கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலைக்குழிழ்

Page 1


Page 2


Page 3
அகளங்கனின் நூல்கள்
1) 2) 3) 4)
5) 6) 7)
8) 9) 10) 11) 12) 13)
14) 15) 16)
17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31) 32) 33)
34) 35)
39) 37) 38) 39)
“செல்” “வா” என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதை) "சேரர் வழியில் வீரர் காவியம்” (குறுங்காவியம்) "சமவெளி மலைகள்” (அகளங்கன், சு. முரளிதரன் கவிதைகள்) "வாலி” (ஆய்வுநூல் - மூன்று பதிப்புகள்) (அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு 1987) "இலக்கியத் தேறல்" (கட்டுரைகள்) "நளவெண்பா' (கதை) "அன்றில் பறவைகள்” (நாடகங்கள்) (தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992) "முத்தமிழ் வித்தகள் சுவாமி விபுலானந்தர்’ (வரலாறு) "இலக்கியச் சிமிழ்’ (கட்டுரைகள் - இருபதிப்புகள்) "தென்றலும் தெம்மாங்கும்’ (கவிதைகள்) "பன்னிரு திருமுறை அறிமுகம்' (சமயம்) "மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” (ஆய்வு) "இலக்கிய நாடகங்கள்” (நாடகங்கள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு - 1994, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு 1994) "ஆத்திசூடி" (விளக்கவுரை)
"கொன்றை வேந்தன்” (விளக்கவுரை) "அகளங்கன் கவிதைகள்’ (கவிதைகள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 1996) வாக்குண்டாம் - விளக்கவுரை (மூதுரை)
"சிவபுராணம்” (பொருளுரை)
“செந்தமிழும் நாப்பழக்கம்” (பேச்சுக்கள்) "நாமறிந்த நாவலர்” (சிறுகுறிப்புகள்)
"நல்வழி” (பொழிப்புரை - விளக்கவுரை) "இசைப்பாமாலை” (இசைப்பாடல்கள்) “கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு' "இலக்கியச் சரம் (கட்டுரைகள்)
“வெற்றி வேற்கை” - உரை (நறுந்தொகை) "கூவாத குயில்கள்” (நாடகங்கள்)
"திருவெம்பாவை’ உரை - (சமயம்)
“பாரதப் போரில் மீறல்கள்’ (கட்டுரை) “சுட்டிக் குருவிகள்” (மழலைப் பாடல்கள்) “சின்னச் சிட்டுக்கள்' (சிறுவர் பாடல்கள்)
"நறுந்தமிழ்’ (கட்டுரைகள்)
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் (ஆய்வு) பத்தினித் தெய்வம் - நாட்டிய நாடகங்கள் (வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008) வேரும் விழுதும் - கட்டுரைகள் (வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008) கங்கையின் மைந்தன் (நாடகங்கள்) (வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2009, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு 2009, தமிழியல் விருது 2009, தேசிய சாகித்திய மண்டல சிறப்புச்சான்றிதழ் 2009, இலக்கிய வட்டமும்), அகில இலங்கை இலக்கியப் பேரவை விருது 2009) பந்து அடிப்போம் (சிறுவர் பாடல்கள்)
சிரிக்க விடுங்கள் (சிறுவர் பாடல்கள்)
சகலகலாவல்லி மலை (உரை)
அலைக்குமிழ் (நாவல்)

ඌlරතඛණ්ෂේ)||6||5
(நாவல்)
-அகளங்கன்
வெளியீடு : 63
WR/TERS M07/VATION CENTRE எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இல.64. கதிர்காமர் வீதி, அமிர்தகழி. மட்டக்களப்பு இலங்கை, T. P. : 065-2226658, 077-6041503 e-mail: okkunaa(a)yahoo.com
3

Page 4
ථුරානඛයීල්ප|6||5
அலைக்குமிழ்
(இளைஞர் நாவலி)
எழுதியவர்
பதிப்புரிமை வெளியீடு
முதற் பதிப்பு அட்டை வடிவமைப்பு கDைனி வgவமைப்பு அச்சுப்பதிப்பு
ପୌର୍ଣ୍ଣd୭୦୦
ALAlKUMIL
Novel
Author
CopyRights
Publication
First Edition
Cover Design Type Setting
Printers
Price
ISBN
அகளங்கன் (நா. தர்மராஜா) GŠIDLDjô). 35ÜLDU TEBIT B.A.(Hons) எழுத்தாளர் ஜூளக்குவிப்பு மையம் (பிரியா பிரசுரம் 63)
2011 மார்கழி
ஐெலீலா காதர் முகைதீன்
ஏ.ஐே
3OO/=
Ahalangan (N.Tharmarajah) Mrs. P.Tharmarajah B.A.(Hons)
Writers Motivation Centre
(Priya Prasuram – 63)
2011 December
Jeleela Cader Mohideen
A.J.
300/=
: 978 - 955 - 8715 - 58 - 1

அணிந்துரை
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
அலைக்குமிழ் ஆசிரியர் திரு.நா.தர்மராஜா இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தில் ஒரு விஞ்ஞான மாணவனாயுள்ளார். விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த சிலரே இலக்கிய உலகிலும் ஈடுபட்டவராயுள்ளனர். அவ்வரிசையில், ஏற்கெனவே சிறுகதைகள், நாடகங்கள் பலவற்றைப் படைத்த திரு.தர்மராஜாவும் தனக்கென ஓர் இடம்பிடித்துக் கொண்டார். இனி அவருடைய புதிய படைப்பாகிய நாவலுக்கு வருவோம்.
அலைக்குமிழ் மொத்தத்தில் நிறைவேறாத ஒரு காதற்கதையாகவே அமைந்துள்ளது. ஏன் அக்காதல் நிறைவேறவில்லையென்பதைக் குறிக்குமிடம் நாவலின் உச்சக்கட்டமாயமைகின்றது. நாவலின் கதைக்களம் வன்னிப் பிரதேசம் எனப் பொதுவாகக் கூறலாம். ஓமந்தை கிளிநொச்சி ஆகிய இரு இடங்களே கதை நிகழிடங்களாக அமைகின்றன. பொதுவாகத் தமிழர் பிரதேசத்தில் வடமாநிலத்தில் ஒரு காதல் நிறைவேறவில்லையென்றால் அதற்குச் சாதி, சீதனம், அந்தஸ்து ஆகியவற்றுள் ஏதாவதொன்றினைக் காரணமாகக் கூறிவிடலாம். இதுதான் பொதுவான நடைமுறையுங்கூட. ஆனால் அலைக்குமிழ் காதலர் சந்திரா-மோகன் காதல் நிறைவேறாமைக்குரிய காரணம் விதிவிலக்கானதேயெனக் கூறலாம். அதாவது, சந்திரா - மோகன் காதல் தொடங்கி நடந்து வந்து, முடிவில் சந்திரா தன்னுடைய
5

Page 5
ඌlගඛණ්ෆ|6|ශ්‍රී
தங்கை என மோகன் அறியுமிடத்தில் நிறைவேறாது போய்விடுகின்றது. இது எல்லாக் காதலர்க்கும் நிகழக்கூடியதல்ல. எனினும் காதல் நிறைவேறாது போவதற்குரிய விதிவிலக்கான சம்பவங்களுள் இதுவும் ஒன்றாகும். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மணமுடியாதிருத்தல் ஏறக்குறைய எல்லா இனப் பண்பாடுகளும் பின்பற்றுவதாகும். உயிரியல் நியாயமும் இதற்குக் கூறப்படுவதுண்டு. சந்திரா எவ்வாறு மோகனின் தங்கையானாள் என்பதை நாவலின் சரி பிற்பாதி கூற முற்பாதி தன் சிநேகிதனாகிய சேகரின் ஓமந்தை வீட்டுக்கு வந்தது முதல் அவன் தங்கை சந்திராவைக் கண்டு காதலித்தது வரை கூறுகின்றது. காதல் உதயம் முற்பாதி; காதல் அஸ்தமனம் பிற்பாதி. இதுவே அலைக்குமிழ் நாவலின் அமைப்பாகும்.
வன்னிப்பிரதேசச் சமூகம், சூழல் ஆகியன இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்களைத் தாக்குவனவாயில்லை. இந்நாவலில் இடம்பெறுங்கதை எங்கும் நிகழலாம். ஆனால் ஒரு கதைக்கு களம் ஒன்று வேண்டுமாகையால், ஆசிரியர் தனது சொந்தப் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
சந்திரா, மோகன் தோன்றுவதற்குக் காரணஸ்தரான தர்மலிங்கம். மோகன் அவதரிப்பதற்குக் காரணமான சரஸ்வதி ஆகியோருடைய காதல் சம்பந்தமான விடயத்தில் சமூகப் பிரச்சினை உதிக்கின்றது. புதுார் திருவிழாவிற் சிநேகிதஞ் செய்து கொண்ட தர்மலிங்கமும் சரஸ்வதியும் உடலுறவு கொள்கின்றனர். தன்னை மணஞ் செய்து கொள்ளும்படி சரஸ்வதி தர்மலிங்கத்திடம் கேட்டபொழுது அவர்,
G
"சரஸ், எங்கட வீட்டில உன்ன நான் கலியாணஞ் செய்ய அனுமதிக்கமாட்டினம்”
என்று கூறுகின்றார்.
அதற்குரிய காரணம் “நீ என்ன விட ரெண்டு வயசு மூத்தவள்’ என்று தர்மலிங்கம் கூறினாலும் , தான் செய்யப் போகும் கலியாணத்தைப் பற்றி ஒரு முடிவெடுக்க உரிமையில் லாத இளைஞரையுடைய தமிழ்ச் சமூகப் பிரதிநிதியாக தர்மலிங்கம் இங்கு காட்டப்படுகிறார்.
ஆசிரியருடைய இலக்கிய நடைபற்றி இங்கு குறிப்பிடுதல் நலம் என எண்ணுகிறேன்.

அகளங்கள்
‘மேகங்கள் திரண்டு மழைபொழியப் போகும் அறிகுறியைக் கண்டதும் மயில்கள் தோகையை விரித்துக் களிப்பினால் நர்த்தனஞ் செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். கவிஞர்களும் கொண்டலை மகிழ்ந்து காணுங் குளிர்பசுந் தோகை.’ என்று மழைகாலம் மயில்கள் சந்தோசமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்’
இதுபோன்ற பல பகுதிகள் ஆசிரியருக்குள்ள இலக்கிய ஆர்வத்தை எடுத்துக் காட்டுவனவாயுள்ளன.
மொத்தத்தில், அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு காதற் கதைகள் கேட்டுப் பழகிய வாசகர்களுக்கு விருந்தளிக்கக்கூடிய காதற்கதை இது. ஒரு பல்கலைக்கழக மாணவன் ஒரு நாவலை எழுத முற்பட்டதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். பல்கலைக்கழகம் நாடறிந்த சில எழுத்தாளர்களை (குறிப்பாக 50வது வீரகேசரிப் போட்டி நாவலாகிய காட்டாறு எழுதிய செங்கையாழியான் போன்றோரை) உருவாக்கியுள்ளது. அந்த வகையில் வயதில் இளமையான யாழ்ப்பாண வளாகமும் ஒரு நாவலாசிரியரை (அவர் எதிர்காலத்தில் இன்னுந் திறமையான நாவல்களைப் படைப்பார் என்ற ஆர்வத்தில்) உருவாக்கியுள்ளது என்பதில் நான் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியுமடைகிறேன்.
- அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பான வளாகம், திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
D D

Page 6
முன்னுரை
அகளங்கன்
முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன் (1977) நான் எழுதிய இந்நாவல் இப்போது தான் வெளிவருகிறது. இந்நாவல் நூல்வடிவம் பெறுவதற்குக் காரணமாக இருந்த நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்களுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
க.பொ.த (சாத) பரீட்சை எழுதி விட்டு பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருந்த காலத்திலும், பின் க.பொ.த. (உ/த) பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழகம் செல்லக் காத்திருந்த காலம் வரையும் நிறையவே வாசித்தேன்.
பழந்தமிழ் இலக்கியமும், நாவலிலக்கியமும் என் வாசிப்புக்கு ருசித்தன. எனது மூத்த சகோதரர். திரு.நா. தியாகராசா சரித்திர சம்பந்தமான நாவல்களை அதிகம் வாசிப்பார். அவர் வவுனியா நூலகத்திலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் கொண்டு வரும் சரித்திர நாவல்கள் யாவும் எனது மேய்ச்சலுக்குப் பயன்பட்டன.
இன்னொரு மூத்த சகோதரர் திரு.நா.வில்வராசா சமூக நாவல்கள் வாசிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் கொண்டுவரும் சமூக நாவல்கள் யாவும் எனக்கும் தீனியாயின.
8

அகளங்கள்
இன்னுமொரு மூத்த சகோதரர் திரு.நா.நடராசா வீரகேசரிப் பிரசுர நாவல்கள் யாவற்றையும் வாங்கி வாசிப்பார். எனக்கும் அவை பெருவிருந்தாயின.
எனக்கு அப்போது வாசிப்பே சுவாசிப்பாக இருந்தது என்று கூறலாம். சரித்திர நாவல்களில் மனதை அதிகம் பறிகொடுத்த நான் பண்டார வன்னியனின் வரலாற்றை நாவலாக எழுதத் தொடங்கி சில அத்தியாயங்களை எழுதினேன். பின்பு அது நிறைவு பெறவில்லை.
யாழ்ப்பாண வளாகத்தில் கணித புள்ளிவிபரவியல் பிரிவு - விஞ்ஞானபீட மாணவனாக 1975ல் அனுமதி பெற்றுச் சென்றேன். எழுத்துத் துறையில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டது.
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள் சிலவற்றை எழுதினேன். சில வெளிவந்துள்ளன. சில கிடப்பில் (3LTLLIL60T.
நாவல் இலக்கியத்தில் எனக்கிருந்த பெரும் ஈடுபாட்டின் காரணத்தால், 2ம் ஆண்டு மாணவனாக இருந்த காலத்தில் 1977இன் ஆரம்பத்தில் இந்த நாவலை அலைக்குமிழ் என்ற பெயரில் எழுதினேன்.
ஈழத்து நாவலாசிரியர்களில் எனக்கு செங்கை ஆழியான் அவர்களையும் (பல நாவல்கள்) அ. பாலமனோகரன் அவர்களையும் (நிலக்கிளி) மிகவும் பிடிக்கும்.
அவர்களது நாவல்கள் தந்த அருட்டுணர்வால்தான் இந்த நாவலை அப்பொழுது எழுதினேன்.
யாழ்ப்பாண வளாகத்தில் (அப்போது வளாகம்) கல்வி கற்ற காலத்தில் செங்கை ஆழியான் அவர்களை அவரது பிறவுண் வீதியிலிருந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று சந்தித்து உரையாடுவேன்.
G
ஒரு நாள் 'அலைக்குமிழ்’ நாவலை அவரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டேன். அவரை நான் அடுத்த தடவை சந்தித்த போது நாவலின் நிறை குறைகள் பற்றியும், திருத்தங்கள் பற்றியும் சொல்லி ‘வீரகேசரிப் பிரசுரமாக்குவதற்கு பொருத்தமாக இருக்கும்.
9

Page 7
ඌlගඛණිල්ප|6|ශ්‍රී
என்னிடம் கொண்டு வந்து தாருங்கள்’ என்று உற்சாகப்படுத்தினார்.
அவரது ஆலோசனைகளை ஏற்று முழுதாகத் திரும்ப எழுதினேன். ஆனால் அவரிடம் கொடுக்காமல் நானே நேரடியாக வீரகேசரிக் காரியாலயத்துக்கு அனுப்பி வைத்தேன்.
சில வாரங்களின் பின் இந்நாவல் திரும்பி வந்து சேர்ந்தது. மண்வாசனை போதாதென்று குறிப்பிட்டு கடிதம் இருந்தது.
வீரகேசரி தனது நாவல் வெளியீட்டு முயற்சியைக் குறைத்து கைவிட்டுக் கொண்டிருந்த காலம் அது. பின் சில நாவல்களை மட்டுமே வெளியிட்டு நாவல் வெளியீட்டை முற்றாகவே நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் செங்கை ஆழியான் அவர்களைச் சந்தித்தபோது இந்நாவல் பற்றிக் கேட்டார். நானும் திரும்பி வந்த கதையைச் சொன்னேன்.
‘என்னிடம் தந்திருக்கலாம். அவசரப்பட்டு விட்டீர்களே” என்று கவலைப்பட்டார். பின்பு தன்னிடம் தரும்படியும் தான் மித்திரன் பத்திரிகையில் தொடராக வெளிவர ஆவன செய்வதாகவும் கூறினார். நான் அதைப் பற்றி யோசித்தேன்.
காலம் கடந்தது. சிரித்திரன் சஞ்சிகையில் எழுதத் தொடங்கினேன். சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி. சிவஞான சுந்தரம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலக்கியத்தில் நகைச்சுவை (சே.நா.தர்மராசா என்ற சொந்தப் பெயரிலும்) இலக்கியச்சிமிழ் (அகளங்கன் என்ற புனைபெயரிலும்) என்ற தலைப்புகளில் எழுதினேன்.
“அலைக்குமிழ்’ நாவலுக்காக நான் வைத்துக் கொண்ட அகளங்கன் என்ற புனைபெயர் பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவதற்கு மிகவும் பயன்பட்டது.
இந்நாவலை எழுதி வீரகேசரிக்கு அனுப்பி இலவு காத்த கிளியாகக் காத்திருந்த காலத்தில் 'மலர்ந்தும் மலராத" என்ற நாவல் ஒன்றையும் எழுதினேன்.
1O

அகளங்கள்
அந்நாவலும் மலர்ந்தும் மலராமலேயே போய்விட்டது.
“அலைக்குமிழ்', 'மலர்ந்தும் மலராத" பெயர்ப் பொருத்தம் வியப்பாக இருக்கிறதல்லவா.
நாவலிலக்கியம் படைக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு பழந்தமிழ் இலக்கியத்தில் எண் கவனத்தை முழுமையாகச் செலுத்தினேன்.
சில மாதங்களின் பின் ஈழத்தின் பிரபல மூத்த எழுத்தாளர் வரதர் அவர்கள் செங்கை ஆழியான் அவர்களின் சில நூல்களை அச்சிட்டு வரதர் வெளியீடாகக் கொண்டு வந்தார்.
அந்த நேரத்தில் செங்கை ஆழியான் அவர்கள் இந்த நாவலை வரதர் வெளியீடாகக் கொண்டு வரலாமென்று என்னிடம் கூறி நாவலைக் கேட்டார்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களிடம் (அப்போது கலாநிதி அ.சண்முகதாஸ்) இந்த நாவலைக் கொடுத்து அணிந்துரை வழங்கும்படி வேண்டினேன். அவரும் வழங்கினார். அந்த அணிந்துரை அப்படியே இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அவருக்கு என்றும் என் நன்றிகள் உரியன.
நாவலையும் அணிந்துரையோடு செங்கையாழியான் அவர்களிடம் கொடுத்தேன். எனக்கு வரதர் அவர்களோடு பழக்கம்; அறிமுகம் இருக்கவில்லை.
சில வாரங்களின் பின் செங்கை ஆழியான் அவர்களைச் சந்தித்தபோது, வரதர் அவர்கள் இந்நாவலை வாசித்துப் பார்த்ததாகவும், வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.
காத்திருந்தேன். சில வாரங்களின் பின் செங்கை ஆழியான் அவர்களைச் சந்தித்தபோது, வரதர் அவர்கள் தனது நூல் வெளியீட்டுப் பணியில் நொடித்துப் போனதால் நாவல் வெளியீட்டு முயற்சியைத் தற்காலிகமாக கைவிட்டு விட்டதாகச் சொல்லி, வரதர் அவர்களைச் சந்திக்கும்படி ஆலோசனை கூறினார்.
நான் வரதர் அவர்களைச் சந்தித்தேன். அவர் நாவலைப் பற்றி
11

Page 8
அலைக்குமிழ்
நல்ல விதமாக உரையாடினார். பிரசுரத்துக்கு பொருத்தமானது என்றும் கூறினார். எழுத்துப் பிழைகள் திருத்தி தான் அச்சிடுவதற்குத் தயாராக வைத்திருந்ததையும் காட்டினார்.
“மீண்டும் நாவல்களை வெளியிடத் தொடங்கினால் உங்கள் அலைக்குமிழ் தான் முதல் வெளியீடு. நாவல் என்னிடமே இருக்கட்டும்” என்று கூறினார்.
நான் எனது முகவரியைக் கொடுத்துவிட்டு, நாவலைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கவலையோடு திரும்பிவிட்டேன்.
வரதர் அவர்கள் பின்பு சில வருடங்கள் நூல்கள் எவற்றையும் வெளியிடவில்லை. என் துர்அதிஷ்டம் இரு தடவைகள் என்னை ஏமாற்றி விட்டது.
வரதர் அவர்களுக்கும், செங்கை ஆழியான் அவர்களுக்கும் என் மனதில் என்றும் அழியாத இடம் உண்டு.
நாவல்களை வெளியிட முடியாமற் போனதால் நாவல் இலக்கியம் படைப்பதைக் கைவிட்டு விட்டு சிறுகதைகள் பலவற்றை எழுதினேன். பல பரிசுகளையும் சிறுகதைத் துறையில் பெற்றேன். இருப்பினும் சிறுகதைத் தொகுதி ஒன்றைக்கூட வெளியிடவில்லை.
கவிதை, நாடகம், ஆய்வு, கட்டுரை, சிறுவர் இலக்கியம், நாட்டிய நாடகம், உரை என முப்பத்தி எட்டு நூல்களை வெளியிட்ட பின்பு இப்போது இந்நாவலை வெளியிட சந்தர்ப்பம் வாய்த்தது.
நண்பர் ஓ.கே குணநாதன் பலவருடங்களாக இந்நாவலை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியபோதும் சம்மதிக்காத நான் இப்போது சம்மதித்தேன்.
செங்கை ஆழியான் அவர்கள், வரதர் அவர்கள், பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள், ஆகியோரின் இந்நாவல் பற்றிய அபிப்பிராயங்கள், ஓ.கே.குணநாதனின் இடைவிடாத வற்புறுத்தல் இந்நாவல் வெளிவரக் காரணமாயிற்று.
12

அகளங்கள்
இலக்கியம் வாசகனை நோக்கிப் படைக்கப்படுவதே தவிர விமர்சகனை நோக்கியல்ல. இந்த நாவலுக்குரிய வாசகனை இந்த நாவல் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அத்தோடு 1980களின் முற்பகுதியில் நான் எழுதிய ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற சிறுகதை 2006இல் ஞானம் சஞ்சிகை நடாத்திய புலோலியூர் க.சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (உலகளாவிய சிறுகதைப் போட்டி எனக் குறிப்பிடலாம்) 7ம் பரிசு பெற்றது.
அச்சிறுகதை 25 வருடங்கள் உயிர்ப்போடு இருந்த மகிழ்ச்சியின் பெருமிதத்தில் 34 வருடங்களுக்கு முந்திய இந்நாவலையும் வெளியிடத் துணிந்தேன்.
இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கிய என் பெருமதிப்புக்கும் பெருவிருப்புக்கும் உரிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு என் இரட்டை நன்றிகள்.
ஏனெனில் எனது வாலி ஆய்வு நூலுக்கும் இவரே அணிந்துரை வழங்கியிருந்தார் (1987). அத்தோடு வாலி ஆய்வு நூல் வெளிவரவும் இவரே காரணமாகவும் இருந்தார்.
ஆக, புனைகதை இலக்கியம், ஆய்வு இலக்கியம் என்ற இருவகை இலக்கிய வகைகளிலும் நான் ஈடுபடக் காரணமாக இருந்தவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களே. அதனால் இவருக்கு என் இரட்டிப்பு நன்றிகள்.
இந்நூலை வெளியிடும் எனது நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்கள். தனது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மூலமாக எனது பல நூல்களை வெளியிட்டவர்.
என்னை எழுதத் தூண்டியும், எனது எழுத்துக்களை வெளியிடத் தூண்டியும் என்னை ஓயாமல் ஊக்குவித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் உயர்ந்த இலக்கிய உள்ளம் கொண்டவர் நண்பர்
ஓ.கே.குணநாதன். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்ல.
எனது நூல் வெளியீடுகளுக்கு ஊக்கம் தரும் சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி ஐயா, அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல்,
13

Page 9
ඌ|රැකබද්ෆ|6|ශ්‍රී
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராசா ஆகியோர் என்றும் நன்றிக்குரியோர்.
எனது நூல் வெளியீடுகளுக்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் என் தம்பி க.குமாரகுலசிங்கம் என்றும் என் இதயத்தில் நீங்காது இருப்பவர். இவருக்கும்,
என் இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் உந்து சக்தியாக விளங்குவதோடு படியெடுத்தும், அச்சுப்பிரதிகளை ஒப்புநோக்கியும், ஆலோசனைகளை வழங்கியும் முதல் வாசகியாகவும், முதல் ரசிகையாகவும் முதல் விமர்சகியாகவும் விளங்கும் என் மனைவிக்கும், எப்படி நன்றி சொல்ல, -
இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாக மாணவன் எழுதிய நாவல் என்ற வகையில் இதுவே முதல் நாவல்.
சாதாரண சராசரி வாசகனைக் கருத்திற்கொண்டு, சாதாரண சராசரி வாசகனாக நான் இருந்த காலத்தில் எழுதிய இந்நாவல் நிச்சயம் இன்றைய சராசரி வாசகனையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
23 வயது இளைஞனாக இருந்தபோது நான் எழுதிய இந்நாவல் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஓர் இளைஞர் நாவலாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இரண்டு தலைமுறைகள் முறையற்ற காதலால் சீரழிந்த கதை இளைஞர்களுக்கு ஒரு படிப்பினையாகும்.
இந்நாவலை வீரகேசரி ஞாயிறு வாரமலரில் 24-01-2010 முதல் 04-07-2010 வரை தொட்ராகப் பிரசுரித்த வீரகேசரி பத்திரிகை நிறுவனத்திற்கும். அதன் பிரதம ஆசிரியர் திரு.வி.தேவராஜா அவர்களுக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
நன்றி
- 960TL - அகளங்கன் 90, திருநாவற்குளம், வவுனியா. 04-12-2011
14

பதிப்புரை
டாக்டர்.ஓ.கே. குணநாதன் MAMSc.Mphi மேலாளர், எழுத்தாளர் ஒளக்குவிப்பு மையம்
இது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 63வது வெளியீடு.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஏலவே அகளங்கனின் 9 நூல்களை வெளியிட்டு மகிழ்ந்தது.
சின்னச் சிட்டுக்கள், சுட்டிக் குருவிகள், கூவாத குயில்கள், வாலி, பாரதப் போரில் மீறல்கள், பாரதியாரும் பாஞ்சாலி சபதமும், நறுந்தமிழ், வேரும் விழுதும், கங்கையின் மைந்தன் ஆகிய 9 நூல்களே
960)6).
இந்த நூல் அகளங்கனின் 10வது வெளியீடாக அமைவது பல்வேறு வகையில் மகிழ்ச்சியளிக்கிறது.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 20வது ஆண்டில் தனது சுவட்டைப் பதிக்கிறது.
இந்த வேளையில் ஒரு எழுத்தாளனுடைய சிறுவர் இலக்கியம், கட்டுரை, நாடகம், நாவல், ஆய்வு என 10 நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதனை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாகக் கிடக்கிறது.
15

Page 10
ඌlරුනඛණ්ෆ|6|ශ්‍රී
அதுவும் இலங்கையிலே இருக்கின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் முதல்வராகத் திகழும் அகளங்கனுடைய நூல்களை வெளியிட்டிருப்பது என்பது மகிழ்ச்சிதான்.
வெளியிட்ட ஒவ்வொரு நூலும் மிகத் தரமான நூல் என்பதனை அதன் விற்பனை மூலமும் வாசகர்களின் தேடல்கள், கடிதங்கள் மூலமாகவும் அறிய முடிந்தது.
இந்த உற்சாகம் கூட எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் வெளியீடுகளில் உந்துசக்தியாக இருந்தது எனலாம்.
அத்துடன் அந்த நூல்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல பரிசில்களைப் பெற்றுக் கொண்டன.
அதிலும் குறிப்பாக "கங்கையின் மைந்தன்' எனும் நாடக நூல் இந்தியாவில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருவிருதினைப் பெற்று எமக்குப் பெருமை சேர்த்தது. அது இலங்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம் எனலாம்.
இந்த 'அலைக்குமிழ் நூலானது பதிப்புப் பெறுவதனால் பல்வேறு வகைகளில் சிறப்புப் பெறுகிறது.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் ஒரு படைப்பாளியின் 10 நூல்கள் வெளியிட்ட பெருமையைப் பெறுகிறது.
எழுத்தாளர் அகளங்கன் அவர்கள் தனது இலக்கியப் பணிக்காக கலாநிதிப் பட்டம் பெற்றபின் வெளிவரும் முதலாவது நூல் என்ற வகையில்.
பழந் தமிழ் இலக்கியத்திலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள அகளங்கன் எழுதும் புனைகதை இலக்கியப் படைப்பான நாவலாக இருப்பது.
பழந்தமிழ் இலக்கியத்தையும் உள்ளடக்கியதாகக்கொண்ட நாவலாக அமைந்திருப்பது
அகளங்கன் இலங்கைப் பல்கலைக்கழக மாணவனாக யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த காலத்தில் 1977 ஆகஸ்ட் நாட்டுப் பிரச்சினைக்கு முதல் எழுதப்பட்ட முதல் நாவலாக இருப்பது.
16

அகளங்கள்
இன்று வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து இதுவரை நானறிந்த வகையில் வேறு எந்த நாவலும் வெளிவராமல் இந்நாவல்தான் ஒரே நாவல் என்ற பெருமையைக் கொண்டிருப்பது.
இந்நாவல் எழுதப்பட்ட காலத்தினைக் கருத்தினிற் கொள்ளும் பொழுது வவுனியா எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட முதலாவது நாவல் என்ற பெருமையையும் கொள்கிறது.
1977ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நாவல் சுமார் 34 வருடங்களாக நூலுருப் பெறாமல் பெட்டியினுள் முடங்கிப் போய்க்கிடந்தது.
இந்த நாவலை வெளியிடுவதில் அகளங்கன் எந்தவிதமான அக்கறையும் காட்டவுமில்லை. விரும்பவுமில்லை. நூலுருவாக்கம் செய்ய அடியோடு மறுத்து விட்டார்.
இருந்தும் நீண்ட எமது முயற்சிதான் இதனை நூலுருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த நாவல் சகலரையும் சென்றடையச் செய்ய வேண்டும்
என்ற நோக்கில் முதலில் இந்த நாவலை வீரகேசரி வாரவெளியீட்டு
ஆசிரியர் மதிப்புக்குரிய வி.தேவராஜா அவர்களின் ஒத்துழைப்புடன் வீரகேசரி வார வெளியீட்டில் தொடராக பிரசுரித்தோம்.
இதனைத் தொடர்ந்து இந்நாவலை நூலுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
அதன் பிரதிபலனே 'அலைக்குமிழ் நாவல் உங்கள் கைகளில் தவழுகிறது. அகளங்கன் நாவலாசிரியரானார்.
இந்நூலை வெளியிட அனுமதியும் ஒத்துழைப்பும் தந்த அகளங்கன் அவர்களுக்கு எமது நன்றிகள்.
மீண்டும் இன்னுமொரு நூலில் சந்திப்போம்.
என்றும் பிரியமுடன், ஓ.கே.குணநாதன் மேலாளர், ஏழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.
17

Page 11
ஈழத்து
நாவல் இலக்கியத்தின்
இணையற்ற
disg)6O)6Of Lusigif
செங்கை ஆழியான்
(9lவர்களுக்கு
இந்நாவல் (9) uGOOf
18

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் புகையிரதம் வவுனியாப் புகையிரத நிலையத்தில் மூன்று நிமிடங்களைக் கழித்து விட்டுப் புறப்படத் தயாரானது. புகையிரதத்திலிருந்து இறங்கி வருகின்ற சனக்கும்பலுக்குள் இரு இளம் உருவங்கள் மிகவும் குதூகலமாக நடந்து வந்து கொண்டிருந்தன.
பாதையில் இடைமறித்த பயணச் சீட்டு வாங்குபவனிடம் ஒரு வினாடியைக் கழித்து விட்டு வெளியே வந்தன அந்த உருவங்கள்.
சற்று நேரத்துக்கு முன்தான் மழைபெய்து ஓய்ந்திருந்ததால் ஒரு குளிர்காற்று அவர்கள் மேல் வீசி, ஒரு குளிர்ச்சியான வரவேற்பை அளித்தது.
நீண்ட நாட்களாக மழையே இல்லாமலிருந்த வவுனியா நகரம், அன்று பெய்த மழையினால் களைகட்டிக் கிடந்தது.
கடந்த மூன்று வருடங்களாகப் போதிய மழையின்றி வாடிப்போய்ப் பாலைவனமாக மாறிக் கொணி டிருந்த வவுனியாவைச் சோலைவனமாக்கவென்று ஆசை கொண்டுதான் வருணபகவான் தன் கண்களைத் திறந்தானோ என்று சொல்லுமளவுக்கு மழை பொழிந்து
வெள்ளம் அடித்து ஓய்ந்திருந்தது.
19

Page 12
ඌlගඛණ්G|6|ශ්‍රී
மார்கழி மாதத்தின் மழை, மண்வளத்தின் வாசனை பாதையின் இருமருங்கும் பாய்ந்தோடிக் கொண்டிருந்த வெள்ளம், அனைத்துமே பார்ப்போரைப் பரவசத்திலாழ்த்தும் காட்சியாக இருந்தன.
'மோகன்! மழைக்காலம் எங்கட வவுனியா குளிர்ச்சியா அழகா இருக்கும். ஆனால் கோடையும் ஒரே வரட்சிதான்” என்றது ஒரு உருவம்.
அந்த உருவம் கூறுவதைப் பார்த்தால் வவுனியா மண்ணிலேயே பிறந்து வளர்ந்ததுபோல் இருக்கிறது.
ஆம். அவன் பெயர் சேகர்.
வவுனியாவிலிருந்து ஏழு மைல் தொலைவில்தான் அவனது ஊர் இருந்தது.
யாழ்ப்பாண வீதியில் அமைந்திருந்த அந்த ஊருக்கு 'ஓமந்தை” என்று பெயர்.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் வவுனியாவிற்கு வந்த மோகனும் சேகரும் பஸ் வண்டி மூலம் ஓமந்தையை அடைந்தனர்.
ஓமந்தைப் பிள்ளையார் கோவிலும் பாடசாலை, வைத்தியசாலை போன்றவையும் தெருவோரம் அமைந்திருந்து போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஓமந்தை பஸ் நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரம் வரை காட்டுப் பாதையில் நடந்து போய்த்தான் சேகரின் வீட்டிற்குப் போகவேண்டும்.
பாதையிலே நடைபயின்று கொண்டிருக்கும் போது சேகர் மட்டுந்தான் கதைத்துக் கொண்டு சென்றான்.
தனது ஊரின் அழகையும் சிறப்பையும் பற்றி வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தான்.
மோகனோ ஒன்றுமே கதைக்கவில்லை.
அவனால் கதைக்கவும் முடியவில்லை. இயற்கை அன்னையின் இன்ப அணைப்பிலே இதயத்தைப் பறிகொடுத்து இனிமையான பசுமைக் காட்சிகளைப் பார்த்து இலயித்துப் போயிருந்ததனால் அவனால் எதுவுமே பேச முடியவில்லை.
20

அகளங்கள்
பசுமை பொங்கப் பூத்துக் குலுங்கும் காட்டுச் செடிகளின் தோற்றம், போர்க்களத்தில் வெற்றியைத் தொட்டணைத்த வீரனைப்போல் நிமிர்ந்து நிற்கும் செந்நெற் களனிகளின் இளமைத் தோற்றம், கிராமத்துப் பெண்களின் அழகை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் பொத்தியோடு கூடிய சோளச் செடியின் தோற்றம், பச்சைப் பசேலெனப் பட்டுக் கம்பளம் விரித்ததுபோல் பரந்திருக்கும் பசும்புல்வெளியின் பாங்கான தோற்றம், இவையெல்லாம் மோகனைப் பரவசப்படுத்தி எங்கோ ஒரு இனந்தெரியாத இன்ப உலகத்தில் சஞ்சாரஞ் செய்ய வைத்தன.
'மோகன்! அங்கே மயில்!” என்ற சேகரின் குரல்கேட்டு இயற்கைக் கன்னியின் இன்ப அணைப்பை விடுத்து மீண்டு இவ்வுலகுக்கு வந்தான்.
மயிலைக் கூர்ந்து பார்த்து ரசிப்பதில் அவனது மணஞ் சென்றது.
“இது இஞ்ச வளக்கிற மயில்” என்று கூறிப் பெருமிதம் முகத்தில் தவழப் புன்னகைத்தான் சேகர்.
மயிலும் தனது தோகையைத் தூக்க முடியாமற் தூக்கிக் கொண்டு மெள்ள மெள்ள அசைந்தது.
மழைக்காலத்தில் மயிலைக் காண்பது ஒரு மகிழ்ச்சியான செயல்தான்.
ஏனெனில் மழைக்காலத்தில்தான் மயிலும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேகங்கள் திரண்டு மழை மொழியப் போகும் அறிகுறியைக் கண்டதும் மயில்கள் தோகையை விரித்துக் களிப்பினால் நர்த்தனஞ் செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். கவிஞர்களும் 'கொண்டலை மகிழ்ந்து காணும் குளிர்பசுந் தோகை.” என்று, மழைக்காலம் மயில்கள் சந்தோஷமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அதனால் சந்தோஷமாக இருக்கும் அழகு மயில்களை சந்தோஷமான மனநிலையுடன் பார்க்கும் ஒருவனின் இதயத்தில் சந்தோஷம் பொங்குவது இயற்கையே.
இலக்கியத்தில் பெண்களின் உடலை அப்படியே மயிலுக்கு ஒப்பிட்டுள்ளதை ஒருமுறை நினைத்துப் பார்த்தான் மோகன்.
‘மெய்யோ கலாப மயில். என்று எங்கோ படித்த வரிகள்

Page 13
அலைக்குமிழ்
அவன் மனத்தில் வந்து மோத அந்த மயிலை உற்றுப் பார்த்து அதன் அழகையும் அதன் அசைவையும் ரசித்துக் கொண்டே சென்றான்.
இப்படியே எண்ணச் சிறகுகளின் மூலம் சிறகடித்துப் பறந்து இயற்கையை ரசித்துக் கொண்டுபோன மோகனை இடைமறித்து அவனது சிந்தனைக்குத் தடை விதிப்பது போல்
"இந்தப் பக்கம் திரும்பு மச்சான். வீடு இஞ்சால இருக்கு” என்று குழப்பினான் சேகர்.
தன்னையும் மறந்து பசுமைக் காட்சிகளைப் பார்த்துப் பூரித்துப்போய் அவைகளை மனதில் பதியவைத்துக் கொண்டு போன மோகன் திரும்பி;
"சேகர்! நான் மட்டும் ஒரு கவிஞனா இருந்தா இந்தக்
காட்சிகளையெல்லாம் அப்பிடியே காவியமாத் தீட்டி விடுவன். என்ன Glarulu I...”
என்று கூறித் தனது இதயத்து எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டான்.
சென்று கொண்டிருந்த நண்பர்களைத் திடுக்கிட வைத்ததுபோல் பெரிய பாம்பு ஒன்று தெருவுக்குக் குறுக்காகச் சென்றது.
இதயம் அப்படியே நின்று விட்டது போலிருந்தது மோகனுக்கு. தன்னையும் மறந்து
“சேகர்! பாம்பு. பாம்பு’ என்று அலறினான்.
“மோகன் பயப்பிடாத, அது போயிரும். ஏன் வீணாப் பயப்பிடுறாய்” என்று அவனைத் தேற்றிக் கொண்டு,
“இப்பிடிக் காட்டில கிடக்கிற பாம்புகளால கரைச்சலில்ல நாங்கள் அதக் கண்டு விலகிப் போகலாம்.
ஆனா நாட்டில எத்தனை விஷப்பாம்புகள் இருக்கு.
நாங்கள் விலகிப் போனாலும் விடாதுகள்.
பாம்புகளக் கண்டாத்தானே விலகிப் போறதுக்கு.
22

அகளங்கள்
சிலர் நல்லவங்களா நடிச்சே தங்கட விஷத்த எங்களில செலுத்தீருவினம்”
என்று நாட்டிலே வஞ்சகஞ் செய்யும் நஞ்சுப் பிறவிகளைச் சாடிய வண்ணம் சென்று கொண்டிருந்தான் சேகர். அவனது பேச்சை ஆமோதிப்பதுபோல்,
'உண்மதான். சிலரப் பாம்பு எண்டு கண்டிட்டு விலகிறம். சிலரப் பாம்பு எண்டு கண்டுபிடிக்க முடியாமலிருக்கு. அந்தப் பாம்புகள்தான் விஷப்பாம்புகள்.”
என்று பெரிய தத்துவங்களை உதிர்த்தவன் போல ஒரு பெருமிதப் புன்னகை பூத்து நடந்தான்.
அதனைக் கேட்டு மகிழ்ந்தவன் போலவோ அல்லது நண்பன் சொல்லி விட்டானே என்று எண்ணியோ, தானும் புதியதோர் முறுவல் பூத்து அவனது கருத்துக்களை ஆமோதித்தான் சேகர்.
D
23

Page 14
இப்படியே நடந்து சென்றவர்கள் வீட்டை அடைந்தனர்.
சாதாரணமாக ஒரு நல்ல நிலையிலிருக்கும் குடும்பம் தன் தகுதிக் கேற்பக் கட்டிய வீடுபோல் இருந்தது அந்த வீடு.
சேகரின் குடும்பம் அந்தப் பகுதியில் ஒரு நல்ல குடும்பம்தான். அந்த ஊரைப் பொறுத்தவரை வசதி படைத்த உயர்ந்த குடும்பமென்றே கூறலாம்.
சேகரின் தகப்பனார் தர்மலிங்கம். அந்த ஊர்க் கிராம சபைத்
தலைவராகவும், விவசாயப் பெருக்கக்குழு போன்ற எத்தனையோ குழுக்களில் அங்கத்தவராகவும் இருந்தார்.
குறிப்பாக அந்தக் கிராமத்தில் கிராமத்தின் முன்னேற்றம் காரணமாக இயங்கும் அத்தனை குழுக்களிலும் அவருக்கு ஒரு முக்கிய பதவி இருக்கும்.
அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்தார்.
சமாதான நீதவானாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வவுனியாவில் கூட அவரைத் தெரியாதவர்கள் மிகக்குறைவு என்னும் வண்ணம் பிரபல்யம் வாய்ந்திருந்தார்.
24
 

அகளங்கள்
வீட்டு முற்றத்திலே வளர்த்து விடப் பட்டிருந்த பூமரங்கள் எல்லாம் மோகனையும் சேகரையும் நோக்கி அசைந்தாடி வருக! வருக! என வரவேற்றன. வீட்டு வாசலில் வந்ததும், அவர்களை நோக்கி ஓடி வந்த ஒரு பதினெட்டுப் பத்தொன்பது வயது மதிக்கத்தக்க அழகுத் தேவதை போன்ற பெண்ணொருத்தி சேகருடன் இன்னொரு ஆடவன் கூட வந்ததால் கூச்சப்பட்டுத் தயங்கி அப்படியே நின்று விட்டாள்.
தங்கத்தால் வடித்தெடுத்த சிலையென வந்து நின்ற கொடியிடையாளை மோகன் கண் ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
"கையோ செழுங்கமலம், முகமோ நிறைந்த மதி
காலோ இளஞ்சினை வரால்
மெய்யோ கலாபமயில் இடையோ நுடங்குகொடி
விழியோ கடைந்த வடிவேல்”
என்று எங்கோ படித்த பாடலொன்றுடன் அந்த இளந் தேவதையின் ஜெளவனத் தோற்றத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு நின்ற அவனை,
'மோகன்! இதுதான் என்ர ஒரே தங்கை. நான் அடிக்கடி சொல்லுவனே அவள்தான். சந்திரா எண்டு பெயர்’
என்ற சேகரின் குரல் சுயநிலைக்கு வரச்செய்தது.
வாசலில் இருவரும் ஏறியதும் சேகரிடம் பெட்டியை வாங்க வந்த சந்திராவை
99
'மோகனிட்ட பெட்டியை வாங்கு.” என்ற சொல் ஆட்கொண்டது.
அந்தர உலகத்திலிருந்து அரம்பையர் தலைவி ஊர்வசி அடியெடுத்த வந்தது போல் மோகனை நோக்கி 'இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க.” வந்து கொண்டிருந்த சந்திராவின் கயல் விழிகளையும், அவளது அங்கத்தில் மின்னும் தங்கப் பிரகாசத்தையும், அன்ன நடையழகையும் பார்த்துப் பிரமித்துப்போன மோகன். அவள் அருகில் வந்ததும்,
‘பறுவாயில்ல. நான் கொண்டு. வாறன்’
என்று மனம் திக்.திக். கென்று அடிக்கத் தடுமாற்றத்துடன்
25 صبر

Page 15
ඌ|ගඛණ්ෆ|6|ශ්‍රී
சொல்லி முடித்தான். அவளோ
'இல்ல விடுங்கோ’
என்ற வண்ணம் சூட்கேசில் கையை வைத்து அவனிடமிருந்து வாங்கினாள். வாங்கினாள் என்று சொல்வதை விட பிடுங்கினாள். பறித்தாள் என்பதுதான் பொருந்தும்.
வழக்கமாக அழகுக்கும் குரலுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை என்பார்கள் சிலர். மயில் அழகுக்கு ஒப்பிடப்படும் ஒரு பறவை. ஆனால் அதன் குரல் அவலக் குரல்தான். குயிலின் குரல் இனிமையை அறியாதார் இல்லை. ஆனால் அதன் உருவம். அழகற்றது என்பதும் யாவரும் அறிந்ததே.
இப்படி, அழகும் குரலும் ஒருமித்து இருப்பதில்லை என்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தது. சந்திராவின் குரல். அவள் அழகும் குரலும் ஒருமித்து அழகுறப் படைக்கப்பட்ட அதிசயத்தை எண்ணி வியந்து கொண்டிருந்த மோகன் சந்திராவின் ஸ்பரிசத்தால் நிலை தடுமாறினான்.
சூட்கேசின் கைப்பிடிக்குள் பெட்டி பரிமாறப்படும்போது இருவரது கைகளிலும் ஸ்பரிசங்களும் பரிமாறிக் கொண்டன. அந்த ஸ்பரிச உணர்ச்சி அவர்கள் இருவருக்குமே புது அனுபவமாய் இருந்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் அந்த அளவுக்குக் கூச்சப்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் பார்ப்போருக்கு எண்ணத் தோன்றும்.
பெட்டியைக் கொண்டு சேகர் முன்னுக்குச் செல்ல, அவனைத் தொடர்ந்து சந்திரா செல்ல, அவளின் நடையழகை ரசித்துக் கொண்டு மோகன் பின்னால் சென்றான்.
அவன் உள்ளத்தில் அவளது நடையைப் பார்த்ததும். இராமாயணத்தில் கம்பர், சீதையின் நடையை அன்னத்துடன் ஒப்பிட்டு இராமர் முறுவலித்ததாகக் கூறிய காட்சி ஞாபகத்துக்கு வந்தது.
“ஒதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும். சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் பூத்தான்'
26

அகளங்கள்
சந்திராவின் நடையையும் அப்படியே ஒப்பிட்டு மனத்தினுள்ளே முறுவலித்துக் கொண்டான்.
'அம்மா! இவன்தான் மோகன்! என்னோடை ஒண்டா ஒரே அறையில இருக்கிறண்டு சொல்லுவன்.” என்று தனது தாய்க்கு அறிமுகஞ் செய்து வைத்தான்.
பின்னர் தனியான ஓர் அறையில் சென்று தமது உடுப்புகளை மாற்றினார்கள்.
“ஆகா! அருமையான சந்தர்ப்பமொன்றை இழந்து விட்டேனே
என்னிடம் பெட்டியை சந்திரா வாங்கும்போது எனது கைகளும். அவளது கைகளும் எப்படிச் சந்தித்தனவோ அப்படி ஒரு சந்திப்பை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டேனே'
என்று மோகன் தன்னையே நொந்து கொண்டான்.
அவள் பெட்டியை வைக்க அறைக்குள் வரும்போது அவளிடம் தான் வாங்காமல் விட்டது எவ்வளவு தவறு என்று தன்மனத்தையே கடிந்து கொண்டான்.
சில சமயங்களில் சில செயல்கள் அதுவும் பாலியல் சம்பந்தமான செயல்கள் ஒன்றில் பிந்திவிடும். இல்லையேல் முந்திவிடும்.
இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சி.
மோகனுக்கு சற்றுப் பிந்தி விட்டது.
சரி பறுவாயில்ல. இன்னுமொரு சந்தர்ப்பம் வரும்தானே. அவள் ரீ கொண்டு வந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேணும்”
என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு தனது உடைகளைக் களைந்து கொண்டான்.
அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரீயும் வந்தது.
கொண்டு வந்தவளும் சந்திராதான்
ஆகா! அருமையான சந்தர்ப்பம். ஆனால். ஆனால்.
27

Page 16
ඌ|ගඛණ්ෂේló|ශ්‍රී
அநியாயமாக அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குச் சாதகமாயில்லையே.
அவள் இரண்டு ரீ கிளாஸ்களையும் ஒரு “ட்றே” யில் வைத்து கொண்டு வந்தாள். அவன் மனம் அவனது துர்அதிஸ்டத்தை எண்ணிக் கொண்டது.
“சீ. சீ. இது என்ன அற்ப ஆசை”
என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். எட்டாத பழம் புளிக்கும் என்பதுபோல தனக்கு எட்டாததால் அது அற்ப ஆசையென்று
தன்னைச் சமாளித்துக் கொண்டான்.
D
28

இரவு நேரம் வீட்டுக்கு வந்த தர்மலிங்கத்தாரிடமும் தனது நண்பனைப் பற்றிக் கூறி அறிமுகஞ் செய்து வைத்ததுடன் அறிமுகஞ் செய்யும் படலம் முடிவுற்றது.
தர்மலிங்கத்தாருக்கு வீட்டில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கவே நேரம் இருக்காது.
நாட்டில் பெரிய மனிதனாக வாழ்பவர்களுக்கு வீட்டில் இருந்து மனைவி மக்களோடு கதைத்து மகிழ்ந்திருக்க நேரமிருப்பதில்லைத்தானே. பொதுவேலைகள் ஒரு புறம். மாரிகாலமாதலால் தனது சொந்த வேலையான வயல் விதைப்புக்கள் மறுபுறம். இப்படியே தனது வேலைகளைக் கவனித்துக் கொண்டு வந்தார் தர்மலிங்கம்.
சிறிது நேரம் வீட்டிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தாலுமே அதைக் குழப்புவதற்கென்றே வருவதுபோல் யாராவது வந்து ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
வீட்டில் முழுப்பொறுப்பும் அன்னலட்சுமி அம்மாளையே சார்ந்தது.
வீட்டில் நிற்கும் வேலைக்காரச் சிறுவன் அவருக்குத்துணை.
இப்படியே அவர்கள் காலம் ஓடிக்கொண்டிருந்தது.
29

Page 17
ඌlගනඛයීල්ප|6||5
மோகன் கொழும்பில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருப்பவன்.
அவனது அலுவலகத்திலேயே சேகரும் வேலைக்கு வந்து சேர்ந்ததால் இருவருக்குமிடையே பழக்கமுண்டாகியது.
தங்கும் இடமும் ஒரே இடமாக மாறியதால் நட்பு வலுவடைந்தது.
இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவருக்கு தங்களையுமறியாது ஒரு பாசஉணர்ச்சி ஏற்பட்டதால் உற்ற நண்பர்களானார்கள்.
சாதாரணமாக மோகன் எல்லோருடனும் பழகுவதில்லை. அப்படியிருந்தும் சேகரைக் கண்டதும் அவன் தானாகவே சென்று கதைத்துப் பழகி, தனது அறையிலே தங்கவும் இடம் கொடுத்து மகிழ்ந்திருந்தான்.
ஒரே அறையில் இருப்பதாலும் ஒரே இடத்தில் வேலை செய்வதாலும் அவர்களுக்கிடையே உள்ள நட்பு நல்ல நெருக்கமானதாக இருந்தது.
சேகர் மேல் எப்படி அந்த அளவுக்கு மோகன் வலுவான அன்பு வைத்தானோ தெரியாது.
ஏன் அது மோகனுக்குமே தெரியாது. ஒன்றாகப் படுத்துறங்கி, உண்டு களித்து விளையாடித்திரிந்த உயிர் நண்பனைப் பிரிந்த பின் எவருடனுமே சினேகிதமில்லாமலிருந்த மோகனுக்கு தன்னை விட வயதில் குறைவாக சேகர் இருந்தபோதும் அவன் மேல் ஏற்பட்ட ஒரு பாச உந்துதலால் அவனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டியதாயிற்று.
சேகர் மோகனை விட இரண்டு வயது குறைந்தவன்.
அப்போதுதான் கொழும்புக்குப் புதிதாக வந்திருக்கிறான்.
வேலைக்கும் புதிது. இடத்துக்கும் புதிது. என்பதால் அவனுக்கு பார்க்கும் காட்சிகள் எல்லாமே அதிசயமானதாக இருந்தன.
வயதும் குறைவு, அனுபவமும் இல்லை
அதனால் சேகருக்கு கொழும்பு ஒரு பயங்கரமான நகரமாக இருந்தது.
30

அகளங்கள்
கொழும்பில் நடைபெறும் திருட்டுக்கள் பற்றிக் கதை கதையாய்க் கேள்விப்பட்டிருக்கிறான் சேகர்.
திருடர்கள் பொருட்கள் வைத்திருப்பவரை கத்தியைக் காட்டி மிரட்டிப் பறிப்பார்களாம்.
பொருட்களைக் கொடுக்காவிட்டால் கத்தியால் குத்திவிட்டு ஓடி விடுவார்களாம். அதுமட்டுமல்ல, விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட “ஏன் ஒண்டும் கொண்டு வரேல்ல” என்று கேட்டுக் கத்தியால் குத்திவிட்டு மறைந்து விடுவார்களாம்.
இப் படி ஒரு நண்பன் சேகருக்கு நகைச் சுவையாகக் கூறியிருந்ததை நினைத்துப் பார்த்துப் பயந்து கொண்டிருந்தான் சேகர்.
இந்த நிலையில் தன்னை ஆதரிக்க வந்து அன்புக்கரம் நீட்டிய மோகனின் பிடிக்குள் சிக்கினான்.
அன்புக்கரங்கள் நான்கும் ஒன்றிணைந்தன.
நண்பர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.
சாப்பாடு இருப்பிடம். வேலை பார்க்கும் இடம், சினிமாப்படம், இப்படி எதற்கெடுத்தாலும் இருவரும் சேர்ந்தே இருந்தனர்.
ஆரம்பத்தில் கொழும்பைச் சுற்றிக் காட்டுவதில் மோகன் முனைந்திருந்தான்.
சேகரும் மிகவும் ஆவலுடன் எல்லா இடங்களையும் பார்த்து மனதில் நிறுத்திக் கொண்டான்.
இருவரும் தனியே செல்வது கிடையாது.
தனியே போனால் திரும்பி வர இயலாமல்ப் போய்விடுமோ என்ற பயம் சேகருக்கு
மோகனுக்கோ, சேகர் தனியாகப் போனால் எங்காவது இடத்தைத் தவறவிட்டு விடுவானோ என்ற பயம்.
அந்த நிலை இருவரையும் இணைபிரியா நண்பர்களாக்கியது.
31

Page 18
ඌ|රුනඛයීල්)||6||ශ්‍රී
வீட்டுக்குச் செல்லும்போது கூட வவுனியா வரை ஒன்றாகவே பிரயாணஞ் செய்வார்கள்.
வவுனியாவில் சேகர் இறங்கி விடுவான். மோகன் கிளிநொச்சிக்குச் செல்வதால் பயணத்தைத் தொடருவான்.
பல தடவை சேகர் வற்புறுத்தியதன் பேரில் இம்முறை தான் முதன் முதலாக ஓமந்தைக்கு வந்திருக்கிறான்.
வவுனியாவிற்குமே இதுதான் முதல் முறை.
இரவு அவனை வாட்டியது. மோகனின் கண்களில் இரவெல்லாம் நிறைந்திருந்தது நித்திரா தேவியல்ல. சந்திரா தேவிதான்.
நித்திரையாகும் வரை அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டு கிடந்தான்.
கண்களை மூடி நித்திரை செய்ய அவனால் முடியவில்லை.
கண்களை மூடினால் சந்திராவின் உருவம் மறைந்து விடுமோ என்றஞ்சி கண்களை மூடாமலேயே இருந்தான்.
அவனது கண்வழியாக இதயத்தில் அவள் அவளவு சீக்கிரம் புகுந்து விடுவாள் என்று அவன் எண்ணவே இல்லை.
ஆனால் அவனோ அவனையுமறியாது அவள் எண்ணத்தையே நெஞ்சத்தில் வைத்திருந்தான்.
அவளது சிரித்துச் செழித்த சிங்கார வதனமும், சிவந்து மெலிந்த சொர்ண மென்னுடலும், அவனைக் கொல்லாமற் கொன்றன.
நீண்ட நேரம் சிந்தனையில் இன்பங் கண்டான்.
எல்லா ஆடவரையுமே தன் வெட்கத்தையும் மறந்து அணைத்து மகிழும் நித்திராதேவி என்னும் வேசியளுக்கு. மோகனை அணைப்பது அவ்வளவு கஸ்டமாக இல்லை.
தான் விரும்பும் பெண்ணின் அணைப்புக் கிடைக்காமல்,
இன்னொருத்தியின் அணப்பிலே மெய்மறந்து கிடந்ததை நினைத்து வெட்கமும் பயமும் கொண்டவன் போல்விடியற்காலை ஐந்து மணிக்கு
32

அகளங்கள்
முன்பே நித்திராதேவியின் அணைப்பை உதறித் தள்ளி எழுந்தவள், மீண்டும் அப்பேதையின் கரங்களுக்குள் சிக்க விரும்பவில்லை.
சந்திராவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு கிடந்தான்.
படுக்கையும் நொந்தது அவனுக்கு புரண்டு, புரண்டு புலரும் பொழுதை எதிர்நோக்கி காத்திருந்தான்.
புதிய இடத்தில் புதிய சூழ்நிலையில் வந்து தங்கி விரகதாபத்தால் துடித்துக் கொண்டிருக்கும் மோகனின் நிலையை உணர்ந்து துயர் துடைக்க எழுபவன் போல சூரியனும் கிழக்குத் திசையில் எழுந்தான்.
மோகனுக்கு சந்திராவைக் காண இருந்த ஆவலைப்போல் சூரியனுக்கும் பூமியைக் காண ஆவல் இருந்ததோ யாரறிவார்.
காலை ஒன்பது மணியளவில் நண்பர்கள் இருவரும் வெளியே சென்றனர்.
சேகர் தமது வயல் களை, தோட்டங்கள், குளங்கள் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுவதில் முனைந்திருந்தான்.
“சேகர்! எங்களுக்கும் இஞ்ச காணி இருக்கெண்டு அம்மா சொல்லுறவ. ஆனா எவடத்தில இருக்குதெண்டு எனக்குத் தெரியாது” என்று தங்களுக்கும் ஓமந்தையில் காணி இருப்பதாகக் கூறினான்.
சேகரோ.
G
‘எங்கட காணிகளையே எனக்குத் தெரியாது. எனக்கெப்பிடி உங்கட காணியத் தெரியும்.
வயல், தோட்டம், எல்லாம் அப்பாவின்ர பாடுதான், சின்னனில இருந்து நான் வயலில வேலை செய்யிறதுமில்ல. வேலை செய்ய அப்பா விடவும் மாட்டார்”
என்று தமது நிலபுலங்களைப் பற்றிப் பெருமையாகவும் தன்னைத் தன் தகப்பன் செல்லப் பிள்ளையாக வளர்த்த கதைகளையும் சொல்லிக் கொண்டு வந்தான்.
மோகனுக்கு சேகரின் வார்த்தைகளைக் கேட்கப் பெருமையாக இருந்தது.
33

Page 19
ඌ|රැනඛයීල්ප|6|ශ්‍රී
மலர்களிலேயே நடந்து பழக்கப்பட்ட சேகரும் முட்களிலேயே நடந்து வளர்ந்த மோகனும் , வளர்ப் பைப் பொறுத்தவரை இருதுருவங்கள்தான். அதனை மோகனின் நெஞ்சம் எண்ணிக் கொண்டது.
ஆண்டவனின் படைப்பில் தான் எத்தனை விசித்திரங்கள் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் உலகமே வெறுத்து விடும். ஒரே நேரத்தில் பிறக்கும் இரு குழந்தைகள். ஒன்று எட்டடுக்கு மாளிகையின் உப்பரிகையில் உலாவந்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்.
தங்கக் கிண்ணத்தில் பாலும் சோறும் சேர்த்தெடுத்துப் பழத்தோடு குழைத்துத் தீம்பாலமுதம் ஊட்டும் தாயின் கையைத் தட்டி, பாத்திரத்தையும் தட்டித் தன் பசியின்மையைக் காட்டும்.
மற்றொன்றோ வீதியோரத்தில் மழைக்கு ஒதுங்கி நிற்கும் தாயின் அழுக்கு நிறைந்த ஆடையை அகற்றிப் பாலருந்த முயன்றும் அங்கு பாலின்மையால் வீரிட்டு அழவும் முடியாத நிலையில் தோளில் போட்ட துவாய்த் துண்டெனத் துவண்டு கிடக்கும்.
இந்த இரு காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு பாவ புண்ணியம், இறைவன் போன்றவை பற்றி நிச்சயம் தெளிவு ஏற்படும்.
உழுது தண்ணிர் நிறைத்துக் கட்டப்பட்டிருந்த வயல்கள், வயல் விதைப்புக்காலம் என்பதை நினைவூட்டின. சேலையை இடுப்பிலே செருகிக் கட்டிய பெண்களும், தலையிலே துண்டு ஒன்று கட்டிய ஆடவரும் நெல்லுச் சாக்கு பெட்டி என்பவற்றைச் சுமந்து கொண்டு வரப்பிலே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
உழவு இயந்திரத்தின் ஓசையோடு போட்டி போட்டுக் கொண்டு மாட்டினால் பலகையடிப்பவர்களின் ஒசையும் சேர்ந்து ஒலித்தது.
எவ்வளவுதான் நவீன முறைகள் வந்தாலும் பழமைக்கு மதிப்புக் கொடுத்துப் பேணும் முறை நமது வழக்கமாக இருக்கின்றது என்பதை இந்தச் சூழ்நிலை எடுத்துக் காட்டியது.
மாட்டினால் உழுவோரும் பலகை அடிப்போரும் இந்த விஞ்ஞான உலகத்தில் அதுவும் பக்கத்து வயல்களில் டிராக்டர் மிசின் வேலை
34

அகளங்கள்
செய்யும் வேளையில் கூட இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருந்தது மோகனுக்கு.
ஆனால் பணவசதியற்றவர்களும், குறைந்த ஏக்கர் அளவில் பயிரிடுபவர்களும் டிராக்டரை நம்பிக் காத்திருந்து பொழுதை வீணாக்க விரும்பாமல் தமது கைகளிலேயே முழு உழைப்பையும் தங்க விடுகின்றனர்.
உழைத்து உரமேறிய உடல் என்பதால் வலுவிழக்கும் வரை உழைக்கவே தூண்டும்.
வயல் உழுது களைத்த ஒருவன் அடிக்கடி மோகன் வந்து கொண்டிருந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மோகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
'அவன் ஏன் அப்படித் தங்களையே பார்க்கிறான்’ என்று நினைத்தான் மோகன். சேகரோ இதில் அவ்வளவாகக் கவனஞ் செலுத்தவில்லை.
சிறிது நேரத்தில் உண்மை விளங்கியது.
கரையல்ப் பானையைத் தலையில் வைத்துக் கொண்டு வந்த பெண்ணொருத்தியைக் கண்டதும் உழுவதை நிறுத்தி விட்டு பக்கத்து வயல்த் தண்ணிரை அள்ளி முகம் கழுவிக் கொண்டு அருகே இருந்த மரநிழலுக்குப் போய் அமர்ந்தான் அந்த ஆடவன்.
‘ஓ இந்தப் பெண்ணின் வரவை நோக்கித்தான் வழியைப் பார்த்துக் கொண்டானோ'
என்று எண்ணிக் கொண்டான் மோகன்.
வயல் வரப்பு மூட்டொன்றில் தனது கரையல்ப் பானையை இறக்கி வைத்து விட்டுத் தன் கணவனுக்குப் பழைய சோத்துத் தண்ணிர் கொடுத்து அவன் குடிப்பதைப் பார்த்து மகிழும் மனைவியையும், அவளது முகத்தையே பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டே கரையல் குடிக்கும் அந்த ஆடவனையும் பார்க்க மோகனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
வேலை செய்து களைத்ததனால் நன்கு கரையலைக் குடித்துவிட்டு
35

Page 20
ඌ|ගඛයීෆ|6||5
‘அப்பாடா.”
என்று ஒரு ஏவறயும் விட்டுக் கொண்டான். அந்தத் தொழிலாளி.
வயலையே பார்த்துக் கொண்டு தன்மனைவியுடன் கதைத்துக் கொண்டிருந்த அவனது கைகள் அவளை நோக்கி நீண்டன. அவனது கைகளை நோக்கி அவளது கைகளும் நீண்டன.
“பீடி”யை வாங்கி பற்றவைத்துக் கொண்டான் அந்த உழைப்பாளி.
மோகன் அந்தக் காட்சியை அப்படியே தன்னையும் சந்திராவையும் சேர்த்துக் கற்பனை பண்ணிக் கொண்டான்.
"எவ்வளவு அந்நியோன்யமான தம்பதிகள். இப்படியான தம்பதிகளை கிராமப் புறத்தில்தான் காணலாம். ஆண் உழைத்துப்போட பெண் அதைப் பாதுகாத்து வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள்தான் சந்தோஷமாகவும் பிரச்சினைகளில்லாதும் இருக்கின்றன. அங்குதான் ஆண்மையும் பெண்மையும் சங்கமமாகின்றன.”
என்று தன்னருகே வந்த சேகருக்குக் கூறினான் மோகன். சேகரும் - விளங்கியதுபோல் காட்டினானே தவிர இந்த விடயத்தில் அவ்வளவாக அக்கறை காட்டியதாயில்லை.
வெய்யில் அதிகமாகிக் கொண்டே போனதால் வயல்ப் புற்று ஒன்றிலே போடப்பட்டிந்த சிறு குடிலொன்றின் கீழ் வந்து இளைப்பாறிக் கொண்டு அந்த இயற்கைக் காட்சிகளைக் கவனித்தார்கள்.
கொக்குக் குருவியெல்லாம் ஒலமிட்டுக் கொண்டு நெல்லுப் பொறுக்குவதற்கு வந்து கொண்டிருந்த காட்சி அப்படியே மனதைக்
கொள்ளை கொள்ள அவ்விடத்தை விட்டுச் சேகருடன் புறப்பட்டான் மோகன்.
D
36

சிந்தனைகளைச் சுழல விட்டுக் கொண்டு நடந்தான் மோகன். வெய்யில் கடுமையாக இருந்தது.
மழைக்காலத்து வெய்யில் என்பதால் அதன் கொடுமையைத் தாங்கமுடியவில்லை.
குளிரிலே பழக்கப்பட்டுக் கொண்டு வந்த உடம்பால் அந்தத் திடீர் வெப்பத்தை அனுபவிக்க முடியவில்லை.
இருவரும் குளத்தங்கரையில் நல்ல ஒரு மரநிழலைத்தேடி நடந்தனர்.
குளக்கட்டில் நடந்து கொண்டிருக்கும் போது அப்படியே குளிக்கும் கரைகளையும் ஒரு கணம் நோட்டம் விட்டான். மோகன்.
நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள். அவர்களை
நீண்ட தூரம் நீந்த வேண்டாமென்று 'அங்கால போகாடா விழுவானே!. ஆழமிடா, தாண்டுபோடுவாய்.”
என்று தமது குரலின் உச்ச ஸ்தாயியில் சத்தம் போட்டுக் கதறும் தாய்மார்கள்.
37

Page 21
ඌlරුනඛයීල්ප|6|ශ්‍රී
குறுக்குக் கட்டுடன் பருவத்து விழிம்பில் நிற்கும் பாவையர், எல்லோரும் ஓர் இடமாக ஒரு கரையில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
ஊர்ப் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி ஊர்ப்புதினங்களைக் கதைத்துக் கொள்வதற்கு குளக்கரை ஒரு ஏற்ற இடமாக இருந்தது.
இன்னொரு கரையில் வயலில் வேலை செய்து விட்டு மத்தியானம் வீட்டுக்கு வரும் ஆண்கள் நீராடிக் கொண்டிருந்தனர்.
குளக்கட்டில் நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே வந்து போய்க் கொண்டிருந்த எல்லோருமே சேகரைப் பார்த்துப் புன்னகைத்ததுடன் மோகனை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு போனது போல் இருந்தது.
அதே எண்ணத்தில் இருப்பவனுக்கு அப்படித்தானே தெரியும்.
அப்படியே நடந்து போய் குளக்கரையில் நின்ற ஒரு பெரிய மருத மரத்து நிழலில் குளத்துக் கட்டில் இருந்தனர். மருத மரத்து நிழல் அவர்களுக்கு இதமாகவே இருந்தது.
வெய்யிலில் நின்றவர்களாதலால் நிழலின் அருமை நன்கு தெரிந்தது.
குளத்திலிருந்து வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த இளந் தென்றல் அந்தக் காளைகளின் களைப்பைப் போக்கிக் கொண்டிருந்தது.
பக்கத்தில் காட்டிலிருந்து எழுந்து வந்த சில் வண்டுகளின் ஒலி அவர்களது காதுக்குள் இன்னிசையாய் வந்து போய்க்கொண்டிருந்தது.
இரைதேடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அவன் முன்னே இரைந்து கொண்டிருந்தன.
நீரில் மூழ்கி மீன்பிடித்துக் கொண்டு மிதக்கும் நீர்க்காகங்கள் ஒரு தொகையாய் வந்து நீந்திக் கொண்டிருந்தன. துTணி டி ல போட்டு மீன்பிடிக்கும் சிறுவர்கள் ஒரு பக்கமாகத் தமது கடமையில் கண்ணாக நின்றனர்.
அப்படியே எல்லாக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டு வந்த மோகனின் கண்கள் குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைப் பார்த்து நிலைத்து நின்றன.
38

அகளங்கள்
அதன் இலையில் அலையால் அடிக்கப்பட்டு வந்து விழும் தண்ணீர் அப்படியே இரசம் போல கட்டி கட்டியாய் மீண்டும் நீருக்குள் விழுவதைப் பார்த்தான்.
'இதுதான் தாமரை இலைத் தண்ணிர்’
என்று நினைத்துக் கொண்டான்
‘எப்பொழுதுமே தாமரை இலையைத் தண்ணிர் பொறுமையாகத் தாங்குகிறதே.
ஆனால் ஒரு சிறு பொழுதாவது, சந்தர்ப்பவசத்தால் அடைக்கலந் தேடும் தண்ணிருக்கு தாமரை இலை கருணை காட்டுவதில்லையே. வந்த உடனேயே வெறுத்து ஒதுக்கித் தள்ளி விடுகிறதே”
என்று எண்ணி அதை அப்படியே மனித இனத்துடனும் ஒப்பிட்டுக் கொண்டான்.
“தாமரை மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. நன்றி கெட்ட தாமரை இலைக்கு நல்ல அழகான மலர் எப்படி வாய்த்தது.
எப்படியிருந்தாலும் தாமரை மலர்களின் அழகே அழகு”.
என்று தாமரை மலர்களிலே மனதைப் பறிகொடுத்து வைத்த கண் வாங்காமல் அதனையே ரசித்துக் கொண்டிருந்தான் மோகன்.
சேகரோ கைகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு பேசாமல் சாய்ந்து கொண்டான்.
தாமரை, இலக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பதை அவன் மனம் எண்ண மறக்கவில்லை.
பெண்களின் முகத்துக்கு “பங்கய வதனம்’ என்றும், கைகளுக்கு "முண்டகக் கரம்” என்றும். பாதங்களுக்கு "கஞ்சமலர்ப் பாதம்”, ‘அரவிந்தத் தாள்’ என்றும். ' கமலக்கண்”, “நளின விழி’ என்றும் 'அம்புய மொட்டுக் கொங்கை” என்றும் "பங்கேருகத்து மலர்போல் விளங்கு வதனம்’ என்றும் இப்படிப் பலப்பல பெயர்களில் பல இடங்களையும் வர்ணிக்க உதவும் தாமரையை இலக்கியக் கண்ணோட்டத்தில் பார்த்து அப்படியே சந்திராவின் அங்கங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டான்.
39

Page 22
ඌ|ගඛණ්ෆ|6|ශ්‍රී
அந்த நேரத்தில் ஒரு தாமரையின் மேல் அமர்ந்து மதுவருந்திக் கொண்டிருக்கும் மதுகரத்தைக் கண்டதும் அவனது கண்கள் கலங்கின. அந்தக் காட்சி அவனை என்றோ படித்த இலக்கியக் காட்சியொன்றிற்கு இழுத்துச் சென்றது.
தாமரைப்பூவைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அதனுள் வண்டமர்ந்து இருப்பதைக் கண்டு அந்த வண்டின் துணையின் மனநிலைக்கு வந்தான். அப்பதுமம் மூடுப்பட்டால் மதுகரத்தின் நிலையென்ன என்று எண்ணமிட்டான்.
பழைய இலக்கியத்தில் வரும் நிகழ்ச்சியொன்று அவனுக்கு இதனை நினைவுபடுத்தியது. ஆண் வண்டொன்று தனது துணையுடன் வந்து தாமரை மலரிலே அமர்ந்து மதுவருந்திக் கொண்டிருந்ததாம். பெண்வண்டு அயலில் எங்கோ பறந்து போக ஆண்வண்டு மதுவருந்தி மயக்கத்தில் மாலையானதையும் மறந்து மலரினுள்ளே தூங்கி விட்டதாம்.
மலர் மாலையானதும் மூடிக் கொண்டது. வண்டு கண் விழித்ததும் நிலைமை புரிந்தது. ஆனால் வெளியில் வர முடியவில்லை.
'பொழுதும் விடியும் பூவும் மலரும்.”
பூ மலர்ந்ததும் பறந்து சென்று தன் துணையை அணைக்கத் துடித்திருந்தது. ஆனால் அவ்வேளையில் அவ்வளியே வந்த யானையொன்று அம்மலரைப் பிடுங்கித் துவைத்து வீசி எறிந்ததாம்.
மலர் கசங்கி விரிய முடியாதிருந்ததால் வண்டு யானையை நொந்து கொண்டு, தன் காதல்த் துணையை எண்ணி ஏங்கிக் கொண்டே உயிர் விட்டதாம்.
இலக்கியத்தில் ஒன்றிப்போய் இருந்த மோகனைக் குழப்புவது போல்
'வா மோகன் போவம். பசிக்குது.”
என்று சேகர் கூறிய வார்த்தைகள் அமைந்திருந்தன.
இருவரும் அவ்விடத்தை விட்டு எழுந்து வீடு நோக்கி நடந்தனர். வாசலில் சந்திரா அவர்கள் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.
பல தடவை வாசலுக்கு வந்து பார்த்துப் பார்த்து ஏமாந்து
40

அகளங்கள்
போயிருக்கிறாள் என்பதை இப்போது அவள் காட்டும் குதூகலமே காட்டுகிறது.
காலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது வாசல்வரை வந்து அவர்களை வழியனுப்பி விட்டு சோர்ந்த மனத்துடன் வீட்டினுள் நுழைந்தது மோகனுக்கெங்கே தெரிந்திருக்கப் போகிறது.
‘நான் மட்டும் தான் சந்திராவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறன்’ என்று நினைத்துக் கொண்டிருந்த மோகனுக்கு சந்திரா வாசலில் தங்களுக்காகக் காத்திருந்த நிகழ்ச்சி ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தமையனை எதிர்பார்த்திருப்பதாகத் தாய்க்குக் கூறிக் கொண்டு சந்திராவும் மோகனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘எங்க யம்மா. இன்னும் அண்ணயக் காணேல்ல.”
என்று ஒவ்வொருமுறையும் தாயிடம் கூறும் போதும் அவளது உள்ளம் அவளுக்காகச் சிரித்துக் கொண்டது.
G
‘அண்ணயக் காணேல்லயே’ என்று சொல்வது சுலபமாக இருந்ததால், சொல்லக் கூடியதாக இருந்ததால் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பருவத்துச் செழிப்பில் பார்ப்போர் மயங்கும் அழகுடன் விளங்கிய அவளுக்கு மோகனின் சுந்தர வதனமும் உயர்ந்த அழகிய தோற்றமும் போதையைக் கொடுத்தன.
காலையிலிருந்து மத்தியானம் வரை அவனையே நினைத்து ஏங்கித் தவித்தது. அந்தப் பேதை உள்ளம்.
நெஞ்சத்தின் அடித்தளத்தில் உறைந்து கிடந்த அவளது உள்ளுணர்ச்சிகள் மோகனின் செங்கமல வதனத்திலிருந்து பாயும் வெங்கதிரின் வெப்பக் கொடுமையால் உருகிற்று.
அவளது நிலையோ
“வாகனைக் கண் டுருகுதையோ (ஒரு) மயக்கமதாய் வருகுதையோ மோகமென்ப திதுதானோ (இதை) முன்னமேநான் அறிவேனோ ஆகமெல்லாம் பசந்தேனே (பெற்ற) அன்னை சொல்லும் கசந்தேனே தாகமின்றிப் பூணேனே (கையில்) சரிவளையுங் ærGórGor?
41

Page 23
ඌ|රැනඛයීල්ප|6|ශ්‍රී
என்றவாறிருந்தது.
வீட்டினுள் மோகனும் சேகரும் வந்த பின் கதவின் ஒரமாக நின்று தயங்கித் தயங்கி மோகனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மோகனின் கண்களும் சந்திராவைத் தேடின.
ஆனால் கண்டு பிடிப்பது இலகுவாக இருக்கவில்லை.
சேகரும் கண்டு விடுவானோ என்ற பயத்தில் தன் பார்வையை அவ்வளவு கூர்மையாக் செலுத்தவும் மோகனால் முடியவில்லை.
இருந்தாலும் மோகனின் விழியென்னும் ஆதவனைக் கண்டு மலர்ந்த அம்புயமென வாசல் இடுக்கில் நின்று ஓர விழி காட்டிக் கொண்டிருந்த சந்திராவின் விழிகளை மோகனின் விழிகளும் சந்தித்து விட்டன.
கண்களின் முதல்ச் சந்திப்பு அதுதான்.
பட்டுத் தெறித்த விழிப் பார்வைகளில் கொட்டிக் கிடந்த இன்பமோ கொள்ளை.
சந்திராவோ அந்த விழி அம்பைத் தாங்க மாட்டாமல் கன்னம் வெட்கத்தில் சிவக்கஅவ்விடத்தை விட்டகன்றாள்.
அவளுக்கு அதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் அவளது தாயார் கொடுத்தாள்.
'சந்திரா! அண்ணை ஆக்களைச் சாப்பிட வரச்சொல்லு.”
என்ற வார்த்தைகள் அவள் இதய மென்னும் தடாகத்தை தேனருவியெனப் பாய்ந்து நிறைத்தது. அவர்களுக்கு முன்னே வந்து. இயல்பான நாணம் முன்செல்ல வார்த்தைகள் பின்வந்தன.
‘அண்ணா! சாப்பிட வரட்டாம்.”
என்று தத்தை மொழியில் மெள்ளக் கூறி அப்படியே,
“மனமுந்தியதோ விழி முந்தியதோ.” தெரியாத வண்ணம் புன்னகையுடன் விழிக்கணை தொடுத்துப் புள்ளிமானெனத் துள்ளி
மறைந்தாள்.
D
42

மாலையில் அவர்களது வீட்டிற்கு அண்மையில் இருக்கும் வாசிகசாலையில் சிறிது நேரப் பொழுது கழிந்தது.
பின்னர் வாசிகசாலையின் ஒரு புறத்திலிருந்த 'கரம் போர்ட்” அவர்களது கைகளில் சிக்கித் தவித்தது.
அவர்கள் அடிக்கும் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டும் தன் பொறுமையைக் காத்துக் கொண்டிருந்ததே அந்தக் கரம்போர்ட் அதுதான் ஆச்சரியம்.
எப்போதோ வாங்கி வைத்த கரம்போர்ட் நீண்ட நாட்களாக விளையாடுவாரற்றுக் கிடந்தது. சேகரைக் கண்டதும் அக் கரம்போர்ட் நிச்சயம் சந்தோசமடைந்திருக்கும்.
அவன்தான் அதைக் கவனமாகப் பராமரித்தவன். இப்போதும் அதைத் துடைத்து துப்புரவு செய்து 'பவுடர்'போட்டு அழகுபடுத்தினான். அவர்களது விளையாட்டில் குயின் கவர்வதில் மோகன்தான் அதிக அக்கறை காட்டினான்.
காரணம் அவன் குயினைக் கவரும் ஆசையில் இருந்ததுதான். அவனுக்கு ஒரு ' குயின்’ தேவைப் பட்டதால் கரம்
43

Page 24
ඵ්lගඛණිල්ප|6|ශ්‍රී
விளையாடும்போதும் "குயினை’க் கவர்வதில் அதிக அக்கறை காட்டியதில் வியப்பில்லைத்தானே.
அந்த ஊர்ச்சிறுவர்கள் கரம் விளையாட்டைப் பார்ப்பதில் மட்டுமே மகிழ்வார்கள். விளையாடத் தெரியாது. சிறுவர்களை விளையாடவும் விடமாட்டார்கள்.
இளைஞர்கள்கூட மழைக்காலமாதலால் வயல் வேலைகளில் கவனஞ் செலுத்தியதால் கரம் விளையாட்டு மாரிகாலத்தில் இருக்கவில்லை. சேகர் அந்தக் கரம் போர்ட்டை தனது வீட்டுக்கே கொண்டு வந்து விட்டான். அதனால் இரவில் கூட விளையாடக் கூடியதாக இருந்தது.
கிராம சபையின் உட்தவியினால் தான் அந்தக் கிராமத்து வாசிகசாலை இயங்கி வந்தது.
கிராமசபைத் தலைவர் சேகரின் தந்தை என்பதால் மிகவும் இலகுவாக அந்தப் போர்ட் அவர்களின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
வீட்டில் கரம் விளையாடுவது மோகனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
காரணம் சில சமயங்களில் சந்திராவும் அவர்களுடன் சேர்ந்து கொள்வதுதான்.
அன்று பக்கத்து ஊரில் ஒரு கலியான வீடு. சேகரின் நண்பனொருவனுக்குத்தான் திருமணம். கட்டாயம் போகவேண்டி இருந்ததால்,
'மோகன்! இண்டைக்கு கலியான வீடொண்டுக்குப் போக வேணும். என்ர(t)பிரண்ட் ஒருவனுக்கு கலியாணம்.”
என்று அழைப்பு விடுத்தான் சேகர்.
“சேகர், நேற்று முழுக்க வெயிலில திரிஞ்சு தலைவேர்த்து தடிமலாயிருக்கு. இப்பிடி மூக்குச் சிந்திக் கொண்டு அழுதுவடியிற முகத்தோட கலியான வீட்டில நிக்கிறது சரியில்ல. நீ போயிற்று வாவன்.”
என்று கூறித் தப்பித்துக் கொண்டான்.
'சரி நான் இரவு வந்திருவன். அதுவரைக்கும் புத்தகங்கள்
44

அகளங்கள்
இருக்கு வாசிச்சுக் கொண்டிரு. உனக்குத்தான் புத்தகங்கள் எண்டாப் போதுமே.”
என்றபடி போய் விட்டான் சேகர்.
ஒன்றாகவே எங்கும் திரிந்த நண்பர்கள் இன்று தனியானார்கள். இன்று மோகனுக்குத் தனிமை தேவையாயிருந்தது.
மோகனுக்குத் தனிமை தேவையாக இருக்கவில்லை. ஆனால் சேகரிடமிருந்து சற்று நேரம் பிரிந்திருக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால் தனியாகப் பிரிந்திருந்தான்.
‘இன்றையப் பொழுதும் கழிந்தால் நாளை வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ -
என்று மனதுக்குள் கூறிக்கொண்டு ஒரு புத்தகத்தைப் புரட்டினான். கட்டிலிலே, புத்தகத்துத் தாள்களோடு, அவனும் போட்டி போட்டுப் புரண்டு கொண்டிருந்தான். கண்கள் புத்தகத்தில் பதிந்திருந்தன.
ஆனால் நெஞ்சம் புத்தகத்தில் இல்லாததால் என்ன வாசித்தான் என்பது அவனுக்கே தெரியாது.
அவனது எண்ணங்கள் புத்தகத்தை வாசிப்பதை விட சந்திராவின் இதயத்தை யாசிப்பதிலேயே முனைந்திருந்தன.
எண்ணங்கள் சந்திராவைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இருக்க
புத்தகத்தையும் தட்டிக் கொண்டே படுக்கையில் புரண்டான்.
இரு மன இடைவெளிகளுக்கிடையே ஒரு அலை இயக்கம் இருப்பதை பலர் அறிந்திருக்கலாம். ஒருவரைப் பற்றி நாம் நமது முழுக்கவனத்தையும் செலுத்திச் சிந்தித்தால், சிந்திக்கப்பட்டவருக்கும் ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றி சிந்திப்பவரைப் பற்றி எண்ணத்தோன்றும்.
இதனை பழங்காலத்தில் கூட அறிந்திருந்தனர். சாப்பிடும்போது பிரக்கேறினால் யாரோ தம்மைப் பற்றிக் கதைப்பதாகக் கூறும் வழக்கம் இன்றும் இருப்பது அதற்குச் சான்று கூறுகிறது.
சாதாரணமாக இளைஞர்களும் கன்னிகளும் இந்த மன அலை இயக்கத்தை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
இல்லாவிடில் இனியாவது கவனித்துப் பார்க்கலாம்.
45

Page 25
ඌlගඛණිල්ප|6|ශ්‍රී
ஒருவருக்கு அண்மையில் இருந்து கொண்டு அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தால், மற்றவரும் ஏதோ ஒரு உணர்ச்சிக்கு ஆட்பட்டு அவரைப் பார்ப்பதைக் காணலாம்.
இப்படி மோகனின் சிந்தனை அலைகள் சந்திராவின் மனத்தைத் தாக்கி விட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவள் ஏன் இப்படி நடந்து கொண்டாள்.
காலை பத்து மணியளவில் மோகனின் அறைக்குள் நுழைந்த சந்திரா தேனீரை அவனிடம் நீட்டினாள்.
அவனும் அன்று எதிர்பார்த்த சந்தர்ப்பம் இன்று கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு மெதுவாக அவளது கைகளில் தனது கைகள் படும்படியாக தேநீரை வாங்கிக் கொண்டான். அவளும் அதனை எதிர்பார்த்தவள் போல பதறவோ நடுங்கவோ இல்லை.
ஆனால் அவனது மனமும் கரங்களும் தான் நடுங்கின.
அவள் முகத்தில் அந்தச் சந்தர்ப்பத்தில் மின்ன வேண்டிய நாணத்திற்குப் பதில் புன்னகைதான் தவழ்ந்தது.
மோகனைச் சந்திப்பதற்கென்றே அதுவும் தனிமையில் சந்திப்பதற்கென்றே அந்தச் சந்தர்ப்பத்தில் தேனீர் போட்டுக் கொண்டு வந்திருந்தாள் சந்திரா.
மோகன் கதைக்க முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருப்பதால் சந்திராவே கதைக்கத் தொடங்கினாள்.
"போர் அடிக்கிறதா?.”
“தனிய இருக்கிறதால அப்பிடித்தான் இருக்கு. இப்ப. நீங்கள் வந்து கதைக்கிறதால கொஞ்சம்.”
என்று இழுத்தான் மோகன்.
‘புத்தகங்கள் இருக்கு வாசிக்கலாமே.”
"புத்தகம் வாசிக்கக்கூடிய மனநிலையில இப்ப நான் இல்ல'
"ஏன் அப்பிடி என்ன மனநில. சிலவேள இஞ்ச இருக்கப் பிடிக்கேல்லயோ.”
“சீ.சீ. அப்பிடியில்ல. ஆனா. ஆனா. ஏனோ தெரியாது.
46

அகளங்கள்
புத்தகம் வாசிக்கிறதில நாட்டம் செல்லுதில்ல.”
“நல்ல புத்தகங்கள் கிடக்கு. அந்த மூலேக்க இருக்கிற அலுமாரியில வீரகேசரிப் பிரசுரங்கள் இருக்கு. அண்ணை எல்லா வீரகேசரிப் பிரசுரங்களையும வாங்கி வாசிப்பார்.”
‘நானும் அனேகமா எல்லா வீரகேசரிப் பிரசுரங்களும் வாசிக்கிற
நான்
இரவின் முடிவு' செங் கை ஆழியானி ர கதை. வாசிச்சனீங்களோ..? 'பாலமனோகரன்ர நிலக்கிளி கிடக்கு.”
'இல்ல, நல்ல கதையாம். ஆனா எனக்குக் கிடைக்கேல்ல. நிலக்கிளி வாசிச்சநான்.”
மோகனின் பதில் வந்த கொஞ்ச நேரத்தில் அலுமாரியிலிருந்த “இரவின் முடிவு” கதைப் புத்தகம் அவனது கைகளில் வந்து விழுந்தது.
'நல்ல கத வாசிச்சிப் பாருங்கோ.”
சந்திராவை விட மோகன்தான் கதைப்பதில் அதிகம் கூச்சப்பட்டான்.
சந்திராவுக்கு மோகனுடன் கதைப் பதில் அதிகம் ஆர்வமிருந்ததை அவளது நடத்தையே நன்கு காட்டியது.
சிறிது நேரம் இருவரும் மெளனமாக இருந்தனர்.
கதைப்புத்தகம் சம்பந்தமான கதை மாறி மெளனம் நிலவியது.
சந்திராதான் மீண்டும் மெளனத்தைக் குலைத்துக் கதையைத் தொடங்கினாள்.
‘அண்ணா இரவுதான் வருவார்.”
என்று ஏதோ கதைக்க வேண்டுமென்பதற்காகக் கூறினாள்.
அவனும் "அப்பிடித்தான் சொல்லிற்றுப் போனவன்”
என்று முடித்தான்.
மீண்டும் மெளனம் நிலவியது.
அவள் ஏதோ கதைக்க முயன்று விட்டு பின் கதைக்காமல் சிறுபுன்னகையை மட்டும் உதிர்த்தாள்.
47

Page 26
ඌ|රුනඛයීල්ප|6|ශ්‍රී
மொட்டவிழ்ந்து விரியும் வெண்முல்லைபோல் பல்வரிசை காட்டி அவள் ஈந்த புன்னகையில் அவன் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருப்பதாக அறிந்தான்.
"முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.”
என்ற குறளடிகள் அவனது மனத்திலே தோன்றி அவளது புன்னகைக்குப் பொருள் தேடச் செய்தது. பதிலுக்கு அவனும் புன்னகைத்தான்.
சிறிது நேரத்தில் ஒரளவு கதைக்கத் தொடங்கி விட்டனர்.
அவர்கள் கதைத்த நேரத்தைவிட மெளனமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்ற நேரம்தான் அதிகம்.
தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தை எடுத்து ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான் மோகன்.
“அவன் எப்படி அதை அவளுக்குக் கூறுவது என்று தடுமாறினான். எப்படியும் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் சொல்ல முடியாதநிலை” என்று இருந்தது.
அவள் அந்தப் புத்தகத்தை வாங்கி சிறிது நேரம் புரட்டி விட்டு ஒரு இடத்தை எடுத்துக் காட்டினாள்.
“என் உள்ளம் அவரிடம் சென்றதை எப்படித் தெரிவிப்பதென்று எனக்குத் தெரியவில்லை.
நான் பெண். என் வெட்கத்தை விட்டு எப்படிக் கூறுவேன்.” என்று இருந்தது.
புத்தகம் இருவருக்குமாகக் கதைத்தது.
“எனது மனநிலையிலேயே அவளும் இருக்கிறாள் என்று ஏற்கனவே தெரிந்திருந்தால்.”
“இப்பொழுதாவது எனது காதல் உள்ளத்தை அவர் புரிந்திருப்பார் என நினைக்கிறேன்’
இப்படியே கதைப் புத்தகம் மூலம் தமது காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்.
D 48

க.பொ.த. சாதாரண தரம் வரை படித்து விட்டு வீட்டில் தாய்க்குத் துணையாக இருந்து வந்தாள் சந்திரா.
வவுனியாவிலிருக்கும் பெண்கள் பாடசாலையின் விடுதியில் தங்கிப் படித்ததனால் அவள் மிகவும் அமைதியாகவே படித்தாள்.
ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பம் மிகக் குறைவு.
அதனால் இன்று மோகனுடன் கதைப்பதில் தன்னையும் அறியாமல் இன்பங் கண்டாள்.
அதற்குக் காரணம் அவளது கூச்ச சுபாவம் மட்டுமல்ல பருவ வயதுமாகும்.
மோகனின் அழகும், குணமும், அவளைக் கவர்ந்து விட்டன.
மிகவும் கனிவாகப் பேசும் அவனது பேச்சுக்களிலே அவளுள்ளம் கனிந்தது.
தமையன் இருந்ததால் கடந்த இரு தினங்களில் அவளால் மோகனுடன் கதைக்க முடியவில்லை. இன்று நல்ல ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.
49

Page 27
| ඌlගඛයීඝ්‍රතිශ්‍රී
அவளும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறவில்லை.
இருந்தாலும் சகஜமாகக் கதைப்பதற்கு நாணம் தடைபோட்டுக் கொண்டே இருந்தது. -
மோகன் கிளிநொச்சியில் க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்து எழுதுவினைஞர் சேவையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள்
முடிந்து விட்டன. பெண்களுடன் பழகும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவில்லையென்றே கூறலாம். அவனது குடும்ப நிலையும் அவனைப் பெண் களுக்குப் பினி னாலி சுற் றித் திரிய இடங்கொடுக்கவில்லை.
தானுண்டு தன் வேலையுண்டென்று வாழ்ந்து வந்தான். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுடன் கூட அவன் கதைப்பதில்லை. கதைப்பதற்கு ஆசையாயிருந்தாலும் அவனால் கதைக்க முடிவதில்லை.
பாடசாலையில் படிக்கும் போதும் சரி, பின்னரும் சரி அவன் பெண்கள் விடயத்தில் அக்கறை எடுத்ததில்லை.
கொழும்பில் வேலைக்குச் சென்ற பின்புதான் அவனுக்கு இத்தகைய உணர்ச்சிகள் வேலை செய்யத் தொடங்கின.
கதைப் புத்தகங்கள், இலக்கியங்கள் போன்றவற்றைப் படிக்கும்போதும், சினிமாப் படங்களைப் பார்க்கும்போதும், அவன் இயல்பாகவே பாத்திரங்களுடன் ஒன்றிப்போய் தானும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் சிந்தனையிலே முகிழ்த்தது.
வெள்ளவத்தைக் கடற்கரையிலே நடைபெறும் காதல் லீலைகளையும் காமலீலைகளையும் பல தடவை கண்டும் கேட்டும் தனது உள்ளத்தில் உணர்ச்சியை வளர்த்துக் கொண்ட அவனுக்கு தானும் அப்படி இருக்க முடியாதா? என்ற எண்ணம் அடிக்கடி எழும்.
ஆனால் அவனது குடும்ப நிலையும், தாயின் அறிவுறுத்தலும் வளர்ந்த விதமும், அந்த ஆசைகளுக்குத் தடைபோட்டு நிறுத்தி விடும்.
அப்படியே உள்ளத்தில் ஆசைகளைப் பூட்டி வைத்துக் குமுறிக் கொண்டிருந்தவனுக்கு இன்று தன் அறையில் தனக்கு முன்னால் ஒரு பருவமங்கை நிற்பதும் கதைப்பதும் ஏதோ கனவு காண்பதுபோல் இருந்தது.
50
 

அகளங்கள்
'சந்திரா கரம் விளையாடுவமா.”
என்றான் தட்டுத்தடுமாறி, அவளும்
'ஓம் விளையாடுவம்.”
உற்சாகமாகக் கூறி விளையாட அமர்ந்தாள்.
'அம்மா, அப்பா ஆரும் கண்டா ஒண்டும் சொல்ல மாட்டினமோ”
'இல்ல. ஒண்டும் சொல்ல மாட்டினம். அப்பா இப்ப வரமாட்டார். அம்மா அப்பிடியொண்டும் சொல்ல மாட்டா.”
மோகனின் விருப்பத்துக்கு அவளது ஆதரவும் கிடைத்தது.
இருவரும் கரம் விளையாட்டில் ஈடுபட்டனர். கரம் விளையாடிக் கொண்டிருந்தபோதே சில சமயம் அவர்களது கரங்களும் விளையாடின.
அதாவது காய்களை அடிக்கும் 'டிஸ்க்கை எடுக்கும்போது பல தடவை அவர்களது கரங்கள் சந்தித்தன.
'நீங்கள் ஏன் க.பொ.த. உயர்தரம் படிக்கேல்ல” இது மோகனின் கேள்வி.
'வீட்டில விருப்பமில்ல. பொம்பிளப் பிள்ளயஸ் கணக்கப் படிக்கக் குடாதெண்டு சொல்லி நிப்பாட்டிப் போட்டினம்’
இது அவளது பதில்
இப்படியே இடையிடையே உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சிலசமயம் பல அர்த்தமற்ற கதைகளையும் கதைத்துக் கொண்டனர்.
இதயத்துக்கோ, மூளைக்கோ என்ன கதைக்கிறோம் என்று தெரியாது.
இருந்தாலும் வாய் ஏதோ கதைத்துக் கொண்டுதான் இருந்தது.
இடையிடையே கரம்போட்டின் கீழிருந்த இருவரது கால்களும் சந்தித்துக் கொண்டன.
51

Page 28
ඌ|රැනඛයීල්ප|6|ශ්‍රී
முதல் தடவை மோகனின் கால்கள் சந்திராவின் கால்களைச் சந்தித்ததும்
'சொறி சந்திரா.”
என்றான். அவளோ
“பறுவாயில்லை.” என்றாள்.
மறுமுறை கால்கள் சந்தித்தபோது மோகன் சொறி
சொல்லவுமில்லை. அவன் சொல்லவில்லையென்று அவள் கவலைப்படவுமில்லை. அதற்குமாறாக அவள் ஒரு பொருள் பொதிந்த நானங் கலந்த புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.
பதில் புன்னகையும் உதிர்ந்தது. கரம் விளையாட்டு கால் விளையாட்டாக மாறியது.
பின்னர் அது 'கரம்’ விளையாட்டாகவும் மாறியது.
ஆம், அவனது கரங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்தன.
ஒருவாறு பொழுது மிகவும் இன்பமாகக் கழிந்தது.
மதிய உணவும் முடித்து மாலையில் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் சந்திராவின் தாயும் வந்திருந்து கதைத்தார்.
பின்னர் அவர் நித்திரையாகி விட்டார்.
அவர்கள் இருவரும் நித்திரை செய்யாது கதைத்துக் கொண்டிருந்தனர்.
சந்திராவின் படம் ஒன்று மோகனின் கைக்கு மாறியது.
மோகனின் கையெழுத்தும் விலாசமும் சந்திராவின் “ஒட்டோகிராப்' இல் பதிந்தன.
இவ்வாறாக அவர்கள் தங்கள் காதலை அன்றைய ஒரு பொழுதிலேயே மிகவும் வேகமாக வளர்த்து விட்டிருந்தனர்.
இரவு நேரம் சேகர் வந்ததும் மோகனுக்கு அவனுடன் கதைக்க
52

அகளங்கள்
முடியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு அவனை ஆட்டிப் படைத்தது.
அவன் செய்தது குற்றமா? காதலிப்பது ஒரு குற்றமா? அதுவும் அவன் அவளையே திருமணஞ் செய்வதாக எண்ணியிருக்கும் போது அவன் செய்த காரியங்கள் எப்படிக் குற்றமாகும்.
என்றோ ஒருநாள் இதைவிட மேலாக அனுபவிக்கத்தானே போகிறான். அதுவும் இவளையேதான்.
அவளையே மணஞ் செய்வதாக அவன் நினைக்கும்போது அவன் தனது செயலைக் குற்றமாக எண்ணவில்லை. அப்படியென்றால் அவன் செய்த குற்றம்தான் என்ன?
நம்பிய நண்பனுக்குத் துரோகம் இழைத்ததுதான் குற்றம்.
உண்மைதான். நண்பனின் தங்கையுடன் தகாத முறையில் நடந்து கொண்டது குற்றம்தானே.
இந்த எண்ணம் அவனது உள்ளத்தை உறுத்தியதால் அவனால் சேகருடன் கதைக்க முடியவில்லை.
ஆனால் சந்திராவுடன் அவன் அப்படிப் பழகியதுதான் குற்றமா? அந்தக் காரியத்தைச் செய்வதில் அவனுக்கு மட்டுமல்ல விருப்பமிருந்தது. அவளுக்கும் பூரண விருப்பம் இருந்தது.
அவனுக்கு மட்டுமன்றி அவளுக்கும் சந்தோஷம் இருந்தது. அதனால் அது எப்படிக் குற்றமாகும்.
சாதாரணமாக உலகத்துக்குத் தெரியவராது என்று நிச்சயமாகத் தெரிந்தால், மூன்றாம் ஆளுக்கும் தெரியாமல் செய்ய முடியுமாயின். ஆண் பெண் சம்பந்தப்பட்ட தவறுகளுக்கு அனேகர் உடன்படுவார்கள்.
ஆனால் இது அப்படியுமில்லையே. அவளை எப்படியும் மோகனே திருமணஞ் செய்யப் போகிறான்.
காரியம் சற்று முந் தி விட்டதேயன் றி செயலில் குற்றமில்லைத்தானே. என்று எண்ணித் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு சேகருடன் கதைத்தான்.
ஒருவாறு அன்றையப் பொழுதும் கழிந்தது.
D 53

Page 29
மறுநாள் சேகர், மோகனை பஸ்ஸில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
காலையில் வீட்டிற்குச் செல்வதற்கு தனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த மோகனின் கண்கள் எதையோ தேடின.
தேடவேண்டிய அவசியத்தை சந்திரா நீண்ட நேரம் வைக்கவில்லை.
சேகரின் தாயாரிடமும் கூறி விடைபெற்றுக் கொண்டு திரும்பியவன் சந்திராவைக் கண்டு ஒன்றுஞ் சொல்ல முடியாத நிலையில் தயங்கித் தயங்கி நின்றான்.
‘போயிற்று வாறன்’
என்று அவளிடம் சொல்ல வேண்டுமென்று அவனது மனம் துடித்தது.
ஆனால் சேகர் தவறாக நினைத்து விடுவானோ என்ற பயம் தான் அவனை அப்படிச் செய்யவிடாது தடுத்தது.
அவளைப் பார்த்து ஓர் இளமுவல் பூத்து தன் கண்களால் யாடை காட்டிவிட்டுப் புறப்பட்டான்.
54
 
 

அகளங்கள்
வைத்தகண் வாங்காமல் அவன் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா.
உருவம் கண்ணை விட்டு மறைந்ததும், கண்களைத் துடைத்துக் கொண்டு தனது அறையை நாடினாள்.
சிறிது நேரம் மனத்தினுள்ளே அழுதவள் அடக்க முடியாமல் கண்களிலிருந்து நீர் சிந்துவதைக் கண்டு அதனைத் தாய் கண்டு விடுவாளோ என்ற பயத்தில் கண்களைத் துடைத்து விட்டுத் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
இணைபிரிந்த அன்றில், இனம் பிரிந்தமான், மணம் பிரிந்த மலர், இவைகளின் நிலையாக அவளின் நிலை இருந்தது. சிறகிழந்த பறவையாய் துடிதுடித்தாள்.
மோகன் பஸ்ஸில் கிளிநொச்சிக்குச் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவனது மனம் மட்டும் ஓமந்தையை விட்டுச் செல்ல மறுத்தது.
உயிரற் ற உடலாயப் அவன் பிரயான ஞ் செய்து கொண்டிருந்தான்.
கடந்த தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கோர்வைப் படுத்தி மனத்திரையில் படமாக ஓடவிட்டுக் கொண்டான்.
காதலிப்பதைவிட காதலிக்கும் காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சிந்திப்பதில்தான் அதிக இன்பம் இருக்கும்.
சிந்தனைகளைச் சுழல விட்டுக் கொண்டு கிளிநொச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
முறிகண்டியில் எல்லோருடனும் அவனும் இறங்கினான். இந்தக் கோவிலின் அருகால் செல்லும் வாகனங்கள் எல்லாம் இவ்விடத்தில் நின்று யானைமுகனைத் துதித்துச் செல்வது வழக்கம்.
கற்பூரத்தை வாங்கிக் கொண்டு கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் மோகன்.
அவனது காதுகளில் இருவரது சம்பாசனை விழுந்தது.
‘அண்ண! இவடத்தில ஏன் எல்லா வாகனங்களும் நிண்டு போறது.”
"இதில இருக்கிற பிள்ளையாரின்ர மகிமை அப்பிடி. அதால எல்லாரும் வந்து தரிசித்துக் கொண்டுதான் போறவினம்’
55

Page 30
ඌ|ෆාබද්ෆ|6|ශ්‍රී
“என்னண்ண இதில உள்ள பிள்யைார் எண்டு புறம்பாச்
சொல்றியள். எல்லாப் புள்ளையாரும் ஒண்டுதானே’
'அதென்னவோ எனக்குத் தெரியாது. ஆனா இந்தப்
பிள்ளையார் அப்பிடி.”
"அதுசரி வேற சமயத்தாக்கள்.” அவயும் நிண்டுதான் போவினம்.” "இவடத்தில நிக்காமல்ப் போனா என்ன நடக்கும்” இப்படிக் கேள்வி கேட்டுக் கொண்டு வந்தான் ஒருவன். அவன் இந்த வீதிக்கு சற்றும் பழக்கமில்லாதவன் போல்
இருந்தது.
G
என்ன நடக்குமோ. முந்தி ஒருக்கா ஒரு வெள்ளக்காரனின்ர
கார் நிக்காமல்ப் போய்த்தான் பிரண்டது. பிறகும் ஒருக்கா ஒரு கார்
நிக்காமல்ப் போய் அடிபட்டது.
இவடத்தில நிக்காட்டி அங்கால போகப் புள்ளையார் விடார்.”
என்று தனது திறமையைக் காட்டிக் கொண்டான் பதில்
சொல்பவன். . .
மோகன் கோவில் வாசலில் வந்து கற்பூரத்தைக் கொழுத்திவிட்டு
தன்மனம் போல ஆண்டவனை வழிபட்டுக் கொண்டான்.
அவனது வேண்டுகோள் அவனையும் சந்திராவையும் மிகவிரைவில் இணைத்துவைக்க வேண்டுமென்றே இருந்தது.
அந்த நேரத்தில் அவனுக்கு அந்த எண்ணந்தான் மிகுந்திருந்தது. கோவில் முகப்பிலே தூங்கும் வாளியினுள் கைவைத்து
திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு வந்து சந்தனக் கட்டையையும் அரைத்து பொட்டொன்றை நெற்றியிலே இட்டுக் கொண்டான்.
திருநீறு பூசிப் பொட்டு வைத்ததும் என்றுமில்லாதவாறு அவனது மனம் அமைதி அடைந்தது.
பக்கத்துக் கடைகளில் கற்பூரம் விற்பவர்கள் கடலை விற்பவர்களின் ஒலி காதைத் துளைத்தது.
ஒரு சுருள் கடலையும் வாங்கிக் கொண்டு பஸ்ஸில் போய் அமர்ந்தான்.
D
56
 

கிளிநொச்சியில் அவனால் நிற்க முடியவில்லை. தாயிடம் விடைபெற்றுக் கொண்டு கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே மோகன் அவனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
பழையபடி இருவரும் ஒன்றாகவே திரிந்தனர்.
ஆனால் அவர்களது நட்பைக் குலைக்க விரும்பியது போல் அந்தக் காரியம் அன்று நடைபெற்றது.
‘சேகர் இதென்ன இது. கொஞ்சங்கூட மனிசத் தன்மையே இல்லாமல், சீ இதென்ன வேல. ஒரு படிச்சவன் பண்புள்ளவன் செய்யிற வேலயே இது.”
"மோகன்! நான் எண்டைக்குமே இப்பிடிச் செய்ததில்ல. ஆனா இண்டைக்குத்தான் செய்தனான். ஏன் தெரியுமா? இதில எனக்கும் பெரிய பங்கிருக்கு”
"பங்கிருக்கோ இல்லயோ, நீ செய்தது எனக்கு கொஞ்சங் கூடப் பிடிக்கேல்ல.
“இது செய்யக் கூடாத வேலை.”
‘'நீ செய்யக் கூடாத வேலயெண்டு சொல்லுறாய். ஆனா,
57

Page 31
அலைக்குமிழ்
எனக்கு இது இந்த நிலமையில கட்டாயம் செய்ய வேண்டிய வேலையா இருக்கு”
“சேகர்! நீ செய்ததையும் செய்து போட்டு சரியெண்டு வாதாடவோ போறாய்.”
"நான் சரியெண்டு வாதாடவும் வரேல்ல. ஆனா என்ர மனச்சாட்சிப்படி சரி.”
'உனக்கு மட்டும் தான் மனச்சாட்சி இருக்கோ. மற்றவைக்கு
இல்லையோ, இப்பிடி நீ நம்பிக்கைத் துரோகம் செய்வாயிண்டு நான் கனவில கூட நினைக்கேல்ல.”
“நம்பிக்கைத் துரோகம் செய்தது நானில்ல நீதான்.”
“சேகர்! அது வேற பிரச்சினை. ஆனா இப்ப இஞ்ச நடந்த பிரச்சினையைக் கவனி. நீ செய்தது என்னால மன்னிக்க முடியாதது.”
என்று சத்தம் போட்டுப் பேசினான்.
“கொஞ்சமாவது யோசிச்சுப் பார் மோகன்.
சத்தம் போட்டு குழப்பாமல் அமைதியாய்க் கதை. அப்பிடி நான் என்ன பெரிசாச் செய்திட்டன். கொஞ்சம் யோசிச்சுப்பார்”
“என்னண்டா கேக்கிறாய், எனக்கு வந்த கடிதத்தை என்ர அனுமதியில்லாமல் நீ எப்பிடி உடைப்பாய்?
உன்ன நம்பி உன்னோட ஒண்டா இருக்கிறனே. எனக்கு நீ செய்தது நம்பிக்கைத் துரோகமில்லையா.”
'இதே நிலையில நீ இருந்தா. நீ என்ன செய்வாய்.
உனக்கொரு தங்கச்சி இருந்து. அவள் எனக்குக் கடிதம் போடுறதை நீ பாத்தா என்ன செய்வாய்
- என்ர தங்கச்சியின்ர கையெழுத்தோட அடிக்கடி உனக்குக் கடிதம் வரேக்க என்னால எப்பிடி அதப் பிரிச்சுப் பாக்காமல் இருக்க முடியும்.”
"அப்பிடியெண்டா நீ என்னட்டக் கேட்டிருக்கலாமே. நான்
58

அகளங்கள்
கட்டாயம் சொல்லி இருப்பனே’
மோகன் சற்று நிதானத்துடன் கதைத்தான்
‘எப்பிடிடா கேக்கிறது. நான் எதிர்பாத்த மாதிரி இல்லாமல் வேற மாதிரி நடந்திருந்தா. சில சமயம் உன்னையும் ஒரு சகோதரனா நினைச்சு எழுதியிருந்தா.”
“சேகர் கதையளக்க எனக்கு விருப்பமில்ல. முதல்ல என்ர பிரச்சினைக்கு முடிவு வேணும். நீ செய்தது பிழை. அதை நீ ஒப்புக் கொள்ளவேணும்'
G. G
சரி அதுக்கென்னடாப்பா. இப்ப என்ன வந்திற்று. என்ர தங்கச்சிய நீ விரும்புறாய். அவளும் உன்ன விரும்புறாள்.
நீங்கள் ரெண்டு பேரும் கலியாணஞ் செய்ய வேணுமெண்டு நானும் விரும்புறன். பிறகென்ன’
“சேகர்! அது வேற பிரச்சினை. என்ர கடிதத்தை நீ பிரிச்சதுதான் என்ர பிரச்சினை.”
'இண்டைக்கு கடிதம். நாளைக்கு டயறி, இப்பிடியே நீ செய்தா எப்பிடி இருக்கும்.”
'இப்ப நீ எனக்கு அடிக்கப் போறியோ. அடிக்கிறண்டா அடி. பறுவாயில்லை. ஆனா நான் நிச்சயமா இதுக்கு முதலோ, இதுக்குப் பிறகோ இப்பிடி வேல செய்ததில்ல. செய்ய மாட்டன். இப்ப ஏன் துள்ளுறாய்.
உன்ர கால்ல விழவேணுமோ சொல்லு விழுறன். ம் இதப் போய்ப் பெரிசுபடுத்திக் கொண்டு.”
மோகனால் அதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியவில்லை. சேகரின் அன்பு நீர் வெள்ளம் மோகனது கோபக் கனலைக் குளிரச் செய்து விட்டது.
'வெறி சொறி மச்சான்.”
என்றவாறு சேகரைக் கட்டிப் பிடித்தான்.
59

Page 32
ඌ|රුනඛණ්ෆ|6|ශ්‍රී
'மச்சான் நீ பயப்பிடாத, நான் இருக்கிறன். உங்கட கலியாணத்தை நான் செய்து வைக்கிறன்.”
அவர்கள் நட்பு அந்தத் தடவைக்குப் பின் மேலும் வலுவாகியது. நட்பும் ஒரு முறை பிரிந்து சேருவதில்தான் பலம் இருக்கும். துன்பம் வரும்போது தான் நண்பர்களின் தரத்தை அறியலாம்.
‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்”
என்ற வள்ளுவர் வாக்கிற்கொப்ப துன்பம் வரும்போதுதான் நண்பர்களை அறியலாம்.
இரு நண்பர்கள் ஒருவர்மேல் ஒருவர் கோபமாக இருக்கும்போது நடந்து கொள்வதைக் கொண்டுதான் அவர்களது நட்பின் ஆழத்தை அளந்து கொள்ளலாம்.
நண்பர்கள் மீண்டும் சேர்ந்தனர். நட்பு முன்னைவிடப் பலமாகியது. அதன்பின் மோகன் கிளிநொச்சிக்குப் போகும்போதெல்லாம் சேகருடன் வந்து சேகரின் வீட்டில் தங்கிய பின்பே செல்வான்.
ஒரிரு நாட்கள் தங்கி சந்திராவுடன் கதைத்து மகிழ்ந்த பின்னர்தான் கிளிநொச்சிக்குச் செல்வான்.
சேகரும் தனது தங்கைக்கும் நண்பனுக்குமிடையேயான காதலை வளர்ப்பதில் அக்கறை காட்டினான்.
கூடியவரை இருவரையும் தனியே விட்டு வெளியே எதற்காவது சென்றுவிடுவான்.
இவர்களது காதல்ப் பயிர் சேகரின் ஆதரவு என்னும் மழையினால் செழித்து வளர்ந்து கொண்டிருந்தது.
ஓமந்தையில் நிற்கும் காலங்களில் சில சமயம் சேகர் தனது தங்கையையும் கூட்டிக் கொண்டு மோகனுடன் வவுனியாவிற்குப் படத்திற்குச் செல்வான்.
சேகர் தங்கையைப் படத்துக்குக் கூட்டிச் செல்வதை தடுப்பதற்கு வீட்டில் யாருமே இல்லைத்தானே. வீட்டில் மூத்த பிள்ளை என்ற 60

அகளங்கள்
செல்வாக்கு அதற்கு உதவியது.
படத்திற்குச் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் மோகனும் சந்திராவும் ஒன்றாகவே இருந்தனர். -
பலவகைப்பட்ட கதைகளையும் பரிமாறிக் கொண்டனர். தமது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி இன்பக் கனவு கண்டு களித்தனர்.
படத்தில் வரும் கதாநயகன் கதாநாயகியாக தாங்களே மாறி விட்டதுபோல் கற்பனை பண்ணினார்கள்.
படமாளிகையில் இருப்போர் இவர்களையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதும். இவர்களைப் பற்றிக் கதைப்பதும் இவர்களுக்கெங்கே தெரியப் போகிறது.
சில இளஞ்சிட்டுக்கள் இந்தக் காதல் ஜோடியைப் பார்த்து ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததுதான் அவர்களுக்கெங்கே தெரிந்திருக்கப் போகிறது.
D
61

Page 33
கிளிநொச்சியில் மோகனின் தாயார் தன்மகனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்.
அவனது நல்வாழ்வு ஒன்றே அவளது குறிக்கோளாக இருந்தது. இருந்தாலும் மகனைப் பற்றி மட்டுமா சிந்தித்தாள்.”
இறந்துபோன தன் தந்தையைப் பற்றி மோகன் ஏன் எண்ணுகிறான். அவனுக்குத்தான் தந்தையின் முகமே தெரியாது.
தந்தையின் துணையில் லாமலேயே அவனை எத்தனை பாசத்தோடு கஸ்டப்பட்டு அவனது தாய் வளர்த்து விட்டிருக்கிறாள். அவனை வளர்ப்பதற்காக அவள் சிந்திய வியர்வை கொஞ்சமா? இல்லை கண்ணிர்தான் கொஞ்சமா?
இளம் பெண்ணொருத்தி கணவனின்றி உலகத்தில் வாழ்வது எவ்வளவு கஸ்டமானது என்பதை அவளிடம் கேட்டால் தான் தெரியும்.
அவளது வயதும், பருவமும், அழகும் அவளுக்கு எத்தனை தொல்லைகளைக் கொடுத்தன.
ஒருநாள் அவள் கண்ணசைத்திருந்தால், அவளது உடலில் வியர்வை நாற்றம் ஏற்பட்டிராது. பன்னீரின் வாசனையிலேயே 62
 

அகளங்கள்
காலங்கடத்தியிருப்பாள்.
கண்ணிரில்க் கஞ்சிகாய்ச்சிக் குடித்திருக்க மாட்டாள். கனிச் சுவையும், தேன்சாறும் அவளைத்தேடி ஓடி வந்திருக்கும். கந்தல் உடுத்துக் கலங்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது.
காஸ்மீரப்பட்டு அவளைத் தொட்டு அணைத்திருக்கும். ஆனால், ஆனால் ஆனால். வாழ்ந்து காட்டுகிறேன் என்று சமூகத்தை எதிர்த்து நின்றவள் போரிட்டுக் கொண்டிருக்கிறாள்.
தன்னை வளர்ப்பதற்குத் தன் தாய்பட்ட கஸ்டங்களையெல்லாம் அவன் அறிந்தே இருந்தான். அதனால் அவனுக்கு அவனது தாய் தெய்வமாகவே இருந்தாள்.
அவன் கோயில் கட்டிக் கும்பிட வேண்டிய தெய்வம் தன் தாய்தான் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.
அதன்படியே தாயையும் மதித்து நடந்து வந்தான். தாயும் மகனது சுதந்திரத்துக்குத் தடை போடுவதில்லை. சிறு பிள்ளையாக இருக்கும்போது மட்டும் மிகவும் கண்டிப்பாகவும் அதேவேளையில் பரிவாகவும் வளர்த்ததனால் தான் அவன் இன்று பண் போடு வளர்ந்திருக்கிறான்.
இம்முறை கிளிநொச்சிக்கு வந்த மோகன் தாயிடம் ஒரு விடயம் கதைப்பதற்காக முயன்றான். எப்படிக் கேட்பது என்ற எண்ணம் அவனைச் சங்கடத்திலாழ்த்தியது. எப்படியும் கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் இப்படியான கதைகளை தாயுடன் அவன் இதுவரையில் கதைத்ததே இல்லை. அதனால் அவன் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது.
நீண்ட நேரம் தாயருகே இருந்து கதையைத் தொடங்கினான்.
'அம்மா அண்டைக்கு எங்கட ஒபீசில வேல செய்யிற ஒருத்தன் என்னோட கதைக்கேக்க சொன்னான். அவன் கலியாணம் முடிச்சு நாலுமாசந்தானாம். அதுக்குள்ளயே வாழ்க்கையே வெறுத்துப் போச்சாம். மனிசி பெரிய வாயாடியாம். ஒரே சண்டைதானாம்.”
"இப்பிடி எத்தினை இருக்கு. எல்லாம் ஒழுங்கா வந்து வாய்க்கோணும்.” -
"நான் வாற அண்டைக்குக் கூட சொன்னான். வீட்ட
63

Page 34
ඌ|ගඛයීල්)||6||5
சமைக்கேல்லயாம். மனிசிக்கும் சேத்து சாப்பாடு கட்டீற்றுப் போறான். அவனப் பாக்க எனக்கிண்டாப் பாவமாயிருந்தது”
"அதுக்கென்ன செய்யிறது. அவரவற்ற விதிப்படி தானே நடக்கும்”
என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
மோகன் தொடர்ந்தான்.
'ஏன்தான் கலியாணம் முடிச்சனோ? எண்டு சொல்லிக் கவலப்பட்டான்.” அவன் முந்தி வேற ஆரயோ விரும்பினவனாம். தாய் தகப்பன் சீதனம், சாதி அது இது எண்டு இவளக் கட்டி வைச்சிற்றினமாம்”
'இப்பிடித்தான் வாழ்க்க. நினைக்கிறதெல்லாம் நடக்காது. நடக்கக்கூடியத நினைக்கிறதில்ல.
ம். எங்கயோ விரும்பி எங்கயோ முடிச்சு, சீரழியுது. ஒவ்வொருத்தருக்கும் ஆண்டவன் அளந்த அளவுதான் கிடைக்கும்.”
சிறிது நேரம் மெளனம் நிலவியது.
மீண்டும் மோகனே குழப்பினான். இம்முறை தான் கதைக்க வந்த பிரச்சினையை ஒரே போடாகப் போட்டு உடைத்தான்.
'அம்மா நான் ஆரையும் விரும்பினா ஏசுவீங்களா.”
அவளோ திகைத்து விட்டாள். அவன் இவளவு நேரமும் கதைத்த கதையிலிருந்து அவளுக்கு எல்லாமே விளங்கி விட்டது.
"மோகனுக்கும் வயசு வந்திற்று. அவன் தனக்கு ஏற்ற துணயத் தேடிக்கொள்ளுற காலமும், தேவையும் வந்திற்று.
அதுமட்டுமில்ல தனக்கு ஏற்ற துணயத் தேடிக்கொள்ளக்கூடிய அறிவும் அவனுக்கு வந்திற்று”
அவளைப் பொறுத்தவரை அவனைக் குழந்தையென்றே எண்ணிக்
கொண்டிருந்தாள். இப்போதுதான் புரிந்தது. அவன் குழந்தை தானா? இன்னமும் குழந்தையாக இருப்பானா?
மகன் தனக்குத் துணைஆத் தேடும்வரை, தான் அவனுக்கு

அகளங்கள்
ஒரு துணையைத் தேடாததை நினைத்துத் தன்னையோ நொந்து கொண்டாள்.
அனேகமாக காலா காலத்தில் பெற்றோர் செய்யத் தவறுவதையே பிள்ளைகள் செய்வார்கள்.
ஆனால் அனேக பெற்றோர்கள் தங்கள் குறையை எண்ணாது பிள்ளைகளின் மேல்தான் பழியைப் போடுவார்கள்
ஆனால் மோகனின் தாயாரோ தன் மகன் மேல் குற்றஞ் சாட்டவில்லை. தன் தவறையே எண்ணி வருந்திக் கொண்டாள்.
'அம்மா! நான் கலியாணஞ் செய்யிறவள் உங்களக் கண்போல காப்பாற்றுறவளா இருக்கோணும்.
இல்லாட்டி நான் கலியாணமே செய்யமாட்டன். நானே இருந்து உதவி செய்வன்’
என்று தனக்கு ஆதரவு தேடுவதற்காக தனக்குத் தாயின் மேலுள்ள பாசத்தை வெளிப்படுத்தினான் மோகன்.
'தம்பி! என்னக் காப்பாற்றுறதுக்காக நீ கலியாணம் செய்ய வேண்டாம். நீ உன்ர வாழ்க்கைய நல்லா அமைக்கிறதுக்காகத்தான் கலியாணஞ் செய்ய வேணும்”
என்று அறிவுரை வழங்க முன்வந்தாள்.
இனி அவளுக்குத்தான் என்ன இருக்கிறது.
மோகன் திருமணஞ் செய்து விட்டால் அவளது கடமையும் முடிவடைந்து விடும்தானே.
6
'அம்மா! நான் ஒரு நல்ல பெண்ணாப் பாத்தா நீங்கள்.”
என்று இழுத்தான் மோகன். அவளோ அவனது கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல்
“டேய்! இப்ப என்னடா அவசரம். எல்லாம் பாப்பம்"
என்று கூறித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
65

Page 35
அலைக்குமிழ்
‘'நீ நல்லா இருந்தா அதப் பாத்துக்கொண்டே என்ர காலத்தக் கழிச்சிருவன். எனக்கு வேற ஆர் இருக்கு.
அப்பவே சாகவேண்டியவள். உன்ர பலன்தான் இவ்வளவு நாளா என்ர உசிர வைச்சிருந்திருக்கு”
என்று கூறிக் கொண்டே மனத்தினுள் குமுறினாள்.
தன் தந்தையைப் பற்றித்தான் தாய் கதைக்கிறள் என எண்ணிக் கொண்டான் மோகன்.
மோகனும் தனது எண்ணம் ஈடேறும் என்ற எண்ணத்தில் சந்தோஷமாக கொழும்பை நோக்கிப் பயணமானான்.
அவளது தாயுள்ளம் ஏங்கித்தவித்தது.
மனத்திலே எங்கோ ஒரு மூலைக்கு ஒதுக்கித் தள்ளி விடப்பட்ட தனது கடந்த காலக் கதையை, கசப்பான நினைவுகளை மோகன் மூலம் நினைவுபடுத்திக் கொண்டவள் மீண்டும் மிகுந்த சிரமத்தின் பேரில் தன் கடந்தகால நினைவுகளை மூட்டைகட்டி பழையபடி தனது இதயத்தின் மூலையில் ஓர் இடத்தில் மீண்டும் வெளிவர முடியாதபடி தள்ளிப்பூட்டி வைத்தாள்.
இவ்வளவு நாளாக தகப்பன் இறந்ததாகவே மோகனுக்குச்
சொல்லிக் காலத்தைக் கடத்தி விட்டாள் சரஸ்வதி.
தன் அந்தரங்க வாழ்க்கையை தன் மகன் அறியக் கூடாதென்று அவள் எவ்வளவு பாடுபட்டாள்.
அவளைப் பொறுத்தவரைக்கும் அவளது மகனைப் பொறுத்தவரைக்கும் அவளது கணவன், அவனது தந்தை இறந்து போனவர்தான்.
ஆனால் உண்மையில் அவனுக்குத் தந்தை யார். அவனுக்குத் தெரியாது. அவளுக்குத் தெரியுமா?
அதுவும் பொறுத்திருந்து பார்ப்போம்.
தனது இளம் வயது வாழ்க்கையைப் பற்றி தனது மகன் அறியக் கூடாதென்பதற்காக அவனை ஒருவரது வீட்டிற்குமே செல்ல 66

அகளங்கள்
விடுவதில்லை. சிறுவயதில் பாடசாலையும் வீடுமாகவே வளர்ந்தான்.
ஊரில் அவனுக்கு நண்பரே இல்லை என்று சொல்லுமளவுக்குக்
குறைவு.
அது சரஸ்வதிக்கும் சந்தோஷமாகவே இருந்தது. யாராவது ஏதாவது அவனுக்குக் கூறி விடக்கூடாதே என்று ஒவ்வொரு கணமும் அவள் பயந்தாள்.
D
67

Page 36
மோகன் கொழும்புக்குச் சென்றபின் தான் அவளது மனத்திற்கு சிறிது ஆறுதல் கிடைத்தது.
கொழும் பில் அவனுக்கு யாருமே எதுவுமே சொல் ல முடியாதுதானே. கிளிநொச்சியில் கூட சரஸ்வதியின் முழு வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் இல்லைத்தான்.
இருந்தாலும் சில விடயங்கள் தெரியாமலிருந்தாலும் கதை கட்டி விடுவார்கள்.
தொடக்கமும் முடிவும் தெரிந்தால் போதுமே கற்பனையை கதையாக்கி ஊர் சிரிக்கச் செய்வதில் இந்தச் சமூகத்துக்கு எவ்வளவு ஆவல்.
தங்கள் குறைகளை மறைப்பதற்கென்றே மற்றவர்கள் மேல் பெரிய பெரிய குறைகள் இருப்பதாகக் கதைப் பதில் தான் எத்தனைபேருக்கு அலாதி இன்பம்.
மற்றவன் அளவுக்கு தன்னால் வளர முடியாவிட்டால் அவனைக் குனியச் செய்து அதன்மூலம் தான் வளர்ந்து விட்டதாக சமூகத்துக்குக் கணக்குக் கொடுப்பவர்கள் எத்தனையோ பேர் எமது சமுதாயத்தில்
$கிmார்கள். இருக்கிறார்கள் 68
 

அகளங்கள்
குனிந்தவன் நிமிர மாட்டான் என்ற நப்பாசை அவர்களுக்கு.
மோகன் கொழும்பில் வேலைபார்த்துக் கொண்டிருப்பதால் தன்னைப் பற்றிய கதைகளை அவனுக்குச் சொல்ல யாருமே இல்லையென்று சிறிது மகிழ்ந்திருந்தாள் சரஸ்வதி.
ஆனால் அண்மைக் காலத்தில் மோகனின் நடத்தை அவளுக்கு கவலையை அளித்திருந்தது
மோகன் வவுனியாவிற்குச் செல்வது, அதுவும் ஓமந்தைக்குப் போய் வருவதை நினைக்க அவளுக்கு மனம் பாரமாகியது.
அவனை ஒ மந் தைக் குப் போக வேணி டா மென் று சொல்வதாயிருந்தால் அதற்குக் காரணம் சொல்ல வேண்டுமே.
அதுதான் அவளுக்குப் பெரிய பிரச்சினையான விடயமாக இருந்தது. ஓமந்தையில் யாரும் அவனைப் பற்றி விசாரித்து அறிந்து ஏதாவது சொல்லி விட்டால், அவளது நெஞ்சத்தை இந்த எண்ணம்
கசக்கிப் பிழிந்தது.
கண்ணிரைத் துடைத்துக் கொண்டு சிந்தனையிலிருந்து விடுபட்டாள். மகனுக்கு விரைவில் திருமணத்தை முடித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நம்பினாள்.
உடனேயே மோகனுக்கு கடிதம் எழுதினாள்.
அன்பின் மகனுக்கு,
நலம். உனது சுகமறிய ஆவல்.
உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்.
கண்டதையெல்லாம் சாப்பிட்டு உடம்பில் வருத்தத்தைத் தேடிக் கொள்ளாதே. அதற்காக ஒன்றுமே சாப்பிடாமலும் விடவேண்டாம்.
வெய்யிலில் திரிந்து காய வேண்டாம். கொழும்புத் தெருக்களில் வாகனங்கள் அதிகம் இருக்கும்.
விபத்துக்கள் நிறைய நடைபெறுவதாகக் கேள்வி. கரைஓரமாகச் செல்லவும். றோட்டில் திரிய வேண்டாம்.
69

Page 37
அலைக்குமிழ்
இரவில் எங்குமே செல்ல வேண்டாம். திருடர் அதிகமாக இருக்கிறார்களாம்.
நீ ஏன் போய்ச் சேர்ந்த உடன் கடிதம் போடவில்லை? நான் உன் கடிதத்தைக் காண ஆவலுடன் இருப்பது உனக்குத் தெரியாதா?
மேலும், நீ அன்று கேட்ட விடயத்தை எண்ணிப் பார்த்தேன்.
நீ விரைவில் திருமணம் செய்து வாழவேண்டுமென்பதுதான் என்
ஆசை.
நல்லவளாக பண்புள்ளவளாகப் பார்த்து திருமணஞ் செய்தால்தான் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அன்று நீ கதைத்ததிலிருந்து நீ யாரையோ மனதில் எண்ணியிருப்பதாக அறிகிறேன். அவளுடன் அதிகமாகப் பழக வேண்டாம்.
அவளை ஏமாற்றவும் வேண்டாம்.
பெண் பாவம் பொல்லாதது. கூடிய விரைவில் அவளது பெற்றோருடன் கதைத்து ஒரு முடிவு எடுப்போம்.
அது பற்றி நீ வீட்டுக்கு வரும்போது கதைப்போம்.
கடிதம் கிடைத்ததும் பதில்போடு. மிகுதி பின்.
இப்படிக்கு உன் அன்பு SDLibLDT
தாயின் கடிதத்தைப் பார்த்ததும் மோகனுக்கு அளவில்லா ஆனந்தமாக இருந்தது.
எப்படியும் தனது திருமணம் நடந்தே தீரும் என்பதில் அவனுக்கு இப்பொழுது முழு நம்பிக்கையும் வந்து விட்டது.
சேகரிடமும் இந்தக் கடிதம் பற்றிக் கூறினான்.
அவனும் சந்தோஷப்பட்டான். சேகரின் வீட்டில் பிரச்சனை வராது என்று மோகன் திடமாக நம்பிக் கொண்டிருந்தான்.
சேகர், வீட்டில் சொல்லி எப்படியும் சம்மதம் பெற்று விடுவான்
70

அகளங்கள்
என்ற நம்பிக்கை மோகனுக்கு இருந்தது.
தனது வீட்டிலும் பிரச்சினை இல்லை. அதுதான் தாயின் கடிதம் வந்திருக்கிறதே.
மோகனைப் போல் அதிஸ்டசாலி யாருமில்லை. அவனது மனமும் அடிக்கடி அப்படிச் சொல்லிக் கொண்டது.
அவன் அதிஸ்டசாலிதானா?
மறுமுறை வீட்டுக்குப் போகும்போது தாயிடம் முழுவிபரமும் சொல்ல வேண்டுமென்று நினைத்தான்.
சந்திராவுக்கு எழுதிய கடிதத்திலும் தனது தாய்க்கும் விருப்பம் என்று தெரிவித்திருந்தான்.
நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.
சேகர் அவனை வவுனியாவிற்கு வரும்படி அழைத்தான். சந்திராவும் கடிதம் போட்டிருந்தாள்.
வவுனியாவிலிருந்து இருபத்தி இரண்டு மைல் தொலைவிலுள்ள புதுார் என்னும் கோவில் திருவிழாவுக்குப் போவதற்காக வரும்படி எழுதியிருந்தாள்.
தெய்வத்தின் சந்நிதானத்திலும் தங்கள் காதலை அரங்கேற்ற அவள் விரும்பியிருந்தாள்.
கோவிலில் சோடியாக நின்று கும்பிடுவதில் ஒரு மகிழ்ச்சிதானே. அதுவும் பெண்களுக்கு இதைவிட வேறு என்ன பாக்கியம் கிடைக்கும்.
கண்ணிறைந்த மனம் நிறைந்த காதலனோடு பெற்றோரின் சம்மதத்தோடு கோவிலில் திருவிழாவில் கலந்து கொள்வதில் யாருக்குத்தான் சந்தோஷமிருக்காது.
மோகனும் ஓமந்தைக்குப் போய் கோவிலில் நின்று விட்டு பின்னர் கிளிநொச்சிக்குச் செல்வதாகத் திட்டம் போட்டிருந்தான்.
வீட்டிற்கும் அதுபற்றி கடிதம் எழுதியிருந்தான்.
71

Page 38
ඌlරුනඛයීෆ|6|ශ්‍රී
புதுார் கோவிலுக்குப் போவதாக மகன் எழுதிய கடிதத்தை வாசித்ததும் சரஸ்வதிக்கு உடம்பெல்லாம் ஏதோ ஒரு பயம் ஆட்கொண்டது.
நெஞ்சம் பலமாக அடித்துக் கொண்டது.
புதுர் கோவில்தான் அவளது வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய இடம்.
கடந்த காலக் கசந்த நினைவுகள் நெஞ்சத்தில் நிழலாடத் தலைப்பட்டன.
வழமைபோல் அந்தக் கசந்த நினைவுகளுக்குத் திரைபோட்டு மறைத்து வைத்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள். சிந்திப்பதை தவிர அவளால் வேறு என்னதான் செய்ய முடியும்.
72

11
ஓமந்தையிலிருந்து மாலை ஐந்து மணியளவில் புதூருக்குக் செல்வதற்கு மோகனும் . சேகரும் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தனர்.
மோகன் எங்கே சந்திரா கோவிலுக்கு வராமல் போய்விடுவாளோ என்ற எண்ணத்தில் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.
வேட்டி உடுத்துக் கொண்டே சந்திராவைப் பற்றி யோசனையில் ஆழ்ந்தான்.
சந்திரா கோவிலுக்கு வருவதற்கு வெளிக்கிடுவதாகவும்
அவனுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் இங்கு வந்தது வீணாகி விடப் போகிறதே.
'மோகன் என்ன இது. உள்ப்பட்டு நீட்டாயிருக்கு. என்னண்டு வேட்டி கட்டுறாய்”
என்ற குரலைக் கேட்டு தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டான்.
மீண்டும் அவனது எண்ணங்கள் அவளையே சூழ்ந்தன.
é.
*உன்னோட கோயிலச் சுத்திப் பாக்கவோ மினக்கட்டு இவளவு
73

Page 39
அலைக்குமிழ்
தூரம் வந்தனான்.”
என்று சேகரிடம் கூறவேண்டும்போல் இருந்தது மோகனுக்கு.
“சேகர்! சந்திரா வரேல்லையா.
அவவையுங் கூட்டிக் கொண்டு போவம். பாவம் வீட்டில தனிய இருக்கப் போறா’
என்று சொல்ல வாயெடுத்தான். ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை. எப்படித்தான் சொல்வது. நம்பிக்கை இழந்தவனாக சோர்ந்த மனத்துடனும் 6) I ITILQULI முகத்துடனும் நின்ற அவனுக்கு சந்திராவின் குரல் சற்றுத் தெம்பளிப்பதாக இருந்தது -
'அம்மா அண்ணேட்டச் சொல்லுங்கோம்மா, நானும் போப் போறன்’
என்ற சொல்லைக் கேட்ட மோகன்
‘அண்ண வேண்டாமெண்டாலும் நான் கூட்டிப் போறன். என்னோட 99 - -
6.T
என்று சொல்லிவிடலாமா என்று சிந்தித்தான்.
ஆனால் அந்த உரிமை அப் போது அவனுக்கு இருந்திருக்கவில்லையே.
சேகர் அமைதியாகக் கூறிய பதில் அவனுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.
'அம்மா! என்னால ஏலாது. எனக்கேன் வீண்தொல்ல
பஸ்ஸில ஒரே சனமா இருக்கும். போகவுமேலாது.”
என்று கூறி முடிக்க முதல்
'அம்மா! அம்மா! என்னம்மா. சொல்லுங்கோவனம்மா”
74

அக்ளங்கள்
‘என்னால கோயில்ல இவளோட இருக்கேலாது. இஞ்ச
நிக்கட்டும்.
நான் மாட்டன். ஒவ்வொரு முறயும் போறதுதானே.
இந்த முற போகாட்டி என்ன” என்று ஒரு பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டான். மோகனுக்கு வந்த ஆத்திரம் சொல்லுந்தரமில்லை.
- கோயிலுக்குப் போகாமல் வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று
96.L நினைத்தான். " .
g இப்பிடியெண்டு தெரிஞ்சிருந்தா வராமலே می ۶،
விட்டிருக்கிலாமே" . . : -
என்று சலித்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு ஆதரவாக சேக்ரின் தாயார் 'தம்பி! நீ கூட்டிப் போகாமல் அவள் வேற ஆர் கூட்டிப்
போறது.
அவளுக்கு கோயில் குளத்துக்குப் போக ஆச இருக்காதோ என்று சொல்லி ஒருவாறு சேகரைச் சம்மதிக்க வைத்தாள்.
“ 9ÜLITLIT“
என்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டான் மோகன்.
ஏதோ ஒருவாறு சந்திராவும் வரப்போகிறாள் என்பதால் மோகன் அளவு கடந்த சந்தோசமடைந்தான்.
அவன் அவளோடு சேர்ந்து கோவிலுக்குப் போக வேண்டுமென்று தானே வந்தவன்.
அதனால் தன் எண்ணம் ஈடேறப் போவதில் அவன் மகிழ்ச்சியடைவது இயற்கைதானே.
புதுார் நாகதம்பிரானுக்கு ஒரு கும்பிடு போட்டுக் கொண்டான்.
மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் தரிப்பில் வந்து காத்திருந்தனர்.
75

Page 40
அலைக்குமிழ்
நீண்ட நேரம் ஒரு பஸ்ஸிலுமே ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
வவுனியாவைப் பொறுத்தவரை இத்தத் திருவிழாவுக்குத்தான் அதிக மக்கள் செல்வார்கள்.
அதனால் பஸ்ஸில் ஒரே நெருக்கமாகத்தான் இருக்கும். பஸ் ஸ்ராண்டில் காத்திருப்பதில் சேகருக்குத்தான் சலிப்பு.
ஆனால் மோகனுக்கோ சந்திராவுக்கோ, அந்தப் பொழுது சலிப்பாக இல்லை.
சேகருக்கு, மோகன் சந்திரா காதல் விடயம் தெரிந்திருந்ததால் அவர்களது கதைகளுக்குத் தடைபோட அங்கு யாருமே இருக்கவில்லை.
சந்திராவுக்கும் தனது காதல் பற்றி தமையனுக்கும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அவர்கள் இருவரையுமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஏனைய பிரயாணிகளுக்கு அவர்களது நடவடிக்கைகள் விசித்திரமாக இருந்திருக்க வேண்டும்.
இல் லா விட்டாலும் அதனை விசித் திரமாக் கி பல கற்பனைகளையும் புகுத்தி தமக்குள் பரிமாறிக் கொண்டனர்.
தாம் செய்ய நினைப்பவைகளை அவர்கள் செய்ததாகக் கூறுவதில் அவர்களுக்கு கொள்ளை இன்பம்.
நீண்ட நேரத்தின் பின் ஒருவாறு ஒரு பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. சந்திரா நிற்கிறாளே என்று எண்ண மோகனுக்கும் கவலைதான்.
ஆனால் அது அவனுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்போது அவன் ஏன் கவலைப்படுகிறான்.
அவனில் சாய்ந்துகொண்டுதான் அவள் நின்றாள்.
இல்லாவிடில் வேறு யாரிலாவது சாயவேண்டும்.
அவளும் மோகனில் சாய்வதில் சந்தேஷப்பட்டிருப்பாள் என்பது அவள் சாய்ந்து நிற்கும் பாணியிலேயே தெரிகிறது.
76

அகளங்கள்
மரத்தைத் தழுவும் மலர்க் கொடியென அவளது உடல் அவனது உடலில் நன்கு சாய்ந்திருந்தது.
சந்திரமதியின் சுயம்வரத்தைக் கூறும் அதன் ஆசிரியர். வீரகவிராஜர். அரிச்சந்திர புராணத்தில் கூறும் ஓர் இடத்தைத்தான் அந்த பஸ்ஸில் ஆண்களும், பெண்களும் முட்டி மோதிக் கொண்டிருந்த காட்சி நினைவு படுத்துகிறது.
சந்திரமதியின் சுயம்வரத்துக்கு வந்த சனக்கூட்டத்தில் பெண்களின் அங்கங்களில் ஆண்களின் அங்கங்கள் பட்டு நெரிவதை அந்த ஆசிரியர் ஒரு நல்ல கண்ணோட்டத்தில் கூறுகிறார்.
"மோது கொண்டலைப் பொருமூரி யானைதம் மீது கொண்டலைத்த மெய்ம்மெலிவு மாறவே தாது கொண்டலைகுழல் தையலார் முலை வேது கொண்டொற்றினார் வீரர் மீதெலாம்”
யானையில் வந்த வீரர்கள் யானையின் முதுகிலிருந்து அடைந்த உடல் நோவுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு அரிச்சந்திரனின் வருகையைக் காண்கிறார்களாம். அந்த வீரர்களின் உடலிலே தோன்றிய வருத்தத்தை நீக்கத் தம்முலையென்னும் வேது கொண்டு ஒத்தடங் கொடுக்கிறார்களாம் பெண்கள்.
இளமங்கையரின் வனமுலை வீரர்களின் உடலெங்கும் படுவதை கவிஞர் வர்ணித்ததுபோல்தான் பஸ்ஸின் அலைப்பிலே மெய்வருத்தம் கொண்ட காளையரின் உடல் நோவைத் தீர்ப்பதுபோல்தான் பாவையரும் அந்த பஸ்ஸில் நடந்து கொண்டார்கள் என்று சொல்லவும் வேண்டுமா
நல்ல வேளையாக தமிழர் தம் கலாசாரத்தில் ஒரு விதிவிலக்கு வைத்திருக்கிறார்கள்.
கோவில் திருவிழாவில் கன்னியரைக் காளையர் முட்டுவதால் அது பெண்களின் கற்புக்கு பங்கமேற்படாது என்று கூறியிருக்கிறார்கள். இல்லாவிட்டால்.’
பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டே சென்றது.
வவுனியாவிலிருந்து இருபத்தி இரண்டு மைல் தொலைவில்
77

Page 41
அலைக்குமிழ்
அமைந்திருக்கிறது இக்கோவில்.
பதின்ஏழு மைல்கள் வரை யாழ்ப்பாண வீதியில் சென்று பின்னர் மேற்குத் திசையில் திரும்பிச் செல்ல வேண்டும்.
பஸ்ஸில் மோகனும் சந்திராவும் குதூகலமாகக் கதைத்துக் கொண்டு சென்றார்கள்.
அவர்களைப்போல் அல்லது அவர்களைப் போல் வரத்துடித்துக் கொண்டு எத்தனை விடலைகள் அதே பஸ்ஸில் இருந்தனரோ,
பஸ் ஊர்ந்து செல்வதால் அவர்களுக்குக் கவலையில்லை.
சந்தோஷமாகப் பொழுது போகும்போது யார்தான் நேரத்தைப் ப்ற்றிக் கவலைப்படுவார்கள்.
ஆனால் சந்தர்ப்பவசமாக பஸ்மாறி ஏறியவர்கள் புதுாரில் சந்திக்கலாமென்று எதிர்பார்த்துப் போய்க்கொண்டிருப்பவர்களுக்கு பஸ்ஸின் வேகம் வெறுப்பூட்டியதும் இயற்கைதானே. பஸ் றைவர்தான் என்ன செய்வான். மண்வீதி, விரைவாகச் செல்வதும் கஸ்டம்.
ஒருவாறு புதூர்க்கோவிலை அடைந்தது பஸ்வண்டி
78

வைகாசி மாதத்தில்தான் புதூர்க் கோவில் திருவிழா நடைபெறும்.
ஒரு இரவு மட்டுந்தான் திருவிழா.
ஒரு வருடத்தில் ஒருமுறை மட்டுமே திருவிழா நடைபெறுவதால் அங்கு கூடும் சனத்தொகை ஆயிரக்கணக்கிலடங்கும்.
வவுனியாப் பகுதியிலுள்ள மக்கள் மட்டுமின்றி யாழ்ப்பாணத்து மக்களும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாங்குளம் மக்களும் அந்தக் கோவிலுக்கு வருவார்கள்.
அங்கு கூடும் மக்களைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சிதான்.
ஆண்டவன் அருள்வேண்டி ஆலயம் வருவோர், ஆலயத்துக்கு வருவோரைப் பார்ப்பதற்கு வருவோர்.
இப்படி ஆலயத்தில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும்.
ஆஸ்திகர்கள் அருள்வேண்டி வருவார்கள்
நாஸ்திகர்கள் நன்கு பொழுது போக்கவென்று வருவார்கள்.
அந்த ஒரு இரவில் எத்தனைபேரை எத்தனை விதத்தில் பழக்கம்
79

Page 42
ඌ|රැනඛයීල්ප|6|ශ්‍රී
பிடிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தக் கோவில் நாகதம்பிரான் கோவில் என அழைக்கப்படுகிறது.
இங்கு ஒரு நாகபூசை நடைபெறுகிறது.
கோவிலைச் சுற்றிக் கும்பிட்டுக் கொண்டு ஒரு மரத்தடியில் வந்து நினறனர்.
மோகன், சந்திரா, சேகர் ஆகியோர்.
அவர்கள் அருகே இருந்த ஒரு பெரியவர் தனது அருகே நின்ற சிறுவன் ஒருவனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
'இந்த மரத்தில நாகபாம்பு இருக்கு. அதில கீழ வைச்சிருக்கு முட்டை, பால் இதையெல்லாம் இந்தப் பாம்பு வந்து குடிக்கும்”
‘எங்க அப்பு பாம்பக் காணேல்ல.”
"அந்தா ஒரு சின்னப்பாம்பு மரப்பொந்துக்க இருந்து எட்டிப் பாக்குது.”
கிழவன் காட்டிய திசையில் மோகனும் பார்த்தான். ஒரு சிறு பாம்பு தலையை நீட்டிக் கொண்டிருந்தது.
"அப்பு ஏன் இப்பிடி பாம்புக்கு சாப்பாடு வைச்சு வளக்கினம்’
"பாம்பு எண்டு சொல்லக்குடாது. இது நாகதம்பிரான்.
இஞ்ச நாகதம்பிரானுக்கு பால், முட்டை, வைச்சா எங்கட ஊர்களில பாம்பு கடிக்காது.
நாங்கள் எல்லாம் எவளவு புல்லுக்க திரியிறம்.
அப்ப பாம்பு கடிக்காமலிருக்கோனுமெண்டா இஞ்ச வந்து கும்பிட்டு பால் வைக்க வேணும்’ கிழவனின் அறிவுரையை அருகில் நின்ற அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
நீண்ட காலமாக இங்கே பாம்புகள் வசித்து வருகின்றன.
இந்த நாகதம்பிரானை வழிபட்டால் பாம்பு கடிக்காது என்ற
80

அகளங்கள்
நம்பிக்கையிலேயே அனேகர் இங்கு வருகிறார்கள்.
வவுனியாவைப் பொறுத்தவரை வயல், காடுகளில் திரிபவர்கள் அதிகம் இருப்பதனால் பாம்புக்குப் பயப்படாமல் இருப்பதற்காக இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
பாம்பு கடித்தால் கடிக்கப்பட்டவரைக் கொண்டு வந்து கோவில் மண்டபத்தில் போட்டு விடுவார்கள்.
அங்கு பூசை செய்யும் பூசகர் கொடுக்கும் மண்ணினால் அந்த விஷம் இறங்கி உயிர் பிழைப்பதாக இன்றும் கூறுகிறார்கள்.
மோகனும் மற்றையோரும் அப்படியே அந்த மரத்தடியிலிருந்து கும்பிட்டுக் கொண்டு வந்தனர். வாசலில் இன்னொரு உரையாடல் அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
இந்தக் கோவிலைப் பற்றி அறிவதில் மோகனுக்கு ஆர்வம் இருந்ததால் உரையாடலைக் கேட்டுக் கொண்டு நின்று விட்டான்.
'மச் சான் சும் மா பாம்புக்குப் பாலவாக்கிறாங்கள். தேவையில்லாத வேல. வெறும் மூடக்கொள்க. இஞ்ச பாம்புக்கு பால் வைச்சா அங்க பாம்பு கடிக்காதாம்.
எப்பிடி இருக்கு வேடிக்க.”
“டேய், கோயிலுக்க நிண்டு கொண்டு இப்பிடியே கதைக்கிறது.
உனக்குப் பிடிக்காட்டி நம்பாமல் விடுறதுதானே. ஏன் கிண்டல் பண்ணிறாய்.”
'இந்தக் காலத்தில கூட இவளவு மூடக்கொள்கையோட சனம் இருக்கே.”
'அதிருக்கட்டும். கடவுள் நம்பிக்கையில்லாத நீ ஏன் கோயிலுக்கு வந்தனி”
"சும்மா இது வழிய பெட்டையளைப் பார்க்கலாம்.”
“பெட்டையஞக்குப் பின்னால திரியிறது மூடப் பழக்கமில்லையோ,
81

Page 43
அலைக்குமிழ்
இளம் வயதில நீ பக்தியை நம்பியிறாயில்ல.
அதேபோல பெட்டையஞக்குப் பின்னால நீ திரியிறதயும் வயசுபோன ஆக்கள் மூடப் பழக்கமெண்டு சொல்லலாந்தானே”.
இருவரது விவாதமும் காரசாரமாக மாறியது.
'இல்ல மச்சான் அது வேற பிரச்சனை.
ஆனா சும்மா இஞ்ச பாம்பு தெய்வம் எண்டு சொல்லி ஏமாத்துகினம். இஞ்ச பாம்பு ஒண்டுமில்ல.
இருந்தாலும் அதால ஒரு பிரயோசனமுமில்ல”
“டேய் சும்மா பிரச்சனை எடுக்காத,
உனக்குத் தெரியாததெல்லாம் மற்றவனுக்கும் தெரியாதெண்டு நினைக்கக்கூடாது.
இந்தக் கோயிலின்ர சரித்திரம் என்னண்டு தெரியுமா உனக்கு.”
என்று தன் கட்சியைப் பலப்படுத்த முயன்றான் அவன்.
"சரி சொல்லன் பாப்பம்.”
என்று பொறுமையாகக் கேட்டான் மற்றவன்.
“முந்தி ஒரு பாம்பு இஞ்ச ஒரு மரத்தில இருக்கிறதா அறிஞ்சு பால்பழம் வைச்சு வந்தாராம் ஒருவர்.
அவர் வைக்கிற பால்பழம் எல்லாத்தையும் பாம்பு சாப்பிடும்.
ஆனா அவர் ஒரு நாளும் பாம்பக் காணேல்லயாம். அவருக்கு ஒரு நாளைக்காவது அந்தப் பாம்பக் காண வேண்டுமெண்டு ஆச.
ஒவ்வொரு நாளும் நாகத்தக் கும்பிடேக்க தனக்குக் காட்சி தரச் சொல்லிக் கேப்பாராம்.
ஒரு நாள் கனவில அசரீரியா என்ன நேரில பாத்தா நீ பயந்திருவாய். அதால காலயில வாசல்ல பார்.”
82

அகளங்கள்
எண்டு சொல்லிச்சுதாம்.
காலம பூசாரியார் வந்து பாக்க கோயில் மணலில அஞ்சு தலைகள் சேர்ந்த ஒரு பாம்பின் உருவம் இருந்ததாம்.
அதுக்குப் பிறகுதான் இந்தக் கோயில் பிரபலமானது'
அவர்களது உரையாடலைத் தொடர்ந்து கேட்க முடியாதபடி பக்த வெள்ளம் தள்ளிக் கொண்டு வந்து பிரித்து வைத்தது.
மோகன், சந்திரா, சேகர் ஆகியோர் கோவிலிலிருந்து திரும்பி வந்து பாய் ஒன்றை வாங்கி ஒரு மரத்தின் கீழ் போட்டுக் கொண்டு அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.
பக்கத்திலுள்ள கடலைக்காரியிடம் கடலை வாங்கி வந்தான் சேகர்.
மோகனது வாயும், சந்திராவினது வாயும் கதைப்பதில் மட்டும் நிற்கவில்லை.
கடலையைத் தின்னுவதிலும் முனைந்திருந்தது. அங்கு வந்து போய்க் கொண்டிருந்த தனது நண்பர்களுடனே கதைப்பதிலேயே சேகருக்கு சந்தோஷமாக இருந்தது. சந்திராவோ, யாரையும் வருவோர் போவோரைப் பார்க்கக்கூடிய நிலையிலில்லை.
மோகனுடன் மட்டுமே கதைத்துக் கொண்டிருந்தாள்.
அடிக்கடி நண்பர்களுடன் சிறிது தூரம் வரை சென்று விட்டு திரும்பவும் மரத்தடியில் வந்து அமர்ந்து கொண்டான் சேகர்.
சிறிது நேரங் கழித்து சேகருக்கு ஒரு நண்பன் வந்து தொல்லை கொடுத்தான்.
"மச்சான் அவள் வந்திருக்கிறாளடா.”
'ஆர்ரா; நீ ஆரச் சொல்லுறாய்.”
“அவள் தான் மங்கய.”
“அவளோ. பொறு வாறன்’ அது சரி இப்ப அவளோட உன்ர பாடு எப்பிடிப் போகுது.”
83

Page 44
ඌlරුනඛයීල්පló|ශ්‍රී
“என்ன மச்சான் சும்மா பார்க்கிற சிரிக்கிறதோட சரி.
இண்டைக்குத்தான் கதைக்க வேணும் வாவன்.”
நண்பனின் தொல்லையை மறுக்க முடியவில்லை. போகும்போது
'மோகன் நித்திர முழிக்கோணும். கஸ்டமாயிருந்தா வீட்ட போய்ப்படு. பஸ் இருக்கு.’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.
D
84
 

சந்திராவுக்கும் மோகனுக்கும் அது நல்ல சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.
புதுமணத் தம்பதிகள் போல் அவர்கள் நெருங்கி இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்துப் பலர் பொறாமையடைந்திருப்பார்கள்.
பலர் ஏங்கித் தவித்திருப்பார்கள்.
பலர் திட்டித் தீர்த்தும் இருப்பார்கள்.
ஆனால் அவைகளைக் கவனிக்கும் நிலையில் இந்த ஜோடி இல்லையே.
அவர்களுக்கு அந்த நேரத்தில் கோவிலிலே இத்தனை சனக் கூட்டத்தின் மத்தியிலே பட்டப்பகல்போல் வெளிச்சத்தில் இருப்பதாகவே தோன்றவில்லை.
எங்கோ ஒரு இனந்தெரியாத இன்ப உலகத்தில் தாம் மட்டுமே இருந்து இன்பத்தை நுகர்வதாகவே எண்ணிக் கொண்டிருந்தனர்.
85

Page 45
ඌlගඛණිජේl6||5
சந்திராவின் கைவிரல்களும் மோகனின் கைவிரல்களும் பின்னிப் பிணைந்து இறுகியிருந்தன.
வேலைசெய்து மரத்துப்போய் அதிக வலிமை பெற்றிருந்த மோகனின் முரட்டுக் கைகளுக்குள், பூவிலும் மெல்லிய இதழ்போன்ற மெதுமையான சந்திராவின் பிஞ்சுக் கரங்கள் சிக்கித் தவித்தன.
அவனது கைகள் தன் கைகளைக் கொஞ்சுவதை விரும்பித்தான் அவளது விழித்தாமரைகள் அவனைப் பார்த்துக் கெஞ்சினவோ? அவனது செய்கைகள் அவளது எண்ணத்தையும் விஞ்சியதுபோல் இருந்தது.
அவளது உள்ளத்து உணர்ச்சிகளுக்கு மிஞ்சியது அவனது கைகள்தானா? இல்லை அவன் கைகளும் அவனை விஞ்சி வேலை செய்துகொண்டிருந்தன. சில சமயங்களில் ஆ. இப்பிடி அழுத்தினால் நோகாதா?”
என்று சொல்லிக் கொண்டாள்.
அதன் அர்த்தம்
‘இன்னுங் கொஞ்சம் அழுத்துங்கள்’
என்பதுதான் என்பதை உணர்ந்து கொண்டவன் போல் அவனும் நடந்து கொண்டான்.
சில சமயங்களில் அவளது கண்கள் கூறும் கதைகளை கற்பனை பண்ண முடியாமலே இருக்கும்.
வாய்விட்டுக் கூற முடியாததை, கூறக் கூடாததை தன் கண்களினால் அவள் காட்டினாள்.
அது அவளது தங்கமென மின்னும் அழகு வதனத்தில் வைரம் பதித்ததுபோல் இருந்தது.
தன் காதல் நோயையும் தனது தேவையையும் தனது விழிக் கோணங்களால் அவள் காட்டுவது அப்படியே வள்ளுவர் வாக்கை ஒத்திருந்தது.
அப்படி அவள் காட்டும் கண்பாவம்தான் அவளது பெண்மைக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தது.
86

அகளங்கள்
“பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு'
தன் காமநோயைக் காட்டி இரந்து தன் விழிகளால் கேட்பது பெண்மைக்குப் பெண்மை சேர்த்துக் கொண்டுதான் இருந்தது.
சந்திராவின் முகத்தை அப்படியே விழுங்கி விடுபவன்போலப் பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்.
மின்னும் மின்சார விளக்கொளியில் அவளது செந்தாமரை முகம் நாணத்தால் சிவந்து சந்தோஷ மிகுதியால் பூரித்துப்போய் அழகை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
போதை தலைக் கேற அப் புது அழகை ரசித்துக் கொண்டிருந்தான் மோகன்.
அவளும் முன்பொருகால் படியாத பாடமதை ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தாள்.
இளைஞர்கள் பலர் அந்தக் காட்சியைப் பார்க்க வருபவர்கள் போல வந்து போய்க்கொண்டிருந்ததை மோகனால் உணர முடிந்தது.
அதனால அவனால தொடர் நீது அவி விடத்தில இருக்கமுடியவில்லை.
'சந்திரா கடப்பக்கம் போய்வருவமா”
என்று அவளைக் கடைத்தெருவுக்கு அழைத்தான்.
அவளும் அவனுடன் செல்ல எழுந்தாள்.
பக்கத்தில் இருந்தவர்களிடம் பாயைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நகர்ந்தார்கள்.
மக்கள் அலையலையாய் கடைவீதியில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர்.
அந்த மக்கள் வெள்ளத்தில் புகுந்து மோகனும் சந்திராவும் போய்க்கொண்டிருந்தனர்.
இளங் கன்னிகள் கடைவாசலில் வந்து நின்று பொருட்களுக்கு
87

Page 46
ඌlගඛණ්ෆ|6|ශ්‍රී
விலைபேசி வாங்குவதும்,
அப்பெண் பாவைகளை தங்கள் மனத்திலே விலைபேசி வாங்கத் துடித்து அருகே வருபவர்களும், எத்தனை குதூகலமாக இருக்கின்றனர்.
கன்னிகள் வாங்கும் பொருட்களுக்கு காசுதரத் தயாரான நிலையில்தான் எத்தனை காளைகள் காத்திருக்கிறார்கள்.
மணிக்கடையில் மின்னும் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் அழகுத் தேவதைகளைக் கண்டு அருகே சென்று விழிவலை வீசி மகிழும் ஆடவர்கள் தம் விழிவலையில் அந்தக் கயல்கள் சிக்கி விட்டால் படும் ஆனந்தமே ஆனந்தம்.
கோவில்த் திருவிழாவில் ஆரம்பமாகி திருமணத்தில் முடியும் காதலும் அனந்தமே.
சிறுவர்கள் ஊதி விளையாடிக் கொண்டிருக்கும் விதம் விதமான குழல்களும் அதன் விதம்விதமான ஒலிகளும் ஒரே களிப்பையும் கலகலப்பையும் உண்டாக்கிக் கொண்டிருந்தன.
சனக்கூட்டத்தில் சந்திரா தவறிவிடுவாளோ என்ற பயத்தில் அவளது கைகளைப் பற்றியபடியே நடந்து கொண்டிருந்தான் மோகன்.
அவளும் மோகனைத் தவற விடக்கூடாதென்று அவனது கைகளைப் பற்றிப் பிடித்தபடியே சென்று கொண்டிருந்தாள்.
ஆம் அவளது எண்ணம் எப்படியும் மோகனைத் தான் பிடித்த பிடியை விடாமல் பிடிப்பதாகத்தான் இருந்தது.
கடைகளெல்லாம் சுற்றி விட்டு “ஜஸ்கிறீம்’ சாப்பிடும் இடத்திற்கு வந்து இருவரும் “ஜஸ்கிறீம்” வாங்கிச் சாப்பிட்டார்கள். அவன் அவளிடம் எதை நாடி ஐஸ்வைத்தானோ?
இருவரும் திரும்பி வந்து தமது இருப்பிடத்தில் அமர்ந்தார்கள்.
அவர்களது கைகளும் வாய்களும் வேலை செய்து கொண்டிருந்தன. கடலை தின்பதில்தான்.
நேரம் செல்லச் செல்ல அவனால் அங்கே இருக்க முடியவில்லை.
நித்திரை அவனை அணைக்கவில்லை.
88

அகளங்கள்
ஆனால் ஏதோ ஒன்று அவனைப் பற்றிப் பிடித்து அணைத்துத் துன்புறுத்தியது.
நித்திரை கொள்பவனைப்போல சந்திராவின் மடியில் தலையை வைத்துப் படுத்தான். அவள் அவனது தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் இருப்பவர்களின் அவதூறுகள் அவர்களைக் குழப்பியது.
'சந்திரா வீட்ட போவம்.”
என்றான். தன் கண்களைக் கசக்கிக் கொண்டே
‘அண்ண தேடுவார்’
என்றாள் அவள் பதிலுக்கு
“எனக்கு இஞ்ச நிக்கேலாமல் இருக்குது. வீட்டபோய் நித்திரை கொள்ளுவம்”
6.
என்று மீண்டும் கூறினான். அவளோ "காலையில போகலாம்”
என்று மறுத்தும் சரிவராததால் ஒப்புக் கொண்டாள்.
மோகனும்,
‘சேகர் சொன்னவன் நித்திர வந்தால் போகச்சொல்லி.”
என்று சொல்லி அவளை இசையச் செய்தான்.
இரவு இரண்டு மணியின் பின் வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டனர்.
பஸ்ஸிலும் அவ்வளவு சனமாயில்லை. தமக்கு வசதியான ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
அவளது மடி அவனுக்கு நித்திரை செய்யும் மஞ்சமாகியது.
ஆனால் அவன் நித்திரை செய்யவில்லை என்பதை அவனது செய்கைகளே காட்டிக் கொண்டிருந்தன.
அவளுக்கு அவனது முதுகுதான் மஞ்சம்.
89

Page 47
ඌlගඛයීෆ|6|ශ්‍රී
அவளும் நித்திரை செய்வது போல்தான் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.
அவர்களது மனம் அதிவேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
அதை எட்டிப் பிடிப்பதுபோல அவர்களது செய்கைகளும் இருந்தன.
இருவரும் தங்களை மறந்த நிலையில் பிரயாணஞ் செய்து கொண்டிருந்தனர்.
எப்படியோ ஒருவாறு ஓமந்தை வந்து சேர்ந்ததைக் கவனித்து இறங்கினார்கள்.
வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
தெருவில் சனநடமாட்டமே இல்லை. வெறிச்சோடிக் கிடந்தது.
கரையில் இருக்கும் மரங்களினால் தெருவிலெங்கும் இருளே சூழ்ந்திருந்தது.
நிலாவொளி மங்கிக் கொண்டிருந்தது.
இரவு நேரம்.
அதுவும் இருட்டு நேரம்.
இளம் ஆடவனும், கன்னிப் பெண்ணும்.
மனத்திலே விரகதாபம் வேறு.
பார்ப்பதற்கு யாருமே இல்லை
ஒருவருக்கு ஒருவர் துணை
இவளுக்கு , இளம் வயதுப் பூங் கொடியாளுக்கு. இயற்கையாகவே இரவில் தோன்றும் பயம் ஒருபுறம்.
தன் பயத்தைப் போக்க வழி
அவனது கைகளைப் பற்றிப் பிடித்து அப்படியே அவனுடலில்
9 O

அகளங்கள்
முட்டி மோதிக் கொண்டு நடந்து வந்தாள்.
காட்டுப்பறவைகளின் ஒலி அவளுக்கு அச்சத்தை ஊட்டியது.
திடீரென அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
அவளருகே ஒலமிட்டபடி ஒரு ஊமத்தங்கூகை சிறகடித்துப் பறந்தது.
கூகைக்குப் பயந்து அவனைக் கட்டியணைத்தபடியே நடந்து
சென்று கொண்டிருந்தாள்.
அவனால் அவனது காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மாரவேளின் மலரம்புகள் அவன் அங்கமெங்கும் துளைத்துத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தன.
அவளது அணைப்பை ஏற்று அவனும் அவளை நெருக்கமாக அனைத்தவாறே நடந்து கொண்டிருந்தான். சில சமயம். அவர்களது நடை தடைப்படும்.
மரநிழலில் கால்கள் பின்ன, கைகள் வருட தம்மையும் மறந்து முத்தமிட்டு மகிழ்ந்ததனால்தான் நடை தடைப்பட்டது.
ஒன்றாக இரண்டாக. எத்தனை முத்தங்களை அவன் மொத்தமாக வழங்கினான் என்று கணக்கிட அங்கே யாருமே இல்லையே.
எவ்வளவு ஆறுதலாக நடந்தும் சொற்ப நேரத்தில் வீடு வந்து சேர்ந்த உணர்வு அவர்களுக்கு.
வீட்டில் தாய் வந்து கதவைத் திறந்தார். அவர் நித்திரை அலுப்பில் கதவைத் திறந்து விட்டுப் போய்ப் படுத்துக் கொண்டார்.
சந்திராவும் மோகனும் மட்டுமே தனியாக வந்ததை அவள் எங்கே எண்ணிப் பார்த்திருக்கப்போகிறாள்.
இருவரும் உடைகளை மாற்றிக் கொண்டு நித்திரைக்குச் சென்றனர்.
மோகனுக்கு நித்திரையே வரவில்லை. கண்களை எப்படி
91

Page 48
ඌlගඛශීල්ප|6||5
மூடியும் பலன் கிடைக்கவில்லை. அவனால் நித்திரை செய்ய முடியவில்லை. புரண்டு புரண்டு கிடந்தவன் வாசலில் சந்திரா வந்து நிற்பதைக் கண்டான். அவளாலும் நித்திரை செய்ய முடியவில்லை.
எழுந்து அவனை நாடி வந்து விட்டாள்.
அவள் வருவாள் என்று எதிர்பார்த்துத்தான் கதவைத் திறந்து விட்டிருந்தானோ?
சந்திரா அறையினுள் வந்ததும் எழுந்து வந்து அவளை அணைத்தபடியே கதவைப் பூட்டிய மோகன் அப்படியே நெருக்கமாக அணைத்துக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினான்.
அவள் அவனுக்குப் பஞ்சணையானாள்.
அவனும் அஞ்சாமல் அந்த அஞ்சுகத்திற்கு கொஞ்சங் கொஞ்சமாக.
காதல் காமத்தில் மாறியது. அவளது உடல் அவனுக்கு பூரண உரிமையாயிற்று.
அவனது அங்கங்கள் அவளது அங்கங்களை அனைத்து இறுக்கியது.
இன்பப் பிணைப்பிலே ஈருடல் ஒன்றாகியது.
நளவெண்பாவில் புகழேந்திப் புலவர், தமயந்தி நளனுடன் கலவியிலிடுபட்டதைக் கூறுமிடத்தில்,
“அங்கைவேல் மன்னன் அகலமெனுஞ் செறுவில் கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக் காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்வளர்த்தாள் கோதையரில் மேலான கொம்பு'
என்று கூறுகிறார். நளமகாராசனது மார்பு எனுஞ் சேற்றிலே இரு கொங்கைகளையும் ஏராக்கி உழுகிறாளாம் தமயந்தி.
உழுவதற்கு நீர் வேண்டுமே. அதுதான் அவர்களிடையே தோன்றும் வியர்வைநீர், சேற்றுழவு, உழும்போது வரம்பாக காதல் வரம்பு போட்டார்களாம்.
92

அகளங்கள்
வளர்க்கும் பயிர் வேறென்ன. காமப் பயிர்வளர்த்தாள்.
சந்திராவும் அப்படித்தான் அந்த நேரத்தில் நடந்து கொண்டாளோ?
காலையில் சேகர் வந்து சேர்ந்தான்.
சேகருடன் வழமைபோலக் கதைக்க மோகனால் முடியவில்லை.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குச் செல்வதற்குத் தயாரானான்.
சேகர் நிற்கும்படி வற்புறுத்தியும் அவனால் அங்கு நிற்க முடியவில்லை.
அவன் வீட்டை விட்டு வெளியேறும்போது சந்திரா அவனது முகத்துக்கெதிரே வந்தாள்.
வழக்கம்போல் அவள் புன்னகைக்கவில்லை.
அவனது நிலையும் அதுதான்.
சோகமாக நின்று கொண்டே தன் கண்ணிரை மெள்ளத் துடைத்துக் கொண்ட்ாள்.
- மோகனும் அவளது கணி ணfரை விரைவில் துடைக்கவேண்டுமென்று எண்ணிக் கொண்டான்.
எப்படியும் அவளது கண்ணிரை அவன் துடைக்கத்தானே வேண்டும்.
இன்னும் சொற்ப நாளில் அவளது கண்ணிருக்கு பதில் கிடைக்கத்தான் போகிறது.
ஆனால் அவன் போன விதம் சகுந்தலையைப் பிரிந்து துஸ்யந்தன் போனது போல் இருந்ததை யார் அறிவார்கள்?
கைகளை ஆட்டி விடைபெற்றுக் கொண்டான் மோகன்.
அவள் அவனுக்குக் காட்டுவதற்கு மிஞ்சியிருந்தது கண்ணிர் மட்டுந்தானே.
இறுதியில் அதையும் அவனுக்குக் காட்டி விட்டு வீட்டினுள் புகுந்தாள்.
93

Page 49
பஸ்ஸில் கிளிநொச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோகனின் எண்ணமெல்லாம் சந்திராவைப் பற்றித்தான் இருந்தது. கடந்த இரவு நடந்த நிகழ்ச்சியை எண்ணி ஒரு புறம் மகிழ்ச்சியும் மறுபுறம் கவலையும் அடைந்தான்.
“என்ன இருந்தாலும் அப்படி நடத்திருக்கவே கூடாது' என்று அவனது உள்ளுணர்வு வலியுறுத்தியது
எப்படியும் மிகவிரைவில் திருமணஞ் செய்ய வேண்டுமென்று மனத்திலே திடப்படுத்திக் கொண்டு கிளிநொச்சியை அடைந்தான்.
ஒரு நல்ல நேரமாகப் பார்த்துக் கதையைத் தொடங்கினான்.
"அம்மா! நான் சொன்ன விசயம்.”
என்று தன் கதையை ஆரம்பித்தான், அவளும்
'சரி நான் அதப் பற்றிக் கவனிக்கிறன்.
நீ அவளின்ர ஊர், பேர், விலாசத்தத் தந்தாயிண்டா கெதீலமுடிச்சிரலாம்.”
'அம்மா! அந்தப் பிள்ளையின்ர தமயன் என்னோட கொழும்பில
வேலை செய்யிறான்.
94
 

அகளங்கள்
என்ர அறையிலதான் தங்கியிருக்கிறான்.
அவனுக்கும் இந்த விசயம் தெரியும்.
அவனிட்டச் சொன்னா அவன் எல்லா ஏற்பாடுகளையும் செய்வான்.
என்று குதூகலமாகக் கூறிக் கொண்டிருந்தான். தன் எண்ணம் நிறைவேறப்போகும் மகிழ்ச்சியில் என்ன கதைப்பதென்றே அவனுக்குத் தெரியவில்லை.
அவளும் -
*சரி சரி நீ விலாசத்தத் தாவன்’ என்று கேட்டு விலாசத்தை வாங்கிக் கொண்டாள். மோகனின் நண்பன் என்றதுமே அவளுக்கு ஒரு பயம். காரணம் அவன் ஓமந்தையில் இருப்பவன் என்று தெரிந்திருந்ததுதான்.
ஓமந்தையில் மகனுக்குக் கல்யாணஞ்செய்து வைக்க அவளுக்குப் பயமாக இருந்தது.
ஏதாவது தன்னைப் பற்றிய கதைகளை யாராவது கூறிக் குழப்பிவிடுவார்களோ என்ற பயத்தில் அவள் எண்ணங்கள் சுழன்றன.
மோகன் கொடுத்த விலாசத்தைப் புரட்டிப் பார்த்த அவளால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
திரும்பத்திரும்ப அந்தப் பெயரையும் விலாசத்தையும் பார்த்தாள். தலையெல்லாம் பாரமாகி மயக்கம் வரும்போல இருந்தது.
ஆயிரம் சம்மட்டிகளால் அவளது தலையிலே அடித்ததுபோல இருந்தது.
ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு அந்தப் பெயரையே மீண்டும் மீண்டும் மனத்துக்குள் வாசித்துக் கொண்டாள்.
மனத்திலே நீண்ட காலமாகப் பூட்டி வைத்திருந்த நெருப்புத்தணல் பிரகாசிக்க ஆரம்பித்தது.
நீறுபூத்திருந்த தணல் இப்போது பழைய ஞாபகம் என்ற
95

Page 50
ඌlගඛණ්ෆ|6|ශ්‍රී
காற்றினால் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.
வழமைபோல் அதனை அணைக்க முயன்று ஒருவாறு தனது இதயத்தை இறுக்கிப் பூட்டினாள்.
அப்படி ஏதாவது நடந்திருந்தால். இருக்காது அப்படி எதுவும் நடந்து விடாது.
ஏன் வீணாகக் கவலைப்படுவான்’ என்று எண்ணிக்கொண்டாள். இருந்தாலும் "அப்படி இருந்து விட்டால்”
என்று எண்ணும்போது அவள் உள்ளம் கொதிக்கத்தான் செய்தது.
மனம் ஊசலாடிக் கொண்டிருக்க அந்த விலாசத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள்.
மோகனும் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்து விட்டான்.
பூட்டி வைத்த கசந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் அவள் மனக்கடலிலே அலைமோதின. கொந்தளித்துக் குமுறின.
"அப்படி நடந்து விட்டால், நல்லது நடக்கத்தான் வேணும்.
பழிக்குப்பழி ஆண்டவன் இப்பதான் கண் திறந்திருக்கிறான்.
சீ.சீ. இது என்ன எண்ணம்
அப்பிடி நடந்தா என்மகனின் நில.
பாவம் இளம்பெண்.
அவள் வாழ்வு.
அவள் வாழ்வுக்காக நான் ஏன் இரங்க வேணும்.
அன்று என் வாழ்வுக்காக யார் இரங்கினார்கள்.
என் கூடப்பிறந்த அண்ணன், என்னை அருமையோட வளத்த அண்ணன். எனக்குக் காலக்கெடு விதித்தானே.
ஏன் இப்பிடியெல்லாம் நினைக்க வேணும். அப்பிடி எதுவுமே நடந்திருக்காது”
என்று அப்பேதை மனம் பலவாறாகப் பேசிக் கொண்டது.
96

அகளங்கள்
இருந்தாலும் அவளது மனத்தை அவளால் தேற்ற முடியவில்லை.
மன அலைகளின் இழுப்பினால் கரையறியாது தவிக்கும் தோணிபோலக் கலங்கிக் கொண்டிருந்தாள்.
“எதற்கும், ஆராய்ந்து பார்த்தால் தெரிகிறது’
என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாள்.
முடிவில் ஓமந்தையில் தனது வயலை விதைக் கும் சுப்பையாவுக்கு கடிதம்போட்டு அந்த விலாசத்தைப் பற்றி அறிந்து எழுதும்படி வேண்டினாள்.
கடிதம் எழுதிவிட்டு அதன் பதிலை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்.
“செல்லம்மா இருந்தால் அவள் எனக்கு இப்போது ஆறுதல் சொல்லுவாளே.
பாவம் அவள்பாடு இப்படியா ஆக வேண்டும்'
செல்லம்மாவைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கு அழுகையே வந்தது.
அவள் சரஸ்வதிக்காக எவ்வளவு துயரங்களைத் தாங்கி இருக்கிறாள்.
அவள் வாழ்வே பாலைவனம்தான்.
அந்தப் பாலைவனத்தில் முளைத்த பசுங்கொடி.
அதன் கெதியும் அப்படியா இருக்க வேண்டும்.
அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடிதமும் வந்தது. அக்கடிதம் அவளது இதயத்தைக் குத்திச் சித்திரவதை செய்தது.
அவளது எண்ணம் சரியாகத்தான் இருந்தது.
விதி இப்படியா செய்ய வேண்டும்.
விதியின் வழியில் அலைப்புண்டு செல்லும் அபலைகளை விதி துரத்திக் கொண்டே போகிறது.
அன்று கடிதத்தைப் பிரித்துப் பார்த்த மோகனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
97

Page 51
அலைக்குமிழ்
ஒருவாறு கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். மிகவும் சுருக்கமாகவும் ஆனால் அவனது எண்ணக் கோட்டை களைத் தகர்த்தெறியும் வெடி குண்டாகவும் அந்தக் கடிதம் இருந்தது.
அன்புள்ள மகனுக்கு
நான் நலம். உன் நலமும் நன்கு அமைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.
இந்தக் கடிதத்தை மிகவும் அவசரமாக எழுதுகிறேன்.
இது அவசியமானதாக இருப்பதால் இதனைக் கவனமாக வாசித்துப் பார்.
நீ அந்தப் பெண்ணை மறந்து விடு.
உனக்கு வேறு நல்ல இடத்தில் பெண் பார்க்க ஏற்பாடு செய்கின்றேன்.
நீ விரும்பிய இடம் வாழக்கூடிய இடமில்லை. அந்த இடத்தில் நீ திருமணஞ் செய்வதில் எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை.
தயவு செய்து நீ அவளை மறந்துவிடு.
நல்ல பிள்ளையாக என் சொற்படி கேள்.
இது அறிவுரையல்ல, கட்டளையல்ல, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
நான் இவ்வளவு காலமும் உன்னை வளர்ப்பதற்கு யாரிடமும் கையேந்தவில்லை. இப்போது உன்னிடம்தான் கையேந்துகின்றேன். யாசிக்கிறேன். அவளை மறந்து விடு.
இந்த விடயமாகக் கதைப்பதற்கு நீ வீட்டுக்கு வரவேண்டாம்.
நீ இருக்கும் அறையையும் விரைவில் மாற்றிக்கொள்.
தொடர்ந்து அதே இடத்தில் இருக்க வேண்டாம்.
மிகுதி பின்
இப்படிக்கு
அம்மா.
98

அகளங்கள்
கடிதத்தை வாசித்ததும் பேய் அறைந்தவன் போல் நின்றான்.
அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. உடனே வீட்டிற்குப் போக எண்ணினான். ஆனால் வீட்டிற்கு இதுபற்றிக் கதைக்க வரவேண்டாமென்று எழுதியிருக்கிறார் அவனது தாய். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது.
சந்திராவின் நிலையை நினைக்க பரிதாபமாக இருந்தது. அவன் செய்த துரோகம். அது அவனது இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.
எங்காவது பஸ், காரில் அடிபட்டு இறந்து விடக்கூடாதா என்று கூட நினைத்தான்.
தற்கொலை எண்ணம் வரும்போது தாயாரின் நினைவு அதனைத் தடுத்துவிடும்.
சில நாட்கள் எதிலுமே பிடிப்பின்றி அலைந்து கொண்டிருந்தான்.
மோகனின் நடத்தை சேகருக்குப் பிரச்சினையாக இருந்தது.
ஆனால் சேகரிடம் தன் பிரச்சினையை மோகனால் வெளியிட முடியவில் லை. உள் ளத்தினுள்ளேயே வைத்துக் குமுறிக் கொண்டிருந்தான். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
சில சமயம் பைத்தியம் பிடித்தவன் போல் தனது அறையை விட்டு வெளிக்கிட்டு நீண்ட தூரம் சுற்றி விட்டு வருவான்.
தான் என்ன செய்கிறான் என்பதே. அவனுக்குத் தெரியாது.
ஒரு விரக்தி அவனை ஆட்கொண்டபின் அவனால் வேறு எப்படித்தான் நடந்து கொள்ள முடியும்.
சந்திராவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்து கண்ணிர் வடிப்பான்.
எங்காவது வெளியில் செல்லும் போது அவளின் படத்தையும் கொண்டு செல்வான்.
தனியான ஒரு இடத்தில் இருந்து கொண்டு அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருப்பான்.
கண்கள் கலங்கி மங்கலாகி படம் தெரியாமல் போனபின் படத்தை
99

Page 52
ඌ|රුනඛයීල්ප|6|ශ්‍රී
வைத்து விட்டுக் கண்களைப் பொத்தியபடி அழுவான்.
இப்படியே நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள்.
என்ன எல்லாமோ எண்ணிக் கொண்டு கவலைப்பட்டவனுக்கு இன்னமும் கவலையை அதிகரிக்கும் செய்தி கிடைத்தது.
சந்திராவிடமிருந்து வந்திருந்த கடிதம் அவனை ஒரு கலக்குக் கலக்கி விட்டது.
அது அவன் எதிர்பார்த்ததுதான்.
இருந்தாலும் அவனால் அந்தச் செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.
அவள் கடிதத்தில்,
“எனக்குப் பிள்ளை உருவாகி வருகிறது. வீட்டில் ஒருவருக்கும் இன்னும் தெரியாது.
தெரிய நேர்ந்தால். அதற்கிடையில் என்னைத் திருமணஞ் செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.
பண்போடு சமூகத்திலே வாழ எனக்கு வாழ்வு கொடுங்கள்.”
என்று ஏதேதோ எல்லாம் எழுதியிருந்தாள்.
இந்த விடயம் வெளியில் தெரிய நேர்ந்தால் சேகரின் குடும்பத்தின்
கெளரவம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படும் என்று அவனால் உணர முடிந்தது.
“சமுதாயத்தில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கும் குடும்பம் என்னாலா சீரழிய வேண்டும்.”
என்று கலங்கினான். முடிவில் தாயிடம் உண்மை நிலையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தான்.
காரியம் தலைக்கு மேல் போவதற்கிடையில் முடிக்க வேண்டுமென்று நினைத்துவீட்டை நோக்கிப் புறப்பட்டான்.
D
1 OO

தன் தாயிடம் தன் பிரச்சினைகளைக் கொட்டித் தீர்த்துவிட مصر வேண்டுமென்ற ஆவலுடன் கதையைத் தொடக்கினான்.
அவன் எவ்வளவு ஆவலுடன் கதையைத் தொடக்கினானோ அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டாள் அவனது தாயார்.
முடிவாக, "நீ அவளப் பற்றிய கதையிண்டா கதைக்க வேண்டாம்.”
என்று சொல்லியே விட்டாள்.
அவனால் தன் நிலையை விளக்கக் கூடிய நிலையை உருவாக்கக்கூட முடியவில்லை.
இருந்தாலும் அவன் வழமைக்கு மாறாகவே காணப்பட்டான்.
அதிக கோபம் என்றுமில்லாதபடி அவன் நெஞ்சத்தை ஆட்கொண்டது.
தாயிடம் கூட கோபிக்கும் அளவுக்கு அவன் நிலை இருந்தது.
மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு
'அம்மா! நான் உங்களிட்டச் சொல்லாமல் வேற ஆரிட்டச்
101

Page 53
ඌlරුනඛයීෆ|6|ශ්‍රී
சொல்லுவன்.
கொஞ்சமிண்டாலும் நான் சொல்லுறதக் கேளுங்கோவன்.”
என்று மிகவும் பரபரப்பாகக் கூறினான்.
அவனது கண்களில் நீர்த்துளிகள் திரண்டு விழுந்து கொண்டிருந்தன.
அதைப்பார்க்க தாயின் கண்களிலும் நீர் நிறைந்தது.
"சரி. அவன் சொல்லுறதையும் கேப்பமே”
என்று மனத்தைப் பொறுமையாக்கிக் கொண்டு நின்றாள்.
ஆனால் அவன் இப்படிச் சொல்லுவானென்று தெரிந்திருந்தால் அவள் அவன் கதையைக் கேட்காமலே விட்டிருப்பாள்.
"நான் அவளத்தான் கலியாணஞ் செய்யப் போறன்.
அவளத்தான் கலியாணஞ் செய்ய வேணும்.
என்னால அவள ஏமாத்தேலாது. ஏமாத்தவும் மாட்டன்’
என்று பிடிவாதமாகக் கூறினான்.
தாயின் முன்னே அவன் என்றுமே இப்படிப் பிடிவாதம் பிடித்தவனில்லை. ஆனால் இன்று நிலைமை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
அவன் தன் தாயின் விருப்பத்தையும் வெறுத்து அவளைத்தான் திருமணஞ் செய்யப் போவதாகக் கூறியதை அவளால் நம்பவே முடியவில்லை.
அவனது பிடிவாதத்தை மாற்றக்கூடிய கடைசிவழி அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது.
அந்தக் கடைசி ஆயுதத்தையும் அவள் பிரயோகிக்கத் தவறவில்லை.
'தம்பி! நான் உனக்குக் கணக்கச் சொல்லமாட்டன். நான் உயிரோட இருக்கோணுமிண்டா அவள நீ கலியாணஞ் செய்யக்குடாது. இனி உன்ர இஸ்டம். என்னண்டாலுஞ் செய்.”
102

அகளங்கள்
G
'அம்மா! இப்பிடிச் சொன்னா. என்னம்மா சொல்லுறியள்
'இதுதான் என்ர முடிவு.
நான் உனக்காகத்தான் உசிர வைச்சிருக்கிறன்
உனக்கு என்ர உசிர் தேவையில்லயெண்டா.”
என்று ஒரு பெரிய வெடிகுண்டையே தூக்கிப் போட்டாள். மோகனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
தாய் அவனது உயிர். அவளைப் பிரிய அவனால் முடியுமா.
இருந்தாலும் தன் வாதத்தைக் கைவிட அவனுக்கு விருப்பமில்லை.
'அம்மா! நீங்கள் சொல்லுறதுக்கு ஏதாவது காரணம் இருக்கோனுமே.
அதையாவது சொல்லுங்கோவன்’
'காரணம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல.
எல்லாம் காரணம் இல்லாமலே நடந்திருக்கு”
அவனால், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் தேட முடியவில்லை காரணமாவது தேடிப் பார்க்கலாமென்று நினைத்துக் கேட்டான்.
'சொல்லுங்கோ அம்மா! நான் ஏன் அவளக் கலியாணஞ் செய்யக்குடாது”
'உனக்கு என்னால அதச் சொல்லேலாது.
நீ அவள ஒரு சகோதரியா நினைச்சு மறந்திரு”
என்று புத்திமதி சொல்வது போலக் கூறினாள். அவளால் தன் நிலையை விளக்கிக் கூறமுடியவில்லை.
அவனாலும் தன் நிலையை விளக்கிக் கூற முடியவில்லை.
தாய் ஏன் காரணஞ் சொல்ல முடியாமல் நிற்கிறாள் என்று மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இறுதியாக அவன் மிகவும் கோபமாக
103

Page 54
ඌlගඛණිල්ප|6|ශ්‍රී
‘இனி அவளச் சகோதரியாய் நினைக்கேலாது.
காலங்கடந்து போட்டுது.
அவள் இப்ப. இப்ப. அவளின்ர வயித்தில.”
வசனம் முடியமுதல் மோகனின் கன்னங்களில் அவளது கைகள் பதிந்தன.
இரண்டு மூன்று அடிகள் விழுந்தபின்
'அம்மா! என்னப் பெத்து வளத்த கையாலயே என்ன அடிச்சிக் கொண்டிடுங்கோ. தயவு செய்து அவளை ஏமாத்த மட்டும் சொல்லாதேங்கோ’
என்று அழுதான்.
“என்ன அடிச்சுக் கொல்லுங்கோ’
என்ற சொல் அவளது இதயத்தைப் பிழிந்தது. இதே நிலைமை. ஆம். இதே நிலைமையை அவளாலும் தாங்க முடியவில்லை.
தன் வாழ்வின் கசந்துபோன நினைவில் இந்த வார்த்தை பெரும் பங்கு கொண்டிருந்ததை எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.
தனது வாழ்வில் சாவுக்குக் காலக்கெடு விதித்த நிலையை அவளால் மறக்க முடியுமா?
ஒரு ஆண் செய்த தவறுக்கே அவள் இப்படிப் பதறும்போது ஒரு பெண் செய்த தவறுக்காக அவளது சகோதரன் எப்படித் துடித்திருப்பான்.
என்று எண்ணிப்பார்த்து அப்படியே மகனைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
அவனது கன்னத்தைத் தடவிக் கொண்டே சிறிது நேரம் மெளனத்திலாழ்ந்தாள்.
இத்தகைய தாயுள்ளத்தின் பாசப்பிணைப்பிலே, அணைப்பிலே மகிழ்வதற்காக எத்தனை அடிகளையும் தாங்க அவன் மனம் விரும்பியது.
ஒரு சிறுபிள்ளைபோல் அழுதுகொண்டே இருந்தான் அவன். அவளது கண்ணிர்த்துளிகள் அவனது உச்சந்தலையில் பட்டு
அவனை நீராட்டின.
104.
 

அகளங்கள்
‘மோகன்! அவள். அவள். உன்ர தங்கச்சியிடா”
என்று அலறினான் மோகன்.
அவள் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் உண்மையை வெளிப்படுத்தினாள்.
அவனோ சிறிது நேரத்தின்பின்
'அம்மா! என்னம்மா இது.”
என்று இதயம் வெடித்து விடுவதுபோல் கேட்டான். ‘புதுக் கத சொல்லுறனெண்டு நினைக்காத
இது புதுக்கதயில்ல.
பழங்கத.
பழகிப்போன கத
நல்லவரிண்டு நம்பி நான்மோசம் போன கத.
எப்பவோ நான் மறக்க நினைச்சு இதயத்தில பூட்டி வைச்ச கத
இப்ப புதுவடிவம் எடுத்திருக்கு”
'தங்கச்சிய அண்ணன் சீ.சீ. என்னடா இது.
இல்ல. இல்ல இது வேணும். தர்மலிங்கத்துக்கு இது வேணும். அவன் செய்த துரோகம். அவன்ர பிள்ளைக்கு வந்திருக்கு.
கட்டாயம் வரத்தான் வேணும்.
நான் வடிச்ச கண்ணிர் வெறும் கண்ணிரில்ல.
அது பெருநெருப்பு.
என்ர துடிப்ப அவனும் உணர நல்ல சந்தர்ப்பம்.
என்ர சகோதரன் அப்ப பட்ட வேதனய இப்ப தகப்பன் எண்ட முறையில அவன் அனுபவிக்கத்தான் வேணும்’
என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
105

Page 55
ඌ|ගඛණ්ෂේló|ශ්‍රී
அவளது கண்களில் குரோதம் நிறைந்திருந்தது.
நெஞ்சம் படபடத்தாலும் ஒரு பழிவாங்கும் உற்சாகம் நிறைந்திருந்தது
'அம்மா! ஏனம்மா அந்த நல்லவரத் திட்டிறியள். நீங்கள் ஏதேதோ சொல்லுறதக் கேட்டா பயமா இருக்கு”
என்றான் பயங் கலந்த குரலில்.
“நல்லவரா! ஆரிடா நல்லவர் தர்மலிங்கம் உன்ர கண்ணுக்கு நல்ல பாம்பு. ஆனா அவன் பாம்பு தான்ரா
அவன். அவன். ஆர் தெரியுமா? என்ன இந்த நிலைக்கு ஆளாக்கின பாவி.
ஆசகாட்டி மோசஞ் செய்தவன்.
என்ர பலவீனத்தப் பயன்படுத்தி என்ன நடுத்தெருவில விட்டவன்.
உனக்கும் எனக்கும் தாய், மகன் எண்ட உறவ ஏற்படுத்தினவன்.
பெத்த பிள்ளயே தகப்பனுக்குத் தண்டன கொடுத்திட்டான்'
என்று சத்தமிட்டான் மோகன்.
‘ என்னம்மா இது. அப்பா செத்துப் போயிற்றாரெண்டு சொன்னிங்களே.”
உயிரற்ற குரலில் அவனது வார்த்தைகள் வெளிவந்தன.
அவனது முகத்தில் ஜீவகளையே அற்றுப்போயிருந்தது.
'இல்ல என்னப் பொறுத்தவர அவர் செத்துத்தான் போட்டார். ஆனா இப்ப உன்ர வாழ்க்கயப் பாழாக்கப் புதுவடிவம் எடுத்து வந்திருக்கிறார். அவருக்கு இது நல்ல தண்டன.”
"ஏனம்மா இத எனக்கு முந்தியே சொல்லேல்ல”
“அது குப்பையிடா, ஏன் கிளறுவானிண்டு பாத்தன். குப்பயக் கிளறினா குப்பதானே வருமெண்டு சும்மாயிருந்தன்.
106

அகளங்கள்
ஆனா இப்ப கிளற வேண்டியிருக்கு
அதுவும் உன்னாலதான்.
நான் என்ர வாழ்க்கயில சேகரிச்ச குப்பையே நிரம்பிக் கிடக்கு. இதுக்குள்ள நீவேற குப்பையக் கொண்டு வந்து கொட்டீற்றியே’
என்று பதறினாள்.
மோகனால் அழத்தான் முடிந்தது. வேறு ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஆனால் அவனது தாயால் அழவும் முடியவில்லை.
‘என்ர வாழ்க்கையக் கெடுத்ததும் போதாமல் இப்ப அவன்ர வாழ்க்கையையும் அழிக்கத் தலைப்பட்டிட்டார். ஆண்டவனே இது என்ன சோதன’
என்று அழுது புலம்பினாள்.
தனக்குள்ளேயே குமைந்து குமுறிக் கொண்டிருந்த எரிமலை இப்போது வெடித்து விட்டது.
அழமுடியாமல் பொருமிக் கொண்டிருந்தவள் இன்று வாய்விட்டுக் கதறக் கூடிய நிலைக்கு வந்தாள்.
நன்றாக அழுது தீர்த்துவிடவேண்டுமென்று நினைத்து நீண்ட நேரம் அழுதாள்.
தனது கடந்தகால நினைவுகள் வரும்போதெல்லாம் அவைகளை உள்ளத்திலே பூட்டி வைத்துச் சிறைப்படுத்தியவள் இன்று பூட்டையும் உடைத்துக் கொண்டு அவை வெளிவந்ததனால் ஒன்றுமே செய்யாது அழுதுகொண்டே இருந்தாள்.
மறுநாள் மோகன் கொழும்புக்குப் புறப்பட்டான்.
அவனது இதயத்தில் பெரிய பிரச்சினை உருவெடுத்திருந்தது.
'தர்மலிங்கத்தார் என் தந்தையா? சீ என்ன காரியம் செய்து விட்டேன்.
சந்திரா என் தங்கை.
நினைக்கவே முடியவில்லயே
107

Page 56
ඌlගඛණ්ෆló|ශ්‍රී
சேகர் என் தம்பி.
g(3u IIT இது என்ன சோதன.
அம்மாவை ஏமாற்றிய துரோகியா தர்மலிங்கம் அப்படியெண்டா நான் மட்டும் துரோகியில்லையா.
நானும் ஒரு பெண்ண ஏமாற்றிப் போட்டனே.
ஆண்டவனே இப்பிடியா நடக்க வேணும்.
அண்டைக்கு நான் அங்க போகாமலே இருந்திருக்கக் கூடாதா”
என்று குமுறிக் கொண்டிருந்தான்.
கண்களில் நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. தனக்கு முன் இருப்பவர் தான் அழுவதைக் கவனிப்பதைக் கண்டு வெட்கப்பட்டுக் கொண்டு தனது கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
இருந்தாலும் துன்பம் என்னும் மலையிலிருந்து ஊற்றெடுத்துக் கண் வழியாகப் பெருகியோடும் கண்ணிர் அருவியை அவனால் தடுத்துவிட முடியவில்லை.
சந்திராவை தன் தங்கையாக எண்ண அவனால் முடியவில்லை. “தங்கையை அண்ணன் திருமணஞ் செய்வதா?
அத இந்தச் சமூகம் ஒப்புக் கொள்ளுமா?
சமூகத்தை எதிர்த்துத் திருமணஞ் செய்வதென்றால் என்தாய் அவளின் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா?
எனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட உறவை சேகர் அறிஞ்சால்.
அதுவும் என்னால் அவளைத் திருமணஞ் செய்ய முடியாத நிலையில
கொலை செய்யவும் அவன் தயங்கமாட்டான்.
அப்படியாவது அவன் என்னைக் கொலை செய்து இந்தப் பிரச்சனையிலிருந்து விடுவித்தானெண்டால் எவ்வளவோ நல்லது.
108

அகளங்கள்
ஆனால் நான் இறந்தாலும் பிரச்சினை தீராதே
வயித்தில பிள்ளையோட இருக்குற சந்திராவின்ர நிலமை. என் தாயார்.
ஆண்டவனே இப்பிடியா வரவேணும்.” என்று உள்ளம் சுடுநீராய்க் கொதித்துக் கொண்டிருந்தது.
D
109

Page 57
இருபத்தி ஐந்து வருடங்கள் பறந்தோடி விட்டன.
ஆம். சரஸ்வதியின் வாழ்வில் இருபத்தி ஐந்து வருடங்களும் இருபத்தி ஐந்து யுகங்களாகக் கழிந்தன.
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அவளது வாழ்வில் வசந்தம் பரவத் தொடங்கியிருந்தது. பட்டுப்போய் இருந்த மரம் தளிர்க்க ஆரம்பித்தது.
கோட்டானும் குரங்கும் குதித்துத் திரிந்த அவள் வாழ்வில் அன்னமும் மயிலும் அழகு நடை பயிலத் தொடங்கியிருந்தன.
புழுதியை வாரி இறைத்துக் கொண்டிருந்த புயற்காற்று நீங்கி மலர்களின் வாசனையை அள்ளிக் கொண்டு மந்தமாருதம் வீச
ஆரம்பித்திருந்தது.
வெய்யிலிலே காய்ந்து சருகாக மாறிக் கொண்டிருந்தவள், சந்திரனின் தண்ணொளிர்க் குளிர்மைமிகு நிலாக்கற்றையிலே இளைப்பாறிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவள் வாழ்வில் வீசிக்கொள்ள வந்த தென்றல் தொடர்ந்து வீச வரவில்லை. வீசியதென்றலும் மலர்களிலே மணமெடுத்து 110
 

அகளங்கள்
வீசமறந்து கற்பாறைகளில் மோதிக் கல்லெடுத்து வீசுகிறதே!
அவளது இதயத்தில் பாரமாக இருந்து மறைந்து கொண்டே வந்த சுமை, இப்போது விசுவரூபம் எடுக்கத் தொடங்கி விட்டது.
அவளை வாட்டி வதைக்கும்படி அவை விசுவரூபம் எடுத்து நிற்கும்போது அவளால் என்னதான் செய்ய முடியும்.
இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்து போன நினைவுகள், உள்ளத்தின் அடித்தளத்திலே வேண்டுமென்றே பூட்டி வைத்த நினைவுகள். அவள் முன் நின்று எக்காளமிட்டுச் சிரித்தன.
கண்ணிர் கண்களினின்றும் வழிந்து கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.
அந்த நினைவுகள், கசக்கும் நினைவுகளுக்கு இப்போது தடைபோட அவளால் முடியவில்லை.
அவளையும் மீறிக்கொண்டு அவை வெளிவரத் தொடங்கி விட்டன.
கொஞ்சங் கொஞ்சமாகத் தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்த்தாள்.
அப்போது சரஸ்வதிக்கு இருபத்தி இரண்டு வயது.
பருவத்துச் செழிப்பில் அவள் பார்வைக்கு அழகாகவே இருந்தாள்.
மாநிற மேனியும் சுருண்ட கேசமும் அவளின் அழகைக் கூட்டிக் கொண்டிருந்தன.
இளம் வயதிலேயே தாயை இழந்தவள்.
தாயை இழந்து சிறிது காலத்தில் தந்தையும் அவர்களை விட்டுச் சென்றார்.
அவளுக்கு ஆதரவு அவளது சகோதரன் பாஸ்கரன் தான். பாஸ்கரன்தான் அவளை வளர்த்து வந்தான்.
தாய் தந்தை இல்லாத குறையை அவளால் உணர முடியாதபடி பாஸ்கரனின் அரவணைப்பு அவளுக்கு இருந்தது.
111

Page 58
ඌlගඛසීඝ්‍ර|6||5
பாசத்தைக் கொட்டி வளர்த்தான் அவன்.
பாஸ்கர் சரஸ்வதிக்கு ஐந்து வயதுதான் மூத்தவன். இருந்தாலும் மிகவும் பொறுப்புடன் அவளைக் காப்பாற்றினான்.
அரசாங்க உத்தியோகமொன்றில் சேர்ந்து வேலை செய்ததால் அவனுக்கு தங்கையைக் காப்பாற்றுவது அவ்வளவு கஸ்டமாக இருக்கவில்லை.
தந்தை இறந்த சிறிது காலத்துக்குள் அவனுக்கு வேலை கிடைத்தது. -
வேலையில் இருந்து கொண்டே தங்கையின் படிப்புக்கு உதவி செய்தான்.
சரஸ்வதி தமையனுக்கு வீட்டில் உதவி செய்து கொண்டிருந்தாள்.
சில நாட்களின் பின் சரஸ்வதி படிப்பை விட்டு வீட்டிலேயே இருந்தாள்.
அந்த நேரம் பாஸ்கரன் தன்னோடு வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காதலித்து கலியாணஞ் செய்து கொண்டான்.
பாஸ்கரன் தன்மனைவியுடன் ஓமந்தையிலுள்ள தமது வீட்டிலேயே வாழ்ந்து வந்தான்.
மூவரும் மிகவும் அன்பாக இருந்து வந்தனர்.
மிகவும் அமைதியாக இருந்து வந்த குடும்பத்தில் புயல்வீச ஆரம்பித்தது.
பாஸ்கரனும் அவனது மனைவியும் சந்தோஷமாகக் குடும்பம் நடாத்தினர்.
இளம் தம்பதிகள்.
அவர்களின் சந்தோஷத்துக்குக் குறையென்ன.
ஆனால் அந்த இளந் தம்பதிகளின் சந்தோஷம் சரஸ்வதியின் வாழ்வுக்கு இயமனாக வந்தது.
112

அகளங்கள்
பாஸ்கரனும் மனைவியும் வீட்டில் பழகிக் கொள்வதைப் பார்த்து சரஸ்வதியின் உள்ளுணர்ச்சிகள் வேலை செய்யத் தொடங்கின.
அண்ணனும் அண்ணியும் அந்நியோன்யமாகப் பழகுவதைப் பார்த்து அவள் பூரித்தாள்.
ஆனால் அதே வேளை அவள் பருவமடைந்து பூத்துக் குலுங்க இருந்த செடியாதலால் அவளின் உணர்ச்சிகளுக்கு அவளால் தடைபோடமுடியவில்லை.
ஒரு நாள் விமலா குளித்து விட்டு தனது அறைக்குச் சென்றாள். அவளின் பின்னால் பாஸ்கரும் சென்று கொண்டிருந்தான்.
சரஸ்வதி அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பாஸ்கரன் அறையின் உள்ளே சென்றதும் கதவைச் சாத்திவிட்டான்.
அவர்களது குரல் அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.
“சீ.சீ. விடுங்கோ இப்பதான் குளிச்சிட்டு வாறன்’
“அதுதான் நல்லது. நீ குளிச்சிற்று வரேக்க உன்ன இந்தக் கோலத்தில பாக்கேக்க எவளவு வடிவாயிருக்கு தெரியுமா?”
"பொறுங்கோ உடுப்பு மாத்துவம். கையை விடுங்கோவன் தலையெல்லாம்.”
“எடு சீப்பை நான் இழுத்து பவுடர் போட்டு விடுறன்.” “வேண்டாம் விடுங்கோ. இதென்ன குழந்தப் பிள்ள மாதிரி.”
'உன்ன அப்பிடியே கட்டிப்பிடிச்சு.”
அதற்கு மேல் சரஸ்வதியால் கேட்டுக் கொண்டு நிற்க முடியவில்லை.
அவளின் உள்ளத்து உணர்ச்சியை பாஸ்கரனின் உள்ளம் உணரவில்லை.
அவளது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் நிலையிலும் அவன் இல்லை.
113

Page 59
ඌlගඛණ්ෆ|6||5
வயது வந்த தங்கை வீட்டிலிருக்க தான் மட்டும் திருமணஞ் செய்து வீட்டில் அவளும் காணக்கூடியதாக குடும்பம் நடத்துவதை அவன் தவறாக எண்ணவில்லை.
ஆனால் அவளுக்கு அது தவறாகப் படக்கூடியதாக இருந்தது.
அவளது பருவ வயதும் வாளிப்பான உடலும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது.
அவளது உணர்ச்சியை பாஸ்கரனின் மனைவி விமலாகூட புரிந்து கொள்ளவில்லை.
விமலா புரிந்து கொள்ளவில்லையோ அன்றி புரிந்து கொண்டும் அதைக் கவனியாமல் இருந்தாளோ தெரியாது.
அவளது குறிக்கோள் பாஸ்கரனைத் திருமணஞ் செய்வதாக மட்டுமே இருந்தது.
அது நிறைவேறி விட்டது.
பின்னர் தன் சந்தோஷத்தை ஏன் அவள் இழக்க விரும்புகிறாள்.
சாப்பாட்டிற்கு அடுப்படியை நாடிய தம்பதிகளின் செய்கைகள் சரஸ்வதிக்கு புதிதாகத்தான் இருந்தன.
‘குஞ்சு இண்டைக்கு நீ ஊட்டி விடுவியாம் நான் சாப்பிடுவனாம் என்ன.”
'நீங்கள் என்ன குழந்தப் பிள்ளயோ நான் ஊட்டுறதுக்கு.”
"புருசன்தான் மனைவியின்ர முதற்குழந்தை. இது தெரியாதா.
“சரி அத்தான். கொஞ்சம் பொறுங்கோ' குழைத்த ஒரு பிடியை அள்ளி வாயினுள் ஊட்டினாள்.
அவன் அப்படியே விரலையும் சேர்த்தே கடித்தான்.
"ஐயோ நோகுது. விடுங்கோ அத்தான்.”
"ம்.ம். இன்னுமொருக்கா.”
114

அகளங்கள்
‘ஊகும் நான் மாட்டன். நீங்கள் கடிப்பியள்’
'இல்ல. நான் இனிக் கடிக்கேல்ல குஞ்சு’
G
என்ர குஞ்சுவை நான் ஏன் கடிக்கிறன். என்ர கண் இல்ல, மூக்கில்ல. ஒருக்கா.”
அவளது மடியில் படுத்திருந்து கொண்டு அவள் ஊட்டும் உணவை உண்டு கொண்டிருந்தான் பாஸ்கரன்.
சரஸ்வதியால் பொறுக்கவே முடியவில்லை.
இப்படியே சரஸ்வதி பார்க்கக் கூடியதாகவே பாஸ்கரனும், விமலாவும் கொஞ்சிக் குலாவிக் கொண்டனர். இவைகளையெல்லாம் பல தடவை கண்டும் காணாததுபோல் தன் உணர்ச்சிகளுக்குத் தடைபோட்டு வந்தாள்.
ஆனால் காலஞ் செல்லச்செல்ல அவள் தானாகவே முயன்று தமையனின் அந்தரங்க வாழ்க்கையை உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.
அந்தப் பழக்கம் அவளது உணர்ச்சிகளுக்குத் தூபம் இட்டது.
எண்ணையாய் மாறி உணர்ச்சித் தீயை கொழுந்து விட்டு எரியும்படி செய்தது.
தன்னை எப்படியும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டுமென்ற உணர்வில் தன் உணர்ச்சிகளைக் கட்டிக் காத்து வந்தாள்.
இந்த நேரத்தில் அவளின் வாழ்க்கையில் குறுக்கிட்டார் தர்மலிங்கம்.
யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியொன்றில் படித்துக் கொண்டிருந்த அவர் சோதனை முடிந்து வீட்டில் வந்து நின்றார். அவரது வீடும் சரஸ்வதியின் வீடும் அருகருகே அமைந்திருந்தன.
சரஸ்வதியின் கண்கள் அடிக்கடி அவரைத் தேடின.
அவரும் அதை உணர்ந்தவர்போல அந்த விடயத்தில் அக்கறை காட்டத் தொடங்கினார்.
115

Page 60
அலைக்குமிழ்
அனேகமாக மாலைப்பொழுதில் சரஸ்வதியைக் காண்பதற்காக அவளது வேலியோரமாகவும், வாசல் பக்கமாகவும் நடைபழகுவார்.
ஒரு நாள் இருவரது சந்திப்பும் சுமுகமாக நடந்தது.
பாஸ்கரனும் மனைவி விமலாவும் வவுனியாவிற்குப் படத்திற்குப் புறப்பட்டனர்.
சரஸ்வதியும் அவர்களுடன் போனாள்.
இவர்கள் வவுனியாவிற்குப் போன அதே பஸ்வண்டியில் தர்மலிங்கமும் இருந்தார்.
இரு இளம் உள் ளங் களும் கணி கள் வழியாகச் சந்தித்துக்கொண்டன.
தர்மலிங்கமும் இவர்கள் போன அதே படத்துக்குத்தான் போயிருந்தார்.
இவர்கள் படத்துக்குப் போவதை அறிந்து தான் வந்தவர்போல் அவர்களுடனே தியேட்டரினுள் நுழைந்தார். படம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும் இருவருமே படத்தை ரசிப்பதை விட கண்களின் சந்திப்பையே அதிகம் ரசித்தனர்.
படம் முடிந்து வீட்டுக்கும் வந்தார்கள்.
ஆனால் இருவருமே கதைக்கவில்லை.
கதைக்கக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.
அவர்களுடன் பாஸ்கரன் இருந்தது பெரிய இடைஞ்சலாக இருந்தது,
பாஸ்கரன் தன் தங்கையை மிகவும் கண்டிப்பாக நல்லவளாகவே வளர்த்து வந்தான்.
பெண்களிடம் இயற்கையாகவே அமையும் அடக்கம் அவளிடம் நிறைந்திருந்தது.
அது அவளுக்கு அழகைக் கொடுத்தது.
- 116

அகளங்கள்
பெண்கள் தங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கையும் நன்கு கடைப்பிடித்தால் நிச்சயம் அழகாகத்தான் இருப்பார்கள்.
பெண்களின் நாணம் அவர்களுக்கு இறைவன் கொடுத்த கொடையென்றே கூறவேண்டும்.
அடக்கமாக இருந்து நாணத்தை முகத்திலே தவழவிட்டால் அதற்கு மயங்காத ஆடவர் இருக்கவே முடியாது.
சரஸ்வதியும் தனது தமையனால் கண்டிப்பாக வளர்க்கப்பட்டதால் அடக்கமாக இருந்து வந்தாள்.
அதனால் அவளிடம் அடக்கத்தோடு சேர்ந்த நாணம் அதிகமாகவே இருந்தது.
அந்த அழகை ரசிக்க தர்மலிங்கம் முன்வந்தார். இந்த நேரத்தில் புதுார்க் கோவில் திருவிழா நடைபெற்றது.
பாஸ்கரனும் மனைவியும் கோவிலுக்குச் சென்றனர்.
அவர்கள் திருமணஞ் செய்து முதன் முதல் அப்போதுதான் புதுர்க்கோவிலுக்குச் செல்கின்றனர்.
அதனால் அவர்களின் மகிழ்சிக்கு அளவே இல்லை.
ஆனால் சரஸ்வதி எதையோ நினைத்து ஏங்கியபடி அவர்களின் சந்தோஷத்தையும் அந்நியோன்யத்தையும் பார்த்துக் கொண்டே அவர்களைத் தொடர்ந்தாள்.
கோவிலில் கும்பிட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் சரஸ்வதியின் நண்பி பாக்கியம் வந்து சேர்ந்தாள்.
தமையனிடம் கேட்டுக் கொண்டு கடைத்தெருப்பக்கம் சென்றாள்.
சரஸ்வதி அந்த இடத்தை விட்டு அகலுவது பாஸ்கரனுக்கு
இதமாகத்தான் இருந்தது. அதனால் மறுப்புக் கூறாமல் விடைகொடுத்து விட்டான்.
சரஸ்வதியும் பாக்கியமும் கடைத்தெருவில் வந்து ஒரு
117

Page 61
ඌ|රැනඛයීල්)||6||ශ්‍රී
மணிக்கடையில் அருகே வந்து நின்றனர். மணிக்கடையில் இருந்த காப்பொன்றை எடுத்துப் போட்டுப் பார்த்து விலைபேசி தன்கையில் போட்டுக் கொண்டாள்.
அந்த நேரத்தில் அவளருகே ஒரு கை கடைக்காரனுக்கு காப்புக்குரிய காசைக் கொடுத்தது.
திரும்பிப் பார்த்தாள். புன்னகை தவளும் முகத்துடன் தர்மலிங்கம் நின்றிருந்தார்.
அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவரைத் தடுக்க அவள் விரும்பவில்லை.
அதனால் காப்பையும் கொண்டு நகர்ந்தாள்.
அவளோடு வந்த பாக்கியம்
‘அடியே சரஸ். நீ பொல்லாதவளடி. எத்தினை நாளா இப்பிடி.”
என்று கேலி செய்தாள்.
‘போடி..! உனக்கு எப்பவுமே கேலிதான்.”
என்று சிரித்துச் சமாளித்துக் கொண்டு நடந்தாள். தர்மலிங்கம் தான் தனக்குக் காப்பு என்று சொல்வது போல் இருந்தது. அந்த நிகழ்ச்சி.
அவர்தான் காப்பு என்று நினைக்க அவளது இதயத்தில் தேனருவி பாய்ந்து தித்தித்தது.
மிகவும் இன்பமான நினைவுகளோடு சென்று கொண்டிருந்தாள்.
இருவரும் சென்று ஒரு கடையில் கடலை வாங்கிக் கொண்டிருந்தனர்.
சரஸ்வதியோ தன்னைத் தொடர்ந்து தர்மலிங்கம் வருகிறாரோ என்று பார்த்துக் கொண்டு நின்றாள்.
கடலை வாங்கிக் கொண்டு திரும்பும்போது அவள் எதிர்பார்த்த தர்மலிங்கம் வந்து கொண்டிருந்தார்.
118

அகளங்கள்
“எனக்கும் கடலை கிடைக்குமா?”
என்று ஒரு கேள்விக் குறியுடன் புன்னகைத்துக் கொண்டு அருகே வந்து சேர்ந்தார்.
அவளும் அவருக்குக் கடலை கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தாள்.
அன்றுதான அவர்கள் இருவரும் முதன் முதல் கதைத்தனர்.
சிறிது நேரம் கதைத்த பின்
‘அண்ண தேடுவார் நாங்கள் போறம்’
என்று சொல்லிக் கொண்டு விடைபெற்றாள்.
கால்கள் முன்னோக்கி நடந்தாலும் அவளது கண்கள் பின்னோக்கியே இருந்தன.
'சொறி”
என்ற குரல் கேட்டதும்தான் முன்னால் ஒரு ஆடவனுடன் தான் மோதியதை உணர்ந்தாள்.
மனத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி மிகுதியால் துள்ளிக் குதித்துக் கொண்டே இருப்பிடத்தை அடைந்தாள்.
D
119

Page 62
புதுார் திருவிழா முடிவடைந்து சில நாட்களில் சரஸ்வதியும் தர்மலிங்கமும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
சரஸ்வதி தர்மலிங்கத்தை நம்பி தன் உணர்ச்சிகளை அவனிடமிருந்து கொஞ்சங் கொஞ்சமாகத் தீர்க்க முற்பட்டாள்.
ஆனால் இளம் வயதில் உணர்ச்சிகள் அனுபவிக்கப்படும்போது அதிகரிக்குமேயன்றிக் குறைவதில்லை.
அதற்கு சரஸ்வதியும் விதிவிலக்கல்லவே.
அவளால் உணர்ச்சிகளுக்குத் தடைபோட முடியவில்லை.
தன் மனத்தைக் கட்டுப்படுத்தி திருமணத்தின் பின் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்ய அவள் இஸ்டப்பட்டாலும், வீட்டில் பாஸ்கரனும் விமலாவும் பழகுவதைப் பார்ப்பதால் அவளால் அப்படியும் கட்டுப்படுத்த முடியவில்லை.
தன் திருமணத்தைப் பற்றியே தமையன் அக்கறை காட்டாமல் இருக்கும்போது அவள் எப்படித் தானாக வெளியிடுவாள்.
இயற்கையிலேயே பாஸ்கரன் மிகவும் கண்டிப்பானவன்.
120

அகளங்கள்
அவனிடம் தன் காதல் விவகாரத்தை அவள் எப்படிச் சொல்லுவாள்.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் பாஸ்கரனும் விமலாவும் படத்துக்குப் போகும்போது சரஸ்வதி தனக்குத் தலையிடி என்றுகூறி போக மறுத்தாள்.
அவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுக் கிழவியைத் துணைக்கு விட்டு விட்டு சென்று விட்டார்கள்.
அவள் உண்மையில் தலையிடியால்தான் படத்துக்குப் போக மறுத்தாளா? அல்லது பாஸ்கரனும் மனைவியும் பழகுவதைப் பார்த்து மனத்தைத் திடப்படுத்த முடியாமலிருக்கும் என்று எண்ணித்தான் மறுத்தாளா?
இல்லை வேறு ஏதாவது காரணத்துடன்தான் மறுத்தாளா?
அன்று ஒரு நாள் அவள் தமையனுடன் கூடப் போகாமல் விட்டதால் என்றுமே அவனுடன் கூடப்போக முடியாமல் போய்விட்டது.
அவள் அன்று கூடப்போனது இன்னொருவருடன்
அவன் அன்று அவளோடு கூடவந்தான்.
கூடினான், ஆனால் கூடியபின் அவளுடன் வாழ்க்கையில் கூடப்போக மறுத்து விட்டான்.
அந்தச் சந்தர்ப்பம் தர்மலிங்கத்துக்கு அனுகூலமாயிருந்தது. சரஸ்வதிக்கும் அது தன் உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்கக்கூடிய சந்தர்ப்பமாக இருந்தது.
தர்மலிங்கமும் சரஸ்வதியும் அன்று தம்மனம் போல் பழகிக் கொண்டனர்.
அவர்களது பழக்கம் அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக ஆக்கியது.
அடிக்கடி இப்படியே பழகி வந்தனர்.
121

Page 63
அலைக்குமிழ்
சுவை கண்ட பூனையல்லவா.
தன்னைத் திருமணம் செய்யும்படி சரஸ்வதி கேட்டாள். தர்மலிங்கமோ இப்போது மறுத்து விட்டார்.
காதலிக்கும்போது திருமணம் செய்வதாகக் கூறிவிட்டு இப்போது தன் காரியம் நிறைவேறியதும் மறுத்து விட்டார்.
அதற்கு அவர் கூறிய காரணங்கள் மிகவும் விசித்திரமாக இருந்தன.
"சரஸ். எங்கட வீட்டில உன்ன நான் கலியாணஞ் செய்ய அனுமதிக்க மாட்டினம்.
எங்களுக்கேன் கலியாணத்த, நீ கலியாணம் முடிக்கும் வரைக்கும் நாங்கள் இப்பிடியே பழகுவம்.
இதில என்ன தவறு.
ஊர் உலகத்துக்குத் தெரியாட்டிச் சரிதானே.
வயித்தில ஒண்டுமே வளராது.
வளர்ந்தாலும் அழிக்கலாம்.
அதுக்கெல்லாம் மருந்திருக்கு.”
என்று பெரிய தத்துவங்களை உதிர்த்துக் கொட்டினார்.
அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவரைத் திட்டினாள். பின்னர் கெஞ்சினாள்.
காலைப்பிடித்துக் கதறித் தன் கண்ணிரைத் துடைக்கும்படி கெஞ்சினாள்.
அவரோ இரங்கவில்லை.
"சரஸ் நீ என்ன விட ரெண்டு வயசு மூப்பு.
122

அகளங்கள்
என்று முடிவாகக் கூறினார்.
அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
என்ன செய்வதென்றே தெரியாது.
தன் கண்ணிரைக் காட்டியும் அவன் அதற்குக் கருணை காட்டாததை நினைத்து வருந்தினாள்.
அழுகை மீறி ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
அதற்குக் காரணம் தர்மலிங்கம். கூறிய அந்த வசனம்தான்.
“நான் கடைசி வரைக்கும் உன்னக் கலியாணஞ் செய்யமாட்டன்.
நீ ஆரையாவது கலியாணஞ் செய்து நல்லா இரு.
அந்த நேரத்திலயும் உனக்கு நான் தேவப்பட்டா நான் நிச்சயமா உதவி செய்வன்.”
அவளால் மட்டுமல்ல எந்தப் பெண்ணால்தான் இப்படியொரு வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியும்.
‘நீ. நீ துரோகி. உன்ன நம்பி நான் என்ர வாழ்க்கையையே கெடுத்திட்டனே! பாவி! இப்பிடி ஒரு நிலமை. நீ பெண்ணா இருந்து உனக்கு வந்திருந்தா. கொஞ்சமாவது யோசிச்சுப்பார்.
உன்ர தங்கச்சிக்கு இப்பிடி நடந்தா. நீயும் ஒரு மனிசனா. மரம். உனக்கெங்க மனிதாபிமானம் இருக்கப் போகுது’ பலவாறாகப் பேசித் தீர்த்தாள்.
இருவரும் தமது உணர்ச்சிகளை விற்பதற்கு ஒற்றுமையாகக் கடை விரித்தார்கள்.
ஆனால் இப்போது பொருட்கள் முழுவதையும் தன்சொந்தமாக்கி எடுத்துக் கொண்டு கையை விரித்து விட்டார் தர்மலிங்கம்.
கடைவிரிக்கும்போது அவள் அவரை நம்பித்தான் விரித்தாள்.
ஆனால் அவர் கைவிரித்தபின்தான் தெரிந்தது தனது பொருட்கள் எல்லாவற்றையும் அவர் களவாடியது.
123

Page 64
ඌlගඛණිෆ|6||5
களவெடுப்பதற்கென்றேதான் அவர் அவளுடன் சேர்ந்து கடைவிரித்ததை அவள் உரணவில்லை.
இறுதியில் களவிலே அவளது கற்புக் களவுபோய் விட்டது.
நாட்கள் சில சென்றன. கண்ணிர் வழிந்தோடக் காலம் கடந்தது.
காலத்தையும் மீறி அவள் வயிற்றில் குழந்தை வளர்ந்தது.
இப்போது அவள் நிலை 'திரிசங்கு சுவர்க்க” மாயிருந்தது.
காதலனுமில்லை. தமையனிடம் சொல்ல முடியாது தவித்தாள்.
தர்மலிங்கத்தைப் பின்பும் ஒரு தடவை சந்தித்து தன் நிலையைத் தெரிவித்தாள். அவரோ மறுத்ததோடு மட்டுமன்றி மேல்வகுப்புப் படிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்து விட்டார்.
சரஸ்வதியின் அமைதியும், கவலையால் சூழப்பட்ட முகமும் வீட்டிலும் வெளியிலும் சந்தேகத்தைக் கிளப்பின.
அவள் கூடியவரை வீட்டிலேயே இருந்தும் அவளது நடத்தை அவள்மேல் சந்தேகத்தை வரவழைத்தது.
விமலாவும் சரஸ்வதியின் போக்கைக் கண்டு சந்தேகப்பட்டு அவள்மேல் ஊன்றிக் கவனம் செலுத்தினாள்.
இந்த நேரத்தில் ஒருநாள் சரஸ்வதி சத்தி எடுப்பதைக் கண்டு விமலா சந்தேகித்து பாஸ்கரனிடம் விடயத்தைக் கூறினாள்.
அவன் எரிந்து விழுந்தான்.
சரஸ்வதியின் கன்னங்கள் பாஸ்கரன் அடித்த அடிகளால் சிவந்து வீங்கிப் போயிருந்தன.
நடந்ததை மறைக்காமல் ஒப்புக் கொண்டாள்.
பாஸ்கரன் குற்றம் முழுவதையும் அவள் மேலேயே சுமத்தினான்.
அவள் நிலையும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவே இருந்தது.
124

அகளங்கள்
பெண்ணாகப் பிறந்த துன்பத்தை அனுபவித்தாள்.
விமலா தான் பெரிய உத்தமி என்பதை உலகுக்குக் காட்ட எண்ணியவள்போல் “வீட்டுக்குள்ள விபச்சாரம் செய்யிறவளோட என்னால வாழேலாது. நான் போறன்.”
என்று சொல்லி ஒரு நீண்ட நேரச் சொற்பொழிவின் பின் தன் தாய்வீட்டை நாடினாள்.
பாஸ்கரன் தடுத்தும் அதைப்பொருட்படுத்தவில்லை.
“இந்த நடத்த கெட்டவள் வீட்டில இருந்தா நான் இஞ்ச இருக்கமாட்டன்’
என்று திடமாகக் கூறிவிட்டுச் சென்று விட்டாள். பாஸ்கரனுக்கு மிகவும் சங்கடமான நிலைதான்.
தன் தங்கையைப் பேசி அடிக்கத்தான் அவனால் முடிந்தது.
திடீரென அவனுக்கு இந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியைக் கொடுத்திருந்ததால் மிகவும் குழம்பிப்போய் நின்றான்.
கதை ஊரெங்கும் பரவியது.
அந்த ஊர்ப் பெண்களின் வாய்களிலெல்லாம் இக்கதைதான் நர்த்தனமாடியது.
சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தால் விடுவார்களா.
அதுவும் இப்படியான விடயமென்றால் தலை, கால் வைத்து மிகவும் பிரமாதமாகச் சோடித்து விடுவார்களே!
அந்தப் பெண்களில் ஒருத்தி தனக்கு முந்தியே தெரியுமென்று சொல்லி தன் திறமையை வெளிக்காட்ட எண்ணி,
“எனக்கு அப்பவே தெரியும். அவளின்ர தகப்பன் செத்ததிலயிருந்து நான் கவனிச்சுத்தான் வாறன்’
என்று வக்கணை பேசினாள்.
உண்மையில் யாருக்குமே இதுபற்றி முன்பு தெரியாது.
125

Page 65
ඌ|ගඛයීල්ප|6|ශ්‍රී
" . மற்றவர்களின் குறைகளைக் கதைத்தே தம் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் சமுதாயத்திலல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மற்றவர்களின் குறைகளைக் கதைக்காது எங்காவது ஒரு இடைவெளிவிட்டால் அந்த இடைவெளியில் தங்கள் குறைகளை வேறு யாரும் கதைத்து விடுவார்களோ என்ற பயந்தான். அப்படி மற்றவர்களின் குறைகளைக் கதைக்க வைக்கின்றதோ?
D
126

18
பாஸ்கரனால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. மனைவி வீட்டை விட்டுப் போய் விட்டாள். கதை ஊரில் பரவி அவனது கெளரவத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டது.
சந்தர்ப்பவசமாக அதுவும் ஒருவரிடம் மட்டுமே தன்னைப் பறிகொடுத்தவளை சமுதாயம் இரக்கம் சிறிதுமின்றி விபச்சாரியெனப் பழிசுமத்தியது.
வெளியில் பல இடங்களுக்கும் அலைந்து மனம் நொந்து திரும்பிக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.
தெருவெங்கும் அவனது தங்கை சீரழிந்த கதைதான் பலமாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
‘இவனும் ஒரு மனிசனே. இன்னும் அந்த வேசய வீட்டில வைச்சிருக்கிறான்.
நானிண்டா அவள எப்பவோ துரத்தித் துலைச்சிருப்பன்.”
என்றார் ஒருவர்.
அதையும் விஞ்சும் வகையில்
127

Page 66
அலைக்குமிழ்
“அவள வீட்ட விட்டுக் கலைச்சாப்போல அவள் தன்ர தொழில விடப்போறதில்ல. அவளக் கழுத்த நெரிச்சுக் கொல்ல வேணும்.
நான் அவளின்ர தமயனினன்டா அவளக் கொல செய்திற்றுத்தான் மற்றவேல பாப்பன்'
என்றார் இன்னொருவர்
'உண்ம தான். நடத்த கெட்டவள தங்கச்சியெண்டு சொல்லி வாழுறத விட அவளக் கொல செய்து போட்டு கொலகாரனிண்ட பேரில மறியலுக்குப் போகிலாம்”
என்று பெரிதாக முழங்கினார் இன்னொருவர்
“நாக்கூசாமல் இப்பிடிப் பேசக்குடாது. சந்தர்ப்பவசமாத் தவறு செய்யிறவ திருந்தி வாழ நாங்கள் சந்தர்ப்பம் கொடுக்கவேணும்.”
என்று ஒரு நல்ல கருத்தைச் சொல்லப்போய் அவர்களிடம் வசைமாரியை வாங்கிக் கட்டிக் கொண்டார் ஒரு பெரியவர்.
பாஸ்கரனுக்கு இவைகளைக் காதால் கேட்க முடியவில்லை. மிகவும் ஆத்திரத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.
வழியில் வரும்போது அவன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துக் கொண்டே வந்தான்.
காலை ஒன்பது மணியளவில் வீட்டினுள் நுழைந்த பாஸ்கரன் ஒரு விஷப்போத்தலைக் கொண்டு வந்து மேசையில் வைத்தான்.
சரஸ்வதியின் முகம் பயத்தால் சிவந்தது.
சரஸ்வதியைக் கூப்பிட்டான்.
தன் வாய்க்கு வந்தபடி பேசினான்.
“என்னால ஊரில நடமாடவே முடியேல்ல.
மூதேவி நீயும் ஒரு பொம்பிளையோ?
இப்பிடிச் செய்து போட்டு இன்னமும் உசிரை வைச்சிருக்கிறியே. வெக்கங் கெட்ட நாயே
128

அகளங்கள்
உன்னச் சாகச்சொல்லி ஆரும் சொல்ல வேணுமெண்டே இருக்கிறாய்.
நீ இருந்து என்ன செய்யப்போறாய்
எவளவு கெளரவமா, அப்புவும் அம்மாவும் சாக உன்னை வளத்தன்.
எல்லாத்துக்கும் சேத்து இப்பிடிச் செய்து போட்டியே
நீ செத்தாத்தான் எங்கட குடும்பப் பெருமை கொஞ்சமிண்டாலும் மிஞ்சும்.
நீ இருந்து என்ன செய்யப் போறாய்.
நல்ல பொம்பிளையளே வாழ முடியாத இந்தச் சமுதாயத்தில கெட்டழிஞ்ச நீ எப்பிடி வாழப்போறாய்”
அவன் என்ன பேசுவதென்றே தெரியாமல் ப் பேசிக் கொண்டிருந்தான்.
அவளும் அழுதுகொண்டே இருந்தாள்.
'உன்ர வாழ்க்கையையும் கெடுத்து எங்கட கெளரவத்தயும் கெடுத்து இப்ப என்ர வாழ்க்கையையும் கெடுத்திற்றியே. சந்தோஷமா இருந்த என்ர வாழ்க்கையும் உன்னால பாழாகிற்றுதே.
நீ சாகாமல் இருந்தா உன்னை அடிச்சே கொண்டுபோடுவன்.
என்னக் கொலைகாரனாக்காமல் நீயே செத்துத் துலைஞ்சிரு.
உன்னக் கெஞ்சிக் கேக்கிறன். இண்டைக்கே நீ செத்துப்போ.
உன்னச் சந்தோஷமாக் கொண்டு போய் காடாத்திற்று வாறன். இந்த மேசையில மருந்துப் போத்தல் இருக்கு. இதில கொஞ்சங் குடிச்சாலே போதும்.
இதக் குடிச்சு நீ செத்தா அதுவே எனக்கு நீ செய்யிற பெரிய நன்றிக்கடனாயிருக்கும்.
129

Page 67
ඌlගඛයීෆ||6||5
அநியாயமா என்ன மறியலுக்கனுப்பாமல் நீயாயே செத்திரு.
இல்லாட்டி இப்பவே இத உனக்கு பருக்குவன்.
உனக்கு இனி ஏன் வாழ்வு.
நான் வெளில போட்டு வாறன். நான் திரும்பி வரேக்க நீ செத்துக் கிடக்கோணும்.
இல்லாட்டி உன்னை நான் தான் கொல்லுவன்
எங்கட சந்ததியே அழியட்டும்.
அப்பு அம்மா உன்னோட நானும் சாகிறன்’
என்று திட்டித் தீர்த்து விட்டு விஷப்போத்தலை எடுத்து அவளது கையில் கொடுத்தான். பின்னர்,
'இல்ல. நீ இப்பவே குடிச்சுச் சாகு”
என்றவாறு போத்தலைத்திறந்து அவளுக்குப் பருக்கப் போனான்.
அவள் போத்தலைப் பார்த்தபடி கண்ணிர் சிந்தினாள்.
‘அண்ண! நான் குடிக்கிறன். தந்திட்டுப்போ.”
என்று அழுதாள்.
"நான் திரும்பி வரேக்க நீ செத்துக் கிடக்கோணும்”
என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு வெளியேறினான்.
அழுது அழுது அவளது கண்களில் நீர் வற்றியே விட்டது. இன்னும் அழுதால் இரத்தம் தான் சிந்தும் என்ற நிலை.
தன்னை இவ்வளவு காலமும் வளர்த்த சகோதரனுக்கு தன்னால் ஏற்பட்ட அவமானத்தை எண்ணிக் கலங்கினாள்.
தன் வாழ்க்கையைப் பாலைவனமாக்கிவிட்டுச் சென்ற தன் காதலனை நினைத்து உருகிப் பெருமூச்சு விட்டாள்.
130

அகளங்கள்
விஷப்போத்தலைப் பார்த்துப் பார்த்து இதயம் வெடிக்கும் வண்ணம் அழுதாள்.
“ஆண்டவனே! இப்பிடியே இதயம் வெடிச்சு நான் செத்துப் போகக்கூடாதா?”
என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டாள்.
ஆண்டவனை வேண்டிக் கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கவில்லை.
தன்னைக் கொல்வதற்கென்றே இயமதேவன் விஷத்தின் வடிவில் வந்து தனக்குக் காலக்கெடு வைத்து விட்டுச் சிரித்துக் கொண்டே கையில் இருப்பதைப் பார்த்து மனங்குமுறினாள்.
“என்ன வளத்த என்ர அண்ணேட மானம் போறபடி நான் வாழமாட்டன்’
என்று ஏதேதோ அரற்றினாள். சிறிது நேரம் அழுது அழுது அப்படியே மயங்கி விழுந்து கிடந்தாள்.
சிறிது நேரத்தில் திரும்பவும் எழுந்து சிந்தித்தாள்.
அவளருகே விஷப்போத்தல் கிடந்து அவளை எண்ணிச் சிந்தித்து சிரித்தது.
இறுதியாக விஷப்போத்தலைக் கையில் எடுத்து மூடியைத் திறந்தாள்.
ஒரு தடவை சுவரில் மாட்டியிருந்த தாய் தந்தையரின் படங்களைப் பார்த்துக் கொண்டாள்.
'அம்மா! அம்மா! அனாதையாய்த் தவிக்கிற என்ன அரவணைக்க உன்ர கையை நீட்டம்மா! நீட்டம்மா! நீட்டமாட்டாய்! நீயும் என்ன வெறுத்தொதுக்கிறியா. உன்ர பேருக்கு இழுக்குத் தேடிப்போட்டு உன்னட்டயே வரப்போறன்.
நீ எப்பிடி என்ன வரவேற்பாய்”
என்று அழுதாள்.
131

Page 68
ඌlගඛශීල්පló|ශ්‍රී
"அப்பு! அப்பு! நீங்கள் இருந்திருந்தா இப்பிடி நடந்திருக்குமா.
நான் கெட்டிருக்கவும் மாட்டன்.
இப்பிடி விஷத்தைக் கையில வைச்சுக் கொண்டு கதறவும் LDITL'L6ör...”
என்று புலம்பினாள்.
அவள் இனி யாருக்காக வாழ வேண்டும்.
சாவை அணைப்பதற்கு சித்தமானாள்.
விஷத்தை எடுத்துக் கொண்டு ஒரு கணம் சிந்தித்தாள்.
திடீரென விஷத்தை வைத்து விட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு வெளியே ஒடினாள்.
சத்தி எடுத்து விட்டு களைத்துப்போய்த்திரும்பி வந்தாள்.
வயிற்றைக் கையால் தடவிக் கொண்டே மெள்ள மெள்ள நடந்து வந்தாள்.
ஏதோ நினைத்தவளாய் சிலைபோலக் கதிரையில் அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் எழுந்து விஷப்போத்தலைக் கையிலெடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறத்தே சென்றாள்.
சிறிது நேரத்தில். அங்கே திடீரென ஒரு சத்தம் கேட்டது.
போத்தல் கல்லொன்றில் உடைபட்ட சத்தந்தான் அது.
திரும்பி வந்தாள்.
"நான் வாழப்போறன். வாழத்தான் போறன்.
இந்தச் சமுதாயத்தில வாழ்ந்து காட்டத்தான் போறன்.
சந்தர்ப்பவசமாகக் கெட்டுப்போனவள் சாகத்தான் வேணுமா?
என் அண்ணனென்ன இந்த அவனியே எதிர்த்து நின்றாலும்
கவலையில்ல.
132

அகளங்கள்
நான் வாழ்ந்து காட்டத்தான் போறன்.
என்ர வயித்தில வளர்ர கருவக் காப்பாற்றி பெத்தெடுத்து வளத்து நல்ல வாழ்வை அமைச்சுக் கொடுக்கும் வரையாவது நான் வாழத்தான் வேணும்.
என்ர குழந்தைக்காக நான் வாழப்போறன்.
என்று அவள் நெஞ்சம் எரிமலையாகக் குமுறியது.
தன் வேதனைக்கு முடிவுகட்ட நல்ல ஒரு தீர்வைக் கண்டாள். எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்து கதிரையில் இருந்தாள்.
நீண்ட நாட்களின் பின் இன்று தான் அவள் ஒரு திடமான மனநிலையில் இருக்கிறாள்.
அழுது களைத்துப் போனதால் அப்படியே நித்திரையாகி விட்டாள்.
D
133

Page 69
19
மாலையாகியது. பாஸ்கரன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அவனது மனத்திரையில் தானும் தங்கையும், ஆடி, ஒடி, விளையாடிய காட்சிகள் படமாக ஓடின.
தாய் தந்தையருடன் ஒன்றாக வாழ்ந்த காலம் நினைவுக்கு வந்தது.
தன் தங்கையை அப்படி வற்புறுத்தி தற்கொலை செய்யத் தூண்டியதற்காக தன்னையே நொந்து கொண்டான்.
ஆனால் அதேவேளை அவள் சாகத்தான் வேண்டுமென்று அவனது இதயம் கூறிக் கொண்டது.
இவள் இந்த உலகத்தில் இருக்கவே கூடாது.
அவளால் இந்த சமூகத்தை எதிர்த்து வாழமுடியாது.
என்று அவனது மனம் அவனது செய்கைக்கு ஆதரவளித்தது.
இப்படியே எண்ணமிட்டுக் கொண்டு தன் தங்கையின் இறப்புக்காக இரண்டு சொட்டுக் கண்ணிர் விடக்காத்துக் கொண்டு வந்தான்.
134

அகளங்கள்
அவளை நினைக்கவே அவனது கண்கள் கலங்கிவிட்டன.
என்ன இருந்தாலும் இரத்த பாசமல்லவா
கண்ணிரைத் துடைத்துக் கொண்டான்.
அவனது மனத்தின் அடித்தளத்திலிருந்து ஒரு குரல்
* அவள் வாழக் கூடாதா. சந்தர்ப்பவசமாகக் கெட்டுப் போனவளுக்கு இப்படியொரு தண்டனையா
அவளை வைத்துக் காப்பாற்ற என்னால் முடியாதா?”
என்று உணர்ச்சிபூர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் அவனோ!
“இதைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாது. கெட்டுப்போனவள் என்று ஊரெங்கும் திட்டும்போது நான் எப்பிடி அவளக் காப்பாற்றுவது
என் மனைவிகூட இதற்கு சம்மதியாளே”
என்று தன்மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு
“அவள் சாவில் நான் மட்டும்மல்ல அவளும் நிம்மதி பெறட்டும்”
என்று அவளுக்காகவும் இரங்கி நினைத்துக் கொண்டு வீட்டினுள்ளே நுழைந்தான்.
வீட்டினுள் நுழைந்தவன் சரஸ்வதி கதிரையில் கிடப்பதைக் கண்டான்.
விஷப்போத்தலையும் காணவில்லை.
அவள் இறந்து விட்டாள்தானா என்று பார்க்க அருகில் வந்தான்.
அவளைக் காணாத நேரத்தில் கொஞ்சமாவது இரக்கங் காட்டிய அவன் நெஞ்சம் அவளைக் கண்டதும் கல்லாகியது. பாஸ்கரன் வந்து நிற்பதை உணர்ந்த சரஸ்வதி.
‘அண்ண! என்னக் கொல்லாத. என்னக் கொல்லாத” என்று கதறி அழுதபடி அவனது கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
135

Page 70
ඌlගඛණ්ෆ|6|ශ්‍රී
அவனோ அவள் சாகாமல் இருப்பதையும் தன்னிடம் உயிர்ப்பிச்சை கேட்பதையும் கண்டு ஆத்திரப்பட்டு தன் கைகளாலேயே அவளைக் கொன்று விடலாமா என்று கூட நினைத்தான்.
அவன் நின்ற நிலை அவனை ஒரு கொலைகாரன் போலக் காட்டியது.
அவளோ மீண்டும் மீண்டும்
‘அண்ண என்னக் கொல்லாத என்னக் கொல்லாத”
என்றவாறே அழுதாள். அவளது கண்ணிர்த்துளிகள் அவனது
பாதத்தில் விழுந்து சிதறின.
'அடிபாவி நீ இன்னும் இந்தச் சமூகத்தில வாழ விரும்பிறியா.
எப்பிடி வாழப்போறாய்.
மானத்தோட வாழத்தான் தெரியேல்ல சாகவும் தெரியாமல் போட்டுது”
என்று எட்டி உதைத்தான். அவளது முகத்தில் விழுந்த அடியினால் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அவளோ திரும்பவும் வந்து அவனது காலையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
'அண்ண! நீ எனக்கு எப்பிடியெண்டாலும் அடி உதை. அந்த உரிம உனக்கிருக்கு.
நீயே அணைச்சு வளத்த கையாலயே அடிச்சுக் கொல்லு,
ஆனா என்னச்சாகச்சொல்லி மட்டும் சொல்லாத.
நான் வாழப்போறன் வாழத்தான் போறன்’
என்று அழுது அரற்றினாள். அவனோ இரக்கம் சிறிதும் காட்டாமல் கைகளால் அடித்து அவள் கழுத்தைப் பிடித்து நெரித்தான்.
அவள்
‘அண்ண அண்ண உன்ர கையாலயே என்னக் கொண்டிரு.
136

அகளங்கள்
என்று ஈனஸ்வரத்தில் அழுதுகொண்டிருந்தாள்.
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்.
அப்படியிருக்க, கூடப் பிறந்தவன். தன் அரவணைப்பிலேயே
வளர்த்தவனால் அவளை எப்படிக் கொல்ல முடியும்.
அவளைத் தள்ளிவிட்டு சிறிதுநேரம் யோசித் தான். அவனையுமறியாமல் அவன் கண்கள் கலங்கியிருந்தன.
அவளை அப்படியே விட்டு விட்டு வெளியே சென்றான்.
அவள் கிடந்து அழுது அழுது தன் வேதனையைத் தீர்த்துக் கொண்டாள். அன்று அழுது வற்றிய கண்ணிர் இன்றுதான் மீண்டும் பெருக்கெடுத்தது.
அது வரையில் அவள் வாழ்வில் நடைபெற்ற எத்தனையோ
துயரங்களை அவள் பொறுமையுடன் தாங்கிக் கொண்டாள்.
ஆனால் இன்று அண்ணன் தங்கையைத் திருமணஞ் செய்யும்நிலை. தன்மகனின் எதிர்காலமும் பாழாக்கப்படுவதற்கு அத்திவாரமிடப்பட்ட நிலையில் தன் கடந்தகால வாழ்வை நினைத்து அழுது கொண்டாள்.
D
137

Page 71
கொழும்புக்குச் சென்ற மோகனால் சேகருடன் ஒன்றாக இருக்க முடியவில்லை.
அவனிடம் தன் கதைகளைக் கூறவும் முடியவில்லை.
கரைதெரியாக் கடலிலே சிக்கிக் காற்றிலே அலைப்புண்டு தவிக்கும் தோணியென அவன் உள்ளம் அலைந்து தவித்தது.
அவனுக்குஅந்த இடத்தை விட்டு மாறவேண்டிய நிலை எப்படியும் வந்து விட்டது.
தனியே, அறையை மட்டும் மாற்றினால் சேகர் தன்னைத் தன் அலுவலகத்தில் சந்தித்து விடுவான்.
தன் தங்கையின் நிலையை அறிந்து தன்னிடம் கேட்க முன் தன் அறையை விட்டு மாறவேண்டுமென்று முடிவு செய்து அதற்கு
ஏற்றாற்போல் ஒருவாறு மாற்றமும் எடுத்துக் கொண்டு அறையை விட்டே வெளியேறிவிட்டான்.
இப்பொழுது அவன் கொழும்பிலில்லை.
கண்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான்.
138
 

அகளங்கள்
சேகரை விட்டுப் பிரிந்தது அவனுக்கு ஆறுதலாகத்தான் இருந்தது.
சேகரைக் காணும்போதெல்லாம். அவனது மனச்சாட்சி அவனைக் குத்திச் சித்திரவதை செய்தது.
அதுமட்டுமல்ல சேகர் தன் தங்கையின் நிலை தெரிந்தால் தன்னை வற்புறுத்துவான்.
தன்னால் முடியாதென்று சொன்னால் கொலை செய்யவும் அவன் தயங்கான்.
அவனிடம் எப்படி அவனைத் தம்பியென்றும், சந்திராவைத் தங்கையென்றும் கூறுவது.
இப்போது மாற்றலாகி வந்ததால் அவனுக்கு சிறிது நிம்மதி கிடைத்தது.
ஆனால் அவனது உள்ளம் அவன் செய்த கொடுமையை துரோகத்தைச் சுட்டிக் காட்டி அவனது நிம்மதியைக் கெடுத்துக் கொண்டே இருந்தது.
சரியாக நித்திரை செய்யவும் முடியவில்லை.
வேலையில் கவனஞ் செலுத்தவும் முடியவில்லை.
இடையிடையே அவனது மனம் துணிகரமாகவும் எண்ணத் தொடங்கியது.
'சந்திராவைக் கலியாணஞ் செய்து கொண்டாலென்ன. இந்தச் சமூகத்தை எதிர்த்து வாழ முடியாதா.”
என்று அவன் மனம் கூறும் அதேவேளையில் தாயின் நிலைமை அந்த எண்ணத்தைச் சிதறடிக்கும்
'அம்மாக்குத் தெரியாமல் அவளக் கூட்டி வந்து இஞ்ச வைச்சிருந்தால்.”
என்று கூட அவன் மனம் எண்ணியது.
ஆனால் அது நடக்கக்கூடிய காரியமா
139

Page 72
ඌ|ගඛණ්ෆló|ශ්‍රී
தாயின் சாவில் தன் வாழ்வை மலரவைக்க அவனால் முடியவில்லை.
'சந்திரா தங்கை, என் தங்கை. அம்மாவின் புதுக்கதை’ என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டான்.
அவனது மனச்சுமை அதிகரித்துக் கொண்டே போனது.
ஒரு பயித்தியக்காரன்போல் நடந்து திரிந்தான்.
முடிவில் தன் தாயின் நிலைக்காக, தாயின் அன்புக்காக, தன்னை இவ்வளவு காலமும் எவ்வளவோ கஸ்டப்பட்டு வளர்த்ததற்காக. தான் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைக்காக தன் காதலைத் துறக்கத் துணிந்தான்.
அதன்பின் ஓரளவு அமைதி அடைந்தான்.
தாய்க்குக்கூட கடிதம் போடுவதைக் குறைத்து விட்டான். தாய்க்குக் கடிதம் எழுதுவதில் ஒரு வெறுப்பு இருந்தாலும் பணம் அனுப்பும்போதும் வேறும் சில சமயங்களிலும் ஏனோ தானோ என்று எழுதுவான்.
இதேவேளையில் மோகனின் பிரிவு சேகருக்குப் பெரிய வேதனையாக இருந்தது.
மோகன் ஏன் இவ்வளவு அவசரமாக மாற்றலாகிச் சென்றான் என்று ஆச்சரியமாக இருந்தது.
சேகரால் மோகன் பிரிந்துபோன காரணத்தை சிந்திக்கக்கூட முடியவில்லை.
மோகனைச் சந்தித்துக் கதைக்க முடியாவிட்டாலும் , கடிதமூலமாவது கதைப்பதற்கும் மோகன் கடிதம் போடவுமில்லை.
அவனது விலாசமும் தெரியாது.
அதனால் சேகருக்கு ஒரே யோசனையாக இருந்தது.
இந்த நேரத்தில் அவனது தகப்பனிடமிருந்து வந்த கடிதம் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
140

அகளங்கள்
அவனால் அதைக் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை.
மோகனும் சந்திராவும் இவ்வளவு தூரம் போயிருப்பார்கள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இப்போதுதான் மோகன் தன்னை ஏமாற்றி வீடு மாறிச் சென்ற காரணம் புரிந்தது.
‘அப்பிடியெண்டால் மோகன் என் தங்கையை ஏமாற்றி 6LT60TT'?
அவனது உள்ளுணர்வுகள் இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தன.
D
141

Page 73
21
அன்று தர்மலிங்கத்தாரின் வீடு ரணகளமாக விளங்கியது.
தர்மலிங்கம் ஏதோ பொரிந்து தள்ளிக் கொண்டே இருந்தார்.
அவர் இன்றுதான் வீட்டில் கூடுதலான நேரம் நிற்கிறார்.
அதுவும் இந்தப் பிரச்சினைக்காகத்தான் வீட்டில் இருக்கிறார்.
அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
மனைவியின் மேல் கோபங்கொண்டு பேசினார்.
பின்னர் அப்படியே திரும்பி மகள்மேல் சீறி விழுந்தார்.
வாயினால் திட்டித் தீர்த்தார். கைகளாலும் அடித்துக் குமுறினார்.
“எடியேய், என்ர குடும்ப கெளரவத்தப் பாழ்படுத்திற்றியேடி.
நான் இனி எப்பிடி நாட்டில தலைநிமிந்து நிப்பன்’
என்று சீறிச் சினந்தார்.
சந்திரா தரையில் கிடந்து அழுதுகொண்டிருந்தாள்.
அவளது கன்னங்கள் வீங்கிப்போய் இருந்தன.
142

அகளங்கள்
அவளால் அழத்தான் முடிந்தது.
அதையே செய்து கொண்டுமிருந்தாள்.
சிறிது நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்ட தர்மலிங்கம்
'அன்னம். ஆரிண்டாலும் வந்தா கத வெளியில தெரிஞ்சுபோடும்.
இந்த மூதேவியக் கொண்டுபோய்ப் படுக்கவை.
எங்கட குடும்பத்தை நாசமாக்க எண்டே பிறந்திருக்குது.
இவளிட்ட கேள் எந்தக் காவாலி இந்த வேலை செய்ததெண்டு.”
இறுதியாக அவர் கூறிய வார்த்தை அவரது இதயத்தை நடுங்க வைத்தது. -
காவாலி என்று அவர் சொன்னதும் அவருக்கு உடலெல்லாம் பதறியது.
முன்பொருகால் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் தர்மலிங்கத்தைச் சந்திச்சு தன் தங்கையின் வாழ்வு பற்றிக் கேட்ட காட்சி அவரது மனத்திரையில் வந்து விழுந்தது.
'தர்மலிங்கம்! நீ தயவு செய்து ஏமாத்தாத, என்ர தங்கச்சிக்கு வாழ்வு கொடு”
என்று கெஞ்சிய நேரத்தில்
'உன்ர தங்கச்சி ஆரோட போனாளோ எனக்கென்ன தெரியும். இப்ப என்னட்ட வந்து கேட்டா நானென்ன செய்ய'
“டேய் கதைக்கிறத அளந்து கத. நீதான் அவளைக் கெடுத்த நீ நீதான் அவளுக்கு வாழ்வு குடுக்க வேணும்”
நான்தான் கெடுத்ததெண்டதுக்கு சாட்சி இருக்கா’
பலவாறாக விவாதித்து இறுதியில்
'உங்கட காவாலிக் கூத்துக்களுக்கு எங்கட குடும்பம்தானோ கிடைச்சுது. இதுக்கெல்லாம் ஆண்டவன் உன்னக் கேக்காமல் விடான்."
143

Page 74
ඌ|රැනඛයීල්ප|6|ශ්‍රී
என்று கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அந்த இடத்தில் நிற்க முடியாமல் வெளியேறினார்.
அன்னலட்சுமியம்மாளின் பாடு சங்கடமாகியது. காலையில் சந்திரா சத்தி எடுத்ததையும் அதனால் அவள் சந்தேகப்பட்டு சந்திராவிடம் கேட்க அவள் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியைச் சொன்னதும் மனங்குமுறி அதை தர்மலிங்கத்தாரிடம் சொன்னது அவள்தான். அதனால்தான் இந்தப் போராட்டம் நடைபெற்றது
சந்திராவின் கனி னத்தில் பதிந் திருந்த கைவிரல அடையாளத்தைக்கான அத்தாயுள்ளம் மிகவும் வேதனைப்பட்டது.
ஒருவாறு சந்திராவைத் தேற்றி அவளின் அறைக்குக் கூட்டிச் சென்றாள்.
'சந்திரா! நீ வீணா அழாத, ஆரும் கண்டு கத ஊரில பரவீற்றுதெண்டா எங்கட மானம் மரியாத எல்லாமே போயிரும்.
என்று சொல்லிக் கொண்டே போனாள்.
சந்திராவின் அழுகை கூடிக்கொண்டே போனதே தவிரக் குறையவில்லை. இறுதியாகச் சந்திராவின் கண்ணிரைத் தன் கைளால் துடைத்து விட்டு
'சந்திரா, சொல்லம்மா! ஆரிண்டு சொல்லம்மா”
என்று மிகவும் அன்பாகக் கேட்டாள்
என்று அழுதாளே தவிர அவளின் வாயிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.
மேலும் அன்பாக அவளது கைகளைப் பிடித்து வருடிக் கொடுத்தவாறே
"சந்திரா! நீ ஆரிண்டு சொல்லு. அவனையே உனக்குக் கட்டி வைக்கிறம்
வீணாக் கதறி என்ன செய்யப்போறாய் சொல்லன்.”
தன் கண்ணிருக்குத் தற்காலிகமாகத் தடைபோட்டு விட்டு 144
 

அகளங்கள்
‘அண்ணனோட வந்தாரே.”
என்று இழுத்தாள்.
'ஆர் மோகனோ. அவன் அவன்.”
என்று ஏதோ பேசத் தொடங்கினாள்.
சந்திரா அதை விடப் பலத்த குரலில் அழத் தொடங்கினாள். 'அவன உனக்கு முடிச்சு வைக்கிறம். நீ முகத்தைக் கழுவீற்று வந்து சாப்பிடு.”
என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.
அன்னலட்சுமியின் மனம் பல எண்ணங்களில் சுழன்றது.
‘இவனாத்தான் இருக்குமெண்டு எதிர்பாத்தன்”
என்று எண்ணிக்கொண்டே அடுப்படியை நாடித் தன் வேலையைக் கவனித்தாள்.
"உடனயே தம்பிக்கு கடிதம் போட்டு இவளின்ர கலியாணத்த முடிச்சிர வேணும்.
யாருக்காவது தெரியக்கிடையில காரியம் முடியோணும்.
தப்பித்தவறி ஆருக்கெண்டாலும் தெரிஞ்சா.”
என்ற எண்ணம் அவளை அவசரப்படுத்தியது. அதேவேளை அவள் மனம் மோகனையும் திட்டிக் கொண்டே இருந்தது.
“நல்ல பிள்ள மாதிரி விட்டில வந்து திண்டு குடிச்சு இருந்தவன். இப்பிடிச் செய்திட்டானே.
இந்தக் களிசறயள நம்பி வீட்டில அண்டினதுதான் குற்றம்’ என்று அவளது மனம் அவனைத் திட்டியது.
மத்தியானம் கழித்து தர்மலிங்கம் வீட்டுக்கு வந்தார்.”
"மோகனாம். அவன்தான். தம்பியோட வந்து நிண்டானே. அவனாம்”
145

Page 75
| ඌlගඛයීඝ්‍රතිශ්‍රී
என்றாள் ஆத்திரமாக,
தர்மலிங்கமும் எதிர்பார்த்தவர்போல்
“சரி.சரி. அவன்ர வீட்டு விலாசமிருந்தாலாவது போய் அவன்ர
தாய் தகப்பனக் கண்டு கதைச்சு ஒரு முடிவு செய்யிலாம். விலாசம் தெரியுமோ
என்று அமைதியாகவே கேட்டார்.
“எனக்கென்ன தெரியும். கிளிநொச்சியெண்டு தம்பி சொன்னான். அவளவுதான் தெரியும்.”
என்று அவள் முடித்தாள்.
"நான் தம்பிக்குக் கடிதம் போட்டு வீட்டு விலாசத்த எடுத்துக் கொண்டுபோய்க் கதைக்கிறன்”
என்று கூறிவிட்டு சேகருக்குக் கடிதம் எழுதினார்.
கடிதத்தில் மோகனைப் பற்றித் திட்டிய வண்ணமும் சேகருக்கு விடயம் விளங்கக்கூடிய வண்ணமும் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தபின்தான் சேகருக்கு மோகன் தன்னை விட்டுப் பிரிந்து போன காரணம் தெரிந்தது.
கடிதம் கிடைத்ததும் முதல் வேலையாக மோகனின் வீட்டு விலாசத்தை எழுதி அனுப்பி வைத்தான்.
தர்மலிங்கத்தார் அந்த விலாசத்தைப் பலதடவை புரட்டிப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு அந்த விலாசம் அந்தப் பெயர் பலகதைகளைக் கூறியது.
"ஆ. அப்படியும் இருக்குமா?. இல்லை இருக்காது. அப்படி இருக்க முடியாது”
என்று தன் மனத்தைத் தேற்றியவாறு கிளிநொச்சியை நோக்கிப் புறப்பட்டார்.
D
146
 

சரஸ்வதி மகனின் கடிதத்தைப் பிரித்துப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
அந்தக் கடிதத்திலிருந்த விடயம் அவளை அப்படி அழ வைத்துவிட்டது.
"என் வாழ்வுக்காக நீங்கள் பட்ட கஸ்டங்களை நான் நன்கு அறிவேன்.
என்னுயிர் இருக்கும் வரை எனக்குத் தெய்வம் நீங்கள்.
அதனால் உங்கள் மனம் நோகும்படி எந்தக் காரியமுமே GagFučju JLDTLIGBL6ör...”
என்றிருந்த வரிகளை வாசித்து தன்மேல் உயிரையே வைத்திருக்கும் மகனுக்கு இப்படியான ஒரு நிலையில் தன்னால் எந்த முடிவுமே எடுத்து உதவி செய்ய முடியாமலிருப்பதை நினைத்து கலங்கினாள்.
'அவன் வேற ஆரையாவது எந்தச் சாதியிலயோ எந்தக் குலத்திலயோ எந்தச் சயத்திலயோ ஏன் குருடாய், செவிடாய் உள்ள ஒரு பெண்ணைக் காதலிச்சு இப்பிடி ஒரு நிலமை வந்திருந்தா நிச்சயமா
அவனையும் அவளையும் சேத்து வைச்சிருப்பன்.
147

Page 76
ඌ|රැනඛයීල්පlélá
ஆனா. ஆனா. இது முடிகிற காரியமா.” என்று ஏங்கித்
தவித்தாள்.
காதலனால் ஏமாற்றப்பட்ட காரிகையர் படும் கஸ்டத்தை அடிமுதல் முடிவரை அனுபவித்தவளல்லவா.
அதனால் அவள் மனம் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வுக்காக கண்ணிர் வடித்தது. வாழ்விலே காதலனால் கெடுக்கப்பட்டு, கைவிடப்பட்டு, சகோதரனால் வெறுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, சீரழிந்த தன் வாழ்க்கையை எண்ணிப் பார்க்க அவள் மனம் குமுறியது.
அண்ணன் பாஸ்கரனின் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்ட சரஸ்வதி சில நாட்களில் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சியை நாடிவந்தாள்.
அங்கேயுள்ள "கருணை நிலையம்” அவளுக்குக் கைகொடுத்தது.
வாழ்விழந்த வனிதையர் பலர் அங்கிருந்து தம் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களோடு அந்த விடுதியிலே சிறுவேலைகள் செய்து தன் காலத்தைக் கடத்திக் கொண்டு வந்தாள் சரஸ்வதி.
அனாதையாய் வந்தோரை ஆதரித்து அன்பு காட்டுவதில் இந்தக் கருணை நிலையத்தினர் மிகுந்த அக்கறை காட்டினார்கள்.
காலம் கழிந்து கொண்டிருந்தது.
அந்த விடுதியில் அவளின் நிலையிலேயே அவளுக்கு ஒரு சினேகிதியும் கிடைத்தாள்.
செல்லம்மா என்ற அந்தப் பெண் தனது முறை மைத்துனன் ஒருவனால் கெடுக்கப்பட்டு கைவிடப்பட்டாள். அவளுக்கு வாழ்வு கொடுக்க யாருமே இல்லை.
அதனால் கருணை நிலையத்தை நாடியிருந்தாள்.
அவள் கிளிநொச்சியில் இருந்து வாழ்ந்தவள். அதனால் அவளுக்கு கிளிநொச்சியில் உறவினர் இருந்தனர்.
148

அகளங்கள்
சரஸ்வதியும் செல்லம்மாவும் நல்ல நண்பிகளாயினர். இருவருக்கும் ஆண்குழந்தைகள் பிறந்தன. பிள்ளையிலும் அவர்களுக்கு ஒற்றுமை இருந்தது.
சிறுவர்கள் வளர்ந்து பாடசாலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தனர்.
பத்து வருடங்களை அந்தச் சுவர்களுக்குள் கழித்த அவர்கள் தாங்களும் வெளியுலகைக் காணவேண்டும் வாழவேண்டும் என்று ஆசைகொண்டனர்.
செல்லம்மாவின் மூத்த சகோதரியொருத்தி குடியிருந்த வீடு அப்போது காலியாக இருந்தது.
செல்லம்மாவின் தமக்கையும் கணவனும் வேறு ஓரிடத்துக்குக் குடிபோகும்போது அந்த வீட்டை செல்லம்மா தனதாக்கினாள்.
அந்த வீடு செல்லம்மாவிற்குச் சேரவேண்டிய வீடு என்பதனால் அந்த வீட்டை அவளது தமக்கை அவளுக்குக் கொடுத்திருந்தாள். செல்லம்மாவுடன் சரஸ்வதியும் சேர்ந்து அவ்வீட்டில் குடிபுகுந்தனர்.
செல்லம்மாவின் மகன் குமாரும் மோகனும் ஒன்றாகவே பள்ளிக்கூடம் போய் வந்தனர்.
இணைபிரியாத நண்பர்களாகப் பழகிவந்தனர்.
வீட்டில் தோட்டம் செய்வதில் செல்லம்மாவும் சரஸ்வதியும் ஈடுபட்டனர்.
செல்லம்மாவுக்கு தோட்ட வேலைகள் எல்லாம் நல்ல பழக்கமாக இருந்தது.
அதனால் தோட்டம் செய்து தங்கள் வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர்.
மோகனும் குமாரும் பள்ளிக்கூடத்தில் நிற்கும் நேரத்தைத்தவிர ஏனைய நேரங்களில் தமது வீட்டிலேயே தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
மோகனையும் குமாரையும் கண்டபடி வெளியில் செல்ல அவர்கள்
149

Page 77
ඌ|රැනඛයීල්ප||6||5
அனுமதிப்பில்லை.
அவ்வூர்ச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடக்கூட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
காரணம் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் அவர்களின் பிறப்பைப்பற்றிய நஞ்சை ஊட்டி விடுவார்கள் என்ற பயம்தான். அவ்வூர் மக்களும் இந்த இருவரையும் ஒதுக்கியே வைத்திருந்தனர். அதனால் அவர்களும் ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர்.
அந்த வேளையில் ஒரு நாள் பாஸ்கரன் கிளிநொச்சிக்கு வந்திருந்தான்.
தனது தங்கையையும் மருமகனையும் கண்டு கருணை கூர்ந்து அவர்களுடன் கதைத்தான்.
சரஸ்வதி தனியாகக் கஸ்டப்படுவதைக் கண்டு உதவ முன்வந்தான்.
தகப்பனின் நெற்காணிகளில் ஐந்து ஏக்கரை தனது தங்கைக்குக் கொடுத்து அதனைப் பராமரிக்கவும் ஒழுங்கு செய்தான். ஓமந்தைக்கு சரஸ்வதி போகவிரும்பாததால் அந்த வயல்க் காணியில் பயிர் செய்ய குத்தகைக் கமக்காரனாக சுப்பையாவையும் ஒழுங்கு செய்து கொடுத்தான்.
சரஸ்வதியின் வாழ்விலும் வசந்தம் வரத் தொடங்கியது. செல்லம்மா குமாருடன் தானும் மகனும் சந்தோஷமாக இருக்கலாமென்று நம்பிக்கொண்டிருந்தாள். ஆனால் வசந்தம் வரமுதல் புயல் ஒன்று வந்தது.
ஒரு நாள் செல்லம்மாவின் கணவன். அவளைக் கெடுத்து அனாதையாக்கியவன் அவள் வீட்டைத் தேடிவந்தான். மிகவும் பணிவாக மன்னிப்புக்கேட்டு தன்மகனையும் கட்டி அணைத்து முத்தமிட்டு உறவு கொண்டாடினான். செல்லம்மாவும் உள்ளம் மகிழ்ந்து அவனைத் திருந்தியவனாக நம்பினாள்.
ஆனால் அவனோ வந்த முதல் நாளிலேயே சரஸ்வதியைக் கண்டு அவளின் அழகைப் பருகும் எண்ணத்தில்தான் வந்தான் என்று அவளுக்குத் தெரியாது.
150

அகளங்கள்
ஒருநாள் சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்றிருந்த நேரம் வீட்டினுள் நுழைந்த அவன் சரஸ்வதியைப் பலாத்காரம் செய்ய முற்பட்டதைக் கடைத்தெருவிலிருந்து வந்த செல்லம்மா கண்டதும் துடிதுடித்துப் பதைபதைத்து ஓடிவந்தாள்.
கைகளில் பெரிய கத்தி ஒன்றை எடுத்து அவனை வெட்டுவதற்கு முயன்றாள்.
ஒருவாறு நிலைமையை சரஸ்வதி சமாளித்தாள். ஆயினும் அவனது கைகளில் கத்தியின் கூர்மை சிறிது காட்டப்பட்டுத்தான் இருந்தது.
அன்றோடு அவன் அந்தப் பக்கமே வருவதில்லை. சரஸ்வதிக்கோ இந்த நிகழ்ச்சியின் பின் செல்லம்மாவின் மேல் பெரிய மதிப்பும் பாசமும் பெருகியிருந்தது
தன் கணவனைக்கத்தியால் வெட்டித் தன் கற்பைக் காப்பாற்ற அவள் முயன்றதை சரஸ்வதியால் மறக்க முடியவில்லை.
அன்றிலிருந்து செல்லம்மா தனக்கு எவ்வளவு பாதுகாப்பு என்பதை அவளால் உணர முடிந்தது.
மறைந்து போன துயரம் மீண்டும் மீண்டும் துளிர்த்தது.
சமூகத்தில் சிலகாலமாக கஸ்டமெல்லாம் குறைந்து வர வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் துயரங்கள் தொடர்ந்தன. அந்த நிகழ்ச்சி அவர்கள் வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இப்படியும் நடக்க வேண்டுமா.
கடவுள் என்ன கண்ணில் லாக் குருடனா? இத்தகைய கொடுமைகளைச் செய்து கொண்டு இறைவன் என்றொருவன் இருப்பதை விட இல்லாமலே இருக்கக்கூடாதா.
அன்று நடைபெற்ற அந்தச் சோக நிகழ்ச்சியை அவர்களால் தாங்க முடியவில்லை. இப்படியும் நடக்கும் என்று ஒருவருமே எதிர்பார்க்கவுமில்லை.
D
151

Page 78
மோகனும் குமாரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.
காலையில் பாடசாலைக்குச் செல்லும் அழகைப் பார்த்து இரு தாயுள்ளங்களும் பூரிப்படையும்
அதிலும் குமார் நல்ல வெள்ளை நிறமாகவும், மோகனை விட சற்று பருமனாகவும் பார்வைக்கு அழகாகவும் இருந்தான்.
சுருண்ட கேசமும் அழகாக வாரிவிடப்பட்டதால் உண்டான அழகும் அவனுக்கு மெருகூட்டின.
சரஸ்வதியும் செல்லம்மாவும் தங்கள் பிள்ளைகளை மாறியே வளர்த்தனர்.
குமாரை அழகுபடுத்துவதும் அவன்மேல் கவனம் செலுத்துவதும் சரஸ்வதியின் வேலை.
அதேபோல் மோகனை செல்லம்மா கவனித்தாள்.
சரஸ்வதிக்கு தன்மகனை விட குமாரில் தான் கொள்ளை ஆசை.
குமாரும் தன் தாயை விட சரஸ்வதியுடன்தான் கூடுதலாகப் பழகினான்.
152

அகளங்கள்
சின்னம்மா. சின்னம்மா’
என்று அவன் கொஞ்சித் திரிவதைப் பார்த்தால் செல்லம்மாவுக்கே பொறாமையாயிருக்கும்.
கொழுகொழு என வளர்ந்து வந்த இரு நண்பர்களும் பாடசாலையிலும் நல்ல பிள்ளைகளாய் அனைவரினதும் அன்புக்கும் பாராட்டுக்கும் ஆளாய் வளர்ந்து வந்தனர். ஒருநாள் வகுப்பில் ஒரு மாணவன் மோகனைப் பார்த்து,
'தகப்பன் ஆரிண்டு தெரியாது அனாத விடுதியிலிருந்து வந்தவன்தானே நீ”
என்று ஏசியதைக் கேட்டு மனம் நொந்து வகுப்பில் அழுது கொண்டிருந்தான்.
வீட்டிலும் அதையே நினைத்து அழுது கொண்டிருக்கும்போது குமாரும் அவனைத் தேற்றினான்.
'மோகன் எங்களுக்குத் தகப்பனத் தெரியாது. எங்கள நல்லா வளக்க தகப்பண் இல் லயெண்டால் அதப்பற்றி மற்றவையள் பரிதாபப்படலாம்.
அனுதாபம் காட்டலாம். அதுதான் பண்புள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை,
அத விட்டிட்டு இப்பிடிப் பரிகாசஞ் செய்யிறது எவ்வளவு பிழையானது.
ஆனா இந்தச் சமுதாயம் எங்களப் பாத்து பரிதாபப்பட்டாலென்ன, பரிகாசஞ் செய்தாலென்ன ஒரு பலனுமே எங்களுக்குக் கிடைக்காது.
நாங்கள் உழைச்சு நாங்கள் படிச்சுத்தான் நாங்கள் வாழப்போறம். பிறகு ஏன் இந்தச் சமுதாயத்துக்குப் பயப்பட வேணும்”
என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டு சரஸ்வதியும் செல்லம்மாவும் பூரித்துப் போனார்கள்.
காலம் ஒடவில்லை. காலத்தை காலம் துரத்தியதால் ஓடியது. ஒருநாள் மோகனும் குமாரும் பள்ளிக்கூடம் விட்டு வந்து கொண்டிருந்த 153

Page 79
ඌlගඛණිෆ||6||5
நேரம் குமாருக்கு வயது பதினைந்து இருக்கும்.
க.பொ.த சாதாரண தரம் படித்துக் கொண்டிருந்தான்.
கைகளைக்கோர்த்தபடி பாதையோரத்தில் வந்து கொண்டிருந்த அந்த நண்பர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது புதிய மொடல் காரொன்று. ஆ. அய்யோ! கண்மூடி முழிக்கும் நேரம். குமார் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
காரில் வந்தவர்கள் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லாததால் காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்
“குமார். குமார்.”
துடிதுடித்துப் போனான் மோகன்.
அவனால் இரத்தத்தைப் பார்க்க முடியவில்லை.சிறிது நேரத்தில் குமாரின் உடலைக் கட்டிப்பிடித்தவாறு மோகன் மயங்கிக் கிடந்தான்.
சரஸ்வதி, செல்லம்மா அழுது துடித்துக் கண்ணிர் விட்டார்கள்.
வளர்ந்து செழித்த உடல் தீயிலே வெந்தது.
தீ அவனுடலை அணைத்தது.
செல்லம்மா அழுது அழுது ஒரு முடிவுக்கு வந்தாள்.
அழுகை மாறி சிரிக்கத் தொடங்கினாள்.
அழுகையும் சிரிப்பும் சிறிது நேரம் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.
பின்னர் தன்னையறியாமல் தன்னருகே நிற்கும் சரஸ்வதியை அறியாமல் உலகத்தையே அறியாமல் சிரிக்கத் தொடங்கினாள்.
பைத்தியம் அவளைப் பற்றிக் கொண்டது.
குமாரின் உடலுக்குக் கொள்ளிவைக்க மோகனையே அனுப்ப முயன்றனர்.
இன்னும் அவன் மயக்கம் தெளிந்தபாடில்லை.
154

அகளங்கள்
சற்று நினைவு வந்தபோதெல்லாம்
“குமார். குமார்.”
என்று அரற்றிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் மீண்டும் நினைவிழந்து விடுவான்.
செல்லம்மா சுயநினைவற்றுப் பிதற்றினாள்.
சரஸ்வதிதான் வீட்டிலிருந்தே கொள்ளி வைத்தாள்.
ஆசையோடு வளர்த்த பிள்ளை "ஐயோ காலனின் கொடுமை.” சில நாளில் மோகன் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து நடமாடத் தொடங்கினான்.
ஆனால் செல்லம்மாவின் பைத்தியம் முற்றிக் கொண்டே வந்தது.
அவளை பைத்தியக்கார விடுதியில் சேர்க்க வேண்டிய நிலைமை.
சில நாட்களில் பைத்தியம் சுகமாகி வீட்டுக்கு வருவாள். பின்னர் மீண்டும் முற்றிவிட பைத்தியக்கார விடுதிக்குப் போவாள். அவள் வாழ்வு அப்படியே போய்க் கொண்டிருந்தது.
மோகன் நடைப்பிணமாக உலாவிக் கொண்டிருந்தான்.
பாடசாலைக்குப் போகவே அவனால் முடியவில்லை.
ஆனால் தாயின் வற்புறுத்தலால் படித்து க.பொ.த. (சாத) பரீட்சையை எடுத்தான்.
அதன்பின் வீட்டிலேயே நின்று வீட்டில் தோட்ட வேலைகளைச் செய்து வந்தான். சரஸ்வதி துணையிழந்து தவித்தாள்.
மோகன் சிறகிழந்த பறவையானான். காலம் ஓடிக் கொண்டிருந்தது. பரீட்சை முடிவு மோகனுக்குக் கைகொடுத்தது.
அந்தப் பாடசாலையில் அவனது பெறுபேறுகள் சிறப்பானதாக இருந்தது.
க.பொ.த (உத) படிக்கும்படி தாய் வற்புறுத்தியும் அவன்
155

Page 80
அலைக்குமிழ்
படிக்கவில்லை. தாயை வீட்டில் வேலை செய்ய விட்டு தான் படிப்பதை அவன் விரும்பவில்லை.
அத்தோடு அவனால் படிக்கவும் முடியவில்லை. தன் நண்பனில்லாமல் பாடசாலைக்குச் செல்வது அவனால் முடியாத காரியமாக இருந்தது.
தாயின் பிடிவாதத்தையும் மீறி வீட்டில் நின்று வேலை செய்து வந்தான்.
தாயின் உழைப்பையும் அவளின் தனிமையையும் அவன் விரும்பவில்லை.
அதனால் வீட்டிலேயே நின்றான்.
சில ஆண்டுகள் பறந்தோடின.
காலத்தின் கண் திறந்து அவன்மேல் விழுந்தது. எழுதுவினைஞர் சேவையில் அவனுக்கு வேலை கிடைத்தது.
தாயைப் பிரிந்து கொழும்பில் வேலை செய்ய வேண்டிய நிலைமை. எப்படியும் பிரிந்துதான் ஆகவேண்டுமென்ற நிலையில் அழுதுகொண்டே நின்றான்.
தாயின்முன்னே நின்று அழுதுவிட்டு அப்படியே தன் நண்பனின் படத்தருகே சென்றான்.
கண்கள் குளமாகி நீர் பெருக்கெடுத்தோடியது.
மோகன் அழுவதைக் கண்டு தாயும் அழுதாள்.
அவர்களது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த நிகழ்ச்சியை நினைத்து தன் கண்களில் வழிந்தோடும் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.
நீண்ட ஒரு பெருமூச்சு அவள் நெஞ்சத்தின் அடியிலிருந்து வெளிவந்தது.
மகனின் இன்றைய பிரச்சினை. அது பெரிய கேள்விக்குறியாய் அவள் இதயத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது.
156
 

அகளங்கள்
“ஆண்டவனே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வைத் தந்திரு.
என்மகனின் வாழ்வை மலரச் செய்.
இத்தனை காலமா என்னக் கொடுமைப்படுத்தியும் உன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேனே என்குறையைத் தீர்க்கக் கூடாதா?
"அனாதை ரட்சகன்’ என்று போற்றுகிறார்களே என்நிலை அறியாயா’
என்று ஆண்டவனின் படத்தின் முன் நின்று வேண்டிக் கொண்டாள்.
D
157

Page 81
தந்தையின் கடிதமூலம் தன் தங்கையின் நிலையை அறிந்த சேகர் மோகனின் விலாசந் தெரியாமல் அவனைச் சந்திக்க முடியாமல் தவித்தான். w
பின்னர் ஒருவாறு தனது கந்தோரில் அவன் மாற்றலாகிச் சென்ற கந்தோரின் விலாசத்தைக் கண்டுபிடித்து கண்டிக்குப் புறப்பட்டான்.
அங்கே மோகனை அவனது அலுவலகத்தில் சந்தித்துக் கதைத்தான். மோகன் அவனைத் தன் அறைக்குக் கூட்டிச் சென்றான்.
அறைக்கு வந்து சேர்ந்ததுமே சேகர் தன் பிரச்சினையைத் தொடங்கினான்.
"மோகன் தங்கச்சியின்ர நிலமை உனக்குத் தெரியும். நீதான் அவளக் கலியாணஞ் செய்ய வேணும்.
இந்த விசயம் வெளியில தெரிஞ்சா மானமே போயிரும்.
அப்பாவுக்கு அம்மாவுக்கு வீட்டில எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சுது.
எங்கட குடும்ப கெளரவமே இப்ப உன்ர கையிலதான் இருக்கு.
158
 

அகளங்கள்
வலுகெதீல உங்கட கலியாணம் நடந்தாத்தான் எங்கட மானத்தக் காப்பாற்றிலாம்.”
என்று தனது ஆர்வத் தை மிகவும் பொறுமையாக வெளிப்படுத்தினான்.
'சேகர்! என்ன மன்னிச்சிரு”
என்ற வார்த்தையைக் கேட்டதும் சேகரால் அதை நம்ப முடியவில்லை.
'மோகன்! என்ன இது. நீயா இப்பிடிச் சொல்லுறாய். இது ஒரு சொல்லக்கூடிய பதிலா.
சீ கொஞ்சம் யோசிச்சுப் பார்.
அவளோட பழகி காதலிச்சு கடைசீல அவள இந்த நிலைக்கு ஆளாக்கிப்போட்டு இப்ப இப்பிடிச் சொல்ல எப்பிடி உனக்கு மனம் வந்தது”
‘என்னக் குழப்பாத என்னால இப்ப எதுவுமே செய்ய முடியாது.
தயவு செய்து என்ன வற்புறுத்தாத”
மோகனின் பொறுப்பற்ற வார்த்தைகளால் சேகர் கோபமடைந்த போதிலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு "உனக்கு எவளவு சீதனம் வேணுமோ சொல்லு. தாறம். உனக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் நாங்கள் தாறம்.
நீ ஒண்ட மட்டும் தா. அவளுக்கு வாழ்வு கொடு. உன்ர காலப்பிடிச்சுக் கெஞ்சிக் கேக்கிறன். என்ர தங்கச்சிக்கு வாழ்வுகொடு.”
என்று உருக்கமாக வேண்டினான்.
'சேகர் கேவலம் காசுக்காக நான் அவள மறுக்க இல்லை.
இந்த நாறிப்போன சமுதாயத்தில ஊறிப்போன உழுத்துப்போன
கொள்கைகளுக்காக நான் அவளை வெறுக்கேல்ல. நான். நான். தயவு செய்து எந்தக் காரணத்தையும் நீ என்னட்டக் கேக்காத,
அம்மாட்டப்போய் இதப் பற்றிக் கத. அவ சரியெண்டாப்போதும்.
159

Page 82
அலைக்குமிழ்
இந்தச் சமூகமே எதிர்த்தாலும் பறுவாயில்லை.
நான் சந்தோஷமாக் கலியாணம் செய்யிறன்”
‘'நீ உன்ர அம்மாட்ட கேட்டே இவளவும் செய்த நீ. காதலிக்கேக்க, அதுக்குப் பிறகு எல்லாம் கொம்மா சொல்லியே எல்லாத்தையும் செய்த நீ.
இப்ப மட்டும் அம்மாவின்ர அனுமதி கேக்கிறியே.
வெக்கமாயில்லை.
சரி பறுவாயில்ல. உன்ர கொம்மாட்டக் கதைக்க அப்பா போயிருக்கிறார். நீ வெளிக்கிடு. நீ வெளிக்கிடு. நாங்கள் இப்பவே (3LT6.jLib.”
என்று மோகனைத் தூண்டினான்.
மோகனால் எந்தப் பதிலுமே சொல்ல முடியவில்லை.
' என்ன அப்பா அம்மாவச் சந்திக்கப் போயிருக்கிறாரா. அப்பிடியெண்டா. சேகர்’
என்று கலங்கினான் மோகன்.
"ஏன் வீணா யோசிக்கிறாய்.
எனக்கு உன்னில நம்பிக்கையிருக்கு, என்ர தங்கச்சிய ஏமாத்த மாட்டாயெண்டு நம்பித்தான் உன்னட்ட வந்திருக்கிறன்.
வா! என்ர தங்கச்சிக்கு வாழ்வு குடு.
உன்னையே நம்பித் தன்னையே கொடுத்த அவளுக்கு வாழ்வு குடு.
எங்கட குடும்ப கெளரவத்தக் காப்பாற்று.
மோகன் தயவு செய்து மறுக்காத, வா.
சீரோட சிறப்போட வாழ்ந்து கொண்டிருக்கிற எங்கட குடும்பத்தின்ர மானத்த குழிதோண்டிப் புதைச்சிடாத,
160
 

அகளங்கள்
மோகன் உன்ர காலப்பிடிச்சுக் கேக்கிறன்.
உன்னக் கும்பிட்டுக் கேக்கிறன்.
என்னோட வா. என் தங்கச்சிக்கு வாழ்வுகுடு’
'முடியாது! முடியாது. இது நடக்காது! என்னால உன்ர தங்கச்சியக் கலியாணஞ் செய்ய முடியாது.
இது நடக்க முடியாதது, நடக்கக்கூடாதது”
என்று ஆவேசமாகக் கத்திய மோகனின் கன்னங்களை சேகரின் கைகள் பதம் பார்த்தன.
சிறிது நேரம் மூர்க்கத்தனமாக மோகனை அடித்தான் சேகர்.
ஆனால் சேகர் அடித்து ஒயுமட்டும் மோகன் பொறுத்துக் கொண்டே இருந்தான்.
A. திருப்பி அடிக்கவோ அன்றித் தடுக்கவோ அவன் முயலவில்லை.
சேகர் தனது ஆத்திரந் தீராதவனாய் வாய்க்கு வந்தபடி ஏசவும் தொடங்கினான்.
“டேய் கொஞ்சமிண்டான்ன இரக்கமிருந்தா, நீ ஒரு மனிசனிண்டா
சிந்திச்சுப்பார்.
இதே நிலையில உனக்கு ஒரு தங்கையிருந்து இப்பிடி நடந்திருந்தா.
சீ. சீ. உனக்கெங்கடா சகோதரம்.
கூடப் பிறந்தாத்தானே அதின்ர அரும தெரியும்.”
என்று கடுமையாகப் பேசினான்.
சேகரை இடைமறித்த மோகன்
"நீ சொன்னியே இதே நிலை என்ர தங்கைக்கு வந்தா எப்பிடியிருக்குமெண்டு
161 ۓ

Page 83
ඌරනඛයීල්ප|6|ශ්‍රී
அதே நிலை என்ர தங்கைக்கு வந்திருக்கு.
ஏன் என்ர தாய்க்குமே வந்திருக்கு.
உன்ர தங்கைக்கு வந்த துயரைத் துடைக்க நீ துடிக்கிறாய்.
ஆனா என்ர தாய்க்கு வந்த. இப்ப என்ர தங்கைக்கு வந்த துயரத் துடைக்க. ஆரால முடியும்.
என்ர தங்கைக்குத் துடைக்க முடியாத துயரக் குடுத்தவனே நான்தானே!
எப்பிடியிடா அதை என்னால துடைக்க முடியும்.
சேகர்.! உனக்கு தங்கை எண்ட துயர் மட்டுந்தான் இருக்கு. ஆனா எனக்கு.
டேய். நீ. நீ. அடிச்ச நீ ஏன் என்னக் கொல்லாமல் விட்டாய்.
நீ அடிச்சே என்னக் கொண்டிருக்கலாமே”
என்று அழுதான் மோகன்.
“மோகன் நீ என்ன சொல்லுறாய். ஏன் இப்பிடியெல்லாம் ஏதேதோ விளங்காதமாதிரிக் கதைக்கிறாய்”
'இது உன்னால தீர்வு காண முடியாத பிரச்சினை. அதால தான் உன்ன மன்றாடிக் கேக்கிறன். என்ன வற்புறுத்தாத”
‘அப்ப என்ர தங்கச்சியின்ர வாழ்க்க”
“அது விதிப்படியே நடக்கும்”
'விதி விதி இவளவுத்துக்கும் காரணம் நீ பிறகு விதியில பழியைப் போடுறியே’
என்று மோகனின் சேர்ட்டில் கையைப் பிடித்தான் சேகர்.
'விதிய மாத்தலாம். எப்பிடித் தெரியுமா. நீயும் உன்ர அம்மா, அப்பாவும், என்ர அம்மாவும் சாகத் தயாரிண்டா அந்த நாலுபேரின்ர சமாதியில வைச்சு எனக்கும் சந்திராவுக்கும் கலியாணம் நடக்கும்.
162
 

அகளங்கள்
அப்பவும் உங்கட ஆவிகள் வந்து வாழ்த் திசைக்க தயாராயிருக்குமா? இல்ல. இல்ல. ஆனா எனக்கு என்ர தாயக் காப்பாற்ற வேணுமெண்ட கடம இல்லாட்டி ஆருக்குமே தெரியாமல் கலியாணம் செய்திருவன்’
“அந்தக் கவல உனக்கெதுக்கு. கலியாணம் முடிச்ச பிறகும் உன்ர தாய நீ காப்பாற்றிலாம் தானே!
‘நான் கலியாணம் முடிச்ச பிறகு என்ர அம்மா உயிரோட இருந்தாத்தானே அவவை நான் காப்பாற்றுறதுக்கு.
அதுக்கு நான் சொல்லேல்ல.
அம்மாக்கு நான் ஒரே பிள்ளையா இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இருந்திருக்காட்டி இப்பிடிக் கோழையா உன்னப் பிரிஞ்சு களவா இஞ்ச வந்திருக்கவே மாட்டன். எப்பவோ தற்கொலை செய்திருப்பன்.
நிம்மதியாப் போய்த் துலைஞ்சிருப்பன்.”
சேகரால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை.
'' (3LDITSE66. நீ ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்”
‘உனக்கு நான் எவளவு சொல்லியும் விளங்காது. விளங்க வைக்கவும் முடியாமலிருக்கு.
சுருக்கமாச் சொன்னா தங்கையை அண்ணன் திருமணஞ் செய்ய இந்தச் சமுதாயம் ஒப்புக் கொள்ளுமா?
இல்ல பெத்தவங்களின்ர மனம்தான் இடங்குடுக்குமா? ஏன் அந்த ரெண்டு பேராலயுமே இதை ஏற்றுக் கொள்ள முடியுமா.
தெரியாமல் செய்த பிழையை இப்ப தெரிஞ்சு கொண்டு செய்ய (pigu|LDT!"
சேகர் அதிர்ச்சியடைந்தவனாய்
"மோகன்! நீ என்ன சொல்லுறாய்”
163

Page 84
ඌlගඛයීල්ප|6||5
'நீ. நீ. எனக்குத் தம்பி’
சேகரால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை.
அவனுக்கு எல்லாமே புதிராக இருந்தது.
அவனால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.
சிந்திக்கக்கூடிய நிலையிலும் அவன் இல்லை
"மோகன் நீ சொல்லுறது.”
என்று இழுத்தான்.
'உண்மதான். உன்ர அப்பாதான் எனக்கும் அப்பா
சந்திராவும் நானும் ஒரு தகப்பன் பிள்ளைகள். அப்பிடித்தான் அம்மா சொன்னா'
சேகருக்கு இது புதுப்பிரச்சனையாக இருந்தது.
இப்போது மோகனின் தயக்கம் சேகருக்கும் புரிந்தது. இருந்தாலும் இப்பிடி நடந்திருக்காவிடில், அல்லது மோகன் தவறாக ஏதேனும் சொல்லியிருந்தால் என்று தன் பக்கம் சாதகமாக நிலமையை மாற்ற எண்ணி
"மோகன்! உன்ர தகப்பனார் இறந்துபோனதாகச் சொன்னியே’
என்று அர்த்தமுள்ளதாகக் கேட்டான்.
"அப்பா இறந்ததாத்தான் அம்மா சொல்லி இருந்தா. ஆனா இப்பதான் எனக்கும் தெரிஞ்சுது.
என்று தன் வாதத்தை வலுப்படுத்தினான் மோகன்.
இப்போது மோகனால் எதையுமே கதைக்க முடியவில்லை.
மோகனைத் தன் தங்கையை மணஞ் செய்யும்படி வற்புறுத்தவும் சேகரால் முடியவில்லை.
"அப்பிடியெண்டால் என்ர தங்கச்சியின்ர வாழ்வு.?
164
 

அகளங்கள்
என்ர தந்தயாரின் தரங்கெட்ட வாழ்க்கைக்குப் பரிசு.
பெண்பாவத்திற்குக் கிடைத்த தண்டனை. நடப்பதுபோல் நடக்கட்டும்”
என்று விட்டுவிட்டான்.
உடனடியாக கொழும்புக்கு வந்து பல டாக்டர்களைச் சந்தித்து விபரம் கூறி தன் தங்கையின் வயிற்றிலே வளரும் கருவை அழிக்க முயற்சி செய்தான்.
ஆனால் அது காலங் கடந்ததாக இருந்தது. அப்படிக் கருவை அழிப்பதால் அவளது உயிருக்கும் ஆபத்தாக முடியும் என்று கூறிக் கையை விரித்தனர் வைத்திய நிபுணர்கள்.
அவனால் எதுவுமே செய்யக்கூடியதாக இல்லை.
"யாருக்காவது மணம் முடித்து வைத்தால். நடக்கக்கூடிய காரியமா? நல்ல நிலையிலுள்ள பெண்களுக்கே மணம் முடித்து வைப்பது பிரச்சினையாக இருக்கும்போது இப்பிடி ஒரு பெண்ணுக்கு யார்தான் வரப்போகிறார்’
என்று துன்பக் கடலிலே எழும் எண்ணச் சூழலிலே சிக்கித் தவித்தது அவன் மனம்.
165

Page 85
கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்த தர்மலிங்கத்தார் பலரிடம் விசாரித்து கடைசியில் சரஸ்வதியின் வீட்டை வந்தடைந்தார்.
அவளது வீடு கிளிநொச்சிக் கடைத்தெருவையண்டியிருந்ததால் அவரால் அங்கு இலகுவாக வரமுடிந்தது.
வாசலில் சரஸ்வதியைக் கண்டதும்
என்று வாய் குழறக் கூப்பிட்டார்.
அவள் அவரை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
வரவேற்பின்றியே வீட்டினுள் நுழைந்தார்.
"சரஸ்! நான் உன்னட்ட மன்னிப்புக் கேக்கவேணுமெண்டு எவ்வளவோ முறை முயன்றன்.
நான் செய்த பாவத்துக்கு உன்னட்ட மன்னிப்புப் பெற்றால்தான் என்மனம் ஆறுதலடையும்.
166

அகளங்கள்
உன்னப் பல தடவை சந்திக்க முயன்றும் முடியேல்ல. ஆனா
இப்ப.”
என்று முடிக்கு முன்பே
"ஏன் இப்ப மட்டும் என்ன அவசரம் வந்தது.
இவளவு நாளுமில்லாத அக்கறை இப்ப ஏன்’
G
சரஸ் நான் உனக்குச் செய்த துரோகம் என்னச் சித்திரவத செய்து கொண்டே இருக்குது.
என்னால நிம்மதியா வாழமுடியேல்ல”
"ஏன் வீணாக் கத அளக்கிறியள்.
என்னட்ட நீங்கள் எதிர்பார்க்கிற இளமையும் அழகும் இப்ப இல்லை. அது இருபத்தி ஐஞ்சு வருசங்களுக்கு முன்னமேயே தீர்ந்து போச்சுது.
ஏன் நான் உங்களுக்கு ரெண்டு வயது மூத்தவள் இல்லையா.”
என்று குத்திக் காட்டினாள். அவளது இதயத்தின் கவலைப் பிரதிபலிப்பாக இரண்டு சொட்டுக் கண்ணிர்த்துளிகள் முகத்தில் உருண்டன.
'நான் உண்மையாத்தான் சொல்லுறன்.
உன்ர வாழ்க்கையை அழிச்சு நாசமாக்கிப்போட்டு என்னால வாழ முடியேல்ல.
என்ர மனச்சாட்சி என்ன அணுஅனுவாச் சித்திரவத செய்து கொண்டேயிருக்குது.
உன்னப் பிரிஞ்சு சில நாட்களில திரும்பி வந்து உன்னத் தேடினன்.
ஆனா நீயோ கருணை நிலயத்தில சேர்ந்ததாக அறிஞ்சன்.
அதேவேளையில எனக்கும் திடீரெனத் திருமணம் நடைபெற்றது.
அம்மா அப்பாவின்ர சொல்லத் தட்ட முடியேல்ல.
167

Page 86
ඌlරනඛයීෆ|6|ශ්‍රී
அதால அவே பாத்த பெண்ணையே கட்டீற்றன்.
அப்ப சமூகத்தில ஒரு நல்ல நிலையில எங்கட குடும்பமும்
நானும் வாழ்ந்து கொண்டிருந்ததால என்னால சுதந்திரமா எதையுமே செய்ய முடியேல்ல.” என்று சொல்லிக் கொண்டே போனார்.
குற்றமுள்ளவர்கள் தங்கள் குற்றத்தை மறைப்பதற்காக அதிகம் கதைப்பது உலக வழக்குத்தானே.
அவரும் அதற்கு விதிவிலக்கல்லவே.
“இப்ப என்னத் தேடியா வந்தீங்கள்.
நரை விழுந்து உடல் சுருங்கி, இந்த நிலையில நாங்கள் கணவன் மனைவியா இந்த உலகுக்கு அறிமுகமாகத்தான் வேணுமா? வேண்டாம். என்ர வாழ்க்கய திரும்பவும் கெடுக்க வேண்டாம்.
என்று சரஸ்வதி கலங்கிக் குமுறினாள்.
சரஸ்! நான் உண்மையில உன்னத் தேடி வரேல்ல.
இந்த ஊரில மோகன் எண்ட பெயரில ஒரு பொடியன் கொழும்பில வேல பார்க்கிறான். அவனத்தேடி வந்தன்.
ஆரோ ஒருவன் இந்த வீட்டக் காட்டிப்போட்டான்.
அவன் வீடு மாறிக் காட்டியும், என்ன உன்னட்ட மன்னிப்புக் கேக்கக் கூடிய சந்தர்ப்பத்த உருவாக்கித் தந்திட்டான்'
என்று தான் வீடு மாறி வந்ததாக எண்ணிக்கொண்டு அதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
'இல்ல நீங்கள் சரியான வீட்டுக்குத்தான் வந்திருக்கிறியள்.
மோகன் என்ர பிள்ளதான்.
என்ர மட்டுமில்ல. உங்கட பிள்ள.
எங்கள் இருவருக்கும் பிறந்த பிள்ள’
“என்ன, மோகன் என்ர பிள்ளையா? இல்லை. இல்லை.
168

அகளங்கள்
இருக்காது. இருக்காது. இருக்கக்கூடாது!”
என்று அலறினார்.
'ஏன் இருக்கக்கூடாது. வயது கூடிப் போயிற்றெண்டு வயித்தில பிள்ளையோட இருந்த என்ன வெறுத்துக் கலைச்சியளே. அதின்ர விளைவு. இப்ப தெரியுதா?
"சரஸ்! நீ என்ன சொல்லுறாய். உனக்கும் தெரியுமா?
ஐயோ.”
என்று ஏங்கிப்போய் நின்றார்.
‘தெரியும். அண்ணனும் தங்கையும் அணைத்து மகிழ்ந்த கத எனக்கும் தெரியும்.
சகோதரனோட சரசமாடிய சகோதரியின்ர கதை எனக்கு நல்லாத் தெரியும்.
அண்ணா எண்டு சொல்ல வேண்டியவனை கண்ணா! எண்டு சொல்லிக் கட்டிப்பிடிச்சு அனுபவிச்ச கத எனக்கு எப்பவோ தெரியும்’
'அடி பாவி! நீ என்னப் பழி வாங்க வேணுமெண்டே இப்பிடிச் செய்திருக்கிறாய். எல்லாம் உன்ர வேலைதானா’
"நான் ஆரையும் பழிவாங்க நினைக்கேல்ல.
ஆனா அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும் என்றது பொய்யாக இல்ல. நீங்கள் விதைத்த வினைதானே.
அறுவடைய அனுபவிக்க வேண்டியது நீங்கள்தான்”
"ஐயோ இப்ப என்ன செய்வன்.
சந்திராவின் வாழ்வு.
மோகன் என்ர பிள்ள.
அப்பிடியெண்டா அண்ணன் தங்கைய மணந்து வாழ்வதா?
169

Page 87
ඌlගඛණ්ෆ|6|ශ්‍රී
என்ன கொடுமை.
இது கொடுமையல்ல பழிக்குப்பழி.
நான் முற்பகல் செய்தது.
இப்ப பிற்பகல் விளைஞ்சிருக்கு.
ஆண்டவனே. என் மகளின் வாழ்வு.
விபச்சாரியென ஊர் சிரிக்கப்போகிறதே.
நடத்தை கெட்டவள் எண்டு நாடே கேலி செய்யப் போகிறதே.
கற்பிழந்தவளெண்டு இந்தச் சமூகம் அவள் மேல் காறி உமிழப் போகிறதே.
இந்தப் பழியெல்லாவற்றையும் பாத்துக் கொண்டு நான் உயிர்வாழப்போகிறேனா”
தர்மலிங்கம் உணர்ச்சி வசப்பட்டு வாய்விட்டுக் கத்திக் கொண்டிருந்தார்.
அதைப் பார்க்க சரஸ்வதியாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தன் கண்களைத் துடைத்துக் கொண்டு
“இப்பிடித்தான் ஒரு நாள் என்னில உசிரயே வைச்சு பாசத்தைக் கொட்டி வளத்த என் அண்ணன் அழுதான்.
நான் அழுதன். எங்களுக்கும் மானம், மரியாத, கெளரவம் எல்லாம் அப்ப இருந்தது.
நாங்கள் அழுததப் பாத்து ஊர் அழேல்ல. உலகம் அழேல்ல
ஏன் அதுக்குக் காரணமாயிருந்த நீங்களே அழேல்ல.
மாறாக இந்தச் சமுதாயம் எனக்கு விபச்சாரியென்ற பட்டத்தைச் சூட்டிப் பரிகசித்தது.
17O

அகளங்கள்
சிரித்து மகிழ்ந்தது.
என் வாழ்வையே கெடுத்தது.
இண்டைக்கு நீங்கள் வாழுற இதே சமுதாயம் அண்டைக்கும் இதே நிலையில தான் இருந்தது.
என்ர வாழ்க்கையப் பாலைவனமாக்கிப்போட்டு பசும்புல்தேடி நீங்கள் போனியளே அந்தக் கல் நெஞ்சம் இண்டைக்குக் கண்ணிரில கரையட்டும்.
நல்லா அழுங்கோ. தண்ணிர் வற்றும் வரையில் அழுங்கோ.
.என்ர சகோதரன் எனக்கு விஷம் வாங்கித்தந்து தன்ர மானத்தைக் காக்கத் துடிச்சானே அப்ப அழாத நெஞ்சம் இப்ப அழட்டும்.
அவள் ஆத்திரத்தில் கொட்டி முழக்கிக் கொண்டே போனாள்.
தர்மலிங்கத்தால் அங்கு நிற்கவே முடியவில்லை.
"ஆண்டவன் எனக்கு நல்ல தண்டனையை அளித்து விட்டான்'
என்று கூறிக் கொண்டு தனது தோளில் கிடந்த சால்வையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு புறப்பட்டார்.
மனம் எரிமலையெனக் குமுறிக் கொண்டிருந்தது.
யாருடனும் கதைக்கவோ, முகம் கொடுக்கவோ முடியாத நிலையில் பஸ் எடுத்து வீடு வந்து சேர்ந்தார்.
அவரது மனச்சாட்சி ஒரு புறமும், மகளின் எதிர்கால வாழ்வு ஒரு புறமும், அவரைக் குத்திக் கொண்டிருந்தன.
வீட்டில் நின்றிருந்த அன்னலட்சுமி அம்மாளிடம் ஒன்றுமே பேசவிலை.
“என்னவாம் அவன்ர தாய்.”
‘எல்லாம் காலம முடிவு தெரியும்”
என்று கூறிவிட்டு தன்அறையை நாடினார்.
171

Page 88
அலைக்குமிழ்
கதவைத் தாளிட்டார்.
நீண்ட நேரமாக அழுதார். அவரது துன்பத்துக்கும் ஓர் எல்லை வந்தது.
தான் ஒரு சுயநலவாதி என்பதை இப்போது இறுதித் தடவையாகக் காட்டி விட்டார். அவர் சுயநலவாதியாக இருந்த முக்கியமான நிகழ்ச்சிகள் அவரது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டன.
தனக்கு வயது குறைவு எனக்கூறி ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்து தன் சுயநலத்தால் அப்பெண்ணின் நல்வாழ்வையே கொன்றார்.
தன்தேவை தீர்ந்தபின் அவள் வாழ்வை எண்ணாது தப்பித்துச் சென்றார்.
இப்போது தன் மகளின் கஸ்டத்தை, குடும்ப கெளரவத்தை, மானத்தை, காப்பாற்ற வழிதெரியாது தன் சுயநலத்தைக் காட்டிக் கொண்டார்.
யாருக்காவது வெளியில் இந்த விடயம் தெரிந்து சமூகம் தன்மேல் காறித்துப்பும் என்ற பயம் அவரை ஆட்கொண்டது.
போலிப் பகட்டும் போலிக் கெளரவமும் அவரை வாழ விடவில்லை.
D
172

காலையில் கதவைத் திறக்க முடியாததால் கதவை உடைத்துத் திறந்து பார்த்த அன்னலட்சுமி அம்மாள் திகைத்துப்போய் நின்றாள்.
சந்திரா தரையில் விழுந்து புரண்டாள்.
தர்மலிங்கத்தாரின் மேசையிலிருந்த விஷப்போத்தல் ஒன்று வாய்திறந்து சிரித்துக் கொண்டிருந்தது.
ஆடித்திரிந்த பம்பரம் ஒய்ந்து விட்டது.
கதறி அழுது கலங்கித் தவித்துப் பயனென்ன.
‘ஆவாரை யாரே அழிப்பார். அதுவன்றிச் சாவாரை யாரே விலக்குவார்’
செத்த வீட்டுக்கு சரஸ்வதியோ மோகனோ போகவில்லை. அவர்களால் போகவும் முடியவில்லை. மோகன் தர்மலிங்கம் இறந்ததற்கு தானே காரணமென்று கலங்கிக் கொண்டிருந்தான்.
தர்மலிங்கத்தார் இறந்து மாதம் ஒன்று முடிவடைந்தது.
அவ்வூரெங்கும் தர்மலிங்கம் இறந்த காரணம் நன்கு பரவியிருந்தது.
173

Page 89
ඌ|ගඛණිෆ||6||5
எப்படித்தான் இப்படி விடயங்கள் வெகு விரைவில் தெரிய வருகின்றனவோ?
சந்திரா வீட்டினுள் பூட்டிய கதவினுள் கலங்கித் தவித்துக் காலங்கழித்தாள்.
உற்றார் உறவினர் எவரையுமே அவள் காண்பதுமில்லை. கதைப்பதுமில்லை.
மோகனால் சந்திராவின் துயரை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தன்னால் அப்பேதையின் வாழ்வு சீரழிந்து போவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அநியாயமாகத் தன் தந்தை இறந்ததை அவன் மனம் சிந்தித்து சிந்தித்துக் கண்ணிர் சிந்தியது.
இறுதியாக ஏதோ நினைத்தவனாகத்தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டு விட்டு நித்திரைக்குச் சென்றான்.
படுக்கையிலே கிடந்து சந்திராவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
சற்றுக் கண்ணயர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வாசலில் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான்.
சந்திரா கையில் பெட்டியுடன் வந்து நின்றாள். அவள் தோற்றம் அவனுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது.
தன்மனத்தைத் தேற்றிக் கொண்டு எழுந்து சென்று சந்திராவை அனைத்துக் கூட்டி வந்து தனது கட்டிலில் இருத்தினான்.
அவளது கண்களில் வழிந்தோடிக் கொண்டிருந்த கண்ணீரைத் தன் கைகளால் துடைத்து அவளுக்கு ஆறுதல் கூறினான். அவனது மனம் ஒரு இறுதியான உறுதியான முடிவை எடுத்தது.
"நான் வாழப்போகிறேன். வாழத்தான் போகிறேன். சந்திராவைத் திருமணஞ் செய்து வாழ்ந்து காட்டத்தான் போகிறேன். என் அம்மா என்ன, அகிலமே எதிர்த்தாலும் கவலையில்லை. என்னால் ஒரு உயிர்
174

அகளங்கள்
பலியான பின்னர்கூட நான் இந்தச் சமூகத்தின் கட்டுக்கோப்புக்குப் பயந்து ஏன் என் வாழ்வை அழிக்கவேண்டும்.
9560) L
அண்ணனாம் தங்கையாம் காரணம் கூறுகிறது சமுதாயம்.
சேர்ந்து வாழக் கூடாது. திருமணஞ் செய்யக்கூடாது என்று விதிக்கிறது உலகம். என்னைப் பொறுத்தவரை எனக்கும் என்
சந்திராவுக்கும் திருமணம் எப்போதோ முடிந்து விட்டது.
வேறு
அவள் என் தங்கையல்ல. மனைவி.
இந்த சமுதாயத்துக்கு பழிச்சொல் கூறமட்டும்தான் தெரியும். என்ன தெரியும்.
கவலைகளுக்கு என்மனத்தில் இனி இடமில்லை.
கண்ணிர் என் கண்களில் இனி மேல்த் துளிர்க்காது.
என் சந்திராவை வாழவைப்பதுதான் என் இலட்சியம்.
நான் வாழப்போகிறேன். வாழத்தான் போகிறேன்’
என்று உறுதியாகக் கூறிக்கொண்டு சந்திராவையும் கூட்டிக்
கொண்டு புறப்பட்டான்.
'சந்திரா நாங்கள் எங்கயாவது போய் வாழுவம். வாழிறதுக்கு
இடமா இல்ல”
என்று கூறிக் கொண்டே சந்திராவுடன் வாசல்வரை வந்தவன்
வாசல்க்கதவில் மோதுப்பட்டபின் தான் திகைத்து நின்றான்.
சந்திராவைக் காணவில்லை.
அங்கும் இங்கும் எங்குமே காணவில்லை.
'சந்திரா சந்திரா!
அலறினான்.
அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. எல்லாம் ஒரே
175

Page 90
அலைக்குமிழ்
பிரேமையாக இருந்தது. அதிகாலை எழுந்து வவுனியாவிற்குப் புறப்பட்டான்.
“எப்பிடியும் சந்திராவக் கூட்டிக்கொண்டு போய் தாயிடம் சொல்லி வாழ்வது.
தாய் எதிர்த்தாலுமே அவளைக் கைவிடுவதில்லை’ என்ற முடிவுடன் வவுனியாவிற்கு வந்து கொண்டிருந்தான்
சரஸ்வதி மகனின் கடிதத்தைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாது திகைத்தாள்.
"ஏன் வாழக்கூடாது. மோகனும் சந்திராவும் வாழட்டும் நானே வாழ்த்துகிறேன். வாழவைக்கிறேன். சமூகம். இந்தச் சமூகம் எனக்கு என்ன செய்தது. என்னை விரட்டியடிச்ச அதே சமூகத்துக்கு நான் ஏன் பயப்பட வேணும். அண்ணன் தங்கை சந்தர்ப்பவசமாக ஏற்பட்ட உறவு. ஏணி நிலைக் கக் கூடாது. அவர்கள் வாழட்டும் . நானே வாழ்த்திசைக்கிறேன்’
என்று ஒரு முடிவெடுத்து மகனும் மருமகளும் வரப்போவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
மோகன் ஓமந்தையில் இறங்கி நடந்து கொண்டிருந்தான். சனக்கும்பல் அவனைப் பார்த்து ஏதேதோ பேசிக் கொண்டது. அவன் காதில் விழுந்தது.
‘இவன்தான் அந்தப் பொடியன். பாவம் அந்த மனிசனையும் கொண்டு கடைசியில அவளையும் கொண்டு போட்டான்'
'அதுக்கு இவனைச் சொல்லி என்ன குறை
தர்மலிங்கம் செய்த பாவம் அவரையும் அவற்ற மகளையும் சேத்துப் பிடிச்சிருக்கு”
“என்ன இருந்தாலும் இப்பிடி முப்பத்தொண்டு முடியும் வரைக்கும் காத்திருந்து செத்ததை நினைச்சா கவலதான்.”
'பாவம் வடிவான பிள்ள. வாழவேண்டிய வயசு, ஆக்களோட கதைக்கப் பிளங்க எவளவு நல்ல பிள்ளை'
176

அகளங்கள்
"புல்லுக் கடிக்கிற மருந்தோ? பூச்சி புளுவுக்கு அடிக்கிற மருந்தோ அவள் குடிச்சவள்”
"அது பொல்லாத மருந்து.
பூச்சிபுளுவுக்கு அடிக்கிற மருந்து”
உரையாடலில் மோகன் மெய்மறந்து போய் நின்றான். அருகில் வந்த ஒருவர்.
'தம்பி! நீ ஏன் வீணா அங்கபோய் அவயளின்ர ஆத்திரத்தக் கூட்டுறாய். அதுதான் அந்தாளும்போய் பொடிச்சியும் செத்துப்போய் கிடக்கே. இனி என்ன வேணுமெண்டு போறாய்”
மோகனின் கால்கள் திரும்பின. அப்பிடியே தள்ளாடி மயக்கமடைந்து விழுந்தான்.
கண்விழித்துப் பார்த்தபோது சந்தியிலுள்ள தேநீர்க்கடையொன்றின் வாங்கில் படுத்திருப்பது தெரிந்தது.
“என்னண்ண சுடலையாலயோ வாறாய்”
"ஒமப்பு. ஐயோ அந்தப் பொடியன் தமயன்காரன் கத்தின கத்த பாக்கப் பெரிய பாவமா இருந்தது.
பத்துப் பன்ரெண்டு தரம் மயக்கம் போட்டிட்டான்”
சுடலைக்குச் சென்று திரும்பியவர்களின் உரையாடல் மோகனின் காதைத் துளைத்தன.
எழுந்து சென்று நடந்து கொண்டிருந்தான் நடைப்பிணமாக,
முற்றும்
D
177

Page 91
ඌlගඛoසීෆlélé
178


Page 92
அலைக்குமிழ் செய்திகள் 265 as
655 திருப்பங்களுடன் தொடர் நவீனத்துவத்துக்குரிய seasus
அமைந்துள்ளது. ஆசிரியரின் அபார ஞாபகசக்தி
கட்டுக்கோப்பு செய்தித் திருப்பம் баштоп фiөрөп, கதையோட்டம் என்பன இரசனைக்குரியது.
கலாநிதி க.நாகேஸ்வரன்
M.A. Ph. D (EDT. f:
முதுநிலை விரிவுரையாளர் தரம்
சப்ரகமுவ பல்கலைக்கழக
ISBN: 978-955-375-58-1
 

8 EI7 55
9ዘ፲ 8 9 5 5
8