கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கியச்சரம்

Page 1
Roshan Hamid Sheritudeen
 


Page 2


Page 3

இலக்கியச் சரம்
அகளங்கன்
வெளியீடு முத்தமிழ்க் கலாமன்றம்
நா.தர்மராஜா பம்பைமடு 01.01.2000 வவுனியா,

Page 4
நூல் :- இலக்கியச் சரம்
துறை :- இலக்கியக் கட்டுரைகள்
எழுதியவர் :- அகளங்கன் (நா.தர்மராஜா)
வெளியீடு :- வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம்
பதிப்புரிமை - திருமதியூதர்மராஜா B.A. (Hons)
முதற்பதிப்பு - 01.01.2000
அச்சுப்பதிப்பு :- ஜெய்னிகா சென்ரர் , குருமன்காடு , வவுனியா.
கணணி அமைப்பு :- செல்வி, தர்மராஜா அறிவொளி
அட்டைப்படம் :- றோசன் ஹமிட் ஷரிபுத்தீன்
விலை :- ரூபா 200/-
Title :- ILAKKIYAHCHARAM
Subject :- Literature Essays
Author :- AGALANGAN (N,Tharmarajah)
Publisher :-Muththamizhk Kalamantram.
Copy Right - Mrs. P. THARMARAJAH.B.A. (Hons)
1st Edition :- 01.01.2000 Printers :- Jeyniga Centre, Kuruman kadu , Vavuniya.
Computer Type Setting:- Miss. Tharmarajah Arivoli
Cover Design :- Roshan Hamid Sherifudeen.
Price :- Rs. 200/-

iii இந்நூலாசிரியரின் நூல்களர்
2)2 ÇÇ,
“செல்” “வா’ என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதைகள்) சேரர் வழியில் வீரர் காவியம் (குறுங் காவியம்) சமவெளிமலைகள் (அகளங்கன் . சு.முரளிதரன் கவிதைகள்) வாலி (ஆய்வு நூல் - இருபதிப்புகள்) (அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு - 1987) இலக்கியத் தேறல் (கட்டுரைகள்)
நளவெண்பா (கதை)
அன்றில் பறவைகள் (நாடகங்கள் ) (தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் இலக்கியச் சிமிழ் (கட்டுரைகள் - இருபதிப்புகள்) தென்றலும் தெம்மாங்கும் (கவிதைகள்) பன்னிருதிருமுறை அறிமுகம் மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் (ஆய்வு) இலக்கிய நாடகங்கள் (நாடகங்கள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு - 1994) ஆத்திசூடி (விளக்கவுரை ) கொன்றை வேந்தன் (விளக்கவுரை) அகளங்கன் கவிதைகள் (கவிதைகள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு - 1996) வாக்குண்டாம் (விளக்கவுரை )
சிவபுராணம் (பொருளுரை) செந்தமிழும் நாப்பழக்கம் (பேச்சுக்கள்)
நாமறிந்த நாவலர்
நல்வழி (பொழிப்புரை - விளக்கவுரை) இசைப்பாமாலை (இசைப்பாடல்கள்) கவிஞர். ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு இலக்கியச்சரம் (கட்டுரைகள்)

Page 5
பொருளடக்கம்
வெளியீட்டுரை V
வாழ்த்திசைப்பா Vii
அணிந்துரை ix
மதிப்புரை Xiv
முன்னுரை XX
ஓசை இன்பம் 1
சொல் இன்பம் - 20
கற்பனை இன்பம் 59
திரை இசைக் கற்பனைகள் 22O
பல்துறை ஆற்றல் மிக்கவர். 254
※

V
வெளியீட்டுரை முத்தமிழ்க் கலா மன்றத்தின் பதினெட்டாவது நூலாக தமிழ்மணி அகளங்கனின் இலக்கியச்சரம் என்னும், தமிழ் இலக்கியத்துறையில் தடம் பதிக்கப்போகும் முக்கியமான நூலை வெளியிடுவதில் நாம் பெருமை கொள்கிறோம். முத்தமிழ்க்கலாமன்றத்தின் ஊடாக அவர்வெளியிடுகின்ற எட்டாவது நூல் இதுவாகும்.
தமிழ்மணி அகளங்கன் தமிழ்இலக்கியத்துறைக்குப் புதியவரல்ல. அவரை அறியாதோர் யாருமிலர். சங்க கால இலக்கியம்தொட்டு இன்றைய நவீன காலம் வரையிலான பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் அவர்
ஆற்றி வருகின்ற இலக்கியப்பணிகளின்மூலம்முத்திரை பதித்தவர்.
அவர் தம்முடைய இருபத்திநாலாவது நூலாக வெளியிடுகின்ற இலக்கியச்சரம் என்ற இந்த நூல், தமிழ் இலக்கியப்பரப்பில் சங்க காலமீ தொட்டு , இன்றைய திரையிசைப்பாடல் வரையிலான இலக்கியத் துறையில் தமது ஈடுபாட்டை அனுபவத்தை , இலக்கியத்தில் தாம் அனுபவித்துச் சுவைத்தவற்றை, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற வகையில் ஓர் இலக்கியச்சரமாகத் தொடுத்துத் தந்துள்ளார்.
எமது மன்றத்தினூடாக இதுவரையில் வெளிவந்துள்ள அவருடைய நூல்களில் , 1992 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அன்றில் பறவைகள் என்ற நாடக நூல் தேசியசாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது. இதேபோல கடந்த 1998ம் ஆண்டு முத்தமிழ்க் கலாமன்றத்தின்வெளியீடாக வந்த கலாபூஷணம் முல்லைமணியின் வன்னியர் திலகம் என்ற வரலாற்று நவீனமும் தேசிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.
எமது வெளியீடான அகளங்கனின் இலக்கிய நாடகங்கள் என்ற நூல் 1994ம் ஆண்டும் அகளங்கன் கவிதைகள் என்ற நூல் 1996ஆம் ஆண டிலும் வடக்கு கிழக்கு மாகாண சாகித் திய மணடலப்
பரிசில் களைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

Page 6
V
இலக்கியச்சரமீ என்ற இந்த நூலில் சங்க இலக்கியம் முதல், இன்றைய திரையிசைப் பாடல்கள் வரையிலான தேனூறும் கவிதைகளில் உள்ள ஓசை இன்பம் , சொல் இன்பம் , கற்பனை இன்பம் , என்பவற்றைத் தமக்கே உரிய பாணியில் சுவைபட ஆய்ந்து சுட்டிக்காட்டி, படிப்பவர்களைத் தாமாகவே இலக்கிய இன்பத்தையும், சுவையையும் தேடிச்
சுவைக்கச் செய்துள்ளார்.
தமிழ்மணி அகளங்கன் என்ற அற்புதமான இலக்கிய நெஞ்சத்தின் ஆக்கமான இந்நூல் தமிழன்னைக்குச் சூட்டப்பட்டுள்ள இன்னுமொரு பொன்னான மணி என்பதில் ஐயமில்லை . இலக்கிய நெஞ்சங்களுக்கு விருந்தாக வந்துள்ள இந்த நூலை தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்கும், அதன் பயன்களை அனுபவிக்கும் என்று நிச்சயமாக நம்புகின்றோம்.
இங்ங்ணம்
ச. அருளானந்தம் பி. மாணிக்கவாசகம்
தலைவர் செயலாளர்
முத்தமிழ்க் கலா மன்றம் வவுனியா
0.01.2000

Vii
வாழ்த் திசைப்பா இலக்கியமணி , தமிழ்மணி
கவிஞர்.செ.குணரத் தினம் (அமிர்தகழியான்)
வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்!
நாடறிந்த பேச்சாளன் நல்லதமிழ்க் கவிஞன்
நட்புக்கோர் இலக்கணமாய் வாழுகின்ற மனிதன்
ஏடறிந்த எழுத்தாளன் இலக்கியத்தில் விண்ணன்
இவன்புகழைப் பாடவல்லோர் இங்கெவரும் ജൂൺങ്ങേ.
( வாழ்க.)
米 米
வன்னிமண்ணின் மணம்கமழக் கலையுலகில் நாளும்
ഖണ്ണIഖL(ിങ്ങ് தன்னெழுத்தை வார்த்தெடுத்து ஆழும்
மன்னனிவன் மட்டுநகர் யாழுரின் LJIT6\)LD
மறப்பதற்கு முடியாத தமிழ்மணியெம் தோழன்
( வாழ்க.)
எதனையிவன் இலக்கியத்தில் இன்றுவிட்டு வைத்தான்,
இயலிசைநல் நாடகங்கள் 6T6Ü)6N)fT (LJD மானான்.
அதனையிங்கே நிரைப்படுத்த போதாது (BPT6) )
அவன்பெற்ற பரிசுகளோ ஏராளம் தேறும்

Page 7
viii
தருமத்தின் மறுபிறப்பு தர்மராஜா தேனாய்
தமிழினிலே எழுதுவதில் தனிச்சிறப்பு ஆனான். கருமத்தில் கண்ணாகிக் கலைவளர்க்கும் கலைஞன் கன்னித்தமிழ் மொழியினிலே கவிதைதரும் புலவன்
(வாழ்க.) 米 米
வாழ்த்துகிறேன் அகளங்கன் வாழ்கநீடு என்று
வளமோடு பலசிறப்பும் வாழ்க்கையிலே கண்டு
வாழவேண்டும் இதுவேயென் உள்ளத்தின் துடிப்பு
வாழ்க! வாழ்க! பல்லாண்டு வளர்கதமிழ்த் தொண்டு
(6) Tp85.....)

IX பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்
கலாகீர்த்தி சி. தில்லைநாதன் அவர்கள்
வழங்கிய அணிந்துரை
தான் பெற்ற அனுபவமொன்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழையும் இலக்கியகர்த்தா அதற்கு ஏற்ற வடிவத்தையும் வழிமுறைகளையும் தெரிந்து கையாளுகின்றான். ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே வெற்றென வெளியிடுவதன் மூலம் கேட்போர் உள்ளங்களில் அவ்வனுபவத்தைக் கிளர்ந்தெழ வைத்தல் சாத்தியமன்று. எனவே, பொருத்தமான அமைப்பினையும் சொற்களையும் சொல் ஒழுங்கையும் அணிகளையும் தெரிந்து கற்பனைத் திறனுடன் கையாளும்வல்லமை சிருஷ்டியாற்றல்என்று போற்றப்படுகிறது. ஆக்க இலக்கியங்கள் அனைத்துக்கும் பொருந்துவதான இவ்வல்லமை கவிதைக்கு இன்றியமையாததாகும்.
“ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று திருவாசகத்தை இராமலிங்க அடிகளார் வியப்பதன் காரணத்தையும் , “தென்னுணி தேனின் தீஞ சுவை செஞ சொற் கவியின்பம் ” என்று கம்பன் வர்ணிப்பதையும் , “பாட்டினைப்போ லாச்சரியம் பாரின்மிசை யில்லையடா’ என்றும் , --
“கள்ளையுந் தீயையுஞ் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையுஞ் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார்”
என்றும் , மகாகவி பாரதி பாடுவதையும் ஆழ்ந்து நோக்குமிடத்துச் சிருஷ்டியாற்றலின் தாற்பரியம் புலப்படும்.
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை செய்யுள் இலக்கியமே ஆட்சி செலுத்தியது. சங்கப்

Page 8
Χ
பாடல்களிலிருந்து பிற்காலத்தில் தோன்றிய தனிப்பாடல்கள் வரை தமிழில் செய்யுள் இலக்கிய்ங்கள் பெருமளவினதாய்த் தோன்றித் தமிழ் இலக்கியகதியை நிர்ணயித்தன. தொல் காப்பியம் முதற் கொண்டு பாட்டியல் நூல்கள் வரை யாப்பிற்கும் , அணிக்கும் இலக்கணங் கூறுகின்ற பல நூல்கள் தமிழில் எழுந்தன. செய்யுள் எனப்பட்டது பின்பு நவீன கவிதையாகி , இன்று புதுக் கவிதை என்னும் வடிவம் பெற்று வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்துறையில் ஏற்பட்ட நவீனத்துவத்தின் செல்வாக்கு எமது பண்டைய செய்யுள்களின்பால் மக்களின் கவனம் குறைவதற்கும் ஒருவகையிற் காரணமாயிற்று. ஐரோப்பிய நவீனத்துவ சிந்தனை மரபை நோக்கிய எமது இலக்கிய வாதிகள் பலருக்குச் செய்யுள் இலக்கியம் வலுவிழந்தவொன்றாகத் தோன்றியது. நவீன கவிதை , புதுக்கவிதை முதலியவற்றை எழுதுவதுதான் காலத்துக்கு உசிதமானது என்றும், அவற்றை எழுதுவதற்கு யாப்பிலக்கண அறிவு அவசியமற்றது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது , யாப்பிலக்கண அடிப்படையில் செய்யுள் இயற்றுவோர் மரபுக் கவிஞர்கள் என்றும் பண்டிதர்கள் என்றும் ஒரோவழி ஓரங்கட்டப்பட்டனர். இதனது உடனடி விளைவு என்னவெனில் , பண்டைச் செய்யுள் இலக்கியங்களைப் படிக்க வேண்டிய தேவை அதிகம் இல்லை என்ற ஒருநிலை உருவாயிற்று. வல்லமையுடையது வாழும் என்ற டார்வினது கூற்றிற்கிணங்க என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்த போதும் தமிழ்ச் செய்யுள் இன்று வரை வாழுகின்றது. தமிழ் போலத் தொன்மையுடைய பல மொழிகளிலுள்ள பணி டைய இலக்கியங்கள் தொல் சீர் மொழி (செவிவியல் மொழி) இலக்கியமாகிவிட, சங்கப்புலவர்களும் வள்ளுவனும் இளங்கோவும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கம்பனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் , இன்றைய அவசர யுகத்தில் எதனையும் பேணுகை பண்ணும் மரபுக்கு மாறாக உபயோகித்துவிட்டு உதறிவிடும் இயல்பு மேலோங்கி வருவதால் பேணிப் போற்றுவதிலான ஆர்வம் அருகிவருகிறது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்மணி அகளங்கன் அவர்களுடைய “இலக்கியச் சரம்” என்னும் இலக்கியஇரசனை நூல் வெளிவந்துள்ளது. முன்னையவற்றிலும் பின்னையவற்றிலும் சிறந்தவற்றை நயக்கும் அகளங்கனது மாச்சரியமற்ற பார்வையும் எண்ணங்களை மனமுவந்து
வெளியிடும் இயல்பும் உற்சாகம் அளிப்பனவாக உள்ளன.

X
ஓசை இன்பம் , சொல் இன்பம் , கற்பனை இன்பமீ எனும் மூன்று பகுதிகளாக வகுத்து சங்கப் புலவர் முதல் வைரமுத்து வரையுள்ள கவிஞர்கள் எழுதிய பாடல்களில் தாம் கண்ட இன்பங்களை இந்நூலில் அகளங்கன் விண்டு காட்டுகின்றார். ஒசை இன்பம் என்ற பகுதியில் இடத்துக்கேற்ற வாறும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறும் உணர்ச்சிக்கு ஏற்றவாறும் செய்யுள்களில் ஒசை விகற்பங்கள் அமைவதைக் கம்பன் தொடக்கம் திரிகூடராசப்பக்கவிராயர் வரை உதாரணங்கள் காட்டி விளக்கியுள்ளார். சொல்லின்பம் எனும் பகுதியில் சொற்கள் அடுக்கி வரும் சொற் பின்வருநிலையணி , யமகம் , சிலேடை ஆகியவை பற்றியே பெரிதும் பேசப்படுகின்றது. மேலும் ஊர்ப்பெயர்கள் பாடலில் இடம் பெறுவதையும் சொல்லின்பம் என்கிறார். இச்சொல்லின்பத்தை விளக்க வள்ளுவரும் விஜயநகர
நாயக்கர் காலப் புலவர்களும் ஆதாரமாகின்றனர்.
'கண்டனன்’ (கற்பினுக் கணியை) என்ற கம்பன் ஆண்ட ஒரு சொல்லும் , "விம்மி விம்மி விம்மி விம்மி (யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே) என்ற பாரதியின் சொல்லடுக்கும் தரும் சொல்லின்பம் நினைவுக்கு வருகின்றது. அதேவேளை , எழுத்தும் சொல்லும் அடுக்கி வந்து தமிழ்ச் செய்யுளை உயிரற்றதாக்கிய பல சந்தர்ப்பங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் தனிச்சுட்டுச் சொற்களுக்கு விளக்கந்தேடியலையும் தேவை கவிதையின் முழுமையனுபவத்தைச் சிதைப்பதும் கவிஞனின் உள்ளத்து ஒளியைச் சந்தேகத்துக்கிடமாக்குவதும் ஆகலாம்.
கற்பனை இன்பம் என்ற பகுதி சற்று விரிவாக எழுதப்பட்டுள்ளது. நாட்டுச் சிறப்பு, கொடைச்சிறப்பு , ஒழுக்கச் சிறப்பு முதலானவை புலவர்களுடைய கற்பனையில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பது விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. நூல்களைப் போல , கவிஞர்களும் தனித்தனியே நோக்கப்பட்டுள்ளனர். இக்காலத் திரைப்படப் பாடல்களில்
காணப்படும் கற்பனைச் சிறப்புக்களும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
தமிழில் இரசனை முறைத் திறனாய்வு நீண்டகாலமாகப் பேணப்பட்டு
வந்த ஒன்றாகும். பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரை எழுதும் மரபு ,

Page 9
ΧIΙ கதாகாலட்சேபம் , அரசவையிலே சூதர்கள் புராணமுரைத்தல் , புராணபடனம், அரசவையில் புலவர்களது இலக்கியச் சர்ச்சைகள் முதலியனவெல்லாம் இரசனை மரபின் வெளிப்பாடுகளே எனலாம். இம்மரபு வ.வே.சு. ஐயர் , இரசிகமணி டி.கே.சி. , ரா.பி. சேதுப்பிள்ளை முதலியோரிடமும் தொடர்ந்து வளர்ந்து வந்தது. ஈழத்திலும் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்துக்குரியோர் பலர் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டனர். பணி டிதமணி சி.கணபதிப்பிள்ளை , இரசிகமணி கனக. செந்திநாதன் முதலியோர் அந்தவகையிலே குறிப்பிடத்தக்கவர்கள்.
இலக்கிய இரசனை முறை பின்வந்த நவீனத்துவ விமர்சன முறைகளால் பின்தள்ளப்பட்டபோதும் , அம்முறையின் தனித்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. பின்வந்த விமர்சன முறைகள் கனதியான பொருள் பற்றிய விவாதத்தில் ஈடுபட, இரசனை முறையே மொழியையும் ,அதன் அழகியல் கூறுகளையும் வளர்த்தது. இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே இலக்கிய இரசனை என்பது வெறும் சொற்பிரிப்பு முறையோ உதாரணங்களை அடுக்கிக் காட்டுவதோவல்ல, "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முனைப்போடு வாசகரை ஆற்றுப்படுத்துவது. இரசிகமணி டி.கே.சியும், சேதுப்பிள்ளையும் கையாண்ட முறை அதுவேயாகும்.
மேற்கூறிய மரபை அடியொற்றித் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தமக்குள்ள புலமைத்துவத்தின் கண்கொண்டு தமிழ் இலக்கியக் கடலுள் மூழ்கி முத்துக்கள் பலவற்றை எடுத்துத் தானும் சுவைத்து வாசகரையும் சுவைக்கத் தூண்டுகின்றார். அதற்கும் ஒரு படி மேலே சென்று வாசகருக்குச் சிரமமில்லாத வகையில் பல உதாரணங்களை எடுத்துக் காட்டுகின்றார். பாடசாலை தொடங்கிப் பல்கலைக்கழகம் வரை தமிழ் இலக்கியப் பயில்வுகள் இடம்பெறுவதால் இத்தகைய முயற்சிகள் அச் செயற்பாடுகளுக்கு உசாத்துணைகளாக அமையக்கூடியனவாகும்.
கவிதையை நயக்கும் திறனை வளர்ப்பதற்குக் கவிதை பற்றிய விளக்கங்களைக் கற்பதிலும் பார்க்க பொருளாழமும் ஒசைநயமும்
சொல்லாட்சித்திறனும் கற்பனைவளமும் பொருந்திய கவிதைகளுடனான

xiii பரிச்சயத்தைப் பெருக்கிக் கொள்வது கூடிய பயன்விளைக்கக் கூடுமாகையால், அத்தகைய கவிதைகள் பலவற்றை எடுத்து விளக்கும் அகளங்கனின் முயற்சி பாராட்டத்தக்கது.
கணிதத்துறை சார்ந்தவரான தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தனது சுய கற்றல் முறையினால் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்துள் ஆழ்ந்து திளைப்பவர் என்பதை அவர் முன்பு வெளியிட்ட நூல்கள் புலப்படுத்துகின்றன. அந்தவகையில் அவரது தமிழ் ஆளுமையைப் புலப்படுத்தும் இன்னோர் நூலாக இது அமைகின்றது. நிதானமான , பக்கச்சாய்வற்ற , அறிவியல் பார்வைகளினூடாக அகளங்கன் போன்றோர் தமிழ் இலக்கியங்களைத் தற்காலத்துக்கேற்ற வகையில் வளம்படுத்துவதை தமிழ்கூறு நல்லுலகம் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.
சி.தில் லைநாதன் தமிழ்ப் பேராசிரியர்
பேராதனைப்பல்கலைக்கழகம், பேராதனை.
08.12.1999.

Page 10
Xiv மதிப்புரை கலா பூஷனடம், தயமிழ்மணி முல்லை மணி வே.சுப்பிரமணியம்
“நல்ல இலக்கியங்களை வேறு பயன்கருதாது அவற்றால் விளையும் இன்பத்தின் பொருட்டே அன்பு பூண்டு கற்பதுவே இலக்கியக் கல்வியாளன் மேற்கொள்ள வேண்டுவது” என்பது பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் கூற்றாகும்.
இரசிகமணி டி.கே.சி என அழைக்கப்படும் சிதம்பரநாத முதலியார் இலக்கியங்களை இரசித்து இரசித்து அவற்றை மக்களுக்கு அறிமுகப் படுத்தினார். நாவலரின் மருகரும், மாணாக்கருமாகிய வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை அவர்கள் சீவகசிந்தாமணியையும், கம்பராமாயணத்தையும் நயம்பட விரித்துரைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
இரசிகர்கள் என்னும் மதுகரங்கள் எந்தநேரமும் அவரைச் சூழ்ந்து கொண்டு இருப்பார்களாம்.
இந்த நூற்றாண்டின் முன்னரைப் பகுதிவரை இலக்கியம் இரசனை முறையிலேயே கற்பிக்கப்பட்டது. கற்கப்பட்டது. சங்க இலக்கியங்களும் இரசனை முறையிலேயே கற்கப்பட்டன. மரபு ரீதியாக இலக்கியக் கல்வி பெற்றோர் , இலக்கிய இரசனைக்கே முக்கிய இடம் கொடுத்தனர்.
விஞ்ஞான, தொழில் நுட்பயகமாகத் திகழும் இன்று எதற்கும் அவசரம், என்றும் அவசரம் என்ற நிலை. உடனடிப்பயன் தரவல்ல துறைகளைக் கற்பதற்கே நேரம் போதவில்லை. இந்த நிலையில் இலக்கியம் தேவைதானா? அதனால் என்ன பயன்? அதனைக் கற்பதற்கோ இரசிப்பதற்கோ நேரமேது. என்கின்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன. இலக்கியத்தால் உடனடிப் பயன் இல்லை என்று கூறலாமே தவிர, பயன் இல்லை என்று கூறமுடியாது. “இலக்கியம் சிறுகச்சிறுக மனித மனத்தைப் பாதிக்கின்றது. உள்ளத்தைப் பண்படுத்துகின்றது, மேம்படுத்துகின்றது” என்பதை மறுக்க முடியாது. 'கவிதை மட்டுமல்ல எல்லா அறிதல் முறைகளுமே அழகியல் வயப்பட்டதாக இருத்தல் வேண்டும்’ என்கின்ற குரலும் மேற்குலகில் தற்போது எழுந்துள்ளது.
இலக்கியத்தைக்கற்போர் தொகை அருகி வருகின்றது. மாணவர்கள் இலக்கியத்தைக் கற்பதை விட இலக்கியத்தைப் பற்றிக் கற்றுப் பரீட்சை எழுதி, கூடிய மதிப்பெண்களைப் பெற்று விடுகின்றனர். பல்கலைக்கழகப் புலமைத் தளம், இலக்கிய இரசனையை விடத் திறனாய்வுக்கே அழுத்தம் கொடுக்கின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள் நூல் நிலையங்களை அழகு செய்யும் அலங்காரப் பண்டங்களாகத் திகழ்கின்றன.

XV
இத்தகைய சூழ்நிலையில் இலக்கியத்தை ரசித்துக் கற்போர் ஒருசிலரேனும் இருக்கின்றார்கள் என்றால் அது வியப்பான சங்கதி தான்.
பழந்தமிழ் இலக்கியங்களையும் இடைக்காலக் காவியங்களையும் ஆழ்ந்து கற்று அவற்றை ரசித்து ரசித்துச் சொல்லக் கூடிய ஒருவர் தான் கவிஞர் , தமிழ் மணி அகளங்கன் அவர்கள்.
இலக்கிய இரசனை இவரது பாரம்பரியச் சொத்து. புராண இதிகாசங்களுக்கு பயன் விரித்துரைக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் இலக்கிய நிகழ்ச்சிகளை சமகால நிகழ்வுடன் பொருத்திக் காட்டும் விதத்தில் இவரது இலக்கியக் கட்டுரைகள் திகழ்கின்றன.
கவிதை , நாடகம் , இசைப்பாடல் இலக்கியத் திறனாய்வு புனை கதை முதலான பல்வேறு துறைகளில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து வரும் இவர் தொழிலால் கணித ஆசிரியர். இலக்கியத்தை இரசனை முறையில் மட்டுமன்றி தர்க்கரீதியாகவும் திறனாய்வு ரீதியிலும் பார்க்கும் ஆற்றலுக்கு இவரது “வாலி' என்னும் ஆய்வு நூலும் நக்கீரர் ஒரு விதண்டாவாதிஎன்ற கட்டுரையும் சிறந்த எடுத்துக் காட்டுகள்.
தனது சீவிய பரியந்தம் பல்வேறு இலக்கிய ஆக்கங்களைக் கற்று இரசித்ததன் வெளிப்பாடே இந்நூலாகும். பத்துப்பாட்டும் , எட்டுத்தொகையும், தேவர் குறளும் மட்டுமன்றி, முத்தொள்ளாயிரம் , சிலப்பதிகாரம் , கம்பராமாயணம் , கந்தபுராணம் , திருத்த்ொண்டர் புராணம், நளவெண்பா , திருக்குற்றாலக் குறவஞ்சி , கலிங்கத்துப்பரணி , முக்கூடற் பள்ளு , வளையாபதி, சிந்தாமணி , பறாளாய் விநாயகர் பள்ளு , பிரபுலிங்க லீலை, நைடதம் , திருவாதவூரடிகள் புராணம் , நந்திக்கலம்பகம் முதலாம் இலக்கியங்களில் அகளங்கனுக்கு நிரம்பிய பரிச்சயம் உண்டு என்பதை இந்நூல் காட்டுகின்றது. இவற்றோடு திரை இசைப் பாடல்களில் இவருக்கிருக்கும் ஈடுபாட்டினையும் இந்நூலில் காணலாம்.
இந் நூல் சொல்லின்பம், ஒசையின்பம் , கற்பனைஇன்பம் என்னும் மூன்று பகுதிகளையுடையது.
சாதாரண சொற்களும் உன்னத கவிகளின் கவிதையில் மிகவும் ஆற்றல் வாய்ந்தனவாகவும்,பொருட் செறிவுடையனவாகவும் திகழ்ந்து விடுகின்றன. வசனத்தில் பல வாக்கியங்களில் கூறவேண்டிய கருத்தினை, கவிதையில் இரண்டு மூன்று சொற்கள் மூலம் தெரிவித்துவிடலாம். நோக்குதல் என்னும் சொல் சாதாரணமாக பார்த்தல் என்னும் பொருளை உடையது.

Page 11
XVi ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாளர்’
என்னும் கம்பனின் கவிதை அடியில், காதல் பொங்க விழுங்குவது போல இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, காதல் உணர்வினைப் பரிமாறிக் கொண்டனர், என்றும் விரிந்த பொருள் வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.
பொருத்தமான சொல்லைச் சரியான சந்தர்ப்பத்தில் புலவர்கள் உபயோகித்து விடுகின்றனர். ஒரே சொல் பல்வேறு பொருள்களில் பாவொன்றில் இடம் பெற்றுவிடுகின்றது. சொல் பின்வரு நிலையணி பற்றி அணியிலக்கணம் பேசுகின்றது. இங்கே சொற்கள் திரும்பத்திரும்ப வருவதால் ஒசையின்பம் நல்குவதாகவும் அமைந்து விடுகின்றன. இதனைப் பல்வேறு இலக்கிய நூல்களில் இருந்து உதாரணம் காட்டி விளக்குகின்றார் ஆசிரியர். உதாரணம் காட்டிய நூற்றுக் கணக்கான பாடல்களில் காளமேகப் புலவர் பாடலையும் அதன் விளக்கத்தையும் நோக்குவோம்.
சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை ஐங்கரற்கு மாறுதலை யானதே - சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார். சங்கரற்கு மாறுதலை - சிவபெருமானுக்கு ஆறு (கங்கையாறு) தலையில் உள்ளது. சண்முகற்கு மாறுதலை - கந்தசுவாமியாருக்கு ஆறுதலைகள் உண்டு ஐங்கரற்கு மாறுதலை - விநாயகருக்கு மாறுபட்ட தலை (யானை முகம்) சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை - மகாவிஸ்ணு ஆற்றில் தலை வைத்துப் படுக்கிறார். பித்தா நின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை - சிவபெருமானே உன்பாதத்தின் பெருமையைப் படித்தோர்க்கு ஆறு தலை அளிப்பாய்.
இங்ங்னம் மாறுதலை என்னும் சொல் பல்வேறு பொருள் கொண்டு சுவைபயப்பதை அகளங்கன் விளக்குகிறார்.
“பா என்பது பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை’ என்பர் ஆன்றோர். எனவே கவிதைக்கு ஓசை ஒழுங்கு மிகவும் முக்கியமானது. செய்யுளுக்கு அக ஓசை, புறவோசை எனும் இருவகை ஓசை உண்டு புறவோசை மோனை எதுகைகளால் வருவது. செய்யுள் கூறும் பொருளுக்கு ஏற்றவிதத்தில் ஓசை அமைவது அகவோசை,

XVII தாடகையின் கொடுங் குணத்தையும் , பயங்கரத்தையும் ஆரவாரச்சத்தத்தையும், வருகையையும் கம்பன் வல் எழுத்துக்களைப் (க்,ச்,ட்,த்,ப்,ற்) பயன்படுத்துவதன் மூலம் காட்டுகின்றான்.
இறைக்கடை துடித்தபுரு வத்தளெயி றென்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயளர் மறைக்கடை அரக்கிவட வைக்கனல் இரண்டாய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பெள விழித்தாள் இவ்வாறு எண்ணிறந்த உதாரணங்களைக் காட்டி ஓசையின்பத்தைச் சுவைபட விளக்குகிறார் ஆசிரியர்,
கவிதையின் முக்கிய பண்பு, அதன் கற்பனையே ஆகும் கற்பனை வளம் இல்லையாயின் அது கவிதையாகாது. கவிப்படைப்பின் உயிர் நாடி, உரிப்பொருளை கற்பனை நயம் பட உரைத்தலே ஆகும். சிறந்த புலவர்கள் தாம் காணுகின்ற காட்சிகளை அப்படியே காட்டுவதில்லை. தாம் கண்டவற்றை, தம் உள்ளம் உணர்ந்தபடியே இலக்கியம் ஆக்குகின்றனர். அதன் மூலம் காணாதவர்களின் உள்ளங்களிலும் அக்காட்சியைப் பதித்துவிடுகின்றனர். அதற்கு உறுதுணையாக இருப்பது கற்பனையே ஆகும்.
கவிதை இன்பம் பற்றி அகளங்கன் மிக விரிவான சுவையான விளக்கம் தருகிறார். இதற்குத் தான் கற்றுச் சுவைத்த காவியங்கள், பிரபந்தங்கள், புராணங்கள் , தனிப்பாடல்கள் ஆகியவற்றிலிருந்து எடுத்துக் காட்டுகளைத் தருகிறார்.
நக்கீர தேவர் இயற்றிய திரு ஈங்கோய் மலை எழுபது என்னும் நூலில் உள்ள பாடலொன்றைக் கற்பனைச் சிறப்பினைக் காட்ட உதாரணம் தருகிறார் அகளங்கன். இந்நூல் கம்பராமாயணத்தைப் போலவோ, பெரிய புராணத்தைப் போலவோ பிரசித்தமான நூல் அன்று. இலக்கியப் பரப்பின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து தினைத்துணையுள்ளதோர் பூவினில் கூட தேனையுண்ணும் மதுகரமாக ஆசிரியர் திகழ்வதை நாம் அவதானிக்கலாம்.
‘கரிய மலைக்குறவன் ஒருவன் வேட்டைக்குச் செல்கிறான். மான் வேட்டைக்காக மலையடிவாரம் எல்லாம் சுற்றி வருகிறான். இறுதியில் மான் ஒன்றைக் கண்டு அதன்மீது அம்பு எய்ய முயல்கிறான். மான் அவனைத் திரும்பிப் பார்க்கின்றது. அதனைக் கண்டதும் அம்பு விடும் நோக்கத்தைக்

Page 12
XVIll கைவிட்டு விடுகிறான். இரக்கமென்பதே இது எனத் தெரியாத அந்த வேடன் ஏன் அப்படித் தயங்குகிறான். மானின் பார்வை தன் மனைவியாகிய மலைக்குறத்தியின் நாணத்தோடு கூடிய பார்வையை நினைவுறுத்துகின்றது அவனுக்கு “மானே நீ மெதுவாகச் செல்லலாம், நான் உன்னைக் கொல்ல மாட்டேன்’ என்கின்ற பாவனையில் கையசைக்கின்றான். பாடல் வருமாறு
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக் கையில் கணைகளைந்து கண்ணிமாண் - பையப்போ எண்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தன் மனைவிமேலே கொண்ட ஆழமான அன்பை இக்காட்சி காட்டுவதை அகளங்கன் சுவைபட விளக்குகிறார். இப்படி எத்தனையோ அருமையான காட்சிகளைப் பல்வேறு அனுபவங்களிலிருந்து எமக்குக் காட்டுகிறார் ஆசிரியர்.
பரந்து பட்ட இலக்கியப் பரவையுள் நுழைந்து அழகழகான கற்பனை முத்துக்களை அகழ்ந்தெடுத்து விரித்திருப்பது எமக்குப் பெருவிருந்தாய் அமைகின்றது.
திரிகூட ராசப்பக் கவிராஜரின் திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம் பெறும் பாடலொன்றை இக்கால நிகழ்வுடன் பொருத்தி விளக்குவது அற்புதமாக அமைந்துள்ளது.
ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுழைச் சங்கு அந்த நாட்டிலே மக்கள் எவரும் இடம் பெயர்ந்து துன்பப் பட்டு ஓடுவதில்லை. ஓடக் காண்பது பூக்களை ஆடையாகக் கொண்ட புதுவெள்ளத்தைத்தான். எவருக்கும் எந்தவிதமான ஒடுக்கமும் இல்லை. பரிபூரண சுதந்திரத்தோடு வாழ்கின்றார்கள். எங்கும் போகலாம் , எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எந்த அடையாள அத்தாட்சியும் தேவையில்லை. மக்கள் யாரும் ஒடுக்கப்படுவதில்லை. மக்கள் யாரும் ஒடுங்கி இருப்பதுமில்லை. அந்த நாட்டில் ஒடுங்கி இருக்கக் காண்பது யோகியரின் உள்ளம் மட்டுமே
தான

XIX
நீண்ட கால இடைவெளியின் பின் வெளிவரும் இலக்கிய இரசனை நூல் இது. இந்தத் துறையில் அரசோச்சிய இரசிகமணி டி.கே.சி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை , பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை , இரசிகமணி கனக செந்திநாதன் முதலானோரின் மறைவுக்குப் பின்னர் இலக்கியரசனையும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கிறார் அகளங்கன் அவர்கள்.
முடிவாகக் கூறுமிடத்து, இந்த இலக்கியச்சரம் தமிழிலுள்ள உன்னதமான இலக்கியச் செல்வங்களைப் படித்து இன்புறுவதற்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றது எனலாம். இலக்கிய இன்பம் துய்க்க விரும்புவோருக்கு, சிறந்ததொரு அறிமுக நூலாகவும் , வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
வாழ்க அகளங்கனின் இலக்கிய நெஞ்சம் ! வளர்க அவரது இலக்கிய இரசனை !!
முல்லைமணி

Page 13
XX
முன்னுரை எனது இருபத்திநான்காவது நூலின் முன்னுரையில் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மிகிழ்ச்சியடைகின்றேன்.
எனது "வாலி” இராமாயணத்தில் வாலி வதை சம்பந்தமான ஆய்வுநூலாக அமைந்தது. kab
“இலக்கியத் தேறல்’, சங்க இலக்கியம் முதல் , கவியரசு
கண்ணதாசனின் திரை இசைப்பாடல்கள் வரையான , இரசனைக் கட்டுரைகளையும் , ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்ட நூலாக அமைந்தது.
“இலக கரியச் சிமிழி’, இலக Eயக காட்சிகளையும் , கருத்துக்களையும் சம காலத்தோடு இணைத்துப் பர்த்துக் கருத்துக் கூறும் நூலாக அமைந்தது.
“மகாகவி பாரதியாரினி சுதநீ தரக கவிதைகள் ”, மகாகவிபாரதியாரின் சுதந்திரக் கவிதைகளைச் சமகால உணர்வோடும் நிகழ்வோடும் ஆராயும் நூலாக அமைந்தது.
“கவிஞர் ஜினி னாஹ வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர்ஆய்வு”, கவிஞர் ஜின்னாஹ்வின் புனித பூமியிலே, மஹஜபீன் காவியம் ஆகிய காவியங்களின் சிறப்பை எடுத்துக் காட்டும் நூலாக அமைந்தது.
இந் நூல் கவிதை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு விருந்தாகவும், ஆர்வமுள்ளவர்களுக்கு அறிவையும் , இரசனையையும் ஊட்டுவதாகவும் , இலக்கிய நூல்களைப் படிக்கத் துரண்டுவதாகவும்
அமையும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளது.
ஓசை இன்பம், சொல் இன்பம் , கற்பனை இன்பம் என்ற மூன்று பகுதிகளினூடு கவிதைகளை இரசித்துப் பயன் பெற இந்நூல் எழுதப்பட்டது. இது தமிழ்த்தாய்க்கு நான் பூட்டும் சிறு ஆபரணம்.
அண்மைக் காலத்தில் இலக்கிய நயம் பற்றியும், இலக்கிய இரசனை பற்றியும் பலவாறாகப் பேசப்பட்ட போதும் , எழுதப்பட்ட போதும் போதிய
உதாரணங்கள் கொடுக்கப்பட்டது குறைவு என்றே கருதுகின்றேன்.

XX} பலாப்பழத்தை இவ்விதமாக வெட்டிப்பிரித்து இவ்விதமாகச் சுளை எடுத்து, இவ்விதமாக உண்டால் இவ்விதமாகச் சுவைக்கும் என்று சொல்வதைத்தான் இன்று பலர் செய்கிறார்கள்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் கம்பராமாயணம் பற்றிய அபிப்பிராயத்தை ஒட்டி இந்நூலைப்பற்றிச் சொல்வதாயின்.
நன்றாக முற்றிப்பழுத்த பலாப்பழத்தை, எண்ணெய் தடவிய கூரான கத்தியால் பக்குவமாக வெட்டி, மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்துச் சுவைக்கக் கொடுத்து , சுவைப்பவர்களே சுவை பற்றிய உணர்வில் ஈடுபடவேண்டும், மேலும் தேடிச் சுவைக்க வேண்டும் , மற்றையோர்க்கும் சுவைக்கக் கொடுக்க வேண்டும், என்ற எனது எண்ணத்தில் எழுந்ததே இந்நூல்.
பலர் சென்ற பாதையில் தான் நானும் சென்றுள்ளேன். இருப்பினும் சமகாலத்தோடு ஒப்பிட்டுச் சொல்லும் எனது வழக்கமான பாணியையும் இந்நூலில் கையாண்டுள்ளேன்.
வாசகர்கள் அடையும் இலக்கிய இன்பத்தைக் குழப்பாத வகையில் இடையிடையே நானும் தலைகாட்டியிருக்கிறேன்.
இலக்கியம் இரசனைக்குரியது மட்டுமல்ல , வாழ்க்கையின் பல்வேறு தேவைகளுக்கும் உரியது என்பதை மறந்து விடலாகாது.
தமிழ்க் கவிதைகளிலே ஈடுபடுபவர்களுக்கு ஏற்படுகின்ற இன்பம் “நவில் தொறும் நூல் நயம் போலும்” என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒப்ப இந்நூலைப் படைக்கும் போதும் நான் அடைந்தேன். அதே இன்பத்தை, படிக்கும் போது நீங்களும் அடைந்தால் அதுவே என் முதல் வெற்றி.
பழந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பவர்களே குறைந்து வரும் இக்காலத்தில், மரபுக் கவிதைகளில் பெரும்பாலும் ஈடுபாடு குறைந்து வரும் இக்காலத்தில், இந்நூல் என்ன சாதிக்கப்போகின்றது என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.
எமது முதியோரைப் பேணுவதாலோ, எமது மூதாதையரின் பழக்கவழக்கங்களை, பண்பாட்டு விழுமியங்களை, எடுத்துப் பேசுவதாலோ எழுதுவதாலோ என்ன பயன் விளையுமோ அதுபோன்றதே இதன் பயன்பாடும்
என்று கூறிக் கொள்ளலாம்.

Page 14
XXII தம்மை ஆளாக்கி விட்ட பெற்றோரை அகதிமுகாமிலோ , அனாதை விடுதியிலோ , முதியோர் பராமரிப்பு நிலையத்திலோ தவிக்க விட்டு விட்டு மானுடப் பண்பு பற்றியும் , மனித முன்னேற்றம் பற்றியும் தாய் , தந்தை பெருமை பற்றியும் சிந்தித்துப் பேசி எழுதி என்ன பயன்.
இதே போன்ற நிலையில், தமிழ்த் தாயைத் தவிக்க விட்டு விட்டு, தமிழ் பற்றிப் பேசி , எழுதி, ஆய்வு செய்து தமிழை வளர்க்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். முயல்கிறார்கள். இது வீண் முயற்சியே.
தமிழை அறியாமல் தமிழை எப்படிப் பாதுகாக்க முடியும். வளர்க்க முடியும். தமிழை அறிய, முதலில் தமிழிலக்கிய நூல்களை நன்கு கற்க வேண்டும்.
இந்நூலின் பயன்பாட்டில் நான் பேராசை கொள்ளவில்லை. என்னைப் போன்ற ஒருவன் உருவாக இந்நூல் பயன்பட்டாலே போதும். ஏனெனில் நான் தமிழ் இலக்கியத்தைச் சுயமாகக் கற்றே ஈடுபட்டு வருகின்றேன்.
இந்நூலை எளிய வசன நடையில், தேவையான அளவுக்கு விளக்கி, சாதாரணர்களையும் கருத்திற் கொண்டே ஆக்கியுள்ளேன்.
என்னை இப்படியொரு நூலை ஆக்க வேண்டுமென்று தூண்டி பலவழிகளிலும் எனக்கு உதவிகள் செய்து, என்னைப் பற்றிய கட்டுரையும் எழுதித் தந்த என் இனிய எழுத்தாள நண்பன் ஓ.கே. குணநாதன் அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உரியன.
ஓசை இன்பம் , சொல் இன்பம் என்ற தலைப்புக்களில் இலங்கை வானொலியில் தொடர் பேச்சுகளை ஆற்றுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் அவற்றை விரிவாக்கி, கற்பனை இன்பம் என்பதையும் எழுதி நூலாக்க வேண்டுமென்ற எண்ணம் என்னுள் முகிழ்த்தது. பின்பு இலங்கை வானொலியில் முப்பத்தெட்டு வெள்ளிக்கிழமைகளில் தொடராக கவிதைக்கலசம் என்னும் நிகழ்ச்சியை நடாத்தும் வாய்ப்பு கிட்டிய போது, அதற்காகத் தயாரித்த குறிப்புக்களும், இந்நூலுக்கு உந்து சக்தியாகின.
இலங்கை வானொலி நிலையத்தாருக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த சகோதரி சிவகங்கா, கவிதைக் கலசம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்த சகோதரி ஜமுனா சர்வானந்தா ஆகியோருக்கும், பணிப்பாளராக இருந்த திரு.வி.என். மதியழகன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
 

ΧΧΙΙΙ என்னை இலக்கியத்தில் நகைச்சுவை , இலக்கியச் சிமிழ் ஆகிய கட்டுரைகளை எழுதத் தூண்டி, தனது சிரித்திரன் சஞ்சிகையில் வெளியிட்டு, என்னை ஊக்குவித்த என் இலக்கிய ஆசான் அமரர் சி.சிவஞானசுந்தரம் அவர்கள் என்றும் என் நினைவுக்கு முந்துபவர். நன்றிக்குரியவர்.
இந் நூலை அணிசெய்யும் வண ணம் நல்லதொரு அணிந்துரையைவழங்கிய எண் மதிப்புக்குரிய பேராசிரியர் கலாகிர்த்தி சிதில்லைநாதன் அவர்களுக்கும் ,
இந்நூலுக்கு மதிப்புரை வழங்கிய என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய திரு. முல்லைமணி அவர்களுக்கும்
வாழ்த்திசைப்பா வழங்கிய என் இனிய நண்பர் கவிஞர் செ. குணரத்தினம் (அமிர்தகழியான்) அவர்களுக்கும் - இந்நூலினையும் முத்தமிழ்க் கலாமன்ற வெளியீடாகச் செய்ய அனுமதி தந்த முத்தமிழ்க் கலாமன்றத் தலைவர் மதிப்புக்குரிய திரு.ச.அருளானந்தம் அவர்களுக்கும் , செயலாளர் நண்பர் பி. மாணிக்கவாசகம் அவர்களுக்கும், எனது தமிழ் வளர்க்கும் பணிக்கு உதவிய டென்மார்க் அபிராமி உபாசகி அவர்களுக்கும் , அவரின் உதவியைப் பெற்றுத்தந்த என் அன்புக்குரிய அருட்கலைவாரிதி கலாபூஷணம் , ஸ்தபதி , க. சண்முகவடிவேல் அவர்களுக்கும் என் நன்றிகள் உரியன.
எனது நூல் வெளியீட்டுப் பணிக்குப் பேருதவி புரிந்து வரும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்துக்கும் , குறிப்பாக அதன் தலைவர். திரு.நா.சேனாதிராசா (சமா.நீதி) அவர்களுக்கும்
வவுனியா பல.நோ.கூ. சங்கத்திற்கும் குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் அமரர் சு.வீரசிங்கம் அவர்களுக்கும் ,
வவுனியா இந்து மாமன்றத்தினருக்கும் , குறிப்பாக அதன் தலைவர் திரு. சீ.ஏ. இராமஸ்வாமி ,
அவுஸ்திரேலியாவில் தற்பொழுது வாழும் நண பர்கள் திரு.செ.குணசிங்கம் , திரு.எம்.எஸ். செல்வராஜா ஆகியோருக்கும் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுக்கும்,
எனது பல ஆக்கங்களையும் வெளியிட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும், என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கும்
வாசகர்களுக்கும் ,

Page 15
ΧΧΙV
இந்நூலாக்கத்தில் எனக்குப் பலவகையிலும் ஆலோசனை வழங்கி, சரவைகளை ஒப்பு நோக்கி உதவிய நணி பர் செ.சணி முகநாதன் அவர்களுக்கும்,
அட்டைப்படத்தை அழகாக வரைந்து தந்த கவிஞர் ஜின்னாஹம் ஷரிபுத்தீன் அவர்களின் மகன் றோசன் ஹமீட் ஷரிபுத்தீன் அவர்களுக்கும்
அட்டையின் பின்புறத்தை அலங்கரித்த என் இனிய சகோதரர் கவிமாமணி ஜின்னாஹ ஷரிபுத்தீன் அவர்களுக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
இந்நூலை அழகாக அச்சிட்டுத் தந்த திரு.செ.தர்மரட்ணம் அவர்களுக்கும் , கணணி மூலம் அமைத்துத் தந்த செல்விதர்மராஜா அறிவொளி அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்நூலை ஆக்குவதிலும் என்னைப் பெரிதும் உற்சாகப்படுத்தி சோர்வகற்றித் துணை நின்று, பிரதி எடுத்துத் தந்து, சரவைகளை ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி , எல்லாவகையிலும் என்னை ஊக்குவித்த என் மனைவிக்கும் ,
எனது இந்நூல் வெளிவருவதற்கும் முழுமுதற் காரணமாக அமைந்து , என்னை இப்பணியில் துணிவோடு ஈடுபடவைத்துத் துணை நின்று உதவி வரும் என் அன்பிற்குரிய தம்பி க.குமாரகுலசிங்கத்திற்கும் நன்றி சொல்லல் எனக்கே நான் நன்றி சொல்லல் போலாகும்.
இந்நூலைப் படித்து இன்புற்றுப் பயனடையப் போகும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
பம்பைமடு 0.01.2000 அன்புடன் வவுனியா. அகளங்கன்
 

-l-
ஓசை இன்பம்
தமிழ்க் கவிதைகளை , மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் எனப் பிரித்துப் பேசும் வழக்கம், இன்று பரவலான பொதுவழக்கமாகவே மாறிவிட்டது. புதுக் கவிதைகள் எனப்படுபவை , குறித்த இலக்கணக் கட்டுக்கோப்புக்குள் அடங்காத கவிதைகள் என்றும் மரபுக்கவிதைகள் எனப்படுபவை இலக்கண வரம்புக்குள் பாடப்படுபவை என்றும் சாதாரணமாகச் சொல்லி விடலாம்.
மரபுக்கவிதைகளுக்கான யாப்பு இலக்கணத்தை அறியாதவர்கள் கூட ஓசையைக் கூர்ந்து கவனித்து , ஒசை ஒழுங்கில் கவிதைகளை எழுதி விடுகிறார்கள். ஒசை சரியாகப் பொருந்தும் கவிதைகள் இலக்கண வரம்புக்குள் அமைந்தும் விடுகின்றன.
புதுக்கவிதைகளிலுங் கூட சிலரது கவிதைகளில் ஒசை ஒழுங்கு இருப்பதைக் கண்டு கொள்ளலாம். இருப்பினும் புதுக்கவிதைகள் ஓசையை அடிப்படையாகவோ , துணையாகவோ கொள்வதில்லை.
மரபுக் கவிதைகள் , ஒசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஓசை ஒழுங்கிற்குள் சொற்களையும் , கருத்துக்களையும் , கற்பனைகளையும் பொருத்தமாக அடக்கி விட்டால் அதுவே சிறந்த மரபுக்கவிதையாகிவிடும்.
முற்காலத்தில் செவிவழியாகவே கவிதைகள் கேட்டு இரசிக்கப் பட்டதால் ஒசை மிகமுக்கிய இடத்தைப் பிடித்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது.
இலக்கணத்தை நிறைவு செய்வதற்காக மரபுக்கவிதைகளை எழுதுவதை ஒரு வகையில் பார்த்தால் மெட்டுக்குப் பாட்டெழுதுகின்ற முயற்சி போன்றதுதான்.
ஒரு கவிஞனின் உணர்ச்சி, இலக்கண வரம்பை மீறி வெளிவரும் போது உருவாகும் கவிதைகள், உயர்ந்த கவிதைகளாக மாறிவிட்டால் அக்கவிதைகளுக்கு இலக்கணம் வகுக்க வேண்டியது இலக்கணக்காரரின் கடமையேயாகும். இலக்கியங் கண்டதிற்கு இலக்கணம் இயம்புதல்தானே
LDJILĮ.

Page 16
இலக்கியச் சரபம் -2-
கவிதைகளிலே , ஓசை நயம், செவிக்கும் மனதுக்கும் மிகுந்த இன்பம் பயப்பதாக இருப்பதைக் கற்றோர் அறிவர். ஒசை நயம் மிக்க பாடல்களை , அந்தச் சந்தத்தில் அதாவது அதை எழுதியவன் திட்டமிட்ட அதே ஓசையில் படிக்கும் போது மிகவும் இன்பம் பயப்பதாக இருக்கும்.
மகாகவிபாரதியார்.
மகாகவி பாரதியார் தனது குயிற்பாட்டில் தான் இலயித்து அனுபவித்த ஒசைகளைப் பட்டியல் போட்டு அற்புதமாகக் காட்டுகிறார்.
கானப் பறவை , கலகலெனும் ஒசையிலும் , காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்றுநீ ரோசை , அருவி ஒலியினிலும் நீலப் பெருங்கடல்எந் நேரமுமே தானிசைக்கும் ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால், ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநிர்ப் பாட்டின் இசையினிலும் , நெல்லிடிக்குங் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் வேயின் குழலோடு வீணைமுதலா, மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும், காட்டினிலும், நாளெல்லாம் நண்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன் என்று குயில் மூலமாகப் பாரதியார் தான் ரசித்த ஒலிகளைப் பட்டியல் போட்டு இனங்காட்டிச் செல்கிறார். இத்தகைய இயற்கை ஒலிகளை, ഉങ്ങ് இன்பத்தை உணர்ந்து அனுபவித்த பாரதி, பிரம்மதேவனின் படைப்பின் சிறப்பைச் சொல்லிப் பாராட்டும் போது,
காலம் படைத்தாய், கடப்பதிலாத் திக்கமைத்தாய் ஞாலம் பலவினிலும் நாடோறுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பலஅனந்தம்
 

அகளங் கனர் -ز - சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நாண்முகனே சால மிகப்பெரிய சாதனைதான் இஃதெல்லாம் தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார்யார்
என்று சொல்லிக் கொண்டு வந்து இறுதியாக ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே, கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஒசைதரும் இன்பம் உவமையிலா இன்பமண்றோ.
என்று ஒசை இன்பம் பற்றி மிகவும் உவகையோடு பாடுகிறான் பாரதி.
கவிதைகளிலே காணப்படும் ஓசை நயத்திலே மனதைப் பறிகொடுத்தவர்கள் பலருண்டு கருத்துத் தெரியாது போனாலுங் கூட கவிதையிலே இருக்கின்ற ஓசை நயம், கற்போரைக் கவர்ந்திழுத்து மயக்கி விடுகின்ற அற்புதத்தன்மை வாய்ந்தது.
தோத்திரப் பாடல்கள் ஒசைக்கே முக்கியத்துவம் கொடுத்தன. அவற்றைப் பொருளறிந்து ஒதுவோர் இன்றும் குறைவு என்றே சொல்லலாம். ஒரு காட்சியைக் கவிஞன் வாசகர்களின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திக் காட்டுவதற்கு ஓசையைப் பெரிதும் நம்பிப் பயன்படுத்திய கவிதைகள் தமிழிலக்கியப் பரப்பில் மிக அதிகம் உண்டு.
ஓசை மூலமாக வாசகர்களைக் கவரவும், காட்சியைச் சிறப்பான முறையில் உணர்வுபூர்வமான வகையில் உணரச் செய்யவும், பெருங்கவிஞர்கள் எடுத்த முயற்சி பெரு வெற்றி பெற்றுள்ளது என்றே பெருமையோடு கூறிக் கொள்ளலாம்.
கவிதைகளை வாசிப்பதிலே விருப்பங் கொண்டுள்ள ரசிகர்களை முதலில் கவிதையின் ஓசை கவர்கின்றது. அடுத்துச் சொற்கள் , சொற்றொடர்கள் கவர்கின்றன. அதற்கு அப்பால் பொருள் தெரிந்து கருத்தூன்றிப் படிக்கும் போது தான் கற்பனை நயம் கவித்துவம் என்பன உள்ளத்தைக் கவர்கின்றன.

Page 17
இலக்கியச் சரபம் -4- கவிச்சக்கரவர்த்ததி கம்பன்
தமிழ்ப்புலவர்களிலே, ஒப்பாரும் மிக்காருமில்லாப் பெரும் புலவனான கவிச்சக்கரவர்த்தி கம்பன், தனது இராமாயணக் காவியத்திலே தொண்ணுற்றாறு வகையான சந்தங்களை, அதாவது ஓசை வேறுபாடுகளைக் கையாண்டுள்ளான். விருத்தம் என்னும் கவிதை இலக்கணத்துள் இவ்வளவு தொகையான ஓசை வேறுபாடுகளை வேறெவரும் இதுவரையிற் பாடவில்லை என்றே (Old T606)6)ITLD.
ஒரு காட்சியை வாசகர்கள் உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் ஓசை மூலம் காட்டுவதிலே ஒப்பற்றவன் என்று கம்பனைப் புகழ்ந்தால் , அது அவனுக்கு முற்றும் பொருந்தும்.
கவிதைக் கலையின் சிகரங்களைத் தொட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பன், ஓசையை நம்பிக் காட்டுகின்ற காட்சி ஒன்றை முதலிற் காண்போம். கருத்தைக் கருதாமல் , ஒசையின்பத்தை நுகர்ந்து அக்காட்சியை ரசித்துப் பார்ப்போம்.
விசுவாமித்திர முனிவர் தனது வேள்வியைக் காவல் செய்வதற்காக இராம இலக்குவரை அழைத்துச் செல்கிறார். தாடகை என்னும் கொடிய அரக்கி அங்கே வந்து தோன்றுகிறாள்.
தாடகையின் கொடுங்குணத்தையும் அவளின் தோற்றப் பயங்கரத்தையும், அவளது ஆரவாரச் சத்தத்தையும், வருகையையும், கம்பன் அற்புதமான ஓசை நயம் மூலம் காட்டுவதைப் பார்ப்போம்.
இறைக்கடை துடித்தபுரு வத்தளெயி றென்னும் பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயளர் மறைக்கடை அரக்கிவட வைக்கனல் இரண்டாய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாளர்
கடங்கலுழி தடங்களிறு கையொடுகை தெற்றா வடங்கொள நுடங்குமிடை யாண்மறுகி வானோர் இடங்களு நெடுந்திசையு மேழுலகு மெங்கு மடங்கலு நடுங்கவுரு மஞ்சநரிை யார்த்தாளர்.
என வல்லின எழுத்துக்களை மிகுதியாகக் கொண்ட
சொற்களைக் கொண்டு , தாடகையின் வருகையையும் அதன் கொடுமையையும்
 

-5- --S03EG GYNT" IEGU 5ANG SUNT கண்முன்னே நிறுத்திக் காட்டக் கம்பன் கையாண்ட ஓசை நயம் உவமையில்லா இன்பம் பயக்கின்றதல்லவா.
இவ்வாறு ஒசை மூலம் காட்சியின் தன்மையைத் தத்ரூபமாகக் காட்டுவதிலே கம்பன் தனிப்பெருங்கவிஞனாகவே போற்றத்தக்கவன்.
கம்பனின் இராமாயணத்திலே இன்னுமொரு காட்சியைக் காண்போம். கம்பன் தனது கவித்துவத்தை வெளிக்காட்டிக், காட்சியையுங் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதற்கு, ஓசையைப் பயன்படுத்துகின்ற பாங்கைப் பார்த்துப் பரவசமடைவோம்.
இராமனும் , சீதையும் , இலக்குவனும் வனவாசம் அனுபவிக்க வந்து விட்டனர். கங்கைக்கரை வேடன், ஆயிரம் படகுகளுக்குத் தலைவனான குகன், இராமனோடு நட்புக் கொள்கிறான். தாயினும் இனியனாக இராமனால் ப்ாராட்டப்பட்ட குகன், இராமன், இலக்குவன் , சீதை ஆகியோர் கங்கையைக் கடந்து செல்ல உதவுகிறான்.
அதன்பின்பு, பரதன் தனது பெருஞ்சேனையோடும், தாயர் மந்திரிகள் பிரதானிகளோடும் இராமனைத் தேடி வருகின்றான்.
இராமனை வனத்திலே வைத்துப் போர் செய்து கொல்வதற்காகவே தான் பரதன் பெருஞ்சேனையோடு வருகிறான் என்று தவறாக நினைத்துக் கோபம் கொண்ட குகன், யுத்த சன்னத்தனாகித் தனது சேனைகளையும் யுத்தத்துக்குத் தயார் செய்கிறான்.
இராமன் மேல் குகன் கொண்டிருந்த பக்தி, அவனைப் பரதன் மேல் கோபங்கொள்ளும்படி செய்திருந்தது. மிகுந்த ஆவேசத்தோடு, குகன் தனது சேனைகளுக்கு ஆணையிட்டு அறிவுறுத்தும் காட்சியைக் கம்பனின் ஒசை நயத்துடன் பார்ப்போம்.
ஆழ நெடுந் திரை ஆறு கடந்திவர் போவாரோ வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ ஏழமை வேடண் இறந்திலன் எண்றெனை ஏசாரோ
போன படைத்தலை வீரர் தமக்கிரை போதாஇச் சேனை கிடக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகம் சோனை படக்குடர் சூறைபடச்சுடர் வாளோடும் தானை படத்தனி யானை படத்திரள் சாயேனோ

Page 18
இலக்கியச் சரபம் -6-
ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ நாடு கொடுத்தளன் நாயக ஒனுக்கிவர் நாமாளும் காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணிரோ,
என கங்கைக் கரை வேடன் குகனின் கோபத்தையும் வீராவேசத்தையும் அவனது கோபம் பொருந்திய ஓசைகள் மூலமே கண்முன்னே காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.
கம்பன் மட்டுமல்ல, பெருங்கவிஞர்கள் பலரும், ஓசை மூலம், தாம் காட்ட வந்த காட்சியைச் சிறப்பாகக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
&9Fu II MESIGNEGUTSESTILLITrir.
கவிச்சக்கரவர்த்தி என்று தமிழறிஞர்களால் பாராட்டப்பட்ட இன்னுமொரு பெரும்புலவர் சயங் கொண்டார். கலிங்கத்துப்பரணி அவர் கைவண்ணத்தில் மிளிர்ந்த அற்புதமான நூல்.
'பரணிக்கோர் சயங் கொண்டார்’ என்று பாராட்டப்பட்ட அவர் தமது கலிங்கத்துப்பரணியில் பல ஓசை வேறுபாடுகளையும் இடமறிந்து பயன்படுத்திப் பிரமிக்க வைத்துள்ளார்.
கருணாகரத் தொண்டைமானைச் சேனாதிபதியாகக் கொண்ட குலோத்துங்க சோழனின் படைகள் , அனந்தபதுமன், அரசாண்ட கலிங்க நாட்டின் மீது போருக்குச் செல்லுகின்ற காட்சியைக் கண்முன்னாலே கொண்டு வந்து நிறுத்த, சயங்கொண்டார் ஓசையையே பெரிதும் நம்பியிருக்கிறார் என்பது அப்பாடல்களைப் படிக்கும் போது தெளிவாகத் தெரிகின்றது.
எடுமெடு மெடுமென வெடுத்ததோர்
இகலொலி கடலொலி இகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடு மெனுமொலி மிகைக்கவே
வெருவர வரிசிலை தெரித்தநாண்
விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை அவரவர் தெழித்ததோர்
தெழிஉல குகளிர்செவி டெடுக்கவே,
 

-7- அகளங் கனர் எறிகட லொடுகடல் கிடைத்தபோல்
இருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுதிரை மலைத்தபோல்
வருபரி யொடுபரி மலைக்கவே
குருதியின் நதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே கரிதுணி படுமுடல் அடுக்கியே
கரைஎன இருபுடை கிடக்கவே.
பொருள் விளங்காமலேயே இந்த ஓசை யுத்தக்
காட்சியைக் காட்டுகின்றது என்று கூறலாமல்லவா.
சேக்கிழார் சுவாமிகளர்.
“பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று
பாராட்டப்பட்ட சேக்கிழார் சுவாமிகள் தனது பெரிய புராணத்தில் ஒரு போர்க்
காட்சியைத் தகுந்த ஓசை ஒழுங்கு மூலம் அற்புதமாகக் காட்டுகிறார்.
ஏனாதி நாத நாயனாருக்கும் அதிசூரனுக்கும் இடையே நடந்த
போரைப் பற்றிப் பாடும் போது, ஓசை நயம் மூலம் அந்தப் போர்க்களத்துக்கே
எம்மை அழைத்துச் சென்று விடுகிறார் சேக்கிழார்.
ஓசை நயம் யுத்த உணர்வை உள்ளத்தில் ஏற்படுத்தி விடும்படியாக
அமைந்துள்ள அப்பாடல்களைப் பார்ப்போம்.
வாளொடு நீள்கை துடித்தன
மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன
தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார்கழல் இற்றன
தாரொடு சூழ்சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர்
நாடிய போர்செய் களத்தினில்

Page 19
இலக்கியச் சரபம் -8-
குருதியின் நதிகள் பரந்தன
குறையுடல் ஒடி அலைந்தன பொருபடை அறுதுணி சிந்தின
புடைசொரி குடர்உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின
விசிஅறு துடிகள் புரண்டன இருபடை தனினும் எதிர்ந்தவர்
எதிர்எதிர் அமர்செய் பறந்தலை பக்திச் சுவையைப் பாடவந்த தெய்வ மாக்கவியாம் பக்திக்கவி சேக்கிழாரே , போர்க்காட்சியை இப்படிப் பாடினால் யுத்தத்தைப் பாடவந்த கச்சியப்பர் சும்மா விடுவாரா.
கச்சியப்ப சிவாச்சாரியார்
1008 அண்டங்களையும் 108 யுகங்களாக அரசாட்சி செய்து வந்த சூரபன்மன் , முருகப்பெருமானோடு யுத்தஞ் செய்துகொண்டிருக்கிறான்.
இறுதிப் போரில் அவன் பல்வேறு வடிவங்களையும் ஒரே காலத்தில் தனது மாயவலிமையினால் எடுத்துக் கொண்டு முருகப் பெருமானோடு போர்புரிய வருகிறான்.
அவன் எடுத்த வடிவங்களையும் வருகின்ற தன்மையையும் கச்சியப்ப சிவாச்சாரியார் ஓசை மூலமே உணரவைத்து விடுகிறார்.
அவரது பாடல்களைப் படிக்கும் போது தேவர்களைப் போல நாமும் பயந்து நடுங்குகிறோம். அவற்றிற் சில பாடல்களைப் பார்ப்போம்.
ஒவா வியல் புரீமூ வரி லொருசார் வரு மொழியுந் தேவா சுரர் பிறரா மென ஒருசார் வருஞ் சேணாளர் கோவா மென வொருசார் வரு மொருசார் வருங் குறள்போ லாவா வெனக் கொடுங்கூற் றென வொருசார் வரு மன்றோ
ஒருசார் விட மெனவந்திடு மொருசார் வரும் பணிபோ லொருசார் முகி லெனவந்திடு மொருசார் வரு மிருள்போ லொருசார் உரு மெனவந்திடு மொருசார் வரும் வரைபோ லொருசார் தன துருவாய்வரு மொருசார் வருங் கதிர்போல்
 

-9- 5 5 6 5 5 6 தொக்கார் பல படையாமென வொருசார் வருஞ் சூழுந் திக்கார் களிற் றினமாமென வொருசார் வருஞ் சினத்தா னக்கார் தரு மரியேறென வொருசார் வரு நலிவா னக்கால் வரு தனிப்புள்ளென வொருசார் வரு மன்றோ
சூரபன் மன் எடுத் து வந்த வடிவங் களையும்
அவ்வடிவங்களின் தன்மைகளையும் கடுமையான ஒசையினால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் காட்டியதைப் பார்த்தோம்.
வில்லிபுத்துராழ்வார்.
மகாபாரதத்தைத் தமிழில் பாடிய வில்லிபுத்துராழ்வார் யுத்தக் காட்சிகளைப் பாடுவதில் மிகவும் வல்லவர் கம்பனின் கவிதைகளுக்கு
நிகரான ஓசை நயங் கொண்ட கவிதைகளைப் பாடிய அப்பெரும் புலவர் பாடிய சில பாடல்களில் ஒசைச் சிறப்பைப் பார்ப்போம்.
தூதுவந்த கிருஷ்ணரைச் சூழ்ச்சியால் கொல்ல நினைக்கிறான் துரியோதனன், துஷ்டச் சதுஸ்டர்கள் எனப்படும் கர்ணன் , சகுனி, துச்சாதனன். துரியோதனன் ஆகியோர் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர்.
கிருஷ்ணரைத் தந்திரமாகச் சபைக்கு அழைத்து, அவரைப் பொறி பொருந்திய ஆசனத்தில் இருத்திக் குழிக்குள் வீழ்த்தி, குழிக்குள் மல்லர்களை ஆயுதங்களோடு நிறுத்திக் கொன்று விடத் திட்டம் தீட்டுகிறார்கள்
திட்டத்தின்படி கிருஷ்ணரை ஆசனத்தில் அமரச் செய்து குழிக்குள் வீழ்த்தியும் விடுகிறார்கள். துரியோதனனின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்லர்களைக் கொன்று தப்புகிறார்.
இக்காட்சியை வில்லிபுத்தூராழ்வார் தருகின்ற கவிதை மூலம் ரசிப்போம்.
இறைவ னெழிற்கதிர் மணிக ளழுத்திய தவிசினி ருத்தலுமே நெறுநெ றெனக்கொடு நிலவறை யிற்புக நெடியவ னப்பொழுதே மறலியெ னத்தகு நிருபனி யற்றிய விரகை மனத்துணரா முறுகுசி னத்துட னடியத லத்துற முடிகக னத்துறவே

Page 20
இலக்கியச் சரபம் -10
அஞ்சின மஞ்சின மென்றுவி ரைந்துயர் அண்டர் பணிந்திடவுந் துஞ்சின மின்றென வண்பணி யிண்கிளை துன்ப முழந்திடவும் வஞ்சம னங்கொடு வஞ்சக னரின்றிடு வஞ்சனை நன்றிதெனா நெஞ்சில்வெ குண்டுல கொண்று படும்படி நின்று நிமிர்ந்தனனே
அந்த விடத்தெறி பம்பர மொத்துட லஞ்சுழ லச்சுழலக் குந்தியுறித்தயி ருண்டவர் பொற்கழல் கொண்டு சுழற்றுதலான் முந்தம ரர்க்கமு தந்தர மைக்கடன் முன்சுழலச் சுழலு மந்தர மொத்தனர் கந்தமெ டுத்தெதிர் வந்து மலைந்தவரே வில்லிபுத்தூராழ்வார் ஓசை மூலம் காட்சியொன்றை எப்படி முன்னிலைப்படுத்தி உணர்வை ஏற்படுத்துகிறார் என்பதைப் பார்த்தோம். கவிச்சக்கரவர்த்ததி கம்பன்
கற்பனையின் எல்லையைக் கண்டு காவியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் காட்டுகின்ற காட்சிகளுக்கே மீண்டும் வருவோம். இராமனோடு முதல்நாள் யுத்தஞ்செய்து எல்லாவற்றையும் இழந்த இராவணன் சோர்வுற்று இருக்கிறான். அவனது மந்திரியாகிய மகோதரன் அவனின் சோர்வகற்றி , கும்பகர்ணனைப் போருக்கு அனுப்பும்படி அறிவுரை கூறுகிறான். அதனால் உற்சாகமடைந்த இராவணன் கும்பகர்ணனை நித்திரையிலிருந்து எழுப்பும்படி தூதுவர்களை அனுப்புகிறான்.
தூதுவர்கள் சென்று நித்திரையாகக் கிடக்கும் கும்பகர்ணனை எழுப்புகிறார்கள். கும்பகர்ணனைத் தூதுவர்கள் எழுப்பும் போது சொல்லுகின்ற விடயங்களை யுத்தத்துக்கு அணிவகுத்துச் செல்லுகின்ற ஒசையிலே அற்புதமான கவிதையாகத் தருகிறான் கம்பன். அதனை இங்கு பார்ப்போம்.
உறங்கு கின்ற கும்பகன்ன
உங்கள் மாய வாழ்வெலாம் இறங்கு கின்ற திண்றுகாணெ
ழுந்தி ராயெழுந் திராய் கறங்கு போல விற்பிடித்த
கால துரதர் கையிலே உறங்கு வாயு றங்குவாயி
னிக்கி டந்து றங்குவாய்
 

- li l- அகளங் கர்ை
என்று மீறி லாஅரக்க
ரிண்ட மாய வாழ்வெலாம் சென்று தீய நும்முனோன்தெ
ரிந்து தீமை தேடினான் இன்றி றத்தல் திண்ணமாக
இன்னு முன்னு றக்கமே அன்ற லைத்த செங்கையால
லைத்த லைத்து ணர்த்தினார் யுத்தத்திற்கு அணிவகுத்துச் செல்லும் போது இன்றும் இந்த ஒசை பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
இனி அவலச்சுவை தரும் ஓசையைக் கம்பன் பயன்படுத்துகின்ற SÐIL-p60D35ŮJ LJTĩÜGLITTLD.
* அழகிய காமவல்லியாக வந்து இராமனை மயக்கமுயன்று தோல்வியுற்ற இராவணனின் தங்கையாகிய சூர்ப்பனகை சீதையைத் தூக்கிச் செல்ல முயன்று இலக்குவனால் மூக்கறுபட்டு வீழ்ந்து கிடந்து புலம்புகிறாள். அக்காட்சியைக் கம்பன் அவலச் சுவை தரும் ஒசையிலே காட்டுவதைக்
காண்போம். --
உரனெரிந்து விழஎண்னை உதைத்துருட்டி மூக்கரிந்த நரனிருந்து தோளிர்பார்க்க நாண்கிடந்து புலம்புவதோ கரனிருந்த வனமன்றோ இவைபடவுங் கடவேனோ அரனிருந்த மலையெடுத்த அண்ணாவோ அண்ணாவோ
கானமத னிடைஇருவர் காதொடுமூக் குடனரிய ஈனமதாற் பாவியேன் இவண்மடியக் கடவேனோ தானவரைக் கருவறுத்துச் சதமகனைத் தளையிட்டு வானவரைப் பணிகொண்ட மருகாவோ மருகாவோ வீரகவிராயர்
வீரகவிராயர் என்னும் புலவர் அரிச்சந்திரனின் கதையை அரிச்சந்திர புராணம் என்ற பெயரில் சிறப்பாகப் பாடியிருக்கிறார். சோகச் சுவையை அதாவது அவலச் சுவையை அவர் அற்புதமாகக் காட்டுகிறார்.

Page 21
இலக்கியச் சரபம் -12
தேவதாசன் பாம்பு தீண்டி இறந்து கிடக்கிறான். பிராமணனுக்கு அடிமையாக இருந்த சந்திரமதி இரவிரவாக இறந்த மகனைத் தேடி இறுதியில் கண்டு பிடித்து விழுந்து புரண்டு கதறுகிறாள்.
தனது ஒரே மகன் இறந்த துயரத்தைத் தாங்கமுடியாமல் சந்திரமதி அழுகின்ற துயரக் காட்சியை ஓசை மூலம் காட்டிப் பெருந்துயரத்தை ஏற்படுத்துகிறார் வீரகவிராயர் ஒசையிலே ஒன்றிப்போய் நாமும் சந்திரமதியின் மனநிலைக்கே சென்று விடுகிறோம். அப்பாடல்கள் இரண்டைப் பார்ப்போம்.
பணியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
பசியால் அலைந்தும் உலவா அநியாய வெங்கண் அரவா லிறந்த
அதிபாவ மென்கொ லறியேன் தனியே கிடந்து விடநோய் செறிந்து
தரைமீ துருண்ட LD3,660T இனியாரை நம்பி உயிர்வாழ்வ மென்றன்
இறையோனும் யானும் அவமே
நிறையோசை பெற்ற பறையோசை யற்று
நிரையாய் நிறைந்த கழுகின் சிறையோசை யுற்ற செடியூ டிறக்க விதியா ரிழைத்த செயலோ மறையோ னிரக்க வளநா டனைத்தும்
வழுவா தளித்த வடிவேல் இறையோ னளித்த மகனே உனக்கும்
இதுவோ விதித்த விதியே
சந்திரமதியின் சோகத்தை ஒசையிலே கண்ட நாங்கள் ஒரு வித்தியாசமான காட்சியை ஓசை மூலமாகப் பார்ப்போம். திரிகூடராசப்பக் கவிராஜர்
திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் திரிகூடராசப்பக் கவிராயர், வசந்த வல்லி பந்தடித்து விளையாடும் காட்சியை, பந்து நிலத்தில் விழுந்து எழுகின்ற தன்மை பொருந்திய ஓசையிலே காட்டுகின்ற அற்புதத்தை இனிப்பார்ப்போம்.

-13- அகலாங் கர்ை
செங்கையில் வண்டு கலிண்கலின் என்று
ஜெயம்ஜெயம் என்றாட - இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று
குழைந்து குழைந்தாட - மணிப்
பைங்கொடி மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே.
பொங்கு கணங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாடக் - குழல் மங்கு வில்வண்டு கலைந்தது கண்டு
மதன்சிலை வண்டோட - இனி இங்கிது கண்டுல கெண்படும் என்படும்
என்றிடை திண்டாட மங்கல மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே. பந்தாட்டம் வேகமடையும் போது பாடலின் ஓசையும் விரைவடையும், இப்பொழுது சற்று வேகமாகப் பந்து விளையாடுகிற காட்சியை ஓசை மூலம் காண்போம்.
குடக முன்கையில் வால்வளை கண்டிரு
தோள்வளை நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாட - நய
நாடக மாடிய தோகை மயிலென
நன்னகர் வீதியிலே - அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே.

Page 22
இலக்கியச் சரபம் -14
இந்திரை யோவிவளர் சுந்தரி யோதெய்வ
ரம்பையோ மோகினியோ - மன முந்திய தோவிழி முந்திய தோகர
முந்திய தோவெனவே - உயர் சந்திர சூடர் குறும்பல வீசுரர்
சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரிபொற்
பந்துகொண் டாடினளே, பந்தடித்து விளையாடுகின்ற காட்சியை ஓசைமூலம் அற்புதமாகக் காட்டினார் திரிகூடராசப்பக் கவிராஜர் அருணகிரிநாதர்.
ஓசை வேறுபாடுகள் மூலம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வல்ல கவிதைகளைப் படைத்த பெரும் புலவர் அருணகிரிநாதர்.
“வாக்கினுக்கு அருணகிரி' எனப் பாராட்டப்பட்ட அப்பெரும் புலவர் பதினாறாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியதாகச் சொல்வார்கள்.
ஆனால் கிடைத்த பாடல்கள் ஆயிரத்து முன்னூறு வரைதான். அவற்றுக்குள்ளே 1008 சந்தங்கள் அதாவது ஓசை வேறுபாடுகள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
சந்தக்கவிநடையில் அவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களுக்கு இணையாகத் தமிழிலக்கியத்தில் எப்பாடல்களையும் சொல்ல முடியாது. அவர் பாடிய முதற்பாடலே அற்புதமாக அமைந்து சிறந்தது.
முத்தைத்தரு பத்தித்திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும் முக்கட்பர மற்குச்சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரு
முப்பத்துமு வர்க்கத்தமரரும் அடிபேண பத்துத்தலை தத்தக்கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப்பொருதரு
பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக்கடவிய
பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒருநாளே
-
 

-15- அகளங் கர்ை எனத் தொடர்கின்றது. இந்தச் சந்தத் திருப்புகழ் வல்லின மெய்களை அடுக்கிப் பாடப்பட்ட இக்கவிதை வரிகள் கம்பீரமான ஓசை நடையில் செல்கின்றன.
அருணகிரிநாதரின் கவித்துவத்திற்கு ஈடுஇணையே இல்லை எனலாம். அவரது திருப்புகழ் ஒன்றில் "ரகர வருக்க எழுத்துக்களே அதிகம் கொண்டதாயமைந்து சொற்சுவையும் ஓசை நயமும் கொண்டு விளங்கும் பாடலை இங்கு காண்போம்.
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் பிரபையாகி நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் சுதண்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமிவ ராதியைக் குறியாமே துரால்புகழ் பராதின துராவுள பராமுக
துரோகண மிகாசையுற் றடைவேனோ இராகவ இராமண்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் குடண்மாய்வென்று இராகண் மவராணிஜ புராணர்கு மராகலை
இராஜசொல வாரணர்க் கிளையோனே விராகல சுராபதி பொராதுத விராதடு
விராயண பராயணச் செருவூரா விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் பெருமாளே.
திருப்புகழிலே இத்தகைய ஓசை நயம் மிக்க பாடல்கள் நிறையவே இருக்கின்றன. கருத்திலே கவனம் கொள்ளாமல் ஒசையிலேயே உள்ளத்தைப் பறி கொடுத்து விடலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பன்
கவித்துவத்தின் எல்லையைக் கண்டவன் கம்பன். கவிச்சக்கரவர்த்தி என்று போற்றிப் புகழப்படும் கம்பனின் இராமாயண காவியத்தில் பலபாடல்கள் சொல்லின்பமும் ஒசைஇன்பமும் கொண்டு விளங்குகின்றன.

Page 23
இலக்கியச் சரபம் -16
ஆரண்யவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த இராமனின் அழகிலே மயங்கிய இராவணனின் விதவைத் தங்கையாகிய சூர்ப்பனகை இராமனை மயக்கித் தன்மேல் ஆசைகொள்ளச் செய்வதற்காக அழகிய காம வல்லியாகத் தன்னை மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி வருகிறாள்.
பார்த்தவர்கள் ஆசை கொள்ளத்தக்க அதிருப சுந்தரியாக, அழகுப் பதுமையாக வடிவெடுத்துக் கொண்டு, அன்னம் போல அவள் நடந்து வரும் காட்சியைப் படிப்பவர்களுக்கு முன்னிறுத்திக் காட்டுவதற்குக் கம்பன் அற்புதமான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறான்.
காமவல்லியாக வரும் சூர்ப்பனகையின் பெண் மைக்குரிய மென்மையைக் காட்டுவதற்காக, மெல்லின எழுத்துக்களையே மிகுதியாகக் கொண்ட சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறான் கம்பன். சூர்ப்பனகையின் தோற்றத்தின் மென்மையை இப்பாடலின் மென்மையான ஓசை மூலமே கண்டு (G35|T6iT6T6)Tib.
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அண்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகளிர் வந்தாளர், என சூர்ப்பனகை காமவல்லியாக, வஞ்சிக் கொடிபோல வளைந்து வளைந்து, அன்னம் போல நடந்து , மயிற்தோகை போன்ற கூந்தலைத் தூக்கமுடியாமற் சுமந்து கொண்டு செக்கச் சிவந்த தாமரை இதழ் போன்ற பாதங்கள் புல்லிற்பட நடந்து வந்த காட்சியை, மெல்லின எழுத்துக்களைக் கொண்ட சொற்களாலே விளக்கிய கம்பனின் கவித்துவத்தைப் பாராட்டாதார் யாருமில்லை.
இத்தகைய பாடல்களைப் பின்னாளில் பல புலவர்கள் தம் வித்துவத்தைக் காட்டுவதற்காகப் பாடியுள்ளார்கள். காட்சியை முன்னிறுத்துவதற்கு இத்தகைய உத்திகள் பயன்படும் போது அது கவிஞனின் கவித்துவத்தைக் காட்டும்.
வெறுமனே இத்தகைய பாடல்களைப் பாடினால் அது கவிஇயற்றுவதில் அக்கவிஞனுக்கிருக்கின்ற இலக்கண அறிவையும் வித்துவத்தையும் மட்டுமே காட்டும். தனிப்பாடல்கள் இரண்டை இந்த வகையில் மெல்லின எழுத்துக்களைக் கொண்ட சொற்களைக் கொண்டு பாடப்பட்ட பாடல்களுக்கு உதாரணங்களாக இங்கு தருகின்றேன்.
 

- 7- அகளங் கனர் மானமே நண்ணா மனமெண் மனமென்னும் மானமாண் மன்னா நனிநாணும் - மீனமா மானா மினண்மின்னி முன்முன்னே நண்ணினு மானா மணிமேனி மாண்.
மண்னுமான் மாண்முன்ன மானமு மீனமா மின்னமா னேமுண்னு மானினி - மென்மென மின்னுமா மென்னினா மண்னமுமா மெண்மணனே மன்னுமா மானுமான் மான், சேக்கிழார் சுவாமிகள்
திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் சேக்கிழார் சுவாமிகளால் பாடப்பட்டு, பெரிய புராணம் என்று இந்நாளில் வழங்கும் புராணத்தில், தடுத்து ஆட்கொண்ட புராணப் பகுதியில், சுந்தரர் தில்லைப் பதியை அடைந்த காட்சியைச் சேக்கிழார் சுவாமிகள் பாடும் போது, இடையின எழுத்துக்களில் ஒன்றான"ல’கரத்தைக் கொண்ட சொற்களையே அதிகமாகக் கொண்டு ஒரு பாடல் பாடியுள்ளார்.
தேம லங்கலணி மாமணி மார்பிற்
செம்ம லங்கயல்கள் செங்கம லத்தண் பூம லங்கவெதிர் பாய்வன மாடே
புள்ள லம்புநிரை வெளர்வளை வாவித் தாம லங்குக டடம்பணை சூழுந்
தண்ம ருங்குதொழு வார்கட மும்மை மாம லங்களற வீடரு டில்லை
மல்ல லம்பதியி னெல்லை வணங்கி,
இப்பாடல் போல, வல்லின எழுத்துக்கள் கொண்ட சொற்களையே மிகுதியாகக் கொண்டதாகவும் சில தனிப்பாடல்கள் தமிழ்க் கவிதைப் பரப்பிலே காணப்படுகின்றன. ஒட்டக்கூத்தரும் புகழேந்திப்புலவரும்
ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் புலவரும் , புகழேந்திப் புலவரும் போட்டியாகப் பாடிய சில பாடல்கள் மிகவும் சுவை பயப்பன.

Page 24
இலக்கியச் சரபம் ... 3
ஒட்டக்கூத்தர் க், ச், ட், த், ப், ற், என்ற வல்லின மெய்களைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்திப் பாடிய பாடலொன்றின் கம்பீரத்தை முதலில் கண்டு, தொடர்ந்து புகழேந்திப் புலவரின் பாடலையும்பார்ப்போம்.
விக்கா வுக்கா வித்தா விப்போய்
விட்டா னட்டார் சுட்டூர் புக்கார் இக்கா யத்தா சைப்பா டுற்றே
யிற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர் அக்கா டப்பேய் தொக்கா டச்சூழ்
அப்பா டத்தி வெப்பா டப்பூண் நெக்கா டக்கா னத்தா LaGLurru
நெய்த்தா னத்தா னைச்சே வித்தே
தற்கோ லிப்பூ சற்பா சத்தே
தப்பா மற்சா கைக்கே நிற்பீர் முற்கோ லிக்கோ லீப்பூ சித்தே
முட்டா மற்சே வித்தே நிற்பீர் வற்றா நெட்டோ டைப்பா ரைச்சேனன்
மைப்பூ கத்தே றித்தா விப்போய் நெற்றா ஞற்றா லைப்பா கிற்சேர்
நெய்த்தா னத்தா னைத்யா னித்தே
தக்கயாகப் பரணி, மூவருலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்களைப்பாடிய ஒட்டக்கூத்தரையும், | கவிச் சக்கரவர்த்தி என்றே தமிழுலகம் அழைத்தது. இராமாயணத்தின் உத்தர
காண்டம் இவராலேயே பாடப்பட்டது.
வெண்பாவிலே ஒரு பிரபந்தத்தை, கற்பனைச் சிறப்போடு Lாடிக் காட்டித் தன் புலமையையும் கவித்துவத்தையும் நிரூபித்தவர் புகழேந்திப்புலவர். அவர் பாடிய நளவெண்பா மிகவும் சிறந்த ஒரு இலக்கியமாகப் பலராலும் போற்றப்படுகின்றது.
இத்தகைய இருவரும் குலோத்துங்க சோழனின் வேண்டு கோளுக்கிணங்கப் பாடிய சந்த விருத்தப் பாக்களே மேலே காட்டப்பட்டவை. இவை போன்ற வல்லோசை கொண்ட இன்னும் இரு LTடல்களையும் பார்ட்போம். | முதலாவது ஒட்டக் கூத்தரின் பாடல் அடுத்தது :ழேந்திப் புலவரின் பாடல்.
 

-19- அகளர்ங் கனர்
திக்குளெட் டுக்கயம்
துக்கமுற் றுத்திடுக் கிட்டலற மைக்கடற் குட்சரம்
தைக்கவிட் டோர்க்கிட LDITLDgU இக்குமுற் றிக்கணுச்
சற்றுவிட் டுத்தெறித் திட்டமுத்தைக் கொக்குமொக் கிக்கக்கி
விக்குமச் சோலைக் குறுங்குடியே
எட்டெழுத் தைக்கருத்
திற்குறித் திட்டுநித் தம்பரவும் சிட்டர்கட் குத்திருப்
பொற்பதத் தைச்சிறக் கத்தருமல் வட்டநெட் டைப்பணி
மெத்தையத் தர்க்கிடம் வாரிசப்பொ குட்டில்நத் துக்குலம்
தத்திமுத் தீனுங் குறுங்குடியே
இத்தகைய ஓசை நயம் மிக்க பாடல்கள் காவியங்களிலே பிரபந்தங்களிலே புராணங்களிலே இடம் பெறும் போது, கதையோட்டத்திற்குரிய உணர்வு வெளிப்படுத்தப்படுகின்றது. இருப்பினும் பொருள் கொள்வதில் பெருஞ் சிரமத்தை எதிர்நோக்கவும் வேண்டியிருக்கின்றது. தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலம் ஐரோப்பியர் காலம் ஆகிய பகுதிகளில் பல தனிப்பாடல்கள் ஒசையின்பம், சொல்லின்பம் கருதிப் பாடப்பட்டுள்ளன. அவை இலகுவில் பொருள் காண முடியாததால் சிறப்பின்றி மறைகின்றன.
கவிதைகளுக்குப் பொருளே முக்கியம். பொருளை விளக்கவே சொற்களும் ஓசைகளும் பயன்படவேண்டும். வெறும் ஓசை என்பது சுரவரிசை பாடுதல் போன்றதே.
நல்ல கவிதைகளில் கருத்தைப் புலப்படுத்த, கருத்தின் உணர்வை படிப்போரின் உள்ளத்தில் பதிய வைக்க சொற்களும் ஓசைகளும் பயன்படுகின்றன.

Page 25
-20
சொல் இன்பம்
கவிதைகளிலே கருத்துக்களுக்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது.
கருத்துக்களைச் சரியான முறையில் வலியுறுத்துவதற்குப் பொருத்தமான
சொற்கள் பயன்படுத்தப் படவேண்டியது அவசியமாகின்றது. அதனால் கவிதைகளில் சொற்களின் சிறப்பு இன்றியமையாததாகி விடுகின்றது.
ஒரு கவிஞன் தன் கருத்தை அல்லது ஒரு காட்சியை விளக்கப் பொருத்தமான கற்பனைகளைப் பயன்படுத்துகிறான். அக்கற்பனைகள் மூலம் கருத்தைத் தொடர்புபடுத்தச் சொற்களே பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. சொற்களால் கிடைக்கின்ற ஓசை இன்பமும் கவிதைகளிலே இரசிக்கத்தக்கதே. இருப்பினும் வெறும் ஒசையினால் கருத்தைப் புலப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகி விடுகின்றது.
எனவே கவிதைகளிலே கருத்தும் , அக்கருத்தைப் புலப்படுத்தும் கற்பனையும் , ஒசைநயம் பொருந்திய சொற்களாலேயே துலக்கம் பெறுகின்றன. கருத்தாழமும், கற்பனை நயமும் பொருந்திய கவிதைகளில், ஓசையின்பம் மிக்க சொற்களும் பொருந்தியிருந்தால் அக்கவிதைகள் அற்புதமான கவிதைகளாக, சாகாவரம் பெற்ற கவிதைகளாக நிலைத்து விடுகின்றன.
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியரின் இலக்கணச்சூத்திரம். எனவே சொல்லின்பத்தை அனுபவிக்கும் போதே அறிஞர்கள் பொருளின்பத்தையும் அனுபவிப்பர்.
பாடப்படுகின்ற பாடல்களுக்கு ஓசை கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு, படிக்கப்படுகின்ற கவிதைகளுக்குச் சொற்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
ஒரு விடயத்தைச் சொல்லும் போது, மிகவும் பொருத்தமான கருத்து நிறைந்த சொற்கள் மூலம் சொன்னால் மட்டுமே தான், அவ்விடயம் சொல்பவரிடமிருந்து கேட்பவருக்குச் சரியாகச் சென்று சேரும்.
ஒரு கருத்து விளக்கமுறுவதற்கும் , சிறப்படைவதற்கும் சொற்களே முக்கியத்துவம் பெறுகின்றன. சொல்லின் பெறுமதிபற்றி மகாகவிபாரதியாரின் பாஞ்சாலி சபதப் பாடலொன்றில் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
 

-21- ss936 6.Tf16956ot பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைப்பதற்காகத் துரியோதனன் கட்டிய மண்டபத்தின் சிறப்பைப் பாரதியார் பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறார்.
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும் நல்ல தொழிலுணர்ந் தார்செய லென்றே நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக் கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச் சொல்லை இசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்
துரியோதனன் கட்டிய மண்டபத்தை ஒரு சிறந்த காப்பியம் என்றும்,அது சிறந்த புலவனொருவன் சொல்லை இசைத்துச் செய்த சுந்தரமான காப்பியம் என்றும் புகழ்கிறான் பாரதி.
சொல்லின் பெறுமதி பற்றித் தெய்வப் புலவர் வள்ளுவப் பெருந்தகை மிகவும் அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொல்லுக சொல்லைப் , பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து, ஒரு சொல்லைச் சொல்லும் போது , அதைவிடச் சிறந்த மற்றொரு சொல், அக்கருத்தை விளக்க , வலியுறுத்த இல்லை என்பதைக் கண்டு கொண்டு , அதாவது அச்சொல்லை வெல்லுஞ் சொல் இல்லாமையை அறிந்து கொண்டு , அதன்பின், மிகப் பொருத்தமான அச்சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்பது இக்குறளின் திரண்ட பொருளாகும்.
பிற்காலப் புலவரான அதிவீரராம பாண்டியன் என்னும் அரசன், சொல்லின் பெறுமதியையும், அதைச் சொல்லும் விதத்தையும் சிறப்பாகத் தனது வெற்றிவேற்கை எனப்படும் நறுந்தொகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே

Page 26
| |
|
இலக்கியச் சரபம் -22
பொய் யைச் சொல லும் ஒருவன் , தனது
சொல்லாற்றலாகிய சொல்வல்லமையினாலும் அதைச் சொல்லுகின்ற வல்லமையினாலும் பொய்யை மெய்யாக்கி விடுகிறான்.
ஆனால் உண்மையைச் சொல்கின்ற ஒருவனிடம், சொல்லாற்றலும் அதைச் சொல்லும் ஆற்றலும் இல்லையாயின் அவனது மெய் பொய்யாகி விடுகின்றது என்கிறார் அதிவீரராம பாண்டியனார்.
நீதி மன்றங்களிலே சொல்வன்மையும் சொல்லும் வன்மையும் உள்ளவர்கள் பொய்யை மெய்யாக்கி விடுவைைதயும், மெய்யைப் பொய்யாக்கி விடுவதையும் இன்றும் காண்கிறோம். திருவளர்ளுவர்
வள்ளுவப் பெருந்தகை தனது திருக்குறட் பாக்களிலே வெற்றுச் சொல் இல்லாமல், வெல்லுஞ் சொல் இல்லாமல் பொருத்தமான சொற்களையே பயன்படுத்தியுள்ளார். அதனாற் தான் குறைந்த சொற்களாலே நிறைந்த பொருளை அவராற் புலப்படுத்த முடிந்தது.
திருவள்ளுவரின் சொல் ஒவ்வொன்றும் அணுவைத் துளைத்த நுட்பம் பொருந்தியும் , அத்துளையுள் ஏழ்கடல் நீரையும் புகுத்தியது போன்ற பொருட் பெருக்கம் பொருந்தியும் காணப்படுவதாக ஒளவையார் பின்வருமாறு கூறியிருக்கின்றார்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்,
சொல்லின்பத்தை நுகர்வதற்கு முதலில் வழிகாட்டியவராகத் திருவள்ளுவரையே புகழ்ந்து கூறலாம். அவரது சில குறட்பாக்களை முதலில் LITs (SLITLD.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய துTஉம் மழை
என்ற குறளில் உள்ள சொல்லின்பத்தை சொல்நயத்தை நுகராதார் யாருமில்லை என்றே சொல்லலாம். "துப்பு' என்ற சொல் ஐந்து தடவைகள் அடுக்கி வந்து சொல்லின்பத்தைக் கொடுக்கின்றது.
 

-23- S9 JG6T GHI JAG GEST இவ்வகையிலே அமைந்த சில குறள்களைப் பார்ப்போம். இக்குறள்களின் பொருள்களை விளக்கின் இது விரியும் என்பதால் சொல்லின்பத்துக்காக மட்டும் சில குறள்களைத் தருகிறேன். பொருளின்பத்தை திருக்குறள் நூலில் கண்டுகொள்ளும்படி வேண்டுகின்றேன்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருளர் இக்குறளில் பொருள் என்ற சொல் நான்கு தடவைகள் வந்து சொல்லின்பம் தருகின்றது.
பற்றுக பற்றற்றாண் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு இக்குறளில் ஆறு தடவைகள் பற்று என்ற சொல் வந்து சொல்லின்பத்தைத் தருகின்றது.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல், இக்குறளில் சொல் என்ற சொல் ஐந்து தடவைகள் வந்து சொல்லின்பத்தை வழங்குகின்றது.
தீயவை தீய பயத்தலாண் தீயவை தீயினும் அஞ்சப் படும் இக்குறளில் தீய என்ற சொல் மூன்று தடவைகள் வந்து தீயினும் என்ற சொல்லையும் சொல்லின்பத்துக்காகத் துணைக் கொண்டிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. இக்குறளில் தோன்றல் என்ற பொருளுடைய சொற்கள் பலவகையிலும் நான்கு சீர்களில் வந்து சுவையாக அமைந்துள்ளது.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் இக்குறளில் வாழ்வு என்ற பொருளுடைய சொல் நான்கு சீர்களில் வந்ததோடு, வசையொழிய இசையொழிய என்ற எதுகைச் சொற்களும் பொருந்தியிருப்பது சிறப்பாக உள்ளது.

Page 27
இலக கியச் சரபம் -24
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் இக்குறளில் சார் என்ற சொல் நான்கு தடவைகள் வந்து ஓசை இன்பத்தைத் தருகின்றது.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு, இக்குறளில் பற்றி என்ற சொல் மூன்று தடவைகளும் விடாஅ என்ற சொல் இருதடவைகளும் வந்து சொல்லின்பத்தைத் தருகின்றன.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் , நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் இக்குறளில் நோய் என்ற சொல் நான்கு தடவைகள் வந்து சொல்லின்பம் தருகின்றது.
எல்லா விளக்கும் விளக்கல்ல , சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு, இக்குறளில் விளக்கு என்ற சொல் நான்கு தடவைகள் வந்து சொல்லின்பம் தருகின்றது.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை , அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் இக்குறளில் அஞ்சுதல் என்ற கருத்துள்ள சொற்கள் நான்கு சீர்களில் வந்துள்ளன.
தண்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் எண்குற்றம் ஆகும் இறைக்கு இக்குறளில் குற்றம் என்ற சொல் மூன்று தடவைகள் வந்துள்ளது. தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். இக்குறளில் தேறுதல் என்ற பொருள் கொண்ட சொல் மூன்று சீர்களிலும் தேருதல் என்ற பொருள் கொண்ட சொற்கள் இரண்டு சீர்களிலும் வந்துள்ளன.
மன்னர்க்கு மண்ணுதல் செங்கோண்மை அஃதின்றேல்
மண்ணாவாம் மன்னர்க்கு ஒளி
 

-25- --S- Æs 6-AT [FRI SE SGT மன்னர்க்கு என்ற சொல்லோடு, மண்ணுதல் , மன்னாவாம் என்ற சொற்களும் சேர்ந்து சொல்லின்பத்தைச் சுவைபட வழங்குகின்றன.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர், கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் இக்குறளில் கண்ணோட்டம் , கண்ணிலர் , கண்ணுடையார் என்ற சொற்களும், இல்லவர் (கண்) இலர் , இல் என்ற சொற்களும் சேர்ந்து சொல்லின்பத்தை வழங்குகின்றன.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் ஒற்று , ஒற்றி என்ற சொற்கள் இக்குறளில் சொல்லின்பத்தை
வழங்குகின்றன.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.
இக்குறளில் தாளாண்மை , வேளாண்மை , வாளாண்மை என்ற சொற்கள் இன்பம் பயக்கின்றன.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை LLIT 9 தவர் இக்குறளில் இடும்பை என்ற சொல் நான்கு சீர்களில் வந்து சொல்லின்பம் தருகின்றது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் எண்ணி என்ற சொல் , மூன்று சீர்களிலும் , திண்ணிய என்ற சொல் ஒரு சீருமாக வந்து இக்குறளில் சொல்லின்பத்தைத் தருகின்றன.
துங்குக துங்கிச் செயற்பால துங்கற்க துங்காது செய்யும் வினை இங்கு துங்குதல் என்ற பொருள் கொண்ட சொற்கள் நான்கு சீர்களிலும் வந்து சொல்லின்பத்தைத் தருகின்றன.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் இக்குறளில் கற்றார் , கற்ற என்ற சொற்கள் நான்கு சீர்களில் பொருந்தி வந்து சிறந்த சொல்லின்பத்தை நல்குகின்றன.

Page 28
இலக்கிய அச் சரபம் -26
நாடெண்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு நாடு , நாடுதல் என்ற பொருள்களைக் கொண்ட சொற்கள் ஐந்து சீர்களில் பொருந்தி வந்து சொல்லின்பம் தருகின்றன.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு இக்குறளில் முகநக , அகநக என்ற எதுகைச் சொற்களும் , நட்பது, நட்பு என்ற சொற்களும் விரவிவந்து சொல்லின்பம் தருகின்றன.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளர் பவர்க்கு. இக்குறளில் நாடுதல் , நட்புக் கொள்ளுதல் , நட்பு என்ற பொருள்களைக் கொண்ட சொற்கள் சொல்லின்பம் தருமாறு பொருந்தியுள்ளன.
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதிண்மை இண்மையா வையாது உலகு இக்குறளில் இன்மை என்ற சொல் முதல் ஐந்து சீர்களிலும் பொருந்தி வந்து சொல்லின்பம் தருகின்றது.
காணாதாற் காட்டுவான் தாண்காணாண் , காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு, இக்குறளில் காணாதான் , காணாண் , கண்டானாம் என்னும் சொற்கள் சொல்லின்பம் தருகின்றன. 米 இரப்பண் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவண்மின் என்று
இன்மையின் இன்னாதது யாதெனின் இண்மையின் இன்மையே இன்னா தது
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத் த்க்கது உடைத்து
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் , வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
 

-27- அகளங் கனர் மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்
பெருமை பெருமிதம் இன்மை , சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ குன்றி அனைய செயின்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாளர் பவர்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலண்.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
இக்குறள்களிலுள்ள சொல்லின் பத்தை நீங்கள் சுவைத்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். இங்கு காட்டப்பட்ட திருக்குறட் பாக்கள் எல்லாம் சொல்லின்பத்தை மட்டுமன்றி ஒசையின்பத்தையும் பொருள் ஆழத்தையும் கொண்டவையாகும்.
spsyncriru Gu Jurrir 356mit
ஊர்ப்பற்று என்பது பொதுவாகவே எல்லோருக்கும் இருக்கின்ற ஒன்றுதான். சிலருக்கு அளவுக்கு அதிகமாகவும் இருந்து விடுகின்றது.
ஊர்ப்பற்று , நாட்டுப்பற்று , மொழிப்பற்று , இனப்பற்று எனப் பல பற்றுக்களை நாம் இறுகப் பற்றிப் பிடித்திருக்கிறோம். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே” என்பது மறக்க முடியாததுதான்.

Page 29
இலக்கியச் சரபம் -28
இருப்பினும் இப்பற்றுக்கள் சிலருக்கு வெறியாகவே மாறிவிடுகின்றது. அதனால் தான் சமயச் சண்டைகள் , சாதிச்சண்டைகள் , மொழிச்சண்டைகள், ஊர்ச்சண்டைகள் எனப் பல சண்டைகள் இடம் பெறுகின்றன.
கவிதைகளிலே ஊர்ப்பெயர்களைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படவே செய்கின்றது. சில புலவர்கள் தம் பாடல்களில் ஊர்ப்பெயர்களை அடுக்கிப் படிப்போரை மகிழ்ச்சிப் படுத்தி, அவ்வூர்ப் பெயர்களுக்கு இலக்கிய அந்தஸ்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ்த்திரையிசைப் பாடல்கள் சிலவற்றிலும் ஊர்ப்பெயர்கள் பொருத்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுப் பிரபல்யமும் அடைந்துள்ளன.
“மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி . ’ என்ற பழைய பாடலும் "தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு . என்ற இக்காலப் பாடலும் “மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில்
கண்டேனே ..” என்ற இடைக் காலப் பாடலும் மிகவும் பிரபல்யமடைந்தன. இரசிகர்களால் முணுமுணுக்கவும் பட்டன. அந்த வகையில் இலங்கையிலும் பாடல் தொடர் ஒன்று மிகவும் சிறப்புப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முத்துக்குமார கவிராஜர் என்பவர் வரகவி என்றும், கவிராஜர் என்றும் அழைக்கப்பட்டவர். சுன்னாகத்தில் வாழ்ந்த அம்பலவாணபிள்ளை என்பவரின் புதல்வரான இவர், இருபாலைச் சேனாதிராஜ முதலியாரோடு நெருங்கிப் பழகிய நண்பராகவும் சி.வை. தாமோதரம் பிள்ளையின் குருவாகவும் விளங்கியவர்.
இவரியற்றிய தனிப்பாடல்கள் அடங்கிய தொகுப்பான “முத்தக பஞ்ச விஞ்சதி” நூலில், யாழ்ப்பாணத்து ஊர்கள் பலவற்றைச் சிலேடையாக வைத்து அவர் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன.
கலாநிதி ஆசதாசிவம் அவர்கள் தொகுத்த ‘ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலில் இவரைப்பற்றிய குறிப்புகளோடு ஒருபாடலையும் அவர் தந்துள்ளார். அப்பாடலையும் அதோடுசேர்ந்த அவராற்
பாடப்பட்டசில பாடல்களையும் பார்ப்போம்.

-29- அகளங் கனர் முடிவி லாதுறை சுன்னாகத் தான் வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்(து) அடைய வோர்பெண் கொடிகாமத் தாளசைத்(து)
ஆனைக் கோட்டை வெளிகட் டுடைவிட்டாள் உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில் தடைவி டாதனை யென்றுப லாலிகண்
தார வந்தன ளோரிள வாலையே
அணைவி யையாச் சித்தங் கேணியர் பண்டத் தரிப் புடனே துணைவி யைநீங்கி லென் கந்தவ
ரோடையைச் சென்றிருந் தென் கணைய கல்காவி உடுப்பிட்டி யாரும்
கர வெட்டி வந்து இணைய டிசூடினும் கோப்பாயைச்
சேர்த லெளி தல்லவே.
பாதக ஞ்செய்தொல் புரத்தார் பதறப்
பன்னாகந் தொட்ட
மாதக லானைத் துணைக் கொள் மல்லாகத்தர் வல்லுவெட்டி
மீதம ரந்தத் தனக் காரர்
நட்பை விளைகுவரோ
ஓதிமீ சாலையாய் அப்பரந் தனனை
ஒட்டு வரே.
நச்சியால் சொல்மத வாய்ச்சியர்
நட்பொடு நாளும் வட்டக் கச்சியை யும்முலைத் தீவையும்
கண்டுங் கருதுவரோ மெச்சுவ ரோஇனிப் புத்துரை
மேதினியில் ஊரெழுவான் அச்செழு வான்வரு முன்சங்கரத்தையை
அண்டல் நன்றே.

Page 30
இலக்கியச் சரபம் -30
இப்பாடல்களின் கருத்தைப் பற்றி ஆராயாமல் ஊர்ப் பெயர்களைப் பட்டியல் இட்டிருக்கும் விதத்தைக் கண்டே உளம் மகிழலாமல்லவா.
இப்பாடல்களில் யாழ் குடாநாட்டுக்குள் இருக்கும் இருபத்தெட்டு ஊர்ப்பெயர்களும் யாழ் குடாவுக்கு வெளியே பரந்தன் , மதவாச்சி , வட்டக்கச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு ஊர்ப்பெயர்களும் ஆழமான அர்த்தங்களோடு பொருந்தி வந்துள்ளன.
இதனைப் பாடிய புலவர் வெறும் பெயர்ப்பட்டியலுக்காக இதனைப் பாடவில்லை. தனது கருத்தையும், இச்சொற்களுக் கூடாகத்தந்துள்ளார். இதிலுள்ள முதற் பாடலை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமது “இலக்கிய வழி” என்ற நூலில் பிரித்துப் பொருள் விளக்கியுள்ளார். இருப்பினும் நாம் இங்கு சொல்லின்பத்திற்காக இப்பாடல்களைப் பார்த்தோம். இவ்வூர்ப்பெயர்ச் சொற்கள் உள்ளத்தை நெகிழச் செய்வதை
ஒருவராலும் மறுக்கமுடியாதல்லவா.
கவிச்சக்கரவர்த்தி கம்பன்
அடுத்து, கம்பனின் இராமாயணத்தில் சொல்லின்பம் மிக்க பாடலொன்றைப் பார்ப்போம். கம்பராமாயணத்தில் பல பாடல்கள் சொல்லின்பம், ஒசையின்பம், கற்பனைஇன்பம் ஆகியவற்றோடு கருத்தாழமும் மிக்கவையாக விளங்குவதைக் காணலாம்.
தன் தம்பியும் இணையற்ற வீரனுமாகிய கும்பகர்ணன் யுத்தத்திலே இறந்த செய்திகேட்டு இராவணன் மிகவும் கவலைப்படுகின்றான்.
தனது பாசத்திற்குரிய தம்பி தனக்காக யுத்தத்திற்குச் சென்று இறந்து விட்டானே, கொல்லப்பட்டு விட்டானே என்ற கவலையை விட, அந்த இணையற்ற வீரன் இராமன், இலக்குவன், சேனைத் தலைவனான நீலன், சுக்கீரீவன், அங்கதன், அனுமான், சாம்பவான் ஆகிய இவர்களில் ஒருவரைத் தானும் கொல்லாமல் வீணாக இறந்து விட்டானே, என்ற ஆச்சரியந்தான் இராவணனுக்கு அதிகமாக வருகிறது. அந்த நிலையைக்
கம்பன் அருமையான பாடலாகத் தருகிறான்.
 

-31- அகளங் கர்ை தன்னைத்தான் தம்பியைத்தான்
தானைத் தலைவனைத்தான் மண்ணைத்தான் மைந்தனைத்தான்
மாருதத்தின் காதலைத்தான் பின்னைக் கரடிக்
கிறையைத்தான் பேர்மாய்த்தாய் எண்னத்தான் கேட்டிலேன்
எண்னான வாறிதுவே சொல்லின்பமும் ஒசையின்பமும் ஒருங்கேயமைந்த இப்பாடலைப் போன்றதொரு பாடலை, பிற்காலத்தில் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராஜர் என்ற புலவர் பாடியிருக்கிறார்.
தனது வறுமையைச் சொல்லித் தன்னைப் படைத்தபிரமதேவனை அவர் ஏசிப் பாடிய அப்பாடலையும் சொல்லின்பப் பாடலாக இங்கு பார்ட்போம்.
கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா அல்லைத்தான் சொல்லித்தான்
ஆரைத்தான் நோவத்தான் ஐயோஎங்கும் பல்லைத்தான் திறக்கத்தான்
பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே,
இப்பாடலின் பொருள் தெளிவானது என்பதால் இதனை விளக்காமல் கவிச்சக்கரவர்த்தியின் இன்னொரு பாடலுக்குச் செல்கிறேன்.
அனுமான் சீதையைத் தேடுவதற்காகக் கடலைத் தாண்டி இலங்கையினுள் புகுகின்றான். இலங்கைக்குள் புகுந்த அனுமான் இலங்கையின் காவற்தெய்வமான இலங்கிணி என்னும் பெயர் கொண்ட இலங்காதேவியைக் காணுகின்றான்.
இலங்கா தேவியைக் கம்பன் அறிமுகப்படுத்துகின்ற பாடலொன்று சொல்லின்பம் மிக்க பாடலாக விளங்குகின்றது. அப்பாடலைப் பார்ப்போம்.

Page 31
இலக்கியச் சரபம் -32
அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாளர் , அரவெல்லாம் அஞ்சு வணத்தின் வேகமிகுத்தாளர் , அருளில்லாளர் அஞ்சு வணத்தின் உத்தரியத்தாளர் , அலையாரும் அஞ்சு வணத்தின் முத்தொளிர்ஆரத் தணிகொண்டாளர் இப்பாடலில் அஞ்சுவணம் என்ற சொல் நான்கு அடிகளிலும் எதுகைச் சீர்களாக வந்து, வேறு வேறு பொருள் கொடுத்து நிற்கின்றது.
முதலாவது அஞ்சுவணம் என்பது ஐந்து வர்ணம் என்பதன் போலியாக வந்து, ஐந்து நிறங்களில்ஆடை அணிந்திருக்கிறாள் எனப் பொருள் தருகின்றது. இரண்டாவது அஞ்சுவணம் என்பது, அஞ்சும் உவணம் எனப்பிரிந்து பாம்புகளெல்லாம் கண்டு அச்சங்கொள்ளும் கருடனின் (உவணம்) வேகம் கொண்டவள் எனப்பொருள் தருகின்றது.
மூன்றாவது அஞ்சுவணம் என்பது அம்சுவர்ணம் என ஆகி, அழகிய பொன் (சுவர்ணம்) கொண்டு செய்த மேலாடை அணிந்தவள் எனப் பொருள் தருகின்றது.
நான்காவது அஞ்சுவணம் என்பது அம்சுவள் நத்தின் எனப்பிரிந்து , கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கிலுண்டான முத்துக்களினாற் செய்யப்பட்டு ஒளிவிளங்கும் மாலையை ஆபரணமாக அணிந்தவள் எனப் பொருள் தருகின்றது. கச்சியப்ப சிவாச்சாரியார்
கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் இதேபோல அடலையின் என்ற சொல்லை நான்கு அடிகளிலும் எதுகைச் சீர்களாகப் பயன்படுத்திப் பாடிய பாடலொன்றும் சொல்லின்பம் பயப்பதாக உள்ளது. அப்பாடலையும்
LITs (8UTLD.
அடலையின் நலத்தை வீட்டி
அரும்பெறல் ஆக்கஞ் சிந்தி அடலையின் உணர்வின் றாகும்
அவுணர்கோன் தானை முற்றும் அடலையின் நெடுவேல் அண்ணல்
அழலெழ விழித்த லோடு அடலையின் உருவாய் அண்டத் -
தொல்லுரு அழித்த மண்னோ,

-33- set 6 is 6 st இப்பாடலின் முதலடியில் முதற்சீராக வரும் அடலை என்பது யுத்தகளத்தைக் குறிக்கின்றது. அடலையின் நலத்தை வீட்டி என்பது யுத்த களத்தில் தன் உயர்வையும் இழந்து எனப் பொருள் தருகின்றது.
இரண்டாம் அடியில் முதற்சீராக வரும் அடலை என்பது அடல்+ ஐ எனப்பிரிந்து அழிக்கும் கடவுள் எனப் பொருள் தருகின்றது. எனவே அடலையின் உணர்வின் றாகும் அவுணர்கோன் என்பது தன்னை அழிக்க வந்திருக்கும் முருகப் பெருமானின் மேல் பக்தி உணர்வில்லாத அசுரர் தலைவன் எனப் பொருள்படும்.
மூன்றாவது அடலை என்பதும் அடல் + ஐ எனப் பிரிந்து அழிக்கும் கடவுள் என்றே பொருள் தருகின்றது. எனவே அடலையின் என்பது அழிக்கும் கடவுளாகிய உருத்திரமூர்த்தியைப் போல எனப் பொருள்படும்.
நான்காவது அடலை என்பது சாம்பல் எனப் பொருள் தருகிறது. எனவே இப்பாடலில் அடலை என்ற சொல் மூன்று விதமான பொருள் தந்து சொல்லின்பத்தை வழங்குகின்றது.
சூரபன்மனின் சேனைகள் முருகப் பெருமானால் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட காட்சியை, கச்சியப்பர் தனது கந்தபுராணத்து யுத்த காண்டத்தில், சூரபன்மன் வதைப்படலத்தில், இந்தச் சொல்லின்பம் மிக்க பாடல் மூலம் சொல்லியிருக்கிறார்.
சின்னத்தம்பிப் புலவர்
யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத் தம்பிப் புலவர் இயற்றிய கல்வளையந்தாதி என்ற நூல் மிகவும் அற்புதமானதொரு நூலாகும். அதிலுள்ள நூறு பாடல்களிலும் நான்கு அடிகளிலும் வரும் எதுகைச் சீர்கள் ஒரே சொல்லாகவே அமைந்திருக்கின்றன.
கல்வளை அந்தாதியிலுள்ள ஒரு பாடலையும் இங்கு பார்ப்போம். கல்வளை யாத இரும்புநெஞ் சேகைய ரோடுறவா கல்வளை யார்சுனை வாயரக் காம்பல் செங் காவியின்பக் கல்வளை யாரநிலாவீச விள்ளுங் கழனிசுற்றுங் கல்வளை யானங் குசபாச மேந்துங் கரண்புகழே
கல்வளை என்ற ஊர்ட்பெயரை அவர் அமைத்துப் பாடியுள்ள விதம் சிறப்பாகவே இருக்கின்றது. இருப்பினும் பொருள் காண்பது மிகவும் கடினமே.

Page 32
இலக்கியச் சரபம் 34
இப்பாடலைப் பொருத்தமான வகையில் பிரித்தால் சுலபமாகப் பொருள் கண்டு இன்புறலாம். கல் என்பதை இறுதியிலே கொண்டுபோய், புகழே கல் எனச் சேர்த்துப் பொருள் காண்போம்.
எனவே கல்லை விட்டு விட்டு , வளையாத இரும்பு நெஞ்சே கையரோடு உறவாகல் என்பதற்குரிய பொருளைப் பார்ப்போம். வளையாத இரும்புக்கு நிகரான மனமே, கீழ்மக்களோடு (கையர்) உறவாகாதே எனப் பொருள் விரியும்.
வளையார் சுனைவாயரக் காம்பல் செங்காவியின்பக்கல், என்பது, வள்ளைக் കെIg(ഖങ്ങണ பொருந்திய சுனையிடத்து செவ்வாம்பற்பூ , அழகிய செங்காவிமலரின் பக்கத்தில் எனப்பொருள்படும்.
வளையார நிலாவீச விள்ளும் என்பது சங்கீன்ற முத்துக்கள் மிகுந்த நிலவொளியை வீச விரியும் , எனப் பொருள் தரும்.
கழனி சுற்றும் கல்வளை யானங் குசபாச மேந்துங் கரண்புகழே கல் என்பது, வயல் சூழ்ந்த கல்வளைப் பதியிலுள்ளவரும் அங்குசம் பாசம் என்பவற்றை ஏந்திய திருக்கைகளைக் கொண்டவருமாகிய விநாயகப் பெருமானின் புகழையே கற்பாய் எனப்பொருள் தரும். சேக்கிழார் சுவாமிகளர்.
பக்திக்கவி என்றும் தெய்வமாக் கவி என்றும் போற்றப்படுகின்ற சேக்கிழார் சுவாமிகள் , தனது பெரிய புராணத்தில் பரவை என்ற சொல்லை ஏழு இடங்களில் பரவவிட்டு, சொல்லின்பச் சுவை பயக்கும் அற்புதமான பாடலொன்றைப் பாடியுள்ளார். அப்பாடலையும் பார்ப்போம்.
சுந்தர மூர்த்தி நாயனார் திருவாரூர்த் தியாகேசப் பெருமான் சந்நிதியிலே பரவையாரைக் கண்டு காதல் கொள்கிறார். அங்குள்ளோரை விசாரித்துப் பரவையார் என்ற பெயரைத் தெரிந்து கொள்கிறார். பின், பரவையாரின் நினைவாக இருந்து புலம்புகிறார்.
பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை அணிதிகழும்
மணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை ஆயினாளர்
திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை இடைப்பட்ட
எண் ஆசை எழுபரவை.
 
 

- - அகளங் கனர் சுந்தரர் பரவையாரின் ேெர அடிக்கடி உச்சரித்து மகிழ்ந்து புலம்புவதாகச் சேக்கிழார் சுவாமிகள் பாடிய இப்பாடல் அமைந்துள்ளது.
ஏழு சீர்களிலே பரவை என்ற சொல்லைப் பயன்படுத்தி, ஏழாவது பரவையை இறுதிச் சீரிலே அமைத்து எழுபரவை என்றே முடித்த சேக்கிழார் சுவாமிகளின் கவித்துவம் வியக்க வைக்கிறதல்லவா. இங்கு ஏழு பரவைகளும் ஏழு அர்த்தங்களில் வருவதை நுணுகி நோக்கி அறிந்து கொள்ளலாம்.
இப்பாடலில், முதலாவது பரவை பரவையாரின் பெயரைக் குறிக்கின்றது. இது பேர் (பெயர்) பரவை என வருகின்றது. அடுத்து வருவது பெரும் பரவை. இது பெரு+ உம்பர்+அவை எனப் பிரிந்து, பெரிய தேவர்கள் சபை எனப் பொருள் தருகின்றது.
மூன்றாவது பரவை , பரவு + ஐ எனப் பிரிகின்றது. இது வழிபடப்படும் தெய்வம் எனப் பொருள் தருகின்றது. முதல் மூன்று பரவைகள் சேர்ந்த பகுதியை மட்டும் பொருள் நோக்கின், பெயர் பரவை. பெண்மைச்சிறப்பினால், பெரிய தேவர்கள் சபையினால் விரும்பப்படும் தேவமாதர்களாலும் வழிபடப்படும் தெய்வமாவாள் எனவரும்.
நான்காவது பரவை, அரும் பரவை எனவருகின்றது. இது அரும்பர்+அவை எனப் பிரியும். முல்லை அரும்புகளின் கூட்டம் எனப்பொருள்தரும் முழுதாகப் பார்த்தால் அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை என்பது, அழகு விளங்கும் பிரகாசம் மிக்க பற்கள், முல்லை அரும்புகளின் கூட்டமாகத் திகழ்கின்றன எனலாம்.
ஐந்தாவது பரவை, சீபரவை. இது பரவைக் கூத்தாடுகின்ற இலக்குமி தேவியைக் குறிக்கும். சீர்பரவை ஆயினாள் என்பது இலக்குமி தேவியைப் போன்றிருக்கிறாள் எனப் பொருள்தரும்.
ஆறாவது பரவை, ஏர் பரவை என வருகின்றது. இது, ஏர் + பரவை எனப் பிரிந்து, அழகு பரவுதல், அதாவது அழகு பரந்து செல்லல் எனப் பொருள் தருகின்றது.
திருவுருவின் மென்சாயல் ஏர் பரவை என்பது, அழகிய உருவின் மென் சாயலாகிய அழகுபரவும் உடல் எனப்பொருள் தருகின்றது.
ஏழாவது பரவை எழு பரவை. இது ஏழுகடல்கள் எனப் பொருள்படும். இடைப்பட்ட எண் ஆசை எழுபரவை என்பது உடலழகில் அகப்பட்ட எனது ஆசையானது, ஏழு கடல்கள் போன்று பெரியது என்றும், பொங்கி எழுகின்ற கடல் போன்றது என்றும் பொருள் தரும்.

Page 33
இலக்கியச் சரபம் 36
இத்தகைய பாடல்களில், பொருள் காண்பதென்பது, பெருங்கணிதச் செயற்பாடுகள் போலவே அமைந்து விடுகின்றன.
இன்றைய வேக உலகில் இத்தகைய கவிதைகளை எழுத்தெழுத்தாகப் பிரித்துப் பொருள் கண்டு இரசிப்பது இயலாத காரியமே, இருப்பினும் தமிழின் சொற் சிலம் பப்பாடல்களுக்கு இவை உதாரணங்களாகத் திகழ்கின்றன.
இந்த வகைப் பாடல்கள் நாயக்கள் காலத்தில் மிகுதியாகவே பாடப்பட்டன. தமது கல்விப் புலமையையும், கவி புனையும் ஆற்றலையுங் காட்டுவதற்காகப் பலர் இத்தகைய பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
இவை இன்று படித்துச் சுவைப்பாரின்றிப் பயனின்றிக் கிடக்கின்றன. இந்த வகையில் இன்னொரு தனிப்பாடலையும் பார்ப்போம்.
காசினிபுக் காசிவரும் காசிவணிக் காசிறியேற் காசிததே காசினதா காசிவையா - காசிலைபோற் காசிவண்வா காசிவதும் காசிவமோங் காசிவழாக் காசிவர்தாழ் காசிவளா கா. இவ்வெண்பாப்பாடலில் பதினான்கு தடவைகள் காசி என்ற சொல் பலவகையிலும் பொருந்தி வந்துள்ளது. இப்பாடலின் பொருளில் கவலைகொள்ளாமல் இன்னொரு பாடலைப் பார்ப்போம். மாலை மாற்று
சமயகுரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் பாடிய தேவாரம் ஒன்று, மாலைமாற்று என்று அழைக்கப்படுகின்ற வடிவத்தில் பாடப்பட்டுள்ளது. நான்கு வரிகளும், குறித்த சில சொற்கள் சில எழுத்துக்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யா , மா , நீ , பூழி , கா, ணா, என்னும் ஆறு எழுத்துக்கள் மட்டுமே இப்பாடலில் வருகின்றன.
யாமா மாநீ யாமாமா யாழி காமா காணாகா காணா காமா காழியா LDILDIT UNIS. LDIILDTUIII இத்தேவாரத்தைப் பின்னாலிருந்து வாசித்தாலும் இதே தேவாரம் வருகின்றது. இத்தகைய பாடல்களைப் பார்த்துத் தமிழின் சொற்சுவையை இரசிக்க முடிகின்றது. இருப்பினும், பொருளை அறிந்து கொள்வது பெரும் கஷ்டமாகவே இருக்கின்றது.
இனி, சொல்லின்பத்திற்காக அடுத்தவகைப் பாடல்கள் சிலவற்றைப் படித்து ரசிப்போம்.

-37- அகளங் கனர் அசிலேடைகளில் சொல்லின்ைபடம்
ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தந்து சிறப்பிப்பது சிலேடையாகக் கொள்ளப்படுகின்றது. சிலவேளை ஒரு சொல்லைப் பலவகையாகப் பிரித்தும் பலவகைப் பொருளும் கொள்ளப்படுகின்றது.
பொதுவாகவே, சிலேடைக் கவிதைகள் கற்போர்க்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன என்றே சொல்லலாம். பொருள் பற்றிய ஆராய்ச்சிக்கு முன்பே சொல் படிப்பவரைக் கவர்ந்து விடுகின்றது.
கவிதைக்குப் பொருள் தான் முக்கியமானது. எனினும் சொல்லின்பமே படிப்போரைக் கவர்ந்து பொருளில் நாட்டங் கொள்ளச் செய்து விடுகின்றது. சொல்லலங்காரம் என்பது கவிதைக்கு முக்கியமானதொன்றே 6T60T6)TLD.
வஞ்சி என்ற சொல்லைப் பல சீர்களிலும் அமைத்துச் சொல்லின்பம் பெறும்படியாகப் பாடப்பட்டுள்ள பாடலொன்றைப் பார்ப்போம்.
வஞ்சியான் என்றவன்தன் பேருரைத்தான் யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியே வஞ்சியேன் வஞ்சியேண் என்றெண் றுரைத்துப்பின் வஞ்சித்தான் வஞ்சியர் கோன்
இந்த வெண்பாவில் வஞ்சி என்ற சொல் ஏழு தடவைகள் வந்துள்ளது. வஞ்சி என்பது சேரநாட்டின் தலைநகரின் பெயர். வஞ்சி என்பது வஞ்சிக் கொடி போன்ற பெண் என்றும் பொருள் தரும், வஞ்சித்தல் என்பது ஏமாற்றுதல் என்றும் பொருள் தரும்.
ஒரு தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த இப்பாடலின் பொருளைப் பார்ப்போம்.
வஞ்சியான் (சேரன்) என்று அவன் தன் பெயரைக் கூறினான். நானும் அவன் என்னை வஞ்சியான் (ஏமாற்ற மாட்டான்) என்று நம்பி சம்மதம் தெரிவித்தேன். வஞ்சியே (தோழியே) வஞ்சி (சேரநாடு) யேன் வஞ்சியேன் (ஏமாற்றமாட்டேன்) என்றென்றே சொல்லிப்பின் என்னை வஞ்சித்து விட்டான் வஞ்சியர் மன்னன் (கோன்), என்பது அதன் பொருள். இதனை நுணுகி இன்னும் ஆழமாகவும் பொருள்கண்டு சுவைக்கலாம் இது தூண்டுதல் மட்டுமே.

Page 34
இலக் கிய அச் சரபம்
-38சுந்தரக்கவிராஜர்
இதே போன்று இன்னொரு பாடல் 'மரம்’ என்ற சொல்லைப் பல தடவை பயன்படுத்திச் சுவை சேர்க்கும் பாடலாக விளங்குகின்றது.
சுந்தரக்கவிராஜர் என்பவரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படும் சுந்தரமான அப்பாடலையும் பார்ப்போம்.
மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளில் வைத்து மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது மரமது கண்ட மாதர்
மரமுடன் மரம் எடுத்தார். இப்பாடலில் மரம் என்ற சொல் பதினொரு தடவைகள் வந்துள்ளது. இங்கு முதலாவது மரம் என்பது அரசு. இது அரசனைக்குறிக்கின்றது. இரண்டாவது மரம் மா , மா என்பதற்குக் குதிரை என்றும் பொருள் உண்டு. எனவே மரமது மரத்தில் ஏறி என்பது அரசன் குதிரையில் ஏறி எனப் பொருள் தருகின்றது. மூன்றாவது மரம் வேல் , வேல் என்பது வேலமரத்தையும் குறிக்கும், வேல் ஆயுதத்தையும் குறிக்கும். எனவே மரமதைத் தோளில் வைத்து என்பது வேலாயுதத்தைத் தோளில்வைத்து எனப்பொருள்தரும்.
நான்காவது மரம் மீண்டும் அரசனைக் குறிக்கின்றது. ஐந்தாவது மரம் வேங்கை , வேங்கை என்பது வேங்கை மரத்தையும் குறிக்கும் வேங்கைப் புலியையும் குறிக்கும். எனவே மரமது மரத்தைக் கண்டு என்பது அரசன் புலியைக் கண்டு எனப் பொருள் தரும்.
ஆறாவதும் ஏழாவதும் மூன்று ஐந்து போன்றே பொருள் தரும். எனவே, மரத்தினால் மரத்தைக் குத்தி என்பது வேலினால் புலியைக் குத்தி எனப் பொருள் தரும்.
எட்டாவதாக வரும் மரம் என்பது மரங்கள் உள்ள காடு எனப் பொருள் படும். எனவே, மரமது வழியே சென்று வளமனைக்கு ஏகும் போது என்பது காட்டு வழியே சென்று வளம் பொருந்திய அரண்மனைக்குச் செல்லும்போது எனப்பொருள் தரும்.
 

-39- se-3,651 as 65 ஒன்பதாவது மரம் அரசனைக் குறிக்கின்றது. பத்தாவது மரம் ஆல், பதினோராவது மரம் அத்தி . எனவே மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார் என்பது, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி (ஆல் + அத்தி) எடுத்தார்கள் எனப் பொருள் தரும்.
அரசன் குதிரையில் ஏறி வேலாயுதத்தைத் தோளில் வைத்துச் சென்று, புலியைக் கண்டு, வேலினால் புலியைக் குத்திக் கொன்று விட்டுக் காட்டுவழியாகச் சென்று , வளம் பொருந்திய அரண்மனைக்குச் செல்லும் போது , அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்து வரவேற்றார்கள் என்பதே இதன் திரண்ட பொருள் ஆகும்.
சயங்கொண்டார்
கலிங்கத்துப் பரணி என்னும் நூல் "பரணிக்கோர் சயங்கொண்டான்' என்று போற்றப்பட்ட சயங்கொண்டாரென்னும் பெரும்புலவராற் பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒரு பாடல் காஞ்சி , கலிங்கம் என்ற சொற்களை இரு பொருள் படும்படியாக அமைத்துப் பாடப்பட்டுள்ளது.
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த கலவி மடவீர் , கழற்சென்னி காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ இப்பாடலில் காஞ்சி என்பது காஞ்சி நகரையும் , ஆபரணத்தையும் குறிக்கும். கலிங்கம் என்பது கலிங்க நாட்டையும் ஆடையையும் குறிக்கும். கணவனோடு கலவி செய்கின்ற காலத்தில் , ஆபரணங்கள் உடலோடு ஒட்டி இருக்க , ஆடைகள் குலைவுற்றுப் போகின்ற பெண்களே!, வீரக்கழலணிந்த குலோத்துங்க சோழன் (சென்னி) காஞ்சி நகரிலே இருக்க, அவனது தளபதியாகிய கருணாகரத் தொண்டைமானால் கலிங்க நாடு நிலை குலைந்து போன போர்க்களக் காட்சியைப் பாடப் போகின்றோம். உங்கள் கதவுகளைத் திறவுங்கள் எனப் பொருள் தருகின்றது இப்பாடல்.
இத்தகைய பாடல்கள் பல, சொல்லின்பம் பயக்கும் பாடல்களாகத் தமிழிலக்கியப் பரப்பிலே மலிந்து கிடக்கின்றன.
கம்பன்
கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமாயணத்தில் ஒரு பாடலின் நான்கு அடிகளில் , இரண்டு அடிகளையே நான்கு அடிகளாகவும் , பொருள் வேறுபடுமாறும் அமைத்துச் சிறப்புச் செய்திருக்கிறான்.

Page 35
இலக்கியச் சரபம்
-40பேர வாவொடு மாசுணம் பேரவே
பேர வாவொடு மாசுணம் பேரவே ஆர வாரத்தி னோடு மருவியே ஆர வாரத்தி னோடு மருவியே. இப்பாடலைப் பொருத்தமான வகையிற் பிரித்தால் பொருள் கண்டு இன்புறலாம். சொல்லின்பத்தைப் பிரித்தல் கூட்டுதல் மூலமும் பெறலாம்.
“பேரவாவொடு மாசுணம் பேர” என்பது பெரிய அவா ( ஆவல்) வொடு மாசுணம் (பாம்பு) பேர (பெயர) எனப் பிரிந்து பொருள் தருகின்றது. தொடர்ந்து "வேபேர ஆவோடு மாசுணம் பேரவே” எனப்பிரித்தெடுத்தால் வே பேர (மூங்கில் பெயர) ஆவொடு (பசுவொடு) மாசுணம் (புழுதி) பேரவே (பெயரவே) எனப் பொருள் தரும்.
“ஆரவாரத்தினோடு மருவியே” என்பது ஆரம் (முத்து) ஆரத்தினோடு (முத்தோடு) மருவியே (பொருந்தியே) எனப் பொருள் தரும். இறுதியாக “ஆரவாரத்தினோடும் அருவியே' எனப்பிரிந்து ஆரவாரம் செய்து கொண்டு (சத்தம்) ஒடும் அருவியே (ஆறு) எனப் பொருள் தரும்.
காளமேகப்புலவர்.
இத்தகைய பாடல்களைப் பாடுவதில் காளமேகப் புலவர் கரைகண்டவர். அவர் ஆறுதலை என்ற சொல்லை ஐந்து சீர்களில் பொருத்தி, பலபொருள் பயக்குமாறு பாடிய ஒரு பாடலின் சொல்லின்பத்தையும் சுவைப்போம்.
சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை ஐங்கரற்கு மாறுதலை யானதே - சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார். இப்பாடலில் "சங்கரற்கு மாறுதலை’ என்பது சிவபெருமானுக்கும் (சங்கரன்) ஆறு (கங்கை) தலையிலுண்டு எனப்பொருள்தரும். "சண்முகற்கு மாறுதலை’ என்பது சண்முகற்கும் (முருகனுக்கும்) ஆறுதலைகள் உண்டு எனப் பொருள் தரும்.
“ஐங்கரற்கு மாறுதலை யானதே’ என்பது ஐங்கரற்கு (விநாயகருக்கு) - மாறுபட்ட யானைத் தலையாக ஆகியுள்ளதே எனப் பொருள்படும்.
“சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை’ என்பது சங்கை கையில் வைத்திருக்கும் மகாவிஷ்ணுமூர்த்திக்கும் ஆறுதலை (பிரளய வெள்ளமாகிய இருப்பிடம்) எனப் பொருள் தரும்.
 

41- الاسم அகலாங் கர்ை இறுதியாகப் "பித்தா நின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை Li” என்பது பித்தா (சிவபெருமானே) உன் பாதத்தின் பெருமையைப் படித்தவர்க்கும் ஆறுதல் கிட்டும் (ஆறுதலை) என்பதனைக் காண் எனப்பொருள்தரும். அந்தகக்கவிவீரராகவ முதலியார்.
அந்தகக்கவிவீரராகவ முதலியார் என்ற ஒரு புலவர் பணியாரம் , தோசை முதலான சொற்களை வைத்துச் சொற்சுவை மிகுந்த ஒரு பாடலைப் பாடியுள்ளார். அப்பாடலைப் பார்ப்போம்.
பணியாரந் தோசையிலக் கொங்கை
தோய்ந்திடப் பார்ப்பர், பல்லி பணியாரந் தோசையிலாச் செந்து
வாய்ப்பிறப் பார்க ளெண்னோ பணியாரந் தோசைமுண் னோனுக்கிட்டேத்திப்
பழனிச் செவ்வேளர் பணியாரந் தோசைவ ராகரன்னோர்க்
கென்ன பாவமிதே. இப்பாடலில் ‘பணியாரந் தோசையிலக் கொங்கை’ என்பது, பணி ஆர் அந்தோ சையிலக் கொங்கை, எனப்பிரிந்து, ஆபரணங்கள் பொருந்திய அழகிய மலைபோலும் கொங்கை எனப் பொருள் தரும். எனவே பணியாரந் தோசையிலக் கொங்கை தோய்ந்திடப் பார்ப்பர் ‘என்பது ஆபரணங்கள் பொருந்திய அழகிய மலை போலும் கொங்கைகளைப் பொருந்தி அணைந்து சுகங்காண்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளவர் எனப் பொருள் விரியும். அதனைத் தொடர்ந்து வரும் "பணியாரந் தோசையிலாச் செந்து” என்பது பணியார் (பாம்புகளோடு பொருந்திய) அந்து ஓசை இலாச் செந்து எனப் பிரியும். எனவே பல்லி பணியாரந்தோசையிலாச் செந்து வாய்ப் பிறப்பார்கள் என்பது பல்லி , பாம்புகளோடு பொருந்திய அந்துப் பூச்சிகள் , ஓசை இல்லாத ஜீவன்களாகப் பிறப்பார்கள் எனப் பொருள்தரும்,
அடுத்து பணியாரந் தோசை முன்னோனுக்கிட்டேத்தி என்பது நேரடியாகவே பணியாரம் தோசை முதலிய பலகாரங்களைக் கடவுளுக்குப் படைத்து, எனப் பொருள் தருகின்றது.
இறுதியாக, பணியாரந் தோசைவராகார் என்பது பணியாதவர் அந்தோ சைவர் ஆகார் எனப் பொருள் தரும். அதாவது பழனிச் செவ்வேள் பணியார்

Page 36
இலக்கியச் சரபம்
-42அந்தோ சைவராகார் என்பது பழனியிலிருக்கும் செவ்வேட் பெருமானைப்
(முருகனை) பணிந்து வணங்காதவர் சைவர் ஆகார் எனப் பொருள் தருகின்றது. பணியாரந் , தோசை என்பவற்றிலும் பார்க்க இப்பாடலே சுவையுடையதாக இருக்கிறது அல்லவா. கடிகைமுத்துப்புலவர்.
கடிகைமுத்துப் புலவர் எனப்படும் பிற்காலப் புலவரொருவர் சொல்லின்பம் பயக்கும் வகையில் அற்புதமான பாடலொன்றைப் பாடியுள்ளார். ஆழமான பொருள் கொண்ட அப்பாடலைப் பொருள் விளங்காமல் படிக்கும் போது கூட, சொல்லின்பம் உள்ளத்தைக் கவருகின்றது. அப்பாடலைப் LITTÎÜGLITTLD.
உள்ள திருக்கை காணிரே
உறங்கா திருக்கை காணிரே ஒசைக் கடலைப் பொருமலையே
ஒழியேன் விரகப் பொருமலையே கள்ள றாதாங் குவளைகளே
கழலுங் கரந்தாங் குவளைகளே கரையிற் படராத் துப்பீரே
கலந்த துடலத் துப்பீரே அள்ளல் அளையுங் களிக்கரையே
அழைப்பார் மாதர் களிக்கரையே ஆறுவகுப்புக் காற்றேனே
ஆழி புடைப்புக் காற்றேனே வெள்ள மூரும் பானத்தே
விரும்பா திருந்தேன் பானத்தே வெங்க டேசு ரெட்டனையே
மேவத் தடுக்கும் எட்டனையே. வெங்கடேசு ரெட்டனை மேவத் துடிக்கும் தலைவியின் விரக வேதனையையும் அவள் கடற்கரையில் நின்று சொல்லிப் புலம்புவதையும் இப்பாடலில் பாடியிருக்கிறார் புலவர்.
“உள்ள திருக்கை” என்பது கடலில் உள்ள திருக்கை மீனைக் குறிக்கின்றது. ‘உறங்கா திருக்கை” என்பது உறங்காது இருக்கை எனப் பொருள் தருகின்றது.

-43- அகளங் கனர் பொரும்லையே என்பது முதலில் பொரும் அலையே (போர் செய்யும்அலை)எனவும் பின் பொருமல் என்றும்பொருள் தருகின்றது.
குவளைகளே - முதலில் குவளை மலர்களைக் குறித்தது. பின் கழலும் கரந்தாங்கு வளைகளே (வளையல்) எனப் பொருள் தருகின்றது.
கரையிற் படராத் துப்பீரே என்பது கரையிலே படராத பவளக் கொடிகளே (துப்பு-பவளம்) என முதலில் வந்து, பின் கலந்ததுடலத் துப்பீரே என்பது கலந்தது உடலத்துப் பீரே (பசலை) எனப்பொருள் தரும்.
அள்ளல் அளையுங் களிக்கரையே என்பது சேறு பொருந்திய கடற்கரையே என முதலில் வருகின்றது. அழைப்பார் மாதர் களிக்கரையே என்பது அழைப்பார் மாதர்கள் இக்கரையே எனப் பிரிந்து, பெண்கள் மன்மதனை அழைப்பார்கள் எனப் பொருள் தரும். இக்கு என்றால் கரும்பு கரும்புவில்லைக் கொண்ட மன்மதனையே என்பது இக்கரையே என வருகின்றது.
ஆறு வகுப்புக் காற் றேனே என்பது அறு வகுப்புக் கால் கொண்ட தேனீக்களே எனப் பொருள் தருகின்றது. (காற் றேனே. கால்த்தேனே) அடுத்தது ஆழி (கடல் ) புடைப்புக்கு ஆற்றேனே எனப் பொருள் தரும்.
வெள்ள மூரும் பானத்தே என்பது தண்ணிரில் ஊர்ந்து திரியும் வெள்ளைநிறமான நத்தைகளே (பானத்தே - பால்நத்தே) எனப் பொருள் தரும். விரும்பாதிருந்தேன் பானத்தே என்பது பாலை (பானம்) விரும்பாது இருந்தேன் எனப் பொருள் தரும்.
வெங்கேடேசு ரெட்டனை அடையத் தனது எட்டு அன்னைகள் தடுப்பதாகச் சொல்லி முடிக்கிறாள் தலைவி.
இத்தகைய பாடல்கள் புலவனின் வித்துவத்தைக் காட்டவே அதிகம் பயன்படுகின்றன. இருப்பினும் தமிழின் சொற்சிறப்பையும் இத்தகைய கவிதைகள் மூலமே காண்கின்றோம். பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்.
பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் வெங்காயம், சுக்கு , வெந்தயம், சீரகம் , சரக்கு , பெருங்காயம் முதலியவற்றை வைத்து ஒரு பாடலைட் பாடியுள்ளார். மிகவும் சொல் நயம் மிக்க அப்பாடலையும் பார்ப்போம்.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்திரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டி யாரே.

Page 37
இலக்கயெச் சரபம்
-44திருவேரகத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானைச் செட்டியாராக்கி, மங்காத சீர் அகத்தைத் தந்தால் இப்பெரும் காயம் (உடம்பு) தேடேன் எனப் புலவர் வேண்டுகிறார்.
கொடிய இவ்வுடம்பு (வெங்காயம்) சுக்குப் போல் உலர்ந்து வற்றிப் போய்விட்டால், மிகுந்த தவத்தினால் (வெந்தயம்) ஆகப் போவதென்ன. இங்கே யார்தான் இச்சரக்கை (உடம்பை) நெடுங்காலம் சுமந்திருப்பார் எனக் கூறுகிறார் புலவர்.
காளமேகப் புலவர்.
அடுத்து, காளமேகப் புலவர் பாடிய, சொற்சுவை மிகுந்த சிலேடைப் பாடலாக அமைந்த ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடல் நிந்தாஸ் துதி என்ற வகையில் அமைந்துள்ளது.
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர் ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் - கேட்டிலையோ குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாளர் கட்டிமணிச் சிற்றிடைச்சி காண். இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், மாடுகளின் தலைவனின் தங்கையாகிய மணிகள் பொருந்திய ஆபரணங்கள் அணிந்த சிறிய இடைச்சியானவள், மதுரையை விட்டு வந்து தில்லை நகரிலே இருக்கும் ஆடுகளின் தலைவனுக்கு மனைவி ஆகினாள். குட்டிகளை மறிப்பதற்காக ஒரு கோட்டானைப் பெற்றாள் எனப் பொருள் வரும்.
ஆனால் இதன் பொருளை ஆழமாக நோக்கினால், மாட்டுக்கோன் என்பது மாடுகளை மேய்த்த தலைவனாகிய கிருஷ்ணபகவானைக் குறிக்கும். கட்டி மணிச் சிற்றிடைச்சி என்பது மேகலை அணிந்த சிறிய இடையைக் கொண்டவள் எனப் பொருள் தரும்.
ஆட்டுக்கோன் என்பது ஆடல் அரசன் , அதாவது நடராஜன் ஆகிய சிவபெருமானைக் குறிக்கும். குட்டி மறிக்க என்பது குட்டிக் கும்பிட எனப் பொருள் தரும். ஒரு கோட்டானை என்பது ஒரு கொம்பு (கோடு) யானை எனப் பிள்ளையாரைக் குறிக்கும்.
எனவே இதன் பொருள் கிருஷ்ணபகவானின் (மகாவிஷ்ணு) தங்கையாகிய அழகிய மேகலாபரணம் அணிந்த சிறிய இடையைக் கொண்டமீனாட்சியம்மையானவள், தனது இருப்பிடமாகிய மதுரையை விட்டுத்,

-45- அகளங் கனர்
தில்லைநகர் வந்து, அங்குள்ள நடராஜப் பெருமானைத் திருமணஞ் செய்து அவருக்கு மனைவியாகினாள். நாங்கள் குட்டிக் கும்பிட ஒற்றைக் கொம்பு (தந்தம்) கொண்ட பிள்ளையாரையும் பெற்றெடுத்தாள் என விரியும்,
வெறும் மாட்டுக்கோன் , ஆட்டுக்கோன் , கோட்டான், இடைச்சி எனப் பொருள் கொள்ளும் போது இழிவாக நிந்தித்தல் போலப் பொருள் தரும் உண்மைப் பொருளைக் காணும் போது துதிப்பது போல ஆகும்.
அசித்தர்கள்.
இத்தகைய பாடல்களும் சொல்லின்பம் தருபவையாகவும் , பொருள் பொதிந்தவையாகவும் காணப்படுகின்றன. இந்த மரபிலே சித்தர்கள் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அவற்றில் இரு பாடல்களைப் பார்த்துத் தொடர்வோம்.
தாவாரம் இல்லை
தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி
மாங்காய்ப்பால் உண்டு
மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி இவ்வகைப் பாடல்களைத் தொடர்ந்து, இன்னொரு வகையான சொற்சுவை மிகுந்த பாடல்களைப் பார்ப்போம்.
வருக்கப் பாடல்கள். t
புலவர்கள் செய்யுள் அமைதியுடன், வித்தாரமாகப் பாடிய சில பாடல்கள் சொல்லின்பம் பயப்பதாக விளங்குகின்றன. காளமேகப் புலவரின் சில பாடல்கள் ஒரு எழுத்து வர்க்கத்தைக் கொண்டே அமைக்கப்பட்டதாக விளங்கி சொல்லின்பத்தையும் , பொருளின்பத்தையும் , ஒசையின்பத்தையும் ஒருங்கே தருகின்றன.
அவரது 'க' வரியிலுள்ள எழுத்துக்களை மட்டும் கொண்டமைந்த
ககர வருக்கப்பாடல் ஒன்றை முதலில் பார்ப்போம்.

Page 38
இலக்கிய அச் சரபம் -46
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா, இப்பாடலில் "ககரவருக்க எழுத்துக்கள்மட்டுமேவந்துள்ளன. இதனைப் பின்வருமாறு பிரித்துப் பொருள் காண்போம்.
காக்கைக்கு ஆகா கூகை, கூகைக்கு ஆகா காக்கை, காக்கைக்கு கூகை (ஊமத்தங் கூசை ) கூகைக்குக் காக்கை பகை, காகத்திற்குப் பகலிலே கண் தெரியும், கூ) , குப் பகலிலே கண் தெரியாது. கூகைக்குப் பகலிலே கண் தெரியாது என்பதை அறிந்து கொண்ட காக்கை, கூகையை வெல்லப் பகற் பொழுதிற் சென்று கூகையைக் கொத்தித் துன்புறுத்தி விரட்டும்.
காக்கைக்கு இரவில் கண் தெரியாது என்பதை அறிந்து கொண்ட கூகை , தனக்கு இரவில் கண்தெரியும் என்பதால் இரவில் சென்று காக்கைகளைத் துன்புறுத்தி வெல்லும்,
இவ்விடயத்தைச் சொல்லி வள்ளுவரும் தனது குறளில், காலம் அறிந்து கருமம் ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாடியுள்ளார்.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது, பகையை வெல்ல விரும்பும் வேந்தர்க்கு அதற்குரிய காலம் வேண்டும் என்று கூற வந்த வள்ளுவர் பகலில் வெல்லும் கூகையை காக்கை என உதாரணமும் கூறி விளக்கினார்.
காளமேகப் புலவரும் இக்கருத்தைச் சொல்லிக் கோக்கு கூ காக்கைக்குக் கொக் கொக்க என்றார். கோக்கு (அரசனுக்கு) கூ (பூமி) காக்கைக்கு (காப்பதற்கு) கொக்கைப் போல தருணம் வரும்வரை காத்திருந்து தவறாது வெல்ல வேண்டும் என்றார்.
இக்கருத்தையும் வள்ளுவப் பெருந்தகை தனது குறளிலே அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து, மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து வள்ளுவர், மன்னர்கள் பகையை வெல்லக் கடைப்பிடிக்க வேண்டிய வழி வகைகளைக் கூறியதை காளமேகப்புலவரும் தமது 'க'கர வருக்கப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

-47- அகளங் கனர் கைக் கைக்கு - பகையை எதிர்த்துக், காக்கைக்கு காப்பாற்றுவதற்கு கைக்கு ஐக்கு ஆகா - காலமற்ற தருணமாயின், பெரும் வல்லமையுள்ள அரசனாயினும் முடியாது போகும்.
இவ்வளவு பொருள் கொண்ட பாடலை "ககர வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பாடிய காளமேகப் புலவர், தகர வருக்கப் பாடல்களும் பாடியுள்ளார். சொற்சுவை மிக்க அவ்வகைப் பாடல்களையும் காண்போம்.
தத்தித்தா துதுதி தாதுதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா துர்துதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? தத்தித் தாது ஊதுதி - தத்தித் தத்தித் தாவிப் பறந்து சென்று பூந்தாதுகளை (மகரந்தப் பொடிகள்) உண்ணுகின்றாய். தாது ஊதித் தத்துதி - அதன் பின்னர் அத்தாதினை விட்டு விட்டு வேறு எங்கோ பாய்கின்றாய். துத்தி துதைதி - துதி என்று ரீங்காரமிட்டு பூவினை நெருங்குகின்றாய். துதைந்து அத்தாது ஊதுதி - பின்னர் அப்பூவினையடைந்து அதனிடம் உள்ள பூந்தாதினையும் உண்ணுகிறாய். தித்தித்த தித்தித்த தாதெது - மிகவும் இனிமை மிக்க பூ எது , தித்தித்தது எத்தாதோ - இனிப்புடையது எதனுடைய மகரந்தமோ , தித்தித்த தாது? - இவற்றில் அழகிய இதழ் எதனுடையது. என வண்டை நோக்கிக் கேட்பதாகப் பாடிய பாடலே இது.
இதேபோன்ற இன்னொரு தகர வருக்கப் பாடலையும் சொல்லின்பத்துக்காகப் பார்ப்போம்.
தாதிதுர் தோதீது தத்தைது தோதாது துாதிது தொத்தித்த துரததே - தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது தித்தித்த தோதித் திதி, தாதி துதோ தீது - அடிமைப் பெண்கள் சென்று உரைக்கும் தூதோ தீயது. பயன்படாதது. (தாதி - அடிமை). தத்தை துர்து ஒதாது - கிளியோ சென்று தூதினைச் சொல்ல மாட்டாது. துதி துர்து ஒத்தித்த துரததே.
தோழியின் துர்தானது நாளைக் கடத்திக் கொண்டே செல்லும் தூதாயிருக்கும் தாதொத்த துத்தி தத்தாதே - மகரந்தப் பொடிகளை ஒத்த

Page 39
இலக்கியச் சரபம்
-48தேமல் (பசலை) உடலில் பரவாமல் இருக்கும் பொருட்டு துதித்துத் தே
தொத்திது - கடவுளை(தே) வழிபட்டுத் தொடர்வதும் பயனற்றதாகும். அதனால் தித்தித்தது ஒதித் திதி - தித்திப்பான எனது தலைவனின் பெயரைச் சொல்லிச் சொல்லி இருப்பேனாகுக.
இத்தகைய 'த'கர வருக்கப் பாடலொன்று அருணகிரிநாதரால் கந்தரந்தாதி என்னும் நூலிலும் பாடப்பட்டுள்ளது.
வில் லிபுத் துTராழ்வாரோடு போட்டியிட்டுப் பாடிய அருணகிரிநாதர் , வில்லிபுத்துராழ்வாரால் பொருள் கூறமுடியாத படி பாடியதாகச் சொல்லப்படும் தகர வர்க்கப் பாடலைப் பொருளுக்காக அன்றிச் சொல்லின்பத்துக்காகப் பார்ப்போம்.
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி திதி திதிதுதி தீதொத்ததே. இவ்வகையான பாடல்களில் சொல்லின்பமும் பொருளின்பமும் அனுபவித்த நாங்கள் , இவற்றைத் தொடர்ந்து இன்னொருவகையான சொல்லின்பப் பாடல்களைப் பார்ப்போம்.
சொல்லடுக்கு.
ஒரே சொல் தனித்தோ வேறு சொற்களுடன் சேர்ந்தோ பலதடவைகள் ஒரு பாடலில் வரும் போது, அப்பாடலிலே அச்சொல் தனி இன்பத்தையே தந்து விடுகின்றது. அச்சொல்லால் கிடைக்கும் ஒசையின்பமும் அனுபவித்தற்குரியதாகிவிடுகின்றது.
இத்தகைய பாடல்கள் கற்பனைச் செறிவும் கருத்தாழமும் மிக்க பாடல்களாக அமைந்து விட்டால் அப்பாடல்கள் முழுமையான சிறப்புக் கொண்ட அற்புதமான பாடல்களாக விளங்கிவிடுகின்றன.
கம்பனின் கைவண்ணத்தில் மிளிர்ந்த ஒரு பாடலை இவ்வகைப் பாடல்களுக்காக முதலில் பார்ப்போம்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனியிந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவ துண்டோ

-49- அகளங் கனர் மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ணலே உண் கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன் இராமனின் பாததுாளிபட்டுக் கல்லாய்க் கிடந்த அகலிகை சாபவிமோசனமடைந்து பெண்ணாக எழுந்தபின் இராமனைப்புகழ்ந்து விசுவாமித்திர முனிவர் சொல்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இராமனின் கைவண்ணம் தாடகையைக் கொன்றது. கால்வண்ணம் அகலிகையின் சாபத்தை நீக்கியது. இப்பாடலில் கம்பனின் கைவண்ணம் எட்டு இடங்களில் வண்ணம் என்ற சொல்லை மிக அழகாகப் பயன்படுத்திக் காட்டியதாகும்.
கம்பன் வண்ணம் என்றசொல்லைவைத்துச் சொல்லின்பம் தந்தபாடலைத் தொடர்ந்து ‘பா’என்ற எழுத்தைப் பலவகையிலும்
சொற்களோடுபொருத்திப்பாடப்பட்டதனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா
தாழிசைப்பா கொச்சகப்பா தனிப்பாவுக்கும் விந்தைப்பா வாகியகி ரந்தப் பாவும்
வெல்லப்பா வதுபோல விகடப்பாவும் எந்தப்பா வுரைத்திடினும் ஒருபே றில்லா
ஏதப்பா விக்குநின திணைப்பாதத்தைக் கந்தப்பா முருகப்பா GLIIIf வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப்பாவே, ‘பா’ என்ற எழுத்து, தனித்துப் பாடல்ைக் குறிக்கும் சொல்லாகவும், வேறு சொற்களுடன் சேர்ந்து வேறு பொருளும் தந்து இப்பாடலில் சொல்லின்பத்தை வழங்குகின்றது.
காளிமுத்துப் புலவர் காளிமுத்துப் புலவர் என்ற புலவர் பாடிய ஒரு பாடலில் சொல்லின்பத்தை அடுத்துப் பார்ப்போம்.

Page 40
இலக்கியச் சரபம் 50
போதத்தை மேவு மயிலைக் குழந்தைக்குப்
போர் மதண்செய் ஏதத்தை யுங் குயி னாதத்தையும்
தனக் கிண்ணத்தினால் மோகத்தை யுந் துயி லாதத்தையும்
மயன் மூட்டு தென்றல் வாதத்தை யுந் தரி யாதத்தையுஞ்
சொல்லி வாதத்தையே, நமச்சிவாயப்புலவர்
தத்தையைத் தூதுவிட்ட அப்பாடலின் சொல்லின்பத்தைத் தொடர்ந்து, நமச்சிவாயப் புலவர் பாடிய பாடலொன்றைப் பார்ப்போம்.
மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர
மன்னன் வெற்பில் பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்
படை வேற்பகழி அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கடல்
அஞ்சு மஞ்சும் நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ உனது
நயனங் களே, அஞ்சு என்ற சொல் பலவகையிலும் விரவி வந்து இப்பாடலில் சொல்லின்பத்தைக் கொடுத்திருக்கின்றது. ததிருஞான சம்பந்தர்.
இந்த வகையில் ஒரெழுத்து பலவகையிலும் சொற்களோடு சேர்ந்து சொல்லின்பம் கொடுக்கின்ற சில பாடல்களையும் பார்ப்போம். திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகமொன்றிலுள்ள ஒரு தேவாரத்தைப் பார்ப்போம்.
அடுத்தானை உரித்தானை
அருச்சுனர்க்குப் штатцу, Li, கொடுத்தானைக் குலவரையே
சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரியச்
சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை
எண்மனத்தே வைத்தேனே,

-51- அகளங் கர்ை வரதடண்டிதர்
இதே போன்ற சொல்லின்பம் தரும் சுவைமிக்க பாடலொன்றை இலங்கைக் கவிஞரான வரதராச கவிராஜர் என்று அழைக்கப்பட்ட வரதபண்டிதர் தனது சிவராத்திரி புராணத்தின் காப்புப் பாடலாகப் பாடியுள்ளார். சுவை மிகுந்த அப்பாடலைப் பார்ப்போம்.
ஓங்குமொரு மருப்பானை உயிர்க்குயிரா யிருப்பானை
உரக வேந்தன் தாங்குநெடு நிலத்தானை முகத்தானை வதைத்தானைச்
சயில மானைப்
பாங்குவைத்து மழுத்தானை பரித்தான்தந் தளித்தானைப்
பசும்பொற் தோட்டுப் பூங்கமல பதத்தானைப் பொருவிலைந்து கரத்தானைப்
போற்றல் செய்வாம். பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்.
வரத பண்டிதரின் சிவராத்திரி புராணக் காப்புப் பாடலைத் தொடர்ந்து பலபட்டடைச் சொக்க நாதப்புலவர் பாடிய பாடலொன்றில் சொற்கள் அடுக்கி வந்து சொல்லின்பம் தருவதைக் காண்போம்.
பண்டனைப் பண்டனை யோதுபெம்
மானைப் பனிவரைக்கோ தண்டனைத் தண்டனை செய்யுமுத்
தண்டனைத் தண்டனைமூ தண்டனை யண்டர் தொழுதிடு
மாற்பே றமர்ந்தமணிக் கண்டனைக் கண்டனை யாயினெஞ்
சேமுத்தி கண்டனையே இதே புலவர் பாடிய இன்னொரு பாடலும் இதே போன்று
சொல்லின்பம் பயக்கும் பாடலாக விளங்குகின்றது. அப்பாடலையும் பார்ப்போம்.

Page 41
இலக்கியச் சரபம்
-52முன்னானை கூப்பிட ஓடிவந்தானை
முளரி மலர்ப் பொன்னானை ஏறி இருப்பானைப்
பூழியன் கைக்கரும்பைத் திண்னானை என்று கல்லானைக்
கிட்டானைத் திருமதுரை மன்னானை வீதி யிலேறி
வந்தானை வணங்குதுமே, மேலே காட்டப்பட்ட பாடல்களில் ‘னை’ என்ற எழுத்து யானையாகவும் வேறுவிதமாகவும் பலவகையில் பொருந்தி வந்து சொல்லின்பம் கொடுத்ததைப் பார்த்தோம்.
அபிராடமிட்பட்டர் o
அபிராமிப்பட்டர் பாடிய அபிராமி அந்தாதியிலே காணப்படும் ஒரு சுவையான சொல்லின்பப் பாடலையும் இங்கு காண்போம்.
96.66 ஒல்குசெம்பட் டுடையாளை
ஒளிர் மதிச்செஞ்
F66)6 வஞ்சகநெஞ் சடையாளைத்
தயங்கு நன்னுல்
இடையாளை எங்கள்பெம்மா னிடையாளை
இங்கெண்னை இனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம்
பார்த்தி டுமே.
அபிராமிப்பட்டர் பாடிய அபிராமி அந்தாதிப் பாடலைத் தொடர்ந்து அழகிய இளம் பெண்ணை வர்ணித்துப் பாடப்பட்ட ஒரு பாடலையும் பார்ப்போம்.
அம்பள வெவ்வள வவ்வளவேவிழி, கோவைச் செம்பழ மெவ்வள வவ்வளவேஇதழ், வஞ்சிக் கொம்பள வெவ்வள வவ்வளவேஇடை, எலுமிச் சம்பழ மெல்வள வவ்வளவே நிறம், இத்தகைய பாடல்கள் கருத்தைப் பற்றிய கவலை யில்லாமலே
சொல்லின்பத்துக்காகப் படிக்கக் கூடிய பாடல்களாகத் திகழ்கின்றன.

-53- அகளங் கர்ை கணிதப் பாடல்களர்
அடுத்து, இன்னொரு வகையான பாடல்களைப் பார்ப்போம். சொல்லின்பமும் பொருளின்பமும் தரும் சுவையான பாடல்கள் அவை,
காளமேகப் புலவர் அரை , கால் , முக்கால் முதலிய ஒன்றிலும் குறைந்த எண்களைப் பாடலில் புகுத்தி அவற்றுக்கு வேறு பொருள் வைத்துப் பாடிய பாடலொன்றை முதலில் பார்ப்போம்.
முக்காலுக் கேகாமுண் முன்னரையில் வீழாமுண் அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுண் - விக்கி இருமாமுனி மாகாணிக் கேகாமுண் கச்சி ஒருமாவின் கீழரையின் றோது.
(9Q`IL JITL6Ü) 3 , 1, 1, 1, 1, 1, 1, 1,
4. 2 4 & 10 16 20 40
என்ற பின்ன எண்களுக்கான தமிழ்ச் சொற்கள் பொருந்தியதாக
இருந்த போதும் வேறு ஆழமான பொருளையும் கொடுக்கின்றது.
முக்காலுக் கேகாமுண் என்பது மூன்றாவது காலாகிய தடியூன்றி நடக்கும் வயோதிபப் பருவத்தை அடையுமுன் எனப் பொருள் தரும். முன்னரையில் வீழா முன் என்பது அதற்கு முன் நரை தோன்றும் பருவத்தே இறந்து போகாமல் எனப் பொருள் தரும்.
அக் காலரைக் கால்கண்டு அஞ்சாமுண் என இரண்டாவது அடி பிரிபடும். அந்தக் காலத்து, உயிர் கவர வரும் காலதூதர்களைக் கண்டு கால்கள் நடுங்குவதற்கு முன்பாக, எனப் பொருள் தரும்.
விக்கி இருமத் தொடங்குவதற்கு முன்பாக மாகாணி (சுடுகாடு) க்குச் செல்லமுன் கச்சி (காஞ்சி) ஒரு மாவின் கீழரை இன்று ஒது. காஞ்சிப் பதியிலே உள்ள ஒரு மாமரத்தின் கீழ் வீற்றிருக்கும் ஏகாம்பர நாதரை வழிபடு என்பது பொருள்.
இப்பாடலில் முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா என்ற பழைய தமிழ்ப் பின்னப் பெயர்கள் பொருந்தி வந்து வேறு பொருள் கொடுத்துச் சுவை பயக்கின்றது.
இதே போன்று, பன்னிரண்டு இராசி வீடுகளில், நான்கு இராசிகளை கணித முறையாகப் பாடலில் அமைத் து அகத் தரினைப் பாடலாகப்பாடியிருக்கிறார் காளமேகப் புலவர்.

Page 42
இலக்கியச் சரபம்
-54தலைவியை அணைந்த தலைவன் பிரிந்து சென்று விட்டான். தலைவியோ விரகதாபத்தில் துடிக்கிறாள். தலைவன் வருவதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையை இப்பாடல் புலப்படுத்துகின்றது.
முந்நாண்கில் ஒன்றுடையான் முந்நாண்கில் ஒன்றெடுத்து முந்நாண்கில் ஒன்றின் மேல் மோதினான் - முந்நாண்கில் ஒன்றரிந்தால் ஆகுமோ ஒஒ மடமயிலே அன்றணைந்தான் வாராவிட் டால்,
இந்த வெண்பாவில் முந்நான்கு என்பது பன்னிரண்டு. பன்னிரண்டு இராசிகளாக இப்பாடலில் வருகின்றது. முந்நான்கில் ஒன்று என்பது பன்னிரு இராசிகளில் ஒன்றான மகரம். மகரம் மீனைக் குறிக்கின்றது. எனவே முந்நான்கில் ஒன்றுடையான் என்பது மீனைக் கொடியாகக் கொண்ட மன்மதன் எனப் பொருள் தருகின்றது.
முந்நான்கில் ஒன்றெடுத்து என்பது பன்னிரு இராசிகளில் ஒன்றான தனுவை(வில்) எடுத்து எனப் பொருள் தரும். முந்நான்கில் ஒன்றின் மேல் மோதினான் என்பது பன்னிரு இராசிகளில் ஒன்றான கண்னி மேல் மலரம்புகளைச் செலுத்தினான் எனப் பொருள் தரும்.
அன்று சேர்ந்திருந்து விட்டுப் பிரிந்து சென்றவன் வராது விட்டால் அவனை வரச் செய்வதற்காக முந்நான்கில் ஒன்றரிந்தால் ஆகுமோ, அதாவது மேடததை (ஆட்டை) அறுத்துப் பலி கொடுத்தால் சரிப்படுமோ என்பது இதன் பொருள்.
மகரம் , தனுசு , மேடம் , கண்ணி ஆகிய இராசிகளை வைத்து அகத்திணைப் பாடல் பாடிய காளமேகப்புலவரைப் பின்பற்றி இன்னொரு புலவரும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
அவர் இராசி , கிழமை , நட்சத்திரம் , வருடம் முதலியவற்றின் பெயர்களைக் கணித முறையாக வகுத்துப் பாடிப் பலரின் நெஞ்சங்களையும் கவர்ந்துள்ளார். அப்பாடல் இது.
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன் இருநான்கு மூன்றுடனே ஒன்றுஞ் சொல்லாய்
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தா யாயின்

-55- அகளங் கனர் பெருநான்கும் அறுநாண்கும் பெறுவாய் பெண்ணே
பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே மானே, இப்பாடலில் ஒரு நான்கும் ஈரரையும் ஒன்றும் சேர்ந்தால் ஆறு. ஆறாவது இராசி கன்னி.
கண்ணியே கேளாய் என்பது முதல் வரியின் பொருள் ஐயரையும் அரையும் மூன்று. மூன்றாவது கிழமை செவ்வாய், எனவே செவ்வாய் கேட்டேன் என்பது இரண்டாம் வரியின் பொருள்.
இருநான்கு மூன்றுடனே ஒன்று பன்னிரண்டு. பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்தரம். எனவே மூன்றாம் வரியின் பொருள் உத்தரம் சொல்ல மாட்டாயா எனவரும். (உத்தரம் - பதில்)
பெருநான்கும் அறுநான்கும் இருபத்தெட்டு. இருபத் தெட்டாவது வருடத்தின் பெயர் ஜெய வருடம், ஜெய என்றால் வெற்றி. எனவே நான் கேட்டபடி செவ்வாயை இதழை) தருவாயாயின் வெற்றி பெறுவாய் என்பது நான்காம் ஐந்தாம் வரிகளின் பொருள்.
நானர் கும் பத்தும் ஒரு பதினைந்து இருபத் தொன் பது. இருபத்தொன்பதாவது வருடம் மன்மத வருடம். எனவே வேறு வார்த்தை சொல்ல வேண்டாம் மன்மதனாலே நான்படும் துன்பம் சகிக்கமுடியாதிருக்கின்றது என்பது இறுதி மூன்று வரிகளினதும் பொருளாகும்.
கணினியே உன் செவ்வாய் முத்தம் கேட்டேன். உத்தரம் சொல்கிறாயில்லை. நான் கேட்டதைக் கொடுத்தால் ஜெயம் பெறுவாய், வேறு வார்த்தை சொல்ல வேண்டாம். மன்மதனால் நானடையும் துன்பம் சகிக்கமுடியாதிருக்கின்றது என்பது இதன் திரண்ட பொருள்.
இங்கு செவ்வாய் கேட்டேன் என்பது சம்மதத்தைக் கேட்டேன் எனவும் வரும். திரிசொற் பாடல்.
இனி, இன்னொரு வகையான பாடலைப் பார்ப்போம் . தமிழிலக்கணத்தில் திரிசொற்கள் என்று ஒருவகையுண்டு இவை கவிதைகளுக்கே உரிமை பூண்ட சொற்கள் என்பர் தமிழறிஞர்.
ஒரு சொல் பல பொருள் கொண்டதாகவும் , ஒரு பொருள் பல சொற்களில் வருவதாகவும் உள்ள சொற்கள் திரிசொற்கள் என்பர் தொல்காப்பியர்.

Page 43
இலக்கியச் சரபம்
-56இதுவரையில் நாம் பார்த்த பாடல்களில் ஒரு சொல் பல பொருள் தந்த வகைகள் தான் அதிகம். இப்போது ஒரு பொருளுக்கு பல சொற்கள் வைத்துப் பாடப்பட்ட பாடலொன்றைப் பார்ப்போம்.
ஒரு புலவன் இராமனைப் போன்ற சிறந்த மன்னனொருவனைப் புகழ்ந்து பாடி யானை ஒன்றைப் பரிசாகப்பெற்று வந்தான்.
வீட்டிற்கு வந்த போது அவனது மனைவி “என்ன பரிசு பெற்றாய்” எனக் கேட்க அவன் யானைக்குரிய வேறு சொற்களைச் சொல்ல அவள் அச்சொற்களுக்கு வேறு பொருள் கண்டு இறுதியில் ஒன்றும் விளங்காமல் கலங்கினாளாம். அதை அப்புலவன் அருமையாகப் பாடுகிறான்.
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
எண்கொணர்ந்தாய் பாணாநீ என்றாளர்பாணி வம்பதாங் களபம் என்றேன் பூசுமென்றாளர்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோமென்றாளர் பம்புசீர் வேழம் என்றேன் திண்னுமென்றாளர்
பகடென்றேன் உழுமென்றாளர் பழனந் தன்னைக் கம்பமா என்றேன் நற்களியா மென்றாளர்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே. யானைக்கு ஒத்த சொல்லாகிய களபம் என்ற சொல்லைப் பாணன் சொல்ல , அவன் மனைவி களபம் என்பதன் ஒத்த சொல்லாகிய சந்தனத்தை நினைத்து விட்டாள்.
அதனால் வம்பதாங் களபம் எனப் புதிய யானை என்ற பொருள் தரும் சொற்றொடருக்குப் புதிய சந்தனம் என அவள் பொருள் கொண்டு நீரே பூசிக் கொள்ளும் என்றாள் கோபமாக,
பின் அவன் மாதங்கம் என்று யானைக்குரிய இன்னொரு சொல்லைச் சொல்ல, மா + தங்கம் எனப் பொருள் கொண்டு யாம் வாழ்ந்தோமென்று மகிழ்ந்தாள்.
அடுத்து அவன் பெருத்த அழகிய யானை என்ற பொருளில் பம்பு சீர் வேழம், (யானை) என்று சொல்ல அவள் கரும்பு எனப் பொருள் கொண்டு நீரே தின்னும் எனக்கோபித்தாள்.
பின் அவன பகடு (யானை) என்று சொல்ல, அவள் எருத்து மாடு என்று பொருள் கொண்டு வயலை உழும்படி கூறினாள்.

-57- அகளங் கனர் அதன் பின் கம்பமா என்று சொல்ல, அவள் கம்பு மா (கம்புப் பயிர்) எனப் பொருள் கொண்டு நல்ல களிக்கு உதவுமென்று களி கொண்டாள்.
இறுதியாக அவன், கைம்மா என்று கூற அவளுக்கு ஒரு பொருளும் விளங்காததாற் கலங்கினாள் என்கிறார் புலவர்.
களபம் , மாதங்கம் , வேழம் , பகடு , கம்பமா , கைம்மா முதலிய சொற்களோடு கரி , குஞ்சரம் , இபம் முதலாகப் பல சொற்கள் யானையைக் குறிக்கின்றன.
இப்பாடல் சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த அற்புதமான
LJTL6) 96)6)6)IT.
ஏகபாதம்.
இனி, இறுதியாகத் திருஞான சம்பந்தர் பாடிய ஏகபாதம் என்ற வகையைச் சேர்ந்த பாடலையும் பார்ப்போம்.
மாலை மாற்று என்ற வகையில் முன்னிருந்து இடம் வலமாக வாசித்தாலும் பின்னிருந்து வலம் இடமாக கீழ்மேலாக வாசித்தாலும் ஒரே பாடலாக அமைவது மாலை மாற்று. ஏகபாதம் என்பது ஒரு அடியே நான்கு அடிகளாகவும் வரும் வகையாகும்.
திருஞானசம்பந்தர் பிரம புரத்து இறைவனைக் குறித்துப் பாடிய பன்னிரண்டு பாடல்களும் ஏகபாதமாகவே அமைந்துள்ளன.
பிரம புரத்துறை பெம்மாண் எம்மாண் பிரம புரத்துறை பெம்மாண் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் அடிகள் ஒன்றாக இருந்தாலும், பொருளில் மாறுபாடு உள்ள இந்த வகைப் பாடல்களும் தமிழில் காணப்படுகின்றன.
இவைகள் மட்டுமன்றி, யமகம் என்னும் சொல்லணியிலும் நீரோட்டகம் என்னும் வகையிலும் நாகபந்தம் , அட்டபந்தம், சித்திரம் முதலான பல வகைகளிலும் பலரும் பாடிய பாடல்கள் நிறையவே தமிழில் உண்டு.
கந்த புராணத்தை 5665 வெண்பாக்களில் பாடிய வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை இதழ் குவியாமல் ஒலிக்கும் எழுத்துக்களை மட்டுப் கொண்டு (ம,ப,வ, வராமல்) ஓர் அந்தாதியும் பாடியுள்ளார்.

Page 44
இலக்கிய அச் சரபம்
-58
சிவப் பிரகாச சுவாமிகளும் இவ்வகையில் பாடல் பாடியுள்ளதாக டாக்டர் மு. வரதராசன் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவப் பெருந்தகை பாடிய ஒரு திருக்குறளும் வாயிதழ்கள் முட்டாமல் உச்சரிக்கப்படத்தக்க வகையில் அமைந்துள்ளதைப் பலரும் அவதானித்திருக்கலாம்.
யாதனின் யாதனின் நீங்கியாண் நோதல்
அதனின் அதனின் இலண்.
என்பது அத்திருக்குறள். திருக்குறளில் கூட இத்தகைய பாடல்கள் இருப்பது ஆச்சரியந்தான்.
சொல்லின்பம் பல வகையிலும் இப்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றைப் படித்து இன்புறுவது தமிழரின் கடனாகும்.
ck 米 米 ماله

கற்பன்ை இன்பம்
“எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்” என்பது பழமொழி. சிரசிலே இருக்கும் உறுப்புக்களிலே கண்ணே சிறந்த உறுப்பு என்பார்கள் அறிஞர்கள். “கண்ணிற் சிறந்த உறுப்பில்லை” என்பது பொதுவான வழக்கு நாம் எமது கண்களால் எத்தனையோ காட்சிகளைக் காணுகின்றோம். ஆனால் அக்காட்சிகள் எல்லாம் மனத்திலே அழியாத நிலையான இடத்தைப் பிடித்து விடுவதில்லை. சில காட்சிகள் மட்டுமே நெஞ்சத்தின் ஆழத்தில் அழியாத வகையில் வேரூன்றி நிலைத்து விடுகின்றன.
எம் நெஞ்சத்தில் மட்டும் அக்காட்சிகள் வேரூன்றி நிலைத் திருப்பதனால் , வேறு யாருக்கும் எந்த விதமான பயனும் விளையப் போவதில்லை.
ஆனால் உயர்ந்த, சிறந்த புலவர்கள், தாம் காணுகின்ற காட்சிகளைத் தம் உள்ளத்தில் மட்டுமன்றி , அக்காட்சிகளைக் காணாதவர்களின் உள்ளங்களிலேயும் பதித்து விடுகின்றனர். அதற்குப்
புலவர்களுக்கு உறுதுணையாக அமைவது, அவர்களது கற்பனைச் சிறப்பேயாகும்.
தான் கண்ட காட்சியிலேயிருந்து, தான் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்குக் கவிஞன் பயன்படுத்துகின்ற உத்தியைக் கற்பனை என்று சாதாரணமாகச் சொல்லலாம்.
கவிஞனின் மனோபாவம் கற்பனையிலே மிளிரும். ஒரு காட்சியைக் காணும் போதே, அவனது கற்பனை அக்காட்சிக்குள்ளே சிறந்த உட் பொருளைப் பொருத்தி விடும்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என வாழ்ந்த அரும் பெரும் அருளாளர்களும் , புலவர்களும், தாங் கண்ட காட்சிகளிலே தம் மனநிலைக்கேற்ற சிறந்த மாட்சிகளைக் கண்டு, அவற்றோடு தம் கற்பனையைக் கலந்துறவாட விட்டுக் கருக் கொள்ளச் செய்து, தமிழ்ச் சொல் மணிகளைச் சிந்திக் கோவைப்படுத்தி, இலக்கணவரம்பு கட்டிப், படிப்போர் இதயத்தில் இன்பக் கவி அருவியைப் பாயவிட்டு, உள்ளத்தைப் பண்படுத்தி விடுவார்கள்

Page 45
இலக்கியச் சரபம் 60
பொய்யடிமை இல்லாப் புகழ் பூத்த பெரும் புலவர்கள் , தாம் கண்ட காட்சிகளினூடே கருத்தைச் செலுத்திக் கற்பனை நயத்தோடு அக்காட்சிகளைக் கவிதையாகச் சொல்லும் போது , அக்காட்சி மாட்சியுறுகின்றது. அக்கவிதைகளைப் படித்து மிகவும் இரசிக்கிறோம். அதன் மூலம் உயர்ந்த கவி இன்பம் உள்ளத்தில் பிறக்கின்றது.
அக்கவி இன்பம் கருத்து விதைகளை உள்ளத்தில் தூவிவிடுகின்றது. அதனால் சிறந்த பண்புகள் உள்ளத்தில் பயிராகிவிடுகின்றன. பயன் விளைக்கின்றன.
ததிருஈங்கோய் மலை எழுபது.
நக்கீரதேவர் என்னும் பழந்தமிழ்ப் புலவர் இயற்றிய, கவிச்சுவையும் கற்பனைச் சுவையும் நிரம்பிய அற்புதமான நூல் “திருஈங்கோய் மலை எழுபது” என்பது.
பன்னிரு திருமுறைகளில் பதினோராந் திருமுறையில் இந்நூல் சேர்க்கப்பட்டுள்ளது.
திருமுருகாற்றுப்படை , நெடுநல்வாடை, ஆகிய சங்க இலக்கிய நூல்களைப் பாடியவரும், தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்தவர் எனச் சொல்லப்படுபவருமான நக்கீரரே , நக்கீரதேவர் என்பார் சிலர். நக்கீர தேவர் நக்கீரருக்குப் பிந்தியவர் என்றும், சங்கமருவிய காலத்தவர் என்றும் சில தமிழ் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
எது எப்படியிருந்த போதும், இவரது கவியாற்றல், கற்பனைச் சிறப்பு என்பன, இவரைப் பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணச் செய்கின்றன.
திரு ஈங்கோய் மலையிலே சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். அம்மலைச் சிறப்பை, இயற்கைக் காட்சிகளின் மூலம் காட்டுகிறார் புலவர். தாம் காணுகின்ற ஒவ்வொரு காட்சியையும், மிகவும் சிறந்த அர்த்தத்தோடு கண்டு, கற்பனை நயத்தைக் குழைத்துக் கவிதையாக்கி, எம் உள்ளத்திற்கு இனிய உணவாக்கித் தருகிறார் புலவர். அப்பெரும் புலவர் காட்டுகின்ற காட்சியொன்றைப் பார்ப்போம்.
வேட்டைக்குச் சென்றான் கரிய மலைக்குறவன் ஒருவன். மான் வேட்டை ஆடுவதற்காக மலையடிவார மெல்லாஞ் சுற்றி வந்தான்.

-61- அகளங் கனர் நீண்ட நேரம் அலைந்து களைத்து, இறுதியில் ஒரு மானைக் கண்டு பதுங்கிப் , பதுங்கிச் சென்றான். அந்த மானை அம்பெய்து கொல்வதற்குத் தருணம் பார்த்து, வில்லிலே கூர்மையான அம்பையும் பூட்டிக் கொண்டு காத்திருந்தான்.
வில் நாணை இழுத்து அம்பு செலுத்திக் கொல்லக் கூடிய தருணம் வாய்த்தது. வில் நாணை இழுத்தான் . ஆனால் அவன் ஒரு கணப் பொழுதுக்குள்ளே அம்பெய்யும் நோக்கத்தைக் கைவிட்டு விட்டான்.
அன்றாடம் மிருகங்களை வேட்டையாடிக் கொன்று தின்னும் குறவர் பரம்பரையில் பிறந்து, இரக்கம் என்ற சொல்லின் அர்த்தமே தெரி1 வாழ்ந்த அவனுக்கு அந்தமானைக் கொல்ல மனம் வரவில்லை. அ), மானிலே அவனுக்குத் தனிவிருப்பமே வந்து விட்டது.
அதற்குக் காரணம் என்ன வென்றால் , அவ்வேடனான குறவன், எய்வதற்காக அம்பைத் தொடுத்து நாணை இழுக்கும் போது, அதை அறிந்தோ அறியாமலோ, அந்தமான் திடீரெனத் திரும்பிப் பார்த்தது. மருட்சி பொருந்திய பார்வையினை வீசிக் கண்களை அகலவிரித்து அலசியது.
அம்மானின் விழிகள், அம்மலைக் குறவனின் விழிகளில் பட்டுத் தெறித்தது. ஒரு கணம் அவன் ஆனந்த பரவசத்தன் ஆகிவிட்டான்.
அவன் தனது மனைவியான குறத்தி நாணத்தோடு தன்னைப் பார்க்கும் பார்வையிலே இருந்த நளினத்தை, நாணத்தை, அந்த மானின் மருண்ட பார்வையிலே கண்டு கொண்டான். அதனால், அந்த மானைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. பெண்ணை மான் விழியாள் என்பது பொதுவழக்குத் தானே.
வில்லிலே தொடுத்த அம்பைக் கையிலே எடுத்துக் கொண்டு “மானே நீ மெதுவாகவே செல்லலாம். நான் உன்னைக் கொல்லவே மாட்டேன்’ என்ற பாவனையில் அம்மானுக்குச் சைகையினாலே விடை கொடுத்து வீடு திரும்பினான் அக்குறவன், என்று ஒரு காட்சியைக் காட்டுகிறார். நக்கீர தேவர்.
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக் கையில் கணைகளைந்து கண்ணிமான் - பையப்போ எண்கின்ற பாவனைசெய் ஈங்கோயே துங்கெயில்கள் சென்றன்று வென்றாண் சிலம்பு,

Page 46
இலக்ககியச் சரபம் -62
கன்னிப் பெண்மானின் கண்ணழகிலும் அதன் பார்வையிலும் தன் மனைவியின் கண்ணழகையும் பார்வையின் அழகையும் கண்ட வேடனின் செய்கை சுய நலம் பொருந்தியது தான். இருப்பினும் தன் மனைவி மேல் அவன் கொண்டிருந்த ஆழமான அன்பை அக்காட்சி காட்டுகிறதல்லவா.
இதே மலைக்குறவன் இன்னொரு நாள் வேட்டைக்குச் சென்றான். முன்பு போலவே ஒரு அழகிய பெண்மானைக் கண்டான். இப்பொழுது அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது. “இந்தப் பெண்மானை உயிரோடு பிடித்து வந்து என் மனைவிக்குத் தோழியாக்கினால் என்ன” என்று நினைத்தான்.
அந்த அழகிய பெண்மானை வலை வீசிப் பிடித்துக் கொண்டு வந்தான். அந்தப் பெண்மானைப் பிடித்துக் கொண்டு வந்ததற்காகத் தன் மனைவியாகிய குறத்தி மிகவும் மனம் மகிழ்வாள் என்று நினைத்தான்.
ஆசையோடு , ஆவலோடு அவன் வீட்டுக்குக் கொண்டு வந்த அந்தப் பெண்மானைப் பார்த்த குறத்தி, மிகவும் வேதனைப் பட்டாள். (335|TLJ'LL LT6i.
கணவன் என்ன கொண்டு வந்து கொடுத்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு பூரிப்படைந்து போகின்ற அவள் உள்ளம், இன்று மட்டும் கொதிக்கத் தொடங்கியது. அவனுக்கோ ஆச்சரியமாக இருந்தது.
தான் கஷடப்பட்டுப் பிடித்துக் கொண்டு வந்த மானுக்காகத் தன்மனைவி மகிழ்ச்சியடைவாள் என்றே அவன் முழுமையாக நம்பியிருந்தான். ஆனால் அதற்கு மாறாக, அவளோ கடுங்கோபங் கொண்டாள்.
கோபங் கொண்டது மட்டுமல்ல வழமைக்கு மாறாகக் கணவனை ஏசவுந் தொடங்கி விட்டாள். “கலை மானைத் தவிக்க விட்டு விட்டு, அதன் துணை மானான பிணை மானை ஏன் பிரித்துப் பிடித்து வந்தீர்கள். இது எவ்வளவு தீமையான காரியம் என்று உங்களுக்குத் தெரியாதா” என்று ஏசினாள் அம்மலைக்குறமடந்தை , என்கிறார் நக்கீரதேவர்.
மலைதிரிந்த மாக்குறவன் மாண்கொணர நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய இம்மாண் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே மெய்ம்மாண் புணர்ந்தகையாண் வெற்பு. அதன் அன்புக் கலை மானிடமிருந்து அதனைப் பிரித்து வந்தது எவ்வளவு இழுக்கான காரியம், என்று கோபித்து ஏசுகின்ற குறப்பெண்ணின் காதல் உள்ளம் சிறப்பாக இருக்கிறதல்லவா.

-63- அகலாங் கனர் தாங்கள் கணவன் மனைவியாக, இன்பமாகக் குடும்பத்தில் இணைந்து வாழ்ந்து கொண்டு, தங்கள் சந்தோசத்திற்காக மான்களின் அன்பான குடும்பத்தைப் பிரிப்பது எவ்வளவு கொடுமையானது என்று எண்ணிய அந்தக் குறத்தியின் உள்ளத்தின் மாண்பு உயர்ந்ததல்லவா.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தாயுமான சுவாமிகளின் தத்துவம், படிப்பறிவற்ற அந்தப் பாமரக் குறத்திக்குத் தெரியாது என்று சொல்லமுடியுமா?
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” என்ற தாயுமான சுவாமிகளின் பக்குவட்பட்ட உள்ளத்தைப் பாமரக் குறத்தியின் உள்ளத்திலே காட்டுகிறார் நக்கீர தேவர்.
வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடுகின்ற வள்ளலாரின் உள்ளத்தை இக்குறத்தியிலே காணலாமல்லவா.
பிறருக்குத் துன்பம் செய்தால் அதனாலுண்டாகின்ற பாவம் , தம்மையும் அதே துன்பத்தில் ஆழ்த்தும், அதனால் தாம் துன்பமில்லாமல் வாழ விரும்புபவர்கள் , எவருக்கும் துன்பஞ் செய்யார் என்கிறார் வள்ளுவர்.
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்” இக்குறளின்கருத்தை அக்குறமகள் அறிந்திருக்க ஞாயமில்லைத்தான். இருப்பினும், தான் தனது கணவனைப் பிரிந்து விட்டால் , அல்லது கணவனிடமிருந்து தன்னை யாராவது பிரித்து விட்டால், தான் எவ்வளவு துன்பமடைவாள் என்பதை நன்றாக உணர்ந்திருந்த அவள் அம்மானுக்கும் அதே விதியைப் போட்டுப் பார்க்கிறாள்.
பிணை மானைப் பிரிந்த கலை மானின் துன்பமும் , கலைமானைப் பிரிந்த அதன் துணை மானின் துன்பமும் அவள் உள்ளத்தை உலுக்கிவிட்டன. அறிணையில் கூட, காதலுணர்வு இருக்கும் எனக் கண்டு கொண்டு, அதன் துன்பத்தைத் தன் துன்பமாக நினைத்துத் தன் அன்பான கணவனைக் கோபித்து ஏசித் திருத்துகின்ற அக்குறக் குலப் பெண்ணைத் திரு ஈங்கோய் மலை எழுபது என்னும் நூலில் நக்கீர தேவர் மூலம் தரிசித்த நாங்கள் புறநானூற்றில் ஒரு காட்சியைப் பார்ப்போம்.

Page 47
இலக்கியச் சரபம் -64
புறநானுற்றுக் காட்சி.
சங்க இலக்கிய நூல்களில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுகின்ற நூல் , புறநானூறு என்னும் நூலாகும். புறத்தினைப் பாடல்கள் நானுாறின். தொகுப்பே இந்நூல்.
வீரை வெளியனார் என்னும், சங்கச் சான்றோர்களில் ஒருவரான புலவரின் பாடல் ஒன்று , புறநானூற்றிலே சொல்லோவியமாகச் சுவை தரும் பாடலாக விளங்குகின்றது.
வீரை வெளியனார் கண்ட காட்சியையும் , கற்பனையையும் புறநானூற்றுப் பாடலிலே கண்டு நாமும் பரவசமடைகின்றோம்.
ஒரு வேடுவக் குடும்பத்தின் வீட்டில் நடக்கும் ஒரு சிறிய நிகழ்ச்சியைப் படிப்போரின் உள்ளத்திலே பதியக் கூடிய காட்சியாகத் தருகிறார் அப்புலவர்.
முற்றத்திலே பலாமரமொன்று செழித்து வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றது. அப்பலா மரத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. முன்னைக் கொடியும் , முசுண்டைக் கொடியும் மிகவும் அடர்த்தியாக அந்தப் பலாமரத்திலே படர்ந்திருக்கின்றன.
இயற்கையான குளிர்ந்த பந்தல் போலக் காட்சியளிக்கின்றது அந்த வீட்டு முற்றம். அந்தப் பந்தலின் கீழே, வார்க்கயிற்றினாலே பின்னப்பட்ட கட்டிலிலே வேட்டையாடிய களைப்புத் தீர வேடனொருவன் நித்திரை செய்கிறான்.
யானைகளையும் வேட்டையாடிப் பிடிக்கும் ஆற்றல் பொருந்திய வேடன் அவன். அவனது மனைவி, பக்கத்தில் இருக்கும் சிறு குடிசைக்குள் தன் வீட்டு வேலைகளுக்காக அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறாள். வீட்டு முற்றத்தில் ஏதோ சிறுஆரவாரங் கேட்டு எட்டிப் பார்க்கிறாள் அவள் காட்டு மான்களைப் பிடிப்பதற்காக, ஏற்கனவே பிடித்துப் பழக்கி வைத்திருந்த பார்வை மானாகிய, தங்களால் அன்போடு வளர்க்கப்படும் பிணை மானுக்குப் பக்கத்தில் அதன் துணை மானாக ஒரு காட்டுக் கலைமான் வந்து நிற்கின்றது.
தங்களை ஏமாற்றிப் பிடிப்பதற்காக வேடனால் வளர்க்கப்படும் பார்வைப் பெண் மான் அது என்பதைப் புரிந்து கொள்ளாமல், தமது இனத்துக் காட்டுமான் என்றே நினைத்து அதனருகில் வந்து நிற்கிறது அக்கலைமான்.

-65- அகளங் கனர் பார்வைப் பிணைமானும், காட்டுக் கலைமானும், அன்போடு மகிழ்ச்சியாக அந்த முற்றத்திலே சல்லாபம் புரிந்து கொண்டிருக்கின்றன. அம்மான்களின் ஆரவாரத்தினால், தனது கணவனின் நித்திரை குழம்பி விடுமே என்று அஞ்சிக் கலைமானைத் துரத்த விரும்பினாள் அவள்.
ஆனால் அதேவேளை தான் ஆசையோடு அன்போடு வளர்க்கின்ற பிணைமானின் சந்தோசம் குழம்பிவிடுமே , அதற்குக் குறுக்கே தான் நிற்கக் கூடாதே என்றும் அஞ்சினாள் அவள்.
என்ன செய்வதென்றறியாமல் வீட்டிற்குள் நடமாடாதவளாகித் திகைத்துக் கொண்டு நிற்கிறாள் அவ்வேடுவிச்சி.
இக்காட்சியை வீரை வெளியனார் என்ற சங்கப் புலவர் காட்டுகின்ற பாடல் மூலம் காண்போம்.
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலாத்துங்கு நீழல் கைம்மாண் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப் பார்வை மடப்பிணை தழிஇப் பிறிதோர் தீர்தொழிற் தனிக்கலை திளைத்துவிளை யாட, இன்புறு புணர்நிலை கண்ட மனையோளர் கணவ னெழுதலும் அஞ்சிக் கலையே பிணைவயிற் றீர்தலு மஞ்சி யாவதும் இல்வழங் காமையின். என இக்காட்சியை விளக்கிச் செல்கிறார் புலவர். காடெல்லாஞ் சுற்றிக் களைத்துவந்த வேடுவன் நன்றாக உறங்குகிறான். அவனது உறக்கத்தை மான்கள் குழப்பிவிடுமே என்று அவள் அஞ்சினாலும், மான்களின் சந்தோசத்தைத் தான் குழப்பக் கூடாது என்று நினைக்கின்றாள்
96)6iT.
காட்டுவேடுவனோடு அன்னியோன்யமாகக் காதல் வாழ்வை நடத்துகின்ற அவ்வேடுவிச்சியின் உள்ளத்துணர்வு எவ்வளவு உயர்ந்ததாக இருக்கின்றது என்று பாருங்கள்.
வேடுவக் குடும்பத்திலே பிறந்து, அன்றாடம் மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வருகின்ற ஜீவகாருண்யமற்ற வேடனின் மனைவியாக வாழ்ந்தும் , மிருகங்களின் காதற்சந்தோசத்தைக் குழப்ப

Page 48
இலக்கியச் சரபம் -66விரும்பாத உயர்ந்த உள்ளத்தைக் கொண்ட வேடுவிச்சியைக் கவிஞர் காட்டிய விதம் சிறப்பாக இருக்கின்றதல்லவா.
மற்றவர்கள் நன்றாக வாழ்கின்ற காட்சியைக் கண்டால் பொறாமைப்படுகின்ற மனிதர்களே மலிந்து கொண்டு போகின்ற இந்நாளில், அறிணையாகிய மான்களின் சந்தோசத்தைக், காதலை மதித்து, அதனை இரசித்து மகிழ்கின்ற மாண்புள்ளம் அவளது உள்ளம் என்று பெருமையாகக் 3:n m6)TLD6ö6)6)IT.
தங்களைப் போலவே மற்றவர்களை மட்டுமல்ல மற்றவைகளையும் நேசிக்கின்ற உணர்வுக்கு மனிதாபிமானம் என்ற சொல்லை விட வேறொரு சொல்லைத் தான் பயன்படுத்த வேண்டும்.
இளம் பார்வைப் பிணைமானும் , கலைமானும் காணுகின்ற இன்பத்திற்குத், தன் அன்புக்குரிய கணவனின் ஆழ்ந்த நித்திரையையும் பலியிடத் தயங்காத பெண்ணுள்ளத்தைத் , தன் அற்புதமான கற்பனை மூலம் காட்டிய வீரை வெளியனார் என்ற சங்கப் புலவரைப் போற்றி அடுத்த காட்சிக்குச் செல்வோம். நளவெண்பாவில்.
வெண்பா என்னும் யாப்பில் கவிதை பாடுவதில் புகழேந்திப் புலவருக்கு யாரும் நிகராகார். “வெண்பாவிற் புகழேந்தி’ எனப் பிற்காலப் புலவரொருவர் புகழேந்திப் புலவரைப் பெரிதும் போற்றிப் புகழ்கின்றார்.
புகழேந்திப் புலவர் பாடிய, அற்புதமான வெண்பாக்களாலாகிய நூல் நளவெண்பா. நளவெண்பாவிலே கற்பனை நயம் மிக்க சிறந்த பாடல்கள் பலவுண்டு. நளவெண்பாவிலே இது போன்றதொரு காட்சி , கவிநயமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய வகையில் காணப்படுகின்றது.
நளவெண்பா பாடியதன் மூலம், புகழேந்தி என்ற தன் பெயரைப் பொருத்தமான பெயராக மாற்றிக் காட்டிய புகழேந்திப்புலவர் காட்டிய ஒரு காட்சியை அடுத்து நோக்குவோம்.
விதர்ப்ப நாட்டரசனாகிய வீமராஜனின் மகளானதேமயந்தியைச் சுயம்வரத்திலே மணந்து கொண்டு , நிடதநாட்டரசனாகிய நளமகாராஜன் தனது தலை நகராகிய மாவிந்த நகருக்கு அழைத்து வருகிறான்.
தமயந்தியை நளன் அழைத்துக் கொண்டு வரும் போது, சில இயற்கைக் காட்சிகளை அவளுக்குக் காட்டிக் கொண்டு வருகிறான்.
இளம் பெண்ணொருத்தி தனக்குப் பிடித்தமான அழகான ஒரு மலரைக் கொய்வதற்காகப் பூஞ்சோலை ஒன்றினுள்ளே செல்கிறாள்.
 

-67- அகளங் கனர்
காற்சிலம்புகள் கலீர் கலீரென ஒலிக்கக் , காட்டு மயில் போலச் சுதந்திரமாக , மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்தோடிச் சோலைக்குள் நுழைகிறாள் அவ்விளம் பெண்.
அவள் எந்த மலரைக் கொய்து தன் தலையிலே சூட்டி மகிழவேண்டுமென்று ஆசையோடும் ஆவலோடும் சென்றாளே , அந்த மலரிலே, ஓர் ஆண் வண்டும் பெண் வண்டும் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து ரீங்காரஞ் செய்து, காதல் மொழி பேசிக் களித்திருக்கின்றன.
துள்ளிக் குதித்தோடிச் சென்ற அப்பெண், அக்காட்சியைக் கண்டதும் அசையாமல் அப்படியே நின்று விட்டாள்.
தனது காலிலே இருக்கின்ற சிலம்புகளின் ஒலியினால், அக்காதல் வண்டுகளின் கலவியின்பம் கலைந்து விடுமே என்று கலங்குகிறாள் அவள், அதனால் காற்சிலம்பிலே இருந்து ஒலி எழாத வண்ணமாக மெல்ல மெல்ல நடந்து செல்கிறாள்.
தான் ஆசைப்பட்ட மலரைப் பறிக்கின்ற எண்ணத்தையும் கைவிட்டாள். மலருக்குப் பதிலாக ஒரு தளிரை மட்டும் பிடுங்கிக் கொண்டு திரும்பி விடுகிறாள். இக்காட்சியைப் புகழேந்தி அருமையாகக் காட்டுகிறான். புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல் செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய் அம்மலரைக் கொய்யாது அருந்தளிரைக் கொய்வாளைச் செம்மலரின் தேனே தெளி. வண்டுகளின் சந்தோசத்தைக் குழப்பக் கூடாது என்ற அவ்வனிதையின் உயர்ந்து மனோதர்மம், இன்றைய நிலையில் எம்மை ஆச்சரியப் பட வைக்கிறதல்லவா.
அகநானுற்றில்
சங்க காலத்து அகத்திணை நூலாகிய அகநானூறு என்னும் நூலில், குறுங்குடி மருதனார் என்னும் புலவர் பாடிய முல்லைத் திணைப் பாடல் ஒன்று, உள்ளத்திலே உவகையை ஏற்படுத்துகின்றது. அப்பாடற் காட்சியைப் L|fst 16Listb.
தன்னைப் பிரிந்து பொருள் தேடச் சென்ற தலைவனை நினைந்து நினைந்து உருகுகின்றாள் தலைவி. அவன் வருவதாகக் குறித்துக் கூறிச் சென்ற கார்காலம் இதோ தொடங்கி விட்டது. தலைவன் இன்னும் வரவில்லையே என ஏங்கி ஏங்கி மனம் நொந்து போயிருக்கிறாள் தலைவி.

Page 49
இலக்கியச் சரபம் -68
அவன் விரைவில் வந்து விடுவான் என்று தலைவியைத் தேற்றுகிறாள் தோழி. தன்னால் யாருந் துன்பம் அடைவதைச் சிறிதும் விரும்பாதவன் அவன். அதனால் உன்னையும் துன்பப்படவிட மாட்டான் என்று தேறுதல் கூறித் தலைவன் வரத் தாமதமாவதற்குக் காரணத்தையும் கூறுகிறாள் தோழி. “தோழி! மிகவும் வேகமாகத் தாவிப் பாய்ந்து செல்லுகின்ற குதிரைகள் பூட்டப்பட்ட தேரிலே, மிக வேகமாக உன் தலைவன் வந்து கொண்டிருப்பான். அவன் தேரைச் செலுத்தும் வேகப்படி பார்த்தால் இந்நேரம் அவன் வந்து சேர்ந்திருக்க முடியும்,
ஆனால் இன்னும் வந்து சேரவில்லை. அவனது வருகை தாமதமாவதற்கு என்ன காரணம் தெரியுமா? அவன் தேரூர்ந்து வருகின்ற தெருக்கரையிலே பூஞ்சோலைகள் காணப்படும்.
அப்பூஞ் சோலைகளிலே, தேனைக் குடிக்கின்ற வண்டுகள் மலர்களிலே மகிழ்ச்சியாகச் சோடியாகச் சேர்ந்திருக்கும்.
அவன் வேகமாகத் தேரூர்ந்து வந்தால் தேரிலே கட்டப்பட்டுள்ள மணிகள் பெரும் ஒலி எழுப்பும். அந்த மணியொலியினாலே அவ்வண்டுகள் அச்சங் கொண்டு பறக்கத் தொடங்கும். அதனால் அந்த வண்டுகளின் காதல் இன்பம் கனவாகிக் குழம்பிப் போகும்.
தனது மனைவியோடு சந்தோசமாக இருக்கவேண்டுமென்று ஆசையோடும், ஆவலோடும் வருகின்ற தலைவன் , தம் துணையோடு சந்தோசமாக இருக்கின்ற வண்டுகளின் சந்தோசத்தைக் குழப்புவானா?
அதனால் அவன் தனது தேரிலே கட்டப்பட்டிருக்கின்ற மணிகளின் ‘நா க்கள் அசைந்து ஒலி எழுப்பாத வண்ணம் கவனமாக, மெதுவாகத் தேரைச் செலுத்திக் கொண்டு வரவேண்டி இருக்கும். அதனால்தான் அவனது வருகை தாமதமாகின்றது.
அதனால் கவலைப்படாதே, நீ மகிழ்ச்சியோடு அவனைக் காணக் கூடியதாக விரைவிலேயே வந்து தோன்றுவான்' எனத் தலைவிக்குத்
தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த அகநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.
 
 

-69- அகளங் கனர்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பு ஆர்த்தண்ன , வாங்கு வளர்பு அரிய பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும் - குறும்பொறை நாடன்
சோடியாகக் கூடியிருக்கின்ற வண்டுகளின் சுகத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என நினைத்துத், தன் சுகத்தைப் பெரிதாகக் கருதாத தலைவனின் உயர்ந்த உள்ளம், இவ் அகநானூற்றுக் காட்சியிலே துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள் பறவைகளுக்கும் உயர்ந்தவர்கள் துன்பஞ் செய்யார்.
மான்களின் சந்தோசத்தையும் வண்டுகளின் சந்தோசத்தையும் மதித்துப் போற்றுகின்ற மனிதாபிமானப் பண்புகள், மானுடப் பண்புகள், இன்று மண்ணிலே எங்கே ஒளித்திருக்கின்றன. இலக்கியங்களிலே கவிஞர்களின் கற்பனைகளிலே மட்டுந்தான் காணப்படக் கூடியனவா. திருஈங்கோய்மலை எழுபது
நக்கீரதேவர் இயற்றிய திரு ஈங்கோய் மலை எழுபது என்ற நூலிலே இருந்து, அவர் கண்டு காட்டிய சில காட்சிகளின் மாட்சிகளிலே மீண்டும் மனதைச் செலுத்துவோம்.
மலையடி வாரத்தில் அமைந்திருக்கும் நீர் நிலையொன்றிலே, அழகான செந்நிற இதழ்கள் விரிந்து காந்தள்மலர்கள் மலர்ந்திருக்கின்றன.
காந்தள் மலர்கள் இதழ்கள் விரிந்து மலர்ந்திருக்கின்ற அந்தக் காட்சியைப் பார்த்தால் நெருப்பு எரிவது போலத் தோன்றுகின்றது. அத்தனை செந்நிறமான காட்சி அது.
அந்தக் காட்சியைப் பக்கத்திலே உள்ள மரம் ஒன்றின் மேல் இருந்த, வயது முதிர்ந்த பெண் குரங்கு ஒன்று, உற்று உற்றுப் பார்க்கின்றது.

Page 50
இலக்கியச் சரபம் -70
நெருப்பானது சுடர்விட்டுச் சுவாலித்து எரிந்து பிரகாசிப்பது போல அதன் கண்ணில் தெரிகிறதே அன்றிக், காந்தள் மலர்கள் மலர்ந்திருப்பது போலத்தெரியவில்லை.
வயது முதிர்ந்த மந்திக் குரங்கு என்பதால் , மரத்திலே இருந்து
பார்க்க, பள்ளத்திலே அப்படித் தெரிந்திருக்கின்றது.
காட்டுக்குள் நெருப்புப் பிடித்து விட்டால் , காடு முழுவதும் எரிந்து நாசமாகிப் போய் விடுமே, என்று நினைத்திருக்கும் அந்த மந்திக் குரங்கு.
நெருப்பையும் பாம்பையும் சிறியது தானே என்று எண்ணிப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து விடக் கூடாது என்பார்கள் அறிஞர்கள். ஆனால் இந்தக் கிழட்டு மந்திக் குரங்கிற்கு அந்த அறிவு எங்கிருந்து வந்திருக்கும். செந்நிற இதழ்கள் விரிந்து நெருக்கமாக மலர்ந்து பிரகாசிக்கும் காந்தள் மலர்களை, மரத்தின் உச்சியில் இருந்து கொண்டு உற்று உற்றுப் பார்த்துத் திகைப்படைகிறது குரங்கு.
என்ன செய்யலாம். எப்படி இந்த நெருப்பை அணைக்கலாம் என்று நினைத்துச் செய்வதறியாது யோசித்துக் கொண்டிருக்கின்றது அந்தப் பெண் குரங்கு.
அந்த நேரத்தில் ஒரு கருவண்டு, தேன் குடிப்பதற்காகப் பறந்து வந்து, காந்தள் மலரிலே அமர்ந்து விட்டது.
அந்த மந்திக் குரங்குக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஐயோ! பறந்து வந்த வண்டு, நெருப்பென்று அறியாமல் நெருப்பில் விழுந்து விட்டதே. பாவம்! இறந்து கருகிச் சாம்பலாகப் போகிறதே, என்று மிகவும் கவலைப் பட்டுச் செய்வதறியாது திகைத்து, எழுந்து எழுந்து அக்காட்சியை எட்டிப் பார்த்துப் பார்த்துக் கையைப் பிசைந்து, பிசைந்து எவ்வாறு அந்த வண்டைக் காப்பாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்ததாம் அந்த முதிய பெண் குரங்கு.
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தி முழுகியதென் றஞ்சி முதுமந்தி - பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்களிர்க் கொழுந்தெழுந்த செஞ்சடையாண் குன்று.
 

-71- அகளங் கர்ை ஆண்களை விடப் பெண்களுக்கே இரக்கம் அதிகம் என்பார்கள். “பெண் என்றால் பேயும் இரங்கும்” என்ற பழமொழிக்கு இரக்கமே இல்லாத பேய் கூட, பெண்களுக்காக இரங்கும் என்று இன்று பொருள் கொள்கிறார்கள். இது தவறான கருத்தாகும்.
இக்கருத்து சரியாயின் “பேயும் பெண் என்றால் இரங்கும்” என்று தான் பழமொழி இருந்திருக்க வேண்டும். ஆனால் பழமொழி அப்படியில்லையே. இப்பழமொழியின் சரியான பொருள் என்னவென்றால், இரக்கம் என்பது சிறிதளவும் இல்லாத பேய்க்குலத்தில் கூட , பெண்பேய்க்கு இரக்கம் இருக்கும் என்பதேயாகும்.
பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள இரக்க சுபாவத்தை வெளிப்படுத்தவே இந்தப் பழமொழி உண்டாயிற்று. இப்பொழுதுள்ள சில பெண்களை ஆதாரமாக்கி , இப்பழமொழியின் பொருளையே மாற்றி விட்டார்கள் போலும்,
இப்பாடலில் குரங்கை மந்திக் குரங்காகவும் , அது வயது முதிர்ந்த மந்திக் குரங்கு எனவும் புலவர் காட்டிய நயம் ரசிக்கவும் மகிழவும் தக்கதே. வயது முதிர்ந்த குரங்கு என்பதால் அக்குரங்கால் இரக்கப்பட முடியுமே அன்றி நெருப்பை அணைக்க முடியாது, என்பதையும், பெண்குரங்கு, அதிலும் வயது முதிர்ந்த பெண்குரங்கு என்பதால், இரக்க மிகுதியையும் எடுத்துக் காட்டிய நயம் ரசிக்க வைக்கின்றது.
இன்னொரு உயிரினத்தின் துன்பத்தைக் கண்டு , அத்துன்பத்தைப் போக்க முடியாது போனால் தானும் அத்துன்பத்தை அனுபவிக்கின்ற உயர்ந்த மனோபாவம், அந்த முது மந்திக் குரங்கிடம் இருந்தது.
தம்மோடு சம்பந்தமில்லாத, விலங்கினமே அல்லாத பறவையினத்து வண்டு , நெருப்பிலே விழுந்து விட்டதே என்று பரிதாபப் பட்டு நிற்கும் அந்த முது மந்தியின் உணர்வு, பல மனிதர்களிடம் இல்லாமற் போய்விட்டதே. மனிதன் , மனிதனுக்காக இரங்குவது கூடக் குறைந்து விட்டதே. முத்தொளர்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்ற பழந் தமிழ் இலக்கியத்திலே ஒரு காட்சியைக் காண்போம். சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட மூன்று தொளாயிரம் பாடல்கள் , அதாவது இரண்டாயிரத்தி எழுநூறு பாடல்கள் கொண்டதே முத்தொள்ளாயிரம் என்னும் தொகுப்பு நூல் என்பர் சிலர்.

Page 51
இலக்கியச் சரபம் -72
இம் மூவேந்தர்களைப் பற்றியும் பாடப்பட்ட, தொளாயிரம் பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம் என்பர் வேறு சிலர். ஆனால் இப்பொழுது கண்டெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகையோ நூற்று முப்பது பாடல்கள் மட்டுமே. ஏனையவை கால வெள்ளத்தில் அள்ளுண்டு போயிற்றே. கிடைத்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பில்லாத முத்துக்களே. இப்பாடல்களை ஒருவர் பாடினாரா அல்லது பலர் பாடினரா , பாடியவர் யார் , யாவர் என்ற விபரங்கள் இது வரையில் அறியப்படவில்லை. சேர மன்னனைக் கோதை என்றும் அழைப்பர். சேர மன்னர்களின் சின்னம் வில், வில்லைச் சிலை என்றும் சொல்வர்.
சேர மன்னனது செங்கோலாட்சி நடைபெறும் சேர நாட்டிலே உள்ள மக்களுக்கு எந்தவிதமான துன்பமும் இல்லை.
மக்களுக்கு மட்டுமல்ல, பறவைகள் விலங்குகள் முதலான ஜீவராசிகள் எவற்றுக்குமே எந்த விதமான துன்பமும் வராத வண்ணமாக நல்லாட்சி புரிகின்றான் சேர மன்னன்.
அவனது அந்த நல்லாட்சிப் பரப்புக்குள்ளே ஒரு துன்பத்தைக் கண்டார் புலவர். அத்துன்பம் என்ன என்பதையும் , அது யாருக்கு ஏற்பட்டது என்பதையும்
LITTsft(3LITTLD.
சேறு பொருந்திய வயல் நிலத்திலே , செந்நிற ஆம்பல் மலர்கள் இதழ் விரிந்து மலர்ந்து , நெருங்கி, சேற்று நீர்ப்பரப்பு முழுவதும் பரந்து மூடியிருக்கின்றது.
அந்த மருத நிலத்து வயலோரத்திலே இருந்த மரங்களின் உயர்ந்த கிளைகளிலே, பறவைகள் கூடுகட்டி , முட்டையிட்டு , குஞ்சு பொரித்துச் சுதந்திரமாக , நிம்மதியாகச் சந்தோசமாக வாழ்ந்தன.
மரத்தின் உயர் கிளையில், கூட்டுக்குள்ளே குஞ்சுகளோடு குலாவி மகிழ்ந்த பறவைகள், கீழே பார்க்கின்றன.
பகலிலே மொட்டாக இருந்த செவ்வாம்பல்கள் இரவிலே மலர்ந்து காட்சியளிக்கின்றன.
நெருப்புப் போன்ற செந்நிற இதழ்களைக் கொண்ட செவ்வாம்பல் மலர்கள் , சேற்று வயல் முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்பட , நீரிலே நெருப்புப் பிடித்து விட்டது என்று பயந்து விட்டன பறவைகள்.
 

-73- அகளங் கர்ை
அதனால் அதைப் பார்த்தவுடனே பதறித் துடித்துத் தமது சிறகுகளுக்குள் தமது குஞ்சுகளை மூடித் துன்பமுற்று நடுங்குகின்றன.
பறவைகளால் நெருப்பை அணைக்க முடியாதே. அதனால் தம் குஞ்சுகளைப் பாதுகாக்கச் சிறகுக்குள் அவைகளை ஒடுக்கி மூடிக் கொண்டன, என்கிறார் புலவர்.
அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ வெள்ளம் தீப்பட்டது எனவெருவிப் - புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு, நீரிலே நெருப்புப் பிடித்து விட்டது என்ற அர்த்தமில்லாத அச்சத்தினால் பறவைகள் அஞ்சினவேயன்றி வேறு அச்சம் எதுவும் யாருக்கும் அந்நாட்டில் இல்லை என்கிறார் புலவர்
செவ்வாம்பல் மலர்ந்து நீர்ப்பரப்பை மூடியிருக்கும் காட்சியை
மனக் கண்ணால் கண்டு பாருங்கள்.
எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடியாது போனால் புலவர் புலமைப்பித்தனின் “பொய்கை என்னும் நீர் மகளும், பூவாடை போர்த்திருந்தாள்’ என்ற திரை இசைப் பாடல் வரியை நினைத்துப் பாருங்கள் இயற்கையின் மகத்துவத்தை , அழகுக் கோலத்தை அனுபவிக்க முடிகிறதல்லவா.
இப்படியொரு காட்சியை, திருஈங்கோய் மலை எழுபது என்ற நூலில் நக்கீர தேவர் இன்னும் அற்புதமாகக் காட்டுகிறார். அக்காட்சியையும் காண்போம். திருஈங்கோய் மலை அடிவாரத்தில் ஒரு இலவமரம் செழித்து, உயர்ந்து, பரந்து வளர்ந்திருந்தது.
அது செந்நிறமான தளிர்களையும் , அரும்புகளையுங் , கொண்டிருப்பதை, உயர்ந்த ஒரு மூங்கில் மரத்தின் கிளையிலே இருந்த ஒரு கடுவன் குரங்கு கண்டு விட்டது.
‘இலவந் தளிர்கள் நெருப்புச் சுவாலைகள் போலக் காணப்படுகின்றன. ‘செந்தியின் நாப் போலச் செழுந்தளிர்கள் ஈன்று’ என்று இலவ மரத்தின் தளிர்களை எமது நாட்டுச் சோமசுந்தரப் புலவர் தனது இலவுகாத்த கிளி என்ற பாடலில் குறிப்பிடுகின்றார்.

Page 52
இலக்கியச் சரபம் -74
நெருப்புச் சுவாலை போல இலவந்தளிர்களும் அரும்புகளும் இருப்பதைக் கண்ட கடுவன் குரங்கு அச்சங் கொண்டது.
முன்னொரு போதும் அப்படி ஒரு காட்சியைக் கண்டிராத அக்கடுவன் குரங்கு , இலவ மரத்திலே நெருப்புப் பிடித்து விட்டது, என்று அச்சங் கொண்டது. -
வயது முதிர்ந்த , முது மந்தியாகிய பெண் குரங்கு , காந்தள் மலர்மேலே வண்டு இருப்பதைப் பார்த்து, வண்டு நெருப்பிலே வீழ்ந்து விட்டதே என்று கவலை கொண்டு எழுந்து , எழுந்து கையை நெரித்துக் கொண்டு செயலற்றிருந்தது போல இக்கடுவன் குரங்கு இருக்கவில்லை.
“வெள்ளந் தீப்பட்டது என வெருவி', தமது குஞ்சுகளைத் தமது சிறகுகளுக்குள் மூடிக் கொண்ட பறவைகளைப் போலவும் இருக்கவில்லை. அதன் சமூக உணர்வு அதனைச் செயலாற்றத் தூண்டியது. தான் இருந்த மூங்கில் மரத்தின் குழைகளை ஒடித்துப் பிடுங்கிக் கொண்டு தாவிப் பாய்ந்து இலவமரத்தில் ஏறிக் கொள்கின்றது.
அக்குழைகளாலே அடித்து அடித்து நெருப்பை அணைக்க முயல்கின்றது. கவிஞர் அக்காட்சியை அற்புதமாகக் காட்டுகிறார்.
ஓங்கிப் பரந்தெழுந்த ஒலிஇலவத் தண்போதைத் துங்குவதோர் கொள்ளி எனக்கடுவண் - மூங்கில் தழைஇறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக் குழைஇறுத்த காதுடையான் குன்று. இலவமரத்தில் தூங்குகின்ற சிறு சிறு அரும்புகளை, சிறுசிறு நெருப்புக் கொள்ளிகள் என எண்ணிய அக்கடுவன் குரங்கு, அந்த நெருப்புக் கொள்ளிகளை அப்படியே எரிய விட்டால் அவை எரிந்து காட்டையே அழித்து விடும் என்று அஞ்சுகின்றது.
அதனால் தன் உயிரையே பணயம் வைத்து நெருப்பை அணைக்க முயன்றது. என ஒரு காட்சியைக் காட்டுகிறார் புலவர்.
குரங்குக்கே இருக்கும் இந்தத் தியாக உணர்வும் , சமூகஉணர்வும் மனிதரிடம் குறைந்து விட்டதே என்ற எண்ணம் என் நெஞ்சை எரிக்கின்றது. கம்பராமாயணம்
கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவன் கம்பன். தமிழ்த்தாய் தவமிருந்து பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன் கம்பன் என்பார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.
 

-75- அகளங் கனர் கவித்துவத்தின் எல்லையைக் கண்ட் கம்பன் பாடிய இராமாயணத்தில் ஒரு காட்சியைப் பார்ப்போம்.
உயிரினங்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமையையும் , விட்டுக் கொடுப்பையும், ஒருவரின் சந்தோசத்தை, நிம்மதியை, சுதந்திரத்தை, வாழ்க்கையை, மற்றவர் குழப்பாமல் வாழுகின்ற மானுடப் பண்பின் மேன்மையையும், அறிணை உயிர்கள் மூலமாக அற்புதமாகக் காட்டுகிறான் 35 DL6öT.
கோசல நாட்டிலே கம்பன் கற்பனையிலே கண்ட காட்சிகள் , அந்நாட்டின் மேன்மையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமைந்திருக்கின்றன. சங்குகள் நீரிலே நிம்மதியாகக்கிடக்க வேண்டும் என்ற காரணத்தினால் எருமைகள் நீரிலே சென்று கிடந்து , சங்குகளைக் குழப்புவதில்லை.
எருமைகள் நீரைக் குடிக்கச் சென்றால் , சங்குகளின் நிம்மதி குழம்பாத வண்ணமாக நீரைக் குடித்து விட்டு , நீரிலே கிடக்காமல் வெளியில் வந்து மரநிழலிலே கிடந்து உறங்குகின்றன.
நீரிலும் நிலத்திலுமாக இரண்டிலும் கிடந்து ஒய்வு கொண்டு மகிழ்ச்சியடையும் எருமை, நீரில் மட்டும் வாழும் சங்கின் நிம்மதியைக் குழப்பாமல் தனது மற்றோர் ஓய்விடமாகிய மர நிழலை நாடி, சங்குகள் நிம்மதியாக வாழ்வதற்கு நீரை விட்டுக் கொடுத்து விடுகின்றன.
வண்டுகள், ஆண்கள் பெண்கள் அணிந்திருக்கின்ற மாலையிலே மொய்த்துக் கிடக்குமேயல்லாமல் செந்தாமரை மலரிலே சென்று மொய்த்து ரீங்காரஞ் செய்து, இலக்குமி தேவியின் நித்திரையைக் குழப்புவதில்லை. இலக்குமி தேவி செந்தாமரையிலே வாசஞ் செய்பவர். வண்டுகள் இலக்குமி தேவியாம் செந்திருமகளைக் குழப்பாமல் மாலைகளிலே துயில்கின்றன.
தாமரைப் பூவிலும் , மாலைகளிலும் சென்று தேன் குடித்துத் தங்கும் வண்டுகள் , இலக்குமி தேவி இனிதே துயில்வதற்காகச் , செந்தாமரைப் பூவை நாடாமல் , மாலைகளிலே தேன் குடித்து உறங்குகின்றன.
இலக்குமி தேவியை யாரும் அழைக்காததால் இலக்குமி தேவி நிம்மதியாக நித்திரை செய்கிறாள். வறுமை இல்லாததால் யாரும் இலக்குமியை அழைக்கவில்லை. வண்டுகளும் குழப்பவில்லை.

Page 53
இலக்கியச் சரபம் -76
சிப்பிகள் நீர்த்துறைகளில் நிம்மதியாக நித்திரை செய்ய வேண்டுமென்பதால் , ஆமைகள் நீர்த்துறையிலே சென்று சிப்பிகளைக் குழப்பாமல் காட்டுப் புதர்களிலே நித்திரை செய்கின்றன.
நீர்த்துறையிலும் நிலப் புதர்களிலும் வாழும் இயல்பு கொண்ட ஆமை, நீர்த்துறையில் மட்டும் வாழும் இயல்பு கொண்ட சிப்பிக்கு நீர்த்துறையை விட்டுக் கொடுத்து விட்டு, அதன் நிம்மதியைக் குழப்பாமல் தான் சென்று நிலப்புதர்களிலே உறங்குகின்றது.
அன்னப் பறவைகள் வைக்கோற் போரிலே நிம்மதியாக உறங்க வேண்டுமென்ற காரணத்தால் , மயில்கள், வைக்கோற் போரிலே வந்து இருந்து நெல்லைக் கொறித்து, அன்னங்களைக் குழப்பாமல் , சோலையிலே சென்று உறங்குகின்றன.
மயில்கள் வைக்கோற் போரை அன்னங்களுக்காக விட்டுவிட்டுத் தாம் சென்று பூஞ் சோலையிலே உறங்குகின்றன.
இப்படி ஒன்றின் நிம்மதியை மற்றொன்று குழப்பாத இனிமையான வாழக்கை, பறவைகள் , விலங்குகள் முதலான உயிர்களிடத்திலேயே இருந்தால், அந்நாட்டு மக்களிடத்தில் எத்தகைய மேன்மையான பண்புகள் இருந்திருக்கும் என்று எம்மைச் சிந்திக்க வைக்கிறான் கம்பன்.
நீரிடை உறங்குஞ் சங்கம்
நிழலிடை உறங்கும் மேதி தாரிடை உறங்கும் வண்டு
தாமரை உறங்குஞ் செய்யாளர் தூரிடை உறங்கும் ஆமை
துறையிடை உறங்கும் இப்பி போரிடை உறங்கும் அண்னம்
பொழிலிடை உறங்குந் தோகை, உறங்கும் ,உறையும் என்ற சொற்கள் நித்திரை கொள்ளும் என்ற பொருளினை மட்டுமன்றி வாழும் , கிடக்கும் என்ற பொருள்களையும் இட்பாடலில் காட்டுகின்றன.
"வல்லமையுடையவனே வாழ்வுடையவன்” என்ற தத்துவத்தை விட்டு நீக்கி , எல்லோரும் எல்லா வகையிலும் சிறப்போடு நிம்மதியாக , சந்தோசமாக, சுதந்திரமாக வாழவேண்டுமென்ற தியாக மனப்பான்மையையும் , கம்பன் காட்டுகின்ற அந்தக் காட்சியிலே கண்டு களிக்கிறோம்.
கம்பனின் கற்பனைக் காட்சி , கருத்திலே மாட்சியுற்று, எமக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லுகிறதல்லவா. வாழ்க கம்பன் புகழ்,
 

-77. அகலாங் கனர் நாட்டுச்சிறப்பு - 1
புலவர்கள் தாங்கள் பாடுகின்ற பிரபந்தங்கள் , புராணங்கள் காவியங்களில் எல்லாம் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என்பவற்றை வெகுவிரிவாகக் கூறல் மரபாக இருந்து வருகின்றது.
பெரும் புலவர்கள் தாம் பாடும் நாட்டின் சிறப்பையும் நகரத்தின் சிறப்பையும் தமது கற்பனைச் சிறப்பினாலே அற்புதமாகக் காட்டி விடுகின்றனர். சில புலவர்கள் நேர்முகமாகவே தாம் பாடும் நாட்டின், நகரத்தின் சிறப்புக்களைக் கூறி விடுகின்றனர். சில புலவர்கள் உட் பொருள் காணக் கூடியவாறு மறைமுகமாகக் கூறுவார்கள். சில புலவர்கள் எதிர்முகமாகவும் நாட்டு , நகரச் சிறப்புக்களைக் கூறி விடுவதுண்டு.
அதாவது , இன்ன இன்ன சிறப்புக்களைக் கொண்டது இந்த நாடு, என்று சொல்வதற்குப் பதிலாக , இன்ன இன்ன இழிவுகள் இந்த நாட்டில் இல்லை என்று வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தி நாட்டு வளம் கூறிச், சிறப்பித்து விடுகிறார்கள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த வகைகளில் கைதேர்ந்தவன். இராமன் பிறந்த நாடாகிய கோசல நாட்டின் சிறப்பைக் கூறும் போதும் இராமன் பிறந்த நகரமாகிய அயோத்தி நகரின் சிறப்பைக் கூறும் போதும், கம்பன் இத்தகைய உத்திகளை வெகு இலாவகமாகக் கையாண்டு பாடியுள்ளான்.
கம்பன் தனது இராமாயணத்தில் நகரப் படலத்தில் அயோத்தி நகரில் என்னென்ன இல்லை என்று கூறி , அதன் மூலம் நாட்டின் பெருமையைக் கூறும் பாடல்கள் இரண்டைப் பார்ப்போம்.
தெளிர்வார் மழையும் திரையாழியும் உட்கநாளும் வளர்வார் முரசம் அதிர்மாநகர் வாழும் மாக்கள் கள்வார் இலாமைப் பொருட்காவலும் இல்லையாதுங் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லைமாதோ, இப்பாடலின் மூன்றாம் நான்காம் அடிகளில் அயோத்தி நகரில் என்னென்ன இல்லை என்று கூறுகிறார் பாருங்கள்.
அந்த நகரில் களவெடுப்பவர்கள் யாரும் இல்லை. அதனால்
பொருட்களுக்குக் காவலும் இல்லை.

Page 54
"
இலக்கியச் சரபம் -78அதுமட்டுமில்லை , அந்நகரில் இன்னொரு சிறப்பும் உண்டு. அந்நகரில் கொடையாளிகள் யாருமில்லை என்கிறான் கம்பன்.
ஒரு பெரிய நகரத்தில் கொடையாளிகள் யாரும் இல்லை என்பது எப்படி நகரச் சிறப்பாக முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதில் சொல்கிறான் கம்பன்.
பிச்சையெடுப்பவர்கள் , அல்லது வேறுவகையாக இரப்பவர்கள் யாருமே அந்நகரில் இல்லை. அதனால் கொடுப்பவர்களாகிய கொடை வள்ளல்களும் இல்லை என்கிறான் கம்பன். கொள்வார் இல்லாததால் கொடுப்பார்கள் இல்லை என்பது கம்பனின் பதில்,
ஒரு நகரத்தில் பல கொடையாளிகள் இருக்கிறார்கள் என்று கூறுவது தான் அந்நகரத்திற்குச் சிறப்புத் தரும் என்பதை மாற்றி, கொடையாளிகளே இல்லா நகரம் அயோத்தி. அது தான் அயோத்தி நகரின் பெருமை, என்று பேசுகிறான் கம்பன்.
இதற்கு அடுத்த பாடலிலும், இதே போன்ற உத்தியைக் கையாண்டு அயோத்தி நகரின் சிறப்பை விளக்குகிறான் கம்பன்.
கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்வி முற்ற வல்லாரு மில்லை, அவைவல்லர் அல்லாரும் இல்லை. எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த லாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ, அயோத்தி நகரிலே கல்வியை முற்றாகத் துறைபோகக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதாம். அப்படியென்றால் இது எப்படி நாட்டுக்குச் சிறப்பாகும் என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா. அதற்குக் கம்பன் பதில் சொல்கின்றான்.
அந்நகரிலே, படிக்காமல் வீணே காலத்தைக் கழிப்பவர்கள் யாருமில்லை. துறைபோகக் கற்காதவர்கள் என்று யாருமில்லை. அதனால் இவரிவர் தான் நல்ல கல்வி மான் என்று வரையறுத்துக் கூறமுடியாது என்கிறான் கம்பன்.
கல்விமுற்ற வல்லார் அந்நகரில் இல்லை என்று தான் சொல்வதற்குக் காரணம், கல்லாது நிற்பார் யாருமில்லை என்பதும் , கல்வி முற்ற வல்லார் அல்லாரும் இல்லாததுந் தான் , எனப் புதுவிதமான புகழ்ச்சியைச் செய்கின்றான்
SLO 60.

-79
இருட்டே உலகில் இல்லை என்றால் ஒளியே இல்லை என்று ஆகிவிடுமல்லவா. வெய்யில் இல்லாதபோது நிழலின் அருமை தெரியாதல்லவா. அதே போன்றது தான் இதுவும்.
அயோத்தி நகரிலே செல்வந்தர்கள் என்று யாருமில்லை. வறியவர்கள்
ஆகளTங் கர்ை
என்றும் யாருமில்லை. எல்லோரும் எல்லாப் பெருஞ் செல்வங்களும் பெற்று வாழ்கின்ற காரணத்தால் அங்கே சமத்துவம் நிலவுகிறதே யன்றிப் , பொருளாதார ஏற்றத்தாழ்வு காணப்படவில்லை என்கிறான் கம்பன்.
இப்பாடல்களிலே, இல்லை’ ‘இல்லை’ என்று இல்லாதவைகளைச் சொல்லிச் சொல்லியே, நாட்டில் உள்ளவற்றின் சிறப்பை எதிர்முகமாக எடுத்து விளக்கியிருக்கிறான் கம்பன்.
கம்பன் தனது இராமாயணத்தில், கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும் நாட்டுப் படலத்திலும், இத்தகைய உத்தியைக் கையாண்டு நாட்டுச் சிறப்பைப் பாடியிருக்கிறான். அந்தப் பாடல் மிகவும் சுவையானது. அப்பாடலையும் இங்கு காண்போம்.
வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லைநேர் செறுநர் இண்மையால் உண்மை இல்லைபொய் உரை இலாமையால் ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால் கோசல நாட்டிலே வள்ளற் தண்மையே இல்லையாம். வள்ளற்தன்மை இல்லாதது நாட்டுக்கு இழிவல்லவா என்று கேட்டால் , கம்பனே பதிலும் சொல்லுகின்றான். அந்நாட்டிலே வறுமை இல்லையே.
வறுமை இல்லாத நாட்டிலே வள்ளற் தன்மை எப்படி இருக்கும் என்று எங்களிடமே கேட்டு விடுவது போல பதில் சொல்லுகிறான் கம்பன். கோசல நாட்டிலே வீரம் இல்லை என்கிறான் கம்பன். ஒரு நாட்டின் சிறப்பிலே வீரம் முக்கியமானதல்லவா. வீரம் இல்லாத நாடும் ஒரு நாடா என்று கேள்வி கேட்டால் கம்பன் அதற்கும் பதில் சொல்கிறான்.
அந்நாட்டோடு எதிர்த்துப் போர் செய்ய நாடில்லையே, எப்படி வீரம் வெளிப்படும் என்கிறான் கம்பன்,
அந்த நாட்டு வீரர்களோடு யாராவது வந்து எதிர்த்துப் போர் செய்தாற்தானே அந்நாட்டு வீரர்களின் வீரம் வெளிப்படும். அதனால் வீரம்
இல்லை என்கிறான் கம்பன்.

Page 55
இலக்கியச் சரபம் -80
எதிர்த்துப் போர் செய்ய யாரும் இல்லாத நாடாகக் கோசல நாடு
இருப்பது, நாட்டின் சிறப்பையும் நாட்டின் வீரத்தையும் காட்டுகிறதல்லவா. எனவே வீரம் இல்லை என்று சொல்லி பெரும் வீரத்தைக் காட்டி விட்டான்
5 DL66.
கோசல நாட்டிலே உண்மையே இல்லை என்கிறான் கம்பன். இராமன் பிறந்த நாட்டிலே ‘உண்மையே இல்லை என்றால் எப்படி அது நாட்டுக்குச் சிறப்பாகும் என்று கேட்டால் , கம்பன் பதில் சொல்கிறான்.
அந்த நாட்டிலே, பொய் சொல்லுபவர் யாரும் இல்லை. பொய்யே
இல்லாத நாட்டில் உண்மை என்ற வார்த்தைக்கே இடமில்லையே என்கிறான்.
அந்தக் கோசல நாட்டில் அறிவுடைமை என்பது இல்லையாம். ஏனெனில் எல்லோரும் கல்வி கேள்விகளிலே சிறந்திருக்கின்ற காரணத்தால் அறியாமை இல்லை அதனால் அறிவுடைமையும் இல்லை என்கிறான் கம்பன். இப்படிக் கம்பன் வகுத்த வழியில் பிற்காலப் புலவர்கள் பலர் வீறு நடை போட்டிருக்கிறார்கள். அப்படிக் கம்பனைப் பின்பற்றி, புலவர்கள் சிலர்
பாடிய நாட்டு வளக் காட்சிகள் சிலவற்றை இனிக் காண்போம்.
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூல் திரிகூடராசப்பக் கவிராஜர் என்ற புலவரால் பாடப்பெற்ற சிறந்த ஒரு பிரபந்தமாகும்.
கடந்த மூன்று நூற்றாண்டுகளில் வெளிவந்த பிரபந்தங்களுள் மிகவும் சிறந்த பிரபந்தம் என்று சொல்லத்தக்க பெருமை வாய்ந்தது. திருக்குற்றாலக் குறவஞ்சியாகும். இது ஐரோப்பியர் காலத்து நூலென்பர் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள். (கி.பி. 18-19)
இப் பிரபந்தத்தில் திருக்குற்றாலத்தின் வளத்தையும், இயற்கை அழகையும், பெருமையையும், திரிகூட ராசப்பக்கவிராஜர் சொல்லுகின்ற பாங்கே அலாதியானதுதான்.
அவரது கற்பனை எல்லை மீறிப் பாய்ந்து படிப்போர் உள்ளத்தை நிரப்பி விடுகின்றது. அவரது கற்பனைச் சிறப்போடு கலந்த நாட்டுவளப்
பாடல்களைப் பார்ப்போம்.

-81 - அகலாங் கர்ை நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல் தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே. அந்த நாட்டில் வாழும் எவரும் வாழ வழியின்றி வாழ்வு தேடி அந்த நாட்டை விட்டு நீங்கிச் செல்வதில்லை.
அந்த நாட்டை விட்டு நீங்க வேண்டிய தேவை எதுவுமே அந்நாட்டில் வாழ்பவர்க்கில்லை. அதனால் அந்த நாட்டிலே நீங்கிப் போகக் காண்பதாயின் பாவங்களைத் தான் சொல்லலாம்.
மக்களைச் சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தான் மக்களை விட்டு , நாட்டை விட்டு நீங்கிச் செல்கின்றன என்கிறார் புலவர்.
எங்களின் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுச் சிந்தித்தால் தான் திருக்குற்றால நாட்டின் சிறப்பு இன்னும் தெளிவாகும். இங்கே அடிக்கடி வீட்டை விட்டு , ஊரை விட்டு , நகரை விட்டு , நாட்டை விட்டு ஏன் உலகை விட்டே நீங்கிப் போகின்ற மக்களைப் பார்த்துப் பழகிவிட்ட எங்களுக்கு இந்த வரியின் அர்த்தம் நன்றாகவே புரியுமல்லவா.
“பதி எழு அறியாப் பழங்குடி’ எனச் சிலப்பதிகாரத்திலே ஒரு வரி வருகின்றது. நாட்டுச் சிறப்பிலே ஒன்று, மக்கள் இடம் பெயர்ந்து செல்லாமல் சொந்த நாட்டிலேயே நீண்ட காலம் வாழ்வதாகும்.
இதனையே இப்பாடலிலும் முதற் சிறப்பாக, மக்கள் எவரும் எக்காலத்திலும், எக்காரணத்தினாலும், அந்த நாட்டை விட்டு நீங்கிச் செல்லார்கள். அதனால், நீங்கிச் செல்வதைக் காண வேண்டுமாயின் மக்களின் பாவங்கள் நீங்கிச் செல்வதைத்தான் காணமுடியும் என்கிறார்.
பாவங்கள் மக்களை விட்டும், நாட்டை விட்டும், நீங்கிச் செல்வது சிறப்பான செயல் தானே. எனவே நீங்கக் கூடாததையும் , நீங்க வேண்டியதையும் சேர்த்து “நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்' எனச் சிறப்பாகப் பாடியுள்ளார்
||സെഖT.

Page 56
இலக்கியச் சரபம் -82
அடுத்து , அந்த நாட்டிலே யாருக்கும் யாராலும் எந்த நெருக்கடிகளும் இல்லை. அந்த நாட்டிலே நெருங்கி இருக்கக் காண்பது கரும்புகளும் செந்நெல்களும் தான், என்று அழகாகக் கூறுகிறார் நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல் என்பது அவரது வரி,
அந்த நாட்டிலே சோம்பேறிகளே இல்லை. தூங்குபவர்களைக் காணவே முடியாது. எந்தக் காரியமும் கிடப்பில் போடப்படுவதில்லை. அவ்வப்போது அந்தந்தக் காரியங்கள் சுறுசுறுப்பாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. அந்த நாட்டிலே நீதி தூங்குவதில்லை. நியாயம் தூங்குவதில்லை தர்மம் தூங்குவதில்லை.
இப்படி தூங்கக் கூடாதவை எவையும் தூங்குவதே இல்லை. தூங்க வேண்டியவை மட்டுமே தான் தூங்குகின்றன. என்ன தூங்குகின்றன என்றால் ஒரு உதாரணத்திற்காக, மாம்பழங்கள் தான் குலைகுலையாகப் பழுத்துத் தூங்குகின்றன என மகிழ்ச்சியோடு காட்டுகிறார் புலவர், தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து என இதனைக் குறிப்பிடுகிறார்.
அங்கே யாரும் மனம் வாடிச் சுழன்று வருந்துவதில்லை. அலைவதில்லை. உறுதியான மனம் , உறுதியான சிந்தனை, கலக்கமில்லாத அறிவு கொண்டவர்கள் அந்நாட்டு மக்கள். அதனால் சுழல்கின்றது என்று சொன்னால் தயிர் கடையும் மத்தைத்தான் காட்ட முடியுமே தவிர வேறெதையுங் காட்ட முடியாதாம். அதனால் “சுழலக் காண்பது பூந்தயிர் மத்து’ என்கிறார் Lേf.
கட்டுப்பாட்டையும் மீறிப் பெருத்திருப்பவை மங்கையரின் கொங்கைகள் தான். வேறு எதுவுமே இல்லை என்கிறார் புலவர்."வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை” மட்டுமே தான். பணவீக்கம் இல்லை.ஒரு சிலர் மட்டும் பெரும் பணக்காரராகவும் பலர் ஏழைகளாகவும் இருக்கின்ற நிலையும் இல்லை. சமூகத்திலே தேவையற்ற வீக்கம் இல்லை.
அந்தக் குற்றால நாட்டிலே “வெடிக்கக் காண்பது” வீட்டுத் தோட்டத்திலே உள்ள முல்லை மொட்டுக்களையேயன்றி வேறில்லை, என்கிறார் Lേi.
எங்கள் நாட்டில் வெடிக்க துப்பாக்கிகள் , செல்கள் , கண்ணி வெடிகள் என எத்தனை கொலைக் கருவிகள் உள்ளன என்பதையும், குற்றாலநாட்டில் வெடிக்க இருப்பவையும், வெடிப்பவையும் தோட்டத்து முல்லை
*

-83- அகளங் கனர் மொட்டுக்கள் மட்டுமே தான் என்பதையும் ஒரு சேர நினைத்துப் பார்க்கும் போது , எமது நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று வெடிப்பதை உணர முடிகிறதல்லவா. இதயந்தான் வெடிக்கிறதோ .
அந்த நாட்டிலே ஒலி எழுப்பிப் புலம்பக் காண்பது மங்கலப் பேரிகையைத்தான். மக்களிலே யாரும் கலங்கி அழுகின்ற அமங்கல ஒலியை அந்த நாடு அறியவே அறியாது. அமங்கல வாத்தியக் கருவிகளின் ஒலியையும், அந்நாட்டிலே கேட்க முடியாது என்கிறார் புலவர்.
ஏங்க என்று நேரடிப் பொருள் கொண்டாலும் , அங்கு மக்களுக்கு எந்த ஏக்கமும் இல்லை என்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது. திருக் குற்றால நாட்டிலே ஏங்கக் காண்பது மங்கல பேரிகை மட்டும் தான். வேறொன்றும் இல்லையாம்.
ஏக்கமும் , கலக்கமும் அழுகுரலும் மாறாத எம் பகுதி மக்களின் வாழ்வோடு , அதாவது தற்கால நம் நாட்டு நிலையோடு, இந்தக் குற்றால நாட்டின் சிறப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் உள்ளம் கொதிக்கின்றதல்லவா.
இப்பாடலை மட்டுமல்ல, இன்னொரு பாடலையும் இதே போன்ற வகையிலே பார்த்து, திரிகூட ராசப்பக்கவிராஜரின் கற்பனையை ரசிப்போம்.
ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுழைச் சங்கு போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே அந்த நாட்டிலே மக்கள் எவரும் இடம் புெயர்ந்து, துன்பப்பட்டு ஓடுவதில்லை. ஓடக் காண்பது பூக்களை ஆடையாகக் கொண்ட புது வெள்ளத்தைத் தான்.
எவருக்கும் எந்த விதமான ஒடுக்கமும் இல்லை. பரிபூரண சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள்.
எங்கும் போகலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எந்த அடையாள அத்தாட்சியும் தேவையில்லை. மக்கள் யாரும் ஒடுக்கப்படுவதில்லை. மக்கள் யாரும் ஒடுங்கியிருப்பதுமில்லை. அந்த நாட்டிலே ஒடுங்கி இருக்கக் காண்பது

Page 57
இலக்கியச் சரபம் -84யோகியரின் உள்ளம் மட்டுமே தான். அது அவர்களின் சுய கட்டுப்பாட்டால் இறை சிந்தனைக்காக ஒடுங்கியிருக்கும்.
அந்த நாட்டில் அழகிய பெண்களின் இடை தான் மெலிந்து காணப்படும். மக்கள் யாருக்கும் மன வாட்டமோ, மெலிவோ இல்லை. பெண்களுக்குச் சிறுத்திருக்க வேண்டிய ஒரு உறுப்பு இடை என்று சாமுத்திரிகா இலட்சணம் கூறுகின்றது. அதனால் சிறுத்து மெலிந்திருக்கும் இடை பெண்களுக்கு அழகையே கொடுக்கின்றது. இதனையே “வாடக் காண்பது மின்னார் மருங்குல்' என்றார்.
அந்த நாட்டிலே வருந்துபவர்களைக் காணவே முடியாது. அப்படிக் காணவேண்டுமென்றால் கருக்கொண்ட சங்குகள் முத்துக்களை ஈனுவதற்காக வருந்தியிருக்கும் காட்சியைத் தான் காணலாம். பெண்களுக்கு பிரசவ காலத்தில் இயல்பாக ஏற்படும் வருத்தம் கூட அந்த நாட்டில் இல்லையாம். எல்லாம் சுகப் பிரசவங்கள் தானாம். இதனையே வருந்தக் காண்பது சூலுழைச் சங்கு என்கிறார்.
பூமியிலே போடக் காண்பது வித்துக்களைத் தான். வேறெதையும் போடக் காண முடியாது. இன்று மக்கள் தமது சொத்துக்களைப் போட்டு விட்டு ஓடுகின்ற காட்சிகள் எம் உள்ளத்தை வருத்துகின்றனவல்லவா. அத்தகைய துன்பங்கள் அந்நாட்டில் இல்லை.
இந்துக்களின் மரணச் சடங்கிலே, சுடுகாட்டில் குடத்தைப் போட்டு விட்டுக் கொள்ளி வைத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகின்ற காட்சியைக் காணலாம். அப்படிக் குடத்தைப் போட்டு விட்டால் எல்லாம் முடிந்து விட்டது இனி ஒன்றும் இல்லை என்று ஆகிவிடும். இராவணன் யுத்த களத்தில் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கதாகக் கம்பன் காட்டும் பாட்டிலும் போட்டு என்ற சொல்லின் நயத்தை உணரலாம். சுடுகாட்டில், குடத்தைப் போட்டு விட்டுக் கொள்ளி வைத்து விட்டுச் செல்லும் போது, கொள்ளி வைத்தவர், கையில் ஒரு கத்தியைக் கொண்டு செல்வார். திரும்பிப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்து நடந்து செல்வார்.
இராவணன் அதை விடக் கேவலமாக கையில் கத்தி கூட இல்லாமல் குனிந்த தலையோடு, திரும்பிப் பார்க்க முடியாதவனாகி அவமான்த்தோடு, இலங்கை நகருக்குச் சென்றான். என்பது போட்டு என்ற சொல்லால் கிடைக்கும் இலக்கிய நயம்,

-85- அகளங் கனர் குற்றால நாட்டிலே அத்தகைய துன்பம் யாருக்கும் இல்லை. இன்று நம் நாட்டிலே போடக் காண்பது "பம்பரில் குண்டு’ என்று பாடலாம் போல் தோன்றுகின்றதல்லவா.
ஒலி எழுப்பிப் புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்துக்களே அல்லாமல், மனிதர் யாரும் துன்பத்தில் புலம்பும் காட்சியைக் காணவே முடியாது என்கிறார் புலவர். அந்த நாட்டில் அமங்கல ஒலியே இல்லை. மணி ஒலியாகிய மங்கல ஒலி மட்டுமே தான் உண்டு.
அடுத்து , அந்த நாட்டில் மக்கள் தேடுவது நல்ல அறநெறிகளையும் புகழையுமே அல்லாமல் செல்வத்தையோ , வேறெதையுமோ அல்ல என்கிறார். செல்வம் நிரம்பியிருக்கின்றது. நிம்மதி நிம்மதியாக இருக்கின்றது. சுதந்திரம் சுதந்திரமாக இருக்கின்றது.
எங்கள் நாட்டில் எத்தனை தேடுதல்கள் என்று எண்ணிப் பார்த்தால் இதன் அர்த்தம் இலகுவாகப் புரியும்.
இந்தக் குற்றாலக் குறவஞ்சிப் பாடல் போல் முக்கூடற்பள்ளு என்ற பிரபந்தத்திலும் சில அற்புதமான பாடல்கள் நாட்டு வளப் பாடல்களாக, நாட்டின் பெருமை கூறும் பாடல்களாகக் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு பாடல்களை இனிக் காண்போம். முக்கூடற் பள்ளு.
திருக்குற்றாலக் குறவஞ்சியும் முக்கூடற் பள்ளும் ஒரே காலத்தன என்பர் இலக்கிய வரலாற்று அறிஞர்.
பள்ளுப் பிரபந்தங்களிலே தலை சிறந்த பள்ளு எனப் போற்றப்படுவது இது. கி.பி. 18-19 ஆம் நூற்றாண்டுக் காலமாகிய ஐரோப்பியர்காலத்தில் என்னயினாப் பிள்ளை என்பவர் இந்நூலை இயற்றினார் என்று, டாக்டர்.சி.பாலசுப்பிரமணியம் தமது ‘இலக்கியக் காட்சிகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். முக்கூடற் பள்ளு நூலில் ஆசூர் நாட்டு வளம் ஒன்றை முதலில் பார்ப்போம்.
கறைபட் டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட் டுள்ளது
கம்பத்து வேழம்

Page 58
இலக்கியச் சரபம் -86
சிறைபட் டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட் டுள்ளது நெய்படும் தீபம் குறைபட் டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு மறைபட் டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை ஆசூர் வடகரை நாடே. வெள்ளை நிறமான கலைகளைக் கொண்டுள்ள சந்திரன் தான் கறை (களங்கம்) பட்டுள்ளது. சந்திரனில் மான் , முயல் போன்ற வடிவங்களிலும் குழந்தைகளுக்குக் காட்டுவது போல, ஒளவைப் பாட்டியின் வடிவிலும் பிரகாசம் குறைந்த பகுதி காணப்படுகின்றது.
இதனை சந்திரனில் ஏற்பட்ட களங்கமாக நெடுங்காலமாகச் சொல்லி வருகிறார்கள், இன்றைய விண்வெளி ஆராய்ச்சியாளர் , அந்தப் பிரகாசக் குறைவுக்குக் காரணம், சந்திரனிலுள்ள பள்ளத் தாக்குகள் என்கின்றனர்.
எப்படியிருந்த போதும் சந்திரனில் கறை , களங்கம் இருப்பது உண்மையே. இதனையே கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள் என்கிறார் புலவர்.
மக்களில் யாரும் களங்கப் பட்டவர்களில்லை. ஒழுக்கக் குறைபாடாகிய களங்கம் - கறை அந்நாட்டு மக்களிடம் இல்லை. களங்கத்தை - கறையைக் காணவேண்டுமென்றால் , சந்திரனைத் தான் பார்க்க வேண்டும் என்கிறார்.
செருக்குடைய யானைகள் தான் மதம் பிடித்து நிற்கின்றன. அவையும் கம்பங்களிலே கட்டப்பட்டுத் தான் நிற்கின்றன. மக்கள் யாருக்கும் செருக்கு (கடம்) ஏற்படுவதில்லை. அதனோடு மக்கள் யாரும் கடன் (கடம்) பட்டு வாழ்வதில்லை.
"கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பராமாயணத்து இடைச் செருகற் பாடலடியில் , கடன் பட்டவரின்
நெஞ்சம் எப்படிக் கலங்கும் என்பதைக் காண்கின்றோம்.
 

-87. அகளங் கனர் மக்கள் கடன் பட்டால் வாழ்வு கலக்கம் உள்ளதாக , துன்பமுள்ளதாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் கடன் (கடம்) பட்டு வாழ்வதில்லை. கடம் பட்டுள்ளது கம்பத்து வேழம் மட்டுமே தான் என்கிறார் புலவர்.
ஆகாயத்தை நோக்கி எழுந்து பறக்கும் பறவை தான் (சிறை) சிறகுகளைக் கொண்டுள்ளது. “சிறை(சிறகு) பட்டுள்ளது விண்ணெழும் புள்' மட்டுமே தான். மக்கள் யாரும் சிறையில் இல்லை.
குற்றவாளிகள் இல்லாததால் சிறையும் இல்லை. சிறை என்ற சொல் சிறகு என்ற பொருளில் மட்டும் தான் கையாளப்படும். அத்தனை சிறப்பு அந்நகருக்குண்டு.
நெய் ஊற்றி எரிக்கப்படும் தீபம் மட்டுந்தான் திரிபட்டுள்ளது. திரியைக் கொண்டுள்ளது. மக்கள் மனம் திரிவுபட்டிருக்கவில்லை என மக்களின் மனச் செம்மையையும் , ஒழுக்க மேம்பாட்டையும் காட்டுகிறார் புலவர்.
அந்த ஆசூர் என்னும் வடகரை நாட்டிலே எவருக்கும் அங்கக் குறைவோ , ஆதனக்குறைவோ , நிம்மதிக் குறைவோ , மற்று எந்தக் குறைவும்இல்லை. எல்லாம் நிறைவாகவே இருக்கின்றது.
ஆனால் குறைபட்டுள்ளது ஒன்றுண்டு. அதுதான் அம்மி. அம்மியைக் கொத்திச் சிறு சிறு பள்ளங்களாகச் செய்திருப்பார்கள் கம்மியர்கள். அந்த அம்மிகள் தான் குறைபட்டுள்ளது.
கொடிகளும் , கிளைகளும் தான் குழைகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது குழைபட்டுள்ளது வல்லியம் , கொம்பு என்பவையே.மக்கள் யாரும் குழைவு கொண்டு அஞ்சிப் பணிந்து கூழைக் கும்பிடு போட்டு வாழ்வதில்லை. அந்நாட்டிலே மறைந்துள்ளது செய்யுட்களிலே அரும் பொருட்களே அன்றிவேறெதுவும் இல்லை. ஏனைய பொருட் செல்வம் எதுவும் பதுக்கப்பட்டு மறைக்கப்படுவதில்லை. மறைக்கப்பட்டிருக்க வேண்டிய தேவையும் இல்லை. பயமும் இல்லை. என நாட்டு வளம் கூறிப் பின்னும் கூறுகிறார்.
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம் மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது
வான்சுழி வெள்ளம்

Page 59
இலக்கியச் சரபம் -88
சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்
தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம் தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே இது தென்கரை நாட்டின் சிறப்பை விளக்கிப் பாடப்பட்டுள்ள பாடல். இப்பாடலின் சிறப்பையும் புலவரின் கற்பனையையும் முன்பு பார்த்த பாடலின் அடிப்படையில் பார்ப்போம்.
அந்த நாட்டிலே காயக் கண்டது சூரிய காந்தியைத் தான். சூரிய காந்தி மலர், தானே விரும்பிச் சூரியன் போகும் திசைக்குத் திரும்பிச் சூரியனைப் பார்த்து வெய்யிலிலே காய்ந்து கொண்டு நிற்கும் காயும் காட்சியாக, அந்த அழகிய காட்சியை மட்டும் தான் அந்நாட்டிலே காண முடியும்.
மக்களின் வயிறு காய்வதையோ , மக்களின் நெஞ்சங்கள் காய்வதையோ (கோபித்தல்) காண முடியாது. இன்று எம் நாட்டில் மக்கள் எத்தனை காய்ச்சலோடு வாழ்கிறார்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். எத்தனை தேவைகளுக்காக வரிசையாக நின்று வெய்யிலில் காய்கிறோம். என்பதை எண்ணிப்பார்த்தால் தான் இதன் அர்த்தம் இன்னும் புரியும்.
வெண்மையான தயிர்க்கட்டிகள் மத்தினால் கடையப்படும் போது கலங்குகின்ற காட்சியைத் தான் அந்நாட்டில் காணமுடியுமே தவிர, மக்கள் யாரும் எதற்காகவும் கலங்குவதைக் காணவே முடியாது. இதனையே கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம் என்கிறார் புலவர்.
நாழிகை, வாரம் என்பவை தான் அழிந்து போகக் காணக் கூடியவையே. அல்லாமல் , நல்லவைகள் எவையும் அழிந்து போகின்ற காட்சியை அந்நாட்டிலே காண முடியாது. மக்கள் பசியாலோ, வேறுகொடுமைகளாலோ மாய்ந்து (அழிந்து) போவதைக் காணவே முடியாது என்பதை “மாயக் கண்டது நாழிகை வாரம்” என்ற வரியினால் விளக்கியுள்ளார் L|സെഖf.
மழை வெள்ளம் பாயும் போது சுழித்து மறுகுதலைத்தான் அந்நாட்டிலே காணமுடியுமே தவிர , மக்கள் யாரும் மறுகுதலை (துன்பப்படுதலை)க்காணவே முடியாது. 'மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்” மட்டுமே தான்.
 

-89- அகளங் கனர்
அந்நாட்டில் மக்களின் வயிறு காய்ந்து , அதனால் மக்கள் சாய்ந்து போகின்ற காட்சியைக் காணமுடியாது. மக்கள் தலை சாய்ந்து அவமானத்தோடு, கவலையோடு செல்வதைக் காணமுடியாது. அப்படிச் சாயக் கண்டது செந்நெல் கதிர் சாய்ந்து இருக்கின்ற காட்சியைத் தான். அதாவது சாயக் கண்டது காய்குலைச் செந்நெல் மட்டுமே.
தனித்திருக்கக் கண்டது, முனிவர்களின் உள்ளத்தைத் தான். மனிதர்கள் யாரும் துணையின்றித் தனித்திருக்கும் காட்சியை அந்நாட்டிலே காணவே முடியாது.
கணவனைப் பிரிந்து மனைவியோ , தந்தை தாயைப் பிரிந்து பிள்ளைகளோ, எந்த வகைப் பிரிவுகளாலும் எவருக்கும் தனிமை இல்லையாம் அந்த நாட்டில், நினைக்க மனம் இனிக்கிறதல்லவா.
முனிவர்களின் உள்ளம் தனித்த ஒரு சிந்தனையோடு , தியானத்தில் ஒன்றிப் போவது சிறப்புத் தானே. எனவே “தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்” எனச் சிறப்பாகக் கூறினார்.
அந்த நாட்டில் தேய்ந்து போகக் கண்டது, உரைத்திடும் (அரைத்தல்) சந்தனத்தைத் தான். நல்லறம், நீதி, முதலியவைகளும் , செல்வம், மகிழ்ச்சி முதலியவைகளும் தேய்ந்து போவதை யாரும் கண்டதில்லை. உரைத்திடும் சந்தனக் கட்டை தேயக் காணலாமே அல்லாமல் உரைத்திடும் செய்யுட்களிலே பொருள் தேய்வுபடுதலையும் காணமுடியாது.
இத்தகைய பெருமைகளைக் கொண்டது சீவல மங்கைத் தென்கரை நாடு என்று இந்நூலாசிரியர் அற்புதமாக நாட்டுவளம் கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து இத்தகையதொரு உத்தியைப் பயன்படுத்தி புகழேந்திப் புலவர் தனது நளவெண்பாவிலே நிடதநாட்டு மாவிந்த நகரின் சிறப்பைக் கூறும் பாடலைப் பார்ப்போம்.
நளவெண்பா
“வெண்பாவிற் புகழேந்தி’ எனப் போற்றப்பட்டவர் புகழேந்திப் புலவர். சோழர் காலப் பிற்பகுதியில் வாழ்ந்தவராகச் சொல்லப்படும் இப்புலவரின் நளவெண்பாவில் , கற்பனைச் சிறப்பு மிக்க பல பாடல்கள் காணப்படுகின்றன. புகழேந்திப் புலவர் நளமகாராஜனின் நாடாகிய நிடதநாட்டுச் சிறப்பைக் கூறிவிட்டு, அந்நாட்டின் தலைநகராகிய மாவிந்த நகரின் சிறப்பைப் பின்வருமாறு கூறுகிறார்.

Page 60
இலக்கியச் சரபம் -90
வெஞ்சிலையே கோடுவன மெண்குழலே சோருவன அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம் கலங்குவன மாளிகைமேல் காரிகையர் கண்ணே விலங்குவன மெய்ந்நெறியை விட்டு, மாவிந்த நகரத்தில் வளைந்திருப்பவை கொடிய விற்களே. செங்கோல் வளையாது. மக்களின் நெஞ்சுறுதி வளையாது. ஒழுக்கம் வளையாது. மக்களின் மனம் கோணாது. (வளையாது) அதனால் வெஞ்சிலையே கோடுவன என்றார்.
அந்நகரில் சோர்ந்து (தளர்ந்து ) இருப்பவை பெண்களின் மென்மையான கூந்தலேயன்றி வேறில்லை. மக்களின் மனம் சோர்வதில்லை. மனச் சோர்வு உடற் சோர்வு அந்நகர மக்களுக்கு இல்லை. என்பதை மெண்குழலே சோருவன என்றார்.
வாய்விட்டுப் புலம்பி ஒலிப்பன, பெண்களின் கால்களில் அணியப் பட்டிருக்கும் அழகிய சிலம்புகள் மட்டுமே தான். மக்கள் யாரும் அவலக் குரலில் புலம்பும் நிலை அந்த நகரில் இல்லை. இதனையே அஞ்சிலம்பே வாய்விட்டு அரற்றுவன என்றார் புகழேந்தி,
மனக் கலக்கம் மனிதர் யாருக்கும் இல்லை. தண்ணிர் மட்டுமே தான் கலங்கும் கஞ்சம் (தண்ணிர்) கலங்குவன.
மாளிகை மேல் இருக்கும் பெண்களின் கண்கள் தான் நேர்ப்பார்வையாகிய நெறியை விட்டு விலகுமேயன்றி, மக்களின் நெஞ்சம் மெய்ந்நெறியை விட்டு விலகுவதில்லை.
பெண் கள் காதலன் முன் னிலையிலும் , கணவன் முன்னிலையிலும் அவர்களது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க வெட்கப்படுவார்கள். அதனால் கணவன் அல்லது காதலன் தம்மைப் பார்க்காத நேரத்தில் தமது கண்களால் மறைவாக ஒரப்பார்வை பார்த்து மகிழ்வர்.
நானங் கலந்த இந்தப் பார்வையின் காரணத்தால், பெண்களின் கண்கள் மட்டுமே தான், மெய்யான பாதையை (நேரான பார்வையை) விட்டு விலகுமேயன்றி, மக்களில் வழி பிறழ்ந்தவர்களாக யாருமே இல்லை என்பதையே "மாளிகை மேல் காரிகையர் கண்ணே விலங்குவன மெய்ந் நெறியை
விட்டு’ என்கிறார் புகழேந்திப் புலவர்.
 

-91- அககாங் கனர்
இப்பாடல்களில் எல்லாம், எதிர்மறையாகவும் , உட்பொருள் வைத்தும் பாடி, நாட்டு வளம் , நகர் வளம் சொல்லப்பட்டுள்ளது.
நேரடியாக நாட்டு வளம் நகர்வளம் சொல்வது ஒரு வகை. “வெஞ்சிலையே கோடுவன” என்றால் கொடிய வில் தான் வளைந்துள்ளது என்பது நேரடிப் பொருள். வில் கொடியது தான். அது வளைவது தான் அதற்குச் சிறப்பு வில் வளைய வேண்டும். மற்றையவை வளையக் கூடாது என உட்பொருள் காணும் போது கவிஞனின் கற்பனையை வியந்து, கவிதை இன்பத்திலே ஆழ்ந்து விடுகின்றோம்.

Page 61
இலக்கியச் சரபம் -92நாட்டுச் சிறப்பு - 2
நாட்டுச் சிறப்பு , நகரச் சிறப்பு, என்பவற்றை, நேர்முகமாகச் சொல்வதிலும் கூட , சில புலவர்கள் தங்கள் கற்பனை வளத்தினால், படிப்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களிலே, புலவர்கள் காட்டுகின்ற நாட்டு வளத்தை விட , அவர்களது கற்பனை வளமே மேலோங்கியும் விடுகின்றது. இங்கே நாட்டு வளம் பற்றிய சில பாடல்களைப் புலவர்களின் கற்பனை வளத்தோடு
பொருத்திப் பார்ப்போம்.
வளையாபதி.
ஐம்பெருங்காப்பியங்களிலே வளையாபதியும் ஒன்று. இந்நூலை இயற்றியவர் யாரென்பது அறியப்படவில்லை. ஒரு சில பாடல்கள் மட்டுமே தான், தற்பொழுது கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அப்பாடல் நாட்டு வளம் கூறுவதாக அமைந்துள்ளது. அப்பாடலை முதலில் பார்ப்போம்.
செந்நெல் அங் கரும்பினோடு
இகலும் , தீஞ்சுவைக் கண்னல் அங் கரும்புதண்
கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண் கிலம்
என்று பூகமும் முன்னிய முகில் களால்
முகம் புதைக்குமே, வயல்களிலே பயிரிடப்பட்டுள்ள செந்நெல் ஆனது அருகிலே வளர்ந்துள்ள கரும்புகளோடு போட்டி போட்டு வளரும்.
சங்க இலக்கியமான புறநானூற்றிலே “கரும்பல்லது காடறியாத் தண்பணை நாடு’ என ஒரு வரி வருகின்றது. காடு என்பது கரும்புக் காடு
தான். வேறு காடில்லை என்பது அப்புலவர் காட்டுகின்ற நாட்டு வளம்.

-93
அதே போல, மருத நிலத்திலே காடாக இருப்பது கரும்பு தான். எனவே வயலிலேயுள்ள நெற்பயிர், அருகிலே வளர்ந்து செழித்திருக்கும்
அகளங் கனர்
கரும்புகளோடு மாறுபட்டுப் போட்டி போட்டு வளர்ந்துநிற்கும்.
அதனால் பார்ப்பவர்கள் நெல்லைப் பார்த்து, கரும்பு என்றே சொல்வார்கள். இப்படிச் சொல்வதைக் கேட்க, கரும்புக்குக் கோபம் வந்து விடும். அந்தக் கோபத்தின் காரணமாகக் கரும்பு மிகவும் பெருத்து உயர்ந்து வளர்ந்து நிற்கும்.
கரும்பு மிகவும் செழித்து உயர்ந்து நிற்கின்ற காட்சி எப்படியிருக்கிற தென்றால் , குளிர்ச்சி பொருந்திய கமுகமரங்களோடு கோபித்து, அக்கமுக மரங்களை வெற்றி கொள்வதற்காகவே உயர்ந்து வளர்ந்து நிற்பது போல
இருக்கும்.
கமுக மரங்களைப் போல, கரும்புகள் வளர்ந்திருப்பது , கமுக மரங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துமல்லவா. அப்படியென்றால் கமுகமரங்கள் இன்னும் மேலே வளர்ந்து அடுத்த நிலையாக, தென்னை மரங்களையோ , பனை மரங்களையோ வெற்றி கொள்ளவேண்டுமே, என்று நினைத்துக் கவிதையைத் தொடர்ந்து படித்தால், கவிஞரின் கற்பனை எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றது.
கமுக மரங்களுக்கு, தங்களை விஞ்சி , தங்களோடு போட்டி போட்டுக் கொண்டு கரும்புகள் வளர்வதைப் பார்த்துச் சகிக்கமுடியவில்லையாம் அப்படி ஒரு காட்சியை எம் கண்களால் நாம் எப்படிக் காண்பது என்று வெட்கப்பட்டு, முகில்களுக்குள் தங்கள் முகங்களைப் புதைத்துக் கொள்கின்றனவாம்.
அற்புதமான கற்பனையாக அமைந்த இப்பாடல், படிக்கும் தோறும் இன்பம் பயக்கின்றது. கமுக மரங்கள் மேலும் செழித்து வளர்ந்து முகில்களை முட்டுகின்றன என்று சொல்வதற்குப் பதிலாக முகில்களுக்குள் முகம் புதைக்கின்றன என்று காட்டிய விதம் ரசிக்கத் தக்க கற்பனை தானே.
அந்த நாட்டில் நெற்பயிர் கரும்பு போல வளர்கின்றது. கரும்பு கமுகு போல வளர்கின்றது. கமுகு முகில்களை முட்டும் வரை வளர்கின்றது. என்ற விடயத்தைத் தனது கற்பனை கலந்து அற்புதமாகப் பாடிய பெயரறியாப் புலவருக்குப் பாராட்டுக் கூறி, அடுத்த காட்சியைக் காண்போம்.

Page 62
இலக்கியச்சரம் -94அசீவகசிந்தாமணி.
சீவக சிந்தாமணி என்னும் நூல், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. ஐம்பெருங் காப்பியங்களில் மிகவும் சிறந்தது இதுவே என்று சில தமிழறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காவியப் பண்புகள் நிறைந்ததும், கற்பனைச் சிறப்பு மிகுந்ததுமான சீவகசிந்தாமணியைப் பாடியவர் , திருத்தக்க தேவர் என்னும் ஒரு சமணத் துறவியாவார்.
சீவகசிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் சிறப்பை, நாட்டு வளத்தை, திருத்தக்க தேவர் தனது கற்பனைச் சிறப்பினால் அற்புதமாகக் காட்டியுள்ளார். அக்காட்சியைக் காண்போம்.
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக்
கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி
வருக்கை போழ்ந்து
தேமாங் கணிசிதறி வாழைப்
பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே, தென்னை மரத்திலே இருந்து, பழுத்த தேங்காய் நெற்று, அதாவது தேங்காய்ப்பழம் விழுகின்றது. அந்தத் தேங்காய்ப்பழம் நேராகத் தரையில் விழவேண்டியது தானே. யாருடைய தலையிலாவது விழுந்து தொலைக்காமல் விட்டால் போதும், என்று தானே நாங்கள் நினைப்போம். அதே நினைப்புத் திருத்தக்க தேவருக்கும் வரவேண்டுமே.
திருத்தக்க தேவரின் கற்பனைப்படி அந்தத் தேங்காய்ப்பழம் தலையில் தான் விழுகின்றது. ஆனால் மனிதர்களின் தலையில் அல்ல. தென்னை மரத்திற்குப் பக்கத்திலே செழித்து வளர்ந்திருந்த கமுக மரத்தின் தலையிலே விழுகின்றது.
கமுக மரத்தின் உச்சியிலே தேனீக்கள் கட்டியிருந்த பூந்தேன் வதைகளைக் கீறிக் கிழித்துக் கொண்டு விழுகின்றது. இனியாவது அந்தத் தேங்காய்ப்பழம் தரைக்கு வரலாமே. வரவில்லை.

-95- அகளங்கண் கமுக மரத்தின் கீழே, பக்கத்தில் வளர்ந்து நிற்கின்ற பலாமரத்திலே பழுத்துத் தொங்குகின்ற பலாப்பழத்தில் வீழ்ந்து, அதனைப் பிளந்து கொண்டு விழுகின்றது.
சரி, இனியாவது தரையில் விழலாமே. ஊ.கூம் அதற்கு இன்னும் வேலையிருக்கின்றது. அந்தப் பலாமரத்தின் அடியில் மாமரம் ஒன்று காய்த்துக் கனிந்து போயிருக்கின்றது. அந்த இனிய மாம்பழங்களை அடித்துச் சிதறும் படி செய்கின்றது தேங்காய்ப்பழம்.
சரி, இனியாவது தரைக்கு வரலாமே. வரவில்லை. இன்னும் ஒரு கருமம் எஞ்சியிருக்கிறதாம் செய்வதற்கு மாம்பழங்கள் சிதறிவிழும் படியாகச் செய்து விட்டு, மாமரத்தின் அடியில் வளர்ந்து செழித்துக் குலை ஈன்று நிற்கின்றது வாழை மரம். அந்த வாழை மரத்தில் இருக்கும் பழுத்த குலையில் விழுகின்றது தேங்காய்ப்பழம்.
அதனால், வாழைப் பழங்கள் கீழே சிந்துகின்றன. இப்போது தான் தேங்காய்ப்பழமும் தரைக்கு வருகின்றது. இத்தகைய இயற்கை வளத்தினால் திசையெங்கும் புகழ் பரவியது ஏமாங்கத நாடு என்கிறார் புலவர்.
தேங்காய்ப்பழம், கமுக மரத்தின் உச்சியில் விழுந்து , தேன் தொடையைக் கீறி , பலாப்பழத்தைப் பிளந்து , மாங்கனியை விழுத்தி , வாழைப்பழங்களையும் சிந்தச் செய்த காட்சி அற்புதமான கற்பனை அல்லவா. தரைக்குத் தேங்காய்ப்பழம் வரும் போது, முக்கனியும் தேனும் கலந்து வந்து சேர்ந்திருக்கும். இத்தனை மரங்களும் உயரப்படி ஒன்றின் கீழ் ஒன்று ஒரே இடத்தில் அமைந்த சிறப்பு நீள்வள, நிலவளத்திற்குச் சிறந்த
எடுத்துக் காட்டல்லவா.
சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் எடுத்துக் காட்டிய கற்பனை பின்னால் திருக்குற்றாலக் குறவஞ்சியில், திரிகூட ராசப்பக்கவிராஜராலும்
எடுத்தாளப்பட்டது.
ததிருக்குற்றாலக் குறவஞ்சி.
திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற பிரபந்தத்தில், திரிகூடராசப் பக்கவிராஜர் , இதேபோன்று நாட்டு வளம் கூறுகின்ற நயமான கற்பனையைக்
காண்போம்.

Page 63
இலக்கியச்சரம் -96
சூழ மேதி இறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும்ப லாக்கனி வாழையிற் சாய வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல் தாழை சோறிட வாழை குருத்திடும்
சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே. எருமை மாடுகள் கூட்டங் கூட்டமாக நீர் குடிப்பதற்காக ஒரு ஆற்றின் இறங்கு துறையிலே இறங்குகின்றன.
நீர்த்துறையிலே இறங்கிய எருமை மாடுகளின் மடியில், வாளை மீன்களோ அல்லது விரால் மீன்களோ முட்டியிருக்கும். அப்படி முட்டிய அளவிலே, கன்றுகள் தான் தங்கள் மடிகளிலே முட்டுகின்றன என்ற நினைப்பு வந்திருக்கும்.கன்றுகளை நினைத்த அளவிலே அவ் எருமை மாடுகள் பாலைச் சொரியத் தொடங்கி விட்டன.
பொதுவாகவே எருமை மாடுகள் நீருக்குள்ளே பால் சொரிவதற்கு இதைத் தான் காரணமாகச் சொல்வார்கள் புலவர்கள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது தனிப் பாடல் ஒன்றிலே, சடையப்ப வள்ளலின் ஊராகிய திருவெண்ணெய் நல்லூரைப் புகழ்ந்து பாடும் போது “மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கண்றென்று வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே.” என்று வர்ணிக்கிறான்.
அதாவது, பெரிய எருமை தடாகத்திற்குச் செல்ல, அங்கே அதன் மடியை விரால் மீன் முட்ட , கன்று முட்டுவதாக நினைத்து வீடுவரை பாலைச் சொரிந்து கொண்டு வரும் என்று பாடுகிறான்.
இதே போல், சேற்றிலே கால் புதையுண்ட எருமை மாடு, கன்ை நினைத்துக் கனைக்க , பால் தானாகவே சொரியும் என்றும் கம்பன் தன: இராமாயணத்திலே பாடியுள்ளான்.
காலுண்ட சேற்று மேதி
கண்றுண்ணிக் கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப் பச்சைத்
தேரை தாலாட்டும் பண்ணை.

-97- அகளங்கண்
என்பது இக்கருத்து அமைந்த பாடற் பகுதி ஆகும்.
மேலும் கம்பன் , இராமாயணத்தில் கோசல நாட்டு வளம் கூறும் போதும் , எருமை மாடுகள் கன்றுகளை நினைத்துப் பால் சொரிகின்ற காட்சியை அற்புதமாகச் சொல்லியிருக்கிறான்.
ஈர நீர்படிந் திந்நிலத் தேசில
கார்க ளென்ன வருங்கரு மேதிகள்
ஊரி னின்றகண் றுள்ளிட மெண்முலை
தாரை கொள்ளத் தழைப்பன சாலியே,
என்பது கம்பனின் நாட்டு வளப்பாடல் ஒன்று. குளிர்ந்த நீரில் மூழ்கிக் கிடந்து, இந்தப் பூமியிலேயும் சில கருமேகங்கள் சஞ்சரிக்கின்றன. எனச் சொல்லும் படியாகத் திரிகின்ற கருநிற்ம் பொருந்திய பெரிய எருமைகளுக்கு, ஊரினின்றும் அகன்று மேய்ச்சலுக்குச் சென்ற காலத்தில் , ஊரில் பட்டிகளிலே விட்டு விட்டு வந்த கன்றுகளின் நினைவு வந்து விடுகின்றது.
கன்றுகளின் நினைவு வந்த அளவில் அவ்வெருமை மாடுகளின் மென்மையான முலைகள் தாரை தாரையாக மழை சொரிவது போலப் பாலைச் சொரிகின்றன. அப்படிச் சொரியப்பட்ட பால் வயல்களிலே சென்று சேர, வயல்களிலே நெற்பயிர் செழித்து வளர்கின்றன என்கிறான் கம்பன்.
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் காண வேண்டிய தேவையில்லை. பால்மூலமே நெற்பயிர் வளர்ந்து விடுகின்றது என்பது கம்பனின் கற்பனை.
திருக்குற்றாலக் குறவஞ்சியிலே எருமை மாடுகள் என்ன காரணத்தால் பால் சொரிகின்றன என்று புலவர் சொல்லவில்லை.
இக்காரணங்களை நாமே நினைத்துக் கொள்ளலாம். அல்லது எருமைகள் நன்றாகக் கொழுத்திருந்த காரணத்தினால் , அவை கன்றுகளுக்குத் தேவையான பாலை விட அதிக பாலை மடியிலே கொண்டுள்ளன. அதனால் அவை பாலை வைத்திருக்க முடியாமல் சொரிகின்றன. என்றும் கொள்ளலாம்.
எப்படிச் சொரிந்தாலும் காரியமில்லை. அப்படி எருமைகள் சொரிந்த ப்ாலை அந்த ஆற்றிலே வாழும் வாளை மீன்கள் பருகுகின்றன.
அப்படி எருமைப் பாலைக்குடித்த வாளை மீன் ஒன்று , புதுத் தெம்பு பெற்று உற்சாகமாகத் துள்ளிக் குதித்து மேலே பாய்கின்றது.

Page 64
இலக்கியச்சரம் -98
வாளை மீன்கள் இயல்பாகவே நீரின் மேலே துள்ளிப் பாயும் தன்மை
கொண்டவை. ஒட்டக் கூத்தர் சோழ நாட்டின் வளத்தைக் கூறும் போது , தண்ணீருக்குள்ளே அடங்கிக் கிடக்க விரும்பாத கோபங் கொண்ட வாளை மீன் , வேலியாக நிற்கும் கமுக மரத்தின் மேலே தாவி ஏறி, அங்கே இருந்து துள்ளி மழை முகிலைக் கிழித்து அங்கே தங்கி, பின் மழைத்துளிகளோடு பூமிக்கு வரும் நாடு சோழ நாடு என்கிறார்.
வெள்ளத் தடங்காச் சினவாளை
வேலிக் கமுகின் மீதேறித் துள்ளி முகிலைக் கிழித்துமழைத்
துளியோ டிறங்குஞ் சோணாடா, என்பது ஒட்டக் கூத்தர் பாடிய பாடற்பகுதி. எனவே சும்மாவே துள்ளிப் பாயும் இயல்பு கொண்ட வாளை மீன் , எருமைப் பாலைக் குடித்த உற்சாகத்தில் என்னதான் செய்யாது. அதனால் அது துள்ளிப் பாய்கின்றது. அந்த ஆற்றங்கரையில் கூழைப் பலாவில் பழம் பழுத்து வாசனைவிசிக் கொண்டிருக்கின்றது. அந்தப் பலாப்பழத்தில் சென்று முட்டுகின்றது வாளை மீன்.
பெருத்த பலாப்பழத்திலே வாளை மீன் பாய்ந்து மோதிய அளவில், அந்த பலாப்பழம் அருகிலிருந்த வாழை மரத்தில் விழுகின்றது. அதனால் வாழை மரம் சாய்ந்து போய் பக்கத்திலே இருந்த தாழை மரத்திலே சரிகின்றது.
இப்போது என்ன நடக்கிறதென்றால், வாழை இலை. ஆற்றங்கரையில் விரிந்து விழுந்து கிடக்கின்றது. அதன் மேலே தாழையின் சோறுகள் கொட்டுண்டு குவிந்து நிரம்பிக் கிடக்கின்றன. அதற்கு மேலே வாழைப்பழங்களும், பலாச்சுழைகளும் கிடக்கின்றன.
இந்தக் காட்சி எப்படி இருக்கின்றதென்றால் , வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு உணவளித்து , உபசரிப்பதற்காக வாழைக் குருத்திட்டு சோறு படைத்து, பலாப்பழச் சுளைகள் , வாழைப் பழங்கள் என்பனவற்றையும் வைத்திருப்பது போல இருக்கின்றதாம்.
வாளை மீன் செய்த செய்கை எத்தகைய அற்புதமான காட்சியாக இருக்கின்றது பாருங்கள். திரிகூடராசப்பக்கவிராஜரின் இந்தக் கற்பனையோடு

-99- அகளங்கண் நம் நாட்டு, சின்னத்தம்பிப் புலவர் தனது பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூலிலே, ஈழ நாட்டு இயற்கை வளத்தைக் காட்டுகின்ற காட்சியைக் காண்போம்.
பறாளாய் விநாயகர் பள்ளு
ஈழத்தில் வாழ்ந்த சிறந்த புலவர்களில் சின்னத்தம்பிப் புலவரும் ஒருவர். அவர் பாடிய பறாளாய் விநாயகர் பள்ளு என்ற நூல் கற்பனை நயம் மிக்க சிறந்த பாடல்களைக் கொண்டது . அந்தப் பறாளாய் விநாயகர் பள்ளு என்ற பிரபந்தத்தில் ஈழ நாட்டின் வளத்தை அற்புதமாக அவர் பாடியிருக்கிறார். அவரது பாடலொன்றைப் பார்ப்போம்.
மஞ்ச ளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல்மட வார்கணஞ் சூழும் அஞ்ச ரோருகப் பள்ளியின் மீமிசை
அன்ன வண்னக் குழாம்விளை யாடும் துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்க ளோடிப் பலாக்கனி கீறி இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய்விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே, ஈழ நாட்டிலே ஆகாயத்தை முட்டும் வண்ணமாக முகில்களைத் தொட்டு, முகில்களோடு அளவளாவுகின்ற உயர்ந்த மாடங்கள் காணப்படுகின்றன. அந்த மாடங்களிலே மயில்களைப் போன்ற பெண்களின் கூட்டம் சூழ்ந்திருக்கும். இது, செல்வச் செழிப்பைக் காட்டுகின்ற கற்பனையாகவும் , பெண்களின் அழகைச் சொல்லுகின்ற உவமையாகவும் அமைந்தது.
அழகிய தாமரைப் பூக்கள் நிரம்பிய பல தடாகங்கள் ஈழநாட்டிலே காணப்படுகின்றன. அந்தத் தடாகங்களிலே மலர்ந்திருக்கின்ற தாமரை மலர்களிலே, அழகிய வெள்ளை நிறமான அன்னக் கூட்டங்கள் விளையாடி மகிழ்கின்றன.
இது கண்ணுக்கு விருந்து படைக்கும் அழகான இயற்கைக் காட்சியின் வர்ணனை. அத்தோடு நல்லவைகளே , அழகானவைகளே எங்கும் நிரம்பியிருக்கின்றன, எனக் காட்டும் சிறப்பு மிக்கது.
அடுத்து நீர்வளம் , நிலவளம் பாடுகின்றார். எருமை மாடுகள் பெரிய தடாகத்திலே சென்று படுத்துக் கிடக்கின்றன. நித்திரைசெய்யும் எருமை மாடுகளில் , அந்தத் தடாகத்தில் வாழும் சுறாமீன்கள் (வாளை) சென்று முட்டி இடித்து விளையாடுகின்றன.

Page 65
இலக்கியச்சரம் -100
நிம்மதியாக நித்திரை செய்யும் எருமைகளுக்குத் தம்மைக் குழப்புகின்ற சுறாமீன்கள் மேல் கோபம் வந்து விடுகின்றது. அதனால் சுறாமீன்கள் மேல் கோபித்து வாலால் அடிக்கின்றன.
சுறாமீன்கள் , எருமைமாடுகளின் வாலடி படாமல் தப்பிப் பிழைப்பதற்காகத் துள்ளிப் பாய்கின்றன. அந்தத் தடாகத்தின் அருகில் உள்ள பலாமரத்திலே பலாப்பழங்கள் பிடுங்குவாரின்றிப் பழுத்துத் தொங்குகின்றன. அந்தப் பலாப்பழங்களைக் கீறிக் கிழித்துக் கொண்டு செல்கின்றன சுறாமீன்கள். பலாமரங்களுக்குப் பக்கத்திலே இஞ்சிச் செடிகள் முளைத்து நிற்கின்றன. அவற்றுக்கு வேலியாக மஞ்சட் செடிகள் நிற்கின்றன. அந்த மஞ்சட் செடிகளிலே சென்று விழுகின்றன சுறா மீன்கள்.
தடாகத்தின் சிறப்பு , அதன் கரையிலே பலாமரம், இஞ்சிச் செடி , மஞ்சட் செடி என்பன வளர்ந்திருக்கின்ற வளம் என்பவற்றை அமைத்து, ஈழநாட்டின் சிறப்பைச் சின்னத்தம்பிப்புலவர் தனது கற்பனையால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றார் அல்லவா.
இனி முக்கூடற் பள்ளு என்ற பிரபந்தத்திலிருந்து இரண்டு பாடல்களை கற்பனை இன்பம் காண்பதற்காகப் பார்ப்போம். முக்கூடற் பள்ளு
மிகவும் உயரமாக வளர்ந்து நிற்கின்றது தென்னை மரம். அந்தத் தென்னை மரத்திலே ஏராளமான , பெரிய இளநீர்களைக் கொண்ட குலைகள் தொங்குகின்றன. அதனால், தென்னை மரத்தினால் அக்குலைகளைத் தாங்குவது கவஷ்டமாகி விடுகின்றது.
கொடிக்குக் காய் பாரமில்லைத் தான். இருப்பினும் சில சமயங்களில் மாமரக் கிளைகள் காய்ப்பாரத்தில் முறிந்தும் போகின்றன அல்லவா.
தென்னை மரத்தினால் தனது குலைகளைத் தாங்க முடியாது போனால், அதற்காகத் தென்னை மரம் வருந்துவதில்லை. ஏனெனில் அருகிலே அடர்ந்து வளர்ந்து உயர்ந்துள்ள கமுக மரங்கள் இளநீர்க் குலைகளைத் தம் தலை கொடுத்துத் தாங்குகின்றன.
கமுக மரங்களில் ஏராளமான , பெரிய பாக்குக் குலைகள் தொங்குகின்றன. கமுக மரங்கள் இளநீர்க் குலைகளைத் தம் தலைகளாற் தாங்குவதால் , கமுக மரங்களில் தொங்குகின்ற பாக்குக் குலைகள் அவற்றுக்குப் பாரமாகி விடுகின்றன.

-101- sessms assor இருப்பினும் அதற்காகக் கமுக மரங்கள் கலங்குவதில்லை. ஏனெனில் கமுக மரங்களின் அருகில் அதன் கீழே வளர்ந்துள்ள மா மரங்களின் கிளைகள் பாக்குக் குலைகளைத் தாங்கிச் சுமந்து கொள்கின்றன.
மாமரங்களிலும் நிறையக் காய்கள் காய்த்துள்ளன. அவை கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. மாமரங்கள் பாக்குக் குலைகளோடு தமது மாம்பழக் கொத்து களையும் தாங்குவது சிரமமாகி விடுகின்றது. அதற்காக மாமரங்கள் வருந்துவதில்லை.
ஏனெனில் மாமரங்களின் அடியில் பலாமரங்கள் நிற்கின்றன. பலாமரங்கள் மாம்பழக் குலைகளைத் தாங்கிக் கொண்டு மாமரங்களுக்கு உதவி செய்கின்றன.
பலாமரங்களும் நிறையப் பழங்களைக் கொண்டுள்ளன. அதனால் பலாமரங்களுக்குத் தமது குலைகளைச் சுமப்பது சிரமமாகி விடுகின்றது.
இருப்பினும் பலாமரங்கள் துன்பப்படுவதில்லை. ஏனெனில் பலாமரங்களின் பலாக்கனிகளை அப்பலா மரங்களின் கீழே வளர்ந்துள்ள வாழை மரங்கள் தாங்கிக் கொள்கின்றன. வாழை மரங்களுக்கு பலாக்கனிகளைச் சுமப்பது வேதனை தான். இருப்பினும் சுமந்து கொள்கின்றன. அந்த வாழை மரங்களும் பெரிய குலைகளை ஈன்றுள்ளன. அதனால் வாழை மரங்களுக்குத் தங்கள் குலைகளையும் பலாக்கனிகளையும் ஒருங்கே சுமப்பது கஷடமாகி விடுகின்றது. இருப்பினும் வாழை மரங்கள் வருந்துவதில்லை.
ஏனெனில் வாழை மரங்களுக்குப் பக்கத்திலே வளர்ந்துள்ள மாதுளை மரங்களின் கிளைகள் வாழைக் குலைகளைத் தாங்குகின்றன. அதனால் வாழை மரங்களுக்குத் துன்பமில்லை.
எப்படி இருக்கின்றது நாட்டு வளக் கற்பனை. ஆசூர் வடகரை நாட்டு வளம் கவிஞரின் கற்பனையில் அற்புதமாக இருக்கின்றதல்லவா.
மீது யர்ந்திடும் தெங்கிள நீரை
மிடைந்த பூகஞ் சுமந்துதன் காயைச் சூத மொன்றிச் சுமக்கக் கொடுக்கும்,
சூதந் தண்கனி தூங்கும் பலாவில்

Page 66
இலக்கியச்சரம் -102
ஒதும் அந்தப் பலாக்கனி வாழை
உளுக்க வேசுமந்து ஒண்குலை சாய்க்கும் மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே. இந்தக் கற்பனையிலே உயர்ந்த உண்மையொன்று உட்பொருளாகக் கொள்ளப்படுகின்றது. மரங்கள் இப்படித் தமக்குள் ஒன்றின் சுமையை மற்றொன்று தாங்கிச் சுமந்து உதவுவது போலவே , மக்களும் ஒருவர் துயரை மற்றொருவர் தாங்கிக் காக்கும் அன்புடையவர்களாக வாழ்ந்தனர் என்பதே அது.
இதே போன்ற இன்னொரு நாட்டு வளப் பாடலையும் முக்கூடற்பள்ளுப் பிரபந்தத்தில் இருந்து பார்ப்போம். வடகரை நாடாகிய ஆசூர் நாட்டைப் பாடிய புலவர், தென்கரை நாடாகிய சீவல மங்கை நாட்டைப் பாடுகின்ற பாங்கைப் பார்ப்போம்.
வயலுக்குள்ளே வளர்ந்திருக்கும் தாமரையானது தனது தலையாகிய மலரை நீட்டி, வரம்பிலேவளர்ந்திருக்கும் இஞ்சியின் பச்சை இலையான பெரிய சடையினைத் தடவி விடும்.
அங்கே இருக்கும் இஞ்சியோ, அருகே இருக்கும் மஞ்சளின் கழுத்தை மெல்லத் தழுவிய வாறே தொடும். அந்த மஞ்சள், அங்கே தன் பக்கத்திலே அசைந்தாடி நிற்கும் காய்கதிர்களைக் கொண்ட செந்நெற் பயிருடன் அளவளாவிச் சுகம் விசாரித்து நிற்கும்.
அந்தச் செந்நெல்லோ, அதனையடுத்து வளர்ந்திருக்கும் செங்கரும்புக்குக் கை கொடுத்து நிற்கும். இப்படி, தாமரையும், இஞ்சியும், மஞ்சளும், நெல்லும், கரும்பும், அருகருகே வளர்ந்து, ஒன்றோடொன்று கலந்துமகிழ்ந்து ஆதரவாக வளர்கின்ற காட்சிக்குரிய கற்பனை நயம் செறிந்த முக்கூடற் பள்ளுப் பாடலைப் பார்ப்போம்.
பங்க யந்தலை நீட்டிக் குரம்பினில் பச்சை இஞ்சியின்
பார்சடை தீண்டும்.

-103- அகளங்கண் தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள்ளத் தொடுமந்த மஞ்சளர் அங்க சைந்திடும் காய்கதிர்ச் செந்நெல்
அளாவி நிற்குமச் செந்நெலு மப்பால் செங்க ரும்புக்குக் கைதரும் போல்வளர்
சீவல மங்கைத் தென்கரை நாடே. இத்தகைய இயற்கை வளக் காட்சிகள் புலவர்களின் கற்பனையை நன்கு தூண்டி விட்டு அற்புதமான பாடல்களுக்கு வழிசமைத்து விடுகின்றன. புகழேந்திப் புலவரின் தனிப் பாடல் ஒன்றில் மருத நிலத்து வளம் காட்டப்பட்டிருக்கும் ஒரு பாடலின் இரு அடிகளை மட்டும் பார்த்து இப்பகுதியை நிறைவு செய்வோம்.
புகழேந்திப் புலவர்.
வயலிலே உழவர்கள் உழவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வயல் வேலியில் நிற்கும் பலாமரத்திலே குரங்குகள் ஏறிப் பலாப்பழங்களைப் பறித்துத் தின்னுகின்றன.
அதைக் கண்ட உழவர்கள் , குரங்குகள் பலாக்கனிகளைத் தின்னாமல் கலைப்பதற்காக, எதையாவது எடுத்து எறிந்து கலைக்கலாம் என்று நினைக்கிறார்கள். தண்ணிர் கட்டி உழவு செய்து கொண்டிருக்கும் வயலிலே, எறியக் கூடிய தடிகள் எப்படிக் கிடைக்கும். மாட்டை அடிக்கின்ற கேட்டிக் கம்புகள் எறிவதற்குப் பயன்படா. கற்களும் கிடையா.
அதனால் குரங்குகளைக் கலைப்பதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கிறார்கள். இருக்கவே இருக்கின்றன சங்குகள்.
வயலுக்குள்ளே முத்துக்களை ஈனுகின்ற சங்குகள் , முத்துக்களை ஈன்ற பின்பு தண்ணிரிலே கிடக்கின்றன. கைக்களவான சங்குகளைண்டுத்து, பலாமரத்திலே இருக்கின்ற குரங்குகளை நோக்கி எறிகின்றார்கள்.
குரங்குகள் பயந்து போய் பலாமரத்தின் உச்சி வரை சென்று, அங்கே இருந்து தாவிப் பாய்ந்து அருகிலே உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்திலே ஏறிக் கொள்கின்றன.

Page 67
இலக்கியச்சரம் - 104
அப்படித் தென்னை மரத்திலே ஏறிய குரங்குகளுக்குக் கோபம் கோபமாக வருகின்றது. தங்களைப் பலாப்பழம் தின்னவிடாமல் சங்கால் எறிந்து கலைத்த உழவர்களுக்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு, இளநீரைப் பிடுங்கி உழவர்களை நோக்கி எறிகின்றன. உழவர்கள் என்ன செய்திருப்பார்கள். தங்கள் வயல் வேலைக் களைப்பு நீங்க, இளநீரைக் குடித்து மகிழ்ந்திருப்பார்கள். இந்தக் கருத்தமைந்த புகழேந்திப் புலவரின் பாடலடிகள் இரண்டைச் சுவைப்போம்.
பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டெறியுந் தமிழ் நாடா. எனச் செல்கின்றது அப்பாடல். இது குலோத்துங்க சோழனின் நாட்டு வளம் பற்றி புகழேந்திப்புலவர் பாடிய பாட்டுப் பகுதி ஒட்டக் கூத்தரோடு புகழேந்திப் புலவர் ஒளவையாரின் வேண்டுதலுக்கிணங்கப் பாடிய பாடற் U(355.
இது வரையிலே, புலவர்களின் கற்பனை நயம் மிக்க இயற்கைவளப் பாடல்களை , நாட்டு , நகரச் சிறப்புப் பாடல்களைப் பார்த்தோம்.
சில பாடல்களில் நாட்டுச் சிறப்பை , நகரச் சிறப்பை , நாட்டுவளத்தை விட, புலவரின் கற்பனைச் சிறப்பை , கற்பனை வளத்தையே அதிகம் காணக் கூடியதாகவும் இருந்திருக்கும்.
இருப்பினும், இதயத்துக்கு இன்பம் பயக்கும் இலக்கிய நுகர்ச்சிக்கு இத்தகைய கற்பனைகள் இன்றியமையாதனவே எனலாம்.
 

-105- அகளங்கண் நாட்டுச் சிறப்பு - 3
கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமாயணத்தில் நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு என்பவற்றைப் பல்வேறு வகையாகவும் வர்ணித்துச் சிறப்பாகப் பாடியுள்ளான். அவற்றுள் சில பாடல்கள் கம்பனின் கவித்துவத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.
அயோத்தி நகரத்தின் கோபுர வாயில்களின் அழகையும், அக்கோபுர வாயில்களில் வரையப்பட்டுள்ள ஒவியங்களின் சிறப்பையும் கம்பன் அற்புதமாகக் காட்டி, அந்தக் காட்சி மூலமே தனது இராமாயணத்தின் மையக் கருத்தையும் உட் பொருளாக வைத்து விளக்கியிருக்கிறான்.
அத்தகையதொரு அருமையான பாடலை, கம்பனின் கற்பனையின் அற்புதத்தைக் காட்டும் பாடலை இங்கு காண்போம்.
தாவில்பொற் தலத்தினற் தவத்தினோர்கள் தங்குதாட் பூவுயிர்த்த கற்பகப் பொதும்பர்புக் கொதுங்குமால் ஆவியொத்த சேவல்கூவ அன்பின்வந் தணைந்திடா ஒவியப் புறாவிண்மாடு இருக்கஊடு பேடையே, அயோத்தி நகரத்துக் கோபுர வாசலிலே ஒரு புறத்திலிருந்து கொண்டு, பெண் புறா ஒன்று தனது உயிருக்கு நிகரான ஆண் புறாவைக் கூவியழைக்கின்றது. பெண் புறாவின் அழைப்பாகிய கூவலைக் கேட்ட ஆண்புறா ஆவலோடு பறந்து வருகின்றது.
பறந்து வந்த ஆண்புறா அந்தக் கோபுர வாசலில் வரையப்பட்டுள்ள பெண் புறாவைப் பார்த்து விட்டு, தனது சோடிப் புறா என மயங்கி அதன் அருகிலேயே இருந்து விட்டது. அவ்வளவு தத்ரூபமாக புறாவின் ஓவியம் அங்கே வரையப்பட்டிருந்தது.
தனது ஆருயிர்ச் சேவலை அழைத்துக் கூவிய பெண் புறா, தன்னை நோக்கி வந்த சேவலாகிய ஆண்புறா தன்னிடம் வந்து சேராமல், இன்னொரு பெண்புறாவின் பக்கத்தில் இருப்பதைக் கண்டு விடுகின்றது.
பக்கத்தில் வந்திருந்த சேவற் புறாவுக்கே, அது ஓவியப் புறா என்று தெரியாதபோது தூரத்தில் இருந்து கூவிய பெண் புறாவுக்குத் தனது சேவல் ஓவியப் புறாவின் பக்கத்தில் தான் இருக்கின்றது என்பது எப்படித் தெரிந்திருக்கும்

Page 68
இலக்கியச்சரம் -100
அதனால் தனது உயிருக்கு நிகரான ஆண்புறா, இன்னொரு பெண்புறாவின் பக்கத்தில் இருப்பதை அப்பேடைப் புறாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சகிக்க முடியாத துன்பமாக இருக்கின்றது அக்காட்சி. அதனால் அப்பெண்புறா ஆண்புறா மேல் ஊடல் கொண்டு எழுந்து பறக்கின்றது.
பறந்து சென்று எங்கே இருக்கின்றது தெரியுமா? சொர்க்க லோகத்திலே இருக்கும் கற்பகச் சோலைக்குள் சென்று இருக்கின்றதாம், கம்பன் சொல்கிறான்.
புறாக்களுக்குள்ளே இருக்கும் காதல் வாழ்வையும், ஒவியத்தின் சிறப்பையும், கோபுர வாயிலின் உயரத்தையும், கம்பன் ஒருங்கே இப்பாடல் மூலம் சிறப்பாகக் காட்டி விடுகிறான் அல்லவா. கந்தபுராணம்
கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்த புராணம், புராண நன்நாயகம் என்று போற்றப்படுகின்றது. கம்பனின் கவிதைகளுக்கு நிகரான பல கவிதைகளை எண்ணிக்கை அளவிலும், எண்ணிக் கொள்ளக் கூடிய அளவிலும் கச்சியப்பர் அற்புதமாகப் பாடியுள்ளார்.
கந்த புராணத்தில், தேவ காண்டத்தில் தெய்வயானை அம்மை திருமணப் படலத்தில் ஒரு காட்சி கச்சியப்பரின் கற்பனையில் மிளிர்கின்றது. முருகப் பெருமானுக்கும் தெய்வயானை அம் மைக்கும் திருப்பரங்குன்றிலே திருமணம் நிகழ இருக்கின்றது. அந்தத் திருமணத்திற்காக முசுகுந்தச் சக்கரவர்த்தி தனது சேனைகளோடும் , நாட்டு மக்களோடும் திருப்பரங்குன்றுக்கு வந்து சேர்ந்தார்.
திருப்பரங்குன்றில் யானைகள் நிற்கின்ற காட்சியில், கச்சியப்பரின் கற்பனை தேவலோகத்திற்குச் சென்று விடுகின்றது.
மலையிலே நிற்கின்ற ஆண் யானைகள் , பெண்யானைகளுக்கு மரங்களிலே இருக்கின்ற குழைகளை ஒடித்து உண்ணக் கொடுக்கின்றனவாம். மரக்கிளைகளை முறித்து, குழைகளைப் பெண்யானைக்கு ஒரு ஆண் யானை உண்ணக் கொடுத்தால் அதிலென்ன அதிசயம் இருக்கின்றது எனக் கேட்கலாம்.
ஆனால் அதிசயம் என்னவென்றால், அந்த ஆண்யானைகள் தேவலோகத்திலே இருக்கின்ற கற்ப்கச் சோலைக்குத் தும்பிக்கையை நீட்டிக் கிளைகளை முறித்துக் குழைகளைப் பறித்துக் கொடுக்கின்றனவாம்.
 

-107- அகளங்கண் அது மட்டுமல்ல, கற்பக மரத்துக்குழைகளை உண்ணும் போது, பெண்யானைகளுக்குச் சிலவேளை விக்கல் எடுக்கவும் கூடும். நடந்து வந்த களைப்போடு அவதி அவதியாகச் சாப்பிட்டால் விக்கல் எடுக்குந் தானே.
அப்படி விக்கல் எடுத்தால் தண்ணிர் பருக்குவது தானே முறை. ஆண் யானைகளும் அப்படித்தண்ணீர் பருக்குகின்றன. எப்படித் தெரியுமா? தமது கொம்புகளால் மழை முகிலைக் கிழித்து வடிகின்ற நீரைப் பிடி யானைகள் அருந்தும் படியாக ஊட்டுகின்றனவாம்.
புழையுறு கரங்களாற் போத கஞ்சில உழைவரு பிடிதனக்கு உம்பர் தாருவின் குழைகளை முறித்தன கொடுத்துக் கோட்டினால் மழைமுகில் கீறியே வாரி நல்குவ, கச்சியப்ப சிவாச்சாரியாரின் இந்தக் கற்பனையைத் தொடர்ந்து முத்தொள்ளாயிரம் என்னும் நூலிலுள்ள ஒரு கற்பனையைக் காண்போம். முத்தொளர்ளாயிரம்
சேர மன்னன் தனது சேனையிலே யானைகளையே அதிகம் வைத்திருந்தான். அவனது நாடு மலை நாடு என்பதால் யானைகள் அங்கு அதிகம் என்பதும் ஒரு காரணம் தான்.
சேர மன்னனின் பட்டத்து யானை பல போர்க்களங்களிலே சேரனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. அந்தப் பட்டத்து யானையின் ஒருபழக்கம் என்னவென்றால், போர்க்களத்தில் எதிர் நாட்டு அரசனின் வெண் கொற்றக் குடையைப் பிடுங்கி எறிந்து விடும்.
பல போர்க்களங்களிலே பல எதிரிகளின் வெண்கொற்றக் குடையைப் பிடுங்கி முறித் தெறிந்து பழக்கப்பட்டு விட்ட , பட்டத்து யானை மாலைக் காலத்தில் பந்திக்கு வந்து சேர்ந்தது.
அன்றொரு நாள் பெளர்ணமி இரவு.தனது கூடாரத்துக்கு வெளியே தலை நீட்டிச் சோம்பல் முறித்து எட்டிப் பார்த்தது யானை, பூரண சந்திரன் வானத்தில் தன்கிரணங்களை வீசிக் குளிர் ஒளி பரப்பிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அளவில் அதற்குக் கடுங்கோபம் வந்து விட்டது. யுத்த களத்திலே நிற்கின்ற நினைப்பு வந்து விட்டது. பகலிலே செய்த காரியம் இரவிலும் பழக்க தோசத்தினால் வந்து விடுகின்றது.

Page 69
இலக்கியச்சரம் -108
பூரண சந்திரன், எதிரியின் வெண்கொற்றக் குடை போலத் தெரிகின்றது யானைக்கு, அதனால் கோபத்தோடு அந்தச் சந்திரனை நோக்கித் தன் தும்பிக்கையை நீட்டுகின்றது. பிடித்து முறித்து எறிவதற்காக என்கிறார் L|സെബി.
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டும்தன் கை சேரனின் வீரத்தையும் , யானையின் பழக்கத்தையும் , அது தும்பிக் கையை சந்திரன் மேல் நீட்டுகின்ற தன்மையையும் , கோபத்தையும், வெண் கொற்றக் குடையின் பிரகாசத்தையும் எல்லாம், இக்கவிஞர் தனது கற்பனை மூலம் அற்புதமாகப் பாடியிருக்கிறார் அல்லவா.
இதைத் தொடர்ந்து, திருக்குற்றாலக் குறவஞ்சியிலும் ஒரு காட்சியைக் காண்பதற்காகத் திருக்குற்றால மலைக்குச் செல்வோம். திருக்குற்றாலக் குறவஞ்சி
முத்தொள்ளாயிரப் புலவனின் கற்பனையில், பூரணசந்திரன், பட்டத்து யானையின் பார்வையில், பிரகாசம் மிக்க வெண் கொற்றக் குடையாகத் தென்பட்டதல்லவா.
திருக் குற்றாலக் குறவஞ்சி ஆசிரியரான திரிகூடராசப்பக் கவிராஜரின் கற்பனையில் , குற்றால மலையில் நிற்கும் யானையின் பார்வையில் , பிரகாசம் விளங்கும் சந்திரன் , அந்த யானை உண்ணும் வெண் சோற்றுக் கவளமாகத் தென்படுகின்றது.
ஆகாயத்தில் வரும் சந்திரனை , மேகங்களில் முட்டுகின்ற உயரமான மலையில் நிற்கும் யானை ஆனது , தனது உணவாகிய சோற்றுக்கவளம் என்று நினைத்துத் தும்பிக்கையை நீட்டுகின்றது பிடித்து உண்பதற்காக என்கிறார் புலவர்.
அந்தத் திரிகூட மலையின் இயற்கை அழகையும் , புலவரின் கற்பனையையும் முழுமையாக இங்கு பார்ப்போம்.
ஆடுகின்ற நாகபாம்புகள் ஈனுகின்ற நாகரத்தினங்கள் , கோடி சூரியர்கள் கிடந்து பிரகாசம் வீசுவது போல பிரகாசம் வீசிக் கொண்டிருக்கும். ஆகாயச் சந்திரனைத் தானுண்ணும் வெண் சோற்றுக் கவளம் என்று நினைத்து பானை தும்பிக்கை நீட்டி வழி மறித்து நிற்கும்.

- 109- அகலாங்கண் வேடுவர்கள் தினை விதைட்பதற்காகப் பண்படுத்தும் தினைப் புனங்கள் தோறும், அவர்கள் காடழித்து நெருப்பிடலால் , வியப்பான அகில்,குங்குமம், சந்தனம் முதலியவற்றின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.
காடுகள் தோறும் மலை ஆடுகள் ஒடிக் குதித்துத் துள்ளிப் பாய்ந்து விளையாடித் திரியும். காகமும் அணுகாத உயர்ந்த மலையுச்சியில் மேகக் கூட்டங்கள் வந்து பறந்து கொண்டிருக்கும்.
புகழ் மிக்க, குறும்பலாவின் அடியில் இருக்கும் ஈசரும் , கைலாசகிரி வாசருமாகிய சிவபெருமான் நிலையாகத் தங்கும் திரிகூட மலை எங்கள் மலையே, என்று குறத்தி தன் மலைச் சிறப்புச் சொல்வதாக இப்பாடல் அமைந்துள்ளது
ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும்
அம்புலியைக் கவளமெண்று தும்பிவழி மறிக்கும் வேடுவர்கள் தினைவிதைக்கச் சாடுபுனந் தோறும்
விந்தைஅகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும் காடுதொறும் ஒடிவரை ஆடுகுதி பாயும்
காகமனு காமலையில் மேகநிரை சாயும் நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்கும் திரிகூட மலைஎங்கள் மலையே. திரிகூட ராசப்பக்கவிராஜரின் கற்பனை வெள்ளம் கரை புரண்டோடும் இன்னொரு பாடலையும் இச்சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
குறத்தி நடனம் ஆடுபவர்க்கெல்லாம் இன்று வரையில் திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களே பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. அவரது கற்பனைச் சிறப்பு மிக்க இன்னொரு பாடலையும் பார்ப்போம்.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வாண்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.

Page 70
இலக்கியச்சரம் - 10
உயரமான குற்றால மலையிலே, வானளாவும் வண்ணம் வளர்ந்துயர்ந்து நிற்கின்றன மாமரங்கள். அந்த மாமரங்களிலே இருக்கின்ற கனிகளைப் பறித்தெடுத்த கடுவன் குரங்குகள் , அவற்றை மந்திக் குரங்குகளுக்குக் கொடுத்துக் கொஞ்சி மகிழ்ந்து விளையாடிக் களிக்கின்றன. அந்த மந்திக் குரங்குகள், கடுவன் குரங்குகள் கொடுக்கின்ற எல்லாக் கனிகளையும் முழுதாகக் கடித்துச் சாப்பிடுவதில்லை, பொதுவாகவே குரங்குகள் மாங்காயையோ பழத்தையோ முழுதாகச் சாப்பிடுவதில்லை. கடித்துக் கடித்துக் கீழே போட்டு விடுவன.
அப்படியே இந்த மந்திக் குரங்குகளும் மாங்கனிகளைக் கடித்துத் துப்பிக் கீழே போடுகின்றன.
அப்படிக், கடித்த பாதி கடிக்காத பாதியாகக் கீழே போடுகின்ற மாங்கனிகளைத் தமது கையில் போடும்படி தேவர்கள் , மந்திக் குரங்குகளைப் பார்த்துக் கெஞ்சிக் கையேந்தி இரங்கி நிற்பார்களாம்.
இப்பாடலில் பொதுவாகக் கனிகள் என்றிருக்கின்ற போதும், ஒரு உதாரணத்துக்காக மாங்கனிகளை நான் எடுத்துக் கொண்டேன்.
தேவர்களைப் புலவர்கள் என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. புலவர்களைக் கவிகள் என்றும் அழைப்பதுண்டு. அதனால் தேவர்கள் கவிகள் ஆகிவிடுகிறார்கள். குரங்குகளையும் கவிகள் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. தேவர்கள் வான் கவிகள் குரங்குகள் கான் கவிகள் உண்மையில் புலவர்கள் தான் கவிகள்.
இப்பாடலில் “மந்தி சிந்து கணிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்” என்ற வரி மிகவும் நயமான கவிதைவரியல்லவா. கான் கவிகள் சிந்தும் கனிகளுக்காக வான் கவிகள் கெஞ்சுகின்ற காட்சியைத் தான் கவிஞர் இங்கு அற்புதமாகக் காட்டியுள்ளார்.
குற்றால மலைக்குத், தேவர்கள் வாழும் தேவலோகம் அண்மையில் தான் இருக்கின்றது என்பதையும் , மந்திகள் கடித்துச் சிந்துகின்ற கனிகள் தேவர்களுக்குத் தேவாமிர்தத்திலும் பிடித்தமானது என்பதால் , அவர்கள் மந்திகளைப் பார்த்துக் கெஞ்சித் தமது கையில் போடும்படி வேண்டுவதையும்
அற்புதமான கற்பனையாகச் சொல்லலாம் அல்லவா.

- 11- அகளங்கண் குற்றால மலையிலே வாழும் வேடுவர்கள், தேவலோகத்திலே இருக்கும் தேவர்களைக் கண் பார்வையால் வெருட்டி அழைத்து வேலை வாங்கி விடுவார்களாம். அம்மலையிலே வாழும் வேடர்களுக்குத் தேவர்களே அடிமைத் தொழில் செய்கிறார்களாம். அதையே கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர் என்ற வரியால் கூறுகிறார் கவிஞர்.
கோபமாக அதிகாரத்தோடு வாயாலே கட்டளை இடுவது , கையைக் காட்டி ஏவுவது, இவை எல்லாவற்றையும் விட விழி மூலம் அழைப்பது மிகவும் கேவலமானது. இதனை இங்கே அற்புதமாகப் பயன்படுத்தியுள்ளார் L|സെബf.
ஆகாயச் சித்தர்கள், உடலை அழியாமற் பாதுகாத்துக் கொள்வதற்காகக் காயசித்தி மூலிகைகளை உண்ணக் குற்றால மலைக்கு வந்து செல்வார்களாம்.
தேனானது அருவியாகப் பெருகி அலைஎழுப்பிக் கொண்டு, குற்றால மலையிலிருந்து குதித்துப் பாய்கின்றதாம். அது ஆகாயத்திலே தேனாறு பாய்வது போல இருக்கிறதாம். அந்தத் தேனருவியிலே சூரிய பகவானின் தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளின் கால்களும், தேர்ச்சக்கரங்களும் வழுக்குகின்றனவாம்.
வளைந்த பிறைச் சந்திரனை அணிந்த சடாமுடியைக் கொண்ட சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திரிகூட மலையின் சிறப்பை திரிகூடராசப்பக்கவிராஜர் எவ்வளவு அற்புதமான கற்பனை மூலம் விளக்குகின்றார் என்று பார்த்தோம்.
இந்தக் கற்பனை மிகவும் மிகையான கற்பனை தான். அணி இலக்கணத்திலே உயர்வு நவிற்சி அணி என்று இத்தகைய அதீதமான கற்பனைகளைச் சொல்வார்கள். இந்தப் பாடலில் இந்தக் கவிஞர் காட்டுகின்ற காட்சியைவிட , இந்தக் கவிஞரின் கற்பனையையும் , அதை அவர் சொல்கின்ற அழகையும் , கவிதை நயத்தையும் தான் ரசிக்க முடிகின்றது. உங்களுக்கு எப்படியோ நானறியேன்.
இருப்பினும் , இப்பாடல் இலக்கிய இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த பாடலாக விளங்குகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
புலவர்களின் கற்பனை சிலவேளை எல்லை மீறியும் போய்விடுவதுண்டு. இப்பாடலைப் போல எல்லை மீறிய சில கற்பனைகளைத் தொடர்ந்து காண்போம்.

Page 71
இலக்கியச்சரம் - 12
புறநானூறு
சங்க காலத்து நூல்களான எட்டுத் தொகை , பத்துப்பாட்டு நூல்களுள் புறநானூறு சிறப்பு வாய்ந்த ஒரு நூலாகும். புறத்திணைப் பாடல்கள் நானூறின் தொகுப்பே இந்நூல்.
சங்ககாலத்துக் கவிதைகள் , உள்ளதை உள்ளபடியே சொல்லுகின்ற கவிதைகள் என்பர் சில அறிஞர். உள்ளதை உள்ளபடியே சொல்வது கவிஞர்களின் நோக்கமல்ல. உள்ளதை உணர்ந்தபடி சொல்வதும், உணர வைப்பதும் தான் கவிஞர்களின் நோக்கங்களாகும்.
சங்கப்புலவர்களைச் சங்கச் சான்றோர் என்று அழைத்து, அவர்களது கவிதைகளை மிகைப்படுத்தல் இல்லாத யதார்த்தமான கவிதைகள் என்று சிலர் எழுதுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
சங்க காலப் பாடல்கள் பல, மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே என்பதற்குப் போதிய சான்றுகள் பல இருக்கின்றன.
ஒரு சம்பவம் அல்லது செய்தி, கவிதை என்ற இலக்கிய வடிவத்தை அடையும் போது கவிதைக்கேயுரிய பல சிறப்பியல்புகளையும் அடைந்து விடுகின்றது.
கவிதைக்கு அணிசெய்வதிலே உயர்வு நவிற்சி அணி என்பதும் ஒன்று. உள்ளதை உள்ளபடியே சொல்வதைத் தன்மை நவிற்சி அணி என்பர் அணி இலக்கணக் காரர்.
ஒரு சம்பவம் மிகைப்படுத்தப்படும் போது, அது உயர்வு நவிற்சி அணியின் பாற் படுகின்றது. சில வேளை இந்த உயர்வு நவிற்சி அணியைக் கையாளும் போது, பொருந்தாத அதீதமான கற்பனையாகவும் ஆகிவிடுகின்றது. அப்படி அதீதமான கற்பனையாகப், பொருந்தாத கற்பனையாக மாறும்போது, கற்பனையை இரசிக்கலாமேயொழிய, காட்சியை ரசிக்க முடியாது. இருப்பினும், சொல்லுகின்ற கவிஞனின் ஆற்றலைப் பொறுத்தும், சொல்லப்படுகின்ற பொருளின் தன்மையைப் பொறுத்தும் அதீதமான கற்பனையும் சிறப்பாக அமைந்து விடுவதுண்டு.
மேலே காட்டிய குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களிலும் இத்தகைய சிறப்பு இருப்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
இனிப், புறநானூற்றிலே வரும் அதீதமான கற்பனையை அதாவது உயர்வு நவிற்சி அணியில் அமைந்த பாடலைப் பார்ப்போம்.

- 13- அகளங்கண் சோழன் நலங்கிள்ளியின் சேனைப் பெருக்கத்தைப் பற்றி, ஆலத்தூர் கிழார் என்ற சங்கப் புலவர் பாடிய பாடல் மிகவும் சுவாரசியமானது.
சோழன் நலங்கிள்ளியின் படை யுத்தம் ஒன்றுக்கு ஒரு பனை மரக் காட்டுக் கூடாகச் செல்கின்றது. செல்லும் போது படையின் முன்னணி வீரர்கள், அதாவது தூசிப்படையோர் பனைகளிலே இருந்த நுங்குகளைக் குடித்துத் தாகந் தீர்த்துக் கொண்டு செல்கிறார்கள்.
சேனையின் நடுவிலே சென்றவர்கள் பனம் பழங்களைச் சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர். சேனையின் கடைசியிற் சென்றவர்கள் பனங்கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிட்டுச் சென்றார்கள் என்று சுவாரசியமாகச் சொல்கிறார் புலவர்.
தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்குநுகர நிலமலர் வையத்து வலமுறை வளைஇ வேந்துபீ டழித்த ஏந்துவேற் றானை. என்பது அப்பாடற் பகுதி. பனங்காட்டைச் சேனை முழுதாகக் கடக்க ஒருவருடம் பிடித்திருக்கின்றது என்பதை அற்புதமான கற்பனையாகக் காட்டுகிறார் புலவர்.
பனையிலே நுங்குகளைப் பிடுங்கிக் குடிக்கின்ற காலம் மாசி , பங்குனிக் காலமாகும். பனம் பழம் கிடைக்கும் காலம் ஆடி , ஆவணி மாதங்களாகும். பனங்கிழங்கு கிடைக்கும் காலம் மார்கழி , தை மாதங்களாகும். எனவே சோழன் நலங்கிள்ளியின் படை, பனங்காட்டைக் கடக்க ஒருவருடம் பிடித்திருக்கின்றது என்பதை இவ்வகையாகக் காட்டியிருக்கிறார் புலவர். சேனைப் பெருக்கை இவ்வளவு மிகைப்படுத்தி உயர்வு நவிற்சி அணிப்பாடலாக்கிக் காட்டிய போதிலும், இட்பாடல் சுவாரசியமாக இருக்கின்றது. அண்மையில், தமிழகத்தின் ஒரு கட்சி மாநாட்டின் போது ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க பதினொன்றரை மணித்தியாலம் பிடித்ததாகச் செய்தி ஒன்றை வாசித்த போது, புறநானுற்றுக் கற்பனை சிலவேளை உண்மைதானோ என்றும் சந்தேகித்தேன்.
இந்த உயர்வு நவிற்சி அணிச் சிறப்பைத் தொடர்ந்து, நாட்டுச் சிறப்புக்கே திரும்புவோம்.

Page 72
இலக்கியச்சரம் -1 14
பொரியபுராணம்
தமிழிலுள்ள புராணங்களிலே பெரியபுராணம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதனை வரலாற்றுப் புராணம் என்பர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள். புராணம் என்று இருந்தாலும், பல அரிய வரலாற்றுச் செய்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல்.
பல்லவர்கால,சங்கமருவிய காலத் தமிழ்ச் சிவனடியார்களின் வாழ்க்கைச் சிறப்பைக் கூறும் இத்திருத் தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமே, தமிழரின் வாழ்க்கையை நாம் அறிந்து கொள்ளத் துணை செய்கின்றது.
பக்திக்கவி , தெய்வமாக்கவி என்றெல்லாம் போற்றப்படும் சேக்கிழார் சுவாமிகள் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பாடல்களில், மனம் பறிகொடுத்தவர் பலர்.
சேக்கிழார் சுவாமிகள் தான் காட்டுகின்ற காட்சிகள் யாவற்றையும் சைவசமயக் கண்ணோடுகண்டு, தனது கற்பனையைக் கலந்து அருமையாகக் காட்டி விடுவார்.
திருஞான சம்பந்தர் பிறந்த ஊராகிய சீர்காழியைச் சேக்கிழார் பெருமான் காட்டுகின்ற அழகு, தனித்துவமான அற்புதமாக விளங்குகின்றது. கவுணியர் கோத்திரத்தில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். அவர் பிறந்த சீர்காழியில் அந்தணர்களே அதிகம். சீர்காழியில் எப்போதும் எங்கும் நெருப்பில் ஆகுதி சொரிந்து அந்தணர்கள் வேள்விகளைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
இந்தக் காட்சி சேக்கிழாரின் உள்ளத்தில் பதிந்து விட்டது. சீர்காழியில் எங்கு பார்த்தாலும் முத்தீவளர்த்து முத்திக்கு வழிதேடும் அந்தணர்கள் ஆகுதி சொரிவதையே காணக் கூடியதாக இருக்கின்றது என்பதை ஒரு வித்தியாசமான இயற்கை வர்ணனைப் பாடல் மூலம் அற்புதமாகக் காட்டுகிறார் சேக்கிழார். சீர்காழியில் வயல்கள்மிகுதியாகக் காணப்படுகின்றன. அந்த வயல்களிலே எப்போதும் நீர் நிரம்பியிருக்கும். நீரிலே செந்தாமரை மலர்கள் செக்கச் செவேலென்று இதழ் விரிந்து மலர்ந்து தோன்றும் இக்காட்சி கண்ணைப் பறிக்கின்ற காட்சியாக இருக்கின்றது.
 

- 15- அகளங்கண் செந்நிற இதழ்கள் விரிந்து நெருங்கிப் பூத்திருக்கும் செந்தாமரைப் பூக்களைப் பார்க்கும் போது, நெருப்புச் சுவாலித்து எரிந்து கொண்டிருப்பது போல இருக்கின்றது. அந்த செந்தாமரைப் பூக்களின் காட்சி வேள்வி நெருப்புப் போல் தென்படுகின்றது சேக்கிழார் சுவாமிகளுக்கு.
அந்த வயல்வரம்புகளில் மாமரங்கள் நிற்கின்றன. அந்த மாமரங் களிலே மாங்கனிகள் பழுத்துத் தொங்குகின்றன. யாரும் தேடுவாரற்றுக்கனிந்து தொங்கும் மாங்கனிகளிலிருந்து சாறு ஒழுகத் தொடங்குகின்றது.
மாங்கனிகளில் இருந்து ஒழுகும் பழச்சாறு , மாமரத்து இலைகளில் விழுந்து, இலைகளினுடாகச் செந்நெருப்புப் போலக் காணப்படுஞ் செந்தாமரை மலர்கள் மேல் சிந்துகின்றது.
அந்தக் காட்சி, அந்தணர்கள் நெருப்பை வளர்த்து எரியும் நெருப்பில் மாவிலை மூலம் நெய் ஆகுதி சொரிவது போல இருக்கின்றது சேக்கிழாருக்கு. அதனால்அவர் சொல்கிறார், சீர்காழியில் மரங்களும் ஆகுதி சொரிந்து வேள்வி செய்கின்றனவாம்.
சேக்கிழார் சுவாமிகள் காட்டுகின்ற பக்திச் சுவையும் இயற்கை அழகும் நிறைந்த அப்பாடலைப் பார்ப்போம்.
பரந்தவிளை வயற் செய்ய
பங்கயமாம் பொங் கெரியில் வரம்பில்வளர் தேமா வின்
கனிகிழிந்த மதுநறு நெய் நிரந்தரம்நீளர் இலைக் கடையால்
ஒழுகுதலால் நெடிதவ் வூர் மரங்களும் ஆகுதி வேட்கும்
தகையவென மணந் துளதால், இனிமையான மாங்கனிகள், யாரும் பறித்துண்பாரின்மையால் கனிந்து விட்டன. சாறு ஒழுகுகின்றது. ஒரு நாள் இரு நாட்களல்ல. நிரந்தரம் ஒழுகுகின்றது.
மாமரம் ஒரு உதாரணத்துக்குத் தான். ஆனால் அவ்வூரில் உள்ள எல்லா மரங்களுமே இப்படிக் கனிந்து சாறு சிந்தி ஆகுதி செய்கின்றன என்கிறார் சேக்கிழார்.
மரங்களே ஆகுதி சொரிந்து வேள்வி செய்யும் என்றால், மனிதர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லைத் தானே.

Page 73
இலக்கியச்சரம் -O-
சேக்கிழார் சுவாமிகளின் இந்த அற்புதமான கற்பனையைத் தொடர்ந்து, கவிச்சக்கரவர்த்தி கம்பன் காட்டுகின்ற இரண்டு காட்சிகளை நாட்டுச் சிறப்பாகக் காண்போம்.
கடம்பராமாயணம்
நட்டு வளர்க்காமல் இயல்பாகவே அமைந்து பூத்துக் குலுங்கும் மரங்களைக் கொண்ட பூஞ்சோலை ஒன்றைக்கம்பன் தனது இராமாயணத்தில் கோசல நாட்டிலே காட்டுகின்றான். அவன் காட்டுகின்ற சோலையிலே ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதனால் அத்திருமண நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியோடு நாமும் செல்வோம்.
யாருக்குத் திருமணமாம் அழைப்புஅனுப்பியிருந்தால் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அழைப்பில்லாமலேயே திருமணத்திற்குச் செல்லும் நாங்கள் அங்கு சென்றுதான் அறிந்துகொள்ள வேண்டும் சரி, கோசலநாட்டுப் பூஞ்சோலை யாகிய திருமண வீட்டுக்குச் செல்வோம்.
திருமணம் வேறு யாருக்குமல்ல இரண்டு குயில்களுக்குத் தான் திருமணம் அந்தத் திருமண விழாவில் நாட்டிய நிகழ்ச்சி தான் முக்கியமானது. நாட்டிய தாரகைகள் யார் தெரியுமா. மயில்கள் தான், வேறுயார்.
மயிற் கூட்டங்களின் நாட்டிய மேடை, மரக்கிளையில் உயரத்தில், இயற்கையாகவே அமைந்துள்ளதால் எவரும் நன்றாகக் கண்டு களிக்கலாம். முன்னாலே இருப்பவர்களின் தலை மறைக்குமே என்ற கவலை இல்லை.
பெரிய செல்வந்தரின் வீட்டுத் திருமணத்தில், கூரிய வேலாயுதம் போன்ற கண்களைக் கொண்ட பெண்கள் ஆடுகின்ற நாட்டியத்திற்கு, இங்கு மயிற் கூட்டங்கள் ஆடுகின்ற நாட்டியம், எந்த வகையிலும் குறைந்ததல்ல. அந்தத் திருமணச் சடங்கிலே கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் பலர். அவர்களிலே அரச அன்னங்கள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
திருமண வைபவம் முடிந்து தமது வீடுகளாகிய தாமரை மலர்களிலே அரச அன்னங்கள் நித்திரை செய்கின்றன. நல்ல களைப்புப் போலும்,
அதிகாலையிலே அரச அன்னங்கள் துயிலெழுவதற்காக , உயர்ந்த ஜாதி வண்டுகள் பூபாளம் பாடுவது வழக்கம். அன்று அந்த வண்டுகளுக்கும் களைப்புப் போலும், முதல் நாள் திருமண விருந்திலே , அதை இதைக் குடித்து விட்டு வந்திருக்குமோ தெரியாது. எழப் பிந்தி விட்டது.
 

- 17- அகளங்கள்ை பொழுது விடிந்தும் வெறிமுறியவில்லை. ஒருவாறு எழுந்து பாடுகின்றன. காலையில் பாடவேண்டிய பண்ணிசைக்குப் பதிலாக மாலையில் பாடப்படும் செவ்வழிப் பாலை என்னும் பண்ணைப் பாடுகின்றன வண்டுகள். அரச அன்னங்களைத் துயிலெழுப்புவதாக அல்லாமல் , மேலும் துயிலச் செய்வதாக அல்லவா முடிந்து விடும் தும்பிகளின் இந்தச் செய்கை, துயிலுணர்த்தப் பூபாளம் இசைக்க வேண்டிய காலையில், நித்திரையாக்கும் நீலாம் பரியைப் பாடினால் எப்படி இருக்கும்.
என்ன செய்ய, தும்பிகள் வேண்டுமென்று செய்ய வில்லையே. மது வெறி. முதல்நாள் திருமணக் கோலாகலம் செய்தவேலை. யாரில் குறை சொல்ல. இனிப் பாடலைப் பார்ப்போம்.
குயிலினம் வதுவை செய்யக்
கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்
அரங்கினுக்கு அழகு செய்யப் பயில்சிறை அரச அண்னம்
பண்மலர்ப் பள்ளி நின்றுந் துயிலெழத் தும்பி காலைச்
செவ்வழி முரல்வ சோலை, திருமணத்தில் மட்டுந்தானா நாட்டிய நிகழ்ச்சி. இல்லை.இல்லை. மருத நிலத்திலே எப்போதுமே நாட்டிய நிகழ்ச்சிதான் நடைபெறுகின்றது. கம்பன் நாட்டுப் படலத்திலே காட்டுகின்ற இன்னொரு நாட்டிய நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
கம்பனின் கற்பனைச் சிறப்போடு பொருந்திய அந்தக் காட்சி, ஒரு அரசன் பெருஞ் சிறப்போடு வீற்றிருக்க, நாட்டிய தாரகைகள் அவன் முன் நடனஞ் செய்கின்ற காட்சி போல இருக்கின்றது. உண்மையில் அந்த நிகழ்ச்சி திறந்த வெளி அரங்கான மருத நிலத்தில் நடைபெறுகின்றது.
அந்த மருத நிலமான அரசன் பெருமிதத்தோடு , வெற்றிக் களிப்போடு, மகிழ்ச்சியோடு கம்பீரமாக அழகிய தோற்றப் பொலிவோடு வீற்றிருக்கிறான். அதாவது சகல சிறப்புக்களும் பொருந்திய மருதம் ஆகிய அரசன் முன்னிலையில் தான், நாட்டியம் நடைபெறுகின்றது. மருதம் அரசனாக உருவகிக்கப்பட்டுள்ளது.

Page 74
இலக்கியச்சரம் -1 18
நாட்டியம் ஆடுபவள் வேறு யாருமல்ல. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த நாட்டிய தாரகை மயில் தான் ஆடுகிறாள். அந்த நாட்டிய நிகழ்ச்சி மருத நிலத்தின் சோலையாகிய மேடையில் நடைபெறுகின்றது.
மருத நிலத்துச் சோலையாகிய மேடைக்கு ஒளிவெள்ளம் பாய்ச்சி, நாட்டிய நிகழ்ச்சியைச் சிறப்பிப்பவை தாமரைகள். தாமரைத் தண்டுகளில் பூத்திருக்கின்ற தாமரைப் பூக்கள் அந்த மேடைக்கு வெளிச்சம் கொடுக்கின்றன. (foot lights) அதாவது தாமரைத் தண்டுகள் தான் விளக்குகளைத் தாங்கி இருக்கின்றன.
அந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு, மழை மேகத்தின் முழக்க ஒலி தான் மத்தளம் வாசிப்பது போல அமைந்திருக்கின்றது.
நாட்டிய அரங்குக்குத் திரைச் சீலைகள் வேண்டுமே. முற்காலத்தில் மேடையில் நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளுக்கு மூன்று வகையான திரைச் சீலைகளைப் (எழினிகள்) பயன்படுத்தினர். ஒருமுக எழினி , பொருமுக எழினி , கரந்து வரல் எழினி என்பவையே அவை,
சிலப்பதிகாரத்தில் இப்படி மூன்று வகையான திரைச் சீலைகளைப் பற்றிய தகவல் உண்டு. ஒரு பக்கமாக இழுத்துத் திறந்து மூடும் எழினி , இரு பக்கங்களிலும் இழுத்து மூடும் எழினி , திடீரென மேடையிலே விழுந்து, அல்லது ஓடி மேடையை மறைக்கும் எழினி, என மூவகை எழினிகள் இருந்தனவாம்.
தெளிந்த நீர் நிலையில் தோன்றுகின்ற அலைகள் தான் , மருதநிலத்துச் சோலையாகிய மேடைக்குத் திரைச் சீலைபோல அமைந்திருக்கின்றது.
பிழிந்து வடித்தெடுத்த தேனின் இனிமை போல இனிமை தரும் மகரயாழின் ஒலிக்கு ஒப்பாக, வண்டுகள் செய்கின்ற ரீங்கார ஒலிதான் நாட்டிய நிகழ்ச்சிக்குப் பாட்டாக அமைகின்றது.
இந்த நாட்டிய நிகழ்ச்சியை மருதமாகிய மன்னனோடு சேர்ந்து வேறு சிலரும் பார்க்கிறார்கள். குவளை மலர்கள் தான் அப்பார்வையாளர்கள் அவை வைத்த கண் வாங்காமல், இமை வெட்டாமல் விழித்துக் கூர்ந்து கவனித்து இரசிக்கின்றன.
கம்பன் காட்டுகின்ற மருத நில இயற்கைச் சிறப்பையும், செழிப்பையும் கண்டு கம்பனின் கற்பனையை வியக்காதார் யார் தானுண்டு.

- 19- அகளங்கண் தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளை கண்விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ, மருத நிலமாகிய அரசனின் முன்னிலையில், தெளிந்த அலைகள் திரைச் சீலைகளாகவும் , தாமரை மலர்கள் விளக்குகளாகவும் அமைந்த சோலையாகிய மேடையில் , மழை முழக்கமாகிய மத்தள ஒலியோடும் , வண்டுகளின் ரீங்காரமாகிய பாடலோடும் , குவளை மலர்களாகிய பார்வையாளர்கள் மத்தியில் , மயில்களின் நடனம் நடைபெறுகின்றது எனக் கம்பன் வர்ணித்த இந்த மருத நிலக் காட்சி அற்புதமாக இருக்கின்றதல்லவா. காவியங்களைப் பிரபந்தங்களைப் பாடுகின்ற எந்தப் புலவனும் நாட்டுச் சிறப்புப் பாடுவதிலே தனது கைவண்ணத்தைக் காட்டாமல் விட்டதில்லை. நாட்டுப் பற்று என்பது சாதாரணர்களுக்கு மட்டுமல்ல உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கங்களாகிய புலவர்களுக்கும்
உள்ளது தான்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தத்துவம் பேசினாலென்ன. “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என வீறாப்புப் பேசினாலென்ன “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பதைப் பெரும் புலவர்களும் தங்கள் கவிதைகளில் காட்டித் தான் இருக்கிறார்கள்.
எல்லாப் புலவர்களும் தாம் பாடவந்த நாட்டுச் சிறப்பைப் பாடும் போது, தமது நாட்டுச் சிறப்பைப் பாடுவதாகக் கற்பனை பண்ணிக் கொண்டே பாடி மகிழ்வார்கள்.
சில புலவர்களுக்கு மட்டும், தமது நாட்டையே நேரடியாக நாட்டுச் சிறப்பில் பாடும் பாக்கியம் கிட்டும். அந்தப் பாக்கியம் அவர்கள் தேர்ந்தெடுத்த கதையைப் பொறுத்ததாகவே அமையும்.

Page 75
இலக்கியச்சரம் 1. 20
நாட்டுச் சிறப்பை எல்லோரும் ஒரே விதமாகப் பாடி விட்டால் அது சிறப்பாக அமையாது என்பதால், புலவர்கள் தமது கற்பனைச் சிறகை விரித்து வெகுதூரம் பறந்து அரிய முறையில் உரிய வகையில் பாடி விடுவார்கள்.
ஒரே கருத்தாக இருந்தாலுங் கூட, தமது கற்பனையால் மெருகூட்டிப் புதிய கருத்தொன்றைச் சொல்வது போலச் சொல்லிப் புகழ் பெறுவது பெரும் புலவர்களின் சிறப்பாக விளங்குகின்றது.
வில்லிபுத்தூராழ்வாரின் கற்பனை
பெரும் புலவராகிய வில்லி புத்தூராழ்வார் மகாபாரதத்தைத் தமிழில் விருத்தப் பாக்களில் பாடினார். இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பில் இவர் நாயக்கர் காலத்தவர் என இவரைப் பற்றி இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவர் பாடிய மகாபாரதம், வில்லி பாரதம் என அழைக்கப்படுகின்றது. வில்லி பாரதத்தில் இவரின் கற்பனைச் செழுமை மிக்க பல பாடல்கள்
உண்டு.
வில்லி பாரதத்தில் திரெளபதி மாலையிட்ட சருக்கம் என்னும் பகுதி மிகவும் முக்கியமானதும் சுவாரசியம் நிரம்பியதும் ஆகும்.
திரெளபதியின் சுயம்வரத்திற்காக வந்து, சுயம்வரமண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைத் திரெளபதியின் தோழிப் பெண்கள் திரெளபதிக்கு அறிமுகப்படுத்தும் காட்சியை, வில்லிபுத்தூராழ்வார் மிகவும் சுவையாகப்
பாடியுள்ளார்.
மன்னர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அறிமுகப் படுத்துவதற்குத் தனது உயர்ந்த கற்பனையைப் பயன்படுத்துகிறார் வில்லிப்
புத்தூராழ்வார்.
ஒவ்வொரு மன்னரையும், அவரது நாட்டுச் சிறப்பு , குணச் சிறப்பு, கொடைச்சிறப்பு என்பவற்றோடு அறிமுகஞ் செய்து கொண்டு வருகிறார்கள் தோழிப் பெண்கள்.
காந்தார நாட்டு மன்னனும் , துரியோதனனின் தாய் மாமனுமாகிய சகுனியை , தோழிப் பெண்கள் திரெளபதிக்கு அறிமுகஞ் செய்யும் விதம் மிகவும் நயமானது.
 

-121- அகளங்கண் சகுனியின் நாட்டுச் சிறப்பையும், அவனது சிறப்பையும் இணைத்து அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார்கள் தோழிகள். அதனைப் பார்ப்போம்.
சகுனியின் நாடான காந்தார நாட்டிலே குரங்குகளுக்குள்ளேயும் அன்பு பொருந்திய இன்பமயமான குடும்ப வாழ்க்கை உண்டாம்.
பிரசவ காலத்து வலியினால் தானே தேடி உணவு பெற முடியாது துன்பப்படும் பெண் குரங்குக்கு உதவுவதற்காக, அதன் கணவன் குரங்காகிய கடுவன் குரங்கு , வேரில் பழுத்து மண் மூடிக் கிடக்கும் பலாப்பழத்தை , நிலத்தைத் தோண்டி எடுத்து, அதன் வலிய மேற்றோலைத் தனது நகங்களால் கிழித்து, இனிய பலாச்சுளையை எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்குமாம். “கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா’ எனப் பாரதிதாசன் விதவைத் திருமணம் பற்றிப் பாடும் போது , வேரில் ப்முத்த பலாப் பழத்தையே சிறந்த சுவையுள்ள பலாப் பழம் எனப் பாடுகிறார்.
வேரில் பழுத்த பலாப் பழம் தான் மிகவும் சுவையானது
என்பது, கடுவன் குரங்குக்கும் தெரிந்திருக்கின்றது. அதனாலே தான் அப்படித் தேடி எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்கின்றது என்கிறார் வில்லி புத்தூராழ்வார்.
சகுனியின் காந்தார நாட்டில் குரங்குகளுக்குள்ளே கூட, குடும்ப வாழ்க்கை இருக்கின்றது. மந்தியின் துன்பத்தைக் கடுவன் போக்கி உதவுகின்றது என்றால் மனிதர்களின் வாழ்க்கை பற்றிச் சொல்லத் தேவையில்லை. என்ற வகையில் கற்பனை செய்து சொல்கிறார் வில்லி புத்துராழ்வார்.
உலைவந் தயரும் சூண்மந்திக்கு
உருகா நிலங்கீண்டு உதவுகுலக் கலைவன் பலவின் சுளைகிறிக்
களிப்போ டளிக்கும் காந்தாரத் தலைவன் சகுனி இவன்கண்டாய்
தக்கோர் ஆடாச் சூதுக்கும் நிலைவஞ் சனைக்கும் தரணிபரில்
uurrĜOJ இவற்கு நிகரென்றார். காந்தார நாட்டுக் கடுவன் குரங்கு போலவே தான், அந்நாட்டு மன்னனான சகுனியும் இருப்பான் என உள்ளுறை உவமம் மூலம் சொல்லிச்
*、 في 3زظ

Page 76
இலக்கியச்சரம் -122சகுனியில்ஒரு நல்ல அபிப்பிராயத்தைத் திரெளபதிக்கு ஏற்படுத்தி விட்டு, உடனடியாகவே இன்னொன்றையும் சொல்கிறார்கள் தோழிகள்.
தகுதி படைத்தவர்கள் ஆடவிரும்பாத சூதாட்டத்திலும் , நிலையான வஞ்சனைச் செய்கை செய்வதிலும் இப்பூமியிலே இச்சகுனிக்கு நிகரானவர் எவருமே இல்லை என்கிறார்கள்.
நாட்டுச் சிறப்பைச் சொல்லக் குரங்குகளின் அன்பு பொருந்திய குடும்ப வாழ்வைக் காட்டிய வில்லிபுத்தூராழ்வாரின் கற்பனையைத் தொடர்ந்து புகழேந்திப்புலவரின் கற்பனையைப் பார்ப்போம். புகழேந்ததிப்புலவரின் கற்பனை.
திரெளபதியின் சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களை, அவளின் தோழிகள் அவளுக்கு அறிமுகப் படுத்தியது போலவே தான் , நளவெண்பா என்னும் பிரபந்தத்திலும் தமயந்தியின் சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களை அவளின் தோழிகள் அவளுக்கு அறிமுகஞ் செய்கிறார்கள்.
வில்லிபுத்துராழ்வார் குரங்குகளின் குடும்ப வாழ்க்கையை வைத்துக் காந்தார நாட்டு மன்னனான சகுனியை அறிமுகஞ் செய்தது போல, புகழேந்திப் புலவர் எருமை மாடுகளின் இசை இரசனையை வைத்து அவந்தி நாட்டு மன்னனை அறிமுகஞ் செய்கிறார்.
தோழிகள் அவந்தி நாட்டு மன்னனைத் தமயந்திக்கு அறிமுகஞ் செய்வதைப் பார்ப்போம். அவந்தி நாட்டு எருமை மாடுகள் நீர் நிலைகளிலே செழித்து வளர்ந்து பூத்துப் படர்ந்து பரவியிருக்கும் அழகிய பசிய குவளை இலைகளை மேய்வதற்காக ஆவலோடு செல்கின்றனவாம்.
பசியோடு பசுங்குவளைகளை உண்ணச் சென்ற எருமைகள், குவளையை உண்ணாது, மெய் மறந்து போய் நிற்கின்றனவாம்.
“பசி வந்திடப் பத்தும் பறந்திடும்” என்பது தானே பழமொழி. ஆனால் எருமைகளுக்கோ பசியே பறந்து போய் விட்டது. அப்படியென்றால் என்ன வந்தது என்ற கேள்வி தானே எழுகின்றது.
அங்கே வந்தது இன்னிசை குவளை மலர்களிலே இருக்கின்ற தேனை நன்றாகக் குடித்த வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. வண்டுகளின் ரீங்காரப் பண்ணிசையில் மனம் இலயித்துப் போன எருமைகளுக்குப் பசி பறந்து விட்டதாம். .
 

- 123- அகளங்கண் செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் FFU படும், என்றாரே வள்ளுவர். என்ன அருமையான கூற்று. எருமைகளுக்கு செவிக் குணவு கிடைத்ததால் வயிற்றுணவு பற்றிய உணர்வே வரவில்லைப்போலும்,
"கழுதைக்கு ஏது கர்ப்பூர வாசனை’ என்பது தான் பழமொழி. ‘எருமைக்கு ஏது இசை இரசனை’ என்று பழமொழி ஒன்றும் இல்லைத்தானே.
வண்ணக் குவளை மலர்வெளவி வண்டெடுத்த பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணாது) அருங்கடா நிற்கும் அவந்திநா டாளும்
இருங்கடா T66 இவன்,
அவந்தி நாட்டு எருமைக் கடாக்களுக்கே இவ்வளவு இசை இரசனை இருக்குமென்றால், நாடாளும் மன்னனுக்கு எவ்வளவு இருக்கும் என எண்ணத் தூண்டும். உள்ளுறை உவமை மூலம் புகழேந்தி பாடிய இப்பாடலின் கற்பனை அற்புதமானது தானே.
சேக்கிழாரின் கற்பனை.
சேக்கிழார் சுவாமிகள் தமது பெரிய புராணத்தில் இத்தகைய இசைச் சிறப்பொன்றைத் தமது கற்பனை கலந்து அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.
திருவாரூர் சைவமணம் கமழ்கின்ற சோழர் தலைநகர். அதனால் அங்கே எழுகின்ற ஒலி, திருவருட் பாடல்களின் தெய்வீக ஒலியாகவே இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே.
திருஅருட் பாடல்களை இசையில் வல்ல மனிதர்கள் பாடுகிறார்கள் என்று சொன்னால், அதிலே நயம் இல்லை. சாதாரண கற்பனையாகவே இருக்கும்.
சேக்கிழார் சுவாமிகள் மிக உயர்ந்த புலவர். அவரது கற்பனையும் மிக உயரியதே. அவர் சொல்கிறார் திருவாரூரிலே தெளிவான ஓசை கொண்ட திருப்பதிகங்களைக் கிளிப்பிள்ளைகள் பாடுகின்றனவாம்.
வீட்டிலுள்ளோர் பாடிப் பாடிப் பரவசமடைய, அவர்களாலே உணவூ டி பக்தி உணர்வூட்டி , வளர்க்கப்படுகின்ற , “சொன்னதைச் சொலyட கிளிப்பிள்ளைகள்' அப்பாடலைப் பாடமாக்கித் தம் பாட்டுக்கு
* + 1) அதே பண்ணோடு பாடுகின்றனவாம்.

Page 77
இலக்கியச்சரம் -124
யாராவது ஆர்வத்தோடு கேட்டால் தானே பாடுபவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும். கிளிப்பிள்ளைகள் பாடுவதை நாகணவாய்ப் ( பூவை) பறவைகள் கேட்டு இரசிக்கின்றனவாம்.
கிளிப்பிள்ளைகள் “ தெள்ளும் ஒசைத் திருப்பதிகங்கள்’ பாட, நாகணவாய்ப் பறவைகள் இரசித்துக் கேட்டு இலயித்துப் போயிருந்த அக்காட்சியைப் பார்த்து எவரது உள்ளம் தான் உருகாது என்கிறார் சேக்கிழார்
சுவாமிகள்.
உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை வளர்ள லார்திரு வாரூர் மருங்கெலாம் தெள்ளும் ஒசைத் திருப்பதி கங்களிர்பைங் கிள்ளை , பாடுவ கேட்பன பூவைகள்,
இடபத்தை வாகனமாகக் கொண்ட அருள் வள்ளலாகிய சிவபெருமான், தியாகேசப் பெருமானாக வீற்றிருக்கும் திருவாரூர்ப் பக்கங்களிலுள்ள சிறப்பை, சேக்கிழாரின் கற்பனை மூலம் கண்டு கொண்டோம். வீட்டிலே வளர்க்கப்படுகின்ற பறவைகளின் நிலை இப்படியென்றால், வளர்ப்பவர்களின் நிலையை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் என விட்டுவிட்டார் சேக்கிழார் சுவாமிகள். கம்பனின் கற்பனை
இலங்கையிலே இராவணனின் ஆட்சியிலே அவனது குடிமக்கள் மிகவும் குதூகலமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் இலங்கையிலே ஒரு அவல ஒலி எழுந்தது. அது வரையில் அத்தகைய ஒரு அவல ஒலியை அங்குள்ள எவரும் கேட்கவே
இல்லையாம். - ку.
வழமையாக இலங்கை மக்கள் நாள் தோறும் கேட்கும் ஒலிகள் மங்கல ஒலிகளே மத்தள ஒலி , வீணை ஒலி , நல்ல யாழொலி , இனிய புல்லாங்குழல் ஒலி , சங்கு ஒலி , எக்காள ஒலி , என்னும் மங்கல ஒலிகளே நாள்தோறும் எழுந்த இலங்கை நகரில், அன்று அவல ஒலியாகிய அமங்கல ஒலி ஒன்று எழுந்ததாம்.
தானவரைக் கருஅறுத்துச்
சதமகனைத் தளையிட்டு வானவரைப் பணிகொண்ட
மருகாவோ மருகாவோ

-125- அகளங்கண் என்று மருமகனாகிய இந்திரஜித்தனை அழைத்தும் “அரண் இருந்த மலையெடுத்த அண்ணாவோ! அண்ணாவோ' என்று இராவணனை அழைத்தும் காட்டிலே சூர்ப்பனகை அழுதது போல நாட்டிலும் அழுதிருப்பாள்.
சீதையைத் தூக்க முயன்ற சூர்ப்பனகையின் மூக்கையும் , காதுகளையும், வெம் முரண் முலைக் கண்களையும் இலக்குவன் தனது வாளினாலே அரிந்த பின்பு, காட்டிலே இருந்த தனது சகோதரர்களான கரன், தூஷணன் ஆகியோரிடஞ் சென்று முறையிட்டாள் சூர்ப்பனகை.
அவர்கள் இராமனோடு போர் செய்து இறந்த பின்பு , இராவணனிடம் முறையிடுவதற்காக இலங்கைக்கு வரும் போது, சூர்ப்பனகை அழுது அரற்றிய அவல ஒலிதான் இலங்கை மக்களுக்குப் புதிய ஒலியாக இருந்தது என்கிறான் கம்பன்.
முழவினில் வீணையில்
முரல்நல் யாழினில் தழுவிய குழலினில்
சங்கில், தாரையில் எழுகுரல் இன்றியே
என்றும் இல்லதுஓர் அழுகுரல் பிறந்தது.அவ்
இலங்கைக்கு அண்றுஅரோ, இலங்கை மக்களின் மகிழ்ச்சியையும் நாட்டின் மங்கலத்தன்மையையும் கம்பன் இக்காட்சி மூலம் காட்டியிருக்கிறான்.
புலவர்கள் தமது திறமை முத்திரையை வாசகர் நெஞ்சங்களில் பதிக்க இத்தகைய சிறந்த கற்பனைகளைக் கையாளுவது வாசகர்களின் இரசனைக்குப் பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துவிடுகின்றது.

Page 78
-126காட்டுச் சிறப்பு
நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என்பவற்றை மட்டுமல்ல , காட்டுச் சிறப்பு மலைச்சிறப்பு என்பவற்றைப் பாடுவதிலும் பெரும் புலவர்கள் கைதேர்ந்தவர்களே.
சிறந்த புலவர்கள் , தாம் எதைப் பாடவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை எப்படிப் பாடவேண்டுமென்று கற்பனை செய்து ஏற்ற வகையில் பாடி , படிப்பவர்களின் இதயத்தில் தம் கருத்தை ஏற்றி விடுவார்கள்.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் கற்பனைச் சிறப்பை - அவரதுபாடலொன்றில் பார்ப்போம். ஆய்அண்டிரனின் காட்டுவளத்தையும் , அவனது சிறப்பையும் கூறுகின்றது இப்பாடல்.
ஆய்அண்டிரனின் நாடு மலை சூழ்ந்த காட்டுப்பிரதேசம், அவனது நாட்டின் பெருஞ் செல்வம் யானைகளே. ஏராளமான யானைகள் அவனது காட்டிலே வசித்து வந்தன. எருமைக் கூட்டங்களுக்குள்ளே பசு மாடுகளைக் காண்பதுபோன்று மலைக்குன்றுக்ளிடையே யானைகள் பரவிநிற்அதைக்
85I60Ö|6\)Tlf).
அவன் தன்னையும் தன் மலைநாட்டையும் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு யானைகளையும் பரிசாகக் கொடுக்கும் வழக்கம் கொண்டவன். புலவர்முடமோசியார் காட்டு , மலைச் சாரல் வழியாகச் செல்லும் போது அங்கே ஏராளமான யானைகள் நிற்பதைக் காண்கிறார்.
ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பை நன்கு அறிந்தவரான அப்புல வருக்கு அந்தக் காட்சி ஒரு விசித்திரமான கற்பனையைத் தோற்றுவிக்கின்றது. இந்தக் காடு வேள் ஆய்அண்டிரனிடஞ் சென்று அவனது மலை நாட்டைப் புகழ்ந்து பாடித்தான் இத்தனை யானைகளைப் பரிசாகப் பெற்றதோ, என்ற கற்பனைதான் அது.
மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக உடையஇக் கவிண்பெறு காடே.
இயற்கையாகக் காட்டில் நிற்கும் யானைகள் புலவரின்
கற்பனையில் எத்தகைய சிந்தனையைத் தூண்டியுள்ளது பாருங்கள்.

- 127- -948s୍rf(!i&&& i !
கபிலரிள்ை குறிஞ்சிப் பாட்டு
சங்கப் புலவர்களிலே மிகவும் சிறப்புப் பொருந்திய புலவராக மதிக்கப்படுபவர் கபிலர். வள்ளல் பாரியின் உயிர் நண்பராக இருந்த கபிலர்
அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சிறப்பை எடுத்து விளக்குவதற்காக, அவர் பாடியதாகச் சொல்லப்படும் குறிஞ்சிப் பாட்டு மிகவும் சிறப்பானது.
பத்துப்பாட்டு நூல்களிலேயே மிகவும் சிறப்பான பாட்டாகக் குறிஞ்சிப் பாட்டையே தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மலைப் பிரதேசத்தில் மலர்ந்தபூக்களைப் பறித்துப் பாறையிலே பெண்கள் குவிப்பதாகக் கபிலர் குறிஞ்சியின் சிறப்பை அற்புதமாகப் பாடியிருக்கிறார்.
காந்தட்பூ முதல் எருக்கம் பூ வரை மொத்தம் தொண்ணுற்றொன்பது பூக்களைப் பட்டியலிட்டு கவிதை நயத்தோடு மலையழகைக் கபிலர் காட்டுகிறார். அதைப் பார்ப்போம்.
ஒண்செங் காந்தளர், ஆம்பல், அனிச்சம், தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை, உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், 3, 65TL), எரிபுரை எறுழம், சுள்ளி கூவிரம், வடவனம், வாகை, வான்பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்இணர்க் குரவம், LJEFLÖLîq, வகுளம், பல்இணர்க் காயா, விரிமலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப்பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தனன் சண்பகம், கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,

Page 79
இலக்கியச்சரம் - 128
தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமா ரோடம், வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல், தாழை, தளவம், முள்தாட் தாமரை, ஞாழல், மெளவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங் குரலி, கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், ஈங்கை, இலவம், துங்கு இணர்க் கொண்றை, அடும்பு, அமர்ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகண்றை, பலாசம், பல்பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி நறவம், நறும்புண் னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மாஇருங் குருந்தும், வேங்கையும், பிறவும் அரக்கு விரித்தன்ன பருவரர் அம் புழுகுடன், மால்அங்கு, உடைய மலிவனம் மறுகி வாண்கண் கழிஇய அகல்அறைக் குவைஇ. என மலையடிவாரத்துப் பூக்களைக் கபிலர் பாடியுள்ளது அற்புதமாக
இருக்கிறதல்லவா. தொண்ணுற்றொன்பது வகையான மலைப்பூக்களைப்
பாடி, பெரும் மலைப்புத் தருகிறார் கபிலர்.

- 29கொடைச்சிறப்பு உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் என்ற புலவர், வேள் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் புறநானூற்றில் பெரும் புகழ் பெற்றன. அவற்றில் ஒரு பாடல் ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பைக் குறித்து நிற்கின்றது. கடை எழு வள்ளல்களில் ஒருவனாகச் சங்க இலக்கியம் இவனைப் போற்றுகின்றது.
பொதுவாகவே கொடை கொடுப்பவர்களின் நோக்கம் அக்கொடை தனக்குப் புண்ணியத்தைத் தரும் என்பது தான்.
தான் கொடுத்து வைத்தால் அக்கொடைக்குரிய பலன் , புண்ணியமாக மாறி , தனக்கு இப்பிறவிக்கு மட்டுமல்லாமல் , அடுத்த பிறவிகளுக்கும் தொடரும் என்ற நம்பிக்கையில் தான் பலரும் கொடுக்கிறார்கள்.
தான் சேர்த்து வைக்கும் புண்ணியம், தனது மறுமைக்கு மட்டுமல்லாமல், தனது சந்ததிக்கும் வாழ்வளிக்கும் என நம்பிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே கொடை என்பது புண்ணியங் கருதியதே என்பது பொதுவான அபிப்பிராயம்.
இவ்வகையில் பார்த்தால் , கொடை கொடுப்பவன் , தான் கொடுத்த கொடைக்குச் சமனான பிரதியுபகாரத்தைப் புண்ணியம் என்ற வடிவில் எதிர் பார்க்கிறான் என்றாகி விடுகின்றது.
இது பண்டமாற்று வியாபாரமே அன்றி வேறில்லை. உண்மையான கொடையாளிக்கு இழுக்கைத் தரும் கோட்பாடே இது.
புண்ணியங் கருதாமல் இரக்கத்தின் காரணத்தினால் கொடுப்பவர்கள்
ஏராளம் பேர் இருக்கிறார்கள். -
கொடைக்குச் சமனான, அல்லது கூடுதலான புண்ணியப் பலன் சேரும் என்று நம்பிக்கொடுத்தால் அது வியாபாரமேயன்றிக் கொடையல்ல என்கிறார் முடமோசியார்.
ஆய்அண்டிரன் மிகச் சிறந்த கொடையாளி. ஆனால் அவன் கொடுப்பது புண்ணியங்கருதி அல்ல. இரக்கத்தின் காரணத்தினாலும் அல்ல. இரக்கத்தின் காரணத்தினால் கொடுத்தாலும் , பெறுபவனிடம் நன்றியை எதிர்பார்க்கும் எண்ணம் கொடுப்பவனிடம் ஏற்பட்டுவிடுகின்றது.
அப்படியாயின் ஆய்அண்டிரன் ஏன் கொடை கொடுக்கிறான் என்று வினா எழுப்பினால் சாதாரணமாக எவராலும் பதில் சொல்ல முடியாது.

Page 80
இலக்கியச்சரம் -130
முடமோசியார் சிறந்த புலவர். சங்கச் சான்றோரில் ஒருவர். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இம்மை செய்தது மறுமைக்கு ஆம்’ எனும் அறவிலை வணிகன் ஆஅய் அலண். பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே,
எப்படி இருக்கின்றது புலவரின்கற்பனை சான்றோரின் ஒழுக்க நெறி கொடைகொடுப்பது சான்றோரல்லாத பிறரும் கொடை கொடுத்திருக்கி றார்கள். பிறரதும் சான்றோரதும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதுதனக்குரிய கடமை என்று கருதித்தான் ஆய்அண்டிரன் கொடை கொடுக்கிறானாம்.
இப்பிறவியிலே கொடை கொடுத்தால் அது மறுமைக்கும் ஆக்கம் தரும் என்ற எண்ணத்தில் அவன் கொடை கொடுப்பதில்லையாம்.
இப்புலவர், "அறவிலை வாணிகம் தான்' மற்றையோர் செய்கிறார்கள் என்று அற்புதமான கருத்தைத் தன் கற்பனை கலந்து சொல்லியிருக்கிறார். புகழ் கருதி, புண்ணியங்கருதிக் கொடை கொடுப்பதை மட்டுமல்ல, இரக்கத்தின் காரணத்தினால் கொடை கொடுப்பதையும் இப்புலவர் பெரிதாக மதிக்காமல்,இயல்பான நல்லொழுக்கம் என்று கருதிக் கொடை கொடுப்பதையே போற்றுகிறார். பெரியபுராணத்தில் சேக்கிழார்
இக்கருத்தைப் பிற்காலத்தில் சேக்கிழார் சுவாமிகள் , திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தில் , தொண்டர்களின் தன்மையை வரையறுத்து வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார்.
கடவுளை வழிபடுவது பயன்கருதி என்றால் அதுவும் வாணிபமே. உலகியற் பயன்கருதி மட்டுமல்ல, முத்தியின்பத்தைக் கருதி என்றாலும் கூட, கடவுளிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதால் அது வியாபாரமே என்பது சேக்கிழாரின் உள்ளத்தில் ஒரு உறுத்தலைச் செய்தது.
கடவுளுக்குச் செய்யும் பூசையிலே இரு வகையுண்டு. ஒன்று காமிய பூசை மற்றொன்று. நிட்காமிய பூசை பலன் கருதிச் செய்வது முன்னையது. பலன் கருதாது செய்வது பின்னையது.
இத்தத்துவங்கள் பகவத் கீதையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உண்மை வழிபாடு என்றால் அது என்னவென்று தனக்குள்ளே ஒரு கேள்வி கேட்டுத் தானே பதிலும் தருகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
உண்மைத் தொண்டர்கள் ஆண்டவனை வணங்குவது வணங்க வேண்டுமென்று உள்ளத்திலே தோன்றி எழுகின்ற உண்மை அன்பு உணர்ச்சியினாலேயே அன்றி, வேறு பயன் கருதியல்ல.
 

அதனால் அவர்களின் வழிபாடே உயர்ந்த வழிபாடு. அவர்களே உண்மைத் தொண்டர்கள் என்கிறார் சேக்கிழார் சுவாமிகள்.
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அண்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
கும்பிட வேண்டுமென்ற உள்ளத்து உணர்ச்சியினால் கும்பிடுகிறார்களேயன்றி , வீட்டின்பத்தையும் வேண்டாத வீரம் தொண்டர்களின் வீரம் என்கிறார் சேக்கிழார் சுவாமிகள்.
இங்கு, "வீடும் வேண்டா” என்பது வீட்டின்பத்தையும் விரும்பாத என்ற பொருளையும் , வீட்டின்பத்தையும் வேண்டாத - வேண்டுதல் செய்யாத என்ற பொருளையும் தருகின்றது.
வீட்டின்பத்தையும் விரும்பாத விறல் - மன்ோவலிமை என்பதை விட ஆண்டவனிட்ம் வீட்டின்பத்தையும் வேண்டித் த்ொழாத மனோவலிமை படைத்தவர்கள் தொண்டர்கள் என்பதே பொருத்தமான சிறந்த பொருளாகும். வில்லி புத் துTராழ்வார் பாரதடம் ܠ
இந்தக் கருத்தை ஒட்டியே வில்லிபுத்தூராழ்வார் தனது பாரதத்திலே ஒரு காட்சியைத் தனது கற்பனை மூலம் அற்புதமாகப் படைத்தார்.
அருச்சுனனின் அம்புகளால் துளைக்கப்பட்டு, ஆவி ஆக்கைக்கு அகத்ததோ புறத்ததோ என்று அறியமுடியாத அவல நிலையில் பதினேழாம் நாள் மாலைப் பொழுதில் கர்ணன் களத்திலே கிடக்க, அவனிடம் கிருஷ்ண பகவான் அந்தணன் வடிவெடுத்துச் சென்று இரக்கிறார்.
கொடை கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கின்ற புண்ணியப் பலன் முழுவதையும் தனக்குத் தாரை வார்த்துத் தரும் படி கிருஷ்ண பகவான் கர்ணனிடம் வேண்ட, அவன் எந்தத் தயக்கமுமின்றி , மகிழ்ச்சியோடு தனது இதயத்தில் குத்தியிருந்த அம்பை இழுத்தெடுத்து, அதிலிருந்து வழிகின்ற இரத்தத்தையே நீராக நினைத்துத் தாரை வார்த்துக் கொடுக்கிறான்.
கர்ணன் புண்ணியப் பலன் கருதிக் கொடை கொடுத்தவன் அல்லன். அப்படியிருந்திருந்தால் புண்ணியத்தையே கொடையாகக் கொடுக்க முன்வந்திருக்க மாட்டான்.
கொடுப்பது அவனது உள்ளத்து நல்லுணர்ச்சியில் ஏற்பட்ட நல்ல பழக்கமே யன்றி வேறல்ல. இல்லை என்று இரப்போருக்கு, இல்லை என்று உரைக்க முடியாத உயர்ந்த உள்ளம் அவனுடையது.
அதனாற்தான் கிருஷ்ண பகவான் தன்னுருக்காட்டி “உனக்கு வேண்டும் வரம் கேள்” என்று கேட்கவும்.

Page 81
இலக்கியச்சரம் - 32
அல்லல் வெவ்வினையால் இன்னும்
உற்பவ முண்டாயினும் ; ஏழெழுபிறப்பும் இல்லை என்றிரப்போர்க்கு இல்லைஎன்றுரையா
இதயம்நீ அளித்தருள் என்றான். எனது துன்ப வினைகளாகிய கொடிய பாவவினைகளால் இன்னும் எனக்குப் பிறவி உண்டாயின், ஏழுபிறவிகளுக்கும் என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்ல மனம் வராத இதயத்தை, எனக்கு நீ தர வேண்டு மென்று கேட்கிறான்.
கர்ணன் கொடை கொடுத்தது துரியோதனனின் சொத்துக்களைத் தானே என யாரும் இழிவாகப் பேசிக் கர்ணனின் கொடையைப் பரிகசிக்கக் கூடாதென்பதற்காக தேவேந்திரன் தன் மகனான அருச்சுனனைக் காப்பதற்காகக் கள்ணனிடஞ் சென்றுஅவனது உடம்போடு ஒட்டிப்பிறந்த கவச, குண்டலங்களைத் தானமாகக் கேட்கவும் , வந்தவனையும் வந்த நோக்கத்தையும் அறிந்துகொண்டும், கொடுப்பதால் தன்னுயிருக்கு அச்சம் ஏற்படும் என்பதையும் கருதாது , கவச குண்டலங்களைத் தன் உடம்பிலிருந்து கர்ணன் அறுத்துக் கொடுத்த காட்சியை வியாச பகவான் தனது பாரதத்தில் அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.
இது மட்டுமன்றி, தாயான குந்திதேவி கள்ணனிடம் வந்து இருவரங்கள் கேட்கவும், கர்ணன் தயக்கமின்றிக் கொடுத்தான். என வியாசர் கர்ணனின் கொடைச்சிறப்பைச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் வியாசரின் பாரதமாகிய முதனூலாகிய மூல நூலில் இல்லாத காட்சியாக , கிருஷ்ணன் கர்ணனிடம் புண்ணியத்தையே தானமாகக் கேட்ட காட்சியை வில்லிபுத்துாராழ்வார் தனது கற்பனை மூலம் காட்டியது. முடமோசியார் , சேக்கிழார் ஆகியோரின் கருத்தை ஒட்டியேயாகும்.
சில குழந்தைகள் கூட தன்னிடமுள்ளதைப்பிறருக்கு அள்ளிக் கொடுத்து விடுகின்றன. அதுவே உயர்கொடை கர்ணன் புண்ணியத்தைத் தானமாகக் கொடுத்ததால் பெரும்புண்ணியம் பெற்றிருப்பான் என்பது உண்மையே. எனினும் அவன் அது கருதி அக்கொடையைக் கொடுக்கவில்லை.
 

ஒழுக்கச் சிறப்பு கம்பனின் இராமாயணத்தில் கோசல நாட்டு மக்களின் ஒழுக்கச் சிறப்பைச் சொல்லுகின்ற ஒரு பாடலை இனிப் பார்ப்போம்.
ஒரு விடயத்தை நேரடியாகக் கருத்தாகச் சொல்வது ஒரு வகை. அக்கருத்தை ஒரு காட்சியாகச் சொல்வது இன்னொரு வகை.
கருத்தாகச் சொல்வது போதனையாக அமையும். அது சிலருக்கு மட்டுமே புரியும். பலருக்குப் புரியாது. சலிப்பை ஏற்படுத்தும், கேட்பதற்குச் சுவாரஸ்யமில்லாமல் இருக்கும்.
சாதாரணர்களுக்கும் புரியும் படியாகக் கருத்தொன்றைச் சொல்ல வேண்டுமென்றால், அக்கருத்தை ஒரு சிறந்த கதை மூலம் , அல்லது காட்சி மூலம் காட்ட வேண்டும்.
மகா பாரதக் கதை மிக நீண்டது. இருப்பினும் அக்கதையை யாவரும் விரும்பிப் படிக்கின்றனர். மகாபாரதக் கதையின் கருத்துச் சாரம் தான் பகவத்கீதை, பகவத்கீதையை சாதாரணர்கள் படிப்பது குறைவு. படித்தாலும் சலிப்பே மிகும். விளங்கிக் கொள்வதும் கடினம்.
பெரும் புலவர்கள் தமது கருத்தைப் படிப்போர் உள்ளத்தில் நேரடியாகப் புகுத்தாமல் மறைமுகமாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி விடுவார்கள். அப்படிப் புகுத்தச் சில காட்சிகளைப் பயன்படுத்துவார்கள்.
கவிச்சக்கர வர்த்தி கம்பன் கோசல நாட்டின் ஒழுக்கத்தை மக்களுக்கு எடுத்துக் காட்ட நினைத்தான். முதலில் நேரடியாகவே சொல்லத் தொடங்கினான்.
பிறன்மனை விரும்பிய பேதையாகிய இராவணனைக் கொன்றவன் இராமன், இராமன் பிறக்கப்போகும் நாட்டில் பிறன்மனை விரும்பல் இருக்கவே முடியாது, இருக்கவே கூடாது என்று நினைத்தான் கம்பன். தமது மனைவியரைத் தவிர வேறு யாரையும் ஆண்கள் ஏறெடுத்தும் பாரார் என்பது கம்பன் சொல்ல வந்த செய்தி.
ஆண்களே அப்படியென்றால் பெண்கள் நிலை இன்னும் சிறப்பானதாகவே இருந்திருக்கும். இக்கருத்தைக் கம்பன் முதலில் நேரடியாகக் கருத்தாகவே சொல்கிறான்.

Page 82
இலக்கியச்சரம் -134
சரயு நதி கோசல நாட்டுக்கு வளஞ் சேர்க்கின்றது. சரயு நதியின் வர்ணனையை முதலில் கூறுவதாகச் சொல்லி, கோசல நாட்டின் சிறப்பை முதலில் கூறுகிறான் கம்பன்.
கம்பராமாயணத்தின் முதற் பாடலாக அமைந்துள்ள சிறப்பு மிக்க அப்பாடலை முதலில் பார்ப்போம்.
ஆச லம்புரி ஐம்பொறி வாளியுங் காச லம்பு முலையவர் கண்ணெனும் பூச லம்பு நெறியின் புறஞ்செலாக் கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.
மனிதனின் , மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்ற ஐந்து பொறிகளும் குற்றங்களை நாள்தோறும் மிகுதியாகவே செய்கின்றன. ஐம்பொறிகளையும் அடக்கியவன் - ஞானியாகி விடுகின்றான்.
நாம் அறிந்தோ, அறியாமலோ நமது ஐம்பொறிகளும் மிகுந்த குற்றங்களை நாள்தோறும் செய்கின்றன. ஐம்பொறிகளையும் அறிவால் அடக்கிக் கட்டுப்படுத்தி வாழ்வதற்கே கல்வி அவசியமாகின்றது.
“சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு”
மனத்தைப் பொறிகளின் ஆசை வழியில் செல்ல விடாது, தீமையிலிருந்தும் விலக்கி, நல்ல வழியில் செலுத்துவதே அறிவு என்கிறார் வள்ளுவர்.
ஐம் பொறிகள் என்ற யானைகளை அறிவு என்ற அங்குசத்தால் அடக்கி வழிப்படுத்த வேண்டும் என்பார்கள் அறிஞர்கள்.
பிற ஆரவாரங்களைக் கண்டதும் ஒட்டுக்குள்ளே தனது உறுப்புக்களை அடக்கிக் கொள்ளுகின்ற ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்பவனுக்குத் துன்பமில்லை. என்று வள்ளுவப் பெருந்தகையும் திருவருட்பயனில் உமாபதி சிவாச்சாரியாரும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள்
“ஒருமையுளர் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து’
"புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர் போதார் தலநடக்கும் ஆமை தக’,

-135
ஆசு அலம்புரி ஐம்பொறி வாளியும் - குற்றங்களை மிகுதியாகப்
புரிகின்ற ஐம்பொறிகளாகிய அம்புகளும் , ஒரு விடயத்திலே குற்ற மிழைக்காவாம்.
அகளங்கள்ை
எந்த விடயத்திலே என்றால் , தம் மனைவியரைத் தவிர வேறு பெண்கள் மேல் கோசல நாட்டு ஆண்களின் ஐம்பொறிகளும் ஈடுபடமாட்டா என்கிறான் கம்பன். இது குறிப்பாக ஆண்களுக்கெனச் சொல்கின்ற விடயம்.
பெண்கள் ஆண்களின் ஐம்பொறிகளுக்கும் இன்பம் அளிப்பவர்கள் என்பது பண்டைய வழக்கம். வள்ளுவப் பெருந்தகை இதனைத் தனது காமத்துப் பாலில்,
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.
என்று விரிவாகச் சொல்லியிருக்கிறார். இதனை
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் இன்னும் தெளிவாகப் பாடியிருக்கிறார்.
கோவலன் , கண்ணகியைத் திருமணஞ் செய்த முதலிரவில் , ஏழுமாடி வீட்டின் நாலாவது மாடியில் மகிழ்ச்சியாக இருக்கும் போது, கண்ணகியின் மேனி நலனையும் , சிறப்பையும் வியந்து பாராட்டுவதாக இளங்கோ அடிகள் ஒரு பாடலைப் பாடுகிறார்.
| DITET அறு பொன்னே வலம்புரி முத்தே!
காசு அறு விரையே கரும்பே தேனே!
எனச் செல்கின்றது அப்பாடல். பொன் கண்ணுக்கு அழகு
தருவது. அதனால் கண்ணகியை குற்றமில்லாத பொன்னே என்ற பொருளில் மாசறு பொண்னே என்கிறான். முத்து உடலுக்குக் குளிர்ச்சி தருவது. அதனால் கண்ணகியை வலம்புரி முத்தே என்று பாராட்டுகிறான்.
வாசனை மூக்குக்கு இதத்தைத் தருவது. அதனால் காசறு விரையே என குற்றமற்ற நறுமணமே என்று பாராட்டுகிறான். -
கரும்பு நாவுக்குச் சுவை தருவது. அதாவது வாய்க்கு இன்பம் தருவது இனிப்பு. அதனால் கரும்பே என்று பாராட்டுகிறான். காதினாலே இனிமையான ஓசைகளைக் கேட்பது ஒரு தனிச் சுகம், தனிச் சுவை. மதுர கானம் என்று இனிமையையும் இசையையும் இணைத்துச் சொல்வது பண்டைய
வழக்கம்.

Page 83
இலக்கியச்சரபம் - 136
“காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்” என்பான் கம்பன். “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இண்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்பான் புதுயுகப் புலவன் பாரதி.
அதனால் தேன் காதுக்கு இனிமை தருவது. தேன் போன்று இனிக்கும் குரலில் பேசுபவள் கண்ணகி என்று சொல்லித் தேனே எனப் பாராட்டுகிறான் கோவலன் என்பார் இளங்கோ அடிகள்.
கோசல நாட்டு ஆண்களின் ஐம்பொறிகளும் பெண்கள் விடயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இயங்குகின்றன என்பது கம்பனின் கருத்து.
ஐம்பொறிகளின் தூண்டுதல்களுக்கு இலக்காகி, கோசல நாட்டு எந்த ஆணும், தன் மனைவியரைத் தவிர வேறெவரிடமும் செல்லான் என்பது இவ்வரியின் பொருள்.
அடுத்து கம்பன் சொல்கிறான் , பெண்களின் கண்கள் யுத்தம் செய்கின்ற அம்புகள் போன்றன. ஆண்கள் மேல் தவறாது தைத்துக் காயப்படுத்திக் , காமப்படுத்தி ஆண்கள் குற்றமிழைப்பதற்குப் பெண்களின் கண்களாகிய அம்புகளும் காரணங்களாகி விடுகின்ற்ன என்பது பொது விதி. ஆனால் கோசல நாட்டுப் பெண்களின் கண்கள் நெறியின் புறஞ் செல்லாதவை. ஒழுக்க நெறிக்கு மாறுபட்டுப் பார்க்காத கண்கள். எந்தப் புற ஆடவனையும் காமங் கொண்டு பார்க்காத கண்கள் அப்பெண்களின் கண்கள் என்கிறான் கம்பன்.
எனவே ஆண்கள் தமது ஐம்பொறிகளாகிய அம்புகள் மூலம் தவறிழைக்க மாட்டார்கள். பெண்கள் கண்களாகிய அம்புகள் மூலம் தவறிழைக்க மாட்டார்கள்.
பெண்களுக்கு மற்றைய உறுப்புக்களைச் சொல்லத் தேவையில்லை என விடுத்து கண்ணை மட்டுமே எடுத்துக் காட்டினான் கம்பன்.
பெண்களைத்தவறிழைக்கத் தூண்டுகின்ற முக்கியமான முதலுறுப்பு கண்களே தான். கண்களே தவறிழைக்காதென்றால் மற்றைய உறுப்புக்கள் பற்றிச் சொல்ல வேண்டிய தேவையில்லை என விட்டு விட்டான் கம்பன்.
கம்பன் காட்டுகின்ற கோசல நாடு இப்படி இருக்கின்றது. இத்தகைய மண்ணிலே தான் இராமாவதாரம் நிகழ்கின்றது என்கிறான் கம்பன்.

- 137- அகளங்கள்ை இப்பாடலின் பொருளை இப்படி விளக்கினால் மட்டுமே தான் பொருளறிந்து கொள்ள முடியும். இது கற்றோர்க்காகக் கம்பன் கடைப் பிடித்த உத்தி.
இனி, மற்றோர்க்காகவும் கம்பன் இன்னொரு வகையாக இதே கருத்தை காட்சி மூலம் காட்டுகிறான். அக்காட்சியைக் காண என்னோடு கோசல நாட்டு வயலுக்கு வாருங்கள்.
மருத நிலத்து வயல்களிலே நீர் நிரம்பியிருக்கின்றது. நெற்பயிர்கள் வளர்ந்திருக்கின்றன. வயலில் களை பிடுங்கும் வேலை நடைபெறுகின்றது. விவசாயிகள் வயலிலே இறங்கி களை பிடுங்க முயல்கிறார்கள். தமது களைப்பைப் போக்குவதற்காக முதலிலேயே கள்ளை நன்றாக அருந்திக் கடை வாயிலே கள்ளொழுக வயலுக்குள் நிற்கின்றார்கள் மள்ளர்கள்.
நன்றாக மூக்கு “முட்டக்’ குடித்து விட்டார்கள் போலும், கள் கடை வாயில் வழிகின்றது. அந்த நிலையிலே களை பிடுங்க வயலிலே இறங்கிய உழவர்கள் , நெற்பயிரையும் களைகளையும் பார்த்த படி அங்குமிங்கும் உலாவிக் கொண்டு நிற்கிறார்களே யன்றிக் களைகளைக் களையவில்லையாம்.
களைக்கும் முதலுக்கும் (நெற்பயிர்) வேறுபாடு தெரியாத அளவுக்குக் கள்வெறியோ என்று தானே சந்தேகிக்கத் தோன்றுகின்றது. அப்படி இல்லையாம். அப்படி இல்லையென்றால் , களை பிடுங்க வயலிலே இறங்கிய உழவர்கள் களை பிடுங்காமல் , அங்கும் இங்கும் உலாவிக் கொண்டு நிற்பதற்குக் காரணம் என்னவாயிருக்கும்.
கம்பனையே கேட்டுப் பார்ப்போம். வயலுக்குள்ளே களையாக முளைத்திருப்பவை கருங்குவளைகள் , தாமரைகள் , செவ்வாம்பல்கள் முதலியவையே. இவை பூத்துப் போய் நிற்கின்றனவாம்.
அப்படியென்றால் அழகிய அந்தப் பூக்களிலே தான் மனம் பறிகொடுத்து, அவைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நிற்கின்றார்களோ என்றால் , அதுவும் இல்லை. அவர்கள் அப்படிப் பார்த்துக் கொண்டு ஓரிடத்தில் நிற்கவும் இல்லையாம். உலாவித் திரிகிறார்களாம்.
பார்க்கவும் மனமில்லை அவர்களுக்கு.

Page 84
இலக்கியச்சரம் -138
சரி , இனி கம்பன் சொல்லுகின்ற காரணத்தை முழுதாகப் பார்ப்போம். பண்கள் போல் இனிமையாகப் பேசுகின்ற உழத்தியர்களின் கண் , கை , கால், முகம் , முதலானவற்றைப் போல இருக்கின்றனவாம் களைகள். கருங்குவளை மலர்கள் உழத்தியர்களின் கண்களைப் போலக் காட்சியளிக்கின்றன. செவ்வாம்பல் மலர்கள் உழத்தியர்களின் வாய்களைப் போலக் காட்சியளிக்கின்றன. தாமரை மலர்கள் உழத்தியரின் கை , கால் முகம் ஆகிய உறுப்புக்கள் போலக் காணப்படுகின்றன.
அதனாற்தான் உழவர்கள் களை பிடுங்க முடியாமல் நிற்கிறார்களாம். வீட்டில் நாள் தோறும் பார்த்துப் பழகியதால் , வயலில் உள்ள கருங்குவளை, செவ்வாம்பல் , தாமரை முதலான மலர்கள் தமது மனைவியரின் உறுப்புகள் இல்லை என்று நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.
அந்த நிறைவெறியிலும் கள் கடைவாயால் ஒழுகுகின்ற அளவுக்குக் குடித்து விட்டு வந்து களைபிடுங்க நிற்கும் போதும் கூட, அந்த வேறுபாடு தெரிகின்றது அவர்களுக்கு.
அதனால் வேறு பெண்களின் உறுப்புகள் என்று நினைத்து அவற்றைத் தொட விரும்பாதவர்களாகவும் , ஓரிடத்தில் நின்று பார்க்க விரும்பாதவர்களாகவும் , அங்கும் இங்கும் உலாவித் திரிகின்றார்களாம் உழவர்கள்.
“மழைக்கால் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது' என்பது பழமொழி. மள்ளர்கள் மது போதையிலே இருந்தாலும் கூட , தமது மனைவியரின் அங்கங்களைத் தவிர வேறு எவரது அங்கங்களையும் தொடார். பார்க்கார், என்பதை இக்காட்சி மூலம் காட்டுகிறான் கம்பன்.
என்ன அற்புதமான காட்சி. நாட்டின் சாதாரண பிரஜைகளிடமே , அதுவும் மது போதையில் உள்ளவர்களிடமே கூட , பிறன்மனை நயவாத பேராண்மை இருக்குமென்றால் , கற்றோர் மற்றும் ஒழுக்க சீலர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். -
பண்களிர்வாய் மிழற்றும் இண்சொற் கடைசியர் பரந்து நீண்ட கண்கைகால் முகம்வாய் ஒக்கும்
களையலாற் களை இலாமை

-139- அபுகளTங்க% உண்களிர்வார் கடைவாய் மள்ளர்
களைகிலாது உலாவி நிற்பார் பெண்களிர்பால் வைத்த நேயம்
பிழைப்பரோ சிறியோர் பெற்றால்
தமது மனைவியரிடத்தில் அன்பு வைத்த எந்த ஒரு ஆடவனும் குடிகாரனாக இருந்தாலும் கூட, வேறு பெண்களைத் தொட மாட்டான், பார்க்க மாட்டான் , வேறு பெண்களிடத்துச் சென்று தவறிழைக்க மாட்டான் என்கிறான் கம்பன்.
“இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடாத' செம்மையாளனாகிய இராமன் பிறந்த கோசல நாட்டு ஒழுக்க மேம்பாட்டைக் கம்பன் காட்டிய இக்காட்சி மூலம் எவ்வளவு தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது பாருங்கள்.
இன்னும் உங்கள் கற்பனையையும் அறிவையும் கொண்டு இப்பாடலிலிருந்து , ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் கண்டு கொள்ளும் படி வேண்டிக் கொண்டு அடுத்த கற்பனைக்குச் செல்வோம்.
米 米 米 冰

Page 85
- 140
நயத்தக்க நாகரிகம் நாட்டுக்கு நாடு, மொழிக்கு ழொழி, மதத்துக்கு மதம் , ஏன் பிரதேசத்துக்குப் பிரதேசம் கூட வாழ்க்கை முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
கலை , கலாசார நாகரிக வேறுபாடுகளும் , நாடுகளோடும் , மொழிகளோடும் , மதங்களோடும் சம்பந்தப்பட்டு , மாற்றமடைந்திருப்பதைக் 85T600T6)ITLD.
தமிழரின் நாகரிகம் நயக்கத்தக்கது, வியக்கத்தக்கது , என்பது பல தமிழறிஞர்கள் எடுத்துக் காட்டி விளக்கிய உண்மையாகும்.
நாகரிகம் என்பது ஆடை அலங்காரங்களாலும் , உணவு வகைகளாலும் , மற்றும் புற ஆசாரங்களாலும் மட்டும் அமைவதன்று.
உண்மையான நல்ல நாகரிகம் பழக்க வழக்கங்களால் அமைய வேண்டும். உள்ளத்தின் செம்மையே உயர்ந்த நாகரிகத்தைக் காட்டுவது. தமிழ் இலக்கியத்திலே , உள்ளத்தின் உயர்வு மூலமாகக் காட்டப்பட்ட உயர்ந்த நாகரிகத்தை அதாவது, நயத்தக்க நாகரிகத்தைப் பல இடங்களிலே தரிசிக்கலாம்.
தனிப் பாடல்களிலும் . காவியங்களிலும் , இத்தகைய நனி நாகரிகத்தைக் காட்டும் முயற்சியில் , பல கவிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். காவியக் கதாபாத்திரங்களின் மூலமாக, நயத்தக்க நாகரிகத்தைக் காட்டி, மக்கள் மனதில் பதிய வைத்து , உயர்ந்த , நாகரிகம் மிக்க தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க முற்காலப் புலவர்கள் பலர் முழுமையாக முயன்றிருக்கிறார்கள். என்பதை அவற்றிலே ஈடுபாடு கொண்டவர்களால், எளிதாகக் கண்டு கொள்ள முடியும். ஒவியக்கண்காட்சி.
நயத்தக்க நாகரிகக் காட்சி ஒன்றை முதலில் பார்ப்போம். ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெறுகின்றது. அதனைச் சென்று பார்த்து ரசிக்க விரும்பினான் ஒரு ஆடவன். தானே தனியாகச் சென்று, அக்கண்காட்சியைக் காண அவனுக்கு விருப்பமில்லை.
தான் காணுகின்ற காட்சிகள், தான் அனுபவிக்கின்ற இன்பம், தனது மனைவியும் காணவேண்டும். அனுபவிக்க வேண்டும் என்று அவன்

-141- அகளங்கண்
என்னுகிறான். “நான் காணும் உலகங்கள் நீ காண வேணடும்” என்ற உயர்ந்த காதலுள்ளம் அவனுடைய உள்ளம்.
அதனால் அந்த ஓவியக் கண்காட்சியைக் கண்டு களிக்க வரும்படி, தன்காதல் மனைவியை அழைக்கிறான், அவ் ஆடவன்.
அதற்கு, அவனது மனைவி கூறுகிறாள் “ஓவியக் கண்காட்சியிலே ஆண்களின் ஓவியமும் வரையப்பட்டிருக்கும். அந்நிய ஆடவன் ஒருவனின் உருவத்தைப் பார்த்து ஓவியத்தை என்னால் ரசிக்க முடியாது.”அதனால் நான் வரவில்லை என்று கூறி இன்னொன்றையும் கூறுகிறாள்.
“அங்கே பெண்களின் ஓவியமும் வரையப்பட்டிருக்கும். அந்தப் பெண்ணோவியங்களை நீங்கள் பார்த்து ரசித்தால் , அதைப் பார்த்து என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் நான் வரவில்லை' என்று.
இதனை அந்த ஆடவன் கூறுவது போல அமைந்திருக்கின்றது ஒரு பாடல், வேதநாயகம் பிள்ளையின் அப்பாடலைப் பார்ப்போம்.
ஒவியர் நீள் சுவரெழுதும்
ஒவியத்தைக் கண்ணுறுவான் --தேவியை யாம் அழைத்திட, ஆண்
சித்திரமேல் நான்பாரேன் பாவையர் தம் உருவெனில்:நீர்
பார்க்கமனம் பொறேனென்றாளர் காவி விழி மங்கையிவளர்
கற்பு வெற்பின் வற்புளதால் என்பது , அப்பாடல். கணவனைத் தவிர , அந்நிய ஆடவன் ஒருவனை , ஒவியத்தில் கூட கண்ணெடுத்துப் பார்க்க விரும்பாத , தனது உள்ளத்துத் தூய்மையை , அவள் வெளிப்படுத்தும் விதம் அற்புதமானது.
"ஆண் சித்திர மேல் நாண் பாரேன்” என்று மறுக்கின்ற மனத்திண்மை இங்கே காட்டப்படுகின்றது. -
அதேபோல் , தனது கணவனும் தன்னைத்தவிர இன்னொரு பெண்ணை, ஒவியத்தில் கூடக் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பதைத் தனது மனம் சகிக்காது, பொறுக்காது என்று அவள் வெளிப்படுத்தும் விதமும் , சிறப்பாக இருக்கின்றது.

Page 86
இலக்கியச்சரம் -142
'பாவையர் தம் உருவெனில் நீர் பார்க்க மனம் பொறேன்’ என்று அவள் கூறுவதாகப் புலவர் காட்டுகிறார்.
இன்றைய நிலையில் இந்த நாகரிகம் விசித்திரமானதாக அர்த்தமற்றதாக பலருக்குத் தெரியலாம். ஆனால் இது ஒரு நயத்தக்க நாகரிகமே.
மகாத்மா காந்தி அடிகளிடம் “உலக அழகி யார்’ என்று கேட்கப் பட்ட போது , அவர் “எனது மனைவி கஸ்தூரி பாய் தான்' என்று, எந்த விதமான தயக்கமுமின்றி , உடனடியாகவே பதில் கூறினார்.
இன்றைய நிலையில் மகாத்மா காந்தி அடிகளின் இக்கூற்றுக் கூட , வியக்கத்தக்கதாகத் தான் இருக்கின்றது. ஆனால் உண்மையில் கணவனுக்கு மனைவி தான் உலக அழகி. மனைவிக்குக் கணவன் தான் ஆணழகன். அன்பின் முதிர்ச்சியில் அப்படித்தான் எண்ணத் தோன்றும்,
இது இந்துக்களின் இல்லற இரகசியமாக மட்டுமல்ல , தமிழரின் வாழ்க்கைத் தத்துவமாகவும் இருந்திருக்கின்றது. ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நாகரிகம், இதன் அடிப்படையிலேயே அமைந்தது.
இப்பாடலில் , மனைவி, தனது கணவன் , இன்னொரு பெண்ணின் ஒவியத்தைப் பார்ப்பதைத் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறித் தனது கணவனை ஓவியக் கண்காட்சிக்குச் செல்ல வேண்டாமென்று நேரடியாகவே தடுத்துக் கட்டுப்பாடு விதிப்பதாகத் தெரிகின்றது.
"ஆண் சித்திரமேல் நாண் பாரேண்’ என்பதோடு நிறுத்தி மிகுதியை உட் பொருளாக , மறைபொருளாக உணர்த்தியிருந்தால் , இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. அதனால் இதைவிட உச்சமான ஓர் உயர்ந்த நாகரிகக் காட்சியை அடுத்து, நோக்குவோம். திருக்கோவையார்.
சமய குரவர்களில் ஒருவரான மாணிக்க வாசக சுவாமிகளின் அற்புதப் படைப்பு திருக்கோவையார் ஆகும் தலைவன் , தலைவி பாவனையில், சிவபெருமான் மேல் அவர் பாடிய திருச்சிற்றம் பலக் கோவையாரில் வருகின்ற, நயத்தக்க நாகரிகக் காட்சி ஒன்றை இங்கே காணுவோம்.
தலைவனும் , தலைவியும் களவு ஒழுக்கத்தில் ஈடுபடுகின்றனர். அதாவது , காதல் கொள்கின்றனர். அதன் பயனாக உடன் போக்கு நிகழ்கின்றது. பெண்ணை வளர்த்த செவிலித்தாய் தேடிச் செல்கிறாள்.

-143- அகளங்கண்
நீண்ட தூரத்தில் ஒரு காதற் சோடி களிப்போடு குதூகலமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனைக் கண்ட அவளது மனம் பூரிப்படைகின்றது. மிகவும் சந்தோசமாக , அந்நியோன்யமாக , மலர்ந்த முகத்தோடு, உலகத்தையே வென்று விட்ட உள்ளக் களிப்போடு வந்து கொண்டிருந்த காதற் சோடியைக் கண்டு , தனது வளர்ப்பு மகளும், அவளது காதலனும் தான் வருகிறார்கள் , என்று நினைத்து ஆனந்தப்படுகிறாள் அந்தச் செவிலித்தாய் அருகில் வந்த பின் தான் , அவர்கள் வேறு ஒரு ஊரிலிருந்து உடன் போக்கில் , கூடி வந்த காதலர்கள் என்ற உண்மை தெரிகின்றது.
தனது வளர்ப்பு மகள் , தான் விரும்பிய ஆடவனுடன் சென்ற ஒழுக்கம் தவறானது என வருந்திய செவிலித்தாய் , மிகுந்த சந்தோசத்தோடு வரும் இக்காதலர்களைக் கண்டு , மனம் மாறுகிறாள் மனம் ஆறுகிறாள். ”ஆகா! இது வல்லவோ மேன்மையான ஒழுக்கம். காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டது தானே இன்பம், அதனால் இது மேன்மையான ஒழுக்கமே” என்ற முடிவுக்கு வந்து விடுகிறாள்.
உடனே அந்தக் காதலர்களிடம் , தான் தேடி வந்தவர்களைப் பற்றி விசாரிக்கிறாள்.
“மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை ; இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரோ”
என விசாரிக்கிறாள். “நான் யாரைத்தேடி வந்தேனோ அவர்கள் தான் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என நினைத்து மகிழ்ந்தேன். ஆனால் அருகில் வந்ததும் தான் அவர்களில்லை என்று தெரிந்து கொண்டே என்று கூறி
“உங்களைப் போலவே இந்த மேன்மையான ஒழுக்கத்தில் ஈடுபட் இருவர் உங்கள் வழியில் சென்றார்களா' என்று கேட்கிறாள் அவள்
அதற்கு ஆடவன் பதில் சொல்லுகிறான். பதிலில் முழுமை இல முழுமையாகச் சொல்ல அவனால் முடியவில்லை. "புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளி அன்னானைக் கண்டேன். அயலே. எனக் கூறி
மிகுதியைக் கூறாது நிறுத்தி விடுகிறான் அவ்வாடவன்.

Page 87
இலக்கியச்சரம் -144
“என்னை ஆட்கொண்ட , சிவபெருமான் , வீற்றிருக்கின்ற மலையின் அடிவாரத்திலே யாளியைப் போன்ற வலிமை பொருந்திய ஒருவனைக் கண்டேன். அவனுக்கு அருகிலே . ’ என்பது இதன் பொருள்.
அந்த ஆடவனுக்குப் பக்கத்தில் வந்த பெண்ணைப் பற்றி , அந்த அன்னைக்குக் கூறும் படி தனது காதலியிடம் சொல்கிறான் அவன்.
“தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லிய்தே' என்று அவன் சொல்வதாக மணிவாசகர் பாடுகிறார்.
யாளி என்பது சிங்கத்தை விட வலிமையும் , யானை போன்ற தோற்றமும் உடைய ஒரு மிருகம். யாளியைப் போன்ற ஒரு ஆடவன், என அவனது வீரத்தைக் கூறியவன். அவனருகில் வந்த அவனது காதலியைப் பற்றி ஒருவார்த்தையும் கூறாது அவளைப் பற்றிக் கூறும் படி தனது காதலியிடம் கூறுகிறான்.
ஆணின் வீரத்தைக் கூறியவன், பெண்ணின் அழகையும் சேர்த்துக் கூறினாற்தான் அந்தத் தாய்க்கு மனமகிழ்ச்சி ஏற்படும். யாளியைப் போன்ற வலிமையுள்ள வீரம் பொருந்திய , ஆணுக்கு, ஏற்ற அழகியாகத், தனது மகள் இருக்கிறாள் , என்று அவள் பெருமைப்படுவாள்.
ஆனால் அந்தப் பெண்ணின் அழகை அவன் எப்படி வர்ணிப்பது. அதுவும், பக்கத்தில் தனது மனைவியை வைத்துக் கொண்டு , இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிச் சொல்வது நாகரிகமாகுமா.
தன்னோடு தன்னை நம்பி வந்த தனது காதலியை அருகிலே வைத்துக் கொண்டு , இன்னொரு பெண்ணின் அழகை வர்ணிப்பது அநாகரிகமான செயல், என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.
அதனால் அவன் தனது காதலியிடம் சொல்கிறான் , “அந்த ஆடவனுக்குப் பக்கத்தில் வந்த பெண்ணைப் பற்றி நீயே சொல்லு' என்று. இப்போது பாடலை முழுமையாகப் பார்ப்போம்.
“மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரோ, புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅண்ணானைக் கண்டேன் அயலே தூண்டாவிளக்கனையாய் எண்னையோ அண்னை சொல்லியதே' இது ஒரு உயர்ந்த நாகரிகமாக நனி நாகரிகமாகத், தமிழரின் தனி நாகரிகமாக எனக்குப் படுகின்றது. இன்று இந்த உண்மையான உயர்வான
நாகரிகம் எங்குமே காணக் கூடிய நிலையில் இல்லை என்றே சொல்லலாம்.

-145- அகளங்கண் இத்தோடு இன்னொரு நயத்தக்க நாகரிகக் காட்சியைக் காணுவோம்.இக் காட்சி கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கைவண்ணத்தில் அமைந்து சிறந்துள்ளது. கம்பன் காட்டும் நாகரிகம்.
காட்டிலே வந்திருந்த காகுத்தன் இராமனைக் கங்கைக்கரை வேடன் குகன் வந்து சந்திக்கிறான். மீனும் , தேனும் கொண்டு வந்து , உண்ணும் படி கொடுத்த ஆயிரம் அம்பிக்கு நாயகனாகிய குகனைத் 'தாயினும் நல்லான்' என்று முனிவர்களுக்கு அறிமுகப் படுத்துகிறான் இராமன்.
நாட்டிலே பரதன் , இலக்குவன் , சத்துருக்னன் என மூன்று சகோதரர்களோடு வாழ்ந்த இராமன் பரதனையும் , சத்துருக்னனையும் பிரிந்து இலக்குவனோடு காட்டுக்கு வந்தான். வனவாசக் காலத்தில் மூன்று சகோதரர்களைப் பெற்றுக் கொண்டான்.
இராமன் முதன் முதலாக காட்டிலே குகனைச் சந்தித்துச் சகோதரனாக்கி மகிழ்கிறான். வானரத்தலைவன் சுக்கிரீவனையும் , அரக்கர் குலத்தோன் , விபீஷணனையும் சகோதரன் என்று உறவு கொள்ளும் போது சீதை அருகில் இல்லை.
ஆனால் வேடனான “குகனொடும் ஐவரா’கும் போது சீதையும் அருகில் இருக்கிறாள். அதனால் சீதை உனக்குக் "கொழுந்தி” இலக்குவன் உனக்குத் தம்பி, நான் உன் சகோதரன் என்றும் குகனிடம் உறவு முறை கூறி மகிழ்கிறான் இராமன்.
அண்ணன் இராமனைத் தேடிக் கொண்டு தம்பி சத்துருக்னனுடனும், தாயருடனும் சுற்றத்தாருடனும் காட்டுக்கு வருகிறான் பரதன்.
காட்டுக்கு வந்த பரதனைக் குகன் எதிர்கொண்டு , புகழ்ந்துரைத்து உரையாடுகிறான். இராமனையும் , சீதையையும் , இலக்குவன் இரவில் காவல் செய்கின்ற அழகைப் பரதனுக்கு எடுத்தியம்புகிறான் குகன்.
அல்லை ஆண்டமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச வில்லை ஊன்றிய கையோடும்
வெய்துயிர்ப் போடும் வீரன் கல்லை ஆண்டுயர்ந்த தோளாய்!
கண்களிர்நீர் சொரியக் கங்குல் எல்லை காண்பளவும் நின்றான்
இமைப்பிலன் நயனம் என்றான்.

Page 88
இலக்கியச்சரம் 1 46
என்று கம்பன் இக்காட்சியைச் சொல்லோவியமாகச் சுவைபடப் படைக்கிறான்.
முதலில் இராமனின் இணையில்லா அழியா அழகை வர்ணிக்கிறான் குகன். "அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகன்” என்பது அந்த வரி “இருட்டை வெற்றி கொண்டு அதனைத் தனக்குள் அடக்கி ஆண்டு அடிமை கொண்டு அமைந்த கரிய நிற மேனியையுடைய அழகன் இராமன்’ என்பது இதன் பொருள். கருமையின் அருமையையும் , பெருமையையும் அழகையும் இவ்வகையில் கூறினான்.
பரதனின் வீரத்தைச் சொல்லும் போது 'கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்” என்று விளிக்கிறான் குகன்.
அதாவது “கல்லை ஆண்டு கொண்டு அதனை விட வலிமையினாலே உயர்ந்த தோளையுடையவனே என்பது அதன் பொருள். கல் என்பது மலையைக் குறிக்கும். மலை போன்ற வலிமையான தோள்கள் பரதனது தோள்கள் என்பதை இப்படி வர்ணித்தான் குகன்.
இலக்குவன் இரவிலே இராமனையும் சீதையையும், இன்னல்கள் எதுவும் ஏற்படாத படி காவல் காத்த நிலையைச் சொல்லும் போது "வில்லை ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப்போடும்” “கண்கள் நீர் சொரியக் கங்குல் எல்லை காண்பளவும் நின்றான். இமைப்பிலன் நயனம்” என்று கூறுகிறான். அதாவது வில்லை நிலத்திலே ஊன்றிய படி , பெருமூச்சுவிட்டவனாக கண்கள் நீர் சொரியும் வண்ணம் , கண்களை இமைக்காதவனாக முழு இரவும் காவல் காத்தான் வீரன். என்கிறான் குகன்.
ஆனால் சீதையைப் பற்றிக் கூறும் போது, எந்த அடைமொழிகளும் இல்லாமல் “அவளும்” என்றே மொட்டையாகச் சொல்கிறான்.
இப்பாடலின் சுருக்கமான பொருள் என்னவென்றால் , இராமனும் , சீதையும் நித்திரை செய்ய, இலக்குவன் கண்ணிர் சொரிந்து, பெருமூச்சு விட்டபடி, விடியவிடிய நித்திரையின்றிக் காவல் காத்தான்’ என்பது தான்.
கம்பன் தனது இராம காவியத்திலே சீதையின் அங்கங்கள் அனைத்தையும் அளவுக்கு அதிகமாகவே வர்ணித்திருக்கிறான். அதிலே அவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி உண்டு.

- 147- அகளங்கண்
இங்கே சீதையின் அழகை வர்ணிக்க ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தும் வர்ணனைகள் எதுவுமின்றி அவளும் என மொட்டையாகக் கூறி விடுகிறான் கம்பன்.
கல்வியில் பெரியவன் கம்பன். கவியில் பெரியவன் கம்பன். கம்பன் கவிச்சக்கரவர்த்தி. அதனால் கம்பனின் இச்செயலுக்குத் தகுந்த காரணம் இருக்காமலா போகும். அக்காரணத்தை ஆராய்ந்தால் அதுதான் இங்கே நாம் காணும் நயத்தக்க நாகரிகமாக அமையும்.
கம்பன் கவிக் கூற்றாகச் சீதையின் அழகை எப்படியும் வர்ணிக்கலாம். அதற்கு அவனுக்கு அருகதையுண்டு அல்லது இராமன் மூலமாக எப்படி எப்படி யெல்லாமோ , மனம்போனபடி வர்ணிக்கலாம்.
சூர்ப்பனகை மூலமாகவும் , இராவணன் மூலமாகவும் கூட சீதையின் அழகை அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்து தள்ளியவன் கம்பன்.
ஆனால் குகன் மூலமாகச் சீதையின் அழகை வர்ணிக்கக் கம்பனுக்கு விருப்பமில்லை. காரணம் அது கொஞ்சமும் பொருந்தாது என்பதே.
ஏனெனில் குகனுக்கு சீதை "கொழுந்தி’ முறையானவள். அதாவது சகோதரனின் மனைவி. அத்தகைய உறவை இராமன் ஏற்படுத்தி அறிமுகஞ் செய்து விட்டான். “என் தம்பி உனக்குத்தம்பி என்மனைவி உனக்குக்
ዓ )
கொழுந்தி நீ எனக்குச் சகோதரன் ” என்னும் பொருளில்
"ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பிநின் தம்பி; நீ தோழன் மங்கை கொழுந்தி” என அறிமுகஞ் செய்ததாகக் கம்பன் காட்டியிருக்கிறான். சகோதரனின் மனைவியை உற்று நோக்கி அவளது அங்க லாவண்யத்தைக் கண்டு , அந்த அழகை இன்னொருத்தனுக்குச் சொல்வது நாகரிகமாகாது. அது பண்பாடற்ற செயல். இராமனால் சகோதரனாக்கப்பட்ட ஒருவன் அத்தகைய வேலையைச் செய்யவே மாட்டான். அதனால் "அழகனும் அவளும்” என்றே கூறிவிடுகிறான் குகன்.
இராமனோ ஏகபத்தினி விரதன். தன் மனைவியைத் தவிர வேறு பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத பண்புடையவன். அவனால் சகோதரனாக மதிக்கப்பட்ட குகனும் அப்படித்தானே இருப்பான். குகன் சீதையைச் சரியாகப் பார்க்கவில்லை. அதனால் அவனுக்குச் சீதையின் அழகு பற்றித் தெரியவுமில்லை.

Page 89
இலக்கியச்சரபம் -148
சீதையின் அழகு பற்றிக் குகனுக்குத் தெரிந்திருந்தாலுங் கூட, பரதனிடம் அதை எப்படிக் கூறுவது. பரதன் இப்போது குகனுக்குச் சகோதரனாகி விட்டான். சகோதரனிடம் கூறக் கூடிய கூற்றா இது.
ஒரு சகோதரனின் மனைவியின் அழகை, இன்னொரு சகோதரனிடம் கூறுவது பண்பாடான செயலாகுமா. அது நாகரிகமாகுமா. அதன்ால் அவளும் என்றே சொல்லச் செய்தான் கம்பன்.
அண்ணன் தம்பிகளையும் அவர்களின் ஒழுக்கத்தையும் வைத்து நாகரிகத்தை அற்புதமாக காட்டுகிறான் கம்பன். நயத்தக்க நாகரிகம் தான். ஆனால் இன்று இவையெல்லாம் வியப்பானதாக இருக்கின்றது.
உள்ளத்தின் அழகே உயர்ந்த அழகு. அதுவே நல்ல நாகரிகம். இங்கே உயர்ந்த நாகரிகத்தை உற்று நோக்கினோம். இவை நடைமுறைக்கு ஏற்றவை தானா என்று கேட்பது அர்த்தமற்றது.
இது நயத்தக்க நாகரிகம். நனிநாகரிகம். தமிழரின் தனிநாகரிகம்.
பிறண்மனை நோக்காத பேராண்மை
பெரிய புராணத்தில் இரண்டாவது தனியடியாராகப் போற்றப்பட்டவர் இயற்பகை நாயனார். இவரின் இயற் பெயர் என்னவென்பதை சேக்கிழார்
சுவாமிகள் சொல்லவில்லை.
“உலகியற் பகையார்’ என்று இவரைக் குறிப்பிட்டு , இவர் சோழநாட்டுப் பூம்புகார் எனும் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர் என்கிறார்.
இவரின் அடியார் பக்தியும் , தொண்டும் ,பெரும் சர்ச்சைக்குள்ளாகிய விடயங்கள். உலகியலில் மூழ்கியுள்ளவர்களால் இவரின் செயற்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் கடினம்.
உண்மைப்பக்தியில் ஈடுபட்ட அடியார்களால் மட்டுமே தான் இவரின் செயற்பாட்டின் உண்மைத்தன்மையை உணர முடியும்.
சிவபக்தியில் மேம்பட்ட இவர் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதையே தன் சிவத் தொண்டாகக் கருதிச் செய்து வந்தார்.
சிவனடியார்கள் இவரிடம் என்ன கேட்டாலும் “இல்லை’ என்று கூறாது கொடுத்து வந்தவர் என்பதால் இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் “இல்லையே எண்ணாத இயற்பகை” என்று தமது திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடுகின்றார்.

-149- அகளங்கண் மிகவும் அன்பு பொருந்திய நற்குணங்கள் நிரம்பப் பெற்ற மங்கை
Ꮆ%
நல்லாள் இவருக்கு மனைவியாக வாய்த்தாள். “கற்பில் மேம்படு காதலியாராக” இவரால் பெரிதும் நேசிக்கப்படுகின்ற மனைவியாக அவர் திகழ்ந்தார்.
இவர் செய்கின்ற நல்லறங்கள் அனைத்திற்கும் இவரது மனைவி உறுதுணையாக இருந்தார். இவர் தம்மிடமுள்ள எதையும் சிவனடியார்களுக்குக் கொடுக்கத் தயங்கார் என்பது உலகப் பிரசித்தமானது
இவரது உண்மைத்தன்மையைச் சோதித்து இவரின் பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான்.
“கொடுக்க முடியாததை, கொடுக்கக் கூடாததைக் கேட்டால் கொடுப்பாரா பார்ப்போம்” என்று ஒரு கடுமையான உலகியற் பகையான ஒரு சோதனையை வைக்க நினைத்தார். சிவபெருமான்
ஒருவன் தனக்குப் பிடித்ததை, தனக்கு என்று வைத்திருப்பதை , யாராலும் கொடுக்க முடியாததைக் கொடுத்தால் தானே கொடைக்கு மதிப்பு உலகப் பற்றுக்களை விட்டொழித்த ஞானியருக்குக் கூடப் பற்று இருக்கும். அது கடவுள்ப் பற்றாக இருந்தாலும் பற்றுத் தானே.
இயற்பகை நாயனார் இல்லறத்திலே ஈடுபட்டவர் தனது மனைவிமேல் தாளாத காதல் கொண்டவர், பற்றுக் கொண்டவர். .
அதனால் சிவபெருமானுக்கு ஒரு யோசனை வந்தது. தன்னிடமுள்ள எதையும் சிவனடியார்களுக்குத் தயங்காது கொடுப்பதை விரதமாகக் கொண்டிருக் கின்ற இயற்பகை நாயனாரிடம் உள்ளதும், அவராற் கொடுக்க முடியாததுமாகிய ஒன்றைக் கேட்டுச் சோதித்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்தது.
அந்த எண்ணத்தை உமையம்மையாருக்குக் கூடச் சொல்லாமல் புறப்பட்டார். சிவனடியார் வேடம் பூண்டு, காமுகன் போன்ற குறிப்புத் தோன்ற இயற்பகை நாயனாரின் வீட்டிற்கு வந்தார்.
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் வந்தார் என்கிறார் சேக்கிழார் சுவாமிகள். வேதியராகச் , சிவனடியார் கோலத்தில், காமுகனுக்குரிய குறிப்புத் தோன்ற வந்த சிவபெருமானை, சிவனடியாராகக் கருதிய இயற்பகை நாயனார் , உபசரித்து வணங்கிப் பூசை செய்து போற்றினார்.

Page 90
இலக்கியச்சரம் - 150
சிவனடியார் இயற்பகை நாயனாரைப் பார்த்து “நீர் சிவனடியார்கள் விரும்பியதை எல்லாம் மறுக்காமல் மகிழ்ச்சியோடு கொடுக்கின்றீர் என்பதைக் கேள்விப்பட்டு , உம்மிடம் நான் ஒன்று நாடி வந்தேன். நீர் , நான் விரும்பியதைத் தருவீராயின் என் விருப்பத்தைச் சொல்வேன்”என்றார்.
உடனே இயற்பகை நாயனார் ‘என்னிடம் ஏதாவது உண்டாயின் அது சிவனடியார்களின் உடைமையே ஆகும். சந்தேகப்படத் தேவையில்லை நீர் உம் விருப்பத்தைச் சொல்லும்” என்றார்.
வந்த சிவனடியாரோ “மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு” என்றார். சிவபெருமான் இதுவரையில் யாருக்கும் வைக்காத பரீட்சையை இயற்பகை நாயனாருக்கு வைத்தார்.
இயற்பகை நாயனார் கலங்கவில்லை , தயங்கவில்லை. மகிழ்ச்சியோடு தன் மனைவியை அக் காமுகச் சிவனடியாருக்குக் கொடுத்து விட்டார். பரீட்சையில்வெற்றி, இருப்பினும் அடுத்த கட்டப் பரீட்சையை வைக்கத் தயாரானார் சிவனடியார்.
“உங்கள் உற்றார் உறவினர்களால் எனக்குத் துன்பம் நேராத வண்ணம் நான் இவரை அழைத்துக் கொண்டு செல்ல உதவ வேண்டும்’ என்று கேட்டார் சிவனடியார்.
இயற்பகையார் போர்க்கோலம் பூண்டார். அழைத்துச் சென்றார். எதிர்த்தவர்கள் பலரைக் கொன்றார். பலரை விரட்டி அடித்தார்.
திருச்சாய்க் காட்டின் அருகில் வந்த பின் சிவனடியார் இயற்பகை நாயனாரைப் பார்த்து “நீர் இனித் திரும்பிச் செல்லும்” என்று கட்டளையிட்டார். இறுதிப்பரீட்சை இதுதான். இயற்பகையார் தன் மனைவியாக இருந்தவளும், தன் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவளும், தன் ஆன்மீகப்பணிக்கு ஆதரவானவளும், தன்னை வேதியரின் ஓமத்தீயின் முன் மணந்து கொண்டவளும், தன்னாலே பெரிதும் நேசிக்கப்பட்டவளுமாகிய அப்பெண்ணை ஒரு தடவையாவது இறுதித் தடவையாகப் பார்த்துச் செல்வாரா செல்லமாட்டாரா என்பதுதான் பரீட்சை,
ஒரு தடவையாவது பார்த்துச் சென்றால் பிறண்மனை நோக்கியவராவார். அல்லது சிவனடியாருக்குக் கொடுத்த பின்னரும் , அப்பெண்மேல் உள்ள விருப்பத்தை, பற்றை அவர் விடவில்லை என்று ஆகிவிடும்.
ஆனால் இயற்பகையார் என்ன செய்தார் என்றால் , சிவனடியாரின் பாதங்களில் தலைபடும்படி விழுந்து வணங்கினார். எழுந்து கைகூப்பித் தொழுதார். “இவனருள் பெறப்பெற்றேன்’ என மகிழ்ந்து திரும்பினார்.

- 151- - அகளங்கண்
இயற்பகை நாயனாரின் உள்ளத் தூய்மையையும் ஒழுக்கத்து மேன்மையையும் மகிழ்ச்சியோடு அவதானித்த சிவபெருமான் ஆச்சரியப்பட்டார்.
பொய் தரும் உள்ளம் இல்லான்
பார்க்கிலன் போனான்
என்று சொல்லிக் கொண்டார். பிறன்மனை நோக்காத பேராண்மை அல்லவா சான்றோர்க்கு அறன். அது மட்டுமா சான்றோரின் ஒழுக்கமும் அது தானே.
பிறண்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு
என்பது குறள், இயற்பகை நாயனார் சான்றோர் அல்லவா. அவரது ஒழுக்கம் சிறந்த ஒழுக்கம். அவரது செயல் அறச் செயலாகத் தானே இருக்கும்.
இயற்பகை நாயனார் சிவனடியார்களுக்குத் தொண்டு
செய்வதிலே உயர்ந்தவர் என்பதை மட்டுமல்ல பிறண்மனை நோக்காத பேராண்மை கொண்டவர் என்பதையும் உலகுக்குக் காட்டச் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல் இது.
தன் அடியவனின் பிறன்மனை நோக்காத பேராண்மையைக் காட்ட, சிவபெருமான் தானே பிறன்மனை நோக்கி வந்து பழிக்கப்பட்டாரே என்னே திருவருட் சிறப்பு.
தன்னைச் சரணடைந்த தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை உண்டதிலும் , இதுவல்லவா பெருங்கருணை விஷம் சிவபெருமானை அழிக்க முடியாது. ஆனால் இக்காரியம் மூலம் சிவபெருமானைப் பழிக்க முடியும்.
சிவபெருமான் தன் அடியாரின் பெருமைக்காக ஒழுக்கந்தவறியமை அவரின் பெருஞ் சிறப்பென்றே சொல்லலாம். ஒழுக்கம் தவறினால் கடவுளும் பழிக்கப்படுவார். இராமன் வாலிக்கு ஒளிந்திருந்து அம்பை எய்தமையால் இன்றும் பழிக்கப்படுகிறான்.
வள்ளுவன் தனது குறளில் ஒழுக்கமே உயிரினும் சிறந்தது என்கிறார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலாண் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்

Page 91
இலக்கியச்சரம் -152
பிறன்மனை நோக்காத என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரை வகுக்கும் போது நோக்காத என்பதை நினைக்காத என்றே பொருள் கொள்கிறார். கவிராஜர் என்பவர் நோக்காத என்பதை விரும்பாத என்று பொருள் கொள்கிறார். பரிதியார் நோக்காத என்பதை, கருதாத என்று பரிமேலழகர் போல் பொருள் கொள்கிறார்.
ஆனால் மணக்குடவர் மட்டும், நோக்காத என்பதை, பார்க்காத என்று பொருள் கொள்கிறார்.
இயற்பகை நாயனாரோபிறன்மனை நோக்காத (பார்க்காத) பேராண்மை படைத்தவர் என்னே அவர் தம் கற்பு
ஆண்களின் ஒழுக்கத்தில் அதிசிறந்த ஒழுக்கமாக , தமிழர் தம் நாகரிகத்தில் நயக்கத்தக்க வியக்கத்தக்க நாகரிகமாக இயற்பகை நாயனாரின் செய்கை விளங்குவதை யாரும் மறுக்க முடியாது.
இக்காட்சியை இத்தகைய முறையில் அமைத்த சேக்கிழார் புகழ் வாழ்க என்றும் வாழ்க மான்களின் காதல் வாழ்வு.
நயத்தக்க நாகரிகத்தைக் கண்டு அதிசயப்பட்ட நாங்கள் அடுத்து ஒரு நயமான காதற் காட்சியைப் பார்ப்போம்.
ஒரு கலைமானும் அதன் துணைமானாகிய பிணை மானும் மிகவும் வெப்பம் பொருந்திய ஒரு காட்டிலே நீர் தேடி அலைந்தன.
மிகுந்த களைப்போடும் தாகத்தோடும் நீரைத் தேடி ஓடிய அம்மான்களின் கண்களில் ஒரு சிறு பள்ளத்தில் நீர் தெரிந்தது.
இருமான்களும் ஓடிவந்து அச்சிறுபள்ளத்தை அடைந்தன. அப்பள்ளத்திலே இருந்த நீரோ இரு மான்களும் குடித்துத் தாகம் தீர்ப்பதற்குப் போதாது.
அதனால் கலைமான் தன் அன்புப் பிணை மானை நீர் குடித்துத் தாகம் தீர்க்கும் படி பார்வையாலே வேண்டிக் கொண்டது.
தன் காதற் கலைமான் தாகத்தால் தவித்திருக்க, தான் மட்டும் தனியாகத் தன் தாகத்தைத் தணிப்பதை, அந்தப் பிணை மான் விரும்பவில்லை. அதனால் பிணை மான் நீரருந்தாமல் கலைமானைப் பார்த்துக் கொண்டு நின்றது.

-153- அகளங்கன் தான் நீரருந்தாது விட்டால் தன் அன்புப் பினை மானும் நீரருந்தாது என உணாந்து கொண்ட கலைமான் ஒரு தந்திரம் செய்தது,
தானும் நீரருந்துவது போலத் தண்ணிரில் வாய்வைத்துக் கொண்டு நின்றது. தன் அன்புக் கலைமானும் தண்ணிர் அருந்துவதாக நினைத்துப் பெண் மான் நீரருந்தியது.
தன் அன்புப் பிணைமான் நீரருந்தும் அழகைப் பார்த்து மகிழ்ந்தது கலைமான் என்று ஒரு காட்சியைச் சிறுபஞ்ச மூலம் என்ற நூலிலே கண்டு களிப்படைந்தேன்.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் பெரிதுண்ண வேண்டிக் - கலைமான்தன் கள்ளத்தால் ஊச்சும் சுரம்என்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி.
பிணைமான் முழுவதையும் குடித்துத் தாகந் தீர்க்கட்டும் என்று, கலைமான் குடிப்பது போலப் பாசாங்கு செய்த இக்காட்சியை காதலர் உள்ளம் படர்ந்த நெறி என்கிறார் புலவர்.
சாதாரணமாகப் பார்க்கும் போது, ஆண்மான் பெண்மானுக்காக விட்டுக் கொடுக்கும் அன்புள்ளம் , காதலுள்ளம் இங்கே காட்டப்பட்டுள்ளது போல இருந்தாலும் , உண்மையில் ஆண் பெண் குடும்ப வாழ்க்கை இரகசியத்தில் இது இன்னும் ஆழ்ந்த பொருளைக் கொடுப்பதாகக் கொள்ளத் தக்கது.
மான் மூலமாக மனிதனுக்கு மானத்தைத்தான் போதிப்பார்கள். ஆனால் இங்கே பிணைமானும் துணைமானும் மூலமாகக் காதல் வாழ்க்கையின் உள்ளம் படர்ந்த உயர்ந்த ஒழுக்க நெறியைக் கற்பித்திருக்கிறார் கவிஞர்.
உலகில் காமஇச்சை கூடிய விலங்கினம் மான் என்று, மகாபாரதத்தில் ஒரு கதை வருகின்றது. எனவே மான் மூலமான இந்தப் போதனை பொருத்தமானது தான்.

Page 92
-154பல்வகைக் கற்பனைகள்
அன்னமும் நடையும் -
கோசல நாட்டிலே உள்ள மருத நிலமாகிய வயல் நிலங்களிலே அன்றாடம் நடக்கின்ற நிகழ்ச்சி ஒன்றைத் தனது கற்பனைமூலம் அற்புதமான பாடலாக்கி, அதன் மூலம் கோசல நாட்டுவளம் சொல்கிறான் கம்பன்.
மருத நிலத்துத் தடாகங்களிலே செந்தாமரை மலர்கள் மலர்ந்து காணப்படுகின்றன. அந்தத் தாமரை மலர்களிலே தான் அரச அன்னங்கள் வாழுகின்றன.
அழகிய அன்னப் பறவைகள் தமது வீடாகிய தாமரை மலரைவிட்டு கோசல நாட்டுப் பெண்களின் வீடுகளுக்கு நாள்தோறும் சென்று விடுகின்றன.
அன்னத்தின் நடை தான் சிறந்த நடை என்றும் , பெண்கள் மிக அழகாக நடந்தால் , அன்ன நடை நடக்கிறார்கள் என்றும் சொல்வது தான் பொதுவான வழக்கம்.
ஆனால் கம்பன் சொல்கிறான், கோசல நாட்டுப் பெண்களின் நடை, அன்னங்களின் நடையை விடப் பெரிதும் அழகான நடையாம். அதனால் அன்னங்கள் அந்நாட்டுப் பெண்களிடம் நடை கற்கச் செல்கின்றனவாம்.
அதுவும் எப்படிப்பட்ட அன்னங்கள் என்றால், அரசஅன்னங்கள் என்கிறான் கம்பன், செங்கால் அன்னம் என்பது அரசஅன்னத்தைக் குறிக்கும்
சொல்.
நடை என்பது ஒழுக்கத்தையும் குறிக்கும். அன்னத்தின் ஒழுக்கமே உயர்ந்த ஒழுக்கம் என்பர் அறிஞர். ஏனெனில் அது பாலையும் நீரையும் சேர்த்து வைத்தால் பாலை மட்டுமே பிரித்துப் பருகும்.
உலகில் நல்லவைகளும் தீயவைகளும் கலந்தே இருக்கின்றன. தீயவற்றைத் தள்ளி, நல்லவற்றைக் கொள்ள வேண்டும் என்பது , அன்னத்தின் செய்கை மூலம் மனிதன் படிக்கின்ற பாடம்.
இப்பாடம், பெண்களுக்கே ஆண்களிலும் அதிகம் தேவை என்று கருதினார்கள் தமிழ்ச் சான்றோர்கள். அதனால் அன்னத்தின் நடையை,
பெண்களின் நடைக்கு ஒப்பிட்டார்கள்.

- 155- அகளங்கண் கோசல நாட்டின் , தடாகங்களிலிருந்த அரச அன்னங்கள், அந்நாட்டுப் பெண்களிடம் நடை பழகச் செல்கின்றன. சென்றால் அது இலகுவில் விரைவாகப் பழகி முடிவதாக இல்லை.
அதனால் ஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்து குஞ்சுகளுக்கு உணவூட்டி, அவற்றைத் தாமரை மலராகிய படுக்கையிலே வளர்த்தி விட்டு, அதாவது படுக்கவைத்து விட்டுப் பெண்களிடம் நடைபழகச் சென்று விடுகின்றன. விரைவிலேயே திரும்பி விடலாம் என்று நினைத்துச் சென்றாலும், நடைபழகி முடிவதாக இல்லை.
நடை பழகப் பழக, இன்னும் பழக வேண்டியது பாக்கி இருந்து கொண்டே வந்ததால், அவைகளுக்கு ஒரு மயக்கம் ஏற்படுகின்றது. எப்படியும் பூரணமாகப் பழகி விடுவது என்ற பிடிவாதத்தோடு நாள்தோறும் சென்று நடை பழகி விட்டு, இருட்டும் நேரத்தில் தான் தம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன.
அன்னங்கள் இப்படிக் காலையிலேயே சென்று விட்டால் அன்னங்களின் குஞ்சுகளின் கதி என்னாகும். இந்த இடைக்காலப் பகற் பொழுதில் என்ன நடக்கின்றது என்று கம்பனிடமே கேட்போம்.
பால் நிரம்பிய பெரிய குடங்கள் போன்ற முலைகளைக் கொண்ட பெரிய எருமை மாடுகள் அந்தத் தடாகத்திற்கு வருகின்றன. அவற்றின் கால்கள் சேற்றிலே புதைந்து விட கன்றை நினைத்துக் கனைக்கின்றன.
கன்றை நினைத்துக் கனைத்த அளவிலே 'பால் நினைந்துாட்டும் தாயினும் சாலப் பரிந்து' பால் சுரந்து விட நீரிலே சொரிந்து விடுகின்றன.
தாயைக் காணாமல் ஏங்கிக் கொண்டு பசியோடிருக்கும் அன்னக் குஞ்சுகள் பாலை நீரிலே இருந்து பிரித்துக் குடித்துப் பசியாறி விட்டுத் தாமரை இதழ்களிலே படுத்துக் கொள்கின்றன.
அப்படிப் படுத்த அன்னப் பிள்ளைகளுக்கு அந்தத் தடாகத்திலே வாழும் தேரைகள் போடும் சத்தம் தாலாட்டாக, இனிமையாக இருக்கின்றது.அலை அடிப்பது தொட்டிலை ஆட்டுவது போலச் சுகமும் தந்திருக்கும். அதனால் நிம்மதியாக நித்திரை செய்கின்றன.

Page 93
-156
இலக்கியச்சரம்
தாய் அன்னங்கள் மாலையிலே வந்து,தமது குஞ்சுகள் ஒரு குறையுமில்லாமல், நிம்மதியாக சந்தோசமாக நித்திரை செய்கின்ற காட்சியைக், கண் கொள்ளாக் காட்சியாகக் காணுகின்றன.
பின் ஏது கவலை. மறு நாளும் அதே போல் நடைபழகப் போய் விடுகின்றன.
சேலுண்ட ஒண்க ணாரிற்
திரிகின்ற செங்கா லண்ணம் மாலுண்ட நளினப் பள்ளி
வளர்த்திய மழலைப் பிள்ளை காலுண்ட சேற்று மேதி
கண்றுண்ணிக் கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப் பச்சைத்
தேரை தாலாட்டும் பண்ணை, கயல் மீன் போன்ற அழகியதும் மை தீட்டப்பட்டதுமான கண்களைக் கொண்ட கோசல நாட்டுப் பெண்களிடம் நடை கற்கச் செல்கின்ற அன்னப் பறவைகளை வைத்துக் கம்பனின் கற்பனை எவ்வளவு தூரம் சென்றிருக்கின்றது பாருங்கள்.
அன்னங்களின் வாழ்க்கையைக் காட்டுவதல்ல கம்பனின் நோக்கம். கோசல நாட்டுப் பெண்களின் அழகு , ஒழுக்கம் என்பவற்றையும் , மக்களின் துன்பமற்ற நிம்மதியான வாழ்வையும் காட்டுவதே அவனது நோக்கம்.
வெறும் கால் நடை பழகப் போயிருந்தால் அன்னங்கள் கால் நடை பழகி முடித்திருக்கும். ஆனால் ஒழுக்கம் என்னும் நடை பழகப் போனால் அது முடிகிற காரியமா!
இன்றும் ஒழுக்கம் குறைந்தவர்களைப் பார்த்து, அவரது நடை சரியில்லை என்று சொல்வது நட்ைமுறை வழக்கில் உண்டு. எழுத்து நடை, பேச்சு நடை என்பதும் ஒழுங்கு , போக்கு என்ற பொருளிலேயே இன்றும் கையாளப்படுவதை நோக்கலாம்.
எருமை, கன்றின் மேல் வைத்திருக்கின்ற அன்பு , அன்னப் பிள்ளைகளுக்கு ஒரு குறையுமில்லாத நிம்மதியான வாழ்வு, தாயுன்னங்கள் நடைபழகி முடியாமை, எனப்பலவற்றையும் ஆழ்ந்த கவித்துவத்தோடு காட்டுகிறான் கம்பன்.

- 157
எலும்பும் பெண்ணுருவும்:
கற்பனைச் சிறகை விரித்துப் பறப்பதிலே கவிஞர்களது உள்ளம்
அகளங்கன்
களைப்படைவதே இல்லை. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பவர் தனது கற்பனைச் சிறகை அகல விரித்து நீண்ட தூரம் பறந்திருக்கிறார்.
அதிலே ஒரு பாடலில் உள்ள கற்பனையை இங்கே பார்க்கப் போகின்றோம்.
தலைவன் , தலைவியருக்கிடையே (அதாவது, காதலன் - காதலி, கணவன் - மனைவி ) பிரிவு ஏற்படுவதற்குச் சங்க காலத்தில் பல காரணங்களைக் கூறியிருக்கிறார்கள்.
தலைவியை விட்டுத் தலைவன் போருக்காகப்பிரிந்து செல்லல் , பொருளிட்டுவதற்காகப் பிரிந்து செல்லல், அரசனது தூதுக்காகப் பிரிந்து செல்லல், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்லல் என்பவை அவற்றிற் சில. இவற்றைப் போரிற் பிரிவு , பொருள் வயிற் பிரிவு , தூதிற் பிரிவு, ஒதற் பிரிவு என அழைப்பர்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் சங்க காலத்துப் புலவரல்லர். கடந்த இரண்டு , மூன்று நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவர் தான்.
ஒரு காதலன் , காதலியைப் பார்த்து , “நான் கல்வி கற்பதற்காக உன்னைப் பிரிந்து போகப் போகிறேன் , நான் கல்வி கற்று வரும் வரையில் கவலைப் படாமல் காத்திருப்பாய்’ என்று கூறினான்.
அவளால் அவனது பிரிவைத் தாங்க முடியவில்லை. அவன் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். -
பிரயாணம் செய்வதற்குப் புறப்படுபவரை செல்ல வேண்டாம் என்று தடுப்பது பண்பாகாது. அதுவும் கல்வி கற்பதற்காகச் செல்பவரைத் தடுப்பது நல்ல காரியமாகாது. அதனால் , அவளால் அவனைத் தடுக்கவும் முடியவில்லை. சந்தோஷமாக வழியனுப்பி வைக்கவும் முடியவில்லை.
தன்னை அவன் பிரிந்து சென்று விட்டால் ஏற்படும் துன்பத்தை அவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள் அதனால் அவள் தனது கணவனைப் பார்த்து , 'கல்வி கற்று விட்டு வரும் பொழுது திருஞான சம்பந்தரைப் போலத் திரும்பி வாருங்கள்’ என்று சொல்லி வழி அனுப்பி வைத்தாளாம்.

Page 94
இலக்கியச்சரம் - 158
கண், நாக்கு, மூக்கு, செவி, உடல் எதுவுமின்றி, எலும்பும் சாம்பலுமாக குடத்திலே கிடந்த மயிலாப்பூர்ச் சிவநேசச் செட்டியாரின் மகளாகிய பூம்பாவையை, தேவாரம் பாடி மீண்டும் பெண்ணாக்கியவர் திருஞான சம்பந்தர். அதே போல, தலைவன் தன்னைப் பிரிந்து விட்டால், அந்தப் பிரிவை ஆற்றாது காமநெருப்பினாலே தகிக்கப் பட்டுச் சாம்பலாகிப் போய்க் கிடக்கப் போகும் தன்னை, திருஞான சம்பந்தரைப் போல திரும்பி வந்தால் மட்டும் தான் பெண்ணாக்கி வாழ்வு கொடுக்க முடியும்" என்று கூறி விடை கொடுத்தாள் அத்தலைவி என்கிறார் பலபட்டடைச் சொக்க நாதப் புலவர்.
விண்ணாக்கு மாமதி காயவெங் காமவெளி கொளுத்தப் பண்ணாக்கு மாமொழி மாதங்க மாம்பஞ்ச பூதியம்போம் கண்ணாக்கு மூக்குச் செவியாக்கை அற்ற கடத்திலங்கம் பெண்ணாக்கு வார்தமைப் போலோதி வாரும் பிரிபவரே வள்ளுவர் தனது காமத்துப் பாலில் இத்தகையதொரு காட்சியைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் சம்பந்தருக்கு முற்பட்டவர்என்ற காரணத்தினால் எலும்பைப் பெண்ணுருவாக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கவில்லைப் போலும்,
தலைவன் தலைவியைப் பார்த்து , “உன்னைப் பிரிந்து செல்லப் போகின்றேன். மிக விரைவிலேயே திரும்பி வந்து விடுவேன் பொறுத்திரு” என்று ஆறுதல் கூறினான்.
அதற்குத் தலைவி கூறினாள் , “உன்னை விட்டுப் பிரிந்து போக மாட்டேன்” என்று சொல்வதாக இருந்தால் எனக்குச் சொல்லுங்கள், பிரிந்து சென்று விட்டுத் திரும்பி வரப்போகின்ற செய்தியைச் சொல்வதென்றால் அக்காலம் வரையில் வாழ்ந்திருக்கக் கூடிய யாருக்காவது சொல்லுங்கள்’ என்று கூறி ஊடல் கொண்டாள் என்கிறார் வள்ளுவர்.
“செல்லாமை உண்டேல் எனக்குரை , மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை'. ഖങiബ്രഖിങ് தலைவியின் நிலையும் பலபட்டடைச் சொக்க நாதப் புலவரின் தலைவியின் நிலையும் ஒன்று தான்.
இருப்பினும் இவர்களுக்கிடைக் காலத்தில்வாழ்ந்த திருஞான சம்பந்தர், பாம்பு தீண்டி இறந்து எரிந்து சாம்பலாகிக் குடத்துள் கிடந்த, மயிலாப்பூர் சிவநேசச் செட்டியாரின் மகளாகிய பூம்பாவையைத் தேவாரம் பாடி, அழகிய பெண்ணாக உயிர் பெற்றெழச் செய்த அற்புதத்தை ஆற்றியிருந்தார்.

- 159- அபுகளங்கள்ை எனவே வள்ளுவரையும் சம்பந்தரையும் நினைவு கூர்ந்த பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் கற்பனை அற்புதமாக அமைந்தது.
திருஞான சம்பந்தரும் திருமங்கையாள்வாரும் இலக்கிய வரலாற்றுக் காலப்பிரிவில் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது பலரும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். இருப்பினும் ஒருவருக்கொருவர் கவிதைக் கடிதம் எழுதியது பலரும் அறியாத ஒன்றாகும்.
திருமங்கையாழ்வார் , மகாவிஷ்ணு மூர்த்திக்குக் கோவில் கட்டுவதற்காக கொள்ளையடித்தவர் என்றும் , மன்னனாக வாழ்ந்தவர் என்றும், மகாவிஷ்ணுமூர்த்தியே பல ஆபரணங்களை அணிந்து மனித உரு எடுத்து வந்த போது , அவரையே வழிமறித்துக் களவெடுத்து அருள் பெற்றவர் என்றும் பல கதைகள் உண்டு.
மிகவும் அழகான தோற்றம் கொண்ட திருமங்கையாழ்வார் மன்னனாக வீற்றிருந்து உலாப் போனாராம். அவரின் அழகிய தோற்றப் பொலிவைக் கண்டு, இளம் பெண்ணொருத்தி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவரை அடையப் பெறாமையால், உடல்வாடி மெலிந்து, திருஞான சம்பந்தரைச் சந்தித்து , தன்னை அவருடன் சேர்த்து வைக்கும்படி முறையிட்டாளாம்.
திருஞான சம்பந்தர் , அவளது வேதனையை வெளிப்படுத்தி அவளது துன்பத்தைப் போக்கும்படி , கவிதை ஒன்றை எழுதி அவளிடம் கொடுத்து திருமங்கையாழ்வாரிடம் அனுப்பி வைத்தாராம். அக்கவிதை இது
கடியுண்ட நெடுவாளை கராவில் தப்பிக்
கயத்துக்குள் அடங்காமல் விசும்பில்பாய அடியுண்ட உயர்தெங்கின் பழத்தால் பூகம்
அலையுண்டு குலைசிதறும் ஆலிநாடா! படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடிப்
பதம்பெற்ற பெருமானே , தமியேண் பெற்ற கொடியொன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாளர் உயிர்ஒன்றும் கொடுவந்தாளே. தடாகத்துக்குள்ளே இருக்கின்ற வாளை மீனானது முதலையிடம் கடிபட்டுத் தப்பி, தடாகத்துக்குள்ளே இருக்க விரும்பாமல் துள்ளி ஆகாயம் நோக்கிப் பாய்கின்றது.
அப்படிப் பாய்கின்ற வாளை மீன், தடாகத்திற்குப் பக்கத்திலே செழித்து உயர்ந்து வளர்ந்திருக்கின்ற தென்னை மரத்திலே பழுத்துக் கிடக்கின்ற தேங்காய்க் குலையில் மோதியடிக்கின்றது.

Page 95
இலக்கியச்சரம் -60
வாளை மீன் மோதியதால் தேங்காய்ப்பழங்கள் கீழே விழுகின்றன. அவை தென்னை மரத்திற்குப் பக்கத்திலே வளர்ந்திருந்த கமுக மரத்திலுள்ள பாக்குக் குலையிலே மோதுகின்றன. பாக்குக் குலைகள் சிதறிக் கீழே விழுகின்றன.
அத்தகைய வளம்பொருந்திய நாட்டின் தலைவனே! (படி-பூமி) படியுண்ட பெருமானிடம் பறித்தும் (களவெடுத்தும்) அவரையே புகழ்ந்து பாடியும் உயர்பதம் பெற்ற பெருமானே!
என்மகள் போன்ற ஒருத்தி, நீ பவனி செல்லும் போது எதிர்வந்து உன்னைப் பார்த்துக்கும்பிட்டாள். இப்பொழுது உயிரை உவ்விடத்திலே விட்டு விட்டு வெறும் எலும்பும்தோலுமாக வந்திருக்கிறாள்.அவளுக்கு உயிர் கொடுத் துக்காக்க வேண்டியது உம்முடைய கடமையாகும், என்பது இப்பாடலின் பொருள்.
இந்தக் கவிதைக் கடிதத்தைப் பார்த்த திருமங்கையாழ்வார் , தானும் ஒரு கவிதைக்கடிதம் எழுதி திருஞானசம்பந்தருக்குக் கொடுத்தனுப்பினார்.
திருஞான சம்பந்தரைப்போலவே திருமங்கையாழ்வாரும், முதலில் திருஞானசம்பந்தரின் நாட்டு வளத்தைப் புகழ்ந்து கூறி விட்டு, தனது கருத்தைச் (GST635mTT.
வருக்கைநறுங் கணிசிதறிச் செந்தேன் பொங்கி
மடுக்கரையில் குளக்கரையில் மதகில் ஒடப் பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளிர் அருளர்குலவு மயிலைதனில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஒர் பெண்ணாக்கல் இயல்பு தானே. பலாவின் இனிய கனியானது பழுத்துத் தானாகவே வெடித்துச் சிதறி, பலாக் கிளையிலே இருக்கும் தேன் கூட்டையும் சிதைத்துக் கொண்டு பூமியிலே விழுகின்றது. தேனானது மடுக்களில் நிரம்பி , குளங்களிலேயும் நிரம்பி மதகின் ஊடாக வயலுக்குப் பாய்கின்றது.
அப்படிப் பெருக்கெடுத்துப் பாயும் போது, வண்டுகளானவை ரீங்காரம் செய்து மொய்க்கின்றன. அத்தகைய வளம் பொருந்திய சீர்காழியில் வாழும் திருஞான சம்பந்தப் பிள்ளையாரே! கேளும்,

ol
அகளங்கண்
சிவபெருமானின் அருள் விளங்கும் மயிலாப்பூரிலே , நெருப்பிலே எரிந்து போய்ச் சாம்பலாகிக் கிடந்த பூம்பாவையை உயிர் பெற்றெழச் செய்தோம் என்று இருப்பது மட்டும் தகுதியானதல்ல.
காமவேதனையால் நிலாவினாலே வெந்து போய் இருக்கின்ற இவளையும் ஓர் பெண்ணாக ஆக்குதல் உமக்கு இயல்பானதுதானே. எலும்பைப் பெண்ணுருவாக்கும் படி என்னிடம் அனுப்ப வேண்டியதில்லையே. நீரே ஆக்கியிருக்கலாமே என்பது இதன் பொருள்.
இவ்விரு பாடல்களும் உண்மையில் , திருஞான சம்பந்தரும் , திருமங்கையாழ்வாரும் பாடிய பாடல்களுமல்ல. இது உண்மைச்சம்பவமும் அல்ல. யாரோ ஒரு புலவர் திருஞான சம்பந்தரைப் பற்றியும் , திருமங்கை யாழ்வாரைப் பற்றியும் நன்றாக அறிந்து கொண்டு, தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, இப்படியான பாடலைப் பாடியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இருப்பினும் பாடல்கள் இரண்டும் மிகவும் கற்பனை நயம் மிக்க பாடல்களாகவும் , சிறந்த இரசனைக்குரிய பாடல்களாகவும் அமைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
மூக்குத்தியில் முத்து.
தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலம் எனக் குறிப்பிடப்படும் காலத்தில் எழுந்த நூல்களில் , பிரபுலிங்கலீலை என்பதும் ஒன்று. இதனைப் பாடியவர் கற்பனைக் களஞ்சியம் என்று போற்றிப் புகழப்பட்ட சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.
அவரது கற்பனைச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்கே பார்க்கப் போகிறோம். தமிழர்கள் மூக்குத்தி போடும் வழக்கம், நாயக்கர் காலத்தில் தான் உருவாகியது என்பர் ஆராய்ச்சி அறிஞர். தெலுங்கு மக்களின் பழக்கமாகிய மூக்குத்தி போடும் பழக்கம் தமிழ் மக்களிடையேயும் வேகமாகப் பரவி விட்டது.
ஒரு பெண் முத்துக்கல் பதித்த மூக்குத்தியைப் போட்டிருக்கிறாள். அந்தக் கல் அப்படியே தொங்கிக் கொண்டு பிரகாசிக்கின்றது. இக்காட்சியைத் தான் தனது கற்பனையிலே பாடுகிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.
கேசி. எஸ். அருணாசலம் என்பவரின் பாடலொன்று தமிழ்த்திரைப் படப் பாடலாக மிகவும் புகழ் பெற்றுப் பலரது உள்ளங்களையும் கவர்ந்துள்ளது.

Page 96
இலக்கியச்சரம் -162அது ஒரு மூக்குத்திப் பாடல். “சின்னச் சின்ன மூக்குத்தியாம். சிவப்புக் கல்லு மூக்குத்தியாம். கண்ணிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணைச் சிமிட்டிற மூக்குத்தியாம்'
என்று தொடர்கின்றது அப்பாடல். அது சிவப்புக் கல் பதித்த மூக்குத்தி , தன்னை அணிந்த கன்னிப் பெண்ணின் ஒய்யாரத்தைக் கண்டு மகிழ்ந்து கண்ணைச் சிமிட்டுகிறதாம்.
சிவப்பிரகாச சுவாமிகள் காட்டுகிற மூக்குத்தி வெள்ளைக் கல்லு மூக்குத்தி, அது வெறும் கல் அல்ல. முத்துக்கல், அந்த முத்துக் கல் மூக்கிலிருந்து அப்படியே முன் வாய்ப்பல் வரையில் தொங்கிக் கொண்டு ஜொலிக்கின்றது.
இதனைக் கண்ட கவிஞர் அந்த முத்து ஜொலிப்பதை , கண்ணைச் சிமிட்டுவதாகச் சொன்னால் , வழமையான வர்ணனையாக இருக்குமென்று கருதித் தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் புதுவிதமாக அக்காட்சியைப் படைத்திருக்கிறார்.
முத்து ஒன்று பற்களுக்குப் பக்கத்திலே தொங்குவது எதைப் போலிருக்கின்றது என்று ஒரு காரணத்தைக் கற்பித்து அவர் விளக்கும் விதம் மிகவும் ரசிக்கத்தக்கது.
வழமையாகப் பெண்களின் பல்லை வர்ணிக்கின்ற புலவர்கள்
எல்லோரும் “முத்துப் போல பல்லு , முத்துப் போல பல்லு ’ என்று தானே சொல்லுவார்கள். அப்படிச் சொல்லும் போது, உவமானமாகிய முத்து உவமேயமாகிய பல்லிலும் சிறந்தது என்ற பொருள் தானேகொள்வர்.
ஆனால் இந்தப் பெண்ணின் பற்களோ, முத்துக்களை விட மிகவும் வெண்மையாகவும் பிரகாசமாகவும் விளங்குகின்றனவாம். அதனால் புலவர்கள் பலர் இவளது பல்லைப் போலத்தான் முத்து இருக்கும் என்று கூறத் தொடங்கி விட்டார்களாம்.
அதாவது உவமானம் உவமேயமாகி விட்டது. உவமேயம் உவமானமாகி விட்டது. பற்களுக்கு முத்தை விட மதிப்புக் கொடுக்கப்பட்டு விட்டது. இவளொருத்தி பிறந்ததனால் முத்துக்களுக்குத் தீராத பழியும் அவமானமும் வந்து விட்டதாம். வழமையான உவமானமே மாறிவிட்டதே.
அதனால் முத்துக்களின் சார்பாக ஒரு முத்து ஒரு திட்டத்தைத் தீட்டியது. எமது குலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி எம்மைப் பழித்த

அகளங்கண் பற்கள் இருக்கின்ற வாயின் அருகில், அந்தப் பற்கள் காணும் படியாகத் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விடுவதுதான் தம் மானத்தைக் காக்க வழி என்று நினைத்தது.
குற்றமேதும் செய்யாத ஒருவருக்கு , யாராவது தீராத பழியை உண்டு பண்ணினால், பழியை உண்டு பண்ணியவரின் வீட்டு வாசலிலே தூக்குப் போட்டு இறந்து போகின்ற செயல், மானஸ்தர்களின் செயலாகப் போற்றப் படுகின்ற வழக்கம் சில இடங்களில் உண்டு.
அதே நிலையில் முத்துக்களின் சார்பாக ஒரு முத்து தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கிக் கிடக்கிறதாம்.
தன்னை நிந்தைசெய் வெண்ணகை
மேற்பழி சார மன்னி யங்கது நிகரற
வாழ்மனை வாய்தல் முன்னி றந்திடு வேனென
ஞான்றுகொள் முறைமை என்ன வெண்மணி மூக்கணி
ஒருத்திநின் றிட்டாளர், சிவப்பிரகாச சுவாமிகளின் இந்தக் கற்பனை மிகவும் நயமாக, இதமாக இதயத்தில் இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்கின்றது.
முத்தைப் போல பல்லைக் கொண்ட பெண்களே பேரழகிகள் என்று வர்ணிக்கப்படும் போது, முத்தை விட அழகிய பற்களைக் கொண்டவள் இவள் என்று ஒரு பெண்ணை அவர் காட்டிய விதமும் , அதற்கு அவருக்குத் தோன்றிய கற்பனையும் மிகச் சிறந்தவையே.
“கற்பனைக் களஞ்சியம்’ என்று பாராட்டினால் அது அவருக்குத் தகும் என்று சொல்லலாமல்லவா. திருக்குற்றாலக் குறவஞ்சி.
திருக்குற்றாலக் குறவஞ்சியில் , திரிகூடராசப்பக் கவிராஜருக்கு ஒரு வித்தியாசமான கற்பனை தோன்றுகின்றது. சிவப்பிரகாச சுவாமிகளுக்குச் சற்றுப் பின்னால் தோன்றியவர் அவர் திருக் குற்றால நாட்டின் பெருமையைச் சொல்ல ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாளுகிறார் அவர்.

Page 97
-164பெண்களின் பேச்சு, நன்கு முற்றி விளைந்த கருப்பஞ் சாற்றிலும்
இலக்கியச்சரம்
இனிமையானது, என்று சொல்வது தான் கவிஞர்களின் வழக்கம். அல்லது கருப்பஞ் சாறு போல இனிமையான வார்த்தைகளைப் பேசுவார்கள் என்று கூறுவதுமுண்டு.
பாகு மொழி - கண்டு (கற்கண்டு) போல மொழி, என்று உவமித்து வர்ணிப்பது தான் புலவர்களின் பொது வழக்கம்.
ஆனால் திருக்குற்றால நாட்டிலே கரும்பு, பெண்களின் பேச்சை விட இனிமையாக இருக்கிறதாம். அப்படி யாரோ சொல்லி விட்டார்கள். அதனால் சில ஆண்களுக்குக் கோபம் வந்து விட்டது.
தமது ஆருயிர்க் காதலியின் கனி மொழியை விடக் கருப்பஞ்சாறு அவ்வளவு இனிமையானதா? அப்படியென்றால் அந்தக் கரும்பு இருந்தால் அது தமது காதலிக்கே பழியாக , அவமானமாக இருக்குமே. அதனால் அந்தக் கரும்பை வெட்டி மண்ணிலே புதைத்து விடுவோம்.
அது மண்ணோடு மண்ணாக மாய்ந்து விட்ட்டும் , என்று கோபம் கொண்டு, நன்றாக முற்றி வளர்ந்திருந்த கரும்பை ஆண்கள் வெட்டி மண்ணுக்குள்ளே தாட்டுப் புதைத்து விட்டார்களாம்.
அப்படிப் புதைக்கப்பட்ட கரும்புக்குக் கோபம் வந்து விட்டது. சரி , உங்கள் காதலியின் பேச்சினிமைக்குப் பழி வந்து விட்டதென்ற ஒரே காரணத்துக்காகத் தானே என்னை வெட்டி மண்ணிலே போட்டுப் புதைத்தீர்கள் இப்பொழுது என்ன செய்து காட்டுகிறேன் பாருங்கள் என்று கரும்பு முளைத்து வளர்ந்தது.
வளர்ந்து அந்தப் பெண்களின் தோளை விடவும் அழகாகக் காட்சி தந்தது. அது மட்டுமன்றி அந்தப் பெண்களின் பற்களை விடவும் அழகான, பிரகாசம் மிக்க வெண்மையான முத்துக்களையும் ஈன்றது.
இனிமைக்காக மட்டுமே கோபித்துப் பழிவாங்கப்பட்ட கரும்பு இப்போது இனிமை , பற்கள் , தோள் என மூன்று வகையிலும் அப்பெண்களைப் பழித்ததும் , அந்தக் கரும்பை என்ன செய்வதென்று ஆண்களுக்குப் புரியவில்லை.

-165
அகளங்கண் தனது சிறப்பினால் , மன்மதனுக்கு வில்லாக மாறியது அக்கரும்பு அக்கரும்பை வில்லாக வளைத்து மன்மதன் தாமரை , மா , முல்லை , அசோகு , நீலோற்பலம் என்னும் ஐந்து மலர்களையும் அம்புகளாகப் பெண்கள் மேலும் ஆண்கள் மேலும் செலுத்தினான். அந்த அம்புகளுக்கு இந்தக் காதலன் காதலியும் இலக்காகினர்.
எந்தப் பெண்ணுக்காக எந்தக் காதலன் தன்னை மண்ணில் புதைத்தானோ , அவனுக்கும் அவனது காதலிக்கும் விரகதாபமூட்டி வருத்திக் கொண்டிருக்கிறதாம் அந்தக் கரும்பு. -
கரும்பு முற்றிய காலத்தில் அந்தப் பெண்மையை வெல்வதற்காகக்
காமனின் வில்லாக மாறி விட்டது என நயம் படக் கூறுகிறார் திரிகூட ராசப்பக் கவிராஜர்.
அந்ந லார்மொழி தன்னைப் பழித்ததென்று
ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு துண்ணி மீள வளர்ந்து மடந்தையர்
தோளை வென்று சுடர்முத்தம் ஈன்று பின்னும் ஆங்கவர் மூரலை வெண்று
பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக் கன்னல் வேளுக்கு வில்லாக ஒங்கும்
கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே.
அம்பிகாபதி ---
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் ஒரே மகனாகப் போற்றப்பட்டவன். அம்பிகாபதி, குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியை அவன் காதலித்து அதனால் அவன் கொல்லப்பட்ட கதை பிரசித்தமானது.
அது உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சியில் நான் இங்கு இறங்கவில்லை. அது உண்மை என்றே வைத்துக் கொண்டு, அவன் தன் காதலியை நினைத்துப் LITIQu பாடலொன்றின் கற்பனைச் சிறப்பைக் காணுவோம்.
அம்பிகாபதி பாடிய பாடல்களாக சில பாடல்கள் இன்றும் உண்டு. கம்பனின் இராமாயணத்தில் , காதல் , காமச்சுவை கொண்ட பாடல்கள் யாவும் அம்பிகாபதி இயற்றியவையே என்பர் சிலர். குறிப்பாக இராமன் சீதை சந்தித்த காட்சிகளை (மிதிலைக் காட்சிப் படலத்தில்) இவனே பாடினான்
// Fr

Page 98
இலக்கியச்சரம் -166
சோழன் மகள் அமராவதியைத் தன் உயிருக்கு மேலாகக் காதலித்த அம்பிகாபதிக்குத் தன் காதலியின் அழகைப் பாட வேண்டும் என்று ஆசை வந்தது.
அவளது முகத் தோற்றத்தைச் சந்திரனோடு ஒப்பிட விரும்பினான். சந்திரனோடு ஒப்பிடுவது அப்படி ஒன்றும் புதுமையானதல்லவே.
எல்லாப் புலவர்களும் அதைத்தானே செய்திருக்கிறார்கள். அப்படி என்றால் தனது காதலியின் முக அழகும் , மற்றைய புலவர்கள் வர்ணித்த நாயகிகளின் முக அழகும் ஒன்றாகி விடுமே என்று நினைத்தான்.
அப்படி என்றால் எதை ஒப்பிடலாம். மீண்டும் சந்திரனை ஒப்பிடத்தான் அவன் மனம் எண்ணியது. இப்போது ஒரு புதுக் கற்பனையோடு தொடங்குகின்றான்.
இது வரையில் எந்தப் பெண்ணின் முகத்தோடும் ஒப்பிடப்படாத சந்திரன் , என்று புதுமையான உவமானத்தைப் போட்டுப் பாடலைத் தொடங்கினான்.
“மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகரொவ்வா மதியை’ என்று முதலடியைப் பாடத் தொடங்கினான். அவன் உவமிக்கின்ற சந்திரன் , எல்லோராலும் காணப்படுகின்ற சந்திரன் அல்லாமல் , அதை விடவும் அழகும், பிரகாசமும் கொண்டதாக , ஆகாய மண்டலத்தில் வேறு எங்கோ இருக்கும்
சந்திரன்.
அதனால் , அந்தச் சந்திரனை வேறு எந்தப் பெண்ணின் முகத்திற்கும் , வேறு எந்த ஒரு புலவனாலும் உவமித்திருக்க முடியாது, என்று கற்பனை செய்து கொண்டு தொடங்குகின்றான்.
இருந்தும் அவனுக்குத் திருப்தியில்லை. பின்பு சொன்னான், தெய்வப் பிறவியாக உன்னைப் படைத்தவன் யாராக இருப்பான். சிவந்த நிறம், சிற்றிடை முத்துப் போன்ற பற்கள் , மூங்கில்த் தோள் இவற்றைக் கொண்டு தன் காதலியைத் தெய்வமாகவே படைத்தவன் பிரம்மதேவனா , அல்லது வேறு யாருமா, என்று வினா எழுப்புகிறான் அம்பிகாபதி.
இறுதியாக அதற்கு அவ்ன்ே விடையும் சொல்கிறான். பிரமதேவன் தான் படைத்தான். அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் பிரமதேவன் பல அழகிய பெண்களை எல்லாம் படைத்துப் படைத்து நல்ல பயிற்சி பெற்று, தனது பயிற்சியை முடித்துக் கொண்டு மகாலக்சுமி தேவியைப் படைத்துப் பார்த்தான். மகாலக்சுமி தேவி பிரகாசமாக, பேரழகியாக ஜொலித்தாள்.

-167- அகளங்கண் அப்போது தான் பிரம்மதேவனுக்கு நம்பிக்கை வந்தது. தன் கை படிந்து விட்டது என்று சந்தோசம் கொண்டான் அதன் பின்பு தான் அமராவதியைப் படைத்தான், என்கிறான் அம்பிகாபதி. என்ன கற்பனை, அற்புதமான கற்பனையல்லவா.
மை வடிவக் குழலியர்தம்
வதனத்தை நிகரொவ்வா மதியைமானைச் செய் வடிவைச், சிற்றிடையைத்,
திருநகையை, வேத்தோளைத், தெய்வமாக இவ் வடிவைப் படைத்தவடி
வெவ்வடிவோ யானறியேன், உண்மையாகக் கை படியத் திருமகளைப்
படைத்திவளைப் படைத்தனன்நற் கமலத்தோனே. நைடதம்
நளனின் கதையைப் புகழேந்திப் புலவர் வெண்பாவிலே பாடினார். அது அற்புதமாக அமைந்தது. அது நளவெண்பா எனப் பெயர் பெற்றது.
வெண் பாவிலே காவியம் பாடமுடியாது என்று நினைத்தவர்களுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதற்கு முன் பெருந்தேவனார் , பாரதத்தை வெண்பாவில் பாடியிருந்தார்.
இருப்பினும் அது அவ்வளவாகப் போற்றப்படவில்லை. பின்பு வில்லிபுத்துாராழ்வார் விருத்தத்தில் பாடிய வில்லி பாரதமே இன்று போற்றப்படுகின்றது.
அதனால் நளவெண்பாவும் , வெண்பாவில் இருக்கின்ற காரணத்தால் பிற்காலத்தில் போற்றப்படாது என்று கணக்குப் போட்ட அதிவீரராம பாண்டியன் நாயக்கர் காலத்தில் நளன் கதையை நைடதம் என்ற பெயரில் விருத்தப் பாவிலே பாடினான்.
நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று போற்றப்பட்ட போதும் நளவெண்பாவின் சிறப்பையோ , புகழையோ அது பெறாமற் போயிற்றென்றே கூறலாம். இருப்பினும் சில சில இடங்களில் நளவெண்பாவை விட நைடதம் சிறந்து விளங்குவதனைப் பலரும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
நளனின் முகத்தின் பேரழகையும் பிரகாசத்தையும் அதிவீரராம பாண்டியர் பாடிய முறை அவரது கற்பனைச் சிறப்புக்கு ஓர் சிறந்த உFTானமாகக் காட்டக் கூடியது.

Page 99
- 68
இலக்கியச்சரம்
பிரமதேவன் நளமகாராஜனின் முகத்தைப் படைத்த பின்பு அந்த முகத்தின் பேரழகிலேயும் பிரகாசத்திலேயும் குளிர்ச்சியிலேயும் மனதைப் பறிகொடுத்து விட்டான். அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. அதனால் அந்த முகத்தைப் போல இன்னொரு முகத்தைப் படைக்கத் தொடங்கினான்.
தொடங்கி, பதினைந்து நாட்கள் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பூரணமாக்கிய பின் பார்த்தான். நளனின் முகத்துக்கு அது ஈடாகவில்லை. அதனால் அதனை அழிக்கத் தொடங்கினான். பதினைந்து நாட்கள் சென்றது அழித்து முடிய. மீண்டும் புதிதாகப் படைக்கத் தொடங்கினான். அதுவும் திருப்தியில்லை மீண்டும் அழித்தான்.
இன்று வரை நளனின் முகத்தைப் போல படைக்க நினைத்துக் கை வருந்தியதேயன்றிக் கண்ட பலன் ஏதுமில்லை.
அது சரி, பிரமதேவன் எதைப் படைத்தானாம். சந்திரனைத்தான். வளர்பிறை, பூரணை , தேய்பிறை ,அமாவாசை மீண்டும் வளர்பிறை இப்படியே தொடர்கின்றது என்கிறார் அதிவீரராம பாண்டியர்.
முருகுண் டுவண்டு பயில்தார்நளன்
வாணி முகத்தைப் பெருவெண் மதியம் நிகரெய்தப்
பெறாமை யன்றோ கருதுங் கமலத்துறை நாண்முகன்
கைவ ருந்த வருதிங் கள்தோறும் புதிதாக
வகுத்தல் செய்வான் கற்பனைச் சிறப்பு மிக்க பாடல் தான் என்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை. அம்பிகாபதியின் கற்பனைக்கு இக்கற்பனை ஈடாக நிற்கின்றது.
கை படிய மகாலக்சுமியைப் படைத்து விட்டு, அமராவதியைப் படைத்தான் பிரமதேவன் என்ற அம்பிகாபதியின் கற்பனையும், நளனின் முகத்தைப் போல சந்திரனைப் படைக்க முயன்று, இன்று வரை முயன்று
வரும் பிரமதேவனின் முயற்சியும் சுவாரஸ்யமான கற்பனைகள் தான்.

-169. அகளங்கண்
கலிங்கத்துப்பரணி
தமிழில் உள்ள பரணிப் பிரபந்தங்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது கலிங்கத்துப் பரணியேயாகும். கவிச்சக்கரவர்த்தி என்று முதலில் போற்றப்பட்ட சயங்கொண்டார் இப்பிரபந்தத்தைப் பாடினார்.
இதன் பின்பே இன்னுமொரு கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக் கூத்தர் தக்க யாகப் பரணி பாடினார் என்பர், இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள். குலோத்துங்க சோழன் தன் சேனாதிபதியாகிய கருணாகரத் தொண்டைமான் மூலம் , கலிங்க மன்னன் அனந்த பதுமனை வென்று, கலிங்க நாட்டைக் கைப்பற்றிய கதை கலிங்கத்துப் பரணியிலே
சொல்லப்பட்டுள்ளது.
கலிங்கத்துப் பரணியிலுள்ள பாடல்கள் யாவும் மிகவும் சுவையானவை, சயங் கொண்டாரின் கற்பனைச் சிறப்பும் , கவித்துவமும் கலிங்கத்துப் பரணியில் உள்ள எல்லாப் பாடல்களிலும் காணப்படுகின்றன. கலிங்கத்துப் பரணியில் காடு பாடிய பகுதியில், பாலை வனத்தின் வெப்பக் கொடுமையை , அற்புதமான ஒரு கற்பனை மூலம் அவர் விளக்கியிருக்கிறார்.
பாலை வனத்திலே இருக்கின்ற மணலின் வெப்பம் எவ்வளவு என்று ஒரு கற்பனை மூலம் விளக்குகின்ற சிறப்பு , எல்லோரும் படித்து இன்புறத் தக்கதே.
இராமன் இலங்கைக்கு வருவதற்குக் கடல் பெருந்தடையாக இருந்தது. அக்கடலுக்கு அணை போட்டுத் திடலாக்கினால் தான், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இராம இலக்குவரும் , குரங்குப் படைகளும் வரலாம் என்ற நிலை வந்து விட்டது.
அதனால் குரங்குகள் பெரிய பெரிய மலைகளைப் பெயர்த்துக் கொண்டு வந்து கடலில் வீசி எறிந்து, பெரும் கஸ்டப்பட்டு அணை போட்டன என்பது இராமாயணத்தில் வருகின்ற காட்சி.
சயங் கொண்டார் தமது கலிங்கத்துப் பரணியில், இந்தக் குரங்குகளின் அறியாமையைப் பரிகசித்துக் கேலி செய்கிறார்.
குரங்குக் கூட்டங்கள் வரிசை வரிசையாகப், பெரிய பெரிய மலைகளைப் பெயர்த்துக் கொண்டு வந்து கடலிலே போட்டுப் பெருந்துன்பப்
பட்டனவே.

Page 100
g6Aasau Iaj-al-Ijtio - 70
இக்குரங்குகள் இப்பாலை வனத்திலே உள்ள ஒரு மணலை எடுத்து வந்து போட்டிருந்தால், அந்த ஒரு சுடு மணலே கடல்நீர் முழுவதையும் உறிஞ்சி வற்றச் செய்திருக்குமே என்கிறார் சயங் கொண்டார்.
அணிகொண்ட குரங்கினங்கள்
அலைகடலுக்கு அப்பாலை மணலொன்று காணாமல்
வரையெடுத்து மயங்கினவே” அப்பாலை நிலத்து மணலொன்றைக் கண்டெடுத்து வந்திருந்தால், பெரியமலைகளைப் பெயர்த்துச் சுமந்து கொண்டு வந்து துன்பப்பட்டிருக்கத் தேவையில்லையே என்ற சயங் கொண்டாரின் கற்பனை சுவாரஸ்யமான கற்பனை தானே. அப்பாலை நிலத்தின் வெம்மையை இதை விடவும் விளக்க
(LDĢULļLDT. இடைச் செருகல்களர்
சில பெரும் இலக்கியங்களிலே , அவ்விலக்கியத்தைப் பாடிய புலவனது பாடலை விட வேறு பாடல்களும் காணப்படுவதுண்டு. இவ்வகைப் பாடல்களை , இடைச் செருகற் பாடல்கள் என்றும், மிகைப் பாடல்கள் என்றும் கூறுவர்.
பெருமளவில் படிக்கப்படும் பாடல்களிலே , பாட பேதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அக்காலத்தில் மனனஞ் செய்தவர்கள் அதனை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது, சில சொற்கள் , சொற்றொடர்களைத் தவறுதலாக மாறிச் சொல்லிக் கொடுப்பதால் , அது மக்கள் மத்தியில் பரவி, பாடபேதங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
பெரும் புலவர்கள் தமது மாணாக்கருக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கும் போது தாம் மறந்து போன சொற்களுக்குப் பதிலாகத் தாமே சில சொற்களைச் சொற்றொடர்களைப் போட்டுப் பாடலை நிறைவு செய்து விடுகிறார்கள்.
இப்பாடல்கள் உண்மைப் பாடல்களிலிருந்து சில வேறுபாடுகளைக் கொண்டதாக இருக்கும். இப்படிப் பலரும் செய்யும் போது பல பாடபேதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. கம்பராமாயணத்தில் ஏராளமான பாடல்களில் பாடபேதங்கள் உண்டு.

-1.7l- அகளங்கண் இதே போல, பெரும் புலவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள். தாமே சில பாடல்களை முழுமையாகப் பாடி , தாம் சொல்லிக் கொடுக்கும் இலக்கியங்களின் இடையிடையே புகுத்தியும் விடுகிறார்கள். இப்படியான பாடல்களை இடைச் செருகற் பாடல்கள் என்பர். கம்பராமாயணத்திலும் வில்லிபுத்தூராழ்வார் பாடிய பாரதத்திலும் இடைச் செருகற் பாடல்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
வெள்ளியம்பலத் தம்பிரான் என்றும், வெள்ளியம்பலக் கவிராஜர் என்றும் அழைக்கப்பட்ட பெரும் புலவரொருவர், இராமாயணம் , பாரதம் ஆகியவற்றில் பல பாடல்களைப் பாடிப் புகுத்தியுள்ளார் என ஆராய்ந்தறிந்த பிற்காலப் புலவர்கள் , அப்பாடல்களை இனங்கண்டு வெள்ளிப் பாடல்கள் என்றுபெயரிட்டு , மிகைப் பாடல்களாக வேறு படுத்தியுள்ளார்கள்.
இருப்பினும் வெள்ளிப் பாடல்கள் முற்றாக இனங்காணப்பட்டு விட்டதாகவும் சொல்ல முடியாது. இனங்காணப்பட்ட சில பாடல்கள் மிகவும் சிறப்பானவையாகவே இருக்கின்றன. கம்பராமாயணத்தில் உள்ள இரு இடைச் செருகற் பாடல்களைப் பற்றி இங்கு காணப்போகின்றோம்.
இராமனின் தூதுவனாக இராவணனிடம் இலங்கா புரிக்கு வருகிறான் அங்கதன். இவன் வாலியின் குமாரன், இவனுக்கு முன்பாகவே இலங்கைக்கு வந்து சென்றவன் அனுமான், அனுமான் தூதுவனல்லன். அவன் ஒற்றனே. அங்கதனே தூதுவன்.
அனுமான் இலங்கைக்கு வந்து அசோகவனத்தில் சீதையைச் சந்தித்த பின் இராவணனைக் காண்பதற்காக , அங்குள்ள பூஞ் சோலையைச் சேதப்படுத்துகிறான். இதன் காரணமாகப் பெரும் யுத்தமே ஏற்பட்டது. இராவணனின் சேனா வீரர்கள் பலரை அனுமான் தனியாளாகவே கொன்று தீர்த்தான்.
இராவணனின் பஞ்ச சேனாதிபதிகளும் , இராவணனின் மகனான அக்கன் என்பவனும் அனுமனால் கொல்லப்பட்டனர். இராவணனது சேனைகளே ஆட்டங்கண்டு விட்டன. அனுமான் பெரு வீரனாகத் தனித்து நின்று இராவணனின் பெரும் படைகளுக்குப் பெரும் அழிவுகளைச் செய்து எல்லோரையும் அச்சங்
கொள்ளச் செய்தான்.

Page 101
இலக்கியச்சரம் - 172
இறுதியில், இராவணனின் மூத்த மகனும், பெரும் வீரனுமாகிய இந்திரஜித்துவால் சிறைப் பிடிக்கப்பட்டு , பாசத்தால் கட்டப்பட்டு இராவணன் முன்னிலையில் கொண்டு வரப்பட்டான்.
அனுமான் இராவணன் முன்னிலையிலும் மிகவும் கம்பீரமாகத் துணிச்சலாக நின்று வீர உணர்வோடு இராமனின் புகழைக் கூறினான். அனுமானைக் கொல்ல வ்ேண்டுமென்று இராவணன் நினைத்த போதும் அது முடியவில்லை. அனுமன் “சொல்லின் செல்வன்” ஆதலால் தன்னை இராம தூதன் என்றே அறிமுகஞ் செய்தான்.
தூதுவர்களைக் கொல்லும் வழக்கம் இராவணனிடம் இல்லை என்பதை அறிந்து அப்படிச் சொல்லி வைத்தான். இராவணனது தம்பியாகிய விபீஷணனும் தூதனைக் கொல்வது எமது வீரத்துக்கு இழுக்கு என்று சொல்லி, அனுமானைக் கொல்ல விடாமற் தடுத்தான்.
அதனால் இராவணன், அனுமான் செய்த கொலைகளுக்கும் , சேதமாக்கிய சொத்துக்களுக்கும் உரிய தண்டனையாக, அனுமானின் வாலில் நெருப்புப் பந்தத்தைச் சுற்றிக் கட்டி விட்டு அனுப்பி வைத்தான்.
அனுமான் தனது வாலில் கட்டப்பட்ட நெருப்பை இலங்கையின் பல இடங்களிலும் வைத்து எரியூட்டிச் சென்று இராமனை அடைந்தான் என்பது, இராமாயணத்தில் கம்பன் காட்டுகின்ற காட்சி.
இனி, இடைச் செருகலுக்கு வருவோம். அங்கதன் இராவணனிடம் தூது வந்து தூதுரைத்த பின், அரக்கர்கள் அங்கதனைச் சந்திக்கின்றார்களாம். அவர்கள் அனுமானுடன் போர் செய்து பெரும் துன்பப் பட்டவர்கள். அனுமானைமாபெரும் வல்லமையாளனாகக் கருதுபவர்கள். அவர்கள் அங்கதனிடம் அனுமானைப் பற்றி விசாரிக்கிறார்களாம்.
பொதுவாகவே எதிரி தரப்பிலே இருக்கின்ற பெரியவர்களைப் பற்றி விசாரிப்பதே, விசாரிப்பவனுக்கும் பெருமை தருகின்ற விடயமல்லவா. அந்த வகையில் தமக்கு அனுமானைத் தெரியும் என்று காட்டுவதற்கென விசாரிப்பதாகவும், அதற்கு அங்கதன் சொல்லும் பதிலாகவும், ஒரு பாடல்
இடைச் செருகல் பாடலாக அமைந்துள்ளது. அப்பாடலைப் பார்ப்போம்.

-173- sassmissiassor “அன்றிலங்கை எரித்தகுரங் கெங்கென
இராவணன்பே ரவையோர் Gas Lu நன்றியில் இந்திரசித்து என்பவனால்
பிணிப்புண்டு நண்ணி னானிங்கு என்றிறைவன் அடிபரவும் வானரர்கள்
அவனைநனி இகழ்ந்து மோத ஒன்றியஅச் சந்தின்இரிந் தொளித்தஇடம்
அங்கதனியாண் உணரேண் என்றாண்” அன்று இலங்கையை எரித்த அனுமான் சுகமாக இருக்கிறானா என, அனுமானைச் சுகம் விசாரித்தவர்களுக்கு , அங்கதன் கூறிய பதில் மிகவும் நயமானது.
அங்கதன் சொல்கிறான் இந்திரஜித்து என்பவனால் கட்டப்பட்டு தோல்வியடைந்து விட்டான் அனுமான், என்ற செய்தியை அறிந்த இராமனின் அடியார்களாகிய குரங்குகள் , அனுமானைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினார்கள். அதனால் அவன் அவமானந் தாங்க முடியாமல் எங்கோ ஒரு பொந்துக்குள் ஒளிந்து கொண்டான்.
அனுமான் எந்தப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டான் என்று அங்கதனாகிய எனக்குத் தெரியாது என்று சொன்னான் அங்கதன், என்கிறார் இப்புலவர். இதைக் கேட்ட அளவிலே அரக்கர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனுமான் மட்டுமல்ல, வேறு சிறந்த வீரர்களும் தன்னோடு இருப்பதைக் காட்டும் முகமாகவும் தான், இராமன் அங்கதனைத் தூதனுப்பினான் 6|6öILITÍ 35LDLJfŤ.
இங்கே அங்கதன் கூறிய் பதிலின் மூலம், அனுமான் குரங்குச் சேனையிலே மிகமிகச் சாதாரணமான ஒரு வீரன் என்றாகி விட்டான். எப்படி இருக்கின்றது இந்த இடைச் செருகற் பாடல் பாடிய புலவரின் கற்பனை.
இன்னொரு கற்பனையையும் இடைச் செருகற் பாடலுக்குள் பார்ப்போம் இராவணன் இறந்த பின்பு அவனது மனைவியும் பட்டத்தரசியுமாகிய மண்டோதரி, இராவணனின் உடலில் விழுந்து அழுகின்றாள். அப்படி அழும் போது தனது கணவனது மரணத்துக்குக் காரணம் யார் என்று அவள் சொல்லி அழுவது தான் விசித்திரமான கற்பனையாக இருக்கின்றது.

Page 102
இலக்கியச்சரபம் - 174
இராவணன் இறந்து போவதற்கு , இராவணன் சீதை மேல் வைத்த காமமே காரணம் என்பது கம்பரின் முடிவு. இந்தப் புலவர் வேறொரு காரணத்தைச் சொல்கிறார். இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது தான் காரணம் என்று மண்டோதரி கூறிப் புலம்புகின்றாளாம்.
இராவணன் இறந்து போவதற்கு சூர்ப்பனகை தான் காரணம் என்றால் அது பொருந்தும், அதுதான் முதற் காரணமே, இராமன் தான் காரணம் என்றால் அதுவும் பொருந்தும் இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது தான் காரணம் என்று மண்டோதரி சொல்லி அழுவது சற்று வித்தியாசமானது தான்.
அதிலும் அவள், இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது தான் பிழை என்று சொல்கின்றாள். சூர்ப்பனகை செய்த காரியம் சரியென்றும் மண்டோதரி சொல்லவில்லை.
“சூர்ப்பனகை செய்த காரியத்துக்கு, இலக்குவன் கொடுத்த தண்டனை தான் பிழை. அதுதான் நான் இன்று பூவிழந்து பொட்டிழந்து போவதற்குக் காரணம்’ என்கிறாள் மண்டோதரி.
சீதையைத் தூக்க முயன்ற சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன் வெட்டினானே அது பிழை. அதற்குப்பதிலாக இலக்குவன் அவளது நாக்கை வெட்டியிருக்க வேண்டும். நாக்கைவெட்டியிருந்தால் அவள் இராவணனிடம் வந்து சீதையின் அழகைப் பற்றியும், தானடைந்த அவமானம் பற்றியும் சொல்லியிருக்க மாட்டாள். இந்தப் போரே வந்திருக்காது என்கிறாள் மண்டோதரி. நாக்கைவெட்டுவது, மூக்கைவெட்டுவது போல சுகமான காரிய மில்லை என்பதும் மண்டோதரிக்குத் தெரியும். அதனால் அவள் சொல்லுகின்றாள், நாக்கைவெட்ட முடியாதென்றால் ஒரு அம்பினாலே சூர்ப்பனகையைக் கொன்றி ருக்கலாமே. கொன்றிருந்தால் எமக்கு இத்தனை துன்பம் வந்திருக்காதே என்கிறாள் மண்டோதரி.
மூக்கினை அறுத்ததம்பி மூட்டியதி அன்னாளின் நாக்கினை அறுத்திருந்தால் நாசமேற் பட்டிராது தீக்கணை ஒன்றாலந்தச் சிறுக்கியின் ஆவிதன்னைப் போக்கிவிட் டிருந்தால்நானும் பூவிழந் திருக்கமாட்டேன்
 

- 75- அகளங்கண்
இந்த இடைச் செருகற் பாடலிலுள்ள கற்பனை இரசிக்கத்தக்கதாகத் தான் இருக்கின்றது. தமிழிலக்கிய வானிலே இத்தகைய கற்பனைகள் ஏராளம் வைகையும் கடலும்,
பாண்டிய நாடு, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை மிக்க நாடு இப்பாண்டிய நாட்டின் தலை நகராக அமைந்தது மதுரை. மீனாட்சியம்மை கோவிலும், திருவாலவாய்ச் சிவன் கோவிலும் மதுரையில் மிகவும் பெயர் பெற்ற கோவில்கள்.
பாண்டிய நாடு தமிழை மட்டுமல்ல சைவ சமயத்தையும் வளர்த்தது. சிவபெருமானின் அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும் நடைபெற்ற இடமாகச் சொல்லப்படுவதும் பாண்டிய நாடே தான்.
ബ சிவபெருமான் பாண்டிய நாட்டிலே செய்த அறுபத்தி நான்கு திருவிளையாடல்களையும் முதலில் வட மொழியில் ஆலாசிய மகாத்மியம் என்ற பெயரில் பாடினார்கள்.
பின் அது திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் பெரும் பற்றப்புலியூர் நம்பியினால் பாடப் பெற்றது. பின்பு பரஞ்சோதி முனிவர் பாடினார். இப்போது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணமே பெரிதும் படிக்கப்படுகின்றது. . -
திருவிளையாடற் புராணத்தில் , இடம் பெற்ற முக்கியமான , சுவாரஸ்யமான , திருவிளையாடல்களில் ஒன்று, பெருக்கெடுத்த வைகைக்கு அணை கட்ட , சிவபெருமான் வந்தி என்னும் செம்மனச் செல்விக்குக் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண்சுமந்து கொட்டியது. மற்றையது நரியைப் பரியாக்கியது.
இவ்விரண்டு திருவிளையாடல்களும் மாணிக்க வாசக சுவாமிகளின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. மாணிக்க வாசக சுவாமிகளின் வரலாறு பெரிய புராணத்தில் பாடப்படாததால் கடவுள் மாமுனிவர், திருவாதவூரடிகள் புராணம் என்ற பெயரில் மாணிக்க வாசக சுவாமிகளின் வரலாற்றை அற்புதமான புராணமாகப் பாடியிருக்கிறார்.
கடவுள் மாமுனிவரின் கற்பனை ஒன்றை, திருவாதவூரடிகள் புராணம் மூலமாக இங்கு பார்க்கப் போகின்றோம். மந்திரிச் சருக்கம் என்னும் முதலாவது சருக்கத்தில் நாட்டுச் சிறப்புச் சொல்கின்ற முதலாவது பாடலில் அமைந்துள்ளது அந்த அற்புதமான கற்பனை,

Page 103
இலக்கியச்சரம் - 76
பாண்டிய நாட்டின் வளம் கூற வந்த கடவுள் மாமுனிவர், பாண்டி நாட்டின் முக்கியமான நதியாகிய வைகை நதியைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்றைத் தனது கற்பனைச் சிறப்பினாலே மெருகூட்டியிருக்கிறார்.
வைகை நதி, பெரும் நீர்ப்பெருக்கைக் கொண்ட நதியல்ல. வைகை நதி கடலுக்குச் சென்று சேர்வதில்லை. வைகையில் செல்லும் நீர் இடையிடையே விவசாயத்துக்குப் பயன்பட்டு விடுவதால் அந்த நதி கடலுக்குச் செல்ல வாய்ப்பே இருப்பதில்லை என்று வைகை.நதி பற்றிக் கூறியுள்ளார்கள். உண்மை நிலை இப்படியிருக்க , கடவுள் மாமுனிவர் , வைகை நதி கடலுக்குச் செல்லாததற்கு அற்புதமான ஒரு காரணத்தைச் சொல்கிறார். அதுதான் அவரின் கற்பனைச் சிறப்பாக இங்கு காட்டப்பட்டிருக்கின்றது.
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் தோன்றியது. அந்த விஷத்தைக் கண்டஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். -
உலகம் முழுவதையும் அழித்தொழிக்க வல்ல கொடிய ஆலகால விஷத்தைச் சிவபெருமான் உண்டு, தனது திருக்கண்டத்தில் அடக்கி திருநீலகண்டராக விளங்கினார். (நீலம் - விஷம்)
இது புராணக் கதை. இக்கதையைத் தேவார முதலிகள் தமது தேவாரங்களில் அதிகம் பாடிச், சிவபெருமானின் இரக்கத்தை வெளிப்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள்.
பாற்கடல் எனப்படும் கடல் தானே சிவபெருமானுக்கு விஷம் கொடுத்தது. சிவபெருமானுக்கு விஷம் கொடுத்தது கடல் என்பதால் கடலோடு தனக்கு ஒரு சம்பந்தமும் இருக்கக் கூடாது என்று கடலோடு கோபித்துக் கொண்டு கடலுக்குச் செல்வதில்லையாம் வைகை.
முக்கணொரு நான்குபுய
ஐந்துமுக முன்னோன் சொக்கனருள் நண்மைபெறு
தொண்மைதிகழ் நன்னாடு அக்கடு விடத்தை
அரனுக்கு அருள்வதென்றே மைக்கடலின் வைகல்ஒழி
வைகைவள நாடு.
 

- 177- அகளங்கண்
மூன்று கண்களும், நான்கு புயங்களும், ஐந்து முகங்களும் கொண்ட முன்னோனாம் சொக்கேசப் பெருமானின் அருளாகிய நன்மையைப் பெறும் பழமை மிக்க நல்ல நாடு பாண்டிய நாடு.
அந்தக் கொடிய ஆலகால விஷத்தைச் சிவபெருமானுக்குக் கொடுத்தது கடல் என்ற காரணத்தால், கருநிறம் பொருந்திய கடலுக்குச் சென்று கலக்காத நதியாகிய வைகை நதியினால் வளம் பொருந்திய நாடாக விளங்குவது பாண்டிய நாடு என்பது இப்பாடலின் பொருள்.
பொதுவாக நதியின் மூலம் நாட்டு வளம் தான் கூறுவார்கள். இங்கேயும் நாட்டுவளம் கூறப்பட்டுள்ளது. அதை விட மேலாகச் சைவவளம் விளக்கப்பட்டுள்ளதைக் கண்டு களிக்கலாம்.
கடவுள் மாமுனிவரின் கற்பனையில் வைகை நதியின் சிவபக்தி எப்படிக் காட்டப்பட்டுள்ளது பாருங்கள். வெறும் நதியின் பக்தியல்ல சொல்ல வந்த விடயம். அந்நாட்டு மக்களின் சிவபக்தியைத்தான் அவர் அப்படியான கற்பனை மூலம் காட்டியுள்ளார். நதி தானே மக்களின் தாய். தாயைப் போலதானே பிள்ளைகள்.
கடவுள் மாமுனிவரின் இந்த அற்புதமான கற்பனையைத் தொடர்ந்து இன்னொரு கற்பனையைப் பார்ப்போம்.
நந்திக்கலம்பகம்
தமிழ்ப் பிரபந்தங்களிலே கலம்பகம் என்பதும் ஒரு வகை. தமிழில் எழுந்த முதற் கலம்பகமாக இப்போது கிடைத்திருப்பது நந்திக் கலம்பகமே. இது நந்திவர்மன் என்னும் அரசன் மேல் பாடப்பட்டது. இக்கலம்பகத்தைப் பாடியவர் பெயர் சரியாக அறியப்படவில்லை.
இருப்பினும் , நந்திவர்மனின் தம்பியருள் ஒருவனே இக்கலம்பகத்தைப் பாடினான். எனப் பலரும் கருதுகின்றனர். தன் தமையனைக் கொல்வதற்காக அறம் பாடுவதுபோல இக்கலம்பகத்தைப் பாடினானென்றும் , இக்கலம்பகத்தைக் கேட்டால், தான் எரிந்து போவது உறுதி என்று தெரிந்து கொண்டும், நந்திவர்மன் தமிழ்க்கவிதை மேலுள்ள பற்றுதலினால் கேட்டு , எரிந்து அழிந்தான் என்றும் கதைகள் உண்டு.
இந் நந்திக் கலம்பகத்தைப் பாடிய தன் தம்பியின் சொற்படி, அரண்மனைக்கும் சுடுகாட்டுக்கும் இடையே தொண்ணுற்றொன்பது பந்தலிட்டு, அப்பந்தல்களுள் முதற் பந்தலிலிருந்து முதற் பாடலை மன்னன் கேட்டான்.

Page 104
இலக்கியச்சரம் - 78பின்பு அதை விட்டு எழுந்து அடுத்த பந்தலுக்குச் செல்ல அம்முதற் பந்தர் எரிந்து விழுந்தது.
இவ்விதமாக மற்றைய பாடல்களையும் படிக்கப் படிக்க மற்றைய பந்தல்களும் எரிந்தன. ஆயினும் நந்தி வர்மன் மனம் கலங்காது கடைசிப் பாடலுக்கு மயானத்தில் கட்டையடுக்கு வித்து அதன் மீதிருந்து இறுதிப் பாடலைக் கேட்டு எரிந்து இறந்தான் எனப் பிற்கால இலக்கியங்கள் கூறுகின்றன. தொண்டை மண்டல சதகம், சோமேசர் முதுமொழி வெண்பா என்பன இந்நிகழ்ச்சியைக் கூறுகின்றன. "நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்” எனச் சோமேசர் முதுமொழி வெண்பாவும் , “செஞ்சொற் கலம்பகமே கொண்டு காயம் விட்ட தெள்ளறை நந்தியெனும் தொண்டைமான்’ எனத் தொண்டை மண்டல சதகமும் குறிப்பிடுகின்றன.
தமிழ்க் கவிதைகளிலே நந்திவர்மன் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இக்கதை எடுத்துக் காட்டு, தன் உயிரினும் தமிழ்ப் பாடலைப் பெரிதாக நேசித்தவன் அவன்.
இனி நந்திக் கலம்பகத்தில் இரண்டு பாடல்களிலுள்ள கற்பனை நயங்களை இங்கு பார்ப்போம். இவ்விரண்டு பாடல்களும் மிகைப் பாடல்களாக நந்திக் கலம்பகம் என்ற நூலில் தனியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. வெண்ணிலாவுடற் பெண்ணிலாவும்.
தலைவனைப் பிரிந்திருக்கிறாள் தலைவி பிரிவு என்பது யாவருக்கும் துன்பம் தரவல்லதே. 'பேயொடு பழகினும் பிரிவதரிதே' என்பது பழமொழி,
இளமைப் பருவத்தில் தன் காதலனைப் பிரிந்திருக்கும் காதலியின் விரக வேதனையை, சங்க காலத்து அகத்திணைப் பாடல்கள் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றன, பல்லவர் காலத்து நூலாகிய நந்திக் கலம்பகத்திலும் இந்த அகத்திணை மரபு போற்றப்படுகின்றது.
காதலனைப் பிரிந்திருக்கிறாள் காதலி. அப்பொழுது வானத்தில் நிலவு தோன்றுகின்றது. காதலர் இல்லாத நேரத்தில் நிலா பகைவரைப் போலத் துன்புறுத்தும் காதலன் அருகில் இருக்கும் போது நிலா காதலர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
"காதலர் நெஞ்சை வெதுப்புவை நீ யெண்பர் வெண்ணிலாவே' என்பார் பாரதியார். தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு வானத்தில் தோன்றும் நிலவு பெரும் துன்பத்தைச் செய்கின்றது. நிலவு போய்மறைந்து விட்டால்
 

- 79- அகளTங்கண் தொல்லையில்லை என்று நினைக்கிறாள் தலைவி ஆனால் நிலாவோ ജൂ|കണ്ണ്വഖg|TG ജൂൺങ്ങാൺ.
அவள் நினைப்பது போல நிலாவாலே வேகமாகச் செல்ல முடியுமா. முடியாதே. அது மெதுவாக, மெதுவாக ஊர்ந்து செல்கின்றது. அந்தத் தலைவிக்குக் கோபம் கோபமாக வருகின்றது. அந்த நிலவைப் பார்த்துச் சொல்கிறாள் “வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே’
உண்மையில் வெண்ணிலாவின் வேகம் தலைவிக்குத்தான் ஆகாது. ஆனால் வெண்ணிலாவைப் பார்த்து அதன்மேலே இரக்கங் கொண்டு சொல்வது போலச் சொல்கிறாள் தலைவி.
“நீ யாவருக்கும் நன்மை செய்பவன் அல்லவா இப்படி மெதுவாகச் சென்று எம்போன்றோர்க்குத் தீமை செய்வது உனக்கு அழகா’ எனக் கரிசனையோடு புத்தி சொல்வது போலச் சொல்கிறாள் தலைவி.
வெண்ணிலாவை ஆணாக்கிப் பார்த்தால் தான் இப்பாடலில் கவிஞனின் கற்பனை அதிகம் சிறபுப் பெறும். முதலில் பாடலைப் பார்ப்போம். “மண்ணெலா முய்ய மழைபோல் வழங்குகரத் தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டிற் பெண்ணிலா ஊரிற் பிறந்தாரைப் போலவரும் வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே’.
“பெண்ணே இல்லாத ஊரிற் பிறந்த ஒருவன் பெண்ணைக் கண்டு விட்டால் அந்த இடத்தை விட்டு அசைவானா! அவனைப் போலல்லவா நீயும் அசையாமல் நிற்கிறாய்” என்று, நிலாவைப் பார்த்து ஏசுகிறாள் தலைவி. “பெண்கள் உள்ள வீட்டில் பிறந்தவர்களுக்கு, பெண்களின் துன்பம் தெரியும். வேதனை புரியும், பெண்களோடு கூடப் பிறக்காதவர்களுக்குப் பெண்களின் வேதனை புரியாது. பெண்களோடு கூடப்பிறக்காது விட்டாலும், பெண்கள் உள்ள ஊரிற் பிறந்திருந்தாலுமே பெண்கள்படும் விரகவேதனை தெரிந்திருக்கும்.
ஆனால் பெண்களே இல்லாத ஊரிலே பிறந்தவர்களுக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் அவர்களைப் போல, பெண்ணில்லாஊரில் பிறந்தாரைப் போல, எம்மை வருத்துகின்றாயே, நீ செல்லுகின்ற வேகம் உனக்குத் தகுந்ததா” என்று கேட்பது போலப் பொருள் கொண்டாலும் இப்பாடல் நயமான கற்பனை மிக்க பாடல் தான்.

Page 105
இலக்கியச்சாரம் -180
இருப்பினும், "பெண்களையே பார்க்காதவன் , பெண்களைப் பார்த்து விட்டால் எப்படி அவ்விடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பானோ அதே போல் நீயும் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நகருகின்றாயில்லையே'. எனத் தலைவி சொல்வதாக அமையும் போது, புலவரின் கற்பனை நயம் நெஞ்சத்தைத் தொடுகின்றதல்லவா.
Lumir Gasas sasflestas L. JI TIL OES.
இதேபோன்று கற்பனைச் சிறப்புமிக்க இன்னொரு பாடலையும்,நந்திக் கலம்பகத்திலிருந்து பார்ட்போம். இது நந்திவர்மனின் பாணனின் பாடல் பற்றியது. நந்தி வர்மன் தனது பட்டத்தரசியைப் பரிதவிக்க விட்டுவிட்டுப் பரத்தையர் வீடுகளிலேயே இரவுப் பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருந்தான். பரத்தையர் வீடுகளில் நந்திவர்மன் இருக்கும் நேரத்தில் அவனது பாணன், நந்திவர்மனையும், பரத்தையரையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்காகப் பாடுவது வழக்கம்.
பாணன் பாடுகின்ற பாடல்கள் பட்டத்தரசியின் அந்தப்புரம் வரை கேட்கும். அதனால் அரசியும் ஏனையோரும் மிகவும் கோபமுறுவர்.
ஒரு நாள் அரசன் தனது மனைவியாகிய அரசியிடம் வர விரும்பினான். மனைவி தன் மேல் ஊடல் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவளிடம் இதமாகப் பேசிக் கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தனது பாணனை அனுப்பி வைக்கிறான்.
LUIT 600T6öI அரசியிடம் வருகிறான். அரசிக்கோ அரசன் மேல் மிகுந்த கோபம், அரசனில் மட்டுமல்ல அரசனுக்கு உதவியாக இருக்கும் பாணனிலும் அவளுக்கு மிகுந்த கோபம் உண்டு.
அரசனிடம் தன் கோபத்தை வெளிப்படுத்த முடியாது என்பது அவளுக்குத் தெரியும் பாணனிடமாவது தன் கோபத்தைக் காட்டலாம் என்றால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை.
ஏனெனில் பாணன் அரசனின் தூதனாக அல்லவா வந்திருக்கிறான். அதனால் அவனைக் கோபித்து ஏசினால், அது அரசனைக் கோபித்து ஏசியது போலாகி விடுமே என்று அஞ்சுகிறாள்.
இருப்பினும் பாணனின் செய்கையைக் கண்டித்து அவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைத்த அரசி அதற்கு ஒரு வழிகாணுகிறாள்.
 

-181- அகளங்கண் பாணனின் பாட்டுத் திறனைப் பற்றிய தன்னைச் சார்ந்தவர்களின் அபிப்பிராயத்தைக் கூறி, அவனை அவமானப்படுத்தித் தன் கோபத்தைத் தணித்துக் கொள்கிறாள்.
ஈட்டு புகழ்நந்தி பாணநீ எங்கையர்தம் வீட்டிருந்து பாட விடிமளவுங் - காட்டிலழும் பேயென்றாளர் அண்னைபிறர் நரியென்றார் தோழி நாயென்றாளர் நீயென்றேன் நான்.
“பெரும் புகழ்ஈட்டும் நந்திமன்னனின் பாணனே! நீ எமது தங்கையர்களின் வீட்டிலிருந்து விடியும்வரை பாடினாய்’, எனத்தொடங்கி பரத்தையரைத்தன் தங்கைகளாகச் சொல்லி உறவு கொண்டாடி விட்டுத் தொடர்கிறாள்.
'நீ பாடியதைக்கேட்ட என் தாய், காட்டிலே பேய் அழுகின்ற சத்தம் கேட்கிறது என்றார். மற்றவர்களோ இல்லை, இல்லை நரி ஊளையிடுகின்ற சத்தம் தான் இது என்று என் தாயின் கூற்றை மறுத்தனர். எனது தோழி சொன்னாள், காட்டில் பேயழும் சத்தமுமில்லை, நரியின் ஊளைச்சத்தமும் இல்லை இது நாய் குரைக்கும் சத்தம் என்றாள்.
ஆனால், எனக்குத்தெரியும் அது உன் வேலைதான் என்று. அதனால் நான் அவர்களுக்குச் சொன்னேன், இது பேயோ, நாயோ , நரியோ செய்யும் வேலையல்ல உன் வேலைதான் என்று'.
எப்படியிருக்கின்றது அரசி பாணனின் இசைத்திறமைக்குக் கொடுத்த சான்றிதழ். புலவரின் கற்பனை அரசியின் கருத்து மூலம் அற்புதமான பாடலாகியிருக்கிறதல்லவா.
தனது கணவன் தன்னை விட்டு விட்டுப் பரத்தையர் வீட்டிலிருக்க, அந்தக் கணவனையும் பரத்தையரையும் மகிழ்ச்சிப் படுத்தப் பாணன் பாடிக் கொண்டிருக்க , அப்பாடலிசை தலைவிக்குக் கேட்கும் போது, தலைவிக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்.
பாணன் தான் கிடைத்தான் ஏச்சு வாங்க கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திப் பாணனைத் தலை குனிய வைத்தாள் தலைவி. தலைவி ஏசுவது நேரடியாகப் பாணனைக் குறிப்பதாக இருந்தாலும் அரசனுக்கும் உரியது தான். பாடியவனுக்கே இவ்வளவு ஏச்சு என்றால், பரத்தையரை நாடியவனுக்கு.?

Page 106
-182சிலப்பதிகாரக் கற்பனைகள் கவிதைகளை இயற்றுவதென்பது சாதாரணமான ஒரு காரியமல்ல. இன்று புதுக்கவிதைகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டு வருவதைப் பார்த்து, கவிதைகளை இயற்றுவது சுலபமான காரியம் எனச் சிலர் கருதலாம்.
ஆனால் இன்று வரும் புதுக்கவிதைகள் எனப்படுபவற்றில் , கவிதைகளாக அமைந்துள்ளவை மிகமிகச் சொற்பமானவையே. அவற்றின் வாழ்நாளும் புற்றீசல்களின் வாழ்நாள் அளவே தான் என்று கூறலாம்.
கவிதைகளுக்கே உரித்தான சில சிறப்பியல்புகளை இன்றைய புதுக்கவிதைகளில் காண்பது அரிதினும் அரிது கவிதைக்குக் கருமுக்கியமானது தான். ஆனால் அந்தக் கரு கவிதை வடிவத்தில் சொல்லப்படும் போது , கவிதைக்குரிய சிறப்பியல்புகளோடு சொல்லப்பட்டால் மட்டுமே தான் அது கவிதை இலக்கியம் என்ற நிலையை அடைகின்றது.
சோதிடம் , வைத்தியம் , இலக்கணம் முதலியவைகளும் முற்காலத்தில் கவிதை வடிவிலே தான் பாடப்பட்டன. ஆனால் அவை இலக்கியங்களாக மதிக்கப்படுவதில்லை.
சங்க மருவிய காலத்து அறநூல்களையும் இலக்கியம் என்று சொல்லத் தயங்கிய காலம் ஒன்று இருந்தது. திருக்குறளைக் கூட இலக்கிய நூல் இல்லை என்று எழுதியவர்களும் உண்டு.
எனவே கவிதை என்பது இலக்கிய அந்தஸ்த்தைப் பெறுவதாக இருந்தால் அது கவிதைக்குரிய சிறப்பியல்புகளைப் பெற்றிருக்க வேண்டும். வெறும் இலக்கணத்தை மட்டும் நிறைவு செய்தாற் போதாது , அதற்கு அப்பாலும் பல விடயங்கள் இருக்கின்றன.
அந்த வகையிலே புலவர்களின் கற்பனை கவிதையின் சிறப்பியல்புகளிலே ஒன்று. தான் சொல்ல வந்த கருத்தைப் பொருத்தமான கற்பனையோடு , சொல்லும் போது தான், அவனது கவிதை, இலக்கிய அந்தஸ்த்தைப் பெறுகின்றது.
இளங்கோ அடிகள் பாடிய சிலப்பதிகாரம் தமிழின் முதற் காப்பியம் மட்டுமல்ல ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மைக் காப்பியமாகவும்
திகழ்கின்றது.
 

-183- அகளங்கண் சிலப்பதிகாரத்தில் 'கானல் வரி' என்னும் பகுதி மிகவும் முக்கியமானது. இளங்கோ அடிகளின் கற்பனை வளத்தையும். கவித்துவத்தையும் ஒருங்கே எடுத்துக் காட்டும் பல பாடல்கள் இப்பகுதியிலே இருக்கின்றன.
புகாரைச் சிறப்பித்துக் கோவலன் பாடுவதாக அமைந்த ஒரு பாடலில் உள்ள ஒரு கற்பனையை முதலில் காண்போம்.
கடற்கரையிலே உள்ள ஆம்பல் மலர்களின் இயல்பு, இரவிலே மொட்டவிழ்ந்து விரிவது தான். இரவிலே வானத்தில் தோன்றும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்த்து, ஆம்பல் மகிழ்ந்து மொட்டவிழ்ந்து விரிந்து மலர்ந்து நிற்கும், என்று பொதுவாகக் கூறுவது மரபு.
ஆனால் பூம்புகார்க் கடற்கரையில் ஆம்பல் மலர்கள் பகலிலேயே மொட்டவிழ்ந்து மலர்ந்து விடுகின்றனவாம்.
சந்திரன் வராமல், நட்சத்திரங்கள் வராமல் ஆம்பல் எப்படி மொட்டவிழ்ந்து விரிந்து மலரும் என்று கேட்டால், ஆம்பல்கள் சந்திரனையும், நட்சத்திரங்களையும் கண்டுதான் மொட்டவிழ்ந்து விரிந்து மலர்கின்றன என்று பதில் சொல்லுகிறார் இளங்கோ,
அதெப்படி பகலிலே சந்திரனும் நட்சத்திரங்களும் வானில் வந்தன என்று கேட்டால், வானில் அல்ல கடற்கரைக்கே வந்து விட்டனவே என்று புதிர் போடுகிறார் இளங்கோ,
கடலிலே இருந்து , புரிகளைக் கொண்ட அழகிய பிரகாசமான வெண்ணிறச் சங்குகள் கரையிலே வந்து உலாவுகின்றன கரையிலே உலாவும் சங்குகளோடு, பிரகாசம் மிக்க முத்துக்களும் கரையிலே விரவிக் கிடக்கின்றன. கரையிலே பரவிக் கிடக்கும் முத்துக்களையும் சங்கையும் பார்த்த ஆம்பல் ஏமாந்து போகின்றது. சங்கைப் பார்த்து, விரிந்த கதிர்களைக் கொண்ட வெண்மதி என்றும், முத்துக்களைப் பார்த்து நட்சத்திரங்கள் என்றும் ஏமாந்து விடுகின்றது ஆம்பல்.
சந்திரனும் நட்சத்திரங்களுந் தான் வந்து விட்டன என்று ஏமாந்துபோன ஆம்பல்கள் மொட்டவிழ்ந்து விரிந்து விடுகின்றன என்கிறார் இளங்கோ,
விரிகதிர் வெண்மதியும் மீண்கணமும் ஆம்என்றே - வெளர்ளைப் புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல் பொதிஅவிழ்க்கும் புகாரே எம்ஊர்

Page 107
இலக்கியச்சரம் - 184
ஆம்பலைப் போலவேதான் பூம்புகார்க் கடற்கரையில் வந்து போகும்
பெண்களும், ஆண்களின் வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து போய் விடுகிறார்கள். இயற்கையே ஏமாந்து போகும் போது இளம் பெண்களில் குறைகூறிப்பயனென்ன என்ற வகையில் உட்பொருள் வைத்துக் கோவலன் கானல் வரிப் பாடலில் பாடுகிறான்.
இதற்குப் பதிலாக மாதவி கானல் வரி பாடும் போதும், இத்தகைய ஒரு கற்பனையைப் பாடுவதாக இளங்கோ அடிகள் அமைத்துள்ளார்.
பூம்புகாரிலே ஆம்பல் மலர்கள் இரவிலே மலராமல் பகலிலே மொட்டவிழ்ந்து விரிந்து விடுகின்றனவாம். அதற்குக் காரணம் சொல்கிறாள் LDITg56).
கடற்கரையிலே இருக்கின்ற புன்னை மரங்கள் நன்றாகப் பூத்துப் போய்க் காட்சியளிக்கின்றன, புன்னைப் பூக்கள் வானத்து நட்சத்திரங்கள் போல ஜொலிக்கின்றன.
அப்படியான ஒரு புன்னைமரத்திலே, வெள்ளை நிறமான , சந்திரனைப் போன்ற பிரகாசம் பொருந்திய தோற்றங் கொண்ட அன்னம் ஒன்று ஏறுகின்றது. அந்தக் காட்சியைக் கடற்கரையிலே கிடந்த ஆம்பல்கள் கண்டு விடுகின்றன. பூரண சந்திரனும் நட்சத்திரங்களும் தான் இவை என்று நினைத்து மலர்ந்து விடுகின்றன என்கிறாள் மாதவி.
நிறை மதியும் மீனும்என அண்னம்
நீள் புண்னை அரும்பிப் பூத்த பொறைமலி பூங்கொம்பு ஏற வண்டு
ஆம்பல் ஊதும் புகாரே எம்ஊர். கோவலன் பாடும் போது, பூம்புகார்க் கடற்கரையிலே , இரவில் மலரும் இயல்பு கொண்ட ஆம்பல் ஏமாந்து போய் பகலில் மொட்டவிழ்ந்து மலர்வதாகப் பாட, மாதவியோ அதற்கு அடுத்த படிக்குச் சென்று , ஆம்பல் ஏமாந்து போய் பகலிலே மொட்டவிழ்ந்து இதழ் விரித்து மலர, காத்திருந்த வண்டுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, விரிந்த மலரில் விரும்பியமர்ந்து தேன் குடித்து ஊதி ரீங்காரம் செய்து கொண்டிருக்கும், என்று கூறுவது மிகவும் சிறப்பான உட்பொருள் கொண்ட கற்பனையாக அமைந்துள்ளது.
சிலப்பதிகாரக் கானல் வரியில் உள்ள அகத்திணை ஒழுக்கத்தை, உட்பொருளோடு சேர்த்துப் பார்க்கும் போது இந்த இரு பாடல்களும் மிகவும் சிறந்த கவித்துவம் மிக்க கற்பனை நயத்தோடமைந்த பாடல்களாகக் காட்சியளிக்கின்றன.

- 85- அகளங்கன்
பண்டமாற்று வியாபாரம்
இளங்கோ அடிகளின் இன்னொரு கற்பனையையும் இங்கு கானல் வரியிலே காண்போம்.
பூம்புகார்க் கடற்கரையிலே விளையாடித் திரிகின்ற அழகிய இளம் பெண்கள் மேல் மனம் போக்கிய இளைஞர்கள், அவர்களைக் காதலிப்பதற்காக அவர்கள் பின்னாலே சுற்றிச் சுற்றித் திரிவார்களாம்.
ஓர் இளைஞன் ஒர் இளம் பெண் மேல் காதல் கொண்டு அவளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்காக , அழகிய பிரகாசம் மிக்க முத்துக்களைக் கையில் கொண்டு அவள் பின்னாலே திரிந்து அலைந்தான்.
அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. “இந்த முத்துக்கள்
உங்களுக்குக் காணிக்கை, இதை வாங்கிக் கொள்ளுங்கள் , வாங்கிக்
கொள்ளுங்கள்’ என்று கூறிப் பின்னாலே அலைந்தான். அவளோ
வாங்கவில்லை. அவளது தோழி அதைக் கண்டு விட்டு அந்த இளைஞனிடம்
வந்து சொல்கிாறள்,
“எனது தோழியை நீ பெற வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற
தகுதியான சிறந்த காணிக்கைப் பொருளையல்லவா கொண்டு வரவேண்டும். நீ கொண்டு வந்து பிடி பிடி என்று வற்புறுத்திக் கொடுக்க முயலும் முத்துக்கள், எனது தோழியின் பிரகாசமான பற்களுக்கே ஈடாகாது என்பதை நீ அறியவில்லை' என்று சொல்லி விட்டு இன்னொரு விடயத்தையும் சொல்கிறாள்.
“ஒலிமிகுந்த இந்தக் கடல் , நாள் தோறும் எனது தோழியின் காலடியில் மிகவும் பிரகாசம் மிக்க ஒளி பொருந்திய முத்துக்களைக்
காணிக்கையாகக் கொண்டு வந்து கொட்டுகின்றது.
அப்படிக் கொட்டி விட்டு அதற்கு ஈடாக எதைப் பெற்றுச் செல்கின்றது தெரியுமா? எனது தோழி சூடிக் களித்து பின் வாடியதால் கழித்து எறிந்த பூமாலையைத் தான் பெற்றுக் கொண்டு செல்கின்றது.
எனது தோழி சூடிக் கழித்த LDT606) தான், கடல் காலடியிலே கொண்டு வந்து குவித்த பிரகாசமான முத்துக்களுக்கு ஈடாகும் அது கடலுக்குத்
தெரியும். உனக்குத் தெரியவில்லையே.

Page 108
இலக்கியச்சரபம் - 186
தீங்கதிர்வாளர் முகத்தாளர் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் “வாங்கும்நீர் முத்து'என்று வைகலும்
மால்மகன் போல் வருதிர்ஐய வீங்குஒதம் தந்து விளங்குஒளிய
வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்
போல்மீளும் புகாரே எம்ஊர். வியாபாரிகள் பண்டமாற்றுச் செய்வது போல கடலும் பண்டமாற்றுச் செய்கின்றது. கடலானது பிரகாசம் விளங்கும் ஒளி மிக்க வெண்முத்துக்களைக் கொண்டு வந்து தந்துவிட்டு, நாம் கழற்றி எறிந்து வாடிய பூமாலையைப் பண்டமாற்றாகப் பெற்றுச்செல்கின்றது. கடலுக்குஇலாபகரமான வியாபாரம்
அது.
ஆனால் நீயோ, சாதாரண முத்துக்களைக் கொடுத்து விட்டு பெண்ணையே கொண்டு போக நினைக்கிறாயே” என்கிறாள். இளங்கோவின் இன்னொரு கற்பனையை அடுத்துப் பார்ப்போம். கனவு கண்டு சொல்வாயா.
காதலன் பிரிந்து போய்விட்டான். காதலி அழுது அழுது நித்திரையின்றி புலம்பித் தவிக்கின்றாள். தன்னை மறந்து துறந்து போனவரைத் தன்னால் மறக்கமுடியவில்லையே என கடற்கரையிலே, தமது காதலுக்குச் சாட்சியாக இருந்த அழகிய, கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் ஆம்பல்ப் பூக்களையும் அன்னங்களையும் பார்த்துச் சொல்லி வருந்துகின்றாள்.
அம்மென் இணர அடும்புகாளர்! அன்னங்காளர் நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்,
இப்படிப் புலம்பிய காதலிக்கு ஒரு யோசனை தோன்றியது. என் காதலனை நேரில் காணத்தான் வழியில்லை. கனவில் கண்டாலாவது மனம் ஆறுமே. அவர் என்னைத் தேடிக் கடற்கரைக்கு வருகின்ற காட்சியைக் கனவிலே கண்டாலாவது என் துன்பங்கள் நீங்கிப் போகுமே என்று நினைக்கிறாள். கண்களை இறுகஇறுக முடி மூடிப் பார்த்தாள் தூக்கம் வரவில்லை. தூக்கம் எப்படி வரும் கண்நிறையக் கண்ணீர் கண் மட்டுமா, மனமும் புலம்புகின்றதே, நித்திரை வந்தாற்தானே கனவு வரும் என்ன செய்யலாம். யார் கனவு கண்டு சொல்லவல்லவர் இருக்கிறார் என்று சிந்திக்கிறாள்.
 

-187- அகளங்கன் கடற்கரையிலே தமது காதலுக்குச் சாட்சியாக இருந்த நெய்தல்ப் பூக்களைப் பார்க்கிறாள். நெய்தல்ப் பூக்கள் இரவிலே கண்மூடி நன்றாகத் துயில்கின்றன. நெய்தல்ப் பூக்களைப் பார்த்துச் சொல்கிறாள்.
“துன்பத்தை மிகுவிக்கின்ற இந்த மாலைப் பொழுதிலே அழுது புலம்புகின்ற என் கண்களைப் போல நீ துன்பம் அடையவில்லை. நன்றாகத் துயில்கின்றாய். அதனால் நீ காணும் கனவில் என்மேல் இரக்கமில்லாத கொடுமைக்குணங் கொண்ட என் காதலன் இக்கடற் கரைக்கு என்னைத் தேடி வரும் காட்சியைக் கண்டறிந்து சொல்வாயோ’ என்று.
நெய்தல்ப் பூக்கள் பெண்களின் கண்களைப் போன்ற வடிவங் கொண்டவை. அதனால் அத்தகைய வேண்டுகோள் விடுக்கிறாள் அவள்.
புண்கண் கூர் மாலைப் புலம்பும் என் கண்ணேபோல் துன்பம் உழவாய், துயிலப் பெறுதியால் இண்கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் வண்கணார் கானல் வரக்கண்டறிதியோ, பிரிந்தவர் நாட்டும் உளதோ,
இளங்கோ அடிகளின் கானல் வரியில் இன்னுமொரு கற்பனையைப் LJTit (3LITLD.
கடலுக்கு, தன்னில் புலால் நாற்றம் வீசுவதாகக் கவலையாம். அப்புலால் நாற்றத்தைப் போக்குவதற்காக , அலைகளாகிய கால்களால் நடந்து, கடற்கரையிலேயுள்ள கானற் சோலைக்குள் புகுந்து உலாவி , அங்கு உதிர்ந்து கிடக்கும் பழம் பூக்களையெல்லாம் அள்ளிக் கொண்டு வருமாம்.
புலவுற்று இரங்கி , அதுநீங்க
பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த கலவைச் செம்மல் மணம் கமழ
திரைஉலாவு கடற் சேர்ப்ப, பழம்பூக்களின் வாசனையினாலே தன் புலால் நாற்றத்தைப் போக்குவதற்காக அலைகள் கரைக்கு வருவதாகவும், கடல்தன்புலால் நாற்றத் தினால் வருந்தி அழுகின்றது என்றும் இளங்கோ செய்த கற்பனை சிறப்பாகவே இருக்கின்றது. இளங்கோவின் இன்னுமொரு கற்பனையையும் காண்போம்.

Page 109
இலக்கியச்சரம் -188தலைவனைப் பிரிந்த தலைவி விரகவேதனையில் வாடுகின்றாள். மாலைப் பொழுது வந்து படைபோலக் கொல்லுகின்றது.
பிரிவுத் துயரில் உடல் மெலிந்து , வளையல்கள் கழன்று விழுகின்றன. மாலைப் பொழுது நெருப்பைச் சிந்திக் கொண்டு வருவது போல இருக்கின்றது. காதலன் இல்லாத இடத்து மாலைப் பொழுது கொலைக் களத்துப் பகைவன் வருவதைப் போல வரும் என்பார் வள்ளுவர்.
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும், துன்பத்தில் வாடிய அவளுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. இந்த மாலைப் பொழுது என்னை விட்டுப் பிரிந்து சென்றவரது நாட்டிலும் வருமோ என்பது தான் அது. காதல் மயக்கத்தில் கற்பனைகள் கண்ட கண்டபடி வருவது இயற்கைதான். பிரிவுத் துயரில் வரும் கற்பனைகள் பற்றிப் பேசவே வேண்டாம்.
“என்னை விட்டுப் பிரிந்து சென்றவரது நாட்டிலும் இந்த மாலைப் பொழுது வந்தால், நான் அடையும் அதே துன்பத்தை அவரும் அடைய மாட்டாரோ அடைந்தால் என்னைத் தேடி வந்து அடைய மாட்டாரோ” என்று ஏங்குகிறாள் அவள்.
இப்படி ஏங்கும் அவள் மாலைப் பொழுதின் கொடுமையைப் பற்றி என்ன சொல்கிறாள் தெரியுமா. “இது மிகவும் கொடிய மாலைப் பொழுது, இந்தப் பொல்லாத , மயக்கத்தைத் தருகின்ற மாலைப் பொழுது சூரியனையே விழுங்கியது. சந்திரனை வானத்திலே துப்பியது(உமிழ்ந்தது)
சூரியனையே விழுங்கி அதைச் சந்திரனாக வானத்தில் துப்பிய இந்த மாலைப் பொழுது, என்னை என்னதான் செய்யாது. என்று தோழியிடம்
சொல்கிறாள்.
புதுமதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம் கொல் மதி உமிழ்ந்து கதிர்விழுங்கி வந்த இம் மருள் மாலை,
காதலனோடு இருக்கும் பொழுது, அதுவும் கடற்கரையிலே இருக்கும் பொழுது வருகின்ற மாலைப் பொழுது பொன்மாலைப் பொழுது தான். கடற்கரையிலே பிரிவுத் துயரோடு தனிமையிலே இருக்கும் போது வரும் மாலைப் பொழுது புன்மாலைப் பொழுதே தான்.
 

- 189- அகளங்கண் சிலப்பதிகாரத்தில் இப்படிப் பல சிறப்பான கற்பனை நயம் மிக்க பாடல்கள் உண்டு. சூரியனை விழுங்கி சந்திரனை உமிழ்ந்து மாலைப் பொழுது வந்தது. எனச் சொல்லும் கற்பனை, இன்றைய புதுக் கவிதைகளில் சிலர் பயன்படுத்துகின்ற படிமங்களுக்கு, உத்திகளுக்கு ஆதாரமானது என்று சொல்லலாம்.
சிலப்பதிகாரக் கானல் வரிப் பகுதிக்குள் மட்டும் இருந்து சில நயமான கற்பனைகளை இங்கே எடுத்துக் காட்டியுள்ளேன்.
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி பாடியதை இளங்கோவின் சிலப்பதிகாரப் பாடல்கள் ஒவ்வொன்றும் நிரூபித்து நிலைநிறுத்துகின்றன என்று துணிந்து கூறலாம்.

Page 110
-190சங்க இலக்கியக் கற்பனைகள்
சங்க காலத்தில் எழுந்ததாக இன்று சொல்லப்படும் இலக்கிய நூல்களில் பாட்டு நூல்கள் பத்து தொகை நூல்கள் எட்டு இதனைப் பத்துப் பாட்டு , எட்டுத் தொகை என்று சுருக்கமாகக் குறிப்பிடுகின்றனர்.
ஈழத்துப் பேராசிரியர் வி.செல்வநாயகம் , இந்தியப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றோர் சங்க காலத்தை கி.பி. 3ம் நூற்றாண்டு முடியும் வரையென வரையறுத்து, இவ் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்களே இக்காலத்துக்குரியன எனநிறுவியுள்ளனர்.
இந்நூல்களிலே அகத்தினை கூறும் நூல்களில், குறுந்தொகையைப் போல் பிற்காலத்தோரால் பெரிதும் இரசிக்கப்பட்டதும் , எடுத்தாளப்பட்டதும் வேறொன்றில்லை என்று உறுதியாகவே சொல்லலாம்.
நான்கடி முதல் எட்டடிவரையான அடி எல்லையைக் கொண்ட அகத்திணைப் பாடல்கள் நானுறு கொண்ட தொகுப்பே குறுந்தொகையாகும். காதலன் காதலி ஆகியோருக்கிடையே நிகழும் மென்மையான, புனிதமான காதல் உணர்வு, மிக அற்புதமாக இத்தொகை நூலில் விரித்துரைக்கப் பட்டுள்ளது. பல புலவர்களதும் ஆற்றல்கள் இந்நூலில் பலவகையிலும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைப் பலரும் படித்துப் பாராட்டி இரசித்திருக்கிறார்கள்.
காதல் என்பது உலகம் தோன்றிய காலத்தில் தோன்றி உலக முடிவுக்காலம் வரை நிலைத்திருக்கும் நித்திய வாழ்வு பெற்றது.
காதலினால் காதலன் காதலி ஆகியோர் அடையும் இன்பமும் துன்பமும் இத்தகையன என்று விபரித்து ஒப்பிட்டு உரைக்கக் கூடியனவல்ல.
ஆண்டவனிடத்தில், அடியார் கொண்ட பக்தியைப் புலப்படுத்த தலைவன் தலைவியர்க்கிடையே ஏற்படும் காதல் உறவையும், உணர்வையும் தான் புலவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.
அதனாலே தான் , பல்லவர் காலத்துப் பக்திப் பாடல்கள் சிலவும், நூல்கள் சிலவும் காதற் பாடல்கள் போலவும், காதல் இலக்கியங்கள் போலவும் காணப்படுகின்றன.
மெய்யடியார்கள் தம்மைக் காதலியாகவும் , தம்மை ஆட்கொண்ட இறைவனைத் தம் காதலனாகவும் வரித்துக் கொண்டு உளம் உருகப் பாடியது காதலின் மகத்தான சக்தியை உலகுக்குப் பறைசாற்றியது.
 

-19- அகனங்கண் குறுந்தொகையிலிருந்து சிலநுட்பமான காதல் உணர்வுகளையும் கவிஞர்களது கற்பனைச்செழுமைகளையும், கவிச்சிறப்புக்களையும் காண்போம் கையில்லாத ஊமையும் காதல் நோயும்.
காதலும் பக்தியும் தாம் தாம் அனுபவித்தற்குரியனவே தவிர “இது இப்படிஇருந்தது என்று எடுத்துரைக்க முடியாத ஒர் உள்ளத்து உணர்ச்சியாக கிளர்ச்சியாகவே இருக்கின்றது' என்பது முற்றிலும் உண்மையே. அதனாலே தான், காதலைப் பொதுவாக அகம் என்றனர் ஆன்றோர்.
வெள்ளி வீதியார் என்ற புலவர் , காதல் வசப்பட்ட காளை ஒருவன் தனது தாங்கமுடியாத துன்பத்தைத் தனது நண்பனுக்குச் சொல்லிப் புலம்புவது போல ஒரு பாடலை மிக அற்புதமாகப் பாடியுள்ளார்.
அப்பாடலிலுள்ள உவமை மிகவும் சிறப்பானது. சங்க காலத்து அகத்தினைப் பாடல்களில் உள்ளுறை உவமை, இறைச்சிப் பொருள் என ஆழ்ந்த பொருள்கள் அளப்பல உண்டு.
படிப்பவரின் அறிவு ஆழத்துக்கு ஏற்ப , பாடல்களின் கருத்தாழத்தைக் கண்டு வியக்கலாம். இப் பாடலும் அத்தகைய சிறபபடையதே.
தலைவன் காதல் நோயால் வாடுகின்றான். அவனது துன்பத்துக்குக் காரணம் கேட்ட நண்பனுக்குத் தன்லைவன் சொல்லுகின்றான்.
"உற்ற நண்பனே. இதை உன் சொந்தக் கடமையாகக் கருதி நிறைவேற்றினால் நல்லது. இதுவே நான் விரும்புவது. சூரியன் காய்கின்ற வெப்பங் கொண்ட பாறையில், கை இல்லாத ஊமை ஒருவன், தன் கண்ணால் மட்டும் காவல் காக்கின்ற வெண்ணெய்க் கட்டி உருகிப் பரவுதல் போலக், காதல் நோய் எங்கும் பரவி வருத்துகின்றது என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்கிறான்.
இடிக்கும் கேளிர் நுங்குறை யாக நிறுக்கல் ஆற்றினோ நன்றுமண் தில்ல. ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின் கைஇல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே.
நல்லவெய்யில் எறிக்கின்ற நேரத்தில், வெப்பம் பொருந்திய பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய்க் கட்டியை உருகாமல் பாதுகாக்க, கையில்லாத ஊமையால் எப்படி முடியும்,

Page 111
இலக்கியச்சரம் -192
கையிருந்தால் ஒடிச் சென்று எடுத்துப் பாதுகாக்கலாம். பேசக் கூடியவனாக இருந்தால் யாரையாவது அழைத்து, வெண்ணெய்க் கட்டியை எடுப்பித்துப் பாதுகாக்கலாம். இரண்டுமே செய்ய முடியாத கைஇல் ஊமன் அவன். அவன் தன் கண்ணாலே மட்டும் அதனைக் காக்க முடியா. முடியாத கட்டத்தில் வருந்தி வாய் விட்டு அழத்தான் முடியுமா.
அந்த வெண்ணெய்க் கட்டி உருகி அந்த இடமெங்கும் பரவுவது போல, காதல் நோய் என் உடல் முழுவதும் பரவிவிட்டது.
யாரை அழைத்து இந்நோயைப் போக்குவேன். யாரை அணைத்து இந்நோயைப் போக்குவேன் என்று புலம்புகிறான் தலைவன்.
“நீ தயவு செய்து எனக்கு அவளைத் திருமணஞ் செய்து வைத்து விடு' என்று கேட்காமல் கேட்கிறான் தலைவன். “இக்காதல் நோயை வேறுவகையாக' மாற்றவும் முடியாது. என்னால் தாங்கிக் கொள்ளவும் முடியாது. என்று தன் துயரை மிக அருமையான உவமை மூலம் விளக்குகிறான்
gങ്ങബൈങ്ങ് -
வெள்ளி வீதியாரின் அற்புதமான உவமைச் சிறப்பு மிக்க இப்பாடலைத் தொடர்ந்து, தலைவி ஒருத்தியின் துன்பத்தையும் பார்ப்போம். இரவில் கண்ட ஊமை.
தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருந்திச் சோர்ந்தாள். வாடி மெலிந்து பொலிவிழந்து கிடக்கும் தலைவியின் துன்பத்தைக் கண்ட அவளது உயிர்த்தோழி மிகவும் வருந்தினாள்.
தோழியின் துன்பத்தைக் கண்ட தலைவி மேலும் வருந்தினாள். தனது துன்பத்தைத் தன் தோழியிடம் ஒரு உவமை வாயிலாக வெளிப்படுத்துகிறாள் தலைவி.
எனது தலைவனைப் பிரிந்து நான்படும் துன்பத்தைப் பார்த்து நீ வருந்துவதை என்னால் சகிக்கமுடியவில்லையடி தோழி.
கிணற்றுக்குள் விழுந்து விட்ட குரால்ப்பசு (பசுவகை) படும் துன்பத்தை இரவிலே கண்ட ஊமைபோல இருக்கின்றது என் நிலை என்கிறாள்.
கவலை யாத்த அவல நீளிடைச் சென்றோர் கொடுமை ஏற்றித் துஞ்சா நோயினும் நோய்ஆ கின்றே, கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட உயர்திணை ஊமண் போலத்
துயர்பொறுக் கல்லேண் தோழி நோய்க்கே,
 

- 193- அகளங்கண் “பல பிரிவுகளாகப் பிரிந்து செல்லும் பாலை நிலத்து யாமரங்கள் பொருந்திய துன்பத்தைத் தரும் நீண்ட வழிகளில் சென்ற என் தலைவனின் நினைப்பில் நான் உறங்காமற் படுகின்ற வேதனையிலும் பார்க்க, என் துன்பத்தைப் பார்த்து நீ படும் வேதனை எனக்கு அதிக துன்பத்தைத் தருகின்றது. “துன்பத்தைத் தாங்கவும் முடியவில்லையே தோழி’ என்று கருத்தாகத் தன் துன்பத்தைச் சொல்லிவிட்டு, ஒரு உவமை மூலம் தன் துன்பத்தை விளக்குகிறாள் தலைவி.
"கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை இரவிலே கண்ட ஊமையன் படும் துன்பத்தைப் போல இருக்கின்றது என் துன்பம்”, என்கிறாள் தலைவி. “ஊமையன் என்பதால் வாயால் சத்தமிட்டு யாரையும் அழைக்கவும் முடியாது. இரவென்பதால் சைகை மூலம் யாருக்கும் காட்டவும் முடியாது. தன்னால் காப்பாற்றவும் முடியாது என்ற நிலையில் அவன்படும் துன்பம் மிகப் பெரியது.
"அதே போல நீபடுகின்ற துன்பத்தை நான் யாருக்குச் சொல்வேன். யாருக்குக் காட்டுவேன். என்னால் தாங்கமுடியவில்லையே” என்கிறாள் தலைவி. கூவன் மைந்தண் என்னும் புலவர் பாடிய இப்பாடல் ஆழமான பொருள் கொண்ட அகத்திணைப் பாடல். சங்ககாலத்து உவமைகள் மிகவும் அற்புதமானவை. எடுத்துக் கொண்ட பொருளைத் துல்லியமாக விளக்கும் சக்தி வாய்ந்தவை.
தலைவி தனக்கு ஏற்பட்ட காதல் நோயையே வெளியே சொல்ல முடியாத போது, தன் பொருட்டாகத் தன் தோழி படுகின்ற துன்பத்தை யாரிடம் எப்படிச் சொல்வாள். காதலும் உயிரும்
சங்க இலக்கிய காலத்தில் இயற்கை வர்ணனை தனியாக இடம் பெறுவதில்லை. தனது கருத்தை விளக்கிக் காட்ட இயற்கையைப் புலவன் துணைக்கழைத்திருப்பான். இங்கே ஒரு காட்சியைப் பார்ப்போம்.
தலைவன் தலைவியைச் சந்தித்துக் காதலில் லயித்து மனம் மகிழ்ந்தான். பின் பிரிந்து விட்டான். தலைவியோ காதலனைப் பிரிந்த போது, காதல் நோயைத் தாங்க முடியாதவளாக இருந்தாள். அவளது உயிர் அவளது காதல் நோயாகிய துன்பத்தைத் தாங்கும் சக்தியற்றதாகத் தென்பட்டது அவளது தோழிக்கு.

Page 112
இலக்கியச்சரபம் - 194
ஒரு தடவை தலைவன் தலைவியைக் களவாகச் சந்திக்க வந்த போது தோழி தலைவனுக்குப் புத்தி சொல்லி தலைவியின் நிலையை எடுத்துரைத்தாள்.
'நீ பலா மரங்கள் நிறைந்த மலைச்சாரல் பொருந்திய நாட்டைச் சேர்ந்தவனல்லவா. உனது மலைச் சாரலில் உள்ள பலாமரங்களில் பலாப்பழங்கள் வேரில் காய்த்துக் கனிந்து கிடக்கும். பலாமரங்கள் வேரில் காய்த்துக் கிடக்கும்.
அப்பலாப்பழங்கள் எவ்வளவு தான் பெரியவையாக இருந்தாலும், எவ்வளவு தான் முற்றிக் கனிந்திருந்தாலும் அவை விழுந்து விடுவதில்லை. பலாப்பழத்தின் தண்டு சிறிதாக இருந்தாலும் வேரில் காய்த்துப் பழுத்திருப்பதால் பாதுகாப்போடு மண்ணில் கிடக்கின்றன அவை,
அப்பெரிய பலாப்பழங்களை அவற்றின் தண்டுகள் மட்டும் தாங்குவதில்லை. மண்ணும் தாங்கிக் கொள்கின்றது. இதனை நீ அவதானித்திருப்பாய்.
இதற்கு மாறாக கிளையிலே காய்த்துச் சிறிய தண்டிலே பெரிய பலாப்பழம் கனிந்து தூங்கினால் எப்படியிருக்கும். விழுந்து விடுமல்லவா. வேறு பற்றுக்கோடு அப்பலாப்பழத்திற்கு இல்லையே.
அதே போன்ற நிலையிற்தான் இருக்கிறாள் தலைவி. அவளது
உயிர் உன்மேல் வைத்திருக்கின்ற பெருங் காதலைத் தாங்கப் போதாமல்
இருக்கின்றது. நீ அவளை மணஞ் செய்து கொண்டால் வேரில் பழுத்த பலாப்பழம் போல அவள் காதல் மிகவும் பாதுகாப்போடு இருக்கும். என்று ஒரு அற்புதமான அறிவுரையை இயற்கை உவமை மூலம் சொல்கிறாள் தோழி.
வேரல் வேலி வேர்க்கோளர் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யார் அஃது அறிந்திசி னோரே சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவளர் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
கபிலர் பாடிய இப்பாடல், வேரில்பழுத்த பலாப்பழச் சுளையிலும் சுவையாகவே இருக்கின்றது. தலைவனின் நாட்டில் பலாமரங்களுக்கு மூங்கில்மரங்கள் இயற்கையாகவே காவலாயமைந்துள்ளன. இங்கு தலைவிக்கோ ஒரு பாதுகாப்பும் இல்லையே என்ற ஆதங்கத்தை “வேரல் வேலி' என்ற சொற்களால் விளக்கியுள்ளார் கபிலர்.
 

- 195- அகளங்கண் சங்கப் புலவர்களில் பெரிதும் போற்றப்பட்ட கபிலரின் கற்பனைச் சிறப்பும், உவமை நயமும் மிக்க அப்பாடலைத் தொடர்ந்து இன்னொரு பாடற் காட்சியைப் பார்ப்போம். ஊரும் இரவும் ஒழுங்கில்லை.
விரைவில் திரும்பி வந்து மணந்து கொள்வதாகக் கூறிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தலைவி தலைவனை நினைத்து அழுது அழுது வாடிச் சோர்ந்து மெலிந்து போனாள். துன்பக் கடலில் வீழ்ந்து கரைசேர முடியாமல் தத்தளித்தாள். இரவுகள் நித்திரையற்ற நீண்ட இரவுகளாகக் கழிந்தன.
பிரிவுத் துயரில் துடிதுடித்த தலைவி தன் துன்பத்தைத் தன் தோழியிடம் சொல்லி முறையிட்டாள். "தோழி இந்த ஊர், மனிதர்கள் வாழ்கின்ற ஊரல்ல” என முதலில் ஊர் மேல் பழி போட்டாள்.
தன்னைத் தனிமைப்படுத்தி வாட விட்ட தலைவனின் ஊரல்ல இது. தனது ஊர் தான். இருப்பினும் இவ்வூர் மனிதர் வாழத் தகுதி படைத்த ஊரல்ல என்கிறாள் தலைவி.
அதற்கு அவள் சொல்லும் காரணங்கள் மிகச் சுவாரஸ்யமானவை. ஒன்று, ‘என்னைக் கைவிட்டு என் தலைவன் பிரிந்து சென்று விட்டான். அந்தக் கொடுமையை உள்ளத்தில் கொண்டு தீராத துயரத்தோடு வருந்தி அழுதழுது நள்ளிரவிலும் நித்திரை செய்யாது கிடந்து துடிக்கின்றேனே.
ஒரு நாளா இருநாளா பல நாட்கள் இப்படி நான் அவஸ்தைப்படவும் என்னிடம் இந்த ஊரவர் ஒருவரும் வந்து துக்கம் விசாரிக்கவில்லையே. இது என்ன ஊர்”.
இரண்டு, “நான் நித்திரையின்றித் துடிக்கவும், தவிக்கவும், அதைப்பற்றி விசாரிக்காமலும் , கவலைப்படாமலும் எனக்கு ஆறுதல் கூறாமலும் தாங்கள் எல்லோரும் நன்றாக நித்திரை செய்கிறார்களே. இவர்கள் கொஞ்சமும் இரக்கம் இல்லாதவர்கள். அதனால் இவர்களோடு நான் எப்படி வாழ்வேன்.
ஒரு நல்ல ஊரிலே யாருக்காவது துன்பம் என்றால் ஊரவர் எல்லோரும் துடித்துப் போவார்களல்லவா. துக்கம் விசாரிப்பார்களல்லவா. ஆறுதல் சொல்வார்கள் அல்லவா. துன்பத்தில் பங்கு கொள்வார்கள் அல்லவா. ஆனால் இந்தக் கடற்கரையில் அமைந்த இந்த ஊரில், அந்த நல்ல உயர்ந்த வழக்கம் சிறிதும் இல்லையே. பின் எப்படி இங்கே வாழ்வது

Page 113
இலக்கியச்சரபம் - 196
இவை மட்டுமல்ல இன்னொரு இரகசியமும் இருக்கின்றதுஎன்கிறாள் தலைவி. மூன்றாவது காரணம் அது. இந்த ஊரிலே இராக்காலப் பொழுது . ஏனைய ஊர்களை விட அதிகமாம், பகற் பொழுதை விட இராப்பொழுது நீளுகின்றதாம். அதனால்ஃாதலரைப் பிரிந்தவர்களுக்கு இந்த ஊர் சரிப்பட்டு வராது' என்கிறாள் தலைவி.
உறைபதி அன்றுஇத் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பண் கொடுமை எற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாளர் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில்கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே,
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு ஒரு கணம் ஒரு யுகமாகக் கழியும். அதனால் இரா, நெட்டிராவாகத் தெரிகின்றது இவளுக்கு கொல்லன்
அழிசி என்னும் புலவரின் பாடல் இது.
யாருக்கு என்ன பயன்.
பொருள் தேடப்போன தலைவன் இன்னும் திரும்பி வரவில்லை. அவனை நினைத்து நினைத்து உடல் மெலிந்து தன் இயல்பான அழகையும் நிறத்தையும் இழந்து விட்டாள் தலைவி.
மாந்தளிர் போன்ற அவளது நிறம் பசலை படர்ந்து மங்கிப் பிரகாசம் இழந்து கிடக்கின்றது. உடல் மெலிவால் அழகு மேலும் கெட்டுவிட்டது. அதனை உணர்ந்து கொண்ட தலைவி மிகவும் கவலை
கொண்டாள்.
“இந்த உடல் அழகு ஒன்றில் எனக்குப் பயன்படவேண்டும். அல்லது என் தலைவனுக்குப் பயன்பட வேண்டும். என் தலைவன் தன் கண்ணாலும் உடலாலும் உண்டு என் அழகு அழிந்து விட்டால் அது நியாயம். அது மகிழ்ச்சியே. ஆனால் எங்களில் ஒருவருக்கும் பயன்படாமல் வீணாகப் பசலை நோய் உடலெங்கும் பரவி உண்டு அழிக்கிறதே என் அழகை’, என்று
வருந்தினாள் தலைவி. ༈་,
இக்கருத்தை விளக்க தலைவி பயன்படுத்தும் உவமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அற்புதமானது.
 

- 197- அகளங்கண் பசுவின் பாலை ஒன்றில் அதன் கன்று குடிக்க வேண்டும். அல்லது கலத்திலே கறந்து அப்பசுவை வளர்த்தோர் பருக வேண்டும். அப்படியில்லாமல் நல்ல இனிமையான பசுப்பால் நிலத்திலே சிந்தி வீணாகினால் எப்படி இருக்கும்.
கண்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்ஆண் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது பசலை உணரீஇயர் வேண்டும் திதலை அல்குல்என் மாமைக் கவினே,
தன்அழகும் இளமையும் வீணாகக் கழிவதைக் கண்டு துன்பப்பட்ட பெண்ணின் துயரக் குமுறலை நல்ல உவமை மூலம் கொல்லன் அழிசி என்ற புலவர் அற்புதமாகத் தந்துள்ளார். பொய்க்கார் பொய்க்கார்
இடைக்காடனார் என்ற புலவர் பாடிய ஒரு குறுந்தொகைப் பாடலை அடுத்துப் பார்ப்போம். தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று விட்டான். கார்காலம் தொடங்க வந்து விடுவதாக நாள்குறித்துச் சொல்லித் தலைவிக்கு ஆறுதலளித்துச் சென்று விட்டான் தலைவன்.
தலைவியோ பிரிவை ஆற்றாதவளாகித் துடித்தாள். கணம் ஒன்றை யுகம் ஒன்றாகக் கழித்துக் கொண்டிருக்கிற்ாள் தலைவன் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற காலமாகிய கார்காலமும் வந்து விட்டது. ஆனால் தலைவனோ இன்னும் வரவேயில்லை.
வானத்தில் மழை மேகங்கள் கூடி விட்டன. மழை முகில்களிடையே முழக்கங்களும் தோன்றிவிட்டன. மயில்க்கூட்டங்கள் மழை முகிலைக் கண்டு மகிழ்ந்து நடனமாடத் தொடங்கி விட்டன. பிடவ மரங்கள் பூக்கத் தொடங்கிவிட்டன.
கார்காலம் வந்து விட்டதற்கான இந்த அறிகுறிகளைக் கண்ட தலைவியின் கவலை கட்டுக்கடங்காததாகி விட்டது. தலைவன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் அவள் உயிரே போய்விடும் போலத் தோன்றியது.
அவள்படும் மரண அவஸ்தையைக் கண்டாள் அவளது உயிர்த்தோழி தலைவியைத் தேற்றுவதற்காகத் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.

Page 114
இலக்கியச்சரம் - 198
இந்த மயில்கள் அறியாமை மிக்கன. மழை முகில்களையும் , முழக்கத்தையும் , மழை பெய்வதையும் கண்டு, கார்காலம் தொடங்கி விட்டதாக நினைத்து மகிழ்ச்சியில் ஆடவும் தொடங்கிவிட்டன.
பாவம் அம்மயில்களுக்கெங்கே தெரியும். இது பொய்க்கார் என்று. தோழி! நீ கவலைப்படாதே. அவர் சொன்னசொல் தவறார். அவர் பொய்க்காரடி இது பொய்க்காரடி
மயில்கள் மட்டுமா ஏமாந்து விட்டன. பிடவமரங்களும் அல்லவா கார்காலம் வந்துவிட்டதாக நினைத்து ஏமாந்து பூக்கத் தொடங்கி விட்டன. உண்மை என்ன தெரியுமா தோழி! வானம் கார்காலத்தில் பெய்வதற்கான புது நீரைக் கொள்வதற்காகக் கழிந்து போன மாரிக்காலத்தில் பெய்யாது எஞ்சிக் கிடந்த பழைய நீரைக் கொட்டுகின்றது.
கார்காலத்தில் காதலனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எத்தனை காரிகைகள் , கார்காலம் வந்து விட்டதாகக் கருதிக் கலங்குவார்கள் என்று சிறிதும் எண்ணாமல் இப்படிப் பொய்க்காராக நின்று மழைபெய்கின்றதே வானம். இது அன்பற்ற வானமடி.
மடவ வாழி மஞ்ஞை மாயினம்; கால மாரி பெய்தென அதன்எதிர் ஆலலும் ஆலின: பிடவும் பூத்தன: கார் அன்று இகுளை தர்கநின்படரே கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளிஇய உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே.
உன் காதலர் கார் காலம் தொடங்க நிச்சயம் வந்து விடுவார். மயிலையும் , பிடவமரத்தையும் போல நீ ஏமாந்து போகாதே. கவலைப்படாதே. எனத் தேற்றுகிறாள் தோழி.
இடைக்காடனாரால் தலைவியின் வேதனையும், அதனைத் தோழி தேற்றுகின்ற விதமும் அற்புதமான பாடலாகப் பாடப்பட்டுள்ளது. கலித்தொகைக் காட்சி.
கலித்தொகை என்பதும் சங்க காலத்து எட்டுத் தொகை நூல்களில் ஒன்று. இது “கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று போற்றப்படுகின்றது.
இந்நூலில் ஒரு கற்பனை. தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்று விட்டான். அவன் சென்ற வழி வெப்பம் மிகுந்த பாலைவனம் என்று அறிந்தாள் தலைவி.
 

-199- அகளங்கள்ை தலைவனின் பாதங்களில் சுடுமணல் சுட்டெரிக்குமே என்று அஞ்சினாள். அவனது கால்களில் மணல் சுட்டால் அவளது இதயம் எரிந்துபோகும். அத்தகைய அன்புள்ளம் அவளது உள்ளம்,
தலைவன் செல்லும் பாலைவனத்தில் மழை பெய்தால் வழியில் சூடு இருக்காதே என நினைத்தாள். ஆனால் தலைவன் சென்ற காலம் மழைக்காலம் இல்லையே. வானத்தில் மழை மேகமே இல்லையே. பின் மழை எப்படிப் பெய்ய முடியும்.
அவள்சிந்தித்துக் கவலைப்பட்டு வானத்துக்கு ஒரு விண்ணப்பம் செய்கிறாள். வானமே என் கண்ணிர்க் கடலிலே நீரை முகந்து கொண்டு போய், அவர் செல்கின்ற பாதையிலே பெய், என்பது தான் அந்த வேண்டுகோள்.விண்ணப்பம்,
தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி வறந்து என்னை செய்தியோ வானம் - சிறந்த எண் கண்ணிர்க் கடலால் கனைதுளரி வீசாயோ கொண்மூக் குழிஇ முகந்து,
கலித்தொகைத் தலைவியின் காதலுள்ளம் அற்புதமான கவிதையாகச் சொல்லப்பட்டுள்ளது.

Page 115
-200
பெரும் புலவர்கள் தமது வித்துவத்தைப் பயன்படுத்திப் புதிய புதிய கற்பனைகளைத் தமது பாடல்களிலே புகுத்தி விடுவார்கள்.
அவர்களது புதிய கற்பனைகள் புதுமையான கற்பனைகளாகவும் இருந்து விட்டால் பலராலும் ப்ோற்றப்படும் நிலையை அக்கற்பனைகள் அடைந்து விடுகின்றன.
அக்கற்பனைகள் சிறந்த வகையிலே சொல்லப்பட்டிருந்தால் , கவிஞனின் கவித்துவம் போற்றப்படுகின்றது.
ஒரு கவிஞனின் கவித்துவமும் வித்துவமும் கைகோர்த்துச் சென்றால் கற்போரின் நெஞ்சங்களை அக்கவிஞனின் பாடல்கள் கவராமற் போகா, காளமேகப் புலவர்.
பிரமதேவனும் மகாவிஷ்ணு மூர்த்தியும், தங்களுக்குள்ளே மாறுபட்டுத் தாமே பரம்பொருள் எனச் செருக்கினாலே போர் செய்தனர்.
அவர்களது செருக்கை அடக்கி , அவர்களுக்கு உண்மையை உணர்த்துவதற்காக , சிவபெருமான் அவர்கள் இருவருக்கும் இடையிற் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
அச்சோதிப் பிழம்பின் அடி முடி தேடியறிய மகாவிஷ்ணு மூர்த்தியும், பிரமதேவனும் முயன்றனர்.
அதன்படி பிரமதேவன் அன்னப் பறவை வடிவெடுத்து மேல் நோக்கிப் பறந்தார். மகாவிஷ்ணு மூர்த்தி பன்றிவடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து கீழே சென்றார்.
அப்படிப் பல வருடங்கள் முயன்றும் முடியாது போகச் செருக்கடங்கிய அவர்கள் சிவப்பரம்பொருளை நினைத்து வழிபட்டதாகக் கந்தபுராணத்தில் தட்ச காண்டத்தில் அடிமுடி தேடியப்டலத்தில் ஒரு கதை வருகின்றது.
சிவராத்திரி விரதநாள் பற்றிய கதையும் இக்கதையே. இக்கதை சிவராத்திரி புராணத்திலும் விரிவாகப் பாடப்பட்டுள்ளது.
இக்கதை தேவார திருவாசகப் பாடல்களிலெல்லாம் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.
 

-20- - அகளங்கள்ை காளமேகப் புலவர் இக்கதையிலே ஈடுபட்டதோடு , பெரிய புராணத்தில் பரவையாரின் ஊடலைப் போக்கச் சிவபெருமான் சுந்தரருக்காகப் பரவையாரின் வீட்டுக்குச் சென்ற சம்பவத்தையும் படித்து இன்புற்றார்.
இவ்விரு கதைகளையும் இணைத்துத் தன் கற்பனை கலந்து அற்புதமான ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவரது சுவாரஸ்யமான கற்பனையைப் பாடலில் பார்ப்போம்.
ஆனார் இலையே அயனும் திருமாலும் கானார் அடிமுடிமுண் காண்பதற்கு - மேனாளர் இரவுதிரு வாரூரில் எந்தைபிராண் சென்ற பரவைதிரு வாயில் படி,
பிரமதேவனும் மகாவிஷ்ணு மூர்த்தியும் சிவபெருமானது முடியையும் அடியையும் காண்பதற்கு முயன்று தேடிப் பெருஞ் சிரமப்பட்டார்கள். அப்படிச் சிரமப்பட்டும் அவர்களால் காணமுடியவில்லை. அவர்கள் மேலே பறந்தும் கீழே அகழ்ந்தும் சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை.
அவர்களுக்கு அடிமுடி காணச் சுலபமான ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்களே என்கிறார் காளமேகப்புலவர்.
அவர்கள் இருவரும் திருவாரூரில் பரவையாரின் வீட்டு வாசற்படியாக மாறிக் கிடந்திருந்தால், சுலபமாக, நிச்சயமாக அடிமுடி கண்டிருக்கலாமோ, என்பதுதான் காளமேகத்தின் கற்பனை.
எந்தெந்தக் காலங்களிலோ நடைபெற்ற இரு சம்பவங்களை இணைத்துத் தன்கற்பனை கலந்து காளமேகம் தந்த பாடல் இரசிக்கத் தக்கதல்லவா. எருமைகளின் நன்றியறிதல்.
கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் திருநாட்டுப் படலம் பாடும் போது எருமைகளின் நன்றி உணர்ச்சியை அற்புதமாகச் சொல்கிறார். கந்த புராணம் நன்றி மறந்த அசுரர் பற்றியும் , நன்றி மறந்த தேவர்கள் பற்றியுமே பேசுகின்றது. அதனை நினைவூட்டுவது போல உட்பொருள் வைத்துத் தனது கந்த புராணத்து முதலாவது காண்டமாகிய உற்பத்திக் காண்டத்தில் கச்சியப்பர் அருமையான ஒரு பாடலைப் பாடியுள்ளார். வலிய, பெரிய எருமை மாடுகள்ஒருதடாகத்தினுள்ளே இறங்குகின்றன. ஏராளமான எருமைகள். பெரிய எருமைகள் . அத்தனை எருமைகளும் நீர் குடித்த அளவிலே தடாகத்து நீரே வற்றிப் போனது போல் ஆகிவிடுகின்றது.

Page 116
இலக்கியச்சரபம் -202
தமது தாகத்தைத் தீர்த்த தடாகத்தை வற்றிப் போய் வறுமையடைய விடலாமா. அது நன்றி மறந்த செயலாகுமே என்று நினைக்கின்றன எருமைகள். தமக்குத் தடாகம் நீர் தந்து தாகம் தீர்த்ததற்குப் பிரதியுபகாரமாக நன்றிக் கடனாக, அந்த எருமைகள் தமது பெரிய முலையாகிய குடங்களிலிருந்து பாலைச்சொரிந்து, தடாகத்தை நிறைத்து விடுகின்றனவாம். எருமை மாடுகள், மீன்கள் மடிகளில் முட்டுவதாலும், கன்றை நினைத்துக் கனைப்பதாலும் பால் சொரியும் இயல்புடையன என்பதைப் பல புலவர்கள் பலவிதமாகப் பாடியுள்ளனர்.
கச்சியப்பரோ அவைகளை விட்டு விட்டு நன்றிக் கடனாகப் பால் சொரிந்து குறையைத் தீர்க்கும்”, என்று சொல்லி அதற்கு ஒர் உவமையையும் வகுத்துக் காட்டுகிறார்.
கடற்பரு கியமுகில் பெய்யுங் காட்சிபோல் அடற்பெரு மேதிகள் அனைத்தும் புக்குராய்த் தடப்புனல் வறிதெனப் பருகித் தம்முலைக் குடத்திழி பாலினால் குறையைத் தீர்க்குமே.
கடலிலேயுள்ள உப்பு நீரைக் குடித்த முகில்கள் நன்னீராக மழை பொழிந்து நன்றிக் கடன் தீர்க்கும் தன்மை போல இருக்கின்றதாம் எருமைகள் செய்கின்ற காரியமும், காவிரி பற்றிய கற்பனை
கவிச்சக்கரவர்த்திகம்பனுக்கு ഉ_ങ്ങഖ கொடுத்து ஆதரித்து இராமாயணம் பாட வசதி செய்து கொடுத்தவர் சடையப்ப வள்ளல் என்பர். தன்னை ஆதரித்த சடையப்பவள்ளலின் பெயரைப் புகழைக் கம்பன் தனது இராமாயணத்தில் பல இடங்களில் பாடியிருக்கிறான்.
இராமாயணத்தில் மட்டுமன்றிப் பல தனிப்பாடல்களிலும் , சடையப்ப வள்ளலின் புகழைப் பாடிப் பரப்பியுள்ளான்.
கம்பனின் தனிப்பாடலொன்று , கற்பனைச் சிறப்பு மிக்கதாகவும், சடையப்பவள்ளலின் பெரும் வள்ளற் தன்மையைப் பறைசாற்றுவதாகவும் அமைந்துள்ளது.
சடையப்ப வள்ளலின் வீடு அடையா நெடுங்கதவு கொண்டது. வறுமையில் வாடி , நாடி வருவோரை 'அஞ்சேல் என்று அபயம்
 

-203- அகளங்கர்ை கொடுக்கும் சொல் எப்போதும் ஒலிக்கும் ஊர் சடையப்பவள்ளலின் திருவெண்ணெய் நல்லூர்,
தடாகத்திற்குள் தம் வெப்பத்தைத் தணிக்கச் சென்ற பெரிய எருமை மாடுகளின் மடிகளிலே , விரால் மீன்கள் முட்டி இடிக்க , தமது கன்றுகள் மடியில் முட்டி இடிக்கின்றதாக உணர்வு கொண்டு அவை வீடுவரை பால் சொரிந்து கொண்டு வரும் ஊர் திருவெண்ணெய் நல்லூர் என்கிறான் கம்பன்.
மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கண்றென்று வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே - நாட்டில் அடையா நெடுங்கதவும் 'அஞ்சல்'என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்.
இப்பாடலில் சடையப்ப வள்ளலின் கொடைச் சிறப்பு நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளது. ஊர்ச்சிறப்பே சிறந்த கற்பனையாக அமைந்துள்ளது.
சடையப்ப வள்ளலின் வள்ளற் தன்மையைச் சிறந்த கற்பனையோடு கம்பன் காட்டுகின்ற சிறப்பைக் காண்போம்.
சோழநாட்டிலே காவிரி நதி வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கின்றது. காவிரி வெள்ளத்தைப் பார்த்த அளவிலே கம்பனுக்கு ஒரு கற்பனை தோன்றுகின்றது.
காவிரி நதி எதைப் போல ஒடுகின்றது என உவமை வாயிலாக விளக்க விரும்புகிறான் கம்பன் தான்கண்ட காட்சியொன்று சிறந்த உவமையாக இருப்பதை உணர்ந்து கொள்கிறான் கம்பன். அவன் கண்ட காட்சி தான் 6160|60).
சடையப்ப வள்ளலின் வீட்டிலே நாள்தோறும் விருந்தினர் வந்து உணவுண்டு செல்வர். ஏழைகள் வந்தாலும், ஏதிலர்கள் வந்தாலும் சடையப்ப வள்ளலுக்கு அவர்கள் விருந்தினர்களே.
அன்னதானம் என்று சொல்லிக் கொடுத்தால் அது புண்ணியங்கருதிய செய்கையாகி விடும் அதனால் சடையப்ப வள்ளல் அன்னதானங் கொடுப்பதில்லை. அவன் வழங்கும் உணவும் உபசரிப்பும் அன்னதானம் போன்றதல்ல.

Page 117
இலக்கியச்சரம் -204‘விருந்து' என்பது புதியவர்களுக்குக் கொடுக்கும் உணவு இன்று அர்த்தமே மாறிவிட்டது. விருந்தினர்களாகவே சடையப்ப வள்ளலின் வீட்டில் வந்து விருந்துண்டு போவார்கள் மக்கள்.
அவர்கள் நன்றாக நீராடி "ஏறு கின்ற பசியை’ எழுப்பியவர்களாக வந்து விருந்துண்பார்கள் , உண்டபின் கைகழுவுவார்கள்.
அவர்கள் கைகழுவும் நீர் தான் காவிரி நதியின் நீர்ப்பெருக்குக்கும் ஒட்டத்திற்கும் உவமை என்கிறான் கம்பன்.
மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர் கைகழுவும் நீர்போலும் காவிரியே - பொய்கழுவும் போர்வேற் சடையன் புதுவையான் தண்புகழை யார்போற்ற வல்லார் அறிந்து.
விருந்துண்டவர்கள் கைகழுவிய தண்ணிர் காவிரி நதி போல ஒடுகின்றது என்று சொல்லியிருந்தாலே அது உயர்வு நவிற்சி அணியாகியிருக்கும்.
ஆனால் கம்பனோ அதை விட அதீதமான கற்பனை மூலம், கைகழுவிய நீர்போலக் காவிரி பாய்கின்றது என்று காட்டியுள்ளான். எப்படியிருக்கின்றது கம்பனின் கற்பனை. கண்ணிர் சிந்ததினாளர்.
புலவர்களின் கற்பனை சில வேளைகளில் புரிந்து கொள்ள முடியாததாகவும் ஆகிவிடுகின்றது. ஒரு புலவர் ஒரு பெண் கண்ணிர் சிந்தினாள் என்பதை எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.
காலாயுதக் கொடியோன்
கையாயுதம் வழியே மாலாயுதம் ஈன்ற
மாமணியைத் தானுதிர்த்தாளர் காலை ஆயுதமாகக் கொண்டு சண்டை செய்யும் இயல்பு பொருந்தியது கோழிச் சேவல், சேவலைக் கொடியாகக் கொண்டவன் முருகப் பெருமான். அவனது கை ஆயுதம் வேல்,
எனவே, ”காலாயுதக் கொடியோன் கையாயுதம்' என்பது வேலைக் குறிக்கின்றது. கண்கள் வேல்போலக் கூர்மையாக இருப்பதால் கண்களை வேல் என்றார்.
 

-205- -sea-fllas 6 Teaseoir வேல் போன்ற கண் என்று கூறினால் அது உவமை, வேலே கண் என்றால் அது உருவகம் ஒன்றைப் போல இன்னொன்று உவமை. ஒன்றே இன்னொன்று உருவகம், உவமையிலும் உருவகமே சிறந்தது.
ஒரு சில வகைகளில் மட்டும் பொருந்துவது உவமை. எல்லா வகைகளிலும் பொருந்துவது உருவகம்,
இங்கு கண்ணை முருகனின் கைவேல் என்று உருவகித்தார் புலவர். இது மிகவும் உயர்ந்த கற்பனை.
மாலாயுதம் என்பது மகாவிஷ்ணுவின் கையாயுதமாகிய சங்கைக் குறிக்கும். யுத்த களத்தில் எதிரிகளை அச்சமடையச் செய்து, தமது போர் வீரர்களை உற்சாகப்படுத்துவதால் மகாவிஷ்ணு மூர்த்தியின் சங்கு அவரது கையாயுதம் என்று வழங்கப்படுகின்றது.
சங்கு , முத்துக்களை ஈனும், எனவே 'மாலாயுதம் ஈன்ற மாமணியைத் தானுதிர்த்தாளர்” என்பது , முத்துக்களைச் சிந்தினாள் என ஆகும்.
இங்கு கண்ணிர்த் துளிகள் முத்துக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன. கண்கள் வழியே கண்ணீர்த் துளிகளைச் சிந்தினாள் என்பதை வேல்வழியே முத்துக்களைச் சிந்தினாள் எனக் கூறி , மிகவும் வலிந்து முயன்று பொருள் கண்டு இரசிக்கும் படி இப்பாடலைப் பாடி பிருக்கிறார் L6ù6)lfi. மன்னருக்குப் பெண் கொடோம்.
துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய அற்புதமான நூல் திருவெங்கைக் கலம்பகம். இந்நூலில் ஒரு கற்பனையைப் பார்ப்போம்.
தாம் பெற்ற பெண், தங்களைவிட உயர்ந்த இடத்திலே வாழச் சென்றால் பெற்றோர் மிகவும் மனம் மகிழ்வார்கள்.
வசதியான குடும் பத்திலே கெளரவமான குடும்பத்திலே புகழ் பொருந்திய குடும்பத்திலேயிருந்து ஏழைக்குடும்பத்திலுள்ள பெண்ணைச் சீதனம் இல்லாமல் திருமணஞ் செய்யப் பெண்கேட்டு வந்தால் ஏழைப் பெற்றோர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லைத்தான்.
அதிலும் அதிகாரம் பெருந்தி அரச குடும்பத்திலே இருந்து வேடுவக் குடும்பத்திலே பெண்கேட்டு வந்தால் அந்த வேடுவக் குடும்பத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

Page 118
இலக்கியச்சரம் -206
தமது மகள் அரச குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு மகாராணியாக வாழ்வதை எந்தப் பெற்றோர் தான் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் திருவெங்கைக் கலம்பகத்திலே வரும் ஒரு வேடுவனுக்குத் தன்மகளை, அரசனுக்குத் திருமணஞ் செய்து கொடுக்க விருப்பமில்லை. என்பது பெரிய ஆச்சரியமான செய்தி தானே.
அரசன் ஒருவன் வேடுவன் ஒருவனின் மகளை மணஞ் செய்ய விரும்பித் தூதுவனிடம் தனது ஆசையை வெளிப்படுத்தும் ஒலையைக் கொடுத்தனுப்பினான்.
ஒலையைப் படித்த வேடுவனுக்குப் பெருங் கோபம் வந்துவிட்டது. வேடுவக் குலத்தில் பெண் எடுக்க அரச குலத்தில் பிறந்தவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது எனச் சீறிச் சினந்தான்.
தமது குலப் பெருமையையும் மன்னர்களின் சிறுமையையும், தனது எண்ணத்தினையும் அவன் வெளிப்படுத்துவதாக அமைந்த பாடலை முதலில் பார்ப்போம்.
விற்ற தார்கலை பாதி யோடு
வனத்திலே அழ விட்டதார்? வெஞ் சிறைப்புக விட்டதார்? துகில்
உரிய விட்டு விழித்ததார் உற்ற தாரமும் வேண்டும் என்றினி
மன்னர் பெண்கொளல் ஒக்குமோ உமியடா மணம் என்றவாய்
கிழித்து ஒலைகாற்றில் உருட்டடா வெற்றி ஆகிய முத்தி தந்தருள்
வெங்கை மாநகர் வேடர்யாம் விமலர் ஆனவர் எமைஅடுத்தினி (து)
எங்கள் மிச்சில் மிசைந்தபின் பெற்ற வேலர் தமக்கு யாம் ஒரு
பெண் வளர்ப்பினில் ஈந்தனம் பெற்ற பெண்ணைக் கொடுப்பமோஇதென்
பேய் பிடித்திடு தூதரே
 

-207- -9-366Triassor “மனைவியாகிய சந்திரமதியை விற்றவன் அரிச்சந்திரனாகிய அரசன். பாதிச் சேலையோடு , காட்டிலே காரிருளிலே தமயந்தியாகிய தனது மனைவியைத் தனித்துத் தவித்து அழவிட்டவன் மன்னனாகிய நளன.
மனைவியாகிய சீதையை அசோகவனத்திலே சிறையிருக்கும் படி விட்டவன் மன்னர் குலத்து இராமன்,
தமது மனைவியின் துகிலை மன்னர் நிறைந்த சபையிலே மாற்றான் உரிய, அவளைக் கைவிட்டுச் செய்வதறியாது விழிபிதுங்க இருந்தவர்களும் பஞ்சபாண்டவர்களாகிய மன்னர்களே.
- தங்கள் மனைவியரைப் பாதுகாக்க முடியாத மன்னர்களுக்கு யாராவது இனியும் பெண் கொடுப்பார்களா, எந்த மன்னனுக்கும், தனக்குப் பெண் தரும்பம் யாரிடமாவது கேட்பதற்கு யோக்கியதை இருக்கின்றதா.
மணம் என்ற சொல்லை உச்சரித்த வாய் எச்சிலை உமிழ்ந்து விட்டு மறுபேச்சுப் பேசு. நீ கொண்டு வந்த ஒலையைக் கிழித்துக் காற்றிலே பறக்க விடு”
என்றெல்லாம் சொல்லி விட்டு இறுதியாக அந்த வேடன் சொல்கிறான். “எங்கள் தகுதி என்னவென்று உங்கள் மன்னனுக்குத் தெரியுமா, அதை சொல்கிறேன் கேள். கேட்டுச் சென்று சொல்.
சிவபெருமானின் குமாரனாகிய முருகப் பெருமான் எங்கள் வீட்டி, வந்து எங்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டார். அவ்வளவுக்கு வந்து பழகிய பின் நாங்கள் எங்கள் வளர்ப்புப் பெண்ணாகிய வள்ளியை முருகப்பெருமானுக்குத் திருமணஞ் செய்து கொடுத்தோம்.
ஆனானப்பட்ட முருகப் பெருமானுக்கே, எங்கள் குல தெய்வமான முருகப் பெருமானுக்கே நாம் வளர்த்த பெண்ணைத்தான் கொடுத்தோம்.
அப்படியிருக்க பெற்ற பெண்ணைக் , கேவலம் மன்னருக்குக் கொடுப்போமா பெண் கேட்டுத் தூதனுப்பிய மன்னனுக்கு மட்டுமல்ல, தூதர்களாகிய உங்களுக்கும் பேய் தான் பிடித்திருக்கின்றதோ,
இல்லாது போனால் இப்படிப் பெண் கேட்டு ஒலை கொண்டு வந்திருப்பீர்களா’ என்று ஏசினான் வேடுவர் தலைவன்.
கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்பட்ட சிவப்பிரகாச சுவாமிகளின் கற்பனை, உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறதல்லவா.

Page 119
-208கற்பனை ஒன்று கவிதைகள் பல.
கவிதைகளிலே பெரிதும் இரசிக்கக் கூடியதாக அமைந்திருப்பது புலவர்களின் கற்பனையே ஆகும் புலவர்களின் தரத்தை அவர்களது கற்பனை மூலமே தான் பெரிதும் மதிப்பிடுகின்றோம்.
நல்ல கருத்தைக் கொண்டு, யாப்பு இலக்கணத்தை முழுமையாக நிறைவு செய்துள்ள கவிதையாக இருந்தாலும், அக்கவிதையில் சிறந்த கற்பனை இல்லையென்றால் அக்கவிதை போற்றப்படுவதில்லை. அதைப் பாடிய கவிஞனும் போற்றப்படுவதில்லை.
கவிதைக்கு , யாப்பு இலக்கணத்திற்கு அப்பால் அணி இலக்கணம என்றும் ஒன்று உண்டு. அணி என்பது அழகு என்று பொருள்படும். கவிதைகளுக்குரிய அழகு தான் அணி இலக்கணத்தில் பலவாறாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனை அலங்காரம் என்றும் அழைப்பர்.
ஒரு உருவத்தைப் பார்த்து அந்த உருவம் மனிதனுக்குரியது என்று சொல்வதற்கு எதை, எதைப் பார்க்கிறோமோ அதே போன்றது தான் ஒரு இலக்கிய வடிவத்தைப் பார்த்து அது கவிதை என்று சொல்வதற்கும் தேவைப்படுகின்றது எனப் பொதுவாகச் சொல்லலாம். அதைத்தான் இலக்கணம் என்கிறோம்.
கவிதைதான் என்று கண்டுகொண்டபின் எந்த வகையான கவிதை என்ற அடுத்த நிலைக்குச் செல்கிறோம்.
ஒரு மணப் பெண்ணை அழகுபடுத்துவதற்கு என்னென்ன அலங்காரங்களைச் செய்கிறோமோ அதே போன்று தான் கவிதையை அழகு படுத்தவும் அலங்காரங்களைச் செய்தனர். அதையே அணி என்றும் அலங்காரம் என்றும் அழைத்தார்கள்.
வெளித் தோற்றத்தில் மிக அழகாக இருக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டாலும் பெண்ணுக்கு உருவம், குணம் என்பவையே மிகவும் முக்கியமானவை.
ஒரு பெண்ணின் அழகு பெண்ணுக்குரிய சகல உறுப்புக்களும் குறைவின்றி நிரம்பியிருத்தலிலேயே தொடங்குகின்றது.
 

-209. அகளங்கண் அதே போல கவிதையின் அழகும் அதன் உறுப்புக்களைக் குறைவின்றிக் கொண்டிருத்தலிலேயே தொடங்குகின்றது. அதைத்தான் யாப்பை நிறைவு செய்தல் என்கிறோம்.
பெண்ணின் முக்கியமான அழகு அவளது குணத்திலே தான் இருக்கின்றது. அதைப் போன்று தான் கவிதையின் முக்கியமான அழகும் அதன் பொருளிலே தான் இருக்கின்றது.
பெண்ணின் புற அலங்காரம் பார்ப்பவர்களை வசீகரிக்கின்றது. அதேபோன்று, கவிதையின் வசீகரம் கவிதையின் அலங்காரத்தில் தங்கியிருக்கின்றது.
உருவம் , குணம் , அலங்காரம் ஆகிய மூன்றும் சரிவரப் பொருந்திய ஒரு பெண்ணைப் போன்றதுதான் வடிவம் , கருத்து , அணி என்பவை மூன்றும் சரிவரப் பொருந்திய கவிதையும் என்று சாதாரணமாகச் சொல்லலாம். நல்ல கருத்தில்லாத கவிதைக்குச் செய்யப்படுகின்ற அலங்காரம் “விளக்கு மாற்றுக்குக் குஞ்சம் கட்டியது போல” ஆகிவிடும்.
கவிதைக்குரிய யாப்பும் பொருளும் யாவருக்கும் சொந்தம். ஆனால் கற்பனை புலவனுக்குப் புலவன் வேறுபடும். கற்பனை என்பது புலவனின் தரத்தைப் பொறுத்தது. கற்பனையே அணிச்சிறப்புக்குக் காரணம்.
அதனாற் தான் பெரும் புலவர்களை அவர்களது கற்பனையை வைத்தே பெரும்பாலும் மதிப்பிடுகிறோம். கம்பனின் கற்பனை
ஒரு புலவனின் கற்பனை சிறந்த வகையிலே அமைந்து , அவனுக்குப் பின்னாலே வருகின்ற புலவர்களின் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்துவிட்டால், அப்புலவர்கள் அக் கற்பனையை இன்னும் மெருகுபடுத்தித் தமது கற்பனையையும் கலந்து அற்புதமாகப் பாடி விடுவார்கள்.
சில சமயங்களில் பின்பற்றல் இல்லாமலேயே வேறு வேறு காலத்திலோ, சமகாலத்திலோ கூட, சில பெரும் புலவர்கள் ஒரே விதமாகக் கற்பனை செய்தும் பாடியிருக்கிறார்கள்.
கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படுகின்ற கம்பனின் கற்பனைகள் பலராலும் போற்றப்படுகின்றன. பின்பற்றப்படுகின்றன. கம்பன் பெண்களின் அழகைச் சொல்வதற்குக் கையாண்ட ஒரு கற்பனையையும் அது விரிவு பட்ட விதத்தையும் இங்கு பார்ப்போம்.

Page 120
இலக்கியச்சரம் -210
இராமனுக்கும் சீதைக்கும் நடைபெற இருக்கும் திருமணத்தைக் காண, அயோத்தியிலேயிருந்து தசரதர் முதலானவர்கள் மிதிலைக்கு வருவதை கம்பன் தனது இராமாயணத்தில் மிகச் சிறந்த முறையில் பாடியிருக்கின்றான். தசரதச் சக்கரவர்த்தியோடு வந்தவர்கள் பூஞ்சோலையிலே பூக்கொய்து விளையாடுகின்ற காட்சியொன்றினைப் பூக்கொய் படலத்தில் காட்டுகின்றான்
கம்பன்.
பெண்கள் பூஞ்சோலையிலே புகுந்து அழகிய பூக்களைப் பறிக்க முயலுகிறார்கள். அந்தப் பூஞ்சோலையிலேயுள்ள பூக்களிலே மொய்த்திருந்த வண்டுகள் , அங்கு வந்த பெண்களின் முகங்களைப் பார்க்கின்றன. முகங்களிலே இருந்த கண்களைப் பார்க்கின்றன. பார்த்த அளவிலே பேராச்சரிய மடைந்துவிடுகின்றன.
அழகிய அப்பெண்களின் முகங்கள் தாமரை மலர்களாகவும், கண்கள் குவளைமலர்களாகவும் காட்சியளித்தமை மட்டும் தான் அவற்றின் ஆச்சரியத்திற்குக் காரணம் என்று முழுதாகச் சொல்லி விட முடியாது.
தாமரை மலர்களிலே குவளை மலர்கள் மலர்ந்திருக்கின்றனவே , அல்லது தாமரை மலர்கள் குவளை மலர்களைப் பூத்திருக்கின்றனவே என்பதும் வண்டுகளுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கலாம்.
அதுமட்டுமல்ல, தாமரைப் பூக்களும் குவளைப்பூக்களும், நீர்ப்பூக் களல்லவா. இவை எப்படி நிலப்பூக்களாயின. தரையிலே வளர்ந்து நிற்கும் வல்லிக் கொடிகளல்லவா. தாமரை மலர்களையும் , அம்மலர்களிலே குவளை மலர்களையும் பூத்திருக்கின்றன, என்றும் அதிசயமடைந்தனவாம் வண்டுகள். பெண்களை வல்லிக் கொடிகளாகவும் , அவர்களின் முகங்களையும், கண்களையும் நதியிலேயும் , குளத்திலேயும் பூக்காத தாமரைப் பூக்கள், குவளைப்பூக்கள் என்றும் நினைத்து , சோலையிலே இருந்த வண்டுகள் அப்பெண்களின் முகங்களிலே மொய்க்கத் தொடங்கி விட்டன.
பெண்களோ தங்கள் கைகளாலே கலைத்துக் கலைத்துக் களைத்துப் போனார்கள். வண்டுகளோ போவதாக இல்லை. என்று சொல்லி விட்டுப் "புதுமை காணும் எண்ணங் கொண்டவர்கள் ஏதாவது புதியனவற்றைக் கண்டு விட்டால் எந்த இடையூறு வந்தாலும் அக்காரியத்தைக் கைவிட்டுச் செல்வாரோ அதே போன்ற நிலையில் தான் வண்டுகளும் இருந்தன என்று அற்புதமாகச் சொல்கிறான் கம்பன்.
 

-21 l- அகளங்கண் நதியினும் குளத்தும் பூவா
நளினங்கள் குவளை யோடு மதிநுதல் வல்லி பூப்ப
நோக்கிய மழலைத் தும்பி அதிசயம் எய்திப் புக்கு
வீழ்ந்தன அலைக்கப் போகா புதியன கண்ட போழ்து
விடுவரோ புதுமை பார்ப்பார். மலர்களிலே தேன் குடிப்பதையே தம் வாழ்க்கையாகக் கொண்ட வண்டுகளுக்கே, அப்பெண்களின் பேரழகு மயக்கத்தைத் தந்திருக்கின்றதே. பூக்கள் பூக்களைப் பூத்திருக்கின்றனவே. நீர்ப்பூக்கள் நிலப்பூக்களாகி விட்டனவே என்று, கலைக்கவும் போகாமல் வண்டுகள் மொய்த்த தாகச் சொல்லி அப்பெண்களின் பேரழகை வர்ணித்தான் கம்பன். சேக்கிழாரின் கற்பனை
கம்பனின் காலத்திற்குச் சற்று முற்பட்டவர் என்றும், சற்றுப் பிற்பட்டவர் என்றும் பலவிதமாக இலக்கிய வரலாற்றாய்வாளர்களால் கருதப்படும். சேக்கிழார் சுவாமிகள் , தமது பெரியபுராணத்தில் இத்தகையதொரு கற்பனையை இன்னும் சிறிது விரிவாகப் பாடியுள்ளார்.
மருத நிலத்திலே உள்ள வயல்களிலே களைபிடுங்க வந்த பெண்கள் வயலுக்குள்ளே களைகளாகக் காணப்படும் செங்குவளை மலர்களைப் பிடுங்கித் தமது கூந்தலிலே அணிந்து கொள்கிறார்கள்.
பெண்களின் கருங் கூந்தலிலே இருக்கின்ற செங்குவளை மலர்கள் மேல் வண்டுகள் வந்து மொய்க்கத் தொடங்கிவிட்டன.
ஏராளமான வண்டுகள் வந்து கூந்தலிலே மொய்த்ததால் அப்பெண்கள் வண்டுகளைக் , கைகளை அசைத்துக் கலைக்கிறார்கள்.
அவர்கள் கைகளை அசைக்கக் , கைகளைக் காந்தள் மலர்கள் என நினைத்து, பக்கத்து வயல்களிலே இருந்த வண்டுகளும் வந்து வந்து கைகளிலே மொய்க்கத் தொடங்கி விட்டனவாம்.
அப்பெண்கள் வண்டுகளைக் கலைத்தது, வண்டுகளை அழைத்தது போலாகி விட்டது என்கிறார் சேக்கிழார் சுவாமிகள்.

Page 121
இலக்கியச்சரம் -212
வயலிலே இருக்கின்ற குவளை மலர்களை விடப், பெண்களின் கூந்தலிலே இருக்கின்ற குவளை மலர்கள் தான் , வண்டுகளுக்குப் பிடித்தமான மலர்களாக இருந்திருக்கின்றன.
கருங்கூந்தலோடு சேர்த்துச் செங்குவளை மலர்களைப் பார்க்கும் போது அது தனியழகாக இருந்திருக்கும் போலும்,
அந்தக் கூந்தலிலே இருக்கின்ற செங்குவளை மலர்களை விட அப்பெண்களின் கைகள் இன்னும் பேரழகு வாய்க்கப் பெற்ற காந்தள் மலர்களாக இருந்ததாற்தான் வண்டுகள் மேலும் மேலும் வந்து கைகளிலே மொய்த்தன என்கிறார் சேக்கிழார் சுவாமிகள். செங்குவளை பறித்தணிவார்
கருங்குழல்மேல் சிறைவண்டை அங்கைமலர் களைக்கொடுகைத்து
அயல்வண்டும் வரவழைப்பார் கம்பன் கூறியது போல முகத்திலே வண்டுகள் மொய்த்தமை பற்றிச் சேக்கிழார் சுவாமிகள் பாடவில்லை. கைகளே இப்படியென்றால் முகம் எப்படியிருந்திருக்கும் என்று எங்கள் ஊகத்துக்கே விட்டு விட்டார் போல் தெரிகின்றது.
சரி, இத்தனை பேரழகு வாய்க்கப் பெற்ற பெண்கள் யார் என்றால், வயலிலே களை பிடுங்குவதற்காக வந்த பெண்கள் தான் இவர்கள்.
எந்த அலங்காரமுமின்றி வயலிலே களைபிடுங்கும் கூலிவேலை செய்ய வந்த பெண்களே இப்படியென்றால் மற்றையோர் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ என்பது சேக்கிழார் சுவாமிகளின் கற்பனை, புகழேந்திப்புலவரின் கற்பனை
இதே போன்றதொரு கற்பனையை இவர்களுக்குப் பின்னால் வாழ்ந்த பெரும் புலவர்களில் ஒருவரான புகழேந்திப்புலவர் அற்புதமாகக் கையாண்டுள்ளார்.
நளமகாராஜன் விதர்ப்ப நாட்டு விமராஜனது மகளாகிய தமயந்தியைத் திருமணஞ் செய்து கொண்டு தனது நிடத நாட்டுக்கு அழைத்து வரும் போது, வழியிலே பல காட்சிகளை அவளுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றான்.
அதிலே ஒரு காட்சி தான் முன்னோர்களின் கற்பனையை ஒத்து முகிழ்த்த ஒரு முத்தான காட்சியாகும்.

அகளங்கர்ை
அழகிய பெண்ணொருத்தி மலர்கள் கொய்யும் ஆசையில் பூஞ்சோலை ஒன்றுக்குள் செல்கின்றாள்.
மலர் கொய்யச் சென்ற அப்பெண்ணின் முகத்தைப் பார்த்த வண்டுகள் , ஆச்சரியப்பட்டு அவளது முகத்தைத் தாமரைப் பூவாக நினைத்து மொய்க்கத் தொடங்கி விட்டன.
தனது முகத்திலே மொய்த்த வண்டுகளைத் தனது கைகளாலே கலைத்தாள் அப்பெண். முகத்திலே மொய்த்த அவ்வண்டுகள் , கைகளைக் கண்டதும், கைகளைக் காந்தள் மலர்கள் என நினைத்து மொய்க்கத் தொடங்கி
விட்டன.
அதனால் அவள் கலைத்துக் கலைத்துக் கலைக்க முடியாமல் களைத்து வியர்த்து நின்றாள் என்கிறார் புகழேந்தி.
மங்கை ஒருத்தி மலர்கொய்வாளர் வாண்முகத்தைப் பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் -செங்கையால் காத்தாளர்அக் கைமலரைக் காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காணென்றான் வேந்து, இந்தக் கற்பனையை இவருக்குப் பின்னாலே வந்த பல புலவர்கள் தொட்டுத் தொடர்ந்திருக்கிறார்கள்.
கண்ணதாசனின் கற்பனை.
கவியரசு கண்ணதாசன் தனது திரை இசைப் பாடலொன்றில் “பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட” எனத் தன் கற்பனையையும் கலந்து புகழேந்திப் புலவரின் பாடலை நினைவூட்டி எழுதியிருக்கிறார்.
இவருக்குப் பின்னால் ரி. ராஜேந்தர் தனது திரையிசைப் பாடலொன்றில் “முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதை தான் கைகள்” என எழுதியிருக்கிறார்.
பெண்களின் அழகைச் சொல்லக் கவிஞர்கள் கையாண்ட கற்பனை இது. இக்கற்பனை இன்னும் தொடரும் போல்தான் தெரிகின்றது.
பெண்களின் உறுப்புக்களை மலர்களோடு ஒப்பிட்டுப் பாடப்படும் வழக்கம் ஒருபோதும் முடியப் போவதில்லை.
வண்டுகளே ஏமாந்து போய் விடுமென்றால் ஆண்கள் ஏமாந்து போய்விடுதல் ஆச்சரியமானதில்லைத் தானே.

Page 122
இலக்கியச்சரம் -214பாரியும் மாரியுடம்
சங்கப்புலவர்களிலே கபிலர் மிகவும் சிறந்த புலவராகப் போற்றப்படுகிறார். வள்ளல் பாரியின் உயிர் நண்பராக விளங்கியவர் இவர், பாரியின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாட நினைத்த இவர் , பாரியை யாரோடு ஒப்பிட்டுச் சிறப்பிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்தார்.
அவரது சிந்தனையில் நல்லதொரு கற்பனைபிறந்தது. “முல்லைக்குத் தேரீந்த' வள்ளல் பாரிக்கு இப்பாரிலுள்ள யாருமே ஒப்பாக மாட்டார்கள் என்பதால் , மனிதர்களை விட்டு விட்டு வேறொன்றை ஒப்பிட விரும்பினார். எனினும் அதுவும் முழுமையாக ஒப்பாகவில்லை. இருப்பினும் அதையே ஒப்பிட்டுப் பாடல் பாடினார். அவர் பாரியை எதனுடன் ஒப்பிட்டார் தெரியுமா. மாரியுடன்,
இந்த உலகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு பாரிக்கு மட்டும் தானா. ஏன் மாரி (மழை) யுந்தான் உலகைப் பாதுகாக்கிறதே.
புலவர்களே! நீங்கள் ஏன் எல்லோரும் பாரி பாரி என்று ஒருவனையே புகழ்ந்து பாடுகிறீர்கள். மாரியையும் பாடலாமே. என்கிறார் கபிலர்.
பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனு மல்லன் மாரியும் உண்டுFண்டு உலகு புரப்பதுவே பாரியைப் புகழ்ந்து பாடும் புலவர்கள் பொன் , பொருளுக்காகப் பொய் பாடும் புலவர்களில்லை. அவர்கள் செந்நாப்புலவர். என்று நயமாகக் கூறுகிறார் கபிலர்.
இப்பாடலில் பாரியை மாரிக்கு ஒப்பிடுவது போலக் காட்டி, மாரியிலும் பாரியே சிறந்தவன் என்று நிறுவுகிறார் கபிலர்.
இப்பாடலும் இக்கற்பனையும் பல பெரியோர்களால் காலந்தோறும் எடுத்தாளப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்தக் கற்பனை கபிலருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் இதே கற்பனையைக் கொஞ்சம் மாற்றி விரிவாக்கி செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னனைப் புகழ்ந்து பாடப் பயன்படுத்துகிறார்.
பாரியின் கொடையைப் புகழ்ந்த கபிலர், சேரமான் கடுங்கோ வாழியாதன் வீரத்தையும், ஆட்சிச் சிறப்பையும் புகழ்ந்து அருமையான ஒரு LITL-6o LITI9ul(555BITi.
 

-25- அகளங்கண் சேரமான் கடுங்கோ வாழியாதனுக்கு இவ்வுலகில் எவரும் ஒப்பாக மாட்டார்கள். உலகைக் காக்கும் தனியொருவனாக விளங்கும் அவனுக்கு உலகில் தனியொருவனாக வந்து செல்லும் சூரியனை ஒப்பிட்டால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்து விட்டது.
இருப்பினும் சூரியன் ஒப்பாக மாட்டான். எனக் காரணங்காட்டிச் சூரியனையே , சேரமான் கடுங்கோ வாழியாதனுடன் ஒப்பிட்டுக் கபிலர் அற்புதமான பாடலொன்றைப் பாடினார்.
வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ இடஞ் சிறிதென்னும் ஊக்கந் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறங்கொடுத்து இறத்தி மாறிவருதி மலை மறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. “இந்த உலகைக் காவல் செய்யும் சிற்றரசர்கள் , வழிபாட்டு வார்த்தைகளைச் சொல்லியவர்களாக , செல்வக் கடுங்கோ வாழியாதனின் வார்த்தைகளைக் கேட்டு நடக்கிறார்கள்.
வாழியாதனோ உலக இன்பங்களைத் தானும் , தன் நாட்டு மக்களும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணங் கொண்டவனாக, இவ்வுலகம் மற்றவர்கள் அரசாள்வதற்கும் பொதுவானது என்ற சொல்லைப் பொறுக்காதவனாக , தனது நாட்டுப் பரப்பு போதாது போதாது என்ற எண்ணம் அவனை உந்தித்தள்ள , குறைவில்லாத ஊக்கத்தோடு முன்னேறுகிறான்.
பகைவர்களை வெற்றி கொண்டு அழித்தொழிக்கும் சேனைகளைக் கொண்டவன் அவன் செல்வத்தைப் பாதுகாக்காமல் அள்ளி அள்ளிக் கொடுப்பவன்.
அத்தகைய சேரலாதனுக்கு மிகுந்த பிரயாணங் கொண்ட சூரியனே! நீ எப்படி ஒப்பாவாய்' என்று சூரியனைப் பார்த்துக் கேட்கிறார் கபிலர்.

Page 123
இல .கியச்சரபம் -2 lo
“சேரலாதனும் நாடுகளைக் கைப்பற்றத் தொடர்ந்து பிரயாணஞ் செய்கிறான். நீயும்தொடர்ந்து பிரயாணஞ் செய்கிறாய். அவ்வளவு தான் ஒப்பு. சூரியனே! நீ பகற் பொழுதை மட்டுமே உன் ஆட்சிக் காலமாகக் கொண்டிருக்கிறாய். சந்திரனுக்குப் பயந்து மாலைக் காலத்தில் புறங்காட்டிச் சென்று இல்லாமற் போய்விடுகிறாய்.
வடக்கு , தெற்கெனத் திசை மாறி வருவாய். குறித்த திசையில் முன்னேறும் பழக்கம் உன்னிடம் இல்லை. அதுமட்டுமல்ல மாலைக் காலத்தில் மலைக்குள்ளே சென்று ஒளித்துக் கொள்வாய்.
உனது வீரம் மிகவும் பரிகாசத்திற்குரியது. அகன்ற பெரிய ஆகாயத்திலே கூட நீ தனியே வரமாட்டாய் பல கதிர்களைத் துணைக்கழைத்துக் கொண்டு தான் வருவாய். அதுவும் எப்பொழுது பகலில்,
இப்படியிருக்க நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய்' என்று சூரியனைப் பார்த்துக் கேட்பது போலப் பாடியிருக்கிறார் கபிலர்.
இப்பாடல் ஆழமான அர்த்தம் நிறைந்த, அற்புதமான , சுவாரஸ்யமான பாடலாக விளங்குகின்றது. கற்பனை நயம் மிக்க இப்பாடலின் விளக்கத்தை விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்தி இன்னொரு கற்பனைக்குச் செல்கிறேன்.
gFuEšGogs T6B5 ir
கபிலரைப் போலவே தான் சயங்கொண்டாரும் தனது கற்பனையை இருபாடல்களில் பாடியிருக்கிறார். கபிலராவது சற்று வித்தியாசமாகப் பாடினார். ஆனால் சயங்கொண்டாரோ, ஒரே கற்பனையை ஒரு சிறு மாற்றமும் இல்லாமல் அப்படியே இரு பாடல்களில் பாடியிருக்கிறார். கலிங்கத்துப் பரணியில் கடை திறப்பு என்ற முற்பகுதியில் இருபாடல்களும் இடம் பெற்றுள்ளன.
வாசனை மிக்க செங்கழுநீர்ப்பூவையும் , முதிராத இளைஞர்களின் அரிய உயிரையும் திருகிப் பிடுங்கி எடுத்துத் தமது கூந்தலிலே செருகியிருக்கிறார்களாம் பெண்கள்.
முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவிர்
செம்பொற் கபாடம் திறமினோ
 
 

-2 17- அகளங்கண் பெண்கள் செங்கழுநீர்ப்பூக்களை அதன் தண்டிலிருந்து திருகிப் பிடுங்கி எடுத்துத் தம் கூந்தலிலே செருகுவது புதுமையானதல்ல. அதிலே கற்பனை நயம் இல்லை.
ஆனால் முதிராத விடலைப் பருவத்து இளைஞர்களின் அரிய உயிரை அவர்களின் உடலிலிருந்து திருகிப் பிடுங்கி எடுத்துக் கூந்தலிலே செருகியிருக்கிறாள்கள். பெண்கள் என்பது மிகவும் வித்தியாசமான நயமான கற்பனையே தான்.
கூந்தலிலே செங்கழுநீர்ப் பூக்களோடு இளைஞர்களின் அரிய உயிரும் செருகப்பட்டிருப்பதாக இவர் செய்த இதே கற்பனையை இவரது இன்னொரு LJTL60160 цTi (3цTLD.
செக்கச் சிவந்த கழுநீரும்
செகத்தில் இளைஞர் ஆருயிரும் ஒக்கப் பெருகும் குழல்மடவீர்
உம்பொற் 36 LITTLL żb திறமினோ இக்கற்பனை இலக்கிய உலகிலே சற்று வித்தியாசமானது தானே. இதனை நன்கு இரசித்த கே.சி.எஸ். அருணாசலம் என்னும் கவிஞர் தனது திரைஇசைப் பாடல் ஒன்றில் இன்னும் விளக்கமாக எளிமையாகப் பாடினார். "சின்னச் சின்ன மூக்குத்தியாம்.” என்று தொடங்குகின்றது அப்பாடல் அதிலே ஒரு வரி
அள்ளிச் செருகிய கொண்டையிலே - எந்தன் ஆவி சிறையுண் டிருக்குதடி இந்தக் கற்பனையிலே எமது பண்பாட்டுக் கோலம் ஒன்றும் உண்டு. முற்காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்கள் கூந்தலை முடிவதில்லை. பூச் சூடுவதில்லை.
கணவனின் உயிர் போனால் கூந்தல் கலையும் , விரித்த கூந்தலாகிவிடும். அதன் மறுதலையாக கூந்தல் கலைந்தால் கணவனின் உயிர்போனதாக ஆகும்.
ஐந்து கணவர்கள் இருக்கும் போதே பாஞ்சாலியின் கூந்தலைக் கலைத்தான் துச்சாதனன், கலைத்த கூந்தலை முடியாது விட்ட பாஞ்சாலி, உயிரோடிருக்கும் கணவர்கள் உயிரோடிருப்பதை நிரூபிக்கும் வரை கூந்தலை விரித்தபடியே வாழ்ந்தாள். சபதமுஞ் செய்தாள்.

Page 124
இலக்கிபச்சரம் -2 18துச்சாதனனையும் துரியோதனனையும் கொன்று, அவர்களது இரத்தத்தை எடுத்து வீமன் கொடுக்க, அதனைத்தலையிலே பூசிச் சபதத்தையும் கூந்தலையும் ஒருங்கே முடித்தாள் பாஞ்சாலி.
கூந்தலை முடித்த பின் தான் பாண்டவர்கள் அவளுக்குக் கணவர்கள். அதுவரையில் அவள் விதவையே.
இக்கதையிலிருந்து கூந்தலுக்குள்ளே உயிர் இருப்பது எமது பண்பாட்டுக் கோலம் என்பது புலனாகின்றதல்லவா. தற்காலக்கவிஞர்களர்
இக்கற்பனையைப் பலகவிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். தற்காலக் கவிஞரான சோ, பத்மநாதனின் வடக்கிருத்தல் என்ற கவிதைத் தொகுதியில் அரங்கேற்றம் என்ற தலைப்பிலுள்ள கவிதையில் இக்கற்பனை அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அள்ளி நீகுழற் கற்றை முடித்தென (து)
ஆவி யைமுடித் தாய்அது மட்டுமா என்ற தோடல்லாமல் கவிஞர், பெருஞ்சுமை என்ற தலைப்பிலான கவிதையில்
அன்ன மென்னந டந்துந டந்தென(து)
ஆவி யூடுக லந்துக லந்ததும் பின்ன லோடெண்உ ளத்தையும் சேர்த்துடன்
பின்ன விட்டதும் எனப் பின்னலோடு தன் உள்ளத்தையும் சேர்த்துப் பின்னியதாகவும் பாடிச் செல்லக் கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டாரின் கற்பனையே காரணமாக அமைந்தது எனலாம்.
சயங்கொண்டாரின் இக்கற்பனையை எனது மெல்லிசைப் பாடலொன்றில் சற்று வித்தியாசமாகக் கையாள நினைத்தேன். இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடலாக அப்பாடல் இப்பொழுதும் ஒலிக்கின்றது.
ஆண் சேற்று வயல்க் காட்டினிலே
நாற்று நட வந்த பெண்ணே நாற்று முடி தன்னை யெந்தண் நெஞ்சினிலே நட்டதேனோ
 

-219. அகளங்கண் பெண் ஏர்பதித்து நீ உழுதாய்
விழிபதித்து நாண் உழுதேன் உழுத வயல் காயலாமோ உள்ள வயல் ஒயலாமோ ஆண் களைபறித்து நிமிரும் போது
கண்கள் எண்னைப் பறித்ததடி முந்தானையைச் செருகும் போதெல்லாம் முழுமனதும் உன்னை நாடுதே. எனத் தொடர்ந்து செல்லும் இப்பாடலில் “முந்தானையைச் செருகும் போது ஏன், எண் முழுமனதைச் சேர்த்துச் செருகினாய்” என்றே நான் எழுதியிருந்தேன். கூந்தலுக்குள்ளே ஆருயிரைச் சேர்த்து முடித்த கற்பனை போல, முந்தானையை இடுப்பிலே செருகும் போது முழுமனதையும் சேர்த்துச் செருகுவதாக என் கற்பனை அமைந்தது.
இருப்பினும் இசை வடிவத்தில் அவ்வரிகள் விளக்கக் குறைவாகத் தெளிவில்லாமல் எளிமைத் தன்மையை இழந்து விட்டன.
ஆனால் எனது இந்தக் கற்பனை பின்பு திரைப் பாடலொன்றில் நாட்டார் பாடல் மெட்டில் அற்புதமாக ஒலித்தது.
“என்னடி முனியம்மா உன் கண்ணிலே மையி எனத் தொடங்கும் நடராஜன் பாடிய திரைப் பாடல் ஒன்றில்
கண்டாங்கி பொடவை கட்டிக் கைநிறையக் கொசுவம் வச்சு இடுப்பில சொருகிறியே முனியம்மா - அது கொசுவம் அல்ல எம் மனசு முனியம்மா எனத் தெளிவாக வெளிவந்தது. இதே கற்பனையின் சாயலில் திரைப் பாடலொன்று பழனிபாரதியின் கைவண்ணத்தில் ஒலித்தது.
நீ கட்டுஞ் சேல மடிப்பில நான் கசங்கிப் போனேண்டி,
S SS ST 0SMMM u SL SS LLLL S 00 S STT MM M0 c MS பின்வருவோரால் பின்பற்றப்படும் பிரகாசம் பெறும்.

Page 125
-220
திரை இசைக் கற்பனைகளர் பட்டுக் கோட்டையினர் பாடல் வாரிகள்
திரைஇசைப்பாடல்களை இலக்கியம் இல்லை என்று இலக்கிய விற்பன்னர்கள் ஒதுக்கிய காலம் ஒன்று இருந்தது. அவைவெறும் “டப்பாங்குத்துப் பாடல்கள்' என்று பண்டிதர் கூட்டம் எள்ளி நகையாடவும் தயங்கவில்லை.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. திரை இசைப் பாடல்கள் பற்றித் தமிழ்ப் பேராசிரியர்களே பேசியும் , எழுதியும் வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
திரை இசைப் பாடல்களில் பல சிறந்த இலக்கிய நயம் வாய்ந்தனவாக இருப்பதை அவற்றிலே ஈடுபடுவோர் நிச்சயம் கண்டுகொள்வர். பாபநாசம் சிவன் , உடுமலை நாராயணக் கவி , பாரதிதாசன் , கல்கி , தஞ்சை ராமையா தாஸ் கவி கா.மு.ஷெரீப் , குமா. பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி , கம்பதாசன் , மாயவநாதன், மருதகாசி , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கவிஞர் கண்ணதாசன், சுரதா , ஆலங்குடி சோமு , பஞ்சு அருணாசலம், கே.எஸ் கோபாலகிருஸ்ணன் , வாலி, பூவை செங்குட்டுவன், கே.சி.எஸ். அருணாசலம், ஜெயகாந்தன், புலவர் புலமைப் பித்தன் , முத்துலிங்கம், முமேத்தா, நா.காமராஜன், ரி. ராஜேந்தர் , வைரமுத்து, பிறைகுடன் , குருவிக்கரம்பை சண்முகம் , கங்கை அமரன் , இளையராஜா, காமகோடியான் , காளிதாசன், அறிவுமதி, பழனி பாரதி என திரைஇசைப் பாடல்களை எழுதியவர்கள் பட்டியல் மிக நீண்டது.
பாரதியார் பாடல்கள் பலவும், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார் முதலான பலரின் பாடல்களும் கூட திரை இசைப் பாடல்களாகியுள்ளன.
1951 இல் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் திரைஇசைப் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்த திரை இசைப் பாடல்களின் போக்கிற்கும் , பட்டுக் கோட்டையின் பிரவேசத்தின் பின்னால் திரை இசைப் பாடல்களின் போக்கிற்கும் பாரிய வித்தியாசமுண்டு.
ஒரு பொதுவுடைமைக் கவிஞனாக சாதாரண கிராமியச் சொற்கள் மூலம் தனது கொள்கையைத் திரைப்பாடல்கள் மூலம் பரப்பியவர் பட்டுக் கோட்டையார்.
 

-221- அகளங்கண்
பட்டுக் கோட்டையாரின் பாடல்களை ஆராய்ந்தவர்கள் யாவரும் அவரின் கருத்துக்களுக்கு முதன்மை கொடுத்தே ஆராய்ந்துள்ளனர்.
இங்கே பட்டுக் கோட்டையாரின் இலக்கிய நயம் மிக்க கவிவரிகளை நாம் கண்டு களிக்கப் போகின்றோம்.
மிகவும் எளிமையாகவே அவர் பாடல்களை எழுதியுள்ளதால் அதிகம் விளக்காமல் உங்கள் ரசனைக்குச் சிலவற்றைத் தருகின்றேன்.
ஆளுக்கொரு வீடு என்ற படத்திற்கு இவர் எழுதிய பாடல் ஒன்று செய்யும் தொழிலே தெய்வம்” எனத் தொடங்குகின்றது. அப்பாடலில் ஒரு பகுதி.
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்.
என்பது. இதில் வரும் வேர்வைகள் எல்லாம் விதையாகும் என்ற வரி மிகவும் சிறப்பானது. இதே பாடலில் திருக்குறள் ஒன்றை அவர் எளிமைப்படுத்தி வழங்கியிருப்பதையும் பார்ப்போம்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்ற திருக்குறட் கருத்து.
சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை - அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை
என்ற வகையில் அவரால் அருமையாக எளிமைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி’ என்ற பாடலில்
ЗБП (6 வெளைஞ்சென்ன
மச்சாண் - நமக்குக் கையுங் காலுந்தானே
மிச்சம்

Page 126
இலக்கியச்சரம் -222என்ற கற்பனையும் , தொழிலாளரின் வாழ்க்கையைச் சொல்லும் போது, அவர்கள் வழி காட்டி மரமாக இருக்கிறார்கள் என்று சொல்வதும் அற்புதமாக இருக்கின்றது.
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் - ரொம்பக் கிட்ட நெருங்குது நேரம் வழிகாட்டி மரம் தான் முன்னேறுவதில்லை. அதனைப் பயன்படுத்தி மற்றையோர் முன்னேறுகிறார்கள். ஆழமான பொருள் கொண்டதொரு பொருத்தமான உவமையை கவிஞர் இங்கு பயன்படுத்தியுள்ளார்.
இதே போல இதே படத்தில் இடம் பெற்ற "தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பாடலில்
துங்காதே தம்பி
தூங்காதே - நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற பகுதியில் வரும் நீயும என்ற சொல் மிகவும் சிறப்பானது. இதே பாடலில் வரும்
நல்ல பொழுதை யெல்லாம்
துங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங் கெட்டார் , சிலர் அல்லும் பகலும் தெருக்
கல்லாய் இருந்து விட்டு அதிஷ்டமில்லை யென்று
அலட்டிக் கொண்டார் என்ற பகுதியில் வரும் தெருக்கல் அருமையான உவமையாகும். தெருவிலேயுள்ள கல்லில் அவர் இவர் என்றில்லாமல் எவரும் குந்தியிருந்து விட்டுச் சென்று விடுவார்கள். கல்லோ அப்படியே இருக்கும்.
இதே போன்று அரசிளங்குமரி படத்திற்கு இவர் எழுதிய் "சின்னப் பயலே சின்னப்படலே. ’ என்ற பாடலில் வரும்

-223ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீதரும் மகிழ்ச்சி என்ற பகுதியில் வரும் “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி” என்ற வரிகளும் , திருடாதே படத்தில் இவர்
அகளங்கன்
எழுதிய “திருடாதே பாப்பா திருடாதே’ என்ற பாடலில் வரும் திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது - அதைச் சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது திருடராய்ப் பார்த்துத் திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது. என்ற கருத்துச் செறிந்த பாடற் பகுதியும் மிகவும் சிறப்பானவை பட்டுக் கோட்டையாருக்குப் பெயர் கொடுத்த பாடல்களில் ஒன்று தங்கப்பதுமை என்ற படத்தில் இடம் பெற்ற
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்ற பாடல். இப்பாடலில் வரும் ஒரு பகுதி மிகவும் சிறப்பானது. அண்பைக் கெடுத்து - நல் ஆசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே துண்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே. LJ (65 கோட்டையாரின் காதல் பாடல்களில் மிகவும் சிறப்புப் பெற்ற ஒரு பாடல் தங்கப்பதுமை என்ற படத்தில் இடம் பெற்ற 'முகத்தில் முகம் பார்க்கலாம்” எனத் தொடங்கும் பாடல். இப்பாடலில்

Page 127
இலக்கியச்சரம் -224
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை யானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல் அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம் ஆயிரம் உருவாக்கலாம், என்ற பகுதி மிகவும் சிறப்பானது. இரத்தினபுரி இளவரசி என்ற திரைப்படத்திற்கு அவர் எழுதிய பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
ஆண் - படிக்கப் படிக்க நெஞ்சிலினிக்கும்
பருவம் என்ற காவியம் பார்க்கப் பார்க்க வளருமே
காதலின்ப ஒவியம் பெண்- ஆ. 2. காதல் இன்ப ஒவியம்
ஆண் 1-அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
கண்களர் மட்டும் பேசும் பெண் - sè,... • • • • • • • Gl JgrLð ஆண்- அன்புமணம் பொங்கி விட்டால் அங்கமெல்லாம் பேசும் இவரது காதல்ப் பாடல்களில் சிறப்புப் பெற்ற இன்னொரு பாடல் அமுதவல்லி என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் "ஆடை கட்டி வந்த நிலவோ.” எனத் தொடங்கும் அப்பாடலில் ஒரு பகுதி.
அந்தி வெயில் பெற்ற மகளோ - குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ - குன்றில்
உந்தி விழும் நீரலையில் ஓடி விளையாடி மனம் சிந்தி வரும் தென்றல் தானோ - இன்பம் தந்து மகிழ்கின்ற மானோ, காதல்ப் பாடல்களில் மட்டுமல்ல, தாலாட்டுப் பாடல்களிலும் கவிஞரின் கற்பனை ஜொலிக்கின்றது. பதிபக்தி என்ற படத்திற்கு அவர் எழுதிய பாடல் ஒன்றில் குழந்தையைத் தாய் விளிக்கும் விதம் அருமையாக இருக்கின்றது.
சின்னஞ் சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச் சோலையே! மாணிக்கமாலையே ஆரிரோ. அன்பே ஆராரோ
 

225- அகளங்கர்ை குழந்தையை வண்ணத்தமிழ்ச் சோலையே என அழைத்துப் பாடுவது மிகவும் நயமானது. இதே பாடலில் நாட்டார் பாடல் அமைப்பில் தாய் தன் எண்ணங்களை குழந்தையில் ஏற்றிப்பாடுவதாக அமைந்த பகுதி மிகவும் சிறப்பானது.
பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால்தான் துக்கமோ தப்பாமல் வந்துண்னை அள்ளியே அணைப்பார் தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார் குப்பை தனில் வாழும் குண்டுமணிச் சரமே குங்குமச் சிமிழே ஆராரோ குங்குமச் சிமிழே எனக் குழந்தையை அழைப்பதும் ரசிக்கத்தக்க கற்பனையாக விளங்குகின்றது.
கல்யாணப் பரிசு என்ற படத்தில் , சிறிய தாய் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து பாடுவதாக அமைந்த பாடல் "உன்னைக் கண்டு நான்
-L,ؤلیت
எனத் தொடங்குகின்றது. அப்பாடலில் ஒரு கற்பனை
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா எனவருகின்றது. குழந்தையிடம் யாராவது கடன் கேட்பார்களா. ஆனால் இந்தச் சிறிய தாய் தனது கன்னத்தில் கடனாக முத்தம் தரும் படி கேட்கிறாள். கடனாகப் பெற்றால் தானே தவறாமல் திருப்பிக் கொடுக்கலாம். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள’ என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் ஒன்று
எண்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (எண்) கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக் காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (எண்) கண்ணத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (எண்)
என்பது. இப்பாடலில் சந்திரனில் உள்ள களங்கத்திற்குக் காரணம் அவளின் காதலன் கிள்ளியது தானோ எனச் சந்திரனைப் பெண்ணாக்கிக் கேட்டுக் கவிஞர் பாடிய கற்பனைமிகவும் சிறப்பானது.

Page 128
இலக்கியச்சரபம் -226
பட்டுக்கோட்டையின் சமகாலத் திரைப்படக் கவிஞர்களில் மருதகாசியும் கண்ணதாசனும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர்கள். கண்ணதாசன் பிற் காலத்தில் பெரும் புகழ் பெற்றார்.
பாடற் கருத்து எதுவாக இருந்தாலும் அது சொல்லும் முறையில் தான் சிறப்புறுகின்றது.
அந்த வகையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , சிறந்த கருத்துக்களை சிறந்த முறையில் சொல்லி இலக்கிய ரசனை மூலம் இதயத்தைக் கவர்ந்தவர்.
இவர் இருபத்தொன்பதே வயதிற்குள் மறைந்து போனாலும் இவரது பாடல்கள் பல காலம் உயிர் வாழும்.
 

-227
கவியரசு கண்ணதாசனின் கவிவரிகள்
தமிழ்த் திரை இசைப் பாடல்களிலே தனக்கெனத் தனித்துவமான ஓர் இடத்தைப் பிடித்துத் தன் முத்திரையைப் பதித்தவர் கவியரசு கண்ணதாசன். காதல் பாடல்களை எழுதுவதிலே தன்னிகரற்றவராக வளர்ந்து , தாலாட்டுப் பாடல்களில் தனியரசு செலுத்தித் , தத்துவப் பாடல்களில் தன் தனித்துவத்தைக் கவித்துவத்தால் காட்டியவர் கவியரசர்.
பழந்தமிழ் இலக்கியக் கற்பனைகளையும் , செந்தமிழ்ச் சொற்கள் சொற்தொடர்களையும் தன்கற்பனை கலந்து அற்புதமாகப் பாடலாக்கித்
தந்தவர் அவர்.
கவியரசரின் பாடல்களிலிருந்து சிலவரிகளை ரசனைக்காகவும் அவரது கற்பனை வளத்தையும் , கவித்துவத்தையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இங்கு தருகிறேன்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. என இரத்தத் திலகம் படத்தில் இடம் பெற்ற “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடலில் தன்னைப் பற்றி எழுதினார் கவியரசர்.
"மகாகவிகாளிதாஸ்' என்ற படத்திற்குக் கவியரசர் எழுதிய இரண்டு பாடல்கள், அவர் தன்னையே நினைத்துக் கொண்டு எழுதியதாக எனக்குப் படுகின்றது. அதில் ஒரு பாடலின் பகுதி
யார் தருவார் இந்த அரியாசனம் - புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
(u III fi ) பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த பேறுபெறும் இடத்தில் இல்லாதவன் சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு தேர்ந்த பொருளெடுத்துச் சொல்லாதவன் - தனக்கு
(u IFTfi) 3) LITL6) காளிதாசனின் நிலையைக் காட்டுவதாக மட்டுமன்றிக்
கண்ணதாசனின் நிலையையும் காட்டுகின்றதல்லவா.

Page 129
-228இலக்கியச்சரம் ബ് ബ്
தனது வாழ்க்கையின் துன்ப துயரங்களையும் காளிதாசனின் வாழ்க்கை நிகழ்வுகளோடு இணைத்து , அவர்பாடிய இன்னொரு பாடலை முழுமையாகவே LJTit (BLITLD.
காலத்தில் அழியாத காவியம் தரவந்த
மாபெரும் கவி மன்னனே - உனக்கு
தாய் ஒரு மொழி சொல்லுவேன்
(கால.) உணர்ச்சியில் விளையாடும் உண்ணதக் கவிச்சிங்கம் தளர்ச்சியில் விழலாகுமா - மகனே சந்தனம் சேறாகுமா
பல்லக்குப் பரிவாரம் படையுடன் முடி உந்தன் சொல்லுக்கு விலையாகுமா - மகனே உண் தோளுக்குள் புவியாடுமே
(கால.) ஊருக்குக் கதை சொல்வோன் உள்ளத்தை வதை செய்தால் சீர்பெரும் கவி வாடுமே - மகனே தெய்வத்தின் முகம் வாடுமே
(கால.) வாழ்வென்றும் தாழ் வென்றும் வளமெண்றும் குறை என்றும் சக்கரம் சுழல்கின்றது - அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது
(கால.) யாருக்கும் வாழ்வுண்டு
அதற்கொரு நாளர் உண்டு அதுவரை பொறுப்பாயடா - மகனேளன்
அருகினில் இருப்பாயடா (கால.)
 

-229- - 945GrTIGussor
இப்பாடல் கவியரசரின் வாழ்க்கையைச் சொல்வதாகவே கொள்ளத்தக்கது. கவியரசரின் இத்தகைய கவி வரிகளைக் கற்பனைச் சிறப்புக்காக இனிப்பார்ப்போம்.
எண் தம்பி என்ற படத்தில் , தனது தம்பியாகிய சிறுவனைக் கொஞ்சி மகிழ்ந்து , அவனது அழகை வர்ணித்துத் தமையன் பாடுவதாக அமைந்த பாடல் ஒன்று உண்டு.
“முத்து நகையே உன்னை நானறிவேன்' எனத் தொடங்குகின்றது அப்பாடல். அந்தச் சிறுவன் மிகவும் அழகானவனாக இருந்தாலும் அவனது கால் ஊனமடைந்திருக்கின்றது. இந்தத் தகவலோடு அப்பாடலின் சிலவரிகளைப்
J(3LII).
கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதற்கு
காலழகு LITsig525Ts) ...................
காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு
கருணை எண்றொரு பேரெதற்கு
இதே போன்று பாலும் பழமும் என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் குறிப்பிடத்தக்கது. தனது கணவன் இரண்டு கண்களும் தெரியாத பார்வையற்றவன் - குருடன் என்பதை அவனது மனைவியால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை.
அவனது மனைவி அம்மன் கோவிலில் ச்ென்று, தன் துன்பத்தை முறையிட்டுப் பாடுவதாக அமைந்த பாடலில், அவள் தனது கணவனைக் குறிப்பிடும் விதம் அற்புதமானது.
“இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா” எனத் தொடங்குகின்ற இந்தப் பாடலில் , அவள் தனது கணவனைக் குறிப்பிடுகின்ற விதத்தைப் பார்ப்போம்.
இந்த நாடகம் அந்த மேடையில்
எத்தனை நாளம்மா - அவர்
இரவையும் பகலையும் ஒன்றாய்க் காண்பதும்
எத்தனை நாளம்மா
தன் கணவன் பார்வையற்றவனல்லன். குருடனல்லன். அவனும் பார்க்கிறான் ஆனால் மற்றையோர்க்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்

Page 130
இலக்கியச்சரம் -230என்றால் அவன் இரவையும் பகலையும் ஒன்றாய்க் காண்கிறான். மற்றையோர்க்கு இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு தெரிகின்றது, அவ்வளவு தான், என்று அவள் சொல்வதாக அமைந்த கவியரசரின் கற்பனை மிகவும்
அற்புதமானது.
சாந்தி என்ற படத்தில் பார்வையற்ற பெண்ணொருத்தியின் தோழி, அவளுக்குப் பார்வையும் கண்ணிறைந்த கணவனும் கிட்ட வேண்டுமென்று , பாடுகின்ற பாடல் ஒன்று மிகவும் சிறப்பானது. அதைப் பார்ப்போம். ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் வீடெங்கும் மாவிலைத் தோரணம் ஒருநாளர் அந்தத் திருநாளர் உந்தண் மணநாளர் தாண்வாராதோ
(ஊரெங்கும்) இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம் இருவிழி போலே வரவேண்டும் இண்முகக் கணவன் தண்முகம் பார்த்து கண்ணிர் வடிக்கும் சுகம் வேண்டும், இப்பாடல் வரிகளை நான் விளக்காமல் உங்கள் ரசனைக்கே விட்டுச் செல்கிறேன். காதல்ப் பாடல்களை எழுதுவதில் கவியரசர் நிகரற்றவர்.
காதற்கற்பனை
இவரது இதயக் கமலம் படப் பாடல் ஒன்றின் தொடக்கம் மிகவும் சிறப்பானது.
உண்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல உண்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல இதே போன்று பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் சிறப்பைப் பார்ப்போம். பெண் நான் பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

அகளங்கண்
ஆண் நாண் காணும் உலகங்கள் நீகாண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
பெண்; பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை, உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் - நானாக வேண்டும் மடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்
இதே படத்தில் கவியரசர் எழுதிய பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற பாடலில் வரும் 'உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே என்ற வரியும் மிகவும் சிறப்பான தொன்று. -
ஆலயமணி என்ற படத்தில், ஒருவன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி அவன் காயம் பட்டுப்படுத்திருக்க அவனைத் தூங்க வைப்பதற்காகப் பாடுவது போல அமைந்த பாடலொன்றைக் கவியரசர் எழுதியிருந்தார். அப்பாடல்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னைத் தொடர்ந்திருப்பேண் என்றும் துணையிருப்பேன்
(துர்க்கம்) காலையில் நான் ஒர் கனவு கண்டேண் - அதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல் கொடுத்து விட்டேன் உண்தண் கண்களிலே முத்தொள்ளாயிரப் பாடலொன்றின் கற்பனை இரண்டாவது பகுதியிலும், சேக்ஸ்பியரின் கற்பனை முதலாவது பகுதியிலும் பொருந்தியிருப்பதைக் கற்றவர்கள் அறிவார்கள்.
ஆலயமணி படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல் மிகவும் சிறப்புப் பொருந்தியது.

Page 131
- O R D -- இலக்கியச்சரம் - - -
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா கண்கள் சொல்லும் கதையாகிய காதல் கதைக்கு நிகரான கலையில்லை யென்று சொல்லித் தன் காதலியின் அங்கங்களை வர்ணிக்கின்றான். காதலன்.
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் 3.6LU 1666. In பெண்களின் உறுப்புக்களில் பெரிதாக இருக்க வேண்டிய உறுப்புக்களில் ஒன்று கண். சிறிதாக இருக்க வேண்டிய உறுப்புக்களில் ஒன்று இடை, என்று சாமுத்திரிகா இலட்சணம் கூறுகின்றது.
தனது காதலியின் உறுப்புக்களிலே உண்டு என்று சொன்னால் அது கண்ணைக் குறிக்கும். இல்லை என்று சொன்னால் அது இடையைக் குறிக்கும். என்றார் கவியரசர்,
கண்ணின் அழகிலே ஏனைய உறுப்புக்களின் அழகு மறைந்து விடும் என்பது கவிஞர்களின் பொதுவான கற்பனை, கவியரசரும் வாயாடி என்ற படத்தில் இக்கருத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக் கண்கள் உண் அழகைத் திருடிக் கொண்டது எனவே உண்டு என்று சொன்னால் அழகிய கண்களையே அது குறிக்கும் என்று பாடினார். சீதைக்கு இடை இருப்பது 'பொய்யோ’ என்பான் கம்பன், “மருங்கிலா நங்கை’ என்பான். சிற்றிடை என்பதால் இத்தகைய கற்பனையைப் புலவர்கள் செய்வதுண்டு
இங்கே கவியரசர் இல்லை என்று சொல்வது மின்னல் போன்ற இடையைத் தான் என்றார்.
இருப்பினும் இப்பாடலில் இன்னொரு நயத்தையும் கண்டு சொல்லியிருக்கிறார்கள்.
கண் இமைகள் அசைவது ‘வா வென்று ஆடவரை அழைப்பது போலிருக்கின்றது. ஆனால் இடை அசைவது வேண்டாம் என்று மறுப்பது போலிருக்கின்றது. அதையே ‘உண்டு’, ‘இல்லை’ என்ற சொற்களாலே கவியரசர் குறிப்பிட்டார் என்பர் சிலர்.
 

റ് 2 - A) - -
S2-59-56 TF5E9E6 OSV
கம்பண் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா அம்பிகாபதி அணைத்த அமராவதி - மங்கை அமராவதி சென்ற பின்பு பாவலர்க்கு நீயேகதி - என்றும் நியேகதி கம்பனின் சீதை தன் காதலிக்குத் தாயாம். காளிதாசனின் சகுந்தலை சேயாம். தாய் கற்பரசியாக மகாலக்சுமியாக இருந்து சேய் பேரழகியாக இருந்தால் இடையிலுள்ளவள் எப்படியிருப்பாள். அவளோ அம்பிகாபதி அணைத்த அமராவதி போல காதல் தேவதையாக இருப்பாள் என்பது கவியரசரின் கற்பனை.
“பாசம்” என்ற படத்தில் ஒரு காட்சி கதாநாயகி வண்டிலில் காட்டு வழியில் சென்று கொண்டிருக்கிறாள். கதாநாயகன் களவெடுப்பதற்காக அம்மாட்டு வண்டியை மறிக்கிறான்.
கதாநாயகி, தம்மிடம் கொள்ளையடிக்க வந்த கள்வன் மேல் காதல்
- கொண்டு விடுகிறாள். மாட்டு வண்டிலில் செல்லும் போது, அவள் பாடிக்
கொண்டு செல்கிறாள். அப்பாடலைப் பார்ப்போம்.
ஜல் ஜல் ஜல்லெனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல்லுங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
காட்டில் ஒருவன் எனைக் கண்டாண் கையில் உள்ளதைக் கொடு என்றான் கையில் எதுவும் இல்லை என்று கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன்
(ஜல்.) அவன்தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடிவிட்டேன் முதன்முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்

Page 132
இலக்கியச்சரம்
இன்றே அவனைக் கைது செய்வேன் என்றும் சிறையில் வைத்திருப்பேன் விளக்கம் சொல்லவும் முடியாது விடுதலை என்பதும் கிடையாது
இப்பாடலின் கற்பனை நான் விளக்காமலே எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியதே. ரசித்துப் பாருங்கள்.
ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது "குங்குமச் சிலையே” என்பார் கவியரசர் பெண்ணின் அழகுமேனி எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்கிறார் பாருங்கள்.
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா,
தாயைக் காத்த தனயண்' படத்தில் இடம் பெற்றது இந்தக் கற்பனை. "மாலையிட்ட மங்கை' என்ற படத்தில் ஒரு பெண்ணைக் கவியரசர் வர்ணிக்கும் விதம் இன்னும் சிறப்பானது.
செந்தமிழ்த் தேன்மொழியாளர் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாளர்
எனச் சொல்லி , அவள் தனது கண்களிலே நீலநிறத்தை விளைவித்து அதைக் கடலிலே கரைத்தாளாம். அதனால் தான் கடல் நீலநிறமாயிற்றாம். இப்படிப் புதியதோர் கற்பனையைச் சொல்லுகிறார் கவியரசர்.
கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
இதே போன்று பல கற்பனைகளைக் கவிதையாக்கியவர் கவியரசர். “போலீஸ்காரன் மகள்’ என்ற படத்தில் வரும் ஒரு பாடலில் காதலன் காதலியை வர்ணிக்கத் தொடங்கி முடியாமல் திண்டாடுகின்றான்.
பொண் என்பேண் - சிறு
பூ வெண்பேன் - காணும்
கண் என்பேன் - வேறு
எண் என்பேண்

-235- அகளங்கண் தனது காதலியின் பார்வை மட்டுமே தனக்குப் போதும்; அதற்கு மேல் சொற்கள் தேவையில்லை, என்று காதலன் பாடும் பாடல் ஒன்று “யார் நீ” என்ற படத்தில் இடம் பெற்றது.
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா "எங்கிருந்தோ வந்தாளர்’ என்ற படத்தில் காதலன் காதலியின் மேனி நலத்தை வியந்து பாடுவதாக அமைந்த வரிகள்
மின்னல் பாதி தென்றல் பாதி உண்னை ஈன்றதோ என் வருகின்றது. "நெஞ்சம் மறப்பதில்லை” என்ற படத்தில் கவியரசர் எழுதிய ‘அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை’ என்ற பாடலில் ஒரு கற்பனை, காதலன் பாடுகிறான்.
உந்தன் கண்ணிலும் முகத்திலும் மோதிவரும் இளங் காற்றின் விலையே கோடிபெறும் தாலாட்டு
தொட்டிலிலே கிடக்கும் குழந்தையைத் தாலாட்டுவதாக அமைந்த காட்சி ஒன்றில், பாசமலர் என்ற படத்திற்கு கவியரசர் எழுதிய பாடலின் கற்பனை அற்புதமானது. பலராலும் பலவகையிலும் பாராட்டப்பட்டது. குழந்தையை வர்ணிக்கும் விதம் மிகவும் சிறப்பானது.
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அண்ணமே நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே - வளர் هيه பொதிகை மலைத் தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

Page 133
-236
இலக்கியச்சரபம்
சோகடம்
சோகப் பாடல்களையும் மிகச் சிறப்பாக எழுதியவர். கவியரசர்.
ராமு என்ற படத்தில் இடம்பெற்ற கவியரசரின் பாடல் ஒன்று நிலவே
என்னிடம் நெருங்காதே. ’ எனத் தொடங்குகின்றது. அப்பாடலில் அமைதி இல்லாத நேரத்திலே - அந்த ஆண்டவன் எண்னையே படைத்து விட்டாண்
எனவரும் வரிகள் மிகவும் சிறப்பானவை. அவன் தான் மனிதன் என்ற படத்தில் "ஆட்டு வித்தால் யாரொருவர்” எனத் தொடங்குகின்ற L JITL 656)
எண் நிழலில் கூட அனுபவத்தின்
சோகம் உண்டு.
தனது மனதில் மட்டுமல்ல தனது உடலிலும் சோகம் தோன்றி அது தன் நிழலிலும் பிரதிபலிப்பதாக அவர் பாடிய கற்பனை அற்புதமானது.
புதிய பறவை என்றபடத்தில் "எங்கே நிம்மதி” என்று தொடங்குகின்ற ஒரு பாடலில் தனது சோகத்தையும் துர்அதிஷ்டத்தையும் ஒருவன் சொல்லிப் பாடுவதாக கவியரசர் அமைத்த பாடல் வரிகள் சிறப்பானவை.
எனது கைகள் மீட்டும் போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது
மலரும் சுடுகின்றது
பெரிய இடத்துப்பெண் என்ற படத்தில் “அவனுக்கென்ன தூங்கி விட்டான் எனத் தொடங்கும் சோகப் பாடலொன்றில் கவியரசரின் கற்பனையைப் LITTLIGHTLD.
வானிலுள்ள தேவர்களை
வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான் தத்துவடம்
தத்துவப் பாடல்களை எழுதுவதில் கவியரசர் தனித்துவம் வாய்ந்தவர். அவரது தத்துவப் பாடல் வரிகள் சிலவற்றையும் பார்ப்போம்.

-237- -94356Triassos
ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் இடம் பெற்ற ஆறுமணமே ஆறு’ எனத் தொடங்கும் பாடலில்
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இண்பத்தில் துன்பம் துண்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
என்று தத்துவப் போதனை செய்து கவியரசர் பின்வருமாறு தொடர்கிறார்.
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசரின் “ஆசையே அலை போலே’ என்ற தத்துவப் பாடல் மிகவும் புகழ் பெற்றது. அப்பாடலில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஒடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே
(ஆசையே)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார்
அதிசயம் BESIT GOTTLJITír
நாளை உலகின் பாதையை இன்றே
யார் காணுவார்
கவலை இல்லாத மனிதன் என்ற படத்தில் இடம் பெற்ற கவியரசரின்
பாடலொன்றை அடுத்துப் பார்ப்போம்.

Page 134
இலக்கியச்சரபம்
பிறக்கும் போதும் அழுகின்றான். இறக்கும் போதும் அழுகின்றான். ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
(பிறக்கும்) இரவின் கண்ணிர் பணித்துளி என்பார் முகிலிண் கண்ணிர் மழை எனச் சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் சுமை தாங்கி என்ற படத்திற்குக் கவியரசர் எழுதிய தத்துவப் பாடலொன்று பெரும் புகழ் பெற்றது.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
(மயக்கமா) வாழ்க்கை என்றால் ஆயிரமிருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை
(மயக்கமா) நாளைப் பொழுதை இறைவனுக் களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எனவரும் பகுதியும் மிகவும் சிறப்பானது. அண்னை என்ற படத்தில் அவர் எழுதிய பாடல் ஒன்றின் முற்பகுதியைப் பார்ப்போம்.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

-239
அகளங்கண் இறுதியாக பணிபுண ப என்ற படத்தில் இடம் பெற்ற கவியரசரின் ஒரு பாடலைப் பார்ப்போம்.
உறவு வரும் - ஒருநாள பிரிவு வரும் வரவு வரும் வழியில் செலவு வரும் பகலும் வரும் உடனே இரவு வரும் பழகி வரும் துணையும் விலகி விடும் (உறவு)
ஆசையிலே சிலநாள் - பெரும்
அவதியிலே சிலநாளர் காதலிலே சிலநாள் - மனக் கவலையிலே சிலநாளர் வாழ்வதுவோ சிலநாள் - இதில்
வாடுவதேன் பலநாளர்
(9 p6) சென்றதெல்லாம் வருமோ - அதைச்
சிந்தனைதான் தருமோ வந்ததை யார்தடுத்தார் - இனி
வருவதை யார்மறுப்பார் (உறவு)
இமைகளை மூடிடுவோம் - அதில்
துயர்களை மூடிடுவோம்
மறுபடியும் விழிப்போம் - புது
மனிதரைப் போல் பிறப்போம் (உறவு) இமைகளை மூடி அதில் துயர்களை மூடி நித்திரை செய்து, புதுமனிதரைப் போல விழித்து அடுத்த காரியத்தை ஆற்றுவதே சிறந்தது. என்ற கவியரசரின் கவிதை வரிகளோடு "நெஞ்சுக்கு நிம்மதிஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம்உனக்குள்ளே” என்றதத்துவத்தை உணர்ந்து கொள்வோம் தமிழ்த்திரைஇசைட்பாடல் வரலாற்றில் சாதனை படைத்த கவியரசரின் பாடல் வரிகள் காலத்தால் அழியாதவை. இங்கு நான் எடுத்துக் காட்டியவை
சில இன்னும் இருப்பவை பல. சுவையுங்கள்.
米 米 米 米

Page 135
-240
கவிஞர் வாலியின் கவிவரிகள்
தமிழ்த்திரை இசைப்பாடல்களை அதிகம் எழுதியவராக வாலியையே குறிப்பிடலாம். வாலியின் திரை இசைப்பாடல்கள்” என்ற நூலின் பதிப்புரையில் திரு. எம். நந்தன் அவர்கள் “இந்தியாவிலே திரை இசைக்கு மிகுதியாகப் பாடல்கள் புனைந்தவர் கவிஞர் வாலி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவுக்குப் பின் அவரது இடத்தை நிறைவு செய்ய முயன்றவர் இவர் கருத்துச் செறிவான பல ust 6.3606ird, கவியழகோடு , இலக்கிய நயத்தோடு இவர் தந்திருக்கிறார்.
கவியரசு கண்ணதாசனின் காலத்தில் இவரது திரைப்பாடல்கள் பல கவியரசரின் பாடல்களாகக் கருதப்பட்டதுமுண்டு மருதகாசி , பட்டுக் கோட்டை ஆகிய இருவரினதும் கலவை என கவிஞர் வாலியின் பழைய பாடல்களைக் குறிப்பிடலாம்.
கவிஞர் வைரமுத்துவின் வேகமான வளர்ச்சியின் பின் கவிஞர் வாலியின் பாடல்களில் வைரமுத்துவின் சாயலும் படியத் தொடங்கியது.
எனவே கவிஞர் வாலியின் பாடல்களில் பட்டுக்கோட்டை , மருதகாசி, கவியரசு கண்ணதாசன் , கவிஞர் வைரமுத்து ஆகியோரின் சாயல்கள் படிந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
படகோட்டி என்ற படத்தில் இடம் பெற்ற கவிஞர் வாலியின் பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப்
போனவன் போனாண்டி
எனத் தொடங்கும் பாடலில் காதலனைப் பிரிந்த காதலியின் ஏக்கம் துல்லியமாக வெளிப்படுவதைக் காணலாம். இப்பாடலில்
நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துப்
போனவன் போனாண்டி - அவன்
நீரை எடுத்து நெருப்பை அணைக்க
வந்தாலும் வருவாண்டி
எனவரும் பகுதி காதலியின் பிரிவுத்துயரின் உணர்வு வெளிப்பாடாக
அருமையாக அமைந்துள்ளது. t
இதே போல இதே படத்தில் வரும் “தொட்டால் பூ மலரும்
ܟ
என்ற பாடலில் வரும் ஒரு கற்பனை

-241- அகளங்கன் இருவர் ஒன்றானால் ஒருவர் எண்றானால் இளமை முடிவதில்லை என வருகின்றது. தெய்வத்தாய் என்ற படத்தில் வரும் ஒரு பாடலும் சிறந்த கற்பனையாக அமைந்தது.
52(5- பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை - அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளி இல்லை அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை இப்பாடலில் குயில் - ஒசை போலொரு வார்த்தை
குழலோ பாழோ என்றிருந்தேன் 1 கற்பனையும்
566) is
அண்னம் போலவளர் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
என வர்ணிக் கின்ற விதமும் சிறப்பானவை. பேசும் தெய்வம் என்ற படத்தில் கவிஞர் வாலி எழுதிய நாட்டியப் பாடல் ஒன்று மிகவும் சுவையானது.
"ஆழியிலே பிறவாத அலைமகளோ' எனத் தொடங்கும் அப்பாடலில் இயலிசை நாடகம் என்ற முத்தமிழும் தனது காதலியிடம் தான் தோன்றியது என்றும் , அவை தோன்றிய விதம் பற்றியும் , காதலன் பின்வருமாறு வர்ணிப்பதாக வாலி எழுதியிருக்கிறார்.

Page 136
இலக்கியச்சாரம் -242
தத்தி வரும் தளர் நடையில் விளைந்தது தான் தாளமோ தாவி வரும் கையசைவில் பிறந்தது தான் பாவமோ தெய்வமகள் வாய்மலர்ந்து மொழிந்தது தான் ராகமோ இத்தனையும் சேர்ந்த்து தான் இயலிசை நாடகமோ
எனக் கற்பனை செய்து வாலி எழுதிய பாடல் மிகவும் சுவையானது. “பூவா தலையா” என்ற படத்திற்கு கவிஞர் வாலி எழுதிய பாடலொன்று ஒரு பெண்ணை அப்படியே தமிழகமாக வர்ணித்து அமைந்திருந்தது. கற்பனை நயம்மிக்க அப்பாடலின் முற்பகுதியை இங்கு பார்ப்போம்.
மதுரையில் பறந்த மீண் கொடியை - உன் கண்களில் கண்டேனே! - GLIIIf() புதுமைகளிர் புரிந்த சேரண் வில்லைப் புருவத்தில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை - உன் பெண்மையில் கண்டேனே - இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உண்னைத் தமிழகம் என்றேனே.
சங்க இலக்கியக் கற்பனை போல அகத்திணை மரபிற்குள், தலைவனை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த தலைவி பாடுவது போல, உயர்ந்தமனிதன் படத்திற்கு கவிஞர் வாலி எழுதிய பாடலொன்று மிகவும் சிறந்தது.
பால் போலவே -
வான் மீதிலே - LITsi காணவோ -
நீ காய்கிறாய். நாளை இந்த வேளை பார்த்து
ஒடி வா நிலா

-243இன்று எந்தண் தலைவன் இல்லை
சென்று வா நிலா தென்றலே எந்தண் தனிமை கண்டு
நின்று போய்விடு தெய்வத்தாய் என்ற படத்தில் இடம் பெற்ற கவிஞர் வாலியின்
அகளங்கண்
கற்பனையை அடுத்துப் பார்ப்போம். “பெண் போனால்” என்று தொடங்கும் பாடலில் ஒருபகுதி
ஆண்
பாதி நிலாவை விண்ணில் வைத்து மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை உனது கண்ணில் வைத்தானோ எனவருகின்றது. பணம் படைத்தவன் என்ற படத்தில் கவிஞர் வாலியின்
கற்பனை நயம்மிக்க வர்ணனையாக அமைந்த பாடல் ஒன்றை அடுத்துப்
பார்ப்போம்.
ஆண்
பவளக் கொடியிலே - முத்துக்கள் பூத்தால் - புன்னகை என்றே பேராகும் கண்ணி ஓவியம் - உயிர் கொண்டு வந்தால் பெண்மயில் என்றே பேராகும் (பவள)
பூமகளிர் மெல்ல வாய் மொழி சொல்ல சொல்லிய வார்த்தை பண்ணாகும்
காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும் பால்க்குடம் என்ற படத்தில் இடம் பெற்ற கவிஞர் வாலியின்
பாடலைக் கற்பனை நயத்திற்காகப் பார்ப்போம்.
ஆண்
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக செண்பகத்தை வாங்கி வந்தேன் உன் முகத்தின் நினைவாக உனக்காக அன்பே
நான் உனக்காக

Page 137
இலக்கியச்சரம் -244
இக்கற்பனை இரசிக்கத்தக்கதாக எளிமையாக அமைந்திருப்பதால் நான் விளக்கவிரும்பவில்லை.
காதலியின் அழகை காதலன் வர்ணிப்பதாக அமைந்த காவல்காரன் படப்பாடலொன்றின் கற்பனையை அடுத்துப் பார்ப்போம்.
“நினைத்தேன் வந்தாய் நூறு வயது” எனத் தொடங்குகின்றது
9|ČILITL60.
நூறு நிலாவை ஒரு நிலவாக்கிப்
பாவை என்று -
ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப்
பார்வை என்று - கண்
மீனாக LD6T's நின்றாடவோ - சொல்
தேனாகப் பாலாகப் பண்பாடவோ
காதற்பாடல்களில் பெண்ணை வர்ணிப்பதற்குத் தன் கற்பனையைப் பயன்படுத்தியது மட்டுமன்றிக் குழந்தையை வர்ணிப்பதற்கும் தன் கற்பனையைப் பயன்படுத்தி இருக்கிறார் கவிஞர்.
கண்ணன் எண் காதலன் ប្រែ படத்தில் இடம் பெற்ற 'மின்மினியைக் கண்மணியாய்க் கொண்டவனை’ என்ற பாடலில் குழைந்தையின் சிறப்பை பின்வருமாறு சொல்கிறார் கவிஞர்.
மணிப்பயல் சிரிப்பினில் -
மயக்கிடும் கலை படைத்தான்
பசிக்குரல் கொடுக்கையில்
புதுப்புது இசையமைத்தான்
நகைச் சுவையைப்பாடலுக்குள் புகுத்துவதிலும் கவிஞர் வல்லவர். படகோட்டி என்ற படத்தில் இடம் பெற்ற கவிஞரின் பாடல் ஒன்று 'கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு' எனத் தொடங்குகின்றது அப்பாடலில்,
பொண்டாட்டி புருசன்
ரெண்டாக இருந்தா
மூணாகச் செய்யும் வளையல்
இரண்டாக இருத்தல் என்பது பிரிந்திருத்தல் மூணாகச் செய்தல், சேர்ந்து பிள்ளையும் பிறக்கச் செய்தல். இதே பாடலின் அடுத்த பகுதி

-245
அகளங்கன் மாமியாரை மாமனாரைச் சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்தவளையல் என நகைச்சுவையோடு வருகின்றது. சோகப் பாடல்களிலும் தன் முத்திரையைப் பதித்தவர் கவிஞர். அவரது
தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணிரில் குளிக்க வைத்தான்
என்ற பாடல் மிகவும் சிறப்பானது. வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை - என்ற பகுதியும்
ஒருநாள் போவார் : ஒருநாளர் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ஒருசாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற பகுதியும் மிகவும் சிறப்பான வகையில் சோகஉணர்வை ஏற்படுத்துகின்றன. சமத்துவக் கருத்தை வெளிப்படுத்திப் பாடல் எழுதுவதில் கவிஞர், பட்டுக்கோட்டையின் பாணியைப் பின்பற்றி இருக்கிறார். -
இதற்குப் படகோட்டி படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று மிகவும் சிறப்பான உதாரணமாகச் சொல்லத்தக்கது.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை ஊருக்காகக் கொடுத்தான் (கொடுத்த)
மண்குடிசை வாசல் என்றால் -
தென்றல் வர வெறுத்திடுமா

Page 138
-246
இலக்கியச்சரம்
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை (கொடுத்த)
இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையெண்பார் மடிநிறையப் பொருளிருக்கும் மனம்நிறைய இருள் இருக்கும் எதுவந்த போதும் பொதுவென்று வைத்து - வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் (கொடுத்த) சமூகத்திற்குப் போதனையாக சில கருத்துக்களை மிக அழகாக கவிஞர் சொல்லியிருக்கிறார். தெய்வத்தாய் என்ற படத்தில் இடம் பெற்ற “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ எனத் தொடங்கும் பாடலில்
பதவி வரும் போது -
பணிவு வரவேண்டும் ;
துணிவும் வரவேண்டும் தோழா பாதை தவறாமல்
பண்பு குறையாமல் -
பழகி வரவேண்டும் தோழா எனக் கவிஞர் வாலி போதனையையும் திரை இசைப்பாடல்கள் மூலம் செய்திருக்கின்றார்.
கவிஞர் வாலியின், சில பாடல்களை மட்டுமே இங்கு எடுத்துக் காட்டியுள்ளேன். இன்னும் ஏராளமான பாடல்களில் கற்பனை நயமும் கருத்துச் செறிவும் வர்ணனைகளும் நிரம்பி இருக்கின்றன.

-247வைரமுத்துவினர் வைர வரிகள் தமிழ்த் திரை இசைக் கவிஞர்களில் கண்ணதாசனுக்குப் பின் கவியரசர் என்று அழைக்கப்படுபவர் வைரமுத்து.
அகில இந்தியரீதியில் சிறந்த திரை இசைப்பாடலாசிரியர் என்ற விருதை மூன்று தடவைகள் பெற்ற ஒரே தமிழ்க் கவிஞர் இவரே
திரைஇசைப்பாடல்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அண்மையில் இவர் ஒரு விழாவில் பேசியிருந்தார்.
எமது நாட்டில் பேராதனைப் பல்கலைக்கழக வெளி நிலைப் பொதுக் கலைத் தேர்வுக்கு (B.A.External) கவியரசு கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை திரைப்படப்பாடலான
மழை கூட ஒருநாளில் தேனாகலாம் மணல் கூட சிலநாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவையாவும் நீயாகுமா அம்மா எண் றழைக்கின்ற சேயாகுமா. என்ற தாலாட்டுப் பாடல் திறனாய்வுக்காக , 1996 மார்கழி தமிழ் வினாத்தாளில் கொடுக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி “பின்வருவோருள் ஒருவருடைய இலக்கியப் பங்களிப்பை மதிப்பிடுக” என்ற வினாவொன்றில் கண்ணதாசனின் பெயரும் 1995 ஓகஸ்ட்டில் நடைபெற்ற பொதுக் கலைத்தேர்வு (B.A. External) வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வினாவுக்கு கண்ணதாசனின் திரைஇசைப்பாடல்களிலிருந்தே பல மாணவர்களும் விடையெழுதியிருப்பார்கள் என்பது தெளிவு.
எனவே, திரை இசைப்பாடல்களைப் பாடத்திட்டத்தில் புகுத்தும் முயற்சி இலங்கையில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.
எதிர் காலத்தில் நல்ல திரைப்பாடல்கள், ஏனைய வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் புகுத்தப்படலாம். புகுத்தப்படல் வேண்டும்.
இந்த வகையிலே , கவியரசு வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பற்றியும் இங்கே நோக்குவது பொருத்தமானதே.
வைரமுத்துவின் திரைப்பாடல்களில் பெரும்பாலானவை புதுக்கவிதைப் போக்குடையவை. நல்ல கற்பனைகளைக் கொண்டவை. ரசிக்கத் தக்கவகையில் எழுதப்பட்டவை.

Page 139
இலக்கியச்சரம் -248
வைரமுத்துவின் பாடல் ஒன்றின் முதற்பகுதியை அவரது விளக்கவுரையோடு அப்படியே தருகிறேன்.
ஓர் இளைஞன் இயற்கை நேசன் கலைகளின் காதலன் கனாக்களின் புத்திரன், சமூகப் பிரக்ஞையும் சற்றே உடையவன். அவன் மாலைப் பொழுதில் மயங்குகிறான்.அந்தி வானத்தை ஆராதிக்கிறான். அந்த அழகில் ஆனந்திக்கிறான்.
பொண் மாலைப் பொழுது - இது ஒரு
பொண் மாலைப் பொழுது
வானமகளிர் நாணுகிறாளர்
வேறு உடை பூணுகிறாளர் -
இது நிழல்கள் படத்தில் இடம் பெற்றது. இதுவே இவரது முதல்த்
திரைப்படப் பாடல்.
காதல் பற்றி கவிஞர் வைரமுத்து , அலைகள் ஒய்வதில்லை என்ற படத்திற்கு எழுதிய பாடல் ஒன்றில்
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
என அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார். மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு பெண்ணை, ஒருவன் காதலிக்கிறான். அவளது உள்ளமும் நெகிழ்ந்து விடுகின்றது. அவனுக்குத் தன் நிலையை அவள் வெளிப்படுத்துவதாக அமைந்த ஒரு பாடல் பாலைவனச் சோலை என்ற படத்தில் இடம் பெற்றது.
மேகமே மேகமே
பால்நிலா தேயுதே
தேகமே தேயினும்
தேனொளி வீசுதே
தந்தியில்லா வீணை
சுரம் தருமோ
புயல் வரும் வேளையில்
பூவுக்குச் சுயம்வரமோ
நிலவைப்பற்றியும் வானத்தைப் பற்றியும் வைரமுத்துவின் கற்பனை எங்கெங்கெல்லாம் செல்கின்றன என்பதைப் பாருங்கள்.

-249- அகளங்கன் இளைய நிலா பொழிகிறதே - இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே - வானமே
வரும் வழியில் பணி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகில் எடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது - மழையோ
இப்பாடல் பயணங்கள் முடிவதில்லை என்றபடத்தில் இடம் பெற்றது. காதல் ஒவியம் என்ற படத்தில் இடம் பெற்ற இவரது பாடலொன்று பாத்திரத்தின் உள்ளத்து உணர்வை மட்டுமன்றி இவரது உள்ளத்து உணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. “பூவில் வணிடு கூடும்.” எனத்தொடங்கும் அப்பாடலின் ஒரு பகுதி இது.
வானம் என் விதானம் - இந்த
பூமி சந்நிதானம்
பாதம் மீது மோதும் - ஆறு
பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் - எந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - எந்தன்
ராகம் சென்று ஆளும்,
இயற்கைக் காட்சிகளை இக் கவிஞர் வர்ணிக்கும் விதம் மிகவும் சிறப்பானது. ஒரு காலைக் காட்சியை உயர்ந்தஉள்ளம் என்ற படத்தில் பின்வருமாறு வர்ணித்திருக்கிறார் கவிஞர்.

Page 140
இலக்கியச்சரம் -250
காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும் மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும் தினந்தோறும் புதுக்கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே - பனித் துளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே, கவிஞர் வைரமுத்துவின் நகைச் சுவைப் பாடலொன்று மிகவும் பிரபலம் பெற்றது. சுவையானது. பாலைவனச் சோலை என்ற படத்தில் இடம் பெற்ற “பெளர்ணமி நேரம் பாவை ஒருத்தி .' எனத் தொடங்கும் பாடலில்
பையில் உள்ள எட்டனாவை பத்துமுறை எண்ணுவான் சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா தேன்நிலவு போனாலும் தனியாய்த்தானே போவானே உப்பு இல்லை என்றாலும் கண்ணிர் விட்டுக் கொள்வானே
வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன் ஆமையிடம் தோற்றவன் எங்கள் வறிரோ

-25- அகளங்கள்ை ராமண் வேடம் போட்டாலும் ரெண்டு சீதை கேட்பானே ரெண்டு சீதை வந்தாலும் சூர்ப்பனகை பார்ப்பானே என கவிஞர் சொல்லும் அழகு நன்றாகவே இருக்கின்றது. கவிஞர் தனது புலமையையும் தமிழின் சிறப்பையும் இணைத்து பஞ்சமி என்ற படத்தில் ஒரு பாடலில் எழுதியிருக்கிறார்.
உதய காலமே நனைந்த மேகமே மொழியின் கதவு திறந்தது விழியில் விடியல் புலர்ந்தது அமுதம் பொழிந்து விளைந்த தமிழில் புலமை பிறந்தது காதல் சம்பந்தப்பட்ட கற்பனைகள் பல கவிஞரால் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
பணிவிழும் மலர்வனம் - உன் பார்வை ஒரு வரம் இனிவரும் முனிவரும் - தடு மாறும் கனிமரம் இது நினைவெல்லாம் நித்யா படப் பாடல். "வெட்டிவேரு வாசம்.” எனத் தொடங்கும் பாடலொன்று முதல் மரியாதை என்ற படத்தில் இடம் பெற்றது. இப்பாடலில் வைரமுத்துவின் கற்பனையை அடுத்துப் பார்ப்போம்.
ஆண்- கையக் கட்டி நிக்கச் சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது பெண்- காதல் மட்டும் கூடாதுன்னா
பூமியிங்கு சுத்தாது நட்பு என்ற படத்தில் இடம் பெற்ற வைரமுத்துவின் பாடலொன்றின் தொடக்கம் பின்வருமாறு அமைந்தது.
ஆச வச்சேண் ஒம்மேல - மச்சாண் அரளி வச்சேனர் கொல்லையில ஆதரிச்சா நல்லதையா - இல்ல அரளி வெத உள்ளதையா

Page 141
இலக்கியச்சரம் -252
இசைபாடும் தென்றல் என்ற படத்தில் இடம் பெற்ற கவிஞர் வைரமுத்துவின் காதல்ப்பாடலொன்று “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது' எனத் தொடங்குகின்றது. அப்பாடலில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
ஆண்- எந்தண் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தண் காதலி தந்தது கைக்குட்டையில் வேர்வையைத் துடைத்ததில்லை அதற்கு வலித்திடும் என்று நாண் மடித்ததில்லை மிகவும் நுட்பமாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவிஞர் வைரமுத்து வல்லவர். கவிஞர் வைரமுத்துவின் தாய்மை பற்றிய பாடலொன்று மிகவும் சிறந்தது. அம்மா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் சிலபகுதிகளைப் பார்ப்போம்.
அம்மாவே தெய்வம் ஆகாய தீபம் தாய் சிந்தும் கண்ணிர் நெஞ்சைச் சுடும்
தாய்மையின் தவிப்பால் குழந்தையை எடுப்பாளர் பூக்களினால் முகம் துடைப்பாளர் சேலையின் தலைப்பால் காற்றினைத் தடுப்பாளர் காயம்படும் என நினைப்பாளர்
துரும்பு விழுந்தால் முகஞ்சிவப்பாளர்
தாய்விழி அழுதால் சூரியண் அழுமே
பாறைகளும் கசிந்திடுமே
அந்த ஆகாயம் சிறிதே
அவள் தியாகங்கள் பெரிதே
முதல் மரியாதை என்ற ப்டத்திற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பூங்காத்துதிரும்புமா என்ற பாடல் சிறந்த சோகப்பாடல்ாகச் சொல்லத் தக்கது.
ஆண் பூங்காத்து திரும்புமா?
ஏம்பாட்ட விரும்புமா?

-25 3 அகளங்கண் பாராட்ட மடியில் வச்சுத் தாலாட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா?
பெண் - ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா? ஏங்காதே, அத ஒலகம் தாங்காதே அடுக்குமா - சூரியன் கறுக்குமா ஆண்- என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்தை வாங்கினேன் தூக்கத்த வாங்கல மூக விழிப்புணர்ச்சிப் பாடல்களையும் திரைப் படங்களுக்குக் க. ஆர் வைரமுத்து எழுதியுள்ளார். அவரது அத்தகைய பாடலொன்று பாடும் வானம் பாடி என்ற படத்தில் இடம் பெற்றது.
வாழும் வரை போராடு வழிஉண்டு என்றே பாடு
அடமாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டையைப் போட்டிருக்கு அட சேரிக்குள்ள
சின்னப்புள்ள
அம்மணமாயிருக்கு ஒரு காலம் உருவாகும்
நிலைமாறும் உண்மையே
கவியரசு வைரமுத்துவின் திரை இசைப் பாடல்களின் (தொகுதி 1. தொகுதி 2 ) தொகுப்பு நூல்களிலிருந்து சிலவற்றை மட்டுமே இங்கு எடுத்துக் காட்டியுள்ளேன். 1992 இற்கு முன் அவர் எழுதிய பாடல்களே gങ്ങഖ.
இப்பொழுது இன்னும் சிறப்பாக எழுதுகிறார். கற்பனைகளை ரசிக்கத்
தெரிந்தவர்களும் , ரசிக்க முடிந்தவர்களும் ரசித்து மகிழுங்கள்.
米 米 冰 米

Page 142
-254பல்துறை ஆற்றல் மிகுந்தவர் தமிழறிஞர் அகளங்கன் ஓ.கே. குணநாதன்
இப்படி ஒரு அற்புதமான நூலை - தமிழ்மணி அகளங்கன் அவர்கள் ஆக்குவதற்கு நானும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது என்நெஞ்சம் பூரித்து விம்முகின்றது.
நான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரியாகக் கடமையாற்றிய காலத்திலே இவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
எனது இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் ஆலோசனைகள் வழங்கி, உந்து சக்தியாக இவர் திகழ்ந்துள்ளார். இவரோடும் சர்வதேச பத்திரிகையாளர் திரு.பி. மாணிக்கவாசகம் அவர்களோடும் இணைந்து வவுனியாவில்
கலை இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட்ட காலம் கணி களில்
நிறைந்திருக்கின்றது.
குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலரான மருதநிலாவை உருவாக்கியதும், அகில இலங்கை ரீதியில் சிறுகதை , கவிதைப் போட்டிகளை நடாத்தியதும்,வவுனியாபிரதேச இலக்கிய விழா மலரான “கலைமருதம்” மலரை வெளியிட்டதும் மறக்க முடியாதவை. மாவட்ட ,பிரதேச இலக்கிய விழாக்கள் , இலக்கியக் கருத்தரங்குகள் கலை நிகழ்வுகள், போட்டிகள் என பலவற்றிலும் நான் அகளங்கன் அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கின்றேன்.
நான் எனது “வவுனியாவும் இலக்கிய வளர்ச்சியும்” என்ற ஆய்வு நூலை வெளியிடுவதில் அகளங்கன் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அந்நூலில் அவரை , நான் தமிழ்ப் பேரறிஞர் என்று குறிப்பிட்டதற்காக, என்மேல் அவர் பெருங்கோபங் கொண்டார். இப்பொழுது அவரது இவ் இலக்கியச் சரம் நூலின் மூலம் பலரும் அவரை அப்பெயர் கொண்டழைக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் பல வடிவங்களையும் சிறப்போடு கையாளும் திறமை மிகுந்தவர் இவர் சிறுகதை , நாடகம் , கட்டுரை , ஆய்வு கவிதை , போன்ற துறைகளில் மட்டுமன்றி, பேச்சிலும் ஆற்றல் படைத்தவர்.

-255
பழந்தமிழ் இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சைவமும் தமிழும் அவரின் இருகண்கள்.
இன்றிருக்கும் தமிழாற்றல் மிக்க அறிஞர்களில் தனித்துவம் மிக்கவர் இவர் என்றால் அது மிகையாகாது.
இவரைப் பற்றி நான் அதிகம் கூறாமல் , இவர் தயாரித்த
மலர்களையும், வகித்த, வகிக்கும் பதவிகளையும், இவர் பெற்ற பரிசுகளையும் பெற்ற பட்டங்களையும் , இவருக்குக் கிடைத்த பாராட்டுக்கள் சிலவற்றையும் கீழே தருகிறேன்.
தயாரித்த மலர்கள்:- 米 பண்டாரவன்னியன் விழா மலர (1982) வவுனியாவில் நடைபெற்ற
பண்டார வன்னியன் விழாவின் போது வெளியிடப்பட்டது. தவத்திரு ஆறுமுகநாவலர் சைவ வினாவிடை தொகுப்பு (வ/ சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 1997) சுத்தானந்தம் (வ/ சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் புதிய மண்டபத்திறப்பு விழா மலர் 1998)
வவுனியா கந்தசுவாமி கோவில் மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் (1999) -- வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தசாப்த சிறப்புமலர் (1999)
米
வகித்த,வகிக்கும், இலக்கிய / சமயத்துறை சார்ந்த பதவிகள் 米 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் மன்றத் தலைவர் (1977) 米 வவுனியா இலக்கிய வட்டத் தலைவர் (1979.) 米 வவுனியா பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவர் (1995.)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க குழு உறுப்பினர் (1991 - 1999)
வடக்கு கிழக்கு மாகாண கலாசாரக் குழு உறுப்பினர்
米

Page 143
-256வடக்கு கிழக்கு மாகாண சாகித்தியக் குழு உறுப்பினர் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தற்போதைய போசகர்
நூல்களுக்கான பரிசுகள்
"வாலி” ஆய்வு நூல் , 1987 இல் வெளிவந்த சிறந்த இலக்கிய நூலுக்கான பாராட்டை , அகில இலங்கை இலக்கியப் பேரவை , யாழ் இலக்கிய வட்டம் , ஆகியவற்றிடம் பெற்றது. "அன்றில் பறவைகள்’ நாடக நுல் , 1992 இல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. “இலக்கிய நாடகங்கள்” நூல் , 1994 இல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான , வடக்குக் கிழக்கு மாகாண இலக்கியப் பரிசைப் பெற்றது. (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு ) “இலக்கிய நாடகங்கள்’ நூல் 1994இல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசையும் பெற்றது. "அகளங்கன் கவிதைகள்’ என்னும் கவிதை நூல் , 1996 இல் வெளிவந்த சிறந்த கவிதை நூலுக்கான வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசைப் பெற்றது.
(வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு)
சர்வதேச ரீதியான பரிசுகள் அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச்சங்கம் சர்வதேசரீதியாக 1996 இல் நடாத்திய கவிதைப் போட்டியில் “சிந்தனை செய் தமிழா” என்ற கவிதை 2ம் பரிசைப் பெற்றது. 1998இல் பிரான்ஸ் தமிழ் ஒலி நிறுவனம் தினக்குரலுடன் இணைந்து தேசிய ரீதியில் நடாத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த வானொலி நாடகப் போட்டியில் , "சிலம்பு பிறந்தது”
என்னும் நாடகம் 2ம் பரிசைப் பெற்றது.

257
ஏனையபரிசுகள்
来
1985இல் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் ஈழ முரசு பத்திரிகையினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் பொன்விழர் போட்டியில் “மீண்டும் ஒரு குருசேத்திரம்” என்ற சிறுகதை 2ம் பரிசைப் பெற்றது. 1991 இல் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு , கல்வியமைச்சு, ஆசிரியர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்திய நாடகப் பிரதியாக்கப் போட்டியில், “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” என்ற நாடகம் 1ம் பரிசைப் பெற்றது. இது MELTING CAMPHORS என்ற பெயரில் திரு.க. பூபால சிங்கம் அவர்களால்ஆங்கிலத்தில்மொழி பெயர்க்கப்பட்டு மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1994 இல் கலாசார அமைச்சு நடாத்திய அகில இலங்கை ரீதியிலான சிறுகதைப் போட்டியில் “யாழ்தேவி” என்னும் சிறுகதை 2ம் பரிசைப் பெற்றது. 1995 இல் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம் நடாத்திய அமரர் ரி.பாக்கிய நாயகம் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியில “தமிழிலக்கியத்தில் நகைச்சுவை” எனும் கட்டுரை 1ம் பரிசைப் பெற்றது. 1996 இல் மாத்தறை மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு நடாத்திய கவிதைப் போட்டியில் “ஒற்றுமைப் பாட்டு” என்ற கவிதை சிறப்புப் பரிசைப் பெற்றது. 1996 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கட்டுரைப் போட்டியில் “மகாகவி பாரதியார் காட்டும் வாழ்வியல் முறை” என்னும் கட்டுரை 1ம் பரிசைப் பெற்றது. - 1996 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அகிலஇலங்கை ரீதியில்நடாத்தப்பட்ட நாவற்குழியூர் நடராஜன் நினைவுக்கவிதைப் போட்டியில் “சமாதானமீ துளிர்க்க வேண்டும்” என்ற கவிதை 2ம் பரிசைப் பெற்றது.

Page 144
-2581998 இல் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி அகில இலங்கைரீதியில் ஆசிரியர்களிடையே நடாத்தப்பட்ட சிறுகதைப் ,
"துருவ நட்சத்திரம்” என்னும் சிறுகதை திறமைச் சான்றிதழைப் பெற்றது. 1997 இல்மேற்கூறப்பட்டபோட்டியில் “மனித தெய்வங்கள்”
போட்டியில்
என்ற சிறுகதை பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது.
பட்டங்கள்
米
வவுனியா இந்து மாமன்றம் 1990இல் “காவிய மாமணி” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. இந்து கலாசார இராஜாங்க அமைச்சு 1993 இல் “தமிழ்மணி” என்னும் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. யாழ்ப்பாணம் திருநெறிய தமிழிசைச் சங்கம் 1995 இல் “திருநெறிய தமிழ் வேந்தர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. ஞானப் பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் (குரு மகாசந்நிதானம்)
மெய்கண்டார் ஆதீனம் (இலங்கை) 1997 இல் “கவிமாமணி”
என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. வவுனியா நகராண்மைக் கழகத்தினால் 1998 இல் மக்கள் சேவையில் நான்கு ஆண்டுகள் நிறைவு விழா வைபவத்தின் போது , “பல்கலை எழில்” என்னும் பட்டம் வழங்கப் பெற்றது. வவுனியா மாவட்டத்தின் முதன்மைத் தமிழ் அறிஞராக , கொழும்புத் தமிழ்ச்சங்கம் 1998 இல் தெரிவு செய்துள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கக் கலாசார மண்டபத் திறப்பு விழாவில், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் 1999 இல் “புராணபடன புகழ்தகை” என்னும் பட்டம் வழங்கப்பெற்றது.
அகில இலங்கை கச்சியப்பர் கழகம் 1999 இல் “புராணபடன
வித்தகர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.

-259
கெளரவங்கள்
வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு தனது முதலாவது சாகித்திய விழாவில்( 1991 திருகோணமலை) கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் , வவுனியா இந்து மாமன்றம் , வவுனியா நகரசபை , வைரவர்புளியங்குளம் கிராமோதய சபை , வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் , பிறந்த ஊரான பம்பைமடு கிராமம் , வவுனியாவில் உள்ள பல ஆலயங்கள் ஆகியன ப்ல தடவைகள் பொன்னாடை போர்த்தியும்,
பொற்கிழி வழங்கியும் பாராட்டியமை மனங் கொள்ளத்தக்கது.
ஓ.கே.குணநாதன்

Page 145
*:
 


Page 146


Page 147

தாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தமிழ் இலக்கிய கில் பலதுறைகளிலும்
பதித்து வெற்றி டவர்கள் மிகச்சிலரே. களுள் காவியமாமணி அகளங்கன் கள் சிறப்பு மிக்க ஒரு ந்தை வகிப்பவர்.கவிஞராகத்
உலகுக்குத் தன்னை முகம் செய்து கொண்ட , தமிழ் இலக்கியத்தின் வாரு துறையிலும் தன்
காட்டி அதிக களையும்ஆக்கியளித்துப்
கொண்டவர்.
ாங்க தனி நிறுவனங்கள் பற்றிலும் பரிசில்களும் பங்களும் பாராட்டுக்களும் D இலக்கியஉலகில் தன் நிதை நிலைபெறச் செய்த மணி அகளங்கன் அவர்கள் து தன் தாய் மொழிக்காய் ழப்பதன் மூலம் பிறந்த