கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கங்கையின் மைந்தன்

Page 1


Page 2

கங்கையின் மைந்தன்

Page 3
அகளங்கனின் நூல்கள்
1) 2) 3) 4)
5) 6) 7)
8) 9) 10) 11) 12) 13)
14) 15) 16)
17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31) 32) 33)
34)
35)
“செல்” “வா’ என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதை) "சேரர் வழியில் வீரர் காவியம்” (குறுங்காவியம்) "சமவெளி மலைகள்" (அகளங்கன், சு. முரளிதரன் கவிதைகள்) "வாலி” (ஆய்வுநூல் - மூன்று பதிப்புகள்) (அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு 1987) "இலக்கியத் தேறல்" (கட்டுரைகள்)
"நளவெண்பா' (கதை)
"அன்றில் பறவைகள்” (நாடகங்கள்) (தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992) "முத்தமிழ் வித்தகள் சுவாமி விபுலானந்தர்" (வரலாறு) "இலக்கியச் சிமிழ்’ (கட்டுரைகள் - இருபதிப்புகள்) "தென்றலும் தெம்மாங்கும்’ (கவிதைகள்) "பன்னிரு திருமுறை அறிமுகம்' (சமயம்) "மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” (ஆய்வு) "இலக்கிய நாடகங்கள்" (நாடகங்கள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு - 1994, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு 1994) "ஆத்திசூடி" (விளக்கவுரை) "கொன்றை வேந்தன்' (விளக்கவுரை) “அகளங்கன் கவிதைகள்’ (கவிதைகள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 1996) வாக்குண்டாம் - விளக்கவுரை (மூதுரை) "சிவபுராணம்” (பொருளுரை) "செந்தமிழும் நாப்பழக்கம்” (பேச்சுக்கள்) "நாமறிந்த நாவலர்' (சிறுகுறிப்புகள்) "நல்வழி” (பொழிப்புரை - விளக்கவுரை) "இசைப்பாமாலை” (இசைப்பாடல்கள்) “கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு' "இலக்கியச் சரம் (கட்டுரைகள்) “வெற்றி வேற்கை” - உரை (நறுந்தொகை) "கூவாத குயில்கள்” (நாடகங்கள்) "திருவெம்பாவை’ உரை - (சமயம்) “பாரதப் போரில் மீறல்கள்’ (கட்டுரை) "சுட்டிக் குருவிகள்” (மழலைப் பாடல்கள்) "சின்னச் சிட்டுக்கள்” (சிறுவர் பாடல்கள்) "நறுந்தமிழ்’ (கட்டுரைகள்)
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் (ஆய்வு) பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகங்கள்) (வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008) வேரும் விழுதும் - (கட்டுரைகள்) (வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008) கங்கையின் மைந்தன் (நாடகங்கள்)

கங்கையின் மைந்தன்
(TLតសិកទាំ)
- அகளங்கன் -
ଗରାଗୀild(B – 55
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
WRITERS MOTIVATION CENTRE இல. 64 கதிர்காமர் வீதி அமிர்தகழி மட்டக்களப்பு T. P. : 065-2226658, 0.77-6041503 e-mail: okkunaasayahoo.com
ar

Page 4
கங்கையின் மைந்தன்
A
நாடகங்கள்
A
எழுதியவர் அகளங்கன் (நா.தர்மராஜா) பதிப்புரிமை திருமதி. யூதர்மராஜா B.A. (Hons) வெளியீடு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
(பிரியா பிரசுரம் 55 )
முதற் பதிப்பு : 2OO9 அட்டை வடிவமைப்பு ஜி. டீ. நிரங்க கணணி வgவமைப்பு ஜெலீலா காதர் முகையதினி அச்சுப்பதிப்பு ஏஐே. ପୌରାଠ : бѣшт 25O/-
KANKAYIN MAINTHAN
DRAMAS
A Author · Agalangan (N.Thamaraja) Copyrights : Mrs. P.Tharmarajah B.A(Hons.)
Publication : Writers Motivation Centre
(Priya Pirasuram )
First Edition 2009 Cover Design ! G. D. Niranga
Type Setting : Jeleela Cader MOhideen
Printers A.J.
Price RS. 250/-
ISBN : 978 - 955 - 8715 - 10 - 7

பொருளடக்கம்
(padrgia DIT
பதிப்புரை
6(86FTes66OTf
கங்கையின் மைந்தன்
6. Teól
திருவாதவூரர்
அனார்க்கலி
கவரி வீசிய காவலன்
28
Ծ|
7
O
5

Page 5
முன்னுரை
அகளங்கன்
இது எனது நான்காவது நாடக நூல். நான் எழுதிய அன்றில் பறவைகள், இலக்கிய நாடகங்கள், கூவாத குயில்கள் ஆகிய நாடகங்கள் ஏற்கனவே வெளிவந்து, பலரது பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றுத் தந்து, பலரது பயன்பாட்டுக்கும் உரியனவாக விளங்குகின்றன.
கடந்த ஆண்டில் எனது பத்தினித் தெய்வம் என்ற நாட்டிய நாடக நூல், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல கள் விளையாட்டுத் துறை அமைச் சினி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறந்த நாடக நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இந்நாடக நூலையும் அச்சேற்றத் துணிந்தேன்.
அன்றில் பறவைகள், கூவாத குயில்கள் ஆகிய நாடக நூல்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பான சமூக நாடகங்களின் தொகுப்பு நூல்களாக வெளிவந்தன.
இலக்கிய நாடகங்கள் நூலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களைக் கொண்ட நூலே.
இந்நூலில் உள்ள ஆறு நாடகங்களில் கங்கையின் மைந்தன், வாலி ஆகியவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் ஒலிபரப்பான நாடகங்கள்.
6

கங்கையின் மைந்தன் அகளங்கன்
கங்கையின் மைந்தனி நாடகத்தைத் தயாரித்தவர் எஸ்.எழில்வேந்தன், அவரோடு எஸ்.செல்வசேகரன், கே.சந்திரசேகரன், எஸ்.சிவசண்முகநாதன், ஆர்.யோகராஜன், எஸ்.கணேஸ்வரன், இந்திராணி ஜோர்ஜ் பெர்ணான்டோ, அம்பிகா சண்முகம் ஆகியோர் இந்நாடகத்தில் நடித்தனர். அவர்களுக்கு என் நன்றிகள்.
வாலி நாடகத்தை ஆர்.யோகராஜன் தயாரித்தார். அவரோடு ஆர். விக்ரர், ஏ.எம்.யேசுரட்ணம், எஸ். செல்வசேகரன், ஜெ. கிருஷ்ணா, செல்வம் பெர்னாண்டோ ஆகியோர் நடித்தனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.
கங்கையின் மைந்தன் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் பீஷ்மரின் தியாகம் பற்றியது. வாலி மற்றொரு இதிகாசமான இராமாயணத்தில் வரும் வாலி பற்றியது. திருவாதவூரர், சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் வாழ்வின் முற்பகுதி, அனார்க்கலி, இஸ்லாமியக் காதல் கதை, கவரி வீசிய காவலன், புறநானூற்றுச்செய்தி, அசோகவனம் இராமாயணத்தில் வரும் ஒரு காட்சி.
இந்நாடகங்களில் அனார்க்கலி நாடகத்தில் மட்டும் எனது கற்பனை கலக்கப்பட்டுள்ளது. பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆலோசனை பெறப்பட்டு கலக்கப்பட்டுள்ளது.
அசோகவனம் நாடகம் 2009ம் வருட தமிழ்த்திறன் போட்டிக்காக எழுதப்பட்ட இலக்கிய நாடகம். இந்நாடகம் வலய, மாவட்ட, மாகாண மட்டத் தமிழ்த்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குச் செல்லத் தயாராக இருக்கிறது.
இந்நாடகத்தில் வ/விபுலானந்தாக் கல்லூரி மாணவர்கள் நடித்தனர். அக்கல்லூரி ஆசிரியர் கந்தையா ரீகந்தவேள் தயாரித்து நெறிப்படுத்தினார். த. பிரதாபன், மாணிக்கம்ஜெகன் ஆகியோர் உதவினர். அவர்கள் யாவருக்கும் என் நன்றிகள்.
கவரி வீசிய காவலன், நான் நு/ஹோல்புறுாக் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் அப்பாடசாலை மாணவர்களுக்காக எழுதியது. இதனை சு. முரளிதரன் தயாரித்து நெறிப்படுத்தினார்.
சு.முரளிதரன் அப்போது அப்பாடசாலையில் எனது சக ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்பாடசாலை மாணவர்கள் இதில்
நடித்திருந்தனர். அவர்கள் யாவருக்கும் என் நன்றிகள்.
7

Page 6
கங்கையின் மைந்தன் அகளங்கன்
திரு. சு. முரளிதரன் இன்று மலையகத்தில் சிறந்த கல்விமானாகவும், சிறந்த படைப்பாளியாகவும் திகழ்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய நினைவுகூரலாகும்.
திருவாதவூரர், அனார்க்கலி ஆகியவை மேடை காணாதவை. இனித் தயாரித்து நெறிப்படுத்தி நடிக்கப் போகும் யாவருக்கும் என் நன்றிகள்.
எனது பலநூல்களை தன் நூல்கள் போலவே பொறுப்பெடுத்துச் சிறப்பாக வெளியிட்ட என் நண்பர் ஓ.கே. குணநாதன் அவர்களுக்கும், அவரது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்திற்கும் எத்தகைய வார்த்தைகளால் நான் நன்றி கூறுவது.
எனது நூல் வெளியீடுகளுக்கெல்லாம் ஆதரவு தந்து உற்சாகப்படுத்தும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கும், அதன் தலைவர் மக்கள் சேவை மாமணி, சமாதான நீதிபதி. நா.சேனாதிராசா அவர்களுக்கும், வவுனியா இந்து மாமன்றச் செயலாளர் சிவநெறிப் புரவலர் சி.ஏ. இராமஸ்வாமி ஐயா அவர்களுக்கும், கலாபூஷணம், அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் அவர்களுக்கும் என்றும் என் நன்றிகள் உரியன.
எனது ஆக்கங்கள் யாவும் நூலுருப் பெறவேண்டும் என என்னிலும் அதக ஆர்வம் கொண்டு உதவிவரும் என் தம்பி க.குமாரகுலசிங்கம் அவர்களுக்கும், எனது முதல் வாசகியாகவும் முதல் இரசிகையாகவும், முதல் விமர்சகியாகவும் இருந்து படியெடுத்தும், திருத்தியும் ஒத்துழைப்பு நல்கும் என் இல்லாளின் ஆதரவுக்கும் எப்படி நன்றிகூற.
இந்நாடகங்களை வாசித்தும், மேடையேற்றியும், நடித்தும், மகிழவும் மகிழ்விக்கவும் காத்திருக்கும் என் அன்புக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.
வழமைபோல உங்கள் ஆதரவை நாடி அடுத்த நூலில் சந்திப்பேன்.
நன்றி.
- அகளங்கன் - 90. திருநாவற்குளம் வவுனியா, 27-11-2009

பதிப்புரை
ஓ.கே. குணநாதன் MA, MSC MPhil மேலாளர் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 55வது நூலினூடாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஈழத்து இலக்கியப் பரப்பையும் தாண்டி, சர்வதேச தமிழிலக்கியப்
பரப்பில் நல்ல பல பழந்தமிழ் இலக்கியப் படைப்புக்களால் பேசப்படுபவர் தமிழறிஞர் அகளங்கன்.
ஈழத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அருகி விட்டனர்.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் தமிழறிஞர் அகளங்கன்.
அதற்குச் சிறப்புக் காரணங்களும் உண்டு.
இவர் தமிழிலக்கியக் கட்டுரைகள், தமிழிலக்கிய ஆய்வுகள், கவிதைகள், நாட்டிய நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், சிறுவர் இலக்கியப் படைப்புக்கள். மேடைப்பேச்சுக்கள், தொடர் சொற்பொழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் நின்று பழந்தமிழை ஆள்பவர்.
இதனால் ஏனையோரில் இருந்து வேறுபட்டு நிற்கின்றார்.
9

Page 7
கங்கையின் மைந்தன் அகளங்கள்
அதுமட்டுமல்லாமல் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவர்.
ஏலவே இவரின் தமிழிலக்கிய வன்மையை அறிந்து எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 8 நூல்களை வெளியிட்டது.
அதில் எம்மால் வெளியிடப்பட்ட வாலி, பாரதப் போரில் மீறல்கள், நறுந்தமிழ், பாரதியாரும் பாஞ்சாலி சபதமும், வேரும் விழுதும் ஆகிய பழந்தமிழ் இலக்கிய நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அகளங்கனின் இலக்கியக் கட்டுரைகளுக்கு வாசகர்களிடையே இருக்கின்ற வரவேற்பை உணர்ந்தும், இன்றைய தேவை கருதியும் அகளங்கன் எழுதிய "கங்கையின் மைந்தன்' என்னும் இந்நூலை வெளியிடுகின்றோம்.
"கங்கையின் மைந்தன் 6 நாடகங்களின் தொகுப்பு நூலாகும். இதில் அசோகவனம், கங்கையின் மைந்தன், வாலி, திருவாதவூரர், அனார்க்கலி, கவரி வீசிய காவலன் ஆகிய நாடகங்கள் இடம்பெறுகின்றன.
இவற்றில் கங்கையின் மைந்தன் வாலி ஆகிய நாடகங்கள் வானொலி நாடகமாக ஒலிபரப்பானது. "அசோகவனம் தமிழ்தினப் போட்டியில் பரிசு பெற்றது.
சில நாடகங்கள் அவ்வப்போது மேடையேற்றப்பட்டவையாகவும், மற்றும் சில நூலுக்காக எழுதப்பட்டவையுமாக இருக்கின்றன.
அத்துடன் இந் நாடகங்களானது 6 வெவ்வேறு பழந்தமிழ் இலக்கிய வேரிலிருந்து ஒரு மரமாய்த் தளிர்த்து நிற்கிறது.
அழகாகப் பூத்துக் குலுங்கி. காய்த்துப்போய்க்கிடக்கிறது.
நல்ல கனிகளைப் பறித்து உண்டு. அதன் விதைகளை பரந்து போடுவோம்.
பாரெங்கும் தமிழும் தமிழ் மொழியும் செழித்து வளரட்டும்.
என்றும் அன்புடன்,
ஓ.கே. குனநாதன்
மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.
64. கதிர்காமர் வீதி, அமிர்தகழி. மட்டக்களப்பு.
10

அசோகவனம்
பாத்திரங்கள்
இராவணன்
சீதை
திரிசடை
அனுமான் அரக்கிகள் 8
அழகிகள் 5

Page 8
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
01 - அசோகவனம்
காட்சி - 01
: அசோகவனம்
பாத்திரங்கள் : சீதை, திரிசடை, அரக்கிகள் 8
காலம்
: இரவு
(சீதையைப் பல அரக்கிகள் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துகின்றனர். சீதை பயந்துபோய் இருக்கிறாள். திரிசடை ஒன்றும் செய்ய முடியாது நிற்கிறாள்.)
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
அரக்கி
உன்னைக் கொன்று விடுவேன்.
உன்னைத் தின்று விடுவேன்.
உன்னை அடித்துச் சித்திரவதை செய்வேன்.
உன்னைக் குத்திக் கொடுமைப் படுத்துவேன்.
உன் கைகால்களைப் பிய்த்துத் தூர எறிந்து விடுவேன்.
உன்னை அப்படியே கடித்து விழுங்கி விடுவேன்.
உன்னைப் பிடித்துக் கடித்துச் சுவைத்துத் துப்பிவிடுவேன்.
நரமாமிசம் தின்று நாட்கள் பலவாயிற்று இன்றைய பசிக்கு நீயே இரையாவாய்.
(எல்லா அரக்கிகளும் சேர்ந்து கொடுமைப் படுத்தல். சீதை பயங்கொள்ளல்)
எங்கள் மண் னணி இராவணேசனை உதாசீனப் - படுத்துகிறாயா.
மூவுலகிலும் ஏக சக்கராதிபத்தியம் செலுத்தும் எங்கள் முடிவேந்தனைத் துடிதுடிக்க வைக்கிறாயா,
தேவமாதர்கள், கந்தர்வ மாதர்கள் எல்லாம் தவம் கிடக்கிறார்கள் எங்கள் இராவணேசன் காலடியில்.
12

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
அரக்கி 4:
அரக்கி 5:
அரக்கி 6:
அரக்கி 7:
அரக்கி 8:
அரக்கி 1:
அரக்கி 1:
அரக்கி 2:
அரக்கி 3:
அரக்கி 4:
அரக்கி 5:
அரக்கி 6:
அரக்கி 7:
அரக்கி 8:
இந்திர லோகத்துச் சுந்தரிகள் இராவணேசனின் விழி அசைவுக்காய்க் காத்துக் கிடக்கிறார்கள். ஊர்வசி, ரம்பை, திலோத்தமை முதலாம் இணையற்ற பேரழகிகள் எங்கள் மன்னனுக்குக் குற்றேவல் புரிகிறார்கள். நீயோ எங்கள் மன்னனை அவமானப்படுத்துகிறாய்.
ஆண்மையைப் பழிக்கிறாய்.
இந்த ஈரேழு பதினான்கு உலகிலும் எங்கள் இராவணேசனுக்கு ஈடில்லை என்பதை அறிந்துகொள் பெண்ணே.
எம்மால் முடியாததும் ஒன்றுண்டா? எம் அரசனை நீ ஏற்றுக் கொள்ளும் வரை உன்னைச் சித்திரவதை செய்வோம். (எல்லா அரக்கிகளும் சேர்ந்து கொடுமைப்படுத்தல். சீதை பயந்து திரிசடையோடு ஒட்டி இருத்தல்.)
பெண்னே! நான் சொல்வதைக் கேள். எங்கள் மன்னனைக் கூடிக் களித்து சகல சுகபோகங்களையும் அனுபவித்துச் சுகமாக வாழப்பார். வீணாகச் செத்தொழியாதே.
அற்ப மனிதனுடன் வாழுகின்ற வாழ்க்கை ஒரு வாழ்க் கையா. உன் மேல் ஆசைப் பட்ட எங்கள் தலைவனோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
எங்கள் இராவணேசனின் பெயரைக் கேட்டால் ஏழேழு உலகமும் நடுங்கும். அவரின் மனதைக் கவர்ந்த மதன கோமளமே! அவரோடு வாழ்ந்து பிறவிப் பெரும்பயனை அடையப்பார்.
மகாமேரு மலையையே பெயர்த்த தோளாற்றல் மிக்கவன் சிவபெருமானிடம் வாளும் நீண்ட நாளும் பெற்றவன்.
மூவுலகையும் வென்றவன்.
சங்கீத விற்பன்னன்.
சிவபெருமானையே தன் சாம கானத்தால் வென்றவன்
13

Page 9
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரக்கி 1:
அரக்கி 2:
அரக்கி 3:
அரக்கி 4:
அரக்கி 5:
அரக்கி 6:
அரக்கி 7:
அரக்கி 8:
அரக்கி 1:
இன்னும் சொல்கிறேன் கேள். ஹம்சத்வனி என்ற இராகத்தையே கண்டுபிடித்தவன்.
ரதியும் விரும்பும் பேரழகன்.
எங்கள் இராக்கதர் குலம் விளங்க வந்துதித்த இரத்தின கீரிடன்.
மங்கையர் யாவரும் மதிமயங்கும் மன்மத சொரூபி.
எங்கள் மன்னனின் காலடியில்தான் சொர்க்கமே கிடக்கிறது.
பெண்ணே இந்த இலங்கா புரியின் மகிமை தெரியுமா உனக்கு.
இத்தனை சொல்கிறோமே. வாய்திறந்து ஒருவார்த்தை பேசவராதா உனக்கு.
ஏ. கர்வம் பிடித்தவளே. நீ எங்கள் மன்னனுக்கு இணங்காது போனால், உன்னை மட்டுமல்ல எங்களையும் கொன்றுவிடுவான் எங்கள் மன்னன்.
எங்கள் சாவுக்கு நீயா எமனாக வந்தாய்.
(யாவரும் சேர்ந்து சீதையைத் துன்பப்படுத்துதல். சீதை பயங்கொள்ளல். பின் அரக்கியர் யாவரும் களைத்து அயர்ந்து தூங்குதல்.)
14

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
(QLib
அசோகவனம்
gaf F - O2
: அசோகவனம்
பாத்திரங்கள் : சீதை, திரிசடை, அனுமான்
: இரவு
(திரிசடையைச் சீதை எழுப்புகிறாள். அரக்கியர் நித்திரை செய்கின்றனர்.)
சீதை
திரிசடை
சீதை:
திரிசடை
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை1. திரிசடை1. என் அருமைத் தோழி! அனாதரவாக நிற்கும் இந்த அபலைக்கு ஆதரவாய் இருப்பவளே. அரக்கர் குலத்தில் பிறந்தும் என்மேல் இரக்கம் காட்டுபவளே. என் துயரை உணர்ந்த தூயவளே. &l(ԼՔ....... 6մII....... என் அருகில் அமர்ந்து கொள்.
தாயே! அஞ்சாதீர்கள். இந்த அரக்கியர் உங்களைக் கொல்லமாட்டார்கள். அவர்களது மூச்சுக் காற்றுக் கூட உங்களில் படமுடியாது. பயப்படாதீர்கள்.
திரிசடை உன் ஆறுதல் வார்த்தைகளாம் மழைத்துளிகள் தான், எண் சோகப் பாலை வனத்தைச் சற்றுக் குளிர்விக்கின்றன. -
சொல்லுங்கள் தாயே! உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும். என் பூர்வ பாபம் இந்த அரக்கர் குலத்தில் வந்து பிறந்தது. ஆனாலும் என் புண்ணியப் பேறும் ஒன்றுண்டு. அதுதான் நான் உங்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தது.
திரிசடை நீண்ட நாட்களுக்குப் பின் எனக்கு இன்று மாறிமாறி இடது கண் துடிக்கின்றது.
பெண்களுக்கு இடது கண் துடிப்பது நன்மைக்கு அறிகுறி. அதனால் உங்கள் துன்பத்துக்கு ஒரு முடிவு வரப்போகிறது.
என் நாயகன். என் சுவாமி. என் பிரபு, விசுவாமித்திர முனிவரோடும் தம்பி இலக்குவனோடும் மிதிலைக்கு வந்த
15

Page 10
கங்கையின் மைந்தன் அகளங்கன்
திரிசடை
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை
சீதை:
திரிசடை:
அந்த இனிய நாளிலே, என் வாழ்வின் முதல் வசந்த வாசல்த் திருநாளிலே, எனக்கு இடதுகண் துடித்தது. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிப் பிரவாகத்தைப் பாயவிட வார்த்தை வாய்க்கால் போதாது திரிசடை. அது சொல்லி விளக்க முடியாதது. சொல்லில் விளக்க முடியாதது.
தாயே! தாங்கள் இராமபிரான்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாதா. பருவத்து வாசலில் தோன்றும் முதல் வசந்தத்தைப் பற்றிப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். -
LĎ...... ம். அதுபற்றி நாட்கணக்கில் பேசலாம். (பெருமூச்சு) திரிசடை மணிமுடி புனைந்து இவ்வுலகங்கள் யாவற்றையும் தன் அடிநிழலில் காப்பாற்றுவார் எனப் பலரும் பார்த்திருக்க, என் நாயகன் மரவுரி தரித்து வனம் செல்லத் தயாரானாரே அன்று எனக்கு வலது கண் துடித்தது திரிசடை.
வலது கண் துடிப்பது துன்பத்தின் அறிகுறிதானே.
அது மட்டுமா திரிசடை, அன்றைய நாளைவிட எனக்கு அதிகமாக வலது கண் துடித்தது எப்போது தெரியுமா திரிசடை.
சொல்லுங்கள் தாயே.
கொடியவனான அரக்கன் இராவணன், வஞ்சனையால் என் நாயகனை என்னிடமிருந்து பிரித்து என்னைச் சிறையெடுத்து வந்தானே அன்றுதான்.
இராவணன் செய்த பாவங்களுக்குள்ளே மிகக் கொடிய பாவம் அது தாயே.
திரிசடை.1. திரிசடை1. இன்று எனக்கு இடது கண் துடிக்கின்றது. இது உண்மையில் நன்மையின் அறிகுறிதானா. சொல் திரிசடை நல்லதையே சொல் திரிசடை உன் இனிய வார்த்தையெனும் அமுதத்தினால் தான் என் உயிரெனும் பயிர் உயிர் வாழ்கிறது. சொல் திரிசடை நல்ல வார்த்தையாகச் சொல்.
16

கங்கையின் மைந்தன் ©1@6াটিld53তাঁ
திரிசடை:
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை:
தாயே! உங்களுக்கு நன்மை ஏற்படுவதற்கும், இந்த அரக்கர் குலத்துக்கு நாசம் ஏற்படுவதற்கும் ஆன நன் நிமித்தமொன்றை முதலில் கூறுகிறேன் கேளுங்கள்.
சொல் திரிசடை. சொல்!
ஒர் அழகான பொன்வண்டு என் காதுகளுக்கு அருகில் வந்து வந்து இனிய கீதத்தை இசைத்துச் சென்றது. அதுமட்டுமல்ல சில கனவுகளையும் நான் சில நாட்களாகக் காணுகிறேன்.
திரிசடை நானோ கனவுகூடக் காணமுடியாத பாவி. நான் எண் நாயகனைப் பிரிநி த பிணி நிதி திரையே கொள்ளவில்லையே. பின் எப்படிக் கனவு காணுவேன். ம். நீ கண்ட கனவைச் சொல் திரிசடை.
இராவணன் தனது பத்துத் தலைகளிலும் எண்ணெய் தேய்த்தபடி, கழுதைகளும், பேய்களும் இழுத்துச் செல்கின்ற தேரிலே, இரத்தச் சிவப்பாடை உடுத்து, தெற்குத் திசை நோக்கித் தன் சுற்றத்தாரோடு செல்வதாக ஒருகனவு கண்டேன்.
திரிசடை! நீ கண்ட கனவு பலிக்கத்தான் போகிறது. சொல் திரிசடை. வேறென்ன கண்டாய்
இராவணனது அழகான பிரம்மாண்டமான மாளிகை, இடி விழுந்து அழிந்து போவதாகக் கனவு கண்டேன்.
இதுவும் நடக்கும் திரிசடை. இதுவும் நடக்கும்.
தாயே! இலங்கையிலே சில உற்பாதங்களும் நிகழ்கின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
சொல் திரிசடை சொல்.
பெண் யானைகளிலிருந்து மதநீர் ஒழுகுகின்றது. யாரும் அடிக்காமலேயே பேரிகைகள் பேரிடிபோல் முழங்குகின்றன. முகில் இல்லாமலேயே வானத்தில் இடி இடிக்கிறது. நட்சத்திரங்கள் உதிருகின்றன. மந்திர நீர் நிரம்பிய பூரண கும்பங்களில் கள்நிறைந்து வழிகின்றது. மழைத் துளிகள்
17

Page 11
கங்கையின் மைந்தனர் அகளங்கள்
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை:
சீதை:
திரிசடை:
இரத்தத் துளிகளாய் விழுகின்றன. சுமங்கலிப் பெண்களின் தாலிகள் தாமாகவே கழன்று விழுகின்றன.
இன்னும் சொல் திரிசடை. வேறென்ன நிகழ்கிறது.
இராவணனது பட்டத் தர சியான மயணி மகள் மண்டோதரியின் கூந்தல் அவிழ்ந்து நெருப்புப் பிடித்தது. வீரர்கள் அணிந்திருக்கும் கற்பக மாலைகள் புலால் நாற்றம் வீசுகின்றன.
இந்த உற் பாதங்கள் நிச்சயம் இலங்கையின் அழிவுக்குத்தான் திரிசடை.
தாயே! நான் கண்ட இன்னொரு கனவையும் சொல்கிறேன். இரண்டு ஆண்சிங்கங்கள், புலிக் கூட்டத்தோடு, யானைகள் நிறைந்த காட்டைத் துவம்சம் செய்தது. அக்காட்டிலிருந்த மயில் ஒன்று சிங்கங்களோடு அக்காட்டை விட்டுச் சென்றது.
இது சுப சோபனம் தான். சுப சோபனம்தான்.
இராவணனது பிரகாசம் மிக்க அழகிய மாளிகையிலிருந்து செந்நிறமான பெண்ணொருத்தி ஆயிரம் திரிகள் பொருந்திய பெரிய விளக்கொன்றை ஏந்திய வண்ணம் விபீஷணரது அரணி மனைக் குச் செல் வ ைதயும் கணி டேனி , அப்பொழுதுதான் என்னை நீ துயிலுணர்த்தினாய்
திரிசடை உன்னைக் கைகூப்பிக் கேட்கிறேன். நீ மீண்டும் நித்திரை செய். மிகுதிக் கனவையும் கண்டு சொல்.
(அனுமான் சீதை இருக்கும் இடத்தைக் காணுதல். அரக்கியர் துயிலுணர்ந்து சீதையைத் துன்புறுத்தல்.)
18

கங்கையின் மைந்தன் அகளங்கள்
SLib
அசோகவனம்
EITT F -- O3
: அசோகவனம்
பாத்திரங்கள் : இராவணன், சீதை, திரிசடை, அனுமான்,
காலம்
அழகிகள் ஐவர்
: இரவு
(நாட்டிய தாரகைகள் நாட்டியமாடிவர, ஊர்வசி, ரம்பை, திலோத்தமை
முதலான அழகிகள் தொடர, இராவணன் கம்பீரமாக வருகிறான். யாவரையும்
சைகையால் அகலச் செய்கிறான். சீதை மட்டும் தனித்திருக்கிறாள். அனுமான் மரத்தில் மறைந்திருந்து பார்க்கிறான்)
இராவணன்:
சீதை:
இராவணன்:
சீதை:
இராவணன்:
சீதா! உன் பேரழகை எண்ணி எண்ணியே காமத்தீயில் எரிந்து நான் கருகிப் போகிறேன். என்மேல் இரக்கம் காட்டமாட்டாயா, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என்னை இக்காமத்தீயில் எரிய விடப் போகிறாய்.
(கைகளால் காதுகளைப் பொத்தி மெளனமாக இருக்கிறாள்)
சீதா இன்று நாளை என்று 10 மாதங்கள் கடந்து விட்டன. உன் பதில்தான் கிடைக்கவில்லை.
குலமாதர் கற்பு நெறி வழுவார் என்பதை நீ அறியாயா. என்னை ஏன் மீண்டும் மீண்டும் துன்புறுத்துகின்றாய்.
பேரழகிகளுக்கு இருக்கவேண்டிய சாமுத்திரிகா இலட்சணத்தில் சிறிதளவும் குறைவின்றி நிரம்பப் பெற்றவளே! அதெப்படி உன்னிடம் இரக்கம் மட்டும் இல்லாமற் போகமுடியும். பிரம்ம தேவன் உனக்கு இடையை மட்டுமல்ல இரக்கத்தையும் படைக்காமல் விட்டு 6, LII (860 T.
மூடனே! இன்னொருத்தருக்குச் சொந்தமான பெண்ணிடம் என்ன வார்த்தை பேசுவதென்றே அறியாதவனாக

Page 12
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இராவணன்:
இராவணன்:
சீதை:
இராவணன்:
இருக்கிறாயே. நான் ஜனக மகாராஜனின் குலக்கொடி.
இராமச் சந்திர மூர்த்தியின் பத்தினி என்பதை மறந்து பேசாதே.
சீதா என்மேல் இரக்கங்காட்டாது போனால் என் உயிர் போகும். சீதா! சற்றுச் சிந்தித்துப் பார். என் உயிர் போனால் அது உனக்குப் பழியாய்ச் சேரும். நீ அயோத்திக்குச் சென்றாய். அங்கே உன்மாமன் தசரதன் இறந்தான். உன் மணவாளன் அரசை இழந்து பஞ்சைப் பராரியாய்
காட்டுக்குச் சென்றான். நீ இலங்கைக்கு வந்தாய்.
இங்கேயும் என் மரணம் உன்னால் நிகழ்ந்தால் உன்னைத் தானே உலகம் பழிக்கும்.
கற்புள்ள பெண்ணிடம் பேசுகின்ற பேச்சா இது.
குலமாதர்கள் கற்புநெறி தவறார். தவறின் உயிர் வாழார் என்பதை நீ அறியாயா.
(சீதையின் காலடியில் விழுந்து எழுந்து) சீதா! மூவுலகும் போற்றி வணங்கும் இந்தத் தச கண்ட இராவணன் உன் காலடியில் வீழ்ந்து வணங்கி இரங்கி நிற்கவும் உனக்கு என்மேல் இரக்கம் பிறக்கவில்லையா. காமத்தீயிலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா.
(இராவணனது முகத்தைப் பாராமல், அருகிலிருந்த ஒரு புல்லை எடுத்து, இராவணனைப் புல்லாக மதித்துச் சொல்கிறாள்) மூடனே! மிதிலையின் ஒழுக்கமும், அயோத்தியின் மானமும் ஒருசேர வந்த வடிவம் நான் என்பதை மறவாதே. சர்வஜீவராசிகளுக்கும் தலைவனாக விளங்கும் என் இராமபிரானைப் பார்த்த என் கண்கள் அற்பனான உன்னைப் பார்க்குமா? ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகு திரண்ட என் ஆன்மநாயகன் இராமனை நினைத்த என் நெஞ்சு அற்பப் புழுவாகிய உன்னை நினைக்குமா. நீசனே! என் நினைப்பை
விட்டொழி.
(கோபமாக) சீதா! நீ சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் கோபத்தால் நெஞ்சு கொதிக்கிறது. ஆனால், ஆனால் (சாந்தமாக) உன் குரலினிமை அந்த
2O
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
சீதை:
இராவணன்:
சீதை:
இராவணன்:
சீதை:
வெப்பத்தைத் தணிக்கிறது. பெண்ணே நினைத்துப்பார்! மூவுலகையும் ஒரு குடைக்கீழ் ஏக சக்கராதி பத்தியம் செலுத்தும் இந்த இராவணனது (கர்வமாக) பட்டத்தரசியாய் பஞ்சணை மெத்தையில் பக்கத்திருப்பதா? அல்லது அந்தப் பஞ்சைப் பராரி இராமனின் பத்தினியாய் பகலிரவு தெரியாத காட்டில் பரிதவித்து அலைவதா? எது சிறந்தது என்று எண்ணிப்பார்.
மூடனே! உனக்கு நான் சொல்வது (கோபமாக)
புரியவில்லையே. உனக்கு மட்டுமல்ல உன் குலத்துக்கே நாசம் தேடுகிறாயே. என் நாயகன் சாதாரண மனிதனல்ல. நாங்கள் காட்டுக்கு வந்தபோது அகத்தியர் முதலான முனிவர்கள் உன் கொடுமைகளை என் நாயகனிடம் சொல்லி, உன்னைக் குலத்தோடு கொல்லும்படி கூறினார்கள். அதற்குரிய வல்லமை என் நாயகனுக்கு இருப்பதையும் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தான் நீ நடந்து கொண்டாய். விளக்கை நாடிவந்து விழுந்து வலிந்து சாவைத் தேடிக் கொள்ளும் விட்டில்ப் பூச்சியைப் போல உன் காம விகாரத்தால் வந்து விழுந்து விட்டாய். இனி நீ தப்பவே முடியாது.
சீதா (கோபமாக) நான் தசகண்ட இராவணன். மூவுலகையும் வென்றவன். என் வீரத்தைப் பழிக்காதே. உன் வீரத்தைக் கேட்டபின்தான் இலக்குவன் உன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும், முலைக்காம்புகளையும் அறுத்தான். உன் வீரத்தைக் கேட்டபின்தான் உன் தம்பியர்கள் கரன், தூஷணன் மற்றும் அறுபதினாயிரம் அரக்கப் படைவீரரையும் என் நாயகன் தனித்து நின்று கொன்றொழித்தான். மூர்க்கனே! வீரத்தைப் பற்றி நீ பேசாதே.
சீதா! அற்ப மானுடர் என்று எண்ணி அவர்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள். அதைப் பயன்படுத்தி இராமன் அவர்களைக் கொன்று விட்டான். அது பெரிய வீரமல்ல.
நீ வீரனாயிருந்திருந்தால் என் நாயகனை வென்று
21

Page 13
கங்கையின் மைந்தனர் அகளங்கன்
இராவணன்:
இராவணன்:
சீதை:
என்னைச் சிறையெடுத்திருக்க வேண்டும். வஞ்சனையாய் மானை ஏவி என் நாயகனைப் பிரித்தாய். தம்பி இலக்குவனையும் பிரித்தாய். தனியாக இருந்த என்னிடம் தாபத வேடத்தில் வந்து தகாத முறையில் என்னைக் கவர்ந்தாய். இதுதானா உன்வீரம். இளையவன் இலக்குவன் நின்ற நேரத்திலாவது நீ வந்திருந்தால் உன் வீரத்தைப் பார்த்திருப்பேனே.
சீதா! உன் கணவனைக் கொன்றால் நீ பூவையும் பொட்டையும் இழப்பாய். மஞ்சள் குங்குமம் மலர்மாலை இழந்த உன் தோற்றத்தைப் பார்த்தால் என் ஆவி பிரியும். அதனால்த்தான் அவர்களைக் கொல்லாது விட்டேன். இப்போது நினைத்தாலும் தேடிச் சென்று கொல்வேன். அது மட்டுமல்ல. உன்னை எனக்குத் தந்த அந்த மானுடர்களுக்கு நான் நன்றி பாராட்டக் கூடாதா. அதனால்த்தான் விட்டுவைத்தேன். என்னை வெல்ல யாராலும் முடியாது.
நீசனே! உன் வீரம் பற்றிப் பெருமை பேசுகிறாயே. உண்னைக் கட்டிச் சிறைவைத் தானே கார்த்த வீரியார்ச்சுனன். அவனது ஆயிரம் கைகளையும் வெட்டிச் சாய்த்து கொன்றொழித்த பரசுராமரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா. அந்தப் பரசுராமரின் செருக்கடக்கித் தன் பாதம் பணிய வைத்தவர் என் நாயகன். இதை அறிவாயா நீ என் நாயகன் சிவதனுசை முறித்த ஒலி உன் செவியில் விழவில்லையா. மூடனே. வீரத்தைப் பற்றி யாரிடம் பேசுகிறாய். சிங்கத்தைச் சிறுநரி வெல்லுமாம். சீறிப்பாயும் நாகத்தைச் சிறு அணில் கொல்லுமாம். நன்றாக இருக்கிறது நியாயம்.
(கோபமாக) சீதா எண் கோபத்தைக் கிளறாதே. இதுவரையில் நான் உன்னைத் தொட்டதில்லை. உன்னைக் கொன்று தின் னும் அளவுக்கு எண் கோபத்தைக் கொழுந்துவிட்டெரியச் செய்கிறாய். நான் பெற்ற வரங்களையும் வலிமையையும் என் வாளையும் நாளையும் நீ அறியாய். எனக்கு நீ இணங்காது போனால்.
உன் வல்லமையை நானே கண்டேனே. என்னை
22

கங்கையின் மைந்தன் Olebo IISEG)
இராவணன்:
சீதை:
இராவணன்:
சீதை:
இராவணன்:
வஞ்சனையாய்ப் புஸ்பக விமானத்தில் கடத்தி வந்தபோது, எதிர்த்துப் போர் செய்த வயோதிபச் சடாயுவுக்கு ஆற்றாது தோற்றுத் தடுமாறினாய். கைலை வாசன் கொடுத்த வாளினால் கொன்றாய். உன்தோளினால் அல்ல. உன் ஆயுள் கணக்கு இயமனுக்குரியதே அன்றி இராம பாணத்துக்குரியதல்ல. உன் வரங்கள் எல்லாம் சாபங்களாகப் போவதை நீயே நேரில் காண்பாய்.
சீதா முடிவாய் என்ன சொல்கிறாய். (கோபமாக)
(கோபமாக) துஷ்டனே! உன் முடிவைக் கேட்கிறாயா. என் முடிவைக் கேட்கிறாயா என் முடிவை எப்போதோ சொல்லிவிட்டேன். உன் முடிவு தான் முடிவு, உன்முடிவு தான் என் விடிவு. விஷ நாகம் கூட மகுடிக்குக் கட்டுப்படும். உன்னைச் சூழ்ந்திருக்கும் மந்திரிகளும் உன் சுற்றத்தாரும் நீ விரும்புவதையே சொல்லி உன்னை முடிக்கக் காத்திருக்கும் போது என் முடிவு என்ன என்றா கேட்கிறாய். மூடனே உன் முடிவுதான் என் முடிவு.
சீதா (கோபமாக) இந்த அரக்கியர் மூலமாக உன்னை அச்சுறுத்தி எண் அரண்மனைக்கு உன்னை வரச் செய்கிறேனா இல்லையா என்று பார்.
நீசனே! (கோபமாக) நான் பயப்படுகிறேன் என்று நினைக்கிறாயா, என் பயம் என்ன தெரியுமா. என் நாயகனின் கோபம் உன் அழிவோடும் இலங்கையின் அழிவோடும் மட்டும், நின்றுவிடுமா, இல்லை இந்த அகிலத்தின் அழிவில் தான் போய் முடியுமா என்பதுதான்.
சீதா (கோபமாக) இன்னும் இரண்டுமாதம் உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன். நீ இணங்காது போனால், உன் அங்கங்களை அறுத்து என் அரிய பசிக்கு உணவாக்கிக் கொள்வேன். இப்போது அயோத்திக்குச் சென்று பரதன் முதலானோரை அழிப்பேன். மிதிலைக்குச் சென்று உன் தந்தை ஜனகனையும் கொன்று தீர்ப்பேன். இந்த இராவணனைப் பற்றி அப்போது தெரிந்து கொள்வாய். யாரங்கே. (அரக்கியர் ஓடி வருகின்றனர்) இவளைச் சித்திரவதை செய்து என்னை ஏற்கச் செய்யுங்கள்.
23

Page 14
கங்கையின் மைந்தன் அகளங்கள்
சீதை:
அனுமான்:
சீதை:
அனுமான்:
(இராவணன் செல்கிறான். அரக்கியர் சீதையைத் துன்புறுத்துகின்றனர். அனுமான் பார்த்திருந்து தன் மாயத்தால் யாவரையும் நித்திரையில் ஆழ்த்துகிறான். சீதை மட்டும் விழித்திருக்கிறாள்.)
(சிந்தித்தல்),
நான் உயிர் வாழ்ந்து என்ன பயன். என் நாயகன் என்னைக் கைவிட்டு விட்டாரோ. இன்னும் இரண்டு மாதங்கள் இந்த இராவணன் காலக்கெடு விதித்திருக்கிறானே. என் உள்ளத்தைத் தீண்ட முடியாத இவ்வரக்கன் என் உடலையும் தீண்ட முடியாதென்பதை உணர்ந்து, என்னைக் கொன்று விடுவானோ. இந்தத் துஷ்டனின் கைவாளினால் இறப்பதைவிட நானே என்னுயிரை மாய்த்துக் கொள்வேன்.
(சீதை எழுந்து ஒரு மரத்தின் பக்கம் செல்லல். அனுமான் சீதையின் அருகில் வரல்)
ஜெய் ரீராம். ஜெய் ரீராம்.
யார் நீ? என் பிராண நாயகனது நாமத்தைப் பயபக்தியோடு உச்சரிக்கிறாயே, யார் நீ.
தாயே! நான் இராம தூதன். இராம பக்தன். இராமனின்
3)-1960). D.
நீ சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் . ஆனால் . இதுவும் அரக்கரின் மாயந்தானோ என்று ஐயுறுகிறது நெஞ்சம்.
தாயே! கவலையை விடுங்கள். இராமபிரான் என் தெய்வம். நான் அவரின் அடிமை.
உன் பெயர்
நான் கேசரி என்ற வானரத் தலைவனின் மனைவி அஞ்சனாதேவிக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தேன். என்னை மாருதி என்பர். அனுமார் என்பர் ஆஞ்சநேயர் என்பர்.
24

கங்கையின் மைந்தன் அகளங்கள்
சீதை:
அனுமான்:
சீதை:
அனுமான்:
சீதை:
அனுமான்:
சீதை:
அனுமான்:
சீதை:
நீ. என் நாயகனைத் தரிசித்திருக்கிறாயா?
கற்பின் தெய்வமே! ஜனகர் குலக் கொழுந்தே என் தாயே! உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. என் இறைவன் இராமபிரானின் கண்கள் செந்தாமரை மலர் போன்றவை. அவரது தோற்றம் மழைமுகில் போன்றது. திருவடிகளும் திருவாயும் திருக்கரங்களும் செந் தாமரை மலர் போன்றவை. பரந்து அகன்ற மார்பு, அதன் வலதுபுறத்திலே ரீவத்சம் என்னும் மச்சம். வலது கையிலே சங்கு சக்கர
(மகிழ்ச்சியாக) நிச்சயம் இவை என் நாயகனின் அடையாளங்கள் தான். தங்களைத் தரிசித்தால் தங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த சில அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி என்னிடம் கூறினார் தாயே.
நம்புகிறேன் மாருதி. நம்புகிறேன். என் நாயகனுக்கும் உனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது.
தங்களைப் பிரிந்த அந்தத் தயாளன் தம்பி இலக்குவனோடு காடு காடாகத் தங்களைத் தேடி அலைந்து கவலையினால் பிரகாசமிழந்த முகத்தோடு இரலையங்குன்றை அடைந்தார். அங்கே சுக் கிரீவ ராஜனோடு அறிமுகமானார். இராவணனை வென்ற பெருவீரனான வாலியை ஒரம்பால் கொன்று சுக்கிரீவனுக்குக் கிஷ்கிந்தை இராச்சியத்தை வழங்கினார்.
(மகிழ்ச்சியாக) சொல் மாருதி சொல்1 என் நாயகனின் பெருமைகளைக் கேட்க என் செவிகள் புண்ணியஞ் செய்திருக்கின்றன. சொல் மாருதி சொல்.!
தாங்கள் அடையாளத்துக்காக எறிந்த ஆபரணங்களை நாங்கள் சேகரித்து வைத்திருந்தோம். இராம பிரானுக்குக்
காட்டினோம். அவரின் துயரை நான் எப்படிச் சொல்லுவேன்.
(அழுதபடி) நான் பாவி. அவரின் துயரிற்கு நானே காரணமானேன். பிறகு. சொல் மாருதி.

Page 15
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அனுமான்:
சீதை:
அனுமான்:
சீதை:
அனுமன்:
சீதை:
அனுமான்:
சீதை:
அனுமான்:
சீதை:
இராவணன் தங்களைத் தென்திசை நோக்கிக் கொண்டு சென்றதை ஜடாயு மூலம் இராமபிரான் அறிந்திருந்தார். என்னிடம் தனிமையிலே தங்களைப் பற்றி உரையாடினார். இளவரசர் அங்கதனின் சேனைப் பிரிவில் தென்திசையில் தேடி வந்த நான் கடலைக் கடந்து இலங்காபுரிக்கு வந்தேன். கற்பின் தெய்வத்தைக் கண் களிக்கக் கண்டு விட்டேன். என் பிறவி அர்த்தமுள்ளதாகிவிட்டது.
மாருதி! நீ என் உயிர் தந்தாய். உன்னை நம்புகிறேன். இருப்பினும்.
தாயே! உங்கள் ஐயம் தீர இதோ என் ஐயன் உங்களுக்குக் காட்டும்படி தந்த அடையாள மோதிரம்.
(மோதிரத்தை இரு கைகளாலும் வாங்கிக் கண்களில்
தாயே! என் தோள்களில் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த இலங்கையைத் தாண்டி இராமபிரானிடம் உங்களைச் சேர்க்கிறேன்.
உன்னால் அதுமுடியும் என்பதை நான் உணருகிறேன். ஆனால் அது உனக்கும் அழகல்ல. எனக்கும் அழகல்ல. உன்னை அனுப்பி வைத்த என் நாயகனின் பெருமைக்கும் ஏற்றதல்ல.
இந்த அரக்கன் உங்களைக் கொன்று தின்று விடுவான். தயவு செய்து எனக்கு ஆணையிடுங்கள். இந்த இலங்காபுரியைக் கடலுள் அமிழ்த்தி இராவணனையும் அழித்து விடுகிறேன்.
மாருதி! இந்த இலங்கையை மட்டுமல்ல உலகம் யாவற்றையும் என் சொல்லினால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசாகும் என்று தவிர்த்தேன். மாருதி! நீ என் நாயகனிடம் சென்று இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என்னை மீட்டுச் செல்லும் படி சொல்லு.
தாயே! கலங்காதீர்கள்.
இந்தத் துர்ப்பாக்கியசாலி அந்தத் தூயவரைத் திசை
26

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
அனுமான்:
சீதை:
அனுமான்:
நோக்கித் தொழுத வண்ணமும் அழுத வண்ணமுமாக இருக்கிறாள் என்பதையும் சொல்லு.
தாயே! விரைந்து செல்வேன். உங்கள் துயரைப் போக்குவேன்.
மாருதி என்னைச் சந்தித்ததற்கு அடையாளமாக இந்தச் சூளாமணியை அவருக்குக் காட்டு. (தலையிலிருந்து சூளாமணியைக் களற்றிக் கண் களில் ஒற்றிக் கொடுக்கிறாள்.)
ஜெய் ரீராம். ஜெய் ரீராம். (சீதையின் முன் அனுமான் ஆனந்தக் கூத்தாடுகிறான்.)
சுபம்
27

Page 16
கங்கையின் மைந்தன்
பாத்திரங்கள்
சந்தனு
பீஷ்மர்
தேரோட்டி
பகிரதி
சத்தியவதி
தாசராஜன்
தலைமை அமைச்சர்
தளபதி
28

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
கங்கையின் மைந்தன்
காட்சி - 01
: கங்கையாற்றங்கரை
பாத்திரங்கள் : சந்தனு, பகீரதி, தேரோட்டி
காலம்
சந்தனு:
தேரோட்டி:
சந்தனு:
தேரோட்டி:
சந்தனு:
தேரோட்டி:
: 63)6)
தேரோட்டி! தேரோட்டி! இந்தக் கங்கைக் கரையின் அழகைப் பார். எவ்வளவு ரம்மியமாக இருக்கின்றது. பூக்களை அளைந்து வந்து உடலைத் தழுவும் இளந்தென்றல் உடலுக்கு மிகவும் இதமாக இருக்கிறது.
மகாராஜா இந்த இளந்தென்றல் உடலுக்கு மட்டுந்தானா இதமாக இருக்கிறது. மனதுக்கும் கூட எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
அதோபார் கங்காநதி, தன் அலைக் கரங்களால் அழகிய முத்துக்களை அள்ளிவந்து கரையில் குவிக்கிறதே.
ஆம் அரசே தாங்கள் அஸ்தினாபுரத்து அரியணையில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் அரசரல்லவா. சந்திர குலத்துச் சக்கரவர்த்தியல்லவா. தங்கள் சிற்றரசர்கள், தங்கள் காலடியில் பொன்னையும் மணியையும் கொண்டுவந்து குவிப்பது போல் இருக்கிறது இந்தக் கங்கா நதியின் செய்கை.
(சிரிப்பு) நல்ல உவமானம். சிற்றரசர்கள், தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அப்படிச் செய்கிறார்கள். ஆனால் கங்காநதிக்கு அப்படி ஒரு தேவையில்லையே.
அப் படியென் றால , சந் தனு மகாராஜா  ைவ வரவேற்பதற்காகக், கங்கையெனும் மங்கை, தன் முத்துக்களாம் பற்களைக் காட்டி மோகனப் புன்னகை வீசி, அலைக் கரங்களால் அழைப்பதாகக் கொள்வோமே.
29

Page 17
கங்கையின் மைந்தன் அகளங்கன்
சந்தனு:
தோரோட்டி:
சந்தனு:
தேரோட்டி:
சந்தனு:
தேரோட்டி:
சந்தனு:
பகீரதி:
உன் கற்பனை மிகவும் நன்றாகவே இருக்கிறது. தேரோட்டி! அலைகளிலே ஆதவனின் கதிர்கள் பட்டுத் தெறிக்கும் அழகைப் பார்த்தாயா. மாணிக்கங்களை நீர்ப்பரப்பில் விதைத்து விட்டது போலல்லவா காட்சியளிக்கிறது.
ஆம் அரசே! மிகவும் அற்புதமாக இருக்கிறது.
தேரோட்டி! இதோ பார் . புள்ளிமான்கள் துள்ளி விளையாடுகின்ற காட்சி மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது. அலைகளைப் பார்த்துக் கருமேகம் என்று நினைத்தோ அந்த மயில்கள் நடனமாடுகின்றன, மயில்களின் நாட்டியத்திற்கு ஏற்பத்தான் வண்டுகள் ரீங்காரஞ் செய்கின்றனவோ. மூங்கில்த் துவாரங்களுக்கூடாக மோதிவரும் இளந்தென்றல் என்ன மோகன ராகத்தையா இசைக்கிறது.
அரசே! பூக்களைச் சூடிக் கொண்டு கொடியாகிய மணமகள், தன் கொழுநனைத் தழுவும் காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்.
ஆ. என்ன இது கொடி, பூங்கொடி, இல்லை. இல்லை. மின்னல்க் கொடி உயிரோவியம். தேரோட்டி! அதோ பார். கந்தர்வக் கன்னிகையா? தேவ அரம்பையா? யாரந்தப் பெண்ணணங்கு.
அரசே! யாராக இருக்கும். கங்கைக் கரைக் காட்டில், கட்டுக் காவலின்றித் தன்னந்தனியாக நிற்கும் இக்கன்னி யாராக இருக்கும்.
நீ இங்கேயே நில், நான் சென்று விசாரித்து வருகிறேன். (நடந்து சென்று) ஒவியத்தில் எழுத முடியாத ஒப்பற்ற சித்திரமே! சிற்பியின் சிந்தனைக்கும் எட்டாத சிங்காரச் சிலையே! கவிஞனின் கற்பனையைக் கடந்து நின்ற காவியத்தின் நாயகியே!, யார் நீ? என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட எழிலரசி! நான் காண்பது கனவல்லவே. நிஜம் தானே. சொல் நீ யார்.
என் பெயர் பகீரதி,
30

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
சந்தனு:
பகீரதி:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
31
அற்புதமான பெயர். என்னுள்ளத்தையும் உயிரையும் ஒருங்கே பகிர்ந்து கொண்ட உனக்குப் பகீரதி என்னும் பெயர் சாலப் பொருந்தும். பெண்ணே உன்மேல் என் பார் வை பட்ட பொழுதிலிருந்து ஆனந்த பரவசமடைந்தவனாகி நான்படும் இன்ப வேதனையை எப்படி எடுத்துரைப்பேன். நீ யாராக இருந்தாலும் நீயே என் இல்லத்தரசி. அஸ்த்தினாபுரத்து அரியணையில் என் இடப்புறத்தை அலங்கரிக்கப் போகும் எழிலரசி நீயே.
தங்கள் பேச்சும் தோற்றமும் தங்களை ஒரு மன்னனாகக் காட்டுகிறது. ஆனால் நானோ.இக்கங்கைக் கரையிலே கால்கள் நோக நடந்து திரியும் சாதாரண கன்னிப் பெண்.
அப்படிச் சொல்லாதே என் அஞ்சுகமே, உன் பாதங்கள் நடந்து செல்வதற்குப் பாதையிலே பட்டு விரிக்கட்டுமா. அதன்மேலே பனிமலர்களைத் துரவட்டுமா அல்லது பவளத்தால் பாதைபோட்டு அதன் மேலே பஞ்சைப் பரப்பி வைக்கட்டுமா, என் உள்ளத்திலும், உயிரிலும் ஒருங்கே நடைபயிலும் ஒப்பற்ற ஒவியமே, உன்னை நான் மணஞ் செய்து கொள்ள விரும்புகிறேன்.
நான் சந்திர குலத்துச் சத்திரியன் துஷ்யந்தன், பரதன், யயாதி, அஸ்த்தி, பூரு, குரு முதலானவர்கள் ஆட்சி பெய்த அஸ்த்தினாபுரத்து அரியணையில் வீற்றிருந்து அவர்களின் வாரிசாக அரசாட்சி செய்பவன். என் பெயர் சந்தனு.
தங்களுக்குப் பட்டத்தரசிகள் பலபேர்கள் இருப்பார்கள் போலும்.
(சிரிப்பு) பெண்ணே பகீரதி உன் கேள்வியிலுள்ள கேலியை நான் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். என் மனம் இதுவரையில் எந்தப் பெண்ணையும் நாடியதுமில்லை. உள்ளம் வாடியதுமில்லை. உடல் தேடியதுமில்லை. இது சத்தியம். என் உள்ளத்து உணர்விலும் உயிரிலும் கலந்த ஒப்பற்ற உயிரோவியம் நீ ஒருத்தியே.

Page 18
கங்கையின் மைந்தன் அகளங்கன்
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
பகீரதி:
சந்தனு:
பகிரதி:
சந்தனு:
சத்திரிய குலத்தவர்கள் சொல்லும் சாதாரண வார்த்தைகள் தான் இவைகள்.
இல்லை. இல்லை. சத்திய வார்த்தைகள். என் அன்பின் ஆழத்தை அறியாமல்ப் பரிகசிக்காதே பகீரதி. அஸ்த்தினாபுரத்து ஆட்சிப்பரப்பு அகன்றது தான். ஆனால் என் அரியணை அகன்றதல்ல. என் உள்ளக் கோவிலில் உன் ஒருத்திக்கே இடமுண்டு. இது சத்தியம்.
நான் உங்களை நம்புகிறேன். பூரணமாக நம்புகிறேன். நீங்கள் யார் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
அன்பு நெஞ்சங்கள் அளவளாவிக் கலந்த பின்பு, ஆனால் என்ற சொல்லுக்கு இடமே இல்லைப் பகீரதி.
நான் உங்களை மணந்து கொள்வதாக இருந்தால், எனது நிபந்தனை ஒன்றுக்கு நீங்கள் கட்டுப்படவேண்டும்.
பகிரதி உலகம் இதுவரையில் கண்டிராத ஒப்பற்ற அழகியாகிய உன்னை மணந்து கொள்வதற்காக, ஒன்றென்ன, ஒராயிரம் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட நான் தயார். என்னவென்று சொல் பகீரதி.
வானவில்லை மடித்துக் கொண்டுவந்து ஆடையாகத் தரவேண்டுமா. வானத்து நட்சத்திரங்களை அள்ளிவந்து உன் வளைந்த கூந்தலுக்கு மலராகத் தரவேண்டுமா. அல்லது மாலைச் சூரியனை உன் மலர் முகத்தில் வைக்கும் திலகமாக்கித் தரவேண்டுமா.
அவைகள் அற்பமானவை. நான் கேட்பது அவைகளல்ல.
பெண்ணே! அப்படியென்றால் இந்திரலோகத்துக் கற்பகதருக்கள் வேண்டுமா, காமதேனு வேண்டுமா, அல்லது சந்திர மண்டலந்தான் வேண்டுமா, பகீரதி நீ உன்வாய் வார்த்தைகளால் கட்டளையிட வேண்டாம். உன் இதழ்கள் அசையும் பொழுது வலி எடுத்தால் அது என்
32
 

கங்கையின் மைந்தன் அகளங்கள்
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்து நொருக்கி விடும். உன் கண்ணசைவைக் காட்டு, நான் காரியத்தைச் சாதித்துக் காட்டுகிறேன்.
இவற்றையெல்லாம் விட மாறுபட்டது என் நிபந்தனை.
பகீரதி என் ஆவலைத் தூண்டி என்னைப் பரிதவிக்க விடாதே. சொல்!. நான் என்ன செய்ய வேண்டுஞ் சொல். உன்னை மணஞ் செய்து கொள்ள என் உயிரையே கொடுப்பேன. சொல் பகீரதி சொல்.
அரசே! நான் என்ன காரியஞ் செய்தாலும் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நீங்கள் என்னை ஏன் என்று கேட்கவும் கூடாது. தடுக்கவும் கூடாது. நான் செய்யும் காரியத்தை ஏன் என்று கேட்டுத் தடுக்க முயன்றால் அந்தக் கணத்தோடு நான் பிரிந்து விடுவேன்.
(சிரிப்பு) பகீரதி நீ ஏதோ பெரிதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இவ்வளவுதானா. இதுதானா நீ விரும்பும் நிபந்தனை, பகீரதி நான் என் உயிரிலும் மேலாக மதித்துக் காத்துவரும் அஸ்த்தினாபுரத்து இராச்சியத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ என்ன செய்தாலும் நான் ஏன் என்று கேட்கவும் மாட்டேன். தடுக்கவும் மாட்டேன். இன்னும் என்னைச் சோதிக்காதே. என்னோடு வந்துவிடு.
சத்தியந் தவற மாட்டீர்களே.
தவறிவிட்டால் அது சத்தியமில்லையே. சூரிய குலத்துக்கு ஒரு அரிச்சந்திரன். சந்திர குலத்துக்கு இந்தச் சந்தனு மகாராஜன் என்று நினைத்துக் கொள்.
என்மேல் ஏற்பட்ட அளவுகடந்த மோகத்தினால் இக்கொடிய சத்தியத்தைச் செய்திருக்கிறீர்கள். பின்னால் வருத்தப்பட
பகிரதி உன்னை யாரென்று அறியாமலேயே என் பட்டத்தரசியாக்கிக் கொள்கிறேன். கற்றவர்களையும், நலன்கள் பல நிறைந்த கன்னியர்களையும், வீரத்தில்
33

Page 19
கங்கையின் மைந்தன் அகளங்கன்
பகீரதி:
சந்தனு:
உயர்ந்தவர்களையும், குற்றமற்ற ஞானவான்களையும், யாரென்று ஆராயாமலேயே சேர்த்துக் கொள்வது ராஜ தர்மம் . உனக்காக எந்தத் துணி பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
தங்களை நான் நம்புகிறேன்.
வா பகீரதி வா. இப்பொழுதே அஸ்த்தினாபுர நகருக்குச் செல்வோம். அங்கே மக்கள் காண, மன்னர்கள் போற்ற, மறையவர்களின் மந்திர ஒலி முழங்க, ஒமாக்கினி முன்னால் மாங்கல்ய தாரணஞ் செய்து மணமாலை சூட்டிக் GasT6i (36)ITLö. 6.J.T.
34
 
 
 
 
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
கங்கையின் மைந்தன்
காட்சி - 02
இடம் ; கங்கையாற்றங்கரை பாத்திரங்கள் : சந்தனு, பகீரதி, தளபதி, தலைமை அமைச்சர்
காலம் : இரவு
(தளபதி வருகிறார். தலைமை அமைச்சர் நிற்கிறார்)
தளபதி: தலைமை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எங்கே, இவ்விடத்தில், இந்த வேளையில் தனிமையில் நிற்கிறீர்கள்.
தலை. அமை: இந்தக் கேள்வியை தளபதியாகிய உங்களிடம் நானும்
கேட்கலாமல்லவா.
தளபதி: உங்கள் நோக்கமும் எனது நோக்கத்தைப்
இருந்தால். தாராளமாக மனம் விட்டுப் பேசலாம்.
தலை,அமை. அஸ்தினாபுரத்து அரசின் புகழையும், பெருமையையும் காப்பாற்றிக் கொள்வதில் அரச ஊழியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்காது என்றே கருதுகிறேன்.
தளபதி: உண்மை. உங்கள் நோக்கம் எனக்குப் புரிகிறது. பாவம்
மன்னர்.
தலை,அமை: மன்னர் மட்டுமல்லத் தளபதி. குடிமக்களுந்தான் பாவம்.
தளபதி: (கோபமாக) இந்த அஸ்தினாபுரத்துச் சாம்ராச்சியம், மன்னர் சந்தனுவின் பின் அஸ்த்தமித்துவிடப் போகிறது. சந்திர குலத்தின் வம்ச நதி, வாரிசு அருவிகள் இன்றி வற்றி வரண்டுவிடப் போகிறது.
தலை,அமை. ஆம் தளபதி காட்டிலிருந்து அழைத்துவந்த அக்காரிகை
பகீரதி, பட்டத்தரசியல்ல, படுபாதகி, பிசாசு, அரக்கி.
தளபதி: (கோபமாக) ஆம். ஆம். பிசாசுதான். பிணந்தின்னும் பிசாசு ஒன்றா இரண்டா ஒவ்வொன்றாக ஏழு அழகான
35 -

Page 20
கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
தலை,அமை.
தளபதி:
தலை,அமை.
தளபதி:
தலை அமை.
தளபதி:
ஆண்குழந்தைகளை ஈன்றெடுத்தும், அவ்வப்போதே கொன்றுவிட்ட கொலைகாரி. இரக்கமில்லா அரக்கி. பேயிலே கூடப் பெண் பேய்க்குச் சிறிது இரக்கம் இருக்கும் என்பார்களே இப்பெண்ணுக்கு இரக்கமே இல்லையே.
தன் வாரிசுகள், பிறந்த அன்றே கொல்லப்படுவதை மன்னர் பொறுமையாகப் பார்த்துச் சகித்துக் கொள்கிறாரே, அதுதான் ஆச்சரியம்.
தலைமை அமைச்சர் அவர்களே! மன் னருக்கு அம்மங்கையிலுள்ள மோகமும், மயக்கமும் இன்னமுங் குறையவில்லையே. வருடம் ஒரு பிள்ளையாகப் பெற்றுக் கொண்டு வந்து இந்தப் புண்ணிய கங்கையில் போட்டுக் கொன்று, கங்கையின் புனிதத்தையும் பாழ்படுத்துகிறார்களே. இக்கொடிய அரக்கச் செயலை அரசர் இதுவரையில் கண்டிக்கவும் இல்லையே.
சந்திர குலத்துச் சத்திரியப் பரம்பரையில் சந்தனு மகாராஜாவைப் போல பொறுமைசாலியுமில்லை, பட்டத்தரசி பகீரதியைப் போலக் கொடுமைக் காரியுமில்லை. ஒன்றா இரண்டா ஏழு ஆண்குழந்தைகளைக் கொன்று விட்டார் தளபதி ஏழு ஆண்குழந்தைகளைக் கொன்று விட்டார்.
பட்டத் தர சியார் , அழகிலும் , ஏனைய பழக் க வழக்கங்களிலும் மிகவும் சிறந்த பத்தினியாகவே விளங்குகிறார். மன்னருக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறார். ஆனால்.
ஆனால் குழந்தைகள் விடயத்தில் மட்டும் ஏன் இப்படிக் கொடுமைக் காரியாக, அரக் கியாகப் , பேயாக இருக்கிறாரோ தெரியவில்லை.
இப்பொழுது, நாங்கள் வந்த வேலையைக் கவனிப்போம். அரசியார் ஒவ்வொரு பிள்ளையும் பிறந்தவுடன் அதைத்தானே தூக்கிக் கொண்டு தனியாக வந்து, இந்தக் கங்கை நீரில்தான் போட்டுக் கொன்று வருகின்றார். இன்று எட்டாவது குழந்தை பிறக்கும் நாள்.
36
 

கங்கையின் மைந்தன் அகளங்கள்
தலை,அமை:
தளபதி:
தலை,அமை.
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
தளபதி எட்டாவது வாரிசு இறக்கக் கூடாது. எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.
நானும் அதற்காகவே தான் வந்தேன். மன்னருக்கு வாரிசு தேவையில்லாமலிருக்கலாம். ஆனால் இந்தச் சந்திர குலத்துக்கு ஒரு இளவரசு தேவை. அதோ. அதோ. அரசியார் தான் வருகிறார் போல்த் தெரிகிறது. குழந்தையைப் பறித்தெடுக்க வேண்டும். முகமூடியை அணிந்து கொள்ளுங்கள். ܝ
தளபதி சற்று நிதானமாக இரும். பதட்டம் வேண்டாம். அரசி பகீரதிதான் வருகிறார். சந்தேகமில்லை. அவரின் பின்னால் ஒருருவம் விரைந்து வருவதுபோல்த் தெரிகிறது. சற்று மறைந்து நின்று பார்ப்போம்.
(சந்தனு வேகமாக வந்து பகீரதிக்கு முன்னால் வழிமறித்து நிற்கிறான்)
(கோபமாக) நீயென்ன பெண்ணா? அல்லது பேயா? இரக்கமற்ற அரக்கிகள் கூட இப்படிச் செய்ததில்லை. ஒன்றா இரணி டா ஒவி வொன் றாக எண் ஏழு குழந்தைகளையும் ஆற்றில் எறிந்து கொன்று விட்டாயே. பாவி உன் அங்க அழகிலே மயங்கி விஷத்தை விழுங்கிக் கொண்டிருந்த என் அறியாமையால், என் மதிப்பும் மாண்பும் பழிக்கப்பட்டன. எண் மகிழ்ச்சியும், நிம்மதியும் அழிக்கப்பட்டன. தான் பெற்ற குழந்தைகளையே கொன்று தீர்க்கும் பட்டத்தரசிகளை இக்குவலயம் என்காலத்தில்தான் காண்கிறது. பாவி.படுபாவி.
மன்னரே நிதானம் இழக்க வேண்டாம். வார்த்தைகளின் வீச்சு, வாள்வீச்சிலும் வலிமையானது. அளந்து பேசுங்கள்.
(கோபமாக) நீ பெண்ணாக இல்லாதிருந்திருந்தால், உன் னை எண் உடை வா ளாலேயே வெட் டிக் கொன்றிருப்பேன். உன்மேல் நான் வைத்த அளவு கடந்த அன்பு என்னை இப்படிப் பாவியாக்கி விட்டிருக்கிறது. நீ ஏன் இப்படிச் செய்கிறாய். எந்தப் பழிதீர்க்க நீ இங்கு
37

Page 21
கங்கையின் மைந்தன் அகளங்கன்
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
வந்தாய். யார் உன்னை இப்பாவச் செய்கைக்குத் தூண்டினார்கள். சொல் பகீரதி. சொல்.
மன்னருக்கு மீண்டும் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
(கனிவாக) இன்னும் சரியாகக் கண்விழிக்காது இன்பக் கனவு காணும் இப்பிஞ்சுக் குழந்தை உனக்கு என்ன கொடுமை செய்தது சொல். இந்தக் குழந்தையையாவது என் கையில் தந்துவிடு. உன் அரக்கத்தனத்திற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிடு. உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். உனது மணவாளன் என்ற முறையிலல்ல, மன்னன் சந்தனு என்ற முறையிலுமல்ல, அஸ்தினாபுரத்து அரசு உன் காலடியில் மண்டியிட்டுக் கதறுவதாக நினைத்துக் கொள். இக்குழந்தையைக் கொல்லாதே, கொடுத்துவிடு.
மன்னரே அமைதியடையுங்கள். இக்குழந்தையை நான் கொல் லப் போவதில் லை. உங்கள் கையிலேயே ஒப்படைக்கப் போகிறேன்.
கொஞ்சமாவது மனம் இரங்கினாயே. 6) T....... அரண்மனைக்குச் செல்வோம்.
மன்னரே! இனி நான் உங்களோடு வரப்போவதில்லை. எப்போது நீங்கள் சத்தியத்தை மீறினீர்களோ, அப்போதே எனக்கும் உங்களுக்கும் இடையேயிருந்த திருமண பந்தம் அறுந்துவிட்டது.
பகீரதி!. நீ. என்ன சொல்கிறாய்.
நான் என்ன செய்தாலும் ஏன் என்று கேட்டுத் தடுப்பதில்லை என்ற சத்தியத்தைச் செய்து தான் என்னை மணந்தீர்கள். இன்று அச்சத்தியத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டீர்கள். அதனால் நான் உங்களை விட்டுப் பிரியப் போகிறேன்.
(சோகமாக) பகீரதி நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா, என்னை மன்னித்துவிடு. என்னை மன்னித்துவிடு. புத்திர பாசத்தால் சத்தியத்தை மீறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு.
38
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
பகீர தி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
மன்னரே! மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் விதிப்படிதான் நடந்திருக்கிறது.
(ஆச்சரியமாக) நீ என்ன சொல்கிறாய்.
நான் சாதாரண பெண்ணல்ல. கங்கா நதி, பிரம்மதேவரின் சாபத்தினால் பெண்ணுருவாகி வந்து இப்படி நடந்து கொண்டேன். என்னால் கங்கையாற்றில் எறிந்து கொல்லப்பட்ட நம் ஏழு குழந்தைகளும் சாதாரண பிறவிகளல்ல. அட்டவசுக்களில் எழுவர். இக்குழந்தை எட்டாவது வசுவாகிய பிரபாசன்.
பகீரதி. ஏன் இப்படி நடந்தது.
வசிட்ட முனிவரின் சாபத்தினால் அட்டவசுக்கள் பூமியில் பிறக்கவேண்டி வந்தது. இனிக்கவலைப் பட்டுப் பயனில்லை. நான் வருகிறேன். (குழந்தையோடு நடக்கிறாள்)
பகீரதி குழந்தையையாவது தந்துவிட்டுச் செல்.
இவனைச் சிறந்த வீரனாக, விவேகியாக, அறிவாளியாக வளர்த்து, கட்டிளங்காளையாக உங்கள் கைகளில் ஒப்படைப்பேன். கவலையை மறந்து சென்று வாருங்கள்.
பகீரதி பகீரதி.
39

Page 22
கங்கையின் மைந்தன் அகளங்கள்
கங்கையின் மைந்தன்
-0)
இடம் : கங்கையாற்றங்கரை
பாத்திரங்கள் தேரோட்டி, சந்தனு, பகீரதி, பீஸ்மர்
தேரோட்டி : மகாராஜா பதினாறு ஆண்டுகளாக, அடிக்கடி இந்த ஆற்றங்கரைக்கு வருகிறீர்கள். தனிமையில் இருந்து கண்ணிர் வற்றும் வரையில் அழுதுவிட்டுத் திரும்புகிறீர்கள். இன்னும் தாங்கள் பட்டத்தரசியார் பகீரதி யாருக்காகக் கண்ணிர் விடுவது நியாயமா.
சந்தனு: தேரோட்டி எண் துயர வடுவின் ஆழத்தை நீ அறியமாட்டாய். நான் பகீரதியோடு வாழ்ந்த நாட்கள் தெய்வ நாட்கள் என்பதும் உனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்பொழுது அவளோடு வாழ்வதற்காக ஏங்கி அழுது காத்திருக்கவில்லை.
தேரோட்டி மகாராஜா மன்னிக்கவேண்டும். தாங்கள் அனுமதித்தால் நான் எனது அபிப்பிராயத்தைக் கூறுவேன்.
சந்தனு: தேரோட்டி உன்னை நான் வெறுந் தேரோட்டியாக மட்டும் நினைக்கவில்லை. என் அந்தரங்கங்களை அறிந்த ஒரு நல்ல நண்பனாகவே கருதுகிறேன். எதுவாயிருந்தாலும் சொல்.
தேரோட்டி நீங்கள் மறுமணஞ் செய்து, பாலைவனமாகி விட்ட உங்கள்
வாழி க கையைச் சோலை வனமாக மாற் றிக கொள்ளலாமல்லவா.
சந்தனு: நீ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளாமலிருக்கவும்
முடியவில்லை. அதேவேளை, என்னால் பகிரதியை
மறந்துவிடவும் முடியவில்லை. என்னுடலின் ஒவ்வொரு அணுவும் கூட அவளை நேசித்தன. (பெருமூச்சு)
தேரோட்டி வானத்து நட்சத்திரங்களைப் பிடித்துக் கையில் வைத்து
விளையாடுவோம் என்று பிரியப்படும் குழந்தையின்
40
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
சந்தனு:
១០:
சந்தனு:
பீஷ்மர்
சந்தனு:
பீஷ்மர்:
பகீரதி:
நிலைதான் உங்கள் நிலை.
தேரோட்டி நான் எனது மனைவிக்கு மட்டுமல்ல, மகனுக்காகவும் காத்திருக்கிறேன். என்பதை நீ அறியாயா. என்னைச் சற்று நேரம் தனிமையாக இருக்கவிடு.(தேரோட்டி செல்கிறான். பீஷ்மர் கையில் வில்லோடு வருகிறார்)
கங்கைக் கரையில் தனிமையில் அமர்ந்திருக்கும் இவர் யாராக இருக்கும். ராஜலட்சணம், இவரது தோற்றத்திலும் அலங் காரத்திலும் தென் படுகிறது. நான் கற்ற வில்வித்தையை இவரிடம் பரீட்சித்துப் பார்த்தால் என்ன. (தனக்குள்ளே மெதுவாகச் சொல்லிவிட்டு) யார் நீங்கள் (உரத்து)
LĎ. நீயார் என் தனிமையை ஏன் குழப்புகிறாய்.
எனக்குச் சொந்தமான கங்கைக் கரையில் இருந்து கொண்டு, என்னையா யாரென்று கேட்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு என் அம்புகள் தான் பதில் சொல்லும்.
மகனே! உனக்கு இந்தக் கோபம் ஆகாது. மீண்டும் சொல்கிறேன். என் தனிமையைக் குழப்பாதே. இந்தக் கங்கை நதி இமயமலையிலிருந்து ஊற்றெடுத்து ஒடுவதாக எண்ணாதே என் இதயத்திலிருந்துதான் ஊற்றெடுத்து ஒடுகிறது. சிறிது நேரம் நான் அழுதுவிட்டுச் செல்ல வேண்டும். உன்னைப் பார்த்தால் நல்ல பிள்ளையாகத் தென்படுகிறாய். நீ யாரென்று சொல்.
நான் யாரென்பதை என் வீரத்தினால் விளக்குகிறேன். இந்த மோகனாஸ்த்திரம் நான் யார் என்பதை உங்களுக்கு விளக்கும். (மோகனாஸ்திரத்தை எய்கிறார். சந்தனு மயங்குகிறார். பகீரதி ஓடி வருகிறாள்)
(அழுகிறாள்) மகனே! மகனே! என்ன காரியஞ் செய்தாய். தந்தையும் மகனும் உரையாடுங் காட்சியைக் கண்டு சிந்தை மகிழ்ந்து கொண்டிருந்தேனே. அதற்குள் ஏன் அம்பு தொடுத்தாய். இதற்குத்தானா உன்னை வளர்த்தேன். விதி, சதி செய்து விட்டது. மகனே! விதி சதி செய்துவிட்டது.
- 41

Page 23
கங்கையின் மைந்தனர் அகளங்கன்
பீஷ்மர்:
பகீரதி:
பீஷ்மர்:
சந்தனு:
பகீரதி:
சந்தனு:
பகீரதி:
பீஷ்மர்
பகீரதி:
சந்தனு:
பீஷ்மர்:
அம்மா! அம்மா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஏன் இப்படிப் புலம்புகிறீர்கள்.
இவர் தானடா உன் தந்தை சந்தனு மகாராஜா.
அழாதீர்கள் அம்மா. அழாதீர்கள். நான் செலுத்தியது மோகனாஸ்திரம். விளையாட்டாகத்தான் அதைச் செலுத்தினேன். இன்னும் சிறிது நேரத்தில் அவர் சுய நினைவு பெற்றுவிடுவார். கவலைப்படாதீர்கள்.
(மயக்கந் தெளிந்து) நான் காண்பது கனவல்லவே. பதினாறு ஆண்டுகளின் பின் இன்றுதான் என்கண்கள் உன்னைப் பார்க்கும் பாக்கியம் பெற்றுள்ளன. வா. அஸ்தினாபுரம் செல்வோம். அரியணையில் நீ இருந்த இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
மன்னிக்கவேண்டும் மகாராஜா. அது முடிந்து போன பழைய நாடகம். இதோ புதிய நாடகத்தின் புதிய கதாநாயகன். இவன் உங்கள் மகன். தேவவிரதன்.
மகனே! உன் னை யாரெனி று அறியாமல் இருந்துவிட்டேனே. வா இங்கே, (கட்டித் தழுவுகிறார்)
இவன் பார்க்கவ முனிவரிடமும் பரசுராமரிடமும் வில்வித்தை கற்றவன். தேவகுரு கிருகஸ்பதியிடம் அரசியல் கற்றவன். பிரம்மரிசி வசிட்டரிடம் அறங்களைக் கற்றவன். அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் சுக்கிரநீதி அறிந்தவன். இவனை அழைத்துச் செல்லுங்கள். என்னை மறந்து விடுங்கள். (பகிரதி செல்கிறாள்)
அம்மா! அம்மா! என்னை விட்டு எங்கே செல்கிறீர்கள்.
மகனே! நீ உன் தந்தையுடன் செல். உனக்காக இந்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. அஸ்தினாபுரத்து அரசை, ஆலம் விழுதைப் போல் நீ காப்பாற்றியாக வேண்டும். நான் வருகிறேன் கலங்காதே.
 

கங்கையின் மைந்தன் அகளங்கள்
S Lib
கங்கையின் மைந்தன்
காட்சி - 04
: யமுனை ஆற்றங்கரை, ஆறு, குடிசை
பாத்திரங்கள் : சந்தனு, தேரோட்டி, சத்தியவதி, தாசராஜன்
சந்தனு:
தேரோட்டி:
சந்தனு:
தேரோட்டி:
தேரோட்டி:
சந்தனு:
தேரோட்டி! இந்த யமுனை ஆற்றங்கரை, இன்று வழமையிலும் புதுப்பொலிவு பெற்றுத் திகழ்வதாகத் தெரிகிறதல்லவா.
அரசே யமுனை ஆற்றங்கரையில் விசேடம் ஒன்றுமில்லை. தாங்கள் தான் இன்று குதூகலமான மனநிலையில் இருக்கிறீர்கள். அதனாற்தான் காணுகின்ற காட்சிகள் எல்லாம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.
உண்மைதான் தேரோட்டி, மனித மனம் என்பது ஆண்டவனின் அற்புதமான படைப்பு. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது உலகம் முழுவதும் இன்பமயமாக இருக்கிறது. உலகம் முழுவதும் தனக் காகவே படைக்கப்பட்டது போன்ற இன்ப உணர்வு தோன்றுகிறது. மனத்தில் துன்ப இருள் சூழும் போது சிருஷ்டி கர்த்தாவிலேயே வெறுப்பு ஏற்படுகிறது.
அரசே! உங்கள் ஆனந்தத்தை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.
உண்மைதான், பகீரதி புத்திரன், கங்கையின் மைந்தன் தேவவிரதன் என்னோடு வந்து சேர்ந்த பின்பு என் கவலைகள் எல்லாம் காற்றோடு காற்றாகப் பறந்து போய்விட்டன.
தங்களுக்குச் சிறந்த வாரிசு கிடைத்திருக்கிறது. இந்தத் தரணிக்குச் சிறந்த இளவரசர் கிடைத்திருக்கிறார்.
(பெருமிதமாக) தேரோட்டி அஸ்த்தினாபுரத்து எல்லைகள் எல்லாம் என்மகனின் வீரத்தினால் விஸ்தரிக்கப்பட்டு
43

Page 24
கங்கையின் மைந்தன்
d o c
தேரோட்டி:
சந்தனு:
♔(jT്റ്റൂ:
சந்தனு:
சத்தியவதி:
சந்தனு:
சத்தியவதி:
சந்தனு:
சத்தியவதி:
சந்தனு:
சத்தியவதி:
பலப் படுத் தப் பட்டுள்ளன. அஸ் தினாபுரத் துக் கு அடங்காதிருந்து தொல்லை கொடுத்து வந்த சில அயல்நாட்டு இராச்சியங்களை அடிபணிய வைத்திருக்கிறான் என் மகன். என் மகனின் மூலமாக நான் பிறந்த ராஜபரம்பரை, சந்திரகுலத்துச் சத்திரிய வம்சம், பெரும் புகழ்பெறுகிறது. எனது மகனின் ஆட்சிக் காலம் எனது காலத்தைவிட மிகச் சிறப்பாக அமையும்.
இளவரசரின் வீரமும், விவேகமும், ஒழுக்கமும் , எல்லோராலும் போற்றப்படுகின்றன அரசே,
(b......... மூக்கினால் முகர்ந்து பார்த்து ம். LĎ.......... ) இது என்ன வாசனை. எங்கிருந்து வருகிறது. ம். பரிமளவாசனை. ஆகா. திவ்வியமாக இருக்கிறதே.
ஆம் அரசே! பரிமளவாசனைதான். நிச்சயமாக, அது எங்கிருந்து வருகிறது.
ஆ. யாரங்கே ஆற்றங்கரையில் ஒருருவம் தெரிகிறதே. பெண். என் பகீரதிதானோ. ஆனால். ஆனால் யமுனை ஆற்றங்கரையில் எப்படி அவள் வந்தாள். பகீரதி. பகீரதி. (விரைந்து செல்கிறான்)
தாங்கள் யார். நான். பகீரதி அல்ல
என் பகீரதியின் அதே முகச் சாயல் பரிமள வாசனை
இங்கிருந்துதான் வீசுகிறது. ம். LĎ......... (முகர்ந்து கொண்டே) பெண்ணே நீ யார்?
நான் பரதவர் தலைவன் தாசராஜனின் மகள் சத்தியவதி. இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்வோரைப் படகில் ஏற்றிச் செல்வது என் குலத்தொழில்.
சத்தியவதி உன் படகில் என்னையும் ஏற்றிச் செல்வாயா.
flå-gu ILDTæ.
உன் வாழ்க்கைப் படகில்
இது என் தந்தையிடம் கேட்க வேண்டிய கேள்வி.
44

கங்கையின் மைந்தன் அகளங்கன்
சந்தனு:
சத்தியவதி:
:
சத்தியவதி:
தாசராஜன்:
தேரோட்டி:
தாசராஜன்:
சந்தனு:
தாசராஜன்:
(&g(3]T_Q:
தாசராஜன்:
(335(3TTL.9:
தாசராஜன்:
சந்தனு:
சரி. என்னை உன் தந்தையிடம் அழைத்துச் செல். அவரிடமே கேட்டுவிடுவோம். தேரோட்டி படகில் ஏறிக்கொள் (படகில் செல்கின்றனர்) இந்தப் பரிமள வாசனை எங்கிருந்து வீசுகிறது.
என் உடம்பில் இருந்துதான்.
ஆச்சரியமாக இருக்கிறதே.
இது பராசர முனிவரின் கொடை (ஆற்றைக் கடந்து கரையேறுகின்றனர்) அப்பா! அப்பா! இவர்கள் உங்களைக் காண வந்திருக்கிறார்கள்.
வணக்கம். வாருங்கள். அமருங்கள். நீங்கள்.
அஸ்த்தினாபுரத்து அரசர் சந்தனு மகாராஜா.
மகாராஜா தங்கள் பாதம் பட இச்சிறு குடில் பெரும் பாக்கியஞ் செய்திருக்கிறது. எங்கள் பரதவர் குலமும் புனிதமடைந்தது.
அது உணர் மை யானா ல எண் அரியனையும் புனிதப்படுத்தப்பட வேண்டும்.
உங்கள் பேச்சு எனக்கு விளங்கவில்லை மகாராஜா.
நேரடியாகவே சொல் கிறோம். உங்கள் மகளை,
அஸ்த்தினாபுரத்து அரியணையில் பட்டத்தரசியாகப் பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் மன்னர்.
அது நாங்கள் செய்த பாக்கியம். மீன் பிடித்து வாழும் எங்கள் பரதவர் குலத்துப் பெண்ணொருத்தி இப்பாராளும் மன்னனின் பட்டத்தரசியாவது பெரும் பாக்கியந்தான். ஆனாலும்,
இடையில் இந்த ஆனாலும் என்ற வார்த்தைக்கு அவசியமே இல்லையே.
எண் மகள் பட்டத் தர சியா கி ஆகப் போவது ஒன்றுமில்லையே.
உங்கள் பேச்சு எனக்குப் புதிராக இருக்கிறது.
45

Page 25
கங்கையின் மைந்தன் அகளங்கன்
தேரோட்டி:
தாசராஜன்:
சந்தனு:
தாசராஜன்:
தேரோட்டி:
தாசராஜன்:
சந்தனு:
தாசராஜன்:
சந்தனு:
அஸ்தினாபுரத்து அரியணையில் தங்கள் இளவரசிகளை இருத்துவதற்கு எத்தனை அரசர்கள் தவமிருக்கிறார்கள். அப்படியிருக்க, மன்னரே மனம் விரும்பிக் கேட்ட பின்பும், ஆகப் போவது என்ன என்று அக்கறையில்லாமல் சர்வ சாதாரணமாகக் கூறுகிறீர்களே.
வேறொன்றுமில்லை. என் மகள் பட்டத்தரசியாகி விடுவாள். ஆனால் அவளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளும் பரம்பரையும் என்ன செய்யப் போகின்றன.
இன்னும் உங்கள் கேள்வி புதிராகத்தான் இருக்கிறது.
பெருஞ் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு வெறுஞ் சாதாரணனாகிய நான் புதிர்போட விரும்பவில்லை. தங்கள் மகன் தேவவிரதன் இளவரசனாக இருக்கும் பொழுது என் மகளுக்குப் பிள்ளை பிறந்து ஆகப் போவது என்ன.
(கோபமாக) நீங்கள் என்ன வார்த்தை பேசுகிறீர்கள். இளவரசர் தேவ விர தருக்கு என ன குறை , அறிவுஆற்றலிலும், ஒழுக்க மேம்பாட்டிலும், வீரத்திறனிலும் அவருக்கு நிகரானவர் இந்த அகிலத்தில் யார் இருக்கிறார்கள்.
ஆத்திரப்படாதீர்கள் . இளவரசருக்கு இருக்கும் தகுதிகள்தான் எங்களுக்கு இருக்கும் குறைகள். என் மகளுக்குப் பிறக்கப் போகும் மகன் அஸ்த்தினாபுரத்து அரசனாக ஆக்கப்படுவான் என்ற உறுதிமொழியை நீங்கள் தந்தால், எண் மகளை இப்பொழுதே அழைத்துச் GEF6)6)6) Tub.
தேரோட்டி. பேச்சை வளர்த்துப் பயனில்லை. வா. நாங்கள் செல்கிறோம்.
சென்று வருகிறோம் என்று சொல்லுங்கள். அரசே,
இல்லை. அந்த வார்த்தைக்கு அவசியமே இல்லை. நாங்கள் செல்கிறோம்.
口 口 口
46
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
கங்கையின் மைந்தன்
EITT F -- O5
: தனியிடம்
பாத்திரங்கள் : பீஷ்மர், தேரோட்டி
தேரோட்டி:
பீஷ்மர்
தேரோட்டி:
பீஷ்மர்:
தேரோட்டி:
பீஷ்மர்:
தேரோட்டி:
பீஷ்மர்
தேரோட்டி:
பீஷ்மர்:
(பீஷ்மரின் பக்கத்தில் நடந்து வந்து கொண்டே) இளவரசே! தாங்கள் என்னைத் தனியாக அழைத்து வந்த காரணம்.
வேறொன்றுமில்லை. சில அந்தரங்கமான விடயங்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இளவரசே! அந்தரங்கமானது என்று சொல்லிவிட்டு, கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று நீங்கள் சொல்வது மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
இது அரசியல் சம்பந்தமான அந்தரங்கமல்ல. என் தந்தை சம்பந்தமான அந்தரங்கம்.
இளவரசே! உங்கள் தந்தை என்பவர் தனிமனிதரல்லர். இந்தச் சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தி.
பெரிதாக ஒன்றுமில்லை. கடந்த சில நாட்களாக என் தந்தையார் மிகவும் கவலையாக இருக்கிறார். அதன் காரணம் நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இளவரசே! மன்னிக்க வேண்டும். நீங்களே உங்கள்
தந்தையாரிடம் கேட்டிருக்கலாமே.
நான் பலதடவை பலவிதமாகவும் கேட்டுவிட்டேன். ஆனால் எனக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. அதனாற்தான் உங்களைக் கேட்கிறேன்.
இளவரசே! மன்னர் சம்பந்தப்பட்ட இரகசியம் எதுவாக இருப்பினும் அதனை வெளியிடுவது அவரது தேரோட்டியான எனது தேரோட்டுந் தர்மத்திற்கு அழகல்ல.
என் தந்தையாரின் அந்தரங்கங்கள் அனைத்தையும்
47 -

Page 26
கங்கையின் மைந்தன் அகளங்கன்
தேரோட்டி:
பீஷ்மர்
தேரோட்டி:
பீஷ்மர்
தேரோட்டி:
பீஷ்மர்:
தேரோட்டி:
அறிந்தவர் நீங்கள் என்ற காரணத்தினாற்தான் உங்களிடம் கேட்கிறேன். உங்கள் பதிலிலிருந்து, என் தந்தையாரின் கவலைக்குரிய காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். எனவே தயவு செய்து மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்.
இளவரசே! நீங்கள் கற்ற கல்வியையும், உங்கள் தந்தையாரின் மேல் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பையும் அஸ்த்தினாபுர அரசின்மேல் நீங்கள் வைத்திருக்கும் நேசத்தையும் நம்பி உண்மையை ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன்.
சொல்லுங்கள். என்னுயிரை விலையாகக் கொடுத்தேனும் என் தந்தையின் கவலையைப் போக்குவேன்.
யமுனை ஆற்றங்கரையில் இருக்கும் பரதவர் குலத் தலைவன் தாசராஜனின் மகள் பரிமளகந்தி என அழைக்கப்படும் சத்தியவதியை மன்னர் சந்தித்தார். மணந்து கொள்ள விரும்பினார். ஆனால்.
என்ன தடை சொல்லுங்கள். என்ன தடை
இளவரசே! நான் தேரோட்டி எனக்கும் சில தர்மங்கள் இருக்கின்றன. என்னை வற்புறுத்தாதீர்கள்.
சரி, நான் உங்களை வற்புறுத்தவில்லை. என்னைத்
தாசராஜனிடம் அழைத்துச் செல்லுங்கள்.
நிச்சயமாக. இப்பொழுதே செல்வோம்.
48

கங்கையின் மைந்தன் அகளங்கன்
SLib
கங்கையின் மைந்தன்
காட்சி - 06
: தாசராஜனின் குடிசை
பாத்திரங்கள் : தாசராஜன், பீஷ்மர்
தாசராஜன்:
பீஷ்மர்:
தாசராஜன்:
பீஷ்மர்:
தாசராஜன்:
பீஷ்மர்
தாசராஜன்:
பீஷ்மர்:
தாசராஜன்:
(பீஷ்மர் வருகிறார்) வாருங்கள். வாருங்கள். தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?
நான். அஸ்த்தினாபுரத்து இளவரசன். சந்தனு மகாராஜனின் ஒரே புதல்வன். தேவவிரதன்.
வணக்கம். உங்கள், வரவு நல்வரவாக அமையட்டும். உங்கள் தந்தையாரை எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
விசித்திரமான வழக்கந்தான், என்றாலும், தந்தையின் கவலையைப் போக்குவது மைந்தனின் கடமையல்லவா.
நீங்கள் வந்த விடயம் என்னவென்று தெரிகிறது. எனது நிபந்தனைக்கு மன்னர் கட்டுப்பட்டால், மன்னரின் கவலையைப் போக்க நான் தயார்.
மன்னரால் வாக்குத்தர முடியாதபடி அப்படி என்ன நிபந்தனையை விதித்தீர்கள்.
உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன், சரி, சொல்கிறேன். என் மகள் சத்தியவதியைச் சந்தனு மகாராஜா, அதாவது உங்கள் தந்தையார் மணந்து கொள்வதாக இருந்தால், என் மகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அஸ்த்தினாபுரத்து அரசுரிமை என்று எனக்கு வாக்குத் தரவேண்டும்.
(சிரிப்பு) இந்த நிபந்தனையை மன்னரால் எப்படித் தரமுடியும். இளவரசுப் பட்டம் பெற்றவனாக, மூத்தவனாக நான் இருக்கும் போது அவரால் எப்படி அந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு வாக்குத் தரமுடியும்.
(பயந்து) நீ.ாங்.கள் என்ன சொல்கிறீர்கள்.
49

Page 27
கங்கையின் மைந்தன் அகளங்கன்
பீஷ்மர்:
தாசராஜன்:
56.9LDj:
தாசராஜன்:
பீஷ்மர்:
தாசராஜன்:
ເກີດຢູ່Dj;
அசரீரி:
உங்கள் மகளுக்குப் பிறக்கும் மைந்தனே அரசனாவான். எக்காரணங் கொண்டும் நான் அரசுரிமையில் பங்கு கொள்ள மாட்டேன். இது சத்தியம். இனி என்ன தடை இருக்கிறது.
இருக்கிறது. தாங்களோ பெரும் வீரர். பரசுராமரிடம் வில்வித்தை கற்றவர். அஸ்த்தினாபுர இராச்சியத்தை விஸ்தரிப்பதில் பெரும் பங்கு கொண்டு உரிமை பூண்டவர்.
என்ன அதனால். என்று சொல்லி நிறுத்திவிட்டீர்கள். சொல்லுங்கள்.
பிரச்சினை இத் தோடு முடிவடையவில் லையே. சிங்கத்திற்குப் பிறப்பது சிங்கக் குட்டியாகத் தானே இருக்கும். சிங்கம் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், சிங்கக் குட்டி வளர்ந்ததும் காட்டு ராச்சியத்தைத் தானே கைப்பற்றிக் கொள்ளுமல்லவா.
நான் நேரடியாகவே சொல்கிறேன். உங்கள் மகனோ, பரம்பரையில் வருபவர்களோ இழந்த அரசுரிமையை மீண்டும் பறித்தெடுக்க மாட்டார்கள் என்று எப்படி நம்புவது.
(சிரிப்பு) இதோ மிகவும் கடுமையான ஒரு சபதத்தை, பீஷ்ம சபதத்தை நான் செய்கிறேன். முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, மூவுலகவாசிகள் சாட்சியாக, சப்த ரிஷிகள் சாட்சியாக விண்ணும் மண்ணும் சாட்சியாக சந்திர சூரியர்கள் சாட்சியாக, மும்மூர்த்திகள் சாட்சியாக இச் சபதத்தைச் செய் கிறேன் . நான் நித்தியப் பிரம்மச்சாரியாகவே என் வாழ்க்கையை முடிப்பேன். எனக்கு இம்மண்ணில் சந்ததியே இருக்காது. இது சத்தியம். (உரத்துச் சொல்லி தாசராஜனின் கையில் அடிக்கிறார்)
பீஷ்மன் பீஷ்மன் பீஷ்மன் (எல்லா இடங்களிலுமிருந்து பீஷ்மன் என்ற ஒலி எழுகிறது)
முற்றும்
50

வாலி
பாத்திரங்கள்
இராமன்
இலக்குவன்
வாலி
சுக்கிரீவன்
அனுமான்
அங்கதன்
தாரை
51

Page 28
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
வாலி
காட்சி - 01
; கிஷ்கிந்தை மலையடிவாரம்.
பாத்திரங்கள் : இராமன், இலக்குவன், சுக்கிரீவன்.
காலம்
இராமன்:
சுக்கிரீவன்;
இராமன்:
சுக்கிரீவன்:
இராமன்:
சுக்கிரீவன்:
: 35606)
(முவரும் நடந் துவந்து நிற் கறார்கள் . இராமனும், இலக்குவனும் வில், அம்பறாத் ஆாணி என்பவற்றைத் தாங்கியிருக்கின்றனர். சுக் கரீவன் வெறுங் கையோடு நிற்கிறான். )
சுக்கிரீவ ராஜனே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் நன்றாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
சொல்லுங்கள் இராமச் சந்திரமூர்த்தி. தாங்கள் காலால் இட்டதை நான் தலையாற் செய்யக் காத்திருக்கின்றேன்.
ஆம், நான் நன்றாக ஆலோசித்து எடுத்த முடிவு இதுதான்.நீ வாலியை அறை கூவிப் போருக்கழைத்து அவனோடு யுத்தஞ் செய்.
(பயந்தபடி) வா. 6 UT. . . . . . . . . . வாலியோடு நா. bfT............. நான் யுத்தஞ் செய்வதா.
கலங்காதே சுக்கிரீவனே. கலங்காதே. ஈரேழு
பதின்நான்கு உலகத்திலுமுள்ள சர்வ ஜீவராசிகளும் வாலிக்கு உதவியாக வந்தாலும் நான் அவனைக் கொல வேனி - கிஷ் கிந் தை ராச்சியத் தையும் உண்மனைவியையும் மீட்டுத் தருவேன். இது சத்தியம்.
தங்கள் வல்லமையில், நான் இனியும் சந்தேகம் கொள்வேனா, ஏழு மராமரங்களையும் துளைத்துச் சென்ற உங்கள் இராமபாணம், வாலியின் மார்பை நிச்சயம் துளைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இராமன்:
சுக்கிரீவன்;
இராமன்:
சுக்கிரீவன்:
இராமன்:
சுக்கிரீவன் :
தயங்காதே சுக்கிரீவா, சொல்
தயக்கம் ஒன்றுமில்லை. கலக்கம் தான் உண்டு. வாலியோடு நான் போர்செய்வது தற்கொலைக்குச்
சமனானது.
உன் அச்சம் நியாயமானதுதான். நீ வாலியை அழைத்துப் போர் செய்யும் போது நான் மறைந்து நின்று அம்பெய்து கொடிய விஷம் போன்ற வாலியைக் கொல்வேன். நீ தாமதிக்காமல் வாலியை அழைத்துப் போர் செய்.
நீங்கள் துணையிருக்க நான் ஏன் அஞ்சப் போகின்றேன். உங்கள் யோசனை மிகவும் நல்ல யோசனை. தொலைந்தான் வாலி. இராமபாணத்துக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய மார்பு எந்த உலகத்திலும் கிடையாது.
சரி. நாங்கள் இந்தப் பெரிய மரத்தின் பின்னால் மறைந்து நிற்கிறோம். நீ வாலியின் கோபத்தைக் கிளறி இங்கே வரச்செய்து அவனோடு யுத்தஞ் செய். (இராமனும் இலக் குவனும் மரத்தின் பின் னால் மறைந்து கொள்கின்றனர்.)
நல்லது. இப்பொழுதே அவனை இங்கு வரச் செய்கிறேன். (உரத்து) வாலி வாடா வெளியே! நீ வீரனென்றால், உனக்குத் தைரியமிருந்தால் இப்போது இங்கு வந்து என்னோடு போர்செய் பார்க்கலாம். என் மனைவியையும் அபகரித்து, என்னையும் அடித்துத் துரத்திய நீ இன்று வீட்டுக்குள்ளே கோழைபோல் ஒளிந்து கிடக்கிறாயா, இன்றோடு நீ ஒழிந்தாய். பழிக்குப் பழி வாங்க வந்திருக்கும் என் கையில் நீ பலியாகப் போகின்றாய். நீ வீரனென்றால் விரைந்து வா.
53

Page 29
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
வாலி
காட்சி - O2
: வாலியின் அரண்மனை
பாத்திரங்கள் : வாலி, தாரை
காலம்
வாலி:
தாரை:
வாலி:
தாரை:
வாலி:
: 35F60}}6N)
(சுக்கிரீவனின் சத்தம் கேட்கிறது. வாலி நித்திரை விழித்து எழுகிறான்)
(பயங்கரமாகச் சிரித்தல், எழுந்து கோபா வேசமாக நிற்கிறான். சுக்கிரீவனின் அறை கூவல்ச் சத்தம் கேட்கிறது)
ஏய் சுக்கிரீவா!. இதோ வந்தேன். வந்தேன். என்னை யாரென்று நினைத்தாய். என்ன தைரியமிருந்தால் என் ராச்சியத்திற்குள் வந்து என்னையே அறைகூவிப் போருக்கழைப்பாய். நீ வாலியைப் போருக்கழைக்கவில்லையடா. உன் வலியழித்து உயிர்க் குடிக்கும் இயமனைத்தான் போருக்கழைக்கின்றாய். இதோ வந்துவிட்டேன். வந்துவிட்டேன். சிங்கத்தின் குகைவாசலில் வந்து நின்று மதயானை முழக்கமிட்டது போலிருக்கிறது உன் செயல். இனி நீ தப்பவேமாட்டாய். (கைகளால் தொடையிலும் தோளிலும் தட்டிக் கொண்டு புறப்படுகிறான்.)
சுவாமி. இது என்ன கோலம். ஏனிந்தக் கோபம். (வழியில் நிற்கிறாள்)
தாரை, எங்கு செல்கிறேன். ஏன் செல்கின்றேன் என்று கேட்காதே. ஒரு சிறு பொழுதுக்குள் திரும்பி வந்து சொல்கிறேன். இப்போது வழியை விடு. தடுக்காதே.
(சுக்கிரீவனின் அறைகூவல்ச் சத்தம் கேட்கிறது. வாலி கோபமாகச் சிரிக்கிறான்.) கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள்.
கேட்டாயா பெண்ணே அந்தக் கேலிப் பேச்சை என்னிடம்
அடிபட்டு, உதைபட்டு, மானம் இழந்து, மதிப்பிழந்து,
54

கங்கையின் மைந்தன் அகளங்கன்
தாரை:
வாலி:
தாரை:
வாலி:
தாரை:
வாலி:
தாரை:
வாலி:
தாரை:
உயிர்பிழைத்தால் போதுமென்று தப்பியோடி, என்னால் செல்லப்பட முடியாத சாப எல்லை கொண்ட மதங்க முனிவரின் இரலையங்குன்றுக்குச் சென்று, செத்தவன் போல இருந்த சுக்கிரீவன், மதியிழந்தவனாய் இன்று என் நாட்டுக் குள் வந்து என னையே அறைகூவிப் போருக்கழைக்கும் சத்தத்தைக் கேட்டாயா பெண்ணே. (885 Lust.
சுவாமி! அதைப்பற்றிப் பேசத்தான் வந்தேன். கொஞ்சம் பொறுங்கள். -
அன்புக்குரியவளே! அகன்றுவிடு. இவ்விடத்தைவிட்டு என்னை அறைகூவிப் போருக்கழைத்த சுக்கிரீவனின் உடலைக் கலக்கி, அவனது இனிய உயிரைக் குடித்துவிட்டு, விரைவில் வந்து உண்னோடு உரையாடுவேன். இப்போது விலகி நில். மலைக்குல மயிலே மறிக்காதே என்னை.
சுக்கிரீவன், முன்பு தங்களிடம் தாங்கொணா அடிபட்டுத் தப்பியோடி உயிர் பிழைத்தவன். உங்கள் ஆற்றலின் முன்னால் அணுப்பொழுதுகூடத் தன் உயிர் காக்கும் அருகதையில்லாதவன். இது உலகம் அறிந்த உண்மை.
அப் படியிருக்க அந்த மூடனி ஏன் என் னைப் போருக்கழைக்கிறான்.
அதைத்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
(சுக்கிரீவனின் அறைகூவல் கேட்கிறது) பெண்ணே! சிந்திப்பதற்கு நேரமில்லை. முதலில் அவனைக் கொன்றுவிட்டு வருகிறேன். அதன்பின் ஆறுதலாகச் சிந்திப்போம்.
சுவாமி சுக்கிரீவன் புதுப்பலம் பெறவுமில்லை. புதுப்பிறவி எடுக்கவும் இல்லை. அப்படியிருக்க அவன், தானே வலிந்து உங்களைப் போருக்கழைப்பதிலே ஒரு சூழ்ச்சி இருக்கிறது.
(சிரிப்பு) சூழ்ச்சி (சிரிப்பு) என்ன சூழ்ச்சி.
அவனுக்குச் சிறந்த துணை கிடைத்திருக்கிறது.
55

Page 30
கங்கையின் மைந்தன் அகளங்கன்
6ulT65ી:
தாரை:
வாலி:
தாரை:
வாலி
தாரை:
வாலி:
அதனாற்தான் போருக்கழைக்கிறான்.
துணை, (சிரிப்பு) அன்புக்குரியவளே! ஒன்று சொல்கிறேன் கேள். இந்த மூவுலகத்திலுமுள்ள முடிவில்லாத ஜீவராசிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, எனக்கெதிராக யுத்தஞ் செய்ய வந்தாலும் அவையெல்லாம் என்னிடம் தோல்வியுற்றுத் தொலைந்து அழியும் என்று நான் சொன்னால் அது தற்பெருமையான வாசகம் என்று நினைப்பாயா. அதற்குச் சான்றுகள் பலவுண்டு பெண்ணே. சான்றுகள் பலவுண்டு.
உண்மைதான். இருந்தாலும்.
பெண்ணே மந்தர நெடுமலையை மத்தாக நட்டு, வாசுகிப் பாம்பைக் கடைகயிறாகக் கட்டி, சந்திரனைத் தூணாக நிறுத்தி, மகாவிஷ்ணுமூர்த்தி அடைகல்லாய்க் கிடக்க, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைய முற்பட்டார்களே, உனக்குத் தெரியுமா பெண்ணே, அவர்களால் மலையை அசைக்கவும் முடியவில்லையே, அவர்கள் சோர்ந்து போனதைக் கண்டு, அவர்களை விலக்கிவிட்டு, நானொருவனே தன்னந் தனியாகக், கடைகயிறை இழுத்துத், தயிர் கடைவது போலப் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைக் கொடுத்தேனே. அதை மறந்து விட்டாயா தாரை. மறந்துவிட்டாயா.
யாரால் தான் மறக்க முடியும் அந்தச் சம்பவத்தை. ஆனால். (தயங்கி)
என்ன ஆனால், என்னோடு போர் செய்து தோற்றவர்கள் யார் யார் என்று பட்டியலிட்டால், சொல்லி முடியுமா. ஒன்று சொல்கிறேன் கேள். கூற்றுவன் கூட என் பெயரைத் தன் வாயாற் கூற நடுங்குவான். யாராவது கூறினாலும் கேட்க நடுங்குவான். அப்படியிருக்க என்னை யார் என்ன செய்துவிட முடியும்.
இருப்பினும், சிறந்த வலிய நம்பிக்கைக்குரிய துணை கிடைத்ததாற்தான் சுக்கிரீவன் போருக்கழைக்கிறான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
(சிரிப்பு) துணை. என்ன பெரியதுணை. யார்

கங்கையின் மைந்தன் அகளங்கள்
தாரை:
வாலி:
தாரை:
வாலி:
துணையாக வந்தால் எனக்கென்ன. எவரும் எனக்கு இணையா வார்களா எண் முன் னால் வருபவன் எவனாயிருந்தாலும் அவனது பலத்திற் பாதியும், வரத்திற் பாதியும் என்னுடையதாகிவிடுமே. சிவபெருமானிடம் நான் பெற்ற வரத்தின் மகிமையே அதுதானே. பின் எப்படி என்னை எவனாவது எதிர்க்க முடியும். அறிவு கெட்டவன் தான் தன் அழிவுக் காலத்தில் வந்து எதிர்ப்பான். விளக்கிலே, வலிய வந்து வீழ்ந்து இறந்து போகும் விட்டிற் பூச்சிபோல் அழிந்து போவான். இனியும் விளக்கம் தேவையில்லை. என்னை விலக்காதே. போகவிடு.
சுக்கிரீவனுக்குத் துணையாகி உயிர்நட்புப் பொருந்தி, இராமன் என்பவன் உங்கள் உயிரைக் கவர்வதற்காக வந்துள்ளதாக என்மேல் மிகவும் அன்புடையவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
என்ன இராமனா. அவன் கடவுளடி கடவுள். அவனா இந்தக் கீழ்த்தரமான வேலையைச் செய்வான். உனக்கு அவனைப் பற்றி என்ன தெரியும். அற ஒழுக்கத்தை வாழ்ந்து காட்ட வந்த அறத்தின் நாயகனடி அவன். அவன் அறந்தவறுவானா, அந்த இராமன் அறத்தோடு பொருந்தாத செயலைச் செய்ய வந்துள்ளதாகச் சொன்னாயே. பாவி நீ பெண் என்பதால் பிழைத்தாய். இல்லையேல் உன்னைக் கொன்று போட்டிருப்பேன். (கோபமாக).
என்னை மன்னித்து விடுங்கள்.
என்னை வஞ்சனையாகக் கொல்வதிலே இராமனுக்கு என்ன பெருமை இருக்கிறது. நன்மை தீமை, பாபம் புண்ணியம், தர்மம் அதர்மம், நியாயம் அநியாயம், இம்மை மறுமை என இருமையும் நோக்கும் இயல்பு கொண்டவன் இராமன். இன்னும் சொல்கிறேன் கேள் பெண்ணே. தந்தையாகிய தசரதச் சக்கரவர்த்தி அரசாண்ட இராச்சியத்தை உரிமையினாலே தான் பெற்றும், தன் மாற்றாந்தாயாகிய கைகேயியின் கட்டளைக்குப் பணிந்து அக்கைகேயியின் மகனான பரதனுக்குத் தன் ராச்சியத்தைத் தாங்கமுடியாத மகிழ்ச்சியோடு கொடுத்தவன் இராமன்.
57

Page 31
கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
தாரை:
வாலி:
தாரை:
வாலி:
அவனை நீ புகழாது போனாலும் பழிக்காமலாவது இருக்கக் கூடாதா.
சுவாமி என்னை மன்னித்து விடுங்கள். நான் யார் மேலும் பழிசுமத்தவில்லை. அறிந்ததைச் சொன்னேன்.
பெண்ணே, உலகம் முழுவதும் எதிர்த்து வந்தாலும், அதை வெற்றிகொள்ள இராமனுக்கு வில் ஒன்றே போதும், வேறு துணை தேவையில்லை. தனக்கு நிகரில்லாத் தனிப்பெரும் வீரனாகிய இராமன் அற்பக் குரங்காகிய சுக்கிரீவனோடு நட்புப் பூணுவானோ, சமத்துவம் இல்லாமல் சிநேகிதம் இல்லை என்பதை நீ அறியாயோ.
இருப்பினும் என் மனம் அமைதியடையவில்லை.
பெண்ணே! என் பேரன்புக்குரியவளே! இராமன் அருட்கடல் போன்றவன். நானும் என் தம்பியும் போர் செய்யும் போது இரக்கமில்லாதவனாக என்மேல் அம்பு தொடுக்கவே மாட்டான். இதை நம்பு, சூரியன் மேற்கே உதித்தாலும் உதிப்பான். ஆனால் சூரிய குலத்தோன்றலாகிய இராமன் அறந்தவறி யாரையும் அழிக்கமாட்டான். கவலையை விடு. கணப் பொழுதுக்குள்ளே அக்கயவனின் உயிர் குடித்து மீண்டு வருவேன்.
(சுக் கிரீவனின் அறைகூவல் கேட்கிறது. வாலி புறப்படுகிறான்.)
58

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
வாலி
qtill dif" - 03
; மலையடிவாரம்
பாத்திரங்கள் : இராமன், இலக்குவன்
காலம்
இராமன்:
இலக்குவன்:
: 666)
(வாலி பயங்கரமாகச் சிரிக்கின்ற சத்தமும், இதோ வந்தேன். வந்தேன். உன் உயிர் குடிக்க வந்தேன் என்கின்ற சத்தமும், கேட்கிறது. மரத்தின் பக்கத்தில் நின்று கொண்டு இராமனும் இலக்குவனும் உரையாடுகின்றனர். வாலி சுக் கிரீவன் ஆகியோரைக் காட்டத் தேவையில்லை)
தம்பி இலக்குமணா! அதோ பார். வாலி வருகின்றான். நன்றாகக் கூர்ந்து கவனித்துப் பார். ஆகா. என்ன தோற்றம் என்ன கம்பீரம். என்ன வேகம். என்ன ஆரவாரம். தேவர்களிலும் அசுரர்களிலும் எவருமே இவனுக்கு இணையாக மாட்டார்கள்.
(வாலியின் சத்தம் கேட்கிறது. அடே சுக்கிரீவனே, இன்று நீ தொலை நீ தாயப் எண்  ைனயா அறைகூவிப் போருக்கழைத்தாய்)
இலக்குவா இவனது தோற்றத்துக்கும் ஆரவாரத்திற்கும் கோபத்திற்கும் வேகத்திற்கும் எந்தக் கடல், எந்த மழை மேகம், எந்தக காலாக்கினி, எந்தச் சூறைக்காற்றுத் தான் ஒப்பாகும். சொல்வாய்.
அண்ணா தன் கூடப் பிறந்த தமையனைக் கொல்வதற்குக் கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்திருக்கிறானே இந்தக் கொடும் பாவி சுக்கிரீவன். அவனைப் பற்றிக் கேளுங்கள் சொல்கிறேன். யுத்த தர்மத்துக்கு மாறான வஞ்சகப் போரைச் செய்யவும் வழிவகுத்திருக்கிறானே சுக்கிரீவன். அவனைப் பற்றிக் கேளுங்கள் நிறையவே சொல்கிறேன். ஆனால் கொல்லப்பட இருக்கும் வாலியின் தோற்றம் பற்றிச் சொல்லப்பட என்னிடம் எந்த உணர்வும் இல்லை.
59

Page 32
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இராமன்:
இலக்குவன்:
இராமன்:
தம்பி, நீ என்ன சொல்கிறாய்.
அண்ணா! தாங்க முடியாத வேதனையினால் ஒன்று மட்டும் சொல்கிறேன். இந்தச் சுக்கிரீவன் நம்பத் தகுந்தவனல்லன். தன் கூடப் பிறந்த அண்ணனையே கொல்லத் துடிக்கும் இவனி அந் நியராகிய எமக் கு 6T Lj Lu Lọ நம்பிக்கைக்குரியவனாவான்.
தம்பி! பொறுமையாக இரு பித்துப் பிடித்த இக்குரங்குக் கூட்டத்துக்குள்ளே அண்ணன், தம்பி என்ற அன்பு ஒழுக்கத்தைப் பற்றி நீ பேசலாமோ. விலங்குகளிலே மட்டுமல்ல மனிதர்களிலே கூட, ஒரு தாய் வயிற்றிற் பிறந்த தம்பிகள் எல்லோரும் தமையனோடு ஒற்றுமையாக ஒத்துப் போகின்றார்களா? அப்படி இருந்தால் பரதனை ஏன் உலகம் பெரிதும் உத்தமன் என்று புகழ்கின்றது. வீரனே! உலகில் மெய்யொழுக்கத்தவர் சிலர். பொய்ம்மையாளரே பலர் என்பது உண்மை. சிறிதும் குற்றமே இல்லாதவர்கள் என்று பார்த்தால் நட்புக் கொள்ள யார்தான் இருக்கிறார்கள். நண்பர்களாகப் பெற்றவர்களிடம் அடைய வேண்டிய நன்மையை அடைந்து கொள்வதே அல்லாமல், அவர் நல்லவர் கெட்டவர் என்ற ஆராய்ச்சி அவசியமில்லாதது. (மரத்தின் பின் மறைகிறார்கள். வாலியின் சத்தம் கேட்கிறது.)
60

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
வாலி
காட்சி - 04
: மலைச்சாரல்
பாத்திரங்கள் : வாலி, சுக்கிரீவன்.
வாலி:
சுக்கிரீவன்:
சுக்கிரீவன்:
வாலி:
: 66.)
(நெருங்கி வந்து தங்கள் தோள்களையும் தொடைகளையும் தட்டிச் சிரித்து உறுமி ஆரவாரிக்கிறார்கள்)
அடே சுக கிரீவா ! என னையா அறைகூவிப் போருக்கழைத்தாய், உன் அங்கங்களை என் நகங்களால் பிளந்து அங்கங்கே எறிவேன். உன் உடம்பைக் கடித்து உதிரத்தை உறிஞ் சிக் குடிப் பேண் . இன் றோடு தொலைந்தாய் நீ.
வாலி வாய் வீரம் பேசாதே. உன் வாழ்க்கை இன்றோடு முடிந்தது.
(சிரிப்பு) சிங்கத்தை அடித்துக் கொல்லுமாம் சிறு முயல், யானையைக் கடித்துத் தின்னுமாம் பூனை. நன்றாக இருக்கிறது உன் பேச்சு. மூடனே! என் கைகளால் உன் னைக் கசக்கிப் பிழிந்து உன் உயிரைக் குடித்துவிடுவேன். (மல்யுத்த முறைப்படி சாரிதிரிந்த படி கதைக்கிறார்கள்)
(சிரிப்பு) அது நடக்காது. அணையப் போகும் விளக்காக நின்று ஆர்ப்பரிக்கும் வாலியே! நீ அழியப் போகிறாயடா.
(சிரிப்பு) அடே சுக்கிரீவா! நான் அணையப் போகும் விளக்கல்ல. உன்னை அழிக்கப் போகும் பெரு நெருப்பு என்பதை இப்போது கண்டு கொள்வாய். (பாய்ந்து சுக்கிரீவனோடு சண்டை செய்கிறான். இருவரும் கைகளால் அடித்தும், உதைத்தும், கட்டித் தழுவியும், நகங்களால் கிழித்தும், கடித்தும், இடித்தும் போர் (மல்யுத்தம்) செய்கிறார்கள். வாலியிடம் நன்றாக அடிவாங்கிய
61

Page 33
கங்கையின் மைந்தன் அகளங்கன்
SLib
சுக்கிரீவன் களைத்துப் போகிறான். நிலத்தில் விழுந்த சுக் கிரீவன் திடீரென எழுந்து ஓடுகிறான். வாலி பயங்கரமாகச் சிரித்து)
கோழையே போ. மானத்திலும் உயிரையே மேலாக நினைக்கும் மதிகெட்டவனே போ. இனியொருதடவை இந்தக் கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைத்தால் உன்னைக் கொல்லாது விடேன். (வாலி சிரிக்கிறான்)
DOO
வாலி
காட்சி - 05
: மலைச்சாரல்
பாத்திரங்கள் : சுக்கிரீவன், இராமன், இலக்குவன்
காலம்
சுக்கிரீவன்:
இராமன்:
சுக்கிரீவன்:
: மதியம்
(மரத்தின் மறைவில் இராமன், இலக்குவன் நிற்க சுக்கிரீவன் இளைத்தபடி ஓடிவந்து நிற்கிறான். குனிந்து வணங்கி)
பிரபு. என்னைக் கைவிட்டு விட்டீர்களே. என்னிடம் வாலியை அறைகூவிப் போர் செய்யச் சொன்னது, என்னை வாலியின் கையால் கொல்விப்பதற்காகவா. இது உங்களுக்குத் தகுமா.
சுக் கிரீவனே! கலங்காதே. மனோ வல்லமையை இழக்காதே.
சுவாமி! நான் வாலியிடம் வாங்கிய அடிகள் கொஞ்சமா. கடிகள் கொஞ்சமா. நான் உயிர் தப்பிப் பிழைத்து வந்ததே பெரிய சாதனை தான். நீங்கள் ஏன் அவனைக் கொல்லவில்லை. இனி எப்படி அவனைக் கொல்லப் போகிறீர்கள். (சலிப்போடு)
62

கங்கையின் மைந்தன் அகளங்கள்
இராமன்:
சுக்கிரீவன்:
இராமன்:
சுக்கிரீவன்
இராமன்:
சுக்கிரீவன்:
இங்கு நின்று பார்க்கும் போது உங்கள் இருவருக்கும் வேற்றுமை தெரியவில்லை. அதனாற் தான் அம்பு தொடுக்கத் தயங்கினேன். சுக்கிரீவா தப்பித் தவறி என் பாணம் உன்மேற்பட்டுவிட்டால் (புன்சிரிப்போடு)
(நடுங்கி) நினைக்கவே பயமாக இருக்கிறது.
சுக்கிரீவராஜனே! நீ மீண்டும் வாலியுடன் சென்று போர் @guງ.
மீண்டுமா என்ன விபரீதம் இது. வேண்டாம் இந்த விளையாட்டு. யானை வாய்ப்பட்ட கரும்பும். பாம்பின் வாய்ப்பட்ட தேரையும் கூடத் தப்பிவிடலாம். ஆனால் வாலி கைப்பட்ட எதிரியும் தப்ப முடியுமா.
இம்முறை கொடிப் பூவைத் தலையில் சூடிச் செல். அந்த அடையாளத்தை வைத்து நான் வாலிக்கு அம்பு தொடுக்கிறேன்.
சரி இதோ செல்கிறேன். டேய் வாலி! எங்கே செல்கிறாய். நில் 1. நில் 1. இதோ வந்துவிட்டேன். வந்துவிட்டேன். உன்னைக் கொல்லாமற் திரும்பமாட்டேன். நில்! நில்! (சத்தமிட்டுக் குதித்துச் செல்கிறான். தலையில் கொடியோடு பூவைச் சூடியிருக்கிறான்)
DDD
63

Page 34
கங்கையின் மைந்தன் அகளங்கள்
இடம்
வாலி
காட்சி - 06
: மலையடிவாரம்
பாத்திரங்கள் : வாலி, சுக்கிரீவன், இராமன், இலக்குவன்,
Öb. 60).6A)
வாலி:
அனுமான், அங்கதன்.
: மதியம்
(சுக் கிரீவன் வருகிறான்) என்ன அதிசயம் இது. உயிர்பிழைத்து ஓடிப் போனவன் திரும்பவருகிறானே. இவன் இனித் தப்பவே முடியாது. வாடா! வா!. (சுக்கிரீவன் ஓடி வந்து வாலிக்குக் குத்தி அடித்தல். இருவரும் மல்யுத்தம் செய்தல். வாலி சுக்கிரீவனைத் தலைக்கு மேலே தூக்கி) இதோ ஒழிந்தாய். உன்னைப் பூமியிலே மோதி, அடித்துக் கொன்றுவிடுகிறேன். பார்.
(இராமபாணம் வாலியின் மார்பில் படுகிறது. கையை மெதுவாக விட்டு விட்டு அம்பைப் பிடித்துக் கொண்டு விழுகிறான். சுக்கிரீவன் விடுபட்டு பக்கத்தில் நிற்கிறான். கால்களாலும் வாலாலும் கைகளாலும் அம்பைப் பிடித்துக் கொண்டு கிடந்து புரள்கிறான். கோபமாக சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு கையால் பூமியில் அறைகிறான். காலை நிலத்தில் உதைத்து எழ முயல்கிறான். அம்பைப் பிடுங்க முயன்று முடியாமல் சலித்து)
யார் இந்தப் படைக் கலத்தைச் செலுத்தினார். தேவர்களாயிருக்குமோ. சீ. சீ. அவர்களால் என் மார்பைத் துளைக்க முடியுமோ. அவர்கள் இப்படி ஒரு செயலைச் செய்வார்களோ, வேறு எவராகவும் இருக்குமோ. முனிவர்கள் யாரும் சாபமிட்டு அது ஒரு ஆயுதமாக வந்து துளைத்ததோ. (கிடந்து புரண்டு கொண்டு பின் எழுந் திருந்து சொல் வான்) இது சிவபெருமானின் சூலமோ? மகாவிஷ்ணுமூர்த்தியின் சக்கரமோ? (அம்பை இழுத்துப் பார்க்கிறான்) அம்பு.
64
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இராமன்:
வாலி:
சீ. அம்பு. யாரோ மனிதர்கள் செலுத்திய அம்பு. (பெயரை வாசிக்கின்றான்.) " இராம” என்ன. (ஆச்சரியத்தோடு) இராமனா மறைந்திருந்து நிராயுதனும் குற்றமற்றவனுமான என்மேல் அம்பெய்தான். சீ. ซึ่*........................ கேவலம். கேவலம். (இராமனும்,
இலக்குவனும், அனுமானும் வருகின்றனர். இராமனைப் பார்த்து ஏசுகின்றான்.) இராமா! என்ன காரியம் செய்துவிட்டாய். உன் தகுதிக்கு ஏற்ற காரியமா இது. உன்னைப் பெற்றதால் உன் தந்தை தசரதன் பெருமையிழந்தான். நீ பிறந்த அயோத்தியும் பெருமை இழந்தது. உன் பின்னால் பிறந்ததால் பரதனும் பெருமை இழந்தான். அவைமட்டுமல்ல நீ பிறந்ததால் சூரிய குலமே மாசுபட்டது. சத்திரிய வம்சத்துக்கே நீ ஒரு களங்கம். இராமா! உயர் குலத்தில் தோன்றி, உயர் கல்விகற்று உயர்ந்த வெற்றிகள் பெற்று உயர்ந்த பண்பில் நின்றவனாகிய நீ, உலகத்திற்கு ஒழுக்க நெறியின் உதாரண புருஷனாகத் திகழ்ந்த நீ ஏன் இவ் இழிசெயலைச் செய்தாய்.
வாலி! உன் கேள்விக்கு நான் தகுந்த பதில் சொல்வேன். கேலியை விட்டுவிட்டுக் கேள்வியைக் கேள்.
இராமா! நீயே ஒழுக்கந் தவறினால் இனி யார்தான் ஒழுக்கந்தவறமாட்டார்கள். சீதையைப் பிரிந்த பின்பு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா. சீ. சீ. அவமானம். அவமானம். நீ வில்லறம் துறந்ததால் சூரிய குலமே தன் நல்லறம் துறந்தது. இராமா! அரக்கர் தலைவனான இராவணனி உணி மனைவியை வஞ்சனையாகச் சிறையெடுத்துச் சென்றால், ஒரு பாபமுமறியாத குரங்குக் கூட்டத்துத் தலைவனை வஞ்சனையாகக் கொல்லும் படியா, உங்கள் மனு தர்ம சாத்திரம் சொல்லுகிறது. என்னில் என்ன பிழை கண்டுவிட்டாய். குற்றமில்லாதவனான எனக்கு, உன்னோடு போர் செய்யாதவனான எனக்கு, நிராயுதனான எனக்கு, மறைந்து நின்று அம்பெய்து குற்றவாளியாக நிற்கும் நீ, இனி இராவணனைக் குற்றவாளி என்று கூறமுடியுமா.
65

Page 35
கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
இராமன்:
வாலி:
இராமன்:
வாலி:
இராமன்:
இராமா, நீ வாலியைக் கொன்றுவிட்டதாக நினைக்காதே. நீ கொன்றது மனுதர்ம வேலியை என்பதை மறக்காதே.
வாலி! இவ்வளவு நியாயங்களைப் பேசுகிறாயே, நீ உன் கூடப் பிறந்தவனும் சிறிதும் குற்றமற்றவனுமாகிய இந்தச் சுக்கிரீவனை அடித்துத் துன்புறுத்திக் கொல்ல முயன்றாயே, அது குற்றமில்லையா.
நான் மாயாவியைத் துரத்திக் கொண்டு குகைக்குள்ளே செல்லும் போது குகை வாசலிலே காவல் காத்திரு என்று சுக்கிரீவனுக்குக் கட்டளை இட்டுச் சென்றேனே. இருந்தானா அவன். நான் குகைக்குள்ளே யிருந்து வெளியே வர முடியாதபடி பெரிய மலைகளைப் போட்டுக் குகை வாசலை அடைத்துவிட்டு என் இராச்சியத்தையும் அபகரித்துச் சுகபோகம் அனுபவித்த சுக்கிரீவனை நான் அடித்தது எப்படித் தவறாகும்.
வாலி நடந்த உண்மையை அறியாமல் பேசுகிறாய், நீ. மாயாவியைத் துரத்திக் கொண்டு குகைக்குள்ளே நீ சென்ற பின்பு நீண்ட நாட்கள் நீ வரவில்லை. சிலவேளை மாயாவி உன்னைக் கொன்றுவிட்டு இவ்வழியே வந்துவிடுவானோ என்று அஞ்சித்தான். குகையை அடைத்தார்கள். நீ இறந்திருந்தால் நானும் இறந்துவிடுவேன் எனக்கூறிய, உன்மேல் உயிருக்குயிரான அன்பு வைத்திருந்த உன்தம்பி சுக்கிரீவனை, உன் மந்திரிகளும் சேனாதிபதிகளும், சுற்றத்தாரும் வற்புறுத்தித் தான் அரசாளச் செய்தார்கள்.
ம். மிக நன்றாக இருக்கிறது கதை. என்மேல் உனக்குக் கோபத்தை ஏற்படுத்துவதற்காகக் கைதேர்ந்த ஒருவன் கட்டிச் சொன்ன கதை மிக நன்றாக இருக்கிறது.
கதையல்ல வாலி. இது தான் உண்மை.மாயாவியைக் கொன்றுவிட்டு நீ திரும்பி வந்தபோது, இந்த உண்மையைச் சொல்லி, உனக்கே அரசைத் தரவந்த உன் தம்பியை அடித்துக் கொல்ல முயன்றாய். உன்னால் செல்லப்பட முடியாத சாப பூமியாகிய இரலையங்குன்றுக்கு இவன் ஒடித் தப்பியதால் உயிர் பிழைத்தான். இப்பொழுது சொல் வாலி. நீ குற்றஞ்செய்யவில்லையா. இதை விடவும் பெரிய
66

கங்கையின் மைந்தன் அகளங்கன்
வாலி:
இராமன்:
வாலி:
இராமன்:
வாலி
குற்றம் ஒன்றை, என்னால் மன்னிக்கவே முடியாத குற்றம் ஒன்றையும் நீ செய்திருக்கிறாய்.
அது என்ன குற்றம். அப்படிப்பட்ட குற்றம் ஒன்றை நான் எப்பொழுது ஏன் எப்படிச் செய்தேன், சொல் இராமா. சொல்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த தம்பி சுக்கிரீவனின் மனைவியான உருமையை, அவனிடமிருந்து அபகரித்து உன் உரிமையாக நீயே வைத்திருக்கிறாயே, இதைச் சொல்லவும் என் நா சுடுகிறது. நினைக்கவும் என் மனம் கூசுகிறது. கொதிக்கிறது. தம்பியின் மனைவியைத் தங்கையாக மகளாக நினைக்க வேண்டுமே அன்றித் தாரமாக்கலாமா. தமையனின் மனைவி தாய்க்குச் சமம். தம்பியின் மனைவி மகளுக்குச் சமம் என்பதை நீ அறியாயா.
(சிரிப்பு) இராமா! நீ கூறிய இக்குற்றச் சாட்டுக்கள் விசித்திரமாக இருக்கின்றன. உங்கள் மனித குலத்து ஒழுக்கவிதியை எம் விலங்கினத்துக்குப் பொருத்திப் பார்த்து வருத்தம் கொள்கிறாய். மறைவழிவந்த மனமும் எமக்கில்லை. கற்பொழுக்கமும் எம் பெண்களுக்கு இல்லை. இன்னாருக்கு இன்னார் தான் மனைவி என்ற கட்டுப்பாடும் எமக்கில்லை. பின் எப்படி அவன் மனைவியை நான் வைத்திருந்தேன் என்று குற்றம் கூறமுடியும். எங்கள் ஒழுக்கமோ மனம் போனபடி வாழும் புலநெறி ஒழுக்கம், அறநெறிப்பட்ட அறிவு வழி ஒழுக்கம், எம்மிடம் இல்லை. இதை நீ அறியாயா இராமா.
வாலி! நீ இந்திரனின் மகன், அதுமட்டுமல்ல அற ஒழுக்கத்தை நன்றாக அறிந்திருக்கிறாய். அதனால் நீ விலங்கல்ல. விலங்கிற்கும் மனிதனுக்கும் பகுத்தறிவுதான் வித்தியாசம். நீயோ பகுத்தறிவு படைத்தவன். நீ எப்படி விலங்காக முடியும். பகுத்தறிவற்ற மனிதன் விலங்காவான். பகுத்தறிவு படைத்த விலங்கு மனிதனாகும். சகல அறங்களையும், ஐயந்திரிபற அறிந்த நீ விலங்கல்ல.
38TTLDT'. நீ சொல்வது விளங்குவது போலவும்
67

Page 36
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இராமன்:
வாலி:
இராமன்:
வாலி:
இலக்குவன்:
இருக்கிறது. விளங்காதது போலவும் இருக்கிறது.
வாலி நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இது நல்லது இது தீயது என்று பகுத்தறியும் அறிவில்லாமல் வாழ்வது தான் விலங்கின் இயல்பு. ஆனால் உனக்கோ நல்லது கெட்டது தெரியும். யுத்த தர்மம் பற்றிப் பேசுகிறாய். மனுதர்மம் பற்றிப் பேசுகிறாய். மனித ஒழுக்கம், விலங்கின் ஒழுக்கம் எனவேறுபடுத்திப் பேசுகின்றாய். பின்பு நான் விலங்கு என்று கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாய். விசித்திரமாக இருக்கிறது உன் உரையாடல்.
இராமா! என் சிந்தையில் உன் அற உபதேசம் சிறிது சிறிதாகப் பதிகிறது. சொல்.
வாலி நான் ஊமை நான் ஊமை என்று காரணகாரியங் கூறி ஒருவன் உரக்கக் கத்துவதனால் அவன் ஊமையாகமாட்டான், என்பதை உணர்ந்து கொள். உன் வாயே உன் கல்வியையும் உன் பகுத்தறிவையும் காட்டிக் கொடுத்துவிட்டன. நீ சிறந்த கேள்விச் உடையவன் என்பது நன்றாகப் புரிகிறது. வாலி கேள்வி
கேட்டு விவாதம் செய்யவும் என்னைக் கேலி செய்யவும், செய்த குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், அறிவைப் பயன்படுத்தும் நீ, விலங்காக முடியுமா. உன் உடம்பைக் காரணம் காட்டி நீ விலங்கென்று கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
அப்படியென்றால் நீ ஏன் என்னை எதிர்த்து முன்னின்று போர் செய்யாது, கொடிய வேடர்கள் மிருகங்களை வேட்டையாடுவது போல மறைந்து நின்று அம்பெய்தாய்.
இதற்கு நான் பதில் சொல்கிறேன். முன் உன் தம்பி சுக்கிரீவன் வந்து என் அண்ணனைச் சரணடைய, உன்னைக் கொல்வதாக அவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டார். உன் முன்னால் என் அண்ணன் வந்தால், நீயும் உன் உயிர் மேல் அன்பு கொண்டு அடைக்கலம் கேட்டுவிடுவாய், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமற் போய்விடும். அதனாற்தான் அண்ணன் மறைந்து நின்று அம்பெய்தான்.
68 -
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
வாலி:
சுக்கிரீவன்:
வாலி:
அங்கதன்:
வாலி:
பெருமானே! நாயிலும் கேவலமானவனான என்னால் இவைகளையெல்லாம் முன்பே உணர்ந்து கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்துக் கொள். என்னை எதையும் அறியாத அற்பக் குரங்காகக் கருதி நான் ஏசிய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடு. உன் அம்பும் உன் வார்த்தைகளும் என் உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஒருசேர உபதேசங்களாய் விட்டன. நீயே பாபம், நீயே புண்ணியம், நீயே பகை, நீயே உறவு, மூவரும் நீயே. அவர்களுக்குள் முதல்வனும் நீயே, உன் அம்புதான் தர்மம். உன் செயல் அறந்தவறி அமையுமா. (சுக்கிரீவனை அழைத்து) தம்பி! இவனை வெறும் மனிதன் என்று எண்ணாதே. கடவுள் என்றே நம்பு. நீ எனக்கு நன்மைதான் செய்திருக்கிறாய் கலங்காதே. (இராமனிடம் சுக்கிரீவனைக் கொடுத்து) சுவாமி. இவன் இனி உங்கள் அடைக்கலம். தம்பி உடனே சென்று அங்கதனை அழைத்துவா.
இதோ இப்பொழுதே அழைத்து வருகின்றேன்.
சுவாமி (அனுமானைக் காட்டி) இவ்வனுமானை உன் கையில் இருக்கும் வில்லுக்குச் சமனாகக் கருது. சுக்கிரீவனையும், அனுமானையும் துணைக் கொண்டு உன் மனைவியைத் தேடிப் பெற்றுக்கொள். என்ன செய்ய. மாய அரக்கனான இராவணனை என் வாலிலே கட்டிக் கொண்டுவந்து உன்னிடம் தர எனக்குப் பாக்கியமில்லை. அதுதான் கவலை.
(ஒடி வந்து வாலியின் மேல் விழுந்து அழுகிறான்) ஐயோ. அப்பா. அப்பா. உங்களை இந்தக் கோலத்திலா நான் பார்ப்பது. அட்டதிக்கு யானைகளின் செருக்கடக்கிய இராவணனை வாலால் கட்டிக் கொண்டு வந்து, பத்துத்தலைப் பூச்சி என எனக்குக் காட்டினிர்களே. அந்த வால் செயலற்றுக் கிடக்கிறதே. இந்த வாலை நினைத்தாலே இராவணனது நெஞ்சம் பறைபோல் அடிக்குமே.

Page 37
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அங்கதன்:
- வாலி:
அங்கதன்:
வாலி:
அங்கதன்:
வாலி:
இராமன்:
ஐயோ, பாற்கடலைக் கடைந்த கைகள் பயனற்றுக் கிடக்கின்றனவே. அட்டதிக்கு மலைச் சிகரங்களிலும் தாவிய பாதங்கள் பலமற்றுக் கிடக்கின்றனவே.
மகனே! கவலையைவிடு. நீ பாலன் இல்லை இப்படிப் பரிதவிப்பதற்கு. இராமன் எனக்கு முத்தியைத் தந்திருக்கிறான். அவனை வணங்கு. பிறப்பும் இறப்பும் எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டு விட்டன. என் தவப் பேறு ஆண்டவனே வந்து எனக்கு வீடு பேற்றைத் தந்துள்ளான்.
ஐயோ. என்னால் தாங்க முடியவில்லையே.
என் வார்த்தையைக் கேள். இராமனே கடவுள். இராமன் என்னைக் கொன்றதாகப் பகை கொள்ளாதே. கவலை கொள்ளாதே. எனக்கு வீட்டின்பத்தைத் தரவே இராமன் இப்படிச் செய்தான் என்பதை நம்பு. இராமனுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதே. அவனது பாத தாமரைகளைத் தலையில் சூடி வாழ்.
என்னைத் தவிக்கவிட்டுச் செல்கின்றீர்களே. உங்களுக்கா இந்தநிலை.
(இராமனைப் பார்த்து) இராம பிரானே! என் மகன் அங்கதன் இனி உங்கள் அடைக்கலம். (இராமனின் கையில் அங்கதனை ஒப்படைக்கின்றான்) அங்கதன் இராமனைப் பணிகின்றான்.
(அங்கதனிடம் தன் உடைவாளை நீட்டி) அங்கதா என் உடைவாளை உன்னிடம் தந்தேன். நீ இனி என் நம்பிக்கைக்குரியவன். அன்புக்குரியவன். கலங்காதே. (வாலி அதைப் பார்த்து மகிழ்ந்து இறக்கிறான்)
- முற்றும் -
7O

திருவாதவுரர்
பாத்திரங்கள்
அரசன் வாதவூரர் அமைச்சர்
குரு சீடர்கள்
கூலியாள்
செம்மனச் செல்வி
சேவகர்கள் Lണ്ഡഖ]
ஒற்றன் குதிரை வீரர்கள்
71

Page 38
கங்கையின் மைந்தன் அகளங்கன்
04 திருவாதவுரர்
காட்சி - 01
இடம் : 9 yd3f6)
பாத்திரங்கள் : அரசன், வாதவூரர் (முதலமைச்சர்) அமைச்சர்
புலவர், காவலன், ஒற்றன்.
(அரசன் கொலு மண்டபத்தினுள் வருகிறான். எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்.)
காவலன்: ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ கம்பீர! ராஜகுலதிலக அரிமர்த்தன பாண்டிய மகாராஜா வருகிறார். பராக் பராக் பராக்!
(அரசன் வந்து சிம்மாசனத்தில் அமர்கிறான். எல்லோரும் அமர்கின்றனர். புலவர் எழுந்து நிற்கிறார்)
அரசன்: தாங்கள்.
L|സെഖj: தேனேர் தமிழெடுத்துச்
செவிகுளிரக் கவிபாடும் நானோர் தமிழ்ப் புலவன். நாடி வந்தேன் உனைப் பாடி வந்தேன்.
அரசன்: புலவரே!
தமிழ் என் உயிர். தமிழ் பாடும் புலவர்கள் என் உடல். எங்கே. பாடுங்கள். வாய் குளிரப் பாடுங்கள். செவி குளிரக் கேட்போம்.
புலவர்: உமையம்மை மணவாளன் தலைமைதாங்க
உலகளந்த தமிழ்மொழிக்குச் சங்கங்கண்டாய். இமையசைத்துத் தானைதனை வழி நடாத்தி இமையத்து நெற்றியிலே மீன் பொறித்தாய். கொற்கையின் முத்துக்கள் வளத்தைச் சேர்க்கக்
72

கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
L|സെഖj;
அரசன்:
புலவர்:
அரசன்:
அமைச்சர்:
கோபுரங்கள் பக்திமணம் பரப்பிநிற்க நற்கருமம் பலசெய்யப் பூமித் தாயை நல்நீரால் வளமூட்டும் வைகை கொண்டாய். செந்தமிழால் உனைப்பாடும் புலவர் கூட்டம். சேர்ந்திருக்க மகிழ்வதிலே உனக்கு நாட்டம். வந்தனங்கள் கூறியுனை வாழ்த்த வந்தேன். வாழிய நீ பல்லாண்டு வளமாய் ஆண்டு.
ஆகா! அற்புதம்! அற்புதம்! தமிழ் மொழியின் சுவையறிந்து கவிபொழியும் புலவரே! தங்கள் கவிகேட்டுக் களிப்படைந்தேன். ஆனால். புலவரே! என் மூதாதையரின் பெருமைகளை எல்லாம் எனக்குச் சேர்த்துக் கவி பாடுகிறீர்களே. அதுதான்.
மன்னா! மரம் ஒன்றுதான். கிளைகள் தான் பல. கிளைகளின் பெருமைகள் யாவும் மரத்தைச் சேரும். மரத்தின் பெருமைகள் யாவும் கிளைகளையும் சேரும். பாண்டியப் பேரரசு. பக்தி மணக்கும் பழைமை கொண்டது. பாண்டியப் பேரரசு. தமிழ் வளர்த்த பெருமை கொண்டது. பாண்டியப் பேரரசு. பாரையெல்லாம் வெற்றி கொள்ளும் திறமை கொண்டது.
புலவரே! தங்கள் புகழ் மழையில் என் இதயம் குளிர்கின்றது. (பரிசுப் பொருள் கொடுக்கிறான்)
வணக்கம் மன்னா! வருகிறேன்.
வாழ்க பல்லாண்டு. (செல்கிறார்)
அமைச்சரே! தாங்கள் சென்ற காரியம்.
அரிமர்த்தன பாண்டிய மன்னருக்கு அடியேனின் வணக்கங்கள். சிற்றரசர்களின் போக்கு கவலையளிக்கிறது.
73

Page 39
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
காரணம்.
அவர்கள், வரி தருவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
காரணம்.
எமது பாண்டியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் , சிற்றரசர்களாயிருக்கும் ஐந்து குறுநில மன்னர்கள் கூடி இரகசியக் கூட்டம் நடாத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் பாண்டியப் பேரரசிலிருந்து பிரிந்து, சுதந்திர ராச்சியம் அமைத்து, முடிசூட்டிக் கொள்ளப் போகிறார்களாம்.
(335TULDT35) அமைச்சரே! இது தாங்கள் கண்டதோ? கேட்டதோ? யார் சொன்னது.
ஒற்றர் தலைவன் ஒற்றாடிக் கொண்டு வந்த செய்தியை, இன்னொரு ஒற்றனால் ஒர்ந்து, ஊகித்து அறிந்த விடயம் இது.
சிற்றரசர்கள் கூடி திறைப் பிரச்சினையை நாடி சுதந்திரப் பாட்டுப் பாடி. பாண்டியப் பேரரசை எதிர்த்துப் படை நடாத்தப் போகிறார்களாமா. பேடிகள்!.
வேலும், வில்லும் வாளும் ஈட்டியும் வடித்துக் குவித்து இரகசியப் பயிற்சிகூடப் பெறுகிறார்களாம்.
இமையம் வரை படை நடாத்தி இணையில்லாப் புகழ் படைத்து இமையத்தின் நெற்றியிலே மீன் பொறித்த. பாண்டியப் பேரரசுக்கு எதிராகப்
74

கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்
வாதவூரர்:
அரசன்:
வாதவூரர்.
அமைச்சர்:
படை நடத்தப் போகிறார்களாமா பேடிகள்.
உத்தமத் தாயென உலகூட்டும் வைகைவள நாட்டோடு யுத்தஞ் செய்யப் போகிறார்களாம் பேடிகள். வயலெல்லாம் பொன் கொழிக்கும். வரம்பெல்லாம் மணி சிரிக்கும். அயலெல்லாம் முத்திருக்கும். அழகான கொற்கைத் துறையிருக்கும் பாண்டிய நாட்டோடு படை நடாத்தப் போகிறார்களாமா பேடிகள். இப்படிக் கனவு காண என்ன துணிச்சல் அவர்களுக்கு அமைச்சரே. என்ன துணிச்சல்,
எங்கள் படைபலம் அறியாத அப் பாவிகளுக்குப் பாடம் புகட்டுவோம்.
முதலமைச்சர் வாதவூரர் ஏன் முகம் கவிழ்ந்து மெளனியாகி விட்டார்.
யுத்தம். பகையை வளர்க்கும். பழியை வளர்க்கும். பாபத்தை வளர்க்கும். வைகை நன்னீர் ஓடும் பாண்டிய நாட்டில் இரத்தச் செந்நீர் பாய்தலாகாது மன்னா.
அறைகூவிப் பகைவர் ஆர்த்தெழும் முன் நாங்கள் திறைகோரிப் போர் தொடுத்துச் செயலழிக்க வேண்டும்.
அரசே! அதற்கு இப்போது அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. அன்பே சிவம், இதை அவர்களிடத்தில் விளக்குவோம். பகைமை எண்ணத்தைக் கைவிட்டு நட்புக் கரத்தை நீட்டுவோம்.
சமாதானப் பயிர் வளர
அன்பு நீரை ஊற்றுவோம்.
75

Page 40
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
வாதவூரர்:
ஒற்றன்:
அரசன்:
ஒற்றன்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
வாதவூரர்:
இரத்தச் சேற்றில் சமாதானப் பயிர் வளரவே முடியாது.
முதலமைச்சரே!
நான் யுத்தப் பிரியனு மல்லன், யுத்த வெறியனுமல்லன்.
இருப்பினும் என் நாட்டைக் காக்க அதுதான் வழியென்றால், யுத்தத்தைக் கண்டு அஞ்சி அடங்கிக் கிடக்க நான் ஆமையுமல்ல.
அரசே! பகையைப் பகையால் வெற்றி கொள்ள முடியாது. அன்பால் தான் முடியும். அதற்குரிய காலம் கனியும். அவசரம் அவசியமில்லை.
அகிலமெல்லாம் ஒரு குடைக்கீழ் அரசாண்டு புகழ் தேடும் அரிமர்த்தன பாண்டியமா மன்னருக்கு அடியேனின் வணக்கங்கள்.
என்ன செய்தி ஒற்றனே.
கீழக் கடற்கரையில் ஆரியக் குதிரைகள் வந்திருக்கின்றன.
அரசே! அந்தக் குதிரைகள் அனைத்தையும் நாமே வாங்கி விட்டால், நமது படை பலமும் பெருகும்.
பேச்சு நிறைவு பெறவில்லையே!
ஆம் அரசே! அந்தக் குதிரைகளைச் சிற்றரசர்கள் வாங்காதபடி முழுவதையும் நாமே வாங்கிவிட்டால், அவர்களின் பலமும் குறையும், நம்பிக்கையும் சிதையும்.
ஆமாம். அருமையான யோசனை. மந்திரிக்குரிய மதிநுட்பத்தோடு உரைத்தீர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். இப்பொழுதே குதிரைகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன். எமது முதலமைச்சராகிய வாதவூரரே நேரில் சென்று குதிரைகளைப் பார்வையிட்டு வாங்கி வரட்டும்.
தங்கள் சித் தமும் , சிவபெருமானின் சித் தமும் அப்படியிருந்தால் என் சித்தமும் அதுவேயாகும். நாளைக் காலையிலேயே புறப்படுகிறேன்.
76

b|i|(b|ിര് ഞഥf96് அகளங்கள்ை
திருவாதவுரர்
காட்சி - 02
இடம் : குருந்த மர நிழல். பாத்திரங்கள் : குரு, வாதவூரர் (மாணிக்க வாசகர்), அடியார்
ஒருவர், சேவகர்கள் இருவர்.
(குருந்த மர நழலில் சிவபெருமான் குருவாக எழுந்தருளியிருக்கிறார். அவரைச் சுற்றி அடியார்கள் பலர் அமர்ந்துள்ளனர். குருவின் கையில் ஏட்டுக் கட்டு. ஓம். ஓம் என்ற ஒலி கேட்கிறது. வாதவூரர் தமது பரிவாரத்தோடு அவ்விடத்துக்கு விரைந்து வருகிறார்.)
வாதவூரர் (ஞானதேசிகரை வணங்கி) சுவாமி குருவாக வந்து இந்தக் குருந்த மர நிழலில் வீற்றிருக்கும் தங்களின் பாதார விந்தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தங்கள் தோற்றப் பொலிவைக் காணும் போது அடியேனுக்கு உள்ளம் உருகுகின்றது. மனம் மகிழுகின்றது. என்னையும் அறியாமல் பரவச உணர்வு என் மேனியெங்கும் பரவுகிறது. தாங்கள் திருக்கையில் தாங்கியிருக்கும் புத்தகம் யாதென அறிய அவாவுறுகிறது என் மனம், தயவு கூர்ந்து கூறியருள வேண்டும்.
(é5(h: சிவஞான போதம்.
வாதவுரர்: சுவாமி தங்களைப் பார்த்தால், கல்லால மரநிழலில் தென்திசை நோக்கி அமர்ந்திருந்து, சின்முத்திரை காட்டிச் சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்த குரு முதல்வராம் சிவப் பரம்பொருள் போலவே இருக்கிறது. அடியேனின் ஐயத்தைத் தாங்கள் போக்கியருள வேண்டும். சிவம் என்றால் என்ன ஞானம் என்றால் என்ன, போதம் என்றால் என்ன?
(ტ([b: சிவம் ஒன்று. அது நித்த முத்த சுத்த சித்தாகிய ஒரு வஸ்து அழிவில்லாத நித்தியப் பரம்பொருள். அச்சிவத்தை, அதனருள் பெற்றுச் சரிவர அறிந்து கொள்தலே ஞானம். அச்சிவத்தைப் பற்றி அறிந்தவற்றைத் தெளிதலே போதம்.
77

Page 41
கங்கையின் மைந்தன் (Oldb6|TIElepi
வாதவூரர்:
நாயேன் இன்று பிறவிப் பெரும்பயனை அடைந்தேன். தேவரீர் என்னை அடியவனாக ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும். மின்னலிலும் நிலையில்லா இவ்வுலகப் பொருள்களையும், போகங்களையும் நான் விரும்பேன். தேவரீரது திருவடிகளையே சரணடைந்தேன். என்னை ஏற்று அருள்புரிய வேண்டும் (பாதங்களில் பணிகிறார்)
அடியார் ஒருவர்: சுவாமி இவர் தேவரீரது கருணைக் குரியவர். இவரைத்
(5(5:
வாதவூரர்:
குரு:
வாதவூரர்:
குரு:
சேவகன் 1:
வாதவூரர்:
தேவரீர் வினைகளைந்து அடிமை கொண்டருள வேண்டும்.
அன்பனே! உன்னை ஆட்கொள்ளவே இவ்விடத்துக்கு வந்தோம். நீ முன்பு செய்த தவம் உன்னை என்னோடு இணைத்தது. வருந்தாதே.
சுவாமி! தங்களின் அருளுக்குப் பாத்திரனான அடியேனுக்குத் தேவரீர் தீட்சை கொடுத்தருள வேண்டும்.
நல்லது. சீடர்களே! இவ்வாதவூரனுக்குத் தீட்சை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். (திருவடி தீட்சை, ஸ்பரிசதிட்சை, வாகீசதீட்சை, நயனதிட்சை, மானச தீட்சை, முதலான தீட்சைகளை வழங்கல்)
எம் பெருமானே! நான் கொண்டு வந்த பொன்னும், என்னுடையது என நான் நினைத்திருந்த இவ்வுடம்பும், உயிரும் யாவும் இனித் தங்களுடையதாகும். (குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருள்களைக் குருவின் பாதங்களில் வைத்தல்) இவற்றை ஏற்றருள வேண்டும்.
அடியார்களே! இப்பொன் பொருள் யாவற்றையும் திருப்பணிகளுக்கும், தவத்தோர்க்கும், அடியார்க்கும், வறியோர்க்கும் வழங்குங்கள்.
முதலமைச்சர் பெருமானே! மன்னனின் கோபத்திற்கு ஆளாகிவிட்டீர்கள். குதிரைகளை வாங்குவதற்குக் கொண்டுவந்த பணத்தை வீண் செலவு செய்ததுமன்றி, இங்கேயே தங்கியும் விடுவது மாபெரும் குற்றமாகும்.
மயக்கம் பொருந்தியவர்களே! நீங்கள் யார் என்ன கூறுகிறீர்கள். என்னை விட்டு அகன்று விடுங்கள்.
78

கங்கையின் மைந்தன் அகளங்கன்
சேவகன் 11:
சேவகன்;
சேவகன் II:
சேவகன்;
சேவகன் II:
சேவகன்:
என்ன இது. குதிரைகளை வாங்குவதற்காக மன்னன் கொடுத்த பணத்தை, இந்தக் குருவிடம் கொடுத்து விட்டாரே! பாண்டிய மன்னன் அறிந்து விட்டால் பறி போகுமே தலை.
இப்பொழுது என்ன செய்வோம்.
நாங்களும் இங்கேயே தங்கிவிடுவோமா.
இங்கே தங்கினால் எங்கள் தலைகளும் எங்கள் தோள்களில் தங்கா.
எங்களை யார் என்று கேட்கிறாரே. இனி இவர், வரமாட்டார். வரவே மாட்டார்.
இவரை அழைத்துப் பிரயோசனமில்லை. நாம் சென்று மன்னருக்குத் தகவல் சொல்வோம்.
口 口 口
79

Page 42
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
திருவாதவுரர்
காட்சி - 03
அரண்மனை
பாத்திரங்கள் : அரசன், சேவகர்கள், அமைச்சர்.
சேவகர்கள்: அரசே! வணக்கம்.
அரசன்:
சேவகன்:
சேவகன் II:
அரசன்:
சேவகன்):
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
என்ன செய்தி.
எங்கள் முதலமைச்சர் வாதவூரர் குதிரை வாங்கச் சென்ற இடத்தில்
கு. கு. குதிரை வாங்கச் சென்ற இடத்தில்
என்ன நடந்தது. குழப்பம் வேண்டாம். அச்சமின்றி அங்கு நடந்ததைக் கூறுங்கள்.
தாங்கள் கொடுத்தனுப்பிய பொன்னை, குருந்தமர நிழலில் இருந்த ஒரு குருவின் காலடியில் காணிக்கையாக வைத்து அவரின் அடியவராகி விட்டார்.
அமைச்சரே! என்ன இது. எமது தலைமை அமைச்சரின் ராஜ விசுவாசம் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா. ((335/TLJLDIT35)
அரசே! மன்னிக்க வேண்டும். சில நாட்களாக வாதவூரரின் மனம் அரசாட்சியில் பதியவில்லை. ஏதோ சிந்தனையில் இருந்து வந்ததை நான் அவதானித்திருக்கிறேன்.
அமைச்சரே! எமது தலைமை அமைச்சர் செய்தது ராஜத் துரோகம். என் பரம்பரையினர் ஈட்டிய செல்வத்தை அவர் தன்மனம் காட்டிய வழியில் செலவிடல் அநீதியானது. இப்பொழுதே ஒலை அனுப்பி அவரை அழைப்பிப்போம்.
OOD
80

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
திருவாதவுரர்
காட்சி - 04
: குருந்த மரநிழல்.
பாத்திரங்கள் : குரு, வாதவூரர், சீடர்கள், சேவகன் 1
சேவகன்:
வாதவூரர்:
சேவகன்:
வாதவூரர்:
சேவகன் 1:
பாண்டிய நாட்டின் தலைமை அமைச்சரும், தென்னவன் பிரம்மராஜன் எனப் பட்டம் பெற்றவருமான வாதவூரர் அவர்களுக்கு, வணக்கம், எதிரிகளுக்கு இடியேறு போன்ற அரிமர்த்தன பாண்டிய மன்னனின் திருமுகம் இது. (நீட்டுதல்)
திருமுகம், இக்குருந்த மரநிழலில் வீற்றிருக்கும் குருவின் திருமுகத்தையன்றி, வேறொரு திருமுகத்தை யான் பாரேன், யான் அமைச்சனுமல்ல. அரசன் எனக்கு ஆணையிடவும் முடியாது. அந்த ஆண்டவனின் ஆணையே அன்றி அரச ஆணைகள் என்னை ஒன்றுஞ் செய்யாது. நீரே படியும்.
(படிக்கிறான்) தென்னவன் எழுதும் ஒலை. தென்னவன் பிரம்மராஜன் காண்க. குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை வீண் விரயஞ் செய்து விட்டதாக அறிகிறேன். நன்று நும் ராஜ விசுவாசம். அரசனுக்கு முதலமைச்சர் இயற்றும் அரசியற் கருமம் இதுதானோ. மன்னனுக்குத் தவறிழைத்தவர்க்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஒலை கண்டதும் உடன் வரவும்.
நான் அமைச் சனி அலி ல. அடியவன் . அரண் அடியார்க்கெல்லாம் அடியவன். என்னை ஆட்கொண்ட எழிலார் கழல் இறைஞ்சி இன்பங் காண்பதே என் தொழில். இயமனின் ஒலை கொண்டு இயம தூதனும் சிவனடி யாரை நெருங்கான். உன் துணிச்சல் ஆச்சரியமாக இருக்கிறது.
அரச ஆணையை, அவமானப்படுத்துவது அடுக்காத
81
À

Page 43
கங்கையின் மைந்தன் அகளங்கன்
(5(5:
வாதவூரர்:
இடம்
செயல். இதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. என நினைக்கிறேன்.
வாதவூரனே! நீ மன்னனிடம் செல், ஆவணி மூல நட்சத்திரத்தன்று குதிரைகள் வரும் என்று மன்னனிடம் கூறு. இந்த மாணிக்கத்தை மன்னனிடம் கொடு. உன் ஆடைகளை அணிந்து கொள்.
தங்களைப் பிரிந்து நான் செல்வதா. ஆண்டவா. இன்னும் ஏன் சோதனை.
O
* திருவாதவூரர்
காட்சி - 05
: அரண்மனை.
பாத்திரங்கள் : அரசன், வாதவுரர், அமைச்சர்.
அரசன்:
வாதவூரர்:
அரசன்:
வாதவூரர்:
அமைச்சர்:
வாதவூரன்:
(அரச சபைக்கு வாதவூரர் வருகிறார்.)
(கேலியாக) மாட்சிமை பொருந்திய முதலமைச்சர் வாதவூரருக்கு அரிமர்த்தன பாண்டிய மன்னனின் வணக்கங்கள்.
வணக்கம்.
குதிரை வாங்கிவர அனுப்பி வைத்தேனே. குதிரைகள் எங்கே?
குதிரைகள் வாங்கப்பட்டன. ஆவணி மாத மூலநட்சத்திரத் தன்று வரும் சுபவேளையில் அவைகளை மதுரை மாநகருள் நானே கொண்டு வருவதற்காகத் திருப்பெருந் துறையில் தங்கி இருந்தேன்.
(கேலியாக) அதற்குள் அரசர் அவசரப்பட்டு ஒலை அனுப்பி விட்டார். நீங்களும் ஓடோடி வந்து விட்டீர்கள்.
82

கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
வாதவூரர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அப்படியென்றால் குதிரைகள் நிச்சயம் வருமா?
ஆம் அரசே! சந்தேகம் வேண்டாம். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும். இந்த மாணிக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
சரி, சென்று ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். நன்றாகக் களைத்திருப்பீர்கள். (வாதவூரர் செல்கிறார்)
கொடுக்காத பணம் பெற்று, வாங்காத குதிரைகளை வழி நடத்தி வருவது யார்.
அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
சொல்பவரோ பாண்டியப் பேரரசின் பொறுப்பு மிக்க தலைமை அமைச்சர். பொய்யையும் மெய்யையும் வாக்கை மட்டும் கொண்டு எப்படித் தீர்மானிப்பது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
83

Page 44
கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
SLib:
திருவாதவுரர்
Id - 06 அரண்மனை
பாத்திரங்கள்: அரசன், அமைச்சர், சேவகன்.
சேவகன்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
சேவகன்;
அரசே! வணக்கம், திருப்பெருந்துறையிலோ, அன்றி வேறு அண்மைப் பிரதேசத்திலோ குதிரைகள் எதுவுமே இல்லை.
சரி. நீ, போகலாம். அமைச்சரே! இன்று ஆவணி மாதத்து அனுஷ நட்சத்திர நாள். நாளை மறுநாள் தான் மூலநட்சத்திர நாள்.
நாளை ஒரு நாளுக்குள் குதிரைகள் எங்கிருந்து வரப் போகின்றன. வானகத்திலிருந்தா? அன்றிக் கானகத்திலிருந்தா?
பரிகள் என்ன பறந்தா வரமுடியும். அமைச்சரே! பரிகள் வர முடியாது. நரிகள் தான் வரமுடியும். யாரங்கே! (சேவகன் வருகிறான்) எமது தலைமை அமைச்சராகிய வாதவூரரைச் சிறையிலடைத்தும், சுடுமணலில் நிறுத்தியும் எமது பொன்னை அறவிடுங்கள். இரக்கம் காட்ட (36600 LTLD.
உத்தரவு. அப்படியே செய்கிறோம்.
84
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்:
திருவாதவூரர்
காட்சி - 07
சுடுமணல்
பாத்திரங்கள்: வாதவூரர்
வாதவூரர்:
GLub:
(சுடுமணலில் நின்று கொண்டு) ஆண்டவா! நான் உன் அடிமையல்லவோ என்னை நீ குருந்தமர நிழலில் குருவாக வந்து ஆட்கொண்டாய் அல்லவோ. இன்னும் எனக்குத் தொல்லையோ, அடியார்கள் அமுதுண்ண ஆலகாலம் உண்டவனே, முப்புரங்களை எரித்தாய். என் துன்பத்தை எரிக்க மாட்டாயா நாயிற் கடையாம் அடியேனை நயந்து ஆட்கொண்ட அருட்பெருங் கருணை இத்துன்பத்தைத் தருவதற்கோ. நீ தந்தையல்லவோ. நான் உன் மைந்தன் அல்லவோ. இத்துன்பம் விந்தை
அல்லவோ,
திருவாதவூரர்
காட்சி - 08
அரண்மனை
பாத்திரங்கள்: அரசன், வாதவூரர், சேவகன்
சேவகன்;
அரசன்:
சேவகன்:
(வந்து) அரசே! வணக்கம். ஏராளமான குதிரைகள்; அழகழகான குதிரை வீரர்களால் செலுத்தப்பட்டுக் கோபுர வாசலில் வந்து குழுமி நிற்கின்றன.
என்ன அதிசயம். எப்படி வந்தன குதிரைகள். எங்கிருந்து வந்தன குதிரைகள். உடனே சென்று நமது தலைமை அமைச்சரை விடுதலை செய்து வா.
உத்தரவு, (செல்கிறான்) வாதவூரர் வருகிறார்.
85

Page 45
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
இடம்
தலைமை அமைச்சர் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். குதிரைகள் வந்து விட்டனவாம். வாருங்கள் சென்று காண்போம்.
O
திருவாதவூரர்
காட்சி - 09
: கோபுர வாசல்
பாத்திரங்கள் : அரசன், வாதவூரர், அமைச்சர், குதிரைவீரன்,
அரசன்:
வாதவூரர்:
அமைச்சர்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
குதிரைகளும் வீரர்களும்.
தலைமை அமைச்சரே! தங்களைத் தண்டித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மண் ணித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூறியபடி கூறியநாளில் குதிரைகள் வந்துவிட்டன. மிகவும் மகிழ்ச்சி.
எல்லாம் ஈசன் செயல். நன்றே செய்வாய் பிழை செய்வாய். நானோ இதற்கு நாயகமே.
அரசே! அற்புதமான குதிரைகள். அழகும் கம்பீரமும் பொருந்திய குதிரை வீரர்கள் . பரவசமூட்டும் கண்கொள்ளாக் காட்சி.
ஆகா! ஆகா! அற்புதம்! அற்புதம்! அவர்கள் செய்யும் குதிரை ஏற்றங்கள். ஆகா அற்புதமாக இருக்கின்றன.
அரசே! அதோ அவர்கள் குதிரைகளில் அமர்ந்தவாறே சிநேகயூர்வமாக வாள்ச்சண்டை செய்வதும், ஈட்டிச்சண்டை செய்வதும் மிகவும் அற்புதமாக இருக்கிறது.
அமைச்சரே! அதோ! அந்தக் குதிரை வீரர்களின்
தலைவனைப் பாரும். என்ன தேஜஸ், என்ன கம்பீரம்.
கோடி சூரியப் பிரகாசம். இவன் என்ன ஆரிய வீரனா
அல்லது சூரிய வீரனா? அவன் அணிந்திருக்கும் ஒப்பரிய சட்டையும், உடுத்திருக்கும் பட்டும், தொப்பியும். ஆகிT. ஆகா. கண்கொள்ளாக் காட்சி. இப்படி
- 86

கங்கையின் மைந்தன் அகளங்கன்
அமைச்சர்:
அரசன்:
வாதவூரர்:
அமைச்சர்:
அரசன்:
வாதவூரர்:
ஒரு பேரெழில் படைத்த ஆணழகனை இன்றுதான் காண்கிறேன். என்கண்கள் புண்ணியஞ் செய்தன.
உண்மை அரசே உண்மை. பரிமேல் அழகனாகக் காட்சியளிக்கும் தலைவனைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கின்றது.
வீரர்களின் தலைவனையும் ஒரு வீதியில் குதிரை ஏற்றம் செய்து காட்டும் படி கூறுங்கள்.
ஆணை அரசே! (செல்கிறார்)
ஆகா! அந்தக் குதிரை வீரர்களின் தலைவன் செய்து காட்டும் விளையாட்டுக்கள் அதி அற்புதமாக இருக்கின்றன. பாயும் குதிரைகள் வேகம் குறைந்து நடனம் ஆடுகின்றனவே. ஆகா. அற்புதமான காட்சி. மெய் சிலிர்க்கின்ற காட்சி.
உணி மை உணி மை. இத்தகைய குதிரை விளையாட்டுக்களை நான் இதுவரையில் காணவில்லை. இவருக்கு விலைமதிப்பில் லாத இந்தப் பட்டுப் பீதாம்பரத்தைப் பரிசாக வழங்குவோம்.
வாங்கி அதைக் குதிரையில் விரித்து அலட்சியமாக அமர்கிறான்)
விலை மதிப்பற்ற ஒரு பட்டுப் பீதாம்பரத்தை நான் கொடுக்க, பணிவாகக் கைகளினால் வாங்கவுமில்லை. கண்களில் ஒற்றிக் கொள்ளவுமில்லை. மகிழ்ச்சியோடு தோளில் போட்டுக் கொள்ளவுமில்லை. குதிரைச் செண்டால் வாங்கியது மட்டுமன்றி விரிப்பாகப் போட்டு உட்கார்ந்தும் விட்டானே. கர்வம் பிடித்தவன். மரியாதை தெரியாதவன். ((885 TIL DIT)
அரசே! அது அவர்கள் நாட்டு வழக்கம். தங்களை அவமரியாதைப்படுத்த அவர் அப்படிச் செய்யவில்லை. தாங்கள் கோபங் கொள்வது தங்களுக்கு அழகல்ல.
87

Page 46
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
SLib:
அமைச்சரே! அஸ்வ இலக்கண விற்பன்னர்களை அழைத்துச் சென்று, பரிகளைச் சோதனை செய்து அவற்றின் நிறைகுறைகளை ஆராய்ந்து சொல்லுங்கள். (அமைச்சர் சென்று திரும்புகிறார்) -
அரசே! அனைத்தும் பஞ்ச கல்யாணி வகையைச் சேர்ந்த உயர்சாதிக் குதிரைகள். நாம் கொடுத்த பணத்தின் எட்டு மடங்கு பெறுமதியான குதிரைகள் கிடைத்திருக்கின்றன.
மகிழ்ச்சி. எனது முதலமைச்சர் எனக்கு ஏற்ற காரியத்தைத்தான் செய்திருக்கிறார். குதிரைகளை, கயிறு மாற்றி லாயத்தில் கட்டி வையுங்கள்.
OOO
திருவாதவூரர்
காட்சி - 10
அரண்மனை
பாத்திரங்கள்: அரசன், சேவகர்கள் இருவர்.
சேவகன்:
அரசன்:
சேவகன்:
சேவகன்I:
அரசன்:
சேவகன்:
சேவகன் II:
(நரிகள் ஊளையிடும் சத்தம். )
அரசே! அரசே!
என்ன செய்தி. ஏன் இந்தப் பதைபதைப்பு.
அரசே! லாயத்திலே நேற்றுக் கட்டிய குதிரைகள் எல்லாம் இரவோடிரவாக நரிகளாக மாறிவிட்டன.
அங்கே இருந்த எமது பழைய குதிரைகளையும் கடித்துத் தின்று கொன்று கட்டறுத்து எம்மையும் துரத்துகின்றன.
என்ன. பரிகள் நரிகளாயினவா.
ஆம் அரசே, அதோ! மக்களின் அபயக்குரலும், அவலக்குரலும், நரிகளின் ஊளைச் சத்தத்தோடு போட்டி போட்டு ஒலிப்பதைக் கேளுங்கள்.
நாங்கள் எவ்வளவோ முயன்று பார்த்தோம். நரிகளா
88

கங்கையின் மைந்தன் அகளங்கள்
அரசன்:
GLub
பாத்திரங்கள் : வாதவூரர்
வாதவூரர்:
அவை. சிங்கங்கள் போலச் சீறிப் பாய்கின்றன.
சேனாதிபதியிடம் செய்தி தெரிவித்து அந்த நரிக்கூட்டத்தை ஒன்றும் விடாமல் கொல்லுங்கள். காட்டு நரிகளைப் பஞ்ச கல்யாணிப் பரிகளாக்கிய ஏமாற்றுக்காரத் தலைமை அமைச்சரைச் சுடுமணலில் முன்போல வளைப்பில் நிறுத்தி, குதிரை வாங்கக் கொண்டுபோன நாற்பத்தொன்பது கோடி பொன்னையும் அறவிடும்படி தண்டலாளர்களுக்குத் தெரிவியுங்கள். ம். செல்லுங்கள்.
திருவாதவுரர்
காட்சி - 11
2 மணல்வெளி
(சுடுமணலில் மேல்நோக்கிப் பார்த்து நிற்கிறார்)
இறைவா! இது என்ன சோதனை. பால் நினைந் தூட்டும் தாயினும் பரிவுடையை அல்லையோ,
என்பால் இரக்கமில்லையோ, நரிகளைக் கொண்டு வந்து பரிகளாக்கி விளையாட்டுக் காட்டிய விந்தை என் பொருட்டாகவோ, என் துயர்களைக் களையாயோ,
பன்றிக் குட்டிகளுக்குப் பரிவு காட்டித், தாயாக வந்து பாலூட்டிய கருணை, இந்தப் பாவியேனிடத்தில் சிறிதும் இல்லையோ,
சுடுமணலில், சூரியனைப் பார்த்தபடி கண்கள் கூச, உடல் நடுங்கத் துயரடைவதுதான் உன் தொண்டனுக்கு நீ காட்டும் வழியோ.
89

Page 47
கங்கையின் மைந்தன் அகளங்கள்
இடம்
திருவாதவுரர்
காட்சி - 12
அரண்மனை
பாத்திரங்கள் : அரசன், அமைச்சர், சேவகன் 1
சேவகன்:
அமைச்சர்:
அரசன்:
சேவகன்:
அரசன்:
அமைச்சர்:
அரசன்:
அரசே! அபாயம்! அபாயம் வைகை ஆறு பெருக்கெடுத்து விட்டது. வயலெல்லாம் அழித்து, இப்போது மதுரை மூதுTரையும் விழுங்கும் வேகத் தோடு, வந்து கொண்டிருக்கிறது. மக்கள் அல்லலுற்று அலறி ஒடுகிறார்கள்.
என்ன அதிசயம். மழையில்லை. ஆனால் வெள்ளம் வருகின்றது. முன் எப்பொழுதும் நிகழ்ந்திராத சம்பவமாயிற்றே.
கடலுக்கே செல்லாத வைகை நதி கடல் போல் அலையடித்து வருகிறதா? என்ன ஆச்சரியம்.
அரசே! ஒருபனை உயரத்துக்கு அலை எறிந்து ஆர்ப்பரித்து வருகிறது வைகை. வாயைத் திறந்து வரும் வைகையை இப்படியே விட்டுவிட்டால், மதுரையின் மாடங்கள் மட்டுமென்ன, சோமசுந்தரப் பெருமானின் ஆலயமும் கூட விழுங்கப்பட்டு விடும்.
அமைச்சரே! திருவாலவாயிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு நான் செய்யும் பூசையில் ஏதேனும் குறைபாடு வந்ததோ, அன்றி, சிவனடியார்கள் யாருக்காவது நான் தீங்கு செய்துள்ளேனோ. நீதிநெறி தவறி ஆட்சி செய்துள்ளேனோ, வைகையின் பெருக்கெடுப்புக்கு யாது காரணம் அமைச்சரே, யாது காரணம்.
அரசே! எங்கள் முதலமைச்சர் ஒர் சிவனடியார். அவருக்குத் தண்டனை வழங்கியது தவறாக இருக்கலாம்.
அமைச்சரே! நீர் சொல்வது சரி. நீர் உடனடியாகச் சென்று எமது தலைமை அமைச்சரைத் தண்டனையினின்றும் விடுவித்து அழைத்துவாரும்.
90
 

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
அமைச்சர்:
GLub:
இப்பொழுதே செல்கிறேன். வாதவூரரின் கண்ணிர்தான் கங்கையாய்ப் பெருகி வைகையோடு சேர்ந்திருக்கும். (அமைச்சர் செல்கிறார்)
D D D
திருவாதவுரர்
காட்சி - 13
வைகைக் கரை
பாத்திரங்கள்: அரசன், அமைச்சர், வாதவூரர், சேவகன்.
அரசன்:
அமைச்சர்:
வாதவூரர்:
அரசன்:
வாதவூரர்:
சேவகன்:
அமைச்சர்:
அரசன்:
எமது மாண்புமிக்க தலைமை அமைச்சர் எங்களை மன்னிக்கவேண்டும். மீண்டும் தலைமை அமைச்சர் பொறுப்பேற்று வைகைக்குக் கரைகட்டும் பணியைத் தாங்களே செய்விக்க வேண்டும்.
தங்களின் தெய்வீகத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இப்படித் தண்டனை கொடுத்து விட்டோம். தாங்கள் மன்னிக்கவேண்டும். மன்னா! நன்றோ, தீதோ, நாம் அதற்குப் பொறுப்பன்று, எல்லாம் அவன் செயல். அவன் ஆட்டுகின்றான். நாம் ஆடுகின்றோம். இதில் குற்றம் யாரில் இருக்கிறது.
தாங்கள் வைகைக் கரையை அடைக்க இப்பொழுதே பொறுப்பேற்க வேண்டும். ஆம், அதுவும் அவன் செயல்தான். இதில் நான் என்ன சொல்ல.
அரசே! அரசே வெள்ளம் குறைகிறது. வைகையின் சீற்றம் தணிந்து விட்டது.
கரையைக் கட்டிவிட்டால் பயமில்லை.
நாட்டு மக்கள் யாவருக்கும் பங்குகொடுத்து மிக விரைவில் இப்பணியை முடியுங்கள்.
口 口 口
91

Page 48
கங்கையின் மைந்தன் அகளங்கன்
திருவாதவுரர்
காட்சி - 14
SLib வெளி
பாத்திரங்கள் : தண்டோராப் போருபவன்
தண்டோராப் போடுபவன்: இத்தால் சகலரும் அறியத் தருவது என்னவென்றால், வைகையாற்றுக்குக் கரைகட்டும் பணி உடனடியாக ஆரம்பமாகின்றது. பொதுமக்கள் யாவரும் கூடையும் மண்வெட்டியும் கொண்டு வைகைக் கரைக்கு வந்து கூடவேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்குமுரிய அடைக் கும் பங்கு அளந்து கொடுக் கப்படும் . தவறுபவர்களுக்குக் கடுந் தண்டனை வழங்கப்படும். இது அரிமர்த்தன பாண்டிய மகாராஜாவின் கட்டளை.
SLub: கோவில்
பாத்திரங்கள்: செம்மனச் செல்வி (நரை மூதாட்டி வந்தி)
செம்மனச் செல்வி: சோமசுந்தரப் பெருமானே! எனக்குத் தாயுமில்லை. தந்தையுமில்லை. உற்றார் என்று உதவ உறவு ஏதுமில்லை. வைகையில் எனக்கிட்ட பங்கை எப்படி அடைக்கப் போகிறேன். பிட்டு விற்றுச் சீவிக்கும் என்னிடம் கூலியாளுக்குக் கொடுக்கப் பணமில்லை. பிட்டையே கூலியாகக் கொண்டு பெருங்கரை அடைப்பாருண்டோ. பேதையாய்ப் புலம்பும் என் துயர் நோய்க்கு மருந்தும் உண்டோ. உன்னை அன்றி எனக்கு வேறு யார் துணை, எம் பெருமானே! என் பங்கை அடைக்க எனக்கு வழிகாட்ட மாட்டாயா? அடியார்கள் துயர்தீர்க்கும் ஆலவாய் அண்ணலே! நான் துயருறல் சரிதானோ. இதுவும் என் விதிதானோ. என் துன்பத்தை நீ போக்காவிட்டால் என்
உயிரை நான் போக்குவேன். இது சத்தியம். இது சத்தியம்.
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
திருவாதவுரர்
காட்சி - 16
இடம்: குடிசை
பாத்திரங்கள் கூலியாள், செம்மனச் செல்வி
கூலியாள் கூலிகொள்வோர் யாருமுண்டோ.
கூலி கொள்வோர் யாருமுண்டோ,
செம்செல்வி என் செவிகளில் அமுதம் பாய்ந்தது போன்ற வார்த்தை.
யாரது. (எட்டிப் பார்க்கிறார்.)
கூலியாள் பாட்டி ஏதாவது வேலை கிடைக்குமா. மண்வெட்டி, கூடை
எல்லாம் வைத்திருக்கிறேன்.
செம்.செல்வி; மகனே! மகனே! வா. வா. நான் வேலை தருகிறேன். உன்னை அந்தச் சோமசுந்தரப் பெருமான் தான் அனுப்பியிருக்கிறார்.
கூலியாள் என்ன பாட்டி. என்னென்னவோ சொல்கிறாய். என்னை
யாரும் அனுப்பவில்லை. என்னை யாரும் அனுப்புவதும் இல்லை. நானாகத்தான் வந்தேன்.
செம்.செல்வி; மகனே! வைகைக் கரையில் எனக்கு அளந்து விடப்பட்ட
பங்கைக் கட்டி முடிக்க வேண்டும். வருகிறாயா,
கூலியாள் பாட்டி முதலில் கூலி எவ்வளவு தருவாய் சொல்லு,
கூலியை முற்கூலியாகத் தரவேண்டும்.
செம்.செல்வி; மகனே! நானோ பரம ஏழை. முற்கூலி தருவதற்கு நான் எங்கே போவேன். உனக்குக் கூலி தருவதற்கே எனக்கு வழி தெரியவில்லை. அப்படியிருக்க முற்கூலி தர என்ன செய்வேன்.
கூலியாள்: ம். b....... அப்படியென்றால் வேறு யாரையும் பார் பாட்டி பாவத்துக்கு இரங்கி வேலை செய்ய அந்தப் பரமசிவன்தான் வரவேண்டும். என்னால் முடியாது. நான் வருகிறேன். (செல்கிறான்)
செம்.செல்வி; மகனே! மகனே! நில். நில். உன்னை என்
93

Page 49
கங்கையின் மைந்தன் அகளங்கன்
கூலியாள்:
குலதெய்வமான சோமசுந்தரப் பெருமான்தான் அனுப்பினார் என்று மகிழ்ந்தேன். அவசரப்படாதே. நில்.
பாட்டி! யாரும் சும்மா வேலை செய்வார்களா. எனக்கும் குடும்பம் பிள்ளை குட்டிகள் உண்டு. பாவம் பார்த்தால் பசிக்கு எங்கே போவது.
செம்.செல்வி; மகனே! நான் பிட்டு விற்றுச் சீவிக்கும் ஏழை. உனக்கு
கூலியாள்:
உண்பதற்கு நல்ல சர்க்கரைப்பிட்டுத் தருகிறேன். மாலையில் பிட்டை விற்றுக் கூலி தருகிறேன்.
பாட்டி! உன்னைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது. சரி இப்பொழுது பிட்டைத் தா. சாப்பிடுவோம்.
செம்.செல்வி வா மகனே! வந்து உட்கார். (இலையில் பிட்டை இடுகிறார்)
கூலியாள்:
(eFTüllLLL19) lÖ......... Լb........... நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போடு பாட்டி, உனக்கென்ன பிள்ளையா குட்டியா. நான் தான் பிள்ளை போல வந்திருக்கிறேன். ம். இன்னும் போடு பாட்டி. (நன்றாகச் சாப்பிடுகிறார்)
செம்.செல்வி; மகனே! ஆறுதலாகச் சாப்பிடு. நீ சாப்பிடுவதைப் பார்க்க
கூலியாள்:
என் இதயமும் வயிறும் ஒருங்கே நிறைகின்றன.
பாட்டி பிட்டைக் கொஞ்சம் கட்டித் தந்தால் சாப்பிட்டுச் சாப்பிட்டு வேலை செய்யலாம்.
செம்.செல்வி: சரி, கட்டித் தருகிறேன். கடவுள் போல வந்திருக்கிறாய்.
கூலியாள்:
உனக்குத் தராமல் வேறு யாருக்குத் தரப்போகிறேன்.
பாட்டி ஒன்று செய்வோம். நீ பிட்டை அவி. உதிர்ந்து போகின்ற பிட்டையெல்லாம் எனக்குச் சாப்பிடக் கொடு. உதிர்ந்து போகாத பிட்டை விற்று மாலையிலே கூலியைக் கொடு.
செம்.செல்வி: சரி. சரி. அப்படியே செய்வோம்.
கூலியாள்:
பாட்டி. பிட்டைத் துணியில் முடிந்து கையில் தா. (துணியில் முடிந்த பிட்டை தோளில் போடுகிறார்) நான் போய் வைகைக் கரையில் உங்கள் பங்கை ஒரு குறையும் இல்லாமல் அடைத்து விடுகிறேன்.
94

கங்கையின் மைந்தன் அகளங்கன்
செம்.செல்வி: நானும் வருகிறேன். எனது பங்கை உனக் குக்
காட்டுகிறேன்.
கூலியாள் சரி, சரி. வா பாட்டி விரைவாகப் போவோம்.
D D
திருவாதவூரர்
bfdf - 17
S. b : வைகைக் கரை,
பாத்திரங்கள் : செம்மனச் செல்வி, கூலியாள்.
(செம்மனச் செல்வி முன்னே நடக்கிறாள். கூலியாள் பின்னே
நடக்கிறார்.)
கூலியாள்: (முடிச்சிலிருந்து பிட்டை அள்ளி வாயில் போட்டுச்
சுவைத்துக் கொண்டு)
பாட்டி பிட்டு பிரமாதம். நன்றாக இருக்கிறது.
செம்.செல்வி; மகனே! இன்னும் சுவையாக அவித்துத் தருகிறேன்.
விரைவாக நடந்துவா.
கூலியாள் என்ன பாட்டி, கரைக்கு வந்துவிட்டோமா?
செம்.செல்வி நடந்து களைத்து விட்டாயா மகனே.
கூலியாள் எனக்குக் களைப்பேது பாட்டி இடைவிடாமல் இயங்கும்
நான் களைப்படைந்தால்.
செம்.செல்வி நீ என்ன சொல்கிறாய் மகனே.
கூலியாள்: ஒன்றுமில்லைப் பாட்டி. சும்மா சொன்னேன்.
செம்.செல்வி: இதோ கரைக்கு வந்துவிட்டோம் . அலையடித்து
ஆர்ப்பரித்தோடும் வைகையைப் பார் மகனே.
கூலியாள் பாட்டி! உனது பங்கைக் காட்டு. ஒரு நொடிக்குள்
அடைத்து விடுகிறேன்.
செம்செல்வி: இதோ. இந்தப் பகுதிதான் என்னுடையது.
95

Page 50
கங்கையின் மைந்தன் அகளங்கன்
கூலியாள்: சரி. சரி. (மண்ணை வெட்டிக் கூடையில் போட்டுத் தூக்குகிறார்) பாரமாக இருக்கிறதே. (கொஞ்சத்தைக் கொட்டி விட்டுத் தூக்கித் தலையில் வைத்துப் பார்க்கிறார்) தலை நோகுகிறதே. (தலையில் துணியைச் சுத்திச் சும்மாடு வைக்கிறார். பின் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு நடந்து போய்க் கரையில் கொட்டுகிறார்). களைப்பாக இருக்கிறதே. (கரையில் இருக்கிறார்)
செம்.செல்வி; மகனே! இப்படி வேலை செய்து எப்படி கரையை
அடைக்கப் போகிறாய்.
கூலியாள் பாட்டி அதெல்லாம் அடைத்து விடுவேன். நீ, போ பாட்டி போய்ப் பிட்டவித்து விற்று எனக்குரிய கூலிக்குப் பணத்தைச் சேர்.
கூலியாள்: பசிக்கிறது பாட்டி. நான் சாப்பிட்டுச் சாப்பிட்டு வேலை
செய்வேன். நீ போ.
செம்.செல்வி வேறு கூலியாளும் இல்லை. வந்தவனும் இப்படி.
எம்பெருமானே. (திரும்புகிறார்)
OO
திருவாதவூரர்
காட்சி - 18
இடம் வைகைக் கரை
பாத்திரங்கள் : அரசன், வாதவுரர், அமைச்சர், சேவகன்,
கூலியாள்
அரசன்: வைகைக் கரையெங்கும் அணை கட்டப்பட்டு விட்டதா. மதிப்புமிக்க முதலமைச்சரே அளந்து விடப்பட்ட பங்குகளைக் குடிமக் கள் குறையே துமினி றி அடைக்கிறார்களா.
வாதவூரர்: ஆம் அரசே, கரை கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.
96

கங்கையின் மைந்தன் அகளங்கள்
அமைச்சர்:
வாதவூரர்:
சேவகன்:
அரசன்:
சேவகன்:
அரசன்:
ஒரு பங்கு குறையாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆம். செம்மனச் செல்வி என்று அழைக்கப்படும் நரை மூதாட்டி வந்தியின் பங்குதான் அடைபடாமல் குறையாகக் கிடக்கிறது.
அரசே! தாங்கள் அனுமதித்தால் அடியேன் ஒன்று கூறுவேன்.
என்ன செய்தி. அச்சமின்றிச் சொல்.
வந்தியின் கூலியாளாய் வந்திருக்கிறான் ஒருவன். அவன் செய்யும் விளையாட்டுக்கள் சொல்லில் அடங்கா. அவன் யாரையும் மதிப்பதுமில்லை. தன் கடமையைச் செய்வதுமில்லை. மண்ணை வெட்டுவான். சிறிது சிறிதாகக் கொட்டுவான். பின்பு சிரித்துக் கை தட்டுவான். வேலை செய்து களைத்தவன் போலக் கொன்றை மரநிழலில் இருந்து பிட்டுச் சாப்பிடுவான். பின் எழுந்து நின்று பாடுவான். ஆடுவான். தான் கொட்டிய மண்ணிலே மிதித்துப் பாய்வான். பின்பு சென்று கூடையைத் தலைக்கு வைத்துத் தூங்குவான். அதோ. அந்த மரநிழலில் தான் அவன் தூங்குகிறான். வா என்றால் போவான். போ என்றால் வருவான். பார்த்தால் அரசிளங் குமரன் போலக் காட்சியளிக்கிறான்.
(கோபமாக) சேவகா! நீ சென்று அவனை இழுத்து வா. ம். செல்.
O)
97

Page 51
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
திருவாதவுரர்
GITTF – 1 9
: கொண்றை மரநிழல்
பாத்திரங்கள் : கூலியாள், சேவகன்
சேவகன்;
கூலியாள்:
சேவ்கன்:
கூலியாள்:
சேவகன்;
கூலியாள்:
சேவகன்:
(மரநிழலில் கூடையைத் தலைக்கு வைத்து நித்திரை செய்கிறார் கூலியாள்)
ஏய் எழும்பு!. எழும்பு!
யார் நீ? (திடுக்கிட்டு எழுந்து)
உன்னுடைய பாட்டன். எழும்பு!
நீ எனக்குப் பாட்டனா, நீ பெரிய ஆள்தான். நன்றாக நித்திரை செய்கின்ற நேரத்தில் குழப்புகிறாயே, புத்தி இருக்கிறதா உனக்கு. எவ்வளவு வேலை செய்து களைப்போடு வந்து நிம்மதியாகத் தூங்குகிறேன். குழப்புகிறாயே. இந்த ஆற்றங்கரை, இந்தக் கொன்றை மரநிழல் இந்தக் காற்று, இந்த நித்திரை, இதற்குப் பின் கிடைக்குமா. ஏன் குழப்புகிறாய். போ. போ.
நித்திரை செய்யவா இங்கே வந்தாய். உன்னுடைய சோம்பேறித் தனத்தை மன்னர் அறிந்துவிட்டார். இனி நீ தூங்க முடியாது. வா என்னோடு. (பயந்து பயந்து செல்கிறார்) நீ முன்னால் போ. நான். பின்னால் வருகிறேன்.
இந்தப் பயமும் நடுக்கமும் கரை கட்டாமல் விளையாடும் போது இருந்திருக்க வேண்டும். என் முன்னால் செல்.
b..... என் முன்னால் செல். (தள்ளிச் செல்கிறான்)
O
98
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
SLib:
திருவாதவுரர்
காட்சி - 20
வைகைக் கரை
பாத்திரங்கள்: அரசன், வாதவுரர், அமைச்சர், சேவகன்,
சேவகன்;
அரசன்:
அரசன்:
வாதவூரர்:
கூலியாள்
(கூலியாளை அரசன்முன் நிறுத்தி) அரசே! வணக்கம். வைகைக்கு அணைகட்ட வந்து, விளையாடிக் காலம் கடத்துபவன் இவன்தான்.
எல்லோர் பங்குகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீ கட்டும் பங்கு மட்டும் அப்படியே இருக்கின்றது. உன் னைப் போல ஏமாற்று வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும். சேவகா! இவனது முதுகிலே நன்றாக அடி. அப்போது தான் இவனுக்குப் புத்தி வரும்.
(சேவகன் பிரம்பினால் அடிக்கிறான். எல்லோரும் தத்தம் முதுகைத் தடவிச் சத்தமிடுகின்றனர்)
என்ன அதிசயம் ஆண்டவா. இது என்ன சோதனை. கூலியாளைக் காணவில்லையே. முதலமைச்சரே! என்னை மன்னிக்க வேண்டும். அகில உலகத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருள் உங்கள் பொருட்டாக குதிரை வீரனாகவும், கூலியாளாகவும் வருவதென்றால் உங்கள் மகிமைதான் என்னே! இதை முன்பே உணராமற்போனேனே. இனி நீங்கள் தான் இந்த நாட்டை அரசாள வேண்டும். என்னை மண் ணித்து இந்த இராச்சியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (பணிகிறார்)
அரசே! எனக்கு நீங்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், நான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக அனுமதிக்க வேண்டும். அது ஒன்றே வேண்டும். நான், என்னை ஆண்டு கொண்ட ஆலவாய்ப் பெருமானின் பாதங்களை வணங்கப் பயணமாகப் போகிறேன். திருப்பெருந்துறையிலே குருந்தமர நிழலிலே குருவாக வந்து வீற்றிருந்து என்னை ஆண்டு கொண்ட பரம்பொருள் மூர்த்தியைக் காண எண்மனம்
99

Page 52
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அரசன்:
அமைச்சர்:
வாதவூரர்:
ஆவலாயிருக்கிறது. எனக்கு விடை கொடுங்கள்.
பாண்டிய மண்டலத்தின் பெருமை பாரெங்கும் பரவவும், சைவத்தின் மேன்மை இத்தரணியெல்லாம் செழிக்கவும் தங்கள் பயணம் வழிவகுக்கட்டும். ' -
தங்கள் பயணம் பக்கத்து நாடுகளிலெல்லாம் சமாதானத்தை வளர்க்கட்டும். அன்புச் சமயமாம் சைவம் அகிலத்தின் சமாதானத்துக்கு வழிவகுக்கட்டும். யுத்தமற்ற உலகைத் தங்கள் பயணம் உருவாக்கட்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் சிவாய நம.
திருச்சிற்றம்பலம். GULð
1OO
 

அனார்க்கலி
பாத்திரங்கள்
அனார்க்கலி
சலீம்
அக்பர்
ராஜாமாண்சிங்
அனார்க்கலியின் தாய்
101

Page 53
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
சலீம்:
அனார்:
சலீம்:
அனார்:
geSib:
05. அனார்க்கலி
காட்சி - 01
: பூஞ்சோலை.
பாத்திரங்கள் : சலீம், அனார்க்கலி
அனார்! அன்பின் பிறப்பிடமே! அழகின் சிறப்பிடமே! எவ்வுலகிலும் காண முடியா எழிலுருவே! உன் அகன்ற விழிகளிலே என் விழிகளைப் பதித்து, எமக்கெனப் புது வழி வகுத்து, இந்த உலகத்தையே, காதல் இன்பத்திலே வென்று விடுவோம் அனார்.
சலீம் சரித்திரங்கள் மாறலாம். சாம்ராச்சியங்கள் மாறலாம், அழியலாம். ஆனால் எமது உள்ளத்திலே ஊன்றி வளர்ந்து விட்ட காதல் விருட்சம் மட்டும் என்றுமே அழியாது சலீம். அழியாது.
அனார்! நீ அசைந்தாடும் அழகிலே இந்த அகிலமே என் கண்களில் அசைந்தாடுகின்றது. தாமரைப் பாதங்களை மெல்லத் தூக்கித் தரையிலே வைக்கும் போது என் நெஞ்சிலே வைப்பது போல் இருக்கிறது. அனார்! ஏன் தெரியுமா, தளிரிலும் மெல்லிய உன் பாதங்கள் தரையில் பட்டால் சிவந்து விடுமே என்ற கவலைதான். கைகளை அசைத்து நீ அபிநயம் பிடிக்கும் போது, உன் ஒவ்வொரு விரல் அசைவும் என்னைக் கவர்ந்திழுத்து உன்னைக் கட்டிக் கொள்ளும்படி தூண்டுகிறது. மலர்ந்த உன் மதிமுகத்தைப் பார்த்து, மகிழ்ச்சியிலே என் இதயம் பூரிக்கின்றது. உன் அங்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் என் உயிரும் சேர்ந்தே அசைகிறது.
போதும். போதும். இப்படியே புகழ்ந்து கொண்டே
அனார்! கண்ணே! உன் அழகையும், ஆடலின் பெருமைகளையும் நான் கூறுவதே மிகச் சொற்பம்தான். ஆ5T. நான் மட்டும் ஓர் கவிஞனாக இருந்திருந்தால் உன் அங்கத்தின் அழகை ஆயிரம் ஆயிரம் பாடல்களில்
102
 

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
அனார்:
சலீம்:
அனார்:
சலீம்:
அடுக்கி அர்ச்சனை செய்திருப்பேன். இதழ் அசைவுக்கோர் ஈராயிரம். இரு விழிகளுக்கும் இன்னும் பல்லாயிரம். தாமரை முகத்தை, சங்குக் கழுத்தை, பொன்னெழில்க் கன்னத்தின் பூவெழில் வண்ணத்தை. தந்தத்தில் செதுக்கிய உன். (உற்றுப் பார்க்கிறான்.)
ld.......... இப்படியே போனால். சலீம்! இப்படியே நாம் காதல் வானத்திலே சிறகடித்துப் பறந்து கொண்டே இருந்தால் கல்யாணம் என்ற மரத்திலே களைப்பாறுவது எப்போது. -
உனக்குத் தெரியாதா என்ன! என் தந்தை. இந்தப் பெரிய சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தி. நானோ இளவரசன். தந்தையின் மனதை மாற்றி அவரது சம்மதத்துடனே எமது காதல் சாம்ராச்சியம் டில் லி சாம்ராச்சியத்துடன் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை. அனார்! சோலையிலும் சாலையிலும் மனம் மயக்கும் மாலையிலும், வாலைப் பருவத்து வண்ணப்பூஞ் சிட்டுக்களாய் இரகசியச் சந்திப் பிலே இன் பங் கண்டு வந்த நாங்கள் , அரண்மனையிலே அடுக்கு மல்லிகை பரப்பிய மஞ்சத்திலே அன்புப் பிணைப்பிலே இன்பங் காணத்தான் போகின்றோம். அங்கே மஞ்சத்தில் பரப்பிய மல்லிகையை விட்டு மதுதேடி வண்டெல்லாம் உன் மதிமுகத்திலே சுற்ற, நான் அவைகளைக் கலைத்துக் களைத்து வேர்க்க, உன் முந்தானையால் நீ என் களைப்பைப் போக்க, அந்தக் குளிர்ச்சியிலே நான் உன்னைச் சேர்க்க ஆகா. ஆகிT. அந்த இன்பமான நாட்களை எண்ணிப் பார்க்கவே இன்ப ஊற்று இதயத்திலே பெருகுகிறது கண்ணே!
உண்மைதான் அத்தான். காதல் ச் சோலையிலே நாமிருவரும் கருவண்டுகளாய்ச் சுற்றினோம். காதல்த்தேன்
அருந்திக் களித்து மகிழ்ந்தோம். இனி திருமண மேடையிலே எமது காதல் நாடகம் அரங்கேறும் நாளை
என்ன. அனார். ஏன் நிறுத்திவிட்டாய்.

Page 54
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அனார்:
g65 b:
அனார்:
6ਪੰD:
அனார்:
56 ນີ້ມີ:
அனார்:
சலீம்:
தங்கள் அந்தஸ்துக்கு ஏற்றவள் இல்லை இந்த ஆட்டக்காரி என்று அக்பர் பாதுஷா அனுமதி மறுத்து விட்டால். அதை நினைக்க இதயத்தில் ஈட்டி பாய்கிறது அத்தான்.
அனார்! என்ன இது கண்ணிரா! வேண்டாம் அனார். வேண்டாம். உன் கண்களிலே கண்ணிரை நான் உயிரோடிருக்கும் வரை காணவே வேண்டாம் அனார். காணவே வேண்டாம். அக்பர் பாதுவடிா என்ன அனார், ஆண்டவனே வந்தாலும் கூட எம்மைப் பிரிக்க முடியாது. இன்னும் சில தினங்கள் பொறுத்துக் கொள். என் இதயத்துச் சாம்ராச்சியத்தில் ராணியாக வீற்றிருக்கும் உன்னை இந்த டில்லிச் சாம்ராச்சியமே அறியும் வண்ணம் மனைவியாக்கி விடுகிறேன்.
அத்தான்!. இந்த ஏழை நாட்டியக் காரிக்கு இந்த உலகிலே நீங்கள் மட்டும் சொந்தம். வேறில்லைப் பந்தம்.
அனார்!. விடைகொடு கண்ணே. நேரமாகிறது.
இன்று ஏனோ வழமைக்கு மாறாக என் இதயம் அதிகமாக அடித்துக் கொள்கிறது. அத்தான். அத்தான். என்னைத் தனியே தவிக்க விட்டு விடமாட்டீர்களே.
அனார்! என்ன இது. குழந்தை போல. அனார் இல்லாமல் சலீம் இல்லை. சலீம் இல்லாமல் அனார் இல்லை என்று சங்கமித்த பின்பும் சஞ்சலமா. இல்லை சந்தேகமா.
இல்லை சலீம் சந்தேகமில்லை. சஞ்சலமுமில்லை.
ஆனால் சங்கடமாக இருக்கிறது. தங்களைப் பிரிவது. ஏதாவது தடங்கல்கள்.
வானமே பிளந்தாலும் வையகமே இடிந்தாலும், நீயும் நானும் கொண்ட காதலுக்கு முடிவே இல்லை அனார்.
கலங்காதே. கன்னே. எங்கே சிரித்த முகத்தோடு விடைகொடு. வருகிறேன் கண்ணே.
DOD
104
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
பாத்திரங்கள்
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
அனார்க்கலி
GITT F - O2 * அனார்க்கலியின் வீடு (அல்லது சோலை)
அனார்க்கலி, ராஜாமான்சிங்
அனார்க்கலி
ராஜாமான்சிங். அரச நிர்வாகி, அமைச்சர், படைத்தளபதி.
ஆம். ஆம். அக்பரின் மைத்துனர் என்று கூடத் தெரியும்.
நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே! இது மட்டுமா தெரிந்து வைத்திருக்கிறாய். ? நாளை நாடாளப் போகும் அக்பரின் மகன் சலீமை எப்படி நயமான வார்த்தைகளால் வலைவீசிப் பிடித்து டில் லி சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தினி ஆக வரலாம் என்ற வழியையும்தான் தெரிந்து வைத்திருக்கிறாய். ஆனால் அது நடக்காது பெண்ணே!
ஏன் வீண் பேச்சு அரச குமாரனும் ஆட்டக்காரியும் காதலிக்கக் கூடாது என்று அக்பர் ஆணையிட்டுள்ளார். இளவரசன் சலீமை நீ இன்றோடு மறந்து விடவேண்டும்.
இல்லை. இல்லை. முடியாது. அவரை என்னால் மறக்கவே முடியாது.
தொல்லைகள் பல விளையும். தொந்தரவு செய்யாதே பெண்ணே.
என் உயிர் இருக்கும் வரை, என் உயிரோடு கலந்துவிட்ட காதல்த் தெய்வத்தை யாராலும் பிரிக்க முடியாது. என்னால், என் உள்ளம் கவர்ந்த சலீமை மறக்க முடியாது. வாழ்ந்தால் நான் அவரோடுதான்
105

Page 55
கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
ராஜாமான்சிங்:
அனார்க்கலி:
வாழ்வேன். இல்லையென்றால் அவருக்காகவே சாவேன். இது உறுதி.
வீண் விவாதம் வேண்டாம். நீ சலீமின் மீது வைத்திருக்கும் காதல்க் கடலின் ஆழத்தைக் காண நான் வரவில்லை. சலீமை நீ மறக்க வேண்டும். அது மட்டுமல்ல. நான் தரும் லட்சம் பொன்னையும் கொண்டு இன்றே இந்த நாட்டை விட்டுப் போய்விட வேண்டும். இது அரச கட்டளை. அக்பரின் ஆணை. ஆரணங்கே அழுது இனி ஆவதில்லை. அகன்று விடு உடனே.
அவனி ஆளும் அக்பர் என்ன; ஆண்டவனே வந்தாலும் இப்படி அற்பக் காரியத்தை அனார்க்கலி செய்யவே மாட்டாள். கேவலம் பொன்னைக் காட்டி இந்தப் பெண்ணை எடை போட வந்து விட்டீர்.
பெண் ணே1 இறுதியாகக் கூறுகிறேன். உன் நாட்டியமெல்லாம் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே இருக்கட்டும். இந்த மண்டலத்தையே ஆட் டிப் படைப்பதற்கு வேண்டாம். அவனோ இளவரசன். அரசாள வேண்டியவன். அவனை மறந்து விடுவதுதான் நல்லது. இதோ இதிலேயுள்ள லட்சம் பொன்னைக் கொண்டு இன்றே ஓடிவிடு.
நான் ஆடப் பிறந்தவள் தானி , நாட்டை ஆளப்பிறக்காதவள் தான். ஆனால் யாரையும் ஆட்டிப் பிழைக்கும் வஞ்சகத்தை அறியாதவள் அமைச்சரே. சலீமும் நானும் உளமாரக் காதலித்தோம். அதன் உள்நோக்கம் இந்த இராச்சியமில்ல்ை. அன்புதான். அதுதான் எங்களைப் பிணைத்தது.
முடிவாக என்னதான் கூறுகிறாய்!
(LDL96)IT............ முடிவெடுக்க வேண்டியவர்கள் இனி நீங்கள் தான். நானல்ல.
அப்படியானால் விளைவு என்ன தெரியுமா.
கூரியகொலை வாள் எண் கழுத்தை நோக்கிக்
106

கங்கையின் மைந்தன் அகளங்கள்ை
இடம்
சலீம்:
அக்பர்:
56 ວັນ)
அக்பர்:
☞6ານີ້ມີ:
அக்பர்:
குறிவைத்து வந்த போதிலும், கொண்ட காதல் மட்டும் மாறாது. மந்திரியாரே! அனார்க்கலியின் ஆத்மாவோடு கலந்துவிட்ட அழியாக் காதல் அரசாட்சிக்கும், அதிகாரத்துக்கும் பயந்து பணிந்து விடாது.
OOD
அனார்க்கலி
காட்சி - 03
: அரண்மனை
பாத்திரங்கள் : சலீம், அக்பர்.
சலீம்!. இந்தப் பேரரசுக்கு நீ வாரிசு என்பதால் உன் மனம் போனபடியெல்லாம் நடக்க விட்டேன். இப்போது நான் மனங்கோணும்படி நடந்து விட்டாயே.
நாடாள வேண்டியவன் நீ அந்த நாட்டியக் காரியோடு Up856) TLDIT............
பயிர் நிற்கும் இடம் பார்த்தா மழை பெய்கிறது. மனிதர் நிற்கும் இடம் பார்த்தா குயில் பாடுகிறது. மயில் ஆடுகிறது. மான் ஒடுகிறது. அது இயற்கையின் பிணைப்பிலே ஒன்றியது. அதுபோல்தான் நானும்.
சலீம் இது வேடிக்கையல்ல. இதை உனது தனிப்பட்ட பிரச்சினையாக எண்ண வேண்டாம். இது இந்தச் சாம்ராச்சியத்தின் பிரச்சினை. நீ அவளை மறக்கத்தான் வேண்டும்.
நான் இளவரசனாக நின்று கொண்டு பேசவில்லை. எனக்கு இளவரசுப் பட்டமும் தேவையில் லை. அனார்க்கலிதான் எனக்கு நாடு. அனார்க்கலிதான் எனக்கு ഖ്(. அனார்க்கலிதான் எனக்கு வாழ்வு. அவள்தான் எனக் கு எல் லாமே. அனார் கி கலியின் இதய சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தியாக இருப்பதையே நான்
107

Page 56
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அக்பர்:
சலீம்:
அக்பர்:
சலீம்:
இடம்
பெருமையாகக் கருதுகிறேன்.
சலீம்! நீ யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடவேண்டாம். நான் உன் தந்தை என்பதை விட இந்த சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தி என்பதில் தான் அதிக கண்ணாக இருப்பேன். எனது கட்டளைக்கு நீ கட்டுப்படத்தான் வேண்டும். இன்றே அனார்க்கலியை நீ மறந்துவிட வேண்டும். இது அரச கட்டளை.
அரச கட்டளையையே மீறவேண்டிய துர்ப்பாக்கியத்தை அக்பர் தனது மகனுக்கே ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற அவலச் சொல்லை நீங்களே ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். அனார்க்கலியை மறப்பதைவிட என் ஆவியை இழப்பதையே நாண் விரும் புகிறேன். அக்பரின் அதிகாரத்துக்கு எமது அழியாக் காதல் பணிந்து விடாது.
அப்படியானால். (UD196).....
முடிவே வந்தாலும் எனக்கு இதுதான் முடிவு. வேறு எந்த விடிவையும் சலீம் தேடமாட்டான்.
DOD
அனார்க்கலி
காட்சி - 04
: அரண்மனை
பாத்திரங்கள் : அக்பர், ராஜாமாண்சிங்
ராஜாமான்சிங்: அரசே! தங்கள் தீர்ப்புப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டி
இருக்கிறது.
அக்பர்: தீர்ப்பு. அதுதான் தீர்ப்பு. அரச ஆணையை மீறிய அனார்க்கலியும், சலீமும் உயிரோடு சமாதி வைக்கப்படுவார்கள்.
ராஜாமான்சிங்: சலமையும் சமாதிக் குளிர் வைத் துக்
கொல்வதாயிருந்தால். வீணாக அவர்களது காதலைக் கெடுத்திருக்க வேண்டாமே.
108

கங்கையின் மைந்தன் அகளங்கன்
அக்பர்:
ராஜாமான்சிங்:
அக்பர்:
ராஜாமான்சிங்:
அக்பர்:
ராஜாமான்சிங்:
அக்பர்:
ராஜாமான்சிங்:
என்ன சொல்கிறீர் அமைச்சரே!
அரசை அவமதித்த குற்றம் ஆரம் பத்தில் நிகழவில்லையே. சலீம் இந்த நாட்டின் இளவரசன். தங்களின் வாரிசு. நாளை இந்த மண்டலத்துக்கே மன்னனாக மணிமுடி தரிக்க வேண்டியவன் என்பதால் தானே அவன் அனார் க் கலியை மணக் கத் தடை விதித் தோம் . சாதாரண குடிமகனாக இருந்திருந்தால் அவர்களது காதலைத் தடுக்க அருகதை இருந்திருக்காதே எமக்கு.
ஆம். அதிலென்ன சந்தேகம்.
இல்லை. சலீம், உங்களுக்கும் பயன்படாமல், இந்த நாட்டுக்கும் பயன்படாமல், தனக்கும் பயன்படாமல், அனார்க்கலிக்கும் பயன்படாமல் அநியாயமாக அர்த்த மற்ற கொலையில் அல்லவா அழியப் போகிறான்.
լb... լb........ அதற்காக
அரச பரம்பரை அஸ்தமித்து விடக்கூடாது. அரசே! சலீமை தாங்கள் விடுதலை செய்யத்தான் வேண்டும். இந்த மண்டலத்தைக் கட்டியாளும் மன்னனுக்கு உரிய
அனார்க்கலி இறந்தபின் சிறிது நாளில் அவன் அவளை மறந்து விடுவான். அரச அலுவல்களைக் கவனிப்பான். அந்தநிலைக்கு அவனைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு என்னுடையது. தயவு செய்து தண்டனையை மாற்றி விடுங்கள்.
வழங்கிய தீர்ப்புக்கு மறுதீர்ப்பா.
இது அக்பருக்கும் சலீமுக்கும் இடையே ஏற்பட்ட தகப்பன் மகன் பிரச்சினையல்ல; அரசே!. டில்லிச் சக்கரவர்த்திக்கும், இளவரசனுக்கும் ஏற்பட்ட பிரச்சினை. எந்த மக்களுக்காக அவன் காதலுக்குத் தடை போட்டீர்களோ, அதே மக்களுக்காக அவனது வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கத் தான் வேண்டும். வேறு வழியே இல்லை. நாளைய சரித்திரத்திலே
109

Page 57
கங்கையின் மைந்தன் அகளங்கன்
அக்பர்:
மகனையும், மகனின் காதலியையும் வீணாகக் கொன்று கொடுமையான ஆட்சியை அக்பர் நடத்தினார் என்று யாரும் எழுதிவிடக்கூடாது அரசே! தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
சரி. சலீமுக்கு விடுதலை வழங்குகின்றேன்.
அவனைப் பாதுகாத்து இந்த நாட்டுக்கு அரசனாக்க வேண்டியது உமது பொறுப்பு.
ராஜாமான்சிங். நன்றி அரசே! நன்றி.
இடம்
O D D
அனார்க்கலி
காட்சி - 05
: அரண்மனை
பாத்திரங்கள் : அக்பர், அனார்க்கலியின் தாய்.
அ.தாய்:
அக்பர்:
அ.தாய்:
அரசே! இந்த ஏழைகள் மீது இரக்கங் காட்டுங்கள். அறியாப் பருவத்தில் தெரியாமல் தவறிழைத்து விட்டாள், அனார்க்கலி. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவளைக் கொல்லாதீர்கள் அரசே! கொல்லாதீர்கள்.
பெண்ணே உன் மகளுக்காக நீ படும் வேதனையை நான் அறியாமல் இல்லை. ஆனால். இந்த மக்களுக்காக அரசன் என்ற நிலையிலே நிற்கும் நான், தந்தை - மகன், தாய் - மகள் என்ற பாசப் பிரச்சினையிலே இந்தப் பாரைப் படுகுழிக்குத் தள்ளத் தயாராக இல்லை. தீர்ப்புத் தீர்ப்புத்தான். அதை மாற்ற முடியாது.
அரசே. உங்கள் காலைப் பிடித்துக் கேட்கிறேன். எங்களுக்குக் கருணை காட்டுங்கள். இன்றே இரவோடு இரவாக அனார்க்கலியை அழைத்துக் கொண்டு இந்த நாட்டை விட்டே போய்விடுகிறேன். இனி ஒருபோதும் இளவரசனை என் மகள் சந்திக்க வழியே இருக்காது.
110

கங்கையின் மைந்தன் அகளங்கன்
அக்பர்:
அ.தாய்:
அக்பர்:
அ.தாய்:
அக்பர்:
இது வீண் முயற்சி பெண்ணே. வீணாக என்னைப் பொய்யனாக்காதே.
அரசே! எனக்கு ஆசைக்கு ஒரே குழந்தை அவள்தான். அவளுக்கு, கல்லறையிலே சமாதி கட்டப்பட்டால் அடுத்த கணமே, அதே கல்லறையின் அடியிலே என் பிணமும் கிடக்கும் அரசே, இது சத்தியம். அனார்க்கலியைக் கொல்வதற்குத்தான் அக்பரால் தீர்ப்பு வழங்கப்பட முடியுமே தவிர, அனார்க்கலியின் தாய் இறப்பதைத் தடுப்பதற்கு அக்பரால் எந்தத் தீர்ப்புமே வழங்கப்பட முடியாது அரசே. வழங்கப்பட முடியாது.
b.... b..... பெண்ணே! நீ வென்று விட்டாய். என்னை வென்று விட்டாய். ஆனால் ஒன்று தீர்ப்பு மாற்றப்படாது. கல்லறையினுள்ளே சுரங்கம் அமைக்க ஏற்பாடு செய்கிறேன். நீயும் அனார்க்கலியும் சுரங்க வழியே தப்பிச் சென்று இந்த நாட்டை விட்டே வெளியேறி விடுங்கள்.
அது போதும் அரசே! அது போதும். அக்பரின் ஆட்சி ஒரு ஈ எறும்புக்குமே துரோகம் இழைக்காதது, என்பதை இந்த அகிலம் அறியட்டும். நன்றி அரசே. நன்றி.
பெண்ணே! அதுவரை.யாருக்கும் தெரியப்படுத்தி விடாதே. ரகசியமாகவே இருக்கட்டும்.
DD D
111

Page 58
கங்கையின் மைந்தன் அகளங்கன்
குரல்:
SLib:
அனார்க்கலி
காட்சி - 06
நாட்கள் கடந்தோடின. சலீம் அரசனானான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற சலீம் வழிதவறித் தனியாகத் தனது நாட்டு எல்லையைக் கடந்து சென்று விட்டான். அங்கே.
காரு
பாத்திரங்கள்: சலீம், அனார்க்கலி
g65 D:
அனார்க்கலி:
ਲ65LD:
அனார்க்கலி:
சலீம்:
அனார்க்கலி:
சலீம்:
அனார்:
அனார்க்கலி. அனார்க்கலி. என்காதலி. கல்லறையில் கட்டப்பட்ட கட்டழகி. கண்ணெதிரே. கனவா இது.
இல் லை. இல் லை. கற்பனையுமல்ல. அப்படியானால்.
சலீம்1. வியப்பாக இருக்கிறதா. அல்லது வேண்டா
வெறுப்பாக இருக்கிறதா. நீங்கள் காண்பது கனவல்ல. நிஜம் தான் . உங்கள் கண் ணெதிரே நிற்பவள் கற்சிலையல்ல. கற்பனை ஓவியமுமல்ல. அனார்க்கலிதான். ஒரு காலத்தில் உங்களோடு ஆடி ஒடி மகிழ்ந்த அதே அனார்க்கலிதான்.
நீ. நீ. நீ எப்படி உயிரோடு.
அக்பர் அத்தனை தூரம் கொடுமைக்காரரல்ல. என் அன்னையின் வேண்டுகோளால், கல்லறையில் சுரங்கம் வைத்துக் காப்பாற்றி விட்டார் எங்களை.
நீ உயிரோடு இருப்பதை அறிந்திருந்தால் ஓடோடி வந்திருப்பேனே.
உள்ளத்தில் ஆசைகள் கோடி இருந்தென்ன. நீங்கள் தேடிவந்தென்ன. ஒடி வந்தென்ன. இனி. எதுவித பயனுமே இல்லை சலீம்.
இது. இது. யாருடைய குழந்தை.
என்னுடையதுதான். நான் இப்போது இன்னொருவருக்கு மனைவி.
112
 
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
G6ນັ້ນມີ:
அனார்:
g6Sb:
அனார்:
நீ. நீ. உன்னால் எப்படி இன்னொருவனை மணக்க முடிந்தது. என்னோடு நீ நடத்திய காதல் லீலைகள் எல்லாம் நாடகந்தானா? பாவி1. உன்னை நம்பி மோசம் போக இருந்தேனே, நாவினிக்கப் பேசும் உன் பேச்சிலே இந்த நானிலத்தையே மறந்திருந்தேனே. ஆண்களை
மயக்கும் உன் அகன்ற விழிகளிலே அகிலத்தையே
மறந்திருந்தேனே. நல்லவேளை. உன் ஆசையிலே மோசம் போகாமல் தப்பியது.
சலீம் நாவை அடக்குங்கள். நீங்கள் மட்டும் என்னைக் காதலித்து நான் இறந்ததாக நினைத்துக் கொண்டு திருமணஞ் செய்யலாம், அரசாட்சி நடத்தலாம், அரச போகத்தில் திளைக்கலாம். அப்பாவி நான் மட்டும் இளமைச் சூறாவளியில் சிக்கிப் பலியாக வேண்டுமா. பழிகாரியாம் நான். பார்த்தேனே உங்கள் நடத்தைகளை உங்கள் நாட்டின் எல்லைக்கு வெளியே நான் இருந்த போதும் உங்கள் நடவடிக் கைகளை அறியாமல் நான் இருக்கவில்லை. நீங்கள் திருமணஞ் செய்ததைக் கேள்விப்பட்டதும் என் நெஞ்சமே வெடித்தது போலிருந்தது. அதன்பின்தான் உங்கள் போலிப் பேச்சுப் புரிந்தது எனக்கு அதற்குப் பின் எனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.
அனார், என்னை மன்னித்து விடு. சந்தர்ப்பம் சதி செய்துவிட்டது அனார். சதி செய்து விட்டது.
இனி அதைச் சரி செய்ய முடியாது சலீம். அன்று உங்களை மறக்க முடியாமல் அணுவணுவாகச் சித்திரவதை அடைந்த நான் அன்றே இறந்திருப்பேன். ஆனால், என் அன்னை தங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி என்னைச் சாகவும் விடவில்லை, நான் தற்கொலை செய்தால் அரசாளப் போகும் உங்களுக்குப் பழிவந்துவிடுமாம். அதனால் உங்களுக்காக வாழ்ந்தேன். உங்கள் திருமணம் என்னைச் சிந்திக்க வைத்தது. போலிப் பேச்சுக்களால் மெய்மறந்த அந்த அனார்க்கலி அன்றே செத்துவிட்டாள் சலீம். அனார் இல்லாமல் சலீம் இல்லை. சலீம் இல்லாமல் அனார் இல்லை. என்று சத்தியங்கள்
113

Page 59
கங்கையின் மைந்தன் அகளங்கன்
சலீம்:
அனார்:
சலீம்:
அனார்:
செய்த நீங்கள் என்னைக் கல்லறை மூடியதும் என்ன செய்து விட்டீர்கள். கல்லறையை உடைக்கவில்லை. கலியாணத் தைக் கட்டினிர் கள். அரசவாரிசாக
அதிகாரபீடமேறினீர்கள். அரசாட்சி செய்தீர்கள். உண்மைக்
காதலை உணராது உங்கள் பேச்சிலே மயங்கிய நான் ஏமாந்தேன்.
என்னை மன்னித்து விடு அனார். மன்னித்து விடு. சொல்லம்புகளால் என்னைக் கொல்லாதே. அனார். அனார். இப்போதும் காலங் கடந்து விடவில்லை. என்னோடு வா. உன்னை இந்த மண்டலத்துக்கு மகாராணியாக்குகிறேன்.
சலீம்! அது முடிந்த கதை. பட்டுப் போய் நிற்கும் என் உணர்வுகளுக்கு நீர்வார்க்க நினைப்பதில் பயனில்லை. சலீம்! எனக்கு இனி இதுதான் வாழ்வு. என்னை அன்பாக வைத்திருக்கும் என் கணவர், என் உயிரினும் மேலான குழந்தை. இதுதான் இனி என் உலகம். தயவு செய்து நீங்கள் போய் விடுங்கள். அவர் வரும் நேரமாகிறது.
அனார்!. உன்னைச் சந்திக்காமலே இருந்திருந்தால் கலைந்த கனவுகள் கலைந்தே போயிருக்கும். ஆனால். ஆனால். விதி என்னை வீழ்த்தி விட்டது. என் நிம்மதி பறிபோய் விட்டது. நடைப் பிணமாக நாடு திரும்புகிறேன்.
சலீம் அதெல்லாம் இனிப் போலிப் பேச்சு சலீம். உங்கள் மனைவி, குழநி தை. அரசு இவைகளோடு சுகங்காணுங்கள். அதுதான் முறை. சென்று விடுங்கள் சலீம். சென்று விடுங்கள்.
- முற்றும் -
114

கவரி வீசிய காவலன்
பாத்திரங்கள்
பெருஞ்சேரல் இரும்பொறை
அமைச்சர்
மோசிகீரனார்
புலவர்
வீரன்
115

Page 60
கங்கையின் மைந்தன் அகளங்கன்
இடம்
06. கவரி வீசிய காவலன்
காட்சி - 01
: அரண்மனை -
(முரசு வைக்கப்பட்டிருக்கும் இடம்)
பாத்திரங்கள்: பெருஞ்சேரல் இரும் பொறை (அரசன்),
அமைச்சர்:
எல்லோரும்:
அமைச்சர்:
எல்லோரும்:
அரசன்:
அமைச்சர், வீரர்கள் இருவர், புலவர்.
வேழமுடைத்து மலைநாடு என்று சிறப்பிக்கப்படும் மலைநாடே எம் சேரநாடு. எம் சேர நன்நாட்டிலே நிறைந்திருப்பது வேழம். வீரத்தின் திருவுரு வேழம். திணவெடுக்கும் தோள்கள். தீர்க்கமான படைக்கலப் பயிற்சி, புறங்காட்டா மறப்பண்பு, இவை எம் வீரத்தின் புகழை விளங்கச் செய்கின்றன. எமது மாமன்னர் பெருஞ்சேரல் இரும்பொறையின் தீரமும், போர்க்களத்தில் வெற்றியைக் குவிக்கும் வீரமும், புலவர்க்கு அள்ளி வழங்கும் நெஞ்சு ஈரமும் உலகறிந்தவை தான். எமது வீரத்திற்கு ஆதாரமாய் அமைந்தது இவ்வீரமுரசு. முரசைப் பார்த்தாலும், ஓசையைக் கேட்டாலும், தோள் குலுக்கி, வாளெடுத்துப் போர்புரிய வருவர் எம் வீரர். அத்தகைய முரசுக்கு இத்தகையதோர் விழா இன்று எடுக்கப்படுகின்றது. எங்கோன் இரும்பொறையின் செங்கோல் வாழ்க. தகடுரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் பெயர் வாழ்க. தகடுரை வெற்றி கொண்ட பெருஞ்சேரல் இரும்பொறை.
வாழ்க!
தோல்வியே அறியாத் தொல்புகழ்ச் சேரர்
வாழ்க. வாழ்க.
இந்த நாட்டைத் திறம்பட ஆட்சி புரிய என்னோடு தோளோடு தோளாய் உடனிருந்த அமைச்சர்களே! தளபதிகளே! சேனாவீரர்களே! என் உயிரினும் இனிய குடிமக்களே! உங்கள் அனைவர்க்கும் என் வணக்கங்கள். இந்நாள் ஒரு நன்னாள். எமக்கெல்லாம் பொன்னாள்.
116
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
புலவர்:
போரிலே வென்றோம், புகழ்பெற்றோம். எந்த முரசின் ஒசை போரிலே எமக்கு எழுச்சியை ஊட்டி வெற்றியை ஈட்டித் தந்ததோ, அந்த முரசுக்கு அஞ்சலி செலுத்த இங்கு கூடியிருக்கிறோம். அரச பாரம்பரியத்திலே முப்பெரும் முரசுகளே பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. நீதியைப் பறை சாற்றும் நீதிமுரசு. அற்றார் அழிபசி தீர்க்கும் கொடை முரசு. வீர மறவர் நாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வீரமுரசு என்பவை அவை. அவற்றுள் தலையாயது இந்த முரசு. குமரி முதல் இமயம் வரை வெற்றி கொண்ட சேரர் பரம்பரையினர் இம்முரசினைத் தம் உயிரினும் மேலாக மதிக்கின்றனர். போர்க்காலத்திலே வீரமுரசைக் கைப்பற்றி விட்டால், அந்நாட்டைக் கைப்பற்றுவதற்குச் சமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். காற்றடித்து முரசிலே ஓசை எழுந்தால் கூடப் போரென்று பூரித்துப் புறப்படும் வீரர்கள் நீங்கள். இவ்வீர முரசை வணங்கி தோள்மீது தாங்கிச் செல்வோம். நீராட்டிப் பூசை செய்து, மீண்டும் இங்கே கொண்டு வந்து நிறுத்துவோம். (முரசை வீரர்கள் தூக்குகிறார்கள்.)
வெற்றி முரசு வீர முரசு!! சுற்றி நிற்கும் பகை விரட்டும் வெற்றி முரசு. வீர முரசு வீர மறவர் தீரங்காட்ட விண் ணதிர்ந்த ஒலியெழுப்பும் வெற்றி முரசு. வீரமுரசு. வீர மறவர் போற்றும் முரசு.
OD
117

Page 61
கங்கையின் மைந்தன் அகளங்கன்
SLib
கவரி வீசிய காவலன்
காட்சி - 02
: முரசு கட்டில் இருக்கும் இடம் (அரண்மனை)
பாத்திரங்கள் : மோசிகீரனார், வீரன் (முரசு கட்டில்
அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது)
மோசிகீரனார். (தள்ளாடியபடி வருகிறார்) அப்பப்பா. ஒரே வெய்யில்.
வீரன்:
உச்சியை எரித்துப் பொசுக்கி விடும்போல் தெரிகிறதே. பனியில் குளித்தேன் காலையில், வெய்யிலில் உலர்ந்தேன் இவ்வேளையில். வைத்த அடி தூக்கி மறு அடியை வைக்க முடியாதபடி வெந்துவிட்டன கால்கள், குன்றென்றும் குழியென்றும் முள்ளென்றும் கல்லென்றும் என்றென்றும் பார்த்ததில்லை. இன்று என்ன விதிவிலக்கோ? தகடுரெறிந்த தலைமகனை, போற்றாரை, பழிசொல்லும் மாற்றாரை, போர்க்களத்தில் தோற்றோடச் செய்த வீரனை, கண்டால் காணும், புலவர்களுக்குக் கொண்டல் போல் விளங்கும் கொடையாளனை, பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணவேண்டும் என்ற பேராவல் பிடித்துந்த இவ்விடம் வந்தேன். அரண்மனையில் காலடி வைத்ததும் அடையும் இன்பம். ஆகா. (வீரன் வருதல்) வீரனே நம் அரசர் எங்குள்ளார்.
யார் நீங்கள். புலவரா.
மோசிகீரனார்: வீரனே, நான் ஒரு புலவன், என் பெயர் மோசிகீரன்.
வீரன்:
இந்த நேரத்தில் யாரைக் காணப் போகிறீர்கள்.
மோசிகீரனார்: சேர மனி னணி தகடு ரெறிந்த பெருஞ் சேரல
வீரன்:
இரும்பொறையின் புகழ்கேட்டு நெடுந்துாரம் கடந்து வந்தேன். நடந்து வந்தேன். என் கண்குளிர மன்னனை நான் காண வேண்டும் என்னும் அவாவில்.
இன்று நம் வீரமுரசுக்கு விழா நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள மன்னர் சென்று விட்டார். வீரமுரசை நீராட்டி மலர்தூவி பூசை செய்து எடுத்துவர யாவரும் சென்று விட்டார்கள். நான் மட்டும் தனியாக இங்கே
118
 

கங்கையின் மைந்தன் அகளங்கன்
நிற்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் முரசு இக்கட்டிலுக்கு வந்துவிடும். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. (செல்கிறான்)
மோசிகீரனார். (தள்ளாடியபடி) களைப்பாக இருக்கிறது. மன்னர் வரும்
இடம்
வரையில் இங்கே ஒரிடத்தில் இருப்போம். பழுத்துக் களைத்த உடல் பசியால் உலர்ந்த பாழ் வயிறு. நிற்கவே முடியவில்லையே. (மெதுவாகத் தடவியபடி முரசு கட்டிலில் அமர்ந்து படுத்து உறங்குகிறார்)
口 口 口
கவரி வீசிய காவலன்
காட்சி - 03
: முரசு கட்டில் வைக்கப்பட்டிருக்கும்
(அரண்மனை)
பாத்திரங்கள் : அரசன் (பெருஞ்சேரல் இரும்பொறை,
அரசன்:
அமைச்சர்:
வீரன்:
அரசன்:
மோசிகீரனார், வீரன், அமைச்சர்.
(முரசொலிக்க மன்னன் ஒளர்வலம் வருகிறான்)
அமைச் சரே! ஊர் வலம் முடியும் கட்ட தி தை அடைந்துவிட்டது. வீரமுரசை வைக்க கட்டில் தயாராகிவிட்டதா.
ஆம் அரசே, கட்டில் அலங்கரிக்கப்பட்டு விட்டது. இதோ பணியாள் வேலையை முடித்து விட்டு வந்து விட்டான்.
முரசு கட்டில் அழகாக அலங்கரிக்கப்பட்டு விட்டது அரசே,
மிக்க மகிழ்ச்சி. ஆனந்தம். பேரானந்தம், கொற்றவை விழா. ஊர்வலம். யாவும் வெற்றியாய் முடிந்த உவகையில் உள்ளம் பூரிக்கின்றது. அடுத்து என்ன, விருந்து. பிரமாதமான விருந்து. எம் நாடு காத்த நற்குடிமக்களாம் வீரர்களுக்கு விருந்து (முரசு கட்டிலைப் பார்த்து.)
- 119

Page 62
கங்கையின் மைந்தன் அகளங்கன்
யாரது. முரசு கட்டிலில் ஒரு மானிடன் மூடன், மதியற்றவன், வீரத் திருவுருவாய் விளங்கும் எம் வீரமுரசு வீற்றிருக்க வேண்டிய கட்டிலை அவமதித்து விட்டான் அற்பன். முரசு உறங்கும் கட்டிலில் இந்த மூடக் கிழவனுக்கு என்ன வேலை. இக் கொடுஞ் செயலைச் செய்த இவனுக்குச் சிரச் சேதம் தான் தண்டனை. (வாளை உருவியபடி கட்டிலை நெருங்குகிறான்)
என்ன இது. இளைத்த உடல், சோர்ந்த கரங்கள், ஆற்று நுரை போன்ற அழகிய தாடி, தோற்றத்தைப் பார்த்தால் புலவர் போல் தோன்றுகிறது. நான் தோற்றுவிட்டேன். ஆம். ஆம். பைந்தமிழ்ப் புலவர் தான். ஒரு நிமிடத்தில் இதயத்தை இரும்பாக்கி இழிசெயல் செய்யப் பார்த்தேனே, தரணியை வெற்றி கொண்டால் பரணி பாடும் புலவரை கொலை செய்யவா வாளெடுத்தேன். இந்த வாள் இனி எனக்கு வேண்டாம். வீரனே சாமரை எடுத்து வா. இந்தச் சாந்த சொரூபி நித்திரை செய்ய நாம் தாலாட்டிசைக்க வேண்டும். மன்னன் (கவரி) சாமரை வீசுகிறான்.
மோசிகீரனார்: (புலவர் மெல்ல எழுகிறார்) என்ன இது. நான் காண்பது
அரசன்:
கனவா? அரியணையில் அமர்ந்து அரசோச்சும் கைகள் அற்பன் எனக்குக் கவரி வீசுவதா, கொற்றவையாய்ப் போற்றும் முரசு கட்டிலில் சற்றும் அறிவின்றி நித்திரை செய்த என்னை வாளால் வெட்டி, கொற்றவைக்குப் பலியிடாது குற்றஞ் செய்து விட்டீர் அரசே முரசையும், முரசு கட்டிலையும் அவமானப்படுத்திய என் அங்கங்களைப் பிளந்திருந்தால் என் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். அதைச் செய்யாது விட்டீர்களே. இதோ வாள். என் தலையை வெட்டி எறியுங்கள்.
புலவரே! போடுங்கள் வாளை, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் ஆழ்ந்த நித்திரையைக் கலைத்து விட்டேன். பாடிப் பாடிக் களைத்த சிந்தையின் ஓய்வைக் கெடுத்து விட்டேன். தங்களுக்கு நான் செய்தது பெருங்கொடுமை. அந்தக் கொடுமையில் கூட பெரும்பேறு பெற்றுவிட்டேன். தமிழ் பாடும் புலவருக்கு சாமரை வீசிக் களிக்கும் இப்பெரும் பேறு, வேறு எந்த அரசன் பெற்றான்
120

கங்கையின் மைந்தன் அகளங்கன்
இவ்வையகத்தில். என்னைத் தாங்கள் தான் மன்னிக்க வேண்டும்
மோசிகீரனார்: மன்னா! உன்னைப் போலொரு தமிழ் மன்னனை இத் தரணி கண்டதே இல்லை. புலவர்களை ஆதரிக்கும் புரவலனே! புவியில் யார் வரைந்தார் இப்பொன் ஏடு. நீ அடைந்த வெற்றிப் புகழிலும் மேலாக, புலவருக்குக் கவரி வீசிய புகழ் நிலைத்து நிற்கும் இப்புவியில். வாழ்க நின் கொற்றம். வளர்க நின் பெரும் புகழ்.
சுபம்
121

Page 63


Page 64

978 - 955 - 875 - O - 7 250/-