கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொன்றை வேந்தன்

Page 1
පංචපෙපළුඑළුපතළුපතළුතර එචථළුපත එපඑළු පෙප්
FIII1 SI)
கொன்றை
( உரை
G
ssesesesesesesesesee0e0esese0esse0esseseseseLeLeLe0e0esese0L விளக்
à bé
பன்னிரு திருமுறை மு.
ஞாபகார்த்த
இந்து மாமன்ற 1 - 1 .
 

விளங்குக உலகமெல்லாம்
LLe0e0e0e0e0e0eeeeeJJJe0ee0e0Je00JJJ0000eJ
Shuu Ti
ளிய
வேந்தன் պւ65 ) e0eeseseesseseeeeee0ee00e0eeY0e0e0e0e0e0ese0eJ : עיט6{(66 ங்கன்
ற்றோதல் பூர்த்தி விழா வெளியீடு = 3
ம் - வவுனியா.
1996
222222222222222

Page 2

ŜA = சிவமயம்
و سرا
மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
ஒளவையார் அருளிய கொன்றை வேந்தன் ( உரையுடன் )
விளக்கவுரை:
அகளங்கன்
பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழா ஞாபகார்த்த வெளியீடு = 3
இந்து மாமன்றம் - வவுனியா
- 1 - 1906

Page 3
கொன்றை வேந்தன்
எழுதியவர்
முதற்பதிப்பு :
வெளியீடு
அச்சுப்பதிவு :
விலை
அகளங்கன்
1 0 1 0 ہے۔ 1996
இந்து மாமன்றம், வவுனியா
சுதன் அச்சகம், வவுனியா
ரூபா /  ைடு இ)
 

போசகரின் ஆசிச் செய்தி
விஞ்ஞானம் வளர்ச்சிபெற்று வரும் தற்போதய உலகில் இளைய தலைமுறை தொலைக்காட்சி, வானொலி, கணனி, ( கொம்பியூட்டர் ) மூ த லிய சாதனங்களில் மூழ்கியுள்ள இவ்வேளை இந்து மாமன்றம் தனது சமயப் பணியை மட்டுமல்லாது ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற வேண்டத்தக்கனவற்றை நூல்வடிவில் பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழா ஞாபகார்த்த மூன்றாவது வெளியீடாக கொன்றை வேந்தனை'
வெளியிட முற்பட்டமைக்கு எனது நன்றிகள்.
இப்பணியை இந்து மாமன்றம் மேற்கொள்வதற்கு உறுதுணையாக உழைக்கும் நிர்வாகத்திற்கு உந்துசக்தி யாகவும், தற்காலம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்து இப்பணியில் விளக்க வுரை தந்துதவும் தம்பி தமிழ்மணி அகளங்கன் அவர் களுக்கும் எமது நன்றிகளும், வாழ்த்துக்களும்,
தொடர்ந்து இப்பணியை மன்றம் மேற்கொள்வ துடன் அனைவரும் படித் துப் பயன்பெற முயற்சிகள் மேற்கொள்ள இறை அருள் வேண்டி ஆசிக்கின்றேன்.
யாழ். வீதி, அன்பு வவுனியா. ச. சுப்பிரமணியம்,

Page 4
தலைவரின் ஆசிச் செய்தி.
AAAAAAA>
ல்ெலாம் வல்ல சிவனருளால் கடந்த காலங்கள் போன்று இந்த வருடமும் பன்னிரு திருமுறை முற்றோத லைப் பூர்த்திசெய்து 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒராம் திகதி (1 - 1 - 1996 ) பூர்த்தி விழாவினைச் சிறப் பாக மேற்கொள்ள இறையருள் கூடியுள்ளது,
இதேபோன்று, கடந்த வருடம் போன்று இந்த வருடமும் பன்னிரு திருமுறைப் பூர்த்தி ஞாபகார்த்த மாக, பெரும்புலவர் ஒ ள  ைவ ய ர ர் அருளிச்செய்த கொன்றை வேந்தன் நீதிநூலை இந்து மாமன்றத்தால் வெளியிட்டு வைக்க இறையருள் கூடியுள்ளது. சென்ற வருடம் 'ஆத்திசூடியைச் சிறப்பாக உரைசெய்து தந்த வவுனியாவின் தவப் புதல்வனான தமிழ்மணி அகளங்கன் அவர்கள் ஒளவையார் அருளிச்செய்த கொன்றைவேந்தன் நீதிநூலுக்கு உரை செய்துள்ளார்.
எமது வன்னிப் பிரதேசத்தில் சமயப்பணியில் ஒர் கலங்கரை விளக்கான அ வ ர து பணி எமது மத்தியில் காலா கால மா கத் தொடர்ந்திருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். மேலும் திருமுறை முற்றோதலில் நாள்தோறும் கலந்துகொண்டு இத்தெய்வப் பணிக்கு குறைவற நிறைவேற உதவிய அடியார்களுக்கும், வவுனியா பூரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபையினருக்கும் ஆலயக் குருக்களுக்கும், சிறப்பாக அயராது உழைத்த இந்து மாமன்றச் செயலாளருக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டு. " கொன்றை வேந்தனுக்கு ’ உரைசெய்து தமிழ்மக்கள் மத்தியில் தமிழ் பண்பாடுகள் மனித விழுமியங்கள் நிலைக்க உறு துணையாக நின்று அரும்பணியாற்றிய திரு அகளங்கனுக் கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். இத்தூல்மக்களுக் குப் பெரிதும் ப யன் பெற இறைவனை வேண்டி நிற்கின்றேன், வணக்கம்,
இந்து மாமன்றம், C. A. SITT LD5ñð6 TL6, பூங்கா வீதி, வவுனியா. தலைவர்.

அரசாங்க அதிபரின் ஆசியுரை
*AAAAAMe
6J) 8F, பெருமக்கள் வாழும் யாழ்ப்பாணத்தில், சைவமும் தமிழும் ஒருங்கே வளர்ந்தது போன்று கடந்த சில வருடங்களாக வவுனியாவிலும், வவுனியா இந்து மாமன்றம் பன்னிரு திருமுறைகளைஒதி, வருட ஆரம் பத்தில் பூர்த்தி விழா எடுப்பதனைக்கண்டு மகிழ்ச்சி யடைகின்றேன்:
பூர்த்தி விழாவின்போது நீதிநூல்களை வெளியிடு வது கண்டு மேலும் மகிழ்ச்சியடைகின்றேன், வன்னியின் சிறந்த தமிழ் அறிஞனான அகளங்கன் அவர்கள் உரை செய்ததும், ஒளவையார் அருளியதுமான கொன்றை வேந்தன் எனும் நீதிநூல் வெளியிடப்படுவது கண்டு இரட்டிப்புமகிழ்ச்சி அடைகின்றேன்.
இதேவேளை சமய நிறுவனங்கள் மனித நேயப் பணிகளை பெரிதும் ஆற்றவேண்டும் என்பதையும் வலி யுறுத்த வேண்டிய அவசியம் இருப்பதையும், உணர்கின் றேன். எதிர்காலத்திலும் இந்து மாமன்றம் சிறப்பாகத் தனது பணிகளைச் செய்து, அதன் பணிகள் மென்மேலும் வளர்ந்து மக்களைச் சென்றடைய வேண்டும் என்று இறை வனை வேண்டி - ஆசிகூறி விடைபெறுகின்றேன்.
வ ன க் க ம்
அரசாங்க அதிபர், வவுனியா
凯0一12一95

Page 5
செயலாளரின் ஆசிச் செய்தி
Gaga மண்ணில் சைவ்த்தையும், தமிழையும் வளர்த்து வருகின்ற இடங்களில் வவுனியாவும் தலை சிறந்துவிளங்குகின்றது. இவ்வகையில் வவுனியா இந்து மாமன்றம் தொடர்ச்சியாக, வவுனியா பூரீ கந்தசுவாமி கோவிலில் பன்னிரு திருமுறைகளை முற்றோ தி தைமாதம் முதலாந்திகதி (01-01-1996) வ/குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஏட்டுச் சுவடிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வவுனியா பூரீ கந்தசுவாமி கோவிலில் முற் றோதல் பூர்த்திவிழாவை நடாத்திவருகிறது. 01-09-95 இல் இருந்து திரு முறை முற்றோதல் ஆரம்பமாகி 31-12-95ல் பூர்த்திசெய்து 01.01.96 காலை 9 மணிக்கு ஊர்வலம் நடைபெற உள்ளதை மனமார வாழ்த்தி வணங்குகின்றேன். இம்முற்றோதல்களில் என்னை மிக அகமகிழ வைத்தது திருவாசகமும், ஆறாந் திருமுறையும் ஆகும். அடுத்த திரு முறை முற்றோதலுக்கு மேலும் சிறப் பான முறையில் சகல ஆலய நிர்வாகிகளும். சைவசமய நிறுவன நிர்வாகிகளும் ஆதரவுதர வேண்டுவதோடு இது வரை எம்மோடு திருமுறை முற்றோதல் செய்த அனைத்து அடியார்களையும் அவர்களின் பாதங்களிற் தலைவைத்து வணங்குகின்றேன். வாழ்த்துகின்றேன்.
இந்து மான்றத்தின் தலைவர் C. A. இராமஸ்வாமி அவர்களை எந்த நிலையில் வைத்துப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. அவ்வளவு சிறப்பாக இயங்கியுள்ளார். அவருக்கு நீடித்த ஆயுளை இறைவன் அளிக்கவேண்டும் என வணங்குகின்றேன். வ பூரீ கந்தசுவாமி ஆலயத்தில் முற்றோ தலை தொடர்ந்து நடத்த ஒத்துழைப்புத்தந்த நிர்வாகிகளுக்கும், ஆலயக் குருக்களுக்கும், ஏனைய பூசகர் களுக்கும் எனது வணக்கங்கள், நன்றி.
அன்பன் இறைபணிச் செம்மல் வை, செ. தேவராசா,
இந்து 8 மன்றம் , பூங்கா வீதி, ଛା ଛ}} ଖାଁ l T.

ଡି! -
நயினை ரீ நாகபூஷணி துணை
போதனை இலக்கியம்
இதிவூதி
வுெனியா இந்து மாமன்றம் முன்னின்று நடாத் தும் பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தியினை ஒட்டி ஒளவையார் அருளிச்செய்த கொன்றை வேந்தன் நூலை வெளியிடுவதை அறிந்து மிக மகிழ்ச்சி அடை கின்றேன். -
போதனை இலக்கிய வரிசையில் பெரிதும் விரும் பப்படும் ஒளவையாரின் ஆத்திசூடி, சென்ற வருடம் இந்து மாமன்றத்தினால் வெளியிட்டதும் சிறப்பான அம்சமாகும்,
இதற்கும் ஆத்திசூடிக்கும் வ ன் னி யி ன் புகழை உயர்த்தி நிற்கும் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் விளக்க உரை எழுதியுள்ளார். இப்பணிமூலம் அவரின் தமிழ்ப் பணி ஒருபடி உயர்ந்து நிற்கின்றது; அவரதுபணி யாவ ராலும் பாராட்டத்தக்கது. ஆளுமையும், ஆராய்ச்சி நுட்ப மும், அன்புள்ளமும் கொண்ட அவரது பணியினைக்கண்டு வாழ்த்தும்பேறு கிடைத்தமையை இட்டு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்:
* திருநெறிய தமிழ் வேந்தர் ' எனும் பெருமைக் குரிய பட்டத்தைத் தாங்கியுள்ள தமிழ்மணி அகளங்கன் மேலும் மேலும் இதுபோன்ற தமிழ்ப்பணி செய்து
புகழோங்கி வாழ வாழ்த்துகிறேன்
சிவத்தமிழ்த் தொண்டன் வாகீச கலாநிதி க. நாகேஸ்வரன் M. A.

Page 6
முன்னுரை
தியின் பால் உடம்பிற்கு உறுதி தரும் தாயின் அறிவுரைகள் உள்ளத்திற்கு உறுதி தரும். சிறுவர்களின் உடல் - உள வளர்ச்சிக்குத் தாயே தனிப்பெருந் துணை3
தமிழர்களின் தாய்க்குத் தாயாக விளங்குகின்ற ஒளவைப் பா ட் டி யார் அருளிச் செய்த அறநூல்கள் அத்தனையும், தமிழர்கள் அனைவரினதும் வாழ்வுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக நிற்பவை.
ஒளவைப் பாட்டியாரின் அறவுரைகளாம் அறிவுரை களைத் தமிழ்ச் சிறார்கள் பொருளறிந்து கற்று மனதில் பதித்துக்கொண்டு செம்மையான ந ல் வாழ் வு வாழ வேண்டுமென்ற என் ஆசைக்கு வவுனியா இந்துமா மன்றத் தார் பெருந்துணையாக விளங்குகின்றனர்.
கடந்த ஆண்டு " ஆத் தி சூ டி ', இவ்வாண்டு ' கொன்றை வேந்தன் ' விளக்கவுரையோடு வெளியிடப் படுகின்றது; இப்பணியில் என்னை உற்சாகப்படுத்தி இச் சிறுநூலை வெளியிடும் வவுனியா இந்து மாமன்றத்தினர்க் கும், குறிப்பாக அதன் தலைவர் திரு. C. A. இராமிஸ்வாமி அவர்களுக்கும் என் நன்றிகள் என்றும் உள.
சிறுவர்கள் மட்டுமன்றி. இக்காலப் பெரியோரும் இதனைப் படித்துத் தம்வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டும் அதன்மூலம் உயர்ந்த மனிதப் பண்பு களை வளர்த்து மானிட வாழ்வின் மாண்புகளைப்பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற எண்ணமே எம்மை இத்தகைய நூ ல் க  ைள ஆக்கும் பணிக்குத் தூண்டுகிறது.
இந்நூலை அழகாக அச்சிட்டுதவிய வவுனியா சுதன் அச்சகத்தினருக்கும் எனது நன்றிகள், நிறை மனிதர்களை உருவாக்க முயலும் இறைபணியாம் அறப்பணிக்கு ஆதர வளிக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றேன்;
ந ன் றி. பம்பைமடு, உ ங் இ ன் வவுனியா. அன்பு
01.01.1996 அகளங்கன்
 

କ}. சிவமயம்
கொன்றை வேந்தன்
(உ  ைர யு டன் )
காப்பு கொன்றை வேந்தன் செல்வ னடியிணை. என்று மேத்தித் தொழுவோ மியாமே.
கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய, வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமார னாகிய விநாயகக் கடவுளுடைய, அடிஇணை -
பாதங்களிரண்டையும், என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் - வணங்கு வோம், யாம் - நாங்கள்.
விளக்கவுரை:
விநாயகப்பெருமானை நினைந்து காப்புப்பாடுவதே மரபு. அதனால் 'கொன்றை வேந்தன் செல்வன் ' என் பது விநாயகப் பெருமானையே குறிக்கிறது. தொழுவோம் யாமே ' என்பது மற்றவர்களின் தூண்டுதலின்றி நாமா கவே அறிந்து உண ர் ந் து வணங்குவோம்.
எனப் பொருள்படுகிறது,
. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும்,
முன் - முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவார்.

Page 7
02 கொன்றைவேந்தன்
வி. உரை
குழந்தையின் அத்தியாவசிய ஆரம்பத் தேவைக ளெல்லாம் தாயினாலேயே நிறைவேற்றப்படுகின்றன. தாய்மூலம் அறியப்படும் தந்தையினாலேயே அடுத்தபடி யான தேவைகளெல்லாம் நிறைவேற்றப்படுகின்றன. தந்தை மூலம் அறியப்படும் குருவினால் கல்வி, ஞானம் ஆகிய முக்கிய தேவைகள் நிறைவேற்றப்டுகின்றன. குரு மூலம் அறியப்படும் கடவு ளே சகல தேவைகளையும் நிறைவேற்றி வைப்பவர். அதனால் மாதா, பிதா, குரு தெய்வம் என்ற தெய்வங்கள் வரிசையில் மாதாவும், பிதாவுமே முதலில் அறியப்பட்ட தெய்வங்களாவர். இதனையே " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றார்.
2. ஆலயந் தொழுவது சாலவு நன்று.
ஆலயம் - கோயிலுக்குப் போய், தொழுவது - கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று = நல்லது.
வி, உரை:
கோயில் புனிதமானது. பக்குவமடைந்த ஞானிகளை விட ஏனையோர்தம் மனத்தை ஒருநிலைப்படுத்தி இறை வழிபாடாற்ற - ஏற்ற சிறந்த இடமாக கோயில் அமை வதால், கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது என்றார்.
3. இல்லற மல்லது நல்லற மன்று
இல்லறம் - மனையாளோடு கூடிச்செய்யும் அற மானது, நல் அறம் - எளிதிற் செய்யத்தகும் அற மாகும், அல்லது - இல்லறமல்லாத துறவறமானது, அன்று - எளிதிற் செய்யத்தகும் அறமன்றாகும்.
"مصير

கொன்றைவேந்தன் 03
வி. உரை:
தனது ஆன்ம ஈடேற்றத்திற்கு மட்டுமன்றி ஏனையோ ரின் ஆன்ம ஈடேற்றத்திற்கும் இல்லறத்தாரே துணையாக அமைகின்றனர். அதனால் ஏனைய அறங்களிலும் இல் லறமே சிறந்த அறம் என்றார். அத்தோடு வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்துக்கொண்டு, அதாவது வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வங்களுக்குள் சென்று சேரும் வாய்ப்பு இல்லறத்தாருக்கே இலகுவில் கிட்டுகிறது துறவறமோ உலகியலில் வாழாது முத்தியை நாடுவது என்பதால், இல்லறமே எல்லா அறங்களிலும் சிறந்த அறம் என்றார்,
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயார் - கொடாதவருடைய, தேட்டை
சம்பாத்தியத்தை, தீயார் . ( கள்வர் முதலிய)
தீயவர், கொள்வர் - அபகரிப்பர்.
வி. உரை.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்' என்ற பழமொழியையும் நினைவிற் கொள்க, வறியவர்களுக் கும், நற்காரியங்களுக்கும் கொடுக்காதவன் தேடிய செல்வத்தைக் கள்வர் முதலிய தீயவர் அபகரித்துக்
டு உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
உண்டி - போசனம், சுருங்குதல் - (அளவிற்) குறைதல், பெண்டிர்க்கு = பெண்களுக்கு, அழகு - அழகாகும்.

Page 8
04 கொன்றைவேந்தன்
as, plunty
உணவைக் குறைத்துக் கொண்டால் நோய்வருவது குறைவு. உண்டது ஜீரணம் ஆகிய பின்பே உண்பவ்ர் ளுக்கும் நோய்வருவது குறைவு, உணவைக் குறைத்துக் கொண்டால் பெண்களின் உடல் அழகுபெறும் என்பதோடு சுறுசுறுப்பும் ஏற்படும் என்பதால் இவ்வாறு கூறினார். உண்டி சுருங்குதல் என்பதை இடை சுருங்குதல் எனக் கொண்டு இடை சிறிதாக இருத்தல் பெண்களுக்கு அழகு தரும் என்றும் கொள்ளலாம்.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊருடன் - ( தான் இருக்கும் ) ஊராருடன்’ பகைக்கின் - ( ஒருவன் ) விரோதித்தால், வேருடன் - ( தன் ) வமிசத்துடன், கெடும் - ( அவன் ) கெடுவான்.
வி. உரை.
* ஊ ரோ டு ஒத் து வா ழ் ' என்பது அறிஞர் வாக்கு ஊரார் எல்லோருடனும் பகைத்தால் உதவி யின்றித் துன்பப்படவேண்டி வரும் அதனால் ஊரோடு பகைத்து வாழ்பவன் தனது பரம்பரையுடன் அழிந்து விடுவான் ஒற்றுமையே உயர்ந்த இலட்சியமாகும்.
7. எண்ணு மெழுத்துங் கண்னெனத் தகும்
எண்ணும் - கணித நூலும், எழுத்தும் - ( மனிதருக்கு ) இலக்கண நூலும், கண்ணெணத் தகும் - கண்களென்று சொல்லப்படும்.
 

கொன்றைவேந்தன் 05
வி, உரை:
எண்ணைக் கொண்ட கணித நூலும், எழுத்துக் களைக் கொண்ட ஏனைய நூல்களும் மனிதர்களுக்கு இரு கண்களைப் போன்று அத்தியாவசியமானவை, கற்றோரே முகத்தில் கண்ணுடையார், கல் லா ர் முகத்தில் இரண்டு புண்ணுடையார் என்ற வ ள் ஞ வர் வாக்கை
நினைவு கொள்க,
இ. ஏவா மக்கள் மூவா மருந்து
ஏவா - (பெற்றவர் இதைச்செய் என்று ) ஏவுவதற்கு முன்பு குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவா மருந்து - (அப்பெற்றவருக்குத் ) தேவாமிர்தம் போல்வர்.
வி, உரை
மூவா மருந்து என்பது தேவா மிர்தம். இதனை உண்ட வர்களுக்கு மூப்பில்லை , நோயில்லை, மரணம் இல்லை. என்று
தேவர்கள் ஆவார்கள், * இதைச் செய் பெற்றோர் கட்டளை இடமுன்பே குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தேவர்கள் ஆவார்கள்: * புத் ' என்ற நரகத்துக்குச் செல்லாமல் தடுப்பவர்கள் புத்திரர் என்பர். அப்புத்திரர்கள் சற்புத்திரர்களாக இருந்தால், பெற்றோர் இலகுவாகச் சுவர்க்கலோகம் செல்வர் நல்ல பிள்ளைகள் தேவா மிர்தம் போன்றவர் கள் பெற்றோருக்குக் கட்டளையிட்டு ஏவாத மக்களா யிருந்தாலும் போதும்.

Page 9
08 கெர்ன்றைவேந்தன் (). ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஐயம் புகினும் - பிச்சையெடுத்தாலும், செய்வன - செய்யத்தகும் கருமங்களை, செய் - நீ (விடாது) செய்,
வி, உரை:
கடமைகளைத் தவறாது செய்வது, கடவுள் வழிபாட்டிலும் மேலானது என்பது பகவத் கீதையின் சாரம், பலனில் பற்று வைக்காமற் செய்யும் கடமையே பெரும் புண்ணியத்தைக் கொடுக்கும். அதனால் பிச்சை எடுக்கும் நிலையிலும் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்தல்வேண்டும்,
(), ஒருவனைப் பற்றி ஓரகத் திரு
ஒருவனை - (நற்குணமுடைய ) ஒருவனை, பற்றி - துணையாகப் பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்திலே தானே, இரு நீ (எப்போதும்)
வாசம் பண்ணு.
Gf. 269» :
ஒருவனை நம்பித் துணையாக க் கொண்டு கற் பொழுக்கத்தில் வாழு என, பெண்களுக்காகச் சொல்லப் பட்டதுபோல் இருந்தாலும், இன்னுமொரு நுட்பமான பொருளும் உண்டு. ஒருவனை - ஒப்புயர்வில்லாத (ԼՔ(Ա)
முதற் பரம் பொருளான ஒரு கடவுளை, பற்றி - உறுதியாக
நம்பி ஓரகத்து - ஒரு மனத்தோடு தியானித்துக்கொண்டு, இரு நீ வாழ்வாய் எனவும் பொருள் கொள்ளலாம், அகம் - மனம்,

கொன்றைவ்ேந்தன் 07
ஒதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
வேதியர்க்கு - பிராமணர்க்கு, ஒழுக்கம் - ஆசாரமானது, ஒதலின் - (வேதம் ) ஒதலினும், நன்று - நல்லது.
வி, உரை:
மந்திரத்தை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம், ஒழுக்கத்தை இழந்தால் பெற்றுக்கொள்ள முடியர்து மந்திரம் ஒதுபவர் எல்லோரும் பிராமணர் ஆகார். ஒழுக்கத்தில் சிறந்தவரே பிராமணர். அதனால் மந்திரம் ஒதுவதை விட பிராமணருக்கு ஒழுக்கமே சிறந்தது என்
மார் ஒதல் என்றால் கற்றல் என்றும் பொருளுண்டு. வேதங்களைக் கற்பது பிராமணருக்கு முக்கிய க-பிமி
இருப்பினும் அதைவிட ஒழுக்கமாக இருப்பதே அத்தியா வசியக் கடமையாகும் எனினும் பொருந்தும்.
2 ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு
ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல் - (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன் ) செல்வத்துக்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.
வி. உரை:
 ெப ாறா  ைம பிடித்தவனுக்கு நிம்மதியில்லை, பொறாமை கொண்டு அதனை வெளிப்படுத்திக் கதைப் பவர்களின் செல்வம் விரைவில் அழிந்துவிடும்.

Page 10
80 கொன்றைவேந்தன்
13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு
அஃகமும் தானியத்தையும், காசும் - திரவியத் தையும், சிக்கெனத் தேடு நீ வீண் செலவு செய் யாமற் சம்பாதி.
a. 9 lang
சிக்கென - என்பது விரைவாக, உறுதியாக என்ற பொருள்களையும் தரும், தானியங்களையும், திரவியங் கிளையும் உறுதியாக விரைவாகத்தேடு என்றார். இளமை யிலேயே பொருளைத் தேடினாற்தான் முதுமைக்குப் பயன் படும்.அதனால் விரைவாகத் தேடிக்கொள்ளவேண்டும்.
4. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை
கற்பு எனப்படுவது - (பெண்களுக்கு) கற்பு என்று சொல்லப்படுவது, சொல் - ( கணவர் ) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமை யாம்
வி. உரை:
இது பெண்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட ஒரு அறக் கூற்று அன்று, இருபாலாருக்குமே பொருந்தும், சொல்லிய சொல்லில் இருந்து மாறுபடாமை கற்பு எனப் படும் எனப் பொருள் கொண்டு வாய்மையை வலியுறுத்து வதாகவும் கொள்ளலாம். இதைவிட, சொல்லப்பட்ட நல்ல ஒழுக்கி நெறியினின்றும் மாறுபடாமல் வாழ்வதே கற்பு, எனப்பொருள் கொள்ளின் இரு பாலாருக்கும் மிகவும் பொருந்தும்,

கொன்றைவேந்தன் 09
டு, காவல் தானே பாவையர்க் கழகு
காவல் தானே. ( கற்புக்கு அழிவு வராமல் தம்மைக் ) காத்துக் கொள்வதுதானே, பாவை யர்க்கு பெண்களுக்கு, அழகு - அழகாகும்.
ssa. 32.695:
தன்னைத் தானே கற்பொழுக்கத்தில் காத்துக் கொள்ளும் காவலே பெண்களுக்கு அழகு தருவதாகும்.
6. கிட்டா தாயின் வெட்டென மற
கிட்டாது ஆயின் ( இச்சித்த ஒரு பொருள் ) கிடையாதானால், வெட்டென சீக்கிரத்தில் தானே, மற அப்பொருளை ) மறந்துவிடு.
வி. உரை:
கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிந்துவிட் -ால், அதை உடனடியாக மறப்பதே சிறந்தது. மறவா திருந்தால் நிம்மதியே கிட்டாது. கிடைக்க முடியாததை நினைத்து ஏங்கிப் பயனில்லை.
7. கீழோ ராயினுந் தாழ வரை
கீழோர் ஆயினும் (கேட்போர் உனக்குக் கீழ்ப்பட்டவராயிருந்தாலும், தாழ (உன்சொல்)
வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - ( நீ அவருடன்) பேசு.
வி. உரை.
பிறர்க்கு இன்னுரை வழங்குதல் சிறந்த ஒழுக்கி மாகும், எப்பொழுதும், பாரிடத்தும் பணிவான, அடக்க

Page 11
10 கொன்றைவேந்தன் மான, கர்வமற்ற, அதிகாரத் தன்மையற்ற வார்த்தை
களைப் பேசுவதே சிறந்தது; இன் சொல் இனிமையே பயக்கும். .
இ. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை
குற்றம் - குற்றங்களை, பார்க்கின் -
(ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவோர்,
இல்லை - ( ஒருவரும் ) இல்லை.
dif. g2 GajniJ :
குற்றத்தையே கண்டு கொ ண் டா ல், குணங் காணவே முடியாது, சுற்றம் என்பது குற்றத்தின் எதிர்ச் சொல்லாக பொருள் கொள்ளக் கூடியது. குற்றத்தையே பார்ப்பவர் சுற்றத்தைப் பாரார் எனவும் கொள்ள லாம். எதிலும் நல்லதையே பார்த்து, எப்பொழுதும் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்வதே சிறந்தது.
9. கூரம் பாயினும் வீரியம் பேசேல்
கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத் தன்மையை, பேசேல் - (நீ வீணாக ) பேசாதே.
வி. உரை
உன்னிடம் எவ்வளவு வலிமை இருந்தாலும் உன் வலிமை பற்றி நீயே பெருமை பேசாதே. தற்பெருமை பேசுபவன் மதிக்கப்படான். ஒருவனது பெருமைபற்றி மற்றவர்களே பேசவேண்டும். அப்போது தான் அது பெருமையுறும்.

கொன்றைவேந்தன் 11
ZO. கெடுவது செய்யின் விடுவது கருமம்
கெடுவது - கெடுவதை, செய்யின் - ( தன் சினேகிதன்) செய்தால், விடுவது - (அவன் சினே கத்தை ) விடுவதே, கருமம் - (விவேகிக்கு)
நற்செய்கையாம்.
வி. உரை:
நீ செய்யும் கருமம் யாருக்காவது தீமைபயக்கும் எனின் அக்கருமத்தை விட்டு விடுவாய். எனினும் பொருந் தும். - 2. கேட்டி லுறுதி கூட்டு முடைமை . 7* ܢ கேட்டில் - ( கைப்பொருள் ) இழந்த காலத்திலே, உறுதி மனந் தளராமை, உடைமை - முன்போல அப்பொருளுடையவனாந் தன்மையை, கூட்டும்." சேர்க்கும். -
வி. உரை:
துன்பம் வந்த போதிலும், மன உறுதி கொண்ட வன் துன்பத்தை வென்று மீண்டும் இன்பத்தைப் பெறு வான் எனச் சுருங்கச் சொல்லலாம்,
22. கைப்பொரு டன்னின்
மெய்ப்பொருள் கல்வி
கைப்பொருள் தன்னில் - கையிலிருக்கின்ற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் = அழியாத பொருளாவது, கல்வி கல்வியேயாம்.

Page 12
கொன்றை வேந்தன் 12
வி; உரை:
கல்வி ஏழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும் என்பதாலும், தன்னோடு எப்பொழுதும் கூடவே இருக் கும் என்பதனாலும், எவராலும் கவரமுடியாதது என்பதி னாலும், கல்வி பற்றிக் கூறினார்.
23, கொற்றவ னறித லுற்றிடத் துதவி
கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒரு வனை ) அறிந்திருத்தல், உற்ற இடத்து = ( அவ னுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி உதவி யாகும்,
af. 2 lany:
அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மை அறிந்து, மதிப்புக் கொள்ளும்படி நல்லவராக வாழ்தல். ஆபத்து வந்த நேரத்தில் பெரும் உதவியாக இருக்கும்,
24 கோட்செவிக் குறளை
காற்றுட னெருப்பு
கோட்செவி - கோள் கேட்கும் குணத்தோ
னுடைய காதிலே, குறளை (பிறர்மேல் ஒருவன்
வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்
றுடன் சேர்ந்த, நெருப்பு நெருப்பைப் போல
மூளும்.
வி. உரை:
* சும்மா மெல்லும் வாய்க்கு ஒருபிடி அவல் '
கிடைத்தால் எப்படியோ அப்படியே இதுவும், காற்றோடு
சேர்ந்த நெருப்பு மிக வு ம் கொடியது. அதை இங்கு சொல்லிய அழகு நயக்கத்தக்கது.

கொன்றைவேந்தன் 13
2டு, கெளவை சொல்லி
னெவ்வருக்கும் பகை
கெளவை ( பிறர்மேலே ) பழிச்சொல்லு களை, சொல்லின் - ( ஒருவன்) சொன்னால், எவ்வருக்கும் எல்லோருக்கும், பகை - அவன் L60)5r afT67.
வி, உரை:
பிறர்மேல் பழிச் சொற்களைச் சொல்லக் கூடாது" நல்லவற்றையே சொல்லவேண்டும்:
26. சந்ததிக் கழகு வந்திசெய் யாமை
சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுவதற்கு, அழகு-அழகாவது, வந்தி மலடியாக, செய்யாமை(தன் ம ைன யா ளே " டு) 3ih 19. வாழ்தலாம்.
வி, உரை:
வந்தி என்றால் சண்டை என்றும் பொருள் ஆண்டு. எனவே தமக்குள் சண்டை செய்யாமல் ஒற்றுமையாக இருப்பதே ஒரு பரம்பரையின் பெருமைக்கும் அது பெருகு வதற்கும் அழகாகும், பாண்டவர்களும், கெளரவர்களும் ஒரு சந்ததியில் தோன்றியும் சண்டையினால் பரம்பரைப் பெருமையை இழந்தார்கள் - அழிந்தார்கள்.

Page 13
14 கொன்றைவேந்தன்
27. சான்றோ ரென்கை - ஈன்றோட் கழகு
சான்றோர் என்கை = (தன்புத்திரரை) கல்வி யறிவால் நிறைந்தோர் என்று (கற்றவர்) சொல்லு கிறது ஈன்றோர்க்கு = பெற்றவருக்கு, அழிகு - அழகாகும்.
வி. உரை:
ஈன்றோட்கு எ ன் ப  ைத ஈன்றோர்க்கு எனக்
கொண்டு பெற்றோருக்கு எனச் சொல்லுதலே தற்காலத் தில் பொருந்தும்,
28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு சிவத்தை - ( முதற் பொருளாகிய ) பரமசிவத்தை, பேணின் ( ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - அவன் செய்யும் தவத்திற்து, அழகு - அழகாம்.
வி. உரை:
சிவம் என்பதற்கு முற்றுந் துறத்தல் என்றும் பொருளுண்டு. முற்றும் துறத்தலே தவத்திற்கு அழகு எனினும் பொருந்தும்,
29. சீரைத் தேடி னே ரைத் தேடு
சீரை - செளக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடும் தொழிலை, தேடு - நீ தேடிக்கொள்ளு.

கொன்றை வேந்தன் 15
வி. உரை
சீரை என்பதற்கு சிறந்த வாழ்வை எனவும் பொருள் கொள்ளலாம். பயிரிடுந் தொழில் சுதந்திர மானதும், புண்ணியத் தன்மை பொருந்தியதும் என்ப தால் இத்தொழிலைச் சொன்னார்
30 சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்
சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகா வது, சூழ - ( சுபாசுப கருமங்களிலே பலரும்வந்து) குழி, இருத்தல் ( சமீபங்களிலே ) குடியிருக்கை List (3.Lb.
வி. உரை:
எல்லா இன்ப துன்பங்களிலும் கலந்து கொள்ளக் கூடிய வகையில், அண்மித்த இடங்களில் சூழ்ந்து குடி யிருத்தலே சுற்றத்திற்கு அழகாகும்.
3. சூதும் வாதும் வேதனை செய்யும்
குதும் - சூதாடுதலும். வாதும் தருக்கம் பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும்.
வி. உரை.
சூதாட்டமும், வீண் வாதாட்டமும் வேதனை தரும் தருமன், நளன் ஆகியோர் ஆடிய குதும், திரெளபதை செய்த வாதும் பெரும் துன்பங்களி லேயே முடிவடைந்தன.

Page 14
16 கொன்றைவேந்தன்
32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும்
செய்தவம் செய்யும் தவத்தை, மறந்தால் - ( ஒருவன் ) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமை கொண்டு) ஆளும்.
af. D.svg:
தவம் - முயற்சி, கைதவம் - துன்பம் எனப் பொருள் கொள்ளலாம். நல்ல காரியத்தைச் செய்யும்
முயற்சியைக் கைவிட்டால், துன்பமே ஆட்கொள்ளும் எனவும் பொருள் கொள்ளலாம்,
33. சேமம் புகினும் யாமத் துறங்கு
சேமம் - காவற் கூடத்திலே, புகினும் - போய் (ஒருவேலையும் இல்லாமல்) இருந்தாலும்,யாமத்துஏழரை நாழிகைக்குப் பின், உறங்கு நீ நித்திரை பண்ணு.
af. Sauny:
நித்திரையின் முக்கியத்துவத்தை விளக்க, இராக் காவல் பொறுப்பேற்றாலும், நடுச் சா மத்தில் சிறிது நேரம் உறங்கு என்றார்.
34. சையொத் திருந்தா லைய மிட்டுண்
சை ஒத்துஇருந்தால் - பொருள் ஒத்திருந்தால் ஐயம்இட்டு - பிச்சை இட்டு, உண் - நீயும் உண்ணு ( சை பொருள் )
 

கொன்றைவேந்தன் 17
வி. உரை:
தனக்கு மிஞ்சித்தான் தானம், தருமம், தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழச்செய்ய வேண்டும்.
35. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்
சொக்கர் என்பவர் - பொன் உடையவர் என்று சொல்லப் படுவோர், அத்தம் - (அறமும், இன்பமு மாகிய மற்றைப்) புருஷார்த்தங்களையும், பெறு வர் . பெறுவார், ( சொக்கு பொன் ) (சொக்கர்" முயற்சியுடையார் ) அத்தம் - செல்வம்.
வி. உரை :
சொக்கர் என்பதற்கு முயற்சியுடையவர் எனப் பொருள் கொள்ளலாம். அடுத் த வாக்கியத்தில் * எனவருவது இக்கருத்தை வலியுறுத்துகிறது. அத்தம் என்றால் செல்வம் என்றும் பொருள்? எனவே, முயற்சியுடையவர் என்று சொல்லப் படுவோர் செல்வத்தைச் சம்பாதித்துப் பெற்றுக்கொள் வார் என்று கூறலாம்.
36. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்
சோம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - வறுமையி னால் வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவார்.
வி, உரை:
,',s(x,y3س
சோம்பலுடையவர் பொருளின்றி வறுமையில் @TH வருந்தித் திரிவர்,

Page 15
18 கொன்றைவேந்தன் 37. தந்தைசொல் மிக்க மந்திர மில்லை
தந்தை - பிதாவினுடைய, சொல் - சொல் லுக்கு, மிச்க - மேற்பட்ட, மந்திரம் - (பலனைத் தரும் ) மந்திரமானது, இல்லை - ( ஒருவனுக்கு எந்நூலிலும் ) இல்லை.
வி. உரை
மந்திரம் பெரும் பயனைத் தரும், தந்தையின் சொல்லே மேலான மந்திரமாகும்.
38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை
தாயின் மாதாவைப் பார்க்கிலும், சிறந்த
சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஒரு ஆலய மும், இல்லை - (ஒருவனுக்கு எங்கும்) இல்லை.
வி, உரை:
வழிபாடாற்றச் சிறந்த இடம் கோயில் என்பர் பெரியோர், அதிலும் சிறந்த கோயில்களில் வழிபாடாற் றுவது இன்னும் சிறப்பானது என்பர். ஆனால் தாயை விடச் சிறந்த கோயில் இல்லை எனத் தாயின் பெருமை யை வலியுறுத்தினர்,
39. திரைகடலோடியுந் திரவியந் தேடு
திரை கடல் - அலை பொருந்திய கடலிலே, ஓ டி யு ம் - தோணியேறித் தூர தேசங்களுக்குப் போயானாலும், திரவியம் - திரவியத்தை, தேடு - is fiburt 5),

கொன்றைவேந்தன் 19
வி, உரை:
கடலில் சுழியோடி முத்துக்களை எடுப்பது மிகவும் கஷ்டமான தொழில், மரண பயத்தோடு கூடிய தொழில் அதனால்" திரைகடல் ஒடியும் ' என்பதற்கு, அலை அடிக்கின் கிற கடலில் சுழியோடியும் என்ற பொருளே அதிகம் பொருந்தும், திரவியம் முத்தைக் குறிக்கிறது: " திரைகடல் தாண்டியும் " என வராமல்" திரைகடல் ஒடியும் ' என வந்ததையும் பொருள், செல்வம் என்ற சொற்கள் வராமல் திரவியம் என்ற சொல் வந்ததையும் நோக்கும்போது இவ்வுண்மை தெளிவாகின்றது, மிகுந்த சிரமப்பட்டாயினும் செல்வத்தைத் தேடு என்பது திரண்ட பொருள்.
41). தீராக் கோபம் போரா முடியும்
தீரா - தீராத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் முடிந்து விடும்.
வி. உரை,
" ஆறுவது சினம் ' என்றார் ஆத்திசூடியில். மகா பாரத யுத்தம் தீராக் கோபம் போராய் முடிந்ததற்குச் சிறந்த சான்றாகும்,
4. துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு
துடியா (தன் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில்
(அவர்) வயிற்றில், நெருப்பு - அக்கினிக்கு ஒப்பாவார்.

Page 16
20 கொன்றைவேந்தன்
வி, உரை:
பேணும் தன்மை கொண்டவள் பெண், பெண் தன்மை கொண்டவள் கணவனின் துன்பங்கண்டு துடிப் பர்ள், அப்படித் துடிக்காதவள் கணவனுக்கே துன்பஞ் செய்பவளாக இருப்பாள். கணவன் தனது மடியிலே நெருப்பைக் கட்டிவைத்திருப்பதற்கு அவள் ஒப்பாவாள்.
42. தூற்றும் பெண்டிர்
கூற்றெனத் தகும்
தூற்றும் - (தன்கணவன்மேற் குற்றஞ் சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத் தகும் = (அவனுக்கு) யமன் என்று
எண்ணத்தகும்.
aså. Spany:
கணவனைப் பழிச்சொற்களால் ஏசும் பெண்ணா
இவள் அவனுக்கு யமன் ஆவாள்.
43 தெய்வம் சிறிற் கைதவ மாளும்
தெய்வம் தெய்வமானது, சீறின் (ஒருவனைக்) கோபித்தால், கைதவம் . ( அவனுக்கு) கைகூடி யிருந்த தவமும், மாளும் . (பயன்கொடாமல்) அழியும்.

கொன்றைவேந்தன் 21
வி, உரை:
தவம் என்றால் முயற்சி என்றும் பொருள். தெய்வம் கோபித்தால், கைகூடியிருந்த முயற்சியும் பயன் கொடா மல் அழியும். தெய்வம் கோபித்தலாவது பாவவினை வந்து பற்றுதல் எனப்படும்:
44. தேடா தழிக்கிற் பரடா முடியும்
தேடாது - ( ஒருவன் வருந்திச் ) சம்பாதி யாமல், அழிக்கின் (இருக்கிற பொருள்களைச்)
செலவழித்தால், பாடா முடியும் - (அவனுக்கு) பின் வருத்தமாக முடியும்.
வி, உரை:
எப்பெருஞ் செல்வராயினும், செல்வத்தைத் தேடாது செலவு செய்துகொண்டே இருந்தால், செல்வம் அழிந்து,
பெருந் துன்பத்தில் வாழ்வு முடியும். கோவலன் இதற்கு உதாரணமாவான்.
4டு. தையும் மாசியும் வையகத் துறங்கு
தையும் - தை மாதத்திலும், மாசியும் - LDTS
மாதத்திலும், வை அகத்து -(பனி வருத்தந் தராத) வைக்கோலினால் வேய்ந்த வீட்டிலே, உறங்கு- நீ
நித்திரை செய்.

Page 17
22 கொன்றைவேந்தன்
வி, உரை:
வைக்கோலினால் வேயப்பட்ட ೧? G. Lu Gõi) j; குளிரைத் தாங்கக் கூடியது என்ற காரணத்தால், ' வைய கத்துறங்கு ' என்றார்,
46. தொழுதுாண் சுவையி
னுழுது னினிது தொழுது = ( ஒருவரைச் ) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் சுவையைப் பார்க்கிலும், உழுது - பயிர் செய்து, ஊண் - உண் னும் உணவின் சுவை, இனிது - இன்பந் தரும். வி. உரை:
உழவின் பெருமை கருதி, இத்தொழிலைச் சொன் னாலும், தாம் தாம் உழைத் உண்ணும் உணவே சிறந்த உணவு எனப் பொதுவாகச் சொல்லலாம்,
4/7 தோழ னோடு மேழைமை பேசேல்
தோழனோடும் (உன்) சினேகிதனோடேயா யினும், ஏழைமை (உனக்கு இருக்கின்ற) சிறுமையை, பேசேல் - நீ எப்படிப்பட்ட (வேளை
யிலும் ) பேசாதே.
வி, உரை:
ஏழைமை என்பதற்கு வறுமை என்ற பொருளைக் கொண்டு, உற்ற நண்பனிடத்தும் உன் வறுமையைச் சொல்லாதே எனவும் கொள்ளலாம். இருப்பினும், உனது சிறுமைக் குணங்களைச் சொல்லாதே என்பதே அதிகம் பொருந்தும், அதாவது உன் பலவீனத்தை யாரிடத்தும் கூறாதே.

கொன்றைவேந்தன் 23
48. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் நல்லிணக்கம் அல்லது நல்ல சகவாசம் அல்லா தது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண் டாக்கும்.
வி. உரை.
* பன்றியோடு கூடிய பசுக்கன்றும் பகரவி உண் ணும் ' கெட்டவர்களோடு சேர் வது துன்பத்தைத் தரும், துரியோதனனோடு சேர்ந்த கர்ணன் கெட்டவ னாக மதிக்கப்பட்டான். துன்பப்பட்டான்.
49. நாடெங்கும் வாழக்
கேடொன்று மில்லை
நாடு எங்கும் தேசமெங்கும், வாழ - செழித் திருக்குமாயின், கேடுஒன்றும் - (திருட்டுமுதலாகிய) கேடொன்றும், இல்லை - இல்லையாம்.
வி, உரை:
' இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க ' என்கிறது சைவசமயம், எல்லோரும் சிறப்பாக வாழ்ந்தால் யாருக் கும் துன்பமில்லை,
டு). நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை
நிற்க " (ஒருவன் தகுதியான வழியில் ) நிலை பெறும்படி கற்றல் - கற்றலாவது, சொல் -(தான் சொல்லும்) சொல்லுகளிலே, திறம்பாமை = ( ஒரு
போதும்) தப்பி நடவாமையாம்.

Page 18
24 கொன்றைவேந்தன்
வி. உரை:
தான் சொன் ன சொல்லிலிருந்து மாறுபடாமல் வாய்மை காத்துநிற்பதே ஒருவன் நல்லொழுக்கத்தில் நிற்க கற்ற கல்வியின் சிறப்பாகும், அரிச்சந்திரன் வாய்மை காத்து ஒழுக்கத்தில் நிலைத்து நின்றான்,
டு. நீரகம் பொருந்திய வூரகத் திரு
நீர் - நீர்வளமானது. அகம் - தனக்குள்ளே, பொருந்திய ( மழையில்லாத பஞ்சத்திலும் ) அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்தே, இரு - நீ குடியிரு.
மழை இல்லாக் காலத்திலும் நீர்த் தேவையை நிறைவு செய்யக்கூடிய இடத்தில், நீர்நிலைகள் உள்ளே பொருந்திய ஊரில், வாழ்வது நல்லது.
52. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி
நுண்ணிய - சிறிய, கருமமும் தொழிலை யும், எண்ணி - ( முடிக்கும் வழியை நன்றாக )
ஆலோசித்து, துணி - (நீ முன்பு அதைச் ) செய்யத் துணி,
வி. உரை
சிறிய காரியமாக இருந்தாலும், அதனை முடிக்கும் வழியையும் அதன் பல  ைன யு ம் ஆராய்ந்து செய்யத் தொடங்க வேண்டும்,
 

கொன்றை வேந்தன் 25
53 நூன்முறை தெரிந்து சிலத் தொழுகு நூல் தருமநுரலிலே சொல்லப்பட்ட, முறை( விதிகளின் ) முறையை, தெரிந்து அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு நீ நட.
வி. உரை :
நல்லொழுக்கத்தை நல்ல நூல்களிலேயிருந்து தெரிந்து கொண்டு அதன்படி நட.
04. நெஞ்சை யொளித்தொரு
வஞ்சக மில்லை
நெஞ்சை (தம்முடைய) மனதுக்கு, ஒளித்த மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை . ( யாவரிடத்திலும் ) இல்லையாம்.
வி. உரை:
மனத்திலே குற்றமற்றவனாக இருத்தலே அறம் என்றார் வள்ளுவர் தன் நெஞ்சுக்குத் தெரியாமல் எந்த வஞ்சனையையும் செய்ய முடியாது. எனவே மனச் சாட்சிப்படி நட,
டுடு நேரா நோன்பு இரா காது
நேரா - மனதினால் உடன்படாத, நோன்பு " தவமானது, சீர் ஆகாது க சீர்பெற முடியாது.

Page 19
26 கொள்றைவேந்தன்
வி. உரை:
மனம் விரும்பாத விரதமானது பெருமை பெறாது. மனம் ஈடுபடாத முயற்சி சிறப்பான பலனைத் தராது,
56. நையவ ரெனினும்
நொய்ய வுரையேல்
நைபவர் எனினும் - (கேட்போர் எதிர் பேசா மல்) வருந்துவோராயினும், நொய்ய வ அற்ப வார்த்தைகளை, உரையேல் - நீ சொல்லாதே.
al. Se Gunty:
எதிர்த்துப்பேச வலுவற்று வருந்தும் சிறியவராக இருந்தாலும் ( தாழ்வானவர்) அவரை அற்பமான வார்த்தைகளால் ஏசாதே
இ7 நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்
நொய்யவர் என்பவர் ( உருவத்தினாயே ) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - ( செய்காரியத்தால் ) யாவரும் விரும்பும் குணத்தையுடையவராவர்.
வி. உரை:
' கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது" அச்சாணி இல்லாத் தேர் முச்சானும் ஓடாது' ' உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' உருவில் சிறியவரும்
சிறந்த காரியத்தைச் செய்து பெரியவராய் வருவார்.

கொன்றைவேந்தன் 27
டுஇ நோன் பென் பதுவே
கொன்றுதின் னாமை
நோன்பு என்பது - தவம் என்று சொல்லப்படு வது, கொன்று - ( ஒரு சீவனை ) வதைசெய்து, தின்னாமை. ( அதன் மாமிசத்தை ) தின்னாமை Gu Jurth.
வி. உரை
உண்மையான விரதம் எனப்படுவது நன்றி மறந்து (கொன்று), அபகரித்து உண்ணாமையேயாகும்,
59. பண்ணிய பயிரிற் புண்ணியந் தெரியும்
பண்ணிய ( ஒருவன்) செய்த, பயிரில் விளை வினாலும், விளைவின்மையினாலும் புண்ணியம் ம ( அவனிடத்தே ) புண்ணியம் இருத்தலும், இல்லா மையும், தெரியும் அறியப்படும்.
a. silang:
பயிர் என்பதற்குப் பதிலாகத் தொழில் எனக்
கொண்டு ஒருவன் செய்கின்ற தொழிலில், அடைகின்ற வெற்றி தோல்விகளைக் கொண்டு அவனது புண்ணியத்தை யும், பாவத்தையும் கண்டுகொள்ளலாம்.
(6). பாலோ டாயினுங் கால மறிந்துண்
பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய
அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து -
காலத்தை அறிந்து, உண் = நீ அதை உண்ணு.

Page 20
28 கொன்றைவேந்தன்
வி. உரை:
உண்ட உணவு ஜீரணமான பின்பே உண்ணும் வழக்கமுடையோர்க்கு நோய் இல்லை. உண்ணவேண்டிய காலந் தவறாமல் உண்ணவேண்டும். பாலோடு கூடிய உணவு விக்கினமில்லாதது, இருப்பினும் காலமறிந்து உண் என்றார்.
6. பிறன்மனை புகாமை
அறமெனத் தகும்.
பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத் தில், புகாமை " (இச்சித்துப்) போகாமையே, அறம்
எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.
வி, உரை:
இராவணன் இராமனின் மனைவியாகிய சீதைமேல் மனம் வைத்து இறந்தொழிந்தான் என்பதை நினைவு கூர்க,
62. பீரம் பேணி பாரந் தாங்கும்.
பீரம் பேணி - முலைப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங் கும் - சுமப்பான், (அதுபோல முன்னே காரணங் களைக் குறைவறக் கொண்டவன், பின்னே பெரிய காரியங்களையும் வருத்தமின்றி முடிப்பான்.)
 

கொன்றைவேந்தன் 29
a. so lang:
தாய்ப்பாலுக்கு நிகரான உணவு இல்லை. அத்தி வாரம் சரியாகப் போடப்பட்டால், அது எத்தனை மாடி களையும் தாங்கும். அதேபோல சிறு வயதில் நல்ல உர மாக வளர்ந்தவர்கள் பிற்காலத்தில் உடல் - உள வலிமை மிகுந்தவர்களாக வருவார்கள்.
63. புலையுங் கொலையுங் களவுந் தவிர்
புலையும் - புலால் உண்ணுதலையும், கொலை யும் - சீவ வதை செய்தலையும், களவும் - பிறர் பொருளைத் திருடுதலையும், தவிர் = (நீசெய்யாது) ஒழித்துவிடு.
af. s2 launy:
இழிவான காரியங்களைச் செய்தலையும், கொலை செய்தலையும், களவெடுப்பதையும், விலக்கு,
64. பூரியோர்க் கில்லை சீரிய ஒழுக்கம்
பூரியோர்க்கு - கீழ் மக்களுக்கு, சீரிய - சிறப்
பாகிய, ஒழுக்கம் - நடையானது, இல்லை (உண்
உாதல்) இல்லையாம்.
வி. உரை!
கெட்ட செயல்களைச் செய்யும் இழிந்தோரிடம் சிறந்த ஒழுக்கம் இருப்பதில்லை.

Page 21
30 கொன்றைவேந்தன்
65. பெற்றோர்க் கில்லை
சுற்றமும் சினமும் பெற்றோர்க்கு - (மெஞ்ஞானத்தைப்) பெற்ற வருக்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும், சினமும் - ( மற்றவர்மேல் ) வெறுப்பும், இல்லை - இல்லையாகும்.
வி. உரை:
மெஞ்ஞானிகள் பந்தபாசமற்றவர்கள் என்பதால் இப்படிக் கூறினார்.
66. பேதைமை யென்பது
மாதர்க் கணிகலம்
பேதைமை என்பது மடம் என்று சொல்லப் படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும். ( மடம் - அறிந்தும், அறியார் போன்றிருத்தல்)
வி, உரை
தனது கணவனின் ஒழுக்கம்பற்றி ஆராயாமலேயே நல் லொழுக்கமென நம்பி உணர்வு வழியிலும், அன்புவழியிலும் கணவனைப் பேணு கி ன் ற தன்மை பெண்களுக்கு ஆபரணம் போன்றது.
67. பையச் சென்றால் வையந் தாங்கும்
பைய - மெல்ல, சென்றால் - ( ஒருவன் தகுதி யான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள் ளோர், தாங்கும் - (அ வ  ைன ) மேலாகக் கொள்வர்,

கொன்றைவேந்தன் 31
வி. உரை:
நிதானமாகத் தகுதியான வழியிலே நடப்பவனை இப்பூமியிலுள்ள பெரியோர் மேலானவனாகக் கொள்வர்,
6இ. பொல்லாங் கென்பவை எல்லாந் தவிர்
பொல்லாங்கு என்பவை - தீங்குகள் என்று சொல்லப்பட்டவைகளாகிய, எல்லாம் - எல்லா வற்றையும், தவிர் - (நீ செய்யாது) ஒழித்துவிடு.
வி. உரை:
as essa
எவை எவை தீமை பயப்பவை எனப் பட்டிய லிடாமல், தீமைகள் என்று சொல்லப் படுபவை எல்லா வற்றையும் எனக் கூறினார்.
இ0 போனக மென்பது தானுழந் துண்டல் போனகம் என்பது போசனம் என்றுசொல்லப் படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப்பட்டுச்
சம்பாதித்து, உண்டல் உண்ணுதலாம்.
வி, உரை:
தான் முயற்சிசெய்து உழைத்து உண்ணும் உணவே உணவாகும் என உழைப்பின் பெருமையைக் கூறினார்,
78), மருந்தே யாயினும் விருந்தோ டுண்
மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத் தற்கரிய) தேவா மிர்தமேயானாலும், விருந்தோடு வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - நீ உண்ணு

Page 22
32 கொன்றைவேந்தன்
al, so long,
அதிகமான் என்ற அரசன் தனக்குக் கிடைந்த அரிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாமலேயே ஒளவையாருக்குக் கொடுத்துப் புகழ்பெற்றான் என்பது நினைத்தற்குரியது. உடல்நோய் தீர்க் கும் மருந்தாக இருந்தாலும்கூட விருந்தினருக்குக் கொடுத்துச் சேர்ந்து உண் என்று நேரடிப் பொருள் கொண்டாலும்கூட விருந் தின் சிறப்பு உணர்த்தப்படும்.
7. மாரி யல்லது காரிய மில்லை
மாரியல்லது மாரியினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - யாருக்கும் நடப் பது இல்லை.
வி. உரை.
மழை இல்லாதுபோனால் பூமியில் ஒரு காரியமும் நிகழாது என மழையின் பெருமையைக் கூறினார்.
/2. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
மின்னுக்கு எல்லாம் - வானத்திற் காணப் பட்ட மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - (அப்பொழுது மழையில்லையாயினும் ) பின்னே மழை உண்டாகும். (அதுபோல) ஒருவனிடத்திலே காணப்பட்ட நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப் போது பயனில்லையாயினும் பின் னே பயன் உண்டாகும்.

இகான்றைவேந்தன் 33
sa, along!
பின்னால் நடக்கப்போகும் காரியத்தின் அறிகுறி முன்பே காட்டப்படும் எனினும் பொருந்தும்,
73. மீகாம ணில்லா மரக்கல Guom i trgy
மீகாமன் - தன்னை ஓட்டத்தக்க மாலுமி, இல்லா - இல்லாத, மரக்கலம் - தோணியானது, ஓடாது - கடலிலே செவ்வையாக ஓடாது, ( அது போல நல்வழியில் நடத்தும் தலைவன் இல்லாத குடும்பமும், வேந்தன் இல்லாத நாடும் செவ்வை யாக நடைபெறமாட்டா )
வி, உரை:
நல்ல தலைவனால் குடும்பமும், சமூகமும், நாடும் வழிநடத்தப்படவேண்டும்.
74. முற்பகல் செய்யிற்
பிற்பகல் விளையும்
முற்பகல் - ஒரு முகூர்த்த காலத்தின் முன் கிலே, செய்யின் - பிறனுக்குத் தீங்குசெய்தால், பிற்பகல் - பின்பங்கிலே, விளையும் ( செய்தவ னுக்கு அத்தீங்குதானே) உண்டாகும்.
( பகல் - முகூர்த்தம் ) வி. 2.60
ஒருவன் செய்கின்ற நன்மை தீமைகளின் பலன் விரைவாகவே அவனை வந்தடைந்து விடுகின்றது.

Page 23
34 கொன்றைவேந்தன்
/டு. மூத்தோர் சொன்ன
வார்த்தை யமிர்தம்
மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர் சொன்ன - சொல்லிய, வார்த்தை - வார்த்தை யானது. அமிர்தம் - தேவாமிர்தத்தைப் போலும்.
கல்வி. அறிவு, வயது, ஒழுக்கம் என்பவற்றிலே முதிர்ந்தவர்கள் சொல்லிய வார்த்தைகள் தேவாமிர்தம் போன்றவை.
76. மெத்தையிற் படுத்தல்
நித்திரைக் கழகு
மெத்தையில் - பஞ்சணையிலே, படுத்தல் - படுத்தலானது, நித்திரைக்கு - ( ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு - அழகாகும்.
வி, உரை:
அழகாகும் . A 7. மேழிச் செல்வங் கோழை படாது
மேழி - கலப்பை பிடித்து உழுதலால் உண்டா
கின்ற, செல்வம் - செல்வமானது, கோழைபடாது. ஒருபோதும் குறைவை அடையாது. -
இலவம் பஞ்சு மெத்தையிற் படுத்தலே நித்திரைக்கு

கொன்றைவேந்தன் 35
வி. உரை
உழுதுண்டு வாழும் வாழ்வே என்றும் குறைவில்லா வாழ்வு என்றார்.
78. மைவிழி யார்தம்
மனையகன் றொழுகு
மைவிழியார்தம் -  ைம தி ட் டி ய கண்ணை உடைய வேசிகளது, மனை - வீடுகளை, அகன்று ஒழுகு - நீ அணுகாமலே விலகி நட.
* மைவிழி ' என்பது குற்றம் நிறைந்த பார்வை எனப் பொருள் கொள்ளப்படக்கூடிய சொல் எனவே கெட்ட எண்ணத்தோடு பார்க்கும் பெண்களின் வீட்டை அணுகாமல் வாழ் என ஆண்களுக்கு வலியுறுத்தினார்.
79. மொழிவது மறுக்கி
னழிவது கருமம் மொழிவது - கற்றோர் சொல்கின்ற உபாயத்தை மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் - (ஒருவன் செய்யும் ) தொழில், அழிவது - கெடுவதாகும். ef. plany:
அனுபவம், அறிவு. ஆற்றல் உள்ளவர்கள் கூறிய நல்வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்துத் தன் விருப்பப்படி காரியஞ் செய்தால் அக்காரியம் பயன் தராமல் அழிந்துபோகும்,

Page 24
36 கொன்றைவேந்தன்
இ). மோன மென்பது ஞான வரம்பு
மோனம் என்பது = மெளனநிலை என்பது, ஞானம் - மெஞ்ஞானத்துக்கு, வரம்பு = எல்லை யாகும்.
aâ. selang:
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது’ என்றார் தாயுமான சுவாமிகள், மெளனமே மெஞ்ஞானத்தின் எல்லையாகும்,
இ. வளவனாயினு மளவறிந் தளித்துண்
வளவன் ஆயினும் - (சம்பத்திலே) சோழனுக்கு ஒப்பாயிருந்தாயானாலும், அளவு - (பொருள் வர வின்) அளவை, அறிந்து - தெரிந்து, அளித்து - கொடுத்து, உண் - அனுபவி.
வீ. உரை:
வளவனாயினும் என்பதற்கு, செல்வ வளம் நிறைந்தவனாக இருந்தாலும் என நேரடிப் பொருள் கொள்ளினும் பொருத்தும்
82. வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும்
வானம் - மழையானது, சுருங்கின் பெய்தல் குறையுமாயின், தானம் - ( சற்பாத்திரருக்குக் ) கொடுக்கின்ற கொடையும், சுருங்கும் குறைவு படும்.

கொன்றை வேந்தன் 37
வி. உரை:
மழை குறைந்தால் உணவு உற்பத்தி குறையும். அதனால் தானமும் குறையும். வாண்ம் மழையை வழங் காது போனால் தானமும், தவமும் நிலைக்காது என் றார் வள்ளுவர்.
83. விருந்திலோர்க் கில்லை
பொருந்திய வொழுக்கம் விருந்து இல்லோர்க்கு விருந்தினரை உபசரித் தல் இல்லாதவருக்கு, பொருந்திய தாம்பொருந்திய ஒழுக்கம் = இல்லறம், இல்லை - (இருந்ததாயினும்) இல்லாததற்குச் சமானமாகும்.
af, gaung :
இல்வாழ்வாரின் முக்கிய கடமை விருந்தோம்ப லாகும். விருந்தினரை உபசரிக்காதவரின் இல்லற வாழ்வு வாழ்வாகாது.
84. வீரன் கேண்மை கூரம் பாகும்
வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம் (ஒருவனுக்கு இருந்தால்) கூர் அம்பு ஆகும் - (அவ னுக்கு அதுவே தன் பகையை வெல்லுவதற்குக் ) கூர்மை பொருந்திய அம்பாகும்.
வி, உரை!
வீரனொருவனின் நட்பைப் பெற்றிருத்தல் பகையை வெல்ல வல்ல சிறந்த ஆயுதத்தைப் பெற்றிருத்தலுக்குச் சமனாகும். வீரனுக்கு அவனது சிறந்த கையணயுதமே நல்ல நண்பனாகும். எனினும் பொருதும்,

Page 25
38 கொன்றைவேந்தன்
இடு. உரவோ ரென்கை இரவா திருத்தல்
உரவோர் என்கை - வல்லவர் என்று சொல்லப் படுதல், இரவாது - ( தமக்குச் சிறுமை வந்த காலத்திலும் பிறரை ) இரவாமல், இருத்தல் - இருக்கையாம்.
வி, உரை:
எவ்வளவு வறு  ைம வந்தாலும் எச்சந்தர்ப்பத் திலும், யாரிடத்தும் சென்று இரக்காமல் வாழ்பவரையே. சிறந்த மனோ வல்லமை படைத்தவரென்று சொல்லலாம்.
இ6. ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு
ஊக்கம் - (செய்தொழிலிலே) மனந் தளராமை GOL, DL 60.601 D (ஒருவன்.) உடையனாதல், ஆக்கத்திற்கு - அவன் செல்வத்திற்கு, அழகு - அழகாகும்.
வி. உரை:
தளராத விடாமுயற்சி உடையவராயிருத்தலே செல்வத்தைப் பெகுக்குவதற்கு ஏற்ற வழியாகும்
s7. வெள்ளைக் இல்லைக் கள்ளச் சிந்தை
வெள்ளைக்கு களங்கமில்லாத பரிசுத்தகுண முடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந் திய, சிந்தை - நினைப்பானது, இல்லை - இல்லை வி. உரை
இவைகரைககள்
:* களங்கமில்லாத வெள்ளை உள்ளம் கொண்டவ ரிடம் வஞ்சகமான நினைப்புக்கள் இருப்பதில்லை.

கொன்றைவேந்தன் 39
இஇ. வேந்தன் சிறி னாந்துணை யில்லை வேந்தன்- அரசனானவன், சீறின் - ஒருவனைக்
கோபித்தால், ஆம் - (அப்போது ) அவனுக்கு
உதவி ஆகின்ற, துணை - துணைவர், இல்லை -
( ஒருவரும் ) இல்லை.
வி, உரை.
வேறு யார் கோபித்தாலும் மன்னனிடம், அதாவது ஆட்சிப் பொறுப்பிலுள்ளவரிடம் முறையிடலாம். ஆனால் ஆட்சிப்பொறுப்பிலுள்ளவரே கோபித்தால், விமோசனமே இல்லை, அதனால் ஆட்சியாளர்களின் கோபத்துக்காளா காமல் நடந்துகொள்.
இ9. வையந் தோறுந் தெய்வந் தொழு
வையந்தோறும் - பூமியிலுள்ள த லங் க ள்
தோறும் (போய்) தெய்வம் - கடவுளை, தொழு -
நீ தரிசித்து வணங்கு.
வி, உரை:
பூமியிலுள்ள சிறந்த கோயில்களுக்கு எல்லாம் சென்று கடவுளை வழிபடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று விசேடங்களும் ஒருங்கே பொருந்தி இருப்பதே கோயிலுக் குச் சிறப் பாகு ம். இவ் விசேடங்களுக்காக இடமிடந் தோறும் சென்று வழிபடல்வேண்டும் என்றார்.
9). ஒத்த விடத்து நித்திரை கொள்
ஒத்த இடத்து - (மேடு, பள்ளம் இல்லாமற் சமமான இடத்திலே, நித்திரை கொள் ( நீ படுத்து) நித்திரை கொள்ளு.

Page 26
40 கொன்றைவேந்தன்
af. Selang,
நல்ல நித்திரையிருந்தாற்தான் உடல் ஆரோக்கியமும். உள ஆரோக்கியமும் கிடைக்கும். இவை இரண்டும் சரி யாக இருந்தாற்தான் உணர்வும் சிந்தனையும் சிறப்புறும். அதனால் நன்கு நித்திரை செய்யக்கூடிய சமமான இடத் தில் நித்திரை செய்யவேண்டும்.
91. ஓதாதார்க் கில்லை
உணர்வொடு மொழுக்கம்
ஒதாதார்க்கு - ( அறிவு நூல்களைப் ) படியா தவர்க்கு, உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்ல நடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை
வி. உரை:
நல்ல நூல்களைக் கற்காதவர்களுக்கு நல்ல அறிவு மில்லை, நல்ல உணர்வுமில்லை. அதனால் நல்ல ஒழுக் கமும் அவரிடம் இருப்பதில்லை. எனவே நல்ல ஒழுக்க முடையவர்களாக வாழ நல்ல நூல்களைப் படித்து நல் லுணர்வு பெறவேண்டும்.
ららららららら Qp i ● ● ○○○○○○○

N
11.
12.
நூல் வெளியீட்டுக்கு நிதி உதவிய அன்பர்கள்.
திரு, சி. ஞானசம்பந்தன், அவர்கள்
G, H, A, De சில்வா அன் கோ, வவுனியா
திரு, க. ந. பாலச்சந்திரன், அவர்கள்
1-ம் குறுக்குத் தெரு, வவுனியா
திரு. ச ஆனந்தராசா அவர்கள்
சண்முகம் ஸ்ரோர்ஸ் கடைவீதி, na sofiluru
திரு. நா. சண்முகராசா அவர்கள், சிவசக்தி வவுனியா
திரு. அ. தணிகாசலம் அவர்கள்
கவிதா ஸ்ரோர்ஸ், புத்தக நிலையம், வவுனியா
திரு T K. இராஜலிங்கம் அவர்கள் திரு, ஆ. பெரியண்ணன் அவர்கள்
குளோப் ரேடர்ஸ்
M / S METO TRADERS
பஸ் நிலைய கடைத் தொகுதி
திரு. பொ, கமலேஸ்வரன் அவர்கள்
றணா பிறதர்ஸ். வவுனியா
M/s, E, K, T, 29 Old Moor Streef. Colombo
திரு. செல்லத்துரை மகேஸ்வரன் அவர்கள்
மங்களா. 141, கண்டி வீதி, வவுனியா
K. P. K. புத்தக நிலையம், பஸ் நிலையம், வவுனியா
S, இராமச்சந்திரன், அவர்கள்
இராமச்சந்திராஸ், பஸ் நிலையம், வவுனியா

Page 27
43 M S. R. இரத்தினம் பிறதர்ஸ்
1-ம் குறுக்குத் தெரு, வவுனியா
14. HONDA MOTORS,
கந்தசுவாமி கோவில் வீதி, வவுனியா
15, திரு. C. A. இராமஸ்வாமி அவர்கள்
ஈசன்ஸ், கடைவீதி, வவுனியா
16. திரு. வை, செ, தேவராசா அவர்கள்
* ஆண் ஒஇ ?? வவுனியா
17. 5(5. L. பழனிவேல், அவர்கள்
1-ம் குறுக்குத் தெரு, வவுனியா
18. திரு. கணேஸ் அவர்கள்
மொத்த வியாபாரச் சந்தை, வவுனியா
19. திரு. 虽 செல்வராசா அவர்கள்
காஞ்சனா நகைமாளிகை, கடை வீதி வவுனியா |
Cడ్రస్తాడ>ఢ2ఢలిస్తాడో">ఢలి2
நடப்புவருட நிர்வாக சபை
SeqSqESMSESAqAqASe MSMSeAASSLA AAA AASSLS MASMSMS MMeAe SAA AeAMMAMASA A ASq AA AqA AMAAA AA ASA AAAA AqA SAAAAA AA S :۹.ترانگیخیعنی
தலைவர்: திரு. .ெ A. இராமஸ்வாமி (ο)9τιιμίου τοητή . திரு வை செ. தேவராசா பொருளாளர்: திரு க சபாபதி
உப - தலைவர்: திரு மு. மாணிக்கவாசகர்
உப - செயலாளர் திரு. 5. அமிர்தலிங்கம் J.P.
உறுப்பினர்கள் s
திரு. T K இராஜலிங்கம் திரு. i. பழனிவேல்
திரு, ஆ, நவரத்தினம் திரு. இ. சண்முகம்
திரு, இ, வீரசிங்கம்
 
 


Page 28
爭。發...發...發**
ஒன்றென்றிரு தெய்
உயர் செல்வ
அன்றென்றிரு பசித்
நல் அறமும்
நன்னென்றிரு நடு
நமக்கு இட்ம்
என்றென்றிரு மனே
உப தேசம்
善。發發,**發*旁
 

D
*發...發...泰...發...發...*
வம் உண்sென்றிரு
ம் எல்லாம்
தோர் முகம்பார்
நட்பும்
நீங்காமலே
ܚܛܹLTL -ܥ
மே உனக்கே
இதே,
- பட்டினத்தார்
發。執-***約...教
喀
ހނނަ"