கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூவாத குயில்கள்

Page 1


Page 2


Page 3

வானொலி நாடகங்கள்
அகளங்கன்
品
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் WRITERS MOTIVATION CENTRE

Page 4
நால் கூடவாத குயில்கள்
தறை வானொலி நாடகங்கள்
எழுதியவர் : அகளங்கண் ( நா. தர்மராஜா)
வெளியீடு : பிரியா பிரசுரம் ~ 10
(எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்)
பதிப்புரிமை : திருமதி பூ தர்மராஜா B.A. (Hons)
முதற்பதிப்பு : டிசம்பர் 2001
அச்சுப் பதிப்பு : ஏ.ஜே. பிறிண்டர்ஸ், தெகிவளை
கணணி அமைப்பு : கணா டிஜிட்டல் பப்பிளிசர், மட்டக்களப்பு
அட்டை ஓவியம் ஞானகுரு
விலை : ரூபா 150/-
TITLE : KO OVATHA KUIYELKAL
SUBJECT : COLLECTION OF RADIO DRAMAS
AUTHOR : AGALANGAN (N. THARMARAJAH)
PUBLISHER : PRIYA PRASUIRAM — 10
(WRITERS MOTIVATION CENTRE)
COPYRIGHT : MRS. PTHARMARAJAH B.A. (Hons)
FIRST EDITION : DECEMBER 2001
PRINTERS : A.J. PRINTERS, DEHIWALA
COMPUTERTYPESETTING : GANA DGITAL PUBLISHERS
COVER DESIGN : GNANAGUIRUI
PRICE : RS. 150/-
ISBN 955 - 8666 - 01 - 7
கூடவாத குயில்கள் 2 அகளங்கண்

லண்டனில் வெளியீடு
காற்றுவெளி 34, Redriffe Road, Plaistow LONDON E13 OJX Tel: O2085867783
Price: 6 Dollers
கூடவாத குயில்கள்
அகளங்கண்

Page 5
நன்றி
ஆற்றில் விழுந்த மலர், மாற்றங்கள் மாற்றவில்லை, கூவாத குயில்கள், ஆகிய மூன்று நாடகங்களையும், வானொலி நாடகங்களாகத் தயாரித்த திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன், திரு. எஸ் எழில்வேந்தன், திரு. கே. ஞானசேகரன் ஆகியோர்க்கும்,
இந்த நாடகங்களில் ஒலிக்குரல் மூலம் நடித்த, திரு. கே. எஸ். பாலச்சந்திரன், கமலினி செல்வராஜன், ஆர். பகவான், வனஜா (நீனிவாசன், ஏ. எம். சி. ஜெகஜோதி, கே. ஞானசேகரன், கனிஷ்டா திருச்செல்வம், எஸ். சுரேஸ்ராஜா, வி. சுபாஜினி, ஆர். யோகராஜன், நிலாமதி பிச்சையப்பா, புஸ்பராணி சிவலிங்கம், கே. சிவலோகநாயகி ஆகியோர்க்கும்.
இந்நாடகங்களைச் சிறந்த முறையில் ஒலிபரப்பிய
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவைக்கும் என் நன்றிகள் என்றும் உரியன
அகளங்கன்.
கூடவாத குயில்கள் 4 அகளங்கண்

இந் நாடகங்கள் பற்றி.
ஆற்றில் விழுந்த மலர்
மலருக்குச் சொந்தக்காரன் சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் மலரை ஆற்றில் தத் தளிக்க விட்டுச் சென்று விட்டான். அம் மலர் இன்னொருவனுக்குச் சொந்தமானது என்று தெரியாமலேயே கரைசேர்க்க வந்தவனிடம்; மலருக்குச் சொந்தக்காரனே, தான் அம்மலரை வைத்திருக்கத் தகுதியற்றவன் என உணர்ந்து ஒப்படைத்து விடுதலே கதையின் கருப்பொருளாக அமைகிறது.
ஆற்றில் விழுந்த மலர் என்ற தலைப்புக் கேற்ப மலரின் தத்தளிப்புக்கள், பாத்திரப் படைப்புக்களின் உரையாடல்கள் மூலம் கூறப்பட்டுள்ள விதம், இந் நாடகத்தினை அணிசெய்கிறது.
இங்கு மோகனா, வானதி, கணேசன் மாஸ்டர், குமார் முதலான அனைத்துப் பாத்திரப் படைப்புக்களும் அவற்றின் உணர்வுகள் மூலம் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றன.
கணவனால் ஏமாற்றப்பட்ட மோகனாவின் மன உணர்வுகள் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக; வானதி தனது நண்பியின் கதையைக் கூறும்போது, “ஆண்களே இப்படித்தான்’ என ஆண் இனத்தையே வெறுப்பது, விதியை நோவது, என்பவற்றைக் குறிப்பிடலாம்.
கணேசன் மாஸ்டருடைய காதலைப் பற்றி ஆவலாகக் கேட்கும் விதம், நண்பி என்ற வகையில், அதுவும் ஒரே அறையில் வாழ்பவர்கள் என்ற வகையில் மோகனாவின் தனிமையைக் கோபிப்பது, வானதியின் பாத்திரப் படைப்பை உயிரூட்டுகின்றது.
மோகனாவுக்கு திருமண வயதிலே ஏற்பட்ட அடி, அவளது மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதனாலேயே அவள் நுவரெலியாவில் ஒருவருடனும் மனம் விட்டுப் பழக முடியாத நிலை ஏற்பட்டது. அதனை ஆசிரியர் சித்தரிக்கும் விதம் சிறப்பானது.
சமகாலப் பிரச்சனைகளினூடாக சீதனப் பிரச்சனையைச் சித்தரிக்கும் விதம் உள்ளத்துணர்வுகளைத் தட்டியெழுப்புகின்றது. குமாரின் தாய், தந்தை ஆகியோர் மோகனாவின் தந்தையுடன் உரையாடும்
கூடவாத குயில்கள் 5 அகளங்கண்

Page 6
போது அவர்களின் குண இயல்புகள் சிறப்பாக வெளிக்காட்டப்படுகின்றன. வன்செயலால் வீடு பாதிக்கப்படுவதற்கு யார் பொறுப்பு ? அதற்கு பெண்ணைப் பெற்றவர்கள் என்ற வகையில் பெண்ணின் பெற்றோர் பொறுப்பாளியாக்கப்பட்டு, வீட்டைக் கட்டித்தர வேண்டும் எனப் பிடிவாதமாக நிற்கும் ஆணின் பெற்றோரின் குணம் பல வீடுகளில் இன்றும் காணக் கூடியதே. இப் பிரச்சனை சீதனப் பிரச்சனைக்குள்ளும், சமகாலத்தைப் புகுத்திய சிறந்த பிரச்சனையாகச் சொல்லப்படத்தக்கது.
தனக்குச் சீதனம் தேவையில்லை என்று கூறுவதும், காதலியின் குடும்பப் பொறுப்புக்களைத் தீர்க்கச் சம்மதிப்பதும் கணேசன் மாஸ்டரின் உண்மையான காதலை வெளிக்காட்டுகிறது.
எல்லா வகையிலும் சமூகத்தில் நாள்தோறும் நடக்கும் சம்பவங்களை மக்களின் உள்ளத்துணர்வுகளைச் சித்தரிக்கும் விதத்தில் ஆசிரியர் பாராட்டப்படுகின்றார்.
த. அநபாயன்
கஉவாத குயில்கள்
பறவைகளுக்குள்ளே ஒன்றாக விளங்கும் குயிலானது, காகத்தினுடைய கூட்டுக்குள் களவாக முட்டையை இட்டு விடும். ஏனென்றால் அதற்கு முட்டையிட மட்டும் தான் தெரியும். அம்முட்டையை அடைகாக்கத் தெரியாது.
காகம் தனது முட்டைகளோடு குயிலின் முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்யும். காகம் குயிலின் குஞ்சுகளுக்கும் இரையூட்டி வளர்க்கும். குயில் அடைகாப்பதுமில்லை தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதுமில்லை.
இவ்வாறு குயிலுடைய செயலைப் போன்று தான், இக்காலத்திலே வாழுகின்ற சில பெண்களினது செயலும் இருக்கின்றது. என்னும் ஒரு அரிய கருத்தை மையமாகக் கொண்டே கூவாத குயில்கள் என்னும் நாடகம் சிறந்த பாத்திர வார்ப்புக்களினூடாகப் படைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பாத்திரங்களைப் படைத்து நாடகத்தை அலைபாய விடாது, கருப்பொருளுக்கேற்ற வகையில் முக்கிய பாத்திரங்களை
கூடவாத குயில்கள் 6 அகளங்கண்

மட்டும் கொண்டு நாடகத்தை நகர்த்தியிருக்கும் விதம், வாசிப்பவர்களின் நெஞ்சங்களை நெகிழவைக்கின்றது.
ஆசிரியர் தனது கற்பனையை கருப் பொருளாகக் கொள்ளாமல், சமுதாயத்திலே நடக்கின்ற உண்மையான ஒரு சம்பவத்தை நாடகமாக உருவாக்கியுள்ளதனால் வாசிப்பவர்கள் அதைத் தெளிவாக அறிய முடிகிறது.
பாத்திர வார்ப்புக்கள் மிகவும் உயிர்த்துடிப்புடையனவாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பேரப் பிள்ளைகள் மீது கொண்ட தீராத ஆசையினாலேயே அவர் பூனைக்குட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்தவர், பூனைக்குட்டியைப் பேரப்பிள்ளைகள் என்னும் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்ததனாலேயே பூனைக் குட்டிகளின் பலனை பஞ்சாங்கத்திலே பார்க்கிறார்.
தனது மகளுக்குப் பிள்ளை பிறந்தால் எப்படிப் பார்ப்போமோ அதே போல பூனையையும் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை, துடிப்பு எல்லாமே, பேரப்பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தினது வெளிப்பாடேயாகும் . இங்கு ஆசிரியர் சிறந்த உத்தியைக் கையாண்டுள்ளார். பேரப் பிள்ளைகள் மீது கொண்ட பாசம் பூனைக்குட்டிகள் வாயிலாக விளங்க வைத்திருப்பது மனங்கொள்ளத் தக்கதே.
பேரப்பிள்ளைகள் மீது கொண்ட பாசம், தாயின் வளர்ப்பு முறை தவறினால் ஏற்படும் வெறுப்பு என்பவற்றைச் சிறப்பான முறையிலே ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
மேலும், பிள்ளைகளை நீ” என்று கூடச் சொல்லுவதில்லை “நீங்கள்” “வாங்கோ’ என்று மரியாதையாகக் கதைக்க வேண்டும் என்று மருமகள் கூறுகிறாள். அந்நியர்களைத் தான் நாம் மரியாதையாகக் கதைப்போம். பிள்ளைகளை அப்படிக் கதைப்பது வன்னியில் யதார்த்தமில்லை. இதன் மூலமாகத் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான உறவு எவ்வளவு தூரம் விரிசலடைகிறது என ஆசிரியர் மறை முகமாக உணர்த்தியுள்ளார்.
இந்த நாடகத்திலே காகங்களாகப் பாட்டன், பாட்டியும், குயிலாக மருமகளும் உருவகிக்கப்பட்டுள்ளனர்.
பெற்ற தாய் தன் பிள்ளைகளைப் பராமரிக்காமல் உத்தியோகத்திற்குச் செல்வதையும், உத்தியோகத்திற்குச் சென்று
கூடவாத குயில்கள் 7 அகளங்கண்

Page 7
பொருள் தேடும் தேவை இல்லாதிருக்கவும், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அவலத்தையும், வயது சென்ற கணவனைப் பராமரிக்கும் கடமையிலுள்ள மனைவி அக்கடமையைச் சரிவரச் செய்வதற்கு, பேரப்பிள்ளைகள் தடையாக இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கும் மருமகள்களையும் இந்நாடகம் கண்டிக்கிறது.
த. அநிந்திதை.
தாயும் நாயும்
பட்டி தொட்டிகளிலெல்லாம் வாழும் படித்தபடிப்பறியா மக்களின் மக்கள் இலக்கியமாகச் செல்வதும், செவி வழியினூடாகப் புகுந்து இதயங்களில் தொக்கி நிற்கும் இலக்கிய வடிவமும் வானொலி நாடகம்.
ஈழத்து இலக்கிய சரித்திரத்தில் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற ஒரேயொரு வானொலி நாடக நூல் அன்றில் பறவைகள். அந்த நூலை ஆக்கித் தந்தவர் அகளங்கன்.
அந்த இலக்கியச் செழுமையையும் விஞ்சிய வகையில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் இந்த நாடகம் ஒரு வரலாற்று ஆவணப் பதிவு
நிகழ்கால நிகழ்வுகளை - இன்றைய அவலங்களை கவிதை - சிறுகதை - கட்டுரை வடிவங்களில் கேட்டிருந்த எமக்கு வானொலி நாடகத்தின் வடிவில் வந்த முதல் தரப் படைப்பு இது.
தாயும் நாயும்’ நாடகத்தின் தலைப்பு. தலைப்பு கூட வாழ்வியல் தத்துவத்தின் சிறந்த குறியீடாக அமைகிறது.
இடம்பெயர்ந்து செல்லல் தமிழர்க்குக் கடன் என்பது போல 99 இல் வவுனியாவிலிருந்து திடீரென இடம்பெயரவேண்டிய சூழலின் அவலத்தையும் - ஒரு குடும்பம் படும் அவஸ்த்தையையும் - அங்கே நிகழ்கின்ற யதார்த்த ரீதியிலான கெளரவ - அகெளரவங்களையும் - அறியாமையையும் சுட்டிக் காட்டுவதே கரு.
அகளங்கனின் வானொலி நாடகங்கள் எல்லாம் உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருப்பவை. ஆனால் இந்த நாடகம் உணர்வுடன் கலந்து அறிவு பூர்வமாக நகர்த்தப்பட்டிருப்பது விசேட அம்சம்.
இவற்றை விட வன்னிப் பிரதேச கிராமியச் செழுமை
கூடவாத குயில்கள் 8 அகளங்கண்

நிறைந்த வார்த்தைப் பிரயோகம் எம்மை வன்னியின் கதை முனைக்கே கொண்டு செல்வதுதான் நாடகத்தின் வெற்றி.
த. ஈஸ்வரராஜா
மாற்றங்கள் மாற்றவில்லை
பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை வானொலியில் கேட்ட “மாற்றங்கள் மாற்றவில்லை’ எனும் நாடகத்தை, எழுத்துருவில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அதில் என்னால் உணரமுடிந்தவற்றை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.
பெண் அடிமைத்தனத் திரையைக் கிழித்து வெளிவரும் மாலதி என்னும் தமிழ்ப் பெண்ணின் துணிவும், சீதனத்தின் சொந்தக் காரரான ஆண் பிள்ளையைப் பெற்ற தமிழ்த் தாய்ச் சமூகத்தின் பேராசையும், இளந்தலைமுறையை எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்பதனை மனக்கண்முன் நிறுத்திச் செல்கிறது இந் நாடகம்.
விபத்து, காதல், இடப்பெயர்வு, வெளிநாடு, திருமணக்குழப்பம், சுபம் என தமிழ்க் குடும்பங்களின் 1983 களின் பின் உள்ள களத்தில் இருந்து “மாற்றங்கள் மாற்றவில்லை” என்ற இந்நாடகம் வெளிவந்துள்ளது.
"இப்படித்தான் எங்கள் குடும்பத்திலும்” என்று யாரோ ஒருவர் சொல்லித்தான் ஆகவேண்டும். அது தான் யதார்த்தமும், ஆக்கத்தின் வெற்றியும் கூட.
யுத்தம், உயிர், உடமை அழிவு, இடப்பெயர்வு எவையும் பல தமிழரின் மனப்பாங்கை இன்னும் புடம்போடவில்லை என்பதே ஆசிரியரின் ஆதங்கம் என்பது புரிகிறது.
நாடகத்தினை எழுத்துருவில் வாசிக்கும் போது, இலங்கை வானொலி நாடகக் கலைஞர்கள் சிலரின் ஆளுமைக்கு உட்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது வானொலி நாடகத்தில் சொற்களைக் கையாள்வதில் ஆசிரியருக்குரிய முதிர்ச்சியைக் காட்டுகிறது.
செ. சண்முகநாதன்.
கூடவாத குயில்கள் 9 அகளங்கண்

Page 8
முன்னுரை
வானொலிக்காக சமூக நாடகங்களைத் தயாரிப்பதிலும், குரல் ஒலி மூலமாக நடிப்பதிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தழிழ்ச் சேவையின் வானொலிக் கலைஞர்களுக்கு நிகராக எவரையும் சொல்லமுடியாது.
வானொலி நாடகத் தயாரிப்பாளர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள், நடிகர்கள் கே. எஸ். பாலச்சந்திரன், கமலினி செல்வராஜன், வனஜா பூீரீநிவாசன், ஏ.எம். சீ. ஜெகஜோதி, ஆர். பகவான் முதலானோர் சிறந்த கலைஞர்கள். இவர்களின் திறமையினால் எனது சமூக நாடகங்கள் பல, வானொலியில் சிறப்புப் பெற்றுள்ளன.
இலங்கை வானொலிக்கு அதிக அளவு நாடகங்களை எழுதிய வானொலி நாடகப் பிரதியாக்க விற்பன்னர் அராலியூர் திரு. ந. சுந்தரம்பிள்ளை அவர்கள், வானொலி நாடகத் துறையில் ஜாம்பவான் எனல் பெரிதும் பொருந்தும்.
அவருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவை மட்டுமல்ல, வானொலி நேயர்களும் நன்றிக்கடன் பட்டவர்கள். வானொலி நேயர்களில் ஒருவன் என்ற வகையில் அவருக்கு என் நன்றிகள் என்றும் உரியன.
எனது அன்றில் பறவைகள் வானொலி நாடக (சமூக) நூலிற்கு பேராசிரியர். சி. மெளனகுரு அவர்கள் எழுதிய அணிந்துரையில், நாடகத் தயாரிப்புக்கான குறிப்புக்களை போதிய அளவுக்கு நான் கொடுக்கவில்லை என்று ஒரு குறையைக் கூறியிருந்தார்.
இந் நூலிலும் தயாரிப்புக் குறிப்புக்களை நான் அதிகம் எழுதவில்லை. எனக்கு இக்கருத்தோடு உடன்பாடு சிறிதும் இல்லை.
வானொலி நாடகங்களைப் பொறுத்த வரையில், நான் நாடகப் பிரதியாக்கக் கலைஞனே அன்றித் தயாரிப்பாளன் அல்லன், தயாரிப்பாளன் நெறியாளுகை செய்ய முன், நாடகத்தை நன்கு வாசித்து விளங்கிக் கொண்டு அதன்பின்பே தயாரிக்கத் தொடங்குகிறான்.
தயாரிப்பாளன் விளங்கிக் கொள்ளுமளவிற்கு குறிப்புக்கள் எழுதினால் போதும். தயாரிப்பாளனது கற்பனைக்கும், திறமைக்கும், அனுபவத்திற்கும் முழுமையாக இடமளிக்கப்படவேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.
நாடகத் தயாரிப்பாளன், நாடகத்தை வெற்றிகரமாகத் தயாரித்தபின், அவனே
கூடவாத குயில்கள் 10 அகளங்கண்

அதை நூலாக்கம் செய்தால், தான் எவ்வகையில் அதைத் தயாரித்தான் என்பதைக் காட்ட, தான் கையாண்ட உத்திகளைக் குறிப்பிடலாம்.
இருப்பினும் அது நூலில் நாடகத்தை (இயலாக) வாசிப்பவர்கள் உணர்வோடு ஒன்றிப் போவதற்குப் பெருந்தடையாக இருக்கும் என்பதும் என் அபிப்பிராயம்.
இந் நாடகங்களில் தயாரிப்பாளன் விளங்கிக் கொள்ளப் போதுமான, தேவையான அளவிற்கு தயாரிப்புக் குறிப்புக்களை வழங்கியிருக்கிறேன். அதனால் தான் இந் நாடகங்களை அவர்களால் சிறப்பாகத் தயாரித்தளிக்க முடிந்துள்ளது எனத் துணிந்து கூறலாம்.
இது எனது மூன்றாவது வானொலி நாடகநூல், எனது முதல் வானொலி நாடக நூலான “அன்றில் பறவைகள்” நூலில் ஐந்து சமூக நாடகங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்நூல் 1992ம் ஆண்டிற்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்று என்னை உற்சாகப் படுத்தியது.
அந்நூலில் இடம் பெற்ற நாடகங்கள் உலகின் பல பாகங்களிலும் வானொலி நாடகங்களாகவும் மேடை நாடகங்களாகவும் நடிக்கப் பட்டுள்ளன. நடிக்கப் படுகின்றன.
குறிப்பாக அன்றில் பறவைகள் என்ற நாடகம் பல இடங்களில் மேடை நாடகமாகவும், பல வானொலிக் கலைஞர் குழுக்களால் வனொலி நாடகமாகவும் நடிக்கப்பட்டுள்ளது.
எனது “இலக்கிய நாடகங்கள்’ என்ற வானொலி நாடகத் தொகுப்பு நூல் 1994ம் ஆண்டிற்கான வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசை (இலக்கிய நூற்பரிசு) ப்பெற்றது.
ஆறு இலக்கிய நாடகங்களைக் கொண்ட அத்தொகுப்பில் இடம்பெற்ற நாடகங்களும், பலராலும், பல இடங்களிலும் மேடைநாடகங்களாக நடிக்கப்பட்டன.
அதில் இடம்பெற்ற சிலம்பு பிறந்தது என்ற நாடகம், 1998ல் பிரான்ஸ் தமிழ் ஒலி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து தேசிய ரீதியில் நடாத்திய சில்லையூர் செல்வராஜன் ஞாபகார்த்த வானொலி நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் இலக்கிய நாடகங்கள் நூலை 1994ல் வெளிவந்த சிறந்த நாடக நூலாகத் தேர்ந்தெடுத்தது.
கூடவாத குயில்கள் 11 அகளங்கண்

Page 9
இந்த இரு நாடக நூல்களிலுமுள்ள நாடகங்கள், முப்பது நிமிட வானொலி நாடகங்களாக இலங்கை வானொலியில் முதலில் நடிக்கப் பெற்றன.
பின் அவற்றில் சில, அவுஸ்ரேலிய தமிழ் முழக்கம், முத்தமிழ் மாலை ஆகிய வானொலிகளில் தொடர் நாடகங்களாக நடிக்கப்பட்டன.
கனேடியத் தமிழ் வானொலியிலும், சர்வதேச ஒலிபரப்புச் சேவை (IB.C) யிலும், பிரான்ஸ் தமிழ் ஒலியிலும், பல வானொலிக் கலைஞர் குழுக்களால், எனது சில நாடகங்கள் நடிக்கப்பட்டதாக அறிந்து மகிழ்கிறேன்.
கூவாத குயில்கள் என்ற இந்த வானொலி நாடக நூலில் நான்கு வானொலி நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஆற்றில் விழுந்த மலர், தாயும் நாயும் என்ற இரு நாடகங்களும் முப்பது நிமிட வானொலி நாடகங்கள். மாற்றங்கள் மாற்றவில்லை, கூவாத குயில்கள் ஆகிய இரு நாடகங்களும் நாற்பத்தைந்து நிமிட வானொலி நாடகங்கள்.
மாற்றங்கள் மாற்றவில்லை, கூவாத குயில்கள், ஆகிய இரு நாடகங்களும், இலங்கை வானொலிக்கென முப்பது நிமிட நாடகங்களாக எழுதப்பட்டன. இங்கு விரிவாக நாற்பத்தைந்து நிமிட நாடகங்களாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 'தாயும் நாயும்’ என்ற நாடகம் தவிர்ந்த ஏனையவை மூன்றும் இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டன.
இந்நாடகங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் எமது அன்றாட வாழ்வின் பிரதிபலிப்புக்களாக, காலக் கண்ணாடிகளாக விளங்கும்படியே எழுதப்பட்டன.
எனது வானொலி நாடகங்களைத் தகுந்த முறையில் தயாரித்து நடித்த கலைஞர்களுக்கும், சிறந்த முறையில் ஒலிபரப்பிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவைக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
எனது இலக்கியப் பயணத்தின் ஆரம்ப காலத்திலிருந்து, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எனக்குப் பலவகையிலும் உதவி வரும் என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய உடுவை எஸ். தில்லை நடராஜா அவர்கள் எனது பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கியவர். இந்நூலுக்கும் அவரின் வாழ்த்துரை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
இந்நூலை வெளியிடுவதில் என்னை விட அதிக அக்கறை காட்டி, சகல பொறுப்புக்களையும் தன் தலைமேல் ஏற்று, தனது நூல்களை விடச் சிறந்த வகையில் எனது இந்நூல் அமைய வேண்டுமெனப் பாடுபட்டு, இந்நூலை அச்சிட்டுத் தந்த என் பேரன்புக்குரிய நண்பர் ஓ.கே. குணநாதன் அவர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் நிறைவு பெறாது.
* கூடவாத குயில்கள் 12 அகளங்கண்
 

எனது நூல் வெளியீடுகளுக்குப் பெரும் ஆதரவு நல்கி வரும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றிற்கும், குறிப்பாக அவற்றின் தலைவர் மக்கள் சேவை மாமணி. நா. சேனாதிராசா (சமாநீதி) அவர்களுக்கும்.
எனது அறம் சமயம் சார்ந்த எட்டு நூல்களை வெளியிட்டும், பல நூல்களை நான் வெளியிடப் பல்வேறு உதவிகளைச் செய்தும் ஊக்கமளித்து வரும், வவுனியா இந்து மாமன்றத்திற்கும், குறிப்பாக அதன் தலைவர் சிவநெறிப் புரவலர். சி. ஏ. இராமஸ்வாமி அவர்களுக்கும் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுக்கும், என் நன்றிகள் உரியன.
எனது இலக்கியப் பயணத்தைக் கெளரவமாக ஆரம்பிப்பதற்கு வழியமைத்த சிரித்திரன் ஆசிரியர் அமரர். சி. சிவஞான சுந்தரம் அவர்களை நினைந்து வணங்கி, வழமைபோல இந் நாடகங்களை எழுதுவதிலும் எனக்கு ஆலோசனைகளை வழங்கிய நண்பர்கள் செ. சண்முகநாதன் பிமாணிக்கவாசகம் ஆகியோர்க்கும்,
நாடகங்களைப் பற்றிய தமது எண்ணங்களைப் பதிவுசெய்த. த. அநபாயன். த. அநிந்திதை, திரு. செ. சண்முகநாதன். திரு. த. ஈஸ்வரராஜா ஆகியோருக்கும்
எனது ஆக்கங்கள் யாவற்றையும் நூல்வடிவில் காண ஆவல்கொண்டு எனக்குப் பல்வேறு வகைகளிலும் உதவிவரும் என் அன்புக்குரிய தம்பி திரு.க.குமாரகுல சிங்கம் அவர்களுக்கும்.
இந் நூலை லண்டனில் வெளியீடு செய்யும் நண்பன் முல்லை அமுதன் அவர்களுக்கும்.
என்படைப்புக்கள் யாவற்றையும் இரசித்து, ஆலோசனை வழங்கி பிரதியெடுத்து, சரவைகளை (Proof) ஒப்புநோக்கித் திருத்தி, எனக்கு
உந்து சக்தியாக விளங்கும் என் மனைவிக்கும்,
இந்நூலைப் படித்துப் பயன்பெறவும், நடித்துப் பரப்பவும் போகும், வாசகர்களுக்கும் கலைஞர்களுக்கும், என் நன்றிகள் உரியன.
பம்பைமடு அன்புடன் வவுனியா அகளங்கண்
கூடவாத குயில்கள் 13 அகளங்கண்

Page 10
பதிப்புரை
எனது நூலொன்றைப் பிரசவித்துப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பல பிரசுராலயங்களின் படிகள் ஏறி, இறங்கினேன்.
இளம் எழுத்தாளராக இருந்த எனது நூலை யாருமே பிரசுரிக்க முன் வரவில்லை.
வேதனையின் வெளிப்பாடு. நானே எனது நூலை வெளியிட்டாலென்ன என்று எண்ணினேன். -
இதன் பயன். 12.04.1992 இல் பிரியா பிரசுரம் என்ற பெயரில் வெளியீட்டகத்தை ஆரம்பித்தேன். முதலாவது வெளியீடாக எனது “ஊமை நெஞ்சின் சொந்தம்’ நாவல் வெளிவந்தது.
தன்னம்பிக்கையும் துணிவும் தொடர்ந்தது.
இதுவரை. 9 நூல்கள் வெளியாகின. அத்தனையும் எனது நூல்களே.
எனது நூல்களை மட்டும் வெளியிடாமல் எழுத்தாள நண்பர்களின் நூல்களையும் வெளியிட்டாலென்ன என்ற எண்ணம் உதயமாகியது.
பிரியா பிரசுரம் என்ற வெளியீட்டகத்தை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் என்ற தனி நபர் அமைப்பாக விரிவு படுத்தினேன்.
இதன் வாயிலாக. இந்த "கூவாத குயில்கள்' என்ற வானொலி நாடகங்கள் நூல் வடிவம் பெறுகிறது.
இது 10வது வெளியீடு.
அதிலும். எனது இலக்கிய வளர்ச்சிக்கு பக்க பலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் தமிழ் அறிஞர் அகளங்கனுடைய நூலாக இந் நூல் அமைவது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இன்னும். பல நூல்கள் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையுண்டு.
மீண்டும். அடுத்த வெளியீட்டில் சந்திப்போம்.
பிரியமுடன், ஓ.கே. குணநாதன்.
மேலாளர் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
கூடவாத குயில்கள் 14 அகளங்கண்

வாழ்த்துரை
இலங்கையில் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருந்த போதும், அவர்களது ஆக்கங்கள் தரத்தில் உயர்ந்ததாக இருக்கின்ற போதும் வெளியீட்டு வசதிகள் சந்தைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிறந்த எழுத்தாளர்கள் பற்றியும் உயர்ந்த படைப்புகள் பற்றியும் பலர் அறியாமலே இருக்கின்றார்கள்.
எமத் எழுத்தாளர்களை ஊக்குவிக்குவித்த அவர்களின் படைப்புகளை நாலுருவில் வெளியீட்டு புதிய சமுதாயத்தை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழுலகம் நன்கறிந்த எழுத்தாளர் தமிழ்மணி அகளங்கனின் கூவாத குயில்கள்’ வானொலி நாடகங்களை வெளியிடுவத அறிந்து மகிழ்கின்றேன்.
இலங்கையில் இன்று பலரது கவனத்தைக் கவரும் பிரதேசமான வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அகளங்கண், சிறு வயத முதல் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை எனப் பலதறைகளில் தடம்பதித்தவர். போட்டிகளில் பரிசில்கள் பல பெற்றவர். கடல் கடந்த நாடுகளிலும் பரந்த வாசகர் கூட்டத்தை வைத்திருப்பவர். அவரது நாடகங்களை நாலுருவில் கொண்டுவருவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
திரு. ஓ.கே. குணநாதனை மையமாகக் கொண்டு செயற்படும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பணிகள் பல நூறாகி பல்லாயிரமாகி பலரும் பயன்பெற வாழ்த்துகின்றேன்.
உடுவை. எஸ். தில்லைநடராசா
கூடவாத குயில்கள் 15 அகளங்கண்

Page 11
I
இந் நாலாசிரியரின் பிற நால்கள்
“செல்' 'வா’ என்று ஆணையிடாய் (அஞ்சலிக்கவிதைகள்)
சமவெளி மலைகள் (கவிதைகள்)
வாலி (ஆய்வு நூல் - இரு பதிப்புக்கள்)
இலக்கியத் தேறல் (கட்டுரைகள்)
நளவெண்பா (கதை)
அன்றில் பறவைகள் (நாடகங்கள் - தேசிய சாகித்திய மண்டலப்
பரிசு பெற்றது)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்
இலக்கியச் சிமிழ் (கட்டுரைகள் - இருபதிப்புக்கள்)
தென்றலும் தெம்மாங்கும் (கவிதைகள்)
பன்னிரு திருமுறை அறிமுகம் (சமயம்)
மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல்கள் (ஆய்வு)
இலக்கிய நாடகங்கள் (நாடகங்கள் - வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய
மண்டலப் பரிசு பெற்றது)
ஆத்திசூடி (விளக்கவுரை)
கொன்றை வேந்தன் (விளக்கவுரை)
அகளங்கன் கவிதைகள் (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப்
பரிசு பெற்றது)
வாக்குண்டாம் (விளக்கவுரை)
சிவபுராணம் (பொருளுரை)
நாமறிந்த நாவலர்
செந்தமிழும் நாப்பழக்கம் (பேச்சுக்கள் - சிறுவர் இலக்கியம்)
நல்வழி (பொழிப்புரை - விளக்கவுரை)
இசைப்பாமாலை
கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு
இலக்கியச் சரம்
வெற்றி வேற்கை, (பொழிப்புரை)
கூடவாத குயில்கள் 16 அகளங்கண்

ஆற்றில் விழுந்த மலர்
(30 நிமிட வானொலி நாடகம்)
பாத்திரங்கள்
இடம்
பாத்திரங்கள்
வானதி
(LDITassort
வானதி
மோகனா
வானதி
மோகனா
வானதி
(DTasgOTT
வானதி
வானதி
மோகனா
கணேசன்
குமார் மோகனாவின் தாய் மோகனாவின் தகப்பண் குமாரின் தகப்பண் குமாரின் தாய்
ஒருவன்
g5 Tgif (01)
மோகனாவின் அறை
:- மோகனா, வானதி
மோகனா! நான் எத்தினையோ முறை கேட்டிட்டன். நீர் ஒரு முடிவும் சொல்லுறீரில்ல. எப்பிடியோ கதைச்சு மழுப்பீருறீர். இண்டைக்குக் கட்டாயம் ஒரு முடிவு சொல்லோனும்,
வானதி!. நீர் என்ன கேக்கிறீர்.
என்ன மோகனா! இது கூட மறந்திற்றிரே. நீர் எப்பவும் இப்பிடித்தான். பட்டும் படாமலும் கதைப்பீர். புடி குடுக்காமல் தப்பீருவீர்.
இப்ப நீர் என்ன கேக்கிறீர் வானதி, நானென்ன சொல்லோனும்,
நான் நேற்றுக் கேட்ட விசயந்தான்.
அதுதான் கேக்கிறன்: என்ன விசயம்.
சரி மோகனா, நான் சுத்தி வளைக்கேல்ல, நேரடியாக் கேக்கிறன். உமக்கு. கணேசன் மாஸ்ரரில விருப்பமில்லயே.
வானதி. ஏன் இப்பிடிக் கேக்கிறீர், இது பிரயோசனமில்லாத கேள்வி.
மோகனா . எனக்கு இது பிரயோசனமில்லாத கேள்விதான். ஆனா. இதில உமக்குப் பிரயோசனம் இருக்கு.
கூடவாத குயில்கள் 17 ஆகளங்கண்

Page 12
மோகனா
வானதி
(DTasgOTIT
வானதி
மோகனா
வானதி
மோகனா
வானதி
GDITassOTIT
வானதி
நான் என்ன சொல்லவேணுமெண்டு எதிர்பார்க்கிறீர்.
மோகனா!. நீர் எப்பவும் இப்பிடித்தான். நான் உம்மோட இந்த அறைக்கு வந்து ஆறு மாசம் முடியுது. இன்னும் மனம் விட்டு ஒண்டையும் கதைக்கிறீரில்ல. பள்ளிக்குடத்திலயும் ஒருத்தரோடயும் மனம் விட்டுப் பழகிறீரில்ல. என்னால உம்மப் புரிஞ்சு கொள்ளவே ஏலாமலிருக்கு. மோகனா. உண்மையாச் சொல்லுறன். நீர் என்னோட மனம் விட்டுப் பழகாட்டி நான் வேற ரீச்சேர்ஸ்ஒடபோய் இருக்கப் போறன்.
வானதி. ஏன் என்ன வற்புறுத்திறீர். நான் இந்தப் பள்ளிக் குடத்துக்கு வந்து அஞ்சு வருசம் முடிஞ்சுது. நான் ஆரோடயும் மனம் விட்டுப் பழகேல்லத்தான். எத்தின ரீச்சேர்ஸ் எனக்குப் பிறகு இந்தப் பள்ளிக் குடத்துக்கு வந்திற்றினம். எத்தினபேர் என்னோட இந்த றுமில (Room) இருக்கிறதுக்குக் கேட்டிட்டினம். ஆனா, நான் ஒருத்தரயும் கூட்டி வரேல்ல, தனியத்தான் இருந்தனான். ஏனோ உம்மப் பிடிச்சிருந்தது. அதுதான் நானே உம்மக் கேட்டுக் கூட்டி வந்தனான்.
அதுதான் பெரிய ஆச்சரியமெண்டு இப்பவும் எல்லாரும் கதைக்கினம். சரி அப்பிடி நான் வந்தும் ஆறு மாசம் முடிஞ்சுது. நீர் வீட்ட போறதும் குறைவு. கேட்டா ஒண்டுஞ் சொல்லமாட்டீர். உம்மப் பற்றி ஒரு விசயமுமே எனக்குத் தெரியாது. இப்பிடி நாங்கள் ரெண்டு பேரும் ஒரே அறையில இருக்கத்தான் வேணுமோ.
நீர் கேக்கிறது சரிதான். ஆனா என்னப்பற்றி இஞ்ச ஆருக்குமே தெரியக் குடாதெண்டு தான் நான் தனிய இருந்தனான். ஆரோடயும் பழகிறதுமில்ல. நான் விரும்பிக் கேட்டுத்தான் நுவரேலியா மாவட்டத்துக்கு வந்தனான்.
ஏன்நீர் றெயினிங் கொலிச்சுக்குப் போகேல்ல, மாற்றமெடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிட்ட உள்ள பள்ளிக்குடத்துக்கே போயிருக்கிலாமே.
யாழ்ப்பாணத்தில போய் நிக்க எனக்கு விருப்பமில்ல, வானதி. தயவு செய்து அதுகளக் கேக்காதயும்.
மோகனா!. ஏன் இப்பிடிக் கதைக்கிறீர். மனசில இருக்கிற சுமைய இறக்கி வைக்கோணும். இப்பிடி மனசில வைச்சுப் பொருமிக் கொண்டிருக்கக் குடாது.
தயவு செய்து கேக்காதயும் வானதி. எனக்கு இந்த வேலயில நிரந்தரமா இருக்கோணுமெண்டும் விருப்பமில்ல. ஏன், இந்த உலகத்தில இருக்கோணுமெண்டே விருப்பமில்ல. (அழுகிறாள்).
மோகனா. ஏன் அழுறிர்.சரி.சரி. நான் கேக்கேல்ல. பள்ளிக்
கூடவாத குயில்கள் 18 அகளங்கண்
 

மோகனா
வானதி
மோகனா
வானதி
(8 DfTasgOTIT
வானதி
மோகனா
வானதி
(LDITassOTIT
வானதி
குடத்தில மற்ற ரீச்சேர்ஸ் உம்மையும் கணேசன் மாஸ்ரரையும் பற்றி அப்பிடி இப்பிடிக் கதைக்கினம். என்னட்டையும் கேக்கினம். நீர் தான் ஸ்ராவ் றும் (Staff Room) பக்கமே வாறேல்லயே.
நானென்ன செய்ய வானதி. எனக்கு ஸ்ராவ் றுமுக்கு (Staff Room) வர விருப்பமில்ல. வந்தா எத்தின கேள்வியளுக்கு நான் பதில் சொல்லோனும்,
அப்ப மோகனா. உமக்கு கணேசன் மாஸ்ரரில விருப்பமில்லயோ. அதை மட்டும் சொல்லும்,
வானதி பிளிஸ் (Please) இந்தக் கதையே வேண்டாம்.
எனக்குத் தெரியும், விருப்பமில்லயெண்டா இல்லயெண்டு ஒரு வார்த்தையில சொல்லலாந் தானே. உம்மட பதிலே உம்மக்காட்டிக் குடுக்குதே.
வானதி!. அவருக்கு என்னில விருப்பமாமே. உம்மட்டக் கேட்டவரே.
கதைக்கிறதப் பாத்தா உம்மில அவருக்கு விருப்பம் போலத்தான் இருக்கு. ஆனா அவரும் ஒண்டும் நேரடியாச் சொல்லுறாரில்ல. நாங்கள் தான் (GueSS) கெஸ் பண்ண வேண்டியிருக்கு. ஏன் மோகனா. அவருக்கென்ன குறை. அவர் ஒரு சயன்ஸ் கிறையுவேட் (Science Graduate). நல்ல குணம், அழகாயும் இருக்கிறார். (சின்னச் சிரிப்பு) அவர் ஒமிண்டா எவளவு சீதணமெண்டாலுங் குடுத்து அவரக் கலியாணம் முடிக்க எங்கட பள்ளிக் குடத்திலயே ஆக்கள் இருக்கினம்
சொல்லுறதப் பாத்தா உமக்கே (Idea) ஐடியா இருக்குப் போல இருக்கு.
சீ.சீ. (சின்னச் சிரிப்பு) அப்பிடியெல்லாம் இல்ல. உமக்கு நான் துரோகம் செய்வனே.
வானதி அவர் நல்ல பண்பாப் பழகிறார். நல்ல குணம். ஆனா. ஆனா. வேண்டாம் வானதி வேண்டாம். அந்தக் கதையே வேண்டாம். நான் ஆத்தில விழுந்த பூ.பூ நினைச்சாப் போல கரைக்குப் போகேலுமே. அலை எப்ப கரேல சேர்க்குதோ அப்ப தான் கரையக் காணலாம். வானதி. என்னச் சலனப் படுத்தாதயும்.பிளிஸ் (Please) எனக்கு என்னிலயே நம்பிக்கையில்ல. (அழுகிறாள்)
மோகனா! ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீர், உமக்கென்ன குறை. ஏன் அழுறிர். சரி.சரி. இதப் பற்றிக் கதைக்கேல்ல. கண்ணத் துடச்சுப் போட்டுப் போய்ப் படும்.
கூவாத
குயில்கள் 19 அகளங்கண்

Page 13
இடம்
gsTug (02)
- பாடசாலையிலுள்ள ஆசிரியர்களின் அறை (Staff Room)
பாத்திரங்கள் :- வானதி, கணேசன்
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
என்ன வானதி ரீச்சர் பிறீ (Free) போல, ஸ்ராவ் றுமுக்குள்ள (Staff Room) g(5555uj6ir
ஓம் மாஸ்ரர். உங்களுக்கும் பிறீ (Free) போல.
எனக்கு கிழமையில ரெண்டு பாடந்தான் பிறீ (Free). அதயும் எந்த வகுப்பிலயெண்டாலும் போய்ப்படிப்பீப்பன். அல்லாட்டி கொப்பி
திருத்துவன். இண்டைக்கு அலுப்பாயிருக்கு. அது தான் வந்திற்றன்.
நீங்கள் வந்ததும் நல்லது தான். இண்டைக்கு முக்கியமான ஒரு விசயத்த அறிஞ்சிரலாம் (சின்னச் சிரிப்பு)
என்ன . பெரிசா ஏதோ கேக்கப் போறியள் போல.
கணேசன் மாஸ்ரர். நான் ஒண்டு கேப்பன் ஒளிக்காமல் உண்மையச் சொல்லோனும்,
ரீச்சர். நீங்கள் கேக்கிறதப் பாக்கப் பயமா இருக்கு. நான் வகுப்புக்குப் போகப்போறன். (சின்னச் சிரிப்பு)
இல்ல மாஸ்ரர். ஒண்டும் பயப்பிடுற விசயமில்ல இருங்கோ. மாஸ்ரர் சும்மா ரீச்சேர்ஸ் அதை இதைக் கதைக்கினம். ஏன் அப்பிடி உண்மையெண்டா உண்மையாயிருக் கோணும். இல்லையெண்டா இல்லையெண்டிருக் கோணும்.
ரீச்சர். நீங்கள். என்ன கேக்கிறியள்.
உண்மையாச் சொல்லுங்கோ. உங்களுக்கு மோகனா ரீச்சரில விருப்பமில்லயோ,
ஏன் ரீச்சர் இப்ப இந்தக் கேள்வி.
மாஸ்ரர். உண்மையாச் சொல்லுங்கோ. உங்களுக்கு மோகனாவில விருப்பமில்லயோ,
ரீச்சர் மோகனாக்கு என்னில விருப்பமாமோ. கேக்கச் சொன்னவவே.
எனக் கெப்பிடித் தெரியும் மாஸ்ரர். அவவிட்டயில்லோ கேக்கோணும்.
கூடவாத குயில்கள்
20 அகளங்கண்

கணேசன்
வானதி
கணேசன்
வானதி
கணேசன்
இடம்
பாத்திரங்கள்
மோகனா
வானதி
மோகனா
வானதி
(LDIT3560 IT
வானதி
(LDITassOTIT
வானதி
ஏன். நீங்கள் தானே அவவிட நூம்மேற் (Roommate) உங்களுக்குத் தெரியாமல் இருக்குமே.
நாங்கள் ஒரே றுமில (Room) இருக்கிறந்தான். ஆனா மோகனா எதையும் மனம் விட்டுக் கதைக்கா. மாஸ்ரர் உங்களுக்கு அவவில விருப்பமில்லயெண்டா, விருப்பமில்ல யெண்டு சொல்லலாந் தானே. மோகனாட விருப்பத்தக் கேட்டா என்ன அர்த்தம்.
வானதி ரீச்சர், நீங்கள் என்ன அர்த்தத்தயும் எடுக்கலாம். நான் வகுப்புக்குப் போகப்போறன்.
மாஸ்ரர், இன்னும் பெல் (Bel) அடிக்கேல்ல. அதுக்குள்ள போறியள்.
எங்கயாவது வகுப்பு பிறீ (Free) யாயிருந்தா போய்ப் படிப்பீப்பம்,
as Tlal (03)
மோகனாவின் அறை
:- மோகனா, வானதி,
என்ன வானதி கனநேரமா அந்தக் கடிதத்தயே வாசிச்சுக் கொண்டிருக்கிறீர், பாடமாக்கிறீரே.
இல்ல மோகனா. என்னோட படிச்ச ஒரு பிள்ள, ராணியெண்டு பேர். அவள் கடிதம் போட்டிருக்கிறாள்.
வெளி நாட்டில இருந்து போட்டிருக்கிறா போல.
ஓம் மோகனா. கனடாவில இருந்துபோட்டிருக்கிறாள். கடிதத்த வாசிக்க ஆச்சரியமாயிருக்கு.
ஏன், அப்பிடி என்ன விசேசம்.
அவளின்ர மச்சான் பொடியன் ஒருவனுக்கு அவளில விருப்பம். ஆனா அவளுக்கு வேற் ஒரு பொடியனில விருப்பம். மச்சான் காறனின்ர தாய் தகப்பன் வந்து கலியாணங்கூடப் பேசினவினம். இவள் மாட்ட னெண்டிட்டாள். பிறகு அவன் கனடாக்குப் போட்டான். அவள் காதலிச்ச பொடியன்ர தாய் தேப்பன் இவேட்ட கனக்க சீதனங் கேட்டுக் குழப்பீற்றினம். அவன் இவள ஏமாத்திற்று வேற இடத்தில கலியாணம் முடிச்சிற்றான்.
ஆம்பிளயளே இப்பிடித்தான் வானதி, ஒருத்தரையும் நம்பேலாது.
மிச்சத்தயும் கேட்டிட்டுச் சொல்லுமன்.அவள் தற்கொலை செய்ய
கூடவாத குயில்கள் 21 அகளங்கண்

Page 14
GLDITassOTIT
வானதி
GLDT660TT
வானதி
மோகனா
வானதி
மோகனா
வானதி
மோகனா
வானதி
மோகனா
வானதி
விஷம் குடிச்சிருக்கிறாள். ஆனா தப்பீற்றாளர், சாகேல்ல, அவளின்ர மச்சான் பொடியன் இதக் கேள்விப்பட்டு அவளை அங்க கூப்பிட்டு கலியாணமும் முடிஞ்சுது. தான் அவனோட நல்ல சந்தோசமா இருக்கிறதா எழுதியிருக்கிறாள்.
வானதி ஆண்டவன் எழுதினத அழிச் செழுத ஆரால முடியும். அவரவர் தலைவிதி, நாங்கள் நினைச்சாப் போல எங்கட வாழ்க்கய மாத்தேலுமோ.
உண்மதான் மோகனா! சிலரின்ர வாழ்க்கய நினச்சுப் பாத்தா ஆச்சரியமா இருக்கும். சில நேரம் வாழ்க்கையே வெறுத்திரும்.
வானதி. நீர் என்ர கதயக் கேட்டீரெண்டா ஆச்சரியப்படுவீர். ஆனா சொல்லி என்ன பிரயோசனம், என்ர சுமை என்னோட அழுது தீர்க்க வேண்டியத அழுதுதான் தீர்க்க வேணும்.
மோகனா! எத்தின தடவ நீர் இப்பிடித்துவங்கீற்று சொல்லாமல் விட்டிட்டீர், இண்டைக் கெண்டாலும் சொல்லுமன். என்னால ஏதும் முடியுமெண்டா என்ர உயிரக் குடுத்தெண்டாலும் உமக்கு உதவி செய்வன்.
என்ர பிரச்சனைக்கு என்ன தீர்வெண்டு எனக்கே தெரியாது. எனக்கு இனி என்ன வாழ்க்கை, எல்லாம் முடிஞ்சு போட்டுது. ஆத்தில விழுந்த பூவ அலதான் கரையில சேர்க்கோனும் .ம்..ம்.(பெருமூச்சு)
பூ ஆத்தில தானே மோகனா விழுந்திருக்கு, சேத்தில இல்லயே. ஆரும் எடுத்தும் கரை சேர்க்கலாம். எடுத்துக் கரை சேர்க்க ஆரும் வந்தாலும் பூ விடுகுதில்லயே.
வானதி! நீர் என்ன சொல்லுறிரெண்டு எனக்கு விளங்குது. ஆனா. நானென்ன செய்ய. எனக்கு நிகழ்காலத்தில நம்பிக்கையில்லாதது போலத்தான் எதிர் காலத்திலயும் நம்பிக்கயில்ல . ஏதோ ஆண்டவன் விட்ட வழி.
மோகனா!. நான் இண்டைக்கு கணேசன் மாஸ்ரரிட்டக் கேட்ட நான்.
என்ன சொன்னார் வானதி. (ஆவலாக)
இவளவு ஆவலாக் கேக்கிறீரே. பிறகேன் இப்பிடி மெளனம், அவர் உமக்கு விருப்பமோண்டு கேட்டார்
நீர் என்ன சொன்னனிர்.
:- நான் என்னத்தச் சொல்லுறது. நீங்கள் ரெண்டு பேரும்,
மனசுக்குள்ள நிறையக் காதல வைச்சுக் கொண்டு, ஏன் இப்பிடி
கூடவாத குயில்கள் 22 அகளங்கண்
 

மோகனா
வானதி
மோகனா
இடம்
ஊமையா இருக்கோணும், ஒரு வார்த்தையில முடிக்கிற பிரச்சனய ஏன் முடிக்கத் தெரியாமல் இப்பிடி நடிக்கோணும்.
(கோபமாக) வானதி! எனக்கு அவரில விருப்பமெண்டு சொன்னனானே. ஏன் இப்பிடிக் கதைக் கிறீர். எனக்கு ஆம் பிளயளயே பிடிக் காது. ஆம் பிளயளெல் லாரும் ஏமாத்துக்காறங்கள். சுயநலக்காறங்கள், காசாசையில தான் கலியாணம் முடிக்கிறவங்கள்.
மோகனா! ஏன் ஆத்திரப்படுறிர் உம்மட பிரச்சனய மட்டும் வைச்சுக் கொண்டு எல்லாரையும் எடைபோடக் குடாது. உம்மட அப்பாவும் ஆம்பிளதானே. நீர் உம்மட பிரச்சனையச் சொன்னாத்தானே தெரியும், தயவு செய்து சொல்லும்.
வேண்டாம் வானதி, வேண்டாம். தயவு செய்து கேக்காதயும், பிறகொரு நாளைக்குச் சொல்லுறன். இப்ப கேக்காதயும்.
காட்சி (04)
- பாடசாலை, பாடசாலையிலுள்ள ஆசிரியர்களின் அறை
(Staff Room)
பாத்திரங்கள் :- மோகனா, கணேசன், வானதி
கணேசன்
(LDITassor
கணேசன்
வானதி
கணேசன்
வானதி
GDITassort
(Uாடசாலையில் நடந்து கொண்டு) ரீச்சர்! உங்களுக்குக் கடசிப்பாடம் பிறீ (Free) போல.
ஓம் பிறீ (Free) தான். ஆனா எங்கயாவது வகுப்பெடுப்பன்.
இண்டைக்கு எல்லா ரீச்சேசும் (Teachers) வந்திருக்கினம். வகுப் பொண்டும் பிறீ (Free) யாகாது.ஸ்ராவ் றுமுக்கு (Staff Room) வரேலுமே. உங்களோட கொஞ்சம் தனியக் கதைக்கோணும். நான் போறன். எனக்கும் கடசிப் பாடம் பிறீ (Free).
என்ன கணேசன் மாஸ்ரர் கடசிப் பாடம் பிறீ (Free) போல, ஸ்ராவ் றுமுக்குப் (Staf Room) போறியள்.
ஓம் ரீச்சர் இண்டைக்கு ஒரு வகுப்பும் பிறீ (Free) இல்ல.
எங்க மோகனா. ஸ்ராவ் றுமுக்கே (Staf Room) போறிர், இண்டைக்கு மழைவரப் போகுது.
ஓம் வானதி. ஏதோ கதைக்கோணுமெண்டு கூப்பிட்டார். எனக்குப் பயமா இருக்கு.
கூடவாத குயில்கள் 23 அகளங்கண்

Page 15
வானதி :- ஏன் பயப்பிடுறிர். மனம் விட்டுக் கதைச்சிற்றா பிரச்சன இல்ல சும்மா மனசுக்க வைச்சிருந்தா வீண் மனச்சுமை தானே. (wish you all success.) 6î6mü) ųjų gọ6o 3Fä56mo6mü)
(ஆசிரியர்களின் அறையில்)
கணேசன் :- ரீச்சர். நான். நான். உங்களிட்டத் தனியக் கதைக் கோனுமெண்டுதான் இஞ்சவரச் சொன்னனான். ஆனா எப்பிடிச் சொல்லுறதெண்டு எனக்குத் தெரியேல்ல.ரீச்சர். நான் உங்கள விரும்பிறன். எனக்கு ஒரு சதமும் சீதனம் வேண்டாம். ஒரு வருசமா உங்களிட்டக் கேக்கோணுமெண்டு நினைச்சிருந்தன். எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறாள். அவளின்ர கலியாணத்துக்கு சீதனக்காசுக்காக எனக்கு எங்கயும் செய்து வைச்சு காசு வாங்க வீட்டில முயற்சி செய்தினம். அந்தச் சிக்கல்ல நான் ஒரு முடிவும் எடுக்கேலாமல் இருந்தன். இப்ப ஒரு வழியா தங்கச்சியின்ர கலியாணம் முடிஞ்சுது. இனி என்ன ஆரும் கட்டுப் படுத்தேலாது. என்ர விருப்பத்துக்கு நான் கலியாணஞ் செய்து நிம்மதியா வாழ விரும்பிறன். நீங்கள் ஓமிண்டாச் சரி. (மோகனா அழுகிறாள்) .ரீச்சர். ஏன் அழுறியள். உங்களுக்கு என்னில விருப்பமில்லயே. நான் ஏதும் பிழையாக் கேட்டிட்டனே.
மோகனா :- நீங்கள் கேட்டது பிழையில்ல. ஆனா. ஆனா. உங்கட
நிலையில நானில்ல.
கணேசன் :- ரீச்சர்! உங்களுக்கு உங்கட குடும்பப் பொறுப்பு ஏதுமிருந்தா
நானும் சேர்ந்து தீர்த்து வைப்பன்.
மோகனா :- எனக்கு. எனக்கு. எனக்குக் கலியாணம் நடந்து அஞ்சு வருசம்
முடிஞ்சுது. (அழுகிறாள்)
636 :- உண்மையாவா. அப்ப மிஸ் (Miss) எண்டு தானே பெயரில
இருக்கு.
GLDIT356OTIT :- கலியாணத்துக்கு முதலே வேலைக்கு அப்பிளிக்கேசன்
(Application) (3UT'LQ'L67.
கணேசன் :- அப்ப ஏன் அஞ்சு வருசமா பேர மாத்தேல்ல. நீங்கள், என்னில விருப்பமில்ல யெண்டா விருப்பமில்லயெண்டு சொல்லுங்கோ, பொய் சொல்லி என்ன மடயனாக்காதேங்கோ ரீச்சர்.(கோபமும் கவலையும் கலந்து)
மோகனா :- நான் , கலியாணம் முடிக் காதவளெண் டு ஆரையும் ஏமாத்துறதுக்காக இப்பிடி இருக்கேல்ல. ஆனா. ஆனா. என்ர தலவிதி அப்பிடி. (அழுகிறாள்) -
கணேசன் :- ரீச்சர். உங்கட கதயச் சொல்லுங்கோ. ஒரு வருசமா நான்
கூடவாத குயில்கள் 24 அகளங்கண்
 

(ELDIT356OTIT
இடம்
பாத்திரங்கள்
மோ, தாய்
மோ.தகப்பன் :
மோ. தாய்
மோதகப்பன் :
மோ. தாய்
மோ.தகப்பன் :
மோ. தாய்
மோ.தகப்பன் :
மோ, தாய்
மோதகப்பன்
மோ. தாய்
மோதகப்பன்
ஆசைகள மனசில வளத்திற்றன். உங்கட கதயக் கேட்டா என்ர மனம் அமைதியடையக் கூடும். தயவு செய்து சொல்லுங்கோ. (Please) thoforo
சரி சொல்லுறன். என்ர கலியாணப்பேச்ச முடிச்சுக் கொண்டு அப்பா வீட்ட வந்தார்.
gSTGAì (05)
(Flash Back) Liai (360TT is 35ul 35sT'd
:- மோகனாவின் வீடு.
:- மோகனா, தாய், தகப்பண் கலியாணப் பேச்சுக்குப் போய் வந்தியள் ஒண்டுஞ் சொல்லாமல் யோசிச்சுக் கொண்டிருக்கிறியள், என்னவாம் மாப்பிள வீட்டுக்காறர்.
என்னத்தச் சொல்லுறது. சீதனத்தில கொஞ்சம் இறுக்கமா நிக்கினம்.
எவளவு கேக்கினம்.
அஞ்சு லச்சம் காசு. நகை, முப்பது பவுணில போடோணுமாம், வீடு தரோணுமாம்.
குறைச்சுக் கேட்டுப் பாக்கேல்லயே.
கதைச்சுப் பாத்ததுதான், அவே விடாப் பிடியாய் நிக்கினம்.
வீடு என்ன மாதிரியாம் சீவிய உருத்து எழுதிக் குடுத்தாச் சரியாமோ.
உன்ர கதை, உத ஆர் அங்க கேட்டது.
அப்ப என்னத்தக் கதைச்ச நீங்கள்.
இஞ்சேரும். கலியான எழுத்தண்டைக்கு வீட்டயும் பொம்பிளயின்ர பேரில எழுதோணுமாம். கலியாண் வீடு முடிஞ்சு ரெண்டு கிழமைக்குள்ள வீட்டக் குடுத்திற்று நாங்கள் வேற எங்கயும் போகோணுமாம்.
வீட்டக் குடுத்திற்று நாங்கள் எங்க போறது.
எங்கயிண்டாலும் வாடகைக்கு வீடு பாத்துக் கொண்டு போறது தான்.
கூடவாத குயில்கள் 25 அகளங்கண்

Page 16
மோ. தாய்
மோ.தகப்பன் :
மோ. தாய்
மோ.தகப்பன் :
GDITassOTIT
மோ.தகப்பன் :
மோ. தாய்
மோ.தகப்பன் :
மோ. தாய்
மோ.தகப்பன் :
மோ. தாய்
மோதகப்பன் :
மோ. தாய்
தகப்பன்
உது சரிப்பட்டு வராது.
இஞ்சேரும், உமக்கு உது விளங்காது. சும்மாயிரும்.
ஏனப்பா விளங்காது. வீட்டக் குடுத்திற்று மற்ற ரெண்டு குமருகளயுங் கொண்டு நாங்கள் எங்க போய் இருக்கிறது.
பின்ன ஆரும் வீடு வாங்காமல் சும்மா வந்து கலியாணம் முடிப்பாங்களே.
அம்மா. வேற எங்கயும் பாத்தா என்ன. குறைஞ்ச சீதனத்தில. எங்களுக்கு ஒத்துப்போகக் கூடியதா.
பிள்ள. பொடியன் நல்ல குணமான பொடியன். B.A. படிச்சிருக்கிறான். பாங்கில (Bank) வேல, எங்களுக்கும் குடும்பத்துக்கு மூத்த மருமகன் ஒரு பட்டதாரியா, நல்ல பொடியனா வந்தா, மற்றதுகளின்ர எதிர்காலத்துக்கும் நல்லா இருக்கும். நான் இல்லாத காலத்திலயும் மற்றப் பிள்ளயள ஒரு தகப்பன் போல பாக்க, கைப்புடிச்சுக் குடுக்க ஏற்ற ஆளா இருக்கோணும்.
அதுக்கு. இப்பிடி உள்ளதெல்லாத்தையும் குடுத்திற்று மற்றதுகள எங்கயும் ஆத்தில, குளத்தில தள்ளுறதே.
சும்மா விசர்க் கதை கதைக்காத, மோகனாக்கு முதல் முதல்ப் பேசின கலியாணமே இது தான். இத வேண்டா மெண்டிட்டு வேற இடங்களில பேசி அலையிறண்டா அதுவும் அவளுக்கொரு குறமாதிரித்தான். ஏதோ குடுக்கிறதக் குடுத்துச் செய்து வைக்கப் L JITL JLJL D.
சரி. இப்ப. காசு அஞ்சு லச்சத்துக்கு எங்க போறது.
அந்த றோட்டடிக் காணித் துண்ட விப்பம். அதக் கனபேர் கனகாலமாக் கேக்கிறாங்கள்.
என்னவோ. நான் சொல்லிக் கேக்கப் போறியளே, காசில நாலு லச்சத்த மோகனாவின்ர பேரில பாங்கில போட்டுக் குடுப்பம், மிச்சத்தக் கையில குடுப்பம்.
உது நான் கதைச்சுப் பாத்தது தான். அவே காசு முழுவதையும் தங்கட கையில தரோணுமிண்டு நிக்கினம்.
உந்த இடம் வேண்டாம். வேற எங்கயும் நல்ல இடமாப் பாப்பம்.
சும்மா பேக்கத கதைக்காத நாள் வைக்கச் சொல்லிப் போட்டுத்தான்
கூடவாத குயில்கள் 26
அகளங்கண்
 

(LDIT as GOTIT 8
கணேசன் :-
மோகனா
இடம் :-
பாத்திரங்கள்
மோதகப்பன் :-
(Söo தகப்பன் :-
மோதகப்பன் :-
கு. தகப்பன் :-
மோதகப்பன் :-
வந்தனான். வாற மாதத்தில எழுத்த வைப்பம் மற்றப்பிள்ளயஞக்கு பொடியள் ரெண்டு பேர் இருக்கிறாங்கள் தானே. அவங்கள் உழைச்சுக் குடுத்துக் கலியாணஞ் செய்து வைக்க மாட்டாங்களே.
பின்னோக்கிய a51TL'laf (Flash Back) (ypọ5g5g5] ]
எழுத்தண்டைக்கு காசு அஞ்சு லச்சமும் குடுத்து, வீடும் என்ர பேரில எழுதியாச்சு, அண்டைக்கே கலியாணத்துக்கும் நாள் குறிச்சாச்சு. அதுக்குப் பிறகு.
சொல்லுங்கோ மோகனா. பிறகு என்ன நடந்தது.
ஒரு கிழமேக்க எங்கட வீட்டுக்குப் பக்கத்தில கண்ணிவெடி வெடிச்சுது, நாங்கள் பின் பக்கத்தால தப்பி ஒடீற்றம். கொஞ்ச நேரத்தில எங்கட வீடு எரிஞ்சு சேதமாப் போட்டுது. நாங்கள் வேற ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தம். எப்பிடியும் வைச்ச அதே நாளுக்குக் கலியாண வீடு செய்ய வேணுமெண்டு கலியான வீட்டு ஒழுங்குகள் பற்றிக் கதைக்க அப்பா அவே வீட்ட போனார்.
hoir(360TTg535u (Flash Back) BIT'd
g5 Tgif (06)
குமாரின் வீடு.
:- மோகனாவின் தகப்பண், குமாரின் தகப்பன்,
குமாரின் தாய்.
என்ன பிரச்சன நடந்தாலும் நடக்கட்டும், நாங்கள் தீர்மானிச்ச திகதிக்கே கலியாணத்த வைச்சிருவம்.
இல்லப் பாருங்கோ. இப்ப கலியான வீடு செய்யேலாது. பிறகு ஆறுதலாப் பாப்பம்.
இல்லப் பாருங்கோ. எங்களுக்கு ஒரு கஸ்ரமுமில்ல. இப்ப இருக்கிற வீட்டிலயே கலியாண வீடு செய்யிலாம். முதல் முதல் வைச்ச நாள்; ஏன் மாத்துவான். அதே நாளிலயே வைச்சிருவம்.
அது சரிவராது பாருங்கோ. வீடு முற்றாச் சேதமாப் போட்டுது. வீட்ட கட்டி முடிச்சுத் தந்தாப் பிறகுதான் கலியான வீடு.
நீங்கள். என்ன சொல்லுறியள் (ஆச்சரியத்தோடு)
கூடவாத குயில்கள் 27 அகளங்கண்

Page 17
கு, தாய்
மோ.தகப்பன்
கு. தகப்பன்
மோ.தகப்பன்
குதாய்
கு.தகப்பன்
மோ.தகப்பன்
கு.தகப்பன்
கு. தாய்
மோ.தகப்பன்
மோகனா
:- என்ன செய்யிறதோ. நீங்கள் பேச்சில
:- அவரென்ன புதுசாச் சொல்லுறது. வீடில்லாமல்க் கலியாணத்த
முடிச்சு என்ன செய்யிறது. வீட்டக்கட்டி முடீங்கோ முதல்ல.
:- வீடு உறுதியெல்லாம் மாத்தி எழுதியாச்சு. வீடு எரிஞ்சதுக்கு
நாங்களென்ன செய்யிறது.
சொன்னபடி வீடு குடுக்கோணும். கலியான வீடு முடிஞ்சு ரெண்டு கிழமைக்குள்ள வீட்ட விடுறதாச் சொன்னியள். இப்ப வீடில்லயே.
:- விடெரிஞ்சதுக்கு நாங்கள் காரணமில்ல. கலியாண வீடு
முடிஞ்சாப் பிறகு எரிஞ்சிருந்தா என்ன செய்யிறது.
:- அப்பிடி நடந்திருந்தால்லோ அதப்பற்றிக் கதைக்கிறதுக்கு.
:- ஒரே முடிவாச் சொல்லுறன். வீட்டக் கட்டி முடிச்சிற்று வாங்கோ.
கலியாணத்துக்கு நாள் வைப்பம்.
:- இஞ்ச பாருங்கோ. நான் சொன்ன சொல் தவற மாட்டன்.
கலியாணத்த குறிச்ச நாளில வைச்சிருவம், பிறகு நான் வீட்டக் கட்டிக் குடுக்கிறன். அது வரைக்கும் எங்களோடயே இருக்கட்டும்.
:- பிறகு. பின்ன, எண்ணிறது சரிவராது. நீங்கள் வீட்டக் கட்டி
முடிச்சிற்று வாங்கோ கதைப்பம்,
:- கெதியாக் கட்டி முடியுங்கோ. பிந்தினா. விவாகரத்துச்
செய்திற்று என்ர மகனுக்கு வேற எங்கயும் செய்து வைக்க வேண்டி வரும்.
:- கலியாணமே முடியேல்ல. அதுக்குள்ள விவாகரத்தப் பற்றிக்
கதைக்கிறியள். பொம்பிளயப் பெத்தவன் நானல்லோ. எனக்கெல்லோ வேதன. நீங்களெல்லாம். நான் வாறன். (கோபமாக)
( பின்னோக்கிய காட்சி (Flash Back) முடிவு )
:- அதுக்குப் பிறகும், அப்பா வீட்டக் கட்டி முடிச்சு என்ன அவருக்குக்
கலியாணம் முடிச்சு வைக்கத் தான் விரும்பினார், உடனடியாக் கட்டி முடிக்கவும் வசதியிருக்கேல்ல. மூண்டு நாலு, கிழமைக்குப் பிறகு ஒரு நாள், அப்பா அவரக் கண்டு கதைச்சு, அவற்ற காலில விழுந்தெண்டாலும் என்ர கலியாணத்த முடிச்சிர வேணுமெண்டு சொல்லிப் போட்டு, அவர் வேல செய்யிற பாங்கு (Bank) க்குப் போனார், ஆனா அதுக்கு முதல் நாளே அவர் வெளிநாட்டுக்குப் போட்டாராம். வீட்ட வந்து சின்னப் பிள்ள போல அழுதார், வீடே செத்த வீடு போல இருந்திது. (அழுகிறாள்)
கூடவாத குயில்கள் 28
அகளங்கண்
 

கணேசன்
(DTasgOTIT
கணேசன்
(LDIT as GOTIT
&ଖି ଉତotଥFରବାଁ
மோகனா
கணேசன்
மோகனா
கணேசன்
மோகனா
இடம்
பாத்திரங்கள்:
வானதி
மோகனா
வானதி
வெளிநாட்டுக்குப் போன குமார் ஒரு கடிதமும் போடேல்லயோ,
இல்ல. அவரப் பற்றி ஒண்டுமே எங்களுக்குத் தெரியாது. அஞ்சு
அப்ப நீங்கள் குடுத்த காசு.
அவங்கள் யோக்கியமானவங்களிண்டா அந்தக் காசையாவது தந்திருக்கோணும் , அப்பா அந்த வீட்டுப் பக்கமே போகமாட்டனிண்டிட்டார். அப்பாக்கு அதே கவலயில பாரிச வாதம் வந்து நடக்க மாட்டார். என்ர வாழ்க்கையே போட்டுது. அந்தக் காசு என்ன பெரிசே, (அழுகிறாள்)
மோகனா! இப்பிடி ஒரு ஆண்வர்க்கத்தில தான் நானும் பிறந்திருக்கிறன் எண்டு நினைக்க வெக்கமாயிருக்கு. நான் உங்கள வாழ வைப்பன். ஆரும் என்னத் தடுக்கேலாது. ஆயுள் முழுக்க உங்கட குடும்பத்துக்காக நான் உழைப்பன்.
எங்களுக்கு இப்ப காசுக் கஸ்ரமே இல்ல. ரெண்டு தம்பியும் கனடாவில இருக்கிறாங்கள். ஒரு தங்கச்சி வாற கிழமை கனடாக்குப் போறாள். உடைஞ்ச வீட்ட பெரிசாக் கட்டீற்றம். இருண்டு போன என்ர வாழ்க்கையத்தவிர மற்ற எல்லாம் பிரகாசமாயிருக்கு.
இனி உங்கட வாழ்க்கையும் பிரகாசமாயிருக்கும் (மணி அடிக்கிறது). ரீச்சர் எங்க எழும்பீற்றியள்.
பெல் (Bell) அடிச்சிற்று.
ஒரு முடிவும் சொல்லாமல்ப் போறியள்.
நாளைக்கு வந்து சொல்லுறன்.
g5ITL" l.ga (07)
மோகனாவின் அறை
மோகனா, வானதி, குமார்
மோகனா!. என்னவாம் கணேசன் மாஸ்டர்.
அவர் என்ன விரும்பிறதாச் சொன்னார் வானதி.
நீர் என்ன சொன்னீர்!
கூடவாத குயில்கள் 29 அகளங்கண்

Page 18
(DTasgOTIT
வானதி
மோகனா
வானதி
(SuDITasgOTIT
வானதி
மோகனா
வானதி
மோகனா
வானதி
குமாா
வானதி
மோகனா
குமார்
(DfTasgOTIT
குமார்
(SDITassOTIT
நான் என்னத்தச் சொல்லுறது வானதி. என்ர கதை முழுக்க உமக்குத் தெரியுந் தானே.
அவரிட்டயும் சொன்னநீரே.
ஓம் வானதி, எல்லாத்தயும் சொல்லி முடிச்சிற்றன்.
மேகனா! உம்மட கதையக் கேட்டாப் பிறகும், அவர் உம்மக் கலியாணஞ் செய்ய விரும்பிறாராமோ.
அவர் நல்லவரடி. தனக்கு ஒரு சீதனமும் வேண்டாமாம். காசு காசெண்டுஆம்பிளயஸ் அலையிற இந்தக் காலத்தில, இப்பிடி ஒருத்தரக் காணிறதே அருமை தான்.
சரி. அப்ப நீர் என்ன ஒமெண்டிட்டீரே.
ஒமெண்டு சொல்லுவமெண்டு தான் நினைச்சன் அதுக்குள்ள பெல் (Bel) அடிச்சிற்று. ஏனோ தெரியாது, நாளைக்கு வந்து சொல்லுறணிண்டிட்டு வந்திற்றன்.
சொல்லீருக்கலாமே. அவர் இண்டைக்கு முழுக்க என்னென்ன வெல்லாமோ யோசிப்பார். பாவமடி.
வானதி. கதவு தட்டிக் கேக்கிது போல. ஆரிண்டு பாரும்,
ஆரது. நீங்கள் ஆரச் சந்திக்கோணும்.
மோகனா ரீச்சர் இஞ்ச தானே இருக்கிறவ.
ஓம் இஞ்ச தான். உள்ளுக்கு வாங்கோ. மோகனா. ஆரோ உம்மத் தேடி வந்திருக்கினம்.
என்ன ஆர் தேடி வாறது.(மெதுவாக)
மோகனா! நான் தான். அடையாளந் தெரியேல்லயே. முந்த நாள் தான் சுவீஸில இருந்து வந்தனான்.
தெரியுது. உங்கள மறக்கேலுமே என்னால. ஏன் வந்தநீங்கள். வீடு கட்டி முடிச்சு நல்ல வசதியா இருக்கிறமெண்டு கேள்விப் பட்டுத்தான் வெளிநாட்டில இருந்து வந்த நீங்களே. எனக்கும் உங்களுக்கும் ஒரு கதையுமில்ல. என்னக் காணத்தேவையுமில்ல. கதைக்கவும் தேவையில்ல. வானதி அவர வெளில கலைச்சுக் கதவப் பூட்டும் (கோபமாக)
மோகனா! தயவு செய்து நான் சொல்லுறதக் கேளும்.
எனக் கொண்டுஞ் சொல்லத் தேவையில்ல. சொல்ல வேண்டியத
கூடவாத குயில்கள் 30 அகளங்கண்

வானதி
மோகனா
குமார்
வானதி
மோகனா
வானதி
குமார்
இடம்
பாத்திரங்கள்
குமார்
உங்கட கொப்பரிட்டயும், கொம்மாட்டயும் போய்ச் சொல்லுங்கோ, கலியாணத்த எழுதிக் காச வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடின உங்களுக்கு இப்பதான் என்ர நினைப்பு வந்திருக்கே. யோக்கியமான ஆம்பிளயெண்டா காசையாவது திருப்பித் தந்திருக்கோணும், வீடு உடைஞ்சதுபோல என்ர கை, கால் முறிஞ்சிருந்தாலும் இப்பிடித்தானே விட்டிட்டு ஒடீருப்பியள். வானதி பிளிஸ் (Please) கதவப் பூட்டும். (கோபமாக)
மோகனா! கொஞ்சம் பொறும். யாழ்ப்பாணத்தில இருந்து இவளவு தூரம் வந்திருக்கிறார், அவர் சொல்ல வந்ததச் சொல்லட்டும்.
வானதி. அவர் என்னத் தப் புதிசாச் சொல்லுறது. எனக்கொண்டும் சொல்லத் தேவையில்ல. இஞ்ச நிண்டாரெண்டா சத்தம் போட்டு ஆக்களக் கூப்பிட்டுத்தான் கலைப்பன். (கோபமாக)
நான் போறன். ரீச்சர் உங்களிட்டயாவது நான் சில விசயங்களச் சொல்லிப் போட்டுப் போறன்.
சரி இருங்கோ.
வானதி. உமக்கென்ன கதை அவரோட. அவரொண்டுஞ் சொல்லத் தேவையில்ல. நீரொண்டும் கேக்கத் தேவையில்ல. (கோபமாக)
மோகனா! அவர் என்னட்ட ஏதோ கதைக்கப் போறாராம். கதைக்கட்டும். உமக்கு விருப்பமில்லாட்டி நீர் உள்ளபோம்.
ਸੰਯ! உங்களுக்கு கத முழுக்கத் தெரியு மெண்டு நினைக்கிறன். ஆனா என்ர நிலம ஆருக்குமே தெரியாது. நான் ஆம்பிளயாயிருந்தும் வீட்டில மூண்டு தங்கச்சி மாருக்கு முந்திப் பிறந்திற்றன். அப்பாட சுமைய நான் சுமக்க வேண்டிய கஸ்ரம். நான் வீட்ட எவளவோ கதைச்சுப் பாத்தன்.
( பின்னோக்கிய காட்சி (Flash Back))
gesToga (08)
குமாரின் வீடு.
:- குமார், குமாரின் தாய், தந்தை
அம்மா!. வீடு எரிஞ்சு போனதுக்கு அவையே காரணம்.
இப்ப கட்டித் தந்தாத்தான் கலியாண வீடு 6া600া (6 வற்புறுத்தினியளாம். உது கொஞ்சங்கூட நியாயமில்ல.
கூடவாத குயில்கள் 31 அகளங்கண்

Page 19
கு.தாய்
குமார்
கு.தகப்பன்
குமார்
கு.தாய்
கு.தகப்பன்
கு, தாய்
குமார்
கு.தகப்பன்
குமார்
வானதி
குமார். அப்பிடிக் கெடுபிடியாய் நிண்டாத்தான் கெதீல கட்டித் தருவினம்.
அம்மா. அவே ஏனம்மா கட்டித் தரோணும். கலியான எழுத்தண்டைக்கே வீட்டையும் எழுதித் தந்தாச்சுத் தானே. பிறகேன் அவே கட்டித் தரோணும்.
குமார். கலியாணம் பேசினது நாங்கள். நீயில்ல, உன்ர எண்ணத்துக்குச் செய்யிற தெண்டா நாங்கள் தேவையில்ல. வீடில்லாமல் கலியாணம் முடிச்சு எங்க இருக்கப் போறாய்.
உடைஞ்ச வீட்ட நான் கட்டுவன்.
அவே கட்டித் தாறண்டாலும் நீ விடாய் போல கிடக்கு.
அந்தாளுக்கு என்ன தடிப்பு, ஏன் கட்டித்தரோணு மெண்டெல்லே கேட்டிது.
குமார் ஆறு மாசம் பாப்பம். வீடு கட்டாட்டி விவாகரத்துச் செய்திற்று வேற இடத்தில பாப்பம்.
அம்மா! நான் குழந்தப் பிள்ளயில்ல. எனக்கும் நல்லது கெட்டது தெரியும். நான் அவளத்தான் முடிப்பன். வாற மாதத்தில நாள் வைக் கோணும் ; இல் லாட் டி நான் அங்கயே போய் இருக்கப்போறன்.
குமார்!. அந்தளவுக்குக் கதைக்கப் பழகீற்றாய் என, உனக்கு வாய் முத்திற்று. போ. ஆர் வேண்டாமெண்ட, இந்தா நெருப்புப் பெட்டி. பெத்த தாய்க்கும், தகப்பனுக்கும் கொள்ளி வைச் சிற்றுப் போ. நீ தானே மூத்த பிள்ள; கடசிக் கடமையையும் இப்பவே செய்திற்றுப் போ, எங்கட பிரேதத்திலயும் முழிக்காத. போ. (கோபமாக)
( பின்னோக்கிய காட்சி (Flash Back) முடிவு )
அதுக்குப் பிறகு நான் வெளி நாட்டுக்குப் போனன். இந்த அஞ்சு வருசமும் உழைச்சு எல்லாப் பொறுப்பையும் முடிச்சிற்றன். மோகனாவோட குடும்பம் நடத்த வேணுமெண்ட ஆசையில தான் இலங்கைக்கு வந்தனான். எவளவு சீலையள், எவளவு நகையள், அழகழான வெளிநாட்டுச் சாமான்கள் எல்லாம் வாங்கி வந்தன். ரீச்சர். எனக்கு மோகனான்ர வீடு தேவையில்ல. நான் கட்ட நினச்சிருக்கிற வீட்டின்ர படம் இதில இருக்கு, பாருங்கோ.
:- நீங்கள் மேகனாக்கு ஒரு கடித மெண்டாலும் போட்டிருக்கலாமே.
கஉவாத
குயில்கள் 32 அகளங்கண்
 

குமார்
GLDTaboost :-
வானதி :-
GDITs60III :-
வானதி
மோகனா :-
இடம் :-
பாத்திரங்கள்
கணேசன் :-
வானதி -
நான் மோகனாக்குக் கடிதம் ஒண்டும் போடேல்லத்தான். ஆனா. இந்த அஞ்சு வருசத்திலயும் மாதம் ஒரு கடிதம் எழுதினன். இதில அறுபது கடிதம் இருக்கு மோகனாக்கு எட்பவாவது வாசிக்க விருப்பமிருந்தா இதுகள வாசிச்சு என்ன மன்னிக்கட்டும். ரீச்சர்! மோகனாட்டச் சொல்லுங்கோ, வாற வெள்ளிக் கிழமை நான் அவவிட வீட்ட போவன். அவ விரும்பினா அவவிட விருப்பம் போல வாழ நான் தயார். நான் வாறன்.
வானதி! போட்டாரே. (ஆவலாக)
எல்லாம் உமக்கும் கேட்டிருக்குந்தானே. இந்தாரும் கடிதங்கள். வாசியும். இவளவு அவசரமாக் கடிதத்த வாங்கிறீர். வந்து கதைச்சிருக்கலாமே. (மோகனா அழுகிறாள்) சரி.சரி. அழாதயும். நான் ரீ (Tea) போட்டுக் கொண்டு வாறன்.
என்ன வாசிச்சு முடியேல்லயே. இந்தாரும் ரீ (Tea) குடியும். (மோகனா அழுகிறாள்) இப்ப அழுதென்ன பிரயோசனம்.
வானதி! நான் நாளைக்கு வீட்ட போப்போறன். சரியோ. பிழையோ, என்ர தலைவிதி அப்பிடித்தான் எழுதியிருக்கு. வெள்ளிக் கிழமை அவர் வீட்ட போவார், நான் அங்க நிக்கோணும். வாற மாதம் கலியாணம், ஆத்தில விழுந்த பூவை அலையே கரை சேர்க்க வந்திருக்கு; இனியெண்டாலும் பூ கரையப் பாக்கோணும்.
மோகனா. முடிவச் சரியா எடும். இண்டைக்கு இரவு நல்லா யோசியும்.
வானதி யோசிக்க என்ன இருக்கு, அவர் இவளவு ஆசையோட வந்திருக்கிறார், நான் அவரோட போய் வாழப்போறன். நீர் நாளைக்கு கணேசன் மாஸ்ரரிட்டச் சொல்லி விடும். நான் இனி இஞ்ச வரமாட்டன். வேலய விட்டிட்டு சந்தோஷமாக் குடும்பம் நடத்தப் போறன்.
asTaf (0.9)
பாடசாலையிலுள்ள ஆசிரியர்களின் அறை (Staf Room)
:- வானதி, கணேசன்,
வானதி ரீச்சர், இனி எனக்கு இந்தப் பள்ளிக் குடம் வரவிருப்பமில்ல, முந்தி எங்க பாத்தாலும் மோகனா ரீச்சராத்தான் தெரிஞ்சுது. இப்ப எல்லாமே சூனியமா இருக்கு.
மாஸ்ரர். கவலப் படாதேங்கோ. பாவம் மோகனா; அவவுக்கு இப்ப எண்டாலும் நல்ல வாழ்க்கை கிடைச்சுதே.
கூடவாத குயில்கள் 33 அகளங்கண்

Page 20
கணேசன் :-
வானதி
கணேசன் sa
இடம் =
பாத்திரங்கள்:-
மோ.தாய்
மோகனா -
மோ.தாய் 8
மோகனா
மோ.தாய்
மோகனா 8
மோ.தாய் an
மோகனா E
வந்தவன் 8
(LDIT8660 IT -
ரீச்சர் என்ர பிறன்ட் (Friend) ஒருவன் கனடாவில இருக்கிறான். அவன் ஒரு வருசமா அங்க வரச்சொல்லிக் கடிதம் போடுறான். நான் மோகனாக்காகத்தான் இஞ்ச நிண்டநான், எல்லாம் முடிஞ்சு (8 IITifyi. இனி எனக்கு என்ன கிடைச்சாலும் சந்தோசம் மட்டும் கிடையாது.
மாஸ்ரர். ஏன் அப்பிடிச் சொல்லுறியள். இதுகள மறந்து புது வாழ்க்க தொடங்குங்கோ.
(பெருமூச்சு விட்டு) இனி என்ன புது வாழ்க்க. நான் நாளைக்கே கொழும்புக்குப் போறன்; அங்க நிண்டு கனடாக்குப் போகப் போறன். எப்பவாவது மோகனாவச் சந்திச் சாச் சொல்லுங்கோ, இல்ல. வேண்டாம். அவ தன்ர புருசனோட சந்தோசமா இருக்கட்டும். சொல்லிக் குழப்ப வேண்டாம். நான் போய்ச் சேந்தாப் பிறகு உங்களுக்குக் கடிதம் போடுறன்.
காட்சி (10)
மோகனாவின் வீடு
மோகனா, மோகனாவின்தாய், ஒருவன்.
என்ன பிள்ள வாசலப் பாத்துப் பாத்து நடந்து திரியிறாய். ஆரும் வாறண்டவினமே.
ஓமம்மா. அம்மா!. இண்டைக்கு வெள்ளிக்கிழமை தானே.
ஆர் பிள்ள வாறதண்டது.
அது. அது. வந்தாப்பிறகு பாருங்கோவன்.
நல்லா அலங்காரம் பண்ணிக் கொண்டு நிக்கிறாய். ஆரிண்டு சொல்லன் பிள்ள.
அதம்மா. கொஞ்சம் பொறுங்கோ வருவார் தானே, வந்தாப் பிறகு பாருங்கோவன்.
சரி. சரி. எனக்கு குசினிக்க வேலையிருக்கு நீ நிண்டு பார்.
(தனக்குள்) இதாரிது வாறது. அவர் வரேல்ல.
இத உங்களிட்டக் குடுத்திற்று வரச் சொன்னார்.
ஆர்.
கூடவாத குயில்கள் 34 அகளங்கண்

வந்தவன்
மோகனா
வந்தவன்
மோகனா
வந்தவன்
மோகனா
குமாரண்ண.
எங்க அவர்
அந்தச் சந்தியில காறுக்க (car) இருக்கிறார். ஏன் அவர் ഖങു
இதக் குடுத்திற்று உடன வரச் சொன்னார். கடிதமும் காசும் இருக்காம் நான் வாறன்.
என்ன கடிதம் இது.
மோகனாவுக்கு! நீர் வீட்டிற்கு வந்ததை அறிந்து இக் கடிதத்தை எழுதினேன். இத்துடன் பத்து லட்சம் ரூபா காசு இருக்கிறது. விவாகரத்துப் படிவத்தில் (Divorce Form) எனது கையெழுத்தை வைத்திருக்கிறேன். நீர் உமக்குப் பிடித்த கணேசன் மாஸ்ரரோடு சந்தோசமாக வாழ என் நல்வாழ்த்துக்கள், நான் உம்மைச் சந்தித்து விட்டு வரும் போது, உம்மோடு கடமையாற்றும் மூர்த்தி மாஸ்ரர் என்னோடு றெயினில் (Train) வந்தார். அவர் கணேசன் மாஸ்ரரின் (Room mate) றும்மேற் ஆம். என்னை யாரென்று தெரியாமலேயே எல்லாக் கதைகளையும் சொன்னார்.
உமது சந்தோசமான எதிர் காலத்துக்கு என் நல்வாழ்த்துக்கள்.
இப்பழக்கு துர்ப்பாக்கியசாலி
குமார்.
முற்றும்
கூடவாத குயில்கள் 35 அகளங்கண்

Page 21
மாற்றங்கள் மாற்றவில்லை (45 நிமிட வானொலி நாடகம்)
பாத்திரங்கள்
இடம்
பாத்திரங்கள்
காஞ்சனா :-
LDTools *ー
காஞ்சனா :-
LDTGog5 *ー
காஞ்சனா :-
LDITGoa
காஞ்சனா :-
LDITGoa 8
காஞ்சனா :-
1. மாலதி
மாலதியின் தாய் குமார் குமாரின் தாய் காஞ்சனா செல்லம் கணேசன்,
காட்சி (1)
:- பாடசாலையில் ஆசிரியர் அறை
:- மாலதி, காஞ்சனா
என்ன மாலதி, தனிய இருக்கிறீர். பாடமில்லயோ .
பிள்ளையள PT மாஸ்ரர் கூட்டிக்கெர்ண்டு போய் பள்ளிக்குடந் துப்பரவாக்கிறார். எனக்கு வெயிலுக்க போய் நிக்கேலாது. பின்ன
வந்திற்றன். உமக்கு (free) பிறியோ காஞ்சனா
ஓம் .அதுதான் ஸ்ராவ் றுமுக்கு (Staf Room) வந்தனான். என்ன ஒரு மாதிரியா இருக்கிறீர். சுகமில்லையோ,
ஆ.ம்.அ.அப்பிடியொண்டுமில்ல. (பெருமூச்சு விடுகிறாள்) ம்.ஏன் சுகமில்லாத மாதிரியோ தெரியுது.
பின்ன என்ன.முகமெல்லாம் வாடிக்கிடக்கு, என்ன யோச்னையப்பா உமக்கு.ஏதோ புருசனப் பறிகுடுத்தவள் போல முகத்துக்குக் கையக் குடுத்துக் கொண்டு இருக்கிறீர்.
(அழுகிறாள்)
மாலதி.மாலதி. அழாதயும்.ஏன் அழுறிர்
ஒண்டுமில்லக் காஞ்சனா. ஏதோ யோசனயில இருந்தன். நீர் அப்பிடிச்
சொன்னோடன அழுக வந்திற்று.
உமக்கென்ன பிரச்சனை . ஏன் இப்ப கொஞ்ச நாளா ஒரு
கூடவாத குயில்கள் 36 அகளங்கண்
 

மாலதி
காஞ்சனா
LDITGoa
காஞ்சனா :
LDITGog,
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGog
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGoa
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா
மாதிரி இருக்கிறீர். எனக்கெண்டாலும் சொல்லக் குடாதே.
உமக்குச் சொல்லி என்ன ஆகப்போகுது காஞ்சனா என்ர துன்பம்
என்னோட இருக்கட்டும்.
நீர் எப்பவும் இப்பிடித்தான். உம்மோட இப்ப ஒரு வருசத்துக்கு மேல
பழகீற்றன். நீர் இன்னும் என்னோட மனம் விட்டுப் பழகிறீரில்ல.
காஞ்சனா.ஏன் இப்பிடிச் சொல்லுறீர் (கோபமாக). நான் இந்தப் பள்ளிக் குடத்தில மனம் விட்டுக் கதைச்சுப் பழகிறதே உம்மோட மட்டுந்தானே. பிறகேன் இப்பிடிச் சொல்லுறீர்.
மாலதி.நான் உம்மில எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறன். தெரியுமே.ஆனா நீர் தான்.
காஞ்சனா! . ஏன் அப்பிடி நினைக்கிறீர். இண்டைக்கு நான் ஏதோ யோசனயில இருந்திட்டன், அதுக்காக இப்பிடிச் சொல்லாதயும். (அழுகிறாள்)
என்னப்பா நீர்.ஏன் அழுறிர் உமக்கென்ன குறை. சுவீஸ் இல இருந்து கடிதம் வரேல்லயோ.
கொஞ்ச நாளாக் கடிதம் ஒண்டும் வாறேல்ல. (அழுகிறாள்)
உதுக்கெல்லாம் கவலப்பட்டு என்ன பிரயோசனம். அங்க அவருக்குக் கடிதம் எழுத நேரமில்லையாக்கும். நாளைக்கு உமக்கு நிச்சயமாக் கடிதம் வரும். கண்ணத்துடையும் (சிரிப்பு).
இல்லக் காஞ்சனா, இனிக் கடிதம் வராது. (அழுகிறாள்)
ஏன் வராது. என்ன பிரச்சன.எனக்குக் கூடச் சொல்லக் குடாதோ
இன்னொரு நாளைக்கு ஆறுதலாச் சொல்லுறன் இப்ப கேக்காதயும்.
சரி அதவிடும். இப்ப உமக்கு நானொரு குட் நியூஸ் (good news) சொல்லப் போறன் (சிரிப்பு)
சொல்லும் காஞ்சனா, உம்மட சந்தோசத்திலயாவது எனக்குச் சந்தோசம் கிடைக்கட்டும்.
எனக்கு.எனக்குக் கலியாணம் முற்றாகீற்றுது.
இதை ஏன் வந்தவுடனயே சொல்லேல்ல. (கையைப் பிடித்துக் கொஞ்சுகிறாள்)
கூடவாத குயில்கள் 37 அகளங்கண்

Page 22
மாலதி
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGoa
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDTGos
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGog,
காஞ்சனா :
மாலதி
போல என்ர கையப்பிடிச்சுக் கொஞ்சுறீர் (சிரிப்பு)
(சிரிப்பு) இனி நான் கையப்பிடிச்சுக் கொஞ்சக் கூடாது தான் என.(சிரிப்பு)
நான் சும்மா பகிடிக்கில்லோ.இப்ப தான் உம்மட முகத்தில மகிழ்ச்சி தெரியுது. மாலதி, உமக்கு என்ர கையப் பிடிச்சுக் கொஞ்சுற உரிமை எப்பவும் இருக்கும்.நான் வந்த உடனயே சொல்லுவமெண்டு தான் இருந்தனான். ஆனா நீர் கவலையா இருந்தீர். . அது தான் GSFT60(360606).
ஆர் மாப்பிள.என்ன வேல செய்யிறார்.
என்ன வேல செய்யிறாரெண்டு ஆருக்குத் தெரியும் - மாலதி, அவர் இருக்கிற இடம்.ஆ.அதுதான் சஸ்பென்ஸ் (Suspense)
எங்க காஞ்சனா.வெளிநாட்டிலயோ.
(சிரிப்பு) ரெண்டு பேரும் ஒரே இடந்தான். உம்மட ஆள் இருக்கிற இடத்திலதான்.
எங்க சுவீஸிலயோ.
ஓம். மாலதி, அங்க என்ன வேல செய்யிறாரோ ஆருக்குத் தெரியும். மாலதி, எனக்கு வெளிநாட்டு மாப்பிளயளில நம்பிக்கையில்ல. அவங்கள் அங்க என்ன கூத்தடிக்கிறாங்களோ,
காஞ்சனா! ஏன் அப்பிடிச் சந்தேகப்படுறிர்.
(சிரிப்பு) உமக்குக் கோபம் வருது போல.ஓம். ஓம்.வருந்தானே. மாலதி! இஞ்ச காதலிச்சிற்று வெளில போனவங்கள் சிலவேள ஒழுங்கா இருக்கக்கூடும். மற்றவங்களில ஆர நம்புறது, ஆர விடுறது.
அப்ப.உமக்கு விருப்பமில்லையோ.
மாலதி, எனக்கு வெளிநாட்டு மாப்பிளையோ, வெளிநாட்டு வாழ்க்கையோ விருப்பமில்ல. எங்கட வசதிக்கு இஞ்சயே நல்லா வாழலாம். வீடுவளவு, காசு, நகையெண்டு எங்களுக்கு என்ன
என்ன காஞ்சனா.ஆனாண்டிட்டு நிப்பாட்டிட்டீர்.
ஆனா சுவீஸில போயிருக்கிறதெண்டா விருப்பமாயிருக்கு,
ஏன். அங்க அப்பிடி என்ன விசேசம்.
கூடவாத குயில்கள் 38 அகளங்கண்

காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGog
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITologë
இடம்
பாத்திரங்கள்
தாய்
LDITGog
தாய்
LDITGog
தாய்
மாலதி, நீரும் அங்கதானே போகப் போறிர். அப்ப நானும் அங்க வந்தா, நாங்கள் ரெண்டு பேரும் சாகிற வரைக்கும் கிட்டக் கிட்டவே இருந்திரலாம்.
(அழுகிறாள்) காஞ்சனா.நீர்.நீர்.நீர்.என்னில எவ்வளவு அன்பு
வைச்சிருக்கிறீர். (அழுகிறாள்) ஆனா .ஆனா.உது நடக்கிற காரியமில்லப் போல இருக்கு .ம்.(பெருமூச்சு)
மாலதி. ஏன் இப் பிடி மாறி மாறி அழுறிர். சொல்லுறிருமில்ல.எல்லாம் நன்மையா முடியும் இருந்து பாரும்.
சரி.ஏதோ உம்மட ஆறுதலுக்குச் சொல்லும்.
நான் நாளைக்கு விலாசத்தக் கொணந்து தாறன். நீர் உம்மட ஆளுக்குக் கடிதம் போட்டு விசாரிச்சுப் பாக்கச் சொல்லும், உம்மட ஆளின்ர சிபார்சில தான் என்ர கலியாணம். (சிரிப்பு)
(அழுகிறாள்)
சொறி (Sorry) மாலதி.அவசரமில்ல.உம்மட குமார் உமக்குக் கடிதம் போடுவார் தானே.ஏதோ கடிதம் எழுத நேரமில்லயாக்கும். நீர் எழுதிப்பாரும். அல்லாட்டி போன் (Phone) பண்ணிப் பாரும்.
அது.அது. பெரிய கதை காஞ்சனா. நான் பிறகு சொல்லுறன். இப்ப சொல்லி ஏன் உம்மட சந்தோசத்தக் குழப்புவான்.
595 TL gf (02)
வீடு
:- தாய், மாலதி
பிள்ள. பிள்ள.எழும்பன் மோன விடிஞ்சு எவளவு நேரமாச்சு. இன்னும் கிடந்து நித்திர கொள்ளுறாய். பள்ளிக் குடம் போறேல்லயே எழும்பன்.
இண்டைக்குச் சனிக்கிழம தானேயம்மா.
ஓம் . ஓம்.நான் மறந்து போட்டன். பள்ளிக்குடமில்லாட்டி வெள்ளண எழும்பிறேல்லயே. இரவில யோசிச்சு யோசிச்சு அழுது கொண்டு கிடக்கிறது. நித்திர கொள்ளுறேல்ல.எழும்பு.
நான் எழும்புவன் தானே..கொஞ்ச நேரம் நிம்மதியாக் கிடக்க 6LTu6 (85TULDT35)
மோன.பொம்பிளயஸ் வேலைக்குப் போனான்ன, போகாட்டியென்ன,
கூடவாத குயில்கள் 39 அகளங்கண்

Page 23
மாலதி
தாய்
மாலதி
தாய்
LDIT65
தாய்
LDITGog
தாய்
மாலதி
தாய்
LDITGog
தாய்
மாலதி
வெள்ளண எழும்போனும், வேல வெட்டியளச் செய்யோணும்.
அம்மா.அம்மோய்.நான் சொன்ன விசயம் கேட்டுப் பாத்தனிங்களே (அமைதியாக)
என்ன விசயம் பிள்ள.
அதுதான்.நேற்றுச் சொன்னன்.
நான் ஆரிட்டக் கேட்டுப் பாக்கிறது பிள்ள.அதுகள் குஞ்சு, குருமான் கூட கொஞ் சக் காலமா முகங் குடுத் துக் கதைக்குதுகளில்ல. நான் ஆரிட்டக் கேட்டுப் பாக்கிறது.
ஏனம்மா அவன் ராசனிட்டக், கொண்ண கடிதம் போட்டவரோண்டு (85 LIT& Gastób6)LDIT'LIT(360T.
அவன எங்க இந்தப் பக்கத்தில நான் காணுறது, இதுவழிய ரியூசனுக்கு வாறதயும் காணேல்ல, ஏன். நீ. பள்ளிக் குடத்தில அவனக் கூப்பிட்டு கேட்டுப் பாக்கிலாமே.
நான் அவனிட்டக் கேக்க, அவன் போய் அவேட வீட்ட சொல்லிப் போடுவான்.
சொன்னா என்ன...தெரியாத விசயமே.பிள்ள. நான் சொல்லுறனெண்டு ஏறிப்பாயாத, நீ ஒருக்கா குமாருக்கு போன் (Phone) u606T600's LITU66.
அம்மா! எனக்குவேற வேலயில்லயே. (கோபமாக) அந்தக் கதைய விடுங்கோ,
அப்ப ஏன் காலம விடிஞ்சதும் விடியாததுமா உந்தக் கதையத் துடங்கினனி.நீ உன்ர வீண் பிடிவாதத்தால கஸ்டப்படப் போறாய். அவே குமாருக்கு அங்க இஞ்ச யெல்லாம் கலியாணம் பேசிறதாக் கதை அடிபடுது.
(அழுகிறாள்) எங்கேண்டாலும் கலியாணஞ் செய்து நல்லா இருக்கட்டும். எனக்கென்ன.
பிள்ள..சொல்லுற பறயிறதக் கேள் பிள்ள. அவே தாய் தேப்பன் இஞ்ச கலியாணம் பேசிற விசயம் குமாருக்குத் தெரியாமலும் இருக்கும்.
(கோபமாக) அவருக்குத் தெரியாமலே, வவுனியாவில வீடுவளவோட பொம்பிள பாக்கினம். அவே இருந்த நிலமைக்கு இப்ப அவே காட்டுற லெவெல்(றாங்கி)
கூடவாத குயில்கள் 40 அகளங்கண்

தாய் 8
மாலதி
தாய் :-
பாத்திரங்கள்
செல்லம் :-
தாய் :-
செல்லம் :-
தாய் e
செல்லம் :-
தாய் :-
செல்லம் :-
25Tul
செல்லம் :-
தாய் :-
உப்பிடிக் கதைச்சுத்தானே பிரச்சனய உண்டாக்கினநீ கொஞ்சம் நிதானமாக் கதைச்சுப் பழகு. கோவம் வந்தா என்ன கதைக்கிறண்டு தெரியாமல் பேசுவாய். படிப்பீக்கிற நீங்கள் இப்பிடி நிதானமில்லாமல் கதைச்சா.பிள்ளயஞம் உதத்தானே பழகுங்கள்.
எப்பிடிப் படிப்பீக்கிறதெண்டு எனக்குத் தெரியும். நீங்கள் ஒண்டுஞ் சொல்லித் தரத் தேவையில்ல. உங்கட வேலயப் போய்ப் பாருங்கோ. (கோபமாக)
உன்னோட கதைக்கேலாது.எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுவாய். நீ எழும்பி முகத்தக் கழுவு, தேவகி டான்ஸ் (dance) கிளாசுக்கப் போகோணும். எனக்கு வேலையிருக்கு.
காட்சி (3)
வீடு
:- தாய், செல்லம், மாலதி
அக்கா.அக்கா.
ஆரெண்டு பார்பிள்ள. நான் இஞ்ச கைவேலயா இருக்கிறன்.
அது.நானக்கா
ஆர் செல்லமே.நான் குசினிக்க வேலயா இருக்கிறன், இஞ்சால வாவன். இஞ்சால கதிரேல இரன்.டேய் சிவம் ஒரு கதிர எடுத்திற்றுவாடா.அதுகளெல்லாம் தெறிக்கப் போட்டுதுகள். (விளையாட)
வேண்டாமக்கா.நான் கீழ இருந்திட்டன்
அந்தப் பலகக் கட்டையயெண்டாலும் போட்டிட்டு இரன். .சமயல் முடிஞ்சுதே.என்ன கறி.
மரக்கறியள் கிடந்திது. மீன் வாங்கினனான்.
நாங்கள் விரதம், புரட்டாதிச் சனியில்லே.
அவருக்கு மச்சமில்லாட்டி இறங்காது.வெள்ளணச் சமைச்சுப் போட்டு குளிச்சிற்றுப் போவமெண்டு வந்தன். -
போன கிழம உந்தமாதிரி மழை பெஞ்சுது. அதுக்கும் உங்கட கிணத்துக்க தண்ணி ஊறேல்லயே.
கூடவாத குயில்கள் 41 அகளங்கண்

Page 24
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
மாலதி
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
அதென்ன மழை.தண்ணி நல்லா ஆழத்துக்குப் போட்டுதக்கா. அள்ளிக் குளிக்கிற தெண்டாச் சீவன் போயிரும்.
மெய்ய செல்லம். உன்ர பொடியனுக்கு இப்ப சுகமே. அண்டைக் கொருநாள் வந்து பாத்தாப் பிறகு நான் வரேல்ல.எங்க நேரங்கிடக்கு. வீட்டுவேல செய்யவே பொழுது காணாது. இப்ப எப்பிடி இருக்கிறான்.
மலேரியாக் காய்ச்சலெண்டு குளிச தந்தவங்கள். மலேரியாக் குளிச போட்டாத் தெரியுந் தானே என்ன செய்யுமெண்டு.
வவுனியாவில மலேரியாக் காய்ச்சல நினைச் சாத்தான் பயமாக்கிடக்கு. ஆரப் பாத்தாலும் மலேரியாக் காய்ச்சல் எண்டுதான் கதை.
காய்ச்சல் வர வர மலேரியாக் குழிசைய போட்டா மணிசர நல்லா வாட்டிப் போடும்.
மணிசரக் கொல்லுறதுக்கெண்டு எத்தின வருத்தங்கள் வந்திருக்கு.
மெய்யக்கா.நான், உங்களிட்ட ஒண்டு கேப்ப மெண்டுதான் வந்தனான்.
பொறு செல்லம், சட்டி கழுவின தண்ணிய வெளில ஊத்திற்று வாறன்.சரி.சொல்லு.
மெய்யக்கா, மாலதீன்ர கலியாணப் பிரச்சன என்ன நிலையில கிடக்கு.
ம்.ம்.அதேன் கேக்கிறாய். (சயிக்கிள் மணி அடித்துக் கேட்கிறது) பிள்ள.தவால்க் காறன் போல கிடக்கு போய்ப் பார்பிள்ள.
அது பக்கத்து வீட்டிலயம்மா.
இப்ப அந்தப் பெடியன் என்னவாம்.
அது பெரிய பிரச்சனயில கிடக்கு.
பெடியன்ர தாய் தேப்பன் ஆக்கள் பெடியனுக்கு கலியாணம் பேசுறதாக் கேள்விப் பட்டன். அதுதான் கேட்டன்.
உண்மதான் செல்லம். இப்ப ஒரு மூண்டு மாசமா. தொடர்பு முற்றா விட்டுப் போச்சு.
பெடியன் மாலதிக்கு கடிதம் கிடிதம் ஒண்டும் போடுறதில்லயோ.
கூடவாத குயில்கள் 42 அகளங்கண்
 

தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
கொஞ்சம் மெல்லமாக் கத செல்லம். அவளின்ர காதில விழுந்தா சத்தம் போடுவாள்.
வீடுவளவோட நல்ல சீதனத்தில பொம்பிளபாக்கிறதாக் கேள்வி.
இப்ப ஒரு மூண்டு மாசத்துக்கு முதல் நாங்கள் கேட்ட நாங்கள். அவே இஞ்ச வவுனியாவில, ரவுணுக்க வீடுவளவு வேணுமெண்டு நிக்கினம், இப்ப வவுனியா ரவுணுக்குள்ள வீடு வளவு வாங்கிறண்டா லேசான காரியமே.
நாங்களக்கா பத்து வருசத்துக்கு முந்தி, பரப்பு பத்தாயிரப்படி வாங்கித்தான் எங்கட வீட்டக் கட்டின நாங்கள். இப்ப வைரவ புளியங்குளத்தில பரப்பு மூண்டர லச்சத்தத் தாண்டீற்று.
அப்பிடி வாங்கியும் வீடு கட்டிற தெண்டா குறைஞ்சது ஏழு, எட்டுஎண்டாலும் தேவப்படும். கிடந்த காணியயும் அநியாயமா வித்துப் போட்டம்.
ஸ்ரேசனடியில கிடந்த காணிய முழுக்க வித்துப் போட்டியளே.
அப்ப அவர் இஞ்ச வேல செய்யேக்க வாங்கி விட்டிருந்த காணித் துண்டு.எப்பவோ ஒரு நாளைக்குத் தேவப்படு மெண்டு முன்யோசனயா வாங்கி விட்டிருக்கிறார். எங்கட புத்தி.பெண்புத்தி பின்புத்தி. வித்து ஏமாந்து போனம்.
ஏனக்கா வித்த நீங்கள். அவளவு காணியும் இப்ப இருக்கிறதெண்டா இருபது, இருபத்தைஞ்சு லச்சத்துக்கு விக்கிலாம்.
ம்.அவர் செத்தாப் பிறகு.ம் (பெருமூச்சு) எங்களுக்குப் பிடிச்சுது சனியன். இந்தப் பெடியன் குமார் வெளிநாட்டுக்குப் போற தெண்டு நாண்டு கொண்டு (பிடிவாதம்) நிண்டான். பெரியவளும் விக்கச் சொல்லி ஆக்கினப் படுத்தினாள். வன்னியில வந்து இப்பிடி இருப்பமெண்டு கனவுகூடக் காணேல்ல . . . இனிக் கதைச்சு என்ன பிரயோசனம்,
அக்கா.நான்சொல்லிறனெண்டு குறநினைக்காதயுங்கோ, அவேட கதையளப் பாத்தா.உங்கட கலியாணம் சரிவருமெண்டு நான் நம்பேல்ல.
யாழ்ப்பாணத்தில சண்ட துடங்க நான் பிள்ளயளயும் கூட்டிக் கொண்டு இஞ்ச வந்திற்றன். போன வருசக் கடசியிலதான் அவே இஞ்ச வந்தினம். ஒரு மூண்டு நாலு மாசமா எங்களோட தான் இருந்தினம். பிறகு தான் தனிவீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போனவினம். உதுகளக் கதைச்சு இனி என்ன.
அக்கா.எங்கட சொந்தக் காறப் பெடியனொருத்தன் கனடாவில
கூடவாத குயில்கள் 43 அகளங்கண்

Page 25
தாய்
செல்லம்
தாய்
செல்லம்
தாய்
இடம்
-
●
இருந்து வந்து நிக்கிறான். நீங்கள் கண்டிருப்பியளெண்டு நினைக்கிறன். ஓமந்தப் பெடியன். உங்கட சரளாவோட படிக்கிறாள் லோஜி. இஞ்சயெல்லாம் வருவாள்.
அவளின்ர தமையன் தான். அவனுக்கு அங்க சிற்றிசன் கிடைச்சிற்றுதாம். அவன் மாலதியப்பள்ளிக்குடம் போகேக்கயோ எங்கயோ பாத்திருக்கிறான். தனக்கு ஒரு சதமும் சீதனம் வேண்டாமாம் நகை நட்டு எல்லாம் தானே போடுறானாம். கேட்டுப் பாக்கச் சொல்லிச் சொன்னான். நல்ல பெடியன். வீட்டுப் பொறுப்பு ஒண்டுமில்ல. எல்லாச் செலவும் செய்து தானே கூட்டிக் கொண்டு போவான்.
நான் பெடியனக் கண்டனான்.அவேக் கென்ன. (பெருமூச்சு) இவள் கேட்டா நெருப் பெடுப்பாள்.
என்னவோ அக்கா.நல்ல இடம். அவயள நம்பிக் கொண்டிருந்து என்ன செய்யப்போறியள்.
LITÜLJLb
95 TL gf (4)
வீடு
பாத்திரங்கள் :- தாய், மாலதி.
தாய்
LDTools
தாய்
LDITGoa
தாய்
LDIT6a
மோன.நீ இப்பிடிப் பிடிவாதம் பிடிச்சுப் பழகாத, உன்ர பிடிவாதக் குணமும், எரிஞ்சு விழுற கோவமுந்தான், உனக்குச் சத்துரு எண்டு நினைச்சுக் கொள்.
அம்மா.ஏனம்மா இப்பிடிச் சொல்லுறியள்.
நீ ஒருக்கா அவரிட்ட போன் பண்ணிக் கதைச்சுப் பாரன்.
(கோபமாக) என்னத்தக் கதைக்கிறது. இனி என்ன கதைக்க வேண்டிக் கிடக்கு.
இதுதானே சொல்லுறநான்.எரிஞ்சு விழாதயெண்டு. கொஞ்சம் பொறுமையாக் கேள். எவ்வளவு கோபம் வந்தாலும் நீ அப்பிடிப் (Phone) போனில பேசியிருக்கக் குடாது.நீ பொம்பிள, இப்பிடி ரோசக் காறியாயிருந்தா, ஆம்பிளயஞக் கென்ன; அந்தச் சாட்டில விட்டிட்டு மாறிருவாங்கள்.
அம்மா.அவே கஸ்ரப்பட்ட காலத்தில எவளவு உதவியெல்லாம்
கஉவாத குயில்கள் 44 அகளங்கண்
 

தாய்
LDITGoss
தாய்
LDITGog
தாய்
LDIT65
தாய்
மாலதி
தாய்
LDITGoa
தாய்
LDITGog
தாய்
LDIT60s
செய்த நாங்கள். இப்ப சுவீசில இருந்து அவர் உழைச்சுத் தாய் தேப்பனுக்குக் காசனுப்பிறதுக்கு நாங்கள் தானே காரணம். அத மறந்திற்று தரமுடியாத சீதனத்தத் தா எண்டு கேட்டா ஆருக்குத்தான் கோவம் வராது.
வவுனியா ரவுணுக் குள் ள வீடு வளவு அவேக் குத் தேவப்படுது.அவேக்கும் வேற வழியில்ல.
அதுக்கு.நாங்களே கிடைச்சம். (கோபமாக)
கொஞ்சம் பொறுமையாக் கதையன்.சுடுதண்ணி குடிச்சவள் மாதிரி நிக்கிறாய். அவே வீடு கட்டித் தரச் சொல்லிக் கேட்ட விசயம் குமாருக்குத் தெரியாமலும் இருக்கிலாந்தானே.
அவருக்குத் தெரியாமலே அவே இந்த ஆட்டம் ஆடுகினம்.அம்மா என்னை என்ன செய்யச் சொல்லுறியள் . அவர் ஒரு கடிதமெண்டாலும் போட்டிருக்கிலாந் தானே. (அழுகிறாள்)
நீ பேசின பேச்சுக்கு.ஆருக்குத்தான் கோவம் வராது. எதுக்கும் ஒருக்கா நீ அவரோட போனில கதைச்சுப்பார். இல்லாட்டி கடிதமெண்டாலும் எழுதிப்பார்.
நான் வலியக் கெஞ்சிக் கேக்கத் தேவையில்ல. விருப்பமெண்டா
அவர் கடிதம் எழுதட்டும். பிறகு நான் எழுதிறன்.
மோன.செல்லம் வந்து ஒரு வியழஞ் (விசயம்) சொல்லிப் போட்டுப் போகுது.அவேட சொந்தக் காறப் பெடியனாம். கனடாவில சிற்றிசன் கிடைச்சிற்றாம்.
(வெறுப்பாக) அவனுக் கென்னவாம்.
ஒண்டு மில்ல.நீ போய் கிடந்து அழு, சொல்லுற பறயிறதக் கேட்டாத் தானே (கோபமாக)
சரி சொல்லுங்கோ.
ஒரு சதமும் சீதனம் வேண்டாமாம். உங்க வந்து நிக்கிறான். உன்னக் கண்டிருக்கிறான் பிடிச்சுக் கொண்டுதாம்.
(கோபமாக) அம்மா! உந்த விசர்க் கதையள விட்டிட்டு வேற வேல இருந்தாப் பாருங்கோ அவனுக்கு வேற வேல இல்ல.என்ன ஏன் பாத்தவனாம் அவன்.
பின்ன ஏமாந்து போய் இப்பிடியே இருக்கப்போறியே (கோபமாக)
அம்மா.எனக்குத் தெரியும் என்ன செய்யிறதெண்டு . நீங்கள் சும்மா இருங்கோ (அழுகிறாள்)
கூடவாத குயில்கள் 45 அகளங்கண்

Page 26
gGT" gf (5)
பின்நோக்கிய காட்சி (Flash back) அதற்குரிய ஒலியோடு
இடம் s
பாத்திரங்கள்
கணேசன் :-
குமார் 8
கணேசன் :-
குமார் :-
கணேசன் :-
குமார்
கணேசன் :-
குமார் *ー
கணேசன் :-
குமார் 8
கணேசன் :-
குமார் 8
இக்காட்சி தொடங்கும்.
தெரு
:- மாலதி, குமார், கணேசன்,
(தீபாவளி நாள் என்பதைக் காட்ட பட்டாசு ஒலிகள் இடம் பெறுவது பொருத்தம்)
குமார்.எங்காலடாப்பா, இவளவு ஈக்கில்வாணம் வைச்சிருக்கிறாய்.
அம்மாட்டச் சண்ட புடிச்சு ஒருமாதிரிக் காசு வாங்கி ஈக்கில் வாணம் வாங்கினனான்.
அப்ப இண்டைக்குத் தீபாவளிக் கொண்டாட்டம் விசேசந்தான் எண்டு சொல்லு.
ஏன்ராப்பா கணேசன். நீ நினைச்சா பெட்டிக் கணக்கா வாங்கிலாந் தானே எங்கட வீட்டில அப்பருக்கு வெடியெண்டாலே பயம், வேற எதுக்கு மெண்டா எவளவு காசும் தருவார். ஆனா வெடி வாங்க எண்டு கேட்டாத் துலைச்சுப் போடுவார். (அடிப்பார்)
எங்கட வீட்டிலயும் அப்பிடித்தான். உனக்கெண்டாலும் காசுப் பிரச்சனயில்ல. எங்கட வீட்ட தீபாவளிக்கு உடுப்புகள் கூட ஒரு நாளும் எடுக்கிறேல்ல. எங்களுக்கு அப்பா, வருசம் தீபாவளி, தைப் பொங்கல் எல்லாத்துக்கும் உடுப்பெடுத்துத்தருவார்.
எங்களுக்கு வருசத்துக்கு மட்டுந்தான் புது உடுப்பு. தீபாவளிக்கு பலகாரஞ் சுடக்கூடக் கஸ்ரம்.
மெய்ய குமார். உங்கட நிலமைக்கு நீ இப்பிடி ஈக்கில் வாணம் வாங்கி விட்டுக் கொண்டு திரிஞ்சா என்னண்டு உருப்படுவாய்.
என்ன கணேசன் செய்யிறது. வீட்ட கஸ்ரம் தான். தம்பி தங்கச்சிக்கு கொப்பி, பென்சில் பேனை வாங்கக் கூடக் கஸ்ரம் தான். ஏன் உனக்குச் சொன்னா என்ன, சில நேரம் இராச் சாப்பாடே இருக்காது.
அப்ப ஏன் நீ இப்பிடிச் செய்யிறாய்.
மச்சான், இந்த வயசில விளையாடித் திரியாமல் வீட்டுக்க
கூடவாத குயில்கள் 46 அகளங்கண்
 

கணேசன் :
குமார்
கணேசன் :
குமார்
கணேசன் :
குமார்
கணேசன் :
குமார்
கணேசன்
குமார்
கணேசன்
குமார்
கணேசன் :
குமார்
கிடக்கேலுமே,
குமார், நீயும் ஏதும் வேலைக்குப் போகிலாந்தானே.
எங்கடாப்பா போறது. அப்பரோட, தோட்டத்துக்கே நான் போறேல்ல.
ஏன் உனக்குத் தோட்டவேல செய்ய விருப்ப மில்லயோ,
என்னவோ, எனக்குத் தோட்டங் கொத்திறது பிடிக்கேல்ல.
நாங்கள் இருந்து கதைக்கிறதுக் கெண்டு தான் இந்தப் பாலத்தக் கட்டினாங்கள் போல என, நல்ல இடம். குமார்.அப்ப இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்.உத்தியோகம் ஏதும் கிடைக்காதோ.
எனக்கு ஆர் மச்சான் உத்தியோகந் தாறது. உனக் கென்ன தெரியாதே. ரெண்டு தரம் O/L எடுத்து பெயில் விட்டிட்டன்.
அப்ப என்ன செய்யிற நோக்கம்.
அப்பர் பாவம், தோட்ட வேலயில சரியாக் கஸ்ரப்படுறார். அம்மாவும் வீட்டு வேலயும் தோட்ட வேலயுமா. பாவம்.ஆனா நான் என்ன மச்சான் செய்யிறது. எங்கட குடும்ப நிலையயும் எதிர் காலத்தயும் யோசிச்சுப் பாத்தா தற்கொலை தான் செய்யோணும். நான் ஒண்டையுமே யோசிக்கிற தில்ல. ஏதோ நடக்கிற மாதிரி நடக்கட்டும் எண்டு இருக்கிறன்.
சரி குமார். உந்தக் கதைய விடு. அங்கே அந்தப் பனைமரத்தில பார் பெரிய குளவிக்கூடு.
ஒமிடாப்பா.உந்தக் குளவிக் கூட்டுக்குத் தான் ஒரு நாள் ஒரு வேலை செய்த நாங்கள்.
என்ன வேல மச்சான்
நானும் ஆனந்தனும் ஒரு நாள், ரியூசன் முடிஞ்சு பெட்டையள் வரேக்க, உந்தக் குளவிக் கூட்டுக்குக் கல்லெறிஞ்சு போட்டு எடுத்தம் ஓட்டம், குளவியெல்லாம் வெளிக்கிட்டு திரத்தத் தொடங்கீற்று.பெட்டையள் கீசிக் கத்திக் கொண்டு பட்டபாடு (சிரிப்பு)
உனக்கிடாப்பா எப்பவும் உப்பிடிச் சேட்டதான் செய்யத் தெரியும். எனக்கிண்டா அப்பர் அடி அடியெண்டு அடிச்சுக் கொல்லிப் போடுவார்.
நாங்கள் வடலியஞக் கால ஒளிச் சோடீற்றம் எங்களக்
கூடவாத குயில்கள் 47 அகளங்கண்

Page 27
கணேசன் :
குமார்
கணேசன் :
குமார்
கணேசன் :
குமார்
கணேசன் :
LDITGog
குமார்
மாலதி
குமார்
LDIT65
குமார்
LDITGoa
குமார்
LDITGog
குமார்
கண்டாத்தானே.இண்டைக்கு அந்தக் குளவிக் கூட்டுக்கு ஈக்கில் வாணம் விடுவம் என.
ஆக்கள் வருகினமோண்டு பாத்திற்று விடுவம்
ஆக்கள் வந்தா என்ன.
ஏன் வீண் பிரச்சனய எண்டு தான்.
நீ பயந் தாங் கொள்ளி தானே. நான் விடுறன் பார்.
(ஸ்.ஸ்.வெடிக்கும் சத்தம்) அட.அது விலத்தீற்று மச்சான். மற்றத விடுவம்
கொழுத்தியாச்சிடாப்பா.இப்ப என்ன செய்யிறது.
கீழ போடடா.கைய விட்டிட்டு ஒடடா.
ஐயோ.அம்மா.(கீசிக் கத்துகிறாள்)
கணேசன். நில் லடா. நில் லடா.அவளின்ர சட்டயில நெருப்பு.மாலதி.பொறும்.பொறும் சத்தம் போடாதயும்.
(சத்தமிட்டபடி அழுகிறாள்)
கையால தட்டி நூரும் மாலதி.
தொடாதயும்.தள்ளும்.(அழுதபடி, கோபமாக)
பொறும்.நான் நூத்துவிடுறன்.பின்னுக்கு நெருப்பு.
விடும்.என்னத் தொடாதயும். தள்ளும்.தள்ளும் உங்களுக்கு விளையாடுறதுக்கு வேற இடங்கிடைக் கேல்லயே (கோபமாக)
காவாலியள் மாதிரி போறவாற பெட்டையஞக்கே ஈக்கில் வாணம் விடுறது.
நல்ல காலம்.பெரிசா எரியேல்ல.சொறி மாலதி, உமக்கு விடேல்ல. தவறுதலா உம்மில பட்டிட்டுது.
என்ர புதுச் சட்டையெல்லாம் எரிஞ்சு போச்சுது. இப்ப நான் போய் செய்யிறன் வேலை, எங்க அவன் . கணேசன் (கோபமாக)
அவன் பயத்தில ஒடீற்றான்.மாலதி பிளிஸ் (Please) வீட்ட சொல்லாதயும். தவறுதலா நடந்து போட்டுது.
கூடவாத குயில்கள் 48 அகளங்கண்

LDITGog S
குமார் :-
இடம் :-
பாத்திரங்கள்
குமார்
LDITGog5 :-
குமார் :-
மாலதி :-
குமார் :-
LDITGoa :-
குமார் :-
மாலதி :-
குமார் :-
LDITGoa
குமார் :-
நெருப்புப் பிடிச்சு என்ர சட்டையோட நானும் எரிஞ்சிருந்தா . உங்களுக்கு விளையாட்டு. இப்ப போய் வீட்ட சொல்லி என்ன செய்யிறன் பாரும். (கோபமாக)
மாலதி.மாலதி.பிளிஸ் (Please) பிளிஸ்.தயவு செய்து சொல்லாதயும். இனிமேல் இப்பிடிச் செய்ய மாட்டன். உம்மக்
கும்பிட்டன் பிளிஸ். ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதயும்.அங்க ஆரோ வருகினம். அழாதயும்.
g5 Tgif (6)
வீடு
:- மாலதி, குமார்
ஓம்.வாறன்.ஆ.நீரே.வாரும். அம்மா கிணத்தடியில நிக்கிறா.என்ன விசயம்.
நீர் பயப்பிடுத்தாதயும் கொம்மா கடைக்குப் போறா, நான் பாத்திற்றுத் தான் வாறன்.
எப்ப அம்மா வெளில போவாண்டு பாத்துக்கொண்டு நிண்டிட்டு வாறிர் போல (சிரிப்பு)
கொம்மா நிண்டா இப்பிடிவந்து பிறியாக் (Free) கதைக் கேலுமே.
குமார்! அம்மா இப்ப வந்திருவா.கெதியாச் சொல்லும்.
நான் இப்ப என்ன.இஞ்ச குடும்பம் நடத்தவே வந்தனான். சும்மா கதைச்சிற்றுப் போகத்தானே. உமக்கு விருப்பமில்லாட்டிச் சொல்லும்.நான் போறன்.
நான் சும்மா பகிடிக்கெல்லோ சொன்ன நான்.அம்மா இப்ப வரமாட்டா பிந்தும். ஆனா.ஆரும் ஆக்கள் கண்டா.அதையிதக் கதைப்பினம்.
கதைச்சாக் கதைக்கட்டும், நான் உம்மத் தானே கலியாணம் முடிக்கப் போறன். இனித் தெரிஞ்சா என்ன.
குமார்.நாங்கள் எங்கட கலியாணத்தப் பற்றி முடிவெடுக்க முதலே ஊர் கதை கட்டீற்று. ஆருக்குத்தான் தெரியாது. எண்டாலும் ஏன்.சும்மா. என.
மாலதி, நீர் A/L படிச்சுக் கொண்டிருக்கிறீர் நான் O/L பெயில் விட்டிட்டு வேல வெட்டி இல்லாமல் அலையிறன்.
கூடவாத குயில்கள் 49 அகளங்கண்

Page 28
LDITGog
குமார்
LDITGog
குமார்
மாலதி
குமார்
மாலதி
குமார்
LDITGog
குமார்
LDITGog
குமார்
மாலதி
ஆரும் படிப்பையும் வேலயயும் கலியாணம் முடிப்பினமோ.என்ன நிலமயிலயும் நான் உங்களத்தான் முடிப்பன்.
ஈக்கில் வாணத்துக்கு உதெல்லாம் தெரியுமே..என .என்னவோ மகிழ்ச்சியான தீபாவளி நாளில எங்கள கடவுள் சேத்து வைச்சிருக்கிறார். இனிப் பிரிக்க ஆராலயும் முடியாது.
தீபாவளி கொண்டாடுறதில இருக்கிற மகிழ்ச்சி, எங்கட வாழ்க்கையிலயும் எப்போதும் இருக்கோணும். குமார் .நீர் திருப்பி O/L எடுத்தா என்ன
அதெல்லாம் சரிவராது மாலதி, நீர் கெட்டிக்காறி (A/L) பாஸ்பண்ணி யூனிவெசிற்றி (University) க்குப் போனாலும் போயிருவீர். உம்மட அப்பா படிச்சு உத்தியோகம் பாத்தவர். காசு வசதி இருக்கு. எனக்கு அப்பிடியே.
அம்மா ஓயாமல் என்னப் பேசிறா.நான் பிடிவாதக் காறி யெண்டு அவக்குத் தெரியும். அதால ஒண்டுஞ் செய்யேலாமல் இருக்கிறா.
மாலதி! நான் இப்ப முந்தின மாதிரி விளையாட்டுப் பிள்ளயில்ல. என்ர அம்மா, அப்பா, சகோதரங்களை நான் தான் பாக்கோணும். அதோட. உம்மட வீட்டிலயும் நீர்தானே மூத்தபிள்ள. எங்கட கலியாணம் முடிஞ்ச பிறகு நான் தானே உம்மட வீட்டுக்கும் பொறுப்பு
அதுதான் அம்மா அடிக்கடி சொல்லுறவ, என்ன ஒரு நல்ல இடத்தில கட்டி வைச்சிற்றா எனக்குக் கீழ உள்ளதுகளுக்கு நல்ல வாழ்க்க கிடைக்கு மெண்டு. அப்பா இருந்தாப் பிரச்சனயில்ல.
அதுக்குத்தான் நான் ஒரு திட்டம் வைச்சிருக்கிறன். நான் வெளிநாட்டுக்குப் போய் உழைச்சு முன்னேறிற்றா .ஒரு குறையும் தெரியாது. நீர் படிச்சுப் பட்டதாரியா வந்தாலும் குறையாத் தெரியாது. இஞ்ச இருந்தா உமக்கே ஒரு காலம் வெக்கமாயிருக்கும்
வெளிநாட்டுக்குப் போறதெண்டா சும்மா காரியமே. எவளவு காசு வேணும்.
அதுதான் உம்மட்டக் கேக்கிறன்.
என்ன சீதனம் பேசுறீர் போல கிடக்கு.
சீ.சீ.அப்பிடியில்ல.நீர் மனம் வைச்சா நான் வெளில போகலாம்.
குமார், ஏன் இப்பிடிக் கேக்கிறீர், உமக்காக நான் எதையும் செய்வன். என்ன செய்ய வேணும் சொல்லும்.
கூடவாத குயில்கள் 50 அகளங்கண்

குமார்
LDITGoa
குமார்
LDITGog
குமார்
LDITGog
குமார்
LDITGog
குமார்
LDITGog
குமார்
LDIT605
இடம்
பாத்திரங்கள்
காஞ்சனா :
LDITGog
உம்மட மாமா ? ஒராள் அவுஸ்ரேலியாவில இருக்கிறாரெண்டு சொல்லுவீர்.அவர் மூலமா நான் வெளில போக ஒழுங்கு செய்யோணும்.
அது நடக்கிற காரியமோ.
ஏன் அபசகுனமாச் சொல்லுறீர். உம்மட அம்மாட்டச் சொல்லி ஒழுங்கு பண்ணேலாதோ.
கலியாணம் முடிச்சாப் பிறகெண்டா மாமாட்டக் கேட்டு ஒழுங்கு பண்ணலாம். இப்ப என்னண்டு கேக்கிறது.
மாலதி, நான் வெளில போய் உழச்ைசு, என்ர குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொணந்திற்றுப் பிறகு கலியாணம் முடிச்சாத்தான், நாங்கள் நிம்மதியா இருக்கிலாம். எப்பிடியும் நான் வெளில போய் அஞ்சு, ஆறு வருசம் செல்லோனும்,
ஏன்.ஏஜன்சிக் (Agency) காறர் மூலமாப் போனா என்ன.
அதுக்கு எவளவு காசு தேவப்படும் அதுக்கு நாங்கள் எங்க போறது.
அப்பிடியெண்டா றியிஸ்ரேசனிண்டாலும் (Registration) செய்வம். பிறகு ஒரு மாதிரி மாமாட்டக் கதைச்சு ஒழுங்கு பண்ணலாம்.
அதெல்லாம் கரைச்சல், உம்மத்தான் நம்பியிருக்கிறன். கதைச்சு நல்ல முடிவாச் சொல்லும்.
தேத்தண்ணி கொண்டாறன் இரும்.
கொம்மா வந்தாலும் வந்திருவா.கெதில கொண்டாரும். உமக்குத் தேத்தண்ணி போடத் தெரியுமோண்டு பாப்பம். (சிரிப்பு)
உப்பிடிச் சொன்னீரிண்டாத் தேத்தண்ணி தரன். (சிரிப்பு)
(பின்னோக்கிய காட்சி முடிவடையும் ஒலி)
95ITL" gif (7)
LITLEFT606),
:- மாலதி, காஞ்சனா,
LDIT6)g5........ என்ன ஒரே யோசனையில இருக்கிறீர். பழைய ஞாபகங்களோ.
இனி.யோசிச்சு என்ன பிரயோசனம்..ம். (பெருமூச்சு)
கூடவாத குயில்கள் 51 அகளங்கண்

Page 29
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
Drøvo
காஞ்சனா :
LDITGog
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGog
காஞ்சனா
மாலதி
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDTGogo
காஞ்சனா :
மாலதி.நான் நேற்றுச் சொன்னன்.
ம்.சொல்லும், உமக்கு வெள்ளிக் கிழம சொன்னது நேற்றுப் போல கிடக்கு என.
சொறி.என்ன சுவாரஸ்ய மில்லாமல் கேக்கிறீர்.
ஒண்டு மில்ல. சொல்லும், உம்மட கலியாண விசயம் என்ன நிலையில கிடக்கு.
மாலதி, இதில அவற்ற சுவீஸ் விலாசம் இருக்கு இது அவற்ற (3LIT' (3LT(photo)
ஆ..இது.இது.காஞ்சனா.(அழுகிறாள்)
மாலதி.மாலதி.ஏன் அழுறிர் சொல்லும், ஆரும் பிள்ளையஸ் பாத்தாலும்,
காஞ்சனா.எல்லாம் முற்றாப் போச்சா.
முற்று மாதிரித்தான். சாதகம் பொருத்தமாம். வீடு வளவு, நகை, பத்து லச்சம் காசு.
(அழுகிறாள்)
ஏன் இப்பிடி அழுறிர் நல்ல செய்தியச் சொல்லுறன். விஸ் (Wish)
பண்ணாமல் இப்பிடி அழுறிர்.
காஞ்சனா.நீர் அண்டைக்குக் கேட்டீரே.விசாரிச்சு நல்லவனோ கெட்டவனோ எண்டு அறியச் சொல்லி, (அழுறாள்) இனி ஆரிட்ட விசாரிக்கிறது.
ஏன்.உம்மட குமாரிட்டத் தான்.
காஞ்சனா.உந்தப் போட்டோவில இருக்கிறது. குமார் தானே. (அழுகிறாள்)
மாலதி சொறி.எனக்குத் தெரியாமல்ப் போச்சு, நீர் ஏதோ பிரச்சன.பிரச்சன எண்டு சொல்லேக்க. இந்தளவுக்கு நான் நினைச்சே பாக்கேல்ல.உமக்குத் துரோகஞ் செய்து நான் வாழ LDITL’LL L6öT.
(அழுகிறாள்) காஞ்சனா.நீர்.நீர்.
மாலதி அழாதயும். உம்மட சொத்த நான் பறிச்செடுக்க மாட்டன்.
கூடவாத குயில்கள் 52 அகளங்கண்

LDITaaS :-
காஞ்சனா :-
LDIT65 :-
இடம் 8
பாத்திரங்கள்
LDfTools :-
தாய் 8
மாலதி :-
தாய்
LDITGog
தாய் :-
எங்களிட்டக் காசிருக்கு எண்டதுக்காக, ஆற்றையும் புருசன விலைக்கு வாங்கி வாழ எனக்கு விருப்பமில்ல. அதுவும்.ஏற்கனவே காதலிச்சு ஏமாத்தினவனை நான் மனிசனாவே மதிக்க மாட்டன்.
காஞ்சனா! நீர்.நீர்.(அழுகிறாள்)
மாலதி, அழாதயும். உமக்கும் அவருக்கும் என்ன பிரச்சன யெண்டு சொல்லும், என்னால முடியுமெண்டா உயிரக் குடுத்தும் உம்மை நான் அவரோட சேர்த்து வைப்பன். என்ன நம்பும்.
சொல்லுறன். இனியும் சொல்லாமல் விடேலாது. அவர வெளிநாட்டுக்கு அனுப்புறதுக்கு நான் பட்டபாடு கொஞ்சமில்ல. அதுக்காக நான் அம்மாவோட எத்தின நாள் சண்ட பிடிச்சுச் சாப்பிடாமல்க் கிடத்திருப்பன்.
(flash back) (1566 (8birds.d5u BIT'd)
(பின்னோக்கிய காட்சி ஒலி மாற்றம்)
gsrun Bo (8)
6ზ08
:- தாய், மாலதி,
அம்மா.இண்டைக்குக் கடைசியாக் கேக்கிறன். எனக்கு ஒரு நல்ல முடிவச் சொல்லுங்கோ.
பிள் ள. உனக்கு வயசு காணாது. அறிவில்லாத கத கதைக்காத.வீண் பிடிவாதம் பிடிச்சுப் பழகாத,
அம்மா.இப்ப பிடிவாதம் பிடிக்கிறது நானில்ல. நீங்கள் தான். வீணா என்னச் சாகக் குடுக்கப் போறியள்.
வி சர்க் கதையள் கதைக் காத பிள் ள. நாளைக் கு வேணுமெண்டாலும் உனக்கு, நீ விரும்பினவனைக் கட்டி வைக்கலாம். ஆனா.
அந்தக் கதைய விடுங்கோ அம்மா. கலியாணத்துக்கு இன்னும்
அஞ்சு வருசம் கிடக்கு. நீங்கள் மாமாக்குக் கடிதம் போட்டு, அவரை வெளிநாட்டுக்கு அனுப்போனும்.
கடிதம் போட்டு, ஏதோ ஒழுங்கு செய்யிலாம். இந்த நிலையில
கூடவாத குயில்கள் 53 அகளங்கண்

Page 30
LDITGog
தாய்
LDITGoa
தாய்
மாலதி
LDITGog
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGog
எப்பிடிப் பிள்ள செய்யிறது. சும்மா விளங்காமல் கதைக்கிறாய்.
அம்மா.உந்தச் சாட்டெல்லாம் சொல்லாதேங்கோ. நான் அவரத்தான் கலியாணம் முடிப்பன், பேந்தென்ன. பிறகு செய்யிறத இப்ப செய்ய வேண்டியது தானே.
என்ன நம்பிக்கையில உதவி செய்யிறது. எழுதிப் போட்டுப் போனாலும் மறுவாயில்ல.அதுக்கும் ஒத்து வாறாயில்ல. சும்மா என்னப் போட்டுப் பிச்சுப் புடுங்கிறாய். கொப்பர் இருந்திருந்தா எங்கட நிலமைக்கு அவேட வீட்டப் பற்றி நினைச்சுப் பாத்தாலே கொண்டிருப்பார்.
ஏன்.இப்ப நீங்கள் என்னக் கொண்டு போட்டிட்டு நிம்மதியா இருங்கோவன் (அழுகிறாள்)
மோன.வா.வந்து சாப்பிடு.கடவுள் ஆற்ற தலையில என்ன எழுதியிருக்கிறாரோ எழும்பு.வந்து சாப்பிடு.
எனக்குச் சாப்பாடும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்.
( (Flash back) பின்னோக்கிய காட்சி முடிவு 7ம் காட்சித்தொடர்
(ஒலிமாற்றம்) )
காஞ்சனா.இப்பிடி எத்தின நாள். நான் அம்மாவோட சண்ட பிடிச்சு சாப்பிடாமல் அழுதழுது கிடந்திருப்பன் .ம்.(பெருமூச்சு)
பிறகு என்னண்டு அவர் வெளில போனவர்.
நான் பயித்தியம் பிடிச்சவள் போலக் கோபிக்கிறதயும், சாப்பிடாமல் கிடக்கிறதயும் பாத்திற்று, அம்மா மாமாக்குக் கடிதம் போட்டா. மாமாக்கு கொஞ்சமும் விருப்பமில்ல. கடைசியில வேற வழியில்லாமல் இவர வெளிநாட்டுக்கு அனுப்பிறதுக்கு மாமாதான் முழு உதவியுஞ் செய்தார்.
அப்ப பிறகேன் மாலதி உங்களுக்க பிரச்சன வந்தது.
மிச்சத்தயும் சொல்லுறன் பொறும். அவர் வெளில போறதுக்கு எல்லா ஒழுங்கும் பண்ணிற்றம், அப்பிடி இருந்தும் கொஞ்சக் காசுக்கு கஸ்ரம் வந்திற்று. ஒரு நாள் அவர் என்னட்ட வந்து.
கூடவாத குயில்கள் 54 அகளங்கண்

இடம்
பாத்திரங்கள்
குமார்
LDITGoa
குமார்
LDIT65
குமார்
LDITGog,
குமார்
LDITGog
குமார்
LDITGoa
குமார்
3GITI gé (9) (flash back) பின்னோக்கிய காட்சி ஒலி மாற்றம்
வீடு
:- மாலதி, குமார்.
மாலதி. இன்னும் ரெண்டு கிழமையில நான் வெளில போயிருவன்.எல்லாத்துக்கும் நீர்தான் காரணம். உம்மட பிடிவாதத்தால சாதிச்சுப் போட்டீர். ஆனா இப்பவும் பிரச்சன தீரேல்ல. போறதுக்கு உடுப்புக்கள், இஞ்சத்தேச் சிலவுகள் எண்டு எவளவோ கிடக்கு, உமக்குத் தெரியுந்தானே எங்கட நிலமை. எப்பிடிச் சமாளிக்கிறதெண்டு தெரியேல்ல.
இனி மாமாட்ட வேற உதவி ஒண்டும் கேக்கேலாது.
இவளவுஞ் செய்து போட்டு இன்னும் கொஞ்சக்காசால போகேலாமப் போனா, எல்லாம் வீணாப் போயிரும்.
இப்ப என்ன செய்யிறது குமார்.
அம் மாட் ட ஏதும் நகை யிருந் தாலும் Ꮿl 60Ꮥ [ - 6ll
ஈடுவைப்பம் எண்டு கேட்டா.அப்பர் அது ஈட்டில கிடக்கென்றார். அதுதான் யோசனையாக் கிடக்கு.
என்ர அம்மாட்ட நகையக் கேட்டுப் பாக்கிறத நினைச்சே பாக்கேலாது. காசுக்கு வேற எங்க போறது. என்ர பேரில அப்பா பாங் (Bank)கில போட்டுவைச்ச காசு கொஞ்சமிருக்கு, ஆனா அத இப்ப எடுக்கேலாது. பதினெட்டு வயசு முடிஞ்சாப் பிறகு தான் எடுக்கலாம்.
மாலதி.உம்மட பேரில வவுனியா ரவுணுக்க காணியிருக் கெண்டு சொல்லுறநீரெல்லோ.அதை வித்தாச் சமாளிக்கலாம்.
அப்பா வவுனியாவில வேலை செய்யேக்க, என்ர பேரில வாங்கி விட்ட காணி கிடக்குத் தான். ஆனா அதை விக்கிறதெண்டாச் சும்மா காரியமே, அம்மாட்டச் சொன்னா அடிதான் தருவா.
நாங்கள் என்ன வன்னில போய்க் குடியிருக்கப் போறமே. அங்க காணி சும்மா கிடந்தா, ஆரும் பிடிச்சிருவாங்கள்.
அது உறுதிக் காணி, ஆரும் பிடிக்கேலாது. வவுனியா ரவுணுக்குக் கிட்ட, நல்ல இடம், அதை விக்க ஆருக்குத்தான் மனம் வரும்,
உமக்கு என்ன விட உம்மட வன்னிக் காணிதான் பெரிசெண்டா
கஉவாத குயில்கள் 55 அகளங்கண்

Page 31
மாலதி :-
குமார் 8
LDITGoals :-
காஞ்சனா :-
LDITGoa
காஞ்சனா :-
LDTag :-
காஞ்சனா :-
LDITGoa
இடம் :-
பாத்திரங்கள்
கு. தாய் :-
வைச்சிரும், நான் வெனி நாட்டுக்கும் போகேல்ல.ஒரு இடத்துக்கும் போகேல்ல.
குமார்.ஏன் இப்பிடிக் கோபிக்கிறீர்.
உம்மட்டக் கெஞ்சிக் கேக்கிற நிலையில நான் இருக்கிறன். என்ன செய்ய.நான் வாறன்.
குமார்.குமார்.நில்லும்
(Flash back) 167(360TT d535u BIT'd (p196)
7ம் காட்சித் தொடர் (ஒலி மாற்றம்)
பிறகு என்ன செய்தியள் மாலதி
திரும்பியும் நான் அம்மாவோட சண்டை பிடிச்சு. இஞ்ச கிடந்த காணிய அவசரமா அநியாய விலைக்கு வித்துக் காசு குடுத்து அனுப்பினம். போய்ச் சேர்ந்து அங்க உழைச்சு, பண்டத் தரிப்பில நல்ல வசதியான வீடு கட்டி.இப்ப அவேக்கு என்ன குறை.
அப்ப ஏன் உங்கட கலியாணம் குழம்பினது.
எங்கட பகுதீல சண்ட துவங்கீச்சு. 94 இல நாங்கள் இஞ்ச வந்திற்றம். வீடு வாடகைக்கு எடுத்து இருந்தம். .அவர் அடிக்கடி கடிதம் போடுவார். போன் (Phone) பண்ணுவார்.
அப்ப என்ன பிரச்சனயப்பா.
96 இல அவற்ற தாய் தேப்பன் குடும்பமா இஞ்ச வந்தினம், எங்கட வீட்டதான் மூண்டு நாலு மாசம் இருந்தவினம். பிறகு தனிவீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போட்டினம். பிறகு ஒரு நாள் அவற்ற தாய் எங்கட வீட்ட வந்தா.
35 TIL Egf (10) (Flash back) (up6öT60D60Tu J 35 TL'laf (696Ó LDİTİBAMBLb)
வீடு
:- மாலதியின் தாய், குமாரின் தாய், மாலதி,
குமார் கடிதம் போட்டிருந்தான். காலம போன் பண்ணியும் சொன்னவன். தனக்கு சிற்றிசன் கிடைச்சிற்றாம். இந்த ஆவணியில கலியாணத்துக்கு நாள் வைக்கட்டாம். அது தான் கதைச்சிற்றுப் போவமெண்டு வந்தனான்.
கூடவாத குயில்கள் 56 அகளங்கண்

ہے
மா. தாய்
கு. தாய்
மா.தாய்
கு, தாய்
LIDIT. 5 Tui
கு.தாய்
LDITGoa
கு.தாய்
LDIT6Aog5
LIDIT. 5 Tui
மாலதி
கு.தாய்
LDIT6Ag5
மா.தாய்
மாலதி
இந்த வருசம் புரட்டாசியில நாளில்லயாம். ஆவணியில செய்யோணும். அல்லாட்டி ஐப்பசியில செய்யோனும், சிற்றிசன் கிடைச்சா வந்து போகிலாந்தானே.
இஞ்ச வந்து போகப் பயமாக் கிடக்காம். இந்தியாவில, அல்லாட்டிச் சிங்கப்பூரிலதான் செய்ய வேண்டியிருக்கும்.
ஓம், ஓம் இஞ்ச வந்தா இயக்கங்களிட்டத் தப்பேலாது. பிடிச்சுக் கொண்டுபோய் லெச்சக்கணக்கில காசு கேப்பாங்கள்.
குமார் போன் பண்ணினவன். தனக்கு வவுனியா ரவுணுக்குள்ள வீடுவளவு வேணுமாம்.
பண்டத் தரிப்பில இருக்கிற எங்கட வீடு மாலதிக்குத் தானே.
அங்க இனி எந்தக் காலம் போய் இருக்கிறதோ. அங்க வீடு இருக்கோ இல்லையோ ஆருக்குத் தெரியும்.
(கோபமாக) மாமி! என்ன கதை கதைக்கிறியள். எங்களிட்ட சீதணமே பேசிறியள்.
குமார் தான் சொன்னவன். இதென்ன உலகத்தில இல்லாத வழக்கமே.
நீங்கள் இருந்த நிலமையை மறந் திற்று, நன்றியை மறந்திற்று.(கோபமாக)
பிள்ள.சத்தம் போடாத.நிப்பாட்டு, உதப்பற்றி நீ பேசாத.
(கோபமாக) அம்மா! சும்மா இருங்கோம்மா.நான் பேசாமல் ஆர் பேசுறது. சீதனம் பேச வந்திட்டினம் சீதனம்.நாங்கள் செய்த உதவிய மறந்திற்று சீதனம் கேக்க உங்களுக்கு வெக்கமாயில்லயே.
நீங்கள் உதவி செய்தது சும்மாயே.மாப்பிளயிடிக்கிற ஆசையில செய்தியள். நீங்கள் குடுத்த காசக் கொணந்து மூஞ்சயில எறியிறன். அதவைச்சு ஆர எண்டாலும் கலியாணம் முடீங்கோ.நான் வாறன். இனி இந்த முத்தம் மிதிக்கன்.
முதல்ல அதச் செய்து போட்டுப் பிறகு சீதனம் பேசுங்கோ.
பிள்ள.பிள்ள.உனக்குக் கோவம் வந்தாப் பத்திரகாளியா மாறிருவாய்
ஏணிப்ப இப்பிடி அட்டகாசம் பண்ணினநீ கொப்பற்ற குணம் முழுக்க அப்பிடியே உன்னட்டக் கிடக்கு.
அம்மா! அவேக்குத்தான் கதைக்கத் தெரியுமோ. வவுனியாவில கிடந்த காணியையும் விக்கப் பண்ணிப் போட்டு, இப்ப வவுனியா ரவுணுக்க வீடு வேணுமாம் அவேக்கு.
கூடவாத குயில்கள் 57 அகளங்கண்

Page 32
மா.தாய்
DITGoa
LIDIT. 5 Tui
DITGoa
LDIT.5Tuin
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
tDT603
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா
மாலதி
காஞ்சனா :
LDTGoa
காஞ்சனா
س-2
போகோணும். இப்ப அவேட கை ஓங்கியிருக்கு..எங்கட கோவம் செல்லாது பிள்ள.
நான் இப்ப அவருக்குப் போன் பண்ணிக் கேக்கிறன்.
பிள்ள.மாலதி.அவசரப்பட்டு போன் எடுத்துக் கதைக்காத போய் முகத்தக் கழுவீற்று ஆறுதலாயிரு. பிறகு கதைக்கிலாம்.
அவரோட கதைச்சாத்தான் எனக்கு மனம் ஆறும்.
வெளிக்கிடுறியே.கொஞ்சம் பொறுபிள்ள.இதுகள் ஒண்டும் சொல்வழி கேக்காதுகள். தாங்கள் பிடிச்சதச் சாதிச்சுப் போட்டுத்தான் மற்றவேல பாக்குங்கள்.
(Flashback) Ligór(360TTd535ul BITI'd (p196)
7ம் காட்சி தொடர் (ஒலி மாற்றம்)
அந்தக் கோபத்தோட போய்ப் போன் (Phone) பண்ணிற்றிரோ.
ஓம் காஞ்சனா.என்ன பேசினனெண்டே எனக்கு ஞாபகமில்ல. என்னால பொறுக்கேலாமல் போட்டுது. கோபத்தில ஏசிப் போட்டன்.
அப்ப அவர் ஒண்டும் சொல்லேல்லயே மாலதி.
அவர் ஏதோ சொன்னார். எனக்கு என்ன சொன்னாரெண்டே ஞாபகமில்ல. என்ர கோபம் தீருற வரைக்கும் ஏசீற்று போன (Phone) வைச்சிற்றன்.
அதுக்குப் பிறகு அவர் கடிதம் எழுதேல்லயோ.
இல்லக் காஞ்சனா. ரெண்டு தரம் போன் பண்ணி என்னோட கதைக்கோணுமெண்டு சொல்லியிருக்கிறார். நான் கதைக்கேல்ல.
நீர் கோபம் மாறினாப் போல விபரமாக் கடிதம் போட்டிருக்கிலாமே.
இப்ப மூண்டு மாதமாகுது காஞ்சனா. எனக்கு எழுதப் பயமா இருக்கு. நான் அப்பிடிப் பேசினது பிழையெண்டு தெரியும். ஆனா அப்ப இருந்த மனநிலையில அப்பிடிப் பேசிப் போட்டன்.
மாலதி.இவளவு தானே பிரச்சன. நான் ஏதோ பெரிய பிரச்சன எண்டு நினைச்சன்.
என்ன காஞ்சனா, இப்பிடிச் சொல்லுறீர்
மாலதி.உமக்குக் கோவம் வந்தது நியாயம்தான். உம்மட நிலையில
கூடவாத குயில்கள் 58 அகளங்கண்

LDITGoals -
காஞ்சனா :-
இடம் :-
நானிருந்தா இன்னும் கணக்கப் பேசியிருப்பன். மாலதி.உமக்கும் குமாருக்கும் ஒரு பிரச்சனயும் இல்லத் தானே. நீர் ஒருக்கா குமாரோட போனில கதைச்சுப் பாரும், அல்லாட்டி விரிவாக் கடிதம் போட்டுப் பாரும்.
எப்ப அவர் என்ன விட்டிட்டு வேற கலியாணஞ் செய்யச் சம்மதிச்சாரோ.அதுக்குப் பிறகு அவரிட்டக் கெஞ்சிக் கேட்டு வாழ்ற வாழ்க்க எனக்குத் தேவையில்ல. எனக்கு மாறா ஒரு பொம்பிளையின்ர கழுத்தில தாலி ஏறினா (அழுதபடி) அண்டைக்கே என்ர பிரேதம் விழும்.
மாலதி. . . அழாதயும், உம்மட நல்ல காலம் என்னக் கலியாணம்
பேசினது. எனக்கு நீர் ஒரு உதவி செய்யோணும். குமாரின்ர போன்
நம்பரத்தாரும். நான் இண்டைக்கே கதைச்சுப் பாக்கிறன். உங்களிட்ட
சீதனங் கேட்ட விசயங்கள் அவருக்குத் தெரியாமலும் இருக்கிலாம்.
BESTILEF (11)
வீடு
பாத்திரங்கள் :- காஞ்சனா, குமார்.
காஞ்சனா :-
குமாா -
காஞ்சனா :-
குமார் 3
காஞ்சனா :-
குமார்
காஞ்சனா :-
குமார் -
(ரெலிபோனில் கதைப்பதுபோல எடுக்கவேண்டும்) ஹலோ.ஹலோ.யார் பேசுறது.
நான்.குமார் பேசுறன்.ஆர்.மா.ல.சொறி.ஆர் பேசுறீங்கள்.
ஹலோ குமார், எண் ன மா. ல. எண் டு குறையில நிப் பாட் டீற்றியள். சொல் லி முடியுங் கோ. நான் மாலதியில்ல.காஞ்சனா பேசுறன்.
ஆர் நீங்கள், சொறி.றோங் (wrong) நம்பர் போல.
இல்ல.இல்ல.பிளிஸ் போன வைச்சிராதயுங்கோ, மிஸ்ரர் குமார். என்னத் தெரியாதா. என்ர போட்டோவ உங்களுக்கு அனுப்பிறதாச் சொல்லி உங்கட அம்மா வாங்கினா.அனுப்பியிருப்பாவே.
சொல்லுங்கோ.
என்னத்தான் உங்களுக்குப் பொம்பிள பாத்து பொருத்தம் பாத்து, சீதனம் பேசி முற்றாக்கி இருக்கினம், நானே போனில கதைக்கிறது. ஆச்சரியமா இருக்கும்.
ஆர் கதைக்கிறதெண்டு முதல்ல தெரியேல்ல. அதுதான். இப்ப தெரியும்.என்ன விசயம்
கூடவாத குயில்கள் 59 அகளங்கண்

Page 33
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
குமார்
காஞ்சனா :
நான் ஆர் தெரியுமே. , . உங்களோட உயிருக்குயிரா இருந்த.
பிளிஸ்.கொஞ்சம் பிலத்துக் கதையுங்கோ. விளங்கேல்ல.
நண்பி.
மிஸ்ரர் குமார்.தயவு செய்து இடையில போனக் (Phone) கட் பண்ணிராதேங்கோ. வெளிநாட்டு ஆம்பிளயளிண்டா இஞ்ச உள்ள பொம்பிளயஸ் எல்லாரும் பல்லிளிப்பினம், ஏமாந்து போயிருவினம் எண் டு நினைக் காதேங் கோ. காதலிக் கிறதுக்கு ஒரு பொம்பிள.கலியாணம் முடிக்க வேற பொம்பிள.
மிஸ்.நீங்கள்.நீங்கள்.என்னப்பற்றிப் பிழையா விழங்கீருக்கிறியள்.
மிஸ்ரர் குமார், முழுவிசயமும் தெரிஞ்சுதான் பேசுறன். பாவம் மாலதி, அவளப்போல பொம்பிள.நீங்கள் எத்தின வருசம் தவஞ்செய்தாலும் கிடைக்காது. வீடு வளவு சீதனத்துக்கு ஆசப் பட் டுக் கொண் டு, Ֆ| 6)] 6IT ஏமாத் தப் பாக்கிறியள்.நீங்களெல்லாம்.
காஞ்சனா.கொஞ்சம் நான் சொல்லுறதயும் கேளும். மாலதி போனில என்னக் கேவலமாப் பேசினா, ஆனா. நான் அதுக்காகக்
கோபப்படேல்ல. ஆனா.அம்மாவ கண்டபடி பேசிப் போட்டாவாம். அதத்தான் என்னால தாங்க முடியேல்ல.
ஆம்பிளையின்ர அம்மா எண்டாப் போல வாய்க்கு வந்தபடி கதைக்கேலுமோ.உங்கட அம்மா என்ன கேட்டவ எண்டு உங்களுக்குத் தெரியுமே.
ஏன்.என்ன கேட்டவவாம்.
வவுனியா ரவுணுக்குள்ள வீடு வாங்கிச் சீதனமாத் தரச் சொல்லிக் கேட்டவவாம்
மிஸ்.அம்மா இப்பிடிக் கேட்ட விசயம் எனக்குத் தெரியாது. சத்தியமாத் தெரியாது.
நீங்கள் கேக்கச் சொன்னதெண்டு சொல்லித்தான் கேட்டவவாம்.
இல்லக் காஞ்சனா.நான் அப்பிடிச் சொல்லேல்ல.
இப்ப சொல்லுங்கோ.மாலதி கோபப்பட்டதில என்ன பிழை இருக்கு, அப்பவும் அவள் இப்ப வரைக்கும் அத நினைச்சுக் கவலப்
கூடவாத குயில்கள் 60 அகளங்கண்

uDITñi :- (35
காஞ்சனா :-
குமார் :-
காஞ்சனா :-
குமார் :-
காஞ்சனா :-
குமார் :-
காஞ்சனா :-
பாத்திரங்கள்
காஞ்சனா :
LDITGog
காஞ்சனா :-
LDIT65
பட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.
எனக்கு உண்மையில இவளவு பிரச்சன நடந்த தெண்டு தெரியாது. அம்மா சொன்னதை நம்பீற்றன்.
மாலதி என்னட்ட முழுக்கதையும் சொன்னவள். தான் உங்களைப் பேசினது கூட தனக்கு, என்ன பேசினதெண்டே தெரியாதாம். கோபத்தில பேசிப் போட்டனெண்டு இப்பவும் கவலப் படுறாள்.
சொறி.(sorry) நான் தான் அவசரப்பட்டிட்டன்.
கொம் மா இப்ப ஏன் எண் னக் கலியாணம் பேசினவ தெரியுமே.எனக்கு பெரிய வீடு இருக்கு. பத்து லச்சம் சீதனம் .இஞ் ச உள் ளக் களின் ர ஆடம் பரங்களும் போலிக்கெளரவங்களும் உங்க உள்ளக்களுக்குத் தெரியாது. தாயன்பு எல்லாத்தயும் மறைச்சிரும்.
காஞ் சனா 1. உங்களோட கதைக் கவே எனக் கு வெக் கமாயிருக் கு. நான் ஏமாத்துக் காறனில் ல. கெட்டவனில்ல.நல்ல நேரத்தில போன் பண்ணினிங்கள். தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யோணும்.
சொல்லுங்கோ.என்ன செய்யோணும்.
மாலதியோட நான் கதைக்கோணும்.
சரி.அதுக்கு நான் ஒழுங்கு பண்ணுறன்.
5r F) (12)
கிர்ஞ்சனாவின் வீடு
:- மாலதி, காஞ்சனா,
என்ன மாலதி.என்னவாம் குமார்.போனில பேசச் சொல்லி
சரி.அழுததிருக்கட்டும்.என்ன முடிவு
அவர் என்ன இந்தியாவுக்கு வரட்டாம். தான்வந்து கூட்டிக் கொண்டு போவாராம். விபரமா கடிதத்தில எழுதிறதாச் சொன்னார்
கூடவாத குயில்கள் 61 அகளங்கண்

Page 34
காஞ்சனா :
LDITGoa
காஞ்சனா :
மாலதி
காஞ்சனா :
LDITGoa
காஞ்சனா :
ஒரு தீபாவளி நாளிலதான் எங்கட தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தீபாவளிக்கு அங்க போய்ச் சேர்ந்திற்றா சந்தோசம் தான். (சிரித்தபடி) அங்க போய் என்ன மறந்திராதயும்
(சிரித்தபடி) உம் ம மறக் கேலுமே. எனக்கு வாழ்வு குடுத்த.(அழுகிறாள்)
மாலதி. கைய விடும் எண் ன அழுறிர். ஆனந்தக் கண்ணிரோ.சிரிக்கிற நேரத்தில ஆரும் அழுவினமே.
காஞ்சனா.உமக்கு.உமக்கு.எப்பிடி நன்றி சொல்லுறதெண்டெ தெரியேல்ல.
அங்க ஆரும் நல்ல பொடியனாக் கிடைச்சா எழுதும். உம்மட சிபார்சில நான் கலியாணம் முடிச்சுக் கொண்டு அங்க வந்திருவன்.
(முற்றும்)
கூடவாத குயில்கள் 62 அகளங்கண்

இடம்
கடவாத குயில்கள் (45 நிமிட வானொலி நாடகம்)
பாத்திரங்கள்
தாய் தந்தை நிதிலா
மருமகள்
asTaf (1)
வீடு
பாத்திரங்கள் :- தாய், தந்தை, (LD56ri) நிதிலா
தாய் :- நிதிலா நிதிலா பிள்ள நிதிலா
நிதிலா :- என்னம்மா (சலிப்போடு)
தாய் :- நான் கூப்பிடுறது கேக்கேல்லயே மோன,
நிதிலா :- (சலிப்போடு) கேக்கிதம்மா. என்னண்டு சொல்லுங்கோவன்.
தாய் - அடக்கிடக்கிற கோழிபோல, அறேக்குள்ள இருந்து என்ன பிள்ள
செய்யிறாய்.
நிதிலா :- (சலிப்போடு) என்னம்மா நீங்கள். நிம்மதியா இருந்து புத்தகம்
வாசிக்க விடாயஸ்.
தாய் :- சனி, ஞாயிறில எண்டாலும் வீட்டு வேலயில, கொஞ்சங் கூட மாட உதவிசெய்யக் குடாதே பிள்ள. எப்ப பாத்தாலும் புத்தகமுங் கையுமா இருந்தா, வருங்காலத்தில என்னண்டுதான் காலங் கழிக்கப் போறியோ.
நிதிலா :- அம்மா! அஞ்சு நாளும் பள்ளிக்குடம் போய்க் கத்திக் களைச்சுப் போட்டு, சனி ஞாயிறும் வீட்டில வேல செய்யிற தெண்டா ஏலுமே, கொஞ்ச மெண்டாலும் ஒய்வு வேண்டாமே.
தாய் 2- சனி ஞாயிறில எண்டாலும் வீட்டில நிக்கிறனியே; நாடகம் பழக்க
எண்டும் விளையாட்டுப் போட்டி எண்டும், எக்ஸ்ரா கிளாஸ் (
) வைக்கிற தெண்டும் சொல்லீற்றுப் பள்ளிக்குடம் போயிருவாய் இண்டைக்கு ஏதோ நிண்டிட்டாய்.
கூடவாத குயில்கள் 63 அகளங்கண்

Page 35
நிதிலா 8
நிதிலா :-
தாய்
நிதிலா 3
தாய்
பேந்தென்னம்மா. தெரியுந்தானே, நான் படுறபாடு, பிறகேன் குழப்பிறியள்.
நீ எனக்கொண்டும் உதவி செய்துதர வேண்டாம். அ. அந்தக் கிணத்தடித் தேசி மரத்தில ஒரு தேசிக்காய் புடுங்கிக் கொண்டு வந்து தந்திற்றுப் போயிருந்து புத்தகம் வாசி.
(சலிப்போடு) இந்த அம்மாவோட பெரிய கரச்சல். சும்மா இருக்க விடா(புறுபுறுத்தபடி) -
நானும் முப்பத்தைஞ்சு வருசமா ரீச்சரா இருந்து, பள்ளிக்குடம் போனதுந்தான் குடும்பத்தப் பாத்ததுந்தான். உங்களுக்கு இட்ப துரும்பளவு வேல செய்யவும் ஏலாமல் இருக்கு.ம்.(பெருமூச்சு) அம்மாட அருமை, அம்மா இல்லாட்டித்தான் தெரியும்,
சரி சரி புறுபுறுக்காதேங்கோ. புடுங்கிக் கொணந்து தாறன். (மரத்தடியில் நின்று கொண்டு) அம்மா, அம்மோய்! (உரத்து) நல்லாப் பழுத்த பழமாப் புடுங்கட்டோ, காயாப் புடுங்கட்டோ,
கீழ விழுந்து கிடக்கும் பார்புள்ள.
ஒண்டயுங் காணேல்ல. அ. அங்க அடி மரத்துக்குப் பக்கத்தில பழமொண்டு கிடக்கு என்னண்டு எடுக்கிறது. (மெதுவாக தனக்குத் தானே) அம்மா, அம்மோய் அடிமரத்துக்குப் பக்கத்தில ஒரு பழம் விழுந்து கிடக்கு. என்னண்டம்மா எடுக்கிறது. பூந்து போகேலாது. முள்ளுக்குத்துமில்லே (உரத்து)
பிள்ள. தோட மரத்தில ஒரு தடி சாத்தியிருக்குப் பார். அதால தட்டி எடன்,
φιb............ φίδι. .......... ம். இந்தாங்கோ நல்ல பழம்.
என்ன பிள்ள கையில ரெத்தம், முள்ளுக் குத்திப்போட்டே இஞ்ச கைய நீட்டு.
நிதிலா :- முள்ளுக் கீறிப்போட்டுது. கடுக்குது.
தாய் -
தாய்
தாய் -
சின்னக் கீறல்தான், அது மாறீரும், மோன இரன் உதில சொல்லுறன்.
அம்மா எனக்கு வேல கிடக்கம்மா.
என்ன, புத்தகம் வாசிக்கிற வேலதானே, அது பிறகு வாசிக்கிலாம், இப்ப இரன் உதில.
சரி என்னண்டு சொல்லுங்கோ.
படிப்புப் படிப் பெண்டு பீ.ஏ (B. A) படிச்சு முடிக்கும் வரைக்கும்
கஉவாத
குயில்கள் 64 அகளங்கண்
 

நிதிலா :-
தாய் -
நிதிலா ?-
தாய் 8
தாய் -
குசினிப் பக்கம் தலை காட்டாமல் தப்பீற்றாய். பிறகும் ரீச்சர் வேலைக்குப் போனதோட சமையலிண்டா என்னண்டே உனக்குத் தெரியாது. சனி ஞாயிறு வீட்டில நிக்கிற நாட்களில யெண்டாலும் கொஞ்சம் சமயல் வேலயப் பழிகினா என்ன.
அம்மா! உதெல்லாம் சரி வராது. நான் வெளில போகப் போறன். பிறகேன் சமையல். சட்டி பான கழுவிறதுக்கே படிச்ச நான்.
எங்க போனாலும் சமைக்காமல் சாப்பிடுலாமே.
அதெல்லாம் சாப்பிடலாம். இவளவு நாளும் சமைக்காமல்த்தானே சாப்பிட்ட நான். இனியும் அப்பிடித்தான்.
பிள்ள. நானும் 35 வருசமா ரீச்சரா இருந்திற்றுத்தான் பெஞ்சன் எடுத்தனான். 15, 16 வயசிலயே சமைக்கப் பழகின படியாத்தான் இண்டைக்கும் நிம்மதியாக் குடும்பம் நடத்திறன்.
SED Lb LDT.......... உந்தப் பாரதமெல்லாம் இருக்கட்டும். நான் பெரியண்ணைக்குக் கடிதம் எழுதப் போறன். என்ன பதில் எழுதிறது. சொல்லுங்கோ.
நீ என்ன மோன கேக்கிறாய்.
பெரியண்ண அங்க ஆரையோ பாத்துவைச்சி ருக்கிறாராம். விருப்பமிண்டா தான் கதைச்சு ஒழுங்கு பண்ணிறனெண்டு எழுதியிருந்தவரல்லே. அதுக்குத்தான் என்ன பதில் எழுதிற தெண்டு கேக்கிறன்.
பிள்ள. உனக்கேன் மோன வெளிநாட்டு மாப்பிள, உனக்கென்ன, படிப்பிருக்கு, நல்ல உத்தியோகமிருக்கு மாளிகபோல இந்த வீடிருக்கு, அதுகள விட்டிட்டு, வெளிநாட்டில போய் அங்க என்ன வாழ்க்கை வாழப் போறாய், பெரிசா,
S|LbLDIT........ பெரியண்ண கனடாவில குடும்பத்தோட சந்தோசமாத் தானே இருக்கிறார்.
அவன் ஆம்பிள. எங்கயெண்டாலும் சந்தோசமா வாழலாம்
என்னம்மா கதை இது, அண்ணேட மனிசி, அண்ணி பொம்பிளதானே. அவ இஞ்சயிருந்து போய் அங்க ரெண்டு பிள்ளயளயும் பெத்து சந்தோசமாத் தானே இருக்கிறா. அவ என்ன இஞ்ச வசதியில்லாமலிருந்தே போனவ.
உன்னோட கதைச்சு வெல்லேலாது.
கூடவாத
குயில்கள் 65 அகளங்கண்

Page 36
நிதிலா :- அம்மா! எனக்கு இஞ்ச கலியாணம் முடிக்க விருப்பமில்ல. பெரியண்ணைக்குக் கடிதம் போடுவம் அவர் அங்க ஒழுங்கு பண்ணட்டும்.
தாய் - கொப்பர் வரட்டும் நீ அவரிட்டக் கதைச்சுக் கொள். எனக்குக்
கரச்சல் குடுக்காத,
நிதிலா :- அம்மோய், என்ர அம்மா இல்லே. நீங்கள் தான் கதேங்கோ.
நான் மாட்டன்.
தாய் :- நீ தானே அவற்ற செல்லம், நீயே கதையன்.
நிதிலா :- அம்மா. பிளிஸ் அம்மா, என்ர ஆசையம்மால்லே.
தாய் - கொப்பர் தான் வாறார் போல கிடக்கு (கேற்திறக்கும் சத்தம்) கேற்
திறந்து கேக்கிது.
நிதிலா :- ஒமம்மா அப்பாதான் வாறார்.
தந்தை :- சரியான வெயில், கடும் புழுக்கம், வெளில வெளிக்கிடேலாது.
தாய் - ஏனப்பா வெயில் நேரத்தில வெளில அலையிறியள். பேசாமல்
சிவனேண்டு வீட்ட கிடக்க வேண்டியதுதானே.
தந்தை :- கந்த சாமிக்கு வீட்டு நிலையம் எடுக்கப் போனாப்போல வெயிலாப்
போட்டுது.
தாய் :- நிலையம் எடுக்கக் கூப்பிடுறவங்கள் ஏதும் வாகனம் ஒழுங்குபண்ணிக் கெளரவமாக் கூட்டிக் கொண்டு போய்க், கூட்டிக் கொண்டு வந்து விடவேண்டியது தானே. இப்பிடி சயிக்கிளில உழக்கித் திரிய உங்களால ஏலுமே,
தந்தை :- சாத்திர காறருக்கு அவளவு மரியாத குடுத்தா ஏன் இப்பிடி
இருக்கிறம்.
தாய் - முந்தித்தான் சாத்திரம் பாக்கிறதெண்டும், வீட்டு நிலையம், கிணத்து நிலையம் எடுக்கிற தெண்டும் வெயில் வெயிலா அலைஞ்சியள். இப்ப எங்களுக்கு என்ன குறை. இனி யெண்டாலும் கொஞ்சம் ஓய்வா இருக்கக் கூடாதே.
தந்தை :- கம்பிளி மூட்டயெண்டு கறடியப் பிடிச்ச கததான் இந்தத் தொழிலும்; ஓய்வெடுக்கச் சனங்கள் விடுங்களே, பசிக்குது. நான் குளிச்சிற்று வாறன்.
நிதிலா :- (பூனை கத்தும் சத்தம்) அம்மா. அம்மோய். அப்பான்ர (bag)
பாக்குக்குள்ள ஏதோ கத்துது, பூனச் சத்தம் போல கிடக்கு.
கூடவாத குயில்கள் 66 அகளங்கண்

தந்தை
நிதிலா
தாய்
தந்தை
இடம்
ஓம். ஓம். சொல்ல மறந்திற்றன். பாக்குக்குள்ள ரெண்டு பூனக் குட்டியள் இருக்கு, பிள்ள அதுகள எடுத்து வெளில விடு.
நான் தொடன். (பூனை கத்துகிறது) அம்மா, அம்மோய், இஞ்ச வாங்கோம்மா.
வாறன் பொறுபிள்ள (பூனைகத்தும் சத்தம்) எங்கயப்பா பிடிச்சியள் இதுகள.
றோட்டில நிண்டுதுகள், வடிவான குட்டியள். பாத்தன் ஆசையாயிருந்துது கொண்டு வந்திற்றன்.
ஆர் கொணந்து றோட்டில விட்டுதுகளோ, இஞ்ச என்ன எலியிருக்கே. ஏன் சும்மா பிடிச்சுக் கொணந்தியள்.
அப்பிடியே பாக்கில (bag) போட்டுக் கொண்டு போய, வெளில கொட்டிவிட்டா, அதுகள் போயிரும்.
அதுகள் இஞ்ச நிக்கட்டும். நாங்கள் வளப்பம்.
என்ன, ரெண்டும் பெட்டக் குட்டியளே.
வடிவாப் பாரப்பா:- ஒண்டு கடுவன், ஒண்டு பெட்ட
பாத்துத்தான் பிடிச்சு வந்திருக்கிறியள்.
(பூனை கத்தும் சத்தம்) அதுகளுக்கு பால் கரைச்சு வை. நல்லாக் குடிக்கட்டும்.
srru" gé) (2)
66,
பாத்திரங்கள் :- தாய், தந்தை,
தாய் - உதென்ன போத்தலுக்க; பாலே,
தந்தை - பூனக் குட்டியள் பாவம், கொஞ்சக் காலத்துக்குப் பால் வேண்டி
606), Lub.
தாய் - உங்களுக் கென்ன பயித்தியமே.
தந்தை :- இதென்னப்பா இது. பூனக் குட்டிக்குப் பால் வேண்டி வைச்சாப்
பயித்தியமே.
தாய் - இனி உதோட தான் மினக்கடுவியள்.
கூடவாத குயில்கள் 67 அகளங்கன்

Page 37
தந்தை :-
தந்தை :-
தாய் -
தந்தை :-
தாய் :-
தந்தை :-
தந்தை :-
தநதை -ே
கஉவாத
நல்ல வடிவான குட்டியள் என.
வடிவான குட்டியளெண்டா றோட்டில கொணந்து விடுகினமே. உங்களுக்கு குழந்தப் பிள்ளையஸ், குட்டிநாயஸ், பூனக் குட்டியளக் கண்டாக் காணும் சோறும் வேண்டாம்.
இஞ்சேரும், இப்ப கொஞ்சக் காலமாத்தான் எனக்கு இப்பிடி ஆசையள் வந்திருக்கு. எங்களுக்கு அஞ்சு பேரப்பிள்ளயஸ் இருந்தும், இண்ட வரைக்கும் ஒண்டக் கூடக் கண்ணாலயுங் காணேல்ல.
ரெண்டு கனடாவில, மூண்டு யாழ்ப்பாணத்தில. போட்டோவில பாத்துக் கற்பனையில கொஞ்சினது தான் மிச்சம்.
பேரப்பிள்ளயளத் தூக்கிக் கொஞ்சோனும், அதுகளோட விளையாடோனும் எண்டு, எவளவு ஆசை யாயிருக்கு, யாழ்ப்பாணத்தில இருக்கிற மருமோளிண்டாலும் பிள்ளையளக் கூட்டிக் கொண்டு வந்து போகேலாதே. எத்தின கடிதம் போட்டிட்டம் வரச் சொல்லி.
மூண்டு பிள்ளயளயுங் கொண்டு இஞ்ச வந்து போறண்டா இப்பத்தே நிலமயில சாதாரண காரியமே. கிளாலிக் கடல் தாண்டி இரவிரவாப் பிரயாணஞ் செய்யோணும். இனி, எவளவு கஸ்ரங்கள்.
அவ நினைச்சா வந்திருக்கிலாம் சின்னவன் அவவுக்குக் கடிதம் போட்டவனாம், வவுனியாவுக்கு வந்து போகச் சொல்லி.
அவனுக்குத் தெரியுமே இஞ்சத்தே நிலம; அவன் சுவீஸில, அவ யாழ்ப்பாணத்தில. ம்.(பெருமூச்சு)
சரி. அதுக்கெல்லாம் குடுத்து வைச்சிருக்கோணும். இந்தா இந்தப் பூனக் குட்டிய நீ தூக்கிக் கொஞ்சு, மற்றத நான் கொஞ்சுறன்.
பூனக் குட்டியக் கொஞ்சிற திருக்கட்டும் இப்ப நிதிலாவின்ர பிரச்சினைக்கு என்ன செய்யிறது.
என்ன பிரச்சினயப்பா.
பெரியவன் கடிதம் போட்டிருந்தவனில்லே. அங்க ஒரு மாப்பிள பாத்திருக்கிறண்டு.
மாப்பிளய அவன் பாத்தாப் போதுமே, சாதகம் பாத்து பொருந்தோணுமில்லோ,
சாதகம் பொருந்தினாப் போல, அவள கனடாக்கு அனுப்பப் போறியளே.
எனக்கிண்டா கொஞ்சங்கூட விருப்பமில்ல. ஏன். அவளுக்குப்
குயில்கள் 68 அகளங்கண்

தாய் C
தந்தை :-
தந்தை :-
தாய் -
தந்தை :-
தநதை -ே
தாய் :-
தந்தை :-
தாய் :-
போக விருப்பமாமே.
அவள். நான் வெளில போகப் போறனெண்டு, நாண்டு கொண்டு
அவளுக்கு இஞ்ச என்ன குற. நல்ல படிப்புப் படிச்சிருக்கிறாள். நல்ல வேல பாக்கிறாள்.
இந்தவிடு. 6) 6T6........... எல்லாம் அவளுக்குத்தானே. இஞ்ச ஒரு மாப்பிளயப் பாத்துச் செய்து வைச்சா எங்கட கண்ணுக்குள்ள இருப்பாள்.
நானும் அதத்தான் நினைக்கிறன் இஞ்ச எங்கயும் ஒரு நல்ல பொடியனாய் பாத்துச் செய்து வைச்சா, பேரப்பிள்ளயளோட எங்கட பொழுதும் போகும்.
சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லேக்குள்ள தான் நிக்கிறியள். பேரப்பிள்ளயஸ் பேரப்பிள்ளையஸ் எண்டு எப்ப பாத்தாலும் அதே நினைவு தான்.
ஏனப்பா உனக்கு ஆசையில்லயே.
LĎ......... (பெருமூச்சு) ஆருக்குத் தான் ஆசையிருக்காது. பிள்ளயளவிடப் பேரப்பிள்ளயளில தான் ஆசை கூடவரும்.
இஞ்சே, நீ அவளிட்டச் சொல்லு, வெளிநாட்டு மாப்பிள வேண்டாம் எண்டு. பெரியவனுக்கும் கடிதம் போடு.
பெரியவன்ர கலியாணம் கனடாவில நடந்துது. சின்னவன்ர கலியாணம் பிரச்சன காலத்தில யாழ்ப்பாணத்தில நடந்துது. நிம்மதியில்லாமல் நிண்டு செய்து வைச்சம். இவளின்ர கலியாணத்தயெண்டாலும் நாலு இன சனத்துக்குச் சொல்லிச் செய்து வைப்பமெண்டா. அதுக்கும் சரிவராது போல இருக்கு.
நீ கண்டிப்பாய்ச் சொல்லு, இஞ்ச வவுனியாவுக்குள்ள ஒரு மாப்பிள UITÜLJLD.
அவளப் பற்றித் தெரியுந்தானே உங்களுக்கு. அவள் நினைச்சா நினைச்சதச் சாதிக்காமல் விடாள். பிடிச்சிராவி, பாப்பம் சொல்லிப் பாக்கிறன்.
கஉவாத
குயில்கள் 69 அகளங்கண்

Page 38
இடம் :-
BITu"-s“) (3)
வீடு (குசினி)
பாத்திரங்கள் :- தாய், (மகளிர்) நிதிலா,
நிதிலா :- அம்மா. அம்மோய்.
தாய் :- என்ன பிள்ள தடவுறாய்.
நிதிலா :- தேங்காய்ப் பாதியத் தாங்கோவன். நான் திருவித் தாறன்.
தாய் :- என்ன புதினமாக் கிடக்கு. இந்தா கைகவனம் பாத்துத் திருவு
(3LDIT60T.
நிதிலா :- அப்பா என்னவாம். கேட்டனிங்களே.
தாய் :- என்னத்தப் பிள்ள.
நிதிலா ?- என்னத்தையோ, என்னம்மா நீங்கள் (சிணுங்கியபடி) பெரியண்ண கடிதம்
போட்ட விசயந்தான்.
தாய் :- கொப்பருக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லப் பிள்ள, அவர், இஞ்ச
எங்கயும் பாத்துச் செய்வமிண்டு சொல்லுறார்.
நிதிலா :- எனக்கிஞ்ச இருக்கேலாது. (கோபமாக) அப்பா இஞ்ச ஆரையும் பாத்து, அவர் வளக்கிற பூனக்குட்டிக்குக் கட்டி வைக்கட்டும். நான் மாட்டன்.
தாய் :- பிள்ள, கொஞ்சம் பொறுமையாக் கத புள்ள இந்தக் கோவந்தானே
பொம்பிளயஞக்காகா தென்றது.
JÉ5a)T :- 9||LDLDIT அவர் வாறபோற ஆக்களுக்குச் சாத்திரம் பாத்துக் கொண்டும். வீட்டுக்கும், கடைக்கும், கிணத்துக்கும் நிலையம் எடுத்துக் கொண்டும் திரியட்டும், என்னப்பற்றி அவருக் கென்ன
566).
தாய் - ஊர், உலகம் முழுக்க அவரிட்டச் சாத்திரம் பாக்க வருது. அவருக்குத் தெரியாதே உனக்கு எப்ப கலியாணம் நடக்கும். எங்க நடக்கும். எப்பிடியான மாப்பிள வரும் எண்டு.
நிதிலா :- அதுதான் பெரியண்ண கடிதம் போட்டிருக்கிறாரே பிறகென்ன.
தாய் - உன்னையும் வெளில அனுப்பிப் போட்டு, நாங்கள் ரெண்டு பேரும்
தனிய இஞ்ச இருந்து என்ன செய்யிறது.
கூடவாத குயில்கள் 70 அகளங்கண்

நிதிலா :- அதுக்கு நானென்ன செய்யிறது. நான் இஞ்ச நிண்டு. என்ர வாழ்க்கயப்
பாழாக்கிறதே
தாய் :- இந்த நாட்டில இருக்கிற பொம்பிளயளின்ர வாழ்க்கை யெல்லாம் பாழாயே போகுது, சரி, நான் கொப்பரிட்டக் கதைக்கிறன். வேற என்ன செய்யிறது. நீ பிடிவாதம் பிடிச்சியெண்டா கடவுள் வந்தாலும் மாத்தேலா தெண்டு தெரியுந் தானே.
g5rIn" Bool (4)
இடம் - வீடு
பாத்திரங்கள் :- தாய், தந்தை.
தாய் - (கார்க் கோன் (Hom) சத்தம்) என்ன கோன் சத்தம் கேக்கிது. கேற்றடியில கார் நிக்கிது. ஆரது. (பதட்டத்தோடு) என்னப்பா. என்னப்பா இது, என்ன நடந்தது. காலில என்ன செய்தது. கடவுளே, பெரிய கட்டாப் போட்டிருக்குது. என்னண்டு சொல்லுங்கோவன்
தந்தை :- சத்தம் போட்டு. ஊரக் கூட்டாத,
தாய - என்ன நடந்தது, கால்ல பெரிசாக் கட்டீருக்கு.
தந்தை -ே ஆ. அதில அமத்தாத பொறு. பொறு.
தாய் - இஞ்சால இதில இருங்கோ. கவனம் என்னப்பா முறிஞ்சு
கிறிஞ்சு போட்டே. (கவலையோடு)
தந்தை :- ஒண்டுமில்லயப்பா சொல்லுறன் கேளன.
தாய் - எக்ஸ்றே (X, Ray) எடுத்துப் பார்த்த நீங்களே.
தந்தை :- நீ சொல்ல விட்டாத்தானே சொல்லுறதுக்கு. கணபதிப் பிள்ளயின்ர வீட்டுக்கு நிலைய மெடுக்கப் போனனெல்லோ, ஆ. நோகுது. தொடாத,
தாய் - விடியக் காலம வந்து ஒட்டோவில கூட்டிக் கொண்டு போனது
இதுக்குத் தானோ.
தந்தை :- ஒட்டோக் காறன் ஒடுற ஓட்டம் தெரியுந்தானே. ஒரு பள்ளிக்குடப் பிள்ள குறுக்கால ஓடீற்றெண்டு வெட்டி விட்டான், பின்னால வந்த பஸ் ஓட்டோவில அடிச்சிற்றுது.
தாய் وإليك -ة............... பின்ன
கூடவாத குயில்கள் 71 அகளங்கண்

Page 39
தந்தை :- நல்ல காலம். பிள்ளைக்கு ஒண்டுமில்ல. நான் தான் விழுந்து போனன்.
கால்ல மண் அரைச்சுப் போட்டுது.
தாய் - இஞ்ச கையிலயும் காயம்.
தந்தை :- அது சின்னக் காயம். கால்தான் கொஞ்சம் கடுக்குது.
தாய் - முறிவு கிறிவு இல்லயாமோ. கடவுளே. இந்த வயசில கால்
முறிஞ்சு கிறிஞ்சு போனா. கதிராம சுவாமி
தந்தை :- ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ் றே (XRay) எடுத்துப் பாத்து, ஒண்டும் முறியேல்ல எண்டுதான் மருந்து கட்டி விட்ட வங்கள். ரெண்டு மூண்டு கிழமையில சரிவந்திடுமாம்.
தாய் - உண்மையச் சொல்லுங்கோப்பா இஞ்ச முழங் கால்ல இப்பிடிக்
கட்டீருக்கு
தந்தை :- அது. மூட்டு சாடயா விலகியிருக்குது. பிறகு சரியாப் பொருத்திக்
கட்டுப் போட்டிட்டாங்கள். இனிப் பயமில்ல.
தாய் - கடவுளே, இந்தளவில தப்பீற்றியள். (அழுகிறாள்) ஏதுமொண்டிண்டா
நான் என்ன செய்வன்.
தந்தை - பிள்ளயளுக்கு ஒண்டும் எழுதிப் போட்டிராத, அதுகள் அங்க இருந்து
கவலப் படுங்கள்.
தாய் :- இவள் நிதிலா நிண்டிருக்க எவளவு உதவியாயிருக்கும். அவளயும்
அனுப்பீற்றியள்.
தந்தை :- இஞ்சேரும் போய் புளித்தண்ணி கரைச்சுக் கொண்டாரும்.
களைப்பாயிருக்கு குடிச்சுப் பாப்பம்.
தாய் - இந்தக் கட்டில்ல அப்பிடியே சாஞ்சு படுங்கோ.
தந்தை -ே ஓம். ஓம். எனக்குப் பெரிசா ஒண்டுமில்லயப்பா. நீ போய் கரைச்சுக் கொண்டு வா, பிள்ளயஸ் எல்லாம் வெளி நாட்டில. நாங்கள் வவுனியாவில. ஒரு கஷ்ரம் துன்பமெண்டா உதவிக்கு ஆரும் புறத்தியாரத்தான் கூப்பிடோணும். தூக்கி நிறுத்த ஆளில்ல காசிருந்தென்ன. ம். (பெருமூச்சு விடுகிறார்).
தாய் - நான் சொல்லச் சொல்லக் கேக்காமல் நிதிலாவையும் கனடாக்கு
அனுப்பீற்றியள்.
தந்தை :- அவள் போப்போறனெண்டு நாண்டு கொண்டு நிக்கிறாள். நானென்ன
இழுத்துப் புடிச்சு மறிக்கிறதே.
தாய் - ஏன் நீங்கள் நினைச்சா மறிச்சிருக்கேலாதே.
கூடவாத குயில்கள் 72 அகளங்கண்

தந்தை
இடம்
2
அவளுக்கு வெளிநாட்டுப் பலன்தான் நடக்குது. நான் எல்லாத்தயும் பாத்துத்தான் அனுப்பின நான். பெரியவன் அனுப்பின சாதகமும் பொருந்தீற்று. அவளுக்கும் விருப்பம், பிறகு வைச்சிருந்து என்ன செய்யிறது.
சரி அததுகளின்ர தலையில என்னென்ன எழுதியிருக்கோ அப்பிடி அப்பிடித்தானே நடக்கும், நாங்களென்ன செய்யிறது. இந்தாங்கோ குடீங்கோ.
நான் குடிப்பன் கையில தா.
நான் பருக்கிவிடுறன் குடீங்கோ,
நானென்ன குழந்தப் பிள்ளயே பருக்கிறதுக்கு, இஞ்ச கையில தாவன்.
வயசு போயிற்றாப் புருசனுக்கு மனிசி குழந்த மனிசிக்குப் புருஷன் குழந்த, நீங்கள் சரிஞ்சு படுங்கோ. நான் பருக்கி விடுறன்.
g5 Tgif (5)
வீடு
பாத்திரங்கள் :- தாய், தந்தை
தந்தை :- இஞ்சேரும், அந்தப் பஞ்சாங்கத்த ஒருக்கா எடுத்துத் தாரும்.
தாய் - ஏனப்பா இப்ப பஞ்சாங்கம் சொஞ்ச நாளைக் கெண்டாலும் உதுகள
விட்டிட்டுச் சும்மா கிடக்கேலாதே உங்களுக்கு.
தந்தை :- இல்ல. ஏன் இப்ப எனக்கு இப்பிடிக் காயம் வரோணுமெண்டு யோசிச்சுப் பாத்தன். என்ர சாதகப்படி இப்ப ஒரு குற்றமுமில்லயே. அதுதான் கிரக நிலையளப் பாப்பம் எண்டு.
தாய் - சும்மா விட்டிட்டுப் படுங்கோ, நேரம் பத்து மணியாகுது.
தந்தை :- எனக்கு நித்திர வரேல்ல. பகல் முழுக்க நித்திர கொண்டது தானே,
நீ ஒருக்கா எடுத்துத் தாவன்.
தாய் - சரி. இருங்கோ எழும்பாதேங்கோ, எடுத்துத் தாறன்.
தந்தை :- அப்பிடியே பேனையையும் ஒரு பேப்பர்த் துண்டையும் எடுத்துத்
தா
தாய் - இந்தாங்கோ; எனக்கு அலுப்பாயிருக்கு. நான் படுக்கப் போறன்.
தந்தை :- ம். எனக்கு நல்ல பலன் தானே நடக்குது. உன்ர பலனும்
கூடவாத குயில்கள் 73 அகளங்கண்

Page 40
தாய் =
தந்தை :-
தாய் :-
தந்தை :-
தாய் :-
தந்தை :-
தாய் :-
தந்தை :-
தந்தை :-
நல்லாத்தான் இருக்கு, கனடாவில இருக்கிற பெரியவன்ர பிள்ளயளின்ர பலன் கிலன் கூடாதோ, கனடாவில இருக்கிற பேரப்பிள்ளயளின்ர பலன் வவுனியாவில வேல செய்யுமே, சில வேளை யாழ்ப்பாணத்தில இருக்கிற சின்னவன்ர பிள்ளையளின்ர பலன் ஏதும் சரியில்லயோ. ம் ஒண்டுமா விளங்கேல்ல.
உத விட்டிட்டுச் சும்மா படுங்கோப்பா. ஏதோ இந்தளவில தப்பினது நல்ல காலந்தானே.
(பூனை கத்தும் சத்தம்) எங்கட பூண் நேற்றுத்தானே குட்டி போட்டது. சிலவேள அந்தப் பூனைக்குட்டியளின்ர பலன் தான் இப்பிடிப் படுக்கையில போட்டுதோ. θ".......... பூன, குட்டி போட்டா, எனக்குப் பலன்
உங்களுக்கென்ன பயித்தியமே பிடிச்சிருக்கு. பூன குட்டி போட்டா வீட்டுக்காரருக்குப் பலன் செய்யுமே.
சில வேள அப்பிடியும் இருக்கும். ஒருக்காக் குறிச்சுப் பாப்பம். நேற்று ராத்திரியெல்லோ குட்டி போட்டது. என்ன நேரமிருக்கும்.
நேற்று ராத்திரியோ முந்தநாள் ராத்திரியோ ஆர் உதப் பாத்தது.
நேற்று ராத்திரித்தான். நேரமென்னண்டு எடுக்கிறது. சந்திரன வைச்சுக் குறிப்பம், நட்சத்திரம் நேற்று முழுக்க மாறேல்ல.
உண்மையில உங்களுக்குப் பயித்தியந்தான் பிடிச்சிருக்கு. நாய் குட்டி போடும். பசு கண்டு போடும், ஏன் எலியள், பேன்கள். கரப்பொத்தான்கள் எல்லாத்துக்கும் மினைக் கட்டுச் சாதகம் குறிச்சுப் பாருங்கோவன்.
பகிடி பண்ணாத, இஞ்ச பார். இந்தப் பூனக் குட்டியள் ஏழரைச் சனி நடுக் கூறில பிறந்திருக்குதுகள், பத்தில வியாழன். அதுதான் என்னப் படுக்கையில போட்டிட்டிது.
பத்தில வியாழனோ. அப்ப பதிய விட்டு எழுப்பீருமோ. எங்க கனடாக்குக் கலைக்குதோ. சுவீசுக்குக் கலைக்குதோ, பேசாமல் படுங்கோ.
சரி படுப்பம். எனக்கு நித்திர வராது. நீ நித்திர கொள்ளு. (பூனை கத்தும் சத்தம்) கொம்மா, கொம்மா.
616öT60TJLUT மணிசர நித்திர கொள்ள விடுறியளில்ல. இருமல்க் குழிசயளப் போட்டுட்டுப் படுக்க மயக்கமா இருக்கு.
நிதிலா புள்ளப் பெத்திருந்தா அவளுக்கு என்னென்ன விதமாச் சாப்பாடுகள், பராமரிப்புகள் எல்லாம் செய்திருப்பம். ம். (பெருமூச்சு)
கஉவாத
குயில்கள் 74 அகளங்கண்

தாய் :- அவள் சொல்வழி கேக்காமல் ஒற்றக் கால்ல நிண்டு கனடாக்குப் போட்டாள். அவளின்ர கலியான வீட்டக்கூட நாங்கள் காணேல்ல. பிறகு புள்ளப்பெறுவ எங்க பாக்கிறது.
தந்தை :- இஞ்சேரும். நான் ஒண்டு சொல்லுறன். பயித்தியமெண்டு
சொல்லாமல் செய்யோனும்,
தாய் - சொல்லுங்கோ.
தந்தை :- நாலஞ்சு நெத்தலிக் கருவாடு போட்டு நல்ல ஒரு பால்க் கஞ்சி
காய்ச்சி .
தாய் - சரியப்பா, நாளைக்குக் காய்ச்சித்தாறன். உங்களுக்கு வயசு போகப்
போகக் குழந்தப் பிள்ளக் குணந்தான் வருது.
தந்தை :- எனக்கில்லயப்பா, நல்லா மணக்க மணக்க, நெத்தலிக் கருவாடு நாலஞ்சு போட்டு கஞ்சிகாய்ச்சி, அந்தப் பூனைக்கு வைப்பம், பாவம் குடிக்கட்டும். குட்டி போட்ட பூனையில்லே.
தாய் - நான் தானே சொன்னன், உங்களுக்குப் பயித்தியந்தான் புடிச்சிருக்கு
தந்தை - எழும்பு. நானும் வாறன். நான் வேணுமெண்டாத் தேங்காய்
திருவித்தாறன்.
தாய் :- உங்களுக்கு என்னப்பா நடந்தது. ஏன் இப்பிடி விசர்த்தனமாக்
கதைக்கிறியள்.
தந்தை :- எனக்கு விசருமில்ல. ஒண்டுமில்ல. எழும்பு எழும்பி, கஞ்சி காய்ச்சு. பாவம் புள்ளப் பெத்த பூன. நல்லாக் குடிக்கட்டும்.
g5 Tgif (06)
இடம் - வீடு
பாத்திரங்கள் :- தாய், தந்தை, மருமகள்,
தாய் - (பூனை கத்தும் சத்தம்) அங்க பூனக் குட்டியளோட என்ன
செய்யிறியள், தேத்தண்ணி குடிங்கோவன்.
தந்தை :- இஞ்ச கொண்டாவன் குடிப்பம். பாத்தியே நல்ல வடிவான குட்டியள்.
தாய் - சும்மா அதுகள ஏன் தூக்கி அளையிறியள். உங்களுக்கு கொஞ்சங்
கூட அருவருப்பில்லயே.
தந்தை :- என்ன அருவருப்பு. நாய், பூனை, இதெல்லாம் வீட்டு மிருகங்கள் தானே. வெள்ளக் காறர் மடீல வைச்சுக் கொஞ்சிக் கொஞ்சி
கூடவாத குயில்கள் 75 அகளங்கண்

Page 41
தாய் 8
தந்தை :-
தநதை -ே
தாய் :-
தந்தை :-
தாய் -
தந்தை :-
தந்தை :-
தாய் 8
தந்தை :-
தாய்
வளக்கிறாங்கள்.
பின்ன. நீங்களும் மடீல வைச்சுக் கொஞ்சுங்கோவன்.
அஞ்சு பேரப்பிள்ளையஸ் இருந்தும் ஒரு பேரப்பிள்ளையக் கூட நான் தூக்கிக் கொஞ்சேல்ல. கண்ணாலயும் காணேல்ல. இந்தப் பூனக் குட்டியள் தான் எனக்குப் பேரப்பிள்ளையன். இதுகளத்தான் தூக்கிக் கொஞ்சி வளக்கப் போறன்.
நான் தானே சொன்னன் உங்களுக்கு.
பயித்தியம் பிடிச்சிருக் கெண்டு சொல்லு. இஞ்சே. நாங்கள் இந்த வீட்டை ஆருக்கும் வாடகைக்குக் குடுத்துப் போட்டு யாழ்ப்பாணம் போவமே.
ஆருக்கு வாடகைக்குக் குடுக்கிறது.
வவுனியாவில வாடக வீட்டுக்குத் தவங்கிடக்குதுகள் சனங்கள், ஒரு லெச்சம் ரூபா அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ரெண்டாயிரத்தை நூறு ரூபா வாடகைக்குச் சும்மா கண்ண மூடிக் கொண்டு குடுக்கிலாம்.
கிளாலிக் கடல் தாண்டி யாழ்ப்பாணம் போறதெண்டா சும்மா காரியமே, இந்த வயசில இரவு பகலாப் பிரயாணஞ் செய்ய ஏலுமே எங்களால. அதுவும் இந்த நேரத்தில ஆரும் யாழ்ப்பாணம் போவினமே. எல்லாச் சனங்களும் இஞ்ச வந்து காணி வாங்கி வீடு வாங்கி இருக்கப் பாக்குதுகள், நீங்கள் யாழ்ப்பாணம் போவமெண்டு சொல்லுறியள்.
அங்க சின்னவனுக்கு அவே சீதனமாக்குடுத்த வீடிருக்கு அங்க போனாப் பேரப்பிள்ளையளோட பொழுதும் போகுந்தானே.
எனக்கும் பேரப்பிள்ளயளப் பாக்க ஆச தான். ஆனா இப்ப யாழ்ப்பாணப் பிரயாணம் பற்றி நினைச்சுப் பாக்கவே ஏலாது.
அப்ப மருமகளுக்குக் கடிதம் போட்டு பிள்ளையளயுங் கூட்டிக் கொண்டு இஞ்ச வந்திற்றுப் போகச் சொல்லுவம்.
மூண்டு பிள்ளையளயுங் கூட்டிக் கொண்டு அவ தனிய வருவாவே. .
வாறமட்டுமே . . . பிறகு போகவுமில்லே வேணும்.
ஏன் போவான், இந்தப் பெரிய வீட்டில நானும் நீயுந்தானே தனிய இருக்கிறம். அதுகளும் வந்திற்றுதுகளெண்டா. இந்தக் கோலுக்கயும் (Hall) முத்தத்திலயும் ஒடியாடி விளையாடுங்கள். எனக்கு எவளவு சந்தோசமாயிருக்கும்.
நினைச்சுப் பாக்கவே சந்தோசமாத்தான் இருக்கு. ஆனா நடக்கிற காரியமே.
கஉவாத
குயில்கள் 76 அகளங்கண்

தந்தை :-
தந்தை :-
தாய் :-
தந்தை :-
தாய் :-
தநதை -ே
தந்தை :-
பேரப்பிள்ளயளத் தூக்கிக் கொஞ்சி, அதுகளின்ர கதையளக் கேக்க எவளவு ஆசையாயிருக்குது. இஞ்சேரும், பிள்ளையள விடப் பேரப்பிள்ளயளில தான் பாசம் அதிகமாயிருக்குமாம்.
ம். உது கற்பன பண்ண நல்லாத்தான் இருக்கு. அங்க உள்ள வீடுவளவ விட்டிட்டு இஞ்ச வருவாவே அதோட இஞ்ச வந்து நிண்டா வேல பாக்கிற தெப்பிடி
அவவுக்கேன் வேலய, அவன் சின்னவன் காசனுப்புவான் தானே. இஞ்ச வந்து நிண்டு வெளில போகுலாந்தானே.
உண்ம தான், முப்பத்தைஞ்சு வருசமா உத்தியோகம் பாத்து எனக்கு உத்தியோகம் எண்டாலே வெறுப்பாயிருக்குது. வீட்டுவேலையுஞ் செய்து, பள்ளிக்குட வேலையுஞ் செய்து, எவளவு கஸ்ரப் பட்டிருப்பன். b............. சின்னவனுக்கும் மருமோள் உத்தியோகம் பாக்கிறது விருப்பமில்ல.
எங்கடநிலம வேற. எங்களுக்கு, காசுவசதியிருக்கேல்ல கட்டாயம் உத்தியோகம் பாக்க வேண்டியிருந்திது. இப்ப மருமோளுக்கு என்ன குற, தகப்பன் குடுத்த சீதனக்காசு அப்பிடியே பாங்கில கிடந்து வட்டி வளருது, நகைநட்டு, காணி, பூமி, வீடுவளவெண்டு எல்லாம் இருக்கு, சுவீஸில இருந்து சின்னவனும் காசனுப்புறான்.
எங்களுக்கு இந்த வசதியில நூறில ஒரு பங்கு இருந்திருந்தாலும் நான் நிம்மதியா வீட்டில இருந்து சந்தோசமாக் குடும்பம் நடத்தியிருப்பன்.
(சைக்கிள் மணியோசை) கடிதம் போல கிடக்கு. நான் வாங்கீற்று வாறன், ம். ஆற்ற கையெழுத்து. அந்தக் கண்ணாடிய எடுபாப்பம் எங்கேருந்து வருகுது. ம்.
இந்தாங்கோ உடைச்சுப் பாருங்கோ. . . .
மருமகள் தான் போட்டிருக்கிறா (வாசிக்கிறார்) என்ன தெரியுமே.
நாங்கள் ஆசப்படுறது அவவுக்கு விளங்கீற்றுப் போல.
என்னண்டு சொல்லுங்கோவன். என்னவாம்.
அவவுக்கு வவுனியாக்கு மாற்றம் கிடைச்சிருக்காம், வாறமாதம் முதலாந் திகதி கச்சேரியில டியூட்டி அசியூம் (Duty ASSume) பண்ணோணுமாம்.
முதலாந் திகதியோ. . . . நாளேண்டைக்கு.
கடிதம் எழுதிப் பதினைஞ்சு நாளாகுது, இப்பதான் வந்து சேந்திருக்கு
கஉவாத
குயில்கள் 77 அகளங்கண்

Page 42
தாய் E
அப்ப இண்டைக்கு நாளைக்கு வந்திருவினம், என்னண்டு வரப்போறாவோ.
தந்தை :- குழந்தப் பிள்ளயளோட பெரிய கஸ்ரப்படப்போறா.
தாய் :- (ஒட்டோச் சத்தம்) வாசல்ல ஒட்டோ வந்து நிக்கிற மாதிரிக்
கிடக்கு.
தந்தை :- உனக்கு அதே நினைப்புத்தான்.
தாய் :- ஒமப்பா, மருமோள் தான் வாறா. வாங்கோ. வாங்கோ.
தந்தை :- நல்லாக் களைச்சுப் போட்டுதுகள்,
மருமகள் :- ஓம் மாமி. முந்தநாள் பின்னேரம் வெளிக்கிட்ட பயணம். சரியானகளைப்பு. கடல்ல வருந்தனைக்கும் குமாரும், ராசனும் கீசிக் கத்தினபடி தான். சரியாப் பயந்து போட்டுதுகள். நித்தியா நித்தினரயாப்போட்டா.
தாய் :- நித்தியாவத் தாங்கோ. வாங்கோ அப்பம்மாட்ட வாங்கடி.
(அழுகிறாள்)
தந்தை :- ராசன். வாங்கோ.
மருமகள் :- ராசன். g)|ÜLILILITLLÜ (3LITTÉ1(35T
தாய் - வாறாளில்ல. கத்துறாள் (குழந்தை அழும் ஒலி)
மருமகள் :- தெரியாது தானே, ஆரோ புதாக்களெண்டு பாக்கிறாள். நித்தியா.
அப்பம்மா தானே. போங்கோ,
தந்தை - பின்ன. இஞ்ச அப்பப்பாட்ட வாங்கோ. (அழுகிறாள்)
அதுகளுக்கு இடமும் புதுசு, ஆக்களும் புதுசு.
35 TL gf (07)
இடம் — 6ზ08
பாத்திரங்கள் :- தாய், தந்தை
தாய் - டேய், டேய். டேய் குமார், ஏன்ரா அவளுக்கடிக்கிறாய். (அழுகிறாள்) விடுடா, விடுடா, அவள அடிக்கா தடா. விடுடா அவள. நல்ல, பிள்ளயளப் பெத்து வைச்சிருக்கினம். ஓயாமல் சண்டையும் அழுகையும், (குழந்தை அழும் ஒலி)
தந்தை :- டேய் ராசன். அங்கால போடா. அப்பம்மா வீடெல்லாம் கூட்டி
கூடவாத குயில்கள் 78 அகளங்கண்

தந்தை :-
தாய் 8
தந்தை :-
வைச்சிருக்கிறா இல்லே, அதுக்குள்ள ஏன் மண்ணயள்ளிப் போடுறாய், மண் விளையாடுறண்டா முத்தத்தில மாமரத்தடியில இருந்து விளையாடன், இதுகள் குழப்படி பண்ணவெண்டே பிறந்தது களப்பா, ஒரு மாதிரியும் திருத்தேலாது.
அவவுக்கென்ன பிள்ளையஸ் மூண்டையும் விட்டிட்டு வேலைக்குப் போயிருவா. பின்னேரம் அஞ்சு மணியாகும் திரும்பிவர, எங்கட பாடுதான் கஸ்டம்.
நேரமாகுது. உதுகளக் குளிப்பாட்டி வெளிக்கிடுத்து கொண்டு போய் பள்ளிக் குடத்தில விட்டிட்டு வாறன்.
மூத்தது முதலாம் ஆண்டு, மற்றது நேசறி, ரெண்டுந் துலைஞ்சாலும் மூண்டாவது வீட்டதானே நிக்கும். அது ஏதோ சும்மா நிக்குமே, பத்திரகாளி.
காலம பிள்ளையஞக்குப் பல்லுத்தீட்டி முகம் கழுவி வெளிக்கிடுத்தி விட்டிட்டிண்டாலும் வேலைக்குப் போகிலாந்தானே. தன்ர பாட்டில வெளிக்கிட்டு வேலைக்குப் போனா, நாங்கள் என்ன செய்யிறது. அங்கபார் மூத்ததுகள் ரெண்டும் வீட்டச்சுத்தி ஒடுதுகள், உதுகளத் திரத்தி மறிச்சுப் பிடிக்க என்னால ஏலுமே.
உத ஆர் அவவுக்குச் சொல்லுறது. காலம விடியப்புறம் எழும்பி நான் சமைக்க அவ நல்லாப் படுத்துக்கிடந்திற்று ஏழு மணிக்குத்தான் எழும்புவா, தன்ர அலுவல்களப் பாத்திற்று ஏழரைக்கு வேலைக்குப் போடுவா. மத்தியானச் சாட்பாட்டையும் நான் தான் கட்டிக் குடுக்கோணும்.
இவ யாழ்ப்பாணத்தில இந்த மூண்டையும் வைச்சுக் கொண்டு இவளவு காலமும் என்னண்டு வளத்தவ.
இவ எங்க வளத்தது. அங்க இவலின்ர தாய் இருந்தவ தானே, அவதான் வளத்தது. இப்ப ரெண்டு மாதத்துக்கு முந்தித் தானே தாய் செத்தது. இல்லாட்டி இஞ்ச வந்திருப்பாவே,
இந்தக் காலத்துப் பொம்பிளையளே இப்பிடித்தான்.
வீட்டு வேலையள் ஒண்டும் தெரியாது. பிள்ளையள வளக்கத் தெரியாது. பிள்ளயள வளக்கத் தெரியாட்டி ஏன் பெறுவான்.
குயில் இருக்கில்லே. . . . அதுக்கு முட்டையிடத் தெரியும் அடைகாக்கத் தெரியாது. காகத்தின்ர கூட்டுக்க களவா முட்டையிட்டுப் போட்டுப் பறந்து போயிரும். காகம் தன்ர முட்டையளோட குயிலின் ர முட்டையளையும் சேத்து அடைகாக்கும். குஞ்சு பொரிச்சாப்பிறகு குயில்க் குஞ்சுகளுக்கும் இரை ஊட்டி வளக்கும் குயில் போலத் தான் இந்தக் காலத்துப்
கஉவாத
குயில்கள் 79 அகளங்கண்

Page 43
தந்தை :-
தந்தை :-
தந்தை :-
பொம்பிளையஞம். பிள்ளையஞக்குச் சாப்பாடு தீத்தாத தாய்மாரும் இருக்கு.
சரியாச் சொன்னியள். புள்ளப் பெறத் தெரியும். வளக்கத் தெரியாது. எங்களப் போல காகங்கள் இருக்குத் தானே வளக்கிறதுக்கு. காலம எழும்பி வீடு வாசல் கூட்டி முத்தங் கூட்டித் தந்தாலும்
எவளவு உதவியாயிருக்கும். ம். அசையாவே. இரவிலயெண்டாலும் உதவி செய்வாவே. அதுவும் இல்ல.
சரி. சரி. நேரம் போச்சுது, உதுகள வெளிக் கிடுத்திவிடு
கொண்டு போய் விட்டிட்டு வந்தா பன்ரெண்டு மணி வரைக்கு மெண்டாலும் மணிசருக்கு நிம்மதி
என்ன நிம்மதி. இஞ்ச நிக்கிது முளையான், துரு துரு வெண்டு சும்மா கிடக்குமே அது.
ஏனப்பா இதுகள் இவளவு குழப்படியாப் பிறந்துதுகள், முந்தின காலத்தில எட்டுப் பத் தெண் டு பிள்ளையளப் பெத் து வளக்கேல்லயே. இப்ப ஏன் ஒண்டு ரெண்டையே வளக்கேலாமல் கிடக்கு.
பிள்ளையஸ் குழப்படிப் பிள்ளையளாப் பிறக்கிறேல்ல, பிறந்த பிறகுதான் குழப்படிப் பிள்ளயளா மாறிறதுகள். தகப்பன் வீட்டில இருந்து வளத்தா கொஞ்சம் பயந்து நல்லா வளருங்கள். இதென்ன, தகப்பன் சுவீஸில, தாய் கச்சேரியில, பேரன் பேத்தியால பேசி அடிச்சுக் கட்டுப்படுத்தி பயமுறுத்தி வளக்கேலுமே,
சாடயாப் பேசினாலுமே மருமோளுக்கு மூஞ்ச கறுத்து நீண்டிரும்.
அவவுக்கு முன்னால பிள்ளயள நீயெண்டு சொன்னாலும் அவவுக்குப்
பிடிக்காது. உதுகள வைச்சு என்னண்டு தான் சமாளிக்கப் போறமோ, நாளாந்தம் இந்தச் சனியன்களோட பெரிய மாச்சலாப் போச்சு.
काlि. சரி. இதுகளக் கொண்டு போய் விட்டிட்டு வாறன். பிறகு கதைப்பம்.
35TI BA (08)
வீடு
:- தாய், தந்தை, மருமகள்
இஞ்சேருங்கோ. போய்ப் பாண் வாங்கீற்று வாங்கோ. . . . நேரம் போகுது. . . .
குயில்கள் 80 அகளங்கண்

தந்தை :-
தாய்
தந்தை :-
மருமகள் :-
தாய்
மருமகள் :-
தாய் s
மருமகள் :-
தாய் -
தந்தை :-
மருமகள் :-
தாய் :-
\
பொறுவாறன். எனக்கு நாரீக்க பிடிச்சுக் கொண்டுது. எங்கசயிக்கில் திறப்பு. -
இந்தாங்கோ திறப்பும் பாக்கும் (bag). சுறுக்காய் வாங்கோ. , . மருமோள் வெளிக்கிட்டிட்டா.
செய்யிறாய். குமார். குமார். விடுடா. விடுடா. இஞ்சால வாடா (காத்துப் போகும் சத்தம்) நாசமறுந்த காலியளப்பா. ஆளுக்கொரு ரயறில காத்தத் திறந்து போட்டுதுகள். இதென்ன கரைச்சலப்பா மணிசருக்கு.
ஏன் இப்பிடிப் பிள்ளயளில எரிஞ்சு விழுறியள். பிள்ளயள இப்பிடிப் பேசியே வளக்கிறது. குழந்தையளிண்டாக் குளப்படி பண்ணத்தான் செய்யும். எப்ப பாத்தாலும் நாயே. பேயே. சனியன். இதத் தவிர வேற ஒண்டுந் தெரியாதே உங்களுக்கு.
பிள்ள, அவர் பேசினா. இப்ப என்ன குறைஞ்சு போச்சு. அதுகள் செய்யிற திருகுதாளங்களுக்கு அதுகள என்ன செய்யிறது.
பிள்ளயளப் பேசினா அதுகளின்ர மனவளர்ச்சி குறைஞ்சு போகும், அதுகளச் சுதந்திரமா விட்டுத்தான் வளக்கோணும், ஓயாமல் திட்டித் திட்டி அதுகளப் பாழ்படுத்திப் போடுவியள்.
பிள்ள, நான் முப்பத்தைஞ்சு வருசமா பாலர் வகுப்பு ஆசிரியையா (Primary Teacher) இருந்தனான். நானும் மூண்டு புள்ளயளப் பெத்துத்தான் வளத்தனான். உந்த உளவியல் தத்துவங்கள் எல்லாம் படிச்சுத்தான் நானும் படிப்பீச்சனான். ஆனா. . . உதுகளெல்லாம் எங்கட நாட்டுக்கு ஒத்துவராது.
மாமி. . . ஏன் இப்பிடித் திட்டிறியள், நான் என்ர பிள்ளயள நீயெண்டு கூடச் சொன்னதில்ல. என்னயும் அப்பிடித்தான் என்ர அம்மா அப்பா வளத்தவினம். (அழுகிறாள்).
பிள்ளயளப், பேசாமல் அடிக்காமல் பூப்போல வளக்கிறதெண்டா வேலைக்குப் போகாமல் வீட்டில நிண்டு வளக்கோணும்.
இஞ்சே. போதும் நிப்பாட்டு. கதய வளக்காதேங்கோ. நான் நடந்து போய் வாங்கீற்று வாறன். நேரம் போச்சு நீ. குசினிக்குப் போ.
எனக்குச் சாப்பாடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நான் போறன்.
இதென்ன கரைச்சலப்பா மணிசருக்கு, கடசி காலத்தில பெரிய தலவேதன வந்து சேந்திருக்கு, வயசுபோய் பென்சனும் எடுத்தாச்சு,
கஉவாத
குயில்கள் 81 அகளங்கண்

Page 44
தந்தை :-
தாய் s
தந்தை :-
இடம் :-
பாத்திரங்கள்
தாய் 3
தந்தை :-
தாய்
தந்தை -ே
தாய் -
தந்தை :-
தாய்
தந்தை :-
நான் என்ர வருத்தத்தப் பாக்கிறதோ, உங்களப் பாக்கிறதோ, இதுகளப் பாக்கிறதோ, என்னால ஏலுமே,
மருமோளுக்குக் கேட்டா அடுத்த பாட்டம் தொடங்கிருவா. பேசாமல் உள்ளுக்குப் போ(மெதுவாக).
இஞ்ச வந்து பாருங்கோவனப்பா குசினிய, சீனிப் போத்தலத் தட்டி உடைச்சுச் சீனியெல்லாத்தையும் கொட்டிப் போட்டுத் தொட்டுத் தொட்டு நக்குதுகள். கண்ணாடித் துண்டுகள் வயித்துக்க போனா என்ன செய்யிறது. எழும்புங்கடா. எழும்பு. எழும்பு ஏப்பக் காம்பால முதுகில போட்டிருவன் மூதேவியள்.
உதுகளோட பெரிய தலையிடியாப் போச்சுது, போங்கடா வெளில.
போங்கோ. . . போய்ப் பல்லுத் தீட்டுங்கோ,
gastu gf (0.9)
:- தாய், தந்தை
இஞ்சேருங்கோ. நேரமாகுதெல்லே. . . . போய் அதுகளக் கூட்டிக் கொண்டு வாங்கோ, போகப்பிந்தினா அதுகள் ரவுணுக்குள்ளபோய்
என்ன குழப்படி பண்ணுதுகளோ,
ஓம். . . . ஓம். . . . இன்னும் நேரங்கிடக்கு. நான் போய்க் கூட்டீற்றுவாறன்.
அண்டைக்கொரு நாள் நீங்கள் போகப் பிந்திற் றெண்டு அதுகள் வெளிக்கிட்டு ரவுண் சுத்தினது ஞாபகமில்லயே, கெதீல போங்கோ.
பிறகு மருமோளிட்டத் தப்பேலாது என எல்லா வீடுகளிலயும் மருமகள் தான் மாமியாருக்குப் பயம், இஞ்ச மாறி.
பயப்பிடாமல் என்ன செய்யிறது. அவவோட சரிக்குச்சரி நான் சண்டபிடிச்சுக் கொண்டு நிக்கவே. நீங்கள் போட்டு வாங்கோ.
இப்பதானே பதினொரு மணி நேரத்தப்பாரன். பன்ரெண்டு மணிக்குத் தானே சுத்தானந்தா நேசறிவிடும். இப்பபோய் என்ன செய்யிற.
நான் பன்ரெண்டு மணியாக்குமெண்டு பாத்தன், உந்தப் புள்ளயளோட என்ன செய்யிற தெண்டு எனக்கிண்டாத் தெரியேல்ல. நேற்று. நேற்று உங்கடமேசையில.
ஏன், என்ன நடந்தது.
கஉவாத
குயில்கள் 82 அகளங்கண்

தாய் 8=
தந்தை :-
தாய் 8
தந்தை :-
தாய் s
தந்தை :-
தாய் -
தந்தை :-
தாய்
தந்தை :-
தாய்
தந்தை :-
என்ன நடந்ததோ, உங்கட அருமப் பேரப்பிள்ளயஸ், உங்கட பஞ்சாங்கத்த எடுத்து விளையாடிப் பக்கம் பக்கமாக் கிழிச்சுப் போட்டுதுகள்.
உதுகள என்ன செய்யிறண்டு தெரியாமல்க் கிடக்கு என்ரபிள்ளயளே என்ரமேசப் பக்கம் போய் ஒரு பேப்பர்த்துண்டு எடுக்காதுகள்.
அவளவு கண்டிப்பாவளத்தம். இதுகள அப்பிடியே வளக்கினம், பூப் போல வளக்கினமாம் பூப் போல, உப்பிடி வளத்துப் புத்திசாலியாவந்தாலும் உலகத்துக்கு உதவுங்களே.
அன்பு எண்ட பேரில, பிள்ளயளக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிப் போடுவினம்.
எங்கட பேரப் பிள்ளயஸ் எண்ட உரிமை எங்களுக்குக் கொஞ்சமும் இல்ல. அதுகள வாடா ராசா எண்டு வாய்நிறையக் கூப்பிடேலாது. நீங்கள் நாங்கள் வாங்கோ, போங்கோ எண்டு மரியாதையாக் கூப்பிட்டா அன்பு வருமே.
எப்பவும் மருமோளுக்குப் பயந்து பயந்து இருந்து கொண்டு, எப்பிடிப் பேரப்பிள்ளயளில அன்பு காட்டுறதும். கொஞ்சுறதும்.
உங்களுக்கும் சுகமில்ல. நான் உங்களப் பாக்கிறதோ, மருமோளப் பாக்கிறதோ, உந்தப் புள்ளயளப் பாக்கிறதோ, அவவுக்கென்ன. பின்னேரத்தில யெண்டாலும் பிள்ளயளப் பாக்கிறவவே ரீ.வி. (TV) பாப்பா புத்தகம் வாசிப்பா, ஒரு உதவியுமில்ல.
நீயெண்டாப் போல சுகமாயே இருக்கிறாய்.
என்னால ஏலுமே இவளவு வேலயுஞ் செய்ய. ஒவ்வொரு நாளும் மூச்சிழுக்கும். ஒரு, கோயில் குளம் எண்டு போகமுடியுமே. பெரிய கால்க் கட்டாப் போச்சுது எனக்கிண்டா மனம் விட்டுப் போச்சு. நாங்கள் மருமோளையும் பிள்ளயளயும் இஞ்ச விட்டிட்டு, வேற வீடொண்ட வாடகைக்கு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தூரத்தில போயிருந்தா என்ன எண்டு யோசிக்கிறன்.
நாங்கள் வேற எங்கயும் போனா. மருமோள் என்னண்டு L 56i6Tul I6ITLJ LJT LJLJIT.
நாங்கள், பிள்ளயளயும் பாத்து சமைச்சும் குடுத்து, பிள்ளயளின்ர உடுப்புக்களயும் தோச்சுக் குடுத்து, எல்லா உதவியளயுஞ் செய்யிறம், கொஞ்சமெண்டாலும் நன்றியிருக்கே அவவுக்கு. பிறகேன் செய்து குடுக்கோணும்.
நாங்கள் வேற வீடு பாத்துப் போனா சனம் சிரிக்கும். சின்னவனுக்கு என்ன பதில் சொல்லுறது. -
கஉவாத
குயில்கள் 83 அகளங்கண்

Page 45
தாய் -
தந்தை :-
தாய் :-
தந்தை :-
தாய் :-
தந்தை :-
இடம் :-
பாத்திரங்கள்
தாய் :-
தநதை -ே
தாய் :-
தந்தை :-
அதுதான் நானும் யோசிக்கிறன். இப்பிடிச்செய்வம், இஞ்ச இருந்துவீணா பிரச்சனப் படுறதவிட நாங்கள் யாழ்ப்பாணம் போவம், அங்க மருமோளுக்குக் குடுத்த வீடிருக்குத்தானே.
இந்த நேரத்தில எங்களால யாழ்ப்பாணம் போகேலுமே, போனாலும், அங்க இப்ப நிம்மதியா இருக்கேலுமே, அங்க உள்ள சனங்கள் இஞ்சவந்து கொண்டிருக்கு. நீ அங்க போவமென்றாய்.
என்னவோ மருமோளோட சண்ட பிடிக்காமல் இருந்திற்றாப் பெருங்காரியம். அதுதான் நான் பாக்கிறன்.
பாப்பம், இன்னும் கொஞ்சம் பொறுமையா இருப்பம், எங்கட பேரப்பிள்ளயள நாங்கள் தானே பாக்கோணும். இதென்ன உலகத்தில இல்லாததே.
பேரப் பிள்ளயளக் காணோனும், தூக்கிக் கொஞ்சோணு மெண்டு எவளவு ஆசப்பட்டம் ம். ம். உரிமை யில்லாமல் என்னண்டு அன்புவரும். எங்கள, ஏதோ இந்தப் பிள்ளயளப் பாக்கிற கூலிக் காறரெண்ட நினைப்பில இல்லோ அவ இருக்கிறா.
சரி. சரி. நேரமாச்சுது நான் போய் கூட்டிக் கொண்டு
g5 Tgif (10)
:- தாய், தந்தை, மருமகள்
(பூனை கத்தும் சத்தம்) இஞ்சேருங்கோ. வீட்டுக்குப் பின்னால பூனை கத்திக்கேக்கிது. என்னண்டு பாருங்கோ.
(3Lul......... டேய். விடுங்கடா. விடுங்கடா. இஞ்ச பாரன் இதுகள் செய்யிற வேலய, விடுங்கடா. பூனையளயும் குட்டியளயும் கயித்தால கட்டிக் கொற கொற எண்டு இழுத்து விளையாடுதுகள். விடுங்கடா. குமார். விடுடா கயித்த. இதுகள் ரெண்டும் என்னண்டு இப்பிடி வந்து பிறந்துதுகள், இஞ்சபார் மற்றத அது சின்னனிண்டாலும் லேசுப்பட்டதே. தலைநிறைய மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு நிக்கிது. (பூனைகத்துகிறது).
என்னப்பா. என்னப்பா. ஏன் அதுகளுக்குப் போட்டு அடிக்கிறியள் (பிள்ளைகள் அழும் சத்தம்)
அடிக்கிறதோ. இஞ்சவந்துபார். அதுகள் செய்யிற அநியாயத்த,
கஉவாத
குயில்கள் 84 அகளங்கண்

தாய் :-
தந்தை -ே
தாய் :-
தந்தை :-
தாய் :-
மருமகள் :-
தாய் :-
மருமகள் :-
தாய் :-
மருமகள் :-
தாய் :-
தந்தை :-
மருமகள் :-
தாய் :-
என்னப்பா. பூனையள் செத்துப் போச்சே. சத்தத்தக் காணேல்ல.
பின்னச் சாகாமலிருக்குமே. கழுத்தில சுருக்குப் போட்டு வீட்டச்சுத்திச்சுத்தி இழுத்துத் திரிஞ்சாச் சாகாதே, இந்த மாதிரி இந்தப் பூனையள இழுத்துத் திரிய நீங்கள் இவளவு நேரமா என்ன செய்து கொண்டிருந்த நீங்கள்.
நான் விடியப்புறம் எழும்பியும் இன்னும் குசினி வேல முடியேல்ல. மத்தியானத்துக்கும் சமைச்சுக் கட்டிக் குடுக்க எல்லோ வேணும். வீட்ட சும்மா இருக்கிற ஆக்கள் இதுகளப் பாக்கேலாதே.
நான் மரக்கறி வாங்கக் கடைக்குப் போட்டு இப்பதானே வந்தநான். என்னை ஏன் பேசிறாய்.
உங்கள ஆர் பேசினது இப்ப, இந்தப் பிள்ளயளக் கொஞ்ச நேரத்துக்குத் தாயால பாக்கேலாதோ.
பூனக்குட்டியள் செத்ததுக்கு என்ர பிள்ளயளப் போட்டு ஏன் இப்பிடி அடிக்கிறியள்.
வீட்டில நிக்கிற நேரத்தில யெண்டாலும் பிள்ளயளக் கொஞ்சம் கவனிச்சாக் குறைஞ்சு போயிருவியளே.
என்ர பிள்ளயள எனக்குப் பாக்கத் தெரியும் ஆரும் பாக்கத் தேவையில்ல. எப்ப பாத்தாலும் சனியனெண்டும் மூதேவியெண்டும் திட்டினபடி தானே. உப்பிடித்திட்டு வாங்கிறதுக்கும் அடிவாங்கிறதுக்குமே நான் புள்ளயளப் பெத்து வைச்சிருக்கிறன்.
புள்ளயளே அதுகள். அசுர கணங்கள். உங்கட பிள்ளயளின்ர திறத்துக்கு அதுகள ராசா மோன எண்டே கொஞ்சிறது. தறுதலையள்.
என்ர புள்ளயள விட உந்தப் பூனையள் உங்களுக்குப் பெரிசாப் போச்சு. இனி நான் இஞ்ச இருக்க மாட்டன். (அழுகிறாள்) நான் போறன்.
உங்கட பிள்ளயளிண்டா. எங்களுக்குப் பேரப்பிள்ளையன். எங்கட மகன்ர பிள்ளையஞக்கு நாங்கள் அடிக்க உரிமையில்லயோ.
இஞ்சேரும். கதைய நிப்பாட்டும்.
ஓம். ஓம். உங்கட மகன் தனியத் தானே பெத்தவர்.
உந்தக் குதர்க்கக் கத கதைக்கத்தான் தெரியும்; வீட்டுவேலதான் ஒண்டும் செய்யத் தெரியாது.
கஉவாத
குயில்கள் 85 அகளங்கண்

Page 46
நந்தை :- கொஞ்சம் சும்மா இரப்பா. சத்தம் போட்டு ஊரக் கூட்டாத,
மருமகள் :- ஏன், எனக்கென்ன வீட்டுவேல ஒண்டும் தெரியாதே.
தாய் :- இஞ்ச வந்து ஆறு மாதமாகுது. ஒரு நாளிண்டாலும் இந்தப் பிள்ளயளக் குளிப்பாட்டியிருப்பியளே. அல்லாட்டி ஒரு நாளெண்டாலும் குசினிப்பக்கம் வந்து தேத்தண்ணியெண்டாலும் போட்டிருப்பியளே.
மருமகள் :- நான் இப்பவே போறன். இனி ஒரு நிமிசமும் இஞ்சநிக்கமாட்டன். பூண் செத்ததுக்குப் புள்ளயளப் போட்டு அடிச்சுக் கொல்லுகினம்
(அழுகிறாள்)
தந்தை - பிள்ள. கொஞ்சம் பொறுங்கோ. அவசரப் படாதேங்கோ.
தாய் :- போனாப், போகட்டும் விடுங்கோ. இவயள் இல்லயெண்டுதான்
இஞ்ச ஆரோ ஏங்கிக் கொண்டிருக்கினம். இவேட சோத்தத் தண்ணிய நம்பியே நாங்கள் இருக்கிறம். விடுங்கோ எங்கயெண்டாலும் துலையட்டும்.
தந்தை :- நான் சொல்லுறன், நீபேசிக் கொண்டுநிக்கிறாய் நீ. போ குசினிக்கு.
கதைய நிப்பாட்டு.
தாய் :- நெத்தலிக்கருவாடும் போட்டுக் கஞ்சி காய்ச்சிக் குடுத்து, பெத்த பிள்ளயின்ர புள்ளப் பெறுவப் பாத்தது போலப் பாத்த பூனையையும், குட்டியளையும் சாக்காட்டிப் போட்டுச் சிரிச்சு விளையாடிக் கொண்டு நிக்குதுகள் சனியன்கள். எனக்கு வாற கோவத்துக்கு.
தந்தை :- பிள்ள. (அழுகிறாள்) நீங்கள் ஓரிடமும் போக வேண்டாம் நீங்கள் இஞ்சயே இருங்கோ, நாங்கள் போறம். இண்டைக்கு ஒரு நாளயப் பொழுது. உள்ளுக்குப் போங்கோ. போங்கோ உள்ளுக்கு. பக்கத்து வீட்டுச் சனங்கள் பாத்தா எல்லாருக்குந் தான் மரியாதை இல்ல.
(முற்றும்)
கூடவாத குயில்கள் 86 அகளங்கண்
 

தாயும் நாயும்” (30 நிமிட வானொலி நாடகம்)
பாத்திரங்கள்
1. குமார் 2. தாய் 3, நித்தியா 4. இராசையா 5. சிண்னத்துரை
g5 Tgif (1)
இடம் :- ബ
பாத்திரங்கள் :- குமார், அவனது தாய், அவனது மனைவி நித்தியா,
(மோட்டர்ச்சயிக்கிள்ச்சத்தம் கேட்கிறது)
குமார் - நித்தியா! நித்தியா!. எங்க உதுகளக் காணேல்ல; குசினிக்க எல்லாஞ் சேந்து என்ன செய்யுதுகள். அம்மா. அம்மா! அம்மோவ்! (8Luu........ டேய் சதீஷ் விடுடா, நீ இதுகளத் தூக்குவனெண்டே தூக்கிறாய். மனிசன் களைச்சு விழுந்து வாறன், ஒருத்தரையும் காணேல்ல; யதுஷா தள்ளடி, மோட்டச்சயிக்கில விழுத்திப் போடாத தள்ளு.
தாய் - என்ன மோன, அந்தரப் பட்டுக் கொண்டு நிக்கிறாய்.
குமார் - விடுங்கோம்மா. நீங்கள் தூக்குவியளே உத போய் உங்கட வேலயப்
பாருங்கோ, எங்க நித்தியாவக் காணேல்ல. டேய் சதீஸ் . எங்கடா கொம்மா.
தாய் - குசினிக்கயோ, பாத்ருமுக்கயோ. . . .
குமார் - விடுங்கோம்மா, சொன்னாக் கேக்க மாட்டியளாம். ஏலாதிண்டு தெரியும்
பிறகு சும்மா வில்லங்கத்துக்குத் தூக்கிறியள்.
நித்தியா :- (வந்து கொண்டு) என்னப்பா சீறிச் சினந்து கொண்டு நிக்கிறியள்.
என்ன பிரச்சன.
குமார் - அது பெரிய பிரச்சன. முதல்ல இதுகள எடுத்து வையும் பிறகு
சொல்லுறன்.
நித்தியா :- உள்ளுக்கு வாங்கோவன், வெளில நிண்டு பேசிக்கொண்டிருக்கிறியள்.
கூடவாத குயில்கள் 87 அகளங்கண்

Page 47
குமார் :-
தாய்
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
நான் செத்த வீட்டுக்குப் போயிற்று வந்தனான். இதுகள எடுத்து வைச்சிற்று, என்ர துவாயையும் சறத்தையும் தாரும் கிணத்தடில குளிப்பம்.
ஆர் செத்த,
ஆர் மோன செத்த,
அவர் தான் எங்கட கந்தையாண்ண.
போஸ்ற் ஒபீசில வேல செய்த கந்தையாவோ; எப்பவாம் செத்தவர்.
நேற்றுப் பின்னேரம்.
இதென் னது. அதிசயமா இருக் கு. கிழமக் கணக் கில வைச்சிருக்கிறாங்கள் பிரேதங்கள. இது நேற்றுப் பின்னேரம் செத்து, இண்டைக்கு மத்தியானம் எடுத்திற்றாங்களெண்றாய். வெளிநாட்டில இருக்கிற பிள்ளையன் ஒண்டும் வரேல்லயோ,
பிள்ளையஸ் வரவும் ஏலாது. வைச்சிருந்து எடுக்கவு மேலாது.
ஏன் மோன, இவன் சுப்பிரமணியத்தின்ர, பிரேதத்த பத்து நாளா வைச்சிருந்து, சுவீசில, கனடாவில இருந்தெல்லாம் பிள்ளையஸ் வந்தாப்பிறகுதானே எடுத்தவங்கள்.
அது நான் பிறகு சொல்லுறன். எங்கயப்பா என்ர சறம், துவாய், சவுக்காரம்
இஞ்ச கிணத்தடில எல்லாம் வைச்சிருக்கு வாங்கோ.
நீர் ஒண்டும் கேள்விப் படேல்லயோ,
ஏன் என்ன பிரச்சன.
நீர் இண்டைக்குப் பள்ளிக்குடம் போகேல்லயோ,
கந்தசஷ்டி விரதமெல்லோ. நான் எங்க பள்ளிக்குடம் போன. கோயிலுக்கெல்லோ போய்வந்தனான்.
அப்ப நீர் கோயில்ல ஒண்டும் கேள்விப்படேல்லயோ,
நான் பதினொரு மணிபோல தானே போனனான். பூசை முடிய உடனயே வந்திற்றன். ஏகாம்பரத்தார வாட்டில வைச்சிருந்தின மெல்லோ, திடீரெண்டு ஒட்டோ புடிச்சு வீட்ட கொணந்திட்டினம். ஆஸ்பத்திரீல வைச்சிருக் கேலா தெண்டு ரிக்கற் வெட்டி அனுப்பீற்றாங்களாம் எண்டு கதைச்சினம் எனக் கொண்டும் விளங்கேல்ல.
கஉவாத
குயில்கள் 88 அகளங்கண்
 

குமார் :-
நித்தயா -ே
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா -
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
ஓம். ஓம் ரிக்கற்ற வெட்டி வீட்ட கலைக்கினம். செத்தவீடும் அவசர அவசரமாச் செய்து முடிச்சிற்றினம்.
என்ன பிரச்சன.
(தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றும் சத்தம்) அம்மா கேட்டாப் பயந்திடுவாண்டுதான் நான் அங்க வைச்சுச் சொல்லேல்ல. வவுனியாவில உள்ள எல்லாரையும் வெளியேறட்டாம்.
)ெ. (ஏங்கிப் போய் பதட்டத்துடன்) என்ன கதயப்பா இது. ஆர் சொன்னது.
ஆர் எவர் சொன்ன தெண்டு ஏன் கேக்கிறீர். (Fax). பக்ஸ் இல மசேஜ் (MaSSege) வந்ததாம். ரவுண் சனம் முழுக்க பதகழிப் பட்டுக் கொண்டிருக்கு.
அப்ப எங்க போறதாம்.
ராசேந்திரங் குளப் பக்கம் போகட்டாம். அல்லாட்டி ஆசிகுளப் பக்கம் (3LITEBL'LITLD.
கடவுளே! ரவுணுக்க சண்ட தொடங்கப் போகுது போல கிடக்கு. கந்த சஷ்டி விரதமும் போச்சு எல்லாம் போச்சு. ஓமந்தைக்குக் கிட்டத்தானே அடிபாடு கேக்குது. பின்ன வவுனியா ரவுணுக்குவர கனநேரமே.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி எண்டு எவளவு சனம் வவுனியாவுக்குள்ள வந்திருக்கு. என்ன பாடு படப் போறமோ,
உதாரும் கதகட்டி விட்டிருப்பினம்
சும்மா விசர்க்கத கதைக்காதயும். எல்லாம் ஆதாரத்தோட தான் வந்திருக்கு. அவங்கட றேடியோவிலயும் சொல்லுறாங்களாம். சனங்களெல்லாம் அங்க இஞ்ச ஒடத் துடங்கீற்றுதுகள். அதுதான் அவசரப்பட்டு செத்த வீட்டயும் முடிச்சவினம். பிள்ளையளையும் பாக்கேல்ல, சொந்தக் காறரையும் பாக்கேல்ல, கொண்டேய்ப் போட்டுக் கொழுத்திப் போட்டு வந்திற்றினம், சண்ட துடங்கீற்றிண்டா பிரேதத்த வைச்சு என்ன செய்யிறது.
அப்ப அதுதான் வாட்டில கிடந்தாக்களையும் ரிக்கற் வெட்டி அனுப்பீற்றினம். வருத்தக்காறர வீட்ட அனுப்பி என்ன செய்யிறது. அவேக்கு என்ன பயம் அங்க வைச்சிருக்க.
டொக்டர், நேஸ் எண்டா அவேக்கு உயிர் இல்லையோ, குடும்பம் இல்லையோ, சொத்துச் சுகம் இல்லையோ, சண்ட நடந்தா, ஆஸ்பத்திரி, கோயில் எண்டு இருக்கே. இவளவு காலமும் நடந்தது தெரியாதே.
கஉவாத
குயில்கள் 89 அகளங்கண்

Page 48
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
தாய் 8
குமார் :-
நித்தியா :-
தாய் 8
நித்தியா :-
தாய்
நித்தியா :-
குமார் :-
தாய் :-
குமார் :-
தாய் :-
அது சரி. இப்ப எங்க போறது. இவளவு சாமான்களயும் வீட்டயும் விட்டிட்டு எங்க போறது.
பின்ன இஞ்ச கிடந்து சாகேலுமே. என்னண்டோ கொண்டு போகக் கூடிய சாமான்களக் கொண்டு எங்கயோ போகத்தானே வேணும். வீரம் பேசிக் கொண்டு நிக்கேலுமே
96 இல யாழ்ப்பாணத்துச் சனம் பட்ட சீரழிவு கொஞ்ச நஞ்சமே. அப்பிடித்தான் இப்ப வவுனியாவுக்கும் வந்திருக்கு.
ஏன் நாங்கள் 90 இல இஞ்ச பட்ட சீரழிவு கொஞ்சமே. எல்லாத்தயும் விட்டிட்டு ஓடி பட்ட பாடு தெரியாதே, இப்ப 99இல திரும்ப ஒட வேண்டியிருக்கு. சாமான்கள விட்டிட்டு ஓடினமெண்டா அவளவு தான். எல்லாத்தயும் கள்ளர் கொண்டு போடுவாங்கள்.
கடவுளே! எவ்வளவு சாமான்கள் வாங்கிப் போட்டு. உடைஞ்சு கிடந்த வீட்டயும் திருத்திக் கட்டி. நாசமாப் போச்சு தெண்டா என்ன செய்யிறது. ஏதும் நடந்து தெண்டா இனி உதுகள என்னண்டு திருப்பித் தேடுறது.
என்ன மோன, என்ன பிரச்சின
அதொண்டும் இல்லயம்மா
எல்லாரையும் வவுனியாவ விட்டுப் போகட்டாம்.
அம்மாளாச்சி. எங்க போறது. ஏன் என்ன பிரச்சன.
வவுனியாவில அடிபாடு வரப்போகுதாம்.
அப்ப. . . . இப்ப என்ன மோன செய்யிறது. எங்க மோன போறது
அது தான் மாமி யோசிக்கிறம்.
இஞ்சாலுப் பகுதிச் சனம் முழுக்க ராசேந்திரங் குளப்பக்கம் போகுதுகள். அங்க சரியான சனமாயிருக்கும். எங்க போய்த்
தங்கிறது.
ஏன் அங்கால சூடுவெந்தபுலவு, புளித்தறிச்ச புளியங் குளப் பக்கம் போனா என்ன.
சனங்கள் அங்காலயும் போகுது. பம்பமடு, செக்கடிப்புலவு இயங்கராவூர்ப் பக்கமும் போகுது. ஆசிகுளப்பக்கமும் போகுதுகள்.
பிறகென்ன. மினக்கடாமல் வெளிக்கிடுவம், சண்டதொடங்கினா
கஉவாத
குயில்கள் 90 அகளங்கண்
 

நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
தாய் :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
தாய் :-
நித்தியா :-
தாய்
நித்தியா :-
இடையில கிடந்து சிக்குப் படேலாது. 90 இல பட்டயாடு தெரியுந்தானே.
அங்கபோய் என்ன செய்யிறது. எத்தின நாளைக்கு இருக்கவேண்டி வருமோ தெரியாது.
ஒரு, மூண்டு நாலு நாளைக்கு போயிருந்தாக் காணும் எண்டு தான் அறிவிச்சிருக்கிறாங்களாம்.
சின்னப் பிள்ளையளயுங் கொண்டு, சாமான்களையும் கொண்டு அங்கால போயிருக்கிறதெண்டா எவளவு கஸ்ரம். பேசாமல் கொழும்புப்பக்கம் போவம்
அங்கால போக விடுவாங்களோ,
வவுனியா ஒன்லி (Only) பாஸ்(Pass) உள்ள சனங்களே போகுது, பிறகென்ன, திருகோணமலை, மட்டக்களப்பு மலைநாடு , கொழும்பு எண்டு எல்லாப் பக்கமும் சனம்போகுது. முதல் போகவிடாமல் மறிச்சவங்களாம் பிறகு விட்டிட்டாங்களாம்.
ஒரு லொறியப் புடிச்சு சாமான்கள ஏத்திக் கொண்டு நாங்கள் கொழும்புக்குப் போவம்.
அங்கபோய் எங்க தங்கிறது, இவளவு சாமான்களயும் கொண்டுபோய் எங்க போடுறது.
ஏன் வெள்ளவத்தையில அக்காடமகள் வனிதா இருக்கிறாள் தானே, அங்க போவம்.
அவேட வீடும் ஒரு சின்ன வீடு. எங்களில அஞ்சு பேர். அம்மாவோட ஆறு. அம்மாவும் சுகமில்லாத ஆள். சாமான்கள எங்க போடுறது. நாங்களெங்க தங்கிறது.
மோன, நான் சொல்லுறதக் கேள். உதில பக்கத்தில யெங்கராவூர்ப் பக்கம் போவம். கோப்பிறட்டி லொறியப் புடிச்சா சாமான்கள ஏத்தீரலாம். அங்க சொந்தக் காறற்ற வீட்டில இருக்கிலாம். இல்லாட்டிப் பள்ளிக் குடத்தில எண்டாலும் தங்கிலாம்.
அதெல்லாம் கரைச்சல் மாமி.
கிட்ட இருந்த மெண்டா, வரக்கூடியதா இருந்தா ஆக்களோட
ஆக்களா வந்து வீட்டப்பாத்திட்டும் போகிலாம். கொழும்புக்குப் போன மெண்டா கைவிட்டதாப் போயிரும்.
நான் சொல்லுறதக் கேளுங்கோ. முதல் ஒரு லொறியப் புடிச்சிற்று வாங்கோ, கொழும்புக்குப் போவம்
கஉவாத
குயில்கள் 91 அகளங்கண்

Page 49
குமார் :- கொழும்புக்குப் போறதெண்டா சும்மா கிடக்கே, அம்மாவ என்ன
செய்யிறது.
நித்தியா :- ஏன், கொண்ணர் வீட்ட விட்டிட்டுப் போவம். இல்லாட்டி கொக்கா வீட்ட விடுவம். ஏன் அவே பாக்கமாட்டினமே. கொழும்புக்குக் கூட்டிக் கொண்டுபோய் ஏதுமெண்டா எங்களுக்குத் தானே கஸ்ரம்.
குமார் :- என்ன பேக்கத கதைக்கிறாய். இவளவு நாளா எங்களோட வைச்சிருந்திற்று இந்த நேரத்தில போய், எங்கயும் விட்டிட்டுப் போகிலாமே.
நித்தியா :- ஏன் நீங்கள் மட்டுந்தானோ அவவுக்குப் பிள்ள, மற்றவ வைச்சுப் பாக்க மாட்டினமோ. இவளவு காலமும் நாங்கள்தானே வைச்சுப் பாத்த நாங்கள்.
குமார் :- என்ர அம்மாவில உள்ள அன்பிலயோ, அல்லாட்டி அம்மாவ வைச்சுப் பாக்கோணுமெண்டோ, அம்மாவ இஞ்ச கூட்டிக் கொணர்ந்து வைச்சிருக்கிறீர் எண்டு எனக்குத் தெரியாதே. ரெண்டு பேரும் வேலைக்குப் போனா பிள்ளையளப் பாக்க உதவியாயிருக்கு மெண்டல்லோ வைச்சிருக்கிறீர். இப்ப ஏதோ புதினமா அம்மாவ வைச்சுப் பாக்கிற கத கதைக்கிறீர்.
நித்தியா - உந்த ஆராய்ச்சியப் பிறகு பாப்பம். இப்ப வெளிக்கிடுற வேலயப்
LITÜLub.
தாய் :- என்ன ஒருத்தரும் பாக்கத் தேவயில்ல. நானென்ன சொத்தியோ, முடமோ, அல்லாட்டி இயக்கமில்லாமல்க் கிடக்கிறனோ, நான் இந்த வீட்டில கிடந்து சாகுவன். ஒரு இடமும் போகமாட்டன். நீ போய்ச் சாப்பிடு மோன, தலையத் துட, தண்ணி ஊறப் போகுது.
asTaf (2)
இடம் :- வீடு
பாத்திரங்கள் :- குமார், தாய், நித்தியா, சின்னத்துரை, ராசையா
(பொருட்களை அடுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்)
ராசையா :- தம்பி . . தம்பி . . . குமார்.
குமார் :- ஆரது . . .
ராசையா :- அது நான் தம்பி.
குமார் :- ஆர் ராசையாண்ணயே , , , ஆ , , சின்னத்துரை நீயுமே .
வாங்கோ,
கூடவாத குயில்கள் 92 அகளங்கண்
 

தாய் 8
சி. துரை :-
தாய் 8
ராசையா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
JT608FLLIT :-
குமார் :-
JIT60)3Fus :-
சி. துரை :-
JT608FLLIT :-
சி. துரை :-
குமார் :-
TeO)3Full 3
* ሥ
என்ன மோன பிரச்சன. நீங்கள் ஒண்டுங் கேள்விப்படேல்லயே.
நாங்கள் இஞ்ச தான் இருக்கப் போறம். எங்கயிண்டு போறது. பாப்பம், நீங்கள் என்ன செய்யப்போறியள்.
எனக்கிண்டா இஞ்ச இருக்கத்தான் விருப்பம் சின்னத்துர. இனி என்ர இஸ்ரத்துக்கு ஏதும் ஆகுமே.
மெய்ய குமார். நீங்கள் என்ன செய்யப் போறியள்.
அது தான் ராசையாண்ண நானும் யோசிக்கிறன்.
நாங்கள் கொழும்புக்குப் போகப் போறம், இஞ்ச இருந்து என்ன செய்யிறது.
மெய்யண்ண. இஞசாலுப் பக்கத்தில உள்ள சனங்கள் எங்க போகப் (3LT560TLDITLD.
சனங்கள் ஒவ்வொண்டா வெளிக்கிடுதுகள். ராசேந்திரங்குளப் பக்கம் யெங்கராவூர்ப்பக்கம் சூடுவெந்த புலவுப் பக்கமெண்டு போகுதுகள்.
அப்ப நீங்கள் எங்க போகப் போறியள்.
எனக்கிண்டா வெளிக்கிட மனமில்லத் தம்பி. ஆனா ஊரெல்லாம் போயிற்றா தனிய இருக்கேலுமே. ஏது மொண்டிண்டா பிறகு அவசரத்தில எங்க ஒடுறது. செல், மழையாக் கொட்டுமெண்டு கதைக்கிறாங்கள், இஞ்ச இருந்துதான் என்ன செய்யிறது.
சும்மா சொல்லுவாங்கள் அண்ண, உதெல்லாம் நடக்கிற காரியமே. நாங்கள் எழும்பிறதா இல்ல.
நீ பேக்கத கதைக்காத சின்னத்துர யாழ்ப்பாணத்தில 96 இல நடந்தது தெரியாதே. செக்கனுக்கு மூண்டு நாலு செல்வந்து விழுந்தாத் தப்பேலுமே, நிண்டமெண்டா ரெண்டு பகுதிக்கும் எங்களில சந்தேகம் வரும்.
சரி பாப்பம் அப்பிடி எழும்பினாலும் எங்கயாவது கிட்டவாய் போய் இருந்த மெண்டா இடைக்கிட வந்து வீட்டப் பாத்துக் கொள்ளலாம்.
அதுவும் நல்லது தான் சின்னத்துரை. இது வழிய வந்தா எங்கட வீட்டயும் பாத்துக் கொள்.
என்ன தம்பி இப்பிடிச் சொல்லுறியள். நீங்கள் எங்களுக்குச் செய்த உதவியள மறப்பமே. வந்து போகக் கூடியதா இருந்தா உங்கட வீட்டப் பாக்காமல் விடுவமே.
கூடவாத
குயில்கள் 93 அகளங்கண்

Page 50
சி. துரை :
குமார்
சி. துரை :
குமார்
JT6)3Fu
குமார்
JIT608FUT :
தாய்
குமார்
தாய்
நித்தியா :
குமார்
நித்தியா :
குமார்
நித்தியா :
குமார்
நித்தியா :
குமாரண்ண. இப்பவே வெளிக்கிடுறியள் போல கிடக்கு, இஞ்ச அக்கா எல்லாச் சாமான்களயும் கட்டுறா.
பாப்பம். எதுக்கும் ஆயத்தமா இருப்பம்.
வீடு நிறையச் சாமான்கள் வைச்சிருக்கிறியள். உதுகள் எல்லாத்தையும் ஏத்துறதெண்டா ரெண்டு லொறி வேணும் போல கிடக்கு. முழுக்க ஏத்தப்போறியளோ,
பாப்பம், ஏதோ கொண்டு போகக் கூடிய முக்கியமான சாமான்களயெண்டாலும் கொண்டு போவம். மிச்சத்தப் பிறகு பாப்பம்.
தம்பி, நாங்கள் வரப்போறம். சின்னத்துர வா போவம.
வந்தநீங்கள் ஒருக்கா இந்த அன்ரனாவக் கழட்டித் தந்திற்றுப் போங்கோவன்.
சரி. நில்லு சின்னத்துரை இதக் களட்டிக் குடுத்திற்றுப் போவம்.
மோன உவங்கள் கள்ளங்கள். வந்து எல்லாத்தயும் நோட்டம் விட்டுக் கொண்டு போறாங்கள்.
அம்மா, அவங்கட காதில விழுந்திரும். உங்களுக்கு எல்லாரிலயும் சந்தேகந்தான்.
அவங்கள் போட்டாங்கள். அவங்களுக் கெங்க கேக்கிறது. உவங்களப் பற்றி எனக்குத் தெரியாதே.
சத்தம் போடாதேங்கோ மாமி. அயல்ல உள்ளவங்கள் கள்ளரோ காவாலியளோ, அனுசரிச்சுத்தான் போகோணும்.
இப்ப என்ன செய்யிறது. எங்க போறது.
என்னப்பா இது, குழந்தப் பிள்ள போல கேக்கிறியள். கொழும்புக்குப் போவமெண்றன்.
கொழும்புக்குப் போனா வீட்ட ஆர் பாக்கிறது. சாமான்கள என்ன செய்யிறது.
சாமான்களயும் கொண்டுதானே போறம்.
சரி அப்ப வெளிக்கிடுங்கோ, நான் போய் ஒரு லொறி பிடிச்சிற்று வாறன். அம்மா! கெதில வெளிக்கிடுங்கோ, மினக்கடாதேங்கோ.
மாமியக் கொழும்புக்கு கூட்டீற்றுப் போய் என்ன செய்யிறது.
கஉவாத
குயில்கள் 94 அகளங்கண்

குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
தாய் *ー
குமார் :-
தாய் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
நித்தியா :-
குமார் :-
பின்ன இஞ்ச விட்டிட்டுப் போறதே.
இஞ்ச விட்டிட்டுப் போகச்சொல்லி ஆர் சொன்னது.
பின்ன(கோபமாக) உம்மட கத எனக்கு விளங்கேல்ல.
கொழும்புக்குக் கூட்டிக் கொண்டுபோய் அவவ வைச்சுச் சமாளிக்கேலாது. ஓயாமல் இருமிக் கொண்டிருப்பா. அங்க எல்லாம் படிச்ச சனங்கள். உத்தியோகம் பாக்கிற சனங்கள். படிக்கிற பிள்ளையஸ் இருக்குதுகள். மரியாத இல்ல.
பிள்ள. உந்தக் கதயெல்லாம் ஏன் பிள்ள. நான் கொழும்புக்கு வரேல்ல, இஞ்ச கிடந்து சாகிறன். -
அம்மா, சும்மா இருங்கோ. நீங்கள் வெளிக்கிடுங்கோ,
இல்ல மோன, கொழும்பு எனக்கு ஒத்துவராது. நீங்கள் போட்டு வாங்கோ. என்னால நீங்கள் வீணாச் சண்ட பிடிக்காதேங்கோ.
(சத்தமாக) உங்களுக்கு நான் சொல்லுறது விளங்கேல்லயேப்பா. மாமிக் கென்ன இஞ்ச ஆக்களில் லயே. முதல் ல மாமியக் கொண்டுபோய் கொண்ண வீட்டயோ, கொக்கா வீட்டயோ எங்கேண்டாலும் விட்டிட்டு வாங்கோ. வரேக்க லொறி ஒண்டு புடிச்சிற்று வாங்கோ,
இஞ்சேரும் ஒருக்காலுக்கு ரெண்டுதரம் நல்லா யோசிச்சுப்பாரும். எங்கட சனம் எல்லாம் இஞ்சால பக்கத்து ஊருகளுக்குத்தான் போவினம் நாங்களும் இஞ்சால, பக்கத்து ஊருக்குப் போவம்.
அதெல்லாம் கரைச்சலப்பா, கொழும்புக்குப் போவம்.
இஞ்சேரும், செட்டி குளத்தில என்ர (friend)பிறன்ட் ஒருத்தன் இருக்கிறான் அங்க போவம்.
இவங்கள் சின்னத்துரை, ராசையாண்ண ஆக்கள் வேணுமெண்டா அங்கால போகட்டும். நாங்கள் அங்க போனா மரியாத இல்ல.
அப்ப கொழும்புக்குப் போனாத்தான் மரியாதயோ
எங்கட ரீச்சேர்ஸ் கிறெளட் (Teacher's Croud) எல்லாம் கொழும்புப் பக்கம்தான் போகும். அங்க போனாக் கெளரவமாப் போய் வந்திரலாம்.
இஞ்சால போனா அகதியாத்தான் இருக்கோணும்.
ஓம். ஓம். கொழும்புக்குப் போனா (Refugee)றெபிஜி பக்கத்துக் கிராமங்களுக்குப் போனா அகதி. இங்கிலீசில சொன்னா கெளரவந்தான்.
கஉவாத
குயில்கள் 95 அகளங்கண்

Page 51
நித்தியா - உந்தக் குத்தல் கதையும், குதர்க்கக் கதையும் தானே உங்களுக்குத் தெரியும் உங்களுக்கு விருப்பமெண்டா கொம்மாவோட இஞ்ச இருங்கோ. நான் பிள்ளையளையும் சாமான்களயும் கொண்டு கொழும்புக்குப் போறன்
குமார் :- சரி, இனி நான் சொல்லி என்ன, நீர் புடிச்சா புடிச்ச புடி விடமாட்டீ ரெண்டு தெரியுந்தானே. வெளிக்கிட்டு நில்லுங்கோ. நான் போய் லொறி ஒண்டு பிடிச்சுக் கொண்டு வாறன்.
நித்தியா :- அப்ப மாமி.
குமார் :- இப்ப நிக்கட்டும், போகேக்க அண்ண வீட்ட இறக்கி விட்டிட்டுப்
போவம் (மோட்டார்ச் சைக்கிள் சத்தம்)
g5 Tgif (3)
இடம் :- வீடு
பாத்திரங்கள் :- தாய், குமார், நித்தியா, ராசையா.
நித்தியா :- (வான் வந்து நிற்கும் சத்தம்) இதென்னப்பா லொறி புடிச்சிற்று வாங்கோண்ண, இந்த வானக் கொணந்திருக்கிறியள்.
குமார் :- ரவுணில ஒரு லொறியும் புடிக்கேலாதப்பா, கடக்காறரெல்லாம் தங்கட
சாமான்கள ஏத்துறாங்கள்.
நித்தியா :- இப்ப, இந்த வானில என்னண்டு இவளவு சாமான்களயும் ஏத்திறது.
அப்பிடி, ஒரு லொறி பிடிக்கேலாமல்ப் போட்டோ. (சத்தமாக)
குமார் - இஞ்சேரும் சத்தம் போடாதயும். லொறிக் காறங்கள் தங்கட சாமான்கள
ஏத்தாமல் எங்களுக்கு வாறாங்களே.
நித்தியா :- நான் அப்பவே சொன்ன நான், கெதியாப்போய் வாங்கோண்டு,
கேட்டாத்தானே.
குமார் - பின்ன நீர் போய் லொறியப் புடிச்சிற்று வாரும்.
நித்தியா - எத ஏத்துறது. எத விடுறது. இதுகள நானும் நீங்களும் தனியத்
தூக்கி ஏத்தேலுமே.
குமார் - இஞ்ச றைவரும் ஒருகை பிடிப்பார் தானே
ராசையா :- என்ன தம்பி, சாமான்கள ஏத்திறியள் போல (வந்து கொண்டே).
குமார் :- ஒமண்ண. நீங்கள் போகேல்லயே. ராசையாண்ண.
கஉவாத
குயில்கள் 96 அகளங்கண்
 

JIT60)öFuT :-
குமார் :-
JIT60) gust :-
குமார் :-
குமார் :-
JITSOEFUIII 3
தாய் :-
நித்தியா :-
தாய் :-
நித்தியா :-
தாய்
குமார் :-
பாப்பம். நாளைக்கு ஏத்துவம். என்ன அவசரம்.
நீ நல்ல ஆள்தானண்ண.
தங்கச்சி விடுங்கோ. நான் பிடிக்கிறன். நீங்கள் தூக்குவியளே. இந்தப் பெரிய TVய ரெண்டு முழு ஆம்பிளையஸ் பிடிச்சாத்தான் தூக்கலாம்.
நித்தியா இத விட்டிட்டு மற்றச் சாமான்களக் கெதியா ஏத்தும் கவனமாத் தூக்கி வையும். உடைஞ்சு போகும்.
அதென்ன தம்பி கொஞ்சச் சாமானே (Gas) காஸ் குக்கர், பிறிஜ் TV டெக், ரேப், பிளெண்டர் எண்டு வீடு கொள்ளாமல் சாமான்கள வேண்டிப் போட்டிருக்கிறியள். இதுகள என்னண்டு ஏத்தி முடிக்கப் போறியள்.
பாப்பம் அண்ண, ஏத்தக் கூடியத ஏத்துவம், மிச்சம் கிடக்கட்டும். வேற என்ன செய்யிறது. அண்ண இது வழிய வாற போற நேரத்தில எங்கட வீட்டயும் பாத்துக் கொள்ளுங்கோ.
ஓம். ஓம். நான் ஏலுமிண்டா இது வழிய அடிக்கடி வந்து போவன்தானே. நான் பாத்துக் கொள்ளுறன். நீங்கள் பயமில்லாமல் போட்டு வாங்கோ.
டேய் ரமேஸ். இந்த நாயையும் புடிச்சு ஏத்திடா, இஞ்ச கிடந்தா சாப்பாடில்லாமல் செத்துப் போகும்.
உந்த நாயையோ, உதக் கொழும்புக்குக் கொண்டு போனா எங்களப் பயித்தியக் காறரெண்டுதான் சொல்லுவினம். விடுடா அத.
பாவமில்லே புள்ள, இஞ்ச கிடந்தா அதுக்கு ஆர் சாப்பாடு வைக்கிறது. உந்தச் சடை நாய்க் குட்டியத் தூக்கி வைச்சுக் கொஞ்சுறியள், உதால என்ன பிரயோசனம்.
அது உங்களுக்குத் தெரியாது. உந்த நாய் போல என்ன, றோட்டோரத்தில கிடந்து புடிச்சுக் கொணந்த நாயே இது, இது வெளி நாட்டு நாய். 1500 ரூபா குடுத்து வாங்கின பொமறேனியன் நாயெல்லோ இது. இதென்ன பறநாயோ. உதக் கொழும்புக்குக் கொண்டுபோனா எங்கள ஆரும்மதிப்பினமே.
என்னவோ எனக்குத் தெரியுமே. ம். (பெருமூச்சு) பறநாயும் ஒண்டுதான். வயசு போன தாயும் ஒண்டுதான்.
சரி சரி கதய விட்டிட்டு ஏறுங்கோ, நேரம் போச்சு. சண்ட துவங்கீற்றெண்டா அசையேலாது கெதில போவம். அம்மா, கவனமா ஏறுங்கோ. உங்களக் கொண்டு போய் அண்ண வீட்டில விட்டிட்டுப்
கஉவாத
குயில்கள் 97 அகளங்கண்

Page 52
போறம், உங்கட (Bag) பாக்கப் புறம்பா வைச்சிருங்கோ.
தாய் :- குமார் அப்ப இந்த நாயையும் தூக்கிப் போட்டுக் கொணந்து கொண்ண
வீட்ட விட்டுவிடன் பாவமில்லே.
குமார் :- அம்மா, பேக்கத கதைக்காமல் ஏறுங்கோ. அது இஞ்ச கிடக்கட்டும்.
(Vanவான புறப்படும் சத்தம். பெரிய நாய் ஊளையிடுவது
போல சத்தம், பின்குரைக்கிறது)
காட்சி (4)
இடம் :- வீடு,
காலம் :- இரவு
பாத்திரங்கள்:- ராசையா, சின்னத்துரை
சி. துரை :- அண்ண, ராசையாண்ண, எங்கட கைவரிசையக் காட்டுவமே.
ராசையா :- இந்த நேரத்தில.
சி. துரை :- இந்த நேரத்திலதான் சுகமாச் செய்யிலாம் ஒரு சனமுமில்ல.
ஆறுதலா வடிவா எடுக்கக் கூடிய எல்லாத்தயும் எடுத்திரலாம்.
ராசையா :- இண்டாலும் சின்னத்துரை, அந்தாள் என்னட்ட வீட்டப் பாத்துக் கொள்ளச் சொல்லிப் போட்டுப் போகுது. என்னண்டு அந்தாளின்ர வீட்டயே போய் களவெடுக்கிறது.
சி. துரை :- அணி ன. ஒண் டு தெரியுமே உனக் கு, கள் ளன முகதாரியாப்போட்டாக் களவெடுக்க மாட்டானாம். அது போல தான் எங்கள வீட்டப் பாத்துக் கொள்ளச் சொன்ன கதையும்.
ராசையா :- இண்டாலுஞ் சின்னத்துர.
சி. துரை :- என்ன ராசையாண்ண, இப்பதான் புதிசாச் செய்யிறது போல பஞ்சிப் படுறாய். குமாரண்ண, உன்னட்ட வீட்டப் பாத்துக் கொள்ளச் சொன்னதிலயும் ஒரு வசதி இருக்கண்ண. தப்பித் தவறி ஆருங் கண்டாலும் நாங்கள் தான் பொறுப்பெண்டு சொல்லித் தப்பீரலாம்.
ராசையா :- சின்னத்துர உதுவழிய ஆற்றயும் நடமாட்டந் தெரியுதோண்டு பார்.
சி. துரை :- ஒரு அசுமாத்தும் இல்லயண்ண. இரவு 8, 8 % ஆகுது. இந்த நேரத்தில இந்த இடத்தில ஒரு ஈ எறும்பக் காணேலுமே. பின்னேரம
கூடவாத குயில்கள் 98 அகளங்கண்
 

JT60) afu IIT :-
சி. துரை :-
ராசையா -ே
சி. துரை :-
T608FuT 3
சி. துரை :-
JT60) afu IIT :-
சி. துரை :-
JIT608 Fus :-
சி. துரை :-
JITSOEFUIII 3
சி. துரை :-
JT60)3FUIIT :-
சி. துரை :-
recaust 3
4,4% க்குப் பிறகு இந்தப் பக்கம் ஆர் வருகினம்.
உனக்கென்னண்டு தெரியும் சின்னத்துர.
அத விடுங்கோ. எனக்குத் தெரியாதே.
ஓம். ஓம். உன்னையறியாமல் இரவில இந்தப் பக்கத்தில ஒரு ஈ எறும்பு அசையுமே. மெய்ய சின்னத்துர. இதுகள எடுத்துக் கொண்டு போய் எங்க விக்கிறது.
அண்ண . . . செட்டி குளப்பக்கம் கொண்டு போட்டா அங்க குடுக்கலாம். அதப் பற்றி நீ ஏன் யோசிக்கிறாய். நானில்லோ வித்துக் காசாக்கித் தாறது.
இண்டாலும் அதுகள். . . .
ராசையாண்ண! இவளவு சனங்களும் எவளவு கஷ்ரப்பட்டு இஞ்சால, பக்கத்து ஊருகளுக்குப் போக, இவே பெரிய லெவலா வான்
புடிச்சு ஒய்யாரமாக் கொழும்புக்குப் போனவினமில்லோ,
ஓம். ஓம் அவேக்கு பக்கத்து ஊருக்குப் போனா மரியாத குறைஞ்சு போடுமாம். அகதியாயிருக்க வேண்டி வந்திருமாம்.
அண்ண. இப்ப தமிழன் எண்டா முழுப்பேரும் அகதிதானே, வெளி நாட்டுக்குப் போனவசுட அகதி அந்தஸ்துத்தானே கேக்கினம். பிறகு இவையென்ன பெரிசா லெவல்க் கதை கதைக்கிறது.
ரெண்டு பேரும் உத்தியோகம் பாக்கினம். நல்ல சம்பளம் எடுக்கினம். அந்தத் தடிப்புத் தான்.
ராசையாண்ண. . . நேரம் போகுது . . வா போவம்
ஆரும் நிக்கினமோண்டு பார் சின்னத் துரை
அண்ண சத்தம் போடாம வாங்கோ. (நாய் பெரிய சத்தமாகக் குரைக்கிறது)
என்னடாப்பா நாய் விடாது போல கிடக்கு. உந்த மாதிரிக் குலைக்குது.
உது எவளவு நேரம் குலைக்கப் போகுது பாப்பம். (பெருவிரலில் நடுவிரலைத் தட்டி ஒலி எழுப்பி) வா. உஞ்சு. உஞ்சு . . உஞ்சு (நாய் தொடர்ந்து குரைக்கிறது)
உது சரிவராது சின்னத்துர. ஆமிக்காறங்கள் வந்தாச் சுட்டுப்
கஉவாத
குயில்கள் 99 அகளங்கண்

Page 53
இடம்
காலம் :-
போடுவாங்கள். வேறயும் ஆரும் உது வழிய வந்தாக் கரைச்சல், வா போவம்.
g5 Tgif (5)
வீடு,
இரவு
பாத்திரங்கள் :- சின்னத்துரை, ராசையா
சி. துரை :- ராசையாண்ண இண்டைக் கொருக்காப் போய்ப் பாப்பமே.
ராசையா :- அந்த நாய் விடாது சின்னத்துர வேற எங்கயும் பாப்பம்.
சி. துரை :- வேற ஆற்ற வீட்டில என்ன இருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா கோழிதான்
புடிக்கிலாம். இஞ்சயிண்டா நம்பிக்கையா ஏதும் எடுக்கிலாம்.
ராசையா - அதுக்கு அவன்ர நாய் விட்டாத்தானே.
சி. துரை :- அண்ண. அதுக்கு நான் ஒரு வழி வைச்சிருக்கிறன் இண்டைக்குப்
பாரன் என்ர கெட்டித்தனத்த,
ராசையா :- என்ன ஏதும் மந்திரத்தால நாய்க்கு வாய்கட்டப் போறியே
சி. துரை :- நாய்க்கு வாய் கட்டுற மந்திரம் தெரிஞ்சா நான் ஏன் இப்பிடி இருக்கிறன். ராசையாண்ண, இப்ப நாலு நாளா அந்த நாய் சோறு தண்ணியில்லாமல்த் தானே கிடக்குது. ஒரு பாண்துண்டப் போட்டாச் gीि.
ராசையா - ஓம். ஓம். நாய் நன்றியுள்ள மிருகமில்லே, சாப்பாடு போட்டா எங்களுக்கும் வாலாட்டும். உன்ர மூளையும் ஒரு மூளைதான். நீ எங்கயோ இருந்திருக்க வேண்டியவன் சின்னத்துர.
சி. துரை :- வாண்ண, உப்பிடி எத்தின இடங்களச் சமாளிச்சிருக்கிறன். உது
பெரிய வேலயே. (நாய் குரைத்துக் கொண்டு ஓடி வருகிறது)
ராசையா :- சின்னத்துர. கெதியாப் போடு, அது வாற வேகத்தப் பாத்தாப் பாஞ்சு எங்களக் கடிச்சுத் திண்டிரும் போல கிடக்குது. அந்தப் பாண் துண்டப் போடு. (3LITL6 JITULIT. LJuJLDITöölö(55).
சி. துரை :- வா. உஞ்சு. உஞ்சு. இந்தா (பாண் துண்டைப் போடுகிறான்) இந்தா. உஞ்சு. உஞ்சு. (நாய் தொடர்ந்து குரைக்கிறது)
கூடவாத குயில்கள் 100 அகளங்கண்
 

ராசையா :- உது விடாது சின்னத்துர, வீணா உதிற்றக் கடி தான் வாங்கோணும்.
இப்ப ஊசி போடவும் இடமில்ல. வா. போவம்.
சி. துரை :- அண்ண. நில்லண்ண. நில்லண்ண ஓடினியிண்டாத் துரத்திக்
கடிக்கும் அண்ண. ஓடாத நில்லு,
ராசையா :- (நாய் குரைக்கிறது) நீ நிண்டு கடி வாங்கு. நான் போறன்.
சி. துரை :- (களைத்து மூச்சுவாங்கியபடி) அ. ങ്ങി. .ண என்ன செய்வம்.
இது பாண் துண்டுக்கும் மசியுதில்ல. -
ராசையா :- நீயும் உன்ர மூளையும். நீ இண்டைக்கு ஒரு நாளைக்கு ஒரு துண்டுப் பாணப் போட்டு நாய ஏமாத்திலாமெண்டு பாக்கிறாய். நாயென்ன மனிசரப் போலயே. இவளவு நாளாச் சாப்பாடு போட்ட வீட்டுக்காறர மறக்குமே அது. அதுதான் சின்னத்துர நாயின்ர நன்றிக் குணம்.
சி. துரை :- அண்ண. அது நான் போட்ட பாண்துண்டுக்குக் கிட்டவும்
(SLIII (3356)6O(3u.
ராசையா :- சின்னத்துர. நீ போட்ட பாண் துண்டச் சாப்பிட்டிட்டா உனக்கு வாலாட்டோனும் எண்டு நினைச்சுத்தான் பாண்துண்டுப் பக்கமே போகேல்லப்போல என.
சி. துரை :- உது வீண் வேல அண்ண. அது நாய் போலயே பாயுது. புலிபோல எல்லோ பாயுது. உள்ளுக்குப் போனாக் கடிச்சுத் திண்டிடும் போலனல்லோ கிடக்கு.
ராசையா - ஓம். ஓம். அதுக்கிருக்கிற பசீல எங்களத் தான் கடிச்சுத்
திண்டிடும் வா போவம்.
as Tlal (6)
இடம் :- வீடு
பாத்திரங்கள் :- குமார், நித்தியா
(Van) வான் வீட்டுக்கேற் (Gate) அடியில் வந்து நிற்கும் சத்தம், நாய்குரைக்கும் சத்தம்
குமார் :- இதில நிப்பாட்டுங்கோ (நாய் குரைத்துக் கொண்டு அருகில் வந்து
நின்று வாலை ஆட்டுகிறது)
நித்தியா - சீ. சனியன். போ அங்கால அடி. கால நக்குது சனியன்.
கூடவாத குயில்கள் 101 அகளங்கண்

Page 54
|
குமார்
நித்தியா :
குமார்
எலும்பும் தோலுமா அது இருக்கிற இரயப்பார். டேய் ரமேஸ் அதத் தொடாதடா விசராக்கியும் இருக்கும். கடிச்சும் போடும்.
அடி. ரமேஷ், கையில வைச்சிருக்கிற நாய்க்குட்டிய ...........(الإ9ك இறக்கிவிட்டிட்டு, அந்த பிஸ்கற்ற எடுத்துப் போடுடா. தின்னட்டும் பாவம், ம் நல்ல காலம் சண்ட நடக்கேல்ல.
99......... .الإلك( .......... காலெல்லாம் நக்குது. சனியன். அதுக்கு
ஆக்களத் தெரியேல்லப் போல. நான் நினைச்சன் செத்திருக்குமெண்டு. பத்து நாளாச் சாப்பாடில்லாமல்க் கிடந்தும் சாகேல்ல. உதுக் கென்னத்துக்கு பிஸ்கற்.
ஓடிக் குரைக்கிறது) அது படுற பாட்டப் பார். வீட்டச் சுத்திச் சத்தி ஒடுறதயும் குலைக்கிறதயும்.
முற்றும்
கூடவாத குயில்கள் 102 அகளங்கண்
 


Page 55