கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்

Page 1


Page 2


Page 3

மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்
தமிழ்மணி 95GT56
EjstliI h6NA) SAståIIIs EU6NAl
சவுத் ஏசியன் புக்ஸ்
المدينة

Page 4
Mahakavi Barathiyarin Suthandhira Kavithaikal Thamilimani Akalankan First Edition : July 1994 Printed at : Suriya Ach agam, Madras-41. Published in Association with
National Art & Literary Association by South Asian Books 611, Thayar Sahib II Lane Madras-600 002. RS. 17,00
மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் தமிழ்மணி அகளங்கன் முதற்பதிப்பு : ஜூலை 1994
அச்சு ; சூர்யா அச்சகம், சென்னை-41 வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை-600 002
ლნ. 17.00

୬-ଶif (୫ ଜୀ...
பதிப்புரை முன்னுரை அணிந்துரை
பகுதி - 1
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர் வேறொன்று கொள்வாரோ
LJ(g595 - II
ஆயிரம் உண்டிங்கு ஜாதி
L.J (g5S) – liIi.
விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்
பகுதி - IV
போராளிகளை பிடிக்கும் ஆவல்
6
41
59
9 O.

Page 5
s UBÜL68);
வெளியீட்டுத்துறையில் முனைப்புடன் செயற்படத் தொடங்கியதிலிருந்து தேசிய கலை இலக்கியப் பேரவை பல காத்திரமான நூல்களை தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்கியுள்ளது. அந்த வரிசையில் பல்துறை சார்ந்த அறிஞர்களின் பங்களிப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவாவில் பல கருத்துக்களையும் வெளி பிடும் களமாக பரிணமித்துள்ளோம் ஆயிரம் மலர்கள் மலரட்டும், ஆயிரம் சிந்தனைகள் பிறக்கட்டும் என்ற விரிந்த தளத்துக்கு நாம் உயர்த்து செல்வது இனி தவிர்க்க
வியலாத வரலாற்றுத்தேவை.
அந்த வகையில் நீண்டகால நண்பராகத் திகழ்ந்த அகளங்கனின் நூலை முதற்தடவையாக நாம் இப்போது வெளியிடுகிறோம். ஏற்கனவே பல ஸ்தாபனங்களுடாக தன் படைப்புகளை தமிழுலகுக்கு வழங்கிய அகளங்கன் அங்களுடாக இந்தப் படைப்பை வெளியிடுவது குறித்து
நாம் உளப்பூரிப்படை கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை

முன்னுரை
1986ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ‘மகாகவிபாரதி யாரின் சுதந்திரக் கவிதைகள்' ஆய்வு நூல் உருப்பெறு வதற்கு இத்தனை ஆண்டுகாலம் சென்றது மிகவும் கவலைக்குரியதாகும் முரசொலி (யாழ்ப்பாணம்) பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வெளியிடுவதற்காக, ஜனரஞ்சகமான முறையில், எளிய வடிவில் பாமரர் களுக்கும் விளங்கும் வகையில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டது.
முரசொலி பத்திரிகை இடையில் நின்று போனதன் காரணமாகவும், அதுவரையில் எனது வேறு கட்டுரைகள், ஆக்கங்கள் மாறிமாறி வந்துகொண்டிருந்ததன் காரண மாகவும் இக்கட்டுரைத் தொடர் வெளி வருவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் எனது எட்டு நூல்கள் வெளிவந்து விட்டன. இருப்பினும் இந்நூல் அச்சாகும் காலம் இப்போதே கனிந்திருக்கின்றது. இதனை வெளியிடும் தேசிய கலை இலக்கிய பேரவை மற்றும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கு என் நன்றிகள்.
மகாகவி பாரதியின் மேல் காதல் கொள்ளாதவன் தமிழ்க் கவிஞன் அல்ல. கவிதைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் எனக்கும் பாரதியிலே அதிகளவு விருப்பம் உண்டு பாரதி ஒரு காலத்தின் கவிஞன் மட்டுமல்ல, இந்த ஞாலத்தின் பெரும் கவிஞன் என்றும் போற்றப்படத் தக்கவன்.

Page 6
8
பாரதியைப் பற்றியும் பாரதியின் ஆக்கங்கன் பற்றியும் பல கோணங்களிலே பலராலும் பல வகையிலும் ஆராய்ந்து நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலிலே பாரதியின் சுதந்திரக் கவிதைகள் - விடுதலைக் கவிதைகளை ஒரு உள் நோக்கத்தோடு ஆராய்ந்து எழுதி இருக்கிறேன் பாஞ்சாலி சபதத்தை பாரதி எந்த உள் நோக்கத்தோடு பாடினானோ அத்தகையதொரு உள் நோக்கமாகவும் கருதிக் கொள்ளலாம்.
பாரதியின் பாடல்களை அங்கொன்றும் இங்கொன்று மாகப் படித்துப் பெறுகின்ற உணர்வைவிட பகுதி பகுதியாகப் பிரித்து தொகுத்து இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பாடல்கள் மூலமும் விளக்க உரைகள் மூலமும் அதிக உணர்வைப் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மீண்டும் ஒரு பாரதி பிறந்து வந்து கவி பாடுவானோ
தெரியாது, ஆனால் எல்லாக் கவிஞர்களது இதயங்களுக்
குள்ளும் ஏராளமான பாரதிகள் குடியிருந்து கோலோச்சி னால் அதுவே போதும்.
இந்நூலை வெளியிடுவதில் எனக்கு சகல வகையிலும்
உதவி செய்த நண்பர் திரு ந. இரவீந்திரன் அவர்களுக்கும்,
நூலாக்கத்திற்கு உதவிய தம்பி க. குமாரகுலசிங்கம் அவர் களுக்கும் என்றும் என் நன்றிகள் உரியவை.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய எனது பெருமதிப் புக்கும் பெருவிருப்புக்கும் உரிய பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.அருணாசலம் அவர்களுக்கும் எனது நன்றிகள். பம்பைமடு வவுனியா.
1. i. 1994
அன்புடன் அகளங்கன் நா.தர்மராஜா.
 
 

அணிந்துரை
* உயர்வும் தாழ்வும் ஒருவழி நில்லா' என்பது ஆன்றோர் வாக்கு. உலக நாடுகளினதும் இனங்களினதும் வரலாற்றை நோக்குமிடத்து இக்கூற்று எத்துணைப் பொருத்தமானது என்பது தெற்றெனப் புலப்படும். ஏற்றமும் எழுச்சியும் மிக்கு விளங்கிய நாடுகளும் இனங் களும் தாழ்வுறுவதும், தாழ்வுற்று அடிமைச் சகதியில் உழலும் நாடுகளும் இனங்களும் ஏற்றமும் எழுச்சியும் உறுவதும் உலகில் நாம் காணக்கூடியவை.
அரசியல், சமூகம், சமயம் முதலிய துறைகளில் தளர்ச்சியும் வீழ்ச்சியும் அழிவும் ஏற்படும் காலங்களில் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றிப் புத்துயிரளித்து மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டுவரக் காலத்துக்குக் காம் வாராது வந்த மாமணிபோல் அவதார புருஷர்க ள கவும் வரலாற்று நாயகர்களாகவும் யுகப்பெருங் கவிஞர்களாகவும் வெவ்வேறு வடிவிற் பெரியோர்கள் பலர் தோன்றியதையும் தோன்றுவதையும் உலக வரலாறு காட்டி நிற்கும்.
1- חj_ן

Page 7
lO
துணைக்கண்டம் எனக் கூறப்படும் பாரதம் உட்படக் கீழைத்தேய நாடுகள் பலவும் அந்நியரின் ஆளுகைக்குட் பட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றவேளையில் அந்நாடுகளையும் இனங்களையும் உய்விக்க அரசியல், சமூக, சமய, கலைஇலக்கியத்துறைகள் சார்ந்த பெரியோர்கள் பலர் தோன்றி மக்கள் உய்யும் நெறி காட்டிச் சென்றமையை நாம் மறக்கமுடியாது. இராமகிருஷ்ணபரமகம்சர், சுவாமி விவேகானந்தர், ஆறுமுக நாவலர், சுவாமி விபுலாநந்தர், மகாத்மா காந்தி, யுகப் பெருங்கவிஞர்களான பாரதி, இக்பால், தாகூர் முதலியோர் இவ்வகையில் நினைவுகூரத் தக்கவர்கள். யுக புருஷர்களாகத் தோன்றும் அத்தகைய வர்களைப் பற்றியதும் அவர்களது ஆக்கங்களைப் பற்றியதுமான ஆய்வு முயற்சிகள் முடிவுறுவதில்லை. மாறாக என்றும் புத்தம் புதிய கருத்துகளை நல்கிக்
கொண்டே இருக்கின்றன.
இவ்வகையில் யுகப்பெருங்கவிஞனாக விளங்கும் பாரதியைப்பற்றிய ஆய்வு முயற்சிகள் இந்தியா, ஈழம் உட்பட உலகெங்கும் நடைபெற்றுள்ளன; நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன பாரதியைப் பற்றிய ஆய்வு முயற்சி பில் ஈழம் தனக்குரிய பங்களிப்பிலும் கூடுதலாகவே செய்துள்ளது எனலாம். சுவாமி விபுலாநந்தர் முதல் இன்றுவரை பாரதியைப் பற்றிய பன்முகப்பட்ட ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. எனினும் பாரதியியல் பற்றிய ஆய்வு முயற்சிகள் முடிவுறாது நீண்டுகொண்டே செல்கின்றன.
இவ்வகையிற் பேச்சாளனாகவும் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் ஆய்வாளனாகவும் பன்னூல் ஆசிரிய னாகவும் இளைஞனாகவும் விளங்கும் திரு. அகளங்கன் அவர்களும் பாரதியியல் பற்றிய ஆய்வுமுயற்சியில் தமது பங்களிப்பாக இந்நூலை எழுதியுள்ளமை பாராட்டுக்குரிய தாகும்.

11
இந்நூல் எல்லாமாக நான்கு பகுதிகளையும் பல உபதலைப்புகளையும் கொண்டுள்ளது. உபதலைப்புகள் மிகபொருத்தமான முறையிற் பாரதியின் சிறந்த கவிதைத் தலைப்புகளையோ பாடலடிகளையோ கொண்டு அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது. சில உபதலைப்புகள் வருமாறு; பாரதநாட்டின் அன்றைய நிலை, அரசியலைப் பேயென்று அஞ்சும் மக்கள், ஒருகோடி பிரிவினைகள், குடிக்கக் கஞ்சியுமில்லை அதற்குக் காரணமுமில்லை, நடிப்புச்சுதேசிகள், ஆயிரம் உண்டிங்கு ஜாதி, வாராது போல் வந்த மாமணி, சாதிச் சண்டையும் சமயச் சண்டை யும், ஆங்கிலம் பயின்றோரின் அன்றைய நிலை.
பாரதியின் சுதந்திரக் கவிதைகளே (தேசீய கீதங்கள்) இந்நூலின் ஆய்வுப் பொருளாக இருப்பினும் அவசியமான இடங்களில் நூலாசிரியர் சுதந்திரம் சார்ந்த பாரதியின் ஏனைய பாடல்களையும் எடுத்தாளத் தவறவில்லை. எடுத்துக்காட்டாகப் பாஞ்சாலி சபதத்தில் இடம் பெறும் சுதந்திரம், அடிமைத்தனம், ஆளுவோரின் மனோபாவம் முதலியன பற்றிய பாடல்கள் நூலாசிரியராற் பொருத்த மான இடங்களிலே காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. பாஞ்சாலி சபதத்தில் இடம்பெறும், "நாட்டு மாந்தரெல்லாம். ஒரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன்றிடாமே சோரஞ் செய்திடாமே - பிறரைத் துயரில் வீழ்த்திடாமே ஊரையாளுமுறைமை உலகில் ஒர் புரத்து மில்லை." என்னும் பாடற்பகுதி ஆசிரியரால் எடுத்தாளப் பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதே போன்று தாய்மொழியைத் தூற்றி அந்நிய மொழியைப் புகழ்பவர்கள் துகிலுரிந்த துச்சாதனனைத் திரெளபதி புகழ்ந்ததைப் போன்றதற்கு ஒப்பானதாகும் என வரும் பகுதியும் மனங்கொளத்தக்கது.
பாரதி வெறுமனே அரசியல் விடுதலையை மட்டும் வேண்டி நின்றவரல்லர். "சிட்டுக் குருவியைப் போலே

Page 8
12
விட்டு விடுதலையாகி நிற்பாய்' எனவும், 'மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் அறுக’ எனவும் வேண்டிய அவர் சமூக, பொருளாதார, ஆத்மீக, பண்பாட்டுத் துறைகளிலும் விடுதலையை அவாவி நின்றவர்; சாதி ஏற்றத் தாழ்வுகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் பெண் அடிமைத்தனத்தையும் அகற்ற அயராது பாடுபட்டவர் என்பதை நூலாசிரியர் பொருத்தமான உபதலைப்புகளில் விண்டு காட்டி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத மக்களையும் அவர்களுள் ஒரு கூறான தமிழ் மக்களையும் தட்டி எழுப்பிச் சுதந்திரக் கனலை மூட்டுவதற்குப் பாரதி எவ்வாறெல்லாம் முயன்றார்; மக்களிடம் குடிகொண்டிருந்த அந்நிய மோகத்தையும் அடிமை மனப்பான்மையையும் தாழ்வுச் சிக்கலையும் போக்குவதற்குப் பாரதத்தினதும் அதன் ஒரு கூறான தமிழகத்தினதும் பண்டைய பெருமைகளையும் சிறப்புக்களையும் புவிச்சக்கரவர்த்திகளையும் கவிச்கக்கர வர்த்திகளையும் விஞ்ஞானிகளையும் மெய்ஞ்ஞானிகளை பும் அரசியல், சமூக, பொருளாதார, சமய, கலைஇலக்கிய, பண்பாட்டுச் சிறப்புகளையும் அடுக்கடுக்காக எவ்வாறு காட்டிச் செல்கிறார் என்பதையும் நூலாசிரியர் ஆங்காங்கே தெளிவு படுத்தியுள்ளமை போற்றத்தக்கது.
தவிர்க்கமுடியாதவாறு இந்நூலிற் பாரதியாரின் பாடல்கள் சற்றுக் கூடுதலாகவே மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. அதேபோன்று பாரதியாரின் ஒருசில பாடல்கள் திரும்பத்திரும்ப வெவ்வேறிடங்களில் எடுத்தாளப் பட்டுள்ளன.
பாரதியின் சுதந்திரப் பாடல்கள் பாரதியின் காலத் துக்கு மட்டுமன்றி உலகில் அடக்குமுறையும் அடிமைத்
 

13
தனமும் இருக்கும் வரை உயிர்த்துடிப்புடன் வாழவல்லவை என்பதையும் உலகில் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட எந்த ஒரு நாடோ இனமோ சமூகமோ வர்க்கமோ விடுதலைகோரிப் போராடத் தூண்டும் வகை அமைந்துள்ளன என்பதையும் நூலாசிரியர் ஆங்காங்கே அழுத்திக் கூறியுள்ளார். சமகால நிலைமை களின் தாக்கம் நூலாசிரியரை எவ்வளவு தூரம் பாதித் துள்ளது என்பதையும் நூலில் ஆங்காங்கே காண முடிகின்றது.
பாரதியைப் பற்றித்தரமான ஆய்வுநூல்கள் பல வெளி வந்துள்ளனவேனும் சாதாரண மக்களும் பாடசாலை, கல்லூரி மாணவர்களும் இலகுவற புரிந்துகொள்ளக்கூடிய நூல்கள் எண்ணிக்கையிற் குறைவே. இந்நூல் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் இலகு நடையிலும் அமைந்துள்ளமை மனங்கொளத் தக்கது. ஆசிரியரது பணி மேன்மேலும் சிறந்தோங்க இறையருள் கிட்டுவதாக,
கலhநிதி. க. அருணாசலம் முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை

Page 9

U(35 - I
Qij ligji 6 QIGJII. Ë6 pTi-ligj Qiri 6 QIGp T65IO QE TIGir QIT GJT.
காலத்தால் அள்ளுண்ட கவிஞர்களின் தொகை கணக்கில் அடங்காது. காலத்தை வென்ற கவிஞர்கள் சிலர் தான், இன்றும் ஞாலத்தில் நிலைத்திருக்கின்றனர். அவர்களுள் பாரதிக்குத் தனியானதும் தனித்துவமானது மான ஒர் நிலையான இடம் உண்டு.
அதற்குக் காரணம் பாரதியின் எளிய நடையும். இலகுவான சொற் பிரயோகமும், உணர்வு பூர்வமான இயல்பாகவே அமைந்த கவிதா வேகமும் தான், என்று துணிந்து கூறலாம். அதிலும் பாரதியை நின்று நிலைக்கச் செய்த முக்கியமான பாடல்கள் அவர் பாடிய சுதந்திர-விடுதலைப் பாடல்களே. தனது சமகால நிகழ் வுகளை, தானும் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட சம்பவங்களை, மிகவும் அழகாகப் பாடி இருக்கின்றார் பாரதியார். சம்பவங்களிலிருந்து தனித் தொதுங்கி, வெறும் பார்வையாளனாக நின்று கொண்டு கவிதை பாடியவனல்ல பாரதி. தானும் ஈடுபட்டு மற்றவர்களையும் ஈடுபடத் தூண்டியவன் பாரதி. பாரதியின் காலத்தில் பாரதியின் பாடல்கள் உணர்ச்சிப் பாடல்களாகவும்,

Page 10
16
சமுதாய, அரசியல், விடுதலை, எழுச்சிப் பாடல்களாகவும் மிளிர்ந்தன.
ஒரு சிறு காவியம் என்ற அளவில் பாஞ்சாலி சபதத்தின் சிறப்பு வியந்து போற்றுதற்குரியதுதான். அது ஒர் காலத்தால் அழியாத காவியம். கண்ணன் பாட்டும், குயிற் பாட்டும் பாரதியின் பக்திப் பிரவாகத்தையும் கவிதைச் செழுமையையும் காட்டுவன. ஆனால் பயன் பாட்டைப் பொறுத்த வரையிலும், சமுதாய மாற்றச் சிந்தனைகளைப் பொறுத்த வரையிலும், பாரதியின் சுதந்திரக் கவிதைகள் தமிழிலக்கியப் பரப்பிலே ஈடு இணை 12 ல்லாத பெரும் சிறப்பைப் பெற்றிருக்கின்றன. எல்லோ ருக்கும் விளங்கும் படியாகவும், தமிழிலே கவிதை பாடலாம் என்று பாடிச் சாதனை செய்து வழிகாட்டிய வன் பாரதியே.
உலகிலே எந்தெந்த நாட்டிலெல்லாம் அடக்கு முறை நடைபெறுகிறதோ அந்தந்த நாட்டிலெல்லாம் பாரதியின் விடுதலைப் பாடல்களுக்குப் பெரும் மதிப்புண்டு மனித இனம் முற்றாக அழியும் வரை, மனிதனை மனிதன் அடிமை கொள்ளும் நிலை நிச்சயமாக இருந்தே தீரும். அதனால் பாரதியின் கவிதைகளும் மனித இனம் முற்றாக அழியும் வரை வாழ்ந்தே தீரும் என்று உறுதியாக நம்பலாம்.
பாரதி தமிழனுக்கு மட்டும் சொந்தக்காரனல்ல. விடுதலை வேண்டிப் போராடும் எல்லா இனத்து மக்களுக் கும் பாரதி இரத்த உரித்துக்காரன்.
இன்று உலகப் பொது மறையாகப் போற்றப்படும் திருக்குறளை வள்ளுவப் பெருந்தகை உலகுக்குத் தந்தார். வள்ளுவர் தந்த திருக்குறள் அனைத்தும் உலகம் முழுமைக் கும் பயன்படும் பொதுக்கருத்துகளைக் கொண்டிருக் கின்றன. உலகிலுள்ள அதிகூடிய மொழிகளில் மொழி
 

17
பெயர்க்கப்பட்டுள்ள பொதுநூல் என்ற சிறப்பு திருக் குறளுக்கு உண்டு.
இன்றைய இந்த நிலையினை அன்றே தன் தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த பாரதி, வள்ளுவரை தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தக் காரனாக வைத்திருக்க விரும்பாமல், இந்த உலகத்துக்கே பொது உடைமையாக்க விரும்பினான். அப்படி உலகம் முழுவதற்கும் வள்ளு வனைச் சொந்தக் காரனாக்குவதால், தமிழ் நாட்டிற்கு வானளாவிய பெரும்புகழ் கிடைக்கும் என்று கனவு கண்டான். அதனால் தான்,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு."
என்று அன்றே பாடினான். வள்ளுவனைப் பாரதி உலகத்துக்கே சொந்தமாக்கியது போல; பாரதியையும் தமிழ்நாடு இன்று உலகத்திற்கே சொந்தமாக்கி விட்டது
என்று கூறலாம்.
அடிமையும், மிடிமையும் மிஞ்சி நிற்கும் மக்களுக்கு, விடிவைத் தேடும் உணர்வு ஊட்டிய மாக் கவிஞன் பாரதி. அவன் மகா கவிஞன். அவன் பிறந்து நூறாண்டுகள் முடிந்து விட்டன. அவனது கவிதைகள் ஆயிரம் ஆண்டு சுளுச்கும் மேல் வாழுப் படி அத்திவாரமிடப்பட்ட நிலையை இன்று அடைந்திருக்கின்றன. அந்த அமர கவியை மகாகவி பாரதி என்று அழைப்பதில் இன்று இரு கருத்துக்களுக்கு இடமே இல்லை. அவனது கவிதைகளைப் பற்றி ஆராயாத தமிழறிஞர்கள் தமிழறிஞர்களல்ல. அந்த அளவுக்கு வான் புகழ் கொண்டவன் பாரதி.
பாரத நாட்டின் அன்றைய நிலை :
பாரதநாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அங்கே உதித்ததோர் செந்ஞாயிறு பாரதி. பாரதியாரின்

Page 11
|
18
பாடல்கள், மக்களின் அன்றைய நிலையையும், அவ்விழி நிலை மாறி, உய்நிலை காணும் வழியையும் மிக அழகாகக் கூறுகின்றன. விடுதலைத் தீயைக்கொழுந்து விட்டெரியச் செய்யப் பாரதி பல வழிகளைக் கையாண்டான், மொழிப் பற்று, நாட்டுப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மத, பேதம், ஏழை பணக்காரன் என்ற பேதம், மற்றும் பலவகையான பேதங்களினின்றும் விடுதலை, போன்ற வகைகளிலே இலகுதமிழில் கவிதை மூலம் உணர்வூட்டி, விடுதலைக் கீதமிசைத்தான் பாரதி.
பாரதி, நடக்கும் நடையும் பாரதியின் கவிதை நடையும் இரண்டுமே வீறாப்பும், வீராவேசமும் கொண் டவை மகாத்மா காந்தியின் அரசியல் தலைமையை ஏற்றபின் பாரதி பாடிய பாடலொன்றில் அன்றைய பாரதத்கின் உண்மை நிலை மிகத் தெளிவாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
'வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து
நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க!
என்று பாடுகிறார். இந்த பூமியிலே இருக்கின்ற நாடுகள்
எல்லாவற்றையும் விட இந்தியா தாழ்வுற்று, வறுமை
மேலாதிக்கஞ் செலுத்த, எப்பொழுதோ இவைகளிலிருந் தெல்லாம் விடுதலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால்
அந்த விடுதலை தவறிக் கெட்டு விட்டது. அதனால் பாழ்
பட்டு நின்றது, பாரத தேசம் என்று பாரத நாட்டின்
அன்றைய நிலையை விளக்குகிறார் பாரதியார்,
நெஞ்சு பொறுக்குதில்லையே :
தாழ்வுற்று நின்ற மக்களைப் பார்த்து, பாரதிக்கு மனம் தாங்கவில்லை. அந்த மக்களின் அறியாமையையும்
 

19
அர்த்த மற்ற பயத்தையும் எண்ணி நெஞ்சங்கலங்குகிறார். மூடக் கொள்கைகள் மலிந்திருந்த சமுதாயத்தில் முன் னேற்றம் எப்படி முகிழ்க்க முடியும். வேதனையின் விளிம் பிலே நின்று அந்த நிலையை அப்படியே பாடுகிறார். பாரதியார். உணர்வு பூர்வமான பாடல்களாக அவை பரிணமிக்கின்றன,
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் . அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என் பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.
எதனைக் கண்டாலும் ஆராய்வு, அறிவு இன்றி, அஞ்சுகின்ற மக்களைப் பார்த்து பாரதியார் அஞ்சுகிறார். பாரதியாரின் பார்வையிலே, அன்றைய அறிவற்ற மக்கள் கண்டு அஞ்சாத, அதாவது பயங் கொள்ளாத, பொருள் களே அவனியில் இல்லை, என்ற நிலை தெரிந்தது. அந்த அளவுக்கு மக்கள் பயந்து, பயந்து வாழ்ந்து கொண்டி ருந்தனர். மரத்திலும் குளத்திலும், வீட்டு முகட்டிலும் கூட பேய்கள் இருக்கின்றன. தங்களை வருத்துகின்றன, என்று மக்கள் பயந்ததாகப் பாடுகிறார். அறியாமை என்ற பேயை மனத்திலே வைத்துக் கொண்டு ஆகாயம், பூமி 6ாங்கும் பேய் இருப்பதாகக் கூறும் அறிவிலிகள் இருந்த நிலை பாரதியின் பாடலிலே காட்டப் படுவதைக் காணலாம்.
அரசியலைப் பேயென்று அஞ்சும் மக்கள் :
மக்கள் தம்மைத் தாமே ஆள்வதுதான் ஜனநாயகம். அரிசி விற்பவனும், அரிசியை அடுப்பிலே வேகவைக்கும்

Page 12
20
அரிவையரும் அறிந்து கொண்டிருக்கிறார்கள் அரசியலை. இது இன்றைய நிலை, ஆனால் அன்றோ அரசியலும்
பேயாய், பூதமாய் பயந்து ஒதுங்கும் ஒன்றாக இருந்திருக்
கிறது என்பது பாரதியின் கூற்று.
மந்திரவாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலி பிடிப்பார் யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள் தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம் அந்த அரசியலை - இவர் அஞ்சு தரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார்.
குடிமக்கள் கொடுக்கும் வரிப்பணத்தைக் கொண்டு தான் அரசியல் நடாத்து வார்கள் அரசர்கள். மக்கள் இன்றி மன்னன் இல்லை. ஆனால் மக்களுக்கோ தங்கள் பணத்திலேதான், தங்களுக்காகத்தான் அரசியல் நடாத்து கிறார்கள் அரசர்கள்; என்ற உண்மை தெரிந்திருக்க வில்லை. மக்களில் எவ்வளவு அதிகமான தொகையினர் அரசியலில் பங்கு கொள்கிறார்களோ அந்த அளவுக்குத் தான் அரசியலும் சிறப்புறும். மக்களின் வாழ்க்கையும் சிறப்புறும் ,
அந்த அரசியலை, தங்களைத் தாங்களே ஆளுகின்ற அரசியலை, பேயாக நினைத்துப் பயந்தனராம் பாரத மக்கள், அந்த மக்களைக் கண்டு பாரதிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. அந்த அடிமை மன நிலையில் வாழ்ந்த மக்களை எழுச்சியும், உணர்ச்சியும் பெறச் செய்வதற் காகவே "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று பாடினார் பாரதியார். மக்களாக இருக்கத் தெரியாமல் மாக்களாக இருந்த அடிமை மனிதரை, மன்னராக்கப் பாடுபட்டுப் பாட்டுப் பாடினான் பாரதி. அரசியலைக்
 

21
கண்டு ஒதுங்கிய மக்களைக் கண்டு கோபாவேசமாகக் குமுறிய பாடல்தான் இது
சிப்பாயைக் கண்டு அஞ்சும் சிறுமை :
அரசியலைப் பேயென்று ஒதுங்கிப் பதுங்கிய மக்கள் சிப்பாய்களைக் கண்டால் எவ்வளவு பயங் கொண்டிருப் பார்கள், என்பதை அற்புதமாகக் காட்டுகிறார் பாரதியார்.
'சிப்பாயைக் கண்டு அஞ்சு வார் - ஊர் ச்
சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார் எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்".
நீண்டகாலமாக அடிமைப் பழக்கத்திலே ஊறிய மக்கள் எப்பொழுதும் கைகட்டிச் சேவை செய்வதையே தம் பெரும் பேறாகக் கொண்ட மக்கள்; பூனைகள் போல பயந்து, பயந்து ஏங்கி வாழ்ந்த மக்களை, அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் பாரதியார்,
'ம்' என்றால் சிறைவாசம் 'ஏன்' என்றால் வன வாசம் என்ற வகையில் அடக்கி ஆளும் ஆட்சியாளர் களின், அடக்கு முறைகளுக்குள் ஆட்பட்டு, அடிபட்டு அல்லல்பட்டுத் தவித்து அடிபணிந்து வாழ்ந்த அன்றைய மக்களின் நெஞ்சத்திலே எதற்கெடுத்தாலும் பயமே நிரம்பியிருந்தது சிப்பாயைக் கண்டு அஞ்சுவதும் ஊர்ச் சேவகனைக் கண்டு கூட மனம் பதைபதைப்பதும், துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகுதூரத்தில் வரக்கண்டு,

Page 13
மூலம் காட்டுகிறார் பாரதியார்.
22
வீட்டில் ஒளிப்பதும், சிப்பாயின் ஆடை போன்ற ஆடை யைக் கண்டாலே பயந்து எழுந்து கைகட்டி நிற்பதும்,
அடக்கு முறையில் அடிபணிந்து மனம் புண்பட்டு கோழை நெஞ்சாக மாறிய பாரத மக்களின் பண்பாடாகவே வளர்ந்து விட்டிருந்தது.
ஒருகோடி பிரிவினைகள் :
அது மட்டுமல்லாமல், மக்களுக்குள்ளே ஏராளமான, தாராளமான பிரிவினைகள் இருந்தன. அவர்களுக்குள் இருந்த தாராளமான பிரிவினைகள் தான், அந்நியரைத் தாராள வைத்தது என்பது பாரதியின் கருத்து. அறியாமையால் ஏற்படும் பிரிவினைகள் மக்களின் ஒற்று
மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டிருந்தது.
'நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ ஐந்துதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை என்றுமகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திடுவார்.
பிரிவினைகள் கொஞ்சமல்ல, ஒரு கோடி என்று கொதித்தெழுகின்றார் பாரதியார். ஒன்றிரண்டல்ல, ஒரு
கோடி பிரிவினைகள் என்று சொன்னால்கூட அது பெரிய
அளவில்லையாம். அதனை விடக் கூடுதலான பிரிவினைகள் உண்டாம் நாட்டில் சாதி, மதம் ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள் மட்டுமன்றி அவர்களின் அறியாமை யால் ஏற்படுகின்ற பிரிவினைகள் அனேகம் அன்று இருந்தன. அதனை ஒர் நகைச் சுவையான உதாரணம்
 

23
'அஞ்சுதலைப் பாம்பென்பான் அப்பன்' மகன் "ஆறுதலைப் பாம்பு’ என்று மறுத்துக் கூறிவிட்டால் அப்பனுக்கும் மகனுக்கும் பிரிவு ஏற்பட்டு விடுமாம். நீண்ட நாட்களுக்குப் பகையாளியாக இருந்து விடுவார் 5GT (TLD . -
உண்மைச் சாத்திரங்களின் தன்மையை அறியாமல், பொய்ச் சாத்திரங்கள் பலவற்றை நம்பி அவர்களுக் குள்ளே பிரிவு ஏற்பட்டு விடுகிறதாம், குலமும், கோத்திரமும் ஒன்றாக இருந்தாலும்கூட, அர்த்தமற்ற கொள்கைகளினால் பிரிந்து, ஒருவரை ஒருவர் இகழ்ந்து வாழ்ந்து வந்தார்களாம்.
தம்மை அடிமைப்படுத்திய அந்நியர்களையே புகழ்ந்து பாடி, தோத்திரங்கள் சொல்லி கை கட்டி, வாய் பொத்தி அடிபணிந்து வாழும் பழக்கமே மேலோங்கி இருந்ததாம். இந்து சமயம் என்ற அமைப்புக்குள் கூட, இவன் சைவன், இவன் வைஷ்ணவன் என்ற பிரிவினை பெரிதாக வேர் விட்டுச் செழித் திருந்ததாம்.
சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை
நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் தோத்திரங்கள் சொல்லி அவர் தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் ஆத்திரங் கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.
குடிக்கக் கஞ்சியுமில்லை அதற்குக் காரணமுமில்லை :
ஒவ்வொரு நாளும் பஞ்சம், பஞ்சம் என்ற பேச்சு, பஞ்சமே அவர்களுக்குத் தஞ்சம், பஞ்சம் பஞ்சமென்று

Page 14
24
பரிதவித்து உயிர் துடிதுடித்து மக்கள் இறந்து கொண்" டிருந்தாலும் பஞ்சம் எப்படி ஏற்பட்டது என்பது அவர் களுக்குத் தெரியாது. அவர்களது உழைப்பு யார் வயிற்றுக்கு உணவாகிறது என்பதை அறியும் நிலையில் அவர்கள் இல்லை. பெரிதாக சாப்பிடுவதற்கல்ல. வெறுங்கஞ்சிகூட குடிப்பதற்கு இல்லை. அத்தகைய வறுமை ஏற்பட்டதற்குக் காரணம் கூட என்ன என்பது அவர்களின் அறிவுக்கு எட்டாத நிலையிலே இருந்தார்
5 GMT s TLD ( DG5 é956NT.
நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரி தவித்தே உயிர்துடிதுடித்துத் துஞ்சி மடிகின்ற றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.
அறியாமையில் ஊறி, அறிவற்ற சமுதாயமாக நாறிக் கிடந்த மக்களை நினைத்தால், பாரதிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. மக்களின் இத்தகைய இழிநிலையைக் கண்ட போதும் அவர்களை விட்டொதுங்க பாரதிக்கு விருப்பமில்லை: அவர்கள் மேல் வெறுப்பும் ஏற்பட வில்லை. காரணம். அவர்கள் இந்தியாவிலே; அதாவது தனது தாய் நாட்டிலே பிறந்த மக்கள் என்ற உணர்வு தான் என்று கூறலாம். அதனால் அறிவற்ற அந்த, அன்றைய பாரத மக்களின் வறுமைத் துயர்களையும், அடிமைத்துயர்களையும், களைவதற்கு ஒரு வழி தெரிய வில்லையே என்று ஏங்குகிறார்.
பொறியற்ற விலங்குகள் :
உண்ணுவதற்குப் போதிய உணவில்லை. உடலிலும், மனத்திலும் தோன்றியுள்ள நோய்களைத்தீர்க்க வகை.

25
யில்லை. அறிவு வளராத சிறு குழந்தைகளைப்போல பிறர் காட்டிய பாதையிலே சென்று கஸ்ரங்களுக்குள் மாட்டிக்கொள்வாரே தவிர எதையும் சிந்தித்துச் செயல்படுத்தும் ஆற்றல் அந்த மக்களுக்கு இருக்கவில்லை
எண்ணிலா நோயுடையார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார். கண்ணிலாக் குழந்தை கள் போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார். நண்ணிய பெருங்கலைகள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே-இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.
எழுந்து நடப்பதற்கும் திராணியற்ற அந்த மக்கள் வாழ்ந்த நாடோ, சாதாரண நாடல்ல, வாழும் வழிகளும், பெருங்கலைகளும், பெருஞ் சமயங்களும், தத்துவங்களும் தோன்றிச் செழித்து வளர்ந்த புண்ணிய நாடாய் பொலிந்த பாரத நாடு; ஒன்றிரண்டல்ல நாற்பதாயிரம் கோடி பெருங்கலைகள் உலகுக்கு அளித்து நின்ற புண்ணிய நாடு என்று பாரதத்தை பாரதியார் புகழும் விதம் அவரது நாட்டுப்பற்றை நன்கு விளக்கு கின்றது.
அத்தகைய நாட்டிலே, ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவைகளால் அறிந்து கொள்ளும் அறிவில்லாதவர்களாக, மக்கள் வாழ்ந்தனர். அவர்களை மக்கள் என்று கூறவும் பாரதிக்கு மனமல்லை அதனால் விலங்குகள் என்கிறார். அதுவும சாதாரண விலங்கில்லை. 'பொறியற்ற விலங்குகள்' என்று கோபமாகவே கூறுகிறார், குமுறுகிறார் பாரதியார்.
| Jпт –2

Page 15
26
அரசர்களால் ஏற்பட்ட அவலம் :
மக்கள் அறிவற்றவர்களாக அடிபணிபவர்களாக எழுந்து நடப்பதற்கும், வலிமையற்றவர்களாக வாழ்ந்த தற்கு மக்கள் மட்டுமேதான் காரணம் என்று கூறிவிட முடியாது. மக்களை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளும் காரணமே மக்களை அறிவற்றவர்களாக, சிந்திக்கத் திறனற்றவர்களாக, வைத்திருந்தால் அரசர் களுக்கு அடக்கி ஆளுதல் சுலபமான காரியமே. மக்களின் அறியாமைக்கு மன்னர்களும் காரணமே, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்திலே, அரசர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்க ளென்று கருதார். ஆட்டு மந்தை யாமென்று - உலகை அரச ரெண்ணி விட்டார். காட்டு முண்மை நூல்கள் - பல தாம் காட்டி னார்க ளேனும் நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்ய வில்லை. ஒரஞ் செய்திடாமே - தருமத் துறுதி கொன்றிடாமே சோரஞ் செய் திடாமே - பிறரைத் துயரில் வீழ்த் திடாமே ஊரை யாளு முறைமை - உலகில் ஒர் புறத்து மில்லை.
இது பாரத காலத்தில் நடந்ததாக பாரதியார் கூறவில்லை. கவிக் கூற்றாகவேதான் இவ்வரிகள் வருகின்றன. அப்படி இல்லாமல் பாரத காலத்தைத்தான் அவர் கூறுகிறார் என்று கூறினாலுங்கூட, பாஞ்சாலி சபதம் ஒரு மறைமுகமான அரசியல் இலக்கியமே. பாரத

27
நாட்டை பாஞ்சாலியாகவும்; பாஞ்சாலியைப் பணயம் வைத்துச் சூதாடி இழந்த பாண்ட வரை பாரதத் தலைவர் களாகவும், பாஞ்சாலியை அடிமைப்படுத்தி, கேவலப் படுத்திய துரியோதனன் முதலியோர்களை, பாரதத்தை அடிமைப் படுத்திய அந்நியர்களாகவும் நினைத்துக் கொண்டு தான் பாரதி பாஞ்சாலி சபதம் பாடியிருக் கிறான் என்பது ஊன்றிப் படிப்போற்கு இலகுவில் புரியும்.
இதே போல தனது இன்னொரு பாடலிலே அரசர்கள் மக்களை அடிமைப் படுத்தி அறிவற்ற மக்களாக வாழச் செய்ததை ஆத்திரத்தோடு கூறுகிறான் பாரதி,
இற்றை நாள் வரையினும் அறமிலா மறவர், குற்றமே தமது மகுடமாக் கொண்டோர் மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார், பற்றை அரசர் பழிபடு படையுடன் சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார். மற்றை மனிதரை அடிமைப்படுத்தும் குற்றமே, தம் கொள்கையின் மகுடமாகக் கொண்டு அதுவே தமது அறிவின் திறம் என்று எண்ணி அரசர்கள் அரசாட்சி செய்து வந்ததனாலேயே மக்கள் அத்தகைய இழிநிலை யிலே இருந்தார்கள் என்று நாம் எண்ணலாம்.
அரசர்களின் நீண்டகால அடக்குமுறைகளினால்தான் மக்கள் துணிவில்லாதவர்களாக, தன்னம்பிக்கை அற்றவர் களாக ஆற்றல் அற்றவர்களாக அடிமைச் சிந்தனையில் ஊறியவர்களாக அங்குமிங்குமாய்ச் சிதறிக் கிடந்தனர்.
நெட்டை மரங்களாய்ப் பெட்டைப் புலம்பல் :
பாஞ்சாலி சபதத்திலே பாஞ்சாலியை தெருவிலே
இழுத்து வருகிறான் துச்சாதனன். அதனைப் பார்த்து நின்ற மக்களை கண்முன்னே காட்டுகிறார் பாரதியார்.

Page 16
28
உண்மையில் இந்தியாவிற்கு அந்நியர்கள் செய்து கொண் டிருந்த கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு அந்நிலையை மாற்ற வகையறியாது திகைத்திருந்த பாரத மக்களையே இப்பாடல் மூலம் தெளிவாகத் தெரியக் காட்டுகிறார் பாரதியார்.
கக்கக்க வென்று கணைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கர கரெனத் தானிழுத்தான் ஐயகோ வென்றே யலறி உணர்வற்றுப் பாண்டவர் தந் தேவியவள் பாதி உயர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரன் பற்றி முன்னிழுத்துச் சென்றான் வழி நெடுக
மொய்த்தவராய் ‘என்ன கொடுமையிது’ என்று பார்த்திருந்தார்; ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தர மாமோ, வீர மிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னை அவள் அந்தப் புரத்தினலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர் க்குத் துணையா மோ.
பாஞ்சாலியை இழுத்துக் கொண்டு வந்த துச்சாதன னைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களை , மிகவும் மோச மாக, கேவலமாக ஏசுகிறார் பாரதியார் * வீரமிலா நாய்கள்' என்று திட்டுகிறார். விலங்கு போன்ற இளவர சனான துச்சாதனனை மிதித்துக் கொன்று விட்டு திரெள பதியைக் கொண்டுபோய் அவளது அந்தப்புறத்திலே சேர்க்காமல், நெட்டை மரங்கள் போல நின்று, பெட் டைப் புலம்பல் புலம்புகிறார்கள் மக்கள் என்று கோபிக் கிறார் பாரதியார்.
இந்தியாவின் அடிமை நிலையைப் பார்த்துக்கொண்டு வெறும் பார்வையாளராக இருந்த மக்களை இக்காட்சி
 

29
மூலம் காட்டுகிறார் பாரதியார். இது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமான காட்சியா விடுதலைப் போராட் டம் நடைபெறும் நாடுகளுக்கெல்லாம் இதுவே சாட்சி
நீ பியும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு :
இந்தியாவை அடிமைப்படுத்திய அந்நியரிடம் கை கட்டி ச் சேவை செய்து சம்பளம் வாங்கும் இந்தியர்களும் அந்த நாளிலே இருந்திருக்கிறார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எல்லா அடிமை நாடுகளுக்கும் பொது வானதுதான். அதிலும் சிப்பாய்களாக, பொலிஸ் காரர்களாக இந்தியர்கள் இருந்து கொண்டு, அந்நியர் கொடுக்கும் பிச்சைச் சம்பளத்திற்காக தங்கள் இனத்த வரையே கொன்று குவித்த மக்களும் இருந்திருக்கிறார்கள்.
இவர்களே கோடரிக் காம்புகள், மரத்தை வெட்டு வதற்கு வெறுங் கோடரியால் முடியாது ஒரு மரத்தை கோடரியினுள் பிடியாகப் போட்டால்தான் மரத்தை வெட்ட முடியும். மரம்தான் மரத்தை வெட்டப் பெரிதும் உதவுகிறது. மக்களை அடிமை கொள்வோர் எல்லோரும் இந்தத் தந்திரோபாயத்தைக் கைக்கொள்வது இயற்கை. அழிக்க, அடிமைப்படுத்த விரும்பும் இனத்தில் சிலரை எடுத்து உயர் பதவி கொடுத்து அவர்கள் மூலமாகவே அவர்கள் இனத்தை அழிக்க முற்படுவது, இன்றும் நடை முறையில் உள்ள ஒரு விடயந்தான்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கொல்வதற்கும், வெல்வதற்கும் போராட்டம் நடாத்தும் இனத்திலிருந்தே மக்களை எடுத்தார்கள் அந்நியர்கள். தங்களைத் தாங்களே அழிப்பதற்குச் சம்பளம் பெற்ற இந்தியர்களை பாரதி மிகக் கேவலமாகக் கருதுகிறான். ஏசுகிறான்.

Page 17
30
நாயும் பிழைக்கும் இந்தப் - பிழைப்பு
நாளெல்லாம் மற்றதிலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலீசுக் - காரப் பார்ப் பானுக் குண்டிதிலே பீசு.
பிராமண குலத்திலே பிறந்த பாரதியார், பொலீஸ் தொழிலில் ஈடுபட்ட பிராமணரை இப்படிச் சாடுகிறார் ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்றும் 'பாயும் கடிநாய்ப் போலீசு' என்றும் மிகக் கோபமாக ஏசுகிறார். காசுக்கு ஆசை கொண்டு தம்மினத்தை அழிப்போரை பாரதியார் சாடும் விதம், பாடும் விதம் அழகாகவே இருக்கிறது.
இந்தியாவிற்கு வெளியே இருந்த இந்தியர்களின் நிலை :
இந்தியாவில் இருந்த மக்கள் மட்டுமின்றி இந்தியா விற்கு வெளியிலும் பிழைப்புக்காகச் சென்ற இந்திய மக்கள் அடிமைத் தொழிலில் உழன்று கொண்டிருந்தனர். மலேசியாவிலும், இலங்கையிலும், பிஜித் திவிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்திய மக்கள் தோட்டக்கூலி களாக, வாட்டமுற்று, அடியும் உதையும் வாங்கி அடிமை களாக, அநாதைகளாக அகதிகளாக இருந்ததைக் கண்டு பாரதி பதறுகிறார்.
இந்தியா சுதந்திர நாடாக இருந்தால், இந்தியாவிற்கு வெளியே இருந்த மக்களை இந்தியாவிற்கு வரவழைத்து வாழவகை செய்துவிடலாம். அல்லது அவர்களை அடிமை கொண்ட நாடுகளிடமாவது பேசிப்பார்த்து, அவர்களை கண்ணியமாக நடத்தும்படி வழி செய்யலாம். அதற்கு இந்தியாவை இந்தியர்கள் ஆண்டால் மட்டுமே தான் முடியும். அதனால் இந்தியாவிற்கு விடுதலை கிடைக்கும் வரை இந்தியாவிற்கு வெளியே இருக்கும் இந்திய மக்க ளுக்கு விடுதலை கிடைக்கவே முடியாது.

31
ஆளுபவர்கள், ஆளப்படுபவர்களை அந்நியர்களாகக் கருதும் வரை, ஆளப்படுபவர்களது வாழ்க்கையின் அவலங்கள் பெருகுவதைத் தடுக்கவே முடியாது. அதனால் தங்களைத் தாங்கள் ஆளவேண்டும் என்ற உத்வேகத்தில் உணர்ச்சிக் கவிதை பாடுகிறான் பாரதி.
கண்காணாத தூரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்நாட்டு மக்களின் துயரத்தைத் தனது கவிதைக் கண்ணாடி மூலம் அப்படியே தத்ரூபமாகக் கண்முன்னே காட்டுகிறான் பாரதி. மக்கள் அந்த அவலங்களைப் பற்றிச் சிந்திப்பதற்காக, மாற்று வழிகளை மேற்கொள் வதற்காக பாரதி காட்டும் காட்சி மக்களுக்கு ஒரு ஆவேசத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக கரும்புத் தோட்டத்திலே கஸ்ரமுறும் பெண்களை கண் முன்னே காட்டுகிறான் இப்படி,
கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே! - ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய் சுருங்கு கின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு மருந்தி தற்கிலையோ - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார் அந்தக்
(கரும்புத்.) பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார், தெய்வமே நினது எண்ணம் இரங்காதோ - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணிர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழங்குகின்றார். அந்தக்
(கரும்புத்.)

Page 18
32
'பெண்ணென்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங் கும் என்பார் தெய்வமே! நினது எண்ணம் இரங்காதோ' என்று பாரதி கூறும் வரிகள், தெய்வ நம்பிக்கையைக் காட்டுவதற்காகக் கூறப்பட்டவையல்ல. 'பெண்ணென் றால் பேயும் இரங்கும்’ ஆனால் பாரத மக்களோ, இரங்கு பவர்களாக இருக்கவில்லையே. பாரதத்திற்கு வெளியே இருந்து கஷ்ரமுறும் பெண்களின் நிலை கண்டு பாரத மக்கள் கண்ணிர் சிந்தவில்லையே; என்று கண்ணிர் சிந்து கிறான் பாரதி. அந்நிய நாட்டிலே பெண்கள் சிந்தும் கண்ணிர் வெறும் மண்ணில் கலந்து வீணாவதோ, இந்திய மக்களின் நெஞ்சில் விழுந்து, விடுதலையை ஏற்படுத் தாதோ என்ற ஆதங்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்து கிறான் பாரதி. பெண்களின் கஷ்ரத்தைக் காட்டியாவது பெண்களைத் தெய்வமாகப் போற்றும் சமுதாயத்திலே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த முயல்கிறான் பாரதி.
காடையர்களால் கற்பிழக்கும் கன்னியர் நிலை :
"சொந்த நாட்டில் வாழ வழியில்லாமல் உயிரைக் காப்பாற்ற, உடமைகளைக் காப்பாற்ற, ஒரு வழியும் தென்படாத நிலையில் வெளிநாட்டிலே, போய் இருந்த மக்கள், தங்கள் தாய் நாட்டிற்கு எப்போது திரும்பி வருவோம், எந்தக் காலத்தில் பிறந்த மண்ணை மிதிப் போம், என்று விம்மி விம்மி அழுத குரலைக் கேட்டிருந்த காற்றே நீயாவது அவர்கள் என்ன கூறி அழுகிறார்கள் என்பதை இங்கே வந்து கூற மாட்டாயா' என்று அவர் களின் துன்பத்தைத் தனது வார்த்தைகளிலே வடிக்க முடியாமல் இரத்தக் கண்ணிரை வடிக்கிறான் பாரதி, "விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல்' என்று பாடும்போதே பாரதியும் நாமும் சேர்ந்து விம்மி, விம்மி, அழுகிறோம்.
 

33
நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ - அவர்
விம்மி யழவுந் திறங் கெட்டுப் போயினர்
(கரும்புத்.)
மணல் வீடு கட்டி, விளையாடிய மண்ணை, "அ, ஆ" என்று எழுதப் பழகிய மண்ணை, மழை பெய்த முற்றத் திலே சறுக்கி, அளைந்து விளையாடிய மண்ணை அந்தச் சொந்த மண்ணை, என்று மீண்டுந் தீண்டுவோம் என்று எத்தனை பேர் அந்நிய நாடுகளிலே ஆவலோடு காத்திருக் கின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேற விடுதலை வேண்டாமா என்று வினவுகிறான் பாரதி.
நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப் பச்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ! ஹே!
வீர கராளி சாமுண்டி காளி1 (கரும்புத்.)
இத்தனை கொடுமைகளையும், இந்திய மக்கள் இந்தியாவிற்கு வெளியே அனுபவித்ததைச் சொல்லியும் பாரதிக்கு மனம் ஆறவில்லை. மக்களுக்கும் மனம் மாற வில்லை. கற்பொழுக்கத்திலே மேம்பட்ட இந்துப் பெண் கள் அடக்கு முறைகளினால் கற்பிழக்கச் செய்யப்பட்ட கொடுமைகளையும் அதனால் அவர்கள் செத்து மடிந் து

Page 19
34
மடிநது, மடிந்தொரு தஞ்சமில்லா நிலை அடைந்ததையும் கூறி இதனை மாற்றுவதற்கு வழியே இல்லையா? என்று தனது வழிபடு தெய்வமான காளியிடம் விண்ணப்பித்துக் குமுறுகிறார் பாரதியார்.
இந்த வகையிலே பாரதத்திற்கு உள்ளேயும், வெளியே யும் அடிமைப் படுகுழியில் கிடந்த மக்களை விடுதலை வேண்டிப் போராடுவதற்குத் தூண்டுகிறான் பாரதி: அடிமைப்பட்ட மக்களின் அன்றைய நிலையை அப்படியே சொல்லி, அந்த நிலை மாற மக்களை எழுச்சியுறச் செய்ய முயல்கிறான் பாரதி.
சாதிச் சண்டையும் சமயச் சண்டையும் :
விடுதலை உணர்வு பெற்ற மக்களை அடக்கி ஆளுவோர் கேலி செய்வதையும், பரிகசிப்பதையும் ‘தொண்டு செய்யும் அடிமை' என்ற பாடலிலேயே காட்டுகிறான் பாரதி, உற்சாகத்தோடு, தன்னம்பிக்கை யோடு, நன் நம்பிக்கையோடு போராட்டத்தில் குதித்த மக்களை சோர்வடையச் செய்ய அடக்குமுறையாளர் கள் கையாண்ட தந்திரங்கள் அளப்பல. தொண்டு செய்யும் அடிமைகள் சுதந்திரமாக வாழமுடியாது என்று அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் விதமான கேலியாக இருக்கிறது இந்தப் பாடல்கள்.
தொண்டு செய்யும் அடிமை - உனக்குச்
சுதந்திர நினைவோடா பண்டு கண்ட துண்டோ - அதற்குப்
பாத்திர மாவாயோ (தொண்டு.) ஜாதிச் சண்டை போச்சோ - உங்கள் சமயச் சண்டை போச்சோ நீதி சொல்ல வந்தாய் - கண்முன்
நிற்கொணாது போடா. (தொண்டு.)

35
சாதிப் பிரிவினைச் சண்டையும், சமயப் பிரிவினைச் சண்டையும் உள்ள மக்களால் சுதந்திரப் போராட்டத்தை நடாத்துவது முடியவே முடியாது. அடக்கி ஆளுவோர் கேட்கும் கேள்வியாக அமைந்த இந்தப் பாடல் எவ்வளவு யதார்த்தமானது. ஆண்டான் அடிமையிடம் கேள்வியாக வும், கேலியாகவும் கூறுவதாக இந்த உண்மை நிலையை உணர்த்துகிறார் பாரதியார்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற குலத்தாழ்ச்சியினால் ஏற்படும் சண்டையும் இல்லாமற் போகும்வரை அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள், சகோதரர்களாக ஒன்றிணைந்து போராடி விடுதலை காண்பதென்பது வீண் முயற்சியே. சாதி, மதச் சண்டைகள் இல்லாத, ஒன்றுபட்டுப் போராடும் இனத்தில்கூட சாதிச் சண்டை யையும், சமயச் சண்டையையும் உண்டாக்கி உட்பூசலை உருவாக்கி, விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கு வதற்கு; அடக்கியாளும் வர்க்கத்தினர் முயன்று கொண்டே இருப்பர் . இது அடக்கியாளுபவர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒன்று. விதிவிலக்கானவர்கள் யாருமே இல்லை. சேனை நடாத்துவயே?.
அரசாங்கத்தின் சலுகைகளையும், சம்பளத்தையும், சன்மானத்தையும் பெறுவதற்காக, தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் இருக்கும் வரை சுதந்திர போராட்டம் வெற்றி பெறுவது எளிதானதல்ல. அச்ச மும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் அகன்றவர்கள் மட்டுமேதான் சுதந்திரத்திற்கு உரியவர்கள் என்கிறான் பாரதி.
அச்சம் நீங்கினாயோ - அடிமை!
ஆண்மை தாங்கினாயோ! பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணுதல் ஒழித்தாயோ (தொண்டு.)

Page 20
36
கப்பலேறு வாயோ - அடிமை
கடலைத் தாண்டு வாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
கொற்றத் தவிசும் உண்டோ (தொண்டு.)
‘பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிழைப்பு' என்றும், “குப்பை விரும்பும் நாய்' என்றும் இத்தகையவர்களை ஏசுகிறான் பாரதி. அரசாட்சியும், சிம்மாசனமும் குப்பை விரும்பும் நாய்க்கு இல்லை, என்று கூறுவது நயமாக இருக் கிறது. தன் வயிற்றுப் பிழைப்புக்காய், தன் இனத்தைக் காட்டிக் கொடுப்போரை இத்தகைய வார்த்தைகளைக் கொட்டித் திட்டுகிறான் கோபங்கொண்ட பாரதி.
நாடு காப்பதற்கே - உனக்கு
ஞானம் சிறிது முண்டோ
வீடு காக்கப் போடா - அடிமை
வேலை செய்யப் போடா. (தொண்டு.)
சேனை நடாத்து வாயோ - தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ
ஈனமான தொழிலே - உங்களுக்கு
இசைவ தாகும் போடா. (தொண்டு.)
சுதந்திரம் கிடைத்து விட்ட பின்னால் அச்சுதந் திரத்தை வைத்துக் காப்பாற்ற முடியாத மக்களுக்கு, சுதந்திரம் என்பது தேவையே இல்லாத ஒன்று. வெறுஞ் சுதந்திரம் கிடைப்பதோடு விடுதலைப் போராட்டம் ஒய்ந்து விடுவதில்லை. வறுமையும், அறியாமையும் முற்றாக அகன்ற நிலையில்தான் உண்மையான விடுதலையை, சுதந்திரத்தை மக்களால் அனுபவிக்க முடியும்.
நாடு கிடைத்த பின் நாட்டைக் காப்பாற்றுவதற்கு சிறிதும் ஞானம் இல்லாதவர்களால் வாங்கப்படும் சுதந்

37 திரத்தில் அர்த்தமே இல்லை. நாட்டைக் கைபற்றுவதோடு கடமை முடிவதில்லை. நாட்டைக் காப்பாற்றுவதுதான் மிக முக்கியமானது. நாட்டைக் கைபபற்றவும், காப்பாற்றவும் சேனை நடத்திப் பழக்கம் இருக்கவேண்டும், என்கிறான் பாரதி. "சேனை நடத்துவாயோ' என்றும் 'நாடு காப்பதற்கே உனக்கு ஞானம் சிறிது முன்டோ' என்றும் இதனையே பாரதி பாடுகிறான்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அடக்கியாளுவோர் கேட்கும் கேள்விகள் போல அமைந்த இந்தப் பாடல்களிலே, சுதந்திரம் கேட்பதற்கு வேண்டிய அடிப்படைத் தகுதிகளும், விடுதலைப் போராட்டத்தை வீறு கொண்டு முன்னெடுத்துச் செல்லத் தேவையான விபரங்களும் அடங்கியிருப்பதைக் காணலாம். இந்தக் கேள்விகள், கேலிகளை எல்லாம் விடுதலைப் போராட்டக் தில் ஈடுபடுபவர்கள் நிச்சயமாகச் சந்தித்தே ஆக வேண்டும். இவை பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும். நடிப்புச் சுதேசிகள் :
விடுதலைப் போராட்டத்திற்கு, மக்களைத் தயார் செய்த போதிலும், மக்களுக்குள்ளே சிலரிடம் உண்மை யான விசுவாசம் ஏற்படாமல் இருந்தது எதையும் பேச்சளவிலே பெரிதாக வாய்ப் பந்தல் போட்டுக் கொண்டு, செயலளவில் நடித்துக் கொண்டு திரிந்தவர் களும் இல்லாமல் இல்லை. அந்த மக்களையும் பாரதி இனங்கண்டு காட்டித் திருத்த முயல்கிறான்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வா ரடீ - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி
கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளா ரடீ - கிளியே
நாளில் மறப்பா ரடீ. தாமும் செய்யாமல், செய்பவர்களையும், செய்ய விடாமல் அர்த்தமற்ற விமர்சனஞ் செய்து கொண்டும்

Page 21
38
பலர் இருந்தனர். நெஞ்சில் உரம், நேர் மைத் திறம், எதுவும் அற்ற, வஞ்சனைச் சொல்லும் வாய்ச் சொல் வீரரை பாரதி இங்கே காட்டுகிறான். தாமும் போராட் டத்திலே ஈடுபடுவதாகக் கூறிக் கொண்டு கூட்டத்திலே நின்று ‘கோவிந்தா' போடும் ஏமாற்றுப் பேர் வழிகளை யும் இனங்காட்டுகிறான் பாரதி.
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ, தங்கள் சொந்த நாடு, தாய் நாடு, தாய் மொழி என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதும், சுதந்திரத் தாய் நாட்டிலே வாழ்வதால் கிடைக்கும் சுகங்களும், பெருமை களும், விடுதலை பற்றிய அறிவில்லாத, அடிமைப் புத்தி கொண்ட மக்களுக்கு ஏற்படுவதே இல்லை. அலிகளுக்கு இன்பம் இல்லையே. அத்தகையவர்களே இவர்கள், என்று சாட்டுகிறான் பாரதி.
கண்கள் இரண்டிருந்தும் கானுந்திறமை அற்ற
Ll
பெண்களின் கூட்டமடி - கிளிே பேசிப் பயனென்னடீ.
இரண்டு கண்கள் இருந்தும் காட்சிகளைக் காண முடியாத கருத்துக் குருடர்களின் கூட்டத்திற்கு எதைச் சொல்லி என்ன பயன் என்று சலித்துக்கொள்கிறார். இவர்கள் பார்த்து அறிய முடியாதவர்களாக, சிந்திக்கும் திறனற்றவர்களாக, கூட்டத்தில் கூடி நின்று கொண்டு 'உப்பு என்றும், சீனி என்றும், உள் நாட்டுச் சேலை என்றும்’ செப்பித் திரிந்தனரேயன்றி எதனையும் செய்யத் தெரியாதவர்கள் என்று ஏசுகிறான் பாரதி. கோயிலிற் தீமை செய்ய ஆவி பெரிதென்றிருப்போர் :
மாதரைக் கற்பழித்து வண்கண்மை பிறர் செய்ய
பேதைகள் போலுயிரைக் - கிளியே பேணி யிருந்தார டி.

39
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் - கிளியே அஞ்சிக் கிடந்தார(உ.
மானத்தைப் பெரிதாக மதிக்கும் மக்கள், கொடுமை யாளர்களினால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடுமைகளை அனுபவிக்கவும், தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, அறிவற்ற, உணர்வற்ற, மானஞ்சிறிது மற்ற பேதைகளாக சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
கோயில்களை எரித்தும் கோயில்களை கேவலப் படுத்தியும் அட்டகாசஞ் செய்யும் அடக்கு முறையாளர் களைக் கண்டும் தமது உயிர் பெரிதென்றெண்ணி அஞ்சிக்கிடந்தனர். சிலர் மானம் என்றும், பக்தி என்றும் வாய்ப்பேச்சிலே பேசுவதன்றி செயல் திறம் அற்றவர் களாக, தம் உயிரையும், உடலையும் பேணுபவர்களாக இருந்த மக்களை மிகவும் கோபமாக ஏசுகிறார் பாரதியார் .
மானம் சிறிதென்றெண்ணி, வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்களைக் காணும் போதெல்லாம் உண்மையான விடுதலைப் போராளிகளுக்கு; அந்த வீணர்களுக்காகவும் தாம் போராடுகிறோமே என்று நினைக்கும்போது ஆத்திரமாகத் தானே இருக்கும்.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கண்டும்
சிந்தை இரங்காரடீ - கிளியே செம்மை மறந்தா ரடீ.
ஒரு இனத்திலே சொந்தச் சகோதரர்களாகப் பிறந்த வர்கள், சிறையில் அடைபட்டும் அடிபட்டும், அல்லற் பட்டும், வாடுவதைக் கண்டுகூட மனம் சிறிதும் இரங்காமல் தமது மனித சுபாவமான செம்மைக் குணங்களை மறந்திருந்தனர் அன்றைய மக்களில் சிலர்.

Page 22
40
ஒரு விடுதலைப் போராட்டத்திலே எத்தகைய போக்குள்ள மக்கள் எல்லாம் இருப்பார்கள் என்பதை ᎶᏂ16ᏡᏯ#5 , வகையாகக் காட்டுகிறார் பாரதியார். அத்தகைய கோழைகளை , தம்முயிர் பேணிகளை, காட்டிக் கொடுக்கும் கயவர்களை, நடிப்புச் சுதேசிகளை எல்லாம் போலித்தனமாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாம் என்று கோபித்து வெறுத்து போ! போ! என்று கலைக்கின்றார் பாரதியார்.
வலிமை யற்ற தோளினாய் போ! போ! போ! மார்பிலே ஒடுங்கினாய் போ! போ! போ! கிலி பிடித்த நெஞ்சினாய் போ! போ! போ! கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ! போ! போ! இன்று பார தத்திடை நாய் போல ஏற்ற மின்றி வாழுவாய் போ! போ! போ! ஜாதி நூறு சொல்லுவாய் போ! போ! போ! தரும மொன்றி யற்றிலாய் போ! போ! போ! நீதி நூறு சொல்லுவாய் கா சொன்று நீட்டினால் வணங்குவாய் போ! போ! போ!
தனித் தனியாக மக்கள் நிலையைப் பாடிய பாரதி ஒட்டுமொத்தமாக, சுதந்திரத்திற்கு லாயக்கில்லாத சிலரை வெறுத்துப் போ! போ! என்று கலைத்து விடுவதை இப்பாடல்கள் மூலம் காணலாம். இவர்களைக் கலைத்து விட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களாக, உண்மையான விடுதலை விரும்பிகளை வா! வா! என்று அழைக்கிறார் அழகாக.
ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா! வா! ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயி றொப்பவே வா! வா! வா! களையிழந்த நாட்டிலே முன்போலே களை சிறக்க வந்தனை வா! வா! வா!

பகுதி - I
ஆயிரம் உண்டிங்கு ஜாதி
விடுதலைப் போருக்கு வீரர்களைத் தேர்ந்தெடுத்த பாரதி அந்த விடுதலைப் போராளிகளுக்குத் தனது அறிவுறுத்தல்களை மிக அழகாகக் கொடுக்கிறான், விடுதலை பெற்ற ஓர் சுதந்திர நாட்டில் சமுதாய சகோதரத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால், விடுதலைப் போராட்டத்தின் போதே சமுதாய சகோதரத்துவத்தைப் பேணி வளர்ப்பது தலையாய கடமை ஆகும்.
ஏழை, பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினைகள், சமயங்களிடையே எழும் சர்ச்சைகள் எதுவுமில்லாத சமுதாய சகோதரத்துவத்தைக் கட்டி எழுப்புவதில் கண்ணும் கருத்துமாகப் பாடுபடு கிறான் பாரதி பாடுகிறான் பாரதி. இந்தியாவிலே இன்னொரு பிரிவினையும் இருந்தது. அது மொழிவாரி ய்ான பிரிவினை, இந்த எல்லா வகையான பிரிவினை களுக்கும் எதிராக அடிமைப்பட்ட இனத்தின் விடுதலைக் காக ஒற்றுமைக் கீதத்தை உரத்த குரலில் ஒங்கி ஒலிக்கிறான் பாரதி.
L JIT -3

Page 23
42
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே.
வர்ணங்களிலே உயர்ந்த வர்ணமாகப் போற்றப் பட்ட பிராமண வர்ணத்திலே பிறந்தவர்களாக இருந் தாலும் சரி, அல்லது வேறு குலத்திலே பிறந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களிடையே பேதம் பாராட்டுதல் கூடாது. சகலதிலும் அவர்கள் சமமானவர்களே என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். விடுதலை கோரும் அடிமைப்பட்ட இனத்திலே தோன்றிய மக்கள் நாம் என்ற எண்ணமே அன்றி வேறு எண்ணம் எழவே கூடாது என்கிறான் பாரதி.
ஈனப் பறையர் களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ
சீனத் தராய்விடு வாரோ - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப்பாரோ.
தாழ்ந்த சாதியாக நகைக்கப்படும் சாதியினர் கூட எம்மோடு ஒன்றாகப் பிறந்து வளர்ந்து வாழும் சகோதரர்களே. வேறு தேசத்தில் அவர்கள் பிறக்கவு மில்லை. எமக்கு தீங்கு செய்யும் எண்ணங் கொண்டவர் களுமில்லை. அடிமை என்ற முத்திரை குத்தப்பட்ட எல்லோரும் அடிமைகளே. அதில் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை. விடுதலைப் போராளிகள் என்ற உணர்வே அன்றி ஜாதி உணர்வுக்கு அங்கு இடமே இல்லை என்கிறான் பாரதி.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ
 

43
எங்களிடையே ஆயிரம் ஜாதிகள் இருக்கலாம். அந்தப் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். தீர்த்துக் கொள்வோம். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகொதரர்கள் தம்முள் சண்.ை செய்தாலும் அவர்கள் சகோதரர்களே, அன்றி அந்நியர் இல்லை. அந்தப் பிரச் சனையைச் சாட்டாக வைத்து அந்நியர்கள் ஆதிக்கஞ் செலுத்த முயல்வது அனுமதிக்க முடியாதது. அச்செய்கை வெருக்கத்தக்கது, ஒறுக்கத் தக்கது.
சாதிகள் இல்லையடி பாப்பா :
பெரியவர்களுக்கு மட்டுமன்றி, குழந்தைகளுக்குப் பாப்பாப் பாட்டு பாடும் போது கூட, சாதி பேதத்தைச் சாடுகிறான் பாரதி,
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
பிறப்பினால் எல்லோரும் ஒன்றே. குலம் என்ற வகை யிலே தரம் பிரித்து ஒரு குலத்தைத் தாழ்த்தியும் ஒரு குலத்தை உயர்த்தியும் பேசுவது கூட பாவம் என்கிறான் பாரதி. குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பிழை என்று சொல்லாமல் பாவமான காரியம் என்று பாரதி கூறுவதி லிருந்து பாரதியின் சாதி ஒற்றுமை உணர்வை நாம் நன்றாக இனம் கண்டு கொள்ளலாம்.
ஒவ்வொரு தொழிலும் செய்வதற்கான மக்கள் பல வகையாகப் பிரிக்கப்பட்டனர். அந்த மக்கள் செய்த தொழிலைக் கொண்டு அவர்கள் ஜாதிகளாகப் பகுக்கப் பட்டனர். தொழில் அடிப்படையில் பிரித்து பெயரிடப் பட்ட ஜாதி அமைப்பு பிற்காலத்தில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று இழிவாக்கப்பட்டது. சில தொழில் செய்பவர்கள் சில தொழில் செய்பவர்களை தாழ்த்தி சாதி அமைப்பை வலுப் பெறச் செய்து விட்டனர்.

Page 24
44
ஒரு குடும்பத்திலே பொருள் தேடுவது தந்தையின் தொழிலாகவும், மற்றைய வேலைகளைச் செய்து குடும் பத்தை வாழ வைப்பது தாயின் கடமையாகவும், அந்தத் தாயும் தந்தையும் ஏவிய வேலைகளைச் செய்து குடும் பத்தைச் சிறப்புறச் செய்வது பிள்ளைகளின் கடமை ஆகவும் இருக்கிறது. அப்படி அமைந்தால் தான் அந்த வீடு நல்ல வீடாக இருக்க முடியும் அப்படி இல்லாமல் அப்பனும் பிள்ளையும் தாயும் ஒருவர் க்கொருவர் முரண்டு பிடித்துக் கொண்டு உயர்வு தாழ்வு காட்டுபவர்களாக, இருந்தால் அது வீடல்ல சுடுகாடு.
ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள் - இவர்
யாவரும் ஒர் குலம் அன்றோ. மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல
வீடு நடத்துதல் கண் டோம்.
இதே போல்தான் சாதி வகுப்புகளும் , பிராமணன் நாய்க்கன், செட்டி போன்ற இன்னோரன்ன எல்லா வகுப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தான் ஒரு நாடு செழித்தோங்கும். தவறிக் கெட்ட விடுதலையை மீட்டு விட முடியும் என்று சமுதாய சகோரத்துவம் பாடுகிறான் பாரதி.
வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்,
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
 

45
தொண்ட ரென்றோர் வகுப்பில்லை - தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை.
இவனுக்கு இவன் தொண்டு செய்கிறான். அடிமை வேலை பார்க்கிறான் என்ற வகையில் ஒரு ஜாதி வகுப்பு இல்லவே இல்லை, என்று சாதிக்கிறான் பாரதி. சோம்பல் தான் இழிவானதே தவிர தொழில்களிலே இழிவு இல்லவே இல்லை.
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த
நான் கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி.
நான்கு வருணங்களும் ஒன்றுக்கொன்று சமனான வையே, இந்த நான்கு வகுப்பிலே ஒரு வகுப்பு இன்னோரு வகுப்பை விடக் குறைந்தது என்று ஏற்பட்டால் மானிட ச் சாதி அழிந்து விடும் என்கிறான் பாரதி. நாலு வகுப்பிலே ஒரு வகுப்பு குறைந்து இல்லாமல் போய் விட்டாலும் என்ற வகையில் பொருள் கொள்வதை விட நான்கு வகுப்பினுள் ஒரு வகுப்பு இன்னோரு வகுப்பை விடக் குறைந்தது என்ற வகையில் பொருள் கொள்வதே சிறப்பானது
சாதிப்பிரிவுகளைச் சொல்லி அதிலே தாழ்வு என்றும் உயர்வு என்றும் சொல்லி சண்டை செய்வதை முற்றாக விட்டோழித்து சமுதாய சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்று பாடுகிறான் பாரதி,
கறுப்பு இன மக்களை வெள்ளையர்கள் அடக்கி ஒடுக்கும் கொடுமைகளும் கறுப்பர்களை மனித இனமே இல்லை என்று கூறுகின்று கூற்றுக்களும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.

Page 25
46
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானிடர் வேற்றுமையில்லை.
என்று அன்றே பாரதி உலகுக்குக் கூறினான்.
தம்பி மெலிந்தால் அண்ணனுக்கு அடிமையா
இந்த உலகத்தில் வாழும் மக்கள் எல்லோரும் ஒருவருக் கொருவர் நிகரானவர். ஆண்டான் என்றும் அடிமை என்றும் அங்கே பேதம் இருக்கக் கூடாது. பொய்யான வகையிலே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற அநியாயச் சாதிப் பிரிவினைகள் தகர்த் தெறியப்பட வேண்டுப் என்று பாடுகிறார்.
நிகரென்று கொட்டு முரசே - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்,
தகரென்று கொட்டுமுரசே - பொய்மைச்
சாதிவகுட்பினை எல்லாம்.
இது மட்டுமல்லாமல் ஒரு நாட்டிலே சிறுபான்மை இனமாக இருப்பவர்களை பெரும்பான்மை இனத்தார் அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, கசக்கி அடிமையாக்க முயலுவ தைப் பாரதியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சாதி அடிப்படையிலுஞ்சரி அல்லது சமய அடிப்படை யிலுஞ் சரி அல்லது பணக்காரன் ஏழை என்ற அடிப் படையிலுஞ்சரி எந்த வகையிலும் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவது எதிர்க்கத் தக்கதே என்பது பாரதியின் கருத்து.
இந்தியாவிலே மிகப் பெரும்பான்மையான இந்துக் களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்ட காலத்தில் ஒர் இந்துவாக அரசியல் தலைவராக இருந்த மகாத்மா காந்தி தனது இனமான இந்து மக்களை கோபித்து சிறுபான்மை மக்களைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்று அறிக்கை விட்டு செயல்பட்டார்.

47
ஒரு வீட்டிலே உடன் பிறந்தவர்களுள் அண்ணன் நன்றாகச் சாப்பிட்டு தம்பியின் உணவையும் சேர்த்து உண்டு நன்றாகக் கொழுத்தவனாகவும், தம்பி சற்று மெலிந்தவனாகவும் இருந்தால், தான் வயதிலும் தோற்றத் திலும் பெரியவன் என்ற ஒரே காரணத்துக்காக அறிவு, திறமை என்பவை பற்றிய எண்ணமே இல்லாமல் அண்ணன் தம்பியை அடிமை கொள்வது மன்னிக்க முடியாத குற்றம். அதே போன்றதுதான் கூடிய எண்ணிக்கையோடு வசதியோடு வாழும் பெரும்பான்மை இனம் நலிந்து கிடக்கும் சிறுபான்மை இனத்தை அடிமை கொள்ளுதலும் அநீதியானது என்று ஆர்ப்பரிக்கிறான் பாரதி
தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தான டிமை கொள்ளலாமோ
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடிமைப் படலாமோ.
பெரும்பான்மை சிறுபான்மையை அடிமை கொள்வது மட்டுமல்ல, சிறுபான்மை மக்கள் பயந்து நடுங்கி பணிந்து பெரும்பான்மையினரிடம் கைகட்டி -9} L.Gð)LDU-ls 5 அடங்கிப்போவதும் மன்னிக்க முடியாத குற்றம், என்கிறான் பாரதி பெரும் பான்மையின் அடக்குமுறை களுக்கு பயன்படும் ஆயுதங்களுக்கு அதாவது 'செம்புக் கும் கொம்புக்கும் அஞ்சி' சிறுபான்மை மக்கள் சிறுமை யான 'சிற்றடிமை'ப் படல் ஏற்கக் கூடியதல்ல.
4 UD(U (9 UD0, 4 úd
சமயங்களுக்கிடையே, அனேகமான சமயங்களில் ஏற்படும் சச்சரவுகள் நீக்கப்படுவதும் இன்றியமையாததே, சமயங்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று சமரசம் போதிக்கிறான் பாரதி.

Page 26
48
தெய்வம் பல பல சொல்லி - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஒர் பொருளானது தெய்வம்.
பல சமய மக்கள் ஒன்று கூடி விடுதலைப் போரை நடாத்தும்போது சமய உயர்வு தாழ்வு, கடவுளில் பெரியர் யார் என்ற வாதம் பகையையே வளர்க்கும். அடக்கி ஆள நினைப்போர் சமயங்களின் ரீதியில் மக்க ளைப் பிரிக்கச் சூழ்ச்சி செய்வார்கள் விடுதலைப் போராளிகளிடையே இத்தகைய பகைத் தீயை வளர்க்க நினைப்பவர்கள் மூடர்களே. தெய்வம் உயிற்களெல்லா வற்றிலும் இருக்கிறது. சமயத்துக்குச் சமயம் வேறுபாடா
னதல்ல.
'தீயினைக் கும் பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.'
தீயைக் கும்பிடும் பார்ப்பனர்களும் அதாவது கற்றாங்கு எரி ஒம்பும் இந்துக்களும், திசையினை வணங் கும் முஸ்லிம்களும் சிலுவையின் முன் நின்று வணங்கும் யேசுக் கிறிஸ்துவின் மதத்தவர்களான கிறிஸ்தவர் களும் வழிபடும் தெய்வம் ஒன்று தான்.
* யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்'
ஒரு கடவுளை பல வடிவங்களில் பல விதங்களில் வழிபடுகிறோமேயன்றி வேறில்லை. 'ஒன்று பரம்
 

49
பொருள் நாமதன் மக்கள்' என்று சமயவாதிகளைச் சமரசஞ் செய்து வைத்து ஒற்றுமையை ஏற்படுத்துகிறான் பாரதி
வர்க்க பேதம்
சாதி மதக் கொடுமைகளைச் சா டி சமரசங் கானும் பாரதி ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பேதமும் ஒழிய வேண்டும் என்று பாடுகிறான். ஏழை என்பது கூட ஒரு தாழ்ந்த சாதியாகச் சிலரால் கருதப்பட்டு வந்த காலத்தில் சாதி வேற்றுமையோடு ஏழை பணக்காரன் என்ற வேற்று மைகளையும் களையப் பாடுகிறான் பாரதி.
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒரு நிகர்
சமான மாக வாழ்வமே,
மனிதர் யாவரும் ஒரு நிகர் சமமானவர்கள். ஏழையு மில்லை, அடிமையுமில்லை. இந்திய மண்ணிலே பிறந்த வர்கள் எல்லோரும் உயர்ந்தவர்களே. இழிவு கொண்ட மனிதர் யாருமே இல்லை.
இந்தியா முழுமைக்கும் பொது உடைமைத் தத்துவமே பேணப்பட வேண்டும் என்பதில் பேராவல் கொண்டவன் பாரதி உழைப்பவன் ஒருவனாகவும், அதை உறிஞ்சுபவன் வேறொருவனாகவும் இருக்கும் கொடுமையை பாரதியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருவனின் பசியிலே இன்னொருவன் பசிதீர்வதும் ஒருவனின் நோவிலே இன்னொருவன் சுகம் காண்பதும், ஒருவனின் வியர்வை

Page 27
50 இன்னொருவனுக்கு பன்னீராகும் பரிதாபத்தையும் பாரதி
பயங்கரமான காட்சியாக காண்கிறான். அதனால் சுதந்திரம் கிடைத்தபின் தன் ஆட்சி, தனி ஆட்சி ஏற்பட்ட பின் பொது உடைமைத் தத்துவமே நாட்டுக்கு ஏற்றது என்று கூறுகிறான்.
'முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை'.
என்று பொது உடைமையையே வலியுறுத்துகிறான். பசியால் துடித்து ஒருவன் உயிர் துறக்கும் நிலை ஒரு சுதந்திர நாட்டிலே இருந்தால் அந்த ஒரு கொடுமைக் காகவே உலகம் முழுவதையும் அழித்துவிட வேண்டும் என்று ஆவேசமாகப் பாடுகிறான் பாரதி.
இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.
அடிமைப்பட்ட நாட்டிலே தனி ஒருவனுக்கு உணவு இல்லாமல் போகலாம், உயிர் துறக்கலாம், அது அந்நிய ஆட்சியின் அடக்கு முறைக் கொடுமையினால், துயரால் ஏற்படும் விளைவே, எனவே அந்த நிலையில் மக்கள் கிளர்ச்சியும் புரட்சியும் செய்து போராடி உயர்ச்சி காண வேண்டும். அல்லது உலகையே அழிக்கும் படியான பலம் பெற வேண்டும் என்பது பாரதியின் கொள்கை.
எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓரினப் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒர் நிறை எல்லாரும் ஒர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர். குலத்தளவிலே எல்லோரும் ஒன்றே, இனம் என்ற ரீதியிலும் ஒன்றே. அதாவது எல்லோரும் இந்திய மக்கள் என்ற ஒரே இனம், ஒரே குலம், விலை போட்டுப் பெறுமதி
 

5
பார்த்தாலும் எல்லோரும் ஒரே விலை. நிறையிலும் அப்படியே, என்று கூறி சமத்துவத்தை வலியுறுத்து கிறான் பாரதி.
எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்று கூறுவதில் கூட பாரதிக்கு மனம் ஆறவில்லை. மக்களை உற்சாகப்படுத்தி விடுதலைப் போரில் வீறு கொண்டு எழச் செய்வதற்காக * எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்றே கூறிவிடு கிறான். எல்லாரும் மன்னர் என்று கூறினாலாவது மக்களுக்கு பொறுப்புணர்ச்சியும் உற்சாகமும் ஏற் படாதா என்ற ஆதங்கம்தான். அரசியலை பேய் என்று அஞ்சிய மக்களை அரசியல் தலைவர்களாக்க, மன்னர் களாக்க பாடுபடுகிறான் பாரதி.
ஒற்றுமை வழியே விழி
ஒற்றுமை வழியொன்றே வழியென்பது
ஒர்ந்திட்டோம் - நன்கு தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக் கெலாம்
மலைவுறோம் - சித்தம் கலைவுறோம்.
பல சாதிகளும், பல சமயங்களும் அவற்றிடையே பல வகையான வாதங்களும் பேதங்களும் மலிந்திருக்கும் ஒரு நாடு, அந்நியரால் அடிமைப்படுத்தப்படுவது மிக இலகு வானது அந்த மக்களிடையே சாதிமதப் பிரிவினைகளை இலகுவாக ஏற்படுத்தி விடலாம் அதன் மூலம் அவர் களை பிரித்து உதறி தனித்தனியாக்கி விடுவது மிகவும் இலகுவானது.
பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்தவர்கள் அந்தக் கலை யிலே கைதேர்ந்தவர்கள் அந்த மக்களை அடிமை கொள் வதில் எந்தவித கஸ்டமுமே இல்லை. அடிமைப்பட்ட அந்த மக்களுக்குள்ளே சமுதாய சகோதரத்துவம் கட்டிக்

Page 28
52
காக்கப்பட்டால் விடுதலை பெறுவது இலகுவாகி விடு
கிறது. சிறுபிள்ளையும் விளையாட்டாக முறித்து எறிந்து விடக் கூடிய அடம்பன் கொடியும் கூட ஒன்று சேர்ந்து விட்டால் பெரியவர்களால் கூட முறிக்க முடியாத மிடுக்கு ஏற்பட்டு விடுகிறது.
இந்தியாவிலே பல மாநிலங்களில் பல மொழி பேசும்
மக்களும் வாழ்ந்தனர். பல மொழி பேசும் பல இன
மக்களை ஒன்று படுத்தினால் மட்டுமே தான் விடுதலைப் போரை வீறுடன் நடாத்த முடியும், இதனை நன்குணர்ந்த பாரதி எல்லா மொழி பேசும் மக்களையும் இந்திய மக்கள் என்ற வகையிலேயே ஒரு தாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்களாக மதித்து ஒன்றுபட்டு போராடத் தூண்டு கிறான்.
சிந்து நதியிலே சேர நன்னாட்டுப் பெண்களுடன் சுந்தரத் தெலுங்கினில் பாட்டுப் பாடி தோணிகளோட்டி விளையாடி வருவோம் என்கிறான் பாரதி.
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஒட்டி விளையாடி வருவோம்.
விளையாடி வருவோம் என்று தமிழனாகிய பாரதி
பாடுவதிலிருந்து தோணிகளோட்டி விளையாடுவது
தமிழர்கள் என்பது தெளிவு வட நாட்டிலுள்ள சிந்து நதியிலே தென்னாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கேரள நாட்டுப் பெண்களுடன் சேர்ந்து தெலுங்கில் பாட்டுப்
பாடும் ஒற்றுமையை விபரிக்கிறான். இதே போல
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட் டியர் தம் கவிதை கொண்டு சேர்த்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.
 

53
வட நாட்டிலுளள கங்கை நதிக் கரையில் விளையும் கோதுமைக்குப் பண்டமாற்றாக தென்னாட்டு காவிரிக் கரையில் வளரும் வெற்றிலையைக் கொடுப்பதும், சிங்கம் போன்ற மராட் டியர்களின் கவிதைக்கு சேரத்துத் தந்தங் கள் பரிசளிப்பதையும் கூறுகிறான் பாரதி.
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்ப தற்கோர் கருவி செய்வோம் ராச புத்தானத்து வீரர் தமக்கு நல்லியா ற கன்னடத்துத் தங்கம் அளிப்போம். வட நாட்டுக் காசியில் புலவர்கள் பேசுகின்ற உரை களை நேரடியாக காஞ்சியில் இருந்து கொண்டு கேட்கக் கருவி செய்வோம், என்றும் ராச புத்தானத்து வீரர்களுக்கு கன்னடத்துத் தங்கம் அளிப்போம் என்றும் பிரதேச ஒற்றுமையை வலியுறுத்துகிறான்.
நம்புதற்கு உரியவர் அவ்வீரர் :
தாயின் மணிக்கொடியின் கீழ் அணி அணியாக நிற்கும் விடுதலை வீரர்களை ஒற்றுமைப்படுத்தும் அரிய தொரு காட்சியினைக் காட்டுகிறான் பாரதி.
கம்பத்தின் கீழ் நிற்றல் காணிர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியவர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்.
தாயின் மணிக் கொடியை வணங்கி அந்த நாட்டின் அடிமைத் தனத்தை அகற்றி விடுதலைப் போரில் வெற்றி காண்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களின் பெரிய கூட்டத்தைக் கண்ட பாரதி, அவர்களின் ஒற்றுமை உணர்வையும் தன்மான உணர்வையும் போற்றி அந்த
வீரர்கள் விடுதலையைப் பெற்றே தீருவார்கள். நம்பு

Page 29
54
வதற்கு உரிய வீரர்கள் அவர்கள் தங்கள் இனிய உயிரைக்
கொடுத்தும் தாய் நாட்டை மீட்டு எடுத்தே விடுவார்கள் என்று கூறுகிறான் பாரதி.
சாதாரணமாக அதிக மக்களை 'பெருங் கூட்டம்' என்றேதான் சொல்வோம். இறைவனின் அடியார்களை வெருந் தொண்டர்கள் என்று கூறாமல் திருத் தொண்டர் என்று ‘திரு' அடைமொழி கொடுத்து சிறப்பித்துக் கூறுவது ஆத்மீக வழக்கம். விடுதலைப் போராளிகளையும் 'பெருந்திருக்கூட்டம்' என்று பாடுவ தில் இருந்து பாரதியின் விடுதலை வேட்கையையும் போராளிகளை பாரதி எவ்விதம் மதித்தான் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. அந்த வீரர் வரிசையை 'திருக்கூட்டத்தை’’ இப்படி அறிமுகஞ் செய்கிறான்
பாரதி,
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன் தன்வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்
கன்னடர் ஒட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்ன கர்த் தேவர்கள் ஒப்ப - நிற்கும்
பொற்புடை யார் இந்துஸ் தானத்து மல்லர்.
பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர் விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜ புத்ர வீரர்,
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதந்
தொண்டு நினைந்திடும் வங்கத்தினோரும்.
 

55
தமிழர்கள், தெலுங்கர், மலையாளிகள், துளுவர், கன்னடர், ஒட்டியர், மராட்டியர், இந்துஸ்தானியர், ராஜபுத்திரர், பஞ்சாபியர், வங்காளிகள், போன்ற எல்லா மொழி பேசும் மக்களும் ஒற்றுமையோடு விடுதலைப் போரில் முனைந்து நிற்கும் காட்சி ஒர் அரியகாட்சி. ஒற்றுமைப்பட்டுப் போராடும் வீரர்கள் நம்பத் தகுந்தவர் கள், விடுதலையை வென்றெடுத்தே தீருவார்கள் என்று நம்பிக்கையூட்டுகிறான் பாரதி,
ஒன்றாக வாழ்வோம், அன்றேல் ஒன்றாக மாழ்வோம்
எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள்
என்ற உயர்வு நோக்கை உணர்வை உண்டாக்கி அடக்கி ஆளுவோரிடம் வ.உ.சிதம்பரம் பிள்ளை கூறுவதாக;
நாங்கள் முப்பதுகோடி ஜனங்களும்
நாய்களோ - பன்றிச் சேய்களோ, நீங்கள் மட்டும் மனிதர்களோ - இது
நீத மோ பிடிவாதமோ, என்ற கருத்தைக் கூறுகிறான் பாரதி. வெற்றியோ, தோல்வியோ, வாழ்வோ சாவோ எது கிடைத்தாலும், புறப்பட்ட விடுதலைப் போரில் எல்லோருக்கும் அது பொதுவானதே. ஒன்றாக வாழ்வோம், அன்றேல் ஒன்றாக மாழ்வோம், எங்களைப் பிரிக்க அனுமதியோம். தனித்தனி அடிமைகளாக இருக்காமல் ஒன்றாகி சுதந்திர மனிதர்களாக வாழ்வோம் அல்லது மாழ்வோம்.
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும் முப்பது கோடியாம் வாழ்வோம் - வீழில்
முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்.

Page 30
56
தனித்தனி பகுதிகளாகச் சுதந்திரம் தருவதாக ஏகாதி பத்தியவாதிகள் ஏமாற்றும் ஆசை வார்த்தைக்கு அடிபணி யவே மாட்டோம். ஒன்றாக, நன்றாக முழுமையான சுதந்திரத்தோடு வாழ்வதுதான் விடுதலைப் போரின் நோக்கமே, என்பதை வலியுறுத்துகிறான் பாரதி.
பாரதி தனது பாஞ்சாலி சபதத்தில் கூட ஒற்றுமை வழிப்பற்றி மிக உறுதியாக உரைக்கிறான். பாஞ்சாலி சபதம் ஒரு மறை முகமான அரசியல் இலக்கியம் என்று ஏற்கனவே பார்த்தோம். அங்கே தருமன் சகுனியோடு சூதாடும் போது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த பின் தனது சகோதரர்களான நகுலன் சகாதேவன் ஆகிய இரு வரையும் பணயம் வைத்து சூதாடி தோற்று விடுகிறான்.
அப்போது சகுனி 'நகுலன் சகாதேவன் ஆகியோர் மாத்திரி தேவியின் பிள்ளைகளல்லவோ அதாவது உனது ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களல்லவே இதனால் தான் அவர்களை பணயம் வைத்து ஆடினாய் உனது சொந்தச் சகோதரர்களான அருச்சுனன், வீமன், ஆகியோரை பணயமாக வைத்துச் சூதாட ஒருப்படு வாயோ' என்று கேட்கிறான்.
பஞ்ச பாண்டவர்கள் ஐவரிடையே ஒற்றுமையைக் குலைத்து அவர்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதற் கான முயற்சியைச் சகுனி மேற்கொள்கிறான், உடனே தருமன் கோபத்தோடு பதில் சொல்கிறான்
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் - ஐவர்
எண்ணத்தில் ஆவிபில் ஒன்றுகாண் - இவர் பங்கமுற்றோ பிரி வெய்து வார் - என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்
எண்ணத்திலும் செயலிலும் ஒன்றாக உயிருக்கு உயிராக ஒற்றுமைப்பட்ட பாண்டவர்களைப் பிரிப்பதற்கு

57
சகுனி மேற்கொண்ட சூழ்ச்சி தருமனிடம் பலிக்கவில்லை, என்று கூறுகிறான் பாரதி,
அடிமைப்படுத்த நினைப்போரின் பிரிவினைச் சூழ்ச்சியினை சகுனியின் வாய் மூலமாகவும் ஒன்றுபட்ட மக்களின் உணர்ச்சிக் குரலினை தருமனின் வாயிலாகவும் தருகிறான் பார தி.
திரெளபதியையும் தருமன் தோற்றுவிட்டான். பாஞ்சாலியை பாதகர்கள் சபைக்கு இழுத்து வந்துவிட் டார்கள். அந்த நிலையைக்கண்டு மனம் பொருக்காத வீமன், திரெளபதியை பணயம் வைத்துச் சூதாடிய தரும னின் கைகளை எரித்து விடுவேன் என்று ஏசுகிறான்.
இது பொருப்பதில்லை - தம்பி
எரிதழல் கொண்டு வா.
கதிரை வைத்து இழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்.
*அண்ணன் கொடுமை செய்துவிட்டான், அதனால் அவனது கையை எரிப்போம் வா தம்பி’ என்று வீமன் சகாதேவனிடத்தில் கூறுகிறான். தருமனோடு தான் மட்டும் மாறுபடாது சகாதேவனையும் தனது பக்கத்தில் சேர்த்துக் கொண்டு 'எரித்திடுவோம்' என்று பன்மை யில் வீமன் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது, சகுனியின் சூழ்ச்சிப்படி பாண்டவர்கள் இரண்டாகப் பிரிய வா ய்ப்பு ஏற்படுவதுபோல இருக்கிறது வீமனின் பேச்சு.
அதே வேளையில் தங்களிடையே உள்ள பிரச்சனை களை எதிரிகள் மத்தியில், எதிரிகள் மகிழும்படி வெளிக் காட்டிக் கொள்வது விடுதலைப் போரினை பெரும் பாதிப் புக்கு உள்ளாக்கும் என்பதனை உணர்த்தும் பாத்திரமாக அர்ச்சுனனைப் படைக்கிறார் பாரதியார்
4 س-LI fT

Page 31
58
மனமாரச் சொன்னாயோ 1 வீமா! என்ன
வார்த்தை சொன்னாய்! எங்கு சொன்னாய்.
யாவர் முன்னே."
'மனமாரச் சொன்னாயோ" என்று பாரதி பயன் படுத்தும் வார்த்தைகளும், "எங்கு சொன்னாய். யாவர் முன்னே' என்ற வார்த்தைகளும், மிகவும் பெறுமதி வாய்ந்த வார்த்தைகள் எதிரிகளின் மத்தியில் அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியானதாக காட்டும் வீமனின் கோபமும், அதனைச் சாந்தப்படுத்தும் அர்ச்சுனனின் வார்த்தைகளும் மிகவும் யதார்த்தமான வார்த்தைகள்.
பொருளாதார சமத்துவத்தையும் சமுதாய சகோதரத் துவத்தையும் கட்டிக் காத்து விடுதலைப் போரை நடாத்து வதற்கு பாரதி கையாண்ட வழிகளை இங்கு பார்த்தோம்.
 

US 3 - III
Qi 3ë ul Gijë: glojë T360LLI ଗର୍ଭିt ଜt[i] ]୍)ରୀଷ୍ଟିy'][i]
சமுதாய சகோதரத்துவத்தையும் பொருளாதார சமத்துவத்தையும் அடிமைப்பட்ட நாட்டின் அத்தனை பகுதி மக்களின் ஒற்றுமையையும் வலியுறுத்தி விடுதலை வேண்டி நிற்கும் வீரர்களிடையே ஒற்றுமை உணர்வை ஊட்டினான் பாரதி பாரதி ஒர் தமிழ்க் கவிஞனாக இருந்த காரணத்தால் தமிழ் மொழியையும் தமிழ் நாட்டையும் சிறப்பித்துப் பாடுகிறான்.
தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பற்றை ஏற்படுத்தவும், தமிழ் நாட்டுப் பற்றை ஏற்படுத்தவும், அதே வேளை தமிழர்களின் தனித்துவத்தைப் பேணிக் கொண்டு அகில இந்திய அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழும் வண்ண மாகவும், அனைத்து மக்களுக்கும் அறைகூவல் விடுக்கிறான் பாரதி, மொழிப்டற்றும் நாட்டுப் பற்றும் இல்லாதவன் தாயையும், தந்தையையும் கொல்லும் ஒரு படுபா வியாவான், பாரதி இதனை நன்குணர்ந்து பாடுகிறான்.
தமிழ் மக்கள் தமிழ் நாட்டுக்குள் மட்டுமன்றி அதற்கு வெளியே வெளிநாடுகளில் எல்லாம் படும் துன்பங்களை வகைப்படுத்திக் கூறுகிறான். தமிழ்

Page 32
60
நாட்டுமக்கள் அந்நிய நாடுகளுக்குச் சென்ற காரணத்தை யும் அந்நிய நாடுகளில் அவர்கள் படும் இன்னல்களையும் தெரிந்து கொண்டால் அந்த இன்னல் தீர்க்க சுதந்திரப் போராட்டம் வலிவுறும் என்று நம்பி அந்தக் காட்சிகளை அப்படியே காட்டுகிறான்.
ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பல வினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவி யிவ் வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ்செய்தியும் பெண் டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும்; பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந் தொலை யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்,
சொந்த நாடு சுதந்திர நாடாக இல்லாத காரணத்தால் சொந்த நாட்டிலே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் அகதிகளாக, அனாதைகளாக அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில் செய்யும் மக்களின் கஷ்டங்களைக் கூறிக் கலங்குகிறான் பாரதி. அந்நிய நாடுகளில் அடியுதை யுண்டும் அவமானப் பட்டும் அல்லல் படும் தமிழ் மக்களின் அவலங்கள் தீர தமிழ் நாடு, தாய் நாடு சுதந்திர நாடாக இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி சுதந்திரப் போருக்கு உற்சாகங் கொடுக்கிறான் பாரதி.
இத்தகைய இழிநிலையை தமிழர்கள் அடைந்ததற்குக் காரணம் தமிழர்கள் தமது தனித் தன்மையை இழந்து விட்டதுதான். 'தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு.” என்ற கூற்றிலே வரும் தனியான குணம் எது என்றே தெரியாத நிலையில்
 

61.
தமிழர்கள் வாழ்ந்ததனால் ஏற்பட்ட வருத்தங்கள்தான் இவைகள்
பாத்திரங்களிலே ஊற்றப்பட்ட நீர் பாத்திரங்களின் நிறத்தையே தன்னிறமாகக் காட்டுவது போல, தமிழர் களும் சேர்ந்தவர்களோடு எல்லாம் அவர்களின் குணத்தைக் காட்டுவதாக மாறித் தமது தனித்தன்மையை இழந்ததுதான்; தமிழர்கள் அடையும் இன்னல்களுக்குக் காரணம் என்கிறான் பாரதி, இன்றுகூட எத்தனை பச்சோந்திகள் சார்ந்ததன் வண்ணமாய் இருந்து தமிழினத்தினை அழிக்க உதவுகிறார்கள் என்பது எமக்குத் தெரியும் அவர்களெல்லாம், 'வீடெரிக்கும் அரசனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரி' போன்றோர்.
விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்து நின் அருளால் வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடுவாயோ,
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு நூறுமல்ல ஒரு பதினாயிரம் சனியின் வாய்ப்பட்டுத்தான் தமிழ்ச் சாதிக்கு இத்தகைய இழிநிலைகள் ஏற்பட்டன, என்று தமிழின் இன்றைய நிலையை விளக்குகின்றான் பாரதி,
S S S S S S S S SS S SS SS SS SS SS S SS S SSS S S S S ஒரு பதினாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்'
கண்டதாகக் கூறுகிறான் பாரதி. இன்று மிகவும்
இக்கட்டான நிலையிலே இருக்கும் தமிழின் ஆரம்பம் பற்றியும் வளர்ச்சி பற்றியும், தமிழ் மக்களுக்கு,

Page 33
62
அறிவுறுத்தி பழம் பெருமையை நினைவுறுத்தி, தமிழின் உயர்வை நிலைநிறுத்தி, வெற்றி காண விரும்புகிறான் பாரதி,
ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
தமிழ், சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட து என்பது ஐதீகம், தமிழுக்கு ஆதியில் இலக்கணஞ் செய்தவர் அகத்தியர். அது அகத்தியம்’ என்ற பெயரில் வழங்கியதாம். இன்று அது இல்லாமல் போய்விட்டது. அகத்தியரின் மாணவனே தொல்காப்பியன். தொல்காப் பியர் தமிழுக்குச் செய்த இலக்கணமே இன்றும் "தொல்காப்பியம்’ என்ற பெயரில் நின்று நிலைத்து நிலவி வருகிறது.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே :
இன்றுள்ள பிரபல்யம் வாய்ந்த பல மொழிகள் தோன்றுவதற்கு முன்னாலேயே, தமிழ் மொழி செம்மொழியாக, இலக்கணம் கண்ட மொழியாக இருந் திருக்கிறது. ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல்' என்பது கோட்பாடு, ஆதலால் தொல் காப்பியருக்கு முன்பே தமிழ் மொழியில் இலக்கியம் தோன்றிவிட்டது. தொல்காப்பியர் சில இடங்களிலே என்மனார் புலவர்' என்ற சொல்லைப் பயன்படுத்து வதை தொல்காப்பியத்திலே காணலாம். 'இப்படி புலவர் கூறுவர்' என்பதே இதன் பொருள். இதிலிருந்து தொல் காப்பியருக்கு முன்பே தமிழ்ப் புலவர் இருந்திருக் கிறார்கள், இலக்கியஞ் செய்திருக்கிறார்கள், என்பதற்கு தெளிவான சான்று இதுவென்று கூறலாம்.
 

63
அகத்தியன் நிறைவான இலக்கணம் செய்து கொடுக்க, தொல்காப்பியன் தமிழ் இலக்கணத்தை மெருகூட்டிச் சிறக்கச் செய்தான் அதன் பின்
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.
தேவ பாஷை என்று சிறப்பித்துக் கூறப்படுவது சமஸ்கிருத மொழி மொழிகள் எல்லாவற்றிலும் மிகவும் பழமை வாய்ந்த மொழி அது. அந்த மொழிக்கு நிகராக தமிழ் மொழியை மூன்று வேந்தர்களும் வளர்த்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் போற்றி, பேணி வளர்க்கப்பட்டது, தமிழ் மொழி, ஆன்ற மொழியான சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கை இழந்து விட்டது.
ஆனால் தமிழ் மொழியே எல்லா வளத்தோடும் உயர்ந்து ஒங்குகிறது. இது உவப்பான செய்தியே எனலாம்.
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
சாத்திரங்கள் பல தந்தார் - இந்தத்
தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்.
தமிழைப் பற்றிப் பாடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாரதி மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறான். எல்லா மொழியையும் விட தமிழ் மொழியே உயர்ந்தது. தமிழ்ச் சொல்லே உயர்ந்தது என்கிறான் பாரதி.

Page 34
64
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா.
என்று பாப்பாக்களுக்கும் கூறுகிறான் பாரதி. தமிழ் மொழியில் எல்லா விடயங்களும் பேசப்படலாம், எழுதப் படலாம், பாடப்படலாம். அது வளம் மிகுந்த மொழி. வண் மொழி என்று பாடுகிறான் பாரதி.
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே.
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி என்று பாரதி வர்ணித்து மகிழ்கிறான். தாய் மொழியாம் தமிழை ஒழுங்காகப் படிக்காது வேறுவேறு பாஷைகள் படிப்போரைக் கோபித்து போ! போ! என்று ஏ சி விரட்டுகிறான் பாரதி.
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ! போ! போ!
தமிழ்மொழிபோல் இனிய மொழி எங்குமே இல்லை:
பாரதிக்கு ஆங்கில மொழியில் நல்ல புலமை இருந்தது. இந்திய மொழிகளிலும், பல மொழி அவனுக் குத் தெரியும். தமிழ்க் கவிதைகளில் பாரதி ஈடுபாடு கொள்வதற்கு முன்பு ஆங்கிலக் கவிதைகளிலேயே அவனுக்கு அதிக ஈடுபாடு இருந்தது. பிரபல ஆங்கிலக் கவிஞனான ஷெல்லியில் பாரதிக்கு அதிக காதல் உண்டு. பாரதி தனது பெயரை "ஷெல்லி தாசன்” என்று புனைந்து கொண்டு, அதாவது "ஷெல்லி தாசன்’ என்ற புனை பெயரில் கவிதைகள் இயற்றியிருக்கிறான். ஆங்கிலத்தில் சிறுகதையும் எழுதியிருக்கிறான்.
 
 

65
ஆங்கில அறிவும் ஏனைய பல மொழிகளும் தெரிந்து வைத்திருந்த பாரதி அந்த மொழிகள் எல்லாவற்றையும்
விட தமிழ் மொழியே சிறந்த மொழி என்று சாதிக்
கிறான். தமிழ் மக்களுக்கு, விடுதலைப் போராளிகளுக்கு உற்சாகமூட்டுவதற்காக மட்டுமன்றி உண்மையை, உண்மையாகக் கூறுவதாகக் கூறுகிறான் பாரதி. வெறும் புகழ்ச்சி இல்லை என்று சத்தியம் செய்கிறான்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்குங் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ! சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.
உலகிலே தமிழ் மொழியைப்போல் இனிய மொழி
எங்குமே இல்லை. அந்த மொழியைப் பேசும் மக்களாகிய நாம் பாமரர்களாகவும், விலங்குகளாகவும் இருப்பதால்
தான் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவாமல் இருக்கிறது. உலகம் முழுவதையும் அடிமை கொண்ட ஆங்கிலேயர் தம் மொழியை உலகம் எங்கும் பரப்பினார் கள். அதனால் ஆங்கிலம் சிறந்த மொழியாகவும் உயர்ந்த மொழியாகவும் உலகத்தில் போற்றப்படுகிறது. வெறும் மொழி அறிவு கொண்டவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்ற பெயரோடு திரிந்தனர்.
இது பாரதிக்குப் பிடிக்கவில்லை. ஆங்கிலத்தைவிட சிறந்த மொழியாக செம்மையான மொழியாக வண் மொழியாக விளங்கும் தமிழ் மொழி அடிமைப்பட்ட மக்களான தமிழர்களால் பேசப்பட்டதால் பொலிவிழந்து, சிறப்பிழந்து கிடந்தது. அதனால் அந்த மக்களை உலகம்,

Page 35
66
படிக்காத பாமரர் என்றும் விலங்குகள் என்றும் இகழ்ச்சி யாகக் கூறியது.
அந்த இழிநிலையை மாற்ற, தமிழ் மொழியை உயர் நிலைக்கு ஏற்ற, வெறும் பெயரளவில் தமிழர்கள் நாம் என்று கூறிக்கொண்டு இருப்பதை விடுத்து உலகம் முழுவதும் தமிழைப் பரவச் செய்ய வேண்டும் என்று பாடுகிறான் பாரதி. தமிழ், உலகெங்கும் பரவினால்தான் அதன் சிறப்பு எல்லா மக்களுக்கும் புரியும். அதனால் தமிழர்களுக்கு சிறப்பு ஏற்படும் என்று பாடுகிறான் பாரதி.
கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் :
ஷெல்லிதாசனாக ஷெல்லியின் (Sky Lark) 'ஸ்கை லாக்' கவிதையின் தாக்கத்தினால் குயில்பாட்டுப் பாடிய பாரதி ஷெல்லியையோ அல்லது வேறு எந்தக் கவிஞர் களையோ விட தமிழ்ப் புலவர்கள் சிறப்பானவர்கள் என்று பெருமையோடு பாடுகிறான்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற்கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
உலகக் கவிஞர்களில் முதல் மூன்று கவிஞர்களாகவும், தமிழ்க் கவிஞர்களையே தேர்ந்தெடுக்கிறான் பாரதி. கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமியிலே எங்குமே ஒரு கவிஞன் கூட பிறந்த

67
தில்லை. இது வெறும் புகழ்ச்சிக்காகவும், உற்சாகத்துக் காகவும் கூறப்பட்டதல்ல. உண்மை என்று அடித்துக்
கூறுகிறான். கவிதைத் துறையிலே முதல் மூன்று இடத் தையும் தட்டிக் கொண்ட புலவர்கள் பிறந்த தமிழ்
நாட்டில் பிறந்த பெருமை மிக்க மக்களாகிய நாங்கள்
உமைகளாக, ஆமைகளாக, செவிடர்களாக, குருடர்களாக
வாழ்கின்றோம் என்று இகழ்கிறான் பாரதி.
ஆங்கிலம் படித்த இரு தமிழர்கள் தாய் மொழியை மறந்து, தாய் மொழியைத் துறந்து அந்நிய மொழியான ஆங்கில மொழியிலேயே உரையாடும் அவல நிலையை இன்றும் காண்கிறோம். அந்நிய நாடுகளில் என்றாலும் பரவயில்லை, சொந்த நாட்டில், சொந்த ஊரில், சொந்த தெருவில் கூட அந்நிய மொழியில் உரையாடும் துரோகச் செயல் இன்றும் தொடர்கிறது. ஒரு மொழியைக் கற்றவர் கள் அதை மொழி என்றும், தொடர்புச்சாதனம் என்றும் கருதாமல் தாம் அறிவாளிகள் என்று பெருமை அடித்துக் கொள்ளும் நிலை அன்றும் இருந்தது. அடிமைப் படுத்திய வர்களின் மொழியான ஆங்கில மொழியைக் கற்றவர்கள் தமிழ் பண்டிதர்களைக் கேலி செய்த கேவலம் அன்று பெரிய அளவிலே நிகழ்ந்திருக்கிறது.
பாரதியின் காலத்தில் ஆங்கிலம் படித்த தமிழர்கள் தான் தமிழுக்கும், தமிழர் க்கும் பெரிதும் துரோ கஞ் செய்தார்கள். ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளுக்கு தமிழரை அடிமைகொள்ள கோடரிக் காம்பாக பயன் பட்ட வர்கள் இவர்களே. இவர்களைப்பற்றி தனது சுயசரிதையிலே அழகாகக் கூறுகிறான் பாரதி.
தமிழும் தமிழரும் வாழவேண்டும் என்றால் எந்த இடம் என்றில்லாமல் எல்லா இடங்களிலும் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும் 'அஃது பார்க்குமிடமெங் கணும் நீக்கமற என்று பாடுகிறான் பாரதி.

Page 36
68
பாரதிக்கு கம்பன் என்றால் அதிக காதல், சுப்பராம தீட்சிதரின் மறைவுக்கு இரங்கல் பாடும்போது *கன்னனொடு கொடை போயிற்று உயர் கம்ப நாட்
னுடன் கவிதை போயிற்று" என்று பாடுகிறான்,
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு; என்றும்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு.
என்றும் இந்த மூன்று புலவர்களையும் பல இடங்களி லும் புகழ்ந்து பாடும் பாரதி இவர்களில் தனக்குப் பிடித்ததையும் மறைக்காமல் சொல்லிவிடுகின்றான். சிலப்பதிகாரச் செய்யுள் அவனுக்குப் பிடிக்கிறது. திருக்குறளிலே உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் அவனுக்குப் பிடித்திருக்கிறது. கம்பனின் கவி ஆற்றலுக்கு வரம்பே இல்லை என்று கூறுகிறான். இம்மூன்று புலவர்களையும் கொண்ட தமிழ்ச்சாதி அமரத் தன்மை வாய்ந்தது என்று இறுமாந்தானாம் பாரதி.
சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், எல்லை யொன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்.
தமிழ் மொழியின் சிறப்பை இப்படியும் பாடிய பாரதி தமிழ் மொழியின் எதிர்காலம்-பற்றியும், அது மேலும்

69
சிறப்புற்று நின்று நிலைப்பதற்கு செய்யவேண்டிய நடவடிக்கை பற்றியும் கூறுகிறான்.
கொன்றிடல் போலொரு வார்த்தை :
புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் மற்றும் கலைகளும் பஞ்ச பூதத் செயல்களின் நுட்பங்கள் கூறும் நூல்களும், எல்லாம் மேல் நாடுகளில் அதிகமாக வளர் வதாகவும், தமிழிலே அக்கலைகள் இல்லாதது மட்டுமல்ல அவைகளைத் தமிழிலே மொழி பெயர்க்கவும் முடியாது. அதனால் தமிழ் மொழி இனி மெல்ல மெல்ல இறந்து விடும் என்றும், சில ஆங்கிலம் படித்த பேதைகள் கூறியதைக் கேட்டு ஆவேசம் பிடித்த பாரதி தமிழின் எதிர்கால உயர்ச் சிக்காக எட்டுத்திசைகளுக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவற்றையும் தமிழிலே கொண்டு வந்து சேர்க்கும்படி கூறுகிறான். தமிழ்த்தாய் கூறுவது போல இதனைப் பாரதி கூறுகிறான்.
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை,
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிடமிசை ஓங்கும். என்றந்தப் பேதை உரைத்தான் -ஆ.
இந்த வசையெனக் கெய்திடலாமோ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
கொன்றிடல் போன்ற அந்த வார்த்தையைக் கேட்டு சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று தமிழ்த்தாய் தமிழர்

Page 37
تھیں ۔
களைக் கலைப்பதாகப் பாடுகிறான் பாரதி, மேலைத் தேச விஞ்ஞானங்களில் உள்ளவற்றை சொல்லும் திறமை வாய்ந்த மொழியாக அதாவது மொழி பெயர்க்கக் கூடிய சொல்வளமுள்ள மொழியாக தமிழ் மொழி இல்லை என்று சிலர் கூறும் வசையைப் போக்க இன்னொரு அறை கூவலையும் விடுக்கிறான் பாரதி.
மறைவாக நமக்குள்ளே :
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். மரைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.
பிற நாட்டிலுள்ள நல்ல அறிஞர்களின் நூல்களை எல்லாம் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டும். அதே சம காலத்தில் துறவாப் பெரும் புகழ் படைக்கக் கூடிய புது நூல்கள் தமிழ் மொழியிலே இயற்றப்பட வேண்டும், எமது பழம் பெருமைகள் எல்லாவற்றையும் எமக்குள்ளே மறைவாகப் பேசிக் கொண்டிருப்பதால் எந்தப் பெருமை யும் மகிமையும் ஏற்படப் போவதில்லை, அதனால் எமது பழங்கதைகளை எமக்குள்ளே மறைவாகப் பேசிக்கொண் டிருக்காமல் உலகமெல்லாம் கேட்கக் கூடியதாக உரத்த குரலிலே தன்னம்பிக்கையோ டு பேசிப் பரப்ப வேண்டும் விளம்பரம் இல்லாத எந்தப்பொருளும் விற்பனையாகாது தானே, எமது புலமையைத் தெரிந்து கொண்ட வெளி நாட்டார் அதை திறமான புலமை என்பதை ஒப்புக் கொண்டால் தமிழ் மொழியின் சிறப்புக்குத் தலைவணங்க
 

7 1
வேண்டும் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்
பாரதி.
அமுதம் அருந்தியவர்கள் அமர ரானார்கள். அமரர் களுக்கு இறப்பில்லை, என்பது இந்து சமயக் கொள்கை,
தமிழ் அமுதம் குடித்தவர்களும் இந்தப் பூமியிலே தேவர்
கள் போன்ற சிறப்பை அடைவார்கள் என்று தமிழர்
களுக்கு தமிழின் சிறப்பு பற்றிக் கூறி உற்சாகமூட்டு கிறான் பாரதி.
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
தமிழ்ப் பற்றைப் போற்றும் பாரதி அதே நேரத்தில்
ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தையே சிறப்பான மொழி
உயர்ந்த மொழி என்று சாதித்துக் கொண்டிருந்த தமிழர் களைப் பெரிதும் சாடுகிறார். ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாகி விடுதலைப் போராளி களுக்கு எஜமானராகி காட்டிக் கொடுத்து காசு பெற்று உயிர் வாழ்ந்தனர். அதனால் பாரதிக்கு அந்த மக்கள் மேல் ஏற்பட்ட கோபம் ஆங்கில மொழிக்கும் தாவியது. தன்னை ஆங்கிலம் படிப்பதற்காக தந்தை அனுப்பிய
செய்தியைதனது சுயசரிதையிலே பாடும் போது;
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன் புல்லை உண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடுவிப்பது போலவும் எந்தை தான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரியர்க்கிங் கருவருப் பாவதை

Page 38
72
சிங்கக் குட்டியைக் கூப்பிட்டு புல்லைத் தின்னும்படி கேட்பது போலவும், பிராமணச் சிறுவனை இறைச்சி வியாபாரமே உனக்கு நல்லதெனக் கூறி அத்தொழிலில் ஈடுபடுத்துவது போலவும் இருந்ததாம், தந்தை தன்னை ஆங்கிலம் படிக்கும்படி அனுப்பிய செய்கை, அந்த ஆங்கிலக் கல்வி அல்லல் மிக்க மண்படு கல்வி என்று இழிவாக ஏசுகிறான் பாரதி. ஆங்கிலக் கல்வியில் அத்தனை கோபம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை இதன் தொடரான அடுத்த பாடல் மூலம் விளக்குகிறான்.
நரியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள்
நாயெனத்திரி ஒற்றர் உணவினைப்
பெரிதெனக் கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர் பிறர்க் கிச்சகம் பேசுவோர்
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைபயில் கென என்னை விடுத்தனன்.
அடக்கியாள நினைப்பவர்கள் தமது மொழியை, முதலில் அடிமை கொள்ள இருக்கும் மக்களுக்கு ஊட்டு வார்கள். அந்த மொழியைக் கற்றவர்களுக்கு உயர் பதவி கள், சலுகைகள் செய்வார்கள். அந்தச் சலுகைகளுக்கு ஏமாந்த மக்கள், தமது இனத்தையே அந்நியருக்கு காட்டி கொடுத்து; கைகட்டி, வாய் பொத்தி நிற்பார்கள். இதனால் அந்த இனம் அடிமையாகும்.
ஆங்கிலம் கற்று சேவகர்களாகவும், அடிமை களாகவும் நரிபோல, நாய் போலத் திரியும் ஒற்றர் களாகவும், உணவையே பெரிதாக நினைத்து தம் உயிரை விற்பவர்களாகவும் பிறருக்கு முகஸ்து தியாக அடிமை கொள்வோரின் செயலை ஆதரித்து அனுசரித்துப் புகழ்ந்து பேசுவோர்களாகவும் பலர் அன்று இருந்தனர். அந்த எண்ணங் கொண்டவர்களுக்கே அந்தக் கல்வி
 

73
தகும். ஏனையோர்க்கு அருவருப்பான மண்படு கல்வியே என்று கூறுகிறான் பாரதி.
ஆங்கிலம் பயின்றோரின் அன்றைய நிலை :
ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் தம் உயிர் பேணிகளாக
அடக்கி ஆளுவோர் மிதித்தேறும் ஏணிகளாக, இருந்தது
மட்டுமன்றி, பாரத நாட்டின் உண்மையான கலைகளை அறியாமலும் இருந்தனர்.
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஒர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்பருந் திறலோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்
கம்பனையும், காளிதாசனையும் வானியல் ஆராய்ச்சி செய்த பாஸ்கரனின் மாட்சியும், ஆங்கிலம் கற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் ஒதுங்கி வாழ்ந்த காலத்தில் உலகே வியக்கும்படி ஒரு பெண்ணான காக்கை பாடினியார் தமிழுக்கு இலக்கணஞ் செய்ததையும் ஆங்கிலம் பயில்வோர் அறியா திருந்தனர், என்று கூறுகிறான் பாரதி தமிழுக்கு முதன் முதல் இலக்கணஞ் செய்தவர் அகத்தியர் என்றும், அவரது மாணவர் களாகிய தொல்காப்பியர், காக்கைப் ப டினியார் என்ற பெண் புலவர் ஆகியோரும் தமிழுக்கு இலக்கணஞ் செய்தனர் என்றும் தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்.
L}{T-5

Page 39
74
சேரன் த பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார வளித்துத் தர்மம் வளர்த்ததும் பேர ருட்சுடர் வாள் கொண்ட சோகனார்
பிழைபடாது புவித்தலங் காத்ததும் வீரர் வாழ்த்த மிலேச்சர் தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
இளங்கோ சிலப்பதிகாரம் பாடியதையும் வள்ளுவன் வான்மறையாம் திருக்குறள் செய்ததையும், சோழ பாண்டியர்கள் தர்மம் வளர்த்து உலகை காத்ததையும் அசோகச் சக்கர வர்த்தி பூமியை பிழையின்றிக் காத்ததை யும் மிலேச்சர் தம் கொடுங்கோலை வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், ஆங்கிலம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை தங்கள் மொழியை, நாட்டை அறிந்து கொள்ளாத பேடிக் கல்வியே கற்றனர், ஆங்கிலங் கற்றவர்கள் என்கிறான் பாரதி.
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர் முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கு மிந் நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுந் தேர் கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள் என்ன கூறி மற் றெங்கன் உணர்த்துவேன்
இங்கிவர்க் கென துள்ளம் அழிவதே.
இந்த வகையிலே ஆங்கிலத்தையும் ஆங்கில மொழி கற்று தமிழைப் புறக்கணித்தவர்களையும் ஏசிய பாரதி தான் ஆங்கிலம் படித்ததால் தந்தைக்கு செலவு ஆயிரமும், தனக்கு தீது பல்லாயிரமும் வந்து சேர்ந்ததாகக் கூறு , கிறான். ஆங்கிலம் படித்ததால் மொழி அறிவைத் தவிர

75
வேறு நலம் ஒரு எள்ளளவும் கிடைக்கவில்லை என்று கூறுகிறான்.
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன நலமொ ரெட்டுணையுங் கண்டி லேனிதை
நாற்பதாயிரங் கோயிலிற் சொல்லுவேன். எள்ளளவு நன்மை கூட தனக்கு ஏற்படவில்லையாம். சத்தியஞ் செய்கிறான் பாரதி. ஒன்றிரண்டல்ல நாற்ப தாயிரம் கோயிலில் சென்றும் இந்த உண்மையைச் சொல்லத் தயாரென்கிறான் பாரதி. 'நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்' என்று பாரதி கூறும் பாங்கு அவனுக்க ஆங்கிலக் கல்வியிலும், ஆங்கிலம் பயின்று அடிமை வாழ்வு வாழ்ந்த, தமிழரிலும் இருந்த அருவருப் பின் உச்ச வெளிப்பாடாக இருக்கிறது.
மக்களை அடிமைப்படுத்திய மொழி ஆங்கிலம், அந்த மொழியை, அடிமைப்பட்ட மக்களே போற்றிப் புகழ்வது அடுக்குமா, எப்படிப் பொறுப்பான் பாரதி. துகிலுரிந்த துச்சாதனனை துகிலுரியப்பட்ட திரெளபதியே புகழ்ந்து கூறுவது போலல்லவா இருக்ரும் இச்செயல், அதுதான் பாரதிக்கு ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கற்று, ஆங்கிலத்தைப் புகழ்ந்து திரிந்தவர்கள் மீதும் அத்தனை வெறுப்பு ஏற்படுகிறது. அளவிடமுடியாத கோபம் வருகிறது. தந்தையர் நாடென்ற பேச்சினிலே :
தமிழ்மொழியின் சிறப்பைக் கூறி தமிழ் மக்களை உணர்ச்சி கொள்ளத் தூண்டிய பாரதி தமிழ் நாட்டின் சிறப்புப் பற்றியும் கூறி அந்த நாட்டின் அடிமை விலங்கொடித்து ஆரோக்கியமான நிலைக்கு அழைத்துச் செல்ல விடுதலை வீரர்களைத்தயார் செய்கிறான் பாரதி.
நாட்டின் பழம் பெருமையை ஞாபகப்படுத்துவதன் மூலம் நாட்டிலே பற்றை உருவாக்கி விடலாம் என்று

Page 40
76
நம்பிப் பாடுகிறான். 'செந்தமிழ் நாடு' என்று கூறும் போது காதிலே தேனாக இனிக்கிறதாம் பாரதிக்கு.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
வழமையாகத் தாய்நாடு என்று கூறித்தான் நாட்டுப் பற்றை எல்லாப் புலவர்களும் உண்டாக்கு வார்கள். பாரதியோ "தந்தையர் நாடென்ற பேச்
சினிலே' ஒரு சக்தி பிறப்பதாகப் பாடுகிறான். தாய் நாடு, தாய் மொழி என்று மட்டும் கூறிக்கொள்ளாமல் தந்தைய நாடு என்றும் பாடுவது பாரதிக்குத் தன் தமிழ் நாட்டிலிருந்த பற்றையே எடுத்துக் காட்டுகிறது.
எங்கள் தந்தையர் செய்த தவறுகளால்தான் நாம் இன்று இந்த இன்னலை அனுபவிக்கிறோம் என்று எண்ணிப் புதுச் சக்தி மூச்சிலே பிறப்பதாகவும் கொள்ளலாம்.
வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு.
வேதம் நிறைந்த நாடாக மட்டுமல்ல, வீரம் செறிந்து நாடாகவும் தமிழ் நாடு இருந்தது என்பதை நினைவூட்டு கிறான் பாரதி, தந்தையர் நாடு என்றும் வேதமும் வீரமும் ஒருங்கே நிரம்பியிருந்த நாடு என்றும் கறிய பாரதி, தமிழ் நாட்டின் பொருளாதார வளத்தையும் கூறுகிறான்,
காவிரி தென் பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையைப் பொருணைநதி - GT GUT
மேவியயாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு

77
நாட்டின் வளத்திற்கு மிக முக்கியமானது நீர், மிக முக்கியமான நான்கு நதிகளின் பெயர்களையும் கூறி மேலும் பல நதிகள் ஒடுவதால் நீர்வளம் நிறைந்த தமிழ் நாடு என்று கூறுகிறான். இன்னொரு பாடலில் *செல்வம் எத்தனை உண்டு புவி மீதே, அவை யாவும் படைத்த தமிழ் நாடு' என்று தமிழ் நாட்டின் பொருளாதார வளத்தை மக்களுக்குச் சுட்டிக்காட்டு கிறான் பாரதி. இத்தனை பொருளாதார வளமுள்ள நாடு அடிமை நாடாக இருக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணத்தை மக்களுக்கு எழுப்புகிறான் - இப்பாடல்கள் மூலம்
நீலத்திரைக்கடல் ஒரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
தமிழ் நாட்டின் எல்லைகளைக் கூறி அந்த எல்லைகளுக்கிடையே புகழ் மண்டிக் கிடக்கிறது; என்று மிகவும் பெருமையாகவும் கூறுகிறான். இன்று புகழ் மங்கிக் கிடக்கிறது என்பதையும் இன்றுள்ள எல்லைகள் எப்படி இருக்கின்றன என்பதையும் சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறான் பாரதி
வளத்தையும் புகழையும் கூறிய பாரதி தமிழ் நாட்டின் கல்வியைப் பற்றி மிகச் சிறப்பாக; மிகப் பெருமையாக கூறுகிறான்.
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மனம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.

Page 41
78
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகார மென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.
தமிழரின் வீரமும் வெற்றியும் :
கல்வியிலும், கவிதையிலும், சாஸ்திரங்களிலும் உலகெங்கும் புகழ் பரப்பி நிற்கும் தமிழ்நாடு என்று கூறி பண்டைய தமிழகத்தின் வீரத்தைப் பற்றியும் பாடுகிறார் பாரதியார்,
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
இன்று பூரீலங்காவாக இருக்கும் அன்றைய இலங்கை புட்பகம், சாவகம் ஆதியான பல தீவுகளுக்கும் சென்று அந்தத் தீவுகளை வென்று தங்களின் புலிக்கொடியையும் , மீன்கொடியையும், ஆட்சிக் கொடியாக அமைத்து வீரப்புகழ் கொண்ட சோழர்களினதும் பாண்டியர் களினதும் நாடு தமிழ்நாடு என்று பெருமையாகப் பாடுகிறார் பாரதியார் .
தமிழர்கள் அந்நிய நாடு சென்று அந்த நாடுகளை வெற்றிகொண்டு நல்லாட்சி செய்ததைக் கூறிய பாரதி இன்று தமிழ் மக்கள் அந்நிய நாடுகளிலே அடிமைகளாக அநாதைகளாக, அகதிகளாக இருப்பதை நினைவூட்டு கிறான் வீரஞ் செறிந்த தமிழ்நாட்டு மக்களின் நிலை இப்படியிருக்கிறது. அன்று தமிழர்கள், யாரை வெற்றி கொண்டார்களோ, அவர்களாலேயே இன்று துன்புறும் நிலையை அடைந்திருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.

தமிழ் நாட்டிலிருந்து இந்தியாவின் வடக்கு எல்லை யான இமயமலைவரை சென்று கைப்பற்றி விண் தொட வளர்ந்திருந்த இமயச் சிகரத்தில் தங்கள் விற்கொடியையும் புலிக்கொடியையும், மீன்கொடியையும் பொறித்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட தமிழ்நாடு என்றும் தமிழ் வீரத்தைக்கூறி ஞாபகப் படுத்துகிறான் பாரதி:
விண்ணை இடிக்கும் தலை இமயம் - எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு,
தமிழ் அரசர்கள் வீரத்தால், நெஞ்சிலே, சரித்திரத் திலே, இலக்கியத்திலே நிலைத்துநின்ற தமிழ்நாடு என்று தமிழ் வீரத்தினைக்கூறி உற்சாகப்படுத்துவதை இங்கு காணலாம். சீனம், மிசிரம், ஜவனரகம் முதலான இன்னும் பலதேசங்களுக்கும்,சென்று புகழைப் பரப்பி கலைஞானம், படைத்தொழில், வாணிபம் முதலியவற்றை மிக நன்றாக வளர்த்துக் கொண்ட தமிழ்நாடு என்று தமிழர்களின் அனைத்துத் திறமைகளையும் வரிசைப்படுத்திக் கூறு கிறான் பாரதி.
சீனம் மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்கு வளர்த்த தமிழ்நாடு.
தீவுகளைக் கைப்பற்றியதைக் கூறிய பாரதி, தேசங் களில் புகழ் பரப்பி, வளம் நிறைந்த செய்தியை அடுத்த தாகக் கூறினான், ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் புகழ் பரப்ப அந்நிய நாடுகளுக்குச் சென்றனர் தமிழர்கள், இன்றோ அகதிகளாக அந்நிய நாடுகளிலே அலைகி றார்கள் தமிழர்கள்.

Page 42
80
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!
தமிழர்களின் நிலையைப் பாரதி இன்னொரு பாடல்லே அழகாகப் பாடுகிறான்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே.
இந்தப் பாடலிலே மிக முக்கியமான கருத் தொன்றைச் சூசகமாகக் கூறுகிறான் பாரதி. அந்நியர் களால் அடிமைப் படுத்தப்பட்ட இந்தியாவின் அன்றைய நிலையில் மக்களால் தங்களது வீட்டுக்குள்ளே மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடிந்ததே தவிர 6)) Tլք முடியவில்லை. தங்கள் குடும்ப ஒற்றுமை காரணமாக மகிழ்ந்து குலாவினார்களே தவிர அவர்களால் வாழ முடியவில்லை. இதைத்தான் பாரதி "மகிழ்ந்து குலாவி இருந்ததும்' என்று கூறுகிறான்.
சுதந்திரமாக மகிழ்ச்சியாக நன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை. அப்படி வாழ முடியாதவர்கள் வாழ வசதி பில்லாதவர்கள் 'ஏதோ இருக்கிறோம்' என்ற நிலையில் தான் இருப்பார்கள். அவர்களால் வாழ முடியவில்லை. என்பதை பாரதி 'இருந்ததும்' என்ற சொல்லில் றிெப்பிட்டுக் காட்டுகிறான்
சுதந்திரமான தமிழ் நாடாக இருந்த காலத்தில் சகல வசதிகளும், வளமும் பொருந்தியிருந்த நிலையில் மக்கள், அதாவது எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இங்கே 'வாழ்ந்து' என்ற

&K II
சொல்லைப் பாரதி பயன் படுத்துவதன் வித்தியாசத்தினை உணர்ந்து கொள்ளலாம். எந்தையும் , தாயும் இருந்தனர், ஏதோ இருக்கிறோம் என்ற நிலையில். ஆனால் எமது முந்தையர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர். எம்மால்
ஏதோ இருக்கிறோம் என்ற நிலையில் இருக்கக்கூட முடிய
வில்லையே என்ற ஆதங்கந்தான் எழுகிறது.
வாழ்பவர்களால் தான் எதையாவது சிந்திக்க முடியும் நடைப்பினமாக இருப்பவர்களால் எதையும் சிந்திக்கவும் முடியாது, சாதிக்கவும் முடியாது. எங்கள் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததனால் அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்தது, என்று பாரதி பாடும் நயம் வியந்து பாராட்டத்தக்கது.
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து - அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னிய ராகி நிலவினி லா டிக்
களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே.
எங்கள் தாய், தந்தையர் தங்கள் மழலைப் பருவத் திலும், இளமைப் பருவத்திலே தமது நாட்டிலே எல்வளவு மகிழ்ச்சியாக ஆடிப்பாடிக் களித்திருக்கின்றனர், என் பதைப் பார்க்கும்போது மனதில் பெரும் ஆதங்கமும் ஆவலும் தான் ஏற்படுகிறது. எங்களால் அப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே, இருக்க வழியில் லையே என்ற ஏக்கம் தான் நிறைகின்றது.
சுதந்திர நாடாக இருந்த காலத்தில் சிந்திக்கவும், சிரிக்கவும் எங்கள் மூதாதையர்களுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. அடிமைப்படுத்தப்படும் இன்றைய நிலையில்

Page 43
82
சிரிப் புக்கும் இடமில்லை. சிந்தனைக்கும் இடமில்லை. அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து தமிழர்களை ஆவேசங் கொள்ளச் செய்கிறார் பாரதியார் .
வீரத்திலே உயர்நாடு :
தமிழ்ப் பற்றையும் தமிழ் நாட்டுப் பற்றையும் கூறிய பாரதி பாரத தேசத்தில் பாரத மக்களுக்குப் பற்று ஏற்பட வேண்டும். அதன் மூலம் அடிமைப் படுத்தப்பட்ட மக்களின் பொது எதிரியாக இருந்த அந்நியரை வெற்றி கொள்ள வேண்டும், என்று பாடுகிறான். பாரத நாட்டின் பழம் பெருமை பற்றிப் பல வகையிலும் ஞாபகப்படுத்தி உணர்ச்சியூட்டுகிறான் பாரதி.
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு
என்று பாரத நாட்டைக் கூறி ஒவ்வொரு பெருமை யாக வரிசைப் படுத்துகிறான் பாரதி
ஞானத்திலே பர மோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதை யிலே உயர் நாடு.
தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு
என்று பாரத நாட்டின் பழம் பெருமை பாடுகிறான் பாரதி. 'பாரத நாடு பழம் பெரு நாடு, பாடுவோம் இஃதே நமக்கிலை ஈடே' என்று பல வகையிலும் பாடுவதைக் காணலாம்.

83
சிறையில் வாடினாலும் தனது நாட்டு சிறையெனில் மகிழ்ச்சியே :
சுதந்திரப் போராட்ட வீரரான லாலாலஜ" பதிராயின் பிரலாபமான நாட்டுப் பற்றைப் பல வகையிலும் பாடுகிறான் பாரதி. சுதந்திரப் போராட் டத்தில் ஈடுபட்டதற்காகத் தன்னை எத்தனை ஜன்மங் களுக்கு இருட்டுச் சிறையிலே அடைத்து வைத்தாலும் தனது தாய் நாடான பாஞ்சால நாட்டிலேயுள்ள சிறை யொன்றில் அடைத்து வைத்தால், தான் துன்பமே இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று லாலா லஜபதிராய் கூறுவதாகக் கூறுகிறான் பாரதி.
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்து புனற் பாஞ்சாலந் தனில் வைத்தால்
வாடுகிலேன்
பதினெட்டு மொழிகளும் முப்பதுகோடி மக்களும் உள்ள நாடாக பாரதியின் காலத்தில் இந்தியா இருந்தது. எத்தனை மொழிகள் இருந்தாலும் எவ்வளவு : மக்கள் வாழ்ந்தாலும் எல்லோரது சிந்தனையும் உயிரும் ஒன்றே. விடுதலைதான் உயிர். முகங்கள் மட்டுமே வேறு வேறு என்கிறான் பாரதி.
முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற மொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில்
சிந்தனை ஒன்றுடையாள்.
எத்தனை முகமிருந்தாலும் உயிர் ஒன்றுதான். அதனால் சிந்தனையும் ஒன்றே தான் என்று ஒற்றுமையைப் பாடிப் புகழ்கின்றான் பாரதி. முப்பது கோடி முகங்கொண்ட பாரத மாதா தனது அறுபது கோடி

Page 44
84
கைகளினாலும் தர்மங்களைச் செய்வாள். போர் புரிய வரும் அந்நியரைக் கொன்று குவித்து துகள் துகள் ஆக்கி விடுவாள்.
அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள்தாய் - தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள் செய்து கிடத்துவன் தாய்.
ஆத்மீகத்தில் ஊறிய புண்ணிய பூமியான பாரதம்
ஒரு ஞான பூமிதான் அறங்கள் நடத்திடும் கைகள்
தங்களை அடக்கியாள வருபவர்களைக் கொன்று துகள், துகள் ஆக்கவும் தயாராக இருக்கும்.
பாரத நாட்டினைப் பற்றி பாரதி மிகவும் பெருமை கொண்டிருந்தான் புண்ணிய நாடு என்று புகழ்ந்து பாடுகிறான். சாதாரண புண்ணிய நாடல்ல. பத்து நாலாயிரம் கோடி பெருங்கலைகள் நயந்து நின்ற புண்ணிய நாடு என்று புளகாங்கிதம் அடையும் வண்ணம் புகழ்கின்றான் பாரதி.
நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே,
என்று பாடுகின்றான், பரவுகின்றான். அந்தப் புண்ணிய பூமியின் பெருமையைப் பற்றி சத்திர பதி
சிவாஜியின் மூலமாக இன்னும் அதிகமாகப் புகழ்கிறான் பாரதி,
வீரரைப் பெறாத தாய் மலடி எனப்படுவாள் :
மாராட்டிய வீரன் வீரசிவாஜி தனது போர் வீரர்களுக்குக் கூறுவதாக வரும் வீர வரிகளிலே பாரத

85
நாட்டுப் பழம் பெருமை பற்றி அழகாகக் கூறுகிறார் பாரதியார் .
மாற்றவர் தம் புலை நாற்றமே அறியா ஆற்றல் கொண் டிருத்த திவ் அரும் புகழ்நாடு வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி வீரமும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும் புகழ் பரப்பிய நாடு வீரரைப் பெறாத மேன் மைதீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு.
வீரர்களும் அவர்களது வீரப் பிரதாபங்களை விபரித்துப் புகழ்பாடும் புலவர்களும் நிரம்பியிருந்த நாடு நம் நாடு, அதனால் உலகமெங்கும் எம் பெருமை பரவியிருந்தது.
வீரத்தைக் கூறும் நூல்கள் பல கண்டது எம் நாடு, போர் புரிவதற்கு வீரர்களைப் பெறாத மங்கை பெருமை இழந்தவளாகக் கருதப்பட்டாள், பிள்ளையை பெற் றாலும் அப்பிள்ளை வீரனாக, தீரனாக தன்மானமும், தாய் மானமும், தாய் நாட்டின் மானமும் காப்பாற்று வதற்காக எதிரிகளை எதிர்த்துப் போர் புரியத் தயங்கும் கோழையாக இருந்தால் அந்தக் கோழையைப் பெற்ற தாய் மலடி என்று உயிர வர ல் கேவலமாகக் பட்டவள், வீரசிவாஜி,
கருதப் கதைக்கப்பட்டவள் என்று கூறுகிறானாம்
ஆண்கள் என்றால் வீரர்கள் பட்டுமே என்ற வகையில் வாழ்ந்து செழித்த நாடு எம் நாடு என்று உற்சாகமாகக் கூறி நாட்டுப் பற்றை வலியுறுத்துகிறான்.
பாரத பூமி பழம் பெரும் பூமி நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர். பாரத நாடு பார்க் கெலாந் திலகம் நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்.

Page 45
86
இப்படிப்பாரத நாட்டின் பெருமைகளைக் கூறி இந்தத் தாய் நாட்டை அந்நிய அடக்குமுறையாளர்கள் எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை விவரிக்கிறான் சிவாஜி
தாய் திரு நாட்டைத் தறுகன் மிலேச்சர் பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபுரி பகைவர் வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் இந்நாள் படை கொணர்ந்து இன்னல் செய்கின்றார். ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் மாதர் கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார். தாய் நாட்டின் பெருமையையும், வன்மையையும், ஞானத்தையும் அறியாத எதிரிகளைப் பேய் போன்ற பகைவர்கள், அரக்கர்கள் போன்ற அநியாயக்காரர்கள் இன்று படை கொண்டு வந்து எமக்கு எத்தனை இன்னல்களைச் செய்கின்றனர். ஆலயங்களை எரித்து அழித்தலும், வேதங்களைப் பழித்தலும், பால் குடி மறவாத பாலர்களையும், வயது சென்ற கிழவர்களையும்
கூட கொன்றொழிக்கின்றனர். மாதரின் கற்பை அழித்து
மக்களின் வாழ்வைச் சூறையாடுகிறார்கள் என்று
பலவாறாக அவர்கள் செய்யும் கொடுமைகளை எடுத்தியம்புகிறான். வெற்றியே அன்றி வேறெதும்
பெறுகிலோம் :
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம் தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல். இந்தக் கொடுமைகளைப் பொறுத்து என்றோ ஒரு நாள், இப்பவோ, பின்னையோ, மத்தியானத்திலோ,

87
இரவிலோ, பகலிலோ, இரவுதான் படு நேரத்திலோ இறப்பது நிச்சயம். நிச்சயம். நிச்சயம் , அதனால் உயிர் பெரிதென எண்ணுவரோ வீரர் தாய்த்திருநாட்டை அழிக்கும் மிலேச்சரை மாய்த்திட விரும்பாதார் வாழ்வு வாழ்வே அல்ல, மனித குலத்துக்கே தாழ்வு என்று தனது வீரர்களுக்குக் கூறுகிறான் சிவாஜி.
மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற் றிருக்க எவன் கொலோ விரும்புவான் தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரியனல்லன்.
மானம் சிறிது மின்றி எதிரிகளின் அடிமைகளாக ஈனமுற்று இருக்க எம்மிலே எவன் விரும்புவான். தாயை எதிரிகள் கையில் பறிகொடுத்த பின் சகித்துக் கொண்டு பொறுமையாகப் பேசிப் பார்த்துத் தீர்க்க விரும்புபவனும் உண்டோ. அத்தகையவன் நாய் போன்றவன். எம்மிலே எவரும் அந்நிலையில் இல்லை. பிச்சை வாழ்வை விரும்பும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையோ! அதிலும் அந்நிய எதிரியின் ஆட்சியிலே அடிமையாய் பிச்சை பெற்று வாழும் அச்சமுற்ற வாழ்க்கை வாழுபவன் எம்மினத்தைச் சேர்ந்தவனே அல்ல, என்று ஆவேசமாகப் கூறுகிறான் சிவாஜி.
தன்னோடு போராட வருபவர்களை அழைத்து கோழைகளைக் கலைத்து வீர உணர்வூட்டுகிறான். வீரர்கள் இருங்கள். சோரர்கள் போங்கள் என்று கூறுகிறான்.
ஆரியர் இருமின் ஆண்கள் இருமின். வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்,

Page 46
88
மானமே பெரிதென மதிப்பவர் இருமின் தாய்நாட் டென்புறு தனையர் இங்கு இருமின் மாய் நாட் பெருமையின் மாய் பவர் இருபின் நம் மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் புல்லிய மாற்றலர் பொறுக்க வல் லார் கொல்.
வீரியம் மிகுந்த ஆண்கள் என்னோடு துணையாக வாருங்கள், மானமே மிகுந்த மேன்மையோர் ஈனம் பொறுக்கா இயல்பினர் தாய் நாட்டிலே அன்பு கொண்ட தனையர்கள் என்னோடு இருங்கள். இறக்கும்போதும் பெருமையோடு இறக்க விரும்பும் இனிய வீரர்களே என்னோடு இருங்கள் எமது ஆற்றலை நாம் முழுமை யாகப் பயன் படுத்தினால் ஒற்றுமையாகப் பயன்படுத்தி னால் ஒரு நாழிகைகூட எமது எதிரியால் அதனைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று தனது வீரர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டுகிறான் சிவாஜி,
வெற்றியே அன்றி வேறேதும் பெறுகிலோம், என்ற நம்பிக்கையைப் பெரிதும் ஊட்டி சுதந்திரவிடுதலைப் போர் பற்றி மேலும் கூறுகிறான் சிவாஜி.
புண்ணியத் திருப்போர் :
‘போரினில் இது போற் புண்ணியத் திருப்போர்
பாரினில் ஒன்று பார்த்திடற் கெளிதோ . ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவதை விரும்புவர் சிலரே. நெஞ்சக் குருதியை நிலைத்திடை வடித்து வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவோம். வேள்வியில் இதுபோல் வேள்வியொன்றில்லை தவத்தினில் இதுபோல் தவம் பிறிதில்லை, விடுதலைப்போரை வெறும் போராக இல்லாமல்,
புண்ணியப் போராகவும் திருப்போர் என்றும்
கூறுவதைக்கொண்டு சிவாஜியின் நாட்டுப்பற்றை விளக்கு

89
கிறார் பாரதியார். விடுதலைப்போரே உலகில் உயர்ந்த போர் என்றும் விடுதலை வேள்வியே மிகப்பெரு வேள்வி என்றும் குருதியைக் கொடுத்து போர் புரிந்து விடுதலை கோரும் யாகமே மிகப்பெரும் யாகம் என்றும், மா மகம் என்பதும், பெரும் தவம் என்பதும் எல்லாம் சுதந்திரப் போராட்டமே அன்றி இதைவிடச் சிறப்பாக எதுவுமே இல்லை என்றும் உணர்வூட்டுகிறான் சிவாஜி.
மக்களின் சிந்தனையை முற்று முழுதாகச் சுதந்திரப் GLJ I fG6) திசைதிருப்புவதற்காகச் சிவாஜி இந்த வகையிலே ஆத்மீக வேள்விகள், தவங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் விட சுதந்திரப்போரே பெரிதென்றும், வீர மரணமே சொர்க்கத்து வாசலைத்திறக்கும் என்றும் மக்களுக்கு உணர்வூட்டி உயிரூட்டுகிறான்.
நாமோ உறவினர்கள், எம்மை அடக்கி ஆள நினைக் கும் அறிவிலிகளோ மிலேச்சர்கள் அவர்களது நாடும் எமது நாடல்ல, அவர்கள் வேற்று நாட்டுக்கார ரே, பிறப்பாலே அவர்கள் எமக்கு அந்நியர். பேசும் மொழி யாலும், பேசும் பேச்சுக்களாலும் அந்நியர்.
தேரில் இந் நாட்டினர் செறிவுடை உறவினர் நம் மை இன் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர் செம்மைதீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம். பிறப்பினில் அந்நியர் பேச்சினில் அந்நியர்
எல்லா வகையிலும் அந்நியராக இருப்போரோடு ஒரு கொடி, ஒரு குடைக்கும் கீழ் வாழ்தலும் தகுமோ ! என்று தம் மக்களுக்கு, தமது போர்வீரர்களுக்கு அறிவுரை கூறி, போரை நடத்தினான் சிவாஜி என்று பாரதியார் பரணி பாடுகிறார்.
LI IT-6

Page 47
US533 - IV
GHTJ Tafaj6)QITË. If:25C5i 9,0.6)
அகிம்சைப் போராட்டங்களும் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் மலிந்திருந்த அவ்வேளையில் மக்களின் அறப் போரட்டங்களை ஆட்சி செய்வோர் ஆயுதங்களின் துணையினால் அடக்கப் பார்த்தனர். கத்தியின்றி இரத்த மின்றித் தொடங்கிய யுத்தமான சுதந்திரப்போரை துப்பாக்கிக்குண்டினால் இரத்தஞ் சிந்தச் செய்து சிவப்பாக்க முயன்றனர், அடக்குமுறையாளர்கள். எந்த வகையிலும் சுதந்திரப் போரை அடக்குவதே ஆட்சியாளர் களின் பெரும் நோக்கமாக இருந்தது. அதனால், சுதந்திரப் போராளிகளுக்கு சிறையும் தூக்குமேடையும், அடி, உதை சித்திரவதைகளும் கொலையும் கூட ஆட்சி யாளரின் ஆயுதங்களாக இருந்தன.
இதனால் ஆயுதத்தை ஆயுதத்தால் எதிர்த்து வெற்றி கொள்ளவும் ஒரு பகுதிப் போராளிகள் தயாராகினர். சுதந்திரப்போராளிகளை எப்படியாவது கைது செய்து, சிறையில் பூட்டிவிட ஆட்சியாளர்களின் அடிவருடிச் சிப்பாய்கள் ஆர்வத்தோடு தேடினர். போராளிகளைப் பிடிக்க ஆவலோடு காத்திருந்த சிப்பாய்களின் ஆர்வத்தைப் பற்றித்தனது சுயசரிதையிலே அழகாகக் கூறுகிறான் பாரதி

9 |
தனது சிறுவயதுக் காதலைக்கூறுமிடத்தில் இதுபற்றி வருகிறது. தனது காதலி தண்ணிர் எடுத்துவரச் செல்வா ளாம். அவள் திரும்பி வருவதைப் பார்த்துக்கொண்டு தான் ஆசையோடு ஆவலோடு காத்திருப்பாராம்பாரதியார். காதலியைக் காணவேண்டுமென்ற துடிப்பில் தனது பார்வையைக் கூர்மையாக்கி மிகவும் அக்கறை யோடு, ஆவலோடு பார்த்திருப்பாராம். இதோ வருகி றாள் இதோ வருகிறாள் என்றுதான் ஆவலோடு காத்தி ருந்த அந்த ஆவலினை, தனது மனத் தன்மையினை ஒரு உதாரணம் மூலம் விளக்க விரும்புகிறான் பாரதி.
அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு புதுமையான, யதார்த்தமான உவமானம் கிடைக்கிறது. சுதந்திரப் பயிரை வேரோடு களைந்தெறிய முயன்று கொண்டிருந்த மன்னர் களின் சிப்பாய்கள் தேசபக்தர்களின் வரவை ஆவலோடு காத்திருந்தார்களாம் பிடிப்பதற்கு, அது போன்றிருந்ததாம் தான் காதலிக்காகக் காத்திருந்த தன்மை .
போராளிகளின் நடமாட்டம்பற்றி சிப்பாய்களுக்குத் தகவல் கிடைத்தால் எந்த நேரத்தில் வந்து எந்த நிலையில் 6த்தனை ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பது எமக்குத் தெரிந்ததுதானே.
நீரெடுத்து வருவதற் கவள் மணி
நித்தி லப்புன் ன கைசுடர் வீசிடப் போரெடுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தோறும் வேரெடுத்துச் சுதந்திர நர் பயிற்
வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர் தம் சீரெடுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல் போல்.

Page 48
92
பாரதிக்குக் கிடைத்த உவமானம் தனது காதலிமேல் ஏற்பட்ட ஆவலையும் அதற்காகக் காத்திருந்த நிலையை யும் போதிய அளவு விளக்குவதற்கு அந்த நேரத்தில் பெரும் உதவியாக இருந்திருக்கிறது தெரிந்ததை நாளும் பொழுதும் கண்டு விளங்கிக்கொண்டதைக் கொண்டு தானே விளங்காத ஒன்றுக்கு உவமானம் சொல்லுவார் கள். பாரதியின் இந்த உவமானம் விடுதலைப்போரை முறியடிக்க ஆட்சியாளர் எவ்வளவு ஆவல் கொண்டிருந் தார்கள் என்பதை இன்று நன்றாக விளக்குகிறது.
மோதி மிதித்து விடு பாப்பா :
பாரதியின் துணிச்சல், கொடுமைகளைக் கண்டு அதற்குப் பயந்து பணிந்து செல்லாத பண்பு போன்ற வற்றை பாரதியின் பலபாடல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு அறிவுரையாகப் பாடிய பாப்பா பாட்டுக் களிலும் பாரதியின் உண்மைத் தன்மை பல இடங்களிலும் காட்டப்பட்டுள்ளது.
பாதகஞ்செய் பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.
பாதகஞ் செய்பவரைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம், அவரை மோதி மிதித்து முன்னேற வேண்டும், என்று ஒரு ஆக்ரோஷமான அறிவுரையைக் கூறுகிறான் பாரதி தனது இன்னொரு பாடலிலே *வைரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமை யடி பாப்பா' என்று பாடுகிறான்.
புதிய ஆத்திசூடி ஒன்றை வகுத்து அதிலே பல புதுமைக் கருத்துக்களைப் புகுத்தியிருக்கிறான். குழந்தை
 

93
களின் மனத்திலே வீர உணர்வையும், தன்னம்பிக்கையை /ம் தன்மான உணர்வையும் ஊட்டுகிறான் இந்த ஆத்தி திருடி மூலமாக,
அச்சம் தவிர். ஏறு போல் நட கீழோர்க்கு அஞ்சேல். கேட்டிலுந் துணிந்து நில், கொடுமையை எதிர்த்து நில். சாவதற்கு அஞ்சேல். சீறுவோர்ச் சீறு சூரரைப் போற்று. தீயோர்க்கு அஞ்சேல். போர்த் தொழில் பழகு. முனையிலே முகத்துநில். வையத் தலைமை கொள்.
சுதந்திரப் போராட்டத்தின்போது சுயநலவாதிகளாக இருந்த சிலரை தனது கவிதைகள் மூலம் இடித்துரைத்துத் திருத்த முயல்கிறான் பாரதி. தங்களது சொந்தச் சுகங்களுக்காக, தங்கள் இனத்தையே விற்பவர்கள் அன்றும் இருந்தனர். பணத்துக்கும், பதவிக்கும், பவிசான வாழ்வுக்கும் ஆசை கொண்ட பாவிகளை, அவர்கள் பாட்டிலே செல்லவிடாது தனது பாட்டிலே திருத்திவிட முயல்கிறான் பாரதி.
இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனி மண்ணில் துஞ்சோம்.
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்.
அடியும், உதையும் ஆக்கினைகளும் தாங்க முடியா மல் சிலர் தம்மினத்தைக் காட்டிக் கொடுக்கும்

Page 49
94.
சுயநலவாதிகளாக மாறுவதும் உண்டு. இன்னல் வந்தா லும் அஞ்சோம். 'தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்.' என்று அறிவுரையாக, அறவுரையாக உரைக் கிறான் பாரதி.
அன்றைய அந்தச் சுதந்திரப்போரின் தலைவராக விளங்கிய மகாத்மா காந்தியை வாழ்த்தி பாடியிருக்கிறான் பாரதி ஆரம்பத்தில் திலகரின் சீடனாக, திலகரின் தீவிரவாதப் போக்கைப் பெரிதும் ஆதரித்த பாரதி, பிற்காலத்தில் மகாத்மா காந்தியின் தலைமை பற்றிச் சந்தோசம் கொண்டு பாராட்டி மக்களுக்கு நம்பிக்கையும் ஊட்டினான். மகாத்மா காந்தியின் கூற்றாக இப்படிக் கூறுகிறான் பாரதி. -
‘விடுதலை பெறு வீர் விரை வாநீர்
வெற்றி கொள்வீர்' என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய்கிறான்.
சுடுதலுங்குளி ரும் உயிர்க்கில்லை
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை
எடுமி னோ அறப் போரின் என்றான் எங்கோ மேதகம் ஏந்திய காந்தி,
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை :
'உண்டகளை தொண்டருக்கும் உண்டு' என்பது பழமொழி, களைப்பு என்பது தொண்டர்களுக்கு ஏற்படுவதேயில்லை என்பதே இதன் ஆழந்த பொருள். 'தொண்டருக்கும்' என்பதில் வரும் 'ம்' இதனையே குறித்து விளங்குகிறது. தொண்டர் என்று கூறப்படுபவர் கள் ஆத்மீகத்தில் கூறப்படும் இறைவனின் அடியவர்கள் மட்டுமல்ல, ஏனைய தொண்டு செய்பவர்களும் தொண் டர்களே.

95
தொண்டர்கள் எனப்படுபவர் கருமமே கண்ணா யிருக்கும் கர்ம வீரர்கள், பசியையும் பாரார். நித்திரை யையும் மதியார், களைப்பு ஏற்படுவது உடலுக்கே அன்றி உயிருக்கல்ல. கருமமே கண்ணாக இருப்பவர்கள் தம் உடல் வருத்தத்தைக் கருதவே மாட்டார். "நேயம் மிகுந் தவர் காய வருத்தம் நினைப்பதுவே இல்லை."
இந்தப் பாடலில் பாரதி ‘சோர்வு வீழ்ச்சிகள் தொண் டருக்கில்லை' என்பதை விளக்குவதற்கு 'சுடுதலும் குளிரும் உயிர்க்கில்லை' அது உடம்புக்கு மட்டுமே உரியது என்று கூறுகிறான். சுதந்திரப் போராளிகளின் உயிர் சுதந்திரந்தான் அதனால் அவர்களது உடலுக்கு ஏற்படும் எதுவும் அவர்களது சுதந்திரப் போராட்டத் தைப் பாதிப்பதில்லை என்று மகாத்மா காந்தி வாயிலாகப் பாடுகிறான் பாரதி
சுதந்திரத்தின் பெருமையைப் பற்றிப் பாரதி பாடும் போது, அந்தப் போராட்டத்தில் கிடைக்கும் பல கோடி துன்பங்களையும் விட சுதந்திரத்தினால் கிடைக்கும் இன்பமே தலையாய இன்பம் என்று பாடுகிறான். ‘தூக்கு மேடை பஞ்சு மெத்தை' 'துப்பாக்கிக் குண்டு எங்கள் விளையாட்டுப் பந்து' 'சிறைச்சாலை எங்கள் பூஞ் சோலை' என்றெல்லாம் பலரும் சுதந்திரப் போரினால் கிடைக்கும் துன்பங்களை இன்பங்களாகக் கூறியதைப் பாரதியும் பாடுகிறான்.
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும் பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும் கதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.

Page 50
96
" சிறையிலே இடர்பட்டாலும், செல்வமும் சுகமுங் அழிந்து விட்டாலும், வேறு பல வகையான கோடி துன் பங்கள் ஒன்று சேர்ந்து வந்து அழித்தாலும் சுதந்திரப் போரில் ஈடுபடுவதை நான் மறக்கவே மாட்டேன்' என்று பாடுகிறான் பாரதி. சுதந்திர தேவியைத் தொழுவதே தன் தலையாய கடமை என்று பாடுகிறான் பாரதி.
ஆபரணங்கள் அணிந்த பிணங்கள் :
சுதந்திரம் இல்லாதவர்கள் ஒப்புவரை இல்லாத பெருஞ் செல்வந்தராக இருந்தாலும் பல அரிய கல்வி கேள்விகளால் சிறந்து. உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெறும் பாழாகும். அவர்களது பெருமைகள் எல்லாம் பிணத்தின் மேல் அணியப்பட்ட தங்க நகைகள் போன்றவைகளே. நின்னருள் பெற்றிலா தார்
நிகரிலாச் செல்வ ரேனும் பன்னருங் கல்வி கேள்வி
படைத்து உயர்ந் திட்டாரேனும் பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தாரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம்
அணிகள் வேய் பிணத்தோ டொப்பர்.
மனிதர்களுக்கு இயற்கையாகத் தோன்றும் சுதந்திர ச் சுகம் இல்லாதவர்கள், உயிரற்ற நடைப்பினங்கள் ஆவர். அந்த நடைப்பிணங்களுக்கு எத்தனை விதமான எவ்வளவு அழகான ஆபரணங்களை அணிந்து வைத்தாலும், அலங் கரித்தாலும் அவர்களுக்கு அது அழகு செய்வதில்லை" பிணங்களால் தமது உடலிலுள்ள அழகான ஆபரணங் களைப் பார்த்து மகிழவும் முடியாது. மற்றவர்களால் பிணத்தின் மேலுள்ள ஆபரணத்தினை, அலங்காரத்தினை
q சிக்கவும் முடியாது.

97
சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இல்லாத மனிதர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அத்தனை சிறப்புக் களும் பிணங்களுக்குச் செய்த அலங்காரம் உயிருக்கே உத்தரவாதமில்லாத அடிமை நாட்டில் கல்வி கேள்விகளி னாலோ வேறு பெருமைகளினாலோ எந்தப் பயனுமே இல்லை. மனிதனுக்கு முதலில் வேண்டியது உயிர். அதன் பின்புதான் பெருமைகள் செல்வங்கள் எல்லாம். ஒரு நாட் டுக்கு மிக முக்கியமானது, உயிர் போன்றது - சுதந்திரமே அது இல்லாத வேறெந்தச் சிறப்புக்களும் பயன் பாடற் றவை. 'அணிகள் வேய் பிணத்தோ டொப்பர்' என்ற ஒரு வரியிலே சுதந்திரத்தின் அத்தனை பெருமைகளையும் கொண்டு வந்து குவித்து விட்டான் பாரதி.
தேவி நின்னொளி பெறாத
தேயமோர் தேய மாமே ஆவியங் குண்டோ செம்மை
அறிவுண்டோ ஆக்கமுண்டோ காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ பாவிய ரன்றோ நின் தன்
பாலனம் படைத்தி லாதார்.
சுதந்திரம் இல்லாத நாட்டிற்கு உயிர் இல்லை. அதனால் அந்த நாட்டிற்கு செம்மையான அறிவில்லை. ஆக்கமில்லை. காவிய நூல்கள் ஞானக் கலைகள், வேதங் கள் எதுவுமே அங்கு நிலைத்திருக்கவும் முடியாது. தோன் றவும் முடியாது. சிறப்புறவும் முடியாது. சுதந்திரம் இல்லாத நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் பாபப் பட்ட ஜென்மங்கள் என்று பரிதாபப் படுகிறான் பாரதி,
பையல்கள் நெஞ்சில் பயமே இல்லை :
இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால தீவிர வாதத் தலைவர்களுள் ஒருவர் லோக மான்ய பால

Page 51
98
கங்காதர திலகர், உலகத்தவர்களால் வணங்குதற்குத் தகுந்தவர் என்பது லோக மான்யர் என்பதன் பொருள்.
தீவிரப் போக்குக் கொண்ட சுதந்திர - விடுதலைத் தலைவ
ரான திலகரே பாரதியின் அரசியல் வழிகாட்டியும்
தலைவருமாவர். திலகர் மூட்டிய சுதந்திரத் தீயை
இளைஞர்கள் நெஞ்சிலே ஏற்று தேசமெங்கும் கொளுத்
தினர். அதனால் ஆட்சியாளர்களுக்கு பெருந் தொல்லை
யாயிற்று.
திலகர் ஆட்சியாளருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவரின் வழியிலே இளைஞர்களின் பெரும் அணி திரண்டது. மிதவாதப் போக்கை விட்டொழித்துத் தீவிரவாதிகளாக பலர் திரிந்தனர். தமிழ்நாட்டிலே மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகரின் தலைமையை ஏற்றுக்கொண்ட முக்கியமான சிலர் ஆவர். திலகரின் செய்கையை ஆட்சியாளர் கூறுவது போல பாரதி பாடுகிறான்.
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமல் போச்சு பல திசையும் துஷ்டர் கூட்டங்களாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு.
பையல் என்பது ஆண் பிள்ளைகளின் ஒரு பருவம் பையன் என்பதுதான் பயல் என்றும், பையல் என்றும் கூறுவதுமாகும். திலகரினாலே இளைஞர்கள் துணிவு பெற்று விட்டார்கள். பல திசைகளிலும் சுதந்திர வேள் வியைக் கொழுந்து விட்டெரியச் செய்கிறார்கள். எந்த வகையான அடக்குமுறைகளுக்கும் பையன்கள் பயப்படுவ தாக இல்லை; என்று அடக்குமுறையாளர்கள் பையன் களைப் பற்றிக் கூறுவதாகப் பாடுகிறான் பாரதி.
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யுந் தொழில் முறை யாவையும் விட்டார்

99
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லி விட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் மக்கள் பெருந் தொகை யாக ஈடுபட்டதனால் மக்களுங் கெட்டு விட்டார்கள். செய்யும் தொழிலையும் விட்டு விட்டார்கள் என்கிறார் கள் அடக்குமுறையாளர்கள் ஒத்துழையாமை இயக்கம் அன்று அடக்குமுறையாளரின் ஆட்சியை ஆட்டம்காண வைத்தது. இதனையே 'செய்யுந் தொழில்முறை யாவை யும் விட்டார்' என்று கூறுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
இதுமட்டுமின்றி இன்னொன்றையும் கூறுகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆளப்படுவோரின் அதாவது சுதந்திரப் போராளிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதாவது பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினாலும் அந்தப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளாமல் அப்பேச்சு வார்த்தைக்கு 'டாட்டா' காட்டிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதையே ‘பேசுவோர் வார்த்தை தா தா சொல்லி விட்டார்’ என்ற வரிகளால் விளக்கினார்.
கேட்டுப் பெறுவதல்ல சுதந்திரம் திரெளபதிக்கு துச்சாதன னா விடுதலை கொடுப்பது அவளது விடுதலை அவளது கணவன்மார்களின் வீரத்தால் கிடைக்க வேண்டும். அல்லது அவள் வழிபடுந் தெய்வத் தால் கிடைக்கவேண்டும் அப்படிக் கிடைத்தால்தான் அது விடுதலை. அதனால் கிடைப்பது தான் சுதந்திரம். சுதந்திரத்தையே உயிராக நினைத்துப் போராட்டம் நடத்தும் போராளிகள் சுதந்திரத்துக்குக் குறைந்த
எந்தச் சலுகைகளுக்கான பேச்சுவார்த்தைகளுக்கும் சப்மதிக்காமல், அப்பேச்சு வார்த்தையையும், அதனை ஒழுங்கு செய்பவர்களையும், மதிக்காமல் இருந்த
நிலையையே இப்பாடல் மூலம் விளக்கினார் பாரதி.

Page 52
100 எங்கும் சுயராஜ்ய விருப்பம்
வெள்ளைக்கார விஞ்ச் துரை, தேசபக்தர் வ. உ. சிதம்பரப் பிள்ளைக்குக் கூறும் கூற்றாக அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆட்சியாளர் கொடுத்த தண்டனைகளையும் பயமுறுத்தல்களையும் கூறுகிறார், பாரதியார். நாட்டில் சுதந்திர வாஞ்சையை ஊட்டியதற்காகச் சிறைக்குள்ளே பூட்டித் :5ԼD3}} வலிமையை வேறு வழிகளிலும் சிறைக்குள் வைத்துக் காட்டப்போவதாகப் பயங்காட்டுகிறார் விஞ்ச் துரை.
நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் - கனல் - மூட்டினாய்
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் - வலி - காட்டுவேன்.
கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள்
கூறினாய் - சட்டம் - மீறினாய்
ஏழைப் பட்டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய் - வீரம் - பேசினாய்.
கோழையாக இருந்த மக்களுக்கு சுதந்திரப் போரின் உண்மை நிலைகளையும், விடுதலையின் வீரியத்தையும் விளக்கியதற்காகவும், சட்டத்துக்குக் கட்டுட்படாமல் சட்டத்தை மீறியதற்காகவும் வீரச் சாவின்றி அநியாயக் கோரச் சாவு - இழிவு என்று மக்களுக்குக் கூறியதாகவும் இங்கே கூறுகிறான் விஞ்ச் துரை
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் - விதை - தூவினாய் சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ நீங்கள் - உய்யவோ. எல்லா இடங்களிலும், சுயராஜ்ய விதையைத் தூவி முளைக்கச் செய்த சிதம்பரப் பிள்ளையை எப்படி
 

10
எல்லாம் தண்டிக்க, வெள்ளைக்காரத் துரைத் தனத் தார்" முயன்றனர் என்பதை அடுத்த பாடலிலே விளக்குகிறார் பாரதியார்,
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
செல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்.
அடக்கி ஆளுவோரின் கொடுமைகளுக்குக் குரல் கொடுத்தால் அதற்குத் தண்டனை, சிறை வாசம், சுதந்திரப் போரில் ஈடுபட்டால் சுட்டு வீழ்த்துதல், இதுதான் அடக்கு முறையாளர்களின் அராஜகப் போக்கு, வ உ. சிதம்பரப்பிள்ளை தனது தாய் நாட்டிலே அந்நியரின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய பல வகைகளிலும் முயன்றார். எதிரிகளின் பொருளா தாரத்தை முற்றாக அழித்து அவர்களைப் பணிய வைக்க முயன்றார். வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் வாங்கி அவர்களோடு போட்டி போட்டுக் கப்பல் மூலம் கடல் வணிகஞ் செய்து அந்நியரின் பொருளாதாரத்தில் பெருஞ் சீர் குலைவைச் செய்தார். அவருக்கு ஆட்சியாளர் கொடுத்த பரிசு இரண்டு ஆயுள் தண்டனைகள் அதாவது நாற்பது வருடக் கொடுஞ்சிறை.
வெள்ளைக்கார விஞ்ச் துரையின் கூற்றுக்குப் பதிலாக வ. உ. சிதம்பரப் பிள்ளை கூறுவதாக இப்படிப் பாடு கிறான் பாரதி.
சொந்த நாட்டிற் பார்க்கடிமை செய்தே துஞ்சிடோம் - இனி - அஞ்சிடோம.
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ - தெய்வம் - பார்க்குமோ.

Page 53
102
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை
கொண்டு போகவோ - நாங்கள் - சாகவோ அழுது கொண்டிருப் போமோ ஆண்பிள்ளைகள்
நாங்கள் அல்லமோ - உயிர் - வெல்லமோ .
சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ - ஜீவன் - ஒயுமோ
இதயத் துள்ளே இலங்கு மகாபத்தி
ஏகுமோ - நெஞ்சம் - வேகுமோ,
சதையைத் துண்டு துண்டாக வெட்டிப் போட் டாலும் அடிமைத் தனத்தின் அரிச் சுவடியைக் கூட நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாங்கள் வீணே அழுது கொண்டும், தொழுது கொண்டும் இருக்க மாட்டோம். விழுது விட்டுப் படர்ந்திருக்கும் சுதந்திர விருட்சத்தின் சிறு வேரைக்கூட இனி ஆட்சியாளர்களால் அசைக்க முடியாது. இதயத்துள்ளே இலங்குகின்ற சுயராஜ்ய பக்தி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒயாது, என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார்; கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரப் பிள்ளை என்று பாடுகிறார் பாரதியார்.
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்:
சுதந்திரப் போரின் வெற்றியைக் காண பாரதி உயிரோடிருக்கவில்லை, அவசரமாகச் சுதந்திரத்தைத் தரிசிக்க விரும்பினான் பாரதி. ஆனால் அவனைவிட அவசரமாக அவனது உயிரை எடுக்க காலன் முந்தி விட்டான். சுதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் போதே சுதந்திரம் கிடைத்த உணர்வு பாரதிக்கு
 

103
ஏற்படுகிறது. 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்"
என்று ஆனந்தமாகப் பாடுகிறான் பாரதி.
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்ட வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஒதுவோமே.
சுதந்திரம் கிடைக்கும் முன்னே சுதந்திரம் கிடைத்து விட்டது என்றும் அந்த நல்ல செய்தியைத் தரணிக் கெல் லாம் அறிவிப்போம் என்றும் பாடிய ஒரே கவிஞன் பாரதி யாகத்தான் இருக்கும். சுதந்திரம் - விடுதலை கிடைக்கும் என்பதில் அவ்வளவு நம்பிக்கை பாரதிக்கு. அதனால் தானும் உற்சாகமாகி, போராளிகளுக்கும் உற்சாகமளித் துப் பாடுகிறான் பாரதி.
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் - இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப் பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம். நாமிருக்கும் இந்த நாடு நமது நாடு என்பதை அறிந்த நாங்கள் நமது நாட்டுக்கு நாமே சொந்தக்காரர் கள் என்பதையும் உணர்ந்து கொண்டோம். அந்நியருக் குத் தொண்டு செய்த அடிமை நாட்கள் அகன்று லிட்டது, இனி எவருக்கும் நாம் அடிமையாக மாட்டோம்; என்று பாடுகிறான் பாரதி. சுதந்திரம் பெற்றபின் மக்களுக் குள்ளே எந்த விதமான ஏற்றத் தாழ்வுகளும இல்லாமல் எல்லோரும் சமமென்ற எண்ணம் வளர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறான் தனது பாடல்களில்,
வாரnது போல் வந்த மாமணி
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று அங்கம் புள கிக்கக் கவிபாடும் பாரதி சில நேரங்களில்

Page 54
104.
சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியில் சந்தேகம் கொள் வது போலவும் பாடியிருக்கிறான்; என்றால் அது ஆச்சரிய மானதுதான்.
போராட்டக் காலத்தில் எற்பட்ட சில தற்காலிக தோல்விசளும், தேக்க நிலைகளும் சில அதிகாரப் போட்டி களும் அவனுக்கு விடுதலைப் போரின் வெற்றியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சலுகைகளுக்கும் தற்காலிக இடைக்காலத் தீர்வுகளுக்கும் மயங்கி உயிரினும் இனிய சுதந்திரத்தை மக்கள் கைவிட்டு விடுவார்களோ என்று அஞ்சினான் பாரதி.
தண்ணீர் விட் டோ வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணிரால் காத்தோம் கருகத் திருவுளமோ எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக் கிஃது மடியத்திருவுள மோ ஒராயிரம் வருடம் ஒய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைந் தோற்போமா மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரித்து காதலிளைஞர் கருத்தழிதல் காணாயோ
எந்தாய் நீதந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ வான மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ எந்தை சுயா தீனமெமக் கில்லையென்றால் தீனரெத
செய்வோமோ.
கண்ணிரால் வளர்த்துக் காத்த சுதந்திரப் பயிர் கருகி விடுமோ என்று கலங்கினான் பாரதி. சுதந்திர உயிர்

105
என்னும் நெருப்புக்கு எண்ணம் எனும் நெய்யூற்றி வளர்த்து விட்டு அந்தச் சுதந்திர நெருப்பு அனைந்து விட்டால் என்ன செய்வோம், சுதந்திர உணர்ச்சியும், போராட்டமும் மக்களுக்கு வாராது போல வந்த மாமணி அதனை இழந்து விடுவோமோ என்று கலங்குகிறான் பாரதி.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தமது மனைவி, மக்கள், சகோதரர்கள் தாய் தந்தை என்று அனைவரையும் துறந்து தம்மை முற்றுமுழுதாகச் சுதந்தி ரப் போரிலே ஈடுபடுத்தியிருந்தனர் . ஆடசியாளரின் கெடு பிடி களால் தமது உறவினரைச் சந்திக்கக் கூட வழியில்லா மல் ஒழித்துத் திரிந்தனர். அவர்களின் துயர் நீங்க வேண்டு மாயின் சுதந்திரமே அதற்கு ஒரே வழி. தமது வீடு லாசல், சொத்துச் சுகம் எல்லாம் இழந்த மக்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரே ஆறுதல் சுதந்திரமே. மழை இல்லா விட்டால் மக்களுக்கு வாழ்வே இல்லை. சுதந்திரப் போராட்டம் பாலைவனங்களிலே சுற்றித் திரிந்து களைத்த போராளிப் பறவைகளுக்கு சுயராஜ்யமே தான் சோலைவனம், அங்கே மட்டும் தான் களைப்பாற முடியும் அடிமை ரணங்களை யும் ஆற்ற சுயராஜ்ய மருந்து தான் ஒரே மருந்து, அரு மருந்து என்று பாடுகிறான் பாரதி.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் :
இதே போன்று சில சந்தர்ப்பங்களில் பாரதிக்கு சுதந் திரப் போரின் வெற்றியிலே சந்தேகமும் எழுந்தது பஞ்ச மும், நோயும், போராளிகளுக்கு ஏற்பட்டது, சிறையும், இறப்புகளும் அதிகமாகின. இவைகளால் போராட்டம் தடைப்படடு விடுமோ என்று அஞ்சுகிறான் பாரதி.
Lu T-7

Page 55
106
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்
என் றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்.
உண்மையான சுதந்திரப் போராளிகளுக்கு பஞ்சமும், நோயுமா ஏற்படுவது. இந்தப் பூமியிலே மேன்மைகள் அனைத்தையும் பெற அருகதையுடையவர்கள் அவர்கள் மட்டுமே. சுதந்திரப் போர் மக்களால் கைவிடப் பட்டு விடுமோ என்ற ஐயமே இப்பாடலில் தருகிறது.
விர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ :
இளமையும், அழகும் இறவாநிலையும் எய்துவர் அமுதம் உண்டவர்கள்; என்கிறது இந்து சமயம். அமுதம் அருந்தியவர்கள் அமரர்கள் ஆனார்கள். அழகும் இளமை யும் இறவாநிலையையும் அடைவதற்காக அமுதம் அருந்த ஆசை கொண்டு தவஞ் செய்பவர்கள் அதை விட்டுவிட்டுக் கள்ளிலே மனத்தைச் செலுத்த மாட்டார்கள்.
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ - என்றும்
ஆரமு துண்ணுவதற்கு ஆசைகொண்டார் - கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ.
அமுதத்தில் ஆசை கொண்டவர்களுக்கு அதைவிடச் சற்றுக் குறைந்த, ஏதாவது கிடைத்தாலாவது சிலவேளை அவர்கள் அமுதத்தை மறந்து துறந்து விடலாம். தேனோ பாலோ, கிடைத்தால் கூட காரியமில்லை என்று வைத்துக் கொள்வோம். கள்ளைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார் களோ! கள்ளை ஏற்றுக் கொள்பவர்கள், மதிமயங்கிய, புத்தி பேதலித்த, புத்தி சுயாதீனமற்ற நிலையிலுள்ளவர்

107
களாகத்தான் இருக்க வேண்டும். அறிவோடு இருப்பவர் கள் அமுதத்தைக் கேட்டுப் போராடி, அது கிடைக்காத பட்சத்தில் கள்ளை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இதனையே பாரதி 'கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ" என்ற வரியால் விளக்குகிறான்.
அமுதத்தில் ஆசை கொண்டு பாற்கடலைக் கடைந் தார்கள் தேவர்களும் அசுரர்களும், அமுதத்தில் ஆசை கொண்டு பின் மோகினியில் தமது உணர்வைச் செலுத்திப் பின்னால் சென்ற அசுரர்கள், அமுதமும் இல்லாமல் மோகினியும் கிடைக்காமல் அழிந்தார்கள். அறிவுள்ள வர்கள் அமுதத்துக்கான போராட்டத்தில், மாற்றீடாகக் கள்ளை விரும்பவே மாட்டாகள்,
வீர சுதந்திரம் வேண்டிப் போராடும் போராளிகளை அமுதம் குடிக்க ஆசை கொண்டவர்களாகவும். சுதந்திரத் திற்குக் குறைந்த வேறு ஒன்றை ஏற்றுக் கொள்பவர்களை, ஏற்றுக் கொள்ள நினைப்பவர்களை கள்ளில் அறிவைச் செலுத்தும் புத்தியற்றோராகவும் பாரதி பாடிய பாங்கு பாராட்டற்குறியது.
வீர சுதந்திரத்திற்கு நிகரே இல்லை. அதற்கு மாற்று என்பதும் இல்லை. சுதந்திரத்திற்குக் குறைந்த தென்பது மீண்டும் அடிமைத் தனத்தை ஏற்படுத்தும் வழியே அன்றி வேறில்லை; என்பது பாரதியின் அபிப்ராயம்.
கண்ணிரண்டும் விற்றபின் சித்திரம் வாங்குவதா :
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரே ல் - மானம் துறந்து அறம் மறந்தும் பின் உயிர்கொண்டு
வாழ்வது சு கமென்று மதிப்பாரோ.

Page 56
108
மானத் துறந்து, அறந்துறந்து, மறந்துறந்தும் பின்பு உயிர் பெரிதென எண்ணி வாழ விரும்புபவர்கள் தான் வீர சுதந்திரம் வேண்டி நின்று பின்பு வேறொன்று கொள்வார் கள். மற்றவர்கள் அந்த நிலைக்கு அருகில்கூட வரவே மாட்டார்கள். பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பதை அறிந்தவர்கள் மானமே பெரிதென்றும் மற் றெல்லாம் சிறிதென்றும் மதிப்பார்கள். சுதந்திரமே அவர் களின் உயிராக இருக்கும். உயிர் போன பின் உயிருக்கு மாற்றாக ஒன்று இருக்க முடியவே முடியாது, என்று சுதந்திரப் பெருமையைப் பாடுகிறான் பாரதி.
விண்ணி லிர விதனை விற்றுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ! கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின்
கைகட்டிப் பிழைப்பாரோ. சூரியனுக்கு மின்மினிப் பூச்சியா மாற்றுப்பொருள். சூரியனை விற்று விட்டு எவராவது ஒருவர் வெறும் மின் மினிப் பூச்சியை வாங்க விரும்புவார்களோ, சூரியன் இல்லை என்றால் சந்திரன், நட்சத்திரங்கள் அப்படி என்றாலும் ஒரளவு சிந்திக்கலாம். ஆனால் மின்மினிப் பூச்சியையா சூரியனை விற்று வாங்குவது. சூரியனை விற்று மின்மினியை விரும்பும் வீணர்கள் கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் மீண்டும் கைகட்டி, வாய் பொத்தி அடிமைப் பிழைப்பு பிழைக்க விரும்பும் அற்பர்களே அன்றி வேறில்லை; என்று ஆக்ரோசமாகப் பாடுகிறான் பாரதி.
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ,
கண்களை விற்றுச் சித்திரத்தை வாங்கி என்ன பயன். அப்படிச் செய்யும் அறிவிலிகளைப் பார்த்து, உலகெல்லாம்
 

J 09
கை கொட்டிச் சிரிக்கும், நகைக்கும், ஏளனஞ் செய்யும், என்கிறான் பாரதி. கண்கள் இரண்டையும் விற்று விட்டு சித்திரத்தை வாங்கி எப்படி அதன் அழகை ரசிப்பது, அதனால் அது வீண் வேலை, விவேகமற்ற வேலை என்கிறான் பாரதி.
உலகமெல்லாம் உரத்த குரலிலே ஏளனமாகச் சிரிக்கும் என்பதையே 'கை கொட்டிச் சிரியாரோ' என்ற வரியால் கூறுகிறான் பாரதி. கண்களை விற்று விட்டதனால் சாதா ரணமாக, சத்தம் வராமல் சிரிக்கும் சிரிப்பை கண்ணை விற்றவனால் காண முடியாது தானே. கை கொட்டிச் சிரித்தால் தானே கண்ணில்லாதவனால் சத்தத்தை கேட்டு தன்னை ஏளனஞ் செய்து சிரிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதனை மனதில் வைத்தே பாரதி 'கை கொட்டிச் சிரியாரோ" என்று பாடுகிறான்.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் :
சுதந்திரப் போராட்டத்தின் போது ஏற்படும் அத்தனை துன்பங்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் அஞ்சாது, அடிபணியாது எதிர்த்து நின்று துணிந்து போராடுபவர்களாலேயே மட்டும் தான் சுதந்திரத்தை வென்றடைய முடியும். பாரதியார் தனது ஞானப்பாடல் களுல் ஒன்றாகப்பாடிய பாடல் ஆத்மிகத்துக்கு மட்டு மன்றி, அன்றாட வாழ்க்கைக்கும் ஏற்றதாக இருக்கிறது. அந்தப் பாடல் வரிகளை மனதில் பதித்துக் கொள்வது பயத்தைப் போக்கும் சஞ்சீவி மருந்தாகும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. இச்சைகொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட
போதிலும்

Page 57
1 1, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
அக்கறையோடு, ஆவலோடு வியர்வை சிந்தி உழைத்த பொருளெல்லாம் அழிந்து போனாலும் அதற்காகக் கண்ணிர் சிந்தப் போவதில்லை. வியர்வைக்குக் கண்ணி ரல்ல மாற்றிடு அச்சம் இல்லாத சுதந்திரப் போரினால் இழந்ததை மீண்டும் மீட்டெடுப்போம், என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட வேண்டும்.
உச்சியிலே வான் இடிந்து விழப் போவதே இல்லை. ஆனால் வானிலிருந்து வேறுபல பொருட்கள் உச்சியிலே விழுந்து கொண்டுதான் இருக்கிறது. அச்சம் கொண்டவன அன்றாடம் சாகிறான். அச்சம் அற்றவன் ஒரி தடவை மட்டுமே சாகிறான்,
பாரதியின் சுதந்திரப் பாடல்கள் காலத்தால் அழியா தவை. அவனது பாடல்கள் மையினால் எழுதப்பட்டவை யல்ல. இரத்தத்தினால் எழுதப்பட்டவை. உலகில் மனித இனம் அழியும் வரை அடக்குமுறைகளும் அழியவே அழி யாது. அடக்கு முறைகள் அழியாது இருக்கும் வரை சுதந்திரப் போராட்டங்களும் அழியவே அழியாது.
பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாரதி பாடிய பாடல்கள், இந்தப் பார் எல்லாம் விடுதலை கோரிப் போராடும் மக்களின் பரணிப் பாடல்களாகும். எந்தெந்த நாடு என்றில்லாமல் எல்லா நாடுகளுக்கும் பாரதி பாடலின் மொழிப் பெயர்ப்புத் தேவை. பாரதி தமிழ னுக்கு மட்டும் சொந்தக்காரனல்ல, அடிமைப் பட்ட அத்தனை இனமக்களுக்கும் இரத்த உரித்துக்காரன் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டது போல், பாரதியையும் இந்தப் பாருக்கு அளித்து அழியாப் புகழ் அடைவோம்.
 


Page 58


Page 59