கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவெம்பாவை (உரையுடன்)

Page 1
- 9) சிவமt
*மேன்மைகொள் சைவ நீதி வி
வெளி
5. இராமஸ்வாமி ! 12 - 12
 

விளங்குக உலகமெல்லாம்”
ரை
ங்கன்
Î()
அறக்கட்டளை நிதியம்
- 2002

Page 2

2_ gflóIIldu lö
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
மணிவாசகப் பெருமாண் அருளிய
திருவெம்பாவை
(உரையுடன்)
உரை அகளங்கண்
வெளியீடு சீ. ஏ. இராமஸ்வாமி அறக்கட்டளை நிதியம்
12 - 12 - 2002

Page 3
நூல் - திருவெம்பாவை (உரையுடன்)
உரை - அகளங்கன்
முதற் பதிப்பு - 12 - 12 - 2002
வெளியீடு :s சீ. ஏ. இராமஸ்வாமி அறக்கட்டளை
அச்சுப்பதிவு - சுதன் அச்சகம் - வவுனியா.
“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்த”
(சிவபுராணம்)
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
(குறள் - 05)
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் , அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
الم. -ܢܠ

“மார்கழிநீர் ஆடுவோம் வாரீர்”
கடவுள் இரண்டு நிலைகளிலே இருக்கிறார். ஒன்று சொரூப நிலை, மற்றையது தடந்த நிலை, மாணிக்கவாசகர் திருப்பள்ளி எழுச்சியில் "பள்ளி எழுந்தருளாயே’ என்கிறார். இது ஏன்? இறைவன் சொரூப நிலையில் இருந்து தடத்த நிலைக்கு வருவதையே குறிக்கிறது. இறைவனை துயில் எழுப்புவதா? இல்லை சொரூப நிலையில் இருந்து தடத்த நிலைக்கு இறைவனை வரப்பண்ணல் என்பதே. இறைவன் பலபடி இறங்கி அருள் பாலிப்புதாகும்.
திருவாசகத்தில் ஒரு சிறந்த பகுதிதான் திருவெம்பாவை. மாணிக்கவாசகரிடம் இறைவன் திருவாசகத்தை கேட்டு எழுதிவிட்டு பின் "அன்பரே பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடும்’ எண்கறார். பாவை என்ன திருவெம்பாவை தானே. அதனை சிறப்பித்து சொல்லி உள்ளார். மார்கழி மாதத்தில் இதை பொருள் உணர்ந்து பாடுபவர் தம் பிறவிப்பிணி அகலும் எண்பர் பெரியோர்.
இத்திருவெம்பாவைப் பாடலை சும்மா பாடாமல் பொருள் உணர்ந்து பண்ணோடு ஓத வேண்டும். அதன்பெருமையை உணர்ந்த இந்துமாமன்ற தலைவர் சீ. ஏ. இராமஸ்வாமி அவர்கள். தன் அறக்கட்டளை பணியின்நிமித்தம் இதன் பொருளை தமிழ்மணி அகளங்கள் வாயிலாக உணரச் செய்து உங்களின் கைகளில் தவளவிட்டுள்ளார். ஆகவே இவற்றை திருவெம்பா நாட்களில் ஒத ஆத்மாவின் துயிலை நீக்கி இறைவன் வலையில் வீழ்ந்து மார்கழி நீர் ஆடுவோம் வாரீர்.
பிரம்மருநீ இ. பாலச்சந்திரக் குருக்கள்
- ()3 -

Page 4
C தமிழருவியின் வாழ்த்தரை D
சிவநெறிப் புரவலர் உயர்திரு. சீ. ஏ. இராமஸ் வாமி அவர்களின் அறக்கட்டளை முதலாவது வெளியீடாக, “திருவெம்பாவை மூலமும் உரையும்” வெளிவருவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
மணிவாசகத்தை ஒதுவோர், பொருளுணர்ந்து ஓதவேண்டும், இல்லையேல் அதனை எத்தனை முறை ஓதினும் பலன் இல்லை, “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்வார் செல்வர்” என்றார் பெருமான். “சொல்வார் செல்வர்” என்றளவில் நிறுத்திப் பொருள் காணினும் மணிவாசகத்தை பொருளுணர்ந்த சொல்லுவார். எல்லாச் செல்வங்களையும் பெறுவர் எனலாம்.
திருவெம்பாவை காலத்தில் இதை ஒதுவார் செல்வராகும், ஆன்மீகச் செல்வராக்கும் முயற்சியே இவ் உரைநாலின் வெளிவருகையாகும்.
“வெந்தழலும் நீறாகும் வெள்ளெலும்பும் பெண்ணாகும்
வந்தமத வேழமும் வணங்கிடுமே - சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்’
எண்பது அருளாளர் வாக்கு, உள்ளுருகிப் பாடுதல் பொருள் உணர்ந்தால் மட்டுமே கைவரும். அப்போது தான் அற்புதங்களும் நடக்கும்.
எனவே அவ்வகை கருதி, சைவத் தமிழ் தொண்டினை தன் வாழ்க்கை நோக்காக கொண்டொழும் பெரியார், அதனால் வவுனியா காணாத மணிவிழா கணி ட பெருந்தகை சிவநெறிப் புரவலர் அவர்களினி திருவெம் பாவை பொருளுணர்ந்து ஒதப்படல் வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவர் தம் அறக்கட்டளை வெளியீடாக இந்நால் வெளிவருவது காலத்தின் பொருத்தமுடைத்த.
பல உரைநால்களை வளம் செய்து அனுபவம் பெற்ற தமிழ்மணி அகளங்கண் அவர்கள் எழுதும் அரிய உரையுடன் இம்முயற்சி மேலும் சிறக்கிறது. எனவே இந்நூல் பெற்று பொருளுணர்ந்து பாடிப் பரவசிப்போர் பாக்கியவான்கள்.
தமிழருவி த. சிவகுமாரனி B, A (Hons)
- 04 -

@_ சிவமயம்
வெளியீட்டுரை
ஆண்டாண்டு காலமாக ஆலயங்களில் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் திருவெம்பாவைப் பாடல்களைப் பக்தர்கள் பாடி வருகிறார்கள். சுவை மிகுந்த, பொருள் நிறைந்த இந்தப் பாடல்களை, பொருள் அறிந்து பாடுவது அவசியம் என்பதனால் திருவெம்பாவைப் பாடல்களுக்கு உரையுடன் கூடிய ஓர் பதிப்பை வெளியிட்டு சிவனடியார்களுக்குத் துணைபுரிய வேண்டும் என்று கருதி, வவுனியாவின் சிறந்த தமிழ் அறிஞரான தமிழ்மணி அகளங்கன் அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு இந்நூல் வெளிவருகின்றது. மாணிக்கவாசகர் “பொருளறிந்து சொல்லுவார். செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்' என்றவாறு - அவரது கருத்தையே கொண்டு, இந்நூல் வெளிவருகிறது. இறைவன் துணை நிற்க பக்தர்களுக்குப் பயன்தர. சிவனுக்குக் காணிக்கை யாக்குகிறோம்.
சீ. ஏ. இராமுஸ்வாமி

Page 5
முன்னுரை
திருவெம்பாவை என்பது கண்ணிப்பெண்கள் அதிகாலையில் ஒருவரை ஒருவர் தயிலெழுப்பி மார்கழி நீராடும் வரலாற்றினைக் கொண்டது.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் இருந்த காலத்தில் அங்குள்ள கன்னிப்பெண்களின் “பாவை நோன்பையும்”, ஒவ்வொரு வீடாகப் பெண்கள் சென்று மற்றவர்களை அழைப்பதையும், அதிகாலை நீராடலையும் கண்டு, அவர்களின் உரையாடலாகவும், வேண்டுதலாகவும், வழிபாடாகவும் இப்பாடல்களைப் பாடினார் என்று திருவாதவுரடிகள் புராணம் சொல்கிறது.
மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தண்ணில் ஆதிரைமுண் ஈரைந்தே ஆகிய தினங்கள் தம்மில் மேதகு மனைகள்தோறும் அழைத்து இருள்விடிவதான போதுஇவர் தம்மிற்கபடி புனற்தடம் ஆடல் செய்வார்.
(திரு.திருவம்பலச்சரு - 40)
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளை இறுதி நாளாகக் கொண்டு, அதற்கு முன்னான பத்த நாட்களும் பெண்கள் ஒருவரை ஒருவர் தயிலெழுப்பி நீராடச் சென்ற காட்சியையே மாணிக்கவாசக சுவாமிகள் பாடினார் என்பதை மேற்குறித்த பாடலும்,
அண்ணவர் இயல்புகண்டார். ஆங்கவர் புகன்றதாக மண்ணிய திருவெம்பாவை வாசகம் பேசி. . . . . .
எனவரும் அடுத்த பாடல் அடிகளும் தெளிவுபடுத்துகின்றன. இப்பாடல்கள் திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டன என்பது கடவுள் மாமுனிவர் பாடிய திருவாதவூரடிகள் புராணத்தாலும் திருவெம்பாவைப் பாடல்களில் வரும் பின்வரும் அடிகளாலும் அறிய முடிகிறத.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை’
“மாலறியா நாண்முகனும் கானா மலையினை.”
“பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே.”
*அண்ணா மலையாண் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
திருவெம்பாவை போன்ற பிரபந்தங்கள் மிகவும் பழமை வாய்ந்தன. அவை “பாவைப்பாட்டு” என அழைக்கப்பட்டன. இப்பாடல்களின் இறுதிதோறும் “எம்பாவாய்' எனவருவதால், திரு என்ற சிறப்பு அடைமொழியோடு "திருஎம்பாவாய்' என வழங்கி வந்த திருவெம்பாவையாயிற்று எண்பர்.
பாடலின் இறுதியில் “ஏல்ஓர் எம்பாவாய்” எனவருவத இப்பாடல் மரபாதலின் அதற்கு இங்கு உரை எழுதப்படவில்லை. ஏல்ஓர் என்பதை அசைச் சொற்களாகக்
- 06 -

கருதியும், "பாவாய்' என்பது பாவைப் பாட்டுக்குரிய மரபு என்பத கருதியும் இவ்வாறு உரை எழுதப்படாத விடப்பட்டுள்ளத.
‘பாவாய்' என்பத பெண்ணை விளித்ததாக இப்பாடல்கள் மூலம் சொல்ல முடியாதிருப்பதும் கவனிக்கத்தக்கத. இவ்வுரைகளில் “பாவாய்' என்பதை விளித்தலாகக் கொள்ளவில்லை.
ஏல் ஓர் என்பவற்றுக்கும், “எம்பாவாய்' என்பதற்கும் சேர்த்த உரை வகுப்பாரும் உளர். ஏல் - ஏற்றுக்கொள். ஓர் - ஆராய்ந்து பார். எம்பாவாய் - எமது பெண்ணே என அவ்வுரை அமையும். ‘ஏல்ஓர் எம்பாவாய்' என்பது பொருள் பொதிந்த சொற்தொடரே ஆயினும் இங்கு மரபு அடிப்படையில் வந்ததாகக் கொள்தலே பொருந்துகின்றது. ஆண்டாள் பாடிய திருப்பாவையும் இத்தன்மைத்தே யாப்பருங்கலச் சூத்திரவிருத்தி உரையுள்ளும் “ஏலோரெம்பாவாய்” பற்றி வருகின்றது.
“மலஇருளுற்று உறங்காமல் மண்ணுபரி பாகர் அருள் செலமுழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை’
என்பதைக் கொண்டு இது மலஇருளில் மூழ்கி உறங்குகின்ற ஆன்மாக்களைத் தட்டி எழுப்பி மலபரி பாகத்தைத் தரவல்ல சிவபெருமானின் அருளிலே முழுக வரும்படி அழைப்பது திருவெம்பாவை எனக் கொண்டு இத் திருவெம்பாவைக்குத் தத்தவ விளக்கம் எழுதுவாருமுண்டு.
ஒன்பது சக்திகளும் ஒருவரை ஒருவர் முறையே தயிலெழுப்புவதாகவும், பின் எல்லோரும் கூடி இறைவனை வாழ்த்துவதாகவும், தங்கள் தேவைகளை முறையிடுவதாகவும் இப் பாடல்கள் அமைந்தன. எனச் சிலர் தத்துவ விளக்கமுரைக்கிறார்கள்.
நவசக்திகளை அம்பிகை, கணாம்பிகை, கெளரி, கங்கை, உமை, பராசக்தி, ஆதிசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று உரைப்பர். மனோன்மணி, சர்வபூத தமனியையும் , சர்வ பூததமனி பெலப் பிரமதனியையும் , பெலப் பிரமதனி, பெலவிகரணியையும், பெலவிகரணி, காளியையும், காளி, இரவுத்திரியையும், இரவுத்திரி சேட்டையையும், சேட்டை வாமையையும், வாமை சிவசக்தியையும் தயிலெழுப்புவதாகச் சிலர் உரை எழுதுகிறார்கள்.
இதில் எட்டுப் பாடல்கள் தயிலெழுப்புவதாக அமைகின்றன. ஏனையவை அனைவரும் சேர்ந்து பாடுவதாக அமைகின்றன.
ஒன்பதாவது பாடலில் அனைவரும் சேர்ந்த
“உண்னைப் பிரானாகப் பெற்ற உண் சீரடியோம்
உண் அடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்." 1
எனப் பாடுவதும், பத்தொண்பதாம் பாடலில் “எம் கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க” எனப் பாடுவதும் இப்பாடல்களில் நவசக்திகளைச் சம்பந்தப்படுத்தத் தேவையில்லை என்பதை எனக்கு உணர்த்துகின்றன. அதனால் அவ்வகை விளக்கத்தை நான் எழுதவில்லை.
கோகுலப் பெண்கள் ஆயர் பாடியில் மார்கழி மாதத்தில் கார்த்திகாயினி நோன்பு நோற்றதையும் இதேபோல அதிகாலை நீராடிய செய்தியையும் வைத்துக் - 07 -

Page 6
கொண்டு, இதற்கும் அத்தகைய விளக்கம் கொடுப்பத அவசியமற்றத. மாணிக்கவாசகரைப் பொறுத்தமட்டிலும், சைவர்களாகிய எம்மைப் பொறுத்த மட்டிலும் சிவபெருமானே முழுமுதற் பரம்பொருள். எனவே அவரைக் குறித்தே பொருள் கொள்ள வேண்டும்.
“பாரொருகாலி வந்தனையாளர் வரிணர் னோரைத் தாண் பணியாள்” எனவரும் பதினைந்தாம் பாடல் வரியை நோக்க உண்மை புலனாகும். அதனால் சக்தியை விடுத்த சிவபெருமானுக்கு முதன்மை கொடுத்தே இவ்வுரை வகுக்கப்பட்டுள்ளது.
புலியூர்க்கேசிகன், சட்டப் பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை, சங்கநாற் செல்வர் பண்டிதமணி சு. அருளம்பலவனார், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன், சுவாமி சித்பவாநந்தர். ஆகிய மாறுபட்ட ஐவரது திருவெம்பாவை உரைகளையும் விளக்கவுரைகளையும் ஆராய்ந்த எண் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இவ்வுரையை நாண் வகுத்தள்ளேன்.
எனது ஆத்திசூடி உரை, கொன்றைவேந்தன் உரை, மூதரை உரை, நல்வழி உரை, சிவபுராணம் உரை, என்பவற்றையும் நாமறிந்த நாவலர், பன்னிரு திருமுறை அறிமுகம், ஆகிய நூல்களையும் இந்து மாமன்ற வெளியீடாகவும், வெற்றிவேற்கை உரையைத் தனது மணிவிழா நினைவாகவும் வெளியிட்ட வவுனியா இந்து மாமன்றத் தலைவரும், பிரபல சமூக சேவையாளரும், கொடை வள்ளலுமாகிய சிவநெறிப் புரவலர் சீ. ஏ. இராமஸ்வாமி ஐயா அவர்கள் இந்நூலைத் தனது அறக்கட்டளை நிதியம் மூலம் வெளியிடுகிறார்.
1330 திருக்குறட் பாக்களையும் மனனஞ் செய்த ஒப்புவிப்பவர்களுக்கு 10000 ரூபா பரிசுதருவதாகத் தனது அறக்கட்டளை மூலம் அறிவித்த அவர், எனது திருவெம்பாவை உரை நாலை பெருவிருப்போடு வெளியிடுவது நிறைந்த மனமகிழ்வைத் தருகின்றது.
அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்நால் என்னால் எழுதப்பட்டது. அதனால் என்னை எழுதத் தாண்டி இந்நூலை வெளியிடும் அவருக்கும், ஆசியுரை வழங்கிய வவுனியா கந்தசுவாமி கோவில் பிரதம குருக்கள் பிரம்மறி இ. பாலச்சந்திரக் குருக்கள் ஐயா அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய தமிழருவி த. சிவகுமாரன் அவர்களுக்கும் என நன்றிகள்.
சிவபெருமான் மாணிக்கவாசக சுவாமிகளிடம் “பாவைபாடிய வாயால் ஒரு கோவை பாடுக” எனக் கேட்டார் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். எனவே பாவை (திருவெம்பாவை) சிவபெருமானுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பாவை பாடிய வாய் பெருமை பெறுகிறது. வாய்க்கு அத்தகைய பெருமை வாய்க்க இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நூலை எழுத திருவாசக ஆராய்ச்சி உரை நூல்கள் பலவற்றைத் தந்துதவிய முன்னாள் தொலைத்தொடர்புப் பொறியியலாளர் திரு. க. த. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், இந்நூலை மிகவும் விரைவாக, அழகாக அச்சிட்டுத் தந்த வவுனியா சுதன் அச்சகத்தார்க்கும் எண் நண்றிகள்.
“மேன்மைகொள் சைவநத விளங்குக உலகமெல்லாம்”
90, திருநாவற் குளம், உங்கள்
வவுனியா, I2 - 12 - 2002 அகளங்கண்
- 08 -

O 1)
9.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய
திருவெம்பாவை
சக்தியை வியந்தது
(வெண்டளையால் வந்த இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா)
திருச் சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வண்செவியோ நிண்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டுஇங்ங்ணி ஏதேனும் ஆகாள் கிடந்தாள் எண் னேனண்னே
ஈதேஎந் தோழி பரிசு ஏலோர் எம்பாவாய்.
(துயிலெழுப்பியவர்கள் கூற்றாக அமைந்தது)
ஒளிபொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரிய பெரிய ஒளிவடிவினனாகிய இறைவனை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடலைக் கேட்டும் உறங்குகின்றாயோ அல்லது உனது செவிகள் கேட்கும் தன்மையில்லாத வலிய செவிகளோ,
மகாதேவனாகிய சிவபெருமானது நீண்ட வீரக் கழல்கள் பொருந் திய திருவடிகளை நாம் வாழ் த திப் L J FT Lq u li வாழ்த்தொலியானது சென்று தெருவினிடத்திலே கேட்ட அளவிலே ஒருத்தி விம்மிவிம்மி அழுது தன்னிலை மறந்து, மலர்கள் நிறைந்த படுக் கை மேலிருந்து கீழே விழுந்து புரண் டு, இவ்விதமாக யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய்ப் பக்திப் பரவச நிலையடைந்து கிடந்தாள்
இதுவல் லவோ உண்மையான பக்தி நிலை. இதை எப்படிச் சொல்லி விளக்க, அப்படியிருக்க எமது தோழியாகிய உனது தன்மை நித் திரையில் விருப் புற்றது போலல்லவா இருக்கிறது. இப்படியா உன் நிலை இருக்க வேண்டும்.
... (9 -

Page 7
குறிப்பு
திருவெம்பாவை வாட்டடங்கண் - வாள் தடம் கண், போதார் - போது ஆர்
சிவபெருமானை வாழ்த்தி உன் வீட்டு வாசலிலே வந்து நின்று உரத்துப் பாடுகின்றோம். உனக்குக் கேட்கவில்லையா? அல்லது உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டனவா? அல்லது நித்திரையில் உனக்குள்ள விருப்பு இறைவன் மேலுள்ள விருப்பிலும் அதிகமா? எனக் கேட்பது போலப் பாடும் பெண்கள், இன்னொரு பெண்ணின் நிலையை அழகாகச் சொல்கிறார்கள். அந்தப் பெண் ணின் விட்டு வாசலை அடைவதற்கு முன்பாகவே, தெருவில் நாம் சிவபெருமானை வாழ்த்திப் பாடிவர, அந்த வாழ்த் தொலியைக் கேட்டு அவள் பரவச நிலையை அடைந்து விட்டாள். அவளின் பக்தி முதிர்ச்சி வியப்பானது. ஆனால் எமது தோழியாகிய உன் நிலையோ துயிலில் பற்றுள்ளது போலிருக்கிறதே.
“யாம் பாடக கேட் டேயும் ' எனப் பாடுவதால் நித்திரையாகக் கிடந்த பெண்ணுக்குத் தமது பாடல் கேட்டிருக்கும். கேட்காமலிருக்க முடியாது. தெருவில் பாடும் போதே வீட்டுக்குள் கேட்டு விடுகிறது. அதனால் கேட்ட பின்னும் துயில்கின்றாயே என நயம்படச் சொல்கிறார்கள்.
கேட் காதரிருந்தால செவி, வண் செ வி. கேட் கும தன்மையிழந்த செவியோ என்றும், கண், தடங்கண், விசாலமான கண், கண்ணின் சுகத்திற்காக நித்திரையில் பற்று வைத்தாயோ என்றும், வாள், தடங்கண் என்பதில் வரும் வாள் என்பது ஒளியைக் குறித்து நிற்பதால் ஒளி பொருந்திய கண்ணை மூடி நித்திரை செய்யலாமா என்றும் கேட்பதாகச் சிந்திக்க வைக்கிறது. வீதியில் பாடியதைக் கேட்ட பெண்ணின் நிலையைத் தான் நீ அடையாது போனாலும் உடனடியாக எழுந்து வந்திருக்கலாமே. எமது தோழியாக இருந்தும் உண் நிலை எம் நிலையிலிருந்து வேறுபட்டிருக கிறதே எனப் பொருள் கொள்ளும்படி அமைந்திருக்கிறது.
போதார் அமளியின் மேல் - மலர்கள் நிறைந்த படுக்கையில் நித்திரை செய்வது நித்திரைச் சுகத்தைக் குறித்தது. அச்சுகத்தை விட்டும் நீங்கிப் புரண்டு விழுந்து பக்திப் பரவச நிலையை ஒரு பெண் அடைந்ததாகச் சொல்வதை, உலக போகங்களில் மயங்கி மகிழ்ந்திருக்கும் ஆன்மா, ஆண்டவனின் திருநாமத்தைக் கேட்ட அளவில் அவற்றைத் துறந்து ஆனந்த நிலையை அடையவேண்டுமென்பதற்காகச் சொல்லப்படுவதாகக் கொள்ளலாம்.
- () -
 

O2)
ഉ_ങ്ങ]
குறிப்பு
rooted பாசம் பரஞ்சோதிக்கு எண் பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய், நேரிழையீர்.
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்ததற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளுந் தேசண் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்தள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆர்ஏலோர் எம்பாவாய்
(துயிலெழுப்பியவர்களும், துயிலுணர்ந்த பெண்ணும் உரையாடுவதாக அமைந்துள்ளது)
"செப்பமான ஆபரணங்களை அணிகின்ற பெண்ணே! நாம் இரவும் பகலும் பேசிக்கொண்டிருந்த பொழுதெல்லாம் நீ என்னுடைய பற்றுதல் யாவும் பரஞ் சோதியாக விளங்கும் சிவபெருமான் மேலேயே உள்ளது என்பாய். இப்பொழுது இந்தப் பூ நிறைந்த படுக்கையிலே பற்று வைத்து விட்டாயோ'
“செப்பமான ஆபரணங்களை அணியும் பெண்களே! சீசி இத்தகைய அற்பமான பேச்சுக்களைப் பேசி விளையாடி என்னை ஏளனமாக ஏசும் காலமும் இடமும் இதுவல்ல. நாம் யார் . தேவர்களே வழிபடுவதற்குக் கிட்டாத தாமரை மலர் போன்ற பாதங்களை நாம் வழிபடத் தந்தருள வந்தருளும், பிரகாசம் மிக கவனும் , சிவலோகத் தில் வாழ் பவனும் , தி லி லைச் சிற்றம்பலத்துள் திருநடனம் செய்பவனுமான சிவபெருமான் மேல் அன்பு பொருந்தியவர்கள் அல்லவா’
இரவு பகலாக நாம் பேசிக்கொண்டிருந்த பொழுதெல்லாம் “என்னுடைய பற்றுதல் யாவும் பரஞ் சோதியாக விளங்கும் சிவபெருமான் மேலேயே உள்ளது” என் பாய் என “பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போதெப்போது” என்பதற்கு உரை எழுதப்பட்டுள்ளது.
இதை இன்னொரு விதமாகவும் காண்போம். நாம் பேசும் போது “இரவும் பகலும் என் பற்றுதல் யாவும் பரஞ்சோதியாகிய சிவபெருமான் மேலேயே உள்ளது” என்பாய். அப்படியென்றால் இப்போது - இப்பொழுது, எப்போது - எப்பொழுது. இது இரவும் பகலுமற்ற பொழுதா, அதனால் தான் உண் பற்றுதலை நித்திரையில் ஆர்வம் தரும் படுக்கையில் வைத்தாயோ (ஆர் அமளி - ஆர்வந்தரும் படுக்கை) என நயமாகவும் காணலாம்.
இதேபொருளில் பின்வருமாறும் பிரித்து நயம் கண்டு மகிழலாம். இராப்பகல் பாசம் பரஞ்சோதிக்கெண் பாய். நாம் பேசும்போது எப்போது, அதாவது எனது பற்றுதல் இரவும் பகலும் பரஞ்சோதியாகிய சிவபெருமான் மேலேயே உள்ளது என்பாய்.
- 1 1 -

Page 8
03)
திருவெம்பாவை அப்படியென்றால் நாம் பேசுகின்ற இப்பொழுது இரவும் பகலும் அற்றபொழுதா அது எப்பொழுது,
தேவர்களே, சிவபெருமானது பாதங்களை வழிபடக் கூசுகிறார்கள், தம் அன்புப் போதாமை அறிந்து அவர்களே கூச, சிவபெருமானோ தம் மலர்ப்பாதங்களை எம் வழிபாட்டுக்காகத் தந்தருள வந்தருளுகின்றான் என்றால் சிவபெருமான் எம்மேல் வைத்த கருணையின் அளவுதான் என்னே. -
தமது பக்தி போதாதிருந்தாலும் இறைவனின் கருணை பொங்கி வருவதைச் சொல்லும் சிறப்பு நயக் கத் தக்கது. “விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூகம் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் . ” “ஈசனார் க்கு அண் பார் யா ம் ஆரே லோ ரெம்பாவாய்” என்பதற்கு யாம் ஆர். ஈசனார்க்கு அன்பர் அல்லவா’ எனப்பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஈசனார்க்கு யாம் அன்பள். வேறுயார் எம்மளவு அன்பு கொண்டவர்கள் இருக்கிறார்கள் எனப் பெருமைப் படுவதாகக் கொள் னினும் பொருந தும் “ஈ சனார் க கு அணி பார் யாம் ' எண் பது ஈசன் மேலே அன்புபொருந்தியவர்கள் நாங்கள் எனப்பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
முத்தண்ன வெண்ணகையாய் முன்வந்த எதிர்எழுந்துஎண்
அத்தண் ஆனந்தண் அமுதன் எண்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்த உண் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புண்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்குஏலோர் எம்பாவாய்,
(உரையாடலாக அமைந்துள்ளது)
*முத்துப் போன்ற வெள்ளை நிறமான பற்களையுடைய பெண்னே! வழமையாக எல்லார் க்கும் முன் துயில் நீங்கி எழுந்து எதிர் வந்து, என் தந்தை, என் ஆனந்தத்துக்குரியவன், என் அமுதமானவன் என்று வாயூறி இனிக்கும்படி பேசுவாய். அத்தகையவளாகிய நீ இன்று உறங்கிக் கொண்டிருக்கிறாய் எழுந்து வந்து உன் வாசற்கதவைத் திறப்பாயாக"
“பக்தி நிறைந்தவர்களே! சிவபெருமானது நீண்ட கால அடியார்களே! தோழமைக்குரிய பண்பு கொண்டவர்களே! புதிய அடியவளான என்போன்றோரின் குற்றத்தை நீக்கி எங்களை உங்களோடு சேர்த்துக் கொண்டால் அது தீயதாகுமோ”.
“நீ சிவபெருமான் மேலே அன்புடையவளாக இருப்பது எண் ன ஏமாற் றோ உனது அண் டரின் ஆழத் தை நாம் அறிய மாட டோமோ உன் னைப் போன்ற மனத் துT ய  ைம
- 12 .

குறிப்பு
04)
உரை
அகளங்கன் கொண்டவர்கள் நம் சிவபெருமானைப் புகழ்ந்து பாடமாட்டாரோ. எனவே நீயும் எம்மோடு சேர்ந்து சிவபெருமானைப் புகழ்ந்து பாடவேண்டும். அதுவே எமக்கு இப்போது வேண்டும்”
அள்ளுறி - வாயூறி, கடை - வாயில், பத்து - பற்று.
பத் துடையர் என்பது பற்றுடையர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. எதுகை நோக்கி பற்று பத்தாகியது என்பர். இருப்பினும் அடியார்கள் பத்துச் சிறப்புப் பண்புகளைக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். பாங்கு என்பதற்கு ஒழுங்கு, மேன்மை எனச் சிலர் பொருள் கொள்கின்றனர். இங்கு *தோழமைக் குரிய பணி பு” எனப் பொருள் கொள் வது பொருத்தமாககின்றது. பாங் கண் , பாங் கி என்ற சொற்கள் நோக்கத்தக்கன.
தோழமைக்குரிய நற்பண்பு கொண்டவர்களாதலால் என்குற்றம் பொறுத்து சேர்த்துக் கொள்ளவேண்டும் எனப்பொருள் கொள்வது சிறப்பானது. て
“இத்தனையும் வேண்டும்” என்பதற்கு 4 துயிலுணர்ந்த பெண் தன்னைத் தாழ்த்தி துயிலுணர்த்தியவர்களை உயர்த்திக் கூறியதால், துயிலுணர்ந்தவளின் பக்தி வைராக்கியத்தை, பக்தி ஆழத்தை அறிந்திருந்த பெண்கள் வருந்திக் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம். நல்ல பதிலடி தந்தாய் என்பதுபோல எடுக்கலாம். உன் பக்தியையும், செயற்பாட்டையும் பற்றிக் கூறிய எமக்கு இது வேணும் என்பதாக அமையும்.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ.
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ. எண்ணிக்கொடு உள்ள வா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயினிறுஅவமே காலத்தைப் போக்காதே. விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துஉள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்.
(உரையாடலாக அமைந்துள்ளது)
“ஒளிபொருந்திய முத்துப் போன்ற பற் களையுடைய பெண்ணே உனக்கு இன்னமும் விடியவில்லையோ'
*அழகிய கிளிபோலும் மொழிபேசும் பெண்கள் யாவரும் வந்துவிட்டனரோ"
“யாவரும் வந்து விட்டார்களா இல்லையா என்பதை எண்ணி முடித்து உள்ளபடி சொல்லுவோம். ஆனால் அதுவரையில்
- 13 -

Page 9
குறிப்பு '
05)
உரை
திருவெம்பாவை நீ கண்ணை முடித்துயின்று காலத்தே வீணாகப் போக்காதே.
விண்ணுலகத்தவர்க்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, வேதத்திற் சொல்லப்படுகின்ற மேலான பரம்பொருளை, கண்ணுக்கு இனிமையாக இருப்பவனைப்பாடி, மனம் கசிந்து, நெகிழ்ந்து உருகிப் போகும் நிலையிலுள்ளதால், எம்மால் அதை விடுத்து எண்ணிக் கொண்டு நிற்க முடியாது. அதனால் யாம் மாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, குறைந்தால் சென்று குறை நித்திரையைக் கொள்வாய்”
ஒண் ணித்தில நகை - ஒள் நித்தில நகை. ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்கள்.
யாவரும் வந்துவிட்டனரா அல்லது சிலர் வர இருக்கிறார்களா எண் பதை எண் ணிக் கணக் கிடுகிற அவ்வளவு பொழுதும் சிவபெருமானை வணங்காத, வாழ்த்திப்பாடாத அவப்பொழுது என்பதால் யாம் மாட்டோம் எனப் பெண்கள் கூறுகிறார்கள்.
"விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப் பொருளை கண்ணுக்கினியானைப் பாடி மனம் கசிந்து உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்ற நிலையில் இருக்கும் எம்மால் எண்ணிக்கை சரியாக எடுக்க முடியாது எண்ணமுடியாது. அதனால் யாம் மாட்டோம். அந்நிலையடையாத உன்னால் தான் எண்ண முடியும். எனவே நீயே வந்து எண்ணிப்பார்" எனக் கூறுவது மிகவும் நயமானது. அந்தப் பொழுது ஆண்டவனை எண் ணுகலின் ற பொழுதேயன்றி அடியவரை எண்ணுகின்ற பொழுதல்ல.
மால் அறியா நாண்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளே பேசும் பாலூறு தேனி வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேனன்று ஒலம் இடினும் உணராய் உணராய்காணி
ஏலக் குழலி பரிசுஏலோர் எம்பாவாய்
(துயிலெழுப்பியவர்கள் கூற்றாக அமைந்தது)
“தருமாலினாலும் நாண் மு கணினாலும் அடி முடி அறியப்படாத அருணாசல மலையாக நின்ற சிவபெருமானை, நாங்களா அறியும் தகுதி படைத்தோம்" என்று பணிவாகப் பேசுவது போல் பொய்மொழிகளையே பேசும், பாலும் தேனும் போல் இனிய சொற்கள் ஊறிவரும் வாயையுடைய வஞ்சகி! உன் வாசற் கதவைத் திறவாய்.

குறிப்பு
06)
அகளங்கன் மண்ணும் விண்ணும் ஏனைய உலகமும் அறிவதற்கரியவனது திருவடிவத்தையும், ஆட்கொண்டருளத் தகுதியற்றவர்களாகிய நம்மையும் ஆட்கொண்டருளி, நம் குற்றத்தைப் பொறுத்தருளும் பெரும் குணத்தையும் பாடி, சிவனே சிவனே என்று அடைக்கலம் வேண்டி முறையிட்டுச் சத்தமிட்டாலும், நீ துயில் உணர்கிறாய் இல்லை. நாம் சொல்வதை உணர்கிறாயுமில்லை. மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய பெண்ணே! உன் தன்மை இப்படி இருக்கிறதே.
பொக்கங்கள் - பொய்கள், படிறீ - வஞ்சகி. கோதாட்டும் - குற்றங்களிலிருந்து நீக்கும்.
‘நாம் போலறிவோம்” என்பதை நாம் அறிவோம் போலும் எனமாற்றி, நம்மால் அறியமுடியாது எனப் பணிவாகப் பேசியதாக உரை வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக நாம் அறிவோம் என்று உரை வகுப்பாருமுளர். நாம் அறிவோம் என்று கூறியதால் அவள் வாய் பாலும் தேனும் ஊறுகின்ற வாயாயிற்று. ஆனால் அவள் அதற்குரிய முயற்சியில் இறங் காததால் அவள் வார்த்தைகள் பொய்களாயிற்று. அவளும் வாக்கும் செயலும் வேறுபட்டதால் வஞ்சகியானாள்.
நம் மால அறியமுடியாது என்று பணிவாகப் பேசி சிவபெருமானது பெருமையை உயர்த்திக் கூறியதால் அவளது வாய் பாலும் தேனும் ஊறுகின்ற வாயாயிற்று. சிவபெருமானை அறிவதற்கு இன்னும் அன்பு வேண்டுமென்று உணர்ந்திருந்தும் அதற்குரிய நேரத்தில் துயில்வதால் அவள் வார்த்தைகள் பொய்களாயின. அவளும் வஞ்சகியானாள். இப்படி இருவகையிலும் அருமையாகப் பொருள் கொள்ளலாம்.
'உணராய் உணராய் காண்” என்பது துயிலுணராய். நாம் சொல்வதையும் உணராய் என உரை வகுக்கப்பட்டுள்ளது. இதனை துயிலுணராய், இப்போது துயிலுணராவிட்டால் இனி ஒருபோதும் விழித்துக் கொள்ளமாட்டாய் எனவும் நயம் காணலாம். ஏனெனில் சிவனே சிவனே என்று இட்ட ஒலத் துக்கே துயிலெழவில்லையே.
மானேநீ நென்னலை நாளைவந்த உங்களை
நானே எழுப்புவண் என்றலும் நாணாமே போன திசைபகராய். இன்னம் புலர்ந்தின்றோ.
வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந்த எம்மைத் தலையளித்துஆட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குஉண் வாய் திறவாய் ஊனே உருகாய். உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடுஏலோர் எம்பாவாய்.
(துயிலெழுப்பியவர்கள் கூற்றாக அமைந்தது)
- S -

Page 10
உரை
குறிப்பு
07)
திருவெம்பாவை மான் போன்ற மருண்ட நோக்கினையுடையவளே! “நாளை வந்து உங்களை நானே எழுப்புவேன்” என்று நேற்று நீ கூறினாயே, நீ கூறிய அந்த வார் தி தைகள் போன திசையையாவது 8fin AB LD (T L’ L. (T uLu IT . வெட்கமரில் லா மல தூங்குகின்றாயே, உனக்கு இன்னும் விடியவில்லையா, ஆகாயம், மண், வேறுலகம் யாவற்றாலும் அறியப்படுதற்கு அரியவனான சிவபெருமான் தானே வலியவந்து எம்மைத் தம் தலையாய அன்பு செலுத்தி ஆட்கொண்டருளினான்.
அவனது மேன்மை மிக்க நீண்ட வீரக் கழல் அணிந்த பாதங்களைப் பாடி வந்தவர்களாகிய எமக்கு உன்வாய் திறந்து ஒரு வார்த்தை கூறமாட்டாயா. நாம் பாடும் சிவபெருமானின் புகழ்ப் பாடல் கேட்டு உடல் உருகுகிறாய் இல்லை. உனக்கும் உன்னோடு சேர்ந்த எமக்கும், ஏனையவர்க்கும் நன்மை பெருக நம் சிவபெருமானைப் பாடுவோமாக.
நென்னல் - நேற்று, தலையளி - தலையாய அன்பு
வீட்டு வாசலைத் திறவாது போனாலும் வாயையாவது திறந்து பதில்சொல்லு எனக் கேட்பது இப்பாடல். வான், நிலன், பிற என்பவை ஆகுபெயராகி வந்தன. வான் - வானிலுள்ளோரையும், நலன் - நிலத தல உளி ளோரையும் , பிற - பிற உலகங்களிலுள்ளோரையம் குறித்தது.
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உண்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னாமுனி னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை எனினரையண் இன்னமுதென்று எல்லோமும்
சொண்னோங்கேள் வெவ்வேறாய் இன்னம் தயிலுதியோ வணினெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் எண்னே தயிலின் பரிசுஏலோர் எம்பாவாய்.
(துயிலெழுப்பியவர்களின் கூற்றாக அமைந்தது)
தாயே! உன்னிடத்து இத் தீய இயல்புகள் சிலவும் இருக்கின்றனவோ. பல தேவர்களாலும் நினைத்தற்கு அரியவனும், ஒப்பற்ற தனியொருவனும், பெரும் புகழை உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கோயிலிலே ஒலிக்கின்ற சின்னம் முதலிய ஊது கருவிகளின் ஒலியைக் கேட்ட அளவிலே ‘சிவ சிவ
என்று வாய் திறந்து கூறுவாய்,

குறிப்பு
08)
அகளங்கன் ‘தென்னா' என்று மற்றவர்கள் கூறுகின்ற அளவிலே தீயிலிட்ட மெழுகைப் போல உருகுவாய். இப்படிப்பட்ட இயல்பு கொண்ட நீ இப்பொழுது, என் ஆன்மாவின் தலைவனாகிய சிவபெருமானை, என் அரசன், இனிய அமுதமானவன் என்று நாமெல்லோரும் உன் வீட்டு வாசலில் நின்று உனக்குக் கேட்கும்படி தனித்தனியாய்ச் சொல்லித் துதித்தோமே. அது உனக்குக் கேட்கவில்லையா. இன்னும் நித்திரை செய்கின்றாயோ, பக்தி உணர்வினால் உருகிப் போகும் தன்மையில்லாத வலிய மனத்தையுடைய அறிவிலிகள் போல வீணே கிடக்கின்றாயே, உனது நித்திரையின் தன்மை மிகவும் வியப்பானதே.
என்னானை - என் ஆன் ஐ
சின்னங்கள் என்பது சங்கு தாரை முதலிய விடியற் கால இசைக்கருவிகள். நாகசின்னம் எனக் கொள்ளல் பொருந்தா, மாணிக்கவாசக சுவாமிகள் காலத்து நாகசின்னம் (நாதஸ்வரம்) இருந்ததா என்பது ஆய்வுக்குரியது. 。
சின்னம் - சிவ சின்னம், இதில் திருவைந்தெழுத்து மந்திரம் ஒன்று. “சின்னங்கள் கேட்ப" என்பதற்கு “மந்திர ஒலியைக் கேட்ட மாத்திரத்தே" எனவும் பொருள் கொள்ளலாம். தென்னன் என்பது சிவபெருமானுக்கு ஒரு பெயர். “தென்னன் பெருந்துறையான்' என மணிவாசகப் பெருமான் பாடுகிறார். தென்னாடுடைய சிவன் தென்னன் எனப்பட்டான். என்னானை என்பதை எனக்கு இனியவன், எனது அன்பிற்குரியவன், எனது இனிய தலைவன் எனப் பலபொருளில் விளக்குவர் அறிஞர்.
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்.
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும். கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழிஈ தெண்ன உறக்கமோ வாய் திறவாய்.
ஆழியாண் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ. ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடுஏலோர் எம்பாவாய்,
(துயிலெழுப்பியவர்களின் கூற்றாக அமைந்தது)
கோழிகள் கூவ, ஆரவாரிக்கும் பறவைக் கூட்டங்களின்
ஒலி எங்கெங்குமாய் இசையாய் ஒலிக்க, வெண் ணிறமான
சங்குகளும் , எங்கும் ஒலிக்கின்றன. ஒப்பில்லாத மேலான
ஒளிவடிவினனாகிய சிவபெருமானுடைய ஒப்பில்லாத மேலான
கருணையையும், ஒப்பில்லாத உயர்ந்த புகழ்களையும் நாங்கள்
- 17 -

Page 11
குறிப்பு
0.9)
ഉ_ഞj
திருவெம்பாவை பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா. நீ நன்றாக வாழ்வாய். இது எத்தகையதான உறக்கமோ தெரியவில்லை. வாய் திறக்கமாட்டாயா, மகாவிஷ்ணுமூர்த்தி சிவபெருமான் மேலே அன்பு கொண்டு அறிதுயிலில் கிடந்து தியானிப்பது போன்றதோ உனது தூக்கமும், ஊழிக் காலத்தும் அழியாது எஞ்சி இருக்கும் முதல்வனாகிய ஒப்பற்றவனும் உமையம்மையை இடப்பாகத்தே கொண்டவனுமாகிய சிவபெருமானைப் பாடுவாயாக.
ஏழில் - இசை, நாதஸ் வரம் எண் பார் சிலர் , நாதஸ் வரம் அக்காலத்தில் இருந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆழியான் என்பது சிவபெரும்ானைக் குறித்ததாகவும் கொள்வர் சிலர்.
அப்படியாயின் சிவபெருமான் மேல் அன்புள்ளவளாக இருக்கும் தன் மை இத் தன் மையதோ என “ஆழியாண் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ” என்பதற்கு சுலபமாகப் பொருள் கொள்ளலாம். ஆழியான் - அருள் ஆழியான் - அருட் கடலாக விளங்குபவன். கோழி கூவுவதோ, குருகுகள் ஒலி எழுப்புவதோ, வெண் சங்கின் ஒலியோ உனக்குக் கேட் காவிட்டாலும், உன் வீட்டு வாசலிலே வந்து நின்று சிவபெருமானது அழியாப் பெரும் புகழைப் பாடினோமே அது கூடக் கேட்கவில்லையோ, எனக்கூறி, இவைகளைக் கேட்காது உறங்கிய பெண்ணுக்கு ஏதேனும் நோய் இருக்குமோ என அஞ்சி வாழ்த்துவது சிறப்பானது. கோபத்திலும் வாழ்த்தும் மரபு எனவும் கொள்ளலாம்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதமைக்கும் பேர்த்தம் அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉண் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார். அவருகந்த
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்,
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
முற்பட்டனவாகிய பழைய பொருட்கள் யாவற்றிற்கும் முற்பட்ட பழைய பொருளாயுள்ளவனே. பிற்பட்டனவாகிய புதிய பொருட்கள் யாவற்றிற்கும் புதுப் பொருளாயிருக்குந் தன்மையுடையவனே. உன்னைத் தலைவனாகப் பெற்ற உன் சிறப்பினையுடைய
- 18 -
 

குறிப்பு
10)
அகளங்கன் அடியவராகிய நாங்கள், உனது அடியவர்களது பாதங்களையே வணங்குவோம். அவ்வாறே உன் அடியவர்களுடனேயே நட்புரிமை கொள்வோம்.
அவ் வடியார் களே எமக் குக் கணவராகும் தகுதி படைத்தவராவார். அவ்வடியார்கள் விரும்பிக் கட்டளையிட்ட படியே அடிமையாய்த் தொண்டு செய்வோம். எமது தலைவனாகிய நீ நாங்கள் வேண்டிக் கொண்ட இந்த வகையான பேறுகளை எமக்குத் தந்தருளுவாயாயின் என்ன குறையும் இல்லாதவராவோம்.
முற் காலத் தில் கடவுள் எண் றும் பரம் பொருள் எண் றும் சொல்லப்பட்டு வந்த யாவருக்கும் முந்திய பரம் பொருளே என்றும் , இனிப் பிற் காலத்தும் சொல்லப் படப் போகின்ற கடவுள்கள் யாவருக்கும் பின்னும் பேசப்படப் போகும் தன்மை படைத்தவனே என எக்காலத்தும் நிலைத்திருக்கும் கடவுள் எனவும் எண்ணலாம்.
ஏனெனில் முற்காலத்தில் கடவுள் என்று சொல்லப்பட்ட, வழிபடப்பட்ட சில தெய்வங்கள் இன்று வழிபடப்படுவதில்லை. உதாரணமாக சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் அருகி வருகிறது. அதேபோல இக்காலத்து வழிபடப்படும் சில கடவுளர்கள் இனிக் காலத்தில் வழிபடப்படாமல் மறைந்து போகலாம். ஆனால் சிவபெருமான் எக்காலத்தும் வழிபடப்படும் நித்தியப் பரம்பொருள் என்பதை இது காட்டுகிறது எனலாம்.
மனோன்மணி, சர்வ பூததமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்னும் நவசக் தரிகள் ஒரு வரை ஒருவர் துயரிலுனர் த தரியதாக ச் சொல்லப்படும் தத்துவ விளக்கம் இப் பாடலையும் இதைத் தொடர்ந்து வரும். உங்கையிற் பிள்ளை பாடலையும் பார்க்கும் போது பொருந்துவதாயில்லை.
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே. பேதை ஒருபால். திருமேனி ஒன்றல்லன்.
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் தாதித்தாலும் ფ985 உலவா ஒருதோழன். தொண்டருளன்.
கோதில் குலத்தஅரண் தண் கோயிற் பிணாப்பிள்ளைகாள்! ஏதஅவாைர் ஏதஅவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதஅவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
- 19 -

Page 12
குறிப்பு
1)
திருவெம்பாவை சிவபெருமானது பாத தாமரைகளோ கீழ் உலகங்கள் ஏழினுக்கும் அப்பால் கீழே சென்று இவ்விடத்திலுள்ளன என்று சொல்லும் சொல்லளவைக் கடந்தன.
அவரது பூக்கள் நிறைந்த, சடையாற் புனைந்த முடியும் மேலுலகங்கள் ஏழினுக்கும் அப்பால் மேலே சென்று எல்லாப் பொருள்களுக்கும் முடிவில் உள்ளது.
உமையம் மையாரை ஒரு பக்கத் தி ல கொண் ட உருவத்திரு மேனியைக் கொண்டவன். ஒரு குறித்த உருவத்தை மட்டும் கொண்டவனல்லன்,
வேதம் முதல் விண்ணும் மண்ணும் துதித்தாலும் போற்றப் போற்றக் குறைவுபடாத புகழையுடைய ஒப்பற்ற தோழனாக உள்ளவன். மெய்யன்புடைய தொண்டர் களது உள்ளத்தில் எழுந்தருளியிருப்பவன்.
சிவபெருமானது கோயிலிலே இருந்து தொண்டு செய்யும் குற்றமில்லாத மரபில் பிறந்த பெண் பிள்ளைகளே! அவனது திருப்பதி யாது? அவனது பெயர் யாது? யார் அவனது உறவினர். அவனது அயலவர் யார் . அவனைப் பாடும் தன்னை யாது என்பதை எங்களுக்குக் கூறுங்கள்.
சொற்கழிவு - சொல்லெல்லையைக் கடந்தது. பினாப்பிள்ளை - பெண் பிள்ளைகள், ஓத உலவா - சொல்லக்குறையாத
சிவபெருமானது அடி கீழே எங்குள்ளது. எனச் சொல்ல முடியாது. சிவபெருமானது முடி மேலே யாவற்றுக்கும் மேலே உள்ளது.
எவ்வளவு தான் புகழ்ந்தாலும் புகழ்ந்து முடியாத பெரும் புகழை, வளருகின்ற புகழை உடையவன்.
மொய் யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்த குடைந்துண் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காணி ஆர் அழல்போற்
செய்யாவெண் நீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா.
ஐயாநி ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்,
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
- 20 -

குறிப்பு
12)
அகளங்கன் மலர் கள் நெருங் கி நிறைந்ததிருக்கும் விசாலமான பொய்கையிற் சென்று, முகேள் என்று ஒலியுண்டாகும்படி கையினால் நீரைத் துழாவித் துழாவி முழுகி, உனது திருவடிகளைப் புகழ்ந்து பாடி, எம் தந்தையே வழிவழி அடிமைகளாகிய நாங்கள் வாழ்வடைந்தோம் . நிறைந்த நெருப்புப் பிழம் பு போலச் செந்நிறமுடையவனே, வெண் ணிற் றைத் திருமேனியெங்கும் அணிந்தவனே. பேரருட் செல் வனே, சிற்றிடை கொண்ட, மைதிட்டப்பட்ட அகன்ற கண்களையுடைய உமையம்மையின் மணவாளா, எங்கள் தலைவா, நீ எம்மை ஆட்கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், உயப் யும் தகுதியுடையவர் உயப் யும் வகையின் எல்லாம் உய்ந்து விட்டோம் . இனி எங்களை இளைத்துப் போய் மறுபடி பிறவாமற் காப்பாய்.
மொய்யார் - மலர்கள் மொய்த்து நிறைந்துள்ள
இறைவன் அடியவர் களை அவரவர் களது பக் குவ நிலைக் கேற்ப ஆட் கொண் டு அவரவர் களுக்கு வழங்க வேண்டியதைத் தவறாது அவ்வக் காலங்களில் வழங்குவான். அவ் வகையாகத் தமக்கும் இறைவன் அருள் பாலித்ததாகப் புகழ்ந்துபாடி, இனித் துன்பம் வராமற் காப்பாய் எனப்பாடுவதாக மேலே பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
“உய்ந்தொழிந்தோம்’ என்பதை மற்றவர்கள் எல்லாம் உயப்ய, யாம் உயப் தி அடையாமல் தவிர்ந்துள்ளோம் என இரங்கிக் கேட்டு, எம்மைத் துன்பப்பட்டு இளைத்துப் போகாமற் காப்பாற்றுவாய் எனப் பாடுவதாகப் பொருள் கொள்ளும் வழக்கமும் உண்டு. உண் னால் ஆட் கொள்ளப் பட் டவர் கள் யாவரும் உய்யவேண்டிய அளவு உய்ய யாம் மட்டும் உய்தியடையவில்லை என்பது இதன் பொருள் ஒழிந்தோம் - தவிர்ந்தோம். உய்ந்தொழிந்தோம் - குறைவின்றி உய்ந்துவிட்டோம்.
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தனி நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடுங் கூத்தனி இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தம் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்த உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடுஏலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
நம்மைப் பிணித்துள்ள பிறவித் துன்பங்கள் நீங்கும்
வண்ணம் நாம் மகிழ்ச்சியாய் ஆரவாரித்து நீராடும் தூய
சிவானந்த வெள்ளமாயுள்ளவன். நல்ல தில்லைச் சிற்றம்பலத்தே
- 21 -

Page 13
குறிப்பு :-
13)
திருவெம்பாவை தன் கையில் நெருப்பை ஏந்தி ஆடுகின்ற கூத்தப்பிராணாயுள்ளவன். இவ் விண்ணுலகத்தையும் , மண்ணுலகத்தையும், உயிர்கள் யாவற்றையும் படைத்தும் காத்தும் அழித்தும் திருவிளையாடல் புரிபவன்.
அத்தகைய சிவபெருமானது அழியாப் புகழ் பொருந்திய சொற்களைப் பேசி, கையிலனிந்த வளையல்கள் ஒலிக்க, இடையிலனிந்த நீண்ட மேகலைகள் ஆரவார ஒலி செய்ய, பூமாலை அணிந்த கூந்தலின் மேலுள்ள வண்டுகள் எழுந்து ஒலி செய்ய, தாமரை முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையில் நீரைக் கைகளால் துழாவி, எம்மை அடிமையாக உடைய சிவபெருமானது பொன்மயமான பாதங்களைப் புகழ்ந்து பெரிய சுனை போன்ற அப்பொய்கையில் நீராடுவோமாக.
பிறவித் துன்பமாகிய அழுக்கு எம்மைப் பிணித்துள்ளது. அவ்வழுக்குப்போக நாம் சிவபெருமானது பக்தி வெள்ளத்தில் மூழ்கி நீராட வேண்டும். சிவானந்த வெள்ளமே பிறவியாகிய அழுக்கைக் கழுவவல்லது என அழகாகச் சொல்கிறார்கள். கர நீ தும் எண் பதறி கு ஒடுக் கலியும் - மறைத் தும் எண் ற பொருள்களையும் கொள்ளலாம். ஆர்த்த - பிணித்த விளையாடி - விளையாடுபவன் என வினையாலணையும் பெயராக வந்தது. இருஞ்சுனை - பெரிய சுனை, இங்கு பொய்கையாயிற்று.
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார்வந்த சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்த பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
நீர் மிகுந்த பொய்கையானது சிவசக்தி போல இருக்கிறது. எப்படியென்றால் பொய்கையில் பசிய கருங்குவளை மலர்களும் செழிப்பான செந்தாமரை மலர்களும் கலந்திருக்கின்றன. அக்காட்சி கருங்குவளை நிறமுள்ள உமையம்மையாரும் , செந் தாமரை நிறமுள்ள சிவபெருமானும் சேர்ந்திருப்பது போல இருக்கிறது. பொய் கையில ஆங் காங் கே குருகு எனப் படும் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன. உமையம்மையாரின் கையில்
- 22 -

குறிப்பு
அகளங்கன்
குருகு எனப்படும் கை வளையல்கள் காணப்படுகின்றன. பெயரளவில் குருகு என்பது நீர்ப்பறவைகளையும், கை வளையல்களையும் குறித்த சிலேடையாகின்றது. எனவே பொய்கையிலும் குருகு உண்டு. உமையம்மையாரிடத்தும் குருகு உண்டு. பொய்கையில் அங்கங்கு குருகு உண்டு. உமையம்மையாரின் அங்கத்தில் குருகு உண்டு. இதுவும் சிலேடை.
மேலும் (பின்னும்) பொய் கையில் சத்தம் (அரவம்) ஏற்படுகிறது. சிவபெருமானிடத்தே பாம்புகள் (அரவம்) பின்னிக் கிடக்கின்றன. இங்கு பின்னும் அரவத்தால் என்பதில் பின்னும் என்பதும் அரவம் என்பதும் சிலேடையாக அமைந்துள்ளன. நீர் ப் பாம்புகள் பொய் கையில் பின் னிக் கரிடப் பதாலும் , சிவபெருமானிலும் பாம் புகள் பரிண் ணிக கவிடப் பதாலும் , சிவபெருமான் போல பொய் கை விளங்குகிறது என்றும் கொள்ளலாம். எப்படிப் பார்ப்பினும் பின்னும் அரவத்தால் பொய்கையும் சிவபெருமானும் ஒப்பு.
தங்கள் அழுகி கைக் கழுவிப் போக குபவர்கள் பொய்கையை வந்தடைகின்றார்கள். தங்கள் மலபந்தத்தை நீக்க விரும்புபவர்கள் சிவசக்தியிடம் வந்து சேருகிறார்கள். (மலம் என்பது அழுக்கையும் மலத்தையும் குறித்த சிலேடை) இக் காரணங்களால் எங்கள் இறைவியையும் இறைவனையும் போன்று அமைந்துள்ள நீர் பொங்குகின்ற பொய்கையில், உடல் நீரினுள் போகும் படி (மூழ்கும் படி) பாய்ந்து பாய்ந்து, நம் கைகளில் அணிந்துள்ள சங்கு வளையல்கள் ஒலிக்க, நம் காற் சிலம்புகளும் அவ்வொலியோடு கலந்து ஒலிக்க, எங்கள் மார்பகங்கள் (ஸ்தனங்கள்) பூரித்தெழ நாம் துழாவுகின்ற நீர் பொங் க, தாமரைப் புக் களையுடைய நீரில் குதத் து நீராடுவோமாக,
அங்கங் குருகினத்தால் என்பது அங்கம் குருகு இனத்தால் எனவும், அங்கங்கு குருகு இனத்தால் எனவும் சிலேடையாகப் பொருள் கொள்ளப்படுகின்றது.
குருகு - வளையல், நீர்ப்பறவை. பின்னும் - மேலும், பிணைந்து கிடக்கும் அரவம் - பாம்பு, சத்தம் மலம் - அழுக்கு, மும்மலம், மடு - பொய்கை
சிவசக தி யையும் பொயப் கையையும் ஒப் பிட்ட கவிநயம் சிறப்பானது. சொற் சிலேடை பொருட் சிலேடை கொண்டது. நயம் காண்பார்க்கு நல்ல விருந்து பொய்கை கருங்குவளையும் செந் தாமரையும் கலந்து அர்த்த நாரீஸ் வரர் கோலத்தில் காட்சியளிக்கிறதாகச் சொன்ன நயம் ரசிக்கத்தக்கது.
- 23

Page 14
14)
குறிப்பு
திருவெம்பாவை காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொண்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி பேதித்த நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடுரலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
காதுகளிற் பொருந்திய தோடுகள் ஆடவும், அழகிய அணிகலன்களாகிய ஆபரணங்கள் ஆடவும், கூந்தலில் உள்ள மாலைகள் ஆடவும், அம்மலர் மாலைகளில் மொய்த்த வண்டுக் கூட்டங்கள் ஆடவும், குளிர்ச்சி பொருந்திய நீரில் நீராடி தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதப் பொருளாகிய சிவபெருமானைப் பாடி, சிவபெருமான் அப்பொருளாய் நிற்கும் தன்மையைப் பாடி, ஒளி வடிவினனான இறைவனின் கருணைத் திறனைப் பாடி, இறைவன் அணிந்துள்ள கொண்றை மலர் மாலையைப் பாடி, எமி இறைவனின் எலி லாவற் றுக் கும் முதலாயிருக கலின ற சிறப் பைப் பாடி, எலி லாவற் றுக் கும் முடிவாயிருக்கும் தன்மையைப் பாடி, உயிர்களாகிய எங்களை வேறுபடுத்திப் பாதுகாத்து வளர்த்து மேல் நிலையடையச் செய்த வளையலனிநி த கைகளையுடைய உமையம் மையாரின் திருவடிகளின் அருட் திறத்தினைப்பாடி நீராடுவோமாக.
சீதம் - குளிர்
தாயானவள் தனது பிள்ளைகளின் இயல்புகளையும் தேவைகளையும் உணர்ந்து, தன் பிள்ளைகளுக்கு வேண்டியதை வேண்டிய காலத்தே செய்ய வேண்டிய கடமை பொருந்தியவள். ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வெவ்வேறு தேவையுள்ள பிள்ளைகளைக் கவனிக்க முடியாது. அதனால் பிள்ளைகளிலே மாறுபாடு காட்ட வேண்டியவளாகின்றாள்.
நோயுள்ள பிள்ளைக் கு மருந்தும் ஊட்டச் சத்தும் கொடுக்கின்ற அதேவேளை மிகுந்த ஆரோக்கியமும் உடல் வலுவும் உள்ள பிள்ளைக்கு மருந்தும் ஊட்டச்சத்தும் கொடுக்க வேண்டியதில்லை. இந்தப் பேதம் கட்டாயத் தேவையாகிறது. இந்த அடிப்படையில் எம் பக்குவ நிலைக்கேற்ப எம்மை வளர்த்தெடுக் கும் தாயாகிய உமையம் மையார் பேதித் து வளர்ப்பவளாகின்றாள். பேதித்து' என்பதற்கு இரும் பைப் பொன்னாக்கினாற் போல எம்மை மாற்றி என்றும் உரைப்பர்.
- 24 -

15)
குறிப்பு
அகளங்கன் ஒரொருகால் எம்பெருமான் எண்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஒவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கணிபனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தாண்பணியாள் பேரரையற்கு இங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்த ஆடுஏலோர் எம்பாவாய்,
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
கச்சணிந்த, ஆபரணங்கள் பொருந்திய தனங்களையுடைய பெண்களே! சிவானுபவ நிலையில், பக்திப் பரவச நிலையிலுள்ள பெண்ணொருத்தி, மனம் மிகவும் மகிழ்ச்சியடைய, ஆனந்தக் கண்ணி ஒரு பொழுதும் மாறாமல் இடைவிடாது நீண்ட தாரை தாரையாகக் கண்களினின்றும் வழிந்தோட, அடிக்கடி ‘எம்பெருமான் எம்பெருமான்' என்று கூறி, எம் தலைவனாகிய சிவபெருமானது சிறந்த புகழை எப்போதும் வாய்தவறாமல் இடைவிடாது பாடிக்கொண்டிருப்பாள்.
தெய்வத் திருவருள் பெற்ற அம் மங்கை நமக்கு வழிகாட்டப் பூமியில் ஒரு தடவை வந்து பிறந்தாளோ என்று சொல்லத்தக்கவளாயிருக்கிறாள். சிவபெருமானையே அன்றி வேறு தேவர் களை வழிபட மாட் டாளர் . பெரு நீ தலைவராக ய சிவபெருமானுக்கு இவ்விதமாகப் பக்திப் பித்துக் கொண்டவராக வேறு யாரொருவரால் ஆகக் கூடும். இவ்விதமாக இப் பெண்ணை ஆட்கொள்ளும் அதிதிறமை வாய்ந்த வித்தகராக விளங்கும் சிவபெருமானுடைய பாதங்களை நாம் வாயாரப் பாடிக்கொண்டு, அழகிய மலர் நிறைந்த பொய்கை நீரில் பாய்ந்து நீராடுவோமாக.
ஒரொருகால் - அடிக்கடி, ஒவ்வொரு பொழுதும், ஓர் ஒரு கால், கால் - பொழுது. வாயோவாள் - வாய், ஒவாள் - வாய்ஒழியாமல் ஒவா - இடைவிடாத, தாரை - நீர்த்துளி பார் - பூமி, பேரரையர் - பெரிய அரசர் வித்தகர் - திறமைமிக்கவர், வார் - கச்சு, ஏர் - அழகு
வாருருவப் பூண் முலையீர்! சித்தம் களிகூர நீரொருகால் ஒவா நெடுந் தாரை கண் பணிப்ப ஓரொருகால் எம் பெருமான் என்றென்றே நம் பெருமான் சீரொருகால் வாயோவாள் எனப் பொருத்தி பொருள் கூறப்பட்டுள்ளது.
பாரொருகால் வந்தனையாள் என்பதற்கு பூமியில் விழுந்து வணங்கியபடியே கிடக்கின்றாள் எனப் பொருள் கொள்வாருமுண்டு. இப்பாடலில் அழுதழுது அடியடைந்த அன்பராகிய மாணிக்க வாசக சுவாமிகள் தனது நிலையை ஒரு பெண் ணினி நிலையாக்கிக் கூறுவதாகக் கொள்ளலாம். பிறதெய்வங்களைத்
- 25 -

Page 15
16)
குறிப்பு
திருவெம்பாவை தொழாது கணவனை மட்டுமே தொழுபவள் பெரும் கற்பரசி எனத் திருவள்ளுவர் கூறியது போல பெருந் தலைவனாகிய சிவபெருமான்மேல் பக்தி வைராக்கியமாகிய கற்புக் கொண்ட பெண் பிறதெய்வங்களை வணங்காள் என்பதை “விண்ணோரைத் தான் பணியாள்” என்ற வகையில் எடுத்துக் காட்டுகிறார். இதுவே ஆன்மீகக் கற்பு மனம், வாக்கு, காயம் மூன்றாலும் சிவபெருமானை மட்டுமே வணங்கும் கற்பு நெறி இங்கு காட்டப்பட்டுள்ளது.
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்தடையாள்
எண்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் எனினச் சிலைகுலவி நம் தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமாண் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முனி சுரக்கும் இன்னருளே
எனினப் பொழியாய் மழைஏலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
மேகமே! நீ கடலை அடைந்து அதன் நீர் குறையும்படி முகந்து கொண்டு எழுந்து, எம்முடைய உமையம்மையாரின் திருமேனி போன்ற கருநல நிறமாக விளங் கசி, எம் மை அடிமைகளாகக் கொண்ட அவ் இறைவியின் சிறிய இடையைப் போல மின்னிப் பிரகாசித்து, எம்முடைய பெருமாட்டியினது திருப்பாதங்களின் மேல் அணியப்பெற்றிருக்கும் பொன்மயமான அழகிய சிலம்பின் ஒலி போல முழங்கி, எம் இறைவியின் அழகிய கண் புருவங்கள் போல வானவில்லை வளையவிட்டு, நம்மை அடிமைகளாகவுடைய உமையம்மையார், தன்னிலிருந்தும் பிரிதலில் லாத எமது தலைவராகசிய சிவபெருமானது அன்பர்களாகிய நமக்கு, சிவபெருமான் அருள் செய்வதற்கு முன்பாகவே முதலில் சுரந்து பொழியும் இனிய அருள் மழை என்று சொல்லும் படியாக மழையைப் பொழிவாயாகுக.
முன்னி - அடைந்து, முன்பாக, பொலிந்து - பிரகாசித்து என இடம் நோக்கிப் பொருள் கொள்ளப்பட்டது.
இறைவரி தனது அடியவர் களாகிய எமக் கும் , தன்னைவிட்டுப் பிரியாத சிவபெருமானது அடியவர்களுக்கும் அருள் பொழிவது போல மழை பொழிவாயாகுக என சிலர் உரை வகுக்கின்றனர். அது பொருந்தாது. இதைப்பாடும் பெண்கள் சிவனடியார்கள். என்பதே முதன்மை. எனின் சிவனடியார்களுக்கு முதலிலும் தன் அடியார்களுக்கு அதன்பின்னும் சொரிகின்ற அருள் எனில் பொருந்தும். நமக்கு என்பது சிவனடியார்களாகிய நமக்கு எனக் கொள்வதே பொருந்தும்.
- 26 ہے

17)
குறிப்பு
அகளங்கன் முண் ணி எண் பதை முன் பு எனக் கொண் டு, எமது சிவபெருமான் தமது அன்பர்க்கு அருள்பாலிக்க முன்பு அவரது அன்பர்களாகிய எமக்கு உமையம்மையார், முதலே சுரக்கும் இன்னருள் எனப் பொருள் கொள்வது பொருந்தும். முன்னிக் கடலைச் சுருக்கி என்பதை முன் இக்கடலைச் சுருக்கி எனப் பிரித்து கார் காலத்திற்கு முன் இக்கடல் நீரைக் குறைத்து முகந்து கொண்டு சென்று எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இக்கடல் என எதைக் குறிக்கிறது என்பது விளங்கவில்லை. எனவே அது பொருந்தாது.
செங்கண் அவன் பால் திசைமுகண் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழ
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
வாசனை தங்கியிருக்கும் கரிய கூந்தலையுடைய பெண்ணே! செந் தாமரைப் பூப் போன்ற கண் களையுடைய மகாவிஷ்ணு விடத்தும், நான்கு திசைகளுக்கும் நான்கு முகங்களையுடைய பிரம தேவனிடத்தும், வேறு தேவர்கள் எவரிடத்தும், மற்று எவ்விடத்திலுள்ள எவரிடத் தும் இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பம் நம்மிடத்து உளதாகும்படி, எம் குற்றங்களைப் போக்கி, இங்கே நமது வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை LD 6\)ri போன்ற பொண் மயமான பா தங்களை நாம் வழிபடுவதற்காகக் காட் டியருளும் மாவீரனை, கருணை பொழிகின்ற அழகிய கண்களைக் கொண்ட எம் தலைவனை, அடியவர்களாகிய எங்களுக்குக் கிடைத்தற்கரிய அமுதாகக் கிட் டியவனை, நமது சிவபெருமானைப் பாடி, பேரின் பம் பெருகும்படி தாமரை மலர்கள் நிரம்பிய பொய்கையிலே உள்ள நீரில் பாய்ந்து நீராடுவோமாக.
கொங்குண் கருங்குழலி - கொங்கு உண் கருங்குழலி - வாசனை
தங்கிய கரிய கூந்தலை உடையவளே.
இச்சொல் உமையம் மையைக் குறிப்பதாகச் சிலர் பொருள்
கொள்வர்.
கோதாட்டி - கோது, ஆட்டி - குற்றங்களைப் போக்கி
கொங்குண் கருங்குழலி என ஒருபெண்ணை விளித்துச்
சொல்வதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. “கொங் குண்
- 27

Page 16
18)
குறிப்பு
திருவெம்பாவை கருங் குழலி நம தம் மைக் கோ தாட் டி’ எனச் சேர்த் து உமையம்மையார் நம் குற்றங்களைப் போக்கி நாம் யாவரிலும் மேம்பட்ட இன்பம் பெற வைத்தார் எனப் பொருள் கொள்வர் சிலர்.
அண்ணா மலையாண் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவிறு அற்றால்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங் கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றாண் கழல்பாடி
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடுஎலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
GALI 600 (3600 ! திருவண் ணா மலையில் விற் றிருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானது திருவடித் தாமரைகளை அடைந்து வணங்குகின்ற தேவர்களின், தலைமுடிகளிலே உள்ள மாணிக்கக் கற்களின் கூட்டங்களின் பிரகாசித்தலாகிய வல்லமை அற்றுப் போவதுபோல, அதாவது, சிவபெருமானது பாதங்களின் பிரகாசத்தின் முன்னே, மாணிக்கங்களின் ஒளி மழுங்கிப் போவது போல, சிவபெருமானின் வலது கண்ணாக இருக்கும் சூரியனின் கதிர்கள் வந்து இருள் நீங்க நட்சத்திரங்களின் குளிர்ச்சி பொருந்திய ஒளி மழுங்கி, நட்சத்திரங்கள் யாவும் நீங்கிப் போகின்ற உதயப் பொழுதில், பெண்ணாகி, ஆணாகி, அலியாகி விளங்குகின்ற ஒளிபொருந்திய விண்ணாகி, மண்ணாகி இவை அனைத்தினின்றும் வேறாகி அகக் கண்ணாலும், புறக் கண்ணாலும் பருகும் அமுதமாகியும் நிலைபெற்று நின்ற சிவபெருமானது பாதங்களின் பெருமையைப் பாடி, இந்தப் பூக்கள் நிறைந்த பொய்கை நீரில் பாய்ந்து நீராடுவோமாக.
வீறு அற்றல் - வல்லமை நீங்குதல், கரப்ப - நீங்க, தாரகை நட்சத்திரம்
சிவபெருமானது பாதங்களின் பிரகாசத் திண் முன் , தேவர்களது மகுடங்களிலுள்ள மாணிக்கங்களின் ஒளி மங்கிப் போவது போல, சூரியன் தோன்ற நட்சத்திரங்களின் ஒளி மங்கிப் போகின்ற காலைப்பொழுது என காலைப்பொழுதை அழகாக வர்ணித்தார். கண்ணார் இரவி என்பதை (கண் - இடம்) இடம் நிறையும் கதிரவன் எனப் பொருள் கொள்வாருமுண்டு. கண்ணார் அமுதம் என்று சிவபெருமானைக் குறிப்பது கண்ணுக்கினியான் என்பதிலும் சிறந்த பொருளைத் தருகிறது.
- 28 -

19)
உரை
குறிப்பு
அகளங்கன் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொண்று உரைப்போம்கேள்.
எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க. எங்கை உனக்கல்லாத எப்பணியும் செய்யற்க,
கங்குல் பகல்எம்கண் மற்றொன்றும் காணற்க. இங்கிப் பரிசே எமக்கொங்கோன் நல்குதியேல்
எங்கெழில் எண் ஞாயிறு எமக்குஏலோர் எம்பாவாய்
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
தாயானவள் தன்கையிலுள்ள பிள்ளையைத் தானே காத்துக் கொள்வாள். அது அவள் கடமை “உன் கையிலிருக்கும் உன் பிள்ளைக்கு நீயே பாதுகாவல்” என்று சொல்வது பழமொழி. அச்சொல்லைப் புதுப்பிப்பது போல “இறைவனே எம்மை நீ காத்தருள வேண்டும்” என்று சொல்ல எமக்கு அச்சமாகின்றது. ஏனெனில் அப்படிச் சொல்வது அவசியமற்றது. தாயிடம் “உன் கைப்பிள்ளையை நீ காத்துக் கொள்” என்று சொல்வது தாய்க்குக் கோபத்தைத் தரவல்லது. அதேபோல எம்மைக் காத்துக்கொள் என்று உன்னிடம் நாம் முறையிடுவது உனக்கும் கோபத்தைத் தர வல்லதே.
அந்த அச்சத்தால் அப்படிச் சொல்ல முடியாதவர்களாக, எங்கள் பெருமானே உனக் கு நாம் ஒரு விண் ணப் பஞ செய்கிறோம். அதனைச் செவிமடுத்தருள வேண்டும். எமது தனங்கள் நினது அன்பரல் லாரது தோள்களிலே பொருந்தக் கூடாது. அதாவது எமக்கு நின் அன்பரல்லாத ஒருவர் கணவராக வரக்கூடாது. எமது கைகள் உனக்கேயல்லாது வேறெவர்க்கும் எந்தப் பணிவிடையையும் (தொண்டு) செய்யக்கூடாது. இரவும் பகலும் எம் கண்கள் உன் திருக்காட்சியேயன்றி வேறொன்றும் காணக் கூடாது. இங்கே இவ்விதமான தன்மைகளை எமக்கு எமது தலைவனாகிய நீ தருவாயாக இருந்தால் சூரியன் எங்கே உதித்தால் எமக்கென்ன.
உங்கை - உன் கை, அங் கப் பழஞ் சொல் - அங்கு அப்பழஞ்சொல், எங்கை - எம் கை
எங்களைக் காக்கவேண்டும் என்று நாங்கள் உன்னிடம் வேண்டுவது, எங்களுக்கு உன் மேலுள்ள நம்பிக்கைக் குறைவால் என நீ நினைத்து விடுவாயோ என்ற அச்சம் எமக்குண்டு என்பதை அருமையாகப் பிள்ளையையும் தாயையும் வைத்து விளக்கினார்.
சூரியன் கிழக்கில் உதிக்காமல் வேறெங்கும் உதித்தால் உலகம் அழிந்துவிடும் என்பர். ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேறிவிட்டால் உலகம் அழிவது பற்றிய பயமே இல்லை என உரைப்பதாகக் கொள்ளலாம்.
- 29 -

Page 17
20)
குறிப்பு
திருவெம்பாவை போற்றி அருளுகநிண் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள். போற்றிஎல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள். போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்.
போற்றிமால் நாண்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொண் மலர்கள். போற்றியாம் மார்கழிநீர் ஆடுஏலோர் எம்பாவாய்.
(அனைவரதும் கூற்றாக அமைந்தது)
எம்பெருமானே, எப்பொருட்கும் முதலாகிய நின் திருவடி மலர்கள் எம்மைப் பாதுகாத்தருளட்டும். எப்பொருட்கும் முடிவாகிய நின் செந்தளிர் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருளட்டும். எல்லா உயிர் களும் தோன்றுவதற்குக் காரணமாகிய நின் பொன்மயமான பாதங்கள் எம்மைப் பாதுகாத்தருளட்டும். எல்லா உயிர்களுக்கும் போகங்களை வழங்கிப் போகமாக விளங்கும் நின் பூப் போன்ற பாதங்கள் எம்மைப் பாதுகாத்தருளட் டும். எல்லா உயிர்களுக்கும் இறுதியைச் செய்கின்ற நின் இரண்டு திருவடிகளும் எம்மைப் பாதுகாத் தருளட் டும் , திருமாலும் பிரமதேவனும் காணாத நின் தாமரை போன்ற பாதங்கள் எம்மைப் பாதுகாத்தருளட்டும். யாம் உய்யும் வண்ணம் ஆட்கொண்டருளும், பொன்மலர்களாகிய நின் பாதங்கள் எம்மைப் பாதுகாத்தருளட்டும். அவ்வாறு வணங்கி நாம் மார்கழிநீரை ஆடுவோம்.
பாதமலர், செந்தளிர்கள், பூங்கழல்கள், புண்டரிகம், பொன்மலர்கள் ஆகிய சொற்கள் சிவபெருமானது பாதங்களைக் குறித்தன. இவை உருவகங்களாகவும் ஆகுபெயர்களாகவும் இங்கு வந்தன. மார் கழிக் காலத்தில் ஆடும் நீர் என்பதால் மார் கழி நீர் எனப்பட்டது.
புண்டரிகம் - தாமரை சிவபெருமானது பாதங்கள் , யாவற்றுக் கும் ஆதியாயும் , அந்தமாயும் யாவும் தோன் றுவதற்கும் , வாழ்வதற்கும் , அழிவதற்கும் காரணமாகியுள்ளன எனச்சொல்லி, அப்பாதங்களை திருமால் பிரமன் ஆகியோராலும் காணப்படாதவை எனப்பெருமை பேசி, அவை தம்மைக் காக்கவேண்டுமென வேண்டுகின்றனர்.
முற்றும் ,
திருச் சிற்றம்பலம்.
- 30 -


Page 18


Page 19
திருக்குந்ஷ் கின
1330 திருக்குறட்
செய்து ஒப்புவிப்பெ
10,000/= பணப்பரி
Upig@ 3
தொடர்பு முக
அக
9 O, g5 (I
6) J
பரிசு
சிவநெறிப்புரவலர் சீ.
சீ. ஏ. இராமஸ்வா

.2003-- -{ھے|لینتھHج6
பாக்களையும் மனனஞ்
வர்களங்க் (யாவருக் ii)
ளுககு யாவருககுப
சு உடன் வழங்கப்படும்.
01 - 01 - 2004
வரி:
எாங்கன் நநாவற் குளம்,
வுனியா,
வழங்குபவர்;
ஏ. இராமஸ்வாமி அவர்கள்
மி அறக்கட்டளை நிதியம்
༄༽