கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாமறிந்த நாவலர்

Page 1
தமிழ்மணி &
வவுனியா இந்து மாமன்ற
 

அகளங்கண்
வெளியீடு - 15-01-2008

Page 2

அகளங்கன்
2.
3Faudub “மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
நாமறிந்த நாவலர்
தமிழ்மணி அகளங்கன்
வவுனியா இந்து மாமன்ற வெளியீடு
5-01-2008
-1-

Page 3
நாமறிந்த நாவலர்
நாமறிந்த நாவலர்
எழுதியவர்: அகளங்கன் (நா.தர்மராஜா) முதற்பதிப்பு: 22-1-1997 இரண்டாம் பதிப்பு: 18-01-2008
வெளியீடு: இந்துமாமன்றம், பூங்காவீதி,
ଈଶyଗର୍ଦturt. அச்சுப்பதிப்பு: ஜெய்னிக்கா அச்சகம், வவுனியா. விலை: ரூபா. 80/=
இந்துமாமன்ற வெளியீடுகள்.
01.
02.
03.
04。
05.
06.
07.
08.
09.
0.
ii.
புதிய மண்டப திறப்புவிழா மலர் 20-40-1993 பன்னிரு திருமுறை அறிமுகம் 01-01-1994 (அகளங்கன்) ஆத்திசூடி (விளக்கவுரை) 01-01-1995 (அகளங்கன்) மேன்மைகொள் சைவரீதி 01-01-1996 (ந. சிவன்) வவுனியா வெளிவட்ட வீதி சிந்தாமணிப் பிள்ளையார் திருஒளஞ்சற் பாமாலை 14-04-1998
{அருட்கவிஞர். கல்மடு பொன்.தில்லையம்பலம்) கொன்றை வேந்தன் (விளக்கவுரை) 01-01-1996 (அகளங்கன்) வாக்குண்டாம் {முதுரை) விளக்கவுரை 10-01-1997 (அகளங்கன்) 18 ஆண்டு நிறைவு மலர் - சிவபுராணம் (பொருளுரை) 14-04-1997 (அகளங்கன்) நாமறிந்த நாவலர் 22-11-1997 (இகளங்கன்) நல்வழி (விளக்கவுரை) 01-01-1998 அகளங்கன்) திருவெம்பாவை (விளக்கவுரை) 12-12-2002 (அகளங்கன்)
-2-

அகளங்கன்
8.
பதிப்புரை
இன்று தமிழ் மக்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ்ப் பேச்சு நடை - உரை நடை எளிதாக இருக்கின்றது என்றால் மூலகாரணம் நல்லை ஆறுமுக நாவலர் பெருமான் எடுத்துவைத்த தமிழ் வழியே.
இதனை நினைவு கொள்ளுமுகமாக 22-11-1997ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூசைத் தினத்தில் - நாம் அறிந்த நாவலர் என்னும் நூலை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் மூலம் தொகுத்து வெளியிட்டு வவுனியா இந்து மாமன்றத் தாராகிய நாம் பெருமையடைந்தோம்.
இப்போது இந்நூலின் தேவையறிந்து இரண்டாம் பதிப்பை வெளியிடுகிறோம்.
அன்னாரது தமிழ்ப்பணியும், சைவப்பணியும் வருங்காலச் சந்ததியினர் அறிந்து அவர் வழியைப் பின்பற்ற ஆவன செய்வோம் என்று உறுதி கொள்வோம்.
எமது மன்ற வெளியீடுகள் பலவற்றைத் தொகுத்தும், எழுதியும் உதவிவரும் தமிழ்மணி அகளங்கன் அவர்கட்கு எமது மன்றத்தின் சார்பில் நன்றியைத் தெரிவிப்பதுடன் எமது மன்றப் பணிகளில் எதிர்காலங்களிலும் சிறந்த பணிபுரிய இறைவன் அவருக்கு சகல வளங்களையும் அருள வேண்டுகிறோம்.
இறைபணிச் செம்மல் சிவநெறிப்புரவலர்
6ை.செ.தேவராசா சீ. ஏ. இராமஸ்வாமி தலைவர் செயலாளர்
வவுனியா - இந்துமாமன்றம் பூங்காவீதி, வவுனியா.
5-O-2008
م-3مه

Page 4
நாமறிந்த நாவலர்
密_
ஈழத்திலும், வெளியிலும் சைவமும், தமிழும் தழைத்தோங்கக் காரணமாக இருந்த யாழ்ப்பாணத்து நல்லுர் ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூசைத் தினமான 22-11-1997ல் வெளியிடுவதற்காக இச்சிறு நூலை எழுதித் தரும் படி வவுனியா இந்து மாமன்றத்தின் தலைவர் சிவத்திரு.சீ.ஏ.இராமஸ்வாமி அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
“நாமறிந்த நாவலர்” என்று தலைப்பிட்டு, இந்நூலில் அடங்கவேண்டிய விடயங்களையும் அவர் என்னிடம் குறிப்பிட்டார். அதற்கிணங்க இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை எழுதுவதற்கு ஆதாரமாக இருந்த நூல்கள் (1) இந்து சமய, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் 1990 ல் வெளியிட்ட இந்து கலைக்களஞ்சியம் பகுதி - , (2) சென்னை காந்தளகம் வெளியிட்ட ஈழம் தந்த நாவலர், (3) இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் இலக்கியவழி ஆகியவை. முதல் இரண்டு நூல்களும் பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்களால் எழுதப்பட்டவை.
மிகவும் சுருக்கமான அறிமுக நூலாக இந்நூலை ஆக்கியுள்ளேன். மாணவர்களும், மற்றையோரும் நாவலர் பெருமானை அறிந்து கொள்ள இச் சிறுநூல் பெரிதும் உதவும் என்றே நம்புகிறேன்.
எனது பன்னிரு திருமுறை அறிமுகம் , ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, திருவெம்பாவை விளக்கவுரை நூல்களையும், சிவபுராணம் (பொருளுரை) நூலையும் வவுனியா இந்துமாமன்றம் வெளியிட்டுச் சைவத்தமிழ்ப் பணிசெய்துள்ளது. அந்த வரிசையில் இந்நூலையும் வெளியிடுகிறது.
வெளிவருகிறது.
இந்நூல் எமது எண்ணத்தை நிறைவு செய்ய எல்லாம் வல்ல சிவபெருமானின் பெருங்கருணையை வேண்டுகிறேன்.
நன்றி 90,திருநாவற்குளம்,
வவுனியா, 5-01-20 (8
-4-

அகளங்கன் 龛_
சிவமயம்
நாமறிந்த நாவலர்.
காலம் 3 ஐரோப்பியர் காலம் (கி.பி. 19ம் நூற்றாண்டு)
பிறப்பு : 1822 - 12 - 18
பெற்றோர்
தந்தை : நாடகப் புலவராகவும், வைத்தியராகவும் விளங்கிய
யாழ்ப்பாணத்து நல்லூர் ப.கந்தப்பிள்ளை
தாய் : சிவகாமி
பிறந்த இடம்: யாழ்ப்பாணத்து நல்லூர்
பெயர் 3 ஆறுமுகம்
மர81 : யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலி ஞானப்பிரகாச
முனிவரின் மரபு.
தமிழ் ஆற்றலும் ஆர்வமும் தந்தையார் எழுதி முற்றுப்
பெறாதிருந்த இரத்தினவல்லி விலாசத்தை எழுதி நிறைவு செய்தார்.
தமிழ் இலக்கண, இலக்கிய ஆசிரியர்கள் : இவரின் தமிழ் இலக்கண, இலக்கிய ஆசிரியர்களாகப் பின்வருவோரைக் குறிப்பிடலாம். நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர். நல்லூர் வேலாயுத முதலியார். இருபாலை சேனாதிராய முதலியார். நல்லூர் ம.சரவணமுத்துப் புலவர்.
படித்த பாடசாலை: யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்த
மிஷன் - மத்திய கல்லூரி (இங்கு ஆங்கிலமும் அக்காலப் பாடத்திட்டப் படியான பாடங்களும் கற்றார்.)
பதவி : தான் கல்வி கற்ற பாடசாலையிலேயே ஆசிரியராகவும், அங்கிருந்த பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் தமிழ்ப் பண்டிதராகவும் (ஆசிரியர்) ஏழு ஆண்டுகள் தொழில்
புரிந்தார். (1841 - 1848)
-5-

Page 5
நாமறிந்த நாவலர் சைவசமய உணர்வு: இவருக்கு இளமையிலேயே இருந்த சைவ
மூலம் காண்போம். "இதனை யான் என் சிறுவயது முதலாகச் சிந்தித்துச் சிந்தித்து சைவ சமயத்தை வளர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வாரி ல்லையே. இதற்கு யாது செய்யலாம், சைவ சமய விருத்தியின் கண்னதாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சக்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சக்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதலும், பலருக்குப் பிதற்று தலினுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்கு வேனாயினேன்." இவ்வுரைக்குக் காரணமாக இருந்த அக்காலச் சூழ் நிலையை அடுத்து நோக்குவோம். காலச் சூழ்நிலை
தமிழ் , சைவப் பண் பாடுகளோடு சிறிதளவும் சம்பந்தமில்லாத, ஒத்துப்போகாத, ஒத்துப்போக விரும்பாத, அந்நிய ஏகாதிபத்திய வாதிகளான ஐரோப்பிய ஆங்கிலக் கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்த காலம் அது.
சைவ சமயத்தை அஞ்ஞானச் சமயம் என்றும், அதனைக் கடைப்பிடிப்பவர்களை அஞ்ஞானிகள் என்றும் குற்றஞ்சாட்டி, கடைப் பிடிப்பவர்களுக்குப் பல்வேறு தொல் லைகளும் , தண்டனைகளும் ஆட்சியாளர்களாலே கொடுக்கப்பட்ட காலம் elgol.
சைவ சமயச் சின்னங்களாகிய விபூதி, உருத்திராக்கம் முதலியவற்றை அணிதல் ராஜத் துரோகமாகக் கருதப்பட்ட காலம்
Segol.
பாடசாலைகளில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியம், ஆங்கிலேயர் சரித்திரம், விவிலியம் (Bible) முதலான கிறிஸ்தவ,
ஆங்கிலேயரோடு சம்பந்தப்பட்ட நூல்கள் மட்டுமே கற்பிக்கப்பட்ட -6-

அகளங்கன் காலம் அது. இப்பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்பட்டன. தமிழ், பாடசாலைகளில் கற்பிக்கப்படாத காலம். அப்பாடசாலைகளில் கல்வி கற்க விரும்புபவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றியே ஆகவேண்டும். ஞானஸ்நானம் பெற்று பெயர் மாற்றமும் செய்து கொள்ள வேண்டும் எனப் பாதிரியார்கள் நடந்து கொண்ட காலம் அது. இருப்பினும் ஒரு சிலருக்கு அவர்களின் சமூக அந்தஸ்த்தைப் பொறுத்து விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது. அவர்களில் நாவலரும் ஒருவர். நாவலர் சமயம் மாறவில்லை என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்று கீழே தரப்படுகிறது.
நாவலர், தான்படித்த யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்த மிஷன் - மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், அவருக்குரிய சம்பளமாகிய நூறு ரூபாவிற்குப் பதிலாக பாதிரிகள் முப்பது ரூபாவே வழங்கினர். அதற்குக் காரணம் அவர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றாததே ஆகும். நாவலர் இதனை ஜோன் வால்ரன் பாதிரியாருக்கு 1856ம் ஆண்டு ஜனவரி மாதம் எழுதிய கடிதத்திலே குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
"நான் ஞானஸ்நானம் பெற்றிருப்பின் என்னுடைய சேவைகளின் மாதாந்தப் பெறுமானம் பத்துப் பவுண். அது பெறாததால் எனக்கு மாதம் முப்பது ரூபா மட்டுமே கொடுக்கப்பட்டது. இங்கும் மாதாந்தம் 7 பவுண் தியாகஞ் செய்யப்பட்டதை நீர் காணலாம்"
கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறுபவர்களுக்கு அரச உத்தியோகங்களும். சம்பள உயர்வும், உயர்கல்வி வாய்ப்பும், வெளிநாட்டுப் புலமைப் பரிசில்களும், மற்றும் பல சலுகைகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக அரசாங்கம் அறவிடும் பல்வேறு வகையான வரிகளிலிருந்தும் வரிவிலக்கும், வரிக்குறைப்பும் மதம் மாறுபவர்களுக்கு வழங்கப்பட்டன.
-7-

Page 6
நாமறிந்த நாவலர்
இத்தோடு அரச கடமைகளுக்கான சமூகப் பிரதி
நிதித்துவங்களில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்ட காலம் அது.
கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பாடசாலைகள் மூலமாகவும், போதனைகள், பிரசங்கங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரங்கள், நூல்கள் மூலமாகவும், அரசின் முழுமையான ஆதரவோடு கிறிஸ்தவ சமயத்தை யாழ்ப்பாணத்தில் முழுமையாகப் பரப்ப முழுமுயற்சி எடுத்துக் கொண்ட காலம் அது.
யாழ்ப்பாணத்தில் மிகப் பெரும் பான்மையினர் கடைப்பிடித்த சைவ சமயக் கொள்கைகளை இழித்தும், பழித்தும், சைவக் கடவுளர்களைக் கேவலப்படுத்தியும் துரவழித்தும், பாதிரிமார்களும், ஆட்சியாளர்களும் கடுமையாக நடந்து கொண்ட காலம் அது.
சைவ ஆலய வழிபாடுகளும், சமய அனுட்டானங்களும் குன்றிப்போய், சமயப்பண்பாடு சிதைவுற்று, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்கள் உதாசீனம் செய்யப்பட்டு மேலைத்தேய கலை கலாசாரத்தில் சைவத் தமிழர்கள் மோகங்கொண்டு அதில் மூழ்கத்தொடங்கிய காலம், விரும்பியோ, விரும்பாமலோ அரசின் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும் அடிபணிந்து பாரம்பரிய விழுமியங்களைக் கைவிட வேண்டிய இக்கட்டான காலம் அது. நாவலரின் சமயப்பணி:
1846ல் அதாவது யாழ்ப் பாணம் வெஸ் லியன் மெதடிஸ்தமிஷன் மத்திய கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, சைவ சமயப்பிள்ளைகளை ஒன்று திரட்டித் திண்ணைப் பள்ளியை ஆரம்பித்தார்.
1848 ஆம் ஆண்டு ஆவணிமாதம் வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமது ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார்.
-8-

器
அகளங்கன் இந்தியத் தமிழகத்தின் சிதம்பரத்திலும் 1860ல் சைவவித்தியாசாலையை அமைக்க முயன்றார். இருப்பினும் பொருளாதார உதவி அங்கு கிட்டாமையால், யாழ்ப்பாணத்திலே நிதிதிரட்டி சிதம்பரத்தில் சைவவித்தியாசாலையை நிறுவினார்.
யாழ்ப்பாணத்துக் கோப்பாய், புலோலி என்னும் இடங்களிலும் 1870 களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை அமைக்க முயன்றார்.
1872 - 1876 காலப்பகுதியில் வண்ணார்பண்ணையில் சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றினையும் ஆரம்பித்து நடாத்தினார். இதன் நோக்கம் ஆங்கிலம் கற்பதற்காகக் கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குச் சென்று மதம் மாறுபவர்களைத் தடுப்பதேயாகும்.
1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபத்திலே சைவப்பிரசங்கத்தைத் தொடங்கி 1879ம் ஆண்டு ஜீலை மாதம் வரை ஆற்றிவந்தார்.
சைவசமய நூல்கள் பலவற்றைத் தாமே எழுதியும், கிறிஸ்தவ மதக் கண்டனத் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டும், சைவசமயச் சிறப்புக்களை, உண்மைகளைத் துண்டுப்பிரசுரங்களாக வெளியிட்டும் சைவப்பணி புரிந்தார்.
உரை நடையே அக்கால மக்களின் தமிழ் அறிவுக்குப் பொருத்தமானது என்பதனையும், உலகம் முழுவதும் உரைநடை பரவி இருந்தமையை அவதானித்தும், புராணங்களை உரை (வசனம்) நடையில் எழுதி வசன நடை கைவந்த வல்லாளர் எனப்
போற்றப்பட்டார். பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்
புராணம், கோயிற் புராண உரை என்பவற்றை வசன நடையில் எழுதினார்.
இவற்றில் பெரிய புராண வசனம், திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரில் வெளிவந்தது. கந்த புராணத்தில் அசுரகாண்டம் அசுரயாகப் படலம் வரை வசன நடையில் எழுதினார்.
-9-

Page 7
நாமறிந்த நாவலர் திருவிளையாடற் புராணத்தில் பெரும்பகுதியை வசன நடையில் எழுதினார். எழுதிய சைவ நூல்கள்
பெரியபுராண சூசனம், அனுட்டானவிதி, (நித்தியகரும விதி) - முதற்புத்தகம் இரண்டாம் புத்தகம், சைவவினாவிடை - முதற் புத்தகம், இரண்டாம் புத்தகம், குருவாக்கியம், சிவாலய தரிசனவிதி, சைவசமயசாரம், சைவசமயி, அனாசாரம், திருக்கோயிற் குற்றங்கள்.
யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லூர்க் கந்தசாமி கோவில் பத்திரிகை, மித்தியாவாத நிதர்சனம் ஆகியவற்றையும் எழுதி வெளியிட்டார். உரை எழுதிய சைவ நூல்கள்:
திருச்செந்தி நீரோட்ட யமக அந்தாதி, திருமுருகாற்றுப் படை, சைவசமய நெறி, மருதூர் அந்தாதி, சொரூபானந்தப் பொருளாகிய உபநிடதம், கண்டன நூல்கள்
போலி அருட்பா, சைவ தூஷண பரிகாரம், சுப்பிர போதம், வச்சிர தண்டம், முதலானவை அவர் எழுதிய கிறிஸ்தவ மதக் கணடன நூல்களாகும் பதிப்பித்த சைவ நூல்கள்:
செளந்தர்யலகரி உரை, புட்பவிதி, கொலைமறுத்தலுரை, ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், கோயிற் புராணம், மறைசை அந் தாதி, திருக் கோவையார் உரை, திருவாசகமும் திருக்கோவையாரும். சேது புராணம், சிதம்பர மும்மணிக்கோவை, அருணகிரிநாதர் திருவகுப்பு, கந்தபுராணம், பதினோராம் திருமுறை, விநாயக கவசம், சிவகவசம், சக்திகவசம், சகலகலாவல்லி மாலை என்னும் சரஸ்வதி தோத்திரம், இலக்குமி தோத்திரம், நால்வர் நான் மணி மாலை, பெரியநாயகி விருத்தம், பிச் சாடன நவமணிமாலை, பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்திரட்டு, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்
தமிழ், திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருச்செந்தூரகவல் -10

அகளங்கன்
தமிழ்ப்பணி
t_dfF6nol JFTLD - 01, |_| T6OUT Licio - 02, eup6örg|31|Tib Llyfr 6OL JP Lifio (இது 4ம் பாலபாடமாக விளங்குவது) மற்றும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, வாக்குண்டாம் (மூதுரை). நல்வழி நன்னெறி என்னும் நீதி நூல்களுக்கு உரை எழுதியும் வெளியிட்டார்.
சூடாமணி நிகண்டு முதற்தொகுதி உரை, இலங்கைப் பூமி சாத்திரம், இலக்கண வினாவிடை, ஏர் எழுபது, திருக்கை வழக்கம், நன்னூல் விருத்தி உரை, தருக்க சங்கிரகவுரை, இலக்கணக் கொத்து. இலக்கண விளக்கச் சூறாவளி, திருக்குறள் (பரிமேலழகருரை) தொல்காப்பியச் சூத்திரவிதி முதலானவற்றைப் பதிப்பித்தார்.
இலக்கணச் சுருக்கம் இவர் எழுதிய மிகச் சிறந்த இலக்கண நூலாகும். அச்சியந்திரசாலை:
1849ல் இந்தியாவிலிருந்து அச்சியந்திரம் கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில் “வித்தியாதுபாலன யந்திரசாலை” என்னும் அச்சகத்தை நிறுவினார். முதன் முதல் இலங்கையில் சைவத் தமிழர் ஒருவரால் நிறுவப்பட்ட அச்சியந்திரசாலை இதுவே. பின் சென்னையிலும் இதே பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவினார். இவ்வச்சியந்திரசாலைகள் மூலமாகவே தாம் புதிதாக எழுதிய நூல்களையும், உரை எழுதிய நூல்களையும் மற்றும் சைவ, தமிழ் நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார். புராணபடனம்:
புராணங்களை ஒருவர் இசையோடு பாட (வாசிக்க) தகுதியானவர் ஒருவர் உரை விளக்கத்தை இசையோடு கூறுதலாகிய புராண படனத்தை ஏற்படுத்தியவர் இவரே. கந்தபுராண படனமே முக்கிய இடம் பெற்றது. பிடி அரிசித்திட்டம்:
தாம் உருவாக்கிய பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களுக்குச் சிறுதொகை வேதனம் வழங்குவதற்காகத்
-11

Page 8
நாமறிந்த நாவலர் தாய்மாரிடம் சோறாக்கும் போது ஒருபிடி அரிசியைச் சேமித்துத் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்மூலம் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டினார்கள். ஆசிரியர்களுக்கு வேதனமும் கிடைத்தது. கஞ்சித் தொட்டித் தருமம்:
மக்கள் பஞ்சத்தில் வாடிய காலத்தில் சாதிசமய பேதம் பாராட்டாமல் கஞ்சி வார்த்துக் காப்பாற்றினார். அரசியல்
சேர்.பொன் .இராமநாதன் அவர்கள் இலங்கைச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்குக் காரணகர்த்தராக விளங்கினார். மொழிபெயர்ப்பு:
ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க கிறீஸ்தவ வேதாகம நூலாகிய விவிலியத்தைத் (Bible) தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துக் கொடுத்தார். அவரது மொழிபெயர்ப்பே தமிழகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிப்பிக்கப்பட்டது. பட்டம்:
1849ல் தமிழகத்துத் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கிக் கெளரவித்து. கவிதையாக்கம்:
தேவகோட்டைத் தலபுராணம் பாடத் தொடங்கி 500 பாடல்கள் வரை பாடினார். புலோலி நகர் பூரீ பசுபதீஸ்வரப் பெருமானார் திருவூஞ்சற் பாடல்களையும். பல தனிப்பாடல்களையும், பல கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். வழிகாட்டல்:
திருக்கேதீஸ் வரத்தையும், நகுலேஸ் வரத்தையும் (கீரிமலை) சைவர்களுக்கு அறிமுகப்படுத்தி வழி காட்டினார்.
நல்ல சமஸ்கிருத அறிவும் வாய்க்கப்பெற்ற இவர் சைவப்பணி, தமிழ்ப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி, அரசியற்பணி எனப் பல பணிகளையும் அறப்பணிகளாகச் செய்தார்.
-12

அகளங்கன் D65 CE)6
1879ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 5ம் திகதி (5-12-1879) சிவனடி சேர்ந்தார். சைவத்தையும், தமிழையும் காத்த காரணத்தால் ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படுகிறார். நாவலர் சிலை:
கொழும்பு ஆறுமுக நாவலர் சபை யாழ்ப்பாணத்து நல்லூரில் 1969ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் திகதி நாவலர் அவர்களின் சிலையை நிறுவியது.
வவுனியா நகரசபையின் ஆட்சிமன்றத்தினர் தமது மூன்றாண்டு நிறைவு விழாவை 04-04-1997ல் கொண்டாடிய போது நாவலர் அவர்களுக்கும் வவுனியா நகரினுள் சிலையை ព្រំប្រជារាំu|66T601j. நாவலர் முத்திரை:
1971ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி இலங்கை அரசாங்கம் நாவலர் அவர்களின் நினைவாக முத்திரை வெளியிட்டு அவரைக் கெளரவித்தது.
வாழ்க நாவலர் நாமம்
சி.வை.தாமோதரம் பிள்ளை
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்துபுரா னாகமங்க ளெங்கேபிர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை
-3-

Page 9
நாமறிந்த நாவலர்
2
போற்று கவிகள்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை புண்ணியநாள், நாளெல்லாம் போற்றுநாள், செந்தமிழ்த்தாய் எண்ணியெதிர் பார்க்கும் இனியநாள், - மண்ணுலகில் மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள், ஆறுமுக நாவலர்கோன் தோன்றியநல் நாள்.
ஆடும் தில்லை அம்பலவன்
அடிகள் மறவா அன்புடையோன். பீடு பெறவே செந்தமிழைப்
பேணி வளர்த்த பெரும்புலவன். நீடு சைவம் இவ்வுலகில்
நிலவச் செய்த குருநாதன். நாடு புகழும் ஆறுமுக
நாவ லன்பேர் மறவோமே.
சி.வை.தாமோதரம் பிள்ளை. வேதம் வலிகுன்றியது மேதகு சிவாகம
விதங்கள் வலி குன்றின அடற் சூதன் மொழிமூவறு புராணம் வலிகுன்றியது
சொல்லரிய சைவ சமயப் போதம் வலிகுன்றியது சொற்பொதிய மாமுனி புகன்றமொழி குன்றியது நம் நாதனினை ஞாலமிசை நாடறிய ஆறுமுக
நாவல ரடைந்த பொழுதே.
உடுப்பிட்டி சிவசம்புப் புலவர். ஆரூர னில்லைப் புகலியர் கோனில்லை அப்பனில்லை சீரூரும் மாணிக்க வாசகனில்லை, திசை அளந்த, பேரூரும் ஆறுமுக நாவலனில்லைப் பின்னிங்கு யார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே.
一量4

அகளங்கன் 2. ஐந்தாம் குரவர் ஆறுமுகநாவலர்
அகளங்கன்
நாவலர் என்றால் அது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரையே குறிக்கும் என்று, அவனியுள்ளோர் கூறும் அரும்பெரும் சான்றோனாக விளங்கிய நாவலர் பெருமான், கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரராய், சித்திரபானு வருடம் மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அதாவது ஆங்கிலப்படி கி.பி. 1822ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அவதரித்தார்.
இருபாலை சேனாதிராயமுதலியார் , நல்லுனர் சரவணமுத்துப்புலவர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைத் துறை போகக்கற்று தமிழ் உணர்வும் சமய உணர்வும் ஒருங்கே வாய்க்கப்பெற்றார்.
புறச்சமயங்களின் ஆதிக்கத்தை வென்று சைவத்தை நிலை நாட்டி, தமிழ் நாட்டில் சைவத்தையும், தமிழையும் தழைக்கச்செய்த சமய குரவர்களின் வரிசையிலே ஆறுமுக நாவலர் பெருமானின் பணி அரும் பெரும் பணியாகக் காட்சியளிக்கின்றது.
எப் பொழுதெல் லாம் சைவ சமயத்திற்கும் , சிவனடியார்களுக்கும் துன்பங்கள் ஏற்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் யாரோ ஒரு சமயப் பெரியார் தோன்றி மேன்மை கொள் சைவநீதியை உலகெலாம் விளங்கச் செய்து வழிகாட்டி வருவதை சமய வரலாற்றினூடாகக் கண்டு ஆச்சரியப்படுகின்றோம்.
களப்பிரர் காலத்துக் காரைக்கால் அம்மையார், பல்லவர் காலத்து அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சோழர் காலத்துச் சேக்கிழார், கச்சியப்பர் என்ற வரிசையிலே ஐரோப்பியர் காலத்தில் ஆறுமுக நாவலர் பெருமான் -15.

Page 10
நாமறிந்த நாவலர் முன்னவர்கள் ஆற்றிய அரும்பணிகளை ஆற்றுவதற்கு முன்னின்று உழைத்தார்.
ஆட்சி அதிகார பலத்தைக் கொண்டு அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகள் சைவத்தையும் தமிழையும் இழிவுபடுத்தி கிறிஸ்தவத்தையும், ஆங்கிலத்தையும் வளர்க்க முற்பட்ட காலத்திலே சீண்டிவிடப்பட்ட சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து, சைவப் பணியையும் தமிழ்ப்பணியையும் ஆற்றுவதில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார்.
திருமண பந்தத்திலே ஈடுபட்டால், சாதாரண உலகியல் ஆசாபாசங்களிலே ஈடுபட்டு நேரத்தை வீணடிக்க நேரிடும் என்ற காரணத்தினாலே நைட்டிகப் பிரமச்சாரியாய் சமயப் பணி ஆற்றத் தன் நேரத்தை முழுமையாக அர்ப்பணித்தார்.
அத்தனை பணிகளையும் அறப்பணிகளாகச் செய்து அப்பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆறுமுக நாவலர், சைவப்பிள்ளைகளை ஒன்று திரட்டி திண்ணைப் பள்ளியை ஆரம்பித்து சைவப்பணியைத் தொடங்கினார்.
அதனை விரிவுபடுத்த பின் னர் வண் னை சைவப்பிரகாச வித்தியாசாலையினை நிறுவி சமயப் பணியை ஆற்றினார். யாழ்ப்பாணத்தில் கோப்பாய், புலோலி என்னுமிடங்களிலும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை அமைக்க முயன்றார்.
ஈழத்திற்கு வெளியிலே சிதம் பரத்திலேயும் சைவப் பிரகாச வித தனியா சாலை யை அமைத் து சைவப்பணியினை ஆற்றினார்.
வண்ணை வைத் தீஸ்வரன் கோவிலிலே 32 ஆண்டுகளாக சமயப் பிரசங்கங்கள் செய்து. சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றினார். தமிழகத்துத் திருவாவடுதுறை ஆதீனத்தினால் 'நாவலர்’ என்ற சிறப்புப்பட்டம் பெற்ற அவர், பல சமய நூல்களை எழுதி அவைகளை அச்சிட்டுச் சமயப்பணியாற்றினார்.
-16

洲
அகளங்கன் பெரிய புராணம் , திருவிளையாடற் புராணம்
என்பவற்றை வசன நடையில் எழுதி "வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் போற்றப்பட்டார். சைவசமயசாரம், சைவவினாவிடை, பாலபாடம் முதலான பல சைவ, தமிழ் மொழி சார்ந்த நூல்களை எழுதியும் ஏராளமான சமய நூல்களைப் பதிப்பித்தும் சைவத்தின் பெருமையினை உலகத்துக்கு எடுத்துக் காட்டினார்.
கிறிஸ்தவ மதமாற்றப் பிரசாரத்திற்கெதிராகக் கண்டனப் பிரசங்கங்களும், பிரசாரங்களும் செய்தார். சைவர்களுக்கு சைவ சமய உண்மைகளை விளக்கித் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட் டதுடனமை யாது புராண படன மரபை ஏற்படுத்தியவரும் இவரே ஆவார்.
துண்டுப் பிரசுரங்கள் சமய நூல்கள் பிரசங்கங்கள், பாடசாலைகள் புராண படனம் முதலியவற்றால் சைவசமயத்தை அழியாமல் காத்த அருந்தமிழ்ப் புலவராம் ஆறுமுக நாவலர் 1879ஆம் ஆண்டு மார்கழி மாதம் 05ஆம் திகதி இறையடி சேர்ந்தபொழுது சி.வை.தாமோதரனார் அன்னாரின் இறப்புக்கு இரங்கி
“நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதியெங்கே எல்லவரும் ஏத்துபுரா னாகமங்க ளெங்கேயிர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை"
எனப்பாடி அன்னாரின் பெருமையினை அகிலத்திற்கு நினைவூட்டினார்
“ஆரூர னில்லைப் புகலியர் கோனில்லை அப்பனில்லை சீருரும் மாணிக்க வாசகனில்லை திசை அளந்த பேரூரும் ஆறுமுக நாவலனில்லைப் பின்னிங்கு யார் நீருரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே'
என உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் ஆறுமுக நாவலர் பெருமானை ஐந்தாம் குரவராய் அறிமுகப்படுத்திய பெருமையைக் காண்கின்றோம்.
- 7

Page 11
நாமறிந்த நாவலர்
நாவலர் பெருமானின் சமயப்பணி என்னும் வித்து
வளர்ந்து இன்று பெருவிருட்சமாய் நிழல் பரப்பி நிற்கிறது. அப்பணிக்கே எம்மை அர்ப்பணிப்போம். வாழ்க நாவலர் நாமம். வளர்க சைவப்பணி
@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ 會 @ 魯 @ @
உநான்காவது உலக சைவ மாநாட்டையொட்டி, உலக சைவப்
பேரவையின் இலங்கைக் கிளையால், மாணவர்களுக்காக
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டியில்
尊 鬍 @ ↔ @ @ 尊 @ ↔ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ 尊
மத்திய பிரிவில் முதலாமிடத்தைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி
செல்வி.தேவகி நடராஜா பேசிய பேச்சு
அகளங்கனின் நூல்கள்.
Ot.
02.
O3.
04.
O5.
06.
O7.
O8.
09.
10.
1.
“செல்” “வா” என்று ஆணையிடாய் (கவிதை) "சேரர் வழியில் வீரர் காவியம்” (குறுங்காவியம்) "சமவெளி மலைகள்" (அகளங்கன்சுமுரளிதரன் கவிதைகள்)
(ஆய்வு, மூன்று பதிப்புகள் - அகில இலங்கை இலக்கியப் பேரவை,
யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு - 1987) "இலக்கியத் தேறல்” (கட்டுரைகள்)
“நளவெண்பா' (கதை) "அன்றில் பறவைகள்'நாடகங்கள்,தேசிய சாகித்திய மண்டலப்பரிசு 1992) "முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர், (வரலாறு) "இலக்கியச் சிமிழ்” (கட்டுரைகள் இரு பதிப்புக்கள்) "தென்றலும் தெம்மாங்கும்’ (கவிதைகள்) "பன்னிரு திருமுறை அறிமுகம்” (சமயம்)
-8-

12.
3.
14.
5.
16.
அகளங்கன் "மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” (ஆய்வு)
"இலக்கிய நாடகங்கள்" (நாடகங்கள், வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய
நூற்பரிசு - 1994, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு - 1994) "ஆத்தி சூடி" (விளக்கவுரை) "கொன்றை வேந்தன்' (விளக்கவுரை)
“அகளங்கன் கவிதைகள்’ (கவிதைகள், வடக்கு கிழக்கு மாகாண
இலக்கிய நூற் பரிசு - 1996) "வாக்குண்டாம்” மூதுரை (விளக்கவுரை) "சிவபுராணம்” . பொருளுரை "செந்தமிழும் நாப்பழக்கம்” (பேச்சுக்கள்) "நாமறிந்த நாவலர்” (சிறு குறிப்புகள் இரு பதிப்புக்கள்) "நல்வழி” (பொழிப்புரை - விளக்கவுரை) "இசைப்பாமாலை” (இசைப் பாடல்கள்) “கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள். ஒர் ஆய்வு' "இலக்கியச் சரம்” (கட்டுரைகள்)
“வெற்றி வேற்கை” - நறுந்தொகை (உரை) "கூவாத குயில்கள்” (நாடகங்கள்) "திருவெம்பாவை' - உரை (சமயம்) “பாரதப் போரில் மீறல்கள்’ (கட்டுரை) "சுட்டிக் குருவிகள்' (மழலைப் பாடல்கள்)
"சின்னச் சிட்டுக்கள்' (சிறுவர் பாடல்கள்)
"நறுந் தமிழ்” (கட்டுரைகள்) 'பாரதியாரும் பாஞ்சாலி சபதமும்” (ஆய்வு) "பத்தினித் தெய்வம்" (நாட்டிய நாடகங்கள்)
-19

Page 12
நாமறிந்த நாவலர்
நாவலர் இசைப்பா
- பல்லவி நல்லை நகர்ப் பிறந்த நாவலரே! - புகழ் எல்லை தனைக் கடந்த காவலரே
அனுபல்லவி தொல்லை துயர் நிறைந்த கானத்திலே - மண முல்லை என முகிழ்த்த மூலவரே!
(நல்லை.) ് சரணம் செந்தமிழ்த் தாயின் துயர் தெரிந்து அதை அகற்றி நந்தமிழ் நானி லத்தில் நலம்பெற வே உழைத்த
(நல்லை.) சைவமாஞ் FLDIIIh மாழச் சதிசெய்தோர் எண்ணம் மாழத் தெய்வமாய்த் தோன்றிச் சைவத் தெளிவினை உலகிற் கீந்த
(நல்லை.) பேச்சிலே நிகரில் GOTTLAG) பிரசங்க ιοπή பெய்து மூச்சிலே 63}୫F6}} மேன்மை முன்னேற்றம் கண்டு வாழ்ந்த
(நல்லை.) ஐந்தாம் குரவர் என்று அகிலமும் போற்றும் சைவத் தந்தாய் 9 سLتنقيح புகழ் தமிழள விற்கும் மேலாம்
(நல்லை.)
கவிஞர். அகளங்கன்
-20


Page 13
நாவலர் இ6
Lasagrafi
நல்லை நகர்ப் பிறந்த நாவலே எல்லை தனைக் கடந்த காவல
scapediagrafi
தொல்லை துயர் நிறைந்த கா6 முல்லை என முகிழ்த்த மூலவே
சறம்ை
செந்தமிழ்த் தாயின் தெரிந்து é90laig நந்தமிழ் চুড়ঙ্কগ্রািন্ত্রী நலம்பெற మైళ్లి
சைவமஒேத் சமயம்
சதிசெய்தோல் எண்ணம் தெய்வமாய்த் தோன்றிச் தெளிவினை உலகிற்
பேச்சிலே நிகரில்
iਸ Druff மூச்சிலே @研@圈 முன்னேற்றம் கண்டு
ஐந்தாம் குரவர் அகிலமும் போற்றும் தந்தாய் உமது
தமிழன விற்கும்

மேலாம்
கவிஞர்.அகளங்கன்