கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நளவெண்பா (கதை)

Page 1


Page 2


Page 3
“
: -
,
', '
.
-
 

நளவெண்பா
(கதை)
அகளங்கன் -
பம்பைமடு,
வவுனியா,

Page 4
Go)Lu Lurih : நளவெண்பா (கதை)
எழுதியவர்: அகளங்கன்.
பம்பைமடு, வவுனியா.
)திருமதி பூ தர்மராஜா, B. A. (Hons * מth60) L. פ.
அச்சுப்பதிவு: உமா பிறிண்ட்டேர்ஸ்,
32, நல்லூர் குறுக்கு வீதி, நல்லுTர்.
முதற்பதிப்பு: ஆவணி 1989.
விலை : ரூபா. 13-00.
 

б0
அணிந்துரை
"வித்யாபூஷணம்’ நா. சுப்பிரமணியன் M. A. Ph. D. (முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.)
- இந்திய இதிஹாசக் கடலின் முத்துக்களிலொன்று நளன்
கதை, மஹாபாரதத்தில் இடம் பெறும் ஒரு கிளைக்கதை இது . சூதாட்டத்தின் தீமை, ஜோதிட (கிரகங்களின் பாதிப்பு தொடர்பான) நம்பிக்கை, கற்பு நலன் என்பவற்றை உணர்த்தும் கதைப்பொருள் கொண் டது. நிடத நாட்டு மன்னணுகிய நளனின் வாழ்க்கைச் சரிதமான இதனை வடமொழி மூலங்களிலிருந்து தமிழிற் கொணர்ந்தோர் இரு வ ர். ஒருவர் புகழேந்திப் புலவர், மற்றவர் அதிவீரராம பாண்டியர். இவர்கள் முறையே கி. பி. 13 ஆம் நூற்றண்டிலும், 16 ஆம் நூற்ருண்டிலும், வாழ்ந்தவர்களாகக் கொள்ளப் படுபவர்கள். முற்சுட்டியவரின் நூல் நளவெண்பா பின்னையவரது ஆக்கம் நைட்தம். இவற்றுள் முதலாவது நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த நளவெண்பா (கதை) நூல் அமைகிறது. -
வெண்பா யாப்பைக் கையாள்வது, புலியை அடக்கியாள்வது போன்ற கடினமானதொரு செயல் என்பது பொதுவழக்கு, அத்தகு கடின யாப்பைப் பயன்படுத்தி 424 பாடல்களில் புகழேந்திப் புலவர் நளவெண்பாக் காவியத்தைத் தந்துள்ளார். இலக்கிய வகைமையில் இது சிறு காவியம் எனும் நிலையில் அமைவது. பாவடிவிலமைந்த இந்நூலின் கதையம்சத்தை உரைநடை வடிவத்தில் தரும் முயற்சியாக இந்த நூலாக்கம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த உரைநடை ஆக்கத்தைச் செய்தவரான அகளங்கன் (நா. தர்மராஜா) அவர்கள் ஒரு கணித ஆசிரியர்; பண்டைத் தமிழி லக்கியங்களில் தோய்ந்தவர். பண்பாட்டு நோக்கினர்; நவீன தமிழி லக்கியப் படைப்பாளியுங்கூட. பல கட்டுரைகளையும் கவிதை, சிறு கதை என்பவற்றையும் தந்து இலக்கிய உலகில் தன்னை அறிமுகப் படுத்திக்

Page 5
கொண்ட இவர் வாலி (1987), இலக்கியத் தேறல் (1988) ஆகிய நூலாக்கங்கள் மூலம் அதில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டவர்க் அவரது பண்டைய இலக்கியச் சுவைதேர் முயற்சிகளிலொன்ருக இந்த நூலாக்கம் அமைகின்றது.
இந்த நூல் மூன்று காண்டப் பிரிவுகளைக் கொண்டது. எல்லா மாகப் பதினைந்து பிரிவுகளில் கதை கூறப்படுகின்றது. ஈற்றிலே நள வெண்பாவிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளாக 27 வெண்பாக்கள். இணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இவ்வாறு கதை ஆர்வலர்க்கும் கவி தைச் சுவை தேர்வோர்க்கும் பயன்பட வ ல் ல த ரீ க இந்த நூலை அகளங்கன் அவர்கள் ஆக்கியுள்ளார்.
இன்றைய கல்வித்திட்டத்தில் க. பொ: த சாதாரண தரத்துக் குரிய பாட நூல்களிலொன்முக நளவெண்பாவில் ஒரு பகுதியாகிய சுய வர காண்டம் இடம் பெற்றுள்ளது. பெருந் தொகையான மாண வர்கள் நளவெண்பாவைத் தேடிப் புத்தக சாலைகளில் ஏறி இறங்கு கின்றனர். போதிய நளவெண்பாப் பிரதிகள் கிடைப்பனவாக இல்லை இந்நிலையில் அகளங்கனின் இந்த ஆக்கம் மிகு பயன் தருவதாக அம்ை
யும் என நம்புகிறேன்.
அகளங்கன் அவர்களின் ஆக்க முயற்சிகள் மேலும் சிறப்பான முறையில் தொடர வேண்டுமென வாழ்த்தி அமைகிறேன்.
முதுநிலை விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, கலாநிதி நா. சுப்பிரமணியன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், {}8 19 س 8 ہے'9J

வாழ்த்துரை
இலக்கியம், மனதைப் பண்படுத்தி, உணர்வை வளப்படுத்தி, வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் சாதனம் ஆகும். இலக்கிய அறிவை மாணவர் இடையே வளரச் செய்வதால், அவர்களது வாழ்  ைவ ச் செம்மையுறச் செய்யலாம். மொழிப்பாடத்தில், இலக்கிய அறிவையும் ழையோட வைப்பதற்கு வழி செய்யும் வகையில், ஆங் காங் கே இலக்கியச் சிதறல்களாக இராமாயணம், நளவெண்பா, நால்டியார், ஆசாரக் கோவை, பெரிய புராணம், சீருப் புராணம், போன்ற நூல் களிலிருந்து சிலபகுதிகள் புகுத்தப் பட்டுள்ளன.
நமது மாணவர் பெரும்பாலானுேருக்கு இதிகாச, புராண காப்பிய இலக்கியக் கதைகள் தெரியாதுள்ளதைப் பலரும் அறிவர். பல ஆசிரியர்களுக்குக்கூட இவை தெரியாதென்ருல் வியப்பன்ருே! இராமாயணத்தின் பாத்திரங்களை, மகாபாரதத்தின் பாத்திரங்களாகக் கூறும் மாணவர்களும் இன்று எம்மிடையே இருக்கின்றனர். இம் மாணவர்களுக்கு, இலக்கியக் கதைகளை விளக்கிக் கற்பிக்க ஆசிரியர் களும், முனைவதில்லை. விளங்காத நிலையில் மாணவர்களும், சு  ைவ யின்றி வேண்டா வெறுப்பாகக் கற்கமுனைவதால் இடர்ப்பாடுகள் ஏற் படுகின்றன,
திரு. அகளங்கன் அவர்கள் இலக்கிய நயம் கொண்டவர். தான் அறிந்து உணர்ந்த விடயங்களைப் பிறரும் அறிந்து உணரவேண்டும் என்ற ஆதங்கங் கொண்டவர்.
இராமாயணத்தைக் கற்று வாலி என்ற விமர்சன நூலை த் தந்தவர். இலக்கியத்தேறல் அவரது இலக்கியத் தாகத்தை உணர்த் தியது. இன்று புகழேந்தியின் நளவெண்பாவை மாணவர் கற்று உணர் வதற்காக இலகு நடையில் கதையாகத் தந்துள்ளார்.
10-ம், 11-ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாது, எல்லா இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஏற்றவகையில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. கற்றுப் பலனடைவது மாணவர் சமுதாயத்தின் கடமையாகும். திரு. அகளங்கன் அவர்கள் இது போன்ற பல நூல்களை ஆக்கி அளிக் கவும், அவரது இலக்கியப்பணி தொடரவும் வாழ்த்துகிறேன்.
ச, அருளானந்தம். B. A., S. L. B. A. S. அஸ்வேனி கல்வி அதிகா ரி
கிண்ணியா கல்விப் பணிமனை வவுனியா,

Page 6
முன்னுரை
இன்றைய இளைய தலைமுறையினருக்குப் போதிய இலக்கிய அறிவு இல்லை என்பது பலரதும் அபிப்பிராயமாகும். இது வெறு ம் அபிப்பிராயம் மட்டுமல்ல, ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையுங் கூட என்பது எனது அபிப்பிராயம்.
எந்த மனிதனுக்கும் தாய்மொழி தாயைப்போன்றது. அதிலுள்ள இலக்கியம் தந்தையைப் போன்றது. 'சான்றேனுக்குதல் தந்தைக்குக் கடனே’ என்பது சங்கத்துத் தமிழ் வாக்கு,
நற் குண நற்செய்கைகள், நல்லறிவு, நல்லாற்றல்கள், நல் லெண்ண நற்சிந்தனைகள், முதலான இன்ன பிற எல்லா நலன்களும் . சான்றண்மை என்ற சொல் குறிக்கும் பண்பினுள் அடங்குகின்றன மனிதனைச் சான்றேனுக்கும் சக்தி வாய்ந்தது இலக்கியம், அத ஞ ல் இலக்கியம் தந்தையைப் போன்றது.
தமிழ் இலக்கியம் அதனைக் கற்போரைச் சான்ருேராக்கும் என்ற நம்பிக்கையில் எனக்குத் தளர்ச்சி சிறிதளவும் இல்லை. அதனல் இலக்கிய அறிவை ஏற்படுத்தக் கூடிய நூல்களை ஆக்கும் என து பணியில் இந் நளவெண்பா (கதை) இப்போது உங்கள்  ைக க ளி ல் தவழ்கின்றது.
*வெண்பாவிற் புகழேந்தி’ எனப் போற்றப்படும் புகழேந்திப் புலவர் பாடிய நளவெண்பாவின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட் டுள்ளது. கதையோடு நெருங்கிய தொடர்புள்ள சில பாட ல் க ள் அங்கங்கே சேர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்கள் பின் இணைப்பாக்கப்பட்டுள்ளன
இலக்கிய அறிவைப் பாடநூல்களினல் மட்டும் ஏற்படுத்தி விடலாம், என்று எண்ணுவது பொருத்தமானதல்ல. இலக்கியங் கற்ற எழுத்தாளர்கள், எளிய வடிவில், இளம் உள்ளங்களில் பதியக் Th. L. ULI வகையில், இலக்கிய நூல்களை ஆக்கி வெளியிட்டு மாணவர் மத்தியில் பரப்புவது அவசியமானது

இப்பணி இன்று இங்கு மிகமிகக் குறைவாகவே நடைபெறு கிறது. இத்துறையில் ஆற்றலுள்ளவர்களும் அச்சுச் செலவுப் பூதத் தைக்கண்டு அஞ்சுவதன்றி அடுத்ததறியார்.
10-ம், 11-ம் ஆண்டு மாணவர்களுக்கு நளவெண்பாவில் சுயம்
வர காண்டம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதைக் கருத்தில்
கொண்டு, இப்பொழுது இந்நூல் வெளிவருகிறது. மாணவர்களுக்காக வும், இலக்கிய ஆர்வலர்களுக்காகவும், இந்நூலை ஆக்கியுள்ளேன். மேலும் ;-
எனது நூலாக்க முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஊக்கந்தந்து உற்சாகப் படுத்தும் எனது நண்பன் திரு, செ. சண்முகநாதன், ஆசிரிய நண்பர்கள் திரு, சு. முரளிதரன், திரு. சி. சிவலிங்கம் ஆகியோரும். வவுனியா தெ. த. பிரிவு உத வி அர சா ங் க அதி பர் திரு. க. ஐயம் பிள்ளை அவர்களும், என் உடன் பிறந்த சகோதரர்களும், என்றும் என் நன்றிக்கு முந்துபவர்கள்.
என் எழுத்துப் பசிக்குத் தீனிபோட்ட சிரித்திரன் ஆசிரியர் திரு. சி. சிவஞானசுந்தரம் அவர்களுக்கும், மற்றும் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, பத்திரிகைகள், மற்றும்சஞ்சிகைகளுக்கும் என் நன்றிகள்.
அணிந்துரை வழங்கி நூலை அணிசெய்க கலாநிதி நா. சுப் பிர மணியன் அவர்கள்; வாழ்த்துரை வழங்கிய திரு, ச. அருளானந்தம் அவர்கள்; ஆகியோரும் என் நன்றிக்குரியவர்கள்.
அழகான முறையில் இந்நூலை அச்சிட்டுத் தந்த உமா அச் சிக ஊழியர்களுக்கும், அதன் அதிபர் திரு. அ. கதிர்காமநாதன் அவர் களுக்கும், அச்சுப்பிழை திருத்துதலில் எனக்கு உதவி செய்த நண்பர் திரு. மு. க. தில்லை மோகன் அவர்களுக்கும், என் நூல்களை வாசித்து என்னை ஊக்குவிக்கும் இலக்கிய நன்நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.
என்னில் கலந்து நானே ஆகிய என் இல்லாளின் உற்சாகமான ஒத்துழைப்பும் , நூலாக்கப் பாதையில் எனது வலது காலைத்  ைத ரி யமாகத் தூக்கிவைத்து ஊக்கங் கொடுத்த என் தம்பி திரு க. குமார குலசிங்கம் அவர்களின் அன்பும், என்றும் என் இதயத்தை நிறைப்பன.
உங்கள் நா. தர்மராஜா அன்பு
பம்பைமடு, 1-9 - 1989 அகளங்கன்
வவுனியா.

Page 7
இலக்கிய உணர்வை என் இதயத்திலும், இரத்தத்திலும், கலந்த என் தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவுக்கு
8 : *
 

சுயம்வர காண்டம்
1. கதை பிறந்த கதை
தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், என்பவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என அழைக்கப்படுபவர்கள். இவர்களில் தருமன் மூத்தவன். பாண்டுவின் பிள்ளைகள் என்பதால் பாண்டவர்கள் என்றும், ஐந்துபேர் என்பதால் பஞ்சபாண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
துரியோதனன், துச்சாதனன் என்ற வரிசையில் விகர்ணன் வரை நூறு ஆண்களும், துச்சளை, என்ற பெண்ணும் கெளரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். துரியோதனன் இவர்களில் மூத்தவன். குருட னன திருதராட்டிரனின் பிள்ளைகள் இவர்கள்.
திருதராட்டிரனும், பாண்டுவும் சகோதரர்கள். திருதராட்டிரன் மூத்தவன். பாண்டு இளையவன்.
பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் அரசுரிமையில் பிரச்சனை தோன்றியது. அது கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்தது. பாண்ட வரும், கெளரவரும் ஒன்ருக ஒற்றுமையாக வாழ முடி யா த நிலை உருவாகியது.
அதனுல் இந்திரப் பிரஸ்தம் என்ற நகரில் பாண்டவரும், அஸ்த் தினபுரம் என்ற நகரில் கெளரவரும், ஆட்சி புரிந்து வந்தனர்.
தருமனின் ஆட்சிச் சிறப்பையும், அவன் இ ரா ச சூ ய யாகஞ் செய்து பெற்ற பொருளையும். புகழையுங் கண்டு பொரு  ைம யி ல் புழுங்கினன் துரியோதனன்.
அவனது உள்ளத்தில் கிடந்த பொருமைத் தணலை ஊதி எரியச் செய்தான் மாமன் சகுனி, சகுனி துரியோதனனின் தாயான காந் தாரியின் சகோதரன். தாய்மாமன்.
தருமனைச் சூதாட்டத்தில் வென்று அவ னது நாடு நகரத்தைக் கைப்பற்றத் திட்டந் தீட்டினன் சகுனி. அதற்கிணங்கத் தாம் புதிதாக

Page 8
2 - நளவெண்பா அகளங்கன்
அமைத்த மண்டபத்தைக் கண்டு செல்லும்படி பாண்டவர்களைத் துரியோதனன் அழைத்தான்.
பாண்டவர்கள் வந்தனர். விருந்து முடிந்ததும் பொழுது போக் காகச் சூதாட வரும்படி தருமனத் துரியோதனன் அழைத்தான். தருமனும் ஒப்புக்கொண்டான்.
துரியோதனனுக்காகச், குதாட்டத்தில் வல்லவனை LD IT ILI dji* சகுனி தருமனேடு சூதாடினன். மாமன் சகுனிக்கு மருமகன் துரியோத னன் பணயம் வைத்தான்.
சூதாட்டத்தில் தருமன் பொன், பொருள். சேனை, நாடு, நகர் என்று எல்லாவற்றையும் பணயமாக வைத்துத் தோற்ருன். பின் தனது தம்பி களை வரிசையாகத் தோற்றுத், தன்னையும் தோற்றுத், தன் மனைவி யான திரெளபதியையும் தோற்ருன்.
துரியோதனனல் அவமானப் படுத்தப்பட்ட த ரு ம ன் த ன து சகோதரர்களுடனும், திரெளபதியுடனும் கா ட் டு க் குச் சென்ருன்.
பல நாட்டு மன்னர்களும் பாண்டவர்களைக் காட்டில் வந்து சந்தித் தனர் தங்களது இழப்புக்களை ஈடுகட்ட யுத்தம் ஏற்படலாம் என்ற நிலையைப் பாண்டவர்கள் உணர்ந்தனர். அதற்காகத் தமது பலத்தை அதிகரிக்க ஏற்ற வழிமுறையைக் கையாள ஆயத்தமாகினர்.
பாரத யுத்தத்தில் தாம் வெற்றி பெறுவதற்காகச் சிவபெரு மானைக் குறித்துத் தவஞ்செய்து பாசுபதாஸ்த்திரம் எ ன் ற படைக் கலத்தைப் பெற்று வரும்படி தனது தம்பியும், சிறந்த வில் வீரனுமான அருச்சுனனை இமய மலை அடிவாரத்துக்கு அனுப்பினன் த ரு ம ன்.
தனது தம்பியைத் தன்னந் தனியாளாக இமயமலை அடிவாரத் துக்கு அனுப்ப நேர்ந்ததை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந் தான் தருமன்.
அப்பொழுது வியாச முனிவர் அங்கு வந்தார். தருமனின் மு க வாட்டத்தைக் கண்டு காரணங் கேட்டார். தருமன் அருச்சுனனைத் தனியாக அனுப்பிய செய்தியைக் கூறிக் கலங்கினன்,

அகளங்கன் நளவெண்பா - 3
வியாச முனிவர் அவனைத் தேற்றி " அருச்சுனன் பெரும் வில் வீரன். அவனைக் காப்பாற்ற அவனது தோள்கள் இரண்டுமே போதிய துணை ' என்று ஆறுதல் கூறினர்,
* அறிவுக் கண்ணை இழந்து மாயச் சூதாடி மண்ணிழந்து மாண் பழிந்து காட்டிலே வாழ்ந்த வேறு மன்னவர்களும் உண்டோ. இதற்குக் காரணந்தான் என்ன" என்று தனது செய்கைக்கு வருந்தி வியாசமுனி வரிடம் தருமன் கேட்டான்.
* சூதாட அழைத்தால் அதை மறு க் கா ம ல் ஏற்றுச் சூதாடல் மன்னர்க்கு இயல்பே. அதற்காக நீ கலங்குவது அழகல்ல” எனக்கூறி
முற்காலத்தில் நளமகாராஜன் என்பவன் தனது சகோதரனன புட்கரனுடன் சூதாடி, நாடு நகரிழந்து காட்டுக்குச் சென்ற கதையைத் தருமனுக்குக் கூறினர், வியாச முனிவர்.
கண்ணிழந்து மாயக் கவருடிக் காவலர்தாம் மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழிந்த மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ என்போல் உழந்தார் இடர்.
2. நிடத நாடு.
கடலால் சூழப்பட்ட இப்பூமியில் இருக்கின்ற சி ற ந் த நாடுகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த நா டு என்று கூற க் கூ டி ய சிறப்புப் பொருந்தியது நிடத நாடு
* கண்ணிற் சிறந்த உறுப்பில்லை’ என்பர் ஆன்றேர். நிடத நாடு பூமாதேவியின் கண் என்று சொல்லக் கூடிய அ ள வு பெருமையும்
சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது .

Page 9
4 - நளவெண்பா அகளங்கன்
காடுகள் எல்லாம் பூஞ்சோலைகளாகப் பொலிந்தன. அங்கே பலவித மான பூக்கள் பூத்துக் குலுங்கின. வண்டுகள் மலர்களிலே இருக்கின்ற தேனை மிகுதியாகக் குடித்துப் பாட்டிசைத்து மயங்கின. மலர்களிலேயே உறங்கின. -
நீர்நிலைகளில் அழகான கயல் மீன்கள் புரண்டு விளையாடிக் கொண் டிருக்கும். குவளை மலர்களின் மொட்டுக்கள் இதழ் விரிந்து மலர்ந்து அழகு சேர்த்துக்கொண்டிருக்கும். தேனை மிகுதியாகவுடைய தாமரை மலர்கள் தடாகங்களில் பூத்துப் பொலிந்து காட்சியளித்துக்கொண் டிருக்கும்.
நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே நிறைந்தமைந்த நிடத நாட்டின் தலைநகர் மாவிந்தம் என்னும் பெயருடையது.
அழகான உயர்ந்த மாடங்கள் நிறைந்து நிரைநிரையாகத் தோன் றும் செல்வச் செழிப்பு மிக்க நகரமாக மாவிந்த நகரம் விளங்கியது,
உயர்ந்த மாடங்களில் வாழும் பெண் கள் நீராடி விட்டுத் தமது நீண்ட அழகிய மயிற் தோகை போன்ற கூந்தலை அகிற்புகையால் உலர்த்த, அந் த அகிற்புகை சென்று மழைமேகத்தோடு கலப்பதால் அந்த மாவிந்த நகரில் பெய்யும் ம  ைழ யி ல் எக்காலத்திலும் அகில் வாசம் கமழ்ந்துகொண்டே இருக்கும். اس
அங்கு வாழும் மக்கள் எந்தக் கவலையும், எந்தவிதக் கஸ்டமுமின்றி
மிகவும் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
கற்க வேண்டியவைகளைக் கற்று ப், பெறவேண்டியவைகளைப் பெற்று, கல்வியும் செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்று ச் சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர்.
நல்லறிவு பெற்றதனுல் அந்நகரில் வாழும் மக்களிடம் கலக்கம் மயக்கம் தயக்கம், என்பனவும், சூது, வஞ்சனை, களவு என்பனவும் சொல்லளவில் மட்டுமேதான் இருந்தன,
t இரப்பவர்கள் இல்லாததால் கொடுப்பவர்களும் இல்லை. கள்வர்கள் இல்லாததால் பொருட்களுக்குக் காவலும் இல்லை. எல்லோரும் எல் லாப் பெருஞ் செல்வங்களும் எய்தி இன்பமாக அறத்தின் வழியிலே வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்தனர்.
 

அகளங்கன் நளவெண்பா - 5
அந்நாட்டின் அரசனே நளன் என்பவன். அவனது ஆட்சிச் சிறப் பினலேதான் அந்நாடு அத்தகைய பெ ரு  ைம பெற்ற நாடாகத்
திகழ்ந்தது. லி
eqM MST SASA Ae SS SSLSLMLM LrL L L S TS yySe MSMSMS
. ܬ ܢܝ W o - நளன் நால்வகைச் சேனைகளையும் மிகுதியாகக் கொண்டு, வீரமும்
விவேகமும் மிக்க வகையில் நல்லாட்சி செய்துல் வந்ததனல், போர்க்
களங்களில்ே வெற்றியன்றி வேறெதுவும் அறியான்.
'(' '്യ്"," ( a V3:16y:
தனது வெண்கொற்றக் குடை நிழலில், அதாவது தனது ஆட்சிப் பரப்பினுள் வாழும் மக்களை நீதி நெறிமுறையில் கோத்துச் செங்கோ லாட்சியை அவன் செய்து கொண்டிருந்தான். அவனது நாட்டில் இயற் கையிலேயே பகைமை கொண்ட பறவைகள், மிருகங்கள் கூட ஒற்று OOLD LITT5 வாழ்நதன delive MARCA RIAA KITAJ. Prof.
· კი - " . // სია at AR-RAF" : "("\\{\\\\') { ه"{"; பெண்கள் வீட்டில் வளர்க்கும் கிளிகளும், கிளிகளைக் கொன்று தின்னும் பருந்துகளும் ஒரே கூட்டில் ஒற்றுமையாக வாழ்ந்தன:
でリ、○ リ“。“「「エリ چراغf. வெய்யிலில் வாடிய தவளைக்கு அதனைக் கொன்று தின்னும் நாக பாம்பு தனது படத்தினலே நிழல் தந்து காத்தது. ஒரு நீர்த் துறையிலே மானும் அதனைக் கொன்று தின்னும் புலியும் ஒற்றுமையாக நீரருந்தின.
-
பகைமை கொண்ட பறவைகள்,மிருகங்களே இப்படி ஒற்றுமையாக வாழ்ந்தன என்ருல் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை எவ்வளவு சீரும்
', '*' o l - S. சிறப்பும் பொருந்தியதாக இருந்திருக்கும் ിജു ീൂ ÄN ESTISKE دان a நளமகாராஜனின் ஆட் 角。 நல்லாட்சியாய் நானிலம் "போற் றிப்
புகழும் வண்ணம் சிறந்து விளங்கியது.
ά, αφεαλ είναι ο θεία is . Es revious St. ஆ சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிட்ப்பத் வ τα αντα,
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்.மாதர் 1 1 ܬܘܬܪܛܲܪ ܬ݂
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும் نة مهنة وهي مدريده . كما يكرمة في .
နှီဗို့... ဒို့..၊ ஒருகூட்டில் வாழ உலகு. ````ါ ́` * 毫率。 *、 .14:8 4 ܠܼܲ ESTRAGA SISTE...) %% და შესახებ. წ. უ.දී දී,බ් බ්ඳී බ්‍රිෂ්ණු (sãEs الكثافتها من نقية. يع مكة فاش واة لينكس. كما بدلا من ال 1884 . .

Page 10
6 - நளவெண்பா அகளங்கன்
* =
3. நளன் சோலேக்குச் செல்லல்
நளமகாராஜன் வேனிற் காலத்திலே ஒரு நாள் தனது பூஞ்சோலை ஒன்றிற்குச் சென்றன். தாமரை மலர் போன்ற முகமும், குவளை மலர் போன்ற கண்களும், காந்தள் மலர் போன்ற கைகளுங் கொண்ட அழகான பெண்கள் கூந்தலிலே பலவகை மலர்களையுஞ் குடிக் கொண்டு அவனைச் சூழ்ந்து வர, அவன் சென்ற காட் சி ஒரு பூஞ்சோலையே அவனுடன் செல்வது போன்று இருந்தது.
அவன் தேரூர்ந்து செல்வதனல் எழுந்த புழு தி  ைய, அவனைச் குழ்ந்து வரும் பெண்களின் நீண்ட க ரி ய கூந்தலிலே குட்டியிருந்த மலர்களிலே இருந்து சிந்தும் தேன் துளிகள் அடக்கிப் படிய வைத்தன.
பல்விதமான மலர்கள் மலர்ந்து குலுங்கும் அவ்வழகிய பூஞ்சோலை யிலே வண்டுகள் மிகுதியாக இருந்து ரீங்காரஞ் செ ய் த ன. நன்கு செழித்து வளர்ந்திருந்த பூஞ்செடிகளில் பூத்திருந்த பெரிய மலர் களிலே நிறைந்திருந்த தேனைக் குடித்த வண்டுகள், குடிமயக்கத்தில் தேனிலே குளித்துச் சிறகை_நனைத்து விட்டன. அதனல் எழு ந் து பறக்க முடியாமல் தமது சி ற கு களை உலர்த்துவதற்காகச் சிற.ை விரித்துக் கிடந்தன.
மிகமெல்லிய இலைகளைக் கொண்ட பல மரங்கள் அச்சோலையிலே நிறைந்திருந்தன. நெருக்கமான இலைகள் மிகுந்திருந்ததால் அச்சோஆல யினுள் குயில் நுழையுமே அன்றி வெய்யில் துழையாது. உலகத்திலிருக் கின்ற இருள்களெல்லாம் சூரியனுக்குப் பயந்து ஒன்ருக வந்து ஒளித்துக் கொண்டது போன்ற இருண்ட சோலையாக அச்சோலை விளங்கியது.
அச்சோலையிலேயுள்ள ஒரு தடாகத்தில் நிறைந்து மலர்ந்திருந்த தாமரை மலர்களுக்கிடையில் அழகிய அன்னப் றவை ஒன்று இருப் பதை நளன் கண்டான்.
p
(algirir நிறமான பிரகாசம் பொருந்திய சிறகுகளும், சிவந்த கால்களுங் கொண்ட அவ்வன்னத்தைத் தப்பிப் போகல் பிடித்து த அரும்படி தன்னேடு வந்த பெண்களுக்கு அவன் கட்டளையிட்டான்.
 

அகளங்கன் நளவெண்பா - 7
அப்பெண்கள் அவ்வன்னத்தைப் பிடித்துக் கொண்டு வந்து நளனின் முன் விட்டனர்.
அன்னம் கலங்கியது. பயந்து நடுங்கியது. தனக்கு ஏதுங் கெடுதல் செய்து விடுவானே என்று அஞ்சியது.
அன்னத்தின் அச்சத்தைக் கண்ட நளன் அதற்கு ஆறுதல் வார்த்தை கூறி, அதன் அச்சத்தைப் போக்கிஞன். ' அன்னமே! அழகிய பெண் களின் நடையா அல்லது உனது நடையா சிறப்பானது, என்று கண்டு கொள்வதற்காகவே உன்னைப் பிடித்தேன் "என்று தான் பிடித்ததற்குக் காரணங் கூறினன் நளன். அன்னத்தின் அச்சம் நீங்கியது.
அன்னத்திற்கு நளனில் பெ ரு ம் வி ரு ப் ப ம் ஏ ற் பட்டது . அவனது அழகையும், குணத்தையுங் கண் டு பெருமிதமடைந்தது, அதனல் தான்வாழும் அரண்மனையிலுள்ள இளவரசியான தமயந்தியைப் பற்றி நளனுக்குச் சொல்லியது.
தமயந்தியின் அழகைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் எடுத்துக் கூறி நளனுக்கு அவளே ஏற்றவள் என்றும் கூறியது.
அன்னம் கூறியவற்றைக் கேட்ட நளன் தமயந்தியின்மேல் காதல் கொண்டான். அதனல் தமயந்தி பற்றி ஆவலோடு விசாரித்தான்.
விதர்ப்ப நாட்டு அரசனுண் வீ ம ரா ஜ னி ன் மகளே தமயந்தி என்றும் கூறி, தமயந்தியின் குண நலன்களையும், அவ ள் அவனுக்கு எப்படிப் பொருத்தமாவாள் என்றும், காரணங் கூறியது.
நளன் அரசன். அவனிடம் அரசைக் காப்பாற்ற தே ர், யானை, குதிரை. காலாள் என நால்வகைப் படை இருக்கும், அரசாட்சியைச் செம்மைப்படுத்தும் நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள். முரசு முழங்கும். வேற்படை, வாட்படை இருக்கும். வெண்கொற்றக் குடை நிழற்றும்.
* தமயந்தியும் ஒரு அரசை ஆட்சி செய்கிருள். தனது பெண்ம்ை" என்ற அரசை அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு என்னும் நாலு குணங்கள் ஆகிய நா ற் படையினல் நல்லாட்சி புரிகின்ருள். சுவை"

Page 11
8 - நளவெண்பா - அகளங்கன்
ஒளி, *று, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து புலன்களும் அவளது நல்ல அமைச்சர்கள் சிலம்புகள் தான் முரசு. ஒரு கண் வேற்படை
மறுகண் வாட்படை, முகம் என்ற சந்திர வட்டக் குடையின் கீழ் அவள்
பெண்மை அரசைச் சிறப்பாக ஆளுகின் ருள் என் று அன்னம்
நளனுக்கும் தமயந்திக்கும் உரிய திரு ம ன ப் பொருத்தத்தைச்
శ్లోTT R . . . - **
ஆமயந்தியின் பேரழகையும், பெருங் குணத்தையுங் கேட்ட நளன் அவள் மேல் அழியாக் காதல் கொண்டான். 鬆,忒
* அன்னமே இனி உன்னுடைய வாயில்தான் எர்ன்வாழ்வு இருக் கின்றது ?? எனக்கூறி அன்னத்தைத் தூதாகத் தமயந்தியிடம் அனுப் பினன் நளன். ':്
s、 蔷、 蠍子 நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா ஆர்க்குஞ் சிலம்ப்ே அணிமுரசா. வேற்படையும்
வாளுமே கண்ணு வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெண்மை அரசு, "7 = }
" i. ܕܝܢ ܠܐ ܝܬܐ ܬܕ இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல் . அற்றது மானம் அழிந்ததுநாண் பு மற்றினியுன் " வாயுடைய தென்னுடைய வாழ்வென்றன் வெங்காமத் * தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து,
4 * அன்னத் Sgt. :്. %" |
*、 ,':'ം ', '(':', ' அன்னம் நாஜிடம் விடைபெற்றுத் தமயந்தியிடஞ் சென்றது. அன்னம் ஆகாயத்தில் பறந்து செல்வதையே பார்த்துக் கொண்டி ருந்தான் நளன். தமயந்தியின் மேல் தீராக் காதல் கொண்டதால் அன்னம் தமயந்தியிடஞ் சென்று தனது காதலைச்சொல்லி, நல்ல பதிலைக் கொண்டுவரும் என்று ஆவலோடும் ஆசையோடும் ஆகர்யத் தைப் பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான் நளன்."
 
 

அகளங்கன் நளவெண்பா - 9
* அன்னம் இவ்வளவில் சென்றிருக்கும். இவ்வளவில் தமயந்தியைக் கண்டிருக்கும். இவ்வளவில் நான்கொண்ட காதலைச் சொல்லியிருக்கும். இவ்வளவில் அவளது விருப்பத்தையுங் கேட்டுக் கொண்டு திரும்பி யிருக்கும்.? என்று கணக்குப் போட்டுக் கொண்டு ஆகாயத்தையே அண்ணுந்து பார்த்தவனுகக் காத்திருந்தான் நளன்.
அன்னம் தமயந்தியின் அந்தப் புரத்தைச் சென்றடைந்தது. அன் னத்தைக் கண்ட தமயந்தி அன்னத்தின் அருகில் வந்து "நீ இப்போது இங்கே வந்த காரணம் என்ன?' என்று கேட்டாள்.
அன்னம் நளனைப் பற்றித் தமயந்திக்குக் கூறியது." செம்மையானதளம்பாத உறுதியான மனத்தையுடையவன், செங்கோலாட்சி செய்து வருபவன். மங்கையர்கள் எல்லோரையும் கவரத்தக்க வ சீ க ர மும் பேரழகும் பொருந்தியவன். இந்தப் பூவுலகத்திலும் மேலுலகத்திலும் உள்ள எவரிலும் மேலானவன். அவனுடைய பெயர் நளன். அவனே உனது பேரழகுக்கும் குணத்துக்கும் பொருத்தமானவன். அவ னே உனக்கு ஏற்ற கணவனுக வருவதற்குத் தகுதிபடைத்தவன் ' என்று கூறியது.
அன்னம் தொடர்ந்தும் நளளைப் பற்றி த் த ம ய ந் தி க் கு ச் சொல்லியது. " அந்த நளனுக்கு ஈடு இணை இவ்வுலகிலே யாருமில்லை. மகாவிஷ்ணுவைத்தான் அவனுக்கு உவமையாகச் சொல் ல லாம்" அவனது நெஞ்சிலே வீரமும், ஈரமும், தர்மமும், கிடக்கின்றன. கண் களிலே கருணை குடி கொண்டிருக்கின்றது. ' எனப் பலவாருக நளனின் அழகையும் சிறப்பையும் வியந்து கூறியது.
அன்னம் உரைத்த மொழிகளைக் கேட்ட தமயந்தி, நளன்மேல் காதல் கொண்டாள். நளனைப்பற்றிய விபரங்கள் அவளது நெஞ்சிலே பசுமரத்து ஆணிபோல் பதிந்தன. தன் மனக் கோயிலிலே அவனையே தெய்வமாகக் குடியிருத்தினுள்.
அன்னம், நளனுக்குத் தமயந்தியின் மேல் ஏற்பட்ட காதலையும், தன்னையே தூதாக விடுத்ததையும் கூறியது. உடனே தமயந்தி
3 ந. க.

Page 12
10 - நளவெண்பா ۔ அகளங்கன்
6 அன்னமே! நீ சென்று நான் அவர்மேல் கொண்ட கா த லை யு ம் தெரிவித்து என் உயிரைக் காப்பாற்று.” என்று கூறி அன்னத்தைத் தூதாக அனுப்பினள். -
அன்னம் தமயந்தியின் காதல் மொழிகளைக் கேட்டு ** உன்னையும் நளனையும், சேர்த்து வைப்பேன்.” என உறுதி கூறி நளனிடஞ் சென்றது.
செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள் தம்மனத்தை வங்குந் தட்ந்தோளான். - மெய்ம்மை நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான் உளனென்பான் வேந்தன் உனக்கு.
வாவி யுறையும் மட்வனமே என்னுடைய ஆவி உவந்தளித்தாய் ஆதியால் - காவினிடைத் தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி என்றுரைத்தாள் பார்வேந்தன் பாவை பதைத்து.
*.
5. சுயம்வரச் செய்தி
அன்னம் நளமகாராஜனை நோக்கிப் பறந்து சென்றது. தமயந்தி நளனின் அழகையும், குண நலச் சிறப்பையும் எண்ணி எண்ணிக் காதல் நோய் மிகுந்து கடுந்துயரடைந்தாள். அவளது முகம் பிரகாச மிழந் தது. நளனைப் பற்றிய காதல் நினைவுகளில் அவள் உள்ளம் ஈடுபட்டி ருந்ததால் ஊண், உறக்கம் இன்றி அவள் உடல் மெலிந்தது.
அவளது முகவாட்டத்தையும், உடற் சோர்வையுங் கண்ட அவளது தோழிப் பெண்கள், அவளது தாயிடம் அதுபற்றிக் கூறினர்கள். தாய் தந்தையிடம் கூறினுள். தந்தையாகிய வீமராஜன் வந்து தன் மகளின் மனவருத்தத்தையும், உடல் சோபை இழந்திருப்பதையுங் கண்டு சிந்தித்தான்.
 

அகளங்கன் - நளவெண்பா - 11
" அவளது நோய்க்கு மருந்து, சுயம் வரம் வைத்து அவளுக்கு ஏற்ற கணவனைத் தேர்ந்தெடுக்கச் செய்து, குடும்ப வாழ்வில் ஈடுபடுத்து வதுதான்' என்று தீர்மானித்தான். உடனே தனது மகளின் சுயம் வரத்துக்குரிய நாளைத் தீர்மானித்தான்.
* அன்றிலிருந்து ஏழாவது நாள் தமயந்திக்குச் சுயம் வரம் " என்ற செய்தியை எல்லா அரசர்களுக்கும் அறிவிக்கும் படியும், தனது நாட்டிலே முரசறைந்து தெரியப்படுத்தும் படியும், தூதுவர்களுக்குக் கட்டளையிட்டான்.
தமயந்தியின் சுயம்வரச் செய்தி எல்லாநாடுகளிலும் பரவியது. பேரழகியான தமயந்தியைத் திருமணஞ் செய்யப் பேராசைப்பட்டு எல்லா நா ட் டு மன்னர்களும் விதர்ப்ப நாட்டின் தலைநகரான குண்டின புரத்துக்கு வந்து குழுமினர்.
அரசர்கள் எல்லோரும் அழகான சோலைகளிலும், நீர்த் தடாகக் கரைகளிலும் விடுதிகளமைத்துத் தங்கினர். அவர்களின் உள்ளம், தமயந்தியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.  ܼܓ
இது இப்படியிருக்க, அன்னம் தமயந்தியைக் கண் டி ரு க் கு ம், காதலைச் சொல்லியிருக்கும். இப்போது வந்து கொண்டிருக்கும்; என்று ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த நளன் ஆகாயத்திலே மேகக்
கூட்டத்தினுள் அன்னம் வருவதைக் கண்டான்.
அன்னத்தைக் கண்ட நளன் ஆசைமுந்த, நாணம் பிந்த, உள்ளம் உந்த, தமயந்தி பற்றிக் கேட்டான். அன்னம் தான் தமயந்தியிடஞ் சென்றது முதலாக, தமயந்தி நளன்மேல் காதல் கொண்டு தன்னைத் தூதாக அனுப்பியது ஈருக, ஒன்றும் ஒளிக்காமல் எடுத்துரைத்தது. அதனைக் கேட்ட நளன், ஆனந்த மிகுதியால் அயர்ந்து திகைத் திருந்தான்.
அந்த நேரத்தில் தமயந்தியின் சுயம்வரச் செய்தியை விதர்ப்ப நாட்டுத் தூதுவர்கள் நளமகாராஜனின் அரன்மனை வாசலில் வந்து அறிவித்தனர். நளன் அவர்களை அழைத்து விசாரித்து மகிழ்ந்தான்.

Page 13
12 - நளவெண்பா அகளங்கன்
உடனே தனது சிறந்த தேரை, நல்ல வேகமாகச்செல்லக் கூடிய இலட் சணம் பொருந்திய குதிரைகள் பூட்டித் தயார் செய்யும்படி கட்டளை யிட்டான், பின்பு தேரில் ஏறி மிகவேகமாகத் தனது நாட்டைக் கட ந்து விதர்ப்ப நாடு நோக்கிச் சென்றன்.
கொற்றவன்றன் ஏவலினுல் போயக் குலக்கொடிபால் உற்றதுவும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும் மொழிந்ததே அன்னம் மொழிகேட் ட்ரசற்கு அழிந்ததே உள்ள அறிவு.
X.
6. இந்திரன் வந்தான்
தேவ லோகத்திலே இந்திரனின் சபைக்கு நாரதமுனிவர் சென் ருர். அன்று வேறு ஒரு வேந்தரும் அச்சபைக்கு வராததால் இந்திரன் நாரத முனிவரிடம் அதுபற்றிக் கேட்டான்.
தமயந்தியின் அழகையும், குணத்தையும்கூறிய நாரதர், அவளுக்குச் சுயம்வரம் நடைபெற இருக்குஞ் செய்தியையும், அதற்காக மன்னர்கள் எல்லோரும் விதர்ப்ப நாட்டுக்குச் சென்ற செய்தியையும் கூறினர். -
நாரத முனிவர் கூறியதைக் கேட்ட தேவேந்திரன், தமயந்தியை மணஞ் செய்து கொள்ள ஆசைப்பட்டுச் சுயம்வரத்துக்குச் செல்ல ஆயத் தமானுன் , அவனேடு வருணனும், இயமனும், தீக் கடவுளான அக் கினி தேவனும் சென்றனர்.
தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்த தேவேந்திரன் நள ஆனக் கண்டான். நளனிடம் தனக்கு ஒர் உதவி செய்ய வேண்டு மென்று கேட்டான். நளனும் இந்திரன் என்ன கேட்கப் போகின்றன் என்பதை அறியாமலேயே ஒப்புக் கொண்டான்.
தமயந்தியிடஞ் சென்று, சுயம்வரத்தின் போது மணமாலையைத் தங்களில் ஒருவருக்குச் சூட்ட வேண்டும் என்று கேட்கத் தூது போக வேண்டும் என்று கேட்டான் இந்திரன்.
 
 

அகளங்கன் நளவெண்பா - 13
வாக்கிற் பொய்யாத சத்திய வந்தனன நளன் அதற்கு ஒப்புக் கொண்டான், இருப்பினும் தமயந்தியின்மேல் அவன் கொண்ட காதல் அவனைத் தடுத்தது. காதலைக் கடமைக்குப் பலியாக்கி விட்டுத் தம யந்தியிடஞ் செல்லத் தயாராஞன்.
“காவல் பொருந்திய அரண்மனையினுள் எப்படிச் செல்வது ? என்று நளன் கேட்க, இந்திரன் ' உன்னைத் தமயந்தியன்றி வேறு யாருங் காணுர், நீ போய் வா’ என்று அனுப்பிவைத்தான்.
நளன் தமயந்தியின் அந்தப் புரத்திற்குச் சென்ருன், தன் காத லியான தமயந்தியைக் கண்டான். தமயந்தியும் நளனைக் கண்டாள். இருவர் கண்களும் கலந்தன. ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங் காமல் பார்த்துக் கொண்டு நின்றனர்.
நளமகாராஜனின் தாமரை மலர் போன்ற கண்களிலே தமயந் தியின் குவளை மலர் போன்ற கண்கள் பூத்துப் பதிந்தன. தமயந்தி யின் குவளை மலர் போன்ற விழிகளிலே நளமகாராஜனின் தாமரை மலர் போன்ற விழிகள் பூத்துப் பொலிந்தன"
ஒருவர் கண்கள் மற்றவர் இதயத்தை ஊடுருவிச் சென்று கதை பேசின. உள்ளத்தின் அடித் தளத்திலே எழுந்த காதலை மறைக்கவும் முடியாமல், நின்று கதைக்கவும் முடியாமல் திணறிய தமயந்தி, ஒரு வாறு தெளிந்து 'கட்டுக் காவலையுங் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்த நீ வித்தியாதரர் தலைவனே? அன்றித் தேவனே ? “ என்று கேட்டாள்.
அவளது அமுதம் போன்ற சொற்களைக் கேட்ட நளன், தனது நாட்டையும் பெயரையும், தான் வந்த காரணத்தையுஞ் சொல்லி இந்திரனுக்கே மாலையிடும்படி அவளை வேண்டினன்.
தமயந்தி அதற்கு மறுத்து இச்சுயம் வரமே நளனுக்காகத் தான் ஏற்படுத்தப் பட்டது என்பதையும், தான் வேறு எவருக்கும் மாலையிடப் போவதில்லை என்பதையுங் கூறி, நளனையும் சுயம்வரத்துக்கு வரும்படி வேண்டுகோளும் விடுத்தாள்.
4 ந. க.

Page 14
14 - நளவெண்பா அகளங்கன்
நளன் திரும்பி வந்து தான் தமயந்தியிடம் சொல்லியதையும், தமயந்தி மறுத்ததையும் இந்திரனுக்கு எடுத்துரைத்தான்.
இந்திரன், வருணன் இயமன், அக்கினி தேவன் ஆகிய நால்வரும் நளனை வாழ்த்தித், தமக்காகத் தூது சென்ற செயலை மெச்சி, 'நீ எ ப் பொழுது எந்த இடத்தில் விரும்பினுலும் நெருப்பு, உணவு, நீர்,
அழகிய பூமாலை, அணிகலன், ஆடை என்பவற்றைப் பெறுவாய் '> என வரங் கொடுத்துச் சென்றனர். -
தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப் பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு மது நோக்கும் தாரானும் வாள் நுதலும் தம்மில் பொது நோக்கு எதிர்நோக்கும் போது.
7. சுயம் வரம்
சுயம் வரத்துக்குரிய நாளும் வந்து சேர்ந்தது. பலநாட்டு மன்னர் களுஞ் சுயம்வர மண்டபத்தில் வந்து தமயந்தியின் கடைக் கண் பார்வைக்கு ஏங்கி 'எனக்குத்தான் மாலையிடுவாள்' என்று ஏமா ந்து காத்திருந்தனர்.
சுயம் வர மண்டபத்தினுள் தமயந்தியைத் தோழிப் பெண்கள் அழைத்து வந்தனர். மன்னர்களின் கண்கள் எல்லாம் சிவந்து அகல விரிந்து அவழழகையே அள்ளிப் பருகிக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம் பொருந்திய தமயந்தி, மன்னர்களின் விரிந்த செந் தாமரை மலர் போன்ற கண்கள் பூத்திருக்கின்ற மண்டபத்தினுள்ளே சென்ற காட்சி, செந்தாமரைத் தடாகத்தில் அன்னப் பறவை ஒன்று சென்றதைப் போன்று இருந்தது.
சுயம்வர மண்டபத்தில் இருந்த மன்னர்களைத் தோழி தமயந்திக்கு அ றி மு க ஞ் செய்து கொண்டு வ ந் தாள். ம ன் னர் க ளின் பெயரும், குலமும், வளம் பொருந்திய அவர்களது நாடும், வீர
گھې
 

அகளங்கன் நளவெண்பா - 15
திரப் பிரதாபங்களும் என மன்னர்களின் எல்லா நலங்களும், எல்லா வளங்களும் எடுத்தியம்புதல் சுயம்வர மரபு.
சுயம்வரத்துக்கு வந்திருந்த மன்னர்களான, சோழன், சேரன், பாண்டியன், யதுகுலவேந்தன், குருநாட்டு மன்னன், மத்திர தேசத்து மன்னன், மச்ச நாட்டு மன்னன், அவந்தி மன்னன், பாஞ்சால மன் னன், கோசல மன்னன், மகத மன்னன், அங்க நாட்டரசன், கலிங்க அரசன், கேகய மன்னன், காந்தார மன்னன், சிந்து நாட்டு மன்னன், என எல்லா மன்னர்களையும் தோழிப் பெண் தமயந்திக்கு அறிமு கஞ் செய்து கொண்டு வந்தாள்.
சுயம்வர மண்டபத்தில் ஐந்துபேர் நளன் போலவே இருக்கக் கண்டு தோழி அதிசயமுற்று நின்ருள். தமயந்தியும் அவர்களைக் கண்டு அவர்களில் தன் உள்ளங் கவர்ந்த உண்மை நளன், யாரென்று அறி யாமல் உருவ ஒற்றுமையில் மயங்கி நின்ருள்.
சுயம்வரத்துக்கு வந்த இந்திரன், வருணன், இயமன், அக்கிளி தேவன், ஆகிய நால்வரும் நளனின் இரு புறத்திலும்நளனைப் போன்ற வடிவத்தோடு வீற்றிருந்தனர்.
சுயம்வரப் பெண்ணுன தமயந்தியின் உள்ளம் ஊசலாடியது. " நான் வீமராஜனின் செம்மையான மரபிலே பிறந்து, சிறந்த ஒழுக் கத்தைக் கொண்ட கன்னியாக இரு ப் பது உண்மையானல், அன் னம் எனக்குச் சொல்லி நான் காதல் கொண்ட நளனை எனக்கு அடையாளங் காட்டவேண்டும். ' என்று நளனையே தனது உள்ளத் தில் போற்றுந் தெய்வமாக நினைத்து, மனத்துள் வேண்டிக் கொண்
LITT GYT
از
சுயம்வரத்தில் இருந்த ஐந்து நளன்களில் ஒருவனின் கால்களே நிலத்தில் படிந்திருந்தன. அவனது தோளில் சூடியிருந்த மாலைமட்டுமே வாடியிருந்தது. அவனது கண்கள் மட்டுமே இமைத்தன. இந்த அடையாளங்களை அவதானித்த தமயந்தி, நளனை அறிந்து அவனது கழுத்திலே தனது மணமாலையைச் சூட்டினுள்.

Page 15
16 - நளவெண்பா அகளங்கன்
சுயம் வரத்தில் மணமாலை பெருத மன்னர்களின் முகங்கள் வெட் கத்தால் வெளுத்தன. மாலை பெற்ற நளன் தமயந்தியோடு மண்டபத் தில் நடந்து சென்ருன், மன்னர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்ற னர். தேவர்கள் தமதுலகஞ் சென்று கொண்டிருந்தனர்.
சுயம் வரத்தில் கலந்து கொள்ள விரும்பி வந்து கொண்டிருந்த சனிபகவானை இந்திரன் கண்டான். தமயந்தி நளனுக்கு மாலை சூட்டி யதை இந்திரன் சொல்லக் கேட்ட சனிபகவான் கடுங் கோபமுற்ற ர். ** தேவர்களை அவமானப் படுத்தி, மானிடனுன நளனை மணந்த தம யந்தியை நான் வாழவிடப் போவதில்லை. அவளது கணவனுன நள னையும் வாழவிடமாட்டேன் ' என்று வஞ்சினங் கூறினுர்,
சுயம் வரத்திலிருந்து வந்த இந்திரன், நளனின் வாய்மையையும், மனத் தூய்மையையும், ஆட்சிச் சிறப்பையும், வீரத்தையும், தீரத் தையும், தமயந்தியின் கற்பையும் எடுத்துக் கூறினன். 'அவன் எத்த கையவனுக இருந்தாலும், அவளும் அவனும் ஒன்ருக வாழ்வதை நான் சகிக்க மாட்டேன் " எனக் கூறிய சனிபகவான், அதற்குரிய காலங் கருதிக் காத்திருந்தார்.
மன்னர் விழித்தா மரைபூத்த மண்ட்பத்தே பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச் செய்ய தாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று,
கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னுள் அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.
ܓܠ
X
 

கலி தொடர் காண்டம்.
8. மணமும் மகிழ்வும்
தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியபின், சோதிட வல்லுனர்கள் கூறிய நல்ல சுப வேளையிலே இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது.
ஈருடலும் ஒருயிருமாய், உள்ளமும், உணர்வும், ஒன்றேயாக இல் லற வாழ்வு தொடங்கினர். நீரோடு நீர்கலந்தது போல, அன்பிலே ஒன்று கலந்த அவர்களின் வாழ்வு, மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பமாகி + iقیلIL
விதர்ப்ப நாட்டில் இன்பமாகப் பொழுதைக் கழித்த நளன், தமயந் தியை அழைத்துக் கொண்டு, தனது நாடான நிடத நாட்டுக்கு வந்தான். வரும் வழியில் பூஞ்சோலைகளையும், தடாகங்களையும், தனது நாட்டு வளங்களையும், இயற்கை அழகுகளையும் தமயந்திக்குக் காட்டி மகிழ்ந்தான்.
வாவியிலும், சோலையிலும், ஆவியும் ஒன்று, உடலும் ஒன்று என்று ஒன்றி அனுபவித்து மகிழ்ந்தனர். நிடத நாடடைந்து, வான் முட்டி முகில் தழுவும் மாடங்கள் நிறைந்திருக்கும் மாவிந்த நகரின் சிறப் பைத் தமயந்திக்குக் காட்டி மகிழ்ந்தான் நளன். -
மாவிந்த நகரிலே, எந்தக் குறைவும் இல்லாது, சீரோடும் சிறப் போடும் பன்னிரண்டு வருடங்கள் இல்லற வாழ்வை இன்பமாக நடத்
தினர். ஒரு ஆண்மகவையும் ஒரு பெண்மகவையும் பெற்று, குடும்ப
வாழ்வில் நிறைவு பெற்றனர்,
எக்குறையும் இன்றி, உள்ளும் புறமும் செம்மையாகச் செங்கோல் செலுத்திய நளனையும், கற்பு நெறியில் மேம்பட்ட தமயந்தியையும் சனிபகவானல் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. இருப்பினும் காலம் பார்த்துக் காத்திருந்தார் சனீஸ்வரர்
5 fr; 4.
a.

Page 16
18 - நளவெண்பா அகளங்கன்
மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப் பங்கயமென் றெண்ணிப் படிவண்ட்ைச் - செங்கையால் - காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காணென்றன் வேந்து.
பொய்கையும் வாசப் பொழிலும் எழிலுருவச் செய்குன்று. ஆறும் திரிந்தாடித் - தையலுடன் ஆறிரண்டாண் டெல்லே கழித்தான் அடையலரைக் கூறிரண்டாக் கொல்யானைக் கோ.
举
9. சூதாடித் தோற்றன்.
பன்னிரண்டு வருடங்களாக நளனைப் பிடித்துத் தன்வசப் படுத்த முனைந்த சனிக்கு, ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருநாள் நளன் சந்தியாவந்தனம் பூசை செய்வதற்காக கைகால் கழுவும் போது, அவ னது காலின் பின்புறத்தில், குதிக்குமேல் ஒரு மறுவளவு இடம் நீர்ப டாமல் இருந்தது. அதைக் கண்ட சனிபகவான், அதன் வழியே சென்று நளனைத் தன்வசப் படுத்தினுர்,
பின்பு நளனின் தமையன் முறையான புட்கரன் என்பவனது மனத்திலே புகுந்து, புட்கரனை நளனுடன் சூதாடி, அவனது நாட்டைக் கைப் பற்றும்படி தூண்டினர். -
சனிபகவானின் தூண்டுதலால் புட்கரன் தளைேடு சூதாடு வதற்குத் தன் யானையிலேறிப் போனன், தனது கொடியை உயர்த்தி யவனக நிடத நாட்டின் மாவிந்த நகருக்குள் வந்த புட்கரனை நளன் சென்று சந்தித்து 'இக்கொடி என்ன நோக்கில் உயர்த்தப்பட்டது' என்று வினவின்ை. இது 'சூதாட்டத்தில் எவரையும் வெல்லு ம் வல்லமையைக் காட்டி நிற்கும் கொடி” எ ன் று புட்கரன் பதில் (சான்(ன்ை.
 

9/66YTİâ166öT - நளவெண்பா - 19
புட்கரனின் பதிலைக் கேட்ட நளன் சனியின் தூண்டுதலால் 'என்னேடு சூதாட வருக’ என்று தானே அவனைச் சூதுக்கு அழைத் தான். " -
'பிறபெண்களிடங் காதல் கொள்ளுதல், மது அருந்துதல், பொய் 弈 பேசுதல், ஒருவர் கொடுக்குங் கொடையைத் தடுத்தல், சூதாடுதல் என்பன நல்லவர்கள் நினைத்தும் பார்க்காத தீமைகளாகும்.
அவற்றுள்ளும் சூதாட்டம் என்பது, அறிநெறியை வேரோடு இல்லா தொழிக்கும்; கொடிய நரகத்தில் சேரும்படி செய்யும், இரக்கத்தை இல்லாமற் செய்யும் வளத்தைக் கெடுக்கும், உயர்ந்த குணத்தையும் வாழ்வையும் அழிக்கும். அதனல் சூதாட்டம் போலக் கொடியது இவ்வுலகில் வேறென்றும் இல்லை’ -
என்றுகூறி நளனின் அமைச்சர்கள் அவனைத்தடுத்தனர், 'கெடுகுடி சொற் கேளாது' என்பதற்கேற்ப நளன், அவர்களின் அறிவுரைகளே உதாசீனஞ் செய்தான். விதி பிடர்பிடித்துந்த அறிவு  ைர களை யும், அறவுரைகளையும் மறுத்தான். வெறுத்தான். தான் நினைத்ததையே
செய்யத் துணிந்தான். சூதாட்டந் தொடங்கியது.
நளன் தனது மார்பிலே அணிந்திருந்த அழகிய, பிரகாசம் பொருந் திய, இரத்தினங்களால் இழைக்கப்பட்ட மணிமாலையைப் பணயம் வைத்தான். புட்கரன் அதற்குப் பதிலாகத் தான் ஏறிவந்த பட்டத்து யானையைப் பணயப் பொருளாக வைத்தான். காயை உருட்டினர். சனிபகவான் புட்கரனுக்குச் சார்பாகப் புரளச் செய்தார்.
இப்படியே நூருயிரம், அதன் இருமடங்கு, எனத் தனது நாட்டுச் செல்வங்களை எல்லாம் வைத்து இழந்தான். பின்பு தனது நால்வகை : சேனைகளான ரத, கஜ, துரக, பதாதிகளையும் தோற்றன். தனது அரண்மனைப் பெண்களையும் தோற்றன்.
நாட்டைத் தோற்று, வைத்துச் சூதாட ஏதும் இல்லாதிருந்த நளனைப் பார்த்துப் புட் க ர ன் 'மனையாள் தான் ஒருவனுக்குத் துன்பம் தீர்ப்பவள், அதனல் உன் துன்பந் தீர உன் மனைவியைப் பணயம் வை” என்றன்.

Page 17
20 - நளவெண்பா அகளங்கன்
அந்த அளவிலே மெய்யறிவு சிறிது வரப் பெற்ற நளன் ‘இனிப் போதும் "என்று மறுத்துச் சூதாட்டத்தை விட்டு எழுந்தான்.
காதல் கவருடல் கள்ளுண்ட்ல் பொய்ம்மொழிதல் ஈதல் மறுத்தல் இவை கண்ட்ாய் - போதில் சினையாமை வைகுந் திருநாடா செம்மை நினையாமை பூண்ட்ார் நெறி
அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும் திறத்தையே கொண்டருளேத் தேய்க்கும் - மறத்தையே பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள் தீண்டுவரோ வென் ருர் தெரிந்து,
உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத் திருவழிக்கும் மானஞ் சிதைக்கும். - மருவும் ஒருவரோ டன் பழிக்கும் ஒன்றல்ல சூது பொருவரோ தக்கோர் புரிந்து,
翠
10 காட்டுக்குச் சென்றனர்
சூதாட்டத்தில் தோல்வியுற்று நாடுநகரிழந்த நளன், தமயந்தி  ையயும் பிள்ளைகளையுங் கூ ட் டி க் கொண்டு நாட்டை வி ட் டு ப்
புறப்பட்டான்.
மன்னணுக மாண்போடு வீற்றிருந்த நளன், அரசிழந்து கால் நடையாகக், கவலையோடு, மனைவி பிள்ளைகளையுங் கூட்டிக் கொண்டு செல்வதைப் பார்த்த மக்கள் கலங்கினர், அழுதனர், அரற்றினர்.
"எங்களை இனி யார்காப்பாற்றப் போகிருர்கள்" என்று கூறி நள னின் பாதங்களில் விழுந்து பணிந்தனர். தமது மன்னனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு அழுது, தொழுது, கண்ணிரால் நளனின் கால் களைக் கழுவினர்.
لي

/00Yr I/95 Gör நளவெண்பா - 21
"இன்று மட்டுமாவது இங்கே தங்கிச் சென்ருல் எங்களுக்கு 4றுதலாக இருக்கும்" என்று நளனின் கால்களைப் பணிந்து கெஞ்சி ICP0563rri.
தமயந்தியின் வாடியமுகத்தையும்,பிள்ளைகளின் உடற்சோர்வையும், ட் டு மக்களின் துன்பத்தையும் கண்ட நளன், அன்று அங்கே ங்கிச் செல்ல நினைத்தான்.
அந்த நேரத்தில் 'நளனை யாராவது இந்நகரிலே உபசரித்துப் போற்றினல், அவர்கள் கொல்லப் படுவார்கள்" என்ற புட்கர மன்னனின் ஆணை  ைய முரசறைவோர் பிரகடனப் படுத்துவது கேட்டுத் துயருற்ருன் நளன்.
உடனே அவ்விடத்தை விட்டு அகன்றனர். நல்லாட்சி செய்த 'ன்னனின் பிரிவை ஆற்ருத நாட்டு மக்கள், தாமும் தம் மன்னனேடு வருவதாகக் கூறிப் பின்னல் சென்றனர்.
'நளனேடு செல்லும் நாட்டு மக்கள் கொல்லப் படுவார்கள்? என்ற மற்ருெரு அரச ஆணையை முரசறைவோர் பறை சாற்றினர். அதைக் கேட்ட நளன், மக்களைத் தடுத்து, நாட்டில் இருக்கும்படி கூறினன். மன்னனை இழந்த சோகத்தில், வீடுகள் எல்லாம் 'இழவு வீடுகள் போல்’ சோகமயமாக இருந்தன.
நடந்து நடந்து களைப்படைந்த நளனின் பிள்ளைகள், தமது பெற் ருேரைப் பார்த்து ** கடக்க வேண்டிய துர ர த்  ைத க் க ட ந் து விட்டோமா' என ஆற்றமையால் கேட்டனர்.
பிள்ளைகளின் துன்பங் கண்டு கண்ணிர் வடித்தான். தா ன் குதாடிய செயலுக்காக வேதனைப்பட்டான். பிள்ளைகளின் துன்பத் தையும், மனைவியின் கஸ்டத்தையுங்கண்டு சகிக்க மாட்டாதவனுகித் துயரடைந்தான். -
அதனுல் தமயந்தியைப் பார்த்து 'நீ பிள்ளைகளையுங் கூ ட் டி க் கொண்டு, உனது தந்தையின் வீட்டுக்குச் செல்' என்று கூறினன். அவளோ, கணவனை விட்டுப் பிரிய மனமில்லாதவளாய் "துன்பத்தி லும் துணைபோபவளே நல்ல மனைவி' என்று கூறி மறுத்தாள்.
6 ந. க

Page 18
22 - நளவெண்பா - அகளங்கன்
பிள்ளைகளின் அருமையையும், அவர்களைக் காத்து வளர்க்க வேண்டிய கடமையையும் , தமயந்திக்குப் பலவாருக எடுத்துக் கூறினன் நளன். அவளோ 'பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனல் கற்புடைய பெண்ணுக்குக் கணவனைப் பெற முடியாது' எனக் கூறி தான் பிரியாதிருக்கவே விரும்புவதாகக் கூறினுள்.
பின்பு **எல்லோரும் எனது தந்தையின் நாட்டிலே சென்றிருப் போம்” என்றும் கூறினுள் "மன்னர்கள் நாடிழந்தபின் இன்னுெரு மன்னனின் நாட்டில், அவர் தயவில் வாழ்வது மா ன மி ழ ந் த செயலாகும்' என்று பல காரணங்களைக் கூறி, அதற்கு நளன் மறுத்தான். -
* அப்படியாயின் பிள்ளைகளை மட்டும் எனது தந்தையிடம் அனுப்பி வைத்துவிடுவோம்’ என்று தமயந்தி தனது இறுதி மு டி  ைவ " கூறினுள். அதனை ஏற்ற நளன், பிள்ளைகளை ஒரு பி ராம ண னி ன் கையில் கொடுத்து, அவர்களை வீமராஜனிடஞ் சேர்க்கும்படி கூறினன்,
பிள்ளைகள் இருவரும் தாயையும், தந்தையையும், பி ரிய ம ன மில்லாது, அழுது புலம்பினர். தாயைக் க ட் டி ப் பிடித்துக் கொண் டனர், அழுது புலம்பி ஆவதென்ன. இரு பிள்ளைகளையும் அனுப்பி வி ட் டு உயிரற்றவன்போல நடந்தான் ந ள ன். தொடர்ந்தாள் தமயந்தி. மெளனம் தொடர்ந்தது.
பொன்னுடைய ரேனும், புகழுடைய ரேனுமற்
ஹென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களேயிங் கில்லா தவர்.
குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும் பெற்றுக் கொளலாம் பெறலாமோ - கொற்றவனே கோக்கா தலனேக் குலமகளுக் கென்றுரைத்தாள் நோக்கான் மழைபொழியா நொந்து
 

அகளங்கன் நளவெண்பா - 23
11. காரிருளில் கைவிட்டான்.
பிள்ளைகளை விதர்ப்ப நாட்டுக்கு அனுப்பிவிட்டு, நளனும், தமயந்தி யும், காட்டுக்குள் புகுந்தனர். கடும் வெய்யிலும், கல்லும், முள்ளும், நிறைந்த கானகத்தில் இருவரும் நடந்து சென்றனர்.
அவர்களின் மு ன் னே அழகான பொன்னிறம் பெ ா ரு ந் தி ய பறவையொன்று பறந்து வந்து நின்றது. அழகான அந்தப் பறவை யைக் கண்ட தமயந்தி, அப்பறவையைப் பிடித்துத் தருமாறு நளன வேண்டினுள் நளன் அதனைப் பிடிக்க முயன்றன். அப்பறவை அவனது கைகளுக்குள் அகப்படுவதுபோல வந்து வந்து விலகிச் சென்றது.
அப்பறவையைக் கையால் பிடிக்க முடியாததை உணர்ந்த நளன், * சேலையினல் இருவருஞ் சேர்ந்து வளைத்துப் பிடிக்கலாம்.’’ என நினைத் தான். அதனல் தமயந்தியின் ஆடையின் ஒரு முனையைத் தான் உடுத்துக் கொண்டு, தான் உடுத்திருந்த ஆடையை அவிழ்த்தான், இருவருஞ் சே ந்து அப்பறவையைத் துணியால் வளைத்துப் பிடிக்க முயன்றனர்.
அவர்கள் வளைத்த சேலையையுந் தூக்கிக் கொண்டு அப்பறவை பறந்தது. ஆகாயத்தில் சென்ற அப்பறவை "மன்னனே, உனது நாட் டைத் தோற்பித்தவன் நானே' என்று கூறி மறைந்தது.
சனிபகவானே தன்னை வஞ்சந்தீர்த்தார், என்பதனை அறிந்த நளன், மேலுங் கவலை கொண்டான். 'தெய்வமே தீதிழைத்தால் தீர்ப்பவர் யார்’ என்று அவனுக்குத் தமயந்தி ஆறுதல் கூறினுள்.
இரண்டு உடலுக்கும் உயிர் ஒன்ருக அவர்கள் ஒன்றியது போல,
இப்போது ஆடையும் ஈருடலுக்கும் ஒன்றேயாகியது. கவலையோடு
நடந்து சென்றனர். சூரியன் பகற் பொழுதைக் கடந்து சென்றன்.
ஆளை ஆள் காணமுடியாத காரிருள் சூழ்ந்தது.
‘இனிப் புகலிடம் இல்லை. எங்காவது இரவைக் கழிக்க வேண்டும்", என்று நினைத்தான் நளன். அப்பொழுது ஒரு பாழ்மண்டபம் தெரிந்தது. அங்கே சென்று சேர்ந்தனர்.
துங்

Page 19
அகளங்கன் நளவெண்பா - 24
'இரவு நீண்ட நேரமாகிவிட்டது. இனிச் சிறிது நித்திரை செய் வோம்’ என்ருன் நளன். 'பஞ்சணை - மெத்தையில், பட்டுத் துணியில், பலவகை மலர்கள் பரப்பிய மலர் மஞ்சத்தில், மகரயாழின் இன்னிசை கேட்டுத் துயில் கொள்ளும் தன் கணவன், பாழ்மண்டபத்து வெறுந் தரையில் நுளம்புகளின் இரைச்சலில் எப்படித்தான் நித்திரை செய்யப் போகிருனே' எனக் சலங்கி அழுதாள் தமயந்தி.
தேவர்களைக் கூட ஒருபொருட்டாக மதிக்காமல் தனக்கு மா லை சூட்டிய தமயந்தி, காட்டிலே படுந்துன்பத்தை எண்ணிக் கலங்கி, அவ ளது கண்ணிரைத் துடைத்தான் நளன். நீண்ட நேரம் அ ப் ப டி யே இருந்தனர்.
பின்பு இருவரும் படுத்தனர். தமயந்தியின் கைகள் நளனது தலைக்கு அணையாகின. கால்கள் அவனது காலுக்கு அணையாகின. விரித்துப் படுக்கச் சிறு துணி கூட இல் லா த வே த னை யி ல் அழு த ப டி
கண் ண யர்ந்தாள் தமயந்தி.
அவனது சிந்தனையில் சனிபகவான் புகுந்து அவனைக் குழப்பினர். அதனல், தமயந்தியின் துன்பத்தைக் காணச் சகிக்காதவனுக, அவளை அந்த இடத்தி லே விட்டுப் பிரிந்து செல்ல நினைத்தான்.
இருவருக்கும் ஒருயிர்போல இருந்த ஆடையைக் கண்டு சிந்தித் தான். அவனருகிலே சனிபகவான் ஒரு கத்தியாக வந்து கிடந்தார், அதனை எடுத்து ஆடையை அரிந்தான்.
அவளைப் பிரிந்து செல்லும்படி அவனது விதி அவனைப் பிடர் பிடித்து உந்தும். பிரிய விடாது அவள்மேல் வைத்த அன்பு தடுக்கும். இட்டடி நீண்டநேர மனப் போராட்டத்தில் சிக்கியிருந்தான்
hummama
தயிரை மத்தினுல் கடையும் போது, கைகள் போய்ப் போய்த் திரும்புவது போல, அவனது மனமும் முடிவெடுக்க முடியாமல் தவித் தது. மத்தினுல் கலக்கப்பட்ட தயிர்போல மனங் கலங்கினன்.
இறுதியாக, "விதியின் கைப் பாவையாகி” விட்டுப் பிரிந்தான். 'திக் 31 னசத்து உறை யுந் தெய்வங்களே. இவளைக் காப்பாற்றுங்கள்” என்று கூறிப் பிரிந்து 3ெ ன் ருன் ,

அகளங்கன் நளவெண்பா - 25
ஒற்றைத் துகிலும் உயிரும் இரண்ட்ாக முற்றுந்தன் அன்பை முதலோடும் - பற்றி அரிந்தான் அரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில் தெரிந்தான் இருந்தான் திகைத்து.
போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல் கடைவார்தங் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம்.
#
12 தனியானுள் தமயந்தி
ஆவி ஒன்று உடல் இரண்டு என வாழ் ந் து, ஆவியைப்போல் ஆடையும் ஒன்று என ஒன்றிய பின், காரிருளில், கானகத்தில், பாழ் மண்டபத்தில், உடலைப் போல உயிரும் இரண்டு, ஆடையும் இரண்டு என்னும்படியாக, ஆடையை அரிந்து அவளைக் கைவிட்டு அகன்ருன் நளன.
சிறிது நேரத்தில், நித்திரை குழம்பியவளாய்த் தனது அரு கி ல் நளனைக் காணுமையால், கைகளால் தடவிப் பார்த்தாள் தமயந்தி. கைக் கெட்டுந் தூரம் வரை அவனைக் காணவில்லை. தான் உடுத்திருந்த பாதி ஆடை மட்டும் இருப்பதைக் கண்டு கலங்கினள். இருள், காடு, தனிமை, என்ன செய்வதென்றே தெரியாதவளாய்த் திகைத்தாள். தனது கணவனைக் கூப்பிட்டா ள்.
பதில் கிடைக்காததால் அந்த இருளில் அங்கும் இங்கும் ஓடினள். விழுந்தாள். எழுந்தாள். வேடுவனின் அம்புபட்ட மயில் போல விழுந்து அழுதாள், கணவனைப் பிரிந்த துன்பமும், காட்டிலே, இருளிலே, தனிமை யிலே, கைவிடப்பட்ட கவலையும், அவளால் தாங்க முடியாதனவாக இருந்தன.
7 ந. க.
I(T H
ாதுங்

Page 20
26 - நளவெண்பா அகளங்கன்
அவளின் துன்பத்தைக் கண்டு பொறுக்க மாட்டாதன போல, கோழிகள் தமது சிறகுகளால் வயிற்றில் அடித்து அடித்துச் சூரியனைக் கூவி அழைத்தன. அவளது துன்பத்தைக் கொஞ்சங் குறைத்து, நளன் சென்ற வழியைக் காட்ட வந்தவன்போலச் சூரியன் உதயமானன்,
மிகவும் பிரியமாய் இருந்து, எ ந் த த் துன்பத்திலும் கணவனை விட்டுப் பிரியாதிருக்க விரும்பிய தன்னைத், தன் கணவன் பிரிந்ததை நினைத்து 'அழுது அரற்றினுள். நளன் நடந்து சென்ற பாதச் சுவடுகளைசி கண்டு, அதிலே விழுந்து அழுது கண்ணீரால் காலடிகளைக் கழுவினள்.
'நான் என்ன பிழை செய்தேன். எனக்கு ஏன் இந்தத் தண்டனை’ என்று அரற்றுவாள். காட்டிலேயுள்ள மான்களையும், மயில்களையும் கூவி அழைத்துத் தன் தலைவன் சென்ற வழியைக் காட்டும் படி கதறு வாள். காட்டையும், தனிமையையும் நினைத்து உள்ளம் பதறுவாள்.
இப்படியாகச் செய்வதறியாது திகைத்துத் தியங்கி ம ய ங் கி த் துயரில் மூழ்கிய தமயந்தி, பெரிய யானை ஒன்றை விழுங்கிக் கிடந்த ஒரு பெரிய மலைப் பாம்பின் அருகில், அதனைக் காணுதவளாக வந்து சேர்ந்தாள். அழுது சோர்ந்தாள்.
பாம்பு, அவளையும் விழுங்கத் தொடங்கியது. 'கெட்ட குடியே கெடும்' என்பது போல அடுக்கடுக்காகத் துன்பங்கள் அவளை வந்த டுத்தன. 'பாம்பின் வாய்த் தேரை போலப்' பதறினுள். தன்னைக் காப்பாற்றத் தன் க ண வ னை அழைத்துக் கதறினள். தன்கைகளைக் கூப்பித் தன் கணவனுக்கு இறு தி வணக்கமும் செலுத்திச் சா கத் தயாராஞள்.
தமயந்தியின் அழுகுரல் கேட்டு ஒரு வேடுவன் அவ்வழியே ஒடி வந்தான். பாம்பின் வாயிலிருந்து அவளை மீட்டான்.
தமயந்தியின் அழகைப் பார்த்து மயங்கினன். அவளின் அழுகை அவ்வேடனுக்கு இரக்கத்தைத் தரவில்லை. அவளது தனிமை அவனுக்கு இன்பத்தைக் கொடுத்தது. அவளைத் தன் மனைவியாக்கி மகிழ எண்ணங் கொண்டு தன் வீட்டுக்கு அழைத்தான் வேடன்.

அகளங்கன் நளவெண்பா - 27
அவன் சொல்லை மறுத்தாள். அவனை வெறுத்தாள், அஞ்சி ஒடினுள், அவன் துரத்தினன். காடெல்லாம் தன் கூந்தல் கலைந்து இழு பட ஒடிஞள். கொடிய புலியால் துரத்தப் பட்ட புள்ளிமான் போல அங்கும் இங்கும் ஒ டிப் பார்த்தாள்.
இனித் தப்பமுடியாது என்ற நிலையில், திரும்பி நின்று அவ்வேட னைக் கோபமாகச் சீறி விழித்துப் பார்த்தாள். நெருப்புப்போல் சிவந்த அவளது கண்களில் இருந்து நெருப்புப் பாய்ந்தது. வேடன் எ ரி ந் து விழுந்தான்.
அவ்வழியே வந்த ஒரு வணிகன், அழுது கொண்டு நிற்கும் அவ ளைக் கண்டு ஆறுதல் கூறினன். அவள் தன்னை யாரென்று கூருமல், தன்னைத் தன் கணவன் காட்டில் தனியாக விட்டுப் பிரிந்ததாகக் கூறி அழுதாள். அவ்வணிகன் அவளை அழைத்துச் சென்று சேதி நாட்டில் விட்டு விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
சேதி நாட்டிலுள்ள சில பெண்கள், தமயந்தியைக் கண்டு தமது அரசியிடங் கூறினர். அர சி அவளை அழைத்துத் தன்னேடு அந்தப் புரத்தில் தங்கும் படியும், தான் அவளது கணவனைத் தேடிக் கண்டு பிடித்துத் தருவதாகவுங் கூறினள்.
தமயந்தி அங்கும் தன்னை யாரென்று கூருமல் அழுத கண்ணிரும், குலைந்த கூந்தலும், அழுக்கடைந்த அரை ஆடையோடும், ஒளியிழந்த மதி போன்று, சோகமே ஒர் உருவெடுத்தாற்போல் இருந்தாள்.
வீமராஜன் தனது மகளான தமயந்தியையும், மருமகனுனநளனையும் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வரும்படி பலரையும் பல இடங்களுக்
கும் அனுப்பினன்.
அவர்களிலே ஒரு அந்தணன், சேதி நாட்டுக்கு வந்து அங்கே தம யந்தியைக் கண்டு, அவளது நிலையையும், கோலத்தையும் கண்டு, இரங்கி அழுதான். சேதிநாட்டு அரசி தமயந்தியை அறிந்து கொண்டு, தனது மகள் முறையான தமயந்திக்கு நேர்ந்த துன்பத்தையும், தன் அந்த ப்
புரத்திலேயே இருந்துந் தானறியாத நிலையையும் நினைத்து அழுதாள்.
IIT ---
ாதுங்

Page 21
28 - நளவெண்பா அகளங்கன்
பின்பு, பிள்ளைகளுடன் இருந்தால் அவளது துயர் கொஞ்சமாவது குறையும் என்று கூறி அவர்கள் வற்புறுத்தித் தமயந்தியை, விதர்ப்1 நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தமயந்தி விதர்ப்பநாடு சென்று தாய், தந்தையையும், பிள்ளே களையுங் கண்டு அங்கே இருந்தாள்.
தையல் துயர்க்குத் தரியாது தம் சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோன வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்,
தீக்கட் புலிதொடரச் செல்லும் சிறுமான்போல் ஆக்கை தளர அலமந்து - போக்கற்றுச் சீற விழித்தாள் சிலேவேடன் அவ்வளவில் நீருய் விழுந்தான் நிலத்து.
+、
கலி நீங்கு காண்டம்
13. அயோத்திக்குச் சென்றன் நளன்.
தமயந்தியைக் கானகத்தில் நீத்துத், துயரத்தைச் சுமந்து கொண்டு நடந்தான் நளன். அந்த நேரத்தில் காட்டுத்தீயில் எரிந்து கொண் டிருந்த பாம்பொன்று 'மன்னு உனக்கபயம்' என்று தன்னை அழைப் பதைக் கேட்டுத் தீயின் அருகில் வந்தான்.
நெருப்பிலே எரிந்து கொண்டிருந்த பாம்பைக் கண் டு, தன்னைச் சரணடைந்து நிற்கும் பாம்பைக் காப்பாற்றுங் கடமையில் ஈடுபட்டான். சுயம் வரத்தின் போது, தமயந்தியிடந் தேவர்களின் ஏவலால் தூது சென்றதற்காகத் தீக்கடவுள் கொடுத்த வரத்தினை மனத்திலே நினைத் துக் கொண்டு, எரியும் பாம்பை எடுக்கத் தீயுள் புகுந்தான். நெருப்பு அவனைச் சுடாது அகன்றது.

அகளங்கன் - நளவெண்பா - 29
எரிகின்ற பாம்பைக் கைகளில் எடுத்துக் கொண்டு நடந்தான். "மன்னனே என் உடலில் பற்றியிருக்குந் தீயை அணைத்து வி ட் டு என்னைத் தரையில் விடு. விடுமுன் உனது கால்களால் ஒன்று முதல் பத்துவரை அளந்து எண்ணித் தச" என்று சொல்லு” என்றது.
பாம்பின் சூழ்ச்சியறியாத நளன், அதேபோல ஒன்று முதல் எண்ணி, *தச’ என்று சொல்லிப் பூமியில் விட்டான். உடனே பாம்பு அவனைக் கடித்தது. 'தச’ என்ருல் பத்து என்றும் கடி என்றும் பொருள். அதனல் நளனின் சொற்படியே நளனைக் கடித்தது பாம்பு.
பாம்பின் கடியினல் உடல் கருகி, அழகு குறைந்து நின் ரு ன் நளன். "பாம்பின் அரசே! உனக்கு நான் நன்மை செய்ய நீ ஏன் எனக்குத் தீமை செய்தாய்’ என்று கோட்டான் நளன்.
அதற்குக் 'கார்க் கோடகன் என்பது எ ன் பெயர். நீ சொந்த உருவத்தில் சென்று வாழ்வது கஸ்டமானது, அதனுல் உன் அழகை Hம், தோற்றத்தையும், கெடுத்து உடல் வாகைக் குறைத்தேன்" எனக்கூறி இரு ஆடைகளைக் கொடுத்து 'இந்த ஆடைகளைப் போர்த் தினல் உன் பழைய தோற்றம் உன்டாகும். உன் உடல் வாகு குறைந் ததனல் நீ வாகுவன் எ ன் ற பெயரில் அயோத்தி அரண்மனைக்குச் சென்று அவ்வரசனுக்குத் தேர் ஒட்டியாக இரு' என்று ஆலோச னையும் கூறியது.
அதனைக் கேட்ட நளன், அதுவும் நல்லதே என ஏற்றுக் கொண்டு, அயோத்தி நோக்கி நடந்தான். அவனது நெஞ்சினிலே தமயந்தியின் நினைவே நிறைந்திருந்தது. அலைகடலில் அலைக்கழிக்கப்பட்ட துரும்பு போல அவனது மனம் அலைபாய்ந்தது.
தமயந்தி துயில்கலைந்து தன்னைக்காணுது என்ன பாடுபடுவாளோ? என்று நினைத்து அழுதான். புன்னை மரத்துப் பூவைக் கோதிய ஆண் வண்டு, பெண்வண்டுக்குத் தேனுரட்டிச் சேர்ந்திருந்த காட்சியைக்
சண் டு பனம் சோர்ந்தான்.
8 ந. க.
IT" Han
ாதுங்

Page 22
30 - நளவெண்பா அகளங்கன்
இன்பம் பயக்கக் கூடிய இயற்கைக் காட்சிகள் எல்லாம் அவனுக்குத் துன்பமே விளைத்தன. கடல் அலைபோல, அவனது உள்ளம் ஒய்வின்றி அழுது அழுது இரைத்துக் கொண்டிருந்தது. துன்பம் முன்னே அழைதி துச் செல்ல, விதி பின்னல் பிடித்துத் தள்ளிச் செல்ல, அயோத்திக்குச் சென்ருன்.
அயோத்தி அரண்மனைக்குச் சென்று, தேர் ஒட்டுவதிலுஞ், சமையற் தொழிலிலுந் தான் வல்லவன் என்று கூறி, இருது பன் ன ன் என்ற அயோத்தி மன்னனிடம், வாகுவன் என்ற பெயரில் வேலையாளாக இருந்தான் நளன்.
புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்டு அஞ்சினுன் ஆவி அழிந்தான் அறவுயிர்த்து நெஞ்சினுல் எல்லாம் நினைந்து,
போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி நாவாய் குழற நடுங் குறுவாய் - தீவாய் அரவகற்றும் என்போல ஆர்கடலே மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று,
14. மீண்டும் சுயம்வரம் ,
தன் தந்தையின் நாடான விதர்ப்ப நாட்டில், பிள்ளைகளுடன் இருந்த தமயந்தி, நளனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டாள். த ம து புரோகிதனன ஒரு பிராமணனே அழைத்து, எல்லாநாடுகளுக்குஞ் சென்று நளனைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி கூறிஞள்.
நளனைக் கண்டு பிடிக்க ஒரு உபாயமுஞ் சொன்னுள், "மக்கள் கூடும் இடங்களில் நீ சென்று, கானகத்தில், காரிருளில், பாழ்மண்ட பத்தில், துயில் கொள்ளும் போது தனது மனைவியை அநாதரவாகக்

அகளங்கன் நளவெண்பா - 31
கைவிட்டுச் செல்லுஞ் செயலும் ஒரு மன்னன் செய்யக் கூடிய செயலோ”
என்று சொன்னல், அதற்கு எதிர்க்கதை கதைப்பவரை அறிந்து கண்டு பிடிக்கலாம்' என்ருள் தமயந்தி.
அந்தப் பிராமணன் அவளின் சொற்படியே எல்லா இடங்களிலுந்,
தேடினன். மலையடி வாரங்கள், காடுகள், நாடுகள் எனத்தேடி இறு
தியாக அயோத்திக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு வந்து, மக்கள் கூடும் இடங்களில் தமயந்தி சொல்லியது போலச் சொல்லும் போது "காட்டில், காரிருளில் பாழ்மண்டபத்தில், ஒரு மன்னன் தனது காதலியை, அவள் நித்திரை செய்யும் போது அநாதரவாக விட்டுச் சென்ருன் என்ருல், அவன் அவள்மேல் அன்பில் லாததனுல்தான் அப்படிச் செய்தான் என்று கொள்வது பொருந்தாது. அது அவர்களது விதியின் பயன், என்று தான் கொள்ள வேண்டும்" என்று தேர்ப்பாகனன நளன் அந்த அந்தணனுக்கு முன்னே வந்து கூறினன்.
அதனைக் கேட்ட அவ்வந்தணன், அவனைக் கூர்ந்து கவனித் துப் பார்த்தான். பின் தமயந்தியிடஞ் சென்று நடந்ததைக் கூறி னு ன். *குரலையும் பேச்சையுங் கேட்டால் நளமகாராஜன் போலவே தான்
இருந்தது. ஆனல் தோற்றம் அவரைப்போல இல்லை. பதில் கூறியவன்.
அயோத்தி அரசனுக்குத் தேர்ப்பாகனக இருக்கிறன். ' என்று அந்த
ணன் விபரமாகச் சொன்னன்.
அவன் நளனகத்தான் இருக்க வேண்டும் என்று சந்தேகங் கொண்ட தமயந்தி, அப்பிராமணனைப் பார்த்து 'தமயந்திக்கு இரண் டா ஞ சுயம்வரம் நாளை நடக்கப் போகிறது என்று அயோத்தி அரசனுக்கு நீ சென்று அறிவித்தால் அவ்வரசனுக்குத் தேர்ப்பாகனுக அ வ ரு ம் வருவார். அப்போது உண்மையை அறிந்து கொள்ளலாம்' எ ன் று கூறி அனுப்பி வைத்தாள்.
அவனும் அயோத்திக்குச் சென்று முரசறைந்து, அரச னு க் குச் செய்தி தெரிவித்தான். அயோத்தி மன்னன் ஆசை கொண்டவனுக
'நாளை சுயம் வரத்துக்கு எப்படிப் போய்ச் சேருவது, தூரம் அதிகமே.”*
என்று கவலை கொண்டு தேர்ப்பாகனன நளனிடஞ் செய்தி சொன்னன்.
IT"

Page 23
32 - நளவெண்பா அகளங்கன்
தமயந்தியின் இரண்டாஞ் சுயம்வரச் செய்தியை நம்பமுடியாத வணுகத் கிகைத்துக் கலங்கினன் நளன். இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் எனத் துணிவு கொண்டு, தன்கடமையைச் செய்வதற்காகத் தேரைத் தயார் செய்து, அரசனையும் ஏற்றிக் கொண்டு சென்றன்.
வாயுவேகம், மனே வேகம், என்று சொல்கின்ற வேகத்தில் அவன் செலுத்திய தேர் விரைந்தது. வழியில் ஒரு பள்ளத்தில் இருந்த தான்றி மரத்தில் செறிவாகக் காய்த்துத் தொங்கிய தான்றிக் காய்களைக் கணக் கிட்டு "இதில் பத்தாயிரங் கோடி காய்கள் இருக்கின்றன” என்று அயோத்தி மன்னன் கூறினன். நளன் தேரை நிறுத்தி எண்ணிக் கணக் கிட்டு, அது சரியாக இருக்கக் கண்டு ஆச்சரிய மடைந்தான்.
நளன் ஆச்சரியப்பட்டதைக் கண்ட இருது பன்னன் 'நீ எனக்குத் தேரோட்டுந் தொழிலைச் சொல்லிக் கொடுத்தால், நான் உனக்குக் காய் எண்ணும் வித்தையைச் சொல்லித் தருவேன்’ எனக் கூறினன். இருவருந் தத்தம் வித்தையை மாற்றிக் கொண்டனர்.
இருது பன்னன் நளனுக்குச் சொல்லிக் கொடுத்த வித்தை 'அட்சய இருதயம்" என்பது. இது பிறர் எண்ணத்தை அறிதலும், கண்டவற்றைக் கணக்கிடலும், ஆகிய சக்தி கொண்டது. - .
இனி நளன் சூதாட்டத்தில் வென்று விடுவான். தன் இஸ்டம் போல் அவனை ஆட்டிப் படைக்க முடியாதென்று நினைத்துப் போலும் நளனை விட்டுச் சனிபகவான் அகன்ருர்,
கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப் போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று சாற்றினுன் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில் ஏற்றினுன் வந்தான் எதிர் .
மேலாடை வீழ்ந்த தெடுவென்றன் அவ்வளவில் நாலாறு காதம் நடந்ததே - தோலாமை மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதில்
* மால்கொண்டான் கோல்கொண்ட் மா,
基

அகளங்கன் நளவெண்பா - 33
15. மீண்டும் அரசனுணுன்.
வீமராஜனின் அரண்மனை முற்றத்தில் தேரைநிறுத்தச் செய்து இறங்கிய இருதுபன்னன், வீமராஜனின் சேவகர்களிடந் தன்வரவை மன்னனுக்கு உரைக்கும்படி கூறி, அரண்மனைக்குள் பிரவேசித்தான்.
சுயம்வரத்துக்குரிய எந்த அறிகுறிகளையுங் காணுதவனுகி உட். செல்கின்ற அவனை வீமராஜன் வரவேற்று உபசரித்தான்.
நளன்; தேரில் பூட்டிய குதிரைகளை அவிழ்த்து, அவைகளை இளைப் Hாற்றி விட்டுத், தனது அரசனுக்குரிய உணவை ஆக்குவதற்காக மடைப்பள்ளிக்குச் சென்றன்.
தேர்ப்பாகன் நளன் தான என்பதைக் கண்டறிவதற்காகத் தனது இருபிள்ளைகளையும் அவனுடன் உரையாட விட்டு அவதானிக்கும் படி தனது தோழிப் பெண்ணை அனுப்பினுள் தமயந்தி,
பிள்ளைகளைக் கண்ட நளன் அன்பின் மிகுதியால் அப்பிள்ளைகளை
அள்ளி அணைத்துப் பின் தன்னை இனங்காட்டாமல் மறைப்பதற்காக அவர்களுடன் அவர்களது தந்தையான நளமகாராஜா பற்றி உ ைர யாடினன். பிள்ளைகளோடு நளன் உரையாடி மகிழ்வதையும், நளனின் செய்கைகளையும் அவதானித்த தோழிப்பெண், தமயந்தியிடஞ் சென்று தான் கண்டவற்றை விபரித்தாள்.
அதனைக் கேட்ட தமயந்தி, தனது தந்தையிடஞ் சென்று "தேர்ப் பாகனே நளன்' என்ற தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள். விமராஜன் அவளது சொற் கேட்டுத் திகைத்து நளனருகில் வந்து கதைத்தான். நளனின் கதையிலிருந்து அவனை இனங்கண்டு, உண்மை உருவைக் காட்டும்படி வேண்டினுன்,
நளன், கார்க்கோடகன் என்ற பாம்பரசன் கொடு த் த ஆடை
களில் ஒன்றை எடுத்து உடுத்துக்கொண்டு, மற்றென்றைப் போர்த்
தான், உடனே பழைய உருவை அடைந்தான்.
9 ந. க
IsT mon

Page 24
தமது தந்தையைக் கண்ட பிள்ளைகள், தந்தையின் காலில் வீழ்ந்து அழுது, தமது கண்ணிரினல் அவனது பாதங்களைக் கழுவினர்.
தமயந்தி, பாதித் துகிலோடும், மாசடைந்த விரித்த கூந்தலோடும் பிரகாசமிழந்த தோற்றத்தோடும் ஓடிவந்து, நளமகாராஜனின் காலடி? களில் விழுந்து அழுதாள்.
நளமகாராஜனின் முன்னுல் வந்த சனிபகவான் “மன்னனே உனக்கு வேண்டும் வரங்கேள்’ என்று சொன்ஞர். நளமகாராஜன் 'எனது கதையைப் படிப்பவரையும், கேட்பவரையும் நீங்கள் வருத்தக் கூடாது' என்று கேட்டுப் பெற்ருன்.
அயோத்தி மன்னன் இக்காட்சிகளைக் கண் டு ம ன ம் வருந்தி, நளமகாராஜனுக்கு வாழ்த்துரைத்து, தான் தனது தேர்ப்பாகன் தானே என நினைத்து அதிகாரம் பண்ணியதை மன்னிக்கும்படி வேண்டி விடை பெற்றுத் தன்னுடடைந்தான்.
நளமகாராஜன் தமயந்தியையும் பிள் ளை களை யு ம் அழைத்துக் இகாண்டு தேரேறித், தனது நாடான நிடத நாட்டுக்குச் சென்று மாவிந்த நகரினுள் பிரவேசித்தான், தூதரை அனுப்பிப் புட்கரனுக்குச் செய்தி சொல்லி அவனேடு மீண்டுஞ் சூதாடினன்.
அட்சய இருதயம்' என்ற வித்தையை அறிந்த ந ள ன் அதன் மகிமையால் புட்கரனைத் தோற்கடித்துத் தனது நாட்டைப் பெற்றன். Hட்டத்து யானையிலேறி, இந்திரன் சுவர்க்க உலகம் செல்வது போன்று *ம்பிரமாகப் பொலிவோடு அரண்மனையடைந்தான்.
மனைவி மக்களும் நிரம்பிய மகிழ்ச்சியுமாய்த் தமது ம ன் ன ன் தம்மை அரசாள வரும் காட்சி கண்ட மக்கள் மகிழ்ந்து பாடினர். ஆடினர். ஒரு வருக்கொருவர் செய்தி சொல்ல ஓடினர். அவர்களது ஆனந்தத்தை அளவிட முடியவில்லை.
மழைமேகத்தை க் கண்ட மயில் போல் களிப்பினல் ஆடினர் கண்ணிழந்தவர்கள் கண் பெற்றபோது அடையும் மகிழ்ச்சியடைந்து
 
 
 
 
 
 
 
 
 
 

அகளங்கன் நளவெண்பா - 35
தமது மன்னனைக் கண்ணுரக் கண்டு களித்தனர். நீர் நிரம்பியிருக்கின்ற வயலில் செழித்து வளர்ந்து நிற் கின்ற நெல்லைப் போலப் பூரிப் படைந்தனர்.
அவர்களது மகிழ்ச்சி சொல்லுந் தரமன்று. நளமகாராஜன் காட் டுக்குச் செல்லும்போது இழவு வீடுபோல இருந்த அந்நாடு இப்போது திருமண வீடு போலப் பொலிந்தது. மக்களின் உவகை வெள்ளத்தில் உலகமே மூழ்கியது,
“இதுவே நளமகாராஜன் சூதாடித் தோற்று மீண்டும் நாடுபெற்ற கதை. ‘கேடுவரும் பின்னே மதிகெட்டுவரும் முன்னே" அதனுல் நீ கவலைப் படவேண்டாம்.” என்று வியாச முனிவர் த ரு மனு க் கு ச் சொல்லி ஆசிகள் வழங்கி அவ்விடத்தை விட்டகன்ருர்
மக்களைமுன் காணு மனநடுங்கா வெய்துயிராப் புக்கெடுத்து வீரப் புயத்தனையா - மக்காள்நீர் என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான் வன்மக் களியான மன்.
என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானட்ையேன் மின்கால் அனல்வேலாய் மெய்யென்று - நன்காவி மட்டிறைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று கட்டுரைத்துப் போனுன் கலி.
கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று மாதோடு மன்னன் வரக்கண்ட் மாநகருக்கு ஏதோ உரைப்பன் எதிர்.
முற்றும்
3yfu llifo!

Page 25
தேர்ந்தெடுத்த கவிகள்
திருமால் வணக்கம்
ஆதித் தனிக்கோலம் ஆணுன் அடியவற்காச் சோதித் திருத்தூணில் தோன்றினுன் - வேதத்தின் முன்னின்றன் வேழம் முதலே எனஅழைப்ப என்னென்ருன் எங்கட் கிறை.
நூலாசிரியர் பற்றி
பாரார் நிட்த பதிநளன்சீர் வெண்பாவால் பேரார் புகழேந்தி பேசினுன் - தாரார் செழியனையும் சென்னியையும் சேரத் திறைகொள் மொழியின் சுவையே முதிர்ந்து.
தருமனின் முகவாட்டம்
பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதுந் தோற்றெருநாள்
ஆண்ட்கையே தூதுவணுய்ச் சென்றவனி - வேண்ட - மறுத்தான் இருந்தானே மண்ணுேடும் போய்மாளப்
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து.
மாவிந்த நகரின் சிறப்பு
கோதை மட்வார்தம் கொங்கை மிசைத்திமிர்ந்த சீதக் களபச் செழுஞ்சேற்றல் - வீதிவாய் மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர் ஞானக் கலைவாழ் நகர்.
 
 

அகளங்கன் நளவெண்பா - 37
மாடங்களின் சிறப்பு நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல் அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால் புலர்த்தும் புகைவான் புகுந்து,
மக்களின் வாழ்வு வெஞ்சிலேயே கோடுவன மென்குழலே சோருவன அஞ்சிலம்பே வாய்விட் ட்ரற்றுவன - கஞ்சம் கலங்குவன மாளிகைமேல் காரிகையர் கண்ணே விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.
கல்வி தெரிவனநூல் என்றும் தெரியா தனவும் வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும் இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும் கல்லா தனவும் கரவு,
சோலைக்கு நளன் செல்லல். வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த பூங்குவளைக் காட்டிட்ையே போயினுன் - தேங்குவளைத் தேனுடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாட்ன் பூநாடிச் சோலை புக: , -
புழுதி அடங்கியது தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின் வேரிப் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு தொக்கிருந்தா லித்துழலும் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப் புக்கிருந்தால் அன்ன பொழில், יע י
நூபுரங்கள் புலம்பும் மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன் அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு, ந. க. 10 سمبر

Page 26
88 - நளவெண்பா அகளங்கன்
இவ்வளவில் செல்லும் இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற் காணுங்கொல் இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் - இவ்வளவில் மீளுங்கொல் என்றுரையா விம்மினுன் மும்மதம்நின் ருளுங்கொல் யானை அரசு.
கொடியை வணங்கினுன் வாரணியும் கொங்கை மட்வாள் நுடங்கிடைக்குப் பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர் கொடியார் எனச்செங்கை கூப்பினுன் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து.
திருமாலே ஒப்பு அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும் மறங்கிடந்த திண்தோள் வலியும் - திறங்கிடந்த செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ அங்கண்மா ஞாலத் தவற்கு, −
குழியில் விழுந்த கரிபோல கேட்ட் செவிவழியே கேளா துணர்வோட் ஒட்ட்ை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும் குழியிற் படுகரிபோல் கோமான் கிடந்தான் தழலிற் படுதளிர் போல் சாய்ந்து.
மாலைப் பொழுது மல்லிகையே வெண்சங்கா வண்டுதே வான்கருப்பு வில்லி கணை தெரிந்து மெய்காப்ப - முல்லையென்னும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலே அந்திப் பொழுது,
மன்மதன் எரிந்தானு கானுந் தடங்காவும் காமன் படைவீடு வானுந் தேர்வீதி மறிகடலும் - மீனக் கொடியாடை வைய மெல்லாம் கோதண்ட் சாலை பொடியாடி கொன்றதெல்லாம் பொய்.

அகளங்கன் நளவெண்பா - 39
அன்றிலின் காதல் அன்றில் ஒருகண் துயின்றெருகண் ஆர்வத்தால் இன்றுணைமேல் வைத்துறங்கும் என்னும் சொல் - இன்று தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே அவிழ்ந்ததே கண்ணிர் அவட்கு,
காலே விடிந்தது பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக் காசினியுந் தாமரையுங் கண்விழிப்பு - வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு புலர்ந்ததே அற்றைப் பொழுது,
குருநாடன் தெரியில் இவன்கண்ட்ாய் செங்கழுநீர் மொட்.ை அரவின் பசுந்தலையென் ஹஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும் வள்ளைக் குருநாடர் மன்,
அவந்தி நாடன் வண்ணக் குவளை மலர்வெளவி வண்ட்ெடுத்த பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணு தருங்கடா நிற்கும் அவந்திநா டாளும் இருங்கடா யானை இவன்.
புல்லும் வரிவண்டு புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல் செல்லும் மட்ந்தை சிலம்பவித்து - மெல்லப்போய் அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச் செம்மலரின் தேனே தெளி,
பாதார விந்தத்தில் மலர் கொய்த மலரைக் கொடுங்கையி னுலணைத்து மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள் பாதார விந்தத்தே சூட்டினுன் 11ாவையிடைக் காதார மில்லா தறிந்து.

Page 27
40 - நளவெண்பா ay nariral
காமப் பயிர்
அங்கைவேல் மன்னன் அகலம் எனுஞ்செறுவில் கொங்கைஏர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கட்ைத்துக் காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள் கோதையரில் மேலான கொம்பு.
நண்டே சொல்வாய்
காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட் பாதகனப் பார்க்கப் பட்ாதென்றே - நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி ஒளிக்கின்ற தென்ணுே உரை,
சொல்லப் படுமோ
குறையாத கற்பினுள் கொண்ட்ானுக் கல்லால் இறவாத வேந்திழையாள் இன்று - பறிபீறி
நெல்லிற் பருவரால் ஒடும் நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்,
அழுதாள் தமயந்தி
கொங்கை அளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய் அங்கை யிரண்டும் அடுபுகையால் - இங்துன் கருகியவோ என்றழுதாள் காதலனை முன்னுள் பருகியவேற் கண்ணுள் பதைத்து.
ஒளியாது காட்டுன் உரு
பைந்தலேய நாக பணமென்று பூகத்தின் ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி தெளியா திருக்கும் திருநாடா! உன்னை ஒளியாது காட்டுன் உரு,
举


Page 28


Page 29
リー
ങ്ങ