Page 2
9
சிவமயம்
"மேன்மைகொள் சைவந்தி விளங்குக உலகமெல்லாம்"
ஒளவையார் அருளிய
Ko
பொழிப்புரை, விளக்கவுரை அகளங்கன்
பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்திவிழா ஞாபகார்த்த வெளியீடு - 5
இந்து மாமன்றம் - வவுனியா அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் கோவில்குளம் - வவுனியா
Page 3
I
நல்வழி:- ஒளவையார் பொழிப்புரை, விளக்கவுரை:- அகளங்கண் முதற்பதிப்பு:- 1998-01-01 வெளியீடு:- இந்து மாமன்றம், பூங்காவீதி, வவுனியா
அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்
ஆலய அறங்காவலர், கோவிற்குளம், வவுனியா அச்சுப்பதிப்பு:- சுதன் அச்சகம், வவுனியா.
நல்வழி நூல் வெளியிட் மனமுவந்து நிதி வழங்கிய அன்பர்கள்
01. திரு. S.K.K. நித்தியானந்தன் அவர்கள்
(மாலா டிஸ்ரிபியூட்டர்ஸ், மில்வீதி, வவுனியா)
02. M/s கொண்டா மோட்டர்ஸ்
(கந்தசாமி கோவில்வீதி, வவுனியா)
03. திரு. சு. கணேசன் அவர்கள்
துே
(கீர்த்தன்ஸ் தொலைத்தொடர்பு நிலையம், புகையிரத நிலையவிதி, வவுனியா)
(சீவம்ஸ் லொட்ஜ், கந்தசாமி கோவில்வீதி, வவுனியா)
(உதயன் லொட்ஜ் பசார்வீதி, வவுனியா) 06. திரு. இ. தியாகலிங்கம் அவர்கள்
(வரன் கெமிக்கல்ஸ் உள்வட்ட வீதி, வவுனியா) 07. திரு. சி. ஞானசம்பந்தண் அவர்கள்
(சில்வா அன் கோ. வவுனியா) 08. திரு. T.K. இராஜலிங்கம் அவர்கள்
(குளோப் ரேடர்ஸ் வவுனியா) 09. திரு. பெ. பழனிவேல் J.P அவர்கள் (கந்தசாமி கோவில் வீதி, வவுனியா) 10. திரு. சீ.ஏ. இராமஸ்வாமி அவர்கள்
(ஈசன், வவுனியா) 11. ஆ. செந்தில்நாதன் J.P அவர்கள்
(சிற்றி ஏஜென்சி, 1ம் குறுக்குத்தெரு, வவுனியா)
III
9
சிவமயம்
- இந்து மாமன்றத் தலைவர் உரை
தொடர்ந்த ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் பண்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழாவின் ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் நால் வரிசையில் தமிழ்ப்பெரும் புலவர் ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தனர், வாக்குணி டாம் ஆகியவையுடன் இந்தவருடம் நல வழி
அகளங்கண் (நா. தர்மராசா) அவர்கள் இம்முறை நல்வழிக்கு உரைசெய்து தந்தள்ளார். "ஆன்றோர் வாக்கு அமுதம்" என்பதனை வலியுறுத்தவதன் அடிப்படையில் மேற்கண்ட நால்களை இந்தமாமன்றம் வெளியிட்டு வருகின்றது. இவை வளர்ந்துவரும் மாணவ சமுதாயத்திற்கு ஒரு வழிகாட் டியாக அமையும் எண் பதனைக் கருத்தாகக் கொணி டே ஒளவையாரின் நால்களை வெளியிட்டு வருகின்றோம். எளிய தமிழில் அரிய பெரிய கருத்துக்கள் இந் நால்களில் காண முடிகிறது. இந்தப் பணியினை சிறப்பாக ஆற்றிவரும் தமிழ்மணி அகளங்கண் அவர்களுக்கு
திரு. வை. செ. தேவராசா இறைபணிச் செம்மல் அவர்களும், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர்களும் நன்றியுடையவர்களாவோம்.
அன்பே சிவம்.
அசீ. ஏ. இராமஸ்வாடமி தலைவர், இந்து மாமன்றம்.
Page 4
IV
.ெ
வவுனியா சிவாலயத் திருப்பணி
SIT HY WINAYAGAR ALAYA SAIYA MAHASABA ஒத்தி விநாயகர் ஆலய கிை பே
KOVILKULAM, கோவில்குளம்,
VAVUNYA. awany Goffaumr
சிவன் கோவில் அறங்காவலரின் ஆசியுரை
"மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்"
சிவனையன்றி வேறு எதனையும் சிந்தையில் கொள்ளா மாண்பினர்களால் அருளிச் செய்யப்பட்ட பன்னிரு திருமுறைகளையும் ஆண்டுதோறும் முற்றோதல் செய்துவரும் வவுனியா இந்து மாமன்றத்தின் சீரிய பணி சைவர்களாகிய ஒவ்வொருவருக்கும் பெருமையைத் தேடித் தருவதாகும்.
பூர்த்தி விழாவில் ஞாபகார்த்த வெளியீடாக சிறந்த நால்களையும் பதிப்பித்து வருவது சாலச் சிறந்தது. அந்த வரிசையில் இந்த முறை ஒளவையாரின் அறநால் "நல்வழி தமிழ்மணி அகளங்கண் அவர்களின் விளக்கவுரையுடன் வெளியிடுவதும் பொருத்தமானதே.
எண்ணியவை இனிதே நடைபெற அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரின் நல்லருள் கிடைக்கப் பிரார்த்தித்து எனது நல்லாசியை வழங்குகின்றேன்.
di ggiò.
ஆ. நவரெத்தினராசா அறங்காவலர் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயம், கோவில்குளம்.
2_. திருச்சிற்றம்பலம்
வவுனியா இந்து மாமன்ற செயலாளர் இறைபணிச் செம்மல் திருவாசகச் செல்வர் வை.செ. தேவராசா அவர்களின் ஆசியுரை
வருடந் தோறும் தவறாமல் பன்னிரு திருமுறைகளை முற்றோதல் செய்து வருகின்ற இந்துமாமன்றம் 96, 97ம் ஆண்டுகளில் கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலுடன் இணைந்து முற்றோதியது சாலவும் சிறந்தது. பன்னிரு திருமுறைகளில் 90%மானவை சிவனையே பாடப்பட்டுள்ளதும் சிவாலயத்தில் இப்பன்னிரு திருமுறைகள் ஒதப்பட்டதும் பொருத்தமானதே.
ஒவ்வொரு திருமுறை முற்றோதலுக்கும் இந்துமாமன்றம் ஒவ்வொரு புத்தகம் வெளியிடுவது வழக்கம். சென்ற வருடம் மூதுரைக்கு தமிழ்மணி தம்பி அகளங்கன் அவர்கள் உரை எழுதி வெளியிடப்பட்டது பலராலும் பாராட்டப்பட்டது. இம்முறையும் ஒளவையாரின் நல்வழிக்கு தம்பி தமிழ்மணி அகளங்கன் உரை எழுதி வெளியிட்டுள்ளது பாராட்டப்பட வேண்டியது.
சிவாலயமும் இந்து மாமன்றமும் இணைந்து நடாத்துகின்ற இவ்விழாவில் இந்நூால் சிறந்து விளங்க சிவனை வணங்குகின்றேன்.
வணக்கம்.
- வை.செ. தேவராசா
Page 5
V
முன்னுரை
வவுனியா இந்து மாமன்றம் தனது சமயப் பணிகளிலே தலையாய பணியாக நூால் வெளியீட்டுப் பணியைச் செய்து வருகின்றது.
வருடந்தோறும் பன்னிரு திருமுறைகளையும் முற்றோதல் செய்து பூர்த்திவிழா அன்று ஞாபகார்த்த நூலாக நல்ல நூல்களை வெளியிடுவது இந்து மாமன்றத்தின் வழக்கமாகிவிட்டது.
அந்த வரிசையில் ஒளவையார் அருளிச் செய்த ஆத்திகூடி, கொன்றைவேந்தன், மூதுரை ஆகிய நூல்களைக் கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட இந்துமாமன்றம் இவ்வாண்டு ஒளவையார் அருளிய "நல்வழி” என்ற அறநூாலை வெளியிடுகிறது.
வழமைபோல் இந்நூாலையும் ஆக்கும் பொறுப்பு திருவருளால் எனக்குக் கிட்டியது. நல்வழிப் பாடல்களுக்கு பொழிப்புரை, விளக்கவுரை என்பவற்றை எழுதி நூலாக ஆக்கியிருக்கிறேன்.
நல்வழிப் பாடல்கள் எமது தமிழ்ச் சமூகத்தை நல்வழிப் படுத்தும் என்பது எமது நம்பிக்கை. வேற்றுச் சமயத்தவரும் படித்துப் பயன்பெறக்கூடிய அரியநூல் இது.
இந்துமாமன்றத் தலைவர் திரு. சீ.ஏ. இராமஸ்வாமி அவர்கள் இத்தகைய நூல்களை வெளியிட்டு அடுத்த தலைமுறையைச் செப்பஞ் செய்வதில் அதிக அக்கறை கொண்டவர். அவரின் பணி சிறக்க இறைவனை வேண்டுகின்றேன்.
இந்நூல் சிறுவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பயன் படக்கூடிய அரிய பொக்கிசம் என்பது யாவரும் அறிந்ததே. இன்றைய உலகின் போக்கை ஒழுக்கத்தின்பால் திசை திருப்ப இத்தகைய நூல்கள் உதவும் என்பது எனது நம்பிக்கை.
இந்நூலை அழகாக அச்சிட்டுத் தந்த சுதன் அச்சகத்தாருக்கும், இதனை வெளியிடும் இர்நு மாமன்றத்தினர்க்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
உங்கள் LIMO 6OLIMO(b, அன்பு 6Q6sa6zsfuLI NT. -- -
6 O366 856.
O 1 - O - 1998
O
சிவமயம்
நல்வ
காப்பு பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் துாமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்முன்றும் தா.
பதவுரை:- தெளிதேனும் - தெளிந்ததேனும், பாகும் - வெல்லப்பாகும். கோலம் செய்-அழகு பொருந்திய, துங்கம் -பெருமை(உயர்வு), கரிமுகத்துயானைமுகத்தையுடைய, துாமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம் போன்றவரே. சங்கத்தமிழ் மூன்றும்-இயல், இசை நாடகம் என்னும் சங்கத்தில் வளர்க்கப்பட்ட தமிழ் மூன்றும்.
பொழிப் புரை :- அழகுபொருந்திய, பெருமையையுடைய, யானைமுகங்கொண்ட பரிசுத்தமாகிய சிந்தாமணிபோன்ற விநாயகப் பெருமானே! உனக்குப் பாலும், தெளிந்ததேனும், வெல்லப்பாகும், பருப்பும் ஆகிய இவை நான்கையும் கலந்து நான் தருவேன். எனக்கு நீ இயல், இசை, நாடகம் என்னும் சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும் தருவாயாகுக.
விளக்கவுரை:- விநாயகப்பெருமானின் அழகைப்புகழ்ந்து மகிழ்ச்சிப் படுத்தி, அவருக்குப் பிடித்தமான நான்கையும் ஒருசேரத் தருவதாகக் கூறித், தனக்குத் தேவையானதும் பிடித்தமானதுமான மூன்றையும் தரும்படி கேட்கிறார். பெரியவர்களிடம் சிறியவர்கள் ஏதாவது பெறவேண்டும் எனில் பின்பற்ற வேண்டிய வழி இதுவேயாகும்.
தீதினை விலக்கு நன்மைய்ைச் செய்
புண் ணியம் ஆம். பாவம்போம். போனநாள் செய்தஅவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதுஒழிய வேறில்லை எச்சமயத் தோர் சொல்லும்
திதுஒழிய நன்மை செயல். - O1
Page 6
O2
பதவுரை:- ஆம் - செய்யத் தக்கது. போம் - விலக்கத்தக்கது, போனநாள் - முற்பிறவியில் (முற்காலத்தில்) -
பொழிப்புரை:- புண்ணியமே செய்யத்தக்கது. பாவமே விலக்கத்தக்கது. இம்மண்ணிலே பிறந்தவர்களுக்கு அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களே வைப்பு நிதியாகும். ஆராய்ந்து பார்க்கையில் இதைவிட வேறு நிதியே இல்லை. ஆதலால் எச்சமயத்தோர் சொல்வதும் தீமையை விலக்கி நன்மையைப் புரிக என்னும் அறிவுரையே ஆகும்.
விளக்கவுரை:- எந்தச் சமயத்தவர்களும் தீமையை விலக்கி நன்மையைச் செய்யும்படியேதான் அறிவுறுத்துகின்றார்கள். மறுபிறவி பற்றிய கொள்கை இல்லாத சமயத்தவர்களும் இதையே சொல்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எண்பது மறுபிறவிக்கும் பொருந்தும், ஒரே பிறவிக்கும் பொருந்தும். மறுபிறவிபற்றிய கருத்தில்லாதவர்களும் சொர்க்கம், நரகம் பற்றிய கோட்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். எனவே புண்ணியச் செயலே செய்யத்தக்கத. அத சொர்க்கத்திற்குச் செல்லச் செய்யும். பாவச் செயல் விலக்கத்தக்கது. அது நரகத்திற்குச் செல்லச் செய்யும், எனினும் பொருந்தும்.
சாதி இரண்டே ே
சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில் இட்டார் பெரியோர் இடர்தார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. - O2
பதவுரை:- சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினி-பூமி, பட்டாங்கு - உண்மை நுால் (அறநூால்).
பொழிப்புரை:- சொல்லப்போனால் பூமியிலே சாதி இரண்டே அல்லாமல் வேறு இல்லை. நீதியினின்று தவறாத ஒழுக்கமுறைப்படி பொருள்தேடி மற்றவர்க்குக் கொடுத்து வாழ்பவரே உயர்ந்த சாதியினர். தருமஞ் செய்யாதவரே இழிந்த சாதியினர். இதுவே அறநூாலில் கூறப்பட்டுள்ள உண்மையாகும்.
விளக்கவுரை:- சாதியைப் பற்றிய ஒளவையாரின் கோட்பாடு மிக உயர்ந்தது. நல்லொழுக்கத்தில் வாழ்பவன் உயர்ந்த சாதி, தீயொழுக்கம்
03
கொண்டவன் தாழ்ந்த சாதி எனவும் பொருள்கொள்ளலாம். கொடுப்பவன் உயர்ந்த சாதி, கொடாதவன் தாழ்ந்த சாதி என்பதைவிட, ஒழுக்கம் மூலமான சாதிப்பாகுபாடே இப்பாடலின் பரிபூரணமான பொருளைத் தருகிறது. நீதிவழுவா நெறிமுறையில் இப்பூமியில் தன் வாழ்வை இட்டுக்கொண்டவன் உயர்சாதி அப்படி இட்டுக் கொள்ளாதவன் தாழ்ந்த சாதி என்பது மிகவும் பொருந்துகின்றது.
விரைந்து தருமஞ் செய்க.
இடும் பைக்கு இடும் பை இயலுடம்பி தன்றே இடும் பொய்யை மெய்யென்று இராதே - இடுங்கடுக உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. - 03
பதவுரை:- இடும்பை - துன்பம், இடும்பை -இடும்+பை, கடுக-விரைவாக, இடும்-கொடும், விண்டாரை-நீங்கியவரை, கொண்டாடும் - சிறப்பிக்கும், வீடுமுத்தி.
பொழிப்புரை:- துன்பங்களைப்போட்டு வைக்கும் பைதான் இது என்று சொல்வதற்கு ஏற்றதாக உள்ளதே இந்த உடம்பாகும். ஆதலால் பொய்யாகிய இவ்வுடம்பை மெய்யானதென்று நம்பியிராமல் விரைந்து தருமஞ் செய்க. தருமஞ்செய்யும்பழக்கம் உன்னிடத்தில் உண்டாகி விட்டால், நல்விதிப் பயனால் பெரிய வலிமையுடைய துன்பங்களி னின்றும் விடுதலை அடைபவர் பெறுகின்ற முத்தி உனக்கும் கிட்டும்.
விளக்கவுரை:- உடம்பு துன்பத்துக்குக் காரணம். பொய்யான உடம்பை
வளர்த்து ஆகப்போவது ஏதுமில்லை. அதனால் உடனடியாகத் தருமஞ் செய்க. தருமப்பயனால் முத்தி கிட்டும்.
குருடண் எறிந்த மாத்திரைக் கோல் எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந் தெய்து போதல்லாற் - கண்ணில்லான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. - 04.
பதவுரை:- மாத் திரைக் கோல் -அளவுகோல் (குருடன் வழிப் பயணஞ் செய்யத் துணையாயிருக்கும் கோல்)
Page 7
04
பொழிப் புரை:- புண் ணியப் பலன் வந்து பொருந்துகின்ற காலத்திலே அல்லாமல் வேறு காலத்தில் எவராலும் எக்காரியத்தையும் நன்கு ஆராய்ந்து செய்தும் நிறைவேற்றிவிட முடியாது. அம்முயற்சி கணிணில் லாதவன் மாங் காயை விழுத்துவதற்காகத் தனது கைத் தடியை எறிந்த வீண் முயற்சியை ஒக்கும். அவருக்கு அக்காரியம், நிறைவேற வேண்டிய காலத்திலேயே நிறைவேறும்.
விளக்கவுரை:- புண்ணியப்பலன் வந்து பொருந்துகிற காலமே, ஒரு காரியம் நிறைவேறுகிற காலமாக இருக்கும். அக்காலத்தில் குருடன் எறிகின்ற கைத்தடிகட்ட மாங்கனியை அவனுக்கு விழுத்திக் கொடுக்கும். மற்றைக் காலத்தில் எவ்வளவு ஆராய்ந்து முயன்றாலும் அக்காரியம் கைகூடாது என்றும் சிலர் பொருள் கொள்வர்.
வினைப் பயனே அனைத்தும்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின்என்றாற் போகா - இருந்தோங்கி நெஞ்சம் புண்ணாகி நெடுந்துாரம் தான்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். - 05
பதவுரை: வருந் தி - முயன்று, வாராத - உரிமை இல் லாதவை. பொருந்துவன-எமக்கென ஊழால் விதிக்கப்பட்டவை, துஞ்சுவது- இறப்பது.
பொழிப்புரை:- நாம் எவ்வளவுதான் முயன்று அழைத்தாலும் எமக்கு உரியன அல்லாதவை எமக்குக் கிட்டவே மாட்டா. எமக்கென ஊழால் விதிக்கப்பட்டு எம்மோடு சேர்வனவற்றைப் “போ’ என்று விலக் கினாலும் அவை எம்மை விட்டுப் போகவே மாட் டா, இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், வராதவைக்காகவும் போகாதவைக் காகவும் மனம் புண் ணாகும் படி நீணி ட சிந்தனைசெய்து ஏங்கி இறந்து போவதே மனிதர் செயலாகும்.
விளக்கவுரை:- அவரவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவே அவரவர்களுக்கு இன்பமும் துன்பமும் அமைகின்றன. இதனை உணர்ந்த கொள்ளாத மனிதர்கள் வீணாகக் கவலையடைந்து இறந்துவிடுகிறார்கள். எமது முழுமையான முயற்சியினாலே விரும் பியதையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விரும்பாதவற்றைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்றும் நினைப்பவர்கள் உலக மாயையினுள் அழுந்தி இறப்பர்.
05
பிறர்தர வருவதன்று உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னால் எண் உடலோடு வாழும் உயிர்க்கு. - 06
பதவுரை:- குவலயம் -பூமி, வெள்ளம்-நீர்ப்பெருக்கு.
பொழிப்புரை:- நீர்ப்பெருக்குமிக்க கடலைக் கடந்து சென்று
பொருள் உழைத்துவந்து கரைசேர்ந்தாலும், ஒரு மனிதனுக்கு, அவனுக்கென்று இவ்வுலகில் விதிக்கப்பட்ட அளவு சுகந் தான் கிடைக்கும். மற்றொருவரின் சுகம் கிடையாது.
விளக்கவுரை:- கடலோடுதல் என்பதை முத்துக்குளித்தல் என்று கொண்டாலும் பொருந்தம். எவ்வளவுதான் முயன்று பொருள் தேடிக்கொண்டு வந்தாலும் அவனது புண்ணியத்தின் அளவுக்கேற்ப விதிக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கமுடியுமே அணி றி அதற்குமேல் அனுபவிக்க முடியாதது. மற்றவருடைய சுகத்தைப் பெறவும் முடியாது. தாம் தாம் செய்த வினை தாமே அனுபவிப்பர்.
தாமரை இலைத் தண்ணிர்
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புண்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர் போற் பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. - O7
பதவுரை:- புண் -அற்ப, குரம்பை - சிறுவீடு.
பொழிப்புரை:- சகல விதங்களாலும் ஆராய்ந்து பார்த்தால் இவ்வுடம்பானது கொடிய புழுக்கள் மலிந்தும், நோய்கள் நிறைந்தும் இருக்கும் அற்பமான சிறுவீடாகவே இருக்கின்றது. இவ்வுண்மையை நல்லறிவினோர் அறிந்திருப்பார்கள். ஆதலால் அவர்கள் தாமரை இலைத் தணி னிர் போல, இவ் வுடம் போடு கூடியிருந்தும் உண்மையில் ஒட்டாதிருப்பர். பிறரோடு இதுபற்றிப் பேசவும் மாட்டார்.
Page 8
06
விளக்கவுரை:- தாமரை இலைத்தண்ணீர் இலையோடு ஒட்டியது போலக் காணப்படினும் உண்மையில் ஒட்டியிருப்பதில்லை. அதேபோல் அறிஞர்கள் உடற்போடிருந்தாலும் உடம்போடு பொருந்துபவர்கள் அல்லர். அதாவது உடம்பின் வசமாவதில்லை. தாமரை இலைத்தண்ணீர் ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் இலையைவிட்டு விலகிவிடுவதுபோல உடல்பற்றி அறிந்த அறிவாளிகள் உடலை நீக்கும் சந்தர்ப்பத்தைக் காத்திருப்பார். இவ்வுடம்பின் தன்மையை அறியாத பிறர்க்கு இதுபற்றிப் பேசவும் மாட்டார்.
செல்வம் செல்லும்
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை கானும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது கானுைம் தனம். - 08
பதவுரை:- ஈட்டும் சேர்க்கும், தேட்டம் -தேடியது. தரியாது -தங்காது. மரியாதை - நன்னெறியில் நிற்றல், மதிப்பு, மகிதலம் -உலகம்,
பொழிப்புரை:- உலகீர்! பொருளைத் தேடுகின்ற முயற்சிகள் எண்ணில்லாதவையாக இருப்பினும் விதி கூட்டிவைத்தாலேயன்றிச் செல்வம் வந்துசேராது. சேர்ந்தாலும் தங்காது. அதனால் நான் சொல்வதைக் கேளுங்கள். தேடக்கூடிய செல்வம் மதிப்பேயாகும்.
விளக்கவுரை:- நல்வினைப் பயனில்லாவிடின் எவ்வழிகளில் முயன்றாலும் செல்வம் வராது. வந்தாலும் நிற்காது. அதனால் தேடிச் சேர்க்கவேண்டியது நல்லவர் என்ற மரியாதையையே ஆகும். புண்ணியச்செயல் செய்வதனாலேயே அம்மரியாதை கிட்டும்.
இல்லை என்றுரையா இதயத்தார்
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும், அந் நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லைஎன மாட்டார் இசைந்து. - 09
07
பதவுரை:- பெருக்கு-வெள்ளம், ஊற்று-சுரத்தல், ஊட்டும் - காப்பாற்றும், நல்கூர்ந்தார் - வறுமையடைந்தார். இசைந்து-மனம் ஒப்பி.
பொழிப்புரை:- ஆறானது கோடைகாலத்தில், நீர்ப்பெருக்கை இழந்து சுடுமணலாய்க்கிடக்கும். அப்பொழுதும் நீர் விரும்பி யாராவது தோண்டினால் ஊற்றெடுத்து உலகத்தவர்க்கு உதவி செய்து காப்பாற்றும். இத்தன்மை போலவேதான் நல்ல குடியில் பிறந்தவர்கள், மிகவும் வறுமையாளராக மாறிய நிலையிலும் தம்மிடம் வந்து இரந்தவர்க்கு இல்லை என்று மனம் ஒப்பிச் சொல்லார். ஏதோ வகையில் உதவி செய்தே தீருவார்.
விளக்கவுரை:- இளையான்குடி மாற நாயனார், மிகுந்த வறுமையிலும், வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு அமுத படைப்பதற்காக வயலில் விதைத்த நெல்லை அள்ளிவந்த சமைத்துக் கொடுத்தார். குமண வள்ளல் வறுமையோடு காட்டில் வாழ்ந்த காலத்தில் தன்னிடம் வந்த பெருஞ்சித்திரனார் என்ற புலவருக்குத் தன் தலையையே கொடுத்தார். கர்ணன் இறக்கப்போகும் நிலையிலும் தன்னிடம் இரந்த பிராமணனுக்குத் தான் செய்த புண்ணியத்தையே தானமாகக் கொடுத்தான். வறுமை வந்தபோதம் இல்லை என்று சொல்ல முடியாத இதயம் படைத்தவர்கள் இவர்கள்.
இட்டு உண்டு இரும்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென் என்று இட்டுஉண்டு இரும். - 10
பதவுரை:- மாண்டார் -இறந்தார். மாநிலத்தீர்-மக்களே.
பொழிப்புரை:- பரந்த இப்பூமியிலே வாழும் மக்களே! நீங்கள், ! இறந்துபோன உங்கள் அன்புக்குரியவர்களுக்காகக் கண்ணிர் சிந்தி வருடம்தோறும் அழுது புரண்டாலும் இறந்தவர்கள் உயிர்த்து வரப்போவதில்லை. அதனால் வீணே அழுதுபுரண்டு காலத்தை வீணாக்க வேண்டாம் நமக்கும் மரணமே வழியாகும். அதனால் நாம் இறந்துபோகும் வரையில் நாம் செய்யத்தகுந்த நற்காரியம் என்ன என்று சிந்தித்து மற்றவர்களுக்குக் கொடுத்து உண்டு வாழவேண்டும்.
Page 9
08
விளக்கவுரை: இவ்வுலகில் அழியாமல் நிலைத்திருப்பது எதுவுமே இல்லை. மற்றையோரின் மரணத்தைத் தாங்கமுடியாமல் புரண்டு அழுபவர்களும் மரணமடையத்தான் போகின்றார்கள். அழுவதனாலே மாண்டவர் மீழ்வதில்லை. நிரந்தரமானது புண்ணியமே. அழிவில்லாததும் அப்புண்ணியமே. எனவே புண்ணியத்தைத் தேடுங்கள். அதற்குச் சுலபமானவழி கொடுத்து வாழ்தலேயாகும்.
உண்னோடு வாழ்தல் அரிது
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும் பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. -
பதவுரை:- இடும்பை - துன்பம், கூர் -மிகுதியாகச் செய்யும்.
பொழிப்புரை:- பசித்துன்பத்தை மிகுதியாகச் செய்கின்ற எனது வயிறே உணவு கிடைக்காதபோது ஒருநாள் உணவை விட்டுவிடு என்று சொன்னால் விடமாட்டாய். உணவு கூடுதலாகக் கிடைத்தபோது இரண்டு நாட்களுக்கான உணவை ஏற்றுக்கொள் என்றாலும் ஏற்கமாட்டாய். ஒரு நாளாவது நான் உணவு தேடுவதற்காகப்படுகின்ற துன்பத்தை நீ அறிந்து கொள்கிறாய் இல்லை. ஆதலால் உன்னோடு கூடி வாழ்தல் எம் போன்ற ஏழைகளுக்கு அரிதினும் அரிதாகும்.
விளக்கவுரை:- பசியினால் வயிற்றில் தோன்றும் நெருப்பை உதராக்கினி எண்பர். பசியைப் பசிப்பிணி என அழைத்த அத பிறவியோடு தொடர்ந்து வருவதாகவும் கூறினர். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது சங்க இலக்கியக் கூற்று. பசியின் கொடுமை உலகம் அறிந்ததே. பசிக்கு
காரணமாகிய வயிற்றை ஒளவையார் ஏசுகின்ற இப்பாடல் மிகவும் சிறந்தது.
உழவுத் தொழிலே உயர் தொழில்
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. - 12
09
பதவுரை:- வீற்றிருந்த-பெருமையோடு வாழ்ந்த, விழும் -அழியும், ஏற்றம் - உயர்ந்தது, பழுது-கேடு.
பொழிப்புரை:- ஆற்றங்கரையில் எவ்வித குறைகளும் இன்றிச் செழித்து வளர்ந்து ஓங்கி உயர்ந்து நின்ற பெருவிருட்சமும், அரசரும் மதிக்கும்படி பெருமையொடு வாழ்ந்த வாழ்க்கையும் ஒருநாள் அழிந்துபோகும். ஆனால் உழுது பெறும் பயனை உண்டு வாழ்வதற்கு நிகரான உயர்ந்த வாழ்வு வேறில்லை. ஏனெனில் மற்றைய தொழில்களுக்கு எப்பொழுதும் குறைகள் உள்ளன.
விளக்கவுரை:- ஆற்றங்கரை மரத்தின் வாழ்வுக்கும் துன்பம் உண்டு. மன்னர்கள் மதிக்க வாழ்கின்ற வாழ்வும் அழிந்து போகும். எனச் சிறந்த இரு உதாரணங்களைக் கூறி உழுதுண்டு வாழும் வாழ்க்கையின் சிறப்பைச் சொல்கிறார் திருவள்ளுவர், கம்பர் போன்றோரும் உழவுத் தொழிலின் மகிமையை விசேடமாகப் புகழ்ந்துள்ளனர். கம்பன் "ஏர் எழுபத' என்றே ஒரு நால் பாடியுள்ளான்.
விதி வலியது
ஆவாரை யாரே அழிப்பார் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பார் - ஒவாமல் ஐயம் பகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல். - 13
பதவுரை:- ஆவாரை-நன்றாக வாழ்வாரை, ஐயம் -பிச்சை, ஒவாமல் - இடைவிடாமல் அம்புவி-அழகிய பூமி
பொழிப்புரை:- அழகிய இப்பூமியிலே நன்றாக வாழ்வாரை அழிக்க வல்லவர் எவருளர். அதுமட்டுமன்றி இறப்பவரைத் தடுக்கவல்லவர் எவருளர். இடைவிடாமல் பிச்சையெடுக்கச் செல்பவர்களைத் தடுத்து விலக்க வல்லவர் எவருளர். எவருமிலர் என்பது உண்ணையாகும்.
விளக்கவுரை:- வள்ளுவர் 'ஊழிற் பெருவலி யாவுள' என்றார். தாம் தாம் செய்த வினை தாமே அனுபவிப்பார்" என்பது சைவசமயக் கொள்கை. அதனால் யாரையும் யாரும் கெடுக்கவும் முடியாத, யாரையும் யாரும் வாழவைக்கவும் முடியாது. பூர்வ புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட விதியின்படியே யாவும் நடைபெறுகிறது. மாற்றவல்லவர் பரம்பொருளாம் கடவுள் ஒருவரே என்பதை உணர்க.
Page 10
10
மானமிழந்தும் வாழ்வதா?
பிச்சைக்கு முத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சி வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா (து)
உயிர்விடுகை சால உறும். - 14
பதவுரை:- மூத்த-இழிவில் பெரிய, குடிவாழ்க்கை-பிழைப்பு, இச்சை-இச்சகம், மற்றவர்களுக்குப் பிடித்தமான வார்த்தைகள்.
பொழிப்புரை:- பிச்சை எடுப்பதிலும் மிகக் கேவலமான பிழைப்பு யாதெனில், ஒருவர்க்குப் பிடித்தமான பொய்ப்புகழ்ச்சி வார்த்தைகளையே எடுத்துக்கூறி அவரைத் துதித்தும், பிறரை வருத்தியும் பொருள் பெற்று உண்பதாகும். சிச்சீ! இப்பிழைப்பு மிகவும் இழிந்ததாகும். இவ்வாறு வயிறு வளர்ப்பதைவிட மானத்தைக் காத்து உயிரைவிடுதல் மிகவும் பெருமை தருவதாகும்.
விளக்கவுரை:- தகுதியற்றவர்களைப் புகழ்ந்து, பொருள்பெற்று வயிறு வளர்ப்பது, பிச்சையெடுப்பதிலும் கேவலமானது. இவ்வாழ்க்கையை பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை என்கிறார் ஒளவையார் . தகுதியற்றவர்களைப் புகழ்ந்தபொருள் பெறுவதும் ஒருவகையில் அவர்களை வருத்துவதேயாகும் என்பதால் இடித்தண்கை எண்கிறார். இக்கேவலமான வாழ்க்கையை சிச்சீ என இகழ்வதும், உயிர்விடுகை சால உறும் என, உயிர்விடுகையைப் புகழ்வதம் மான உணர்வையும், தன்மான வாழ்வையும் வலியுறுத்தகின்றன.
விதியினை வெல்லும் உபாயம்
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க் (கு) அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே. மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். - 15
பதவுரை:- அபாயம் -ஆபத்து, உபாயம் - தந்திரம்.
11
பொழிப்புரை:- "சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தினைக் கூறிச் சிவபெருமானின் பாதங்களைச் சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் ஆபத்து இல்லையாகும். இந்தத் தந்திரமே விதியை வெல்லும் புத்தியாகும். இது தவிர்ந்த ஏனைய வழிகளெல்லாம் விதியே புத்தியைச் செலுத்துகின்ற வழிகளாகும்.
விளக்கவுரை:- பாவவினைகளால் விதிக்கப்பட்ட விதியிலிருந்து விடுதலை பெறச் சிறந்தவழி 'சிவாய நம" என்று சொல்லிச் சிவபெருமானது பாதங்களைத் தியானிப்பதேயன்றி வேறில்லை. பக்தி நெறியே பழவினைகளைப் பாறச் செய்யும் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான். மார்க்கண்டேயர் விதியினை வென்று என்றும் பதினாறாய் வாழ்வு பெற்றது சிவாயநம என்று சிந்தித்திருந்ததனாலன்றோ.
நான்கு பெரும் அற்புதங்கள்
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணிர்மை மாறாக் கருணையால் - பெண்ணிர்மை கற்பழியா ஆற்றாற் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. - 16
பதவுரை:- தக்கோர் -மேலோர், நீர்மை-குணம், மாறா -நீங்கா.
பொழிப்புரை:- குளிர்ந்த நீரானது அது சார்ந்த நிலத்தின் தன்மைக்கேற்பவும் தகுதி வாய்ந்த மேலோராம் சான்றோர் குணம் அவரது கொடைத் தன்மைக்கேற்பவும், கண்ணினுடைய குணம் நீங்காத கருணைக்கேற்பவும், பெண்ணினது குணமானது கற்பு மாறுபடாத தன்மைக்கேற்பவும் சிறந்து விளங்குவதாகிய பண்பு. கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலே உயர்ந்த அற்புதமாகும் என்பதை அறிந்து கொள்வாயாகுக.
விளக்கவுரை:- தண்ணீரையும், சான்றோரையும், கண்ணையும், பெண்ணையும், சார்ந்தவற்றின் தன்மையோடு அற்புதமாக விளக்கியுள்ளார் ஒளவையார். இங்கு தக்கோர், எனக் கொடையாளிகளை அதாவது வள்ளல்களைக் குறிப்பிட்டுள்ளார். கண்ணுக்கணிகலன் கண்ணோட்டம். அதுவே கருணை, கற்பு இன்றிப் பெண்தன்மை இல்லை. இவை பழந்தமிழர் பண்பாட்டுச் சிறப்பு. இது என்றும் போற்றுதற்குரியத.
Page 11
12
தெய்வத்தை நொந்து பயன்என்
செய்தி வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்(து) அறும்பாவம் என்னஅறிந் தன்றிடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல். - 17
பதவுரை:- வையம் -பூமி, அறும் - அற்றுப் போகும் இருநிதியம் - பெருஞ்செல்வம்.
பொழிப் புரை:- முன் புசெய்த தீவினைகள் வறுமைக்குக் காரணமாக இருக்கத், தெய்வத்தை நொந்து கொள்வதால் பெருஞ் செல்வம் வந்தடையுமோ. அடையாது. இவ்வுலகிலே உள்ளே ஒன்றுமில்லாத வெறும் பானையும் மேலே பொங்குமோ. பொங்காது. பாவமானது கொடையினாலே அற்றுப்போகும் என்பதை அறிந்து முற்பிறவியிலே கொடுக்காதவர்களுக்கு இன்று செல்வம் வந்து சேராது.
விளக்கவுரை:- பானையிலே தண்ணீரோ, பாலோ இல்லாதபோது, அதை அடுப்பிலே வைத்து நெருப்புமுட்டி எவ்வளவுதான் முயன்றாலும் அவி வெறும் பானை பொங் காது. அது வீண முயற் சியே. பானை பொங்காததற்காக எவரைக் கோபித்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதேபோல் வறுமைக்கு முற்பிறப்பில் செய்த பாவ காரியமான தீவினை காரணமாக இருக்க ஆண்டவனைக் கோபித்து எதுவும் ஆகாது. பாவம் தொலைந்து போகவேண்டுமென்றால் கொடை கொடுத்திருக்க வேண்டும். புண்ணியமாகிய பால் பானிையிலே இருந்தால் பானை பொங்கி வழியும் என மிக அற்புதமான உவமானம் மூலம் விளக்குகிறார் ஒளவையார்.
கொருக்காதவர் செல்வம் கொள்ளையிடப்படும்
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உeற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம். - 18
13
பதவுரை:- பெருநாட்டார் -பெரிய நாட்டவர், உகந்தார் - அன்புக்குரியவர், இரணம் - இரத்தக்காயம், சரணம் -அடைக்கலம்.
பொழிப்புரை:- தம்மைப் பெற்றவர், தம்மோடு பிறந்தவர் தன் நாட்டிலுள்ளவர். இவ்வுலகில் தம் உறவினராக இருப்பவர், தம்மேல் அன்புக்குரியவர். தமக்கு ஆபத்தில் அடைக்கலம் கொடுத்தவர் என்று தம்மைச் சார்ந்தவர்க்கு இரங்கங்காட்டித், தம்பொருளைக் கொடுக்காத உலோபிகள் தம்மை உடற்புண்படும்படி வருத்தித் துன்புறுத்தும் பகைவர்க்கு அவர் கேட்டதையெல்லாம் கொடுப்பர்.
விளக்கவுரை:- இன்றும் இதே நிலமையைக் காண்கின்றோம். தானே மனமகிழ்ந்த தன்னைச் சார்ந்தோர்க்கும், மற்றையோர்க்கும் , தனக்கு உதவியோர்க்கும், தன்நாட்டார், தன் இனத்தார் எனப்பார்த்துக் கொடுத்தப் புண்ணியம் தேடாத உலோபிகளான அறிவிலிகளின் பணம், பறிக்கப் படுகிறது. அதுவும் உடல் உள வருத்தத்தோடு அவர்கள் பணத்தை இழக்கிறார்கள். இப்பணத்தைப் புண்ணியமாக்கத் தெரியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
வயிற்றுக் கொருமை
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். - - 19
பதவுரை:- சேவித்தும் -வணங்கியும் பாழின் - வினிலே, போவிப்பம் - போக்கிவிடுகின்றோம்.
பொழிப்புரை-நாம் எல்லோரும் வயிற்றினது பசிக்கொடுமையால் ஒருபடி அரிசிக்காகப் பிறரை வணங்கியும், பிறரிடம் சென்று இரந்து பெற்றும், தெளிந்த நீர் நிரம்பிய கடலைத் தாண்டிச் சென்றும், பிறரைப் பெரியவராகக் கருதியும், உலகத்தை ஆட்சி செய்தும், பிறரைப் பாராட்டிப் பாட்டுக்களை இசைத்தும் நமது அரிய உடம்பை வீணிலே போக்கி விடுகின்றோம்.
Page 12
14
விளக்கவுரை:- மனிதன் பசிக்கொடுமையால் என்ன என்னவெல்லாம் செய்கின்றான் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஒளவையார். இன்றைய நிலையில் இன்னும் எவ்வளவோ சொல்லலாம் அடிப்படைத் தேவையான வயிற்றுப் பசிக்காக இத்தகைய காரியங்களை ஆற்றினாலும் மன்னிக்கலாம், ஆனால் அர்த்தமில்லாத போலி அந்தஸ்துக்காக மனிதன் ஆற்றுகின்ற காரியங்கள் அருவருப்பையே தருகின்றன.
கெட்ட ஒழுக்கம் கேடு தரும்.
அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்கும் கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். - 20
பதவுரை:- இழிந்த-இறங்கிய, மாநிதியம்-பெருஞ்செல்விம், வெறுமை-வறுமை, வித்தாய் - விதையாய்.
பொழிப்புரை:- ஒழுக்கமில்லாத பெண்களோடு ஒருவன் மகிழ்ந்து கூடியிருக்கும் செயலானது. இம்மை மறுமை ஆகிய இருமைக்கும் நல்லதல்ல. பெரிய செல்வத்தை இழந்து வறுமைக்கும் அதுவே விதையாகிவிடும். அத்தகைய பெண்களோடு சேர்ந்து மகிழ்வது அம்மிக்கல்லைத் துணைக்கொண்டு ஆற்றைக்கடப்பதற்கு ஆற்றுநீரில் இறங்குவதற்கு ஒப்பாகும்.
விளகி கவுரை:- படகைத் துணைக் கொணி டு தானி ஆற்றைக் கடக்கவேண்டும். அம்மிக்கல்லைத் தணைக்கொண்டு ஆற்றைக் கடக்க ஆற்றில் இறங்குவது அறிவனமான செயலே. மனைவியை விட்டு ஒழுக்கமில்லாத பெண்ணின் துணையை நாடும் செய்கை, படகைவிட்டு அம்மியைத் தணைக்கொள்வதற்கு ஒப்பாகும். செல்வத்தையும் இழந்து, உடல் ஆரோக்கியத்தையும் இழந்த, புண் ணியத்தையும் இழந்த தனி பத் தைப் பெறும் வழியே கெட்ட பெண் களின் சகவாசமாகும். இப்பாடலில் இரண்டாம் அடி "செம்மையிலா வேசையர்தம் தீநட்பு எனச் சிலபிரதிகளில் உண்டு. இரண்டும் கருத்தளவில் மாறுபடவில்லை.
15
வஞ்சமிலார் வாழ்வார் நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாணாளும் வஞ்சமிலார்க் கென்றும் தருஞ்சிவந்த தாமரையாள் தான். - 21
பதவுரை:- நிழலும் - நல்லவீடு, வாணாளும் -வாழ்நாளும்.
பொழிப்புரை:- உள்ளத்திலே கபடமில்லாதவர்களுக்கு என்றும் நீர் வளத்தையும், நல்ல வீட்டையும், வயல் நிலம் நிரம்பிய நெற்கட்டுக்களையும் நல்ல பிரபலத்தையும் புகழையும் பெருவாழ்வையும் நல்ல ஊரையும், மேலும் மேலும் பெருகும் செல்வத்தையும், நிறைந்த வாழ்நாளையும், சிவந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமிதேவி தானே விரும்பிக் கொடுப்பாள்.
விளக்கவுரை:- நெஞ்சில் வஞ்சமில்லாதவர்களுக்கு மகாலக்சுமி சகல செள பாக்கியங்களையும் தானே மனமுவந்து வழங்குவாள். இதைத்தான் மனம்போல வாழ்வு என்றனரோ, நல்ல மனம்படைத்தவர்களுக்குத் தெய்வம் சகல போகங்களையும் கொடுக்கும்.
அந்தப் பணத்தை ஆர் அனுபவிப்பார்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு) ஆவிதான் போயினபின் (பு) ஆரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம். - 22
பதவுரை:- பாடுபட்டு-வருந்தி, கேடுகெட்ட-மிகவும் கெட்டுப்போன.
பொழிப்புரை:- மிகவும் வருந்தி உழைத்த பணத்தை நல்வழியில் செலவு செய்யாமல் புதைத்து வைத்துள்ள மிகவும் கெட்டுப்போன பாவிமனிதர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். உடம்பைவிட்டு உயிர்போன பின்பு யார்தான் அப்பணத்தை அனுபவிப்பார்களோ,
Page 13
16
விளக்கவுரை:- பாடுபட்டுத் தேடுகிற பணத்தைத் தருமவழியிலே செலவு செய்தால் அத புண் ணியமாகத் தொடர்ந்த வரும். அப்படிச் செய்யாமல் புதைத்த வைத்தாலோ அன்றிச் சேமித்து வைத்தாலோ அப்பணம் உடம்பைவிட்டு உயிர்போகும் காலத்தில் தொடர்ந்து வராது. யார் யாரோ அனுபவிக்கவும் கூடும். அல்லது எவருக்கும் கிட்டாமற் போகவும் கூடும்.
நடுநிலை தவறினோர் வீடு வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள முலி படருமே - முதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை. - 23
பதவுரை:- மன்று-நீதிமன்றம் ஒரம் -ஒருபக்கச் சார்பாகப் பொய், வேதாளம் - பேய்கள். சேடன் - பாம்பு.
பொழிப்புரை:- நீதிமன்றிலே ஒருபக்கச்சார்பாகப் பொய்பேசியவர்க ளுடைய வீட்டிலேபேய்கள் சென்று சேரும் வெள்ளெருக்குப் பூத்திருக்கும். பாதாள மூலி என்ற கறையான் புற்றுப் படரும் மூதேவியானவள் சென்று தங்கி வாழ்க்கை நடத்துவாள். நாகபாம்பு குடிபுகும்.
விளக்கவுரை:- நீதிமன்றிலே நீதிபதியாக இருந்துகொண்டு பக்கச் சார்பாக நடந்துகொண்டவர் என்றும், பொய்ச்சாட்சி சொன்னவர் என்றும், இருவிதமாகவும் கொள்ளலாம். மன்று ஒரம் சொன்னார் என்பவர் இவர்களே.
இவையெல்லாம் பாழ்
நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில் உடற்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை. - 24
பதவுரை: - நீறு - திருநீறு, மாறில் -மாறுபாடுஇல் லாத, மடக் கொடி -
நல்லபெண் (நல்லமனைவி)
பொழிப்புரை:- திருநீறிடாத நெற்றி, நெய்யில்லாத உணவு, ஆறில்லாத ஊரின் அழகு மாறுபாடில்லாத சகோதரம் இல்லாத உடம்பு, கற்புள்ள மனைவி இல்லாத வீடு என்பவை பாழாகும்.
17
விளக்கவுரை: பாழ்என்ற சொல் பலகருத்துக்களில் வந்துள்ளது. எனினும் வீண் எண் பத பொதக் கருத்தாக வருகிறத. மடக் கொடி எண் பத நல்லொழுக்கமுள்ள மனைவியைக் குறிக்கின்றது.
வரவிற்கேற்ப செலவு செய்க.
ஆன முதலில் அதிகஞ் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்வனாய் ஏழ் பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. - 25
பதவுரை:- ஆன-உண்டான, முதலில்-வருமானத்தில், மதி-அறிவு, நாடுஆராய்ந்து அறிந்து கொள்.
பொழிப்புரை:- ஒருவன் செய்கின்ற தொழிலினாலே உண்டாகி வருகின்ற வருமானத்திலும், அதிக பணஞ் செலவாகப் போகுமானால் அவன் மானம் இழந்து, புத்திகெட்டு, செல்கின்ற திசைதோறும் களவன் என்ற பெயர்கேட்டு, ஏழுபிறப்பும் தீயவனாகப் பிறந்து நல்லவர்களாலே பொல்லாதவனாக இகழப்படுவான் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்.
விளக்கவுரை:- வருமானத்திலும் செலவு கூடுதலாக இருந்தால் வாழ்வு எவ்வளவு தாரம் அர்த்தமற்றதாகும் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இதனை வள்ளுவர் குறிப்பிடும்போது
ஆகாறு அளவிட்டித்து ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை.
என்கிறார். செல்வம் வருகின்ற வழி சிறியதாக இருந்தாலும் அதனால் துன்பமில்லை. செல்வம் போகின்ற வழி அதைவிடப் பெரிதாக இருக்கக்கூடாது, என்பது இதன் பொருள்.
பசிவந்திடப் பத்தும் பறந்துபோம் மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்முயற்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம். - 26
Page 14
18
பதவுரை:- மானம்-மதிப்பு குலம்-குடிப்பிறப்பு வண்மை-கொடைக்குணம், தானம் -தானே கொடுப்பது, தவம் - கடவுள் வழிபாடு, தாளாண்மை-முயற்சி.
பொழிப்புரை:- பசிவந்தபோது ஒருவனின் மதிப்பு உயர்குடிப்பிறப்பு கல்வி, கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுக்கும் வள்ளற் தன்மை, நல்லுணர்வுடைமை, தானே கொடுக்கும் தர்மம், கடவுள் வழிபாடு, உயர்வு முயற்சி, தேனிலும் கனிவான இனிமையான சொல்பேசும் பெண்கள் மேல் ஏற்படும் காமம் முதலிய பத்துப் பண்புகளும் பறந்துபோய்விடும்.
விளக்கவுரை:- பசி ஒருவனத நற்பண்புகள் அனைத்தையும் நாசமாக்கும் ஆற்றல்படைத்தது என்பதை இங்கு எடுத்துக்காட்டியுள்ளார். இங்கு வண்மை, தானம் என்ற இருசொற்களும் இருவேறு பொருள்களில் வருகின்றன. வண்மை எண்பது கேட்டவர்களுக்குக் கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் தண்மை. இது வள்ளண்மை என்று குறிப்பிடப்படுகிறது. இத்தன்மை படைத்தவர்களே வள்ளல்கள். தானம் என்பது தானாக மனமுவந்து வறியவர்க்கும், பிராமணர்க்கும், ஏனையோருக்கும் கொடுப்பது. இதைவிட தருமம் என்பதுடுமான்றுண்டு. அது புண்ணியத்தைத் தேடுவதற்காகக் கொடுப்பது. முயற்சி என்ற சொல் இங்கு உயர்ச்சியைக் குறிக்கிறது. கல்வி, அறிவுடைமை என இருபாகுபாடு காட்டப்பட்டுள்ளது. கல்வி என்பது கற்று ஏற்படும் அறிவையும், அறிவுடைமை என்பது நல்லுணர்வையும் குறித்து நிற்கிறது.
எல்லாம் இறைவன் செயல்
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். - 27
பதவுரை:- ஒழிந்திட்டு-தவறி, ஈசன் -ஈஸ்வரன்(கடவுள்)
பொழிப்புரை:- ஒன்றை விரும்பி நாம் நினைத்திருக்க அது கிடைக்காமல் வேறொன்று கிடைக்கும். சிலவேளை விரும்பியதே கிடைத்தாலும் கிடைக்கும். நாம் ஒன்றை நினையாதிருக்க அது எம்முன்னே வந்துசேர்ந்தாலும் சேரும் இவையெல்லாம் என்னை ஆளுகின்ற கடவுளின் செயலே ஆகும்.
19
விளக்கவுரை:- நாம் நினைப்பது போலவே எல்லாக் காரியங்களும் நடைபெறுவதில்லை. சிலவேளை விருப்பம்போலவே நடைபெறவும் கூடும். அதற்கு மாறானதொன்று நடைபெறவும் கூடும். கிடைக்காது என்றிருந்த பொருளே கூடக்கிடைக்கும். இப்படி எம்மைமீறிய விதத்தில் கருமங்கள் நடைபெறுவதற்குக் கடவுளே காரணம். எனவே எம்கையில் ஒன்றுமில்லை.
ஆசையும் தேவையும்
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்னணுவது - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்தனையும் சஞ்சலமே தான். - 28
பதவுரை:- நாழி - ஒருபடி கண் புதைந்த-கண் கெட்ட
பொழிப்புரை:- நாம் உண்பது ஒருபடி அரிசியே. உடுப்பது நான்குமுழத்துணி டே. ஆனால் ஆசைக் கனவுகளோ எண்பது கோடியாகும். அறிவுக்கண்கெட்ட மக்களது உயிர் வாழ்க்கையானது மட்பாத்திரம் போன்றது. இறக்கும்வரை துன்பத்தையே தருவதாகும்.
விளக்கவுரை:- எமது அத்தியாவசியத் தேவைகளோ சொற்பம், ஆனால் எமது ஆசைகளோ அளவுக்கதிகம். ஆசையானது எவ்விதத்திலும் நிறைவுறாது. அறிவுகெட்ட மனிதர்கள் ஆசைப்பிசாசின் கையில் சிக்கி தம்வாழ்நாள் முழுவதம் மனச்சஞ்சலத்தோடு வாழ்ந்த இறந்து விடுகின்றார்கள். இந்த உயிர்வாழ்க்கை மட்பாத்திரம் போன்றதென்பதை மனிதர்கள் உணர்வதில்லை.
கொருப்பவர்க்கு உலகத்தவர் உறவினர்
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல் உற்றார் உலகத் தவர். - 29
Page 15
20
பதவுரை:- இரந்து-வேண்டி, கற்றா-கண் றையுடைய பக, கரவாது - மறைக்காது. அளிப்பரேல்-கொடுப்பாரேயானால், உற்றார் - உறவினர்.
பொழிப்புரை:- மரமானது பழுக்குமானால் வெளவாலைக் கூப்பிட்டு இங்கேவா என்று வேண்டிக்கெஞ்சி அழைப்பவர்கள் யாரும் இல்லை. கன்றையுடைய பகவானது பாலை மறைக்காது சுரந்து தருவதைப்போல தனது செல்வங்களை மறைத்து வைக்காது யாவர்க்கும் கொடுத்து வாழ்ந்தால் உலகத்தவர் யாவரும் அவருக்கு உறவினர்களாவார்கள்.
விளக்கவுரை:- மரம்பழுத்து விட்டால் வெளவால்கள் யாவும் மரத்துக்கு "உறவினர்களாக வந்த குவிந்தவிடுகின்றன. யாரும் கெஞ்சி வெளவாலை அழைக்கவேண்டியதில்லை. இதேபோல் மனம் பழுத்துவிட்டால் அதாவது மனம் எல்லோர்க்கும் கொடுக்கின்ற பக்குவம் அடைந்தவிட்டால் உறவினர்களை வருந்தி அழைக்கத் தேவையில்லை, உலகமே உறவாகும். கன்றுள்ள பசு கன்றுக்கு மட்டுமன்றி மற்றையோர்க்கும் பாலைத் தருவதுபோல, மனிதர்களும் தமது பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது எல்லோர்க்கும் கொடுத்து வாழவேண்டும்.
விதி மிகவும் வலியது
தாந்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய் வெறுத்தாலும் போமோ விதி. - 30
பதவுரை:- முன்செய்தவினை-முற்பிறப்பில் செய்த செயல்களின் பலன், பொறி-விதி, ஒறுத்தாரை -எமக்குத் துன்பஞ் செய்தவரை
பொழிப்புரை:- அரசனே தாமரைப் பூவிலே வீற்றிருக்கும் பிரமதேவனின் எழுத்துப்படி ஒவ்வொருவரும் தாம் தாம் முன் செய்தவினைகளின் பலனைத் தாமே அனுபவித்துத் தீருவர். அதனால் எம்மை வருத்தியவரை நாம் என்ன செய்யலாம். ஊராரெல்லோரும் ஒன்றாகக் கூடி வெறுத்தாலும் விதி இவ்வுலகைவிட்டுப் போய்விடுமோ.
21
an
விளக்கவுரை:- யாவரும் சேர்ந்து வெறுத்து ஒதுக்கினாலும் விதி இவ்வுலகைவிட்டு ஒதுங்காது. அவரவர் தாம் முற்பிறவியில் செய்த வினைகளின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். இதனால் விதியை நொந்தும் பயனில்லை. விதித்தவனை நொந்தும் பயனில்லை. இதனை விளங்கிக் கொண்டு நல்வினை களைச் செய்வதே நல்லதாகும்.
ஒழுக்கம் உயர்குலத்தினும் நண்று
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சால ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. - 31
பதவுரை:- இழுக்கு-குற்றம், வழுக்கு-தவறுதல்.
பொழிப்புரை:- குற்றமுடைய பாட்டிலும் வெறும் வாத்திய இசையே நல்லது. உயர்குலத்தில் பிறந்த பிறப்பிலும் நல்ல ஒழுக்கமே நல்லது. பழுதுபட்ட(தவறிய) வீரத்திலும் தீரா நோயே நல்லது. பிறர் பழிப்பார்களே என்று அஞ்சாத மனைவியிலும் அவளைவிட்டுத் தனித்திருத்தலே நல்லது.
விளக்கவுரை:- இசையும் பாட்டும் பொருந்திவரும்போதுதான் பாட்டுச் சிறப்படைகிறது. பாட்டு இலக்கண வழு உள்ளதாக, கருத்தப்பிழை உள்ளதாக இருந்தால் அப்படிஒரு பாட்டை இசையோடு கேட்பதிலும், வெறும் இசையே நல்லது. உயர் குடிப் பிறந்தம் ஒழுக்கத்தைப் பேணாதவர் களைவிட தாழ்குடிப்பிறந்தும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களே சிறந்தவர்கள். அதனால் குலத்திலும் குணமே சிறந்தது. அறந்தவறிய வீரத்திலும் தீராநோய் நல்லது. பழிபாவங்களுக்கு அஞ்சாத மனைவியோடு வாழ்வதிலும் திருமணமின்றித் தனித்து வாழ்வதே நல்லது என்றும் கொள்ளலாம்.
தருமமே உயிருக்கு வலுசேர்க்கும்.
ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணிர்மை வீறும் உயர்ந்து. - 32
Page 16
22
பதவுரை:- மாநிலம்-பூமி, மடு-பள்ளம், உண்ணிர்மை-புண்ணியம்.
பொழிப்புரை:- பூமியிலுள்ளவர்களே! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படுகின்ற மேடும் பள்ளமும்போல் செல்வம் வளரும் தேய்ந்து போகும் அது நிலையில்லாதது. அதனால் ஏழைகளுக்குச் சோறு கொடுங்கள். தண்ணிர் கொடுத்து உபசரியுங்கள். இத்தருமமே துணையாகப் புண்ணியப்பலன் வலிமைபெற்று உயரும் அதுவே நிரந்தரத் துணையாக நிலையாக நிற்கும்.
விளக்கவுரை: ஆற்றின் காரணத்தால் மேடும் பள்ளமும் உருவாக்கப்படுவது போல, விதியின் காரணத்தால் செல்வமும் வறுமையும் உண்டாக்கப்படும். அதனால் புண்ணியத்தைப் பெற தானதருமங்களைச் செய்யுங்கள்.
இண்சொற்கள் கருஞ்சொற்களை வெல்லும்,
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம், வேழத்திற் பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். - 33
பதவுரை:- வெட்டெனவை-கடினமான சொற்கள், மெத்தெனவை-மென்மையான சொற்கள், வேழம்-யானை, பாரை - கடப்பாரை(அலவாங்கு)
பொழிப்புரை:- யானையின் வலிய உடம்பிற்பட்டு ஊடுருவிச் செல்லும் அம்பானது மென்மையான பஞ்சினுள்ளே பாயாது. இரும்பாலான நீண்ட அலவாங்குக்குப் பிளந்து விடாத வலிய கற்பாறை பசிய சிறுமரத்தின் மென்மையான வேருக்குப் பிளந்து வளர இடங்கொடுக்கும் இவை போன்றே கடுமையான சொற்கள் சாதிக்காததை மென்மையான, இனிமையான சொற்கள் சாதித்து வென்றுவிடும். கடுஞ்சொற்கள் இன்சொற்களை வெல்லமாட்டா.
விளக்கவுரை:- இனிமையான வார்த்தைகளை அமைதியாகப் பேசினால் கல்லும் கசிந்தருகும். அடக்குமுறையால் சாதிப்பதைவிட அன்பினால் சாதிப்பதே சுலபம்,
23
இல்லானை எவரும் விரும்பார்.
கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று உண்டாயின் எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல். - 34.
பதவுரை:- கைப்பொருள்-செல்வம் இல்லாண் -செல்வம் இல்லாதவன், இல்லாள் -மனைவி செல்லாது - ஏற்கப்படாது.
பொழிப்புரை: படிப்பறிவில்லாதவனாக இருந்தாலும் அவனது கையிலே பொருளிருந்தால் யாவரும் சென்று அவனை வரவேற்று உபசரிப்பர். கல்வியறிவுள்ளவனாக இருந்தும் செல்வம் இல்லாதவனை மனைவியும் விரும்பாள். அதுமட்டுமல்ல அவனைப் பெற்றெடுத்த தாயும் விரும்பாள். அவனது வாய்ச்சொல் எவராலும் ஏற்கப்படாது.
விளக்கவுரை:- கல்விகற்றுச் சிறப்படைந்த மகனிலேதான் தாய்க்குக் கூட அதிகம் மனவிருப்பம் ஏற்படும் என்பது சங்ககாலக் கல்விக்குரிய மதிப்பு. "பிறப்போரன்ன உடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலாற் தாயும் மனந்திரியும் என்பது அக்கவிதை வரிகள். ஆனால் ஒளவையாரின் காலத்தில் பொருளில்லாத வனைத் தாயும் விரும்பாள் என்ற நிலை வந்தவிட்டது. கல்வியும் செல்வமும் சேர்ந்திருப்பதே சிறப்பு.
மூடனுக்கு எப்படி விளக்குவது
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - துாவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. - 35
பதவுரை:- ஏவாதே - கட்டளையிடாமலே, விரைத்தாலும் -விதைத்தாலும், பேதை -மூடண் (அறிவிலி), உணர்வு-நல்லறிவு
பொழிப்புரை:- பூக்காமலே காய்க்கின்ற மரங்களும் உள்ளன. அவைபோல் "ஒன்றைச் செய்” என்று கட்டளையிடாமலே தானாகக் குறிப்பறிந்து செயலாற்றுவோரும் உள்ளனர். நன்றாகத் துாவி விதைத்தாலும் நன்கு முளையாத வித்துப் போல, அறிவில்லாத, மூடனுக்கு எவ்வளவுதான் சொன்னாலும் நல்லறிவு உண்டாகாது.
Page 17
24
விளக்கவுரை:- பொதுவாகவே, பலா, ஆல், அத்தி முதலான சில மரங்கள் தவிர்ந்த ஏனைய மரங்கள் பூப்பூத்தே காய்க்கின்றன. அதேபோல் மக்களிலும் அனேகர் மற்றவர்களின் ஏவலின் காரணத்தாலேதான் காரியமாற்றுகின்றார்கள். பூத்தக்காய்க்க வேண்டுமென்பது கட்டளை. பூவாமலே காய்ப்பது தன்னுணர்வு. எவனும் தானாக உணர்ந்து ஒரு காரியமாற்றுவதே சிறப்பு எவ்வளவுதான் பண்படுத்தி எருவிட்ட நிலமாயினும் விதை முளைக்காமலும் போகும். அது விதையின் பிழை. அதேபோல மூடனுக்கு எவ்வளவு சொன்னாலும் நல்லறிவு ஏற்படாத,
பெண்ணாசை அழிவைத் தரும்
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவழிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடீஇ போதம் தனம்கல்வி பொன்றவரும் காலத்தே மாதர்மேல் வைப்பார் மனம். - 36
பதவுரை:- ஒண்டொடீஇ -ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணே, நாசம் -அழிவு, கரு-கருப்பம், போதம் -ஞானம், வேய் = மூங்கில், கதலி - வாழை.
பொழிப்புரை:- ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணே, நண்டு, சிப்பி, மூங்கில், வாழை முதலானவை அழிவை அடையும் காலத்தில் அவை கொண்டுள்ள கருப்பமே அவற்றுக்கு அழிவைத்தரும் தன்மையைப்போல் ஒருவனிடம் பொருந்தி இருக்கும் ஞானம், செல்வம், அறிவுடைமை, முதலானவை அழிவை அடையும் காலத்தில் பிறபெண்கள்மேல் காமமுறுதலாகிய மனக்கருத்து அவனிடம் தோன்றும். །
விளக்கவுரை:- நண்டு தனது சந்ததி உருவாகத் தான் அழிந்துவிடும். சிப்பி முத்துக்களை ஈன்றதும் இறந்துவிடும். வாழை குலைபோட்டபின் அது அழிந்தபோகும். மூங்கில் கன்றுகள் வெடித்த உருவாக அத அழிந்துபோகும். இவற்றைப் போன்றே பிறபெண்கள் மேல் வைக்கும் காமமாகிய மனக்கருத்துத் தோன்றிவளர ஞானம், செல்வம், கல்வி யாவும் அழியும். இராவணன் இதற்குச் சிறந்த உதாரணமாவான்.
25
முத்திக்கு முயல்வார்க்கு விதி இல்லை.
வினைப்பயனை வெல்வதற்கு வேத முதலாம் எனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுைறுவ தல்லால் கவலையுறல் நெஞ்சமேமெய் விண்ணுறுவார்க்கு இல்லை விதி. - 37
பதவுரை:- நினைப்பதென - நினைப்பதுபோல்
பொழிப்புரை:- முன்செய்த வினைகளின் விளைவை வெற்றி கொள்வதற்கு வேதத்தை முதலாகக் கொண்ட எவ்வகையான நூல்களிலும் எவ்வழியும் இல்லை. ஆயினும் வீடு பேறாகிய முத்திப்பேற்றை அடைபவர்களுக்கு விதி இல்லை. அவர்கள் நினைப்பதுபோலவே யாதும் நடைபெறும் நெஞ்சமே இவை மெய்யாகும். அதனால் வீண் கவலையை விட்டொழித்து வீடுபேற்றை நாடுவாய்.
விளக்கவுரை:- முத்தியை நாடுபவர்களுக்கு மட்டுமேதான் அவர்கள் நினைத்தபடி கருமங்கள் நடக்கும். ஏனையோர்க்கு விதிப்படியேதான் காரியம் நடக்கும். விதியை வெல்ல வேறு வழியில்லை.
வீட்டுநெறி இதுவே.
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். - 38
பதவுரை:- சம்பு-கோரைப்புல், யாக்கைக்கு-கட்டுவதற்கு.
பொழிப்புரை:- நல்லது என்றும் தீயது என்றும் நான் என்றும் அவன் என்றும் இல்லை என்றும் ஆம் என்றும் வேறுபாடு பாராட்டாது எல்லாவற்றையும் ஒரு நிலையில் காண்கின்ற சமநிலைதான் வீடுபேற்றினை அடைவதற்கான உண்மை வழியாகும். இதனை விடுத்து வேறு வழியை நாடுதல், கோரைப்புல்லை அறுத்தவர்கள் அதனைக் கொண்டே அதற்குக் கயிறு திரித்துக் கட்டுவதை விடுத்து கயிறு தேடி அலைவது போன்ற பயனற்ற செயலாகும்.
விளக்கவுரை:- கோரைப்புல்லைப் பிடுங்கியவர்கள் அதனைக் கட்டுவதற்கு, அப்புற்களின் வேரை நீக்கிக் கயிறு திரித்தக் கட்டுவார்கள். அதேபோல் பாசவேரை நீக்கி, அதனாலேயே உலகியலைக் கட்டிவிட்டால் அதுவே முத்திக்கு வழியாகும். நான் தான், நன்று தீது, ஆம் அன்று என்ற வேறுபாடு அகன்ற நிலையே யாவும் தறந்த நிலையாகும்.
Page 18
26
முப்பதாம் ஆண்டளவில் முன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகைய்ார் தங்கள் முலையளவே ஆகுமாம் முப்பு. - 39
பதவுரை:- மூன்று-மணி, பெண் பொன், மூப்பு-முதுமை.
பொழிப்புரை:- முப்பது வயதளவில் மண், பெண், பொன் ஆகிய மூன்று ஆசைகளையும் விட்டு ஒப்புயர்வில்லாத பரம்பொருளைத் தனது மனத்தினுள்ளே அனுபூதி ஞானத்தால் ஒருவன் அடையானாயின் அம்முழுமுதற்பொருள் அவன் கற்ற கல்வியின் அளவிலேயே தென்படும். பெண்களின் மூப்பை அவர்களின் முலையின் சரிவு காட்டுவது போல, இது அமையும்.
விளக்கவுரை:- முப்பது வயதிலேயே பற்றுக்களைவிட்டு தவறாமல் ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஒருவாசகம் என்று உணர்.
தேவர் குறளுந் திருநான் மறை முடிவும் முவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமுலர் சொல்லும் ஒருவா சகமென்று உணர். - 40
பதவுரை:- தேவர் - திருவள்ளுவர். நான் மறைமுடிவு - உபநிடதம் , மூவர்தமிழ்-தேவாரம் முனிமொழி-வியாசமுனிவருடைய வேதாந்த சூத்திரம்.
பொழிப்புரை:- திருவள்ளுவரின் திருக்குறளும், சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் சாரமாக விளங்கும் உபநிடதங்களும், அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர்பாடிய தேவாரப் பாடல்களும், வியாசமுனிவர் கூறியருளிய வேதாந்த சூத்திரமும் திருக்கோவையார், திருவாசகம் என்பவையும் திருமூலர் செய்த திருமந்திரமும் ஒரே பொருள் கொண்டவை என்பதை உணர்ந்து கொள்வாய்.
விளகி கவுரை:- முனிமொழியும் எண் பதை மாணிக்கவாசகர் சொல்லியருளிய, எனக்கொண்டு பொருள் கொள்வாருமுளர். தேவாரங்கள், வேதசாரமாகிய உபநிடதம், வியாசமுனிவரின் வேதாந்த சூத்திரம் , திருக்கோவை, திருவாசகம், திருமந்திரம் என்பவை எல்லாம் ஒன்றேயாகும்.
3 : :
Page 19
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
இந்து மாமன
புதிய மண்டபத் திறப்பு வி பன்னிரு திருமுறை அறிமு ஆத்திசூடி (விளக்கவுரை) மேன்மைகொள் சைவநீதி வவுனியா வெளிவட்ட வீதி
பாமாலை - அருட்கவிஞ
கொன்றை வேந்தன் (விளக்
வாக்குண்டாம் (விளக்கவுள்
15 ஆண்டு நிறைவு மலர் -
நாமறிந்த நாவலர் - அகள
நல்வழி - (பொழிப்புரை,
ாற வெளியீடுகள்
ழா மலர்
கம் - அகளங்கன்
- அகளங்கன்
- ந. சிவன்
சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற்
ர் கல் மடு பொன். தில் லையம்பலம்
கவுரை) - அகளங்கன் ரை) - அகளங்கன் சிவபுராணம் (பொருளுரை) - அகளங்கன்
ங்கன்
விளக்கவுரை) - அகளங்கன்