கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதப் போரில் மீறல்கள்

Page 1


Page 2


Page 3

பாரதப் போரில் மீறல்கள்
அகளங்கண்
ܚܸܵ
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் WRITERS MOTIWATION CENTRE 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு.

Page 4
பாரதப் போரில் மீறல்கள் Ο
கட்டுரை
Ο
எழுதியவர் அகளங்கன் (நா.தர்மராஜா )
பதிப்புரிமை திருமதி, பூ , தர்மராஜா BA.(Hons)
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (பிரியா பிரசும் -13)
முதற் பதிப்பு : LDIाएँ 2008
அச்சுப் பதிப்பு : ஏ.ஜே பிறின்ஸ், தெகிவளை
கணினி அச்சுக்கோப்பு : கணா டிஜிட்டல் பப்பிளிசர், மட்டக்களப்பு.
விலை :
ரூபா 125/-
ISBN: 955-8715-06-9

3 வவுனியா இந்து மாமன்றத் தலைவர்
சிவநெறிப்புரவலர் சீ.ஏ. இராமஸ்வாமி
அவர்கள் வழங்கிய
அணிந்துரை
'உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்'
என்ற வள்ளுவன் வாக்கு எவ்வளவு நுட்பமானது என்பதை அரிச்சந்திரன் சரித்திரத்தையும், மகாத்மா காந்தியின் சரித்திரத்தையும் அறிந்தவர்கள் அறிவார்கள்.
இந்த நூலில் மிகவும் மதிப்புக்குரிய குருவானவர்களும் வாக்குறுதிகளைச் சந்தர்ப்பத்தில் மீறியதானது, புராண வரலாற்றில் அரிச்சந்திரனுடைய மனஉறுதிக்கும் அண்மைக் காலத்தில் வாழ்ந்து அமரரான மகாத்மா காந்தியடிகளின் மனஉறுதிக்கும் முன்னால் பட்டப்பகல்ச் சந்திரன் போல் தோன்றுகின்றது.
மகாபாரதத்தில் எங்கே யார் எல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வாக்குறுதிகளையும் சத்தியத்தையும் மீறியிருக்கிறார்கள் என்று மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, ஒர் புதுவிதமான சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் அகளங்கன் அவர்கள்.
மகாபாரதக்கதை, மகான்களும் வில்லாளிகளும் போரில் வல்ல யாருமே விதிவழியிலிருந்து விலக்கப்படாதவர்கள் தான் என்ற ஓர் உண்மையையும் தெளிவுபடுத்துகின்றது.

Page 5
4 தள்மருக்கு, 13 வருடங்கள் கெட்டகாலம் என்று வியாசர் கூறியதால் தெரிந்திருந்தும் புத்திசாலித் தனமாக ஒதுங்க முடியாமல் அரசதர்மம், சத்தியம் என்று தனக்குத்தானே தளையிட்டுக் கொண்டதும் விதி தானே.
பீஷ்மர் புத்தி சாதுரியத்தால் வில்லைப் போடவைத்து, சுவேதனை வாட்போருக்கு அழைத்து, வாள் ஏந்தி வந்தவனை அம்பெய்து கொன்ற வஞ்சனையால், அவரும் வஞ்சிக்கப்பட்டு சிகண்டியின் அம்புக்கு இலக்கானார். இது விதி இல்லையா.
துரோணர் வள்ளுவர் வாய் மொழிக்கிணங்க, தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடுப்பை தரும்
என்றபடி, என்றும் சாசுவதமானவன் அசுவத்தாமன் என்று தெரிந்தவர், அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதும் தன் ஆயுதங்களைக் கைவிட்டதும் ஏற்கனவே கொண்ட முடிவான முடிவில் ஏற்பட்ட சந்தேகமல்லவா.
தெளிந்த ஞானிகளான இவர்கட்கெல்லாம் தடுமாற்றம் ஏற்பட்டதற்கு விதி காரணமில்லையா.
இவற்றையெல்லாம் நோக்கும் போது, நாடகாசிரியன் ஒருவன் தான் எழுதும் நாடகத்தின் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கேற்ப தானே அழுவதும், சிரிப்பதும் போன்றதே.என எண்ணத்தோன்றுகிறது.

5 இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தும், விதிக்கப்பட்ட விதியே வலிது என்று நம்பி மரணங்களைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளாமல் மன உணர்வுகளுக்கும் உந்துதல்களுக்கும் ஆட்பட்டதும், அளவற்ற கோபமும், பகையும் கொண்டிருந்ததும் விதி மேலோங்கி நின்றதை உறுதி
செய்கின்றதல்லவா.
இத்தனை நுட்பங்களையும் அறிந்து வெளியிட்ட ஆசிரியர் அகளங்கன் அவர்களும் ஒரு வியாசர் என்றே சொல்லத் தோன்றுகிறது.
ஏனென்றால் இந்த நூலை எழுதிய காலத்தில், கடந்த பத்து வருடங்களாக நடந்து வரும் யுத்த அத்து மீறல்களும் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்றும் காலத்துக்குக் காலம் வெளிப்படுத்தப்படும் அரசதரப்பு - எதிர்த்தரப்புக் கருத்துக்களும் உடன்பாடுகளும் நிரந்தரமாக அமையப்போவதில்லை. சந்தர்ப்பம் பார்த்து காலை வாரிவிடுவார்கள் என்று மக்கள் தத்தம் யோசனைகளில் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுவது போல் யுத்தகால நெருக்கடிகள் தொடங்குவதற்கு முன்னேயே கூறியிருக்கின்றார்.
மகாபாரதத்தின் மகானுபாவர்கள் உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று எண்ணவே இல்லை. மானிடனான மகாத்மா காந்தி, தன் உயிரைப் பணயம் வைத்து, கொன்று குவித்துக் காரியம் சாதிக்க விளைந்த வெள்ளையர்களை அன்பு வழியால் தடுத்து, கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.

Page 6
6
உலகம் வியந்த மகாபாரத பாத்திரங்கள் அனைவருமே குரூரமான குற்றம் புரிந்தவர்களாகவும் குற்றச் செயல்களுக்குத் துணை போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் வெளிச்சம் போட்டுக் காட்டி 20, 21 ஆம் நூற்றாண்டு இந்திய இலங்கை மகான்கள் உயிர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, தத்தம் உயிர்களையும் இழக்கத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பதை சொல்லாமலே சிந்தனையுள் இட்டிருக்கிறார்.
மகாபாரதப் பாத்திரங்களின் தனித்தனிக் குணாதிசயங்களை வெகு உன்னிப்பாக ஆய்வதற்கு அவரிடம் உள்ள மகாபாரதம் பற்றிய முழுமையான அறிவும் விருப்புமே காரணங்கள்.
சுமார் 13 வருடங்களுக்கு முன்னதாக வான் வெளியில் மிதந்து வந்த பேச்சொலி கேட்டுச் சென்றபோது, வவுனியா சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் ஒரு இளைஞன் படுவேகமாக, பாத்திரங்களின் பெயர்கள் குணாதிசயங்கள் ஆகியவற்றை நெட்டுருச் செய்வது போன்று அருவியாகச் சொரிந்து கொண்டிருந்தான்.
எனது ஒன்பதாவது வயதிலிருந்து நான் படித்த வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும், மற்றும் கிருபானந்த வாரி யார், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், கி.ஆ.பெ.விசுவநாதம் முதலியோர் பேசிய சொற்பொழிவுகளையும் கேட்டுத் திளைத்த நான், அன்று சிந்தாமணி விநாயகள் ஆலயத்தில் நிகழ்த்திய சொற்பெருக்கைக் கேட்டு அதிர்ந்து போனேன். என் மகிழ்ச்சியின் காரணமாக ஒரு சிறுதொகை பணத்தை பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவரிடம் பேச்சாளரிடம் கொடுக்கும்படி கொடுத்துவிட்டு, பேசிக் கொண்டிருப்பவரின் பெயர் என்ன என்று கூட அறியாமல்

வந்துவிட்டேன்.
இரண்டு மூன்று வருடங்களின் பின் தான், பேசியவரை அவரது புத்தக வெளியீட்டில் - விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தித்து அறிமுகமானேன். அவர் இந்நூல் ஆசிரியர் அகளங்கன்.
சமைத்த உணவை சுவைத்துச் சாப்பிடுபவனுக்கு அதன் சுவை எப்படியெல்லாமிருக்கிறது என்று சொல்லும் உரிமை இருப்பது போல, இந்நூல் மூலம் நான் பெற்ற இன்பத்தை விரித்துச் சொல்லவும் இருக்கும் உரிமையில் எனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளேன்.
இந்த நூலைப் படிப்பவர்கள் தத்தம் உணர்வுகளுக்கேற்ப சுவைத்துக் கொள்வார்கள். எனக்கு எந்தவிதமாகச் சுவையளித்தது
சுகமளித்தது என்று இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்.
பல் கலை வல்லுனரான அகளங்கன், தாம் கற்கும் நூல்கள் அனைத்திலும் வித்தியாசமான கண்ணோட்டத்தில், ஆழமாகச் சொல்லில் புதைந்துள்ள நுட்பங்களையும், மறைபொருளாக இருப்பவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்குவதில்லை.
எழுத்தாளன் என்பவன், கற்றவற்றைத் துலாக்கோலி லிட்டு தீர்ப்பு வழங்குவதுபோல் எழுதுவதே எழுத்தாக்கம் என்று நானும் கருதுகின்றேன். சீர் துாக்கிப் பார்க்கும் அகளங்கன் அவர்களது சிந்தனை வளம் என்றும் குறையாமல் நிரம்பி வழிய என் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
வணக்கம்

Page 7
8 முன்னுரை
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழமுரசு பத்திரிகையின் ஞாயிறு வாரமலர்ப் பகுதியில் 24.11.1985 முதல் 05.01.1986 வரை ஏழுகிழமைகளுக்குத் தொடராக வெளி வந்து, ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த “மகாபாரதப் போரில் யுத்தமுறை அத்துமீறல்களும் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும்’ என்ற கட்டுரைத் தொடர் , 17 ஆண்டுகள் கழித்து நூலுருப் பெறுவதையிட்டு மகிழ்ச்சியும், ஆச்சரியமுமடைகின்றேன்.
தமிழீழ விடுதலைப் போராளிக் குழுக்களுக்கும், பூரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலகட்டத்தில் (திம்புப் பேச்சுவார்த்தை) இக்கட்டுரை ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது.
அப்பொழுது ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்து இக்கட்டுரைத் தொடரை மிக அழகாக வெளியிட்ட திரு. எஸ். திருச்செல்வம் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது.
பழந்தமிழ் இலக்கியங்களைச் சமகாலப் பிரச்சனைகளோடு பொருத்திப் பார்த்து கட்டுரைகள் எழுதும்படி என்னைத் தூண்டி, எனது "இலக்கியச் சிமிழ்” “ இலக்கியத்தில் நகைச்சுவை” முதலான தொடர் கட்டுரைகளைத் தனது சிரித்திரன் சஞ்சிகையில் 1979ம் ஆண்டிலிருந்து வெளியிட்டு எனக்கு உற்சாகமளித்த சிரித்திரன் ஆசிரியர் அமரர். சி. சிவஞான சுந்தரம் அவர்களுக்கு என் பணிவான மதிப்பார்ந்த நன்றிகள்.

9 பழந்தமிழ் இலக்கியங்களைச் சமகாலப் பிரச்சனைகளோடு பொருத்தி நான் ஏராளமான கட்டுரைகளை சிரித்திரன் சஞ்சிகையிலும், ஈழமுரசு, முரசொலி முதலான யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளிலும், வீரகேசரி, தினகரன் ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும் எழுதிவந்தேன். பின்பு பலரும் இப் பாணியைத் தமது பேச்சிலும், கட்டுரைகளிலும் பின்பற்றத் தொடங்கினர்.
எனது இக்கட்டுரைத் தொடர், மகாபாரதச் சம்பவங்களையும், அந்நேரத்து (சமகால) அரசியல் சம்பவங்களையும், ஒப்பிட்டுச் சிந்திக்கக் கூடியதாக அமைக்கப்பட்டது.
17ஆண்டுகள் கடந்து இப்பொழுது வாசிக்கும் பொழுதும் அது பெரிதும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு வியந்த நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்கள், தனது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (பிரியா பிரசுரம்) மூலம் இதனை நூலாக்க விரும்பி மிகச்சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார். அவருக்கு நன்றி சொல்வது எனக்கே நான் நன்றி சொல்வதைப் போன்றது.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய "சிவநெறிப் புரவலர்” சீ.ஏ. இராமஸ்வாமி ஐயா அவர்களுக்கு நான் நன்றி சொல்வதும் எனக்கே நான் நன்றி சொல்லிக் கொள்வதைப் போன்றதே.
சமகாலப்போராட்டத்தை ஒப்புநோக்கக்கூடியவகையில் நான் எழுதி வெளிவரும் இரண்டாவது நூல் இது. எனது மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல்கள் (ஆய்வு) நூல் முழுக்க முழுக்க எங்கள் சுதந்திரப் போரை நினைவூட்டி எழுதப்பட்டது. அந்நூல் 1994ல் தேசிய கலை இலக்கியப் பேரவையினால்

Page 8
10 வெளியிடப்பட்டது. அதுவே இந்த வகையில் வெளிவந்த எனது முதல் நூல், இருப்பினும் இக்கட்டுரைத் தொடரே என்னால் முதலில் எழுதி பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
இம் மகாபாரதத் தொடர் , வியாசமுனிவர் பாடிய மகாபாரதத்தையும் அதனடிப்படையில் சில மாற்றங்களுடன் வில்லிபுத்துாராழ்வார் தமிழில் பாடிய வில்லி பாரதத்தையும் ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
எனது தந்தையாருக்கு வில்லி பாரதத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஏராளமான பாடல்கள் அவருக்கு மனப்பாடம். அவர்மூலமாக எனக்கு மகாபாரதக் கதையில் மிகுந்த ஈடுபாடும் பெருவிருப்பும் உண்டாகியது.
பல தடவைகள் மகாபாரதத் தொடர் சொற்பொழிவுகளைப் பல இடங்களிலும் ஆற்றியிருக்கிறேன். முதன் முதலாக என்னை வவுனியா, வெளிவட்ட வீதி சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் மகாபாரதத் தொடர்விரிவுரையாற்ற அழைத்த வவுனியா இந்துமா மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் திரு. ந. செல்லையா (மாமடுச் செல்லையா) அவர்களுக்கு என் நன்றிகள் உரியன.
மகாபாரதம் சம்பந்தமான தனி நூலொன்றை வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
பத்திரிகையில் சராசரி வாசகர்களைக் கருத்திற்கொண்டு மிகவும் எளிய நடையில் இக்கட்டுரைகளை எழுதியிருந்தேன். அந்த நடை மாற்றப்படாமல் அப்படியே இந்நூலில் பதிவாகியுள்ளது.

11 அதனால் இலக்கண சுத்தத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
பத்திரிகையில் ஒவ்வொரு தொடரிலும், முக்கியமான, சமகாலத் தோடு பொருந்தும் விடயம் ஆவலைத் தூண்டுவதற்காகவும், வியப்பை அளிப்பதற்காகவும் தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட்டது. இங்கும் அத்தகைய விடயங்கள் தனியாகவும் அச்சிடப்பட்டுள்ளன.
மகாபாரதக் கதையில் எனது இக்கட்டுரைத் தேவைக்கேற்ற பகுதிகளை மட்டும் எடுத்து இக்கட்டுரையை எழுதியதால் பெரிய அளவில் விளக்கி எழுத வாய்ப்பு இருக்கவில்லை.
மேலும், எனது ஆக்கங்களுக்கு ஆதரவு வழங்கி உற்சாகப்படுத்தி வரும் வவுனியா கத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கும் குறிப்பாக அதன் தலைவர் 'மக்கள் சேவை மாமணி” நா. சேனாதிராசா சமாநீதி அவர்களுக்கும்.
எனது நூல் வெளியீடுகளுக்கு பெரும் ஆதரவு தந்து எனக்குப் பலவகையிலும் உதவிவரும் வவுனியா இந்து மாமன்றத்திற்கும், குறிப்பாக அதன் தலைவர் “சிவநெறிப்புரவலர்’ சீ. ஏ. இராமஸ்வாமி அவர்களுக்கும், மற்றும் வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்திற்கும், வர்த்தகப் பிரமுகர்களுக்கும் என் நன்றிகள் உரியன.
டென்மார்க் அபிராமி ஆலயத்தில் அன்னை அபிராமியின் சொரூபமாக இருந்து அருள்பாலித்து வரும் அன்னை அபிராமி உபாசகி அவர்களின் அருளையும் உதவியையும் எனது நூல்

Page 9
12 வெளியீடுகளுக்குப் பெற்றுத்தரும் என் பெருமதிப்புக்குரிய “அருட்கலை வாரிதி” “கலாபூஷணம்’ சு.சண்முகவடிவேல் அவர்களுக்கும்.
வழமை போல் இந் நூலாக்கத்திற்கும் வேண்டிய ஆலோசனைகளை வழங்கி உற்சாகப் படுத்திய நண்பர்கள் திரு. செ. சண்முகநாதன் , திரு. பி. மாணிக்கவாசகம் ஆகியோருக்கும்.
நானேயாகி என்னுட் கலந்து, எல்லா வகையிலும் எனை ஊக்குவிக்கும் என் இல்லாளின் இணையிலா அன்புக்கும்,
என் எழுத்தெல்லாம் நூலாகி எங்கும் பரவவேண்டுமென்று என்னை ஊக்குவித்து என் இதயமாய் உயிர் மூச்சாய் விளங்கும் என் தம்பி க. குமாரகுலசிங்கத்திற்கும் எப்படி நான் நன்றி கூற.
ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்து பின் நூலுருப் பெற்று இரண்டு பதிப்புக்கள் கண்டு பெரும் வரவேற்பைப் பெற்ற எனது கம்பராமாயணத்து “ வாலி” ஆய்வுக் கட்டுரைத் தொகுப் பைப் போல இத் தொகுப்பும் வாசகர்களினதும் , தமிழறிஞர்களினதும் பெரும் வரவேற்பைப்பெறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இந்நூலைப் படித்துப் பயன்பெற இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் நன்றிகள்.
90. திருநாவற்குளம், அன்புடன் வவுனியா. அகளங்கண்

13 பிரசவத்தின் குரல்
பாரதப் போரில் மீறல்கள் -
இது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 13வது வெளியீடு.
ஏலவே இம்மையம் தமிழறிஞர் அகளங்கனின் “கூவாத குயில்கள்” வானொலி நாடக நூலொன்றை வெளியிட்டிருந்தது. அதனைத்
தொடர்ந்து இந்நூல்.
இலங்கையில் பழந்தமிழ் இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே.
அந்த விரல்களில் சுட்டு விரலாய் இருப்பவர் தமிழறிஞர் அகளங்கன்.
பழந்தமிழ் இலக்கியங்களை வார்த்தைகளாலும் எழுத்தாலும் உயிரோவியமாக்குவது அவருக்குக் கைவந்த கலை.
அவருடைய எவ்வகையான பழந்தமிழ் இலக்கியக் கட்டுரையாக இருந்தாலும், அதிலே அவருடைய புதிய பார்வையும் சிந்தனையும் இழையோடியிருப்பதனைக் காணலாம். புதிய தேடல்கள் நிறைந்து போய்க்கிடக்கும்.
பெற்ற தாயை மறந்து விட்டு, குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு புட்டிப் பாலுக்கு அந்நிய நாட்டிடம் கையேந்துவது போல.
தமிழின் வேரான பழந்தமிழை மறந்து விட்டு, நவீன இலக்கியம்

Page 10
14 படைக்கும் இந்த யுகத்திலே இவர் ஒரு வித்தியாசமான படைப்பாளி.
இந்தக் கட்டுரையானது, பழந்தமிழின் வேருக்கு உரநிர் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.
காலத்தின் தேவை கருதி இந்தக் கட்டுரையை நூலாகக் கொண்டு வரும் கடமை எமக்குண்டு.
எனவேதானி , இந்த கட்டுரை எழுத்தாளர் ஊக் குவிப்பு மையத்தினூடாக (பிரியாபிரசுரம்) நூலுருப் பெறுகிறது.
இன்னும் இவரது பல நூல்கள் இம் மையத்தினூடாக நூலுருப் பெறும் என்ற நம்பிக்கை உண்டு.
பிரியமுடன்,
எழுத்தாளர், ஊக்குவிப்பு மையம்.

15
இதனைப் படிக்கும் போது, தமிழீழப் போராட்டத்தின்
நிகழ்காலச் சம்பவங்கள்,
வாசகர்கள் நினைவுக்கு
வருமானால் அதற்கான
முழுப்பொறுப்பையும்
நாம் ஏற்றுக்
கொள்ளுகின்றோம்.

Page 11
16
பாரதப் போரில் மீறல்கள்
இராசசூயயாகம்
எதிர்த்த அரசர்களையெல்லாம் வென்று, எதிர்க்காத அரசர்களின் திறைப்பொருளுடன் இராசசூயயாகம் செய்தான் தருமன். இந்திரப் பிரஸ்தத்தில் பெரும் கோலாகலமாக நடந்தது அந்தவிழா. அந்த விழாவிலே பல உற்பாதங்கள் நிகழ்ந்தன. அதாவது தீய நிமித்தங்கள் கூடாத சகுனங்கள் பல ஏற்பட்டன. விழா பல பிரச்சனைகளுடன் முடிவடைந்தது.
முதல்த் தாம்பூலத்தை விழாவில் கலந்து கொள்ளும் மிக முக்கியமானவர் ஒருவருக்கே கொடுப்பது வழக்கம். இந்த விழாவில் முதல்த் தாம்பூலம் கிருஷ்ணபகவானுக்குக் கொடுக்கப்பட்டது.
தனிப்பட்டபகை காரணமாக சிசுபாலன் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. கிருஷ்ணனுக்கு முதல்த் தாம்பூலம் அளித்துக் கெளரவித்ததன் மூலமாக தம்மையெல்லாம் தருமன் அவமானப்படுத்தி விட்டான் என்று சத்தமிட்டு விழாவைக்குழப்பி வெளிநடப்புச் செய்தான்.
அவனுக்கு வேண்டிய சில அரசர்களும் அவனோடு சேர்ந்து வெளிநடப்புச் செய்தனர். ஆம், வெளிநடப்புச் செய்யும் நிகழ்ச்சிகள் பாரதக்கதையில் பல தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. துரியோதனன் கூட பல தடவைகள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறான்.
சிசுபாலன் விழாவைக் குழப்பிக் கொண்டு வெளிநடப்புச்

17 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
செய்தது கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு கிருஷ்ணன் முதல்த் தாம்பூலம் பெறத் தகுதியற்றவன் என்ற வாதத்தைச் சிசுபாலன் நிகழ்த்தியதால் கிருஷ்ணனுக்குக் கோபம் கிளர்ந்தெழுந்தது.
அதனால் சிசுபாலனுக்கும் கிருஷ்ணனுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கிருஷ் ண்னின் சக்கராயுதத்திற்குச் சிசுபாலன் இரையாகினான். இத்தகைய பரபரப்புக்களோடு இராசசூயயாகம் நடந்தேறியது.
தருமனிடம் எல்லோரும் விடை பெற்றுச் சென்றனர். வியாச முனிவரும் விடை பெற்றுச் செல்ல வந்தார். தருமன் அவரிடம் வணங்கிக் கேட்டான்.
"முனிவர் பெருமானே! இந்த ராசசூயயாகத்தின் போது பல உற்பாதங்கள் நிகழ்ந்தன. இந்தக் கூடாத நிமித்தங்கள், சகுனங்களினால் இனியும் கஸ்ரமுண்டா, அல்லது சிசுபாலன் இறந்ததோடு முடிந்துவிட்டதா’ என்று. வியாசர் யோசித்துவிட்டு நிதானமாகக் கூறினார்.
"இன்னும் பதின்மூன்று ஆண்டுகளுக்கு உனக்கு மிகவும் கூடாத காலம். அதன் பின் உன் பொருட்டாக யுத்தம் தோன்றி ஏராளமான மன்னர்களும் மக்களும் மடிவார்கள் என்று எதிர்காலத்தைக் கூறினார்.
வியாசர் சென்றதும் தருமன் தனது சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு வியாசமுனிவர் சொன்னதைச் சொல்லி,

Page 12
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 18
“சகோதரர்களே என் பொருட்டாக யாரும் அழிவதை நான் ஒரு போதும் விரும்பமாட்டேன். அதனால் இன்றிலிருந்து பதின்மூன்று வருடங்களுக்கு நான் என் சகோதரர்களையாவது மற்றக் குலத்தோரையாவது, எந்தச் சந்தர்ப்பத்திலும் கடிந்து கோபித்துப் பேசமாட்டேன். குலத்தோர் விருப்பப்படியே எப்போதும் நடந்து கொள்வேன்' என்று சத்தியஞ் செய்தான்
இராசசூயயாகத்திற்கு வந்திருந்த துரியோதனன், பளிங்கைக் கண்டு நீர் என்று ஏமாந்து தனது காலை மூடியிருந்த ஆடையைச் சற்றே உயர்த்திக் கொண்டு நடந்து சென்றான். திரெளபதி தனது தோழிகளோடு இக் காட்சியைக் கண்டு சிரித்தாள்.
இன்னோரிடத்தில் உண்மையில் தண்ணிரே இருந்தது. துரியோதனனோ இதுவும் பளிங்குதான் என்று ஏமாந்து நடந்து சென்றான். காலை மூடியிருந்த ஆடை நனைந்து விட்டது. இந்தக் காட்சியையும் திரெளபதி கண்டு பலமாகச் சிரித்தாள்.
'புகையிலை விரிச்சாப் போச்சு, பொம்பிளை சிரிச்சாப் போச்சு’ என்று கூறும் இக்காலப் பழமொழி அக்காலத்தும் சரியாகவே இருந்திருக்கிறது.
தன்னை அவமானப்படுத்திய திரெளபதியை தான் அவமானப்படுத்த வேண்டும் என்று அன்றே திட்டமிட்டான் துரியோதனன். அதற்காகத் தருமனைச் சூதாட்டத்துக்கு அழைத்து, அதற்குத் தந்தை திருதராட்டினனின் சம்மதத்தையும் பெற்றுவிட்டான்.

19 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
சூதாட்டம்
யுத்தம் வராமல் தடுப்பதற்காகத் தருமன் செய்த சத்தியந் தான், யுத்தம் வருவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது, என்றால் அது ஆச்சரியந்தானே.
துரியோதனன் சூதாட்டத்திற்கு அழைத்த போது தருமன் ஆரம்பத்தில் மறுத்தான். இருப்பினும் தான் மறுப்பதால் துரியோதனன் கோபங்கொள்வான், அத்தோடு திருதராட்டினனின் சம்மதத்துடனேயே சூதாட்ட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், தான் மறுத்தால் அது பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடும் என்று அஞ்சினான்.
பிற்காலம் பெரும் யுத்தம் தோன்றக் கூடாது. அதற்கு தான் காரணமாக இருக்கக் கூடாது. என்ற நல்ல நோக்கத்தில் தான்
தருமன் சூதாட்டத்திற்கு ஒப்புக்கொண்டான்.
அத்தோடு, துரியோதனனை விட தருமன் சூதாட்டத்தில் கெட்டிக்காரன். துரியோதனன் அழைத்ததால் துரியோதனன் தான் தன்னோடு சூதாட வருவான் என்று தருமன் நம்பினான். ஆனால் சகுனி ஆடவந்ததால் தருமனுக்குப் பெருஞ் சங்கடமாகிவிட்டது.
யுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக சூதாட்டத்திற்கு ஒப்புக் கொண்டான் தருமன். ஆனால் சூதாட்டமே பாரதப் பெரும்
போருக்குக் காரணமாயிற்று.
சூதாட்டத்தில் அனைவரும் தோற்கப்பட்டனர். திரெளபதி

Page 13
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்20 சபைக்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள். திரெளபதியின் துகிலை துச் சாதனன் உரிந்து கொண்டே போனான். துகில் கிருஷ்ணபகவானின் அருளால் வளர்ந்து கொண்டே போனது. மயங்கி விழுந்தான் துச்சாதனன்.
மற்றோரெல்லோரும் ஆச்சரியப்பட்டு கைகூப்பித் தொழுதனர். திருதராட்டிரன் நிலையை அறிந்து பயங்கொண்டான். திரெளபதியின் கற்பு வலிமையால் நாடே அழிந்து விடும் என்று அஞ்சிய திருதராட்டிரன், நடந்து முடிந்த சூதாட்டத்தை மறந்து விடும்படியும், மீண்டும் இந்திரப் பிரஸ்தம் சென்று அரசாளும்படியும் வற்புறுத்தினான்.
ஆனால் தருமனோ சூதாட்டத்தில் இழந்ததை இந்தவகையில் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கவில்லை துரியோதனனுக்கும் இதில் சம்மதமில்லை.
அதனால் பலர் தடுக்கவும் கேளாது சகுனியை தருமன் மறு சூதாட்டத்திற்கு அழைத்தான். இச் சூதாட்டத்தில் தருமன் வென்றால் இழந்தவை முழுவதும் உடனடியாகப் பெற்றுக் கொள்வதென்றும், தோற்றால் பன்னிரண்டு வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாதவாசமும் முடித்த பின் இழந்த சகலதையும் பெற்றுக் கொள்வது என்றும் சூதாட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இங்கே தருமனின் பதின்மூன்று வருட ஒப்பந்தம் வியாச முனிவரின் கணக்குப் படி தருமனுக்குக் கூடாத காலம் என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. இதிலும் தருமன் தோல்வியடைந்தான் என்று வியாச முனிவர் கூறுகிறார்.

21
இரு தரப்பினரும்
படைதிரட்டிக் கொண்டு
பேச்சுவார்த்தைகளையும்
தொடக்கினார்கள்.

Page 14
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 22
துாதும் யுத்த ஆயத்தமும்
வனவாசமும் அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் கெளரவ பாண்டவ தரப்பில் தூதுகள் தொடங்கின. சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தால் யுத்தத்தின் மூலம் தங்கள் வெற்றியை நிலை நாட்ட இருதரப்பினரும் ஆதரவு திரட்டத் தொடங்கினார்கள்.
தத்தமக்கு உதவி செய்யக்கூடிய நாடுகளிடம் உதவிகோரி இருதரப்பினரும் படை திரட்டினர். சமாதானம் என்பது கோழையின் வழியல்ல. வீரனுக்கும் அதுதான் வழிஎன்பதை நிலைநாட்ட இருதரப்பினரும் பெரும் படைதிரட்டிக் கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
இதில் ஒன்று தான் கிருஷ்ணனிடம் துரியோதனனும் அருச்சுனனும் சென்று உதவி கேட்ட கதை, போரையே பெரிதும் விரும்பி எதிர்பார்த்த துரியோதனன், கிருஷ்ணனிடம் உதவிகோரி துவாரகைக் குச் சென்றான். கிருஷ்ணன் நித் திரையில் இருப்பதைக்கண்டு கிருஷ்ணனது தலைக்குப் பக்கத்தில் உள்ள அதாவது தலைமாட்டிலுள்ள கதிரையில் அமர்ந்து கொண்டான்.
ராஜராஜன் என்றும் வணங்கா முடி மன்னன் என்றும் பெயர் பெற்ற துரியோதனன் எவரது கால்மாட்டில் இருப்பதையும் விரும்பமாட்டான் தானே. அருச்சுனனும், கிருஷ்ணனிடம் போர் உதவிக்காகச் சென்று கிருஷ்ணனின் கால்மாட்டிலுள்ள கதிரையில் அமர்ந்து கொண்டான்.
அண்மைக்கால யுத்தங்களின் போது, ஒரே நாட்டிடம் போர்
 
 

23 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் புரியும் இரு நாடுகளும் உதவி கோருவது போல முற்காலத்திலும் இருந்திருக்கிறது. பெரும் வல்லரசுபோல கிருஷ்ணன் பாரதக்கதையில் செயற்பட்டிருக்கிறான்.
நித்திரை விழித்த கிருஷ்ணன் தனது காலடியில் அமர்ந்திருந்த அருச்சுனனைப்பார்த்துக் கதையை ஆரம்பித்தான்.
“என்ன அருச்சுனா வெகு நேரமாகக் காத்திருக்கிறாய் போல் தெரிகிறது. உனக்கு என்ன வேண்டும் என்றான் கிருஷ்ணன், துரியோதனன் தான் வந்திருப்பதைத் தெரியப்படுத்துவதற்காகத் தனது தொண்டையைச் சரி செய்து கொண்டான்.
“என்ன துரியோதனா இருவரும் ஒன்றாகவே வந்திருக்கிறீர்கள் இங்கேயே சமாதான ஒப்பந்தத்தைச் செய்து விடலாம் போல் தெரிகிறது’ என்று நகைச்சுவையாக பேச்சை ஆரம்பித்தான் கிருஷ்ணன்.
'பரந்தாமனே! பாரத யுத்தம் ஏற்பட்டால் எனக்கு நீ உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறேன். என்றான் துரியோதனன்.
அருச்சுனன் தானும் அதே உதவியைக் கேட்கவே வந்திருப்பதாகக் கூறினான்.
"இதில் யாருக்கு நான் சகாயம் செய்வது” என்று குழம்பிய கிருஷ்ணனுக்கு "நான் தான் முதலில் வந்தேன்’ என்றான் துரியோதனன்.

Page 15
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 24
“என்னைத்தான் முதலில் கண்டு என்ன வேண்டும் என்று கேட்டீர்கள்’ என்றான் அருச்சுனன்.
"இது சிக்கலான பிரச்சனை தான். நான் இருவருக்கும் உதவி செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன். அதனால் ஒரு தீர்வு சொல்கிறேன்.
நான் தனி ஒருவனாக, ஆயுதம் எடுத்துப் போர் புரியாதவனாக ஒரு பக்கத்திற்கும். எனது முழுப் படைகளும் மறுபக்கத்திற்கும் நின்று போரில் பங்கு கொள்வோம்.
வயதில் குறைந்தவர்களின் ஆசையைத்தான் முதலில் தீர்த்து வைக்க வேண்டும் என்பது முறை. எனவே அருச்சுனா நீயே வயதில் குறைந்தவன். ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை நன்றாக யோசித்து விட்டுப் பதில் சொல்.
ஆயுதம் எடுத்துப் போர் புரியாத தனி மனிதனான நான் வேண்டுமா, அல்லது எனக்குச் சமனான வீரர்கள் பலரைக் கொண்ட யாதவ குலத்துப் படை வேண்டுமா’ என்று கேட்டான் கிருஷ்ணன்.
அருச்சுனன் எந்த யோசனையுமின்றி எந்தத் தயக்கமும் இன்றி, நிதானமாகப் பதில் சொன்னான். 'எனக்கு நீ தான் வேண்டும்'
இதில் துரியோதனனுக்கும் பெருமகிழ்ச்சி. அத்தனை பெரிய யாதவ சேனையும் தன்பக்கம் சேர்ந்ததில் அவனுக்கும் பெரிய மகிழ்ச்சிதான்.

25 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
ஆயுதங்களினாலும் பெரும் படை பலத்தினாலும் எதையும் சாதித்து விடலாம் என்று கூறும் நாடுகளுக்கு துரியோதனன் ஒரு எடுத்துக்காட்டு.
யுத்தத்தில் வெற்றி கொள்வதற்கு படைபலத்தை விட சிறந்த
கேள்வியில் இருந்து புரிகிறது. இது மகாபாரதத்தில் ஏற்பட்ட இரண்டாவது ஒப்பந்தம்.
கடவுள் துணையே வேறெந்தத் துணையிலும் மேலானது என்ப ன் அக்மீக விளக்கம்.
து இதன் ஆத்
முதலாவது ஒப்பந்தம் தான், பன்னிரண்டு வருட வனவாசமும், ஒருவருட அஞ்ஞாத வாசமும் முடித்த பின் பாண்டவர்களுக்கு இழந்த இராச்சியம் கிடைக்க வேண்டும் என்பது.
சில வல்லரசுகள் யுத்தம் நடக்கும் நாடுகளில் இரு
நாடுகளுக்குமே உதவி செய்து இருநாடுகளுக்கும் பெரும் நாசத்தை உண்டு பண்ணுவதை இன்று நாம் காண்கிறோம்.
கிருஷ்ணனும் பூமியில் உள்ள மக்கள் தொகையைக்
குறைப்பதற்காக யுத்தத்தில் இருபக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறான்.

Page 16
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்26 யுத்த ஒப்பந்த மீறல்
கிருஷ்ணனுடன் துரியோதனன் செய்து கொண்ட யுத்த உடன்படிக்கை, யுத்த ஒப்பந்தம், யுத்தம் தொடங்குவதற்கு முன்பே மீறப்பட்டு விடுகிறது.
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை சில குழுக்கள் மீறிவிடுகின்றன.
கிருஷ்ணனின் அணி ணனான பலராமன் போரிலே தன்னிகளில்லா வீரன். துரியோதனனுக்குப் பலராமனே தண்டாயுத வித்தைக்குரு. அதனால் பலராமன் துரியோதனனின் பக்கத்தில் சேர்ந்து தன் சிஷ்யனுக்கு வெற்றியைத் தேடித்தர விரும்பினான்.
ஆனால் கிருஷ்ணனுக்கு எதிர்ப்பக்கத்தில் நின்று போர் புரிய விரும்பாததால் யுத்தக் களத்துக்கே செல்லாமல் தீர்த்த யாத்திரை சென்றுவிட்டான்.
இது ஓர் ஒப்பந்த மீறலாகும். அதனால் துரியோதனன் ஒரு பெரும் வீரனை இழந்தான்.
கிருஷ்ணனின் தம்பியான சாத்யகிக்கு அருச்சுனனே வில்வித்தைக் குரு. அதனாலும் கிருஷ்ணனுக்கு எதிர்ப்பக்கத்தில் நின்று போர் புரிய விரும்பாததாலும் சாத்யகியும் அவனது பிள்ளைகளும் பாண்டவர் பக்கமே சேர்ந்து கொண்டனர்.
இதுவும் கிருஷ்ணனும் துரியோதனனும் செய்து கொண்ட

27 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
உடன்படிக்கைக்கு மாறானதாகும்.
சில யுத்தங்களின் போது சிறுசிறு குழுக்கள் பெரிய குழுக்களின் ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்படாது மீறுவதும், அரசின் கட்டுப்பாட்டை இராணுவம் மீறுவதும் நடைமுறையில் காண்பது தானே.
கிருஷ்ணனின் படையைச் சேர்ந்தவர்களாகவும் , கிருஷ்ணனின் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்த பலராமன் சாத்யகி ஆகியோரின் செய்கை எக்காலத்தும் நிகழும் நிகழ்வு தான்.
தனக்குக் கட்டுப்பட வேண்டியவர்களைக் கிருஷ்ணனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை. இதுவும் எக்காலத்திலும் நடைமுறையில் இருக்கக் கூடிய பிரச்சனையே ஆகும்.
அநீதியை அநீதியால் அழிக்கக்கூடாது
யுத்தம் என்ற ஒன்று ஏற்பட்டு விட்டால் அங்கே தர்மங்கள், நியாயங்கள், சட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகி விடும் என்பதைத் தருமன் நன்றாகவே உணர்ந்திருந்தான். தர்மத்தை, தர்மத்தால் தான் காப்பாற்ற வேண்டும் என்பது தர்மனுக்குத் தெரியாததல்ல.
இராமாயண காவியத்திலும் இராவணனை வெல்வதற்கு, கொல்வதற்கு இராமன் வாலியை இலகுவாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

Page 17
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்28 இராமனின் அம்புபட்டு இறக்கும் தறுவாயில் இருந்த வாலி இதையே இராமனிடமும் கேட்கிறான்.
'இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்கக் கூடிய வலிமையுடையவனாக நான் இருக்க, நீ ஏன் என்னைக் கொன்று. என் தம்பி சுக்கிரீவனைத் துணைக்கொண்டாய்” என்று வாலி கேட்க, இராமன் பதில் சொல்கிறான்.
"உடன் பிறந்த தம்பியின் மனைவியை அபகரித்துக் கொண்ட பாவியாகிய நீ என்மனைவியை அபகரித்துக் கொண்ட பாவியான இராவணனை வெல்வதில் தர்மம் இல்லை. பாபத்தைப் பாபத்தால் அழிப்பதல்ல என் நோக்கம். பாபம் தர்மத்தால் தான்
அழிக்கப்பட வேண்டும்’ என்று சூசகமாகத் தத்துவம் உரைக்கிறான்.
இதே போலவே தான் தருமனின் சிந்தனையும் இருந்தது. யுத்தம் ஏற்பட்டால் பாபச் செயல்கள் புகுந்துவிடும். பின்பு பாபத்தை பாபத்தால் அழிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடும் என்றே யுத்தத்துக்குத் தருமன் அஞ்சினான்.
தனக்கு வேண்டியவர்களோடு மந்திராலோசனையிற் கலந்தான் தருமன். யுத்தம் ஏற்படாமல் காப்பதற்கு என்ன வழி என்பதே தருமனின் கேள்வியாக இருந்தது. யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்குரிய ஒரே ஒரு வழியை சகாதேவன் எடுத்துரைத்தான்.
சகல சாஸ்திர விற்பன்னனான சகாதேவன் முக்காலமும் அறிந்தவன். அப்படி இருந்தும் அவனது யோசனை கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அப்படி அவன் என்னதான் கூறினான் என்று பார்ப்போம்.

29 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
“கர்ணனை அரசனாக்க வேண்டும் . அதற்காக அருச்சுனனைக் கொல்ல வேண்டும்’ என்று ஆரம்பித்தான் சகாதேவன்.
கிருஷ னண் கேட்டானி "அத் தோடு பிரச்சனை முடிந்துவிட்டதா, துச்சாதனன் பிடித்து இழுத்ததால் குலைந்த கூந்தலை துச்சாதனனின் இரத்தத்தை எடுத்து கூந்தலிலே பூசித்தான் முடிப்பேன், அதுவரை விரித்த கூந்தலோடு திரிவேன் என்று சபதஞ் செய்த திரெளபதியின் கூந்தலுக்கு என்ன வழி சொல்லப் போகிறாய்” என்று.
வேறு யோசனையின்றி சகாதேவன் கூறினான். "திரெளபதியின் தலைமயிரை அதவாது கூந்தலை வெட்டிவிட வேண்டும்”. இக்காலம் போல குறோப்' செய்ய வேண்டும் என்று அன்றே கூறினான் சகாதேவன். அதுமட்டுமல்ல வீமனைச் சும்மாவிட்டால் அவனும் குழப்பஞ் செய்வான், அதனால் வீமனுக்குக் காலிலே சங்கிலி கட்டி சிறையில் அடைக்க வேண்டும்’ என்றும்
கூறி, இறுதியாக
"கிருஷ்ணா நீ இந்தப்பிரச்சனைகளில் எல்லாம் தலையிடாமல் இருக்கும் வண்ணம் நான் எனது மனத்தினுள்ளே அசையாமல் உன்னை நிலைநிறுத்தி விட்டேனென்றால் பாரதப்போர் ஏற்படவே மாட்டாது’ என்று விளக்கமளித்தான், சகாதேவன்.
பாராளக் கன்னன் இகற்
பார்த்தனை முன்கொன்று அணங்கின்
காரார் குழல் களைந்து
காலிற் தளை பூட்டி

Page 18
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்30
நேராகக் கைப் பிடித்து
நின்னையும் நான் கட்டுவனேல் வாராமற் காக் கலாம்
மாபா ரதம் என்றான்
(வில்லிபாரதம்)
இந்த யோசனையை யாரால் தான் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் கள்ணன் தமது மூத்த சகோதரன் என்பதும் கிருஷ்ணன் பூ பாரம் நீக்கப் பிறந்த மகாவிஷ்ணு என்பதும் தெரிந்த சகாதேவன்
வேறு எப்படித்தான் பேசுவான்.
கிருஷ்ணன் துாது
தருமன் தனது குறைந்த பட்சக் கோரிக்கையாக ஐந்து பேருக்கும் ஐந்து ஊராவது வேண்டும் என்று கூறினான். அதற்கும் குறைவாக ஐந்து வீடுகளோடு கூட திருப்திப்பட்டுக் கொள்ள அவன் மனம் துடித்தது.
அவனது பிரச்சனை தாங்கள் ஆள வேண்டும் என்பதல்ல, தாங்கள் வாழவேண்டும் என்பது கூட அல்ல, தன்னால் எந்த
மக்களுமே அழியக்கூடாது என்பதாகவே இருந்தது.
போர், போர் என்று எப்போதும் பேசிக் கொண்டிருந்த வீமன் கூட சமாதானமாக ஒரு தீர்வுக்கு வரவே விரும்பினான். உண்மையான பலசாலி சமாதானத்தையே விரும்புவான். சமாதானத்தீர்வு கோழைகளின் வழியல்ல. வீரர்களின் வழிதான் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
தூதுகள் பரிமாறப்பட்டன. ஒரே நாட்டைச் சேர்ந்த கெளரவர்க்கும், பாண்டவர்க்கும் இடையே சமாதானத்தை நிலைநாட்ட வேறு நாட்டைச் சேர்ந்த பார்த்த சாரதி கிருஷ்ணர் தூது சென்றார்.
பார்த்த சாரதியின் தூது கூடப் பயன் அளிக்கவில்லை. தூதின் போது கிருஷ்ணன் பார்த்த சாரதியாக இல்லைத்தான். போரில் தானே அருச்சுனனுக்கு, அதாவது பார்த்தனுக்கு தேர்ச்சாரதியாக தொழில் செய்தார்.
பாண்டவர்களுக்கு இராச்சியத்தில் பங்கில்லை என்றும் ஈ இருக்கும் அளவு நிலம் கூட தனி இராச்சியமாக அமைப்பதற்கு பாண்டவர்க்குக் கொடுக்கமாட்டேனென்றும் மறுத்தான் துரியோதனன்.
"நாடு முழு நாடாகவே தான் எப்போதும் இருக்கும். அதனை நானும் எனது பரம்பரையுமே தான் அரசாளுவோம். இதில் யாருக்கும் உரிமையில்லை. என்ன காரணம் கொண்டும். "நான் இருக்கும்வரை நாட்டைப் பிரியேன்” என்று பிடிவாதமாகப் பேசிய துரியோதனன் 'பார்த்த சாரதியின் தூது ஒருதலைப்பட்சமானது. அவர் பாண்டவர் பக்கம் சார்ந்து சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்” என்றும் குற்றம் சாட்டினான். அதனால் தூது பயனளிக்கவில்லை. யுத்தம் நிச்சயமாகியது.
யுத்தத்தில் எதிரியை வெல்வதற்குப் பல வழிகள் கையாளப்படுகின்றன. ராஜதந்திரம் என்று இவைகளை அறிஞர்கள் கூறிக் கொள்வார்கள். பாரத யுத்தத்தில் இத்தகைய ராஜதந்திரங்கள் பல இடங்களிலும் காணப்படுகின்றன. இந்த ராஜ தந்திரங்களுக்கு

Page 19
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 32
எல்லாம் ஊற்றாக விளங்குபவன் கிருஷ்ணனே. மகாபாரதக் கதையில் கிருஷ்ணன் மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதாபாத்திரம்.
ஒரு கதாநாயகன் கதாநாயகியை வைத்துப் பின்னப்படாத பெருங்காவியம் மகாபாரதம் இங்கே தர்மம் கதாநாயகனாகவும் அதர்மம் வில்லனாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாக் கதாபாத்திரங்களின் தன்மைகளும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த சிறப்பு மிக்கதாகவே இருக்கிறது. அவைகளில் கிருஷ்ணனின் கதாபாத்திரம் படிப்பவர்கள் மனதில் நல்ல சுவாரஸ்யமான உணர்வை உண்டாக்கக் கூடிய பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் தெரிந்தவன் கிருஷ்ணன். ஆனால் கிருஷ்ணனுக்கு எல்லாம் தெரியும் என்பது அந்த நேரத்தில் எல்லோருக்கும் தெரியாது. 69(Ib சிலருக்கே தெரியும்.
பாரதக் கதையில் கிருஷ்ணனின் அவதார நோக்கை அறிந்து கொண்டவர்கள் மிகக்குறைவு. அருச்சுனன் கூட கிருஷ்ணனின் பகவக்கீதை உபதேசத்தின் பின்தான் ஒரளவு உணர்ந்து கொள்கிறான்.
மித்திர பேதம் :- விதுரண்
யுத்தத்தில் ஒரே பக்கத்தைச் சேர்ந்தவர்களிடையே கலகத்தை உண்டு பண்ணி அப்பக்கத்தைப் பலவீனப்படுத்துவது மிக முக்கியமான ராஜதந்திரம், இதனை மித்திர பேதம் செய்தல் என்று முற்காலத்தில் குறிப்பிட்டார்கள்.

33 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
இந்த மித்திர பேதம் செய்தல் முறை இன்றும் கூட நடைமுறையில் உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடையே கலகத்தை ஏற்படுத்தி அந்த இனத்தைப் பலவீனப்படுத்துவது இன்றும் காணக்கூடியது தானே.
தூது சென்ற கிருஷ்ணன் யுத்தம் ஏற்படாமல் தடுக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டதால், துரியோதனனின் பக்கத்திற்குள் மித்திர பேதஞ் செய்வதை ராஜதந்திரமாகக் கொண்டான்.
பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் சிறிய தந்தையான விதுரன் அறிவில் மட்டுமன்றி போரிலும் மிகுந்த புகழ் பெற்றவன். நீண்ட காலமாக மந்திரிப்பதவியில் இருந்து அரசை வழிநடத்தியவன். அவனது கையில் இருக்கும் வில் மகாவிஷ்ணுவின் வில்லாகும். இது பரம்பரையாக இவனிடம் வந்து சேர்ந்த ஒரு சொத்து.
அந்த வில்லை எடுத்துப் போர் புரிந்தால் விதுரனை வெல்ல எவராலும் முடியாது. யுத்தம் ஏற்பட்டுவிட்டால் விதுரன் துரியோதனன் பக்கத்திலேயே இருக்க நேரிடும் என்பது கிருஷ்ணனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் விதுரனை எப்படியாவது போரில் கலந்து கொள்ளாமல் தடுக்க வேண்டும் என்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தான்.
சமாதானப் பேச்சு வார்த்தைக்குத் தூதாக கிருஷ்ணன் வந்திருந்தாலும், கிருஷ்ணனின் உண்மை நோக்கம் யுத்தம் ஏற்பட வேண்டும் மக்கள் மடிய வேண்டும் என்பதே. அதி கூடிய மக்களைக் கொல்வதற்கு இருதரப்பிலுமுள்ள மிகைப்பலத்தைக் குறைப்பதற்கு

Page 20
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 34
மித்திர பேத நடவடிக்கையில் இறங்கினான்.
அதனால் தான், தூதாக வந்த கிருஷ்ணன் தனக்கெனத் துரியோதனன் ஒதுக்கிக் கொடுத்த மாளிகையில் தங்காது, விதுரனின் சிறு குடிசையில் தங்கி விருந்துண்டு, துரியோதனனுக்கு வேண்டும் என்றே கோபத்தை உண்டாக்கினான்.
பொதுவாகவே விதுரன் பாண்டவர்கள் மேல் அன்பு கொண்டவன் என்று துரியோதனன் எப்பொழுதும் சொல்லிக் கொள்வான். கிருஷ்ணனோ யுத்தம் ஏற்பட்டால் பாண்டவர் பக்கமே நிற்பதாக ஒப்பந்தஞ் செய்யப்பட்டவன்.
அதனால் விதுரன் கிருஷ்ணனை அழைத்துச் சென்று விருந்து வைத்தது துரியோதனனுக்குப் பெருங்கோபத்தை மூட்டியிருந்தது. கிருஷ்ணனின் திட்டம் சரியாகத்தான் வேலை செய்தது.
பேச்சு வார்த்தையின் போது விதுரன் கூறிய அறிவுரைகள் பாண்டவர்களுக்குச் சார்பாக இருந்ததாகத் துரியோதனன் கருதி, விதுரனைக் கேவலமாகப் பேசினான். விதுரனின் பிறப்பைப் பற்றி இழிவாகப் பேசியது விதுரனுக்குப் பெரும் கோபத்தை உண்டாக்கியது. அச்சந்தர்ப்பத்தைக் கிருஷ்ணன் பயன்படுத்தி
“விதுரனின் வில் உலகத்தையே அழிக்கும், அத்தகைய பெருவீரனை வீணாகப் பகைத்துக் கொள்ளாதே துரியோதனா” என்று கூறி விதுரனுக்கு அவனது வில்லை ஞாபக மூட்டினான்.

35 團 பாரதப் போரில் மீறல்கள் சூதாட்டத்தில் தோல்வியடைந்து மனம் குழம்பி மனச் சமநிலை குலைந்திருந்த தருமனுக்கு இன்னின்னவற்றைப் பணயமாக வை என்று சகுனி ஞாபக மூட்டி வெற்றியடைந்தது சூதாட்டத்தில் வருகிறது.
அதே போலவே கோபத்தில் மனம் ஒரு நிலையில் இல்லாதிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விதுரனுக்கு வில்லை ஞாபக மூட்டினான் கிருஷ்ணன். விதுரன் வில்லை முறித்து "நான் போரில் கலந்து கொள்ளமாட்டேன்’ என்று சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தான்.

Page 21
36
சமாதானப்
பேச்சில்
கிருஷ்ணர்
ஈடுபட்டிருந்த
போதிலும்
யுத்தத்தையே
அவர்
விரும்பினார்.
 

37 அசுவத்தாமன்
இதே போல, துரோணாச் சாரியாரின் மகனும், பெரும் வீரனுமாகிய அசுவத்தாமாவையும் செயல் இழக்கச் செய்ய கிருஷ்ணன் திட்டம் தீட்டினான்.
சாதாரண வீரனாக போர் புரிவதற்கும் தளபதியாக - சேனாதிபதியாக போர் புரிவதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு.
சேனாதிபதியாக இருக்கும் வீரன் தனது கட்டுப்பாட்டிற்குள் படைகளை நிறுத்தி சுதந்திரமாகப் போர் புரிவான். ஆனால் அவன் சாதாரண வீரனாகப் போர் புரியும் போது பிறருக்குக் கட்டுப்பட்டு நிற்பதால் தனது முழுத்திறமையையும் காட்ட முடியாது போய்விடும்.
அருச்சுனனுக்கு ஒப்பான பெரும் வீரன் அசுவத்தாமன். அவன் சேனாதிபதியாகினால் யுத்தத்தில் கெளரவர்களை வெல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அசுவத்தாமாவை சேனாதிபதியாகாமல் தடுக்க முயன்றான் கிருஷ்ணன்.
சபையிலிருந்து அசுவத்தாமாவை அழைத்துச் சென்றான் கிருஷ்ணன். தனது மோதிரத்தை மெதுவாகக் கழற்றி நிலத்தில் போட்டான். அருகில் வந்த அசுவத்தாமன் குனிந்து மோதிரத்தை எடுத்தான். அவன் நிமிரும் போது “அதோ ஆகாயத்தைப் பார் அசுவத்தாமா, பரிவட்டம் தெரிகிறது’ என்று ஆகாயத்தைக் காட்டினான் கிருஷ்ணன்.
அசுவத்தாமா ஆகாயத்தைப் பார்த்தபின் கிருஷ்ணனின்

Page 22
38 கையிலே மோதிரத்தை வைத்தான். இந்த உரையாடல் கேட்காத தூரத்தில் இருந்த துரியோதனன் முதலியோர், சம்பவத்தை மட்டுமே கண்டனர்.
“அசுவத்தாமா பூமியையும் தொட்டு ஆகாயத்தையும் காட்டி கிருஷ்ணனின் கையிலே அடித்துச் சத்தியம் செய்து விட்டான். அதனால் அவன் நம்புவதற்கு உரியவனல்லன்” என்று முடிவு கட்டி என்ன காரணங் கொண்டும் அசுவத்தாமாவுக்கு சேனாதிபதிப் பதவி கொடுக்கப்படக் கூடாது எனறு தீர்மானிக்கப்பட்டது.
அதனால் அசுவத்தாமன் தனது முழுத்திறமையையும் காட்டுவதற்குப் பாரத யுத்தத்தில் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.
தனிப்பட்ட பலமிழப்பு முயற்சி
இதே போல, மித்திர பேதம் செய்ய முடியாதவர்களை தனிப்பட்ட முறையில் பலமிழக்கச் செய்வதும் ஒரு ராஜதந்திரமே.
கவச குண்டலங்களோடு பிறந்தவன் கர்ணன். யுத்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே அவனது கவச குண்டலங்களைத் தானமாகப் பெற்று வரும்படி இந்திரனை கிருஷ்ணன் அனுப்பி வைத்தான்.
இல்லை என்று இரப்போர்க்கு இல்லையென்றுரையா இதயம் படைத்த கர்ணன், கிழவனாக வந்த இந்திரன், யாசகமாகதானமாகக்கேட்ட கவச குண்டலங்களைச் சந்தோசமாக வழங்கினான். கவசமும் குண்டலமும் கர்ணனின் உடலிலே இருக்கும்வரை

39 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் அவனை யாருமே கொல்ல முடியாது. கவச குண்டலங்களை இழந்ததால் கொல்லப் படக் கூடிய நிலைக்கு அவன் உருவாக்கப்பட்டான்.
இதுவும் போதாதென்று இன்னுமொரு சூழ்ச்சியும் செய்தான் கிருஷ்ணன். கவச குண்டலங்களை இழக்கச் செய்து கர்ணனின் உடல் வலிமையை அழித்த கிருஷ்ணன், அவனது தாயான குந்தியைத் தூதனுப்பி அவனின் உள வலிமையையும் அழித்தான்.
குந்திக்கு கர்ணன் தனது மகன் தான் என்பது நிச்சயமாகத் தெரிந்து தான் இருந்தது. தனக்குப் பிறந்த குழந்தை கவச குண்டலங்களோடு பிறந்ததை அவள் அறிவாள்.
கங்கையாற்றிலே ஒரு பேழையில் கிடந்த குழந்தையை அதிரதன் என்ற தேரோட்டி எடுத்து வளர்த்த கதையும் அவளுக்குத் தெரியும். அந்தமகன் கவச குண்டலங்களோடு பெருவீரனாக விளங்குவதும் அவளுக்குத் தெரியாததல்ல, அதனால் கள்ணன் தனது பிள்ளைதான் என்பது சந்தேகமற அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது.
ஆனால் அதனை வெளிப்படுத்தி வீண் பழியைச் சுமக்க அவள் விரும்பவில்லை. திருமணத்திற்கு முன் கன்னியாக இருந்த காலத்தில் பிறந்த பிள்ளையல்லவா அவன். அதனால் தானே தனது சேலையால் சுற்றி பெட்டியில் வைத்து, ஆற்றிலே விட்டாள்.
இப்போது அதே பிள்ளையால் தனது ஏனைய, ஊர் உலகம் அறிந்த தான் வளர்த்த ஐந்து பிள்ளைகளுக்கும் ஆபத்து வரும்

Page 23
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 40 என்ற நிலைவந்ததும். அவள் இதயம் துடித்தது. கிருஷ்ணன் குந்தியைக் கள்ணனிடம் தூதாக அனுப்பினான்.
கர்ணன் பாண்டவர் பக்கம் சேரவேண்டும் என்பது கோரிக்கை. இதன் மூலமும் துரியோதனனின் பலத்தை இழக்கச் செய்யலாம். இதுமுடியாது போனால், அருச்சுனனைக் கொல்வதற் கென்றே வைத்திருக்கும் நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை என்றும், அருச்சுனனைத் தவிர மற்றைய நால்வரில் எவரையும் கொல்வதில்லை என்றும் கர்ணனிடம் வரம் கேட்கும்படி குந்தி அனுப்பப்பட்டாள்.
இதனால் கர்ணனின் வீரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது. தான் போர் செய்வது தன் தாய் வயிற்றில் பிறந்த தம்பியர்களோடும் தன் தாயினால் வளர்க்கப்பட்ட தம்பியர்களோடும் தான் என்று தெரிந்து கொண்டு எப்படிச் சஞ்சலமில்லாமல் போர் புரிய முடியும். இருந்தாலும் பந்தபாசங்களை மறந்து கோரயுத்தஞ் செய்தான் கர்ணன் என்று வியாசர் கூறுகிறார்.
யுத்த முறை ஒப்பந்தங்கள்
வில்லாளி வில்லாளியோடும், கதாயுதம் வைத்திருப்போன் கதாயுதம் வைத்திருப்போனோடும் தேரில் வருவோன் தேரில் வருவோனோடும், குதிரை வீரன் குதிரை வீரனோடும், காலாள் காலாளோடும் யானையில் வருவோன் யானையில் வருவோனோடும். யுத்தஞ் செய்யவேண்டும்.
தன்னோடு போர் செய்யாதவனோடு போர் செய்வது யுத்த தர்மம்

41 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் அல்ல. போர்க்களத்தில் இருந்து விலகிச் செல்பவனோடு அல்லது மூர்ச்சை அடைந்து கிடப்பவனோடு புறங்காட்டி ஓடுபவனோடு, ஆயுதம் இல்லாதவனோடு, சரண் அடைந்தவனோடு போர் புரிவது யுத்தமுறையல்ல.
தன்னோடு போர் புரிவதை சற்று நிறுத்தும்படி கூறுபவனோடு கூட போர் புரியக் கூடாது. காயப்பட்டவனை யுத்த களத்திலிருந்து தூக்கிச் செல்பவர்களையும் தாக்கக் கூடாது. இப்படிப் பலவகையான யுத்தமுறைகள் அக்காலத்தில் இருந்தன. யுத்தம் ஆரம்பித்தபின் இந்த யுத்த தர்மங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.
யுத்தங்களினால் தர்மங்களைக் காப்பாற்றவே முடியாது. யுத்தத்தின் போது யுத்த தர்மங்கள் கூட நிலை குலைந்து விடும் போது, ஏனைய தர்மங்கள் எப்படித்தான் காப்பாற்றப்பட முடியும்.
முதலாம் நாட் போரிலேயே யுத்த முறை அத்து மீறல், அதாவது யுத்த தர்ம மீறல் இடம் பெற்றுவிட்டது. இந்தக் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தவர் மகாவீரனும், பெரும் சத்தியவானும் குலப்பிதாமகரும் யுத்தத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக வயதாளியும் ஆன பீஷ்மரே என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
விராட அரசனின் இளையமகன் கொல்லப்பட மூத்தமகனான சுவேதன் மிகுந்த கோபங்கொண்டு பீஷ்மரை எதிர்த்தான். பீஷ்மருக்கும் சுவேதனுக்கும் நெடுநேரம் விற்போர் நடந்தது. வயதில் இளமை, உடலில் திண்மை. போர்ப்பயிற்சித் திறமை போன்றவற்றால் சிறப்புப்

Page 24
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 42
பெற்றிருந்த சுவேதனோடு கிழவனான பீஷ்மரால் நிலைநிற்க முடியவில்லை.
அதனால் அவர் மனம் வஞ்சனையால் வெல்லமுனைந்தது. சுவேதன், கையிலே வில்லை வைத்திருக்கும் வரை அவனை வெல்லமுடியாது என்று உணர்ந்து கொண்ட பீஷ்மர், சுவேதனை நோக்கி “இந்த விற்போரை விட்டால் வேறு வாள் தண்டு ஏந்திச் செய்யும் போர் ஒன்றும் நீ அறியவில்லையோ’ என்று கேட்டார்.
யுத்தத்தில் எதிரி எந்த ஆயுதம் ஏந்திப் போர் புரிய விரும்புகிறானோ அந்த ஆயுதம் ஏந்திப் போர் புரிதல் தான் உண்மை வீரம் அதுதான் யுத்த தர்மம் வெற்றியென்பது தனக்கு ஒப்பானவனிடம் பெறுவதே. எதிரிக்கு போதிய சந்தர்ப்பம் கொடுத்து வெல்வதே வெற்றி
அதனால் சுவேதனும் “இதோ வாள் எடுத்துப்போர் புரியவும் என்னால் முடியும்’ என்று கூறி, கையிலே வாள் ஏந்தித் தேரிலிருந்து கீழே குதித்தான். பீஷ்மரோ தானும் அவனோடு வாளேந்திப் போர் புரிய வேண்டிய யுத்தமுறையை மீறி சுவேதனுக்கு அம்பெய்து அவனைக் கொன்று பழியேந்தி நின்றார். என்று வில்லிபுத்தூரார் குறிப்பிடுகிறார்.
வாளோடு போர் புரிய வருபவனோடு வாளோடு போர் புரியாமல் அம்பு எய்து கொன்று யுத்த முறை அத்துமீறலை ஆரம்பித்து வைத்தார் தளபதியும் பிதாமகருமான பீஷ்மர். குல மூதாதையான பீஷ்மர் தொடக்கி வைத்த யுத்த தர்ம மீறல் இறுதிப் போர்வரை தொடர்ந்தது.
பீஷ்மரைக் கொல்வதற்கென்றே சிகண்டி, துருபதனின் மகளாகப்
 

43 அகளங்கனின் பாரதப் போல் மீறல்கள் பிறந்தாள். துருபதனின் அரண்மனை வாசலில் தொங்கிய மாலையை அணிந்ததால் பீஷ்மரின் பகைக்கு அஞ்சிய பாஞ்சால அரசனான துருபதன் சிகண்டியைக் காட்டுக்குக் கலைத்துவிட்டான்.
காட்டில் சிகண்டி - சிகண்டனாக ஆணாகமாறினாள், இருப்பினும் அவனை அலியாகக் கருதினர். மகாபாரத யுத்தத்தில் பீஷ்மரைக் கொல்வதற்கு சிகண்டி கொண்டுவரப்பட்டான்.
அருச்சுனனின் தேரில் சிகண்டி பீஷ்மரோடு போர் புரிய வந்தான். அருச்சுனன் சிகண்டியின் பின்னால் மறைந்து நின்றான். பத்தாம் நாட் போரில் சிகண்டி பீஷ்மரோடு போர் செய்வதற்காக அம்புதொடுக்க, பீஷ்மர் அவனோடு போர் புரியமறுத்து நின்றார்.
சிகண்டி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய விபரம் அறிந்த பீஷ்மர் “நீ ஒரு பேடி உன்னோடு போர் புரிவது எனக்கு இழுக்கு” என மறுக்க, சிகண்டி பீஷ்மருக்கு அம்பு தொடுத்தான்.
அந்நேரத்தில் சிகண்டியின் பின்னால் மறைந்து நின்று அருச்சுனன் பீஷ்மர் மேல் அம்பு தொடுத்து பீஷ்மரை வீழ்த்தினான்.
ஒரு தேரில், ஒரு வீரனைக் கேடயமாகப் பயன்படுத்தி
யுத்தம் செய்து கொலை செய்த கொடிய செயல் பழிக்கப்படத்தக்க செயலே.
இன்றும் கூட பொதுமக்கள் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதை பல யுத்தங்களில் காண்கிறோம்.

Page 25
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 44
மறைந்திருந்து தாக்கல்
பாரத யுத்தத்தில் பதின்மூன்றாம் நாட்போர் மிகவும் முக்கியமான ஒரு போர். அருச்சுனனுக்கும் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரைக்கும் மகனாகப்பிறந்த அபிமன்யுவே அன்றைய யுத்தத்தின் கதாநாயகன் என்று குறிப்பிடப்படக்கூடியவன்.
சுபத்திரையின் வயிற்றில் நிறைமாதக் குழந்தையாக அபிமன்யு இருந்த பொழுது, அருச்சுனன் சுபத்திரைக்கு போர் முறைகள் பற்றி ஒரு நாள் கூறிக் கொண்டிருந்தான். சச்சரவியூகத்தை எப்படி உடைத்து உள்ளே சென்று போர் புரிவது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, அந்த இடத்துக்கு வந்த கிருஷ்ணன் உரையாடலைக் குழப்பி விட்டான்.
வயிற்றில் இருந்த அபிமன்யு இந்தக் கதைகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் அவனுக்குச் சக்கரத்தைப் பிளந்து உள்ளே செல்லவழி தெரியுமேயன்றி, ஆபத்து ஏற்பட்டால் வெளியேற வழி தெரியாது என்று பாரதக் கதை கூறுகிறது.
வயிற்றில் பிள்ளை இருக்கும் போது தாய்மார்கள் நல்ல விடயங்களை வாசிக்க வேண்டும், நல்ல விடயங்களை யோசிக்க வேண்டும், நல்லவைகளையே கேட்க வேண்டும் என்ற கருத்து இன்றும் நடைமுறையிலுள்ளது.
பதின்மூன்றாம் நாட்போருக்குக் கெளரவ சேனையைச் சக்கரவியூகமாக அமைத்தார். துரோணாச்சாரியார். அன்று அருச்சுனனை திரிகள்த்த ராஜாக்கள் வலிந்து போருக்கு அழைத்து வேறிடத்துக்குக் கூட்டிச் சென்றனர்.
 

45 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் அறை கூவலை ஏற்க வேண்டியது சத்திரியனின் கடமை. அதனால் அருச்சுனன் கட்டாயமாகப் போகவேண்டி இருந்தது. இதுவும் துரோணாச்சாரியாரின் திட்டமே. அவரே அப்போது சேனாதிபதி.
பாண்டவர் படையிலே. சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்று போர் புரியக் கூடிய திறமை சாலிகள் இருவர் மட்டுமே. ஒருவன் அருச்சுனன். மற்றவன் அவனது மகனான அபிமன்யு, அபிமன்யுவுக்கு சக்கரத்தைப் பிளந்து உள்ளே செல்ல முடியுமே தவிர வெளியே வரத் தெரியாது.
அன்றைய போரில் அருச்சுனன் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டமையால், சக்கர வியூகத்தை உடைக்கும்படி தருமன், வீமன் முதலியோர் அபிமன்யுவை வேண்டிக் கொண்டனர்.
ஆபத்து நேரிட்டால் தன்னால் வெளியே வரமுடியாது என்று அபிமன்யு கூற, "சக்கரம் பிளக்கப்பட்டதும் நாம் எல்லோரும் உன்னுடன் உள்ளே புகுந்து விடுவோம். அதனால் யோசிக்க வேண்டாம்” என்று வற்புறுத்தினர்.
சக்கரத்தைப் பிளந்து துணிச்சலாக உட்சென்றான் அபிமன்யு, அபிமன்யு உள்ளே சென்றதும் சக்கரம் மீண்டும் மூடப்பட்டுவிட்டது. துரோணர், கள்ணன், சல்லியன், அசுவத்தாமா போன்ற பெரும் வீரர்களோடு எல்லாம், அஞ்சா நெஞ்சுடனும். ஆண்மையுடனும் நின்று போர் புரிந்தான் அபிமன்யு
கந்த புராணத்து பானுகோபன் போல, இராமாயணத்து

Page 26
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் இந்திரஜித்துப்போல பாரதத்திலே அபிமன்யு பிரகாசித்தான். போர் புரியும் வேகத்திலும், வீரத்திலும் தந்தை அருச்சுனனைப் போலவும்தாய் மாமன் கிருஷ்ணனைப் போலவும் அபிமன்யு விளங்குவதைக் கண்டு எல்லோரும் ஆச்சிரியம் அடைந்தனர்.
அருச்சுனனைக் கொல்வேன் என்று வீரம் பேசும் கள்ணனால் கூட அவனுடன் எதிர்த்து நிற்க முடியவில்லை. அருச்சுனனுக்குக் குருவான துரோணரால் கூட அருச்சுனனின் மகனோடு சமனாகப் போர் புரிய முடியவில்லை.
தனித்தனியாகப் போர் புரிந்து தோற்று ஒடினார்கள். துரியோதனனின் மகனான இலக்கண குமாரன் அபிமன்யுவால் கொல்லப்பட்டதும், துரியோதனன் கோபங் கொண்டு துரோணரை ஏசினான். எப்படியாவது அபிமன்யுவைக் கொன்றேயாக வேண்டும்
என்று ஆணையிட்டான்.
தனித்தனியே தோற்றோடியவர்கள் அபிமன் யுவைக் கொல்வதற்காகச் சேர்ந்து எதிர்த்தனர். அபிமன்யுவிற்குப் பின் புறமாக நின்று அவனது கவசத்தையும் வில்லையும் அம்பெய்து அறுக்கும்படி சேனாதிபதியான துரோணர் கள்ணனை ஏவினார். அதன்படி அவனும் அபிமன்யுவின் பின் புறம் நின்று கவசத்தையும் வில்லையும் தேரையும் அழித்தான் என்று வியாசர் கூறுகிறார்.
ஒருவனோடு ஒருவன் நேர் நின்று போர் புரிவது தான் யுத்தமுறை, இன்னொருவனோடு யுத்தம் செய்து கொண்டிருப்பவன்

47இல் மேல் ஒளித்திருந்து அம்பெய்வது யுத்தமுறையல்ல, மறைந்திருந்து தாக்கும் முறைகள் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தத்தில் இடம் பெறுவதில்லை.
இராமாயணத்திலும், வாலியும் சுக்கிரீவனும் யுத்தம் செய்யும் போது, தன்னோடு போர் புரியாத வாலிக்கு இராமன் வாளி எய்து குற்றவாளியாக நிற்பதைப் பார்க்கிறோம்.
இராமாயண காவியம் இருக்கும்வரை இராமன் ஏன் இத்தகையை இழி செயலைச் செய்தான் என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.
கள்னனால் கவசமும் வில்லும் தேரும் அழிக்கப்பட்டு நின்ற அபிமன்யுவின் ஒரு கையை அறுத்தார் துரோணாச்சாரியார். அதன் பின்பு போர் செய்து அபிமன்யுவின் தலையை அறுத்தான் சயத்திரதான், என்று வில்லிபுத்தூராழ்வார் குறிப்பிடுகின்றார்.
மறைந்திருந்து தாக்கும் யுத்தமுறை மீறல் தனு வேதத்தைக் கரை கண்டவரும் கெளரவ பாண்டவர்களுக்கு வில்லாசிரியருமாகிய துரோணாச்சாரியாரின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

Page 27
48
யுத்தம் தோன்றிவிட்டால்,
தர்மம் ஏது
நியாயம் ஏது.
எல்லோருமே
தர்மங்களை,
சட்டங்களை,
நியாயங்களை
மீறத் தொடங்கி
விடுகிறார்கள்.
 

49 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
அருச்சுனனின் அத்துமீறல்
கிருஷ்ணனின் தம்பியான சாத்யகிக்கும். பூரிசிரவசு என்ற பெருவீரனுக்கும் பாரதத்தில் ஏற்படும் யுத்தம் கணிக்கத்தக்கதும் கவனிக்கத்தக்கதுமாகும். இரு பரம்பரைப் பகையான குலங்களில் இருந்து வந்தவர்கள் இவர்கள். அதனால் இவர்களது யுத்தம் மிகவும் கோபத்தோடும் ஆக்ரோசத்தோடும் புரியப்பட்டது.
பூரிசிரவசு சாத்யகியை அடித்துக் கீழே தள்ளிக் கொல்லப்போனான். வேறு வீரர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த அருச்சுனனிடம் கிருஷ்ணன் கூறினான். "எனது தம்பியும் உனது சிஷ்யனுமான சாத்யகி இதோ இறக்கப் போகிறான். உடனடியாக அவனைக் காப்பாற்ற வேண்டும் பூரிசிரவசுவுக்கு அம்பெய்து கொன்று விடு” என்று. அருச்சுனனோ தன்னோடு போர் புரியாத ஒருவனுக்கு தான் அம்பு தொடுப்பது யுத்த தர்மமல்ல என்று மறுத்துரைத்தான்.
பல தடவைகள் கிருஷ்ணன் வற்புறுத்தவும் அது சத்திரிய தர்மமல்ல, என்று அருச்சுனன் மறுத்தான். இறுதியாக பூரிசிரவசு கத்தியை எடுத்து சாத்யகியின் தலையை வெட்ட முயன்றான். உடனே அருச்சுனன், கத்தியோடு ஓங்கிய பூரிசிரவசுவின் கையை அம்பெய்து அறுத்துத் தள்ளினான்.

Page 28
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 50
பூரிசிரவசு அருச்சுனனை பலவாறாக நிந்தித்து, ஏசிவிட்டு யுத்த களத்திலேயே யோகத்தில் அமர்ந்து தலையால் பூமியைத் தொட்டு நிமிர்ந்து தியானத்தில் ஆழ்ந்தான். நிலத்தில் கிடந்து எழுந்த சாத்யகி
தனது வாளால் பூரிசிரவசுவின் தலையை வெட்டி வீசினான்.
ஆயுதம் இல்லாமல், போர் புரியும் நோக்கமும் இல்லாமல் யோகத்தில் இருந்தவனின் தலையை அறுத்தது இரு திறத்துச் சேனைகளுக்கும் பிடிக்கவில்லை. சாத்யகி செய்தது இகழத்தக்க
காரியம் என்று எல்லோரும் கூறினர்.
அன்று வரை யுத்த முறையில் இருந்து மாறாமல், யுத்த தர்மத்தை மீறாமல் போர் புரிந்து வந்த அருச்சுனன் கூட அன்று யுத்த முறையில் அத்து மீறலைச் செய்தான். குலப் பெரியோரையும் குருவையும் உற்றாரையும் கொன்று அரசாள்வது பாபம் என் பாணம் அவர்களைக் கொல்லாது என்று முதல் நாட் போரிலேயே தர்மவானாக உரைத்த அருச்சுனன், கிருஷ்ணனின் கீதை உபதேசத்தால் மனந் தெளிந்தே போர் புரியப் புகுந்தான்.
நல்ல அறிவும் நிகரற்ற வில்லாற்றலும் படைத்த விஜயன் கூட, யுத்த முறைக்கு மாறாக அத்துமீறலைச் செய்து
விட்டானென்றால் வேறெவர் தான் செய்யார்.

51 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் யுத்த ஒப்பந்த மீறலும் யுத்த நிறுத்த மீறலும்
பதின் நான்காம் நாட்போரில் "பொழுது மறைவதற்குள் சயத்திரதனைக் கொல்வேன் அன்றேல் நெருப்பில் விழுந்து உயிரை விடுவேன்’ என்று அருச்சுனன் சபதஞ் செய்திருந்தான். தனது மகன் அபிமனி யுவைக் கொன்றதற்காக இந்த வஞ்சினத்தை உரைத்திருந்தான்.
சயத்திரதனை எப்படியாவது அன்று ஒரு பகற் பொழுதுக்கு காப்பாற்றி விடுவது என்று கங்கணங் கட்டிக் கொண்டார்கள் கெளரவ சேனாவீரர்கள், அருச்சுனன் இறந்தால் மீதி நால்வரும் நிச்சயமாக இறந்து விடுவார்கள். அதனால் எப்படியாவது சயத்திரதனைக் காப்பாற்றி அருச்சுனனின் தற்கொலைக்கு வழி சமைக்க வேண்டும் என்று கெளரவர்கள் பெரும் பிரயத்தனஞ் செய்தனர்.
சயத்திரதன் துரியோதனனாதியரின் ஒரே தங்கையான துச்சளையின் கணவன். அதனால் சயத்திரதன் மிகவும் அவதானமாகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டான்.
யுத்தம், ஒவ்வொரு நாளும் காலையிலே இருதிறத்துச் சேனைகளினதும். சங்கொலியுடன் ஆரம்பமாகும். பின் சூரியன் அஸ்தமிக்க இருதிறத்துச் சேனைகளினதும் சங்கொலியுடன் முடிவடையும்.
சூரியன் அஸ்தமனமாகி மீண்டும் உதயமாகும் வரையிலான இராக்காலம் யுத்த நிறுத்த ஒப்பந்தக்காலமாகும். இக் காலத்துக்குள் எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழக் கூடாது. இப்பொழுது போலல்லாது இரு திறத்தாரும் இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்து அமுலாக்கினர்.

Page 29
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 52
பதினான்காம் நாட்போரில் அருச்சுனன் வழமையை விட திறமையாகப் போர் புரிந்தான். வலது கையால் மட்டுமன்றி அதே அளவு வேகத்தோடு இடது கையாலும் பாணந்தொடுத்தான் அருச்சுனன். இருகைகளாலும் வேற்றுமை தெரியாவண்ணம் சரளமாக அம்புதொடுக்கும் ஆற்றல் மிக்கவன் என்பதால் அருச்சுனனுக்கு சவ்வியசாசி என்றும் ஒரு பெயர்.
அருச்சுனன் எவ்வளவு தான் திறமையாகப் போர் புரிந்தாலும், சயத்திரதனை நெருங்கக் கூட முடியவில்லை. அத்தனை பலமான காவலுக்குள் நின்று போர் செய்தான். சயத்திரதன்.
சூரிய அஸ்தமனம் நெருங்கிக் கொண்டிருந்தது. இரு திறத்துச் சேனைகளும் போரைக் கவனிப்பதைவிட சூரியனைக் கவனிப்பதையே முக்கியமாகக் கருதினர்.
பாண்டவ சேனையிலுள்ளவர்களோ சூரியன் மறைந்து விட்டால் அருச்சுனன் தீக் குளித்து இறந்து விடுவான். அதனால் சூரியன் மறையக் கூடாது என்ற நோக்கில் சூரியனைப் பார்த்தனர்.
கெளரவ சேனையிலுள்ளவர்களோ சூரியன் மறைந்து விட்டால் அருச்சுனன் இறந்து விடுவான். இந்தச் சூரியன் இன்னும் மறையவில்லையே என்ற நோக்கில் ஆகாயத்தைப் பார்த்தனர்.
திடீரெனச் சூரியன் மறைந்தான்யுத்தம் முடிந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் சயத்திரதன் யுத்த களத்தின் முன்னணிக்கு வந்தான். சயத்திரதனின் தலைக்கு அம்பெய்யும்படி கிருஷ்ணன் அருச்சுனனை வேண்டினான். அருச்சுனனோ “சூரியன் அஸ்தமித்து விட்டான். இராக்காலம் என்பது யுத்த நிறுத்தக்காலம். அதனால் அம்பு தொடேன்’என்று மறுத்துரைத்தான்.

53 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் “சூரியன் உண்மையில் இன்னும் மறையவில்லை. எனது சக்கராயுதத்தால் நானே தான் சூரியனை மறைத்திருக்கின்றேன். நீ அம்பை விடு என்றான் கிருஷ்ணன் அருச்சுனனின் இலக்குத் தவறாத அம்பு சயத்திரதனின் தலையைக் கொய்தது. கிருஷ்ணன் சக்கராயுதத்தை விலக்க சூரியன் ஒருபனை உயரத்தில் இருந்ததாக வில்லிபுத்தூராழ்வார் குறிப்பிடுகின்றார்.
துரியோதனனின் கோபம் எல்லையைக் கடந்தது. "ஆயுதம் எடுத்துப் போர் புரியமாட்டேன் என்று யுத்த ஒப்பந்தஞ் செய்த கிருஷ்ணன் இப்போது எந்த ஆயுதத்தை எடுத்துச் சூரியனை மறைத்தான்’ என்று கேள்விக்கணை தொடுத்தான்.
மூன்றாம் நாட்போரிலும் ஒன்பதாம் நாட்போரிலும் பீஷ்மருடன் அருச்சுனன் போர் செய்து வெல்ல முடியாத நிலையில் நிற்கும் போது, கிருஷ்ணன் " நானே பீஷ்மரை அழிப்பேன்’என்று கூறி சக்கராயுதத்தையும் எடுத்துக் கொண்டு தேரிலிருந்து குதித்து ஒடியிருக்கிறான்.
அப்போதெல்லாம் அருச்சுனன் தடுத்து துரியோதனனோடு செய்து கொண்ட யுத்த உடன்படிக்கையை நினைவுபடுத்தி அழைத்துச் சென்றிருக்கிறான்.
ஆனால் இன்றைய போரிலே அருச்சுனனுக்குத் தெரியாமலேயே கிருஷ்ணன் சக்கராயுதத்தால் சூரியனை மறைத்துவிட்டான். ஏதோ ஒருவகையில் கிருஷ்ணன் ஒப்பந்தத்தை மீறி ஆயுதம் எடுத்து உபயோகித்திருக்கிறான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Page 30
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 54
ஆயுதம், எதிரிகளை அழிக்க நேரடியாகப் பயன்படுத்தப்படா விட்டாலும் கூட, மறைமுகமாகப் பயன்பட்டே இருக்கிறது.
அதனால் கிருஷ்ணனை மிகவும் கேவலமாக ஏசிய துரியோதனன், அன்றே தான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, இரவிலும் போர் புரிந்தான்.
"பகலிலே இருட்டை வரவழைத்து மாயஞ் செய்தான் கிருஷ்ணன், நாங்கள் இரவிலே பகலை உண்டாக்கிப் போர் செய்வோம் வாருங்கள்’ என்று கூறி வெளிச்சங்கள் கொண்டு வரச் செய்து போர் செய்தான் துரியோதனன்.
யுத்தமுறை மீறல்கள், யுத்த ஒப்பந்த மீறல்கள் பல இடங்களில் நடந்தாலும், யுத்த நிறுத்த மீறல் இன்று தான் பாரத யுத்தத்தில் முதன் முதலில் இடம் பெற்றது.
 

55
நிராயுத பாணிகளைக்
கொலை செய்வதும்,
வதந்திகளை நம்பி
ஏமாற்றமடைவதும்,
பொய் பேசித்
தாக்குவதும்
அன்றுகூட
நடைபெற்றிருக்கின்றது.

Page 31
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்: வதந்தி பரவியது தருமனும் பொய் சொன்னான்
பத்தாம் நாட்போரில் பீஷ்மர் இறந்த பின் துரோணாச்சாரியார் சேனாதிபதியாக்கப்பட்டார். துரோணாச்சாரியாரைக் கொல்லாமல் யுத்தத்தை வெல்லமுடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணன் ஒர் தந்திரஞ் செய்தான்.
தனது மகனான அசுவத்தாமன் இறந்துவிட்டான். என்று துரோணர் கேள்விப்பட்டால் புத்திர சோகத்தால் வில்லைப் போட்டுவிட்டு வெறுங்கையோடு இருப்பார். அது தான் அவரைக் கொல்வதற்கு ஏற்ற சமயமாகும். அப்படியில்லாமல் துரோணர் கையிலே வில்லை வைத்திருக்கும் வரை, அவரை எவராலும் கொல்லவே முடியாது என்று கூறினான் கிருஷ்ணன்.
பதினைந்தாம் நாட்போரிலே இந்தத் தந்திரமே செய்வதாக கிருஷ்ணன் தீர்மானித்தான். “அசுவத்தாமாவைக் கொல்வதென்பது முடியாத காரியம். அசுவத்தாமா இறந்தான் என்று கதையைப் பரப்பி விடுவோம். அதனை நம்பாத நிலையில் துரோணாச் சாரியார் உண்மை நிலையை அறிவதற்கு உன்னிடம் வருவார். அவருக்கு நீ "அசுவத்தாமா இறந்தது மெய் என்று பொய் சொல்ல வேண்டும்’ என்று தருமனிடம் சொன்னான். கிருஷ்ணன்.
தன் காதுகளைப் பொத்திய தருமன் “பொய் சொல்லி அரசாள்வதிலும் பார்க்க செத்து மடிவதே மேல்” என்று மறுத்தான். ஆனால் கிருஷ்ணனோ "நீ செய்திருக்கும் புண்ணியங்களையெல்லாம் இந்தச் சிறிய பொய் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.

57 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
உனது புண்ணியப் பெரு நெருப்பை இச் சிறு பொய் நீர் அவித்து விடப் போவதில்லை என்று பல வழிகளிலும் வற்புறுத்தினான் கிருஷ்ணன். வீமன், அசுவத்தாமா என்ற பெயர் கொண்ட யானையொன்றைத் தான் கொன்றதாகவும், துரோணாச்சாரியர் அசுவத்தாமா இறந்தது மெய்யா என்று கேட்டால் மெய் என்று சொல்வது பொய்யாகாது என்றும் தருமனைச் சமாதானப்படுத்தினான். வேறு வழியின்றி தருமனும் ஒப்புக் கொண்டான்.
யுத்தத்திற்கு ஏன் தருமன் அஞ்சினானோ அத்தனை பாபங்களும் யுத்தத்திலே பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தன. நீதி நெறி தவறாத சத்திய சீலனான தருமனே கூடப் பொய் சொல்லத் துணிந்து விட்டான்.
அசுவத் தாமா கொல்லப் பட்டான் என்ற வதந்தி பரப்பிவிடப்பட்டது. வதந்திகளால் பெருங்கலகங்கள் கலவரங்கள் ஏற்பட்டதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். பாரத யுத்தத்திலும் இந்த வதந்தி பெரும் விளைவை உண்டு பண்ணியிருக்கிறது.
தனது மகனான அசுவத் தாமாவை எவராலும் கொல்லமுடியாது. எனறு நம்பியிருந்த துரோணாச்சாரியார், வதந்தியிலே ஏமாந்து நம்பிக்கை இழந்து உண்மை நிலையை அறிவதற்காக தன்னருகில் நின்று போர் புரிந்து கொண்டு நின்ற சத்தியவானான தருமனிடம் கேட்டார்.
தருமனும் உண்மையே என்று பொய் சொல்லி பெரும் நம்பிக்கைத் துரோகம் செய்தான். நம்பிக்கைத் துரோகம் போல் பெரிய பாபம் வேறெதுவும் இல்லை.

Page 32
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 58
மகன் இறந்தான் என்று நம்பிய துரோணர் புத்திர சோகத்தால்
வில்லையும் அம்பையும் தூர எறிந்துவிட்டு அவ்விடத்திலேயே
யோகாசனத்தில், நிஷ்டையில் ஆழ்ந்தார்.
துரோணரைக் கொல்வதற்கென்றே துருபதனின் தவத்தின் மூலம் பிறந்தவன் திட்டத்துய்மன்.இவனே பாண்டவரின் சேனாதிபதி. இவன் திரெளபதிக்குத் தமையன், தன்னைக் கொல்வதற்கென்றே பிறந்தவன் திட்டத்துய்மன் என்று தெரிந்திருந்தும் கூட துரோணரே அவனுக்கு வில்வித்தையும் கற்பித்தார். அத்தகைய மகானை ஆயுதமின்றி நிஷ்டையில் இருக்கும் போது திட்டத்துய்மன் வாளால் வெட்டிக் கொன்றான்.
இராமாயண யுத்தத்தில் இராவணன் ஆயுதம் எல்லாம் இழந்து நிற்பதைப் பார்த்த இராமன் "நிராயுதனோடு போர் செய்வது வீரமுமாகாது முறையுமாகாது அதனால் நீ இன்றுபோய் சகல ஆயுதங்களோடும் நாளை வா’ என்று அனுப்பி வைத்தான். யுத்தத்திலும் சில சந்தர்ப்பங்களில் தர்மம் காப்பாற்றப்படலாம் என்பதற்கு இது எடுத்துக் காட்டு.
நிராயுதனான வாலியை மறைந்திருந்து அம் பெய்து கொன்று பழிதேடிய இராமன், இராவணனை “இன்று போய்ப் போர்க்கு நாளை வா’ என்றனுப்பி வைத்து பழியையும் நிரவி புகழையும் பெற்றுக் கொண்டான்.
சேனாதிபதியாகிய திட்டத்துய்மனோ ஆயுதமில்லாது மட்டுமல்ல, போர் செய்யும் எண்ணமுங் கூட இல்லாது யோகத்திலிருந்த குருவை வெட்டிக் கொன்று யுத்த தர்மத்தின் ஆணிவேரையே அகழ்ந்தெடுத்து விட்டான்.
வதந்தியினால் எவ்வளவு பெரிய அநியாயங்கள் நிகழ்ந்து விடுகின்றன. சத்தியந்தவறாத தருமனுங் கூட, சத்தியத்தைக் கைவிட்டு யதார்த்த வாதியாக பொய் சொல்லிப் பூமியாளத் தயாராகி விட்டான்.

59
அண்று அரசர்கள்
வாக்குச் சீட்டினால்
தெரிவு செய்யப்படவில்லை.
அதனால்
தமது வாக்கைக்
காப்பாற்றுவதில்
அவர்கள்
அக்கறை காட்டினர்.
அவர்கள்
வாக்குக்கும்
உயர்ந்த மதிப்பிருந்தது.

Page 33
அகளங்கனின் பாரதப் மீறல்கள் 60
பட்டினி போட்டுக் கொலை செய்வது போல்
மகாபாரதக் கதையில் எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட பெருயுத்தம் கள்ணனுக்கும் அருச்சுனனுக்கும் ஏற்பட்ட யுத்தமே. அதிலும் கர்ணன் சேனாதிபதியாக இருந்து பதினாறாம் பதினேழாம் நாட்களில் அவன் அருச்சுனனோடு செய்த யுத்தங்கள் பாரதக் கதையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
அருச்சுனனைக் கொல்வதற்கென்றே நாகாஸ்திரத்தை கள்ணன் வைத்திருந்தான். கர்ணனைக் கொல்வேன் என்று அருச்சுனன் சபதஞ் செய்திருந்தான். அதனால் அவர்களது யுத்தம் எல்லோராலும் பெரிதும் கவனிக்கப்பட்டது.
அருச்சுனனின் வில்லாற்றல் பிரசித்தமானதாக இருந்தாலும், கள்ணனின் கையில் இருக்கும் நாகாஸ்திரம் அருச்சுனனைக் கொல்லும் என்றே எல்லோரும் நம்பினர். அதனால் தான் கிருஷ்ணன் கூட கள்ணனிடம் குந்தியைத் தூதனுப்பி, நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகஞ் செய்யக் கூடாது என்று வரம் வாங்கச் செய்தான்.
அதனால் கெளரவர்களா பாண்டவர்களா வெல்வது என்ற உச்சக்கட்டப் போட்டி, அன்றைய யுத்தமே ஆகும். அருச்சுனனா? கர்ணனா? யார் விஞ்சுவார்கள், யார் மிஞ்சுவார்கள் என்பதே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நிலையாக இருந்தது.
அருச்சுனனுக்கு, கிருஷ்ணன் சாரதியாக இருப்பது போர்க்களத்தில் வெற்றிகளைக் குவிக்க பெரிதும் அனுகூலமாக இருந்தது. அதே போல தனக்கும் ஒரு நல்ல தேர்ச் சாரதி வேண்டும் என்று எண்ணமிட்டான் கர்ணன்.

61
சல்லியன் மிகவும் சாமர்த்தியமான தேர்ச்சாரதி, சல்லியனைத் தனக்குச் சாரதியாக அமர்த்தித் தந்தால் தான் அருச்சுனனைக் கொல்ல இலகுவாக இருக்கும் என்று துரியோதனனிடம் வேண்டிக் கொண்டான் கர்ணன்.
நகுலன், சகாதேவன் ஆகியோரின் தாயான மாத்திரிக்கு சல்லியன் சகோதரன். சல்லியன் கர்ணனோடு நிகள் நிற்கக் கூடிய பெருவீரனுமாவான். பாண்டவர்களுக்கு போரில் துணை செய்யவென்று தனது மித்திர தேசத்தில் இருந்து படைகளோடு வந்து கொண்டிருந்தான் சல்லியன்.
சல்லியனையும் படைகளையும் எப்படியாவது தனது பக்கம் சேர்த்துவிட வேண்டும் என்று எண்ணிய துரியோதன், மாறுவேடத்தில் வழியிலே ஒர் அன்ன சத்திரம் அமைத்து தண்ணிர்ப்பந்தலும் வைத்து சல்லியனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் உணவு பரிமாறி களைப்பைப் போக்கினான்.
விருந்தில் மகிழ்ந்த சல்லியன் மாறுவேடத்தில் இருந்த துரியோதனனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன். என்று சொல்ல, துரியோதனன் தனது உருவத்தைக் காட்டி “பாரதயுத்தத்தில் துணையாக வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். வாக்குத்தத்தஞ் செய்தபடி சல்லியனும் அவனது படைகளும் துரியோதனனுக்கே துணையாகின.
முற் காலத்தில் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொருவார்த்தைக்கும் எவ்வளவு பெறுமதி இருந்திருக்கிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் அரிச்சந்திரனைப் போன்ற பல சத்தியவான்கள் இருந்திருக்கிறார்கள்.

Page 34
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்)
இன்றோ வாக்கும் மனமும் வேறுபட்டுவிட்டது. அன்று வாக்குகளால் (சீட்டு) அரசர்கள் தேர்ந்தெடுக்கப்படாததால் தான், அவர்களது வாக்குக்கு அத்தனை மதிப்பு இருந்தது போலும். இன்று வாக்குகளினால் ஆள்வோர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்களது வாக்கு தளம்பி விடுகிறது போலும்,
பதினேழாம் நாட்காலை கள்ணனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய துரியோதனன் சல்லியனை அணுகினான். சல்லியனோ "தேரோட்டியின் மகனுக்கு நான் தேரோட்டுவதா, இதை வேறு யாராவது என்னிடம் கேட்டிருந்தால், அவர்களைக் கொன்றே
போட்டிருப்பேன்’ என்று கோபமாகப் பேசினான்.
சாதி வேற்றுமைகள் ஏற்றத் தாழ்வுகள் அன்றைய சமுதாயத்தில் எப்படி இருந்தன என்பதை கர்ணனின் வரலாற்றில் அடிக்கடி காணலாம். ராஜாதிராஜனான துரியோதனன் சாதித் தாழ்வைப் பெரிதுபடுத்தாமல் தேரோட்டியின் மகனான கர்ணனுக்கு அரசும் கொடுத்து சம அந்தஸ்தும் கொடுத்து தனது உயிர் நண்பனாக்கி ஒரே கலத்தில் சோறுண்டு சமபந்தி போசனத்தையும் அன்றே செய்து காட்டி, சாதிக்குச் சாவுமனி அடித்திருக்கிறான்.
ஆனால் நாகரிகம் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் இன்றைய உலகில் சாதி ஏற்றத்தாழ்வுகள் தலைவிரித்தாடுகின்றன. விஞ்ஞானமும் ஆடை அலங்காரமும் தானி வளர்ச்சியடைந்திருக்கின்றன. மனிதப்பண்பும் உள வளர்ச்சியும் ஏற்படவே இல்லைப்போல் தெரிகிறது.

63 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் தனது காரியத்தை எந்தவகையிலும், சாதிக்கும் பழக்கமுடைய துரியோதனன் சல்லியனையும் சம்மதிக்க வைத்தான். சல்லியனும் கள்ணனும் தேரில் செல்வதைப்பார்த்து கெளரவசேனை
பெரிதும் மகிழ்ச்சியும் பெருமிதமும் உற்சாகமும் அடைந்தது.
சல்லியனுக்கோ அருச்சுனனைக் கொல்வதில் அவ்வளவு விருப்பம் இல்லை. தனது மருமகன் என்ற பாசம் ஒரு புறம். கர்ணனுக்குப் பெரும் புகழ் கிடைத்துவிடும் என்ற பொறாமை மறுபுறம். அதனால் கர்ணனிடம் ஏதாவது சொல்லி கர்ணனின் சிந்தனையைக் குழப்பி காரியத்தைக் கெடுத்துக் கொண்டே வந்தான்.
சேனாதிபதியாக இருந்து சேனையைக் கட்டுப்படுத்தி வழி நடத்தும் கர்ணன் சல்லியனின் கட்டுப்பாட்டிற்குள் சிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. ஒத்துப்போகாத இரு திறமைசாலிகளின் கூட்டினால் ஒரு பயனுமே இல்லை என்பது உண்மை தானே. வீண் கதைகள் கதைத்துக் காரியத்தைக் குழப்புபவர்களை 'சல்லிப்பயல்’ என்றும் “சல்லியனைப் போல்’ என்றும் இந்தியாவில்
இப்பொழுதும் கூறுகின்றார்கள்.
கள்ணனுக்கும் அருச்சுனனுக்கும் உக்கிரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கர்ணன் நாகாஸ்திரத்தை அருச்சுனன் மேல் பிரயோகிப்பதற்கு எடுத்தான். அந்த அம்புக்குரிய இலக்கு கழுத்து என்பதால் கழுத்திற்கே குறிவைத்தான்.

Page 35
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 64
ஆனால் சல்லியனோ மார்புக்குக் குறிவைக்கும் படி கூறினான். அது யுத்த தர்மமல்ல. யுத்த முறையல்ல என மறுத்து "உனது கடமையை நீ செய். எனது கடமையைச் செய்ய எனக்குத் தெரியும்’ என்று கூறி அம்பை கழுத்திற்கே எய்தான். கிருஷ்ணன் தேரை நிலத்தில் அழுத்தி குதிரைகளை முழங்காலில் படுக்கச் செய்துவிட்டான். அதனால் நாகாஸ்திரம் அருச்சுனனின் தலைமுடியைத் தட்டிக் கொண்டு சென்றது. அருச்சுனன் பிழைத்துக் கொண்டான்.
மீண்டும் வந்த நாகாஸ்திரத்தை மறுபடியும் அருச்சுனன் மேல் செலுத்தும்படி சல்லியன் வற்புறுத்த, கள்ணன் தாய்க்குக் கொடுத்த வரத்தை நினைத்து மறுத்தான்.
அச் சந்தர்ப்பத்தில் கர்ணனின் தேரும் மணலில் புதைந்துவிட்டது. சல்லியன் கோபங்கொண்டு பாதியுத்தத்திலேயே, புதைந்த தேரை அப்படியே விட்டுவிட்டு இறங்கிச் சென்று விட்டான்.
தப்பிப்பிழைத்த சந்தோசத்தில் அருச்சுனன் உற்சாகமாகப் போர் புரிந்தான். கர்ணன் சாரதியுமின்றி தேரும் மண்ணில் புதைந்த ஆபத்தான நிலையில், தேர்ச்சில்லை உயர்த்தி தேரைச் சரி செய்யும் வரை சிறிது நேரம் யுத்தத்தை நிறுத்தும் படி மிகவும் விநயமாக வேண்டினான்.
யுத்தத்தின் போது எதிரி தனது முழுப்பலத்தையும் பயன்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பது தான் யுத்த தர்மம். தேவ அசுர யுத்தத்தின் போது சூரபன்மன் தனது திறமை முழுவதையும் காட்டிப் போர் புரியச் சந்தர்ப்பம் கொடுக்கிறான் முருகன்.

sஅகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் இறுதியில், "உனது திறமை முழுவதையும் காட்டுவதற்கு சந்தர்ப்பம் தந்து விட்டேன். இப்போது எனது திறமையிலும் சிறிதைப் பார்’ என்று தனது வில்லாண்மையைக் காட்டியதாக கச்சியப்பர் கந்தபுராணத்தில் கூறுகிறார்.
இராமாயணத்திலும் இராமன் இராவணனுக்குப் போர் செய்யப்போதிய கால அவகாசமும், சந்தர்ப்பமும் அளித்து அவனது மூல பலத்தையும் ஒன்றாகத்திரட்டி வரச் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.
அருச்சுனனோ கிருஷ்ணனின் தூண்டுதலால் சிறிது நேர அவகாசங் கூட கொடுக்காது போர் செய்கிறான். கர்ணன் தனது திறமையால் அருச்சுனனை மூர்ச்சையடையச் செய்துவிட்டு, தேரில் இருந்து குதித்து தேர்ச்சில்லை உயர்த்த முயல்கிறான். அதற்குள் மயக்கம் தெளிந்த அருச்சுனன் தன்னோடு போர் செய்யாது தேர்ச்சக்கரத்தை உயர்த்திக் கொண்டு நின்ற கர்ணனுக்கு அம்பு எய்கிறான்.
எத்தனை அம்புகளை எய்தாலும் அவை அவனது உயிரைக் குடிக்காமல் அவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கின்றது. அருச்சுனனின் வலிமையான அம்புகள் எல்லாம் மலர்மாலையாக கர்ணனின் கழுத்தில் விழுந்ததாக பெளராணிகர்கள் சொல்லுவார்கள்.
கிருஷ்ணன் கிழப்பிராமணவடிவங் கொண்டு சென்று கர்ணனிடம் புண்ணியத்தை யாசிக்கிறான். ஒவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க’ என்று தனது புண்ணியத்தை தாரை வார்த்துக் கொடுக்கிறான். பின் அருச்சுனனின் அம்புகளால் இறந்து விடுகிறான்.

Page 36
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 66
இந்த யுத்தத்தில் யுத்த தர்மம் மட்டுமல்லாமல் சாதாரண மனித தர்மங்கூட கொல்லப்படுகிறது. போர்க்களத்தில் கொலை என்பது பாபச் செயலல்ல. பாரத யுத்தத்தில் ஏராளமான யுத்தமுறை அத்துமீறல்கள் நிகழ்ந்து விட்டதால் அருச்சுனன் கர்ணனை அம்பெய்து கொன்றது கூட அவைகளில் ஒன்றென்று பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம்.
ஆனால் கள்ணனின் நல்ல குணமான கொடை கொடுக்கும் சுபாவத்தைப் பயன்படுத்தி, அவனது புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொண்டு அவனைக் கொலை செய்தது பட்டினி போட்டுக் கொலை செய்வதிலும் கொடுமையான தொன்றாகும்.
இன்றைய யுத்தங்களில் எதிராளியை பட்டினி போட்டுக் கொல்லும் முறையும் நடைமுறையிலுண்டுதான். ஆனால் அக்காலத்திற்கு அது மிகவும் பாபமாக கருதப்பட்டது. அதனால் தான் போலும் இந்தப் பாவத்தைத் தன் தலையிலே போட்டுவிடும்படி அருச்சுனனிடம் கிருஷ்ணன் கூறுகிறான். கிருஷ்ணனைத் தவிர வேறுயாரால் தான் இந்தப் பாபத்தைத் தாங்கமுடியும் என்று வியாசர் குறிப்பிடுகின்றார்.
வீரனான வீமனும் அத்துமீறினான்
கர்ணன் இறந்த பின் பதினெட்டாம் நாட்போருக்கு சல்லியனே சேனாதிபதி. அன்றைய போரில் நடுப்பகுதிக்குள்ளேயே சல்லியனும் சகுனியும் இறந்தனர். யுத்த களத்தை விட்டு துரியோதனன் சென்று ஒரு நீர் நிலையுள் இறங்கி ஒளிந்திருந்தான்.

67 அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
துரியோதனனுக்கு ஒரு முனிவர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரத்தை உபதேசித்திருந்தார். தனி இடத்தில் சென்று தியானத்தில் இருந்து அம்மந்திரத்தை ஜெபித்து, இறந்த தனது சகாக்களை உயிர்ப்பிப்பதற்காகவே துரியோதனன் நீர் நிலையுள்
மறைந்திருந்தான்.
துரியோதனன் தப்பி ஒடி ஒளித்துக் கொண்டான் என்று கருதிய பாண்டவர்கள் நீர் நிலை அருகில் வந்து அவனைப் பலவாறாக ஏசி அவனது தியானத்தைக் குழப்பி வெளியேறச் செய்தனர்.
ஆயுதங்களும் படைகளுமில்லாமல் துரியோதனன் நிற்பதைக் கண்ட தருமன் மிகவும் உயர்ந்த யுத்த தர்மத்தைக் கடைப்பிடித்தான் 'துரியோதனா! சேனை இல்லை என்று நீ கலங்கவேண்டாம் உனக்கு விரும்பிய ஆயுதங்களை நான் தருகிறேன். எங்கள் ஐவரில் நீ விரும்பிய ஒருவனோடு விரும்பிய ஆயுதம் மூலம் போர் செய்யலாம் வா’ என்று போர்க்களத்துக்கு அழைத்துச் சென்றான் தருமன்.
தருமனின் இந்த யுத்த தர்மத்திலும் விட ஒரு படி கூடுதலான நிலையில் யுத்த தர்மத்தை நிலை நிறுத்தினான் துரியோதனன். “எனக்குச் சமனான வீரன் என்று கருதக் கூடியவன் உங்களில் வீமன் மட்டுமே. வீமன் கதாயுதப் போரில் தான் திறமைசாலி. எனவே வீமனோடு கதாயுத யுத்தஞ் செய்யவே விரும்புகிறேன்’ என்று கூறி வீமனோடு யுத்தம் தொடங்கினான் துரியோதனன்.

Page 37
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்8
கதாயுத யுத்தத்தில் நகுலனை சகாதேவனை, தருமனை அருச்சுனனைக் கூட இலகுவில் வென்றுவிடுவான் துரியோதனன். ஆனால் அவன் அதை விரும்பவில்லை தனக்குச் சமனில்லாத வீரனுடன் போர் செய்து வெல்வதும் இழுக்கு, தோற்பதும் இழுக்கு என்ற மறத்தன்மையை அனுசரித்தான்.
மகாபாரதக் கதையில் துரியோதனன் கர்ணனோடு வைத்திருந்த நட்பும், இந்த பதினெட்டாம் நாட்போரின் போது கடைப்பிடித்த வீரப்பண்பும் யுத்த தர்மமும், அவனை உயர்ந்த கதாபாத்திரமாக மாற்ற முயல்கின்றன.
யுத்தத்தின் போது கிருஷ்ணனின் தூண்டுதலால் வீமன் துரியோதனனின் தொடையில் தண்டாயுதத்தால் அடித்து விடுகிறான். இந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமன், வீமன் செய்தது யுத்த முறைகளுக்கு விதிகளுக்கு அப்பாற்பட்டது என்று கூறி வீமனுடன் போர் செய்ய ஒடினான். கிருஷ்ணன் பலவாறு சமாதானங்கூறி அவனைத் தடுத்தான்.
யுத்தத்தின் போது ஒவ்வொரு ஆயுதமும் அது பிரயோகிக்கப்பட வேண்டிய அங்கமும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கர்ணனிடம் குந்தி தேவி நாகாஸ்திரத்தை அருச்சுனன் மேல் ஒரு தடவைக்கு மேல் விடவேண்டாம் என்று வரம் கேட்ட போது கர்ணன் கூறுகிறான். உண்மையான வீரன் ஒரு அம்பை ஒரு முறை தான் தொடுப்பான். அது பொய்க்காது. அப்படிப் பொய்த்தால் அதனை மறுமுறை தொடுப்பது ஆண்மையுமல்ல, வீரமுமல்ல, அழகுமல்ல, அறமுமல்ல என்று கூறுகிறான்.

6gஅகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
யுத்தத்தின் போதும் அந்த அஸ்திரத்தை ஒரு முறைமட்டும் தான் பயன்படுத்துகிறான். இது கூட உயர்ந்த யுத்த தர்மமாகக் கணிக்கப்பட்டது.
ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் ஒவ்வொரு இலக்கு கூட தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நாகாஸ்திரம் விடப்பட வேண்டிய இலக்கு கழுத்து. சல்லியன் எவ்வளவோ வற்புறுத்தி மார்புக்குக் குறிவைக்கும்படி கூறியும் கள்ணன் மறுத்து கழுத்திற்கே குறிவைத்து எய்கிறான்.
தண்டாயுதம் பிரயோகிக்க வேண்டிய இலக்கு இடுப்புக்கு மேலன்றி கீழல்ல. “கதையெடுத்துடற்றுவோர். கடிதடந்தனக்கு மேல்” அன்றி கீழே அடிக்கார். இது யுத்த விதி,
வீமன், துரியோதனனின் இடுப்பிற்குக் கீழ் அடித்ததால் தான், பலராமன் கோபங் கொண்டான். வீமன் அன்றுவரை தனது யுத்தத்தின் போது யுத்த தர்மத்தில் இருந்து மாறாமல் ஒழுங்காகவே போர் செய்தான். ஆனால் இறுதிக் கட்டத்தில் அவனும் யுத்தமுறையை மீறவேண்டி ஏற்பட்டுவிட்டது.
பாசறை முற்றுகையும் திவைப்பும்
துரியோதனன் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது அவர்கள் தரப்பில் உயிர் பிழைத்திருந்த அசுவத்தாமா, கிருபாச்சாரியார், கிருதவர்மா ஆகியோர் துரியோதனனை வந்து சந்தித்தனர். துரியோதனன் வஞ்சனையால் வீழ்த்தப்பட்டதை அசுவத்தாமாவினால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

Page 38
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள்
தனது தந்தையான துரோணாச்சாரியாரையும் வஞ்சனையால் கொன்றதையும் நினைத்துப் பெருங்கோபங் கொண்டான். இன்றே பாண்டவர்களையும் அவர்களது எஞ்சிய சேனைகளையும் கொன்று வருவேன் என்று சபதங் கூறிப்புறப்பட்டான்.
பதின்நான்காம் நாட்போரைத் தவிர ஏனைய நாட்களில் இராக்காலம் யுத்த நிறுத்தக் காலமாக இருதிறத்தாலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. பதினெட்டாம் நாள் இரவு அசுவத்தாமா யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீற முடிவு செய்தான். அதுவும் இதுவரை நிகழ்ந்திராத பயங்கரமான ஒரு திட்டத்தோடு.
இரவு நித் திரை செய்து கொண்டிருக்கும் போது பாண்டவர்கள் அனைவரையும் கொன்று பாசறைக்கு நெருப்பு வைப்பது அவனது திட்டம்.
கிருஷ்ணன் பாண்டவர் ஐவரையும் திரெளபதியையும், யுத்தம் முடிந்த அன்று பாசறையில் தங்கக் கூடாது என்று கூறி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
அசுவத் தாமா இரவில் வந்து பாசறையை முற்றுகையிட்டான். இரவில் பாசறையை முற்றுகையிட்டுப் போர் புரியும் முறை அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையல்ல. மிகவும் பழிப்புக்கிடமான முறை. தனது தந்தையைக் கொன்ற பாவியான திட்டத் துய் மனையும் பாசறையில் இரவு தங்கியிருந்தயாவரையும் கொன்று பாசறையைத் தீ வைத்துக் கொளுத்தினான். பாஞ்சாலியின் ஐந்து புத்திரர்களும் அசுவத்தாமனால்
கொல்லப்பட்டனர்.

71. TS0C0CTCTTMMMT L L TTTT SSLLSLLLLLLLLtttLLS LLtT TSMMTSL
பாரத யுத்தம் தொடங்கும் போதிருந்த நிதானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றிருக்கிறது. பதினெட்டாம் நாள் இறுதிப்போர் நிதானம் தர்மம், நியாயம் எதுவுமே இல்லாத நிலையில் முடிக்கப்பட்டது. கலிகாலம் தொடங்குவதற்கு நேரடியாக முதற்காலமான துவாபரயுகத்தின் இறுதியில் பாரத யுத்தம் நிகழ்ந்ததாக பலரும் கூறுவர்.
அதனால் தான் போலும் கலிகால யுத்தச்சாயல்கள் அந்த யுத்தத்திலும் அப்படியே பிரதிபலித் திருக்கின்றன. யுத்தம் ஏற்பட்டுவிட்டால் எதுவும் நடக்கலாம். தர்மனும் பொய் சொல்ல
வேண்டிவரலாம் என்பது தான் உண்மை.
மண்ணுக்காக நடந்தது மகாபாரதயுத்தம். ஆனால் அந்த யுத்தம் முடிந்தபின் வெற்றியடைந்தவர்கள் ஆளுவதற்கு மண்மட்டும் தான் இருந்தது. மக்கள் மாண்டுவிட்டனர்.
நாற்பத்தேழு இலட்சத்து இருபத்தி மூவாயிரத்தி
தொளாயிரத்தி இருபது (4723,920) பேர் கலந்து கொண்ட மகாபாரதயுத்தத்தில் எஞ்சியோர் பத்துப்பேர் மட்டுமே.
பாண்டவர் பக்கத்தில் பஞ்ச பாண்டவர் ஐவரும்,
கிருஷ்ணனும், சாத்யகியும் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.
துரியோதனன் பக்கத்தில் கிருபாச்சாரியார், கிருதவர்மா, அசுவத்தாமா ஆகிய மூவர் மட்டுமே உயிர்பிழைத்தனர். பதினெட்டு அக்குரோணி சேனையும் பதினெட்டு நாட்கள் நடை பெற்ற போரிலே அழிந்து போனது.

Page 39
அகளங்கனின் பாரதப் போரில் மீறல்கள் 72
தாங்களே முழு நாட்டையும் ஆளவேண்டும் என்பதற்காகப் போர் தொடங்கிய துரியோதனன் கூட்டம் மாளவேண்டி ஏற்பட்டது. தனது பக்கத்தில் சேனை கூட என்று இறுமாந்த துரியோதனன் எல்லாவற்றையும் இழந்தான். தாங்களும் வாழவேண்டும். தங்களால் மற்றவர்கள் மாழக் கூடாது என்று நினைத்த தருமனின் நினைப்பும் ஈடேறவில்லை. யுத்தத்தில் வெற்றி கிடைத்த போதும் தர்மனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை.
திரெளபதி உட்பட யாவருக்கும் கவலையே மிஞ்சியது. வீட்டுக்கு வீடு அழுகுரல்கள். மரணத்தைச் சந்திக்காத வீடே இல்லை எனலாம்.
மகாபாரதம் வெறும் கட்டுக் கதையல்ல. யாரோ பாண்டவர்களதும் யாரோ கெளரவர்களதும் கதையைக் கூறும் காவியமுமல்ல. நடைமுறையில் நாம் காணும் மனிதர்களின் மனிதப்பலவீனங்கள் பலங்களின் தொகுப்பு இலக்கியம். அது என்றும் வாழும் இலக்கியம். அது மக்களை என்றும் வாழ்விக்கும் சஞ்சீவி இலக்கியம்.
முற்றும்

இணைப்பு
யுத்தத்தில்
இறந்தவர்களின்
கணக்கு

Page 40
74
நாங்கள் அறிந்தவரையிலே மகாபாரத யுத்தத்தில் மட்டுந்தான், யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையையும், தப்பியவர்களின் எண்ணிக்கையையும், தப்பியவர்களின் பெயர் விபரங்களையும் சரியாக
அறிந்து கொள்ள முடிகிறது.
துரியோதனனது தரப்பில் பதினொரு அக்குரோணிசேனையும், தருமனது தரப்பில் ஏழு அக்குரோணி சேனையுமாக பதினெட்டு அக்குரோணி சேனைகள் குருசேத்திர யுத்தகளத்தில் வந்து குவிந்தன.
அக்குரோணி என்றால் எவ்வளவு என்பதை முதலில்
பின்வரும் அட்டவணை மூலம் பார்ப்போம்.
தேர் யானை குதிரை காலாள் பெயர்
1. 1. 3 5 பந்தி
3 3 9 15 சேனாமுகம்
9 9 27 45 குமுதம்
27 27 81 135 கணகம்
81 81 243 405 வாகினி
243 243 729 1215 புலுதம்
729 729 21.87 3645 சமுத்திரம்
21.87 21.87 6561. 10935 சமாக்கியம்
21870 21870 65610 109350 அக்குரோணி

75
எனவே அக்குரோணி என்பது இருபத்தோராயிரத்தி எண்ணுாற்றி எழுபது தேர்கள் அதேயளவு யானைகள் அறுபத்தையாயிரத்தி
அறுநூற்றிப்பத்துக் குதிரைகள், ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்தி முன்னூற்றி ஐம்பது காலாட்கள் கொண்டதாகும்.
இப்படி ஏ அக்குரோணி, பாண்டவர் சேனை என்பதால் பாண்டவர்களின் படையில் 1,53,090 தேர்கள், அதேயளவு யானைகள், 4,59.270 குதிரைகள், 7,65,450 காலாட்கள் இருந்தன.
கெளரவர்களின் சேவை 11 அக்குரோணி என்பதால் 2,40,570 தேர்கள், அதேயளவு யானைகள் 7.21,710 குதிரைகள், 12,02,850 காலாட்கள் கொண்டதாக இருந்தது.
எனவே மொத்தமாக மகாபாரத யுத்தத்தில் 3.93,660 தேர்கள், 3,93,660 யானைகள், 11,80,980 குதிரைகள், 19,68,300
காலாட்கள் பங்கு கொண்டன.
தேரில் சாரதியும் வீரனுமாக இருவர் செல்வர். யானையிலும் பாகனும் வீரனுமாக இருவர் செல்வர். குதிரையில் ஒருவரே செல்வர். இந்தக் கணக்குப்படி மகாபாரத யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் மொத்த எண் ணிக்கை (47,23,920) நாற்பத்தேழு இலட்சத்து இருத்திமூவாயிரத்தி தொளாயிரத்தி இருபது.
இவ்வளவு வீரர்கள் கலந்து கொண்டு பதினெட்டு நாட்கள் செய்த யுத்தத்தில் தப்பியவர்கள் பத்தேபத்துப்பேர்கள்.
துரியோதனனது தரப்பில் கிருபாச்சாரியார், அசுவத்தாமா, கிருதவர்மா, ஆகியோரும். பாண்டவர் பக்கத்தில் கிருஷ்ணபகவான் சாத்யகி, பஞ்சபாண்டவர்கள் என ஏழுபேரும் மட்டுமே தப்பினர்.
மொத்தமாக நாற்பத்தேழு இலட்சத்து இருபத்தி மூவாயிரத்தி தொளாயிரத்தி 讓醬 பாரத யுத்தல் பதினெட்டு நாட்களில் இறந்து போனார்கள்.

Page 41
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
இந்நூலாசிரியரின் பிற நூல்கள்
"செல்” “வா’ என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதைகள்) சேரர் வழியில் வீரர் காவியம் (குறுங்காவியம்) சமவெளி மலைகள் (அகளங்கன் - சுமுரளிதரன், கவிதைகள்) வாலி (ஆய்வு நூல்- இரு பதிப்புக்கள்) இலக்கியத்தேறல் (கட்டுரைகள்)
நளவெண்பா (கதை), அன்றில் பறவைகள் (வானொலி நாடகங்கள். தேசிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது) முத்தமிழ் வித்தகள் சுவாமி விபுலானந்தர். இலக்கியச் சிமிழ் (கட்டுரைகள் இருபதிப்புக்கள்) தென்றலும் தெம்மாங்கும் (கவிதைகள்) பன்னிரு திருமுறை அறிமுகம் (சமயம்) மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல்கள் (ஆய்வு) இலக்கிய நாடகங்கள் (நாடகங்கள். வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூற் பரிசு பெற்றது.)
ஆத்தி சூடி (விளக்கவுரை) கொன்றை வேந்தன் (விளக்கவுரை) அகளங்கன் கவிதைகள் (வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூற்பரிசு பெற்றது).
வாக்குண்டாம் (விளக்கவுரை)
சிவபுராணம் (பொருளுரை)
நாமறிந்த நாவலர். செந்தமிழும் நாப்பழக்கம் (பேச்சுக்கள் - சிறுவர் இலக்கியம்) நல்வழி (பொழிப்புரை, விளக்கவுரை)
இசைப்பாமாலை. கவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு இலக்கியச் சரம் (கட்டுரைகள்) வெற்றி வேற்கை (பொழிப்புரை) கூவாத குயில்கள் (வானொலி நாடகங்கள்) திருவெம்பாவை (உரை)


Page 42


Page 43
அன்பு அகளங்க!
மிகவும் பொருத்தமான கட்டுரை வெளிவருகின்றது. சம வியாக்கியானங்கள் கொடுக்கிறீர்கள் அப்படியே உங்கள் வார்த்தை மூ
செல்கிறது.
உங்கள் எழுத்தில் அறு முடிகிறது. இக்கட்டுரை நல்ல வர
உங்கள் நீண்ட கால எழு
தொடங்கி விட்டமை புலனாகின்ற வரவேற்பைப் பெற்றுள்ளதை என்ன
தொடரட்டும் இப்பணி.
உங்கள் உயிர்த் துடிப்பான
அன்பு,
__7} جمituي ويتعلروم_onنگھ கலாநிதி நா. சுப்பிரமணியன் விரிவுரையாளர்
 
 
 
 

தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
1985-12-03
சமயத்தில் “மகா பாரதப் போரில்.’
காலச் சூழலை ஒட்டி இடையிடையே 1. ஏறத்தாழ என் மனதில் உள்ளவற்றை மூலம் பார்க்கிறேன். சுவை குன்றாமற்
துபவ முதிர்ச்சியையும் அவதானிக்க வேற்பைப்பெறும் என நம்புகின்றேன்.
த்தார்வத்திற்கு உரிய பலன் கிடைக்கத் து. வாசகர், கற்றோர் மத்தியில் பெரும் எால் நன்கு உணர முடிகின்றது.
செயற்பாடுகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
125