கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பன்னிரு திருமுறை - அறிமுகம்

Page 1
لایه
S.
溪
fر
స్త్రీ*
SM
fر
ܛܼ
· ፖ%ሉ
资
స్త్రీ ് స్త్రీ 游
#44:4:4
6.
சிவட
* மேன்மைகொன் சைவநிதி
9 8661
வவுனியா இந்:
வவுனியா றி கந்தசுவாமி ே
இணைந்து
திருமுறை முற்றோ
ஞாபகார்த்த
0 - 0
يج محمحی 漆女懿然經常鯊誅然怒
S;
** ۔ مگجی تھ
 

skeletaseke
l
Dulb
விளங்குக உலகமெல்லாம் ”
YR
N
ଓଁ
WS
é
N
து மாமன்றமும், காவில் தர்மகர்த்தா சபையும்
நடாத்தும் தல் பூர்த்தி விழா
வெளியீடு.
- 994
SSM, MA
落英溶殺
محی
ଧୃଷ୍ଟି
a
Y
窦

Page 2

ìa). LDLL
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
பன்னிரு திருமுறை அறிமுகம்
స్త్రీN్క :<ފޮޑޯ
தமிழ்மணி
அ க எா நீ க ன்

Page 3
பன்னிரு திருமுறை - அறிமுகம்
எழுதியவர் அகளங்கன்
முதற்பதிப்பு 1994 - 1 - 1
வெளியீடு இந்து மாமன்றம், வவுனியா -
பூரீ கந்தசுவாமி கோவில், வவுனியா.
அச்சுப் பதிப்பு : சுதன் அச்சகம், வவுனியா,
விலை : ரூபா 20-00

Sessessessessess
ബഝേ.....
S W
愛
2 S
போசகரின் ஆசிச்செய்தி
* பெருகலாம் தவம், பேதமை தீரலாம்,
திருகலாகிய சிந்தை திருந்தலாம்
s
இப்படி பரம்பொருளைப் பாடி வாழ்த்தி வணங்கிய அநுபூதிச் செல்வர்களின் சரிதம்தான் பெரிய புராணம், சுருக்கமாக தொண்டர் தம் பெருமை பேசவும் பெரிதே என்பதுபோல இந்த பெரியபுராணத்தை சிவனருட் செல்வர்களின் சிறப்புச் சரிதம். இறையருளை நாடி ஆன்ம நேயர்கள் நோற்ற தவங்களும், ஆற்றிய தொண்டுகளும் போற்றுவற்குரியன.
தொண்டுகளில் எல்லாம் பெரிய தொண்டு மனித குலத்துக்குச் செய்யும் தொண்டு. இ  ைற வ ன் இதை மிகவும் விரும்புகிறர் 63--09=72 நாயன்மார்களின் மாக்கதை பெரியபுராணம். இது 12 திருமுறைகள் அடங்கிய ஓர் அருள் நூலாகும். இவையிருக்க நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைப் பதினோன்றாக வகுத்த காரணம் என்ன? சைவ சாஸ்திரத்தில் மந்திரங்கள் பதிஞென்று, இதற்குமேல் மந்திரமே இல்லை.
" ஓம் ஈசானுயநம ஒம் தற்புருஷாயநம : ஒம் அகோராயநம : ஓம் வாமதேவாயநம ஓம் சத்யோஜாதாயநம ; இவை ஐந்தும் பஞ்ச பிரம மந்திரங்கள், ஓம் ஹ்ருதயாயநம ; ஓம் சிரசே நம: ஒம் சிகாயெதம: ஒம் கவசாயதம: ஒம் நேத்திரேப்பியோந8: ஒம் அஸ்த்ராயநம ; இவை ஆறும் சடங்க மந்திரமாகும். இந்த ஐந்தும் ஆறும் சேர்ந்து பதினென்றும் சம்மிதா மந்திரம் எனப்படும். இந்த பதினுெரு மந்திரங்களுமே பதினுெகு திருமுறையாகும். இதைப் படிப்பதும் கேட்பதும் பல பிறவிகளில் செய்த பெரும் புண்ணியம் துணைசெய்தாலன்றி இவை படிக்க கேட்க பாக்கியம் கிட்டாது
8 என்பர்,
y

Page 4
வவுனியா இந்து மாமன்றப் போசகராக இது ஆரம்பித்த 82-ம் ஆண்டிலிருந்து இதுவரை இருந்து வருகிறேன், இந்துமா மன்றத்தின் அங்கமாக கோவில்களிலே பஜனை, புராண படனம் , திருமுறை ஓதல், திருவாசக முற்ருேதல், சற்சங்கம், சைவநற் சிந்தனை போன்றவற்றை செய்துவந்தோம். அன்றிலிருந்து இந்த சைவநற் சிந்தனையை இதுகாலவரை நடாத்தி வருகின்ருேம். காலத்துக்குக் காலம் இந்த தி ரு மு  ைற முற்ருேதல் நடந்துவரு கின்றது. இதற்குப்பல சைவ அன்பர்கள் பெரிதும் விரும்பி ஒத்தாசை புரிகின்றனர், திருமுறையிலே மிக வும் விருப்பம் கொண்டுள்ள எமது அன்பன் வை, செ, தேவராசா அவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாகும்,
தற்பேர்தைய இந்துமாமன்றத் தலைவரான திரு. C, A, இரா
மஸ்வர்மி அவர்களின் பணியும் மேலும் பெருகவேண்டும், பாடல் பெற்ற தலங்களும். பாடல்களும் கவனிப்பாரற்று இருக்கையில் எமது இலங்கையில் அதுவும் வட மாகாணத்தில் புராணப் பட
னங்கட்கு புத்துயிரளிப்பது எமக்கு பெ ரு  ைம தரும் ஓர் விடயமாகும், எமது ஆலயத்தில் இரண்டாவது தடவை திரு முறை முற்ருேதல் நடைபெற்று இன்று பூர்த்திவிழா எடுக்கின் றனர். இந்த மலர் உங்கட்கு பெரும்பகயன் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம். கவிஞர் அகளங்கனின் ஆக்கம் போற்றுதற்குரியது. எமது சைவ நூல்கள் என்ருல் என்ன? திரு முறைகள் என் மூல் என்ன? என்பது வருங்காலச் சந்ததிகட்கு தெரியாமல் போய்விடலாம் அல்லவா? அந்தக் குறையை நாம் பூர்த்திபண்ணவேண்டும், மேன்மைகொள்  ைச வ நீ தி விளங்குக உலகமெல்லாம் என்றுகூறி இவ்விழா சிறப்புற எம்மான் முருகப் பெருமானை வேண்டி அமைகின்றேன்,
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
பிரம்மறி இ. பாலச்சந்திரக் குருக்கள் (பிரதம குரு பூரீ கந்தசுவாமி கோவில் வவுனியா) போசகர்: இந்து மாமன்றம், வவுனியா,
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா,
ଔକ୍ତିତ ଶ୍ରେତ

WM
anama
சமயப்பணிகள் பல்கிப் பெருகட்டும் ! * பரந்து சிறக்கட்டும் இல்
s è
சிறுவயது முதல் உள்ளத்தில் தெய்வ நம்பிக்கை தோன் றவும், அந்நம்பிகை உறுதியானதாக உயிர் உள்ளவரை நிலைக்கவும் இறைவனின் அருமை பெருமைகள் பற் றியும், இறைவனின் தனித்தன்மை பற்றியும் அறிந்திருப் பது அவசியம் இறைபக்திச் சுவை நனி சொட்டும் திரு முறைகள் காலத்தையும் எல்லைகளையும் கடந்து நிற் கும் கடவுள் சிந்தனைகளை நெஞ்சில் ஆழமாகப் பதிக் கவும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல அம் சங்களையும் அழகாகச் சொல்கின்றன.
தொலைக்காட்சி வானொலி சாதனங்களின் அநேக நிகழ்ச்சிகளும், பெரும்பாலான திரைப்படங்களும் மனித மனதை அலைக்கழித்து துன்பத்தில் ஆழ்த்தும் போது திருமுறைகள் - ஆன்மீக சிந்தனைகள் - அருளுரைகள் ஆகியன மனதை ஒரு நிலைப்படுத்தி இன்பத்தோடும் இளமையோடும் வாழ வழிகாட்டுகின்றன.
பல்வேறு சமய சமூகப்பணிகளோடு வவுனியா கந்த சுவாமி கோவில் தர்மகர்த்தா சபையும் வவுனியா இந்து மாமன்றமும் ஒருங்கிணைந்து அறியாதோர் அறியும் வண்ணமும் அறிந்தோர் மீண்டும் நினைவுகளை மீட்டும் வண்ணமும் பன்னிரு திருமுறைகளை முற்றோதி பயன் உரைப்பது பெரும்பயன்தரும் திருமுயற்சியாகும்.
வவுனியா கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபையும் வவுனியா இந்து மாமன்றமும் தொடரும் சமயப்பணிகள் பல்கிப்பெருகட்டும், பரந்து சிறக்கட்டும் என்று மனப் பூர்வமாக வாழ்த்தி, முயற்சிகள் எல்லாம் சித்திக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். -
எஸ். தில்லைநடராசா அரச அதிபர் பணிமனை, வவுனியா 93 - 12 - 24
^^^^^^^^^^
MNMNMMN
AAAASSSLS LSLSSSMeMSMSASAeLLLLL LLLS LeeLLLLL LLLLLLLALSLLL LS SAAST L eeLSLS LSM LLSMS LLLeLMAMqLS cScLS eASALSLASLSeAMSLLLeSLASLeASASLMSSALASLSAMAqq ",

Page 5
AMLSMMLMMLSSSMASSqS SMASMSMMS qMA MAMAMALA AMMMMMqe SAAS LL AAAAS MMS
ତ! - சிவமயம்
வவுனியா இந்து மாமன்றத் தலைவரின்
*8 ஆசிச் செய்தி இல்
* மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் ?
தமிழ் மறையாம் பன்னிருதிருமுறைகளையும் போற்றி, நன்கு உண்ர்ந்து ஓதி அதன் உண்மைகளை பரவச் செய்வதன் மூலம், சைவர்களாகிய நாம், சைவநிதியை நிலைபெறச் செய்யலாம் சைவ நீதிபரவச் செய்யும் தொண்டினே திறம் பட ஆற்றிவரும், பூறி கந்தசுவாமி கோவில் செயலாளரும், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கச் செயலாளரும், வவுனியா இந்து மாமன்ற நிர்வாக சபை உறுப்பினருமான திரு. வை செ. தேவராசா அவர்கள் பணி போற்றத்தக்கதாகும் இன் 6) gibtu விழாவினச் சிறப்பாக இயங்க பாடுபட்டுவரும் அவரது பணியை மீண்டும் நினைவு கூருவதுடன், வவுனியா ஜீ கந்த சுவாமி கோவில் பிரதம குருக்கள் பிரம்ம ரீ இ. பாலச்சந்திரக் குருக்களின் ஆசியும், தமிழ் மணி அகளங்கனின் தூண்டு தலுமே திருமுறைமுற்ருேதல் விழா இடம் பெறக் காரணியாக அமைகின்றது
தமிழ்-மனி அகளங்கன் தயாரித்த திருமுறை அறிமுகம் என்னும் இந்த நூல் சிறிய அளவிலும், விபரங்களுடனும் மொத்தத் தொகைகள் பற்றியும், பாடியவர்கள் பற்றியும் தெளிவாகத் தெரிகின்றது தமிழ் - மணி அகளங்கன் அவர் கட்கு நன்றி தெரிவிப்பதுடன், இது போன்ற பணியின ஆற்ற இறைவன் அருள்புரிய வேண்டு மென்று வேண்டிக் கொள்கின்றேன்.
மேலும் திருமுறை முற்ருேதலில் சிரமம் பாராது தெய் வப் பணியாகக் கருதி தினமும் ஒதிவந்த அன்பர்கள் அனே வருக்கும் இறைவன் கருணை இட்டவேண்டும் என்று பிரார்த் திக்கிறேன்
வணக்கம்
C. A. இராமஸ்வாமி
தலைவர் இந்து மாமன்றம் - வன்னியா,
/^^^Yn
ALALMLMLMMLMLMMMMMLMLALMMS ALMLMLMMMALAeA

"ں۔ --ملائمہ ہ"۔^سميہ علیہخدسمبر^سمجھے حبر^*کھیتی^کی^ھیپ^محی
ஆசியுரை
வவுனியா இந்து மாமன்றத்தினராலும் வ/ழரீ கந்தசுாமிகோவில் தர்மகர்த்தா சபையினுலும் அனுட்டிக்கப்பெற்ற பன்னிரு திரு முறைகனின் முற்ருேதல் பூர்த்தி விழா ஞாபகார்த்த வெளி யீட்டிற்கு ஆசியுரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். - சைவ அடியார்களாலும், நாயன்மார்களாலும் படைக்கபெற்ற பன்னிரு திருமுறைகள் கற்போரையும், கேட்போரையும் பக் திப் பரவசமூட்டும் சிந்தனைத் தூண்டல்களாக, சமயக் கரு வூலமாக முத்திப்பேற்றுக்குரிய வழிகாட்டியாகத் திகழ்கின்றன. பல்வகைச் சிந்தனேகள் வேறெங்குங் காணிமுடியாத சிறப் பினவாய் சமயத்துடன் இணைந்தவாறே வளர்வதை உண்ர்த்து கின்றன. இறைவனே அணுகவும் அவன் திருவருளைப் பெற வும் வல்ல உபாயங்களை வழங்கியும், அகக்கண்ணுல் காணும் ஆற்றல் அற்றவர்கள் புறக்கண்ணுல் கண்டனுப விக்கக் கூடிய விதத்தில் திருமுறைகள் அமைந்துள்ளன நாம் அடியார்கள், நாயன்மார்கள் வழியைப் பின்பற்றி இறைவனே இறைஞ்சி வழிபடவும், இறைவன் எம் கேள்வி களுக்கு அருளுரை தர வல்லவன் என்பதையும் திருமுறை கள் இயம்பி நிற்கின்றன.
k
* ஆரொருவர் உள்குவஈர் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்
என்ருர் அப்பர்,
鼻 勤
நாயன்மார்கள் வரலாறு வளர்ந்தது செயல் கள் சித்தங்களைத் தூண்டி விட்டன. சித்தங்கள் கருத்துக் களைப் பிரதிபலித்தன. எனவே இத் திருமுறைகளை அடியார் கள் ஓதி இறைவனே அடைய முத்தியைப்பெற வழிகாட்டிய வவுனியா இந்துமாமன்றம் வாழ்க ! வளர்க ! நின்தொண்டுகள்!
இறையருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
சொ. அமிர்தலிங்கம் பிரதேசச் செயலாளர், வவுனியா,
3 ALMAALLAAAAALAAAAALLAMLMLMAMALALALALALAMALALALMeMAMAMAeLMLAMAeLAMeMAMLMLMLeLLMeLALMLLLLL

Page 6
v/M
al சிவமயம்
திருமுறையே சைவ நெறி கருவூலம்
திருமுறையே சைவ நெறி கருவூலம் என்ற சைவ சமய உண் மைகள் மூலம், சைவத் திருமுறைகள் மிக உயர்ந்தவை எனக் கணிக்கப்படுகிறது. பன்னிரு திருமுறைகளை வவுனியாவில் முதலில் முற்ருேதல் செய்த பாக்கியம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கு கிடைத்தது. இரண்டாவதாக இந்துமாமன் றமும், வவுனியா றி கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபையும் இணைந்து இந்த அரிய பொறுப்பை ஏற்று சிறப்பாக முற் ருேதல் செய்து பூர்த்தி விழாவைக் கொண்டாடியது. இதில் ஆலய பிரதமகுரு சிவழறி இ. பாலச்சந்திரக் குருக்களின் பங்களிப்பும் ஆசியும் முயற்சியும் பெரிதும் உதவின.
மீண்டும் 12 - 9 - 93 தொடக்கம் வவுனியா இந்து மாமன்றமும் வவுனியா றி கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபையும் இணை ந்து பன்னிரண்டு திருமுறைகளையும், முற்றேதல் செய்து, அதன் பூர்த்திவிழாவை 94ம் ஆண்டு தைமாதம் 1-ம் திகதி கொண்டாடு வதை, பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
சைவசமயத்தின் அதி உயர்ந்த பொக்கிசங்களாக விளங்கும் இத் திருமுறைகளை, நாட்டின் எல்லாப் பாகங்களிலும் முற்ருேதல் செய்து பூர்த்தி விழா கொண்டாடவேண்டு மெனவாழ்த்துகின்றேன் இம் முயற்சிக்கு மிக ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து தாங் களும் கலந்து பாடியதன் மூலம் பெருமை தேடித் தந்த உயர் திரு. C. A. இராமஸ்வாமி, தலைவர் இந்துமாமன்றம் அவர் களுக்கும், சிவழறி இ. பாலச்சந்திரக் குருக்கள் அவர்களுக்கும், இம் மாதம் திருவாசக முற்ருேதலே இரண்டு தடவைகள் செய்ய உதவிய வவுனியா இந்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுகின்றேன்
இந் நிகழ்ச்சியில் பாடியும், கேட்டும் கலந்து கொண்ட அடியார் களுக்கு எல்லா வளங்களும் இடைக்க வேண்டுகின்றேன் இன் றைய விழாவில் வெளியிடப்படும் திருமுறை அறிமுகம் என்னும் நூலே ஆக்க உதவிய தம்பி தர்மராசா (அகளங்கன் ) அவர் களுக்கும் என் வணிக்கங்கள்.
விழாக்குழு சார்பாக வை. செ. தேவராசா செயலாளர், வ / மணி கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை
செயலாளர், சு, இ. இ. சங்கம் - வவுனியா 1 - 1 - 94. உறுப்பினர் இந்து மாமன்றம் - வவுனியா
LLeMLeLeLMMMMMLMLeMMMMLMLeAeMMeMLMMMLAMAMMAMAYAMMAMALeLeLeLeALALALAMLeMMLMLMMMLML
^محی^محری^محی^مح^مبر

S
& S.
R
மு ன்னுரை
1994-ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளில் எனது நூல் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு நிகழ்ச்சியா கும். அதுவும் சமயநூலாக வெளிவருவது இரட்டிப்பு மகிழ்ச்சி தருவதாகும்.
பன்னிரு திருமுறை பற்றிய ஆராய்ச்சி நூல்கள் அதிகம் வெளிவந்துள்ளன. தனித்தனி திருமுறை பற்றிய ஆராய்ச்சிகளும், தனி நூல் பற்றிய ஆராய்ச்சிகளும் பலர் செய்திருக்கிறார்கள்.
ஆனால் பன்னிரு திருமுறை பற்றிய சிறிய ஒரு கைநூல் காண்பதரிது. வவுனியா சிந்தாமணி விநாயகர் கோவி லில் 1992 ல் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவை (10 நாட்கள்) ஆற்றிய போதும், அதற்கு முன் 1991 ல் வவுனியா கந்தசுவாமி கோவிலில் நவராத்திரித் தொடர் சொற்பொழிவை (9 நாட்கள்) ஆற்றிய போதும், பன் னிரு திருமுறைகளைப்பற்றி விபரமாக அறிந்து கொள் வதற்கும், விரைவாகச் சில தகவல்களைப் பெறுவதற்கும் பெரிதும் சிரமப்பட்டேன்.
வவுனியா இந்துமாமன்றத் தலைவர் வள்ளல் இராழ சாமி அவர்கள், பன்னிரு திருமுறைகள் பற்றிய ஓர் அறி முக நூலை எழுதித் தரும்படி கேட்டபோது, திருவருள் கைகூடும் காலம் இதுவே எனத் துணிந்து எழுதத் தொடங்கினேன்.

Page 7
திரு. க. சி. குலரத்தினம் அவர்கள் எழுதிய இந்து நாகரிகம் ” நூல் எனக்கு பெரிதும் கைகொடுத்தது பன்னிரு திருமுறைப் பெருந்திரட்டு, மற்றும் நான் அவ் வப்போது சேகரித்து வைத்திருந்த தகவல்கள் எனக்குப் பெரிதும் உதவின.
இந்தப் ' பன்னிரு திருமுறை அறிகம்' நூல் மாணவர் களுக்கும் சைவ அன்பர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்றே நம்புகிறேன்.
இதனை வெளியிடும் இந்துமாமன்றம் - கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை ஆகியவற்றுக்கு என் நன்றிகள்.
நன்றி
L'tbáð)L. LD (), அன்புடன், வவுனியா, அகளங்கன்

பன்னிரு திருமுறை அறிமுகம்.
ബ அகளங்கன் லிசிவ நல்லடியார்களும், நாயன்மார்களும் பாடிய திரு வருட் செந்தமிழ் நூ ல் க ள், திருமுறைகள் ஆகத் தொகுக்கப் பட்டுள்ளன. திருமுறைகளைத் தொகுத்து வழங்கியவர் நம்பி யாண்டார்நம்பி என்னுமோர் சிறந்த சிவனடியாராவர். இவர் இராஜராஜசோழ மன்னனின் ஆட்சிக் காலத்திலும், அவனது மக ஞன கங்கைகொண்ட சோழன் எனப் போற்றப்பட்ட இரா ஜேந்திரசோழ மன்னனின் காலத்திலும் வாழ்ந்தவர்
இராஜராஜசோழனின் ஆட்சிக் காலத்தில் அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க மு த ல் 7 திருமுறைகளைத் தொகுத் தார் என்றும், பின்பு இராஜேந்திரசோழனின் ஆட்சிக் காலத் நில் அவனது வேண்டுகோளுக்கிணங்க 8-ம், 9-ம், 10-ம், 11-ம் , திருமுறைகளைத் தொகுத்தார் என்றும் அறியக் கூடியதாக இருக்கின்றது. -
திருவிசைப்பாவில் கங்கை கொண்ட சோழேச்சரம் பாடப் பட்டிருப்பதனால் இராஜேந்திரசோழனின் வடநாட்டு வெற்றிக் குப் பின்பே, அவை பாடப்பட்டிருத்தல் கூடும். அத்தோடு 11-ம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பிகளின் பாடல்கள் காணப் படுவதையும் கருதலாம்.
இவரின் பின் வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் பாடிய ருளிய "பெரிய புராணம்' எனப் போற்றப்படும் " திருத் தொண்டர் புராணம் ' 12-ம் திருமுறையாக பின்னளில் சேர்த் துக் கொள்ளப்பட்டுள்ளது.
திருமுறைப் பாடலொன்றைத் தனியாகப் பாடும்போதும் அல்லது பல வற் றைப் பாடும்போதும் 'திருச்சிற்றம்பலம் ” என்று தொடக்கத்திலும், முடிவிலும் கூறுதல் வழக்கமாகும்.
பொதுவாகவே " நின்ருலும், இருந்தாலும், கிடந்தாலும்,
நடந்தாலும், மென்ருலும், துயின்ருலும், விழித்தாலும், இமைத் தாலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என ஒவ்வொரு

Page 8
- 2 -
காரியத்தின் முன்னும் கூறிக்கொள்தல் சிவனடியாரிகளின் பெரு
வழக்காகும்.
திருச்சிற்றம்பலம் என்பது ' தத்துவங் கடந்த தடையிலா அருளறிவுப் பெருவெளி ' என்பதாகும் என்பர் சைவநல்லறிஞர்
திருச்சிற்றம்பலம் என்னும் பதத்தில் வரும் எழுத்துக்கள் ஒற்றுநீக்கி - அதாவது மெய்யெழுத்துக்களைத் தவிர்த்து ஆறு ஆகும்.
(கிரந்தக் கணக்கு ஒற்று நீக்கியே கணக்கிடப்படுகின்றது )
இப்படி முதலிலும் முடிவிலுமாக இருதடவைகள் சொல்லும் போது மொத்தம் பன்னிரண்டு எழுத்துக்கள் வருகின்றன. இதுவே திருமுறைகள் பன்னிரண்டாக அமைந்த திருவருள் என்பர் θου ή
தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு, சைவத் தமிழ் நூலாகிய திருமுறைகளும், சைவ உலகிற்கு உயிராக இருக்கும்படி பன்னிரண்டாக அமைந்தன என்றும் கூறுவர்
முதலாவது திருமுறையின் முதற் தே வார மா கி ய தோடுடைய செவியன் .' இல் ( த் -- ஒ=தோ ) ஓங் கார உயிர் முதற் சொல்லின் முதலெழுத்திலே அமைந்துள்ளது பன்னிரண்டாந் திருமுறையாகிய பெரிய புராணத்தின் இறுதிப் பாடலாகிய ' என்றுமின்பம் பெருகும் இயல்பினால். ' என்ற பாடலின் இறுதிச் சொல் ( உலகெலாம் ) லின் இறுதி எழுத்தும் இல் முடிகிறது ஓம் என்ற பிரணவ மந்திரத்தினுள் அடங்கும் அருட்செயலாகவே பன்னிரண்டாந் திருமுறை வரை சென்று முற்றுப் பெற்றது என்றும் சைவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.
வேதம் - ஆகமம்
திருமுறைகள் வேத ஆக மக் கருத்துக்களைத் தம்மி கத்தே கொண்டவையாகக் காணப்படுகின்றன. வேதங்களையும், ஆகமங் இளையும், சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசித்தருளினார் என்பது நீண்ட கால நம்பிக்கையாகும்.
அதனால் வேதங்களினதும். ஆகமங்களினதும் சாரமாக அமைந்த திருமுறைகளைச் சித்தத்தைச் சிவன் பால் வைத்த இவனடியார்கள் பாடியருளியமையால் திருமுறைகளும் சிவபெரு

- 3 -
LD nr SISTIT 6) அருளிச் செய்யப்பட்டவையாகக் கருதப்படுதல் தகும் GTGGTGA) mtib.
அதுமட்டுமன்றிச் சிவபெருமான் நேரடியாகப் பாடிய பாசுரம் ஒன்றும் 11ம் திருமுறையிலே இடம் பெற்றிருக்கின்றது.
சித்தத்தைச் சிவன்பால் வைத்த சிவனடியார்கள் தாமென்ற நிலையை இழந்தவர்களாக , , நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே " என்று வாழ்ந்ததனாலும் அடியார் களின் வாக்குக்கள் ஆண்டவனின் வாக்குக்களேயாகும்,
இவைமட்டுமன்றிச் சில அடியார்களுக்குச் சிவபெருமான் பாட அடியெடுத்துக் கொடுத்தும், மாணிக்கவாசக சுவாமிகள் பா டி ய  ைத ப் படி ( பிரதி) யெடுத்துக் கொண்டு போயும் அருட்செயல்களைச் செய்ததனால் திருமுறைகள் தமிழ் வேதங் களாக, தமிழ் ஆகமங்களாகப் போற்றப்படும் தகுதி படைத தனவாக மிளிர்கின்றன
இவற்றின் காரணமாகப் பன்னிரு தி ரு மு  ைற க ளு ம் திருமுறைகள் என்றும், திருமறைகள் என்றும் அழைக்கப்படக் கூடியன என்பர் அறிஞர். ( முறை - ஆகமம், மறை - வேதம் )
திருமுறைகளின் பயன்
படிப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் தன்மை படைத் தனவாகவும், உலகியல் ஆத்மீக அறிவுகளைத் தரும் உன்னத மானவையாகவும் : பாபங்களைப் போக்கும் பெருமை படைத் தனவாகவும். பதமுத்தியைத் தரும் அ ரு  ைம படைத்தன வாகவும் திருமுறைப் பாடல்கள் விளங்குகின்றன.
சிவசின்னங்களின் மகிமையையும், அடியார்களின் பெரு மையையும், ஆண்டவனின் அளப்பெருங் கருணையையும் அந்த அருட்கருணையை அடைவதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய சைவ நெறிமுறைகளையும் திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன.
வானத்தில் முட்டும் படியாக குவித்து வைக்கப்பட்ட பெரிய விறகுக் குவியலையும் ஒரு சிறு நெருப்பு எரித்து அழித்துவிடு வதுபோல, செய்த பாவக் குவியலை 18 கிவாயநம என்னும் பஞ்சாட்சர ம ந் தி ர ம் போக்கிவிடும் என்று பஞ்சாட்சரத்தின் பெருமையை அடியார்கள் போற்றியுள்ளனர்,

Page 9
- 4 -
பக்திநெறி ப  ைழ ய பாவங்களையும் நீக்கிவிடும் என்ற கருத்தில் பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் . என அருளாளர்கள் அகநெகிழ்ந்து பாடியுள்ளார் கள். நற்றமிழ்ப் பாடல்களிலே நன்னெறியைப் போதித்தவை திருமுறைகளாகும்.
சைவநெறி மு த் தி ப் பேற்றுக்குரிய நெறி மட்டுமன்றி, முத்திப்பேற்றை அடைவதற்கு இடையிலே இருக்கின்ற சகல போகங்களையும், சகல யோகங்களையும் அடைவதற்கும் உரிய நன்னெறி என்பதைத் திருமுறைப் பாடல்கள் எடுத்தியம்புகின்ற்ன?
** மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் " என் றும், " இம்மையே தரும் சோறும் கூ  ைற யும் ' என்றும், ' பொன்னும் மொய்ப்பொருளும் தருவானை என்றும் பல வகையாகச் சிவபெருமானைச் சிவனடியார்கள் போற்றித் துதித் திருப்பது இந்த உண்மையை உலகுக்குணர்த்துகின்றது,
சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழி படும் அடியார்கள் கோவில்களிலே பஞ்சபுராணம் ஒதித் துதிக் கும் வழக்கம் இன்றும் உண்டு. தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ( பெரியபுராணம் ) என்பவையே அவை. இவைகளெல்லாம் திருமுறைகளுக்குள்ளே அடங்குகின்றன.
தனது அடியவனுகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் மகிழ்ச்சிக் காஜ ஊடல்கெர்ண்ட பரவையாரின் ஊ டல் தீர்க்க இரவிலே நடந்து தூதுசென்று ஊடல் தீர்த்த கதைகளும், வேண்டிய பொழுதெல்லாம் பொன்னைக் கொடுத்தும், நெல்லைக் கொடுத் தும், வழிப்பசி போக்க உணவு கொடுத்தும், தாகந்தீர்க்கத் தண் ஒணிர் கொடுத்தும் அடியாரைப் பேணியவர் சிவபெருமான் எனச் சிவபெருமானின் எளிவந்த கருணையை எல்லாம் திருமுறைக ளிலே கண்டு களிகூரலாம்.
அதனால் திருமுறைகளை ஒதுவதனாலே வையத்துள் வாழ்வாங்கு வாழ வசதிகளும், பொன்னும் புகழும் கிட்டும். தேக நீக்கத்தின் பின் முத்தியும் கிட்டும்.
இம்மைப் பயனையும், மறுமைப் பயனையும் ஒருங்கே தர வல்ல திருமுறைகளைச் சைவர்கள் போற்றாதொழிந்துபோனால் வேறெந்த இலகுவான வழியாலும் இரு  ைம ப் பயன்களைப் பெறவே முடியது என்று கூறலாம்:

- 5 -
இந்தச் ச ரீ ர ம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும்பொருட்டேயாகும் என்பது திரு முறையாசிரியர்களின் கருத்தாகும். வேத, ஆகம சாரங்களாக வும், சைவ சித் தா ந் த க் கருத்துக்களடங்கிய தொகுப்பாகவும் விளங்கும் இந்நூலில் சாத்திரப் பாடல்களும் உண்டு தோத்தி ரப் பாடல்களுமுண்டு
பன்னிரு திருமுறைகள்
1-ம், 2-ம், 3-ம், திருமுறைகள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களைக் கொண்டுள்ளன. 4-ம் 5-ம், 6-ம் திருமுறைகள் திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரங்களைக் கொண்டுள்ளன. 7-ம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களைக் கொண்டுள்ளது,
முதல் 7 திருமுறைகளும் தேவாரங்கள் அ ட ங் கி ய திரு முறைகளாகும். ' தேவாரம் ' என்பது கடவுளுக்கு LDT60 போன்றது எனக் கருத்துப்படும் ஒரு சொல். (தேவு - கடவுள், ஆரம் - மாலை )
முதல் 7 திருமுறைகளையும் சேர்த்து 'அடங்கன் முறை” என்று கூறும் வழக்கமுண்டு தேவாரங்களைப் பாடிய மூவரை யும் ' தேவார முதலிகள் ' என்று அழைக்கும் வழக்கம் நெடுங் காலமாக உண்டு
இந்த 7 திருமுறைகளையும், இராஜராஜ சோழனின் வேண்டு கோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பிகள் அ வ ன து காலத்தில் தொகுத்தார் என்பர் வரலாற்று அறிஞர்,
8-ம் திருமுறையில் மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திரு வாசகம், திருக்கோவையார் என்னும் இரு நூல்கள் இடம்பெறு கின்றன.
தேவார முதலிகளாகிய மூவரோடு மணிவாசகப் பெருமா னையும் சேர்த்துச் சமய குரவர் என்றழைத்தல் தமிழர் மரபாகும்.
இந்நால்வரையும் சிவபெருமான் ஆட்கொண்ட விதத்தைக் கூறும்போது, அருண்மொழியரசு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அற்புதமாக விளக்குவார். சம்பந்தரைப் பாலைத் ?? கொடுத்து ஆட்கொண்டார், அப்பரைச் 1 சூலை ' கொடுத்து ஆட்கொண்டார்.

Page 10
--6 مس۔
சுந்தரரை " ஒலை * கொடுத்து ஆட்கொண்டார். மாணிக்க வாசகரைக் * காலைக் ' கொடுத்து ஆட்கொண்டார். ( திரு லடி தீட்சை கொடுத்து ) என்பர்ர் அவ்வடியார் .
9-ம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என் பவை இடம்பெறுகின்றன. இவற்றைப் பாடியோர் ஒன்பதின்மர் (9) 10-ம் திருமுறையில் திருமூலர் பாடிய திருமந்திரம் என்ற தனிநூல் இடம்பெறுகின்றது.
11-ம் திருமுறையில் திருவாலவாயுடையார் முதலிய பன் னிருவர் பாடிய 40 பிரபந்தங்கள் அடங்குகின்றன. 12-ம் திரு முறையில் சேக்கிழார் சுவாமிகள் பாடியருளிய பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம் இடம் பெறுகின்றது?
கோவை, அந்தாதி, கலம்பகம், இரட்டை மணிமாலை. மும் மணிக் கோவை, உலா, ஆற்றுப்படை, நான்மணிமாலை, முத லான பிரபந்தங்களும், புராணமும் அடங்கிய பன்னிரு திருமுறை கள் தமிழ் இலக்கிய உலகுக்குப் பெருந் தொண்டு செய்திருக் கின்றன.
இவற்றிலே கலம்பகம் என்ற பிரபந்த வகையைத் தவிர ஏனையவற்றைத் தமிழிலக்கிய உலகுக்குப் பன்னிரு திருமுறை களே வழங்கியிருக்கின்றன. இத் திருமுறையிலே இடம் பெறு ம் ஆளுடைய பிள்ளையர்ர் திருக்கலம்பகத்திற்கு முன்பே நந்திக் கலம்பகமும், சமணரின் திருக்கலம்பகமும் எழுந்துவிட்டன என் பர் இலக்கிய வரலாற்றாசிரியர்கள்.
முதலாந் திருமுறை
சிவபெருமானின் திருவருளால் ஞானப்பால் குடித்து –2H, Q5 GS)LBij பிள்ளை யாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய பாடல்கள் அளவிலாப் பெருமை படைத்தவை. வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துற்ை விளங்கப் பூத பரம் பரை பொலியப் புனித வாய் மலர்ந்தழுத சீத வள வயற்புகலித் திருஞான சம்பந்தர் திருவாய்மலர்தருளிய திருப்பதிகங்களின் எண்ணிக்கை மொத்தம் 16, 000 என்பர்.
சோழ நாட்டுச் சீர்காழியிலே அந்தணர் குலத்தில் சிவ பாதவிருதையருக்கும், பகவதி அம்மையாருக்கும் மகனாக அவ தரித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பதினாறு ஆண்டு களே இப்பாரில் வாழ்ந்து, பாடிய பதிகங்களின் எண்ணிக்கை

- 7 -
16,000 என்பதை ' பன்னு தமிழ்ப் பதினாறாயிரம் நற்பனுவல். மன்னுடவியரர்க்கு வாய்ப்பவும் ' என்னும் வரிகள் காட்டுகின்றன,
இருப்பினும் காலத்தால் அழிந்துபோனவைபோக ஞாலத் தில் மிஞ்சியிருப்பவை மொத்தம் 384 திருப்பதிகங்களேயாகும். ஒவ்வொரு திருப்பதிகத்திலும் பெரும்பாலும் 11 பாடல்கள் காணப் படுகின்றன. சிலவற்றில் 12 பாடல்களும் வந்துள்ளன, சில திருப் பதிகங்களில் சிதைவடைந்தும், அழிந்தும் குறைந்து 10 9, 7 எனவும் வந்துள்ளன. மொத்தம் 4126 திருப்பாடல்கள் கிடைக் கப்பெற்றுள்ளன.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல்களைத் திருக் கடைக் காப்பு என்றும் திருநெறி தமிழ் என்றும் அழைப்பர். தமது முதற் பதிகத்திலேயே " ஞானசம்பந் தன் உரை செய்த திரு நெறிய தமிழ் ' என்று த னது திருப்பாடல்களுக்கு இவர் பெயர்சூட்டியுள்ளார். தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறிக் குரிய தமிழ்மறை என்பது இதன் பொருளென்பர் அறிஞர்.
முதலாந் திருமுறையில் 136திருப்பதிகங்களில் 1469 திருப்பாடல் கள் காணப்படுகின்றன. இவை 8 பண்களில் அமைந்துள்ளன' இத்திருப்பதிகங்கள் தமிழ்நாட்டிலுள்ள 90 திருத்தலங்களில் பாடப் பட்டுள்ளன.
திருஞானசம்பந்தமூர்த்தி நா ய னா ரி ன் திருப்பதிகங்களில் இயற்கை அழகு மேலோங்கி இருப்பதை இலகுவில் இனங்கண்டு
கொள்ளலாம்,
மக்கள் வாழ்க்கைமுறை, புராணக் கதைகள், இதிகாச நிகழ்ச்சி முள், வரலாற்றுக் குறிப்புகள், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வேத நுட்பொருள்கள், முதலியன இவரது திருப்பதிகங்களில் விர வி வந்துள்ளன.
அகத்திணை மரபுக்கேற்ப நாயக, நாயகி பாவனையில் பாடும் பாடல்களும் இவரது திருமுறைப் பாடல்களில் காணப் படுகின்றன,
இரண்டாந் திருமுறை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிருளிய இரண்டாந் திருமுறையில் 122 திருப்பதிகங்களில் 1310 திருப்பாடல்கள் காணப் படுகின்றன. இவை 88 திருத்தலங்களில் அருளிச் செய்யப்பட்டுள் ள .ை இவை 6 பண்களில் அமைந்துள்ளன,

Page 11
- 8 -
ஈழத்திலுள்ள மாதோட்டத்தில் பாலாவிக் கரையில் கெளரி அம்பாளுடன் இருந்து அருள்பா லிக்கும் திருக்கேதீஸ்வர நாதரைப் பாடிய பதிகமும் இத்திருமுறையில் அடங்குகின்றது
மூன்றா ந் திருமுறை
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் பாடியருளிய மூன்றாந் திருமுறையில் 125 திருப்பதிகங்களில் 1347 திருப்பாடல்கள் அமைந் துள்ளன, பிற்காலத்தில் திருவிடைவாய் என்னுந் திருக்கோயிலிற் கண்டுடி பிக்கப்பட்ட கல்வெட்டில் இரு ந் து ஒரு பதிகமும் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 126 திருப் பதிகங்களும், 1358 பாடல்களும் காணப்படுகின்றன. இவை 85 திருக்கோவில்களிற் பாடப்பட்டன
ஈழத்திலுள்ள திருக்கோணமலையில் மாதுமையாளுடன் எழுந் தருளியிருக்கும் திருக்கோணேச்சரப் பெருமானைத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடித் துதித்த 3 நிரைகழலரவம் சிலம் பொலி அலம்பும் . எனத் தொடங்கும் திருப்பதிக மும் இத்தொகுப்பில் அடங்குகின்றது.
எல்லோரும் வாழ்தல் வேண் டும் எல்லோரும் ஆன்ம ஈடேற்றம் பெறுதல் வேண்டும். எல்லோரும் இறைவனை வணங் குதல், வாழ்த்துதல், பாடுதல், ஆடுதல், பரவுதல், வலம்வருதல் பணிபுரிதல் செய்யவேண்டும் என்றும், அச்செய்கைகளால் இறை யருள் கட்டாயம் கி  ைட க் கும் என்று சம்பந்தப் பெருமான் கருத்துரை பகர்ந்துள்ளனர்.
தாம் பாடிய பாடல்களைப் பக்தியோடு பாடுபவர்கள் வீடுபேறு அடைதல் திண்ணம் என்று ஆணையிட்டுக் கூறுவார், அந்த உலகெய்தி அரசாளும் அதுவே சரதம் ஆனை நமதே
என்றும் ,
தாம் பா டி  ைவ அனைத்தும் இறையருள் வாக்குக்களே என்றும் கூறியுள்ளார். " எனதுரை தனதுரையாக என்றும், * பழுதிலிறை எழுது மொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழி த ைகயவே என்னும் வ்ரிகள் இதனை ஆதாரப் படுத்துகின்றன.
திருஞானசம்பந்தமூர்த்தி நாய னா சி ன் தேவாரப் பாடல்களில் பொதுவாகப் பெரும்பாலும் 8-ம் பாடலில் சிவ

س 9 سم.
பெருமான் இராவணனை மலையின் கீழ் நெரிந்த செய்தியும் 9-ம் பாடலில் பிரமா விஷ்ணு முதலானுேர் குக் கானரிய பொரு ளாக நின்ற செய்தியும், 10-ம் பாடலில் புத் த ரி, சமணர் ஆகிய புறச்சமயத்தோரின் பொய்மை நெறிகளும், 11-ம் பாட லில் தனது திருப்பதிகம் ஒதுவோர் பெறும் பயனும், அவரைப் பற்றிய விபரங்களும் காணப்படுகின்றன
நான் காம் திருமுறை திருமுனைப்பாடி நாட்டில், திருவா மூரில், சைவவேளாளர் குலத்தில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் புத்திரராக திலக வதியாருக்குத் தம்பியாராக அவதரித்து மருணிக்கியார் எனப் பெயர் பெற்றுச் சமணசமயத்தைச் சார்ந்து தருமசேனர் எனும் பெயரில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரைச் சிவபெருமான் சூலை நோய் கொடுத்து ஆட்கொண்டார்.
81 வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாய னார் பாடி யருளிய தேவாரப் பதிகங்களின் எண்ணிக்கை 4900 என்பதை " இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன்
நாவினுக் கரையன் ' என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் பாட பாடல் வரிகளும் ' பதிகம் ஏழெழு நூறுபகரும் மாக வியோகி பரவு நாவரசான பரம காரண ஈசன் " என்ற நம் யாாண்டார்
நம்பிகளின் வரிகளும் " திருநாவுக்கரசனெனும் செம்மையாளன் ஒரு நாற்பத் தொன் பதினாயிரமாகப் பெருநாமம் புகலூரில் பதிகம் கூறிப் பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுள்ளா ரே என்ற உமாபதி சிவாச்சாரியாரது வரிகளும் மெய்ப்பிக்கின்றன.
பதிகம் ஒன்றுக்குப் பத்துப்பாடல்கள் வீதம் 49000 பாடல் களை அப்பர் சுவாமிகள் அருளிச்செய்தார் என்பர் அறிஞர் ,
அப்பர் சுவாமிகளின் திருப்பதிகங்களில் 312 பதிகங்களே இப்போது கிடைத்துள்ளன. மொத்தம் 3066 பாடல்களே காணப் படுகின்றன. இவரது பதிகமொன்றில் 10 பாடல்களே பொதுவாகக் காணப்பட்டாலும், திருவங்கமாலை என்னும் பதிகத்தில் 12 பாடல் களும், திருவையாற்றுப் பதிகத்தில் 20 பாடல்களும் காணப்படு கின்றன.
தனது 10-ம் பாடலில் இராவணனுக்குச் சிவபெருமான் அருள் புரிந்த தைப் பாடும் வழக்கத்தை இவர் கொண்டுள்ள தை அநேக திருப்பதிகங்களிற் காணலாம். திருநாவுக்கரசு கவாமி கவின் திருப்பாடல்கள் ' இலக்கிய நயம் ' மிகு ந் து காணப் படுகின்றன.

Page 12
- 10
நf ன் காந் திருமுறையில் 113 திருப்பதிகங்களில் 1070 திருப் பாடல்கள் காணப்படுகின்றன. 51 திருத்தலங்களில் அருளிச்செய் யப்பட்டு 10 பண்களில் அமைந்துள்ளன.
ஐந்தா ந் திருமுறை
இத்திருமுறையில் அப்பர் சுவாமிகளின் 100 திருப்பதிகங் களில் 1015 நிருப்பாடல்கள் காணப்படுகின்றன, இவை 75 திருத் தலக்களிற் பாடப்பட்டவையாகும்.
ஒரு தலத்திலிருந்து இன்னொரு தலத்திற்குச் செல்லும் வழியிலும், உழவாரத் தி ரு ப் பணி செய்யும்போதும் இறைவன் புகழை மக்களுக்கு உணர்த்தும்போதும் திருப்பணிகளின் போதும் பாடியளிருய பதிகங்கள் இத் திருமுறைகளில் அடங்குகின்ற்ன. இவைகள் யாவும் ** திருக்குறுந் தொகை ” என்னும் பெயரை
S2. Gð) 1. ti.Jøðr.
ஆறாந் திருமுறை
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளிய 99 திருப்பதிகங் களில் 981 திருப்பாடல்கள் 6-ம் திருமுறையில் காணப்படுகின்றன, இவையாவும் " திருத்தாண்டகம் ' என்னும் செய்யுள்வகை யைச் சேர்ந்தவையாகும், தாண்டகச் செய்யுளைச் சிறப்பாகப் பாடியதன் கார ண மாகத் " தாண்டக வேந்தர், தாண்டகச் சதுரர் " என்னும் திருநாமங்கள் இவருக்கு வழங்கப்படுகின்றன"
அப்பர் சுவாமிகளின் 4-ம் திருமுறை கவிச்சுவை நிரம்பிய தாகவும், 5-ம் திருமுறை அறிவுரை நிரம்பியதாகவும், 6-ம் திரு முறை இறைவனின் கருணையும், அவர் ஆன்மாக்கள்மேல் வைத் துள்ள அளப்பரும் கருணையால் திருவருள் பாலிக்கும் பான் மை யைப் பஈடுவதாகவும் அமைந்துள்ளன.
ஏழாந் திருமுறை
திருமுனைப்பாடி நா ட் டி ல் திருநரவலூரில் ஆதிசைவ வேதியர் குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மக னாக அவதரித்த சுந்தரரைச் சிவபெருமான் திருமணச் சடங் கின்போது வலியவந்து அடிமை ஒலை காட்டி ஆட்கொண்டார்.

-- 11 -
18 ஆண்டுகளே இப்பாரில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகங்கள் 38000 என்பர். இவை 114 திருத்தலங்களிற் பாடப்பட்டவையாகும். ஆனால் இன்று எமக்குக் கிடைத்துள் ளவை 96 திருத்தலங்க களிற் பாடப்பட்டவையும் 4 பொதுப் பதி கங்களுமாக மொத்தம் 100 பதிகங்கள் மட்டுமே ஆகும். மொத் தம் 1026 ப ா ட ல் க ளே 7ம் திருமுறையில் காணப்படுகின்றன. இவை 18 பண்களில் வந்துள்ளன.
*爱
சிவபெருமானைப் " பித்தன் என்று ஏசியவர் இவர் , சிவபெருமான் அந்த வார்த்தையில் மகிழ்ந்து பித்தா' என்றே பாடும்படி அ டி யெ டு த் து க் கொடுத்தார். சிவபெருமானோடு தோழனாக வாழ்ந்த அவர் தம்பிரான் தோழர் என்று போற் றப் பட்டார்.
சுந்தரரைப் போலத் தமக்குமுன் வாழ்ந்த சிவனடியார் களின் திருநாமங்களைத் தொகுத்துப் பாடியவர்கள் யாருமில்லை. இவரது திருத்தொண்டத் தொகையில் மட்டுமன்றி தேவாரப் பதிகங்களிலும் இவருக்கு முன்வாழ்ந்த சிவனடியார்கள் பெரிதும் போற்றப்பட்டிகுக்கின்றார்கள்.
ஈழத்தின் மேற்குத் திசையில் மன்னாரில் ' மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில், பாவம் வினை அறுப் பார் பயில் பாலாவியின் கரையில் கெளரியம்மையோடு வீற் றிருந்து அருள்பாலிக்கும் திருக்கேதீஸ்வர நாதனையும் சுந்தரர் ஒரு பதிகத்தில் போற்றித் துதித்துள்ளார்,
சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரத்தில் "பொருள்நயம்' சிறந்திருப்பதையும், சிவபெருமானோடு தோழமையாக உரை யாடும் பான்மையையும் கண்டுகொள்ளலாம்.
இந்த ஏழாத் திருமுறைகளிலும் அடங்கும் தேவாரங்கள் முழுவதும் தனித்தமிழ்த் " திருமாமறைகள் ” என்று சைவ நல்லறிஞர் போற்றுவர். -
தேவாரப் பாடல்கள் சொல்நயம், பொருள் நயம், முதலிய வற்றோடு படிப்போரையும், கேட்போரையும் கவர்ந்திழுக்கும் பண் நயமும், இசை நயமும், மிகுந்தவை. ஆன்ம ஈடேற்றத்துக்கு அடிகோலுபவை என்பர் அறிஞர்.

Page 13
-12
● 愛 - எட்டாந் திருமுறை
பாண்டிய நாட்டிலே திருவாதவூரில், அமாத்தியப் பிராமண குலத்திலே சம்புபாதாசிரியருக்கும், சிவஞானவதி அம்மையாருக்கும் மகனாக அவதரித்த மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய திருவாசகமும், திருக்கோயைார் என்ற இருநூல்களும் στL - ι π|5 திருமுறையில் இடம்பெறுகின்றன.
திருவாசகம் மிகவும் போற்றப்படும் பக்திப் பாடல்களைக் கொண்ட அற்புதமான பாடற் தொகுப்பாகும். இப்பொழுது 51 பகுதிகளங்கிய 656 பாடல் க ளே கிடைக்கப்பெற்றுள்ளன: இவற்றில் திருச்சாழல், திருப்பொன்னுரசல், பண்டாய நான்மறை, திருப்படையாட்சி, மு த லி ய பகுதிகளிற் பாடல்கள் குறைந்து காணப்டுகின்றன. " இன்ப வெள்ளம் ' போ ன் ற பகுதிகள் மறைந்து விட்டன என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
" திருவாசகத்திற்கு உருகாதவர் நெஞ்சம் ஒருவாசகத்திற் கும் உரு காது ' என்றுகூறும் கூற்று திருவாசகம் கல்லையும் கணிய வைக்கும் தன்மை படைத்தது என்பதற்குச் சான்றாகும். மாணிக்கவாசக சுவாமிகள் தான்னென்ற நிலையை இழந்து, அழுதழுது உருகி உருகிப் பாடிய தித்திக்கும் தெவிட்டாததேன் விருந்தான திருவாசகத்தின் பெருமை அளப்பரியது.
எட்டாந் திருமுறையில் அடங்கிய இன்னொரு நூலான திருக்கோவையார் தமிழில் தோன்றிய முதல்க் கோவை நூலா கும்? தலைவன், தலைவி பாவனையில் அக்த்திணை மரபுக் கேற்பப் பேரின்பக் காதலைப்பற்றி; மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருக்கோவையாரில் 400 பாடல்கள் காணப்படுகின்றன. சிறந்த இலக்கிய நூலாகவும் மிளிரும் திருக்கோவையாரை ஆகம நூல் வழியில் செய்யப்பட்ட ஞானயோக நுண்பொருளுடைய நூல் என்று சைவ அறிஞர்கள் போற்றுகின்றனர்.
இருபத்தைந்து அதிகாரங்களைக் கொ எண் ட இத்திருக் கோவை யாரைச் சிவபெருமான் மாணிக்கவாசக சுவாமிகளிடம் பாவை பாடிய வாயால் ஒரு 41 கோவை' பாடுக ' எனக் கேட்டுப் பாடச்செய்து தாமே எழுதி எ டு த் து ச் சென்றார் என்பது வரலாறு.
பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டியனின் முத லமைச்சராக இருந்த மாணிக்கவாசக சுவாமிகள் குதிரை வாங்

- 15
கச் சென்றபோது திருப்பெருந்துறையிலே சிவபெருமானே குரு வாக வந்து ஆட்கொண்டார் என்றும், பின்னாளில் மாணிக்க வாசகரிடம் சிவபெருமான் அந்தண வடிவில்வந்து திருவாசகம். திருக்கோவையார் ஆகியவற்றைதாமே கேட்டுத் தம் கைப்பட எழுதி " வாதவூரன் விளம்பிட அம்பலவன் எழுதியது' என்று எழுதி " அ ழ கி ய சிற்றம்பலமுடையான் ' என ஒப்பமிட்டு தில்லைச் சிற்றம்பலத்துப் பஞ்சாட்சரப் படியில் வைத்திருந்தார் என்றும் எட்டாந் திருமுறையின் பெருமைகளை நூல்கள் போற்று கின்றன,
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் நின்ற மார்க்கத்தை முறையே தாச மாக் கம். சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்றும். இவர்கள் நின்ற நெறியை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றும், இவர்கள் அடைந்த முத்தியை முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியம் என்றும் குறிப்பிடுவர்.
இப்பூமியில் 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசக சுவாமி கள் பிறந்த ஊரின் பெயரில் திருவாதவூரடிகள் என்றே அழைக் கப்பட்டார். பெரிய புராணத்தில் இவரது வரலாறு காணப் Hடாமையால் இவரை நாயனார் என்று கூறும் வழக்கம் இல்லை, சுத்தரர் திருத்தொண்டர் தொகையில் பாடாததால், பெரிய புராணத்தில் இவர் பெயர் இடம்பெறவில்லை என்பர் ஆராய்ச்சி ut i IT GMT stř.
ஒன்பதாந் திருமுறை
ஒன்பதாந் திருமுறையில் இடம்பெற்றுள்ளவை திருவிசைப் பா, திருப்பல்லாண்டு என்னும் திருப்பதிகங்களாகும். ஏழிசை யாய், இசைப்பயனாய் இருக்கும் இறைவனை இத் திருமுறை யாசிரியர்கள் சிறந்த இசையில் பாடிப் பரவினர். இசைத் தமி ழின் வளர்ச்சியை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பவற்றிலே கண்டு கொள்ளலாம். இ  ைச த் தமிழின் வளர்ச்சியே திரு விசைப்பாவின் தோற்றம் எனினும் பொருந்தும், திருவிசைப் பாப் பாடல்களைப் பாடியவர்கள் ஒன்பதின்மர் (9) மொத் தப் பதிகங்களின் எண்ணிக்கை 28, பாடல்களின் தொகை 288
ஆகும்,
இசை நயமுள்ள சிறந்த பாடல்களை இத்தொகுப்புக் கொண் டுள்ளதால் திரு இசைப்பா எனப் பெயர் பெற்றது. ' சாளர

Page 14
- 14
பாணி ' என்ற பண் அமைந்த பாடல்களும் இத் திருவிசைப் பாவில் இடம் பெற்றுள்ளன. இப்பண் இதற்கு முந்திய திரு முறைகளில் இடம்பெறவில்லை. திருவிசைப்பாவில் இடம்பெற்ற மொத்தப் பண்களின் எண்ணிக்கை 6 ஆகும்.
இத்தொகுப்பில் திருமாளிகைத் தேவர் பாடிய 4 பதிகங் களில் 45 பாடல்களும், சேந்தனார் பாடிய 3 பதிகங்களில் 34 பாடல்களும், கருவூர்த்தேவர் பாடிய 10 பதிகங்களில் 103 பாடல் களும், பூந்துருத்திநம்பி, காடநம்பி பாடிய 2 பதிகங்களில் 12 பாடல்களும், கண்டராதித்தர், வேணாட்டடிகள், சேதிராயர் ஆகியோரின் ஒவ்வொரு பதிகங்களிலும் 10 பாட்டுக்களும், திருவா லிபமுதனாரின் 4 பதிகங்களில் 42 பாடல்களும், புருடோத்திம நம்பியின் 2 பதிகங்களில் 22 பாடல்களும் காணப்படுகின்றன.
சோழப்பெருமன்னர் காலத்தில் பாடப்பட்ட தெய்வீகத் தீந்தமிழ் இசைப் பாடல்களே இவை.
திருப்பல்லாண்டு
ஒன்பதாந் திருமுற்ைபயில் இடம் பெற்ற திருப்பல்லாண் டைப் பாடியவர் சே ந் த னா ர் ஆவர். ஒரே ஒரு பதிகமே திருப்பல் லாண்டில் காணப்படுகின்றது, திருப்பல்லாண்டுத் திருப் பாடல்களின் எண்ணிக்கை 13 ஆகும், சேந்தனார் பாடிய 3 பதி கங்கள் திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளன.
சிதம்பரத்திலே ஓடாது நின்ற தேரை ஓடச் செய்யவே சேந்தனார் திருப்பல்லாண்டு பாடினார் என்பர். பஞ்சபுராணம் பாடும்போது ஒன்பதாந் திருமுறையிலிருந்து திருவிசைப்பா, திருப் பல்லாண்டு என, இரு திருப்பாடல்கள் பாடுவது ஒன்பதாந் திருமுறையின் பெருமைக்குச் சான்றாகும்.
தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் முடி சூட்டுவிழா முதலிய மங்களகரமான வைபவங்களில் மகிழ்ச்யோடு திருப்பல்லாண்டு ஒதப்பெற்று வந்துள்ளது. இத்னை *லாண்டு' பாடுதல் என அழைத்தனர்.
இறைவனைப் பல்லாண்டு வாழ்க வென வாழ்த் துவது இறையருள் பல்லாண்டு இப்பாரில் நிலைத்து ஆன்மாக்கள் பயன் பெற வாழ்த்துவதற்குச் சமனாகும்,

- 15 -
பத்தா ந் திருமுறை
பத்தாந் திருமுறையில் திருமூலர் பாடியருளிய திருமந்திரம் என்ற தனிநூல் காணப்படுகின்றது. இங்கே 3000 பாடல்கள் காணப்படுகின்றன. இதைத் தமிழ் மூவாயிரம் என்றும் அழைப்பர்
இலங்கையைச் 16 சிவபூமி " என்று முதன்முதலில் பாடி யவர் இவரே. வடநாட்டுச் சுந்தரநாத முனிவர் தமிழ் நாட்டுத் திருமூலராகி,
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே '
எனத் தமிழில் ஒப்பற்ற சாத்திர நூலாகிய திருமந்திரத்தைப் பாடியருளினார் இந்நூல் சாத்திரநூல் மட் டு ம ன் றி சிறந்த இலக்கியமாகவும், முத்திக்கும் வழிகாட்டும் ஞானக் களஞ்சியமாக வும் வினங்குகின்றது.
திருமந்திர மாலை, சுந்தரனாகமம் முதலிய பெயர்களும் இதற்குண்டு, திருமந்திரம் 9 தந்திரங்களாக (ஆகமமுறைப்படி) பிரிக்கப்பட்டுள்ளது, சிவாகமங்கள் 28ல் ' காரண ' ஆகமம் முதல் * மகுட " ஆகமம் வரையுள்ள 9 ஆகமங்களின் சாரத் தைத் திருமந்திரத்தில் காணலாம்.
ஒரு ஞானவான் " நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற எண்ணத்தோடு, தொண்டு புரிதல் வேண் டும் என்பர் திருமூலர். ஆகமங்களின் உட்பொருளையும் சிவ சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும், யோகத்தின் உண்மைத் தன்மையையும் விரிவாகக் கூறும் இந்நூல் ' தனித் தமிழ் ஆகமம் ' என்று பெயர்பெறுகிறது.
பதினோராந் திருமுறை
இத்திருமுறையில் மொத்தம் 40 பிரபந்தங்கள் இடம்பெற் றுள்ளன. பாடியவர்கள் தொகை 12. பதினோராந் திருமுறை அற்புதமான ஞானக் களஞ்சியம் என்று அறிஞர்கள் பாராட்டு கிறார்கள்,
சிவபெருமான் பாடியகுளிய ஒரு பாடலும் இத்தொகுப் பில் இடம்பெற்றுள்ளது. இதன் சிறப்புக்கு ஒரு காரணமாகும்.

Page 15
-6-
மதுரைத் திருவாலவாய் என்னுந் திருக்கோவிலில் எழுந்தருளி யுள்ள சிவபெருமானின் திருப்பெயர் திருவாலவாயுடையார் என் பது. தனது ஆலயத்தில் இசைப்பணி புரிந்த பாணபத்திரர் என்னும் அடியாருக்கு பொன்னளிக்குமாறு சேரநாட்டையாண்ட சேரமான்பெருமாள் நாயனாருக்கு எழுதிய சீட்டுக் கவியாகிய திருப்பாடல் திருமுகப் பாசுரம் என வழங்கி; இத்திருமுறையில் முதற்பாடலாக வந்துள்ளது.
தி ரு மு க ப் பா சு ர ம்.
திருச்சிற்றம்பலம்
மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிற அன்னம் பயில் மொழி ஆல வஈயின் மன்னிய சிவன் யான் ' மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ் ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பாண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன் போ லென் பால் அன்பன் தன் பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வர விடுப் பதுவே.
திருச்சிற்றம்பலம்
இப்பதினோராந் திருமுறையில் சிவபெருமானோடு விநாய கர், முருகன் முதலான தெய்வங்களையும், சமயாசாரியார்களை யும், தொண்டர்களையும், நாயன்மார்களையும் புகழ்ந்து பாடிய பாடல்கள் காணப்படுகின்றன.
அந்தாதி, இரட்டை மணிமாலை மும்மணிக் கோவை, உலா, ஆற்றுப்படை, நான் மணி மாலை, கலம்பகம் போன்ற பிரபந்த வகைகளில் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்ட தொகுப்பாகவும் இத்திருமுறை அமைத்துள்ளது. பலவாய பிர பந்தங்களைக் கொண்டு அமைந்ததால் இத் திருமுறையைப் " பிரபந்த மாலை ' என்றும் வழங்குவர்.

- 17
பதினோராந் திருமுறை பற்றிய விபரம் வருமாறு:
ஆசிரியர் பிரபந்தம் பாடல் தொகை 1, திருவாலவாயுடையார் திருமுகப்பாசுரம் 2. காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் 1
மூத்ததிருப்பதிகம் 11 1 திருஇரட்டைமணிமாலை 20 - - - அற்புதத் திருவந்தாதி 101 3. ஐயடிகள்
காடவர் கோன் சேத்திரத் திருவெண்பா 24 4. சேரமான் பெருமாள்
நாயனார் பொன்வண்ணத் தந்தாதி 100
திருவாரூர் மும்மணிக்கோவை 30 - - - திருக்கை லாய ஞான உலா 199 அடிகள் 5. நக்கீர தேவர் கைலை பாதி காளத்திபாதி 100 திருஈங்கோய்மலை எழுபது 70 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 5 திருஎழுகூற்றிருக்கை 59 அடிகள் பெருந்தேவபாணி 71 அடிகள் கோபப் பிரசாதம் 100 அடிகள் கார் எட்டு 8 போற்றித்திருக்கலிவெண்பா 90 அடிகள் திருமுருகாற்றுப்படை 317 9 Liq. 55 är திருக்கண்ணப்பதேவர்
திருமறம் 158 அடிகள் ,ே கல்லாடதேவர் திருக்கணணப்பதேவர்
திரு திறம் 38 அடிகள் 7. கபிலதேவர் மூத்த நாயனார்
திருவிரட்டைமணிமாலை 塞0 சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை 87 ݂ ݂ ݂ சிவபெருமான் திருவந்தாதி 100 - 8. பரணதேவர் சிவபெருமான் திருவந்தாதி 301 9. இளம்பெருமானடிகள் சிவபெருமான்
திருமும் மணிக்கோவை 30 10. அதிராவடிகள் மூத்த பிள்னை யார்
திருமும் மணிக்கே வை

Page 16
-- 18 .س-
11. பட்டினத்தடிகள் கோவில் நான்மணிமாலை 40 திருக்கழுமலமும்மணிக்கோவை12
திருவிடைமருதூர் மும் மணிக்கோவை 8) திருவேகம்பமுடையார்
திருவந்தாதி 00 திருவொற்றியூர்
10 12. தம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர்
திருவிரட்டைமணிமாலை 5 கோயிற்றிருப்பண்ணியார்
விருத்தம் 20
திருத்தொண்டரீதிருவத்தாதி 70
திருவந்தாதி E0
9 is . திருச்சண்பை விருத்தம் 11
திருமும்மணிக்கோவை 30
~ «6 o . திருவுலாமாலை 147 அடிகள்
திருக்கலம்பகம் 釜9 திருத்தொகை 36 திருநாவுக்கர சுதேவர்
திருவேக ஈதச மாலை 置翼
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் வேறு, நக்கீரதேவர் வேறென்பர் அறிஞர் இருப்பினும் நக்கீர தேவர் பாடியதாகவே 10 பிரபந்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இத்திருறையில் காரைக்காலம்மையார் என்னும் பெண் அடிகாரின் பாடல்கள் அமைந்திருப்பதும் சிறப்பாகப் போற்றப் படக்கூடியது. காரைக்காலம்மையார் வகுத்து வைத்த பதிகம். பாடும் மரபும் மற்றும் புதுமைகளும் பிற்கால அடியார்களின் பக்திப் பாடல்களுக்கு அத்திவாரமிட்டன என்று பெருமையோடு குறிப்பிடலாம்,
சங்க காலத்து தக்கீரரின் திருமுருகாற்றுப்படை முதல் பதினொரு திருமுறைகளையும் தொகுத் நம்பியாண்டார் நம்பி யின் பாடல்கள் வரை, சுமார் ஆயிரம் ஆண்டுகால அடியார் களின் பக்தி வெளிப்பாடுகளை இத்தொகுப்பிலே தரிசிக்கலாம் பதினோராந் திருமுறை இயற்றமிழ் நூல் என்று போற்றப்பட் டாலும், இாரைக் காலம் லிமியாரின் பிரபந்தங்கள் இரண்டு நட்ட

- 9.
ாேடை என்னும் பண்ணிலும், இந்தளம் என்னும் பண்ணிலும் வந்துள்ளன.
பன்னிரண்டாந் திருமுறை
பன்னிரண்டாந் திருமுறையில் இடம்பெற்ற ஒரே நூல் பெரியபுராணம் ஆகும். இதனைப் பாடியவர் சேக்கிழார் சுவாமி ள் ஆவார் இவர் அநபாய சோழனின் முதலமைச்சராக உத்தம சோழ பல்லவன் என்ற பட்டப் பெயரோடு கடமை புரிந்தி வர். அருண்மொழித் தேவர் என்ற் இயற்பெயரைவிட சேக்கிழா" என்ற குடிப்பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது.
சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையையும், அதன் விரிவாக நம்பியாண்டார் தம்பி பாடிய திருத்தொண்டர் திரு வந்தாதியையும் ஆதாரங்க் (rாகக் கொண்டு, தனது ஆராய்ச்சி அறிவின்மூலமும், கர்ண பரம்பரைக் கதைகள் (செவிவழிச் செய்தி கள்) மூலமும் தகவல்களைப் பெற்று, ஆழ்ந்த தியானத்தின் மூலம் சிலவற்றைக் கண்டு தெளிவடைந்து தனது அற்புதமான சிற்பனை ஆற்றல் புலப்பட கவித்துவத்தின் மகத்துவம் விளங்க அடியார் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெய சில் அற்புதமாகப் பக் தி ச் சு  ைவ நனிசொட்டச் சொட்டப் 4 trig. 6orn si. -
" தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே ' என்ற ஒளவையார் கூற்றுப்படி தொண்டர் பெருமை கூறும் இந்நூல் ' பெரிய புராணம் " எ ன் னும் பெயரிலேயே அழைக்கப்படு கின்றது. சிவபெருமான் ' உலகெலாம் ' என்று அடியெடுத்துக் கொடுக்க, சேக்கிழார் சுவாமிகள் இந்நூலைப் பாடினார் என்பது வரலாறு. இது ஒரு வரலாற்றுக் காப்பியமாகவும், சைவசித்தாந்தி சாகரமாகவும் தமிழில் பாடப்பட்ட முதற் புராண நூலாகவும் பெருமை பெற்றது.
சாதி, குலம். பொருள், அறிவு, பதவி, வயது முதலிய ஏற்றத் தாழ்வுகள் எதுவுமின்றி, ஆண்டவன் மேல் வைத்த அன் பொன்றையே அளவுகோலாகக் கொ ண் டு அடியார்களைப் போற்றுகின்றது இந்நூல், சைவசமயத்தின் ஒரு கண்ணாகப் போற்றப்படுகின்ற இந்நூலை 1 அன்பு நூல் ' என்பர் அறிஞர்
63 தனியடியார்களையும், 9 தொகையடியார்களையும் பற் றிய 4253 செய்யுட்களைக் கொண்டமைந்த இந்நூலில் சில

Page 17
ܫܒ݂ 20 -
இடைச் செருகற் பாடல்களும் இனங் காணப்பட்டுள்ளதால் இத் தொகை சற்றே மாறுபடலாம். தமிழ்ப் புராணங்களுக்கு காலத் தால் மட்டுமன்றிக் கருத்தாலும் முன்னோடியாக விளங்குவது பெரியபுராணமாகும்.
எடுத்தாண்ட நூல்கள் : 1. பன்னிரு திருமுறைப் பெருந் திரட்டு, திரு. வ. இராமநாதபிள்ளை, 2. இந்து நாகரீகம் திரு க, சி. குலரத்தினம், 3. திருவாதவூரடிகள் புராண்ம், கடவுள் மாமுனிவர்.
இரு காண்டங்களாக அமைந்த இப்புராணம் திருமலைச் சருக்கம் முதல் வெள்ளானைச் சகுக்கம் ஈறாக 13 சருக்கங் களைக் கொண்ட து.
நம்பியாண்டார் நம்பிகளின் பின் இப்புராணம் பாடப் பட்ட தால் இப்புராணத்தைத் தில்லைவாழ் அந்தணர்களின் விருப்பத்தோடு அநபாயசோழனும் அவனது மந்திரி பிரதானிகளும், அறிஞர் களும், புலவர்களும், பன்னிரண்டாந் திருமுறைகளாகச் சேர்த் துப் பெருமைப்படுத்தின்ர்.
இப்பெரிய புராணம் சிறந்த இலக்கியக் காப்பியமாகவும் வரலாற்றுச் சான்றுகளைத் தரும் நூலாகவும், தமிழ்க்கலை களின் சிறப்பைக் கூறும் நூலாகவும், பக்திச்சுவை பயக்கும் நூலாகவும், சைவசமயக் கருத்துக்களைத் தத்துவங்களாகவும், கதைகளாகவும் கூறும் சிறந்த நூலாகவும் திகழ்கின்றது.
பெரிய புராணத்தின் பெருமையும், பெரிது. இதன் பேரு மையை விரித்துரைத்தல் அரும்பெரும் காரியமாகும்.
முன்னிரு முதல்வோராலும் அறியொணு வடிவாய்த் தோன்றிப் பின்னிரு முதல்வோர்தங்கள் பெரும்பதம் அளித்தோன் மேன்மைப் பன்னிரு திருமுறைப்பாப் படித்திடும் அடியார் தம்மைத் தன்னிரு திருத்தாள்காட்டித் தன்னுடன் இணிைப்பான் கண்டீர்.
முற் று ம்

Ok,
GFG), IL DULIL b
பஞ்ச புராணப் பாடல்கள்
திருச்சிற்றம்பலம் தேவாரம்
தேவார்ந்த தேவனைத் தேவரெல்லாந்
திருவடிமே லலரிட்டுத் தேடி நின்று நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி
நான்முகனு மிந்திரனுமாலும் போற்றக் காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின் பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
திருவாசகம்
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன் உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேனான் உடையானே அடியேனை வருகவென் றஞ்சேலென் றருளியாவா றார்பெறுவார் அச்சோவே
திருவிசைப்பா
அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே?
அன்போடு தன்னை அஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத் (து) உள்ளம்அள் ரூறும் தொண்டருக் (கு) எண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா எளிகையும்
பவளா யவர்பனை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே

Page 18
திருப்பல்லாண்டு
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்
போதியாய் நிற்குந் தில்லைப் பொதுநடம்போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்
 


Page 19
வாழ்க அந்தணர் வீழ்க தண்புனல்
ஆழ்க தீயதெல் 6 சூழ்க வையக மு
 

வானவ ரானினம் வேந்தனு மோங்குக லாமரன் நாமமே ந்துயர் தீர்க்கவே.