கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதியாரும் பாஞ்சாலி சபதமும்

Page 1


Page 2


Page 3

vy)%სun(ტtà Unஞ்சAலிசUதமுe

Page 4
அகளங்கனின் நால் வடிவங்கள்
1) 2) 3) 4)
5) 6) 7)
8) 9) 10) 11) 12) 13)
14) 15) 16)
17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31) 32)
y
“செல்” “வா” என்று ஆணையிடாய் (கவிதை) "சேரர் வழியில் வீரர் காவியம்” (குறுங்காவியம்) “சமவெளி மலைகள்" (அகளங்கன், சு. முரளிதரன் கவிதைகள்) "வாலி” (ஆய்வுநூல் - இரு பதிப்புக்கள்) (அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு 1987)
"இலக்கியத் தேறல்" (கட்டுரைகள்)
"நளவெண்பா' (கதை) "அன்றில் பறவைகள்” (நாடகங்கள்) (தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992)
“முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்” (வரலாறு) "இலக்கியச் சிமிழ்’ (கட்டுரைகள் - இருபதிப்புகள்) "தென்றலும் தெம்மாங்கும்’ (கவிதைகள்) "பன்னிரு திருமுறை அறிமுகம்” (சமயம்) “மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” (ஆய்வு) "இலக்கிய நாடகங்கள்” (நாடகங்கள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு - 1994, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு 1994) "ஆத்திசூடி" (விளக்கவுரை)
"கொன்றை வேந்தன்” (விளக்கவுரை) "அகளங்கன் கவிதைகள்' (கவிதைகள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 1996) வாக்குண்டாம் - விளக்கவுரை (மூதுரை)
“சிவபுராணம்” (பொருளுரை) "செந்தமிழும் நாப்பழக்கம்” (பேச்சுக்கள்) "நாமறிந்த நாவலர்' (சிறுகுறிப்புகள்) “நல்வழி” (பொழிப்புரை - விளக்கவுரை) "இசைப்பாமாலை" (இசைப்பாடல்கள்) “கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு” "இலக்கியச் சரம் (கட்டுரைகள்) “வெற்றி வேற்கை" - உரை (நறுந்தொகை) "கூவாத குயில்கள்" (நாடகம்)
"திருவெம்பாவை' (உரை - சமயம்) “பாரதப் போரில் மீறல்கள்” (கட்டுரை) “சுட்டிக் குருவிகள்' (மழலைப் பாடல்கள்) "சின்னச் சிட்டுக்கள்' (சிறுவர் பாடல்கள்) "நறுந்தமிழ்” (கட்டுரைகள்) பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் (கட்டுரை)
2

UyதிJAரும் υΛώθηού ታv9Uዖúm
இகளங்கள்
661OfSd) - 40
2 OldD55O)2CI5566)Dub S. MVRITERS’ AM 07VWA TWON CENTREF 45 இல. 64 கதிரகாமர் வீதி, அமிர்தகழி. * DLDolu, రియెర్రరి,
T. P. : 065-2226658, 0.77-6041503

Page 5
UUதியாரும் பாஞ்சாலிசபதமும் கட்டுரைகள்
எழுதியவர் :
அகளங்கன்
Luğ$ůILỊrfd6ODLO: 3q5Ln36. L4 35jLmy Teg IT B.A. (Hon) ബൈബiu : எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (பிரியா பிரசுரம் -40)
முதற் பதிப்பு :
செப்டம்பர் 2007 கணணி வடிவமைப்பு : வஜலீலா காதர் முகையதின் அச்சுப்பதிப்பு : ஏ.ஜே. விலை: ரூபா : 200/-
BARATHIYUMPANCHALISAPATHAMUM
Essays
Author :
Ahalangan
Copy Rights : Mrs. P. Tharmarajah B.A. (Hon.)
Publication :
Writers Motivation Centre (Priya Prasuram - 40)
First Edition: September - 2007 Type Setting : Jeleela Cader Mohideen
Printers : A.J.
Price : Rs. 200/-
இலங்கை தேசிய நூலகம் - வெளியீட்டில் உள்ள பட்டியற் தரவு
அகளங்கன்
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும்/ அகளங்கன், -
பதிப்பாசிரியர் ஓ.கே.குணநாதன், - மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 2007, - ப. 114; ச.மீ.18 அகளங்கன் நா. தர்மராஜா.
ISBN: 978-955-8715 - 40 - 6 விலை: ரூ. 200.00
i. 894.8113 gigas 21 i. தலைப்பு i. குணநாதன், ஓ.கே. பதிப். 1. கட்டுரைகள்
இந்நூல் கலாசார அலுவல்கள் அமைச்சினதும் மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரணையில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் கலாசார அலுவல்கள் அமைச்சின் அல்லது மத்திய கலாசார நிதியத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்காது
என்பதைக் கவனத்திற்கொள்க.
ISBN : 978 - 955 - 8715 - 40 - 6
4.

வாழ்த்துப்பா
சிவநெறிப் புரவலர் சி. ஏ. இராமஸ்வாமி
உண்டவர் கண்டறி தேனே
இனித்தமிழ் சாகும் என்றவன் எங்கே
அழையுங்கள் இவ்விடத்தே. கணித்தமிழ் தன்னைக் காலமும் படைக்கும் கவிஞரும் இங்குஉள்ளாரே. தனித்தமிழ் உயரத் தாரணி தன்னில்
தமிழ்மணி இங்குதித்தாரே. பனித்தமிழ் பருகத் தந்தவர் இவராம்
பலகலை வல்லுனராமே.
இயலொடு இசைத்தமிழ் இயற்றிட வல்ல
இயல்பின ராம்இவரே. வயலொடு வனத்தின் வகைவகை மரங்கள்
வரிசையை அறிந்தவராம். செயலொடு சொல்லும் சேர்ந்தவ ரான
செஞ்சொற் கொண்டலுமாம். புயலொடு வெள்ளம் போலவும் துன்பம்
பொதுவென உணர்ந்தவராம்
(வேறு) உண்டவர் கண்டறி தேனே என்றார்
அன்றொரு நாளில் அருணகிரி வண்டது தேனை உண்டிட வருவது வாச மலரது வரவழைத்தோ கண்டது கேட்டது களித்தவன் நானே
கற்பனை அல்ல உண்மையிதாம். விண்டது உள்ளம் விற்பனை அல்ல
விபரம் அறிந்தே விளம்புகின்றேன்.
5

Page 6
அணிந்துரை
திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை
இலக்கியம், மக்களுக்கு உயர் இலட்சியப் பற்றையும், ஒழுக்கத்தையும் ஊட்டி சிந்தனையில் தெளிவை ஏற்படுத்தி, பண்பும் பயனும் பெறத் தூண்டுகோலாக விளங்குவது என இலக்கிய அறிஞர்கள் கூறுவர். தமிழறிஞர் அகளங்கனது பணியும் அத்தகையதே.
கவிஞர் தமிழ்மணி அகளங்கன் (நா. தர்மராஜா) அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். பண்டைத் தமிழ் இலக்கியக் கடலில் மூழ்கி, அரிய முத்துக்களை எடுத்து, தக்கவாறு கையாண்டு தமிழ் நூல்களாக ஆக்கித்தரும் அரிய பணியில், அவர் கடந்த பல வருடங்களாகவே சிறப்பாக மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்.
குறுங்காவியம், ஆய்வுநூல்கள், இலக்கியக் கட்டுரைகள், விளக்க உரைகள், நாடகங்கள், மழலைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கி தழிழ் உலகிற்கு அளித்திருக்கிறார். அவற்றுள் அவரது “அன்றில் பறவைகள்” (நாடகங்கள்) தேசிய சாகித்ய மண்டல நூற் பரிசினைப் பெற்றுள்ளது என்பதும், "அகளங்கன் கவிதைகள்', 'இலக்கிய நாடகங்கள்’ ஆகிய நூல்கள் வடக்குக்கிழக்கு மாகாண இலக்கிய நூற்பரிசினைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிரவும், சிறந்த இலக்கிய, சமய பேச்சாளராகவும் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.
6

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2شيوخصصعيد
காவிய மாமணி, கவிமாமணி, தமிழ்மணி, திருநெறிய தமிழ்வேந்தர், பல்கலை எழில், புராண படன வித்தகர், சிவனருட் செல்வர், வாகீசகலா நிதி, உட்பட அவர் பெற்ற பட்டங்கள், அன்னாரது புலமைக்குக் கிடைத்த கெளரவங்களாகும். அவர் தொடர்ந்தும் தமது இலக்கிய எழுத்துப் பணியில் ஆர்வமுடன் உழைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
கவிஞர் அகளங்கனின் பண்டைத் தமிழ் இலக்கிய கட்டுரை ஆக்கங்கள் அவ்வப்போது வீரகேசரி, கலைக் கேசரி அனுபந்தத்தில் பிரசுரமாகி வந்துள்ளமை தெரிந்ததே. பொதுவாக, பத்திரிகையில் வெளியாகும் பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் எனின், அவை தழிழ்ப்பண்டிதர்களுக்கோ அல்லது தமிழ் ஆர்வமுள்ள முதிர்ந்த பராயத்தினருக்கோ உரியது என்றவாறான ஒரு கருத்தில், பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெறாமல் போவதுமுண்டு.
ஆயின், தமிழ் மணி அகளங்கனின் இலக்கியக் கட்டுரைகள் வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் படித்துப் பயன் பெறும் வகையில் அமைவது குறிப்பிடத்தக்கது.
மிக எளிமையான முறையில், அதே சமயம் கதை போன்று சுவை குன்றாது பண்டைய இலக்கிய அம்சங்களை விபரித்துச் செல்லும் பாங்கு, நயக்கத்தக்கது. இவை அவரது ஆக்கங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தருகின்றன என்று கூறலாம். அத்துடன் அவரது தற்கால வாழ்வியல் அம்சங்களுடனான ஒப்பீட்டு நோக்கு மேலும் ரசிக்கவும், சிந்திக்கவும் தக்கது.
அவரது 'மகாகவி பாரதியும் பாஞ்சாலி சபதமும் என்னும் ஆய்வுக் கட்டுரை, "கலைக் கேசரி'யில் தொடராக வெளிவந்து, பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டது. அந்த வகையில்தான், தமிழறிஞரான அவர், எம்மிடம் அணிந்துரை வேண்டியுள்ளார் போலும். அவருக்கு எமது நன்றி.
7

Page 7
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் Daھena:Jaتھa
மகாகவி பாரதியையும், பாஞ்சாலி சபதத்தையும், நாம் ஏற்கனவே ஓரளவு படித்துத் தெரிந்து கொண்டோமாயினும், அகளங்கன் அவர்கள், அதனை எடுத்து விபரிக்கும் விதம் மேலும் நயக்கத் தக்கதாக உள்ளது.
பாரதியின் பாஞ்சாலிசபத நோக்குடன், வில்லிபாரதம், வியாசபாரதம், ஆகியவற்றை ஆராய்ந்து ஒப்பிட்டுக் காட்டும் ஆசிரியர், அரச சபைக்கு இழுத்து வரப்பட்டு அவமானப்படுத் தப்பட்ட பாஞ்சாலியின் நிலையை, அடிமைப்பட்ட பாரத மாதாவின் நிலையாகக் காட்டி, ஆவேசம் கொள்ளும் பாரதியின் உணர்வை விபரிக்கும் பாங்கும் படிப்போரைக் கவரும். தவிரவும், அவர் தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்களையும் சிறப்புக்களையும், ஆங்காங்கு தகுந்தாற் போல் எடுத்துக் காட்டுவதும் தீயன களையப்பட்டு, நல்லவை ஏற்கப்பட வேண்டும் என வழிகாட்டுவதும், அவரது எழுத்தில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், சமூகத்தின் சரிபாதியினரான பெண்பாலார் கெளரவமாகவும், தன் மானத்துடனும் வாழ உரிமை கொண்டவர்கள் என்ற பாரதியின் கருத்தை வழிமொழிபவராக, வலியுறுத்தும் பாங்கு வரவேற்புக்குரியது.
அவரது இந்த ஆய்வு, நூலுருப் பெறுவது வரவேற்புக்குரியது. இந்நூல் தமிழ் இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயன்தரத்தக்கது.
எமது இளைய சமுதாயம் இத்தகைய நூல்களைப் படித்துப் பயன் பெற வேண்டும்.
தமிழறிஞர் அகளங்கன் அவர்களது தழிழ்ப்பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவாராக.

முன்னுரை
தமிழறிஞர் அகளங்கன்
20ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனாகப் போற்றப்படுபவன் பாரதி. தமிழிலக்கியத்தில் பாரம்பரிய வேர்களைப் பாதுகாத்து புது விருட்சத்தை வளர்த்தவனாகப் பாரதியைக் குறிப்பிடலாம்.
பாரதியின் படைப்புக்களைப் பல்வேறு கோணங்களில் பலரும் ஆராய்ந்துள்ளனர். பாரதியைப் பற்றிய பல கட்டுரைகளை நான் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளேன்.
"மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்' எனும் ஆய்வு நூலையும் எழுதியிருக்கிறேன். பாரதியின் சமுதாயக் கோட்பாடுகள் யாவும் எனக்கு உடன்பாடானவை.
அவரின் பெண் விடுதலைக் கருத்துக்களிலிருந்த முரண்பாடுகள் மட்டும் எனக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
பாரதியாரின் பாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு, “பாரதியாரும் பாவையரும்” எனும் தலைப்பில் பாரதியாரின் பெண் விடுதலை சம்பந்தமான முரண்பாடுகளை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வு செய்து கட்டுரையாக்கி இன்றுவரை வெளியிடாமல் கைவசம் வைத்துள்ளேன்.
9

Page 8
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Olla ባለx}2e&
“மகாகவி பாரதியாரின் வாழ்வியல் சிந்தனைகள்” என்ற எனது கட்டுரை ஒன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 1994ம் ஆண்டுக்கான, அமரர், பேராசிரியர் க. கைலாசபதி நினைவு பாரதி பற்றிய கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாரதியின் கவிதைகளிலுள்ள எளிமையும் , கருத்துக்களிலுள்ள புதுமையும், கவிதை நயமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
மகாபாரதம் எனக்குப் பிடித்தமான ஒரு இதிகாசம். நான்கு தடவைகள், மகாபாரதத்தைத் தொடர் சொற்பொழிவுகளாக (11 நாட்கள்) நான்கு கோவில்களில் ஆற்றியிருக்கிறேன்.
மகாபாரதத்தில் எனது தந்தையாருக்கு இருந்த ஈடுபாட்டாலும் அவர் எனக்கு ஊட்டிய இரசனையினாலும் எனக்கு
அதிக ஈடுபாடு ஏற்பட்டது.
வியாசர் 'பாரதம்', வில்லிபுத்துாராழ்வார் 'பாரதம்' பெருந்தேவனார் 'பாரத வெண்பா, நல்லாப்பிள்ளை "பாரதம் மற்றும் கே. பி. இரட்னாயக்கா சன்ஸ் வெளியிட்ட மகாபாரத வசனம், இராஜாஜியின் வியாசர் விருந்து', வெங்கட் மொழிபெயர்த்த, சோப்ரா தயாரித்த மகாபாரத தொலைக்காட்சி நாடகப் பிரதி, 'சோ'வின் "மகாபாரதம் பேசுகிறது மற்றும் மகாபாரதம் பற்றிய பல கட்டுரைகளையும் படித்து இன்புற்றிருக்கிறேன்.
மகாபாரதம் ஒரு கருத்துச் சுரங்கம். வாழ்வியல் அனுபவ முத்துக்களை பெருவாரியாகக் கொண்ட பெரும் சமுத்திரம். “பாரதம் கற்றவனோடு பகை கொள்ளல் ஆகாது” என்பது பழமொழி.
10

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ○ܟܸܠܹܐ ገላ..jää
எனது ஏராளமான மேடைப் பேச்சுக்களில் பாரதக் கருத்துக்களை, கதைகளைத், தத்துவங்களை, வாழ்வியல் நெறிகளை எடுத்துப் பேசியிருக்கிறேன்.
பல கட்டுரைகளை பாரதம் சார்ந்து எழுதியிருக்கிறேன். வில்லி பாரதத்தை அடிப்படையாகக் கொண்டு "பாரதத்தில் கேலிச்சுவை” என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தும், இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளேன்.
“பாரதப் போரில் மீறல்கள்” என்ற நூலை சமகால ஈழப்
போரோடும், யுத்த நிறுத்த ஒப்பந்தங்களோடும் இணைத்து நோக்கும் வண்ணம் எழுதி நூலாக்கியுள்ளேன்.
தமிழீழ விடுதலைப் போராளிக் குழுக்களுக்கும், பூரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையே முதலாவது யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ‘ஈழமுரசு’ பத்திரிகையின், ஞாயிறு வாரமலர் பகுதியில், 24 - 11 - 1985 முதல் 05-01 - 1986 வரை, ஏழு கிழமைகள் தொடராக வெளிவந்து, ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த "மகாபாரதப் போரில் யுத்த முறை அத்து மீறல்களும், யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களும்” என்ற கட்டுரைத் தொடரே “பாரதப் போரில் மீறல்கள்” என்ற பெயரில் நூலாகியது.
பாரதியின் முப்பெரும் பாடல்களினுள்ளே மிகவும் சிறப்புப் பெற்றது. என்னைப் பொறுத்த வரை பாஞ்சாலி சபதமே. ஏனெனில், பாரதியின் அத்தனை சமூக சீர்திருத்தக் கருத்துக் களுக்கும், பாஞ்சாலி சபதம் கொள்கலனாக விளங்குவதைப் பாஞ்சாலி சபதத்தில் காணலாம்.
11

Page 9
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيوخصصعيد
பாரதியின் மேலும், பாரதத்தின் மேலும் எனக்கிருந்த ஈடுபாட்டின் காரணத்தால், பாஞ்சாலி சபதத்தின் ஒரு பகுதியை அரை மணிநேர நாட்டிய நாடகமாக, இவ்வாண்டுக்கான யப்பானிய புங்கா விருது பெற்ற திருமதி சூரியயாழினி வீரசிங்கம் ஆசிரியை அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிக் கொடுத்தேன். அதை அவர் தமிழ்த்தினப் போட்டிக்காகத் தயார்ப்படுத்தியதோடு மட்டுமன்றி பல இடங்களிலும் மேடையேற்றியுள்ளார்.
பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை முழுமையாக சிறப்பாக ஆராய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாக இருந்த போதிலும் இவ்வாண்டு தான் அதற்கான வாய்ப்புக் கிட்டியது.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் இவ்வாண்டு தனது கட்டுரைப் போட்டிக்காக 'பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் என்ற தலைப்பை வழங்கியிருந்தது. அவர்களது போட்டி விதிகளுக்கேற்ற வகையில் சுருக்கமாக, உரிய நேரத்திற்குள், ஆய்வுக் கட்டுரையை எழுதக் கூடிய கால அவகாசம் கிட்ட வில்லை.
அதனால் போட்டி நோக்கத்தைத் தவிர்த்து என் மன விருப்பின்படி தெளிவாக ஆராய்ந்து, இக்கட்டுரையினை எழுதி முடித்தேன்.
பாரதியின் பாடல்கள் மிக எளிமையானவை எனும் காரணத்தினால், அவற்றை நான் அதிகம் விளக்க வில்லை. அதே வேளையில் வில்லிபாரதம் கடுமையான புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டதால், அதன் பாடல்களை அதிகம் கையாளவில்லை.
'சோ' அவர்கள் எழுதிய "மகாபாரதம் பேசுகிறது” என்ற அற்புதமான நூலிலிருந்து வியாசபாரத மொழிபெயர்ப்பை
12

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2ܗܿܧܐܝܶܣܣܘܝܟܐ
அப்படியே எடுத்து, எனது ஆய்வுக்கு தேவையான அளவுக்குப் பயன்படுத்தியுள்ளேன்.
2005, 2006ம் ஆண்டுக் காலப்பகுதியில், இலங்கையின் பிரபல தேசிய நாளேடான வீரகேசரியின், சனிக்கிழமை மலராக வெளிவந்து கொண்டிருக்கும் "கலைக்கேசரி’ பகுதியில் எனது பல இலக்கியக் கட்டுரைகள் தொடராகவும் தனித்தனியாகவும் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், அப்பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் மூத்த பெண் எழுத்தாளரும், பிரபலம் மிக்க மூத்த பெண் ஊடகவியலாளரும் ஆகிய திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு இக்கட்டுரைத் தொகுப்பினை அவரிடமிருந்து அணிந்துரை பெறுவதற்காகவும், அவர் விரும்பினால் இதனைத் தொடராக வெளியிடுவதற்காகவும் அனுப்பியிருந்தேன்.
அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள் என்னைவிட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர். பெண்ணியல் இலக்கியத்தோடு அதிகம் தொடர்புடையவர். கவிஞரும் கூட.
இந்து கலாசார அமைச்சு, நீர்கொழும்பில், நடாத்திய ஒரு பொங்கல் விழாக் கவியரங்கில் எனது தலைமையில் கவியரங்கில் பங்குபற்றி பெரும் பாராட்டுப் பெற்றவர். அன்றுதான் எனக்கு அவரோடு முதல் அறிமுகம் ஏற்பட்டது.
எனது இக் கட்டுரைத் தொகுப்பைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து, இதைத் தொடராக வீரகேசரி, சனிக்கிழமை கலைக்கேசரிப் பகுதியில் வெளியிடுவதாகவும் முடிந்த பின்பு அணிந்துரை எழுதித் தருவதாகவும் கூறி இதனை வெளியிட்டார்.
இது பதினாறு வாரங்கள் தொடராக வெளிவந்து, பலருடைய பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
13

Page 10
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9lچھna:Jaتھa
இவ்வாய்வு நூலுக்குச் சிறந்ததோர் அணிந்துரையை வழங்கிய அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எனது கட்டுரைகளை வெளியிட்டு வரும் வீரகேசரி நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
என்னை இலக்கியக் கட்டுரை எழுதத் தூண்டி, ஈடுபடுத்தி; தனது சிரித்திரன் சஞ்சிகை இதழ்களில் அவற்றை வெளியிட்டு இலக்கிய உலகில் நான் கால்பதித்து வளரக் காரணமாக இருந்த அமரர் சி. சிவஞானசுந்தரம் (சுந்தர்) அவர்களுக்கு
6T60T 660085855.856T.
எனது ஆக்கங்களை நூலுருவாக்கி வெளியிடுவதற்கு எனக்கு பெரும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் வவுனியா இந்து மாமன்றச் செயலாளரும், சிவநெறிப் புரவலர் சி. ஏ. இராமஸ்வாமி அறக்கட்டளை நிறுவன ஸ்தாபகருமாகிய திரு. சி. ஏ. இராமஸ்வாமி ஐயா அவர்களுக்கும், வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்துக்கும், குறிப்பாக அதன் தலைவர் மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராசா அவர்களுக்கும் எனது நன்றிகள் உரியன.
இலக்கிய ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் எனக்குப் பல்வேறு வகையான உதவிகளைச் செய்து வருபவரும், எனது பல நூல்களை வெளியிட்டவரும், எனது உடன்பிறவாச் சகோதரராகவும், உரிமைமிகு நண்பராகவும் விளங்குகின்ற ஒ. கே. குணநாதன் அவர்களுக்கும், நண்பர், செ. சண்முகநாதன்
அவர்களுக்கும்,
என் சிந்தனைகள் யாவும் எழுத்துருவம் பெற வேண்டும், அவை நூலுருவம் பெற வேண்டும் என்று எண்னை
14

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2an4Jaశ
உற்சாகப்படுத்தி என் நூலாக்க முயற்சிகள் யாவற்றுக்கும் முதன்மையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவரும் என் தம்பி க. குமாரகுலசிங்கம் அவர்களுக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
இந்நூலை அழகுற அச்சிட்டு வெளியிடும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்திற்கும் குறிப்பாக அதன் மேலாளர் நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
வழமைபோல் இவ்வாய்வையும் வாசித்து இரசித்து ஆலோசனை வழங்கிப் பிரதி எடுத்து உதவிய என் மனைவிக்கும் இதனை வாசித்து பயன்பெறப் போகின்ற உங்கள் யாவருக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
உங்கள் அன்பு - அகளங்கன் -
15

Page 11
பதிப்புரை ஓ.கே. குணநாதன், மேலாளர் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
எழுத வேண்டும், எழுதியதை நூலாக்க வேண்டும், அந்த நூலைச் சமூகத்திற்கு கொண்டு போகவேண்டும். அதனுடாகச் சமூகம் பயன்பெற வேண்டும்.
இந்த நான்கையும் ஒருங்கே கொண்டு எழுதுபவன்தான் எழுத்தாளன்.
ஆனால், எழுத்தாளர் எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் பலர் இதனைச் செய்வதில்லை.
பெரும்பாலானவர்கள் அப்படி எழுதவேண்டும், இப்படி எழுத வேண்டும் என்று பேசிக்கொள்வர். ஆனால், எழுதுவதோ கிடையாது.
இன்னும் சிலர் எழுதினாலும் அதனை நூலாக்கம் செய்வதில்லை. நூலாக்கம் செய்யாமல் பெட்டிக்குள்ளே போட்டுப் பூட்டிக் கொள்வதனால் சமூகத்திற்கு என்ன பயன்? எழுதிய படைப்புக்களை பெட்டிக்குளே போட்டு பூட்டி வைப்பதும் எழுதாமலே நெஞ்சுக்குழிக்குள்ளே போட்டு வைப்பதும் ஒன்றே. அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் நெஞ்சுக்குள்ளே எத்தனை ஆயிரம் கதைகளைச் சுமந்து கொண்டு திரிகின்றான்.
16
 

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2هولنصصعيدي
அப்படியானால் ஒவ்வொரு மனிதர்களையும் எழுத்தாளர்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.
சிலர் பணத்தைச் செலவு செய்து நூலாக்கம் செய்தாலும், அதனைச் சமூகத்திற்குச் சென்றடையச் செய்வதில்லை. நூலொன்று வெளிவர வேண்டும் என்பதற்காக ஒரு சில பிரதிகளை மட்டும் அச்சிடுபவர்களும் இதில் அடக்கம்.
இம்மூன்று நிலை கடந்து நூல்கள் சமூகத்தைச் சென்றடைந்தாலும் அதில் சிறிய சதவிகிதமே சமூகத்திற்கு பயன்பாடான படைப்பாக இருக்கிறது.
அப்படியானால் எத்தனை பேர் எழுத்தாளர்களாக
என்று துணிந்து கூறக்கூடிய ஒருவர் தமிழறிஞர் அகளங்கன் அவர்கள்.
இந்நூல் அவரின் 32வது நூலாக அமைகிறது.
ஏலவே, இவரின் கூவாத குயில்கள் (நாடகங்கள்), 'பாரதப் போரில் மீறல்கள் (கட்டுரை), 'சுட்டிக் குருவிகள் (மழலைப் பாடல்கள்), "சின்னச் சிட்டுக்கள் (சிறுவர் பாடல்கள்), நறுந்தமிழ் (கட்டுரைகள்) முதலிய 5 நூல்கள் இம்மையத்தினூடாக வெளிவந்தன.
'பாரதியாரும் பாஞ்சாலி சபதமும்' என்னும் நூல் இம் மையத்தினால் வெளியிடப்படும் அவரின் 6வது நூலாக வெளிவருகிறது, மகிழ்ச்சியளிக்கிறது.
இந்நூலை இம்மையத்தினூடாக வெளியிட அனுமதி தந்த மதிப்புமிக்க தமிழறிஞர் அகளங்கன் அவர்களுக்கு நன்றி.
17

Page 12
பாரதியின் கருத்துக்களையும் கவிதை நடையையும் பின்பற்றும் கவிஞர்களுக்கு இந்நூல்.
18

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன் எனப் போற்றப்படுபவன் பாரதி. மகாகவி எனவும் யுககவி எனவும் இன்றைய தமிழ்கூறு நல்லுலகம் பாரதியைப் புகழ்கின்றது.
பாரதியின் பாடு பொருள்கள் பல. பாரதி வகுத்த வழி தனக்கு மட்டுமான தனிவழியல்ல. தனக்குப் பின்னால் வரும் கவிஞர்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய பொது வழி எனலாம்.
பாரதியைப் பின்பற்றி பாரதிதாசன் பெரும் கவிஞனாக வளர்ச்சி பெற்றார். பாரதிதாசனைப் பின்பற்றி கவிஞர் சுரதா புகழ்பெற்றார். இவ்வகையில் ஒரு தொடர்ச்சியான சீடர் பரம்பரையே பாரதிக்கு உண்டு.
இன்றைய தமிழ்க் கவிதை உலகு, பாரதியைப் பின்பற்றியே கம்பீரமாக நடைபோடுகிறது என்கிறார்கள் தமிழறிஞர்கள்.
பாரதியின் பாடல்களுக்குள்ளே முப்பெரும் பாடல்கள் எனப் போற்றப்படுபவை கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில்ப்பாட்டு என்பவையாகும்.
இவற்றுள் கண்ணன் பாட்டு பக்திப் பாடலாக - ஆன்மீக வெளிப்பாடாகவும், குயில்ப்பாட்டு தத்துவப் பாடலாகவும் விளங்க,
19

Page 13
பாரதியாரும்பாஞ்சாலி சபதமும் 2وهولنصصعيد
பாஞ்சாலி சபதம் ஒரு காவியமாக, சமூக அவலங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்வதாக அமைந்துள்ளது.
எனவே பாரதியின் பாடல்களுக்குள்ளே பாஞ்சாலி சபதம் தனித்துவம் மிக்கது எனக்கூறுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
ஒரு புதிய காவியத்தைப் பாடி தனக்குப் பின்னால் வரும் புலவர்களுக்கு வழிகாட்டும் உணர்வோடு பாரதி பாஞ்சாலி சபதம் பாடியிருக்கிறான் என்று துணிந்து கூறலாம்.
பாஞ்சாலி சபதம் நூலைத் தனியாக வெளியிட்ட பாரதி, அதை யாருக்குக் காணிக்கையாக்கியிருக்கிறான் என்பதைப் பார்க்கும்போது அது தெளிவாகிறது.
"தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகின்ற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக் களுக்கும் இந்நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்".
எனச் சமர்ப்பணம் செய்யும் பாரதி, தனது முகவுரையில் ஒரு காவியம் எப்படிப்பாடப்பட வேண்டும் என்பதையும், தான் பாஞ்சாலி சபதத்தைப் பாடிய நோக்கத்தையும், பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்தல் வேண்டும்.
காரியம் மிகப் பெரிது. எனது திறமை சிறிது. ஆசையால்
இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று வழிகாட்டியாக'
20

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ക്ഷക്ഷ
காவிய இலக்கணங்களை நிறைவு செய்ய வேண்டுமென்ற கவலையற்றவனாக, புதியதொரு காவிய மரபைத் தோற்றுவிக்கும் எண்ணத்தோடு, பழைய இதிகாசத்திலிருந்து சம்பவமொன்றை, சமூக சமகாலப் பொருத்தப்பாடு கருதி எடுத்து, அற்புதமான காவியமாகப் பாடியிருக்கிறான் பாரதி.
பாரதியின் பாஞ்சாலி சபதம் வெறும் மகாபாரதத்துப் பாஞ்சாலி (திரெளபதி)யின் சபதம் மட்டுமல்ல. அது பாரதத் தாயின் சபதம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கோடுதான் செல்கிறது.
பாரதிக்குக் காவியம் பாடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே பாஞ்சாலி சபதத்தால்தான் எனலாம்.
பாரதி, மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி சபதத்தைப் பாடுபொருளாக்கிக் காவியம் பாடுவதற்கு முக்கியமான காரணங்கள் LJ6Ó 9_6f6fT60).
அடிமைப்பட்ட இந்தியாவின் விடுதலை வேள்வியில் தீயாக எரிந்த பாரதி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்ட, பல பாடல்களைப் பாடியிருக்கிறான். பெண்ணடிமைக்கு எதிரான பெரும் புரட்சிக் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறான். மூடக்கொள்கைக்கு எதிராக முழங்கியிருக்கிறான்.
இம்மூன்று முக்கியமான பாடுபொருள்களையும் ஒரே காவியத்தில் பாடும் சந்தர்ப்பம் பாஞ்சாலி சபதம் பாடுவதன் மூலம் நிறைவேறும் என்று நம்பியே பாஞ்சாலி சபதம் பாடுகிறான் பாரதி.
இவை மட்டுமன்றி, குயில்ப் பாட்டில் வரும் ஊழ்வினைத் தத்துவமும், கண்ணன் பாட்டுக் கருத்துக்களும் பாடுவதற்கு, பாஞ்சாலி சபதம் பொருத்தமாக இருக்குமென்று கருதியே, பாஞ்சாலி சபதத்தைப் பாரதி பாடினான் என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற மூன்று உரிமைக்குரல்களை ஒருங்கே ஒலிக்கச் 21

Page 14
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2صعيدW2ஆன்)
செய்ய பாஞ்சாலி சபதம் பொருத்தமாக இருந்தது. அதனால் பாடினான் எனலாம்.
அரசியல் ரீதியாக, இந்தியர்கள், பிரித்தானியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தனர். இந்தியப் பொருளாதாரத்தை, பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஏமாற்றிச் சுரண்டிச் சுவைத்து ஏப்பம் விட்டு ஏளனம் செய்து மகிழ்ந்தது. மூடக்கொள்கையில் மூழ்கிக் கிடந்த ஒற்றுமையற்ற இந்திய மக்களையும் மன்னர் களையும் பிரித்தானியர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியோடு கொடுமைப்படுத்தினர்.
சாதி ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைநிலை, தம் பழம் பெருமை மறந்த இழிநிலையில், அறியாமையில் மயங்கிக் கிடந்த அன்றைய பாரதத்தை எழுச்சிப்படுத்த, ஒரு காவியம் பாடவேண்டுமெனப் பாரதி விரும்பியபோது, பாஞ்சாலி சபதம் பொருத்தமாகத் தெரிந்தது பாரதிக்கு.
சூதாட்டத்திற்கு தருமன் ஒப்புக் கொண்டதற்கு மூடப் பழக்க வழக்கம் காரணமாக இருந்தது.
அதைப் பயன்படுத்தி பாண்டவர்களின் பொருளாதாரத்தை அபகரித்தனர் கெளரவர். பாண்டவர்களை அடிமைகளாக்கி அவமானப் படுத்தினர். பாஞ் சாலியைத் துகிலுரிந்தனர். பெரியவர்களாலோ பொதுமக்களாலோ தட்டிக் கேட்க முடியவில்லை. தடுத்து நிறுத்த முடியவில்லை.
தெய்வம் துணைக்கு வந்தது. "தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கெளவும். தர்மம் மறுபடிக்கும் வெல்லும்” என்ற உற்சாக உணர்வு ஊட்டப்பட்டது. பாஞ்சாலி சபதம் முழுமையான விடுதலையை நோக்கியதாக இருந்தது.
எனவே பொருளாதார, சமூக, அரசியல் விடுதலையை நாடிநின்ற அடிமைப்பட்ட இந்திய சமூகத்துக்கு, பாஞ்சாலி சபதம் அத்தியாவசியம் எனக் கருதியே, பாரதி பாஞ்சாலி சபதம் பாடினான் 6T60T6OTib.
22

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيد النصصعيدي
பாஞ்சாலி சபதத்தை நுட்பமாக நோக்கும்போது, பாஞ்சாலி பாரதத் தாயாகவும், பாஞ்சாலியைப் பணயம் வைத்துத் தோற்ற பாண்டவர்கள் இந்தியத் தலைவர்களாகவும், அடிமைப்படுத்தி அவமானப்படுத்திய கெளரவர்கள், பிரித்தானியர்களாகவும், பார்த்துக்கொண்டு செயலற்றிருந்த சபையோர், பொதுமக்கள், இந்தியர்களாகவும், பாஞ்சாலியைத் துகிலுரிந்து அவமானப்படுத்திய நிகழ்வு இந்தியாவை அவமானப்படுத்தியதாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கண்டு கொள்ளலாம்.
இந்தியாவை அந்நியர் எந்த அளவுக்கு கேவலப்படுத்தினார்கள் என்பதன் உருவகமாகவே, பாஞ்சாலி பாரதியால் கருதப்பட்டாள். பாஞ்சாலியின் சபதம் இந்தியர்களின் சபதம், விடுதலைக்கான சபதம், என்பது பாரதியின் உள்நோக்கு.
மகாபாரதத்தை முதலில் பாடியவர் வியாசமுனிவர். வடமொழியில் பாடப்பட்ட பாரதத்தை தமிழில் முதலில் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாடிய வெண்பா யாப்பிலமைந்த பெருந்தேவனார் பாரத வெண்பா நூலில் சில பாடல்களே இப்போது கிடைத்துள்ளன.
மகாபாரதத்தை விருத்தம் என்ற யாப்பில் அமைந்த பாடல்களாகப் பாடியவர் வில் லிபுத் துTராழி வார். இவர் பெருந்தேவனாரின் சில புதிய சிந்தனைகளையும் ஏற்று தானும் சிலவற்றைக் கற்பனை செய்து புகுத்தியிருக்கிறார்.
இவருக்குப் பின் இவரின் பாடல்களோடு தானும் பல பாடல்களைப் பாடி நல்லாப்பிள்ளை என்பவர் பாரதத்தை விரிவாகப் பாடியிருக்கிறார். வில்லி பாரதம் சுருக்கமாகவும் நல்லாப் பிள்ளை பாரதம் மிக விரிவாகவும் அமைந்துள்ளன.
இவர்களுக்குப் பின், மகாகவி பாரதி, பாரதத்தின் ஒரு சிறு பகுதியைப் பாஞ்சாலி சபதம் என்ற பெயரில் விரிவாகப்
பாடியிருக்கிறான்.
23

Page 15
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2صيدAوشيدلث
இருப்பினும் இங்கு வியாசர் பாரதம், வில்லிபுத்தூராழ்வார் பாரதம், பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆய்வு நிகழ்த்தப்படுகின்றது.
வியாசரும் பாஞ்சாலி சபதமும்
திருதராட்டிரனால் கொடுக்கப்பட்ட காண்டவப் பிரஸ்தம் என்ற நிலப்பரப்பை, மிகுந்த பிரயாசையோடு, இந்திரப் பிரஸ்தம் என்ற பெயரில், சுவர்க்க உலகம் போல மாற்றி, தருமன் அரசாட்சி புரிந்து வந்தான்.
அக்காலத்தில், பாரத நாட்டின் சகல இராச்சியங்களையும் வென்று, திறைபெற்று, இராசசூய யாகம் என்ற பிரம்மாண்டமான சிறந்த யாகத்தைத் தருமன் தன் தம்பியர்கள் துணையோடும், கிருஷ்ணனின் அருளோடும், பெரியவர்களின் ஆசியோடும் செய்து முடித்தான்.
அந்த இராசசூய யாகத் திற்குச் சென்றிருந்த துரியோதனனுக்கு மிகுந்த பொறாமை ஏற்பட்டது. தங்களை விடப் பெரிய சீர் சிறப்புக்களோடு பாண்டவர்கள் வாழ்கிறார்கள், மதிக்கப்படுகிறார்கள் என்ற பொறாமையால் புழுங்கினான் துரியோதனன்.
அங்குள்ள மாளிகை ஒன்றினுள் நடந்து சென்றான் துரியோதனன். அங்கே இருந்த பளிங்குத் தரையை நீரென்று நினைத்து ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்தான். திரெளபதி தனது தோழிகளோடு அக்காட்சியைக் கண்டு சிரித்தாள்.
பின், நீர் இருந்த இடத்தைப் பளிங்கு என நினைத்து நடந்தபோது, கீழாடை நனைந்துபோக, அதைப் பார்த்தும் திரெளபதி தனது தோழிகளோடு கூடி நின்று சிரித்தாள்.
இந்தச் சம்பவத்தை வியாசபாரதத்திலிருந்து சோ அவர்கள் தனது மஹாபாரதம் பேசுகிறது என்ற நூலில் மொழிபெயர்த்துள்ளதை அப்படியே தருகிறேன்.
24

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9
"இதற்கிடையில் துரியோதனன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யுதிஷ்டிரரின் மாளிகையைச் சுற்றிப் பார்த்தான். பளபளப்பான தரையைத் தண்ணிர் என்று நினைத்து, உடையைத் தூக்கிக் கொண்டு நடந்தான். எது உயரம், எது பள்ளம் என்று தெரியாமல் நடந்து தடுக்கி விழுந்தான்.
தண்ணிர் இருந்த இடத்தைத் தரை என்று நினைத்து நடந்து நீரில் விழுந்தான். அடுத்து வந்த தரையைத் தண்ணிர் என்று நினைத்துத் தாண்டினான். இதையெல்லாம் பார்த்து பீமனும் பணியாட்களும் கேலியாகச் சிரித்தார்கள்.
தான் சிறுமைப்பட்டதாக நினைத்த துரியோதனன், அவர்களைக் கவனிக்காதது போல் நடந்து, கண்ணாடியை சுவர் வாயில் என்று நினைத்து, அதில் முட்டிக் கொண்டான். திறந்திருந்த வாயிலைக் கண்ணாடி என்று நினைத்து, மீண்டும் ஏமாந்தான்.
பீமசேனனும், மற்ற பலரும் எள்ளி நகைத்தார்கள். இதையெல்லாம் நினைத்துக் கொண்டே துரியோதனன் அஸ்தினாபுரம் திரும்பினான். அடிக்கடி பெருமூச்சு விட்டு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த துரியோதனனிடம் சகுனி எதை நினைத்து வருந்துகிறாய்' என்று கேட்டான்.
துரியோதனனின் பொறாமை
துரியோதனன் "மாமா! அர்ஜூனனுடைய வீரத்தினால் இந்த அவனி முழுவதும் தர்ம புத்திரனுக்கு உட்பட்டதாகி விட்டது. அவனுடைய யாகம் சிறப்பாக நடந்த விதமும், அங்கு அவனுக்குக் கிடைத்த புகழுரைகளும் என்னை எரிக்கின்றன.
கோடையில் குளம் வற்றுவது போல் நான் வற்றிப்போயிருக்கிறேன். சிசுபாலன், கிருஷ்ணனால் கொல்லப்பட்டான். அதற்குப் பழிவாங்கக் கூடிய ஆண்மகன் ஒருவன் கூட அந்தச் சபையில் இல்லாமல் போய்விட்டான்.
மன்னர்கள் கப்பம் கட்டி, தர்மபுத்திரனை வணங்கி நின்றனர்.
25

Page 16
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2an4Jaశ
அங்கே குவிந்து, தர்மபுத்திரனிடத்தில் பிரகாசித்த ராஜ்ய லட்சுமியைக் கண்டு என்மனம் படாதபாடு படுகிறது. எதிரிகள் வளர்வதைக் கண்டு பொறுத்துக் கொள்வது சத்திரியனுக்கு ஆகாது.
உதவி இல்லாமல் அவர்களுடைய செல்வத்தைப் பெற்றுவிட எனக்குச் சக்தி இல்லை. அதைப் பெற்றுத்தரக்கூடியவர்கள் யாரும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.
ஆகையால் இறப்பதைப் பற்றியே என்மனம் நினைக்கிறது. தீயில் விழுவேன். விஷத்தைக் குடிப்பேன். நீரில் மூழ்குவேன். இனி வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை விட்டு விடு. என்மனம் படும் பாட்டை என் தந்தைக்குத் தெரிவிப்பாயாக’ என்று பொருமினான்.
துரியோதனன் சகுனியிடம் கூறிய விடயங்களே இவை. வியாசர், திரெளபதியும் தோழிகளும் துரியோதனனைக் கேலி செய்து அவமானப்படுத்தியதாகச் சொல்லவில்லை. பீமனும் மற்றும் பலரும் எள்ளி நகையாடிப் பரிகசித்ததாகவே சொல்லியிருக்கிறார். துரியோதனன் சகுனியிடம் இதுபற்றி இந்த இடத்தில் எதுவும் கூறவில்லை.
இந்தச் சம்பவத்தைத் துரியோதனன் தனது தந்தையாகிய திருதராட்டிரனிடம் சொல்லும் போது "நன்றாக உடுப்பதும், உண்பதும், அற்ப மனிதர்களும் பெற்று அனுபவிக்கக்கூடிய வசதிகள். உள்ளது போதும் என்று இருக்கும் குணமும், அச்சமும், செல்வத்தையும், கெளரவத்தையும் நாசம் செய்கின்றன.
போதும் என்று நினைப்பவனும், பயந்தவனும் மேன்மையை அடைய மாட்டான். தர்ம புத்திரனிடத்தில் சேர்ந்து விட்ட ராஜ்ய லட்சுமியைக் கண்டபிறகு, நான் அனுபவிக்கும் இந்தச் செல்வம் எனக்குத் திருப்தி தரவில்லை.”
எனத் தொடங்கி, தர்மபுத்திரனிடம் சேர்ந்துள்ள செல்வக் குவியலை விபரமாக வர்ணித்த துரியோதனன் இறுதியாக,
26

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2an4Jaశ
"தர்ம புத்திரனிடம் சேர்ந்த ராஜ்ய லட்சுமியைக் கண்ட பிறகு, நான் வாழ்வதில் அர்த்தமில்லை. இது என்ன காலமோ நான் அறியேன். உலகமே ஒரு குருடனால் படைக்கப்பட்டது போல் தாறுமாறாகப் போய்விட்டது. தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாவதும், உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களாவதும் நடக்கிறது.
மயனால் நிர்மாணிக்கப்பட்ட தர்ம புத்திரன் மாளிகையில், தண்ணிர் என நினைத்துத் தரையைக் கண்ட நான், எனது உடைகளைத் தூக்கினேன். தரை என்று நினைத்துத் தண்ணிரில் வீழ்ந்தேன். இப்படிப் பலவாறாக நான் அங்கே ஏமாந்தேன்.
அப்போது பீமனும், அர்ஜூனனும் சிரித்தார்கள். திரெளபதியும் வேறு பெண்களோடு சேர்ந்து என் மனம் நசிந்து போகும் வகையில் நகைத்தாள். அந்தப் பரிகாசங்களை நான் மறக்கப் போவதில்லை. தர்மபுத்திரன் பெற்ற ராஜ்ய லட்சுமியை, நான் பெற வேண்டும். அது இல்லாமல் எனக்கு ஆறுதல் என்பது கிடையாது. பாண்டவரையாவது வீழ்த்துவேன். அல்லது நானாவது வீழ்வேன்.”
இந்தப் பொறாமையாலும் அவமானத்தாலும் தான், பாண்டவர்களது சொத்துக்களைக் கவர வழிதேடினான் துரியோதனன். பாஞ்சாலியை அவமானப்படுத்துவது முதல் நோக்கமாக இருக்கவில்லை. அத்தகைய திட்டம் எதுவும் அவர்களிடம் இருக்கவும் இல்லை.
பாஞ்சாலி சிரித்தாள்:
துரியோதனன் தரையிலும் தண்ணிரிலும் ஏமாந்து தடுக்கிவிழுந்தபோது பாஞ்சாலி அவனைப் பார்த்துச் சிரித்து "தந்தை மட்டுந்தான் குருடன் என நினைத்தேன். மகனும் குருடனாக இருக்கிறானே' எனப் பரிகாசமாகக் கூறியதாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இதற்கு வியாசர் பாரதத்தில் ஆதாரம் இல்லை.
பாஞ சாலி சபதத்தில் பாரதியார் பாஞ சாலி துரியோதனனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த செய்தியை, "அந்த 27

Page 17
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2ܗܧܐzܗ̇ܧܐܝܶ
ஏந்திழையாளும் எனைச் சிரித்தாளிதை எண்ணுவாய்" எனத் துரியோதனன் சகுனிக்குச் சொல்வதாகச் சொல்கிறார்.
சகுனி இந்தச் செய்தியைத் திருதராட்டிரனிடம் கூறியபொழுது, திருதராட்டிரன் இதனைப் பெரிதுபடுத்தவில்லை. பாரதியார் தனது பாஞ்சாலி சபதத்தில் திருதராட்டிரன் கூறுவதாகப் பின்வருமாறு கூறுகிறார்.
- LDU6)
அப்பி விழிதடு மாறியே - இவன்
அங்கு மிங்கும் விழுந் தாடல் கண்டு - அந்தத்
துப்பிதழ் மைத்துணி தான்சிரித் - திடில்
தோஷம் இதில்மிக வந்ததோ.
தவறி விழுபவர் தம்மையே - பெற்ற
தாயும் சிரித்தல் மரபன்றோ - எனில் இவனைத் துணைவர் சிரித்ததோர் - செயல்
எண்ணரும் பாதகம் ஆகுமோ - மனக் கவலை வளர்த்திடல் வேண்டுவோர் . ஒரு
காரணம் காணுதல் கஷ்டமோ - வெறும் அவல மொழிகள் அளப்பதேன் - தொழில்
ஆயிரம் உண்டவை செய்குவீர்.
திருதராட்டிரன், துரியோதனன் தடக்கி விழுந்ததைப் பார்த்து பாஞ்சாலி சிரித்ததையோ, பாண் டவர் சிரித்ததையோ, பெரிதுபடுத்தவில்லை. சர்வ சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்கிறான். பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
"பாண்டவர்கள் பெற்ற பெருஞ் செல்வத்தையும், சிறப்பையும் கண்டு. பொறாமை மயக்கத்தில் விழி தடுமாறி அங்கும் இங்கும் விழுந்து தள்ளாடுவதைக் கண்டு பாஞ்சாலி சிரித்தது தோஷமாகாது. அவள் யார். அவள் மைத்துனிதானே. அவள் சிரித்ததில் பெருங்குற்றம் இல்லை.
28
 

பாரதியாரும்பாஞ்சாலிசபதமும் 2ெ Mladší
தவறி விழுபவர்களைப் பார்த்துப் பெற்ற தாயும் சிரிப்பது வழக்கமல்லவோ, அப்படி இருக்க இவனைப் பார்த்து இவனது சகோதரர்கள் சிரித்த செயல் நினைக்க முடியாத பாதகச் செயலாகுமோ?
மனதிலே கவலையை வளர்க்க விரும்புவோர் அதற்கு ஒரு காரணத்தைக் கண்டு பிடித்தலும் கஷ்டமாகுமோ. வெறும் அவல வார்த்தைகளைச் சொல்வதேன். அவற்றை விட்டு விட்டு ஆயிரம் கருமங்கள் செய்ய உண்டு. அவற்றைச் செய்யுங்கள்” என்று துரியோதனனையும் சகுனியையும் திருதராட்டிரன் ஏசுகிறான்.
துரியோதனனுக்கும், பாஞ்சாலியைத் துகிலுரிந்து அவமானப்படுத்துகிற திட்டம் இருக்கவில்லை. பாண்டவர்களின் இராச்சியத்தைக் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது.
சூதாட்டத்திட்டம்
போர் செய்து பாண்டவர்களைக் கொன்றோ, வென்றோ இராச்சியத்தைக் கைப்பற்றுவதையே துரியோதனன் விரும்பினான். ஆனால் கிருஷ்ணனின் துணையோடிருக்கும் பாண்டவர்களை யாராலும் வெல்ல முடியாது என்ற சகுனியின் அறிவுரையைக் கேட்ட துரியோதனன்,
"மாமா! நமக்கு வேண்டியவர்களுக்கோ, மற்றுமுள்ள சிறந்த மனிதர்களுக்கோ, ஒரு தீங்கும் இல்லாமல், பாண்டவர்களை ஜெயிக்கக் கூடிய உபாயம் ஒன்று இருந்தால், அதை எனக்குச் சொல்” என்று கேட்க, சகுனி சூதாட்டம் பற்றிக் குறிப்பிடுகிறான்.
சகுனியின் திட்டப்படி, திருதராட்டிரனின் சம்மதத்துடன் ஒரு அழகிய மண்டபத்தைக் கட்டி, அதன் திறப்பு விழாவிற்கு பாண்டவர்களை அழைத்து சூதாடத் திட்டமிட்டான் துரியோதனன். அதன்படி சிறிய தந்தையாகிய விதுரன் மூலம் பாண்டவர்களை அழைப்பித்தான்.
29

Page 18
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Dia ባለx}%&
சூதாடும் எண்ணம் துரியோதனனுக்கு இருப்பதாகவும், விதுரன் தருமனிடம் கூறினான். தருமனுக்கு சூதாட்டத்தில் இயல்பாகவே விருப்பம் உண்டு.
சகுனி துரியோதனனிடம் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறான். "தர்மபுத்திரன் சூதாட்டத்தில் விருப்பமுள்ளவன். ஆனால் அவனுக்கு முறையாக ஆடத்தெரியாது. அதே சமயத்தில் அரசனாகிய அவன் நாம் அழைத்தால் ஆடவராமலும் இருக்கமாட்டான்.
நானோ ஆட்டத்தில் கைதேர்ந்தவன். இதில் எனக்கு நிகரானவன் மூவுலகிலும் இல்லை. சூதாட்டத்திற்கு நீ தர்மபுத்திரனை அழைத்தால், காய் வீசுவதில் நிபுணனாகிய நான், தர்மபுத்திரனின் ராஜ்யத்தையும், அங்கு உலவும் செல்வத்தையும் உன் காலடியில் போடுவேன்.”
தர்மனுக்கு சூதாட்டத்தில் விருப்பமுண்டு என்பது மட்டுமல்ல, ஒரு சத்திரிய மன்னன் சூதாட்டத்திற்கு அழைத்தால், அழைக்கப்பட்ட சத்திரிய மன்னன் அதை ஏற்றுச் சூதாடுவது மரபாக, நாகரிகமாக, அக்காலத்தில் இருந்ததால், தருமன் ஒப்புக் கொண்டேயாகவேண்டும் என்று உறுதியாக நம்பியிருந்தான் சகுனி.
இருப்பினும் விதுரர் துரியோதனனின் சூதாடும் திட்டம் பற்றிக் கூறியபோது தருமன் பின்வருமாறு கூறுகிறான்.
"சூதானது பெரும் தீமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் திருதராஷ்டிர மன்னர் உத்தரவிட்ட பிறகு, அதைமீற நான் விரும்பவில்லை. அந்தச் சபையில், சகுனி என்னை ஆட்டத்திற்கு அழைக்காமல் இருந்தால், நான் ஆடப்போவதில்லை. ஆனால் அவன் என்னை அழைத்துவிட்டால், நான் மறுக்கவும் மாட்டேன். இது எனக்கு நானே விதித்துக் கொண்டிருக்கும் வழக்கம்"
இப்படித் தருமன் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு.
இராசசூய யாகத்தின் போது கிருஷ்ணபகவானோடு மாறுபட்டுப்போர்
புரிந்து, சிசுபாலன் இறந்துபோன போது, புனிதமான இராசசூய
30

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 3ha MAlabě
யாகம் இரத்தக்களரியில் முடிந்ததில் தருமனுக்கு மிகவும் கவலை ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஒரு துர்க்குறி - தீமை வருவதற்கு அறிகுறி என எண்ணிய தருமன், வியாச முனிவரிடம் இதுபற்றிக் கேட்டான்.
“இங்கே தோன்றிய உத்பாதங்கள் (அப சகுனங்கள்) சிசுபாலன் மரணத்தைத்தான் குறித்தனவா? அப்படியென்றால் அவன் மடிந்ததால் அந்த உத்பாதங்களின் பலன்கள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் ஆகிறதா'
இப்படி தருமன் கேட்ட போது வியாசர் கூறினார் "இந்த மாதிரியான துர்நிமித்தங்களின் பலன், பதின்மூன்று ஆண்டு காலம் பெரிதாகவே இருக்கும். இங்கே தோன்றிய உத்பாதங்கள் பொதுவாக, சத்திரியர்களின் அழிவைத்தான் குறிக்கின்றன. துரியோதனன் செய்யும் குற்றத்தினால், கடும் யுத்தம் மூண்டு, அதில் சத்திரிய நாசம் பெரிதாய் விளையும். இது உன்னை முன்னிட்டே நடந்தேறும்.
தருமன் சபதம்:
இதனைக் கேட்ட தருமன் மிகவும் கவலையுற்று, தன்பொருட்டாக யாரும் இறந்து போவதை விரும்பாதவனாக ஒரு சபதம் செய்தான்.
“இன்று முதல் நான் ஒரு சபதம் மேற்கொள்கிறேன். பதின்மூன்று வருட காலம் என் சகோதரர்களையும் மற்ற அரசர்களையும் நான் கடிந்து பேசமாட்டேன். என் குலத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதைக் கட்டளையாக மேற்கொண்டு, அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வேன்.
கலகம்' என்பது மனிதர்களிடையே தோன்றும் மனவேறுபாட்டினால்தான் உண்டாகிறது. ஆகையால், மற்றவர்களோடு வேறுபாடு இல்லாமல், என் பிள்ளைகளிடம் நான் நடந்து கொள்ளக்
கூடிய வகையில், மற்றவர்களிடமும் நடந்து கொள்வேன்.”
31

Page 19
பாரதியாரும்பாஞ்சாலிசபதமும் 2وإ ባለሯ)%á
இந்தச் சபதத்தினால்தான் தருமர், சூதாடுவதற்குச் சம்மதிக்கவேண்டியவரானார். அப்படியிருந்தும் சகுனி தர்மனைச் சூதாட்டத்திற்கு அழைத்தபோது 'சூதாடுவது சத்திரியனுக்கு இலட்சணம் இல்லை. அதில் நீதியோ, வீரமோ கிடையாது. இந்த முறைகெட்ட வழியினால் எங்களை வெல்லப் பார்க்காதே" என்று முதலில் மறுத்தே கூறினார். பின் சகுனியோடு பலவாறு தர்க்கம் செய்தார். இறுதியாக,
"ஆட்டத்திற்கு அழைக்கப்பட்டு நான் மறுப்பதில்லை. விதியின் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும். எனக்கு எதிரே பந்தயம் வைப்பவன் யார் என்பது தெரிந்த பிறகு, ஆட்டத்தைத் தொடங்க நான் தயார்” என்று முடிவு கூறினார்.
"செல்வத்தை நான் கொடுப்பேன். எனக்காக என் மாமன் சகுனி ஆடுவார்' என்று துரியோதனன் கூற, தர்ம புத்திரர் "ஒருவருக்காக மற்றொருவர் ஆடுவது தவறு என்று எனக்குத் தோன்றினாலும், உங்கள் இஷ்டப்படியே நடக்கட்டும்” என்று கூறி சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
சூதாட்டத்தில் சாதாரண பொருட்கள்தான் ஆரம்பத்தில் பணயமாக வைக்கப்பட்டன. ஒவ்வொன்றாகத் தொடர்ந்து தோற்றார் தருமர். பணயப் பொருள் நாடாக மாற, நாட்டையும் இழந்தார். அதனைத் தொடர்ந்து, வரிசையாக தம்பியர்களைப் பணயம் வைத்துத் தோற்று, தன்னையும் தோற்றார் தருமர்.
பாண்டவர்களை அடிமைகளாக்கினால்தான், தான் சூதில் வென்ற இராச்சியம் தமக்கு நிலைக்கும் என்ற எண்ணத்தில், இராச்சியத்தை இழந்த தருமனை, சகோதரர்களைப் பணயம் வைக்கும்படி சகுனி கூறினான்.
சூதாட்டம் தொடங்கும் போது இராச்சியத்தையும், செல்வத்தையும் கவர்வது மட்டுமே திட்டமாக இருந்தது. வெற்றிக் களிப்பில், மமதையில் பாண்டவர்களை அடிமைப்படுத்தி அவமானப்படுத்த நினைத்து, அவர்களைப் பணயப் பொருளாக்கி, வென்றபின், பாஞ்சாலியைப் பணயம் வைக்கும்படி கேட்கிறான் சகுனி.
32
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيدالنصصعيد
"மற்ற செல்வம் தன் வசம் இருக்கும்போது, தன்னை வைத்துத் தோற்பது முறையில்லை. இருந்தாலும் உன்னையும் வென்றேன். ஆனால் நீ இன்னமும் தோற்காத செல்வம் உன்வசம் இருக்கிறது. உன்னுடைய மனைவி திரெளபதியைப் பந்தயமாக வைத்து, ஆடு, அவள் ஒருத்தியை வைத்தே உன்னை நீ மீட்டுக் கொள்ளலாம்.”
பாஞ்சாலியும் வெல்லப்பட்டாள். சகுனி பாண்டவர்களையும், பாஞ்சாலியையும் அடிமைப்படுத்த வேண்டுமென்று நினைத்தே பந்தயப் பொருள்களாக்குவித்தான்.
ஆனால், அவன் பாண்டவர்களின் தாயான குந்திதேவியைப் பணயம் வைக்கும்படி கேட்கவில்லை. தாயைப் பணயம் வைக்க முடியாது என்று விதியேதும் இருந்ததா என்பதை அறிய முடியவில்லை.
எந்தச் சூதாட்டத்திலும் தாயைப் பணயம் வைத்ததாகக் கதையில்லை. நளமகாராஜனுடன் சூதாடிய புட்கரன், நளனிடம் தமயந்தியை (மனைவி) பணயம் வைக்கும்படி கேட்கிறான். நளன் மறுத்து விடுகிறான். நளனிடம் பிள்ளைகளைப் பணயம் வைக்கும்படி புட்கரன் கேட்கவில்லை. இது பாரதத்திற்கு முந்திய கதை.
பிள்ளைகளையோ, தாயையோ பணயம் வைக்கும்முறை அக்காலத்தில் இருக்கவில்லை. அதனால்தான் குந்திதேவியோ பாண்டவர்களின் பிள்ளைகளோ பணயப் பொருள்களாகவில்லை என எண்ணத் தோன்றுகிறது.
அடிமையின் மனைவியும் அடிமைதான் என்று பின்பு வாதாட்டம் நிகழ்வதை வைத்துப் பார்க்கும்போது, பாண்டவர்களின் ஏனைய மனைவியர்களும் அடிமைகள் தானே. அவர்களைக் கெளரவர்கள் தனித்தனி பணயமாக்கும்படி கேட்கவுமில்லை. அவமானப்படுத்தவுமில்லை.
துரியோதனன் முதலியோர்க்கு பாண்டவர்களிலும், பாஞ்சாலியிலும் மட்டுமே கோபம் இருந்தது. குந்தி தேவியிலோ
33

Page 20
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் .2صعيدAوشيداث
ஏனையவர்களிலோ அவர்களுக்குக் கோபமில்லை. அதனால் அவர்கள் வேறு எவரையும் பணயமாக்க விரும்பவில்லை என்றும் 6T600600T6) TLb.
குந்திதேவி தருமனுக்கு மட்டும் தாயில்லையே, என்று வாதித்தால்கூட, பாஞ்சாலியும் தருமனுக்கு மட்டும் மனைவி யில்லையே என்றும் வாதிடலாம். அல்லவா. அத்தோடு பாண்டவர்கள் யாவரும் அடிமையாகியதால் அவர்கள் எதிர்க்கும் சக்தியற்ற வர்களாகவும் தானே இருந்தார்கள்.
மனைவியைப் போன்று தாய் மகனின் சொத்தல்ல என்ற நிலையும் அக்காலத்தில் இருந்திருக்கலாம். பாஞ்சாலி வாக்குவாதம்
திரெளபதியை அடிமையாக்கிய துரியோதனனுக்கு, அவளை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்ததேதவிர, துகிலுரிந்து அவமானப்படுத்தவேண்டுமென்ற எண்ணம் சிறிதளவும் இருக்கவில்லை.
துரியோதனன் விதுரரை அழைத்து "பாண்டவர்களின் மனைவி திரெளபதியை இங்கே அழைத்துவாரும். என் வீட்டை அவள் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்" என்று தான் கட்டளை இடுகிறான்.
கோபமுற்ற விதுரர் "துரியோதனா! உன் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்பட்டிருக்கிறது. என்பதனை நீ உணரவில்லை. தன்னை இழந்த தர்ம புத்திரனுக்கு, திரெளபதியைப் பந்தயத்தில் வைக்க உரிமையில்லை என்பது என் கருத்து, உன் வாயிலிருந்து தகாத வார்த்தைகள் வருகின்றன. உன் சொல்லினால் அடிக்கப்பட்டவன் படும் துயரம் உன்னை அழித்து விடும். கெளரவர்களுக்கு முடிவு நெருங்குகிறது. பெரும் நாசம் விளையப் போகிறது என்பதை நான் காண்கிறேன். இந்தச் சபையில் நீதி எடுபடவில்லை. பேராசையே மேலோங்கி நிற்கிறது. சத்திரிய குலமே அழியப் போகிறது" என்று ஏசுகிறார்.
34
 

பாரதியாரும்பாஞ்சாலிசபதமும் 2annad
இதன்பின் துரியோதனன் பிராதிகாமி என்ற தேர்ப்பாகனைக் கூப்பிட்டு திரெளபதியை அழைத்து வருமாறு ஏவினான்.
அந்தத் தேர்ப்பாகன் திரெளபதி இருந்த இடம் சென்று "அம்மையே! உங்கள் கணவர் தர்மபுத்திரர், சூது எனும் கள் மயக்கத்தினால் மயங்கிய நிலையில், துரியோதனன் அவரை வென்று விட்டார். இப்பொழுது பணிப்பெண்ணாக உங்களைத் துரியோதன மன்னர் அழைக்கிறார்” என்று கூறினான்.
உடனே திரெளபதி 'என்னை வைத்து இழந்தாரா? ஆடுவதற்கு அவரிடம் வேறு பொருள் இல்லையா?" என்று கேட்டாள். அதற்குத் தேர்ப்பாகன் "வேறு பொருள் இல்லாத போதுதான் தர்மபுத்திரர் உங்களை வைத்து ஆடினார். செல்வம் அனைத்தையும் இழந்து, சகோதரர்களையும் தோற்று, பிறகு தன்னையே பந்தயத்தில் தோற்று, அதன் பிறகு தான் உங்களைப் பந்தயமாக வைத்தார்" என்றான்.
திரெளபதி "சூதாடிய அந்தத் தர்மரிடம் போய், அவர் முதலில் தன்னைத் தோற்றாரா? அல்லது என்னை வைத்துத் தோற்றாரா? என்று சபையிலே கேட்டுவா” என்று தேரோட்டியை அனுப்பி வைத்தாள்.
தேரோட் டி ஏற்கனவே விளக்கமாகத் தானி சொல்லியிருந்தான். இருப்பினும் திரெளபதி "சபையிலே' என்ற சொல்லைப் பயன்படுத்தி அனுப்பி வைத்தாள்.
தேர்ப்பாகன் சபைக்குச் சென்று. தர்மபுத்திரனைப் பார்த்து, திரெளபதி பணித்தவாறே கேட்டான். மன்னர் சூழ்ந்த சபையில் பதில்கூறாமல், மனம் குன்றி அமர்ந்திருந்தார் தர்மபுத்திரர்.
அதைப்பார்த்த துரியோதனன், "திரெளபதி கேட்க நினைக்கும் கேள்விகளை இங்கே வந்து கேட்கட்டும். அவள் கேட்பதையும், தர்மர் பதில் சொல்வதையும், சபையில் உள்ள அனைவரும் அறியட்டும்” என்று கூற, தேர்ப்பாகன் மீண்டும் திரெளபதியின் இடத்திற்குச் சென்று நடந்ததைக் கூறினான்.
35

Page 21
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9a ባለx}àë
திரெளபதி "தர்மம் அறிந்தவர்களும், நியாயம் உணர்ந்தவர்களும் அந்தச் சபையில் இருக்கிறார்கள். என் கேள்வியை அவர்களிடம் சென்று கேள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நான் செய்கிறேன்” என்று கூறி, மீண்டும் அவனை சபைக்கே அனுப்பினாள்.
அந்தத் தேரோட்டி சபையில் வந்து, திரெளபதி கூறியதைச் சொல்ல, எல்லோரும் துரியோதனனின் பிடிவாதத்தை உணர்ந்து, தலைகுனிந்து மெளனமாகவே இருந்தனர்.
அப்போது தர்மபுத்திரர் தனக்கு நம்பிக்கையான ஒரு தூதனை அழைத்தார். அவனிடம் அவர் சொன்னார். "வீட்டுக்கு விலக்காகி இருக்கும் திரெளபதியை, ஒற்றை ஆடையுடன் அழுதபடியே சபைக்கு வந்து, திருதராஷ்டிர மன்னர் முன்னால் நிற்கச் சொல். அப்பொழுது சபையோரெல்லாம் மனதால் சபிப்பார்கள்.”
அந்தத் தூதனும் திரெளபதியிடம் சென்று தர்மபுத்திரர் கூறியதைத் தெரிவித்தான்.
இதற்கிடையில், துரியோதனன் திரெளபதியை எப்படியாவது அழைத்து வருமாறு தேர்ப்பாகனுக்கு மீண்டும் கட்டளையிட்டான்.
ஆனால் அந்தத் தேர்ப்பாகனோ, திரெளபதியின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று கேட்டுத் தயங்கி நின்றான்.
அதைப்பார்த்த துரியோதனன். தன் தம்பி துச்சாதனனை அழைத்து "நீ போய் திரெளபதியை இழுத்து வா’ என்று &ELL60D6"Tulî"LIT6ÖT.
துச்சாதனன் சென்று, சபைக்கு வருமாறு கட்டளையிட்டான். அவள் பெண்கள் இருக்கும் பகுதிக்கு ஓட முயற்சித்தபோது, அவளுடைய கூந்தலைப்பிடித்து பலாத்காரமாக இழுத்தான்.
36
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9 MAlabě
திரெளபதி "நான் வீட்டிற்கு விலக்காகி, ஒற்றை ஆடையோடு இருக்கிறேன். என்னைச் சபைக்கு இழுத்துப் போகாதே’ என்று கதறினாள்.
துச்சாதனனோ “நீ ஒற்றை ஆடையோடு இரு அல்லது ஆடையில்லாமலே இரு. நீ ஆட்டத்தில் ஜெயிக்கப்பட்டவள். பணிப்பெண்களோடு சேர்ந்திருக்க வேண்டிய நீ இழுத்துக்கொண்டு போகத்தக்கவளே' என்று கூறி இழுத்தான்.
திரெளபதி சபைக்கு இழுத்துப் போகப்பட்டாள். கதறிக்கொண்டே வந்த அவளை, துச்சாதனன் ஏசினான். அதைக் கண்டு துரியோதனன், சகுனி, கர்ணன் ஆகிய மூவரும் துச்சாதனனைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இவர்களைத் தவிர, அந்தச் சபையில் இருந்த எல்லோருக்குமே அந்தக் காட்சி அதிர்ச்சி தருவதாகவும், காணச் சகிக்க முடியாததாகவும் இருந்தது.
திரெளபதி கதறினாள். “பாரத வம்சத்துத் தர்மமும், சத்திரியர்களுடைய ஒழுக்கமும் அழிந்து போய் விட்டனவா? இங்கு நடக்கும் அக்கிரமங்களை எப்படி எல்லோரும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மஹாத்மாக்களான துரோணர். பீஷ்மர், விதுரர் ஆகியோர் இருக்கும் சபையில் இந்த அட்டூழியம் நடக்கலாமா? ஆடுவது சூதாட்டம் எனினும் அதிலும் முறை கிடையாதா? தன்னையே இழந்த தர்மனுக்கு என்னை வைக்க அதிகாரம் உண்டோ?”
இவ்வாறு முறையிட்ட திரெளபதியைப் பார்த்து, பீஷ்மர் சொன்னார். "சகுனி சூதாட்டத்தில் ஈடுஇணையற்றவன். தர்ம புத்திரன் அவனோடு இஸ்டப்பட்டு ஆடினான். தர்ம புத்திரன் இணங்கி வைத்த பந்தயம் இது. தன் சுதந்திரத்தை இழந்தவனாகத் தர்மன் அந்த நிலையில் இருந்தாலும், மனைவியானவள் கணவனுக்கு
9) L'ULL616ft.
தன் சுதந்திரத்தை இழந்தவன் வேறு எந்தப் பந்தயத்தையும் வைக்க அருகதையற்றவன் என்பது ஒருபுறம் என்றென்றும் எந்த 37

Page 22
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ○2ܐ Alabě
நிலையிலும் கணவனுக்கு உட்பட்டவளே மனைவி என்பது ஒரு புறம். இதில் எதை முறையானது என்று சொல்வது? தான் ஆட்டத்தில் வஞ்சிக்கப்பட்டதாக தர்மபுத்திரனே நினைக்கவில்லை. தர்மம் மிகவும் சூட்சுமமானது. இப்பிரச்சினையில் உள்ள சிக்கல்களை எல்லாம் என்னால் கூற முடிகிறதே தவிர இதுதான் சரி என்று தீர்வு சொல்ல இயலவில்லை."
பீஷ்மர் இவ்வாறு பேசி அமர்ந்த போது, திரெளபதி சபையோரைப் பார்த்து மீண்டும் முறையிட்டாள். "என் கேள்வியை ஆராய்ந்து எனக்கு மறுமொழி சொல்பவர்கள் யாருமே இல்லையா. பெரியோர்கள் இல்லாத இடம் சபையல்ல. தர்மத்தைக் கூறாதவர்கள் பெரியோர்கள் அல்ல. உண்மை அல்லாதது தர்மம் அல்ல. கபடம் சேர்ந்தால் அது உண்மையும் அல்ல. இந்தச் சாத்திரத்தை மனதில் வைத்து எனக்குப் பதில் சொல்லுங்கள். என்று அவள் வேண்டினாள்.
பீமனின் கோபம்
சபையில் மெளனம் நிலவியது. துச்சாதனன் அவள் கூந்தலைப் பற்றி மீண்டும் இழுத்தான். திரெளபதி ஆடை குலைந்து நின்றாள்.
திரெளபதியின் நிலைகண்டு பீமன் உள்ளம் கொதித்தான். தர்மபுத்திரரைப் பார்த்து அவன் கோபமாகப் பேசினான்.
"சூதாடுவதைப் பழக்கமாகக் கொண்டவர்களின் வீடுகளிலும் பணிப்பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் சூதாட்டத்தில் அவர்கள் கூட பந்தயமாக வைக்கப்படுவதில்லை. ஏனென்றால் சூதாட்டத்தையே பழக்கமாகக் கொண்ட அவர்கள் மனதில்கூட கருணைக்கு இடமிருக்கிறது.
நமது செல்வம் ஆயுதம், ராஜ்யம், உங்களுடைய
சகோதரர்களாகிய நாங்கள் எல்லாவற்றையும் நீர் சூதில் வைத்து
இழந்தபோதும் எனக்குக் கோபம் வரவில்லை. ஆனால் இப்போது
திரெளபதியையே பந்தயம் என்று நீர் வைத்தது மிகப் பெரிய 38

பாரதியாரும்பாஞ்சாலிசபதமும் 22 MAJači
அக்கிரமம் என்று நான் கருதுகிறேன். இதை என்னால் பொறுக்க முடியாது. உமது கைகள் இரண்டையும் நான் இப்போது எரிக்கப் போகிறேன்.”
இவ்வாறு கூறிய பீமன், தன்தம்பி சகாதேவனைப் பார்த்து "சகாதேவா! நீ போய் எரியும் நெருப்பைக் கொண்டுவா” என்று கட்டளையிட்டான். சபையோர் திகைத்தார்கள்.
அர்ஜினன் குறுக்கிட்டு "பீமசேனா! இம்மாதிரி பேச்சுக்களைப் பேசுவது உன்னுடைய இயல்பல்ல. கொடியவர்களான நமது எதிரிகள் உனக்கு தர்மத்தின் மீது இருந்த மரியாதையை அழித்து விட்டார்கள். அவர்கள் நோக்கம் நிறைவேறுகிற மாதிரி நடந்து கொள்வது தான் உன்னுடைய எண்ணமா? மூத்தவரை எதிர்த்துப் பேசுவது உனக்குத் தகுதியுடைய செயலா? சத்திரியன் பிறரால் அழைக்கப்பட்ட பந்தயத்திற்கு இணங்குவது அரச தர்மம். அதனால் நமக்கு இகழ்வில்லை. தர்மத்தை அனுஷ்டித்து நடந்து கொள்' என்று கூறினான்.
விகள்ணன் கேள்வி
அப்போது துரியோதனனின் தம்பிமார்களில் இளையவ னாகிய விகள்ணன் எழுந்து, சபையோரைப் பார்த்துப் பேசினான்.
அரசர்களே! இங்கே திரெளபதி சொன்ன சொல்லுக்குப் பதில் கூறுவது உங்கள் கடமை. நம்மில் மூத்தவர்களாகிய பீஷ்மரும், திருதராட்டிர மன்னரும் இது பற்றி முடிவான கருத்துக் கூறாமல் இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது. சகல சாத்திரமும் அறிந்த விதுரரும் திரெளபதியின் கேள்விக்கு மறுமொழி கூறவில்லை. எல்லா மன்னர்களுக்கும் ஆசாரியர்களாகிய துரோணரும் சரி, கிருபரும் சரி, பிராம்மனோத்தமர்கள், அவர்களும் எதுவும் பேசவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது.
புருஷர்களில் சிறந்தவர்களே! வேட்டையாடுவது, சூதாடுவது, சிற்றின்பத்தில் பற்று வைப்பது, இவையெல்லாம் 39

Page 23
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2en:Jaశ
மன்னர்களுக்குத் துக்கத்தை விளைவிப்பவை என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.
தர்மபுத்திரர் இங்கே திரெளபதியைச் சூதில் பந்தயமாக வைத்ததும், இழந்ததும், உங்களால் ஏற்கப்படுகிறதா? இந்தத் திரெளபதி பாண்டவர் ஐவருக்கும் உரியவள். அப்படியிருக்க அவளை சூதில் பந்தயமாக வைத்து ஆட தர்ம புத்திரருக்கு தனிப்பட்ட உரிமை ஏது? அதுவுமின்றி தன்னைத் தோற்ற பிறகு, தருமருக்குத் தன் மனைவியைத் தோற்கும் உரிமை உண்டா?
இதைத் தவிர, திரெளபதியைப் பந்தயமாக்க விரும்பி, சகுனிதான் முதலில் அவள் பெயரைக் கூறி அவளை வைத்து ஆடுமாறு தர்மபுத்திரருக்குக் கூறினான். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது, திரெளபதி இங்கே வெல்லப்பட்டவளாகி விட்டாள். என்று நான் கருதவில்லை. இங்கே உள்ள அரசர்கள் அனைவரும் தாங்கள் அறிந்தவரையில் எது நியாயமோ அதைக் கூறவேண்டும்.”
இவ்வாறு விகர்ணன் பேசியவுடன் சபையோரில் பலர் விகள்ணனைப் புகழ்ந்து, சகுனியை இகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். இப்படிப் பலரும் ஒரே சமயத்தில் பேச, சபையில் பேரோசை உண்டாயிற்று.
கர்ணன் பதில்:
இதைக்கண்டு கோபமுற்ற கர்ணன் எழுந்து, கைகளை உயர்த்தி, சபையோரின் கோஷத்தை அடக்கினான். பிறகு கர்ணன் விகள்ணனைப் பார்த்து, கோபமாகப் பேசத் தொடங்கினான்.
"விகள்ணா! நீ பேசியது போதும், அரணிக் கட்டையைத் தேய்த்தால் உண்டாகும் நெருப்பு, அந்தக் கட்டையையே அழித்து விடும். அதுபோல், நீ எந்தக் குலத்தில் பிறந்தாயோ அதையே அழிக்க முற்படுகிறாய். திரெளபதி கேள்வி கேட்டும், சபையோர் பதில் கூறாமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அவள் முறையாக
40

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் . 2وشيد النصصعيدي
வெல்லப்பட்டிருக்கிறாள் என்று இங்குள்ள அரசர்கள் கருதுகிறார்கள். அதுதான் அர்த்தம்.
ஆனால் ஒன்றுமறியாத சிறுவனாகிய நீ, எல்லாம் அறிந்த பெரியவன்போல் இங்கே பேசத் துணிந்து விட்டாய். பாண்டவர்களில் மூத்தவனாகிய தர்மபுத்திரன், தன் உடமை எல்லாவற்றையும் சூதில் பந்தயமாக வைத்தான். தன்னைச் சார்ந்தது எல்லாவற்றையும் வைத்து விட்ட நிலையில், அதில் திரெளபதிக்கு மட்டும் விலக்கு உண்டு என்று நீ நினைப்பது என்ன நியாயம். திரெளபதியும் தர்மனின் உடமைகளில் அடங்கியவள் தானே.
திரெளபதியைப் பந்தயமாக வைக்கும் யோசனையை சகுனி சொன்னான் என்பது உண்மை. ஆனால் இதை இங்கே தர்மபுத்திரனும் ஏற்றான் அல்லவா. அதன் பிறகு அதில் எவ்வாறு குற்றம் காண்கிறாய். ஒற்றை ஆடையுடன் இவள் சபைக்கு அழைத்து வரப்பட்டது அதர்மம் என்று நினைக்கிறாயா? அதுபற்றி என் உறுதியான கருத்தைக் கேள். ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தான் என்பது சாத்திரங்களில் வகுக்கப்பட்ட விதிமுறை. ஆனால் இந்த திரெளபதியோ ஐவருக்கு உடமையானவள், ஆகையால் இவள் வேசி என்பது என் கருத்து.
அப்படியிருக்கையில், இவள் சபைக்கு இழுத்து வரப்படுவதோ, ஒற்றை ஆடையுடன் இவளை இங்கே கொண்டு வருவதோ, அல்லது ஆடையே இல்லாமல் கொண்டு வருவதோ எதுவுமே அதிர்ச்சிக்குரிய காரியங்கள் அல்ல. திரெளபதி உட்பட இங்கே ஜெயிக்கப்பட்டவை அனைத்தும் சகுனியினால் தர்மமான முறையிலேயே ஜெயிக்கப்பட்டிருக்கின்றன’
இப்படிக் கர்ணன் கூறியவுடன் சபையோர் திகைத்திருக்க, கர்ணன் மீண்டும் துச்சாதனனைப் பார்த்து "துச்சாதனா! இந்த விகர்ணன் பேச்சுப் பற்றி நீ கவலைப்படவேண்டியதில்லை. பாண்டவர்கள் மார்பின் மேல் அணிந்திருக்கும் ஆடைகளையும் திரெளபதியின் ஆடைகளையும் அவிழ்த்து இங்கே கொண்டு வா” என்று கூறினான்.
41

Page 24
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் .2وشيد النصصعيد
கர்ணன் இத்தகைய கொடுரமான ஒரு கட்டளையை இடுவதற்கு என்ன காரணம், கர்ணனைப் பெரும் வள்ளல் என்றும், அவனது நற்பண்புகளைப் பலவாறாகப் பெரிதுபடுத்தி வியந்தும், அவனுக்கு பாரதக் கதையின் கதாநாயகன் என்ற அந்தஸ்தை வழங்கக்கூடிய வகையில் அவனை உயர்த்தியும் சொல்லுகின்ற வியாசரே, கர்ணன் இத்தகைய இழிகுணம் படைத்தவன் என்று சொல்லிவிட்டாரே, என்ற ஆதங்கம் பாரதத்தைப் படிப்பவர்கள் மத்தியில் உண்டு.
பாரதத்தை தமிழில் விருத்தப் பாக்களில் பாடிய வில்லிபுத்தூராழ்வார். கர்ணனைத் தவிர்த்து துரியோதனனே திரெளபதியின் ஆடையை அவிழ்த்துத் தரும்படி கட்டளை இட்டதாக மாற்றிப் பாடியிருக்கிறார். இது பற்றி பின்னர் ஆராய்வோம்.
கர்ணனுக்கு பாண்டவர்களிலே, அருச்சுனன் மேல் தீராத விரோதம் இருந்தது. அருச்சுனனைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் அவனது இரத்தத்திலேயே ஊறி இருந்தது. அதனை அவன் யுத்தத்தின் மூலமே தீர்த்துக் கொள்ள விரும்பினான்.
அதேவேளை கர்ணனுக்கு திரெளபதியின் மேலும் தீராத விரோதம் இருந்தது. அது யுத்தத்தால் தீர்க்கப்பட முடியாதது. தன்னை அவமானப்படுத்திய திரெளபதியைத் தான் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனுள்ளத்தில் குடிகொண்டிருந்தது.
கர்ணனுக்குத் தன் சாதியைச் சொல்லி தேரோட்டி மகன், சூதன் மகன் என்று யாராவது இழிவாகப் பேசினால் பொறுக்க மாட்டான். சூதர் என்றால் அடிமை என்றும் பொருள். கர்ணன் யுத்தத்தில் இறந்து போகும் வரை பல சந்தர்ப்பங்களில் பலராலும் இழிந்த சாதிக்காரன் என்று அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான். இறுதியாகக் கர்ணனை அவமானப்படுத்தியவன் சல்லியன். கர்ணனுக்குத் தேரோட்டும்படி துரியோதனன் சல்லியனிடம் கேட்டபோது "தேரோட்டி மகனுக்கு நான் தேரோட்டுவதா' என எள்ளி நகையாடிப் பரிகசித்து அவமானப்படுத்தினான்.
42

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ெ Mad
ஆனால் அப்போது, தான் குந்தி தேவியின் மூத்த மகன் என்று கர்ணன் அறிந்திருந்ததால், சல்லியனை ஒன்றும் செய்யவில்லை. கர்ணன் முதன் முதல் அவமானப்படுத்தப்பட்டது பெரியதொரு சபையில்,
பாண்டவ கெளரவ வீரர்களது வித்தை அரங்கேற்றப்பெருவிழாவின்போது, அருச்சுனனுக்கு நிகரான வீரத்திறமையைக் காட்டிய கர்ணன், அருச்சுனனைத் தன்னோடு சண்டை செய்ய அறைகூவி அழைத்தபோது, கிருபாச்சாரியாரால் அவமானப்படுத்தப்பட்டான்.
"அடிமையாகிய தேரோட்டியின் மகனாகிய நீ, அரசாளும் மன்னர் குலத்து இளவரசனோடு யுத்தம் செய்வதா" என்ற வகையில் கிருபாச்சாரியாரால் அவமானப்படுத்தப்பட்டான்.
அந்தப் பெரிய சபையில், புகழின் உச்சியில் நின்ற கர்ணன், அவமானப்படுகுழியில் விழுந்தான். அந்த அவமானத்தை அடையக் காரணமாக இருந்த, தனக்கு நிகரான வில்வீரனான அருச்சுனனை வென்று, கொன்று, பழி தீர்ப்பது கர்ணனின் நோக்கமாக இருந்தது.
அந்த அவமானப்பயங்கரப் படுகுழியிலிருந்து தன்னை மீட்டு, தனக்கு அங்க தேச அதிபதியாக முடிசூட்டி ஆதரித்து அங்கீகரித்த துரியோதனனுக்கு, உயிர் கொடுப்பதே தனது கடமை என்று உறுதி பூண்டான் கர்ணன்.
இவற்றோடு இன்னொன்றும் அழியாத வடுவாகக் கர்ணனின் உள்ளத்தில் பதிந்திருந்தது. பாஞ்சாலியின் (திரெளபதி) சுயம்வரத்தின்போது அது நடந்தது. இது பற்றி வியாசர் கூறுவதைப் LustsT’ (BLITTLb.
கர்ணன் பட்ட அவமானம்
திரெளபதியின் சுயம்வர மண்டபம் நிரம்பி வழிந்தது. துருபதன், தான் நடத்திய வேள்விமூலம் பெற்ற திரெளபதியை, அருச்சுனனுக்கே மணம் முடிக்க வேண்டுமென்ற ஆசையுடை யவனாக இருந்தான்.
43

Page 25
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2وشيد النصصعيد
அரக்கு மாளிகை எரிந்தபோது பாண்டவர்கள் அதில் மடிந்து போகவில்லை என்று ஒரு வதந்தி அவன் காதுகளை எட்டியிருந்தது. ஆகையால், அருச்சுனன் வந்து அந்தச் சுயம்வரத்தில் கலந்து கொண்டு, திரெளபதியை மணந்து கொள்வான் என்ற ஒரு நம்பிக்கை அவன் மனதில் இருந்தது.
சுயம்வரத்தில் திரெளபதியை மணம் செய்து கொள்ளும் தகுதியைப் பெற நிறைவேற்ற வேண்டிய ஒரு நிபந்தனையை துருபதராஜன் விதித்திருந்தான்.
மிகவும் உயர ஒரு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம். அந்தச் சக்கரம் சுழன்று கொண்டு இருக்கும்போதே, ஐந்து அம்புகளால் அந்தக் குறியை வீழ்த்தி, சக்கரத்தினூடே அதைக் கீழே தள்ள வேண்டும் என்பது. இதற்காகவே ஒரு விசேடமான வில்லை துருபதன் தயாரித்திருந்தான். அதில் நாணேற்றுவதே மிகவும் கடினம்.
இப்படிப்பட்ட ஒரு நிபந்தனையை விதித்தால், இதை அருச்சுனனைத் தவிர வேறு யாராலும் நிறைவேற்ற முடியாது என்று துருபதன் நம்பிக்கொண்டிருந்தான். சுயம்வர சபை கூடியது. பற்பல தேசங்களின் மன்னர்கள், அரச குமாரர்கள், தேவர்கள் முதலானோர் சுயம்வரத்திற்கு வந்திருந்தனர்.
திரெளபதியின் சகோதரன் திருஷ்டத்துய்ம்னன், நிபந்தனையை அறிவித்தான். கூடியிருந்த மன்னர்களையும் மற்றவர்களையும் திரெளபதிக்கு அறிமுகம் செய்தான். நிபந்தனையை விபரித்தான். பல மன்னர்கள் முயற்சி செய்து வில்லில் நாணேற்ற முடியாமல் வில்லடிபட்டுக் கீழே விழுந்தார்கள். துரியோதனன் முதலானவர்களும் இவ்விதமே விழுந்தார்கள்.
அந்த நேரத்தில் கள்ணன் எழுந்து தன்னுடைய திறமையைப் பரிசோதிக்க முடிவு செய்தான். அவன் வில்லிலே நாணேற்றிவிட்டான். வில்லும் நானுமாகச் சேர்ந்து வட்டமாக வளைந்து நின்றது. சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக தாங்கள் ஏற்கனவே
44

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2an4Jaశ
தரித்திருந்த பிராமண வேடத்திலேயே வந்திருந்த பாண்டவர்களும் இதைப் பார்த்தனர்.
கர்ணன் இலக்கை அடித்து விடுவான் என்றும், திரெளபதியை அவன்தான் மணக்கப் போகிறான் என்றும் அவர்கள் நம்பியே விட்டனர். சூரியனே அங்கு வந்து விட்டது போல் தேஜஸோடு விளங்கிய கர்ணன், இலக்கை நோக்கி அம்பைச் செலுத்த இருந்த நேரத்தில் திரெளபதி "ஒரு தேரோட்டி மகனை நான் ஒரு போதும் மணக்க மாட்டேன்” என்று கூறிய வார்த்தைகள், கர்ணன் காதுகளில் விழுந்தன. அவன் வெறுப்புற்று, விரக்தியுடன் சிரித்துக் கொண்டே வில்லைக் கீழே போட்டு விட்டு, தன் இடத்திற்கே மீண்டும் சென்று 6'LT66.
பாஞ்சாலி, மன்னர் சபையில் மதிப்பு மிக்க நிலையில் இருந்த தன்னைத் தன் சாதியின் பெயரால் அவமானப்படுத்தி விட்டாள் என்ற கடுங்கோபம் கர்ணனுக்கு இருந்தது. சபை மரியாதை கருதி அந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு தோல்வியுற்றவன் போல தன் இருப்பிடத்தை அடைந்திருந்தான் கர்ணன். அழியாத வடுவாக அந்த அவமானம் அவனுள்ளத்தில் ஆழ வேரூன்றிப் பதிந்திருந்தது. அதற்குப் பழி தீர்க்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினான் கர்ணன்.
துரியோதனன் பளிங்கை நீரென்றும், நீரைப் பளிங்கென்றும் ஏமாந்து, தடுக்கி விழுந்தபோது, பாஞ்சாலி தனது தோழியர்களோடு சேர்ந்து சிரித்து அவமானப்படுத்தியதாக, துரியோதனன் தனது தந்தை திருதராட்டிரனிடம் கூறியதை முன்பே பார்த்திருக்கிறோம்.
துரியோதனனுக்கு திரெளபதியை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் திரெளபதியின் ஆடைகளை அரச சபையில் களைந்து அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அவளை அடிமைப்படுத்தி தன் வீட்டு வேலைக்காரியாக ஆக்கிப் பழி வாங்கும் எண்ணமே இருந்தது.
கர்ணன் மனதில் பதிந்திருந்த அழியாத ஆறாத அவமான
45

Page 26
பாரதியாரும்பாஞ்சாலிசபதமும் .2وهولنصصيد
வடுதான், பாஞ்சாலியின் துகில் உரிப்பு நிகழ்ச்சிக்கு அத்திவாரமாகியது.
அடிமைகள் தங்களை அடிமை கொண்டவர்களின் முன்னிலையில் அங்க வஸ்திரம் எனப்படும் மேலாடையை அணிவதில்லை. அடிமைப்பட்டவர்கள் அங்க வஸ்திரம் அணிவதை அவர்களை அடிமை கொண்டவர்கள் பொறுத்துக் கொள்வதுமில்லை.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் மேற்சட்டை போடுவதைக் கூட உயர்ந்த சாதியினர் அனுமதிக்கவில்லை. அணிய முற்பட்டவர். களைத் துன்புறுத்தினர். மேற்சட்டையைக் கிழித்தெறிந்தனர் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.
அடிமைப்படுத்தப்பட்ட பாண்டவர்கள் தங்களை அடிமைப்படுத்தியவர்களாகிய கெளரவர்கள் முன்னிலையில், மேலாடைகளை அணிந்திருந்தனர். கர்ணன் எழுந்த மானத்திலே தான் அந்த உத்தரவை விடுத்தான்.
துச்சாதனா இந்த விகள்ணன் பேச்சுப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. பாண்டவர்கள் மார்பின் மேல் அணிந்திருக்கும் ஆடைகளையும், திரெளபதியின் ஆடைகளையும் அவிழ்த்து இங்கே கொண்டு வா’ என்று கூறினான்.
கர்ணன் இவ்வாறு கூறியதைக் கேட்ட பாண்டவர்கள், தங்கள் மேலாடைகளைத் தாங்களாகவே கழற்றி எறிந்தார்கள். துச்சாதனன் திரெளபதியின் ஆடையைப் பலாத்காரமாக இழுத்து அவிழ்க்கத் தொடங்கினான்.
திரெளபதி 'ஓ' என்று கதறி கிருஷ்ணரை வேண்டினாள். "கெளரவர்கள் என்னும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் என்னைக் கரை சேர்த்து விடு. இந்தச் சபை நடுவில் துன்பப்பட்டு, உன்னைச் சரணடையும் என்னைக் காப்பாற்று" என்று வேண்டி முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.
46
 

பாரதியாரும்பாஞ்சாலிசபதமும் 22 n^3}àế1
அப்போது திரெளபதியின் ஆடையைத் துச்சாதனன் இழுக்க இழுக்க கிருஷ்ண பரமாத்மாவின் அருளினால் அவளுக்குப் பல நிறங்கள் கொண்ட ஆடைகள் மேலும் மேலும் உண்டாகிக் கொண்டே இருந்தன. துச்சாதனன் களைத்துப்போய் உட்கார்ந்து விட்டான்.
பீமன் சபதம்
பீமன் எழுந்து பெருங் குரலோடு ஒரு சபதம் செய்தான். "உலகத்தில் உள்ள சத்திரியர்கள் யாரும் இதுவரை செய்யாததும் இனி யாரும். செய்யப் போகாததுமான ஒரு சபதத்தை நான் செய்கிறேன். கெட்ட புத்தி உடையவனும், இழிவானவனுமாகிய இந்தத் துச்சாதனன் மார்பை, யுத்தத்தில் பிளந்து, இவன் இரத்தத்தை நான் குடிக்காமல் விட்டால், என் முன்னோர்கள் சென்ற நல்ல உலகத்திற்கு நான் போகாமல் இருக்கக் கடவேன்.”
இந்தச் சபதத்தைக் கேட்ட சபையோர் திகைத்தனர். விதுரர் எழுந்து பல நியாயங்களையும் சொல்லி திரெளபதியின் கேள்விக்கு தகுந்த பதில் சொல்லும்படி வேண்டினார். சபையோர் திரெளபதியின் கேள்விக்குப் பதில் கூறவில்லை. கர்ணன் துச்சாதனனைப் பார்த்து "பணிப்பெண்ணாகி விட்ட இந்தத் திரெளபதியை வீட்டிற்கு அழைத்துப் போ” என்று உத்தரவிட்டான். திரெளபதியை சபை நடுவே துச்சாதனன் மீண்டும் இழுத்தான்.
திரெளபதி மீண்டும் தான் முதலில் கேட்ட கேள்வியையே கேட்டு "நான் ஜெயிக்கப்பட்டவளா, ஜெயிக்கப்படாதவளா, என்பது பற்றி உங்கள் கருத்தைக் கூறுங்கள்" என்று சபையில் கூடியிருந்த மன்னர்களைப் பார்த்து மன்றாடினாள்.
பீஷ்மர் எழுந்து தகுந்த பதில் சொல்ல முடியாதவராகத் தடுமாறினார். "மேன்மை பொருந்திய பெண்ணே தர்மத்தின் பாதையைப் பற்றி உனக்கு நான் முன்னமேயே சொன்னேன். அந்த சூட்சுமத்தை அறிந்து இந்த விஷயத்தில் விளக்கம் கூறுவது மகாத்மாக்களாலும் முடியாது. ஆனால் நடைமுறையில் பலம் பொருந்திய மனிதன் எது தர்மம் என்று கூறுகிறானோ, அது தான்
47

Page 27
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 9a Wஆக்
எல்லோராலும் ஏற்கப்படும் தர்மமாகிறது. உன்னுடைய கேள்வியில் அடங்கிய விஷயம் மிகவும் சிக்கல் நிறைந்திருப்பதால் என்னால் அதற்கு நிச்சயமான பதிலைக் கூறமுடியவில்லை. இத்தனை கொடிய நிகழ்ச்சி இங்கு நடந்திருக்கக் கூடாது.
துரோணர் போல் தர்மம் அறிந்த பெரியவர்கள், உயிர் போனவர்கள் போல் இங்கே வீற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் உன் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவன் தர்ம புத்திரனே, என்பது எனது அபிப்பிராயம். நீ சூதில் வெல்லப்பட்டவளா இல்லையா என்பது பற்றித் தன் கருத்தை அவன் கூறட்டும்.”
தர்மபுத்திரர் மெளனம் சாதித்தார். அப்போது துரியோதனன் சிரித்துக் கொண்டே பேசினான். "உன் கேள்விக்கு உன்னுடைய கணவன்மார்களே பதில் சொல்லட்டும். உன்னை இழக்கும் உரிமை தர்மபுத்திரனுக்கு இல்லை என்று பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், ஆகியோர் இந்தச் சபையினர் முன்னே சொல்லட்டும். அப்படி அவர்கள் கூறினால், நீ பணிப்பெண்ணாகும். நிர்ப்பந்தத்தில் இருந்து விடுபடுவாய். தர்மபுத்திரர் உனக்கு அதிகாரி இல்லை என்று மற்ற நால்வர் கூறினால் உனக்கு விடுதலை.”
இதனைக் கேட்ட பீமன் எழுந்து பேசினான். "தர்மபுத்திரர் எங்கள் எல்லோருக்குமே அதிகாரிதான். அந்த நிலை இல்லாமல் போயிருந்தால் இந்தக் கெளரவ வம்சத்தாரை இங்கேயே நான் அழித்திருப்பேன். அவர் தன்னையே தோற்றவராகக் கருதும் போது நாங்களும் அவரால் தோற்கப்பட்டவர்கள் தான்.”
உடனே கர்ணன் எழுந்து திரெளபதியைப் பார்த்துப் பேசினான். “பெண்ணே அடிமை, அடிமையின் மகன், பிறருக்கு உட்பட்ட பெண், இம் மூவரும் பொருள் இல்லாதவர்கள். உன் கணவர்களோ அடிமைகளாகி விட்டார்கள். நீ உள்ளே போய் துரியோதனனின் பணிப் பெண்கள் கூட்டத்தில் சேருவாயாக. பிறகு நீ என்ன செய்ய வேண்டு மென்பது அங்கே கட்டளையிடப்படும்.
பணிப்பெண்ணாகிவிட்ட பிறகு, உன் இஷடப்படி
48
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 22MJaశ
புருஷர்களைச் சேர்த்துக் கொள்வது உன் உரிமையாகிறது. ஆகையால், எந்தப் புருஷனை அடைந்தால் சூதாட்டத்திலே பந்தயமாகி அடிமையாக வேண்டியநிலை வராதோ, அப்படிப்பட்ட புருஷனை நீயாகத் தேர்வு செய்து கொள். உன்னைத் தோற்று விட்டவர்கள் இனிமேல் உன் கணவர்கள் அல்ல”
இப்படிக் கர்ணன் பேசிய பின்பு துரியோதனன் தர்மபுத்திரரைப் பார்த்து “உன் சகோதரர்கள் உன் பேச்சை எதிர்பார்த்து நிற்கிறார்கள், திரெளபதி எங்களால் ஜெயிக்கப்பட்டவளா, ஜெயிக்கப்படாதவளா? அவள் கேள்விக்கு நீயாவது பதில் சொல்” என்று கேட்டான்.
இப்படிப் பேசிய துரியோதனன், வீமனை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய இடது தொடையின் மீதிருந்த ஆடையை விலக்கி அதைத் திரெளபதி பார்க்குமாறு காண்பித்தான்.
திரெளபதியைத் தன் இடது தொடையிலே வந்து அமருமாறான சைகை அது என்பதை உணர்ந்த பீமன் கடுங்கோபம் கொண்டு "துரியோதனா உன்னுடைய இந்தத் தொடையை என் கதையினால் பிளந்து, யுத்தத்தில் உன்னை மாய்ப்பேன்’ என்று மீண்டும் ஒரு சபதம் செய்தான்.
விதுரர் மீண்டும் சபையோரிடம் நியாயம் கூறும்படி முறையிட்டார் “தன்னை இழந்த பிறகு, தர்மபுத்திரனுக்கு திரெளபதியை இழக்கும் உரிமை இல்லை" என்று அவர் வாதாடினார். துரியோதனனோ, திரெளபதியை இழக்கும் உரிமை தர்மபுத்திரனுக்கு இல்லை என்று தர்மபுத்திரரின் தம்பிமார்கள் கூறி விட்டால், அவளை விடுவிப்பதாக மீண்டும் கூறினான். விதுரர் திருதராஷ்டிரனிடம் முறையிட்டார். திருதராஷ்டிரனோ மெளனம் சாதித்தான்.
அப்போது வீமன் "துரியோதனனை நான் கொல்வேன். அருச்சுனன் கர்ணனைக் கொல்வான். சூதில் தேர்ந்த சகுனியை சகாதேவன் கொல்வான். யுத்தத்தில் தெய்வங்கள் இதைச் சாதித்துத்
தரும்” என்று சபதம் செய்தான்.
49

Page 28
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 32ంగిwaశ
அருச்சுனன் “உன் உத்தரவினால் கர்ணனை நான் கொல்வேன். என்னுடைய சபதம் பொய்யானால் சந்திரன் தனது குளிர்ச்சியை இழக்கும். சூரியன் ஒளி இழப்பான். இமயமலை தன் இடத்தை விட்டு நகர்ந்து விடும்.” என்று சபதம் இட்டான்.
சகாதேவனும் சகுனியை வெல்வதாகச் சபதம் செய்ய, நகுலன் சகுனியின் மகனையும், மற்ற அரசர்களையும் வெல்வதாகச்
சபதம் செய்தான். அந்தச் சபதங்களை உறுதி செய்து சபதமிட்டாள் திரெளபதி.
வியாசர் பாரதத்தின் படி பாஞ்சாலி சபதம் பெரிதுபடுத்தப்படவில்லை. பீமனின் சபதமே முக்கிய அம்சம் பெறுகிறது. இந்தச் சபதங்களின்படி துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி ஆகியோர் கொல்லப்படுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இனி பாஞ்சாலி சபதம் பற்றி வில்லிபுத்தூராழ்வார் தனது பாரதத்தில் என்ன சொல்கிறார் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
வில்லி பாரதம்
தமிழில் முதன் முதல் பாரதக் கதையைப் பாடியவர் பெருந்தேவனார். அவரது பாரதம் பெருந்தேவனார் பாரதம் என அழைக்கப்படுகிறது. வெண்பா யாப்பில் பாடப்பட்ட இந்நூல் “பாரத வெண்பா' என்றும் “பெருந்தேவனார் பாரத வெண்பா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூலில் சில பாடல்களே இப்போது கிடைத்துள்ளன. அவற்றில் பாஞ்சாலி சபதம் பற்றிய தகவல்கள் இல்லை.
வில்லிபுத்தூராழ்வார் பாடிய வில்லி பாரதமே தமிழில்
சிறந்த பாரதமாகப் போற்றப்படுகிறது. இங்கே வில்லி
பாரதத்திலிருந்து வியாசரோடு மாறுபட்ட அவர் கருத்துக்களை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.
வியாசரின் மூலப் பாரதத்தில் துச்சாதனன் திரெளபதியை
அவளது கூந்தலை தனது கையினால் பிடித்து இழுத்துச் சென்றதாக 50
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيدانصصعيدي
இருக்க, வில்லி பாரதத்திலே துச்சாதனன் தனது கையிலிருந்த தாமரைச் செண்டினால் திரெளபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்துச் சென்றதாக இருக்கிறது.
தண்டார் விடலை தாயுரைப்பத்
தாய்முன் அணுகித் தாமரைக்கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
தீண்டான் ஆகிச் செல்கின்றான். வண்டார் குழலும் உடன் குலைய
மானங் குலைய மனங்குலையக் கொண்டார் இருப்பர் என்றுநெறிக்
கொண்டாள் அந்தக் கொடியாளே (வில்லி-219)
துச்சாதனன் தன் தாயின் வீட்டில் காந்தாரியின் அந்தப் புரத்தில் இருந்த பாஞ்சாலியை சபைக்கு வரும்படி அழைக்க, அவள் நியாயம் கேட்டு அழுது காந்தாரியின் பக்கம் செல்கிறாள். காந்தாரி பாஞ்சாலியை சபைக்குச் சென்று வரும் படி கூற, துச்சாதனன் தனது கையிலே இருந்த தாமரைச் செண்டால் அவளது கூந்தலைச் சுற்றிப் பிடித்து, அவளது கூந்தலை வெறுங்கையால் பிடிக்காது இழுத்துச் சென்றான் என்கிறார் வில்லிபுத்துாராழ்வார்.
பாஞ்சாலியின் கூந்தலைத் துச்சாதனன் கையால் பிடித்து இழுத்தான் என்று சொல்ல விரும்பாத வில்லிபுத்துாராழ்வார், இதற்கு முன் பாஞ்சாலியின் கையை தன் கையால் பிடித்து இழுத்தான் என்றும் அப்போது பாஞ்சாலி காந்தாரியின் பக்கத்திற்கு ஓடினாள் என்றும் கூறுகிறார்.
தலத்துக் கியையாது ஐவரையுந்
தழுவித் தழுவித் தனித்தனியே
நலத்துப் பொய்யே மெய்போல
நடிக்குஞ் செவ்வி நலனுடையாய்,
குலத்திற் பிறந்தாய் ஆமாகிற்
கூசாது என்பின் போதுகெனப்
பெலத்திற் செங்கை மலர்திண்டிப்
பிடித்தான் சூழ்ச்சி முடித்தானே. (வில்லி-217)
51

Page 29
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் .2صعيدAوشيدت
"இப்பூமியில் உள்ளவர்களின் ஒழுக்கத்திற்கு மாறுபட்டு ஐவரை மணந்து, அந்த ஐந்து பேருடனும் முழுமையான திருப்தியுடன் சந்தோசமாக இருப்பது போல, பொய்யை மெய்யென நம்பும் வண்ணம் சிறப்பாக நடிக்கின்ற ஆற்றல் படைத்தவளே! நீ நல்ல குலத்திற் பிறந்தவளாக இருந்தால் கூச்சமில்லாது என் பின்னே வா என்று சொல்லிப் பலமாகத் தன் கையினால் சிவந்த தாமரை மலர் போன்ற பாஞ்சாலியின் கையைப் பிடித்தான். தான் எண்ணியதை முடித்தான்’ என்பது இப்பாடலின் பொருள்.
இங்கே “பெலத்திற் செங்கை மலர் தீண்டி” என்பது, பலமாக அவளது சிவந்த தாமரை மலர் போன்ற கையைப் பிடித்து என்றே பொருள் தருகிறது. கூந்தலை மட்டும் ஏன் கையால் பிடித்து
இழுத்தான் என்று அவர் சொல்லவில்லை என்பது புரியாதிருக்கிறது.
கூந்தல் நிலத்திலே புரள பாஞ்சாலியை தெருவிலே இழுத்து வருகிறான் துச்சாதனன் என்று துச்சாதனனின் கொடுமையைச் சொல்கிறார் வில்லி.
தாழும் பெரிய கரியகுழல்
தாரோடு அலையத் தழீஇக்கொண்டு
வாழும் சுரும்பு சுழன்றரற்ற
மண்மேல் இழுத்து வருகின்றான். (வில்லி-220)
எனவே பாஞ்சாலியின் கூந்தலை துச்சாதனன் கையால் பிடித்து இழுக்கவில்லை, தாமரைச் செண்டால் சுற்றி இழுத்து வந்தான் என்று சொல்கின்ற பாடல், பாட பேதமாக அல்லது இடைச் செருகலாக இருக்கலாம்.
இராவணன் சீதையைக் கைகளால் தொட்டுத் தூக்கினான் என்பதைச் சொல்ல விரும்பாத கம்பர், பர்ணசாலையோடு தூக்கிச் சென்றான் என்று கூறியிருப்பது போல, வில்லிபுத்தூராழ்வாரும் சொல்ல விரும்பி, தாமரைச் செண்டினால் கூந்தலைப்பற்றி இழுத்தான் என்று சொல்லி இருக்கிறார் எனக் கருதினால், துச்சாதனன் தனது
52
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் DہمیشہnnشJانہیط
கையினால் பாஞ்சாலியின் கையைப்பிடித்து இழுத்தான் என்று சொல்லப்பட்ட இரு பாடல்களும் பொருத்தமில்லாதவையாகிவிடும்.
“பெலத்திற் செங்கை மலர் தீண்டி” என ஒரு பாடலிலும் “சிலைவாய் அணங்கை அவன் தீண்ட” என அடுத்த பாடலிலும் வருபவை நோக்கத் தக்கவை.
வெள்ளியம்பலத் தம்பிரான் என்பவர் பல பாடல்களைப் பாடி, வில்லி பாரதத்தில் இடைச் செருகல் செய்தார் என்பதும், அவை வெள்ளிப் பாடல்கள் என வழங்கப்படுகின்றன என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.
பாஞ்சாலி நீதி கேட்டு சபையில் அழுது புலம்பி நிற்கும் போது, துரியோதனன் துச்சாதனனைப் பார்த்து பாண்டவர்களின் மேலாடைகளையும், திரெளபதியின் சேலையையும் களையும்படி கட்டளை இடுகின்றான். என்கிறார் வில்லி.
என்னவெகுண் டிடுகின்ற வெல்லைதனில்
எழுஉறழ்தோள் இராச ராசன் தன்னனைய கொடுங்கோபத் தம்பியை, இன்று
உம்பிதனைத் தக்கோன் என்ற மன்னவையின் எதிரேஇம் மானமிலா
ஐவரையும் வழக்கு வார்த்தை சொன்னகிளி மொழியினையுந் துகிலுரிதி
எனவுருமிற் சொன்னான் மன்னோ (வில்லி-244)
"கற்தூணுக்கு ஒப்பான தோள் படைத்த இராச ராசனாகிய துரியோதனன், தனக்கு ஒப்பான கொடிய கோபங் கொண்ட தம்பியாகிய துச்சாதனனைப் பார்த்து, இன்று உன் தம்பியாகிய விகர்ணனைத் தகுதி வாய்ந்த நீதிமான் என்று பாராட்டிய இந்த மன்னர் சபையில்,அவர்களுக்கு எதிரே, மானமில்லாத இந்த ஐவரையும், வழக்கு வார்த்தை பேசிய கிளி மொழியாளாகிய பாஞ்சாலியையும் துகிலுரிதி என இடி இடித்ததைப் போன்று கூறினான்’ என்பது மேற் காட்டிய பாடலின் திரண்ட பொருள்.
53

Page 30
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் نمصميهيلهJوشيد
வியாசர் கர்ணனே துகிலுரியக் கட்டளை இட்டதாகச் சொல்ல, வில்லிபுத்துராழ்வாரோ துரியோதனனே கட்டளை இட்டதாகச் சொல்கிறார்.
வியாசருக்கும் வில்லிபுத்துாராழ்வாருக்கும் இடைப்பட்ட காலத்தில் கர்ணனுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட மதிப்பு, வில்லிபுத்தூராழ்வாரையும் பாதித்திருக்கிறது. பரிதாபத்துக்குரிய பாத்திரமான கர்ணன் மேல் பழிபோட விரும்பாத வில்லிபுத்தூராழ்வார் துரியோதனன் மேலேயே பழியைப் போடுகிறார்
மகாபாரதத்தை ஆழமாகக் கருத்தூன்றிப் படித்த சுவாமி விபுலானந்தர், மகாபாரதக் கதைக்கு கர்ணனே கதாநாயகன் என்பார். வில்லிபுத்துராழ்வாருக்கும் கர்ணன்மேல் பெரும் விருப்பம் இருந்ததை வில்லி பாரதத்தின் பல இடங்களிலும் காணலாம். அவற்றில் ஓரிடத்தை இங்கே காட்டுகிறேன்.
திரெளபதியின் சுயம்வரத்தின் போது, திரெளபதியை சபைக்கு அழைத்து வந்து மன்னர்களைக் காட்டி அவர்களது செவிலித் தாயர் (வளர்ப்புத் தாயர்) அறிமுகஞ் செய்கின்றனர். அப்பொழுது அவர்கள் கர்ணனை அறிமுகஞ் செய்வதை வில்லிபுத்துாராழ்வார் பின்வருமாறு கூறுகிறார்.
பெண்மைக்கு இரதி எனவந்த
பெண்ணார் அமுதே பேருலகில் உண்மைக்கு இவனே வலிக்குஇவனே
உறவுக்கு இவனே, உரைக்குஇவனே திண்மைக்கு இவனே நெறிக்குஇவனே,
தேசுக்கு இவனே சிலைக்குஇவனே வண்மைக்கு இவனே கன்னன்எனும்
மன்னன் கண்டாய் மற்றிவனே
(ஆதி திரெள மாலை 39)
54
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் @೩enóà
“பெண்களிலே இரதி என்று சொல்லும் படியாக வந்திருக்கின்ற பெண்ணமுதே! இப் பெரிய உலகில் உண்மைக்கு ஒருவனென்றால் இவனைத்தான் சொல்லலாம். அதேபோல வல்லமைக்கு, உறவுக்கு, வார்த்தைக்கு, மனோவல்லமைக்கு, ஒழுக்கநெறிக்கு, அழகுக்கு, வில் ஆற்றலுக்கு, கொடைக்கு என யாவற்றுக்கும் இவனையேதான் சொல்ல முடியும்.” என கர்ணனை அறிமுகஞ் செய்கிறார்கள்.
செவிலித்தாயர் இப்படிப் பெருமையாகச் சொல்லி கர்ணனை அறிமுகஞ் செய்வதாக வில்லிபுத்தூராழ்வார் கூறிய போதும், வில்லிபுத்தூராழ்வாரின் கர்ணன் பற்றிய கருத்தும் இதுவே என்று கருதலாம்.
பாஞ்சாலியின் துகில், உரிய உரியப் பெருகியதைக் கண்ட யாவரும் ஆச்சரியப்பட்ட அந்த நேரத்தில், வீமன் கடுங்கோபங் கொண்டு தனது தண்டாயுதத்தில் கைவைத்து துரியோதனன் முதலான நூறு பேரையும் தன்னோடு போர் செய்ய வருமாறு அறை கூவுகிறான்.
அந்த நேரத்தில் துரியோதனன், துச்சாதனனைப் பார்த்து "பாஞ்சாலியைக் கொண்டு வந்து எனது மடியில் இருத்தி வை” எனக் கட்டளை இடுகிறான்.
வியாசரின் மூல நூலில் துரியோதனன் தனது இடது தொடையின் மேலிருந்த ஆடையை விலக்கி, இடது தொடையில் வந்தமரும் படி சைகை செய்தான் என்றே இருக்கிறது. வில்லிபுத்தூராழ்வார்
தந்தைவிழி இருள்போலத் தகுமனத்தோனும்
துச்சா தனனை நோக்கிப் பைந்தொடியைக் கொணர்ந்து இனியென்
மடியின்மிசை இருத்துகெனப் பணித்திட்டானே.
(வில்லி-253)
55

Page 31
||
|
|
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் DيجيديnنصJينتهيد
அடிமைப்படுத்துதல், அவமானப்படுத்துதல் என்பவற்றுக்கு மேலாக, பாலியல் துன்புறுத்தலாகவும் இச்செயல் கருதத்தக்கது.
இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று தன்னைத் திருமணம் செய்யும் படி வற்புறுத்தியதும் ஒருவகைப் பாலியல் துன்புறுத்தலே.
பாஞ்சாலியின் சாபம்
துரியோதனனின் கொடுமொழி கேட்ட பாஞ்சாலி கடுங்கோபமுற்று அவனுக்குச் சாபமிட்டாள்.
என்ற பொழுது அருந்ததிக்கும்
எய்தாத கற்புடையாள், இடியேறுண்ட வன்றலை வெம் பணிபோல
நடுநடுங்கி மாயனையு மறவாளாகிப் புன்றொழி லோன் யானிருக்கக்
காட்டியதன் தொடைவழியே புள்வாய்குத்தச் சென்றிடுக ஆருயிர் என்றுஎவரும்
வெருவுறச் சபித்திட்டாள் தெய்வமன்னாள்
(வில்லி-254)
“என்னை இருக்கும் படி காட்டிய தனது தொடையின் வழியே, துரியோதனனின் உயிர் பிரியட்டும்” எனச் சாபமிட்டாள். பாஞ்சாலி. இது பாஞ்சாலி சபதமல்ல. பாஞ்சாலியின் சாபம் என்றே சொல்லத் தக்கது.
இத்தோடு பாஞ்சாலி சபதமும் செய்கிறாள். “அரச சபைக்கு எனைக் கொணர்ந்து, அஞ்சாமல் என் கூந்தலையும் சேலையையும் பிடித்திழுத்து அரசர் முன்னிலையில் தகாத வார்த்தைகளையும் சொல்வோரை, யுத்தத்தில் தலையறுத்து புலால் நாறும் இரத்தம் வளிந்து போக, வெற்றி முரசு ஒலிக்கும் பொழுதேயல்லாமல் விரித்த கூந்தலை இனி எடுத்து முடியேன்” என்கிறாள்.
56

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ○ܝܶܣܣܘܝܟܐlܗܺܝܧ
“விரித்த கூந்தலை முடிக்க மாட்டேன்’ என்று பாஞ்சாலி சபதஞ் செய்ததாக வியாசர் கூறவில்லை. பாரதி இன்னும் விரிவாகச் சொல்கிறான். அதுபற்றி பின்பு பார்ப்போம்.
அரசவையில் எனையேற்றி அஞ்சாமல்
துகில்தீண்டி அளகந்தீண்டி விரைசெய்அளி இனம்படிதார் வேந்தரெதிர்
தகாதனவே விளம்புவோரைப் பொருசமரின் முடிதுணித்துப் புலால்நாறு
வெங்குருதி ஒழிய வெற்றி முரசறையும் பொழுதல்லால விரித்தகுழல் இனியெடுத்து முடியேனென்றாள்
(வில்லி-255)
பாஞ்சாலியைத் தொடர்ந்து வீமன் சபதஞ் செய்கிறான். துரியோதனனையும் அவனது தம்பிமாரையும் கொல்வேன். துச்சாதனனின் இரத்தத்தைக் கையால் அள்ளிக் குடிக்காமல் தண்ணீரைக் கையால் அள்ளிக் குடிக்க மாட்டேன் என்று கொடுமையான சபதஞ் செய்தான்.
வண்டாருங் குழல்பிடித்துத் துகிலுரிந்தோன். உடற்குருதி வாரி அள்ளி உண்டு ஆகம் குளிர்வதன்முன் இக்கரத்தாற்
புனல் உண்ணேன். (ബിന്റെ-257)
கர்ணனைக் கொல்வேனென அருச்சுனன் சபதஞ் செய்தான். நகுலன் சகாதேவன் ஆகியோரும் சபதஞ் செய்தனர். தருமன் மட்டும் சபதஞ் செய்யவில்லை.
இவ்வகையாக வில்லிபுத்துாராழ்வார், வியாசரோடு ஒட்டியும்
மாறுபட்டும், தனது பாரதத்தில் சூது போர்ச் சருக்கத்தை அமைத்திருக்கிறார்.
57

Page 32
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ெ2CVMAJPశ
பாரதியும் பாஞ்சாலி சபதமும்.
வியாசரின் பாரதத்தையே, தான் பின்பற்றுவதாகச் சொல்லித்தான், பாரதி பாஞ்சாலி சபதத்தைப் பாடியிருக்கிறான். பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் பாரதி பின்வருமாறு கூறுகிறான்.
"இந்நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்கள் உடையவனாகவும், சூதில் விருப்பமில்லாதவனாகவும், துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கிறேன். அவனும் மகனைப் போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோரும் உளர். எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதி விடலாம். அதாவது "கற்பனை திருஷ்டாந்தங்களில் எனது சொந்தச் சரக்கு அதிகம் இல்லை. தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி.”
இருப்பினும் பாரதி சம்பவங்களைச் சொல்லும் முறையிலும், கவிக் கூற்றாகத் தனது கருத்துக்களைச் சம்பவத்தினூடாக வலியுறுத் துவதிலும் , தனது உணர்ச்சியை அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது.
கதாபாத்திரங்களோடு சேர்ந்து புலவனாகிய பாரதியும் உணர்ச்சிப் பிளம்பாகவே ஆகிவிடுகிறான். தான் பாஞ்சாலி சபதத்தைப் பாட எடுத்துக் கொண்டதற்குரிய கருத்துக்களை வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில், பாரதி பாத்திரங்களை முந்திக் கொண்டு நிற்கிறான். வாசகன் அடைய வேண்டிய உணர்ச்சிக்கு மேலாக பாரதி தன் உணர்ச்சியைக் காட்டுகிறான் என்பதும் கவனிக்கத்தக்கது.
பாத்திரத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டின் மூலமும், கதைச் சம்பவங்களின் மூலமும் தான், வாசகனுக்கு உணர்வூட்ட வேண்டும். நேரடிப் போதனை மூலம் உணர்ச்சியூட்ட முயல்வது இலக்கியத்தின் தரத்தை குறைத்து விடக்கூடியது.
58

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9 ገሌö}amé
இருப்பினும் பாரதி இலக்கியத்தரம் குன்றாமல் தானும் தலை காட்டியிருப்பது பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது.
பாண்டவர்களின் இராசசூயயாகப் பெருமை பற்றிச் சகுனிக்குச் சொல்லிப் பொறாமைப்படும் போது துரியோதனன் சொல்கிறான்.
"நிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே! - எந்த நெறியினாலதூ செய்யினும் நாயென நீள்புவி துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை மாமனே! - வெறுஞ் சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணிவெலாம்.”
“பெரும் பணம் சம்பாதித்துள்ளவர்களை மனிதர்கள் பணிந்து வணங்குவார்கள் மாமனே! எந்த வகையில் பணம் சம்பாதித்திருந்தாலும் அதைப்பற்றிக் கவலை கொள்ளாது இந்தப் பூமியிலே வாழுகின்ற மக்கள் நாய் போலப் பாதங்களை நக்கி வணங்குவதைக் கண்டிருக்கிறாயல்லவா மாமனே! அறநூல்கள் நல்வழியில் பணத்தைத் தேடவேண்டு மென்று சொல்லியிருக்கின்ற முடிபெல்லாம் வெறும் பேச்சுக்கே.” எனத் துரியோதனன் சகுனிக்குச் சொல்கிறான்.
பாரதியின் காலத்தில் இவ்விழிநிலை கோலோச்சிய கோபத்தினால், துரியோதனனுக்கூடாக பாரதி, தன் கருத்தை ஆவேசமாக வெளிப்படுத்தியிருக்கிறான் என்றே எண்ணத் தோன்றுகிறது.
துரியோதனனும் சகுனியும் சேர்ந்து, திருதராட்டிரரின் மனதை மாற்றி, பாண்டவர்களைச் சூதாட அழைக்கும்படி செய்தார்கள்.
திருதராட்டிரன் தனது சகோதரனான விதுரனை அழைத்து, பாண்டவர்களைத் தமது புதிய மண்டபங்காண வரும்படி அழைக்கும்படியும், அதே நேரத்தில் சூதாடும் எண்ணத்தோடு துரியோதனன் இருப்பதைத் தெரிவிக்கும்படியும் கூறுகிறான். -
சூதாட்டம் என்ற சொல்லைக் கேட்டவுடன் விதுரன் பதைபதைத்து மிகவும் கவலையோடு
59

Page 33
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ○ܐܸa cላሌx}%é]
போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
எனத் தொடர்கிறான். வஞ்சனையினால் நாட்டைக் கவரும் எண்ணம் பாரதிக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்துகிறது. அதையே விதுரன் வாயிலாகப் பாரதி வெளிப்படுத்துகிறான்.
சூதாட்டம் என்பது நெடுங்காலமாக அரசர்களது விளையாட்டாக இருந்து வந்திருக்கிறது. ஓர் அரசன் சூதுக்கு அழைத்தால் அதை மற்றைய அரசன் ஏற்க வேண்டும் என்பது LDJIL.
வலிந்து போருக்கு அழைத்தால், அதாவது அறைகூவிப் போருக்கு அழைத்தால், எதிர் சென்று போரிட வேண்டும் என்பது போல, சூதாட அழைத்தாலும் செல்ல வேண்டும் என்பது அக்கால LDUL.
வாலியை வலிந்து அறைகூவிப் போருக்கு அழைக்கிறான் சுக்கிரீவன். அவனோடு போர் செய்யப் புறப்படுகிறான் வாலி. வாலியின் மனைவி தாரை எவ்வளவோ புத்தி சொல்லித் தடுத்துப் பார்க்கவும், அறைகூவலை ஏற்பது அரச தர்மம் என்று கூறி, போருக்குச் சென்றான் வாலி. அங்கே இராமனாலே வாலி கொல்லப்பட்டான் என்பது இராமாயணச் செய்தி.
சூதாடும் எண்ணத்துடன் வந்த புட்கரனுடன் சூதாடி நாடுநகரிழந்து பெருந்துன்பப்பட்டான் நளமகாராஜன். முடப்பழக்கம்
சூதாட அழைத்தால், அழைப்பை ஏற்க வேண்டும் என்பது மூடப்பழக்கம். பாரதி மூடப்பழக்கங்களுக்கெதிராகவும் குரல்
கொடுத்தவன் . எனவே சூதாட்ட விடயத்திலும் இதே மூடப்பழக்கத்தை மிக மோசமாகக் கண்டிக்கிறான் பாரதி.
60
 

பாரதியாரும் பாஞ்சாலி ச1ஆமும் 2وتقييد نصصعيدي
வைய்ய தான விதியை நினைந்தான்
விலக்கொணாதறம் என்ப துணர்ந்தோன். பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்.
ஐயகோ அந்த நாள்முத லாகத் துய்ய சிந்தைய ரெத்தனை மக்கள்
துன்பம் இவ்வகை எய்தினர் அம்மா!
முன்பி ருந்ததோர் காரணத் தாலே
மூடரே பொய்யை மெய்என லாமோ? முன்பெனச் சொலுங் கால மதற்கு
மூடரே, ஓர் வரையறை உண்டோ? முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்
மூன்று கோடி வருடமும் முன்பே. முன்பிருந் தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ?
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் திரோ. பார்பி றந்தது தொட்டின்று மட்டும்
பலப்ப லப்பல பற்பல கோடி கார்பி றக்கும் மழைத்துளி போல
கண்ட மக்க ளனைவருள் ளேயும் நீர்பி றப்பதன் முன்பு மடமை
நீசத் தன்மை இருந்தன அன்றோ
பொய்யொ முக்கை அறமென்று கொண்டும்
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும் ஐயகோ நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர் நொய்ய ராகி அழிந்தவர் கோடி.
நூல்வ கைபல தேர்ந்து தெளிந்தோன் மெய்ய ஹிந்தவர் தம்மு ஞயர்ந்தோன்
விதியி னாலத் தருமனும் வீழ்ந்தான்.
61

Page 34
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Dوي ባለህኃed
− பல நூல்களையும் கற்று ஆராய்ந்து தெளிந்தவனும், நூலறிவிலே யாவரிலும் மேம்பட்டவனுமாகிய தருமனும், மூடக் கொள்கைக்கு அடிமையாகி விட்டானே எனப் பாரதி ஆவேசத்தோடும், ஆத்திரத்தோடும் பாடுகிறான்.
இப்பாடல்களிலே, முன்பிருந்த காரணத்தால் பொய்யை மெய் எனலாமோ? என்றும், முன்பு என்றால் அதன் காலக் கணக்கு என்ன என்றும் முன்பிருந்தவர்கள் யாவரும் முனிவர்களோ என்றும் கேள்வி கேட்கிறான் பாரதி. இந்தக் கேள்விகளைத் தருமனிடம் கேட்காமல் எங்களிடமே ஆவேசமாகக் கேட்கிறான் பாரதி.
நீர் பிறக்கும் முன் பூமியிலே மூடர்கள் இருக்கவில்லையோ? பூமி தோன்றி இக்காலம் வரையில் நீசத் தன்மை மடமை இல்லையோ என்று கோபமாக ஏசுகிறான் பாரதி.
பாரத நாட்டிலே அறிவில்லாதவர்களும், அறத்திலே பற்றுமிக உள்ளவர்களும், அற்பர்களாகி அழிந்துள்ளனரே. அது ஒரு கோடி இருக்குமே.
முன்பே நடைமுறையில் இருந்தது என்ற காரணங் காட்டி தீயவற்றைக் கடைப்பிடிக்கும் மூடப்பழக்கத்தை அறிவிலிகளும், அறத்திலே பற்று மிக்கவர்களும் என இருவகையோரும் கடைப் பிடித்து அதனால் அழிவெய்தியிருக்கிறார்களே என ஏசுகிறான் பாரதி.
தருமன் நீதிநெறிகளையும். பலநூல்களையும் கற்றவன் அறம் அறிந்தவன். உண்மையை அறிந்தவர்களில் உயர்ந்தவன் அந்தத் தருமனே விதி வசத்தினால் சூதாட்டம் என்ற படுகுழியில் விழுந்து விட்டானே. மூடக்கொள்கை என்ற பாழ் நரகில் விழுந்து விட்டானே என்கிறான் பாரதி.
தருமன் சூதாடுவதற்கு சம்மதித்ததற்கு சூதாட்டத்துக்கு அழைத்தால் ஒப்புக்கொண்டு ஆட வேண்டும் என்ற அரச தர்மம் மட்டும் காரணம் இல்லை.
62

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் .2نصصعيدJوشيد
தருமனைச் சகுனி சூதுக்கு அழைப்பதற்காகவே மண்டபங்காண வருமாறு திருதராட்டிரன் அழைப்பு விடுத்துள்ளான் என விதுரன் தருமனிடம் கூறிய பொழுது, தருமன் சூதாட்டத்தில் விருப்பமில்லாதவனாக, சூதாட்டத்தை, வெற்றிகிடைக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் ஆடக்கூடாது என்று தர்மம் உரைக்கிறான்.
வெல்லக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ.
என்கிறான் தருமன். பின்பு சபையிலே வைத்து தருமனைச் சூதாட வரும்படி சகுனி அழைத்த போதும், தருமன் பல நீதிகளையும் கூறி மறுக்கிறான்.
தருமனங் கிவைசொல் வான் - ஐய
சதியுறு சூதினுக் கெனை அழைத் தாய் பெருமைஇங் கிதிலுண் டோ? - அறப்
பெற்றிஉண் டோ? மறப் பீடுள தோ? வருமம்நின் மனத்துடை யாய்! - எங்கள்
வாழ்வினை உகந்திலை என லறிவேன்! இருமையும் கெடுப்பது வாம் - இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற்றாய்.
சூது என்பது ஒரு சதி. சூதாடுவதில் பெருமை உண்டோ? அறத் தன்மை உண்டோ? வீரப் பெருமை உண்டோ? இம்மை மறுமை என்னும் இரண்டையும் அழிப்பது சூது என்றும் தருமன் தனது மறுப்பைத் தெரிவிக்கின்றான்.
இதனைக் கேட்ட சகுனி கோபங்கொண்டு கல கல வென்று சிரித்து, தருமனைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறான்.
சோரமிங் கிதிலுண் டோ? - தொழில் சூதெனி லாடுநர் அரசரன் றோ
சூதாட்டத்திற்கு அரசர்கள் முற்காலத்தில் கொடுத்திருந்த மதிப்பை இது காட்டுகிறது. சூதாட அழைத்தால், அழைப்பை 63

Page 35
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9a በሌx)%&
ஏற்றுக் கொள்வதே ஆண்மை என்பது ஒரு மரபாகவே இருந்திருக்கிறது.
சகுனி தருமனின் ஆண்மைக்குச் சவால் விட்டே சூதாட அழைக்கிறான். சூதாட மறுத்த தருமனைப் பார்த்துச் சகுனி சொல்கிறான்.
பாரத மண்டலத் தார் - தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ? சோரமிங் கிதிலுண்டோ? - தொழில்
சூதெனி லாடுநர் அரசரன் றோ? மாரத வீரர்முன் னே - நடு
மண்டபத் தே பட்டப் பகலினிலே சூரசி காமணி யே - நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ?
சகுனி இவ்விதமாகக் கூறிய பின்னும் கூட, தருமன் ஒப்புக்கொள்ளவில்லை. தோல் விலைக்குப்பசுவினைக் கொல்லும் துஷ்டன் எனப் பாரதியாரால் வர்ணிக்கப்படும் சகுனிக்கு, தருமன் மீண்டும் அறம் உரைக்கிறான்.
தேவலன், அசிதன் என்ற பெரிய முனிவர்கள் மன்னர்களுக்குச் சூதாட்டம் நஞ்சு போன்றது என்று கூறியிருக்கிறார்கள் எனப்பல வகை நியாயங்களையும் எடுத்துக்காட்டி சூதாட மறுக்கிறான் தருமன்.
சகுனியோ மீண்டும், பழைய வழக்கத்தையே காரணமாகக் காட்டி, தருமனைச் சூதுக்கழைக்கிறான். தருமனும் சூதாட ஒப்புக் கொள்கிறான். இது பற்றி விபரமாக மேலே தந்துள்ளேன்.
தருமன் சூதாட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுபற்றி பாரதி எதுவும் சொல்லவில்லை.
வியாசரின் மூலப்படி, இராச சூய யாகம் முடிவுற்ற பின், தருமன் ஒரு சபதம் செய்கிறான். தன்னால் சத்திரியர்களுக்குப்
64
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 22 Matt
பேரழிவு வரப்போகிறது என்று வியாசர் கூறியதைக் கேட்ட தருமன்
“இன்று முதல் நான் ஒரு சபதம் மேற்கொள்கிறேன். பதின்மூன்று வருட காலம் என் சகோதரர்களையும், மற்ற அரசர்களையும் நான் கடிந்து பேசமாட்டேன். என் குலத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதைக் கட்டளையாக மேற்கொண்டு அதற்குத் தகுந்த படி நடந்து கொள்வேன்.”
என்று சபதம் செய்கிறார். இதில் குறிப்பாக துரியோதனனின் மனம் கோணும்படியாக நடக்க மாட்டேன் என்பது உள்ளடக்கம். துரியோதனனோடு பகைத்தால் குல நாசத்திற்கு அதுவே காரணமாகிவிடும் என்பது தருமனின் எண்ணம்.
அதனால் தான் தருமன் சூதாட்டத்திற்கு இணங்கினான். தருமன் சூதாட ஒப்புக் கொண்டதற்கு மூடப்பழக்கவழக்கம் மட்டும் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.
பாரதி இதனைச் சொல்லாமல், "வெய்ய தான விதியை நினைந்தான்.” எனச் சொல்லிச் செல்கிறான். பாரதிக்கு மூடக்கொள்கையைச் சாடுவதற்கு தருமன் சூதாட இணங்கியதும், சகுனி கூறிய மரபு பற்றிய நம்பிக்கைகளும் துணையாயின.
தன் கொள்கையை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வெகு சிறப்பாகச் சொல்லி முடித்தான் பாரதி. அதனால் தான் மூலநூலான வியாச பாரதத்திலில்லாத ஆவேசத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் காண முடிகிறது.
சூதாட்டம்
தருமன் சூதாட்டத்தில் ஒவ்வொன்றாக இழந்து வரும் போது பாரதி அதைச் செய்தியாகவே சொல்லி வருகிறான். தன் உணர்வை வெளிப்படுத்தவில்லை.
ஆனால் யாவற்றையும் இழந்த தருமனைப் பார்த்துச் சகுனி
65

Page 36
|
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் .2وشيدانصصعيد
"நாடிழக்க வில்லை - தருமா,
நாட்டை வைத்திடு" என்று கூறியதும் பாரதி கடுங்கோபங் கொள்கிறான்.
விதுரன் வாயிலாகத் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றான். வியாசரிடமோ அன்றி வில்லிபுத்தூராழ்வாரிடமோ இந்த ஆவேசத்தைக் காணமுடியவில்லை. விதுரர் சொல்கிறார்.
ஐயகோ இதை யாதெனச் சொல்வோம்?
அரச ரானவர் செய்குவ தொன்றோ?
மெய்ய தாகவோர் மண்டலத் தாட்சி
வென்று சூதினில் ஆளுங் கருத்தோ?
வைய மி.து பொறுத்திடு மோ? மேல்
வான் பொறுத்திடு மோ? பழி மக்காள்
துய்ய சீர்த்தி மதிக்குல மோநாம்
தூ! வென் றெள்ளி விதுரனும் சொல்வான்
ஐயகோ என அவலச் சுவையோடு தொடங்குகின்ற விதுரன் "தூ! என்று எள்ளி” அறிவுரை கூறியதாகப் பாரதி பாடுகிறான். விதுரனின் தரத்துக் கேற்ப ஒரு வரம்புக்குள்ளே நின்று விதுரன் சொல்வதாகப் பாடியதால் தனது ஆவேசத்தை மட்டுப்படுத்தியே வெளிப்படுத்துகிறான் பாரதி. இருப்பினும் தூ! என்று தூற்றித் துப்பியதாக பாரதி தன் கோபத்தை வெளிப்படுத்தினான் என்பது கவனிக்கத் தக்கது.
பின்பு, தருமன் தனது நாட்டைப் பணயம் வைத்து இழந்ததைப் பொறுக்க முடியாத பாரதி, கவிக்கூற்றாக தன் அபிப்பிராயத்தை ஆவேசமாக வெளிப்படுத்துகிறான்
கோயிற் பூசை செய்வோர் - சிலையைக் கொண்டு விற்றல் போலும்; வாயில் காத்து நிற்போன் - வீட்டை வைத்து இழத்தல் போலும்,
66
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் .2وشيدانصصعيد
ஆயிரங் க ளான - நீதி அவை உணர்ந்த தருமன்; தேயம் வைத் திழந்தான் - சிச்சி சிறியோர் செய்கை செய்தான்.
தருமன் தேசத்தைப் பணயம் வைத்து இழந்த செய்கை பாரதிக்கு அருவருப்பாக இருக்கிறது. அதனால் 'சிச்சீ என வெறுப்போடும் அருவருப்போடும் அந்தச் செய்தியைச் சொல்லி "சிறியோர் செய்கை செய்தான்” என்கிறான் பாரதி.
ஆயிரக் கணக்கான நீதிகளை உணர்ந்து கொண்ட தருமன், நாட்டைப் பணயப் பொருளாக வைப்பது தவறு என்பதை உணர்ந்து கொள்ளவில்லையே, என ஆதங்கப்படுகிறான் பாரதி.
கோயிலிலே பூசை செய்பவன் சிலையை விற்கும் உரிமை கொண்டவனல்லன். வீட்டு வாசலிலே நின்று வீட்டைக் காப்பவனுக்கு வீட்டைப் பணயம் வைக்கும் உரிமை கிடையாது. அதேபோல் தான் ஆட்சி புரிபவனும், கோயிலாகிய நாட்டிலேயுள்ள விக்கிரகமாகிய மக்களுக்கு நன்மையாகிய பூசையைச் செய்யும் கடமை கொண்டவனேயன்றி, மக்களை விற்கும் உரிமை கொண்டவனல்லன்.
நாடு என்பது ஆகுபெயராக மக்களைக் குறிக்கும். நாட்டை இழத்தல் என்பது நாட்டு மக்களை இழத்தல் ஆகும்.
வீட்டைக் காப்பவன் போன்றவன் தான் அரசைக் காப்பாற்றுகின்ற - நாட்டைக் காப்பாற்றுகின்ற அரசன். அரசனுக்கு காவலன் என்பது ஒரு பெயர். எனவே காவலனுக்கு தன்னால் பாதுகாக்கப்படும் பொருளைப் பணயம் வைக்கும் உரிமை இல்லை என அரசியல் தத்துவத்தை ஆவேசமாக உரைக்கிறான் பாரதி.
முற்கால முடியாட்சி முறைமையிலும் முடிவேந்தர்களிலும் பாரதிக்கு இருந்த கோபத்தை பின்வருமாறு வெளிப்படுத்துகிறான்.
67

Page 37
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9. 1ለxJኃed
நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்க ளென்று கருதார். ஆட்டு மந்தை யாமென்று - உலகை அரசர் எண்ணி விட்டார். காட்டும் உண்மை நூல்கள் - பலதாங் காட்டி னார்க ளேனும் நாட்டு ராஜ நீதி - மனிதர் . நன்கு செய்ய வில்லை.
ஒரஞ் செய்தி டாமே - தருமத்து உறுதி கொன்றி டாமே சோரஞ் செய்தி டாமே - பிறரைத் துயரில் வீழ்த்தி டாமே ஊரை ஆளும் முறைமை - உலகில் ஒரு புறத்தும் இல்லை. சாரம் அற்ற வார்த்தை - மேலே சரிதை சொல்லு கின்றோம்.
"நாட்டு மக்களை மன்னர்கள் மனிதர்களாக, தம்போன்ற மானுட ஜீவன்களாக மதிப்பதில்லை. வெறும் ஆட்டு மந்தைகளாக நினைக்கிறார்கள். எவ்வளவோ சிறந்த உண்மை நூல்களை உருவாக்கியிருந்தாலும் ராஜ நீதியை மன்னர்கள் நன்கு கடைப்பிடிக்கவில்லை” என்று கூறுகின்றான் பாரதி.
அத்தோடு "ஒரஞ் செய்யாமல், தருமத்து உறுதி கொன்றிடாமல், சோரம் செய்திடாமல், பிறரைத் துயரில் ஆழ்த்திடாமல், ஊரை ஆளும் முறைமை உலகில் ஒரு இடத்திலும் இல்லை.” என மன்னராட்சியை வெறுத்துரைக்கிறான் பாரதி.
பிரித்தானியர்கள் பாரத தேசத்தையும், ஏனைய பல்வேறு நாடுகளையும் ஆட்சி புரிந்த முறைமையைப் பார்த்து, கோபமுற்ற
பாரதி, இந்தச் சந்தர்ப்பத்தில் அதனை வெளிப்படுத்துகிறான் எனக்
கொள்ளலாம் அல்லவா.
68

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وقبيدخصصعيدي
நாட்டைப் பணயம் வைத்து இழந்த பின் வரிசையாக சகாதேவன், நகுலன், அருச்சுனன், பீமன் என தம்பியர்கள் யாவரையும் பணயம் வைத்து இழந்த பின் தருமன் தன்னையும் பணயம் வைத்து இழக்கிறான்.
யாவரையும், யாவற்றையும் பணயம் வைத்துத் தருமன் இழந்ததும், துரியோதனன் மகிழ்ச்சியில் குதிக்கிறான். கூத்தாடுகிறான், துரியோதனனுக்கோ, கர்ணனுக்கோ திரெளபதியைப் பணயம் வைப்பது பற்றிய எண்ணம் இருக்கவில்லை.
திரெளபதியைப் பணயம் மூலம் அடிமைப்படுத்தி அவமானப்படுத்தும் திட்டம் எதுவும் எவரிடமும் இருக்கவில்லை.
பாண்டவர்களின் இராச்சியத்தைப் பறிக்க வேண்டும். அதற்கு எதிராக அவர்கள் செயற்படாதிருக்கும் வண்ணம் அவர்களை அடிமைப்படுத்த வேண்டும், அதன் மூலம் பாஞ்சாலியின் செருக்கை அடக்க வேண்டும். அவளைப் பார்த்து தாங்கள் பரிகாசஞ் செய்ய வேண்டும் என்ற அளவிலேதான் அவர்களிடம் திட்டம் இருந்தது.
பாஞ்சாலி பணயப் பொருள்
சகுனிதான் சூதாட்டத்தில் பாஞ்சாலியையும் பணயம் வைக்கும்படி கூறுகிறான்.
இன்னும் பணயம்வைத் தாடுவோம் - வெற்றி
இன்னும் இவர்பெற லாகுங்காண் பொன்னுங் குடிகளுந் தேசமும் - பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம் - ஒளி மின்னும் அமுதமும் போன்றவள் - இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால் - அவள் துன்னும் அதிட்டம் உடையவள் - இவர்
தோற்றது அனைத்தையும் மீட்டலாம்.
பாஞ்சாலி மிகவும் அதிஷ்டக்காரி. அவளைப் பணயம் வைத்து வென்று, இழந்ததை மீண்டும் பெறும்படி, சகுனி தருமனுக்கு ஆசைகாட்டியதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைகிறான்.
69

Page 38
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيد خصصعيد
என்றந்த மாமன் உரைப்பவே - வளர்
இன்பம் மனத்தி லுடையனாய் - மிக நன்றுநன் றென்று சுயோதனன் - சிறு
நாயொன்று தேன்கல சத்தினை - எண்ணித் துன்றும் உவகையில் வெற்றுநா - வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல் - அவன் ஒன்றுரை யாம லிருந்திட்டான் - அழி
வுற்றது உலகத்து அறமெலாம்.
இதிலிருந்து துரியோதனனின் திட்டமல்ல இது என்பதும், சகுனிதான் புதிதான ஒரு திட்டத்தை எழுந்த மானத்திலே சொல்லியிருக்கிறான் என்பதையும் அறிய முடிகிறது.
பாஞ்சாலியைத் தருமன் பணயப் பொருளாக வைத்துச் சூதாட நினைத்ததைப் பாரதி மிகவும் வன்மையாகக் கண்டித்துப் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
பாவியர் சபைதனி லே - புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பய னை ஆவியில் இனியவ ளை . உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமு தை ஓவியம் நிகர்த்தவ ளை - அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரத னைத் தேவியை நிலத்திரு வை - எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை
படிமிசை இசையுற வே - நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்
கடிகமழ் மின்னுரு வை - ஒரு
கமனியக் கனவினைக் காதலி னை
வடிவுறு பேரழ கை - இன்ப
வளத்தினைச் சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத் தில் - அறக்
கோமகன் வைத்திடல் குறித்து விட்டான்.
70

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 9a 1/NJosé
பாஞ்சாலியைப் பணயம் வைத்துச் சூதாடியது பற்றிப் பாரதி மிகுந்த மனவருத்தத்தோடு மேலும் பாடுகிறான்.
வேள்விப் பொருளினை யே - புலை நாயின் முன்
மென்றிட வைப்பவர் போல் நீள்விட்டப் பொன்மாளி கை - கட்டிப் பேயினை
நேர்ந்துகுடி யேற்றல் போல் ஆள்விற்றுப் பொன்வாங்கியே - செய்த பூணை ஓர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல் கேள்விக் கொருவரில் லை - உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கினான்.
செருப்புக்குத் தோல் வேண்டி யே - இங்குக் கொல்வரோ
செல்வக் குழந்தையினை விருப்புற்ற சூதினுக் கே - ஒத்த பந்தயம்
மெய்த்தவப் பாஞ்சாலி யோ ஒருப்பட்டுப் போன வுடன் - கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண் டே இருப்பகடை போடென் றான் - பொய்மைக் காய்களும்
இருப்பகடை போட்ட வே. .
"புனிதமான வேள்வியிலே இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படுகின்ற புண்ணிய அவிர்பாகத்தை, கெட்ட, கீழான புலைநாயின் முன் அது உண்பதற்காக வைப்பவர் போல, நீண்ட அகன்ற பொன்மாளிகையை அழகாகக் கட்டி, அங்கே பேயினைக் கொண்டு வந்து குடிவைத்தல் போல, ஆளை விற்று பொன்னை வாங்கி அப்பொன்னினால் செய்த ஆபரணத்தை ஓர் ஆந்தைக்குப் பூட்டுதல் போல, பாண்டவர்களின் ஆருயிர்த் தேவியான பாஞ்சாலியைத் தருமன், கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் கீழ் மக்களான துரியோதனன் முதலானவர்க்கு அடிமையாக்கினான்.
செருப்புக்குத் தோல் தேவைப்பட்டால், யாராவது தமது
செல்வமான குழந்தையினைக் கொன்று தோலுரிப்பார்களோ,
சூதாட்டத்தில் விருப்பமென்றால் அதற்கு ஏற்ற பந்தயப் பொருள் 71

Page 39
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2دي ባለህ%ë]
உண்மைத் தவத்தின் உருவாய் விளங்கும் பாஞ்சாலியோ"
என்று பாரதி மிகுந்த ஆவேசத்தோடு பாடுகிறான். பல கேள்விகளை எங்களைப் பார்த்துக் கேட்கிறான் பாரதி. பாஞ்சாலியின் பெருமையையும் அவளை அடிமை கொள்வோரின் சிறுமையையும் எண்ணிச் சீற்றமுற்ற பாரதியின் கோபக் கனலாக எரிகின்றன அவனது கேள்வித் தணல்கள்.
இங்கு பாஞ்சாலியின் பெருமையையும் சேர்த்துப் பாரதி பாடினாலும் கூட, மனைவியைப் பணயம் வைப்பது பற்றிய உட்பொருளே கருதத்தக்கது.
துரியோதனனின் மகிழ்ச்சி
நாட்டைப் பணயம் வைத்துத் தருமன் இழந்த போதும், தங்களையே பணயம் வைத்துத் தருமன் இழந்த போதும், துரியோதனன் முதலியோர் மகிழ்ச்சியடைந்தனர் தான். இருப்பினும் பாஞ்சாலியைப் பணயம் வைத்துத் தருமன் இழந்த போதுதான், துரியோதனன் முதலியோர் அதிக மகிழ்ச்சி அடைந்ததாகப் பாரதியார் காட்டுகிறார்.
நாட்டைச் சூதாட்டத்தின் மூலம் வெற்றி கொள்வதற்காகவே தான் சூதாட்டமே தொடங்கப்பட்டது. அதாவது 'கத்தியின்றி இரத் தமின்றி சூதாட்டமெனும் யுத்தத் தாலி நாட்டை அபகரிக்கவேதான், சகுனி சூதாட்டம் என்ற திட்டத்தையே வகுத்திருந்தான்.
ஆனால் நாட்டைத் தருமன் பணயமாக வைத்து இழந்த செய்தியைப் பாரதி கவிக்கூற்றாகக் கவலையோடும் விரக்தியோடும் கோபத்தோடும் சொல்கிறானே தவிர, கெளரவர்களின் மகிழ்ச்சியை அங்கு பெரிதாகக் காட்டவில்லை.
பின்பு பாண்டவர்கள் ஒவ்வொருவராக தோற்கப்படும்போதும் கூட, கெளரவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைப் பெரிதாகப் பாரதி சொல்லவில்லை. ஓரிரு வரிகளிலே தான் சொல்கிறான்.
72
 

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2ܝܶܣܣܘܧܐJܣܵܧ
சகாதேவன், நகுலன் ஆகியோர் சூதில் வெற்றிகொள்ளப்பட்டதைப் பற்றிய கெளரவர்களின் மகிழ்ச்சியை பாரதி காட்டவில்லை. அருச்சுனன் தோற்கப்பட்டதும் சகுனி “கொக்கரித்து ஆர்த்து முழங்கியே - களி கூடி.” யதாகப் பாரதி சொல்கிறான். மற்றையோரின் மகிழ்ச்சியைக் காட்டவில்லை.
பீமனைப் பணயம் வைத்து இழந்த போது, கெளரவர்களின் மகிழ்ச்சியைப் பின்வருமாறு பாரதி காட்டுகிறான்.
போரினில் யானை விழக்கண்ட - பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் - புலை ஓரி கழுகென் றிவையெலாம் - தம
துள்ளங் களிகொண்டு விம்மல்போல் - மிகச் சீரிய வீமனைச் சூதினில் - அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் - நின்று மார்பிலும் தோளிலுங் கொட்டினார் - களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார்.
“போர்க்களத்திலே யானை வீழ்ந்து இறந்து போகக் கண்ட பூதங்கள், நாய், நரி, காகம், ஓநாய், கழுகு, முதலான உயிரினங்கள் மகிழ்ச்சி கொண்டு பூரிப்படைவது போல, பீமன் சூதில் வசமானது கண்ட கெளரவர்கள், தங்கள் தங்கள் மார்பிலும் தோள்களிலும் தட்டி மகிழ்ச்சி கொண்டு குதித்து எழுந்து ஆடினார்கள்” என்கிறான் பாரதி.
தருமன் தன்னைத்தானே பணயம் வைத்து இழந்தபின், துரியோதனன் சபையோரைப் பார்த்து, தானே இனிப்பூமிக்கு அதிபதி என்றும், தன்னை வாழ்த்தும்படியும் கூறி, இச்செய்தியைப் பறை அறைந்து மக்களுக்குத் தெரிவிக்கும்படி கட்டளை இட்டதாகப் பாரதி பாடுகிறானே தவிர, துரியோதனனின் மகிழ்ச்சியைக் காட்டவில்லை.
73

Page 40
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9 Wஜர்
"பொங்கி எழுந்து சுயோதனன் - அங்கு - பூதல மன்னர்க்குச் சொல்லுவான் - ஒளி
மங்கி அழிந்தனர் பாண்டவர் - புவி
மண்டலம் நம்ம திணிக்கண்டீர் - இவர் சங்கை யிலாத நிதியெலாம் - நம்மைச்
சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் - இதை எங்கும் பறையறை வாயடா - தம்பி”
என்று அந்நிகழ்ச்சியைச் சொல்லும் பாரதி, பாஞ்சாலியைப் பணயத்தில் வென்றதால் கெளரவர் அடைந்த மகிழ்ச்சியைத்தான் விரிவாகப் பாடுகிறான்.
திக்குக் குலுங்கிடவே - எழுந்தாடுமாம் | தீயவர் கூட்டமெல் லாம்.
தக்குத்தக் கென்றே அவர் - குதித்தாடு வார் தம்மிரு தோள்கொட்டு வார் ஒக்குந் தருமனுக்கே - இ.தென்பார் ஓ!
ஓ! என் றிரைந்திடு வார். கக்கக்கென் றேநகைப் பார் - 'துரியோ தனா
கட்டிக்கொள் எம்மை' என்பார்.
மாமனைத் தூக்கா யென் பார் - அந்த மாமன் மேல்
மாலை பலவீசு வார். சேமத் திரவியங்கள் - பல நாடுகள்
சேர்ந்ததி லொன்று மில்லை. காமத் திரவிய மாம் - இந்தப் பெண்ணையும்
கைவச மாகச்செய் தான்,
மாமனோர் தெய்வ மென்பார் - 'துரியோதனன்
வாழ்க’ என் றார்த்திடு வார்.
இப்படி, கெளரவர்களது மகிழ்ச்சியைப் பொதுவாகச்
சொல்லிய பாரதி, துரியோதனனின் அளவு கடந்த மகிழ்ச்சியைத்
தனியாகச் சொல்கிறான்.
74

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 2جيعيnنهمJهيوéa
நின்று துரியோதனன் - அந்த மாமனை
நெஞ்சோடு சேரக் கட்டி, என்துயர் தீர்த்தா யடா! - உயிர் மாமனே! ஏளனந் தீர்த்து விட்டாய். அன்று நகைத்தா ளடா உயிர் மாமனே!
அவளை என் ஆளாக்கி னாய். என்றும் மறவே னடா! உயிர் மாமனே!
என்ன கைம்மாறு செய்வேன்.
ஆசை தணித்தா யடா! - உயிர் மாமனே! ஆவியைக் காத்தா யடா. பூசை புரிவோ மடா! - உயிர் மாமனே!
பொங்க லுனக்கிடு வோம்! நாச மடைந்த தடா! - நெடு நாட்பகை
நாமினி வாழ்ந்தோ மடா! பேசவுந் தோன்று தில்லை - உயிர் மாமனே! பேரின்பங் கூட்டிவிட் டாய்.
என்று பலசொல்லு வான் - துரியோ தனன்
எண்ணி எண்ணிக் குதிப்பான். குன்று குதிப்பது போல் - துரியோ தனன்
கொட்டிக் குதித்தாடு வான். மன்று குழப்பமுற் றே - அவர் யாவரும்
வகைதொகை ஒன்று மின்றி அன்று புரிந்த தெல்லாம் - என்றன் பாட்டிலே
ஆக்கல் எளி தாகுமோ?
நாட்டையும், பாண்டவரையும், பாஞ்சாலியையும் என யாவற்றையும் வெற்றிகொண்டதனால் துரியோதனனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பாரதி பாடினாலும், பாஞ்சாலியை வென்ற மகிழ்ச்சியையே இப்பாடல்களில் அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது.
75

Page 41
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் Olaenajada
துகிலுரிதல் நிகழ்ச்சி
பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்த காட்சியில் வியாசருக்கும், பாரதிக்கும் மாறுபாடில்லை. கையினால் பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான் துச்சாதனன் என்றே இருவரும் சொல்கின்றனர்.
வில்லிபுத்தூராழ்வார் பூச்செண்டால் அவளது கூந்தலைப் பிடித்து இழுத்ததாகப் பாடியிருப்பதை முன்பு பார்த்துள்ளோம். பாஞ்சாலியைக் கூந்தலில் பிடித்துத் துச்சாதனன் இழுத்து வந்த காட்சியைப் பாரதி ஏனையோரைவிட விரிவாகப் பாடுகிறான்.
"திரெளபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்துவரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்” என்ற தலைப்பில் தெய்வங்கள் யாவும் செயலற்றிருந்த தன்மையையும் அவற்றின் மாறுபாட்டையும் சொல்கிறான் பாரதி.
பின்பு விதுரனை நோக்கி, பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்து வரும்படி கட்டளை இடுகிறான் துரியோதனன், என்று பாடுகிறான் பாரதி.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Sமூடப் புலமையினோன் அகத்தே இருளுடையான், ஆரியரின் வேறானோன். துரியோ தனனும் சுருக்கெனவே தான் திரும்பி அரியோன் விதுர னவனுக் குரைசெய்வான். “செல்வாய் விதுரா! நீ சிந்தித்திருப்பதேன்? வில்வா னுதலினாள், மிக்க எழிலுடையாள், முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவிமகள் இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள் பால் சென்று விளைவெல்லாஞ் செவ்வனே தானுணர்த்தி, மன்றினிடை உள்ளான் நின் மைத்துனன் நின் ஓர் தலைவன் நின்னை அழைக்கிறான் நீள் மனையில் ஏவலுக்கே என்ன உரைத்தவளை இங்கு கொணர்வாய் என்றான்.
76
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9a 6Jهیوم
அடிமைப்பட்ட பாஞ்சாலியை வீட்டு வேலைக்கு அழைப்பதாகவே துரியோதனன் சொல்கிறான். துரியோதனனும் கர்ணனும் பாஞ்சாலியைப்பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் அவளை பொதுமகள், தாசி, விலைமகள் என்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர். துச்சாதனனும் இதற்கு விதிவிலக்கில்லை. அவனும் பொதுமகள் என்றே ஏசுகிறான். வியாசர், வில்லி, பாரதி ஆகிய மூவரும் இதனைக் காட்டுகின்றனர்.
ஐந்து பேருக்கும் பொதுவான மனைவி என்பதால் பொதுமகள் என்றும், அடிமை என்பதற்கு ஒத்த சொல்லான தாசி என்றும், பணயப் பொருளாக விலைப்பட்டதால் விலைமகள் என்றும் நேரடிப் பொருள் படக்கூடியதாகவும், அதேவேளை விபச்சாரி என்ற இழிபொருள் கொண்டதாகவும் இச்சொற்கள் அமைந்திருத்தலைக் கண்டு கொள்ளலாம்.
இங்கும் துரியோதனன் விதுரனிடம் “இன்னே நாம் சூதில் எடுத்த விலைமகள் பால்” என்றே சொல்லி அவமானப்படுத்துவதைக் காணலாம்.
விதுரன் துரியோதனனுக்கும் ஏனையோருக்கும் பல்வேறு அறிவுரைகளைக்கூறி “சத்திரிய நாசத்துக்கு வழிவகுக்க வேண்டாம். யாவரும் வீணாக அழியப்போகிறீர்கள்.” என்று புத்தி சொல்லி, போக மறுத்தபின், பிராதிகாமி என்ற தேரோட்டியைப் பாஞ்சாலியிடம் அனுப்புகிறான் துரியோதனன்.
"யாரடா தேர்ப்பாகன்! நீ போய்க் கணமிரண்டில்
பாரதர்க்கு வேந்தன் பணித்தான் எனக்கூறிப் பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே ஈண்டழைத்து வா என்” றியம்பினான்.
தேரோட்டி சென்று பாஞ்சாலியை வணங்கி, சபையில் நடந்தவைகளைச் சொல்லி, அவளை அழைப்பது, மூன்று பேராலும் ஒரேமாதிரியாகவே சொல்லப்படுகின்றது. வில்லி சுருக்கமாகச் சொல்ல பாரதி விரிவாகச் சொல்கிறான்.
77

Page 42
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9. ባለm}%é
துரியோதனனின் தேர்ப்பாகன் பாஞ்சாலியிடம் சென்று, பாஞ்சாலியை வணங்கி பணிவாகத் தன் கோரிக்கையை முன்வைக்கிறான்.
S SS SS SS S S S S S S S S SSSSS SS SS SS SS SS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS ஆங்கே தேர்ப் பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில் சோகம் ததும்பித் துடித்த குரலுடனே, 'அம்மனே போற்றி அறங்காப்பாய் தாள் போற்றி! வெம்மை யுடைய விதியால் உதிட்டிரனார் மாமன் சகுனியோடு மாயச்சூ தாடியதில், பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத் தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார். சாற்றிப் பணயமெனத் தானே உனைவைத்தார். சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார். எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்.
துரியோதனனின் தேரோட்டியாகிய பிராதிகாமி என்பவன், மிகவும் பணிவாகப் பாஞ்சாலியிடம் விடயத்தை விளக்கி அழைத்த விதத்தை, பாரதியின் கூற்றாக மேலே பார்த்தோம்.
தேரோட்டியின் அழைப்பைக் கேட்ட பாஞ்சாலி, கோபங் கொண்டவளாகி, அவனைப்பார்த்து, ஆவேசமாகக் கேட்கிறாள். அதற்கு அவன் பதில் சொல்கிறான். அதைப் பாரதி பின்வருமாறு சொல்கிறான்.
S S S S S S S S S S S S S S S S S S S S யார் சொன்ன வார்த்தையடா சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் "என்னை அழைக்கிறாய்' என்றாள். அதற்கவனும் மன்னவன் சுயோதனன்றன் வாரத்தையினால் என்றிட்டான். நல்லது நீ சென்று நடந்ததைக் கேட்டு வா. வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம் என்னை முன்னேசுறி இழந்தாரா? தம்மையே
78

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் . 2وشيدانصصعيد
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில்இச் செய்தி தெரிந்து வா
எனப் பாஞ்சாலி தேர்ப்பாகனை அனுப்பிவிட்டு
"தன்னந் தனியே தவிக்கும் மனத்தளாய், வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய உள்ளத்தை அச்சம் உலைஉறுத்த பேய்கண்ட பிள்ளையென”
இருக்கிறாள் என்கிறான் பாரதி.
பெண்கள் நிலை
தருமர் தன் னைத் தோற் குமுன் தன் மனைவி பாஞ்சாலியைத் தோற்றிருந்தால் சரி என்று ஒப்புக்கொள்ள பாஞ்சாலி தயாராக இருந்தாள் என்பது தெளிவாகிறது.
அக்காலச் சமுதாய அரசியல் நிலையில் பெண்ணை, அதாவது மனைவியைப் பணயப் பொருளாக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கணவன் தன்னைத் தோற்குமுன் மனைவியைத் தோற்றால் அது செல்லுபடியாகும் என்பதே பாஞ்சாலியின் வாதமாகவும் இருக்கிறது. பாரதியால் இதனை மாற்றிச் சொல்ல முடியவில்லை. பாரதிக்கு, இத்தகைய பணயம் முன்னோ பின்னோ எதுவுமே உடன்பாடானதில்லை. இருப்பினும் கதையைச் சொல்கிறான் பாரதி.
SLSSSSLS SSLLS SSSLLSSSSLSLSLSLS SLSLSLSLSLSLSSபின் அந்தத் தேர்ப்பாகன் மன்னன் சபைசென்று "வாள் வேந்தே ஆங்கந்தப் பொன்னரசி தாள் பணிந்து போதருவீர் என்றிட்டேன். ‘என்னை முதல்வைத் திழந்தபின்பு தன்னைஎன் மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னரெனைத் தோற்றாரா? என்றேநூம் பேரவையை மின்னற் கொடியார் வினாவிவரத் தாம் பணித்தார் வந்துவிட்டேன். என்றுரைத்தான்.
79

Page 43
பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் - 2وشيد ثمصعيدي
தேரோட்டி கூறியதைக் கேட்டு சபையோர் யாவரும் பதில் கூறாமல் மூங்கையர் போல் - ஊமைகளாய் இருந்தனர்.
சபையோரிடம் தான் பாஞ்சாலி கேள்வி கேட்டாள். சபையோர் மெளனமாக இருந்தனர் என வியாசரும் பாரதியும் ஒரே விதமாகவே
உரைக்கின்றனர். பாண்டவர்கள் எதுவும் கூறவில்லை. சபையும் எதுவும் கூறவில்லை. -
.................... மாண்புயர்ந்த பாண்டவர்தாம் நொந்துபோ யொன்றும் நுவலா திருந்திட்டார்.
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னரெல்லாம் முற்றும் உரைஇழந்து மூங்கையர் போல் வீற்றிருந்தார்.
என்கிறான் பாரதி. துரியோதனன் உடனே கடுங்கோபங் கொண்டு சொல்வதைப் பாரதியின் கவிதைகளில் பார்ப்போம்.
உள்ளந் துடித்துச் சுயோ தனன் - சினம்
ஓங்கி வெறி கொண்டு சொல்லு வான் - அட
பிள்ளைக் கதைகள் விரிக் கிறாய் - என்றன்
பெற்றி அறிந்திலை போலும் நீ - அந்தக்
கள்ளக் கரிய விழியி னாள் - அவள்
கல்விகள் கொண்டிங்கு வந்த னை - அவள்
கிள்ளை மொழியின் நலத்தை யே - இங்குக்
கேட்க விரும்புமென் உள்ள மே.
வேண்டிய கேள்விகள் கேட்க லாம் - சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம் - மன்னர் நீண்ட பெருஞ்சபை தன்னிலே - அவள்
நேரிடவே வந்த பின்பு தான் - சிறு கூண்டிற் பறவையு மல்ல ளே, - ஐவர்
கூட்டு மனைவிக்கு நாண மேன் - சினம் மூண்டு கடுஞ்செயல் செய்யு முன் - அந்த மொய்குழ லாளைஇங் கிட்டு வா.
80

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ெ MA2
மன்னன் அழைத்தனன் என்று நீ - சொல்ல
மாறி அவளொன்று சொல்வ தோ? - உன்னைச்
சென்றவ ளைக்கொணர் வாய் என்றான் - அவன் சொன்ன மொழியினைப் பாகன் போய் - அந்தத்
தோகைமுன் கூறி வணங்கி னன் - அவள் இன்னல் விளைந்திவை கூறு வாள் - தம்பி என்றனை வீனில் அழைப்ப தேன்?
“வெறிபிடித்தவன் போலாகிய துரியோதனன் சொல்கிறான். என் தன்மையை நீ அறிந்து கொள்ளவில்லையா. அவளது அறிவை எடுத்துக் காட்டவா வந்திருக்கிறாய். அவளது கிளி போன்ற மொழி நலத்தைக் கேட்கவே என் மனம் விரும்புகிறது.
அவள் மன்னர்கள் கூடியுள்ள இப் பெருஞ் சபையில் வந்து சேர்ந்த பின்பு வேண்டிய கேள்விகளைக் கேட்கலாம். வேண்டியவாறு உரையாடலாம். அவளென்ன சிறு கூண்டுப் பறவையா. இல்லையே. ஐவரின் கூட்டு மனைவியல்லவா. அவளுக்கு நாணம் தேவையில்லாதது. கோபம் மிகுந்து நான் உன்னை கொடுமைப்படுத்து முன் அவளை இங்கு அழைத்துவா
மன்னன் அழைத்தானென்று நீ சொல்ல அவள் வேறு பதில் சொல்வதோ, உன்னைச் சின்னாபின்னமாகச் சிதைத்து விடுவேன். இந்தக் கணமே அவளைக் கொண்டு வா என்றான்.”
பாகன் சென்று பாஞ்சாலியிடம் சொல்லி வணங்க அவள் துன்பப் பட்டுக் கூறுகிறாள் தம்பி என்னை வீணாக அழைப்பதேன்' என்பது இப்பாடல்களின் திரண்ட பொருள்.
பாஞ்சாலி சபைக்குச் செல்ல மறுத்து தேரோட்டியிடம் மீண்டும் பல நியாயங்களை எடுத்துரைக்கிறாள். அவை பெண்ணடிமைக்கு எதிரான கருத்துக்கள் என்பதால் பாரதியின் பாடல்கள் மூலமாகவே அக்கருத்துக்களைப் பார்ப்போம்.
81

Page 44
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 22النصصعيدஆன்
நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கில் லை - புலைத் தாயத்தி லேவிலைப் பட்ட பின் - என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? - அவர் தாயத்தி லேவிலைப் பட்ட வர் - புவி
தாங்குந் துருபதன் கன்னி நான் - நிலை சாயப் புலைத்தொண்டு சார்ந்திட் டால்-பின்பு
தார முடைமை அவர்க் குண்டோ?
திரெளபதியின் வாதம் சரியானதா தவறானதா என்பது யாருக்குமே புரியவில்லை என்பதை வியாசர் பாரதம் விரிவாகக் காட்டியிருக்கிறது.
துருபதன் கன்னி
அடிமைப்பட்டவனுக்கு அவன் மனைவியே சொந்தமில்லை என்கிறாள் பாஞ்சாலி. "தருமர் சூதிலே அடிமையாகி விட்டார். அதனால் அவர் இனி என் கணவரில்லை. அவருக்கு நான் மனைவி இல்லை. நான் அவருக்கு உரிமையுடையவளல்லள். எனவே நான் இப்போது துருபத மன்னனின் மகளேயன்றி தருமரின் மனைவியல்ல” என்கிறாள் பாஞ்சாலி.
இதனைப் பாரதி குறிப்பிடும் போது மிக நுட்பமாக "துருபதன் கன்னி நான்’ என்று பாஞ்சாலி குறிப்பிடுவதாகச் சொல்கிறான்.
பாரதியின் இந்த ஆவேசம் பொருத்தமானதா? நியாயமானதா? என்பது கேள்விக்குரியதே. ஆனால் அக்காலத்தில், மனைவி கணவனுக்கு அடிமை என்பதும், கணவனுக்கு கட்டுப்பட்டவள் என்பதும், நடைமுறையில் இருந்திருக்கிறது என்பது மறுப்பதற்கு இல்லை.
இக்கேள்விக்குரிய பதிலும் விவாதமும் வியாசர் பாரதத்தில்
விரிவாக இருக்கிறது. அதுபற்றி முன்பு பார்த்துள்ளோம். தொடர்ந்து பாஞ்சாலி சொல்கிறாள்.
82
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் @೩chwäå
கெளரவ வேந்தர் சபை தன்னில் - அறங்
கண்டவர் யாவரும் இல்லை யோ? - மன்னர் செளரியம் வீழ்ந்திடும் முன்ன ரே - அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்கு மோ - புகழ் ஒவ்வுற வாய்ந்த குருக்க ளும் - கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதி லே - செல்வம் வவ்வுறத் தாங்கண் டிருந்த னர் - என்றன்
மான மழிவதும் காண்ப ரோ
இப்படிச் சொல்லி அந்தப் பாகனை மீண்டும் அனுப்புகிறாள் பாஞ்சாலி. அவன் சென்று,
மாத விடாயி லிருக்கிறாள் - அந்த மாதர சென்பதும் கூறினான்
வியாசரின் பாரதப் படி தருமர் தனக்கு நம்பிக்கையான ஒரு தூதனை அழைத்து அவனிடம் "வீட்டுக்கு விலக்காகி இருக்கும் திரெளபதியை ஒற்றை ஆடையுடன் அழுதபடியே சபைக்கு வந்து திருதராஷ்டிர மன்னர் முன்னால் நிற்கச் சொல். அப்பொழுது சபையோரெல்லாம் மனதால் சபிப்பார்கள்'
என்று சொல்லியனுப்பியதாக இருக்கிறது. ஆனால் வில் லிபுத்துTராழ்வாரோ பாரதியோ இது பற்றி எதுவும் சொல்லவில்லை. பாஞ்சாலியின் நிலையைத் தேரோட்டிதான் சபையிலே வந்து துரியோதனனிடம் கூறுகிறான்.
கோபங் கொண்ட துரியோதனன் தேரோட்டியை அச்சுறுத்தி, மீண்டும் பாஞ்சாலியிடம் சென்று அவளை அழைத்து வரும்படி கூறியதையும் அதற்குத் தேர்ப்பாகனின் பதிலையும் பாரதியின் மூலமாகப் பார்ப்போம்.
பாகனை மீண்டுஞ் சினத்துடன் - அவன்
பார்த்திடி போலுரை செய்கிறான்; . பின்னும்
83

Page 45
- பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2يجيجإnnثJتهيوn
ஏகி நமதுளங் கூறடா - அவள்
ஏழு கணத்தில் வரச்செய்வாய் - உன்னைச் சாக மிதித்திடு வேண்டா - என்று
தார்மன்னன் சொல்லிடப் பாகனும் - மன்னன் வேகந் தன்னைப்பொருள் செய்திடான் - அங்கு
வீற்றிருந் தோர்தமை நோக்கியே
சீறும் அரசனுக் கேழையேன் - பிழை | செய்த துண்டோஅங்குத் தேவியார் - தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும் - அவர்
நுங்களைக் கேட்கத் திருப்புவார் - அவர் ஆறுதல் கொள்ள ஒருமொழி - சொல்லில்
அக்கண மேசென் றழைக்கிறேன் - மன்னன் கூறும் பணிசெய வல்லன் யான் - அந்தக்
கோதை வராவிடில் என்செய் வேன்?
பாகன் கூறியதைக் கேட்ட துரியோதனன், துச்சாதனனைப் பார்த்து நீ சென்று பாஞ்சாலியோடு வா என்று கட்டளையிடுகிறான்.
பாகன் உரைத்தது கேட்டணன் - பெரும்
பாம்புக் கொடியவன் சொல்கின்றான் - அவள்
பாகன் அழைக்க வருகிலஸ் - இந்தப்
பையலும் வீமனை அஞ்சியே - பல
வாகத் திகைப்புற்று நின்றனன் - இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கிறேன் - தம்பி!
போகக் கடவைஇப் போதங்கே - இங்கப்
பொற்றொடி யோடும் வருக நீ!
இதனைக் கேட்டுச் சென்ற துச்சாதனன், பாஞ்சாலியை இழுத்து வந்த விபரத்தை இனிப் பார்ப்போம்.
துச்சாதனனின் கல்வி, அறிவு, பண்பு பற்றி பாரதி விளக்கிக்
கூறுகிறான். துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரிந்தவன்
| என்பதாலும், துரியோதனனின் எண்ணங்களுக்கு செயல்வடிவம்
84

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ےD}2يجيnنهمJ2<ܘܵ[
கொடுப்பவன் என்பதனாலும், அவன் பற்றி பாரதியார் அறிமுகம் ஒன்றைச் செய்கிறார்.
இவ்வுரை கேட்டதுச் சாதனன் - அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன் - இவன் செவ்வி சிறிது புகலுவோம் - இவன்
தீமையில் அண்ணனை வென்றவன் - கல்வி எவ்வள வேனுமி லாதவன் - கள்ளும்
ஈரக் கறியும் விரும்புவான் - பிற தெவ்வர் இவன்தனை அஞ்சுவார் - தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார்.
புத்தி விவேக மில்லாதவன் - புலி
தத்தி வழியுஞ் செருக்கினால் - கள்ளின்
சார்பின் றியேவெறி சான்றவன் - அவ சக்தி வழிபற்றி நின்றவன் - சிவ
சக்தி நெறிஉண ராத வன் - இன்பம் நத்தி மறங்கள் இழைப்பவன் - என்றும்
நல்லவர் கேண்மை விலக்கி னோன்.
அண்ண னொருவனை யன்றியே - புவி
அத்தனைக் குந்தலை யாயினோம் - என்னும் எண்ணந் தனதிடைக் கொண்டவன் - அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்திடான் - அருட் கண்ணழி வெய்திய பாதகன் - அந்தக்
காரிகை தன்னை அழைத்துவா-என்றவ் அண்ண னுரைத்திடல் கேட்டணன் - நல்ல
தாமென் றுறுமி எழுந்தனன்.
துரியோதனன் என்ன சொன்னாலும் செய்யக் கூடியவனாகவும், துரியோதனனைவிடக் கெட்டவனாகவும் துச்சாதனனைச் சித்திரிக்கிறார் பாரதியார்.
85

Page 46
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 9. RJaفهي
துரியோதனனை பிரித்தானிய ஏகாதிபத்தியமாக உருவகப்படுத்திய பாரதி, துச் சாதனனை பிரித்தானியரின் கைக்கூலிப் படையாக உருவகிக்கிறான்.
இந்தியாவை பிரித்தானியர் ஆண்டகாலத்தைத் துல்லியமாகக் காட்டுவதற்காக, பாஞ்சாலியைப் பாரதநாடாகவும், தருமனைப் பாரதநாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவனாகவும், துரியோதனன் முதலியோரைப் பிரித்தானிய ஆட்சியாளர்களாகவும் உருவகித்துத்தான் பாரதி பாஞ்சாலி சபதம் பாடினான் என்று பாஞ்சாலி சபதத்தை ஆராய்வோர் கூறுகின்றனர்.
அந்த வகையிலே துச் சாதனனை, பிரித்தானிய இராணுவமாகக் கருதித்தான், பாரதி துச்சாதனனைப் பற்றி விரிவான அறிமுகத்தைச் செய்கிறான் என்று எண்ணக் கூடியதாக இருக்கிறது.
பாரதியின் துச்சாதனன் பற்றிய அறிமுகம். இவனைப்பற்றிய
பாஞ்சாலியின் அபிப்பிராயத்தையும் பாரதி தருகிறான்.
துச்சாதனன் பாஞ்சாலி இருந்த மாளிகைக்குச் சென்றான். பாஞ்சாலி, தான் மாதவிலக்காக இருப்பதை நினைத்து ஒதுங்கினாள். "அடி செல்வ தெங்கே” என்று சப்தமிட்டபடி நெருங்கினான். அவனை "இவன் ஆண் தகை அற்ற புலையன் என்று." அவள் நினைத்து அவன் எதிர் நின்று உரையாடுகிறாள் என்கிறான் பாரதி.
இது பாஞ்சாலியின் துச்சாதனன் பற்றிய எண்ணம் மட்டுமல்ல, பிரித்தானிய இராணுவத்தினர் பற்றிய மக்களின் எண்ணம் என்று கொள்ளலாம்.
நெட்டை மரங்கள்
பாஞ்சாலி துச்சாதனனோடு வாதாடுவது வியாச பாரதம் போலவே தான் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் காணப்படுகிறது. இருப்பினும் துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப்பிடித்து தெருத்தெருவாக இழுத்து வந்ததாகப் பாரதி பாடுவதும், அதைப் பார்த்துச் செய்வதறியாது திகைத்து நின்ற கையாலாகாத மக்கள்
86

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Oan4Jaశ
கூட்டத்தைப் பாரதி கடுங் கோபத்தோடு ஏசுவதும் உணர்வு பூர்வமாக இருக்கிறது.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
வியாசரைப் போலவே பாரதியும் துச் சாதனன் தன்கையினால் பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்ததாகவே குறிப்பிடுகிறான்.
‘ஐயகோ’ என்றே அலறி உணர்வற்றுப் பாண்டவர்தம் தேவியவள் பாதிஉயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரம் பற்றி முன்னிழுத்துச் சென்றான்; வழிநெடுக மொய்த்தவராய் ‘என்ன கொடுமையிது என்று பார்த்திருந்தார். ஊரவர்தம் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ.
வியாசர் இப்படி பொதுமக்களின் இயலாமையைச் சொல்லவில்லை. பொதுமக்களின் இரக்கத்தை மட்டுமேதான் சொல்கிறார்.
பாரதி தன் அடி மன உணர்வுக்கேற்பவும், உருவகத்திற்கு ஏற்பவும், பொதுமக்களை - பார்வையாளர்களை ஏசுவது கவனிக்கத்தக்கது.
பாஞ்சாலியை இழுத்து வந்த, துன்பப்படுத்துகின்ற துச்சாதனனை, மக்கள் மிதித்துக் கொன்று பாஞ்சாலிக்கு விடுதலை வழங்காமல் "நெட்டை மரங்களென நின்று பயனற்ற பெட்டைப் புலம்பல் புலம்பினார்” என்று ஆக்ரோசமாகப் பாடுகிறான் பாரதி. 87

Page 47
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2.صعيدAA( كفهيه
இது இந்தியாவைக் கேவலப்படுத்தி நிற்கும் பிரித்தானியரின் ஏவலாளர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்காமல் பார்த்துப் பரிதவித்திருந்த பாரத மக்களை, செயலாற்றத் தூண்டுகின்ற கூற்றாகவே கொள்ளத்தக்கது.
செயலற்றிருந்த பாரத மக்கள் மேல் பாரதிக்கு இருந்த கோபத்தை, இப்பாடல் வரிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா.
பாஞ்சாலியின் அவலத்தையும் துயரத்தையும் கையறு நிலையையும்
ஐயகோ என்றே அலறி உணர்வற்றுப் பாண்டவர்தந் தேவியவள் பாதிஉயிர் கொண்டுவர
என்ற வரிகளால் காட்டிய பாரதி, துச் சாதனனின் கொடுமையை
"கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்”
என்றும், "நீண்ட கருங்குழலை நீசன் கரம் பற்றி முன்னிழுத்துச் சென்றான்” என்றும் சொல்கிறான். மக்களின் செயலற்ற தன்மையை, எதிர்க்கும் ஆற்றலற்ற தன்மையைப் பாரதி
S S S S S S S S S S S S S S S S S S S S S LSL LSL S S S S S வழிநெடுக மொய்த்தவராய் ‘என்ன கொடுமையிது என்று பார்த்திருந்தார் ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
88
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيدخصصعيد
என ஆவேசமாகப் பாடுகிறான் அடுத்து பாஞ்சாலி மன்னர் சபையிலே கதறி அழுது நியாயம் கேட்கும் போது துச்சாதனனைப் பார்த்து,
மங்கியதோர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே
என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்.
நின்னை எவரும் நிறுத்தடா' என்பதிலர்.
என்று பார்வையாளர்களைப் பார்த்து பாஞ்சாலி கோபத்தோடு தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதும், எதுவும் சொல்லாதிருந்த மன்னர்களையும், சபையோரையும் பாரதி குறிப்பிடும் போது
மற்றவர் தாம் முன்போல் வாயிழந்து சீர்குன்றிப் பற்றைகள் போல் நிற்பதனைப் பார்த்து
எனக் குறிப்பிடுவதையும் கவனத்தில் எடுப்பது நல்லது. தெருவிலே செயலற்று நின்ற மக்களை "வீரமிலா நாய்கள் நெட்டை மரங்கள் என்று ஏசிய பாரதி, கெளரவர் சபையில் இருந்தவர்களைப் பற்றைகள்’ என்று ஏசுவதும் கவனிக்கத்தக்கது.
தன்னைக் காப்பாற்றக் கடமை பூண்ட தனது கணவர்கள், தன்னைப் பணயம் வைத்துச் சூதாடி இழந்து விட்டு, தனது துன்பகரமான, அவமான கரமான, பரிதாப நிலையைப் பார்த்திருக்கின்ற தன்மையை, பாஞ்சாலியின் மூலம் பாரதி பின்வருமாறு காட்டுகிறான்.
விம்மி அழுதாள் - விதியோ கணவரே! அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ.
பாஞ்சாலி மூலமாக பாரதி பாரதவிடுதலையையே
பாடுகிறான் என்பதை உணர்வு பூர்வமாக அறியக்கூடியதாக இருக்கிறதல்லவா.
89

Page 48
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் @೩enkläå
பாஞ்சாலியின் கேள்விக்கு பீஷ்மர் பதில் சொல்கிறார் வியாசரின் பாரதத்தில் பீஷ்மர் தெளிவில்லாமலே பதில் சொல்கிறார். ஆனால் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பீஷ்மர், அக்காலப் பெண்கள் நிலை பற்றித் தெளிவாகவே கூறுகிறார்.
பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்குக்
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாரதி இந்த இடத்தில் சரியாகப்
பயன்படுத்திக் கொள்கிறான். பீஷ்மரின் கூற்றைப் பார்ப்போம்.
சூதாடி நின்னை உதிட்டிரனே தோற்றுவிட்டான். வாதாடி நீயவன்தன் செய்கை மறுக்கின்றாய் சூதிலே வல்லான் சகுனி தொழில்வலியால் மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திட்டான். மற்றிதணி லுன்னையொரு பந்தயமா வைத்ததே குற்றமென்று சொல்லுகிறாய், கோமகளே! பண்டையுக வேத முனிவர் விதிப்படி நீ சொல்லுவது நீதமெனக் கூடும். நெடுங்காலச் செய்தியது ஆணோடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணிவந்தார்.
ஒரு காலத்தில், ஆணும் பெண்ணும் சமம் என்னும் நிலை இருந்தது. அக்காலத் தர்மப்படி, நீதிப்படி நீ கேட்கும் கேள்வி நியாயமானது தான், என்று கூறும் பீஷ்மர் பிற்கால நிலைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
- - - - - - - - - - - - - - - - பின்னாளில் இது பெயர்ந்து போய் இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால், ஆடவருக்கு ஒப்பில்லை மாதர், ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்: முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
பெண்களின் இழிநிலை பற்றி, பீஷ்மர் கூறிய கருத்து, பாரதியின் காலத்தும் இருந்தது. அதனால் பாரதி மிகச் சிறப்பாக
90

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2en:Jaశ
அதனைத் தருகிறான். இப்படிக் கூறிய பீஷ்மர் பாஞ்சாலியின் கேள்விக்கு பதில் சொல்கிறார்.
தன்னை அடிமையென விற்றபின் னுந்தருமன் நின்னை அடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.
தருமன் தன்னைத் தோற்ற பின்னும், தன் மனைவி பாஞ்சாலியைத் தோற்கும் உரிமையுடையவன், என அக்கால நீதியைக் கூறிய பீஷ்மர், தனக்கு அந்தச் சாத்திரத்தில் நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் தடுக்கும் திறமும் இல்லை என்றும் பின்வருமாறு கூறுகிறார்.
செல்லு நெறியறியார் செய்கையிங்குப் பார்த்திடிலோ கல்லும் நடுங்கும், விலங்குகளும் கண்புதைக்கும், செய்கை அநீதியென்று தேர்ந்தாலும் சாத்திரந்தான் வைக்கும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் ஆங்கவையும் நின்சார்பிலாகா வகையுரைத்தேன். தீங்கு தடுக்குந் திறமிலேன்.
பேயரசு செய்தால்
வீஷ்மரின் இந்தக் கருத்தைக் கேட்ட பாஞ்சாலி கோபமாகப் பின்வருமாறு கூறுகிறாள்.
சாலநன்கு கூறினீர்! ஐயா! தருமநெறி. பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால் கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின் கூட்டமுற மந்திரிகள், சாத்திரிமார், தம்மை வரவழைத்தே செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால் "தக்கதுநீர் செய்தீர், தருமத்துக் கிச்செய்கை ஒக்கும்” என்று கூறி உகந்தனராம். சாத்திரிமார். பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
வென்றவனும், வல்லமை படைத்தவனும் சொல்வதையும் செய்வதையும் சரியென்று நியாயம் கற்பிக்கின்ற நீதிநூல்களையும், 91

Page 49
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2جيجہnnثJينتهيوo
சாத்திரிமார்களையும் பாஞ்சாலி மூலமாகக் கடுமையாக ஏசுகிறான் பாரதி.
வியாசரின் பாரதத்தில் பீஷ்மர் தர்மம் மிகவும் சூக்குமமானது. அதனைப் புரிந்து கொள்வது கஷ்டம் என்று கூறித் தப்பித்துக்கொள்வதை முன்பு கூறியிருக்கிறேன்.
பாஞ்சாலி சபதத்தில் பீஷ்மர் பெண் அடிமை நிலைபற்றி விரிவாகப் பேசுவதையும், தருமன் பாஞ்சாலியைத் தோற்றது சரியென்று கூறியதையும் பார்த்தோம்.
பெண்களோடு பிறந்து, பெண்கள் மூலம் பிறந்து,பெண்கள் மூலம் பிள்ளைகள் பெற்று வாழுகின்ற ஆண்கள், பெண்களுக்குச் செய்கின்ற அநியாயங்களைக், கொடுமைகளை நினைக்கச் செய்யும் விதத்தில், பாஞ்சாலி சபையிலே கதறி அழுகின்ற காட்சி, எல்லா ஆண்களுக்கும் இரக்கத்தையும் பரிதாப உணர்ச்சியையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்த வல்லது.
பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்! பெண்பாவ மன்றோ பெரியவசை கொள்ளிரோ! கண்பார்க்க வேண்டுமென்று கையெடுத்துக் கும்பிட்டாள். அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள் வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத் தேவி கரைந்திடுதல் கண்டே.
பாஞ்சாலியின் துன்பமென்பது பாரதியைப் பொறுத்த வரை அவன் காலத்து அடிமைப்பட்ட பெண்ணினத்தின் துன்பம் என்றே சொல்லலாம்.
சகோதரப்பகை
அடிமைப் பட்ட இந்தியாவையும் , அடிமைப் பட்ட பெண்ணினத்தையும், ஒருங்கே மனக்கண்ணில் காணச் செய்கிறான் பாரதி. தொடர்ந்து பாஞ்சாலியின் நிலையைப் பாரதி பாடுகிறான்.
92

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ക്ഷക്ഷ
ஆடை குலைவுற்று நிற்கிறாள் - அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள் - வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள்
மைக்குழல் பற்றி இழுக்கிறான்.
பாஞ்சாலியின் பரிதாப நிலையைப் பார்த்த பீமன், தருமனை ஏசுவதும், பாஞ்சாலியைப் பணயம் வைத்ததற்காகத் தருமனின் கைளை எரிப்பதற்கு நெருப்பெடுத்து வரும்படி, பீமன் சகாதேவனிடம் கூறியதும், வியாசர் பாரதத்தில் போலவே தான் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் காணப்படுகின்றது.
இது பொறுப்ப தில்லை - தம்பி எரி தழல் கொண்டு வா கதிரை வைத்தி ழந்தான் - அண்ணன் கையை எரித்திடு வோம்.
எரித்திடுவேன் என்று சொல்லாமல், எரித்திடுவோம் என்று பீமன் சொல்வது நோக்கத் தக்கது. தலைமைக் கெதிரான அரசியற் குரலாகக் கொள்ளத்தக்கது.
இந்தியத் தலைவர்களுக்குள்ளே சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த ஒற்றுமையின்மை, மாற்றுக் கருத்து என்பவற்றை வீமனின் கூற்று நினைவூட்டுகிறது.
வீமன் "தருமனின் கையை எரித்திடுவோம் எரிதழல் கொண்டுவா” என்று சகாதேவனிடம் கூறிய மாத்திரத்தில், அருச்சுனன் மிக நிதானமாக வீமனின் கோபத்தை அடக்கக் கூடிய வார்த்தைகளைச் சொல்லுகிறான்.
மனமாரச் சொன்னாயோ? வீமா என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர்முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்றமென்றாய். சினமான தீ அறிவைப் புகைத்த லாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்.
93

Page 50
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2صعيدAوشيدات
எனத் தொடர்கிறான் அருச்சுனன். என்ன வார்த்தை சொன்னாய், எங்கு சொன்னாய், யாவர் முன்னே? என அருச்சுனன் வீமனைப் பார்த்துக் கேட்பது, எந்த நிலையிலும் எமது ஒற்றுமை குலையாமல் நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எமது தவறுகளை, எமது தனிப்பட்ட பிரச்சினைகளை, நமக்குள்ளே நாமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் முன்னிலையில் எமது பலவீனத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்ற அரசியல் சித்தாந்தத்தைக் காட்டுகிறது.
பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேரையும் ஏதோ வழியில் பிரிக்க வேண்டும் என்று பல தடவைகள் சிந்தித்தவன் துரியோதனன்.
சூதாட்டத்தின் போது சகாதேவனையும், நகுலனையும் பணயமாக வைத்துத் தருமன் இழந்து துயருற்ற போது, சகுனி அவனைப்பார்த்துக் கூறுகிறான். "சகாதேவனும், நகுலனும் உனது ஒரு தாய் வயிற்றுச் சகோதரர்களில்லைத்தானே. அதனால் அவர்களைப் பணயம் வைத்து இழந்து விட்டாய்,
உனது தாயான குந்திதேவியின் பிள்ளைகளான, ஒருதாய் வயிற்றுச் சகோதரர்களான பீமனையும், அருச்சுனனையும் பணயத்தில் வைக்க விரும்பவில்லைப் போலும்” என்று கூறுகிறான்.
பாண்டவர்களில் தருமன், வீமன், அருச்சுனன் ஆகிய மூவரும் குந்திதேவியின் பிள்ளைகள் என்பதும், நகுலனும், சகாதேவனும் மாத்திரி தேவியின் பிள்ளைகள் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.
இந்தப் பிரிப்புச் சூழ்ச்சியை, சந்தர்ப்பம் பார்த்து சகுனி முன்வைக்கிறான். இது துரியோதனனின் நீண்ட நாள் திட்டம். உடனே தருமன் கடுங்கோபங் கொண்டு சொல்கிறான்.
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; ஐவர்
எண்ணத்தில் ஆவியில் ஒன்றுகாண் - இவர் பங்கமுற் றேபிரி வெய்துவார் - என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய்.
94
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Oan4Jaశ
தருமனின் இந்தக் கூற்று, பாரதிக்கு பாரததேச விடுதலைப்போரை நினைவூட்டியதால் எழுந்ததாகக் கொள்ளத்
தக்கது.
தருமத்தின் வாழ்வு
அருச்சுனன் வீமனுக்குப் புத்தி சொல்லும் போது விதியினை-ஊழினை காரணங் காட்டி தருமம் வெல்லும் என்று உறுதியாகக் கூறுகிறான்.
"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான். கருமத்தை மென்மேலும் காண்போம் இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம் காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனுவுண்டு காண்டிவம் அதன்பேர் என்றான்
பாஞ்சாலியின் பணயம் சம்பந்தமாக வீமன் கோபங் கொண்டு தலைமைக் கெதிராக குரல் எழுப்பியதையும், தலைமைக்கு தண்டனை கொடுக்க முனைந்ததையும், அதற்கு ஏனையோரின் ஆதரவை (சகாதேவன்) கோரியதையும் பாரதி பாரத விடுதலைப் போரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான் என்பதை மேலே காட்டிய காட்சிகள் மூலம் இலகுவில் கண்டு கொள்ளலாம்.
ஐவருக்கு மனைவியாக பாஞ்சாலி இருந்தது போல, இந்தியாவின் பல நாட்டுமன்னர்களுக்கும் இந்திய தேசம் சொந்தமாக இருந்தது. மன்னர்களைத் தமக்குள்ளே பகைக்க விட்டால் இந்தியாவை அபகரிப்பது சுலபமானது என்று கருதிய பிரித்தானியர், பாரத நாட்டு மன்னர்களுக்குள்ளே பகைமை உணர்ச்சியை ஏற்படுத்தியதையும், சிலரை வளைத்துப் பிடித்ததையும் இந்திய வரலாறு கூறுகிறது. அதனை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தமானது.
95

Page 51
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ெ 1ለmlàâ
பெண்ணடிமை நிலை
துரியோதனனின் தம்பியர்களிலே சிறந்த நீதிமானாகப் போற்றப்பட்ட விகர்ணன், பீஷ்மரின் நியாயங்களை ஏற்றுக் கொள்ளாதவனாகி, பாஞ்சாலியின் கண்ணிருக்கும், கேள்விக்கும் பதில் தரும்படி சபையோரை வேண்டுகிறான்.
விகர்ணன் பெண் ணடிமை முறையை ஏற் காது, பாஞ்சாலியின் பணயம் நியாயமற்றது என்ற கருத்தில் பேசுகிறான். தருமன் எந்த நிலையிலும் தன்னைத் தோற்பதற்கு முன்போ, பின்போ பாஞ்சாலியைப் பணயம் வைத்தது தவறு என்ற வகையிலே பின்வருமாறு கூறுகிறான்.
அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்
அப்போது விகர்ணனெழுந் தவைமுன் சொல்வான். பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான்கொள்ளேன். பெண்டிர் தம்மை எண்ணமதில் விலங்கெனவே கணவ ரெண்ணி
ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன் வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
வழங்குவதிந் நெறிஎன்றான் வழுவே சொன்னான்
எந்தையர்தம் மனைவியரை விற்ப துண்டோ
இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற விந்தையைநீர் கேட்டதுண்டோ? விலைமா தர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக் காரர் சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்
சொல்லளவே தானானாலும் வழக்கந் தன்னில் இந்தவிதஞ் செய்வதில்லை சூதர் வீட்டில்
ஏவற்பெண் பணயமில்லை என்றுங் கேட்டோம்.
பெண்ணை விலங்காகக் கணவர் மதித்து, எதுவும் செய்திடலாம் என்ற பீஷ்மரின் கூற்றை விகர்ணன் கண்டிக்கிறான். வேதநெறி அதுவல்ல. இருப்பினும் தற்காலத்தில் அதுவே வழக்கு என்று பீஷ்மர் கூறியதையும் விகர்ணன் ஏற்கவில்லை.
96

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் @೩chwäå
எமது தந்தையர் யாராவது மனைவியரை விற்றிருக்கிறார்களா? இதுவரையில் அரசியரைச் சூதாட்டத்தில் யாராவது தோற்றிருக்கிறார்களா? விலை மாதர்களுக்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் யாவருக்கும் பொதுவான விதியெனப் புகுத்தி விட்டார். இதுவும் கூட சொல்லளவேதான். செயலளவில் வழக்கத்தில் இல்லை என்றும் கூறுகிறான் விகர்ணன்.
இதுமட்டுமன்றி வீமன் கூறிய கருத்தொன்றையும் விகர்ணன் மீட்டும் கூறுகிறான். வீமன் தருமனை ஏசும் போது
சூதர் மனைகளி லே - அண்ணே
தொண்டு மகளி ருண்டு
சூதிற் பணயமென் றே - அங்கோர்
தொண்டச்சி போவ தில்லை.
என்கிறான். சூதாடுபவர்களின் வீட்டிலே அடிமைத் தொண்டு செய்கின்ற பெண்கள் இருக்கின்றார்கள். ஆனால் அப் பெண்களைச் சூதாட்டத்தில் பணயம் வைத்துச் சூதாடுவதில்லை. என்று வீமன் சொல்வது போலவே தான், விகர்ணனும் சொல்கிறான். “சூதர் வீட்டில் ஏவற் பெண் பணயம் இல்லை” என்று
விகர்ணனின் நியாயத்தைச் சபையோர் ஏற்றுக் கொண்டு கூச்சல் போட்டனர் என்கிறான் பாரதி. சபையோரால் தடுக்க முடியவில்லை. தட்டிக்கேட்க முடியவில்லை. தனியாக எழுந்து தன்னை அடையாளங் காட்டி நியாயத்தை எடுத்துச் சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை. "கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி” வேறெதுவும் செய்ய முடியாதவராக இருந்தனர்.
விகர்ணனுக்கு கர்ணன் விபரமாகப் பதில் சொல்வதாக வியாச பாரதம் கூறுகிறது. அதை முன்பு பார்த்திருக்கிறோம். பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் படி கர்ணன் எந்த நியாயத்தையும் சொல்லவில்லை. விகர்ணனது அறிவையும் வயதையும் இகழ்ந்து பேசுகிறானே தவிர நியாயம் கூறவில்லை.
97

Page 52
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 22النصصعيدణి
வில்லி பாரதத்தில் கர்ணன் விரிவாக நியாயம் கூறுகிறான். அது வியாசரின் பாரதத்தில் உள்ளது, போலவே காணப்படுகின்றது.
வில்லி பாரதத்தில் துரியோதனன் தான், பாஞ்சாலியின் துகிலை உரியும் படி கட்டளை இடுகிறான். அது பற்றியும் முன்பு பார்த்துள்ளோம். வியாசரைப் பின்பற்றிய பாரதி கர்ணனே, பாஞ்சாலியின் துகிலை உரியும் படி கட்டளை இட்டதாகப் பாடுகிறான்.
மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை சீரிய மகளும் அல்லள்
ஐவரைக் கலந்த தேவி யாரடா பணியாள்! வாராய்!
பாண்டவர் மார்பி லேந்தும் சீரையுங் களைவாய் தையல்
சேலையுங் களைவாய் என்றான்
வில்லி பாரதத்தில் துரியோதனன் துச்சாதனனைப் பாரத்துத் தான் "துகிலுரியும் ஆணையைப் பிறப்பிக்கிறான். வியாசரின் பாரதத்தில், கர்ணன் துச்சாதனனைப் பாரத்து இக்கட்டளையை இடுகிறான்.அனால் ஏனோ பாரதியார் கர்ணன் யாரடா பணியாள்! வாராய்' எனப் பணியாளை அழைத்துக் கட்டளையிட்டதாகப் பாடுகிறார்.
யாரடா பணியாள்
பாஞ்சாலியைப் பாரத தேசமாக பாரதி உருவகித்ததால், துரியோதனன் முதலியோர் பிரித்தானியர்களாக உருவகிக்கப்படுகின்றனர். எனவே துச்சாதனன் துரியோதனனின் தம்பி என்பதால் அவனையும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்தவனாகத்தான் உருவகிக்க முடியும் என்று கருதி "யாரடா பணியாள்!" என்று பிரித்தானியருக்கு ஏவல் செய்த இந்தியரைக் குறித்து பாரதி பாடியிருக்கலாம் என எண்ண இடமுண்டு.
98
 

பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் 9. ARaكهي
இந்திய அடிமைகளைக் கொண்டே, இந்தியாவை அவமானப்படுத்த பிரித்தானியர் முயன்றனர் என்ற கருத்தைச் சொல்ல பாரதி முயன்றிருக்கலாம்.
இந்திய தேசத்தைக் கைப் பற்றிய பிரித்தானியர் இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை அடக்கியதும், அவமானப்படுத்தியதும் வரலாற்று உண்மையல்லவா. எனவே பாரதியும் அதனைச் சூசகமாகக் காட்ட முனைந்திருக்கலாம்.
திரெளபதி, ஐவருக்கும் மனைவி என்ற காரணத்தால் பொதுமகள், எனவும் பணயப் பொருளாக விலைப்பட்டதால் விலைமகள் எனவும், அடிமையாக்கப்பட்டதால் தாசி எனவும் இரு பொருள்பட துரியோதனன், கர்ணன், துச்சாதனன் ஆகியோர் ஏசுவதையும் அவளுக்கு நாணம் என்ற ஒன்று தேவையற்றது. இல்லாத ஒன்று. ஆடை கூட அவளுக்கு அவசியமற்றது. என அவர்கள் கருதியதாக வியாசரும், பாரதியும் ஒரே விதமாகக் கூறுகின்றனர்.
பெண்ணடிமையின் உச்சக்கட்ட வெளிப்பாடான, பாலியல் துன்புறுத்தலாக, பாஞ்சாலியின் துகில் உரிதல் நிகழ்ச்சியைக் கருதலாம்.
பாலியல் வல்லுறவை விட, மிகமிகக் கொடுரமான கொடிய செயலாக, ஆண்கள் நிறைந்த சபையில் கணவர்கள், உறவினர்கள், மாமன், பாட்டன், முன்னிலையில் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்த முனைந்த செய்கையைச் சொல்லலாம்.
உலகில் எந்தக் காவியத்திலும், எந்தக் கதையிலும், இத்தகைய காட்சி இடம் பெற்றிருப்பதாக யாரும் இதுவரை சுட்டிக் காட்டவில்லை.
பாரதி பாஞ்சாலி சபதம் பாடுவதற்கு இந்தக் கொடுரம் முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். பாஞ்சாலியைக் கெளரவர்கள் செய்ததைத்தான் பாரத நாட்டைப் பிரித்தானியர் செய்கிறார்கள் என ஒப்பிட்டு உணர்த்தும் நோக்கமே பாரதியின் நோக்கம் எனலாம்.
99

Page 53
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2صعيدAوشيدت
பாஞ்சாலி சபதம்
துச் சாதனண் பாஞ் சாலியின் துகிலை உரியத் தொடங்குகிறான். பாண்டவர் தாமே தம் மேலாடைகளைக் களைந்து எறிகின்றனர்.
துச் சாதனன் பாஞ்சாலியின் சேலையை உரியத் தொடங்கியதைப் பாடும் பாரதி, பாஞ்சாலியை 'அன்னை என்று குறிப்பிடுவது கருதத்தக்கது.
துச்சாதனன் எழுந்தே - அன்னை
துகிலினை மன்றிடை உரிதலுற்றான்
எனத் தொடங்குகிறான் பாரதி.
கண்ணன் பாட்டைத் தனியாகப் பாடிய பாரதிக்கு இந்த இடத்தில் நல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. மிக அழகாகக் கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறான் பாரதி. இது வியாசரை விட விரிவாகப் பாரதியால் பாடப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
உரிய, உரிய துகில் (சேலை) பெருகிக் கொண்டே போனதால், துச்சாதனன் களைத்து வீழ்ந்து விட்டதையும், வீஷ்மர் பாஞ்சாலியைத் தொழுவதையும் மற்றும் நிகழ்ச்சிகளையும் பாரதி பின்வருமாறு பாடுகிறான்.
பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல் - கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
பாஞ்சாலியின் சேலை உரிய உரியப் பெருகியதைப் பாடும் பாரதி, "தையலர் கருணையைப் போல்”, என உவமிப்பது சற்று வித்தியாசமானது. பெண்களின் கருணை பெருகும் இயல்புடையது எனப் பெண்மையைப் போற்றுகிறான் பாரதி.
100
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ക്ഷക്ഷ
பெண்ணொளி வாழ்த்திடு வார் - அந்தப்
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல் கண்ண பிரானரு ளால் - தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதி தாய் வண்ணப் பொற் சேலைக ளாம் - அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந் தனவே. எண்ணத்தி லடங்கா வே - அவை
எத்தனை எத்தனை நிறத்தன வோ!
பெண்ணை வாழ்த்துபவரை பெருமக்கள் என்றும், அந்தப் பெருமக்கள் செல்வம் பெருகும் என்றும், பாஞ்சாலியின் சேலை அந்தப் பெருமக்களின் செல்வம் போலப் பெருகியது என்றும், பாரதி சொல்வது, பெண்களைப் பாரதி மதித்த விதத்தைச் சிறப்பாகக் காட்டுகிறது.
பொன்னிழை பட்டிழை யும் - பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைக ளாய் சென்னியிற் கைகுவித் தாள் - அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே முன்னிய ஹரிநா மம் - தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே துன்னிய துகிற் கூட்டம் - கண்டு
தொழும்பத்துச் சாதனன் வீழ்ந்து விட்டான்.
தேவர்கள் பூச்சொரிந் தார் - ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி என்றே ஆவலோ டெழுந்து நின்று - முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழு தான் சாவடி மறவரெல் லாம் - ஓம்
சக்தி சக்திசக்திஎன்று கரங்குவித் தார். காவலின் நெறிபிழைத் தான் - கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந் தான்.
101

Page 54
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ܗܶܧܐ ثمصعيدي[
பாஞ்சாலியைத் தேவர்கள் ஒம் ஜெய ஜெய பாரத சக்தி' என்று பூச்சொரிந்து போற்றியதாகப் பாரதி பாடியிருப்பது பாரதி பாஞ்சாலியைப் பாரத தேசமாக உருவகித்ததை அப்படியே வெட்டவெளிச்சமாகக் காட்டிவிடுகிறது.
பாரத தேசத்தை அதன் தலைவர்கள் தோற்றுக் காப்பாற்ற முடியாமல் கைவிட்டாலும், அதன் மக்கள், காக்க வழியின்றி வலியின்றிச் செயலற்றுத் திகைத்து நின்றாலும், தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்கவே கண்ணபிரான் பாஞ்சாலியைக் காத்த கதையைப் பாரதி பாட விரும்பினானோ என்று எண்ணக் கூடிய வகையில் துகிலுரிதல் காட்சியைப் பாரதி பாடியிருக்கிறான்.
கடவுளின் அருளால் தான் நாட்டில் புரட்சிகள் உருவாகின்றன என்ற பொருளில் பாரதி ரூஷ்ய நாட்டுக்கு வாழ்த்துக்கவி பாடியதையும் மறப்பதற்கில்லை.
மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப் புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
என ரூஷ்ய நாட்டுப் புரட்சியை யுகப்புரட்சி என்றும் அதற்குக் காரணம் மாகாளி பராசக்தியின் கடைக்கண்பார்வை தான் என்றும், ஜார் என்னும் கொடுங்கோல் மன்னன் அப்புரட்சியினால் வீழ்த்தப்பட்டான் என்றும், பாரதி புதிய ரூஷ்யா விற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பாடியிருக்கிறான்.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்
வனவாசம், இவ்வா றங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்
அம்மை மனங் கனிந்திட்டாள்; அடிபரவி
உண்மை சொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
102
 

பாரதியாரும் பாஞ்சார்லி சபதமும் Dia nzٹلاJ2تمهي
பராசக்தியை வழிபடாத ருஷ்ய நாட்டு மக்களுக்கே பராசக்தி கடைக்கண் பார்வையை அருளி, அவர்களைக் காத்தாள் என்றால், அந்தப் பராசக்தி தன்னை நம்பி வழிபடுகின்ற பாரத மக்களுக்கு ஏன் விடிவைத் தராள், துன்பங்களுக்கு முடிவைத் தராள், என்ற வினாவிற்கு விடையாகவே நம்பிக்கை ஊட்டுகிறான் பாரதி.
இருப்பினும் தெய்வம் முயற்சியுடையவர் பக்கமே நிற்கும், செயலாற்றத் துTணி டும் என்ற உணி மை நிலையை உணர்த்துவதாகவே சபதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சபதங்கள்
பாஞ்சாலியின் துகிலைத் துச்சாதனன் உரிய உரிய அது பெருகிய பின்பும் வியாச பாரதத்தில் வாக்குவாதங்கள் நீளுகின்றன. அது பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். பாஞ்சாலியைத் தனது தொடையில் வந்து அமரும்படி துரியோதனன் சைகை காட்டியதையும் விரிவாக முன்பு பார்த்துள்ளோம்.
பாரதி விறுவிறுப்பை அதிகப்படுத்தி உச்சக் கட்டக் காட்சியான பாஞ்சாலி சபதத்தை முடிப்பதற்காக, உரையாடல்களைத் தவிர்த்து சபதங்களைச் சொல்கிறான்.
பாஞ்சாலியைத் தன் தொடையில் வந்து அமரும் வண்ணம் துரியோதனன் சைகை காட்டியதை பாரதி பாடவில்லை. ஆனால் வீமனின் சபதத்தில் அதைக் குறிப்பிடுகின்றான்.
வீமனெழுந் துரைசெய் வான் - இங்கு
விண்ணவ ராணை பராசக்தி ஆணை
தாமரைப்பூவினில் வந்தான் - மறை
சாற்றிய தேவன் திருக்கழலாணை
மாமகளைக் கொண்ட தேவன் - எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே - சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில்
103

Page 55
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2وشيوخصصعيدي
ஆணையிட் டி.துரை செய்வேன் - இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் தன்னை பேணும் பெருங்கன லொத்தாள் - எங்கள்
பெண்டு திரெளபதியைத் தொடை மீதில் நாணின்றி வந்திரு என்றான் - இந்த
நாய்மக னாந்துரி யோதனன் தன்னை, மாணற்ற மன்னர்கள் முன்னே - என்தன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே.
தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் - தம்பி சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் - அங்கு கள்ளென ஊறும் இரத்தங் குடிப்பேன் நடைபெறுங் காண்பி ருலகீர் - இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா தடையற்ற தெய்வத்தின் வார்த்தை - இது
சாதனை செய்க பராசக்தி என்றான்.
தேவர்கள், பராசக்தி, பிரம்மதேவன், மகாவிஷ்ணு மூர்த்தி, சிவபெருமான் முதலான கடவுளர்கள் மேல் ஆணையிட்டுத் தன் சபதத்தைச் செய்கிறான் வீமன்.
பாஞ்சாலியைத் தன் தொடையிலே வந்திரு' என்று சொன்னதால், துரியோதனனது தொடையைப் பிளந்து உயிரை மாய்ப்பேன் என்றும், துச்சாதனனுடைய தோள்களைப் பிய்த்து "கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன்" என்றும் கோரமான சபதத்தை வீமன் செய்கிறான்.
துச்சாதனன், பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்து இழுத்து வந்ததற்காகவும், பாஞ்சாலியின் சேலையைப் பிடித்து இழுத்து உரிந்ததற்காகவும், பழிவாங்குவதற்காகவே தோள்களைப் பிய்த்து அங்கே ஊறும் இரத்தம் குடிப்பதாக வீமன் சபதஞ் செய்கிறான்.
வியாசரின் பாரதப்படி வீமன் முதலில் சபதஞ் செய்கிறான்.
104

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ീക്ഷ ܘ̇ܒܸܧܐ[
அதில் “உலகத்தில் உள்ள சத்திரியர்கள் யாரும் இதுவரை செய்யாததும், இனியாரும் செய்யப் போகாததுமான ஒரு சபதத்தை இதோ நான் செய்கிறேன். கெட்ட புத்தியுடையவனும், இழிவானவனுமாகிய இந்தத் துச்சாதனன் மார்பை, யுத்தத்தில் பிளந்து இவன் ரத்தத்தை நான் குடிக்காமல் விட்டால் என் முன்னோர்கள் சென்ற நல்ல உலகத்திற்கு நான் போகாமல் இருக்கக்கடவேன்” என வருகிறது.
பாஞ்சாலியை தனது தொடையில் வந்து அமருமாறு துரியோதனன் சைகை காட்டியதைப் பார்த்த பீமன் "துரியோதனா! உன்னுடைய இந்தத் தொடையை என் கதையினால் பிளந்து யுத்தத்தில் உன்னை மாய்ப்பேன்" என்று மீண்டும் ஒரு சபதஞ் செய்தான்.
வியாசரின் பாரதப்படி பதினேழாம் நாள் யுத்தத்தின்போது வீமன் துச்சாதனனைக் கீழேதள்ளி, அவனுடைய கழுத்தைக் காலால் மிதித்த வண்ணம், அவனைப் பார்த்து, திரெளபதியினுடைய கூந்தலை உன்னுடைய எந்தக் கை இழுத்தது சொல். பீமன் கேட்கிறான் பதில் சொல்' என்று கத்தினான்.
அந்நிலையிலும் கூட, அச்சம் கொள்ளாத துச்சாதனன், "பீமா! நீங்கள் ஐவர் வாய்புதைத்துப் பார்த்துக் கொண்டிருந்த போதே, திரெளபதியின் கூந்தலைப் பற்றி இழுத்த பெருமை உடைய கை இது தான்” என்று பதில் கூறிக் கையைத் தூக்கிக் காட்டினான்.
துச்சாதனனின் கர்வம் நிறைந்த சொற்களைக் கேட்ட பீமன், வெறி பிடித்துப்போய், அவன் கையை ஒடித்தான். பிறகு அவனை மிதித்தே கொன்றான். அதன்பின் பூமியில் வீழ்ந்து கிடந்த துச்சாதனனின் மார்பைப் பிளந்து அவனுடைய இரத்தத்தைக் குடிக்கத் தொடங்கினான், எனச் சொல்லப்பட்டுள்ளது.
பாரதியார் “துச்சாதனனின் தோள்களைப் பிய்த்து இரத்தம் குடிப்பேன்" என வீமன் சபதஞ் செய்ததாகச் சற்று மாற்றிப் பாடினார்.
105

Page 56
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ܣܘܧܐ AKJaén
வீமனின் சபதத்தைத் தொடர்ந்து அருச்சுனன் கர்ணனைக் கொல்வதாகச் சபதஞ் செய்கிறான். பின் பாஞ்சாலி சபதம் இடம்பெறுகிறது. நகுலன், சகாதேவன் ஆகியோரும் சபதஞ் செய்ததாக வியாசரும், வில்லிபுத்தூராழ்வாரும் பாடியிருக்கவும் பாரதி அது பற்றிப் பாடவில்லை.
பாஞ்சாலி சபதம் வியாச பாரதமான மூல பாரதத்தில் விரிவாகவோ உணர்ச்சி பூர்வமாகவோ சொல்லப்படவில்லை.
பாரதியின் பாஞ்சாலி சபதக் காவிய நாயகி பாஞ்சாலி என்பதால், உச்சக் கட்ட நிகழ்ச்சியாக பாஞ்சாலி சபதத்தைப் பாரதி உணர்ச்சிபூர்வமாக உள்ளர்த்தத்தோடு பாடுகிறான்.
பாஞ்சாலி சபதம்
தேவி திரெளபதி சொல்வாள், - ஒம்
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது
செய்யுமுன் னேமுடி யேனென் றுரைத்தாள்.
பாஞ்சாலியின் இந்தச் சபதம், இந்த வகையில் நிறைவேற்றப்படவில்லை. பாஞ்சாலி யுத்த களத்திற்கு வந்து துச் சாதனன், துரியோதனன் ஆகியோரின் இரத்தத்தை அள்ளவுமில்லை. தலையில் பூசவுமில்லை. வியாசரோ, வில்லிபுத்தூராழ்வாரோ இதுபற்றி எதுவும் சொல்லவும் இல்லை.
சோப்ரா தயாரித்த மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில், துச்சாதனனின் இரத்தத்தை பீமன் திரெளபதியிடம் கொண்டு போய்க் கொடுக்க, திரெளபதி கூந்தலில் பூசியதாக காட்டப்படுகிறது.
துரியோதனனின் தொடை முறிந்து அதன் வழியே அவனுயிர் போகவேண்டும் என்றும், தன்னைப் பிடித்திழுத்த
106

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2en:Jaశ
துச்சாதனனின் உயிர்போக வேண்டும் என்றும் பாஞ்சாலி சபதஞ் செய்ததாக, வியாசரும், வில்லிபுத்துராழ்வாரும் சொல்லியதை பாரதி கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கிறான்.
பாஞ்சாலி சபதத்தில் பாரதி பாஞ்சாலியின் சபதத்தை முதன்மைப்படுத்தியதற்குக் காரணமே பாஞ்சாலியைப் பாரதத் தாயாக உருவகப்படுத்தியதுதான்.
பாஞ்சாலியின் தலைவிரிகோலம்
பாஞ்சாலியைத் தலைவிரிகோலமாக அமங்கலிக் கோலமாக ஆக்கியவர்கள் கெளரவர்கள். பாஞ்சாலியை அவமானப்படுத்தியவர்கள் கெளரவர்கள்.
முடிக்காத கூந்தலிலே பூச்சூடும் வழக்கம் முற்காலத்தில் இல்லை. கூந்தலைக் கலைப்பது கணவனை இழந்த விதவைக்குத்தான்.
கணவனை இழந்த விதவைக்கு தலையை மொட்டை அடித்து முற்றாக வழித்த காலமும் இருந்தது. தலைமுடியைக் கலைத்து, அவிழ்த்துத் தொங்கும்படி விட்ட காலமும் இருந்தது.
இன்றும்கூட, விதவைகள் பூச்சூடுவதில்லை. இது இந்துப் பண்பாடாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் உயிருடன் இருக்க, அவர்கள் முன்னிலையில் இன்னொருவன் அவளது கூந்தலைக் கைதொட்டிழுத்துக் கலைத்து விட்டான். அவனைக் கொல்லாமல் ஐவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்கள் கணவர்களாக இருக்க முடியாது. உயிரோடிருக்கும் எந்தக் கணவனும் அதைப் பொறுத்துக் கொள்ளான்.
எனவே பாண்டவர்கள் மாண்டவர்கள்தான் என்ற
எண்ணத்தில்தான் பாஞ்சாலி விரித்த கூந்தலை முடிக்காதிருந்தாள்.
தாம் உயிரோடிருப்பதை பாண்டவர்கள் நிரூபிப்பதாயின்,
தன் கூந்தலைப்பிடித்திழுத்துக் கலைத்துத் தன்னைத் துகிலுரிந்து 107

Page 57
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Olaenllain
அவமானப்படுத்திய துச் சாதனனின் இரத்தத்தையும், தன் தொடையைக் காட்டி வந்து அமருமாறு அவமானப்படுத்திய துரியோதனனின் இரத்தத்தையும் தன் கூந்தலுக்கு நெய்யாகப் பாண்டவர் தரட்டும். அவற்றைக் கலந்து பூசிக்கூந்தலை முடித்து பூச்சூடி விதவைக் கோலத்திலிருந்து விடுதலை பெறுவேன் என்ற பிடிவாதத்தை விரதமாக மேற்கொள்வதே பாஞ்சாலியின் இச்சபதம்.
பாஞ்சாலியைக் காப்பாற்றக் கூடிய, காப்பாற்ற வேண்டிய கணவர்களாகிய பஞ்சபாண்டவர்கள் அருகிருக்க, பார்த்திருக்க, பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதும், அலங்கோலப்படுத்தப்பட்டதும் அப்படியே இந்தியாவின் நிலையாக பாரதியால் உருவகப்படுத் தப்படுகிறது.
பாரதத்தாய் தலைவிரிகோலமாக அமங்கலியாகப் பாரதியின் கண்ணிலே படுகிறாள். அவளின் அக்கோலத்தை மாற்றுவது பாரதத்தலைவர்களின் கடமை என்பதைப் பாஞ்சாலி சபதத்துப் பாஞ்சாலியின் தலைவிரிகோலம் மூலம் காட்டுகிறான் பாரதி.
கண்ணகி தன் கணவன் கோவலன் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டதும், தலைவிரிகோலமாகப் பாண்டிய மன்னனிடம் சென்றது பற்றி இளங்கோ அடிகள் விரிவாகப் பாடியுள்ளார்.
இந்துக்களைப் பொறுத்தவரையில், பெண்களின் தலைவிரிகோலம் என்பது மிகவும் இரக்கத்துக்குரிய கோலமாகவே கருதப்பட்டு வந்தது. கண்ணகியின் விரித்த கருங்குழல் பாண்டிய நாட்டின் அழிவுக்கு, அதாவது கண்ணகி கூந்தலை விரிக்க யார் காரணமோ அவர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது என்ற சிலப்பதிகாரச் செய்தி, பாரதிக்கு பாஞ்சாலியின் விரித்த கூந்தலை முடிக்கின்ற சபதத்திற்குக் காரணமாயிருக்கலாம்.
பாஞ்சாலி விரித்த கூந்தலோடு வாழ்ந்தது ஒரு பண்பாட்டுச் சீரழிவாகும். இந்தியாவும் அந்நியர்களால் பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை பாஞ்சாலியின் விரித்த கூந்தல் மூலம் பாரதி காட்டுகிறான்.
108

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் Pܗ̇ܧܐܝܶܣܗܧܐ
பாரதத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்து, சுதந்திர இந்தியாவைச் சுமங்கலிக் கோலத்தில் காண இந்திய மக்கள் போராட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் பாஞ்சாலியின் தலைவிரிகோலமும் சபதமும் அமைகின்றன.
காவியப் பண்புகள்
பாரதி பாஞ்சாலி சபதத்தை, ஒரு காவியமாகவே பாடுவதாகக் குறிப்பிட்டுள்ளான். பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில். "காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்தல் வேண்டும். காரியம் மிகப் பெரிது. எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன்" என்கிறான் பாரதி.
இருப்பினும் பாரதியின் பாஞ்சாலி சபதம் நூலில் பெருங்காப்பிய இலக்கணங்களில் சிலவற்றையே காண முடிகிறது. பெருங்காப்பிய இலக்கணத்தை தண்டியாசிரியர் பின்வருமாறு தருகிறார்.
பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினான் ஏற்புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிகள் இல்லாத் தலைவனை உடைத்தாய் மலைகடல் நாடு வளநகள் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இணையன புனைந்து, நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தல் என்று இன்னன புனைந்து நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவுஇகல் வென்றி சந்தியிற் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையில் விளங்கி
109

Page 58
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2صعيديAوشيداث
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றியது என்பர்.
(தண்டியலங்காரம்)
காவிய இலக்கணத்தை நிறைவு செய்வதற்காக வலிந்து எதையும் பாட முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது சிறப்பாகப் பாடலாம். பாஞ்சாலி சபதம் போன்ற ஒரு குறுங்காவியத்தில் காவிய இலக்கணங்கள் யாவற்றையும் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் பாரதி நாட்டு வர்ணனை, மாலைக்கால வர்ணனை என சிறப்பாக இயற்கையை வர்ணித்துப் பாடியுள்ளான்.
இவற்றில் நாட்டு வர்ணனையை ஒரு உள்நோக்கத்தோடுதான் பாரதி பாடுகிறான் என்பதை அவனது பாடல்களை ஆராய்ந்து ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தை அறிந்து கொள்ளலாம்.
திருதராட்டிரனின் துTதுவனாக, துரியோதனனின் நிர்ப்பந்தத்தால் பாண்டவர்களின் இந்திரப் பிரஸ்தம் என்ற நாட்டைநோக்கிச் செல்லுகின்றார் விதுரர்.
பாண்டவர்களை அழைத்துச் சூதாட்டம் மூலம் அவர்களது நாடு, நகள் செல்வங்கள் யாவற்றையும் கவர்கின்ற துரியோதனனின் திட்டத்தைத் தெரிந்து கொண்டே தான் செல்கிறார் விதுரர்.
அதனால் பாண்டவரின் நாட்டு வளம் அவரது உள்ளத்தில் கவலையை உண்டு பண்ணுகிறது. பாரதி அதனைப் பின்வருமாறு சொல்கிறான்.
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்.
அடவிமலை ஆறெல்லாம் கடந்து போகித் திண்ணமுறு தடந்தோளும் உரமும் கொண்டு
திருமலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும் வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி எண்ணமுற லாகித்தன் இதயத் துள்ளே
இணையபல மொழிகூறி இரங்கு வானால்,
110

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் @೩enkläå
திருதராட்டிரனிடம் விடைபெற்று விதுரர் காடு, மலை, ஆறு முதலானவற்றைக் கடந்து போய் பாண்டவர் ஆட்சிபுரியும் இந்திரப் பிரஸ்த நகரின் பக்கத்தை அடைந்து, வழியில் நாட்டு வளங்களைப் பார்த்து பல எண்ணங்கள் தோன்ற தன் இதயத்துள்ளே பலவாறு கூறி இரங்குகின்றார். என்கிறான் பாரதி.
இயற்கை அழகையும், வளத்தையும், சிறப்புக்களையும் பார்த்து மகிழ்வதற்குப் பதிலாக விதுரர் இரங்குவதற்குரிய காரணம், சூதினால் இந்நாடு கவரப்படப்போகின்றதே என்ற கவலையினாலேயே ஆகும். பாரதியின் கூற்றாக நாட்டு வளத்தை நாமும் காண்போம்.
நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு
நீர் அமுதம் எனப் பாய்ந்து நிரம்பும் நாடு. கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழும்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு, ஞாலமெலாம், பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப் பாலடையும் நறுநெய்யும் தேனும் உண்டு
பண்ணவர்போல் மக்களெல்லாம் பயிலும் நாடு.
மலைவளம், ஆற்றுவளம், காட்டுவளம், உணவு வளம் எனப் பல வளங்களையும் கொண்ட நாடு என்று சொல்லி, மக்கள் தேவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
எந்தக் குறையுமின்றி வாழ்கிறார்கள் எனச் சொல்வதன் மூலம் சொர்க்க புரியாகத் திகழ்கிறது இந்திரப் பிரஸ்தம் என உட்பொருளாக உணர்த்துகிறான் பாரதி. தொடர்ந்து
அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர் கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல் பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ மாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு.
111

Page 59
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ெ ባለx}2≤d
அன்னங்களின் அசைவும் அழகும், வண்டுகளின் ரீங்கார ஒலியும், கிளியின் மழலை மொழியும், குயில்களின் பாட்டொலியும், காட்டு மலர்களின் நறுமணமும், ஊடல் கொண்ட ஆடவரின் மகிழ்வும், பெண்களின் விழி வன்மையும், வளமும் கொண்ட நாடு என இலக்கியப் பெரு நயத்தோடு இயற்கைக் காட்சியை வர்ணிக்கிறான் பாரதி. தொடர்ந்து,
பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும் நாடு
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும் நாடு வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்வி எனும் இவையெல்லாம் விளங்கும் நாடு சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும் நாடு. பாரதர்தந் நாட்டினிலே நாசம் எய்தப்
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே.
பேரறம், பெருந்தொழில் என்பன செழித்துள்ள நாடு, பெண்கள் யாவரும் தேவ அரம்பையர் போலப் பேரழகோடு திகழும் நாடு, வீரம், மெய்ஞ்ஞானம், தவங்கள், கல்வி, வேள்வி என்பவையெல்லாம் சிறந்து விளங்குகின்ற நாடு. சோரம் போதல் முதலான கீழாம் தன்மைகள் ஏதும் தோன்றா நாடு. பழமையான இவ்வுலகின் முடியில் பதித்த மாணிக்கம் போலக் காட்சியளிக்கும் நாடு. என்று இவ்வாறாகத் தனக்குள்ளே சொல்லி வந்த விதுரர் இறுதியாக இந்திரப் பிரஸ்தம் என்று சொல்வதற்குப் பதிலாக பாரதர் தம் நாடு என்று சொல்வது கவனிக்கத்தக்கது.
பாரத நாடு நாசம் அடையப் பாவியாகிய நான் துணைபுரியும் தன்மையை என் என்று சொல்வது என்கிறார் விதுரர் என்கிறான் பாரதி.
பாரதி மேலே காட்டியவை யாவும் பாரத நாட்டின், இந்திய நாட்டின் சிறப்புக்களே. இந்தச் சிறப்புக்களைப் பாரதி பாடிய நோக்கம், காவிய இலக்கணத்திற்கேற்ப இயற்கையைப் பாடவேண்டும் என்பதல்ல.
112
 
 

பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2an4Jaశ
இவ்வளவு சிறப்புப் பொருந்திய நாடு சூதினாலே கவரப் பட்டுத் தன் பெருமைகளை இழக்கப் போகிறதே என்ற ஆதங்கம்தான்.
இந்தியா அந்நியருக்கு அடிமைப்பட்டுச் சீரழிந்ததை நினைவில் நிறுத்தியே இந்தியர்களுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தவே இந்தக் காட்சியை இவ்வகையில் பாரதி பாடியிருக்கிறான் எனலாம் அல்லவா.
பெருங்காப்பியம், சிறுகாப்பியம், குறுங்காப்பியம் என்ற இலக்கணக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்காமல், அதேவேளை அத்தியாவசியமானவற்றை அழகுற எடுத்துக் கூறும் பாரதியின் கவித்திறன் வியந்து போற்றுதற்குரியதே.
அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்.
என்று பாரதி வெறும் ஏட்டுக் கல்வியாளரை ஏசுவதிலிருந்து, தனது காவியத்திலும் "ஆழ்ந்திருக்கும்” தனது உள்ளத்தைக் காண எம்மைத் தூண்டுவதாகப் பாடம் கற்றுக் கொள்ளலாம் அல்லவா.
பாரதியின் குயில்ப் பாட்டிலும் இவ்வாறே பாரதியின் உள்ளத்தை அறியும் முயற்சிகள் தமிழறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம்.
பாரதியின் வெற்றி
பாரதியின் பாடுபொருள்களில் முக்கியமானவை, பாரத விடுதலை, பெண்விடுதலை, மூடக்கொள்கையைச் சாடுதல், முதலானவையாகக் கொள்ளப்படத்தக்கவை.
பாஞ்சாலி சபதத்தில் பாரத விடுதலையைப் பாட பாரதிக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. பாஞ்சாலியைப் பாரதமாக உருவகித்து மிக நேர்த்தியாகப் பாரதி பாடியிருக்கிறான்.
பெண் விடுதலைக் கருத்துக்களைப் பாடவும், பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதி மூலம் பாரதிக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
113

Page 60
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் 2ெ, ባለህàé]
அதையும் வெகு சிறப்பாகப் பாடியிருக்கிறான்.
மூடக்கொள்கைகளைச் சாடவும் வழி கிடைத்தது. சூதாட்டம் பற்றிய கருத்து பாரதிக்கு வாய்ப்பளித்தது. மிகச் சிறப்பாக அதையும் பாடினான் பாரதி.
பாரதக் கதையை முழுதாகத் தெரிந்து கொண்டு, பாரதியின் நோக்கத்தையும் பாரதியின் பாடுபொருள்களையும் விளங்கிக் கொண்டு, பாஞ்சாலி சபதத்தைப் படிக்கும் போதுதான் பாஞ்சாலி சபதத்தின் உண்மையான பெறுமதியை விளங்கிக் கொள்ளலாம்.
பாஞ்சாலி சபதத்தை முழுமையாக விமர்சிப்பதோ, முழுமையான ஆய்வுக்கு உட்படுத்துவதோ எனது நோக்கமாக இருக்கவ்வில்லை.
இருப்பினும் பாரதியின் பாஞ்சாலி சபதம் உணர்த்தும், உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதே எனது நோக்கமாக இருந்தது. அதனையே இக்கட்டுரையில் செய்திருப்பதாகக் கருதுகிறேன்.
பாரதி ஓர் அற்புதமான கவிஞன். யுக புருஷன். அவனது கவிதைகளை முழுமையாக ஆராய்வது ஒரு சுக அனுபவம்தான்.
- முற்றும் -
உசாத்துணை நூல்கள்: 1) வியாசர் விருந்து - ராஜாஜி 2) மஹாபாரதம் பேசுகிறது - சோ 3) பெருந்தேவனார் பாரதம் (பாரத வெண்பா) 4) வில்லிபுத்தூராழ்வார் பாரதம் 5) நல்லாப் பிள்ளை பாரதம் 6) மஹாபாரதம் - சோப்ரா - தொலைக்காட்சித் தொடர்
(மொழி பெயர்ப்பு வெங்கட்) 7) வான்மீகி இராமாயணம் 8) கம்ப இராமாயணம் 9) பாரதியார் கவிதைகள் 10) நளவெண்பா - புகழேந்திப் புலவர் 11) சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள்
114
 


Page 61


Page 62
தமிழ்மணி அகளங்கனின் இலக் வயது வித்தியாசமின்றி அனைத்
மிக எளிமையான முறையில், அே சுவை குன்றாது பண்டைய இ
விபரித்துச் செல்லும் பங்கு ந இவை அவரது ஆக்கங்களுக்கு தருகின்றன என்று கூறலாம். அ வாழ்வியல் அம்சங்களுடனான மேலும் ரசிக்கவும், சிந்திக்கவு மகாகவி பாரதியையும், பாஞ்சா நாம் ஏற்கனவே ஓரளவு படித்து அகளங்கன் அவர்கள், அதனை
Buਸੁੰ ਸੁਣ ਸੁਣ 9 ਕੰG
- திருமதி அன்னலெட்சு
ISBN : 978 - 955 - 375 - 40
 

கியக் கட்டுரைகள் து வயதினரும்
அமைவது குறிப்பிடத்தக்கது.
சமயம் கதை போன்று
க்கத்தக்கது. வரவேற்பைப் பெற்றுத் ݂ ݂ ݂
த்துடன் அவரது தற்கால ஒப்பீட்டு நோக்கு
சபதத்தையும் தெரிந்து கொண்டோமாயினும் எடுத்து விபரிக்கும் விதம் மேலும்
இராஜதுரை