கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செந்தமிழும் நாப்பழக்கம்

Page 1
Nor
(z
డఇg !مجھے خبر g}\న#sశ్
ශ්‍රි.
GSY
 
 


Page 2

அகளங்கன்

Page 3
செந்தமிழும் நாப்பழக்கம் SENTHAMZHUM NAAPPAZHAKKAM
சிறுவர் இலக்கியம் Children Literature
எழுதியவர்: அகளங்கன். (நா. தர்மராஜா) AUTHOR: AGALANGAN ( N. THARMARAJAH)
பதிப்புரிமை: திருமதி பூ தர்மராஜா B.A (Hons) CopyRights: Mrs. P. THARMARAJAH B.A (Hons)
முதற்பதிப்பு: ஆனி 1997 1st EDITION: JUNE 1997
அச்சுப்பதிப்பு: சுதன் அச்சகம் - வவுனியா, இலங்கை, Printers : SUTHAN PRINTERS. WAWUNIYA, SRILANKA. கணனி வடிவமைப்பு: க. கேசவன்
க. சிவகரன் Computer Type Setting By : S. Kesavan
K. Sivaharan.
வி :
" 40/_

வடக்கு - கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு கூந்தரம் டிவகலாலா அவர்களின் வாழ்த்துரை
அனைத்துலகும் இன்பமுற, எத்தியும் புகழ்மணக்க, விளங்கும் தமிழணங்கு இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் கோலங்களைக் காட்டி எம்மைக் குளிர்விக்கின்றாள். உண்மையான அழகும், மனங்கனிந்த அன்பும், செவிகளுக்கு இனிமையான ஒலிகளும் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. அத்தகைய நலன்நிறைந்த பல காவியங்களை அணிகலனாகப் பூண்டு சீரிளமைத்திறனுடன் அவள் சிரிக்கிறாள்.
"மெத்த வளருது மேற்கே - அந்த
மேண்மைக் கலைகள் தமிழினில் இல்லை"
என்னும் வசை அவளுக்கு வரவிடக்கூடாது.
அதனால் தமிழ்த் தாயை அணிசெய்யும் பணி செய்வோம். அப்பணி மேற்கொள்ளும் அனைவரையும் போற்றுவோம்.
தமிழறிஞர்களுட் சிலர் தமிழணங்கு வளமுடன் வாழ இடையறாத பங்களிப்பினைச் செய்த வருகின்றனர். அவர்களுள்ளே காவியமாமணி, தமிழ்மணி, கவிஞர் அகளங்கண் (நா. தர்மராஜா) குறிப்பிடப்பட வேண்டியவர். கட்டுரை, கவிதை, கதை, நாடகம், ஆய்வு, சமயம், குறுங்காவியம் என்னும் பல்வேறு வடிவமைப்புக்களில் நால்களை ஆக்கித் தமிழ்த்தாயை படிமலர்ச்சி கொள்ள வைத்துள்ளார்.
எனினும் தற்பொழுது மாணவப் பருவத்தினரின் அடிப்படை மொழித்திறன் விருத்தியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளமை பெரிதம் வரவேற்கத்தக்கத.
அவற்றுள் பேச்சுத்திறன் விருத்தி கருதி "செந்தமிழும் நாப்பழக்கம்" என்னும் நாலினை உருவாக்கியுள்ளமை கண்டு, நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன்.
மாணவப் பருவத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் நால்கள் எழுதுவோர் தொகை அருகிக் கொண்டு வருகின்ற இவ்வேளையில், காலத்தின் தேவையை அறிந்து தரமானதொரு நாலினை ஆக்கித் தந்தள்ளார் நாலாசிரியர். அவர்பணி மேன்மேலும் தொடர வாழ்த்தகின்றேன்.
சுந்தரம் டிவகலாலா
G8uan GT திருகோணமலை. கல்வி பண்பாட்டலுவல்கள்
29-04-1997 விளையாட்டுத்துறை அமைச்சு
வடக்கு - கிழக்கு மாகாணம்

Page 4
V
முன்னுரை
"இன்றைய மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலும், இலக்கிய அறிவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது" என்ற கூற்று பல தமிழறிஞர்களாலும் முன்வைக்கப்படுகின்றது.
சமகால, எதிர்காலச் சந்ததியினரிடையே, மொழி ஆற்றலையும், இலக்கிய அறிவையும் வளர்க்கவேண்டிய கட்டாயத் தேவையை உணர்ந்து கொண்ட பலர் அதற்குரிய சிந்தனையில் மூழ்கியிருக்கின்றார்கள். சிலர் தம்மாலியன்ற சில செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இதற்கு முன் வாலி (ஆய்வு) நளவெண்பா (கதை) நூல்களைச் சுயமாகவும், பன்னிரு திருமுறை அறிமுகம், ஆத்திசூடி (விளக்கவுரை), கொன்றை வேந்தன்(விளக்கவுரை) வாக்குண்டாம் (விளக்கவுரை), சிவபுராணம் (பொருளுரை) ஆகிய நூல்களை வவுனியா இந்து மாமன்றத்தினூடாகவும், "முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்" என்ற நூலை வவுனியா கல்வித் திணைக்களத்தினூடாகவும், மாணவர் நலன்கருதி வெளியிட்டிருந்தேன்.
கடந்த ஆண்டின் இறுதியில் திருகோணமலையில், வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால், கூட்டப்பட்ட மூண்றாண்டுச் செயற்றிட்ட உருவாக்கக் குழுக்கூட்டத்தில், அவ்வமைச்சின் செயலாளர் திரு. கந்தரம் டிவகலாலா அவர்கள் மாணவர்களின், மொழி, இலக்கிய, அறிவியல், ஆக்கத்திறன் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கக் கூடியபொருத்தமான நூல்கள் தமிழில் இல்லாமையைச் கட்டிக்காட்டியிருந்தார். அதனைக் கருத்திற்கொண்டு செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் இந்நூலை ஆக்கியுள்ளேன்.
இந் நூல் 5 ஆண்டுமுதல் 11 ஆண்டுவரை கல்வி கற்கும் மாணவர்கள் மேடைகளிலே பேசக்கூடிய அமைப்பில் (4 - 10 நிமிட) 13 பேச்சுக்களை உள்ளடக்கியிருக்கின்றது.
இந்நூலிலுள்ள பல பேச்சுக்கள், பல போட்டிகளில் முதற் பரிசுகளை வென்றவை. அவை அப்படியே தரப்பட்டுள்ளன.
விளித்தலை மட்டும் மாற்றிவிட்டால் எல்லாப் பேச்சுக்களும், போட்டிகளுக்கும் பயன்படும், மேடைப்பேச்சுக்களுக்கும் பயன்படும்.
விவித்தலையும் முடித்தவையும் தவிர்த்துவிட்டால் கட்டுரைக்கும் பயன்படும்.
பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி, ஏனையோருக்கும் இந்நூல் சிறந்த உசாத்துணை நூலாகப் பயன்படும் என்பது எனது நம்பிக்கை எனது இந்நூலாக்க முயற்சிக்குத் தூண்டு கோலாயிருந்து, வாழ்த்துரையும் வழங்கிய வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. கந்தரம் டிவகலாலா அவர்களுக்கு எண் நன்றிகள் என்றும் உரியன.

W என் நூலாக்கப் பணிக்கு அச்சாணியாக விளங்குகின்ற எண் தம்பி க. குமாரகுலசிங்கத்திற்கு எவ்வகையிலும் நன்றி சொல்லிமுடியாது.
இந்நூலாக்கத்தில் எனக்கு உதவிய நண்பர்கள் செ. சண்முகநாதன், ஓ.கே. குணநாதன், பி. மாணிக்கவாசகம் ஆகியோருக்கும் அழகாக அச்சிட்டுத் தந்த சுதன் அச்சகத்தாருக்கும் என் நன்றிகள் உரியன.
பம்பைமடு, அகளங்கன் வவுனியா. 15/07/97
இந் நூாலாசிரியரின் பிற நூால்களர்
* "செல்" "வா" என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதைகள்) * சேரர் வழியில் வீரர் காவியம் (குறுங்காவியம்) * சமவெளி மலைகள் (அகளங்கன் - சு. முரளிதரன் கவிதைகள்) * வாலி (ஆய்வுநூல்)
(அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கியவட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசுபெற்றது. 1987) * இலக்கியத் தேறல் (கட்டுரைகள்) * நளவெண்பா (கதை) * அன்றில்ப் பறவைகள் (நாடகங்கள்)
(தேசிய சாகித்திய மண்டலப் பரிசுபெற்றது 1992) * முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர். * இலக்கியச் சிமிழ் (கட்டுரைகள்) * தென்றலும் தெம்மாங்கும் (கவிதைகள்) * பன்னிரு திருமுறை அறிமுகம். * மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல்கள் (ஆய்வு) * இலக்கிய நாடகங்கள் (நாடகங்கள்)
(வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு,கொழும்புத் தமிழ்ச்சங்கப் பரிசு: 1994) * ஆத்திசூடி (விளக்கவுரை) * கொன்றை வேந்தன் (விளக்கவுரை) * அகளங்கன் கவிதைகள். (கவிதைகள்) * வாக்குண்டாம் (விளக்கவுரை) * சிவபுராணம் (பொருளுரை)

Page 5
W
பொருளடக்கம்
சுதந்திரக் கவிஞன் பாரதி
ஐந்தாம் குரவர் ஆறுமுக நாவலர்
மாவீரன் பண்டார வன்னியன்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
பன்னிரு திருமுறை
நவராத்திரி
சிவராத்திரி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழன் தமிழ் இலக்கியத்தில் அறம்
நால்வகை நிலங்கள்
O
O5
12
17
20
24
33
35
38
42
47

அரங்குநிறை பெரியோர்களே! அவைநிறைந்த ரசிகர்களே! கரங்குவித்தேன் வணக்கங்கள். மகாகவியாம் பாரதியைப் பற்றி, சுதந்திரக் கவிஞன் பாரதி என்ற தலைப்பில் சிற்றுரை ஒன்றை, இச்சபை தன்னில் ஆற்றிட வந்தேன். முற்றுணர்ந்த பெரியோர்களே! எண் குற்றம் பொறுத்துக் குணம் காண வேண்டுகின்றேன்.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னில், 1882 ஆண்டு டிசம்பர் மாதம் 17" திகதி நெல்லை மாவட்டத்து எட்டய புரத்தில், சின்னச்சாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் புத்திரனாகப் பாரதி பிறந்தான்.
சிறு வயதிலேயே, கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற பாரதியைச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டு அழைத்தார்கள். எட்டய புரத்துச் சமஸ்தானம்வரை அவன் புகழ் எட்டிய பொழுது, பாரதி என்னும் புகழ் நாமம் அவனுக்குக் கிட்டியது.
தமிழ்க் கவிதையின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பாரதி, தான் வாழ்ந்த சமூகத்து உயர்வைக் குறித்துப் பாடல் பாடத் தொடங்கினான்.
ஏழையாகவும், கோழையாகவும், அடிமையும், மிடிமையும் அரசோச்ச, ஆமையாய், ஊமையாய், அடங்கிக் கிடந்த பாரத மக்களைத் தட்டி எழுப்பும் சுதந்திரக் கவி பாடினான் பாரதி.
ஏழை என்றும், அடிமை என்றும், பிறப்பால் இழிந்தவர் என்றும் பழிக்கப்பட்டுக், கழிக்கப்பட்டுக் கிடந்த பாரத மக்களைப் பார்த்து
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை, ஜாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது
இந்தி யாவில் இல்லையே
என உணர்ச்சிக் குரலை உரிமைக் குரலாக ஒலித்தவன் பாரதி.
பிரித்தாளும் சூழ்ச்சிவல்ல, பிரத்தானிய ஏகாதிபத்திய வாதிகளால், அடிமைப் படுத்தப் பட்டு, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு "இம்" என்றால் சிறைவாசம், "ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையில், சுதந்திரம் சிறிதுமற்று, அஞ்சி அஞ்சி வாழ்ந்த இந்திய மக்களை அணியணியாகத் திரண்டு சுதந்திரத்திற்காகப் போராடச் செய்தவன் பாரதி.

Page 6
O2
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அண்னியர் வந்து புகல் எண்ண நீதி ஓர் தாயினி வயிற்றில் பிறந்தோர் - தம்முனி
சண்டைசெய் தாலும் சகோதரர் அனிறோ.
என, சகோதர ஒற்றுமை உணர்வை மக்களுக்கு ஊட்டிச், சுதந்திர உணர்வைக் கொழுந்துவிட்டெரியச் செய்தவன் பாரதி.
போர்ப்பாட்டாம் புறப்பாட்டாய்ச் சுதந்திரப் பாட்டிசைத்த புதுமைக் கவிஞன் பாரதி.
ஒளிபடைத்த கணிணினாய் வா! வா! வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வர வர வா!
எனப் பாரத மக்களைச் சுதந்திரப் போருக்கழைத்து, அவர்களது உள்ளத்திலே அச்சத்தை அணுகாதொழிக்கும் வண்ணம்
அச்சமில்லை அச்சமிப்லை அச்சமெனப்பதில்லையே உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
என அஞ்சாமை முழக்கத்தை இடி முழக்கத்தையும் விஞ்சும் வண்ணம் எழுப்பியவன் பாரதி. பிறந்து தவழ்ந்து விளையாடி மகிழ்ந்த மண்ணை, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த அந்நியராம் வெள்ளையர்கள் கைப்பற்றித் தங்கள் மண்ணெனச் சொந்தங் கொண்டாடிச் சுகங்கண்ட வேளையில், அந்த மண்ணின் பாரம்பரியப் பெருமைகளையெல்லாம், மண்ணின் மைந்தர்களுக்கு மண்டையிலே ஏறும்படியாக எடுத்துரைத்தவன் பாரதி.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததம் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே
என்று, மக்களுக்கு மண்ணின் மேலே மதிப்பையும் விருப்பையும் உண்டாக்கியவன் பாரதி.
* அகளங்கன். *

O3
இண்ணுயிர் தந்தெமை சன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள் அண்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர் கணினிய ராகி நிலவினி வாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள் பொண்ணுடன் இன்புற நீர்விளை யாடி, இல்
ாேந்ததும் இந்நாடே
என்று பாரம்பரியப் பெருமையையும், மகிழ்ச்சியையும் மக்களுக்கு ஊட்டி, மண்ணின் சுதந்திரத்திற்கு மக்களைத் தூண்டி வழிகாட்டியவன் பாரதி.
சுதந்திரத்தின் அருமை பெருமைகளை மிகவும் நன்றாக உணர்ந்திருந்தவன் பாரதி, நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்கின்ற முழுமையான சுதந்திரத்தைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என மக்களுக்கு எடுத்துரைத்து, அடையப்பட வேண்டிய ஒரே இலக்கு வீரசுதந்திரமேயன்றி வேறொன்றில்லை என வெட்ட வெளிச்சமாகத் தொட்டுக் காட்டியவன் பாரதி.
இரகதத்திரம் வேண்டிநின்றார் பினர்னர் வேறொன்று கொள்வரரோ - வனiறம் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொலர்டார், கள்ளில் அரிவைச் செலுத்துவாரோ.
விண்ணில் இரவிதனை விற்றுவிட் டெவதும் போயர்
மினர்மினி கொ6ர்வரரோ
கண்ணில் இனிய சுதந்திரம் போனபினர்
கைகட்டிப் பிழைப்பரோ
என்றெல்லாம் சுதந்திரத்தின் மாணியை
மக்களுக்குச் சுட்டிக் காட்டியவன் பாரதி.
பார்வையாளனாக அல்லாமல், பங்காளனாக இருந்துகொண்டு பாரதி பாடிய பாடல்கள், பாரதத்தின் விடுதலைக்குப் பெரும் பங்களிப்பாக இருந்தது.
சமூகவிடுதலை, பொருளாதார விடுதலை, அந்நிய ஏகாதிபத்திய அடக்குமுறையிலே இருந்து அடையும், விடுதலையாம், அரசியல் விடுதலை, எனச் சகல தளைகளிலிருந்தும் விடுதலை வேண்டிச் சங்கொலித்து முரசு கொட்டியவன் பாரதி.
2ழ் செந்தமிழும் நாப்பழக்கம். আঁঠু

Page 7
04 செந்தமிழ் நாடெனினும் போதினிலே - இனியத்
தேனிவந்து பாயுத காதினிலே - எங்கள் தந்தையர் நாடெனிற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
என மூச்சினிலே மக்களுக்குச் சக்தியைப் பிறக்க வைத்தவன் பாரதி. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" எனத் தமிழ் மொழியின் இனிமையைச் சொல்லி, உறங்கிக் கிடந்த தமிழர்களின் உணர்ச்சி நரம்பைத் தட்டி எழுப்பி, உயிர்த் தீயினிலே சுதந்திர ஜோதியை ஏற்றி வைத்தவன் பாரதி.
வட நாட்டுச் சிந்து நதியிலே, நிலாக்காலத்தில், சேரநாட்டுப் பெண்களாம் மலையாளப் பெண்களுடன் சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத், தமிழர்கள் தோணிகள் ஒட்டி விளையாடி வரும் ஒற்றுமையின் மூலமாக, அகன்ற பாரத தேசத்தின் அடிமை விலங்கொடித்து விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி.
கவிதைகள் மட்டுமல்ல, கவிதைகளைப் படைக்கின்ற கவிஞனும் காலத்தின் கண்ணாடியாகவே கருதப்படவேண்டியவன். காலத்தின் கண்ணாடியாக மட்டுமன்றி காலத்தையும் கடந்து நின்ற மகா கவிஞன் பாரதி.
அந்த மகா கவிஞன் பாரதி 1927ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி மதயானையினாலே தாக்குண்டு இம் மண்ணுலகைவிட்டு மறைந்து போனாலும் அவன் மூட்டிய சுதந்திரத் தீ, உலகின் எப்பாகத்திலும் விடுதலை கோரிப் போராடும் மக்களின் உள்ளத்தில் எரிந்து கொண்டேதான் இருக்கும்.
‘வாழ்க பாரதி நாமம் வளர்க அவன் ஊட்டிய சுதந்திர தாகம்" வாய்ப்புக்கு நன்றி வணக்கம்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோடம், பாமரராயப் விலங்குகளாகப் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பாணர்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொனர்டிங்கு
வாழ்ந்ததிடுதல் நனர்றோ சொல்லர் தேமதுரத் தமிழோசை உலகமெலாடம்
பரவும்வகை செய்தல் வேனர்டுடம்.
(LTU Jgf6) * அகளங்கன். ே

隨
ஐந்தாம் குரவர் ஆறுமுகநாவலர்
கரங்குவித்தேன். சிரம் பணிந்தேன். சிறியேனின் வணக்கங்கள் ஏற்றிடுக.
நாவலர் என்றால் அது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரையே குறிக்கும் என்று, அவனியுள்ளோர் கூறும் அரும் பெரும் சான்றோனாக விளங்கிய நாவலர் பெருமான், கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரராய், சித்திரபானு வருடம் மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அதாவது ஆங்கிலப்படி கி.பி. 1822ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அவதரித்தார்.
இருபாலை சேனாதிராயமுதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைத் துறை போகக்கற்றுத் தமிழ் உணர்வும் சமய உணர்வும் ஒருங்கே வாய்க்கப் பெற்றார்.
புறச் சமயங்களின் ஆதிக்கத்தை வென்று சைவத்தை நிலைநாட்டி, தமிழ் நாட்டில் சைவத்தையும், தமிழையும் தழைக்கச் செய்த சமய குரவர்களின் வரிசையிலே ஆறுமுக நாவலர் பெருமானின் பணி அரும்பெரும் பணியாகக் காட்சியளிக்கிறது.
எப்பொழுதெல்லாம் சைவசமயத்திற்கும், சிவனடியார்களுக்கும் துன்பங்கள் எற்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் யாரோ ஒரு சமயப் பெரியார் தோன்றி, மேன்மைகொள் சைவநீதியை உலகெல்லாம் விளங்கச் செய்து வழிகாட்டி வருவதனைச் சமய வரலாற்றினூடாகக் கண்டு ஆச்சரியப்படுகின்றோம். களப்பிரர் காலத்துக் காரைக்கால் அம்மையார், பல்லவர் காலத்து அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சோழர் காலத்துச் சேக்கிழார், கச்சியப்பர் என்ற வரிசையிலே ஐரோப்பியர் காலத்தில் ஆறுமுக நாவலர் பெருமான் முன்னவர்கள் ஆற்றிய அரும்பணிகளை ஆற்றுவதற்கு முன்னின்று உழைத்தார்.
ஆட்சி அதிகார பலத்தைக் கொண்டு அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகள் சைவத்தையும் தமிழையும் இழிவுபடுத்தி கிறிஸ்தவத்தையும் ஆங்கிலத்தையும் வளர்க்க முற்பட்ட காலத்திலே, சீண்டி விட்ட சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து, சைவப்பணியையும் தமிழ்ப்பணியையும் ஆற்றுவதில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக்கொண்டார்.
திருமண பந்தத்திலே ஈடுபட்டால், சாதாரண உலகியல் ஆசாபாசங்களிலே ஈடுபட்டு நேரத்தை வீணடிக்க நேரிடும் என்ற காரணத்தினாலே நைட்டிகப் பிரமச்சாரியாய் சமயப்பணி ஆற்றத்தன் நேரத்தை முழுமையாக அர்ப்பணித்தார்.

Page 8
Ο86 அத்தனை பணிகளையும் அறப்பணிகளாகச் செய்து அப்பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆறுமுக நாவலர், சைவப்பிள்ளைகளை ஒன்று திரட்டி, திண்ணைப் பள்ளியை ஆரம்பித்து சைவப்பணியைத் தொடங்கினார்.
அதனை விரிவுபடுத்தி, பின்னர் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையினை நிறுவி சமயப் பணியை ஆற்றினார். யாழ்ப்பாணத்தில் கோப்பாய், புலோலி என்னுமிடங்களிலும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை அமைக்க முயன்றார்.
ஈழத்திற்கு வெளியிலே சிதம்பரத்திலேயும் சைவப்பிரகாச வித்தியாசாலையை அமைத்து சைவப் பணியினை ஆற்றினார்.
வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலே 32 ஆண்டுகளாய் சமயப் பிரசங்கஞ் செய்து, சமயத்தின் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றினார். தமிழகத்துத் திருவாவடுதுறை ஆதீனத்தினால் நாவலர் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற அவர், பல சமய நூல்களை எழுதி அவைகளை அச்சிட்டுச் சமயப்பணி ஆற்றினார்.
பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் என்பவற்றை வசன நடையில் எழுதி "வசன நடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்பட்டார். சைவசமய சாரம், சைவ வினாவிடை பாலபாடம், முதலான பல சைவ நூல்களை 6. ம் எராளமான சமய நூல்களைப் பதிப்பித்தும் சைவத்தின் பெருமையினை உலகத்துக்கு எடுத்துக் காட்டினார்.
கிறிஸ்தவ மீதமாற்றப் பிரசாரத்திற்கெதிராகக் கண்டனப் பிரசங்கங்களும் பிரசாரங்களும் செய்தார். சைவர்களுக்கு சைவ சமய உண்மைகளை விளக்கித் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டதுடனமையாது புராண படன மரபை ஏற்படுத்தியவரும் இவரே ஆவார்.
துண்டுப் பிரசுரங்கள், சமய நூல்கள், பிரசங்கங்கள், பாடசாலைகள், புராண படனம் முதலியவற்றால் சைவசமயத்தை அழியாமல் காத்த அருந்தமிழ்ப் புலவராம் ஆறுமுக நாவலர் 1879ஆம் ஆண்டு மார்கழி மாதம் 5ஆம் திகதி இறையடி சேர்ந்தபொழுது சி. வை. தாமோதரனார் அன்னாரின் இறப்புக்கு இரங்கி
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலேரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்துபுரா னாகமங்க ளெங்கேயிர சங்கமெங்கே ஆத்தனரி வெங்கெ அறை"
எனப்பாடி அன்னாரின் பெருமையினை அகிலத்திற்கு நினைவூட்டினார்.
ஆரூரனில்லைப் புகலியர் கோனில்லை அப்பனில்லை சீருரும் மாணிக்க வாசகனில்லை திசை அளந்த பேருரும் ஆறுமுக நாவலனில்லைப் பின்னிங்கு யார் நீருரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே"
* அகளங்கன். *

O7 என உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் ஆறுமுக நாவலர் பெருமானை ஐந்தாம் குரவராய் அறிமுகப்படுத்திய பெருமையைக் காண்கின்றோம். நாவலர் பெருமானின் சமயப்பணி என்னும் வித்து வளர்ந்து இன்று பெருவிருட்சமாய் நிழல் பரப்பி நிற்கிறது. அப்பணிக்கே எம்மை அர்ப்பணிப்போம்.
வாழ்க நாவலர் நாமம். வளர்க சைவப்பணி வாய்ப்புக்கு நன்றி, வணக்கம்
(வெண்பா) புனன்னரியநாளர் நாளெல்லாம் போற்றுநாளர் செந்தமிழ்த்தாய் எனகர்னரியெதிர் பார்க்கும் இனரியநாளர் - மணர்ணுலகில் மேவுமுயர் சைவம் விளங்கிடுதாளர், ஆறுமுக நாவலர்கோனர் தோனறியதல் நாளர்
(வேறு) ஆடும் தநில்ைலை அடம்பலவனர்
அடிகர்ை மறவா அர்ைபுடையோனர், பரீடு பெறவே செந்தமிழைப்
பேனரி வளர்த்த பெரும்புலவனர்,
நிலவச் செய்த குருநாதனர் நாடு புகழுடம் ஆறுமுக
நாவ லனர்பேர் மறவோமே
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
# செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 9
மாவீரன் பண்டார வண்னியண். அடங்காப் பற்று என்றழைக்கப்படும் வன்னி மண்ணையும், வன்னியின் மானத்தையும் காப்பதற்காக, அந்நிய ஏகாதிபத்திய வாதிகளை எதிர்த்துப் போர்செய்து புகழ்பூண்ட மாவீரன் பண்டார வன்னியனுக்கு விழா எடுக்கும் இந்நாளிலே, அம்மாவீரனின் பெருமைகளை நினைவுகூர்வதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பொன்னான வாய்ப்பாகக் கருதி உரையாற்ற விழைகின்றேன்.
விழாத் தலைவர் அவர்களே! பிரதம விருந்தினர்களே! விழாப் பொலிவு காண்பதற்காய் வீறுகொண்டு வந்திருக்கும் பெரியோர்களே! தாய்மார்களே! ககோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள் உரியதாகட்டும்.
பிரித்தானிய சாம்ராச்சியத்தை எதிர்த்துப் போரிட்ட உலகின் கடைசித் தமிழ் இராச்சியம் வன்னிராச்சியமேயாகும்.
அடங்காப் பற்று எனப்பெயர் கொண்ட வன்னிராச்சியத்தை, பண்டாரிக்குளம் என்னும் இராசதானியிலிருந்து அரசாண்டு, ஒல்லாந்தரையும் பின் ஆங்கிலேயரையும் ஓட ஓட விரட்டிய ஒப்புயர் வில்லா வீரனாம் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனே வன்னியின் கடைசி மன்னனாவான்.
கெப்பிட்டிப் பொல திசாவ, வீரபுரன் அப்பு போன்ற சிங்கள விடுதலை வீரர்கள் வரிசையிலே, தேசிய வீரனாக இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தமிழ் வீரன் மாவீரன் பண்டார வன்னியனே.
தமிழும் சைவமும் சிறப்புற்றுச் செழித்தோங்கி வளர்ந்திருந்த வன்னியிலே மானும் மானமும் ஒருங்கே பெருகியிருந்தன. பாலும் தேனும் பாய்ந்தோடின. செந்நெல்லும் தினையும் சிறந்து விளைந்திருந்தன. யானைகளும்சேனைகளும் வலிமை பெற்றிருந்தன.
வற்றாப் பளைக் கண்ணகை அம்மனும், முள்ளியவளைக் காட்டுவிநாயகரும் பண்டார வன்னியனின் வழிபடு தெய்வங்களாகத் திகழ்ந்தன. தமிழகத்துப் பாஞ்சாலங்குறிச்சியிலே, வீரபாண்டிய கட்டப் பொம்மன் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த காலத்திலே மாவீரன் பண்டார வன்னியன் ஈழத்திலே ஒரு வீர வரலாற்றைத் தீட்டிக் கொண்டிருந்தான்.
 

09 யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அரசாண்ட வெள்ளையர்கள், வன்னி ராச்சியமும் யாழ்ப்பாண ராச்சியத்திற்குள் அடங்கிய ராச்சியமேயெனத் தவறாகக் கருதித் திறை கேட்டபோது, சிங்கமெனச் சிலிர்த்தெழுந்தான் பண்டார வண்னியன். "வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுக்கவேண்டும்" என்று வீரமுழக்கமிட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மனைப் போன்று முரசு கொட்டி ஆர்ப்பரித்தான் பண்டார வன்னியன்.
செந்நெல்லும் தேனும், தேக்கும், அகிலும், யானைத் தந்தமும், சாயவேரும், திறையாகத் தருவதற்கு நாமொன்றும் இறைமையற்றவர்களல்லர். நட்பின் நிமித்தமாகக் கேட்டால் நாமே கொண்டு வந்து தருவோம். அன்பின் நிமித்தமாகக் கேட்டால் அள்ளியள்ளித் தருவோம். அடக்குமுறை உணர்வோடு அடிபணிய வைப்பதற்காகக் கேட்டால் அழித்தொழிப்போம் எனச் சவால் விட்டவன் பண்டார வன்னியன்.
யாழ்ப்பாண ராச்சியமும், கோட்டை ராச்சியமும் வெள்ளையரின் பீரங்கிகளின் பிளந்த வாய்களால் விழுங்கப்பட்ட பின்பும் கூட, நெஞ்சுரத்தையும், மானத்தையுமே பெரும் போராயுதங்களாகக் கொண்டு நிமிர்ந்து நின்றவன் மாவீரன் பண்டார வண்ணியன்.
அந்நிய ஆக்கிரமிப்பை, ஆதிக்கத்தை அடியோடு எதிர்த்த அம்பலவண்ணியன், சேதுகாவல வன்னியன், கைலாய வன்னியன் முதலாய வன்னியர்களுக்கெல்லாம் திலகமாகத் திகழ்ந்தவன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்றால் மிகையாகாது.
கண்ணுச்சாமியாய் இருந்து, கண்டி மன்னனாகி, விக்கிரம ராஜசிங்கனாய் வீற்றிருந்து, பிலிமத்தலாவையின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கித் திணறிய கண்டி மன்னனை, வெள்ளையர்கள் சிறைப்பிடிக்கத் திட்டம் தீட்டிப் படைகொண்டு வந்தபோது, சிங்க ஏற்றின் நடைகொண்டு, வன்னிச் சேனைகளை வழிநடத்தி, விக்கிரம ராஜசிங்கனையும், கண்டி ராச்சியத்தையும் காப்பாற்றிய திடமனம் படைத்தோன் பண்டார வன்னியன்.
1803 கண்டியரசனுக்குப் படையுதவி செய்து களைத்திருந்த வேளையிலும், முல்லைத்தீவுக் கோட்டையிலே இருந்து வீண்கலகத்தை விளைத்துக் கொண்டிருந்த வொன்றிபேக்கையும் அவனது படைவீரர்களையும் யாழ்பரவைக் கடலுக்கு அப்பால் ஓட ஓட விரட்டியடித்த மாவீரன் பண்டார வன்னியனின் வீரத்தை மதிக்காதோர் யார்தானுண்டு.
1803 ஓகஸ்ட் 25 திகதி முல்லைத்தீவுக் கோட்டையைத் தாக்கி அழித்த, பின் யாழ்நகரிலும் தங்கள் கோட்டைகளைத் தாக்கித் தகர்க்கப் பண்டார வன்னியன் வந்து விடுவானோ என்று அஞ்சினார்கள் அந்நியர்கள். கரிக்கட்டு மூலையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கயவனாம் காக்கை வன்னியனுக்கு ஆசை வார்த்தை காட்டினார்கள். அவனை வசப்படுத்திப் பண்டார வன்னியனை வீழ்த்துவதற்குத் திட்டமும் தீட்டினார்கள்.
* செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 10
O நேருக்கு நேர் நின்று போர்புரிய ஆற்றலற்ற நீசர்களாம் கொடியவர்கள், மும்முனைத் தாக்குதலைப் பண்டார வன்னியன் மேல் வஞ்சனையாகத் தொடுத்தார்கள்.
தளபதி ஜோன் யுவெலின் தலைமையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு படையும், தளபதி எட்வேட் மெட்சின் தலைமையில் திருகோணமலையில் இருந்து ஒருபடையும், கப்ரன் வொன்றிபேக்கின் தலைமையில் மன்னாரில் இருந்து ஒரு படையுமாக மும்முனைத் தாக்குதலைத் தொடுத்தல்லவா முறியடித்தனர் அம்மாவீரனை.
1803 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 திகதி அதிகாலை ஐந்து மணிக்குக் களைப்போடு நித்திரையில் ஆழ்ந்திருந்த பண்டார வண்ணியனைத் தோற்கடித்துத் தண் வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டான் கப்ரன் வொன்றிபேக். தனது வெற்றியையும், மாவீரன் பணிடார வன்னியனைத் தோற்கடித்ததால் தான் பெற்ற புகழையும், உலகுக்குப் பறைசாற்ற விரும்பி கற்சிலை மடுவிலே நடுகல்லுமல்லவா நட்டுவைத்தான் வொன்றிபேக்.
1803 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 திகதி பண்டார வன்னியன் வொன்றிபேக்கினால் தோற்கடிக்கப்பட்டான் என்ற வாசகம் இன்றும் பண்டார வன்னியனின் புகழையே பறைசாற்றுகிறது.
ஆயுதத்தால், ஆட்பலத்தால் வலிமை குறைந்தவனாக இருந்த போதும், வெள்ளையரை எதிர்த்துப் போர்புரியும் நவீன வசதிகள் அற்றவனாக அவன் இருந்த போதிலும், அவனது உடல் வலிமையும் உள்ளத்து உறுதியும், மான உணர்வும், மண்ணின்மேல் அவனுக்கிருந்த பற்றுமேயன்றோ அவனை அத்தனை வீரச்செயலைச் செய்யத் தூண்டின.
தமிழாட்சி காக்கத் தனித்து நின்று போரிட்டுத் தன் உயிரை இழந்தாலும், தன்னகத்து விடுதலை உணர்வை மக்கள் மனதில் விதைத்து விடுதலைக்கு வழிகோலிய மாவீரன் பண்டார வன்னியனின் சாதனை விடுதலை விரும்பிகளை விழிப்புறச் செய்கின்றதல்லவா.
அந்நியர் ஆட்சியில் அவனது வீர வரலாறு மூடிமறைக்கப்பட்டாலும், அவனது வீரமும் தீரமும், ஈரமும் சாதனைகளும், பாட்டாகக் கூத்தாக நாடகமாக இன்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கின்றதன்றோ. வடக்கில் பரவைக் கடல் வரையில், தெற்கில் அருவியாறு வரையில், கிழக்கே திருகோணமலை வரையில், மேற்கே மன்னார் வரையில் பரந்திருந்த வன்னி ராச்சியம், சூழ்ச்சியினால் அந்நியரிடம் வீழ்ச்சியடைந்தாலும், வீரம் விலைபோகாத, மானம் மண்ணோடு போகாத வன்னியின் வீர வரலாறு என்றும் வீழ்ச்சியடைந்ததே இல்லை.
மாவீரன் பண்டார வன்னியனின் தோற்றப் பொலிவைத் தற்காலப் புலவர் ஒருவர் அற்புதமாக வர்ணிக்கிறார்.
* அகளங்கன். ே
 

நெற்றியில் நிலைத்த நீறும்
நீர்கரம் பிடித்த வாளும் வெற்றியைக் குறித்த நோக்கும்
வீரத்தை வினைத்த நேஞ்சும் 2ற்றவெற் படையை வேண்று
இயர்கொடி யுடன் அடங்காப் பற்றினை ஆண்ட வீரம்
பண்டார வண்ணித் தோற்றம்
அந்த மாவீரனின் சிலை வவுனியா மாவட்டச் செயலக முன்றலில் கம்பீரமாகக் காட்சியளித்து வன்னி மண்ணுக்கும். தமிழர்க்கும் பெருமையைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
கல்லெனத் திரண்ட தோளும்
கடலென விரிந்த மார்பும் நில்லென எதிரி தம்மை
நிறுத்திடும் விர வாளும் கொல்லென வருவேல் காக்கக்
கொடுத்த கேடயமும் கொண்டு செல்லென எதிர்த்து வெள்ளைச்
சேனையைக் கலைத்த வீரனி
எனப் புலவர் போற்றும் மாவீரன் பண்டார வன்னியனின் புகழ் வந்தாரை வாழவைக்கும் வன்னியில் மட்டுமன்றி இவ்வையகம் எங்கும் வாழட்டும்.
வாழ்க பண்டார வன்னியன் நாமம். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
தோற்றலும் வெற்றிப் பாதை
தொடர்தலும் உலக நீததி.
காற்றிலா விடினும் வாழ்வோம்,
கனவிலும் அடிமைத் தாழ்வை ஏற்றிடோம் எனப்போர் செய்த ஏந்தல் பணர்டார வர்ைனரி.
ు செந்தமிழும் நாப்பழக்கம். আঁঠু

Page 11
تکنیتے&ے திருக்குறள்
சமண்செய்து சீர்தரக்கும் கோலிபோல்அமைந்து ஒருபால் கோடாமை சாண்றோர்க்கு அணி
என்ற, வள்ளுவப் பெருந்தகையின்
வாய்மொழியாம் திருக்குறளின் பொருளுணர்ந்து, சமண்செய்து சீர்தூக்கிக், கோடாமையையே அணியாகக் கொண்டு, அவைக்குப் பொலிவாய் அமர்ந்திருக்கும் நடுவர்களே! எண் சக போட்டியாளர்களே! உங்கள் அனைவருக்கும் எனது அண்பார்ந்த வணக்கங்கள் உரியதாகட்டும்.
திருக்குறளின் பெருமை பற்றிப் பேசுவதற்குச், சிறியேனாகிய எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பொண்னான வாய்ப்பாகக் கருதி, எண் சிற்றறிவுக்கெட்டிய வரையில் அம்முற்றறிவாளனாம் வள்ளுவனின் குறள் பற்றிப் பேசப்போகின்றேன்.
தமிழ்நாட்டின் பெருமையைக் கூறவந்த மகாகவி பாரதியார், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வாண்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று வள்ளுவனை வானளாவப் புகழ்ந்து தள்ளுகிறார்.
வள்ளுவண் திருக்குறளைத் தமிழர்க்காக எண்று மட்டுந் தரவில்லை, இந்த உலகத்திற்காகவே தந்தான். அதனால் தமிழகம் விள்ளுவனை உலகத்திற்கே தந்தது. அதனால் தமிழகம் மிகப்பெரும் புகழ் கொண்டது எண்கிறான் பாரதி.
உலகின் அதிகூடிய மொழிகளிலே மொழிமாற்றஞ் செய்யப்பட்ட
ஒரே பொதுநூல் என்ற பெருமை திருக்குறளையே சாரும்.
"வான்மறை" என்று போற்றப்படும் வள்ளுவர் வாய்மொழியாம் திருக்குறளுக்கு இணையாக எந்த ஒரு நூலையும் சொல்லமுடியாது என்பரர்கள் அறிஞர்கள்.
மதுரைத் தமிழ் நாகனார் என்ற புகழ்சால் புலவர், திருக்குறளின் பெருமைபற்றிக் கூறும் போது
எல்லாப் பொருளும் இதனிபாலிஉளது இதண்பால் இல்லாத எப்பொருளும் இல்லையாம்.
என்பார். அறம் வேண்டுமா, அரசியல் வேண்டுமா, அன்பு வேண்டுமா, அனைத்தையும் அடக்கியதோர் அற்புத நூலல்லவா திருக்குறள்.
 
 

屋、 - ஒதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருனாப் மிகவிளங்கித் - தீதற்றோர் உண்ஞதோ றுண்ருதேச அண்ணம் உகுக்குமே வர்ைளுவர் வாய்மொழி மாண்பு
என்று மாங்குடி மருதனார் போற்றுகின்ற சாற்றுகவி ஏற்புடையதாகியல்லவோ விளங்குகிறது
சமயங்களைக் கடந்த நூலாய், சமூகவாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய நூலாய், இண்பத்துப் பாலும் இணைந்த நூலாய், இன்னொரு நூலை இவ்வுலகில் எவரால்த்தான் இனி ஆக்கித்தர முடியும்.
அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாலும் இதற்குள்ளே அடங்கினாலும், அதற்கு அப்பாலும், பரந்த ஆழமான நுண்ணிய பொருள் தரும் சிறப்பு திருக்குறளுக்கே உண்டு.
வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நெறியிலே வாழ்பவர்கள், வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்வு பெற்றவர்களாவார்கள். இவ் வையகத்தையே சொர்க்கமாகக்காணும் அறிவு பெற்றவர்களாவார்கள்.
அறத்திற்கு 38. பொருளுக்கு 70, இண்பத்திற்கு 25 என அதிகாரங்களைப் பிரித்து அதிகாரந் தோறும் பத்துப் பத்துப் பாக்கள் தத்தம் கருத்துக்களை அதிகாரம் செலுத்த வைத்த வள்ளுவண் தமிழ்த் தாயின் தலைமகன் என்ற தகுதி பெற்றவனன்றோ.
அன்பில்லாதவனை அறம் காயும் என்பார், கண்ணில்லாதவன் ஆவான் கல்வியில்லாதவண் என்பார். மக்கட் பண்பில்லாதவனை மரம் எண்பார். கற்றவரின் முகத்திலே இருப்பவைகள் தான் கண்கள். அக் கண்களும் இரக்கஞ் சுரக்காதவைகளாக இருப்பின் அவை புண்களே எனப் புதுமொழி பேசுவார் வள்ளுவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகப் பேதங்களை, ஏற்றத் தாழ்வுகளைக் கடந்த பெருங் கருத்தும் குறளுக்குள்ளே குடியிருக்கின்றதன்றோ.
பிச்சை எடுத்தும் உயிர் வாழ விரும்புகின்றவனைப் படைத்த கடவுள் பிச்சை எடுத்து அழியட்டும் என்று, ஏழ்மையின் கொடுமையை, இரத்தலின் இழிவை வள்ளுவர் காட்டுகின்ற தன்மை இணையில்லாத தன்மையன்றோ.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்றும், சிறப்பும் செல்வமும் அறமே கொடுக்கும் என்றும், அன்பும் அறமும் பொருந்தப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள் என்றும், அறத்தை வலியுறுத்தும் திருக்குறட் பாக்கள் உலகின் சீர்திருத்தப் பாக்களாக அல்லவா திகழ்கின்றன.
இச் செந்தமிழும் நாப்பழக்கம். আঁঠু

Page 12
4. ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் அது உயிரினும் மேலானதாகப் பாதுகாக்கப்படவேண்டியது என ஒழுக்கத்தின் உயர்வைத் திருக்குறள் வலியுறுத்துகின்றது.
கற்றதனால் ஆயபயன் கடவுளின் நற்றாள் தொழுதல் எனக் கூறி, ஒரு பிறவியிலே ஒருவன் கற்ற கல்வி அவனது ஏழு பிறவியிலும் உதவும் தன்மை படைத்தது என கல்வியின் மேண்மையைக் குறள் கூறுகின்றது.
அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். மற்றைய செல்வங்கள் கல்விச் செல்வத்திற்கு ஈடாகா என்று கூறிக் கல்வியின் மூலம் சமுதாய முன்னேற்றத்தை நாடுகிறது திருக்குறள்.
தான், துன்பமில்லாமல் வாழவிரும்புகின்றவண் மற்றவர்களுக்குத் துன்பஞ் செய்யான். மற்றவர்க்குச் செய்யும் துன்பம் தன்னையே வந்து சூழும் என்ற தத்துவக் கருத்து உலகப் பொதுக் கருத்தன்றோ.
இனிமையான வார்த்தைகளையே பேசவேண்டும், இனிமை பயக்கும் படியாகவே பேசவேண்டுமென்று சொல்லி, தீயினாற் கட்டபுண் ஆறும், நாவினாற் கட்டபுண் ஆறாது எண்பார் வள்ளுவர். அதனால் நாகாக்க என வற்புறுத்துவார்.
உண்ணாது தவமிருப்பவர்களைவிடப் பெரியவர்கள் யாரென்றால், பிறர் சொன்ன இன்னாச் சொற்களைப் பொறுப்பவர்களே, என்று நயத்தக்க
|ീഴ്പ് 'நனி நாகரிகத்தை இவ்வுலகிற்கு வழங்கியது திருக்குறளன்றோ.
— -
மாற்றானுக்கும் அருள் செய்தால் அவன் தன் மனத்தை மாற்றாது விடான் என்ற கருத்தை உள்ளடக்கி
இனினா செய்தாரை ஒறுத்தல் அவர்தான நன்னயம் செய்து விடல்
என்று வள்ளுவப் பெருந்தகை பாடிய பாங்கைப் பாராட்டாதார் யார் இப்பாரிலுண்டு.
கருத்துச் செறிவும், கற்பனைச் செறிவும் கொண்ட திருக்குறட் பாக்களிலே இலக்கிய நயமும் இதமாக அமைந்திருப்பது இதயத்தை மகிழ்விக்கின்றது.
* அகளங்கன். *

தம்பர்க்குத் தம்மய தம்மாக்கித் தம்மார்க்குத் தம்மவ தவிடம் மழை
எனச் சொற்சிலம்பமாடி வரும் திருக்குறட் பாக்கள் இலக்கிய நயத்திற்கு எடுத்துக் காட்டானவை.
இனிய உணவாக இன்னாத கூறலி கனிவிதம்பக் காய்கவர்த் தற்று இணகுர்த்தம் நாறா மலரணையர் கற்றது உணர விரித்துரையா தர
- என உவமை மூலம் கருத்தை விளக்கும் குறட்பாக்கள் இதயத்திற்கு இதமூட்டி இலக்கிய இன்பம் பயக்கின்றன.
தமிழின் முதலெழுத்தான அகரத்திலே அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
என உயிர் எழுத்துக்களின் முதல் எழுத்திலே தொடங்குகின்ற திருக்குறள்,
இடுதலி காமத்திற்கு இனியம் அதற்கிண்மம் கூடி முயங்கப் பெறினர்
என 1330 வது திருக்குறளில், தமிழ் மெய் எழுத்துக்களின் இறுதி எழுத்தாகிய "ள்" இல் முடிகிறது. தமிழ் மொழியின் முதலெழுத்துக்களின் முதலாவது எழுத்தில் தொடங்கி, இறுதி எழுத்திலே முடிகின்றதிருக்குறட் சிறப்பைப் பார்த்து வியப்படையாத தமிழ் அறிஞர்களே இல்லை எனலாம்.
எல்லாச் சமயக் கருத்துக்களையுந் தன்னகத்தே கொண்ட திருக்குறள் மதவேறுபாடிண்றி மக்கள் எல்லோராலும் ஒருங்கே போற்றப் படுகின்றது.
பொய்பேசாமை, கள்ளுண்ணாமை, கொலைசெய்யாமை, முதலான அறக்கருத்துக்களை வலியுறுத்தி, அறவழியில் பொருளைத்தேடி, பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புகின்ற அன்புநிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தைத் திருக்குறள் அனைவருக்கும் போதிக்கின்றது.
§ෂ செந்தமிழும் நாப்பழக்கம். అ

Page 13
6 மனித சமுதாயத்தின் உன்னதமான மேம்பாட்டிற்கான அனைத்துக் கருத்துக்களையுந் தன்னகத்தே கொண்டிருக்கின்ற அற்புதமான ஒரே நூல் திருக்குறள் என்று சொன்னால் எப்படி அது மிகையாகும்.
திருக்குறளுக்குப் பின் வந்த அனைத்துத் தமிழ் நூல்களிலும் திருக்குறட் சொற்கள், சொற்றொடர்கள், கருத்துக்கள் கற்பனைகள், உவமைகள் வர்ணனைகள், எல்லாம் பரவி இருப்பதைப் பார்த்துப் பரவசமடையலாம்.
அத்தகைய திருக்குறளின் பெருமையை நத்தத்தனார் என்னும் புலவர் பெருந்தகை அற்புதமாகப் போற்றிப் புகழ்கிறார்.
ஆயிரத்து முத்தற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பீர் - போயொருத்தர் வார்கேட்க நாஸ்திடனவோ மண்னு தமிழ்ப்புலவர் ஆர்க்கேட்க விற்றிருக்க லாம்.
எண்கிறார். திருக்குறள் கற்றவனுக்கு வேறு நூல் தேவையில்லை, வேறு உபதேசங்களும் தேவையில்லை. திருக்குறள் கற்றவனே சிறந்த தமிழ்ப்புலவனாக நிலையாக வீற்றிருப்பான் என்று கூறுகிறார். சொற்கருக்கமும், பொருட் பெருக்கமும் கொண்ட திருக்குறளின் ஒவ்வொரு சொல்லும் அணுவிலும், நுட்பமானது. கடலிலும் ဒို့ကြီး `~ திருக்குறளைப் பொருளறிந்து படித்தால் வாழ்வு பொருளுள்ளதாக அமையும்.
வாழ்க திருக்குறள். வளர்க இவ் வையகம். வாய்ப்புக்கு நண்றி. வணக்கம்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்டர் சொல்லிழுக்குப் பட்டு.
(குறனர் 127)
வெளர்னாத் தனைய மலர்நதிட்டம் மாந்தர்தம் உணர்ளத் தனையது உயர்வு
(குறளர் 595)
ஒழுக்கம் விழுப்பம் தரலாகசர் ஒழுக்கம்
உயிரினும் ஒரும்பப் படும்
(குறளர் 131)
* அகளங்கன். ே

அவைத்தலைவர் அவர்களே! அறிஞர் பெருமக்களே இலக்கிய இரசிகர்களே! இன்முகத்தோடு வீற்றிருக்கும் என்னருமைச் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என் தமிழார்ந்த வணக்கங்கள்.
ஐம்பெருங் காப்பியங்களிலே தலை சிறந்த காப்பியமாக, நம்பெரும் புலவர்களால் போற்றிப் புகழப்படும் சிலப்பதிகாரம் பற்றிச் சிறியேனாகிய யான் உரையாற்ற வந்துள்ளேன்.
தமிழ்த்தாயின் அங்கங்களிலே அங்கங்கு ஜொலிக்கும், அழகு மிகு அணிகலன்களாக, ஐம்பெருங் காப்பியங்களை அமைத்துப் பார்த்தனர் நம் ஆன்றோர்.
காதிலே குண்டலகேசியும், கையிலே வளையாபதியும், மார்பிலே சீவக சிந்தாமணியும், இடையிலே மணிமேகலையும், காலிலே சிலப்பதிகாரமும், என ஐம்பெருங் காப்பியங்களாம் அணிகலன்களால், அழகுக் கோலம் கொண்டுள்ளாள் அன்னை தமிழாள், என்றனர் நம் ஆன்றோராம் அறிஞர்கள். இவ் ஐம்பெருங் காப்பியங்களுள் தலைசிறந்த காப்பியமாகத், திகழும் சிலப்பதிகாரத்தை ஆக்கித் தந்தவர், சேரன் செங்குட்டுவனின் தம்பி எனச் சொல்லப்படும், சேரத்துத் துறவி இளங்கோ அடிகளாவார்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழின் பெருமை கூறும் முத்தமிழ்க் காப்பியமாகவே, அமைந்த ஒப்புயர்வில்லாக் காப்பியம் இதுவேயாகும். "அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதுஉம் தலைமைக் கருத்துக்களாகக் கொண்ட இக்காப்பியம், இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பிலே சங்கமருவிய காலத்து நூல் என்று தமிழ்ச் சான்றோர் குறிப்பிடுகின்றனர்.
தமிழில் முதலெழுந்த காப்பியம் என்ற பெருமையைப் பெற்றதும், சமயச் சார்பில்லாத காப்பியம் என்ற பெருமையைப் பெற்றதும் இக் காப்பியமே ஆகும்.
ஆண்டவனையும், அரசர்களையும் பாட்டுடைத் தலைவர்களாக்கிப் பாடல் பாடப்பட்டு வந்த மரபைமீறி ஒரு குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டெழுந்த குடிமக்கள் காப்பியம் இதுவென்பர். தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள். கோவலன் ፵® கோ - அல்லன்

Page 14
8 உரை இடைமிட்ட பாட்டுடைச் செய்யுளாகப் படைக்கப்பட்ட இக்காப்பியத்தில் கற்பு நெறிதவறாத கண்ணகியின் பெருமை பெரிதும் வியந்து பேசப்படுகிறது. போற்றப்படுகிறது.
தற்காத்து, தற்கொண்டார் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலள் ஆகித் தெய்வம் தொழாது கொழுநற் தொழதெழுந்த கண்ணகி, எல்லோராலும் தொழப்படுகின்ற நிலையை அடைந்த சிறப்பை, இளங்கோ அடிகள் சிறப்புறக் காட்டுகின்றார்.
சேர சோழ பாண்டிய நாடு என்னும் முத்தமிழ் நாட்டின் பெருமைகளையும் முடியுடை மூவேந்தராம் தமிழ் வேந்தரின் ஆட்சிச் சிறப்பையும், முத்தமிழாற் பாடிய இளங்கோ அடிகளின் முயற்சியை மூவுலகும் தலையசைத்துப் பாராட்டுகிறது.
தமிழர்தம் பண்பாட்டின் சிறப்புக்களான கற்பையும் விரத்தையும் கலந்து தந்த இக்காவியத்தில், கானல் வரியையும், வேட்டுவவரியையும், ஆய்ச்சியர் குரவையையும், குன்றக் குரவையையும், அதிசயித்துப் படிக்காதவர் ஆர்தான் உண்டு.
மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்தையும், பதினொருவகையான
சிலப்பதிகாரத்திலே கண்டு சிந்தை மகிழ்கின்றோம்.
ஆடற்கலை பற்றியும், மேடை அமைப்புப்பற்றியும் ஆராய்பவர்கள் சிலப்பதிகாரத்தை ஆராய்ாமல் விட்டதில்லை. பல்வேறு நரம்புகளைக் கொண்ட யாழ் பற்றியெல்லாம் சிலப்பதிகாரம் தரும் செய்திகளைக் கொண்டு ஆராய்ந்தன்றோ நம் ஈழத்துத் துறவி சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் என்னும் அரிய நூலை ஆக்கித் தந்து புகழ்பெற்றார்.
பழியொடு மடராப் மஞ்சவனம் பாண்டியன், தன் மனைவியாம் பாண்டிமா தேவியின் சிலம்பைத் திருடினான் கோவலன் என்று பழி சுமத்திக், கோவலனைக் கொன்றுவிட, கள்வன் என்ற பழியோடு கொலையுண்டான் கோவலன் என்ற பழிச்சொல் கேட்டுக் கொதித்தெழுந்து வழக்குரைத்த கண்ணகியையும்,
"யானோ அரசன் யானே கள்வன். கெடுக என் ஆயுள்" என மயங்கி வீழ்ந்து மரணித்த நெடுஞ்செழியப் பாண்டியனையும்,
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்என்று இணையடி தொழுது வீழ்ந்திறந்த இணையிலாக் கற்பரசி பாண்டிமா தேவியையும்,
கோவலன் இறந்ததும் தனி ஆடலையும் அலங்காரக் கோலங்களையும் துறந்து, கைம்மை நோன்பு பூண்டு, தங்கள் பரம்பரை ஒழுக்கமாம் பரத்தமை ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பரிசுத்த வாழ்வு வாழ்ந்த மாதவியையும், சிலப்பதிகாரத்திலே கண்டு மெய்சிலிர்ப்படைந்து நிற்கிறோம்.
* அகளங்கன். ே
 

9 மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் தனிச் சிலம்பும் கண்ணிருமாக வந்து "தேரா மன்னா செப்புவ துடையேன்” எனத் தொடங்கித் தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்குகின்ற கண்ணகியைச் சிலப்பதிகாரத்திலே இளங்கோ அடிகள் காட்டுகின்ற சிறப்பு, தனிச் சிறப்பன்றோ.
ஒழுக்கத்திலே உயர்ந்த உத்தமியாகிய பத்தினியாம், கண்ணகியின் கண்ணிரைக் கண்டு, கூடலான் கூடாகிப் போயினான். கண்ணகி அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிர் அல்லவோ, பாண்டியனின் செல்வ வாழ்வைச் சிதைத்த படையாக மாறியது.
சோழத் தலைநகராம் பூம்புகாரின் பெயரில் முதற்காண்டமாகிய புகார்க் காண்டத்தையும், பாண்டியர் தலைநகராம் மதுரையின் பெயரில் இரண்டாம் காண்டமாகிய மதுரைக் காண்டத்தையும், சேரனின் தலைநகராம் வஞ்சியின் பெயரில் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தையும் அமைத்த இளங்கோ அடிகளின் நாட்டுப் பற்றை, என்னவென்று சொல்லிப் புகழ்வது. பெண்கள் முத்தியடைய முடியாது என்று இழித்துப் பழித்துக் கூறப்பட்ட காலத்தில், சோழநாட்டில் பிறந்த கண்ணகியைப், பாண்டிய நாட்டில் வழக்குரைக்கவைத்துச் சேரநன்நாட்டில் தெய்வமாக்கிக் காட்டிய இளங்கோ அடிகளைப் போற்றாதார் யாருண்டு இப்பூமியிலே.
தமிழரின் வீரத்தைப் பழித்த வடநாட்டுக் கயவராம் கனக விஜயரின் தோள்மேல், கண்ணகிக்குச் சிலைவடிக்கக் கல் சுமப்பித்தான் சேரன் செங்குட்டுவன், என்ற வீர வரலாற்றை, இளங்கோவடிகளைவிட வேறு யாரால் தான் பாடமுடியும்.
கற்பின் கனலியாய், பொற்பின் செல்வியாய் விளங்கும் கண்ணகியின் கதை, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாகப் பாடப்பட்டதனாலன்றோ, தமிழ்நாடு பெருமை பெற்றது என்கிறார் மகாகவி பாரதியார்.
தமிழர்களே பெருந்தொகையாகப் பங்கு கொள்ளும் தமிழ்நாட்டுக் கதையை, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மேலோங்கும் வண்ணம், முத்தமிழில் காப்பியமாகப் பாடித் தந்த இளங்கோ அடிகளின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இந்துக்களால் மட்டுமன்றிப், பெளத்தர்களாலும் வழிபடப்படும் பத்தினித் தெய்வத்தின் வரலாறு, இந்தப் பாரெங்கும் சிறந்தோங்குகிறது.
பெண்ணின் பெருமை பேசும் சிலப்பதிகாரம், பெருமைகள் பலவற்றை இன்னும் பெறும் எனக் கூறி விடைபெறுகின்றேன்.
‘வாழ்க சிலப்பதிகாரம். வளர்க தமிழர் தம் பண்பாடு” வாய்ப்புக்கு நன்றி, வணக்கம்.
செந்தமிழும் நாப்பழக்கம். 呜

Page 15
நடுநின்று நீதிவழங்கக் காத்திருக்கும் நற்றமிழ்ச் சான்றோர்களே! நண்பர்களே! நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்போடியைந்த வணக்கங்கள்.
தமிழ்த்தாயின் தவப்பெரும் புதல்வனாகவும், தமிழ்ப் புலவர்களின் தனிப்பெருந் தலைவனாகவும் விளங்குகின்ற, கவிச்சக்கரவர்த்தியாம் கம்பனின், கம்பராமாயணம் பற்றி, இச் சபையிலே சிறிது நேரம் பேச விழைகிறேன்.
தமிழ்த் தாயானவள் தவமிருந்து பெற்றெடுத்த தனிச் செல்வன், தவச்செல்வன் என்று போற்றப்படும் கம்பன், தமிழ்ப் புலவர்களுக்குள்ளே தலையானவன்.
கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றிப் புகழப்படுகின்ற கம்பனை அறியாதார், ஏதும் அறியாதாரே எனலாம்.
ஆதிகவி என்றும், முந்திய நாவினார், என்றும் மால்கடிந்த தவமுனி என்றும் போற்றப்படுகின்ற வால்மீகி முனிவரின் வடமொழி இராமாயணத்தைத் தமிழிலே பாடியவன் கம்பன்.
"விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர்கம்பன்", என்று பாராட்டப்பட்ட கம்பன் பாடிய இராமாயணம் இன்று கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகின்றது.
மனிதருள் மாணிக்கமாய்த் திகழ்ந்த அவதாரபுருஷனாம் இராமனின் பெருமை கூறும் கதைக்குக் கம்பன் இராமாவதாரம் எனப் பெயரிட்டான். ஆனால் மக்களோ கம்பராமாயணம் என்றே பெருமையோடு அழைத்துவருகின்றனர்.
ஆதிகவியாம் வான்மீகியின் இராமாயணமோ "பால் படிந்து முள் அடர்ந்து பருத்து நீண்டு பரிமளித்த பலாக்கனி கம்பன், அப்பலாக்கனியின் சுவையறிந்து "மேல்படிந்த பிசினகற்றி மெல்லக்கீறி, மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்து நூல்படிந்த மனத்தவர்க்குக் கம்பராமாயணமாக விருந்து வைத்தான், என்பார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உன்னதமான உயர்ந்த ஒரு கருத்தை, உலகத்திற்கு எடுத்துக் காட்டிய ஒப்புயர்வில்லாத காவியமாகத் திகழ்வது கம்பராமாயணமே ஆகும்.
 
 

2. "இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்" என்ற மனவைராக்கியத்தோடு வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதப் புனிதனாகத் திகழும் இராமனைப் போற்றுகிறது இராமாயணம்.
வால்மீகியின் இராமாயணத்தை இதிகாசங்களுள் ஒன்று என்பார் வடநூலார். கம்பனின் இராமாயணமோ காப்பிய இலக்கணங்களெல்லாம் குறைவின்றி முழுமையாய் நிறைவுறப் பெற்றதோர் அரும்பெரும் காப்பியமாகவே திகழ்கின்றது என்பார் தமிழ் நூலார்.
தன்னிகரில்லாத் தலைவனைப் பாட்டுடைத் தலைவனாகக், காவிய நாயகனாகக் கொண்டு, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற் பொருள் பயக்கும் நடைநெறித்தாகிச் செல்லும் கம்பராமாயணத்திற்கு, வேறெந்தக் காவியத்தையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.
பிறன்மனை விழைதலின் கேட்டினால், பேராற்றல் படைத்திருந்த வாலியும், இராவணனும், இராம பிரானாலே கொல்லப்படுகின்ற காட்சிகள், இவ்வுலகின் நல்லொழுக்க நெறிக்கு நற் சாட்சிகளாகவன் றோ அம்ைந்திருக்கின்றன.
கங்கைக்கரை வேடன் குகனையும், கிஷ்கிந்தை மலைக் குரங்கினத்துச் சுக் கிரீவனையும், இலங்கையின் அரக்கர் குலத்து விபீஷணனையும், இராமன் தன் அன்புச் சகோதரர்களாக அரவணைத்துக் கொள்கின்ற காட்சிகள், இவ்வுலகத்திற்கு மானிட நேய சகோதரத்துவத்தைக் காட்டும் மாட்சிகளன்றோ.
களுகுகளுக்கு அரசனாகிய சடாயு, காமுகனாம் இராவணனை " எதிர்த்து, சீதையைச் சிறை மீட்கப் போரிட்டு இறந்து போகின்ற காட்சி, இவ்வுலகத்தில் கொடுமைகளைப் பார்த்துக் கைகட்டி, வாய்பொத்திப், பணிந்து நிற்போருக்குக் கொடுக்கின்ற சாட்டையடியாகவன்றோ தெரிகின்றது.
தனக்கே கிடைத்த இராச்சியத்தைத், தன் தம்பி பரதனுக்குக் கொடுத்துவிட்டு, அன்றலர்ந்த செந்தாமரையினை வென்ற முகத்தோடு காட்டுக்குச் செல்கின்ற கதாநாயகனைக், கம்பனைவிட வேறு யாரால்தான் இவ்வளவு சிறப்பாகக் காட்டிடமுடியும்.
நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றுகூறி, இராமன் இருக்கும் இடமே அயோத்தி என்ற மனநிறைவோடு கானகம் சென்ற "கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்ச் சானகியை, "வேநகு நெடுங்கட் செவ்வாய் மெல்லியலை கம்பன் காட்டுகின்ற நிலையைக் கண்டு களிப்படையாதார் யாருளர் இவ்வுலகத்திலே,
தாயின் வரத்தினால் தான் பெற்ற இராச்சியத்தைத் "தீவினை என்ன நீத்துச், சிந்தனை முகத்திற் தேக்கி அண்ணன் இராமனின் அடிகளில் கிடந்த பாதுகைகளைத், தன் தலைமேல் தாங்கி, அதற்கே முடிசூட்டிவிட்டு, நகரின் எல்லையில், நந்திக் கிராமத்தில், பதின்னான்கு ஆண்டுகள் தவவாழ்க்கை வாழ்ந்த பரதனின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்றக் கம்பனைவிட வேறு யாரால்தான் முடியும்.
# செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 16
22 இராமனின் கால்த்தூசி பட்டுக், கல்லாய்க் கிடந்த அகலிகை பெண்ணுருக் கொண்டு நின்றாள் என்பதையும், இராமனின் கால்ச் செருப்புக்களே அரியாசனத்தில் இருந்து அரசாண்டன என்பதனையும், கம்பன் காட்டுவதைப் பார்க்கும் பொழுது, உத்தமன் ஒருவனின் கால்த்தூசிக்கும், கால்ச் செருப்புக்கும் உள்ள உயர்வை உலகம் கண்டு வியக்கின்றதல்லவா.
கற்பின் கனலியான சீதை
அல்லல் மாக்கள் இலங்கைய தாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும்என் சொல்லினாற் சுடுவேனி, அது தாயவனர் வில்லினி ஆற்றற்கு மாசென்று வீசினேன் என்று அனுமானிடம் கூறுகின்ற காட்சி, கணவனின் வீரத்தையும், கடமையையும் மதித்து, உலகுக்குக் காட்ட விழைகின்ற உத்தமியாம் கற்பரசியின் செயலாகவன்றோ காணக்கிடக்கின்றது.
மணிமுடி சூடி அரசாளுவான் மகன் என்று பார்த்திருந்த தாயாம் கோசலையிடம் இராமன் வந்து, "என் தம்பி பரதனே அரசாள்வான்", என்று கூற, தன் மாற்றாள் ஈன்ற மகனாம் பரதனிலே மாசு மறுவற்ற அன்பு வைத்திருந்த கோசலை ”முறைமை அன்று எண் பதொன் றுணர்டு, மும்மையின் நிறைகுணத்தவன், நின்னினும் நல்லனால் குறைவிலன்" என்று பரதனைப் புகழ்கின்ற காட்சி தாய்மைக்குச் சாட்சியாகவன்றோ விளங்குகின்றது.
இராமன் காட்டுக்குச் செல்லும் போது சுமித்திரையாகிய சிறியதாய், தன்மகன் இலக்குவனை அழைத்து, "மகனே இவன் பின் செல். தம்பி என்னும் படியன்று, அடியாரின் ஏவல் செய்தி. மன்னும் நகர்க்கு இவன் வந்திடின் வா அது அன்றேல் முன்னம் முடி" என்று சொல்லி அனுப்பிவைக்கின்ற காட்சி நெஞ்சை உருக்கும் காட்சியல்லவோ,
முதலாம் நாட் போரிலே ஆயுதங்கள் அனைத்தையும் இழந்தவனாய், ஆலம் விழுதுகள் போன்று இருபது கைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு, நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட தனித்தவனாக, தவித்தவனாக, இராவணன் நின்ற பொழுது, அவன் தன் ஆருயிர் மனைவியை, அமிழ்தின் வந்த தேவியை, ஜனகன் பெற்ற அன்னத்தை வஞ்சனையாகக் கவர்ந்து சென்ற நஞ்சனையானாக இருந்த போதும், அவனைக் கொல்லாது "இன்று போய்ப் போர்க்கு நாளைவா என உயிரப்பிச்சை நல்கிய இராமனின் வள்ளல்த் தன்மையினை, வீரசிகரம் என்பார் இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள்.
வடநாட்டுக் கதாபாத்திரங்களையும், காட்சிகளையும், தமிழ்நாட்டுக் கதாபாத்திரங்களாகவும், காட்சிகளாகவும் உலாவவிட்டு, ஒப்புயர்வில்லாத வகையில் தமிழிலே இராமாயணத்தைப் பாடிய கம்பனை, அவன் பிறந்த காரணத்தால் தமிழ்நாடு பெருமை பெற்றது என்ற பொருளில், "கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று மகாகவி பாரதியார் பாராட்டிப் பாடுகின்றார்.
* அகளங்கன். *
 

235
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று சத்தியம் பண்ணிப்பாடுகின்ற பாட்டுக்கொரு புலவனாம் பாரதி, கம்பனையே உலகமகா கவிகளிலே தலையாய கவியாகப் போற்றிப் புகழ்கின்றான். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழி கம்பனின் கவியாற்றலுக்குக் கிடைத்த சான்று அல்லவோ,
உலக மகாகவிகளிலே உயர்ந்தவனாகப் போற்றப்படுகின்ற, கம்பனின் இராமாயணத்தை ஒரு சில நிமிடங்களுக்குள்ளே உரையாற்றி முடிப்பதென்பது ஒருமுடியாத காரியமே.
சிற்றறிவுடைய சிறியேனாகிய யான் கம்பராமாயணத்தின் பெருமையை அளவிடும் முயற்சி, நரிவாலைக் கொண்டு கடலாழத்தை அளவிடும் முயற்சியே என்பதை நன்கறிவேன்.
இருப்பினும் கம்பனின் தமிழிலேயே சொல்வதாக இருந்தால், காசில் கொற்றத்து இராமன் கதை கூறும் கம்பராமாயணத்தை, ஆசைபற்றி அறையலுற்றேன், என்றுதான் சொல்லலாம், எனக் கூறி அமைகின்றேன்.
வாழ்க கம்பராமாயணம், வளர்க தமிழ்ப் புலமை.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்
மருத நிலத்தின் சிறப்பு
தனர்டலை மயில்கனர் ஆடத்
தாமரை வினாக்கத் தாங்கக் கொனர்டல்களர் முழவினர் ஏங்கக்
குவளை கணர்விழித்து நோக்கத் தெனர்டிரை எழினி காட்டத் தேடம்டமிழி மகர மாறினர் வானர்டுகளர் இனிது பாட
மருதடம் விற்றிருக்கும் மாதோ
(a:Galib (Lugrinurusoniurua 65 estratibo)
e செந்தமிழும் நாப்பழக்கம்.

Page 17
பன்னிரு திருமுறை
அருமைமிக்க இந்நிகழ்வின் பெருமைமிக்க தலைவர் அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! என் அன்புக்குரிய சகோதரர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பு கனிந்த வணக்கங்கள்.
படிப்பவர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பண்பு படைத்தவையாகவும், உலகியல், ஆத்மீக அறிவுகளைத்தரும் உன்னதமான தன்மை படைத்தவையாகவும், பாபங்களைப் போக்கும் பெருமை படைத்தவையாகவும், பதமுத்தியைத்தரும் அருமை படைத்தவையாகவும் விளங்கும் பன்னிரு திருமுறைகள் பற்றி, எண் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இச்சபையிலே பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சைவ நல்லடியார்களும், நாயன்மார்களும் பாடியருளிய திருவருட் செந்தமிழ் நூல்கள், திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
திருமுறைகளைத் தொகுத்து வழங்கியவர் நம்பியாண்டார் நம்பி என்னுமோர் சிறந்த சிவனடியார் ஆவர். சித்தத்தைச் சிவன்பாலே வைத்த இச்சிவனடியார், தன்னை இத்திருப்பணியில் அர்ப்பணித்துத் திருமுறைகளை அருமறைகளாகத் தொகுத்தருளினார்.
தமிழர்களின் பொற்காலம் எனப் போற்றப்பட்ட சோழர் காலத்தில், மும்முடிச் சோழனாகப், பெருஞ், சக்கரவர்த்தியாக வாழ்ந்த இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில், அவனது பேருதவியோடு இப்பெரும்பணி நம்பியாண்டார் நம்பிகளால் நம்பிக்கையோடு தொடங்கப்பட்டது.
இத்தொகுப்பில், முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரங்களைக் கொண்டுள்ளன. நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய தேவாரங்களைக் கொண்டுள்ளன. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரங்களைக் கொண்டள்ளது.
"தேவார முதலிகள்" என்று போற்றப்படுகின்ற மூன்று நாயன்மார்களும் பாடியருளிய முதல் ஏழு திருமுறைகளும், "அடங்கன் முறை" என்று அழைக்கப்படுகின்றது.
கடவுளுக்கு மாலை போன்றது, எனக் கருதத்தகும் கருத்துடைய தேவாரங்கள் அடங்கிய சிறப்பு வாய்ந்தனவாக, முதல் ஏழு திருமுறைகளும் அமைந்து காணப்படுகின்றன.
 

25 மாணிக்கவாசகப் பெருமானால் பாடியருளப் பெற்ற, திருவாசகம், திருக்கோவையார், என்னும் இரு நூல்களும் எட்டாம் திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றுள்ளன.
திருமாளிகைத் தேவர் முதல், சேதிராயர் ஈறாக உள்ள ஒன்பதின்மரால் பாடியருளப் பெற்ற திருவிசைப்பாவும், சேந்தனாரால் பாடியருளப் பெற்ற திருப்பல்லாண்டும், ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. திருமூலர் என்னும் அருளாளரால் பாடியருளப்பெற்ற திருமந்திரம், பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், நக்கீரதேவர், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பிகள் முதலான பன்னிரு அருளாளர்கள் பாடியருளிய நாற்பது பிரபந்தங்கள், பதினோராம் திருமுறையாகவும், சேக்கிழார் சுவாமிகள் பாடியருளிய பெரியபுராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணம், பன்னிரண்டாம் திருமுறையாகவும் தொகுக்கப்பெற்றுள்ளன.
கோவை, அந்தாதி, கலம்பகம், இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, உலா, ஆற்றுப்படை, நான் மணிமாலை, முதலான பிரபந்தங்களும், புராணமும் அடங்கிய பன்னிரு திருமுறைகள் தமிழ் இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்து, வளமூட்டி, வாழ்வளித்திருக்கின்றன என்று வாய்குளிரக் கூறி மகிழ்ந்து துள்ளலாம்.
வேதங்களினதும் ஆகமங்களினதும் சாரமாக அமைந்த திருமுறைகளைச், சித்தத்தைச் சிவன் பால் வைத்த சிவனடியார்கள் பாடியருளியமையால், திருமுறைகளையும் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்ட திருமறைகளாகக் கருதினால் அது மிகையாகாது.
இது மட்டுமன்றிச் சிவபெருமானே நேரடியாகப் பாடிய பாசுரம் ஒன்றும் , பதினோராம் திருமுறையில் இடம் பெற்றிருப்பது பெருவியப்பிற்குரியதன்றோ.
தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. சைவத் தமிழ் மறை நூலாகிய திருமுறைகளும், சைவ உலகிற்கு உயிராக இருக்கும்படி பன்னிரண்டாக அமைந்த திருவருள் வியந்து போற்றுதற்குரியதன்றோ.
சிவ சின்னங்களின் மகிமையையும், சிவனடியார்களின் பெருமையையும், திருக்கோவில்களின் அருமையையும், சிவபெருமானின் அளப்பரும் கருணையையும், அந்த அளப்பெரும் கருணையை அடைவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய சைவநெறி முறைமையையும், திருமுறைப் பாடல்கள் சிறப்புற விளக்குகின்றன.
பக்திநெறி பழைய பாவ வினைகளையும் நீக்கிவிடும் என்ற கருத்தில் "பக்தி நெறி அறிவித்துப் பழ வினைகள் பாறும் வண்ணம்" என மணிவாசகப் பெருமான் அகநெகிழ்ந்து, மகிழ்ந்து பாடியுள்ளார்.
e செந்தமிழும் நாப்பழக்கம். ఆస్ట్రీ

Page 18
ܕ ܬܐ.
26 முத்திநெறி அறியாத மூர்க்கரொடு சேர்ந்து முத்தியடைய முயன்ற தமக்கு, பக்தி நெறியையே அத்தன் அருளிச் செய்தான் என்று வித்தகராம் மணிவாசகப் பெருந்தகை பாடியது போல, பல நற்றமிழ்ப் பாடல்கள் மூலம் நன்னெறியைப் போதித்தவை திருமுறைகளாகும்.
சைவநெறி முத்திப் பேற்றுக்குரிய நெறி மட்டுமன்றி முத்திப்பேற்றை அடைவதற்கு இடையிலே இருக்கின்ற சகல போகங்களையும் முறைப்படி அடைவதற்கும் அனுபவிப்பதற்குமுரிய, உயரிய நன்னெறி என்பதையும் இத்திருமுறைகள் எடுத்தியம்புகின்றன.
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் என்றும் "இம்மையே தரும் சோறும் கூறையும்" என்றும் "பொன்னும் மெய்ப் பொருளும் தருவானை" என்றும் பல வகையாகச் சிவபெருமானையும், உலகியலையும் சிவனடியார்கள் போற்றித் துதித்திருப்பது, இந்த உண்மையை உலகுக்குத் துல்லியமாக உணர்த்துகின்றது.
இத்திருமுறைகளுக்குள் அடங்கும் பஞ்ச புராணத்தையே தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் என்ற வரிசையில் கோவில்களிலே பாடித் துதிக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
அடியாரைப் பேணியவர் சிவபெருமானி என்பதையும்,
சிவபெருமானின் எளிவந்த கருணையையும், அடியார் கண்ட அன்புநெறியாக
எங்கள் சைவநெறி மலர்ந்ததையும், சாத்திரப் பாடல்களும் தோத்திரப் பாடல்களும் அடங்கிய இத் திருமுறைகளிலே கண்டு களி கூரலாம்.
அன்பும் சிவமும் இரண்டெண்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார். அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபினர் அனர்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே.
என்று எங்கள் சைவ நெறி அன்பின் வடிவமாக இறைவனைக் காண்கிறது. அன்பின் வழியாக இறைவனைக் காட்டுகிறது.
திருமூலரின் திருமந்திரப் பாடல் மட்டுமன்றி, ஏனைய திருமுறைப் பாடல்களும் இதையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
முதலாவது திருமுறையின் முதலாவது தேவாரமாகிய, திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய
தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தாவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடியூசி என்
உள்ளங் கவர்கள்வனர் ஏடுடைய மலராணி முனைநாட் பணிந்து
ஏத்த அருள் செய்த fடுடைய பிரமா புரம் மேவிய
பெர்மானி இவன் அன்றே. * அகளங்கன். *

27 என்ற தேவாரம், ஓங்காரத்தில் தொடங்குகின்றது. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தின் இறுதிப் பாடல்
எண்றும் இனியம் பெகுஞர் இயலியினாலி ஒனறு காதலித்து உண்னமும் ஒகர்கிட மணிரனார் அடியாரவர் வாணி புகழ். நீரினிறது எகர்கும் நிலவி உலகெலாம்.
என "ம்" இல் முடிகின்றது. எனவே "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தினுள் திருமுறைகள் அடங்குவது திருவருட் செயலாகவே தெரிகின்றது.
இம்மைப் பயனையும், மறுமைப் பயனையும் ஒருங்கே தரவல்ல திருமுறைகளைச் சைவர்கள் போற்றா தொழிந்து போனால், வேறெந்த இலகுவான வழியிலும் இருமைப் பயன்களையும் பெறவே இயலாது என்பது
திண்ணம்.
எனவே திருமுறைகளைப் போற்றுவோம். வையத்துள் வாழ்வாங்கு வாழ வசதிகளும் பொன்னும் மெய்ப்பொருளும் கிட்டும். புகழும் நிம்மதியும் பெருகும். தேக நீக்கத்தின் பின் முத்தியும் சித்திக்கும்.
ன்ேமைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்." வாழ்க மன்னிரு திருமுறைகள், வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
šias augfyusupüha Sněž ண்டு
கணிப்பன ஆகாதே 歴 ர்கர்ைதம் asisrašr
கடைப்படும் ஆகாதே s இறந்திடு மாறு
ଶ୍ତ ஆகி -ബ
வணங்குதும் ஆகாதே பண்கணி கூர்தரு பாடலொ, உாடல்
பயினர்றிடு மாகாதே
a AmurCasw azonwasnyós வினர்களி கூர்வதோர் வேதகம் வறுத்து
வெளிப்படு மாகாதே மினர்வலை விசிேய கானவனர் வந்து
(திருப்படையாட்சி = திருவாசகம்)
* செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 19
நவராத்திரிக் காலங்கள் என்று th புரட்டாதி மாதத்தின் வளர்பிறைக் காலத்து வரும் பிரதமைத் திதிமுதல் தசமித் திதி ஈறாகவுள்ள இக்காலத்திலே, நவராத்திரியின் மகிமை பற்றியும், கல்வியின் பெருமை பற்றியும் பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பெருவாய்ப்பாகக் கருதி மகிழ்கின்றேன்.
விழாவின் தலைவர் அவர்களே! பெருமதிப்புக்குரிய அதிபர் அவர்களே! ஆசிரியப் பெருந்தகைகளே! என் அன்புக்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சக மாணவர்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
புலவர்தம் நாக்கிலே இருந்து, நல்லருள் புரிந்து, காக்கும் கடவுளாம் கலைமகள் எண் வாக்கிலே வருவாள் என நம்பித் தொடர்கின்றேன். புரட்டாதி மாதத்து வளர்பிறையில், பிறதமை முதல் தசமி ஈறான பத்து இரவுகளையும் ஒருசேரத் "தசரா என்று குறிப்பிட்டு, இந்தியாவின் வடநாட்டு இந்துக்கள் பெருவிழா எடுத்து வருகின்றார்கள்.
தமிழ்ச் சைவர்களாகிய நாங்களோ, நவராத்திரிக் காலம் என்று பொதுவாகவும் சரஸ்வதி பூசைக் காலமென்று சிறப்பாகவும் முதல் ஒன்பது நாட்களையும் குறிப்பிட்டுப் பத்தாவது நாளான தசமி நாளை விஜயதசமி நாள் என விசேடமாகக் குறிப்பிடுகின்றோம்.
மனிதனின் அத்தியாவசியத் தேவைகளாகிய கல்வி, செல்வம், வீரம் என்ற மூன்றையும் பெற விரும்பி, அததற்குரிய் கடவுளர்களை வழிபடும் காலங்களே இந்நவராத்திரிக் காலங்கள் ஆகும்.
வீரத்தைப் பெறவிரும்பி முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்மனையும், செல்வத்தைப் பெறவிரும்பி அடுத்த மூன்று நாட்களும் இலக்குமி தேவியையும், கல்வியைப் பெறவிரும்பி இறுதி மூன்று நாட்களும் கலைமகளையும், துதித்துப் பூசை செய்து விரதமிருந்து வழிபாடாற்றுகின்ற ஒன்பது நாட்களையுமே, நவராத்திரி விரத நாட்கள் என்று போற்றுகின்றோம். கல்வி, செல்வம், வீரம், என்ற மூன்றும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு, மாண்புக்கு மிகவும் அத்தியாவசியமானவை என்பதை உலகம் இன்று ஒப்புக் கொள்கின்றது.
ஆனால் நீண்ட நெடுங்காலங்களுக்கு முன்பாகவே, சைவர்களாகிய நாங்கள் இதனை ஐயந்திரிபற அறிந்திருக்கின்றோம்.
* அகளங்கன். ே
 
 

29 தும்பிக்கையானாகிய விநாயகப் பெருமானது பாதங்களுக்குத் தூவித் துதிப்பதற்குப் பூக்கொண்டு, தப்பாமற் சார்பவர்களுக்குக், கல்வியும், வீரமும், செல்வமும், ஒருங்கே கிட்டும் என்று ஒளவைப் பாட்டியார் அமுதத் தமிழில் அழகுற அன்றே பாடியுள்ளார், அல்லவா.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராளர் நோக்குண்டாம் மேனி நடங்காது - பூக்கொண்டு தப்பார் திருமேனித் தம்பிக்கையாண் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
என்ற பாடலில், வாக்குண்டாம் என்பது கல்வி உண்டாகும் என்றும், நல்லமனமுண்டாம் என்பது வீரம் உண்டாகும் என்றும், மாமலராள் நோக்குண்டாம் என்பது மகாலக்சுமி தேவியின் அருட்பார்வையாலே செல்வம் உண்டாகும் என்றும் பொருள் தருகின்ற சொற்கள் என்கிறார்கள் தமிழ்ப் புலவர்கள்.
அபிராமி அந்தாதி என்னும் அருட்பாடற் தொகுப்பிலே அபிராமிப் பட்டரும், அபிராமி அம்மையின் கடைக்கண் பார்வை, செல்வத்தைத் தரும், கல்வியைத் தரும், வீரத்தைத் தரும், என்ற பொருளில் "தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் என்றே பாடிச் செல்கின்றார்.
கல்வியும், செல்வமும், வீரமும் மனித வாழ்க்கைக்கு எவ்வளவு அத்தியாவசியமானவை என்பதைப் பெரும்புலவர்களின் அருங்கவிகளில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
நவராத்திரி விரதத்தைச் சரஸ்வதி பூசை என்றும், வாணிவிழா என்றும், தமிழ்ச் சைவர்களாகிய, அதிலும் மாணவர்களாகிய நாங்கள் போற்றுவது கல்வியின் முதலிடத்தையே குறிப்பாகக் காட்டுகின்றது.
வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்து வீற்றிருக்கும் கலைமகளிடம், கல்வியை வேண்டி வழிபடுகின்ற மிக முக்கியத்துவம் பொருந்திய இந்நாளிலே, கல்வியைப் பற்றிச் சிறிது பேசி எண்பேச்சை நிறைவு செய்யலாம் என்று நினைக்கின்றேன்.
"எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் எனறார் ஒளவையார். "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்றார் அதிவீர ராம பாண்டியர்.
இவர்கள் யாவருக்கும் முன்பு வாழ்ந்த தமிழ்ப் பெரும் புலவராகப் போற்றப்படும் தனிப் பெரும் அறிஞராம் வள்ளுவப் பெருந்தகை
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
என்கிறார். அதுமட்டுமன்றி ஒரு பிறவியிலே ஒருவன் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறவிகளிலும் உதவி செய்யும் என்ற பொருளில்
* செந்தமிழும் நாப்பழக்கம். আঁঠু

Page 20
350 இதமைக்கர்ை தாண்கற்ற கல்வி ஒருவர் கிழமையும் ஏமாம்பு உடைத்து
என்றும், செல்வங்களுக்குள்ளே அழிவில்லாத பெருமை பொருந்திய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறொன்றுமில்லை என்ற பொருளில்,
கேடுஇல் விழச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடலில மற்றை யவை
என்றும் சிறப்பித்துப் பாடுகின்றார். நாலடியார் என்னும் அறநூல் கல்வியின் சிறப்புப் பற்றி மிக விசேடமாகக் கூறுகிறது.
ஒரு தந்தையானவர் தனக்குப்பின் தண்பிள்ளைகளுக்குத் தொடர்ந்து வரக்கூடிய எஞ்சிய செல்வமாகக் கொடுக்கக் கூடிய பெருஞ் செல்வம் கலி வியே ஆகும். ஏனெனில் கலவி எவராலும் கொள்ளையிடப்படமுடியாதது. அழியாதது. அரசர்களாலும் கவரப்படமுடியாதது என்றெல்லாம் வலியுறுத்துகின்றது.
வைப்புழிக் கோட்படா வாய்த்தியிற் கேடில்லை மிக்க சிறப்பினர் அரசர் செறினர் வவிவர எச்சம் எனலுருவண் மக்கட்குச் செய்வன வீச்சை மற்றல்ல பிற.
இதுமட்டுமண்றி மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடிய இரசிக்கத்தக்க போற்றத்தக்க உண்மை அழகு கல்வியினாலேயே ஏற்படுகின்றது என்ற பொருளில்,
குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சனி அழகும் அழகண்ல - நெஞ்சத் தலிலம்யாம் எண்ணும் நடுவு நிலைமையாற் கல்வி அழகே அழகு.
என்றும் கூறுகின்றது. மன்னனையும், மாசறக் கற்றோனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனிற் கற்றோனே சிறப்புடையன் என்று பாடிய ஒளவையாரின் பாட்டு கற்றோரின் மேலான சிறப்பையல்லவா விதந்தோதுகிறது.
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க இலக்கியமாம் புறநானூற்றிலே பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
கல்வியின் பெருமையை அற்புதமாகப் பாராட்டியுள்ளான்.
* அகளங்கன். *

3重 உற்றழி உதவியும் உறுபொருள் கொடுத்தம் பிற்றைநிலை முனியாது கற்றல் தனிறே பிறப்பேர ரனின உடன் வயிற் றுள்ளும் சிறப்பினர் பாலரற் தாயும்மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் முத்தோணி வருக எனினரது அவருள் அறிவுடையோனி ஆறு அரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.
என்ற புறநானூற்றுப் பாடலைப் பொருளறிந்து பாடுவது மிகவும் பயனுடையதாகும். சாதிப்பிரச்சனைக்குச் சாவுமனி அடிக்கின்ற பாட்டல்லவா இது.
தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்தவன் கற்று மேதையானால் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் அவனை வணங்கவேண்டி வரும் என்ற கருத்து இன்றைய உலகுக்கும் ஏற்புடையதன்றோ.
வயதில் மூத்தவனைவிட அறிவில் முதிர்ந்தவனையே அரசும் மதிக்கும் என்று கூறியது மட்டுமன்றி தாய்கூட கல்வியின் சிறப்பினாலே, கல்வி கற்ற மகனிலே அதிகம் அன்புவைப்பாள் என்ற பொருளில், "சிறப்பின் பாலாற் தாயும் மனந்திரியும்" என்று கூறியவிதம் கல்வியின் சிறப்பைக் கனகச்சிதமாகக் காட்டுகின்றதல்லவா. - கல்வி அறிவில்லாதவனுக்குக் கல்வி அறிவூட்டலைப் போன்ற புண்ணியம் வேறொன்றுமில்லை என்பார் மகாகவி பாரதியார்.
இண்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தணி சுனைகள் இயற்றல் அண்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் பிண்ன குண்ன தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அண்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்று எடுத்தியம்புகின்ற பாரதியார், வெள்ளைத் தாமரைப் பூவிலும், வீணைசெய்யும் ஒலியிலும், கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத்திலும் வீற்றிருக்கும் கலைமகளை வழிபடுதல் என்பது, கல்வியை மதித்தலும் கற்றலுமே அன்றி வெறுமனே
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதனிமேல் சந்தனத்தை மலரை இடுவோர்."
சாத்திரம் அல்ல என்று கண்டிக்கின்றார்.
飘 செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 21
352
கல்வியை மதிக்கின்ற காலமாக, கலைமகளைத் துதிக்கின்ற காலமாக மட்டுமன்றி கல்வியைத் தொடங்குகின்ற காலமாகவும் இக்காலமே அமைகின்றது. N
வித்தியாரம்பம் என்று சொல்லப்படுகின்ற ஏடு தொடங்கும் புனித நிகழ்ச்சி வெற்றிக்குரிய தசமி என்று பொருள் கொண்ட விஜயதசமித் தினத்திலே தான் நடைபெறுகின்றது.
எருமை மாடுபோன்ற தோற்றங்கொண்ட மகிடாசுரனைத் துர்க்கையம்மன் வதைத்த மகாநோன்பு நாளாம் மானம்பு நாள் விஜயதசமி நாளேயாகும். எருமைக் குணமாகிய சோம்பலை எங்களிடமிருந்து அழிக்கவேண்டி நாம் வழிபாடாற்றுவோம்.
இத்தகைய பெருமை பொருந்திய இந்நவராத்திரியின் மகிமைபற்றியும் கல்வியின் பெருமையற்றியும், சிறிது நேரம் பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கூறி,
கசடறக் கற்போம். கற்றபடி நிற்போம். வாலறிவன் நற்றாள் தொழாது கற்றதனால் ஆயபயன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வோம்.
நண்றி, வணக்கம்.
சரஸ்வதி துதி நாடிப் புலங்களர் உழுவார் கரமும்
தயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும்
செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சம்
உவந்துநடடம் ஆடிக் களிக்கும் மயிலே உண்டாதம்
அடைக்கலமே
(கவிமணி தேசிக விநாயகம் மிலர்ணை)
* அகளங்கன். *

சிறப்பாகப் பூசைகளைச் செய்கின்ற சிவாச்சாரியார் அவர்களே! இவ்வாலயத்தின் அறங்காவலர்களே சிவனடியார்களே!
பெருமை மிகுந்த இத்தினத்திலே, அருமை மிகுந்த ஒரு தலைப்பிலே, சிறியேனாகிய யாண் உரையாற்றுவதற்குத் திருவருள் கூடியிருப்பதை நினைத்து அவனருளாலே அவன் தாள் வணங்கித் தொடர்கின்றேன்.
எல்லாம் வல்ல முழுமுதற் பரம்பொருளாம் சிவபெருமான், எல்லோருக்கும் எல்லா நலமும் நல்கவேண்டுமென்று பிரார்த்தித்துக்கொண்டு, சிவபெருமானின் பெருமைமிகு விரதமான சிவராத்திரி பற்றி உரையாற்றப்போகிறேன். வேதங்களுக்குள்ளே சாம வேதம் எவ்வளவு சிறப்புடையதோ, யாகங்களுக்குள்ளே அஸ்வ மேத யாகம் எவ்வளவு சிறப்புடையதோ, மலைகளுக்குள்ளே மகாமேரு மலை எவ்வளவு சிறப்புடையதோ, நதிகளுக்குள்ளே வற்றாத ஜீவ நதியாகிய புண்ணிய நதியாம் கங்கா நதி எவ்வளவு சிறப்புடையதோ, பஞ்ச பூதங்களுக்குள்ளே ஆகாயம் எவ்வளவு சிறப்புடையதோ, அதே போன்று விரதங்களுக்குள்ளே சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையது என்று புராணங்கள் புகழ்கின்றன.
கும்பமாதம், குடமாதம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற மாசிமாதத்துத், தேய்பிறைக் காலத்துச், சதுர்த்தசித் திதியிலே வருகின்ற சிவராத்திரி விரதமானது, சிவபெருமானுக்குரிய பெருமை பொருந்திய சிறந்த விரதம் எனப் போற்றப்படுகின்றது. இவ்விரதமானது உலக நாயகியாம் உமையம்மையாலே அனுஷ்டிக்கப்பட்ட பெருமை கொண்டது.
பிரம்ம தேவன் இவ்வுலகத்தைப் படைக்கின்ற தலைமைப் பொறுப்பைச் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தே பெற்றான்.
மகாவிஷ்ணு மூர்த்தியானவர், காத்தற் தொழிலைச் செய்கின்ற காத்தற் கடவுள் என்ற பதவியைச், சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்ததன் பேறாகவே பெற்றார்.
அளகாபுரியின் அரசாட்சியைக் குபேரன் பெற்றதும், தேவேந்திரன் சொர்க்க ராச்சியத்தின் அதிபதியாக இருப்பதும், இச்சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்த மகிமையினாலேயே, என்று புராணங்கள் கூறுகின்றன.
பிராமணர்களுக்கு நிலமும், கோடி பொற்குவியல்களும் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியத்தைவிட, சிவராத்திரி விரதம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
o

Page 22
34 །
நூறு அஸ்வமேத யாகங்கள் செய்வதனாலே கிடைக்கின்ற புண்ணியத்தைவிட, சிவராத்திரி விரதம் அதிக புண்ணியத்தைத் தரும்.
இதுமட்டுமன்றிப், பசுக்களைப் பார்ப்பாரை, பாலரை கன்னியரைக் கொன்ற கொடும் பாவங்களையும் போக்கவல்ல தகுதியும், தலைமையும் கொண்டது இச்சிவராத்திரி விரதமாகும்.
ஏனைய விரதங்கள் போலல்லாமல் இவ்விரதத்தை அன்போடு அனுஷ்டிக்காமல், சந்தர்ப்பவசமாக அனுஷ்டித்தாலுமே கூட, அதிக பயன்! விளையும் என்று புலவர்கள் கூறுகின்றார்கள்.
பகல் முழுவதும் உண்ணாமல், இரவு முழுவதும் நித்திரை விழித்து உணவின்றி இருப்பவர்கள், பெரும் புண்ணியப்பயனை அடைவார்கள். இவ்விரதமானது தோன்றிய கதை மிகவும் சிறப்பானது. ஒரு கற்பாந்த காலத்தில், பிரம்ம தேவனும் இறந்து போய் சர்வ ஜீவராசிகளும் அழிந்து போன ஒரு காலத்தில், உமையம்மையார் சிவபெருமானை நோக்கி வணங்கிச் செய்த விரதம் இது என்று ஒரு கதை சொல்வர்.
இதுமட்டுமன்றி இன்னொரு கதையும் சொல்வர். படைத்தற் கடவுளான பிரம்ம தேவனும், காத்தற் கடவுளான மகாவிஷ்ணு மூர்த்தியும், தாமே முழுமுதற் பரம் பொருள் எனச் செருக்கோடு போரிட்டுக் கொண்டிருந்த வேளையில், அவர்களின் கர்வத்தை அடக்குவதற்காகச் சிவபெருமான் அவர்களின் நடுவில் சோதிப் பிழம்பாகத் தோன்றி, அச்சோதிப் பிழம்பின் அடிமுடி காண்பவரே உயர்ந்தவர் என்று கூற, பிரம்ம தேவன் முடியைத் தேடிக்கான அன்னமாக உருமாறிப் பறந்து மேலே சென்றார். மகாவிஷ்ணு மூர்த்தி பன்றி வடிவமெடுத்து மண்ணை அகழ்ந்து அடியைக் காணக் கீழே சென்றார்.
அப்படி அடிமுடி தேடியவர்களின் அகந்தை அழிந்துபோக, சிவபெருமான் அருணாசல மலையாக - நெருப்பு மலையாகத் தோற்றமளித்து, பின் இலிங்கமாகக் காட்சியளித்த நாளே சிவராத்திரி நாள், என்று சூதமுனிவர் நைமிசாரணிய வனத்து முனிவர்களுக்குச் சொல்கிறார்.
இவ்விரதத்தை அனுஷ்டித்துப் பெரும்பேறு பெற்றவர் அநேகர். இமயமலை அடிவாரத்தில், மரத்திலே இருந்த குரங்கொன்று, அறியாமலேயே இவ்விரவில் வில்வம் இலைகளைப் பறித்துக் கீழே போட, அவ்வில்வம் இலைகள் சிவசக்தியின் மேல் விழுந்த புண்ணியத்தினால், அக்குரங்கு, அடுத்த பிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாய் வாழ்ந்து, முருகப் பெருமான் தெய்வயானை அம்மையைத் திருமணஞ் செய்யும்போது, திருப்பரங்குன்றத்திற்கு வந்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
இச்சிவராத்திரி விரதத்தை நியமவிதி தவறாது அனுஷ்டித்துப் பெறற்கரிய பேறுகளைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோமாகுக.
நன்றி, வணக்கம்.
* அகளங்கன். *
 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
ஒருபால் கோடாமை, சான்றோர்க்கு அணியென்ற ஒப்புயர்வில்லா உண்மையை உணர்ந்து, நடுவர்களாக வீற்றிருக்கும் சான்றோர்களே! 4
சொற்கடிவாளத்தைச் சோரவிடாது கைப்பிடித்துக் கருத்துக் குதிரையைச் செலுத்த வல்ல சொல்லேர் உழவர்களே! உங்கள் அனைவருக்கும் எண் அன்பு நிறைந்த வணக்கங்கள்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள், உள்ளத்து உவகையோடு கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கற் திருநாளை ஒட்டி நடாத்தப் படுகின்ற உழவர் விழாவிலே, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற தலைப்பிலே உரையாற்றுவதில், உவமையில்லா மகிழ்ச்சியடைகின்றேன். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம். என்று உழவுத்தொழிலின் மேன்மையை உலகெங்கும் பறைசாற்றினான் உலகமகாகவி பாரதி.
பார்ப்பனக் குலத்திலே பிறந்திருந்தும் கூட பாரதி, உழவுத் தொழிலை உன்னதமான உயர்ந்த தொழிலாக மதித்து, வணக்கஞ் செலுத்துதற்குரிய தொழிலாக நினைத்துப் பாடினான் என்றால் உழவுத் தொழிலின் உயர்வுதான் என்னே!
பண்டைக் காலத்திலே தொழில் என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளையே கொடுத்தது என்பர் ஆராய்ச்சி அறிஞர்.
எனவே உழவுக்கும் தொழிலுக்கும் வந்தணை செய்வோம் என்றால் அது உழவாகிய தொழிலுக்கு வணக்கஞ் செலுத்துவோம், என்றே பொருள் படுகிறது. எனவே உழவுத் தொழிலின் மேன்மை பற்றியே இங்கு உரையாற்றுகின்றேன்.
உழவுத் தொழிலுக்கு வேளாண்மைத் தொழில் என்றும் பெயருண்டு. வேளாண்மை என்பது உபகாரஞ் செய்தல் என்று பொருள் தரும் ஒரு சொல்லாகும். உலகில் பல்வேறு உயிரினங்களுக்கும் கொடுத்தலாகிய உபகாரத்தைச் செய்கின்ற தொழில் உழவுத் தொழில் என்ற காரணத்தினால் தான், உழவுத் தொழிலை வேளாண்மைத் தொழில் என்றும் பொருத்தமாகக் குறிப்பிட்டனர் நம் முன்னோர்.
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள்வரை பழமை வாய்ந்த பெருமை பொருந்தியதாகப் பலராலும் போற்றப்படுகின்ற, உலகப் பொதுமறையாய் விளங்குகின்ற, அறிவுப் பெட்டகமாம் திருக்குறளிலே, வள்ளுவப் பெருந்தகை உழவுத்தொழிலைப் பற்றி மிகவும் உன்னதமாக, உற்சாகமாகப் பெருமிதத்தோடு சொல்லியிருக்கிறார்.

Page 23
3○
2-முதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு தேவர்
என்று கூறியதோடு விட்டுவிடாமல், இந்த உலகம் உழவனது உழவு கருவியாகிய ஏரின் பின்னாலேதான் செல்கின்றது என்னும் பொருளில்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
என்று அறுதியிட்டுக்கூறியிருக்கின்றார். உழுது உண்டு வாழ்பவர்களே தான் வாழ்கிறார்கள் என்றும், ஏனையோர் மற்றவர்களைப் பணிந்து கைகூப்பித் தொழுது அடிமையாக அவர்பின் செல்கின்றார்கள், அவர்கள் வாழவே இல்லை என்றும் வள்ளுவர் சொல்லுகின்ற வைர வரிகள் வளம்மிக்க வரிகளல்லவோ,
தொழில்களுக்குள்ளே தலையாய தொழிலாகப் போற்றப்பட்ட காரணத்தினாலேதான், தொழில் என்றாலே அது உழவுத் தொழிலைக் குறித்தது என்ற உண்மையைப் பலர் முற்காலத்தில் உணர்ந்திருந்தனர்.
"அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது" என்பது பழமொழி. இந்த உலகமாகிய தேர் ஓடுவதற்கு அச்சாணியாக அமைந்திருப்பவன் உழவனே என்ற வள்ளுவண் வாய்மொழிக்கு மறுமொழியும் உண்டோ.
"உழுவார்உலகத்தார்க்கு ஆணி என்று அடித்துச் சத்தியஞ் செய்து கூறிய வள்ளுவரைப்போலப் பல புலவர்களும் பலவகையாக உழவுத் தொழிலைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார்கள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற, சங்கச் சான்றோர்களில் ஒருவராம் குடபுலவியனாரின் புறநானூற்று வரிகள், உழவுத் தொழிலின் மேன்மையை அல்லவா உலகுக்கு உணர்த்துகின்றது.
உலகுக்கு உணவு கொடுப்பவர்களாகிய உழவர்களே, இவ்வுலகுக்கு உயிர் கொடுப்பவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள், என்ற ஆழ்ந்த கருத்து, சங்க காலத்துக் கருத்தல்லவா.
உழவன் சேற்றிலே கைவையாது போனால், மனிதன் சோற்றிலே கைண்வக்க முடியாது என்று கூறுவது வெறும் புகழ்ச்சி வார்த்தையல்லவே. உழவனின் நாற்றுமுடி உயர்ந்தாற்தான், மன்னனின் மணிமுடி உயரும் என்ற உண்மை உலகம் ஒப்புக் கொண்ட உண்மையல்லவா.
"ஆற்றங்கரையின் மரமும், அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்." ஆனால் உழுதுண்டு வாழும் வாழ்க்கைக்குப் பழுதில்லை. அவ்வாழ்வு விழுந்து விடாது. விழுதுவிட்டுச் செழித்து நிலைத்திருக்கும் என்றார் ஒளவை மூதாட்டியார்.
வரப்புயர நீரும், நெல்லும், மட்டுமல்ல, குடியும் கோனும் உயரும்
விசித்திரத்தைத் தமிழ்க் கவிச் சித்திரமாகத் தீட்டித் தந்தவர் ஒளவைப்
பாட்டியார் அல்லவா. 2ழ்
* அகளங்கன். *

37 "மேழிபிடிக்குங் கை வேல்வேந்தர் நோக்கும் கை" என்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.
"உழுகுலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தவர்கள். என்று உழவுத் தொழிலின் ஒப்புயர்வில்லா மேன்மையைச் செப்பிய கவிச்சக்கரவர்த்தி, உழவர்கள் உழுகின்ற உழவாலே நாட்டில் எவை எவையெல்லாம் மேம்பாடடைகின்றன என்று பட்டியலிடுகின்றான் பாருங்கள்.
அலகிலா மறை விளங்கும்.
அந்தணர் ஆகுதி விளங்கும். பலகலையாம் தொகை விளங்கும்.
பாவலர்தம் பர விளங்கும். மலர்குலாம் திரு விளங்கும்.
மழைவிளங்கும். மனு விளங்கும். உலகெலாம் ஒளி விளங்கும்.
உழவர் உழும் உழவாலே.
இது மட்டுமா, மேலுஞ் சொல்கிறான் கவிச்சக்கரவர்த்தி. உழவர்களின் ஏர் நடந்தால் எவையெவை எல்லாம் நடக்கும், எது நடக்காது என்றும் பட்டியலிடுகின்றான் பாருங்கள்.
கார் நடக்கும் படி நடக்கும்
காராளர் தம்முடைய ஏர்நடக்கும் எனில் புகழ்சால்
இயலிசை நாடகம் நடக்கும். சீர்நடக்கும், திறல் நடக்கும்,
திருவறத்தினர் செயலநடக்கும். பார் நடக்கும் படை நடக்கும்
பசி நடக்க மாட்டாதே.
ஏர் நடந்தாலே தான் இயல், இசை நாடகமும் நடக்கும். சீரும் திறனும், திரு அறத்தின் செயலும் நடக்கும்.
ஏர் நடந்தால்தான் இந்தப் பூமியும் இயங்கும். நாட்டைக் காக்கின்ற படையும் இயங்கும். ஆனால் பசிமட்டும் இல்லாதொழிந்து போகும் என்கிறான் பாரேத்தும் பாவலவனாம் கம்பன்.
அரசர்களின் முடிசூட்டு விழாக்களிலே முடியை எடுத்துக் கொடுக்கின்ற அருகதையாம் அதிஉயர் சிறப்பை உழவர்கள் பெற்றது அவர்களது தொழிற் சிறப்பினாலன்றோ.
அரசர்களையும், புலவர்களையுங் கூட, உழவர்களாக்கி மகிழ்ந்தானே வள்ளுவன், அதை நாம் மறந்துவிடலாமா.
"வில்ஏர் உழவர்" என்று அரசர்களையும், "சொல்ஏர் உழவர்" என்று புலவர்களையும் திருக்குறளிலே கண்டு திருப்தியடைகின்றோமல்லவா. இத்தகைய பெருமை பொருந்திய உழவுத் தொழிலின் சிறப்பைப் பற்றிச் சிறிது நேரம் உரையாற்றக் கிடைத்த வாய்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி. வணக்கம். §ෂ செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 24
பெரிய புராணத்தில் மநீைதிச் சோழன்
மாண்பு மிக்க நடுவர்களே மன்றத்தில் வீற்றிருக்கும் சக போட்டியாளர்களே! உங்கள் அனைவருக்கும் எண் அன்பார்ந்த வணக்கங்கள் உரித்தாகட்டும்
அநபாயச் சோழச் சக்கரவர்த்தியின் அரண்மனையில் முதன் மந்திரியாக இருந்து, உத்தம சோழ பல்லவன் என்ற உயர்பட்டம் பெற்றவரும், அருள்மொழித் தேவர் என்ற இயற்பெயர் கொண்டவருமாகிய சேக்கிழார் சுவாமிகள், பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய புராணமே பெரிய புராணமாகும்.
கந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையின், வழிநூலாகிய நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை, ஆதாரமாகக் கொண்டு, தனது நுண்மாண் நுழைபுலத்தால் ஆராய்ந்து, சிவபெருமான் எடுத்துக்கொடுத்த "உலகெலாம்" என்ற சொல்லை முதற் சொல்லாகக் கொண்டு, திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரில் சேக்கிழார் சுவாமிகள் 88 தனியடியார்களையும், 9 தொகையடியார்களையும் பெருமைப் படுத்திப் பாடிய புராணமே, இன்று பெரிய புராணம் என்று பெருமையோடு அழைக்கப்படுகின்றது.
இத் திருத்தொண்டர் புராணம், "தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற தமிழ் மூதாட்டியாம் ஒளவைப் பாட்டியாரின் அருமையான கருத்திற்கிணங்க, பெரிய புராணம் எனப் பெயர் பெற்றதாகப் பேரறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
- தன் கணவன் கோவலனைக் கள்வன் என்று குற்றஞ்சாட்டிப் பாண்டியன் நெடுஞ்செழியன் படுகொலை செய்வித்துவிடப், பதைபதைத்த மனத்தோடு பழிதுடைக்கப் புறப்பட்ட பத்தினியாம் கண்ணகி, பாண்டியனின் அரண்மனையிலே சென்று தான் பிறந்து வளர்ந்த சோழநாட்டு மன்னர்களின் நீதி நெறி பற்றி விளக்கிக் கூறுகையில்
தேரா மன்னர செப்புவது உடையேனர் எள்ளற சிறப்பினர் இமையவர் வியப்பப் புள்ளுறு புண்கணி தீர்த்தோனி
எனச் சிபிச் சோழனின் பெருமையையும் நீதிநெறியையும் கூறிவிட்டு
 
 

39 வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உதநீர் நெஞ்சுசுடத் தானிதன் அரும்பெறற் புதல்வனை ஆழியினி மடித்தோன்.
என்று மனுநீதிச் சோழனின் நீதியைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறாள்.
மனுநீதிச் சோழனின் மாண்பினைப் பற்றித் தமிழ்கூறும் நல்லுலகிற்கு முதன்முதல் எடுத்துக் கூறிப்பெருமைப் படுத்தியவர், சிலப்பதிகாரம் பாடிய சேரத்துத் துறவியாம் இளங்கோ அடிகளே யாவார்.இருப்பினும் சேக்கிழார் சுவாமிகளே இதனைத் தம் பெரியபுராணத்தில் விரிவாகப் பாடியுள்ளார்.
எனவே சேக்கிழார் சுவாமிகள் பாடிய பெரிய புராணத்தின் அடிப்படையிலே மனுநீதிச்சோழனின் மாண்பினைப் பற்றிச் சிறிது நேரம் உரையாற்ற இம் மன்றுக்கு வந்துள்ளேன்.
பிள்ளைப் பேறில்லாமற் பெரும் வேதனையுற்ற மனுநீதிச் சோழன், தன் துணைவியோடு சேர்ந்து, சற்புத்திரன் ஒருவன் தனக்கு வந்து வாய்க்க வேண்டுமென்று, வீதிவிடங்கன் என்னும் பெயர் கொண்ட சிவபெருமானைக் குறித்து வழிபாடுகள் பலவற்றையும் ஆற்றிய காரணத்தினாலே, அவர்களுக்குச் சிங்கக் குட்டி போன்ற ஆண்மகன் பிறந்தான்.
தாம் அன்றாடம் வழிபடும் வீதிவிடங்கப் பெருமானின் பெயராகிய வீதிவிடங்கன் என்ற பெயரையே மகனுக்குச் சூட்டி மகிழ்ச்சியோடு வளர்த்து வந்தனர். வளர்பிறையென, வாழை இளங்குருத்தென வளர்ந்து வந்த வீதிவிடங்கன் அளவில்லாத பல்வேறு வகையான கலைகளையும் ஐயம் திரிபறக் கற்றுத் தெளிந்தான்.
தன்னை அருமையாகப் பெற்றெடுத்த தந்தைக்கும் தாய்க்கும், நாளுக்கு நாள் மகிழ்ச்சி அதிகரிக்கும் படியான நல்லொழுக்கச் செயற்பாடுகளைச் செய்து, இளவரசன் என்னும் பட்டத்தைப் பெறுவதற்குரிய பருவத்தை அடைந்தான்.
பாலசூரியனைப் போன்று பிரகாசிக்கும் அவன், மழை முகில்களை முட்டுகின்ற மாடங்கள் நிறைந்த அரசர்கள் உலாப் போகும் வீதியிலே, அரசிளங் குமரர்கள் சூழ்ந்துவர, மிகுதியான தேர்களும் சேனைகளும் முன்பின்னாகத் தொடர்ந்து சூழ்ந்துவர, அழகிய தோற்றப் பொலிவோடு ஒருநாள் தேர் ஊர்ந்து உலாச் சென்றான்.
மனிதர்கள் யாருமே காணாத வண்ணமாக ஒரு அழகிய தலைமீற்றுப் பசுக்கன்று, ஒரு விசையினாலே செலுத்தப்படுவது போல் ஓடோடி வந்து வீதிவிடங்கனின் தேர்ச்சக்கரத்திலே வீழ்ந்து இறந்துபோயிற்று.
ஜூ செந்தமிழும் நாப்பழக்கம். আঁঠু

Page 25
Al-O இரத்த வெள்ளத்திலே இறந்து கிடக்கின்ற தன் கண்றைப் பார்த்த தாய்ப்பசு, தாங்க முடியாத சோகத்தினாலே அங்கும் இங்கும் கழன்றோடி, வெம்பி, அழுது, மனமுருகி உடல் நடுங்கி விழ்ந்தது.
கொடுரமான அக்காட்சியைப் பார்த்த வீதிவிடங்கன் மிகவும் துயரடைந்து "எண் செய்வேன், எண் செய்வேன்" என்று சொல் தடுமாறித் தேரினின்றும் இறங்கி மயங்கி வீழ்ந்தான்.
நினைவு தெளிந்த அவன் கன்றை நினைத்துக் கதறி அழுதுகொண்டிருக்கின்ற தாய்ப் பசுவைப் பார்த்தான், இரத்த வெள்ளத்திலே கிடக்கும் கன்றைப் பார்த்தான். மனங்கலங்கிப் பெருமூச்சு விட்டான்.
இவ்வுலகின் உயிர்களையெல்லாம் ஒருகுறையும் வராமல் பாதுகாக்கும் மனு என்னும் எனது தந்தையான அரசனுக்கு, உலகிலே பெரிய, மிகக் கொடிய பழிவந்து சூழும்படியாக நானொருவன் மகனாக வந்து பிறந்து விட்டேனே என்று மனம் பதைத்து, அந்தப் பழியை மாற்றுவதற்காகப் பிராயச்சித்தம் தேடிப் பிராமணர்களை நாடிச் சென்றான்.
தனிநயிர்க் கணிற வியத் தளர்ந்த ஆத் தரியா தாகி முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணிர் வார மனிதனுயிர் காக்குஞ் செங்கோலி மனுவினர் பொற்கோயில் வாயிற் பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது.
ஆராய்ச்சி மணியின் ஒலி கேட்ட மனுநீதிச் சோழன் அரியணையில் இருந்து இறங்கி அவ்விடத்திற்கு ஓடோடி வந்தான்.
ஆராய்ச்சி மணியை அடித்தது பசு என்பதைக் கண்டு கொண்ட மனுவேந்தன் வருந்திய பசுவை நோக்கிப் பின் "என் இதற்கு உற்ற தென்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க அமைச்சர்களிலே முதிர்ந்த கேள்வி ஞானம் கொண்ட அமைச்சன்
வளவு நின்புதல்வனி ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல் ஏறி அளவில் தேர்த் தானைசூழ அரசுலாந் தெருவிற் போங்கால் இணையஆனி கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்ததாகத் தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தண்மை என்றான்.
அதனைக் கேட்ட மன்னன் தாய்ப்பசு அடைந்த துயரமெல்லாம் கொடிய விஷமாக மாறித் தனது தலையிலே ஏறிக் கொண்டால் எப்படி இருக்குமோ அந்நிலை அடைந்தான்.
வேதனை உள்ளத்திலே மிகுந்துவர "என்னாட்சி வெகு சிறப்பாக இருக்கின்றது" என்று தன்னாட்சியைத் தானே பழிப்பான். வேதனையைத் தாங்க முடியாதவனாக மயங்குவான். தெளிவான். தன் இளங்கன்றைக் காணாது அழுதுகொண்டு நிற்கும் தாய்ப்பகவின் முகம்கண்டு, அரசன் அடைந்த துன்பம் அளவிட்டுச் சொல்லுதற்கு அரியதே ஆகும்.
"என்ன செய்தால் இப்பகவின் துன்பம் தீரும்" என்று கேட்ட மன்னனுக்கு மந்திரிகளோ பசுவதை செய்தார்க்குப் பிராயச் சித்தம் உண்டு. * அகளங்கன். *

4. வேதங்களை ஒதுகின்ற பிராமணர்கள் விதித்த விதிமுறையில் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்."
"எண் மகன் செய்த பாவத்தைப் போக்குவது தாய்ப்பகவின் துன்பத்தைப் போக்குவதாகுமா. பாதிக்கப்பட்டது தாய்ப்பசு. தன் கன்றைப் பறிகொடுத்துப் பதறி அழுதுகொண்டு நிற்பது தாய்ப்பக. ஆராய்ச்சி மணியை அடித்து அரசின் நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பது தாய்ப்பசு. ஆனால் நீங்களோ பாதிப்பை ஏற்படுத்திய மகனுக்குப் பரிந்துரைக்கின்றீர்கள். பாவத்துக்குப் பிராயச்சித்தமே வழி என்கிறீர்கள். ஒரு மன்னனின் கடமைகள் என்னென்ன வென்று தெரியுமா உங்களுக்கு.
மாநிலங் காவலனாவான் மண்ணுயிர் காக்குங் காலை தானதனுக் கிடையூறு தண்னால் தன் பரிசனத்தால் இனமித பகைத் திறத்தாலி கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்தம் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ.
என அறமுரைக்கின்றான் மன்னன். "எண் மகன் செய்த கொலைக்கு நான் பிராயச்சித்தம் செய்து விட்டு அந்நியன் ஓர் உயிர் கொன்றால், அவனைக் கொல்வேனானால் "தொண்மனுநூல் தொடை மனுவால் துடைப்புண்டது" எனும் பழிமொழியானது எனக்குக் கிடைக்குமே. என்கின்றான்.
"வேதங்களில் இதுவே சொல்லப்பட்டிருக்கின்றது." என்று மந்திரிகள் மறுத்துக்கூற மன்னன் அதற்குச் செவிசாய்க்காதவனாகிப் புதுநீதி வகுக்கிறான்.
"ஆற்றமுடியாத சோகத்திலே அழுது புலம்பிக் கொண்டு நிற்கும் இத்தாய்ப் பசுவின் சோகத்தை என்னால் போக்கவே முடியாது. அதனால் இப்பசு அடைந்த அதே துயரத்தை நானும் அடைவதே ஒரே வழியாகும். என்று கூறிப் பசுக்கன்று கொல்லப்பட்ட அதே இடத்தில் தன் மைந்தனையும் கிடத்தி அவனது மார்பின் மேல் தேரை ஊர்ந்து கொல்லும்படி ஒரு மந்திரிக்குக் கட்டளையிட்டான்.
அரசிளங் குமரனைக் கொல்லுகின்ற பாவத்திற்கு அஞ்சியும், அரச ஆணைக்குக் கட்டுப்படாத ராஜத்துரோகப் பழிக்கு அஞ்சியும், அவ்வமைச்சன் தன் உடைவாளால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான். தன் பரம்பரைக்குரிய ஒரே வாரிசான மைந்தனை, தாங்கள் தவமிருந்து பெற்றறெடுத்த தனிப்புதல்வனைத் தம்மைத் தினமும் மகிழ்ச்சியிலே திளைக்கவைத்த அருமந்த புத்திரனை வீதியிலே கிடத்தி அவனது மார்பின் மேலே தானே தேரூர்ந்து கொன்றான் மனுநீதிச் சோழன்.
துன்பத்தைப் போக்க முடியாது போனால், அதே துன்பத்தைத் தானும் அடைவதே உயர்ந்த நீதியாகும் என்று தன்மைந்தன் மேலே தேரூர்ந்த
* செந்தமிழும் நாப்பழக்கம்.*

Page 26
42 தணிஅளி வெண்குடை வேந்தனர்
செயல்கண்டு தரியாது மண்ணவர் கண்மழை பெழித்தார்
வானவர் பூமழை பொழிந்தார்.
தன் அரும்பெறற் புதல்வனிலும் தன் அரசரீதியே அரிதும் காப்பாற்றப்படவேண்டியது என்ற கொள்கை கொண்ட மனுநீதிச் சோழனின் புகழ் இம்மாநிலத்தில் என்றும் வாழட்டும்.
வாழ்க மனுநீதிச் சோழன் புகழ்
- வாய்ப்புக்கு நன்றி.
வணக்கம்
"எணர்மகனர்செகம் பாதகத்துக்கு
இருந்தவங்கனர் செயஇசைத்தே அர்ைனரியனர்ஒர் உயிர்கொனர்றால்
அவனைக் கொல்வேனரானால் தொர்ைமனுருவி தொடை மனுவால்
துடைப்புணர்டது எனும் வார்த்தை உமர்ைனுலகில் பெறமொழிந்தர்
மந்தரிகர்ை வழக்" கெனர்றார்ை
(பெரிய புராணம்)
* அகளங்கன். *

அறமறிந்தோராய் அவையத்து வீற்றிருக்கும் அறிஞர்களே! பெரியோர்களே! அன்பார்ந்த தமிழிலக்கிய இரசிகர்களே! உங்கள் அனைவருக்கும் எண் அறம்சார்ந்த வணக்கங்கள்.
விலங்குகளோடு விலங்குகளாகக் காடுகளிலே, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த மனிதன், தன் பகுத்தறிவினாலே மானுடம் என்ற பண்பைக் கட்டி எழுப்பி, அறத்தின் வழிப்பட்ட வாழ்க்கையிலே ஒரு முழுமையைக்
56060.
இலக்கியம், மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றது என்ற உலகப் பொதுக் கருத்திற்கேற்ப அறக் கருத்துக்களே, இலக்கியமாகிய ஊடகத்தின் உயிர் நாடியாக இருந்து, மாக்களை மக்களாக்கி இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
எந்த மொழி இலக்கியத்திலும், அந்த மொழி பேகம் மக்களின் உலகியல் வாழ்க்கையையும், ஆத்மீக வாழ்க்கையையும் ஒருங்கே செம்மைப் படுத்த உறுதுணையாக அமைந்திருப்பவை அறக்கருத்துக்களே என்பது உலகப்பெரு அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.
தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையிலே, இலக்கிய வராலாற்றுக் காலப்பகுப்பிலே 300 ஆண்டு காலத்தை அறநெறிக் காலம் என்றே அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். கி. பி 4, 5, 6 நூற்றாண்டுக் காலப்பகுதி அறநெறிக் காலம் என்றே அழைக்கப்படுகின்றது.
எல்லாக் கருத்துக்களையும் விட அறக்கருத்துக்களே, இக்கால இலக்கியங்களிலே அதிகம் அரசோச்சி இருக்கின்றன என்ற காரணத்தினாலேயே இக் காலம் அறநெறிக் காலம் என அழைக்கப்படுகின்றது.
உலகிலே அதி கூடிய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்ட ஒரே பொதுநூல் என்ற சிறப்புப் பெற்ற திருக்குறள் இக்காலத்து நூலேயாகும். இது அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இதன் முதல் 38 அதிகாரங்களிலும் அறமே பேசப்படுகின்றது.
- திருக்குறளோடு சேர்ந்து, அறக் கருத்துக்கள் அதிகம் பேசப்பட்டுள்ள நாலடியார் என்னும் நூலும் இக்காலத்து நூலேயாகும்.
இக்காலத்து எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே, நான்மணிக் கடிகை, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்ச மூலம், ஆசாரக் கோவை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, முதலான பதினொரு நூல்கள் அறக்கருத்துக்களைப் பெரிதும் வலியுறுத்துகின்றன.

Page 27
44 மனித வாழ்க்கைக்கு உயிராகவும், மனித வாழ்க்கையை உயர்வாக்கவும் அறமே உறுதுணையாகின்றது. அறம் என்ற சொல்லுக்குள்ளே மானிடத்தின் உயர் பண்புகள் அனைத்தையும் அடக்கி விடலாம்.
தனித்தனியே இவை, இவைதான் அறம் எனப் பட்டியலிட்டுக் கூறுவது இங்கே அதிகம் பயன்படாது என்றாலும் ஒன்றிரண்டைக் கூறாமலும் இருக்க முடியாது.
ஈதல் அறம் என்றார் ஒளவையார். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்றார் வள்ளுவர். - பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை விழையாமை, கொல்லாமை, வருத்தாமை, கோபங் கொள்ளாமை, குருநிந்தை செய்யாமை, முதலாகச் சொல்லப்படுகின்ற உயர் பண்புகளை அறம் என்று கொள்ளலாம்.
தமிழ் மூதாட்டி ஒளவையார் 'அ'கரத்தைத் தமிழ்ச் சிறார்களுக்கு அறிமுகப் படுத்தும் விதத்தைப் பார்த்து இன்று அகிலமே வியக்கின்றது. "அறஞ் செய விரும்பு என்ற அவரது ஆத்திசூடி வாக்கியம் அறத்தோடியைந்த வாழ்க்கைக்கல்லவா சிறுவர்களைத் தயார் செய்கின்றது.
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் நூல்கள் தமிழ் இலக்கியத்தில், அறக் கருத்துக்களுக்கு ஆணிவேராகவே அமைந்திருக்கின்றன என்று அறுதியிட்டுக் கூறலாம்.
"அறத்தால் வருவதே இன்பம் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு; உலக இன்பமானது அறத்தின் வழியிலே வருவதேயாகும் என்று உலகத்தாரை அறவழிக்கு அறை கூவி அழைக்கின்றதல்லவா!
இரண்டாயிரம் ஆண்டுகள் வரையில் பழமை வாய்ந்த சங்க இலக்கியத்திலே, அறக்கருத்துக்களையும் ஆங்காங்கே காணலாம்.
அறக்கருத்துக்களை நேரடியாக வலியுறுத்துவதற்காகத் தமிழ் இலக்கியத்திலே தனி நூல்கள் பல வந்த போதும், பெருநூல்களான காவியங்களும், சிற்றிலக்கியங்களுங் கூட அறக்கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் பசுமரத்தாணிகளாய்ப் பதியச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் முதன் முதல் எழுந்த காவியம் என்று போற்றப்படும் சிலப்பதிகாரத்தை, இளங்கோ அடிகள் பாடும் போது, "அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்தூட்டும்" என்னும் மூன்று அறக்கருத்துக்களையும் முதன்மைப் படுத்திப் பாடுகின்றார்.
* அகளங்கன். *

45 "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற சங்க இலக்கியமாம் புறநானூற்றின் அறக்கருத்திற்கேற்ப சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை, பசிப்பிணி தீர்ப்பதையே தன் அறத்தொண்டாய்க் கொண்டு, அமுத சுரபி ஏந்தி வறியவர்களைத் தேடி நடந்தாள்.
கம்பனின் இராமாயணமாம் இதிகாசத்திலே, அறம்பற்றிப் பல்வேறு இடங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது.
இராமனின் உடம்பிலே தர்மவாசனை வீசுவதாகச் சொல்லுவான் கம்பன், வாலியோ, இராமனைப் பார்த்து, "எண் மார்பை ஊடுருவிச் செல்கின்ற உன் அம்புதான் அறம்" என்று வியந்து பேகவான்.
இராமனாலே கொல்லப்படுகின்ற வாலியும், இராவணனும், பிறனில் விழைந்து அறந்துறந்த பேதையர்களாகப் பெரிதும் இகழப்படுகின்றார்கள்.
முதல்நாட் போரில் ஆயுதங்கள் அனைத்தையும் இழந்து, ஆலம் விழுது போன்று இருபது கைகளையும் தொங்கப்போட்டுக் கொண்டு, அவமானத்தால் தலை தாழ்த்தி, நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நிற்கின்ற இராவணனைப் பார்த்து, "அறம் கடந்தவர் செயல் இது" என்பான் கம்பன்.
அறத்தின் நாயகனாக அவதரித்த இராமனின் ஏவலனாய், இலங்கைக்கு வந்த அனுமானைப் பார்த்து, சாபம் நீங்கிய இலங்கா தேவி "அறம் வெல்லும் பாவம் தோர்க்கும் என்று அறத்தின் பெருமையை எடுத்துக் கூறுகின்றாள்.
அழியாப் புகழ் படைத்த பெரும் இதிகாசமாகிய மகாபாரதம் அறத்தையே தலைமைப் பண்பாகக் கொண்டு எழுந்திருக்கின்றது. மகாகவி பாரதியார் மகாபாரதத்தின் மையக்கருத்தை ஒரே வாக்கியத்தில் "தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடிக்கும் வெல்லும் என்று வலியுறுத்துகிறார். தர்மம் என்பது அறம் என்ற பொருளையே இங்கு தருகின்றது. சத்தியம் தவறாமை என்ற ஒரு அறக்கருத்தை உலகோர் நெஞ்சங்களில் எல்லாம் ஆழப்பதிய வைக்க என்றன்றோ அரிச்சந்திரன் கதை தோன்றியது.
" பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
நிதி இழந்தனம் இனிநமக்கென இருக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்."
என்று சத்தியத்தை யாவற்றிலும் மேலாக மதித்த அரிச்சந்திரனின் கதையைப் படித்த மோகனதாஸ் கரம்சந்காந்தி, மகாத்மா காந்தியானார் என்றால், இலக்கியத்தில் சொல்லப்பட்ட அறக் கருத்து, இலட்சிய மனிதர்களை உருவாக்குவதில் தவறிவிடவில்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும்.
தமிழ் இலக்கியத்திலும் அரிச்சந்திரன் கதையைப் படித்து சத்தியமாகிய அறத்தைக் கடைபிடித்தோரின் சரித்திரங்கள் பலவுண்டு.
§ෂ செந்தமிழும் நாப்பழக்கம். খ্ৰীঃ

Page 28
46 சூதாட்டத்தினாலே விளையும் தீமையை விளக்கி எழுந்த நளவெண்பாப் பாடல்கள், அறமலாத செயலினாலே பெருமன்னன் அடைந்த பெருந் துண்பத்தையல்லவா காட்டுகின்றது.
தமிழ் இலக்கியத்திலே நற்காரியங்கள் அனைத்தையும் அறம் என்றே அழைத்தனர். இல்லறம், துறவறம், சொல்லறம், வில்லறம், எனச் செம்மையானவைகள் எல்லாவற்றையும் அறத்திற்குள்ளே அடக்கினார்கள்.
ஆண்டவனைக் கூட, அறக்கடல், என்றும், அற ஆழி அந்தணன் என்றும், தர்ம நாயகன் என்றும், அறத்தின் பெயரால் அழைத்தனர். அறக்கருத்துக்கள்; வாழ்க்கை நிலையாமைக் கருத்துக்கள் ஆகும் என்று சிலர் அவற்றை இலக்கியங்களிலே இருந்து எடுத்தெறியப்பார்த்தாலும், அல்லது எடுத்துக் காட்டாது விடப்பார்த்தாலும், அறம் இன்றித் தமிழ் இலக்கியம் இல்லை என்று அடித்துச் சொல்லாம்.
வாழ்க்கையை, உயர்ந்த கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு அறக்கருத்துக்கள் முயல்வதனால் அவற்றைச் சட்டம் போடுகிறதென்று சிலர் சத்தம் போடுகின்றனர்.
ஆனால் அற இலக்கியங்கள் வாழ்க்கைக்கு வரம்புகளாக அமைந்து மானிடப் பயிரை வளர்ப்பதற்குப் பயன் படுகின்றன என்பதை அவர்கள் அறியவில்லை.
காட்டாற்று வெள்ளமாய், தங்கு தடையின்றி, ஒடும் மனித மனக் குதிரையின் கடிவாளமாக அமைந்து, ஒடும் மனக்குதிரையிலே, மானிடப் பண்புகள் சவாரி செய்வதற்கு, அறக்கருத்துக்களே வழி சமைத்துக் கொடுக்கின்றன என்பது எவராலும் மறுக்க முடியாத தொன்றாகும்.
தமிழ் இலக்கியத்திலே சங்க காலத் தனிப் பாடல்கள் முதல் தற்காலத் தனிப்பாடல்கள் வரையில், சங்கமருவிய காலத்துக் காவியங்கள் முதல் தற்காலத்து நாவல்கள் வரையில், பல்லவர் காலத்துப் பக்தி இலக்கியங்கள் முதல் தற்காலத்துக் காதல் இலக்கியங்கள் வரையில், அறக்கருத்துக்கள் ஆங்காங்கே உயர்ந்து நின்று மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அமைந்திருக்கின்றன என்பது தமிழ் இலக்கியத்தைத் துறைபோகக் கற்றவர்கள் கண்டறிந்து ஏற்றுக்கொண்ட பொதுமுடிவாகும்.
வாழ்க தமிழ் இலக்கியம். வளர்க அற ஒழுக்கம்
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
* அகளங்கன். *
 

நால்வகை நிலங்கள்
அவைத்தலைவர் அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எண் அன்பார்ந்த வணக்கங்கள் உரியதாகட்டும்.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி" என்று போற்றிப் புகழப்படுகின்ற தமிழர்களின் வாழ்க்கை, என்றும் போற்றிப் புகழப்படத்தக்கதே.
இயற்கையோடு ஒன்றி இன்ப வாழ்வு கண்ட தமிழர்கள், தாம் வாழ்ந்த நிலத்தை, அதன் தன்மைக்கேற்ப நான்காகப் பிரித்தார்கள்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த செந்தமிழ்ப்புலவர்கள், பிரித்த, நால்வகை நிலங்கள் பற்றியும், அந்நால்வகை நிலங்களிற்குமுரிய ஒழுக்கங்கள் பற்றியும், சிறிது நேரம் உரையாற்றுவதிலே சிறியேனாகிய எண்மனம் சிறப்புற்று மகிழ்வுறுகின்றது.
தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பை அவதானித்து, அந் நிலப்பரப்பிற்குள்ளே . எந்தமரம், அல்லது எந்தக் கொடி சிறப்பாகவோ, மிகுதியாகவோ காணப்பட்டதோ, அதன் பெயராலே அந்நிலத்தை அழைத்துக் கொண்டனர் தமிழர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை மலரும் சிற்ப்பும், பெருமையும் பொருந்திய, குறிஞ்சி மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்த, மலையும், மலை சார்ந்த இடமும் பொருந்திய நிலத்தைக் குறிஞ்சி நிலம் என அழைத்தனர்.
முல்லைக் கொடிகள் படர்ந்து பரவி, அழகழகாய்ப் பூப்பூத்துப் பொலிந்திருக்கும், காடும், காடு சார்ந்த இடமும் பொருந்திய நிலத்தை முல்லை நிலம் என்று எல்லை இல்லா மகிழ்ச்சியுடன் சொல்லி அழைத்தனர் எம் முன்னோர்கள்.
மந்தியினம் குந்தி அன்பாய்க் கொஞ்சி விளையாடி மகிழும் மருதம் என்னும் மரங்கள் நிறைந்துள்ள வயலும், வயல் சார்ந்த வளம் மிக்க இடமும் பொருந்திய நிலத்தை மருத நிலம் என்று மகிழ்வோடு பெயரிட்டு அழைத்தனர் மாண்புமிகு தமிழர்.
பெண்களின் கண்கள் போல் அழகாகப் பூத்திருக்கும் நெய்தற் கொடிகள் நிரம்பிய, கடலும் கடல் சார்ந்த இடமும் பொருந்திய நிலத்தை, நெய்தல் நிலம் என்று நேரிதாய் அழைத்தனர் தமிழர்.

Page 29
48 நால்வகை நிலங்களிலும் வாழ்ந்த தமிழ் மக்களின் முக்கியமான தொழில்களும் நான்கு வகையாகவே அமைந்திருந்தன.
தொழிலின் அடிப்படையிலான சாதி ஏற்றத் தாழ்வு என்று சொல்லப் படுகின்ற வருணப் பாகுபாடாகிய கொடுநோய், தமிழகத்தில் வந்து தொற்று நோயாகப் பரவுவதற்கு முன்பு "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனத் தொழிற் சமத்துவம் பேசிப் பெருமைகண்டு வாழ்ந்தனர் தமிழர்.
குறிஞ்சியிலே வாழ்ந்தவர்கள், அந்நிலத்தின் பெயரால் குறவர்கள் என்று அழைக்கப்பட்டாலும், அவர்கள் குறையுள்ளவர்களாகத் , தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படவில்லை, ஒதுக்கப்படவுமில்லை.
இந்நிலத்தில் வாழ்ந்த ஆண்கள் வேட்டையாடுதலையும், தினைப்பயிர் செய்தலையும் தொழிலாகக் கொள்ள, அந்நிலத்துப் பெண்களாகிய குறத்தியர் திணைப்புனம் காத்து ஆடவர்க்கு உறுதுணையாய் விளங்கினர். முல்லை நிலத்து ஆடவர்களாகிய ஆயர்கள், மாடுகளை வளர்த்தலைத் தம் முக்கிய தொழிலாகக் கொள்ள, அவர் தம் மகளிராம் ஆய்ச்சியர்கள், மோர், நெய் முதலியனவற்றை விற்றுப் பொருளிட்டினர்.
மருத நிலத்து ஆண்கள் வேளாண்மை என்னும் பயிர்த் தொழிலைச் செய்ய அவர்தம் இல்லக் கிழத்தியர் அத்தொழிலுக்கு உறுதுணையாக இருந்தனர்.
நெய்தல் நிலத்து ஆடவர்கள் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொள்ள அவர்தம் மனைவியர், கருவாடு ஆகுவதற்காகக் காயப்போடப்பட்ட மீன்களைக் காவல் காத்துத் துணைபுரிந்தனர்.
இவ்வாறாக வளம் பொருந்திய நான்கு நிலத்து மக்களும் தங்கள் வாழ்க்கையை, மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் கழித்தனர்.
குறிஞ்சி நிலத்து மக்கள், குமரக் கடவுளம் முருகக் கடவுளைத், தங்கள் நிலத்துக்குத் தெய்வமாகப் போற்றி வழிபட்டனர்.
முல்லை நிலத்து மக்கள் மாயவனாம் மகாவிஷ்ணு மூர்த்தியைத் தம் நிலத்துத் தெய்வமாகப் போற்றி வழிபட்டனர்.
மருத நிலத்து மக்கள் மழைக்கு அதிபதியாகிய தேவேந்திரனையும், நெய்தல் நிலத்து மக்கள் கடலுக்கு அதிபதியாகிய வருணனையும் தங்கள் தங்கள் நிலங்களுக்குரிய தெய்வங்களாகப் போற்றி வழிபட்டுப் பயன் பெற்றனர். தமிழ் மொழிக்குச் சிறப்பாக இலக்கணஞ் செய்த தொல்காப்பியர், தாம் இயற்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலிலே, ஏனைய மொழிகள் எவற்றுக்கும் இல்லாத வகையிலே, தமிழ் மொழிக்கு மட்டுமன்றித் தமிழ் மொழியைப் பேசுகின்ற தமிழர்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தார்.
* அகளங்கன். கி

49 அந்த ஒப்புயர்வு இல்லாத பொருள் இலக்கணத்திலே, தமிழர் வாழ்க்கை நெறியினை அகத்திணை, புறத்திணை என இரண்டாகப் பாகுபடுத்தினார்.
அந்த வகையில் நால்வகை நிலங்களிற்குமுரிய நால்வகை அக ஒழுக்கங்களையும், நால்வகைப் புற ஒழுக்கங்களையும் வகுத்துக் காட்டினார். எந்த நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு, எந்த அக ஒழுக்கம் அதிகம் பொருத்தமோ, அந்த அக ஒழுக்கத்தையே அந்த நிலத்திற்குரிய அக ஒழுக்கமாகக் கூறினார்.
திணைப்புனம் காக்கும் குறிஞ்சி நிலப் பெண்களை வேட்டையின் பொருட்டு வரும் ஆடவர்கள் கண்டு, காதலித்துச் சேரும் ஒழுக்கம் அந்நிலத்துக்குரிய அக ஒழுக்கமாகப் புணர்தல் என்னும் பெயர் பெற்றது.
மந்தைகளை மேய்க்கச் சென்ற கணவன் திரும்பி வரும் வரை, அவனையே நினைத்துக் காத்திருக்கும் பெண்களின் அக ஒழுக்கம், முல்லைநில மக்களின் இருத்தல் ஒழுக்கம் எனப் பெயர் பெற்றது.
இராப் பொழுதுகளை வீட்டில் இராப்பொழுதுகளாக்கி கலை முதலிய களியாட்டங்களிலே ஈடுபட்டு. பொது மகளிரிடம் சென்று திரும்பும் தங்கள் கணவர்கள் மேல் மருத நிலத்துப் பெண்கள் கொண்ட பொய்க் கோபமாகிய ஊடல் ஒழுக்கம் மருத நிலத்தின் அக ஒழுக்கமாயிற்று.
வலை வீசி மீன் பிடிக்கக், கட்டுமரம் ஏறிக் கடல் நடுவே சென்ற கணவன் ஆபத்தின்றிக் கரைசேர வேண்டுமே என்று, நெய்தல் நிலப் பெண்கள் கடல்த் தெய்வத்தை வழிபட்டுக் கரையிலே இரங்கிக் காத்திருக்கின்ற இரங்கலாகிய ஒழுக்கம் நெய்தல் நில அக ஒழுக்கமாக அழைக்கப்பட்டது.
நால்வகை நிலங்களைச் சேர்ந்த ஆடவர்களும் யுத்தத்திற்குச்
செல்லும் பொழுது எந்தெந்தப் பூவைச் சூடிச் செல்கின்றார்களோ, அந்தந்தப் பூக்களின் பெயராலே அந்தந்த நிலங்களுக்குரிய புற ஒழுக்கங்களும் அழைக்கப்பட்டன.
குறிஞ்சி நில மக்கள் பிற நிலத்து மந்தைகளைக் கவரச் செல்லும் போது வெட்சிப் பூவைச் சூடிச் சென்றதனால், குறிஞ்சி நிலத்துக்குரிய புற ஒழுக்கம் வெட்சி எனப்பட்டது.
முல்லை நில மக்கள் தம் பசுக்கூட்டங்களைக் கவர வரும் பகைவர்களை அடக்குவதற்காக யுத்தத்திற்குச் செல்லும் போது வஞ்சிப் பூவைச் சூடிச் சென்றதனால் அவர்களின் புற ஒழுக்கம் வஞ்சி எனப்பட்டது. மருத நிலத்து மக்கள் தாம் அமைத்த செயற்கை அரணுக்குள் இருந்து போர் நிகழ்த்தும் காலத்திலே, உழிஞைப் பூவைச் சூடிச் சென்றதனால் அந்நிலப் புற ஒழுக்கம் உழிஞை எனப்பட்டது.
தத்தம் வீரத்தை உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கோடு நெய்தல் நிலத்தில் இடம் குறித்துப் போர்செய்த மறவர்கள் தும்பைப் பூவச்ை சூடிச் சென்றதனால் நெய்தல் நிலப் புற ஒழுக்கம் தும்பை எனப் பெயர் பெற்றது.
செந்தமிழும் நாப்பழக்கம். ঋ;

Page 30
50 இந்நால் வகை நிலங்களே தமிழகத்தின் நிரந்தரமான நிலங்களாக விளங்கிய காரணத்தால் நானிலம் என்று தமது நிலத்தைத் தமிழர்கள் பெருமையோடு அழைத்தனர்.
இருப்பினும் முல்லை. குறிஞ்சி ஆகிய நிலங்கள் சிலகாலங்களில் தமது நல்லியல்புகளை இழந்து வளமற்ற வறண்ட நிலமாகக் காணப்பட்டதால் அந்நிலத்தைப் பாலை நிலம் என்று பண்டைத் தமிழர் அழைத்தனர். முல்லையும் குறிஞசியும் முறைமையினி திரிந்து நலிவியல்பு இழந்த நடுங்குதுயர் உறுத்து பாலை சீனர்யதோர் படிவம் கொள்ளுர்"
எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், தமிழகத்திலே பாலை என்று சொல்லுகின்ற வடிவத்தை முல்லையும் குறிஞ்சியும் பெறும் என்று விளக்கினார்.
இந்நிலத்தில் வாழ்ந்தவர்களின் அக ஒழுக்கம் பிரிதல் என்றும், புற ஒழுக்கம் வாகை என்றும் வகுத்தனர். பாலை மரங்கள் செறிந்திருந்ததனால் பாலை எனப் பெயர் பெற்ற இந்நிலத்து மக்கள் ஆறலைத்திருடர்களாய் இருந்தனர் என்பர்.
கொற்றவையை, இந்நிலத்து மக்களின் தெய்வம் எனக் கூறினர். பெரும் வீரர்களாகத் திகழ்ந்த பாலை நிலத்து மக்கள் போர்களிலே வெற்றியே பெற்றதனால், அவர்கள் போருக்குச் செல்லும்போது சூடிச் செல்லும் வாகைப் பூவே வெற்றிக்குரியதாகக் கருதப்பட்டு யார் வெற்றி பெற்றாலும் வெற்றிவாகை சூடினார் என்ற மரபுத் தொடரும் உதயமாயிற்று.
இவ்விதமாகப் பாரம்பரியப் பெருமைமிக்க, தமிழ்ச் சான்றோரால் வகுக்கப்பட்ட நால்வகை நிலங்கள் பற்றிச் சிறிது நேரம் பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பொன்னான வாய்ப்பாகக் கருதி விடை பெறுகின்றேன்.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
* அகளங்கன். *


Page 31

曼、
鬣 ܓ݁ܰܢܳ s