கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சேரர் வழியில் வீரர் காவியம்

Page 1


Page 2


Page 3
முதற் பதிப்பு:
விலை ரூபா
பதிப்புரிமை;
பதிப்பாசிரியர்:
அச்சிட்டோர்.
ஆடி 1982 -
5.00
பதிப்பாசிரியர்க்கே
செ. சண்முகநாதன்.
வஸ்தியன் அச்சகம் யாழ்ப்பாணம்.

இலக்கிய உலகில்.
என்று.
தத்தித் தத்தித்
தளர்நடை பயில்கையில்
பற்றிப் பற்றிப் பரிவொடு அணைத்து, முத்த மழையினில் முழுமணம் நெகிழ்த்தி, 'கற்றனே போலும் நம் கவின் தமிழ் இலக்கியம்?
எனயுணர்ந்து. இலக்கியம் எழுது என் இதழில். சிரித்திரன் - இதழில்: தமிழர் இதயமாற் தாமரை இதழில்.
என்றெண் ஊக்ெ
உருவாக்கி வழிகாட்டும், சிரித்திரன் ஆசிரியர் திருவளர் சிவஞான சுந்தரம் அவர்கட்கும், சிரித்திரன் சஞ்சிகைக்கும்
இக்குறுங் காவியம்
& KOfficisorit,

Page 4
பதிப்பாசிரியர் உரை
அகளங்கன் என்ற புனைபெயரில் புகுந்து இலக்கிய இரசிகர் கூட்டமொன்றைத் தனக்கென உருவாக்கிக் கொண்டவர் நண்பர் நா. தர்மராஜா,
அவர் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்குங் காலத்தில் அமரேந்திரா என்ற அரச நாடகத்தைப் படைத்து தன்னை எம் முன் அடையாளங் காட்டியவர் கழகத்தின் உள் மட்டுமன்றி, தனது ஆக்கங்களினுல் பலரது உள்ளங்களையும் கவர்ந்தவர்
தனது புனைபெயருக் கேற்பவே களங்கம் இல்லாதவ னுக சொல்லையும், செயலையும் ஒன்ரு கவே மதித்து வாழ்பவர். பழந் தமிழ் இலககியங்களில் அவருக்கு உள்ள ஆர்வமும், ஆளுமை யும், அவரது படைப்புக்களில் முத்திரை பதித்துச் செல்வதை அவதானிக்கலாம்.
சிலப்பதிகாரத்தின், புகார்க் காண்டத்தில் மாதவியின் காதலையும், மதுரைக் காண்டத்தில் கண்ணகியின் கற்பையும், தெரிந்து கொள்வதோடு சிலப்பதிகாரத்தினைச் சுவைப்பவர்களில் அனேகர் திருப்தியடைந்து விடுகின்றனர்.
வஞ்சிக் காண்டத்தில் வரும் சேரன் செங்குட்டுவனின் வீரத்தையும் இலக்கிய இரசிகர்கள் சுவைக்க வேண்டும் என்ற ஆவலில் இக்குறுங்காவியத்தை இலகு தமிழில் இயற்றியுள்ளார் கவிஞர்,
இக்குறுங் காவியத்தை உங்கள் முன், பதிப்பித்து வெளி யிடுவதில் ஆத்ம திருப்தியை ஒரளவு அடைய முடிகிறது. இத னைப் பதிபபிக்க முழுமையாக ஆதரவு தந்த நண்பனுக்கும், பதிப்பிப்பதில் உதவ செய்த அனைவருக்கும் என் நன்றிகள,
உங்கள் கீரிமலை வீதி, செ. சண்முகநாதன், பண்டத்தரிப்பு.
 
 

'தாரணி போற்றுந் தமிழ்மொழியே == 2 -5ট্য
தாளணி செய்வேன் கவிவழியே."
என்னுரை
சிலப்பதிகாரத்தின் இறுதிக் காண்ட மான வஞ்சிக்காண்டத்தைப் படித்தபோது, சேரன் செங்குட்டுவனின் வீரமும் தன் மான உணர்வும், என்னைப் பெரிதுங் கவர்ந்தன.
பொதுவாக, சிலப்பதிகாரம் வாசிப்போர், கண்ணகி மதுரையை எரித்ததோடு நிறுத்தி விடுவது வழக்கம். அதனுல் வஞ்சிக் காண்டத்தை இலகு தமிழில் கவிதையாக, ஒரு குறுங் காவியமாக ஆக்கி எல்லோரையும் படிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் என்ருே ஏற்பட்டது அது கவிதை யாகி இன்றுதான் புத்தக வடிவில் வெளிவருகிறது.
இந்த நேரத்தில் இவர்களை நான் நினைவு கூராமல் இருக்க முடியாது. நான் இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்த ஆரம்ப காலத்தில் எனது பல கட்டுரைகள், கவிகைகள், சிறுககைகளை பிரசுரித்து எனக்கு பெரிதும் ஊக்கங்கொடுத்த 'சிரித்திரன்' சஞ்சிகையும், 'ஈழநாடு’ பத்திரிகையும் என்றும் என் நன்றிக்கு முந்துகின்றன.
மற்றும் வீரகேசரி பத்திரிகை, சுடர், சோதிடமலர் கிருதயுகம் ஆகிய சஞ்சிகைகள் எனது ஆக்கங்களை அவ்வப்போது வெளி யிட்டமைக்காக அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இக்குறுங்காவியத்தை வெளியிடுவதில் எனக்கு பலவகை யிலும் உதவி செய்யும் என் உடன்பிறந்த சகோதரர்கள், உடன்பிறவாச் சகோதரர்களான, திரு. ச. மோகனகாந்திராசா, திரு. க. குமாரகுலசிங்கம் ஆகியோர்க்கு நான் என்றும் நன்றிக் இடன் உடையேன்.
அட்டைப்படத்தை அழகுற வரைந்த தம்பி திரு. இ விக் னேஸ்வரனுக்கும் எனது நன்றி இதனைப் பதிப்பிக்கும் பதிப் பாசிரியர் எனது உயிர் நண்பன் திரு. செ. சண்முகநாதன் அவர் கள் என்றும் என் நன்றிக்கு உரியவர். சே. நா. தர்மராசா, இவ்வண்ணம் பம்பைமடு கவிஞர் வவுனியா. (தலைவர் வவுனியா இலக்கிய வட்டம்) அகளங்கன்.

Page 5
ஈன்றமு தூட்டி என்னுடல் வளர்த்த தாயின் ஆசியும்.
'ஆன்ருேர் செய்த அருங்கவி கற்றுச் சான்றேன் ஆவாய்"
என்றென் உணர்வினில் இலக்கியம் புகுத்திய. தந்தையின் அருளும்;
உயிரோடு உயிராய் ஒன்றியே கலந்தென் அயர்வு நீங்கியில் அரும்பணி புரிவதற்கு.
எல்லா வகையிலும் என ஊக்குவிக்கும் இல்லாள் அவளின் இணையிலா அன்புங்.
கொண்டு இக் காவியங் கூறிடப் புகுந்தேன்.

ஒரு நிமிடம்.
சேர நாடடைந்து தெய்வமாகிய கண்ணகிக்கு சிலைவடிக்க கல்லெடுக்க இமயம் சென்ற சேரன் செங்குட்டுவன் .
"தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு விற் புலிகயல் பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் இங்கில்லேப் போலும்"
to no e o a என்ற கணகவிஜயரின் பழிமொழி கேட்டு, வெஞ்சினங் கொண்டு, வஞ்சின முரைத்து. போரிட்டு வென்று. கனகவிஜயரின் முடித்தலையில் .
= கண்ணகிக்குக் கல்சுமந்த கதை
தமிழரின் வீரத்திற்கு ஒர் தனிப்பெருங்
காவியமாகும். -
நன்றி !
உள்ளே தொடர்க

Page 6
காவியம்
.
(முருகன் ) ஆறுமுகத் தண்ணலே ஆறுதலை மைந்தனே கூறுதமிழ் காக்கின்ற கோமானே - நூறிமிக அசுரரை அழித்தவா அமரர்வாழ் வளித்தவா அடியவன் நாவிலே வா.
( கணபதி ) திருமகள் கணவனும்
திருமாலின் மருகனும்
சிவன்மைந்தன் முருகனுக்
கண்ணனும் அருந்தமிழ் வல்லனும்
ஒளவைக் களித்தனும்
அடியவர் குறைதீர்க்கும்
அன்பளும் பெருமுகங் கரியனும்
பெறுவதற் கரியனும்
பிழைகள்மலி என்கவிதைக்
குரியனும் செருமுகத் திணியனும்
சேரனின் பெருமைதனைத்
செப்பினேன் காத்தருள்
கணபதியே!
( கலைமகள் )
கலைவாணி உன்னுடைய
கழலடி இறைஞ்சினேன்
கவிபாட வைத்திடம்மா! அலைவாணி மலைவாணி
அருந்தமிழில் வாழ்பவள்நீ
அழகுதமிழ் தந்திடம்மா!

சேரர் வழியில் வீரர் காவியம்
கோவலனும் பெருவணிகன் சோழநாட்டிற்
குடியிருந்த காலத்தில் ஒர்நாளங்கே ஆடலினுற் புகழ்பெற்ற அரம்பைபோல்வாள் அழகுமா தவிஎன்பாள் அரங்கில்மின்னக் காவலனேர் கைப்பரிசாய் மாலைதந்தான்.
களஞ்சுஆ யிரத்தெட்டுப் பொன்னத்தந்து கோவலனம் மாலைதனை வாங்கிவந்தான்
கொழுநஞய்க் கொண்டவளை மறந்தேபோனுன்
கானல்வரி இசைத்ததனுற் கலகம்முற்றக்
காதலியாம் மாதவியைப் பிரிந்தபின்னர் பாணல்மொழி மங்கையெனுங் குல்க்கொழுந்து
பாவைகண் ணகிதன்னை மீண்டுஞ்சேர்ந்தான் மானன்ன விழியாளும் மணுளன்தன்னை
மதிப்போடு வரவேற்ருள் மாற்றந்தந்தாள் தேனன்று நீயென்ருன் தென்றல்என்ருன்
தென்றமிழுஞ் சுவையுமதாய்ச் சேர்ந்துகொண்டார்
09

Page 7
கவிஞர் அகளங்கன்
இழந்தபொருள் மீட்டுதற்கு மார்க்கந்தேடி
இதயத்துச் சிந்தனையில் இருந்தபோது பழந்தமிழர் பண்பாட்டு மங்கைநல்லாள்
பகர்ந்தாள்நல் மொழியாகப் பாதம்பார்த்து, விளைந்திடுவீர் சிலம்புதனை விற்றுநல்ல
விலைகொண்டு பொருள்கொண்டு வியாபாரத்தில் நுழைந்திடுவீர் என்றந்தச் சொல்லைக்கேட்டு
நூலாய்ந்த கவிஞணுய் ஆனன்.அன்பன்
முத்துக்கள் விளைகின்ற கொற்கையென்னும்
மூத்ததுறை முகநகரைத் தனதாய்க்கொண்ட சொத்தினுல் உயர்ந்தநகர் மதுரைநோக்கிச்
சோடியாய் இருவருமே வந்துசேர்ந்தார். வித்துத்தான் சிலம்புதனைப் பொருளாயாக்க
விரைந்தகோ வலன்தன்னே அரசன்கொல்லு வித்துத்தான் பழிபூண்டான், வீதிதன்னில்
விரைந்தகண் ணகியங்கே நீதிகேட்டாள்!
0.
 

சேரர் வழியில் வீரர் காவியம்
(வேறு)
குற்றம் அற்றவன் கோவலன் என்று
கோதை கண்ணகி கொலுமண்ட பத்தில் கொற்றவன் தன்னெடு வாதம் உரைக்கக்
குலைந்தது நீதி கண்டனன் பாண்டியன். மற்றவன் செய்யா முறையில் அநீதி
மன்னவன் செய்தனன் என்ற அளவினில் சற்றென வீழ்ந்து உயிர்தனப் போக்கினுன்
சங்கமித் தாளவன் தேவியுஞ் சாவில்!
காவலன் இறந்தனன் என்றதுந் தேவி
கழலடி தொழுதுவீழ்ந் திறந்ததைக் கண்ட கோவலன் மனைவி கொங்கையின் தீயினுற்
கொடியவர் ஆட்சியைத் தீக்கிரை யாக்கினுள் ஆவலில் கணவனின் ஆவியைத் தேடி
அலமற்றுக் கண்ணகி ஈரேழு நாளில் கோவலன் வந்திடும் பாதையை நோக்கிக்
கொற்றவன் சேரநன் நாட்டி லிருந்தாள்!

Page 8
2.
கவிஞர் அகளங்கன்
(வேறு)
தினைப்புணங் காக்கும்
மலைப்புறக் குறவர் வனப்பினில் உயர்ந்த
வனிதையைக் கண்டு முலையொன் றிழந்து
நின்றீர் யாரென
கொலைக்களத் திறந்த
கோவலன் மனைவி
விதிவாய் திறந்ததால்
வேந்தனும் பாண்டியன் பதியாம் மதுரை
பழியில் எரிந்தது. கொதியழல் சீற்றமென்
கொளுநனக் கொண்டவர் பதியை எரித்தது
பாண்டியன் இறந்தான்

சேரர் வழியில் வீரர் காவியம்
என்று சொல் லாடி
இருந்த பொழுதில் நன்று நன் றிதுவென
நயமாய்க் கைகுவித்து குன்றக் குறவர்கள்
கும்பிடும் போதில் சென்றனஸ் கொழு நனேடு தேவ ருஞ் சூழ்ந்திட
அன்றது கண்டவர்
அவளடி தொழுதனர்.
இன்றிவஸ் போலவோர்
தெய்வ மிங்கில்லை.
சென்றிடு வீரெங்குஞ்
செகத்திற் குரைமின்,
நன்றேஇப் பத்தினி
நங்குல தெய்வமாம்!

Page 9
4.
கவிஞர் அகளங்கன்
பூத்த வேங்கைப்
பொன்மர நீழலில் பாத்த குன்றக்
குறவர்கள் போற்றினர் கோத்திறம் பழி
கொண்டதுங், கண்ணகி தீத்திறஞ் செய்த
செய்கையைப் பாடினர்
ஆடினர் பாடினர்
அருஞ்சுனை யாடினர். கூடினர் ஊடினர்
கூத்தினில் வாடினர். சூடினர் புதுமலர்
சுகமுங் கண்டனர். நாடினர் இன்பத்தை
நங்கையைக் கண்டதால்

சேரர் வழியில் வீரர் காவியம்
(வேறு)
வெள்ளிமா டத்தினிலே வேண்மாளோடு
வீற்றிருந்த சேரன்செங் குட்டுமன்னன் அள்ளியவள் அழகுதனைச் சுவைத்தபின்பு
அடுத்தியற்கை தனைச்சுவைக்க எண்ணங்கொண்டு பள்ளியினை விடுத்தெழுந்து பலருஞ்சூழப்
பாவையும் உடன் தொடர வீதியோரந் துள்ளிமான் கன்றெல்லாம் ஒடிநின்று
சூழ்கின்ற கானகத்தே வந்துசேர்ந்தான்
கானகத்தே மலையடிவா ரத்தில் வந்த
காவலனைக் கண்ட குன்றக் குறவர் எல்லாம் தேனகத்தே கொண்டசுவைப் புட்டியோடு
தேமாவின் பழங்களொடு தினையும் மற்றுந் தானகத்தே முத்துச்சூழ் கரியின்கொம்புந் தறுகண்புலிப் பல்லோடு பலவுந்தந்து வானகத்தே வேந்தனிலும் மேலோயென்று
வாழ்த்திசைத்துச் சூழ்ந்து நின்ருர் மன்னன்காண

Page 10
கவிஞர் அகளங்கன்
ം്
ஏழேழு-பிறப்பினுக்கும் அடியோம்நாங்கள்
இங்கேயோர் புதுமைதனைக் கண்டோம்மன்ன கீழேயோர் வேங்கைமர நிழலிலோர்பெண்
கிளிமொழியாள் கவலையொடு வந்துநின்ருள் முலைமுகத்து ஒன்றில்லாள் முன்னர்தேவர்
முழுதாக வந்தவள்தன் கணவன் ஆகுங் கொலை முகத்து இறந்தவனக் காட்டியன்றே
கொண்டேகி ஞர்கள்மேல் உலகம்என்ருர்!
புதுமையிது நாங்கண்டோம் புரியவில்லை
புன்மைநிலை அடைந்தவள்தன் சரிதம்என்ன இதுபோலே எங்கேனுங் கண்டாருண்டோ?
இவள்தெய்வம் என்றவர்கள் உரைப்பக்கேட்டு முதுமையிலே நிற்கின்ற ஆசானுகும்
மூத்தசித் தலைச்சாத்தன் தன்னக்கேட்டான் இதுமெய்யே என்றுகண் ணகிதன் வாழ்வை
எடுத்தியம் பினரங்கே அரசன்கேட்ப
6
 

சேரர் வழியில் வீரர் காவியம்
இத்தரையில் வந்துவான் உலகஞ்சென்ற்
இத்தெய்வந்தனைநாங்கள் போற்றவேண்டும் பத்தினியைப் பரவுதற்குக் கல்சமைக்கப்
பழஅறிஞர் களே இடத்தைச் சொல்லுமென்ருள். முத்தமிழின் சுவைதன்னை உலகம்போற்ற
முன்னீன்ற பொதிகையிலே கல்லெடுத்து கத்துதிரைக் காவிரியில் நல்நீராட்டிக்
கல்எழுதில் நலமென்ருர் சிலபேர்அங்கே!
உமையம்மை தன்ணுேடு சிவனுமொன்ருய்
உறைகின்ற பெருமலையாய்ப் போற்றுகின்ற இமயத்து மலேயினிலே கல்லெடுத்து
இடையினிலே கங்கைதனில் நன்னீராட்டிச் சமயத்துச் சிற்பமென அணல்கைச் செய்தல்
சான்றமெம் பெருமைக்கு என்ருர்சில்லோர் இமையசைத்து நன்றுநன் றென்றே சொன்னுன் இணையில்லா வீரச்செங்குட்டுமன்னன்

Page 11
கவிஞர் அகளங்கன்
(வேறு)
கண்ணகிக்குச் 2ெலவடிக்கக் கல்லெடுக்க என்றே
கடுந்தூரங் கடந்திட வே முயன்ருேம் நாம் இன்றே எண்ணத்தில் மாறுபட்டு எதிர்ப்பவர்கள் நின்ருல்
எதிர்த்தழித்து வெற்றியொடு மீள்வோபநாம் கொன்றே சண்ணுக்குள் ஒளியின்றேல் அதுவும் வீண் ஆகுங்
காவலனுந் தமிழ்மன்னன் கணக்குமே அஃதே விண்ணுக்குள் இருக்கின்ற கல்லுத்தான் வேண்டி
விரைந்தாலும் எதிர்ப்பவரார் என்ருன் மன்னன்!
உலகெல்லாம் ஒருகுடைக்கீழ் தமிழன் =劉@7
உருவாக்குஞ் செயலிதுவாய் அமையும் என்று சிலசொல்லால் பெருவிளக்கந் தந்தாய் மன்ன
சிறக்கட்டுந் தமிழர்தம் வாழ்வு மண்ணில் அலைசூழ்ந்த கடலுலகில் வடக்கே வேந்தர்
அனைவர்க்குந் திருமுகத்தை அனுப்பி வைப்போம் கொலைவில்மீன் புலிசேருந் துவசந் தன்னைக்
கோபுரத்தில் அவர்நாட்டில் ஏற்றி நம்மை

சேரர் வழியில் வீரர் காவியம்
வரவேற்று வழிதந்து திறையுந் தந்தார்
வாழ்ந்தார்கள் மற்றெல்லாம் வீழ்ந்தாரென்றே கரங்குவித்து வில்லவநற் கோதை என்பான்
காவலர்க்கு உரைத்தமொழி நிகழா நிற்பச் சிரங்கொண்டு அழும்பில்வேள் சொல்வான் மன்ன
சித்திரநல் நம்நாட்டுத் தெருவில் எங்கும் முரசறைந்தால் போதுமது ஒற்றர் கேட்டு
முழுநாடுஞ் செய்திதனைப் பரப்பு வார்கள்
(வேறு)
நன்றென முரசு நகர்த்தெரு எங்கும் நாலா புறமுங் கேட்க ஒலித்துக் குன்றினை நிகர்த்த யானைகள் படைகளுங்
குதிரைகள் தேர்கள் காலாட்படைகளும் அன்றே தொகுத்து அடுத்தவர் தம்மை 3
அழித்தெதிர் வென்று அற்பரைக் கொன்று குன்றினில் இமயக் கல் எடுத் தங்கே
குளிர்நீ ராகுங் கங்கையில் ஆட்டிட
9

Page 12
கவிஞர் அகளங்கன்
குடை யும் வில் வரை கொடியுந் தேர்சளுங்
கொற்றவன் அமைச்சன் தளபதியோடு படை யுஞ் சேவகர் பலதொடர் வந்திட
படுப்போம் எதிர்க்கும் வடவரை வென்றே தடைகள் கடந்திடத் தகுந்தநல் நிமித்தம்
தமிழர் வாழ்வினில் வீரமோங்கிடச் சடையில கங்கையைத் தாங்கிய சிவனுறை
இமய ஞ்செல்ல எண்ணினன் அரசன்
(வேறு )
புறப்பட்டான் வேந்தனென்ற சொல்லைக்கேட்டுப்
புவியாளுஞ் சிற்றுாரின் அரசரெல்லாம் புறப்பட்டார் திறைதந்தார் வாழ்த்துந்தந்தார்
புதுப்பொலிவு அரசனிலே ஆண்டுநின்ருர், சிறைப்பட்டான் செங்குட்டு மன்னனெங்கள்
செங்காந்தள் விழியினிலே என்று பெண்கள் குறைப்பட்டார் கைவளை யும் இடையில்மின்னுே
குன்ருத அழகுமே கலையுமெல்லாம்

சேரர் வழியில் வீரர் காவியம்
வஞ்சியினை நீங்கினுன் மன்னனென்று
வாழ்த்தொலிகள் விண்ணினயே பிளக்கக்கேட்டுக் கொஞ்சுமொழி வஞ்சியர்கள் சூழ்ந்தேதின்று
கொற்றவனை ஆடலினுல் மகிழ்வித்தார்கள். மஞ்சினிலே தவழ்கின்ற முனிவர்வந்தார்
மன்னவனை வாழ்த்திமலை முனிவர்தம் மை அஞ்சுஞ்செயல் ஏதுமே இயற்றவேண்டாம் அடைக்வெற்றி என்றுதல் ஆசிதந்தார்
வஞ்சியினை ஆள்கின்ற சேரவேந்தன்
வஞ்சியினைத் தலைமுடியிற் சூடிக்கொண்டு வஞ்சியரின் விற்புருவ விழியிற்தப்பி
வஞ்சியரின் விற்கொடியை உயர்த்திப்போரில் வஞ்சிக்காத் தமிழ்வீர மறவர்தம்மை
வஞ்சினங்கள் உரைத்துடனே அழைத்துக்கொண்டு. வஞ்சினத்தால் மதுரைதன்னை அழித்தகற்பு
வஞ்சிக்காய் வடதசையில் புறப்பட்டானே!
2.

Page 13
கவிஞர் அகளங்கன்
( வேறு)
வடதிசை வந்த வண்தமிழ் வேந்தனை
வந்துசந் தித்தான் சஞ்சயன் என்போன். திடமன தாக கன்னர் நூற்றுவர்
திண்மையி லுயர்பெறு கண்ணகி யாகுங் கடவுள் எழுதவோர் கல்தனே இமயக்
கடவுள் மலையில் எடுத்துக் கங்கையில் உடமையில் ஆட்டிட ஒற்றுமை யுடனே
ஒருப்பட் டார்கள் என்ருன் சஞ்சயன்!
எத்தனை வடவர்கள் எம்தமிழ் மன்னனை
ஏத்தினர் என்பது எண்ணில் அடங்கா சொத்தெனத் தமிழர் சின்னக் கொடிகளைச்
சொந்தமாய்த் தமது நாட்டினில் ஏற்றினர். இத்தனை அறிந்தும் இறுமாப் படங்கா
இளையவர் கனக விஜயராம் மன்னர் "செத்தனர் கொல்லோ எம்போல் வீரர்
செந்தமிழ் வீரர் இமயத் தலையில்

சேரர் வழியில் வீரர் காவியம்
மீன்புலி வில்லெனும் மூவகைக் கொடிகளே
மூவேந்தர் எனுந் தமிழர் ஏற்றி வான்புகழ் கொண்ட ஓர் காலந் தன்னில்
வாழ்ந்தோம் இல்லை அதனுல் செய்தனர். மான்உருத் தெழுந்த காலந் தன்னில்
மதகரி இல்லையே' என்று நகைத்துத் தான் எனும் அகந்தைத் தருக்கராம் இளையோர்
தமிழர் வீரம் பழித்தனர் விழாவில்
வாய்வாள் வீரம் பேசி இருந்த
வட வராங் கனக விஜயராம் மன்னர் தங் காப்சின வார்த்தைகள் கேட்டனர் புலவோர். கடுஞ்சின முடனே எழுந்தனர் தென்திசை தாய்எனத் தமிழைக் காக்கும் தமிழர்தந்:
தலைவன் செவியில் தருக்கர்கள் விழாவில் வாய்வந் ததுவென வார்த்தையில் தமிழரை
வைதனர் வட்வர் என்றே உரைத்தனர்:

Page 14
கவிஞர் அகளங்கன்
என்றுரையாடிய செய்தியைப் புலவோர்
எடுத்தியம் பிறுதும் எரிந்தான் சேரன், இன்றிது சொல்தனேக் கேட்கும் நிலையிலா
இழிவுற வாழ்க்கை வாழ்கின் றேன்றான். நன்றிது நன்றிது நம்தமிழ் வீரம்
நலிந்ததோ பழியோ என்று நகைத்து. சென்றவர் முடித்தலே கல்லினை ஏற்றிச்
சேர நாடது திரும்புவேன் என்ருன்!
செல்லுந் திசையில் செறுநர் இல்லாச்
செலவு நேர்ந்திடு மோவென அஞ்சி வில்லும் வாளும் வீணே சுமந்தோம்
வீரங்காட்டவோர் வழியிலை என்று கல்லுயர் தோளினைப்பார்த்த சேர்னேக்
கனக விஜயர் வந்தே எதிர்த்தார். கொல்லும் வீணரைக் கொடும்போர் புரிமின்
கொற்றவன் ஆணே மகிழ்ச்சியில் விடுத்தான்!
 

சேரர் வழியில் வீரர் காவியம்
உத்தரன் விருத்திரன் உருத்திரன் சிவேதன்
உலுத்தர்கள் வரிசையில் பைரவன் சிங்கன்
சித்திரன் தனுத்திரன் சிந்தையிலே நொந்து
சிறியவர் தமிழர்கள் வீரத்தைப் பார்ப்போம்
எத்தனை வீரர்கள் யானைகள் குதிரை
ஏறிய தேரினில் கனக விஜயரும்
எத்தரை எதிர்த்திடு வம்மென வந்தார்
எழுந்தன புழுதிகள் ஏழ்கடல் வற்ற
(வேறு)
போரென்ருல் புலியாகுஞ் சேரவீரர்
பொருதமுறை சொல்வதற்கோர் பரணிவேண்டுங் காரென்ருல் மழைபொழியுங் கவிஞனென்ருல்
கணக்கின்றிப் பொழிந்திடுவான் கவிதைமாரி ஆரென்ருல் தமிழரென அறிந்தபின்னும்
அவர்வீரந் தன்னேயே சொலிற்சொல்லிப் பாரென்ருல் நானென்ன செய்யஅய்யோ
பார்த்தவிட மெங்குமே குருதிவெள்ளம்!

Page 15
கவிஞர் அகளங்கன்
வாய்ப்பேச்சு வீரராம் வட ஆரியர்கள் வற்ருத போர்மாரி கண்டேயஞ்சி நாய்போலப் மதுங்கித்தம் உடைகள்மாற்றி
நல் நீறுங் காவியதும் உடுத்துக்கொண்டு, பேய்போல மலையினிலே பதுங்கிக்கொண்டார் பிடிபட்டார் குயிலாலுவந் தன்னிலென்று வாய்மொழிகள் கேட்டவுடன் வீரரெல்லாம்
வாய்விட்டுச் சிரித்தாடி மகிழ்ந்தேறின் ருர்
(வேறு)
வெற்றிக் கூத்தும் விழாவும் முடிந்தபின்
வீரன் விவ்லவன் கோதையுஞ் சூழ சுற்றி இமய மலையினில் கல்தனைச்
சூழ்ந்து அகழ்ந்து களிப்புக் கொண்டனர். நற்றிறங் கொண்ட தமிழர்தம் வீரமுந்
நலிந்தோர் சொல்லும் வாயின் வீரமும் முற்றிட ஊரெங்கும் முடியுடை வேந்தன்
முடித்தான் போர்தனை முழக்கினன் முரசம்
26
 

சேரர் வழியில் வீரர் காவியம்
(வேறு)
தேவர்கள். அசுரரொடு புரிந்த யுத்தஞ்
சேர்ந்தபதி னெட்டென்னும் வருடமாகும் பாவர்கள் இராவணனும் அரக்கர் தம்மைப்
பழிதீர்த்தார் இராமபிரான் பதினெட்டாகும் மாதத்தில் என்பார்கள் மகாபாரதப் போர்
மற்றுமொரு பதினெட்டு நாளிலென்பார் மானத்தில் உயர்ந்த செங் குட்டுமன்னன்
நாழிகை யோர் பதினெட்டில் பகையை வென்முன்!
வீரத்தைத் தமிழரிடம் பழித்த வீணர்
விட்டோடிச் சென்றுலும் பிடித்துவந்து பாரத்தைச் சுமவென்ருன் பத்தினியின் கல்லால் பாபங்கள் தீரட்டும் என்றேசொல்லி, ஆரத்தைச் சுமந்தமார் பழகு மன்னன்,
அணியான தமிழ்த்தாயின் அழகுவீரன், ஆரிந்தச் சொல்லையினிச் சொல்வார்பார்ப்போம்
அவர்க்குமிது தானென்றே காட்டிவிட்டான்!
27

Page 16
கவிஞர் அகளங்கன்
கங்கையிலே கல்தனையே நல்நீராட்டிக்
கணிதமுறை வழுவாது பூசைசெய்து
கொங்கையிலே தீமூட்டிக் கொளுத்தினுளைக்
குளிர்விக்குஞ் செயல்போலக் குளிர் நீராட்டி
மங்கையிலே இவள் போலுந் தெய்வமில்லை
மன்பதைக்கு இதுநன்றே என்று சொல்லிச் செங்கையினல் நூற்றுவர்கள் கன்னர்வேந்தர்
சேர்ந்தழைக்க மண்டபத்தே வந்துசேர்ந்தான்
போர்க்களத்தே புதுமைகளைச் செய்தவீரர்
புழுதியிலே விளையாடி மீண்ட வீரர் ஏர்க்களத்தே நெல்லடித்துக் குவித்ததேபோல்
எதிரிகளின் தலையடித்துக் குவித்த வீரர் தேர்க்காலில் யானைகளைச் சிதைத்தவீரர்
தேவர்களுங் களிகொள்ள வென்றவீரர் பாரேத்தத் தமிழ்ப் பெருமை காத்து மண்ணிற்
பட்டதமிழ் வீரர்கள் குழாத்தையெல்லாம்
28
 

சேரர் வழியில் வீரர் காவியம்
பாராட்டிப் பலபரிசு கொடுத்தான் சேர்ன்
பழிதீர்த்த வீரரெல்லாம் மகிழ்வுகொண்டார் சீராட்டித் தாயெனவே தமிழைக்காக்குஞ்
செங்குட்டு மன்னனவன் பெருமையெல்லாம் ஆராட்டி மகற்குரைத்துப் பார்த்திருந்தாள்
அழகுவேண் மாளாகும் அரசிநாட்டிற் தேரோட்டக் காலத்தைக் கணிதன் சொன் னுன் தெளிந்தமுப் பத்திரண்டு திங்கள்காட்டி!
தமிழ் வீரந் தனைப்பழித்த அரசராகுந்
தருக்கராங் கன கவிசயர் தம்மை தமிழ் நாட்டைக் காக்கின்ற மன்னன்சோழன் தமிழ்மாறன் இருவருக்குங் காட்டுஎன்றே தமிழ்மானங் காத்தசேர மன்னனன்றே
தன்வீரத் தலைவருக்கு ஆணேயிட்டுத் தமிழ்நாடு நோக்கித் தன் விழிவிரித்தான்
தானேகளும் புறப்பட்டுச் சேர்ந்ததங்கே!
29

Page 17
கவிஞர் அகளங்கன்
(வேறு)
புண் தோய்ந்த யாக்கையினைக் கண்ட பெண்கள்
புல்லினர் புருஷர்களை புதிதாய் மீண்டும், பண் தோய்ந்த பாடலினுல் செவிநிறைத்துப்
படுக்கையிலே கொங்கையிஞல் உடல்நிறைத்துக் கண் தோய்ந்த சிவப்பாலே விழிநிறைத்துக்
காதலரைக் கலவிப்போர் தனில்ஜெயித்து விண்தோய்ந்த புகழ்பெற்ருர் வீரப்பெண்கள்
வீரர்களும் மூலைவேதால் நோவுந் தீர்ந்தார்
பிரிவினிலே சிந்தையிலே கொண்ட காதற்
பித்தெல்லாந் தீர்ப்பதிலே வீரர்நின்ருர், செருவினிலே கொண்டபெருஞ் சீற்றம் எல்லாஞ்
செங்காந்தள் மலர்க்கரத்தால் தணிந்துபோனுர், கருவினிலே தமிழ் ஒலிக்குஞ் சேரவீரர்
கண்டபெரும் போர்களிலே கலவிப்போர்போல் இருவருக்கும் வெற்றிதரும் போரைக்கண்டார்
இங்குண்டோ செகத்தினிலே இல்லை இல்லை!
30
 

சேரர் வழியில் வீரர் காவியம்
வேண்மாளும் விழிச்சிவப்பை மாற்றளன்றே
வேந்தனையே தழுவிமுக மலர்ச்சிபெற்ருள்.
ஆண்மானும் பெண்மானும் அடையுமின்பம்
அம்மானும் அம்மானும் அடைந்தபின்னர் மான்நானும் விழியாளும் மன்னன்தானும்
மண்டபத்தே வந்தமர்ந்தார் மகிழ்ச்சிபொங்கத் தேன் நாணும் மொழியினிலே தமிழைப் பாடித்
தெருவெல்லாங் களிப்பினிலே ஆடல் கண்டார்
முறைசெய்து காக்கும் குறையுடை வேந்தன் நிறையுடை கற்பினர் சோழன் நகரில் செங்கோல் a2n, assir
எங்கனும் மன்னவர்த் தென்னவன் வழியில் வஞ்சினம் அன்றி வெஞ்சின வேந்தர்
இ65 விஜயரை
(pg. 60- மூவர்
அடிப்படை
இண்ணுஇ என்னுங்
(வேறு)
இறையவன் ஆயின்
ஆகார்
பிறந்து
கேற்றது
loos oo eras
வலிந்துபோர்
என்பதைச் வென்றதால் வேந்தர் அறிவித் கவின்பெறு
அல்லாது பெண்கள்
என்பதை
உணர்த்தியும், வாழாமை
என்பதை குணர்த்தியும்,
(6) Fijulufyrir சேரன் காட்டியும், தமக்கும் தாளெங்
தெய்வம்!
3.

Page 18
கவிஞர் அகளங்கன்
(வேறு)
கற்புடைக் கண்ணகி
கடவுளைப் போற்றி
கல்லினை வடித்துக்
கடவுள்மங் கலமும்
விற்கொடி வேந்தன்
விருப்பொடு செய்தான்!
கொற்றவன் வழியில்
கோதைகண் ணகியை
கற்றறி தமிழர்
கைகுவித் தேத்தினர்.
பொற்புடன் போற்றினர்.
போற்றினுேம் யாமும்!


Page 19
அகளங்
ஒரே பா
சிரித்திரன் மாதச் சஞ்சிகை மேலாக இலக்கியச் சிமிழ், (சே, நா. தர்மராசா என்ற என்பன.
ஈழநாடு பத்திரிகை வாரமல கேள்விச்சரமும் ஆய்வுக் கட் தொடராக வெளிவந்தது. மாபெரும் பண்பாடும், தெ சிறுகதை. வீரகேசரி 'ஊடலால் எரிந்த கட்டுரை, சோதிடமலர் பல சோதிடக் களும், சுடர் சஞ்சிகையில் பல கவின் கிருதயுகம் சஞ்சிகையில் கட் உலகத்தமிழ்க் கவிஞர்களின் செம்மாங்கனியில் கவிதை, யாழ். பல்கலைக் கழக பிரச் கவிதைத் தொகுப்பில் கவி தொகுப்பில் சிறுகதை, G கட்டுரைகள், இந்து நெறி முஸ்லீம் மாணவர் சஞ்சிகை ஈழத்துச் சிறுகதை மஞ்சரியில்
வஸ்தியன் அச்ச
 

கனின் படைப்புக்களில் சில ர்வையில்:
யில் மூன்று ஆண்டுகளுக்கு இலக்கியத்தில் நகைச்சுவை சொந்தப் பெயரில்) கவிதை
ரில் வாலி கொலைச்சரமும் ட்டுரை எட்டு வாரங்கள்
மனுநீதி கண்ட சோழனும் ாடர் கட்டுரை, கவிதை,
து கூடல் மாநகர்" ஆய்வுக்
கட்டுரைகளும், கவிதை
தைகள், டுரை.
கவிதைத் தொகுப்பான
ஈரங்களான தேன் துளிகள் ಹೌ5 மாலை சிறுகதைத் செந்தழல் 1-2 ல் கவிதை, யில் கவிதை, இன்கிலாப் sயில் கட்டுரை.
சிறுகதை,
L-fir ~~~~പ്പെ
கம், யாழ்ப்பாணம்,