கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சகலகலா வல்லி மாலை (உரையுடன்)

Page 1


Page 2

бО
Uநீ குமரகுருபரசுவாமிகள் அருளிச் செய்த
சகலகலா வல்லி மாலை
(உரையுடன்)
உரை விளக்கம்
கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
சிவநெறிப் புரவலர்
சீ.ஏ.இராமஸ்வாமி அறக்கட்டளை நிதியம்
வவுனியா,
15. O9.2O11

Page 3
சகலகலா வல்லி மாலை
நூல்
உரைவிளக்கம்
6ຄ6)/6fluff@
1ம் பதிப்பு
விலை
அச்சுப்பதிப்பு
சகல கலா வல்லி மாலை (உரையுடன்)
கலாநிதிதமிழ்மணி அகளங்கன் "தமிழ்அதர்"
90,திருநாவற்குளம்,
வவுனியா. சிவளருறிப் புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி அறக்கட்டளை நிதியம், வவுனியா.
15. O9.2O11
শুচLIT 5O/-
வாணி கணனிப்பதிப்பகம்
வவுனியா,
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
бгш 2бия:ПбЯlёѣсфіі) бтббїбояIIJбошо — gђпш
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராதிடற்.
- 85DLs
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில் அரசரோடு என்னைச்
சரியா சனம்வைத்த தாய்.
— ёѣпбп08шpaБüц6обыП

சகலகலா வல்லி மாலை
வெளியீட்டுரை
தமிழும் சைவமும் கற்கும் மாணவர்களிடையே தமிழ் நூல் அறிவும் நிரம்பி இருக்க வேண்டும் என்ற பெரு நோக்கோடு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் கைவண்ணத்தில் ஆக்கம் பெற்றிருக்கும் சகலகலா வல்லி மாலை பொருளுடன் வெளியிடப்படுகிறது.
இதன் தேவையையும், அருமையையும், உணர்ந்து இந்நூலை வெளியிடுவதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.
சீ.ஏ.இராமஸ்வாமி
இன்ன நூறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தணர் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புணர்னியர் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தலி.
- பாரதியார்

Page 4
சகலகலா வல்லி மாலை
CUD6ÖICONGDII
வவுனியா இந்துமா மன்றத்தின் தலைவராக சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி ஐயா அவர்கள் பதவி வகித்த காலத்தில் அவரது வேண்டுகோளுக்கிணங்கி ஆத்திகடி, கொன்றை வேந்தன், மூதுரை (வாக்குண்டாமி) நல்வழி, ஆகிய ஒளவையாரின் அரிய நீதி நூல்களுக்கு விளக்கவுரை எழுதினேன்.
இவற்றோடு சிவபுராணத்திற்கும் உரை எழுதினேன். பன்னிரு திருமுறை அறிமுகம், நாமறிந்த நாவலர் ஆகிய உரைநூல்களையும் எழுதினேன். இவை யாவும் இந்துமாமன்ற வெளியீடுகளாக வெளிவந்தன.
சிவநெறிப் புரவலர் அவர்களின் மணிவிழாவின் நினைவாக “வெற்றி வேற்கை” என்ற நான் உரை எழுதிய நீதி நூல் வெளியிடப்பட்டது. மணிவிழாவன்று ஆரம்பிக்கப்பட்ட சிவநெறிப் புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி அறக்கட்டளையின் மூலம் நான் எழுதிய "திருவெம்பாவை" உரை நூல் வெளியிடப்பட்டது.
இப்பொழுது “சகல கலா வல்லி மாலை” உரையுடன் அறக் கட்டளை மூலமாக வெளிவருகிறது. குமரகுருபரர் அருளிச் செய்த சகலகலாவல்லிமாலை பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. சரஸ்வதி பூசைக் காலத்தில் பாடப்படுகின்றது.
இம் மாலையின் பொருளுணர்ந்து பாடுவதற்காக, திருத்தமான பதிப்பாகவும், பதவுரை, பொழிப்புரை, உரைச்சுருக்கம், சிறப்பு, ஆகியவற்றை உள்ளடக்கியும் இந்நூல் வெளிவருகிறது.
இதன் நோக்கத்தைப் புரிந்து பயன்பெறுவது மாணவர்களது கடமை. இந்நூலை வெளியிடும் சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி ஐயா அவர்களுக்கு என் நன்றிகள். அவரது அறப்பணியில் இப்பணியும் ஓர் அரும் பணியே.
அகளங்கன்

சகலகலா வல்லி மாலை
குமரகுருபரர் வரலாறு
இவர் இந்தியத்தழிழகத்தில், பாண்டியநாட்டில், Uநீவைகுண்டம் என்னும் கைலாசபுரத்தில், வேளாளர் குலத்தில், சண்முக சிகாமணிக் கவிராயரும் சிவகாமசுந்தரியம்மையாரும் நெடுநாள் புத்திரப் பேறின்றி, பல விரதங்கள் நோற்ற பலனால் பிறந்தார்.
இவரது பெற்றோர் புத்திரப்பேறின்றி வருந்தி விரதமிருந்த காலத்தில், வீட்டுக்கு வந்த ஒரு சிவனடியார் "திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கினால் ஆண் குழந்தை பிறக்கும். அக்குழந்தைக்கு முருகனின் பெயரை வையுங்கள்” என்று சொல்லிச் சென்றதற்கேற்ப திருச்செந்தூர் சென்று அங்கே முருகனை வணங்கி விரதமிருந்து இவரைப் பெற்றதனால் குமரகுருபரன் எனப் பெயரிட்டனர்.
ஆனிமாதம் திருவாதிரை நட்சத்திர நன்னாளில் பிறந்த குமரகுருபரர், இரண்டு வயது வரை பேசாதிருப்பதைப் பார்த்துப் பெற்றோர் கலங்கினர்.
அப்பொழுது அங்கு மீண்டும் வந்தசிவனடியார்'ஐந்து வயதுமுடிய திருச்செந்தூர் முருகன் சந்நிதிக்குக் கூட்டிச் செல்லுங்கள். அங்கே அற்புதம் நிகழும்” என்றார்.
அத்தோடு, “அதுவரை முருகன் பாடல்களையும், புராணக் கதைகளையும் இவருக்குச் சொல்லிக் கொடுத்து மனதில் பதிய வையுங்கள்” என்று அறிவுரையும் வழங்கிச் சென்றார்.
அதன்படி தந்தையார் புராணக் கதைகளையும், திருப்புகழ்ப் பாடல்களையும் இவரது செவிவழியாக உள்ளத்தில் பதித்தார்.
ஐந்து வயது முடிய திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று வழிபாடாற்றி இரவு நித்திரை செய்து கொண்டிருக்கும் போது,
- 5 -

Page 5
சகலகலா வல்லி பDாலை முருகப்பெருமான் குமரகுருபரரின் கனவில் தோன்றி தன் வேலால்
அவரது நாவில் சடாகூஜ்ர மந்திரத்தை எழுதி மறைந்தார்.
குமரகுருபரர் நித்திரை விழித்தெழுந்து பெற்றோரை அம்மா, அப்பா என அழைத்ததைக் கேட்டுப் பெற்றோர் மனம் மகிழ்ந்தனர்.
திருச்செந்தூர் முருகப்பெருமானைத்தரிசனம் செய்து "கந்தர்கலி வெண்பா” பாடினார். ஐந்து வயது வரை ஊமைப் பிள்ளையாக இருந்த குமரகுருபரர் அற்புதமான பாடல்களைப் பாடுவதை அறிந்து யாவரும் அதிசயித்தனர். அவரது புகழ்நாடெங்கும் பரவத்தொடங்கியது.
மதுரை திருமலை நாயக்க மன்னரின் சபைக்கு சகல மரியாதைகளோடும் அழைக்கப்பட்ட இவர் மன்னனின் சபையில் "மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்” பாடினார். திருமலை நாயக்க மன்னனின் விருப்பத்திற்கிணங்கி "மீனாட்சியம்மை குறம்”, “மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை”, “மதுரைக் கலம்பகம்", "நீதிநெறி விளக்கம்” முதலிய பிரபந்தங்களைப் பாடினார்.
தருமபுர ஆதீனத்துUநீமாசிலாமணி தேசிகரைக் குருவாக ஏற்று ஞானமடைந்து அவர் விருப்பப்படி காசியாத்திரை சென்றார்.
காசியில் தங்கியிருந்த காலத்தில் "காசிக் கலம்பகம்” பாடினார். இவரது கனவில் சிவபெருமான் எழுந்தருளி, கங்கைக் கரையில் கேதாரேஸ்வரர் மறைந்து கிடக்கும் இடத்தைக் கூறி அதைப் புதுப்பிக்கும்படி கட்டளையிட்டார். மறுநாட்காலை தேடி இடத்தைக் கண்டுபிடித்தார்.
காசியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னனிடம் நிலத்தையும், அனுமதியையும் பெறுவதற்கு உரையாடுவதற்கு இந்திமொழி, (கிந்துஸ்தானி) அறிவைத் தரும்படி கலைமகளை நினைத்துச் “சகலகலாவல்லிமாலை”யைப் பாடினார்.
- 6 -

சகலகலா வல்லி மாலை
மன்னனைச் சந்தித்து இந்திமொழியில்உரையாடிநிலத்தையும் அனுமதியையும் பெற்றார். கங்கைக் கரையில் “குமாரசுவாமிமடம்” கட்டினார். கேதாரேஸ்வரர் ஆலயத்தையும் புதுப்பித்தார்.
மீண்டும் தமிழகத்துக்கு வந்து தன் குருநாதரின் ஆசிபெற்று அவரின் விருப்பப்படி காசிக்குத் திரும்பி அங்கிருந்து ஆன்மீகப் பணியாற்றி இறைபதம் எய்தினார்.
இவர் காசியிலிருந்த காலத்தில் கம்பராமாயணத்தை இந்திமொழியில் பிரசங்கம் செய்தார் என்றும், அதைக்கேட்டதுளசிதாசர் இராமாயணத்தை "இராம சரித மனஸ்” என்ற பெயரில் இந்தியில் பாடினார் என்றும் கூறுகிறார்கள்.
இவர் பாடியவையாக மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, மதுரைக்கலம்பகம், நீதிநெறி விளக்கம், கந்தர் கலி வெண்பா, கைலைக்கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை ஆகிய நூல்களைப் பட்டியலிடுகிறார்கள் தமிழறிஞர்கள்.
அகளங்கன் தமிழ்அதர் 90. திருநாவற்குளம், வவுனியா.

Page 6
சகலகலா வல்லி மாலை
б.
Uநீகுமரகுருபரசுவாமிகள் அருளிச் செய்த
சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்து உண்டா னுறங்க வொழித்தான்பித்
தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே! (O)
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே! (O2)
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப
சகல கலாவல்லியே! (O3)
- 8 -
 

சகலகலா வல்லி மாலை
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே! O4)
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந்
நாவுமகவும் வெள்ளைக் டு கஞ்சத் தவிச்ொத் திருந்தாய்
சகல கலாவல்லியே! (Օ5)
பண்ணும் பரதமுங் கல்வியந்
ஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே! (OᏮ)
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே. (O7)
- 9

Page 7
சகலகலா வல்லி மாலை
சொல்விற் பனமு மவதான
முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமை நல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே! (O8)
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந்தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே! (O9)
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம், பல்கோடி
யுண்டேனும் விளம்பிலுன்போல் கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலாவல்லியே! (O)
 

சகலகலா வல்லி மாலை
6_
Uநீகுமரகுருபரசுவாமிகள் அருளிச் செய்த சகலகலாவல்லி மரலை
o லிவண்டா மரைக்கன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டா மறைக்குத் தகாதுகைாலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்துஆக
உண்டாக்கும் வண்ணம்
856ADŐLTIGŐ ÖTGOD 6D 655 657 55ÎòGBL!
சகல கலா வல்லியே!
பதவுறை :
வெண் தாமரைக்கு அன்றி - வெள்ளைத் தாமரைப் பூவுக்கே அல்லாமல், நின்பதம் தாங்க - உனது பாதங்களைத் தாங்குவதற்கு, என் வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொல் - எனது வெள்ளை உள்ளமாகிய குளிர்ந்த தாமரை மலருக்குத் தகுதி இல்லையோ, சகம் ஏழும் அளித்து - ஏழு உலகங்களையும் பாதுகாத்து, உண்டான் - பிரளய காலத்திலே உண்டு தனது வயிற்றிலே அடக்கியவராகிய மகாவிஷ்ணு மூர்த்தி, உறங்க - பாற்கடலில் பள்ளி கொள்ள, ஒழித்தான் பித்தாக - சர்வ சங்கார காலத்தில் யாவற்றையும் அழித்த கடவுளான சிவபெருமான் பித்தனாக, உண்டாக்கும் வண்ணம் கண்டான் - சகலவற்றையும் படைக்கும் வழிவகைகளைக் கண்டு கொண்டு படைத்தவனாகிய பிரமதேவனது சுவைகொள் கரும்பே - சுவை பொருந்திய கரும்பே சகல கலாவல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
பொழிப்புறை :
ஏழு உலகங்களையும் பாதுகாத்து பிரளய காலத்தில் உண்டு தனது வயிற்றில் அடக்கியவரான காத்தற்கடவுளாம் மகாவிஷ்ணு மூர்த்தி - 11 -

Page 8
F3,60956)|T 6)6)6(SLDIT60)6) பாற்கடலில் பள்ளிகொள்ள, சர்வ சங்கார காலத்தில் யாவற்றையும்
அழித்தவரான சிவபெருமான் பித்துப் பிடித்தவராக, சகலவற்றையும் படைக்கும் வழிவகைகளைக் கண்டு கொண்டு படைத்தவராகிய பிரமதேவனின் சுவை நிரம்பிய கரும்பாக இருக்கின்ற சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! உனது பாதங்களைத்தாங்குவதற்கு வெள்ளைத்தாமரைப்பூவுக்கே அல்லாது எனது வெள்ளை உள்ளமாகிய குளிர்ந்ததாமரை மலருக்குத்தகுதி இல்லையோ,
6) Idbf birdb856) :
சகலகலாவல்லியே! உனது பாதங்களைத் தாங்குவதற்கு
வெள்ளைத்தாமரைப்பூவுக்குத்தான் தகுதியிருக்கிறதோ, எனது உள்ளத்
தாமரைப்பூவுக்குத்தகுதி இல்லையோ,
சிறப்பு :
உள்ளம் தாமரையாக உருவகிக்கப்படுகிறது. கலைமகள் சுவைநிரம்பிய கரும்பாக உருவகிக்கப்படுகிறாள்.
சிவபெருமானை சுந்தரர் பித்தா என்றார். "பித்தனுமாக"
எனச் சிவபெருமான் ஒத்துக் கொண்டார். காத்தற்கடவுள் பள்ளிகொள்ள, அழித்தற்கடவுள் பித்தனாய் இருக்க, பிரமதேவன் படைத்தற் தொழிலைச் செய்வதற்கு, கலைமகளே காரணமாக இருந்தாள் என கலைமகளின் சிறப்பு போற்றப்படுகின்றது.
02 நாடும் வபாருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்
பங்க யாசனத்தில்
கூடும் பசும்பைாற் கொழயே
கனதனக் குன்றும் ஐம்பாற்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலா வல்லியே!
- 12 -

சகலகலா வல்லி மாலை L56)6ODI :
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர - யாவரும் விரும்பும் வண்ணம் பொருள் இனிமை, சொல் இனிமை பொருந்த நாற்கவியும் - நான்கு வகைக் கவிகளையும், பாடும் பணியில் பணித்து அருள்வாய் - பாடுகின்ற பணி செய்ய எனக்குக்கட்டளை இட்டருள்வாய். பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே - தாமரை மலர் ஆசனத்தில் இருக்கின்ற பசும்பொற் கொடியே கணதனக் குன்றும் - பருத்த ஸ்தன மலைகளையும், ஐம்பால்காடும் - ஐந்து பகுப்பாக முடிக்கப்படுகின்ற கூந்தல் வனத்தையும், சுமக்கும் கரும்பே - தாங்குகின்ற கரும்பே, சகல கலா வல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
பொழிப்புரை :
வெள்ளைத் தாமரை மலராகிய இருக்கையிலே அமர்ந்துள்ள பசும்பொற் கொடியே பெருத்த முலைகளாகிய மலைகளையும், ஐந்து பகுப்பாக முடிக்கப்படும் கூந்தலாகிய காட்டையும் சுமந்திருக்கும் கரும்பே சகலகலைகளிலும் வல்ல கலைமகளே! யாவரும் விரும்பும் பொருளினிமை, சொல் இனிமை பொருந்த நால்வகைக் கவிகளையும் பாடுகின்ற தொண்டைச் செய்ய எனக்குக் கட்டளையிட்டு அதற்குரிய அருளையும் நல்குவாய்.
பொருட்சுருக்கம் :
சகலகலாவல் லியே! பொருட்சுவை, சொற்சுவை பொருந்த நால்வகைக் கவிகளையும் பாடுகின்ற பணிசெய்ய எனக்குக் கட்டளையிட்டு அருள்பாலிப்பாய்.
சிறப்பு :
கலைமகள் பசும் பொற் கொடியாகவும், கரும்பாகவும் உருவகிக்கப்படுகிறாள். கூந்தலைக் காடு என உருவகித்தது (பூக்காடு சிறப்பு. நாற்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி. ஐம்பால் - கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி

Page 9
சகலகலா வல்லி மாலை
O3 அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் பழக்குஎன்று கூடுங்கொலோ
உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப DBOD
சகல கலா வல்லியே!
LESGOGODIT :
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்து - நீ வழங்கும் செழுமையான தமிழாகிய தெளிந்த அமிர்தத்தை நிறைய உண்டு. உன் அருட்கடலில் - உனது அருளாகிய கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொல் - குளிக்கும் காலம் என்றுதான் கைகூடுமோ உளம் கொண்டு - உள்ளத்தில் ஆராய்ந்து விருப்பங்கொண்டு தெள்ளித் தெளிக்கும்- மிகத் தெளிவாகப் பாடும் பனுவல் புலவோர்-நூல்களை இயற்றும் புலவோர் கவிமழை சிந்த - கவியாகிய மழையைத் தூற கண்டு களிக்கும் கலாப மயிலே - கண்டு மகிழ்ச்சியடையும் தோகைமயிலே சகல கலா வல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
பொழிப்புறை :
உள்ளத்திலே ஆராய்ந்து மிகுந்த விருப்பங்கொண்டு மிகத் தெளிவாக நூல்களை இயற்றும் புலவர்கள் கவிதைகளை மழையாகப் பொழிய, அதைக் கண்டு மகிழ்ச்சியடையும் தோகைமயிலாக இருப்பவளே! சகலகலைகளிலும் வல்ல கலைமகளே! நீ வழங்கும் செழுமையான தமிழாகிய தெளிந்த அமிர்தத்தை மனம் நிறைய உண்டு, உனது அருளாகிய கடலில் குளிக்கும் காலம் என்றுதான் கைகூடுமோ.
- 14 -
 

ܥܝ ݂ܒܸܨܒ
சகலகலா வல்லி மாலை 6LIIIdbfördb858bib :
சகல கலா வல்லியே! நீ வழங்கும் செழுமையான தமிழாகிய தெளிந்த அமிர்தத்தை மனம் நிறைய உண்டு, உனது அருளாகிய கடலில் குளிக்கும் காலம் என்றுதான் வருமோ.
சிறப்பு :
தழிழைச் செழுந்தமிழாகிய தெளிந்த அமிர்தம் என்கிறார். அருள் கடலாக உருவகிக்கப்படுகின்றது. மழை சிந்துவதைக் கண்டு மகிழும் மயிலாக கலைமகள் உருவகிக்கப்படுகிறாள். மழை சிந்தும் போது (தூறும் போது தான் மயில் மழை முகிலைக் கண்டு மகிழ்ந்து ஆடும். அதனால் கவிமழை சிந்தக் கண்டு என்றார். மழைபொழியும் போது மயில் மகிழ்ந்து ஆடுவதில்லை. இருப்பினும் கவிமழை பொழிதல் சிறப்பு என்பதால் பொழிய என உரைவகுக்கப்படுகிறது.
o4 தூக்கும் பனுவல் துறை தோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்
வடநூற் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருனைக் கடலே!
சகல கலா வல்லியே
L66)6OD :
தூக்கும் - ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்கும் அறிவும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் - பலவகையான நூல்களோடு பொருந்திய கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் - சொற்சுவை பொருந்திய நாவன்மையும் பெருகப் பணித்தருள்வாய் - பெருகும் வண்ணம் ஆணையிட்டு அருள்பாலிப்பாய். வடநூற் கடலும் - வடமொழி நூற்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - இதயத்தில் பாதுகாத்து வைக்கப்படுகின்ற செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் - தொண்டர்களது உண்மைதவறாத நாவில் நின்றும் விலகாது காப்பாற்றும் கருணைக் கடலே - - 15 -

Page 10
சகலகலா வல்லி மாலை கருணைக்கடலாக விளங்குபவளே! சகல கலா வல்லியே - சகல
கலைகளிலும் வல்லவளே!
onungül qoSDDIT :
வடமொழி நூலாகிய கடலும், இதயத்தில் பாதுகாத்து வைக்கப்படுகின்ற செழுந்தமிழாகிய செல்வமும், அடியவர்களது உண்மைதவறாத நாவில் நின்றும் விலகாது காத்தருளும், கருணைக்கடலே சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! எதையும் ஆராய்ந்து நடுநிலை தவறாது சீர்தூக்கிப் பார்க்கும் அறிவும், பலவகையான நூல்களோடு பொருந்திய கல்வியும், சொல் இன்பம் பொருந்திய வாக்கு வல்லமையும் என்னிடம் வந்து பெருகும் வண்ணம் அவற்றுக்கு ஆணையிட்டு அருள்பாலிப்பாய்.
65 för5685ò :
கருணைக்கடலே சகலகலாவல்லியே நடுநிலைதவறாத அறிவும்,
பலவகை நூல்களோடு பொருந்திய கல்வியும் சொல்லினிமை
பொருந்திய நாவன்மையும் பெருகும் வண்ணம் அருள்பாலிப்பாய்.
சிறப்பு: வடமொழி, வடநூற்கடல் என்றும், தமிழ் செழுந்தமிழ்ச் செல்வம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
05 பஞ்சப்பி இதம்தரு செய்ய
பைாற்பாத பங்கேருகம், என்
நெஞ்சத் தடத்து அரைாததுஎன்னே!
வநடுந்தாட் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்
Ghöfrö 5 TGÎò vÓDHG5píÎò 666ĪGOD6TIĞts
கஞகத் தவிசைாத்து இருந்தாய்
சகல கலாவல்லியே!
- 16 -
 

சகலகலா வல்லி மாலை
பதவுரை :
பஞ்சு அப்பி இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் - செம்பஞ்சுக்குழம்பு பூசி இன்பத்தைத்தருகின்ற சிவந்த பொன்மயமான பாத தாமரைகள் என் நெஞ்சத் தடத்து அலராததுஎன்னே! - எனது நெஞ்சமாகிய தடாகத்திலே மலராதது என்ன காரணத்தாலோ நெடுந்தாட் கமலத்து - நீண்ட தண்டினைக் கொண்டுள்ள தாமரை மலரில் இருக்கும் அஞ்சத் துவசம் உயர்த்தோன் - அன்னத்தைக் கொடியாக உடையவனாகிய பிரமதேவனது செந்நாவும் - செந்நிறம் பொருந்திய நாவும் அகமும் - அப்பிரமதேவனது உள்ளமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத்து இருந்தாய் - வெள்ளைநிறமான தாமரை மலர் ஆசனம் போலிருக்க அவற்றில் வீற்றிருந்தவளே சகல கலா வல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
வபாழிப்புறை :
நீண்ட தண்டினைக் கொண்டுள்ள தாமரை மலரிலே வசிக்கும் அன்னத்தைக் கொடியாகக் கொண்டவராகிய பிரம்ம தேவரது செந்நிற நாவும் உள்ளமும் வெள்ளைத் தாமரை மலருக்கு ஒப்பானது எனக் கொண்டு அங்கு வீற்றிருக்கும் கலைமகளே! செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்டு பார்வைக்கு அழகையும் இன்பத்தையும் தருகின்ற சிவந்த பொன்மயமான உனது பாத தாமரைகள் எனது நெஞ்சமாகிய தடாகத்திலே மலராதது என்ன காரணத்தாலோ,
(5) Lundb5förd5öö5ŭÒ :
பிரம்ம தேவரது நாவிலும், உள்ளத்திலும் எழுந்தருளியிருக்கும் கலைமகளே! உனது பாததாமரைகள் எனது நெஞ்சமாகியதடாகத்தில் மலராதது என்ன குறைபாட்டால்
சிறப்பு :
கலைமகளின் பாதங்களைத் தாமரை என்றதால் தனது நெஞ்சைத்தடாகம் என்கிறார் புலவர். பாதம் தாமரை ஆகவும், நெஞ்சம் தடாகம் ஆகவும் உருவகிக்கப்பட்டுள்ளது. பிரம்மதேவரது நாவையும், உள்ளத்தையும் வெள்ளைத் தாமரைப்பூவாகக் கருதிய நீ ஏன் என்

Page 11
சகலகலா வல்லி மாலை நெஞ்சத்தைத்தடாகமாகக் கருதவில்லை. என் நெஞ்சத்தடாகத்தில் உன் பாதகமலங்களை மலரச் செய்திருக்கலாமே. உன் பாதங்களை என் இதயத்தில் பதிக்காததற்கு என்ன காரணமோ,
06 பண்ணனும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணனும் பொழுது எளிதுனய்த
நல்காய் எழுதா மறையும்
விண்ணனும் புவியும் புனலும்
கனலும் விவங்காலும் அன்பர்
கண்ணனும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே!
பதவுரை :
பண்ணும் - இசைத்தமிழும் பரதமும்-நாடகத்தமிழும் கல்வியும் - இயற்றமிழும் தீஞ்சொற் பனுவலும் - இனிய சொற்களாலமைந்த நூல்களும் யான் எண்ணும் பொழுது - நான் நினைத்த மாத்திரத்தில் எளிதுஎய்தநல்காய் - எளிதாய் என்னைச் சேருமாறு வழங்கி அருள்வாய் எழுதா மறையும் - வேதங்களிலும், விண்ணும் - ஆகாயத்திலும், புவியும் - பூமியிலும், புனலும் - நீரிலும், கனலும் - நெருப்பிலும், வெங்காலும் - வேகம் பொருந்திய காற்றிலும், அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் - அன்பர்களது கண்ணிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகல கலா வல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
GumplīùLųGODIT :
எழுதாமறை எனப்படும் வடமொழி வேதங்களிலும் பஞ்சபூதங்களிலும், அன்பர்களது கண்ணிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், இனிய சொற்களாலமைந்த நூல்களையும் நான் நினைத்த மாத்திரத்திலே எளிதாகப் பெற்றுக் கொள்ள அருள்பாலிப்பாய்.
- 18 -

சகலகலா வல்லி மாலை
6LIIIdlfördötist) :
எங்கும் நிறைந்திருக்கும் கலைமகளே! முத்தமிழ்ப் புலமையும் நல்ல நூற்புலமையும், நான் விரும்பிய பொழுது எனக்கு எளிதாகக்கிட்ட அருள்பாலிப்பாய்.
ծՈ»fiւ :
கலைமகள், வேதங்களிலும், பஞ்சபூதங்களிலும், அடியவர்களின கண்ணிலும் கருத்திலும் நிறைந்திருப்பவள்."பார்க்கும் இடம் எங்கணும் நீக்கம் அறநிறைகின்ற பரிபூரணானந்தமே” என்பது கலைமகளுக்கும் பொருந்தும். முத்தமிழில் படைப்பாற்றலும், நூற்புலமையும், கலைமகளை நினைக்கும் போது எளிதாகக்கிட்ட வேண்டும்.
O7 LIIIf(6f 6LIIIdbobb GUIId b6III6
பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் பழநின் கடைக்கன்ை நல்காய்
2ளங்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வன்னம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே!
சகல கலா வல்லியே!
ШЕБОЈ6ОП =
பாட்டும் பொருளும் - பாடல்களும் பொருள்களும் பொருளால் பொருந்தும் பயனும் - பொருள்களோடு சேர்ந்த நல்ல பயன்களும், என்பால் கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய் - என்னிடத்திலே வந்து சேரும்படி உனது கடைக்கண் பார்வையைத் தந்தருள்வாய். உளங்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ் - நின் தொண்டராகிய புலவர்கள் உள்ளத்திற் கருக்கொண்டு இயற்றும் கலைநயம் வாய்ந்த தமிழ் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் - இனிய பாலாகிய உணவிலே நீரை விலக்கி பாலை மட்டும்
பருகும் தன்மையைக் காட்டும் வெள்ஓதிமப் பேடே - வெள்ளை - 19 -

Page 12
சகலகலா வல்லி மாலை நிறமான பெண் அன்னமே சகலகலாவல்லியே! - சகல கலைகளிலும்
வல்லவளே!
வபாழிப்புறை :
நின் தொண்டராகிய புலவர்கள், உள்ளத்தில் கருக்கொண்டு இயற்றுகின்ற கலைநலம் மிக்க தமிழ்நூல்களாகிய பாலுணவில், நீரை விலக்கி பாலை எடுக்கும் தன்மையைக் காட்டும் வெள்ளை அன்னப் பேடையே சகலகலைகளிலும் வல்ல கலைமகளே! பாடல்களும், பாடல்களிலே பொருந்தியுள்ள கருத்துக்களும், அக்கருத்துக்களால் பெறும் பயன்பாடும் என்னிடத்திலே வந்து, சேரும்படி உனது கடைக்கண் பார்வையைத் தந்தருள்வாய்.
6. Lindblörd bisbib :
பாலும் நீரும் கலந்தஉணவில் பாலைப்பிரித்துண்ணும் திறனைக் கொண்ட வெள்ளைநிறமான அன்னப்பறவையே சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! நூல்களிலேயுள்ள நல்லவற்றை மட்டும் பிரித்தறிந்து எடுத்துக்கொள்ள உனது கடைக்கண் பார்வையினால் அருள்பாலிப்பாய்.
čilipiju :
கலைமகள் வெள்ளை அன்னப்பேடாக உருவகிக்கப்படுகிறாள்.
பாலோடு நீர் கலந்திருந்தால் பாலைப் பிரித்தெடுத்தல் அன்னத்தின்
இயல்பு. நூல்கற்போரும் இத்திறன் கொண்டவராய் இருத்தல் வேண்டும்.
08 சொல் விற்பனமும் அவதானமும்
b656 to II 6iboo 666)
நல் வித்தையும் தந்துஅடிமை
Glönófons, Ib6sfloOIIIGGOIúb(8örf
செல்விக்கு அரிதைன்று ஒருகாலமும்
ólootbumColD Ib6ðGíð
d566ht oudb05 ondo6 D (8u (BD
சகல கலா வல்லியே!
- 20

சகலகலா வல்லி மாலை
Lέ5όλΙσα»II και
சொல் விற்பனமும் - நாவன்மையும், அவதானமும் - நினைவுப் பயிற்சியும் கவிசொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் - கவிதை பாடவல்ல நல்ல கல்வி அறிவையும் ஆற்றலையும் தந்து அடிமையாக ஏற்றுக் கொள்வாய் நளினாசனம்சேர் செல்விக்கு அரிதென்று - செந்தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்தருளும் மகாலக்குமிக்கு அழியாச் செல்வத்தை வழங்குதல் அரிய காரியம் அதனால் ஒருகாலமும் சிதையாமை நல்கும் - ஒரு காலத்திலும் அழிந்து போகாத தன்மையை வழங்கும் கல்விப் பெருஞ் செல்வப்பேறே! - கல்வியாகிய பெரிய செல்வப் பாக்கியமே சகல கலா வல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
பொழிப்புறை :
செந்தாமரை மலரிலே இருக்கின்ற மகா இலக்குமி தேவிக்கு ஒரு காலமும் அழியாமல் இருக்கும் செல்வத்தை வழங்குவது அரிய காரியமாகும் என்று, கல்வியாகிய அழியாத பெருஞ் செல்வத்தை வழங்குகின்ற பெரும் பாக்கியமே! சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! வாக்கு வன்மையும், அட்டாவதானம் முதல் சதாவதானம் வரையான அவதானங்களையும் கவிதை பாடவல்ல நல்ல கல்வி அறிவு ஆற்றலையும் தந்து என்னை உன் அடிமையாக ஏற்றுக்கொள்வாய்.
வபாருட்சுருக்கம்:
ஒரு காலத்திலும் அழியாதிருக்கும் கல்விப் பெருஞ் செல்வத்தை வழங்கும் கலைமகளே! சகல கலைகளிலும் வல்லவளே! வாக்கு வன்மை, அவதானவன்மை, கவிபாடவல்ல நல்ல கல்வி வன்மை ஆகியவற்றைத் தந்து என்னை உன் அடிமையாக ஏற்றுக்கொள்வாய்.
சிறப்பு :
இலக்குமியால் அழியாச் செல்வத்தைத் தரமுடியாது. சரஸ்வதி தரும் கல்விச் செல்வம் அழியாச் செல்வம். அச் செல்வத்தை
- 2 -

Page 13
சகலகலா வல்லி மாலை வழங்கினால் போதாது. உன் அடிமையாக வைத்திருக்க வேண்டும். இல்லை எனில் அழியாச் செல்வமான கல்வி அழிவுக்குப் பயன்பட்டுவிடும்.
09 சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்
ஒருாணத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலம்தோய் புழைக்கை நற்குத் சறுத்தின் பிடியோடு
9Id void Gorb IbIGOTIb6OL கற்கும் பதாம்புயத் தாளே!
சகல கலா வல்லியே
L15660)II :
சொற்கும் பொருட்கும் உயிராம் - சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராயிருக்கும் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்யார் - உண்மை அறிவின் உருவாக இருக்கும் உன்னைத் தியானிக்கும் ஆற்றல் பெற்றவர் யார் இருக்கிறார். நிலம்தோய் புழைக்கை - நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் உட்துளை பொருந்திய தும்பிக்கையை உடைய நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண - நல்ல பெண் யானையோடு அரச அன்னமும் நாணமடையும்படி நடை கற்கும் பதாம்புயத்தாளே-நடை பயிலும் பாத தாமரைகளைக் கொண்டவளே சகல கலா வல்லியே - சகல கலைகளிலும் வல்லவளே!
வபாழிப்புரை :
நிலத்தைத் தொடுகின்ற உட்துளை பொருந்தியதும்பிக்கையைக் கொண்டநல்ல பெண் யானையோடு அரச அன்னமும் தமது நடையின் சிறப்பின்மையால் நாணமடையும்படி நடைபயிலும் பாததாமரைகளைக் கொண்டவளே! சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக இருக்கும் உண்மை அறிவாகிய மெய்ஞ்ஞானத்தின் வடிவம் இது என்று சொல்லும்படியான வடிவு கொண்டு நிற்கின்ற நின்னைத்தியானிக்கும் ஆற்றல் படைத்தவர் யார் இருக்கிறார்.
- 22 -

சகலகலா வல்லி மாலை
ollurg5Löid5ööli) :
சகலகலாவல்லியாகிய கலைமகளே! மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் போன்றிருக்கும் உன்னை மனத்திலே தியானிக்கும் ஆற்றல் படைத்தவர் யார் இருக்கிறார்.
சிறப்பு :
சகல இலட்சணங்களும் பொருந்திய யானை என்று சொல்வதற்காக "நிலந்தோய் புழைக்கை” அடைமொழி கொடுக்கப்பட்டது. அன்னங்களில் சிறந்த அரச அன்னம் இங்கு சொல்லப்பட்டது.
10 மணிகண்ட வெண்குடைக் கீழாக
(BID/DLILL ID66ĩGOIdbíĩ), GIGổ.
L0LmTmCLL00mmLLS Ts0mmLmmT LL00LLkTmLLLLLLL tttLLLLLLLtaLLLLLLL
IIooLíj (Burroő (IpöoITLD
605ចoL ចាចិតោ uចាំខែ៥smp
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?
GFE56D E56DI I 66ãò6ól (BuLu!
பதவுறை :
மணிகண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் - வெண்கொற்றக் குடையின் கீழாக உலகம் முழுவதையும் கண்ட அரசர்கள் யாவரிலும் மேற்பட்ட சக்கரவர்த்திகளும், எண் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் - எனது பாடலைக் கேட்ட அளவில் என்னை வணங்கும்படி செய்வாய். படைப்போன் முதலாம் - படைத்தற் கடவுளாம் பிரம்மதேவன் முதலாக, விண்கண்ட தெய்வம் - வானகம் கண்ட தெய்வங்கள் பல்கோடி உண்டேனும் - பலகோடி உண்டு என்று கூறினாலும், விளம்பில் உண்போல் - ஆராய்ந்து சொன்னால் உன்போன்ற, கண்கண்ட தெய்வம் உளதோ - புறக்கண்களால் காணப்பெற்ற தெய்வம் இருக்கிறதோ சகல கலா வல்லியே! - சகல
கலைகளிலும் வல்லவளே!
- 23 -

Page 14
சகலகலா வல்லி மாலை
பொழிப்புறை :
படைத்தற் கடவுளாம் பிரம்மதேவன் முதலாக ஆகாயத்தில் இருப்பதாகக் கண்டு கொண்ட தெய்வங்கள் பலகோடி இருப்பினும், உண்மையாகச் சொல்லப்போனால் உன் போன்ற கண்கண்ட தெய்வம் அங்கு இருக்கின்றதோ? சகல கலைகளிலும் வல்ல கலைமகளே! இந்தப் பூமி முழுவதையும் தமது வெண்கொற்றக் குடையின் கீழாகக் கொண்டு ஆட்சிபுரியும் மன்னர்கள் யாவரிலும் மேம்பட்ட சக்கரவர்த்திகளும் எனது பாடலைக் கேட்ட மாத்திரத்திலே என்னை வணங்கும்படி செய்வாய்.
65īör böööĪò :
கண் கண்ட தெய்வமாக விளங்கும் 560)6OLD5 (86T சக்கரவர்த்திகளும் என் பாட்டைக் கேட்ட அளவில் என்னை வணங்கும் படியாக அருள்பாலிப்பாய்.
őFMDĩùL :
விண்கண்ட தெய்வம் பலகோடி இருப்பினும் கண்கண்ட தெய்வம் கலைLDகளே
- 24
 


Page 15
குல ஹவலற் உள் உள்ளதறிஇவருள்
இதுறிவுேதத்தின்இ கள்விஅறிறமுனிவற்க கருணைவகுத்து
றகேள்மேஜூறு5 கீதறிவடுறிகுயிலின்கு
இதனைத்தின்னழிலிடை
ൈ
 
 
 

98.60
விகுவுறுறி ரீஇவருவள்
இருறிஹள் ஒலயில்உள்ளுள்
隐 தீதாகி
籌