கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேரும் விழுதும்

Page 1


Page 2


Page 3

வேரும் விழுதும்

Page 4
அகளங்கனின் நூல்கள்
1) 2) 3) 4)
5) 6) 7)
8)
10) 11) 12) 13)
14) 15) 16)
17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31) 32) 33) 34)
“செல்” “வா” என்று ஆணையிடாய் (கவிதை) "சேரர் வழியில் வீரர் காவியம்” (குறுங்காவியம்) “சமவெளி மலைகள்” (அகளங்கன், சு. முரளிதரன் கவிதைகள்) "வாலி” (ஆய்வுநூல் - இரு பதிப்புக்கள்) (அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு 1987) "இலக்கியத் தேறல்’ (கட்டுரைகள்) "நளவெண்பா' (கதை) "அன்றில் பறவைகள்” (நாடகங்கள்) (தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992) “முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்” (வரலாறு) "இலக்கியச் சிமிழ்’ (கட்டுரைகள் - இருபதிப்புகள்) "தென்றலும் தெம்மாங்கும்’ (கவிதைகள்) "பன்னிரு திருமுறை அறிமுகம்” (சமயம்) "மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” (ஆய்வு) "இலக்கிய நாடகங்கள்" (நாடகங்கள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு - 1994, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு 1994) "ஆத்திசூடி" (விளக்கவுரை) "கொன்றை வேந்தன்” (விளக்கவுரை) "அகளங்கன் கவிதைகள்' (கவிதைகள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 1996) வாக்குண்டாம் - விளக்கவுரை (மூதுரை) "சிவபுராணம்” (பொருளுரை) “செந்தமிழும் நாப்பழக்கம்” (பேச்சுக்கள்) "நாமறிந்த நாவலர்” (சிறுகுறிப்புகள்) “நல்வழி” (பொழிப்புரை - விளக்கவுரை) "இசைப்பாமாலை” (இசைப்பாடல்கள்) “கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு” "இலக்கியச் சரம் (கட்டுரைகள்) "வெற்றி வேற்கை" - உரை (நறுந்தொகை) "கூவாத குயில்கள்' (நாடகங்கள்) "திருவெம்பாவை’ உரை - (சமயம்) “பாரதப் போரில் மீறல்கள்’ (கட்டுரை) “சுட்டிக் குருவிகள்” (மழலைப் பாடல்கள்) “சின்னச் சிட்டுக்கள்' (சிறுவர் பாடல்கள்) "நறுந்தமிழ்’ (கட்டுரைகள்)
பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் (ஆய்வு) பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகங்கள்) வேரும் விழுதும் - கட்டுரைகள்
2
 

வேரும் விழுதும்
- அகளங்கன் -
66)]Orfiŝodb — 48
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் WRITERS M07/VATION CENTRE
இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி. A DLLöö6TÜLI, 860516)ö.
T. P. : 065-2226658, 077-6041503 e-mail: okkunaasayahoo.com

Page 5
கொள்ளப்படல் வேண்டும்.
இந்நூலானது தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள உள்ளடக்கமானது, தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்பது கவனத்திற்
இலங்கை தேசிய நூலகம் - வெளியீட்டில் உள்ள பட்டியற் தரவு
அகளங்கன்
அகளங்கன் நா. தர்மராஜா.
ISBN: 978-955-8715 - 52 - 9
வேரும் விழுதும்/ அகளங்கன், - பதிப்பாசிரியர் ஓ.கே.குணநாதன், - மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 2008, - ப.160; ச.மீ.18
விலை: ரூ. 225.00
i. 894.8113 içiçef, 21 i. தலைப்பு
i. குணநாதன், ஓ.கே. பதிப்.
1. இலக்கியக் கட்டுரைகள்
வேரும் விழுதும் VERUM WILUTHUM இலக்கியக் கட்டுரைகள் Essays எழுதியவர்: அகளங்கன் Author : Ahalangan பதிப்புரிமை: CopyRights : #6q5Ln36. Lly, g5jLmy/TTegIT B.A. (Hon.) Mrs. P. Tharmarajah B.A. (Hon.)
Publication:
666fiu:
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (sufu Irragaigih - 48)
முதற் பதிப்பு : ஒக்டோபர் 2008 அட்டை வடிவமைப்பு: சி. பாலேந்திரா (பாலன் போட்டோ) கணணி வடிவமைப்பு: வஜலீலா காதர் முகையதின் அச்சுப்பதிப்பு: ஏ.ஜே. விலை: ரூபா : 225/-
Writers Motivation Centre (Priya Prasuram - 48)
First Edition: October - 2008
Cover Design : S. Balendra (Balan Photo) Type Setting: Jeleela Cader Mohideen
Printers: A.J.
Price: Rs. 225/-
ISBN: 978-955-8715 - 52 - 9
4.

IIILhī Ififfffi
1) வேரும் விழுதும் 6 2) பொங்கிவிழும் செந்தமிழ்த்தேன் பேச்சு 11
3) முன்னுரை 16
4) பதிப்புரை 20
5) தாய்மை அது தெய்வீகம் 23 6) உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றவை 33 7) வீட்டுக்கு விளக்கு வைக்கும் விந்தைக் குருவி 43
8) ஒளவையாரும் சமாதான தூதும் 51 9) மாட்டு வண்டில் முதல் ஆகாய விமானம் வரை 59
10) ஏகலைவனின் கட்டை விரலை 68
11) ஆச்சரியப்படவைக்கும் அக்காலப் போர் 79
12) காக்கைச் சிறகினிலே 87 13) கொலைக்களஞ் சென்ற இரு நிரபராதிகள் 96 14) பாரதத்தில் பாஸ்' நடைமுறை 106
15) பயன்படாத கல்வி 112 16) உருவறியாப் பிள்ளை அழுதது 124 17) விட்டகுறை தொட்ட குறை 133 18) படைத்தவன் மேல் கோபங்கொண்டு 145
19) தனக்குத்தானே இரங்கற்பா பாடியவர் 153

Page 6
வேரும் விழுதும் - ஒரு பார்வை
(p.G1356Tjab Tigb65 M.A.M.Ed. விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா.
வேரும் விழுதும் எனும் நூல் தமிழ்மணி அகளங்கன் அவர்களது முப்பத்திநான்காவது நூலாகும். பல்வேறு காலங்களிலே வெவ்வேறு இதழ்களிலே இவரால் எழுதப்பட்ட பதினைந்து இலக்கியக் கட்டுரைகள் இப்போது தொகுக்கப்பட்டு நூலாக எமது பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. வேரும் விழுதும் என்பது அகளங்கனுடைய பதினைந்து கட்டுரைகளில் ஒன்று அல்ல. இது அக்கட்டுரைகளை முழுமையாகப் பார்ப்பதற்கான அரிய முயற்சியெனலாம். ஆலும் அறுகும் தமிழரின் வாழ்த்தில் சிறப்பிடம் பெறுவன. அறுகுபோல் வேரூன்றி, ஆல்போல் தழைத்து விழுது பரப்பி வையத்துள் வாழ்வாங்கு வாழ நல்வழி காட்டும் கட்டுரைகள் இதிலே உள்ளன.
இன்றைய சராசரி வாசகன் நிலையில் நின்று இந்த நூலைப் பார்க்கும் போது ஓரிரு நாட்களிலே நூலை முழுமையாகப் படித்து விடலாம் என்று கூறுவதற்கில்லை. ஆனால் இந்த நூலில் உள்ள கட்டுரை ஒவ்வொன்றினையும் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியவாறு - ஆர்வத்தைத்
6

வேரும் விழுறும் - அகளங்கன்
தூண்டும் வண்ணமாக எழுதப்பட்டுள்ளமை ஆசிரியரின் ஆற்றலையும் அனுபவமுதிர்ச்சியையும் காட்டுகிறது.
தனிக் கட்டுரைகளிலே ஒருமைப்பாடு காணப்பட்டாலும் ஆய்வாளன் நிலையில் நின்று நூலை முழுமையாகப் பார்க் கையிலே சில விடயங்கள் திரும் பத் திரும் பக் கூறப்படுகின்றமையினையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. உதாரணமாக, காகம் எனும் பறவையின் பண்புகள், ஏகலைவனும் துரோணரும் என்பனவற்றைக் குறிப்பிடலாம். பல்வேறு காலங்களிலே தனித்தனியாக எழுதப்பட்டவற்றைத் தொகுத்து வெளியிடும் போது இந்தக் குறை இருக்கவே செய்யும்.
தனிக்கட்டுரைக்குள்ளேயே மற்றொன்று விரித்தல் ஆக வருவதையும் அவதானிக்க முடிந்தது. "ஒளவையாரும் சமாதானத்துாதும்” எனும் கட்டுரையிலே "ஒளவையாரும் நெல்லிக் கனியும்” எனும் உபகதை இடம் பெற்றமை ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக அமைந்துள்ளது போலத் தெரிகிறது. இரசனை முறைத் திறனாய்வுக் கட்டுரைகளிலே இக் குறைபாடு இல்லாததொன்றல்ல.
இளமைக் காலந் தொட்டுப் பல்வேறு காலகட்டங்களிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கற்ற, கேட்ட இலக்கியக் கதைகள், கருத்துக்கள் என்பன எமது மாணவர்களதும், ஆசிரியர்களதும், சமூகத்தினதும் முன்னேற்றம் கருதி ஒழுங்கமைக்கப்பட்டுக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமெனலாம், பல புதிய விடயங்களும் கண்டு பிடிப்புக்களும் இலக்கியக் கருத்துக்களுடன் இயைபுபடக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இலக்கிய உள நெறிக்கதைகளை, கருத்துக்களை உள்ளவாறு கூறுவோர் எமது நாட்டிலே அருகிவரும் காலத்திலே அகளங்கனின் இலக்கியத்தரமுடைய இவ்வாறான நூல்கள் அரிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை பாராட்டப்பட வேண்டியதாகும்.
7

Page 7
வேரும் விழுதும் அகளங்கன்
புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம், திருக்குறள், மாணிக்கவாசக சுவாமிகள் பாடல் , சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், பெரியபுராணம், கம்பன், ஒட்டக்கூத்தர், ஒளவையார், இரட்டையர் ஆகியோர் பாடிய தனிப்பாடல்கள் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் ஆகியோர் பாடல்கள் கட்டுரைகளிலே உரிய வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட பாடல் பகுதிகளை கதைகள், சம்பவப்பின்னணியுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது அவ்வவ் இலக்கியங்களை இலக்கிய ஆர்வலர்கள் மேலும் தேடிப் படித்துணரத் தூண்டுகோலாக அமையும்.
இந்திய இதிகாசங்களிலே இராமாயணமானது எமது சமூகத்தில் வேரூன்றியதைப்போல மகாபாரதம் வேரூன்றவில்லை. (இலங்கையின் வடமேல் பிரதேசத்தில் உள்ள உடப்பூரைத் தவிர) என்று கூறலாம். இதற்குக் காரணம் மகாபாரதம் பெயருக்கு ஏற்றாற்போல பல கிளைக் கதைகளையும் கொண்டு பரந்து பட்டிருப்பதேயாகும். இந்த மகாபாரதத்தில் இருந்து நாம் பயன் பெறுவதற்கு ஏராளமான விடயங்கள் அதிலே புதைந்து கிடக்கின்றன.
அகளங்கன் அவர்கள் மகாபாரதத்திலே தேர்ச்சிபெற்றவர். 1991 யூலை - ஆகஸ்டு மாதத்திலே தினகரன் பத்திரிகையில் "மகாபாரதத்தில் குட்டிக் கதைகள்’ எனும் தலைப்பில் அவரது பல கட்டுரைகள் தொடராக வெளிவந்த போது தவறாமல் படித்துள்ளேன். பாரதப்போரில் மீறல்கள் (2003) எனும் தலைப்பிலும் ஒரு நூலை எழுதியிருக்கிறார். “வேரும் விழுதும்' என்ற இந்த நூலில் அவர் 'ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரியார் துரோகியா', "ஆச்சரியப்படவைக்கும் அக்காலப் போர் ஆயுதங்கள்”,
“கொலைக்களஞ் சென்ற இரு நிரபராதிகள்,” “பாரதத்தில் பாஸ்
8

வேரும் விழுதும் அகளங்கன்
22
நடைமுறை”, “பயன்படாத கல்வி', "உருவறியாப்பிள்ளை அழுதது” எனும் தலைப்புகளிலே மகாபாரதம் தொடர்பான கட்டுரைகளையும் தந்துள்ளார். இவை மகாபாரதத்தைப் பொருள் உணர்ந்து கற்கத் துணைபுரிவன.
வாலி வதை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து இராமனைக் குற்றவாளியாகக் கண்டவர், நக்கீரரை விதண்டாவாதியாகக் காட்டியவர் இப்போது ஏகலைவனின் கட்டைவிரலை துரோணாச்சாரியார் கேட்டுப் பெற்றுக்கொண்டது சரியென்று நிறுவியிருக்கிறார். இக்கட்டுரையினை படித்தபின் எதிர்வாதம் எழுமாயின் அது கூட இந்நூலுக்குரிய பங்களிப்பென்றே கருதமுடியும்.
"ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டினை.’ என்று ஆங்கில வாணி என்ற கம்டுரையில் சுவாமி விபுலானந்தர் எழுதியதாக, "முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு’ எனும் கட்டுரையில் (இலக்கிய சிந்தனைகள் பக்கம் - 55) க.கைலாசபதி குறிப்பிடுகின்றார். அகளங்கன், ஆரிய அரசன் பிரகத்தன் என்பவன் தமிழ் நாட்டின் மேல் போர் தொடுக்க முனைவதை அறிந்த கபிலர் அவனிடம் சென்று போரைத் தடுக்க தமிழகத்து இயற்கை அழகைப் புகழ்ந்து பாடிய பாட்டே குறிஞ்சிப்பாட்டு (ஒளவையாரும் சமாதானத்தூதும் பக்கம் - 28) என்று கூறிப்பிடப்பட்டுள்ளமை ஒப்புநோக்கி ஆராய்ந்து நயக்கத்தக்கதாகும்.
பாரதி பராசக்தியிடம் காணிநிலம் வேண்டிப்பாடும் பாடலிலே "கத்துங் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்’ எனும் அடி இரசனைக்குரியதொன்றாகும். அகளங் கண் இதற் குக் கொடுக் கும் விளக்கம் வ.அ.இராசரத்தினத்தின் "கத்தும் குயிலோசை” எனும் கட்டுரையில் கொடுக்கும் விளக்கத்துடன் ஒப்புநோக்கத்தக்கது. பாரதிக்கு குயிலின் கூவல் கூட கத்தலாகத்தான் இருந்தமையினால்
9

Page 8
வேரும் விழுதும் அகளங்கன்
அவ்வாறு பாடியதாக அகளங்கன் தம்முடைய 'காக்கைச் சிறகினிலே.” எனும் கட்டுரையில் (பக்கம் - 59) குறிப்பிடுகிறார். வ.அ.இராசரத்தினம் கத்தும் குரல் என்பதற்கு சோகம் என்று அர்த்தம் கொடுக்கிறார்.
விட்டகுறை தொட்டகுறை என்னும் கட்டுரை பண்டிதமணியின் “இலக்கியவழியில்’ உள்ள "இரட்டையர்கள்’ எனும் கட்டுரையிலும் பார்க்க வளர்ச்சி பெற்றதாகக் காணப்படுகின்றது. இரண்டு கட்டுரைகளையும் ஒப்புநோக்கிச் சுவைக்கலாம்.
சைவசித்தாந்தம் கூறும் தீட்சை பற்றிய அடிப்படையை எளிமையாக விளங்கிக்கொள்ள "தாய்மை அது தெய்வீகம்” எனும் கட்டுரை உதவும்.
அகளங்கன் அவர்கள் கணித விஞ்ஞானத்துறை ஆசிரியர் என்றமையாற் போலும் அவரிடம் அவதானிப்புத் திறன் மிகுந்திருக்கிறது. இதனை "உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றவை' எனும் அவரது கட்டுரை நன்கு புலப்படுத்துகிறது.
அகளங்கன் அவர்களின் அறிவியற் பார்வை அவருடைய கட்டுரைகள் பலவற்றில் செல்வாக்குச் செலுத்தியமை தெரிகிறது. இவற்றோடு தமிழ்ப்பற்றும் சைவப்பற்றும் இவருக்கே உரித்தான இரசனை முறையுடன் கூறும் திறன்களும் கட்டுரைகளுக்கு வலுச்சேர்க்கின்றன.
நிறைவாக, இந்நூல் தமிழ் இலக்கியங் கற்போருக்கும் கற்பிப்போருக்கும் இலக்கிய ஆர்வலருக்கும் தேவையான பல அடிப்படையான கருத்து விளக்கங்களைக் கொண்டு சிறப்புற்று திகழ்கின்றது. அறிவும் திறனும் மிகுந்து நேர்மனப்பாங்குகள் அருகிச் செல்லும் இக் காலகட்டத்தில் உயர் விழுமியங்களைப் போதிப்பதிலே அகளங்கன் அவர்களுடைய “வேரும் விழுதும்’ எனும் நூல் கூடிய பங்களிப்பை வழங்கும் என்பதில் ஐயமில்லை. 骨
O

பொங்கிவிழும் செந்தமிழ்த்தேன் பேச்சு பங்கமற்ற சங்கக்கவி மூச்சு!
ஈழநிலா (யு.எல்.எம். அஸ்மின்)
தங்கமாய் ஜொலிக்கும் தமிழ் வானை அலங்கரித்து தகதகத்து மின்னுகின்ற தாரகைகள் நடுவிலே, தளராத தன் இலக்கிய தாகத்தினால், தமிழ் மோகத்தினால், கலை வேகத்தினால், கவியாகத்தினால் தண்மதியாய் இலங்குபவர் தமிழ் மாமணி அகளங்கன் அவர்கள்.
தமிழால் ஒருநாள் வளம் பெற்றவர்கள் தமிங்கிலத்துக்கு தாலிகட்டி, தமிழை பேசாது வேலிகட்டி, கன்னித் தமிழை கற்பழித்து, கழுத்தறுத்துக் கொண்டிருக்க, தமிழில் தோய்ந்து தமிழை ஆய்ந்து, தமிழில் சாய்ந்து, தமிழைமேய்ந்து ஓய்ந்து போகாமல் ஒருசிலர் ஒசைப்படாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். சங்கத் தமிழை பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய தமிழை வளப்படுத்தும் இமயங்களின் வரிசையில் தன்னையும் பதிப்பித்தவர். தினம் தினம் புதுப்பிப்பவர் தமிழ்மாமணி
அகளங்கன்.
“வாசி வாசிக்கப்படுவாய்’ என்பதற்கமைய கண்ணாமூச்சி ஆடுகின்ற காற்சட்டைப் பருவத்தில் புத்தகப் பூமியில் புதைந்து
11

Page 9
வேரும் விழுதும் - அகளங்கன்
போனதால் இன்று இவர் வாசிக்கப்படுகின்றார் பலரால் நேசிக்கப்படுகின்றார்.
“தோன்றிற் புகழொடு தோன்றுக அ.திலார் தோன்றலிற் தோன்றாமை நன்று’ என்கின்ற வள்ளுவரே, “தெய்வத்தால் ஆகாதெனினும்: முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’
என்று கூறுகின்றார். அந்த வகையில் அன்னை மடியில் அவதரிக்கும் போதே புத்தியீவியாக இவர் புகழ் பெறாவிட்டாலும் இன் று தன் விடாமுயற் சியால் தமிழுலகை வியப்பிலாழ்த்தியுள்ளார். இவர் போன்ற தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் வாசிப்பதின் மூலம் வளம் பெற்றுக் (OET6f 6T6)To.
வவுனியா மாவட்டத்தில் “பம்பைமடு’ என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் அகளங்கன். படைப்புலகில் பல பரிணாமங்களைக் கண்டவர். பரிமாணங்களைக் கொண்டவர். இயற்பெயர். நா.தர்மராஜா. 1970களில் இருந்து எழுத ஆரம்பித்த இவர் இலக்கியம். கவிதை, நாடகம், சிறுவர்பாடல், கட்டுரைகள் உள்ளடங்கலாக முப் பதுக் கு மேற்பட்ட நூல் களை
வவுனியா தமிழ்மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற காலத்திலேயே கலை இலக்கியத்தோடு காதல் ஏற்பட்டதாம். வில்லுப்பாட்டு, பேச்சு முதலானவற்றிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபடத் தொடங்கினார்.பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் க.பொ.த(உ/த) கற்கும் பொழுது கவியரங்குகளில் பங்கு பற்றும் வாய்ப்புக் கிட்டியது. அதன் மூலம் அங்கே தன்னைப் புடம் போட்டுக்கொண்ட கவிஞர் யாழ்ப்பாண பல்கலைக்களகத்தில் கற்ற காலத்தில் கவிதை,
12

வேரும் விழுறும் جس سے அகளங்கன்
சிறுகதை, கட்டுரை, நாடகம், பேச்சு ஆகிய துறைகளில் F(Bull'_LIT).
கணித விஞ்ஞானத் துறையில் கற்று அத்துறையில் ஆசிரியப் பணி புரிந்த போதும் சுயமாக பழந் தமிழ் இலக்கியங்களைக் கற்று பாகு பொங்கும் பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை பாங்காய் எழுதி வெற்றிப் பதாகையோடு பவனி வரத் தொடங்கினார். அக்காலத்தில் சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி.சிவஞானசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி இலக்கியச் சிமிழ், இலக்கியத்தில் நகைச்சுவை என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு வாலி - கொலைச்சரமும் கேள்விச் சரமும் என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர் கட்டுரை ஒன்றையும் எழுதினார். தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல ஆகிய பத்திரிகைகளிலும் பல சஞ்சிகைகளிலும் பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் மட்டும் நில்லாது பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகளின் மூலம் பலரையும் ஆகர்சித்துள்ளார்.
வானொலி, தொலைக் காட்சி எண் பவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கியவர் 70 களின் பிற்பகுதியிலே இவரது மெல்லிசைப் பாடல்கள் உலாவரத் தொடங்கின. அதில் “சேற்று வயல் காட்டினிலே’ என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ்பெற்ற பாடல். 80களின் ஆரம்பத்தில் வானொலியில் பல சொற்பொழிவுகளை ஆற்றியவர். ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். 90 களின் பிற் கூறுகளில் இருந்து கவியரங்கம், கவிதைக் கலசம் என ஏறக்குறைய 100 நிகழ்ச்சிகள் நடத்தி இளங் கவிஞர்களது பல கவிதைகளை வானலை வளியே தவழவிட்டுள்ளார்.
13

Page 10
வேரும் விழுறும் அகளங்கன்
இவரின் கவிஞர் ஜின்னாவின் “ இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு” என்ற ஆய்வு நூல் தமிழ் நாட்டு ஆளுனர் பாத்திமா பீவீயினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியாரின் சுதந்திர பாடல்கள் - ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப் பட்டுள்ளது. “வாலி’ ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணை நூலாக பயன்படுகின்றது. ஏற்கனவே வெளியிட்ட 30 நூல்களோடு கம்பனில் நான் (கட்டுரைகள்) தமிழர் - (கட்டுரைகள்) பாரதியாரும் பாவையரும் (ஆய்வு) ஆகிய நூல்கள் வெளிவர இருக்கின்றன. இவரது பல்துறை ஆற்றல்களை கண்ணுற்ற பல நிறுவனங்கள் மன்றங்கள் இவரை பல தடவை விருதுகள் பட்டங்கள் பொன்னாடைகள், பொற்கிழிகள் வழங்கி கெளரவித்துள்ளன.
பட்டங்கள் * காவிய மாமணி - வவுனியா இந்துமாமன்றம் (1990) * தமிழ்மணி - இந்து கலாச்சார அமைச்சு (1993) * திருநெறிய தமிழ் வேந்தர் - யாழ். திருநெறிய தமிழ்ச்சங்கம்
(1995) கவிமாமணி - யாழ். மெய்கண்டார் ஆதீனம் (1997) தமிழறிஞர் - கொழும்பு தமிழ்ச் சங்கம் (1998) பல்கலை எழில் - வவுனியா நகரசபை (1998) புராணபடன புகழ் தகை - வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம். (1999) - * புராணபடன வித்தகர் - அகில இலங்கை கச்சியப்பர்
கழகம். (1999) - * வாகீச கலாநிதி - கொழும்பு ஐயப்ப சுவாமி பீடம் (2002) * சிவனருட் செல்வர் - சிவபுரம் சிவன் கோயில் (2001) அத்தோடு அவுஸ்ரேலியா, பிரான்ஸ், மற்றும் கனடாவிலுள்ள பல அமைப்புக்களிடம் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
14

வேரும் விழுறும் அகளங்கன்
இவரது விருது பெற்ற நூல்களின் விபரம் வருமாறு.
01. அன்றில் பறவைகள (நாடக நூல்) 1992 ஆம் ஆண்டுக்கான
தேசிய சாகித்திய மண்டலப் பரிசு.
02. இலக்கிய நாடகங்கள 1994 ஆம் ஆண்டுக்கான வ.கி.மா.சா.
மண்டலப் பரிசு.
03. அகளங்கன் கவிதைகள “1996 ஆண்டிற்கான வ.கி.மா.சா.
மண்டலப் பரிசு
இவர் தம் கலை இலக்கிய பணிக்காக 2000 ஆம் ஆண்டில் வட கிழக்கு மாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார்.
இவர் போன்ற நல்லறிஞர்களின் நூல்களை வாசகர்கள் தேடிக் கற்பதன் மூலம் தமிழின் தேன் சுவையை அதன் தேவ சுகத்தை நுகர்ந்து களிப்புறலாம் என்பது திண்ணம்.
நன்றி :- ஈழநிலா. (உதுமா லெவ்வை முஹம்மட் அஸ்மின்) சுடர் ஒளி பத்திரிகை : ஒக், 14 - ஒக், 20 - 2007
15

Page 11
முன்னுரை
அகளங்கன்
தமிழிலக்கிய அறிமுகம், இரசனை, ஆய்வு, விமர்சனம் என்று பல வகையில் பெயரிடக்கூடிய வகையில் எனது இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளிவருகின்றது.
எனது இலக்கியத் தேறல், இலக்கியச் சிமிழ், இலக்கியச் சரம், நறுந் தமிழ் ஆகிய இவ் வகையான கட்டுரைத் தொகுப்புக்களுள் இவ் “வேரும் விழுதும்” கட்டுரைத் தொகுப்பு சற்று வித்தியாசமாகத் தெரியும்.
இருப்பினும் இன்றைய மாணவர்களதும், இளைஞர்களதும் தமிழிலக்கிய அறிவு வளர்ச்சிக்கும், தமிழ் உணர்வு வளர்ச்சிக்கும், இந் நூலும் எனது ஏனைய நூல்களைப் போல பெரும் பங்காற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
ஒருவன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அவனது கட்டாயக் கடமை என்றே கருதுகின்றேன். அனுபவப் பகிர்வினாலேதான் இன்றைய உலகு இவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.

வேரும் விழுறும் அகளங்கன்
எனது வாழ்க் கை அனுபவங்களை வாசிப் பு அனுபவங்களோடும் யோசிப்பு அனுபவங்களோடும் பொருத்தி, ஒருமைப்பாடு கண்டு, அவற்றை இலக்கியப் படைப்புக்களாக்கி தமிழ் கூறு நல்லுலகிற்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கிவருகின்றேன்.
பழந்தமிழ் இலக்கியம் பலருக்கு பாகற்காயாக கசப்பதை நான் அறிவேன். அதேவேளை பாகற்காய் நல்ல மருந்து என்பதை யாரும் மறுக்க முடியாது.
பாகற் காயையும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சுவையோடு சமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் வெற்றி கண்டுள்ளேன். எனது பழந்தமிழ் இலக்கியப் படைப்புக்கள் யாவும் பலராலும் பெரிதும் வரவேற்கப் பட்டுள்ளன.
நோயாளிக்கு விருப்பமானதைக் கொடுப்பதல்ல வைத்தியரின் கடமை, நோயாளிக்குத் தேவையானதை கொடுப்பதே வைத்தியரின் கடமை.
நோயாளிக்குத் தேவையானதையே நோயாளியின் விருப்பத்திற்குரியதாக மாற்றிக் கொடுத்துவிட்டால் இருவர் நோக்கங்களும் நிறைவேறிவிடும்.
கசக்கும் மருந்தைக் குடிக்க விரும்பாத பிள்ளைக்கு இனிக்கும் தேனைக் கொடுத்து தேனுக்குள் மருந்தைக் கலந்து விடுவது வைத்தியரின் திறமையல்லவா.
எனது பழந் தமிழ் இலக் கிய முயற்சிகளும் அவ்வகையானவையே. இம் முயற்சியில் வெற்றி கண்டதால்தான் தொடர்ந்தும் இத்துறையில் ஈடுபட்டு வருகின்றேன்.
எனது வாலி, மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்
17

Page 12
வேரும் விழுதும் அகளங்கன்
- ஆய்வு, பாரதப்போரில் மீறல்கள், கவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு, பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ஆகிய ஆய்வு நூல்கள் பலரதும் பாராட்டைப் பெற்றன.
அந்நூல்களை வாசித்துப் பயனடையும் வாசகர்கள் எனது ஏனைய கட்டுரை நூல்களை வாசித்து வளர்ச்சியடைந்து அந்நூலைத்தேடி வாசிக்கிறார்கள் என்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வாசகர்களின் வாசிப்புத் தரத்தை உயர்த்தினால் தான் நல்ல படைப்புக்களை வாசிக்க முடியும். இந்நூலும் வாசகரின் வாசிப்புத் தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இந்நூலுக்கு நல்லதோர் ஆய்வுரையை வழங்கிய வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு.மு. கெளரிகாந்தன் அவர்களுக்கு என் நன்றிக்ள்.
இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கு என் நன்றிகள்.
எனது நறுந்தமிழ் நூல் வெளியீட்டுக்கும், மற்றும் பல வெளியீடுகளுக்கும் பெரும் உதவிபுரிந்த சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாமி ஐயா அவர்களுக்கும், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜா அவர்களுக்கும் என்றும் என் நன்றிகள் உரியன.
எனது நூல் ஆக்க முயற்சிகளில் துணை நின்று என்னை
எழுதத் தூண்டிக் கொண்டிருக்கும் என் அன்புக்குரிய அருமை
நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல
வார்த்தைகளில்லை. அவரது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின்
பிரியா பிரசுரம் மூலம் எனது கூவாத குயில்கள், பாரதப் போரில்
மீறல்கள், சுட்டிக் குருவிகள், சின்னச் சிட்டுக்கள், நறுந்தமிழ்,
18

வேரும் விழுறும் அகளங்கன்
வாலி (முன்றாவது பதிப்பு), பாரதியாரும் பாஞ்சாலி சபதமும ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்நூலாக்கத்திற்கும் ஆலோசனை வழங்கிய நண்பன் திரு.செ. சண்முகநாதன் அவர்களுக்கும் எனது சகல நூல்வெளியீடுகளுக்கும் கைகொடுத்துதவி ஊக்குவித்து வரும் அருட்கலை வாரிதி சு. சண்முகவடிவேல் அவர்களுக்கும், என் தம்பி க.குமாரகுலசிங்கம் அவர்களுக்கும் என் நன்றிகள்.
ஆலோசனைகளை வழங்கியதோடு பிரதியெடுத்தும் திருத்தியும் உதவி, என்னை உற்சாகப்படுத்தியும், என் ஆக்கங்களின் முதல் வாசகியாகவும் முதல் விமர்சகியாகவும் விளங்கும் என் மனைவிக்கும்.
இந்நூலைப் படித்து இன்புறும், பயனுறும் அனைத்து இலக்கிய நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.
அன்புடன், அகளங்கன்
90. திருநாவற்குளம் ഖഖങ്ങിult.
19

Page 13
பதிப்புரை
ஒ. கே. குணநாதன் மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
"வேரும் விழுதும்
அழகான பெயர். இது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 48வது வெளியீடாக வரும் தமிழறிஞர் அகளங்கன் எழுதிய நூலின் பெயர்.
மனிதன் உயிர் வாழுவதற்கான அடிப்படை இருப்புகளில் மரமும் ஒன்று. அந்த மரம் அழிந்து விடாமல் இருப்பதற்கு அந்த மரத்தினைத் தாங்கி நிற்கிறது வேர். இந்த வேரினால் மரமும் வாழ்கிறது; மனிதனும் வாழ்கிறான்.
சில வேளைகளில் இயற்கை அனர்த்தங்களும் செயற்கை அனர்த்தங்களும் வேரோடு பிடுங்கி மரத்தை வீழ்த்தி விடுகின்றன.
இயற்கை அனர்த்தமாயினும் செயற்கை அனர்த்தமாயினும் தாக்கி மரத்தை வேருடன் பிடுங்கி அழித்து விடாமல் தடுத்து விடுவதற்காக ஆலமரம் போன்ற சில மரங்களில் விழுதுகள் அம்மரத்தை தாங்கி நிற்கின்றன. இவ் விழுதுகள் இலகுவில் மரத்தை வீழ்த்த விடுவதில்லை. பலமான மரமாகவும் வேராகவும் செயல்படுகின்றன.
மாற்றங் கண்டு வரும் இன்றைய இலக்கிய உலகில் பழந்தமிழ் இலக்கியங்கள் அழிவு நிலையை எதிர்கொண்டுள்ளன. அவை அழிந்து விடாமல் இருப்பதற்கு பலமான வேர்கள் அவசியமாகின்றன. வேர்கள் இருந்து விட்டால் மட்டும் அதனை காப்பாற்றி விட முடியுமா என்ற அச்சம் தோன்றியுள்ளது. அவை வேரோடு சரிந்து விடாமல் இருக்க பலமான விழுதுகளும் தேவைப்படுகின்றன.
20

வேரும் விழுதும் - அகளங்கன்
அந்த விழுதுகளான நல்ல பழந்தமிழ் இலக்கிப் படைப்புக்களும் வெளிவர வேண்டும்.
அந்தப் பணியை சிறப்பான வழியில் செய்து வருபவர்கள் ஈழத்தில் ஒரு சிலரே இருக்கின்றனர். அவர்களில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவர் தமிழறிஞர் அகளங்கன்.
ஏலவே, இவர் வாலி, இலக்கியத் தேறல், இலக்கியச் சிமிழ், இலக்கியச்சரம், பாரதப் போரில் மீறல்கள், நறுந்தமிழ், பாரதியாரும் பாஞ்சாலி சபதமும், மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் (ஆய்வு) ஆகிய நயமிகு இலக்கிய நூல்களைத் தந்தவர்.
இவற்றில் வாலி (மீள்பதிப்பு), பாரதப் போரில் மீறல்கள், நறுந்தமிழ், பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ஆகிய நூல்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டு வைத்தது.
இவற்றைவிட சின்னச்சிட்டுக்கள், சுட்டிச் குருவிகள், கூவாத குயில்கள் ஆகிய நூல்களுமாக அகளங்கனின் 7 நூல்கள் வெளியிடப்பட்டன.
இது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினூடாக வெளிவரும் அவருடைய 8வது நூலாகும்.
நூல் வெளியிடும் பணி என்பது மிகவும் சிரமமான பணியாகும். அச்சிரமத்தின் மத்தியிலும் இப்பணியை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதிலும் எனது எழுத்துப் பணியின் மத்தியில் தனிநபராக இதனை நகர்த்திச் செல்வது என்பது இன்னும் கடினமானதுதான்.
ஆனாலும், என் தமிழுக்கு என்னால் ஆனதைச் செய்கின்றேனே என்ற மனத்திருப்தி என்னை உற்சாகமாகச் செயற்படத் தூண்டுகிறது. அவ்வளவுதான்!
இன்னும் தமிழறிஞர் அகளங்கனின் பல நூல்கள் இம்மையத்தினுாடாக வெளிவரும் என்ற நம்பிக்கையுண்டு. வெளிவரும்.
மீண்டும் இன்னுமொரு நூலில் சந்திப்போம்.
21

Page 14

01 தாய்மை அது தெய்வீகம்
யாருக்கு யார் பிள்ளையாகப் பிறப்பது என்பதும், யாரை யார் பிள்ளையாகப் பெறுவது என்பதும், ஆராய்ச்சியினால் அறிய முடியாத, சிந்தனைக்கெட்டாத, சாதாரண காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இது தேவரகசியம்.
இரண்டு உயிர்களுக்கிடையிலான உறவை, இறைவன் எப்படி ஏற்படுத்துகிறான் என்பதை இந்து சமயம் விளக்கமாகச் சொல்கிறது.
இன்றைய உலகப் பெரும் சமயங்களுக்குள்ளே இந்து, பெளத்தம் ஆகிய இருசமயங்களும் மட்டும் தான், தாய் - சேய், தந்தை - பிள்ளை, சகோதரன் - சகோதரி, கணவன் - மனைவி, உறவினர்கள், நண்பர்கள், இறைவனாலே எப்படிப் பொருத்தப்படுகின்றார்கள் என்பதற்கு விளக்கம் சொல்கின்றன.
ஏனெனில் இவ்விரு சமயங்களும் ஊழ்வினை என்று சொல்லப்படுகின்ற மறுபிறவிக் கோட்பாட்டை தம்மகத்தே கொண்டுள்ளன.
அதனால் இன்னாருக்கு இன்னார் பிள்ளையாக வரவேண்டும், இன்னாருக்கு இன்னார் தாயாக வரவேண்டும் என்ற ஊழ் - விதி முற்பிறப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.
23

Page 15
வேரும் விழுறும் அகளங்கன்
சைவ சமயத்தில், சிவபெருமானின் கட்டளைப்படி, படைத்தற்கடவுளாகிய பிரமதேவனாலே, பழம் பிறவியின் பாவ புண்ணியக் கணக்கிற்கேற்ப இப் பிறவி அமைக்கப்படுகிறது.
இதைத்தான் தலை எழுத்து என்றும், பிரமன் எழுதிய எழுத்தென்றும் சொல்கிறோம்.
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும் அழுது தொழுது நின்றாலும்
அதிலோர் எழுத்தும் அழியாது.
என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றும், எமது புராண இதிகாச காப்பியக் கதைகளும் எல்லாம், இதை உறுதி செய்கின்றன. ஊழாகிய விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்கிறது இந்து சமயம்
இயந்திரங்கள் பழுது பார்க்கப்படுகின்ற இடத்தில் (கராஜ்) பலவகை வாகனங்களின் உதிரிப் பாகங்களையும் கழற்றிப் போட்டுவிடுவது போன்றது, பல உயிர்களும் ஓரிடத்தில் சென்று சேர்வது என்று கொண்டால்; ஒரு, கைதேர்ந்த பொறிநுட்பவியலாளன் (மெக்கானிக்) அந்த அந்த வாகனங்களுக்குரிய உதிரிப்பாகங்களைக் கவனமாக எடுத்து, அந்த அந்த வாகனங்களில், உரிய முறையில் பொருத்தி விடுவதைப் போன்றதுதான், உயிர்களையும் உறவுகளோடு பொருத்திவிடுகின்ற செயல் என்று ஒரு வகையாகச் சொல்லலாம்.
அதாவது பேருந்து வண்டிக்குரிய உதிரிப்பாகங்களை பேருந்து வண்டியோடும், மோட்டார் சைக் கிளுக்குரிய உதிரிப்பாகங்களை மோட்டார் சைக்கிளோடும் பொருத்தி விடுவதைப் போன்றது.
இந்த உறவுகளுக்குள்ளே, தாய் - பிள்ளை, கணவன் -
24

வேரும் விழுதும் அகளங்கன்
மனைவி ஆகிய இரண்டு உறவுகளும் மிகவும் முக்கியமானவை.
கணவன் - மனைவி உறவு, இன்று பெருமளவுக்கு விளங்கிக் கொள்ளப்படாத காரணத்தினால் போற்றப்படுகின்ற உறவாக இல்லாமற் போய்க் கொண்டிருக்கிறது.
நாட்டுக்கு நாடு இவ்வுறவு மாறுபட்டுக் கொண்டு போனதாலும், மாற்றப்படக்கூடியதாக இருப்பதாலும் இவ்வுறவு பெருமையை இழந்துவிட்டது எனலாம். ஆனால் தாய் - பிள்ளை என் கின்ற உறவு மட்டுமே தான், இன்று வரையில் போற்றப்படுகின்ற ஓர் உறவாக இருந்து வருகின்றது.
புனிதமானதாகப் போற்றப்படுகின்ற இவ்வுறவு, இன்னும் நீடிக்கும் என்று நம்புவோம்.
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்னும் நால்வகையாக உயிரினங்கள் தோன்றுகின்றன என்று சைவசமயம் சொல்கின்றது.
அண்டசம் என்பது முட்டையில் இருந்து தோன்றுகின்ற உயிரினம். பாம்பு, தவளை, மீன், பறவை முதலானவற்றை இவ்வகையினவாகக் குறிப்பிடலாம். அண்டம் என்றால் முட்டை என்றும், "சம்” என்றால் பிறந்தது என்றும் பொருள். எனவே அண்டசம் என்பது முட்டையில் இருந்து பிறந்ததைக் குறிக்கும்.
சுவேதசம் என்பது வியர்வையில் இருந்து தோன்றுகின்ற உயிரினத்தைக் குறிக்கும். கிருமி, புழு, பேன் முதலியன வியர்வையில் இருந்து தோன்றுகின்ற உயிரினங்கள் என சைவசமயிகள் கருதுகிறார்கள். சுவேதம் என்றால் வியர்வை என்று பொருள். எனவே சுவேதசம் என்றால் வியர்வையில் இருந்து தோன்றியது என்று பொருள்.
உற்பிச்சம் என்பது வித்து, வேர் முதலியவைகளில் இருந்து
25

Page 16
வேரும் விழுதும் அகளங்கன்
தோன்றுகின்ற உயிரினங்களைக் குறிக்கும். அவை மரம், செடி, கொடி முதலியன. "உற்பித்” என்றால் மேற்பிளந்து என்று பொருள். எனவே உற்பிச்சம் என்பது மேற்பிளந்து தோன்றியது என்று பொருள்.
சராயுசம் என்பது கருப்பையிலே தோன்றுகின்ற உயிரினங்களைக் குறிக்கும். அவை நாற்கால் மிருகங்கள், மானுடர், தேவர் முதலிய உயிரினங்கள் ஆகும். சராயு என்பது கருப்பாசயப் பையைக் குறிக்கும்.
நான்கு வகைத்தோற்றங்களில் ஏழுவகைப் பிறப்புக்களை ஆன்மா எடுக்கும் என்பது சைவசித்தாந்த விதி, தேவர்கள், மானுடர், நீர்வாழ்வன, பறவை, மிருகம், ஊர்வன, தாவரங்கள், இவையே அவ் ஏழுவகைப் பிறப்புக்களாகும்.
நால்வகைத் தோற்றங்களில், ஏழுவகைப் பிறப்புக்களில், எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கூடாக உயிரினங்கள் தோன்றுகின்றன என்பது சைவசித்தாந்த விதி.
தேவர்கள், பதினொருநூறாயிரம் யோனிபேதங்களுக் கூடாகவும், மானுடர், ஒன்பது நூறாயிரம் யோனிபேதங்களுக் கூடாகவும், நீர் வாழ்வன, பறவை, மிருகம் என்பன ஒவ்வொன்றும் பத்துப் பத்து நூறாயிரம் யோனிபேதங்களுக் கூடாகவும், ஊர்வன, பதினைந்து நூறாயிரம் யோனி பேதங்களுக் கூடாகவும் தோன்றுகின்றன, என்பது சைவசித்தாந்தக் கணக்கு.
இவற்றுக்குள்ளே, சராயுசம் என்று சொல்லப்படுகின்ற, கருப்பையிலே இருந்து தோன்றுகின்ற உயிரினங்களுக்கும், அக்கருப்பையைச் சுமந்திருக்கின்ற உயிரினங்களுக்கும் இடையிலான தாய் - சேய் உறவு மிகவும் வித்தியாசமானது.
இருப்பினும், அண்டசம் எனப்படும் முட்டையில் இருந்து தோன்றுகின்ற உயிரினங்களுக்கும், அம்முட்டைகளை இட்ட 26
 

வேரும் விழுறும் அகளங்கன்
தாய் உயிரினங்களுக்கும், உள்ள உறவும், கண்முன்னாலே காணக்கூடிய சிறப்பு மிக்க உறவாக இருக்கின்றது.
கடவுளின் படைப்பிலே தாய்மையின் மகத்துவம் பற்றி பறவைகளை, விலங்குகளை வைத்து ஆராயும் போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
பகுத் தறி வில் லாததாகச் சொல் லப் படும் அவ்வுயிரினங்களின் தாய்மைக்குத் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தவேண்டியது, பகுத்தறிவோடு கூடிய ஆறறிவு படைத்த மனிதரின் தலையாய கடன் என்றே கருதுகின்றேன்.
கோழி:-
தனது முட் டைகளோடு வேறு கோழிகளின் முட்டைகளையும், தெரிந்தோ தெரியாமலோ அடைகாக்கும் ஒருகோழி, அந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகளை, எவ்வளவு கவனமாகப் பாதுகாக்கிறது என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
பருந்தோ அல்லது வேறு பிராணிகளோ குஞ்சுகளைப் பிடிக்க வந்தால், தன்குஞ்சுகளைக் காப்பதற்காக அவற்றோடு போராடுவதையும், அக்குஞ்சுகளை சிறகுக்குள் அழைத்து, அணைத்துப் பாதுகாத்துக் கொள்வதையும் பார்க்கும் பொழுது, தாய்க்கோழி ஏன் அப்படிச்செய்கின்றது என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம் மிகுந்து கொண்டே செல்கிறது.
கோழி தன் குஞ்சுகளுக்குத் தானே இரை எடுத்து ஊட்டுவதும், குப்பையைக் கிளறிவிட்டு குஞ்சுகள் உண்ண வழிகாட்டுவதும், இரவில் தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை அனைத்துப் பாதுகாப்பதும் ஆச்சரியமானதாகவே இருக்கின்றது.
ஏன் இப்படி எல்லாம் தாய்க்கோழி செய்கின்றது. இந்த
27

Page 17
வேரும் விழுறும் அகளங்கன்
அறிவு இதற்கு எப்படி வந்தது. இப்படிப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய உணர்வு அதற்கு எப்படி வந்தது. ஏன் வந்தது?
சிறிதுகாலம் சென்றபின் தானே கொத்தி விடை துரத்தப் போகின்ற குஞ்சுகள் மேல், அக்குஞ்சுகளின் பாதுகாப்புக் காலம் வரையும் தாய்க்கோழி நடந்து கொள்கின்ற விதம் ஆச்சரியமாக இல்லையா?
us0608
பூனை தனது குட்டிகளைப் பாதுகாப்பதற்காக, ஈன்ற சில நாட்களுக்குள் ஒரே இடத்தில் குட்டிகளை வைத்திருக்காமல், ஏழு இடங்களுக்குத் தூக்கிச் சென்று இடம் மாற்றி வைத்து, அந்தக் குட்டிகளைப் பாதுகாத்து வளர்ப்பதைப் பார்க்கும் போது, பூனைகள் ஏன் இப்படிச் செய்கின்றன என்ற ஆச்சரியம் உங்களுக்கு ஏற்படுவதில்லையா?
பூனை தனது குட்டிகளைத் தனது வாயினால் கவ்வித் தூக்கிச் சென்று, இடம் மாற்றி வைத்துப் பாதுகாப்பதைப் பார்த்த சைவசித்தாந்திகள், ஆண்டவனுக்கும் அடியவனுக்கும் உள்ள ஒரு உறவு நிலையை இச் செயலோடு ஒப்பிட்டு "மார்ச்சால” சம்பந்தம் எனப் பெயரிட்டு வழங்கினர். மார்ச்சாலம் என்பது பூனைக்குரிய ஒரு பெயர்.
66OLD:-
இதை விட ஆச்சரியமான தொன்றுண்டு. நீர் நிலைகளிலே வாழ்கின்ற ஆமைகள், நீருக்கு வெளியிலே சென்று, புதர் மறைவில் மண்ணைத் தோண்டி முட்டைகளை இட்டு மண்ணால் மூடிவிடுகின்றன.
ஆயிரம் முட்டைகள் வரையில் ஆமைகள் ஒரே தடவையில் இடுகின்றனவாம். அந்த முட்டைகளை வேறு உயிரினங்கள்
28
 

வேரும் விழுதும் w அகளங்கன்
குடித்து விடக்கூடாது என்பதற்காக, மண்ணால் நன்றாக மூடி விடுவது மட்டுமன்றி, எந்த இடத்திலே முட்டைகள் மூடப்பட்டிருக்கின்றன என்பதை எதிரிகள் அறியாத வண்ணம், அந்த இடம் முழுவதும் நடந்து திரிந்து காலடிச்சுவடுகளைப் பதித்து விட்டு, நீர்நிலைக்குச் சென்று விடுகின்றன.
முட்டைகள் குஞ்சாக வருகின்ற காலம் நோக்கி, தண்ணீர்க் கரையில் வந்து தாய் ஆமைகள் காத்திருக்க, முட்டையில் இருந்து வெளியேறிய குஞ்சுகள் மண்ணைத் தோண்டிக் கொண்டு வெளியே வந்து, தாய் காத்திருக்கின்ற நீர்க்கரைக்குச் சென்றடைந்து தாயோடு சேர்ந்து விடுகின்றன.
ஆமை தண்ணிருக்குள்ளே இருந்து கொண்டு, தரையிலே, தான் மணலுக்குள் இட்டு மூடி வைத்த முட்டைகளை, மனதுக்குள் நினைக்க, அந்த நினைப்பினாலே அடைகாக்கப்பட்ட முட்டைகள், குஞ்சுகளாக மாறி, தாயிடம் வந்து சேருகின்ற விசித்திரத்தைப் பார்த்த சைவசித்தாந்திகள், குருவுக்கும் சீடனுக்கும் இடையேயுள்ள ஒருவகைப் பிணைப்பை இதன் மூலமாக விளக்கினார்கள்.
ஆமைகள் ஏன் இவ்வகையாக முட்டைகளை இட்டுப் பாதுகாக்கின்றன? வம்ச விருத்திக்காகவா? அல்லது எதிர்காலத் தேவைகளுக்காகவா?
இதனை எண்ணும் பொழுது, அறியும் பொழுது, ஆச்சரியமானதாகவில்லையா? இந்தத், தாய்களுக்கும் குஞ்சுகளுக்கும் உள்ள பிணைப்பிற்குக் காரணமாக எதைச் சொல்லலாம்.?
முதலை:-
முதலைக் குஞ்சுகள் நீர் நிலையிலே நீந்தி விளையாடும்
பொழுது, அக்குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால், தாய் முதலை 29

Page 18
வேரும் விழுதும் அகளங்கன்
வாயைப் பெரிதாக அங்காந்து கொள்ளும். குஞ்சு முதலைகள் நீந்தி வந்து தாயின் வாய்க்குள்ளே புகுந்து கொள்ளும். தாய் முதலை வாயைத் திறந்து குஞ்சுகளை மீண்டும் நீந்தித்திரிய விடும்.
இதனைப் பார்த்து முதலை அன்பில்லாத பிராணி என்றும், தன் குஞ்சையே தின்கின்றது என்றும் சிலர் கருதியிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில் தன் குஞ்சையே தின்கின்ற அன்பில்லாத பிராணி முதலை என்று, முற்காலத்தில் பாடியிருக்கிறார்கள்.
“தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை’ என்பது பழம் பாடல் வரி
காகம்:-
காகம் தனது முட்டைகளோடு குயிலின் முட்டைகளையும் சேர்த்துப் பாதுகாத்து அடைகாக்கின்றது.
தனது குஞ்சுகளோடு குயிலின் குஞ்சுகளுக்கும் இரையூட்டுகிறது. தன் குஞ்சுகளைப் போலவே குயிலின் குஞ்சுகளையும் பாதுகாக்கின்றது. ஆனால், குயிற் குஞ்சுகளை
இனங்கண்டு கொண்ட பின்பு, கொத்தி விரட்டி விடுகின்றது.
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்ற உணர்வு எப்படி ஏற்பட்டது.?
மீன்கள் நீர்நிலைகளிலே முட்டைகளை இடுகின்றன. அம் முட்டைகள் குஞ்சுகளாகும் வரை, தனது பார்வையினாலே அருகிருந்து அடைகாக்கின்றன.
ஆமை எப்படி மனதாலே (நினைப்பாலே) அடைகாத்ததோ,
30

வேரும் விழுதும் அகளங்கன்
அதே போல மீன்கள், பார்வையினாலே அடைகாத்து தம் முட்டைகளைப் பாதுகாக்கின்றன.
இதனை நுட்பமாக அவதானித்த சைவசமயிகள், தனது பார்வையினாலே மக்களைப் பாதுகாக்கின்ற அம்பிகையை, மீனாட்சி என்று அழைத்தனர்.
"அக்கம்” என்றால் கண் என்று பொருள். மீனாட்சி என்பது மீனைப்போன்ற கண்ணுடையவள் என்று பொருள்படும். இங்கு மீன், கண்ணின் வடிவத்திற்கு ஒப்பிடப்படாமல், மீனின் கண்ணின் செயற்பாடு அம்பிகையின் கண்ணின் செயற்பாட்டிற்கு ஒப்பிடப்பட்டிருக்கின்ற நுட்பத்தை அறிந்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
மீன்கள் ஏன் தங்களது முட்டைகளை அவ்வளவு கவனமாக, பார்வையினாலே அடைகாக்கின்றன. அதனாலே தாய் மீன்களுக்கு என்ன லாபம்?
LGS 3
உயிரினங்களுக்குள்ளே தாய்மை உணர்விலே மிகவும் மேம்பட்டதாக, பசுமாட்டையே சொல்கிறார்கள். அதனால்தான் மநுநீதி கண்ட சோழனின் மகன் தேரூர்ந்து சென்று, பசுக்கன்றைக் கொன்றதையும், தாய்ப்பசு நீதிகேட்டு மணி அடித்ததையும் பெரிய புராணம் மிகச்சிறப்பாகச் சொல்லிக் காட்டுகிறது.
தாயப் க் கும் சேய் க் கும் உள்ள உறவையும் , ஆண்டவனுக்கும் அடியவனுக்கும்உள்ள உறவையும் உதாரணம் மூலம் காட்ட விரும்பிய புலவர்கள், தாய்ப்பசுவையும் அதன் கன்றையுமே உதாரணமாக்கினார்கள்.
தான் ஈன்ற கன்றை, தன் நாவினால் நக்கி சுத்தம் செய்கின்ற தாய்ப் பசுவைப் பார்க்கும் போது, தாய்மையின்
31

Page 19
வேரும் விழுதும் அகளங்கன்
உணர்வை தெட்டத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகையிலே, மனித குலத்திலே தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு பத்து மாதகாலம் வரைக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காத உறவு. குழந்தை முதலிலே அறிந்து கொள்வது தாயைத்தான்.
தாயோடு தொடர்புபடுத்தியே ஏனைய உறவுகளை குழந்தை அறிந்து கொள்கிறது. தாயோடு தொடர்புபடுத்தியே மற்றவர்களோடு உணர்வையும் பகிர்ந்து கொள்கிறது.
தாயின் அரவணைப்பாகிய சூடு, செயற்கையாக ஓரளவுக்கு ஊட்டப்பட முடியுமாயினும், தாயன்புக்கு நிகரான அன்பை குழந்தைக்கு ஊட்டவே முடியாது.
குழந்தையின் பசிதீர வயிறு நிறைய வேறுபால்கள் ஊட்டப்பட முடியுமானாலும், தாய்ப்பாலுக்கு நிகரான பாலை உருவாக்கவே முடியாது.
குழந்தைக்கு தாயை முழுமையாகவே பிடிக்கும். இத்தகைய உறவை வேறெங்குமே காணமுடியாது.
தாய்க்கும் சேய்க்கும் இடையேயான புனிதமான, தெய்வீகத் தன்மை பொருந்திய இந்த உறவைப்பற்றி, எவ்வளவோ 9,JITU6)TLD.
“தாய்மை அது தெய்வீகம்”
鲁
32

02 உயிரினங்களிடமிருந்து மனிதன் கற்றவை
உலகிலுள்ள உயிரினங்களை, விலங்கு, தாவரம் என இரண்டு பிரிவுகளாக விஞ்ஞானிகள் பிரித்துப் பார்க்கின்றனர்.
மனிதனை, சிந்திக்கத் தெரிந்த விலங்கு என்று குறிப்பிடுகின்றனர்.
இந்திய விஞ்ஞானி ஜகதீச சந்திரபோஸ் என்பவர் மனிதனும் ஒரு தாவரமே என்று நிறுவினார். இருப்பினும் இன்று அக்கோட்பாடு வழக்கிலில்லை.
தமிழில் விலங்கு என்ற சொல் விலகுதல் என்ற பொருளில் இருந்து வந்தது. மனிதன் மேல் நோக்கி உயரமாக வளர்கிறான். விலங்குகள் அத்தன்மையிலிருந்து விலகி, பக்கம் நோக்கி அகலமாக வளர்கின்றன.
மனிதனைப் போல வளராமல், விலகி வளர்வதால் விலங்குகளுக்கு விலங்கு என்ற பெயர் வந்தது என்பர் தமிழறிஞர்.
மனிதன் விலங்குகளோடும் ஏனைய உயிரினங்களோடும்
காடுகளில் வாழ்ந்துதான் இன்றைய நிலையை அடைந்துள்ளான்.
இன்றும் விலங்கு வாழ்க்கையைக், காட்டுக்குள்ளே
33

Page 20
வேரும் விழுதும் அகளங்கன்
வாழுகின்ற மனிதர்கள் இருக்கின்றார்கள். நாட்டுக்குள்ளேயும்
தான்.
மனிதன் இன்றைய நாகரிக நிலையை அடைய பல
உயிரினங்கள் காரணிகளாக இருந்திருக்கின்றன. அவற்றை இங்கு
பார்ப்போம்.
பூனை:-
பூனை, காலையிலே எழுந்து தனது முன்னங்காலொன்றை உயர்த்தித் திருப்பித், தனது நாக்கினால் நக்கி ஈரப்படுத்தும்.
ஈரப்படுத்தப்பட்ட காலினால் தனது முகத்தைத் துடைக்கும். மனிதன் முகம் கழுவுவதற்கு இதுதான் முன்னோடி எனலாம்.
நாம் தண்ணீரினால், அல்லது வெந்நீரினால் (இடத்தைப் பொறுத்து) முகத்தை நன்றாகக் கழுவிக் கொள்கிறோம்.
குழந்தைகளதும், நோயாளிகளதும் முகங்களை ஈரமாக்கப்பட்ட துணியினால் துடைத்து விடுகிறோமே இது பூனையின் வழிகாட்டலல்லவா.
பூனையின் இன்னொரு செய்கை மிகவும் ஆச்சரியமானது. பூனை, மண்ணைத் தோண்டி மலம் கழித்துவிட்டு, மண்ணைப் போட்டு மூடிவிட்டுச் செல்லும். இதை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?
மனிதரில் பலர் இன்னும் பூனையின் நிலையை அடையவில்லையே!
எனவே, மிருகமாகிய பூனை, மனிதர்களுக்கு, முகம் கழுவவும், பாதுகாப்பாக மலம் கழிக்கவும் கற்றுக் கொடுத்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது.
34

வேரும் விழுறும் அகளங்கன்
தேனீக்கள்:-
மரஞ் செடி கொடிகள் பூப்பூக்கின்ற காலங்களில் பறந்து சென்று, மலர்களிலுள்ள தேனைக் குடித்து அன்றாட உணவை முடித்துக் கொண்டு, எதிர்காலத் தேவைக்காக தேனை எடுத்து வந்து, கூடுகட்டிச் சேமித்து வைக் கும் வழக்கம் தேனீக்களுடையது.
பென்சன் திட்டம், காப்புறுதித் திட்டம், வங்கித் திட்டங்களுக்கெல்லாம், தேனீக்கள் தான் முன்னோடிகள்.
மனிதன் தேனீக்களிடமிருந்து சேமிப்பைக் கற்றுக் கொண்டு விட்டு, தேனீக்களுக்கே துரோகம் செய்துவிடுகிறான்.
காட்டுக்குத் தேனை எடுக்கச் செல்பவர்கள், தேனீக்களை நெருப்பினால் எரித்துக் கலைத்து, தேனீக்களின் உழைப்பைச் சுரண்டி தேனை எடுத்துக் கொண்டுவருகிறார்கள்.
தேனீக்கள் பலவற்றைக் கொன்று விட்டு எடுத்துவந்த தேனை, கடவுளுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
தேனீக்கள் மட்டுமல்ல, எறும்பு முதலான பல உயிரினங்கள் தமது எதிர்காலத் தேவைக்காகச் சேமிக்கும் பழக்கங் கொண்டவை.
இராணித் தேனீயின் பின்னால் ஒருகட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தன்மை தேனிக் களுடையது. மனிதனுக்கு தலைமைத்துவப் பண்பையும், அதற்குக் கட்டுப்படுகின்ற பண்பையும் கற்பித்தவை தேனீக்கள் என்றே சொல்லலாம்.
எனவே தேனீக்களிடமிருந்து சேமிப்பு, தலைமைத்துவப் பண்பு, கட்டுப்பாடு என்பவற்றை மனிதன் கற்றுக்கொண்டான்
6T60T6)TLD.
35

Page 21
வேரும் விழுறும் அகளங்கன்
பறவைகள்:-
பறவைகள் பல, கூடுகட்டி வாழ்கின்றன. வேறுபல உயிரினங்கள் தமக்குரிய பாதுகாப்பான இருப்பிடங்களைத் தாமே அமைத்துக்கொள்கின்றன.
மனிதனின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படும் குரங்குகளுக்கு, கூடுகட்டி வாழத் தெரியாது.
ஆனால் பல சிறிய உயிரினங்கள் கூடுகட்டியே வாழ்கின்றன. தூக்கணாங் குருவிகள் கட்டுகின்ற கூடுகள், குளவிகள் கட்டுகின்ற கூடுகள், கறையான்கள் கட்டுகின்ற கூடுகள் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்த வல்லன.
மனிதனுக்கு வீடு கட்டி வாழ இவைதான் கற்பித்தவை என்று சொல்லலாம் போல் தெரிகிறது.
அதிலும் தூக்கணாங் குருவியின் கூடு, மிக மிக விசேடமானது. அது மட்டுமல்ல, தூக்கணாங் குருவியின் ஒரு செய்கை யாவரையும் வியப்பில் ஆழ்த்த வல்லது.
இன்று வீடுகளுக்குள் விளக்கு வைத்தோ வேறு விதமாகவோ வெளிச்சத்தை ஏற்படுத்துகிறோமே. அச் செய்கைக்கு முன்னோடி, இந்தப் பறவைதான் என்றால் யார் தான் ஆச்சரியப் LILLDTL LojЈЗБ6ii?
தூக்கணாங்குருவி, பச்சைச் சாணத்தை, அல்லது ஈரக் கழிமண்ணைக் கொண்டு போய் தனது கூட்டுக்குள் அப்பிவிட்டு, மின்மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு போய் அதற்குள் பொருத்திவிடும்.
தூக்கணாங்குருவிக்கூடு பிரகாசமாக இருக்கும். கூட்டுக்குத் தேவையான வெளிச்சம் கிடைத்து விடும்.
36

வேரும் விழுறும் அகளங்கன்
பறவைகளிடமிருந்து தான், வீடுகட்டவும், வீட்டுக்கு விளக்கு வைக்கவும் மனிதன் கற்றுக் கொண்டான் என்றால், அது எப்படித் தவறாகும்.
அன்றில்:-
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நாகரிகத்தை உலகுக்கு முதன் முதல் உணர்த்தியவை அன்றிற் பறவைகள் தான். இராமன் வாழ்ந்து காட்டுவதற்கு இப்பறவைகளே முன்னோடிகள்.
அன்றிற் பறவைகள், ஆணும்பெண்ணுமாக எப்போதும் சோடியாகவே இருப்பவை. துணைமாறிச் சேரும் பழக்க மில்லாதவை.
இரவிலே இருபறவைகளும் உறங்கும் போது, இரு கண்களையும் மூடி உறங்குவதில்லை. ஒரு கண்ணால் தன் துணையைப் பார்த்துக் கொண்டு, ஒரு கண்ணை மட்டும் மூடி நித்திரை செய்யும் பறவை இனம் இது.
புறாக்களும் கற்பொழுக்கம் மிக்கவை என்கிறார்கள் அறிஞர்கள். கற்பு, பெண்புறாவிடம் மட்டுமல்ல, ஆண்புறாவிடமும் உண்டு என்று ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள்.
மனிதனுக்கு உயர்ந்த காதல், கற்பு ஒழுக்கத்தைக் கற்பித்தவை அன்றில், புறா முதலான பறவைகள் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.
காகம்:-
காகங்களிடமிருந்து மனிதன் கற்க வேண்டியவை, ஆறு பண்புகள் என்று அறிவுறுத்துகிறார்கள் புலவர்கள்.
அதிகாலை நித்திரைவிட்டெழுதல், எவரும் காணாத
37

Page 22
வேரும் விழுறும் அகளங்கன்
இடத்திலே புணர்ச்சியில் ஈடுபடுதல், மாலையிலே நீராடல், மாலையிலே தவறாமல் தமது கூட்டுக்கு வருதல், ஒன்றாகச் சேர்ந்து உண்ணல், தமது உறவிலே ஒன்று இறந்து விட்டால் கூடி அழுகின்ற உறவாடல் , ஆகிய இவ் வாறும் காகங்களிடமிருந்து மனிதன்கற்க வேண்டிய பண்புகள் என்கிறார் ஒரு புலவர்.
இவை யாவுமே உயர் பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள் தான் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால் இன்று பலர் இவற்றைக் கடைப்பிடிப்பதில்லையே.
எறும்பு;-
எறும்பு சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற ஓர் உயிரினம். இருபத்திநான்கு மணி நேரமும் தூங்காதிருக்கும் உயிரினம் என்கிறார்கள்.
தன்னைப் போல பலமடங்கு பாரமான தனது உணவை இழுத்துச் செல்லும் ஆற்றலை, மனவைராக்கியத்தைப் பெற்றவை.
வரிசையாகக் கட்டுப்பாட்டோடு செல்லுகின்ற இயல்பு கொண்டவை எறும்புகள். இன்று எதற்கெடுத்தாலும் வரிசை வரிசை என்கிறோமே, எறும்புகள் தான் வரிசை முறையை எமக்குக் கற்பித்தவை என்று ஏன் எண்ணக் கூடாது?
நாய்:-
உலகில் பல் வேறு வகையான நாய் இனங்கள் இருக்கின்றன. உருவாக்கவும் படுகின்றன. இதிலே என்ன விசேடம் என்றால், எந்த வகையான நாயாக இருந்தாலும், நாயிடம் இருக்கும் எஜமான விசுவாசம், நன்றி என்ற அந்த அற்புதமான குணம் மட்டும் மாறவில்லை. நன்றிக்குணம் இல்லாது விட்டால் அது நாயில்லை.
38
 

வேரும் விழறும் அகளங்கன்
தனக்கு உணவு போட்டு, அன்பு காட்டி வளர்த்தவனுக்கு விசுவாசமாக இருக்கின்ற அந்தச் செய்ந்நன்றி மறவாப் பண்பு, நாயிடமிருந்து மனிதர்கள் யாவரும் கற்க வேண்டிய பண்பு ஆகும்.
அன்னம்:-
பாலையும் நீரையும் கலந்து வைத்தால், பாலை மட்டும் பிரித்துப் பருகுகின்ற ஆற்றல், அன்னப் பறவைகளிடம் இருந்தது.
நல்லதும், கெட்டதும் கலந்துள்ள இவ்வுலகில், கெட்டதை விலக்கி நல்லதை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதற்கு இப்பறவை இனம் உதாரணமாக்கப்பட்டுள்ளது.
தனக்குத் தேவையானதை மட்டும் பிரித்தெடுக்கின்ற அன்னத்தின் ஒழுக்கம், அன்ன நடை எனப்பட்டது (நடை - ஒழுக்கம்)
இந்த அன்ன நடை, மனிதர் யாவருக்கும் தேவையானதே. இருப்பினும் பெண்களுக்கு அதிகம் தேவை எனக்கருதி, அன்ன நடையைப் பெண்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிற்காலத்தில், அன்ன நடை என்பது, அன்னத்தின் நடந்து செல்கின்ற நடை, வெறும் கால்நடை எனக் குறுகிய பொருள் கொள்ளப்பட்டு விட்டது.
உண்மையில் அன்னத்தின் நடை (ஒழுக்கம்) மிகவும் உத்தமமானது. அன்னம் தாமரைத் தடாகத்திலே வாழும். பாலை அருந்தும். வெண்மையாக, தூய்மையாக இருக்கும்.
இதுதான் அன்ன நடை. இதை யார் இப்பொழுது விளங்கி வைத்திருக்கிறார்கள் கடைப்பிடிக்க.
39

Page 23
வேரும் விழுறும் அகளங்கன்
தூய்மையான அழகிய சூழலிலே வாழ்வதும், தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வதும், தான் தூய வாழ்க் கை வாழ்வதுமாகிய அன்ன நடையை, நாம் கற்கவேண்டியதும், வாழவேண்டியதும் நம் கடமை அல்லவா.
T6060
நீர் நிலைகளிலே சென்று, தும்பிக்கையில் நீரை அள்ளி உடம்பு முழுவதும் வீசி அடித்துக் குளிக்கும் பழக்கம் யானையினுடையது.
யானையை துப் புரவாக அதாவது உடம் பில் அழுக்கில்லாமல் வாழ விரும்புகின்ற ஒரு மிருகம் என்கிறார்கள்.
யானை, நீராடி விட்டு, தெருவிலே வரும்போது,
அழுக்குச் சேற்றிலே கிடந்து புரண்டு விட்டு வருகின்ற பன்றியைக் கண்டால், பன்றிக்கு வழிவிட்டு விலகி ஒதுங்கிச் செல்லுமாம்.
பன்றியின் அழுக்கு, தன்னிலே பட்டுவிடக் கூடாது என்பதற்காக யானை ஒதுங்க, தன்னைக் கண்டு யானை பயந்து ஒதுங்கிச் செல்கிறது என எண்ணிக், கர்வம் கொள்கிறதாம் பன்றி.
பெரியோர்கள் கெட்டவர்களைக் கண்டு ஒதுங்குவதை இதன் மூலம் விளக்கியிருக்கிறார்கள் புலவர்கள்.
யானை தன்உடம்பைக் கழுவி சுத்தம் செய்வதைப் பார்த்து, மனிதனும் பழகியிருக்கலாம் எனலாம்.
கொக்கு-கூகை:-
கொக்கைப்போல, தகுந்த தருணம் வரும்வரை காத்திருக்க
வேண்டும் என்று மனிதன் கற்றுக் கொண்டான்.
40

வேரும் விழுறும் அகளங்கன்
"ஓடு மீன் ஓட, உறுமின் வருமளவும” வாடி இருக்கும் கொக்கு மனிதனுக்குப் புத்திபுகட்டியிருக்கிறது.
பகலிலே கண் தெரியாததால், கூகை காகத்திடம் தோல்வியுற்றது போல, பொறுத்திருக்கும். இரவில் காகத்துக்குக் கண் தெரியாது என்பதை அறிந்து, கூகை காகத்தை இரவில் பிடித்துத் தின்னும்,
காலமறிந்து கருமமாற்ற இப் பறவைகள் தான் உதாரணமாக்கப்பட்டன.
ஆடு, புலி:-
இரு ஆடுகள் - ஆட்டுக் கடாக்கள், ஒன்றோடொன்று சண்டை செய்யும் போது, இரண்டும் சண்டையிலிருந்து விலகிச் செல்வது போல பின்னோக்கிச் சென்றுவிட்டு, வேகமாக ஓடிவந்து முட்டிமோதிச் சண்டை செய்யும்.
அதே போல, புலிகள் தருணம் வரும் வரை தம்மைத் தயார்படுத்தப் பதுங்கி இருந்து விட்டு, திடீரெனப் பாய்ந்து பிடிக்கும்.
"புலி பதுங்குவது பாய்வதற்கு’ என்று இதனைப் பழமொழியாக்கி மனிதன் இதனைப் பயன்படுத்திக் கொண்டான்.
ஆடும், புலியும், போர் முறையை மனிதனுக்குக் கற்பித்திருக்கின்றன. என்று சொல்லலாம்.
கொக்கும், கூகையும், ஆடும், புலியும் மனிதனுக்குக் கற்பித்தவை பெரும் போர்த் தத்துவங்கள் எனலாம்.
41

Page 24
வேரும் விழுறும் அகளங்கன்
சிலந்தி-மீன்-பறவை:-
சிலந்திகள் பின்னுகின்ற வலைகள் மனிதனுக்கு, நெசவுத் தொழிலுக்கு அத்திவாரமாக அமைந்தன. மீன்கள் நீந்துவதைப் பார்த்து படகுகளையும், பறவைகள் பறப்பதைப் பார்த்து, ஆகாய விமானங்களையும் மனிதன் கண்டுபிடித்தான் என்று பாடுகிறார் கவியரசு கண்ணதாசன்
மனிதன், தன்னோடு வாழ்ந்த பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை முறைகளையும் அவதானித்து, அவற்றின் சிறந்த பழக்க வழக்கங்களைத் தனதாக்கித், தன் வாழ்க்கையைச் சீர் செய்து உயர்த்தி, இன்றைய நிலைக்கு வந்துள்ளான்.
மனித நாகரிகம், யுத்தக் கொடுமையால் சிதறிச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மனிதன் மனிதனாக வாழ்ந்தால், இன்னும் நீண்ட காலம், நிம்மதியான அமைதியான அமர வாழ்க்கையை, இப் பூமியிலேயே வாழலாம். சிந்திப்போம். செயற்படுவோம்.
42
 

03 வீட்டுக்கு விளக்கு வைக்கும் விந்தைக் குருவி
புலவன் என்றதுமே அவன் கற்பனை உலகில் சஞ்சரிப்பவன் என்ற எண்ணம் பலருக்கும் வந்து விடுகிறது.
தனது கவிபுனையும் புலமையையும் , அறிவுப் புலமையையும் கொண்டு, உலகுக்கு வழிகாட்டுவதற்காக அவன் பொருள் தேடினானே அல்லாமல், தன் வாழ்வை வளப்படுத்தப் பொருள் தேடவில்லை.
சில புலவர்களுக்குப் பாடுபொருள் எளிதில் கிட்டி விடுவதில்லை. அதனால் தனித்திருந்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள்.
சில புலவர்கள், கற்பனையிலே சில பாடுபொருள்களைக் கண்டு, அவற்றைப் பாடுவார்கள்.
பெரும் புலவர்களுக்கு, அவர்கள் காணுகின்ற காட்சிகள் எல்லாம் பாடுபொருள்களாகவே தென்படும். அவைகளை எல்லாம் பாடிக் குவித்துவிடுவார்கள். மகாகவி பாரதி, இத்தகையதொரு புலவன் எனலாம்.
பொதுவாகவே, புலவனின் உள்ளம் குழந்தையுள்ளம் போன்றதெனக் கருதப்படுகின்றது.
43

Page 25
வேரும் விழுறும் அகளங்கன்
தான் புதிதாகக் காணுகின்ற ஒரு காட்சியில் மனதைப் பறிகொடுத்து இலயித்துப் போதல், அதனைப் பல்வேறு விதமாகவும் விபரித்துக் கூறுதல், குழந்தையின் இயல்பாகும்.
விபரிக்கின்ற முறையிலே குழந்தைக்குக் குழந்தை வேறுபட்டு நிற்கும். இப்பண்பு புலவர்களுக்கும் பொருந்தும்.
வான்குருவி:-
எமது வன்னிப் பகுதியிலே நாம் காணுகின்ற பறவைகளில் ஒன்று தூக்கணாங்குருவி. இது தொங்குகின்ற அழகான கூட்டை மரக்கிளையிலே கட்டி வாழுகின்ற ஒரு பறவை.
அணம் என்பது மேலே எனும் பொருளைக் கொண்ட ஒரு சொல். அண்ணன், அண்ணம் என்ற சொற்கள் எல்லாம் அணம் என்னும் சொல்லோடு தொடர்புபட்டவையே. எனவே தூக்கணாங் குருவி என்பது மேலே தொங்குகின்ற குருவி எனப் பொருள்படும்.
பறவைகளின் கூடுகளுக்குள்ளே தூக்கணாங் குருவியின் கூடு மிகவும் அற்புதமானது. தூக்கணாங் குருவியின் கூட்டைப் போன்றதொரு கூட்டைக் கட்டுவதென்பது மிகவும் கடினமானது. முடியாத காரியம் என்று கூடச் சொல்லலாம்.
ஒளவையார், அரிய காரியங்கள் சிலவற்றைப் பட்டியல் போட்டுப் பாடும்போது, தூக்கணாங்குருவியின் கூடுபோல கூடுகட்டுவது மிகவும் அரிய காரியம் என்று, அதனை முதல் வைத்துப் பாடுகிறார்.
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கு மொவ்வொன் றெளிது.
44

வேரும் விழுறும் அகளங்கன்
இப்பாடலில் “வான் குருவியின் கூடு” என்று ஒளவையார் குறிப்பிடுவது தூக்கணாங் குருவியின் கூட்டையே ஆகும்.
குரங்கும் குருவியும்:-
கெட்டவர்களுக்குப் புத்தி சொன்னால், சொன்னவர்க்குத் துன்பமேற்படுமே அல்லாமல், ஒரு பயனுமில்லை, என்பதனை விளக்குவதற்காக, குரங்கையும் தூக்கணாங் குருவியையும் சம்பந்தப் படுத்திப் பாடப்பட்ட பாடலொன்று விவேக சிந்தாமணி என்னும் நூலிலே உண்டு.
குரங்கொன்று மழையில் நனைந்து வருந்திக் கொண்டு இருந்தது. மரக்கிளையில் தன் கூட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருந்த தூக்கணாங்குருவி, குரங்குக்கு, வீடுகட்டி வாழும்படி புத்தி சொன்னதாம்.
கோபங்கொண்ட குரங்கு, மரத்திலே பாய்ந்து ஏறித், தூக்கணாங் குருவியின் கூட்டைப் பிய்த்தெறிந்து நாசஞ் செய்ததாக அப்பாடல் சொல்கிறது. -
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும். ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடர தாகுமே.
தூக்கணாங் குருவியின் கூடு, எவ்வளவு அழகாக, அற்புதமானதாக இருக்கின்றதோ, அதைவிட அற்புதமான தொன்றுண்டு. தனது கூட்டுக்குள்ளே வெளிச்சம் இருப்பதற்காகத் தூக்கணாங்குருவி கையாண்ட முறைதான் அது.
வீடும் விளக்கும்:-
தூக்கணாங் குருவி, தனது கூட்டிற்குள் வெளிச்சம்
45

Page 26
வேரும் விழுதும் - அகளங்கன்
வருவதற்காகக் கையாண்ட முறையைக் கண்ட புலவர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர்.
"புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார" எனக் கம்பன் பாடுவதற்கு ஏற்பப் புலவர்களும், அப்புதுமையைப் பல்வேறு விதமாகவும் பாடத் தொடங்கிவிட்டனர்.
தூக்கணாங் குருவிகள் தமது கூடுகளுக்குள்ளே வெளிச்சத்தை எப்படி ஏற்படுத்துகின்றன தெரியுமா?
பச்சைச் சாணத்தில், அல்லது களிமண்ணில் சிறிதளவை எடுத்துக் கொண்டு வந்து கூட்டுக்குள்ளே ஒட்டி வைத்துவிட்டு, மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து அதற்குள் பொருத்தி
விடுகின்றன. -
முதன் முதல் தம் இருப்பிடத்திற்கு வெளிச்சத்தை صبر ஏற்படுத்திய உயிரினமாக தூக்கணாங் குருவியைத்தான் சொல்லலாம் போல் தெரிகிறது.
கம்பனும் குருவியும்:-
இந்த விடயத்தைக் கவிச்சக்கரவர்த்தி கம்பன், ஒரு விதமாகக் கையாளுகின்றான்.
தனது இராமாயணத்துப் பால காண்டத்தில், கோசல நாட்டின் வளத்தைப் பாடவந்த கம்பன், கோசல நாட்டுக் குப்பை மேட்டின் சிறப்பின் மூலம் தன் எண்ணத்தை ஈடேற்றுகிறான்.
கோசல நாட்டுக் குப்பை மேடுகளிலே மேய்கின்ற கோழிகள், தமது கால்களால் குப்பைகளைக் கிளற, அங்கே மாணிக்கக் கற்கள் கிடந்து ஒளி வீசுகின்றனவாம்.
கவனிப்பாரற்றுக் குப்பைக்குள் கிடக்கும் பெறுமதி வாய்ந்த மாணிக்கக்கற்களை, மின்மினிப் பூச்சிகள் என நினைத்துத்
46

வேரும் விழுதும் அகளங்கன்
தூக்கணாங்குருவிகள் தூக்கிக் கொண்டு போய்த், தம் கூட்டுக்குள் வைக்கின்றனவாம்.
சூட்டுடைத் தலைச் செந்நிற வாரணந் தாட்டுணைக் குடையத் தகை சான்மணி மேட்டி மைப்பன மின்மினி யாமெனக்
கூட்டி னுய்க்குங் குரீஇயின் குழாமரோ.
பிற்காலப் புலவரும் குருவியும்:-
தூக்கணாங்குருவி, மழைக்கால இருட்டைப் போக்குவ தற்காக, மின்னலாகிய மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து, தன் கூட்டுக்குள் வைக்கும் என்று, அதீதமான ஒரு கற்பனையைக், கார்காலத்தை வர்ணிக்கும் பாடலொன்றில் பாடுகிறார் பிற்காலப் புலவரொருவர்.
கன்னலெனுஞ் சிறுகுருவி
ககனமழைக் காற்றாமல் மின்னலெனும் புழுவெடுத்து
விளக்கேற்றும் கார்காலம். மன்னவனாம் தென்மதுரை
மாவலிவா னனைப்பிரிந்திங் கென்னபிழைப் பென்னவிருப்
பென்னநகைப் பின்னமுமே.
இப்பாடலில் "கன்னல் எனுஞ் சிறுகுருவி” எனப் புலவர் குறிப்பிடுவது தூக்கணாங் குருவியையேயாகும்.
நாட்டார் பாடலில் குருவி:-
மட்டக்களப்பு நாட்டார் பாடலொன்றில், "கன்னிக் கிரான் குருவி
கடும் மழைக்கு ஆத்தாமல்
47

Page 27
வேரும் விழுறும் அகளங்கன்
மின்னி மின்னிப் பூச்செடுத்து
விளக் கேத்தும் கார்காலம”
என வருவதையும் ஒப்பு நோக்கலாம்.
கச்சியப்பரும் குருவியும்:-
கந்தபுராணத்தைப் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார்,
இந்த விடயத்தை இரண்டு வகையாகக் கற்பனை பண்ணிப் பொருத்திக் காட்டுகிறார்.
வள்ளியம்மை திருமணப்படலத்தில் வருகிறது ஒன்று. வள்ளியம் மை தினைப் புனத் தைக் காவல் செய்து கொண்டிருக்கின்றார்.
கலியுக வரதனாம் கந்தப் பெருமானின் இச்சைக் குகந்தவராகிய, வள்ளியம்மையின் தராதரம் புரியாத காட்டு வேடர்கள், அவரைக் கொண்டு போய் தினைப்புனங் காக்க வைத்திருக்கிறார்களே, என்று கவலைப்பட்டுக், கோபப்பட்டுப், பாட்டுப் பாடுகிறார் கச்சியப்பர்.
காட்டிலே எளிதாகக் கிடைத்த ஒரு மாணிக்கத்தை,
அதன் பெறுமதி அறியாத தூக்கணாங் குருவி கொண்டுபோய், ஒரு மின்மினிப் பூச்சியாக நினைத்துக், கூட்டுக்குள்ளே உள்ள இருள் போக்க வைத்தது போல் இருக்கின்றது இச்செய்கை, என்கிறார் கச்சியப்பர்.
“காட்டில் எளிதுற்ற கடவுள்மணி யைக்கொணர்ந்து
கூட்டில் இருளோட்டக் குருகுய்த்த வாறன்றோ
தீட்டுசுடர் வேற்குமரன் தேவியாம் தெள்ளமுதைப்
பூட்டுசிலைக் கையார் புனங்காப்ப வைத்ததுவே"
கச்சியப்பரின் அடுத்த கற்பனை, மிகவும் அற்புதமானது.
48

வேரும் விழுறும் அகளங்கன்
கந்தபுராணத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்ற கற்பனை
அது.
முருகப் பெருமானின் தம்பியாகிய வீரவாகு தேவர், முருகப் பெருமானின் தூதுவனாக, வீரமகேந்திரபுரிக்குச் சூரபன்மனிடம் செல்கிறார்.
வீரமகேந்திர புரியின் அழகைப் பார்த்து வியப் படைகிறார். இவ்வளவு அழகான வீரமகேந்திரபுரி, அழிந்து நாசமாகப் போகிறதே என்ற அவலம் அவருள்ளத்தை அரிக்கிறது.
வீரமகேந்திரபுரி அழிந்து போகக் காரணம், தேவர்களைச் சூரபன்மன் பிடித்து வந்து சிறைவைத்திருப்பதுதான் என்று எண்ணுகிறார் அவர்.
இப்பொழுது அவருக்கு ஒரு காட்சி தென்படுகிறது. வீரமகேந்திரபுரி அழகிய அற்புதமான ஒரு தூக்கணாங்குருவிக் கூடாகவும், சூரபன்மன் அந்த வீரமகேந்திரபுரியைக் கட்டிய தூக்கணாங் குருவியாகவும் தெரிகிறது.
சிறையில் உள்ள தேவர்கள், கூட்டுக்குள் வைக்கப்பட்ட நெருப்புக் கொள்ளிக் கட்டைகளாகத் தெரிகிறது அவருக்கு.
இப் பொழுது அவருக்கு ஒரு அப் பாவித் தூக்கணாங்குருவியின் செய்கை ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு அப்பாவித் தூக்கணாங்குருவி, தனது அழகிய கூட்டிற்குள் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக, மின்மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு வருவதாக நினைத்து, நெருப்புக் கொள்ளியைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டிற்குள் வைத்துவிட்டதாம்.
அந்தச் சிறு நெருப்புக் கொள்ளியால் கூடும் எரிந்து,
49

Page 28
வேரும் விழுதும் அகளங்கன்
குஞ்சுகளும் எரிந்து, தானும் எரிந்து போனதாம்.
இதே செய்கைதான், தேவர்களாகிய நெருப்புக் கொள்ளிகளைச், சூரபன்மனாகிய அப்பாவித் தூக்கணாங்குருவி, வீரமகேந்திர புரியாகிய கூட்டிற்குள் கொண்டு வந்து வைத்த செய்கை.
இதனால் வீரமகேந்திர புரியோடு சூரபன்மனும் அவனது சுற்றமும் அழிந்து போகப் போகின்றன, என்று அருமையாகப் பாடுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை
விரகின்மை கொண்ட குருகார் கச்சோத மென்று கருதிக் குடம்பை
தனினுய்த்து மாண்ட கதைபோல் அச்சோ எனப்பல் இமையோரை ஈண்டு
சிறைவைத்த பாவம் அதனால் இச்சூர பன்மன் முடிவெய்து நாளை
இதனுக்கொர் ஐய மிலையே.
இங்கே கச்சோதம் என்பது மின்மினிப் பூச்சியையும், குருகு என்பது தூக்கணாங்குருவியையும் குறிக்கும் சொற்கள்.
புலவர்கள் தாங்கள் காணுகின்ற அற்புதங்களை எங்கெங்கே கொண்டுபோய், எதெதனோடெல்லாம் பொருத்திப் பார்த்துப் பாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, அற்புதமாக இருக்கிறதல்லவா.
50

04| ஒளவையாரும் சமாதானத் தூதும்
ஒளவை என்ற சொல்லுக்கு தவப் பெண், தாய், ஆரியாங்கனை, ஒளவையார் என்றும், அவ்வை என்ற சொல்லுக்கு தாய், ஒளவையார், தவப்பெண், கிழவி என்றும் கழகத் தமிழ் அகராதி பொருள் தருகிறது.
தமிழிலக்கிய வரலாற்றில் பல ஒளவையார்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். முருகனோடு "சுட்டபழம்' மூலம் பிரபலமான ஒளவையார் ஒருவர். அரியது எது, பெரியது எது, கொடியது எது, இனியது எது, என்றெல்லாம் முருகன் கேட்க விடைப் பாடல் பாடிய ஒளவையார் இவர்.
சங்க காலத்தில் கபிலர், பரணர் முதலான பெரும் புலவர்களோடு சரிசமனாக மதிக்கப்பட்ட ஒளவையார் ஒருவர். அதிகமான், பாரி, பாரிமகளிரான அங்கவை, சங்கவை என்பவரோடு சம்பந்தப்பட்டவர் இவர்.
சீதக் களப. ” எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடிய ஒளவையார் ஒருவர். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரோடு சம்பந்தப்படுத்தப்படுபவர் இவர். பல்லவர் காலத்து ஒளவையாராக இவரைச் சொல்லலாம்.
சோழர் காலத்தில் கம்பன், ஒட்டக் கூத்தன், பின் புகழேந்தி
51

Page 29
வேரும் விழுதும் அகளங்கன்
எனப் பெரும் புலவர்களோடு சர்ச்சைகளில் ஈடுபட்ட ஒளவையார் ஒருவர்.
ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலானவற்றைப் பாடிய ஒளவையார் ஒருவர்.
இப்படிப் பல ஒளவையார்களைப் பற்றிப் பலரும் ஆராய்ந்து பலமுடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
ஒளவையார் ஒருவர் தான். பலர் அல்லர். அவர் நீண்டகாலம், ஏறக்குறைய ஆயிரத்தி ஐந்நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார் என்பது ஒரு முடிவு.
ஒளவையாரும் நெல்லிக் கனியும்
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அங்கே இருந்த மலை ஒன்றில் அரிய நெல்லி மரம் ஒன்றில் இனிய பழம் ஒன்று பழுத்திருப்பதைக் கண்டான்.
அதனை உண்டோர், நெடுங்காலம் வாழ்வார் என்பதறிந்த அம்மன்னன், அவ்வரு நெல்லிக்கனியைப் பறித்து வந்தான்.
தன்னைக் காண வந்திருந்த ஒளவையாருக்கு அந்நெல்லிக் கனியை உண்ணக் கொடுத்தான்.
ஒளவையார் உண்ட பின், அந் நெல்லிக் கனியை உண்டவர் நீண்டகாலம் உயிர் வாழ்வார் என்ற உண்மையை அவருக்குக் கூறினான்.
ஒளவையார் வியப்படைந்தார். கிடைத்தற்கரிய அந்த நெல்லிக் கனியை, அதியமான் தானுண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்தது, ஒளவையார் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே.
52

வேரும் விழுறும் அகளங்கன்
ஒளவையார் அதியமானின் கொடைச் சிறப்பையும், தன்மேல் அவன் வைத்திருந்த பெருமதிப்பின் ஆழத்தையும் எண்ணி, அவனைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடினார்.
அப்பாடலில் "இந் நெல்லிக் கனியின் அருமை கருதாது எனக்குத் தந்து, சாதலை நீக்கிய நீ, நீல மணி மிடற்றுக் கடவுள் போல நிலைபெறுவாயாக’ என வாழ்த்தினார்.
தனக்கு அதியமான் நெல் லிக் கனி கொடுத்த செய்தியையும், நெல்லிக் கனியின் தன்மையையும் அருமையாகப் பின்வருமாறு பாடுகிறார்.
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே. தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின் அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே (புறம் - 91)
"பழைய பெரிய மலையின் குகைக்கு அருகாக உச்சியில் இருந்த சிறிய இலைகளைக் கொண்ட நெல்லி மரத்தில் பழுத்திருந்த இனிய கனியைப் பறித்து வந்து, அக்கனியின் மகத்துவத்தை எனக்குச் சொல்லாது, நான் சாகாதிருக்க வேண்டுமென்று விரும்பி எனக்குத் தந்தாயே, நீ சிவபெருமான் போல நிலைத்து வாழ்வாயாக’, என்பது மேலே தந்த பாடற் பகுதியின் திரண்ட பொருள்.
சாதல் நீங்க என்று ஒளவையார் பாடியிருப்பது இங்கு கவனிக்கத் தக்கது. இப்பாடல், இந்த ஒளவையார் தான் நெடுங்காலம் வாழ்ந்தார் என்பதற்கு அகச் சான்றாக அமைந்துள்ளதல்லவா.
53

Page 30
வேரும் விழுறும் அகளங்கன்
சமாதானத் தூது.
முருகப் பெருமான் சூரபன்மனோடு போர் செய்வதற்கு முன்பு, எப்படியாவது போரைத் தவிர்க்க வேண்டுமென்று விரும்பினார்.
தனது தம்பியாகிய வீரவாகுதேவரை வீரமகேந்திர புரிக்குத் தூதாக அனுப்பினார். வீரவாகு தேவரின் சமாதானத் தூது தோல்வியடைந்தது. தேவாசுர யுத்தம் நிகழ்ந்தது.
இராமபிரான் இராவணனோடு போர் செய்வதற்கு முன், அங்கதனைத் தூதாக அனுப்பினார். இலங்கைக்கு சமாதானத் தூதுவனாக அங்கதன் சென்று பேசிப் பார்த்தான்.
சமாதானத் தூது தோல்வியில் முடிவடைந்தது. இராம இராவண யுத்தம் ஏற்பட்டது. இலங்கை அழிந்தது.
பாரதப் போருக்கு முன் பரந்தாமனாகிய கிருஷ்ணன், அஸ்தினா புரத்துக்குச் சமாதானத் தூது சென்றான்.
பாண்டவரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. துரியோதனனின் பிடிவாதத்தால் யுத்தம் முடிவாகியது.
மகாவிஷ்ணு மூர்த்தியின் அவதாரமாகப் போற்றப்பட்ட கிருஷ்ணபகவானின் சமாதானத் தூதும் தோல் வியில் முடிவடைந்தது.
பாரதப் போர் ஏற்பட்டது. அது பார் அதப்போராக இருந்தது. (பார் அதம் - பூமி அழிவு).
சங்க காலத்தில் வாழ்ந்த மிக முக்கியமான புலவர்களில் ஒருவர் கபிலர்.
54
 

வேரும் விழுதும் அகளங்கன்
ஆரிய அரசன் பிரகதத்தன் என்பவன் தமிழ் நாட்டின் மேல போர்தொடுக்க முனைவதை அறிந்த கபிலர் அவனிடம் சென்றார்.
தமிழகத்து இயற்கை அழகை எல்லாம் எடுத்துக்கூறி, யுத்தத்தின் மூலம் இவை எல்லாம் அழிந்து போகும் என இரக்கங் கொள்ளவைத்தார். அதன் மூலம் யுத்தம் தவிர்க்கப்பட்டது. என்கிறார்கள் அறிஞர்கள்.
தமிழகத்து இயற்கை அழகை அவர் புகழ்ந்து பாடிய பாட்.ே குறிஞ்சிப் பாட்டு என்பர். இக்குறிஞ்சிப் பாட்டில் மலையிலே பூத்திருக்கும் 96 வகையான பூக்களையும், அவற்றினை இளம் பெண்கள் பறித்து சூடியும், விளையாடியும், சுனை நீர் ஆடியும், களிLபுறுகின்ற காட்சியை அவர் பாடியிருக்கும் விதம் அற்புதமானது.
ஒளவையாரின் சமாதானத் தூது.
சங்ககாலத்தில் ஏற்பட இருந்த பெரும் போரொன்றைத் தடுப்பதற்காக ஒளவையார் எடுத்த முயற்சிபற்றி புறநானூறு என் நூலில் தகவல்கள் உள்ளன.
அதியமான் என்ற மன்னனின் நாட்டின்மேல் தொண்டைமான் என்ற மன்னன் போர் தொடுக்க முனைந்து கொண்டிருந்தான்.
இரு தரப்பிலும் படைபலம் சமநிலையில் இருந்தது. இரு பெரும் படைகள் மோதினால் அழிவுகள் அதிகமாக இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே.
சம பலங்கொண்ட இரு பெரும் யானைகள் மோதினால், அவற்றின் கால்களுக்குள் அகப்பட்டு, பல உயிரினங்களும், செ) கொடிகள் மரங்களும் அழிந்துவிடும்.
55

Page 31
வேரும் விழுறும் அகளங்கன்
அதே போல சம பலங்கொண்ட அதியமானும், தொண்டைமானும் போர் செய்தால், ஏராளமான மக்களும், சொத்துக்களும் நாசமாகிப் போகும் என்பதை நினைத்துப் பார்த்தார் ஒளவையார்.
அதியமான் யுத்தத்தில் பெரும் நாட்டம் கொள்ளாமல் இருந்தான். தொண்டைமான் யுத்தம் செய்ய வேண்டுமென்ற முனைப்பில் இருந்தான்
அதனால் அதியமானின் சார்பாக ஒளவைபார் தொண்டைமானிடம் சமாதானத் தூது சென்றார்.
தொண்டைமான் தனது படைபலத்தைப் பெரிதாக மதித்து, அதியமானை இலகுவாக வெற்றி கொண்டு விடலாம் என நினைத்திருந்த காரணத்தால் தான், யுத்தத்தில் அதிகம் ஆவம் காட்டினான்.
யுத்தத்தைத் தடுப்பதற்கு ஒளவையார் எவ்வளவோ முயன்றும், தொண்டைமான் தன் பலத்தைப் பற்றியே பெரிதகப் பேசினான்.
இறுதியில், ஒளவையாரைத் தனது ஆயுத சாலைகத அழைத்துச் சென்று, தனது ஆயுதங்களையெல்லாம் காட்டி, தான் இலகுவாக வெற்றி பெற வாய்ப் பிருப்பதாக ஒளவையாருக்குக் கூறினான்.
ஒளவையார், அவனது ஆயுதங்களைப் பார்த்தா, அவையெல்லாம் பிரகாசமாக, கூர்மை பொருந்தியனவாக மயிற்பீலியும் மாலையும் சூட்டப்பட்டு, எண்ணெய் தடவப்பட்டு
அழகிய பிடிகள் பொருந்தப் பெற்றனவாக விளங்கின.
தொண்டைமானின் பெருமிதத்துக்குரிய காரணம் சரியாகவே இருந்தது. இருப்பினும் அதியமானின் பலம் தொண்டைமானின்
56

வேரும் விழுறும் அகளங்கன்
பலத்திற்குச் சற்றும் குறைவு படாதது என்று சொல்ல விரும்பினார் ஒளவையார்.
உடனே ஒளவையார், தொண்டைமானிடம் கூறினார். "இவை பீலியணியப் பட்டு, மாலை சூட்டப்பட்டு, எண்ணெய் தடவப்பட்டு, அழகிய பிடிகள் போடப்பட்டு, காவல் பொருந்திய அரண்மனைக்குள்ளே கிடக்கின்றன.
ஆனால் அதியமானின் ஆயுதங்களோ, பகைவர்களைக் குத்தியதால் கூரிய நுதி சிதைந்தனவாக, கொல்லனது பட்டறையில் கிடக்கின்றன” என்று
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்டிர னோன்காழ் திருத்தி நெய்அணிந்து கடியுடை வியன்நகர். அவ்வே அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ .
(புறம் 95)
அதிய மானின் நாட்டில் ஆயுதங்கள் கொல்லனின் பட்டறையிலே கிடக்கின்றன. காரணம் வீரர்கள் பயன்படுத்தியதால் நுதிகள் சிதைந்து விட்டன, என்று ஒளவையார் கூறுவதைக் கேட்ட தொண்டைமான் அச்சங் கொண்டான்.
ஆயுதங்களின் அழகு, அதனைப் பயன்படுத்து பவர்களிலேயே இருக்கின்றது. அதியமானின் வீரர்கள் நாளாந்தம் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நிறைந்த பயிற்சிபெற்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
அதற்கு அடையாளம்தான் அவனது ஆயுதங்கள் நுதி சிதைந்து கொல்லனின் பட்டறைகளில் கிடப்பது என உணர்ந்து கொண்டான் தொண்டைமான்.
57

Page 32
வேரும் விழுறும் அகளங்கன்
அதனால் வெற்றியில் நம்பிக்கை அற்றவனாக, போர் முனைப்பைக் கைவிட்டான். என்ற செய்தி புறநானூற்றுச் செய்தியாகும்.
முதன் முதலில் சமாதானத் தூது சென்ற ஒரு பெண் என்ற பெருமையும், வெற்றி பெற்ற தூதுக்குரியவர் என்ற பெருமையும் ஒளவையாருக்கே உரியது.
58

05 மாட்டு வண்டில் முதல் ஆகாய விமானம்
வரை அன்றைய பெண்களும் ஒட்டினர்
பெண் களால் செய்யமுடியாத தொழில் என்று வரையறுப்பதற்கு, இன்று ஒரு தொழிலுமே இல்லை என்று கூறத்தக்க வகையிலே, ஆண்கள் செய்யும் அனைத்துத் தொழில்களையும், பெண்களுஞ் செய்து, தமது திறமையைக் காட்டிவருகின்றனர்.
பாலர் கல்வி ஆசிரியப் பணிக்கும், தாதி சேவைக்கும் பெண்களே அதிகம் பொருத்தமானவர்கள் என்று கருதப்பட்டாலும், பெண்கள் அனைத்துத் தொழில்களிலும் கால் பதித்து, ஆண்களுக்கு வேலை வாய்ப்பில் பெருஞ் சவாலாகவே விளங்குகின்றனர்.
இந்து சமயத்தில் பெண்கள் கோவிலினுள்ளே சென்று பூசை செய்வது அனுமதிக்கப்படவில்லை என்கிறார்கள். ஆனால் இன்று இந்தியாவிலே மட்டுமல்ல இலங்கையிலே கூட, பெண்கள் கோயிலினுள்ளே சென்று பூசை செய்யத் தொடங்கிவிட்டனர்.
இன்று மேல் நாடுகளிலே மட்டுமல்ல, இந்தியாவிலே கூட விமானமோட்டியாகவும் பெண்கள் இருக்கின்றார்கள்.
59

Page 33
வேரும் விழுதும் அகளங்கன்
எமது இலக்கிய வரலாற்றிலே பார்க்கும் போது, பெண்கள் அன்று செய்த தொழில்களைத் தான், இன்றுஞ் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கள் வியாபாரம்
கள்ளுக்கடை வைத்துக் கள்வியாபாரம் செய்தல், தமிழரின் பொற்காலமாகப் போற்றப்படுகின்ற சங்ககாலத்துப் பெண்களின் தொழில்களில் ஒன்றாக இருந்திருக்கின்றது.
மோர்விற்கும் பெண்கள் பற்றி மட்டும் அல்ல, கள் விற்கும் பெண்கள் பற்றியும் சங்ககால, சங்கமருவிய கால நூல்கள் மிகுதியாகக் காட்டுகின்றன.
ஐம்பெருங் காப்பியங்களில், பெருஞ் சிறப்புப் பெற்ற காப்பியமான சிலப்பதிகாரத்தில், கள்ளுக்கடை வைத்து கள் விற்கும் பெண்ணைப்பற்றி இளங்கோ அடிகள் தகவல் தருகின்றார்.
சிலப்பதிகாரத்துக் கடல் ஆடு காதையில், இந்திர விழாவின் போது, மாதவியும் கோவலனும் கடைத்தெருவில் போகின்ற காட்சி காட்டப்படுகின்றது.
விடிகாலைப்பொழுதில், வியாபாரிகளின் கடைகளிலே
இருந்த விளக்குகளின் பிரகாசங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, கடற்கரையில், இடித்த மாவைப் போன்ற, வெள்ளை நிறமான நுண் மணலிலே, ஒரு சிறு, வெண்ணிறமான, வெண்கடுகு விழுந்தாலும், கண்டெடுக்கக்கூடியதாக வெளிச்சம் இருந்தது, என்று சொல்கிறார் இளங்கோ அடிகள்.
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஒளழ்உறு விளக்கமும்,
60

வேரும் விழுறும் அகளங்கன்
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும், நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும், இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும், இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும், விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும், மொழிபெயர் தேஎத்தோர் ஒழியா விளக்கமும், கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும், எண்ணுவரம்பு அறியா இயைந்து ஒருங்குஈண்டி இடிக்கலப்பு அன்ன ஈர்அயிர் மருங்கில் கடிப்பகை காணும் காட்சி அதுஆகி
வண்ணக் கலவைகளும், சாந்து வகைகளும், மலரும், சுண்ணப் பொடிகளும், பணிகார வகைகளும், விற்பவர்கள் ஏற்றிவைத்திருந்த விளக்குகளும்,
செய்தொழிற் சிறப்புமிகு கம்மியர் கைத்தொழில் செய்யும் இடங்களிலே வைத்திருந்த விளக்குகளும்,
பிட்டு வாணிகர் பிட்டு விற்கும் இடங்களிலே வைத்திருந்த விளக்குகளும், அப்பம் விற்கும் வாணிகர், கரிய அகலினை உடைய குடத்தண்டிலே வைத்திருந்த விளக்குகளும்,
கள்விற்கும் பெண்கள் தம் கடைகளிலே வைத்திருந்த விளக்குகளும், இடையிடையே மீன் விற்போர் வைத்திருந்த விளக்குகளும்,
கலங்கரை விளக்கும், பரதவர் தமது படகுகளிலே வைத்திருந்த விளக்குகளும், வேற்று மொழி பேசும் வேறு தேசத்தைச் சேர்ந்தோர் வைத்திருந்த விடி விளக்குகளும்,
மிக்க பெரும் பண்டக சாலையைக் காக்கும் காவலர் வைத்திருந்த விளக்குகளும்,
61

Page 34
வேரும் விழுறும் அகளங்கன்
அளவில்லாமல் ஒன்று சேர்ந்து பிரகாசித்து, வெண்மணற் பரப்பில் விழுந்த வெண்கடுகையும் கண்டெடுக்கக்கூடிய வகையிலே, மிகுந்த வெளிச்சம் பரவியிருந்தது என்பது இதன் மேலோட்டமான பொருள்.
இங்கே, கள்விற்கும் கடை பற்றி கூறும் போது மட்டும் “நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும’ என கள்விற்கும் பெண்கள் கடையிலே வைத்திருந்த விளக்கைத் தனியாகப், பால் வேறுபாடு காட்டிப் பாடுகிறார் இளங்கோ அடிகள், மகடூஉ என்பது பெண்ணைக் குறிக்கும் சொல் ஆகும்.
படகோட்டிய பரிமளகந்தி
மகாபாரதக் கதையில் வரும் சந்தனு மகாராஜனின் மனைவியாகிய சத்தியவதி, மச்சகந்தி என்ற பெயரோடு தாசராஜன் எனும் பெயர் கொண்ட செம்படவர் தலைவனின் மகளாக வளர்ந்தவள்.
அவள் வசுராஜனின் மகளாக மீன் வயிற்றில் உற்பவித்து, பிறந்த காரணத்தால், அவளது உடலிலிருந்து மீன் நாற்றம் வீசியது. அதனால் மச்சகந்தி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள். (மச்சம் - மீன், கந்தம் - வாசனை)
மச்சகந்தி, யமுனை ஆற்றிலே படகு செலுத்தி, பிரயாணிகள் ஆற்றைக் கடக்க உதவினாள். அக்காலத்தில் தான் பராசரர் என்ற முனிவர் அந்த யமுனை ஆற்றைக் கடக்க வந்து மச்சகந்தியின் படகில் ஏறினார்.
அந்தப் பராசர முனிவருக்கும், மச்சகந்திக்கும் பிறந்த மகனே, உலகம் போற்றும் மகா பாரதக் கதையை அருளிச்செய்த வியாசமுனிவர் ஆவார்.
62
 

வேரும் விழுதும் அகளங்கன்
பராசர முனிவரின் அருளினால், மச் சகந்தியின் உடலிலிருந்த மீன் நாற்றம் மாறி, பரிமளவாசம் வீசியது. அதனால் அவள் பரிமளகந்தி என்று அழைக்கப்பட்டாள்.
பின்னாளில் சந்தனு மகாராஜனை மணந்து, சத்தியவதி என்ற பெயரோடு சிறப்புப் பெற்றாள். இக்கதை மகாபாரதக் கதையின் ஆரம்பத்தில் வருகின்றது.
பெண்கள் ஆற்றிலே படகோட்டும் தொழிலைச் செய்ததற்கு இக்கதை ஆதாரமாக இருக்கிறது.
மாட்டு வண்டில் ஓட்டும் பெண்.
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூல், சங்ககாலத்துப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பாடிய இந்நூலில், பெண் ஒருத்தி தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மாட்டு வண்டில் ஒட்டிக் கொண்டு போகும் காட்சி காட்டப்படுகிறது.
உப்பு வணிகர் செல்லும் நீண்ட வழிபற்றிக் கூறும்போது, அவ்வழியிலே உப்பு வணிகஞ் செய்யும் உமணப் பெண், எருத்து மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டில் ஒட்டிச் செல்வதை
மகவுடை மகடூஉம் பகடு புறம் துரப்ப.
என்று குறிப்பிடுகிறார். சங்க காலத்தில், பெண்கள் மாட்டு வண்டில் ஒட்டிய தகவலாக இது அமைகிறது.
தேர் ஓட்டிய கைகேயி.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குதிரை ஏற்றம் பழகி குதிரைச் சவாரி செய்வதும், தற்காப்புக்காக யுத்தப்
பயிற்சி பெறுவதும் அக்கால வழக்கமாக இருந்தது.
63

Page 35
வேரும் விழுறும் அகளங்கன்
பெண்கள் தேரோட்டும் கலையிலும் வல்லவர்களாகச் சிறந்து விளங்கியிருக்கின்றனர். பெரும் புகழ்பெற்றிருக்கின்றனர்.
அவர்களிலே கைகேயி முதன்மையானவள். தசரதன் சம்பராசுரனுடன் யுத்தஞ் செய்யச் சென்ற பொழுது, கைகேயியே தசரதனின் தேரோட்டியாக இருந்தாள்.
தேரோட்டும் கலையிலே கைதேர்ந்த வளான கைகேயி, தனது கணவனான தசரதனுக்கு யுத்த களத்திலே ஆபத்து ஏற்பட்டபோது, மிகவும் புத்தி சாதுரியமாகத் தேரைத் திசைதிருப்பிச் சென்று, தசரதனின் உயிரைக் காப்பாற்றினாள்.
அதனால் மனம் மகிழ்ந்த தசரன், தனது உயிரைக் காத்த கைகேயி, எப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக, இரு வரங்களைக் கொடுத்தான்.
இவ் வரங்களைக் கேட்கும்படி, கூனி எனப்படும் மந்தரை கைகேயிக்கு அறிவுரை சொல்லும் போது, சம்பராசுரனுடன் நடைபெற்ற யுத்தத்திற்குக் கைகேயி தேரோட்டியதையும், தசரதன் இருவரங்கள் கொடுத்ததையும் பின்வருமாறு நினைவு படுத்துகிறாள்.
நாடியொன்று நன்குரை செய்வன்.
நளிர்மணி நகையாய்! தோடிவர்ந்த தார்ச் சம்பரன்
தொலைவுற்ற வேலை ஆடல் வென்றியான் அருளியவரம் அவை இரண்டும் கோடி என்றனள், உள்ளமும்
கோடிய கொடியாள்.
என்று கம்பன் இதனைப் பாடுகின்றான். அந்த யுத்தத்தில்
சம்பராசுரன் அழிந்து போவதற்குக் கைகேயி தேரோட்டிய சிறப்பே 64

வேரும் விழுறும் அகளங்கன்
காரணம் என, உள்ளமும் கோடிய (கூனிய) கொடியாளான கூனி கூறும் கூற்று இது.
விமானமோட்டிய விசையை
சீவக சிந்தாமணி, என்னும் நூல் ஐம்பெருங் காப்பியங்களில் மிகுந்த காவியச் சிறப்புப் பொருந்தியது. கற்பனை வளம் மிகுந்தது.
கவிச்சக்கர வர்த்தி கம்பனின் இராமாயணச் சிறப்பிற்குத் திருத்தக்கதேவர் பாடிய சீவகசிந்தாமணியே பெரிதும் காரணமாக அமைந்தது என்று பேராசிரியர்கள் பலர் கருதுகிறார்கள்.
அத்தகைய கவிநயமும், கற்பனைச் செழுமையும், காவிய அமைப்புச் செம்மையும் நிறைந்த சீவகசிந்தாமணியிலே வருகின்ற கதாநாயகன் சீவகன்.
அவனது தாய் விசையை. இவ் விசையை ஆகாயத்திலே, மயிற்பொறியிலே பறந்து சென்ற காட்சியொன்று, சீவகசிந்தாமணி என்னும் காவியத்தில் இடம் பெற்றுள்ளது.
இராசமாபுரத்து அரசனான சச்சந்தன், விதேக நாட்டு இளவரசி விசையை என்பவளை மணம் முடித்து, அவளின் அழகிலே ஈடுபட்டு, உலகியலில் முற்று முழுதாக மூழ்கிவிடுகிறான்.
அதனால் அரசியற் கருமங்களை ஆற்ற முடியாதவனாகி அந்தப்புரமே கதியென்று கிடந்து விடுகிறான்.
தனது உயிர் நண்பனும், அமைச்சர்களில் ஒருவனுமான கட்டியங்காரனிடம், சிறிது காலத்திற்கு இராச்சியத்தைப் பொறுப்பேற்று நடாத்தும் படி வற்புறுத்தி, அரசை ஒப்படைத்து விடுகிறான்.
கட்டியங்காரன் அரசைப் பெற்றுக் கொண்ட பின், நட்பை
65

Page 36
வேரும் விழுதும் அகளங்கன்
விட, நன்றியைவிட, அரசைப் பூரணமாகத் தானும் தன் பரம்பரையும் அனுபவிப்பதே சிறந்தது என ஆசை கொண்டு செயற்படுகிறான்.
தனக்கு ஆபத்து வரப்போவதை ஒருவாறு அறிந்து கொண்ட சச்சந்தன், தனது மனைவியைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு சிறந்த சிற்ப வல்லுனனை அழைத்து, மயிற்பொறி ஒன்றைச் செய்து தரும்படி கேட்கிறான்.
அந்தச் சிற்பியும், அழகான ஒரு மயிற்பொறியைச் செய்து கொண்டு வந்து மன்னனிடம் கொடுக்கிறான்.
அசல் மயில் போலவே தத்ரூபமாகச் செய்யப்பட்டிருந்த அந்த மயிற்பொறியை இயக்கும் வித்தையையும் சொல்லிக் கொடுக்கிறான்.
பண்டவழ் விரலிற் பாவை
பொறிவலந் திரிப்பப் பொங்கி விண்டவழ் மேகம் போழ்ந்து
விசும்பிடைப் பறக்கும், வெய்ய புண்டவழ் வேற்கட் பாவை
பொறிஇடந் திரிப்பத் தோகை கண்டவர் மருள வீழ்ந்து
கால்குவித் திருக்கு மன்றே
விசையை, அம்மயிற்பொறியாகிய வானவூர்தியில் ஏறியிருந்து, வலப்பக்கம் பொறியைத் திருப்ப, அவ்வானவூர்தி எழுந்து, மேகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று, ஆகாயத்திலே பறந்தது.
பொறியை இடப்பக்கம் சுழற்ற (திருப்ப) அந்த மயில்ஊர்தியாகிய விமானம் கீழே இறங்கி வந்து, கால்களைக் குவித்து, பக்குவமாக நிலத்தில் இருந்து கொண்டது.
66

வேரும் விழுதும் அகளங்கன்
இன்றைய ஆகாய விமானங்களுக்கும், உலங்கு வானூர்திகளுக்கும் இது ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறது என எண்ணும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
கட்டியங்காரன், சச்சந்தனைக் கொல்லும் படி ஒரு தெய்வம் தன் கனவில் வந்து தொல்லைகொடுப்பதாகப் பொய் கூறி, சச்சந்தனைக் கொல்ல முயல்கிறான்.
அதை அறிந்த சச்சந்தன், நிறைமாதக் கற்பிணியாக இருந்த தன்மனைவியை, மயிற்பொறியான அந்த வானவூர்தியில் ஏறித் தப்பிச் செல்லும் படியாக அனுப்பிவிட்டுப், போருக்குச் செல்கிறான்.
மயிலுர்தியிலே விசையை ஆகாயமார்க்கமாகச் செல்லும் போது, கட்டியங்காரனின் வெற்றி முழக்கம் கேட்கிறது.
கேட்ட அளவிலே, தன் கணவனுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து மயங்கி விடுகிறாள். அதனால் பொறியை அவள் இயக்கவில்லை
அம்மயிலூர்தி தானாகவே வேகம் குறைந்து மெதுவாக, அழகிய மலர் மாலையானது பஞ்சணையிலே விழ்ந்தது போல பக்குவமாக ஒரு மயானத்தில் தரை இறங்கியது, என்று திருத்தக்க தேவர் தனது சீவகசிந்தாமணி என்ற காவியத்தில் சொல்கிறார்.
இயக்காது விட்டாலும், பிரயாணிகளுக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படாமல் பக்குவமாக கீழே இறங்கும் இம்மயிலூர்தியைப் பற்றி நினைக்கும் போது, வியப்பர்னதாக இருக்கிறது.
பெண்கள் மாட்டுவண்டில் முதல் ஆகாய விமானம் வரை முற்காலத்தில் ஒட்டிய நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது, இடைக்காலத்தில் பெண்களின் நிலை எப்படி மாற்றமடைந்ததோ என்ற ஐயமும், ஆச்சரியமும் இதயத்தில் எழவே செய்கின்றன.
骨
67

Page 37
06| ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கை LITE5ë Gesi"LigjGJITGOOTITë FTrfuri gjGJITËMIT
மகாபாரதத்திலே சொல்லப்பட்ட ஒரு சம்பவம், இன்று வரை மாறாத சர்ச்சைக் குரியதாக இருக்கின்றது.
வியாசர் முதல் , தமிழில் பாரதம் பாடிய வில்லிபுத்தூராழ்வார், நல்லாப்பிள்ளை ஈறாக இந்தச் சம்பவத்தை மாறுபாடில்லாமல் ஒரேவிதமாகவே சொல்லியிருக்கிறார்கள்.
வியாச பாரதத்தில் இல்லாதவற்றையும், உள்ளவற்றில் சிலவற்றை தம் கருத்துக் கேற்றபடி விளக்கியும், பெருப்பித்தும், மாற்றியும் கூட, பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராழ்வாரும் பாடியிருக்கிறார்கள் என்பது அவற்றைப் படிக்கும் பொழுது தெளிவாகின்றது.
துரியோதனனது மனைவியும், கர்ணனும் சொக்கட்டான் விளையாடிய சம்பவத்தையும், போர்க்களத்தில் குற்றுயிராகக் கிடந்த கர்ணனிடம், கிருஷ்ணபகவான் புண்ணியத்தைத் தானமாகக் கேட்ட சம்பவத்தையும், வில்லிபுத்தூராழ்வார் தன் கற்பனை மூலம் அமைத்து, மக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறார். இப்படி வேறும் பலவுண்டு.
68
 
 

வேரும் விழுதும் அகளங்கன்
பெருந்தேவனார் பாரதத்தில் சில பாடல்களே கிடைத்திருக்கின்றன. குந்தி தேவியிடம் கர்ணன் வரம் கேட்கும் பொழுது, போர்க்களத்தில் தான் இறந்து போனால், தன்னை மடியில் கிடத்தி, தனக்கு பால் கொடுத்து, தன்னை மகன் என்று உலகறியச் சொல்ல வேண்டும், என்று வரம் கேட்டதாக ஒரு சம்பவத்தை தனது கற்பனையின் மூலம் பாடியிருக்கிறார்.
அது, வில்லிபுத்தூராழ்வாரால் பின்பற்றப்பட்டது. வில்லிபுத்துராழ்வார் காலத்தில் பெருந்தேவனார் பாரத வெண்பா முழுமையாகக் கிடைத்திருக்கலாம்.
இப்பொழுது, பெருந்தேவனார் பாரத வெண்பா முழுமையாக இல் லாதமையினால் , வில் லிபுத் துTராழ்வார் செய்த மாற்றங்களுக்கும், கூறிய புதுச் சம்பவங்களுக்கும் , செய்திகளுக்கும், பெருந்தேவனார்தான் முழுக்காரணமா என்பதை முழுதாக அறிய முடியவில்லை.
அற்புதமான வெண்பாக்களைக் கொண்ட பெருந்தேவனார் பாரதம், முழுமையாகக் கிடைக்காமற் போனதற்காக மனவருத்தப் படுவதைத் தவிர வேறு செய்வதற்கொன்றுமில்லை
நான் சொல்லத் தொடங்கிய விடயத்திற்கு வரவேண்டுமே. துரோணாச்சாரியார், ஏகலைவனிடம் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டது சரியா பிழையா என்பது தான் இங்கு ஆராயனடுத்துக் கொண்ட விடயம்.
துரோணர் யார்
பரத்துவாச முனிவரின் மகனே துரோணர். அந்தன
குலத்தில் பிறந்த இவர், அந்தண குலத்திற்குரிய கல்வி யாவற்றையும் கற்றுத் தேறினார். வேதியர்களின் ஒழுக்கமாகச்
69

Page 38
வேரும் விழுதும் அகளங்கன்
சொல்லப்பட்ட ஓதல் - ஒதுவித்தல், வேட்டல் - வேட்பித்தல், ஈதல் - ஈவித்தல் ஆகிய ஆறு தொழில்களையும் செய்யும் கடமையை வர்ணாச்சிரம தர்மப்படி கடைப்பிடிக்க வேண்டியவர்.
சரத்வந்த முனிவரின் மகளும் கிருபாச் சாரியாரின் தங்கையுமாகிய கிருபி என்பவளைத் திருமணஞ் செய்து இல்லற வாழ்வை நல்லறவாழ்வாக நடாத்திக் கொண்டிருந்தவர்.
தாய்ப்பால் வற்றிப் போய், தன் மகன் அசுவத்தாமாவிற்கு, பசுப்பால் கொடுப்பதற்கு வழியில்லாத தரித்திர நிலையில், எவரிடமும் கையேந்த முடியாத பிராமண ஒழுக்கத்தினால், தன் உயிர் நண்பனான சத்திரிய குலத்து, பாஞ்சால மன்னன் துருபதனை நாடிச் சென்றார்.
குரு குலத்தில் கல்வி கற்ற காலத்தில், தன்னோடு உயிருக்கு நிகரான நட்புப் பூண்டு, தனக்கு இராட்சியம் கிடைத்ததும், பாதிஇராட்சியம் தருவேன் என்று சொல்லி மகிழ்ந்தவனான துருபதனிடம், ஒரு பசு மாட்டைப் பெறும் நோக்குடன் சென்றார், துரோணாச்சாரியார்.
அதுவும், கேட்டுப் பெறக்கூடாது. அவன் தன் வறுமை நிலையை நன்கு அறிந்து தானாகவே தனக்குத் தரவேண்டும் என்ற தன்மான உணர்வோடு சென்றார்.
துருபத மன்னனால் அவர் அவமானப் படுத்தப்பட்ட போது, அவர் மிகவும் ஆத்திரப்பட்டார். அவன் தனக்கு துரோணரைத் தெரியாது என்றே கூறி விட்டான்.
ஏழை அந்தணனுக்கும், இராச்சியபரிபாலனம் செய்யும் சத்திரிய அரசனுக்கும், எந்த வகையில் நட்பு இருக்க முடியும் என்று ஏளனம் செய்தான் துருபதன்.
70
 

வேரும் விழுறும் அகளங்கன்
அவமானம் என்பதையே அறியாது வளர்ந்தவரும், அந்தணருக்கே உரிய அடக்கம், பொறுமை, சாந்தம் என்பவற்றைக் கொண்டவருமான துரோணருக்கு, அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது.
கோபம் என்பது சத்திரியர்களின் இலட்சணம், கோபப்பட்ட துரோணர் உள்ளத்தால் சத்திரியனாக மாறினார். துருபதனைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
பழி வாங்குவது சத்திரியனின் வேலை. இதனால் துரோணர் அந்தணதர் மத்திற்கு மாறாக சத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பவராக மாறினார்.
தனது வறுமையைப் போக்க, சத்திரியர்களிடம் சென்று உதவி பெற விரும்பாத காரணத்தால், ஜமதக்கினி முனிவரின் மகனாகிய அந்தண குலத்துப் பரசுராமரிடம் சென்று பொருள் வேண்டினார்.
பரசுராமரோ, தன்னிடம் பொருள் இல்லை என்றும், தனக்குத் தெரிந்த வில் வித்தைகள் யாவற்றையும் அவருக்குச் சொல்லித்தருவதாகவும் உறுதி அளித்து, பிரம்மாஸ்திரம், பிரம்மசிரஸ், முதலான அஸ்திரப் பிரயோகம், போர்வியூகங்கள், போர்த்தந்திரங்கள், ஏனைய ஆயுதப் பிரயோகங்கள் யாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்.
தான் கற்ற போர்க் கலை மூலம் துருபதனைப் பழிவாங்குவது தான் அவரது முக்கிய நோக்கமாக இருந்தது
மகாபாரத யுத்தத்தில் மூன்று அந்தணர்களைத்தான் காணுகின்றோம். துரோணாச்சாரியார். அவர் மகன் அசுவத்தாமா, துரோணரின் மைத்துனரான கிருபாச்சாரியார் ஆகியோரே அவர்கள்.
71

Page 39
வேரும் விழுதும் அகளங்கன்
கிருபாச்சாரியார், சந்தனுமகாராஜாவினால் வளர்க்கப்பட்ட காரணத்தால் வேதக் கல்வியோடு விற்றொழிற் கல்வியையும் கற்றிருந்தார்.
அசுவத்தாமாவிற்கு, தந்தையாகிய துரோணரே வில்வித்தை கற்பித்தார். மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் பக்கத்தில் போர் செய்து தப்பியவர்கள் மூன்று பேர் மட்டுமே
அவர்களில் இருவர் கிருபாச்சாரியாரும், அசுவத்தாமாவும். மற்றவர் கிருதவர்மா எனப்படும் யாதவ சேனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் துரோணாச்சாரியார் குருவாக இருந்த நோக்கம், துருபதனைப் பழிவாங்குவதே.
சத்திரியர்களின் போர்க்கல்வி
சத்திரிய வர்ணம் என்பது போர் செய்கின்ற, நாட்டை அரசாள்கின்ற ஒரு பிரிவினரைக் குறிக்கும். அவர்களுக்குத் தான் பகைவர்களை வெற்றி கொள்ளவும், தமது மக்களைக் காப்பாற்றவும் போர்க்கல்வி தேவைப்பட்டது.
போராயுதங்களைப் பயன்படுத்துபவன் வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவனாகவும் இருக்க வேண்டும்.
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டும். தர்மம் அறிந்தவனாக இருக்க வேண்டும். பாவ - புண்ணியங்களுக்குக் கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டும்.
உலகத்தை அழிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவன், உலகத்தை அழிக்கக்கூடிய ஆயுதங்களை வைத்திருப்பவன், அவற்றைப் பிரயோகிக்கத் தெரிந்தவன் மிக நல்லவனாக இருக்க வேண்டும். இல்லாது போனால் உலகம் அழிந்து விடும்.
72
 

வேரும் விழுறும் அகளங்கன்
ஆயுதங்களை உலக நன்மையின் பொருட்டுப் பயன்படுத்தாமல், சுயநலத்திற்காகப் பயன்படுத்துபவன், பெரும் ஆற்றல் படைத்தவனாக இருந்தால் அது உலக அழிவுக்கே வழிவகுக்கும்.
இந்து சமயத்தில், பெருங் கொலை ஆயுதங்களை எல்லாம் இந்து சமயக் கடவுளர்களே கைகளில் வைத்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அதிலும், உலகம் முழுவதையும் அழித் தொழிக்கும் ஆற்றல் படைத்த சர்வ சங்காரமூர்த்தியாகிய சிவபெருமானையே சைவசமயிகள் முழுமுதற்கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது.
குருகுலக் கல்வி
இக்காலத்தைப் போல அரசின் பாடத்திட்டங்களை மட்டும் படிப்பதல்ல அக்காலக் கல்வி.
குருவின் ஆசிரமத்திலே வாழ்ந்து, குருவின் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து, ஒழுக்கத்தோடு பொருந்திய மனித விழுமியங்களைப் போற்றுகின்ற கல்வியே அக்காலப் பாடத்திட்டமாக இருந்தது.
சத்திரியர்கள் கற்கின்ற போர்க்கல்வி கூட, வெறும் தொழிற்கல்வியாக இருக்கவில்லை
தர்ம - அதர்ம, நியாய - அநியாயங்களை அறிந்து கொண்டு, யாருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, எந்தச் சந்தர்ப்பத்தில் ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசித்து, நிதானித்துச் செயற்படக்கூடிய மன ஆற்றலை, போர்க்கல்வி பெறுவோன் பெற்றேயாக வேண்டும்.
73

Page 40
வேரும் விழுறும் அகளங்கன்
மகாபாரத யுத்தத்திற்கு முன்பு, கிருஷ்ணன் தூது செல்வதற்கு முன்பாக, மந்திராலோசனைச் சபை கூடிய பொழுது பெரும் வீரர்களான வீமன், அர்ச்சுனன், ஆகிய இருவருமே யுத்தத்தை வெறுத்தனர் என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்லவா!
யுத்தத்தினால் ஏற்படும் அவலங்களை அறிந்தவர்கள் மட்டும் தான், யுத்தங்களைச் செய்வதற்குத் தகுதி படைத்தவர்கள்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் துரோணாச்சாரியார் குருவாக இருந்து போர்க்கல்வி கற்பித்தார்.
வெறும் போர்க்கல்வி மட்டுமல்லாமல், நாட்டை அரசாளும் பொறுப்பு வாய்ந்தவர்களாகிய சத்திரியர்களுக்குரிய தர்மங்களும் அவரால் போதிக்கப்பட்டன. அவை வெறும் தொழிற்கல்வி அல்ல.
அவர்களுக்குள்ளே அர்ச்சுனன் மிகுந்த திறமை காட்டியதால், துரோணாச்சாரியார், தனக்குத் தெரிந்த சகல வித்தைகளையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
ஏகலைவன்.
காட்டில் மிருகங்களை வேட்டையாடிக், கொன்றுதின்று வாழ்கின்ற வேடனாகிய ஏகலைவன் என்பவன் துரோணாச்சாரியாரைச் சந்தித்து, தனக்கு வில்வித்தை கற்பிக்கும் படி வேண்டினான்.
சத்திரியர்களுக்கன்றி மற்றையோருக்கு அக்கலையைத் தான் கற்பிப்பதில்லை என துரோணாச்சாரியார் மறுத்தார்.
அவர் மறுத்ததைத் தவறாகச் சொல்லமுடியாது. தேரோட்டியாகிய அதிரதனால் வளர்க்கப்பட்ட கர்ணனுக்கும், துரோணாச்சாரியார் வில்வித்தை கற்பிக்க மறுத்தார் என்பது
வியாச பாரதம் தரும் செய்தி.
74

வேரும் விழுறும் அகளங்கன்
அதே வேளை, தன்னைக் கொல்வதற்கென்று பிறந்திருந்த துருபதனின் மகனாகிய திட்டத்துய்ம்மனுக்கு அவர் வில்வித்தை கற்பித்திருக்கின்றார்.
சத்திரியன் அல்லாத ஒரே ஒருவனுக்கு மட்டுமேதான் அவர் வில் வித்தை கற்பித்தார். ஆம் அவர் மகன் அஸ்வத்தாமாவிற்கு மட்டுமே.
வில்வித்தையை முழுதாகக் கற்கவேண்டிய தேவை, வேடுவனாகிய ஏகலைவனுக் கில் லை, மிருகங்களை வேட்டையாடுவதற்குரிய வில்வித்தையை துரோணாச்சாரியாரிடம் சென்று கற்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை
துரோணாச் சாரியார் சத்திரியத் தொழிலாகிய போர்த்தொழிலில் விரும்பி ஈடுபட்டவர் அல்லர். பிராமணர்கள் யாருமே போர்த் தொழிலை விரும்பி கடைப்பிடித்தவர்களில்லை.
போர்க்களத்தில் வீமன் துரோணாச்சாரியாரை மிகக் கேவலமாக ஏசுகிறான். “கோபமும், கொலையும், பழிவாங்கும் எண்ணமும் சத்திரியனுக்கே உரியது. பிராமணர்கள் இந்நிலையை அடைந்தால் அவர்கள் சத்திரியர்களாகி விடுகிறார்கள்.”
வீமன் இப்படி ஏசுவதில் பெரும் நியாயத்தைக் காணக் கூடியதாகவே இருக்கிறது. துரோணருக்கு இது தெரியாததல்ல.
தன் அரசைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களைக் காப்பாற்றிக் கொள்ள, இராட்சியத்தை விஸ்தரிக்க போர்ப் பயிற்சி தேவையே அல்லாமல், காட்டு வேடனுக்கும், தேரோட்டி மகனுக்கும், பிராமணனுக்கும் கூட தேவையற்றது தானே என்பது துரோணரின் எண்ணமாக இருந்திருக்கும்.
75

Page 41
வேரும் விழுதும் அகளங்கன்
ஏகலைவன் காட்டிலே துரோணாச்சாரியாரைப் போல ஒரு சிலையைச் செய்து வைத்து, அவரையே தனது குருவாக நினைத்து மானசீகமாக வழிபட்டு விற்பயிற்சி பெற்றான்.
அர்ச்சுனனுக்கு நிகரான வீரனாக மாறினான். பாண்டவர்கள் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற பொழுது, அவர்களது நாய் துரோணாச்சாரியாரின் சிலையை அசிங்கப்படுத்தியதைக் கண்டு பொறுக்காத ஏகலைவன், ஒர் அம்பை எய்து நாயின் வாயைத் தைத்தான்.
அவனது ஆற்றலைக் கண்டு வியந்த அர்ச்சுனனுக்கு, துரோணாச்சாரியாரே தனது குரு என்று கூறினான். ஆச்சரியப்பட்ட அர்ச்சுனன் துரோணாச்சாரியாரிடம் அதுபற்றிக் கூறினான்.
அதிசயத்தோடு காட்டுக்கு வந்த துரோணாச்சாரியார், ஏகலைவனைச் சந்தித்தார். அவரை, தான் மானசீகமாகக் குருவாக ஏற்று விற்பயிற்சி பெற்றதை ஏகலைவன் வெளிப்படுத்தினான்.
தனது குருவிற்கு, எந்தக் காணிக்கையையும் தர அவன் தயாராக இருந்தான். துரோணாச்சாரியார் அவனுடைய வலது கைப்பெருவிரலைக் காணிக்கையாகக் கேட்டார்.
அவன் எந்தத் தயக்கமுமில்லாமல் வலதுகைப் பெருவிரலை வெட்டி குருவிற்குக் காணிக்கையாக்கினான்.
குருவிற்குத் தட்சணை கொடுத்தவர்களிடையே பெரிதும் மேன்மையானவனாகப் போற்றப்படுகின்றான். அவன் காணிக்கையாக்கியது தனது கட்டை விரலை மட்டுமல்ல, தான் கற்ற கல்வியையே காணிக்கையாக்கினான். அதனால் பெரும் புகழ் பெற்றான்.
கர்ணன் தனது புண்ணியத்தையே கிருஷ்ணருக்குத்
76

வேரும் விழுறும் அகளங்கன்
தானமாகக் கொடுத்ததாக வில்லிபுத்தூராழ்வார் புதிதாகப் பாடிய செய்தி இதே போன்றது தான் போல் தெரிகிறது.
சீடனாகிய ஏகலைவன் புகழ் பெற, குருவாகிய துரோணாச்சாரியார் இன்று பழிக்கப்படுகின்றார். ஆனால் துரோணாச்சாரியார் பழிக்கப்படத்தக்கவர் அல்லர்.
ஏகலைவன் கற்றது வெறும் போர்க்கல்வியாகிய தொழிற்கல்வி மட்டுமே தான். அவன் அதற்குரிய ஒழுக்கக்கல்வியைப் பெறவில்லை. அவன் அந்தக் கல்வியைக் கற்றதே களவாகத்தான். அதுவே பெரும் தவறுதானே. அவன் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்த போதும் அவனால் வேட்டையாட முடியும். அதனால் அவனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஒழுக்கமற்ற முறையில் அவன் கற்ற ஒழுக்கத்தோடு பொருந்தாத போர்க்கல்வி உலகத்தை அழிப்பதற்கு ஏன் பயன்படாது என்ற கேள்வியை, ஏன் நாங்கள் எங்களுக்குள் கேட்டுப் பார்க்கக் கூடாது.
அர்ச்சுனன் தர்மத்தை நிலை நாட்ட வில் ஏந்தினான். அதுவும் தயங்கித் தயங்கித்தான். கிருஷ்ணரின் தூண்டுதலினால் தான். வேறு வழியின்றி அக் கொலைத் தொழிலை அவன் செய்ய வேண்டி வந்தது.
கல்வி கற்காத, சத்திரிய தர்மம் இரத்தத்தோடு ஒன்றிப் போகாத, வேடனாகிய ஏகலைவனது கட்டை விரலைக் காணிக்கையாகப் பெறாது விட்டிருந்தால், அவனால் உலகிற்கு என்னென்ன தீமைகள் விளைந்திருக்குமோ!
அரக்கர்களும், அசுரர்களும் பெரும்பலம் பெற்று
77

Page 42
வேரும் விழுறும் அகளங்கன்
உலகத்துக்குத் துன்பம் செய்த கதைகளை துரோணாச்சாரியார் அறியாதவரா என்ன. உலக நன்மைக்காகத்தான் அவர் கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றார்.
இப்போது சொல்லுங்கள், துரோணாச்சாரியார் துரோகியா? வருமுன் காப்பது கற்றோர் கடமை அல்லவா.
இன்று உலக நாடுகளிலே பெரும் அழிவுகளை ஏற்படுத்துகின்றவர்கள் யார், கற்றவர்களின் கைகளிலா கொலை ஆயுதங்கள் குடிகொண்டிருக்கின்றன.
ஏகலைவன் சிறந்த மாணவன் என்றால், துரோணர் சிறந்த குரு என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது தான்.
78
 

|07 ஆச்சரியப்படவைக்கும் அக்காலப் போர்
ஆயுதங்கள்
உயிரினங்கள் தோன்றிய காலம் முதலே ஒன்றையொன்று அழிக்கவும் தொடங்கிவிட்டன. வல்லமையுடைய உயிரினம் வாழ்வு பெற மற்றவை அழிவு பெற்றன.
உயிரினங்களிலே மிகவும் மேம்பட்ட உயிரினமான மனித இனத்திலே கூட, காலத்துக்குக் காலம் யுத்தங்களால் மக்கள் அழிவைச் சந்தித்தனர். சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
"வல்லமை உடையவனே வாழ்வுடையவனாவான' என்ற பகவத் கீதைத் தத்துவம், பல வாறாகப் பலராலும் பலகாலங்களிலும் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
உடலுறுப்புக்களுக்கு அப்பால், கல்லால் போர்செய்த மனிதன், தடியை ஆயுதமாக்கினான். தண்டாயுதம் தோன்றியது. தண்டு என்றால் தடி என்று பொருள்.
எமது மூத்த குடியினராக டார்வினால் குறிப்பிடப்பட்ட வானரங்கள், கல்லு, தடி முதலியவற்றால் போர் செய்தன.
கம்பனின் இராமாயணத்தில் அனுமான் முதலான வானரச் சேனைகள் வில், அம்பு கொண்டு போர் செய்யாமல், பொல்லு
79

Page 43
வேரும் விழுறும் அகளங்கன்
(தடி), கல்லு கொண்டே போர் புரிந்தன என்று சொல்லப் பட்டுள்ளது.
வானரங்கள், மலைகளைப் பெயர்த்து எறிந்தும், மரங்களைப் பிடுங்கி எறிந்தும் போர் செய்ததாகத்தான் கம்பன் குறிப்பிடுகிறான்.
இருப்பினும், முற்காலத்தில் பாவிக்கப்பட்ட சில ஆயுதங்களைப் பற்றி அறியும் போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
குறிப்பாக, மகாபாரத யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாஸ்திரம், பிரம்ம சிரஸ், நாராயணாஸ்திரம் என்பவை மிகக் கொடுரமானவை.
அருச்சுனன், சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து பெற்ற பாசுபதாஸ்திரம், பாரத யுத்தத்தில் பயன்படுத்தப் படவில்லை.
பாரத யுத்தத்திற்கு முன்பே, தேவலோகத்தில் இந்திரனுக்காக, நிவாத கவச காலகேயர்களோடு அருச்சுனன் புரிந்த போரில் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தப்பட்டது. அவ்வஸ்திரத்தின் கொடுரம் பற்றி விரிவாக அறியமுடியவில்லை.
இங்கே சில வகையான அஸ்திரங்கள் பற்றி நோக்குவோம். அஸ்திரம் என்பதன் பொருள் அம்பு என்பதாகும்.
சப்த வேதி
சப்த வேதி என்ற அம்பு பற்றி, இராமாயணத்தில் வரும் ஒரு சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது.
தசரத மன்னன் வேட்டைக்குச் சென்ற நேரத்தில், வெகு
80
 

வேரும் விழுறும் அகளங்கன்
தொலைவில், ஆற்றிலே தண்ணீரைக் கலக்கும் சத்தம் கேட்கிறது.
யானை தான் தண்ணீர் குடித்துக் கலக்குகிறது என்று தவறாக முடிவுகட்டிய தசரதன், சப்த வேதி என்ற அம்பை, சத்தம் வந்த திசையை நோக்கிச் செலுத்தினான்.
அந்த அம்பு சென்று, ஆற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டு நின்ற சுரோசனன் என்ற சிறுவனைத் தாக்கியது. ¬ܓ
சலபோசன முனிவரின் மகனான சுரோசனன், தனது பார்வையற்ற பெற்றோருக்குத் தண்ணீர் அள்ளிச் செல்ல வந்தவன்.
குடத்தைக் கழுவி தண்ணீரை அள்ளும் போது, தசரதன் எய்த அம்பு அவனைத் தாக்கியது.
சத்தம் வந்த திசையை நோக்கிச் செலுத்தினால் சத்தத்தை உண்டாக்கிய மனிதனையோ, விலங்கையோ, வேறு எதையுமோ குறிதவறாமல் சென்று தாக்கும் வல்லமை படைத்த அம்பு தான் சப்த வேதி. இது இராமாயணத்துச் செய்தி.
மோகனாஸ்திரம்.
பாண்டவர்கள் ஓராண்டு அஞ்ஞாதவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில், துரியோதனன் விராட நாட்டின் மீது வலிந்து போர் தொடுத்தான்.
பாண்டவர்கள் அந்நாட்டில் மறைந்து வாழ்கின்றார்கள் என்ற சந்தேகத்தில், அவர்களை வெளிப்படுத்துவதற்காக இப்போரைத் துரியோதனன் தொடக்கியிருந்தான்.
விராட நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து சென்று, துரியோதனன் உருவாக்கிய போரில், விராட ராஜ குமாரன் உத்தரனின் தேரில் வந்த அருச்சுனன் உக்கிரமாக ஈடுபட்டான்.
81

Page 44
வேரும் விழுறும் அகளங்கன்
துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், வீஷ்மர், கர்ணன் முதலான பெரும் வீரர்களைத், தனி ஒருவனாக நின்று போர் செய்து வென்ற அருச்சுனன், மோகனாஸ்திரம் என்ற ஒரு அம்பை ஏவி, துரியோதனனது சேனைகளை மயங்கி விழச்செய்தான்.
மயங்கிக் கிடந்த சேனா நாயகர்களின் அங்க வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு, வெற்றிவாகை சூடி, விராட நாட்டுக்குச் சென்றான்.
மகாபாரதத்தில் வரும் இப்போரைப் பற்றிப் படிக்கும் போது, இந்த மோகனாஸ்திரம் ஒருவகை மயக்க வாயுவாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றியது.
பிரம்மாஸ்திரம்.
LD&BTUTU 95 யுத்தத்தில் துரோணாச்சாரியார். அருச்சுனன் ஆகிய இருவரும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கர்ணனும் இவ்வஸ்திரப் பிரயோகம் பற்றி பரசுராமரிடம் கற்றிருப்பான். இருப்பினும் அவரது சாபத்தால் அவன் மறந்திருப்பான் என எண்ண வேண்டியிருக்கிறது.
பதினைந்தாம் நாள் யுத்தத்தில் அருச்சுனனோடு கடும்போர் புரிந்த அவனது குருவும், கெளரவ சேனாதிபதியுமாகிய துரோணாச்சாரியார். அருச்சுனனை வெல்ல வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவினார்.
பூமியே நடுங்கியது. கண்மூடிக் கண்திறக்கும் நேரத்திற்குள் எல்லா நதிகளும் எதிர் நோக்கிப் பாய்ந்தன.
பேய்க் காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. யுத்த களமே கூட நடுங்கியது.
இந்த நேரத்தில், இந்தப் பிரம்மாஸ்திரத்தைச் செயலிழக்கச்
82
 

வேரும் விழுறும் அகளங்கன்
செய்ய, அருச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அமைதி திரும்பியது. என்று விபரிக்கிறார் வியாசர்.
நாராயணாஸ்திரம்
அசுவத்தாமா கொல்லப்பட்டான் என்றொரு வதந்தியைப் பரப்பி தர்மன் மூலமாக துரோணாச்சாரியாரை நம்பவைத்தார்கள் பாண்டவர்கள்.
யாராலும் கொல்லப்பட முடியாத தனது மகன் அசுவத்தாமா கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார், அதனைத் தர்மன் மூலம் உறுதி செய்து கொண்டபின் செயலற்றுத் தேர்த்தட்டில் அமர்ந்தார்.
ஆயுதங்களைப் போட்டு விட்டு தேர்த்தட்டில் நிஷடையில் அமர்ந்திருந்த துரோணாச்சாரியாரின் தலையைத், தனது வாளால் அறுத்து வீழ்த்தினான் திட்டத்துய்ம்மன்.
ஆயுதமில்லாமல் நிஷடையில் இருந்த தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்று விட்டார்கள். பாண்டவர்கள் என்ற செய்தியைக் கேள்வியுற்ற அசுவத்தாமா கொதித்தான். பாண் டவசேனைகளைப் பூண் டோடு அழிக் க வல்ல நாராயணாஸ்திரத்தை ஏவினான். -
நீரைத்தொட்டு சில மந்திரங்களை ஒதி, நாராயண அஸ்திரம் என்ற பலம் வாய்ந்த அஸ்திரத்தை அசுவத்தாமா ஏவினான்.
அந்த அஸ்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான அம்புகள் உருவாயின. சூரிய கிரணங்கள் போல் அவை திக்கெட்டும் பரவின. அந்த நாராயண அஸ்திரம் பாண்டவ சைன்யத்தைப் பொசுக்கத் தொடங்கியது.
83

Page 45
வேரும் விழுறும் அகளங்கன்
மேகமே இல்லாத அந்த நேரத்தில் பெரும் இடியோசை கேட்டது. பூமியே அசைந்தது. கடல் கலங்கியது. சமுத்திரத்தை நோக்கிச் செல்லும் ஆறுகள் எதிர்த் திசையில் ஓடத் தொடங்கின. சூரியன் ஒளி மங்கி இருள் கவ்வத் தொடங்கியது.
இந்த நாராயண அஸ்திரம் தேரில் இருப்பவர்களையும், ஆயுதம் வைத்திருப்பவர்களையும் மட்டுமே கொல்லும்.
இந்த அஸ்திரத்திலிருந்து பாண்டவர் சேனையைக் காக்க கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார்.
யாவரையும் தேரைவிட்டு இறங்கி ஆயுதங்களை எறிந்து விட்டு நிற்கச் செய்தார். நாராயணாஸ்திரம் செயலிழந்தது.
ஆயுதம் உள்ளவர்களை மாத்திரமே தேடி அழிக்கும் இந்த அஸ்திரம் மிகவும் ஆச்சரியத்துக்குரிய ஆயுதமல்லவா.
பிரம்ம சிரஸ்
பதினெட்டாம் நாள் இரவு, பாரத யுத்தம் முடிந்த பின்பு, துரியோதனன் தரப்பில் எஞ்சியிருந்த அசுவத்தாமாவின் தலைமையில் அவனது மாமனாராகிய கிருபாச்சாரியாரும். கிருதவர் மாவும் சென்று இரவு நேரத்தில் பாசறையை முற்றுகையிட்டு கொடிய யுத்தம் செய்தார்கள்.
பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்யகி தவிர்ந்த ஏனையவர்கள் யாவரும் கொடுரமாகக் கொல்லப்பட்டார்கள். இரவு பாசறையில் தங்காத பாண்டவர்கள் காலையில் இக்காட்சியைக் கண்டு கோபமுற்றார்கள்.
இளம் பஞ்ச பாண்டவர்கள் எனப்படும். திரெளபதியின் புத்திரர்கள் ஐவரும், துரோணாச்சாரி யாரைக் கொன்ற பாண்டவ சேனாதிபதியும், திரெளபதியின் சகோதரனுமாகிய திட்டத்துய்மன் உட்பட யாவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
84
 

வேரும் விழுறும் அகளங்கன்
பாஞ்சாலி சோகத் தில் துடிதுடித்தாள். அவள் அசுவத்தாமாவைக் கொல்லும்படி அழுது அரற்றினாள்.
அசுவத்தாமாவைத் தேடிச் சென்ற பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமா, பிரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தைப் பிரயோகிக்க நினைத்தான்.
பூமியில் இருந்த ஒரு புல்லைப் பிடுங்கி, உரிய மந்திரங்களை மனதில் தியானித்து, அந்தப் புல்லையே பிரம்மசிரஸ் என்னும் தெய்வீக அஸ்திரமாக மாற்றினான்.
"பாண்டவர்களே இல்லாமற் போவதற்காக” என்று கூறி உலகத்தையே ஸ்தம்பிக்கச்செய்யக் கூடிய அந்த அஸ்திரத்தை ஏவினான்.
மூவுலகையும் நாசம் செய்யக் கூடிய சக்தியோ என்று
தோற்றம் ஏற்படுத்துகிற ஒரு தீ, அந்த அஸ்திரத்தில் அப்போது உண்டாகியது.
கிருஷ்ணரின் வேண்டுகோளுக்கிணங்க அருச்சுனனும் பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தை ஏவினான். “அஸ்வத்தாமாவின் அஸ்திரத்தை இது தணியச் செய்வதாக” என்று கூறி அருச்சுனன் ஏவிய பிரம்ம சிரஸ், வேகமாகச் சென்றது.
இரு அஸ்திரங்களும் ஒன்றை ஒன்று நோக்கி உக்கிரமாகச் சென்றன. இரண்டும் நெருப்பைக் கக்கிக்கொண்டு பாய்ந்து முன்னேறின.
வானமெங்கும் இடியோசை கேட்டது. வானத்திலிருந்து எரிநட்சத்திரங்கள் விழுந்தன. ஜீவராசிகள் அனைத்தும் நடுங்கின. மலைகள், ஆறுகள், நிலப்பரப்புக்கள், மரங்கள் என்று எல்லாவற்றோடும் பூமியே நடுங்கியது.
85

Page 46
வேரும் விழுறும் அகளங்கன்
இரு அஸ்திரங்களும் மோதினால் பெரும் அழிவு ஏற்படும் என்று அஞ்சிய நாரதரும், வியாசரும் அப்போது அங்கே வந்து, இரு அஸ்திரங்களுக்கும் நடுவில் நின்று தமது தவ வலிமையால் இரு அஸ்திரங்களின் வலிமையையும் கட்டுப்படுத்தினர்.
பின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அருச்சுனன் தனது அஸ்திரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டான். அசுவத்தாமாவிற்கு திரும்பப் பெறும் சக்தி இருக்கவில்லை.
கோபம் மாறாத அவன் "நான் ஏவிய அஸ்திரம் ஏதாவது இலக்கை அடைந்துதான் தீரவேண்டும். ஆகையால் அது பாண்டவர்களுடைய வம்சத்தினர் உதிக்கக் கூடிய கர்ப்பங்களில் விழப் போகிறது. அது அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்திலும் விழும்” என்று கூறினான்.
அதன்படி உத்தரையின் வயிற்றிலிருந்த பரீட்சித்து இறந்து பிறந்து, பின் கிருஷ்ணனால் உயிர்ப்பிக்கப்பட்டதாக மகாபாரதம் சொல்கிறது.
முனிவர்களால் தடுக்கப்பட்டதால் அசுவத்தாமாவின் பிரம்மசிரஸ் பெரும் அழிவுகளை ஏற்படுத்தவில்லை.
இத்தகைய பல அரிய, ஆச்சரியப் படத்தக்க ஆயுதங்கள்
அக்காலத்தில் இருந்ததை அறிந்து வியப்படையாமல் இருக்கமுடியவில்லை.
86

08| காக்கைச் சிறகினிலே,
நாங்கள் எத்தனையோ விடயங்களில், புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடுகின்றோம். மயங்கி விடுகின்றோம். எங்களைக் கவருகின்ற பல விடயங்கள் ஒரு பிரயோசனமுமில்லாதவையாக இருந்து விடுவதுமுண்டு.
நாளாந்தம் நாம் காணுகின்றவையும், நமக்கு நெருக்கமாக இருப்பவையும் பல சமயங்களில் நம் மனதைக் கவர்வதில்லை. எங்கோ தொலைவில் உள்ளவைதான் எங்கள் கவனத்தை ஈர்த்து விடுகின்றன.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலொன்றில் ஒரு அருமையான வரி உண்டு. "கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையைப்பார்ப்பதில்லை” என்பதுதான் அந்தவரி. எவ்வளவு அற்புதமான வரி.
தவளையும் வண்டும்
தாமரையோடு ஒன்றாகத் தடாகத்தில் வாழும் தவளைக்கு, தாமரைப் பூவின் வாசனையோ, தாமரை இதழ்களின் பிரகாசமோ, அழகோ, மேன்மையோ, மென்மையோ எதுவுமே தெரிவதில்லை. தாமரைப் பூவிலுள்ள தேனின் அருமையும் தவளைக்குத்
தெரியாது.
87

Page 47
வேரும் விறறும் அகளங்கன்
ஆனால் வண்டு, காட்டிலே இருந்து தாமரைப் பூவைத்தேடிவந்து, தேன்குடித்து மகிழ்ந்து செல்கின்றது. வண்டுக்குத்தான் தாமரைப் பூவின்பெருமை தெரிகிறது.
சிலவேளை வண்டும் தாமரையோடு பக்கத்தில் வளர்ந்திருந்தால், அதற்கும் தாமரைப் பூவின் அருமை பெருமை தெரியாமலிருந்திருக்குமோ என்னவோ.
இதை ஏன் கூறுகின்றேனென்றால் நாம்பல சந்தர்ப்பங்களில் எம்மோடு கூட உள்ளவற்றின் சிறப்பை உணராமல் விட்டுவிடுகிறோம் என்பதால் தான்.
தூரத்தில் இருப்பவற்றில், நல்ல தன்மைகள் தான் தெரிகின்றன. கிட்ட உள்ளவற்றின் கெட்ட தன்மைகள் தான் தெரிகின்றன என்று சொல்லலாம்போல் இருக்கிறது.
காகமும் பாரதியும்
உங்களில் யாருக்காவது காகத்தைப் பிடிக்குமா. காகத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரே ஒரு ஆள் மகாகவி பாரதிதான். அவர்தான் “எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா” என்று காகத்தின் மேல் இரக்கப்பட்டு, மற்றவர்களையும் இரக்கப்பட வைத்தவர்.
பாரதி ஏன் அப்படிப் பாடினான் என்று சிந்திக்கும் போது சிலவிடயங்கள் புலனாகின்றன. அவன் தனது பாப்பாப் பாட்டில்.
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா? எத்தித் திருடும் அந்தக்காக்காய் - அதற்கு இரக்கப்பட வேணனும் பாப்பா.
88
 

பாலைப் பொழிந்துதரும் பாப்பா - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா. வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா வண்டி இழுக்கும் நல்லகுதிரை - நெல்லு வயலில் உழுதுவரும் மாடு அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை ஆதரிக்க வேணனுமடி பாப்பா.
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போகிறார். இப்பாடலில் காகத்தை மட்டும்தான் இரக்கப்பட வேண்டிய பறவை என்று பாடுகிறார்.
காகத்திற்காக ஏன் இரக்கப்பட வேண்டும். அது ஏமாற்றித் திருடித் தின்கிறது. அறிவற்ற காகம் என்பதால் அதற்கு இரங்க வேண்டும் என்றாரா?
காகத்தை நரி ஏமாற்றிய கதை ஒன்று உண்டல்லவா. எத்தித் திருடிக் கொண்டு போய் மரக்கிளையில் இருந்த காகத்தைப் பார்த்து, தந்திரசாலியான நரி புகழ்ந்து பேசியதாம்.
காகம் அழகற்ற பறவை என்றும், அதன் குரல் இனிமையற்றதென்றும் வைத்துக் கொண்டுதான் இந்தக் கதையை உருவாக்கினார்கள். தற்புகழ்ச்சிக்கு அடிமையான காகம், 'கா' "கா" என்று பாட, அதன்வாயிலிருந்த வடை கீழே விழுந்ததாகச் சொல்லும் கதை யாவரும் அறிந்த கதைதான்.
"உன் பொன்னான வாயைத் திறந்து, உன் இனிமையான குரலில் பாடு பார்க்கலாம்” என்று புகழ்ந்தது நரி, எனக் கதை பண்ணியவர்கள், காகத் தை மிகவும் அழகற்ற ஒரு பறவையாகவும், இனிமையற்ற குரல் கொண்ட பறவையாகவும்
எண்ணித்தான் கதை பண்ணியிருக்கிறார்கள்.
89

Page 48
இப்படி, காகம் ஏமாந்து போனதற்காகத்தான் பாரதி காகத்திற்காக இரக்கப்பட வேண்டும் என்று பாடினானோ!
கவிஞரும் கறுப்பும்.
காகத்தின் சிறப்புக்கள் பல உண்டு. காகத்தின் நிறம் கறுப்பாக இருக்கலாம். ஆனால் கறுப்பு அழகில்லை என்று எந்த முட்டாள் சொன்னான்.
பா.விஜய இன் “கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு” பாட்டைக் கேட்ட பின் கறுப்பு அழகில்லை என்று சொல்லலாமா.
தமிழனின் நிறமே கறுப்புத்தானே. அப்படியென்றால் தமிழன் அழகில்லையா. கவியரசு கண்ணதாசன "கன்னங் கறுத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி அன்ன நடை போட்டாளடி" என்று எழுதிய பாடல் ஒலிக்காத திசையில்லையே. உச்சரிக்காத உதடில்லையே.
காத்தவராயன், ஆரியப் பூமாலையைப் பார்த்து விட்டு வந்து, தாயிடம் ஆரியப்பூமாலையின் அழகை வர்ணிக்கும்போது சொல்லுவான். “அவள் நாவற்பழத்திலுமோ நல்ல கறுப்பழகி" என்று.
ஆண்டாள் மகாவிஷ்ணு மூர்த்தியை “கருமாணிக்கம” என்று அன்பொழுகத் தன் பாசுரத்திலே அழைக்கிறாரே.
பாரதி காகத்தின் சிறகினிலே எதைக்கண்டான். “காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்த லாலா’ என்றானே. மறக்க முடியுமா. காகத்தின் சிறகிலுள்ள கருமையிலே கண்ணனைக் கண்டான் பாரதி.
அது மட்டுமா. "காக்கைக் குருவி எங்கள் ஜாத' என்று காக்கையை முன்னிறுத்தியல்லவா பரந்த உலகத்தில் தன் பற்றை வெளிப்படுத்துகிறான், அது மட்டுமா!
90
 

வேரும் விழுறும் அகளங்கன்
காவென்று கத்திடும் காக்கை - என்றன்
கண்ணுைக்கினிய கருநிறக் காக்கை
என்று பாடுகிறானே. சும்மாவா!
காகத்தின் அழகு.
காகத்தின் புறஅழகை ரசிக்க வேண்டுமென்றால் முதலில் காகத்தின் அகஅழகைக் காண வேண்டும். வெறுந் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து போபவர்களுக்கு காகம் அழகில்லை. காகத்தின் சத்தம் வெறும் கத்தல்தான்.
பாரதிக்கு குயிலின் கூவல் கூட கத்தலாகத்தான் இருந்தது, அதனாலேதான் "கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும” என்று பாடினான் பாரதி.
குயிலின் குரல் இனிமையானது என்பது பலரதுவாதம். முடிந்த முடிபு கூட ஆண்டாள் முதல் அத்தனை பேரும் பாடிப் பரவி விட்டார்கள்.
"குயிலே உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்.” என்று சினிமாவில் பாடினார்கள். “கீத மினிய குயிலே' என்று மணிவாசகர் பாடினார். தமிழ்த் திரையில் இளையராஜா பல குயில்ப் பாடல்களைப் புகழ் பெறச் செய்தார்.
ஆனால் எனக்கோ இப்போதெல்லாம் குயிலின் கூவல் பிடிக்கவில்லை. காகத்தின் கரைதல் தான் பிடிக்கிறது.
கூவல் என்றால் அழைத்தல் என்று பொருள். கூவி அழைத்தல் என்றும் சொல்கின்ற வழக்கம் உண்டு.
குயில் யாரைக் கூவி அழைக்கிறது தெரியுமா. தன் துணையைத்தான் கூவி அழைக்கிறது. குயிலினத்தில் பெண்குயில் தான் கூவுகிறது. என்கிறார்கள். பெண் குயில் தன் காம 91

Page 49
வேரும் விழுறும் அகளங்கன்
இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆண்குயிலை அழைக்கத்தான் கூவுகிறதாம்.
சேவல் கூவுகிறது. இருளைப்போக்கி உலகைக் காக்கும் சூரியனை அழைத்துக் கூவுகிறது. அது உயர்ந்த பொது நோக்கம். தனக்காக அல்லாமல் உலகுக்காகக் கூவுகிறது. சேவல்.
இருள் விலகி ஒளிதோன்றி உலகு உய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் அது கூவுகிறது. அதனாலேதான் முருகப் பெருமான் சேவலைக் கொடியாகக் கொண்டார்.
குயில் கூவுவது உண்மையில் படு ஆபாசம். தான், காம இச்சையைத் தீர்த்து வைக்கும் படி ஊரறிய, உலகறியக் குயில் கூவுகின்ற, துணையை அழைக்கின்ற வெட்கம் கெட்ட அநாகரிகமான செயலை எப்படி ரசிப்பது.
காகம் கரைகிறதே ஏன் தெரியுமா! ஏதாவது உணவு கிடைத்தால், தன் சுற்றத்தை அழைப்பதற்காக அது கரைகிறது.
கரைதல் என்றாலும் அழைத்தல் என்றுதான் பொருள், கலங்கரை விளக்கு என்பது கலத்தை அழைக்கும் விளக்கு என்றே பொருள் தருகின்றது.
காகம், தன் இனத்தையும் அழைத்து உண்பிக்கின்ற உயர்ந்த எண்ணம் கொண்டது. இந்தக் குணம் குயிலிடம் இல்லை. இதனால் எனக்கு குயிலின் குரலை விட காகத்தின் குரல் இனிமையானதாக இருக்கிறது.
காகத்தின் சிறப்பு.
இதைவிட இன்னொரு ரகசியமுமிருக்கிறது. அதுதான் இன்னும் முக்கியமானது. உலகில் தாய்மைக்கே களங்கமாக இருப்பது குயில்.
92
 

வேரும் விழுறும் அகளங்கன்
குயில் காகத்தின் கூட்டில், காகத்தை ஏமாற்றி முட்டையிட்டு விடுகிறது. அடைகாக்கத் தெரியாத குயிலுக்கு ஆசை வேறு.
காகம் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, குஞ்சு பொரித்த பின் குயிலின் குஞ்சுக்கும் இரையூட்டி வளர்க்கிறது.
தன் குஞ்சுக்கு ஒருபொழுதேனும் இரை ஊட்டாத குயிலை நினைத்தால் கோபம் வரவில்லையா.
தாய் மைக்கே மாசுகற்பிக்கும் குயிலின் குரல் போற்றப்படுவது விந்தையிலும் விந்தையே. இன்றைக்கு உலகம் இப்படித்தான் மயங்கிப்போய்க் கிடக்கிறது.
காகத்தின் சிறப்புப் பற்றி ஒரு பழம் UTL6) இருக்கிறது. அதனை இங்கு பார்ப்போம்.
“காலை எழுந்திருத்தல் காணாம லேபுணர்தல் மாலை குளித்து மனைபுகுதல் - சால உற்றாரோடு உண்ணல் உறவாடல் இவ்வாறும்
கற்றாயோ காக்கைக் குணம”
என்பதுதான் அப் பாடல் . அதிகாலையில் நித்திரைவிட்டெழுதல், எவரும் காணாதபடி மறைவாகத் தன் துணையோடு கூடுதல், இன்று மனிதனிடமே இந்த இரண்டும் இல்லையே.
காகத்தின் அடுத்த சிறப்பு, மாலையிலே நீராடுதல். அடுத்தது நீராடிவிட்டுத் தன் கூட்டுக்கு வருதல், அடுத்து உற்றாரோடு சேர்ந்துண்ணல், அதுமட்டுமல்ல ஒரு காகம் இறந்து விட்டால் எல்லாக் காகங்களும் சேர்ந்து அழுது தம் கவலையைப் பகிர்ந்து கொள்கின்றன.
93

Page 50
வேரும் விழுதும் அகளங்கன்
இந்த ஆறும் காக்கைக் குணம். இதை மனிதன் கற்க வேண்டும் என்கிறார் புலவர்.
காகமும் சைவரும்.
காகமா குயிலா நல்ல பறவை. வெளிவேசத்தில் மயங்கிப்போகும் மக்களுக்கு இது எங்கே புரியப்போகிறது.
இருந்தாலும் எங்கள் சைவர்கள் புரட்டாதிச் சனியிலே காகத்தை அழைத்து விருந்து வைக்கிறார்களே. காகக் குணத்தைத் தெரிந்து தான் விருந்து வைக்கிறார்களா.
உறவினர்கள் வரப்போவதை, அல்லது விருந்தினர்கள் வரப்போவதை அறிவித்து உதவக், கரைகின்ற காகமா, தன் காமஇச்சையைத் தீர்த்துக் கொள்ள ஆண்குயிலை அழைத்துக் கூவும் குயிலா உயர்ந்த பறவை.
சங்க காலமும் காகமும்,
தன் தோழியின் தலைவனது வரவை அறிவித்துக் கரைந்த காகத்திற்கு ஏழு கிண்ணங்களிலே அறுசுவை உணவை வழங்கினாலும் போதாது என்ற, சங்க காலத்தோழி, காகத்திற்குக் கொடுத்த மதிப்பு உண்மையான உயர்ந்த மதிப்பே.
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு ஏழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
(குறுந் - 210)
காக்கைப் பாடினியார் என்ற பெண்புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல்தான் இது.
94
 

வேரும் விழுறும் அகளங்கன்
"பல பசுக்கள் தந்த நெய்யோடு, தொண்டி என்னும் ஊர்முழுதும் விளைந்த வெண்ணெல்லின் விருப்பமான சோற்றைக் கலந்து, ஏழுகலங்களில் கொடுத்தாலும் சிறிய கைம்மாறே ஆகும். என் தோழியின் தோளை நெகிழுமாறு செய்த துன்பத்திற்கு மாற்றாக, விருந்து வருவதாகக் கரைந்த காக்கைக்கு உரிய பலியாகக் கொடுக்க அது சிறிதே ஆகும்.”
6T60T இதற்கு உரை வகுத்துள்ளார் டாக்டர் மு.வரதராசன். காகத்தின் மதிப்பை இனியாவது உணர்ந்து கொள்வோம். போலிகளைப் போற்றுவதை விட்டுவிட்டு, நல்லவைகளைப் போற்றுவோம்.
95

Page 51
| I
|
|
|
I
09| கொலைக்களஞ் சென்ற இரு நிரபராதிகள்
தமிழ் இலக்கியத்திலே, குற்றவாளிகளல்லாத இருவர். குற்றவாளிகளாக்கப்பட்டு கொலைக்களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். ஒருவர் ஆண். இன்னொருவர் பெண். ஆண் கொலைக்களத்திலே கொலை செய்யப்பட்டார். பெண் கொலைக்களத்திலே கொலை செய்யப்பட முடியாதவராகினார்.
இப்படிப் பீடிகை போட்டால் இலக்கிய இதயங்களுக்குச் சில வேளை இது எரிச்சலாகவும் இருக்கக் கூடும். சிலருக்கு இதுவே இந்த விடயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கக் கூடும்.
கொலைக்களத்திலே கொல்லப்பட்டவன் கோவலன, களவெடுக்காத கோவலன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டு, கொலைக்களத்திலே கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தான்.
கொலை செய்யப்பட முடியாத நிலையை அடைந்தவள் சந்திரமதி. தான் செய்யாத கொலையை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு. கொலைத்தண்டனையை வலிந்து ஏற்று, கொலைக்களம் சென்றவள் சந்திரமதி. அங்கே அவள் கொல்லப்பட முடியாத நிலையை அடைந்தாள்.
96

வேரும் விழுதும் அகளங்கன்
சிலப்பதிகாரம் தமிழ் நாட்டிலே நடந்ததாகக் கூறப்பட்டு, சில வருடங்கள் வித்தியாசத்தில் இளங்கோவடிகளால், தமிழிலே காவியமாகப் பாடப்பட்டது.
அரிச்சந்திர புராணமோ வடநாட்டு மூலக்கதை, தமிழிலே வீரகவிராயர் அல்லது ஆசுகவிராயர் என அழைக்கப்பட்ட புலவரினால் பாடப்பட்டது.
இந்த இரண் டு கொலைத் தண் டனைகளும் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இரண்டுக்கும் நீதி விசாரணைகள் இடம் பெற்றிருக்கின்றன.
அந்த நீதி விசாரணைகளைப் பற்றிய விளக்கத்தைப் பெறுவதன் மூலம், பண்டைக்கால விசாரணை மரபைப் புரிந்து கொள்ள முடியும். முதலில் கோவலன் பற்றிய விசாரணையைப் பார்ப்போம்.
கோவலன்
சோழ நாட்டில் இருந்து துயரத்தைச் சுமந்து கொண்டு, தன் துணைவி கண்ணகியோடு, பாண்டிய நாட்டிற்கு வந்தான் கோவலன். மதுரை மாநகரில், தன் வாழ்வில் மறுமலர்ச்சியைக் காண விரும்பினான். -
தன் மனைவியின் ஒருகாற் சிலம்பை விற்று பொருள் பெற்று. அதன் மூலம் வாணிபம் செய்து சிறப்புற்று, புது வாழ்க்கை தொடங்குவதே அவனது பெரு நோக்காக இருந்தது.
கண்ணகியின் மிகுந்த பெறுமதி வாய்ந்த சிலம்புகளில் ஒன்றை விற்றாலே தனது வாணிபத்திற்குப் போதிய பொருள் கிடைக்கும் என நம்பிய கோவலன், ஒரு சிலம்பை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனை விற்பதற்காக மதுரை மாநகரில், பெரு வணிகர் நடமாடும் வீதியில் செல்கிறான்.
97

Page 52
வேரும் விழுதும் அகளங்கன்
பாண்டிமாதேவியின் காற்சிலம்பு ஒன்றைக் களவாடிய பொற்கொல்லனிடமே, விதி வசத்தால் கோவலன் தன் சிலம்பையும் விற்க முயல்கிறான். கோவலனின் கைச்சிலம்பை நன்கு பரிசோதித்தான் பொற்கொல்லன்.
வெளித்தோற்றத்தில், எந்தவித வேற்றுமையும் இல்லாமல் தான் களவாடிய பாண்டிமாதேவியின் சிலம்பு போலவே அச்சிலம்பும் உருவ ஒற்றுமை கொண்டிருந்தது.
அதனால் கோவலனே பாண்டிமாதேவியின் காற்சிலம்பைத் திருடிய கள்வன் என்று அரசனிடம் குற்றம் சாட்டி அவனைக் கொன்று, தான் தப்பித்துக் கொள்ள வழி தேடுகிறான். பொற்கொல்லன்.
கோவலனை ஓர் இடத்தில் இருத்தி விட்டு, அவசரமாக அரண்மனைக்கு ஓடிச்செல்கிறான்.
அரச சபையிலே ஆடிய ஆரணங்குகளின் ஆட்டத்தை மட்டுமன்றி, அழகையும் இரசித்தான் பாண்டியன் என்று அவன் மேல் ஊடல் கொண்டு, பாண்டிமாதேவி, தலவைலி என்று சாட்டுச்சொல்லி அந்தப்புரத்தை அடைந்தாள்.
தன் மனைவியின் ஊடலைப்புரிந்து கொண்ட பாண்டியன், அவளின் ஊடலைத் தீர்க் கும் உபாயத்தை நாடிய உள்ளத்தனாகத், தனது மந்திரிகளை விலக்கி, தனியாக அந்தப்புரம் செல்கிறான்.
இந்தச் சந்தர்ப்பத்திலே, மன்னனைத் தேடி ஓடி வந்த பொற்கொல்லன், கோவலன் கள்வன் என்பதையும், களவுபோன
சிலம்பு கைப்பற்றப்பட்டதையும் அரசனிடம் கூறுகிறான்.
தொலைந்த சிலம்பு மீண்ட செய்தியையும், களவு
செய்தவன் கைப்பற்றப்பட்டதையும் மனைவியிடம் சொல்லி,
98
 
 

வேரும் விழுறும் அகளங்கன்
மனைவியின் ஊடலைத் தீர்க்கலாம் என்ற எண்ணம் பாண்டியனுக்கு எழுந்திருக்கலாம்.
அரண்மனைக்குள்ளேயே வந்து, பட்டத்தரசியின் காற்சிலம்பைக் களவாடிய கள்வனைக்கொலை செய்யாது விட்டுவிட்டால் அது தன் ஆட்சிக்கு இழுக்காகும் என்றும், அவனைக் கொலை செய்வதன் மூலம் தனது மனைவியின் ஊடலைத் தீர்க்கவும் வழி பிறக்கலாம் என்றும், பாண்டியன் நினைத்திருக்கலாம்.
அதனால் உடனடியாகப் பாண்டிய மன்னன் நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறான். மன்னன் தான் இல்லாத சபையில் தனது மந்திரிகள் இல்லாத சபையில் போதிய அறிவில்லாத ஊர்க்காப்பாளரிடம் நீதி விசாரணையை ஒப்படைத்தது மிகப் பெரும் தவறுக்கு வழி சமைத்துவிட்டது.
"ஊர்க்காப்பாளரைக் கூவி ஈங்கு என் தாழ் பூங்கோதை தன் காற்சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு”
என ஊர்க்காப்பாளரிடம் நீதி விசாரணையை அரசன் ஒப்புவித்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார். இந்த ஊர்க்காப்பாளரிலே, படிக்காதவர்களும் வயது குறைந்த இளைஞர்களும் இருந்திருக்கிறார்கள்.
“கல்லாக் களிமகன் ஒருவன” என்றும், "திருந்துவேற் தடக்கை இளையோன” என்றும் இருவரை ஊர்க்காப்பாளரிலே இளங்கோ அடிகள் இனங்காட்டுகிறார்.
ஒரு கொலைத் தண்டனையை இப்படியான ஒரு பொறுப்பற்ற குழுவினரிடம் பாண்டிய மன்னன் ஒப்படைத்து பெரும்
99

Page 53
வேரும் விழுறும் அகளங்கன்
பழி பூண்டு விட்டான். அதனால் களவெடுக்காத கோவலன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டான்.
இதன் பின்னர், தன் கணவன் சார்பாக கையிற் சிலம்போடும், கண்ணிரோடும், வழக்குரைக்க வந்த கண்ணகியை அரசனே மந்திரி பிரதானிகளோடு விசாரணை செய்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
கோவலனையும் அரசன், தன் முன்னிலையிலேயே விசாரணைக்குட்படுத்தியிருந்தால், வீணான கொலையும், அதனால் விளைந்த விரும்பாத விளைவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று கூறலாம்.
சந்திரமதி.
பாம்பு தீண்டி இறந்த மகன் தேவதாசனை சுடுகாட்டிலே எரிப்பதற்குத், தனது கணவனான அரிச்சந்திரன் முழத்துண்டும். காற்பணமும் கூலிகேட்க, அதனைக் கொண்டு வருவதற்காக, சந்திரமதி தன்னை அடிமை கொண்ட பிராமணனின் வீடு நோக்கி ஒடுகிறாள். வழியிலே சிறு பிள்ளை ஒன்று கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறது.
புத்திர சோகத்தில் ஓடிவந்த சந்திரமதி, தெருவில் கிடந்த பிள்ளையைத் தன் பிள்ளை தானோ என்று ஐயுற்று எடுக்கிறாள். சுடுகாட்டிலே விட்டுவந்த தன் பிள்ளையைப் பேய்கள் எடுத்து எறிந்து விட்டிருக்கலாம், என்று நினைத்துத் தெருவில் கிடந்த அப்பிள்ளையை எடுத்து, அந்த இருட்டு வேளையிலே தன் பிள்ளைதானா என்று ஆராய்கிறாள்.
அப்பிள்ளை காசி அரசனின் மகன். கள்வர்களால் பொன்னகைகளைக் களவாடுவதற்காகக் கடத்தி வரப்பட்ட 100
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேரும் விழுறும் அகளங்கன்
அப்பிள்ளை பின்னர் அவர்களால் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது.
அரசனின் மகனைக் காணாது தேடி வந்த காவலர்கள், சந்திரமதியின் கையில் பிள்ளையைக் கண்டு பிள்ளையை அவளே கொன்றாள் என நினைத்து கோபங்கொண்டு, அவளது கூந்தலைப் பிடித்து, இழுத்து, அடித்து, உதைத்துத் துன்புறுத்திய பின் அரசனிடம் கொண்டு வருகிறார்கள்.
அரசன், மந்திரிகள் முன்னிலையில் சபையோர்கள் சாட்சியாக விசாரணையைத் தொடங்குகிறான். கொலை செய்யப்பட்டது தனது மகனாக இருந்தும் கூட சோகத்தாலோ அன்றிக் கோபத்தாலோ தன் நிலை மயங்காது, உண்மையிலேயே அவள்தான் அந்தப்பிள்ளையைக் கொன்றாளா என்று துல்லியமாக ஆராய முனைகிறான்.
கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சந்திரமதியிடம் அப்பிள்ளையை “நீதானா கொன்றாய்”, “ஏன் கொன்றாய்” எனக்
காரணம் கேட்கிறான் அரசன்.
சத்திய வேள்வியில், தன் இராச்சியத்தை விசுவாமித்திர முனிவருக்குப் பறிகொடுத்து, அயோத்தி அரசை விட்டு அகன்றவன் அரிச்சந்திரன். அவன் பின்னாலே அவன் பத்தினியான சந்திரமதியும், மகன் தேவதாசனும் சென்றனர்.
தன் வாய்மையையும், மனத் தூய்மையையும் தன் உயிரினும் மேலாகப் பேணியவன் அரிச்சந்திரன். அதனால் தன் மனைவியையும், தன் ஒரே மகனையும் ஒரு பிராமணனுக்கு அடிமையாக விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தானும் ஒரு புலைஞனுக்கு அடிமையாகி சுடுகாட்டைக் காக்கும் தொழிலைச் செய்கிறான்.
101

Page 54
வேரும் விழுறும் அகளங்கன்
துன்பம் இவ்வளவோடு முடியவில்லை. தர்ப்பை சமித்து பறித்து வரத் தோழர்களோடு சென்ற தேவதாசனின் உயிர் பாம்புக்குப் பலியாகிறது. இறந்த தன் புதல்வனைக் காட்டில் சென்று கண்ட சந்திரமதி, துன்பத்தின் எல்லைக்கே சென்று விட்டாள்.
பிள்ளையை எரித்து விட்டு, விடிவதற்குள் தன்னை அடிமை கொண்ட பிராமணனின் வீட்டிற்கு வந்து விடவேண்டும் என்ற பிராமணனின் கட்டளை அவள் இதயத்தை மேலும் உலுக்கியது.
சுடுகாட்டைக் காவல் காப்பவனாகத் தன் கணவனை அங்கே கண்டு மேலும் பதைபதைக்கிறாள் சந்திரமதி. இதன் பின்புதான் காசி அரசனின் பிள்ளையை மடியில் வைத்து அழுத சம்பவமும் அரசன் முன் நீதி விசாரணையும் இடம்பெறுகின்றன.
மகனையும் இழந்து, தனது கணவனையும் காணக் கூடாத கீழ் நிலையில் கண்ட சந்திரமதி தானே தன் சாவை வரவேற்கிறாள்.
அதனால் அக்குமாரனைத் தானே கொன்றதாக ஒப்புக் கொள்கிறாள். தான் ஓர் அரக்கி என்றும், இளந்தசை தின்னும் விருப்பத்தில் அரசனின் மகனைக் கொன்றதாகவும் பொய் கூறுகிறாள் சந்திரமதி.
என்றுநர வன்றசைகள் உண்டுடல் எடுத்தேன் வென்றிவடி வேலிறைவ நின்னகரில் மேவி இன்றிரவில் நின்மகன் இளந்தசை விரும்பித் தின்றிட நினைந்துயிர் செகுத்துள தென்றாள்.
செய்யாத கொலையைத் தானே செய்ததாகச் சந்திரமதி ஒப்புகொண்டதும், அமைச்சர்களும் அவளே கொலை செய்திருப்பாள் என்ற முடிவிற்கே வருகின்றனர்.
102
 

வேரும் விழுறும் அகளங்கன்
ஆனால் இறந்தது தன் மகனாக இருந்தும் கூட, அரசன் அவள்மேல் இரக்கங் காட்டுகிறான். அவளை நன்றாக உற்றுப் பார்த்து அவளது அங்க லட்சணங்கள் ஒரு கொலைக்காரிக்கு உரியதாக இல்லை என்று கூறுகிறான்.
உயிர்க்கொலை புரிந்தவர் முகக்குறி உரைக்கும் கையிற்குறி உரைக்கும் இருகட்குறி உரைக்கும் குயிற்குரன் மடந்தையிவள் கொன்றகுறி உண்டென்று அயிற்பிலை எனக்கென அமைச்சரொடு உரைத்தான்
உயிர்க்கொலை செய்பவர்களை, முகத்தைப் பார்த்தால், அல்லது கையைப் பார்த்தால், அல்லது இரு கண்களைப் பார்த்தால், நிச்சயமாகத் தெரிந்து விடும்.
இவளின் குரலோ குயிலின் குரல் போன்று இனிமையாக இருக்கின்றது. உயிர்க் கொலை செய்பவர்களுக்குரிய எந்த அங்க அடையாளங்களும் இவளில் காணப்படவில்லை.
உத்தமிக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் ஒருங்கே வாய்க்கப் பெற்றவளாக இருக்கிறாள். அதனால் இவள் கொலை செய்திருப்பாள் என்ற சந்தேகம் சிறிதளவும் என் நெஞ்சில் இல்லை என்கிறான் அரசன்.
குற்றஞ் சாட்டப்பட்டவள், தானே குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளும் போதும் கூட, நீதிபதியாகிய அரசன், அதனை ஒப்புக் கொள்ள மறுக்கிறான். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு நீதி விசாரணையை நடாத்துகிறான் அரசன்.
அக்காலத்தில் நீதி விசாரணையின் போது சாட்சிகள் மட்டுமன்றி, அங்கலட்சணமும் ஆராயப்பட்டிருக்கின்றது என்பதை நோக்கக் கூடியதாக இருக்கிறது.
103

Page 55
வேரும் விழுறும் அகளங்கன்
கொலையாளியைக் கண்டுபிடிக்க அரசன் இன்னொரு யுத்தியைக் கையாளுகிறான். அரண்மனையில் இருந்து பிள்ளை இறந்து கிடந்த இடம் வரையில் உள்ள காலடிகளைப் பரிசோதியுங்கள், அவை இவளின் காலடிகள் தானா என்பதை ஆராயுங்கள் என ஆணையிடுகிறான்.
காலடையாளம்.
அன்னவை உரைத்தவரை மன்னன் அமைத்தே என்னைபல பேசுவதில் ஏழையடி தானோ பின்னையடி சென்றுளதோ பிறிதெனக் கண்டு இன்னொடியில் வந்திடும் எனச்சிலரை விட்டான்.
அதிகம் பேசுவதில் ஒன்றுமே ஆகப்போவதில்லை. இவளின் காலடிகள் தானா, வேறு காலடிகள் இருக்கின்றனவா என்பதை விரைவில் கண்டு பிடியுங்கள் என ஆணையிட்டான் அரசன் என்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
விசுவாமித்திர முனிவரின் சூழ்ச்சியினால் சந்திரமதியின் காலடிகள் மட்டுமே அங்கு இருந்தன.
காலடி நிபுணர்களின் கூற்றைக்கேட்ட அரசன் வேறு வழியின்றி, மன விருப்பமின்றி ஏதோ வினைப்பயனால் இவளுக்கு இத்தண்டனை கொடுக்க நேர்ந்தது என்று கூறிக் கொண்டு கொலைத் தண்டனையைக் கொடுக்கிறான்.
கொல்ல இவள் வல்லவளு மல்லள்: கொலைசெய்தாள் அல்லள் எனில் அங்கொருவர் வந்தஅடி இல்லை. தொல்லை வினை எவ்வகை தொடர்ந்த தறிதக்கது இல்லை, என மைந்தனில் இவட்குருகி நின்றான்.
"இவள் கொல்லக் கூடியவளுமில்லை. இவள் கொலை செய்யாது விட்டால், வேறு எவரும் கொலை செய்ததற்கான
தடயங்கள், காலடிகள் இல்லை.
104
 

வேரும் விழுறும் அகளங்கன்
ஊழ்வினையை அறிந்து கொள்ளும் திறமும் எனக்கில்லை. இவளுக்கு கொலைத் தண்டனை வழங்குவது எனது மகன் இறந்ததினால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை விட மிகக் கொடுமையானது” எனக் கூறி மனமுருகுகிறான் அரசன்.
,
“மைந்தனில் இவட்குருகி நின்றான்’ மைந்தனின் இறப்பை விட, செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவிக்கப் போகும் சந்திரமதியின் இறப்புக்காக காசி அரசன் அதிகம் கலங்கினான் என்பதை கவிஞர் அழகாகக் கூறிவிடுகிறார்.
கொலைக் களத்திலே அரிச்சந்திரன். சந்திரமதியின் கழுத்தை வாளால் வெட்டும் போது வாள், மாலையாகி அவள் கழுத்தில் விழுந்தது.
"மறுமணத்திடும் மாலையாய் வீழ்ந்தது. அவ்வடிவாள்.” அதனால் சந்திரமதி கொலைக்களம் சென்றும் கொல்லப்பட முடியாத நிலையை அடைந்தாள்.
பிழையான நீதி விசாரணைக்கு கோவலனைப் பாண்டிய மன்னன் விசாரித்த முறையும், மிகச்சரியான நீதி விசாரணைக்குக் காசி அரசன் சந்திரமதியை விசாரித்த முறையையும் இலக்கியத்தில் கண்டு கொள்ளலாம்.
குற்றஞ் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொள்வது, அவரைக் குற்றவாளி என நிரூபிப்பதற்குரிய போதிய சான்றாகாது, என்ற சட்டவிதியை காசி அரசனின் விசாரணை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
காசி அரசனின் நீதி விசாரணை இன்றைய நீதி விசாரணைச் சட்ட முறைமைகளுக்கெல்லாம் முன்னோடியானது என்பதில் மிகை ஏதும் இல்லை.
鲁
105

Page 56
10 பாரதத்தில் “பாஸ்” நடைமுறை
வடக்கிலே, குறிப்பாக வவுனியா நகரிலே கடந்த 1991ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக "பாஸ்” நடைமுறை இருந்து வந்தது.
வவுனியாவிற்குள் வருபவர்கள் இராணுவ சோதனைகளுக்குப்பின் வவுனியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
அப்படி அனுமதிக்கும் போது ஒரே ஒரு நாள் மட்டுமே வவுனியாவில் தங்கக் கூடியதாக ஒரு நாள் அனுமதிச் சீட்டு (One day pass) 6 upsids ULg).
அந்த ஒரு நாள் அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர் வவுனியாவை விட்டு தெற்கே சிங்களப் பகுதிகளுக்கோ அல்லது திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் முதலிய தமிழ்ப் பகுதிகளுக்கோ செல்ல முடியாது.
அதாவது, வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என எந்த வழியால் வவுனியா நகரிற்கு வந்தவர்களும், வந்த வழியால் திரும்பிச் செல்லலாமே தவிர வேறு வழியால் செல்ல முடியாது.
ஒரு நாளுக்கு மேல் வவுனியாவில் ஒருவர் நிற்க வேண்டுமென்றால், வவுனியாவில் நிரந்தர வதிவிட அனுமதிப்
106
 

வேரும் விழுதும் அகளங்கன்
பத்திரம் (Permanentpass) உள்ள ஒருவரைப் பிணையாளியாகக் கூட்டிச் சென்று பதிந்து, அவர் பொறுப்பில் மட்டுமே நிற்கலாம்.
அதுவும் மூன்று நாட்களுக்கு மட்டுமே. அந்த மூன்று நாட்களும் அவர் வவுனியாவிற்கு வெளியே போக முடியாது.
அதற்கு மேலும் நிற்க வேண்டுமென்றால் தகுந்த காரணம் காட்டி, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவரின் பிணையோடு அவரின் பொறுப்பில் ஒரு கிழமை தங்கலாம்.
அரசாங்க உத்தியோகம் பார்ப்பவராயின் திணைக்களத் தலைவரின் சிபார்சோடு, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் உள்ளவரின் பிணையோடு அவரின் பொறுப்பில் ஒரு கிழமை தங்கலாம்.
அதுவும் ஒருநாள் மூன்று நாள், ஒரு கிழமை, இரண்டு கிழமை, ஒரு மாதம், மூன்று மாதம், என்று திகதியிட்டு வரையறுத்துக் கொடுக்கப்படும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றே தங்கலாம்.
எடுத்த எடுப்பிலேயே மூன்று மாதம் என்று அனுமதி வழங்கப்படுவதில்லை. முன்னுள்ள தடைகள் தாண்டியே வரவேண்டும்.
இப்படி ஒவ்வொரு தடையாகத் தாண்டி வவுனியாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி பெற்றாலும் அவர்கள் வவுனியாவிற்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை
அவர் களது வதிவிட அனுமதிப் பத்திரத்தை வவுனியாவிற்கு மட்டுமான வதிவிட அனுமதிப் பத்திரமாகவே (Vavuniya only pass) SÐIJFITTĚJabb 6JĮprĚJaślu. Jg5!.
இத்தகைய வதிவிட அனுமதிப் பத்திரம் பெற்றவர்களும்
107

Page 57
வேரும் விழுறும் அகளங்கன்
வவுனியாவிற்கு வெளியே செல்ல முடியாது.
வவுனியாவிற்கு வெளியே செல்ல வேண்டுமாயின் தகுந்த காரணம் காட்டி, அதற்கெனப் பிரத்தியேகமாக அனுமதிப் பத்திரம் பெறவேண்டும்.
நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் உள்ளவர்கள் மட்டுமே எங்கும் சென்று வரலாம். அதுவும் வெளியேறும் இடங்களில் பதிவுகளைச் செய்த பின்பே அனுமதி கிட்டும்.
நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் பெற சில இறுக்கமான நடைமுறைகளைக் கையாண்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்பு இந்த நடைமுறை கைவிடப்பட்டது.
மகாபாரத காலத்திலேயே இத்தகைய போர்க்கால நடைமுறை இருந்திருக்கிறது, என்பதை அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
மகத நாட்டு மன்னனான சராசந்தனின் புத்திரிகள் இருவரை கம்சன் திருமணஞ் செய்திருந்தான். கம்சனின் சகோதரியான தேவகியின் மகன் கிருஷ்ணன் கம்சனைக் கொன்றான்.
கணவனை இழந்த பெண்கள் இருவரும் தம் தந்தையான சராசந்தனிடம் சென்று முறையிட்டனர்.
சராசந்தன் பதினெட்டுத் தடவைகள் கிருஷ்ணனோடு யுத்தஞ் செய்து வெற்றி பெற்றான்.
பின்பொருநாள் தன் புத்திரிகளின் துயரத்தைத் தாங்க மாட்டாதவனாகித் தனது கதாயுதத்தைச் சுழற்றிக் கிருஷ்ணனின் நகரமான மதுரையின் மேல் எறிந்தான்.
108
 
 

வேரும் விழுறும் அகளங்கன்
கதாயுதம் மதுரையில் விழுந்தது. ஏராளமான மக்கள் மடிந்தனர். பல கட்டடங்கள் சிதைந்தன. மதுராபுரிக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டது.
அதன் பின்பு கிருஷ்ணன் கடல் நடுவே துவாரகை என்ற நகரை நிருமாணித்துக் கொண்டு இடம் பெயர்ந்து சென்றானென்று மகாபாரதம்கூறுகிறது.
சராசந்தன் எறிந்தது இன்றைய ஏவுகணையாக இருக்கலாம். ஏவுகணை செல்ல முடியாத தூரத்திலே தனது தலைநகரைக் கிருஷ்ணர் நிருமாணித்துத் துவாரகை எனப் பெயரிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்ற வில்லையா.
தருமன் இராசசூய யாகம் செய்ய விரும்பினான். அதற்காக சராசந்தனின் மகத நாட்டுக்கு மாறுவேடத்தில் கிருஷ்ணனும் வீமனும் அருச்சுனனும் சென்றனர்.
வீமன் சராசந்தனோடு போர் செய்து சராசந்தனைக் கொன்றான்.
பின், தருமன் செய்த இராசசூய யாகத்தின்போது சிசுபாலன் குழப்பம் விளைவித்தான். முதற்தாம்பூலத்தை அதாவது முதல் மரியாதையை தருமன் கிருஷ்ணனுக்குத் தந்ததை சிசுபாலன் அவமதித்தான்.
கிருஷ்ணனைப் பற்றிப் பலவாறாகப் பழித்துப் பேசினான். இதனால் கிருஷ்ணனுக்கும் சிசுபாலனுக்கும் யுத்தம் மூண்டது. சிசுபாலன் கிருஷ்ணபகவானின் சக்கராயுதத்திற்கு இரையாகி மாண்டு போனான்.
இந்தச் செய்தியைச் சிசுபாலனின் நண்பனான சாலுவன் கேள்விப்பட்டான். அவன் மிகுந்த கோபங்கொண்டு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு துவாரகையை முற்றுகையிட்டான்.
109

Page 58
வேரும் விழுறும் அகளங்கன்
கிருஷ்ணன் தனது நகரான துவாரகைக்குத் திரும்பாத வேளை அது. உக்கிர சேனன். துவாரகையைக் காவல் காத்துக் கொண்டிருந்தான்.
முற்றுகையிடப்பட்ட காலத்தில் துவாரகையில் சில போர்க்கால நடைமுறைகள் அமுலுக்கு வந்தன. அவற்றை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. என் ஆச்சரியத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்களேன்.
யாரும் கள் (மது) குடிக்கக் கூடாது. நடனம் ஆடிப் பிழைப்பவர்கள் மற்றும் வேடிக்கை ஆட்டக் காரர்கள் யாவரும் நகரைவிட்டு வெளியேறி விடவேண்டும்.
துவாரகை ஒரு தீவாக கடல் நடுவில் அமைந்திருந்ததால், கடல் வழியாக நகருக்கு வரும் எல்லாப் பாலங்களும் உடைத்துவிடப்பட்டன. கப்பல்கள் தடுக்கப்பட்டன.
அகழிகளில் தண்ணிருக்குள் இரும்புச் சூலங்கள் நடப்பட்டன. (பொறிவெடிகள் போல) மதில்கள் எல்லாம் பழுதுபார்க்கப்பட்டன. வழிகள் எல்லாம் இரும்பு முட்கம்பிகள் நடப்பட்டுத் தடுக்கப்ட்டன.
நகரத்தின் பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டது. நகரத்திலிருந்து யாரும் முத்திரையிடப்பட்ட அனுமதிச் சீட்டின்றி வெளியே போகமுடியாது. நகரத்தினுள் பிரவேசிப்பதற்கும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
சேனைகளுக்கெல்லாம் சம்பளம் உயர்த்தப்பட்டது. கொடுக்க வேண்டிய ஊதியங்கள் எல்லோருக்கும் தாமதமின்றித் தாராளமாகத் தரப்பட்டன.
சேனையில் சேர்க்கப்பட்ட ஆட்கள் யாவரும் நன்றாகப் பரீட்சிக்கப்பட்டனர். அதாவது நன்றாக ஆராய்ந்தே சேனையில்
சேர்க்கப்பட்டனர்.
110
 

வேரும் விழுறும் அகளங்கன்
பின்பு கிருஷ்ணர் வந்து போர் செய்து சாலுவனை வெற்றி கொண்டதாகவும், இந்தக் காலத்திலே தான் சூதாட்டம் நிகழ்ந்ததாகவும், அதனால் தான் கிருஷ்ணன் சூதாட்டத்தின் போது அஸ்தினா புரத்தில் இருக்கவில்லை என்றும் மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அருமையாகத் தமிழில் எழுதியுள்ளார். அவர் மிகவும் ஆச்சரியத்துடனேயே இந்தப் போர்க்கால நடவடிக்கை விடயத்தைக் குறிப்பிடுகிறார்.
இதனைப் படித்தபோது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் போர்க்கால நடவடிக்கைகளுக்குள் நாங்களும் சிக்குப்பட்டிருந்திருக்கிறோம். சிக்குப்பட்டிருக்கிறோம் அல்லவா, உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்குமே
யுத்தகால நடைமுறைகள் எக்காலத்திலும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கின்றன. முற்காலத்தில் இன்னும் விசேடமாக இருந்திருக்கிறது என்பதை இதைப் படிக்கும்போது கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கிறதல்லவா.
"பாஸ்" நடைமுறை பாரதத்திலும் இருந்திருக்கிறது. எமது நாட்டில் இன்னும் முற்றாக மறையவில்லை. பூரண சமாதானம் ஏற்பட்டு பூரண அமைதி ஏற்படும் போதுதான் யாரும்எங்கும் போய் வரலாம், தங்கலாம் என்ற நிலை வரும்.
அந்நாளையே பொன்னாளாக எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம்.
111

Page 59
11| பயன்படாத கல்வி
தேசத்திற்குத் தேசம், மொழிக்கு மொழி, காலத்திற்குக் காலம் கல்விக் கோட்பாடுகள் மாறுபட்ட வையாகவே இருந்துவந்துள்ளன.
இன்றும் கூட கல்விக் கோட்பாடுகள் விரைவான மாற்றங்களைக் கண்டு கொண்டே இருக்கின்றன எனலாம்.
மாற்றமே உலகின் பொது நியதி. உலகில் மாறாது நிலைத்திருப்பது மாற்றம் ஒன்றேதான் என்பார்கள் அறிஞர்கள். “மாற்றமாம் வையகத்தில். ’ எனப் பாடுகிறார் மாணிக்கவாசக சுவாமிகள்.
இருப்பினும் எனக்குப் பிடித்தமான நிலையான கல்விக் கோட்பாடு ஒன்று உண்டு. அது விளங்கிக் கொள்ளச் சற்றுக் கடினமானது. இருப்பினும் அதுவே சிறப்பானது. என்பது எனது அபிப்பிராயம்.
“கற்றவைகள் யாவும் மறந்துபோன பின்னும் எது உள்ளத்தில் எஞ்சியிருக்கிறதோ அதுவே கல்வ” என்றான் ஒரு மேலைத்தேசக் கல்வியியலாளன். அதுவே எனக்குப் பிடித்த கல்வித் தத்துவம்.
112
 

வேரும் விழுறும் அகளங்கன்
இதை மனப்பாங்கு என்று கருதலாமோ என்று நினைத்துப் பார்த்தால் இச் சொல்லின் பொருள் போதாது போல் எனக்குப்படுகிறது.
உண்ட உணவு முழுவதும் அப்படியே வாழ்நாள் முழுதும் வயிற்றினுள் இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. அவை அன்றன்றே சமீபாடடைந்து ஊட்டச்சத்துக்களாகப் பிரிபட்டால்தான் உடலுக்குப் பயன்படும்.
அந்த வகையது தான் கல்வியும், என்பது அவரது அபிப்பிராயம். உண்ட உணவு மறைந்து போய் அல்லது உருமாற்றம் அடைந்து ஊட்டச் சத்துக்களாவதுபோல, கற்றவைகள் மறந்து போனாலும் அதனால் பெற்றவைகள் பயன்படும் என்பதே இதன் விளக்கம்.
ஆனால் , தொழிற் கல்வியைப் பொறுத்தவரை இதன்பொருத்தப்பாடு மிகமிகக் குறைவு , அல்லது அரிது என்றே சொல்லலாம்.
தொழிற்கல்வி, பெருமளவிற்கு நேரடிப்பயன்பாடு கொண்டது. கற்றது மறந்து போனால் மறந்து போனது தான். எந்தப்
பயன்பாடும் இல்லை.
இங்கே நேரடிப் பயன்பாடுடைய தொழிற்கல்வி கற்று அக்கல்வி பயன்படாமற் போய்ப் பரிதவித்த மூவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
கசன் கற்ற சஞ்சீவினி வித்தை.
மகாபாரதத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு அருமையான கதை கசன் கதை. தேவகுருவாகிய கிருகஸ்பதியின் மகன் இவன்.
113

Page 60
வேரும் விழுறும் அகளங்கன்
தேவர்களும் அசுரர்களும் பெரும் போர் புரிந்து, இருதரப்பினர்களும், இறந்தழிந்து போன வேளைகளில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தின் மூலம் அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் அசுர சேனா வீரர்களை உயிர்பெற்றெழச் செய்து கொண்டிருந்தார்.
இந்த மந்திரத்தை அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் மட்டுமே அறிந்திருந்தார். அதனால் தேவர்களால் அசுரர்களோடு தொடர்ந்து யுத்தம்செய்ய முடியவில்லை.
யுத்தத்தைக் கைவிட்ட தேவேந்திரன் தனது குருவாகிய கிருகஸ்பதிமேல் கோபம் கொண்டான். சஞ்சீவினி மந்திரத்தை அவர் அறியாமல் இருந்தது தான் அவனது கோபத்துக்குக் காரணம்.
தேவேந்திரன் மனம் நொந்து, தேவ குருவின்மேல் கோபம் கொண்டிருப்பதை அறிந்த குருவின் மகனான கசன், அந்த சஞ்சீவினி மந்திரத்தைத் தான் கற்றுவருவதாகக் கூறிப் புறப்பட்டான். அசுரகுருவாகிய சுக்கிராச்சாரியாரிடம் சென்று சேர்ந்தான்.
தன்னை மாணவனாக ஏற்றுக் கொண்டு, தனக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்பிக்கும்படி பணிந்து வேண்டினான்.
சுக்கிராச்சாரியாரோ அவன் தேவகுருவின் மகன் என்பதை அவன் மூலமாகவே அறிந்து கொண்டு அவனது நேர்மையைப் பாராட்டி தனது சீடனாகச் சேர்த்துக் கொண்டார்.
சஞ்சீவினி மந்திரத்தைக் கற்பிக்க அவர் மறுத்தபோதும், அவன் மாணவனாக இருந்து எப்படியாவது அவரது மனதில் இடம்பிடித்து, அவரிடம் அவ்வித்தையைக் கற்றுக்கொண்டே
114
 

வேரும் விழுறும் அகளங்கன்
திரும்புவது என்று பிடிவாதமாகக் காலங்கருதிக் காத்திருந்தான்.
மிகுந்த பணிவோடு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறைவில்லாமல் செய்து, அவரது மனமாற்றத்திற்கான காலம் கருதிக் காத்திருந்தான்.
தமது அசுர குருவாகிய சுக்கிராச்சாரியாரிடம் தமது எதிரிகளான தேவர்களின் குருவின் மகன் கசன், சீடனாக வந்து பணிபுரிவதைப் பார்த்து, அசுர அரசன் விடப்பன்மன் மிகுந்த கோபம் கொண்டான்.
சுக்கிராச்சாரியாரிடமிருந்து சஞ்சீவினி மந்திரத்தை அவன் கற்றுவிடக் கூடாது என்று கருதிய அவன், கசனைக் கொல்ல முயன்றான்.
குருவின் மாடுகளை மேய்த்துக் கொண்டு, காட்டுக்குச் சென்ற கசனை, விடப்பன்மனின் வீரர்கள் கொன்று, துண்டு துண்டாக வெட்டி, நாய்களுக்கு இரையாகப் போட்டுவிட்டார்கள்.
க சண் மேல் பெருங் காதல் கொண் டிருந் தாள் சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி, கசன் மாலையாகியும் வீடு திரும்பாததையும், பசுமாடுகள் திரும்பியதையும் பார்த்துப் பரிதவித்த தேவயானி, தன் தந்தையிடம் முறையிட்டு அழுதாள்.
தனது ஞான திருஷ்டியின் மூலம், அசுரர்கள் செய்திருந்த கொடுமையைக் கண்டு கொண்ட சுக்கிராச்சாரியார், நாய்களின் வயிறுகளில் இரையாகிப் போயிருந்த கசனைத் தனது சஞ்சீவினி மந்திரத்தின் மூலம் உயிர்ப்பித்தார்.
நாய்களின் வயிறுகளைக் கிழித்துக் கொண்டு கசன் உருப்பெற்று வெளிவந்து சேர்ந்தான். தேவயானி மிகவும் சந்தோசம் அடைந்தாள். -
115

Page 61
வேரும் விழுறும் அகளங்கன்
இன்னொரு தடவை தேவயானிக்காகப் பூப்பறிக்கக் காட்டுக்குள் சென்ற கசனை, விடப்பன்மனின் வீரர்கள் கொன்று உடலை அரைத்துச் சமுத்திர நீரில் கரைத்துவிட்டார்கள்.
கசனைக் காணாது அழுது புலம்பிய தேவயானிக்காக சுக்கிராச்சாரியார் மீண்டும் தனது சஞ்சீவினி மந்திரத்தைப் பயன்படுத்தி கசன் உயிர்பெற்று வரும்படி செய்தார்.
இப்படிப் பலதடவைகள் அசுரர்கள் கசனைக் கொல்வதும், சுக்கிராச்சாரியார் அவனை எழுப்புவதுமாகக் காலம் கழிந்தது.
அசுரர்கள் மிகவும் புத்திசாலித்தனமான காரியமொன்றைச் செய்தார்கள். கசனைக் கொன்று அவனுடலை எரித்துச் சாம்பலாக்கி சுக்கிராச்சாரியார் குடிக்கும் மதுவில் கலந்து விட்டார்கள்.
கசனைக் காணாது தவித்த தேவயானி, தந்தையிடம் முறையிட்டாள். சுக்கிராச்சாரியாருக்கு மகள் தேவயானிமேல் அளவு கடந்த பிரியம் இருந்தது. அவளுக்கு கசன் மேல் அளவு கடந்த காதல் இருந்தது.
தனது ஞான திருஷ்டியின் மூலம், கசன் சாம்பலாகத் தான் குடித்த மதுபானத்தில் கரைந்து தன் வயிற்றினுள் இருப்பதைக் கண்டு கொண்டார் சுக்கிராச்சாரியார்.
கசன் உயிர்பெற்று வரவேண்டுமென்றால் தான் இறந்துபோக வேண்டிவரும் என்று மகளிடம் விளக்கினார் சுக்கிராச்சாரியார்.
அவளோ தன் காதலனான கசன் எவ்விதத்திலும் உயிர்பெற்றுவரவேண்டுமென்று பிடிவாதமாக அழுது புலம்பினாள்.
இறுதியாக, சுக்கிராச்சாரியார் ஒரு முடிவுக்கு வந்தார். கசனும் உயிர்பிழைக்க வேண்டும். தானும் வாழவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழிதான் உண்டு என்று உணர்ந்தார்.
116
 

வேரும் விழுதும் அகளங்கன்
தனது வயிற்றுக்குள்ளே இருக்கின்ற சாம்பல்த் துகள்களை கசனாக உருவெடுக்க வைத்து, வயிற்றினுள் அவன் இருக்கின்றபோதே அவனுக்குச் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசிப்பதென்றும், அம் மந்திரத்தைக் கற்றுக்கொண்டபின், தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளியே வரவேண்டும் என்றும், வயிறு கிழிக்கப்பட்டதால் இறந்து கிடக்கப் போகின்ற தன்னை, சஞ்சீவினி மந்திரம் மூலம் கசன் உயிர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.
அதன்படி கசனைத் தனது சஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர்ப்பித்து அவனுக்கு அம்மந்திரத்தை உபதேசித்தார்.
வயிற்றினுள் இருந்து கொண்டே கசன் தான் விரும்பிவந்த அந்த அரிய மந்திரத்தைக் கற்றுக் கொண்டான்.
அதன் பின் அவர் கூறியபடி அவரது வயிற்றைக்
கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். தான் கற்றுக் கொண்ட சஞ்சீவினி மந்திரத்தின் மூலம், தன் குருவாகிய சுக்கிராச்சாரியாரை உயிர்பெறச் செய்தான். தேவயானி மகிழ்ச்சிக் கடலில் முழ்கித் தத்தளித்தாள்.
எல்லாம் சுபமாக முடிந்து விட்டது. தான் எண்ணிவந்த காரியம் ஈடேறிவிட்டதால் கசன் தேவலோகம் செல்ல விடைகேட்டு நின்றான்.
கசன்மேல் தீராத காதல் கொண்டிருந்த தேவயானி, கசன் தன்னை விட்டுச் செல்கின்றான் என்பதை அறிந்து, தன்னைத் திருமணஞ் செய்து கொள்ளும்படி வேண்டினாள்.
அவனோ அதனை மறுத்துப், பல்வேறு காரணங்களைக் காட்டினான். "குரு தந்தைக்குச் சமனானவர். அதனால் நீ என் சகோதரி. அது மட்டுமல்ல, நான் இப்போது உன் தந்தையின்
117

Page 62
6CDDID அகளங்கன்
வயிற்றிலிருந்து தோன்றியிருக்கிறேன். அதனால் அவர் என் தாயுமாகியிருக்கிறார். எனவே நீ என் சகோதரி” என்று காரணம் சொல்லி விடைபெற முயன்றான்.
அவளோ கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டாள். தன்னால் பலதடவை காப்பாற்றப்பட்டவன் அவன். அவனுக்காக அவள் வடித்த கண்ணிர் கொஞ்சமல்ல. தன்னை அவன் வஞ்சித்து ஏமாற்றிவிட்டான் என்று கோபங் கொண்ட அவள் அவனுக்குச் சாபமிட்டாள்.
“என் தந்தையிடம் நீ கற்ற இந்தச் சஞ்சீவினி மந்திரத்தை நீ மறந்து போவாய்.” என்று சாபமிட்டாள்.
தேவயானியின் சாபத்தினால் கசன் தான் கற்ற சஞ்சீவினி மந்திரத்தை மறந்து போனான். அவன் மிகுந்த பிரயாசையுடன்கற்ற அரிய அக்கல்வி அவனுக்குப் பயன்படவில்லை என்று மகாபாரதத்தில் வியாசமுனிவர் இக்கதையைச் சொல்கிறார்.
கர்ணன் - பரசுராமர்.
துரியோதனனின் உயிர் நண்பனான கர்ணன் பரசுராமரிடம் சென்று வில் வித்தை கற்க விரும்பினான். பரசுராமரோ சத்திரியர்களுக்கு வில்வித்தை பழக்குவதில்லை என்று விரதம் பூண்டிருந்தார்.
தனது தந்தையான ஜமதக்கினி முனிவரைக் கொன்ற கார்த்தவீரியார்ச்சுனன் என்ற சத்திரிய மன்னனையும், அவனது புத்திரர்களையும் கொன்று குவித்தும் கோபம் அடங்காதவராக, இருபத்தியொரு தலை முறைகளுக்கு சத்திரிய வம்சத்தைப் பூண்டோடு ஒழிப்பதாகச் சபதம் செய்து நிறைவேற்றியவர் அவர்.
சத்திரியர்கள் மேல் அவ்வளவு கோபம் அவருக்கு
இருந்தது. சபதத்தை நிறைவேற்றியபின் பீஷ்மாச்சாரியார் என்று
118
 

வேரும் விழுறும் அகளங்கன்
அழைக்கப்பட்ட, சந்தனுமகாராஜாவின் மகன் கங்கையின் மைந்தன் தேவவிரதனுக்கு வில்வித்தை கற்பித்தார்.
காசிராஜனது மகள் அம்பையின் பொருட்டாக தனது சீடனான பீஷ்மருடன் பெரும் யுத்தம் செய்யவேண்டி ஏற்பட்டது. தனது சீடனான சத்திரிய வம்சத்து பீஷ்மரை வெல்லவும் முடியாமல், தோற்று அவமானப்படவும் விரும்பாமல் யுத்தத்தை இடையில் நிறுத்தித் திரும்பிச் சென்று ஒதுங்கி வாழ்ந்தவர் அவர்.
அதன்பின் சத்திரியர்களுக்கு வில்வித்தை கற்பிப்பதில்லை என்று விரதம் பூண்டிருந்த அவர் அந்தண குலத்தவரான துரோணாச்சாரியாருக்கு வில்வித்தை கற்பித்தார்.
அவரிடம் வில்வித்தை கற்கவேண்டுமென்று விரும்பிய கர்ணன், தன்னை அந்தணன் என்று பொய் சொல்லி சகல வில்வித்தைகளையும் கற்றுவிட்டான்.
தன் மகன் அருச்சுனனைக் காப்பதற்காக, கர்ணனைப் பரசுராமரின் கோபத்துக்கு ஆளாக்கக் காலம் கருதிக் காத்திருந்தான் இந்திரன்.
ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலைவைத்துப் படுத்துறங்கினார். இந்திரன் விஷவண்டு வடிவெடுத்து கர்ணனின் தொடையைத் துளைத்தான்.
கர்ணனோ தன் குருவின் நித்திரை குழம்பக் கூடாது என்று வலியைப் பொறுத்துக் கொண்டான். வண்டு ஒரு பக்கத்தில் துளைத்து ஊடுருவி மறுப்க்கத்தினூடு வெளியேறி விட்டது.
துவாரத்தினூடு இரத்தம் பெருக்கெடுத்துப் பீறிட்டுப் பாய்ந்து, பரசுராமரது முகத்தில் பட்டு விட்டது. துயில் நீங்கி எழுந்த பரசுராமர் திகைத்துப் போனார்.
119

Page 63
வேரும் விழுதும் ඌ|ඝ6IIIහී ආණ්r
அத்தகைய கொடிய தாங்கமுடியாத பெருவலியைச் சத்திரியனால் மட்டுமேதான் தாங்கிக் கொள்ள முடியும் எனக் கருதிய அவர் கர்ணனிடம் உண்மையைக் கேட்டார்.
அவன் தனது உண்மை தெரியாத நிலையைச் சொல்லி, அந்தணனென்று பொய் கூறியதை மன்னிக்கும்படி பாதங்களில் பணிந்தான்.
கோபம் கொண்ட பரசுராமர் அந்தணன் என்று பொய் சொல்லி அவன் கற்ற கல்வி அவனுக்குப் பயன்படாமற் போகும் படியான கொடிய சாபத்தைக் கொடுத்தார்.
முக்கிய போர்க்களங்களிலே எல்லாம், தான் கற்ற வித்தையை மறந்து போகும் நிலையை அடைந்தான், கர்ணன்.
தான் மிகவும் முயன்று கற்ற அந்த வில்வித்தையைப் பயன்படுத்த முடியாதவனாக, போர்க்களத்திலே அவற்றை
அம்புகளுக்கு இரையாகினான் கர்ணன்.
பரீட்சை மண்டபத்தில், கற்றது நினைவுக்குவராது போனால் எப்படியிருக்குமோ அந்த நிலையில், கற்றதை மறந்து இறந்து போனான் கர்ணன்.
ஏகலைவனும் துரோணரும்.
காட்டு வேடுவனாகிய ஏகலைவனுக்கு வில்வித்தை கற்கவேண்டுமென்று ஆசை ஏற்பட்டது. அதுவும், குரு குலத்துச் சத்திரிய இளவரசர்களான துரியோதனன் முதலானவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில்வித்தை கற்பிக்கும் துரோணாச்சாரியாரிடம் வில்வித்தை கற்க வேண்டும் என்பது அவனது
ജ്യങ്ങ9്.
120
 

வேரும் விழுதும் அகளங்கன்
துரோணரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறினான் ஏகலைவன். துரோணரோ சத்திரியர்க்கன்றி மற்றையோர்க்கு தான் வில்வித்தை கற்பிப்பதில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.
ஏமாற்றத்தோடு காட்டுக்குத் திரும்பிய ஏகலைவன், துரோணர் போன்ற ஒரு சிலையைச் செய்து வைத்து, மானசீகமாக அவரைக் குருவாகக் கருதி வழிபட்டு, வில்வித்தையைச் சுயமாகக் கற்கத் தொடங்கினான்.
துரோணாச் சாரியார் குருகுலத் துச் சத் திரிய இளவரசர்களுக்குக் கற்பிப்பதெல்லாம்அவனுக்கும் தெரியவந்தது.
அருச்சுனனுக்குத் துரோணர் விசேடமாகக் கற்பித்த வில் நுணுக் கங்களையும் ஏகலைவன் காட்டிலிருந்தபடியே கற்றுவிட்டான். -
ஒரு நாள் பாண்டவர்கள் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்கள். அவர்களுக்கு முன்னால் சென்ற அவர்களது வேட்டை நாய், ஏகலைவன் செய்து வைத் திருந்த துரோணாச்சாரியாரது உருவச் சிலையில் சிறுநீர் கழித்து விட்டது.
கோபம் கொண்ட ஏகலைவன் தனது அம்பொன்றைச் செலுத்தி, அந்த நாயின் வாயைத் தைத்து விட்டான்.
நாய் குரைக்க முடியாமல் திரும்பி வந்தது. பாண்டவர்கள் தமது நாயின் வாய் அம்பினால் தைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிசயித்தார்கள்.
ஒரு அம்பு எய்து வாயைத் தைத்து மூடும் வித்தையைத் துரோணாச் சாரியார் அருச் சுனனுக்கு மட்டுமே தான் கற்பித்திருந்தார்.
கோபமும் ஆச்சரியமும் ஒரு சேரப்பெற்ற அருச்சுனனும்
121

Page 64
வேரும் விழுதும் அகளங்கன்
ஏனையோரும் நாயின் பின்னால் ஏகலைவனைத் தேடிச் சென்றனர்.
வழியில் ஏகலைவனைக் கண்டு வாக்குவாதப்பட்டனர். தங்கள் நாயின் வாய்க்கு அம்பெய்து தைத்த வித்தையை எவரிடம் கற்றாய் எனக் கேட்டனர்.
அவனது பதிலைக் கேட்ட அருச்சுனனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
ஏகலைவனோடு வாக்குவாதப் படுவதை நிறுத்திவிட்டு நாடு திரும்பினர். அருச்சுனன் கோபத்தோடு சென்று தனது குருவாகிய துரோணாச்சாரியாரிடம் அது பற்றிக் கேட்டான்.
அவரோ தான் அந்த வித்தையை அருச்சுனனுக்கு மட்டுமேயன்றி வேறு யாருக்கும் கற்பிக்கவே இல்லை எனக்கூறி மறுத்து அருச்சுனனோடு காட்டுக்குச் சென்றார்.
காட்டிலே ஏகலைவனைக் கண்டனர். ஏகலைவன் தன் மானசீகக் குருவாகிய துரோணாச் சாரியாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.
தான் அவரது உருவச் சிலையைச் செய்து வைத்து அவரை மானசீகக் குருவாக வழிபட்டு வந்ததையும், அதனால் அவர் தன் சீடர்களுக் குக் கற்பித் ததெல் லாம் தனக்கும்தெரியவந்ததையும் கூறி, அவரது உருவச் சிலையைக் காட்டி, பாண்டவர்களின் நாய் செய்த காரியத்தையும் தான் அம்பெய்து தண்டித்ததையும் ஒன்றும் மறைக்காமல் பயபக்தியோடு எடுத்துக் கூறினான்.
துரோணாச்சாரியார் அவனிடம் தனக்குக் குரு தட்சணை தரமுடியுமா எனக் கேட்டார். அவனோ தன் உயிரையே தட்சணையாகக் கேட்டாலும் தரத் தயாராக இருப்பதாகக் கூறினான்.
122

வேரும் விழுதும் அகளங்கன்
ஏகலைவனது வலதுகைப் பெருவிரலைத் தட்சணையாகக் கேட்டார் துரோணாச்சாரியார். தயக்கமின்றி கலக்கமின்றி மனமகிழ்ச்சியோடு. தனது கத்தியினால் தனது வலதுகைப் பெருவிரலை வெட்டித் தன் குருவின் பாதங்களில் காணிக்கையாக குருதட்சணையாக, வைத்தான் ஏகலைவன்.
குருதட்சணை கொடுத்தவர்களில் மிகவும் போற்றப்படுகின்ற நிலையை அடைந்தான் ஏகலைவன்.
வலது கைப்பெருவிரலை இழந்ததனால் தான் கற்ற
வில்வித்தையை முழுதாகப் பயன்படுத்த முடியாதவனாகினான் ஏகலைவன்.
கசன், கர்ணன், ஏகலைவன ஆகிய மூவரும் தாம் கற்ற கல்வியினால் எவ்வித பயன்பாடும் அற்றவர்களாகினர். இக் கதைகள் மகாபாரதத்தில் வியாச பகவானால் சொல்லப்பட்டுள்ளன.
இன்றும் பலர் கல்வி மறுக்கப்பட்டும், கற்ற கல்வியைப் பயன்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்ற நிலை உண்டு.
123

Page 65
12 உருவறியாப்பிள்ளை அழுதது
தாயின் வயிற்றில் குழந்தை வளரும் போது, தாய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் ஆரோக்கியமான நல்ல குழந்தை பிறக்கும் என்பது இன்றைய மருத்துவக் கொள்கை மட்டுமல்ல, அன்றைய தமிழர்களின் கொள்கையும் கூட.
அதனால்தான் தாயின் வயிற்றில் கரு உருவாகியபின் தாய்க்கு மகிழ்ச்சியூட்டும் பலசடங்குகளைத் தமிழர் செய்து வந்தனர். குறிப்பாக வளைகாப்புச் சடங்கு இந்த வகையில் குறிப்பிடத் தக்கது.
அது மட்டுமின்றி கர்ப்பிணித் தாய் பிரசவத்திற்கு தனது தாய்வீட்டில் வைத்து உள, உடல் ரீதியாகப் பராமரிக்கப்படுவதே பொது வழக்கம்.
தாயோடு தந்தையோடு சகோதர, சகோதரிகளோடு, மற்றும் உறவினர்களோடு வாழ்கின்ற சூழல், தாய்மை அடைந்துள்ள பெண்ணை மிகவும் மகிழ்ச்சிப்படுத்த வல்லது.
தாய்வீட்டில் இருப்பது போன்ற சுதந்திரம், மகிழ்ச்சி மாமியார் வீட்டில் கிடைப்பது அரிது என்பது பெரும்பாலும் உண்மையே.
124
 

வேரும் விழுறும் அகளங்கன்
தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் பிள்ளையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். தாயின் மகிழ்ச்சி, தாயின் துயரம் என்பவையும், கருவிலிருக்கும் பிள்ளையைப்பாதிக்கும் என்பது கிராமங்களிலே இன்றும் சொல்லப்படுகின்ற ஓர் உண்மையாகும்.
கர்ப்பமுற்றிருக்கும் ஒரு பெண், நல்லவற்றைக் கேட்க வேண்டும், நல்லவற்றைப் பார்க்கவேண்டும், நல்லவற்றைச் சிந்திக்க வேண்டும். ܓ
தாயின் கர்ப்பத்தில் இருக்கும் நிறைமாதக் குழந்தை, தாய் கேட்கின்றவற்றைத் தானும் கேட்கின்றது.
தாயினுடாகத் தாயின் அத்தனை உணர்வுகளையும் தானும் அடைகின்றது என்று தமிழர்களும் இந்துக்களும் பெரிதும் நம்பினர்.
அபிமன்யு கற்ற கல்வி.
மகா பாரதக் கதையில் இது சம்பந்தமான முக்கியமான ஓர் ஆதாரம் உண்டு.
அருச்சுனனுக்கும் கிருஷ்ண பகவானின் தங்கையான சுபத்திரைக்கும் பிறந்தவன் அபிமன்யு,
இவன் தாயின் வயிற்றில் நிறைமாதக் குழந்தையாக இருக்கும் பொழுது ஒரு நாள் மாலைப் பொழுதில் அருச்சுனனும் சுபத்திரையும் தனியிடத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தன் மனைவி சுபத்திரையை மேலும் மகிழ்ச்சிப் படுத்துவதற்காக கதை சொல்லத் தொடங்கினான் அருச்சுனன்.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம் போர்க்கதை தானே, தனக்குத் தெரிந்த, தனக்குப் பிடித்தமான கதை, தன் மனைவிக்கும் பிடிக்கும் என நம்பி சொல்லத் தொடங்கினான். 125

Page 66
வேரும் விழுதும் அகளங்கன்
யுத்த களத்திலே எதிரிகள் சக்கரவியூகம அமைத்தால் அதை எப்படி உடைத்து உள்ளே செல்வது. ஆபத்து நேர்ந்தால் எப்படி உடைத்து வெளியே வருவது என்ற நுட்பத்தைத்தான் கதையாக மனைவிக்குச் சொல்லத் தொடங்கினான் அருச்சுனன்.
சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்வதும் வெளியேறுவதும் சாதாரணமான தல்ல. பாண்டவர் பக்கத்தில் பார்த்தனாகிய அருச்சுனனுக்கு மட்டுமேதான் அந்த நுட்பம் தெரியும்.
அந்த நுட்பத்தைச் சொல்லத் தொடங்கினான் அருச்சுனன். &LIg g5!60) ...lb .lb ...ld..... என்று சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் சுபத்திரை அருச்சுனனின் மார்பில் தலைசாய்த்த வண்ணம் நித்திரையாகிவிட்டாள். அருச்சுனனுக்கு சுபத்திரை நித்திரையாகிவிட்டது தெரியாது.
சுபத்திரைக்குப் பதிலாக சுபத்திரையின் வயிற்றில் நிறைமாதக் குழந்தையாக இருந்த அபிமன்யு, கதையினால் கவரப் பட்டு . b...... b..... b...... என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.
சுபத்திரைதான் ஆர்வமாகக் கதை கேட்கிறாள் என நினைத்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தான் அருச்சுனன்.
அந்த நேரத்தில் அங்கு வந்த கிருஷ்ணபகவான், சுபத்திரை நித்திரை செய்வதையும், அருச்சுனன் கதை சொல்வதையும் பாரத்து, சுபத்திரை நித்திரையாகிவிட்டதை அருச்சுனனுக்கு உணர்த்தினார். அர்ச்சுனன் கதை சொல்வதை நிறுத்தினான்.
சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது, எப்படி உள்ளே சென்று போரிடுவது என்ற அளவுதான் அருச் சுனன்
சொல்லியிருந்தான்.
126

வேரும் விழுறும் அக்ளங்கன்
மகாபாரதப் போரின் பதின்மூன்றாம் நாளில், அருச்சுனனின் விற் குருவும் , கெளரவர் களின் சேனாதிபதியுமாகிய துரோணாச்சாரியார் தனது கெளரவ சேனைகளைச் சக்கர வியூகமாக அமைத்திருந்தார்.
அருச்சுனனை திரிகர்த்த ராஜாக்கள் தனியிடத்துக்கு அறைகூவிப் போருக்கழைத்துப் போர் செய்து கொண்டிருந்தனர்.
சக் கரவியூகத்தை உடைத்து உள்ளே செல்ல அபிமன்யுவிற்கு மட்டுமே தான் தெரிந்திருந்தது. அது அவன் தாயின் கர்ப்பத்தில் இருந்த காலத்தில் தந்தை மூலம் கற்றது.
அந்தக் கல்வி மூலம் சக்கரவியூகத்தை உடைத்து உள்ளே சென்று பெரும் போர் புரிந்தான் அபிமன்யு.
ஈற்றில் தனக்கு ஆபத்து நேர்ந்த போது வெளியேறத் தெரியாமல் தனிஒருவனாகக் கெளரவ சேனையைக் கலக்கி அடித்தான். ஈற்றில் சயத்திரதனால் கொல்லப்பட்டான், என்று மகாபாரதத்தில் கதை உண்டு.
தாய் நித்திரையாகினாலென்ன, விழித்திருந்தா லென்ன, தாய்க்குச் சொல்லப்படுவது சேய்க்கும் சென்று சேர்கிறது. என்பது இக்கதை புகட்டும் பாடம்.
வயிற்றிலுள்ள குழந்தை . ம்.ம்..ம். என்று கதை கேட்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். அதை விட்டு விட்டுப் பார்த்தாலும் போதும்.
பிரகலாதன் கற்ற கல்வி.
இதே போல இரணியனின் மகன் பிரகலாதன் தனது தாயாகிய லீலாவதியின் வயிற்றில் குழந்தையாக இருந்த காலத்தில், நாரத முனிவர் தன் தாய்க்குக் கூறிய உபதேசங்களைக் கேட்டு உணர்ந்தான் என்று கம்ப
127

Page 67
வேரும் விழுறும் அகளங்கன்
இராமாயணமும் வேறு புராணங்களும் கூறுகின்றன.
மகாவிஷ்ணு மூர்த்தியின் பெருமைகளை நாரத முனிவர் லீலாவதிக்குக் கூற, அவளின் வயிற்றில் இருந்த பிரகலாதன் அதைக் கேட்டு ஆன்மீக உணர்வு பெற்றான்.
பின்பு அவன் பிறந்து வளர்ந்து 'நாராயணாய நம” எனச் சொல்லி நாராயணனை வழிபடத் தொடங்கிவிட்டான்
தன்னையே கடவுளாகக் கொண்டு "இரணியாய நம” எனச் சொல்லி மக்கள் யாவரும் தன்னையே வழிபடவேண்டும் என்று இரணியன் சட்டம் பிறப்பித்திருக்க, அவனது மகனான பிரகலாதன் நாராயணனை வழிபட்டதால் அவனுக்குப் பெருங் கோபம் ஏற்பட்டது.
இறுதியில் பிரகலாதன் பொருட்டாக மகாவிஷ்ணு நரசிங்க அவதாரம் எடுத்து இரணியனை வதைத்த கதை தெரிந்த கதை தானே.
கம்பன் கற்பனை.
மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களும் நிறைமாதக் குழந்தை பற்றியதே. ஆனால் கம்பன் இதிலே ஒரு புதுமை செய்கிறான். அது என்னவென்று பார்ப்போம்.
இராமன் காட்டுக்குச் செல்லவேண்டும் என்று கைகேயி தசரதனிடம் வரம் பெற்றுவிட்டாள். இந்தக் கதை அயோத்தி நகரெங்கும் காட்டுத் தீபோல் பரவிவிட்டது.
மக்கள் துன்பக் கடலில் மூழ்கித் தத்தளித்தார்கள். மக்களின் துன்பத்தைக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்ல முனைகின்றான். தனக்கே உரிய கவித்துவத்தோடு அற்புதமாகச் சொல்லி முடிக்கிறான்.
128

வேரும் விழுறும் அகளங்கன்
கிள்ளையொடு பூவை அழுத; கிளர்மாடத்து உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப் பிள்ளை அழுத; பெரியவரை என்சொல்ல; வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த மாற்றத்தால
(கம்.அயோ.நகர். நீங்.100)
வீடுகளிலே வளர்க்கப்பட்ட கிளிப்பிள்ளைகள், அழுதன, என்கிறான் முதலில். “சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' என்பார்கள். கிளிப்பிள்ளை அழுததால் வீட்டிலுள்ளோர்யாவரும் அழுதனர் என்பது பொருள்.
வீட்டிலுள்ளோரின் துயரை கிளியின் துயர் மூலம் காட்டிய கம்பன் அடுத்து பூவை அழுத, என்கிறான். பூவை என்பது நாகணவாய்ப் பறவை. இன்று மைனா என்று சொல்லப்படும் பறவை தான் நாகணவாய்ப் பறவை என்கின்றனர் சிலர். இதுவும் வீட்டில் வளர்க்கப்படுகின்ற பறவையே.
வீடுகளிலே கிளிகளுக்குப் பேசக்கற்றுக் கொடுத்து விடுவார்கள். கிளிகள் பேசுவதைக் கேட்டுக்கேட்டு நாகணவாய்ப் பறவைகளும் பேசக் கற்றுக் கொண்டு விடுமாம்.
கிளிகள் பேசுவதை, நாகணவாய்ப் பறவை கேட்டுக் கொண்டிருக்கும் என்பது இலக்கிய வழக்கு. இதனைச் சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் பின்வருமாறு சொல்கிறார்.
திருவாரூரிலே கிளிகள் திருப் பதிகங்களைப் பாடுகின்றனவாம். நாகணவாய்ப் பறவைகள் கேட்கின்றனவாம்.
உள்ளம் ஆர் உருகாதவர்; ஔர்விடை வள்ளலார் திரு ஆரூர் மருங்கெலாம்; தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்
(பெரிய - 93)
129

Page 68
வேரும் விழுறும் அகளங்கன்
இடபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானது திருவாரூர் பக்கங்களிலெல் லாம் , தெளிவான ஓசையுடைய திருப்பதிகங்களைப் பச்சைக்கிளிகள் பாடுகின்றன; பூவைகள் கேட்கின்றன. இதைப் பார்த்து உள்ளம் உருகாதவர் யார் இருக்கிறார், என்று கேட்கிறார் சேக்கிழார்.
வீட்டில் வாழ்வோரின் உணர்வை கிளிகள் புலப்படுத்த, கிளிகளின் உணர்வை பூவைகள் வெளிப்படுத்துகின்றன எனக் கம்பன் "கிள்ளையொடு பூவை அழுத” என அருமையாகச் சொல்கிறான்.
கிளியும் பூவையும் மட்டுமின்றி விடுகளிலே வாழுகின்ற பூனைகளும் அழுதன என்கிறான் கம்பன். “கிளர் மாடத்து உள்ளுறையும் பூசை அழுத” பூசை - பூனை.
வீடு முழுவதும் சோகம். அழுகுரல். வீட்டிலுள்ளோர் யாவரும் அழுதனர் என்று சொல்வதற்குப்பதிலாக, வீட்டிலே வளர்க்கப்பட்ட கிளி பூவை பூனை என்பன அழுதன எனக் கம்பன் கூறும் உத்தி சிறப்பானது.
இதை விடச் சிறந்த ஒரு உத்தியைக் கம்பன் அற்புதமாகக் கையாளுகிறான். “உருவறியாய் பிள்ளை அழுத” என்கிறான் கம்பன். ஆணா பெண்ணா என்று உருவம் அறிய முடியாதிருக்கும்
பிள்ளை அழுதது என்கிறான் கம்பன்.
குறைந்தது நாலு மாதங்களின் பின்பே தான் கர்ப்பத்தில் இருக்கும் பிள்ளையை ஆணா பெண்ணா என அடையாளம் காணலாம் என்கின்றனர் மருத்துவர்.
கம்பன் சொல்கிறான் “உருவறியாப்பிள்ளை அழுத பெரியவரை என் சொல்ல” என்று. ஆணா பெண்ணா என்று உருவத்தை அறிய முடியாதிருக்கும் கர்ப்பத்திலுள்ள
130

வேரும் விழுறும் அகளங்கன்
பிள்ளைகளே அழுதன என்றால் பெரியவரின் சோகத்தை எப்படிச் சொல்வது என்கிறான் கம்பன்.
வீட்டுக்குள்ளே வளர்க்கப்படுகின்ற கிளியும், பூவையும், பூனையும் அழு தன என்றும் , அதைவிட மேலாக, கர்ப்பத்திலிருக்கும் உருவறியாப் பிள்ளையே அழுததென்றால் பெரியவரின் சோகத்தை எப்படிச் சொல்வது என்றும், கம்பன் கூறும் உத்தி மிக மிக அருமையல்லவா.
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் ஒரு தடவை, தான் ஜப்பானில் தொலைக் காட்சியில் பார்த்த ஒரு காட்சியைப் பற்றிக் கூறினார்.
கர்ப்பிணித் தாயையும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையையும் ஒரு சேரப் படம் பிடித்துத் திரையிலே காட்டினார்களாம்.
தாய்க்கு மகிழ்ச்சியூட்டக் கூடிய சில கதைகளைச் சொல்லி, தாய் சிரிக்கின்ற காட்சியையும், அதே நேரம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் முகத்தையும் காட்டினார்களாம்.
அதே போல, தாயைக் கவலைப்படுத்தி, தாயின் முகத்தையும், சேயின் முகத்தையும் காட்டினார்களாம்.
தாய் சிரிக்கும் போது குழந்தையின் முகம் மலர்வதையும், தாய் அழும் போது குழந்தையின் முகம் சுருங்குவதையும் ஒருங்கே காணக் கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய விஞ்ஞானம், மருத்துவம் என்பவை, தாயின் உணர்வுகள் கர்ப்பத்தில் இருக்கும் பிள்ளையைப் பாதிக்கின்றன என உறுதியாகச் சொல்கின்றன.
ஆனால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை, அபிமன்யு போல, பிரகலாதன் போல கல்வி கற்க முடியும் என்பதை
131

Page 69
வேரும் விழுறும் அகளங்கன்
இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அபிமன்யு, பிரகலாதன் முதலானவர்கள் கற்றது உரு அறியாப் பிள்ளையாக இருந்தல்ல, நிறைமாதக் குழந்தையாகத் தாயின் வயிற்றில் இருந்து.
ஆனால் கம்பன் உருவறியாப் பிள்ளை அழுதது என்று ஒரு புரட்சியே செய்திருக்கிறான்.
இது என்ன உயர்வு நவிற்சி அணியின் பாற்பட்டதா? அல்லது ஒரு சம்பவத்தை இலக்கிய மயப்படுத்தும்போது இத்தகைய கற்பனைகள் செய்வது இயற்கையானது தான் எனச் சாதாரண மாகச் சொல்லி விட்டுவிடக்கூடியது தானா?
வயிற்றில் குழந்தை உருவாகிய நாளிலிருந்து, தாய் அடையும் அத்தனை பாதிப்புகளும் பிள்ளைக்கும் ஏற்படும் என்பதை எமது நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தப் பாதிப்பு எங்களுக்கு உணர்த்தியுள்ளது. இதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.
பல குழந்தைகள் வயிற்றிலிருக்கும் போதே யுத்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. மனநலம் குன்றிப்
பிறந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் பிள்ளைகளிலும் இத்தாக்கம் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கர்ப்பிணிகளை உடல் உள ரீதியாகப் பாதுகாப்பது சமூகத்தின் கடமையாகும்.
எமது தமிழர் இதனை நன்கு அறிந்து வைத்திருந்தனர் என்பது கம்பன் கவிதை மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக
இருக்கிறதல்லவா.
132
 

13| விட்டகுறை தொட்டகுறை
ஒரு புலவன் பல பாடல்களைப் பாடுவது மரபு. ஆனால் பல புலவர்கள் சேர்ந்து ஒரு பாடலைப் பாடுவது மரபல்ல. அப் படிப் பாடியிருந்தால் அது புதுமையானதாக, ஆச்சரியமானதாகத்தானே இருக்கும்.
தமிழிலக்கிய வரலாற்றில் பல புலவர்கள் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியதாகவோ, ஒரு காவியத்தைச் செய்ததாகவோ கதை எதுவும் இல்லை. ஆனால் பல என்ற பன்மைச் சொல்லுக்குள் இரண்டு என்பதும் அடங்கும் அல்லவா.
அப்படிப் பார்க்கும் போது, இரண்டு புலவர்கள் சேர்ந்து ஒரு பாடலைப் பாடிய பல சம்பவங்கள் தமிழிலக்கியத் தனிப்பாடல் உலகில் மிகவும் ரசிக்கத் தக்கனவாக அமைந்துள்ளன.
வட மொழியில் “போஜசம்பு’ என்ற பெயரில் ஒரு இராமாயண காவியத்தை, அம்மொழிப் பெரும் புலவனான மகாகவிகாளிதாசனும், அவனது நண்பனான போஜமன்னனும
சேரந்து மாறி மாறிப் பாடி முடித்ததாக ஒரு கதையுண்டு.
தமிழில் இராமாயணத்தைக் கம்பன் ஆறு காண்டங்களாகப் பாடி, இராமனின் முடிசூட்டு விழாவோடு நிறைவு செய்ய,
133

Page 70
வேரும் விழுறும் அகளங்கன்
மிகுதிக்கதையை ஒட்டக் கூத்தர் உத்தர காண்டம் என்ற பெயரில் பாடி முழுமை செய்திருக்கிறார். ஆனால் இருவரும் சேர்ந்து பாடவில்லை.
இரு புலவர்கள் ஒரே நேரத்தில் சேர்ந்து பாடிய பாடல்களையே இங்கே பார்க்கப் போகிறோம்.
கடவுளோ அன்றி வேறொருவரோ அடியெடுத்துக் கொடுக்க, அல்லது ஈற்றடி கொடுக்கப் பல புலவர்கள் பல பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளே காளமேகப் புலவர் மிகவும் விசேடமானவர்.
திருமலை ராயன் என்ற மன்னரின் சமஸ்தானப் புலவர்களோடு அவர் போட்டிப் பாடல்களைப் பாடிய போது, அவர்கள் கொடுத்த ஈற்றடிகள், முதலடிகள், சொற்கள், கருத்துக்கள் என்பவற்றை வைத்துச் சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறார்.
வில்லவராய முதலியார், கல்வளை விநாயகப் பெருமானின் மேல் கல்வளை யமக அந்தாதி பாட விரும்பிக் காப்புப் பாடலை இரண்டு அடிகள் மட்டும் எழுதி, தொட்ட குறையாக விட்டிருக்க, அவர் மகன் சின்னத் தம் பி அவ் விட்ட குறையைப் பாடிமுடித்ததாகவும், பின்பு சின்னத்தம்பியே கல்வளை யமக அந்தாதியைப் பாடியதாகவும் கதை ஒன்றை, பண்டித மணி திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள் விரிவாகச் சொல்லியிருக்கிறார். எங்கள் நாட்டுப் பெரும் புலவர்களில் சின்னத் தம்பிப் புலவர மிகவும் விசேடமானவர்.
இரட்டையர்கள்.
இரு புலவர்கள் சேர்ந்து ஒரு பாடலைப் பாடுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கெங்கோ ஏதேதோ
சந்தர்ப்பங்களில் நடக்கின்ற நிகழ்ச்சிதான்.
134
 

வேரும் விழுறும் அகளங்கன்
ஆனால் இரட்டையர்கள் பாடிய அத்தனை பாடல்களும் பாதிபாதியாகப் பாடப்பட்ட பாடல்களே என்பது மிகவும் ஆச்சரிய
கரமானது.
முடவரான முதுசூரியர் என்னும் மூத்தவரும், குருடரான இளஞ்சூரியர் என்னும் இளையவரும் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்தனர்.
இவர்கள் இரட்டையர்கள் என்றே அழைக்கப்பட்டனர். குருடர் முடவரைத் தோளிலே சுமந்து செல்வார்.
தோளிலே இருந்து சவாரி செய்யும் முடவர், தான் காணுகின்ற காட்சியை, அல்லது ஏதாவது மனதைத் தொடும் சம்பவத்தைப் பாடலாகப் பாடத் தொடங்குவார். பாதிப் பாடலை அவர் பாட, மீதிப் பாடலைக் குருடர் பாடுவார்.
ஒரு தடவை முடவர், ஆற்றங்கரையிலே இருந்து கல்லில் தமது அழுக்கு ஆடைகளை அடித்து, நீரில் தோய்த்துத் தப்பிச் சுத்தஞ் செய்து கொண்டிருந்தார். அவரது கையிலிருந்து ஆடை தவறி, நீரில் விழுந்து விட்டது. ஆற்று நீரில் ஆடை அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
பாவம் முடவர். ஆற்றிலே போகும் ஆடையைப் பிடிக்க முடியாமற் கவலைப்பட்டார். பின்பு தனது ஆடை தன்னை விட்டுத் தப்பிப் போனதற்குச் சமாதானஞ் சொல்லி, ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார்.
அப்பிலே தோய்த்திட்டு அடித்தடித்து நாமதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ -
அப்பு என்றால் நீர், நீரிலே தோய்த்துக் கல்லிலே
அடித்தடித்துத் தப்பினால் அது நம்மை விட்டுத் தப்பிப் போகாதோ என்பது இதன் பொருள்.
135

Page 71
வேரும் விழுறும் அகளங்கன்
அந்த ஆடைக்கு வலி பொறுக்க முடியவில்லை. அதனால்த்தான் அது நம்மை விட்டுத் "தப்பினேன் பிழைத்தேன்” என்று ஓடி விட்டது. அப்படி அது தப்பியோடியது சரிதான் என்று முடவர் பாடக் குருடர் தொடர்ந்தார்.
- இப்புவியில் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை.
கலிங்கம் என்றால் ஆடை என்று பொருள். இந்த ஆடை போனாலென்ன, மதுரைச் சொக் கலிங்கம் எமக் குத் துணையிருக்கிறாரே, பின் ஏன் கவலை. என்பது இதன் பொருள்.
சொக்கலிங்கம் - சிவபெருமானின் ஒரு பெயர். மதுரைச் சொக்கேசப் பெருமான் துணையிருக்கிறார் என்று விட்ட குறையைப் பாடினார் குருடர்.
கம்பனும் அம்பிகாபதியும்.
அம்பிகாபதி கம்பனின் ஏக புத்திரன். குலோத்துங்க சோழனின் மகளான அமராவதிக்கும், அம்பிகாபதிக்கு மிடையில் காதல் கனிந்திருந்தது.
புவிச் சக்கரவர்த்தியின் மகளைக், கவிச் சக்கர வர்த்தியின் மகன் காதலிக்கிறான் என்ற விடயம், இன்னொரு கவிச் சக்கர வர்த்தியான ஒட்டக் கூத்தருக்குத் தெரிந்து விட்டது.
மன்னனிடம் எடுத்துச் சொன்னார். மன்னன் நம்ப மறுத்தான். நிரூபிக்கப் புதுவகையான தந்திரம் ஒன்றைச் செய்தார் புலவர்.
அம்பிகாபதிக்கும், கம்பனுக்கும், அரண்மனையில் விருந்து கொடுப்பது, அமராவதி உணவைப் பரிமாற, வட்டிலிலே எடுத்து வருவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
136
 

வேரும் விழுதும் அகளங்கன்
அம்பிகாபதி விருந்திலே, கலந்து கொள்கிறான் என்பது அமராவதிக்குத் தெரியக் கூடாது. அமராவதி வட்டில் சுமந்து வருவாள் என்பது அம்பிகாபதிக்குத் தெரியக் கூடாது.
திடீரென ஒருவரை ஒருவர் பார்த்து விட்டால், அவர்களது உள்ளத்தில் பொங்கி எழும் காதல் உணர்ச்சியை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது.
அந்த நிலைமையை மன்னனும், ஒட்டக் கூத்தரும் கூர்ந்து கவனித்து, உண்மையை உணர்ந்து கொள்ள அந்தத் திட்டம் வகுக்கப் பட்டிருந்தது.
அதன் படியாக அமராவதி வட்டிலிலே உணவு கொண்டு வருகிறாள், சில நாட்களாக அவளைக் காணமுடியாமல்த் தவித்துக் கொண்டிருந்த அம்பிகாபதியின் கவியுள்ளம் காதலுள்ளத்தைக் கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று விட்டது.
கவிதையும் காதலும் உணர்ச்சியின் உந்துதலால் பிறப்பன. காதலன் கவிஞனாக இருக்கும் போது உணர்ச்சிக் கொந்தளிப்பு உலகையே காலடியில் போட்டு மிதித்திருக்கு மல்லவா.
அமராவதி நடந்து வருகின்ற அழகைத், தனது உணர்ச்சி நிரம்பிய, காதலில் குழைத் தெடுத்த கனிவான சொற்கள் மூலம், அமுத கவியாகப் பாடத் தொடங்கி விட்டான், அம்பிகாபதி
இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய -
வெண்பாவிற் பாதியில் தன் உணர்ச்சியைக் கொட்டினான் அம்பிகாபதி.
அமராவதியின் பாதம், அதாவது அடி, பூமியில் பட,
137

Page 72
வேரும் விழுறும் அகளங்கன்
அம்பிகாபதியின் நெஞ்சு வலிக்கின்றது. அமராவதியின் பாதங்கள் பூமியில் படுவதையே அவனால் தாங்க முடியவில்லை.
அவளின் தூக்கிய பாதம் கொப்பளித்துப் போய் இருக்கிறதாம். அவளின் பாதங்களின் மென்மையையும், தனக்கு அவள்மேல் இருக்கும் காதலின் வன்மையையும் அற்புதமாகக் காட்டுகிறான் அம்பிகாபதி.
வட்டிலைச் சுமந்தபடி, இடை அசைய வருகிறாள் என அம்பிகாபதி இராக மிசைத்துக் கொண்டிருக்கக் கம்பர் தொடர்ந்தார்.
தனது மகன் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மன்னன் மகளை வர்ணித்துப் பாடிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடலின் கருத்தை மாற்றிப் பாடத் தொடங்குகிறார்.
- கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்.
கொட்டிக் கிழங்கு விற்கும் கிழவி, சுடுமணலில் இட்ட அடி நோவ, எடுத்தஅடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து, சுமைமிகுதியால் இடை அசைய, "கொட்டிக் கிழங்கோ கிழங்கு” என்று கூவி விற்கிறாள்.
பாவம் அவளது அந்த ஒலிக்கு இந்தப் பூமிதான் ஈடாகும். எனக் கருத்தை மாற்றிப் பாடலை நிறைவு செய்து அம்பிகாபதியைக் காப்பாற்றி விட்டார் கம்பர். தந்தையும் மகனும் விட்ட குறை தொட்ட குறையாகப் பாடிய சம்பவம் இது.
கம்பனும் ஒளவையும்.
சிலம்பி என்னும் பெயர் கொண்ட நாட்டிய தாரகை
138
 

வேரும் விழுதும் அகளங்கன்
ஒருத்திக்கு ஒரு ஆசை. நீண்ட நாட்களாக ஆசைப்பட்டாள்.
தன்னைப் புகழ்ந்து கம்பன் ஒரு பாடல் பாட வேண்டும். அப்பாடல் மூலம் தான் நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் அவ் ஆசை, சின்னச் சின்ன ஆசையல்ல. இது பெரிய ஆசை.
கம்பனிடம் கேட்டும் விட்டாள். கம்பனோ ஒரு பாடலுக்கே பெரும் பொருள் கேட்டான். அவள் தனது சொத்துக்களை எல்லாம் விற்றுப் பணம் சேர்த்துக் கம்பனிடம் கொடுத்தாள்.
ஆனால் கம்பன் கேட்ட தொகையில் பாதிப்பணம் தான் தேறியிருந்தது. எனவே கம்பன் பாதிப் பாடலைப் பாடித்
தருவதாகவும், மீதியை, மீதிப் பணத்தைத் தந்த பின் பாடுவதாகவும் கூறினான்.
அவளும் ஒப்புக் கொண்டு, பாதிப் பாடலைச் சுவரிலே எழுதிவிடும்படி கேட்டாள். கம்பன் திண்ணைச் சுவரிலே பாதிப் பாடலை எழுதினான்.
தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே! -
வெண்பாவிற் பாதி இது. தண்ணீர் என்றால் காவிரித் தண்ணீர்தான் சிறப்பானது. மன்னன் என்றால் சோழ மன்னனே சிறந்தவன். மண் என்றால் சோழ நாட்டு மண்ணே சிறந்தது. என்பது இப் பாதி வெண்பாவின் பொருள்.
பூர்த்தியாகாமலே புழுதி பட்டுக் கிடந்தது இப் புகழ்ப் பாடல்.
ஒளவையார் வெய் யிலில் நடந்து களைத் து, ஒதுங்குவதற்காக வந்து அந்தத் திண்ணையிலே அமர்ந்தார். ஒளவையாருக்குச், சிலம்பி என்ற அவ் ஆடலரசி, அயர்வு நீங்க
139

Page 73
1
|
|
|
|
|
வேரும் விழுறும் அகளங்கன்
அன்பு வார்த்தைகள் கூறிக் குடிக்கக் கூழும் கொடுத்தாள்.
கூழ் குடித்துத் திரும்பிப் பார்த்த ஒளவையார், விட்ட குறையில் இருந்த பாடலைப் பூர்த்தி செய்து, சுவரிலே எழுதியும் விட்டார்.
- பெண்ணாவாள் அம்பொற் சிலம்பி அரவிந்தந் தாள்பணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு.
பெண்களுக்குள்ளே சிறந்த அழகிய இலக்குமி தேவி போன்ற சிலம்பியின், தாமரைமலர் போன்ற பாதங்களிலே பணிந்து கிடக்கும், செம்மயமான பொன்னொளி வீசும் சிலம்பே சிறந்த சிலம்பு என்பது இதன் பொருள்.
இதனைக் கேள்விப்பட்ட கம்பன் 'கூழுக்குப் பாடி ஒளவை குடியைக் கெடுத்தாளே” என்று கூறியதாகக் கதை யொன்று உண்டு. -
இரு பெரும் புலவர்களின் விட்ட குறை தொட்ட குறையோடு, இன்னும் இரு பெரும் புலவர்களின் விட்ட குறை தொட்ட குறையையும் பார்ப்போம்.
ஒட்டக் கூத்தரும் புகழேந்தியும்.
குலோத்துங்க சோழனுக்குக் குருவாக இருந்தவர் ஒட்டக்
கூத்தர். பாண்டிய இளவரசிக்குக் குருவாக இருந்தவர் புகழேந்திப் புலவர்.
குலோத்துங்க சோழனுக்குப் பாண்டிய இளவரசியைத் திருமணஞ் செய்து வைப்பதற்காக ஒட்டக் கூத்தர் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். திருமணப் பேச்சு நடை பெற்றது. புகழேந்தியும் கலந்து கொண்டார்.
140

வேரும் விழுதும் அகளங்கன்
பேச்சின் போது, தனது மாணவனும், மன்னவனுமாகிய குலோத்துங்க சோழனின் வீரத்தைப் பற்றிப் புகழ்ந்துகூற விரும்பி, ஒரு பாடலைப் பாடத்தொடங்கினார் ஒட்டக் கூத்தர்.
வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான் என்றும் முதுகுக் கிடான்கவசம் -
வெற்றி பொருந்திய வளவனாகிய, வல்லமை மிக்க சிற்றரசர்களுக்கெல்லாம் பேரரசனாகச், சக்கரவர்த்தியாக விளங்கும் குலோத்துங்கன், ஒரு போதுமே முதுகுக்குக் கவசம் அணிவதில்லை, என்பது இப்பாடல் வரிகளின் பொருள்.
அதாவது எங்கள் மன்னன் யுத்தத்திலே, பயந்து முதுகு காட்டி ஓடுவதில்லை. அதனால் முதுகிலே புண்பட்டுவிடுமே என்ற பயம் அவனுக்கு ஒரு போதுமே இருந்ததில்லை. அதனால் முதுகுக்குக் கவசம் இடுவதும் இல்லை.
உயிரை மானத்திலும் மேலாக மதிக்கும் கோழைகள்தான் முதுகுக்குக் கவசமிட்டுப் புறங்காட்டி ஒடித்தப்புவார்கள். என்று தனது மன்னனின் வீரத்தை ஒட்டக் கூத்தர் பாடினார்.
புகழேந்தி, பெரும் புலவன் அல்லவா. ஒட்டக் கூத்தருக்குக் "குத்தல்க் கதை' சொல்ல விரும்பி, ஒட்டக் கூத்தர் பாடத் தொடங்கிய வெண்பாவின் மீதியை, அவரைப் பாடவிடாமல் தானே பாடி நிறைவு செய்தான்.
- துன்றும் வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல் எறியான் புறங்கொடுக்கில் என்று.
இந்த வெண்பா விற்பூட்டு அணி என்ற அணி பொருந்திய சிறந்த ஒரு வெண்பா. புகழேந்தி பாடிய பிற்பகுதியின் பொருளைத் தொடர்ந்தே, ஒட்டக் கூத்தர் பாடிய முற்பகுதியின் பொருள்
141

Page 74
வேரும் விழுதும் அகளங்கன்
கொள்ளப்படும் தன்மை கொண்டது இவ்வெண்பா. இதுவே விற்பூட்டு அணியின் சிறப்பு.
பின் முன்னாகப் பொருள் கொள்ளும் போது மிகவும்
ரசிக்கத்தக்கதாக அமைகின்றது புகழேந்தியின் கற்பனை.
நெருங்கிய வாசனை வீசும் மலர் மாலைகளை அணிந்திருக்கின்ற எங்கள் மன்னனாகிய மீனவர் கோனாம் பாண்டிய மன்னன், எந்த யுத்தத்திலும் புறங்காட்டித் தோற்றோடும் கோழைகளின் முதுகிற்குத் தன் கைவேலை எறிய மாட்டான் என்ற காரணத்தினாற்தான். என்று முடிகிறது வெண்பா.
"உங்கள் மன்னன் முதுகுக்குக் கவசம் இடாததற்குக் காரணம், எங்கள் மன்னன் புறங்காட்டி ஓடுவதில்லை, அதனால்
தான் முதுகிற்குக் கவசம் இடுவதில்லை என்ற வாதம்
பொருந்தாது.
எங்கள் மன்னன் புறங்காட்டி ஓடுபவர்களது முதுகை
நோக்கி, வேல் ஆயுதத்தை எறியமாட்டான் என்பது தான்'
எனக் குத்தலாகப் பாடி முடித்தான் புகழேந்தி.
இப்பொழுது புகழேந்தி பாடிய அடிகளை முன்னாலே
பொருள் கொண்டு, ஒட்டக் கூத்தரின் பாடலடிகளைத் தொடர்ந்து
படித்து ரசியுங்கள்.
குலோத்துங்கனும் ஒட்டக் கூத்தனும்,
புலவர்கள் சிற்றரசர்கள், மந்திரி பிரதானிகள் பலரும்
நிறைந்திருக்கின்ற சோழமன்னனின் கொலுமண்டபத்தில், குலோத்துங்க சோழன் கொலுவீற்றிருக்கிறான்.
மன்னனைப் புகழ்ந்து, தங்கள் புலமையைக் காட்டி எல்லாப் பெரும் புலவர்களும் பாடுகின்றனர். ஒட்டக் கூத்தரும் தனது
142

வேரும் விழுதும் அகளங்கன்
சீடனான குலோத்துங்கசோழனின் பெருமையையும், ஆட்சிச் சிறப்பையும் பாடத் தொடங்கினார்.
ஆடுங் கடைமணி நாவசையாமல் அகிலமெல்லாம்
நீடுங் குடையிற் தரித்த பிரானென்பர், -
"அரண்மனை வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியின் நடுநா அசையாமல், இந்த அகிலம் முழுவதையும் தனது பெரிய வெண்கொற்ற்க் குடை நிழலிலே வைத்துக் காப்பாற்றுபவன்' என்று புகழ்வார்கள் புலவர்கள் என்பது இதன் பொருள்
மக்களுக்குக் குறையில்லை என்றால், ஆராய்ச்சி மணி அசையச் சந்தர்ப்பமே இல்லை. இது அவனது நீதி நெறிதவறாத ஆட்சிச் சிறப்பு.
உலகம் முழுவதையும் தன் வெண்கொற்றக் குடையின் நிழலில் வைத்துக் காப்பாற்றுதல் வீரச் சிறப்பு.
பாடலைப் பாடி முடிக்கும் முன்பே குலோத்துங்க சோழன் பாடத் தொடங்கினான்.
தன்னைத் தன்குரு பலர் முன்னிலையில் அப்படிப் புகழ்வது அவனுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் பாடலின் மிகுதியை அவன் தொடர்ந்தான்.
- நித்தநவம்
பாடுங் கவிப்பெருமான் ஒட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழன்என்றே என்னைச் சொல்லுவரே
எப்பொழுதும் புதிய விடயங்களையே பாடும் கவிஞர் பெருமானாகிய ஒட்டக் கூத்தரின் பாத தாமரைகளைத் தலையிலே சூடுகின்ற குலோத்துங்க சோழன் என்றே என்னைச்
143

Page 75
வேரும் விழுறும் அகளங்கன்
சொல்லுவார்கள். அதுவே எனக்குப் பெருமை என்று பாடிமுடித்தான் குலோத்துங்கன்.
கண்ணதாசனும் நாட்டார் வரிகளும்.
நாட்டார் பாடலொன்றின் இரு அடிகள் மட்டும் மிகமிகச் சிறப்பான அடிகளாகக் கிடைத்தன. அதனைப் பூரணப்படுத்த விரும்பினார் கவியரசர் கண்ணதாசன். நாட்டுப்புறக் கவிஞரின் அடிகள் இவைதான்.
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழிபோனாரே
கவிஞர் கண்ணதாசனுக்கு இவ்வரிகள் மேல் அளவு கடந்த காதல். இதன் இலக்கிய நயத்திலே மனதைப் பறிகொடுத்த கவிஞர், தன் கற்பனை கலந்து மிகுதியை எழுதினார்.
நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி நிலை பெறுமோ வாழ்வே செந்தமிழ்த் தேன் மொழியாள் - நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் . இப்படி நேருக்கு நேராகவும், காலங்கடந்தும் கவிதை உலகில் விட்ட குறை தொட்ட குறைகள் நிறையவே
இருக்கின்றன. அவற்றைத் தேடி அறிந்து படித்துணர்ந்து ரசிப்பது தனியான இன்பம் பயப்பது. ரசிப்பதும் ஒருகலையே.
144
 

14 படைத்தவன் மேல் கோபங்கொண்டு
பாடல் பாடிய கவிஞர்கள்
ஒரு காட்சியைக் காணுகின்ற போது, ஏற்படுகின்ற உணர்ச்சியை, அடக்கிக் கொள்ள முடியாமல், அதனை ஒழுங்குபடுத்திப் பாடுபவனே கவிஞன் எனப்படுவான்.
இயற்கையின் எழில்மிகு காட்சியாக இருக்கலாம். அல்லது இல்லாமையின் கொடுமைமிகு காட்சியாக இருக்கலாம்.
எந்தக் காட்சியாயிருப்பினும், அதனைக் காணுகின்ற கவிஞனின் உள்ளத்தில் என்ன உணர்வு தோன்றுகிறதோ அது கவிஞனுக்குக் கருப்பொருளாகி விடுகிறது.
முற்காலப் புலவர்கள் சமூக சிந்தனை மிக்கவர்களாக, மனித நேயம் மலிந்தவர்களாகத் திகழ்ந்தனர்.
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன” என்று பாடிய வள்ளலாரின் மனநிலையில் வாழ்ந்தனர்.
"மரமொடிந்து போனாலும் மனமொடிந்து போகின்ற” மனங்
கொண்டவர்களாக இருந்தார்கள்.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம” என்று சொல்லிப்
145

Page 76
| | |
வேரும் விழுறும் அகளங்கன்
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பு பெற்றவர்களாகப் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.
சங்க காலத்தில் மன்னர்கள் பலர், மக்களின் உயிரைத் தம்முயிரினும் மேலாக மதித்து வாழ்ந்திருப்பதையும் சங்க இலக்கியத்திலே கண்டு களிக்கிறோம்.
படரத் துணையின்றி வாடிக்கிடந்தது ஒரு முல்லைக் கொடியே யாயினும், ஒடிச் சென்று அதற்கு உறுதுணையாகக், கொழுகொம்பாகத் தன் உயர்ந்த வேலைப் பாடமைந்த தேரையே கொடுத்து விட்டுத் தான் கால் நடையாகத் தன் பறம்பு மலைக்குச் சென்றான் பாரி மன்னன்.
குளிரில் நடுங்கியது ஒரு மயிலாக இருந்த போதும் அதன் குறையைப் போக்கத் தன் போர்வையைக் கொடுத்துத், தான் குளிரில் நடுங்கிக் கொண்டு தன் அரண்மனைக்குச் சென்ற பேகன போன்ற மன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்திருந்தார்கள். எல்லா உயிரினங்களையும், செடி கொடிகளையும் நேசிக்கும் உயர்ந்த உள்ளம், போர்த்தொழிலில் ஈடுபட்டுக் கொலைத் தொழிலையே அரச தர்மமாகச், சத்திரிய தர்மமாகக் கொண்டொழுகிய மன்னர்களுக்கே இருந்த தென்றால், அறிவு மிகுந்த, அறஉணர்வுமிக்க புலவர்களுக்கு இருந்திருப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்.
புலவர்களின் புனிதமான, சுயநலத்தன்மை சிறிதும் அற்ற சமூக உணர்வு, மிகவும் போற்றுதற்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது.
மன் னர் களை விடப் புலவர் களே மிகவும் முக்கியமானவர்கள் என்று பல மன்னர்களே கருதியிருந்தனர். அதனாற்தான், அரும்பாடுபட்டுத், தான் தன் உயிரைப்
146
 
 

வேரும் விழுறும் அகளங்கன்
பணயம் வைத்துப் பறித்து வந்த அரிய நெல்லிக் கனியைத் தானுண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான், அதிகமான் என்ற அரசன்.
அந்த நெல்லிக் கனியை உண்டவர் நோய் நொடியின்றி அதிக காலம் உயிர் வாழ்வார் என்று நன்கு தெரிந்திருந்தும், அதனைத் தானுண்டு வாழ்வதை விட ஒளவையார் உண்டு வாழ்வதே உலகிற்கு அதிக பெறுமதி மிக்கது, பயன்பாடுடையது, என்று கருதிய அதிகமானின் செய்கை, புலவர்களின் பெறுமதியைப் பெரிதும் புலப்படுத்துகிறதல்லவா.
மன்னரைவிட மதிப்புமிக்க இத்தகைய புலவர்கள், தாம் வாழ்ந்த சமூகத்தை உற்றுப்பார்த்து, அதிலுள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டித் திருத்தும் நோக்கில் பாடிய பல பாடல்கள் தமிழிலக்கியப் பரப்பிலே மிகவும் புனிதமான பாடல்களாகப் பரவிக் கிடக்கின்றன.
குறைபாட்டைக் கண்டு கொதித்தெழுந்தும், தீர்வு காண முடியாமற் தவித்த புலவர்கள், குறைபாட்டைத் தோற்றுவித்த கடவுளையே ஏசிச், சாபங் கொடுத்தும் விடுகிறார்கள்.
பக்குடுக்கை நன்கணியார்
பக்குடுக்கை நன்கணியார் என்ற பெயரில் அழைக்கப்பட்ட சங்க காலப் புலவரொருவர், பொய்யடிமை இல்லாத புலவராகத் திகழ்ந்தார். -
சங்கச் சான்றோரான அவர், இவ்வுலகின் இயற்கையை உற்று நோக்கினார். கோபம் கோபமாக வந்தது அவருக்கு.
ஒரு வீட்டிலே மரணச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அவ்வீட்டில் மரணப்பறை எனப்படும்
147

Page 77
வேரும் விழுதும் அகளங்கன்
அமங்கல ஒலி எழுந்தது. மக்களின் அழுகை ஆரவாரம் காணப்பட்டது.
இன்னொரு வீட்டிலே திருமணச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அவ்வீட்டில் மங்கல மணமுரசு ஒலித்துக் கொண்டிருந்தது. மகிழ்ச்சி ஆரவாரம் மலிந்து காணப்பட்டது.
இரண்டு காட்சிகளையும் உற்று நோக்கினார், உள்ளத்தில் கோபம் மிகுந்தது.
இன்னொரு வீட்டிலே பார்த்தார். கணவனோடு சேர்ந்திருந்த பெண், பூமாலைகளை அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகத் தன் கணவனுடன் கூடிக் குலாவிக் கொண்டிருந்தாள்.
அதே வேளை, இன்னொரு வீட்டிலே கணவனைப் பிரிந்த காரிகையொருத்தி கண்கள் நிறைந்த நீரோடு சோகமே உருவெடுத்தாற் போல் காணப்பட்டாள்.
இக்காட்சிகளைக் கண்ட அப்புலவரால் இந்த இருவேறு நிலைகளுக்கும். சமாதானங் காண முடியவில் லை. துன்பப்பட்டவர்களின் துன்பத்துக்குத் தீர்வு காணவும் முடியவில்லை.
அதனால் அவருக்குக் கோபமே மிகுந்தது. இப்படி மாறுபாடான நிலைமைகளைப் படைத்தானே பிரமதேவன், படைப்புக் கடவுள். அவன் மேல் தான் கோபம் வருகிறது அவருக்கு. -
எல்லோரும் ஒருசேர மகிழ்ச்சியாக இருக்கும்படி இவ்வுலகை அவன் படைக்கவில்லையே. ஒரவஞ்சனையாகச், சிலர் இன்புறவும், சிலர் துன்புறவும் படைத்து விட்டானே என்று ஏசுகிறார் புலவர்.
148
 

வேரும் விழுறும் அகளங்கன்
ஓரில் நெய்தல் கறங்க, ஒரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே.
படைத்த கடவுள் பண்பில்லாதவன், அதனால் இவ்வுலகம் இன்னாதது என்று கூறிப் படைப்புக் கடவுளைத் தூற்றிப் பாட்டுப் பாடித் தன் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார் பக்குடுக்கை நன்கணியார்.
திருவள்ளுவரின் சாபம்
இவரைவிடத் திருவள்ளுவருக்குப் படைப்புக் கடவுளிலே அதிக கோபம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் திருவள்ளுவர் இவரை விட மிகவும் கோபமாக ஏசுகிறார்.
இந்தச் சங்கப் புலவர் படைத்தற் கடவுளைப் “பண்பிலாளன்’ என்று பண்போடு தான் ஏசுகிறார். ஆனால் திருவள்ளுவருக்கோ படைப்புக் கடவுளுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து ஏசப்பிடிக்கவில்லை.
அப்படி மரியாதைக் குறைவாகக் கோபமாக படைப்புக் கடவுளை வள்ளுவர் ஏசுவதற்கு, என்ன காரணம் என்று பார்ப்போம்.
ஒருவன் பிச்சையெடுத்து உண்டு உயிர் வாழுகின்ற காட்சியைப் பார்த்தார் வள்ளுவர்.
பிச்சையெடுத்தும் வாழ விரும்பும் ஒருவனை, கேவலமான மன நிலை கொண்டவனைப் படைத்தானே படைப்புக் கடவுள். அவன் நாசமாகப் போகட்டும். என்று சாபம் கொடுக்கிறார் வள்ளுவர்.
149

Page 78
வேரும் விழுறும் அகளங்கன்
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்'
"பிச்சையெடுத்தும், உயிர்வாழ்வது இன்பமானது எனக் கருதி, இழிவான அவ்வாழ்க்கையை வாழுகிறானே ஒருவன், அவனுக் கும் வாழ்க் கையிலே விருப் பத் தை உண்டாக்கியிருக்கிறானே படைத்தற் கடவுள். அந்தப் படைத்தற் கடவுளும், உலகெங்கும் அலைந்து பிச்சையெடுத்துக் கெட்டழிந்து நாசமாகப் போகட்டும்,' என்று சாபம் கொடுக்கிறார் வள்ளுவர்.
"பரந்து கெடுக உலகியற்றியான்' என ஏசிய வள்ளுவரின் தார்மீகக் கோபம், கர்மவிதியையே நொந்து கொள்ளும்படி செய்து 6ᎣilᏝ Ꮮ gᏏ6Ꭷ6ᎠᎧlIᎢ .
ஒளவையாரின் கோபம்
ஒளவையார் தெருத் தெருவாக நடந்து களைத்து, வெய்யிலில் வாடிச் சோர்ந்து ஒரு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அவ்வீட்டில் இருந்த குடும்பத் தலைவி மிகவும் நல்லவள். இரக்க முள்ளவள், பண்புள்ளவள், "செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும” இல்லற தர்மம் உணர்ந்தவள்.
அவள் ஒளவையாரின் களைப்பைப் போக்கி உணவளிக்க விரும்பினாள். ஆனால் அந்த நேரத்திலே அவளது கணவன் வந்து விட்டான்.
அவனோ மிகவும் கொடியவன். இரக்கம் என்பது இதயத்தில் சிறிதளவும் இல்லாதவன்.
மக்கட் பண்பில்லாத மரம் போன்றவன். அதிலும் ஈரம் சிறிதுமற்ற பட்ட மரம் போன்றவன்.
150
 

வேரும் விழுறும் அகளங்கன்
ஒளவையாருக்குத் தன் மனைவி விருந்து கொடுப்பது, அவனுக்குக் கோபத்தைக் கொடுத்தது.
மனைவியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அடித்து, ஏசித் திட்டிக் கொடுமைப்படுத்தினான்.
பார்த்துக் கொண்டிருந்தார் ஒளவையார். ஒளவையாருக்கும் மிகவும் கோபம் வந்தது.
ஒளவையாருக்கு யாரில் கோபம் வந்திருக்க வேண்டும்? அந்தக் கொடியவன் மேற்தானே.
இல் லை, இல் லை, அதற்கு மாறாக அந்தக் கொடியவனையும், அந்தக் கொடிபோன்ற அழகிய நல்ல பெண்ணையும் திருமணபந்தத்தில் இணைத்து விட்டானே பிரமதேவன் அவன்மேல் தான் கோபம் ஏற்பட்டது.
இன்னாருக்கு இன்னார் என்று விதித்த பிரமதேவன் இப்படி எத்தனை பேரின் வாழ்வை நாசமாக்கி விட்டிருக்கிறான்.
ஒளவையாருக்கு வந்த கோபம் அவரைக் கொலைகாரியாக்கும் அளவுக்குச் சென்று விட்டது.
பிரமதேவன் மட்டும் அந்த நேரத்தில் அவர் கையில் சிக்கியிருந்தால், அவனது நான்கு தலைகளையும் பிடித்துத் திருகிப் பிடுங்கி எடுத்துக் கொன்றே இருப்பார் ஒள்வையார்.
உலகை இப்படியா படைப்பது, யாருக்கு யாரைத் துணையாக விதிப்பது என்று தெரியாமல், பட்டுப் போன மரம் போலக் காணப்படும் இந்தக் கொடியவனுக்கா இந்த அழகிய மான் போன்றவளை மனைவியாக்குவது.
பிரமதேவனை நான் கண்டால் அவனது, ஏற்கனவே பிடுங்கப்பட்ட தலைபோக ஏனைய நான்கு தலைகளையும் பிடுங்கி
151

Page 79
வேரும் விழுறும் அகளங்கன்
எறிய மாட்டேனோ, என்று மிகவும் கோபத்தோடு பாடுகிறார் ஒளவையார்.
அற்றதலை போக அறாததலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ - வற்றல் மரமனை யானுக்கிம் மானை வகுத்திட்ட
பிரமனை யான்காணப் பெறின்.
பிரம தேவனுக்கும், சிவபெருமானுக்குப் போல ஐந்து தலைகள் இருந்தன. அதனால் தானும் சிவபெருமானும் ஒன்று என்று செருக்கடைந்திருந்தான்.
அவனது செருக்கை அடக்க, வைரவக் கடவுள் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார் என்பது புராணக்கதை.
இதனை ஞாபகப்படுத்தி, ஏற்கனவே தவறு செய்து ஒரு தலையை இழந்த பிரமதேவன், இன்னும் திருந்தவே இல்லை.
அவனது ஏனைய நான்கு தலைகளையும் நான் பிடித்துத் திருகிப் பிடுங்கி எடுத்துக் கொன்று விடுவேன் என்று ஆவேசமாகப் பாடுகிறார் ஒளவையார்.
ஒளவையாருக்கு வந்த தர்ம ஆவேசம் அக்காலப் புலவர்களிடையே மிகுதியாக இருந்தது.
படைத்தவனுக்கே சாபம் கொடுக்கிற அளவிற்கு, படைத்தவனையே கொல்லத்துணிகிற அளவிற்கு, படைத்தவனையே பண்பில்லாதவன் என்று ஏசுகிற அளவுக்கு இருந்திருக்கிறது.
புலவர்களின் சமூகப் பார்வை புது உலகைப் படைக்கக் காரணமாயிற்று. அது இன்றும் தொடர்கிறது என்று துணிந்து
சொல்லலாம்.
152
 

15| தனக்குத்தானே இரங்கற்பா பாடியவர்
மதிப்பு மிக்கவர்களும் அன்பு மிகுந்தவர்களும் தனக்கு உதவி செய்த பெரியோர்களும் இறந்து விட்டால், அந்த மனக் கவலையிலே இரங்கற்பா பாடுவது புலவர்களின் வழக்கம்.
சங்க காலம் தொட்டு இக்காலம் வரை இவ்வழக்கம் நடைமுறையிலுண்டு
உயிரோடிருக்கும் ஒருவருக்கோ அன்றித் தனக்குத் தானேயோ இரங்கற்பா பாடும் வழக்கம் எங்குமே இல்லாத வழக்கமாகும். ஆனால் கவியரசு கண்ணதாசன இந்த இருவகைக் கவிதைகளையும் பாடியுள்ளார் என்பது ஆச்சரியமான விடயமாகும்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தாலாட்டுப்பாடல்கள் பாடுவதில் தன்னிகரற்றவர் என்று அவரது ஆரம்ப காலத்தில் பாராட்டப் பட்டாலும் பின்னாளில் காதல்க் கவிதை பாடுவதில் கைதேர்ந்தவர் என மதிக்கப்பட்டார்
இறுதிக் காலத்தில் தத்துவப் பாடல்கள் பாடுவதில் தனி முத்திரை பதித்தவராகப் போற்றப்பட்டார்
இவை மட்டுமின்றி இறப்புக்கு இரங்கற்பா பாடுவதிலும் ஈடு இனணயற்றவர் என்பதற்கு அவர் பாடிய இரங்கற்பாக்களே சான்றுகளாகும்.
153

Page 80
வேரும் விழுறும் அகளங்கன்
இரங்கற் பாக்களிலும் இலக்கிய நயம் விளங்க அவர் பாடிய சில பாடல்களை இங்கே பார்ப்போம்.
தான் ஈடுபட்ட திரைப்படத்துறையில் பெரும் புகழோடு வாழ்ந்து இறந்த சிலருக்கு இவர் பாடிய இரங்கற்பாக்கள்
இதயத்தைக் கொள்ளை கொள்வனவாக இருக்கின்றன.
ராஜரட்ணம் பிள்ளை
நாதஸ்வர மேதை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் திரைப்படங்களிலே நடித்தவர்.
அக்காலத்தில் தலை சிறந்த நாதஸ்வர வித்துவானாக மதிக்கப்பட்டவர்
இவர் இறந்த சோகத்தில் கவியரசர் பாடிய இரங்கற்பா இதயத்தைக் கவர்ந்திழுக்கும் இலக்கிய நயம் மிகுந்தது.
என்னிவன் வளர்த்த பேறு.
எப்படிப் பயின்றான் இந்தச்
சின்னதோர் குழலுக் குள்ளே
செகத்தையே உருட்டும் பாடம்.
"அருவி ஓய்ந்தது' என்ற தலைப்பிலே இவ் விரங்கற்பா வெளிவந்தது. சின்ன நாதஸ்வரமாகிய குழலுக்குள்ளே இந்தப் பூமியையே உருட்டும் பாடத்தை இவன் எப்படிக் கற்றான் என்று வியந்து பாடும் வரிகள் அற்புதமானவை.
ராஜரட்ணம் பிள்ளை அவர்கள் தோடி இராகம் இசைப்பதில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதைக் காட்டும் முகமாகத் தமது இரங்கற் பாவிலே.
154
 

வேரும் விழுறும் அகளங்கன்
செவியினில் ஓடி எங்கள் சிந்தையில் ஓடி இந்தப் புவியெலாம் ஓடி நின்பாற் பொங்கிய தோடி வேறிங் கெவரிடம் போகும் ஐயா. இனியதைக் காப்பார் யாவர். அவிந்த நின் சடலத் தோடே அவிந்தது தோடி தானும்
எனத் தனது கவித்துவம் நிறைந்த கவிவரிகளால் தனித்துவமான இரங்கற்பாவைப் பாடினார் கவியரசர்.
கலை வாணரின் ஆசை
தமிழ்த் திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு என்றும் அழியாத பெயருண்டு
நகைச் சுவை மூலம் நல்ல கருத்துக்களைப் பரப்பிப் பலராலும் பாராட்டப்பட்டவர் அவர்.
உழைத்ததையெல்லாம் ஊருக்குக் கொடுத்து, சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சகலரையும் சிரிக்க வைத்து, பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த கலைவாணர். என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது.
திருவாவடுதுறை ராஜரட்ணம் பிள்ளை அவர்களுக்கு கவியரசர் பாடிய இரங்கற்பாவைப் படித்துச் சுவைத்த கலைவாணர், தான் இறந்த பின் தனக்குக் கவியரசர் பாடப் போகும் இரங்கற்பாவைத், தான் இருக்கும் போதே பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் அந்த விபரீத ஆசை.
அதனால் கவியரசரை வற்புறுத்தி, தான் உயிரோடிருக்கும் போதே இரங்கற்பாவைப் பாடுவித்தார்.
155

Page 81
வேரும் விழுறும் அகளங்கன்
"கலையா வாணன்' என்ற தலைப்பில் கவியரசர் பாடிக் கொடுத்த இரங்கற்பா கலைவாணருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. கலைவாணர் எதிர்பார்த்த அளவிற்கு அது அமையவில்லை.
கற்பனை உணர்ச்சியில் கவிபாடுவது, உண்மை உணர்ச்சியில் கவிபாடுவதின் காற்பங்குக்கும் வராது என்பதைக் கலைவாணரும், கவியரசரும் உணர்ந்து கொண்டனர்.
"இப்படித்தான் பாடுவாயென்றால் இந்த இரங்கற் பாவுக்காக நான் இறக்கத் தயாரில்லை” என்றாராம் கலைவாணர் நகைச்சுவையாக.
பின்னாளில் கலைவாணர் இறந்த போது கவியரசர் உணர்ச்சி கொப்பளிக்க “ஆறாது ஆறாது அழுதாலும் தீராது” என்று தலைப்பிட்டு இரங்கற்பா பாடினார். அவற்றிலொன்று.
பூனையும் கிளியும் தேம்பிப்
பொருமிய தாகக் கூறும் பாநயம் படித்தா ரன்றிப்
பார்த்தவர் இல்லை இல்லை பூனையா? சென்னை மண்ணின்
புல்லெலாம் விம்மி விம்மிக் கூனிய துயரம் கண்டோம்
கூவிய குரலும் கேட்டோம்.
பட்டுக் கோட்டை
இருபத்தொன்பது வயதுக்குள்ளே இனிய கருத்தமைந்த இசைப்பாடல்களை எழுதிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இளங்கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
சமத்துவ, சமதர்ம கருத்துக்களை முதன் முதலில்
156
 

வேரும் விழுறும் அகளங்கன்
திட்டமிட்டுத் தமிழ் சினிமாவில் புகுத்திப் பாராட்டையும் முணுமுணுப்பையும் உண்டாக்கியவர் அவர். தனது பிறந்த ஊரான பட்டுக் கோட்டை என்ற பெயராலேயே அவர் அழைக்கப்பட்டது அவரது சிறப்புக்குச் சான்றாகும்.
பாட்டுக் கோட்டை சரிந்ததாக அவரின் மறைவுக்கு கவியரசர் இரங்கினார்.
புரட்சிகரமான சிந்தனை கொண்ட பட்டுக் கோட்டையின் மரணம் கவியரசருக்குப் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்தது.
அவரின் இழப்புக்குக் கவியரசர் பாடிய இரங்கற் பாக்கள், இளகாத இதயத்தையும் இளகச் செய்யும் இலக்கிய நயம் படைத்தவை.
விழுதுவிட வந்தமகன்
விழுந்துவிட்டான் சாவினிலே
அழுதால் வருவானோ
அரற்றுவதால் கிடைப்பானோ.
என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்திய கவியரசர், பட்டுக் கோட்டையின் தோற்றத்தைக் கண் முன் நிறுத்தும் வகையில்.
வெற்றிலையும் வாயும்
விளையாடும் வேளையிலே நெற்றியிலே சிந்தை
நிழலோடி நின்றிருக்கும்
என்று பாடினார். அது மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டையின் முக்கியத்துவத்தைக் காட்ட அவரை மாகவிஞன எனப் புகழ்ந்தும் பாடினார்.
157

Page 82
வேரும் விழுறும் அகளங்கன்
தன்னுயிரைத் தருவதனால்
தங்க மகன் பிழைப்பானேல்
என்னுயிரைத் தருகின்றேன்
எங்கே என் மாகவிஞன்
என்று பாடியது மட்டுமின்றிப், பட்டுக் கோட்டையின் பாடல்களில் மிகவும் பிரபலம் பெற்ற தத்துவப் பாடலான;
“மனிதன் ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே' என்ற பாடலடியை நினைவூட்டியும் ஒரு பாடல் எழுதினார்.
ஆரம்பமாவ தெல்லாம்
பெண்ணுக்குள் என்றானே
ஆடி அடங்குகின்றான்
மண்ணுைக்குள். என்சொல்வேன்
தனக்குத் தானே பாடிய இரங்கற் பாடல்
தான் இருக்கும் போதே தனது மரணத்தின் தாக்கத்தை உணரவேண்டும் என்ற விசித்திர ஆசை கொண்ட கவியரசர் ஒரு தடவை குரலை மாற்றி இசையமைப்பாளர் எம். எஸ் விஸ்வநாதனுக்கு, தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியைத் தெரிவித்துப் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
தனது மரணத்துக்காக யார் யார் அதிகம் துடிப்பார்கள் என்பதைத் தானே நேரில் பார்க்க ஆசை கொண்டு செய்த காரியம் அது.
அதை விட மேலாக, யாருமே செய்யாத வகையில், தனக்குத்தானே இரங்கற்பாவைப் பாடி வைத்த கவிஞர், கவியரசு கண்ணதாசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
தனக்குத் தானே பாடிய இரங்கற் பாவிலே தன்னைப் பற்றிப் பின்வருமாறு பாடுகிறார் கவியரசர்.
158
 

வேரும் விழுறும் அகளங்கன்
"இருந்து பாடிய இரங்கற்பா’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்த இரங்கற் பாவில்;
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு N
வாய்தீயிற் புகைந்து போக மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
மாந்தியவன் மறைந்து போக தானேனந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
போகுமிடம் தனிமை தானே.
என்றும், பாட்டெழுதிப் பொருள் செய்தான்
பரிதாபத் தாலதனைப் பாழுஞ்செய்தான்.
என்றும் பாடியிருந்தார் கவியரசர்.
கவியரசர் கண்ணதாசன் இறந்தபின் இலங்கையில் அவருக்குப் பல இரங்கற் பாக்கள் பாடப்பட்டன.
அவற்றிலே கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கொண்டே அவருக்கு ஓர் இரங்கற்பாப் பாடி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்விரங்கற் பாக்களில் இரண்டினை இங்கே தருகிறேன்.
"அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலேவே இத்திக்காய் காயாதே'
என்று தமிழ்க் கவிதைதனைத் தித்திக்காய் எனத்தந்த
தீந்தமிழன் கவியரசன் எத்திக்காய் சென்றானோ?
எவரெவரைக் கண்டானோ.
1.59

Page 83
வேரும் விழுறும் அகளங்கன்
| என்றும் கவியரசரின் இன்னொரு புகழ் படைத்த பாடலான
"மலர்ந்தும் மலராத" பாடற் சந்தத்தில்;
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலை
பொதிகை மலைவந்த தமிழில் கவிதந்த
பொன்னான நம் கவிஞன்
விழியின் நீரருவி விழுந்து உடல் நனைப்ப
விண்ணு லகு சென்றானோ?
விதியின் விளையாட்டில் நொடியில் காற்றாகி
வீதி எங்கும் நிறைந்தானோ.
என்றும் பாடினேன். கவியரசர் மறையவில்லை.
வீதியெல்லாம் நிறைந்து விட்டார். வானலைகளில் அவரின் பாடல்கள் தவழும் போதெல்லாம் அவரும் வலம் வருகிறார்.
160
 


Page 84


Page 85
தமிழால் ஒருநாள் o6Trib Gibbo Jasoi தமிங்கிலத்துக்கு தாலிகட்டி, தமிழை வேலிகட்டி, கன்னித் தமிழைக் கற்பழி கழுத்தறுத்துக் கொண்டிருக்க, தமிழில் தோய்ந்து தமிழை ஆய்ந்து தமிழில் ாந்து தமிழை மேய்ந்து ஒய்ந்து
தோல் ஒருசிலர் ஒசைப்படாமல் இண்டிருக்கிறார்கள் சங்கத் தமிழை işi, கொண்டிருக்கிறார்கள் இத்தை தமிழை வளப்படுத்தும் இறங்களின் வரிசையில் தன்னையும் பதிப்பித்தவர் தினம் புதுப்பித்தவர்
தங்கமாய் ஜொலிக்கும் gിg ബ10: இந்தித்து தகதகத்து மின்னுகின் தாரகைகள் ឆែ្កតែ தளராத தன்
தாகத்தினால் தமிழ் மோகத்தினால் வேதத்தினால், கவியாகத்தினால் இலங்குபவர் தமிழ்மணி அகளங்க േബ് இ
ஈழநிலா {ួតិ ൺ |fl = (ခြံjififiဆေး စို့ဝှး :14:2007
 

சேது த்து,
தினம்
இலக்கி
ifoğlu Hü