கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளவையார் அருளிய வாக்குண்டாம் (மூதுரை) உரையுடன்

Page 1
ඌඑළුපතළුපළඑඑචඩ්‍රපංචුතූපපපපඤඑළුද
@.
சிவப
மேன்மைகொள் சைவ நீதி 6
ஒளவையார் 5ll I Ꮷ5 Ꮷ, ; (மூது
96S)
விளக்க
அகள
பன்னிருதிருமுறை மு
ஞாபகார்த்த ே
இந்து மாமன்றம்
அகிலாண்டேஸ்வரி சபே
ஆலய அற கோவில்குளம் -O 1 O - O
පළුද්‍යම පංචතූපපතපටළුපතළ චක්‍රපටපද
 

සංෂපථපපපපපළපතළුව ඊළුපත්‍රපංතන
) QA J A D
விளங்குக உலகமெல்லாம்"
ரை)
யுடன்
3வுரை: ங்கன்
ற்றோதல் பூர்த்திவிழா
0 - வவுனியா மத அகிலாண்டேஸ்வரர் றங்காவலர், -O- வவுனியா
- 97
ඝඑපඑළුඑළවළුළුට්ට්ට්ෆිට්ට්ෆිට්චු එළඳා

Page 2

6,
சிவமயம்
மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
ஒளவையார் அருளிய வா க் குண் டாம் (மூதுரை )
உரையுடன்
விளக்கவுரை:
அகளங்கன்
பன்னிருதிருமுறை முற்றோதல் பூர்த்திவிழா ஞாபகார்த்த வெளியீடு - 4
இந்து மாமன்றம் - வவுனியா
அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர், கோவில்குளம், X-X-X வவுனியா
40 - 1 = 1997

Page 3
வாக்குண்டிாம் (மூதுரை)
விளக்கவுரை : அகளங்கன்
முதற்பதிப்பு ; 1997 - 01 - 10
வெளியீடு : இந்து மாமன்றம், வவுனியா,
அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர், கோவில்குளம், வவுனியர.
அச்சுப்பதிவு : சுதன் அச்சகம், வவுனியா
: esun As In TO

Na
66 Loub
அரசாங்க அதிபரின் ஆசியுரை.
Tெமது கலாசாரத்தை கட்டிக்காத்துப் பேணு
வதில் இந்து மாமன்றங்களின் பணிகள் அளப்பரியது.
இந்த வகையில் வவுனியா இந்து மாமன்றத்தின் பணி
கள் சிறப்பானதும் வரவேற்கக் கூடியதுமாகும்.
தமிழ் மக்களின் துயர் நிறைந்த துன்பம் புகுந்து
கொண்ட துயரமான வாழ்க்கை காரணமாக அவர்களின்
கலாசாரப் பண்பாடு அம்சங்கள் சீர்குலைந்து கொண்டு
இருக்கும் இவ்வேளையில் ஒளவையார் அருளிய (மூதுரை) வாக்குண்டாம் எனும் நீதி நூல் வெளியீடானது மகிழ்ச்சி யைத் தழுகிறது. அது இக்காலத்தில் தேவையானதுமே,
இந்நூல் வெளியீட்டின் மூலம் சீரழிந்துகொண் டிருக்கும் எங்கள் கலாசாரப் பண்பாட்டம்சங்களைக் கட்டிக்காத்துப் பேணி வளர்க்கவும், ஊக்கப்படுத்தவும் முடியும் என நம்புகிறேன்.
சிறப்பான முறையில் நூல் வெளியீடானது நிறைவு பெற எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவார் எனப் பிரார்த்தித்து மனமகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கின்றேன்.
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்,'
க. கணேஷ்
அரச அதிபர் வவுனியா

Page 4
Àa
இந்து மாமன்றத் தலைவரின் ஆசிச் செய்தி.
鑫盛疆鸥盛酶爱超塑鲑墨堡匾>骞塞参鲨堑遍鲨鲨懿 疆雄-碘演囊塑巅墨盖懿翼攀圆碘麟鳢礁雕懿魏魏脑*雷呜穆帽
*டந்த காலங்களில் திரு முறை முற்றோதல் வ / பூரீ சுந்தசுவாமி கோவிலில் ஒதப்பட்டு வந்தது. கோவில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலை கள் நடைபெறுவதால், வ / கோவில்குளம் சிவன் ஆலயத் தில் முற்றோதல் செய்யத் திருவருள் பாலித்துள்ளது, வருடந்தோறும் பன்னிரு திருமுறை முற்றோதல் வெளியீடாக ஒளவையார் அருளிச்செய்த நூல்கள் வெளி வருவது மக்கள் அறிவார்கள். இம்முறையும் வன்னி தந்த தமிழ் அறிஞர் தமிழ்மணி அகளங்கனின் காலத்துக்கேற்ற புதிய கருத்துக்களையும் கொண்ட வாக்குண்டாம் ( மூதுரை ) வெளிவருகிறது. நூலினை வருடந்தோறும் வெளியிட பெரிதும் உதவி வரும் தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு பேறுகள் அனைத்தையும் இறைவன் அளிக்க வேண்டுமென்று வேண்டுவதுடன்;
மாணவர்களதும், மக்களதும், இறை பக்தியும் ஒழுக்கற்தின் சிறப்பும் மேன்மையானது என்று உணரும் படி மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்த மேற்கொள் ளும் இம்முயற்சி வெற்றிபெறுவதற்கு நிதி உதவி செய்து உதவிய அன்பர்களையும்பாராட்டாமல் இருக்கமுடியாது" கடந்த ஒரு வருடமாக திருமுறை முற்றோதலில் பங்குகொண்ட அடியார்களையும், ஆரம்பம் முதல் திரு முறைப் பேச்சுக்களை மிகவும் சிறப்பாக ஆற்றிவந்த தமிழருவி த. சிவகுமாரன் B, A, (Hons,) அவர்களையும் இந்து மாமன்றச் செயலாளரினதும், சிவன் ஆலயச் செயலாளர், தலைவர். பொருளாளர், குருக்கள் மார் தந்த ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்து அனைவருக்கும் எல்லாம் வல்ல இறையருள் கிட்ட பிரார்த்திக்கின்றேன். வ ன க் க ம் , இந்து மாமன்றம் C. A. இராமஸ்வாமி, பூங்கா வீதி, வவுனியா, தலைவர்,

டே சிவமயம்
செயலாளரின் ஆசிச் செய்தி.
பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழா 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் திகதி வெள்ளிக் கிழமை வழமைபோல் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது.
இம்முறை பன்னிரு திரு மு  ைற முற்றோ தலை இந்து மாமன்றமும், கோவில்குளம் அகில்ாண்டேசுரர் திருக்கோயிலும் இணைந்து சிவாலயத்தில் முற்றோதல் நடைபெற்றது. அத்தோடு ஆலய கும்பாபிஷேக, மண்ட லாபிஷேக காலத்தில் தொடர்ந்து 40 நாட்கள் திருவிளை யாடற் புராணத்தை தெய்வீகப் பேருரையாக நிகழ்த்திய தமிழருவி திரு. த. சிவகுமாரன் B, A, (Hons.) அவர்கள் வெள்ளி தோறும் தனது தெய்வீகப் பேருரையில் திருமுறை களைப் பற்றிய விளக்கங்களை அளித்தது இம்முறை விழாவுக்குப் பெருமை சேர்த்தது. இம்முறையும் பல அருளாளர்கள் தொடர்ந்து பன்னிரு திருமுறைகளை ஆலயத்தில் ஒதுவதற்கு உதவியமை பெருமைக்குரியது.
இந்து மாமன்றம் எக்காலத்தும் இவ் விழாவினை
சிறப்பாக நடாத்த சிவனை வணங்குகின்றேன்.
* திருமுறையே சிவபெருமான் அருள்பெருக
எழுந்த தெய்வத் திருநூல் '
அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர்கள் தமது பூரண ஒத்துழைப்பை நல்கினார்கள். அவர்களுக்கு இந்து மாமன்றம் நன்றியைத் தெரிவிக்கின்றது.
இறைபணிச் செம்மல் வை: செ. தேவராசா,
இந்து மாமன்றம். வவுனியா,

Page 5
shசிவமயம்
சிவன் ஆலயச் செயலாளரின் ஆசிச் செய்தி.
ந்ெநாட்டவர்க்கும் இறைவனாகவும், தென்னாட் டவர்க்குச், சிவன் ஆகவும் அமைந்து அருள் பாலிக்கும் எம்பெருமான்; கோவில்குளம் பதியில் அகிலாண்டேஸ் வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி இனிதே அருள் புரிவது நாம் எல்லாரும் செய்த பூர்வ புண்ணியத்தின்
பய்னேயாகும்.
இத்தகு ஆலயத்தில் சிவனுக்கே உரிய திருமுறை களாம் பன்னிரண்டையும் ஏறத்தாள நான்கு மாதங் களுக்கு மேலாக முற்றோதல் செய்து, அவனருளாம் தடங்கருணை கிடைக்கச் செய்த வவுனியா இந்து மாமன்ற பெருமக்களை எவ்வளவு வாழ்த்தினும் தகும். குறிப்பாக தலைவரும், செயலாளரும் செய்துவரும் திரு முறைப் பெரும்பணி எண்ணி எண்ணி மகிழத் தக்கதே.
கடந்த பல்லாண்டுகளாக இத் தி ரு முறை முற் றோதல் நிகழ்த்தி, அது நிறைவுபெறும் விழாவில் அரிய வாழ்வியல் நூல்களை வெளியிடுவது அவர்கள் வழக்கம், இம்முறையும் எமது ஆலயத்தில் இடம்பெற்று நிறைவு பெறும் இத்திருமுறை முற்றோதல் பூர்த்தி விழாவில் ஒளவையார் அருளிச்செய்த ' வாக்குண்டாம் (மூதுரையை) பொருள் விளக்கத்துடன் வெளியிடுகிறார்கள். ' சமூக ஆக்கப் பண்பாடுமிக்க இந்நூலை வெளியீடு செய்வது காலத் தால் செய்த உதவியாகும்.

இந்நல்வேளையில் வவுனியா இந்து மாமன்றத் துப் பெருமக்களையும் திருமுறைப் பெருவிழாவையும், வெளி யீடு செய்யப்படும் நூலையும்; அதற்காக உழைத்த அன்பர்களையும், எல்லாம் வல்ல பூரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரப் பெருமான் திருக் கடைக்கண் ணோக்கம் செய்து அருள்பாலிப்பார் என்ற திட நம்பிக்கை யுடன் எமது தேவஸ்தானம் சார்பாகவும், ஆசிகூறி அமைகின்றேன்.
வன க் கம்.
அ. நவரத்தினராசா,
செயலாளர்,
அறங்காவலர் சபை, கோவில் குளம் சிவன்கோவில்,
01-01-97 வவுனியா,

Page 6
முன்னுரை
இவை யாரை அறியாத தமிழர்களைத் தமிழர் கள் என்று சொல்லுவது தவறானது என்பது என் கருத்து. தமிழ்ச் சிறுவர்கள் எல்லோருக்கும் அரிச்சுவடி வடிக்கும் காலத்திலிருந்தே அறிமுகமானவர் ஒளவையார்
நிலாவின் களங்கத்தைக் குழந்தைகளுக்குக் காட்டி, அது ஒளவைப் பாட்டியின் உருவம் என்று அறிமுகஞ் செய்யும் வழக்கம் தமிழர்களின் நீண்டகால வழக்கம்.
ஒளவையாரின் அற நூல்கள் தமிழ்ச் சிறுவர்களுக்கு ஒழுக்கமாகிய இரத்தத்தை உடலிலே ஓடச்செய்வது என்று சொன்னால் அது மிகையாகாது.
வவுனியா இந்து மாமன்றம் ஆண்டுதோறும் பன்னிகு திருமுறையை முற்றோதல் செய்து, ஜனவரி 1-ம் திகதி பூர்த்தி விழாவைக் கொண்டாடும்போது ஞாபகார்த்த மாக பயன்பாடுமிக்க அறிவு ச் செல்வங்களை வெளி
இந்த வகையில் எ ன து ' பன்னிரு திருமுறை அறிமுகம் ' நூலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியவை எனது விளக்கவுரையுடன் வெளிவந்துள்ளன.
இந்த ஆண்டு மூதுரை எனப்படும் (வ்ாக்குண்டாம்) நூலை வெளியிடுகிறது. இப்பணியில் என்னை ஈடுபடுத்தி வரும் இந்து மாமன்றத்தலைவர் திரு. சீ. ஏ. இராமஸ்வாமி அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உரியன.
சிறுவர்களுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பயன் படும் வகையில் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை களோடு இந்நூல் வெளிவருகிறது;

மனிதர்கள் புனிதர்களாக வாழவேண்டும் என்ற ஆசையே இந்நூல்களை நான் ஆக்குவதற்குக் காரணம். எனவே எல்லோரும் படித்துப் பயன்பெற இறையருளை வேண்டுகின்றேன்.
இந்நூலை அழகாக அச்சிட்டுதவிய வவுனியா சுதன் அச்சகத்தாருக்கும். இந்நூலை அச்சிடுவதில் எனக்கு ஆலோசனைகளைவழங்கிய பெரியவர் திரு. ச. சிவஞானம்
பம்பைமடு . வவுனியா, அன்பு 0.1-0 I-97 அகளங்கன்

Page 7
நூல் வெளியீட்டுக்கு நிதியினை மனமுவந்தளித்த அன்பர்கள்
ந. சண்முகராசா அவர்கள், சிவசக்தி க. செல்வராசா காஞ்சனா ஜுவலர்ஸ் செ. பஞ்சலிங்கம், வேணுகா டெக்ஸ்
கொண்டா மேரட்டர்ஸ்
2
3
4.
5. ம. கணேஷ், கீர்த்தன்ஸ் 6. க. கதிர்காமநாதன், வாடி வீடு 7. க. நித்தியானந்தன், மாலா டிஸ்ரிபியூடர்ஸ் 8. சி. ஞானசம்பந்தன், சில்வாஸ் 9. METO ரேடர்ஸ் 10. பொ. கமலேஸ்வரன் J. P. ரனா பிறதர்ஸ் 11. ந, பாலச்சந்திரன், J. P. 1-ம் குறுக்குத் தெரு 12. C. A இராஸ்வாமி, ஈசன் 13. இறைபணிச்செம்மல் வை. செ. தேவராசன 14, ப. பழனிவேல், J.P. 11ம் குறுக்குத் தெரு
 

@-
$f)anu LDuu lib
வாக் குண் டாம்.
sa AgAg· 22 France
(மூதுரை )
காப்பு  ெவ ண் பா
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மர்மலராள் நோக்குண்டாம் மேனி நுடங்களது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பஈமற் சார்வார் தமக்கு.
பதவுரை: துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம் - பவளம்போலும் ( சிவப்பாகிய) திருமேனியை யும், துதிக்கையையும் உ ைடய விநாயகக் கடவுளது திருவடிகளை பூக்கொண்டு -பூவைக்(கையிலே) கொண்டு தப்பா மற் சார் வார் தமக்கு - தவறாமல் அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் - (நல்ல ) வாக்கு உண்டாகும். நல்ல மனம் உண்டாம் - நல்ல வீரம் கிட்டும், மா மலராள் நோக்குண்டாம் - பெருமை பொருந்திய செந்தாமரைப் பூவில் இருக்கின்ற இலக்குமியி னுடைய அருட்பார்வை உண்டாகும் மேனிநுடங்காதுஅவருடைய சரீரம் பிணிகளால் வாடிப்போகாது.
பொழிப்புரை: பவளம்போன்ற நிறங்கொண்ட திரு வுருவையும், தும்பிக்கையையும் உ  ைடய விநாயகக் கடவு ளது திருவடிகளை, பூச் சொரிந்து தவறாமல் வழிபடுபவர்களுக்கு, நல்ல வாக்கு வல்லமை கிட்டும். நல்ல வீரம் கிட்டும். சிறந்த செந்தாமரைப் பூவிலே இருக் கின்ற மகாஇலக்குமி தேவியின் அருட் பார்வை கிடைக்கும். உடல் நோயினால்துன்பப்படாது.

Page 8
O2 வாக்குண்டாம்
விளக்கவுரை: விநாயகப் பெருமானை வழிபடுவ வர்களுக்கு, கல்வி, வீரம், செல்வம் என்பவை கிட்டும். உடலில் நோய் ஏற்படாது, நல்ல மனம் என்பது வீரத்தைக் குறிக்கின்றது. அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் *" தனந் தரும், கல்வி தரும், ஒருநாளுந் தளர் வறியா மனம்தரும்' என்று பாடுகிறார். தளர்வறியா மனம் வீரத்தைக் குறிக்கும். இங்கும் நல்ல மனம் வீரத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மா - மகாலக்சுமி. மலராள் - தாமரைப் பூவில் இருப்பவள். எனவே செந் தாமரைப் பூவில் இருக்கின்ற மகா லக்சுமி என்கிறோம். மா மலராள் நோக்கு உண்டா கும் என்றால் செல்வம் உண்டாகும் என்று
பொருள்.
* நன்றிக்கு நாள் இல்லை ? ?
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். سبد - Il ----
பதவுரை: நின்று தளரா வளர்தெங்கு - நிலைபெற் றுச் சோரா மல் வளர்கின்ற தென்னை LDU LDf 607 g/ தாள் உண்ட நீரை - (தன்) அடியிலே உண்ட (வெறு, நீரை, தலையாலே தான் தருதலால் - (தன் முடி யிலே ( மதுரமாகிய இளநீராக்கித் ) தானே தருதலி னாலே, ஒருவர் க்கு நன்றி செய்தக்கால் - ( நற்குண முடைய) ஒருவனுக்கு ஒர் உபகாரத்தைச் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - அந்த, உபகாரத்தை (அ வ ன் ) எப்பொழுது செய்வானோ என்று சந்தேகிக்க வேண்டியதில்லை.

வாக்குண்டாம் O3
பொழிப்புரை: சோர்வின்றி நிலையாய் நின்றுவளர் கின்ற தென்னை மரமானது தன் வேர்கள் உண்ட நீரைத் தலையிலே சுமந்து இளநீராக மக்களுக்குத் தருகின்றது. அதுபோல ஒருவ ருக்கு நாம் செய்யும் உதவிப் பயன் எப் போது கிட்டும் என்று சந்தேகிக்க வேண்டிய தில்லை. என்றோ ஒருநாள் அது கிட்டும்.
விளக்கவுரை: தென்னைக்கு அசுத்த நீரை ஊற் றினாலும், அது நல்ல தூய நீரையே தரும். பாதங்கள் பெற்ற உதவியைத் தலையாலே திருப்பித் தருகின்றது என்றார். நாங்கள் குடிக்கின்ற இளநீரெல்லாம் நாங்கள் நீர் ஊற்றி வ3ார்த்த தென்னைகளின் இளநீர் தான் என்றில்லை. எனவே, நாங்கள் யாருக் காவது சிறு உபகாரத்தைச் செய்தால், அது "இன்னொருவர் மூலமாகவாவது வந்துசேரும். அதனால் யாருக்காவது உதவி செய்துவிட்டு அவரிடமிருந்து அது எப்போது திருப்பிக் கிடைக்கும் என்று சந்தேகத்தோடு காத்திருக்க வேண்டாம். எவர் மூலமாது கிடைக்கும்.
நீர்மேல் எழுத்தும் கல்மேல் எழுத்தும்,
(ԼՔ5Ֆl ID, ழுதி து
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர். -2-
பதவுரை; நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணமுடையவராகிய ஒருவர்க்குச் செய்த உபகார மானது. கல்மேல் எழுத்துப்போல் காணும் - கல்லின் மேல் எழுதப்பட்ட எழுத்தைப்போல் விளங்கும். அல்லாத

Page 9
04 வாக்குண்டாம்
ஈரம்இல்லாத நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - மற்ற அன்பில்லாத மனமுடையவருக்குச் செய்த உபகார மானது, நீர்மேல் எழுத்திற்கு நேர் - தண்ணிரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும்:
பொழிப்புரை. நல்லவர்களுக்குச் செய்த உதவி, அவர் நெஞ்சத்தில் கல்லில் பொறித்த எழுத் தைப் போல நிலைத்து நிற்கும், நல்லவரல் லாத தீயவருக்குச் செய்த உதவி நீரின்மேல் எழுதிய எழுத்துப் போல உடனேயே அழிந்து போகும்.
விளக்கவுரை: நல்லவர்கள் தாம் பெற்ற உதவி யை என்றும் மறக்காமல் மனதில் வைத்திருப் ig56T நல்வரல்லாதவர் அன்பில்லாதח חLi நெஞ்சங் கொண்டவர் என்றார். அல்லாத என்பதை அன்றி எனப் பொருள்கொண்டால் ஈரமில்லா நெஞ்சத்தார் என்ற சொல்லில் தீய வரைக் குறிப்பிட்டார். அன்பில்லார் தீயர், அன்பே சிவம் அன்பில்லார் சவம், அன்பில் லாருக்கு உதவிசெய்வது பாபமாகும்.
இளமையில் வறுமை கொடியது இன்ன இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா வளவில் இனியவும் - இன்னாத நாளல்லா நாட்பூத்த நன் மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. - }--
பதவுரை: இளமை வறுமை வந்து எய்தியக்கால்
இன்னா - (இன்பத்தை தருகின்ற ) இளமைப் பருவ மானது வறுமை வந்து அடைந்தால் துன்பத்தைத்
 

வாக்குண்டம்
தருவதாகும், இன்னா அளவில் இனியவுப் இன்னாததுன்பத்தைத் தருகின்ற முதுமைப் பருவத்தில் இனியன வாகிய பொருள்களும் துன் பத்  ைத த் தருவனவாம். (அவைகள் ) நாளல்லா நாள் பூத்த நல் மலரும் - சுப காலமல்லாத காலத்தில்ே பூத்த நல்ல பூவையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகு போலும் - அனுபவிப் பவன் இல்தாத மங்கைப் பருவத்தை உடையவளுக்கு உண்டாகிய அழகையும் போலும் ,
பொழிப்புரை: பருவமல்லாத பருவத்திலே மலர்ந்த மலரைப்போலவும், கணவனில்லாத பெண் ணிற்கு அழகைப் போலவும், முறையே இளமைக் கா லத்து வறுமையும், முதிய காலத்து இன்பப்பொருட்களும் துன்பத்தையே தரும்,
விளக்கவுரை: வறுமையினால் உலக போகங்கள் எதுவும் கிட்டாது. அதனால் உலக போகங் களை அனுபவிக்கக் கூடிய இளமையிலே, வறுமை மிகவும் கொடியது. டுசல்வத்தினால் உலக போகங்கள் அனைத்தும் கிட்டும். ஆனால் உலக போகங்களை அனுபவிக்கமுடி யாத முதுமைப் பருவத்திலே அச்செல்வம் கிடைப்பதும் துன்பமேயாகும். பருவமில்லாக காலத்தில் மலர்ந்த மலரை யாரும் கண்டு பயன் படுத்துவதில்லை. அதேபோல் கண வன் இல்லாதபோது இளம்பெண்ணுக்கு அழ கிருந்தும் அது வீணேயாகும். அவ்வழகினால் துன்பமே ஏற்படும். இளமையில் வறுமையும், முதுமையிற் செல்வமும் மிகவும் கொடுமை

Page 10
O6 வாக்குண்டாம்
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே அட்டாலும் பால்சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்வல்லன் கெட்டாலும் மேன்மக்கண் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்:
பதவுரை; பால் அட்டாலும் சுவை குன்றாது - பாலானது (தன்னைக்) காய்ச்சினாலும் (தன்) மதுரத் திற் குறையாது மிகும், சங்கு சுமீட்டாலும் வெண்மை தரும் - சங்கானது (தன்னை) நீறாகச் சுட்டாலும் மிகுந்த வெள்ளை நிறத்தையே கொடுக்கும், (அவை போல) மேல் மக்கள் கெட்டாலும் மேல் மக்களே - மேலோர் (தாம் தம்முடைய சினேகிதராலே)கெட்டாலும் ( தம்முடைய நற்குணம் வேறு படாமல் ) மேலோ ராகவே விளங்குவார். நண்பு அ ல் லா ர் அளவளாய் நட்டாலும் நண்பு அல்லர் - சிநேக குணம் இல்லாத கீழோர் ( தம்மோடு ஒருவர் கலந்து ) சிநேகித்தாலும் சினேகராகார்,
பொழிப்புரை நன்கு காய்ச்சினாலும் பால் சுவை யிலே குறையாது. சங்  ைக நெருப்பிலே போட்டு எப்படிச் சுட்டாலும் அதன் வெண்மை மாறாது. அதேபோல மேன்மக்க ளுக்கு வறுமை ஏற்பட்டாலும் தமது நிலையி லிருந்து மாறமாட்டார்கள். அதேவேளை நட்புக்குரியரல்லாதார் நன்கு கலந்து உற வாடிப் பழகினாலும் நண்பராக மாட்டார்.
விளக்கவுரை: நட்புக்குரியவர்களே நண்பராவார் கள். மற்றவர்கள் எப்படிப் பழகினாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக மாட்டார். சங்கு பால் என்பவை, சுட்டாலும், காய்ச்சின லும் தம் தன்மையிலிருந்து மாறுபடாதவை உயர்ந்தவர்கள் வறுமை முதலான துன்பம்

N
வாக்குண்டாம் O7
வந்தபோதும் தம் நிலை தளரார். எனவே நல்லவர்களை அவர்களிடம் வறுமை வந்த போதும் ஒதுக்கக்கூடாது. தீயவர்களை அவர் களிடம் செல்வம் இருந்தபோதும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
காலத்திளாற்தான் கருமம் நிறைவுறும். அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. -5- பதவுரை: தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல் லாம் - கிளைத்த வடிவத்தால் நீண்ட உயர் வாகிய மரங்கள் எல்லாம். பருவத்தால் அன்றிப் பழா -( அது அது பழுக்குங்) காலம் வந்தாலல்லால் பழாவாம் (அது
போல ) அடுத்து முயன்றாலும் - மேலும் மேலும் முயற்சி செய்தாலும், ஆகு நாள் அன்றி எடுத்த கருமங் கள் ஆகா - முடியுங் காலம் வந்தால் அல்லாமல்
எடுத்த முயற்சிகள் முடியாவாம்.
பொழிப்புரை: தோற்றத்தில் உயர்ந்து வளர்ந்த மரங்களும் தமக்குரிய பருவகாலத்திலன்றிப் பழுக்க மாட்டா. இதுபோலவே எவ்வளவு தரன் தொடர்ந்து முயற்சி செய்தாலும், அவை நிறைவேறும் காலத்திலன்றி எக்கருமங் களும் நிறைவேறுவதில்லை.
விளக்கவுரை, மரம் எவ்வளவு தான் செழித்துக் கினள பரப்பி உயர்ந்து வளர்ந்திருந்தாலும், அதற்குரிய காலத்திலேதான் பூத்துக் காய்த் துப் பழுக்கும். நன்றாக வளர்ந்திருந்தாலும் பருவம் வராது பயன் தராது. அதேபோல்

Page 11
ც8 AI FT 3.(565ST LT Li)
தொடர்ந்து முயற்சி செய்தாலும், நிறைவேறு கின்ற காலத்திலேதான் கருமம் நிறைவேறும் அதனால் அதுவரை பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டும்.
மானம் போனால் வாழ்வு போகும்
உற்ற விடத்து உயிர்வளங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றுண் பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரந் தாங்கிற் தளர்ந்து வளையுமோ தான். سس 6 مسیسات--
பதவுரை ; கல் தூண் - கல்லுத் துனானது பெரும பாரந் தாங்கிற் பிளந்து இறுவது அல்லால் - பெரிய பாரத்தைத் தாங்கினால் பி ள ந் து ஒடிவதல் லாமல், தான் தளர்ந்து வளையுமோ - தான் தளர்ந்து வளையுமோ (வளையாது, அதுபோல்) உற்ற இடத்தில் உயிர் வ்ழங்குந் தன்மையோர் - (தமக்கு) ஆபத்து வந்த விடத்தே தம்முயிரையும் விடும் குணமுடையவர்கள், பற்றலரைக் கண்டாற் பணிவரோ - தம் பகைவரைக் கண்டால் வணங்குவாரோ (வணங்கார்)
uொழிப்புரை கல்த் தூணானது, பெரிய பாரத் தைச் சுமக்க நேர்ந்தால் தளர்ந்து வளைந்து கொடாது பிளந்து உடைந்து விடும். அது போல் தமக்கு அவமானம் ஏற்படுமாயின் அந்தக் கணத்திலேயே உயிர் நீக்கும் மானஸ்தர்கள் பகைவர்களுக்குப் பணிந்து கைகட்டிச் சேவகம் செய்யார்.
விளக்கவுரை: பாண்டியன் நெடுஞ்செழியன் தனது தீர்ப்புத் தவறானது என்பதை அறிந்த அக் கணமே உயிர் நீத்தான். மானமே பெரிதென வாழ்வோர் கற்தூண் போன்றோர், நெகிழ் ந்து கொடுக்கார்,
 

வாக்குண்டாம் 09
கல்வி - செல்வம் - வீரம்
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாந் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம். -7- பதவுரை: நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரில் இருக்கின்ற அல்லியானது அந்த நீரினுடைய உயரத்தி ணளவாகவே உண்டாகும், (அதுபோல ) நுண் அறிவு தான் கற்ற நூலளவே ஆகும் - ஒருவனுக்கு நுட்பமாகிய அறிவானது தான் கற்ற நூலினளவாகவே உண்டாகும்" தான் பெற்ற செல்வம் மேலைத் தவத்து அளவே ஆகும் - தான் பெற்ற செல்வமானது முற்பிறப்பிற் செய்த தவத்தின் அளவாகவே உண்டாகும். குணம் குலத்து அளவே ஆகும் - குணமானது ( தான் பிறந்த ) குலத் தின் அளவாகவே உண்டாகும். பொழிப்புரை: தண்ணீரின் அளவைப் பொறுத்தே தான் அல்லியின் உயரம் அமையும். அது போல ஒருவனின் நுட்பமான அறிவானது அவன் கற்ற நூலின் அளவைப் பொறுத்தே தான் அமையும். ஒருவன் பெறும் செல்வ மானது அவன் முன்பு செய்த தவத்தின் அளவாகவே அமையும். பிறந்த குலத்திற் கேற்பவே பண்பு அமையும்.
விளக்கவுரை; அல்லி நீரின் அளவை மீறி வளர முடியாது. அதேபோல் நுண்ணறிவும் கற்ற நூலின் அளவை மீறி அமையமுடியாது என் றார். தவம் எ ன் ப  ைத முயற்சி என்றும் கொள்ளலாம். எனவே முன்பு செய்த முயற்சி யின் அளவிற்கு ஏற்பவேதான் ஒருவனுக்குச் செல்வம் உண்டாகும் என்றும் கொள்ள லாம். குலம் என்பது சாதியைக் குறிக்காது.

Page 12
/O வாக்குண்டாம்
நல்ல பண்புள்ள குலம் உயர்குலம். கீழான பண்புகள் கொண்ட குலம் தாழ்குலம், அவ் வகையில் குலத்தின் தன்மைக்கு ஏற்ப குண மும் அமைகின்றது என்று பொருள் கொள்ள லாம். 'இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர்' என ஒளவையார் சாதிப் பிரி வினை செய்வதையும் கருதுக. இங்கு குணம் என்பதை வீரம் என்றும் கருதலாம். மனத் தின் சம்பந்தம் பெற்றது குணம். எனவே கல்வி, செல்வம், வீரம் பற்றிக் குறிப்பிட்டார் எனலாம். சிறுத்தொண்டரின் மகன் சீராள தேவர். தந்தையிலும் மிக மனஉறுதி படைத் தவன். குணம் படைத்தவன், அதுவே வீரம், அது குலத்தளவே ஆகிய குணத்திற்கு எடுத் துக் காட்டு.
நல்லாரைக் காண்பதுவும் நன்று நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. --8-س
பதவுரை: நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நல் லாரைக் காணுதலும் நல்லதே, நல்லார் நலம்மிக்க சொல் கேட்பதுவும் நன்றே - நல்லவருடைய பயன் நிறைந்த சொல்லைக் கேட்குதலும் நல்லதே. நல்லார் குணங்கன் உரைப்பதுவும் நன்றே - நல்லவருடைய நற்குணங்களைப் பேசுதலும் நல்லதே. அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று-அந்த நல்ல வரோடு கூடியிருத்தலும் நல்லதேயாம்.

வாக்குண்டாம்
பொழிப்புரை: நல்ல குணமுடையவரைக் காண்ப தும் நல்லது. நன்மை மிகுந்த உத்தமரின் அறிவுரைகளைக் கேட்பதுவும் நல்லது, நல்ல வரது குணங்களை உரைப்பதுவும் நல்லது. அவரோடு நட்பாய் கூடி வாழ்வதுவும் நல்லது.
விளக்கவுரை: நன்றே எனத் தேற்றமாகக் கூறி யிருக்கிறார். நல்லவர்களைக் காண்பது நல்ல வர் சொற்களைக் கேட்பது, நல்லவர்களது குணங்களைப் பிறரிடம் கூறுவது, நல்லவர் களோடு ம ன மொத் து ச் சேர்ந்திருப்பது ஆகியவ்ை நல்ல காரியங்கள் என்று முடிந்த முடிவாகச் சொல்லுகிறார்.
தீயவரால் என்றும் தீமையே
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குனங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீது, -9-
பதவுரை: தீயாரைக் காண்பதுவும் தீதே - தீய வரைக் காணுதலும் தீயதே. தீயார் திருஅற்ற சொல் கேட்பதுவும் தீதே - தீயவருடைய பயன் இல்லாத சொல்லை கேட்குதலும் தீயதே. தீயார் குணங்கள் உரைப்பதுவுந் தீதே - தீயவருடைய தீக்குணங்களைப் பேசுவதும் தீயதே. அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீது - அவரோடு கூடி இருத்தலும் தீயதே.
பொழிப்புரை: கொடியவரைக் காண்பதுவும் தீமை சிறப்பில்லாத அவர்களின் சொற்களைக் கேட் பதுவும் தீமை, அவர்கள் தம் தீக்குணங்களை எடுத்துப் பேசுவதும் தீமை, அவர்களோடு நட்பாய் கூடி வாழ்வதும் தீமை,

Page 13
12 வாக்குண்டாம்
விளக்கவுரை: நல்லவரோடு தொடர்பு வைப்பதன் சிறப்பைச் சொன்ன ஒளவையார் இப்பாடி லில் தீயவர்களின் தொடர்பு தீமை பயக்கும் என்று முடிந்த முடிவான அறிவுரையைச் சொல்கிறார். ' பன்றியோடு சேர்ந்த பசுக் கன்றும் மலம் உண்ணும்' என்பதை நினை விற் கொள்க.
நல்லாரால் எல்லார்க்கும் நன்மை
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. --س--سدس 10 س
பதவுரை, நெல்லுக்கு இறை த் த தீர் - நெற் பயிரின் பொருட்டு இறைத்த தண்ணீர் , sự Trunj; 95 TT ệẳ) வழி ஓடி - வாய்க்கால் வழி ய ர ல் ஒடி. ஆங்குப் புல்லுக்கும் பொசியும் - அங்கேயிருக்கின்ற புல்லுகளுக் கும் கசிந்துாறும். (அதுபோல்) தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் - பழமையாகிய உலகத்திலே நல்லவர் ஒருவராயினும் இருப்பரேல், அவர் பொருட்டு எல்லார்க் கும் மழை பெய்யும் - அவ்ர் பொருட்டாகவே எல்லா ருக்கும் மழை பெய்யும்,
பொழிப்புரை: நெற்பயிருக்கென இறைக்கப்பட்ட நீரானது வாய்க்காலின் வ்ழியாய் ஒடிப் புல்லுக்கும் உணவாகக் கசிந்து ஊட்டுகிறது. அதுபோன்றே பழமை வாய்ந்த உலகத்திலே நல்லவர் ஒருவர் வாழ்வாரானால் அவரால் எல்லாருக்கும் மழை பெய்யும்.

வாக்குண்டாம் 13
விளக்கவுரை: நல்லவர்களுக்காக இயற்கை பல கொடைகளை இந்தப் பூமிக்குக் கொடுக் கிறது. தீயவர்களும் அதனைப் பயன்படுத்து கிறார்கள். ஒரு நல்லவருக்காகப் பெய்யப்படு கின்ற மழை எல்லோருக்கும் பயன்படுகிறது. நெல்லுக்காக இறைக்கப்படுகின்ற நீர் வாய்க் கால் வழியாக ஒடும்போது புல்லுக்கும் கிட்டு கிறது என்ற சிறப்பான உவமையைக் கை யாண்டு இதனை விளக்கியுள்ளார். இன்றேர நல்லவர்களுக்காக இயற்  ைக கொடுக்கும் கொடையை நல்லவர்கள் பெறமுடியாமற் தடுத்துத் தீயவர்களே முழுதாக அனுபவித்து விடுகிறார்கள் என்றுதான் சொல்லலாம். துணை இன்றேல் செயல் இல்லை. பண்டு முைைளப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்ற கருமஞ் செயல். -11பதவுரை: பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் - ( உமி நீங்குவதற்கு) முன்னே முளைப்பது அரிசியே ஆனா லும், உமி விண்டு போனால் முளையாது - உமி நீங்கிப் போனால் (அவ்வரிசி) முளையாது (அதுபோல) கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் - தம்மிடத்து நீங்காத வல்லமையை உடையவர்க்கும், அளவு இன்றிஏற்ற கருமஞ் செயல் ஆகாது - துணை வலி இல்லாமல் எ டு த் து க் கொண்ட தொழிலைச் செய்தல் முடியாது, பொழிப்புரை: நெல் முளைப்பதற்கு அ ரி சி யே முக்கியமானது என்றாலும், உமி நீங்கிய பின்னர் அரிசி முளைக்காது. பொருந்திய பெருந் திறமை உடையவர்களானாலும் தக்க துணையில்லாமல் எடுத்த கருமத்தை இழைத் திடல் இயலாது.

Page 14
14 வாக்குண்டாம்
விளக்கவுரை: எல்லோராலும் எல்லாக் காரியங் களையும் செய்துமுடித்துவிட முடியாது. அற்ப மானவையாகத் தனித்துப் பெறுமதியற்றவை யாக உள்ளவையும் சேர்க்கையிலே பெறுமதி பெற்றுவிடுகிறது. பேராற்றல் படைத்தவர்க் கும் சிலவேளை ஆற்றல் குறைந்தோரின் துணை தேவைப்படுகிறது. அதனால் பேர் ஆற்றல் படைத்தவர்கள் செருக்கடைந்து சிறியவரை அவமதிக்கக் கூடாது.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
மடல்பெரிது தாழை மகிழ்இனிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரும் ஆகாது அதன்அருகே சிற்றுறல் உண்ணிரும் ஆகி விடும். -12
பதவுரை: தாழை மடல் பெரிது - தாழம்பூ இதழ் களினாலே பெரிதாயிருக்கின்றது. மகிழ் கந்தம் இனிது - மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) வாசனையி னாலே (தாழம் பூவினும்) இனிதாயிருக்கின்றது. கடல் பெரிது - சமுத்திரம் பெரிதாயிருக்கின்றது, மண் நீரும் ஆகாது - (ஆயினும் அதிலுன்ள நீர் உடம்பின் அழுக்கை) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது. அதன் அருகே சிற் றுாறல் உண்ணிரும் ஆகிவிடும் - அ த ன் பக்கத்தே சிறிய மணற் குழியிற் சுரக்கும் ஊற்று நீர் குடிக்கத்தக்க நீருமாகும் (ஆதலினாலே) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - (ஒருவரை) உருவத்தினாலே சிறியவர் என்று (மதியாமல்) இருக்கவேண்டாம். (மண்ணுதல்-கழுவுதல்)
பொழிப்புரை, இதழாற் பெரியது தாழம்பூ, இதழாற் சிறியது மகிழம்பூ, ஆனால் சுகந்த மணத்தால் மகிழம் பூவே சிறந்தது. ஆதலின் உடலாலே சிறியவர் என்று எவரையும் கருதல் வேண்டாம். கடல் அளவால். எத்துணைப்

வாக்குண்டாம் 15
பெரிது! ஆனால் அது உண்ணுதற்கேற்ற நீராவதில்லை. அதன் கரையிலே ஊறும் சிறிய ஊற்றே உண்ணுதற்கு அமைந்த நன்னிரா வதை நாம் காண்கின்றோமன்றோ.
விளக்கவுரை: பெரியவர் சிறியவர் அல்லது பெரி யது சிறியது என்பது உருவத்தால் தீர்மானிக் கப்படுவதல்ல. பயன்பாட்டாலேயே தீர்மா னிக்கப்படுவது. பூவுக்கு வாசனை அளவு கோல், நீருக்கு பருகுந் தன்மையே அளவு கோல் வேறல்ல, தாழம்பூவின் இதழ் பெரி யது என்பதற்காக அது மகிழம் பூவின் வாச னையைவிடச் சிறத்ததாகாது. கடல் பெரி யது என்பதற்காக அதன் நீர் பருகுவதற்குச் சிறந்ததாகாது. கடற்கரை மணலில் தோண் டும் போது தேன்றுகின்ற சிறிய ஊற்று நீரே கடல்நீரிலும் அத்தியாவசியப் பயன்பாடு மிக்கது.
குறிப்பறியாதவன் நல்ல மரம் கவையாகிக் கொம்பாகிக் காட்டுஅகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றனன் குறிப்பறிய
மாட்டா தவன் நன்மரம், -- 13-سيபதவுரை: கவையாகி - கிளைகளை உடையவைக ளாகியும், கொம்பு ஆகி - கொம்புகளை உடையவைக
ளாகியும், காட்டு அகத்தே நிற்கும் அவை நல்ல மரங்கள் அல்ல-காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்களெல்லாம் நல்ல மரங்கள் அல்ல. சபை நடுவே நீட்டு ஒலைவாசியா நின்றான் - சபை நடுவிலே நீட்டிய ஒலையை வாசிக்க மாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறிய மாமீட்டாதவன் - (ஒருவருடைய) குறிப்பை அறியமாட்டாதவனுமே நல் மரம் - நல்ல மரங்களாவர்.

Page 15
16 hi Tá (56's LTib
பொழிப்புரை: கிளைகளை உடையவும், கொம்பர் களை உடையவுமாகக் காட்டிலே வளர்ந்து நிற்கின்ற பெருமரங்கள், மரங்களல்ல. சபை நடுவிலே கற்றறிந்தார் கொடுக்கும் ஒலையை வாசிக்க இயலாதவனும், அவற்றின் குறிப்புப் பொருளி  ைன உணரமாட்டாதவனுமான மூடினே நல்ல மரமாவான்.
விளக்கவுரை: படிக்காதவனே சிறந்த மரம் என் றார். கிளைகள் கொப்புகளைக் கொண்டு காட்டிலே நிற்பவை காட்டு மரங்கள். சபை யில் வாசிக்கும்படி கொடுத்த ஒலையை வாசிக் கத் தெரியாதவ்னும், வாசித்தாலும் அவ் வாசகங்களின் பொருளை அறியமுடியாத வனும் நாட்டு மரங்கள், காட்டு மரங்களை விட நாட்டு மரங்களே சிறந்த மரங்கள் எனக் கோபங்கொண்டு ஒளவையார் கூறுகின்றார்.
இவன் இவ்வோலையை வாசிப்பானா? இல்லையா? என்ற குறிப்பை அறியாது ஒலை யைக் கொடுத்தானே அவனும் மரம் என்பார் சிலர்: கல்லாதவன் மரம், கற்றிருந்தும் ஒலை யிலுள்ளவற்றின் உட்பொருளை அறியாதவன் மரம், இவைகளை அறியாது அவர்களிடம் வாசிக்கக் கொடுத்தவன் மரம். காட்டுமரங் களைவிட இந்த நாட்டு மரங்களே பெரிய மரங்கள். மரத்திற்கும் மனிதனுக்கும் புறத் தோற்றம் வேறுபாடாகாது எ ன் ற ர ர் ஒளவையார். பொருளை அறிந்து கற்கவேண் டும்; ஆற்றலறிந்து செயலைக் கொடுக்க வேண்டும்.
 

வாக்குண்டாம் 17
மயிலும் வான்கோழியும் கான மயில் ஆடக் கண்டுஇருந்த வான்கோழி தானும் அதுவாகப் பலவித்துத் - தானும்தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே கல்லாதன் கற்ற கவி. 14-س--
பதவுரை: கல்லாதான் கற்ற கவி - (இலக்கண இலக்கியங்களைக் கற்றவர் பிழையற்ற கவியைச் சொல் லிப்பொருளுரைக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்து அவைகளைக் கற்று அறியாதவன் (தன்னையும் கற்றவ னாக நினைத்துத் தான் ) கற்ற (பிழையாகிய ) கவியைச் சொல்லிப் பொருளுரைத்தல். கான மயில் ஆடக் கண் டிருந்த வான் கோழி - காட்டிலுள்ள மயிலானது (தனது அழகுள்ள சிறகை விரித்து ) ஆட, ( அதைப் ) பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தானும் அது ஆகப் பாவித்து - தானும் அம்மயிலாகவே நினைத்து. தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும் - தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடுவது போன்றதாகும்.
பொழிப்புரை: கல்வி அறிவில்லாத ஒருவன் பாடிய கவிதை, காட்டிலே அழகிய மயில் ஆடுவதைப் பார்த்துத் தன்னையும் அதுவாகவே கருதி, வான் கோழி தனது இழிந்த சிறகை விரித்து ஆடிய ஆடல் போன்றதாகும்.
விளக்கவுரை; நல்ல சொல் வளம் நல்ல கற்பனை வளம் என்பனவற்றைக் கொடுப்பது நல்ல கல்வி, இவைஇன்றி நல்ல கவிதையைப் பாட முடியாது, பாடினால் அது மதிக்கப்படாது, பாராட்டப்படாது. வான் கோழி தன்விருப் பத்திற்குத் தான் ஆடலாம். மயில் ஆடுவதைப் பார்த்து ஆசையால், ஆர்வத்தால் ஆடலாம், ஆனால், த ன்  ைன மயிலாக நினைத்துக்

Page 16
18 வாக்குண்டாம்
கொண்டு கர்வ் மடைந்து தன்னை எல்லோ ரும் பாரா ட்ட வேண்டுமென்று ஆசை கொண்டு ஆடக்கூடாது. தானாகவே ஆசை கொண்டு ஆடினால் யாரும் பாராட்டாது விட்டாலும் பழிக்க மாட்டார்கள். ஆனால் தன்னை ஒரு மயிலாக நினைத்துக் கொண்டு தனது சிறகை மயின் தோகை போன்றது என்று நினைத்துக் கொண்டு, தன்னையும் தனது ஆட்டத்தையும் உலகோர் பார்த்து வியந்து புகழ்ந்து பாராட்டவேண்டும் என்று ஆடினால் அது பழிக்கப்படும். அதன் சிறகும் பொல்லாச் சிறகென்று பழிக்கப்படும் நடன மும் பழிக்கப்படும்.
இந்த அற்புதமான உண்மையைக் கல்வி அறிவில்லாதவன் பாடிய கவிதைக்கு உவமான மாக்கினார். இங்கு கற் ற கவி என்பது பாடிய கவி எனப் பொருள் கொள்ளப்படு கிறது தான் படித்த கவிதையைப் போல, தானும் பாட வேண்டும் என்று நல்ல கல்வியறிவில்லாதவன் பாடியதைச் சுருக்க மாக * கல்லாதான் கற்ற கவி ' என்ற வரி விளக்குகிறது.
புல்லர்க்குச் செய்யும் நல்லவை: வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம்ஆனாற் போல்-பாங்கறியாப் புல் அறிவு ஆளர்க்கச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம், -15
பதவுரை, வரிவேங்கைப் புலிநோய் தீர்த்த விடகாரி - வரிகளையுடைய வேங்கைப் புலிக்கு நஞ்சு நோயைத்

வாக்குண்டாம் 19
தீர்த்த விஷ வைத்தியன். ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல் பாங்கு அறியா - அப்பொழுது அப்புலிக்கு இரையானாற் போலத் தான் அழியுந் தன்மையை (ஆலோசித்து) அறியாமல். புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம் - அற்ப புத்தியை உடையவர்க்குச் செய்த உபகாரமானது கல்வின் மேல் இட்ட கலம் - கல்லின் மேல் போடப்பட்ட மண்பாத்திரம் போல அழிந்து போகும். பொழிப்புரை கோடுகளோடு கூடிய வேங்கைப் புலியின் நோயைத் தீர்த்த விஷ வைத்தியன் அவ்விடத்திலேயே அதற்கு இரையானது போல, முறைமையை அறியாத மூடர் க்குச் செய்கின்ற உதவியும், உதவி செய்பவனுக்கு ஆபத்தைத் தந்து, கல்லின்மேல் போடப்பட்ட மண் பாத்திரத்திற்குச் சமனாகும். விளக்கவுரை: நல்லறிவில்லாத மூடருக்கு உதவி செய்யப்போனால் தானே பலியாக நேரிடும். புலியின் நோயைப் பார்த்து இரங்கி அதன் உயிரைக் காப்பாற்றிய வைத்தியனை அந்த புலியே கொன்றதாம்.
தூக்கணாங் குருவி குரங்குக்குப் புத்தி சொல்லப்போய் தன் கூட்டையும் இழந்தது என்பது கதை. உதவியை விளங்கிக் கொள்ள முடியாதவருக்கு உதவி செய்வது தன்னையே அழித்துக் கொள்வதற்குச் சமனானது; கல் லிலே போடப்பட்ட மண் பாத்திரம் உடைந்து வீணாகிப் போவதுபோல, அற்பர்களுக்குச் செய்யும் உபகாரமும் பயன்படாது. உபகாரம் பயன்படாது போனாலும் காரியமில்லை. உபகாரம் செய்பவனே இறந்துபோக நேரிடும்.
பாங்கு - நன்றி மறவாமையாகிய
நல்லொழுக்கம்.

Page 17
20 வாக்குண்டாம்
அடக்கத்தை அவமதியாதீர், - அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஒடுமீன் ஒட உறுமின் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு, 16 سست--
பதவுரை, கொக்கு - கொக்கானது, மடைத்தலை
யில் ஒடும் மீன் ஒட - நீர் மடையினிடத்து ஒடும் சிறுமீன் கள் எல்லாம் ஒடவிட்டு, உறுமீன் வரும் அளவும் வாடி யிருக்கும் - பெரிய மீன் வரும்வரையும் அடங்கிஇருக்கும். (அதுபோல) அடக்கம் உடையார் ( தமக்கு எதிரிகளாகத் தகாதவர் எதிர்ப்படினும் ஒடிப் போகவிட்டு தக்கவர் எதிர்ப்படும் வரையும் ) அடங் கி இருக்கும். குண முடையவரை அறிவு இலர் என்று எண்ணி - அறிவு இல்ல தவர் என்று கருதிகடக்கக் கருதவும் வேண்டா - வெல்லு வதற்கு நினைக்கவும் வேண்டியதில்லை.
பொழிப்புரை: அடங்கியிருப்பவரை அறிவு இல்லா தவர் என்று நினைத்து அவர்களை வெல்லு வதற்குக் கருதாதீர், நீர் நிறைந்த குளத் தருகே வாடிக் கண்மூடியிருக்கும் கொக்கு, ஒடுகின்ற சிறிய மீன்களைத் தவிர்த்துப் பெரிய மீன்களை எதிர்நோக்கி இருப்பது போன்றதே அவர் தம் அடக்கம்,
விளக்கவுரை அடக்கமுடையவர், காலங்கருதி, இடங்கருதிக் காத்துப் பொறுத்திருப்பார்கள். அறிவிலார் அவரது அடக்கத்தை அறியாமை என்றும், செயலாற்றும் ஆற்றலற்ற தன்மை என்றும் நினைத்து வெல்ல முயல்வர். ஆனால் அவரை வெல்லமுடியாது அவரது அடக்கம் அறி வினா ல் ஏற்பட்டது. பொறுமை திறமையினால் ஏற்பட்டது என்பதை அறிந்து

வாக்குண்டாம் 2 I
கொள்ளவேண்டும். அளவான மீனைத் தவ றாது குத்திக் கெளவும் நோக்குடனேயே கொக்கு வரடியிருக்கிறது என்ச் சிறப்பாகச் சொல்லி, ஆற்றலுள்ளவர்களின் அடக்கத்தை விளக்கியிருக்கிறார்.
முகநக நட்பும் அகநக நட்பும். அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுபூழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கெளட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. --17-س-
பதவுரை: அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்(நீர் ) வற்றிய குளத்தினின்றும் நீங்கிப்போகின்ற நீர் வாழ் பறவைகள் போல, உற்றுNத் தீர்வார் உறவு அல்ல் ர் - (ஒருவனுக்கு) வறுமை வந்தபொழுது நீங்குவோர் உறவு ஆகார், அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே - அந்தக் குளத்தில் கொட்டியும், அல்லியும், நெய்தலும் போலவே, ஒட்டி உறுவார் உறவு - தாமும் ( வருத்தத்தை) வருத்தத்தை அனுபவித்துக் கொண்டு அவனை விட்டு நீங்காதவரே உறவா வார்.
பொழிப்புரை நீர் வரண்டுபோன குளத்தினை நீங்கிச் செல்கின்ற பறவைகள்போல, வறுமை வந்த வேளையில் நீங்கிச் செல்வோர் உறவா கார். அதே குளத்தில்படர்ந்திருக்கும், கெனட்டிப் பூண்டும், அல்லிக் கொடியும் குளத்தில் தண் ணிர் அற்றுப்போகத் தாமும் வாடிப் பின் தண்ணிர் வரத் தாமும் வளர்வது போலத் துன்ப காலத்தும் துணை நின்று துன்பத்திலே பங்கு பெறுபவரே உண்மையான உறவிற்கு உரியவர்கள்.

Page 18
22 a T iš ES STAT LCD iii)
விளக்கவுரை: பறவைகளுக்கும், கு ளத் தி ற்கு ம் உள்ள தொடர்பு சுயநலமானது. பறவை கள் குளத்தில் நீர் இருக்கும் வரை அங்கிருந்து பயன்பாட்டை அடைந்துவிட்டு நீர் வற்றிப் போக வேறு இடஞ்செல்கின்றன. குளம் நீரின்றி வறுமை அடைய அதற்குத் துணை யாகப் பறவைகள் இருப்பதில்லை. இத்தகைய சுயநலங் கொண்ட பறவைகள் போன்றவர் கள் உறவாகமாட்டார்கள். கொட்டி, ஆம்பல் நெய்தல் என்பனை நீர் வற்றிப்போகத் தாமும் துன்பப்பட்டுப் பின் நீர் வந்ததும் தாமும் மகிழ்ந்து மலர்கின்றன. கொட்டி, ஆம்பல், நெய்தல்போலத் தமக்கு வாழ்வ்ளித் தவர்கள் துன்பப்பட்டு நிற்கையில் தாமும் கூஉ இருந்து துன்பப்படுபவரே நல்ல உறவின Drfrontri.
மண்ணின் குடமும், பொன்னின் குடமும், சிரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று அல்லாதான் கெட்டால்அங்கு என்னாகும் - சிரிய பொன்னின்குடம் உடைந்தாற் பொன்னாகும் -
(என்னாகும் மண்ணின் குடம்உடைந்தக் கால். --1 8-سسسسس
பதவுரை: சீரியர் கெமிட்டாலும் சீரியரே - மேலோர் ( தம்முடைய செல்வம்) கெட்டாலும் மேலோராகவே மதிக்கப்படுவர், சீரியர் மற்று அல்லாதார்கெட்டால் அங்கு என்னாகும் - கீழோர் ( தம்முடைய செல்வம் ) கெட் டால் அப்பொழுது அவருக்கு என்ன மதிப்பு உண்டாகும், சீரிய பொ ன் னி ன் குடமுடைந்தால் பொன்னாகும் ட சிறப்பினையுடைய பொன்னாலாகிய குடம் உடைத்

வாக்குண்டாம் 23
தாலும் பொன்னேயாகும், மண்ணின் குடமுடைந்தக்
கால் என்னாகும் - மண்ணால் ஆகிய குடம் உடைந்
தால் (அதற்கு) என்ன மதிப்பு உண்டாகும்.
மற்று - அசை
வொழிப்புரை: பொன்னாலாகிய குடம் உடைந் தாலும் பொன்னாகவே இருக்கும், மண்ணா லாகிய குடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயர்ந்தோர் வறுமைக் காலத்தும் உயர்ந் தோராகவே விளங்குவர்; இழிந்தார் வறுமைப் போதிலும் இழிந்தவராகவே இருப்பர்.
விளக்கவுரை பொற்குடம் உடைந்தாலும் பொன் னாகவே இருக்கும்; மதிக்கப்படும். மண்குடம் உடைந்தால் அதன் மதிப்புப் போய்விடும். அதேபோல் மேலோர் வறுமை வந்தாலும்
மதிக்கப்படுவார். கீழோர் வறுமையடைந் தால் மதிப்பிழந்து விடுவர். " கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு ' என்னும்
பழமொழியை நினைவு கூர் க.
அவரவர்க்கு அமைந்தனவே அமையும். ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்ககூல்நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன். -19
பதவுரை: ஆழ் கடல் நீர் ஆழ மூகக்கினும் - ஆழ
மாகிய சமுத்திரத்திலுள்ள நீரை முழுக அமுக்கி மொண்
டாலும், நாழி நால்நாழி முகவாது - ஒரு நாழியானது நாலு நாழி தண்ணீரை மொள்ளாது, (அதுபோல )

Page 19
24 வாக்குண்டாம் . தோழி - தோழியே! நிதியும் கணவனும் நேர்படினும் - (பெண்களுக்கு) திரவியமும் நாயகனும் நேர்பட்டா லும், தம்தம் விதியின் பயனே பயன் - அவரவருடைய ஊழின் அளவாகிய பயனே ( அனு ப விக் க ப் படும்) பயனாகும்.
பொழிப்புரை, ஆழ்க்டல் நீரில் அமுக்கி மொண் டாலும் ஒரு கொத்துத் தான் கொள்ளும் அளவன்றி அதனிலும் கூடுதலாய்க் கொள் ளாது. ஒருத்திக்கு வேண்டிய செல்வமும் நாயகனும் தன் மனம்போலக் கிடைக்கப்பெற் றாலும், அவளது இன்ப நுகர்ச்சியானது அவ ளின் விதியின் அளவாகவே அமையும்.
விளக்கவுரை: செல்வம்நிரம்பியதாகவும். கணவன் நல்லவனாகவும் பொருந்தியிருந்தாலும் ஒரு பெண்ணுக்கு அவள் செய்த புண்ணிய பலனுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட விதியின் அளவேதான் அனுபவிக்கக் கிட்டும். அதனால் புண்ணியத்தை இடைவிடாது செய்ய வேண் டும். ஆழ்கடல் என்றும் அதற்குள் ஆழ அமுக்கி அள்ளினாலும் என்றும் உவமை மூலம் விளக்கியிருக்கிறார்,
உடன்பிறந்தே கொல்லும் வியாதி. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவர் மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு. سس۔ 20 سال۔

வாக்குண்டாம் 26
பதவுரை வியாதி உடன் பிறந்தே கொல்லும் - வியா தியானது உடன் பிறந்தே கொல்லும், உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்கவேண்டா. (ஆதலால்) உடன் பிறந்தவரே துணையா வோரென்று நப பியிருக்க
வேண்டியதில்லை. உடன் பிற வா மா மலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும் - உடன் பிறவாமல் பெரிய
மலையிலுள்ள மருந்தே அவ்வியாதியைத் தீர்க்கும். அம் மருந்து போல் வாரும் உண்டு- ஆதலால் அம்மருந்து போல் (அந்நியராயிருந்தும் ஆபத்திலே உதவி செய்) வாருஞ் சிலருண்டு.
பொழிப்புரை தன்னுடன் தோன்றிய வியாதி தன் னைக் கொல்ல, உடன் தோன்றாது எங்கோ தோன்றிய மருந்துச் செடிகள் பிணியைப் போக்கி உதவுவதை நா ம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். எனவே, எம்முடன் பிறந்த எம் சகோதரர் முதலான உறவினர் தாம் எமக்கு உதவும் சுற்றத்தவர் என்று நாம் கருதுதல் கூ டா து. அந்நியரும் உதவுதல் உண்டு.
விளக்கவுரை: சில நோய்கள் பரம்பரை மூலம் பிறப்பிலிருந்தே வருகின்றன. அப்படி உடம் போடு கூடப் பிறந்தும் நோய் தயவுதா ட்சணி யம் பார்க்காது எம்மைக் கொன்றுவிடும். அதே போல கூடப் பிறந்தவர்கள் கெடுதல் செய்ய மாட்டார்கள் என்றும் அவர்களே சிறந்த உறவினர் என்றும் முழுதாக நம்பவேண்டாம். எங்கோ ஓரிடத்தில் எம்மோடு சம்பந்தமில் லாத மலையிலுள்ள ம ரு ந் தே எமது நோயைத் தீர்த்து விடுகின்றது. எனவே,

Page 20
26 வாக்குண்டாம்
ஆபத்துக்கு உறவினர்களே உதவுவார்கள்
என்று முழுமையாக நம்ப வேண்டாம். அந்நி
யரையும் மதித்து நடக்கவேண்டும். அவரும்
எம் உயிர் காக்கக் கூடும்.
வாழ்க்கைத் துணை.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை இல்லாளும் இல்லளே ஆமாயின் இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலிகிடந்த தூறாய் விடும். -2 I
பதவுரை: இல்லாள் அகத்து இருக்கி - ( நற்குண நற்செய்கேகளை உடைய) மனையாள் வீட்டில் இருப்பா ளாயின் இல்லாதது ஒன்று இல்லை – ( அவ்வீட்டில் ) இல்லாத பொருள் ஒன்றும் இல்லை. இல்லாளும் இல்லாளே ஆமாயின் - மனையாள் இல்லாமற் போனாளாயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் - மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல் வாளாயினும்: அவ்இல் புலி கிடந்த தூறு ஆய்விடும் - அவ்வீடு புலி கிடந்த புதர்போல் ஆகிவிடும்.
பொழிப்புரை: உத்தமியான ம  ைன வி வீட்டில் இருந்தால், அங்கு இல்லாத செல்வமே வேறு இல்லை, அவள் மனையில் இல்லாத போதிலும் இல்லாள் கடுமையான சொற் களைப் பேசும் கொடியவளரன சந்தர்ப்பத்தி லும், அந்த வீடானது புலி வாழ்கின்ற புத ராய் மாறித் துன்பத் தரும்.
விளக்கவுரை: நற்குண நற்செய்கை மிக்க பெண் ணானவள் மனைவியாக வந்து வாய்த்து விட் ட7 ல், ஒரு ஆடவனுக்கு வீட்டில் இல்லாதது என்று ஒன்றுமே இல்லை. எல்லாம் நிரம்பப் பெற்ற மகிழ்ச்சி அவனுக்கு ஏற்படும். மனைவி

வாக்குண்டாம் ' : '
நற் குண ம், நற்செய்கை இல்லாதவளாக இருந்து கடுமையான வார்த்தைகளால் கண வனை ஏசுபவளாக இருந்தால் அவ்வீடு புலி பதுங்கிக் கி ட ந் த புதர் போல இருக்கும். கணவன் எப்பொழுதும் பயந்து பயந்து சாக வேண்டியிருக்கும்.
ஊழிற் பெருவலி யாவுள? எழுதிய வாறேகாண் இரங்கு மடநெஞ்சே கருதிய வாறு ஆமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சுரங்காய் ஈய்ந்த(தேல் முற்பவத்திற் செய்த வினை. --%8-- பதவுரை இரங்கு மடநெஞ்சே - வருந்துகின்ற அறி யாமை பொருந்திய மனமே, கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - ( நல்ல பலனைப் பெறலாமென்று ) நினைத்துப்போய் கற்பக தருவை அடைந்தவருக்கு காஞ் சிரங்காய் ஈந்ததேல் - அது எட்டிக் காயைக் கொடுத்த தாயின், முற்பவத்திற் செய்த வினை - ( அதற்குக் காரணம் அவர் ) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும், கருமம் கருதியவாறு ஆமோ - செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ. எழுதியவாறே காண் - கடவுள் விதித்த படியே ஆகும் என்று அறிவாயாக. பொழிப்புரை: பெரும் பேறுகளை அடையக் கருதிக் கற்பக தருவை அடைந்தவர்க்கு அத் தெய்வ தருவே விடமாகிய காஞ்சிரங்காயை வழங்கு மானால்அது முற்பிறவியிலேசெய்த வினையின் பயனேயன்றி வேறென்ன? ஆதலால், இரங்இ யழுகின்ற மூட நெஞ்சமே! எ வையும் பிரமன் எழுதிவைத்த வகையிலே நிகழும். நாம் சிந் தித்து மு டி வு செய்ததுபோல் கருமங்கள் நடைபெறுமோ? நடைபெறாது. இதனை அறிந்துகொள்.

Page 21
28 வாக்குண்டாம்
விளக்கவுரை: செய்த பா வ புண்ணியங்களுக்கு ஏற்பவே பலன் கிட்டும். அதுவே விதி. நினைப் பது போல எல்லாம் நடந்து விடுவதில்லை, கேட்டதைக் கொடுக்கின்ற கற்பக மரம் கூட தீவினையாளனுக்குக் கேட்டதைக் கொடுக் காது, நஞ்சாகிய காஞ்சுரங்காயைக் கொடுத் ததாம். அப்படி நச்சுக்காயைக் கொடுத்தது கற்பக மரத்தின் குறையல்ல, கேட்டவனின் பாவ விதியேயாகும் என்றார்.
குணக்குன்றனையார் கொண்ட வெகுளி. கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். سے 23 سس۔
பதவுரை: சுயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பர் - கீழோர் ( தம்முள்ளே ) கடுங் கோபத்தினால் வேறுபட்டால் கல்லினுடைய பிளவுகளைப் போல் வார் ( திரும்பக் கூடார் , ) பொன் பிளவோடு ஒப்பாரும் போல் வார் - (அப்படி வேறுபட்டபோது) பொன்னினுடைய பிளவோடு ஒப்பா வரும் ஒப்பாவார் ( ஒருவர் கூட்டக் கூடுவர் ) சீர் ஒழுகு சான்றோர் சினம் - சிறப்புமிக்க அறிவுடையோருடைய கோபம், வில் பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறும் - ( அம்பினாலே) தண்ணிர் பிளக்க எய்த (அதனுடைய) பிளவு போல (அப்போதே ) நீங்கும்,
பொழிப்புரை: கயவர்கள் சினங்கொண்டால் கல்
பிளந்ததைப் போல பின் ஒருகாலும் கூடார் சாதாரணர் கோபத்தின் பின், பொன் பிளந் ததுபோல பெரு முயற்சியால் ஒன்று சேர்வர்.

வாக்குண்டாம் 29
சான்றோரோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு நீரைப் பிளக்க அது கணப்பொழுதிலே ஒன்று கூடுவதுபோலத் தம் சினத்தின் முடிவில் உடனே ஒன்று கூடுவர், அவர் சினம் வாழும் காலம் மிகச் சிறிது.
விளக்கவுரை கெட்டவர்களான கீழ்மக்கள் மிக வும் கோபம் வந்தால் மீண்டுஞ் சேரமுடியாத படி வைராக்கியத்தோடு பிரிந்து விடுவார். இவர்கள் கல்லின் பிளவைப் போல்வார் கொஞ்சம் ந ல் ல வ ர் பிரிந்தாலும் யாரும் சேர்த்து வைத்தால் சேர்ந்து கொள்வார். இவர் பெரன்னின் பிளவேனடு ஒப்பர். நெருப் பிலே சூடு காட்டி பொன்னை ஒட்டிவிட 6υ Γτι υ. -
சிறப்புமிக்க ஒழுக்கங்கொண்ட சான்றோ ராகிய நல்லவர்களின் கோபம் வில்லில் பூட் டிய அம்பு நீரைக் கிழித்துக்கொண்டு போக, நீர் மீண்டும் உடனடியாகக் கற்றவர் கூடுவ் தைப்போல, கணப்பொழுதிலேயே மாறிவிடும்.
கற்றார் கொள்ளும் நட்பு. நற்றா மரைக்கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகட்டில் காக்கை உ ைக்ளும் பினம். -24
பதவுரை, கயத்தில் நல் தாமரை நல் அன்னம் சேர்ந் தாற்போல் - குளத்திலுள்ள நல்ல தாமரைப் பூவை நல்ல அன்னப்பறவை சேர்ந்தாற் போல், கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்றறிந்தவரைக் கற்றறிந்தவரே விரும்பிச் சேர்வார் முதுகாட்டில் பிணம் காக்கை உவக்

Page 22
30 வாக்குண்டாம்
கும் - சுடுகாட்டிலே கிடக்கும் பிணத்தைக் காக்கையே விரும்பும். (அதுபோல) கற்பு இலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் - கல்வியில்லாத மூடரை மூடரே கொண்டாடுவர்.
பொழிப்புரை: நல்ல தா ம  ைரக் குளத்திலே அழகிய அன்னப் பட்சிகள் ஒன்று சேர்வது போலக் கல்வியறிவுடையார் தம்மைப்போன்ற கல்வியாளரின் நட்பையே பெரிதும் விரும்புவர்; கல்வியறிவற்ற மூடரோ மூடரையே தம்நட்பிற் குரியவராய்க் கொள் வர். சுடுகாட்டிலே காகம் உவப்பது பிணத்தையன்றோ!
விளக்கவுரை நல்ல தாமரைப் பூவை விரும்பி நல்ல இயல்பு கொண்ட அன்னம் தாமரைத் தடாகத்திற்குச் சென்று சேருவதைப்போல, கற்றவரை விரும்பிக் கற்றவ்ர்கள் சென்று சேருவார்கள். பிணத்தை விரும்பிக் காக்கை யானது சுடுகாட்டிற்குச் சென்று சேருவது போல, க ல் லா த மூர்க்கர்கள் மூர்க்கரை விரும்பிச் சென்று சேருவார்கள். ܵ ܝܗܝ
வஞ்சனை மறைந்துறையும் நஞ்சுடமை தரன் அறிந்து நாகம்கரந்து உறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்ாம்பு - நெஞ்சில் கரவுடையர் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத்து அவர். حس۔ 225-بس۔
பதவுரை. நாகம் தான் நஞ்சுடைமை அறிந்து கரந்து உறையும் - நாகபாம்பு தான் விஷம் உடையதாயிருத் தலை அறிந்து. ஒளித்துக்கொண்டு இருக்கும். நீர்பாம்பு பாம்பு அஞ்சாப் புறங்கிடக்கும் - (தன்னுடத்திலே விஷம் இல்லாத நீர்ப்பாம்பு அஞ்சாமல் வெளியிலே கிடக்கும். (அவைபோல) நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர்

வாக்குண்டாம் 3 II - மனத்தினுள்ளே வஞ்சனையை உடையவர்கள் தம்மை தாமே மறைப்பர், கரவு, இலா நெஞ்சத்தவர் கரவார் - வஞ்சனை இல்லாத மனதை உடையவர்கள் (அப்படித் தம்மை) மறைக்க மாட்டார்கள்.
பொழிப்புரை: நாகபாம்பு தான் நஞ்சை உடைத் தாயிருத்தலை அறிந்து மறைந்து வாழும். நீர்ப் பாம்போ (நஞ்சின்மையால்) அஞ்சா மல் வெளியான இடங்களிலே கிடக்கும். இவை போலவே மனதில் வஞ்சகமுடையவர் தம்மை மறைத்து வாழ்வர். அவ்வாறில்லா தவர் தம் உள்ளத்தை மறைக்காது யாவருட னும் நன்கு வாழ்வர்.
விளக்கவுரை: நாகபாம்பு மறைந்து வாழ்வதற்குக் காரணம் அதனிடம் இருக்கின்ற கொடிய நஞ்சே. அதேபோல ம ன தி லே வஞ்சகம் கொண்டவர்கள் எப்பொழுதும் தங்க  ைள இனங்காட்டிக் கொள்ளாமல் மனதை மறைத் துத் தந்திரமாக வாழ்வார்கள். நீர்ப்பாம்பு யாருக்கும் அஞ்சாது வெட்ட வெளியில் கிடக் கும். ஏனெனில், அதனிடம் நஞ்சு இல்லை அதனால் தனக்கு யாராவது கெடுதல் செய் வார்களோ என்ற பயமுமில்லை. அதேபோல நெஞ்சில் வஞ்சக மில்லாதவர் உள்ளத்தை மறைக்காமல் மனம் திறந்து பழகுவரர்கள்

Page 23
32 வாக்குண்டாம்
கற்றவனுக்குக் காசினியெங்கும் மதிப்பு மன்னனும் மாசறக் கற்றேனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லாற் சிறப்பில்லைக் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. -26
பதவுரை; மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் - அரசனை யும், குற்றந் தீரக் கற்ற வித்துவானை யும் ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப் புடையன் - அரசனிலும், வித்துவானே சிறப்புடையவ னாவான், மன்னற்குத் தன் தேச மல்லாற் சிறப்பு இல்லை -அரசனுக்கு அவனுடைய தேசம் அல்லாமல் (அந்நிய தேசங்களிலே ) சிறப்பு இல்லை. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு - வித்துவானுக்கு (அவன்) போன தேசங்கள் எல்லாவற்றிலும் சிறப்பு உண்டாகும்.
பொழிப்புரை அரசனையும் குற்றங்கள் நீங்கும் வண்ணம் கற்றுயர்ந்த சான்றோரையும்ஒப்பிட் டுப் பார்க்கையில் அரசனிலும் சான்றோனே உயர்ந்தவன். அரசனுக்குப் பெயரும் புகழும் மதிப்பு மெல்லாம் தன் நாட்டில் மட்டுமே உண்டு; சான்றேரனுக்கோ சென்ற நாட்டி லெல்லாம் சிறப்புக் கிட்டும்.
விளக்கவுரை: கற்றோன் எனக் கூறாது மாசறக் கற்றோன் எனக் குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். ஐயந்திரிபு முதலான குற்றங்கள் இல்லாமற் கற்றவனே மன்னனிலும் சிறப் புடையவன். அத்தகையவனுக்கே சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. மன்னற்கு தனது அதி காரஞ் செல்லும் இடத்திலே மட்டுந்தான் சிறப்பு என நல்ல கல்வியின் மேன்மையை விவரக்இனTர்.

வாக்குண்டாம் 33
இவர்களுக்கு இது கூற்றம் கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம்கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்துஒழுகாப் பெண். -27
பதவுரை: மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மெல்லிய வாழை மரத்துக்கு அது ஈன்ற காயே யமனாகும். (அதுபோல) கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் - கற்று அறியாத மனித ருக்கு கற்று அறிந்தவருடைய உறுதிச் சொல்லே யமனா கும். அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - (தரு ம சிந்தையை உடையவர் ) அல்லாத மனிதருக்குத் தருமமே யமனாகும். இசைந்து இல்லிற்கு ஒழுகாப் பெண் கூற்றம் - கணவன் கருத்துக்கு உடன்பட்டு இல்லறத்தில் ஒழுக த
மனையாளே (அக்கணவனுக்கு ) யமனாகும்,
பொழிப்புரை: கல்லாதவர்களுக்குக் கற்ற றி ந் தவர்களது உறுதிச் சொல்லே இயமனாகும். தரும சிந்தையற்றவர்களுக்கு தருமமே இயம னாகும். வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காயே இயமனாகும். வீட்டுக்கு ஏற்ற நல் லொழுக்கத்தோடு கணவனோடு ஒத் து ப் போகாத பெண் அக்கணவனுக்கு இயம Görfur G.Qafur GT.
விளக்கவுரை: கல்லாத மனிதர் கற்றவருக்குத் துன்பம்செய்துஅவரது சாபத்தினால் இறப்பர். நல்ல சிந்தனையற்றவர்களுக்கு அறமே யம னாகி அழிக்கும். வீட்டிற்கு ஏற்றவகையில் ஏற்ற கடமைகளைச்செய்து கணவனது சொல் லுக்கு உடன்பட்டு ஒழுகாத மனைவி அக்கணவ

Page 24
34 வாக்குண்டாம்
னுக்கு இயமனாவ்ாள். வாழைக்கு அதன் குலையே அதன் இயமனாகும். இங்கு கூறிய நான்கும் ஒன்றோடு ஒன்றுதொடர்பு பட்டி தாகத் தெரிவில்லை.
உயர்விலும் தாழ்விலும் ஒத்த தன்மையன், சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைவுபடாது ஆதலால் - தம்தம் தனஞ் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம்சிறிய ஆவரோ மற்று. 228 سس۔--
பதவுரை: மெல் சந்தனக் குறடு - மிருதுவாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் - தான் தேய்ந்துபோன காலத்திலும், கந்தம் குறைபடாது - (தன்னுடைய) நன்மணத்திற் குறையாது. ஆதல்ால்ஆதலினால், தார் வேந்தர் - சேனையுடைய அரசர்கள் கேட்டால் தம்தம் தனம் சிறியர் ஆயினும் - கேட்டி னாலே தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானா லும், மனம் சிறியர் ஆவரோ - மன வலிமையிலே குறைந்தவராவரோ, ( ஆகார்)
பொழிப்புரை: சந்தனக் கட்டையானது தான் தேய்ந்து மெலிந்த காலத்திலும் சுகந்த மணத் தாலே குறைவுபடாது, அரசரும் தமது செல் வத்தாலே குறைவுறும் காலத்தும் தம் உள்ளங் களாற் சிறியராகார், எக்காலத்திலும் அவர் களின் தாராள சிந்  ைத மாறுபடாமலே விளங்கும்.
விளக்கவுரை சந்தனக் கட்டை தேய்ந்தாலும் வாசனை குறையாது. அதேபோல் நல்லஒழுக்க

வாக்குண்டாம் 35
மும், சிறப்பும் பொருந்திய அரசர்கள் செல்வத்தை இழந்துபோனாலும் குணம் மாறு படார். மன்னர்களுக்கு மட்டுமல்ல; நல்லவர் கள் எல்லோருக்கும் இது பொருந்தும்.
செல்வமே சிறப்பிற்கு வித்து, மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து போம்போது அவளோடும் போம். - 29
பதவுரை; மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருள்களும் நல்ல உருவும் - நல்ல அழகும், உயர் குலமும் எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவைகள் எல்லாம்,
திருமடந்தை ஆம்போது அவளோடு ஆகும் - சீதேவி வந்து கூடும்பொழுது அவளுடனே வந்து கூடும். அவள் பிரிந்து போம்போது அவளோடும் போகும் - அவள்
நீங்கிப் போம் பொழுது அவளுடனே நீங்கிப் போகும்.
பொழிப்புரை: கலந்துறவாடுவதற்கு இனிதாகிய உறவுமுறைகளும், பெரும் செல்வமும், அழகிய வடிவமும், உயர்ந்த குலப் பெருமையுமாகிய எல்லாம் இலக்குமி வந்து சேரும்போது ஒரு வரை வந்தடையும். அவள் விட்டு நீங்குகை யில் எல்லாம் ஒரு சேரப் போய்விடும்.
விளக்கவுரை: செல்வம் வந்து சேரும்போது இனிய சுற்றமும் குழும் நல்ல அழகும், குல உயர்ச்சி யும் சேரும். செல்வம் போகும்போது இவை யெல்லாம் போய்விடும்.

Page 25
36 வாக்குண்டாம்
அழிப்பாரையும் தாங்குவர் ஆன்றோர் சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மந்தர் குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். -30
பதவுரை: மரம்- மரங்களானவை மாந்தர் குறைக் கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டுமளவும். குளிர் நிழலைத் தந்து மறைக்கும் - அவருக்குக் குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து (வெயிலை அவர் மேலே படவொட் டாமல்) மறைக்கும். (அதுபோல ) அறிவு உடையோர் அறிவுடையவர்கள். சாம் தனையும் தீயனவே செய்திடி னும் - (தாம்) இறந்துபோம் அளவும் (தமக்கு இறந்து போகத்தக்க) தீங்குகளையே பிறர் செய்தார் ஆயினும் , தாம் அவரை ஆம்தனையும் காப்பர் - தாம் அவரைக் யும் ( தம்மாலே ) ஆகுமளவும் ( நன்மையே செய்து ) 65 TTL) Lutj.
பொழிப்புரை; மக்கள் மரத்தை வெட்டிக் கீழே வீழ்த்தும் வரையும் மரமானது அவருக்குக் குளிர் நிழலையே தந்து காக்கிறது, இதைப் போன்றே தாம் இறக்கும் வரையும் தமக்குத் தீமை செய்கின்ற கொடியவரையும் தம்மா லான வரை அறிஞர்கள் காத்திடுவர்.
விளக்கவுரை: அறிவுள்ளவர்கள் தமக்குப் பிறர் கொடுமைகளைச் செய்தாலும், பொறுத்துக் கொண்டு உதவியே செய்வார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணத்தைச் சொல்லியிருக் கிறார். மரமானது தன்னைத் தறிப்பவருக் கும் தான் விழும்வரை நிழல் கொடுத்துக் காக்கும். அதேபோன்றவர்களே அறிவுள்ளவர் கள் என்று கூறியநயம் சிறப்பானது.
蟹蟹蟹蟹蟹蟹蟹蟹(!p )g b,為蕊。2》


Page 26
>
○米で、/e>
○
う
€
D
€
தண்டா மரையின்
தண்தேன்
1.
I
வண்டோ கானத்
வந்தே கம
பண்டே பழகி இ அறியார் பு
γN s
NZ கண்டே களித்து () தம்மிற் கல 7N
NZ மண்டூகம் - தவளை 7N கமலம் - தாமரை N/
7N
器
○米でう○ら釜う○
ck
c

ക
۔
seeeeeeee
உடன்பிறந்தும் நுகரா மண்டூகம் திடையிருந்தும் 6լ) மதுவுண்ணும்
ருந்தாலும் ". ல்லர் நல்லோரைக் அங்கு உறவாடித் ரப்பர் கற்றோரே,
( விவேகசிந்தாமணி )
<><><><<><
>{<
69ھ N