கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளவையார் அருளிய ஆத்திசூடி (உரையுடன்)

Page 1
டெ
gna) i LD LL
* " மேன் மைடு ஆr விளங்குக உலக
ஒளவை
-91 (56.
ஆத்தி
( உரையு
விளக்க
946 பன்னிரு திருமுறை முற் ஞாபகார்த்த ெ
இந்து மாமன்ற வவுனியா றி கந்தசுவாமி ே
 
 

|ம்
ள் சைவதீதி
|
N uun st N ரிய N
சூடி
ம் வவுனியா, காவில் தர்மகர்த்தா ᎦᏛᏈ01 .
டன் ) AY
வுரை :
நுகன்
றோதல் பூர்த்தி விழா

Page 2

ᎧᏂ . 96). I Lou Ilf,
மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
ஒளவையார் அருளிய
ஆத்திசூடி
( உரையுடன் )
விளக்கவுரை: அகளங்கன்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
ன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழா
ஞாபகார்த்த வெளியீடு - 2
இந்து மாமன்றம், வவுனியா. வவுனியா றி கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை
1 - 1 - 1995

Page 3
ஆத்திசூடி விளக்கவுரை
எழுதியவர்: அகளங்கன்
முதற் பதிப்பு : 1995- 01-01
வெளியீடு: இந்து மாமன்றம், வவுனியா
வவுனியா பூரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை
அச்சுப்பதிவு சுதன் அச்சகம், வவுனியா,
66) su suT á) e (DD
 

போசகரின் ஆசிச் செய்தி,
* ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.
Tெமது சமயம் வளர எமது பண்பாடு வளர சமய வாழ்க்கை முக்கியமானது, சமய வாழ்க்கை வாழ்பவன் சமயத்துக்குத் தக்க வாழ்க்கை வாழமாட்டான்.
எமது புராணங்கள். திருமுறைகள் காட்டித்தரு பவை என்ன ? அதை நாள்தோறும் ஒதி உய்திபெற வேண்டும்.
இந்தப் பெரும் கைங்கரியத்தை எமது ஆலய தர்ம கர்த்தா சபையும், வவுனியா இந்து மாமன்றமும் முன் னின்று. நடாத்தும் திருமுறை முற்றோதல், திருவாசகம் முற்றோதல் மூலம் மிகப்பெரிய சமய மறுமலர்ச்சியைச் செய்கிறது. இவ்வருடம் (1995-ம் ஆண்டு ) இவ் விழா பலவகையிலும் சிறக்க, எம்பெருமான் முருகப்பெருமான்
திருவருள் தருவாராக. இந்த ஆத்திசூடி நூலுக்கு விளக்கஉரை தந்து, யாவருக்கும் விளக்கம் ஏற்படுத்திய தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு எனது ஆசிகள்:
இங்ங்ணம் சிவபூறி. இ. பாலச்சந்திரக் குருக்கள் பிரதம குரு வ்வுனியா பூரீ கந்தசுவாமி கோவில்,
போசகர் வவுனியா இந்து மாமன்றம்

Page 4
ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர் தரும் ஆசிச் செய்தி.
* நற்குஞ் சரக்கன்று நண்ணில் - கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண். ”
14 - 4 - 1982 சித்திரை வருடப் பிறப்பு. அன்று மாலை 3 மணியளவில் ஒரு சிறு
கலந்துரையாடல் கூட்டம்.
நானும், வவுனியா பூரீகந்தசுவாமி ஆலய (نی (یو2Hک குருக்கள் சிவபூg இ. பாலச்சந்திரக் குருக்களும், தொண் டர் திரு ந. செல்லையா ஐயா அவர்களும், திருவாளர் கள் என்.பாலதயானந்தன், எஸ். புஸ்பராசா, நா. தர்ம ராசா ( அகளங்கன் ) அவர்களும் ஆக ஆறுபேர் கலந்து கொண்டோம். அன்று வன்னி மாவட்டத்தை உள்ள டக்கியதாக ஒரு இந்து மாமன்றத்தை நிறுவிச் செயல் பட வேண்டுமென்று முடிவுசெய்து திரு. ந. செல்லையா ஐயா அவர்களின் அழுத்தத்தால், மன்றமும் உருவாகியது.
அதன்பின் கலை கலாசார, சமய நிகழ்ச்சிகளை யும், விழாக்களையும் நடத்தினோம். பல அபிப்பிராயங் கள் மத்தியில் நடவடிக்கைகள் சிறந்துவிளங்கின. சூழ் நிலை காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும் சென்றுவிட்டோம். ஆயினும், நாம் அறுவரும் கூடி விதைத்த விதை, முளையாகி - செடியாகி - மரமாகி கனிதருகின்றது, ஏ ற் றி ய தீ ப ம் தூண்டினால்தான், சுடர்விடும்
இதனை நன்கு உணர்ந்த இறைவன் C. A, இராம ஸ்வாமி அவர்களைத் தன்பணிக்குஆளாக்கிக்கொண்டான். மன்றத்தின் தலைவரான அவரின் தலைமையில் மன்ற

நிர்வாகம் செய்துவரும் சேவைகண்டு உளமார வாழ்த்து கின்றேன்.
இம்மன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்று பன்னிரு திருமுறை பூர்த்தி ஞாபகார்த்தமாக நீதி நூலான, ஒளவையார் அருளிய ' ஆத்திசூடி ' யினை அச்சிட்டு வெளியிடுவதுகண்டு பெருமிதம் அடைகிறேன். இதன் உரையை தம்பி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் புதிய கருத்துக்களுடன் இணைத்துத் தந்துள்ளார். இவரது தமிழ்ப்பணி நாடறிந்ததே. மேலும் இத்தகைய பணியினை இந்து மாமன்றமும், தமிழ்மணி அகளங்கன் அவர்களும் எதிர்காலத்தில் நிரம்பிய அளவில் செய்து மக்களை நெறிப்படுத்திப் பெருமை சேர்க்க இறைவன் துணைபுரிய வேண்டுகிறேன்,
' ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்."
ஆ. தியாகராசா, நயினாதீவு, பூgநாகபூஷணி அம்மன் அறங்காவலர் சபைத் தலைவரும், தீவுப்பகுதி தென்மேற்கு பிரதே சபைத் தலைவரும், உதவி அரசாங்க அதிபரும்,
நயினாதீவு 12 - 12 - 1994
#器、器爆影

Page 5
இந்து மாமன்றத் தலைவரின் ஆசிச் செய்தி.
இறைவன் திருவருளால் மேலும் ஒரு பன்னிரு திருமுறை பூர்த்தி விழாவினை கொண்டாடும் இவ்வேளை யில், வெளியாகும் ஒளவையார் அருளிச்செய்த நீதி நூலான ** ஆத்திசூடி ' தமிழ் இலக்கிய உலகில் ஒளி விட்டு விளங்கும் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையுடன் அமைந்துள்ளது.
வானுயர ஓங்கி நிற்கும் மாட மாளிகை தன் வலு வான அத்திவாரத்தில்தான் அமைய முடியும். இந்த வகையில் ஒரு சிறந்த மனிதன் அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தால் உயர்ந்த மனிதனாக விளங்க முடியும் என்பதற்கிணங்க வும், இளமையிலிருந்தே அறநெறியைப் பின்பற்ற வேண் டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கிலேயே நாம் சிறுவராக இருக்கும்பொழுதே எமக்கு நீதி நூல்கள் பாட நூல்களாக அமைந்திருந்தன.
தமிழ் மக்களின் வாழ்க்கை முறை இறைபக்தியை யும், ஒழுக்கத்தினையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைந்த இறை பக்தியே மேன்மையளிக்கும் என்பதால் அதன் முதற்படி யாகிய அறநெறியை எடுத்துச் சொல்லும் நீதி நூலான ஆத்திசூடியினை வ / இந்து மாமன்றமும், வ / பூரீகந்த சுவாமி கோவில் தர்மகர்த்தா சபையும் முன்வைக்கின்றது. எதிர்காலத்தில் இதுபோன்ற நீதிநூல்களை வெளியிட்டு மக்களுக்கு உதவ, இறைவன் அருள்புரிய அவனது ஒப்பற்ற கருணையை வேண்டிக் கை கூப்புகின்றேன்.
வணக்கம். C. A. gig (TLDGiul San FT LÊ
தலைவர். வவுனியா இந்து மாமன்றம் 1 - 1 - 95

பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழா, 1 = 1 - 1995 ஆசியுரை.
NAMNAASNMNMMNMNg
MAW
விசவமும், தமிழும் மேலோங்கி வளர்ந்து வரும் வன்னி மண்ணில் 1982-ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து மாமன்றம். வவுனியா பூரீ கந்தசுவாமி கோவில் தர்ம கர்த்தா சபையினருடன் இணைந்து பன்னிரு திருமுறை முற்றோதல் பூர்த்தி விழாவை வருடா வருடம் ஆங்கில ஆண்டு ஜனவரி முதல் திகதி பக்திபூர்வமாக சிறந்த முறையில் கோலாகலமாக நடாத்தி வருகின்றது.
இம்முறையும் 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் திகதி ஞாயிறுக்கிழமை இவ்விழாவை சிறப்பாக நடாத்த இ  ைற வ ன் திருவருள் பாலித்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும் இந்த இந்து மாமன்றமும், வவுனியா பூரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபையினரும் இணைந்து இவ் அரிய பணியைத் தொடர்ந்தும் ஆற்ற வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன்,
இப்பணியில் நான்காவது தடவையாக உழைப் பவர்களுடன் கலந்துகொள்வதிலும் பெருமை கொள் கின்றேன்.
இக்காலங்களில் திருமுறைகளை எம்முடன்சேர்ந்து முற்றோதிய தொண்டர்களை வணங்குகிறேன் - வாழ்த்துகிறேன்: '
இங்ங்னம் விழாக்குழுத் தலைவர் இறைபணிச் செம்மல் வை. செ. தேவராசா,
செயலாளர் வவுனியா பூரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை.

Page 6
(p. 601 g). 60) J
சிறுவர்களின் எதிர்காலம் பிரகாசமர்க இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்நூல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் பிரகாசம் என்று நான் கருதுவது ஒழுக்க மான - உத்தமமான - மனிதத் தன்மையான எதிர்காலத் தையேயாகும்.
ஆத்திசூடிக்குரிய பழைய உரையைப் பல பிரதி கள் மூலம் பார்த்து. எழுதினேன். எனக்கு ஒத்துக் கொள்ளாத இடத்திலும் விளக்கம் தேவைப்படும் இடத் திலும் விளக்கவுரை எழுதியுள்ளேன். சிறுவர்களுக்கு
எனது விளக்கவுரை சிலவேளை, சில இடங்களில் விளக்
கக் குறைவை உண்டுபண்ணலாம். அத்தகைய இடங் கள் இதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காகவே எழுதப்
பட்டுள்ளன.
சிறுவர்களின் மனத்திலே இத்தகைய அறநூற் கருத் துக்கள் பதியவேண்டும் என்ற அவாவில் ஆசை பற்றி ஆற்றத் தொடங்கிய பணியே இச்சிறுபணி
1983ல் எழுதிய இவ்வுரை நூல் இத்தனை ஆண்டு சுள் கழித்து அச்சு வாகனமேறுகிறது. வவுனியா இந்து மாமன்றம் 1994 ஜனவரி 1ல் தனது திருமுறை விழாவில் எனது ' பன்னிரு திருமுறை அறிமுகம்' நூலை வெளி யிட்டது. இம்முறை இந்நூலை வெளியிட்டு, அரிய அறப் பணியைச் செய்கிறது.
இந்து மாமன்றத்திற்கும், அதன் தலைவர் திரு. C. A. இராமஸ்வாமி அவர்களுக்கும் என் நன்றிகள்.

இந்த நூலை அழகாக அச்சிட்டுதவிய வவுனியா சுதன் அச்சகத்தினருக்கும், ம ற் று ம். உதவிகள் செய்த இலக்கிய நண்பன் திரு. ஓ.கே. குணநாதன் அவர்களுக்கும், என் நன்றிகள். நிறைமனிதர்களை உருவாக்கும் எமது இறைபணிக்கு ஆதரவளிக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றேன்.
பம்பைமடு, * நீ க ஸ்
வவுனியா, அன்பு " அகளங்கன் 1995 سے 1 0 == //010

Page 7
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி யிருப்பதுவும் நன்று.
( ஒளவையார் )
 

ே சிவமயம்
ஆத்திசூடி.
( உரையுடன் )
காப்பு. ஆத்திசூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே. ஆத்தி - திருவாத்திப் பூமாலையை, சூடி - சூடி யிருக்கும் சிவபெருமான், அமர்ந்த - விரும்பிய தேவனை - விநாயகக் கடவுளை, யாம் - நாம்,
ஏத்தி ஏத்தி - துதித்துத் துதித்து, தொழுவோம் -
வணங்குவோம்.
விளக்கவுரை:
இதில் யாமே என்ற சொல், நாங்களே எனப் பொருள் தரும். அதாவது பிறர் எவரதும் தூண்டுதல் இல்லாமல், மற்றவர்கள் மூலமாக இல்லாமல், நாமா கவே வணங்குவோம் என்ற நுணுக்கமான பொருளையே யாமே என்ற சொல் தருகின்றது.
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை - திருவாத்திப் பூ மாலையைச் சூடிக்கொண்டு அமர்ந்திருக்கின்ற சிவபெரு மானை, என்று நேரடிப் பொருள் கொள்வதும் முறை தான். இருப்பினும் வழமையாக காப்பு விநாயகக் கடவு ளுக்கே சொல்லப்படுவதால், அமர்ந்த என்பதற்கு விரும் பிய எனப் பொருள் கொண்டு. தேவனை என்பதற்கு விநாயகக் கடவுளை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

Page 8
2ெ ஆத்திசூடி
1. அறஞ்செய விரும்பு
அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு விரும்பு - நீ ஆசை கொள்,
வி. உரை:
ஆசை தான் துன்பத்தின் காரணி. அதனால், விரும்பு என்பதற்கு ஆசை கொள் என்று பொருள் கூற வேண்டியதில்லை. விருப்பங்கொள் என்று கூறுதலே போதும். அறம் என்பதற்கு ஒரு பொருளை இலகுவாக வரையறுத்து விடமுடியாது. ஒளவையார் ஒரு தனிப் பாடலில் கொடுப்பது அறம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்டால், இந்த ஆத்திசூடியில், அவரே ஈவது விலக்கேல், ஐயமிட்டுண், அறனை மறவேல், தானமது விரும்பு. என்பவற்றைக் கூறியிருக்கிறார். அதாவது ஒரே பொருளையே மீண்டும் மீண்டும் கூறுவானேன் என்பது சிந்திக்கத் தக்கது.
திருவள்ளுவர் அறம் ' என்பதற்குப் பலவகை யான பொருளைக் கொடுக்கும்படி பல திருக்குறள்களைக் கூறியிருக்கிறார். விரிவஞ்சி சிலவற்றை மட்டும் சிந்திப் பது நலம்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்.
-( குறள் 34 )
அழுக்காறு, அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். -( குறள் 35 )
அந்தணர் என்போர் அறவோர்மற் றெள்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொ முக லான், -( குறள் 30 )

ஆத்திசூடி 0.3
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்ல்ை அதனை மறத்தலின் ஊங்கில்லைக் கேடு, -( குறள் 32 )
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. -( குறள் 45 )
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. -( குறள் 49 )
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. -( குறள் 76 )
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். -( குறள் 93
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். -( குறள் 96)
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையார் இல், -( குறள் 142 )
அறன் வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. -( குறள் 150 )
இக்குறள்களிலே அறம் என்பதன் பொருள் பல வகையிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றதனை அறிஞர் கள் காணலாம். இன்னும் பிற பாடல்களிலும் அப் படியே.
அதனால் நல்ல காரியம் என்று உலகம் ஒப்புக் கெரள்வது எல்லாம் அறம் ஆகும் என எண்ணுவதே சரி
u IT (gbiħ .

Page 9
04 ஆத்திசூடி
இனி, அறஞ்செய் என்று கட்ட  ைள இடுவது அறிவுரையாகாது. இதனால் விரும்பு என்றார். அறஞ் செய்யவேண்டிய காரணத்தை விளங்கிக் கொண்டால், அதிலே விருப்பம் கொண்டால், அக்காரியம் தடைபடாது; விருப்பான காரியத்தையே ஒருவன் செய்வான் என்பத னால் விரும்பு என்றே கூறினார். இந்த நயம் நயக்கத் தக்கதே.
மனத்தளவிலே நல்ல சி ந் த  ைன  ையப் பதிய விட்டுவிட்டால் காரியமாற்றுதலும் ஒரு காரியமோ, அத னால் அறஞ்செய விரும்பு என்றே அழகாகக் கூறியிருக் கிறார்.
2. ஆறுவது சினம்
ஆறுவது - (தன்னுள்ளே) தணிய வேண்டுவது
சினம் - கோபமேயாம்.
வி. உரை:
செய்யவேண்டிய ஒருகாரியத்தைச் செய்யவேண்டிய காலத்திற் செய்யாமல் ஆறவிடுவது எவருக்கும் சினத்தை உண்டாக்கும். அதனால் காரியத்தை ஆறவிடாமல் ஆற்ற வேண்டும். ஆனால் ஆற விடுவதும் ஒன்று உண்டு. கோபம் ஏற்பட்டால் கோபம் ஆறிய பின்பே எதையும் செய்ய வேண்டும். சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல் லும் என்பதால், கோபம் ஏற்பட்டால் அதனை - எப்படி யும் தணித்து விடுதல் வேண்டும்.
3. இயல்வது கரவேல்
இயல்வது - (உன்னால் ) கொடுக்கக் கூடிய பொருளை, கரவேல் - ( இரப்பவர்களுக்கு ) ஒளியாதே.
 

ஆத்திசூடி 05
as slany:
உன்னால் இயன்ற நற்காரியங்களை எதன்பொருட் டாவது செம்யாமல் விடாதே. உனது திறமைகளை
நல்ல காரியங்கள் மூலமாக வெளிப்படுத்தாமல், மறைத்து வைத்து, வாழாதே எனினும் பொருந்தும்.
4. ஈவது விலக்கேல்
ஈவது - (தருமவழியில் ஒருவர் மற்றவர்க்கு ) கொடுப்பதை, விலக்கேல் - நீ தடுக்காதே.
வி. உரை:
நீ, நீயாகவே செய்த கொடுக்குந் தொழிலையும் நிறுத்திக் கொள்ளாதே. மற்றவர்கள் செய்யும் கொடுக்குந் தொழிலையும் விலக்காதே.
5. உடையது விளம்பேல்
உடையது - ( உன்னிடம் ) உள்ள பொருளை விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே.
வி. உரை:
உன்னைப் பற்றி நீயே பெருமையாகப் பேசிக் கொள்ளாதே. தற்பெருமை பே சுப வ னே தனது உடைமைகளைப் பறை சாற்றுவான். உடைமை என்பதில் பொருள்கள் மட்டுமன்றிப் புகழும் அடங்கும். தனது புகழைத் தானே பேசித் திரிபவன் புகழாசையில் தவறு செய்யலாம் என்பது நோக்கத் தக்கது:
6. ஊக்கமது கைவிடேல்
ஊக்கம் - ( செய்தொழிலில் ) உற்சாகத்தை, கைவிடேல் - நீ கைவிடாதே.

Page 10
() ) ஆத்திகுடி
வி. உரை:
முயற்சி திருவினை ஆக்கும் என்பதால், தோல்வியே வந்தாலும், மனஞ் சோராமல், முயற்சி செய்ய வேண் டும். அது மெய்வருத்தக் கூலியையாவது தந்தே தீரும்.
7. எண்ணெழுத் திகழேல்
எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண பிTசிலையும், இகழேல் - நீ இகழ்ந்து தள்ளாதே. வி. உரை:
கல்வியை இகழாமல் மதித்துக் கற்றுக் கொள்.
3. ஏற்பதிகழ்ச்சி
ஏற்பது - ( ஒருவரிடம் போய் ) இரப்பது, இகழ்ச்சி - பழிப்பாகும்
வி. உரை
கொடுத்து வாழ வேண்டும் என்று பலவகைகளி லும் வலியுறுத்திய ஒளவையார், இங்கே இரப்பது பழிப்பாகும், என்று கொடுப்பதை ஏற்றுக் கொள்பவர் களுக்குக் கூறுகிறார். இரந்து உயிர் வாழக் கூடாது. ஏற் போர்இல்லை எனில் ஈவோரும் இல்லை. கொடுப்போரும் இல்லாத - கொள்வோரும் இல்லாத சமநிலைச் சமுதா யத்தையே அவர் விரும்புகிறார்.
9. ஐயமிட்டுண்
ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர் களுக்கு) கொடுத்து, உண் - நீயும் சாப்பிடு.

ஆத்திசூடி 07
வி, உரை:
இரப்போரும், ஈவோரும் இல்லாத சம்நிலைச் சமுதாயம் இருப்பின் பிச்சை இடுவதற்கு ஆளில்லாமல் போய்விடும். பின் எப்படி ஐயம் இட்டு உண் என்பது எனக் கேட்கலாம். ஆனால் துறவிகள், அடியார்கள் பிச்சை எடுத்தே உண்பவர்களாவர், எனவே, அவர்க ளுக்குக் கொடுத்து உண்ணவேண்டும் என்பது பொருள்: பிச்சை எடுத்துண்பதைப் பெருமையாகக் கருதுபவர்கள் துறவிகள், அவர்களுக்கு ஏற்பது இகழ்ச்சி என்பது பொருந்தாது
10. ஒப்புர ஒழுகு
ஒப்புரவு - உலகத்தின் போக்கை அறிந்து
ஒழுகு - (நீ அந்த வழியில் ) நட.
வி. உரை:
நீ செய்யும் காரியம் சரியானது என்று உலகம் ஒப் புக் கொள்ளக் கூடிய வகையில் நடந்து கொள். 11. ஓதுவ தொழியேல்
ஒதுவது - (அறிவு நூல்களைப்) படிப்பதை, ஒழியேல் - விடாதே.
வி. உரை:
எத்துன்பம் வந்தாலும், உயிருள்ளவரை நல்ல நூல்களைக் கற்றுக்கொண்டே இரு.
12. ஒளவியம் பேசேல்
ஒளவியம் - பொறாமை கொண்டு, பேசேல் - நீ பேசாதே.

Page 11
08 ஆத்திசூடி
வி. உரை:
பொறாமை கொண்டு எதையும் பேசாதே, மற்ற
வர்களின் உயர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி கொள்,
13. அஃகஞ் சுருக்கேல்
அஃகம் - நெல் முதலிய தானியங்களை.
சுருக்கேல் - அளவில் குறைத்து விற்காதே.
வி. உரை.
தானியங்களை மிகுதியாக உற்பத்தி செய், எனி
னும் பொருந்தும்,
14. கண்டொன்று சொல்லேல்
கண்டு - ஒன்றைக் கண்டு, ஒன்று - ( நீ காணாத) வேறு ஒன்றை, சொல்லேல்-சொல்லாதே
வி. உரை:
கண்டது ஒன்றாக இருக்க, பொய்யாக இன் னொன்றைச் சொல்லாதே என்பது மட்டும் இதன் பொரு ளாக இருந்தால் பொய் சொல்லாதே எனக் கூறியிருப் பாரே. அதனால் முகஸ்துதியாக எதையும் சொல்லாதே என்பது இதன் பொருள். முன்னால் புகழ்வதும் போக விட்டுப் புறங்கூறுவதும் ஆகாது.
15. நுப்போல் வளை
நப்போல் - நுகரம் ( தான் பிரயோசனமுள்ள தாய் இருந்து தன் வருக்கத்தைத் தழுவுதல் ) போல, வளை - (நீ பிரயோசனமுள்ளவனாயிருந்து உன் இனத்தைத்) தழுவு.

ஆத்திசூடி () ()
af. S. Gong :
ங்கரமானது அங்ங்ணம், இங்ங்ணம், உங்ங்ணம் என்று சொல்லுக்குக் காரணமாய் வரும். அதின் வருக்கங்களா கிய நா' B, B, ந, யூ, நுெ, நுே. நுை, நொ, வோ, ங்ெள என்கின்ற பதினொன்றும் சொல்லுக்குக் காரண மாதல் இல்லை. ஆயினும் நகரத்தின்பொருட்டு இவை களும் தமிழ் நெடுங் கணக்கில் வழங்கப்படுகின்றது. அது போலவே நீ கல்வி செல்வங்களினாலும், வேறுவகை யிலும் பிறருக்கு உதவி செய்பவனாக இருப்பின் உன் பொருட்டாக உனது இனமும் ( சுற்றமும்) மதிக்கப்படும்.
16. சனி நீராடு
சனி - சனிக்கிழமை தோறும், நீர் ஆடு - (எண்ணெய் இட்டுக் கொண்டு) நீரிலே தலைமுழுகு
வி. உரை:
சனி நீர் என்பதை குளிர்ச்சி பொருந்திய நீர் என் றும், மலையில் இருந்து விழும் நீர் என்றும், பொருள் கொள்வாரும் உண்டு. மலை எல்லா இடங்களிலும் இருக்காது; சனிக்கிழமை என்பதன்பொருத்தம் போதாது, குளிர்ச்சி பொருந்திய நீரில் சூடு போகும் வண்ணம் நன்றாகத் தலை முழுகு என்பதே பொருந்தும்.
17. ஞயம்பட வுரை
ஞயம்படி - ( (பேசும் சொல்லிலே) இன்பம்
விளையும்படி, உரை - நீ பேசு.
வி. உரை,
மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியாக இனிமை
u IIT 511 GL15.

Page 12
10 ஆத்திசூடி
18. இடம்பட வீடெடேல்
இடம் - இடமானது, படி - (அளவிற்கு மேற்
பட்டு) வெறுமையாகக் கிடக்கும்படி, வீடு -
வீட்டை, எடிேல் - (நீ பெரிதாக) கட்டாதே.
வி. உரை :
சுற்றி இருப்பவர்களே சுற்றம். சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். என்பதால் சுற்றத்தாரைத் தூரத்தில் விட்டு, அவர்களுக்கும் உனக்கும் இடையே அதிக தூரம் இருக்கக் கூடியதாக வீட்டைக் கட்டி வாழ்தல் கூடாது. எனினும் பொருந்தும்.
19. இ, ணக்கமறிந்திணங்கு
இணக்கம் - (சிநேகிதத்துக்கு ஏதுவாகிய) நற்
குண நற்செய்கைகளை, அறிந்து - தெளிந்து,
இணங்கு - (பின் ஒருவரோடு) சிநேகிதஞ் செய்.
வி. உரை:
உன்னோடு சிநேகிதங்கொள்ள விருப்பமுள்ளவனாக வும், ஒத்துப்போகக் கூடியவனாகவும், நற்குணமுள்ள வனாகவும் பார்த்து, அவனோடு சிநேகிதங் கொள்.
29. தந்தைதாய் பேண்
தந்தை - (நீ உன்) பிதாவையும், தாய் - மாதாவையும், பேண் - ( அன்புடன் உபசரித்து ) காப்பாற்று.

ஆத்திசூடி 11
வி. உரை:
, , %1 தந்தை தாய் முதலியோரை அன்போடு உபசரித்
துக் காப்பாற்று.
21. நன்றி மறவேல்
நன்றி - ( ஒருவர்உனக்குச் செய்த) உH" ரத்தை, மறவேல் - நீ ஒருபோதும் மறவாதே.
வி. உரை:
உனக்குச் செய்த நன்மையை ஒருகாலத்தி லும் மறவாதே.
22. பருவத்தே பயிர்செய்
பயிர் - பயிர்களை, பருவத்தே - (அது விளை
யும்) பக்குவ காலத்திலே, செய் - செய்வாயாகுக.
வி, உரை:
இது பயிர் செய்வதற்காக மட்டும் சொல்லப் பட்டதன்று. எதையும் காலந் தவறாமல் ஒழுங்காக ஆற்றவேண்டும் என்பதே இதன் முழுமையான பொருள். கடந்த காலம் எக்காரணங் கொண்டும், திரும்பாது . என்பதால், செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டிய காலத்தில் செய்யாது விட்டுவிட்டால், பின்பு ஒன்றுமே செய்யமுடியாது என்பதை உணர்க,
23. மன்றுபறித் துண்ணேல்
மன்று - நியாய சபையில் இருந்துகொண்டு, பறித்து - (வழக்குத் தீர்வுக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து உண்ணேல் - நீ சீவனம் செய்யாதே.
rܢ.

Page 13
I 2 كيب(
த்திசூடி
ds. splay:
mimum
குரங்கு அப்பம் பிரித்த கதையை நினைவு கொள்க.
உனது பதவியை, சமூக அந்தஸ்தை உனது கெட்ட
செயல்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளாதே;
24. இயல்பலாதன செய்யேல்
இயல்பு அலாதன - (தரும நூல்களுக்கு) பொருத்தம் இல்லாத காரியங்களை, செயேல் - செய்யாதே.
வி. உரை:
உனது இயல்புக்குப் பொருத்தம் இல்லாதவற்றை யும் , தரும நூல்களுக்குப் பொருத்தம் இல்லாதவற்றை யும், எவரது வற்புறுத்தலின் பேரிலும் செய்யாதே
25. அரவமாட்டேல்
அரவம் (நஞ்சு உள்ள) டாம்புகளை, ஆட் டேல் - நீ பிடித்து ஆட்டாதே.
வி. உரை:
பாம்பையும், பாம்பு போன்றவர்களையும், விளை யாட்டுப் பொருளாக நினைக்காதே.
26. இ. லவம்பஞ்சிற்றுயில்
இலவம் பஞ்சில் - இலவம் பஞ்சு மெத்தை யில், துயில் - நித்திரை செய்.

ஆத்திசூடி 13
27. வஞ்சகம் பேசேல்
வஞ்சகம் - கபட வார்த்தைகளை
பேசேல் - நீ பேசாதே.
28. அ,ழகலாதன செயேல்
அழகு அலாதன - மற்றவர் பழிக்கும் காரியங் களை, செயேல் - நீ செய்யாதே.
afa.. solstoy:
நல்ல செயலை, அழகான செயல் என்பது வழக் கம். அதனால் அழகலாதன என்பதற்கு இழிசெயல் என்னும் பொருள் பெறப்படும்.
29. இளமையிற் கல்
இளமையில் - இளமைப் பருவத்திலேயே, கல் - (வித்தையை விரும்பிக் ) கற்றுக்கொள்.
வி. உரை:
இளமையில் எதையும் மனதில் பதியவைப்பது Bil G) LJ ħ என்பதாலும், காலங் கடந்து கல்வி கற்பது அதிகம் பயன்தராது என்பதாலும், வயது சென்றபின் கற்க முயன்றால் பல இடையூறுகளும் ஏற்படும் என்பதாலும் இளமையிற் கல் என்றார்.
30. அறனை மறவேல்
அறனை - தருமத்தை, மறவேல் - (ஒருபோ தும்) மறவாதே.

Page 14
| 1 ஆத்திசூடி
வி. உரை:
அறஞ்செய விரும்பு என்று ஆரம்பத்தில் கூறியவர் அதனை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார் இங்கே. மறவா மல் மனத்தில் - நினைவில் இருந்தால்தானே காரியம் ஆற்றலாம். அறஞ் செய்வது மட்டுமன்றி அறச்சிந்தனை இருப்பதும் புண்ணியமேயாகும் என்பது இங்கே நோக்கத் தக்கது. இங்கும் அறம் என்பது எல்லா நற்செயல்களை யும் குறிக்கும்.
31. அனந்த லாடேல்
சீனந்தல் நித்திரையை, ஆsே ல் - அதிக மாதச் செய்யாதே.
சி. உரை:
அதிக நித்திரை, சோம்பலையும் நோயையும் தரும்,
32. கடிவது மற
கடிவது - (ஒருவரைச் ) சினந்து பேசுவதை,
பிற - நீ மறந்து விடு.
வி. உரை:
-ജ.
"தையும் அமைதியாக, சந்தோசமாகப் பேசித்
தீர்க்கவேண்டும். கோபமாகப் பேசுவதன் மூலம் தீர்ப்பது நிரந்தரத் தீர்வாகாது. கடிவதும் அற எனப்பிரித்துச் சினங்கொள்வதையும் விட்டுவிடு எனினும் பொருந்தும்.
33. காப்பது விரதம்
காப்பது - ( பிற உயிர்களுக்குத் துன்பம் செய் 47மல் ) அவைகளைக் காப்பாற்றுவதே. விரதம் - விரதமாகும்.

ஆத்திசூடி 5
alá. S2-snij:
Mww.
தனது மன உறுதி குலையாமல், தன்னைத்தானே காத்துக் கொள்வதும் விரதமாகும். அரிச்சந்திரன் சத்தியத்தைக் காத்ததும், ஓர் விரதமே.
34. கிழமைப்பட வாழ்
கிழமைப்பட - (உன்னிடத்தில் உள்ளபொருள் பிறருக்கு) உரிமைப் படும்படி, வாழ் - நீ வாழ்
வி. உரை:
தன்னிடமுள்ள பொருட்கள், மற்றவர்களுக்கும்
பயன் படும்படி வாழ்வதே நல்ல வாழ்க்கை தா"
தனித்து வாழவேண்டுமென்று நினைப்பது முறையாகாது.
35. கீழ்மை யகற்று
கீழ்மை - கீழ்மையாகிய குணத்தை, அகற்றுநீ நீக்கு.
வி. உரை
மேன்மை என்பதன் எதிர்ச் சொல்லாக கீழ்மை பொருள் தருகிறது. எனினும், அடிமைத் தனத்தை அகற்று என்றும் எண்ணலாம்.
36. குணமது கைவிடேல்
குணமது - (மேலாகிய) குணத்தை, கை விடேல் - நீ விட்டு விடாதே.

Page 15
18 ஆத்திசூடி
கூடி - (நல்லவரோடு) சிநேகித்து, பிரியேல் நீ பின் அவரை விட்டு நீங்காதே.
வி. உரை:
நல்லவர்களைக் காண்பதே நல்லது. அப்படியிருக்க அவர்களோடு சேர்ந்து வாழ்வது எவ்வளவு பாக்கியம்
38. கெடுப்ப தொழி
கெடுப்பது - ( பிறருக்குக் ) கேடு செய்வதை, ஒழி - நீ விட்டு விடு.
வி. உரை:
கொடுக்காமல் வாழ்ந்தாலும், கெடுக்காமல் வாழ்ந் தால் அதுவே போதும். 39. கேள்வி முயல்
கேள்வி - ( கற்றவர் சொல்லும் நூற்பொரு ளைக் ) கேட்பதற்கு நீ முயற்சிசெய்.
வி. உரை:
கல்வி கேள்விகளிற் சிறந்தவன் என்று கூறும் வ்ழக்கம் இன்றும் உண்டு. ஒதுவ தொழியேல் என்பதில் கல்வியைக் கூறியிருக்கிறார். இங்கே கேள்விச் செல்வத் தைக் கூறுகிறார்.
40. கைவினை கரவேல்
கைவினை - ( உனக்குத் தெரிந்த ) கைத்
தொழிலை, கரவேல் - (நீ மற்றவர்களுக்கு ஒழியாதே.
 

ஆத்திசூடி 1 7
41. கொள்ளை விரும்பேல்
கொள்ளை - ( பிறருடைய பொருளை )
கொள்ளையிடுவதற்கு, விரும்பேல் - நீ ஆசைப்
படாதே,
42. கோதாட் டொழி
கோது - குற்றம் பொருந்திய, ஆட்டு - விளை
யாட்டை, ஒழி - நீ நீக்கு.
வீ. உரை
கோதாட்டு என்பது சூது முதலிய குற்றம் பொருந்
திய விளையாட்டுக்களாகும்.
43. சக்கர நெறிநில்
சக்கரநெறி - (அரசனுடைய) ஆஞ்ஞையாகிய
சக்கரம் செல்லும் வழியிலே, நில் - நீ அடங்கி நில்.
வி. உரை:
அரசனின் நல்லாட்சிக்கு இடையூறு செய்யாமல்
9ք(ԼՔ(35.
44. சான்றோரினத்திரு
சான்றோர் - அறிவினாலே நிறைந்தவர்களு
டைய, இனத்து - கூட்டத்திலே, இரு - நீ எந்
நாளும் சேர்ந்து இரு
வீ. உரை:
நிறைகுணத்தவர் கூட்டத்தில் எப்பொழுதும் இரு.

Page 16
18 ஆத்திசூடி
45. சித்திரம் பேசேல்
சித்திரம் - மெய்போலத் தோன்றும் பொய்
களை, பேசேல் - நீ பேசாதே,
46. சீர்மை மறவேல்
சீர்மை - புகழுக்கு ஏதுவாகிய குணத்தை,
மறவேல் - நீ மறந்து விடாதே.
47. சுளிக்கச் சொல்லேல்
சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக
சொல்லேல் - நீ ஒன்றையும் பேசாதே.
வி. உரை:
மற்றவர்கள் கோபிக்கும் படியான வார்த்தைகள்
எதையும் நீ பேசாதே.
48. சூது விரும்பேல்
சூது – சூதாடலை, விரும்பேல் - நீ ஒருபோதும் விரும்பாதே.
வி. உரை:
ar.
கோதாட்டொழி என்பதனுள் சூதும் அடங்கும். இருப்பினும். சூது மிகவும் கூடாத விளையாட்டு என்ப தால், தனியாக சூது விரும்பேல் என்றார், 49. செய்வன திருந்தச்செய்
செய்வன - செய்யும் காரியங்களை, திருந்த -
செவ்வையாகச், செய் - நீ செய்.

50. சேரிட மறிந்து சேர்
சேர் இடம் - அடையத் தகும் ( நன்மை யாகிய ) இடத்தை, அறிந்து தெரிந்து, சேர் - நீ அடை
வி. உரை:
நீ சேரும் கூட்டம் நல்லதா என்பதை ஆராய்ந்து
தெளிந்து பின் சேர்ந்து கொள்.
51. சையெனத் திரியேல்
சை என ( பெரியோர் உன்னை ) சீ என்று அருவருக்கும்படி, திரியேல் - நீ (துஷ்டனாகத்) திரியாதே.
52. சொற்சோர்வு படேல் சொல் (நீ பிறரோடு பேசும் ) சொற்களில், சோர்வுபடேல் - மறதிபடப் பேசாதே.
வி. உரை:
சொன்னதைச் செய்வதே வாய்மையாகும். அதனால் சொல்லும்போது செய்யமுடியாத காரியத்தைச் சொல்லி, பின் தட்டிக் கழிப்பதாக, உறுதியில்லாத சொற்களைச் சொல்லுதல் கூடாது. சொன்னதைச் செய்யாமல் விடாதே. வாக்குத் தவறாதே எனினும் பொருந்தும் .

Page 17
20 ஆத்திசூடி
53. சோம்பித் திரியேல்
சோம்பி . (நீ செய்யவேண்டிய முயற்சியைச்
செய்யாமல்) சேர்ம்பல் கொண்டு, திரியேல் .
வீணாகத் திரியாதே.
54. தக்கோ னெனத்திரி
தக்கோன் என - ( உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் எனப் புகழும்படி திரி - நீ Síf.
வி. உரை,
உனது நற்குண நற்செய்கைகளினால், பெரியோர் கள் உன்னைத் தகுதிவாய்ந்தவன் என்று கூறும்வண்
ணம் நடந்துகொள்.
55. தானமது விரும்பு o
தானமது - (சற்பாத்திரங்களிலே) தானப் செய்தலை, விரும்பு - நீ விரும்பு,
வி. உரை:
தன்னைவிட உயர்ந்தோருக்கும், பிராமணர், துறவிகள், போன்றோருக்கும் கொடுப்பது தானம் தருமம் என்பது தன்னிலும் கீழானோருக்குக் கொடுட் பது, அறஞ்செய விரும்பு என்பதனுள் இதுவும் அடங் கும். எனினும், தனித்தும் வலியுறுத்திய காரணம் இதன் முக்கியத்துவம் கருதியேயாகும்.
56. திருமாலுக் கடிமைசெய்
திருமாலுக்கு - விஷ்ணுவுக்கு, அடிமைசெய் தொண்டுசேய்,

ஆத்திசூடி 21
வி. உரை:
திருமால் என்றால் பெரிய பெருமையுடையவர் என்பது பொருள். எனவே பெருமையிற் சிறந்தவர்களுக்குத் தொண்டு செய் எனினும் பொருந்தும்
57. தீவினை யகற்று
தீவினை - பாவச் செயல்களை அகற்று - (நீ செய்யாமல் ) நீக்கு
శ్లోకి 58. துன்பத்திற் கிடங்கொடேல்
துன்பத்திற்கு - ( பிறர் ) வருத்தப்படுவதற்கு இடங்கொடேல் - இடம் கொடாதே,
வி. உரை:
உன்னால் பிறர் துன்பம் அடைவதற்கோ,அன்றி நீயே உன்மனதில் துன்பம் நிலைகொள்ளுமாறோ இடங் கொடாதே, இடுக்கண் வருங்கால் நகுக. என்ற குறளை
ஞாபகப் படுத்தவும். * နုဂ့္် .. ။
59. தூக்கி வினைசெய்
தூக்கி - (முடிக்கும் உபாயத்தை ) ஆராய்ந்து வினை - ஒரு தொழிலை, செய் - (நீ அதன்பின்பு)
செய்.
வி. உரை:
செய்யும் தொழில் பற்றியும், அதன் விளைவு கள் பற்றியும், அத்தொழிலைச் செய்து முடிக்கும் வழிவகை பற்றியும் ஆராய்ந்து தொழிலைச் செய்யவ்ேண்டும்.

Page 18
22 ஆத்திசூடி
60 தெய்வ மிகழேல்
தெய்வம் - கடவுளை, இகழேல் - (மறந்தும்) இகழ்ச்சியாகப் பேசாதே.
61. தேசத்தோ டொத்துவாழ்.
தேசத்தோடு - (நீ இருக்கும்) நாட்டிலுள்ள வர்களோடு, ஒத்து - (பகையில்லாமல்) ஒற்றுமை யாக, வாழ் வாழு.
வி. உரை:
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே அதனால் தேசத்தோடு ஒத்துவாழ் என்பது தேசத்திலேயுள்ள உயர்ந்தோர்களோடு ஒற்றுமையாக வாழவேண்டும் என்ப
தாகும்,
62 தையல்சொற் கேளேல்
தையல் - (உன்) மனைவியுடைய, சொல் - சொல்லை, கேளேல் - நீ கேட்டு நடவாதே.
வி உரை:
LLL0LCELSLLLSkSSSkLkLSSLLLLCLLLS
தையல் என்பது இளவயதுப் பெண்களையே இங்கு குறிக்கிறது. மனைவியைக் குறிக்கும் சொல் என்பது பொருந்தாது. இளவயதுப் பெண்களின் சொல்லைக் கேட்டு நடப்பது, அவர்களின் மோகத்தினால் ஏற்படும் செயலாகுமேயன்றி, ஆராய்ந்தறிந்த நல்ல செயலாக இருக்க முடியாது. அதனால் இதனைக் கூறினார். பொதுவாக, தையல் என்றால் பெண் என்று பொருள். இதன்படி பார்த்தால், இதனைப் பாடிய ஒளவையாரும் பெண்தானே. என்பதனால் இது பொருந்தாது,
 

ஆத்திசூடி 23
63. தொன்மை மறவேல்
தொன்மை - பழமையாகிய சிநேகிதத்தை, மறவேல் மறந்துவிடாதே.
of glassy
முன்பிருந்த நிலையை மறக்கக் கூடாது எ னி னும் பொருந்தும்.
64. தோற்பன தொடரேல்
தோற்பன - தோல்வியையடையக்கூடிய
65. நன்மை கடைப்பிடி
நன்மை - நன்மையான காரியங்கள் செய்வ தையே கடைப்பிடி = உறுதியாகப் பிடி.
66. நாடொப்பன செய்
நாடு - நாட்டிலே உள்ளவர்கள் பலரும், ஒப்பன - ஒத்துக்கொள்ளத் தக்க நல்ல காரி யங்களை, செய் - செய்வாயாக.
வி. உரை
இங்கும் நாடு என்பது நாட்டிலுள்ள பெரிய மனிதர்
களை, அதாவது நல்ல மனிதர்களையே குறிக்கும். "தேசத் தோடொத்து வாழ் ' என்பதும் அதன் ஒரு பகுதியான " நாடெப்பன செய்' என்பதும் நோக்கத்தில் மாறுபr
டில்லாதன.

Page 19
24 ஆத்திசூடி
67. நிலையிற் பிரியேல்
நிலையில் (நிற்கின்ற உயர்ந்த ) நிலையிலே நின்று, பிரியேல் - ஒருபோதும் நீங்காதே.
வி. உரை:
நிலையில் என்பது மனநிலையில் என்றே கொள்ள வேண்டும். ஏனெனில், மற்றைய நிலைகள் மாறக்கூடி யன. அதனால் உனது மனத்தை நல்ல நிலையில் வைத் திரு. அந்த நல்ல நிலையிலிருந்து மனதைப் பிரித்து விடாதே என்பது பொருள்.
68. நீர் விளையாடேல்
நீர் - (ஆழமாக உள்ள) நீரிலே, விளையா டேல்" (நீந்தி ) விளையாடாதே.
வி. உரை:
அரவமாட்டேல் என்று மு ன் பும், பாம்பொடு பழகேல் என்று பின்னும்கூறியதைக் கவனிக்க, நீர் விளையாட்டும் இவைபோல அபாயமானது என்பதால் கூறினார்,
69. நுண்மை நுகரேல்
நுண்மை - (நோய்தரும் ) சிற்றுண்டிகளை,
நுகரேல் - நீ உண்ணாதே.
70. நூல் பல கல்
நூல்பல . ( அறிவை வளர்க்கும் )நூல்கள் பல வற்றையும், கல் = கற்றுக்கொள்

ஆத்திசூடி 25
வி. உரை:
கண்டது கற்கப் பண்டிதனாவான் "' என்பதால் பலவகையான நூல்களைக் கற்பது நல்லது
71. நெற்பயிர்
நெற்பயிர் - நெல்லுப் பயிரை, விளை - விளைவி
sh. g. 65 y:
தமிழர்களின் முக்கிய உணவாக நெல் - அரிசி இருப்பதாலும், நெல் விவசாயம் எல்லா உயிரினங்களுக் கும் கொடுக்கும் புண்ணியத் தொழிலாதலாலும் நெற் பயிர் விளை என்று கூறினார். நெற்பயிர் செய்தலை வேளாண்மை" என அழைத்தனர் தமிழர், வேளாண்மை என்றால் புண்ணியம் என்றும் பொருள். உதவி என் றும் சொல்வர், ' இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு ' -(குறள் 81)
என்ற குறளை நினைவு கொள்க,
72. நேர்பட ஒழுகு
நேர்பட - ( உன் ஒழுக்கம் கோணாமல்) ஒழுங்
காக, ஒழுகு - நட,
73. நைவினை நணுகேல்
நை - ( பிறர்) கெடத்தக்க, வினை = தீய வினைகளை, நணுகேல் - ( ஒருபோதும்) சாராதே

Page 20
28 ஆத்திசூடி 74. நொய்ய வுரையேல்
நொய்ய - ( பொருள் இல்லாத) அற்பவார்த் தைகளை, உரையேல் - சொல்லாதே.
75. நோய்க் கிடங் கொடேல்
நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடிேல் - இடங் கொடாதே,
வி. உரை,
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் '
என்பதால் நோய் உடலைப் பிடிக்கா வண்ணம் உடலைப்
பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
76. பழிப்பன பகரேல்
பழிப்பன - ( அறிவாளிகளால் ) பழிக்கப்படு கின்ற சொற்களை, பகரேல் - பேசாதே.
வி. உரை:
உனது பே ச் சு மற்றவர்களால் பழிக்கப்படுவ தாகவோ, அன்றி மற்றவர்களைப் பழிப்பதாகவோ
இருக்கக் கூடாது எனினும் பொருந்தும்.
77. பாம்பொடு பழகேல்
பாம்பொடு - (பால் கொடுத்தவருக்கும் விஷம்
கொடுக்கிற) பாம்பைப் போல்பவர்களுடன்,
பழகேல் - சகவாசஞ் செய்யாதே."

ஆத்திசூடி 2
78. பிழைபடச் சொல்லேல்
பிழைபட - பிழையான கருத்துக்கொள்ளும்படி சொல்லேல் - ஒன்றையும் பேசாதே.
79. பீடுபெற நில்
பீடு - பெருமையை, பெற - பெற்றுக்கொள் ளும்படி, நில் - (நல்ல வழியிலே ) நில்.
30. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்
புகழ்ந்தாரை - (உலகத்திலே ) புகழ்பெற்று
வாழ்ந்தவர்களை, போற்றி - வணங்கி, வாழ் -
அவர்கள் காட்டிய வழியில் வாழ்வாயாக.
வி. உரை
உன்னைத் துதிசெய்து புகழ்ந்தவரைக் கைவிடாமல் காப்பாற்றி வாழ் என்று பொருள் கொள்வாரும் உண்டு, எனினும், அது சரியாகாது. உலகம் புகழும் உத்தமர் களைப் போற்றி, அவர்கள் காட்டிய வழியில் வாழ் என்பதே பொருந்தும்
81. பூமி திருத்தியுண்
உன் விளைநிலத்தை, திருத்தி - சீர் திருத்திப் பயிர் செய்து, உண் - நீ உண்ணு,
வி. உரை:
நெற்பயிர்விளை என்று முன்கூறியது இதில் ஒரு பகுதியே. எல்லா நிலத்திலும் நெற்பயிர் செய்ய முடி யாது என்பதால், ஏனைய பயிர்வகைக்ளையும் கருத்திற் கொண்டு பூமி திருத்தியுண் என்றார்.

Page 21
28 ஆத்திசூடி
82. பெரியாரைத் துணைக்கொள்
பெரியாரை - அறிவிலே சிறந்த பெரியோரை
துணைகொள் - உனக்குத் துணையாகப் பேணிக் கொள்.
33. பேதைமை UI & bg
பேதைமை - அறியாமையை, அகற்று - நீக்கிவிடு.
வி. உரை:
உன்னிடத்தில் உள்ள அறியாமையை மட்டுமல்ல, எல்லோரிடத்திலுமுள்ள அறியாமையையும் நீ அகற்ற வேண்டும்.
84. பையலோ டிணங்கேல்
பையலோடு - (அறிவின்றி, அடக்குவாரின்றித் திரியும் ) சிறு பிள்ளையோடு, இணங்கேல் - சேராதே,
வி. உரை:
பையலோடு இணங்குதல் என்பது, அறிவற்ற சிறு பிள்ளை (ஆண் ) யோடு அவனது எண்ணப்படி அவ னது போக்கில் ஒத்து இணங்கிச் செல்லுதலாகும். அது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இணங்கேல் என்றார். இனங்கேல் Törd: ஒத்து இயங்காதே என்பது பொருள்.

ஆத்திசூடி 29
85. பொருடனைப் போற்றிவாழ்
பொருள்தனை - திரவியத்தை, போற்றி - ( மென்மேலும் வளரும்படி) காத்து வாழ் = வாழ்வாயாக.
வி. உரை:
போற்றி என்ற சொல் மிகவும் புனிதம் வாய்ந்த தெய்வீக மனங் கமழும் சொல். எனவே, மேலே கூறிய கருத்தில் சந்தேகம் இருப்பது நியாயந் தானே. பொருள் என்பது முழுமுதற்பொருளான இறைவனையே குறிக்கும். அந்த முழுமுதற் பொருளைப் போற்றி வணங்கி வாழ் (6)d ITULJ IT dg5 .
86. போர்த் தொழில் புரியேல்
போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை, புரியேல் - நீ செய்யாதே.
வி. உரை:
போர்த் தொழிலில் கொலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனைக் கருதியும் சமாதான உலகத்தை வரவேற்றுமே இப்படிக் கூறினார், 87. மனந்ததி மாறேல்
மனம் - உள்ளம், தடுமாறேல் - கலங்காதே. வி. உரை:
தடுமாற்றம் என்பது உறுதியான நிலையிலிருந்து தளம்புவதாகும். எதையும் தீர்மானித்த பின் தீர்மா னித்தபடியே செய்து முடிக்கவேண்டும். அதில் தளம்பல் நிலை இருக்கக்கூடாது

Page 22
y
30 ஆத்திசூடி
88. மாற்றானுக் கிடங்கொடேல்
மாற்றானுக்கு - பகைவனுக்கு, இடங்கொடேல் - இடங்கொடாதே.
வி. உரை:
பகைவன் உன்மேல் குற்றஞ் சுமத்தவோ, அன்றி உன்னை வெல்லவோ வசதியாக, உனது பலவீனத்தை
அவன் அறியும் வண்ணம் வெளிப்படுத்தக்கூடாது.
89. மிகைபடச் சொல்லேல்
மிகைபட - எதையும் அளவுக்கு மீறி பெரி
தாக்கி, சொல்லேல் - பேசாதே
90. மீதூண் விரும்பேல்
மீதூண் - அதிக உணவைச் சாப்பிட, விரும்
பேல் - ஆசைப்படாதே,
வி. உரை:
s நோய்க்கு இடங்கொடேல் ?? என்று முன்பு கூறியதால், மீதூண் நோயை உண்டாக்கும் என அஞ்சி
இப்படிக் கூறினார்.
91. முனை முகத்து நில்லேல்
முனைமுகத்து - போர் முனையிலே நில்லேல்(நீ போய் ) நில்லாதே.
 

ஆத்திசூடி 31
af. உரை:
" போர்த் தொழில் புரியேல் ' என்று முன்பு கூறியிருக்கிறார். இங்கு, போர் நடைபெறும் இடத்திலே வேடிக்கை பார்க்கக்கூட நிற்கக் கூடாது என்று வலி யுறுத்கிறார்.
92. மூர்க்கரோ டிணங்கேல்
மூர்க்கரோடு - அறிவில்லாதவர்களோடு, இணங்கேல் - சினேகிதம் செய்யாதே.
வி. உரை:
》剔
" முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற பழமொழியை நினைவு கொள்க. மூர்க்கன், தான் செய்வதே சரி என்று சாதிப்பவன். அதனால், அவ னோடு ஒத்துப் பழகுதல் முடியாத காரியம், அப்படிப் பழகுவதனால் பல ஆபத்துக்கள் ஏற்படும்.
மெல் - மெல்லிய, இல் - (உன் ) மனையா ளாகிய, நல்லாள் - பெண்ணினுடைய, தோள்சேர்
- தோள்களையே பொருந்து.
வி. உரை:
பெண்களைப் போல, ஆண்களையும் கற்பொழுக் கத்தில் ஈடுபடுத்துகிறார் ஒளவையார் இல்லாள் தோள் சேர் என்பதில், மற்றைய எந்தப் பெண்ணையும் சேரக் கூடாது என்ற கருத்து நிறைந்திருக்கின்றது.

Page 23
32 ஆத்திசூடி
94. மேன்மக்கள் சொற்கேள்.
மேன்மக்கள் . eurisG35 TG 560) is u, Garra) - சொல்லை, கேள் - கேட்டு நட.
95. மைவிழியார் மனையகல்
மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய வேசிகளது, மனை . வீட்டை, அகல் - ஒருபோதும் கிட்டாமல் அகன்று போ,
வி. உரை: ma.J.
鸽 "மெல்லினல்லா G3LT GT (3'geri ! " என்பதில் LD60AD (upeis மாகக் கூறிய விடயம் இங்கு வெளிப்படையாகக் கூறப் பட்டுள்ளது.
96 மொழிவ தறமொழி
மொழிவது . சொல்வதை, அற . (சந்தேகம்) நீங்கும்படி, மொழி - நீ சொல்வாயாக.
97. மோகத்தை முனி
மோகத்தை - அதிகூடிய ஆசையை, முனி - கோபித்து விலக்கு. V
வி. உரை:
***êRasa wisatamaassa
ஆசை தான் துக்கத்துக்குக் காரணம். அப்படி ,
யாயின் அதிக கூடிய ஆசை இன்னும் துன்பத்தைக் கொடுக்கும் என்பது விளங்கும். அத்தகைய மோகத்தை வெறுத்து ஒதுக்கவேண்டும்

ஆத்திசூடி 33
98. 6h 6ü36n) avnLD G3L (gF6i)
வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை,
பேசேல் - நீ புகழ்ந்து பேசாதே.
வி. உரை:
முன்பு உடையது விளம்பேல் என்பதன் விளக்கத்தில் இதுவும் கூறப்பட்டுள்ளது. எதையும் செயலில் காட்ட வேண்டுமே தவிர பேசித்திரியக் கூடாது. மற்றவர்கள் போற்றும்படி நடப்பதே நல்லது.
99. வாதுமுற் கூறேல்
வாது வாதுகளை, முன்-பெரியோர் முன்னே
கூறேல் - பேசலாகாது.
வி. உரை:
*" குதும் வாதும் வேதனை செய்யும் ' முன்பு சூது விரும்பேல் என்று கூறி, இங்கே வாது முற்கூறேல் என்று கூறினார். பெரியவர் முன்னே மட்டுமல்ல, எவர்
முன்னும் வாது செய்தல் கூடாது,
109. வித்தை விரும்பு
வித்தை - கல்விப் பொருளையே, விரும்பு - நீ விரும்யு.
101. வீடுபெற நில்
வீடு . மோட்சத்தை, பெற - அடையும்படி நில் - அதற்குரிய ஞானவழியில் நிற்பாயாக.

Page 24
34 ஆத்திசூடி
வி. உரை:
பாபமும் புண்ணியமும் இரண்டுமே பிறவிப்பிணி யைக் கொடுக்கும். அதனால் பிறவித்துயர் இல்லாமற் போகக் கூடிய ஞான மார்க்கத்தைக் கடைப்பிடித்து அதிலே உறுதியாக நிற்பாயாக,
102. உத்தம னாயிரு
உத்தமனாய் - உயர்குணமுடையவனாக, இரு - வாழ்ந்து கொள்.
103. ஊருடன் கூடிவாழ்
ஊருடன் ஊரவர்களுடனே, கூடி - சேர்ந்து வாழ் = வாழ்வாயாக.
வி. உரை:
ஊராரின் இன்ப துன்பங்களில் கலந்து வாழுதல் வேண்டும். பக்கத்து வீட்டிலே அடுப்பு எரியாதிருக்க, நீ மட்டும் விழாக் கொண்டாடி மகிழாதே. மற்றவர்களின் நிலையை அறிந்து ஒற்றுமையாக சேர்ந்து வாழுதல் வேண்டும். * கூடி வாழ்ந்தால் கோடி நன்மை '
194. வெட்டெனப் பேசேல்
வெட்டென - கத்தி வெட்டைப்போல, பேசேல் - எவருடனும் பேசாதே.
வி. உரை:
வெடுக்காகப் பேசாதே. எதையும் நிதானமாக மற்றவர்களின் மனதை அறிந்து பேசவேண்டும் . வெளி வந்த வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது. என் பதால் கவனமாகப் பேசுதல் வேண்டும்.

ஆத்திசூடி 35
105. வேண்டி வினைசெயேல்
வேண்டி - விரும்பி, வினை - தீவினையை, செயேல் செய்யாதே.
வி. உரை:
தெரியாமற் செய்யும் தீவினைகளுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், தெரிந்தே தீவினை செய்வது பாப மாகும். விருப்பத்தோடு தீவினை செய்வது அதைவிடப் பாபமாகும். அதனால் தீவினையை விரும்பிச் செய்யக்
éfinlfTgil,
106. வைகறைத் துயிலெழு
வைகறை - விடியற் காலத்தில். துயிலெழு -
நித்திரையை விட்டு எழு.
107. ஒன்னாரைத் தேறேல் ஒன்னாரை - பகைவர்களை, தேறேல் - நம்பாதே.
வி. உரை:
பகைவன் என்று தெரிந்து கொண்டும். அவன் பேச்சையோ, செயலையோ நம்புவது மிகவும் துன்
பத்தை உண்டாக்கும்.
103. ஒரஞ் சொல்லேல்
ஒரம் - பட்ச பாதகமாக, சொல்லேல் = யாதொரு வழக்கிலும் பேசாதே.

Page 25
38 ஆத்திசூடி
வீ. உரை
உண்மைக்குப் புறம்பாக, ஒருபக்கச் சார்பாகப்
பேசாதே.
குறிப்பு: சிலபிரதிகளில் 'க' வரிசையில் இது
வும் காணப்படுகின்றது.
* கெளவை அகற்று
கெளவை - (பிறர் கூறும்) பழிச்சொற்களுக்கு அகற்று - இடமளியாது அவற்றை நீக்கி, நீ வாழ்க.
வி. உரை:
கெளவை என்ற சொல்லுக்கு கலக்கம், துன்பம், பழிச்சொல் ஆகிய பொருட்கள் உண்டு. எனவே கெளவை யகற்று என்பதற்கு, உனதும், மற்றவர்களதும் மனக் கலக்கத்தைப் போக்கு, துன்பத்தைப் போக்கு என்றும், நீ மற்றவர்கள்மேற் பழிச்சொல் சொல்வதை விட்டுவிடு; மற்றவர்கள் உன் மேற்பழிச்சொல் சொல்லக்கூடிய உனது தீயபழக்கத்தை விட்டு விடு. என்றும் பொருள் கொள்ள
ου Γτι ί .
( செள. தெள, நெள, பெள, மெள, வெள, ஆகிய உயிர்மெய் எழுத்துக்களுக்கு வாக்கியம் இல்லா மையினால், கெள ' விற்கும் இல்லை. கெளவை யகற்று என்ற வாக்கியம் இடைச் செருகலாக இருக் கலாம் கெளவை என்ற சொல் முற்காலத்தில் கவ்வை என்றே எழுதப்பட்டது.)

ஆத்திசூடி 37
நி  ைற வு  ைர.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஆகியவை ஒளவையார் அருளிய அறநூற் செல்வங்கள்.
ஒளவை மூதாட்டி அருளிச்செய்த அற நூற்செல்வங் களில் ஆத்திசூடி தனித்துவமானது. மகத்துவம் மிக்கது.
s
*அ கரத்தைச் சிறுவர்களுக்கு அறிமுகஞ் செய்யும் விதமே அவரது ஆழ்ந்த சமூக உணர்வை அளவிடும் அளவுகோலாக அமைந்துள்ளது எனலாம். ' அறஞ் செய விரும்பு ** இவ்வொரு சோறே போதும் ஆத்தி
குடியைப் பதம் பார்க்க.
ஆ த் தி சூ டி.
( விளக்க உரையுடன் )
முற்றிற்று.

Page 26
இந்து மாமன்ற நிர்வாக சபை
போசகர்:
சிவபூணி, இ. பாலச்சந்திரக் குருக்கள்
தலைவர். (ogua)Totri : திரு, C. A. இராமஸ்வாமி திரு. இ. கிருபாமூர்த்தி
உப-தலைவர்: பொருளாளர் திரு. த், கந்தையா திரு. க. சபாபதி
உறுப்பினர்கள்:
திரு. செ. தருமரத்தினம் திரு. வை. பாலச்சந்திரன் திரு. இ, வீரசிங்கம் திரு. வை. செ, தேவராசா திருமதி. அ. தருமலிங்கம் திரு. பா. யோகநாதன்
வவுனியா பூணி, கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை
தலைவர்:
திரு. கோ. பாலசுப்பிரமணியம்
உப-தலைவர்: (og lu6) frøstff:
திரு. வ. தங்கவடிவேல் திரு. வை, செ, தேவராசா
பொருளாளர்:
திரு. க. முருகையா
உறுப்பினர்கள் திரு. க. ந, பாலச்சந்திரன் திரு. K. T. தர்மராசா திரு. பொ, கமலேஸ்வரன் திரு. த. பொன்னம்பலம்

* ஆத்திசூடி " வெளியீட்டுக்கு நிதி உதவிசெய்த அன்பர்கள்.
திரு. க. ந. பாலச்சந்திரன் அவர்கள்
நடராசா அன் சன்ஸ்,
சூசைப்பிள்ளையார்குளம், வவுனியா.
இறைபணிச் செம்மல் திரு, வை. செ. தேவராசா அவர்கள்
கண்ணகி, வவுனியா,
திரு. பொ, கமலேஸ்வரன் அவர்கள்
றணா பிறதேர்ஸ், வவுனியா
திரு. ந. சண்முகராசா அவர்கள்
சிவசக்தி, வவுனியா
திரு. சி. ஞானசம்பந்தன் அவர்கள்
சில்வா அன் கோ. வவுனியா.
திரு. மு: மாணிக்கவாசகர் அவர்கள்
குளோப் அரிசி ஆலை, வவுனியா
திரு. ஏ. இரத்தினேஸ்வரன் அவர்கள்
இராணி அரிசி ஆலை, வவுனியா
திரு. க. செல்வராசா அவர்கள்
காஞ்சனா நகை மாளிகை, வவுனியா
திரு. இ. சண்முகம் அவர்கள்
ஈஸ்வரன் கூல்பார். வவுனியா
திரு ஆ. நவரத்தினம் அவர்கள்
நெல்மா அரிசி ஆலை, வவுனியா

Page 27
திரு. அ தணிகாசலம் அவர்கள்
கவிதா புத்தகசாலை, வவுனியா
திரு. அ. சிவநாதன் அவர்கள்
சின்னப்புதுக்குளம். வவுனியா
திரு. ஆ. செந்தில்நாதன் அவர்கள் சிற்றி ஏஜன்சி, வவுனியா,
திரு. வை 1ாலச்சந்திரன் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர், வவுனியா
திரு. C. A இராமஸ்வாமி அவர்கள்
ஈசன், கடை வீதி, வவுனியா
திரு. T. K. இராஜலிங்கம் J. P. அவர்கள்
குளோப் ரேடர்ஸ், வவுனியா
A.
ఫ్రో
>â ଔଷ୍ଠ୍ଯ S.
፳ላ\ኛ ̊
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
V. (அப்பர்)
 


Page 28
திருச்சி பத்தராய்ப் பணிவார்கள்
பரமனையே பாடுவா
சித்தத்தைச் சிவன்பாலே
திருவாரூர்ப் பிறந்தா
முப்போதும் திருமேனி தீ
முழுநீறு பூசிய முனிவ
அப்பாலும் அடிசார்ந்தார்
ஆரூரன் ஆரூரில் அம்
திருக்சி
-சுர்
 

ற்றம்பலம். எல்லார்க்கு மடியேன் ர் அடியார்க்கு மடியேன் வைத்தார்க்கு மடியேன் ர்கள் எல்லார்க்கு மடியேன் ண்டுவார்க் கடியேன்
ர்க்கு மடியேன்
அடியார்க்கு மடியேன்
மானுக் காளே. ற்றம்பலம், ந்தரர் - திருத்தொண்டத் த்ொகை