கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்

Page 1
குருநகரென்ற கடலோரக் கிராமத்தில் 1948 பார்கழியிற் பிறந்த அத்தன்ாஸ் யேசு [[TTTTg அஞ்சலதிபர், ਠੰਘ சேவையில் இணைந்து கடமையாற்றி இருபது ஆண்டுகளின் பின்னர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
1969 இல் புதுக்கவிதை முயற்சியுடன் இலக்கிய உலகிற்கு அறிமுகமானதிலிருந்து இடையிடையே எழுதி வருகிறார்.
கலைப் பிரக்ஞை கொண்ட நவீனத் திரைப்படங்களில் மிக்க ஈடுபாடு கொண் டுள்ள இவர் 1979-81 வரை இயங்கிய யாழ் திரைப்பட வட்டத் தை உருவாக் கிய சிலரில் ஒருவர்.
அலை சஞ்சிகை, அவை வெளியீடு, தமிழியல் ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்காற்றி விரும் இவர் தற்போது யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவரும் திசை வார வெளியீட்டின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றுகிறார்.
LL LLLLL u K K L K L L S L L L L S LLL LLLLLL

fillfillEilgiall
ஏனைய கதைகளும்
அ. யேசுராசா

Page 2

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
sy. Guusrprintar nr

Page 3
ஆசிரியரின் மற்றுமொரு நூல் : அறியப்படாதவர்கள் நினைவாக (கவிதை) க்ரியா, சென்னை, 1984

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
9. CuL6JAFT
பூரணி வெளியீடு

Page 4
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத் தொகுப்பு முதற் பதிப்பு: மார்கழி, 1974 இரண்டாம் பதிப்பு: மார்கழி, 1989
(C) Sy. Guus TnTF nr
அட்டை அமைப்பு: Lipni rifesi)
அச்சு :
இராசகிளி பிரிண்டர்ஸ் சென்னை-600 020
விலை : ரூ. வை கிடைக்குமிடம்:
R šiluunt 288, ரர்யப்பேட்டை நெடுஞ்சாலை சென்னை-600 014
வயல் 5. கச்சேரி சந்து சென்னை-600 0 14

、鲇
இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுததைக்கான பரிசினை, 1975இல் பெற்றது.

Page 5
"எதற்காக எழுதுகிறேன் ? என் இயற்கையைக் கண்டுபிடிக்க எழுதுகிறேன்; சரி, என் இயற்கையென்ன ? மனிதனாக இருப்பதுதான் !’
-9 שמוrtif கு. அழகிரிசாமி

என்னுரை
1974இல் முதற்பதிப்பு வெளிவந்ததிலிருந்து இன்றுவரை, பல்வேறு கருத்துக்கள் இதைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 'இந்த நூல் ஒரே விரக்தியையும் நம்பிக்கை வறட்சியையுமே வெளிப்படுத்துகிறது” என்பது, மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்ட கருத்தாகும்.
ஆனால், இக்கருத்தில் உண்மையில்லை. வேறு பல அம்சங்களையும் பல கதைகள் கொண்டிருப்பதை வாசகர்கள் காணலாம். நான்கு கதைகளில்தான் துக்கமும், சலிப்பும் வெளிப்படுத்தப்படுகின்றன. ര இத் துக்கமும் அந்தஸ்து, பொருள்வசதி ப்ோன்ற "லோகாயத லாபங்கள்’ கிட்டாமற் போனமையால் வந்தவை யல்ல. மாறாக, மனித உறவுகளின் உடைவும், நெருக்கமின்மையும், அந்நியனாகிப் போனமை பற்றிய உணர்தலுமே இத்துக்கத்தினதும் சலிப் பினதும் காரணிகளாகும். குற்றஞ்சாட்டுவோர் இத்துக்கத்தின் "மனிதப்பண்பினை உணராமற் போய்விடுகின்றனர்.
மனித உறவுகளிற்குப் பதிலாகப் பொரு ளியல் உறவுகளையோ, பிரக்ஞையுடனிருத்த லுக்குப் பதிலாக பிரக்ஞை அற்ற வாழ்நிலை யினையோ கொண்டிருந்தால், அந்தப் பாத்

Page 6
8
திரங்கள் இத்துக்கத்திற்கோ சலிப்பிற்கோ உட் படுதல் சாத்தியமில்லைத்தான். ஆனால், அது "பொருளிற்குச் சரணடைந்து போகும்-தாமே ஒரு "பொருளாக மாறிவிடும்-மனிதக் குணாம் சங்களிலிருந்து விலகிய, இழிந்த - நிலையே யாகும். "பொருளைக் கடக்க முடியாமல் அதற்குச் சரணடைந்து போகும் வாழ்நிலை யைக் கொண்டவர்களும், கொச்சைப் பொருள் முதல் வாதிகளுமே, இத்துக்கத்தின் "மனிதப் பண்பினைக் காண மறுத்து, அல்லது காண இயலாமல் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்னொரு பக்கத்தில், மனித உறவுகள் உடைந்துபோகும் - அந்நியர்களாகிச் சித றுண்டுபோகும் - அவலம் மிக்க வாழ்நிலை களை நாம் வாழும் சமூகம் கொண்டிருப்பதால், அச் "சமூக யதார்த்தத்தை இந்த நான்கு கதை களிலும் காணலாமெனவும், நான் நம்பு கின்றேன். -
இத்தொகுப்பிலுள்ள நான்கு கதைகளை வெளியிட்ட் நெய்தல், மல்லிகை,பூரணி ஆகிய இதழ்களுக்கு எனது நன்றிகள்.
எனது இலக்கிய வாழ்வில், பல வழிகளிலும் உறுதுணையாக இருந்துவரும் நண்பர் இ. பத்மநாப ஐயரின் முயற்சியினாலேயே, இவ் விரண்டாம் பதிப்பு வெளிவருகிறது; அவரை நன்றியுடன் நினைவுகூர்வது, வெறும் சம்பிர தாயமானதொன்றல்ல.
அ. யேகராசா
குருதகர் 6-1-89

O வெக்கங் கெட்டவர்கள்.
"யேம்ஸ்கடைக்குக் கிட்ட வருகையில் பூவரச மரத் தடியில் நண்பர்கள் நிற்பதை, யேசுதாசன் கண்டான்.
மெல்லிதாய்ச் சிரித்தபடி அவர்களருகில் சைக்கிளை
நிற்பாட்டுகையில் "எ ப் ப ய டா ப் பா வந்தனி?” என அல்போன்ஸ் கேட்டான். :
*ராத்திரித்தான். ’ என்று முடிக்கமுன்னாலேயே,
யோண் பின்ரன் குறுக்கிட்டான்.
** மாஸ்ரர்; இங்கயெல்லோ பெரிய விஷயமெல்லாம்
99
நடக்குது. * — -
கொடுப்பிற்குள் சிரித்தபடி, அவன். எப்பவுமே, அவன் இப்பிடித்தான். ஏதோ ஒன்றை, மேலும் சொல்லத் தயிங் கியவனாய்.
'டேய், சொல்றா. பெரிய வெக்கம்” எமிலியூஸ் யோண் பின்ரனைக், கேலியாய் வற்புறுத்தியபடி, கிறீஸ்து ராசா உதட்டிற்குள் சிரிப்பு எழ, பின்னால் கைகட்டியவனாய் காலினால் மண்ணைச் சீத்தியபடி நின்றான். தள்ளி, "வலை பொத்தியபடி மண்ணில் இருந்த குலசிங்கமும் எழும்பி வந்தான். A. -
யேசுதாசனிற்கு ஒரே சஸ்பென்ஸ்; என்னவென்று விளங்காததில் ஒரே குழப்பமாய் .
*" என்ன விஷயம். நேர சொல்லுங்களன்” அறியும் ஆவலோடு கிறிஸ்துராசாவிடம் கேட்டான்.
'உமக்குக் கலியாணங்கேக்கினம்; அதான்.”

Page 7
கிறீஸ்துராசா சொல்லியதைக் கேட்டதில் யேசுதாசனிற்கு ஒருவித, நூதன உணர்ச்சி பரவியது. கூச்சச்சிரிப்பும் முகத்தில் பரவுகையில் விடுப்பறியும் முனைப்பும் எழும்ப 'அப்படியா. அப்ப சொல்லுங்களன்; நாங்களும் அறியத்தானே வேணும்” என யோண் பின்ரனைப் பார்த்தபடி.
'கடையிக்குள்ள கதைக்கலா”மென எமிலியூஸ் சொல்ல யேம்ஸ்கடையின் உள்பக்கத்தில் போய், வாங்கில் அமர்ந் தார்கள்.
எமிலியூசே ‘ரீக்கும் ஒடர் பண்ணினான். யோண் பின்ரன் தயக்கத்தை விட்டவனாய் விஷயத்துக்கு வந்தான்.
**உங்கட மாமா செல்வநாயகம் உம்மட்டக் கதைக்கச் சொன்னேர். காசு இருபதினாயிரம்; பெட்டைக்கு நகை, செபஸ்தியார் கோயிலடி வீடு தருவினமாம். உம்மட விருப்பத்தக் கேக்கச் சொன்னேர். s
*நல்லதுதானே. இப்ப எல்லாமாய் எழுபதினாயிரத் துக்குக் கிட்ட வரும். நல்ல இடம்; சொந்தத்துக்குள்ள...” எமிலியூசும் சேர்ந்து வற்புறுத்தியபடி "காசு பணங்களோ
டேயே இவங்கள், திருப்தி அடைவாங்கள். பண உடைமையிலேயே, உறவுகளைக் கட்டுகிற இந்த முதலா ளித்துவ அமைப்பில். , அதனுடைய போக்கில் எடுபட்டுச் செல்லுகிறவங்கள். இவங்கள்." مي.
பணத்தை, பணக்காரரைப் பெரிதாய் என்றுமே யேசு தாசன் நினைத்திருக்கவில்லை. மாறாய், வெறுப்பும் வஞ்சின முந்தான் அவன் மனதுள், பெருகி வளர்ந்தபடி இருந்தன. தன்னுடைய கலியாணத்தின் மூலம் ‘சம்மாட்டியென்றோ, "குத்தகைக்காரனென்றோ இருந்த ஊர்ப் பிரமுகர் குடும் பத்திலொன்றோடு கலந்துவிடும் சந்தர்ப்பத்தைப் பார்த்தும், அவன் காத்திருக்கவில்லை.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 2

அவனுடைய எண்ணங்கள், தேடல்கள் எல்லாம் வேறான வையாய் இருந்தன. தன்னுடைய ஆளுமையினைத் திருப் திப்படுத்திய்படி. பரஸ்பர புரிந்துகொள்ளல்களோடும் கூடிய ஒரு உள்ளத்திற்கான தேடல். அவ்வாறான தேடலிற் சந்தித்துக் கொண்ட அவள்.
அவனுள் நினைவுமின்னல்கள் அடுக்கடுக்காய் வெட்டிப் பாய்ந்தன. " .
“பேராதனையில் ஒரு வருஷமாய் அவளுடன் அறிமுகங் கொண்டு பழகிய்போதும், இரண்டு மூன்று மாதமாய் எழும்பத் தொடங்கிய ஆசை. "சங்கமித்தா ஹோலில்" வட்டமேசைக்கு முன்னால் இருந்து கதைக்கையில் இரண் டொரு மாதமாய், நாக்கைக் கடித்து வெட்கத்தில் தலை சாய்த்த அவளின் கதைகள். நாணம் நிறைந்த முகத் தின் பின்னணியில் அந்தக் கண்களின் பிரகாசம்."
"எவ்வளவு பரவசம் கொடுத்தபடி. ‘வெக்கேசனிற்கு" வீட்டுக்கு வரச்சொல்ல அவனும் போன பொழுது அவளது குடும்ப நிலைமை இன்னும், நன்கு விளங்கியது. சின்ன வீடு; வயதுபோன தந்தை, ஒரே அண்ணனில் தங்கிய குடும்பம்.
அங்கு எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை; அவர்களிட மிருந்து அவனுந்தான் ஒன்றையும் எதிர்பார்த்திருக்க வில்லையே..! འ། །
தடையாய் முன் கிடந்த சாதி, மதம் இரண்டையும் தாண்டவும் மனத்துள் வைரம் பாய்ந்து வந்தது.
மலர். நீர் உறுதிப்படுத்தினால் நானும் உறுதிப் படுத்துவேன்.'
**இதில என்ன யோசிக்கக் கிடக்கு. சொந்தத்துக் குள்ள. ஒமெண்டு சொல்லுமன்.”
யோண் பின்ரன் அவனது மெளனத்தைக் குலைத்தான்.
3 | வெக்கங் கெட்டவர்கள்

Page 8
"நான் என்னண்டு சொல்லுறது. அவையள, வீட்ட கேக்கச் சொல்லுங்க...” யேசுதாசன் தட்டிக் கழித் தான். அவர்களும் இரண்டு மூன்று கதைகளின் பின்னால் மெளனமாகிப் போனார்கள்.
அவர்கள் போனபிறகு, கிறீஸ்துராசாவுடன் தனிய "கடற்கரைக்குப் போகையில் ங்கிடியாய்க் கிறீஸ்துராசா கேட்டான்.
**நல்ல காசு. 9 » e ao » e !, சொந்தக்காறப் பெட்ட. அப்ப கட்டுமன்’. ر- ... "
யேசுதர்சனிற்குச் சிறிய ஆத்திரம்; அலட்சியச் சிரிப்புத் தோன்ற "கிறீஸ்துராசா. " எனத் தொடங்கிக் கதைத்தான்.
பத்துப் பன்ரெண்டு வருஷமா இவங்க எங்களோட கதைக் கிறயில்ல. ; காசுச் செருக்கு. சம்பந்தமெல்லாம் தங்களப்போல காசுக்காறரோடதான். இப்ப காற்சட்ட போட்ட கவண்மேன்ற் மாப்பிள்ள வேணுமாம்; அதான். எங்கட்ட ஓடி வாறாங்க. இப்பயும் நாங்களில்ல.லோங்சும், வேலையுந்தான் அவங்களுக்குப் பெரிசு. சொந்தமெண்டா லென்ன, புறத்தியிக்குள்ள எண்டாலென்ன நல்ல மனுசரத் தானே நாங்க, கண்டுபிடிச்சுப் பழக வேணும்.”
அவனுக்குப் பழைய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தன. * - s தவணை முடிய, "அறுதி’க்கு வைச்ச காணியையும் வீட்டையும் விட்டு அண்ணனெண்டும் பாராமல் எழும்பச் சொன்ன மாமியும், இந்த மாமாவும். y ༦, ,
*எந்தப் பெரிய சுரண்டல். நாலாயிரத்துக்கு வச்ச காணியும் வீடும்; இப்பயும் முப்பத்தையாயிரத்துக்குக் கூடப் பெறும்."
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 14

*செபஸ்தியார் கோயிலடியில் ஏழைப், பறையர்களை ஏமாற்றிப் பறித்த காணித் துண்டுகள். குடியெழுப்பப்பட, சாக்கினால் பந்தல்போட்டு ஒழுங்கையில், குமர்ப் பிள்ளை களோடும் இரவையும் பகலையும் கழித்த அவர்கள்." "இப்பிடித்தான் இவங்க சொத்துச் சேக்கிறாங்க." "இந்தப் ப்ணக்காறச் சாதியே." அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. "இந்தக் காசு, ஆருக்கு வேணும் 0 P a 9 db. ၇% வெறுப்போடு சொன்னான்.
2
மூன்று மாதங்களிற்குப் பிறகு லீவில் ஊரிற்கு வந்திருந்
தான.
பப்ளிக் லைபிறறிக்குப் போய் விட்டு மத்தியானம் திரும்புகையில் முனிசிப்பாலிற்றிக் கட்டிடத்தில் நின்றபடி எமிலியூஸ் கையைக்காட்ட, நின்றான்.
மாடியில் ஒவ்வீசில் நின்றும் இறங்கி இவனுக்குக்கிட்ட
*மாஸ்ரர். நீர் வந்ததே எனக்குத் தெரியாது, உங்கட மாமா பத்து மணி போல, தம்பி வந்திருக்கு. ஒருக்காக் கேட்டுச் சொல்லு தம்பி, எண்டு அந்தரப்பிடிக்குது, அப்பதான் எனக்கு நீர் வந்து நிக்கிறது தெரியும்.”
*காலமதான் வந்தனான். லைபிறறிக்கு வரயிக்க, வழியில எங்கயும் கண்டிருக்கும். ’ யேசுதாசன் சொன்னான். ܫ
"ஐயோ மாஸ்ரர். அந்தாளோட பெரிய கரச்சல்.
காணுற நேரமெல்லாம் அரியண்டப் படுத்தினபடி. கணக்கப்பேர் உம்மக் கலியாணங் கேட்டு ஓடித்திரியினமாம், அதான் தான் அவசரப்படுறேராம்.”
藤 5 வெக்கங் கெட்டவர்கள்

Page 9
''. . . . . . . . எனக்குப் பெரிய கரச்சலாய்ப் போச்சு. வாற ஆத்திரத்துக்கு, அறம்புறமாய்ப் பேசிப் போடுவன்; பெரிய மனுசனாக் கிடக்கு. 99
திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டதில் எழுந்த எரிச்ச9 அவனது பேச்சில் மண்டிக் கிடந்தது.
'எமிலியூஸ்.இனிமேல்க் கேட்டா ஒண்டும் சொல்லுறே ரில்ல. அவரோட, இல்லாட்டி தாய் தகப்பனோட கதை யுங்களன் எண்டு ஒத்தையில முடிச்சுப் போடும்.”
எமிலியூசுடன் கதைத்துவிட்டு வருகையில் வீட்டுக்குப் போனதும் அக்காவிடம் இதுபற்றிச் சொல்ல வேணுமென நினைத்துக்கொண்டு வந்தான்.
அக்கா "குசினி'க்குள் சமைத்தபடி இருந்தாள்; அம்மா 'சின்னக்கடைக்குச் சென்றுவிட்டதும் வசதியாய்ப் போயிற்று. எமிலியூஸ் சொன்னதையெல்லாம் சொல்லியவன் "அவையள் இஞ்ச கலியாணங் கேட்டு வந்தவையளா..?” எனக் கேட்டான்.
“ரெண்டு மூண்டு மாதத்துக்கு முன்னர் வந்து கேட்ட வயள். அம்மா எங்களுக்குப் புறியமில்லயெண்டு சொல்லி விட்டிற்றா. 99
"இஞ்ச வந்தவையளோ. ! அப்ப பெரிய முசுப் பாத்தியாயிருந்திருக்குமே..?"
**ւն...... மாமியும் மாமாவும் வந்தினம். ஐயா வாசலில
நிண்டவர் வந்தவையள உள்ள வரச் சொன்னேர். கதிரையில இருந்தபடி ஒராள் ற்ற முகத்தை ஒராள் பாத்தபடி இருந் தினம். ஐயா, வந்த விஷயத்தைச் சொல்லுங்களன் எண்டு கேட்டேர். பிறகுதான் 'கலியாணங் கேட்டு வந்தனாங்க" ளெண்டு மாமி சொன்னா. ஐயா ஒண்டும் பறய இல்ல.
அம்மாதான் சொன்னா...அவனுக்கு இப்ப கலியாணங் கட்டுறதில விருப்பம் இல்ல யெண்டு. “எங்கட காசுபன
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் | 8

மெல்லாம் அண்ணன்ர பிள்ளைக்குப் போகட்டுமெண்டுதான் வந்தனாங்க எண்டு மாமி சொன்னா. *. ஐயோ நீங்க காசுக்காறர்.இவ்வளவு நாளும் இருந்ததுபோல உங்களப் போல ஆக்களோட இருங்க. நாங்க ஏழ பாழையள்., எங்களோட இருந்த மனுசரோட இருக்கிறம் எண்டு ' அம்மா சொன்னா.
மாமாவுக்கும் மாமிக்கும் முகம் தொங்கிப் போச்சு. கொஞ்சநேரம் ஒண்டும் பேசாம இருந்திற்று எழும்பிப் போயிற்றினம்.”
அவனுக்குத் தன் அம்மாவின் மேல் வியப்புக் கலந்த திருப்தி எழும்பியது. "மனிசி காசப் பெரிசா மதிக்கயில்ல, மணிசரத்தான் பாக்குது. ’ என நினைத்துக் கொண்ட வனின் மனதில் மாமியின் மேலும், மாமாவின் மீதும் வெறுப்புத்தான் பரவியது.
“சீ.. இவ்வளவு நாளும் எட்டியும் பாராதவங்க, இப்ப தங்களுக்குக் காரியம் ஆகவேணுமெண்ட உடன வந்திற் றினம். , வெக்கம் ரோசம் இல்லாம.
இந்தக் காசுக்காறருக்கு சுயநலந்தான் பெரிசு. மான்ம் ரோசம் இல்லாதவங்க.
தங்களப் போல, காசெண்ட உடன பல்லிளிச்சு போடுவ மெண்டு நினைச்சிற்றாங்க போல. * வெறுப்பும் ஆத்திர மும் மூள, é
‘என்னட்டக் கதைச்சிருக்க வேணும்;~ நல்லாக் குடுத் திருக்கலாம்" என எண்ணிக் கொண்டான்.
3
மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகு பஞ்சியில் நித்திரை
கொண்டு. எழும்பியவன் வெளியில எங்கயாவது போக வேண்டும்போலத் தோன்ற வேட்டியை உடுத்தி சைக் கிளையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டான். ሰ
Í
7 / வெக்கங் கெட்டவர்கள்

Page 10
"வாடி' குலைந்து வெகுநேரமாகியதில் றோட்டில் நட மாட்டம் குறைந்திருந்தது.
காயப்போட்ட கருவாடுகளைக் கூடைகளில் பெண்கள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள்; சுருட்டுக் குடித்தபடி குந்தி இருந்த ஒரு மனிசி இவனைக் காட்டி மற்றப் பெண்டு களோடு" எதையோ கதைத்தாள்.
பார்த்தும், ஏதும் அர்த்தம் கொள்ளாதவனாய்ச் சைக் கிளில் இவன்.
கருவாட்டுக் கொட்டில்களைக் கடந்து ஐஸ் பக்டரி மூலையில் திரும்புகையில், புகையிலைக் கிட்டங்கிக்குக்கிட்ட *செல்வநாயகம் மாமா நிற்பது போலிருந்தது. சைக்கிள் கிட்ட வருகையில் அவர்தானென நிச்சயப்படுத்திக் கொள் கையில் செல்வநாயகம் வலை வீசினா, ஒண்டுந் தப்பாது." என்று அவர் சொல்லிய வசனமும் நினைவில் தட்ட உதட் டில் கேலிச் சிரிப்பும் அரும்பியது.
அவரும் இவனையே பார்த்தபடி, 'தம்பி. 9(5 விஷயம். ’ என நிற்கும்படி சைகை காட்டவும் வேணு மென்று அவரைக் கடந்தபடி சைக்கிளை நிற்பாட்டினான். சைக்கிளை நிற்பாட்டிய இடத்திற்கு ‘வண்டி’ குலுங்க சிறிய ஓட்டத்தோடு அவரும் வந்தார். s
அவன் சைக்கிளை விட்டு இறங்காமலே இருந்தான். 'தம்பி. எமிலியூஸ் எல்லாம் சொல்லியிருக்கும். உம்மட விருப்பத்தச் சொல்லுமன்.”
இழுத்து இழுத்துக் குழைவாய்க் கதைத்தவர் ஆவலாய், பதிலை எதிர்பார்த்தவாறு நின்றார்.
இவனது பார்வை அவர்மேல் பதிந்தது. கழுத்தைச் சுற்றித் தொங்கிய இரட்டைப் பட்டுச் சங்கிலி “வண்டி"யின் மேல் வளைவாய் விழுந்து கிடந்தது. ஒவ்வொரு கையிலும், மூன்றுவிரல்களில் மோதிரங்கள் மின்னின. உப்புத் தண்ணீரில்
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 1 8

கால்படாமலேயே 'வாடி”யிலும் வீட்டிலும் நின்றபடி சுரண்டிச் சேர்த்த காசில் கொழுத்திருந்த, ஒரு வகைமாதிரிச் சம்மாட்டி. 9 ۔
இவங்கள் என்ன மணிசர்.இவ்வளவு நாளும் காசு கண்ண மறச்சிட்டுது, இப்ப பெரிய அந்தரப்படுறேர்."
எண்ணங்கள் பரவுகையில் கோபமும்., வெறுப்பும் எழுந்துவர ஒன்றும் பறையாமல் நின்றான்.
‘தூண்டல் கயிற்றை "மரக்கலில் போட்டுத் தூக்கிய படி வந்த தோமாசும் அருள்சீலனும் சிரித்தபடி கடந்து சென்றபோதும், பதிலுக்குச் சுமுகமாய் அவனால் சிரிக்கவும் முடியவில்லை.
திடீரென இஞ்சின்போட் ஒன்று ஸ்ரார்ட் எடுத்து தண்ணிரைக் கிழித்துச் சத்தமிட்டுச் சென்றது.
கொஞ்சத் தூரத்தில் விக்ரர் புட்டியருகில் கடலில், ஒற்றைப் பருந்து பதிவாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
அவனுடைய மெளனத்தைச் சம்மதமென அவர் நினைத் தார் போலும். அவர் மெது மெதுவாய் முன்னேறினார்.
'தம்பி.என்ர படவு காசெல்லாம் ஏன் புறத்தியிக் குள்ள போவான். *பிறான்சிஸ்கா’வும் உம்மட மச்சாள் தானே.
‘புறத்திப் பெடியனெண்டா என்ர பங்க்ப் பிரி, அப்படி யெண்டெல்லாம் சொத்துக்குக் கரச்சல் குடுப்பானெண்ட கவலை போல...”
*வீட்டயும் சரிவராது எண்டாப் போல, என்னை வளைக்க வருகினம்.’
*காசயும் பெட்டயையும் காட்டினா, ஒரு இளந்தாரிப் பெடியன் ஒமென்பான்தானே எண்டு, நினைச்சிற்றாங்கள் போல. 9
9 வெக்கங் கெட்டவர்கள்

Page 11
மனதுள் இந்த நினைவுகள் எழும்ப ‘என்ர சுயமரியா தையையே அவமதிக்கிறாங்கள்." என்ற உணர்வும் தோன்ற அடிமனதிலிருந்து மெல்ல மெல்லப் பெருகிவந்த ஆத்திரம் உடலெங்கும் பரவ விறைப்பாய் அவரைப் பார்த் தான். M
அவனது அந்த மாறிய பார்வையை அவர், எதிர் பார்க்கவேயில்லை! திகைப்பாய் அவனைப் பார்த்தார்.
"பொழுது பட்டுக்கொண்டிருந்த ‘பண்ணைக் கடற் பக்கச் செவ்வானத்தின் பின்னணியில் அவன், மேலும் அச்ச மூட்டுபவனாய் அவருக்குத் தெரிந்தான்.
அவனுடைய ஆத்திரம் வெளிப்பாய்ந்தது. **இஞ்சேரும் நாங்க விசரரில்ல. பத்து வருசமா திரும்பியும் பாராதவங்களோட, காசெண்டதும் பல்லக் காட்டிறதுக்கு வேற ஆரயும் பாருங்க.
நாங்க மணிசரத்தான் பாக்கிறம் P எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு; உங்களப்போல, வெக்கங்கெட்டனாங்களில்ல. 9s :
சோழ்கத்தின் வீச்சில், 'பாலக்கட்டின் மேலால் எழும்பி யடித்த அலைத்தண்ணிர் ரோட்டை நனைத்து, வழிந்தது.
- கார்த்திகை 1973
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் | 10

Lafiaj
அது அற்புதமாக இருந்தது; நிச்சயமாக எனக்குத் தெரியும், 8-30க்கு "மூர்' றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்து போகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதை எழுதப்பட்டிருக்கவேண்டும்.
கையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள், சோகம் நிறைந்தவளாக மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.
யாரோ மூர் றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8-35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும்.
எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன்; அது ‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்து விட்டன. ܐ
2
அது எதிர்பாராமல் நிகழ்ந்தது. "சரஸ்வதி மண்டபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழா முடிந்து திரும்பிக்கொண் டிருந்தபோது, ஞானலிங்கம் அவரை அறிமுகப்படுத்தினான்.
"இவர்தான் ‘சுப்பிரமணியன்’. நீர் முந்திச்சொன்ன ‘உறவுகள் பிரியும் கதையை எழுதினவர்.”
சந்தியில் ஞானலிங்கம் விடைபெற்றுக் கொள்ளுப் பிட்டிக்குச் சென்றான். நாங்கள் வெள்ளவத்தைக்குக், கதைத்தபடி நடந்தே வந்தோம்.

Page 12
அந்த வீரகேசரிக் கதையை நான் பாராட்டியபோது, அவர் நன்றி தெரிவித்தார். 'கடற்கரையால போகிற, அந்தச் சிங்களப் பெட்டையத்தானே அதில் எழுதியிருக் கிறீர்” என நான் கேட்டபோது சிறிது தாமதித்துவிட்டு, தன் நண்பரைப் பார்த்து
"நீரும் அந்தப் பெட்டையைக் கண்டிருக்கிறீர்தர்னே? உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத் தெரிய இல்ல!; நீர் ஒண்டும் அதப்பற்றிச் சொல்ல இல்ல”, என்ற படி ன்ன்னைப் பார்த்து,
'நீர்தான் ஐசே சரியாய்ப் பிடிச்சிருக்கிறீர்!” என்று மெல்லிய வெட்கச் சிரிப்புடன் சொன்னார். தொடர்ந்தும் கதைத்தபடி இருந்தார். அவரோடு கதைப்பதிலும் ஆவ லாக இருந்தது. ་་
இடுப்பளவில் உயர்த்தப்பட்ட இடது கையும் சிறிது சாய்ந்த தலையுமாகக், கிறுகிறெனச் சிறிய சுவடுகள் பதித்து நடந்தபடி அவர் கதைப்பது, விசித்திரமாய்த்தான் இருக் கும்.
பேச்சிடையே, தன்னைப்பற்றிய விஷயங்களிற்கூட "இருக்கும்; சில வேளை எழுதியிருப்பன்; எழுதாமலும் இருந்திருப்பன். எனக்குத் தெரியாது. ’ எனத் தன் னைப்பற்றித் தனக்கே நினைவில்லாததைப்போல அவர் கதைத்தபோது, எனக்கு விசித்திரமாக இருந்தபோதும், அதனாலேயே தொடர்ந்தும் அவரோடு தொடர்புகொள்ள ஆவல் ஏற்பட்டது.
3
அதன் பின்னால் ஸ்ரேஷனில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம். அந்த 8-35 ஸ்லோ ட்றெயின் கோட்டையை அடையும்வரை, அந்தப் பதினைந்து நிமிடத்தில் நாங்கள் கலை இலக்கிய விடயங்களைப் பற்றிக் கதைத்துக்கொள்
தொலைவும் இருப்பும் ஏனைய கவிதைகளும் ! 12

வோம். சில வேளை மெளனமாக அது, கழியும். அவர் ரயிற் பெட்டியின் வெளிக்கம்பியைப் பிடித்தபடி, கடலையே இலயிப்பாகப் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த மெளனமும் அற்புதமாக இருக்கும்.
கோட்டையில் "பூந்தோட்ட வீதி'யில் அவர் என்னைப் பிரிந்து தன்னுடைய ‘ஒவ்வீசு’க்குப் போவார்.
அந்நாட்களில் "ஈழம்" தினசரியின் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்திருந்தன. சுப்பிரமணியனின் "விசரர்கள்? அதில் பாராட்டைப் பெற்றிருந்தது.
உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கவில்லைத்தான். மனக் கோளாறு கொண்ட பாத்திரங்களின் இயக்கங்கள். ஆனால், அதில் கையாளப்பட்டிருந்த நடை. அது அற்புதமானது.
அவரது எழுத்து நடையில் எனக்கு ஒரே இலயிப்பு.
நான் சொன்னேன், "உள்ளடக்கத்தில் கவனஞ்செலுத்தி னால் உம்மட அருமையான நடைக்கு பிரமிக்கத்தக்க சிறு கதைகளை நீர் எழுதலாம்.” ஆனால் அவர்,
'நான் என்ன செய்யிறது ஐசே, இந்த உலகமே அழ கான காட்சிகளால, இனிய சோகங்களால நிறைஞ்சிருக் கிறதைப்போல. என்ர மனசுக்குள்ள கிடந்து பிணை யிற உணர்ச்சிகளையெல்லாம் அப்பிடியே "சொல்லவேணும் போலக் கிடக்கு அதத்தான் எழுதிறன்; எழுதினா ஒரு திருப்தி.” -
*மெளனி"யும் "லா. ச. ரா. வுமென்றால் அவருக்கு ஒரே இலயிப்பு. "எவ்வளவு அழகு! நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம், என்னமாதிரி எழுதுகினம்! எல்லா ராலயும் இப்பிடி எழுத ஏலாது ஐசே! இவையின்ர தாக்கத் தர்லதான், எனக்கும் எழுத விருப்பம்.”
13 பிரிவு

Page 13
* இடையிடையில், தான் எழுதிய சிறுகதைகளையும் காட் டுவார். அவருக்கு அவற்றை எழுதியதே திருப்தி. பத்திரிகை களுக்கு அனுப்புவதிலும் அக்கறையில்லை.
"மோனக்குரல்", "குளிர்ந்துபோன நிராசைகள்', 'ஆத்மா வின் வறுமை’, ‘ஓ! இந்த அழகுகள்!” என்பவையெல்லாம் அவர் காட்டிய சிறுகதைகளே.
மழைதூறற் பொழுதில் தனிமையாய்க் கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள்; பனிப்புகாரில் தோய்ந்த மலைத்தொடர்கள்; நிறைவேறாத ஆசைகள்; விசர்ர்களைப்போல் இயங்குகின்ற பாத்திரங்கள்; ரயிலின் கூ. என நீண்ட சோகக்குரல். எல்லாம், சுற்றிச் சுற்றி அவற்றில் தலைகாட்டும். அவரது அழகியல் நோக்கின் வெளிப்பாடுகளை, மனோ ரம்யமான அந்த நடையை நான் வியந்து பாராட்டுவேன். ஆனால் அந்த விசர்ப்போக்கான பாத்திரங்களை, திரும்பத் திரும்ப எழுதும் மன முறிவுகளைப்பற்றிக் கதைக்கும்போது நாம் கருத்து வேறுபடுவோம். அவ்வேளைகளில் விட்டுக் கொடுக்காதபடி அவர் எதையெதையோவெல்லாம், கதைப்
பார்.
சமீபத்தில் ‘ஓர், தனி உலகம்" என்ற அவரது சிறுகதை வெளி வந்திருந்தது. அதில் வருகின்ற இளைஞன் வேலை செய்யவே பஞ்சிப்படுகிறான்; வேலை ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தின் அழகை இரசிக்கவே, ஆசைப்படுகிறான்.
அதைப்பற்றிக் கதைத்தபோது, அவரிடம் சொன்னேன். *சுப்பிரமணியம், இப்படிச் சும்மா உலகத்தில இருக்க ஏலாது.அழக இரசிக்கத்தான் வேணும்.ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும். புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கை யில இருந்தும், நாங்கள் ஒட ஏலாது.”
ஆனால், “எங்களுக்குப் புற உலகத்தைப் பற்றிக் கவலை யில்ல. எங்கட உலகம் எங்களுக்குள்ளேயே இருக்கு;
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 14

அதிலேயே எங்களுக்குத் திருப்தி, அதிலயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சுபோகும்” என்று திருப்பிச் சொன்னார்.
'இதெல்லாம், வசதியான ஒரு கும்பலின்ர சிந்தனைப் போக்குகள். பெரும்பாலான மக்கள் இப்படி வாழ ஏலாது, ஏன், உம்மட குடும்ப நிலைக்கும், இது ஏலாது. உமக்குத் தங்கச்சிகள் இருக்கு: அப்பருக்கும் வயது போயிற்றுது. அப்ப இதெல்லாம், நீர்தானே பாக்க வேணும். இந்த உப் புப் புளிப் பிரச்சினைகள் எனக்கு முக்கியமில்லை எண்டு நீர் சொல்ல ஏலாது." - நான் சொன்னேன்.
“அவையவையின்ர பாட்டை அவையவையள் பார்த்தா லென்ன? நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலை யில சுமக்க வேணும். நாங்க, சுதந்தரமாயிருக்க வேணும். எங்களுக்கு, எங்கட மனத் திருப்திதான் முக்கியம். இல்லை யெண்டு அவையள் ஆரும் வற்புறுத்தினால். நான் செத்துப் போவன்.'"
நான் அதிர்ச்சியில் மெளனமாகிப் போனேன்.
4.
அடுத்த மாதம் முழுவதும் நான் அவரைச் சந்திக்க வில்லை. காலையிலும், மத்தியானத்திலும் இரவிலுமாக என்னுடைய வேலைநேரம் மாறிமாறி அமைந்தது. "போஸ்ற் ஒவ்வீஸ்' என்றால் அப்படித்தானே? இடையிடையில் ஓவர்ரைமும் செய்யவேண்டியிருந்தது. இயைபற்ற வேலை நேரத்திலும் இயந்திர உழைப்பிலும் மனம் வெறுப்படைந் திருந்தபோதிலும், வாழ்வின் சுமை காரணமாக அதில் கலந்து போனேன். சுப்பிரமணியனும் என்னைச் சந்திக்க வில்லை.
அந்த மாதம் வறட்சியாகவே, ஓடிமறைந்தது.
15 பிரிவு

Page 14
5
இந்த மாதம் முழுவதும் 9 மணி நேர வேலை. முதலாம் திகதி 8-30க்கு ஸ்ரேஷனுக்கு வந்தபோது ட்றெயினில் சுப்பிரமணியனைச் சந்தித்தேன். ஆனால், இரண்டொரு பேச்சுக்களோடு அவர் மெளனங் கொண்டார். வெளிக்கம்பி  ́ 60pu It ́ . பிடித்தபடி, அடிவானத்தில் எதையோ தேடுகிற வரைப்போல கடற்பக்கத்தையே வெறித்து நோக்கியபடி நின்றார். ‘பூந்தோட்ட வீதி'யில் பிரிந்து செல்லும்வரை அவர் ஒன்றுமே கதைக்கவில்லை.
அதன் பின்னால் ஒரு கிழமைவரை. நான் அவரைச் சந்திக்கவில்லை. அந்தப் பிரிவு, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. - ጳ
அடுத்த போயாவிற்கு மற்றநாள் ஸ்ரேஷனில் நின்று கொண்டிருந்தபோது, சிறிது தள்ளி யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த "பேரம்பலம்" என்னைக் கண்டுவிட்டுக் கெதியாக வந்து ஓர் அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.
“இஞ்சேற்றாப்பா, சுப்பிரமணியன் தற்கொலை செய் திற்றானாம்; தெல்லிப்பளையில தங்கட வீட்டுக்கருகில ட்றெயினுக்கு முன்னால பாஞ்சானாம். ரெண்டு நாளுக்கு முந்தித்தான் இது நடந்திது காலம ஊரால வந்த ஒரு பெடியன்தான் சொன்னான்.”
என் நெஞ்சம் அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில், நான் மெளனத்தில் புதைந்து போனேன். நம்ப முடியாதது நடந்து முடிந்தும் விட்டதை யறிய, மனது துயர் கொண்டது.
ஓ! சுப்பிரமணியனை இனிச் சந்திக்க ஏலாது. குறுக்குக் கம்பியைப் பிடித்தபடி - ரயிலில் கதைக்கும் அந்த அருமை யான நேரங்களும், இனிமேல் வரப்போவதில்லை.
‘எல்லாம் முடிந்துபோனது.”
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 16
t

கணங்கள், ஊர்ந்து கொண்டிருந்தன. கல்கசைக்கு போகும் ‘கரிக்கோச்சி” கூ. என நீளமாய்க் கூக் குரலிட்டபடி ஓடியது.
‘துயரத்தில் புதைந்துபோன ஒரு பெண்ணின் சோகக் குரலைப் போல. ’ என அக் கூவலை ஒரு கதையில் சுப்பிரமணியன் எழுதியிருந்தது, உடனே நினைவுக்கு வந்தது. *T -
அது பெண்ணின் குரலோ என்னவோ..எனக்கும் சோகக் குரலாகவே, அது இருக்கிறது.
தை 1970
17 | பிரிவு
தொ-2

Page 15
வரவேற்பு.
m ロ
பூரீ லங்கா புத்தகசாலை'யிலிருந்து "தாமோதர விலாசிற்குள் நான் நுழைந்தபோது வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டு, அவன் என்னை வரவேற்றான். நானும் பதிலுக்குச் சிரித்தேன்.
கை கழுவிவிட்டு உள்ளுக்குள் சென்று அமர்ந்தபோது முன்னுக்கு வந்து, ‘என்ன சாப்பிடுறிங்க” என்று ஆதர வாகக் கேட்டான். S.
நான் சொல்லியபடி அவன் கொண்டுவந்துவைத்த வடையைச் சாப்பிடத் தொடங்கியபோது,
"உங்கட ஊர் இங்கயா? லீவில வந்தனீங்க Gursho?” அவன் கேட்டான்.
ஓம்’ நான் தலையை ஆட்டினேன்.
*குருநகர். பழைய போஸ்ற் ஒவ்வீஸ். அதுக்கங்கால கொஞ்சம் போகவேணும்.”
*நான் அங்கால போகஇல்ல.” மேலே ஒன்றுமே தோன்றாதபடி நின்றான். பழையபடி அதே வெட்கம் நிறைந்த சிரிப்பு. / a
நான்தான் தொடர்ந்தேன். "அந்தக் கொழும்புக் கடைய ஏன் 6L6afi' 'சம்பளங் காணாது.”
"இஞ்சவந்து, இப்ப எத்தின மாதம்?”

'அஞ்சு மாதம்”
'அங்கயும் இப்ப எல்லாம், புது ஆக்கள்
"ரீ மேக்கர். ဝှား၊ s
‘ஓ! அந்தாள், பழைய ஆள்”
அவன் உள்ளுக்குப் போனான்.
"இதார்? யாரோ கேட்டார்கள்.
'நான் நிண்ட கொழும்புக் கடைக்கு சாப்பிட வாற
அது அவனின் குரல்தான். வேறு ஒன்றும் கேட்கவில்லை.
வடைகளைச் சாப்பிட்டுவிட்டு தேத்தண்ணிருக்குச்
சொல்ல ஆளைப் பார்த்தபோதும் அவன் வரவில்லை. வேறொரு பெடியன் வந்தான். r
நான், ஸ்றோங்கப் ரீ’க்குச் சொல்லிவிட்டு இருந்தேன்.
அப்போது, அவன் என்னைக் கடந்து முன்னுக்கு - கவியர் மேசைக்குக் கிட்டப் போனான். உடனே திரும்பி வந்தவன் என்னைப் பார்த்து விட்டு, மெல்லிய ஓட்டத்தோடு உள்ளுக்குச் சென்று "கப் ரீ’யை எடுத்து வந்தான்.
"f"யைக் குடித்து விட்டு பக்கத்துக் கதிரையிலிருந்த புத்தகப் பார்சலையும் எடுத்துக்கொண்டு எழும்ப ஆயத்தமான போது அவன் சொன்னான்;
“பில்ல நான் குடுத்திற்றன்.”
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"எங்க?" நான் கேட்டேன்.
‘இல்ல. நான் அங்க குடுத்திற்றன். இப்பதான் காசு குடுத்தனான்’ என்றபடி அதே வெட்கச் சிரிப்புடன் கவியரைக் காட்டினான்.
நான் எதிர்பார்க்கவேயில்லை எழும்ப ஆயத்தமானவன்
அப்படியே கதிரையில் இருந்தேன். எனக்கு ஒரே ஆச்சரியம்.
19 | வரவேற்பு

Page 16
இப்பொழுதுதான், அவன் உள்ளுக்குப் போய்விட்டு வந்தது விளங்கியது. -
உடனே எழுந்து சென்றுவிடாதபடி, அவனது செய்கை என்னைக் கட்டுப்படுத்தியது. அவனோடு இன்னும் நெருங்க வேண்டுமென்று நினைத்து,
'உம்மட பேர்.? வேதம் எண்டு தெரியும்; பேர் ஞாபகத்திற்கு வருகுதில்ல.” என்றபடி அவனைப் பார்த்தேன்.
அவன் சிரித்தபடி சொன்னான்-“மரியசூசை” “இப்பயும் அங்க ஒரு வேதக்காறப் பெடியன் நிக்கிது; பேர் அந்தோனியாயிருக்க வேணும்.” ”.எனக்குத் தெரியாது ; .. . . . ...الايي ؟؟ தொடர்ந்து ஓர் மெளனம். நேரம் போய்க் கொண்டிருந்தது; பப்ளிக் லைபிறறிக்கும் போக வேணும்’
இதமான மெளனத்தோடேயே நான் போவதற்காக
அந்த எழும்பி,
‘அப்ப. . நான் வாறன்’ என்று சொன்னபோது அவன் சரி என்பதைப்போல் தலையாட்டி, என்னைத் தொடர்ந்து வந்தான்.
கவியருக்குக் கிட்ட வந்தபோது நான் திரும்பினேன். *சரி. , வாருங்க” என்று என்னைப்பார்த்துச் சொன்னான். எதற்கோ அவன் பெருமிதப்படுவது தெரிந்தது.
கவியரும் பழகியவரைப்போல் சிரித்தார்.
r f{; அப்ப நான் வாறன்.” என்று அவனுக்குச்ك » » சொல்லியபடி வெளியே வந்தேன்.
சைக்கிளை எடுத்து ஏறி அமர்ந்து ஓடியபோதும், அவனின் ஞாபகம். -
“மரிய சூசை.
தொலைவும் இருப்பும். ஏனைய கதைகளும் 1 20

வெள்ளவத்தையில, "மஹா லசுஷ்மி பவானில’ நாங்க கதைச்சிருக்கிறம். தேத்தண்ணீர்க் கடைப் பெடியங்களில, எனக்கு எப்பவும் அனுதாபம். காலமையில இருந்து ராப் பத்து மணிவரை, ஒ. ! இந்த நீண்ட நேரம் இவங்க வேலை செய்ய வேணும்.’
கடைக்கு வந்தபோது நான் ஆதரவாக நடந்து கொண்டது அவனை என் மேல், ஈடுபாடு கொள்ளச் செய் திருக்கலாம். அவனின் தோற்றத்திலும், பழக்கத்திலும் எனக்கும் ஒருவித பிடிப்பு. எப்பவோ ஒருக்கா அவனின் பேரைக் கேட்டு வேதக்காரனெனத் தெரிந்தபோது எனக்கு ஆச்சரியம். அவனது ஊர் நாவலப்பிட்டி? அப்ப தோட்டக் காட்டிலும் வேதக்காறர் இருக்கினம்.
நானும் வேதக்காரனென்பதை அவனுக்குத் தெரியப் படுத்தினபோது அவனுக்கு ஆச்சரியம். மேலும் ஒருவித அக்கறையுடனும் மரியாதையுடனும் அவன் நடந்துகொண் டான். இதைவிட குறிப்பிடத்தக்க தொடர்பு ஏதும் எனக்கும் அவனுக்குமில்லை.
இப்ப, யாழ்ப்பாணத்தில ஐஞ்சு மாதத்திற்குப் பிறகு அவனைச் சந்தித்தபோது, தனக்குத் தெரிஞ்ச ஒருவரை - பழக்கமானவரை, தன்னுடைய வீட்டில் - கடையில், வரவேற்க விரும்பினானா..?
* மரிய சூசை.
இதை என்னால் மறக்கமுடியாது!
கார்த்திகை 1968
ži வரவேற்பு

Page 17
படம், பார்த்த பிறகு.
படம் முடிந்துவிட்டதுதான். ஆனால் ‘ஒபூ! உனது கனவுகள்; மனோகரங்களெல்லாம் சிதைவடைய. நீ, துயர் கொண்டாய்.
அவள்'; "அந்த மகத்தான நாவல் எல்லாம், உனைவிட்டு இடையில் விலகிப்போனதில், பரிதாபகர மானாய், ·
அந்த மகத்தான துயரங்களோடு நீ. ; ஒபூ! உன்னை மறக்க முடியுமா?
*ரே! நீ மகத்தான கலைஞன்தான். "நாளைக்கென்ன படம்?'; 'ரே"யட எண்டால் பாக்கவேணும்.’
தியேட்டர் முன்னால் விளக்கொளியில் தோற்றங் رகாட்டும், அறிவிப்புத் தட்டி,
‘வங்காளத் திரைப்பட விழா!" 5ம் திகதி - "ஒபூ சன்சார்' - சத்தியஜித் ரே. . 6ம் திகதி - "இரு புதல்விகள்’ - சத்தியஜித் ரே. "அப்ப இருபுதல்விகள் கட்டாயம் பாக்கவேணும்; இண்டயப்போல செக்கண் ஷோவுக்குத்தான் வரயேலும்.’
தியேட்டர் வெறுமை கொண்டிருக்கிறது. ஓம்! எல்லாரும் போயிற்றாங்கள் போல.
நேரம் போகுது.

சந்தியில் புத்தர் சிலையையும் அரசமரத்தையும் கடந்து மக்கலம் றோட்டில், சிலர் போகிறார்கள். சிறிது தூரத்தில் நாலைந்து, ஏழெட்டுப் பேர்கள் நேரே போனபடி.
"அவங்கள் ஸ்ரேஷனுக்குப் போறாங்களா?; இஞ்சின யிக்கிள்ள இருக்கிறவங்களாயுமிருக்கும்.’
அவர்களுக்கு மேலாக மருதானை ஸ்ரேஷனின் மணிக் கூடு தெரிகிறது.
*11-45. சாமமாகப் போகுது. இப்ப என்னண்டு போறது. ? வெள்ளவத்தைக்கு பஸ் இருக்குமா; இது தான், பெரிய கரைச்சல்.’
ட்றெயின் இருந்தாலும் நல்லது." 1-05க்கு அழுத்கமை ட்றெயின்; நேரசூசிப் பலகை காட்டுகிறது.
‘இன்னும் ஒண்டகாமணித்தியாலங் கிடக்கு கண்ணையும் தூங்குது.
‘என்னண்டு இதில நிக்கிறது’: றோட்டடிக்குப் போகக் கால்களுக்கு ஆவல்.
ஸ்ரேஷன் சுற்றுமதிலோடு, எரியும் திரிவிளக்கின் ஒளியில் சுண்டற்கடலையோடு, ஒரு கிழவன், அவன் சுருள்கள் செய்கிறான். ‘இவனுக்கு உழைப்பு இன்னும் முடிய வில்லையா. ; நித்திரை நேரமும் இன்னும் வரயில்லத் தான் போல...' -
கொழும்பே உறங்கிக்கொண்டிருக்கிறது. ح۔ கிழக்குப் புறமாய், மனிதக் காலடிகள் படாத நேரமெனக் கம்பீரமாய் நீண்டு, மிக நீண்டு கிடக்கிறதைப்போல றோட்டு, காலடி பதித்து, அதன் கம்பீரத்தைக் குலைக்க வேணும் போலத் தோன்ற, நடத்தல். v−,
சிறிது யார் தள்ளி, திறந்தபடி இருக்கும் முஸ்லிம் ஹொட்டெல்; அப்பம் சுடும் ஸ். ஸ்.என்ற சத்தம்.
23 படம் பார்த்த பிறகு

Page 18
*தேத்தண்ணி குடிக்கவேணும்போல. சிரமத்தில எப்பயாவது குடிச்சிருக்கிறனா? - இந்த இருபத்திமூண்டு வயது வரையில...'
‘ஓம்! இண்டைக்கு அப்பமும் தின்று, தேத்தண்ணியும் குடிக்க வேணும் ஒரு மாறுதலாக."
மறுபடியும் ஸ்ரேஷனில், சுற்று மதிலுக்குள், நிலத்தில்ஸ்ரேஷனிற்கு வெளியே உலாத்தியபடி. . . .
விரைவுகொண்டு வந்து உள்ளே, கண் செலுத்திப் பார்க்கும் ஒரு பெண். பருக்கள் வெடித்துப் பரவியதில் விகாரங்கொண்ட முகத்தோடு, அவள்; ஒ! இரவு ராணி' போல. ܀
அவள் ஆரைத் தேடுகிறாள். குத்தகைக் காரரையா..? அவளது உலகம், வேகமாக இயங்குகிறது போலும். மதிலுக்கு வெளியே ரக்ஸி வந்து நின்றதில், ஓடிப்போய் ஏறுகிறாள்.
ஓடுகையில் அவளது பிருஷ்டம் குலுங்கியது உணர்வைக், கிளர்ச்சியுறச் செய்ததாக.
ரக்ஸி பறக்கிறது. கண்கள் நேரத்தைப் பார்க்கின்றன; ‘இன்னும் காமணித் தியாலங் கிடக்கு."
படிகளால் ஏறி இறங்கி பிளாற்போமிற்குப் போகிறேன். சாய்வு வாங்குகளில் தூங்கி எழுந்துகொண்டு, சிலர்; "தூரத்திற்குப் போற, ஏதோ ட்றெயினுக்குக் காத்திருக்கினம் போல." -
கலகலப்பே இல்லாததைப் போல், வெறுமையாய் ஒளியில் நீண்டு கிடக்கும் பிளாற்போம்கள். யாருமில்லாத அந்த மறுமுனைவரை நடக்கவேணுமெனத் தோன்ற-உலா நடையோடு சென்று திரும்பல்.
இதுவரை காணாததில், விசித்திரம் கொண்டதாக; எல்லாம் மாறுதலாக, ". .
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 1. 24

நேரமாகிறது. தூரத்தில் ஒளிப்பொட்டு வரவரப் பெரிதாகி வருகிறது; “ஓம் ட்றெயின் வருகுது.' *
நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளிவீசியபடி வந்தும்; நேரே இருளைத் துழாவியபடி அது, நின்றுகொண்டிருக் கிறது. ,
**பஸ்வெனி வேதிகாவே திபென தும்றிய, தங் அழுத்கம பலாபிற்றத்வே. எம தும்றிய அழுத்கம தக்வா சா மதும்றியஸ் தாணயக்கம, நவத்தனவா அத்த.” -
ஆரோ அவசரமாய்க் கீச்சுக்குரலில் கத்துகிறார். ட்றெயின் புறப்படுகிறது. எல்லாமாய் எட்டுப் பத்துப் பேரைச் சுமந்துகொண்டு, அது ஓடிக்கொண்டிருக்கிறது.
*கோட்டை"யில் தரித்ததில் ஏறும் சில பேர்கள்; துறை முகத்தில நைற்ஷிப்ற் முடிஞ்சு வந்தவர்கள் போலிருக்கு. ஜன்னல்களும் கதவுகளும் சாத்தப்பட, வந்த உடனேயே கால் நீட்டி அவர்கள் படுத்துவிட்டார்கள். இவையஞக்கு, இப்ப நித்திர நேர்ந்தான்.” -
உட்காரவும் மனமில்லாதவாறு, தொங்கு கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டே போகவேனும் போல.
*சிலேவ் ஐலண்ட்', 'கொள்ளுப்பிட்டியில் நின்று, பின்னர் கடந்து ட்றெயின் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றப் பக்கத்தில் இரைந்து கொண்டபடி, கடல். வானத்தைப் பார்த்து எழும்பும் அலைநுரைகள், ள்தையோ சொல்லத் துடிப்பதுபோல. *
மூடப்பட்ட ஜன்னலுக்கூடாக லைற்றுக் கம்பங்களின் ஒளியும்; இருளில் தோய்ந்த, வீடுகளின் மங்கிய சாயல்களும் விரைவாகக் கடந்தபடி.
எல்லாமே அமைதியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. உறக்கங் கொள்ளாமல், ட்றெயின் மட்டுமே இருளில், இரைச்சலிட்டபடி ஒட நாங்களும் ஓடியபடி. . * *
25 | படம் பார்த்த பிறகு

Page 19
"பம்பலப்பிட்டி கடந்திற்றது . போல, பாலத்தைக் கடக்கும் இரைச்சல். w
‘அப்ப இது வெள்ளவத்தை நான் இறங்குகிறேன். இருளில் - மங்கல் ஒளியில் எனக்காகவே காத்துக்கொண்டிருப்பதைப் போல. ஸ்ரேஷன்.
எனக்காகவே நின்றதில் தன்வேலை முடிந்து புறப் பட்டது போல், கூவியபடி ட்றெயின் ஓடுகிறது.
ரிக்கற் கொலெக்ரர்; ஸ்ரேஷன் மாஸ்ரர் - எல்லோரும் தூங்கி விழுந்தபடி.."ஏன் எழுப்புவான்; ரிக்கற்றை எறிஞ்சால் சரி.
புனலைப்போல் அகன்று ஒடுங்கி நீண்டு செல்லும் தண்டவாளங்களின் ஒரமாய், நீளத்திற்குத் தாழைகளும்: மறுபக்கத்தில் வீடுகளும். ஆருமே இல்லாததாய் வெறுமை கொண்டு கண்ணுக்கெட்டியவரை. தனிமையாக நான். ‘போயாவின் பின்னேரங்களில் இதால் எத்தினபேர்கள். தங்கள் காலடியைப் பதித்துப் போவார்கள். அண்டைக்குத் தான் காற்றுவீசுகிறதைப் போல, கும்பல் கும்பலாய் எழுப்பங் காட்டிப் போகும் "கிளறிக்கல் குஞ்சுகள்’. அவையஞக்குத் தோதாய்க் கூட்டங்கொண்டு, அங்குமிங்குந் திரியும் யூனிவசிற்றிப் பெட்டைகள்.
ge இப்ப இவையள் எல்லாரும், குறட்டை விடுவி
60TLDIT.........'
’ உயரமான தென்னை மரங்களின் மேலாக ஒளி வீசிய படி, நிலவு. ஒலைகள் ஆடி ஆடி மறைத்தும், விலகியும் நிலவோடு விளையாடுகிறதைப்போல.
இந்த நிலவொளியில் - தென்னைமர அடியின் மணல் வெளியில், கடலைப் பார்த்தபடி இருக்கவேணும் போல. இருள்கொண்ட கடலின் வெண்நுரைகளுக்கும் மேல், வெகு தூரத்தில் -"மினுங்கும் ஒளிப் பொட்டுக்கள்.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 1 26

அலைகளின் ஆட்டத்தில் தோன்றி மறைந்து, மீண்டும் தோன்றி மறைந்தவாறு அவை காட்சி கொடுத்தபடி. "அந்த மீன்பிடி வள்ளங்களில் கடலின் புதல்வர்கள்’ விழித்தபடி காத்துள்ளார்கள்; மானிடத்தின் நம்பிக்கை களோடும்."
மணி இரண்டாகிறது. யாருமற்ற தனிமையில் கிளர்ச்சியான உள்ளத்தோடும் *மூர் றோட், “பெர்னாண்டோ றோட்டுக்களைக் கடந்தபடி.
"வவர்செற் பிளேஸ்’ மூலையில் லைற் எரிந்துகொண்டி ருக்கிறது; அதில் திரும்புகிறேன். -
சிறு தொலைவில், சிறிசேனா வீட்டுக்கு முன்னால் இர ண்டு மூன்று நாய்கள்; அங்குமிங்கும் ஓடியபடி, அவை கவ னிக்கவில்லைப் போலும்; குலைக்கவுமில்லை.
விரைவுகொண்டு சென்று, அறைக் கதவைத் திறக்கின் றேன். பத்மநாபன், நல்ல நித்திரைபோல. கதவு திறந் ததும் தெரியாமல்: படுக்கையில் அவர்.
சப்பாத்தும் உடுப்புக்களும் கழட்டப்பட்டதில், விடுதலை பெற்றதான பிறகும் நினைவின் எச்சத்தில்.
*ஒபூவும் : துயரங்களும்.’ "தனிமையாய்க் காத்துக் கிடக்கும் ஸ்ரேஷன்; நிலவின் கீழ் தென்னை மரம்; யூனிவசிற்றிப் பெட்டையள்."
"எல்லாம்....... எல்லாம். s கண் எரிச்சல்கொள்ள இமைகள் அழுத்துகிறதைப் போல. -
*நாளைக்கு ஒவ்வீசுக்கும் போகவேணும்.” படுக்கையில் விழுகிறேன். t கிளர்ச்சிகொண்ட நெஞ்சின், நினைவுகள் - நித்திரை
யாய்ப் போகாதபடி இடையூறு செய்ததென.
"நான் என்ன செய்ய..?; இன்னும், நேரம் கிடக்குப் போல. ሥ
வைகாசி 1970
27 I படம் பார்த்த பிறகு

Page 20
口 மகத்தான துயரங்கள்
Ο
நன்பனோடு சும்மா உலவித்திரியலாமென வந்தவனின் கண்ணில் தொலைவில் அவள் பார்வைகொண்டதில் பழைய நினைவுகள் கிளர, தனது வாழ்க்கையின் சாரமே துயரம் தானோவென உணர்வு கொண்டான். --
சூனியங் கவிந்ததெனக் கழிந்த இரு ஆண்டுகளிற்குப் பிறகு காண்பதில் எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைப் புக்கொண்டவன் நண்பனோடு கதை கொண்ட தைப்போல அவளைக் கடக்கையில்,
"எங்களையெல்லாம் மறந்திற்றீங்கள் போல.” எனக் குரல் கேட்டதில் திடீரென நிற்பாட்டிச் சைக்கிளைத்
திருப்பினான்.
குழந்தையின் கையில் இழுபட்டபடி கிடந்த தாலியைக் கண்டதில் ‘உன்னையா..?” என உருகிக் கேட்க வந்த வார்த்தைகளும் பதுக்கங்கொள்ள, 'அப்படியில்ல கதைப் பிராக்கில கவனிக்க இல்ல” என வெளியிட்டான்.
அவளோடு தான் அந்நியங்கொள்ள நேர்ந்ததும் இந்தத் தாலியால்தானே என்பது உறுத்த, மெளனமாய் அதனை வெறித்த பார்வை கொண்டான்.
'இது இந்தக் கழுத்தில் ஏறியதை உணர்த்த வந்த தென லோகநாதனின் தந்தி கிடைத்ததில் இரைந்தபடி கிடந்த கடலை வெறித்துத் திரிந்த நாட்களும் முகங்காட்டக் கண்டான். ہی۔

நிர்ப்பந்தமாய்க் கழிந்த காலை மாலை ரயிற் பயணங் களிடையிலும் "பார்சல் ஒவ்வீசின்’ தூசி நிறைந்த இரைச் சல்களிடையிலும் தனது வாழ்க்கை சாரமற்றுப் போனதென் பது பெரிதாய் உறுத்தச் சலிப்புக்கொண்டவன், ඉ(5 மாறு தல் காணலாமெனப் பேராதனைக்குப் போய் சில நாட்கள்
தொங்கு பாலத்தின் அசைவில் ஆடியபடி, காலடியில் *மாவலி'யை வெறித்துப்பார்த்து நின்றதில் இப்படித்தான் துயரங்களும் தன்னை ஆட்டுகின்றதோவெனப் பிரமை கொண்டான். அடர்பச்சை மூங்கிற்கரையைப் போல்தான் தன் வாழ்க்கை ஜீவநாதத்தை இழந்து மொளனங்கொண்ட தெனவும்; வெயில் விழாதபடி அடர்ந்து நின்றதில் நிழல்கள் பரப்பி நின்றதான மரங்களிடையில் - புற்களின் நடுவில் தனியாய்க் கிடந்ததான தரிப்பு விடுதியைப் போற்றான் தானும் தனிமைகொண்டானெனவும் தோன்றியதில், நின்று. பெருமூச்செறிந்தான். •
இரண்டு மாதங்களின் முன்னால்தான் அவளைச் சந்திக்க வந்து, இறுதிப் பரீட்சை நன்றாய் முடிந்த களிப்பில் மிதந்த வளோடு இந்தப் புற்றரையின் தரிப்பு விடுதி, தொங்கு பாலம்; மூங்கிற்கரையருகில் நடத்தல் என்த் திரிந்தபோது வசீகரங்கொண்டதெனத் தோற்றிய வாழ்க்கை இன்று சூனியங் கொண்டதே என்று உணர்ந்தவனின் கண்கள், எதிரில் விரிந்துகிடந்த பெருவட்டப் புற்றரையை வெறித்தன. *றஜவத்தை'யில்துரைராசாவின் அறையில், ஜன்னலுக் கூடாக நின்று நோக்கியதில் தொலைவில் 'வாசிற்றி" பார்வை கொள்ள, அதனுள் நுழையும் வாய்ப்பும் இழக்கப் பட்டதான பழைய நினைவும் வர ‘தன் வாழ்க்கையே நீண்ட இழப்புக்களைக்கொள்ள, வந்தது தானோ’ என நினைவு கொண்டான்.
கொழும்பு திரும்பியதில் ‘வவசெற் பிளேசின்’ நாற் பத்தோராம் இலக்க அறைக்குள்ளும் பார்சல் ஒவ்வீசுக்கு
29 | மகத்தான துயரங்கள்

Page 21
மாகக் கழிந்த சாரமற்ற வாழ்க்கையிடையிலும், அவளிட மிருந்து ஒரு கடிதத்தையாவது எதிர்பார்த்திருந்தான்.
இரண்டு மூன்று மாதங்கள் கழிந்ததிலும் ஒன்றையும் காணாததில் துயர்கொண்டவன் மனது, நம்பிக்கை இழந்த தில் சலிப்புக்கொண்ட வேளை அவள் பீ. ஏ.யில் பாசாகிய தைத் தெரிவித்த லோகநாதனின் கடிதம் கிடைத்ததில் இறுதிப் பரீட்சை முடிந்த களிப்புத் துள்ள தன்னோடு திரிந்த அவளது நினைவு மின்னலிட, நம்பிக்கை துளிர்த்ததெனக் காத்திருந்தான், a
காலங் கழிந்ததிலும் ஒன்றையுங் காணாதவனின் கண் ணில், தொடுவானமும்; தொலைதுார நட்சத்திரங்களும் பார்வைகொண்டு உறுத்தின.
"பிரபஞ்ச வெளியின் தனித்த கிரகங்களைப்போல்தான் நாமும் தனித்துப்போனோமோவென நினைத்தவன். மனது யாழ்ப்பாணத் தொலைவை கிரக இடைவெளித் தூரமெனக் கற்பித்ததில் விரக்திகொண்டு இனி ஒருபோதும் யாழ்ப்பாணம் செல்வதில்லையெனக் கொழும்பிலேயே சாரமற்று உழன்று
கொண்டிருந்தான்.
எச்சில்தொட்டு எழுதியதில் ஊறி விளிம்புகட்டிய காபன் பென்சில் எழுத்துக்களில், ஏதோ என்னவோ எனப் பயந்து கடிதம்மேற் கடிதமாய் அம்மா உருகி எழுதியதில் தள்ளாத வயதில் அவளிற்கேன் இந்தத் துயரமெனத் தோன்ற யாழ்ப்பாணம் வந்தவேளை. இவளையும் காண நேர்ந்ததே, என்பது தோன்ற மனது துயர்கொள்ள நின்றான். என்ன யோசிக்கிறீங்க...' என அவள் கேட்டதில் விழிப்புக் கொண்டவன் 'இல்ல. பழைய நினைவுகள். என மெதுவாய்ச் சொல்லியபடி அவளைப் பார்த்தான். யோசனைகள் முகத்தில் நிழலிட்டதென, அவள் நின்றாள்; அவளும் பழைய நினைவுகளைக், கொண்டாள் போலும்!
படிக்கையில், மத்தியானம் ஊரிற்குச் சென்று அவசர மாய்த் திரும்புகிறவனை எதிர்பார்த்துக் காத்து மெல்ல
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 30

நடந்து போகையில், அவனும் வர இதே ஒழுங்கையால் கதைத்தபடிபோன நாட்களை நினைத்திருக்கலாம்.
காலையில் செபம், விரைவில் முடிந்துபோனபோதும் மறுபுறத்தில் 'நமச்சிவாய வாழ்க..." என நீண்டுசெலும் சிவபுராணத்தைத் தொடரும் சைவச் சொற்பொழிவு முடி யும்வரை, பத்தோ பதினைந்து வேதக்காரப் பிள்ளைகளாய்க் க்ாத்திருந்த வேளைகளில். அந்நிய மதச் சூழலில் - மதம் தந்த நெருக்கங்காரணமாய் கதைத்திருந்த பொழுதுகள்...! Free Periods-6i), 6063 Divisi)...... ; பேராதனையின், "அந்த மனோகர நாட்களையும்’ நினைத்திருக்கலாம்.
முகம் இருள்கொண்டதென நின்றவளின் கண்ணில் நீர் முத்துத் திரண்டதெனக் கண்டவன், வாய்விட்டு அழுது விடுவாளோ எனத் தோன்ற, "இரண்டு வருஷமாய் ஒரு கடிதமும் போடாததைக் கேட்க நினைந்ததையும் கைவிட்டுத் தலையைத் திருப்பி மறுபுறத்தைப் பார்த்தான்.
சைக்கிள் "பாரில் சாய்ந்தபடி தெளிவாய்க், காலடியில் எதையோ உற்றுப் பார்த்ததென நின்ற லோகநாதனைத் தவிர, அந்த ஒழுங்கையே தனிமை கொண்டதென வெறிச்சிட்டுக் கிடந்தது. மதியம் நெருங்கிய பொழுதில் வேலியோரச் சிறுநிழல்கள் தவிர வெயிலில் வறண்டுகிடந்த தைக் கண்டதில் இதுபோல்தானேயென, தனது வாழ்க்கை யினையும் நினைத்துக் கொண்டான்.
'நல்லாய் மெலிஞ்சுபோனிங்க. , உடம்பப் பாக் கிறதுக்கென்ன. ” எனக் கேட்டு, ‘என்ர வாழ்க்கையில என்ன சந்தோஷமிருக்கு?” எனப் பதில் சொன்னதில்,
*எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே.” என்றவள் சேலைத் தலைப்பை வாயில் அடக்கியபடி விம்மினாள்.
Davi! இதென்ன றோட்டில.. ’ என்றவன் கதையை
மாற்ற முயன்று "இப்ப, எங்க போக வெளிக்கிட்டனீர்” ள்னக் கேட்டான். ۔ ۔
31 I மகத்தான துயரங்கள்
兹

Page 22
*ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்” என அவள் பதில் சொல்லியதில், 'அப்ப, நேரம் போகுதே. ?” என்ற வனுக்கு -
‘ஓம், கச்சேரியடியில பஸ் எடுக்க வேணும்” என விம்மற் குரலில் மெல்லச் சொல்லியவள், சிறிதே சுறுசுறுப்புக் கொண்டாள்.
அவள் விரைவிற் போகட்டுமென, அவன் மெளனங் கொண்டு நின்றபோது. - w “கொழும்புக்குப் போறதுக்கிடையில ஒருக்கா வீட்ட
s
வாருங்க.. எனக் குரல் கேட்டு,
“பாப்பம்..” என இழுத்தபடி சைக்கிளைத் திருப்பி 66.
‘பாப்பமெண்டால்..? கட்டாயம் வாருங்க.. , எவ் வளவு நாளாய்க் காணஇல்ல. ,” என்றபடி சேலைத்
தலைப்பால் கண்ணிரைத் துடைத்தபடி அவள் நின்றதைக் 'கண்டதில், பழைய இழைவு மின்னலிட்டதெனத் தோன்ற மெளனமாய் நிலைத்தபார்வையோடு 'ஓம்’ எனத் தலை யாட்டினான்.
அவள், நடந்து போனாள்.
தோளிற் கிடந்த குழந்தை அவனைப் பார்த்துக் கையைத் தூக்கித்தூக்கிக் கீழே போட்டபடி சென்றதைக் கண்டவன், வாழ்வின் வசந்தங்களும், கையசைத்தபடி இவ்வாறு தான் தன்னை விட்டும். எந்நேரமும் செல்கின்றனவோ என உணர்வுகொண்டதில் மனது வெறுமைகொள்ள 'தனது வாழ்க்கையின் சாரமே துயரந்தானேயெனச் சலிப்புக் கொள்ள நின்றவனின் காதில் "யேசு. போவமா?” என லோகநாதன் கேட்டதென்ற ஒலிகள் ஈனஸ்வரத்தில், தடவிச் சென்றன.
மாசி 1971
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் | 32

O ஓ! கடவுள் உறங்குகிறார் போல. D
திரேசம்மா பொருமிக் கொண்டிருந்தாள். நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும் துயரங்களையெல்லாம் வெளியே கொட்டிவிட வேண்டுமென்ற ஒரு அவசரத்தோடு அவள் வாய், வார்த்தைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கடலிலிருந்து வந்த புருஷனுக்கு இடியப்பம் வாங்க வந்ததையும் மறந்துவிட்டு, கதை கேட்கிற, பெண்களின் இயல்பான ஆசையில் மூழ்கி கொஞ்சம் தள்ளி வசிக்கின்ற அன்னம்மாவும், நாடியைக் கையினால் தாங்கிய வளாய் வியப்பினால் திறந்த வாய் திறந்தபடியேயிருக்க திரேசம்மாவின் முகத்தையே, பார்த்தபடி இருந்தாள். திரேசம்மா, தன் மகனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
''t. . . . . . ! ஆ. குறுக்கால போவான்; தெண்டல் வருவான். உங்களுக்கு ஒரு சாவு வருகுதில்லயே. அப்பனும் புள்ளையும் சேர்ந்து வதைக்கிறீங்களேடா. தூரம பறத்தூம. நீங்க உழைச்சு மூண்டு நேரமும் முறியாமத்தின்ன, நானும் இந்தக் குமரும் பட்டினி. -
அவன்.அப்பன், மயிலிட்டிக் கடலில உழைச்சு, நளவனிட்ட எல்லாத்தயும் கொட்டிப்போட்டு வருவான். இப்பவும் ஆறுமாசம்: - அப்பனும் புள்ளையும் எங்கள, விட்டிட்டுப் போய். நானும் குமரும் இருக்கிறமெண்டு எட்டிப் பார்த்தீங்களாடா..? நானும் இந்தக் குமரும் நெருப்புத் திண்டு ஒருத்தரிட்டயும் பச்சத்தண்ணியும் குடி யாம, எங்கட மானத்தோட இருக்கிறம்.
பிறகும், ஏனடா எங்கட்ட வாlங்க?"
ଗ$(t-8

Page 23
சோழகத்துக் கடலாய்க் குமுறுகிற நெஞ்சிலிருந்து வார்த்தைகள் அலையெறிகின்றன.
"சும்மா இரண; எல்லாருக்குங் கேக்கப் போகுது.” சம்பல் இடித்துக்கொண்டிருந்த "லில்லி - அவளின் மகள் தான் சொன்னாள். VK.
*சும்மா இரடி, உனக்கென்னடி தெரியும், தோற; அவங்க ரெண்டுபேரும் எங்களப் படுத்திறபாடு.” ஆத்திரத் தில், இடியப்பக் குழலை எடுத்து அடிப்பதற்கோங்கினாள். 'இந்தக் குமருக்காகத்தான் உசிரோட இருக்கிறன்” என்று ஆரைப்பற்றிச் சொல்லுவாளோ அவளை அடிக்கத் துணியு மளவிற்குத், துயரம் அவளைக் கொதிக்கச் செய்திருந்தது.
"இப்ப என்னண நடந்திது?; சொல்லன். ‘புஷ்பத்த" ஏனன திட்டிறாய்?” அன்னம்மாவிற்குக், கதையறியுமாவல்.
'எடி புள்ள, அவன் அல்போன்ஸ் - என்ர அக்காவட மகன், ‘மண்தோணி’க்குக் "கலப்பத்துப் பாக்கக் காசில்ல யெண்டு என்ர அட்டியலை அடகு வச்சவன். இப்ப ரெண்டு வருசத்துக்கு மேல போயிற்றுது. அவனும், கஷ்ரப்பட்டுப் போயிற்றான். இப்ப போனகிழமதான் அத எடுத்துத் தந்தவன். அத என்ர கழுத்தில பாத்திட்டு, தகப்பன் அடகு வச்ச தன்ர சங்கிலிய உடனி நான் எடுத்துத் தர வேணுமாம்.”
**ஆரண, புஷ்பமா?”
*ஓம்! அந்தத் தூமதான். இப்பயும் ஆறுமாசத்துக்கு மேல போயிற்றுது; அப்பனும் புள்ளையும் உழைப்புத் தராம்விட்டு. எங்களுக்கு ஆனமான தீனியில்ல. காசுக்கு ஆரட்டப் போறது எண்டதுக்கு ‘நாங்க இளந்தாரியள் கழுத்தில கையில ஒண்டுமில்லாம பறையர் மாதிரித் திரியிறம். அவ கிழவி, அட்டியல் கட்டிக் குமரிக்கு நடிக்கிறா. எடுத்துத் தராட்டித் தெரியும்’ எண்டு அடிக்கிற மாதிரி, இந்த முன்னால றோட்டில தள்ளிவிட்டிட்டுப் போயிற்றான்.”
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 34

உட்குழிந்த கண்கள் கலங்க, கன்னங்களில் கண்ணிர் வழிகின்றது; மனவேதனையில் குரல் கரகரத்தபடி,
"அப்பனும் புள்ளையும் எங்களப்போட்டு, வதைக் கிறியளேடா. ” - ஆவேசங் கொண்டவளைப் போலச் சொல்லி நிறுத்தியவள் திடீரென ஏதோ பாடல் வரிகளைச் சொல்லுகிறவளைப் போல இழுத்த குரலில் சொன்னாள்.,
''el...... 42.......
ஈரல் எரியுதடா - என்ர எலும்பெல்லாம் நோகுதடா”
'அவன் அப்பன்; “வெறிகாற மனவல் நளவனட்டக் குடிச்சுப்போட்டு ராவழிய வந்து கண்கட தெரியாம மாட்டுக்குப் போட்டு உதைக்கிறமாதிரி, உதைப்பான், கண்ணோடு கண்ணுறங்காம எத்தின ரா கண்ணீர்விட்ட படி முழிச்சிருப்பன்? ஒரு நாளா ரெண்டு நாளா?
கலியாணங் கட்டினதில இருந்து, இருவத்தஞ்சு வருசமா நித்திய சிலுவ.”
"ஆ.ஆ. என்னப் பெத்தவளே! ஏனிந்தப், பாரச் சிலுவயக் கட்டிவச்சாய்.”
எப்போதோ செத்துப்போன தன் தாயை நினைத்து அடி வயிற்றிலிருந்து பெருங்குரலெழுப்பி அவள் "அழுதபோது, லில்லியும் கிமோனாத் துண்டில் கண்ணைக் கசக்கியபடி சிணுங்கிச் சிணுங்கி, அழுதாள்.
p
புகைந்து கொண்டிருந்த இடியப்ப அடுப்பிற்குள் விறகு கொள்ளிகளைத் தள்ளி, புகைக்குழலால் அன்னம்மா
ஊதினாள். Wé
ಙ್ಗತಿಂrdಷ! நெஞ்சைப்போல, அடுப்புப் பற்றி யெரிந்தது.
35 / ஓ! கடவுள் உறங்குகிறார் போல

Page 24
2
செவ்வாய்க் கிழமைகளில், குருநகரிலிருந்து பாசையூர் அந்தோனியார் கோயிலுக்குப் போகிறவர்களோடு திரேசம் மாவும், போவாள். தீராத நோய்களையும், துன்ப துயரங் களையும் தீர்க்கிற (?) புனிதரான அந்தோனி முனிந்திரரிடம் ஐந்து வருடங்களாக, ஒன்றரை மைலுக்குக் கிட்ட நடந்தே போய், தன்னுடைய துயரங்களைச் சொல்லி அழுவாள். தன்னுடைய கஷ்டங்கள் நீங்குவதற்காக,
“அந்தோனியாரே! பாவிகளான எங்களுக்காக, ஆண்ட வராகிய யேசுக்கிறீஸ்துநாதரிடம் இரக்கமாக வேண்டிக் கொள்ளும்" என்று மெழுகுதிரி கொழுத்தி, "பரிசுத்த அந்தோனியார் சுரூபத்தின்’ பாதங்களைத் தொட்டுமுத்தி செய்து கண்ணிர் விட்டு, மன்றாடுவாள்.
வருவதற்குத் தவறிவிடாத செவ்வாய்க்கிழமைகளைப் போல அந்தோனியாரிடம் போய் மன்றாடுவதற்கும் அவள் தவறியதில்லை. , 、ベ
3
ஞாயிற்றுக்கிழமைகளிலும், "கடன்திருநாட்கள்லும் முழுப்பூசை காண்பாயாக" - "முதற் சற்பிரசாதம் எடுப்ப தற்கு முந்திப் பாடமாக்கிய இந்தத் ‘திருச்சபையின் கட்டளை"யை மீறி ‘சாவான பாவத்தை", அவள் ஒருபோதும் கட்டிக் கொண்டதில்லை.
ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் "திரிந்தாதி மணி" அடித்தவுடனேயே எழுந்து ஆயத்தம். செய்து, முதலாம் பூசைக்குச் சந்தியோகுமையோர் கோயிலுக்குப் போவாள். ‘மனுக்குல மீட்பிற்காக ஆண்டவர் பட்ட பாடுகளை ஞாபகப் படுத்தும், அந்தப் பூசையில், இராகம் போட்டு
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் / 36

வாசிக்கும் ‘மஹோனாக் கிழவனின்’ பூசைச் செபத்தைக் கேட்டபடி ஒன்றிப் போவாள்.
ஆண்டவரின் பாடுகளோடு தன் துயரங்களாகிய சிலு வைகளையும் ஒப்புக்கொடுத்துத், தன்னுடைய மீட்புக்காகப் பிதாவாகிய சருவேசுரனை அவள், பக்தியோடு பிரார்த்திப்
first,
氨
எப்பவாவது நித்திரைப் பஞ்சியில் எழும்பப் பிந்தி முதலாம் பூச்ைக்குப் போக முடியவில்லையென்றால், செபஸ்தியார் கோயிலில் பின்னேரப் பூசைக்குப் போய் அந்த முக்கிய வேதக் கடமையை அவள், நிறைவேற்றி விடுவாள்.
4
சூரியன் கடலுக்குள் போய் பொழுது படுகிற அந்த ஆறேகால் மணிப் பொழுதில், சந்தியோகுமையோர் கோயி லின் ‘திரிந்தாதி மணி அடிக்குஞ் சத்தத்தைக் கேட்டதும் எழும்பி நின்று, "பிதாவுடையவும் போட்டுத் திரிந்தாதி சொல்லுவாள்.
உடனே, செபமாலையை எடுத்துக்கொண்டு ஆண் பிள்ளைப் பள்ளிக்கூடத்து முகப்பில் இருக்கின்ற தேவமாதா சுரூபத்தடிக்குப் போவாள். 1.
*புதும நிறஞ்சமாதா” என்ற நம்பிக்கையில் மெழுகுதிரி கொழுத்தித் தங்கள் துயரங்களைச் சொல்லிப் புலம்புகின்ற அந்த, 'அட்டம் அயல்ப் பெண்டுகளோடு அவளும் சேர்ந்து கொள்ளுவாள்.
ஒரு "செபமாலை"யைச் சொல்லி முடித்து தேவ தாயாருக்கு உண்டாக அதை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்த பின் கண்ணீர் விட்டபடி, தேவதாயாரை அவள் மன்றாடு
s
87 | ஒ கடவுள் உறங்குகிறார் போல

Page 25
"புதும நிறஞ்ச தாயே எங்கள் மேல் கண்பாரும்."
“எங்கட கஷ்ரங்கள் நீங்க உம்மட குமாரரான ஆண்ட வரிடம், வேண்டிக் கொள்ளும்.”
5
நல்ல சட்டைதுணி இல்லாமலும், ஆன சாப்பாடு கிடைக்காமலும் இடியப்பக் காசைக் கொண்டு, அவளுடை யவும் மகளுடையவும் சீவியம் இழுபட்டபடி போய்க் கொண் டிருந்தது. y
நெஞ்சின் அடியில் துயரங்கள் புதையுண்டிருந்தபோதும், வாழ்க்கைக் கஷ்டங்கள் அழுத்திய போதிலும் ஆண்டவர் பேரிற் பாரத்தைப் போட்டு நம்பிக்கையோடுதான், அவள் காத்திருந்தாள்.
எப்பவோ ஒரு தபசுகால “ஞானஒடுக்கப் பிரசங்கத்தில அகஸ்ரின் சுவாமியார், "
“அழுகிறவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.” 'வருந்திச் சுமை சுமக்கிறவர்களே என்னண்டை வாருங்கள்; நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன்’ என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறதாகச் சொன்னது அவளுக்கு இன்னும் நல்ல ஞாபகம். ‘என்ர கஷ்ரத்திற்கும் விடிவுகாலம் வரும்’ என்று, தன்னுடைய வேதக்கடமைகளில் தவறாமல் திருச்சபையின் கட்டளை களையும் பத்துக் கட்டளைகளையும் கடைப்பிடித்தொழுகும் ஒரு நல்ல வேதக்காரிச்சியாகவே சீவித்து, வருகிறாள்.
செவ்வாய்க் கிழமைகளும், ஞாயிறு கடன் திருநாட்களும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. சந்தியோகு
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் I 38

மையோர் கோயில் திரிந்தாதி மணியும் அடித்துக்கொண்டும்,
காற்றில் கரைந்து கொண்டும் இருந்தது. திரேசம்மாவும்,
பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கும்; ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கும், ஆண்பிள்ளைப் பள்ளிக்கூடத்துத்
தேவமாதா சுரூபத்தடிக்கும் போய்க் கொண்டேயிருக்
கிறாள்!
ஆனால், துயரங்கள்தான் இன்னும் தீர்ந்தபாடாக இல்லை...!
ஆணி. 1969
39 | ஓ! கடவுள் உறங்குகிறார் போல

Page 26
கந்தசாமி வெட்கப்படுகிறான்.
O
அந்தப் பாணந்துறை ஸ்லோ ட்றெயின் 'சிலேவ் ஐலன்டில்’ நின்றபோது, அவன் அந்தப் பெட்டிக்குள் ஏறினான். *
கிலுக். கிலுக். வலதுகைப் பேணியைக் குலுக்கிக்கொண்டு, தடியினால் தட்டித் தடவியபடி சீற்றோரமாக அவன், நடந்து கொண் டிருந்தான். - -
அந்தச் சிந்தெற்றிக் ட்றவுஷர் இளைஞனுக்கு இவன் வந்தது சங்கடத்தைக் கொடுத்திருக்க வேண்டும்; அவன், யன்னலுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். சிறிய குலுக்கலுடன் ட்றெயின் ஓடத் தொடங்கியது இடைநேரமானதால் கூட்டமிருக்காத அந்தப் பெட் டிக்குள், ஐந்தோ ஆறுபேர்களோ தான் இருந்தார்கள்.
கிலுக். கிலுக். பெட்டிமுடிவில் தடிநுனியில் பலகை தட்டுப்பட அவன் இடப்பக்கந் திரும்பி நடந்தான். அந்தக் கடற் பக்கக் கதவருகில் நடுத்தரவயதுப் பெண்ணொருத்தி கால் மேல் கால்போட்டபடி இருந்துகொண்டிருந்தாள்.
அவள் கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்ததினால், இவனது வருகை அவளைப் பதட்டிமடையச் செய்ததாகத் தெரியவில்லை; அவள், நிமிர்ந்தபடி நேரே பார்த்துக்கொண் டிருந்தாள்,

கிலுக்.கிலுக். திறக்கப்பட்டிருந்த கதவோரத்தில் - வெளிக்கம்பியைப்
பிடித்தபடி எதையோ தேடுகிறவனைப்போல, கடலையே
ممي.
உற்றுப் பார்த்தபடி அந்தக் காற்சட்டைக்காரப் பெடியன் நின்றுதொண்டிருந்தான்.
குலுக்குகிற ட்றெயினின் ஓட்டத்தில் அந்தக் கதவிடை வெளியை, பழகிவிட்ட ஒரு இலாவகத்தோடு தடியை ஊன்றியபடி கடந்து மற்றச் சீற்றருகே, அந்த குருட்டுப் பிச்சைக்காரன் போனான். -
கிலுக்.கிலுக். அந்தப் ப்க்கத்திலிருந்த இரண்டுபேரும் அவனது வருகையைக் காணாதவர்களேபோல, விரிக்கப்பட்ட ‘சவஸ’ பேப்பருக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டார்கள்.
கண்தெரியாததால் அவர்களுக்குப் பக்கத்தில் வெறுமை யாயிருந்த சீற்றுக்கு முன்னாலும், குலுக்கியபடி அவன்
மெல்லமாக நடந்துகொண்டிருந்தபோது. s
A அந்தச் சீற்று முடிந்து திரும்புகிற மறுபக்கச் சீற்றின் நடுவிலிருந்த கந்தசாமி, இயல்பாகவே தன் பையைக் கையினால் தட்டிப்பார்த்தான்; கையில் சில்லறை கள் தட்டுப்பட்டபடி.
ஆனால் அந்தப் பிச்சைக்காரன் தனது பக்கமாகத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, அவனுக்குத் தயக்கம்.
*ஒருத்தரும் போட இல்ல." அந்தப் பெட்டியில் ஒருவருமே ஒன்றும் போடாமல் இருந்தபோது தான்மட்டும் போட, அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. ஏதோ செய்யத்தகாததைத் தனிமையாகவே செய்ய நேர்ந்ததைப்போல், கூச்சத்தில் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.
கிலுக். கிலுக்.
41 | கந்தசாமி வெட்கப்படுகிறான்.

Page 27
பேணியைக் குலுக்கியபடி தனக்குப் பக்கமாக அந்தப் பிச்சைக்காரன் வந்தபோது அவனை நேரேபார்க்கவும் சங்கடப்பட்டு, எதிரே கண்களை உயர்த்திப் பார்த்தபோது சாமான் பலகைக்குக் கீழே எழுதப்பட்டிருந்த, சிங்க்ள எழுத்துக்கள் தட்டுப்பட்டன. O
*மெய லாங்கிக ஜனதாவ சத்து பவின் எய ஆர
க்ஷாகிரீம ஒபகே பரம யுத்துகமய'
மெளனமாக அதை வாசித்து முடித்தபோது சிறிய குலுக்கலோடு கொள்ளுப்பிட்டியில், ட்றெயின் நின்றது. கந்தசாமி திரும்பிக் கதவடியைப் பார்த்தான்.
அவன் - அந்தப் பிச்சைக்காரன் இறங்கி, அடுத்த பெட்டிக்குப் போய்க்கொண்டிருந்தான்.
ஆடி 1969
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 42

ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது. O
அரைநாள் நித்திரையில் கழிந்துபோனது. மெயிலில் வந்த அலுப்பு: மத்தியானம் சாப்பிட்ட பிறகும் - , சாய் வுக்கதிரையில் சிறு கண்மூடல்.
யாரோ தோளில் தட்டியதைப்போல. முழித்தால் தேத்தண்ணீருடன் அக்கா, தம்பியும் கடலால வந்திற்றான் போல: குசினிக்குள் சாப்பிட்டபடி, அவன்.
"எட, அப்ப நாலுமணிக்கு மேலபோல’: அவசரம். **எங்க போகப்போறாய்? - அக்கா. - 'உப்புமால் கந்தோருக்கு. பெடியங்க பந்தடிப்பாங்க; பாக்கலாம்.”
‘உப்புமால் கந்தோர்; பந்தும், பெடியங்களும். ' ஓ! இந்தப் பின்னேரங்கள்." கால்கள் பரபரக்கின்றன. 'நானும், பந்தடிக்கலாம்; சீ களைக்கும். ஒரு வருஷம் - வின்ளயாடாம விட்டு."
s
'சவக் கொழும்பு - விளையாடக்கூட ஏலாது. கனநாளைக்குப் பிறகு சைக்கிள் ஓட்டம் ஒடுறது கஸ் ரம்: காத்தாக்கிடக்கு. சோழகமும் எழும்பியிற்றுது. 'இதென்ன! ஒருத்தருமில்லாம, வெறும் வெளி. இவங்க்ளெல்லாம் எங்க போயிற்றாங்க; காத்தெண்டு வர யில்லையா..? V
வெட்ட வெளி.

Page 28
புல்லுமேயிற மாடுகள்: பின்னால் தூரத்தில சவக் காலை. தொங்கலில் கடலருகில் ஒற்றைத் தென்னை - சோழகத்தின் வீச்சில் ஒலைகளை, ஆட்டியபடி.
*சீ! ஏமாற்றத்தில் எரிச்சல். திரும்பிவந்து வீட்டுக்குள் முடக்கம். இருட்டிவிட்ட்து. ஏழு மணி. வாசிகசாலைக்குப் போற முந்தின நேரம்; பார்க்குக்கும் போகலாம். •
இதென்ன. றோட்டில, மெழுகுதிரியைப் போல லைற்றுகள்; மங்கல் வெளிச்சம். பார்க்க ஒருமாதிரி.
வாசிகசாலையிலும் முந்தியப்போல கலகலப்பில்ல. வெளி லைற்றும் மங்கல்; இதில, "காட்ஸ்’ விளையாட ஏலாது தர்ன்; அதனால்தானா?
உள்ளே, படந்தட்டிப்பார்க்கின்ற இரண்டு சின்னப் பெடியங்கள். கையில பள்ளிக்கூடப் புத்தகங்கள்; ரியூசனிற்குப் போயிற்று வந்தவங்கள் போலிருக்கு.
பேப்பர் பார்க்கிற "யூலியசின்ர" தகப்பன்; புத்தக மேசை களும் வெறுவாங்குகளும்.
சும்மா தட்டிப்பார்த்தபடி. ஒன்றையும் வாசிக்க மன மில்லை; முந்தி இப்பிடியில்ல - வெளியேறல்.
*சுப்பிரமணிய பார்க்கும், அழுதுவடியு து. 'தரின்ன தரீன்னா.. ” வெறும் இழுவைக் குரல் - றேடியோவில். றேடியோவுக்கு முன்னால், கல் சீற்றுகளில் அந்தப் பழைய கோஷ்டி, இப்பவும், அரசியல் அரட்டை அடித்தபடி தான்.
பின்புறம் ஒரே அமைதி. வெளிக் கேற் லைற்றுஒளி படிந்தபடி தண்ணீர்த் தடாகம், சறுக்கீஸ் அந்த நெடிய மரங்கள் இருளிலும் - ஒளியிலும் கலந்தபடி.
மனிதர்களில்லாத, இந்த வெறும் தனிமை - இப்ப பிடிக்கவேயில்ல. -
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 44

முந்தி,- மனநிறைவும்; உள்ளக் கிளர்ச்சிகளும்!
தனிமையில் - றேடியோச் செய்தி முடியும்வரை, மெல்லிய ஒளி படர்ந்த மக்கிப் பாதையில் சிறு உலா; நிறைவாகத்தானிருக்கும்.
"தனிமை’. இதுக்கு அர்த்தமிருக்குமா. இப்ப ‘இது விசர்த்தனம். ஆக்களோட புழங்க வேணும்: உலகத்தில, நான்மட்டுந்தானா?
*றொபின்சன் குரூசோக்கள்’; இப்ப இது ஏலாது.
2
ஒரு நாள் கழிஞ்சு போச்சு, கிறீஸ்துராசாவை, ஏன் காணயில்ல.? ஓ! இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை; கடலுக்குப் போகாயினம். 太。
** கிறிஸ்துராசா”
**அவன் இல்லத்தம்பி. போனகிழமதான் தாளை
யடிக்குப் போனவன்; அங்க, தங்கு வேலையாம்” வெளி வந்தபடி கிறீஸ்துராசாவின் அம்மா.
**தங்குவேலைக்கு. அங்க ஏன்?”
'அங்க மேசன் வேலைக்குத்தம்பி. அவன் இப்ப கடலுக்குப் போறயில்ல.”
கிறிஸ்துராசா இல்லாம, லீவு எப்பிடிக் கழியும். சீ! அந்தாள், இஞ்ச நிண்டிருந்தால். என்ர போக்குக்கு, புத்தகங்கள்: ஊர்க்கதைகள் நல்லாய்க் கதைக்கலாம்.
மனம் நெருங்கிய ஒரே சினேகிதனாகக், கிறீஸ்துராசா! ‘வேற ஆர்’.? , -
வெட்ட வெளி.
45 | ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது. W

Page 29
*சென்லூயிஸ், "அல்போன்ஸ்..? சும்மா. சிரிப்பதோட சரி. அந்த வாசிகசாலையடிப் பெடியங்களட போக்கும், வேற:
‘அப்ப ஒருத்தருமே, இல்ல." , பத்து மணியின் இள வெய்யில். வாசிகசாலை முன்னால் நிழல்வாடி மரத்தின் கீழ் கும்பல்; யேக்கப்பின்ர தேத் தண்ணீர்க் கடையிலும், படகுப் பெடியங்கள்.
ஓ! இண்டைக்குத் தொழில் ஒண்டும் போகாதெல்லா..! அதா.ன். குறுக்காகக் கடந்தபடி தேவதாஸ்.
−
இதென்ன. கண்டுங் காணாதமாதிரி; சும்மா சிரிக்கவுங் கூடாதா? *
ஏன், நான் தன்னப் பொருட்படுத்தமாட்டனெண்டா?; அப்பிடியென்ன நான் மாறியிற்றன்.
இந்தப் போஸ்ற்மாஸ்ரர் அன் சிக்னலர்ஸ்"; கொழும்பில வேல. இதாலயா? அதுவும் இந்த ஒரு வருஷத்துக் குள்ளயா..?
காட்ஸ் விளையாடுகிற படகுப் பெடியங்கள்; சுவையோடு மொய்த்துப் பார்க்கும் கும்பல்.
அவங்களுக்கு நான் முக்கியமில்ல. முந்தி, நானும் அவங்களைப் பொருட்படுத்தயில்லயே: அவங்கள் ஏன் என்னட்டக் கதைக்கப் போறாங்க.
நெருங்காத முகங்கள். பதட்டமாய், இயல்பில்லாமல் வாசிகசாலையில்ஏங்குகிற மனம். ' ܫ
"சீ! ஊருக்கு ஏன் வந்தன்?" எரிச்சலோடு, தனிமை வறட்சியில் மனம்புதைய திரும்பி வந்து வீட்டில் - சாய்வுக் கதிரையில் ஒடுக்கம். புத்தகங் களோடும், இரா வரைக்கும் அதிலேயே,
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 46

"வெளியில எங்க போறது? ஆரப் பாக்கலாம். 'சீ' - எரிச்சல், "இண்டயோட மூண்டுநாள்; இன்னும் அஞ்சுநாள்க் கிடக்கு” "கொழும்புக்குப்போனர்ல். . ?” கொழும்புக்கு.? சைவக் கடை, ஒற்றைத் தனியறை யின் மூன்றாவது கட்டில் - அதில் ஒடுங்கியபடி e e s a • • வெள்ளவத்தையில இருந்து கோட்டைக்கு, கோட்டை
யில இருந்து வெள்ளவத்தைக்கு" ஒவ்வொரு நாளும், அர்த்தமில்லாமல் மெஷினைப்போல.
"இதென்ன, சும்மா நெடுக வீட்டுக்குள்ளயே. வெளி
யில போய், நாலு மனிசரோட கதைச்சுப் புழங்கன்; சும்மா
விசரன் மாதிரி யோசிச்சபடி.”
- அம்மாவிற்கும் என்னைப் பார்க்க எரிச்சல்போல: அவ எரிச்சல்படுகிறா. “ஆரோட போய்க் கதைக் கிறது” ۔
*இவர்தான், ஒரு புதுமாதிரியான மனிசன்; அப்ப ஏன் இஞ்ச வந்தனி?”
ஏன் இஞ்ச வந்தனி ? ஏன் இஞ்ச வந்தனி ?
சுற்றிச் சுற்றி வந்தபடி அந்தச் சொற்கள். 'ஓம்! நான், ஏன் இஞ்ச வருவான்? வறண்டு போகவா?
"அம்மாவே கேட்டாச்சு" > ‘அம்மா எங்க? வெளியால எங்கயோ போயிற்றா
போல; ஆளைக் காணன்."
47 / ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது. •

Page 30
இந்த எரிச்சலில் இருந்து விலகவேணும்; சும்மா ஏன் இஞ்ச, இப்ப அஞ்சரை மணிதானே; இண்டைக்கு மெயிலுக்கே போயிரலாம்."
வெளியில கிடந்த உடுப்புக்களை அடுக்குவதில்
அவசரம். அக்காவையும் காணயில்ல; பக்கத்து வீட்டில
போல..
தங்கச்சி தனியத்தான் வீட்டில. "கனநாளைக்கு இஞ்ச வரப்படாது. எப்பிடியோ சவக் கொழும்பிலதான்.
ஒற்றைச் சூட்கேசோடு, வெளிவாசலுக்கு வந்த போதுகதவைத் திறந்தபடி அம்மா.
‘எங்க சூட்கேசுங் கொண்டு. ဝှး% அவவிற்கு ஆச்சரியந்தான்.
'நான் கொழும்புக்குப் போறன்.” ‘இதெ.ன்.ன திடீரெண்டு. இன்னும் லீவு கிடக்கே..!” அவவிற்குப் பயம்போல . ஏதோ நான் அவையளவிட்டு விலகப் போறதைப்போல.
எரிச்சல்பட்டபடி மெளனமாக, நான். அம்மா அழுகிறா. 'எனக்கொண்டும் விளங்க இல்ல; எங்களில உனக்கென்ன கோவம்? நீ இப்ப, முந்தின ஆளில்ல; உன்னப் படிப்பிக்க, நான் எவ்வளவு கஸ்ரப் பட்டனான்.”
‘இதென்னண ஒண்டுமில்லாததுக்குச், சும்மா அழுது கொண்டு’
அவவின் நினைப்பு இதே, ஏதோ நான் அவவைப் பேசு கிறதைப்போல mwy-ar-4
ஒரு தாய் சொல்லுறதக் கேக்கவேணும்; இதென்ன?
திடீரென எங்களையெல்லாம், நீ மறக்கப்போறியா..?”
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் | 48

எனக்கு எரிச்சல்; ட்றெயினுக்கும் நேரம் போகுது. *"எனக்குத் தெரியா; நான் போறன்."
நான், திரும்பிப் பார்க்க இல்ல. ஸ்ரேசனுக்கு ஞாய மான தூரம் நடக்கவேணும். கூட வர, ஒருத்தருமே இல்ல.
சூட்கேசும் நானும்; "பீச் றோட் சந்தி லைற்றில், சிறிது தூரம் நிழலும்.
ஆனி 1969
49 ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது
தொ-4

Page 31
தொலைவு
சமீபகாட்களாய் நண்பர்கள்மேல் அவனுக்கு ஈடுபாடு குறையத், தொடங்கியிருந்தது. மூன்று நான்கு பேராய் ஊரில்: கொழும்பில் அவர்கள் இருந்த போதும் சலிப்புக் கொண்டு வந்தான். ஈடுபாடு கொள்ள முடியாதவர்களின் நடுவில் தனித்துப் போன வறட்சி உறுத்திய வேளையில் சந்தித்த அவர்களை, "ஒயாஸிஸ்’களென முன்னர், நினைத் திருந்தான்: ‘ஒயாஸிஸ்"களும் வெம்மை கொள்கிறதைப் போல, உணரத் தொடங்கினான்.
"புத்தகங்கள்; படங்களைப்பற்றி எவ்வளவு ஈடுபாடு கொள்ளக், கதைத்திருப்பார்கள்? “வாய்பாடுகளில் அடை பட்டவர் நடுவில், விலகி நின்றவர்களாய்க் கூர்மை கொள்ளக் கதைப்பார்கள்.
ஊரில்நின்ற நாட்களிலும், வாசிகசாலை முன்னால் அலுப்பாந்தியின் மண்கும்பல்களின் மேல் என இலயிப்பாக, அந்தக் காலங்களின் முன்னிரவு நேரங்கள் கழிந்து போயின. கொழும்பில் வேலைப்பயணங்களிற்குப் பிறகு - நெருக்கங் கொண்ட ஓரிருவரோடு கடலோரக் கற்களில், ஸ்லோ ட்றெ யினில்; மாலையில், வேலை ஒய்ந்த சந்திப்புகளிலும் கதைப் புக்களிலும் உயிர்த்துடிப்பு நிறைந்திருந்ததுதான்.
*கலாபவன'த்தின் ஓவியக் காட்சிகள்...!அருமையாய்ப் பார்க்கநேர்ந்த, 'அந்த உன்னதத் திரைப்படங்களென வெல்லாம் நிறைவுகொள்ளக் கழிந்தனதான்.

தேடித் தேடிப் படிக்க முடிந்த புத்தகங்கள்; அவை தொற்றிய ஆழமான கதைப்புக்கள். எல்லாம். அர்த்தமிழந்து போகிறதாக இப்போது அவனுக்குப் பட்டது. தன்னோடு நெருங்கியோரின் இந்த நட்பை அதிசயமானதென நினைத்து, முன்னர் வியந் திருந்தான்.
அவையெல்லாம். வீழ்ச்சிகொள்ளத், தொடங்கி விட்டன.
அவனைப் புரியாதவர்களைப் போல் ஊசியாய்க் குத்து கிற நளினங்களை அவர்கள், அவனுக்குச் சொன்னார்கள்; அந்த நளினங்களில் அவன் ஏமாற்றங் கொண்டான். தனது கதைப்புக்களில், போக்குகளில் ஒரு "நம்பாமை”யை எரிச்சல்மிக வெளியிடுவதையுங் கண்டான். அவர்கள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையென்பதில் பெரு வியப்புக் கொண்டவன், பிறகும் இவர்கள்ஏன் தன்னுடன் தொடர்பு கொள்ளுகிறார்களென்பதிலும் ஆச்சரியமடைந்தான்.
தன்னைப் பாசாங்கு பண்ணுகிறவனாய்க் காணுகிற வர்கள் தன்னைவிட்டு ஏன் விலகிப் போகவில்லையெனப் பார்த்தான்; அது இப்படியோ எனச் சந்தேகங்கொண்டான். எத்தனை புத்தகங்கள். 1 அருந்தலான அருமை யான புத்தகங்கள். அவற்றைப்பற்றிய விடயங் களை அவன், அவர்களுக்குக் கொடுத்திருக்கிறான். அவனிடமிருந்து அவர்கள் புத்தகங்களைப் பெற்றுச் செல்வார்கள்; அருமையான, மிக அருமையான புத்தகங்கள். அவர்களிடமிருந்து அவனுக்கு. நான்கோ ஐந்தோதான். 。 *இதனால்தான் போல. y *ஒரு செய்தி தருவோனாகத்தான்’ அவர்களுக்கு நான் இருக்கிறேனோவெனச் சந்தேகங் கொண்டான். இதைவிடத் தனக்கு அர்த்தமில்லையெனக் கண்டவனின் மனது உடைந்து
51 தொலைவு

Page 32
போக அந்தச் சந்திப்புக்கள்; கதைப்புகளில் நாட்டம், குறைந்து வரக் கண்டான். எழுதிய கடிதங்களுக்குச் சார மான பதில் கிடைக்காததில், அந்த யாழ்ப்பாண நண்பரிற்குக் கடிதம் எழுதுதலிலும் அவனுக்கு ஆர்வம், குறைந்தது.
சூழவும், தனிமை கொண்டதெனக் கண்டவனின் முன் னால் தான் இழந்துபோன அவளின் நினைவுகளும் உறுத்தி, துயரங்கள்பெருகி வரக்கண்டான். அர்த்தமில்லாத தாய்க் கழிகின்ற நாட்களிடையில்தான் அந்தக் கடிதம், அவனுக்குக் கிடைத்தது.
அந்த யாழ்ப்பாணநண்பர் ஏதோ இன்ரவியூ"விற்கு வருகிறாராம். நீண்ட நாட்களின் பின்னர் அவரை நேரில் சந்திக்கப் போவதைப் பற்றியும் அவன் ஆர்வம் காண வில்லை; "வந்தால் சந்தித்துக் கொள்வோ"மென மட்டும் நினைத்துக் கொண்டான். அவரும் வந்தார். "காலையில், ஸ்ரேஷனில் நெடுநாளைக்குப் பிறகு காண்பதில் ஆர்வமாய் அவர் கதைத்தார்தான்; அவனும் சும்மா, கதைத்தான். ஸ்லோ ட்றெயினில் வெள்ளவத்தைக்கு வருகையில் கதை தொடரவில்லை. அவர் பெட்டிக்கு அப் பால், தலை நீட்டிச் சும்மா பார்த்துக்கொண்டு வந்தார்.
அவனும், இன்னும் பரபரப்புக்கொள்ளத் தொடங்காதஅமைதியில் ஆழ்ந்து கிடந்த நகரத் தோற்றத்தில்; எட்டிய வெளியில் கத்தியபடி பறந்த காகங்களைப் பார்த்து இலயிப்புக்கொள்ள வந்தான். காலையின் அந்த அழகிய விகஸிப்பில் மனம் நிறைவுகொண்டதென உணர, அந்த நண்பரோடும் நன்கு பழகவேண்டுமெனத் திடீரென நினைத்தான்.
அவரோடு ஊரில் கழித்த அருமையான பொழுதுகளை யும் நினைவுகொண்டான் "ஊரில் தன் மனது நெருங்கிய
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் ! 52

ஒரே நண்பனென" முன்னர் கருதியிருந்ததையும், அப்படியே அங்கீகரித்தான். அதன் பிறகு - அவன் சிறிது மனம் விட்டுக் கதைத்தான். இன்ரவியூ; ஊர்ப்புதினங்களென அவை விரிந்து போயின.
பின்னேரம் தம்மோடு படித்த பிறான்சிசைச் சந்திக்க "கிறாண்ட்பாஸிற்குப் போனார்கள். பொலிஸ் ஸ்ரேஷ னிற்குள் நுழைந்து பின்னாலுள்ள "பச்சிலர்ஸ் குவாட்டர்’ சிற்குச் சென்று விசாரித்தபோது, சத்தத்தைக் கேட்டுப் பிரான்சிஸ் வெளியே வந்தான்.
முதலில் இவனைக் கண்டவன்,
"சூரி. 1 கனநாளைக்குப் பிறகு. ” என இவனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சொல்லியபடி, நண்பரின் கையைப் பற்றினான். w
அந்த நண்பரளவிற்கு இவன் பிறான்சிசோடு நெருங்கி யிருக்கவில்லைத்தான். எந்தவித அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொள்ளுமளவிற்கும், அது நெருக்கங்கொண்டிருக்க வில்லை. ஏழெட்டு வருடங்களின் முன்னால் ஒன்றாய்ப்படித் தார்கள் என்பதுதான் அவனைப் பொறுத்தவரை, அவருட னான தொடர்பு. ஆனாலும் அவனின் நெருங்கிய அழைப்பும், கதைப்பும் உற்சாகமான ஈடுபாட்டை ஏற்படுத்தி யிருந்தது; மகிழ்ச்சியாய்க் கதைகளில் பங்குகொள்ள எண்ணினான்.
'வாருங்க. , கடைக்குப் போகலாம்” எனப் பிறான்சிஸ் கேட்க இருவரும் எழுந்து போனார்கள். கடையில் நுழைந்து போனதுமே "பக்’கென ஒரு மொச்சை நெடி மூக்கில் பரவியதை அவன் உணர்ந்தான். புகை படிந்த - பூச்சுக்கள் உடைந்திருந்த கடையின் அழுக்கான சுவர்கள்; மேசையில் கும்பல்கும்பலாய் மொய்த்திருந்த இலையான் களைக் கண்டதில் அருவெறுப்புப் பெருகி வரவும், அதை வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான்.
53 | தொலைவு

Page 33
பிறான்சிஸ் உடைத்து ஊற்றிய "நெக்ரோ'வை அவன் குடித்துக்கொண்டிருந்தபோது நண்பரும் பிறான்சிசும் ` கிளாஸ்களைப் பற்றியபடி, ஏதோ கதைத்துக் கொண்டிருந் தார்கள்.
பிறான்சிஸ் திடீரென "லூசியாவின்ர வீட்ட போன னியா..? எப்பிடி விஷயங்கள். ” என ஆவலாய், தான் மணந்து கொள்ளப் போகும் பெண்ணைப் பற்றிக் கேட்டான்.
**ஓம் போனனான்."எனத் தொடங்கியவர் இவனை அவதானித்ததைப் போல் நிறுத்தினார்.
"என்ன..!ட்ா, சூரிதானே இருக்கிறது. கெதியணச் சொல்லன்ரா” எனப் பிறான்சிஸ் விரைவுபடுத்தவும்,
“பெரிய விஷயங்கள். நான் பிறகு சொல்லுறன்.” என்று அவர் இழுத்தபடி.
அவன் ஏமாற்றங் கொண்டான். அவர்களிடையில் தான் மூன்றாம் மனிதனாகினானெனத் தெரியப் பெரிதாய், அது உறுத்துவதை உணர்ந்தான்; அந்தக் கதைகளை அறிதலில், அவனுக்கு நாட்டம் இருந்ததில்லை.
பிறான்சிஸ் சொல்லும்படி சொல்லவும், தன்னோடு நெருங்கிய நண்பர்தானே தன்னை அன்னியனாய்க் கண்டு மெளனங் கொண்டார் என்பதே பூதாகரமாகிவர. சமீப நாட்களாய் நண்பர்கள்மேல் ஈடுபாடு குறைந்து விலகல் காணவேண்டுமென நினைத்திருந்தது நினைவுக்கு வரக் கண்டான்.
திடீரென, கடையில் பரவியிருந்த மொச்சைநாற்றம் பெருகியது போலிருந்தது. "இனிமேலும் இந்த இலையான் கும்பல்களைப் பார்த்துச் சகித்தபடி இருக்க முடியாது." வெறுப்புக்கொள்ள எழுந்து "வெளியில நிக்கிறன்” என்ற
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் 154

படி வாயிற்புறம் வந்தவன், நோக்கமின்றித் தெருவைப் பார்த்தபடி நின்றான். பணிவிலிருந்து வந்த வெள்ளைக் காரொன்று தன்னைக் கடந்து போனதை ஊன்றிப் பார்த் தான். சிறிது சிறிதாய்த் தொலைவுகொண்டு அது போவதை ஆழ்ந்த அர்த்தத்துடன் பார்த்து நிற்பவனைப்போல், அர்த்த மின்றியே பார்த்து நின்றான். “தொலைவு கொண்ட அது சந்தி வளைவில் மெல்ல மெல்ல, மறைவு கண்டது.
சந்தி குலவிய அடிவானத்தில், கருமேகங்கள் மேல் எழும்பிக்கொண்டிருந்தன.
கார்த்திகை 1971
55 / தொலைவு

Page 34
D இருப்பு O
‘சத்தியசீலனுக்குத் தன் இருப்பின் அர்த்தம் என்ன வென்று விளங்கவில்லை. கழிந்த வாழ்வுக்கும் என்ன அர்த்தம் கொண்டிருந்ததென்று பார்க்கவும் ஒன்றும், காணாது குழம்பினான். வரவரத் துயர் பெருகிவருகிறது.
மனமும் நெஞ்சும் இடைவெளி காணாது துயரில் அழுந்திக்
கிடக்கிறதாய்,
எப்பவும் உடற் பலகீனத்தில் தாமஸத்தில் அழுந்திய வனாய் ஆறுதலாய் இயக்கங்கொண்டு எல்லையற்றுத் துயரம் விரிந்து செல்ல, தலையில் ஏதோ சதாவும் அழுந்திக் கிடக்கக் காண்கிறான் முகம் மேலும்மேலும் கறுத்துவந்த
. . . . . .
துயர்கொண்டு தான்மட்டும் தனித்துநிற்க சூழவும் நகர்ந்து செல்லுகிறதாய்க் காட்சிகள் பார்வை கொள்ளும். வாழ்வு சகிக்கமுடியாததாகி வந்தது. இதிலிருந்து மீட்சி காணவேணுமெனச் சிலசமயம் எண்ணுவான். எண்ண எண்ணத் தன்னை அறியாதே மேலும்மேலும் துயரினில் ஆழ்ந்து போகக் காண்கிறான். விடுதலையே கிட்டாதோ என்று தோன்றப் புதிதாய்ப் பயங்களும் வந்து சூழும்.
ஒரோர் சமயங்களில் விடுதலையும் வந்துகாணும். "பாத் ரூமில்" முழுகிவிட்டுத் தலைதுடைத்து, நிற்கையில் கதவிற்கும் மேற்சுவருக்குமிடையில் தெரிந்த வீட்டுக் கூரையின் பின், படர்ந்த கருநீல ஆகாயம்.

எண்ணங்களற்று மனது நிர்வாணங்கொள்ளும்; வெளியிற் கலந்து எல்லையற்று விரிந்துசெல்ல நிறைவும் வந்துசூழும். "உடப்பேராதனை'யில் நிற்கையிலும் காலடியில் நிலம் முடியத் தொடரும் பாதாளம், நீண்டுநீண்டு எதிரே செல்லும்.
நீள்தொலைவில் அலைகளாய் மலைகள்; மலைகளின் மேலும் வெளி.
வெளியும் பாதாளமும் சந்தோஷத்தை நிறைக்க மனம் உயிர்ப்புக்கொள்ளும்,
ஊரில் "உப்புமால் கந்தோரடியில் ஒற்றைத் தென்னை மரத்தருகில் நின்று பார்க்கையிலும் இதே சந்தோஷம் சூழக் காணுவான்.
கடல்நடுவில் தனித்து வெளிச்சக்கட்டை, 'கல் முனை"க்கும் "மண்டை தீவுக்கும் நடுவில் நீண்டு விரிந்த, கடல்வெளி.
வெளி; பார்க்கையில் எப்பவுமே விடுதலை தந்தபடி.
பாத் ரூமில் நின்றுகொண்டு; பாதாளத்தைப் பார்த்தபடி கடல் வெளியில் இலயிப்புக்கொண்டு சதாவும் இருக்கத் தோன்றும். நீளவும் அவ்வாறு இருக்க முடிந்ததில்லை. அர்த்தமற்ற வாழ்க்கை இயக்கங்கள் வந்துதட்டும்; மண்ணில் கால்பரவும். எல்லையற்ற வெளியில் ஒன்றக்கண்ட பரவசமும் மறைவு கொள்ளும்.
போதல் வருதல்; வருதல் போதலாய் அர்த்தமற்ற இயக்கங்கள், மறுபடியும் மனதில் துயர்வந்து கவியும்; அர்த்தமிழந்து வாழ்க்கை சகிக்கமுடியாததாய்க் காணும்.
“பார்த்தாயா நட்புங் காதலும்
மறைந்து போவதை. என்பதே அடிக்கடி மனதில் எழுந்து வரும்; அவளின் வசீகர
முகமுந் தோன்றும்.
57 இருப்பு

Page 35
இடையில் அவளில், என்ன மாறுதல் நேர்ந்ததென்பதும் தெரிந்தபடியாயில்லை.
Lu TeshusFib நிறைத்த அன்னியோன்னியமும் எவ்வளவு தொலைவிற் சென்றது..?
மணியோடர் மாற்றவோ முத்திரை வாங்கவோ கந்தோருக்கு வந்தவள். பக்கத்துக் கவுண்டரில் இவன் இருக்கவும் பார்த்தும் பாராததாய் நின்றாள். "உன்னுடன் எனக்கொரு சம்பந்தமும் இருந்ததில்லையே. என்பதாய்ப் பாராத தாகப் போனாள்.
இரண்டோ மூன்று நாளின் பின்னால் யூனிவசிற்றி லைபிறறியில் ஓவியக் காட்சியைப் பார்த்துவிட்டு வருகையில் கீழ்ப்படிக்கட்டருகில், "இரத்தினபாலனை'க் கண்டான். அவனோடு கதைத்துநிற்கையில் எதிர்பாராததாய் மேற் படியில் அவள், இரண்டு பெட்டைகள் ஒரு பெடியனுமாகத் தோன்றியபடி. அவளைக்கண்டு மறுபக்கந் திரும் பி நண்பனோடு கதைத்து \ நின்றவன், ‘கதைக்கிறாளோ பாப்பம்" எனத் தோன்ற உடனே திரும்பினான். பாதங் களைக் குனிந்து பார்த்து இறங்கி வந்தபடி அவள்.
கிட்ட வருகையில் அவளது முகத்தை உற்றுப் பார்க்கவும் அவன்மேற் கவனம் கொள்ளாதவளைக்கண்டு வியந்த பக்கத்துத் தோழிப்பெட்டை, கையைச் சுரண்டிக் கவனங் கொள்ளச் செய்ய முயன்றும் படிகளைப் பாதங்களைப் பார்த்தபடி அவள் கடந்து போனாள். ஒன்றும் விளங்காது குழம்பியவளாய் அவனையும், இவளையும் மாறி மாறிப் பார்த்தபடி தோழியும் சென்றாள். «
அதிர்ந்த நெஞ்சில் தனிமை வந்து சூழ்ந்தது. நிலை குலைந்து நின்று திரும்பிப் பார்த்தான்.
கன்ரீன்பக்கமாக அவளும், அவர்களும் விலகிச் சென்ற - . . . . . .
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் I 58

"பார்த்தாயா, நாம் எவ்வளவு அந்நியங்கொண்டு போனோம்!" W
அவனால் தொடர்ந்து கதைத்துநிற்கவும் முடியாது போனது. "போவமா’ என அவசரமாய் முறித்துத் திரும்பி னான். திரும்பிச் செல்லுகையில் "அக்பர் பாதை"யில் பாலத்தின்மேல் சிறிது நின்று ‘மாவலி'யைப் பார்த்தான். தண்ணிரைத் தொடத்தாழ்ந்த மரக்கிளைகளும், தண்ணிரின் ஓட்டமும் முன்போல் பரவசம் தராது போனது, மகாவலி குழம்பித் தெரிந்தது; மரக்கிளைகளும் "கோணல்மாணலாய்ச் சிக்கல்கொண்டு விகாரமாய் மார்பெலும்புகளை நினைப் பூட்டியதாய்.
"அன்புக்குரியவளாய் பரவசந்தந்தவள் இவ்வாறு ஏன், நடந்து கொள்கிறாள். அவனால் அவளை விளங்க முடியவில்லை.
'மனுஷனை நம்ப முடிகிறதில்லைத்தான்’ என்று குழம்பியவன் அறைக்குச் சென்று, அமைதியின்றியே படுத் தான்.
குழப்பங்கள் விலக இரண்டு கிழமைகளின் பின், யாழ்ப் பாணத்திலிருந்து கடிதங்கள் வந்தன. நண்பனோடு ஈஸ்வரனும் போட்டிருந்தான். நண்பனின் கடிதத்தைப் படித்தவன் விளங்காது குழம்பினான்.
திரு. சத்தியசீலன் அவர்களுக்கு
என்று தொடங்கிய கடிதம், இனிமேலாவது எனது தங்கையின் வாழ்வில் குறுக்கிடாம லிருந்தால் நானும் எனது குடும்பமும், நன்றியுடையவர்களாயி ருப்போம்
நன்றிகள்
தங்கள் உண்மையுள்ள, சுப்பிரமணியன் விநாயகமூர்த்தி என்று முடிந்திருந்தது.
59 | இருப்பு

Page 36
நட்பின் நெருக்கமும் இல்லாது தெரிந்தது. எவ்வளவு புத்திசாலித்தனங் கொண்டமைந்ததாய். " திடீரென எவ்வாறு இம்மாறுதல் கொண்டது என்பதும் தெரியாது ஈஸ்வரனின் கடிதத்தைப் பிரித்தான்.
உம்முடைய வாழ்க்கைப் பிரச்சினையில் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்ற முன்னுரையோடு, தெளிவாகவே ஈஸ்வரன் எழுதியிருந்தான். விடியற்புறம் ஐந்து மணிபோல் அறைக்குவந்து படுக்கையில் நின்றும் தட்டி எழுப்பிய நண்பன், "நீயும் சத்தியனும். இரண்டு பேரும் துரோகிகள்" என்று சத்தம் போட்டதனை எழுதியிருந்தான். தங்கச்சியின் படிப்பில் இடைஞ்சலா யிருக்கிறதாயும் இனிமேலும் அவளுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டால் உங்களைச் சும்மா விடமாட்டன்" என்றும் கத்தியவன், இறுதியில் சொன்னானாம்.
"அவளுக்குப் பெரிய இடங்களில இருந்தெல்லாம் கலியாண்ங் கேட்டு வருகினம். தூரத்துச் சொந்தத்தில டொக்ரர்பெடியனுக்குங் கேட்டவையள்.
இவரென்ன..முன்னூறுரூபா பிச்சச் சம்பளக்காறர்; மீன்பிடிக்கிற சாதி. அவருக்கும் ஒரு எண்ணமோ. ဝှ*း
அவனுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. "அந்த நண்பனா இவ்வாறெல்லாம் சொன்னான். மனிதநேசிப்பு சர்வதேசியமென்றெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் முழங்கி னானே, அவனா சாதியை இழுத்தெல்லாம் கதைத்தான்
வேஷங்கள் நிறைந்த நண்பர்குழுவில் விலகி நின்று சத்தியமாய் வாழ்வோமென நெருங்கி நெருங்கி வந்தானே. எவ்வளவு மதிப்போடு பழகினான்.
தங்கையின் காதல் வெளித்தெரிய மறைமுகமாய், எவ்வளவு ஆதரவாய் நடந்து கொண்டான். சொந்தத்தில் ஆரோ "வேதத்தில் கலியாணங்கட்டின கதையெல்லாம் சொன்னவன், "உம்முடைய ஆசையும் நிறைவேறு"மென்று
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் | 60

சொல்லி, சொன்ன தேதியையும் குறித்துவைக்கச் சொன் னானே.
அவனா இவ்வாறெல்லாம் மாறிப் போனான்!” "டொக்ரர் எண்டதில் வரிசை மாறியதா?; இவன் குழப்பத்தான் அவளும் மாறினாளா? எவ்வாறெல்லாம் வியந்தாள்...!; பரவசங் கொண் محمي டிருந்தாள். சந்திப்புகள்; நீண்டகதைகளெனப் புரிந்து கொள்ளல்கள் தொடர எவ்வளவு நெருக்கங் கொண்டி ருந்தோம்.
இரு நீண்ட வருஷங்கள். எல்லாம் தொலைந்து போனதா? மனுஷனெண்டால், கட்டாயம் மாறுவானா..? மனுஷன் மதிப்பிழந்து போனானா? ஒன்றும் விளங்காதே குழம்பினான். அன்பு கொள்ளுகிறவர்களெல்லாம் விலகித் தொலைவிற் செல்லச்செல்ல, சகிக்கமுடியாததாய்த் துயர் வந்து சூழுமென்ற உள்ளுணர்வு மேலும் நிரூபணமாகக் காண் கிறதில் புதிதாய், யாருடனும் நெருங்குகிறதை எண்ண, நெஞ்சம் நடுக்குறுதல் காண்கிறான்.
மனுஷர்களை நம்ப முடியாதுபோகிறதில் நாட்டம் குறைந்து, மேலும் மேலும் தனித்துப் போகிறான். அர்த்த மின்றி வெறுமையில் கழிவதென, அவனுடைய இருப்பும் நீளும்.
வெள்ளியூத்துச் சிதறிய இரவில் முற்றத்தில் நிற்கையில் இடையிடையே சிலசமயம் மறுபடியும் நிறைவுவர, அர்த்தம் மெல்லிய கோடாய்த் தோற்றங்கொள்ளும். பிரமாண்டங் கொண்ட வெட்டவெளி விரிவின்முன் சிறுபுள்ளியென நிற்கும் தான், அதில் ஒன்றுவதான பிரமையில் பரவசம் சூழும். எவ்வாறெல்லாம் இப்பரவசம் சூழ்கிறதென்பதும் விளங்குகிற படியாயில்லை.
61 இருப்பு

Page 37
இள வயதில் விடியற்புறம், பேயாய் இருள் படர்ந்த ஒழுங்கையில் அம்மா "விளக்குப்பிடிச்சுக்" காட்டத் தம்பியுடன் பூசைக்குப் போன நாட்கள்; திரும்பிவருகையில் பனிபடர்ந்த புற்றரையில் கால்கள் பரவி நடந்து வந்த போதுகளிலும்.
புதுமைமாதா கோயிற் தனிமையில் தியானித்திருந்த நாட்களிலும் இதுபோல் மனது நிறைவில் நிறைந்திருந்த தென மின்னலாய், நினைவுகள் தோன்றும்.
கடவுளை-பெருஞ்சத்தியத்தை நம்பிய அந்த நாட்களில் இவ்வாறெல்லாம் அலைப்புற்றதில்லை: சகிக்கமுடியாத துயர் வந்து கவிந்ததுமில்லை. புறக் கஸ்ரங்களிடையிலும் நிறைவாய், எவ்வளவு அமைதியாய் வாழ்க்கை கழிந்தது.!
‘கடவுளற்ற மனிதனாய்’ மாறிய பிந்திய நாட்கள். எல்லையற்று நீட்சிகொள்ளும் வெறுமையும், அமைதி யின்மையும்,
ஆறுதல் கொள்ளவும் ஒன்றுமற்றதாய் தனித்த பாழில், நெஞ்சு தவிப்புக் கொண்டதென.
இவனுக்கு, ஒன்றும் தெளிவாக இல்லை.
மனுஷனை, நம்பமுடியவில்லை.
‘கடவுளும் கோயிலும், நிறைவுநாட்களும். கழிக்க முடியாததாய்த் தோன்றியபடி.
கடவுளைத் திடீரென்று நம்பவும் முடியவில்லை; அந்த ஆறுதல்களின் காரணங்கள் என்னவென, விளங்குகிறது மில்லை. உண்மை எதுவாகுமென்பது தெரியாதே பெரிதாய்க் குழம்பினான்.
தட்டிக்
"புரியாத பலதுகளில் ஒன்றாய் இவையும் கலந்த தென., நீளுகிற இருப்பு.
ஆவணி 1974 ロ ロ ロ