கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நம்மைப் பற்றிய கவிதை

Page 1


Page 2

等
நம்மைப் பற்றிய கவிதை ஆகர்ஷியா (1977)
இயற்பெயர் பவானி அருளையா. யாழ்ப்பாணம், புங்குடு தீவில் பிறந்தவர். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் உயர் கல்வி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்று, இலங்கையில் கம்பஹா என்னும் இடத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவருடைய கவிதைகள் ‘சரிநிகர்’ (கொழும்பு), ‘சக்தி (நார்வே), ‘வைகறை (கனடா), ‘தலித்’ (தமிழ்நாடு) போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.
துணைவர்: பிரதீபன்; மகன்; சுகநயன்.

Page 3

ஆகர்ஷியா
நம்மைப் பற்றிய கவிதை
争
காலச்சுவடு பதிப்பகம்

Page 4
விலை 50 ரூபாய்
நம்மைப் பற்றிய கவிதை 9 கவிதைகள் 9 ஆசிரியர்: ஆகர்ஷியா • C) ஆகர்ஷியா 9 முதல் பதிப்பு: செப்டம்பர் 2007 9 வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை, நாகர்கோவில் 629 0019 தொலைபேசி: 91-4652 - 278525 தொலைநகல் 91-4652 - 402888 மின்னஞ்சல்: kalachuvaduடுSancharnet.in 9 அச்சுக்கோப்பு: சுதர்சன் புக் புராசசர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் "முன் அட்டை ஓவியம் மற்றும் வடிவமைப்பு: நந்தா கந்தசாமி 9 அட்டை அச்சாக்கம்: பிரிண்ட் ஸ்பெஷா லிட்டீஸ், சென்னை 600 014 9 அச்சாக்கம்: மணி ஆஃப்செட், சென்னை 600 005.
காலச்சுவடு பதிப்பக வெளியீடு: 202
nammaip paRRiya kavitai • Poems • Author: aakarshiyaa · C Akarshiya • Language:Tamil • First Edition: Septemper 2007 • Size: Demy 1 x 8 • Paper: 18.6 kg maplitho • Pages: 72 • Copies: 450+50 • Published by Kalachuvadu Pathippagam, 669 K.P. Road, Nagercoil 629001, India o Phone: 91-4652 - 278525 Fax: 91-4652 - 4028880 e-mail: kalachuvaduQsancharnet.in · Typesetting: Sudarsan Book Processors and Distributors o Front Cover Illustration and Design: Nanda Kandasamy (Geevan) • WrapperPrintedat Print Specialities, Chennai 600 014 o Printed at Mani Offset, Chennai 600 005 • Price Rs:50.
Selling Rights: Sudarsan Book Processors and Distributors, 669 K.P. Road,Nagercoil 629001, Phone: 91-4652 - 278525, Fax: 91-4652 - 402888, E-mail: shpd669Gogmail.com
ISBN 978-81-89945-07-7
09/2007/S.No.202, kcp 329, 18.6 (1) 500

பொருளடக்கம்
மெல்லிய நிலவொளி கலந்த . . .
ஏன் இந்த இருப்பு?
அவர்கள் பார்வையில்
நான் ஒரு பெண்
தேடுதல் எங்கள் வீட்டிலொரு பொம்மை
அர்த்த மோன இருப்புகள்
இருள் அரங்கு
காகமும் பனம்பழமும்
இப்படியாக எனது வாழ்க்கை 96இல் சிந்திய துளிகள்
வேண்டும் பருவங்கள் நகரத்தின் சத்தங்கள்
கவிதைக் கனவு 96 ஒக்டோபரில் வந்து விழுந்த (க)விதைகள் எத்தகு நம்பிக்கையைச் . . . முனைந்தேன் கவிதையென . . .
அவள்
தொன்மம்
11
13
15
17
19
20
21
22
23
24
25
29
30
31
37
38
39
40

Page 5
நோவின் கனம் பரந்த வெளி . . .
பேசப்படாத எண்ணங்கள் . . .
பொதுவாகக் குடித்துப் பார்க்க . . .
காற்றுக் கலைத்த மணல்மூடிகளில் . . .
ஊசி முனைக் கணத்தில் . . .
என் கவிதைகளைத் . . .
அசுத்தப்படுகிறது காற்று . . .
உருப்போட்டுவிட்டுப் . . .
சற்றே படச் சிலிர்த்ததென் . . .
நீ என்னை நினைவுகூர்ந்தாய் . . .
இரவு அசையவில்லை . . .
தெருவின் திருப்பத்தில் . . .
நீ சிக்கனமாகத்தான் . . .
கதிரை ஒன்றாயிருக்க .
மடங்கிப்போன பழைய காகிதம் . . .
ஒற்றை வரியில் சொல்வதானால் . . .
சோற்றுப் பிடிகளை . . .
மீன் மான் தேன் . . .
இன்றைக்கும் அப்படித்தான் . . .
உன்னுடைய தீர்ப்புக்காக இப்போதும் . . .
இலைக்குழல்வழி பீறிட்டது. . .
உன்பொருட்டு என்னிடம் . . .
நம்மைப் பற்றிய கவிதை
41
42
43
44
45
46
47
48
49
50
51
53
55
56
57
58
60
61
62
63
65
67
69

முன்னுரை
உண்மையில் இது முன்னுரை அல்ல. உங்க ளுடனான ஒரு சில பகிர்வுகள். பள்ளிக்கூட, பல்கலைக் கழகக் காலங்களில் எழுதிய கவிதைகளே இவை. அண்மைக் காலங்களில் கவிதை எழுதுவதில்லை. 'அடைகாலப் பிராயம்" எனப் பலரும் பேசிக்கொள்கிறபடி பொய்க்கு மனதைத் தேற்றிக்கொள்ள விரும்பவில்லை. இந்த இடைவெளி எனக்குக் கவலை தருவதுதான். இலக்கிய வாசிப்பு, உரையாடல் என்பன சிறிது காலமாக இல்லை. எனினும் இவை பற்றிய கவனம் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளே பெரிதும் இத்தொகுதியில் இடம்பெறு கின்றன. என்னுடைய கவிதைகளைப் பெண்ணியப் படைப்பாக அன்றிப் பெண்ணின் படைப்பாக முன் னிறுத்த விழைகின்றேன். அவை எழுதப்பட்ட காலத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை (போர், இடப்பெயர்வு) கன பரிமாணத்துடன் தரத் தவறியிருக்கிறேன். இது பெரிய குறையாகப் பல சமயங்களில் தோன்றுகின்றது.
பாடசாலைக் காலத்தில் பவானி அருளையாவாக எனது தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்த எனது அம்மா சிவகாம சுந்தரி, அக்காமார் செல்வி, மைதிலி, பின்னர் ஆகர்ஷியாவாக என்னை அறிமுகம் செய்த நண்பர் மதுசூதனன், பல்கலைக் கழகக் காலங்களில் என் ‘கவிதை எழுதுதல் நின்று போகாமல் உந்துசக்தியாக அமைந்த என் தோழிகள் நிதா, நளினி, என்னைவிட என் கற்றலில், உயர்ச்சியில்

Page 6
ஆர்வமாக, ஆதாரமாக இருக்கின்ற என் துணைவர், கண்காணாத் தொலைவிலிருந்துகொண்டு இத்தொகுதி வெளிவரப் பாடுபட்ட இனிய நண்பர்கள் அனைவருக்கும் இத்தொகுதியைச் சமர்ப்பணமாக்குகிறேன்.
ஆகர்ஷியா
兼 10 来 நம்மைப் பற்றிய கவிதை

மெல்லிய நிலவொளி கலந்த இரவும் வீசிச் சுழலும் காற்றிடை சலசலக்கும் வெண்கலப் பணித்துளிகளும் அதில் தோய்ந்து சிரிக்கும் சீமைக் கிளுவைக் கதியாலின் ரோஸ் நிறப்பூக்களின் மங்கலான வடிவமும் என் மனதில் மெல்லிய சலனத்தைத் தோற்றுவிக்கும்.
அடுப்பங்கரைப் புகையில் அவிந்த கண்களில்
நீர்த்துளி கோரும் பகல் இயந்திரமான உடம்பு ஒரு தனிமையான சிட்டுக்குருவிபோல் குளிரில் படபடக்கும்.
பின்புறமிருந்து பால்மணம் மாறாத கன்றுக்குட்டி தோளோடு தோள் உரசும். தன் கனிவான கண்களால் ஒருவித நேசத்துடன் எனை நோக்கும் அந்தப் பார்வையின் ஈரம் எதையோ நினைவுபடுத்துவது போல
ஆகர்ஷியா
米11

Page 7
மடியில் உதிர்ந்து கிடக்கும் பனிதோய்ந்த பூக்களை வருடுகையில் மென்மையான நினைவுகள் பசுந்திரையிடும். உள்ளிருந்து கர்ண கொடூரமான குறட்டைஒலி அந்த நினைவுகளை அறுத்தெறிவதாய் தாள லயமற்றுக் கேட்கும். கால்கள் யந்திரமாய் வீட்டினுள் பாவ நிம்மதியற்ற சோகம் மீண்டும் நெஞ்சில் இடம்பிடிக்கும்.
1990
谏 12 来 நம்மைப் பற்றிய கவிதை

ஏன் இந்த இருப்பு?
எத்தனை நாளைக்குத்தான் இந்த இருப்பு வெற்றிலைச் சாற்றினால் முற்றத்தை அசிங்கப்படுத்தியபடி வெறும் சளசளப்பான வம்பளப்புகளுடன் வீடுகளினுள்ளேயே அவநம்பிக்கையான இராஜாங்கம் நடத்திக்கொண்டு ஆந்தையைப் போல பகலில் ஒடுங்கி இரவில் நடுங்கி இவையெல்லாம் எதற்காக?
வம்புப் பேச்சுகள்
சலித்துவிட்டன
ஒரே கதையை எத்தனை தடவைதான் நன்னுவது?
முற்றத்துத் தென்னங்கன்றில் கிளி இட்ட முட்டைகூட முட்டையிடத் தொடங்கிவிட்டது. எதற்காக இந்த அர்த்தமற்ற இருப்பு?
ஆகர்ஷியா 兼 13 素

Page 8
வீட்டோரத்தில் கரையான்கள் மாளிகை போல் புற்றெழுப்பிவிட்டன . . . முகடுகளிலோ சிலந்திகளின் ஊஞ்சலாட்டம். இத்தனையுடன் அர்த்தமற்ற அவித்துப் போடலும் விழுங்கலும் தினம் தினம் காதில் விழும் சாவுகளை இரைமீட்டபடி வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்தபடி ஏன் இந்த இருப்பு?
1991
米 14 来 நம்மைப் பற்றிய கவிதை

அவர்கள் பார்வையில்
நான் ஓர் அற்பப் புல் போன்றவள்தான் எந்தப் புயலிற்கும் தலைவணங்கி எந்த மழைக்கும் உடல் சிலிர்த்து பெண்மை எனும் போர்வையில் முடங்கிக் கிடப்பதாக வெளிக் கண்கள் மட்டுமுடைய சில வேதாந்திகள் அசிங்கப் பார்வையை என்மேல் அள்ளி எறிகின்றனர். அவர்கள் பார்வையில் நான் ஒரு புல்
என்னில் முளைத்தெழும் முட்களை அவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. என்னுள் விழுது விட்டெழும் கம்பீரமான ஆலமரம் ஒளி உமிழும் கலங்கரை விளக்கம் எதையும் அவர்கள் கவனிப்பதில்லை. என் செய்கைகளில் ஒரு
ஆகர்ஷியா 谏15 米

Page 9
தப்பர்த்தத்தை உருவாக்கி அதன் மூலம் நிரந்தரமற்றதாய் மகிழ மட்டுமே அவர்களால் முடியும். வெளியே பஞ்சாகவும் உள்ளே நெருப்பாகவும் எனக்குள்ளேயே கனன்றுகொண்டிருக்கும் என்னை அவர்கள் யாரும் அடையாளம் காண்பதில்லை. அவர்கள் பார்வையில் அற்பப்புல் போன்றவள் நான்.
1991
16 நம்மைப் பற்றிய கவிதை

நான் ஒரு பெண்
எனக்கெதற்கு இந்தப் போலி முகத்திரை உயிரற்றுச் சுவாசிக்கவும் உதட்டுச் சிரிப்புடன் வாழவும் எனக்குப் பிடிக்கவில்லை. பார்த்தும் பாராதிருக்க நான் ஒன்றும் பைத்தியக்காரி இல்லை நடக்கச் சக்தியிருந்தும் நடைப்பிணமாக எனக்கொன்றும் நடந்துவிடவில்லை. எனக்கு வேண்டியவை உரத்த சுவாசங்கள் காற்றையும் உலுக்கும் வார்த்தைகள் கனவுகளைச் சுமக்காத கண்கள். சூரியனை எட்டிப்பிடிக்க ஓடும்
66 fols என் நம்பிக்கை வானிற்கு
ஆகர்ஷியா 兼17 毫

Page 10
இவை போதும் என் விடுதலை வேட்கைக்கு வேண்டாம் இந்தப் போலி முகமூடி. பழைய வேதாந்தத் திரையைக் கிழித்து வெளிவந்து நிர்வாணமாக என்னை நானாகப் பார்க்கப் பிரியப்படுகிறேன். அப்போது காற்றும் என் குரலில் கிறங்கிப் போகும் சூரியனும் எனக்கு முன் இறங்கி வரும்.
1992
谏 18 米 நம்மைப் பற்றிய கவிதை

தேடுதல்
சர்க்கரையின் கசிவு போல
இருள் நீளுகின்ற மண்துணிக்கைப் பெருவெள்ளம்
ஒற்றை மரம் போலக் குத்திட்டிருக்கிறேன் நான் இலைகள் மட்டும் தலையசைத்து இரகசியம் பேசுவதாய் என் இருதயத் துடிப்புக்கள் யாருக்காகவும் அல்ல என் காத்திருப்பு தொலைக்கப்பட்டுவிட்ட என்னை தனிமை வெளியில் தேடிக் கொண்டு நான்
1994
ஆகர்ஷியா 谏19 毫

Page 11
எங்கள் வீட்டிலொரு பொம்மை
விளையாட வரவில்லை என்றது பொம்மை கையில் எப்போதும் பிடித்திருக்கும் கரண்டி முடுக்கிவிட்ட பொம்மை நடந்து செல்லும் குழந்தை சுமக்கும் உடுப்புத் தோய்க்கும் சமைக்கும் மூட்டைகள் தூக்கும் அவ்வப்போது பளாரென்று அடியும் வாங்கும் எங்கள் வீட்டிலொரு பொம்மை.
அதற்கு விளையாடத் தெரியாது. தலையை மட்டும் ஆட்டும் ஆம் ஆம் சரிசரி என்பது போல நிற்காது சிரிக்காது யாருடனும் கதைக்காது. வேலைக்கு மட்டும் வெளியில் போகும் நேற்றுக் காலை கடைவீதியிலும் கண்டேன் ஏராளமான பொம்மைகள் விதம் விதமாய்
நிறம் நிறமாய் கண்களுக்குள் புதைந்து போன கனவுகளுடன்.
1994
米 20 兼 நம்மைப் பற்றிய கவிதை

அர்த்த மோன இருப்புகள்
வெள்ளம் பொழிந்து மழை ஓடியது நேருக்கு நிகர் மாறாய் எல்லாமே நாய்கள் அலறிக் குரைக்கின்றன நெருப்பு வாடையுடன் தீய்கிறது ‘பெட்டைச்சிக்கு என்ன துணிச்சல் ? வெளியே
வீசுகிறது புயல் யார் துணிவு கொடுத்து யார் வாழ்வது? புரியாத புதிர்தான். யன்னல் சட்டகத்துடன்
ஒட்டி மோன நிலையில் என் இருப்பு. சட்டகம் முளை விடுமா? ஆயின்
நானும் சட்டகமே. யாருக்குத்தான் புரிகிறது இருப்பின் அர்த்தங்கள்?
1994
ஆகர்ஷியா 亲·21 米

Page 12
இருள் அரங்கு
நீண்ட இருள் மேடைக்குள் கனன்றெழுகின்ற நாட்டிய அரங்கம் வார்த்தைகள் சடசடத்துத் தலையில் கொட்ட நீரின் அடியாளத்தில் தேடுவதென்ன முத்துக்களா? மீன்களா ? நீலச்சுடர் தெருவெங்கும் வியாபிக்க ஊமை மெளனம் அழும். ஆலமரங்களும் நாணற்புற்களும் தலைவிரித்தாட வார்த்தையற்ற பிரபஞ்சத்தில் கைகால் உதைத்து அழுது டபிறக்கும் சிசு
பார்வைக்குள் கூடுகட்ட எண்ணும் குத்தீட்டிகள் நிறைந்த தெருவில் தவித்துச் செல்லும் சிட்டுக்குருவிகளா நாங்கள்? மீண்டும் எங்கோ ஒத்திகை புதிய இரவின் நாட்டிய அரங்கிற்காக.
1994
兼 22 谏 நம்மைப் பற்றிய கவிதை

காகமும் பனம்பழமும்
நேற்றைய நாள்வரை தேடிவைத்தவை காற்றில் பறந்துவிட்டன. மண்ணெய் விளக்கு ஜீவனாய்
அந்தரித்து துயரத்தின் தொங்கலில் தலைகீழ் ஊசலாட்டம் நாட்கள் சில்வண்டுகளாய் மாறித் துரத்த ஒலியின் அதிர்வால் உள்வாங்கும் காற்றும் அசுத்தமாயிற்று. எல்லாம் என்னிலிருந்து பிரிந்து செல்ல காகங்கள் அமராமலே வீழ்ந்த பனம்பழங்கள் கதை சொல்லுமா? உள்ளே துயரத்தின் குரல்தான் வெளியேயோ அழகாக மலர்கிறது ஒரு புன்னகை.
1994
ஆகர்ஷியா 豪 23 兼

Page 13
இப்படியாக எனது வாழ்க்கை
மாலைக் கடலின் உப்புக் காற்றுடன்
வீடு திரும்ப
ஈயக் குழம்பாய் கொதிப்புத் தெறிக்கும். அகோர வெயில் எறிப்பில் சிறுகரம் பற்றி ஊர் சுற்றி வந்தது நீயும் நானுமா? அறிமுகமான இரண்டு பந்துகள் மீண்டும் சந்திக்கும் வேற்றுருவத்தில்
சிறுவயதின் தோழமைகளை யாரோ
காற்றில் எக்கி எறிந்துவிட மீன்கள் கொக்குகள் உறவுகொண்டு பாலை மணலில் ஒடித்திரியும். நினைவு வெளியின் சிட்டுக்குருவி ஒன்று வல்லூறாக மாறியது எந்தச் சட்டத்தின் கீழ்? வலுவாகப் பற்ற ஏதுமின்றி அந்தர வெளியில் நான் இப்படியாக எனது வாழ்க்கை
1994
来 24 米 நம்மைப் பற்றிய கவிதை

96இல் சிந்திய துளிகள்
1.
சுவரில்
சின்னஞ் சிறிசாய்
பல்லி
விழாமல்
6) Té956) J L OfT ILI ஊர்ந்து பூச்சிபிடித்து வால் சுழற்றி பன்னிரண்டைத் தாண்டும் முட்கள். நம்பிக்கையுடன் காத்திருக்கும் புத்தகங்கள்
நான்
கவிதை.
2.
வண்ணத்துப் பூச்சிகளை மறக்க முடிவதில்லை. மயிர்க்கொட்டிக் குடம்பிப் பருவத்தைக் கொண்டிருத்தலால் போலும்.
ஆகர்ஷியா 米 25 米

Page 14
3.
நேசிக்கத் தெரியாதவர் பற்றி
ஏதுமில்லை. நேசிப்பைப் புரியாதோர் பற்றி மெளனம் காற்றில் கலக்கட்டும் அற்ப
உணர்வுகள்.
4.
சமன்பாட்டிற்குள் சமப்படுத்தியும் சமன்படாச் சமன்பாட்டினுள் உழலும் என் உறவுகள்.
5.
மண் வெடித்து தலைநுழைத்தன கருகிச் சரிந்த புற்களருகில் மீண்டும் துளிர் விடும் நம்பிக்கைகளும் காளான்களும்.
6.
நான் நினைக்கிறேன்
jS சிரித்துக்கொண்டிருக்கிறாய் என்று. கையிடுக்கில் புதைந்து
谏 26 聚 நம்மைப் பற்றிய கவிதை

நீ அழுதுகொண்டிருந்தாலும் நான் நினைப்பேன் நீ சிரித்துக்கொண்டிருக்கிறாய் என்று வெளிப்படுத்தல் இல்லாமல் புரிதல் மட்டும் எங்ங்னம் சாத்தியம்
மானுடமே ?
7.
நீங்கள் எப்போதும் காணும் நிறம் எது? நீலம்
வானம் நீலநிறமானது மரங்கள் பசிய வண்ணமானவை. மஞ்சள்
ஒளியின் கீற்றுக்கள்
அவ்வாறு கொள்ளப்படுகின்றன போலும். ஆயினும் நான் எப்போதும் காணும் நிறம் சிவப்பு ஒன்றுதானே!
8.
கடைசிப் பறவையின் சிறகடிப்பும் ಸ್ಥಿಕೆ: இறந்தது
குந்தி இருக்கிறாயே?
உதிரும் இலைச் சரசரப்பை மென்றபடி இன்னமும்
இறக்கையின் கதகதகப்பு வேண்டி எல்லாம் இழந்து
ஆகர்ஷியா 兼 27 毫

Page 15
ஏன் ?
நட்சத்திரங்களை மட்டுமே ஏக்கம் திமிறப் பார்த்து எத்தனை நாட்கள் கிழிந்தன உனக்கு?
கண்ணிர் அகற்றி
நிமிரடி பெண்ணே
கனவுகள் அல்லவே உன் இலக்குகள்!
素 28 崇 நம்மைப் பற்றிய கவிதை

வேண்டும் பருவங்கள்
நிலவு தலை வருடியது மனிதர்களிடம் பெறமுடியாதவற்றிற்காக இன்னமும் நான் ஏங்கிக் கொண்டிருக்கவில்லை இரவின் அமைதியில் இன்றைய என்னைத் தொலைத்து தொலைந்த நாட்கள்
கூடுகட்டும் சின்னச் சின்ன நட்சத்திரங்கள் தேவதைகளாய் வந்திறங்க காதல் ததும்பும் விழிகளைத் தொலைத்து மீண்டும் குழந்தையாகுதலின் குதுர கலம் சிறு விரல்களின் பற்றுதலை அரவணைப்பை அப்போது போலன்றித் தருபவர் யாருமிலர் என்பதனால் வேண்டும் அந்தப் பருவங்கள் மீண்டும் மீண்டுமாக.
1996
ஆகர்ஷியா 兼 29 来

Page 16
நகரத்தின் சத்தங்கள்
நகரத்தின் சத்தங்கள் மாறுபட்டுள்ளன. புனித இடங்கள் கலகலப்புக்கள் ஆதித் தன்மையனவாய் பிறர் கண்டு களிக்க, செவி வழி கேட்க அழுகுரல்கள் அமுங்கிவிடும் நெருப்புப் பீறிய வடிவில் மலர்களாய்ச் சொரிந்து குளிர்த்தி நடக்கிறது. எரிமணலில் மேவின சாம்பல் நீறுகள்
தற்செயல் காற்றிலும் தகிக்கக் காத்திருக்கும். முகத்தை மூடி மேலதிகப் புன்னகை. எனினும்
கண்ணின் இடத்தில் சில சுடும் நினைவுகள் ? வேறுபடும் அதிகாரக் குரல்மீது எரிச்சல் கன்றிய பார்வை ? அடிப்படை ஒன்றுதான் சுகிக்கத் துடிப்பவர்களுக்கும் சகிக்க மறுப்பவர்களுக்கும் இடையில் தொடரும் பறிப்புகள் இடையில் இருந்தாற்போல் பறந்து திரியும் சன்னங்களும் புறாக்களும்
1996
素 30 米 நம்மைப் பற்றிய கவிதை

கவிதைக் கனவு
இரவுக்கும் கவிதைக்கும் தொடர்புண்டு அது உண்மைதான் இரவின் உள்ளிடென கணக்கில்லா நெருடல்கள் கவிதையென உருக்கொள்ளும் ஆயினும்
வரிவடிவம் வழங்க எழ வேண்டாமா ? எழுதுகோல் வெண்தாள் இவை வேண்டாமா? எதற்குமே இருள் தடை சோம்பல் கொண்ட கனவென்றும் நிஜமென்றும் பேசத் துடிக்கும் உதடுகளில் இருள் குந்தி அமிழ்த்தும் நித்திரையில் பாதி திறந்த உதடுகளினூடு சிந்தும் சொற்கோர்வைகளின்
ஆகர்ஷியா 来31

Page 17
ஆழ்வு அடிவானம் கிழித்தெழும் ஒளியில் எச்சிலென உலரும் இரவின் ஞாபகம் என்பதேயற்றதாய் உருளும் உலகம் உள்ளே மட்டும் வலி நீங்கி
அமைதியாய் இறந்து கிடக்கும் இன்னொரு கவிதைக் கனவு
1996
兼 32 毫 நம்மைப் பற்றிய கவிதை

96. ஒக்டோபரில் வந்து விழுந்த (க)விதைகள்
1.
நினைவுக் குறிப்புகளைப் புரட்டித் தேடுகிறேன். உன்னோடு பேசிய நினைவில் அடங்காத கணங்களைத் தேடி இன்னும் சிதைந்த எழுத்துக்களில் வழித்தெடுத்த உன் முகத்தை முத்தமிட அவாக் கொள்கின்றேன். ஒரு கணமேனும் வாழ்வின் கடந்த யுகம் என் மீது படிய.
2.
மழை குளித்த மரங்கள் வெயில் சூட்டுக்கு இதமாய்
முதுகு திருப்பும். முப்பத்தோராவது தடவையாக
ஆகர்ஷியா 谏 33 来

Page 18
மேய்ந்து முடிந்த உன் காகித முகம் பூட்டிய கதவுகளை நிமிர்ந்து நோக்கும் நாய்க்குட்டி மனசுக்கு சமாதானம் சொல்வதாய் வார்த்தைகள் ஏதுமில்லை என்னிடம் !
3.
"ஷெல்'களிலும் “சொல்'களிலும் சிதறிப் போகின்ற வாழ்க்கையை குனிந்து தடவுகின்றேன். பிரிவு சொல்லிப் போனது ‘பஸ்’வண்டி காதிற்குள் குடைந்தன துயர ஒலங்கள். இருப்பென்றும், இறப்பென்றும் பச்சோந்தி முகம் காட்டும் நாட்களின்
மார்பில் உதைத்து அடிமரம் பற்றி அழுகின்றேன. தழுவி அணைப்பனவோ வேட்டொலிகள்
4.
எழுதுவதற்காய் பிரியப்பட்டுச் சேகரித்த வார்த்தைகளெல்லாம் காணாமல் போயின இருள் பிரிந்த காலை நேரத்து மணி ஓசை g 6T 6) 60 GF சலனப்படுத்தியிராதா நண்ப
இருப்பின், என்னையும் நினைவுகொள் ஒருகணமேனும்
米 34 兼 நம்மைப் பற்றிய கவிதை

5.
மரங்கள் முறிந்து வீழ்ந்தன. அபசகுனத்தின் அறிகுறி. ஒவ்வொரு மரத்தினுள்ளும் ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு முகம் ஒவ்வொரு நினைவு யாவும் களையப்பட்டு தெருவில் கிடந்தன சிறு துகள்களாய்! மரங்களிலும் பலவகை உண்டல்லோ ? வைர மரங்கள் பற்றிய துயரம் சிறிது அதிகந்தான் எனினும் மரங்கள் போயின. மழை பற்றிய நம்பிக்கை இனி இல்லை.
6.
அமைதி கலைந்தது மண்டபம். ஈக்கள் கலைக்கப்படும் புனிதப் பெட்டிகளை நோக்கி நெரிந்து வந்தனர் ஒவ்வொரு வாயிலிருந்தும் வீணியுடன் கசிந்தது அழுகை நண்பி தடைப்பட்ட உன் பயணம் பற்றிப் பெருங்குரலுடன் அழுகின்றனர் மக்கள் கேட்கிறதா உனக்கு?
7.
கால் அமுக்கலிலும் கைப் பரிவிலும் என்னைப்
ஆகர்ஷியா 兼35 亲

Page 19
புரிந்துகொள்கிறாயா? பெறமுடியாத அதிசயப் பொருளல்ல நீ விரல்களின் சரிவில் ஆனாலும் எனதன்பு ஒட்டிக்கொண்டுதாணிருக்கிறது. இனியும் படிமங்களாய் என்னை சிறை வைத்துக் கொல்லாதே.
அறிந்திருக்கக்கூடும் வேப்பம் பிசினைப் பற்றி அவை ஒருபோதும் உரிந்தபின் ஒட்டிக்கொள்வதில்லை.
8.
திடீரென்று போல அது நிகழவில்லை எல்லா மாற்றங்களும் படிப்படியானதே! கழுத்தை வலிந்த புத்தகங்களிலிருந்து நிமிர்ந்தபோது மரங்கள் மங்கின பறவைகள், அணில்கள், மனிதர்கள் கண்களிலும் கருமேகம் ஒன்று ஊர்ந்து சென்றது. கலையாத மேகங்களிடை பார்வையின் சிறுபகுதி தொலைந்துவிட்டது. மீண்டும் பெறமுடியாத என் வாழ்க்கையும்தான்!
Søen
நம்மைப் பற்றிய கவிதை

எத்தகு நம்பிக்கையைச் சுமந்து நிற்கிறோம்
நேற்று நம்பிக்கை செத்து வேரனுந்த நண்பியின் நினைவுப் புண்கள் ஆறுமுன்னரே நம்புகிறோம் வாழ்வு பற்றி எளிமை நிறைந்ததாக அமைதி நிறைததாக சுதந்திரமானதாக சுவையானதாக நாளை இவையும் செத்துப் போக அடி தங்காய் முறிவு கொள்ளாதே மேலும் மேலும் நம்பு வாழ்வு பற்றி உன் இருப்பு பற்றி அதன் அர்த்தம் பற்றி இன்னும் வலுவாய்
1997
ஆகர்ஷியா 来37 米

Page 20
முனைந்தேன் கவிதையென முனைதல் புனைதலாயிற்று புனைதல்
6 புனைதல் இருள் புனைதல ஆளுதல் புனைதல ஆட்பட வைத்தல் புனைதல் பாம்பின் நாக்கெனப் பிளவுண்டு பிளவுண்டு Ë நான உன் ஆண்மை என் பெண்மை யாவும் புனைதலின் முனைவுகளாயிற்று புனைந்த புனைகளை முனைந்து சிதை புனை கெட்ட உள்ளிடு வித்தின் நுண்மைகள் விருட்சமென விரியட்டும்.
1997
谏 38 毫 நம்மைப் பற்றிய கவிதை

அவள்
உற்றுப் பார் அவள் கண்களை சேலை மடிப்பின் கீழ் வெளித் தெரியா உறுப்புகளில் உன் பார்வை. உற்றுப்பார் அவள் கூறுவதை இல்லாத கற்பனைகளில் அவளை நிர்வாணமாக்கும் உன் பார்வை உற்றுப் பார் அவள் கரங்களை நினைவுகளில் அவளை வன்முறை செய்யும் நீ. உற்றுப்பார் அவள் முகபாவனையை அட மூடா ! இன்னுமா நீ அவளைத் துகிலுரிக்கிறாய்? உற்றுப்பார் அவளை உணர்வுகளின் கலவையென ஆணைச் சிதைக்கும் வலிய கரங்கள் முகம்நோக்கிப் பெயருமுன் உற்றுப்பார் அவளை புரிதல் வேண்டி, அழுகிய கண்கள் துடைத்து கனதித் திரைகள் கிழித்து
1997
ஆகர்ஷியா 毫 39 毫

Page 21
தொன்மம்
படிமங்கள் குந்தியெழுந்து பழுத்துப் போனதென் முகம். ஒவ்வொன்றாய்க் கழற்றி எறிந்து செட்டையுரித்து வளர்ந்துதான் பார்க்கிறேன் புதுத் தோலாய்ப் பின்னுகிறது படிமம். பின்னோக்கியே கலைத்துக் கட்டும் கூட்டிற்குள் உறவு கொண்டு படுத்தெழும்பிக் கனவுக்கழைக்கும். விரும்பாமலே படிமங்களின் அறிவுறுத்தல் கீழாக்கும். ஏறிமிதித்துப் போகிற அசட்டுச் சிரிப்புகளின் கோஷம் பறை தட்டும். இதுநாளாய்ச் சுமந்த உடல் பார்த்து கேவலம் சூட்டி நெஞ்சு வட்டத்துள் எரிமலை குழம்ப, இப்போ மட்டும் பாழாய்ப் போன படிமங்களின்படி, எரிக்கத்தான் முடியவில்லை ஊரை.
1997
豪 40 毫 நம்மைப் பற்றிய கவிதை

நோவின் கனம் பரந்த வெளி குளிர்விறைத்து முடங்கிப்போன
O69. இருள் சிதைந்து பூக்கள் பூக்கும். இதழ்மட்டும் சொரிந்து தெரிகிற பாதை பூச்சும் பவ்வியமுமான பேச்சுக்களில் தொலைக்காட்சியும் வானொலியும் அலறிக்கொள்ள இதமான என்றோ கேட்ட பாடலுக்காகக் காத்திருக்கும் நான் சொற்களின் அர்த்தம் மறைந்து குறியீடாகினேன். மின்னத் தொடங்கியுள்ள புன்னகைகளில் நம்பிக்கையிழந்தேன் வேரூடுருவிப் பிளந்த மண்ணாகி இருப்புக் குன்றினேன இருந்தும் நூலில் துடிக்கின்ற பூச்சியின் நம்பிக்கையாய் நான்
1997
ஆகர்ஷியா 谏41 毫

Page 22
பேசப்படாத எண்ணங்கள் குழம்பலடைகின்றன. உருண்டையைச் சுற்றிய நீர் வட்டங்கள் தெறிக்கச் சிலிர்க்கும் தேக்கம் விரல்பற்றிய பேனா நடுக்கில் கசங்கிப் போன இதயம் பிடிபடாத மொழியின் ரூபமாய் கண்ணின் சிலதுளி இந்தக் கணம் பற்றி உனக்குத் தெரிந்திட வாய்ப்பில்லை. பிளந்த வாய்க்குள் அதக்கிக் கொண்டுவிட்ட மெளனமாகியது காலம், வழமையென இறுமாந்த சிரிப்பும் ஏங்கிய குரலுமாய் எனை அடையாளம் காண்பர் இயல்புபற்றி அலட்டிக்கொள்கின்ற பலர்.
1997
兼 42米 நம்மைப் பற்றிய கவிதை

பொதுவாகக் குடித்துப் பார்க்க விரும்புகிறேன். வாழ்க்கை அர்த்தமற்றது என்பது உண்மைதானா ? வாய்வழி குடல்வரை எரிகிறது பானம் மறக்க முடிகிறதா பார்ப்போம் யாவற்றையும் மூக்கின் வழியே வெளியேறுகிறது புகை. வானொலி விளம்பரங்கள் போதை கெடுதி புகை கெடுதி தினமும் தெருப் புகையில் வெம்பிச் சாகின்றனர் மனிதர்கள். அசுத்தப்பட்ட நீரினால் நிறைந்தன மருத்துவமனைகள். எனக்கு இங்கே தடை புகைத்தலுக்கும் குடித்தலுக்கும் அதற்கும் மேலாய் என் பால் தன்மைக்கும்.
1997
ஆகர்ஷியா 素 43 谏

Page 23
காற்று கலைத்த மணல்மூடிகளில் உதிர்ந்தும் உதிராத உன் நினைவு கடல் காலடியில் திசை திரும்பிற்று நகங்கள் கிழிய குழிதோண்டிப் புதைக்க விரும்பும் நினைவுகள் மல்லாக்கச் சரிய முதுகுறுத்தும் சிப்பிகளில் உன் நீர் முத்துக்கள் ஈரம் பிசிறிய சிறுகணத்தில் அலைந்தன பொறிகள் இருட்டு கசிந்து உள்ளோடிக் கருமையாகிப் போனது இருப்பு உள்ளேயும் புறத்தேயுமாய் இருமைப்பட்டு இழுபட்டுச் செல்கிறதென் வாழ்க்கை.
1997
素44兼 நம்மைப் பற்றிய கவிதை

ஊசி முனைக் கணத்தில் உன் வஞ்சம் குடைபரப்ப சுருண்ட புல்லின் நுனியில் ஒளிர்ந்தது மஞ்சள் நெஞ்சுலுப்பிய கேள்வி இலைகள் பச்சையாய், பழுப்பாய் இதுதானா? நிஜந்தானா? முடிந்தனவா பக்கங்கள்? பன்மைக் கோடுகளில் பிளவுபட்டுத் தெரிகிற விம்பம் ஒவ்வொன்றாய் உதிர்தலில் ஏங்கிக் கனக்கின்ற
கனங்கள் உயிரற்றுப்போன ஒற்றைக் கத்தல் காது குடைகின்றதே ஆச்சரியம் போலும் மெளனம் பற்றிய வினோத எண்ணங்கள் உன் மனதில் தோன்றாதிருக்கட்டும் புல்லின் நுனிக்கப்பால் வெந்து அவிந்தது
66
மண் இதயம்
1997
ஆகர்ஷியா 豪 45 谏

Page 24
என் கவிதைகளைத் தேடிச் செல்கிறேன் தொலைதூரப் புள்ளியாய்த் தேய்ந்துபோனது நம்பிக்கை உற்சாகப் புற்களை உறவுச் சப்பாத்துக்கள் மிதித்துத் துவைக்கின்றன இருந்தும் உயிர்ப்பாக இருக்கத் துடிக்கிறேன் நாள்தோறும் பறவைகள் வேறு திசையிற் பறக்கின்றன அவை கை நீட்டுவதில்லை தங்கியிருப்பதுமில்லை அதுவே சுதந்திரம் நான் தங்கியிருத்தலால் தேங்கியிருக்கிறேன் தேக்கம் உறவுகளைச் சிதறடித்தது தோழமையற்று உதிர்கின்றன வாசனையற்ற நாட்பூக்கள் ஏதுமற்ற வெற்றுப் பார்வையிலே செத்துப்போனது மனசு கடைசியாய்க் கருக்கொண்ட கவிதையும் புறப்பட்டுச் செல்ல தேடியலைகிறேன் தினம்தோறும் நட்பெனும் கவிதையை
1997
谏 46 米 நம்மைப் பற்றிய கவிதை

அசுத்தப்படுகிறது காற்று இருள் பிம்பங்கள் கரைந்தொழுக வெளித் தொங்குகிற சுயம் பற்றித் தெரிந்துகொண்டேன்
போய்விடு இருப்பின்றி வெளியுமின்றி அந்தரமாய்த் தவிக்கிறது மனசு. ஒருமுறை பட்ட காயங்களைக் கவனமாக ஆற்றிவருகிறேன் ஆகையால்
போய்விடு
என் வெளிநிரப்பும் பருண்மை தேடும் பாடலைத் துரத்திச் சென்றேன். மொட்டையாய் முடிந்து போயிற்று காற்று அப்பால் ஏதுமற்றுப்போய் வெறுமனே விரிகிறது என் வானம்.
1997
ஆகர்ஷியா 丧47 谏

Page 25
உருப்போட்டுவிட்டுப் பேசினார்கள் பேச்சு தெளிவற்றதால் அல்லது தெளிவற்றதையே பேசுவதால் ஒரு எழுப்பம் அலட்சிய நகைப்பு எச்சில் துப்பல் போலக் காலடியில் காய்கிறது பேசுபொருள் கீழ்க்கோடு பிரித்துப் பாயுஞ் சூரியனும் அறிவான் விளிம்பில் நின்று கூக்காட்டும் வாழ்வு பற்றிக் கூத்தாடும் மரங்களிற்கல்லவே மரணம். எப்போதும் போல அப்பாவியாய்ச் செத்துப்போகும் மேல் திசையில்
சூரியன்
1998
豪 48谱 நம்மைப் பற்றிய கவிதை

சற்றே படச் சிலிர்த்ததென் தேகம் பொட்டென்றவிந்தது சுடர் மண்ணின் வாசனைக்குள் புகையவிந்த நாற்றம். இது என்ன புதுவிதக் குழப்பம் ? வெளியே சீராகப் பெய்கிறது மழை. துளிகளின் தாளத்திற்கொவ்வாமல் மோதியறைகிறது கதவு. வெளியே மட்டுமல்ல உள்ளேயுந்தான் முரண். நொடிக்கொன்றாய் ஊதிப்பருக்கிற முகங்கள் பெயரறியாத் திருப்பத்தில் விலகிச் செல்கின்ற பாதைகள் மெய்தான் முரண்கள் மட்டும் இல்லையெனில் மழையில்லை காற்றில்லை வாழ்க்கையுமேயில்லை.
1998
ஆகர்ஷியா 谏49 谏

Page 26
நீ என்னை நினைவுகூர்ந்தாய் பாடல்களோ பருவங்களைச் சுவீகரித்துள்ளன ஓயாமல் முழங்கிப் பெய்த பருவமழையில் கொப்பும் குடலுமாய்ச் சாய்ந்தன மரங்கள், பனித்துண்டுகள் நெறுநெறுக்க நீ சாவதானமாய் நடந்து செல்வாய் உப்போடையோரம் புதிதாய்ப் பூத்தது மயானம். நடுக் கூடத்தில் துண்டமாகினாள் என் தோழி மாலைத் தேநீரின் சுவையை நீ ஆழ்ந்து ரசிப்பாய் நண்பனே என்னை நினைத்திருக்க ஆயிரங் காரணங்களிருப்பது போல உன்னை நினையாதிருக்கப் பல்லாயிரங் காரணங்களாய் என் வாழ்க்கை
1998
米 50 来 நம்மைப் பற்றிய கவிதை

இரவு அசையவில்லை மழைக் காலக் குளிரில் உறைந்து போயின மரங்கள். விரிக்கப்பட்ட புத்தகத்தில் இதழ்கள் சரசரப்புடன் அசைகின்றன. குளிர்ந்த பக்கங்களின் கறுப்புக் கோடுகளை உற்று நோக்குகிறேன். வழக்கத்திற்கு மாறாய்
நடுநிசிவரை எண்ணெய் உறிஞ்சுகிறது விளக்கு. ஒருநாள் எப்படியாவது தெரிந்துகொள்வாய் புத்தகத்தின் பக்கங்களில் தீட்டப்பட்ட
உன் ஞாபகங்கள் குரூரச் சித்திரவதைகளால் தொங்கிப்போன கரிய கோடுகளென எழுத்துக்கள். நாளை நாம் சந்திக்காது போகலாம். தூரத்தில் ஊளையிடுகிறதொரு விமானம் தடித்த அங்கியின் கீழாகத் துடித்துக்கொண்டிருக்கின்ற உன் இதயம் பற்றி நான்
அறிவேன்
ஆகர்ஷியா

Page 27
மாலையில் எங்காவது உணவுவிடுதியில் உன் தட்டிலிடப்படும் இறைச்சித் துண்டங்களை என்பொருட்டு நீ வெறுக்க நேரிடலாம். ஏதும் சொல்வதற்கில்லை. தொலைவில் உறுமலிடுகின்ற விமானத்தைத் தவிர நிசப்தமானது இந்த இரவு
1998
津 52谱 நீம்மைப் பற்றிய கவிதை

தெருவின் திருப்பத்தில் மீண்டுமொரு முறை கனத்தலைந்தன விழிகள், நேற்று உன் பின்னாலிருந்து கூந்தல் பறக்கச் சென்றவள் உன் மனைவியாயிருக்கலாம்
அல்லது வேறு யாராகவும் இருக்கலாம்.
கடைசித் தடவையாக உன் புன்னகையை என் கண்களில் தேக்கிட விரும்புகிறேன்
எதிர்த்திசைகளில் ஒருகணமே தரித்தகன்ற அரைவருட நினைவுகளை ஒருபோதும் நான் மறப்பதற்கில்லை பேச்சு எழாத கண்களின் மொழிகளால் ஒரு கணம் பேசுவோமே அதற்காகவே மிகுதி இருபத்து மூன்றுமணி ஐம்பத்தொன்பது நிமிடம் ஐம்பத்தொன்பது நொடி உயிர்த்திருப்பேனே இன்றில்லையேல் இனியந்தக் கணம் ஒருபோதுமில்லை
ஆகர்ஷியா

Page 28
நாளை அந்நியத் தெருக்களின் உயர்ந்த மரங்களின் கீழ் நின்று எதை வியப்பேன் ? நம் காதலையா ? இல்லை ஒருபோதுமே பேசமுனைந்திராத நம் பிடிவாதத்தையா? அல்லது உலக மகா வேதனைகளைச் சகிக்க வைத்த அந்த ஒரு கணப்பொழுதையா?
1998
亲 54 米 நம்மைப் பற்றிய கவிதை

நீ சிக்கனமாகத்தான்
பேசினாய்
நாலைந்து வரிகள் கிண்டல் போலவும் இல்லை போலவும் இரவிரவாக அலசியெடுக்கப்பட்ட என் வழ்க்கைச் சரிதம் உன் பேச்சில் சரிபார்க்கப்பட்டதை நான் அறிவேன்
எனினும் ஆங்காங்கே படர்ந்த கருநிழல் பற்றி அச்சப்படவில்லை நான் நிழல் இருந்திருக்கவில்லையெனில் வெளிச்சப் பகுதிக்குள் நுழைந்திருக்க முடியாதென் பருவம் நீயோ குழந்தையின் குதூகலத்துடன் மர்மப்பாதை தேடும் மாயாவி போலப் புன்னகைக்கிறாய் இந்தச் சிக்கனமும்
இந்தத் தேடலும்
தேவைதான் ஆனால் அது உன் இருப்பைச் சரிபார்த்துக்கொள்ள வெனில் மிகவும் உகந்ததாயிருந்திருக்கும் பாசிப்படிம வழுக்கலுக்குள்ளே கிடந்து உலகை அளவிடாதே நண்பனே நீயே உலகம் என்பதை மறந்து
1998
ஆகர்ஷியா 谏55 米

Page 29
கதிரை ஒன்றாயிருக்க அமர்வுகளே இரண்டு வளைந்த நகமும் சிவிர்த்த உடலும் இரண்டும் ஒன்றின் குறியீடு ஒன்றே குறிக்கோள். உடனடித் தீர்த்துக்கட்டல் காலம் பிந்திய தீர்வுகள் அவநம்பிக்கைச் சின்னமாயினர் அயலாரும் உள்ளாரும் பேசுதல் பயணித்தல் விழுந்து மடிதல் மடிவித்தல் எதிரெதிர் சில்லுகளில் இடறுபட்டு முனங்கிச் சாகின்ற மாடுகள். வீணியூற்றித் திரிய அமர்க்களமாகிற மேடைகள் ஒருபக்க நியாயங்கள் புரிதல் நூலறுந்தும் கட்டியிருப்பதான மாயையில் கலையத் துடிக்கும் பிணம் நோக்கி ஈக்கள் பயணம் முடிவேயில்லாத பாதையின் மீது!
1998
谏 56 谏 நம்மைப் பற்றிய கவிதை

மடங்கிப்போன பழைய காகிதம் கிறுக்கலாய்ச் சில எழுத்துக்கள் இவற்றில் என்ன இருக்கிறது? ஒன்றுமேயில்லையென்று வாதிப்பீர்கள் ஆனால் அதில்தான் என் எல்லாமும் இருக்கிறது. திடீரென்று புதைசேற்றில் சிக்கிப் போனேன். கரிய மைபடிந்து ஆண்டுகள் பலவாகின்றன இருந்தும் ஒவ்வொரு படியாக ஏறுகிறேன். தொலைவு செல்லத் துடிக்கிற காகிதம் பார்த்து கவனம் குவிந்தவளாக ஒவ்வொரு படியாக வாழ்வின் முக்கோணப்
பயணம்
மென்மையான அரவணைப்பை நினைவூட்டும் நான்மடிப்பு காகிதம் பற்றிய உங்களது ஆச்சரியம் எனக்கு வியப்பானதாயில்லை வியத்தலுக்குரியதே அந்தப் பழைய காகிதம்தான் எதேச்சையாக
எனது வாசலில் தேடிய பொருள் தேடிவந்தால் வாழ்வு ஆச்சரியம் நிரம்பியதல்லவா? இந்தக் கிறுக்கல் நிரம்பிய என் இதயத்தைப் போல!
1998
ஆகர்ஷியா 米57 来

Page 30
ஒற்றை வரியில் சொல்வதானால் நான் தொலைந்துதான் போனேன் ஊர்க்குருவியின் இறக்கைகளாக எப்போதும் துடித்துக்கொண்டிருந்த மன சிற்கு ஏன் இந்தத் திடீர் பலவீனம் ? எங்கே ஒளிந்துகொண்டன என் ஆன்மாவின் இனிய சங்கீதங்கள் ? தடிமனான புத்தகங்களிடையேயும் நுண்மையான சொற்களிடையேயும் கனத்துப் போயின கண்கள் ஒவ்வொருநாளும் கடவுளைத் துதித்தபடி கண்விழிக்கிறேன் முன்னே விரிந்திருக்கும் சவால்களிற்காக கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் அவை என் தசைகளை வலிக்கின்றன சுள்ளிடப் போகும் வார்த்தைச் சொடுக்கல்களிற்காக எப்போதும் நான் பயப்படுகிறேன். எந்த நிமிடமும் அறப்போகின்ற
谏 58 米 நம்மைப் பற்றிய கவிதை

கயிற்று உறவுகளைப் பேணுதலிலே வலுவிழக்கிறேன் தினமும் புதிய சிக்கலாய்ப் பிரிகின்றன நாட்கள். கடந்து போன ஒரு மழைக்காலத்தையும் குயிலின் கூவலையும் இனியும் பிரியத்துடன் ரசிப்பேனா ? கருகிப் புகை மண்டும் விளக்கினருகிருந்து தொலைந்து போன நாட்களிற்காய் ஏங்குகின்றேன் அவை மீண்டும் வராது போகலாம் என்றென்றைக்குமே
1998
ஆகர்ஷியா 谏 59 来

Page 31
சோற்றுப் பிடிகளை உருட்டித் தருகிறாள் அம்மா ஐந்து நான்காகி மூன்றாகி இப்போது இரண்டாயிற்று. இனி ஒன்றுமாகலாம். தொலைந்து போயின ஆரவாரமான சிரிப்பலைகள். தெற்கேயும் மேற்கேயுமாய்ப் பறந்து போயின பறவைகள். மூலைக்கொன்றாய்க் கனமான மெளனப் புத்தகங்களுடன் நாமிருவர். சுவர்கள்தோறும் முனகிப் பேசுகிறாள் அம்மா. எல்லாமிருந்தும் எதுவுமில்லாததாகிவிட்டது கூடு. மீண்டும் ஒன்றுகூடுதலென்பது சாத்தியமானதல்ல. இன்பமும் குதூகலமும் தழைத்த பால்ய வாழ்க்கைப் பகிர்தல்களை நினைத்து நெடுமூச்செறிகிறேன் தொலைந்துபோன பருவங்களையெண்ணி ஏங்காதோர் யாருளர்? இப்போதும் ஏதும் பேசுதலற்ற பின்னிரவில் ஆன்மாவின் அடங்கிய துடிப்புடன் தனித்துள்ளேன் ஒருவேளை நான் வியக்கிறேன் இதுதான் நிரந்தரமானது போலும் !
1998
谏 60 毫 நம்மைப் பற்றிய கவிதை

மீன் மான் தேன் தொடர்பிலா உவமைகள். கூறு போட்டுக் காய்கின்றன உப்பிட்ட மீன்கள். வெயிலுழைப்பில் கருகிய கட்டைகள். காய்த்த கரங்களில் மண்ணும் அழுக்கும் பீ, மூத்திரமும் தாலாட்டும் கரியும் வெடிப்பிட்ட வேதனைகளும் உவமை தொடுத்து உட்காரவைத்தாய் மறை என்றாய் மறந்து போனது எல்லாம். உள்ளின் தகிப்பவிந்து புகைமூட்டம் உன் ஒற்றைக் குரலே உச்சமாய்க் கேட்கும். மற்றப்பகுதி மெளனத்துள். வரலாற்றுப் பயங்கள் புனைதலின் பயங்கள் அரிப்பெடுக்கும் அரிதாரம் முகஞ்சொறியக் கையலையும்
இடையில் இன்னுமென்ன திரைகள் ? சற்றேனும் தனிமையில் விட்டுப்போ என்னை, பிறழ்ந்துதான் பார்க்கிறேன் ஒருமுறையேனும்.
1998
ஆகர்ஷியா 来61 毫

Page 32
இன்றைக்கும் அப்படித்தான் புறக்கணிக்கப்பட்டதென் உந்துகை கனமான மூடுதலின் அதிர்வுகளை இன்னமும் நான் மறந்தாகவில்லை. எப்போதும் மாறாதன மாற்றம் என்றாய் மாற்றத்தின் முதற்படிக்குள் எத்தனை சலிப்பு, சலனம் எப்போதும் எதிரே தெரிகின்ற பச்சைக்கு ஏங்கி இருத்தலை இழந்ததால் கனதிச் சாயங்களை இப்போது வெறுக்க நேரிடுகிறது. ஒன்றுமில்லாமல் வெள்ளையாய் எதுவுமேயில்லையா ? எல்லாப் புன்னகைகளின் பின்னும் வஞ்சகமில்லாது இருப்பதில்லையேன் ? பிரியத்திற்குரியவர்கள் தொலைதுாரம் சென்றபிறகு சலித்துப்போயிற்று தேடல். நம்புதலற்ற வாழ்வின் கனதிக் கணங்களைச் சுமக்க முடியவில்லையே தினமும் இப்போதெல்லாம் இல்லாதொருவனை வேண்டுகின்றேன் இந்த நெருக்கத்திலிருந்தென்னை திருப்பிப் பெற்றுவிடு
இறைவனே!
1999
来 62 兼 நம்மைப் பற்றிய கவிதை

உன்னுடைய தீர்ப்புக்காக இப்போதும் நான் காத்திருக்கவில்லை மலர்கள் மலர்வதையும் உதிர்வதையும் என்னால் உணரமுடியும் பாதி திறக்கபட்ட
யன்னலிற்கப்பால் இன்னொரு நம்பிக்கைப் பொழுதிற்காகத் தலை சாய்த்திருக்கிறது வானம். நீர் நிறைந்தன விழிகள். காற்றின் காதோரம் என் சிரிப்பொலியின் தேய்மானம் கூடி வருவதாகச் சொல்கிறார்கள். கருத்தாழமற்ற என் உளறல்களின் முடிவில் எவ்வளவு அருமையானவை உன் விமர்சனங்கள். நான் நம்பிக்கை கொள்ளவேயில்லை இதற்கப்பாலும் ஒருமுகம் உனக்குண்டென்று.
நல்ல நண்பன் ஒருவனைத்தான் நான் நேசிப்பவளேயன்றி எஜமானனை அல்ல. எப்படி நிகழ்ந்துவிடுகின்றன இந்த மாற்றங்கள் யாருக்கும் தெரியாமலேயே?
நான் வியக்கின்றேன்
மனிதர்களையிட்டு. ஒருபோதுமே அவர்களைப்
ஆகர்ஷியா 来 63 兼

Page 33
புரிந்துகொள்ள முடிவதில்லை என்னால் அல்லது ஒருவேளை என்னைத்தானோ ?
மூடிய புத்தகத்துக்குள்ளேதான் எத்தனை முகங்கள் அவற்றைப் படித்துப் புரிதலென்பது எவ்வளவு அசாத்தியமாகிறது நானோ விழித்தலன்றித் துயில் கொள்ள விழைகின்றேன். எனக்கு வேண்டியதெல்லாம் புற்கள் பனி சுமக்கிற ஒரு காலை. காற்று நம்பிக்கையையும் ஒளி புத்துணர்வையும் ஊட்டுதலான ஒருகாலை. அங்கு உன்போன்ற மனிதர்களின் கூக்குரல்கள் இருக்க வேண்டாம். உற்சாகமான ஒரு பாடல் இதயம் பொங்குகின்ற சிரிப்பு புற உலகின் அழுக்குகள் என் சிரிப்பில் கரைய வேண்டும். பாதையோரத்தில் இடித்துச் சென்ற உடலின் நாற்றங்கள் இங்கு இருக்காது. இங்கு சகலமும் நானே. மண்வெள்ளத்தின் நடுவேயோர் சிறுகல் போல மெளனத்தினிடையேயோர் புள்ளிச் சலனம் போல எல்லாமாகவும் ஒன்றுமில்லாமலும் நான்.
1999
豪 64 崇 நம்மைப் பற்றிய கவிதை

இலைக்குழல்வழி பீறிட்டது நின்றொரு கணம் சுழன்ற காற்று. நீண்ட நினைவுகளை நாசிக்குள் புகுத்தி உதிர்ந்தன வேப்பம்பூக்கள். வெடித்த வாணங்கள் மத்தியில் நெஞ்சு நடுங்க நான் குந்தியிருந்தேன். இப்போதெல்லாம் எப்போதாகிலும் கூட மனசுக்குப் பிடித்தமானதாக இல்லாது போயிற்று காலநிலை. காலடியோசை காலனுக்குச் சொந்தமென்றனர் பலர். இல்லை கடவுளே வருகிறார் என்றனர் சிலர்.
கடவுளையும் காலனையும் வேறுபடுத்திப் பார்ப்பார் அறியாதவர் என்றேன் நான். நின்ற விவாதம் நெஞ்சு நோக்கித் திரும்பிற்று.
அமைதி நடுங்கும்படி அமைதியாக்கப்பட்டேன். புலங்கள் குவிந்தென் புத்தகமுனையில் வழுக்கிற்று. பாற்கடலில்லை ஆலகாலமே மிச்சம் என்றுடைந்தவளை
ஆகர்ஷியா 崇65 聚

Page 34
புத்தகம் படித்துப் புத்தி பேதலித்துவிட்டது என்றார்கள்.
பேதலித்தது நானல்ல
பேதைகள்
நீங்கள்தான் பேதைகள் என்றோ துடித்த என் குரலின் அதிர்வுகள் மீட்டிக் கூவுகிறது வேப்பமரத்துக் குயில். எதிர்வினை ஏதுமின்றி எழுத்தெண்ணிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வருகிற மாதம் பரீட்சையாம்!
2000
兼 66 毫 நம்மைப் பற்றிய கவிதை

உன்பொருட்டு என்னிடம் தீர்வுகளெவையுமில்லை. உன்னை நீயெனவும் என்னை நானெனவும் எடுத்துக்கொண்டு பேசுவோமே நம்மிடையான சமத்துவத் தளம்பலில் பரிணமிக்கப் போகின்ற அந்த இடைவெளி வேண்டாம். எத்தனையோ திறக்கப்படாத பூட்டுக்கள் நம்முள் அமுங்கி அடங்கிக் கிடக்கின்றன.
நாம் யாரென்று பரஸ்பரம் அறிந்துகொள்ளுதலில் ஏன் இந்தத் தயக்கம் ? தொலைவுமின்றிக் கலத்தலுமின்றி 'அகலவும் அகலாது அணுகவும் அணுகாத' வெப்ப வட்டத்துக்குள்ளேயே இதோ நம் அமர்வு. திறந்து கொள்
நம் உடலினதும் நுண்ணிய உள்ளத்தினதும் மாயவலைப் பின்னல்கள்
ஆகர்ஷியா 豪67 谏

Page 35
அறுந்து தூங்கட்டும் விழிபொருதி, ஸ்பரிசம் பெற்று என்னுள் நீயும் உன்னுள் நானும் இதுவரை காத்த மெளனங்களை ஊற்றிக்கொள்வோம். பேசுபவர் பேசிக்கொள்ளட்டுமே புறக்கணிக்கப்பட்ட பறவைகளின் பாடல்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. நம் பேசாப் பொருட்களின் மையமகழ்தலில் நாமே இயங்குவோம். கைகொடு நண்பி
2OOO
谏 68 兼 நம்மைப் பற்றிய கவிதை

நம்மைப் பற்றிய கவிதை
ஆளாளுக்கு ஒப்பனையேற்றி மேடையேறுகிறோம்.
இயங்கியல் நம்மைத் தத்தமது வட்டத்துள் வரையறுத்துள்ளது. உன் ஒப்பனை கலையாது நானும் என்னைக் குலைக்க மனமின்றி நீயும் சம பருமன்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. வேடிக்கையதுவல்ல ஒப்பனையற்றிருத்தல்கூட ஒருவித பாத்திரமேற்பிற்கான ஒத்திகையென்பதை ஆளாளுக்கு மறந்து விடாதிருக்கிறோம். இதனால்தான் போலும் நம்முடைய வட்டங்கள் ஒன்றையொன்று இடை வெட்டிக்கொண்டதேயில்லை. வெளியே பலரும் மெச்சுகிறார்களாம் நம் இயங்கியலுக்குள்ளோடும்
ஆகர்ஷியா 兼 69 谏

Page 36
ஒத்திசைவை எத்தனையோ வருடத் திரைநீக்கத்தில் ஒருவித கலையலங்காரத்துடன் சலிப்பேதுமின்றிய பாவனையில் ஆனாலும் என்னவோ வட்டங்கள் மையொழுகக் கரைந்து வெண்தாளில் பீச்சியடிப்பதாய் ஏக்கம் மிகுந்த கனவுகள் மட்டும் இப்பவும் என் இரவுகளில்!
2003
豪 70 谏 நம்மைப் பற்றிய கவிதை


Page 37
எளிமையான வார்த்தைகளா புதிய படிமங்களாலும் நமது அ வாழ்க்கையை மாற்றிவிடுகிற
ஆகர்ஷியாவின் கவிதைகளில் பிரிவு, நேசம், யுத்தம், இழப்பு வேட்கை, சிறிய இன்பங்கள்,
என வாழ்வின் எல்லாப் பரிம நுட்பமாக இவரது கவிதைகளி பெறுகின்றன. பெயருக்கேற்றப வைக்கும் கவிதைக் குரல் இ
 

ISBN 81-899.45 - 07 - 6
788 1891945.077