கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1980.11.16

Page 1
**
#"
ம -
ஆத்ம ஜேரதிநிலையம்ந ܕܒܢܝ
 


Page 2
ஆத்மஜோதி ,
ஓர் ஆத்மீக மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் sejAIat எல்லா உடலும் இறைவன் ஆலயமே
-சுத்தானந்தர் ஆசிரியர்: நா. முத்தையா
ஜோதி 33 - கார்த்திகை (16 11-80) st l
பொருளடக்கம்
ஆத்மஜோதி நேயர்களின் கவனத்திற்கு! - 1 இந்துமத போதகர் - 3 ஆசிச்செய்திகள் - 7 சுடரொளி ஊட்டுந் தூய ஜோ தியே! நீடு வாழி! -ســــــ I دا கந்தர் சஷ்டி கவசம் - 14 மனிதரின் உணவு மாமிசமா மரக்கறியா? ༨ རྒྱལ་ - 18 பல்கலைக்கழகத்துடன் பதினைந்து நாட்கள் . - 20 . காந்தாரியின் கதை - 31 நான் கண்ட ஞான ஒளி - 34 இதுவன்றே அதிசயம் . - - 39 கோணேஸ்வரம் இரண்டாக வளர்ந்த தெய்வீக வரலாறு - 41
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்துசமயம் 一 45
Hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
p e O ஆயுள் சநதா அங்கததவா:
G W திரு. A. P. சேதுராமன் அவர்கள்
鶴 ● ܡܵܐ
நியு லலிதா கோல்ட் ஹவுஸ், 42, "கிட்டங்கி” கொழும்பு விதி, காலி,
LLLLLLLLLSLSSSSLLLSSSSSSLLLLSLLLLLLSLSLSSLLSLSSSSSSLSSLLSLSLSLSLSLSLSLSLSLLLSLSLLLLLSLLLLLSLLLSLLLSLSLLLSLSLLLLLSLLSSLSL
 
 
 

ஆத்மஜோதி
நேயர்களின் கவனத்திற்கு!
y
魔
影 இந்திய மாநிலத்தில் 14 மொழிகள் வழக்கில் இருக் கின்றன. இந்தப் பதினன்கு மொழிகளிலும் ஆயிரம் சினி 醇 மாப்பத்திரிகைகள் வெளியாகின்றன. ஆனல் இந்தியா ஐ முழுவதிலும் பதினன்கு மொழிகளிலும் நூறு சமய சஞ்
சிகைகளாவது வெளியாகின்றனவோ என்ருல், இல்லை என்றே துணிந்து கூறலாம்,
接
பொதுசன நூல் நிலையங்களிலும் சமய ஸ்தாபனங் களிலும் செய்திப்பத்திரிகைகள் காசு கொடுத்து வாங்கு கிருர்கள். ஆணுல் சமய வெளியீடுகளை இலவசமாக அனுப்புமாறு கேட்கின்ருர்கள். செய்தித்தாள் ஒன்றுக்கு மாதம் 35 ரூபா வரை செலவிடும் நிலையங்கள் சமய சஞ் ஜ் சிகைகளுக்கு வருடத்திற்கு இருபதோ இருபத்தைந்தோ * கொடுப்பதற்கு தமது லோபத்தன்மையைப் பயன்படுத்
اج
* துகின்றன.
یہی
இg
器 சமய வெளியீடுகள் என்ருல் எல்லாம் இலவசமாகக்
ஐ கிடைக்க வேண்டும் என்ற மனேபாவம் நம்மவர் மனத்
KK G d 3 திலே வேரூன்றி இருப்பது நமது சமய வளர்ச்சிக்கு ஒரு தடை என்றே நாம் கருதவேண்டி உள்ளது. வேறு சம 3 யங்களுக்கு வேறு தேசங்களிலிருந்து நன்கொடைகள் 器 தாராளமாகக் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு : அவர்கள் தமது சமய நூல்களை அச்சேற்றி இலவசமாக 3 மற்றைய சமயத்தவர்களுக்கும் கொடுக்கின்றர்கள். இத் & தொண்டினை அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள
வேண்டும்.
கோயில்களிலே பெருவிழாக்கள் எடுத்து ஐயாயிரம் 楼 பத்தாயிரம் செலவு செய்பவர்கள் அதில் ஒரு பகுதியை
ஜ் யாயினும் திருமுறை நூல்கள் வெளியிடுவதற்குப் பயன் நீ படுத்துவார்களேயானல் அது ஒரு பெரிய ஞானதான

Page 3
:
ଝ
盛
홍
ہے۔
豹
ஆத்மஜோதி
மாகும் அன்னதானத்திலும் சிறந்தது ஞானதானமா கும். ஒரு நேரம் வயிறு புடைக்க உண்டவன் அடுத்த நேரப்பசி தோன்றிய உடனே அதனே மறந்துவிடுகின் ருன். ஞானதானம் அப்படிப்பட்டதல்ல. இப்பிறப்பில் மாத்திரம் அல்ல, ஏழு பிறப்பிற்கும் தொடர்ந்து செல் வது ஞானதானம். ஆகவேதான் "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என்று கூறிச்சென்றனர். " .
கடல் கடந்த பல தமிழர்களுடைய வேண்டுகோ ளின்படி இம்மாதம் தொடக்கம் மாத ந் தோறு ம் ஆத்மஜோதி வெளிவரும் என்பதை அன்புடன் அறியத் தருகின்ருேம். பலர் நல்ல ஆலோசனைகளேயும் வழங்கி உள்ளார்கள். அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகின் ருேம்,
து இலங்கையிலுள்ள சமய எழுத்தாளர்களே ஊர் குறித்து
அவர்களது படைப்புக்களே வெளியிடுக!
ஆத்மீகத்தோடு சம்பந்தமான சிறுகதைகளே வெளியிடுக!
நாட்டு வைத்தியக் குறிப்புகளே வெளியிடுக!
இலங்கையில் உள்ள கோயில்களின் வரலாறுகள், படங்
கள், உற்சவகால அறிவிப்புகளே வெளியிடுக!
இ சைவ சித்தாந்தத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவம் போல வைஷ்ணவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்குக!
ந ஆத்மீக சம்பந்தமான கேள்வி-பதில் மாதந்தோறும்
வெளியிடுக!
து தியானம் பற்றி மாதந்தோறும் வெளியிடுக!
இ குருவின் அவசியம், மந்திரங்கள் பற்றிய விளக்கங்கள்
வெளியிடுக!
ஆலோசனகள் இன்னும் பல உண்டு. இவையெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமானுல் வாசகர்களின் ஒத்துழைப்பே மிகமுக்கியமாகும். மேற்கூறப்பட்ட சில தலே பங்கங்கனேச் சிலர் பொறுப்பேற்று மாதந்தோறும் ஆத்ம ஜோதியில் வெளியிட எழுதி அனுப்பலாம்.

ஆத்மஜோதி
இந்துமத போதகர்
॥1॥°F PHoPoP + TL L S LLSLLLLlLlLultLtlMtttlMtLLtt MtlttlMaulLS lttLlLASLtMtK
- ஆசிரியர் -
மகான்கள், ஜீவன்முத்தர்கள், முனிவர்கள் இவர்களு டைய வாழ்க்கையே இந்துமதம். இவர்களுடைய இருப் பிடங்கள் ஆச்சிரமங்கள் என்று அழைக்கப்பட்டன. இத் தகைய இடங்களேத் தேடி எல்லாச் சமயத்தவர்களும் வந்த னர். இத்தகையவர்கள் அநுபூதி பெற்றவர்கள். இவர்களுக் குச் சமயபேதம் இல்லே. இத்தகைய இடங்களேத் தேடிச் சென்ற எச்சமயத்தவரும் உயர்நிலை எய்தினர். இந்த நிலை இந்து மதம் ஒன்றிற்கே உள்ள தனிச்சிறப்பாகும்.
எச்சமயத்தவரும் எந்த நிலையில் உள்ளவரும் இந்து சமய போதனைகளே ஏற்றுக்கொள்ளலாம். போதனையை ஏற்றுக்கொண்ட பின்னரும் அவர் தமது முந்திய சமயப் பெயருடனேயே வாழலாம். தம்மைத் தேடி வந்தவர் களுக்கு ஞானப் பொக்கிஷத்தை அள்ளி அள்ளிக் கொடுத் தது இந்துசமயம்.
உலகிலுள்ள எல்லாச் சமயங்களேயும் நல்ல உள்ளத் தோடு ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு சமயம் இந்து சமயம், எல்லாச் சமயத்தவரும் முத்திநிலே பெறலாம் என்று தெளி வாகக் கூறுவது இந்து சமயம்.
"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனுர்தாம் வருவர்' என்றும்,
"எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே" என்றும்,
'ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் " என்றும், 'ஒன்முய்ப் பலவாய் உயிர்க்குயிராய்' என்றும்
უბუქე, பொருளே 5 ல் ரிடத்தும் என் போச் சமயத்திலும் விளங்குகின்றது என்றும் சமரசம் பேசுவது இந்துசமயம்,

Page 4
4 ஆத்மஜோதி
உள்ளது ஒன்று. அதையே 'தத் ஸத்' என்று குறிப் பிடுவர். அதாவது "தத்’ என்றல் அது. ‘ஸத்’ என்ருல் உண்மை. அதையே அவன், எல்லாம்வல்ல ஒருவன், இறை வன் என்று அழைத்தது இந்துமதம். அந்த இறைவன், தானே அனைத்துமாய், தானே தானுய், ஒப்புயர்வில்லா மல் உள்ளான். இரவி எழுந்தது என்ருல் அதன் கதிரும் அதனுடன் எழுந்து பரவுகிறதல்லவா? கதிரும் கதிரவனும் சொல்லுக்கு இரண்டு; இயல்பில் ஒன்றுதான். அதுபோல வே பரமன் தனது அருட்கதிரான பராசக்தியுடன் கூடி இரண்டாகின்றன். பரம்பொருளொருவனே. இவ்வாறு இறைவன்-இறைவி, ஆண்டவன்-அருள், தலைவன்-தலைவி, அப்பன்-அம்மையாக விளங்குகின்றன். அதஞலேதான். உயிர்கள் எல்லாம் ஆண்-பெண் ஆகிய இரண்டுருக் கொண்டு விளங்குகின்றன. உயிர்க்குயிரான ஒருவனே இரண்டாகப் பொலிகிருன்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் நடந்த உலக சமய சமரச மகாநாட்டில் இந்துமதக் கொள்கைகளை விளக்கினர். அவருடைய பேச்சிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவருடைய இந்துசமய தத்துவங்களை விரிந்த மனப்பான்மையுடைய அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்ட னர். உலகம் முழுவதிலும் இன்று இந்துசமய தத்துவங் களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் இந்துசமய நிலையங் கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனல் அவை இந்துசமயக் கொள்கைகளை எடுத்துச் சொல்வதோடு மாத்திரம் நின்று விடுகின்றனவே தவிர, இந்து சமயத்திற் சேருங்கள் என்று எவரையும் ஒருவார்த்தை கூறியதாகச் சரித்திரம் இல்லை.
ஆளுல்ை சமயசாதனைகள் அற்ற பாமர மக்களுடைய நிலை வேறு. அவர்களுக்குத் தருமத்தையும் நீதியையும் கட வுட்கொள்கையையும் எடுத்துச் சொல்வதற்கு நம்மத்தி யிலே சமய போதனைகள் இல்லை. ஒரு சிலர் இருக்கலாம், அவர்கள் மாத்திரம் எல்லாருடனும் தொடர்புகொள்ள முடிவதில்லை. குருடன் குருடனுக்கு வழிகாட்ட் முடியாது.

ஆத்மஜோதி S. 5
ஆகவே ஒவ்வொரு ஊரிலும் இந்து சமய வழிநின்று அத ணேப் போதிக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் குறைந் து இருவர் மூவராவது இருக்கவேண்டும். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் இருவர் மூவரைத் தெரிவு செய்து இந்து சமய போதகர்களை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் பலபெரியார்களுடைய உள்ளங்களிலே வளர்ந்து வந்தது. அதனை நெறிப்படுத்துமுகமாக, கிளிநொச்சியிலே உள்ளகுருகுலம் அகில இலங்கையிலும் இருபது இளைஞர் களைத் தெரிவு செய்து, சென்ற விஜயதசமி தொடக்கமா பயிற்சிகொடுத்துக்கொண்டு வருகின்றது.
தெரிவுசெய்யப் பெற்ற இளைஞர்கள், யுவதிகள் குரு குல வாசம் செய்து அறிவிலும் அநுட்டானத்திலும் முதிர் வடைந்தபின் கிராமங்களுக்குத் தொண்டர்களாக, வழி காட்டிகளாக அனுப்பப்படுவார்கள். வானப்பிரஸ்த, சந் நியாச நிலை அடைந்தவர்களும் வயதில் ஐம்பது அறுபது வயதடைந்தவர்களும் தமது குடும்பப் பொறுப்புகளைத் தமது பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு சமய சமூக சேவைக்கென்றே தம்மை அர்ப்பணித்து விடுவார்களானல் அத்தகையவர்களுக்கும் தகுந்த முறையில் பயிற்சி அளித்து சமய சமூக சேவையிலீடுபடுத்தும் திட்டமொன்றும் நடை முறைப்படுத்தப்பட இருக்கிறது.
இவை இரண்டுவகையினரையுந் தவிர குடும்பத்திலி ருந்து கொண்டே குடும்பமாகச் சேவைசெய்யவிரும்புகி றவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அவர்களையும் சேவை யிலீடுபடுத்த விரும்புகிறது. மனிதனுகப்பிறந்த ஒவ்வொரு வனும் அயலவனையும் நேசித்து வாழக் கடமைப்பட்டிருக் கிருன் சேவை என்பது தொண்டர்களுக்கு மாத்திரம் அல்ல; எல்லோருக்கும் தொண்டு உரியது. ஆகவே அவ ரவர் நிலையில் ஒவ்வொருவரும் தொண்டு தத்தமக்கு இயன்ற அளவில் செய்யமுடியும். தன் குடும்பத்திலுள்ள, தன் வீட்டிலுள்ள வயதுவந்தவர்களுக்கும் குழந்தைகளுக் கும் சேவை செய்வதும் தொண்டுதான். அந்தப்பழக்கம் தான் அயலவர்களுக்கும் சேவை செய்யத்தூண்டுகின்றது.

Page 5
6 ஆத்மஜோதி
நாங்கள் மனிதர்கள் என்ற நினைவு எல்லோரிடத்தி லும் எப்போதும் இருக்க வேண்டும் இறைவனை எந்நிலை யிலும் எப்போதும் மறவாது வாழவேண்டும். இப்படி எல்லோரும் வாழ்ந்துவிட்டால் உலகில் சண்டைசச்சர வுக்கே இடம் இல்லை. பொலிசார், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். இத்த கையதொரு வாழ்க்கையை மக்கள் வாழவேண்டும் என்று தான் மகாத்மாகாந்தி விரும்பினர்கள். அதற்கு இரா மராச்சியம் என்றே பெயரிட்டு வழங்கினர் இந்த நிலைக்கு மக்களுடைய மனேநிலையை உயர்த்துவதே இந்து மத போதகர்களைப் பயிற்றுவோருடைய முக்கிய குறிக் கோளாகும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண் டும் என்று சொல்லுவார்கள். உரிய சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி நாமும் மற்றையோருக்குப் பயனுள்ளவர் களாக வாழ்வோமாக.
வெறுங் கணவாயும் சாரமற்றதாயுமுள்ள இவ்வாழ்க் கையைப்பற்றிய கவலைகளை விட்டு விட்டு, நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தவன் நான்? என் தாயார் யார்?- ஆகிய விசாரத்தில் இறங்குவாயாக.
நீ பொறுமையிழந்து கோபிப்பதேனே? உன்னிடமும் சரி, மற்றவிடங்களிலும் சரி, ஒரே ஆண்டவனன்ருே சர்வ வியாவியாக விளங்குகிருன்? ஆகவே, பேதத்தைத் தோற் றுவிக்கும் அஞ்ஞானத்தை விட்டு எப்பொருளிலும் உன் சொரூபத்தையே காண். இறுதியில், நான், நீ என்ற யாவும் கரைந்து, உள்ளது பிரமம் ஒன்றே என உணர்
6.
விரோதியிடம் விரோதமாகவே, தோழனிடம் தோழ மையாகவே, புத்திரன், சுற்றத்தார் ஆகியோருடன் பரி வுடனே இருக்க முயலாதே. எல்லோருடனும் சமநோக் குடன் ஒழுகுவாயாக. அப்போதே நீ அந்த சர்வ வியா பியின் தன்மையை அடைவாய் --சங்கரர்
 

ஆத்மஜோதி
*ஆத்மஜோதி”யின்
32-வது ஆண்டு நிறைவு விழா
ஆசிச்செய்திகள்
ரீ சந்தரமௌசேவராய நம: பூEl சங்கர பகவத்பாதாசார்ய பரம்பரை பூணீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு யூனி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் யூனி மட ஸம்ஸ்தானம் காஞ்சீபுரம்-631 502
யூனி லங்காவில் 32 ஆண்டுகளாக சமயம், யோக சாதனை பற்றிய தத்துவம், வேதாந்த விஷயம் இவை களைப் பிரசுரித்து ஜனங்களுக்குப் போதித்துவரும் *ஆத்மஜோதி" சஞ்சிகைக்கு 33-வது ஆண்டு தொடங் கப் போவதை அறிந்து ஸந்தோசிக்கின்றேம்.
ழரீ லங்காவில் இந்து சமயப் பற்றையும் சைவ சமய உணர்ச்சியையும் மேம்படுத்தத் தொண்டுபுரிந்து வரும் இச் சஞ்சிகை மேலும் அபிவிருத்தி அடைந்து அதன் நிர்வாகிகள், விஷயதானம் செய்பவர்கள், வாசகர்கள், ஊழியர்கள் யாவரும் ஈசனருளால் எல் லாவித நன்மைகளையும் அடைய ஆசீர்வதிக்கின்றேம்.
நாராயணஸ்ம்ருதி

Page 6
ஆத்மஜோதி
6சிவ சிவ
பூணூலழறீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்
. (அதிபர் பூரீ காசிமடம்)
திருப்பனந்தாள்-612504 (தஞ்சை ஜில் லா)
சீரிய தெளிந்த தமிழ் நடையில் அரும்பெரும் கருத்துக் கருவூலங்களைத் தாங்கிச் சமயப்பணி புரியும் "ஆத்மஜோதி’ 32-வது ஆண்டு நிறைவு விழாக் காண்பதறிந்து மகிழ்கின்றேம்.
நல்லை நகர் ஆறுமுக நாவலரும், சி. வை. தாமோதரம்பிள்ளையும் உள்ளிட்ட தமிழ்ப் பேரறிஞர் கள் வாழ்ந்த ஈழப்பதியில் 'ஆத்மஜோதி" தன்னு டைய ஒப்பற்ற கலாச்சார, கலை, இலக்கியத் தொண் டால் தமிழ் பரப்பி வருவது பாராட்டற்குரிய ஒன்றே ul Tejid.
சமய இலக்கிய இதழாகிய 'ஆத்மஜோதி"யின் 32-வது ஆண்டு நிறைவு விழா சிற்ப்புற நிகழவும், இதழ் தன்னுடைய சமயப்பணியில் எண்ணற்ற சான் றேர்களின் ஏற்றமிகு கருத்துக்களுடன் பொலிவுற மிளிரவும் செந்திற் கந்தன் சேவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகின்றேம்.
சுபம்.

.ஆத்மஜோதி 9 சுவாமி சித்பவானந்தர்
பூணி இராமக்கிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை.
பரம்பொருள் ஆத்மஜோதி என இயம்பப் பெறு கிறது. அது தன்னைத் தானே விளக்கிக் கொண்டு இருப்பதால் அதற்கு இப்பெயர் வந்துள்ளது. குன்ற விளக்கு எனவும், அணையாவிளக்கு எனவும், தூண்டா விளக்கு எனவும் அது மேலும் இயம்பப் பெறுகிறது. இப் பரம்பொருளின் பெருமையை நாடெங்கும் பரப்பு தலில் 'ஆத்மஜோதி' என்னும் பத்திரிகை ஈடுபட் டிருக்கிறது. இப் பத்திரிகை யாண்டும் நிலைத்திருந்து அருள்துறையில் இது இயற்றும் அரும்பணியில் மேலும் மேலும் முன்னேற்றம் அடைந்து வருவது ஆகுக.
நம. சிவப்பிரகாசம்
ஆசிரியர்: "இந்து சாதனம்’’
யாழ்ப்பாணம்.
சமய நெறி பரப்பும் சஞ்சிகையின் பணி உத்தமமானது; பலநோக்குடைய மக்கள் மத்தியில் பரநோக்கினைச் சுட்டிக்காம் டும் 'ஆத்மஜோதி" போன்ற வெளியீடுகள் வளர்ந்து வரு வதைச் சைவ உலகம் மிக மகிழ்ந்து வரவேற்றல் கடமையன்றே.
“இந்து சாதனம்’’ இந்தக் கடமையில் முந்திநிற்கின்றது. ஆண்டுகள் பல்லாண் டாய் ஆதவன் செங்கதிராய் யாண்டுமே இன்னெளி ஏற்றிவரும்-மாண்டகைய
"ஆத்மஜோ தித்தாள்' அரனரு ளாற்பர மாத் மநெறி ஓங்குகஇவ் வாறு.

Page 7
10 ஆத்மஜோதி
LDجري
சிவ சிவ
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி -623 206 இராமநாதபுர் மாவட்டம்.
உயிர் வாழ்க்கையின் குறிக்கோள், உயிரைத் தரப்படுத் துவது; தகுதிப்படுத்துவது. உயிர், தமிழ்ச்சொல். ஆன்மா வடசொல். உயிருக்கு என்ன தரம், தகுதி தேவை. உலகி யல் இன்ப துன்பங்கள் அனைத்தும் உயிர்களின் தகுதிக்குறை வால் வருபவைகளே! உயிர்கள் தகுதிப்பாடுடையதாயின் எங்கும் எதிலும் இன்பமே.
உயிர்க்குலம் அனைத்தும் தகுதியின்பாற்பட்டு நின்று ஒழு குதல் இல்லை. அஃது இயற்கை வளர்ச்சியின் படிநிலைகள். உயிர்களைத் தகுதிப்படுத்தும் முயற்சியிலேயே மொழிகள் முகிழ்த்தன, இலக்கியங்கள் மலர்ந்தன; சமய நெறிகள் கால்கொண்டன. அரசியல் தோன்றியது. இவைகளால் எல்லாம் உயிர்க்குலம் ஒரளவு வளர்ந்திருப்பது மறுக்கமுடி யாத உண்மை. ஆனலும் தேவையான அன்புக்கும் தகு திப்படுத்தும் களங்கள், கருவிகளின் அளவுக்கும் தகுதி நிலைகள் வளரவில்லை . ஏன்? தகுதிப்படுத்தத் தோன்றிய களங்கள், கருவிகள் கூடச்சார்ந்ததன் வண்ணமாய் உயிர்க் குலத்தைத் தகுதிநிலைக்கு உயர்த்துதற்குப் பதில் அவையும் கெட்டு, உயிர்க்குலத்தையும் திசைதிருப்பிக் கெடுத்து விட்டன. இதன் விளைவுகளே மொழிச் சண்டைகள்! இனச் சண்டைகள்! சமயச் சண்டைகள்! அரசியல் சண்டைகள்! கெட்ட போரிடும் உலகம் கூடவே கூடாது! போரிடும் கெட்ட் உலகத்தை மாற்றி, வாழ்விக்க வேண்டுமாயின் உயிர்க்குலத்தின் தகுதி வளரவேண்டும்.

ஆத்மஜோதி 11
உயிர்க்குலம் இயல்பாக அறியாமை என்ற காரிருளில் கிடக்கிறது. அறியாமை என்பது யாதொன்றும் தெரியா மையன்று. அறியாமை இருளில் கிடப்பவர்களுக்கு நிறையத் தெரியும். தெரியாது போனலும் தெரிந்த தாகவே நடிப்பர். ஆனல், தெரிந்துகொண்டிருப்பவை அனைத்தும் முறை பிறழ்வானவை; பயன்படாதவை; அறியவேண்டுவனவற்றை அறிதலே அறிவு. அறிவு ஒளித் தன்மையுடையது. இந்த அறிவைப்பெற்று உயிர், ஒளிமிக்க தாக விளங்குவதையே 'ஆத்மஜோதி" என்கிருேம்.
ஆன்மாவில் ஒளி, உயிரில் ஒளி உண்டாயின் நல்லனவே சிந்திப்பர் காண்பர்; பேசுவர்; செய்வர்; இங்கு நல்லன என்பது தீமைக்கலப்பில்லாதது. எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் நன்மையாக இருப்பதே நன்மை. இத்தகு அறிவொளியினைப் பெற்று வீளங்க வேண்டும். தூய அறிவு,
அன்பில் திளைக்கும். இஃது இயற்கை. உயிர்க்குலம் இன்ப அன்பினில் திளைக்க வேண்டும். அன்றே ஒளிமிக்குடைய
உயிர்க்குலம் தோன்றும். உயிர் ஒளிபெற்றுத் திகழ
ஞான நூல்களைக் கற்க வேண்டும். திருமுறைகளைப்
பயில வேண்டும். அன்பின் தவத்தில் ஈடுபட வேண்டும். அன்பே சிவமாக, எந்நாட்டவர்க்கும் இறைவனுக விளங் கும் பெருமான நினைந்து நினைந்து அவன் தன்மைகளை உரிமைகளாகப் பெற்று, அன்பே சிவமாக அமர்ந்திருக்க வேண்டும். இங்ங்ணம் வாழ்வோர் இன்றைய உலகத் திற்குத் தேவை. -
"ஆத்மஜோதி" அறைகூவி அழைக்கிறது. ஆத்மஜோதி” யின் அருமை தெரிந்த நெறியாளர், தொண்டர், நாவலப் பிட்டி முத்தையா அழைக்கிருர், சேரவாரும் செகத்தீரே" என்று! ஏன் தயக்கம்? ஆன்மா ஒளிபெற முயலுக!
அன்பில் திளைத்திடுக! எல்லோரும் வாழ்க! இன்புற்று
வாழ்க!

Page 8
ஆத்மஜோதி
வித்துவான் தவத்திரு சாந்தலிங்கராமசாமியடிகள்
பேரூராதீனம், கோயமுத்தூர்-641010
ஆத்மஜோதி நிலையம் ஈழநாட்டில் அமைதியும் எழிலும் நிறைந்த சூழலில் விளங்குகிறது. அன்பர் களை வரவேற்றுப் போற்றுவதும், அருளாளர்களை வாழ்த்தி வணங்குவதுமாகிய உயரிய பண் புகளை வளர்க்கும் நிலையம் இது. இந்நிலையத்தின் தொண் டர்களாக விளங்கும், நாவன்மையும், அருள்நெறிப் பண்பும்மிக்க சைவத்திரு முத்தையா அவர்கள் நாட றிந்த நல்லறிஞர். இவரது இளவல் அருள்நெறித் தொண்டர் சைவத்திரு அருமைநாயகம் அவர்கள் அண்ணலின் வழிநின்று ஆத்மஜோதிப் பணிகளைச் செவ்வனே ஆற்றும் திறன் மிக்கவர். இவர்களது அயரா உழைப்பால் ஆத்மஜோதி இதழ் முப்பத்தி ரண்டாண்டுகளைக் கடந்து, Fupu LD600Tib LIJK 19 வருகின்றது. சமயப் பொதுமையும், சான்றேர் வாக் கும் தம் குறிக்கோளாகக் கையாண்டு சைவத்திருநெறி வளர்க்கும் இவ்விதழ் புதிய சமுதாய வளர்ச்சியில் சமயச் செழுமையில் தன் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதற்கு அருள்மிகு சாந்தலிங்கப் பெரு மான் தாள்மலரை நினைந்து வாழ்த்துகின்றேம்.

ஆத்மஜோதி V 13
சுடரொளி ஊட்டுந் தூய ஜோதியே! நீடு வாழி!
ぐる******を●**を****************を?*
- பி. மூ. ஞானப்பிரகாசம் -
வெண்பா முருகன் திருவருளால் முப்பதுங் கண்டு பெருக ஒளிவீசும் பேறு - தருகின்ற ஜோதி! இளஞ்சுடராய்த் தோன்றவென வாழ்த்துகிருேம் ஆதிசிவன் பாதம் அனேந்து.
விருத்தம் வான்முகில் வழாது பெய்ய - மாநிலம் சுவர்க்க மாக கோன்குடி மக்கள் வாழ - கோதிலா ஆன்ம ஞானத் தேன் மழை கொட்டுந் தூய திருவளர் ஆத்ம ஜோதிப் பான்முளே வளர்ந்து காளப் பருவமும் எய்தி ஞனே
அப்பனுெ டம்மையாக அறப்பயிர் தழைக்க வென்று முப்பழந் தேன் கலந்த மூதுரை சுமந்து கொண்டு இப்புவி யெங்கும் சுற்றி இனியநல் விருந்த வித்து முப்பது நிறைந்த ஜோதி முத்தொளி பரந்து வாழி!
மல்லிகை முல்லை ருேசா மணமதி தூரம் விசா எல்லையி லாத்ம ஜோதி இகம்பர மெங்கும் வீசும்
தில்லைவாழ் கொன்றை வேந்தன் திருவருள் காக்கும்-ஜோதி
கல்லையுங் கனியச் செய்து - கற்பகம் போல வாழ்க!
மாவலி கங்கை ஒரம் - மலர்மண மிறைக்குங் காசி நாவலப் பிட்டி யாவில் ஞானசெங் குமுத மான காவலன் முத்தை யாவின் - கருணையில் பிறந்து தேவ ஜீவனம் 'ஊட்டும் ஆத்ம ஜோதியே! சிறந்து வாழி!
பரிந்தநல் லண்ணன் - தம்பி பரதணுே டிராமன் போன்றர்
அருந்தவம் முத்தை யாவும் - ஆரமு தரும்ை யன்பும் பெருங்குடி மக்கள் தொண்டின் பேறுதான் ஆத்ம ஜோதி
வரம்பல பொழிந்து மேலும் வளம்பெற வாழி! வாழி!! சுபம்

Page 9
14 ஆத்மஜோதி
O O O O கநதா சவுடி கவசம YY0L0LLYYYYYYY0L0L0L0L0L00000L0Y0LL0L00LYLL0L0L00L000000L0L00L0L00L0L0L
- K. M. வேங்கடராமையா (M. A.) -
(திருப்பனந்தாள்) w
"சேயோன் மேய மைவரை யுலகம்’ என்ருர் தொல் காப்பியர். இதனுல் குறிஞ்சி நிலக்கடவுள் முருகன் என் பது பெறப்படும். குன்றுகள் தோறும் அமர்ந்த பெம்மா னகிய முருகப்பெருமான் செஞ்ஞாயிறு போன்று தோற் றமளித்து மன்பதைகட்கு அருள்புரிகிருர். அவரது அரு ளைப் பெறுதற்குரிய தோத்திர நூல்கள் பல உ ண் டு. அவற்றுட் சில நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, பூரீகுமரகுருபரசுவாமிகள் அருளிய கந்தர்கலிவெண்பா, அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரம், கந்தர் அனு பூதி தேவராயர் அருளிய கந்தர் சஷ்டி கவசம் என்பன
Gol IT ID
**கந்தர் சஷ்டி கவசம்’ என்பது முருகபக்தர் பல ராலும் நாடோறும் பாராயணம் செய்யப்பெறும் தோத் திரப்பனுவல்களுள் ஒன்ருகும். 'கவசம்’ என்பது சட்டை என்று பொருள்படும். போர்க்குச் செல்பவர் கவசம் அணிந்தால் உடலுக்கு ஊறுபாடின்றிப் பொருவர். அது போன்று இத்தோத்திரப்பாடலாகிய கவசத்தைப் பாராய ணம் செய்யின் உடலுக்குரிய புறப்பகைகள் ஒன்றும் செய் யமாட்டா; உட்பகைகளும் அடங்கும்; இம்மைப்பயன் கள் வந்துறும்; மறுமைப்பயன் திருவருஃளப் பெறலாம். இவற்றை இந்நூல் காப்புச் செய்யுள் இனிது பகர்கின்றது.
துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவச்ந் தன.

ஆத்மஜோதி 15
இந்நூலில் முருகப்பெருமான் சரவணபவன், சிஷ்ட ருக்குதவும் செங்கதிர்வேலோன், மயில்வாகனன், வாசவன் மருகன், குறமகள் நினைவோன், நீறிடும் வேலவன், கார்த் தி கை மைந்தன், சிரகிரிவேலவன், சரஹணபவன், குகன், ஏரகச்செல்வன், தணிகாசலன், கதிர்காமத்துறைகதிர் வேல் முருகன், பழநிப்பதிவாழ் பாலகுமாரன், ஆவினன் குடிவாழ் அழகியவேலன், செந்தின் மாமலையுறும் செங் கல்வராயன், சமராபுரி வாழ் சண்முகத்தரசு என்றின் னேரன்ன சொற்ருெடர்களால் குறிக்கப்பெறுகிருர்.
முருகப்பெருமானின் வேல் பலபடித்தாகக் குறிக்கப் பெற்று இருக்கிறது. “மந்திர வடிவேல்" என்பது ஒன்று. வேலைப் பகைவர் மீது ஏவும் பொழுது மந்திரம் ஜபித்து ஏவப்படுவது என்றே, மந்திர வடிவாக இருந்து பகை வரை அழிப்பது என்ருே பொருள்படும். இனி அழகுவேல், புனிதவேல், நல்வேல், பெருவேல், முனைவேல், செவ்வேல், வடிவேல், கதிர்வேல், இனியவேல், திருவேல், அருள்வேல், பருவேல், வெற்றிவேல், அயில்வேல், வல்வேல், கருணை வேல், முரண் வேல், எதிர்வேல், கனகவேல், வச்ரவேல், சமர்வேல் என்றும் வேல் கூறப்பெற்றுள்ளது.
வரி 107 முதல் 157 வரையில் பேய், பூதம், சூனியம், பிணி, பகை, பல துட்ட மிருகங்கள், கடிவிஷம் முதலிய வற்ருல் நேரும் வாதனைகள் வாரா வண்ணம் காக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
வரி 62 முதல் 95 வரை உடலுறுப்புக்கள் எல்லாவற் றையும் வேல் காத்தருளுவதாகுக என்றுள்ளது. “ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரஹ வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக”* வரி (17-21) என்றவற்றுள் முதல் இரண்டு வரிகளில் வந்துள்ள ஒவ்வொரு எழுத்தும் பீஜாட்சரம். முதல் வரி

Page 10
16 . ஆத்மஜோதி
** சரஹணபவ • என்பதும் அடுத்தவரி **சரிஹணபவ”* என்பதும் மாறிவந்த ஷடாக்ஷரங்களும், ஷடாக்ஷரிகளும் ஆம். இதில் கடைசிவரியில் உள்ள 'வசரஹணப' என் பது மாரண சக்கரத்தின் அமைப்பு என்று கூறுவர். இவையெல்லாம் மந்திர நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. இங்ங்ணம் முருகப்பெருமானைத் துதித்தால் வறுமைபோம்; வல்வினை அணுகா என்றும் அறிஞர் கூறு G) IT
'ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியும் செளவும் கிளிரொளி ஐயும் நில பெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக’
என்ற (27-32) இவ்வரிகளில் பீஜாக்ஷரங்க்ள் கூறப் பெற்றுள்ளன. ஐம்-கிரிம்-செளம் என்பன பீஜாக்ஷரங்கள். இங்குக் கூறியுள்ள பீஜவடிவில் ஒதினல் முருகப்பெருமான் அவ்வடிவில் தோன்றியருளுவன். இதில் ' தனியொளி ஒவ்வும்" என்றது ஒப்பற்று விளங்கும் பிரணவமாகிய ஓங்காரமாகும். ܟܢ
வரி 33 முதல் 44 வரை கேசாதி பாதம் கூறப்பெற் றுள்ளது.
"செககன செககண செககண செகண மொகமெடக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண JJJJ JJJJ JJJJ JJJ ரிரிரிரி ரிரிரிரி சிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடு6டு டுடுடுே டுடுடு
டகுடகு டி குடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன்' என்ற (47-56) இவ்வரிகளிலும் சில ஒலிக்குறிப்புக்களும் மந்திர எழுத்துக்களும் கூறப்பெற்றுள்ளன. 'செககண' என்பது உலகத்தோடு பொருந்தியிருப்பவன் என்று

ஆத்மஜோதி 17 பொருள்படும். அதாவது இவ்வுலகில் பல தலங்களிலும் கோயில் கொண்டிருப்பவன் என்பது கருத்து. "மொக மொக-நக நக" என்பவை "ஒலி-பிரகாசம்' உடையவன் ரன்று பொருள் படும். 'ரர-ரிரி" முதலியன ஷடாக்ஷ ாத்தை நினைவூட்டும் எனவே முருகப்பெருமான் எல்லா வற்றுக்கும் தாது அதாவது வித்தாக விளங்குபவன் என்று விளங்கும்.
இக்கந்தர் சஷ்டி கவசத்தை உடல் தூய்மை செய்து கொண்டு ஆசாரத்துடன் விருப்பத்துடன் ஒரே நினைவாய் சிந்தை கலங்காமல் முப்பத்தாறு தடவை ஓதல் வேண் டும் என்று 203 முதல் 208 வரிகளில் சொல்லியிருக்கிறது. இங்ங்னம் ஒதின்.
"அஷ்டதிக் குள்ள்ோர் அடங்கலும் வசமாய்த்
திசை மன்னர் எண்மர் செயலதருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்'
நக்கீரர் சொன்ன நன்முருகாற்றுப்படை சங்கத்த மி ழரின் சொல்வளம் சொன்னடை கொண்டது. பூரீகுமர குருபரர் அருளிய கந்தர் கலிவெண்பா சைவசித்தாந்த பாத்திரப்பிழிவாய் வாக்குவளம் பொருந்தியதாய் உள் ளது. கந்தர்சஷ்டி கவசம் அவற்றேடு ஒப்பதன்று ஆயி அம் கற்றேர்க்கு அன்றி மற்றேர் க்கும் ஒதற்கெளிதாய் இருத்தலின் இந்நாளில் பல்லோரும் பாராயணஞ் செய் கின்றனர். சொல்லிய பாட்டின் பொருள் உண ர் ந் து சொல்லின் நலன்மிகுக்கும் என்று கருதி இச்சிறுவிளக்கக் டுறிப்புத் தரலாயிற்று.
'அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சேகுறி'

Page 11
8 ஆத்மஜோதி
SY0Y00S00LLSLLLLLS00S0LYL00S000L0S0000000L0S0000SL00SL00S00S0000S0L0S0YY0S0L0LS0L LLS0L LLSSA0L0S00S0L
i மனிதரின் உணவு ; மாமிசமா மரக்கறியா? :
Seco-to-o-o-o-o-Idrissar - occGTs stereo-00-00-0000-00-00-00-00-09
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நம்முடைய உடம்பிலும் மிருகங்களின் உடலிலும் உள்ள பழம் புண்களையும், குஷ்டரோகிகளுக்கு ஏற்பட்டிருக்கும் புண்களையும் மாமிசத்தையும் வரிசை வரிசையாகப் பரப்பிப் பார்த்தால் அகோ ரமான அருவருக்கத்தக்க புண்களின் தோற்றத்திற்கும் மாமிசத் தின் தோற்றத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் காணமுடியுமா? அதுவும் புண்! இதுவும் புண்! உடலில் தோல் மூடியிருக்கும்போது அந்தப் புண் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. இது ஒன்று தானே வித்தியாசம்!
இதனுல் சதை என்பது புண்ணுக்கு ஒப்பாகாது என்று நினைக் கிறீரோ? நன்று! நாம் கழித்துவிட்ட மலத்தைக் கடுதாசியில் சுற்றி மறைத்துக் கையில் வைத்துக்கொண்டு இது நல்ல பதார்த் தம் என்று வெளிக்குச் சொன்னுல் அது உண்மையில் நல்ல பதார்த் தமாகிவிடுமா? அதன் நரகல் தன்மை அதிலேயேதான் இருக்கும். அது போலவே தோலால் மறைக்கப்பட்டிருக்கும் புண்ணுனதசையை எவ்வளவு மறைத்துப் பேசினலும் அதன் உண்மையான அசங்கித குணம் அதிலேயே தானிருக்கும்.
'புறம் பொதிந்து மூடினும் புன்புலால் நாற்றம்
சென்று தைக்கும் சேயார் முகத்து’ என்பதைக் காண்க.
பிணத்தைப் பிடுங்கித் தின்னும் காக்கை கழுகுகள் பிணமாய்க் கிடக்கும் எந்தப் பிராணியின் உடலையும் கொத்திக் கொத்திக் கிளறி உள்ளேயிருக்கும் புண்ணுகிய மாமிசத்தை ஆவலுடன் பசியால் புசிக்கின்றன. தவிர, காயப்பட்டுப் புண் நிறைந்த இறவாத பிராணி களையும் கொத்திப் பிடுங்கித் தொந்தரவு செய்கின்றன.
இம்மாதிரியே மாமிசம் புசிக்கும் மனிதர்களும் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ, நண்டையோ, மீனையோ இரக்க மற்ற இராட்சதரைப் போல வெட்டியும் அறுத்தும் சமைத்து விருப்ப முடன் சாப்பிடுகிருர்கள். அந்த இறைச்சி என்ன சர்க்கரையாலான லட்டா? மிட்டாயா! அல்வாவா? அந்தோ! அது பிராணிகளின்

ஆத்மஜோதி 19
உடல் புண்ணல்லவா? அப்புண்களை உடலிலிருந்து எடுக்கும்போது பார்வைக்காகிலும் அழகாயிருக்கின்றனவா? வாசனையாகிலும் வீசு கின்றதா? ஐயோ! ஒரு நிமிடங்கூட உற்றுப் பார்க்க மனமும் சகி யாது! கண்ணுந் திறவாதே! நாற்றம் குடலைப் பிடுங்க, மூக்கு அழுகிவிடுமே!
தங்களுடைய உடலிலுண்டாகும் புண் கட்டி முதலியவைகளி லிருந்து ஒழுகுகின்ற இரத்தம் சீழ் முதலியவைகளைக் காண அரு வருத்துக் கழுவி மருந்திடும் அறிவாளிகள், எப்படி ஆடு, கோழி முதலியவற்றின் சீழ் அடங்கின திரேகமாகிய சிவந்த புண்ணையும் இரத்தத்தையும் வறுத்து உண்ண ஆசைப்படுகிருர்களோ? அந்தோ! மனிதரின் இழிந்த குணந்தானென்னே! இதனுலன்ருே அறநெறிச் சாரத்தில்:
'தம்புண் கழுவி மருந்திடுவர் தாம் பிறிதின் செம்புண் வறுத்து வரை தின்பர்-அந்தோ! நடு நின்றுலவும் நயனிலா மாந்தர் வடு வன்றே செய்யும் வழக்கு” என்றனர் பெரியோரும்.
இவ்விதம், மாமிசத்தைப் பிற உயிர்களின் சதையாகிய புண் என்று உணர்ந்த பின் எவராவது அதனை உண்ணச் சற்றேனும் துணி வரோ? இதுபற்றியே,
உண்ணுமை வேண்டும் புலால், பிறிதொன்றன்
புண்ணதுணர்வார்ப் பெறின்’ என்றனர் நாயனர்:
அம்மம்ம! இத்தகைய இழிவையும், ஈனத்தையும், கோரத் தையும், அருவருப்பையுந் தரத்தக்க புண்களைச் சுவையுள்ளதென்று பாத்திரங்களில் இட்டுப் புசிப்பவரின் சிந்தைதானென்னே! இவ் விதம் புண்ணைப் பிடுங்கித் தின்னும் பகுத்தறிவற்ற காகம் கழுகு களுக்கும், மாமிசம் புசிக்கும் பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிற்து பகுத்தறிவில்லாத மாடு, ஆடு திரை, யானை, கழுதை, குரங்கு, மான் முதலிய பல உயிர்வர்க் கங்கள் பிற உயிர்களின் புண்ணை விரும்புவதில்லையே? ஆ! மனிதர் மாத்திரம் ஏனே அப்படிச் செய்ய வேண்டும்? இன்னும், மாமிசத் தின் இழிதன்மையை கேளும். (தொடரும்)

Page 12
ஆத்மஜோதி LLLTLLTLLTLLMLMLMLTLLTMLTMLLLrTLLLTMLLLLLLLrLLLLSLLLLLLTLL0LeMLLLLSSSLTLTTLLLLL பல்கலைக்கழகத்துடன்
o - O O பதினைந்து நாட்கள் diko புலவர் விசூர்மாணிக்கம் அடிஅபிவிடிஷ் அடி மானும்பதி-தமிழ்நாடு அஆடிடிஆரஅசஆடி
(சென்ற இதழ் தொடர்ச்சி)
ap射
*
'திருவலம்’ எனும் திருத்தலத்தை நினைத்தாலே இனிக்கும். ஆம். அத்தகைய தெய்வத் திருத்தலத்தை நாங்கள் 17-1-80 அன்று காலை 11 மணியளவில் சென் றடைந்தோம். இறைவன் நீ வா என்று அழைத்ததால்வந்து ஓடிய நதியாகையால் அந்நதிக்கு நீவா என்ற பெயர் அமைந்ததாக ஆன்ருேர் கூறுவர். அந்த நீவா நதிக்கரையில்தான் நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுக்கு மத்தியிலே நெஞ்சையள்ளும் வண்ணம் அமைந்தோங்கும் அழகிய சிறு நகரமே திருவலம் ஆகும். அத்திருவலம் திருஞானசம்பந்தரால் திருவல்லம் என்றழைக்கப் பெற் றுள்ளதை
எரித்தவன் முப்புர மெரியின் மூழ்கத் தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே! என்னும் பாடலால் அறியலாம். ஆனல், அருணகிரியர்ர் காலத்தில் திருவலம் என்றே அழைக்கப்பெற்று வந்ததை அவர் திருப்புகழால் அறியலாம். இதனை,
நசையொடு தோலும் தசைதுறு நீரும்
நடுநடு வேயென் புறுகிலும் நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
x றுறநடை யாரும் குடிலூடே விசையுறு காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேழம் திரியாதே விழுமடியார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும் விறல்தாராய்

ஆத்மஜோதி 21
இசையுற வேயன் றசைவற வூதும்
எழிலரி வேழம் எனையாளென் றிடர்கொடு மூலம் தொடர்வுட னுேதும்
இடமிமை யாமுன் வருமாயன் திசைமுக ஞருந் திசைபுவி வானும்
திரிதர வாழும் சிவன் மூதூர் தெரிவையர் தாம்வந் தருநட மாடும்
திருவல மேவும் பெருமாளே.
என்பார் அருணகிரியார். மேலும் அத்தலம் இன்று எண்ணற்ற அடியார்களைத் தன்பால் ஈர்த்து அருள்பா லித்து வருகின்றது. அத்தலம், வில்வாதேஸ்வரர் ஆலயத் தாலும், அந்த ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் எளிய ஆசிரமம் அமைத்துக் கொண்டு, உலகமக்களின் நலத்துக் காகத் தவமாற்றிக்கொண்டு வாழும் பூரீலபூரீ சிவானந்த மெளனகுரு சுவாமிகளாலும் தழைத்தோங்கி வருகின்றது. மேலும், A
அச்சுவாமிகளைப் பண்போடும் பாசத்தோடும் கோணிப் பட்டைச்சாமி என்றே அனைவரும் அழைப்பர். அதற் கேற்ப சுவாமிகளும் கோணிப்பட்டையைத்தான் கோவண மாக அணிந்து கொண்டு வாழ்கின்றர். அவர் தோற்றம் மிகமிக எளிமை. அவர் குடிப்பதோ கேழ்வரகுக் கூழ் மட்டுமே. அதையும் மண்சட்டியில்தான் குடிப்பார் . சாந்த சொரூபியாக விளங்கும் அவர் ஆற்றிய திருப்பணிகளோ ஏராளம். ஏராளம். V −
அச்சுவாமிகளைப் பற்றி மாசித்திங்கள் ஆத்மஜோதி இதழில் மானம்பதி கிராம அதிகாரி திருவாளர் ஆ. முத்து சாமி முதலியார் அவர்கள் திருவலத்துச் சோதி என்னும் தலைப்பில் அழகாகக் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார் கள். மேலும், நம் ஆத்மஜோதி ஆசிரியர், நாவலப்பிட்டி நாயகர், தவத்திரு. நா. முத்தையா அவர்களும் "திருவலத் தில் ஒருநாள் என்னும் தலைப்பில் சீரார்ந்த வண்ணம் கட்டுரை யொன்றைத் தீட்டி, அச்சுவாமிகள் தம் திரு வுருவை மாசித்திங்கள் ஆத்மஜோதி இதழின் மேல் அட் டையில் அச்சிட்டு வழங்கியுள்ளார்கள். மேலும்,

Page 13
22 ஆத்மஜோதி
அச்சுவாமிகள் கொல்லாமையைப் பெரிதும் வற்புறுத்தி வருகின்றர்கள். இதனை யெண்ணும் போது,
"கொல்லாவிரதம் குவலயமெல் லாமோங்க எல்லார்க்கும் சொல்லுவதென் னிச்சை பராபரமே”
என்ற தாயுமானவ சுவாமிகளின் தத்துவப் பாடல்தான் என்நினைவில் எழும். மேலும், அச்சுவாமிகள் அசைவ மக்களைச் சைவ மக்களாக்கி வருகின்றர்கள். மேன்மை கொள் சைவ நீதி" மேதினியில் பெருக வேண்டி அயராது ழைக்கின்ருர்கள். எல்லாம் வல்ல சிவனே இச் சித்தரின் வடிவில் வந்து வையத்தை வாழ்விக்கின்ருர் என்பதே அடி யேனின் அசைக்கமுடியாத ஆணித்தரமான நம்பிக்கை. மேலும், இச்சுவாமிகளின் திருக்கைகளால் திருநீறும் பெற்று தீராப்பிணிகளைத் தீர்த்துக் கொண்டவர்கள் எண் ணிலர். இத்தகைய நல்லற ஞானியை-திருவலத்துச் சித் தரை-காணும் பொங்கலன்று காணச் சென்றது எங்களின் தவத்தின் பயனேயாகும்.
இச்சீரிய சித்தரின் திருமுன்னர் அமர்ந்துதான் நடமா டும் பல்கலைக்கழகமான நம் சைவராஜா முத்தையா அவர் கள் அமர்ந்து ஒரு மணி நேரம் சமயப் பேருரை நிகழ்த்தி ரூர். அவ்வாறு நிகழ்த்தப்பணித்தவர் திருவலத்துச் சுவா மிகளே ஆவார். அதிலென்ன அதிசயம் என்ருல். இது வரை பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் சமயப் பேருரை நிகழ்த்தும் போது சுவாமிகள் குறுக்கிட்டு - அவர்கள் கருத் துக்களை மறுத்துக்கூறி - விளக்கம் அளித்துப் போதும் முடித்துக்கொள் என்பார். மேற்கொண்டு பேச அனுமதிக்க மாட்டார். ஆணுல் அதற்கு மாருக அன்று - முத்தையா பேசும்போது சுவாமிகள் குறுக்கிட்டுக் (குறைகாணவில்லை) தன் கருத்தொன்றை வலியுறுத்தி மீண்டும் பேசுமாறு பணித்தார். ۔۔۔۔۔۔۔۔۔ ܫ
இதுவரை இப்படி நடந்ததே இல்லையென்று எங்களு டன் வந்த மானம்பதி கிராம அதிகாரி அவர்கள் இன்றைக் கும் அதனைச் சொல்லிச் சொல்லி வியப்பார். உண்மை பிலேயே முத்தையா கொடுத்துவைத்தவர்தான் என்பார்.

ஆத்மஜோதி s 23
இதுவரை எந்த அறிஞரையும் முழுமையாகப் பேச் விட்டதும் இல்லை. இடையிலே நிறுத்தி மீண்டும் பேச அனுமதித்ததும் இல்லை. ஆனல் நம் முத்தையா ஒருவருக் குத்தான் அந்த பாக்கியம் கிடைத்தது என்பார். பின்னர் ஆலய தரிசனம் செய்தோம்.
அன்று இரவு நிகழ்ச்சிக்குக் குறித்த நேரத்தில் போய்ச் சேரவேண்டுமே என்பதற்காகத் திருவலத்துச் சுவாமிகளி டம் இருந்து பிரியாவிடை பெற்ருேம்.
வரும் வழியில்-இன்றையநாளைப் பொன்னளாக்க வழி வகுத்து-வாய்ப்பளித்த - நம் மானும்பதி கிராம அதிகாரி முத்துச்சாமி அவர்களுக்குப் பத்துச்சாமியும் ஈடாகாது என்று நயம்படக்கூறி நன்றியுணர்வை என்னிடம் வெளிப் படுத்திக் கொண்டார் முத்தையா. s
பின்னர், பேருந்தின் மூலமாகப் பெருநகர் கிராமத் தில் இரவு நிகழ்ச்சிக்குக் குறித்த நேரத்தில் நாங்கள் அனை வரும் சென்று சேர்ந்தோம்.
அன்றைய நிகழ்ச்சிக்கு அவ்வூர் முன்னள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. அகத்தியப்ப முதலியார் அவர்கள் தலைமை தாங்க, மானம்பதி கிராம அதிகாரி அவர்கள் அறிமுக உரையாற்ற, நம் முத்தையா அவர்கள் சிறப்புரை யாற்றி அனைவரையும் மகிழ்வித்தார். பின்னர், அன்றைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த என் இனிய நண்பர்கள் முருக. நடராசன், புலவர்கள் எஸ். சரவணன், எஸ். சுவாமி நாதன் ஆகிய அனைவருக்கும் நன்றிகூறி அடியார்களுடன் மானம்பதி வந்து கிராம அதிகாரி அவர்கள் இல்லத்தில் இரவு தங்கினேம்.
மறுநாள் 18-1-80 அன்று பிற்பகல் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியின் இலக்கிய மன்ற விழா வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கேற்றவண்ணம் பேருரை நிகழ்த்தி மாணவர்களின் மனதில் என்றும் நீங் காத வகையில் ஒப்பற்ற ஒர் இடத்தைப் பிடித்துக்கொண்டு

Page 14
24 ஆத்மஜோதி
உயர்ந்தவராக வாழ்பவரே நம் முத்தையா அவர்கள். அன்றைய நிகழ்ச்சிக்குப் பெரிதும் உதவிய அப்பள்ளித் தலைமை ஆசிரியர் கவிஞர் உயர்திரு. மு. சண்முகம் M.A.B.T. அவர்களுக்கும், அப்பள்ளித் தமிழாசிரியர் புலவர் மா. வேங்கடேசன் M. A. அவர்களுக்கும் . நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
பின்னர் ஆங்கிருந்து அன்றைக்குச் சென்று ஓய்வெடுத் துக் கொண்டோம். மறுநாள் 19-1-80 அன்று மானம்பதி ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் அடிகளார் கலந்து கொண் டார். அன்றைய கூட்டத்துக்கு ஆசிரியர் திரு. வீ. சுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினர். அன்றைய கூட்டத்தில் நம் மூன்று சரீரங்களுக்குட்பட்ட அன்னமய கோசம், பிராணமய கோசம், மனேமயகோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆக ஐந்து கோசங்களையும் அழகாகக் கரும்பலகையில் (படம் போட்டு) விளக்கி அனை வரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். மேலும் நம் முடைய பள்ளிகளில் சமயக் கல்வியைக் கட்டாய பாட மாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அன்று அடிகளா ரை அறிமுகப்படுத்தி உரையாற்றிய மானம்பதி கிராம அதிகாரி அவர்களும் சைவசமயத்தின் மேன்மையை எடுத் துக் கூறினர். பின்னர் அடிகளாரும் அடியேனும் நிகழ்ச்சி யை முடித்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்ருேம். அன் றைய நிகழ்ச்சிக்கு உதவியாய் இருந்த ஆசிரியர் சங்கச் செயலாளர் திரு. கு. மாணிக்கம் அவர்களுக்கு நன்றி கூறி வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டேன். மறு நாள் 20-1-80 அன்று திருமுக்கூடல் சென்ருேம். திருமுக் கூடல் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். பாலாறு, சேயாறு. கம்பையாறு இம்மூன்றும் கலக்கும் இடத்தையே இவ்வாறு அழைக்கின்றனர். இதனைப் புண்ணியத் தல மர்கக் கருதிப் போற்றி ஆற்றில் நீராடி அனைவரும் மகிழ் வர். இவ்வூர் இனிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. இவ்வூரின் வடபால் பழைய சீவரம் என்னும் பழம்பெருமை மிக்கத் தெய்வத்தலம் ஒன்றுள்ளது. அத்தலம் பற்றி நம் முடைய ஆத்மஜோதி வைகாசி) இதழில் அடிகளார்

ஆத்மஜோதி 25
அவர்கள் பழைய சீவரம் பூரீ லட்சுமி நாராயணசாமி கோவில் என்னும் தலைப்பில் கட்டுரை யொன்றையும் எழுதியுள்ளார்கள்.
திருமுக்கூடலில் பல்லவர்களாலும், சோழர்களாலும் சிறப்பிக்கப்பெற்ற பெருமாள் கோவில் ஒன்றுள்ளது. அவ்வூரில்தான் என்னுடைய இனிய நண்பரும், கதாசிரி யரும் ஆன வித்துவான் கோ. கோவிந்தசாமி அவர்கள் அடிகளாரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவ்வூரில் குறள்நெறி மன்றத்தின் சார்பாக நடைபெற்ற விழாவிற்கு கிராம அதிகாரி திரு. ம. தேவராசன் அவர் கள் தலைமை தாங்கினர். நண்பர் வரவேற்புரை நிகழ்த்த அடியேன் அறிமுகவுரையாற்ற, அடிகளார் அவர்கள் சிறப் புரையாற்றினுர், ܫ
அவ்வூர் மக்கள் அடிகளார் உரையை அன்புடன் செவி மடுத்தனர். பின்னர் அவ்வூரை விட்டு நண்பர்களிடம் விடைபெற்ருேம். மறுநாள் 21-1-80 அன்று சாலவாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி இலக்கிய மன்றத்தில் கலந்து கொண்டு. அன்று இரவு மீண்டும் மானும்பதி வானசுந் தரேஸ்வரர் ஆலயத்தில் அன்பர் பலர் வேண்டுதலால் அடிகளார் திருவாசகத்தேன் பற்றித் தித்திக்கப்பேசிஅனைவரின் சிந்தையைக் கவர்ந்தார். அன்று இரவு அவ் வூரில் தங்கி மறுநாள் 22-1-80 அன்று திருமுக்கூடல் அர சினர் உயர்நிலைப்பள்ளி இலக்கிய மன்றத்தில் உரையாற்றி அன்று இரவு காஞ்சிபுரம் குமர கோட்டம்-நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமயப் பேருரை நிகழ்த்தினர். அந்நிகழ்ச்சி முடிந்ததும் 8 மணிக்கு காஞ்சிபுரம் ரோட்டரி கிளப்பில் (இளைஞர்பிரிவு) தொண்டு என்னும் தலைப்பில் மிக உயர்ந்த முறையில் உரையாற்றினர். பின்னர் அடிகளார் அவ ரைப் பேட்டிகண்ட அனைவரின் வினக்களுக்கும் அரிய முறையில் பதில் அளித்தார். அடிகளார் அவர்கள் அன் றைய தினம் ஒய்வின்றிப் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

Page 15
26 ஆத்மஜோதி
அன்று இரவு நீண்ட நேரத்துக்குப்பின் உறங்கி ஓய் வெடுத்துக்கொண்டு மறுநாள் 23-1-80 அன்று இரவு நிகழ்ச்சிக்காகச் சோத்துப்பாக்கம் நோக்கிப் பயணமா னேம். சோத்துப்பாக்கம் அருள்மிகு பாலமுருகன் திருக் கோயிலில் அடிகளார் அன்று இரவு சமயச் சொற்பொழி வாற்றினர். கோயில் சொத்துக்களை விற்றுக் கொள்ளை யடிக்கும் இக்காலத்திலும் தன் வீட்டுச் சொத்துக்களை விற்று முருகனுக்குக் கோயில் கட்டிய ஒருவர் இக்கோயி லில் காவியாடையுடன் - நீண்ட தாடியுடன் - அவன் பாத மொன்றையே_பற்றி வாழ்ந்து வரும் சுவாமிகளை என் றும் மறக்க இயலாது. இத்தகைய பண்புடையவர்கள் இக்காலத்திலும் இருக்கத்தான் செய்கிருர்கள்.
இத்தகையவர்களாலேதான் உலகமும் இயங்கி வரு கிறதாம். இல்லையேல் உலகம் மண்மூடிப் போயிருக்குமாம். இதனை, *பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃதின்றேல்
\ மண்புக்கு மாய்வது மன்’
என்னும் வள்ளுவனின் குறளால் அறியலாம்.
அன்று இரவு அங்கேயே உறங்கி மறுநாள் 24-1-80 அன்று என் சொந்த ஊராகிய விசூர் கிராம விழா நிகழ்ச்சிக் காக-ஊர் வந்து என் இல்லத்தில் அடிகளார் ஓய்வெடுத் துக் கொண்டார். எங்கள் விசூர் கிராமத்தை விசுவநகர் என்றே ஆன்ருேர் பெயரிட்டு அழைத்து வந்ததாகக் கூறு வர். எங்கள் கிராமத்தில் இராஜ ராஜசோழன் காலத்துச் சிவன் கோயில் ஒன்றுள்ளது. அக்கோயிலில் அவனுடைய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அது அக த் தீ ஸ் வ ர ன் கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது. அன்ருடம் பூஜை செவ்வனே நடைபெற்று வருகின்றது.
அவ்வாலயத்தினுள் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற நிலையில் காட்சி வழங்கிக்கொண்டிருக் கிருர். எங்கள் ஊராகிய விசுவநகரை-விசுவை என்றும் அழைப்பர். எங்கள் விசுவநகராகிய விசுவையை (விசூர்) அருணகிரிப் பெருமான் பாடிப் பரவியதாகத் திருப்புகழ் சான்று கூறும். எங்கள் விசுவை முருகப்பெருமானை,

ஆத்மஜோதி 27
திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து
முடிமலர் கொண்டொ ரழகாகச் செயவரு துங்க முகமும் விளங்க
முலைகள் குலுங்க வருமோக அரிவையர் தங்கள் வலையில் விழுந்து
அறிவு மெலிந்து தளராதே அமரர்ம கிழ்ந்து தொழுது வணங்கு
னடியினை யன்பொ டருள்வாயே வரையைமு னிந்து விழவெகடிந்து
வடிவெலெ றிந்த திறலோனே மதுரித செஞ்சொல் குறடை மங்கை நகிலது பொங்க வரும் வேலா விரை செறி கொன்றை யறுகுபு னைந்த
விடையரர் தந்த முருகோனே விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு
விசுவைவி ளங்கு பெருமாளே.
d
என்றழைத்துப் பாடிப்பரவினர் அருணகிரிப் பெருமான்.
இத்தகைய புகழ்மிக்க விசூர் கிராமத்தில் தண்டுமாரி யம்மன் கோவில் ஒன்று பழுதடைந்து கிடந்ததைக் கண்டு குலாலமரபினர் மனமுருகி அதனைப் புதுப்பித்துக் கும்பாபி ஷேகம் செய்து நன்னிலையில் வைத்துக்கொண்டு அன்ருடம் பூஜை செய்து - ஆண்டுதோறும் விழாக்களும் செய்து வருகின்றனர். அந்த ஆலயத் தண்டுமாரியம்மனுக்கு வெள்ளிக்கவசம் ஒன்றை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் செய்து வைத்திருந்த என் இனிய நண்பர் கணேச உடையார் அவர்கள் அக்கவசத்தை அணிவிக்கும் விழா எடுக்க நாள்பார்த்துக் கொண்டிருந்தார். நாவலப் பிட்டியா பூரீ முத்துமாரியின் பக்தர் 'முத்தையாவின் திருக் கரங்களால்தான் தனக்கு அணிய வேண்டும் என்பது அன்னை தண்டுமாரியின் திருவுளம் போலும் என்னே பொருத்தம். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் முத்தையாவின் வருகை தித்திக்கச் செய்தது. உடனே விழாவெடுத்தோம். முத்தையா அவர்களை மேளதாளத் துடன் பூர்ண கும்ப மரியாதையுடன் எம்மூர் மக்கள் எம் இல்லத்தில் இருந்து ஆலயத்திற்கு அழைத்துச் சென்றுவரவேற்புப் பாமாலையுடன் பூமாலையும் அணிவித்து வரவேற்றனர்.

Page 16
28 ஆத்மஜோதி
இதோ அப்பாடல்...
பூமாந்தும் வண்டெனவே வாழும் மக்கள்
பூமியிலே மயக்கேறி வாழ்க்கை தன்னில் ஏமாந்து போகாமல் இனிமை யாக
ஈர்த்தவரைத் திருத்துகிற பெரியீர்! பக்திப் பாமாந்தும் வகையினிலே மாந்தர் வாழப்
பண்ணுகின்ற பெருமானே! இதுநாள் மட்டும் ஏமாந்த மாந்தரெலாம் தங்கள் பேச்சால்
இனிமேலே உயர்ந்திடுவர் வாரீர்! வாரீர்!
அரவிந்தர் ரமணரிஷி போன்ற நல்ல
'ஆத்மஜோதி" சிலர்களின் ஆசி பெற்றுப்
பரவைசூழ் உலகினிலே பண்பி னுேடு
பாங்குடனே வாழ்கின்ற பெரியீர்! ஒங்கும்
அரஞரின் ஐந்தெழுத்தை நித்தம் நித்தம்
அன்புடனே ஒதிவரும் அறிஞர் ஏறே!
தரமான மாந்தர்குலம் சிறக்க வேண்டித்
தக்கபணி ஆற்றிவரும் சான்றேய்! வாரீர்!
அருளார்ந்த நம்மன்னே தண்டு மாரி
அகிலாண்ட நாயகிக்கு வெள்ளி யாலே பொருளார்ந்த நற்கவசம் பொருத்த கின்ற
பொன்னுன இவ்விழாவில் கலந்து கொண்டு தெருளார்ந்த வகையினிலே சிறக்கப் பேசத்
தென்புடனே வந்தவரே! தங்கள் பேச்சால் மருளார்ந்த பாழ்பிறவி நோயும் நீங்கும்
மாமருந்தே! மாமலையே! வாரீர்! வாரீர்!
இவ்வாறு எம்சிராமமக்கள் பாடித்தந்த வரவேற்புப் பாமடலைப் பெற்றுக்கொண்டு - அன்னைக்கு வெள்ளிக்கவ சத்தை அணிந்து அன்பான அரிய சொற்பொழிவு ஆற்றி ஞர். இடையிடையே மாணவர்களைக் கேள்விகள் கேட்டுச் சமய உலகில் சிந்தனையைத் தூண்டினர். விழாவிற்கு திரு. அ. சுப்பராயமுதலியார் அவர்கள் தலைமை தாங்கி ஞர். மாளும்பதி கிராம அதிகாரி அவர்கள் முன்னிலை வகித்தார். முத்தையா அவர்களின் பேச்சை அனைவரும் கூர்ந்து கேட்டு இன் புற்றனர். இன்னும் கொஞ்ச நேரம் பேசக்கூடாதா? நன்முக இருக்கிறதே! என்று ஏங்கினர்.

ஆத்மஜோதி 29
விழா முடிந்தது. இரவு தங்கி மறுநாள் 25-1-80 அன்று காஞ்சிபுரம் இறுதிக்கட்ட நிகழ்ச்சியான இராமகிருஷ்ண மடம் சமயப்பேரவைக்குப் புறப்பட்டோம். எம் மூர் நிகழ்ச்சி நடைபெற எம்முடன் ஒத்துழைத்த அன்பர்கள் ஆசிரியர், மா. அண்ணுமலை, கண்ணப்ப ஆச்சாரி, சிவசுப் பிரமணியன், கணேசனர் ஆகிய அனைவருக்கும் நெஞ் சார்ந்த நன்றியினைத் தெரிவித்து அனைவரிடமும் அடிக ளார் விடை பெற்ருர் . அடிகளாருடன் 15 நாட்களாக இருந்து பழகிப் பயின்ற எனக்கு இன்று நிகழ்ச்சியோடு பல்கலைக் கழகத்தை விட்டுப் பிரிய வேண்டுமே என்று எண்ணி வருந்தினேன். V
என் வருத்தம் போக்க என் மனக்கண்முன் வள்ளுவன் தோன்றி, ん -
'உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனத்தே புலவர் தொழில்' என்று பாடிய என் குறளை நீ படிக்கவில்லையா? மீண்டும் என்று காண்போம் என்று ஏங்கும் அளவிலே பிரிந்து செல் வது புலவர்களின் தொழில் ஆயிற்றே! வருந்தற்க என்ருன். ஒருவாறு மனதைத் தேற்றி அடிகளாருடன் நானும் காஞ்சி புரம் சென்று சேர்ந்தேன். அன்று இரவு காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மடத்தில் புலவர் மா. வேங்கடேசன் M.A. அவர்களும், அடியேனும் அறிமுகவுரையும், நன்றியுரையும் ஆற்றினுேம், ‘நாம் ஏன் பிறந்தோம்’ எனும் தலைப்பில் அடிகளார் அனைவரும் வியக்கப் பேருரையாற்றி மகிழ்வித் தார். பின்னர் அம்மடத் தலைவர் பூரீ அவ்யானந்தா சுவாமிகளும், இளையவர் பூரீ ஸ்மரஹர ஆனந்தா சுவாமி களும் வாழ்த்த அன்றிரவு நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. பின்னர் மடத்திலேயே உணவருந்தி ஒட்டலில் உள்ள அறைக்கு வந்து இரவைக் கழித்தோம். விடிந்தால் - ஐந்து மணிக்கெல்லாம் அடிகளாரை சென்னைக்கு வழியனுப்ப வேண்டும். இள்னும் சிலமணி நேரங்களே என்று எண்ணிய போது - உறக்கமே வரவில்லை. அடிகளாருடன் மொத்தத் தில் 15 நாட்களில் நாம் சந்தித்த சமய உலகத்தைப்பற்றிக் கருத்துரைகளைப் பரிமாறிக் கொண்டோம். அடிகளார் இன்னும் சமய உணர்வு தழைக்க வேண்டும் என்ருர்,

Page 17
30 ஆத்மஜோதி
கூட்டுவழிபாடு தேவை என்ருர், நிறைய விடியவிடியப் பேசினேம். அடிகளாரின் அருள்ஞானப் பேச்சால் அஞ் ஞான இருள் விலகுவது போல் - அன்று இரவுப்பொழுது நீங்கியது. ஞான சூரியன் போல் விளங்கும் அடிகளாரைக் கண்டு வான சூரியன் வானில் எழுந்தான். அவனிவாழ் உயிர்கட்கெல்லாம் அன்னை போல் அன்புகாட்டும் அடிக ளாரை சென்னை செல்லும் பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்து விழிகளில் ஆனந்த அருவிபாய நின்றேன். மீண்டும் வருவேன் என்று வள்ளலார் கூறியது போல் அடிகளாரும் மீண்டும் வருவேன் என்ருர். அடிகளாரை ஏற்றிக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பேருந்து ஊர்ந்து சென்றது. அப்பேருந் தினைத் தொடர்ந்து என் மனமாகிய பேருந்தும் அதன் பின்னே ஊர்ந்தது. இந்த வயதிலும் கைம்மாறு கருதாமல் சமயப்பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அயரா துழைக்கும் அடிகளாரை அந்த நடமாடும் பல்கலைக் கழ கத்தை - அவர் இருக்கும் திசை நோக்கி அன்ருடம் தொழுது கொண்டு இருக்கிறேன்.
உலகெலாம் சைவம் ஓங்கி
உயிர்க்குலம் தழைக்க வேண்டி நலமார்ந்த சேவையாற்றி
நானிலம் போற்ற வாழும் மலரினும் மென்மை சான்ற
மாசற்ற முத்தை யாவும் நிலமிசை முருகன் அருளால்
நீடுழி வாழி! வாழி!!
வாழ்க அவர்! வளர்க அவர் தொண்டு!
ஓம் தத் சத்.
ஆத்மஜோதி நிலையத்தின் புதிய வெளியீடுகள்
நவராத்திரிப் பாமாலை *=wuw: 2-00 கூட்டு வழிபாடு Hasa 2-00 அர்ச்சனை மாலை - 5ー00
பன்னிரு திருமுறைத் திரட்டு - 5-00 மொத்தமாக வாங்குவோருக்கு 20 வீதம் கழிவு உண்டு.

ஆத்மஜோதி 31
காந்தாரியின் கதை
பாண்டவர்கட்கும் கெளரவர்கட்கும் இடையே நடந்த மகாபாரதப்போரில் எல்லாக் கெளரவர்களும் கொல்லப் பட்டனர். கெளரவர்கள் காந்தாரியின் மக்களாவர். காந்தாரி அளவிறந்த துன்பத்தால் பீடிக்கப்பட்டாள். அவள் துரியோதனனின் இறந்த உடம்பைத் தன்மடியில் வைத்துச் சத்தமாக ஒலமிட்டாள். சூரியன் அஸ்தமிக்கும் வரை அதேஇடத்தில் அமர்ந்திருந்தாள். சூரியன் அஸ்த மிக்கும்போது காந்தாரியைத் தவிரப் பிறர்தத்தம் இடத் திற்குச் சென்றனர். காந்தாரி தன் இறந்துபோன மக்க ளைப் பிரிய மனமில்லாமையால் அவ்விடத்திலேயே இறந் தாள். அவள் மக்கள்மேல் கொண்டமோகம் மிக வும் அதிகமானது.
கிருஷ்ணபகவர்ன் அங்குதோன்றிக் காந்தாரியிடம் அம்மா இந்த வீண் துன்பம் போதும். நீ ஏன் உன்னு டைய மக்களுடைய தவிர்க்கமுடியாத பிரிவிற்காக அழுகி முய்? மக்கள் உறவினர் எல்லாம் சுய நலநோக்கங்கட் காகவே இணைந்திருக்கிறர்கள். அவர்கள் ஒரு சத்திரத்தி லிருந்து பிரயாணிகள் பிரிந்து செல்வதைப்போல இந்த உலகத்திலிருந்து நீங்கிச் செல்கிருர்கள். நீ வருத்தம் அடையவேண்டாத ஒன்றுக்காக வருத்தம் அடைகிருய். இது உனக்கோ உன்னுடைய மக்களுக்கோ எந்த நன்மை யும் செய்யாது. ஒரு இறந்துபோன மனிதன் திரும்பவும் ஒரு நாளும் உயிரோடு எழுந்துவர முடியாது. மரணம் என்பது என்ன? இது மேலாடையைச் சும்மா மாற்றிக் கொள்வது மட்டுந்தான். உள் ளே வாசம் செய்யும் ஆத்மா இறப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை. வா நாம் வீட்டிற்குச் செல்லலாம். உன்னுல் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஜீவன்களை உபத்திரவம் செய்வது பசி தான். இப்பொழுது இருட்டிவிட்டது என்ருர்,

Page 18
32 ஆத்மஜோதி
காந்தாரி, 'கிருஷ்ணுநீதான் இத்துன்பம் எல்லாவற் றிற்கும் காரணம். என்னை வீட்டிற்கு வரச்சொல்லி வற்பு றுத்தாதே. நான் என்னுடைய மக்களுடன் இறந்துவிடு வேன். என்னுடைய குழந்தைகள் இறந்தபிறகு எனக்குப் பிரியமானது ஒன்றுமில்லை. 'நான் எதையும் சாப்பிட மாட்டேன்' என்ருள். காந்தாரி பிடிவாதமாக இருப்ப தைக் கண்ட கிருஷ்ணன் அந்த இடத்தை விட்டுத் திரும் பிச் சென்றன்.
இரண்டு நாட்கள் கடந்தன. காந்தாரிக்குச் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. அவளுக்கு மிகவும் பசித்தது. அவள் சுற்றிலும் தேடினள். கடைசியாக அருகிலுள்ள ஒருமரக்கிளையிலிருந்து நா யி ன் தசைத்துண்டொன்று தொங்குவதை அவள் கண்டாள். அவள் சுற்றிலும் பார்த் தாள். அங்கு ஒருவரும் இல்லை என்பதைக்கண்டாள். தன்னுடைய பசியைப் போக்குவதற்கு நாயின் தசையைச் சாப்பிடுவதென்று அவள் தீர்மானித்தாள். ஆனல் மரம் உயரமானது. தரையிலிருந்து அவளால் எட்டமுடியவில்லை. அவள் தன்னுடைய சொந்த மக்களின் இறந்த உடம் புகளை அடுக்கி அவற்றின் மேல் ஏறி நாயின் தசையினை எடுத்து ஒருதுண்டு மாமிசத்தை வாயில் அநேகமாக வைத்துவிட்டாள்.
அந்தச் சமயத்தில் அந்தர் யாமியான எல்லோரின் இதயத்திலும் வாசம் செய்கிற கிருஷ்ணபகவான் அங்கே வந்து, ‘அம்மா நாய் மாமிசத்தை உண்பதை விட்டுவிடு. நான் உனக்குச் சுவையான உணவு கொண்டு வந்திருக் கிறேன். உன்னுடைய இதயம் திருப்தி அடையும்வரை அதை உண்டாயாக. உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் இங்கே இருக்கும்போது நீ ஏன் இவ்விதம் துயரப்பட வேண்டும்? உயிரினங்களை மிகவும் துன்பப்படுத்துவது பசி தான் என்று நான் உனக்குச் சொன்னேன்.
ஒருவராலும் அதை வெற்றிகொள்ள முடியாது' என்ருர்,

ஆத்மஜோதி 33
காந்தாரி அவமானத்தினுலும் வியாகூலத்தினுலும் தன்னுடைய தலையைத் தொங்கப் போட்டுக் கொண் டாள். அவள் கிருஷ்ண பகவானின் பாதங்களில் விழுந்து வணங்கி, "கிருஷ்ணு நீ அந்தர்யா மியானவன். நீ இந்த உலகத்தின் நாதன். என்னுடைய அறியாமையை நீக்கி என்னை வெளிச்சத்திற்கும் ஞானத்திற்கும் அழைத்துச் செல். விடுவதற்கு அருமையான எனது குழந்தைகள் - மேல் கொண்ட இந்த மோகத்தை நான் விட்டுவிடச் செய்’ ’ என்ருள்.
கிருஷ்ணனும் காந்தாரியும் யுதிஷ்டிரர் மாளிகையை அடைந்தனர். அங்கே நல்லாத்மாவான தரும புத்திரரால் உபசரிக்கப்பட்டனர். பசியின் கொடுமை மிகவும் பெரிது. மோகத்தின் சித்திரவதை மிகவும் பெரிது. நண்பர்களே! அவற்றைவிடப் பெரிது இந்த உடம்பின் மேல் கொண்டி ருக்கும் பற்றுதல். உடம்பு என்னும் இந்த எண்ணத் தைக் கொன்றுவிடு. அகங்காரத்தைக் கொன்றுவிடு. சுய நலத்தை நீக்கிவிடு. அறியாமையை அகற்றிவிடு. மனைவி மக்களிடம் கொண்டுள்ள மோகத்தை நீக்கிவிடு. சொத்து, குடும்பம் இவற்றின் மேல் கொண்டுள்ள பற்றுதலை விட்டு விடு. பற்றற்றவணுகவும் உலக பந்தங்களிலிருந்து விடு பட்டவணுகவும் ஆகுக'. இதுவே சுவர்க்க சாம்ராச்சியத் தின் ஆனந்தம், மகிழ்ச்சி, அமரத்துவம் ஆகியவற்றைத் திறக்கும் சாவியாகும்.
முக்கண்ணனின் நாயகியாகிய திரிபுர சுந்தரியே, நான் உன்னைச் சரணடைகின்றேன். நீ கடம்பவனத்தில் சஞ்சரிப்ப வள்; அழகிய வடிவுடையவள்! உன் மூன்று கண்க்ளும் அன் றலர்ந்த கமலம் போல் திகழ்வன. நீருண்ட மேகம் போன்று கருநீல மேனியையுடையவள் நீ.
- சங்கரர்
beper" ** ** ** ** ヌ e ey « مه

Page 19
4 3ة
:: எஸ். கல்யாணி :
(தபோவனம்-திருக்கோவிலூர்)
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்பது போல் எனக்குத் தெரிந்த ஒரிரு சம்பவங்களை பலரும் அறிய வேண்டும் என்ற அவாவின் காரணமாக எழுது கின்றேன். குருநாதன் ஒருவனே நம்மை முன்னேறச்செய்ய வல்லவன். 'குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்பது போல் குருநாதன் அருள் பெற புண்ணியம் செய்யவேண்டும். தவிர குருநாதனுக்கு நாம் செய்யும் தொண்டு அவனைப்பற்றி பலரும் அறியும்படி செய்து அவ னருள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே முதல் கட மையாகும். ஆகவே எனக்குத் தெரிந்த, நான் கண்ட சில அனுபவங்களை ஈண்டு எழுத முயலுகிறேன். குற்றம் இருப் பின் அது நான் செய்தது என்றும், இதன் மூலம் நல் லது கிடைப்பின் அது குருநாதன் அருட்பிரசாதம் என வும் எடுத்துக் கொள்ளக் கோருகிறேன்.
முதலில் சுவாமியார்? எம்மதத்தவர்? எத்தனை வய தினர்? என்பதே பலரின் கேள்வி? ஆனல் எங்ங்ணம் நோக்கினும் நம்மைக் காட்டிலும் பெரியவரே தவிர மகான்களின் வயதையோ அல்லது ஜாதியையோ கேட் கக்கூடாது. ஒரு முறை தபோவனத்தில் சுவாமி 'மங்கள புரியின் செல்வனடி, மங்கை சக்குவின் அன்பான மைந்தனடி' என்று பாட்டுப் பாடினர். அதிலிருந்து மங்களபுரியில் சக்கு பாயின் மைந்தர் எனத் தெரிகின்றது. எனக்கு சுவாமி களை 1954 மே முதல் தெரியும். முதலில் அவரை நான் சந்தித்த அனுபவமே அவரை எனக்கு புரியவைத்து, அவ ரிடம் அன்பும், மரியாதையும், பயபக்தியையும் உண்டு பண்ணியது.
 

ஆத்மஜோதி 35
என் தகப்பஞருக்கு (நாட் அண்ணுஜிராவ்) அவரது குரு முதலிலேயே *1954ல் ஒரு பெரிய மகான் தரிசனம் கிடைக்கும் அது ஒரு ஆலமரம். கெட்டியாக பிடித்துக் கொள். உன் குழந்தைகளுடன் அவரை அடைந்து கடைத் தேறு' எனக் கூறினர். அதுபோல் என் தகப்பனர் திருக் கோவிலூர் சென்றர். அங்கு எனது தகப்பனரின் தாய் வழி தம்பி, அவரது 'அம்மா இருவரும் சுவாமிகளைப் பற்றிக் கூறினர்கள். பெரிய மகான் ஒருவர் சித்திலிங்க மடத்தில் வெகு காலமாக இருந்தார். இப்போது தபோவனத்தில் இருக்கிருர் என்றர்கள்." உடனே சுவா மியைப் பார்த்து அங்கு இரண்டு மாதம் தங்கிச் சுவாமி களைப் பூரணமாக அறிந்து பிறகு வந்தார். எனது தகப்ப ஞர் ஒரு சினிமா நடிகர் ஆன போதிலும் பக்தி மிகுந்தவர். பஜனையைச் சதா செய்து தானும் அந்த ஆனந்தத்தை அடைந்து பிறரையும் அடையச் செய்தார். சிறந்த பாட கர், தவிர யாரையும் எளிதில் நம்பும் இயல்பு உடையவர் அல்லர். ஏனெனில் அவரே எத்தனையோ போலிச் சந்நி யாசிகளைப் பார்த்தும் விரட்டியும் உள்ளார். ஆதலால் சுவாமியை அவரே முதலில் சென்று பார்த்து அங்கேயே தங்கிச் சுவாமியின் பரிபூரண அனுக்கிரகம் பெற்று அவரை நன்கு உணர்ந்து சென்னை வந்தார். பிறகு எங்களை அழைத் துச் செல்வதாகக் கூறினர்.
எனக்கு அவர் அருள் பெறும் பாக்கியம் விரைவில் கிட்டவில்லை. நான்கு முறை நண்பர்களுடன் செல்லும் பாழுது பெண்கள் வரவில்லை என என்னை விட்டுச் சென் முர். ஒரிரு மாதம் கழித்து என் மாமா, மாமி, நான் , தகப்பனுர் செல்வதாகக் கூறிவிட்டு, அந்த நாளும்வந்தது. அன்று இரவு 9.30க்கு புகையிரதம். அப்போதெல்லாம் இப்பொழுது போல் போக்குவரத்து வசதி கிடையாது. இன்று இரவு புறப்பட்டால் மறுநாள் தான் போகமுடியும். சுமார் மாலை 6 மணி வரை எந்தத் தகவலும் எனது மாமா வீட்டிலிருந்து வரவில்லை. குமாஸ்தா வராததால் ஏதே னும் தடங்கலாக இருக்கும் என்ருர் எனது தந்தை. நான் ஆயத்தமாகிக் காத்துக் கொண்டிருந்தேன்.

Page 20
36 ஆத்மஜோதி
எனக்குத் துக்கம், கோபம் அதிகரித்தது. என்னையும் மீறி இது என்ன சுவாமி வெறும் போலி. உண்மையானல் இத்தனை ஆசைப்படும் எனக்கு தரிசனம் கிடைத்திருக் காதா? வெறும் ஏமாற்றம்தான் என என் மனம் வந்த மட்டும் திட்டினேன். ஆனல் எனது தகப்பனர் “பெரிய வர்களை அம்மாதிரிச் சொல்லக் கூடாது' என்ருர். என் கோபம் அதிகமாகி அழவும் ஆரம்பித்தேன். என்னைச் சமாதானம் செய்வதற்காகக் கிளம்பினதற்கு எங்காவது செல்வோம் எனக்கூறி என்அத்தைவிட்டில் அன்றுவிருந்து; அதற்கு செல்வோமே என்ருர், நான் வரவில்லை என ஒரு மூலையில் அமர்ந்து அழுதேன். சுமார் 7 மணிக்கு குமாஸ்தா அவசரமாக வந்து என் தகப்பனரிடம் பணத்தைத் தந்து **டிக்கட் வாங்கி ஸ்டேசனில் இருக்கச் சொன்னர். தான் குடும்பத்துடன் ஸ்டேசனுக்கு வருவதாகச் சொன்னர்' எனக் கூறினர். உடனே சந்தோஷத்துடன் கிளம்பிளுேம். காலை 6 மணிக்குத் தபோவனத்தை அடைந்தோம்.
சுவாமி மாமரத்தடியில் சிமெண்ட் பெஞ்சிமேல் உட்கார்ந்திருந்தார். சில பக்தர்கள் நின்றுகொண்டு சுவாமியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் நாங்கள் சென்று நமஸ்கரித்தோம். எனது தகப்பனர் இவள்தான் எனது சிறிய பெண் கல்யாணி என்ருர், உடனே சுவாமி தெரியுமே எனக்கூறி என்னைப் பார்த்து 'நிந்தாஸ் துதிக்குத்தான் உடனே பலன்’ என்றர். அதா வது பகவானை மனம் உருகி அன்பு மேலீட்டால் திட்டினல் விரைவில் நம் குறைகளைக்கேட்பான். எனக்கு உடல்சிலிர்த் தது. மதராஸில் பேசியதை சுவாமி கூறியவுடன் பயத்து டன் கூடிய பக்தி அதிகரித்தது. அன்று முழுநாளும் இருந் தோம். எனது மாமாவுக்கு (எத்தனையோ வருடமாக) டாக்டரால் போக்க முடியாத வாந்தியை சுவாமி தனது அருட்பார்வையாலேயே குணப்படுத்திவிட்டார். எத்தனை தான் டாக்டர்கள் படித்துவிட்டாலும் வியாதியை எதனல் எனக் கண்டுபிடிக்க முடியாதநிலை. அதைப் பார்வையா லேயே குணப்படுத்தும் வைத்தியநாதனை கண்ணுரக்கண்டு களித்தேன்.

ஆத்மஜோதி . 37
மறுதினம் ஊருக்குத் திரும்ப உத்தரவு கேட்டார் என் தகப்பனர். தவிர திருவண்ணுமலை பார்த்து செல்ல உத் தேசம் என்ருர், திருவண்ணுமலை சென்று தரிசனம் செய்து அவர்களை சென்னைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு இங்கு வந்து சிறிது நாட்கள் தங்கிச் செல்வோம் என்ருர், அதன்படி திருவண்ணுமலை தரிசித்து நானும் எனது தகப்பணுரும் மட்டும் திரும்பி வந்தோம். சுவாமியுடன் இருந்த அந்த நாட்களை நினைந்து நினைந்து இன்றும் அவருடன் இருக்கும் பாக்கியம் இல்லையே என்று வருத்தப்பட்டு உள்ளுக்குள்ளே அழுகின்றேன்.
அங்கு இருந்த சமயம் ஒருநாள் அமாவாசை தினம். அகரம் என அருகில் 2 மைலில் உள்ள கிராமத்தில் பஜனை ஆரம்பித்து வைக்க எங்களைக் கூப்பிட வந்தனர். சுவாமி யிடம் உத்தரவு கேட்டனர். சுவாமியும் அனுமதி தந்து மாலை 54 மணிக்கு என்னை அழைத்து சாப்பிட்டுவிடு. அமா வாசை தினம். சூரிய அஸ்தமனத்துக்குள் சாப்பிட வேண் டும் என்றர். கிராமத்தில் அந்தி வேளைக்குள் சாப்பிட்டு விட்டு விரைவில் படுக்கச் செல்வார்கள். சமையல்கட்டுப் பக்கம் சாப்பிடச் சென்றேன். அங்கே ஒர் பாட்டி பலகா ரம் சாப்பிடுகிறவர்கட்காக தோசை வார்த்துக் கொண்டி ருந்தாள். எனக்கு நாக்கில் ஜலம் ஊறிற்று. (சிறிய வயது) நம்ம வீடாகவிருந்தால் தோசையை விட்டு சாதமா சாப் பிடுவோம் என மனதில் நினைத்துக்கொண்டேன். சாப்பி டச் சென்றேன். 'சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது எனது தகப்பனர் பலகாரம் செய்து கொண்டிருந்தார். சுவாமி என் மனதை அறிந்து உள்ளே சென்று இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுவா என்று கூறிஞர். புதிய இடம் புதிய மனிதர்கள் எப்படி கேட்க முடியும். சும்மாவாவது சமையல்கட்டுப்பக்கம் சென்று திரும்பினேன். வெட்கம் காரணமாக அறிமுகமில்லாதவர்கள் ஆனதால் வெளியே வந்தேன். சுவாமி சாப்பிட்டாயா என்ருர், மணமறிந்து ஊம் என்று பொய் கூறினேன். பிறகு சுவாமி சிரித்துக் கொண்டே பெட்ரமாக்ஸ் லேட்டைக்கூட கொடுத்தனுப்பி எங்களை கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.

Page 21
38 ஆத்மஜோதி
அங்கு சென்ற எங்களை அகரத்தார் ஆகாரம் செய்ய வற்புறுத்தினர். என் தகப்பனர் வனத்தில் சாப்பிட்டு விட்டு வந்தாயிற்று என்ருர். இருந்தாலும் சிறிது எடுத் துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தவே நாங்கள் பஜனை முடிந்து எடுத்துக் கொள்வதாகச் சொன்னுேம். அது போல் இரவு சுமார் 2 மணிக்கு பஜனை முடிந்தது. பிறகு தோசை, சுடச்சுட கேசரி, பால் எல்லாம் தந்தனர். மறு நாட் காலை வனத்தை அடைந்தோம். என் தகப்பனர் அங்கு வற்புறுத்தியதால் மறுபடியும் அம்ாவாசை அன்று தோசை சாப்பிட்டோம் என்ருர். அதற்குள் அப்பா பொய் சொல்கிருர் பார். சுடச்சுட நெய்விட்டு முந்திரி போட்டு கேசரி சாப்பிடலை என்ருர், அங்கு நைவேத்யம் செய்ததை சுவாமி இங்கு சொன்னதும் மீண்டும் அதிர்ச்சி. உள்ளே பாட்டி கூப்பிடுகிறர் பார் என்ருர். சென்றல் முதல்நாள் தோசை, பஜ்ஜி எடுத்து வைக்கச் சொன்ன தாகசொல்லித்தந்தனர். இதன்மூலம் திரிகாலம் உணர்ந்த ஞானி என்பது தெரிகின்றது. இது எல்லாம் சிறிய சமா சாரம். இன்னும் போகப் போக அனுபவங்களை நோக்கின் சுவாமி யார் எனப் புலப்படும்.
பிறகு சுமார் பதினைந்து தினம் கழித்து என் தகப்பளுர் உத்தரவு கேட்கச் சொன்னர். மறுதினம் எனது பெரி யப்பா பிள்ளைக்கு சீமந்தம். அதுவும் எங்கள் வீட்டிலேயே நடைபெறுகிறது. பெரியப்பா கோபிப்பார். குழந்தையை யும் அழைத்து வந்துவிட்டேன் என்ருர், முகூர்த்தத்திற் ள் செல்லலாம் என்று சுவாமி சொன்னர். மறுநாள்
காலை 54 மணிக்கு உதயசாந்தி முகூர்த்தம். அன்று இரவு
8 மணிக்கு புகையிரதம் அந்த நேரம் தாண்டியாயிற்று. இனி போக வழியில்லை என தகப்பனர் சங்கடத்தில் மாட் டிக் கொண்டார், இந்தப் பக்கம் சுவாமி வாக்கு மீற முடி யாது. மறுபக்கம் அண்ணுவின் கோபம். இரண்டும் கெட் டான் நிலை. மறுநாள் விடியற்காலை ஒரு கார் வந்தது. அவர்கள் சுவாமியை தரிசிக்க மதருளிலிருந்து வந்திருந் தனர். பகல் சுமார் 1 மணி அளவில் சுவாமியிடம் புறப்பட உத்தரவு கேட்டனர். சுவாமி "நேராக எங்குசெல்லவேண் டும்?" என்ருர். மதருளில் அபிராமபுரத்திற்குப் போக வேண்டும் என்றனர். -வளரும்

ஆத்மஜோதி 39
சுவாமி ராமதாஸ் அருளுரைகள் - 45
இதுவன்றே அதிசயம்
தமிழ் வடிவம்:- ம. சி. சிதம்பரப்பிள்ளை
இந்தியாவில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய பணியாட்களுள் ஒருவனுக்கு ஆண்டவனது கிருபாகடாக்ஷம் கிடைத்தன்மயால் அவனது சிந்தனை இறைவனையே சார்ந்தவண் ணமாக இருந்தது, இறைவனிடம் தனது சிந்தனை செல்கின்ற காரணத்தினுல், தன்னுல் தொடர்ந்தும் அரசனிடத்துக் கடமை புரிய முடியவில்லை. ஆகவே தனது வேலையிலிருந்து விலகி இமயமலச் சாரலை அடைந்து கடும் விரதங்கள் கைக்கொண் டான். சில வருடங்களில் இறை உணர்வு வரப்பெற்றன். அதன் பின்பு இமய மலையிலிருந்து பிரதேச பூமிக்கு வந்து மக்களின் நலன் பொருட்டு வேலை செய்யத் தொடங்கினன். இதனை வட மொழியில் "லோக சங்கிரக" என்போம்.
இவ்வாறக மாறிய தபசி யாகம் ஒன்று செய்ய ஒழுங்குகள்செய்ய லானர். இந்தியாவில் இறை வழிபாடாற்றுவதற்காகப் பலவித மஈன யாகங்கள் செய்வார்கள். ஒரு பலனை வேண்டி அக்கினி வளர்த்து ஒரு வகை யாகம் செய்வார்கள். உலக மக்களின் உயர்வுக்கும் நல்வாழ்வுக்குமாக வேண்டி இந்த தபசி யாகம் தொடங்கினர். தனக்குத் தெரிந்த அரசர்களிடம், இளவரசர் களிடம் இருந்து யாகத்துக்குத் தேவையான பொருட்கள் தரும் வண்ணம் வேண்டினர். பணம் படைத்தவர்களிடமும் கேட்டுப் பெற்றர். அதிவிரைவில் இவரது புகழ் எங்கும் பரவியது. மிக வும் ஏராளமாகப் பொருள்கள் வந்து குவிந்தன. நன்கொடை களாக நாலாபக்கத்திலிருந்தும் வந்தன. தான் முன் கடமை யாற்றிய அரசனிடமும் யாகத்துக்குத் தேவையான பொருள் வேண்டித் தூது அனுப்பியிருந்தார். அரசனும் தம் கீழ் வேலை செய்த ஆள் யார் என்பதனை அறியாதிருந்தும் யாகத்துக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பியிருந்தான். யாக நாள் வந்ததும் நன்கொடைகள் தந்த அத்தனை பேரும் யாகத்தில் பங்குகொள்ள வந்தனர். அதிகமானேர் யாகசாலைக் கண்மை யில் அமர்ந்திருந்தனர். இந்த அரசனும் அவர்களுள் ஒருவன். இந்த யோகியை அரசனுல் இனம்கண்டுகொள்ள முடியவில்லை. ஏஞகில் தபசி தோற்றத்தில் முற்றக மாறியிருந்தார்.

Page 22
40 ஆத்மஜோதி யாகமுடிவில், வந்தவர்கள் யாவரும் ஒவ்வொருவராக வந்து தபசியின் கால்களைக் கண்ணில் ஒற்றி ஆசிர்வாதம் வெற்று ஏகினர். அரசனும் அவ்வாறே தபசியின் முன்னிலையில் சிரம் தாழ்த்தி_நின்று "ஒ மேன்மை தங்கிய ஞானியாரே! தங்களிடம் அதிசயிக்கத்தக்க சக்தியிருப்பதாக அறியலானேன். தயவு கூர்ந்து அவ்வாறன அதிசயத்தில் ஒன்றைச் செய்து காட்டு வீரா?' என்று கேட்டார். -
யோகி அரசனைப்பார்த்து 'அந்த அதிசயம் நிகழ்ந்து முடிந்து விட்டதே' என்று பகர்ந்தார். . ܟܫ
"அது எவ்வாறு?' அரசன் ஆச்சரியத்துடன் கேட்டார். “நான் அந்த அதிசயத்தைக் காணவில்லையே' என்றர்.
யோகியார் புன்னகையுடன் அரசனைப் பார்த் து, "சில காலத்துக்குமுன் தங்களது பணியாளனுக யான் இருந்தேன் என்பதனைக் கூறவேண்டியதில்லை. எப்போதாவது வேலை கார ணமாக என்ன அழைக்கும்போது, உடனே ஒடோடியும் வந்து சிரம் தாழ்த்தி மண்டியிட்டுத் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றி யுள்ளேன். இப்போது யான் அரசபீடத்தமர்ந்துள்ளேன். தாங் கள் என்முன் சிரம்தாழ்ந்து பணிந்து நிற்கின்றீர்கள். இதனி லும் பார்க்க மிகவும் பெரிய அதிசயம் வேறு உண்டா?* என்று தபசி வினவினர்.
மாதாஜி வாழ்க! சுவாமி ராமதாஸ் வாழ்க! எங்கும் இன்பமே சூழ்க!
கடவுளின் பார்வையில் தீமை என்பது கிடையாது. நாம் கஷ் டப்படுவதற்கு "நான்' என்ற உணர்வே காரணம். தீமைகளைப் போல் தோன்றுபவைகளுக்கெல்லாம் காரணம் அஹங்காரம் அல் லது பிறர் வேறு என்ற உணர்வுதான். கடவுள் பூரணமாக நன்மை . பயப்பவர், எல்லோரிடமும் அன்புடையவர். நீ எப்பொழுதும் கடவுளை நினைத்துக் கொண்டிருப்பாயானுல் எவ்விதச் சூழ்நிலையி லும் சந்தோஷமாக இருக்க முடியும். உலகத்தில் கடவுள் சித்தம் மட்டும் தான் செயல்படுகிறது என்பதையும் அவருடைய சித்தத் தால் தான் எல்லாம் நடக்கின்றன என்பதையும் நீ உணர்ந்தால் எங்கும் நீ தீமையைக் காண முடியாது. ஒருபோதும் உனக்குத் துன்பமில்லை. இது ராமதாசின் அனுபவம். ་་
-சுவாமி ராமதாஸ்

-ஆத்மஜோதி 41
கோணேஸ்வரம் இரண்டாக வளர்ந்த தெய்வீக வரலாறு
LLLLLLLLLLLLLLLLLLSSSLLLSLLLLLLLLLLLLLLSLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL
- க. வேலாயுதம்-தம்பலகமம் -
இலங்கையிலும் இந்தியாவிலும் பிரசித்தி வாய்ந்த இந்து ஆல யங்கள் பல உள்ளன. காசி, சிதம்பரம், திருப்பதி, மதுரை, இராமேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கதிர்கா மம் போன்ற தலங்களைக் குறிப்பிடலாம். இவைகளில் திருக்கோ ணேஸ்வரத்தைத் தவிர்ந்த ஏனைய தலங்கள் தோன்றிய காலமுதல் இன்றுவரை எவ்வித மாற்றமும் இன்றி ஒரேநிலையிலேயே உள்ளன. உதாரணமாக சிதம்பரம் தோன்றிய காலமுதல் ஒன்ருகவே உள்ளது. இரண்டு சிதம்பரங்களாக வளர்ந்ததில்லை. ஆளுல் குளக் கோட்ட னென்னும் தர்ம சீலஞல் உருவாக்கப்பட்ட கோணேஸ்வரம் மேற் காட்டிய ஆலயங்களின் நிலைக்கு முற்றும் விலக்கான தெய்வீக முறையில் திருகோணமலையில் ஒரு கோணேஸ்வரமும் அடுத்துள்ள தம்பலகமத்தில் ஒரு கோணேஸ்வரமுமாக இரண்டாக வளர்ந்து இரு ஆலயங்களிலும் நித்திய பூசைகள், அபிஷேகங்கள் ஆண்டு உற்சவ விழாக்கள் போன்ற வைபவங்கள் குறைவின்றிச் சிறப்பாக நடைபெற்று வருவது சைவ ஆலய உலகிலே எங்கும் என்றும் நடை பெற்றிராத தெய்வீக அற்புதங்களாகும்.
குளக்கோட்டன் இயற்றிய அழியாத தர்மம்
பண்டைய மன்னர்கள் படைகொண்டு அண்டை நாடுகளைத் தாக்கி அந்நாடுகளைத் தம்மடிப்படுத்தி பெரிய சாம்ராஜ்யங்களை நிறுவினர் எனச் சரித்திரவாயிலாக அறியமுடிகிறது. இம்மன்னர் களின் நோக்கிற்கு முற்றும் விலக்காக நாடுபிடித்தாளும் ஆசை ஒரு சிறிதும் இன்றி தெய்வப் பணி புரியும் மேலான குறிக்கோளுடன் குளக்கோட்டன் என்னும் சோழ இளவரசன் கடல்கடந்து ஈழம்வந்து கைலை மலையின் சிகரங்களில் ஒன்றெனக் கருதப்படும் தலப்பெருமை மிக்க திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அமைத்தான். ஆலய நிர்வகிப்புக் கருதி அக்காலத்தில் இலங்கையில் செங்கோ லோச்சிய ஆடக செளந்தரி என்னும் பெண்ணரசியுடன் மண ஒப்பந் தம் செய்து கொண்டு அவளிடம் இருந்த பூதப்படையின் துணை கொண்டு கந்தளாய் நீர்த்தேக்கத்தையும் தம்பலகாமத்தில் நீர்ப்பா சனத் திட்டம் ஒன்றையும் வகுத்தான். கோணேஸ்வராலயத்தில் தொழும்பாற்ற தென்னிந்தியாவில் உள்ள மருங்கூரிலும் மற்றும்

Page 23
42 ஆத்மஜோதி
இடங்களில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்களை அழைத்து வந்து இங்கு குடியேற்றிய மன்னன் திருக் கோணமலையைத் தலைநகரமாகக் கொண்டு திருகோணமலை இராஜ் யம் என்ற பெயரில் ஒரு தார்மீக அரசை நிறுவி பாண்டிய இளவரசன் ஒருவனை அழைத்து வந்து பூபாலவன்னிபம் என்று சிறப்புப் பட்டம் ஈந்து திருகோணமலை இராஜ்யத்தின் அரசு கட்டில் ஏற்றினன் எனப் புராண வரலாறுகள் இயம்புகின்றன. இந்த இராஜ்யம் ஆளும் வசதி கருதி மூன்று பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.
திருகோணமலையில் இருந்து வடக்கே பறையனுறு வரையுள்ள பிரதேசம் கட்டுக்குளப்பற்று என்றும் இப்பற்றில் உப்புவெளி - சாம் பல் தீவு, நிலாவெளி, கும்புறுபுட்டி, குச்சவெளி, திரியாய், புல்மோ டை, தென்னமரவடி போன்ற ஊர்கள் உள்ளன. இராஜ்யத்தின் மத்திய பகுதியான தம்பலகமப் பற்றில் தம்பலகம், கந்தளாய், கிண் ணியா, அக்கரை, ஆலங்கேணி, ஈச்சம்தீவு, உப்பாறுகங்கை போன்ற பல ஊர்கள் உள்ளன. கிழக்குப்பகுதியான கொட்டியாபுரப்பற்றில் மூதூர், சம்பூர், கூனித்தீவு, சேனையூர். தோப்பூர், மல்லிகைத்தீவு, பள்ளிக்குடியிருப்பு, கங்குவேலி, கிளிவெட்டி, வெருகல் போன்ற பல ஊர்கள் உள்ளன. இப்பிரதேசங்கள் இன்றும் கட்டுக்குளப்பற்று, தம்பலகமப்பற்று கொட்டியாபுரப்பற்று என்றே அழைக்கப்பட்டு வருகின்றன. தம்பலகமம் கோணேஸ்வரர் கோயிலில் தொழும் பாற்றி வயல் மானியம் பெறும் தொழும்பாளர்கள் இந்த மூன்று பற்றுக்களிலும் பரந்து வாழ்ந்து வருவது இங்கு குறிப்பிடத்தக் கதா (g5 LD.
மகான் ஒருவரின் தீர்க்கதரிசனம்
திருமலை இராஜ்யத்தை ஆட்சி புரிந்து வந்தவன்னிய அரசர் ஒருவர் தம் சபையில் கூடி இருந்த பிரமுகர்களைப்பார்த்து 'அன் புர்களே எம் கோமானகிய குளக்கோட்டு மகாராஜா கோணேஸ் வரத்தை அமைத்து அதன் நிர்வகிப்புக் கருதி திருக் குளத்தையும் வயல் வெளிகளையும் திருத்தி இந்த இராஜ்யத்தையும் நிறுவி என் போன்ரூேரை நடுத்தீர்க்கவும் பணித்துள்ளார். என்வரையில் அவர் இயற்றிய தர்மகாரியம் எவ்வித குறையும் இன்றி நடைபெற்று வந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த தெய்வீக ஆலயம் என்ன நிலை யை அடையுமோ" என மொழிந்தார். அரசன் கூற்றைக் கேட்ட தும் அச்சபையில் இருந்த மகான் ஒருவர் ஆலயத்தின் பிற்கால நிலையைப்பற்றி ஒரு வெண்பா மூலம் பின்வருமாறு கூறினர்.
முன்னே குளக் கோட்டன் மூட்டும் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிப்பர் - மன்னவை பின்

ஆத்மஜோதி
பொண்ணுத் தனையியற்ற வழித்தே வைத்து எண்ணுர் வருவேந்தர்கள் '.
இந்த ஆலயம் பிற்காலத்தில் பறங்கியர்களால் அழிக்கப்படும் இக்கோயிலைத் திரும்பக் கட்டக்கூடிய அரசர்கள் இலங்கையில் இருக்க மாட்டார்கள் என்பதே அந்தத்தீர்க்க தரிசியின் கருத்தா கும். கோணேஸ்வரம் பிற்காலத்தில் அன்னியர்களால் அழிந்து விடும் என்பதை அறிந்து சைவமக்கள் கலக்கமடைந்திருந்தனர்.
கோயிலை அழிக்க பறங்கியர் முயற்சி
மேற்கு நாட்டில் உள்ள போர்த்துக்கேயர்கள் வர்த்தகம் செய் யும் நோக்கில் கிழக்கு நோக்கி வந்தனர். கிழக்கு நாடுகளில் அப் போது நிலவிய ஸ்திரமற்ற அரசியல் நிலையைக் கண்ட அவர்கள் நாடு பிடித்தாளும் ஆசை கொண்டனர். அவர்களின் ஆட்சியில் சிக் கிய நாடுகளில் தங்கள் மதத்தைப் பரப்பவும் அந்நாடுகளில் உள்ள புராதன ஆலயங்களை இடித்தழிக்கவும் முற்பட்டனர். துரதிர்ஷ்ட வசமாக குளக்கோட்டன் என்னும் தர்மசீலன் அரும்பாடு பட்டு அமைத்த கோணேஸ்வரம் இருக்கும் திருகோணமலை அவர்கள் கைகளில் சிக்கியது. அங்கு வானுற உயர்ந்து நிற்கும் கோணேஸ்வரர் ஆலயத்தைக்கண்டதும் அவர்கள் பெரும் மலைப்படைந்தனர். அது ஒரு ஆலயமாக இருந்தது மட்டுமின்றி கிழக்குப் பகுதியில் சைவ சமயத்தின் கலங்கரை விளக்கமாக அருள் ஒளிவீசிக் கொண்டிருந் தது. இந்தக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கினலன்றி ஈழத்தில் தங்கள் சமயத்தைப் பரப்புவதென்பது முடியாத காரியம் எனக் கண்டனர். எனவே கோணேஸ்வரத்தை இடித்தழிப்பதெனத் தீர் மாணித்து நாளும் குறிப்பிட்டனர். கோயிலை இடித்தழிக்கும் பொ றுப்பை கொனஸ்தந்தைன் டீசா என்னும் தளபதி ஏற்றுக்கொண் டான். தங்களின் வணக்கஸ்தலம் அன்னியர்களால் அழிபட இருப் பதை அறிந்து சைவ மக்கள் செய்வதறியாது கலங்கினர்.
சைவப் பெரியார்களின் தீரமிக்க செயல்
போர்த்துக் கேயர்கள் கோணேஸ்வரத்தை அழிப்பதெனச்செய்த முடிவு இப்பகுதி சைவர்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியது. கலையம்சம்மிக்க தெய்வ உருவங்கள் அவர்கள் கைகளில் சிக்கினல் அவைகளை அவர்கள் தங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய் விடுவார் கள் என்பதையும் சைவப் பெரியார்கள் அறிந்திருந்தனர். இடிபட இருக்கும் கோயில் பிரதேசத்துள் அன்னியர்களின் போர்ப்படைகள் வெற்றிக் களிப்பில் ஆரவாரித்துக் கொண்டிருந்ததால் கோயில் பிரதேசத்துள் சைவர்கள் போய் மீள்வது கஷ்டமாக இருந்தது.

Page 24
44 ஆத்மஜோதி
ஆயினும் சைவப் பெரியார்கள் என்ன செய்வது என்று பேசாமல் சும்மா இருந்துவிட விரும்பவில்லை. கோயில் அழிவைத் தடுக்கத் தங்களால் முடியாவிட்டாலும் தாங்கள் வழிபாடு செய்து வந்த கோணநாயகரின் திருவுருவத்தையாவது அன்னியர்களின் கைகளில் சிக்காமல் கோயில் அழிவுக்கு முன் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச்சென்று விடவேண்டும் என்று துணிந்தனர், அவர்கள் இக் காரியத்தில் தங்கள் உயிர், உடல்; பொருள், மனைவி, மக் கள் அனைத்தையுமே இழக்கத்தயாரானர்கள். அவர்கள் குறிக்கோள் கோணநாயகரின் திருவுருவை பறங்கியர்களின் கைகளில் சிக்காமல் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் சென்று விடவேண்டும் என் பதேயாகும். இந்தத் தீரமிக்க கோஷ்டியில் கோயிலில் காரிய மாற்றிய முக்கியஸ்தர்களான இருபாக முதன்மைக் குருக்கள்மார், தானத்தார், வரிப்பத்தார் போன்றவர்கள் இருந்தனர்.
இப்பெருமக்கள் தங்கள் உயிர்வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாது செய்த தீரச் செயலின் விளைவாகவே இப்பகுதி யில் இருந்து அழிக்கப்பட இருந்த கோணேஸ்வர வழிபாடு அழியாது நிலைத்திருந்ததுடன் அழிந்த கோணேஸ்வரம் திருகோணமலையிலும் தம்பலகமத்திலும் இரண்டு கோணேஸ்வரங்களாக வளர்ந்து அருள் ஒளி வீசக் காரணமாக அமைந்துள்ளது என்ருல் அது மிகையாகாது. இந்தத்தீரமிக்க சைவப்பெரியார்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒருநாள் இரவு இடிபட இருக்கும் ஆலயத்துள் புகுந்தனர். அவசரமவசரமாகத் தேடி கோணநாயகரின் மூலத்திருவுருவை எடுத்துக்கொண்டு கொடிய வனவிலங்குகள் உலாவும் காட்டுவழியே இரவில் தம்பலகமத்தை நோக்கி விரைந்தனர். தம்பலகமத்துக்கு வந்த பின்பும் மனிதர்கள் நடமாடும் இடத்தில் வைத்து அந்த மூர்த் தியை வழிபட அஞ்சினர். எனவே விடிந்ததும் தம்பலகமம் மேற்கு மலையை நோக்கி இருள் சூழ்ந்த வனத்தினுாடே சென்றனர். தம்பல கமத்தில் இருந்து சுமார் ஆறு அல்லது ஏழு மைல் தூரத்தில் பல மலை அடுக்குகளை உடையதும் பள்ளத்தாக்குகளும்வானுயர்ந்தமரங்களையும் மனித சஞ்சாரத்தை என்றும் அறியாத மலை வனத்தில் பேரோசையு டன் ஆர்ப்பரித்துப் பாய்ந்து வரும் உலமியனற்றங்கரையில் உயர்ந்து நிற்கும் மலைச் சிகரத்தில் பீடமமைத்து தாங்கள் பெரும்பாடுபட்டுக் கொண்டு வந்த தெய்வீக மூர்த்தியின் திருஉருவை வைத்து வழிபட்டு வரலாயினர். ܫ
இப்பெரியார்களின் தீரமிக்க செயலைக்கண்டு துணிச்சல் அடைந்த சைவப்பெரியார்களில் சிலர் இரண்டாவது தடவையாகவும் இடிபட இருக்கும் கோயிலுக்குள் புகுந்து மிச்சமாக உள்ள பிரதான விக்கிர கங்களை யெல்லாம் எடுத்து வந்து திருமலை வடதிசைக் கடலோரம் புதைத்துவைத்தனர். இம்மூர்த்திகளே கிணறு தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ள திருகோண மலைக் கோணேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வரும் கடவுளர்களின் திருவுருவங்களாகும். -வளரும்

ஆத்மஜோதி - 45
LLLSqSLLLSqSLLSLLLLLSLLLSLLLM LMLSLS LS LLLLLSLLLLLSLLLLLLLALSL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLMLLLLSLLALLLLLLL
ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்
O O Ο
FOUD
செஞ்சொற் கவிமணி புலவர் மா. வெங்கடேசன் எம்.ஏ., തത്തയ്ക്കേ &rബ്ര9|-§fig.prn മൈ
வைதிகத் திருமணம் பண்டைக்காலத் திருமண நிகழ்ச்சிகளை இவ்விலக்கி யங்களின் பல பாடல்கள் தெளிவாக விவரிக்கின்றன. அவற்ருல் அன்று தொட்டு இந்து சம்பிரதாயப்படியே திருமணங்கள் நடைபெற்று வரும் உண்மையை உணர லாம்.
* உழுந்து தலைப் பெய்த கொழுங்களி பிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் திருமணல் ஞெமிரி மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின் பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலே வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொது செய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தாத்தரப் புதல்வர்ப் பயந்த திதலையல் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றேற் பெட்கும் பினையை ஆகென நீரொடு சொரிந்த ஈ-ரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றை...' - அகம் 86
**உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலை உடைய பொங்கலோடு பெரிய சோற்றுத்திர ளையை உண்பது இடையருது நிகழ, வரிசையாகிய கால் களையுடைய குளிர்ந்த பெரிய பந்தரில் கொணர்ந்திட்ட

Page 25
46 ஆத்மஜோதி
மணலைப் பரப்பி, மனையின் கண் விளக்கினை ஏற்றிவைத்து மாலைகளைத் தொங்கவிட்டுத் தீய கோள்களின் தொடர்பு நீங்கப் பெற்ற வளைந்த வெண்மையான சந்திரனைக் குற்ற மற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்ததாக அந் நாளில் மிக்க இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில் உச்சியில் இடத்தினையுடைய வரும், கையினில் புதிய அகன்ற 'மண்டை" என்னும் கலத்தினையுடைய வரும் ஆகிய மணத்தினைச் செய்து வைக் கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறை முறையாகத் தந்திட,
மகனைப் பெற்ற தேமல் டொரு ந் திய அழகிய வயிற்றினையுடைய, தூய அணிகள் பூண்ட மகளிர் நால் வர் கூடி நின்று, ‘கற்பினின்றும் வழுவாது நன்ருய் பல பேறுகளையும் தந்து நின்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடையையாக’ என்று வாழ்த்தி நீரோடு கூட்டிப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக் கள் மிக்க கரிய கூந்தலில் நெற்களுடன் விளங்க, இங்ங் னம் நன்ருகிய வது வைக் கல்யாணம் முடிந்த பின்பு.”*
கேடில் விழுப்புகழ் நாள் என்பது உரோகிணி நட்சத் திரத்தைக் குறிப்பதாகும். காரணம் அது சந்திரனைச் சேரும் நாளே திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொள் ளப்படுவது மரபு.
இப்பாடலில் இந்துசமயச்சம்பிரதாயப்படி கோளும் நாளும் ஆய்ந்து பந்த ரிட்டு மணல் பரப்பி வீட்டை விளக்கேற்றி அலங்கரித்து முதிய மங்கல மகளிரும், மக்கட்பேறுடைய மகளிரும் கூடி மணமகளை வாழ்த்தி நீராட்டும் திருமணச் சடங்குகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளமையை அறியலாம்.
சிலம்பு கழிச் சட்ங்கு:-
தனக்கும் தெரியாமல் தலைவன் ஒருவனுடன் சென்ற
தன் மகளை, அத்தலைவனுடைய தாய் அன்புடன் வரவேற்
றுத் திருமணம் நடத்துதற்குரிய சடங்குகள் சிலவற்றைத்

ஆத்மஜோதி 47 தொடங்குகின்ருள் என்பதைக் கேள்வியுற்ற தாய் ஒருத்தி கூறும் செய்தியினின்றும் இந்து சமயத்தவர் மேற்கொள் ளும் திருமணச் சடங்குகள் முதலியவற்றைத் தெளிவாக அறியலாம்.
நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும் எம்மனை வதுவை நன் மணம் கழிகெனச் சொல்லின் எவனுே? மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடி பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே" ஐங்: 399
'அன்புடையோரே! என் மகளைப் பொய் வார்த்தை கள் பலவற்ருல் மயக்கித் தன்னுடன் கொண் டு சென்ற அவ்வாலிடன் சிறந்த வேற்படையினையும், வீரக் கழலணிந்த அடிகளையும் உடைய வீரரே, அத்தகு திறமை யுடையவன மகளுகப் பெற்ற அவன் தாயினிடத்தில் *"இச் சிலம்புகழிக்கும் சடங்கினை உங்களுடைய இல்லத்தில் செய்தீராயினும் இன்றியமையாத வதுவைத் திருமண விழாவையேனும் மகளை ஈன்ருளாகிய எம்மவள் இல்லத் தில் நிகழ்த்தி முடிக்க' என்று நீங்கள் எடுத்துக் கூறி அதற்கு அவளை உடன்படுத்திஞல் அதனுல் உங்களுக்கு ஏற்படும் குறையும் உண்டோ? (இல்லை)
சிலம்புகழீஇ என்பது திருமணம் நிகழ்வதற்கு முன் னர் மணமகளுக்கு நடத்தப்படும் ஒரு சடங்கு. மணமகள் இளம்பருவம் முதலாக அணிந்துள்ள சிலம்பினைக் கழற்று தலையே "சிலம்புகழீஇ' என்பர். இச்சடங்கினை மணமக னுடன் பிறந்த சகோதரிகள் (நாத்துரண் நங்கையர்நாத்தனர்) செய்வது மரபு. h−
இத்தகைய சிலம்புகழீஇ சடங்கு தன் மகளுக்குத் தலைவனது இல்லத்தில் நிகழ்ந்ததாகக் கேள்வியுற்றே, மேற்கண்ட பாடலில் வரும் தாய், அச்சடங்கிற்குச் சென்று வந்த சுற்றத்தாரை நோக்கித் "திருமணமேனும் எம் மில்லத்தில் நிகழ்த்த உடன்படச் செய்யுங்கள்’’ என்று கூறுகின்ருள். s

Page 26
48 - ஆத்மஜோதி
*சிலம்புகழீஇ' சடங்கும், வதுவை நன் மணமும் மணமகளின் பிறந்த்கத்தில் நிகழ்தலே சிறப்பு. அவற்றுள் முதலாவது மணமகன் இல்லில் நிகழ்ந்துவிட்டமையின் திருமண மேனும் தன்வீட்டில் நிகழ வேண்டும் என்று கருதி யே மணமகளின் தாய் சுற்றத்தாரிடம் மேற்கண்டவாறு கூறினுள்.
இப்பாடலில் கூறப்படும் சிலம்புகழீஇயும் வதுவை நன் மணமும் இந்து சமயத்திற்கே சிறப்பாக உரியவையாகும்.
*சிலம்புகழீஇ ன் சிறப்பை முன்னர் கண்டோம். 1வது
வை நன்மணம்' என்பது மணமகளைப் பெற்ற தாய் தந்தை
யர் மணப்பந்தரில் தலைமகன் கையில் நீரைவார்த்துத் தம் மகளை ஒப்படைத்தலாகும். இதனை ஓம் படை செய்வது" என்று கூறுவர். இத்தகைய திருமண முறைகளை இந்து சமய புராண இதிகாசங்களில் விரிவாகக் காணலாம். சங்க இலக்கியங்களில் மிகச் சிறந்ததாகிய அகநானுரற்றின் 86 ஆவது செய்யுள் இவ்வதுவை நன்மணத்தைத் தெளிவாக விளக்குகின்றது. -
இத்தகைய திருமண முறையினையும் சடங்கினையும் உணர்த்தும் இவ்வைங்குறு நூற்றுப் பாடலால் மிகப் பழங் காலத்தில் மக்கள் இந்துசமய திருமண முறைகளையும் சடங்குகளையுமே தெளிவாக உணர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதை அறியலாம்.
கைம்மை நோன்பு
வைதீக சமயத்தில் கணவன் இறந்தால் மனைவி கைம் மை நோன்பு மேற்கொள்ளுவது பெருவழக்கு. அவ்வழக் கத்தினை இவ்விலக்கியங்களிலும் காணலாம்.
* அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெள் சாந்தொடு புளிபெய்து அட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ’ - புறம் 246
(தொடரும்)

YLL0SLLLLLtLLL LLL LLLLLLL SLLLLLSLLLLSLYLGrr0ASrrrt yyrLLLLLLLLLL 2. G. G. G R &
ஆதிசங்கராச்சார்ய சுவாமிகள் ஹஸ்தாமலகன் என்ற சிறுவனிடம்
விஞவிய விணுக்களும் அவன் இறுத்த விடைகளும்
சங்கரர்: ஓ. அன்புள்ள குழந்தாய்! நீ யார்? யாருடைய மகன்? எங்கே நீ செல்கிருய்? உன் பெயர் என்ன? எங்கிருந்து நீ வந்தாய்?
1. நான் மனிதஞே, தேவணுே, யகஷ்ஞே அல்ல. நான் பிரமச்சாரி அல்ல, குடும்பஸ்தன் அல்ல. நான் தானே ஆத்ம ஞானி.
2. நான் ஆத்மன். மக்களைத் தத்தம் கடமைகளைப் புரியக்
கதிரவன் தூண்டுகிறதுபோல, மனத்தையும் புலன்களை : யும் செயலாற்றத் தூண்டுகிற ஆகாசம் முதலிய வரை : யறைக்குட்பட்ட சேர்மானங்களிலிருந்து விடுபட்ட நித்திய சுய அறிவு சொரூபமானவன்.
3. நான் ஆத்மன். நித்திய ம்ாறுதலற்ற சுய அறிவு சொரூப மானவன். நெருப்பின் சுபாவம் உஷ்ணம். அதுபோல பிரமத்தின் சுபாவம் தூய உணர்வு, இதைச் சார்ந்தே ஸ்துல மனமும் புலன்களும் தத்தம் அலுவல்களைக் கிரமமாகப் புரிகின்றன.
4. நான் ஆத்மன். நித்திய சுய அறிவு சொரூபமானவன். கண்ணுடியில் தெரிகிற முகத்தின் பிரதிபிம்பம் முகமே தவிர வேறல்ல; அது போல, ஜீவன் என்பது புத்தி யில் பிரதிபிம்பமாகப் பதிந்த ஆத்மனத்தவிர வேறல்ல.
5. கண்ணுடியும் அதில் காணப்பட்ட பிம்பமும் இல்லாத போது, முகம் மாத்திரம் இருக்கிறதுபோல, ஆத்ம ஞானம் விளங்குகிறது-புத்தியில்லாதபோது கூட.
6. மனதிற்கு மனமாயும், கண்ணுக்குக் கண்ணுயும் உள் ளது ஆத்மா. இவைகளால் அந்த ஆத்மா அணுக ஒண்ணுதது. V−
ppyyyy"p"FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF;

Page 27
Registerei at till: C. P. (). as a N
LL SLSALSLSLSALSSSSSSS SSLLSLLASLSS LSAALLLLLSLS SASeeSLLLSLLSL அ 9 CD 选
விநாயகர், முருகன், நடர ஐயப்ப சுவாமிகள், நவக்கிற கடவுள், திருவிளக்கு வழிட
வாரப் பதிகம் ஆஃனத்தும்
O அர்ச்சன மாலே
கிடைக்
ீ ஆத்மஜோதி அச்
ஆத் மே இலங்கைக்கு ஆண்டுச் ஆயுள் ச தனிப் பிரதி இந்தியாவுக்கு ஆண்டு இதர நாடுகள் ஆயுள் சந்தா
ஆத்மஜோ
நாவலப்பிட்டி
இந்தியா
"ஆத்மஜோதி"யின் ஆண்டுச் ச விலாசத்திற்கு அனுப்பிவைக்கு
WISALAKSHI I LLAM",
Royapettah - MAD IRA
TT LSL SLSLSSL SLS L SLSL LSSLLSSLLSSLLLLLSSLSALLLSS
ஆசிரியர்: நா. முத்தை அச்சுப்பதிவு பூர் ஆத்மஜே
"ட்ெட திகதி: 1-1-SC).

"ت=
ewspaper M. L. 35900.
AA ALASLLALSLALLSLLLALS LSLLLLLLSLLLLLSLLLSMLSSLLLLSLS
ன மாலே
ாஜர், அம்பிகை , திருமிால்,
"கம், யோகவேள்வி, வைரவக்
ாடு, சிவபெருமான், மாத
அடங்கிய வழிபாட்டுநூல்
வில ரூபா 5-00 குமிடம்: சகம் -நாவலப்பிட்டி.
சந்தா ரூபா. 2). O() ந்தா ரூபா. OO-O.) ரூபா. 2ւ00 ச்சந்தா ரூபா. 25-00 6 வெள்ளி ரூபா. 500-00
தி நிலையம்,
- (ழரீ லங்கா)
நேயர்களுக்கு
Fந்தா 25.00 ரூபாவை பின்வரும் மாறு அன்புடன் வேண்டுகிருேம்.
SEKARAN
274, Royapettah High Road, S-600 014, 'Tanlil Illa du.
LL SMSSSLASSSLLSSLLSSLLSLL STeSSS SAeSSSLSLMSS LAeSSSLSLLLLSTSSS ASSLqSSSS SSSSSL AALSSSSSS S LASLSMMSSS
ாதி அச்சகம் - நாவலப்பிட்டி.
- Неғі