கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1981.11.16

Page 1
對響料巒
Li
 
 
 
 

巒灣
臺
ق
နုံးနှုံးမ္ယန္းနုိမ္ယန္တီးနှံ

Page 2
ஆத்மஜோதி
ஓர் ஆத்மீக மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே
எசுத்தானந்தர்
ஆசிரியர் நா. முத்தையா
ஜோதி; 34 - கார்த்திகை naq (16-11-81) – 5 Lfr : 1
பொருளடிக்கம்
சத்திய சாயி பாபா மலர்ப்பதம் சார்ந்து வாழ்வோம் - 1 அருள் வாக்கு 2 حےع சத்திய சாயி பாபா -3 سس " சுவாமி ராமதாஸ் அருளுரைகள் - 7 சந்திரசேகரேந்திர சுவாமிகள் அருள்வாக்கு - 9 ஒம் யூரீகர்மேத்திபாய் -12 குறுமுனி அகஸ்தியர் தீர்த்தமாடிய புண்ணிய நதி به 1 حسسه ஓம் ஹ்ரீம் நமசிவாய - 18 மகா மந்திர கோடி அர்ச்சனையின் உண்மை -2 حس i மகாராஷ்டிரத்தின் மெய்யடியார் ஒருவர் . --23-س ஐஷ்டிரத்தின் மெய்யடியார் ஒரு -25 சத்சங்கத்தின் முக்கியத்துவம் 29۔ இயமன் -31 சைவாலய பூஜையில் தமிழ் வேதம் 37 حس தற்கால மனிதனுக்குரிய சாதனை 41صسسد யோகத்தின் அர்த்தம் .48 حس
LLSLLLLLSLLLMLMLALALLSLLLAAS SLMLMLSSSMSLLSLLLS
அன்பர்களுக்கு ஒர் நற்செய்தி அகில உலக இந்து மகாநாட்டை ஒட்டிய
ஆத்மஜோதி சிறப்பு மலர்
பெரிய அளவில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அதனுடைய விலை r தபாற்செலவு "წ„... }50 ரூபா ஆகும. வேண்டுவோர் முன்கூட்டியே பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேம்.
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி. பூரீ லங்கா.
VrveřVVVVVVVM PVVVN/VVVV
WAMAMAMWAMMWMPAWANYMAMMY
 
 

:::::::::::::::::: சத்திய சாயி பாபா மலர்ப்பதம்
ந்து வாழ்வாம்
3F
ASSeSYSYLSLSLLSLSLLSLSLSSLL LS LSL SLSSLL SLSLSLSTSLSL SLL LS SLSL LSLSLSLS SLSL LLSSSL LLSLSqLLSLSLSSLLSLSqLLSS SS
-கம்பவண்ணன்-காவேரிப்பட்டணம் -
இத்தரை முழுதும் போற்றும் எழிற்பெருங் கோலமெய்தி சித்தமும் உணர்வும் சீரும் செயல்களும் சிவமே யாகி முத்தரில் முத்தணுய முதல்வனும் புட்ட பர்த்தி சத்திய சாயி பாபா மலர்ப்பதம் சார்ந்து வாழ்வாம்,
கடவுளர் யாரும் வந்தோர் கவின்பெரு வடிவந் தாங்கி
இடனறிந் துதித்து மற்றிங் கிருபதாம் நூற்றண் டின் கண்
நடமிடும் சத்ய சாயி பாபா வென் றரிய நாமம் திடமுடன் பெற்றப் புட்ட பர்த்தியில் திகழ்வாய் போற்றி!
எனக்குமக் கடவுளர்க்கும் இயல்பினில் வேறு பாடு நினைக்குமா றில்லே என்றே விளையாடல் நிகழ்த்தி ஞான
மனத்தினர் தெளிய வெவ்வே றவதார மகிமை காட்டும்
பனித திருநீறு பூக்கும் பால்வண்ணு போற்றி! பேர்ற்றி!
செழும்புனல் பெருகிப் பாயும் சித்திரா வதியின் பாங்கர்
எழும் பெருங் கோயில் கொண்டாய் இருந்துல கனத்தி னின் தொழுந்தலைக் கரத்தராகிச் சூழ்வாரைத் தனித்துப்பேசி (றும் கொழும்பயன் சுவைக்க நீறு கொடுத்தருள் புனிதா போற்றி:
உலகெலாம் அளித்துக் காக்கும் ஒருபெருங் கடவுள் மாயோன் இலகநின் றருள் வதேபோல் எழில்தரும் முல்லைக் காட்டில் திலக! நீ கோயில் கொண்டு தெரிசனம் சிறக்க நல்ஓ அலகிலா விளையாடல் செய் ஆண்டவா போற்றி! போற்றி! போற்றியோ போற்றி! சத்ய சாயி பாவே போற்றி! போற்றியோ போற்றி ஞானப் புண்ணியா போற்றி! போற்றி!
போற்றியோ போற்றி கள்ளப் புலன்களே வென்றம் போற்றி:
போற்றியோ போற்றி! வாசப் பூங்கழல் போற்றி! போற்றி!

Page 3
2 u 4. மஜோதி
அருள் வாக்கு
as
கடவுள் பக்தர்களேயல்ல. அவர்களுடைய பக்கியைத் தான் நேசிக்கிருர் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கடவுள் அருளானது எங்கும் பெய்யும் மழையைப் போன்று ஒரேமாதிரி தூய நீராகும். ஆனல் அதனுடைய சுவையானது அங்கங்குள்ள நிலங்களின் தன் மைக்குத் தகுந்தவாறு மாறுபடுகிறது. அதைப் போன்று கடவுள் சிலருக்கு இனிமையராகவும் மற்றவர்களுக்கு கசப்பானவராகவும் இருக்கிமுர், மனிதர்களில் நான்கு வகைகள் உண்டு. உணர்ச்சியற்றவர்: இவர்கள் தாங்கள் மட்டுமே சுதந்திரமாகவும், தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துபவர்களாக வும் நடத்திச் செல்பவர்களாகவும் சொல்லி கட வுளே மறுக்கிருர் கள். ' நோயாளி , இவர்கள் தங்களுக்குத் துன்பம் வந்த டோதோ அல்லது தங்கரின் வழக்கத்திற்கு மாரு க ஏதா வது ஏற்பாட்டாலோ கடவுளை அழைக்கிருர்கள். அறிவிலி இவர்கள் தங்கள் உள்ளத்தின் தோழன், காவலன் கடவுள் என்று தெரிந்திருந்தாலும் எப்போதாவது தங்களுக்குத் தோன்றும் போதுதான் கடவுளை நினைத்து அதன்படி வாழ்கிறர்கள். ஆரோக்கியவான்; இவர்கள் கடவுளின் மீது நிலையாக நம்பிக்கை w வைத்து ஆறுதல் அளிக்கும் அவருடைய பார்வை
யில் எப்பொழுதும் வாழ்கிருர்கள். மனத்தின் பின்னே ஓடும் ஆசைகளையும், மனத்தையும் கட்டுப்படுத்த சாதனை மிக அவசியமாகத்தான் தேவைப் படுகிறது. வெற்றியடைய முடியவில்லை என்று உங்களுக்குத் தெரிந்தால் சாதனையை விட்டு விடாதீர்கள். ஆளுல் மிக உறுதியுடன் சாதனையைச் செய்யுங்கள்.
கடவுள் பிரேமையின் மலையைப் போன்றவர். அந்த இனிமையை எவ்வளவு எறும்புகள் அணு அணுவாக எடுத் துச் சென்ருலும் அந்தம் பேரருளைத் தீர்த்துவிட இயலாது. அவர் கரையற்ற அருட்கடல். கடவுள் ஒவ்வொரு பொரு ளிலும் நிறைந்திருக்கிருர். உண்மையில் அவரே ஒவ்வொரு பொருளுமாய் இருக்கிருர்.

ஆத்மஜோதி 3
-ஆசிரியர்
இன்றைய உலக மக்களுடைய நாவிலே தவழும் சொற்களுள் முக்கியமான சொல் சத்திய சாயி பாபா என்பதாகும். சத்தியம் என்ருல் உண்மை. உண்மை எப் பொழுதும் ஒன்றுதான். அந்த ஒன்றுதான் ஆண்டவன். சாயி என்ருல் தாய். பாபா என்ருல் தந்தை. ஆண்டவனே தாயாகவும் தந்தையாகவும் விளங்குகின்றன். ஆண்டவன் அருவாக விளங்குகின்றன். அதாவது உருவம் அற்றவனுக விளங்குகின்றன். உருவம் அற்றவனை எல்லாராலும் பக்தி பண்ண முடியாது. எங்களைக் கடைத்தேற்ற உருவம் உள் ளவனுக வருகின்றன் ஆண்டவன். உருவில் நினைக்கும் போது பக்தி பண்ண முடிகிறது. இறைவன் அருஉருவ நிலை யில் பேரொளிப் பிழம்பாகவும் விளங்குகிறன்.
இத்தனை நிலையிலும் இறைவனை உணராத மக்களுக்கு அவதார புருஷனுக வருகிருன். அவதாரம் என்ருல் கீழ் இறங்குதல் என்பது பொருள். கீழே உள்ளவனை மேலே எடுத்து விடவேண்டுமானல் மேலே உள்ளவன் கீழே சில படிகள் இறங்கிக் கைகொடுத்து உதவ வேண்டும். இத்தகை யதொரு உதவியினையே அவதாரங்கள் செய்கின்றன.
அவதார புருஷர், ஈசுவரகுல் அனுப்பப்படும் மனுஷ்ய தூதர் ஆவர். அவர் ஒரு பெரிய சக்கரவர்த்தியின் பிரதிநிதி போன்றவர். நெடுந்தூரத்திற்கு அப்பால் உள்ள பிரதே சத்தில் கலகம் நிகழும் போது அதை அடக்குவதற்கு அர சன் தனது பிரதிநிதியை அனுப்புவது போல, உலகத்தில் எங்கேயாவது தர்மம் மலினம் அடையும் போது அங்கு தர்மத்தைப் பாதுகாத்து அபிவிருத்திக்குக் கொண்டு வரு வதற்காக ஈசுவரன் தனது அவதாரபுருஷனை அனுப்பு கிருன்.
திவ்ய குணங்களுடனும் திவ்விய சக்தியுடனும் அவ தார புருஷர்கள் மண்ணில் அவதரிக்கிருர்கள். அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள். அவதார புருஷர்களே அறிந்து கொள் வது அரிதான காரியமாகும். ஆனுல் அவர்கள் தாம் அவ

Page 4
4 ஆத்மஜோதி
தார புருஷர்கள் என்பதைப் படிப்படியாக வெளிப்படுத்திக்
கொண்டே வருவார்கள். அவர்களை அவதார புருஷர்களா கப் பார்க்கும் கண் முதலில் தேவை. அவர்கள் உணர்த்தும் போது அதனை உணரும் அறிவும் தேவை. இவை இரண் டும் இல்லையேல் எத்தனைதான் உணர்த்தினுலும் உணர முடிவதில்லை. அங்ங்ணம் உணர முடியாமைக்குக் காரணம் நமது அகங்காரமே.
பகவான் திருஅவதாரம் செய்தபோது "சத்யநாரா யணு என்ற நாமத்தைப் பெற்ருர், சத்யநாராயண பூஜைக் கும் அப்பூஜையால் ஏற்பட்ட பலனுக்கும் உள்ள தொடர்பை எண்ணி "சத்யநாராயண' என்ற பெயருக் குத் தாயார் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந் தார். சத்யஸ்வரூபரான நாராயணனே அவர் என்பதை அன்னையார் ஓரளவு புரிந்து வைத்திருந்தார். குழந்தை யின் தலையைச்சுற்றி ஒரு தெய்வீக ஒளிவட்டம் காணப் பட்டது. ஆனல் அதனை உணரும் ஆற்றல் மக்களிடத்துக் காணப்படவில்லை, குழந்தை பிறந்த உடனே துணிமீது கிடத்தினர்கள். அப்பொழுது ஏதோ அடியிலிருந்து அப் படுக்கையை மேலும் கீழும் விசித்திரமாக நகர்த்தியது. பிரசவம் பார்க்க வந்த பெண்களது கவனம் அங்கே நிலைத்தது. அதை அவர்கள் உற்றுக் கவனித்தபின் படுக் கையைச் சோதித்தனர். படுக்கைக்கடியே நாகம் ஒன்று மண்டலம் இட்டுப் படுத்திருப்பதைக் கண்டார்கள். அனந்த சயனனுக்கு ஆதிசேஷன்! w
பகவான் அவதார புருஷர் என்பதற்கு இத்தனையும் போதாதா? விருந்திற்காக யாரேனும் ஏதோ ஒரு கோழியை விருந்திடலாமெனப் பேசக்கேட்டால் சத்ய நாராயணு உடனே அக்கோழியை நோக்கி ஓடி அதை எடுத்துத் தன் மார்போடணைத்து அன்புடன் தடவிக் கொடுத்து அதன்மீது தனக்குள்ள தனியன்பைக் காட்டு வார். அதைக்கொல்ல நினைத்த பெரியோரும் மனம் இளகி அக்கோழியை விட்டுவிடுவார்கள்.
சத்யா என்று எல்லாரும் அழைத்ததற்கேற்ப அவர் எப்பொழுதும் சத்தியமே பேசினர். பயத்தால் தமது தவ றுகளை மறைக்க முயல்வதற்காக ஒருபோதும் தந்திரங்க ளைக் கையாள்வது கிடையாது. பிச்சைக்காரன் எப்பொ ழுது வந்து வாயிற்படியிலே குரல் எழுப்பினலும் சத்தியா

ஆத்மஜோதி 5
விளையாடுவதை நிறுத்திவிட்டு, சகோதரிகளிடத்திலே ஓடி, அவர்கட்கு அரிசியோ அல்லது அன்னமோ கொடுக்குமாறு வற்புறுத்துவான். சாதாரணமாகப் பெரியவர்கள் இம்மா திரியான பிச்சைக்காரர்களது தொடர்ந்த படைஎடுப் பைக்கண்டு பொறுக்கமாட்டாது எரிந்து கோபங்கொள் வதுண்டு. இத்தகைய நல்ல குணங்களைக் கொண்டே அவ தார புருஷர் என்பதை யாரும் தீர்மானிக்கலாம். அல் லவா?
பூரீராமபிரான் இவ்வுலகில் அவதரித்தபோது ஏழு ரிஷிகள் மாத்திரமே, அவர் ஈசுவராவதாரமென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர். எனவே இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்தபோதிலும் சரியே சிலர்மட்டுமே அவனு டைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.
தீபம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை விளக்கிக் காட்டுமாயினும் அதனடியில் எப்போதும் இருட்டாகத் தான் இருக்கும். அதுபோல, அவதார புருஷருக்கு வெகு சமீபத்தில், இருப்பவர்கள் அவரைத் தெரிந்துகொள்வ தில்லை. தூரத்திலுள்ளவர்கள் அவ்வவதார புருஷரு டைய ஆத்மஜோதியாலும் அசாதாரணமான சக்தியா லும் மனங்கனிந்து இன்பமுறுகின்றனர்.
கடவுள் ஏன் மனிதவடிவுடன் அவதாரம் செய்கின் முர்? பூரண தெய்வத்தன்மையை மனிதனுக்குக் காண் பிக்கவே பகவான் அவதாரம் செய்கின்றர். இப்பகவத் அவதாரங்கள் மூலமாக மனிதன் கடவுளோடு பேசுகின் முன் ; கடவுளின் திருவிளையாடல்களை அவனுல் காணவும் முடிகின்றது. பகவான் தமது ஒப்பற்ற திவ்யானந்தத்தை தாமே முழுதும் அனுபவிப்பது போலுள்ளது இப்படி அவ தாரங்கள் எடுப்பது. புஷ்பத்தின் ஒரு பாகத்தில்தான் சிறிது தேன் உள்ளது. அதேபோல, பகவானது அற்ப பாகந்தான் பக்தர் மூலமாகவும் மகான்கள் மூலமாகவும் வெளிப்படுகின்றது. புஷ்பத்தை உறிஞ்சினுல் ஒரு சிறிது தேன்தான் கிடைக்கும். ஆனல், அவதார புருஷர்களி டத்தோ, "எல்லாம் தேனே' அவர்கள் ஆனந்த வடிவி னரே. இன்ப சொரூபமே.
ஸ+ஆ+யி=ஸாயி, ஸ- ஸத்தியமானது. சஞதனமா னது. சர்வமும்தானேயாவது. சம்மதமானது என்று

Page 5
6 "ஆத்மஜோதி
பொருள். 'ஆ' 'து' 'யி சேர்ந்து ஆயி ஆனது. ஆயி என் ருல் அம்மா என்பது பொருள். •፥
பகவானின் அவதாரம் சக்தியோடு கூடிய சிவரூபம், இந்த அவதாரத்தில் இது ஒரு பெரும் இரகசியம். மற்றைய அவதாரங்களில் சக்தி வேறு தான் வேருக இரட்டை வடிவங்களில் அவதரித்து உலகைக்காப்பாற்றி அருளிய பர மன் இப்பொழுது அப்படியின்றி இரண்டில்லாத ஒன்ருக அதாவது அத்வைத மூர்த்தியாக தானேயாகி அவதரித்து உலகிற்கு நன்மை செய்து வருகிருர், தானே தாய், தானே தகப்பன் என்பதற்கு எவ்விதமும் சந்தேகம் இல்லை. இது சத்தியமான விஷயம்.
சாதாரணமாக மனிதர்களில் பெற்றதாய்க்கு உள்ள பொறுப்பு, தந்தைக்கு இராது. ஒரு தந்தை எந்த சின்ன தவறைச் செய்யும் குழந்தையையும் மன்னிக்க மாட்டார். தாய் அப்படியில்லை. எல்லாக்கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு பிள்ளைகளை நன்மை அடைய முயற்சி செய்வாளே அன்றி தந்தையைப்போல கடினமாக இருக்க மாட்டாள். சாதாரண தாய்க்கே இப்புடியான குணமாயின் இறைவணு கிய தாய் எத்தகைய அன்புடையவனுய் இருப்பான்.
சாதனை இல்லாது எதனையும் சாதிக்க முடியாது. வய தோடு புத்தியும் வளரவேண்டும். மாடுவளர வளர அதன் வால் கீழேயே போவது போலச் சிலருடைய உடம்பு வளர புத்தி கீழ் நோக்கியே செல்கின்றது. காரணம் சாதனை இல்லாமையே. ہ" , ۔;
நமக்கு எல்லாம் தெரிந்ததென்று எண்ணி அகங்காரம் அடைவது, ஒரு பெரிய கஷ்டம். புராண வைராக்கியம், பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று மூன்று வித வைராக்கியங்கள் உண்டு. அந்தந்தச் சமயங்களில் விரக்தி அடைவது எல்லோருக்கும் சகசமே யன்றி அது கடைசி வரையில் நிற்பதில்லை. ஆனல் இப்படி வைராக் கியங்கள் நிலைத்துநிற்காவிடினும் அடிக்கடிவருவது நல்லது. பகவானுடைய உபதேசங்களை நேரில் கேட்கும் போதும் வாசித்து அறியும் போதும் இப்படி வைராக்கியங்கள் தோன்றுவதுண்டு. ஆனல் சாதனை முயர்ச்சி இல்லாமையி ஞலே அவற்றைக்கேட்டபோதே வைராக்கியமுந்தோன்றி மறைந்து விடுகின்றது.

ஆத்மஜோதி W 7 சுவாமி ராமதாஸ் அருளுரைகள்:
கடவுள் அளிக்க மறுத்ததை அடியார்கள் அளிப்பார்கள்
தமிழ் வடிவம்:- ud. சி. சிதம்பரப்பிள்ளை
ஒரு கிராமத்தில் விஷ்ணு பக்தர் ஒருவர் இருந்தார். அவர் விவாகமாகிப் பல்லா ண்டாகி விட்டது. பல விரதங் கள் இருந்தும் புத்திர பாக்கிய மற்றவராகி இருந்தார். ஒருநாள் இக்கிராமத்தினுடாக நாரத மாமுனிவர் சென் முர். விஷ்ணுபக்தர் முணிபுங்கவரை கண்டதும் அவர் "எங் குபோகின்ருர்?' என விஞரவிஞர். தான் வைகுந்தம் போ வதாக கூறினர். " தயவு செய்து எனக்கு எதற்காக இது வரை புத்திரபாக்கியம் அளிக்கவில்லை' என்பதனையும், "எப்போது அப்பாக்கியம் அளிக்க இருக்கிருர்' என்பத னையும் அறிந்து வரவேண்டும்' என்று நாரத மாமுனியை அப்பக்தன் கேட்டு நின் ருர்,
வைகுந்தம் அடைந்ததும் பக்தனுடைய மனக் குறை யைப்பற்றி பிரலாபித்தார். இப்பத்தனுக்கு இப்பிறப்பில் பிள்ளைப் பாக்கியம் கிடைப்பதற்கு முறை இல்லை' என்று திருமால் விடையிறுத்தார்.
இச் செய்தியை, விஷ்ணு பக்தனுக்குக் கூற நாரதமா முனி விரும்பவில்லை. இது அவனுக்கு வருத்தமாக இருக்கு மல்லவா! எனவே அவர் அவனிடம் செல்ல வில்லை. பல வருடங்கள் சென்றுவிட்டன. விஷ்ணுபக்தனை மீளவும் நார தமுனிவர் காண்பதற்கு, பக்தனுடைய வீட்டுக்குச் சென்ற தும் மூன்று அழகான குழந்தைகள் வீட்டு முற்றத்தில் நின்று விளையாடிக்கொண்டு நின்றனர். அவர்கள் அந்தப் பக்தனுடைய பாலர்களே எனவும் நாரத முனிவர் அறிந்து அதிசயமானர். பக்தனுக்கு எவ்வாறு புத்திரப்பேறு கிடைத் தன? என்பதனை ஆராய்ந்து அறிவதில் முனையலாஞரர்.

Page 6
8 ஆத்மஜோதி
'யான் தங்கள் தரிசனத்தின் பின்பு ஒரு மகா சந்நியா சியைத் தரிசிக்கும் வாய்ப்பும் பெற்று அவருக்குச் சேவைபுரி யும் வாய்ப்பினையும் அடைந்தேன். தன்னலமற்ற எனது சேவையை மெச்சி, எனக்கு என்ன வேண்டுமென வினவி ஞர். எனக்கு எனது சந்ததி விளங்க ஒரு புத்திரன் வேண் டும் என நின்றேன்'. அதற்கு அவர், "உனக்கு ஒரு மகன் அல்ல, மூவர்தருவேன்" என்ருர்,
இச் செய்தியைக் கேட்டதும் தாமதியாது வைகுந்த மடைந்து "எதற்காக இவ்வித பொய்யுரை கூறினிர்! " என்று விஷ்ணுவை வினவினர் நாரத மாமுனி
விஷ்ணுதேவர் புன்னகை புரிந்துவிட்டு, ** அப்படியாயின் உண்மையாக ஒரு மகா தபசியாலன்றி வேறு ஒருவராலும் விதியை மாற்ற இயலாதன் ருே' என விடை பகர்ந்தார்.
கடவுள் அளிக்க மறுத்ததை அடியார்கன் அளிப்பார் கள் என்பது உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
மரீமத் சாந்தானந்த சுவாமிகள் அருள் வாக்கு
பூரீ ஸத்குருவின் திருவடித் தியானம் அஞ்ஞானமாகிற துஷ்டகிரஹத்தைச் சமனம் செய்து விடும். ஈசன் சொரூபமாக அனைத்தையும் காண்பதே உனது லட்சியமாகிவிட வேண்டும்.
குருவையும். தெய்வத்தையும் அவமதித்தவன் சண்டாளனுவான். ,
கடவுளைச் சரணமடைந்தவனின், முன் செய்த பாவங்கள் வெந்து சாம்பலாகிப்போகும்.
கடவுளின் தோற்றமே உலகம் மறந்துவிடாதே பாவிக்கு உலகப்பற்று அதிகரித்துக்கொண்டே போகும்.
நீ எதையும் கடவுளிடமிருந்து வேண்டாதே, உன்னையே கடவுளுக்குக் கொடுத்துவிடு, கவலையற்றுப் போகும். vn
ஆசை முடிவில் உன்னை நரகத்தில் கொண்டுவிடும். ஏ மனமே! செருக்குற்று அலையாதே, உன்னிலும் மிக்க
நல்லவர்கள் பல்லாயிரம் பேர்கள் இருக்கிறர்கள்.

ஆத்மஜோதி 9 சந்திரசேகரேந்திர சுவாமிகள் ஃ9ருள்வாக்கு
கேள்வி : மக்கள் நல்லொழுக்கத்தின் மீது, திரைப்படத் தின் ஆதிக்கத்தைப் பற்றிய சுவாமிகளின் ஆய்வுரை? ་་
சுவாமிகள்: அணு ஆயுதத்தைப் போல திரைப்படமும்
ஆக்கம் அழிவு இரண்டு சக்திகளையும் தன்ன கத்தே கொண்டுள்ளது. அதனை அதன் கலையுருவிலே, விஞ்ஞானத்திற்கான முறையிலே வரவேற்கிறேன். ஆனல் என்னைப் பொறுத்தவரையில் அதன் உபயோகம் மிகவும் வரையறைக்குட்பட்டது. ஆதாரச் சான்றுக்காகவும், பூகோளம், விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல்துறை கள் முதலியவற்றில் கல்விக்காக வேண்டிய படங்கள் மனித குலத்தின் தன்மைக்காகவேண்டியவை. சமூக அடிப்படை யில் என்று சொல்லப்படும் நீளபடங்கள் வர, எவ்வித நியாயமும் கிடையாது. சமூக சீர்திருத்தம் நமது திரைப் படங்களின் குறிக்கோளாக இருக்க முடியாது. சினிமாத் துறையைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு. தங்களை மிக வும் வெளிக்காட்டிக் கொண்டுள்ள காரணத்தால் தற்கா லத்திய பெண்களிடம் நாணமும் மடமையும் நற்செல்வ மாகத் திகழாதிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். பண்டைய இந்தியாவில் பெண்கள் தங்கள் கணவன்மார் களிடம் சுயவிருப்புடன் எவ்விதம் குருவிடம் பயபக்தி யுடன் நடப்பார்களோ அதுபோன்று சிஷ்யைகளாகச் சரணடைந்தனர்.
திரைப்படத்தின் மோகம் நல்லொழுக்கத்தினின்று பயங்கரமாக தவறுதலில் முடிவுற்றது. திரைப்படங்கள் செய்யக்கூடிய விஷமங்களை மனிதனல் எண்ணிப் பார்க்க முடியாது. பழமையான இந்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் காப்பாற்ற முடியாத அளவிற்குக்

Page 7
O ஆத்மஜோதி
கெட்டிருக்கிருர்கள். நான் முன்பே சொல்லியபடி அணுச் சக்தியைப் போல திரைப்படமும் ஆக்கத் தொழில்களுக் குப் பயன்படுத்தலாம். அது ஒரு கருவிதான். அதனை மேலான அல்லது கீழான காரியங்களுக்கு உபயோகப்படுத் தலாம். மேடையில் பெண்கள் நடிப்பது சரியே. அது அவர்களின் பாரம்பரிய கடமையாகும். இந்தத் தொழி லில் ஈடுபட்ட சமுதாயத்தை மாரத புத்திரர், கலாவந்த், பரதராஜுலு என்பவர்களைச் சாதிய அடிப்படையில் காண லாம். அவர்களுக்கு நடிப்புத்தான் தொழில். அதுதான் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தொழில். இவர்களைத் தவிர வேறு குலப்பெண்கள் எவ்வித பாகமும் நடிக்க அனு மதிக்கப்படமாட்டார்கள். தொழிலாகக் கொண்ட பெண் களும்தங்கள் கணவர்களுக்குதவியாகத்தான் மேடை மீது தோன்றுவர். நடிசூத்ர தாரன் என்ற பரம்பரையைப் பற்றித் தனக்கு நன்ருகத் தெரியும் என்று எண்ணுகிறேன்: மிகப் பழமையான காலத்தைத்தான், நிலையைத்தான் என் மனதில் கொண்டிருக்கிறேன். அதில் ஒழுக்கக் கட்டுப்பாட் டை எவரும் மீறியது கிடையாது. தாங்களே சட்டமியற் றியவர்கள் எனத் திரியும் இன்றைய திரைப்படத் தயாரிப் பாளர்களுக்கு இன்றைய காலத்தில் சட்டமியற்றுவது யார்? அவர்கள் உண்மையிலேயே உல்லாசப் பயணிகளாகத் திகழ் கின்றனர். x ... " கேள்வி : புராண அடிப்படையினை வைத்து எடுக்கப் படும் படங்களைச் சுவாமிகள் அனுமதிக்க வில்லை யென்று எண்ணுகிறேன். அதுசரிதான?
சுவாமிகள்: நான் திரைப்படங்கள் சமூக இயலிலேயே வரக்கூடாது என்று வலியுறுத்தும் போது ஆணும் பெண்ணும் கடவுள் அவர்தம் தேவி யராகவும் வரும் துர்ப்பாக்கிய நிலை தோன்று வதற்கே இல்லை.
கேள்வி : மேலைநாட்டினர் கடவுளைப்பற்றிக் கொண்
டுள்ள முடிவுக்கும் இந்தியர் முடிவுக்கும் முக்கியமான வேறுபாடுகள் என்ன?

ஆத்மஜோதி I
சுவாமிகள்: கடவுளைப் பற்றிய முடிவில் எப்படி வேறுபாடு கொண்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியும்? ஆஞல் அவற்றைப்பற்றிய மனத்துணிவுகளில் இருக்கலாம் மேலைநாடுகளில் கடவுளை அடைய மதத்தைக் கைக்கொள்கி முன்,இந்தியாவில் நாம் தத்துவப் பாதையைக் கைக்கொள் கிருேம், இக்கடினமான பிரயாணத்திற்கு நமது சடங்கு கள், விழாக்கள், விரதங்கள் எல்லாம் வழிகாட்டியாகத் திகழ்கின்றன. மெய்ஞ்ஞானத்தைத் தேடும் உணர்வுஇவ்வுணர்வினில் என்று பக்தனின் மனம் ஈடுபடுகிறதோ அப்பொழுதே அவனது காரியமும் சித்தியடைந்துவிடு கிறது. , ʻ v கேள்வி : தற்போது விஞ்ஞானத்தில் போற்றக்கூடிய அளவிற்கு உண்டாகி இருக்கும் வளர்ச்சி மனி தனின் மத நம்பிக்கையின் பேரில் எவ்வித மாறுதலை அளிக்குமென்று சுவாமிகளின் அபிப்பிராயத்தில் கருதுகிறீர் கள் என்று சொல்ல முடியுமா? -
சுவாமிகள்: விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒன்ருே டொன்று நெருங்கிவருகிறது. விஞ்ஞானி இன்று எல்லாவற்றையும் சக்தியாக மாற்ற முடியுமென்ற முடிவுக்கு வருகிருன், நான் அதைப் பரா சக்தி என்கிறேன். ஆதலின் அவர்கள் தங்களை அறியாமலே அத்துவைதிகளின் பங்கில் வந்து விழுகின்றனர். உஷ்ணம் மின்சாரம் என்ற பல்வேறு பெயர்களில் பல்வேறு நிலைகளி லிருப்பினும் சக்தி என்பதுதான் முடிவான திறன் என்ற விஞ்ஞானிகளின் முடிவு அவர்களைச் சங்கரரின் மத வேதாந் தத்தினிடம் இழுத்துச் செல்கிறது. நம்மைப் பார்த்துக் கொள்வது - ஆன்மா - பார்க்கப்படுவது இவையிரண்டும் முடிவில் ஒன்ருகிவிடுகிறது. விஞ்ஞானம் அதன் அழிவுச் சக்தியில் வேறு விஷயமாகும். s -
முட்டாள் பொருமைப்பட்டு துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்
உலக இன்பமெல்லாம் இறுதியில் துன்பமாகவே முடியும்.

Page 8
2 ஆத்மஜோதி
ஓம் பரீகர்மேத்திபாய்
அன்னை கர்மேத்திபாய் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கண்டேலா என்ற சிற் றுாரில் பிறந்தார். அந்தணர் மரபில் பிறந்த இவர் சிறந்த பேரழகு இனிமையான குரலும் இயற்கையாகவே இவரி டம் அமைந்திருந்தன. இவருடைய தகப்பஞர் பெயர் பரசுராமன் என்பதாகும். இவருடைய வம்சம் பரம்பரை பரம்பரையாக அவ்வூர் மகாராஜாவிடம் புரோகிதரா கவே பணியாற்றி வந்தது. எனவே இக் குடும்பத்திற்கு அரசு செல்வாக்கும், மக்கள் போற்றுதலும் மிகுந்திருந் தவர்.
குழந்தை கர்மேத்திபாய் காலப்போக்கில் மங்கையாக
மலர்ந்தாள்.
பெற்றேர்கள் இவருடைய திருமணத்திற்காக மும் முரமாக உழைக்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்ணுற்ற தர்மேத்திபாய் தனக்குள்ளே பேசிக்கொண்டாள். *"நான் இந்த பிரபஞ்சநாயகனையே மணந்துகொண்டேன். அந்த வேணு கோபாலனே என் கணவர். ஒருத்திக்கு ஒரு வர் தானே கணவராக இருக்க முடியும். அவ்வாறு இருக்க வேருெரு மானிடனை எவ்வாறு திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தனக்குள்ளேயே பேசிக்கொண் டாள். அவனின் வேணு கானத்திலேயே என்னைக்கரைத் துக்கொண்டேன். அவன் புல்லாங்குழலிலிருந்து வரும் இனியநாதம் என்னைக்கட்டித் தழுவி முத்தமிட்டுக் கடைத் தேற்றுகிறது. அவனின் திவ்வியப் பார்வையில் நான் உரு கிப்போனேன். அந்த முரளிதரனே என் மணவாளன். எல்லாவற்றையும் படைத்து அவற்றிற்கு இன்பமளிக்கும் என் நாயகன். என் பர்த்தா. என்னை மட்டுமா விட்டு விடுவார்? அப்படித்தான் என்னை விட்டுவிடட்டுமே? அவர் விதித்த விதிக்கு அவரே பயந்து என்னிடமல்லவா சர ணடைய வேண்டும். அவர் சத்தியநாதன் . என்னை ஒரு போதும் கைவிடமாட்டார். அவர் சட்டநாதன் என்னை நிச்சயம் மணப்பார். நான் யாருக்கு அஞ்சவேண்டும்?

ஆத்மஜோதி 13
என்னுள்ளே இருக்கும் நாயகனை நான் தலைவணங்கி வணங்குவேன். ஆடுவேன், பாடுவேன், அவனுக்குப் பாய முது ஊட்டுவேன். என்றெல்லாம் தன் தெய்வநாயகனை வனைந்து வன்ந்து போற்றினுள். புகழ்ந்தாள். அந்தப் க்புகழ்ப்பணியிலேயே தன்னை மறந்தாள். பெற்றேர்கள் அதிதீவிரமாக திருமணப் பணியில் ஈடுபடவே அவள் வீட்டை விட்டே புறப்பட்டு விட்டாள். மறுநாள் ஊரெங் கும் இதே பேச்சு. தந்தை அரசனிடம் சேதி சொன்னன். அரசன் எல்லாத்திக்குகளிலும் ஆட்களை அனுப்பி தேட ஆணையிட்டான்.
ஒரு சமயம் அன்னை மதுராவை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் ஒர் ஒட்டகம் இறந்து கிடந்திருந் தது. அதன் வயிற்றை பருந்து, பூனை போன்றவை கொத்தி கொத்தி கூடாரமாக ஆக்கியிருந்தது. அக்கூட்டினுள் மூன்று நாள் வாழ்ந்தாள் அன்னை பின் அன்னை மதுரா தவுக்கு சென்ருர். அங்கிருந்து ஹரித்துவாருக்குச் சென்ருர், சாதுக்களுடைய் நட்பு கிடைக்கவே ஹரித்துவாருக்குச் சென் ருர். பிருந்தா வனத்திலுள்ள காடுகளில் உள்ள மரங் களின் மீது ஏறி அன்னை தினந்தோறும் தியானம் செய்வது வழக்கம். தந்தைக்கே கர்மேத்திபாய் எங்கிருக்கிருர் என். பது தெரிந்து விட்டது. தந்தை வந்தார். கர்மேத்தியிடம் மண்டியிட்டு வேண்டினர். அவர் அன்னையைத் தன் வீட் டுக்கு வரும்படி அழைத்தார்.
அன்னை அதி தீவிரமாக ஞானப்பணியில் ஆழ்ந்தார். சமாதியினுள் ஆழ்ந்த அவரை வெளிஉலகுக்குக் கொண்டுவர பல மணி நேரம் பிடித்தது. அவர் உடலைப்பிடித்து உலுக் கவே சற்று நேரம் கழித்து கண் திறந்து பார்த்தாள். தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார் தந்தையார். அன்னை மறுத்துவிட்டார். பின் தந்தைக்கே உபதேசம் செய்தார். பின் அவ்வூர் அரசன் வந்தான். அன்னைக்கு ஒர் அழகிய கட் டிடம் கட்டிக்கொடுத்தான்,
அன்னை கர் மேத்திபாய் இறைவன் திருவருளுக்காக பல . ஆண்டுகள் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார். அப்போதெல் லாம் அவருக்கு சமாதி கைகூடியது. எப்போதெல்லாம் இறைவனை ஆழ்ந்து நினைக்கின்ருரோ அப்போது எல்லாம் அவர் சமாதி நிலை வந்தடைந்தார். கடவுளாகவே இருக் கின்ற கண்ணன் கணவனுக வந்து அவளது கைத்தலம் பற். றினன்.

Page 9
4 ஆத்மஜோதி குறுமுனி அகஸ்தியர் தீர்த்தமாடிய 666Oofu so
மகாவலி கங்கையின் மகத்துவம் பற்றிக் கூறும் புராண வரலாறுகள்
ஆடி அமாவாசையன்று தீர்த்த மகோற்சவம்
- க. வேலாயுதம் - தம்பலகமம் -
பாரத நாட்டில் கங்கை தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படுவது போல் ஈழத்தில் மகாவலி கங்கை தெய்வீகம் வாய்ந்த புனித தீர்த்தமாகச் சைவர்களால் மதித்துப் போற்றப்பட்டு வரு கின்றது. தொன்மை மிக்கதும் சரித்திரப்பிரசித்தி வாய்ந் ததுமான திருகோணமலை கோணேஸ்வரத்துக்கும் மகாவலி கங்கைக்கும் நெருங்கிய ஆன்மீகத் தொடர்புண்டு அன்றி யும் இந்நதி ஈழநாட்டின் கழனிகளை நிறைத்து விவசாயத் துக்கு பேருதவி புரிந்து வருவதால் நாட்டில் உள்ள எல்லா இன-மத மக்களுக்கும் உணவளித்து உயிரூட்டும் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. இந்நதி யின் ஆன்மீகச் சிறப்புப்பற்றி கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணுசலப் புராணத்தில் தீர்த்தகைப் படலம் நூற்றி முப்பத்திரண்டு செய்யுள்களில் இந்நதியின் தெய்வீகச் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. இந்நதியின் பெருமையை எடுத்துக்கூறும் கரை சேர் புராணம் என்ற பெயருடன் ஒரு தனி நூலே உள்ளது.
ஒவ்வொரு வருடமும் வரும் ஆடி அமாவாசை தினத் தில் இந்நதியில் தீர்த்த மகோற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். இந்த தீர்த்த வைபவத்தை தம்பலகமம் கோணேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்த உடையார் என்று நாமம் தாங்கிய மகாதேவன் மேளதாளங்களுடன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி கங்கையில் பக்தர்களுடன் தீர்த்தமாடி அடியார்களுக்கு அருள்புரிவார். அச்சமயம் இந்நதியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் கரைசேர் புரா ணம் வாசிக்கப்பட்டு அதற்கு விரிவுரை நிகழ்த்தப்படும். விரதகாரர்களும் பிறரும் புராண வாசிப்பை மிகவும் பக்தி சிரத்தையோடு கேட்டுப் பயனடைவர். கோணேஸ்வரத் தையும் இந்த மகா நதியையும் சம்பந்தப்படுத்தி மிகப்

ஆத்மஜோதி 15 பழைய கதையொன்று ஸ்தல புராணத்தில் கூறப்படுகின் றது. அது பின் வருமாறு:
இமாசல புத்திரியான அம்பிகைக்கும் சிவபெருமானுக் கும் இமயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற இருந் தது. அந்த வைபவத்தைக் கண்டுகளித்து ஆராதிப்பதற் காக தேவர்களும் ரிஷிகளும் கணங்களும் அங்கு வந்து கூடி னர். பனிக் கடலை உண்டு தேவர்களுக்குச் சகாயம் புரிந்த தவசிரேஷ்டரான அகஸ்திய முனிவரும் அங்கிருந்தார். அகிலத்திலுள்ள அனைவரும் இமயத்தில் வந்து குழுமிய தால் உலகில் வடபால் தாழ்ந்து தென்பால் உயர்ந்தது. அதைக் கண்டு அமரர்கள் அச்சுறுத்தினர். அச்சமயத்தைப் பயன்படுத்தி இறைவன் குள்ள உருவினரான அகஸ்திய முனிவரின் பெருமையை அங்குள்ளோருக்கு உணர்த்த விரும்பி அன்பனே எல்லோரும் இங்கு வந்து குழுமியதால் வடபால் தாழ்ந்துள்ளது. இதைச் சமன் செய்யும் சிறப்பு உன்னிடமே உண்டு ஆகையால் நீ தென்பகுதி செல்லுதி என்று பணித்தார். அதுகேட்டுக் கலக்கமடைந்த குறுமுனி ஐயனே நான் தங்களது திருக்கல் பாணச் சிறப்பைக் கண் காணவேண்டுமென்ற ஆவலோடு வந்திருக்கிறேன் ன்ருர், அதுகேட்ட ஈசன் தென் கைலை என்று போற்றப் படும் கோணேஸ்வரத்துக்குசெல். அங்கே உன் ஆசை நிறை வேற்றப்படும் என்ருர், அரனைப் பணிந்தெழுந்த அகஸ்தி ர் கற்பில் சிறந்த மனையாளான லோபா முத்திரையுடன் தன் பாரதத்திலுள்ள சில தலங்களை வழிபட்டு ஈழம்வந்து காணேஸ்வரத்தை வழிபட்டுக்கொண்டிருந்தனர். இறை வன் அகஸ்திய முனிவருக்கு புகன்றபடியே ஒருநாள் தம்மையோடு திருக்கல்யாண கோலத்தில் காட்சி தந்தார்,
இமைய மால் வர்ை யனருளுட னெங்கோனெச் சராசரங்களுமீன்ற வுமையினை மணந்த கோலத்தின் காட்சியுள்ளன யாவையும் முயர்ந்த ைேமயமால் கோணவரையி னல்லருளன் நிருவிளையாடலால் காட்ட வமையிலானந்தக் களிப்புடன் கண்டே யகங்கசிந்தன்பு கூர்ந்தனனே
(திருக்கோணுசலப்புராணம்)
இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அகஸ்தியர் மகாவலி கங்கையின் பெருமையை உணர்ந்திருந்தார். ஆதலால் மனைவியை அழைத் து க் கொண்டு கங்கையை அடைந்தார். கங்கைக் கரை வழியே அவர்கள் சென்றபோது அங்கே சுயம்பு லிங்கம் ஒன்றைக் கண்டனர்.

Page 10
16 ஆத்மஜோதி
நதிக் கொரு மருங்கதாக நனைமலர்ச் சினமென்றேற்ற
குதித்து வீழ் துடவை சூழுங் கோதுறு கரசை யென்னும்
பதிக்கிடை சென்று வேத முன்வரன் கன்னியோ டுங்
துதிக்கரும் சுயம்புலிங்க ம்ொன்றவன் தோன்றக் கண்டான்
)திருக்கோணுசல புராணம்( ܗܝ
கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோ ஞசல புராணம் இறைவனின் திருக்கல்யாணச் சிறப்பை யும் அகஸ்தியரும் மனைவியும் திருக்கோணசலம் வந்து கல் யாணக்காட்சியைக் கண்டதையும் அகஸ்தியப்படலம் என் னும் அதிகாரத்தில் உள்ள எண்பத்தேழு பாடல்களால் எடுத்துக்கூறுகிறது. மகாவலி கங்கையின் தீர்த்தப் பெரு மையையும் அங்கு முனிவர் தீர்த்தம்ாடிய அகஸ்திய ஸ்தா பனம் என்னும் வழிபாட்டு ஸ்தலத்தை ஏற்படுத்தியதை மேற்படி புராணம் தீர்த்தகைப்படலம் என்னும் பகுதியி லுள்ள நூற்றிமுப்பத்தி மூன்று செய்யுள்களால் எடுத்துக் கூறுகின்றது. மிகப்பழைய நூலான திருக்கோணசலப் புரா -ணம் மறுபதிப்புச் செய்யாததால் காணக்கிடைக்காத நூலாக அருகியுள்ளது. மிகுந்த பிரயாசையெடுத்து இப் புராணத்தில் இருந்து சில பாடல்கள் இ க் க ட் டு ரை யி ல் சேர்க்கப்பட்டுள்ளன நதிக்கரையோரம் லிங்கம் ஒன்று தோன்றுவதைக்கண்டு மெய் சிலிர்த்து பக்திப் பரவசம் கொண்ட முனிவரின் மனைவியான லோபா முத்திரை நாய கரைப் பார்த்து எந்தையே இந்தத் தெய்வீக நதியின் சிறப் பை எனக்குக் கூறவேண்டும் என்று இறைஞ்சினுள்.
சித்தனை அளித்த வள்ளல் செப்பிய ததனைலோபா முத்திரை கேட்டுச் சிந்தை முதிரு மன்புடையாளாகி
பூத்தியோடவன்றன் பாதம் பணிந்து நின்றெந் தாயிந்த
வித்தக நதியின் மேன்மை விளம்பிடவேண்டுமென்ருள்
(திருக்கோணசலப்புராணம்) முனிக்கரசரான அகஸ்தியர் தம்மனை விக்கு மகாவலி
கங்கையின் தீர்த்தச் சிறப்பை பலவிதமாக விளக்கிக் கூறுகி ருர், மனிதர்கள் இந்நதியில் பக்தியுடன் நீராடி இறைவனை ஸ்தோத்தரித்தால் தேவர்கள் ஆவார்கள் என்றும் தேவர் கள் ஆடில் மேலான ப்தவிகளை அடைவார்கள் என்றும் விலங்குகள் பறவை9ள் ஆடினலும் பெரும் புண்ணியம் எய்தி மனுக்களாகப் பிறக்கும் பாக்கியம் கிட்டும் என்றும் குறிப் பிட்ட திதிகளில் இந்த நதியில் தீர்த்தமாடுவோர் அடை யும் பலாபலன்களையும் முனிவர் விரித்துக் கூறுகிருர்,

ஆத்மஜோதி 17
ஏவரேயெனினும் இந்த இனிய மாவலி தீர்த்தத்தி
ளுவலோடாடிஞேர்க ளளவிலா வெறுக்கை யோங்கி
மேவரு மின்பந் துய்த்து மிக்க சந்ததியினுேடுந்
தேவர் தம் பதத்திற் சேர்வர் திண்ணமீதாகு மென்றே
(திருக்கோளுசலம்)
முனிவர்பிரான் லிங்கப் பிரதிஷ்டை செய்து ஆரா தித்த இடம் இன்றும் அகஸ்திய தாபனம் என்றே அழைக் கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். பண்டையில் இந்த தீர்த்த ஸ்தலம் கரைசைமா நகரம் என்ற பெயருடன் சைவர்கள் வதியும் பெரிய மாநகரமாகத் திகழ்ந்து இன்று அழிந்த நிலையில் யானைக் கூட்டங்கள் நிறைந்த கொடிய வனமாகக் காணப்படுகின்றது. காடுகளில் எங்கே பார்த் தாலும் கட்டிடச் சிதைவுகளும் கைதேர்ந்த சிற்பர்களால் உருவாக்கப்பட்ட உடைந்த உருவங்களுமாகவே காணப்ப கின்றன. சுமார் ஒரு மிைல் வரை விஸ்தீரண்முள்ள மாபெ ரும் ஆலயம் அழிந்து காணப்படுகின்றது. காடாக உள்ள கரைசமா நகரில் உள்ள சிவலிங்கம் அகஸ்திய முனிவரால் கோணேஸ்வரப் பெருமானின் ஆக்ஞைப்படி ஸ்தாபிக்கப் பட்டதென இத்தீர்த்தப் பெருமையை எடுத்துக் கூறும் திருக்கரைசப்புராணம் கூறுகின்றது. இந்தத் தீர்த்த ஸ்த லத்திலேயே ஆடி அமாவாசைத் தீர்த்தம் ஆடுவது வழக்க மாக இருந்துவந்தது. கரைசையம்பதி என்னும் இந்த ஸ்தலத்துக்கு போவது மிகக்கஷ்டமான வனப்பகு யாக இருப்பதால் தம்பலகமப்பகுதி மக்கள் இந்த மகத் வம் மிக்க தீர்த்தப்பதியை கைவிட்டு கங்கை கடலில் கலக்கும் இடத்தில் ஆடி அமாவாசைத் தினத்தன்று தீர்த் மாடி இறைவழிபாடு இயற்றுகின்றனர். கொட்டியாபுரப் 蠶 உள்ள பக்தர்கள் இத்தினத்தில் மிகச்சிரமப்பட்டு சரைசையம்பதி சென்று தீர்த்தமாடி இறைவழிபாடு செய் நின்றனர்.
பூீமத் சாந்தானந்த சுவாமிகள் அருள் வாக்கு அறிவாளி பிறரை ஒருக்காலும் அவமதிக்கமாட்டான். முட்டாள் பொருமைப்பட்டு துக்கத்தை அனுபவித்துக்கொண் டிருப்பான்.
உலக இன்பமெல்லாம் இறுதியில் துன்பமாகவே முடியும்,

Page 11
巫& ஆத்மஜோதி ஆம்ஹ்ரிம் நமசிவாய
- ழரீமத் அமேதானந்த சுவாமிகள் w
மந்திரம்
*ஒம் ஹ்ரீம் நமசிவாய" என்பது சக்தி பஞ்சாட்சரி
மகா மந்திரம்.
மனனம் செய்கிறவர்களேச் சகலவிதமான துன்பங் களில் இருந்தும் துயரங்களிலிருந்தும் விடுதலை செய்வது என்பது மந்திரம் என்ற சொல்லின் பொருள். மந்திரம் என்ருல் இறைவனின் திருநாமம் என்றும் பொருள்படும். நம்மை வலிந்து பற்றி இழுத்துச் சென்று இறைவன் திரு வடிகளில் லயிக்கும்படி செய்வது நாமம்.
மந்திர விளக்கம் مح۔
ஒம் என்பது பீஜாக்ஷரம். இது நாம் அறியாமல் நம்மிட மிருந்தே வருகின்ற ஒலி. இந்த ஒலி குழந்தை விளையாட்டுக் குதுரகலத்திலும் இருக்கும். நோயாளியின் சோகத் தொனி யிலும் சுரக்கும். அபயக் குரல்களிலும் இவ்வொலி பிறக் கும். அகர உகர மகாரம் சேர்ந்த ஆதி ஓசை இது. "உல கெலாம்” என்று பொருள் உணர்த்துகின்ற ஒப்புயர்விலாத பிரணவ ஒலி "ஓம்."
ஹ்ரீம் என்பது சக்தியைக் குறிக்கும். இதனை உச்சரித் தால் மனம் வாக்கு காயங்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கு கின்றன. இதனுல் புலனடக்கம் உண்டாகின்றது. உடலும் உள்ளமும் உரையும் புனிதமடைவதோடு உறுதியும் சக்தி யும் பெறுகின்றன. நாடி நரம்புகள் தூய்மையும் வலிமை யும் உறுகின்றன. 'ஹ்ரீம்" என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது வாய், மனம், நாவெல்லாம் தித்திக்கின்
др&5] - " .
நம: என்ருல் என்னுடையது இல்லை என்று பொருள் படும். ஆண்டான் நீ அடிமை நான் என்ற சரணுகதித் தத் துவத்தை இச்சொல் விளக்குகின்றது.

ஆத்மஜோதி w 9.
சிவாய என்பது மங்களத்தைக் குறிக்கும். மங்களம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மம்+கழிப்பது=மமதை, அற்று விழுவது என்று பெரியோர்கள் பொருள் கூறுகின்ருர்கள். இதனை ஓயாது உச்சரிப்பதால் 'யான், எனது" என்னும் அகங்கார மமகாரங்கள் அகன்று போகின்றன.
(6)6i இம்மகா மந்திரத்தை அனைவரும் கூடி நாவார மன ம்ார நவிலும்போது நெஞ்சம் நெக்குருகுகின்றது. நினைவு கள் ஒரு மயமாகின்றன. நமது ஞானேந்திரியங்களும் கர் மேந்திரியங்களும் இசைந்து செயல்படுகின்றன. கண்கள் இறைவனின் உருவத்தில் பதிகின்றன. செவிகள் நாமத் தைக் கேட்கின்றன. நாக்கு உச்சரிக்கின்றது. மனம் உருவத் தைத் தியானிக்கின்றது. அறிவு நாம மகிமையில் லயிக்கின் றது. கைகள் மலர்களை பக்தியுடன் சமர்ப்பிக்கின்றன. மலர்கள் நம்மையே குறியீடாகக் காண்பிக்கின்றன.
உலக சாந்திக்கு இதைவிடச் சிறந்த உபாயம் இல்லை. பஞ்சமும் நோயும் பாருலகை வருத்தாமல்காக்க வல்லது இம்மகா மந்திரம். இம்மந்திரத்தின் அதிதேவதையான அம்மையப்பனை உளமார உணர்வதால் உலகெலாம் உய்யும்.
*நாவெலாம் முழங்க வேண்டும்
ஓம் ஹ்ரீம் நமசிவாய நாளெலாம் முழங்க வேண்டும் ஓம் ஹ்ரீம் நமசிவாய ஊரெலாம் முழங்க வேண்டும் ஓம் ஹ்ரீம் நமசிவாய உலகெலாம் முழங்க வேண்டும்
ஓம் ஹ்ரீம் நமசிவாய'
“ஓம் நமோ நாராயணுய”
எழுத்து ஒலிகளின் சேர்க்கையாலானது. சக்தி பொ ருந்திய எழுத்துக்களின் சேர்க்கையையே மந்திரம் என்கின்
ம். எங்குமாய் எல்லாவுமாய் நிறைந்துள்ள பரமாத் மாவே வேதத்தின் முடிவு. ஒலிவடிவாயும் ஒளிவடிவாயும் இருப்பவனும் அவனே. வேத மந்திர ஸ்வரூபா நமோ நம" என்கின்ருர் அருணகிரி நாதரும்.

Page 12
20 ஆத்மஜோதி மானிடர்களுக்கு இம்மையில் அறம், பொருள்.இன்பம் ஆகிய மூன்றையும் அருளி, மறுமையில் வீடு தரக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்களுள் "ஓம் நமோ நாராயணுய’ என்ப தும் ஒன்று. இதையே நாம் அஷ்டாக்ஷரம் அல்லது எட்டெ ழுத்து மந்திரம் என்கின்ருேம்.
ஒம் என்பது ஒப்பற்ற ஒரே எழுத்தாகிய பிரணவ ஒலி வடிவாகவே பரமாத்மா உள்ளார் என்பதை குறிக்கும்.
நாராயணுயேதி பஞ்சாக்ஷராணி என்பது "நா" ருக் வேதத்தையும், "ரா' யஜுர் வேதத்தையும், "ய’ஸாம வேதத்தையும், “ணு" அதர்வண வேதத்தையும் குறிக்கின் றன. இந்த நான்கு வேதங்களாயும், வேதங்களுக்கு அப் பாற்பட்டவனயும் உள்ள பரமாத்மாவையே இம் மந்திரச் சொல் குறிக்கின்றது. நாத அந்தமே வேத அந்தம். நாதத் தின் முடிவே வேதத்தின் முடிவு. வேதத்தின் முடிவே முறிமந் நாராயணன் என்பதாம்.
- இம் மஹா மந்திரத்தைப் பாராயணம் செய்வதால் பெறும் நன்மைகளைத் திருமங்கையாழ்வார் தமது பாசுரத் தில் அருமையாக விளக்கிக் காட்டுகிறர்.
குலந்தரும்; செல்வந் தந்திடும்; அடியார் படுதுய
ராவின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும்; நீள்வீசும் பருளும்; அருளொடு
பெருநில மளிக்கும்;
வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற தாயினும்
ஆயின செய்யும்;
நலந்தருஞ்சொல்லை நான் கண்டு கொண்டேன்;
நாராயணுவென்னும் நாமம்"
ஒழுக்க சீலர்களாய், அன்ருட வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி, எல்லா நன்மைகளையும் அடையப் பெற்று மறுமையில் முக்தி இன்பத்தையும் அளிக்கவல்ல இம் மஹா மந்திரத்தைப் பாராயணம் செய்து இடர் நீங்கி இன்பம் எய்தலாம்.

ஆத்மஜோதி &蓬
மகா மந்திர கோடி அர்ச்சனையின் உண்மை
- ஜீமத் சரவளுனந்த சுவாமிகள் -
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி என்பது, நித்திய நிறைவுடைய எல் லாம் வல்ல கடவுள் உண்மை வடிவமாயும், அதன் இயற் கைத் தன்மையாயும், அகம் இருந்து, ஆனந்தமாய் அனுப விக்கப் படுவதாயும், உள்ள ஒரு மந்திர வாசகம் ஆகும்.
"அகண்ட ஜோதியான பரம்பொருளே நம் உண்ண்ம ஒளியாய், நாமாய்,தலைநடுவுள் விளங்கி நின்று,பக்குவத்தே அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தை வழங்கி வாழ்விக்கவுள் ளது. இந்த “அருட்பெருஞ்ஜோதி" யைச் சத்விசாரத்தால் அறிந்து அடைந்துநிற்பது முதல்நிலையாகும். அப்படி இருந்து கொண்டு சூழநோக்கும்போது, எவர் உள்ளும், எதன் அகத் தும், அவ்வருட்ஜோதி பதியே விளங்கக் கண்டு இயன்ற வண்ணம் தயவு அல்லது கருணை புரிந்து கொண்டு இருத்த லே இறை இன்ப அனுபவம் பெறும் வழி ஆகும். அருட்பெ ருஞ்ஜோதி அக வடிவிலிருந்து தனிப்பெருங்கருணைச் செயல் வெளிப்படச் செய்வது இரண்டாம்படியாக "அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை" எனக் குறிக்கப்படுகின்றது. கருணைச் செயலால் வெளியே பரவிக் கொண்டே இருக்கும் "அருட்பெருஞ்ஜோதி*யே மூன்ரும் அனுபவ நிலையைச் சுட்டுவதாம். இவ்வண்ணம் அருட்பெருஞ்ஜோதிக் கதிர் வீச்சு எப்பக்கமும், எப்போதும் பரவிச் சென்று அனைத்து உலகுக்கும் இன்பு செய்து கொண்டு தானே நிறையின்பில் நிலவுவது சுத்த சன்மார்க்க அனுபவம்.
மேற்படி இன்பானுபவ சித்தியின் பொருட்டே, அம்
மந்திர வடிவில் இருந்து கொண்டு, தயவோடு வாழ்வதே அருட்சித்திபெறும், கோடாகோடி அர்ச்சனையின் பயணுகும்.

Page 13
22 ஆத்மஜோதி
சமயநெறிகளில் குறிக்கப்பட்ட ஆண்டவன் திருவடிக் குச் செய்யும் அருச்சனை எல்லாம், புறத்தோ அகத்தோ போவித்துக் கொள்ளப்படும் பதியின் ஏகதேச அருளைக் கொண்டு ஓரளவு இன்புறச் செய்யும் எக்கடவுள் உண்மை யையும் அருட்சோதிமயமாய்க் கண்டு, எவரும், மக்கள் சமுதாயம் முழுமையும் இன்பில் தழைத்தோங்கச் செய் வது, எம்மந்திரத்திற்கும் உண்மையில் அனுபவப் பொரு ளாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியே ஆகும்.
எத் தெய்வமும் - அருட்பெருஞ்ஜோதி வடிவே.
எம் மந்திரமும் அரும்பெருஞ்ஜோதி ஆற்றலே.
எவர்க்கும் என்றும் இன்ப வாழ்வு அருள்வதும்
அருட்பெருஞ் ஜோதியே!
பகவான் ரீ சத்திய சாயி வாபாவின் அருள் வாக்கு
களங்கமற்ற சீலத்தை உண்டாக்கும் அருங்குணங்களுள் அதியுயர்ந்தவை-அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, உறுதியான நிலை, அறம் என்பவையாம்.
மனிதன் தன்னில் எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் உடையவனுக இருக்கிருனே அத்துணை அன்போடும் நம்பிக் கையோடும் ஏனைய சீவராசிகளை நோக்க வேண்டும்.
உங்களுக்குள்ளே இருக்கும் குற்றங்களையும் பெலவீனங் கக்ாயும் ஆராய்வதே சாதனையின் முதற்படியாகும். அவை கக்ளத் திருத்திப் பூரணத்துவம் பெறவேண்டும்.
உங்களுடைய நாவுக்கினிமையான எந்த நாமத்தின லும் இறைவனை அழைக்கலாம். அல்லது உங்களுடைய ஆச்சரியமானதும் பயமுள்ளதுமான உணர்ச்சிகளுக்குகந்த எந்த ரூபத்திலும் இறைவனை வணங்கலாம்.
இறுமாப்பும் அழுக்காறும் இறைவனிடத்து வைக்கு மன்பொன்றின் தூய்மையைப் பங்கப்படுத்து ம். Y
எத்துணைப் பெரியவர்களாக இருந்தாலும் பிறருடைய குற்றங்களை அற்பமானவையென்றும் புறக்கணிக்கத்தக்க வையேன்றும் எப்போதும் எண்ணுதல் வேண்டும்.

ஆத்மஜோதி 2器
மகாராஷ்டிரத்தின் மெய்யடியார் ஒருவர்
ஞானச்சுடர்
ஏகநாதர் என்ற பெரியார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சிறந்த மெய்யடியார். தினமும் ஹரி கீர்த்தனம் செய்து பக்தி நெறியைப் பரப்பி வந்தார். சீலம் நிறைந்த வர். தேர்ந்த புலவர். மிக இனிமையாகப் பாடுவார்; பரம ஞானி.
ஒரு நாள் அவருடைய இல்லத்தில் ஹசிபஜனை விமரி சையாக நடந்துகொண்டிருந்தது. தினமும் போல் அன்றும் பக்தர் குழாம் குழுமியது. கூட்டத்தினருடன் மூன்று கள் வர்களும் புகுந்தார்கள். இரவு வேளை பஜனை முடிந்ததும் பக்தர்கள் கலைந்தார்கள். திருடர் மட்டும் அங்கேயே ஒளிந் திருந்தார்கள்.
நடுநிசி. ஏகநாதரின் வீட்டைக் கள்வர்கள் சோதனை இடலாஞர்கள். கையில் கிடைத்த துணி, பாத்திரம் பண் டம் எல்லாவற்றையும் சேகரித்துப் பெரும் மூட்டையாகக் கட்டிக்கொண்டார்கள். பிறகு ஏகநாதரின் பூஜை அறைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தப் புனித அறையில் ஓர் அகல் விளக்குச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. தெய்வமூர்த்திக்கு எதிரே அமர்ந்திருந்த பக்த ஏகநாதர் கண்மூடி ம்ெய்யின் பத்தில் தம்வசமிழந்து ஆழ்ந்திருந்தார்.
விலைமிக்க சில பொருட்கள் அங்கே இருந்தன, அனைத் தும் ஆராதனைச் சாதனங்கள். அவற்றைக் கவர முன்னே றிய திருடர்கள் குருடராகி விட்டார்கள். உடனே பீதியும் கலவரமும் மேலிட்ட அந்தக் கயவர்கள், வெளியே தப்பி ஒடக்கொல்லைப்பக்கம் விரைந்தார்கள். வழி தெரியவில்லை. கால் இடறிப் பல இடங்களிலும் விழுந்தார்கள். இந்தச் சந்தடி கேட்டு, ஏகநாதர் மெல்லக் கண் திறந்தார். எழுந்து

Page 14
24 ஆத்மஜோதி வந்து பார்த்தார். நிலைமை புரிந்தது அவருக்கு. திருடர் களை ஒரிடத்தில் கூடி அமைதியாக அமரச் சொன்னர்.
ஒவ்வொருவனுடைய கண்களையும் தடவிக் கொடுத் தார். அருள் ஸ்பரிசம் இழந்த ஒளியை அருளியது. அவரு டைய திருப்பாதங்களில் திருடர்கள் சென்னி சாய்த்து தாங்கள் புரிந்த பிழைக்கு மன்னிப்புக் கோரினர்கள். அவர் களுக்கு ஆறுதல் கூறி இருக்கவைத்து ஏகநாதர் தன் மனை வியை எழுப்பிச் சமையல் செய்யச் சொன்ஞர். பிறகு திரு டர்களுக்கு வயிருர உண்டி பரிமாறிஞர். சந்தன தாம்பூல மெல்லாம் கொடுத்து உபசரித்தார். தம் விரலில் அணிந்தி ருந்த மோதிரத்தையுங்கழற்றி அவர்களிடம் தந்தார். மனை வியிடம் இருந்த நகைகளையும் வாங்கிக் கொடுத்தார். பொழுது விடியும் நேரம். இந்தச் சுமையை நீங்கள் எங்கே எடுத்துப்போகவேண்டும். சொல்லுங்கள். நானே சுமந்து வந்து கொடுக்கிறேன் என்று கேட்டார்.
நெஞ்சம் நெக்குருகிப் புன்மை உணர்வு ஒழிந்து பரவச ராகி நல்வாழ்வுக்குப் புகல்வேண்டி, மூன்று திருடர்களும் அப்படியே ஏகநாதரின் காலடியில் தஞ்சமென்று விழுந்தார் கள். அன்றுமுதல், ஏகநாதரின் உண்மையான பக்தர் வரி சையின் எண்ணிக்கை மூன்று அதிகரித்தது.
ஆத்மஜோதி நிலைய வெளியீடுகள்
ஈழத்துச் சித்தர்கள் விலை ரூபா 10.00
தமிழில் அர்ச்சனமாலை ரூபா 5-00
பன்னிரு திருமுறை திரட்டு ரூபா 5-00 கிடைக்குமிடம்
யூனி ஆத்மஜோதி அச்சகம் நாவலப்பிட்டி
பூgரீ லங்கா

ஆத்மஜோதி 35
O வித்துவான் கோ. கோவிந்தசாமி
தமிழாசிரியர் திருமுக்கூடல் அஞ்சல்
---- செங்கற்பட்டு மாவட்டம்-தமிழ்நாடு
பசி. இவ்விரண்டெழுத்தினையுடைய சொல்லிற்குத்தான் எத்துணை வலிமை. ஞாலமே இதில் அடங்கியுள்ளது என
லாம். பசியைப்போக்குவதற்காக மாந்தர் படும் அவலநிலை
அளவிடற்கரியது. இமயத்தை வெற்றி கண்ட மாந்தன், விண்வெளியைக் கண்டறிய முயலும் மாந்தன் இன்னும் கண்டறிய இயலாமலிருப்பது பசிஎடுக்காமலிருக்கும் விற் தையேயாம். மாண்டவரையும் உயிர்ப்பித்து, சிறிதுநேரம் பேசுவதற்கு ஆராய்ந்து வெற்றிகண்டுள்ள மாந்தன் பசிப் பிணியைப் போக்கும் வழியைக் காண இயலவில்ல்ை.
மாந்தர் தம் பிணிகளைப் போக்கிக் கொள்ள மருத்து வர் ஒருவரை அணுகி நலம் பெற வேண்டியுள்ளது. ஆணுல் பசிப்பிணியைப் போக்க மருத்துவர் ஒருவர் உளரா எனின் இல்லை. தமக்கு ஏற்பட்ட பசியைப் போக்கும் மருத்துவர் யார்? தாமேதான்.வேருெருவரால் அப்பிணியைப் போக்க இயலாது. பசிவந்ததும் பத்தும் பறந்து போம் என்பர் ஆன்ருேர், அப்பத்து என்னென்ன?
‘மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் முயற்சி தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்"
என்கிருர் ஒளவைப் பெருமாட்டி.
நாள் முழுவதும் விடாதுழைப்பதும், வாழ்வில் பல ரைச் சந்தித்து உரையாடிப் பலதுறையிலும் முன்னேற்றம் காண முயல்வதெல்லாம் எற்றுக்கு? பசியைத்தணிப்பதற் காகத்தான்.
போற்றி போற்றியே என்று புதுச்செல்வம் தோற்றியார் கண்ணெலாம் தொண்டேபோல்-ஆற்றப் பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பதெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு”*
என்கிருர் ஓர் புலவர்.

Page 15
26 ஆத்மஜோதி
இவ்வுலகில் இரு இன்றியமையாத செயல்கள் மாந்தரி
டையே நடைபெற்று வருவதைக் காணலாம். உண்பதும் உறங்குவதுமாகிய செயல்கள் உயிரினங்கட்கு அவசியமாக உள்ளது. இவற்றைப் புறக்கணிக்க இயலாது. இவ்விரு செயல்களேயன்றி பிறிதொன்றினை யான் காணவில்லை என்ற கருத்தினை 'உண்டுண்டுறங்குவதே யல்லாமல் வே ருென்றறியேன் பராபரமே" என்கிருர் ஒரு பெரியார்.
பசி நீங்க உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வு ணவை.ஒரு நாள் எனின்.இல்லை. அன்றி இரு நாள் உண வை ஒரே வேளையில் இவ்வயிறுஏற்றுக் கொள்கிறதா எனின் இல்லை. மாந்தனுடைய துன்பத்தை அது அறிவதில்லை. ஆத லால் இவ்வயிற்றுடன் வாழ்வது மிகவும் அரிது எனக் கூறு கிருர் ஒளவை.
"ஒரு நாள் உணவை ஒழி யென்றல் ஒழிய்ாய்
இரு நாளைக்கு ஏலென்றல் ஏலாய்-ஒருநாளும் என்ணுேவு அறியாய் இடும்பைகூர் என் வயிறே உன்னுேடு வாழ்தல் அரிது"
ஞாலத்து வாழும் மாந்தருக்கு உணவினே நல்கியோர் உயிரை நல்கியோர் ஆவர் என்பதை, −
*மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'
என நவில்கிறது மணிமேகலை.
தவத்திற் சிறந்த வலியார்க்கும் வலியாவது தமக்கு உற்ற பசியைப் பொறுத்தலாகும். அத்தகைய வலியும் பொறுத்தற்கரிய பசியினை ஒழிப்பாரின் வலிக்குப் பிற்பட்ட தேயாகும் என்கிருர் வள்ளுவர் பெருந்தகை.
**ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
w மாற்றுவார் ஆற்றலிற் பின்'
வறியவரது பசியைப் போக்கும் அறத்தை ஒருவன் மேற்கொள்ளின் தாம் தேடின பொருளே வைப்பதற்குத் தக்க இடம் பெற்றவணுவான்.

ஆத்மஜோ தி - 27。
"அற்ருர் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்ருன் பொருள் வைப்புழி"
தாம் ஈட்டும் பொருளைப் பகுத்துண்டு வாழும் மாந்த ரைப் பசி என்னும் தீய பிணி தீண்டுதல் இல்லை. பிறரின் பசியை ஒரு பிறப்பில் போக்குதல் தம் பசியை எப்பிறப்பி லும் ஒழிக்கும் மருந்தாகும் என ஆன்ருேர் மொழிவர்.
சபாத்துண் மf இயவனைப் பசி என்னும்
தீப்பிணி திண்டல் அரிது’
பண்டைக்காலத்தில் புலவர் ஒருவர் மன்னன் ஒருவனே வாழ்த்த முற்படும்போது “மன்ன நின்நாடு பசியும் பிணி யும் நீங்கி வசியும் வளனும் சுரக்க” என வாழ்த்துவதை சங்க இலக்கியத்தின் மூலம் அறிய இயலுகிறது.
பசியின் தன்மையை உணர்ந்து, மாந்தரிடையே நிலவி அப்பிணியைப் போக்க முயன்று நாடாளும் மன்னரும் புலவரும் பாடும் பெருமை பெற்றவன் ப்ண்ணன். பசிப் பிணி மருத்துவன் எனப் பெயர் பெற்றவன் ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழ்வானுக" எனப் பாணன் ஒருவன் கூற்ருக வைத்துச் சோழவேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் புகழ்ந்து பாடியுள்ளான் எனின் அப்பண்ணனின் பெருமையை என்னென்பது?
மன்னர் குடியில் பிறந்தோர் தம் பசியைப் போக்கிக் கொள்வதற்காகப் பிறரிடம் இரந்து உயிர்வாழ மாட்டார் கள் என்பதை “வயிற்றுத் தீத்தணியத் தாம் இரத்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத்தானே’ எனக் கூறுகிருன் சேரமான்கணைக்காவிரும்பொறை. V
நாடாளு மன்னர் மட்டுமல்ல, சான்றேர் தாம் LDigiti நேரினும் பசியின் பொருட்டு மானமிழக்கும் செயல்களைச் செய்ய விழையார்.
ஒழியாப்பிணியும் புறப்பகையும் மட்டுமல்ல, மிக்க பசி யும் அற்ற நாட்டைத்தான் நாடு எனக் கூறுவர் ஆன்ருேர்,

Page 16
2s ஆத்மஜோதி
*உறுபதியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு"
பசி எத்தன்மையது என்பதை நன்கு விளக்குகிறது ஏரெழுபது என்னும் நூல்.
os நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கு மெனில் புகழ்சால் இயல் இசை நாடகம் நடக்கும் சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும் பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்கமாட்டாதே"
பசி என்று வருபவர்களுக்கு இல்லை யென்று கூருது ஒருபிடி உணவை அளிப்பின் அது இரக்கமற்றவரையும் இன்புறச் செய்யும் என்கிருர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன். w
“பசி என்று வந்தால் ஒரு பிடி சோறு
புசி என்று தந்து பாரப்பா பசையற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும் பாருக்குழைப்பதே மேலான யோகம்
மாந்தர் ஒவ்வொருவருடைய பசியைப் போக்குவதற்
கும் தேவையானது நாழி அரிசியேயாகும். இதைப் பெறு
வதற்காக அம்மாந்தர் செய்யும் செயல்களை நன்கு எடுத் தியம்புகிறது நல்வழி,
* சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழினுடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி யரிசிக்கே நாம்"
இதன் மூலம் மாந்தரைப்பற்றியுள்ள பசிப்பிணியின் தன்மையை உணரலாம்.
அன்பே சதாகாலமும் இறைவனை நினைவு கூருவதற்குச் சிறந்தவொரு கருவியாகும். அந்தக் கருவியைப் பவுத்திர மாகவும் பலமுள்ளதாகவும் வைத்திருப்பதற்குச் சாதகர் களுக்கு விவேகமென்னும் உறையே வேண்டும். வேருெரு உறைகளும் வேண்டியதில்லை.
-பகவான் ஹீ சத்திய சாயி பாபா

ஆத்மஜோதி 29.
சத்சங்கத்தின் முக்கியத்துவம்
JR HITTIE LLLLLLL LLL LLTLLLLLLLLzYLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
-செல்வி. தம்பிராசா செல்லக்கிளி
இப் பிரபஞ்சத்திலே நமக்கு வாய்த்து விட்ட மாபெரும் பேறு யாதெனில், மனிதராகப் பிறந்தமையேயாகும். இப் பிறப்பின் மேன்மையைத் தான் அப்பர் சுவாமிகள் * வாய்த்தது நந்தமக்கிதோர் பிறவி மதித்திடுமின் ** என்று பாடியுள்ளார். ஆனல், நாம் இவ்வரிய பிறவிதனைப் பெற்று விட்டு உலக அநித்தியத்தில் மூழ்கிக் கிடந்து வாழ்நாளை வீண் நாளாக்கிக் கொண்டிருக்கின்ருேம். எனவே, எமது சிந்தனையை, வாழ்வின் உண்மையான குறிக்கோளைச் சென் றடைவதற்கான மன வைராக்கியத்தைப் பெற்றுக் கொள் வதற்குத் துணையாக, பற்றுக் கோடாக, ஊன்றுகோலாக இருப்பது தான் சத்சங்கமாகும்.
சத் என்ருல் உண்மை. சங்கம் என்ருல் கூட்டம், ஒன்று படுதல் என்பது பொருளாகும். 'உண்மைப் பொருள் பற். றிப் பேசுவதற்காகக் கூடப்படும் கூட்டமே சத்சங்கமாகும். அருளாளர் கூட்டம் என்ருல் மிகையாகாது. இதன் மகி ம்ையைத் தான் மாணிக்கவாசக சுவாமிகள்,
**மருளார் மனத்தோடு உனைப் பிரிந்து
வருந்துவேன வாவென்றுன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனுல் சிரியாரோ"
ஏன்று பாடியுள்ளார்.
உலக மாயையினுல் மயக்கமுற்று மனத்தோடு இருக் கும் என்னை உனது அருளாளர் கூட்டத்தில் சேர்த்து வைத்து விடு. இல்லையெனில், நான் இறந்து போனல் இவ் வுலக மக்கள் என்னைப் பார்த்துச்சிரிக்காரோ என்று இறை வனிடம் இறைஞ்சி சத்சங்கத்தின் அவசியத்தை எடுத்துக் காட்டுகின்ருர்,
உலக வாழ்க்கையில் சிக்குண்டு தவிக்கும் நம் உள்ளத் திற்குப் புத்துணர்வு அளிக்கக் கூடியது சத்சங்கந்தான்.

Page 17
30 V ஆத்மஜோதி
ஒரு முறையோ அல்லது இருமுறையோ சத்சங்கத்தில் இருந்து விட்டால் போதாது. ஒவ்வொருநாளும் அதில் இணைந்து இருக்க வேண்டும். ஏனென்ருல் , ஆசாபாசங்க ளில், அநித்தியப் பொருட்களில் பற்று வைத்திருக்கும் மனத்தைக் கொண்ட நாம் மனத்தின் வழியே சென்று விடு கின்ருேம். ஆளுல், மனத்தைச் சத்சங்கத்தில் ஈடுபடச் செய் வதால் நமது உள்ளம் தெளிவடைகின்றது. உள்ளத் தெளிவு ஆன்ம ஈடேற்றத்திற்கு உறுதுணை புரிகின்றது.
சங்சங்கத்தின் பயன் பற்றி உபநிடதத்தில். ‘ஸத்சங்கத்தே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம் நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி."
என்று கூறப்படுவதைச் சற்றுச் சிந்திப்போம். சத்தைப் பற்றிப் பேசுகின்ற கூட்டத்தில் நீ இருப்பாயானல் அந்த உண்மைப் பொருள் உனது சிந்தனையுட் சென்று துன்பங்க ளுக்கெல்லாம் காரணமான ஆசைகளை அழித்து விடும். உண்மை உட்சென்ருல் பொய்மை வெளியேறும். ஆசைகள் நீங்குவதனல் அஞ்ஞானத்திற்கு மூலகாரணமாயுள்ள மோகம் இல்லாதொழிந்து விடும். உள்ளத்தில் மோகம் இல்லாது ஒழிந்தால் தான் சலனமற்ற பரதத்துவ நிஷ்டை யுண்டாகும். அப்படிப்பட்ட பரதத்துவநிஷ்டை கூடினல் ஜீவன் முக்தியடையும். அதாவது, ஜீவாத்மா உலகப்பற்றுக் களிலிருந்து விடுதலை அடையும் என்பதேயாகும்.
ஆகவே, பரம்பொருளின் இணக்கத்தின் உணர்வோடு வையத்துள் வாழ்வாங்கு வாழ சத்சங்கம் இன்றியமையாத தொன்ருகும்.
மெய்யன்பர்களே! நல்லோர் கூட்டத்தை நாடுங்கள். உண்மை விளக்கத்தில் இருங்கள். மனித வாழ்வின் நோக் கத்தின் உண்மை புரிந்துவிடும். உண்மையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிறைவும் சமுதா பத்தில் பண்பும் ஒழுங்கும் நிலவி நிற்கும். நாட்டில் ஒற்று மையும், அன்பும், அமைதியும் நடைபோடும்.
ஜெய் சத்சித் ஆனந்தம்

ஆத்மஜோதி - 31
g lf ன் (நா. முத்தையா)
யம என்ற வடசொல் வேத காலத்தில் வழிகாட்டி என் றும்; புராணகாலத்தில் அடக்குதல் என்றும் பொருள்பட்
வேதத்தில் இயம்ன் பாபிகளைத் தண்டிக்கும் செய்தி இல்லை. இயம்ன் இறந்தவரை ஆட்சி செய்கிறவன் என்றும் இறந்தவருக்கு இருப்பிடம் அளிப்பவன் என்றும் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. இயமன் வசிக்கும் இடம் விண்ணுலகில் எல் லாவற்றிற்கும் உயர்ந்தது. மனிதருள் முதன் முதல் மடிந்து வானுலகம் சென்று, மற்றவரும் அங்குப்போக வழிகாட்டி யவன் இயமன் என ரிக்வேதத்திலும் அதர்வேதத்திலும் கூறப்படுகிறது.
இயமனும் அவனுடன் பிறந்த இயமியும் சூரியனுடைய இரட்டைக் குழந்தைகள். இந்த இடத்தில் யம என்னும் வடசொல் இரட்டைக் குழந்தைகள் என்று பொருள்படும். தன்னை மணந்து கொள்ளும்படி இயமி இயமன வேண்டிக் கொள்ள உடன் பிறந்தவளை மணப்பது தவறு என்று இய மன் மறுத்துவிடுகிருன். (ரிக்வேதத்தில் கூறப்படுகிறது) ஆயினும் இவர்களே மனித குலத்தினருடைய தாய் தந்தை யர் என்று கூறப்படுகின்றனர்.
புராண காலத்தில் இயமன் இறந்தவருக்கு நீதி வழங் கும் சிறு தெய்வமாக மாறிவிடுகிருன். அவன் எட்டுத்திசைத் தெய்வங்களுள் தென்திசையின் காவலன்.
கருநிறத்துடன் இருகைகளிலும் ஒரு தடியையும் பாசத் தையும் ஏந்திக்கொண்டு, எருமை வாகனத்தில் தோன்று வான். அவனுடைய இடத்தொடையில் அவனுடைய மனைவி வீற்றிருப்பாள் புராணங்களில் இயமனப் பற்றிய கதைகளிலும் பயங்கர வர்ணனைகளும் வருகின்றன. இறந் தவர் எல்லோரும் இயமபுரிக்கு இயமனுடைய பணியாள ரால் கொண்டுபோகப்பட்டு, அங்கிருந்து பாவம் செய்த வர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். மனிதரின் செயல்களைப் பதிவு செய்து இயமனுக்கு அறிவிப்பவன் சித்திரகுப்தன்.

Page 18
32 w ஆத்மஜோதி
சித்திரா பெளர்ணமியிலன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். பொன், வெள்ளி இவைகளாலான பது மையில் சித்திரகுப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம் வெல்லத்துடன் கலந்த எள், மாவு, பால், நெய் முதலியவை படைக்கும் பொருட்கள். வழிபாட்டின் முடிவில் பாயசம் நிறைந்த வெண்கலப்பாத் திரம் பானமாகக் கொடுப்பது வழக்கம். அன்று முழுவதும் உப்பில்லாத உணவுண்டு விரதம் இருத்தல் வேண்டும். முதன்முறை விரதம் தொடங்கும் போது 5 அல்லது 9 கல. சங்கள் வைத்து அவைகளில் சித்திரகுப்தனையும் மற்றும் எட்டுத்திக்குப் பாலகர்களையும் இருத்தி வழிபட்டுப் பிறகு தானம், ஓமம், பிராமணபோசனம் முதலியன செய்ய வேண்டும்.
● மார்க்கண்டன் கதை சிரஞ்சீவித் தன்மை பெற்ற தொன்று. மிருகண்டுமுனிவருக்குப் புத்திரப்பேறு இல்லை. அதற்காக அவன் தவத்திற்கு இரங்கிய இறைவன் நீண்ட ஆயுளும் குறைந்த அறிவுமுடைய புத்திரன் வேண்டுமா? குறைந்த ஆயுளும் நிறைந்த அறிவும் உள்ள புத்திரன் வேண் டுமா?என்று கேட்கின்ருன். மு னிவனே, புத்திரன் குறைந்த ஆயுள் உள்ளவனக இருந்தாலும் பரவாயில்லை. நிறைந்த அறிவுடையவனகவே இருத்தல் வேண்டும் என்கிருன். மிருகண்டுவின் புத்திரனுய் மார்க்கண்டன் பிறக்கிருன். பதினறு வயது வரையே அவன் இந்நில உலகில் வாழுதல் கூடும் என்று இறைவன் திட்டமாக உரைத்து விடுகிருன், மார்க்கண்டன் வளர்கிருன். பதினறு வயது நிறைவெய் தும் காலம் வருகிறது. அன்னை தந்தையர் அநுமதியோடு கடவூருக்கு வருகிருன். அங்கு கோயில். கொண்டுள்ள அமிர்த கடேசுவரரைப் பூசைசெய்கிருன்.
அப்படி அவன் பூசை செய்து கொண்டிருக்கும்பொழு தே அவனுக்குக் குறித்த பதினறு வயது நிரம்பிவிடுகிறது. எமதுரதன் மார்க்கண்டேயர் முன்பு தோன்றுகிருன். மார்க்கண்டேயருடைய சிவ வழிபாட்டைக் கண்டு அஞ்சி ஞன். அணுகமுடியாமல் திரும்பிச் சென்று இயமனிட்ம் முறையிடுகிருன். இயமன் கோபம் கொண்டான்.
தன் அமைச்சனுகிய காலனை விளித்தான். மார்க்கண் டேயனை இக்கணமே பிடித்து வா என்று கட்டளை இட்டான்.

ஆத்மஜோதி 33
காலன் காசியை அடைந்தான். மார்க்கண்டேயருடைய தவப்பெருமையை உணர்ந்தான். காலன் நயமான வார்த் தைகள் பேசி இயம உலகிற்கு அழைத்தான். சிவனடியார் கள் இயம உலகிற்கு செல்வதில்லை என்று மார்க்கண்டேயர் தடுத்தார். இயமனே நேரில் வந்தான். சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயன் மீது பாசத்தை வீசுகின்றன். அவனே பூஜை செய்யும் லிங்கத்திருஉருவையே கட்டிப் பிடித்துக் 'கொள்கிறன் . அப்போதும் விடுகிருன் இல்லை இயமன். இறைவனுக்கோ இயமன் மீது கடுங்கோபம். எந்த நிய திக்கும் விதிவிலக்குக் கிடையாதா? என்னையே கட்டிப் பிடித்திருக்கிற நேரத்திலுமா இவன் தன் கடமை தவருது அவன் உயிர் கவர வரவேணுமா? என்று எண்ணுகிருன். லிங்கத்திலிருந்தே கிளம்பி எழுந்து காலனை எட்டி உதைத்து விலக்குகிருன். சூலத்தையே பாய்ச்சுகிருன். மார்க்கண்டன் என்றும் பதினறு வயதுடன் நித்யத்துவம் பெற்றுச் சிரஞ் சீவியாய் வாழ்கிருன். இப்படி இறைவன் இயமனைக்காய்ந்த வரலாற்றை சம்பந்தர், அப்பர், சுந்தரர் மாத்திரம் அல்ல, திருவிளையாடல்புராணம் பாடிய பரஞ்சோதியுமே பாடியி ருக்கிருர்.
'அன்ற லின்னிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து
கொன்ருய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்குமான் கன்ருருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்றதை பெருமான் எனக்கார் துணை நீயலதே"
என்பது சுந்தரர் தேவாரம் , மான்கன்று டொருந்திய கையை உடையவனே! திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே, நீ அன்று, கல்லால நீழலின்கீழ் இருந்து நால்வர் முனிவர்க்கு அருள்பண்ணி, காலன் உயிரைக் கொன்றவன் செயலையும் செய்தாய்; அந்தணச் சிறுவ்னுக்கு முடிவில்லாத வாழ் நாளைக் கொடுத்தாய்; இன்னதன்மையை உடைய நீயல் லது வேறுயாவர் எனக்குத்துணை!
இப்படி மார்க்கண்டனுக்கு அருள் செய்ய காலனைக் காய்ந்த காலசம்ஹாரர் பிரதான மூர்த்தியாக விளங்கும் தலம்தான் திருக்கடவூர். இன்றும் நீண்ட வாழ்வைப்பெற விரும்புபவர்கள் சென்று ஆயுஷ் ஹோமம் எல்லாம் செய் யும் இடமும் இதுதான். இந்தத் திருக்கடவூரே திருக்கடை யூர் என்றும் வழங்குகின்றது.

Page 19
84 ஆத்மஜோதி
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் கிடைத்தது. இந்த அமுதத்தை அசு ரர்களுக்குக் கொடுக்காமல் தாங்களே உண்டு அமரத்துவம் பெற தேவர்கள் எண்ணி அதனை அசுரர்கள் அறியாமல் எடுத்துச் சென்றிருக்கிறர்கள். அப்படிக் குடத்திலே நிரப் பிக்கொண்டு வந்த அமுதத்தை ஒரிடத்தில் இறக்கி வைத் துவிட்டு நீராடச் சென்றிருக்கின்றனர். நீராடிவிட்டு வந்து குடத்தை எடுக்க முயன்ருல் அது பூமியிலே வேர் ஊன்றி நின்று எடுக்கவே இயலாதிருக்கிறது. அப்படி அமுதக்கடம் லிங்கத்திருஉருவில் நிலைத்து நின்ற இடமே கடவூர். அப்படி நிலைத்து நின்றவரே அமுதகடேசுவரர். -
அந்தக்கோயிலின் மகாமண்டபத்திலே ஒரு பிள்ளையார் இருக்கின்றர். தேவர்கள் கொண்டுவந்த அமுதகலசத்தைக் களவாடி டுத்து ஒழித்துவைத்து, பின்னர் அவர்கள் வீழ் ந்து வண்ங்கிய பின்னரேபிள்ளையார் அதனைக் கொடுத்தார் என்பது தலவரலவாறு. அதனுல் அவர் கள்ளவாரணப்பிள் ளையார் என்னும் பெயரும் பெற்ருர்,
இயமன் இறந்து போனபடிபினுல் உலகின் கண் உள்ள உயிர்கள் இறப்பில்லாமல் நெடுங்காலம் வளர்ந்து பெரு கின. நிலமகள் சுமை பொறுக்க முடியாமல் திருமாலிடஞ் சென்று முறையிட்டுக்கொண்டனள். திருமால், நான்முகன் முதலிய தேவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானி ட்ரூ சென்றர். திருமால் இறைவனைப் பார்த்து "நாங்கள் அனைவரும் எங்கட்குரிய தொழில்களைச் செயது கொண்டி ருக்கின் ருேம். இயமன் இறந்துபோன மைய7 ல் உலகிலுள்ள உயிர்கள் வளர்ந்து பெருகி விட்டன. இ பன உயிர்பெற் றெழச் செய்யுமாறு வேண்டினர். இயமனே உயிர்பெற்றெ ழுவாயாக என்று கூறியதும் இயமன் எழு5 வணங்கினன்.
சிவபெருமான் இயமனப் பார்த்து ‘ஓநமனே நீ நம் முடைய அறிகுறிகளாகிய திருநீறு, அக்கமணி முதலியவை களை அணிந்துகொண்டு நம்மைப்போற்று: அன்பர்களிடத் திலே செல்லாதே! நம் அடியார்களை ப ட் பிறப்பினர் என்று எண்ணுதே! அவர்களை நாம் என் :) எண்ணக்கட வாய்! அவர்களைக் கண்டால் அவர்களுடைய காலிலே வீழ் ந்து வணங்கக் கடவாய்; மனமொழி ெ 'களாலே நல் வினை தீவினைகளைச் செய்யும் மற்றவர்களை னணுலகிலும் நரகத்திலும் அமர்த்தக் கடவாய்.

ஆத்மஜோதி 35
போற்றிடு தருமனைப் புராரி நோக்கியே சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை நீற்றெடு புனைந்தெமை நிாையும் நீரர்பால் கூற்றுவன் யான் எனக் குறுகுவாய் அலே
நண்ணருங் கதிபெறு நமது தொண்டரை மண்ணுலகத்தவர் மனிதரேயென எண்ணலை அவர்தமை யாமென்றெண்ணுதி கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால்
கண்ணிய மனமொழி காயம் ஈறதா
எண்ணிய கருவிகள் இடையதாகவே புண்ணியம் ஒடுபவம் புரியும் ஏனையர் விண்ளுெடு நிரயமேல் மேவச்செய்தி
தவத்தின் பெருமையினல் குச்சக முனிவர் ஒரு பெண் ணின் உயிரை மீட்டார். ஒரு யானையை விண்ணவனுக்சி ஞர். மிருகண்டூய முனிவர், திருமால், நான்முகன் முத லானவர்களும் போற்றும் மேன்மையைப் பெற்ருர், மிரு கண்டு முனிவர் ஒப்பற்ற புதல்வனைப் பெற்றர். மார்க்கண் டேய முனிவர் ஊழையுங் கடந்து கூற்றுவன் ஆற்றலையும் மாற்றினர். ஒருகாலும் இறப்பற்றவராகவும் ஆனர்.
**வேள்விகாத்த உச்சநமன் தாளறுத்தார்" என்பது நாவுக்கரசர் திருவாக்கு.
சிவபெருமானுக்கு மாருக தக்கன் ஒர் யாகம் செய் தான். அதனை இயமன் காத்து நின்றன். சிவ நிந்தனை ஏற் பட்ட இடத்திலே இயமன் நின்றபடியினலே அவனது கால் முறிக்கப்பட்டது.
* அரி பிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக் கந்தகனை"என்பது a' நாவுக்கரசர் கூற்று"
அந்தத்தைச் செய்பவன் அதாவது இறுதியைச் செய்ப வன் அந்தகன். அந்தகளுகிய இயமனுக்கே அந்தத்தைச் செய்பவன் என்றதனுல் மகா சங்காரக் கடவுள் என்று சிவபெருமான் அழைக்கப்படுகின்ருர், அந்தகாசுரனுக்கு அந்தத்தைச் செய்தவன் என்பாருமுளர்.

Page 20
36 ஆத்மஜோ
** கொல்லுங் கூற்றென்றை உதைத்தாய் போற்றி" இயமனுக்கும் ஈறு உண்டு. இறைவன் ஒருவனே ஈறிலா தவன். கூற்று என்று அஃறிணை வாய்ப்பாட்டால் கூறி, ஒன்றை என்று கூறியமையால் அத்தொழில் பெற்று வாழ்ந்து நீங்கியவர் பலர் என்பது பெறப்பட்டது.
சிவனடியார்கள் யமனையோ பிறதேவரையோ எண்ணி அஞ்சத் தேவையில்லை. மார்க்கண்டேயன இயமனிட மிருந்து காப்பாற்றியது போல, தன்னையும் இயமன் வருங் கால் “நம் அன்பன்' என்று கூறிட வருமாறு இறைவனை வேண்டுவோம். மார்க்கண்டேயனை வழிகாட்டியாகக் கொண்டு இறைவன் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
நீலநன் மேனி செங்கண் வளைவெள் ளெயிற்ற
னெரிகேச னேடிவருநாள் காலை மாலை கொண்டு வழிபாடு செய்யு
மளவின் கண்வந்து குறுகிப் பாலனை யோடவோடப் பயமெய்து வித்த
வுயிர் வவ்வுபாசம் விடுமக் காலன வீடுசெய்த கழல்போலு மண்டர் V
தொழுதோது சூடுகழலே. (நாவுக்கரசர்)
காலன் கரிய மேனியன். வளைந்த வெள்ளைக் கோரைப் பல்லினன். தீயைப்போலும் குஞ்சியன். மார்க்கண்டேய முனிவரைத் தேடிவருகின்றன். அந்நாளிலேயும் வழக்கம் போல், காலையில் நல்ல மண மலர்மாலை முதலிய பூனிசக் குரிய பொருள்களைக் கொண்டு வழிபாடு, ஒழிபாடு இன்றிச் செய்து கொண்டிருக்கின்றர் அம்முனிவர். அவ்வளவில் அக்காலன் வந்தணுகினன். காலஞர் அப்பாலஞரை அச்சு றுத்தி, அவ்விடத்தின் நீக்கி ஓட்ட உயிரைக் கவரும் கயிறு வீசினன். அவனைக் காலால் வீசினன் கடவுள். அக்கடவு ளின் கழற்காலே வாஞேர் வாழ்த்தி வணங்கித் தலைமேற் சூடும் மலர்க் கழல், காலக்கடவுள் வாழ்த்தாகப் பதிற்றுப் பத்தின் காப்பெனப்படுவது ஒன்றுண்டு.
தொடரும்

ஆத்மஜோதி 37
சைவாலய கமிம் வேகம் பூஜையில் தமழ మిత్త
சைவாலய பூஜையின் பொது அம்சங்கள் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, தோத்திரம். தெளர்யத்ரிகம், (நிருத்த கீத வாத்தியங்கள்) என்பன. பூஜையின் முழுமையைப் பேணுவதில் இந்த ஏழு அம்சங்களுக்கும் ஒரேமாதிரியான முக்கியத்துவமுண்டு. இவற்றில் தோத்திரம் என்ற அம்சத்தில் பதிவாக்கு என்ற மகிமைக்குரிய தோத்திரங்கள் யாவும் இடம்பெற வேண்டி யவை. இவ்வகையில் வேதம், ஆகமம், சைவத் திருமுறை கள் என்ற மூன்றும் பிரதானமானவை. தன் சிவபாவனை அழுத்தத்தினல்ே தான் சிவனகவே நின்று கொண்டு சிவன ருளே வேண்டி வேண்டிப் பூசை அம்சங்கள் ஒவ்வொன் றினையும் நிறைவேற்றும் பூசகர், எவ்வாறு "வேதம் அவதாரய" என்று வேண்டிக் கொண்டு வேதத்திலுள்ள துதியையும், 'ஆகமம் அவதாரய என்று வேண்டிக்கொண்டு ஆகமத்தி லுள்ள துதியையும் கூறக் கடமைப்பட்டுள்ளாரோ அவ்வா றே தேவாரம் அவதாரய’, திருவாசகம் அவதாரய" என்று இவ் வகையில் வேண்டிக்கொண்டு திருமுறைகளையும் ஒதக் கட மைப்பட்டுள்ளார். அவரே சங்கற்பித்துக் கொண்டு பூஜை செய்ய முன்னிற்கின்றமையால் அது அவரே செய்தற்குரி யது. சிலவேளை தமக்கு ஒதும் திறமை போதாதென்ற காரணத்தால் பூசகரொருவர் அத்திறமையுள்ள மற்ருெரு வர் மூலம் அதைச் செய்விக்க வேண்டியிருப்பின் தம் தியான வன்மையால் அவரையும் சிவ பாவனையில் நிற்பவ ராகப் பாவித்து அவருக்கு விபூதி வழங்குதல் மூலம், தமது செயலுரிமையை அவர்க்கேற்றி அவர் அதை நிறைவேற்றும் வரை தாமும் அச்செயற்பாவனையில் வழுவாது தியானத் தில் ஒடுங்கி நின்று தாமே தம் கையால் இத்தோத்திர பூஜையைச் சுவாமிக்கு ஒப்புக்கொடுத்துத் தீபாராதனை செய்ய வேண்டியவராகின்றர். இது பூசை இலட்சணத் 'திற்கு ஒத்த நியதியாகும். .

Page 21
E8 ஆத்மஜோதி
இந்நியதியானது இன்றைய நமது ஆலய பூஜை வைப வங்களிற் பெரிதும் பின்னடைந்திருக்கின்றது. பதிவாக் காகிய தோத்திரம் என்ற வகையில் எழுதாமறையாகிய வேதத்துக்கும், எழுதுமறையாகிய திருமுறைக்குமிடையி லுள்ள அந்தரங்கத் தொடர்பு ஆசீர்வாதம் என்ற மற் ருென்றினல் பேதிக்கப்பட்டுப் போய்விடுகிறது. பூஜாமந்தி ரமும், பூஜைத் துதியுமாய், தனித் தனி அமையவல்ல வேதத்திற்கும் திருமுறைக்குமிடையே இவ் விரண்டில் ஒன்றுமாகாத ஆசீர்வாதம் புது வரத்தாகப் புகுந்து கொண்ட புதுமைதான் என்னையோ! ஆசீர்வாதம் என்பது பூஜையில் சேர்ந்துள்ள குறைகள் நிறைவுறவும் குறித்த பூஜைப் பலனுல் பொதுவாக உலகுயிர்களும், சிறப்பாகப் பூஜையில் சம்பந்தப்பட்ட எஜமான் முதலியோரும் இக பரப் பேறுகளைப் பெறவும், மஹான்கள் அனுக்கிரகிக்க வேண்டும். என்ற ஒரு விருப்ப வெளியீடாகும். அது பூஜை பம்சங்கள் சகலமும் பூர்த்தியானபின் நிகழ்தற்குரியது. பூஜை முடிந்த பிறகு குறை நிறைகளுக்கு அமைதி கேட்பது தானே பொருத்தம். குறையை வைத்துக் கொண்டு குறை நிறைகளுக்கு அமைதி கேட்பது எப்படி? அவ்வகையிற் பார்த்தால் பூஜை யொன்றில் ஆசீர்வாதம் செய்யப்பட்டு விட்டதெனில் பூஜை முடிந்தாய்விட்டதென்ற நிலையையே தெரிவிப்பதாகும். அதன்மேல் "தேவாரம் அவதாரய" என்று திருமுறை ஒதுவிக்கப்பெறுமாகில் அப்பூஜையில் தோத்திரப்பூஜையம்சம் சிறங்கணிக்கப்பட்டு அவ்வகை யால் திருமுறை புறக்கணிக்கப்பட்டதென்பதே அர்த்த மாகும்.
சிவபெருமாறல் சிவமெய்ஞ்ஞானிகளைக் கொண்டு முன்னின்று பாடுவிக்கப்பெற்ற திருமுறைகள்; சிவன் வாக்கே தம் வாக்காக வருவதாக அவர்கள் கூறும் அத் தாட்சியோடு கூடிய திருமுறைகள் வேதப் பொருளையே கூறுவனவாக ஆன்ருேரால் அறுதியிட்டு வைக்கப்பெற்ற திருமுறைகள்; தமிழ்நாட்டிலே தனித்துவக் கலையாகச் சிவக்கலையையுஞ் சைவக் கலையையும் ததும்ப வைத்த

ஆத்மஜோதி 39
திருமுறைகள்; பல்வேறு தெய்வாதிசயங்களை நிகழ்வித்த திருமுறைகள், மந்திர மகாராசனுகிய பஞ்சாசுஷ்ரமே ஞா னமும் மெய்ந்நெறியும் என்ற மகிமையைப் பாருலகறியப் பரப்பி வைத்த திருமுறைகள், சொல்லிய பாட்டின் பொரு ளுணர்ந்து சொல்லுதற்கான எளிமையும் இனிமையும் படைத்த திருமுறைகள் சிவாலய பூஜையில் அங்ங்ணம் புறக்கணிக்கப்படுதல் சைவத்துக்கு அழகே அல்ல, இத ஞல் சைவம் ஒருபுறம் அவமதிக்கப்படுகிறதெனில் தவறே அல்ல. بر
இனி, ஆசீர்வாதத்திற்குப் பின் திருமுறை ஒதவிட்டு, அவ்வேளையில் பூசகர் வேறு பராக்காகயிருக்கக் காணும் உபத்திரவமும் வேறு. அந்நிலைமையே திருமுறை பூஜையிற் சேர்க்கை பெருது புறம் போக்காய் விடப்பட்டமையைத் துலாம்பரமாகக் காட்டுவதாகும். திருமுறை பாடப்படும் போது பூசகர் அர்ச்சனைக் குறை நிறைவேற்றுதல், வேறு வகையில் ஆசுவாசம் பண்ணிக்கொள்ளுதல்கூடப் பெரும் பான்மை. திருமுறை மந்திர ஒலிக்கு எதிரிடையாக அர்ச் சனை மந்திர ஒலியைக் கிளப்புதல், "அவர் ஏதோ சொல்கிறர் அதை விட்டு இதைக் கேளும்" என்று சுவாமியின் கவனத்தை திசை திருப்பும் தந்திரமோ என்றும் ஐயுறுதற்கு இடமr கின்றது. அன்றியும், பூஜை அரங்கில் திருமுறைக்குத் தனித் துவமான இடமில்லை என்பதாக வழிபடுவோரிடத்திலே தவருன ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் வல்லதா கின்றது. இந்நிலை நீடிக்க விடப்படுதல் தகுமோ? சிந்திமின் !
ஆகம அநுசரணையிலுள்ள தமிழ்நாட்டுக் கோயில்களில் தோத்திர பூஜையில் வேதமும் திருமுறையும் இடையீடின்றி இடம்பெறுகின்றன. வேலணைக்கு அப்பாலுள்ள வடஇலங் கைக் கோயில்களிலும் அங்ங்னமே. திருக்கேதீஸ்வரம், சுன்னுகம் கதிரைமலைச் சிவன் கோயில், ஐயனர் கோயில் களிலும் அங்ங்னமே. இருந்தும் குடாநாட்டிலும் இலங்கை யில் மறு பகுதிகளிலும் பரவலாக இதற்குப் புறக்கணிப்பு நிகழ்கின்றது. சொல்லியும் கேட்காமல் தவறகப் பண்ணும் புறக் கணிப்பு நிலை காழ்ப்புற்றிருத்தலும் கண்கூடு.

Page 22
40. ஆத்மஜோதி
இந்நிலையில் திருத்தம் நேரும் வாய்ப்பு இருவிதங்களில் கைகூடுதல் கூடும். ஆலய நிர்வாகமும் பூஜை உபயகாரரும் பூசகரிடம் உண்மையை விளக்கிச் சரியான நிலை நடை முறைக்கு வரச்செய்தல் ஒருவிதம். இது சுமுக வழியான நடவடிக்கையாம். மற்றையது ஆசீர்வாதத்திற்குப் பின் திருமுறை ஒதவிடப்படுமிடத்து ஒருவரும் திருமுறை ஒத முன்வரா திருத்தல். இது எதிர் நடவடிக்கையாயினும் ஒரு சில நாட்களில் சரியான நிலையை வருவிக்கக்கூடியது. அன் றியும் திருமுறையின் உயர் மகிமையை ஆலய வளாகத்தில் ஸ்தாபிக்கக் கூடியதுமாம்.
எந்தவகையாலேயோ சிவநெறி ஆலய நெறிகளைப் போலப் பூஜைநெறியையும் சரிநிலையில் ஆக்கி வைப்பது சிவபுண்ணியம். பிழையானது நடக்கப் பார்ப்பதே சிவ அபராதம். சிவ அபராத வளர்ச்சிக்கல்ல. சிவபுண்ணிய விருத் திக்கே உரியது கோயில். இது நாவலர் வழி வழி உணர்வில் சைவ மக்கள் அவசியங் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றுகும்.
چـــسـاد
பகவான் 'ஜீ சத்திய சாயி பாபாவின் அருள் வாக்கு
பக்தி என்பது வியாழக்கிழமை மாலை நேரங்களில் நீங்கள் பசனை செய்வதற்கு கூடும் பொழுது மாத்திரம் அணிந்து கொண்டு பசனை முடிந்ததும் கழற்றி ஓரிடத்தில் வைக்கும் உடைபோன்றதல்ல. அது பெற்ருேருக்கும், குரு வுக்கும், முதியோருக்கும் ஏனையோருக்கும் மரியாதை செலுத்தும் தன்மையையும், பணிவையும் வளர்க்கக் கூடிய தாக இ " க்க வேண்டும். பக்தி என்பது மனதில் எப்பொழு தும் இருக்கின்ற மனுேபாவமாகும்.
மழைபெய்ததென்பதற்கு அடையாளம் நிலத்தின் ஈரலிப்பு. பக்தியின் அடையாளம் பக்தனின் சாந்த நிலை. சாந்தியானது அவனை வெற்றி, தோல்வி, இகழ், புகழ், பேறு இழப்பு என்னும் இவைகளின் தாக்குதல்களினின்றும் காப்பாற்றுகிறது.

ஆத்மஜோதி w 壬及
தற்கால மனிதனுக்குரிய சாதனை
- ழறி சுவாமி சிவானந்தா -
இறைவனை உணர்ந்து தெளிதலைத் தாங்கள் வாழ்க்கை யின் உயர்ந்த முடிவாகவும் குறிக்கோளாகவும் உண்மை யாகவே ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் அனைவரின் நட்ை முறை செயல்களுக்குப் பயன்படும் வகையில் சிலகருத்துக் களைச் சொல்ல விரும்புகிறேன். நாம் இந்த உலகில் பிறந் ததன் முக்கியமான நோக்கம் சாதனைதான். இவ்வுலகம் *சாதன பூமி’ என்றே அழைக்கப்படுகின்றது. இந்த உல கத்தில் மட்டுமே ஆன்மீகத் தெளிவுக்கான சாதனையை மேற்கொள்ள முடியும். மற்ற உலகங்களில் முடியாது. கீழே உள்ள நரகத்தில் தங்கள் தீய செயல்களுக்காகவும், பாவங் களுக்குரிய தண்டனைகளை ஏற்றும் உயிர்கள் தங்கள் நற்செ யல்களின் பயன்களை அனுபவித்துக் கொண்டுள்ளன. இந்த இரண்டு உலகங்களிலும் உள்ள உயிர்கள் தாங்கள் முன்பிரு ந்த பூவுலகிற்கு மீண்டும்வரவேண்டும். ஆனல் பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வதால் நிலையான பேரின்ப வீட்டிற்கு நேரே செல்லலாம். துன்பமும் வருத்தமும் பிறப்பும் இறப் பும் மலிந்து உலகிற்கு மீண்டும் திரும்பிவரவேண்டியதில்லை.
இந்த உலகில் பிறந்து, இப் பிறப்பின் நோக்கம் 'நிலை யான வீடுபேற்றை அடைவதுதான் என்று ஒருவன் அறிந் தாலும், அவனுக்குமுன்னே பல பிரச்சினைகள் தோன்று கின்றன. அவனுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் தடைகள்
காணப்படுகின்றன. அவன் முழுமைபெறுவதை அவைகள் தடுக்கின்றன. தற்காலத்தில் சாதனைக்குரிய ஒரே கருவி யான இந்த உடல் மிகவும் இழிந்த நிலையில் இருக்கிறது. வாழ்நாள் மிகவுங் குறைவு. உடல் வலிமையோ மிகவும் மோசம். இவை ஒன்றுக்கொன்று முரணுகக் காணப்பட்டா லும் உடலளவில் சீரழிவு இருந்தாலும் மனிதன் மனத்தள வில் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிருன். மிகவும் ஒளிம யமான எதிர்காலத்தின் நுழைவாயிலில் இருக்கிருேம்.ஆன் மீக வாழ்வில் மிகவும் இருள் நிறைந்த பகுதியைக் கடந்து விட்டோம். ஆன்மீகத் தெளிவும் வேகமான முன்னேற்ற மும் நிறைந்த காலப்பகுதியில் நுழைய இருக்கிருேம். இது உண்மையானல் அது தாழ்விலிருந்து உயர்வுக்கும், குறை விலிருந்து நிறைவுக்குரிய மாறுதல்களேக் காட்டவேண்டும்.

Page 23
42 ஆத்மஜோதி
அப்படியானுல் “மனிதன் மனதில் வளர்ச்சி அடைந்துள் ளான்' என்ற இந்தக் கருத்தை நாம் மறுக்க முடியாது. ஏனெனில் புராண காலத்தில் உடலின்வெளிப்புற வளர்ச்சி தான் அதிகம் வலியுறுத்தப்பட்டது! மலைகளைத் தூக்குவ திலும் சமுத்திர நீரைக் குடிப்பதிலும் தான் ஒருவனுடைய வலிமை கணக்கிடப்பட்டது. இப்பொழுது அது மாறி விட் டது. வேதாந்தத்தின் அடிப்படையில்தான் அது வலியுறுத் தப்படுகிறது. இது நவீனமுறை.
இது நவீன மனம், பரிணும வளர்ச்சி அடைந்துள்ளது என்ற அடிப்படையில் கூறப்படுகிறது. அப்படியாளுல் ஏன் இந்தச் சோர்வு? ஏன் இந்த நம்பிக்கையற்ற நிலை. மனிதன் முன்பிருந்ததைவிட சாதனையில் இப்பொழுது ஏன் ஆர்வம் குறைந்தவனக இருக்கிருன். மனிதனிடத்தில் ஏதாவது குறை இருக்க வேண்டும். அல்லது அவன் மேற்கொள்ளும் வழிகளில் ஏதாவது குறை இருக்க வேண்டும். ஆளுனல் "அவ னிடம் எல்லாம் சரியாக இருக்கின்றன; என்று சொல்லிக் கொண்டே தொடங்குகிருேம். மனிதன் வளர்ச்சியும் முன் னேற்றமும் அடைந்து முன்பிருந்ததைவிட அதிக தூரம் சென்றிருக்கிருன். எனவே தவறு அவன் மேற்கொள்ளும் முறைகளில்தான் இருக்கவேண்டும். அது எங்கு இருக்கி றது? இவ்வளவு முன்னேற்றத்துக்குப் பின்னரும் தான் இரு ளில் மூழ்கி இருப்பதாகவும், சாதனை செய்ய முடியவில்லை என்றும் சொல்லுகிருன். 'எனக்கு. உடல் வலிமை போதாது. நேரமே கிடையாது. சமுதா யப் பொருளா தாரம் மாறிவிட்டது. இப்பொழுது வாழ்க்கை பொரு ளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. என் வாழ்க்கைக் குவேண்டிய பொருளைத்தேட காலைமுதல் மாலைவரை வேலை செய்யவேண்டியிருக்கிறது. எனக்கு நேரமே இல்லை' என்று அவன் சொல்கிருன்.
இது உண்மைதான். வெளிப்புறத் தோற்றம் முழுவ தும் மாறிவிட்டது. அதற்குத் தக்கவாறு மனிதன் மாருத தால் இந்த அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவன் சாத னைக்கு மேற்கொண்டுள்ள வழிகள் காலத்துக்கு ஏற்றவைக ளாக இல்லை. அவன் வளர்ச்சி அடைந்துள்ளான். உடலிலி ருந்து மனத்திற்கு முக்கியத்துவம் மாறியுள்ளது. அதற் கேற்ப அவன் அணுகும் முறைகளில் மாறுதல்களை ஏற்படுத் திக் கொள்ளவில்லை. மீண்டும் உடலளவிலேயே முயற்சி

ஆத்மஜோதி 43
செய்கிருன். ஜெபம் செய்கிருன், பழைய தபஸ் சரியம், சாதனை ஆகியவைகளையே மீண்டும் புகுத்தப் பார்க்கிருன். சாதனையைப் புதுமுறையில் மாற்றி அமைக்கவேண்டும். அதன் முக்கியத்துவத்தை உடலிலிருந்து மனதிற்கு மாற்ற வேண்டும். அதனுல் பழைய முறை காலங்கடந்ததென்ருே, பயனற்றதென்றே சொல்ல முடியாது. புதியமுறை அதிக ஆற்றலுள்ளது அதிகப் பொருத்தமுள்ளது. அதிக உப யோகமுள்ளது என்றுதான் அதற்குப் பொருள். கீழ் வகுப் புக்களின் கல்வியைக் கற்றுமுடித்த ஒருவன் பல்கலைக்கழ கத்துக்குச் செல்வதைப் போன்றதுதான் அது . காலத்தி லும் சக்தியிலுட் தடைகள் இருக்கின்றன. இவைகளுக் கிடையில் நம் சாதனை புதிய கு, நிலைக்கேற்ப இத்தடைக ளைச் சமாளிக்கின்றதா என்று கவனிக்க வேண்டும். புதிய மாறுதல்கள், ( ' நிலைகள் ஆகியவைகளுக்கிடையில் நம்மு டைய சாதனை இடைவிடாது தொடர்ந்து நடைபெறுகின் றதா என்று பார்க்கவேண்டும்.
இதற்கு வேதாந்தம் சரியான வழியைக் கூறுகின்றது. வேதாந்தம் மனதைப் பண்படுத்தும் முறையை வற்புறுத் திக் கூறுகிறது."உன்சாதனையை மனதிலிருந்து தொடங்கு" என்று வேதாந்தம் கூறுகிறது. மனதின் தளத்தைப் பற்றிக் கூறுவது மகுேதத்துவக்கலை. வேதாந்தம் என்பது முற்றி லும் தெய்வீக மனேதத்துவம். நம்முடைய உண்மையான நிலையை நாம் மறந்து விட்டோம். அதற்குத் தீர்வு என்ன? அதை நினைத்து மீண்டும் வற்புறுத்துவதுதான். இதுதான் சாதனையின் ஒரு அம்சம், தானே தோன்றுவதுதான் வேதாந்தத்தின் தூண் போன்றது. "நீ இழந்துவிட்ட உன் பழைய பாரம்பரியத்தை உன் உண்மை நிலையை எண்ணிப் பார்த்து அதை மீண்டும் வலியுறுத்து.'' என்று அது சொல் கிறது. இதற்கு உனது கால்களும் தேவையில்லை; கைகளும் தேவையில்லை. நம் நாட்டின் பொருளாதார நிலை கார்ண மாக உழைப்பதற்காக உன் உடல் முழுவதையும் கூட நாள் முழுவதும் எந்த வேலையையும் செய்ய அனுமதிக்கலாம். அதே சமயத்தில் ஆத்மீக அனுபவத்திற்கான தெய்விக உணர்வோட்டத்தை இடைவிடாது தொடர்ந்து நடத்த லாம் தானே தோன்றும் இந்த உணர்வை, பாவத்தைவிட மறைந்துள்ள ஓர் விருப்பம் என்றே சொல்லலாம். அது நிலையான பாவமாக நிலைபெற்றவுடன், பாவம் செயலாக மாறிவிடும். நீ எவ்வாறு மாறவேண்டும் என்று நினைக்கின் ருயோ அவ்வாறே ஆகிவிடுகிருய். •

Page 24
垂4 ஆத்மஜோதி
இந்த உணர்வுக்கு இரண்டு தடைகள் இருக்கின்றன. மனதிலுள்ள அழுக்குகளும், சமுதாயச் சூழ்நிலையிலுள்ள தீங்குகளும் தடைகளாக இருக்கின்றன. இவைகளை வெல்ல இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. எதிர்ச் செயலை எண் ணிப் பார்ப்பது, பிரதிபட்ச பாவனை-முதல்வகை. இந்த முறையில் உனக்குள்ளே இருக்கும் நீ நீக்கவிரும்பும்; இயல்பு உனக்குள்ளே இல்லாதது போல் மறுத்துவிட்டு, நீ அடைய விரும்பும் இயல்பு உன்னிடம் இருப்பதாக வலியுறுத்திக் கூறவேண்டும். அதாவது உன்னிடமுள்ள தீய குணத்துக்கு எதிரான நல்ல இயல்பை வற்புறுத்திக் கூறுவதால், தீய பண்பு மறைந்து விடுகிறது. இரண்டாவதாகக் கூறும் விதி உடன்பாடான இயல்பு எதிர்மறை இயல்பை வென்று விடு கிறது என்பது. ஆகையால் உடன்பாடான உறுதிமொழி கள் சில இடைவிடாது கொடுக்கப்படுகின்றன. தேகாதிச யத்தின் எதிர் மறை நிலையை இது வென்று விடுகிறது .இந் திரியங்கள், உடம்பு,மனம், ஆத்மா ஆகியவற்றேடு உன்னை ஒன்று படுத்திக்கொள்வது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. ஆன்மீக உலகில் சஞ்சரிக்க முடியாமல் மனதைக் கீழே இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் பளு இருக்கிறது. அவைதான் உபாதைகள். அவைகளுக்கு மனதின் மேல் அளவற்ற வலிமை உண்டு. நீ தூய ஆத்மன். பெயர்களும் உருவங்களும் நீயல்ல. உன் உண்மையான இயல்பு சச்சி தானந்தம். ஆனல் உடலின் உபாதை நீ ஒரு குறிப்பிட்ட ளவு வலிமையுள்ள :னிதன் தான் என்று கூறும்.
முதலில் உடல் உபாதை. அதற்குப்பிறகு பல உபாதை கள் இருக்கின்றன. மேலைநாட்டு உடையை அணிந்தால். உடனே உன் எண்ணங்கள் மேலைநாட்டுப்பாணியிலே செல் லத்தொடங்குகின்றன. நீ ஆங்கிலத்தில் எண்ணத்தொடங் குகிருய். உன் எண்ணங்கள் எல்லாம் உலகியல் முறையில் இருக்கின்றன. நாகரிகமான விலை உயர்ந்த உடை அணிந்த வுடன் கர்வம் உண்டாகிறது. இந்த உபாதைகள் அனைத் தும் மனதைக் கட்டுப்படுத்தி அதை அடக்கி விடுகின்றன. இவற்றின் ஆற்றலை எண்ணிப்பார்க்கவேண்டும். அவைகளை எதிர்ப்பதற்காக சிலசாத்வீக உபாதைகள் விதிக்கப்பட் டுள்ளன.

ஆத்மஜோதி 45
மனிதன் துறவறத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறன். காவி உடை அணிந்து கொள்ளுமாறு கூறப் படுகிறது. அது மனதிற்கு ஆற்றல் மிக்க எண்ணத்தைக் கொடுக்கிறது. ஆன்மீக சூழ்நிலை நிறைந்த ஓர் அறைக்குள் தனியே இருக்கும்படி சொல்லப்படுகிறது. ஜெபம், கீர்த் தனை, தியானம்ஆகியவற்றைச் செய்யும்படிசொல்கிருர்கள். மன உபாதைகள் சாத்வீக உபாதைகளாக மாற்றப்பட வேண்டும். தனக்குள்ளே தோன்றும் யோசனையால், பிரத் தியட்ச பாவனையால், தான் எப்பொழுதும் உடன் பாடா கவே நினைப்பதால், தெய்வீக உபாதைகளைத் தானே ஏற். றுக் கொள்வதால், அதைச் செய்யவேண்டும். மனதின் திறம் தெய்வீகமாக மாற்றப்பட்வேண்டும்.
உலக வாழ்க்கையில் எப்பொழுதும் ஈடுபட்டு நேரமே இல்லாதிருக்கும் ஒருவரைக் கேட்டால் அவர்களுக்கு ஏற்க னவே தயாரிக்கப்பட்ட ஒழுங்கான வேலைத்திட்டம் ஒன்று இருப்பதாகவும் எனவே ஆன்மீக சாதனைக்கு அரைமணி நேரம்கூடத் தங்களால் ஒதுக்கமுடியாது என்று கூறுவார் */ குறிப்பிட்ட ஆசனத்திலிருந்துகொண்டு, அல்லது ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு, அல்லது தியான அறைக் குள் சென்று, கீர்த்தனம் செய்யவேண்டும் என்ற முறையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இவைகளைச் செய்ய முடியாவிட்டால் கவலைப்படக்கூடாது. பின் என்ன செய் வது? அவன் ஜெபம், தியானம், கீர்த்தனை ஆகியவைகளை மனத்திலேயே செய்யலாம். தியானத்திற்கென்று தனி அறை தேவை இல்லை. தியானத்திற்குத் தனிநேரம் ஒதுக் கப்படவேண்டியதில்லை. வேலை செய்துகொண்டிருக்கும் போதே இரண்டுமணி நேரத்திற்கொருமுறை ஒரு நிமிட நேரம் உன் கண்களை மூடிக்கொண்டு இறைவனைப் பற்றி யும், அவன் தெய்வீக குணங்களைப்பற்றியும் நினைத்துக் கொள். அல்லது ஹரிஓம் என்றே, வேறு ஏதாவது உனக்கு விருப்பமான மந்திரத்தையோ சொல்லலாம். இதனல் தனியே தியான அறையோ மற்றவையோ இருக்கக்கூடாது. என்று அர்த்தமில்லை. தியான அறை வைத்துக்கொள்.

Page 25
粤6 ஆத்மஜோதி
முடியாவிட்டால் சாதனையை விட்டுவிட7தே. வேலைநேரம் முழுவதும்கூட தொடர்ந்து மனதில் ஜெபம் செய்யலாம்" அதை நிறுத்தாமல் செய்யலாம்.
*உன் உடம்பு ஒரு நடமாடும் ஆலயம் என்று எப்பொ ழுதும் நினைத்துக்கொள். உன் அலுவலகம் ஒரு பெரிய கோயில் அல்லது பிருந்தாவனம் என்று எண்ணிக்கொள். நடப்பது, உண்பது, மூச்சுவிடுவது, பார்ப்பது, படிப்பது போன்ற செயல்கள் எல்லாம் இறைவனுக்குச் செய்யும் வழி பாடு என்று கருதவேண்டும். இது மனத்தின் இரண்டாவது செயல். முதலில் சாத்வீக எண்ணம் அல்லது கற்பனை வேண் டும். அதன் பிறகு சாத்வீக பாவனை வேண்டும். பாவனையும் கற்பனையும்தான் நீ வளர்க்கவேண்டிய இரண்டு பண்புகள். மீண்டும் மீண்டும் ஏற்படும் கற்பனையால் நிலையான பாவ னையாக மாறியவுடன் உன் சாதனை முழுவதும் எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறும்.
"நான் செய்கிறேன் என்ற எண்ணமில்லாமலும், எவ் வித பயன் கருதாமலும், இறைவனுக்கே அர்ப்பணமாக வும் உன் வேலையைச் செய்" அதாவது நீ வாழ்க்கையின் எந்தத் துறையில் இருந்தாலும் உன்னுடைய ஒவ்வொரு செயலையும் இந்த மாற்றுக்கல்லை வைத்து மாற்றி அமைத் துக் கொள்ள வேண்டும். கர்மா பஜயைாக மாறட்டும். இந்த மனுேபாவனை சுவையற்ற மோசமான வேலையைக் கூட இறைவழிபாடாகவே மாற்றிவிடும். இதைப்பற்றி உங்களுக்கு மூன்று குறிப்புகளைச்சொல்ல விரும்புகின்றேன். சாதாரணமாக ஒரு செயலைக் கூடதெய்வீக பஜனையாக மாற்றிவிடலாம். எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன், அது நீ பார்க்கும், கேட்கும் தொடும் ஒவ்வொரு பொருளிலும் விராட்ஸ்வரூபமாக எழுந்தருளியிருக்கும். இறைவனுக்குச் செய்யும் மகத்தான வழிபாடு, சிறப்பான பஜனை என்றே எண்ணிக்கொள். பிறகு வேலையைத் தொ டங்கு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போத்ே இடையில் அவ்வப்பொழுது அந்த வேல்ையை நீ செய்யவில்லை என்று உணருவதற்கு முயற்சி செய்.

ஆத்மஜோதி 47
நீ ஒரு கருவிதான். எங்கும் நிறைந்துள்ள இறைவனின் ஆற்றல்தான் உன்வழியே செயல்படுகிறது. ' இந்த வேலை
என்னுடையது. இதை நான் செய்கிறேன்." என்பதை முற்றிலும் மறந்துவிடு. இறைவனின் சக்திதான் உன்மூல
மாக வேலைசெய்து கொண்டிருக்கிறது என்பதை உணர முயற்சி செய்; இதே உணர்வோடு அதன் இயல்பான முடி வுவரை வேலையைத் தொடர்ந்து முடித்துவிடு மூன்ரு வதாகக் கர்மாவைச் செய்து முடித்தஉடனே அதை இறை வனுக்கு அர்ப்பணித்துவிடு. இறைவனுக்கு மனதார அர்ப் பணித்து விடுவதே-கிருஷ்ணுர்ப்பனம்-உன்னுடைய இறு தியான செயலாக இருக்கட்டும். வேலையைத் தொடங்கும் போது, நீ இறைவனுடைய ஒரு கருவியாகவே அதைச் செய்கிருய் என்று எண்ணிக்கொள். அந்தநாள் முடிவில் நீ செய்த செயல் அனைத்தும் கிருஷ்ணுர்ப்பணமாகவே இருக்
கட்டும்.
இவ்வாருக அனைத்தும் இறைவழிபாடாக அமையும். உன் பாவனையின் காரணமாக உன்செயல் ஒவ் வொன்றும் தெய்வீக வழிபாடாகவே மாறிவிடும். எனவே இந்த யுகத் தில் மனிதன் பற்றிக்கொள்ளவேண்டிய ஆதாரம் பாவனை. அவன் வேலை செய்துதான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது. உலகியலில் வாழ்க்கையின் தேவைக்காக அவன் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அடிக்கடி சிந்திப்பதால் பாவனையை ஏற்படுத்திக் கொள்ளட்டும். அதைத் தன்னில் ஒரு பகுதியாகவே ஆக்கிக்கொள்ளட்டும். அவனுடைய வாழ்க்கை முழுவதும் இடைவிடாது இறை வழி பாடாக வே இருக்கும். உடலிலிருந்து மனதுக்கு முக்கியத்தை மாற்றுவதால், இறைவன் அவனை எத்தச் சூழ்நிலையில் வைத்தாலும் அவன் இடைவிடாத சா த னை யாக வே வாழ்க்கையை நடத்துகிருன். நம்பமுடியாத குறுகிய காலத்திற்குள் உலகம்முழுவதும் புதியமாறுதலோடு விளங் குவதை அவன் காண்கிருன். இறைவனை எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உணரத் தொடங்குகிருன்,

Page 26
48 ஆத்மஜோதி
யோகத்தின் அர்த்தம்
- பரமாத்மா -
*யோகம்’ என்ற சொல்லுக்குத் தொடர்பு, சேர்க்கை அல்லது சம்பந்தம் என்பதுதான் பொருளாகும், ஆன் மீகஞானத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் என்றே இதற்கு அர்த்தமாகும். இந்த சம்பந்தம் அல்லது சேர்க்கை எத்தகையது. எதைக் குறிக்கிறது என் பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.
சாதாரணமாக ஒரு ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒரு சம்பந்தம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது என்றே இறைஞானத்தில் பற் றுள்ளவர்கள் கருதுகிருர்கள். இதனுல்தான் பக்திப்பாடல் களிலுங்கூட, "அம்மையும் அப்பனும் நீயே, அருள்ஞான தந்தையும் நீயே" என்ற வாக்கியங்களைக் காண்கிருேம். இன்ருே இச்சம்பந்தம் உண்மையானதாயில்லை. வெறும் சொல்லளவாகவே இருக்கக் காண்கிருேம். வெறும் நம்பிக் கையாகவே இருக்கக் காண்கிருேம். இந்த சம்பந்தம் யாரு டைய வாழ்விலும் முக்கிய பங்கு பெறுவதாகத் தெரியக் காணுேம். நடைமுறையில் மக்கள் யாவரும் தம் தந்தை யான கடவுளிடமிருந்து அறுந்து பிரிந்து பிளவுபட்டிருக் கவே காண்கிருேம். அதனுல்தான் அவருடைய சம்பந்தத் தால் மட்டுமே அடையக்கூடிய, தூய்மை, அமைதி, ஆனந் தம், ஐஸ்வரியம் ஆகிய சுகங்களை அடையாது, அமைதியும், ஐஸ்வரிவமும் இழந்து சதாதுக்கத்தில் ஆழ்ந்து தவிக்கிருச் கள். மிருக சுபாவத்தை அடைந்தவராய் சரீர உணர் லேயே சிக்கித்தவித்து வெறும் போகிகளாயிருந்துவருகிருர் கள். இன்றைய மனிதன் வெறும் வாயளவில் கடவுளுடைய நாமத்தை உச்சரிக்கிருனே ஒழிய, பக்திப் பாடலைப் பாடு கிருனே ஒழிய உண்மையான சம்பந்தம் கொண்டிருக்க வில்லை. இச்சம்பந்தம் தன்னுடைய தகப்பனை விட்டுப் பிரிந்து அயல்நாடு சென்று அங்கு தன் தகப்பனை அடியோடு மறந்தவனய், அவருக்குக் கடிதம்கூட எழுதாமல், அவர் புத்திமதியையும் கவனியாதவளுய்,தன் குடும்ப அந்தஸ்தை யும் மதிக்காதவளுய் இருந்துகொண்டு பிறர் கேட்கும்போது மட்டும் தன் தகப்பன் இன்னரென்று வாயளவில் கூறிவரும் ஒரு அபாக்யபுத்திரனுக்கும் அவனுடைய தகப்பனுக்கும் உள்ள சம்பந்தத்தை ஒத்ததாகவே இருக்கும்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்துனேசியா சந்தாதாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்! 都必必夺哆哆必必必必哆哆*令冷令必、必必哆哆°*令令**●●博
அன்புக்குரிய சந்தாதாரர்களே,
ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கும் ஆத்மஜோதி இங்கி ருந்து அனுப்பப்படுமுன் இருமுறை விலாசம் சரிபிழை பார்க்கப்பட்டுத் தபாலில் சேர்க்கிருேம். அப்படி இருந்தும் ஒரு சிலர் தமக்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை என்றும் முறையீடு செய்கின்றனர். அத்துடன் கடந்த தை மாதம் தொடக்கம் முத் ைெரச் செலவையும் அரசாங்கத்தார் 14 மடங்காக அதி, க்ரித்துள்ளனர். இவை இரண்டையும் ஈடுசெய்யுமுகமாக ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஏஜென்சியை நியமித்துள்ளோம். இனிமேல் அவர்களிட மிருந்தே உங்களுக்கு ஆத்மஜோதி கிடைக்கத்தக்கதான ஒழுங்கைச் செய்துள்ளோம். உங்கள் சந்தாவையும் அவர் களிடமே செலுத்தி அவர்களிடமிருந்தே ரசீதையும் பெற் றுக்கொள்க.
இந்திய விலாசம்:
S. RAJASEKARAN
“Visalakshi Illam”, 274, Royapettah High Road,
Royapettah-Madras-600 014, Tamilmadu. மலேசியா விலாசம்:
S. SUBRAMANIYAM Sri Eswari Flour Mill, 99-IL, Jalan Tandok, Kualalumpur, Malaysia. இந்துனேசியா விலாசம்:
Sri Mariyamman Koil Jalan Teuku Umar NO: 18, Medan-Sumatra, Indonesia. சிங்கப்பூர் விலாசம்:
T. SIVASUNDARAM Sri Senpaga Vinayagar Temple, 19, Ceylon Road, Singapore-15.

Page 27
Registered at the G. P. O. as a
ஆத்மஜோதிக் ஒன்றை அரிய ஆராய்ச்சிக் விருக்கும் நற்செய்திை இலங்கை ஜனநாயக சோ அபிவிருத்தி இந்துசமய ( வல்கள் அமைச்சு மகாநா களுக்கு சகல வசதிகளும்
1982 ஜனவரி 22ம் திக இலங்கையில் இம்மகாநாட்டை முன்ன
பிரதிநிதிகளுக் வெளிநாட்டுப் பிரதிநிதிகளு! வரவேற்புக்குழுவிளுல் வெ பட்டு, இலவச தங்கு வசதிகளும் பத்திற்கிணங்க அளிக்கப்படும்.
மகாநாட்டிற்கான வெளிநா பிரதிநிதிகளுக்கும் கொழும்பில் படும். கலாச்சாரச் சுற்றுலாக்கள்:
வெளிநாட்டுப் பிரதிநிதிகளு மகாநாட்டின் போதும், அதன் நிதிகள் சரித்திரப் பிரசித்திே கீழ்க்கண்ட இடங்களுக்கு அழை திருக்கேதீஸ்வரம், முனி தோன்றீஸ்வரம், நல்லூர், க சீதைகோயில், நுவரெலியா நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், ெேபான்னம்பலவாணேஸ்வரர் ே காலி சிவன் கோயில், கன்னிய அம்மன் கோயில்,
ஈராக்ஷ் ஆசிரியர்: தா. முத் அச்சுப்பதிவு: ஜீ ஆத்ம
அச்சிட்ட திகதி 16-11-81.
 

Nowspaper M. E. 339/00. beetleshseshsasash
96).5 மகாநாடு
தி முதல் 26ம் திகதி வரை
நடைபெறும். fட்டு ஆத்மஜோதி நிலையம் F சிறப்பு மலர் கட்டுரைகளுடன் வெளியிட 2ய அறியத்தருகின்ருேம். ஷலிசக் குடியரசின் 辣
இந்துகலாச்சார, தமிழ்அலு ட்டில் பங்குபற்றும் பிரதிநிதி ஏற்பாடு செய்துள்ளது. க்கான வசதிகள்:
க்கு ளிநாட்டுப் பிரதிநிதிகள் வரவேற்கப்
போக்குவரத்து வசதிகள் செய்யப்
ருக்கான கலாச்சார சுற்றுலாக்கள் பின்பும் ஒழுங்குபடுத்தப்படும். பிரதி பற்ற சமய முக்கியத்துவம் பெற்ற த்துச் செல்லப்படுவார்கள்.
இல்லங்களும் அவர்களின்
ட்டுப் பிரதிநிதிகளுக்கும்
ஸ்வரம், மாமாங்கேஸ்வரம், سم நீர்காமம், கண்டி, அசோகவனம் சிகிரியா, திருக்கோணேஸ்வரம், தெவிநுவரவிஷ்ணு கோயில், ாயில், பொலன்னறுவை, தம்புல்ல, , வெந்நீர்க்கிணறுகள், வற்றப்பளை
э85шпт ஜாதி அச்சகம் - நாவலப்பிட்டி,