கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1982.01.14

Page 1
*機寧療彝*
漸漸事*龔幫*
| –|-|||-|-||-|-|회 - - -|- -| ----|-! ! ! ! !:-) ----|- . . . - - - - -- -| –|- |- ---- | |- |- 』- Nos = ... !! !! !! !! !! = √+ √ **¿¿.*|-|-|-|-|--
寧 နုံးနှုံး 書
| 1- **: : _................... ··· **響臺臺寧臺*********事事串事事*************** -* ) _ - _ ( )
-*= *|-|- |-|- |- s. |- |
 
 
 
 

"
=" ... . *****
॥ ;1982。********罹
|8 - 1 აგვის "უკან გას, კ. ჯ. *、 證 ।
...
輕 枋、 -- နှိုး
·
gin T
சுவாமிகள்.
************

Page 2
ஆத்மஜோதி
ஒர் ஆத்மீக மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே
கைத்தானந்தரி
ஆசிரியர் நா. முத்தையா
Og9: 34 - தை sont (14-1-82) - FLs 3
பொருளடிக்கம்
மறை பொருள் அமைந்த மந்திரம் 97 مس குருநானக் அருள் வாக்கு ** ** * 98 – کړه . يا தவத்திரு காயத்திரி சுவாமிகள் 99 صمم sai Luf 62 1 هست சேரியில் இருக்க வேண்டாம் - 16 ஜீவகாருண்ய ஒழுக்கம் -07 1 ف அருள்மிகு கோணேஸ்வரம் في 1 سم முன்னேசுரத்தில் சம்மேளன காட்சி 18 1 ܣܗ யூரீ மகாவிஷ்ணு சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு 121 سے ஒரு சிந்தனைக் கண்ணுேட்டம் =-124 வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி ஆலய வரலாறு 嵩 இனமும் மனமும் , நடப்பவையாவும் நன்மையின்பாற்று-சுவாமிராமதாஸ் அகுளுரைகள் 33 இறை வழிபாடு 35 earè W 142 سے
O op oamoarapaparapapapapapap LMLLLLLMSSSLL LL LLLLMSLLMLSLSLMS MSSLLS SLSL SSLSLMLMTM S
O ( சந்தா ஆத்மஜோதி! இலங்கைக்கு ஆண்டுச் சந்தா ரூபா. 20.00 ஆயுள் சந்தா ரூபா. 400.00 தனிப் பிரதி ரூபா. 2-00 இந்தியாவுக்கு ஆண்டுச் சந்தா ரூபா. 25.00 இதர நாடுகள் 6 வெள்ளி ஆயுள் சந்தா eju T. 500-00 ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி - (யூனி லங்கா)
LMLLLLLL LLLLSLTLL MLLLLL MLLLLLL LSLLLLL LLLLTSASL TLLMLLLLLL LL LMLL LLLLLLLLSLLLLLLL
 
 

மறைபொருள்
திருமந்திர நூல் திருமூலரால் அருளிச் செய்யப் பட்டது. இப்பாடல்களில் பல மறை பொருள்களைத் தம்மிடத்தே கொண்டு திகழ்கின்றன. அவற்றுள் ஒரு
Lunt -ðav' Lutrfi L'Gl J/T Lð.
வழிதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண் டோடினுர் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
இம்மந்திரப்பாடல் தோட்டப் பயிரைப் பற்றிய
சொற்களைக் கொண்டு திகழ்கிறது. இத்தோட்டப் பயிர் பொருள்களின் மூலம் அரிய குறிப்பை மறைபொரு ளாகக் குறித்துள்ள்னர், இம்மந்திரப் பாட்டின் பொருளை மேல்போக்காகப் பார்க்கும் போது, 'வழு தலங் கத்தரிக்காய் விதையைவிதைத்தேன். விதைக்கு ஏற்பக் காய்க்காமல் பாகல்காய் முளைத்தது. பின் மண் புழுதியைத் தோண்டினேன். பூசணி பூத்தது. இந்த மாறுபாடான நிகழ்ச்சியைக் கண்ட தோட்டக் காரர்கள் ஓடிவிட்டனர். பின்னர் வாழைப்பழம் பழுத் தது' என்பது புலப்படும்.
ஆனல் இப்பாட்டின் உள்பொருள், “யோகப்பயிற்சி யினை மேற்கொண்டேன். அதனுல் வைராக்கியம் வளர்ந்தது. தத்துவங்களே ஆராயத் தொடங்கினேன். இவ்வாராய்ச்சியின் பயனுகச் சிவம் வெளிப்பட்டது. சிவம் வெளிப்பட்டதும்,ஐந்து இந்திரியங்களும் தொண் ணுாற்ருறு தத்துவங்களும் நீங்கின. அதன்பின் திரு வடிப்பேருகிய ஆன் மலாபம்' கிடைத்தது என்பது.
ஈண்டு வழுதலை வித்து யோகப் பயிற்சியினையும், பாகல் வைராக்கியத்தையும், புழுதியைத் தோண்டல் தத்துவ ஆராய்ச்சியையும். பூசணி சிவத்தையும், தோட்டக் குடிகள் இந்திரியாதி விடயங்களையும், வாழைக்கனி ஆன்மலாபத்தையும் உணர்த்தி நிற்கின் றன.

Page 3
ஆத்மஜோதி
குருநானக் seq6 6) Taos
இறைவன் ஒருவனே என்று எல்லாரும் கூறுகிருர் கள். ஆனல் அவர்களை விட்டுச் செருக்கு போகவில்லை.
உள்ளும் புறமும் ஒன்முக வாழ்பவனே மாயை நீங்கிய
இறைவனின் உறைவிடத்தை உணர்கிருன் இறைவன் உன் அருகில் தான் இருக்கிருன் . எட்ட முடியாதவன் என்று நினையாதே. அவன் ஒருவனே, எல்லாப்படைப் புகளிலும் பரத்துள்ளான். அவன் ஒருவனையே போற்று
பவர்தான் அவனேடு இரண்டறக் கலக்கிருர்கள்.
ஒரே உருவை நேசிப்பதுதான் சிறந்தமுறை: அவன் ஐம்பூதங்களிலும் வியாபித்திருக்கிருன்; எதி ரொலிக்கிருன் : ஒரே வண்டு மூவுலகையும் சுற்றுகிறது. அந்த ஒருவனை உணர்பவன் போற்றப்பெறுகிருன். அவன் இறைவனைத் தரிசிக்கிருன். அவன் தன் அறிவு
சிந்தனைகளே அந்த ஒருமையைப்பெறவே பயன்படுத்து
கிருன், ஆணுல் குருவின் மூலமாக சிலருக்குத்தான் இந்த வாய்ப்புக்கிட்டுகிறது. குரு அருள்கூர்த்து இந்த வாய்ப்பினை நல்கும்போது, அவன் பேரின்பமெய்து கின்றன். இத்தகைய உணர்வை குருதான் உவந்து அளிக்கிருர்.
இறைவன் காணமுடியாதவன்; எட்ட முடியாத வன்; எல்லேயற்றவன்; வலியவன்; படைத்தவன்; இரக்கம் உள்ளவன். எல்லாச் சீவன்களும் பிறந்து மடி கின்றன. அவன் மட்டும் அருள்கடலாக என்றென்றும் நிலைத்திருக்கிருன். அவன் தலைவிதியை எவரும் நிர்ண யிப்பதில்லை. அவன் நிலையானவன். நிலமும் வானும் அழிந்தாலும் அவன் அழிவதில்லை. பகலவனும் தண் மதியும் தம் போக்கில் இயங்குகின்றன. இலட்சோப இலட்சம் விண்மீன்களும் அப்படித்தான். அவன் ஒரு வனே இயங்காமல் நிலையாக இருக்கிறன்.
 

ஆத்மஜோதி 99 தவத்திரு காயத்திரி சுவாமிகள்
- ஆசிரியர் -
இந்து சமயத்திற்கு ஒரு பெருமை இன்றும் உண்டு. அதாவது மகரிஷிகளும் யோகிகளும் ஞானிகளும் சித்தர் களும் அன்றிருந்தது போலவே இன்றும் இருந்து கொண் டிருக்கிருர்கள் என்பதுதான். இத்தகையவர்கள் நம்மி டையே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதஞல் தான் உல கம் நிலை பெற்றிருக்கிறது. உலகம் என்பது உயர்ந்தோ ரையே குறிப்பிடுவது.
அகில உலகுக்கும் அன்னையாகிய பராசக்தி பல நாம ரூபங்களோடு விளங்கி பக்தர்கட்கு அருள் பாலித்து வரு கின் ருள். அன்னையின் திருவருள் துணையின்றி நாம் ஏதும் செய்ய இயலாது. அன்னையின் மாறுபட்ட பல உருவங்க ளில் ஒன்ருனது பூரீகாயத்ரி வடிவம். ஐந்து முகங்களும், பத்துக் கரங்களும் கொண்டு விளங்குகின்ற பூgகாயத்ரி தேவி தன்னைத் துதிப்பவர்கட்கு எல்லாவித நலன்களும் தந்து காப்பாற்றுகின்றுள்.
காயத்ரி தேவியைத் துதிக்கும் மந்திரமே காயத்ரி மந் திரமாகும். காயத்ரி மந்திரம் ஒப்புயர்வற்றது. முதலில் காயதரியை ஜபித்த பின்னரே, மற்ற மந்திரங்களே ஜபிக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தின் சக்தியால் பல அரிய சித் திகள் தோன்றுகின்றன. செயற்கரிய பலவற்றைச் சுலபமு டன் முடித்து வெற்றி கொள்ளும் திறமை உண்டாகிறது. முகத்தில் புதிய ஒளியும் வாக்கில் புதிய சக்தியும் கொடுத்து நம்மை ஊக்குவிக்கிருள் பூரீ காயத்ரி தேவி. அறிவைத் தூண்டி வளர்க்கின்ற அன்னை காயத்ரி தேவியின் அரியசக் தியை துணை கொண்டு தம்மை நாடி வருகின்ற பக்தர்க ளுக்கு இன்றும் நலம் புரிந்து கொணடிருப்பவர் காயத்ரி
சுவாமிகள்.
திரு அனந்த கிருஷ்ணையர் அவர்களும் திருமதி லட்சுமி
அம்மாள் அவர்களும் திருவனந்தபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் நான்காவது புத் திரராக 1924ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் ரேவதி நட்சத் திரத்தில் அவதாரம் செய்தவர்தான் தவத்திரு காயத்ரி சுவாமிகள். இவரது இளமைப்பெயர் அனந்தபத்மநாத

Page 4
፫ 00 . ஆத்மஜோதி
என்பது. உரிய காலத்தில் திருமணம் நடைபெற்றது. இல் வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட இவரால் முடியவில்லை. கேரளத்திலிருந்து மதுரைக்கு வந்துவிட்டார். அன்னை மீனுட்சியிடம் வேண்டுதல் செய்தார். யோகி சுத்தானந்த பாரதியார் அன்னை மீனுட்சியிடம் தமது ஏழாவது வயதி லேயேபின்வருமாறு வேண்டுதல் செய்தார்.
** அம்மா பரதேவி தயா பரியே
சும்மா உலகின் சுமையாக இரேன் எம்மாத் திரமுன் பணியிங்குளதோ f அம்மாத்திரம் வைத்தடி சேர்த்தருளாய்'. இதேபோன்று அனந்தபத்மநாதனும் தேவியிடம் தம் குறை களைக் கூறி வழிபட்டார்.
ஒருநாள் அன்னை மீளுறட்சியை வழிபட்டு விட்டு வெளியே வந்தார். பசியினுலும் களேப்பினுலும் சோர்வுற்றிருந்தார். அப்போது ஒரு சிறுவன் தோன்றினன். "உங்களுக்கு புது வழி ஒன்றைக் காட்டுகிறேன் என்ளுேடு வாருங்கள்". என்று சொல்லி அவரை ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று அவர் முன்னிலையில் விட்டுப் பையன் மறைந்துவிட் டான். “உன்னை அந்தப் பையன் தான் அழைத்து வந் தான?’ என்று பெரியவர் கேட்டார். "ஆமாம் அந்தச் சிறு வன்தான் அழைத்து வந்தான்' என்று பையன்ைக் காட்
டத்திரும்பினர். பையனைக் காணவில்லை.
பெரியவர் புன்னகை பூத்தார். "வந்த சிறுவன் வேறு பாருமல்ல; குன்றுதோறும் ஆடும் குமரனேதான். அந்தக் குமரனேடு வந்த பெருமை உனக்கு, உன்னை மாணவனுக அடையும் சிறப்பு எனக்கு’ என்ருர் பெரியவர். குருவின் உபதேசம் பெற்ருர் அனந்தபத்மநாதன், வேதங்களிலுள்ள மந்திரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மந்திரமாக இருக் கும் காயத்ரி மந்திரத்தை உபாசித்து அரிய பல சித்திகள் கைவரப் பெற்றதோடு காயத்ரி சுவாமிகள் என்ற நாமமும் பெற்ருர். காயத்ரிதேவியின் அருள் பெற்ற சுவாமிகள் தம் மை நாடி வந்த அத்தனை பேருக்கும் அமைதிச் செல்வத் தைக் கொடுத்து அருள் பாலித்த வண்ணம் இருக்கின்றர். தம்முடைய தவ வலிமையினல் குங்குமத்திலிருந்தும், டக் தர்கள் கொண்டுவரும் பழம் பூமாலை ஆகியவைகளில் இருந் தம் தெய்வ விக்கிரகங்களை வரவழைத்துக்கொடுக்கின்ருர்

ஆத்மஜோதி 10
அவ்விக்கிரகங்களை நீங்கள் பூஜித்தால் இன்பமேயன்றித் துன்பம் இல்லை என்று அருள்வாக்கும் அருளுகின்றர்.
சுவாமிகளுடைய அற்புத சக்தியைக்கண்டு பிரமித்து அவருடைய அருளைப்பெறும் மக்கள் இன்று பெருகிவருகின் றனர். பக்தர்களின் விருப்பப்படி கணபதிபூஜை பெளர்ண: பூஜை முதலானவற்றை நடத்திவைக்கிருர் சுவாமிகள்.
"பக்தியின் மூலமே நாம் இறைவனை அடையமுடியும், அனைவருந் தெய்வ நம்பிக்கையோடு வாழ்ந்து, தமது கட மையை செவ்வனே செய்து வந்தால், அது நம்மை இறைவ னின் பக்கம் அழைத்துச் செல்லும்" என்று சுவாமிகள் மக் களுக்கு உபதேசம் செய்கின்றர்கள்.
காயத்ரி மகா மந்திரத்தின் பெருமைகளை விளக்கி அனை வருங்காலந்தவருது ஜபம் செய்து ஆத்மசக்தியை வளர்த் துக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லுகின் ருர், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு பூரீ காயத்ரி தேவி குரீசக்கரம் பொறிக்கப்பெற்ற டாலர்களையும் குங்குமப் பிர சாதத்தையும் வழங்கி ஆசீர்வதிக்கிருர்,
4-11-79-இல் அன்று கோழிக்கோடு பிராமண சமூகம் கல்யாணமண்டபத்தில் நிகழ்த்திய பூரீ காயத்ரி தேவியின் பெளர்ணமிப் பெருவிழாவின் போது ஒரு அற்புதம் நிகழ்ந் தது. பூஜை முடிந்ததும், பூஜித்த புஷ்பங்களிலிருந்து ஒன் றரை கிலோ நிறைக்கு மேற்பட்ட காயத்திரி தேவியின் விக் கிரகம் ஒன்றினை எடுத்து சமூகமடத்துத் தலைவரிடம் கொ டுத்து, இவ்விக்கிரகத்தைப்பார்த்தாவது காயத்ரி மந்திரத தை ஜெபித்துப் பலன் அடையவேண்டும் என்று கூறி ஆசீர் வதித்தார்கள்.
தெய்வ நம்பிக்கையை வளர்த்து, தன்னலம் கருதாது மக்களுக்கு வழிகாட்டி, இந்துமதத்திற்குத் தொண்டாற்றி வரும் தவத்திரு காயத்ரி சுவாமிகள் அற்புத சக்தி பெற்ற அதிசயசித்தராக விளங்கிக் கொண்டிருக்கிருர்கள். இனிப் புப் பண்டம் இருக்குமிடந்தேடி எறும்புகள் செல்வது போல சுவாமிகளுடைய தெய்வீகத்தன்மையால் பலர் கவ ரப்பட்டுச் சுவாமிகளைத் தரிசித்துப் பலன்மிகப் பெறுகின் றர்கள்.

Page 5
102 ஆத்ம ஜோதி
Lass6OJT6ūT LITT
یہ محض
பாபாவின் அருளால் பயன் பெற்றவர்கள் இலட்சக் கணக்கான மக்கள். ஒரு சமஸ்தானத்தின் இளவரசராக இருந்தவரின் வாழ்க்கையில் நடந்த அதிசயம் இது. ஸாவ ணுார் என்ற சமஸ்தானத்தின் இளவரசராக இருந்தவர் மெஹர் பான் நவாப் சாஹேப். சாண்டூர் சமஸ்தானத்தின் அரசரும் அரசியும் அவரை அன்புடன் வளர்த்தவர்கள். அவர்களைத் தமது பெற்ருேரைப் போலவே போற்றிவந் தார் மெஹர்பான் நவாப். சாண்டூர் அரசதம்பதிகள் பக வான் பாபாவிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
மெஹர்பான் நவாப் திடீரென்று இருதய நோயினல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். சாண்டூர் அரசதம்பதியர் அதைக்கேட்டு அவரைப் பார்க்க ஓடிவந் தார்கள். வரும்போதே கொஞ்சம் பாபாவின் விபூதிப்பிர சாதத்தையும் எடுத்துவந்தார்கள். அதை அவருடைய நெற்றியில் இட்டதுமே மெஹர்பான் வலி சிறிது தணித் ததுபோல ஆறுதல் அடைந்தார். மனத்திலும் ஆறுதல் உண்டாயிற்று. "நான் பகவான் பாபாவைத் தரிசிக்க விரும்புகிறேன். என்னை அங்கே அழைத்துச்செல்ல முடி யுமா?’ என்று கேட்டார் மெஹர்பான். ஆணுல் அவரு டைய உடல்நிலையில் புட்டபர்த்தி வரையில் செல்லுவது மிகவும் சிரமம் என்று தோன்றிற்று. அதனுல் பெங்களூரி லேயே அவர் சிகிச்சையைத் தொடரவேண்டியதாயிற்று.
1973ம் ஆண்டு நவம்பர் மாதம் பாபாவின் பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் வெகுவிமரிசையாக நடந்தது. ஏராளமாஞேர் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள். சாண் டூர் அரசியும் அங்கே போயிருந்தார். விழா முடிந்தபின் பக வான் பாபாவிடம் தங்கள் நண்பரைப்பற்றி அவர்சொல்லி பாபாவின் அருளை வேண்டினர். "எனக்கு எல்லாம் தெரி யுமே!’ என்று சிரித்துக்கொண்டே சொன்னர் பாபா. "நான் ஒயிட் பீல்டில் டிசெம்பர் மாதம் இருப்பேன். அங்கே என்னைச் சற்தியுங்கள் என்றும் சொன்ஞர்.
 

ஆத்மஜோதி 103
'ஊருக்குத் திரும்பவேண்டிய அரசியின் கார், வழியி லேயே பழுதாகிவிட்டது. அதஞல் அதைச் சரிபார்க்கப் பெங்களூருக்கு வரவேண்டியதாயிற்று. "சரிதான் எல்லாம் பகவான பாபாவின் திருவுள்ளப்படிதான் நடக்கிறது" என்று எண்ணிக்கொண்டே பெங்களூருக்கு வந்துவிட்டார். அரசி பாபா கொடுத்தனுப்பிய விபூதிப்பிரசாதத்தையும் மெஹர்பானுக்கு இடச்செய்து ஆசிகளையும் கூறினர்.
"ஒயிட்பீல்டில் பிருந்தாவனத்திற்கு உங்களை அழைத்து வரச் சொன்னர். அங்கே நீங்கள் பகவானைத் தரிசிக்க லாம்" என்று கூறக்கேட்டதும் அவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.
டிசெம்பர் மாதம் ஒன்பதாம் தேதி, மெஹர்பானின் உடல்நிலை மோசமாக இருந்தது. குடும்ப டாக்டர் அவரைப் பன்னிரண்டு மைல்கள் காரில் அழைத்துச் செல்வதற்குச் சம்மதிக்கவில்லை. குடும்பத்தினரில் சிலர் அவரை எப்படியும் பகவான் பாபாவிடம் அழைத்துச்செல்ல வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினர் கள். ஆளுல் வேறு சிலர் அந்த உடல்நிலையில் வெளியே போனல் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று எண்ணிஞர்கள். 'பகவான் பாபா என்னை அழைத்து வரும்படி கட்டளையிட்டிருக்கிருர், அதனல் தைரியமாகவே போகலாம். ஒன்றும் நேராது" என்று அவர்களுக்குத் தைரியம் சொல்லி அழைத்துப்போனுர் சாண்டூர் அரசி,
கார் பிருந்தாவனத்தை அடைந்தது. காரை வெளியே நிறுத்திவிட்டு அவரை அதிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சாண் டூர் அரசி பகவானிடம் அனுமதி பெற இறங்கி வந்தார். அப்போது பகவான் தரிசனத்துக்காக வெளியே இறங்கி வந்து கொண்டிருந்தார். அதைக்கண்டு மெஹர் பான் தாமும் காரிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவருக்கு மூச்சு தடுமாறத் தொடங்கிற்று.
பகவான் பாபா அதைப் பார்த்துத் தாமே அவர் அரு கில் வந்தார். அவரை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நெற்றியல திருநீற்றை இட்டார். சிறிது அவர் வாயிலும் பாட்டு, தமது கைகுட்டையால் அவருடைய கையைத் தடவிக் கொடுத்தார். தமது உடலில் ஒரு மின்சாரம்

Page 6
04 ஆத்மஜோதி
பாய்ந்தது போன்ற உணர்ச்சியை மெஹர்பான் அனுபவித் தார். அவர் கண்களில் நீர் பெருகிற்று. “பயப்படாதீர்கள் நான் உங்களிடம் இருக்கிறேன். உங்களோடு இருக்கிறேன். கவலை வேண்டாம்" என்ருர் பகவான் பாபா.
மெஹர்பானின் இருதயத்திற்கு அருகே உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்டிருந்தது. அவரைக் குணப்படுத்த பெரிய அறுவைச் சிகிச்சை ஒன்று தேவை என்றும், அவரு டைய உடல்நிலையில் அது அபாயகரமானது என்றும் கூறி இருந்தார் டாக்டர். அதற்கு மெஹர்பான் கடல் கடந்து அயல்நாடுகளுக்குப் போய் வைத்தியம் செய்து கொள்வதே உசிதம் என்று நிபுணர்கள் கூறியிருந்தார்கள். இவையெல் லாம் அவருக்கு மட்டுமே தெரியும். தமது மிக நெருங்கிய உறவினர்களிடமும் அவர் இதைப்பற்றிக் கூறவேயில்லை.
உங்கள் இருதயத்திற்கு அருகில் உள்ள நரம்பு பாதிக் கப்பட்டிருப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அறுவைச்சிகிச்சை இல்லாமலே அதுகுணமாகிவிடும் பயப் படாதீர்கள்" என்ருர் பாபா. அந்த நுட்பமான தகவல் பாபாவுக்கு எப்படி தெரிந்தது என்று அவருக்குப் புரியவே இல்லை. வியப்பில் ஆழ்ந்தவராய் பேசமுடியாமல் அமர்ந் திருந்தார் மெஹர்பான்.
அவருடைய குடும்பத்தினர் அனைவருமே அங்கே வந்தி ருந்தார்கள். ஆணுல் மெஹர்பானின் மகன் சிறுகுழந்தைஅங்கே அழைத்துவரப் படவில்லை. அங்கே வரவேண்டும் என்றும், பகவானைத் தரிசிக்கவேண்டும் என்றும் அந்தக் குழந்தைக்கு மிகுந்த ஆசை.ஆனல் குடும்பத்தினர் அவனைப் பிடிவாதமாக ஊரிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.
*உங்கள் மகன்-சிறு குழந்தை என்னைத்தரிசிக்க மிகவும் சைப்பட்டானே? அவனை நீங்கள் ஏன் வீட்டிலேயே விட்டு ட்டு வந்துவிட்டீர்கள்? பரவாயில்லை. நானே உங்கள் இல் லத்துக்கு வந்து தரிசனம்கொடுக்கிறேன்" என்ருர் பாபா. குடும்பத்தினர் அனைவரும் இந்தக் கேள்வியை கேட்டுத் திகைத்து நின்ருர்கள். -
மெஹர் பானின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மிகுந்த மன அமைதியுடன் அவர் வீடு திரும்பினுர். அவரை ஓய்வு

ஆத்மஜோதி 05
ாடுக்கும்படி டாக்டர் கூறிஞர். ஆணுல் அவர் கேட்கவில்லை.
குடும்பத்தினருடன் நள்ளிரவுவரையில் பேசிக்கொண்டே
ಅಣ್ಣಿ" "என் உடம்பு குணமாகிவிட்டது." என்று தம்புடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
அன்று இரவு அவருடைய துர்க்கத்திலும் பாபாவின் தரிசனம் கிடைத்தது. "இன்னும் இரண்டு நாட்களில் உங் கள் உடம்பு குணமாகிவிடும். கவலை வேண்டாம் என்று பாபா அந்தக்கனவில் சொன்னர். மறுநாள் காலையில் எழுந் ததும் மெஹர்பான் தமது குடும்பதினரிடம் இதைப்பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "இனி எனக்குக் கவலை இல்லை. இதைப்பற்றிச் சாண்டூர் அரச தம்பதிகளிடம் உடனே சொல்லவேண்டும்’ என்று கூறிவிட்டுக் காரைத் தானே எடுத்துக்கொண்டு ஒட்டிச்சென்ருர் மெஹர்பான்.
பாபா அவருக்கு ரோசாப்பூ நிறத்தில் ஒருவிபூதிப் பிர சாதத்தை வரவழைத்துக் கொடுத்திருந்தார். அதை உடல் முழுதும் அவர்.தடவிக் கொள்வது வழக்கம். படிப்படியாக அவருடைய உடம்பு குணமடைந்து விட்டது. விபூதிப்பிர சாதமுந் தீர்ந்துவிட்டது,
1974ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மெஹர்பான் சாண்டூர் அரசிக்கு டெலிபோன் செய்து ‘நான் பகவான் பாபாவைத் தரிசிக்க விரும்புகிறேன். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று வாருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார். சாண்டூர் அரசியும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பகவா னின் தரிசனத்துக்காகப் பிருந்தாவனத்துக்குப் போனர். ஆளுல் அவரால் அவருடைய பாதங்களை தொடமுடிந் ததே தவிர ஏதும் கேட்கமுடியவில்லை.
“புறவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்தால், அது பொறுக்கித் தின்ற தானியம், அதன் இரைப்பையில் இருக்கும். அது போலவே உலகப் பற்றுள்ளவனுக்கு அவனது விவகாரமே கழுத்தில்ஏறி நின்று கொண்டி ருக்கும்."
-அர்த்தமுள்ள இந்துமதம்

Page 7
106 ஆத்மஜோதி ஜியரும் சங்கராச்சாரியரும் சேரியில் இருக்க வேண்டும் - மகாகவி பாரதி -
"முற்பகல் செய்யில் பிற்பகல் விளையும்.' நாம் பள்ளர் பறைய ருக்குச் செய்ததை எல்லாம், நமக்கு அன்னிய நாடுகளில் பிறர் செய் கிருர்கள். நமது சிருங்ககிரி சங்கராச்சாரியாரும் வானமாமலை ஜீயர் சுவாமிகளும் நெட்டால், திருன்ஸ்வால் தேசங்களுக்குப் போவார் சு ளாஞல், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்யவேண்டும்.
சாதாரண மனிதர்கள் நடக்கும் வீதிகளில் நடக்கக்கூடாது. பிரத்தியேகமாக விலகிநடக்கவேண்டும். பல்லக்குகள் வண்டிகள் இவற்றைப்பற்றி யோசனையே வேண்டியதில்லை. நாம் தமக்குள்ளேயே ஒரு பகுதியார்களை நீசர்கள் என்று பாவித்தோம். இப்போது நம் எல் லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக கருதுகின்ருர்கள்.
நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினுேம். இப்போது, நமது ஹிந்து சாதி முழுவதையுமே உலகம் தீண்டாத சாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா சாதி யரிடத்திலும் வகுப்புகள் உண்டு. ஆனல் தீராத பிரிவுகள் ஏற்பட்டு சாதியைத்துர்ப்பலப்படுத்திவிடுமானல், அதிலிருந்து நம்மைக் குறை வாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. ஊர் இரண்டுபட் டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
1200 வருஷங்களுக்கு முன்பு, வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இமிசை பொறுக் கமுடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக்கொண்டுபோய் எதிரிசளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்லுகின் றது. அப்போது நமது சாதியை பிடித்தநோய் இன்னும் தீராமலிருக் கிற்து. பஞ்சத்தில் பெரும்பாலும் பள்ளு பறை வகுப்பினரே மடிந்து போகிருாகள். இதைப்பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலே யப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக் கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக் கற்ற குழந்தைகளையும் கிறிஸ்து மதத்திலே சேர்த்துக்கொள்ளுகிருர்கள்,
ஹிந்து ஜனங்களின் தொகை அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டுவருகிறது. மடாதிபதிகளும், சந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்தம டைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர், இத்தகைய ஹிந்துக்கள் கேட்பா ரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.

ஆத்மஜோதி 07 வள்ளலார் அருளிய ஜீவகாருண்ய ஒழுக்கம்
- மா. செல்லச்சாமி-மலேசியா -
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில்புகும் அரசே! அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே!
அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கரத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே! அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே!
ஜீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகிறது. அது மயங்கவே அறிவுக் கறிவாகிய கடவுள் விளக்கம் மறைகின்றது. அது மறைய வே புருடத்துவம் மழுங்குகின்றது. அது மழுங்கவே குணங் கள் எல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறு கின்றது. புத்தி கெடுகின்றது. சித்தம் கலங்குகின்றது. அகங்காரம் அழிகின்றது. பிராணன் சுழல்கின்றது. பூதங் கள் எல்லாம் புழுங்குகின்றன. வாதபித்த சிலேட்டு மங்கள் நிலை மாறுகின்றன. கண்பஞ்சடைந்து குழிந்துபோகின்றது. காது கும்மென்று செவிடுபடுகின்றது. நா உலர்ந்து வரஞ கின்றது. நாசி குழைந்து அழலுகின்றது, தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது. கைகால் சோர்ந்து துவஞகின்றன. வாக்குத் தொனி மாறிக் குன்றுகின்றது. பற்கள் தளரு கின்றன. மலசல வழி வெதும்புகின்றது. மேனி கருகுகின் றது. ரோமம் வெறிக்கின்றது. நரம்புகள் குழைந்து நை கின்றன. நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன; எலும்பு கள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன. இருதயம் வேகின்றது. மூளை சுருங்குகின்றது. சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது. ஈரல் கரைகின்றது. இரத்தமும் சலமும் rவறுகின்றன. மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது. வயிறு பகீல் என்று எரிகின்றது. தாபசோபங்கள் மேன்மே லும் உண்டாகின்றன. உயிரிழந்துவிடுவதற்கு மிகவுஞ் சமீ பித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும்

Page 8
08 ஆத்மஜோதி
தோன்றுகின்றன. பசியினுல் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக் கின்றது.
இவ்வளவு அவத்தைகளும்-ஆகாரம் கிடைத்த போது உண்டு பசி நீங்க -நீங்குகின்றன. அப்போது தத்துவங்கள் எல்லாம் தழைத்து, உள்ளம் குளிர்ந்து, அறிவு விளங்கி, அகத்திலும் முகத்திலும் ஜீவகளையும் கடவுள்களேயும் துளும்பி ஒப்புல்லாத திருப்தி இன்பம் உண்டாகின்றது.
இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண் ணியத்திற்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல் லலாம். இந்தப் புண்ணியத்தை செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்ச மென்றே சத்தி யமாக அறியவேண்டும்.
இதனுல் நரகவேதனை, ஜனன வேதன்ை, மரணவேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங்கூடி முடித்த வேதனையே பசிவேதனை என்றும், அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற எவ்விடத்தும் நிறைந்தது எக் காலத்தும் வேறு படாத மோகூர் இன்பமே ஆகாரத்தினுல் உ ன் டா கும் திருப்தி இன்பம் என்றும் அறியப்படும்.
பசியில்லாவிடில், ஜீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பாராத பசுஷ்த் தில் உபகாரச் செய்கை தோன்றது. அது தோன்ருதபோது ஜீவகாருண்யம் விளங்காது. அது விளங்காத போது கட வுளருள் கிடைக்கமாட்டாது ,
ஆதலால், பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர்
உபகாரக் கல்வி என்றே அறியவேண்டும், பசியினுல் துன் பப்படுகிறவர்கள் ஆகாரத்தைக் கண்ட காலத்தில் அடை கின்ற சந்தோஷம், தாய், பிதா, பெண்டு, பிள்ளை, காணி, பூமி, பொன், மணி முதலானவைகளைக் கண்ட காலத் திலும் அடையார்களாயின், ஆகாரம் உண்ட காலத்தில் உண்டாகும் சந்தோஷம் எப்படிப்பட்டதாக இருக்கும்!

ஆத்மஜோதி 109*
ஆதலால் இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங் களும் கடவுளருளின் ஏகதேச சொரூப ரூப சுபாவங்களா கவே அறியவேண்டும்.
சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுச ரித்தார்களானல், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து விசேஷ செளக்கியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை
பல நாள் சந்ததி இல்லாமல் பல பல விரதங்களைச் செய்து வருந்துகிற சமுசாரிகள், தங்கள் தரத்திற்கு தக்க படி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானல், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண் ணு மெ ன் பது O-65of 65) LD. w
அற்ப வயதென்று குறிப்பினல் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்று. விப்பதே விரதமாக அனுசரிப்பார்களானல், அந்த ஜீவகா ருண்ய அனுசரிப்புத் தீர்க்காயுளை உண்டுபண்ணும் என்பது: spley 65) Ltd,
ஆகலின் புண் ணியம் என்பது ஜீவகாருண்யம் ஒன்றே யென்றும் பாவம் என்பது ஜீவகாருண்யம் இல்லாமை ஒன்றேடென்றும் அறியப்படும்.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினுல் வரும் விளக்கமே கட வுள் விளக்கம் என்றும், ஜீவகாருண்ய ஒழுக்கத்திளுல் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தை யும் இன்பத்தையும் பலகால் கண்டு அனுபவித்துப் பூர்த்தி யடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தரென்றும், அவர் களே கடவுளே அறிவால் அறிந்து கடவுள் மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறியவேண்டும்.

Page 9
10 ஆத்மஜோதி இராமபிரானைத் தொடர்ந்த பிரமச்சாயையை அகற்றிய அருள்மிகு கோணேஸ்வரம்
- க. வேலாயுதம்-தம்பலகமம் -
வட பாரதத்தில் சந்திரன் பூசித்த புகழ்மிக்க சோம நாதர் ஆலயத்திலுள்ள மூர்த்தியின் கிரீடத்தில் பதிக்கப் பட்டிருந்த விலைமதிக்க முடியாத மரகதத்தின் மையல் கொண்ட கஜனி முகமது என்வன் சோம நாத புரத்தின் மீது பதினன்குமுறை படையெடுத்தான் எனச் சரித்திர வாயிலாக அறியமுடிகிறது. காலக் கோளாறுகளாலும் நச்சுக் காற்றிரூலும் எதிர்த்துப் போராடிய மன்னர் களாலும் அளவற்ற சேஞ வீரர்களைப் பலிகொடுத்த கஜனி பின்வாங்கிச் சென்ருன். ஆயினும் மரகதத்தில் கொண்ட ஆசை அவனைச் சும்மா இருக்கவிடவில்லை. எனவே லட்சக் கணக்கான போர்வீரர்களுடன் கஜனி பதினுன்காவது தடவையாக சோமநாதபுரத்தை நோக்கி முன்னேறினன்.
கோகா பாபா போன்ற மாவீரர்கள் கஜனி பின் படை களை எதிர்த்துச் சமராடி வீரமரணம் எய்தினர். இந்த முறை கஜனியின் படைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வெற்றி கிட்டியது. ஆனல் ஆசையோடு தேடிவந்த மரகதம் கிடைக்கவில்லை. சோமநாதரின் கிரீ ட்த்தில் மரகதம் இல்லை. பிறகு கேட்பானேன், கஜனி அடைந்த ஆத்திரத்துக்கு எல்லையே இல்லை. கடும் சினம் அடைந்த கஜனி சோமநாதரின் ரீடத்தை வாளால் அடித்து நொறுக்கினன். ஆலயத்தைத் தரை மட்டமாக்கி ஞன். இந்தப்புனித ஆலயம் முன்னிருந்த நிலையை அடைந் திருக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
அலாவுதீன் கில்ஜி என்று இன்னெருவன் சிவால யங்களை இடித்து மசூதி கட்டி அந்த ஆலயங்களில் இருந்த புனித சிவலிங்கங்களை மசூதியில் ஆள் ஏறிச்செல்லும் படிக ளில் வைத்துக்கட்டி மாபெரும் அச்சாரம் புரிந்தான் என்று சரித்திரம் பேசுகிறது. இந்த ஆலயங்களெல்லாம் முன் இருந்த நிலையை அடைந்துள்ளதா என்ருல் அது சந்
 
 

ஆத்மஜோதி Y
இறைவன் எங்கும் நிறைந்து வியாபித்து நிற்பவன். ந்தகைய ஈடிணையற்ற பரம்பொருளுக்கு அற்ப மனிதன் டுகட்டிக் கொடுக்க வேண்டியது அவசியமா என்பது சிந்தனைக்குரியது. மிகப்பழமையானது என ஆராய்ச்சியா ளர்களால் கருதப்படும் இருக்குவேத காலத்தில் கோயில் கள் இருந்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பின் தான் வெயில் மழைக்கொதுங்கி நின்று இறைவனைத் தொழ அமைத்துக் கொண்ட மண்டபங்களே பிற்காலத்தில் கோயில்களாக மாறின.
மனிதன் தானே அமைத்துக் கொண்ட அமைப்புகளை உடைப்பது மனிதனைப் பொறுத்தவரை பைத்தியக்காரத் தனமான செயலேயன்றி எல்லாமான இறைவனுக்கு இது பற்றி எந்தவிதமான விருப்பு வெறுப்பும் இருக்க முடியாது என்பது வெள்ளிடைமலை. . . . * '
சிரஞ்சிவித்தன்மைவாய்ந்த தெய்வீக ஆலயம்:
அரக்கர்கள் மேற்கொண்ட ஆலய அழிப்புகளினுல் இறைவனுக்கு எவ்வித விருப்பு வெறுப்பு இல்லையாயினும் பறங்கியர் கோணேஸ்வரத்தை அழித்தபோது வேறு எந்த ஆலயங்களுக்குமில்லாத புதுமை நிகழ்ந்ததைக் காணமுடி கிறது. திருமலையில் இருந்த கோணேஸ்வரத்தை அழிக்க அது தம்பலகமத்தில் பதில் கோணேஸ்வரமாகத் தோன்றி இன்று திருமலையிலும் தம்பலகமத்திலுமாக இரண்டு கோ ணேஸ்வரங்களாக அருளொளி வீசிக்கொண்டிருக்கிறது. இது ஏன்? அழிவுற்ற மற்ற ஆலயங்களுக்கு இல்லாத தெய் -வீகச் சிறப்பு என்று எண்ணவே தோன்றுகின்றது. போர் புரிவது, நாடு பிடிப்பது, பெரிய சாம்ராஜ்யங்களை நிறுவி ராஜ்யபாரம் செய்வது, இதுவே அரசர்களின் குலதர்மமும் நடைமுறையுமாகும். இளம் வயதினர்களாக அரசர்கள் இருந்துவிட்டால் இன்னும் பல பழக்கவழக்கங்களில் ஈடு படுவர் என்பதில் ஐயமில்லை.
கோணநாயகர் கோயில் ஸ்தாபகரான குளக்கோட் டன் அரச குலத்தினர் பலவித ஆசைகளுக்கும் இரையா கும் இளைஞர் இந்த வயதில் ஒரு அரச குமாரர் தன் வாழ்வு முழுவதையும் சிவப்பணிக்கு அர்ப்பணிப்பதானுல் தான் இயற்றும் தர்மகாரியம் என்றும் அழியக்கூடாதென்ற

Page 10
II 2 ஆத்மஜோதி
மேலான நோக்கமுடைய புண்ணிய சீலராக இருப்பாரா ஞல் அந்த மெய்யடியாரின் எண்ணத்தை நோ க் கத் தை நிறை வேற்றி வைக்க வேண்டியது அடியார்க் கெளியணுகிய ஈஸ்வரனின் கடமைப்பல்லவா? ஆகவேதான் பரம்பொருள் கோணேஸ்வரத்துக்கு உலகிலுள்ள மற்றெந்த லயத்துக் கும் இல்லாத தனிச்சிறப்பை அழிவில்லாத சிரஞ்சீவித் ன்மையை அன்பனுன குளக்கோட்டனின் பொருட்டு அருளி இருக்கிருர் என்ருல் அது மிகையாகாது.
**மாருத புனல் பாயும் திருக்குளமும் வயல்வெளியும் வகுந்திச்செய்தே
வீணுக என் மரபோர்க் கியாமல் கோணமலை விமலர்க்கிந்தேன் வேருண பெரியோரே இதற்கழிவு நினைப்பவர்கள் வெட்ப்பு நீங்கி நீருகப் போவர் இது நிட்சயம் கோனை நிமலர் ஆ2ண"
c (கோணேஸ்வரர் கல் வெட்டு)
மேற்படி செப்புள் மன்னனின் மனக் கருத்தை ஐய திரிபுக்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. தர்மம் புரிந்து கடைத்தேறி மேனி அடைவதற்கு சைவமக்களுக்கு எடுத்துக் காட்டாகப் பிரகாசமான விடிவெள்ளியாகத் தோன்றும் இந்த அரசச் செம்மலைச் சைவமக்கள் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டவர்கள்.
、
குளக்கோட்டனின் விழா
'எந்நன்றி கொன்முர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக் கமைய முடிவில்லாத பிறவிப்பெருங்கடலில் கரையேற முடியாமல் கிடந்து துயருறும் உயிர்க்குலத்துக்கு சரியான வழியைக் காட்டி உதவிய குளக் கோட்டன் என்னும் பெருமானுக்கு தம்பலகமம் கோணேஸ்வரமும் திருமலைக் கோணேஸ்வர மும் தனித்தனியாகவோ அல்லது ஒன்று சேர்ந்தோ குளக் கோட்டன் விழா வென்ற பெயரில் விழாவெடுத்து நினை வுச் சின்னம் அமைத்து நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துவதுடன் கோணேஸ்வர வழிபாடு அழிவுருமல் பறங்கியர் அழித்த கோயிலுக்குள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது புகுந்து கோணேஸ்வரரின் திருஉருவை தம்பலகமம் எடுத்துவந்ததின் மூலம் கோணேஸ்வரம்
 

ஆத்மஜோதி 113.
ܠ ܐ
இரண்டாக வளர வழிவகுத்த சைவப் பெரியார்களையும் நினைவு கூர்ந்து வணங்குவதின் மூலம் சைவ மக்கள் இறை வனின் பேரருளைப் பெறலாம் என்பதில் ஐயமில்லை.
UN பெரியோர்கள் போற்றிய தலம்
பணிக் கடல் உண்டு அமரர் கோனுக்குச் சகாயம் புரிந்த
முனிவர் பெருந்தகையான அகத்தியர் மனைவி லோபா முத் திரையுடன் யாத்திரை வந்து கோணேஸ்வரப்பெருமானை தரிசனை செய்ததுடன் கைலை மலையில் நடந்த அம்மை அப் பனின் திருக் கல்யாணக் கோலத்தைக் கண்டு பேரானந்த முற்ருர், y
இமைய மால் வரை யினருளுடனெங் கோனெச் சராசரங்களுமீன்ற
வுமையினை மணந்த கோலத்தின் காட்ச்சி யுள்ளன யாவை யுமுயர்ந்த
சிமையமால் கோஎேன வரையினல்ல குளின் திருவிளையாடலாய்க்காட்ட
வமையிலானந்தக் களிப்புடன் கண்டே யகங் கசிந்தன்பு கூர்ந்தனனே"
தனஞ்செயன் தீர்த்த யாத்திரை செய்தபோது கோணேஸ்வரம் வந்து இறைவனைத் தொழுது பாபநாச தீர்த்தத்தில் நீராடிஞன் எனத் தெரிகிறது. நிடத தேசாதி பதியான நளன் இப்பதியைத் தரிசித்ததுடன் பொருள் இருப்பும் வைத்தான் எனத் தட்சணகைலாய மான்மியம் கல்வெட்டுப் போன்ற நூல்கள் கூறுகின்றன. இரு கயல்கள் எழுதிய பாண்டியன் சடையவர்மன் கோயிலைப் புனருத் தாரணம் செய்து தொழும்பு முறையை நிரைப்படுத்திய கயபாகுவேந்தன், தம்பலகமம் கோணேஸ்வரத்தின் ஸ்தா பகரான வரராசசிங்கனை ஈன்ற அரசி மாருதப்புரவீக வல்லி, யாழ்ப்பாண மன்னர்கள், மற்றும் ஏராளமான பெரியோர்கள் இந்த ஆலயத்தைத் தரிசித்துப் பேறு பெற் றுள்ளனர்.

Page 11
lil 4 ஆத்மஜோதி பல நூற்றண்டுப் பழமைவாய்ந்த ஆயுதப் பெட்டகம்:
தம்பலகமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூற் ருண்டுப் பழமைவாய்ந்த ஆயுதங்கள் அடங்கிய ஒரு பெட் டகம் இருக்கிறது. கோவிலில் இறைவனுக்குப் பூசை நடை பெறும் ஒவ்வொரு சமயமும் இப்பெட் த்துக்கும் பூசை நடைபெறுகின்றது. இப்பெட்டகம் பட த தெய்வத்தன் மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இராமபிரான் அவத ரித்த அயோத்தியாபுரியில் சுவாதியம்மை என்னும் பிரா மண மாது ஈன்ற பாலாவதனன் என்பவரைத் தலைவரா கக் கொண்ட நாராயண பக்தர்களான நூற்றியொரு இளம் வீரர்கள் குழுமாடுகள் பிடித்தும் யானைகளை மடக்கி யும் வீரசாகஸங்கள் புரிந்து பின்பு இலங்கிை வந்தனர் என வும் பின் நாரணனின் பணிப்புக்கமைய கந்தளாய் நீர்த் தேக்கத்தின் அணைக்கட்டுக் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர் எனவும் இவர்கள் கையாண்ட ஆயுதங்களே இந்தப் பெட்டியில் வைத்துப் பூசிக்கப்படுகின்றன என்றும் தெரியவருகிறது. இவர்கள் கெளரவர்களின் மறு ஜனனம் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்குப் பதிலாகவே மறிகளூர் என்ற பெயருடன் குழு மாடுகள் பிடித்துக் கட்டி கந்தளாய்க் குளத்து வேள்வியை நிறைவு செய்கின்றனர். இந்தப் பன்னிருவரில் ஒருவர் முஸ்லீம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் பிராமண இளைஞர்களான வதனமார் என்பவர்களுக்குள் ஒரு இஸ்லாமானவர் எப்படி இடம் பெற்ருர் என்பதற்கு எழுத்து மூலமான ஆதாரங்களைக் காணவில்லை. எனினும் வேள்வி செய்யும் போது ஏனை யோர்களுக்குப் போல் இவருக்கும் நெற்றியில் திருநாமம் இட்டு பிரஸ்தாப ஆயுதப் பெட்டியில் உள்ள ஆயுதமொன் றும் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுதம் தாங்கி நிற்கும் மறிகாரர்களை எந்தக் காட்டு விலங்காலும் ஒன்றும் செய்ய முடியாதென்ற பலமான நம்பிக்கை உண்டு.
குளத்து வேள்வியில் ஒருமுறை குழுமாடொன்று மறி காரர் ஒருவரைக் கொம்பினல் கோலிக் கொண்டு ցքւգԱյ

ஆத்மஜோதி 115
போது இந்த ஆயுதம் ஒன்றை வைத்திருந்த மறிகாரர். ஓடிப்போய் அந்த மாட்டின் மேல் இந்த ஆயுதத்தை வைத்த போது அந்தக் காட்டெருமை ஆங்காரம் குன்றி சாதுவாக நின்றது பெரும் அதிசயத்தை அளித்ததாம். குளத்து வேள்வி நடைபெறும் போது மட்டுமே இந்த ஆயுதங்களைப் பிறர் பார்க்க முடியும். கத்தி, வாள், கோடாரி, கண்டங் கோடாரி, மளு, ஈட்டி, அம்பு, வில், வெழுக்கயிறு, கருங்காலியிலான பூண் இட்ட பொல், புல்லாங்குழல் போன்ற இன்னும் ஆயுதங்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஆயுதப் பெட்டகத்தை கொட்டியாபுரம், மட்டக்களப்பு போன்ற ஊர்களில் உள்ள பக்தர்களும் தங்கள் ஊர்களில் உள்ள நாராயணமூர்த்திக்கு வேள்வி செய்வதற்காக மேளம், மேல்கட்டி நிலப்பாவாடை இட்டு பயபக்தியுடன் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது இந்த வழமை நின்றுள்ளது. தற்போது கந்தளாய்க் குளத்து வேள்விக்கு மட்டுமே பல ஆண்டு களுக்கொருமுறை இப்பெட்டகம் கொண்டு செல்லப்படு கின்றது. இந்த வதன்மார் பற்றிக் குளக்கட்டுக் காவியம் போன்ற அச் சேரு ஏட்டுப்பிரதி நூல்கள் சுவையான தகவல்களைத் தருகின்றன.
அணைக்கட்டு விநாயகர்
குளக் கோட்டனின் வேண்டுகோளுக்கமைய பூதங்க ளைக் கொண் டு சதுர் வேதமங்கலத்தில் திருக்குளத்தை அமைத்த ஆடக செளந்தரியின் அமைச்சர் நீர்த்தேக்கம் ான் எனும் நிறைவாக இருக்க மகாவலி கங்கையைத் தடுத்து அதில் இருந்த ஒரு வாய்க்காலை வெட்டிக் கு ளத் து க் கு கங்கை நீர் வர வழி செய் தார். இந்த ஆத்தின் மூலம் கங்கைநீர் அபரிமிதமாகக் குளத்தில் வந்து வீழ்ந்தது. அணை யை முறித்துக் கொள்ளக் கூடிய அபாயம் ஏற்பட்டது: மதகு திறக்க முடியாமல் அண முறித்துக் கொள் ஞ ம் அபாய நிலை பில் குளத்தின் நீர்மட்டம் மின்னல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருந்த தைக் கண்ட பக்தனுன குளக் கோட்டன் சாத்தல் ச ட வுளான நாராயண மூர்த்தியை

Page 12
16 ஆத்மஜோதி
தோத்தரித்து வேண்டினர். மன்னனின்பிரார்த்தனைக்கிரங் 'கித் தரிசனம் தந்த நாரணன் அரசனுக்கு அபயம் அளித்து *அஞ்சவேண்டாம் இது விநாயகப்பெருமான வேண்டாத காரணத்தால் ஏற்பட்ட விக்கினம்" என்று கூறி அணைக் கட்டோரம் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து மதகு திறந் தோட வழி செய்தார். பேரோசையுடன் குளத்தில் இருந்து புறப்பட்ட நீர் கற்பாறைகளில் மோதி ஆர்ப்பரித்துக் கொண்டு கணேசப்பெருமானின் கோயிலை அற்புதமான முறையில் வலம் வந்து தம்பலகமத்தை நோக்கி ஓடியது. விவசாயிகள் வெயில் மழை வேண்டும் போதெல்லாம் இந் தக் கணேசப்பெருமானுக்கு பட்டு நேர்ந்து வழிபாடாற்று வார்கள். இந்தக் கோயில் தம்பலகமம் sகோணநாயகர் கோயிலே வயல் மானியம் விட்டுப் பராமரித்து வருகின் 29,
04இரடினும் மகிழ்ச்சி கர்ந்து மன்னவன் மூகத்தை நோக்கி
துரய வைங்கரத்தோன் தன்னைத் தொழுதிடாக் குறையிதென்கு காயவன் றன்னே யிந்தக் கரையினிற்ருபித் தேற்றிற் பாயும் நீர் கடிதினென்றே மின்னவை பிரிவிற் செய்வான்".
(திருக்கோளுசலப் புராணம் திருக்குளம் கண்ட படலம்)
குளக்கோட்டு மன்னனின் வேண்டுகோள்படி குளக் கட்டுப் பாதுகாவல் போன்ற பொறுப்புகளே மகாவிஷ் னுவே ஏற்றுக்கொண்டு வதனுமார் என்னும் நூற்ருெரு வரையும் துர்க்கை, மூர்க்கமாதா, தாக்கணங்கு போன்ற பென் தெய்வங்களையும் நீலா சோதயன் போன்ற ஏராள பான ஆண் தெய்வங்களையும் அணைக்கட்டில் நிறுத்தி தம்ப லகமம் ஆலையடி வேள்வி, மாகாமம் மூர்கமாதா வேள்வி, தம்பலகமம் நாயன்மார் திடல், வைரத்தடி மடை, கந்த ளாய் நீர்த்தேக்கத்துள்ள பாப்பான் தீவுக்கடுத்த நெருஞ் சித் தீவு வேள்வி, கந்தளாய்க் குளத்து மகாவேள்வி போன் றவைகளைக் குறைவின்றிச் செய்துவரின், தம்பலகமப்பற்று கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்றுப் போன்ற பகுதி களில் வாழும் மக்களுக்கு குறைவற்ற வாழ்வையும் நிறை லையும் அருளுங்கள். இவர்கள் மேற்படி வழிபாடுகளைச்

ஆத்மஜோதி i /
சரிவரச் செய்யாமல் பாதிப் பாக்கு, பாதி வெற்றில்ை தந் நாலும் சினமின்றி ஏற்றுக்கொள்ளும்படியாகவும் எண் ழ | N சென்றதின் பின் நான்வந்து உங்கள் குறைகளைத் நீபத்து வைப்பேன் என்று நாராயணமூர்த்தி கூறி இருப்ப தாகவும் கூறப்படுகின்றது. மற்ற மானிலங்களிலிருந்து அருவி வெட்டு, வயல்வேலை போன்றவைகளுக்காகப் பல நூற்றுக்கணக்கில் இங்கே வருபவர்கள் இது கோணேஸ் வரர் பூமி. இதில் பூமி அதிரக் கர்வமாக நடந்து கொள்ளக் கூடாது என்று மிகுந்த பக்தி சிரத்தையுடன் நடந்துகொள் ருகின்றனர். א .
இராமன் தரிசித்த தலம்
சிவபக்தனுன இராவணனைக் கொண்டதின் காரணமாக மனத்தால் நினைத்துப் பார்த்தாலும் நடுக்கம் தரும் பிர மச்சயை இராகவனப் பற்றிக் கொண்டு வருத்தியது. ஆகவே இராமன் தம்பியோடும் விபீஷணணுேடும் கோளுது சலம் வந்து பாவ நாச தீர்த்தத்தில் நீராடி பலகாலம் கோணேஸ்வரரைப் போற்றி செய்தான்.
**கோணமா மலையின் பாங்கர் குறுகியே வலமாய்ச் சூழ்ந்து
காணுதற் கரியதான கண்ணுதற் திருமுன் வீழ்ந்து பாணியா விரண்டு பாத பங்கைய மலரை பற்றிப் பூணணி விளங்கராமன் போற்றிநன் நெடும்போதாக"
(திருக்கோளுசலப் புராணம் பிரமகத்திப் படலம்)
இத்தியாதி அருள்ச்சிறப்பு வாய்ந்த கோணேஸ்வர
ஆலயங்களை நாடிச் சென்று வழிபாடு இயற்றுவது பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவதற்கு ஏற்ற செயலாகும்.
(செய்யுள்)
" ஒன்றினை அழிக்க ஒன்று தோன்றிய அற்புதத்தால்
இன்றைய உலகில் கோனைப் பதிகளுக்கு குவம்ை உண்டோ (மான்) கன்றினைக் கரத்திலேந்தும் கடவுளின் கருணை வேண்டின் சென்று போய் கோணநாதன் சேவடி போற்றல் செய்வீர்!"
திருச்சிற்றம்பலம்,

Page 13
ஆத்மஜோதி முன்னேசுரத்தில் Fð83 SM6T6TGE 5 5 óf
azzette - திருமதி. வி. எஸ். சர்மா B, A, (Cey.) -
சம்மேளனம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருள். ஒன்றுக்கு மேற்பட்டவை ஒன்ரு கக் கூடி யிருப்பது சம்மேளனம் எனப்படும்.
பூணூரிலவிதா சகஸ்ரநாமத்தில் 181வது சுலோகத்திலி ருந்து பூர்த்திவரை (நாமாக்கள் 990 - 1000) சிவசக்தி ஐக்கியரூப விடயத்தைக் கொண்டதாக அமைகிறது. அதி லும் "சிவசக்த்யைக்ய ரூபிணி" என்ற நாமம் சிவனும் சக்தி பும் ஒன்றுசேர்ந்து மலரும் மனமும் போல நெருப்பும் ஒளி பும் போல நீக்கமற இருக்கும் தின்மையைக் காட்டுகிறது.
உலகை இரு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று பொருள். மற்றது அதனுள் இருக்கும் சக்தி. சக்தி இல்லாமல் ஒரு பொருள் தனித்திருக்க முடியாது. ஒன்றுடன் ஒன்று இரண் டறக் கலந்துள்ளது. இந்த விஞ்ஞான உண்மையை சிவ சக்தி ஐக்கிய ரூபமான மெய்ஞ்ஞானம் விளக்குகிறது.
ஈஸ்வரனே எப்பொழுதும் அன்னையுடன் சேர்த்தே தியானித்தல் வேண்டும் என்ற மரபு ஒன்று உண்டு, சிவன் என்பது ஈசுவரனின் ஒரு பெயர். அம்பிகைக்கு சிவா (லலிதா சகஸ்ரநாமம் சுலோ - 21: நாம 53) என்ருெரு நாமமும் உண்டு. சிவாவோடு சேர்ந்தே சாம்ப பரமேஸ்வரனே ச+அம்ப-சாம்ப அம்பாளோடு கூடிய) வழிபடல் வேண்
டும்.
கெளவினி என்ற நாமம் அன்னே பராசக்திக்கு உண்டு. குலம் என்பது சக்தியைக் குறிக்கும். அகுலம் என்பது சிவ னேக் குறிக்கும். இரண்டும் சேர்ந்த வடிவம் கெளலம் என் பது. இந்த ரூபத்தில் இருப்பவளை கெளவினி என பூரீலலிதா சகஸ்ரநாமம் (சுலோ. 37 நாம 94) காட்டுகிறது.

ஆத்மஜோதி
உலகிலே உள்ள யாவும் மாற்றத்துக்குள்ளாகின்றன. இவற்றுக்கு நிலைக்களஞகவுள்ள பிரும்மம் மட்டும் மாரு மல் ஒரே மாதிரியாக விருக்கும். இதனை "சத்" என்பர். இப் பிரும்மம் தன்ஃனத்து னே அறியும்போது "சித் ஏற்படுகி றது என்பர். சத், சித் தை அறிவதை ஞானம் என்கிறுேம். சத் என்பது சிவனேயும், சித் என்பது சகதியையும் குறிக்கும், ஒருவன் தன்னே அறிந்துகொள்ளும் போது ஆனந்தம் (ஞானம்) ஏற்படுகிறது. சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து சத்-சித்-ஆனந்தமாக இருக்கிருர்கள். பிரும்பத்தையும் பிரும்மசக்தியையும் பிரிக்கமுடியாது. பாவில் வெண்ணெய் இருப்பதைப்போல சிவனில் சக்தி கலந்துள்ளாள்.
செளந்தர்யலஹரியில் 23ஆம் சுலோகம் சக்தியிடம் சிவாம்சம் அடங்கியிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இவ்வாறு கூறப்பட்ட நிலையை ஆதாரமாகக் கொண் டது பூணூரீமுன்னேஸ்வர கேடித்திரம் எனலாம். கோயிலின் கருவறையில் இன் வன் அருவுருவ நிவேயில் சிவலிங்க ரூபி யாகக் காட்சியளிக்கிருன், இலிங்கத்தின் முன், கீழ் இடது பக்கத்தில் அமைந்துள்ள பீடத்தில் அன்னேயின் தாமிரத் திருவுருவம் காட்சி தருகிறது அம்பிகையின் திருவுருவின் கீழ் இருபரிமான பூணுசக்ர யந்திரமும், அம்பாளின் முன் கீழ் படியில் முப்பரிமாண பூரீமகாமேருயந்திரமும் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின் அண்ணலின் அருவு ருவ சிவவிங்க மூாத்தமும், சக்தியின் உருவ, அம்பிகை மூர்த்தமும் சிவசக்தி ஒன்று சேர்ந்த இரு பரிமான முப்பரி மான பூணுசக்ர ருே யந்திரங்களும் காணப்படுகின்றன. பொதுவாகச் சிவாலயங்களிலே கருவறையில் சிவலிங்க மூர்த்தத்தை பட்டுமே கண்டு பழகியவர்களுக்கு, முன் னேஸ்வரத்தில் னும் மேற்கூறிய காட்சி அரிதாகவே காணப்படும் காட்சியாகும்.
இங்கு நித்திய, நைமித்திய பூஜை ஆராதனைகள் யாவும் எம்பெருமானுக்கும், பெருமாட்டிக்கும் ஒன்முகவே நடை பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். லகார்ச்சனு பூர்த்தி போன்ற விசேட விழாக்களின் போது நடைபெறும் சம் மேளஞர்ச்சனேயின் போது நடைபெறும் லலிதா ருத்திரத் திரிசதி சகஸ்ரநாமம் ஆகியவை சிவ சக்தி ஐக்கியரூப வழி பாட்டை வலியுறுத்துகிறது. இதில் முதலில் ஈஸ்வரன்

Page 14
120 ஆத்மஜோதி
நாமத்தையும் அதனைத்தொடர்ந்து ஈஸ்வரியின் நாமா வையும் இருவர் மாறி மாறி வாசித்துக்கொண்டிருக்கை யில் பிரதம ஆச்சாரியார் வில்வபத்திரத்தால் இறைவனை யும் குங்குமத்தால் அம்பிகையையும் மாறி மாறி அர்ச்சிப் பார். ஒரே நிவேதனம் ஒரே தீபாலங்காரம் போன்றவையும் சிவ சக்தி ஐக்கிய சம்மேளனத்தை வலியுறுத்து கின்றன. சண்டி ஹோம வசந்த நவராத்திரியில் கணபதிஹோ மத்தை அடுத்து நாள்முழுவதும் இச்சம்மேளன வைபவமே நடைபெறும்.
லக்ஷார்ச்சனையின் போது வெள்ளிக்கிழமை தவிர்ந்த நாட்களில் சிவசக்தி ஐக்கிய ரூபமான பூரீ மேருமகாயந்தி ரத்துக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவதும், அப்போ தைய நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்னைக் கும் பூரீ மேரு மகாயந்திரத்திற்கும் ஒன்ருக அபிஷேகம் நடைபெறுவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இங்கு காணப்படும் சிவசக்தி ஐக்கியரூடத்தை மற்றைய கோயில்களிலும் உணர்த்துவதற்காகவே கோ' யில் மதில்களில் காவிப்பட்டையையும் சுண்ணும்புப் பட் டையையும் மாறி மாறித் தீட்டுகிருர்கள் என்பர். வெள்ளை நிறமான சுண்ணும்பு சிவனையும், சிவப்பு நிறமான காவிப் பட்டை சக்தியையும் குறித்து நிற்பதை சிவன் கோயிலல் லாத மற்றைய இந்துக் கோயில்களிலும் காணலாம்.
இறைவனை நெருங்கிவிட்ட ஞானிக்கு அரசனும் துரும் பாகி விடுகிமுன். - கனபரிமாணத்தில் அளவிட முடியாததாக இருக்கும் ஆலமரத்தைக் கண்ணுக்குத்தெரியாத காற்றுசாய்த்து விடுகிறது. - துறவிக்கு வேந்தன் துரும்பு. சொத்து சுகங்களில் எவனுக்குப் பற்றில்லையோ, அவ னுக்கு இறைவனைத் தவிர எல்லாமே துச்சம். ஆணவம் போகிக்கு வரும் யோகிக்கு வராது. எல்லாவற்றையும் கடந்த நிலை, ஞானியின் நிலை. "என்னுடையது" என்று சொல்ல இறைவனைத் தவிர அவனுக்கு எதுவும் இல்லை.
- அர்த்தமுள்ள இந்துமதம்

ஆத்மஜோதி a 4 யூனி மகாவிஷ்ணு சகஸ்ர நாமம்
பிறந்த வரலாறு
- கே. வி. எஸ். வாஸ் எம்.ஏ. --
மகாபாரதத்தில் மிகவும் அற்புதமான கட்டம் அனு சாஸனபர்வம். இது வியாசரின் பாரத புராணத்துக்குச் சிகரம் போன்றது. கடைந்தெடுத்த தயிரில் திரண்டுவரும் வெண்ணையைப் போல, பாரதக் கதைகளில் பல வேத தத் துவங்களையும் மறைமுகமாக விளக்கி வந்த வியாசபக வான் அனுசாஸன பர்வத்தில் வேதாஸாரத்தை சற்று வெளிப்படையாகவே விளக்குவதினுல் அது சிறப்புற்று பிரகாசிக்கின்றது. -
பாரதப்போர் முடிவடைந்து விட்டது. அதர்மத்தில் திளைத்த துரியோதனதிகள் அழிந்தொழிந்து விட்டார்கள். தர்மமே உருவான யுதிஷ்டிரர் சக்கரவர்த்தியாகிவிட்டார். எதிர்தரப்பில் உயிர்தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலர். அந்த வெகுசிலரில் கங்கையின் புதல்வரான பீஷ்மர் ஒருவர். நினைத்த நேரத்தில் சடலத்தை உதறித்தள்ளி விண்ணுல கம் செல்லும் அபூர்வமான வரம் பெற்றிருந்த பீஷ்மர், உத்தராயணத்தின் வருகைக்காக அர்ச்சுனன் அம்புகளி ணுல் அமைத்துக் கொடுத்த படுக்கையில் படுத்து காத்திருக் கிருர், வீரபுருஷரான அவருக்கு அந்த முள் படுக்கையும் பஞ்சணை போலிருக்கிறது.
ஆஞல் பஞ்சனையில் அமர்ந்திருக்கும் யுதிஷ்டிரர், முள் படுக்கையில் படுத்திருப்பதைப் போல அவதிப்படுகிருர், ராஜியத்துக்காக, கோடிக்கணக்கான உற்ருர் உறவினர் களையும், நண்பர்களையும், நாட்டு மக்களையும் போரில் மாய்த்த அவரது மனச்சாட்சியை வாட்டி வதைக்கிறது. துயரம் தாளாமல் கண்ணபரமாத்மாவினிடம் வாய்விட்டு அழுகிருர் யுதிஷ்டிரர்.

Page 15
22 ஆத்மஜோதி
'தர்மா! சஞ்சலப்படும் உன் மனதுக்கு சாந்தியைத்த ரக்கூடியவர் கங்கையின் புதல்வரானபீஷ்மர் ஒருவர்தான். உத்தராயண ஏகாதசியில் உயிர்விடுவதற்காகக் காத்திருக் கும் அந்த தர்மாத்மாவிடம் போவோம் வா. அவர் அறிந்த தர்ம சூட்சுமங்கள் அவருடன் மறைந்து போய்விடாமல் நீ கேட்டறிந்துகொள். சாகுந்தனைக்கும் உன் மனதிற்கு அது ஒரு அருமருந்தாக அமையும்’ என்று சொல்லிய கண்ண பரமாத்மா பாண்டவர்களை அழைத்துக் கொண்டு கங்கைக் கரையில் படுத்திருக்கும் பீஷ்மரை அடைகிருர் .
அவர்கள் வந்த நோக்கத்தையும் கண்ணபிரானே அவர்களை அழைத்து வந்திருப்பதையும் அறிந்து பீஷ்மர் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார். தர்மமே உருவான கண்ணன் தன்னிடம் தர்ம சூட்சுமங்களைக் கேட்க வந்திருப் பதில் ஆச்சரியம், உயிர்விட இருக்கும் தருணத்தில் தன்னை நேரில் ஆட்கொள்ள பரம்பொருளே பிரத்தியட்சமாக வந் திருப்பதில் ஆனந்தம். இந்த இருவித உணர்ச்சிகளில்ை உந் தப்பட்ட பீஷ்மர் சொல்லுகிருர் -
**கண்ணு! நீ தர்ம ஸ்வரூபி! நடந்து முடிந்த இந்தபார தப் போர் உன்னுடைய திருவிளையாடல் எது நடக்கவேண் டுமோ அதை நீ நடத்திவைக்கிருய். எது நடக்கக் கூடா தோ அதை நீ தடுத்து நிறுத்துகிருய். உன்னுடைய திருஉள் ளத்துக்கு மாருக இந்தப் பிரபஞ்சத்தில் ஏதேனும் நடை பெறுமா? பாண்டவர்களும் மற்றவர்களும் உன்னை அறி யாமையினல் சாதாரண மனிதனுக நினைக்கிறர்கள் தரும னும் அவன் தம்பிகளும் உன்னைத் தோழனுக மதிக்கின் றனர். அவர்களுக்காக கால்தேய துரியோதனனிடம் தூது சென்ழுய், போர்க்களத்தில் தேரோட்டியாகக் குற்றே வல் புரிந்தாய் எங்கும் நிறைந்த பரம்பொருளே உன் உருவத் தில் வந்திருப்பதை இவர்கள் அறிந்தார்களில்லையே! என்ன ஆச்சரியம்! எப்பொழுதும் தங்கள் அருகிலேயே இருக்கும் உன்னை விட்டு என்னிடம் தர்ம சூட்சுமங்களேக் கேட்க பாண்டவர்கள் வந்திருப்பதும் அவர்களை நீயே அழைத்து

ஆத்மஜோதி 23
வந்திருப்பதும் ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! என் கடைசிக் காலத்தில் காட்சிகொடுக்க வந்த சர்வேச்சுவரா, உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்."
இப்படி கண்ணிர்மல்க ஆனந்த பரவசத்துடன் பீஷ்மர் சொல்லியதைக் கேட்ட தர்மர் என்று ஆரம்பித்து இந் தப் பிரபஞ்சத்திலே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருக்கும் ஒரே தெய்வம் எது? எதன் திருநாமத்தைப் பாராயணம் செய்தால் பிறவிக்கடலில் இருத்து விடுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும்’ என்று வினவு கிருர்,
இக்கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாக "தெய்வங் களுக்கெல்லாம் தெய்வமாக விளங்குபவன் பூரீமந் நாரா யணனே" என்று அறுதியிட்டுக் கூறிய பீஷ்மர் அந்த இது தான் விஷ்ணுஸஹஸ்ர நாமம் தோன்றிய வரலாறு. நாராயணனின் திவ்ய மங்கள சொரூபத்தையும் குணதிச யங்களையும் அவரது ஓராயிரம் நாமங்களைச் சொல்லுகிருர், இதுவே விஷ்ணுஸஹஸ்ரநாமமென்ற மகா மந்திரம்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனியாக ஸஹஸ்ர நாமங்கள் உண்டென்ருலும் பொதுவாக ஸஹஸ்ர நாம மென்று கூறினுல் அது விஷ்ணுஸஹஸ்ர நாமத்தையே குறிக்கும் என்கிருர் ஆதிசங்கரர். ஆகவேதான் அம்பிகை பின் ஸஹஸ்ர நாமத்துக்கு உரை எழுதுவதின் முன்னல் அவள் விருப்பப்படி விஷ்ணுஸஹஸ்ரநாமத்துக்கு முதலில் உரை இயற்றினர் ஆதிசங்கரர். வியாஸ் மகரிஷியினுல் பீஷ்மர் வாயிலாக வெளியிட்ட ஒரே ஸஹஸ்ர நாமம் என்ற பெருமையும் விஷ்ணுஸஹஸ்ரநாமத்துக்கு மட்டுமே உண்டு.
எவ்வளவு பெரிய ஆணவக்காரனும் இறுதியில் இறை வன் எனும் நெருப்புக்கே சொந்தமாகி விடுகிருன். ஆனல் பற்றற்ற துறவி எரியும் போது கூட, அந்த நெருப்பு அவர்கள் ஊன் உடலை எரிப்பதோடு நின்று விடுவதில்லை; ஞான ஒளியையும் பரப்புகிறது.
- அர்த்தமுள்ள இந்துமதம்

Page 16
424 ஆத்மஜோதி
ஒரு சிந்தனைக் கண்ணுேட்டம்
ae JJALL L0AALLL0A LLLL0ALA A0AA LA0A0YA0JLLLL L0LLLL A0AAL0LY0A0A
Maltà நீ"முருந்ெதன்தம்பிலம்ெ ஈண
பாடசாலையில் அறநெறி; ஆலயத்தில் அறநெறி.
மனிதன் வாழ்க்கையில் பெருநெறியோடு வாழ்வாங்கு வாழ்வதற்கு இரு வழிகள் துணைக்கோடாயிருத்தல் வேண் டும். ஒன்று பாடசாலையில் அறநெறி விளக்கம்; இரண்டு ஆலயத்தில் அறநெறி விளக்கம். பாடசாலையில் கல்விபயி லும் மாணவர் உலகமே நாளைய சமுதாயத்தினர். எனவே, மாணவர்களுக்கு பாடநூல்களோடு அறச் சிந்தனைகளை ஆசிரியப் பெருமக்கள் உாட்ட வேண்டும். அறநெறிச் சிந்த னைகளையும் செயற்பாடுகளையும் ஊட்டுவதற்கு சாதகமான வழி சமய மார்க்கபோகும். சமயம் என்பது அறநெறி பிறழாத பயன்மிக்க நல்லொழுக்க வாழ்க்கையேயன்றி; வெறும் அறிவுநெறி தழுவிய பயனில் வாதமும் நம்பிக்கை களும் அன்று என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.
சமயம் என்ற மார்க்கத்தின் ஊடாக மாணவர்களுக்கு பாடசாலையில் அறப்பணி, ஆலயத்தில் அறப்பணி, சமுதா யத்தில் அறப்பணி, வீட்டில் அறப்பணி என்ற முறையில் நற் பணிச் சிந்தனை ஊட்டங்களை; எந்தெந்த வகையில், எவ் வெப்போது எப்படி ஆற்றவேண்டுமென்பதையும் பயிலு வித்தால் பாடசாலையைவிட்டு வெளியேறும் மாணவர்களில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதமானவர்கள் தானும் சமு தாய வட்டத்தில், தன் வாழ்க்கை வட்டத்தில் நற்பணிகளை ஆற்றி பயன்மிக்கதொரு வாழ்வை வாழக்கூடியதாக விருக் கும். −
அடுத்து, ஆலயங்கள் என்று நோக்கும்போது மக்கள் வழிபாட்டிற்கு வரும்போதெல்லாம் ஆலய மண்டபத்தில் அறப்போதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும். இப்போதனை களை பூசகர்களால் அல்லது சமய உபந்நியாஸ்கர்களால்
 

ஆத்மஜோதி - 25
அல்லது அறங்காவற் குழுவினரால் குறைந்தபட்சம் பதி னைந்து நிமிட நேரமாவது நிகழ்த்தப்பட வேண்டும்.
பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையைப் பயன்பட எப்படி வாழ்வது? என் பது போன்ற தெளிவு இன்மையே, குடும்பத்தில், சமுதா யத்தில், நாட்டில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணி யாகும்.
ஆலயங்களில் அறக்கருமங்கள் குறைந்து அர்த்தமற்ற ஆடம்பரக் கேளிக்கைகளும், அறநோக்குக்கு எதிரான நடைமுறை விதியமைப்புகளுமே செயல்முறைப்படுத்தப் படுகின்றது. எனவே, ஆலய அறங்காவலர்களும் பூசகர்க ளும் இப்படியான நடைமுறைகளைத் தவிர்த்து, மக்களின் நலன் கருதி ஆலயத்தில் வாரந்தோறும், விஷேட நாட்களி லும், திருவிழா வைபவங்களிலும் மக்களின் வாழ்க்கைக் குப் பயனளிக்கக்கூடிய முறையில் நற்சிந்தனைகள், அறநெறி விளக்கங்கள் அந்தர் யோகம் போன்றவை நிகழ்த்தப்பட வேண்டும். அப்போது தான் ஆலயங்களால் மக்களுக்கு பய்ன் ஏற்படும்.
மக்களின் வாழ்க்கை முறைக்கு பயனளிக்காத ஆலய கிரியை முறைகள், விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏதும் தேவை யற்றதொன்ருகும். சமய வழிபாடுகள் மனித வாழ்வுக்கு, ஊன்று கோலாக அமையவேண்டுவதே சாலச் சிறந்ததா கும்.
ஓம் பிரம்மானந்தம்
"நாமார்க்கும் குடியல்லோம், நமன அஞ்சோம்" என்ருரே அப்பர் சுவாமிகள். அவர் கடைசிவரை யிலே தன்னை ஒருஇறைவனின் குடிமகனுகக் கருதினரே தவிர, ஒரு அரசனின் குடிமகனுகக் கருதவில்லை.
-அர்த்தமுள்ள இந்துமதம்

Page 17
盟26 ஆத்மஜோதி
வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி ஆலய வரலாறு - கவிஞர் முருகவே பரமநாதன், வல்லிபுரம்-புலோலி - கோயிலும் குளமும் குலவிடும் நாடு "மக்கள் துங்கம் உயர்ந்து வளர் கெனக் கோயில்கள் சூழ்ந்ததும்
இந்நாடே' ، ، ، ، ، -அமரகவி பாரதியார் மனிதகுல வரலாறு இன்று வெகுதூரம் ஆராயப்பட்டு விட்டது. நந்திக் கரையிலும், குளத்தை அண்டியும், எப் பொழுது மனித இனம் வாழத் துவங்கியதோ, அப்பொழுது தான் அவனுக்கு ஓய்வும், ஆறுதலும் கிடைத்தது இந்த ஒய்வும் ஒழிச்சலும் அவனுடைய சிந்தனைகளே க் கிளப்பி, அகவாழ்வுக்கும், புறவாழ்வுக்கும், ஆக்கமும் 247க்கமும் அளித்தது, கலைகளும், கல்வியும் பிறந்தன. ஆடலும் பாட லும் அவனுடைய பொழுதுபோக்காகி, கலைகளாகவே பர்ணமித்தன. அந்தக் கலைகள் கூடத் தெய்வீக நிலைக்கு ஓங்கி வளர்ந்தன. அவனுடைய சிந்தனுலோகம் இம்மை யையும் கடந்து நின்றது. உலகியலை விட்டு, மெய்யியல் என்று ஒன்று இருப்பதாக உணர்ந்த மனிதன், அந்த உண் மையைக தேடி வுெகுதுரம்-நெடுந்தூரம்-தடந்தான். அப் பாலுக்கப்பாலான செம்பொருளே க்காண்பதே அவனுடைய அறிவுலக ஆய்வ ப் இருத்தது அறிவிய3:ம், அழகியலு மவனுடைய இறக்கைகள் ஆயின. அன் ருட வாழ்வில் ஒரு மனித ன் எத்தனையோ தடவை நான் நான் எனக்குளறிக் கொண்டே இருக்கிருன். நான் என்று சொல்லும் பொரு ளெது அதன் உருவம் என்ன என்பதைப்பற்றி அவனுல் தெரிந்துகொள்ள முடியவில்லை. விளங்காத புதிர்களை விஞ் ஞானத்தின் மூலம விளக்கிவிடும் விஞ்ஞானியால் கூடக் காண முடியாத, இந்தப்புரியாத புதிருக்கு மெய்ஞானம் வி1ை.கண்டது. நான் யார், என்னுள்ளம் பார் என்பதை §ද්දූ விளக்கும் நெறியாகச் சைவம்-நீதி பேசிற்று. கே. பில்களைக்கட்டினன், குளங்களை வெட்டிஞன, கோபில் கள் கலைக்கும், கலையின் கருவூலமான பக்திக்கும், ஏன் முத் திக்குமே இருப்பிடமாயின. கோயில்களே உருவாக்கியது போலவே, குளம் தொட்டு வளம் பெருக்கிஞ்ன் இக் கோட்டமுங் குளமுமே அவனது இருதயமாகவும், மூச்சின் உயிர்ப்பாகவும் இருந்தன். இதனுலோ என்னவோ குள மும் கோட்டமும் அமைத்தவன் குளக்கோட்டு மன்னன்
ஆனன்.

ஆத்மஜோதி 127
எனவே ஒரு சமுதாயத்தின், ஏன் ஒரு நாட்டின் புரா தன நாகரிகத்துக்கு, உறைவிடம் கோயிலும் குளமுமே. மன்பதைக்கு வசியும் வளமும் அளித்து, பசியும் பிணியும் தீர்த்தன குளங்கள், உயிர்க்குயிரான ஆத்ம ஞானத்தை ஊட்டி வாழ்வில் நிம்மதியையும், நித்தியசாந்தியையும் அளித்தன கோவில்களே. எச்சமயத்தோர்க்கும் இது சம் மதமே. மனிதனுக்கு இருதய மெப்படி முக்கியமோ, அவ் வளவு நாட்டுக்கு இன்றியமையாதது நீர்த்தேக்கங்களே. நீரை வயல்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களே இரத்த நாடிகள். ஜீவ சக்தியையும் பலத்தையும் ஆரோக் கியமான வாழ்வையும் தாங்கிச் சென்று, புராதன கிரா மங்கட்கு இவைதாம் உயிர் கொடுத்தன" என்று ரெஜி ணுல்ட் பரார் என்ற ஆசிரியர் இலங்கையின் பண்டைக்கா லக் குளங்களின் மேன்மையை எடுத்துக் கூறியுள்ளார் இந். தக் குளங்கள் கூட ஆலயங்களை அண்டியே அமைந்திருந் தன. மண்ணுலக வாழ்வுக்குத்தேவையான உணவளிப்பன இக்குளங்களே. கோயில்களோடு அண்டி வரும் புனித தீர்த் தங்களாயின.
விண்ணுலக வாழ்வைக் குறிப்பன கோவில்கள். என வேதான் 'திருக் கோவிலில்லாத திருவிலூரும்" என்ருர் அப்பரடிகள். 'கோவிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையமர்ந்தாரே " என்பது சம்பந்தர் வாக்கு குளத்தினுல் வாழ்வு பெறும் ஜீவன் கோயிலிலே சாந்தி பெற்று விடுதலையடைந்தது. இவ்வாறு சமயமும் சமுதாய மும் ஒன்றிணைந்த நிலையிலே இந்துதர்மமும், அதன் நாக ரிகமும், மிகத் தொன்மையானதாகப் பேசப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் இதற்குச் சான்று பகர்வதாக வர லாற்று வல்லுநர்கள் வரையறுத்துக் கூறியுள்ளனர். இமயந் தொட்டு இந்தோனேசியாவரை,கங்கையிலிருந்து மாணிக்க கங்கை வரை இந்துமதம் அனுஷ்டானத்திலிருந்து வருகி றது. ஈழத் தமிழர் இந்நாட்டுப் பழங்குடிமக்கள் மட்டு மல்ல சைவம் கண்ட சமுதாயமுங்கூட. மறைந்துபோன குமரிக்கண்டம், இந்தியா, இலங்கை என்பவற்றை உள்ள டக்கியதாயும் இருந்தது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்தில் ஈழத்துப்புலவர்கள் மதுரையிலிருந்து தமிழாய்ந் துள்ளனர். மேலும் சாக்தம் வருவதற்கு முன்னரே சைவம் நிலவியுமிருக்கிறது. இராவணன் மண்டோதரி என்போர். சைவசமயிகளாய் இருந்து திராவிடப்பண்பாட்டை ஒம்பிக்

Page 18
128 ஆத்மஜோதி
காத்தனர். மாந்தை என்னும் மாதோட்டம் மாபெருஞ் சந் தையாயும் மிளிர்ந்திருக்கிறது. பாடல் பெற்ற தலங்களும், புராதன ஆலயங்களும் நிறையக் காணப்படுவதே ஈழத்தின் தனிச்சிறப்பாகும்.
ஈழம் இயற்கையழகுமிக்கி தீவு. பாரத மணித்திருந்ாட்
டின் முத்துப்பதக்கம் போல் அமைந்து கிடக்கிறது. இந்து மகாசமுத்திரத்தின் நுழை வாயிலான இலங்கையை நாடிப் பல யாத்திரீகர்கள் வந்திருக்கிருர்கள். இதற்கு நித்திலத் தீவு என்னும் பெயரும் உண்டு. ஓங்கியுயர்ந்த மலைச் சிகரங் கள், நெளிந்துபாயும் நதித்திரள்கள். காடெலாம், கடற் கரையெலாம் பசுமை. நாடெலாம் செந்நெல், நாட்டின் நதியெலாம் மணிகள். தேயிலையும், தென்னையும், இறப்ப ரும், கோப்பியும், கொக்கோவும், மிளகும் நம்நாட்டுச் செல்வங்கள். ஆலயங்களுக்கோ குறைவில்லை. தெய்வந் துறையிலிருந்து, பருத்தித்துறைவரை காங்கேசன் துறையி லிருந்து மாத்தறை வரையும், கரையோரமாயமைந்த திருக்கோவில்களே நமக்கு அரண் செய்கின்றன. சைவம் மாத்திரமல்ல பெளத்தமும் ஒன்றிணந்து வழிபடும் த லங்க ளும் பலவுண்டு. தென் கோடியிலுள்ள விஷ்ணு தலமான தெய்வந்துறை (தேவிநுவரை) எல்லோராலும் போற்றப் படும் ஸ்தலமாகும், இபின்பட்டூட்டா இத்தலத்துக்கு வந்த தாக வரலாறுகள் கூறுகின்றன. இவ்வாறு இலங்கையின் கரையைச் சுற்றியுள்ள பேர்பெற்ற தலங்கள் இந்துக்களாற். போற்றப்படும் ஆலயங்களாகும். இவற்றிலே மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கேயமைந்த சிறந்த கேஷத்தி ரங்களில் ஒன்று வல்லிபுரம் (ஆழ்வார் ஆலயம்) ஆகும். இதுவும் தெய்வந்துறையைப் போல, வடகீழ் கரையில் பருத்தித்துறையைச் சேர்ந்த வல்லிபுரம் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.
"மூர்த்தியருளும் முறைசேர்தலநலமும் ~ தீர்த்தத் திருநிறைவும் சேருமருட் - கீர்த்திமிகு நல்லவோர் ஆலயத்தை நாடி நான் போற்றுதற் - கல்லேனின்றனேனறி" என்று கருடாழ்வார் தூது தலமகிமையைப் பாடுகிறது. இப்படி இத்தலத்தைப் பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பன
வற்றிற் காணலாம். என்ருலும் சிங்கள மொழியிலெழுந்த

ஆத்மஜோதி 29
இலக்கியத்திலும் இவ்வரலாறு உண்டு. சிங்கள மொழியிலே சந்தேச காவியங்களென்று கூறுவது தூதுப் பிரபந்தங்க ளையே. இப்பிரபந்தங்கள் 14ம் நூற்றண்டின் பின்னரே எழுந்தன. இப்பிரபந்தங்கள் பெரும்பாலும் ஈழநாட்டில் மத்திய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வரலாற்றை யும், அவர்களின் பழக்க வழக்கங்களையும், சிங்களப் புல வர்களிடையே தமிழ் மொழி பரவியிருந்த தன்மையையும் செவ்வனே எடுததுக் காட்டுகின்றன. அது ம ட் டு மின்றி ஈழத்தின் புராதன இந்துக்கோயில்களைப்பற்றிய குறிப்புக ளுமுள்.
இவற்றிலே செலகினி சந்தேசம், (மலைமயிஞ விடுதூது) மயூர சந்தேசம் (மயில் விடுதூது) கஹகுருலு சந்தேசம் (மஞ்சட் குருவி விடுதூது) கோகிலவு சந்தேசம் (குயில் விடு தூது) என்பன சில. மஞ்சட்குருவி விடுதூது கதிர்காமச் சிறப்பை வியந்து கூறுவதுபோலவே, குயில் விடுதூதும் யாழ்ப்பாணத்திலுள்ள புன்ஞலை வரதராஜப் பெருமாள் கோவிலையும், வல்லிபுரக் கோவிலையும் பற்றிப் பாடியுள் ளது. ஆலயத்தின் புராதனத்துக்கும், புனிதத்துக்கும் இஃ தோர்சான்ருகும். முதலியார் இராஜநாயகமவர்களின் இக் 3. f60sp (Ancient Temples of Sri Lanka) FF p5ggir ETIT g, as: இந்து ஆலயங்களென்னும் நூலில் 57-ம் பக்கத்திலதன் ஆசிரியர் பின் வருமாறு எழுதியுள்ளார்.
“The oldest Temple in Jaffna, Didicated to Rama and Krishna. Were at Vallipuram and Punnalai Respectively and they are Mentioned in the Kohilasandesa'
Writed Mudaliyar C. Rasanayagam:
குடிசையிலிருந்து கோபுரம் வரை ஆதியிலே கோயில்கள் மரத்தின் கீழும், குளக்கர்ையி லும், ஆற்றேரங்களிலும் அமைக்கப்பட்டன. ஒரு விருட் சத்தின் நிழலே கோயிலாயும், விருட்சம் இறைவடிவமா யும் போற்றப்பட்டது. அப்படியான கோயில்கள் வளர்ந்து குடிசையாயும், கீற்று ஒலைக் கொட்டிலாயும் மாற்றமடைந் தன. மண்ணினலும் மரத்தினலும் கட்டப்பட்ட ஆலயங் கள் நாளாவட்டத்தில் வானளாவிய கோ பு ர ங் க ளின் நிலைக்கு மாற்றமடைந்தன. ஈழத்திலே இராச கோபுரங்க ளோடு கூடிய ஆலயங்கள் வெகு அருமையாயினும், அண் மைக் காலங்களில் தென்னக மோடியிலே பல இராச கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழங் கோயில்களைப்
பற்றி அப்பரடிகள் இப்படிப் பேசுகிருர், (தொடரும்:

Page 19
30 ஆத்மஜோதி
gSUTyp Dsopo
வித்துவான் கோ. கோவிந்தசாமி-தமிழாசிரியர் திருமுக்கூடல் (அஞ்சல்), செங்கற்பட்டு மாவட்டம்-தமி
செந்நெல்லும் கரும்பும் செழித்து வளம் கொழிக்கும் சிற்றுார் ஆதனுரர். பண்புமிக்கவர் பலர் அவ்வூரிலிருந்த னர். அதேபோல் பண்பிற் குறைந்தவர்களும் இருக்கத் தான் செய்தார்கள்.
ஒருநாள் பித்தன் ஒருவன் அவ்வூரினுள் நுழைந்துவிட் டான். அவன் சிறிது நேரம் ஆடுவான். பிறகு பாடுவான். கந்தலாடைகளைக் கழுத்திற் சுற்றிக்கொள்வான். சில நிமி டங்களுக்குப் பின் அழுவான். தொழுவான் திடீரென்று சிரிப்பான் அவனுடைய செயல்களைக் காண்போர் எவரும் அவன் மீது இரக்கங்கொள்ளாமலிரார். பித்தனுே பிறரிடம் எதையும் கேட்பதில்லை. எவரேனும் உணவளிப்பின் பெற் றுக் கொண்டு உண்பான். யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
பண் பற்றவர் சிலர் பித்தன் மீது கல்லெறிந்து அவனைத் துன்புறுத்த முற்பட்டனர். கல்லடி பட்டும் கல்லெறிந்த வர்களை அவன் ஒன்றும் செய்யவில்லை;
பண்புடையோர் கல்லெறிந்தவர்களைக் கண்டித்த தோடு பித்தனையும் காத்தனர்.
*பெரியவர் ஒருவர் மற்றெருவரிடம் இப்பித்தன் பார் தெரியுமா”
என்றர்.
"எனக்குத் தெரியாது யாரிவன்?" என்ருர் எதிரே இருந்தவர்.
*இவன் வளவனூர் செல்வந்தர் வடிவேலஞர் மகன்'
*என்ன? அவர் மகளு?”
**ஆமாம். அவனேதான்.”
“இவன் இந்நிலையடையக் காரணம்."
*எல்லாம் இவன் சேர்ந்த இனம்தான் காரணம்."
*என்ன சொல்கிறீர்கள் இனமா..???
'உம். இனம்தான்"
தீயவர்களுடன் நட்புச் கொண்டதால் இவனுடைய செல்வம் தீய வழியில் செல்ல நேர்ந்தது. தன் தந்தை இருந்தவரை அவருக்கு அடங்கி இருந்தான். அவ ரது மறைவிற்குப் பின் தீய வழியில் சென்று தம் செல்வ மனத்தையும் இழந்து விட்டான்.

ஆத்மஜோதி V 13|
செல்வமிழந்த பின் இவன் நண்பர்களும் இவனை விட்டு விலகிவிட்டனர். தீய நண்பர்கள் சேர்க்கை எத்தன்மையது என்பதைப் பிறகுதான் உணர்ந்தான். செல்வமனைத்தை யும் வீணுக்கிவிட்டோமே என்ற நினைவில் பித்தணுக மாறி விட்டான். பரிதாபத்துக்குரியவன்.""
“நல்லினத்தைச் சேர்ந்திருந்தால் இவனது செல்வம் வீணுகியிருக்காது. அது இவனுக்குச் சிறந்த துணையாக இருந்திருக்கும். தீயினத்தின் சேர்க்கையால் இவன் இப் போது துன்புறுகிருன்" என்ருர் அங்கிருந்த ஒருவர்.
அவர் கூறுவது முற்றிலும் உண்மை. நல்லோரினத் தைச் சேரின் அது நன்மை பயக்கும் தீயினத்தைச் சேரின் அது தீமை பயக்கும். நல்லினத்தின் மிக்கதுணை ஒருவனுக்கு வேறெதுவுமில்லை. தீயினத்தைவிட அல்லல் தருவதும் எது வும் இல்லை . என்பதை
**நல்லினத்தின் ஊங்கு துணையில்லே தீயினத்தின்
அல்லல் படுப்பது உம்இல்" எனக் கூறுகிருர் வள்ளுவர் பெருந்தகை. நிலத்தினது வளத்திற்கேற்பச் செழித்து வளரும் நெற் பயிரைப் போல் தத்தம் இன நலத்தினுல் சான்ருேர் மேன் மேலும் சான்ரு mண்மையுடையவராக மிளிர்வர். மரக்க்லத் தின் வலிமையைக் கொடிய புயற்காற்று சென்று கெடுத் தாற்போன்று சான்றேர் தீயினத்தைச் சேரின் அவர்களு டைய சான்ருண்மை அழியும்.
பாலுடன் கலந்த நீர் பாலாகித் தோன்றுமேயன்றி நீராகத் தன்நிறம் தெரியத் தோன் ருது. சிறியோர் சான் ருேர்களைச் சேரின் அவர்களின் சிறுமை மறைந்து பெருமை யைத் தரும்.
சான்றேர் மனநலம் நன்குடையவராயினும் தீயினத்தைச் சேருதல் கூடாது.
காடு தீப்பிடித்தால் அக்காட்டிலுள்ள சந்தனம் வேங் கை போன்ற மணங்கமழும் மரங்களும் அத்தீயில் வெந்து அழிந்து விடும். அதுபோல் சான்ருேரும் தீயினச்சேர்க்கை யால் தம் பெருமை குறைந்து அழிவர்.
'மனத்தான் மறுவிலரேனுந் தாஞ்சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்;-புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே, எறிபுனந் தீப்பட்டக்கால்’’
எனக் கூறுகிறது நாலடியார்.

Page 20
32 ஆத்மஜோதி
நிலத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும் தண்ணிரைப் போன்று மாந்தர் தம் இனத்தின் தன்மைக்கேற்ப அன்னர் அறிவும் மாறுபடும்.
மனம் தூய்மை, செய்யும் செயல் தூய்மை இவ்விரண் டும் தாம் சேர்ந்த இனத்தினது தூய்மை எப்படியோ அ படியே அமையும்.
“மணம் தூய்மை செய்வினைத்துாய்மை இவ்விரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்" மனத்தினது நன்மை சிறந்ததாக இருப்பினும் சான் முேர்க்கு இனத்தினது நன்மை பெருமையைத் தருவதாகும். மாந்தன் உயிருக்கு ஆக்கமாவது மனநலம் இனநலம் எல்லாப் புகழையும் தரும், உள்ளத்தில் கரவுடைய மாந் தன் ஒருவன் தான் கொடை வள்ளல் போன்று நடந்து கொள்வதும் பிறர் தன்னைப் பாராட்ட வேண்டுமென்பதற் தாகவே பொருளிந்து தன்னுடைய பெயரைக் கல்வெட் டுக்களில் பொறித்துக் கொள்ள ஏற்பாடு செய்வதும் உண் மையில் அறமாகுமா எனில் அஃது அறமன்று. அறமாவது மனத்தின் கண்மாசின்றி இருத்தலேயாகும்,
*மனத்துக்கண் மாசிலனுத லனைத்தறன்
ஆகுல நீர பிற" ஒருவன் மனக்குதிரையைத் தன் வயப்படுத்தாது அதன் போக்கிற்கு விட்டு விடின் சீரழிய நேரிடும். அதனல் தான் ாந்தன் நல்லினத்தைச் சேர்வதோடு தம் மனத்தையும் அதன் வழி செல்லாமல் அடக்கி நன்னெறியில் செலுத்த வேண்டும். "மனம் போன போக்கெல்லாம் போக வேண் டாம்" எனக் கூறுகிறது உலக நீதி. மனம் செம்மையாக இருப்பின் மந்திரமேதும் சொல்லவேண்டிய அவசியமில்லை மனமது செம்மையானல் மந்திரஞ் செபிக்கவேண்டாம்' என்று கூறினர் ஆன்ருேர்.
மனத்தினுள் வஞ்சனையான எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனுக நடிக்க முற்படும் மாந்த லுடைய உறவே கூடாது. என்கிருர் இராமலிங்க அடிகள்.
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்"
நல்லோரினத்தைச் சார்ந்து நன்மனத்துடன் மிளிர் வதே மாந்தர்க்குச் சிறப்பைத் தருவதாகும்.

ஆத்மஜோதி I 33 சுவாமி ராமதாஸ் அருளுரைகள்
நடப்பவை யாவும் நன்மையின் பாற்று
m
- தமிழ் வடிவம்: ம. சி; சிதம்பரப்பிள்ளை -
மிசீர் என்னும் மாகாணத்தில், இதில் சொல்லப்படும் சம்பவம் நிகழ்ந்தது. ஒரு வறியவன்-பரமபக்தன். காட்டுக் கருகே குடிசை ஒன்றில் வாழ்ந்துவரலானன். அவனுடன் மனைவியை விட உழைக்கும் எருது ஒன்றும் இருந்தது. இக் குடும்பத்துக்கு இந்த எருது ஒன்றுதான் உழைத்தூட்டும் உழைப்பாளியாக இருந்தது. எருதின் முதுகில் பொதியை வைத்து நகர்ப்புறத்திலுள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்வான். வீடுகாக்கும் நாயும் ஒன்று இருந்தது. இத்தனை யோடு ஒரு கிளியையும் மிகவும் ஆசையோடு (அவர்களுக் குப் பிள்ளைகள் இல்லை) வளர்த்துவந்தனர். இக்கிளி இரவு கழிந்து விடியும் நேரம் பார்த்து 'எழும்புங்கள்? இறைவ னுக்கு தோத்திரம் சொல்லுங்கள் அப்பா!' என்று கூறிக் கூறிக் கூப்பிடும்.
ஒருநாள் அட வியிலிருந்து ஒரு சிங்கம் வந்து இந்த ஏழையின் எருதைக் கொன்று விட்டது. சிங்கத்துக்கஞ்சிய நாய் வீட்டுக்குள் ஒளித்துக் கொண்டது. விடிந்ததும் குடி யானவன் எழுந்தான். மாடு இறந்து கிடப்பதைக் கண் டான். 'இது மிகவும் நன்று! ஆண்டவன் செய்வது எல் லாம் நன்மைக்கே! ஆண்டவனது ஆணைப்படியே இது நடந்து விட்டது. ஆகவே இதனுல் நன்மையல்லாது வேறில்லை" என்ரு ன்.
இவ்வார்த்தைகளைச் செவிமடுத்த இல்லக்கிளத்தி மிக வும் அதிருப்தி கொண்டாளாயினும் ஒன்றும் சொன்ன ளில்லை. துன்பங்கள் ஒருபோதும் தனித்து வருவதில்லை. அன்று மாலை ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கிளி கூட்டி லிருந்து வெளியே வந்தது. அதனை அங்குள்ள நாய்பிடித்துக்

Page 21
罩34 ஆத்மஜோதி
கொன்றுவிட்டது. இதனைக் கண்ணுற்ற வீட்டுத் தலை வன், 'நன்று மிக நன்று! இறைவன் மேன்மையானவற். றையே என்னுளும் செய்வார்" என்று சமாதானமும்
சொன்னர். அவ்வாறு வீட்டுத் தலைவன் மீண்டும் எல்லாம்
நன்மைக்கே என்று கூறியதும் தாங்கொணத் துக்கத்தில் மனைவியானவள், தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்
கொண்டாள். கோப மிகுதியினல் செய்வதென அறியாத
வளாய் ஒரு எதிர்ச்சொல்லும் சொல்லாதிருந்து விட் டாள். ஒருசில வேளைக்குப் பின்பு எவரோ ஒருவர் வந்து
"உங்கள் நாய் ஏதோ தாங்கமுடியாத வலியினுல் துடி துடித்துப் புரளுகின்றது" என்று சொன்னர். அந்தக் காவ
லனும் காலனுக்குத் தன் ஜீவனைத் தந்து உறங்கிவிட்டது.
மீண்டும் வீட்டுத் தலைவன், "இறைவன் செய்வது எல்லாம்
நன்மைக்கே’’ என்று கூறிஞன்.
ஆற்ருெணுத் துயரம் பொங்கிவரத் தன் புருஷனைப் பார்த்து, "கருத்தில்லாத இந்தச் சொற்களின் வடிவம் தான் என்ன? எங்கள் ஜீவனத்துக்கு ஒரு ஆதாரமும் இல் லாமல் பட்டினியாக இருந்து காலம் கழிக்க வேண்டியதே படுக்கையை விரித்து விடியும்வரை தூங்கிக் கொள்ளுங்கள். உணவு தந்த எருதும், நித்திரை விட்டு எழுவதற்கு உதவிய கிளியும் எங்களைவிட்டகன்று விட்டன. நன்றியுள்ள நாயும் நமனுலகம் நண்ணிவிட்டது. எவராவது ஒருவர் எங்களையும் இந்த உயிர்கள் சென்ற சுடலைக்குக் கொண்டு விடுவார்கள். அப்போது ஆண்டவனின் அற்புதச் செயலின் சிறப்பை நீங்கள் நன்ருக அறிவீர்கள்." என்று கூறிஞள்.
**எது நடந்துவிட்டதோ அதனை எவராலும் மாற் றவோ, நிறுத்தவோ முடியாது’ என்று குடியானவன் மிக வும் அமைதியாகவும் சந்தோசமாகவும் கூறினன். நடப் பது யாவும் ஆண்டவனின் அனுமதியின் பேரில் நடப்பது என்ற அசையாத நம்பிக்கை கொண்டிருந்தான். அவனது மனைவியின் கேலி நிறைந்த ஆவேசப் பேச்சினல் அவன் ஒரு விதமாகவும் ஆட்டங்காணவில்லை. ஆனல் அவனது அகத்

ஆத்மஜோதி 135
தாள் அதிக வியாகூலமடையலாஞள். எவ்வாறு நாளாந்த வாழ்க்கையை ஒட்டுவது என்ற பயங்கரப்பீதி அவளை வாட்டி வதைக்கலாயின.
பகலவன் சென்றுவிட்டான். இராப்போதாகின. இரு வரும் தூங்கலாயினர். விடிந்தெழுந்தனர். வெளிப்பக்கமா கச் சென்றனர். எங்கும் இறந்து சிதறுண்டு கிடக்கும் முண் டங்களே க் கண்டனர். சென்ற இரவு கொள்ளையர் கூட்டம் இவர்களது குடிசைக்கண்மையில் உள்ள நகரத்துக்குள் புகுந்து சூறையாடியுள்ளார்கள். ஒருவரையும் உயிருடன் விடவில்லை. வீடு வீடாகச் சென்று சட்டி பானை முதலிய எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். காட்டுக் கண்மையாக ஏதும் வீடுகள் காணப்படின், அத்தோடு நாய் களின் நடமாட்டங்களும் இல்லா திருக்குமாயின், வழமை யாக அவ்வாறன வீடுகளில் ஆள் நடமாட்டம் இல்லை என்றுதானே கொள்ளப்படுகின்றன. அவ்வாறு எண்ணி வந்த கொள்ளையர் கூட்டம் இந்த ஏழையின் வீட்டுப்பக்கம் செல்லாது சென்றுவிட்டனர். ஆகவே ஆண்டவன், தமக்கே உரிய, எமக்கெல்லாம் புரியாத முறையில், இந்த இறைவழி வாழும் ஏழையையும் இவனது இல்லாளையும் இரட்சித்துள்
ளார்-இறைவன்.
ஏழைக் குடியானவன் தமது மனைவியைப் பார்த்து, "இதோ பார்! எங்கள் வீட்டு நாய் சென்ற இரவு உயிரு டன் இருந்துதிருக்குமாயின் எங்கள் உயிர் கொள்ளையர்களி டம் சென்றிருக்கும். எருதைக் கண்டிருப்பார்களாயினும் நாம் தப்பியிருக்க மாட்டோம். கிளியும் எங்கட்குத் தீங் கையே கொண்டுவந்திருக்கும். இறைவனது பெருங்கரு ணைத் திறத்தினலேயே இவ்வாழுன சூழ்நிலையைத் தரு வித்து எம்மை இன்னும் அவனது அருமை பெருமைகளை முழுக்க முழுக்க கண்டின் புற்று வாழ விட்டுள்ளார். "நடப் பது யாவும் நன்மைக்கே’’ என்பதில் இன்னும் உனக்குச் சந்தேகம் இருக்குமா என்று பக்தன் தன் பத்தினியிடம் கேட்டான்.

Page 22
36 ஆத்மஜோதி
Sisten) 5). Tt
- திருமுருக கிருபானந்தவாரியார் -
சென்ற இதழ் தொடர்ச்சி
சிவபெருமானுடைய சக்திகள் நான்கு:- அருள் சக்தி, போர் சக்தி, கோப சக்தி, புருஷ சக்தி.
அருள் சக்தி - பார்வதி போர் சக்தி - காளி
கோப சக்தி - துர்க்கை * புருஷ சக்தி - விஷ்ணு
அரியலாள் தேவியில்லை ஐயன் ஐயாறனர்க்கே’’
என்பது அப்பர் வாக்கு.
முங் கண்ணன் - முக் கண்ணி சங்கரன் - சங்கரி
திரிபுரசுந்தரன் - திரிபுரசுந்தரி என்பது போல், அரன் - அரி எனவந்தது. ஆகவே திருமாலின் வழிபாடும் அம்பிகையின் வழிபாடும் ஒன்றென உணர்க.
திருக்கோயில்களில் காட்சியளிக்கும் துவாரபாலகர்களில் ஒருவர் ஆள்காட்டு விரலைக் காட்டி நிற்பது உள்ளே வழிபடச் செல்வோர்க்குக் கடவுள் ஒன்றே என்பதை அறிவுறுத்துகிறது. மற்ருெரு துவார பாலகர் ஒரு கையை விரித்துக் காட்டுவது, கடவுள் ஒன்றைத் தவிர வேருென்றில்லை என்பதை உணர்த்துகிறது. இதையே ஏகம் ஏவ அத் விதீயம் ப்ரம்மம்' என்று வேதம் கூறுகின்றது. கடவுள் ஒன்றேதான்! இரண்டாவது இல்லை என்பது இதன் பொருள்.
எனவே, தெய்வ வழிபாடு செய்வோர் தெய்வபேதம், மூர்த்தி பேதம் குறித்து மாறுபட்டு மலையாது நிலையாய அன்புடன் ஒருபொரு ளேத் தியானித்து வழிபட வேண்டும்.
* யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனுர்தாம் வருவர்” சிவஞான சித்தியார்.
' ஆரொருவர் உள்வார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்' -அப்பர்
ஒரு காகிதத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், தெய்வத் திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று தட்பம்; மற்றென்று வெப் &ம். வெப்பமும் தட்பமும் சமமாக இருந்தால்தான் மலர் மலராகக் காட்சியளிக்கும். வெப்பம்மிகுந்தால் மலர் வாடும்; தட்பம் மிகுந் தால் மலர் அழுகும். ر

ஆத்மஜோதி 137
இந்த உடம்பும் சீதோஷ்ணத்தால் தான் வாழ்கின்றது. ஒரு சமயம் இந்த உடம்பில் சூடு குறையுமானல் சுற்றத்தார் சூழ்ந்து கொள்வார்கள் மருத்துவர் வந்து "TOO LATE’ என்று கூறி அவர் விரும்பியதெல்லாம் கொடுங்கள்" என்று சொல்லுவார். ஆகவே, உலகிற்கு வெப்பமும் தட்பமும் இன்றியமையாதவை. வெப்பத்தின் நுண்மை சிவம். தட்பத்தின் நுண்மை திருமால். வெப்பத்தின் நிறம் சிவப்பு. தட்பத்தின் நிறம் பச்சை. எனவே, சிவமூர்த்தி பவளம்போல் மேணியன். திருமால் பச்சைமா மலைபோல் மேனியன். சிவம் அனல் ஏந்தி விளையாடுகின்றது. திருமால் ஆழியிடைத் துயிலுகின்றர். சிவா லயத்தில் வெந்த நீற்றையும், விஷ்ணு கோயிலில் தீர்த்தப் பிரசாதத் தையும் வழங்குகின்ருர்கள்.
பாதி சிவம், பாதி விஷ்ணு, இந்தத் தத்துவத்தைச் சிவமூர்த்தங் கள் இருபத்து ஐந்தினுள் கேசவார்த்த மூர்த்தம் என்பது தெரிவிக் கின்றது. சங்கரநாராயணர் கோவிலும் இதற்குச் சான்று.
"தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்நாணும் தோன்றுமால்-விழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக் கிரண்டுருவும் ஒன்ருய் இசைந்து" என்று ஆழ்வார் கூறுகிருர்.
சிதம்பரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருக்குற்ருலம், திரு வருனை முதலிய திருத்தலங்களில் உள்ள சிவாலயங்களில் திருமாலும் காட்சிதருகின்ருர்,
ஏன் வணங்க வேண்டும்?
நம்மிடைப் பலருக்கும் இறைவனை ஏன் வணங்க வேண்டும்? வணங்காவிடில் என்ன? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? நாம் வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? என்ற விஞக்கள் உள்ளுணர்வில் எழுவது இயல்பு. இவைகளுக்கு விடை காண முயல்வது முறை.
விலங்குகளும் உண்ணுகின்றன; உலாவுகின்றன; வம்சத்தை வளர்க்கின்றன; மனிதர்களாகிய நாமும் உண்ணுகின்ருேம்; உறங்கு கின்ருேம்; உலாவுகின் ருேம்; மக்களைப் பெறுகின் ருேம். இவை விலங் குகட்கும் மனிதர்கட்கும் ஒன்றகவே அமைந்திருக்கின்றன. விலங்குக ளினின்றும் மனிதன் உயர்ந்து காட்சியளிப்பது தெய்வ" உணர்ச்சி ஒன் ருலேயேதான்.

Page 23
138 ஆத்மஜோதி
ஒரு கானகத்தில் விலங்குகளின் மாநில மாநாடு கூடிற்று. அதில் தலைமை தாங்கிய சிங்கம் விலங்குத் தோழர்களே! உயிர் வாழ்க் கைக்கு ஆடை அவசியமா? மனிதர்கள் ஆடைக்கு அவசியமின்றி அதி கம் செலவழிப்பது அறிவின்மையாகும். அது வருந்தத்தக்கது; கண் − டிக்கத்தக் லிது’ என்று கூறிற்று. இதுபோல் மனித வாழ்க்கைக்குக் கடவுள் வணக்கம் தேவையா? நாங்கள் கடவுளை வணங்காமல் வாழ வில்லையா? என்று வினவுவார்கள். மானம் உள்ளவன் ஆடை உடுப் பான். மனம் உள்ளவன் இறைவனை வணங்குவான்.
மனிதன் செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு; நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் இல்லை.
** எந்நன்றி கொன்றர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு" --திருக்குறள் "ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாணிழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உளளன நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன் செய்தி கொன்றேர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே" (புறநானூறு-34)
எனவே, கழுவாய் இல்லாத பாவம் நன்றிகோறல் ஆகும். இதற்கு நேர் மறுதலையாக சிறந்த புண்ணியம் நன்றி மறவாமையாகும். இந்த உடம்பையும் உடம்பின் உறுப்புகளையும், உள்ளுறை கருவி காரணங்க ளையும் தந்தவன் இறைவன். கண்ணைக் கொடுத்தஇறைவன் கண் துரசு பட்டு மங்காமல் இருக்கும் பொருட்டு, கண்ணிற்குக் கதவு போல் இமையும் கொடுத்தான். அந்த இமையின் நுனியில் உரோமங்களை யும் அமைத்தான். உணவு உண்ணுகின்ற வாயில் உணவைத் துகள் படுத்த (Flour Mill) பற்களையும் கொடுத்தான். வாய்க்குள் நுழை கின்ற பொருள் நல்லனவா? அல்லனவா என்று சோதித்து உள்ளே அனுப்ப வாய்க்கு நேராக இரண்டு காவற்காரர்களைப்போல் இரு நாசிகளை அமைத்தார் உண்ணுகின்ற உணவை பல் மெல்லவும், நாவில் நீர் ஊறவும் அமைத்தார். நம்முடைய உடம்பில் எல்லா அவ யவங்களிலும் நரம்புகள் உள. நாவில் மட்டும் நரம்புகள் இல ஏனே?
நரம்புள்ள பகுதிகள் சுளுக்கிகொள்ளும். நாவில் நரம்பு வைத் திருந்த7 ல் ஒரு நாளுக்கு நூறுமுறையாவது சுளுக்கிக் கொள்ளும். விளக்கெண்ணெய் தடவி உருவவேண்டிவரும். இறைவன் கருணையால் இடையருது பேசுகின்ற நாவை நரம்பின்றி படைத்துக் கொடுத் தான். அன்ே கொடுத்த நாவினல் அ வனுடைய நாமங்களைச்

ஆத்மஜோதி 139.
சொல்லுதல் நன்றி பாராட்டுதலாகும். அவன் கொடுத்த தலையி ஞல் அப்பரம பிதாவை வணங்குதல் நன்றிக் கடனும் 3 வடமொழியில் காலையும் மாலையும் கடவுளை வணங்குவதை சந்தியாவந்தனம் என் பார்கள். சம்-செவ்வையாக, தியா-தியானித்து, வந்தனம்-வணங்கு
வது சந்தியா வந்தனமாகும். இந்தச் சொல்லைப் பார்க்கினும் ஒரு
கோடி மடங்கு பொருளாழம் உள்ளதாக கடவுளை வணங்குவதற் குக் காலைக்கடன் என்று தமிழில் ஆன்ருேர் கூறினர். கொடுத்த கடனைத் திருப்பிக்கொடாதது. எத்துணைப் பெரிய பாபமாகுமோ. அத்துணை பெரிய பாபமாகும் இறைவனை வணங்கா திருத்தல்."என்
கடன் பணிசெய்து கிடப்பதே" என அப்பர் பெருமான் குறிப்பிடு கின்ருர்,
கருணையே வடிவாகிய இறைவன் உயிர்களின் மீதுள்ள இரக்கத்
தினுல் இந்த உடம்பை வழங்கினன் என்பதை முன்னர் அறிந்தோம்.
அவன் தந்த உடம்பினுல் அவனை வழிபடுவது கடமையாகும். இன் றேல் கடமையை மறந்த மடமையாகும். காவிரியில் ஒருவன் நீரா
டுவது காவிரிக்கு நன்மைவிளையும்பொருட்டன்று. தன் உடம்பிலுள்ள வெப்பம் தணியும் பொருட்டுக் காவிரியில் நீராடுகிருன். அதுபோல அருட்கடலாயிருக்கிற ஆண்டவனை வழிபட்டால் நம்முடைய பிறவி வெப்பம் தணிகின்றது.
"ஆர்த்த பிறவித்துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்” என்று மாணிக்கவாசக சுவாமிகள்திருவெம்பாவையில் அருளிச் செய் கின்ருர்,
ஆதலின் அப்பர் பெருமான் இறைவன் நமக்கு தலை முதலிய கருவிகளைத் தந்தான் என்று தெரிவித்து விட்டு அக் கரு வி களை நோக்கி இறைவழிபாடு செய்யுங்கள் என்று அருளிச் செய்கின்ருர்,
"வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே விழ்த்தவா வினையேன் நெடுங்காலமே'
"தலையே நீ வணங்காய்-தலைமாலை தலைக்கணிந்து
தலேயாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்.” உடம்பின் பயன் இறைவனை வணங்குவதாகும். அறிவின் பயன் இறைவனை அறிவதாகும். கல்வியின் பயன் கடவுளைத்தொழுவதாகும்,

Page 24
140 ஆத்மஜோதி
"கற்றதஞலாய பயன் என்கொல்? வாலறிவன்
நற்ருள் தொழா அர் எனின்' -திருவள்ளுவர் 'சென்றது காலம் சிதைந்(து) இளமைநலம் v .
நின்றதுசா வென்று நினைந்துருகி-மன்றில் நடிக்கின்ற பால்வண்ணர் நாமமெண்ணு மாந்தர் படிக்கின்ற நூல்எல்லாம் பாழ்' -3569rrrr LDurr GöTıg.turi இறைவனுடைய திருவடியில் அன்பில்லாதவர் கல்வியின் பெருக் காலும், குலத்தின் முறுக்காலும் நன்மையடைய மாட்டார்.
* கற்றதனுற் றெல்வினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதனுற் போமோ பிறவிநோய் - உற்றகடல் நஞ்சுகந்து கொண்டருணே நாதனடித் தாமரையை நெஞ்சுகந்து கொள்ளா நெறி" -அருணகிரியந்தாதி ஆதலால், மனிதப்பிறப்புக்கு இறைவழிபாடு இன்றியமையாதது என உணர்க. ஒரு மாவட்டத்திற்கும், மற்றெரு மாவட்டத்திற்கும் அரசாங்கத்தார் ஒர் எல்லைக்கல் அமைத்திருப்பது போல், விலங்கு கட்கும் மனிதனுக்கும் இடையில் இட்ட எல்லைக்கல் இறைவழிபாடா கும். இறைவழிபாடு இல்லாத மனிதன் விலங்கெனவும், இறைவழி பாடு செய்கின்ற விலங்கு தேவன் எனவும் உணர்க.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் எறும்பு வழிபட்ட திருவெறும் பூரும் யானை வழிபட்ட திருவானைக்காவும் காட்சி தருகின்றன. எறும்பு முதல் யானை ஈருக எல்லா வுயிர்களும் இறைவனை வழிபட வேண்டும் என்பதும் போதருகின்றது.
எறும்பு கடை யானைதலை ஈசனைப்பூ சித்துப் பெறுங்கதிகண் டுந்தேறர் பேய்கள் - அறிந்த உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையாய் வைக்கப் படும்' -முதுமொழிமேல் வைப்பு வழிபடும் முறை:
கோயிலில் வழிபடுவோர் நீராடி, தூய ஆடை அணிந்து, சமயச் சின்னங்கள் தரித்து, அன்புடனும் ஆசாரமுடனும் கோயிலுக்குச் செல்லுதல் வேண்டும்
கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்குதல் வேண்டும். உள் பிரகாரங்களில் விழுந்து வணங்குதல் குற்றம் .
விநாயகரை ஒருமுறையும், சிவமூர்த்தியை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம் வருதல் வேண்டும்.
கோயிலில் ஒருமைப்பட்ட மனத்துடன் வழிபாடு செய்யவேண்டும். கோயிலில் வழிபாடு செய்வோர் வீண்வார்த்தைகள் பேசுவதும், எச்சில் துப்புதலும், பிற தீமைகள் செய்தலுங்கூடா. அர்ச்சகர் தரும் விபூதி, பிரசாதங்களைப் பயபக்தியுடன் இருகரங்களாலும் ஏந்திப்

ஆத்மஜோதி I 4.
பெறுதல் வேண்டும். பெற்ற பிரசாதத்தைக் கீழே சிந்துதலும், ஒரு புறத்தில் எறிவதும் பெரும் பாவமாகும். சண்டே சுவரர் மீது நூல் இடுவதும், சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் இடையே போவதும் குற்றமாகும்.
கோயிலில் பிரசாதங்களை உண்டு கோயில் தூண்களில் துடைப் பது அனுசிதமாகும். கோயிலில் படுத்து உறங்குவோர் மறு பிறப்பில் மலைப்பாம்பாகப் பிறப்பார்கள். வழிபாடு முடிந்த பின் கொடிமரத் தின் அருகிலிருந்து வடதிசை நோக்கியமர்ந்து மூல மந்திரம் ஜெபிக்க வேண்டும். நன்கு இனிமையாக தோத்திரப் பாடல்களே அதிகம் சத் தம் போடாமல் இனிய குரலில் துதிக்க வேண்டும். கோயில் விளக்கு களில் எண்ணெய் இடுதல் வேண்டும்.
**விளக்கிட்டார் பேறுசொல்லில் மெய்நெறி ஞானமாகும்' -அப்பர் கோயிலில் அணைகின்ற விளக்கை அபுத்தி பூர்வமாகத் தூண்டிய எலி மாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றது.
'நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனுய் ஆக்கினையே’ -திருவருட்பா
வீட்டு வழிபாடு இனி நாள் தோறும குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று கூடி காலை அல்லது மாலையில் வழிபடவேண்டும். வீட்டுத்தலைவன் ஒரு பாடலைச் சொல் ல ஏனையோர் அதனை வழிமொழிந்து சொல்ல இறை வணை காதலுடன் வழிபாடு செய்யவேண்டும். இதனுல் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன் அந்த வீட்டில் தெய்வ கடாக மும் திரும கள் விலாசமும் உண்டாகும்.
கூட்டு வழிபாடு ஒரு தனி இழையை எளிதில் அறுத்து விடலாம், பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த கயிறு (வடம்) தேரை இழுத்துவிடும். அது போல, பல அன்பர்கள் வ்ாரத்திற்கொரு நாள் கோயிலில் ஒன்று பட்டு கூட்டு வழிபாடு செய்தால் திருவருளை ஈர்த்து விடலாம். முஸ் லீம் அன்பர் தினம் ஒன்றுக்கு ஐந்துவேளை தவரு மல் தொழுவதும், கிறிஸ்தவ அன்பர்கள் ஞாயிறு தோறும் ஆண் பெண் அடங்கலும், தங் கள் தேவாலயத்திற்குச் சென்று நியதியாகத் தொழுவது போல், இந்துக்களாகிய நாம் குறிப்பிட்ட நாட்களில் ஆங்காங்குள்ள ஆலயங் களில் நியதியாக வழிபடுவது மிக மிக அவசியமாகும் அண்ணல் காத் தியடிகள் இறுதியாகப் பிரார்த்தனைக்கூட்டம் நாள்தோறும் நடாத்தி முடிவில் பிரார்த்தனைக் கூட்டத்திலேயே ஆத்ம சாந்தியடைந்தார். ஆதலால், அன்பர்கள் காதலாகிக் கசிந்து கடவுளை வழிபட்டு இக பர நலன்களை எளிதில் பெறுதல் வேண்டும், இறைவழிபாடு செய்து பிறவிப் பிணியை ஒழித்துப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவார்க
60Yr IAr 5 ll

Page 25
ஆத்மஜோதி
பெரும் புலவர் கா.சி. தனக்கோடி எம். ஏ.
6 ஜெயகணபதி நிலயம்,
கந்தசாமி கோயில் குடியிருப்பு
கொடுங்கையூர், சென்னே 51 தமிழ்நாடு
பன்னெடுங்காலமாக அறிஞர்களின் விவாதத்துக்கு உரிய பொருளாயிருப்பது இத்தலேப்பாகும். சிலர் ஊழ் என்று சொல்லப்படும் விதிக்கே முதன்மை தருகிருரர்கள். சிலர் இடையருது செய்யப்படுதற்குரிய முயற்சிக்கே முதன் மைதருகிருர்கள். அதற்கான காரணங்களேயும் எடுத்துக் காட்டுகிருர்கள். கோவலன் கொலேண்டது ஊழின் வலியே என்று இளங்கோவடிகள் கூறுகின்(Tர்.
"வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப
நின்பால் கொலேக்களப்பட்ட கோவன்"
என்பது அவர் ஈ. நும் வாசகம். பழந்துமிழர் ஊழ் வினையை நம்பினர். " அஃது அவன வன் செய்த வினே பின் பயணுக ஏற்படுகிறது என்றும் எண் னினர். எடுத்துக்காட்டாகக் கணியன் பூங்குன்றஞர் தாம் பாடிய புறநானூற்றுப் பாடலில்,
நீ வழிப்படு உம் புனே போலாருங்க் முறை வழிப்படுஉம் என்பது தியோர் காட்சியில் தெளிந்தனம்." என்று கூறுகின் ருர், இதன் பொருள் ஆற்றின் ஒட்டக் தேடு செல்லுப படகைப் போல், . ।।।। செல்லும் என்பதாகும்.
தெய்ப்பு மைத் திருவள்ளுவ நருர், "ஊழியல்' என்ற ஓர் இயலே அறத்துப்பாலின் இறுதியிலும், பொருள் இன்பப்பால்களின் முதலிலும் வைத்துள்ளார். பிதற்குக் காரணம், கூறவந்த பரிமேலழகர் மிக்கா இம்மையில் அடைய வேண்டிய பொருளுக்கும், அஆபவிக்க வேண்டிட இன்பத்துக்கும் முதற் காரணமாக அந்துள்ளது 'சினர்' என்றும், அந்த ஈழதான் வினே பின் பயர்ப் அமைகிறது என்றும் கூறுகிருர் இதிலிருந்து நபிக் ஒரு கருத்துத் தெற் றெனப் புரப்படுகின்றது. அதாவது க் விழானது தன் செல்வா க்கை ஒருவனிடத்திலுள்ள பொருளின் மேலாவது அல்லது அவன் ஆடைகின்ற இன் பத்தின் பல வதுதான் செலுத்தும் என்பதாம். திருவள்ளுபெரும் பொருளுக்குக் காரணமாகிய ஊழைப்பற்றி ألفية والتي ப களிலும் இன் பத்

ஆத்மஜோதி If 3.
துக்குக்காரணமாகிய ஊழைப்பற்றி மூன்று பாக்களிலும் கூறுகின்ருர்,
இனி ஊழ் என்ற அதிகாரத்தின் முதற்குற&ா நோக்குவோம்,
'ஆசுழால் தோன்றும் அசைவின் மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி இதன் பொருள் என்னவெனில், ஒருவனுக்குப் பொருள் கிடைக்க வேண்டிய ஊழ் உண்டானுல் முயற்சி உண்டாகும். பொருள் இழப்ப தற்குரிய ஆாழ் உண்டானுல் சோம்பல் உண்டாகும் என்பதாம். அப்ப டியானுல் திருவள்ளுவர் திருக்குறளேப் பாடவேண்டிய அவசியமில்லே, எல்லாம கிேழ் வினேப்படியே நடக்குமென் துல் திருவள்ளுவர் எதற்கு? அவர் பாடிய ஒப்பற்ற நூலில்
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணிபார்
திண்ணிய ராகப் பெறின்" என்ற திருக்குறள்தான் எதற்கு? நிற்க, இங்கு நாம் ஒரு கருத்தை நன்கு சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சோம்பல், முயற்சி என்பன பழக்கிக் கால் வருவன.
"பிலம் என்று அசைஇ இருப்பானாக்கானின்
நிலம் என்னும் நல்லாள்நகும்" என்ற கிருவள்ளுவர் பிறக் காரணம் என்ன? மனிதன் எக்காரனத் தைக்கொண்டும்
சோம்பியிருத்தல் கூடாது என்பதால் தாளோ? சோம்பியிருப்பவ ஒனுக்கு நீதி நூல்களால் பயனில்லே.
{ற சுற்கு பிளேயே சற்று நோக்குவோம். ஆகழால் தோன்றும் அசைனின்மை" இக்கொள்கையை வற்புறுத்துவதற்குத் திருவள்ளுவர் தம் அரிய திருக்கு வில் "ஊக்கமுடைமை' ஆள்வி:னயுடைமை" என்ற இரண்டு அதிகாரங்களே வகுத்திருக்கிள்குர். அடுத்தது கைப் பொருள் போகூழால் தோன்றும்மடி." இத்தகைய மடியை விலக்கு தற்கு மடியின்மை" "இடுக்கண் அழியாமை" என்ற இரண்டு அதி காரங்ள வகுத் திருக்கின்று ர். இந்த நாள்கு அதிகாரங்களேயும் 'கார்" என்த ஒர் அதிகாரத்தின் விளக்கங்களாகக் கொள்ளலாம்.
நீ வள்ளுவர். பொருள் ஒருவனே விட்டு நீங்குதலே, "பரியினும் ஆக சிபா 2ள்வி' என்று கூறுகின்ஞர். அதாவது, ஒருவன் தன் பொருளே எவ்வளவுதான் வருந்திக் காத்திருந்தாலும், போகூழ் இருப் L ாருள் அவளே விட்டுப்பிரியும் என்பதாம். ஆணுல் ஆரக்கமு டைடி ன் பொருளினது பிரிவிற்கு இரங்கமாட்டான்.
"ஆக்கம் இழந்தேமென்று அல்லாவா நாக்கம்
ஒருவந்தம் கைத்துடை பாம்" நிக் பெற்ற காக்கமுடையவர் பொருள் இழந்து தற்கு வருந்தார்.

Page 26
144 ஆத்மஜோதி
மேலும் அவர்கள் இடையருது முயற்சி செய்தால் பொருள்தானே வழிவினவிக்கொண்டு செல்லும்.
“ஆக்கம் அதர்வினு அய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கமுடையா னுழை" இனி, இன்பத்தைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர்.
**வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்று திட்டவட்டமாகக் கூறுகின்ரு ர்.
‘நன்ருங்கால் நல்லவாக் காண்பவர் அன்றங்கால்
அல்லல் படுவது எவன்?" என்றும் வினவுகின்ருர் .
இன்பத்தை விரும்புதலும் துன்பத்தை வெறுத்தலும் பாமரமக் களின் இயல்பு. ஆனல் சான்ருேர் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவர். இனி இன்பதுன்பங்களின் இயல்புதான் எத்தகையது என்று நோக்குங்கால் இன்பதுன்பங்கள் அவரவர் தத்தம் மனத்தின் சண் ஏற் படுத்திக்கொள்ளும் ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை. எடுத்துக் காட்டாகப் பாகற்காய் சிலரால் விரும்பியுண்ணும் பொருளாகவும்: பலரால் வெறுத்தொதுக்கும் பொருளாகவும் உள்ளது. குற்றம் பாகற்காயினிடத்தில் இல்லை. அது போலவே சான்ருேர் இன்பத்தை விழையார்: முயற்சியையே விரும்புவர்.
'இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்’ x** 'இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்' "இன்பம் விழையான் வினைவிழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் துரண்' என்று வள்ளுவர் கூறுகிருர், முயற்சியுடையவன், முயற்சி செய்து தன் குடியை உயரச் செய் கின்றவன் இன்பத்தை விழையமாட்டான்; வினையையே விழைவான்; இத்தகைய முயற்சியுடையவன் துன்பத்தை எவ்வாறு ஏற்றுக்கொள் கின்ருன் என்று கவனிப்போம். அவன் துன்பம் வருவது இயல்பென்று கருதுகின்றன். தனக்கு வரும் வெள்ளத்தனைய இடும் பையை, அவன்தன் உள்ளத்தில், இடும்பையின் ஆற்றல் இவ்வளவே என்று எண்ணிய எண்ணத்தின் அளவிலேயே போக்கிவிடுகின்றன்; அதைக் கண்டு நகுகின் முன்; மேலும் தனக்கு நேருகின்ற இடும்பையையே இன்பமாகக் கருதுகின்ருன்; அதன் மூல்ம் மனம் தளராது முயற்சி யுடையவஞய் வினையாற்றுகின் முன்; பகைவர் போற்றும் பண்பினே யும் பெறுகின்ரூன்.
'இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஈர்வ தஃதொப்ப தில்’’

"இன்னுமை இன்ப மெனக்கொள்ளின் ஆகுந்தன்
ஒன்ஞர் விழையுஞ் சிறப்பு" என்று கூறுகின்றர் வள்ளுவர் முடிந்த முடிவாக
'ஊழிற் பெருவலியாவுள' மற்றென்று
சூழினுந் தான்முந் துறும்" என்று ஊழின் ஆதிக்கத்தைக் கூறும் திருவள்ளுவர் இந்த ஊழின் வலிமையைத் தோற்கடிக்கும் வகையில்,
"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை யின்மை பழி' என்றும், "தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன் மெய் வருந்தக் கூலி தரும்" என்றும் ! "asuanipuláb alÚuéb súb saauruár 8-a: síleit gólis
5rgar 615ju Jasi" என்றும் . கூறுகின்ருச் இக்குறள் வெண்பாக்களின் மூலமாக நமக்குத்தான் "ஆகூழ் இல்லையே' என்று முயற்சி செய்யாது சோம்பி இருத்தலே பழிக்கு ஏதுவாம் என்றும், மேற்கொண்ட காரியத்தை - விடாது முயற்சி செய்ய அந்த முயற்சிக்கு ஏற்ற முழுப்பயன் கிடைக்காவிடினும், உழைதீத உழைப்புக்கு ஏற்ற பயணுவது கிடைக்கும் என்றும்,மனம் அழிதலின்றி இடைவிடாது முயன்றவர் ஊழையும் புறங்காண்பர் என்றும் தெள்ளத்தெளியக் கூறியிருக்கின்ருர் . இவைகளால் நாம் ஒர் உண்மையை அறிதல் வேண்டும். நம்முடைய பழவினை இன்ன தென்று அறியோமாகையால் நாம் நம்முடைய முயற்சியைக் கை விடலாகாது என்பதாம்.
இது காறும் கூறியவற்ருல் வினையின் பயணுக ஊழ் அமைகின் றது என்றும் நற்செயல் செய்தவனுக்கு ஆகூழும், தீச்செயல் செய் தினுெக்குப் போ கூழும் அமையும் என்றும் உணர்ந்து, ஒருவன்"செயற்பால தோறும் அறனே" என்ற முறைப்படி அஞ்சாது அறத் தின் அடிப்படையில் வினைகளை ஆற்ற வேண்டும் என்றும் முன்பு அறியாது செய்த வினையின் பயனுய் அமைந்த ஊழானது தன் முன் னேற்றத்துக்குத் தடையாய் இருப்பின், அதற்காக மனந்தளர்ந்து சோம்பி இருத்தற் கூடாது என்றும், 'உழைக்கின்ற மாடு உழுது கொண்டே இருத்தல் வேண்டும்" என்பதுபோல, ஒருவன் இடைய ருது தான் மேற்கொண்ட செயல் முடிகின்றவரை ஊக்கத்தோடும் முயற்சியோடும் பாடுபட வேண்டுமென்றும் அவ்வாறு பாடுபட்டால் தடையாக இருக்கின்ற ஊழையும் வெல்லலாம் என்றும், தெய்வப் புலமைத்திருவள்ளுவர் தாமியற்றிய உலகம் போற்றும் ஒப்பற்ற நூலாகிய திருக்குறளில் கூறியிருக்கின்ருர் என்று தெளியலாம்.
ஆத்மஜோதி ஆசிரியர் தமிழகத்தில் சொற்பொழிவு ஜனவரி 2 திருச்சி தமிழ்ச்சங்கம்
- 7-11 சென்னை ஞாஞனந்த சேவா சமாஜம் - 31 திண்ணனூர் கும்பாபிஷேகம் -பெப்ரவரி 1 கோயம்புத்துர் கும்பாபிஷேகம்
பெப்ரவரி 2ல் இலங்கை திரும்புதல்

Page 27
Registered at the G. P. O. as a New இந்தியா, சிங்கப்பூர், மே சந்தாதாரர்களுக்கு ஒ
s@@<<*必令必令令必*必必必必》
அன்புக்குரிய சந்தாதா ரிர்கள்ே
ஒவ்வொரு சந்தாதாரர்க ருந்து அனுப்பப்படுமுன் இரு பார்க்கப்பட்டுத் தபாலில் சேர் ஒரு சிலர் தம்க்கு ஒழுங்காக முறையீடு செய்கின்றனர். அத் தொடக்கம் முத்திரைச் செ 1 மடங்காக அதிகரித்துள்ள6 ஈடுசெய்யுமுகமாக ஒவ்வொரு ஏஜென்சியை நியமித்துள்ளோ மிருந்தே உங்களுக்கு ஆத்மே ஒழுங்கைச் செய்துள்ளோம். களிடமே செலுத்தி அவர்களி றுக்கொள்க.
இந்திய விலாசம்:
S. RAJASEKARAN “Visalakshi Illam”, 274, Royapettah-Madras-60
மலேசியா விலாசம்:
S. SUB RAMANYA Sri Eswari Flour Mill, 99-, Jalan Tandok, ) இந்துனேசியா விலாசம்:
Sri Mariyammar Jalan Teuku Umar No: Medan-Sumatra, Indo சிங்கப்பூர் விலாசம்:
-Mrs. M. MARKA
BLK-54, No. 3597-B, Geylong Bahau, Singa
ஆசிரியர்: தா முத்தைய by fathusay: குறி ஆத்மஜோ அச்சிட்ட திகதி 14-1-82

spaper M. L. 359/00. லசியா, இந்துனேசியா ஒரு வேண்டுகோள்! *************** 。
Ꮴ, ளூக்கும் ஆத்மஜோதி இங்கி முறை விலாசம் சரிபிழை ’க்கிருேம், அப்படி இருந்தும் க் கிடைப்பதில்லை என்றும் ந்துடன் கடந்த தை மாதம் லவையும் அரசாங்கத்தார் எர். இவை இரண்டையும் தேசத்திற்கும் ஒவ்வொரு "ம். இனிமேல் அவர்களிட ஜாதி கிடைக்கத்தக்கதான உங்கள் சந்தாவையும் அவர்
டமிருந்தே ரசீதையும் பெற்
Royapettah High Road, 304, Tamilmadu. r
Telephone: 847107
M
Kualalumpur, Malaysia.
n Koi 8, mesia.
DU
pore- 1233.
s as asub - sTav.