கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1982.08.17

Page 1
醒苷
 
 

LI LIL AD

Page 2
ஆத்மஜோதி
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே -சுத்தானந்தர்
ஆசிரியர் நா. முத்தையா
ஜோதி; 34 - ஆவணி - (17-8-82) ma y || || : .10 مست
பொருளடக்கம்
தினசரி வேண்டுதல் செய்தலே நல்வாழ்வின் முதற்படி. --397 தினசரி பிரார்த்தனை 398 سے நாகைலிங்கரைத் தரிசி நெஞ்சே --399 பூரீ காயத்திரி சுவாமிகளுடன் ஒருநாள் -402 சுவாமி ராமதாஸ் அருளுரை 406 ۔۔۔ கர்மம் செய், பலாபலனில் பற்றுதல் வையாதே - 407 திருமுறைக்கதைகள்-3 409 --سے திருத்தல வரலாறு 144 4 سے நந்தனுர் -4 17 ஸித்தாஸ்ரம மகா பூஜ்யர் 19 4 سم மனிதரின் உணவு மாமிசமா மரக்கறியா? -425 கோணேஸ்வரத்துடன் தொடர்புடைய. -427 س பூரீ அரவிந்தரின் பூரணயோகம் -433
441 ----۔ “
கருணை நிறைந்த தெய்வம் சனிபகவான்
LL LLTLL LLL LSLS LLSLS MT TM SMASL ML TASMLTASLS LALLTL LL LMS LMS M LqLSLSLLLSLSLLLL AAAAA AAAAS AAA SASM LM LMSLSMSLLML
ஆத்மஜோதி சந்தாவில்
இலங்கை வருடச் சந்தா- 25 ரூபா , ஆயுள் சந்தா- 500 ரூபா
, ஆயுள் சந்தா- 500 ரூபா ( , s சிங்கப்பூர்-மலேசியா-இந்துனேசியா
வருடச் சந்தா- 10 வெள்ளி ஆயுள் சந்தா- 200 வெள்ளி
அமுல் நடத்தப்படும்.
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி - யூனி லங்கா.
35ம் ஆண்டு தொடக்கம் நிகழ இருக்கும் மாற்றம்
இந்தியா வருடச் சந்தா- 25 ரூபா (இந்திய ரூபாய்) )
இச்சந்தா 1982 கார்த்திகை மாதம் தொடக்கம்
SLLSLLLLLLTLLLLLLLLSLLLLLLLL LLMLLLLLL LLLLLLLLMMMLLLLLLLLMLL LSMTALLLLLLSLLLTLSLLALLLLSLL LLLL LL LLL LLL LLTL
 
 

କ୍ରୁଞ୍ଚାକ୍ଷ୍ୟଣ୍ଡୁ 圈
தினசரி வேண்டுதல் செய்தலே நல்வாழ்வின் முதற் படியாகும்
அகில உலகத்தையும் எல்லாம் வல்ல சக்தி வியாபித்துக் கொண்டிருக்கிறது. உரிய முறைப்படி வேண்டுதல் செய்தால், வேண்டுவன யாவற்றையும் உரிய காலங்களில் அது கொடுக் கும். சில வருடங்களிலிருந்து பல பத்து வருடங்கள் ச்ெல்ல லாம். ஆணுல் என்றே-நல்லனவோ கெட்டனவோ விடாப்பிடி யாகத் தினசரி கேட்கப்படுபவை சித்திக்கும்.
சகல உலகங்களுக்கும் இறைவன் ஒருவனே. அருவமாக வும் இறைவனைக் கூவி அழைக்கலாம். ஆணுல் அந்த மாபெ ரும் ஒரே சக்தி-ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பி வழி படும் இஷ்ட தெய்வமாக-கனவிலும்-மனதிலும்-அருவமாக வும்-வெளிப்படையாகவும்-காட்சி அளிக்க வல்லது.
பல்லாயிரம் வருடங்களாகப் பற்பல மதங்களும் கோட்பா டுகளும்-வழிபாட்டு முறைகளும்-உலகெங்கணும் இருந்து வரு கின்றன். ஆயினும்-பொய், களவு, காமம், குரோதம், குடி வெறி முதலிய தீக்குணங்களாலும், வறுமையினுலும் உலகம் விக்கப்பட்டு-அழிள்ை நோக்கி விரைந்து கொண்டிருக்கின் றது. இது ஆண்டவனின் கண் மூடித்தனமல்ல.
ஆண்டவனிடமிருந்து அருளைப் பெற நாம் கையாண்டு வரும் வழிகளின் பிழையே இன்றைய உலகின்நிலை - குடி வெறி, பாய், களவு, காமம், குரோதம், வறுமை, யுத்தம் முதலிய வற்றினின்றும் காத்துக் கொள்ளும்படி உலகின் பெரும் பான் மையான மக்கள்-தினசரி--இதய பூர்வமாக, வேண்டுதல் செய்
ம்வரை அந்த அழிவுகள் நம்மைவிட்டு அகலப்போவதில்லை.
உணவு, உடை, வீடு ஆகிய சீவியத்திற்கு இன்றியமை யாத வசதிகள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வரை சமுதா யத்தில் நல்ல ஒழுக்கம் ஏற்பட முடியாது.
|ः
圈 圈 bassas

Page 3
ஆத்மஜோதி
தினசரி பிரார்த்தனை
சர்வலோக நாயகனே தேவ தேவா சர்வமத சம்மதனே தேவ தேவா விண்ணும் மண்ணும் நிறைந்தவனே தேவ தேவா விரும்பும் வரம் கொடுப்பவனே rw as 8 to
உலகெங்கும் பருவழை பெய்யவேண்டும் உயிரினங்கள் சுகமாக வாழவேண்டும் தானியங்கள் காய்கறிகள் விளையவேண்டும்
தயிர் பால் நெய் ஆனிரைகள் தரவேண்டும் goes எப்போதும் இனிமையான பேச்சு வேண்டும் OU எண்ணமெலாம் நல்லனவாய் இருக்க வேண்டும் . உலகெங்கும் கற்புநெறி தளைக்கவேண்டும் ··· · உறுதுனேயாய் யுத்தமின்றி வாழவேண்டும் 9 о фе,
என்கிராமம் என்விடு வசிப்போர்க்குத் எக்குறையும் இல்லாது காத்திடுவாய் உலகேத்தும் நன்னடத்தை ஏற்கின்றேன்
உண்மைபேசி யாவரிலும் உயர்ந்திடுவேன் ས་ T குடிகளவு கோபதாபம் தவிர்த்திடுவேன் une bero ere ospe குறைளவர்க்கும் செய்யாமல் நடந்திடுவேன் t osa eroo.
என்பெற்றேர்க்கும் பெரியோர்க்கும் கீழ்ப்படிவேன் . . எப்போதும் மகிழ்ச்சியுடன் கடமை செய்வேன் Pop சிறியோர்செய் பிழைஎல்லாம் பொறுத்து
செயல்படவே நய்மாகத் துணைபுரிவாய் என் மனத்தை அறியாயோ .. எதையும் நீ தெரிந்தவனே no sos காக்கின்ற தெய்வமல்லோ நீ · ·· நின் வல்லமைக்கோர் எல்லையுண்டோ A.
கூட்டுவழிபாடு புதிய பதிப்பு வெளிவந்துவிட்டது விலை ரூபா 2-00
கிடைக்குமிடம்:
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி

ஆத்மஜோதி 399 நாகைலிங்கரைத் தரிசி நெஞ்சே 0 ஆசிரியர் ()
*தான் தானுய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அதாவது மூச்சை அறிவாய் மணிமே” என்பது இதன் பொருள். இது நெஞ்சறிவிளக்கத்தில் உள்ள ஒரு பாடல்
மனிதப்பிறவி அவரவர் முன்பு செய்த கர்மத்தின் படி கிடைப்பது. முன் செய்த கர்மத்தின் ஒரு பகுதியை அனுப விக்க வந்த மனிதன் இதனை அனுபவிக்கும் போதோ புதிய கர்மங்களையும் தேடிக் கொள்கின்றன். பிறக்கும் போது கொண்டு வந்த கர்மம் பிராரத்துவம் என்று சொல்லப்படும்; பிராரத்துவத்தை அனுபவிக்கும் போதே புதிதாக தேடிக் கொள்ளுவது ஆகாமியம் எனப்படும். அனுபவிக்காமல் வைத்துவிட்டு வந்த கர்மம் சஞ்சிதம் எனிப்படும்.
அப்படியானுல் இந்தக்கர்மம் எப்போ தொலையும்? என் பது ஒரு கேள்வி. கர்மத்தைப் பற்றின்றிச் செய்யும் போது ஆகாமியம் இல்லாமல் போய்விடுகின்றது. இதனைக் குறித்தே பகவத்கீதையில் கர்மயோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட்டிருக்கின்றது.
மனிதனுடையவும் மற்றுமுள்ள ஜீவராசிகளினுடையவும் ஆயுட்கணக்கு அவர்கள் விடுகின்ற மூச்சைக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. நம்முடைய ஆயுட்கணக்கு நம் மூக்கின் வழியாக நடந்துகொண்டிருக்கும் மூச்சே ஒழிய, சூரிய சந்திராதிகளால் நடக்கும்படியான நாட்களல்ல.
எந்தச் சாதியைச் சேர்ந்தவனுயிருந்தாலும் அவனவன் கர்மத்திற்குத் தக்கபடி மூன்று மாதம் ஜீவித்திருந்து, அவன் கர்ம விதிப்படி மரணம் அடைய வேண்டும் என்று பிரம தேவர் சிருஷ்டி செய்திருந்தால், அம்மூன்று மாத ஆயுட்பாக டைய குழந்தை, தாயின் கர்ப்பப் பையிலிருந்து புறப்பட்டு வளிவந்தவுடன், முதல் ஆடும் மூச்சு முதல், மூன்று மாதங்கள் வரையில் ஆடி வரும், 19 லட்சத்து 44 ஆயிரம் மூச்சுகள், இராப்பகலாய் இமைப்பொழுதேனும் சும்மா இரா மல் சுவாசித்து முடிகின்றது. கடைசியாய்வரும் மூச்சானது

Page 4
400 ஆத்மஜோதி
அறுபட்டு அக்குழந்தையின் சரீரத்தை விட்டு ஓடிவிடப்போ கிறபடியினுல், அக்குழந்தை கர்மத்திற்குத்தக்கபடி வரவேண் டிய வியாதி வந்து மரணமடைந்துவிடுகின்றது.
*சாட்டில்லாவிட்டால் சாவில்லை’ என்று ஒரு பழமொழி வழங்கிவருவதை நாம் எல்லாரும் அறிவோம். மரணத் துன் பத்தை விசாரிக்க வந்தவர்கள் முதலில் கேட்கும் கேள்வி குழந்தை ஏன் இறந்தது? என்பதாகும். தாய் ஏதோ ஒரு நோய் வந்ததாகக் கூறுவாள். பிராரத்துவம் அவ்வளவுதான் என்று வந்தவர்கள் சமாதானம் கூறுவார்கள். இது உலக
நியதி.
நேற்று இருந்தவன் இன்றைக்கு இல்லாமற் போனன் என்னும் பெரிய இயல்புடையது இந்த உலகம். அவ்வளவு நி3லயற்றது இம்மானிட வாழ்வு. ஒரு நாள் முழுவதும் கூட உயிரோடிருப்பார்கள் என்பது நிச்சயமில்லாத மனிதர்கள் எண்ணுகிற எண்ணங்கள் ஒரு கோடி இரண்டு கோடியல்ல; பற்பல கோடிகள். எண்பது கோடி நினைந்து எண்ணுவன என்று ஒளவையார் கூறிஞர். ஒவ்வொரு மூச்சோடு ஒவ் வொரு எண்ணம் பிறந்து அழிகின்றது.
நிமிஷத்திற்கு பதினைந்து மூச்சுக்கள் ஆடுகின்றன. மணிக்கு அறுபது நிமிஷங்கள். ஆதலால் மணிக்கு 900 மூச்சு கள் ಸ್ಥಿನ್ದೆ நாள் ஒன்றுக்கு இருபத்துநாலு மணித்தி யாலம் ஆனபடியினுல் 21,600 மூச்சுகள் ஆடுகின்றன.
முன்னுள்ள பெரியோர்கள் இவ்விதமாய்க் கணக்கெடுத் துச் சொல்லாமல் நெஞ்சறி விளக்கத்தில் பாடிய பாடல் பின் வருமாறு:-
"இறந்திடு மிருபத் தோராயிரத் தறுநூறு பேரும்
இறந்திடு மிக்காயம் போனு லீசனக் காண்பதென்னுள் மறந்திடா தறிவான் மூல வாசியை மேலே யேற்றிச்
சிறந்த தற்பரத்து நாகை லிங்கரைத் தரிசி நெஞ்சே."
நிமிஷத்திற்குப் பதினைந்து மூச்சுகளாய் மூக்குத் துவா ரங்களின் வழியாய் ஆடி, பிரதி தினம் இருபத்துநாலு மணி நேரத்திற்குள் நடந்து நடந்து கழிந்து வரும் இருபத்தோரா யிரத்து அறுநூறு மூச்சுகளும், இந்தச் சரீரத்திலிருந்து ஒவ்வொருவராய் அறுபட்டு இறந்துகொண்டே வந்தால், பரம

ஆத்மஜோதி - 40
சிவனைக் காண்பது எப்போது? மறவாதபடி இமைப்பொழுதே னும் சும்மாயிராமல் ஓயாதபடி ஆடி, மூலாதார வழியாய் நடக்கும் மூச்சென்னும் வாசியை முதுகெலும்பின் வெள்ளை நரம்பிலுள்ள சிறிய துவாரங்களின் வழியாய் பிரம்ம கபாலத் திற்கு ஏற்றி, உயர்வாயிருந்து , தான்தானுய் நடந்துகொண் டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அதாவது மூச்சை அறி வாய் மனமே. ஆதலால், மூச்சென்னும் நூல் நமது மூக்குத் துவாரங்களிலிருந்து அறுபடா முன்னமே நாமெல்லோரும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.
பூர்வவினையின் பிரகாரம் ஒரு சிலருக்கு அவமிருத்துக் கள் நிகழ்வதும் உண்டு. அத்தோடு இப்பூவுலகில் நாம் எத் தனை ஆண்டுகள் வாழப்போகின்ருேம் என்பதும் நமது கையில் இல்லை. இயமன் நமது முன்னே திடீரெனத் தோன்று வான். அப்பொழுது யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலே அவ னுடன் புறப்பட்டுவிட வேண்டியதுதான்.
கோயிலுக்குச் செல்வதற்கு, கடவுளை வணங்குவதற்கு நேரம் இல்லை என்று பல ர் சொல்லக் கேட்கின் ருேம். திடீரென மரணம் சம்பவிக்கும் போது நேரம் இல்லை என்று கூறமுடியு மா? அல்லது இயமனிடம் கைலஞ்சம் கொடுத்து அடுத்த ஆண்டு வா என்று சொல்ல முடியுமா?
ஆகவே நாம் நல்ல சுகத்துடன் இருக்கும் போதே புண் ணரியங்களைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் நம்முடன் கடைசி காலத்தில் உடன் வரத் தக்கது. ஒரு சிலர் ‘புண் ணியம் என்பதேது? நான் புத்திசாலி. நான் என் புத்தியை எப்படியும் உபயோகிப்பேன்? என்று கூறி பாவங் களை ச் செய்வார்களாஞல் அவர்கள் பாவமூட்டையுடன் தான் மறு உலகு செல்ல வேண்டும். கடவுள் தியானம் ஒன்றே மனி தைை எந்த இடத்திலும் கைகொடுத்துக் காப்பது. இறைவன் 鲇 உடலைக் கொடுத்ததே ஆத்மாவின் ஈடேற்றத்திற்காகத் தான.
நாம் இப்பூவுலகத்திற்கு எதற்காக வந்தோமோ அதனை மறந்து விட்டோம். ஆகவே வந்த நோக்கத்தை நினைவு கூர்ந்து எமது பிறப்பை புனிதப்படுத்திக்கொள்வோமாக

Page 5
402 ஆத்மஜோதி யூனி காயத்திரி சுவாமிகளுடன் ஒரு நாள் -நா. முத்தையா
25-7-82 ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் இறைபணி மன்றத் தில் அருணகிரிநாதர் விழா மிக அற்புதமாக நடைபெற்றது. அவ்விழாவிற்கு பூரீ பித்துக்குளி முருகதாஸ், உயர்திரு மீ.ப. சோமசுந்தரம்,குருஜிசுந்தரராமன் போன்றவர்களுடன்.தவத் திரு. பூரீலயூரீ காயத்திரி சுவாமிகளும் வந்திருந்தார்கள்.
காயத்திரி சுவாமிகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ட துண்டு. ஆனல் முதல் தரிசனம் அன்றுதான் கிடைத்தது. சுவாமிகள் என்ருல் குறைந்தது காவியாவது உடுத்தி நாலு பேர் முன் பின்னுகக் கட்டியங்கூற தண்டு கமண்டலங்களு டன் காட்சி கொடுப்பார் என்று ஒரு எண்ணம். சுவாமிகளைப் பார்த்த உடனேயே அந்தப் படாடோப எண்ணங்கள் எல் லாம் மறைந்து வேறேர் படம் உதித்தது.
காட்சிக்கு மிக எளிய உருவம்; நம்மைப் போலவே மிக மிகச் சாதாரண உடை. அதுவும் வெள்ளை உடை, முகத்தில் ஒரு தேஜஸ். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார் களே, அந்த அழகை முகத்தில் பார்க்கக் கூடிய ஒரு இலக் கிய புருஷர். “வெள்ளைக்கில்லை, கள்ளச்சிந்தை” என்பது போல உடையும் வெள்ளை; உள்ளமும் வெள்ளை. வெள்ளை நிறத்தில் எந்த நிறமும் மிக இலகுவில் பிடித்துக்கொள்ளும்.
/ “மனத்துக்கண் மாசு இலஞதல் அனைத்து அறன்" என்ற வள்ளுவன் வாக்கிற்கு உதாரண புருஷர். அவரது உள்ளம் வெள்ளை மாத்திரமீ அல்ல, பல நல்ல் குணங்களையும் உடைய தாக இருந்தது.
ஏழைகள் மீது கருணை, கலியுகத்தில் கண்கண்ட தெய் வமாம் கந்தன் கருணையின் இருப்பிட்ம், தன்னை நாடி வந் தோரின் துன்பம் அறிந்து அதனை விரைந்து சென்று நீக்கும் பண்பு, தனக்கென்று எதனையும் வைத்துக் கொள்ளாமை, கையில் கிடைத்ததை எல்லாம் ஏழைகளுக்கே வாரி வழங் கும் வள்ளன்மை, வலதுகை கொடுப்பதை இடதுகை அறி யாத்தன்மை ஆகிய நல்ல குணங்கள் எல்லாம் உள்ளத்தில் நிறைந்து பொங்கி வளிந்தன.

ஆத்மஜோதி 40s
அவரது குணங்கள் பேச்சிலும் செயலிலும் புலப்பட்டன. நொந்துபோன உள்ளங்கள் இலட்சக்கணக்கில் அவரது தரிசனைக்காக ஏங்கிக்கிடக்கின்றன. அவரது இனிய வார்த் தைகளைக் கேட்டு மனச்சாந்தி பெறுவதற்காக பல ஆயிரக் கணக்கான மக்கள் தமது காதினை அவர் திசை நோக்கித் திருப்பி வைத்துக்கொண்டிருக்கிறர்கள். நொந்த உள்ளங்களை 'சிறிதளவாவது அமைதிப்படுத்தி அனுப்புவதே தமது வாழ்
வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கிருர்கள்.
“ஒரு ஜீவனை ஈடேற்றுவதற்காக எத்தனை முறை என்ரு லும் பிறவி எடுக்கத் தயார்? என்று கூறிய வீர விவேகானந்த ருடைய உள்ளத்தையே சுவாமிகளிடமும் காண முடிந்தது.
உலக மக்களுடைய சுபீட்சத்திற்காகச் சுவாமிகள் பல யாகங்களைச் செய்துள்ளார்கள். ஆயிரம் ரூபாயிலிருந்து பதி னையாயிரம் இருபத்தையாயிரம் வரை செலவு செய்து யாசங் கள் நடத்தி உள்ளார்கள். கையில் ஒரு சதமேனும் வைத்தி {ருந்து தொடங்கியவை அல்ல. முருகன் திருவருள் நல்ல எண் ணங்களைத் தோற்றுவிக்கிறது. அவ்வெண்ணங்களைச் செயல் படுத்தத் தக்கவர்களை எல்லாம் முருகப் பெருமானே அனுப்பி வைக்கின்றன்’ என்பதே சுவாமிகளுடைய சித்தமாகும். தான் முருகனின் கருவி மாத்திரமே என்பதுதான் சுவாமிகளுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஆண்டாண்டு காலமாக முருக உபாசனை செய்தவர்கள் சுவாமிகள். முருகனின் திருவருள் கிட்டவில்லை. மதுரை மீனட்சி அம்மன் கோயிலில் முருகன் அருளை வேண்டி மூன்று தினங்கள் அன்ன ஆகாரம் இன்றி தவம் இருந்தார்கள். தன் ಟ್ವಿರ್ಟೆಡ್ಜಷಿಪ್ತ நீண்டகாலம் சோதனை செய்ய முருகப்பெருமான் விரும்பவில்லை. அன்னை மீனுட்சிக்கு முருகன் எப்பொழுதும் குழந்தைதானே. அதுபோல முருகப் பெருமானுக்கும் சுவாமி ಹರ್ಜೆ செல்லக் குழந்தை ஆஞர். முருகன் சித்து என்ற விளை யாட்டைச் சுவாமிகளுக்கு அருளினுன். அதனைச் சுவாமிகள் தன்னை நாடிவரும் அகதிகளுக்கும் அலந்தாருக்கும் அருளிக் கொண்டே இருக்கின்றர்கள்.
ஒரு தாய் பசித்திருக்கும் தனது குழந்தைக்கு ஒரு தின் பண்டத்தைக் கையில் கொடுக்கிருள். அக்குழந்தை அதனை வாங்கி உண்ணப்புகும்போது தன்னிலும் பார்க்க பசி அதிகம் உள்ள குழந்தை ஒன்று அழுவதைக் கண்டு அதனை அக்குழந்

Page 6
404 ஆத்மஜோதி
தையிடம் நீட்டுகின்றது. இக் கருணையைக் கண்ட அக் குழந் தையின் தாய் தன் குழந்தைக்கு இரு பங்கு பட்சணங்களைக் கொடுக்கிருள். இதே போலவே தான் அத்தாயினுடைய ஸ்தா னத்தில் முருகன் இருந்து கருணை பொழிகின்றன். குழந் தையின் ஸ்தானத்திலே சுவாமிகள் இருக்கின்றர்கள். முருகன் கொடுப்பதை அப்படியே ஏழைகளுக்கே கொடுத்துவிடுகின் ருர.
ஒரு முறை ஒரு யாகம் நடைபெற்றது. பெரிய பெரிய இரத்தின வியாபாரிகள் எல்லாம் வந்திருந்தார்கள். பெரிய வணிகர் எல்லாம் பெருந்தொகையாக யாகத்திற்கு நன் கொடை அளித்தார்கள். ஒரு ஏழைத்தாய் பைசாக்கணக்கில் முடிந்து வைத்திருந்த பணத்தை அவிழ்த்து சுவாமிகளு டைய திருப்பாதங்களில் வைத்தாள்.
சுவாமிகள் அந்த யாகத்திலிருந்து வரவழைத்த ஒரு இரத்தினமாலையை அத் தாயிடம் கொடுத்தார்கள். பெரிய பணக்காரர்கள் எல்லாம் பெருந்தொகையாகக் கொடுத்தும் தமக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று ஏங்கினர்கள். சிலர் வாய்விட்டும் கேட்டே விட்டார்கள். சுவாமிகள் புன்மு றுவல் பூத்தார்கள். . . ;
"நீங்கள் தந்த பணம் தொகையால் பெரியது. ஆனல் அத் தாய் கொடுத்த பணமோ தியாகத்தால் பெரியது? என் ருர்கள்.அடுத்த கணப் பொழுதிற்குத் தனக்குத்தேவை என்று எதனையும் அவள் வைத்துக் கொள்ள வில்லை. அது வல்லவா உண்மையான தியாகம்.
'அன்றே என்றன் ஆவியும் உடலும், உடைமை எல்லா மும் குன்றேயனையாய் என ஆட்கொண்டபோதே கொண் டிலையோ? என்ற மணிவாசகப் பெருமானுடைய திருப்பா டல்தான் நினைவிற்கு வந்தது. பணக்காரனுே த ன க் கு கிடைத்ததை மற்றவர்களுக்குக் கூறியிருக்கமாட்டான். தான் மாத்திரம் தான் அதனை அனுபவிக்க வேண்டும் என்பது அவனது இயற்கைக்குணம். ஆனல் அந்தத்தாயோ குறைந் தது ஆயிரம் பேருக்காவது முருகன் திருவருளை வியந்து வியந்து கூறியிருப்பாள் அல்லவா? அதனுல் பலர் முருகப் பெருமானுடைய திருவருளை நினைவு கூரும் பாக்கியத்தைப் பெற்றனர். w

ஆத்மஜோதி 405
சுவாமிகள் சாதி சமய பேதம், கடந்தவர். சிறுமை பெ ருண்ம பார்க்காது எல்லாரையும் ஒன்று போல நோக்குவார். ஒரு முறை அரிஜனப் பெண்களில் எழுவரை அழைத்து அவர்களையே சுபாஜினிகளாக வைத்து சுவாமிகள் பூஜை செய்தார்கள். அதனுல் சுவாமிகளுடைய சமரச மனுேபாவத் தை ஒரு அளவாவது பலரால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒருமுறை சுவாமிகள் ஒரு ஏழைவிவசாயியின் இல்லத்தில்
தங்க நேர்ந்தது. அந்த ஊரோ ஏழை விவசாயிகளால் நிரம்பப்பெற்றது. அந்த ஏழை விவசாயியோ மனங்கோனது சுவாமியைத் தரிசிக்கவருபவர்களை எல்லாம் உபசரித்தார். அந்த ஊரிலுள்ள ஏழை விவசாயிகள் தம்மிடமுள்ள விவசா யப்பொருட்களையேசுவாமிகளுக்குத்தட்சணையாகக்கொடுத்து வணங்கினர். சுவாமிகள் அத்தனை பொருட்களையும் அந்த ஏழை விவசாயிக்கே கொடுத்துவிட்டு எப்படி அங்கு வந்தா ரோ அப்படியே சென்றர்.
பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லை; பிறந்து இறக் கும் பொழுது கொடு போவதில்லை. இடை நடுவில் வந்த செல்வம் சிவன் தந்தது என்று அறிந்து அதனைக் கொடுக்க வேண்டும் என்பது பட்டினத்தாருடைய கருத்து. அக்கருத் தைச் சுவாமிகள் அப்படியே கடைப்பிடித்து வருகின்ருர்கள்
LLeL0LeLL0LYYeLLLLLLLLYYYYSYYYLLLYYMeLSL LLLLSSMLSMSLMLMLMLM ML S YYYLLLLLYLLLLL0LLL0 0SYLY0YLLS0L0L TL00LL0L
சிறப்பு மலர்
அகில உலக இந்து மகாநாட்டில் வெளியிடப்பெற்ற ஆத்மஜோதி சிறப்பு மலர் விற்பனைக்கு உண்டு. மூவர்ண அட்டைப் படத்துடன் கூடிய இம்மலரில் அறுபதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மலர் ஒன்றின் விலை ரூபா 50தொடர்பு கொள்க: ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி
(இலங்கை)
യ അഭ്യുൈത്ത് &&&&&&& മൈ

Page 7
406 ஆத்மஜோதி
சுவாமி ராமதாஸ் அருளுரைகள்
விடுதலையே இலக்கு
தமிழ் வடிவம் ம. சி. சிதம்பரப்பிள்ளை
ஐரோப்பாவில் ஒரு யுத்தம் நடைபெற்றபோது ஒரு மாலுமி பகைவரினுல் கைப்பற்றப்பட்டு மறியலில் வைக்கப்பட்டான். யுத் தத்திலீடுபட்ட இரு பகுதியினரும் பதினைந்து ஆண்டுகட்குப் பின்பு செய்து கொண்ட உடன்படிக்கை காரணமாக மறியலில் வைக்கப்பட்ட மாலுமி விடுதலை பெற்றன். விடுதலை கிடைத்த தினத்தன்று ஒரு நண்பன் 50 பவுண் அடங்கிய ஒரு உறையை இவனுக்குக் கொடுத்தான். நடைசாலை ஒரமாக இவன் நடந்து செல்லும்போது ஒரு கடையில் பல வர்ணங்கள் கொண்ட பறவை களைக் கூடுகளில் விற்பனைக்காக இருப்பதனைப் பார்த்தான். இவன் அக்கடைக்குச் சென்று கூடுகளில் அடைபட்டுக்கிடந்த அத் தனை பறவைகளையும் தன்னிடமிருந்த ஐம்பது பவுனயும் கொடு த்துப் பெற்று அவைகளைச் சுவாதீனமாகச் செல்லும்படி ஒவ் வொன்றகப் பறந்துபோகச் செய்தான். கடைக்காரன் இவனது செயலைக்கண்டு பேரதிர்ச்சியடைந்தான். கடைக்காரன் இவனை நோக்கி "அதிக பணம் செலவு செய்து இப்பறவைகளைப் பெற்று இவ்வாறு பறக்கவிட்டதில் நீர் கண்ட பலன் என்ன? என்று
வினவினுன். மாலுமி அவனை விழித்து “ஒ! அதுவா! நீர் பாரும் சிறைச்சாலே வாழ்வு என்பதின் அர்த்தம் அதனை அனு வித்தவனுக்குத்தான் தெரியும். விடுதலையை மறுக்கப்பட்ட வகையில் வாழ்ந்தபடியினுல், பதினைந்து ஆண்டுகள் சிறைச் சாலையில் துன்பம் அனுபவித்த காரணத்தினுல், இப் பறவை களும் கூடுகளில் துன்பங்களை அனுபவிக்கக்கூடாது’ என்று
இதே போன்றுதான் ஆன்மீக ஞானம்பெற்ற ஞானி ஒரு வர், அறியாமைச் சங்கிலியினுல் பிணைக்கப்பட்டோரை விடுவிப் பதில்அதிக விருப்பம் உள்ளவராகக் காணப்படுகிறர்.
மாதாஜி வாழ்க! சுவாமி இராமதாஸ் வாழ்க! எங்கும் இன்பமே சூழ்க!
SS
Saif

ஆத்மஜோதி 407下
sinib Gril, IIIIIalaisi Ljggsi s))Iurtigs!
-சுவாமி கெங்காதரானந்தஜி
கர்மபலனைத் துறப்பதால் வரும் பேரானந்தப் பெரும் பேற்றுக்கு நம்மை ஆளாக்கி தீர்ப்பதற்கு கர்ம ரகசியத்தைப் பற்றி அறிவது அவசியமாகும். கர்ம பலன் சார்ாமல் கர்மம் செய்யும் அதிநுட்பமான கரும நியமங்களை தத்துவார்த்த ரீதியாக விரித்துக் கூறும் ஓர் அரிய நூல் பகவத்கீதை. பகவத் விரசாதமாக கிடைத்த அந்த அபூர்வ நூலின் சாராம்சம் கருமம் செய் பலாபலனில் பற்றுதல் வையாதே. கர்ம பலனை துறந்து சமசித்தணுய் இருப்பவர்களுடைய கடும் வினைகள் தீர்ந்து நித்திய சுகம் கிடைக்கும். இறப்பு பிறப்பொழிந்து இறை சம்பந்தமும் கிடைக்கும் ஜீவன் அடைய வேண்டிய இறுதி நிலையும் இதுதான். கீதா தர்மங்கள் வாழ்க்கை தர்மங் களைப் புறக்கணிப்பதில்லை. கர்மத்தில் விரத்தி மனுேபாவமில் லாமல் சுயதர்மத்தை முறையாகச் செய்வதற்குரிய ஊக்கம் அளிக்கின்றது. அங்ங்ணம் சுய தர்மத்தை முறை தவறமல் செய்கின்றவர்களுக்கு நாளடைவில் சுய்மாகவே ஞானம் சித் திக்குமென்பது கீதையின் கருத்து. வாழ்க்கைப் பிரச்சனை களைத் தீர்க்கத் தெரியாமல் மதிமயங்கி விரக்தியடைந்திருப்ப வர்களுக்கு சுயநம்பிக்கையும் உற்சாகமும்தாராளமாகக்கீதை அள்ளி வழங்குகின்றது. கர்மத்தைத் துறப்பதும் பலன் கரு தாமல் கருமமாற்றுவதும் எவராலும் செய்ய முடியாத காரி யம். இவ்விஷயத்தில் யோகியும் போகியும் ஒரே சார்புடைய வர்கள். ஊண், உறக்கம், தொழில், வழிபாடு, தவயோகமெல்லாம் பலன் கருதிச் செய்பவை. பயன் கருதாமல் கருமமாற்ற முடியாதொன்றிருக்கையில் கர்ம பலனைத் துறப்பதென்பதின் அர்த்தமென்ன? பயன் எதுவாயினும் சரி அதில் விருப்பு வெறு ப்பில்லாமல் சமசித்தணுய் இருப்பதென்பது அதன் உட்பொருள். இதை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமான காரியமாகி லும் கிரமமான பயிற்சி, வைராக்கியம், உறுதியான மனம், திருவருள் அதுணைகொண்டும் சாதிக்கலாமென்று கீதை வலியு றுத்திக் கூறுகிறது.உண்மைப் பொருளாகிய பகவான் கீதோ பதேசம் மூலமாக நமக்கு உறுதிமொழி அளிக்கும் பொழுது நாம் அதில் நம்பிக்கை இல்லாமலிருப்பதற்குரிய காரணங்க ளில்லை. வினைப்பயனை விட செயலின் பலாபலனைப் பற்றி மனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் “ப்ரதிகரணம்’ அதிக துன்பத்தை விளைவிக்கக்கூடியது. கர்ம பலனைப்பற்றி எண் ணுத எண்ணமெல்லாம் எண்ணி, எண்ணிக்கொண்டிருக்கும்

Page 8
408 ஆத்மஜோதி
மனுேவாசனை “ப்ரதீகரணம்’ எனப்படும். மனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் ப்ரதீகர ண அலைகள் கிரியா சக்தியைப் பல வீனப்படுத்திக் காரியத்தடையும் மனக்குழப்பத்தையும் விளை விக்கின்றன. மனதின் ப்ரதீகரண சக்தியைக் குறைத்துகர்ம பலனைத் துறப்பதற்குரிய வழி என்ன?
“ப்ரசாதயால் சர்வதுக்கானும் ஹானி? கர்ம பலன் சுகமோ துக்கமோ அது எதுவாயினும் சரி கிடைப்பதைத் திருவருள் பிரசாதமாய் ஏற்றுக்கொள்ளப் பழகினுல் துயரம் தீரும். ஆலய வழிபாட்டிற்குப் (ஆலயம் வழிபடுகிறவர்களுக்கு) பின் பிரசாதம் கிடைக்கிறது. சில சிமயம் சர்க்கரை அமுது, பஞ் சாமிருதம் போன்ற சுவைமிக்க இனிய பிரசாதம் கிடைக்கும். வேறு சில வேளையில் கிடைப்பது நீர், குழை, மலர் போன்ற வையாயிருக்கும். அது எதுவாயினும் சரி கிடைக்கும் பொரு ளின் குறை நிறை தராதரமேதுமே நினைக்காமல் நிறை மனது டன் ஈஸ்வர பிரசாதமென்ற மனுேப்ாவனையுடன் அதை ஏற்றுக் கொள்கிறேம். அதே மனுேபாவனையுடன் தினசரி செய்யும் கர்ம பலன் எதுவாயினும் சரி வருவதெல்லாம் திருவருள் பிரசாதம் என்ற மனசங்கல்பத்துடன் ஏற்கப்பழகினுல் வினைப்பuன் சாராத எல்லையில்லா இன்பமும், ஆழ்ந்த உள் அமைதியும் நித்ட அனு பவமாயிருக்கும். இறுதியில் முக்தி நிலையைத் தருகிற ஞானம் இயல்பாகவே உதிக்கும்.
மனிதர் தமது சுய விருப்பு வெறுப்புக்களைச் சாதிப்பதற்காக எத்தனையோ கருமங்காே வருந்திச் செய்கின்றனர். அதஞல் வரும் கடும் துன்பங்களைப் பொறுக்கவும் ஏற்கவும் பழகிக் கொள்கின்றனர். மேலும் பிறவித்துன்பங்களைப் பெருக்கும் இத்தகைய செயலை செய்கின்ற மனிதன் முன் வினையைத் தீர்த்துப் பின்வினை சாராம்ல் அல்லலொழிந்து நித்திய சுக மும், சாந்தியும் தரும் இந்த பயிற்சியைச் செ' கடைத் தேறினல் என்ன?
மனித சரீரத்தில் நிறைந்திருக்கும் ஜீவன் மேன்மையா னது. மரணத்திற்குப் பின் ஜீவனுக்கு மீண்டும் மனித சரீ ரம் கிடைக்குமோ என்பது சந்தேகம், சம்சார ஒத்திரத் தைக் கடப்பதற்குரிய மனித சரீர மென் :) பொருத்தமான தோணியும், குருவென்ற சுக்கானும், இறை அருள் என்ற சாதகமான காற்றும் கிடைத்தும் கரை :ேற முயற்சிக்காத மனித ஜென்மம் தற்கொலைக்கு ஒப்பானது.

ஆத்மஜோதி 409 திருமுறைக் கதைகள் - 3 முத்து
நன் பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி நற் கனகக்கிழி தருமிக்கருளிய கதை
வங்கிய சூடாமணி என்ற பாண்டிய மன்னன் மதுரைச் சோமசுந்தர்ப் பெருமானிடம் நீங்காத பக்தி பூண்டவன். பெருமானுடைய பூஜைக்காக பல அழகிய மணமுள்ள பூக் களைக் கொண்ட பூந்தோட்டம் ஒன்றை உருவாக்கினன். சண் பக நந்தவனம் ஒன்றையும் தனியாக அமைத்தான்.
சண்பக மலர்களால் பெருமானை அலங்கரித்து அழகு பார்ப்பதில் அவனுக்கொரு தனி இன்பம். இதனுல் சோமசுந்த ரர் சண்பக சுந்தரர் ஆனர். பாண்டியனும் சண்பக பாண்டி யன் ஆஞன். சண்பக மாறன் இளவேனிற் காலத்தில் ஒரு நாள் தன் பிரிய மனைவியுடன் பூஞ்சோலைக்கு சென்றிருந் தான். மனைவியின் பக்கத்தே சண்பக மாறன் இருக்கும் போது ஒரு இனிய மணம் வீசிய ஆ. இது சோலை மணம் அன்று காற்றுக்கும் மணம் இல்லை. அப்படியானுல் இது எங் கிருந்து வந்தது என்று ஆராய்ந்தான். தேவியைத் திரும்பிப் பார்த்தான். அவளுடைய கூந்தலில் இருந்து வந்த மணம் என்று தீர்மானித்தான். “இந்த மணம் வண்டுக்குத் தெரி யாது’ என்று எண்ணிஞன். “கூந்தலுக்கு இயற்கை மணமோ அன்றிச் செயற்கை மணமோ” என்று ஐயுற்றன்.
இந்த ஐயம் பாண்டியனுடைய உள்ளத்தில் அகண்டாகா ரமாய் நிறைந்தது. “நான் ஐயுற்ற கருத்தை அறிந்து பாடல் செய்கிறவர் எவரோ அவருக்கே இந்தப் பொற் கிழி சொந்தம்? என்று ஆயிரம் பொற்காசுகள் கொண்ட முடிப்பு ஒன்றை சங்க மண்டபத்தின் முகப்பிலே கட்டித் தொங்கவிட்டான். சங்கப் புலவர்கள் தத்தம் அறிவுக்கேற்றவகை எல்லாம் கருத்தை வெளியிட்டனர். ஆளுல் எவராலும் பாண்டியனு டைய சந்தேகத்தைத் தீர்க்க முடியவில்லை.
தருமி என்பவன் ஆதிசைவ மரபிலே வந்த அந்தண இளைஞன். தாய் தந்தையர் அற்றவன் பிரமசாரி. சோமசுந்த ரக் கடவுள் முன் சென்று வணங்கினன். ‘எம்பெருமானே

Page 9
410 ஆத்மஜோதி
அடியேன் நின்னைத் தவிர ஒரு பற்றுக்கோடும் இல்லாதவன். விவாகத்தில் விருப்புடையேன். அது முடித்தற்குப் பொருள் சிறிதும் இல்லை. வேத சிவாகமங்களை எல்லாம் ஒதி யிருக்கின்றேன். இல்வாழ்க்கை வேண்டும். அப்போதுதான் அர்ச்சிக்கும் அருகதை உடையவனுவேன். ‘ஐயனே! நீர் பாண்டியனுடைய மனக்கருத்தை அறிந்து, எளியேனுக்கு ஒரு செய்யுள் இயற்றித் தந்தருளும்” என்று இறைஞ்சினன்.
வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும் பெருமான் செய் யுள்ஒன்ற ஈந்தருளிஞர்.
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
என்பதே அந்தச் செய்யுளாகும். தருமி மிக மகிழ்வோடு எம் பெருமானுக்கு வணக்கஞ் செய்து பாடலுடன் சங்க மண்டபம் அடைந்தான். புலவர்கள் பாடலின் பொருளா ழத்தையும் சொல்வளத்தையுங் கண்டு மகிழ்ந்தவராய்ப் பாண்டியனிடம் கொண்டு சென்று வாசித்துக் காட்டினர். பாண்டியனுடைய உள்ளக்கருத்துக்கு பாடலின் பொருள் -ஒத்திருந்தது கண்டு தருமிக்கே பொற்கிழியை வழங்குமாறு பாண்டியன் கட்டளையிட்டான். தருமி சென்று பொற்கிழி யை அறுக்கும் போது நக்கீரன் என்ற புலவன் விரைந்து சென்று தடுத்தான். “இச் செய்யுளிலே குற்றம் இருக்கிறது? என்ருன்.
தருமி திரும்பிச்சென்று சோமசுந்தரப் பெருமானிடம் முறையிட்டான். “எம்பெருமானே! நீர் பிழைபட்ட பாடலை தந்தது ஏனே? எவர்க்கும் மேலாகிய இறைவனே! நீர் பாடிய செய்யுளுக்கே புலவர் குற்றம் கூறினுல் நின்னே மதிக்கவல் லர் யார்? எந்தையே? தாங்களன்றி உய்யும் வழியாதுள் ளது.” என்று கூறிக் கலங்கிக் கண்ணிர் விட்டான்.
சோமசுந்தரப் பெருமான் புலவர் வேடங்கொண்டு புல வரவையினைச் சேர்ந்தார். “எமது கவிக்குக் குற்றங் கூறி னவர் யார்?" என்றர். “நானே குற்றங் கூறினேன்’ என் ருன் நக்கீரன். V

ஆத்மஜோதி 411.
யாது குற்றம்?
சொற் குற்றம் இல்லை பொருட் குற்றம். பொருட் குற்றம் யாதோ? 1%னந்த மலர்களின் சார்பினுல் அல்லாமல் கூந்தலுக்கு இயற் 60கயாக மணம் இல்லை. பது மினியினுடைய கூந்தலோ?
அதுவும் அத்தன்மையதே. தேவமகளிரின் கூந்தலோ?
அதுவும் மந்தார நறுமலர் அணிந்து மணங்கமழுந்தன்மை யினல் செயற்கை மணமுடையதே.
நீதுதித்து வழிபட்டு வணங்கும் காளத்தியப்பருடைய சத்தி யாகிய ஞானப்பூங்கோதை அம்மையாருடைய கூந்தலும் அத்தன்மைய்தோ?
அதுவும் அத்தன்மையதே.
உடனே புலவராகிய சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்ட நக்கீரன் அதற்கும் அஞ்சாது,
“இந்திரன் போல் உடம்பு முழுவதும் நீர்கண்களை உடையீ ராயினும் கூறிய உமது பாடல் குற்றம் குற்றமே’ என்ருன்.
சிவபெருமானது நெற்றிக் கண்ணின் செந்தழல் பற்றி வெப்பத்தினுல் நக்கீரன் வருந்தினுன், வெப்பம் தாங்காது பொற்ருமரைப் பொய்கையுள் வீழ்ந்தான். புலவராகிய சோம சுந்தரப் பெருமான் உடனே மறைந்தருளினுர்,
நக்கீரனுடைய வருத்தத்தைக் கண்ட புலவர்கள் நக்கீர ஆணுக்குஅறிவுரை கூறினர். கயிலைமலையைப்பெயர்த்த இராவண புறுடைய சாமவேத கீதத்திற்கு உருகிய பெருமான் அவனது குற்றத்தை மன்னிக்க வில்லையா? ஆகவே எம்பெருமானைப் பாடு என்றனர். நக்கீரனும் தன்பிழையை உணர்ந்து கைலை பாதி காளத்திபாதி அந்தாதி பாடினுர், இறைவரும் மனம் இரங்கி பிழையை மன்னித்து தருமிக்கு பொற்கிழியும் வழங் கிஞர். கீரனுக்கு அகத்திய முனிவரைக் கொண்டு இலக்கண மும் உபதேசித்தருளினுர், −

Page 10
412 ஆத்மஜோதி
ஆத்மீக உணர்வில்லாதவர்கள், இறைவனிடத்திலே பக்தி இல்லாதவர்கள் புல்வர்களாயினும் அகங்காரத்தினுலும் பொ ருமையினுலும் கெடுவர் என்பதற்கு நக்கீரனே ஒரு சாட்சி. அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்த சிவபெருமான் நக் கீரனுக்கும் தாமே உபதேசித்திருக்கலாம் அல்லவா? புலவரா கிய சிவபெருமான் மீது பொருமை கொண்டே நக்கீரன் அவ ரது கவியில் குற்றம் கண்டான். அதனுல் தான் எம்பெரு மான் அகத்தியரைக் கொண்டே கீரனுக்கு இலக்கணம் உப தேசித்தார். இச்செய்தியை அப்பர் பெருமான் பின்வரும் தேவாரத்தில் குறிப்பிடுகின்றர்.
மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலேக்கையோன்காண் நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினுேன்காண் பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே, இறைவியின் இடையைப்பற்றிச் சொல்லவந்தவர் மின்ன லைப் போன்ற இடை கொடியைப்போன்ற இடையென்று. கூறினுர், கொடிக்குக் கொழுகொம்பு தேவை உண்டல்லவா? உமாதேவியாராகிய கொடிக்குச் சிவனே கொழுகொம்பு. அவரே எமக்கெல்லாம் கொழுகொம்பு. கொடிபோன்ற இடை யைக் காட்டுவது மின்னல். ஆணவ இருளில் தவிக்கும் உயிர் களுக்கு இறைவி அருளாகிய மின்னலினுல் இறைவரைக் காட்டுகின்ருள். விருப்பவன் என்ற சொல்லுக்கு கேள்வன் என்ற கருத்தும் விருப்பமுடையவன் என்ற கருத்தும் உடை யவன். தேவியிடம் கொண்ட விருப்பினுல்தான் தேவியின் உருவை இறைவன்தனது உள்ளத்தில் அழகு ஒழுக எழு திப் பார்க்கின்றன்.
தருமி என்றஅந்தணச் சிறுவனுக்குப் பாட்டைப் பாடிக் கொடுத்து, அதனை அறியாது குற்றங்களை கூறிய நக்கீரர் முன் புலவஞய்ச் சங்கத்திற் சென்று வாதிட்டு, பாட்டுக் குற்றம் அற்றதாதலையும் அதனைக் குற்றம் கூறியதே குற்ற மாதலையும் தெளிவித்து பாண்டியன் வைத்திருந்த பொற் கிழியை அவ்வந்தணச்சிறுவன் பெறச் செய்து மறைந்தமை யின் “நன்பாட்டுப் புலவஞய் சங்கம் ஏறி, நற்கனகக் கிழி தருமிக்கு அருளினேன்காண்’ என்று அருளிச்செய்தார்.

ஆத்மஜோதி 413
கொன்றையும் காந்தளும் பொன்னையும், கையையும்
காட்டுதல் தத்தம் பூக்களின் வண்ணத்தாலும், வண்ணத் தோடு கூடிய வடிவத்தானும் என்க, கொன்றை சொரிகின்ற பொன்னை. காந்தள் கையேந்தி வாங்கும் என அழகுபடக் கூறுவர். கொன்றையையும் காந்தளையும் இயைத்து அருளிச் செய்தமையின் “செழும்புறவு’ என்றது முல்லையும் குறிஞ்சி யும் மயங்கிய நிலத்தைக் என்க.
இசை பாடுவது வண்டாக, அதற்குச் சொரியப்படும் பொன்னைக் “காந்தள் பெறுகின்ற திருப்புத்துனர்? என் றது பாட்டை ஆக்கியவர் சிவபெருமானுக, அதற்குப் பாண்டியனுல் வைக்கப்பட்ட பொற் கிழியைத் தருமி பெற்ருன் என்பதனைத் தோற்றுவிக்கும் குறிப்பு மொழியாய் நின்று சிவபிரானது அமைதியையும், அருள் நிலையையும் விளக்கு வதாம.
− , O வயிறு பசிக்காமல் இருக்கவும் 1ਓuਨੇ(ਸੁd 5
காட்டு வாகை, அத்தி, சமீ, மாதுளை இவைகளை நெய்யுடன் பாகம் செய்து உண்டால் பதினந்து நாள் பசி தோன்றதாம். இதைக்கூறியவர் கொங் கணி சித்தர். விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுக்குப் பசிக்கொடுமை ஏற் படாதிருக்க “பலா அதிபலா" மந்திரத்தை உபதேசித்ததாக ராமாயணத்தில் கூறப்படுகிறது.
மனிதன் பட்டினி கிடந்து சாவதற்கா பசி படைக்கப்பட்டுள்ளது? இல்லவே இல்லை. பசித்தவனுக்கு உணவு கொடுக்காமல் வயிறு புடைக்க உண்டவனும் ஒருநாள் சாகவே போகிறன். ஆணுல் பசி என்று வந்தவனுக்கு உணவைக் கொடுப்பவன் உயிரைக் கொடுக்கிறன்.
வீடுதோறும் திரியும் பிச்சைக்காரன் சொல்வது என்ன தெரியுமா? "கொடுக்காமல் என்னப்போல் ஆக வேண்டாம். கொடுத்து உன்னைப்போல நீ இரு. சிரார்த்தத்தின் முடிவில் பிராமணர்களை அருளுமாறு வேண்டு வது என்ன? எங்கள் குடும்பத்தில் கொடுப்பவர்கள் பெருகட்டும். சிரத்தை எங்களைவிட்டுச் செல்லக்கூடாது. எங்களுக்கு கொடுக்க நிறைய இருக்கட்டும். எங்களை எல்லோரும் யாசிக்கட்டும். நாங்கள் ஒருபோதும் யாசிக்கும்படியாக ஆகக் கூடாது." அந்தச் சுலோகம்:
அன்னஞ்சநோ பஹ"பவேத் அதிதிச்ச லபேமஹி யாசிதாரச்ச நஸ்சந்து மாசயா சிஷ்மகஞ்சளு.

Page 11
414 ஆத்மஜோதி
திருத்தல வரலாறு
மரகதாசலம் என்னும் ஈங்கோய்மலை கேஷத்திரம்
SY0 L SA AY0LLLYLLLLL L0SLLLA0LLLAYLL0LSLL0LLA0LLLL0LLLL LLL 0LLLLLL AAAAA A0AA L AAAA LLL AAAA0L0L AAA LL L AA L AAA A L AAA A LL AA AAL
அகத்தியர் ஈ உருவாய்ப் பூசித்துப் பேறு பெற்றமையின் இப்பெயர் எய்தியது. தற்காலம் திருலிங்கநாதமலை என்று மருவி வழங்குகின்றது. காவிரித் தென் கரையிலுள்ள கடப்பந்துறையைக் காலையிலும், திருவாட் போக்கியை நண்பகலிலும், திருஈங்கோய் மலையை மாலையிலும் ஒரே நாளில் பூஜித்தால் பலன் பெருகும். "காலைக்கடம்பர் மத்தியானச் சொக்கர் மாலைத் திருவிங்கநாதர்' என்பது பழமொழி.
இறைவன் மரகதாசலர்: இறைவி மரகதவல்லி; தீர்த்தம் அமிர்த தீர்த்தம். ஆதிகாலத்தில் ஆதிசேடைேடு வீரம்பேசிய வாயுபகவான் மகாமேரு பர்வதத்தின் ஐந்து சிகரங்களைப் பிடுங்கித் தென் திசையில் வீசினுர், அவற்றுள் சஞ்சீவி முளைக்கும் பெருமைபெற்றதும் மரகதமய மானதுமான ஒர் மலேயே மரகதாசலமென்னும் ஈங்கோய் மலையாகும்.
பிரம்மதேவர் இங்கு ஒரு காலத்தில் தபசு செய்து ரஜோகுணம் நீங் கப்பெற்று படைத்தல் தொழில் அதிகாரத்தையும் பெற்ருர், பூரீமகா விஷ்ணு இங்கு பூஜைசெய்து காத்தல் தொழில் அதிகாரத்தையும் வைகுந்த பதவியையும் பெற்றர். இந்தத் தலத்தில் செய்யும் ஒரு சிவ ராத்திரி விரதம் மற்ற இடங்களில் செய்யும் மூன்றுகோடி சிவராத்திரி விரதப் பலனைத் தரும். உமாதேவியார் இங்கு தவம் செய்து பரமேஸ் வரனுடைய இடப்பாகமும் ஈங்கோய் மலையில் சிவனைவிட முக்கியத்து வமும் பெற்ருர் . இன்றும் மரகத கிரியில் அம்மையப்பர் அர்த்த நாரீச்சர மூர்த்தியாய்க் காட்சியருளுகின்றர். இது சக்தி க்ஷேத்திரமென்று பெயர் வழங்கிக்கொண்டிருக்கின்றது. இதனுலேயே ஞானசம்பந்தருக்கு ஞானப் பால் அருளிய அம்மையார் இங்கு தங்கித் தவஞ் செய்வோருக்கு ஞானப் பாலே உவட்டி அருளுகின்றர்.
ஒருமுறை அகத்தியமுனிவர் காலையில் காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பரையும் மத்தியானத்தில் அதற்குத் தெற்கே ஐந்து மைலி லுள்ள இரத்தினகிரிச் சொக்கரையும் தரிசித்துவிட்டு, மாலையில் காவிரி யின் வடகரையிலுள்ள மரகத மலையையடைந்து, கோவிற்கதவு பூட்டிபி ருந்ததால் பரமேஸ்வரன் அசரீரியாய்ச் சொன்னபடி சர்ப்ப நதியில் மூழ்கி ஈ உருவம் பெற்று உள்நுழைந்து பூசித்தார். பின் ஒரு முறை அகத்தியர் ஈ வடிவங்கொண்டு தானே ஒவ்வொரு மலரினின்றும் எடுத் துச்சேர்த்த தேனைக்கொண்டுதேவமானத்தால் ஆயிரவருடம்அபிஷேகம்

ஆத்மஜோதி 45
செய்துவந்தார். இப்பொழுதும் அகத்தியமுனிவர் ஈ வடிவொடு இம்மலை யிலிருந்து எந்நாளும் பூஜித்து வருகின்ருர் என்பது ஐதீகம்.
ஒரு குரங்கானது திருப்புளியமரத்திலுள்ள தேனை எடுக்கத் தேன் கூட்டைப்பற்றி இழுக்கும் பொழுது அத்தேன் கூடு தவறி மரகத இலிங் கத்தின் மேல் விழுந்தது. அதனுல் சிவபெருமானுக்குத் தேனபிஷேகம் ஆயிற்று. பின் அப்புண்ணியத்தால் குரங்கு மரகத தேசத்திற்கு அரச ணுய் சுப்பிரபன் என்னும் பெயருடன், பிறந்தது. அந்தச் சுப்பிரபன் என்னும் அரசன் பூர்வ ஜன்ம ஞானத்தால் மரகதாசலேஸ்வரர் ஆல யத்தைச் சிறப்புறக் கட்டி தினம் ஒரு குருணிதேனுக்குக் குறையாமல் அபிஷேகம் செய்து வந்தான். ஒருநாள் தேன் அகப்படாததால் தன் காதுகளை அறுக்கப் போகும்போது பரமேஸ்வரன் காட்சியளித்து அரசனைச் சிவகணங்களுக்குத் தலைவனுக்கினர்.
பிருகு குலத்தில் பிறந்த அக்கினிசன்மா என்னும் அந்தணரின் சீடன் ஒருவன் லீதிகோத்திரனென்னும் பெயருடையவன். நர்மதாநதிதிரத்தில் வாழ்பவன். தன் குரு வீட்டுக்குச் சிரார்த்தத்திற்காக கொண்டுபோன பாலில் சிறிது பாலை உட்கொண்டதால் அவனைக் குரு பிசாசாகச் சபித் தார். இந்த ஸ்தலத்தில் அந்தச் சாபம்நீங்கி சிவானந்த நித்தியவாழ்வை யும் அடைந்தான் இயமன் இங்கு தவம்செய்து அழியா வரம்பெற்ருன்,
நவசித்தர்கள் தாம் தவம் செய்யக்கூடிய இடம் எது என்று சிவ பிரானிடம் கேட்டபோது மரகதகிரியே சிறந்த இடம் என்று சிவபிரான் கூறினர். சிவபிரானுடைய உத்தரவுப்படி நவசித்தர்களும் இம்மலைக்கு வர அவர்கள் கண்டவுடன் ஒரே முடியாயிருந்த அம்மலை ஒன்பது முடியு டையதாகப் பிரிந்தது. ஒவ்வொரு சிகரத்திலும் ஒவ்வொருவராக நவசித்தரும் இத்தலத்தில் ஆயிரம் வருடம் தவம் புரிந்து மரகதலிங்கத்
தைப் பூசித்து அறுபத்துநான்கு கலைகளும் தோன்றும்படி அருள் செய் யப்பெற்று சீவன் முக்தர்கள் ஆனர்கள். J
கெளதமரின் சாயம் பெற்ற தேவேந்திரன் நாரதர் சொற்படி இத் தலத்திற்கு வந்து ஈ உருவில் இருக்கும் அகஸ்தியரை அடைந்து அவரி டம் மந்திரோபதேசம் பெற்று, அம்மந்திரத்தை தினம் ஆயிரத்தெட்டு முறையாகச் செபித்து தேவமானத்தால் ஆயிரம் வருடம் மரகதாசல மூர்த்தியை வழிபட்டு, ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாகப் பெற்ருன். பின் மரகதாசலேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் பிரகாரம் முதலிய எல்லாவற்றையும் நவரத்தினங்களால் அமைத்து வைகாசி மாதத்தில் மகோற்சவமும் செய்வித்தான்.
பிரம்ம் தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், சர்ப்பநதி, சுதா புஷ்கரணி இயமதீர்த்தம், விஷ்ணுதீர்த்தம், காவிரிநதி, இந்திரதீர்த்தம் ஆகிய

Page 12
46 ஆத்மஜோதி
தீரத்தங்கள் உண்டு. இத்தீர்த்தங்களின் கரைகளில் தானம் முதலியன செய்பவர்கள் ஒன்றுக்குக் கோடிமடங்கு பலனடைவார்கள். இந்தத் தலத்தில் இந்திரன் வைகாசிமாதப் பெளர்ணமியில் தீர்த்த உற்சவம் செய்து வைத்தான். பிரம்மதேவர் பூஜித்த லிங்கம் சுயம்புஜோதி லிங்கம். அகத்தியர் ஈ வடிவாயிருந்து தானே எடுத்துவரும் தேனினுல் அபி & கம் செய்த லிங்கம் அகத்தியர் தேனபிஷேக லிங்கம். நவசித்தர் கள் பூஜித்த லிங்கம் மரகத லிங்கம். இந்திர தீர்த்தக்கரையில் இந்திரன் உண். க்கிப் பூஜித்த லிங்கம் இந்திரலிங்கம் .
மரகதாசல மலையிலுள்ள ஓர் புளியமரமானது ஆதிசேடன் அம்சமா னது; சிவசொரூபமானது. அதைக்கண்டு வணங்குவோர் தாம் விரும்பிய எல்லாப் பேறுகளையும் பெற்று முத்தியையும் அடைவார்கள். இம்மரத்து நிழலில்தான் பிரம்மதேவர் தவம் செய்தார். இதன் நிழலில் செய்யும் தவம், தானம் முதலியவை ஒன்றுக்குக் கோடிக்கணக்காக வளரும். புளியமரத்தோடு லிங்கத்தை வலம் வருவோர் அடிக்கு ஒர் அஸ்வமேதப் பலனைப்பெறுவர்.
தக்ஷக நதியென்றும், கொண்டவுருமாறியென்றும் பெயர் வழங்கி வருகின்ற சர்ப்பநதி காவிரியில் கலந்தபிறகு ஈங்கோய் ஸ்தலத்திற்கும் கடம்ப வனத்திற்கும் மத்தியில் அகண்ட காவிரி நதியில் ஒவ்வொரு வரு டமும் தை மாதம் பெளர்ணமியும் புஷ்ய நட்சத்திரமும் கூடிய புண் னிய காலத்தில், காவிரியில் வடகரையிலுள்ள ஈங்கோய், முசிரி, வெள் ளூர்களிலும், தென்கரையிலுள்ள கடம்பமர்கோயில், ராஜேந்திரம் வெட்டுவாய்த்துறை வாட்போக்கி, கருப்பத்தூர்களிலுமுள்ள எட்டு மூர்த்திகளும் அம்மையப்பர்களாய் இடபவாகனத்திலிருந்து காட்சிதரும் பேரிய உற்சவம் சொல்லமுடியாத சிறப்பினை வாய்ந்தது. ა:
மற்றவர் மனம் ஆள் மன ஒருமை மன ஒருமைப் பயிற்சியிலே சிறந்தவர்கள் தான் தங்கள் ஆற்றலைத் தேக்கி வைத்துக்கொண்டு மெஸ்மெரிசம், ஹிப்னுட்டிசம் என்று கூறப்படும் மற்றவரது மனம் ஆளும் திறமையைப் பெறுகிறர்கள். ,
சுடுவதற்கு மன ஒருமை பட்ையிலே துப்பாக்கி ஏந்துபவர்கள், எதிரியின் விமானத்தைச் சரியா இக் குறிவைத்துச் சுட்டுத் தள்ளுவதற்கு வேண்டியது மன ஒருமை
Sejar ? -
-மந்திரம்

ஆத்மஜோதி - 417
g2SK ffa (i. ாலஃெேத்த)
(பூஞரீரங்கம்)
சிவனடியாராகிய நந்தனர் ஜோதி தரிசனத்திற்காக தில்லை செல்ல ஆசைப்பட்டு தன் எஜமானரிடம் அனுமதி கேட்கிருர். எஜமானராகிய அந்த பிராமணர் நெற்பயிரை அறுவடை செய்து நெல் மணியைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டுச் செல் என்று கூறுகின்றர்.
பொதுவாக ஒரு ஜீவனுக்கு யோகத்தில் ஈடுபட ஆசைவராது. அவ் வாறு ஆசைப்பட்டாலும் தொடர்ந்த யோகப்பயிற்சியால்தான் குண் டலினி சக்தியை மேலெழுப்பி பிரம்மரந்திரத்தை அடையச் செய்ய முடியும். இவ்வாறு இருக்கையில் நந்தனுக்கு ஜோதி தரிசனம் காண ஆசை வந்தது என்ற ல் அது அவரது ஆன்ம பக்குவ நிலையை குறிப்பதா கும். ஆத்ம தரிசனம் கிட்டினல் இறைவனுடன் ஐக்கியமாகலாம்.
எஜமான் ஆகிய பிராமணன் நெற்பயிரை அறுவடை செய்து தெல் மணியை கொண்டு வந்து போடு என்பது நந்தனராகிய ஜீவன் யோகப் பயிற்சியால் வாசியை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி புருவ மத்தியில் சிந்தாமணியாகிய நெல்மணியை பெறுவதைக் குறிக்கும்.
சாதாரணமாக நெற்கதிர் ஒரு முழம் உயரம் இருக்கும். மூலாதா ரத்திலிருந்து புருவ மத்திவரை ஒரு முழம் இருக்கும். அப்படிப்பட்ட நெற்பயிரை அறுவடை செய் என்று பிராமணராகிய எஜமானர் அதா வது குருவானவர் கூறுகின்ருர் என்பது பொருள்.
பொதுவாக நிலத்தை உழுது பயிரிட்டு, கண்யெடுத்து, நீர்பாய்ச்சி பாதுகாத்து வளர்த்து வந்தால்தான் நெற்கதிர் நன்கு வளர்ச்சியுற்று மேலெழும்பும்,
அவ்வாற்ே இந்த தூல உடலை யோகம் செய்வதற்காகத் தயார் செய்து வாசியைப் பயிர் செய்து ஒரே சிந்தனையாகிய உரமிட்டு வளர்த் தால் நெற்கதிர் மேலெழுவதைப் போல் குண்டலினி சக்தி மேலெழும் பும். நன்கு வளர்ந்த நெற்கதிரைச் சுற்றியுள்ள க%ளகளை நீக்கினுல்தான் நெற்கதிர் நன்கு வளர்ந்து முற்றும். அவ்வாறே மனேதிடத்தினல் யோகத்திற்கு ஊறுவிளைவிக்கின்ற காமக்குரோதாதிகளை விட்டொ ழித்து மனதை ஒருமுகப்படுத்தி யோகத்தால் குண்டலினி சக்தியை மேலெழுப்பி புருவமத்தியை அடைந்தால் நெல்மணி செழித்து வளர் வதைப் போல விந்து சக்தியானது மணியாக விளேயும் என்பதில் சந்தேகமில்லை.

Page 13
4 3 ஆத்மஜோதி
நந்தனர் நெல்மணியை அறுவடை செய்து வீட்டிற்குக் கொண்டு ன் நதுசேர்த்துவிட்டு சிவனைத் தரிசிக்கச் சென்ரும். ஆனல் அவரது சிவ தர்சனத்திற்கு இடையூருக நந்தி மறைத்தது.
அதாவது புருவமத்தியாகிய நந்தி மேலெழும்பிய குண்டலினி சக்தி பிரம்ம ரந்திரத்தை அடையவிடாமல் தடுப்பதைக் குறிக்கும்.
சிவன்தந்தியை விலகச்சொல்லி நந்தனருக்கு தரிசனம் அளித்தார்.
அவ்வ#றே இறைவனும் யோகியின்பால் இரக்கப்பட்டு புருவமத்தி :*கிய நந்தியை விலக்கி குண்டலினி சக்தி பிரம்ம ரந்திரத்தை அடை யச் செய்கின்ருர்,
நந்தனராகிய சிவனடியார் தில்லையிலே உள்ள திருச்சிற்றம்பலத்தில் ஐக்கியமானது போன்று யோகியாகிய ஜீவான்மா பரப்பிரமத்தில் இரண்டறக்கலந்துவிடுகிறது.
HHHHHHHH
சர்க்கசில் மன ஒருமை
சர்க்கசில் கம்பியின்மேல் நடந்து செல்லும் பெண் கீழே விழாமல் செல்வதற்குக் காரணமாய் இருப்பது மன ஒருமை யோடு அப்பெண் சமநிலை தவறிடாமல் பார்ப்பது அல்லவா?
சமையலில் மன ஒருமை
சர்க்கசில்தான் மன ஒருமை வேண்டும் என்று எண்ண வேண்டாம். சமையலிலும் மன ஒருமை வேண்டும். ஏதோ வேறு நினைவோடு சமையல் செய்தால் ஒருமுறைக்கு இருமுறை உப்பைப் போட நேரலாம். அல்லது உப்பைப் போடாது மறந்து விடவும் நேரிடலாம். உப்புப் போடவில்லை என்றலும் உணவு சுவையாக இருக்காது. பக்குவம் பார்த்து, சாதத்தைக் கீழே இறக்கி வைக்க மறந்தால், சாதம் அடியில் பிடித்து தீய்ந்து கருகிப் போவதை நாம் பார்த்திருக்கிறேம். பொதுவாக உணவு உண்ணும்போது மட்டும் நாம் எல்லோரும் மன ஒருமை காட்டு
கிருேம் என்பதில் ஐயமில்லை.
-மந்திரம்
HERHEDEGEBEEGHOEDERHOHHOHHOHHOHHOHHOHH)

ஆத்மஜோதி 419
ளித்தாஸ்ரம
DöIT ugyIIIT
() எம். வி. வெங்கட்ராம் ()
இவரைப்பற்றி . . .
இவரைப்பற்றி எழுத வேண்டும் என்னும் ஆர்வம் சில மாதங்களாக என்னுள் மூண்டுள்ளது. ‘எழுது என்று மன துக்குள் ஆணையிட்டாயிற்று.
எழுத முற்பட்டாலோ.
ஒரு நொடி, புதிதாய் ஓட்டம் பயிலும் கன்றுக்குட்டியென வாலைத் தூக்கிக் கொண்டு, தரையை அழகாய் மிதித்துக் குதித்தோடி, ஊரெல்லாம் சுற்றியலைந்து விட்டு, சோர்ந்து திரும்பி உறங்கப் போய்விடும்:
மறுநொடி, வெயில்பட்டு இலைகளை உதிர்த்துவிட்ட மரம் போல் எண்ணங்களைக் களைந்து எறிந்துவிட்டு வெறுமனே நிற்கும்;
எழுதும்படி மேலும் வற்புறுத்தினலோ,
ராவணன் போல் பத்து முகம் காட்டி பத்து வாய்களா லும் எண்ணங்களெண்ணங்களாய் உமிழ்ந்து என்னைக்கறைப் படுத்தி நகையாடும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒயா முயற்சி செய்தும், பத்து முகம் காட்டும் இந்த மனசை ஒரு முகப்படுத்தும் ஸித்தி எனக்குக் கைவரவில்லை. எனக்குக் கிட் டாத இந்த ஸித்தி வேறு யாருக்காவது லயித்திருந்தால் அவர் கள் பால் எனக்கு மரியாதையும், ஈடுபாடும் உண்டாகின்றன. நிசமாகச் சொல்கிறேன். ஒரு சின்ன பொருமையும் உண்டா கிறது.
இந்த மரியாதையும், பொருமையும் துண்டத்தான், இவ ரைப்பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வமே எனக்குள் எழுந் 芝、

Page 14
420 ஆத்மஜோதி
பார் இவர்?
சொக்கன் திருவிளையாடல் புரிந்த கூடல் மாநகரில், மாரி யம்மன் தெப்பக்குளம் மேல் கிரையில் ஆன்மீக வளர்ச்சிக்கா கத் தொண்டு புரிவதற்கென ஸித்தாசிரமம் என்கிற அழகான பெயருடன் ஒரு நிறுவனம் தோற்றுவித்து விளையாடுகிற இவர்தான் பூஜ்யழரீ வமித்த நரஹரி.
வமித்தாசிரமம்.
வRத்த நரஹரி.
சொன்னுலும் இனிக்கும். சொல்லக் கேட்டாலும் தித்திக் கும். சொற்கள் ஆமாம்.ஆத்ம ஸித்தி விரும்புகிறவர்களுக்கு. ஆஞல், பதினெட்டு மாதங்களுக்கு முன்னுல், முதன் முதலில் இந்த இனிய பெயர்களை அன்பர் ஒருவர் என்னிடம் சொன் ஞர்.
என்னிடம் ஆசிரமம் பற்றிக் கூறியவரிடம், சித்தர் என் றல் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவரோ, என்று கேட்டேன்.
எனக்கு அப்படித் தெரியவில்லை. அவரும் அப்படி சொல் லிக் கொள்ளவில்லை, என்ருர் அந்த நண்பர்.
ஆசிரமத்தையும், பூரீ ஸித்த நரஹரி அவர்களையும் அப் போது நேரில் காணுத எனக்கு உள்ளுக்குள் சந்தேகம் தான். சிறிதினும் சிறிதாக உருவத்தைச் சுருக்கிக் கொள்ளவும், பெரிதினும் பெரிதாக உருவத்தைப் பெருக்கிக் கொள்ளவும், நீர் மேல் நடக்கவும், நெருப்பு மீது படுக்கவும்- இத்தகைய ஸித்திகள் பெற்றுவிட்ட உரிமையால்தான் இவரை ஸித்தநர ஹரி என்கிருர்கள் போலும் என நினைத்தேன்.
அப்பால், எனக்கு வந்த சில புத்தகங்கள் என் சந்தேகத் தைப் போக்கின.
லித்தா என்பது இவருடைய குடும்பப் பெயர்; சக கோத் திரக்காரர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான அடை யாளமாக இந்தப் பெயரையே, தம் தவ வலிமையால் உண்மை ஆக்கி, அந்த அடையாளத்தை ஒரு புதிய ஆசாரியப் பரம் பரையின் துவக்கத்திற்குச் சின்னம் ஆக்கிய சிரேஷ்டர் பூரீ லித்த நரஹரி என்பதைத் தெரிந்து கொண்டேன். V−

ஆத்மஜோதி 421.
இவர்-பூரீஸித்தநரஹரி. சித்து ஆட வந்த பெருமாள் அல்ல, பூரீ ஹரியின் ஆசி யால் அருட்சித்தி பெற்ற பெருமாள்.
கீதையும் தியாகமும் -
ஐம்புலன்களை அடக்கி, மனத்தை வென்று, பரம்பொருள் பால் நாட்டம் செலுத்தித் தவம் செய்யும் எழுச்சி, பிறவி பிறவியாகச் செய்த நல்வினைகளின் பயணுகத்தான் தோன்று கிறது. Y
தவத்தின் அடிப்படைத் தேவை - தியாகம். கீதையின் மூலபோதம், தியாகம் என்பார் ராமகிருஷ்ணபரமஹம்ஸர். * கீதா, கீதா' என்று விரைவாகச் சொன்னுல் தியாகி, தியாகி என்று ஒலிக்கக் கேட்கலாம், என்பார் அவர். ராம, ராம என்று சொல்ல வராத வேடன் மரா, மரா என்று சொல்லி வால்மீகி ஆணுன் அல்லவா அந்த நியாயம். செல்வர்கள் குடும் பத்தில் பிறந்த ஒரு சிறுவனுக்குச் சுவையாக உண்ணவேண் டும். டம்பமாக உடுக்க வேண்டும். லோக போகங்களை நுகர வேண்டும் என்பன போன்ற இச்சைகள் ஏன் உண்டாக வில்லை? உண்டாவது தானே உலக வழக்கு. தம்பி தவறு இழைத்தால், அவனை அடித்துத் திருத்த அண்ணன் முயலுகி றன். அடி வாங்கியவன் தான் செய்த தவறு உணர்ந்து திருந் துவான் நல்ல பிள்ளை யானுல். கெட்ட பிள்ளையானல் அடித்த அண்ணனைப் பதிலுக்கு அடித்து நொறுக்க வேண்டியது தானே? −
இந்த நரஹரிச் சிறுவன் அப்படியும் செய்யவில்லை. இப் படியும் செய்யவில்லை. அண்ணன் அடித்ததும் பிறவியின் பிரக்ஞை மூண்டு ஆண்டிவனை நோக்கிப் புறப்பட்டான்,
பொன்னையும், பொருளையும், வீடுவாசலையும், சொந்தபந் தங்களையும் இளம் பிராயத்திலேயே தியாகம் செய்த துடன், ஹிமாசலத்தின் முடிமீதேறி, தபஸ்ஸிகளும், ஞானி களும் நடமாடும் ஆசிரமங்களிலும், தனிமையிலும் பரம் பொருள் விசாரம் செய்கிற உறுதியும், துணிவும் எப்படி உண்டாயின. ܝ -
இதைத்தான் விட்ட குறை தொட்ட குறை என்கிருர்க்ள் பாமரர்கள். யோக பிரஷ்டன் என்பார்கள் பண்டிதர்கள்.

Page 15
422 • ஆத்மஜோதி
ரமண மஹரிஷி, ராமலிங்க வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்த அடிகள், சைதன்ய மஹாபிரபு, நடன கோபால நாயகி சுவாமிகள் போன்ற சான்றேர் பரம் பரையில் உதித்தவர்களுக்கே இவ்வாறு ஞான வேட்கை உண்டாகும்.
எந்தப் பரம்பொருளைத்தேடி இவர் ஊரையும் உறவையும் துறந்து பணிமுடி ஏறிஞரோ, அந்தப் பரம்பொருளே சத்ய சந்த் என்ற திருநாமம் தாங்கி இவரைத் தேடி வந்து நடு நிசியில் கதவு தட்டி எழுப்பி பத்ரிகாச்ரமத்தில் உபதேசமும் அருளியது.
இதைச் சொல்லவும், கேட்கவும் கதைபோல் இருக்கிறது; ஆளுல் இதற்குள் எத்தனை துன்பங்களைச் சந்திக்க நேரும் என்பது திருநெறி செல்கிறவர்களுக்கு மட்டும் தெரியும்; மற் றவர்களுக்குத் தெரியாது: சொன்னுலும் புரியாது; புரிந்தா லும் அவர்களால் நம்ப முடியாது.
ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த தவத்தின் விளைவா கத்தான் ஒருவருக்கு இறைவனே குருவாக வருகிறர். இந்த மகத்தான பேறு பெற்றவர்களில் நம் பூரீ ஸித்தநரஹரியின் மகிமை மகத்தானது.
யூனி வழித்த நரஹரியின் தோற்றமும் ஏற்றமும்
நல்லவேளை, இந்த ஸித்தர் தம்மை ஸந்நியாஸி என்று கூறிக்கொள்ளவில்லை. அதுறவிகளைப் போல் காஷாயமும் தரிக்கவில்லை. சாமான்யர்களான நம்மைப் போலவே வெள்ளை வேட்டியும், சட்டையும், துண்டுமாய்க் காட்சி அளிக்கிருர். இவரைக் கூட்டத்தில் கலந்துவிட்டால் இவர் தனியன் (பிரம்மத்தை தனியன் என வர்ணிப்பது வழக்கு) என்று யாரும் கண்டுகொள்ள முடியாது. இவரை பூரீ ஸித்த நரஹ்ரியின் எளிய தோற்றமே புரட்சிகரமானது, ஏற்றம் மிகுந்தது.
நெற்றியில் பட்டை தீட்டுவதும், தலையை மொட்டை அடிப் பதும், கழுத்தில் உருத்திராட்சம் கட்டுவதும், தண்ட கமண் டலம் சுமப்பதும், தாடி வளர்ப்பதும், காவி கட்டுவதும், அதைவிடுத்து வெறும் கெளமீனம் அணிவதும், அதுவும் விட்டு அவதூத நிலையில் அலைவதும்-திருநெறி செல்லுவோ ரை இனம் கண்டுகொள்ளப் பயன்படும் சின்னங்கள் சந்தே கம் இல்லை. −

ஆத்மஜோதி 423
இந்த ஸித்த பூஜ்யரோ - இந்த மஹாபுருஷ ரோ - இந்த மரபை மீறி - எளிய - ஆனல், புரட்சிகரமான - தோற்றம் தருகிருர், உங்களையும், என்னையும் போல், வேட்டி அல்லது பாண்ட், சட்டை அணிகிறவர்களுக்கும் மெய்யுணர்வுகிட்டும் என்ற நம்பிக்கையை இவருடைய தோற்றம் தருகிறதே.
மறீ வித்த பூஜியரின் அருள்நோக்கும் போக்கும்:
இவர் பிரம்மச்சாரி பிரம்மவித்தை அறிந்தவர். தாம் பெற்ற ஞான செள பாக்கியத்தை மற்றவர்களும் அடைய வேண்டுமென்னும் திவ்யதிருஷ்டியால் ஸித்தாசிரமம் கண்ட வர். இவர் இருக்குமிடத்தில் எந்நேரமும் ஸத்விசாரம் ஒலிப் பதைக் கேட்கலாம். சங்கத்திலும், விசாரத்திலும் சாந்தி நிறைந்திருப்பதை உணரலாம்.
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் என்பார்" திருமூலர். அந்த ஆனந்தத்தினை இவருடைய முகமலர்ச்சி யில் காணலாம்; அந்த ஆனந்தத்தின் விளைவான சாந்தி யினை இவருடைய புன்சிரிப்பில் காணலாம்.
ஜிவனின் மூலநில பிரம்மம்
மாயை வயப்பட்டுத் தன்னை மறந்துள்ள ஜீவன், ஸத்வராஜஸ்-தாமஸ குணங்களின் கவர்ச்சியால் வினைகளாற்றி பிறப்பதும் இறப்பதுமாய் உழன்று, தர்மத்தைப் பின்பற்றி தவமியற்றி, ஸச்சிதானந்தமான தன் சுய ரூபத்தை அறிந்து பிரம்மத்துடன் ஒன்றுபடுவதையே முக்தி விடுதலை என் கிருர்கள்.
தன் சுய ரூபத்தை அறிய வேண்டுமென்ற வேட்கை கொண்ட ஜீவன்கள் எத்தனை? இந்தப் பிரம்ம வித்தையைக் கற்க முனைகிற ஜீவன்கள் எத்தனை? இந்த ஆத்மதத்துவத் தைப் போதிக்கும் தகுதிவாய்ந்த ஜீவன்கள் எத்தனை? இந்தக் கேள்விகளுக்கு நசிகேதனிடம் எமதர்மன் விடை கூறுகின் றர.
இந்த ஆத்மா பலருக்கு கேட்கவும் கிட்டாத ஒரு பொருள். இதைப்பற்றிப் பலரிடம் கேட்டாலும் பலருக்கு இது விளங் காத பொருள்.
இந்த ஆத்ம தத்துவத்தைப் போதிக்கிறவனுே மிக வியக்கத்தக்கவன், பலப்பலருள் அவன் ஒருவன்.

Page 16
- 424 ஆத்மஜோதி
அவ்வாறு போதிக்கப்படுவதை ஏற்று ஆத்மாவை அறி கிறவனே ஒரு வல்லபன் தான் பலப்பலருள் ஒருவன் தேர்ந்த ஆசாரியினுல் உபதேசிக்கப்பெற்று ஆத்ம தரிசனமும் செய் தவனுே, ஆச்சரியமான ஆச்சரியப்படத்தக்கவன்.
உபநிடத வாக்கு இது.
வேதகாலத்திலேயே பிரம்மவித்தையை, ஆத்ம தத்து வத்தை அறிய விழைந்தோர் மிகச் சிலர். இந்த வித்தையைப் போதிக்கும் தகுதிகளை பெற்றேர் மிகமிகச் சிலர்.
மோகினி மாயையில் கவர்ச்சிகள் பல்கிப் பெருகிவிட்ட காலம் இது. தெய்வ வழிபாடு மங்கி, பண வழிபாடு ஓங்கி விட்ட காலம். எங்கெங்கும் ஆத்ம தரிசனமும் என்பது மறந்து எங்கெங்கும் ஆணவதரிசனம் ஆளும் காலம்.
இந்தக் காலத்திலும் ஆங்காங்கு உத்தம புருஷர்கள்
தோன்றித் தர்மவிருந்திற்கு வழிவகுக்கிருர்கள். பிரம்மவித்
தையை மக்களுக்கு நினைவூட்டுகிறர்கள். இந்த அரிய பரம் பரையைச் சேர்ந்தவர் பூஜ்ய பூரீ ஸித்தநரஹரி.
இவரைப் போன்ற உத்தமர்கள் நடமாடும் இடம் துய் மை பெறுகிறது. கர்மிகளால் மாசுபடும் சூழல் இவர்களு டைய மூச்சுக்காற்ருல் சுத்தமாகிறது. இவர்களுடைய வாக் கொலியால் சத்தபித்தம் மறைந்து சாந்தி பிறக்கிறது. இவர் களே நமக்கு வழிதாட்டிகள்,
. . . . . . நன்றி. செளராஷ்டிர மணி
நடனத்தில் மன ஒருமை பாடப்படும் பாடலுக்கேற்ப, தாளத்தோடு சரியாக நடனம் ஆடுவதை நாம் பார்த்திருப்போம். சில நேரங்களில் மிக விரை வாகப் பாடும் பொழுதும் மிருதங்கம் அடிக்கும் பொழுதும் ஆடுகின்றவர்கள் தாளம் தவறது சரியாக ஆடுவார்கள். அப்பொ ழுது அவர்கள் காண்பவர்களின் கரவொலிப் பாராட்டைப் பெறு வார்கள். சற்றேனும் அவர்களுக்கு மன ஒருமை குறைந்தால் அடியெடுத்து வைத்தலில் தாளம் தவறிப் போய்விடும். அப் -பொழுது காண்பவர்கள் அவரைக் குறைத்து மதிக்க நேரிடும்.
ஆகவே அவர்களது பெருமை குறையும்.
- மத்திரம்

ஆத்மஜோதி 425
மனிதரின் உணவு மாமிசமா மரக்கறியா? - மாத்தளை - அருணேசர் -
மாமிசம் அருந்துபவர்கள் அதன் ருசியை அநுபவித்து அதன் ஆவலி னுல் வழக்கமாய் அருந்துவதுபோல், ரிஷிகளும் செய்கிருர்களா என் பதைக் கவனிக்கவேண்டும். ரிஷிகள் தமது பசியைப் போக்கிக்கொள் வதற்காகப் பக்தர்கள் கொடுக்கும் எந்தப் பதார்த்தத்தையும் உட்கொ ள்ளுகிருர்களேயொழிய தம் நாவின் ருசியையாவது வேறெதையாவது பார்ப்பதில்லை. அன்றியும், முன் சாப்பிட்ட அந்த மாமிச உணவையே மீண்டும் அவர்கள் விரும்புவதில்லை. அதாவது எப்போதும் புசிப்ப தில்லை.
தற்காலத்திய மாமிச பட்சணிகள் அவ்வாறன நிலைமையில் இருக் கிருர்களா என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், அந்த ஞானி களின் பக்குவ நிலைமையும் அவர்களின் நிராசையுடைய தூயசிந்தனையும் அவர்களின் ஞான சக்தியும் நமக்கிருக்கிறதா? அவர்கள் செய்த அற்புத ங்களையெல்லாம் நம்மால் செய்ய முடியுமா? அவர்களின் சக்தியில் நாம் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவராயிருக்கும்போது, எப்படி நாம் நம்மாலாகாத காரியத்தை அவர்களுக்குச் சமானமாய்ச் செய்யநினைக்க லாம்? பயில் வானுெருவன் ஆகாயத்தில் கரணமடித்தால் அவன் செய்கை, யால் அவனுக்கு ஆபத்தொன்றும் சம்பவிக்கவில்லையே நாமும் அப்படிச் செய்தாலென்ன என்று கூறிக்கொண்டு கரணமடிப்போமானல் நமது நிலைமை என்னகும்? மண்டையுடைந்து பற்கள் கொட்டுண்டன்ருே போகும். ஆதலின், பக்குவமடைந்த ஞானிகள் செய்த ஒரு சிறு செய் கையை-அதுவும் தற்செயலாக நிகழ்ந்ததைக் காரணமாகக் கொண்டு நாமும் அவர்களுக்குச் சமமாய் நடிக்க எத்தனிப்பது அறிவீனமும் அவ மானமுமேயாகும். எனவே, மகான்களுக்கும் நம்மைப்போன்ற சாதா ரண மனிதர்களுக்கும் இணைகட்டிப் பேசக்கூடாது.
இராமபிரான் மாமிச விருப்பமுடையரல்லர்
இராம பிரான் மாமிசம் உண்டார் என்பது உண்மையெனக் கொள் ௗமுடியாது. அங்ஙனமே கொண்டாலும் அது எப்போதோ தற்செய லாக நடந்திருக்கலாமேயன்றி இராமர் தமது வழக்கமான ஆகாரமாக அல்லது உடல் வளர்ச்சிக்காக மாமிசத்தை உண்டு வந்திருக்கவே மாட் டார். அவர் துன்மார்க்கர்களை ஒடுக்கி நன்மார்க்கர்களைப் பாதுகாக்க வந்தவர், அவர் உயிர்களுக்கு இன்பத்தையே நன்மையையே போதித் துள்ளார், உலகினருக்குத் துன்பம் செய்த இராவணுதியர்களை மடித்து உலகத்தைத் துன்பத்தினின்று காத்தருளினர்.

Page 17
426 ஆத்மஜோதி
திருமாலானவர் புலாலுண்ணலும் கொலை செய்தலும் பாபமற்ற செய்கைகளெனக் கருதியிருந்தால் திருமங்கை ஆழ்வாரை அன்னவர் அரசராயிருந்தபோது, கொலைத் தொழில் புரிந்துவந்ததைப் பிசகென்று உணரும்படி எப்படிச் செய்திருப்பார்? திருமங்கை மன்னர் திருமாலின் அருள் விளக்கம் பெற்றவுடனே தாம் அதுவரை செய்துவந்த பிசகை எண்ணி 'கொன்றேன் பலவுயிரைக் குறிக்கோளொன்றில்லாமல்" என்று வருந்தியிருப்பதையும் உணர்க
கொல்லாமை துறவறத்தாருக்கு மட்டும் உரியதன்று.
மாமிச பட்சணியார். "ஐயா! போதும் போதும்! உமது அதிகப் பிரசங்கித்தனத்தை அப்படியே நிறுத்தும். 'கொல்லா மை' விரதம1 *னது துறவறத்தாருக்கு மட்டுமே உரியதாகக் குறள் வரிசை முறையிலி ருந்து, அது நாயனரின் கருத்தென்பதாய்த் தெரியக் கிடக்க அதை எல் லோருக்குமேபொதுவானதாய்எடுத்துரைக்கின்றீரே! அது எவ்விதம் எல் லோருக்கும் பொருந்தும்?'
சாக பட்சணியார்- ஆகா! உமது அறியாமை நன்ருயிருக்கிறது. சற்று முன்னமே பெரியோரும் ரிஷிகளும் மாமிசம் உண்டிருக்கும்போது நாம் மாத்திரம் ஏன் உண்ணக் கூடாது என்று வினவினிர். இப்போது அதற்குச் சமாதானம் கூறும்போது கொல்லாமை விரதம் துறவிகளுக்கு மாத்திரமே பொருந்துமென்பதாய்க் கூறவந்துவிட்டீர்! நீர் இப்போது கேட்கும் கேள்வியை உமக்கு முன்பே எத்தனையோ பேர்கள் கேட்டிருக் கின்றனர். அதற்குத்தக்க சமாதானமும் அறிஞர்களால் கூறப்பட்டுள் ளது. அதனை அடியில் வருவனவற்ருல் அறிந்துகொள்ளும்.
* நாயனர் கொல்லாமையைப் பற்றிக் கூறியது துறவறத்தாருக்கு மட்டுமன்று. துறவறத்தாருக்கு அது சற்றும் பொருந்தாதாயின் அதை அருளுடைமையின்பின் வைத்துக் கூறினரேயன்றி வேறில்லை. அது பொது விதியேயாகும். அப்படிக்கருதிஞல், இன்னு செய்யாமை வெகு ளாமை-கள்ளாமை யாவுமே துறவறத்தாருக்குமட்டும் கூறினரென்று கருதுவதோ?’’ V -
மாமிசபட்சணி- சரி, அது போகட்டும். மகரிஷிகள் எனப்படு வோர்களின் சாபங்களினல் அதிகமான மனித வகுப்பினர் அழிந்துபோ யிருப்பதும், சில அவதார புருஷர்களாலும் பெரும்பான்மை மக்கள் அழிந்துபோயிருப்பதும் புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருக்கிறதே. அச்செயல்கள் மட்டும் சீவகாருண்யமுடையவையாகுமோ? அம்மாதிரி போதிக்கும் நூல்கள் கொலை நூல்களேயன்றி வேறென்ன?

ஆத்மஜோதி 427 கோணேஸ்வரத்துடன் தொடர் புடைய மற்றெரு சிவாலயம்
- க. வேலாயுதம் -
திருக்கோணமலையிலுள்ள கோணேஸ்வரத்தின் பாது காப்புக்கருதி குளக்கோட்டு மன்னனுல் அமைக்கப்பட்ட திருகோணமலை இராஜ்யம் வன்னிய அரசர்களால் ஆளப்பட்டு மிக மகோன்னத நிலையில் இருந்த காலத்தில் தமிழர்களின் தலைநகரான திருகோணமலைக்குச் சரி தெற்கே மகாவலி கங்கை ஒரமுள்ள கரை சைமா நகருக்கு மேற்கே ஒரு காத தூரத்தில் திருநகர் என்ற சிறப்புப் பெயருடன் தமிழ்ச் சைவர்கள் அடர்த்தியாக வாழ்ந்த ஒரு பெரு நகரம் பிரமாண் டமான கங்கை வெள்ளத்தாலோ பிற இயற்கைக் கோளாறுக ளாலோ அழிவுற்றுக் காடாகிப் பின்வெட்டித் திருத்தப்பட்டு பல்லாயிரக் கணக்கான ஏக்கர் மாரி விளைநிலமாக திருநகர் என்ற பெயர் திரிபுற்றுத்தீனேரி என்றபெயருடன் காணப்படு கிறது.
அழிவுற்ற நிலையில் சிவாலயம்
இந்த இடத்தில் சுங்கான் குழி பட்டியனூற்று என்னும் வனப்பகுதியில் அடர்ந்த கானகத்துள் அழிந்த நிலையில் ஒரு பெரும் சிவாலயம் இருக்கிறது. இக்சிவாலயத்துக்கு சமீபத் தில் பாபநாசம் என்ற பெயருடன் ஒரு வட்ட வடிவமான சிறு ஏரி இருக்கிறது. இது மேற்படி ஆலயத்தின் தீர்த்தம் என்று தெரிகிறது. ஆலயம் முற்றக அழிந்துள்ளது. காடாக இருந்தபோதே கோயில் கட்டிடத்தில் இருந்த பலம் வாய்ந்த சதுரமான பெரிய செங்கற்களை பெயர்த்து ஏற்றி அண்டையி லுள்ள ஊரவர்கள் தங்கள் தேவைகளுக்கு உபயோகித்துள்ள னர் ள்ன்று தெரிகிறது. இப்பகுதிக் காடுகள் சேனைப்பயிர் செய்வதற்காக முஸ்லீம் விவசாயிகளால் வெட்டி அழிக்கப்பட் டபோது நானும் எனது தந்தையாரும் சென்று பார்த்தோம். கரிப்பிச்சை என்பவர் வெட்டிய காட்டினுள் இந்த ஆலயம் அத்திவாரம் மட்டுமான நிலையில் இருந்தது. அத்திவாரம் இரண்டுமுழ உயரத்தில் சுமார் முப்பதடி நீளம்வரை காணப் பட்டதால் ஆலயம் மிகப் பெரிதாக இருந்திருக்கும் என நம்ப 6RDTY.

Page 18
428 ஆத்மஜோதி
வேட்டை மாடு
யானைகள், புலிகள். கரடிகள், மான்கள் போன்ற காட்டு விலங்குகள் இப்பகுதி வனமாக இருந்த போது கூட்டம் கூட்டமாக சஞ்சரித்து வந்தன. ஆகவே இத்தலத்தின் தீர்த்தமான பாபநாசம் பிரசித்தமான வெடி மடுவாக விளங் கியது. நீர்வற்றி வரண்ட காலத்தில் பாபநாச தடாகத்தில் நீர் அருந்த வரும் மிருகங்களை வேட்டைக்காரர்கள் பரண் அமைத்துப் பதுங்கி இருந்து சுட்டுக் கொன்றனர். தன்னில் மூழ்கிப் பக்திசிரத்தையுடன் தீர்த்தமாடும் மானிடர்களின் பாப வினைகளை நாசம் செய்யும் இந்தப் புனித தீர்த்தம் தாகம் கொண்டு நீர் அருந்தவரும் மிருக இனங்களை நூற்றுக் கணக்கில் சுட்டுக் கொல்லும் கொடிய கொலைக்களமாக பன் னெடுங் காலம் இருந்து வந்தது. ஆயினும் இன்று அதன் நிலை மாறியுள்ளது. காடுகள் வெட்டப்பட்டு வேட்டையில் குடியிருப்புகளுக்கு அண்மையில் இந்தத் தடாகம் இருக் கிறது. திருகோணமலை கோணேஸ்வரத்தின் தீர்த்தம் பாப நாசம் என்ற பெயருடன் இருப்பது போல் அழிவுற்ற இந்தப் பழம் ஆலயத்தின் தீர்த்தத்துக்கும் பாபநாசம் என்ற பெயர் இருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
தீர்த்தங்களைப் பொறுத்தவரையில் இரு ஆலயங்களுக்கு மிடையே நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். கோணேஸ்வரத்தை அமைத்த குளக்கோட்டு மன்னனே இந்த அழிந்து கிடக்கும் ஆலயத்தையும் அமைத்திருப்பாணுே என்ற எண்ணத்தை தீர்த்தங்களின் நாம ஒருமைப்பாடு ஏற் படுத்துகின்றன. இந்தப் பகுதியிலும் இதை அடுத்துள்ள சுற்றுப்புறங்களிலும் உள்ள இடங்களின் பெயர்கள் பண்டை யில் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமாக இருந்த பகுதிகள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவைகள் பின்வருமாறு: தீனேரி, பட்டியனூற் று, கொல்லங்குளம், தேன்குடமுடைத்த பட்டி, மாகாமம், வில்லுவெளி, திருநீற்றுமலை,துர்க்கைகேணி, சூரன்கல் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இந்த இடங் களில் பல பெயர்கள் திரிபடைந்து இன்று வழக்கிலுள்ளன.
வீரபாண்டியன் வழிபட்ட தலம்
பட்டியனூற்று என்னும் காட்டுப் பகுதியில் அழிபட்டுக் கிடக்கும் சிவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இலங்கை

ஆத்மஜோதி 429
மன்னனுன முதலாம் புவனேகபாகுவை தோற்கடித்துப் புவ னேக வீரபாண்டியன் என்ற சிறப்புப் பெயரைப் பூண்ட பாண் டிய மன்னன் இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் திரு மலைக் கோணேஸ்வரத்தைத் தரிசித்ததுடன் தான் வந்ததற்
ச் சான்றக கோணேஸ்வரத்தில் தன் சின்னமான இரு கயல் களைப் பொறித்தான் என்பது சரித்திரம். அம்மன்னன் அக் காலத்தில் திருநகரில் (தீனேரியில்) மிகப்பிரசித்தமாக இருந்த இன்று அழிவுற்றுக் கிடக்கும் சிவாலயத்தைத் தரிசிக்க ஆவ லுற்றுப் படைகளுடன் (திருநகர்) தீனேரி நோக்கி விரைந் தான். இடைவழியில் மன்னனும் படைகளும் களைப்புற்றனர். தண்ணிர்த் தாகம் அவர்களை பெரிதும் வருத்தியது. நீர் தேடி அஜலந்த படைவீரர்கள் அங்கு ஒரு இடத்தில் நீர்க்கசிவு காணப்படுவதைக் கண்டு தோண்டியபோது நீர் குபுகுபு என்று வந்தது. ஈஸ்வரனின் கருணையை எண்ணி மகிழ்ச்சி யுற்ற வேந்தன் அந்த நீரூற்றில் நீர் அருந்தித் தாகசாந்தி செய்துகொண்டு சிவாலயத்தை வழிபட்டு பாபநாச தீர்த்தத் தில் நீராடி மீண்டான் என அறியக்கிடக்கின்றது.
பாண்டியன் நீர் அருந்தி தாகசாந்தி செய்துகொண்ட அந்த நீரூற்று இருந்த பகுதிக்கு பாண்டியனூற்று என்ற காரணப்பெயரேற்பட்டது. இப் பெயரே காலப்போக்கில் திரிந்து இன்று வழக்கிலுள்ள பட்டியனுாற்று என்று உருமாறி யுள்ளது. பாண்டிய மன்னன் இந்த ஆலயத்துக்கு யாத்திரை செய்த காலம் குடிமியாமலைச் சாசனத்தின்படி பதின்மூன்ரும் நூற்ருண்டு என்று கணிக்கலாம். (திருநகர்) தீனேரியின் வட கிழக்கிலுள்ள ஒரு பகுதிக்கு தேன்குடம் உடைத்த பட்டி என்ற பெயர் காணப்படுகின்றது.
தேன்குடம் உடைத்த பட்டி
கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்று, கொட்டியாபுரப் பற்று ஆகிய இந்த மூன்று பற்றுக்களிலிருந்தும் திருமலைக் கோணேஸ்வரத்துக்கு பூசைத்திரவியங்கள் கொண்டுசெல்லப் பட்டன என்று ஸ்தல புராணமான திருக்கோணுசலப் புரா னம், தட்சண கைலாய புராணம், கோணேஸ்வரர் கல்வெட்டு போன்ற நூல்கள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்த இந்த இடங்கள் இன்னும் காரணப்பெயருடன் விளங்குவதைக் காணலாம். கோணேஸ்வரத்தில் ஏற்றும் திருவிளக்குகளுக் குக் கட்டுக்குளப்பற்றிலுள்ள ஒரு ஊரில் இருந்து தாமரை நூலினுல் திரி தயாரிக்கப்பட்டுக் கொண்டுவரும் வழக்கம்

Page 19
遭30 · · ஆத்மஜோதி
இருந்து வந்தது. இந்த வழக்கம் இன்று அருகி உள்ளதெனி னும் கட்டுக்குளப்பற்றிலுள்ள அந்த ஊருக்கு இன்றும் திரியாய் என்ற காரணப்பெயரே வழக்கிலுள்ளது. இதைப் போலவே கொட்டியாபுர ப்பற்றிலுள்ள மல்லிகைப் புஸ்பங்கள் கோணேஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ஊருக்கு மல் லிகைத்தீவு என்றும், ஏரண்டை, புன்னை, இலுப்பை போன்ற தருக்களின் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் திருவிளக் கெரிப்பதற்காக இறையாத்தீவு என்னும் இடத்தில் சேமிக்கப்பட்டு கோணேஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப் பட்டன. சந்தனக் கட்டைகள் வெட்டிக் குவிக்கப்பட்டு கொட்டியாபுரப்பற்றிலுள்ள சேனையூருக்கு அண்மையிலுள்ள துறை வழியாக ஏற்றிக் கோணேஸ்வரம் கொண்டுபோகும் வழக்கமிருந்து வந்ததால் அந்தத் துறைக்குக் கட்டைபநிச் சான் என்ற பெயரே இன்னும் வழக்கிலுள்ளது இங்கு குறிப் பிடத்தக்கது.
இவை போலவே தம்பலகமப்பற்றிலுள்ள மகாவலிகங் கையோரமுள்ள வனத்தில் தேன் வெட்டிச் சேகரித்து திருநக ரின் ஒரு பகுதியாக உள்ளதும் பசுமந்தை கட்டி பால் நெய் போன்ற பூசைப் பொருள்களைக் கொண்டு செல்லும் இடமாக வும் உள்ள இடத்திலேதான் தேன் குடங்களையும் வைத்திருந்து கங்கையின் ஒரு பிரிவு ஆறன கொய்யாம்புளி ஆற்றில் ஒடங் களில் ஏற்றி கோணேஸ்வரம் கொண்டு போகும் வழக்கம் இருந்து வந்தது. இப்படிச் சேமித்து வைத்த தேன் குடங்க ளில் சில அசாக்கிரதையினுல் உடைந்ததால் அந்த இடம் பசு மந்தை கட்டும் இடமாக இருந்ததாலும் அந்த இடத்துக்கு தேன் குடம் உடைத்த பட்டி என்ற காரணப் பெயர் ஏற்பட் உது. இப்பெயரே இன்றும் வழக்கிலுள்ளது.
திரு நகரின் இதர பகுதிகளான கொல்லன் குளம்-இரும்பு வேலை செய்வோர்கள் வதிந்த பகுதி கோணேஸ்வரத்துக்கு பந்தம் சூலம் போன்றவகைகளை ஆக்கிக் கொடுப்பவர்கள் வாழ்ந்த ஊர்- மாகாமம் கந்தளாய்க் குளத்து நீர் நிறைவுக் காக மூர்க்க மாதா என்னும் பெண் தெய்வத்தை வேண்டி வேள்வி செய்யப்படும் இடம் துர்க்கை கேணி, சூரன் கல் என்னும் இடப் பெயர்களும் இவைகள் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்துகின்றன.
சிவலிங்கமும் நந்தியும்
அழிவுற்ற ‘திரு நகர் தீனேரிச் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கமும் நந்தியும் இன்று தம்பலகமம் கோணேஸ்வரர்

-ஆத்மஜோதி 43.
ஆலயத்தில் முருகப்பெருமானின் கோயிலருகே உள் மதிலோ ரம் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கின்றன. திருநகர்ச் சிவாலயம் ஓரளவு அழிவுருத நிலையில் காட்டினுள் இருந்த பழங்காலத்தில் தம்பலகமம் கோணேஸ்வரத்தை புனருத்தா ரணம் செய்ய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த பராம ரிப்பு சபாபதிப்பிள்ளை முதலாளி என்னும் கனவான் கான கத்தில் கோயில் அழிந்திருக்கும் நிலையைக் கேள்வியுற்றுச் சிறந்த வேட்டைக்காரர்களின் துணையுடனும் ஐம்பதுக்கு மேற்பட்ட அதுணை ஆட்களுடனும் ஏராளமான வண்டிகளுட னும் சிரமத்தைப் பாராது காட்டு வழியில் பிர யா ண ம் செய்து கோயிலை அடைந்தனர். அப்போது கோயில் கூரை மட்டுமே சேதமுற்ற நிலையில் இருந்ததாம். முதலாளியார் கோஷ்டி பல நாள் ஆலயமுள்ள காட்டில் தங்கி ஈற்றில் சிவ லிங்கம் நந்தி போன்ற தெய்வச் சின்னங்களையும் கருங்கற்க ளினுலான கோயில் முன் வாசல் மேல் விதானம் போன்ற சிற்ப வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஏற்றிக்கொண்டு தம்பலகமம் திரும்பினர். அழிந்துகொண்டிருக்கும் பிரஸ்தாப ஆலயத்தின் அழிவைத் தடுக்க அவரால் முடியவில்லை. அப்
பகுதி பயங்கர மிருகங்கள் சஞ்சாரம் செய்யும் வனமாக
இருந்ததே காரணம். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் குளக் கோட்டன் ஆடக செளந்தரி போன்ற தமிழ் அரசச் செம்மல்கள் வாழ்ந்த காலமே திருநகரின் பொற்காலம் என்று கூறலாம். திருநகரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில் திரு நகரின் அருகே ஓடும் மகாவலி கங்கையின் கிளை நதியான கொய்யாம்புளி ஆற்றின் மூலம் தமிழர்களின் நாவாய்கள் பண்ட ழாற்று முறையில் திருமலைக்கும் திரு நகருக்குமி டையே பிரயாணம் செய்து வந்தன. அத்துடன் திருநகர்ப் பகுதிகளிலிருந்து பசுப்பால், நெய், தேன் போன்ற பூஜைத் திரவியங்களையும் நாவாய்கள் ஏற்றிச் சென்றன என்று தெரிகின்றது.
திருநகர் மகோதை நிலையில் வாழ்ந்த காலத்தில் தம் பலகமம், கிண்ணியா, ஆலங்கேணி போன்ற ஊர்கள் இருந் திருக்க முடியாது. இந்நகர் வெள்ளத்தாலோ வேறு காரணத் தாலோ அழிந்த பிறகே தம்பலகமம் கிண்ணியா ஆலங்கேணி போன்ற ஊர்கள் உண்டாயின என்று நம்ப இடமுண்டு. பெரும்பாலாக அழிவுற்ற திருநகரில் வாழ்ந்த மக்களே மேற் படி ஊர்களில் குடியேறி இருக்கலாம் என நம்ப இடமுண்டு. இவைகளைச் சரிவரக் கணிப்பதற்கு ஆதார பூர்வமான சான்றுகள் இல்லை. ஆயினும் தமிழ்ச் சைவர்களின் பூர்வீக

Page 20
432 ஆத்மஜோதி
வாழ்விடமாக இருந்த இப்பகுதியில் அகழ்வு ஆராய்ச்சி நடத்தினுல் இந்தப் பகுதியில் தமிழர்களின் தொன்மையான நிலை பளிச்சிடலாம்.
தம்பலகமப் பற்றுக்கும் தென்னிந்தியாவுக்கும் உள்ள பெயர்த்தொடர்புகள்
தம்பலகமப் பற்றுக்கும் தென் பாரதத்துக்குமிடையே பெயர்த்தொடர்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக தென்னிந்தியாவில் கோணேஸ்வரம் இருக்கின்றது. தம்பலக மத்திலும் கோணேஸ்வரம் இருக்கின்றது. அங்கே குடமுருட் டியாறு உண்டு. தம்பலகமத்திலும் குடமுருட்டியாறு ஓடுகின் றது. இந்தியாவில் மகாமகம் இருக்கிறது. அதேபோல் தம்பல கமம் கிழக்கிலும் மாகாமம் இருக்கிறது. இது மூர்க்க மாதா வுக்கு வேள்வி செய்யும் இடம். தென்னிந்தியாவில் பத்தினி வழிபாடு ஐயனர் கோயில்கள் இருப்பதுபோல இங்கும் பத் தினி வழிபாடு பிரதானம் வகிக்கிறது. ஐயனுர் திடல் ஐயனுர் கோயில் தீவு போன்ற பேர்தங்கிய இடங்கள் காணப்படுகின் றன. அன்றியும் குளக்கோட்டன் தன் தாயகமான தஞ்சைப் பகுதியை மனத்தில் கொண்டே தம்பலகமத்தைச் சிருஷ்டித் தான் எனத்தெரிகிறது.
இப்போது தம்பலகமம் இருக்கும் இடம் முன்னம் கிண் ணியாக் குடாக்கடலாக இருந்ததென்றும் குளக்கோட்டன் கந்தளாய் நீர்த்தேக்கத்தை அமைத்து அதற்கு வயல்வெளி யைத் திருத்தி வந்தபோது தம்பலகமமாக இப்போது இருக் கும் இடம் வயல்வெளிக்குள் குடாவாக வந்த ஒரு பரவல் கட லாக இருக்கவே வேந்தன் அதைத் தூர்த்துத் தன் தாயகத் தைப் போல் ஒரு அழகான ஊரை உருவாக்க எண்ணி பூதங் களைக்கொண்டு தென்னிந்தியாவில் இருந்து மண் கொண்டு வந்து வயல்களுக்குள் இடையிடையே ஊருமாக தம்பலக மத்தை உருவாக்கினுன் என ஒரு கர்ணபரம்பரைக் கதை கூறுகிறது. இந்தக் கதையில் எவ்வளவு உண்மை இருக்குமோ தெரியாது. தம்பலகமப் பகுதியில் மாக்கை போன்ற ஊர்ப்பகு திகளில் கிணறு தோண்டும்போது சுமார் பத்துப் பன்னிரண் டடிக்குக் கீழே முழுமையான முத்துச் சிப்பிகளும் வேறு கடல் பிராணிகளின் ஓடுகளும் காணப்படுவதை இன்றும் காணலாம்.

433
மரீ அரவிந்தரின் பூரணயே. O
-ழரீகங்காதரன், யூனி அரவிந்தாசிரமம்-புதுவை
15-8-82 ழரீ அரவிந்தரின் பிறந்ததினம்
நவயுக ரிஷியும் நவதத்துவதரிசன போதகரும் நவயுகத் தூதுவரும் நவசமுதாய சிற்பியுமாகிய மகாயோகி பூரீ அர விந்தருடைய பூரண யோகமானது சாதனை முறையிலும் லட் சியத்திலும் மற்ற யோக மார்க்கங்களினின்றும் முற்றும் வேருனதாகும்.
கடவுளறிவு கடவுளுணர்வு கடவுட்கலப்பு இவைகளுடன் நின்று விடாமல் இன்னும் தீவிரமாக முயன்று விஞ்ஞான சத் திய சேதன மென்று அநாதியான அருள்மறைகள் போற்றும் இறைவனுடைய அருட்சக்தியாகிய அதிமானச உணர்வை பகீரதன் கங்கையைக் கொணர்ந்ததேபோல் கீழேகொணர்ந்து உடல் உயிர்மனம் முதலிய எல்லாப் பகுதிகளிலும் ஊடுருவப் பாய்ச்சி அவற்றை திருவுருமாற்றமும் திவ்யபரிபூரண புத் தொளி பெற்ற புதிய மனிதராய் இப்புவியில் சாதாரண மனி தரைப்டோல் வாழ்ந்து கொண்டே இறைபணி புரிந்து இறை ஆணுடன் இடையருது தொடர்பு கொண்டு இம்மண்ணுலகில் விண்ணின்பத்தைத் துய்த்து அமரர்களுக்கும் கிட்டுதற்கு அரிதான ஆத்மானந்தராய் வாழ்வதுவேயாகும். இது மிகக் கடினமான சாதனையும் லட்சியமுமாகும்.
வாழ்வின் குறிக்கோள்
வேதகால ரிஷிகளுக்குப்பிறகு தோன்றிய ஆத்ம தத்துவ போதகர்களில் பெரும்பாலோர் வாழ்க்கைத் துன்பம் அதை அழிப்பதே இன்பம்என்றும்வாழ்க்கையைப்பொய்மாயக்கனவு கானல்நீர் போன்றும் நீரிற் குமிழிபோன்று தோன்றி மரை) யும் அநித்தியமென்றும் வெறுத்துத்துறந்துவாழ்க்கைக்குஅப் பாற் சென்று கடுந்துறவு பூண்டு ஊன் வாட உயிர் வாடக் கடுந்தவம் புரிந்து புலனையும் மனதையும் அடக்கி ஒடுக்கி நாசஞ்செய்து நிச்சலன நிலையில் உள்ளாழ்ந்த மோன சமாதி யில் இறையுணர்வில் இரண்டறக் கலந்தொன்றி இன்புற்று வாழ்வை வெறுமையாக்கினர். ஒடுக்கக் வாழ்வின் குறிக்கோ ளன்று மலர்ச்சியும் வளர்ச்சியும் வெளிப்பாடுமேயாகும்.

Page 21
ஆத்மஜோதி”
வேதகால ரிஷிகளும் உபநிடதகால முனிவர்களும் ராமா யண மகா பாரத காலத்தில் வாழ்ந்த ஆத்ம தத்துவ போதகர் களும் வாழ்வை வெறுக்கவில்லை, துறக்கவில்லை. இவ்வுலகில் சாதாரண மனிதனைப்போல் வாழ்ந்துகொண்டே அறம் வழுவா தூய தவவாழ்க்கை நடத்தி ஆத்மானந்தத்தில் திளைத் திருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மனைவி மக்க ளுடன் வாழ்ந்த இல்லற ஞானிகளேயாவர். இதனின்றும் அமைதியான இந்து தத்துவ தரிசன போதம் வாழ்க்கைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது ஒருவாறு விளங்கும். நித்தியத்தினின்றும் தோன்றிய வாழ்க்கை நித் தியத்துவமுடையதேயாகும். நித்தியத்தினின்று அநித்திய மும் ஒளியினின்று இருளும் தோன்ற முடியாது.
இறைவன் வதியும் திருவிடம் இவ்வையம் இறைவனுக்கு உறைவிடமாகவே யாவும் உள்ளன. வாழ்க்கை ஆனந்தத் தில் தோன்றி ஆனந்தத்தில் உய்த்து முடிவில் ஆனந்தமய மான பரம்பொருளாகவே ஆகுகின்றன என்று உபநிடத மந் திரங்கள் அருளுகின்றன.
அங்கிங்கெளுதபடி எங்கும் நீக்கமற நிறைந்திலங்கும் அகண்ட பரிபூரணுனந்தப் பரம்பொருளில் தோன்றி முடி வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் நிரந்தர இயக்கமே வாழ்க் கை. வாழ்க்கை பொய்யல்ல அது இறைவனுடைய ஆனந்த ரசலீலையாகும். வாழ்வின் உண்மையையும் மரணத்தின் ரக சியத்தையும் உணராமையினுல்தான் வாழ்க்கை அநித்திய மாகவும், இருள்செறிந்து துயர்மலிந்து இன்னல்தரும் கொடுஞ் சிறைக்கோட்டமாகவும் தோன்றுகிறது.
அனைத்திற்கும் மூலமும் முடிவுமான பரம்பொருளை 蠶 மானுபூதியின் மூலம் சாட்சாத்கரிக்கும்போது இவ்வுலகில் துன்பத்தின் சாயையைக்கூட சிறிதும் காணமாட்டோம். எங் கும் இன்பக்கனியமுதம் பொங்கித் ததும்பி வழிந்து தவழ்ந் தோடிக்கொண்டிருப்பதைக் காண்போம்.
கடுமையான யோகப் பயிற்சிகளின் மூலம் இயற்கையை வென்று வசப்படுத்தி அமானுஷிய சக்திகளைப்பெற்று உலகம் பிரம்மிக்கும் வண்ணம் அற்புத சித்துக்களைப் புரிவதுவோ அல்லது மோன சமாதியில் இறையுணர்வில் இரண்டறக் கலந் தொன்றி இன்புறுவதுவோ நமது நோக்கமன்று.
அன்று பாரதப் போரின் மத்தியில் பார்த்தன் கண்ட விஸ்வரூப தரிசனம் போன்று இவ்விஸ்வப் பிரபஞ்சத்தோற்

ஆத்மஜோதி V - 435
றங்கள் இயக்கங்கள் அனைத்தையும் இறைவனின் இருவடிவங் களாகக் காண வேண்டும்.
நமது வாழ்க்கை முழுவதும் யோகமாகவும் இறைவழிப8 டாசவும் நிவேதனமாகவும் ஆகவேண்டும். இறைவனுடன் ஒன்று பட்டு இறைவனின் திருவுள விருப்பம் இம்மண்ணுலகில் நிறைவேற, அருட்பணி புரியவேண்டும். இயற்கை நியதிக ளுக்கு உட்பட்டு சாதார ணமனிதனைப்போல் வாழ்ந்துகொண் டே உள்ளுணர்வின் மூலம் இறைவனுடன் இடையரு:து தொ டர்பு கொண்டு இறையின் பத்தில் திளைக்க வேண்டும். சிவத் திற் தோன்றிய சடம் மீண்டும் சுத்தசிவமாக மலர்ச்சியுற வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோளாகும்.
Le 3)] Up
மனம் குறுகியது. வரம்புக்கு உட்பட்டது. சம்பவங்க ?ளப் பிரித்துப் பார்ப்பது. தொகுத்துப் பார்க்கும் ஆற்றலற்றது. அஞ்ஞான இருளால் கவியப்பட்டு ஆசைக்கு அடிமையாகி விஷயபோகங்களை நாடி புலன் வழி சென்று சதாசலித்துக் கொண்டிருப்பது வாழ்க்கைக்குப் பின்னுள்ள பேருண்மையை உணரும் ஆற்றலற்றது. இத்தகைய குறைபாடுகளை இயல் பாகவே உடைய மனத்தின் உதவியால் அனைத்தையும் இறை வடிவங்களாகக் கண்டு ஆத்மானந்தராக வாழ முடி யாது. மனத்தின் பேராற்றலையும் இறைவனுடைய மகோன் னதமான அருட்குணங்கள் யாவற்றையும் ஒருங்கே தன்ன கத்தே கொண்ட ஒரு உணர்வு நிலையினுல் தான் இது சாத் தியமாகும். f
இன்றைய மனிதன் மனே உணர்வின் உன்னத நிலையில் வதிகிருன். இதுவே உணர்வின் பரிணு மத்தின் இறுதி நிலையன்று. இன்னும் பல உணர்வு நிலைகனே க் கடந்து அதிமானச உணர்வுநிலையை அடைய வேண்டியுள்ளது, அப்போதே அனைத்தையும் இறைமயமாகக் காணமுடியும். மலர்ச்சியும் வளர்ச்சியும் அடையாத பேருணர்வே ஜி டமெ னப்படுவது. சிவத்தில் உள்ள தன் மைகளெல்லாம் வித்தில் மரம் போன்று வெளிப்பாடடையாமல் சடத்தில் உள்ள டங்கி ஒடுங்கிக்கிடக்கின்றன. இவை காலக்கிரமத்தில் மலர்ச்சியுற்று உடல் உயிர் மனம் அதிமனமாகப் பரிணமிச்சின்றன. இவை: யாவும் ஓர் உணர்வுப் பொருளின் பலநிலை விளக்கவத் தவைகளேயாகும்.

Page 22
436 ஆத்மஜோதி
உலக உணர்வின் பரிஞமத்தில் அதிமானச உணர்வின் இறக்கமும் வெளிப்பாடும் விதிக்கப்பெற்றது வந்தே தீரும். அதை எவராலும் எச்சக்தியினுலும் தடுத்து நிறுத்திவிட முடி யாது. மனித முயற்சியும் தவமும் சாதனையும் மிகமிக அவசி யமே எனினும் இவைகளினுல் மட்டுமே இவ்வரும்பெரும் நிலையை அடைந்துவிட முடியாது.
தெய்வத் தாயின் திருவருள் ஒன்றே கண்ணைத் திறந்து திரையை அகற்றி தடைகளைத் தகர்த்து சத்பாத்திரங்களாக மாற்றி சாவும் பொய்யும் இருளும் குயரும் மல்கிய இவ்வுல கின்மிசை சத்தியம் ஜோதி திவ்யஜீவனம் அமரத்துவம் ஆத் மானந்தம் இவைகளைக் கொணர்ந்து பொழியும் மெய்ப் பொருளை அடையவேண்டுமென்ற தகிக்கும் வேட்கை தழலெ மூம் ஆர்வம் தணியாத தாகம் கீழியல் குணங்களினின்றும் முற்றும் விடுபடுதல், பணியையும் பலனையும் அன்னைக்கு நிவேதித்தல், பரிபூரண ஆத்ம சமர்ப்பணம், இறைவனுடைய அருட்காப்பில் அசைக்கமுடியாத நம்பிக்கை, புலனடக்கம் னைதடக்கம், பிரமச்சாரியம்,தனிமை,மோனம், தியானம் முத லியவைகளே பூரணயோக சாதனைக்கு இன்றியமையாத நிய மங்களாகும். சைத்தி மலர்ச்சியும் அதிமானச சித்தியும் திவ்ய பரிபூரண வாழ்க்கைக்கு அவசியமானவைகளாகும். இடை விடா சாதனை தடைகளைக் கண்டஞ்சா நெஞ்சுரம் ஒளியை நோக்கி முன்னேறுதல் சத்குருவால் வழிகாட்டி நடத்தும் கிடைப்பதற்கரிய பெரும்பேறு இறையருள் இவைகளால் இப் பெருநிலை சித்திக்கின்றது.
சைத்திய புருடன் விழிப்புற்று ஆதாரங்களெல்லாம் மலர்ச்சியுற்று அருள் மணங்கமழ பூரணப் பொலிவுடன் திக ழும் போது, பேரறிவு பேராற்றல் பேரமைதி பேரானந்தம் பரசாந்தம் பரமோனம் முதலிய அருட் குணங்களெல்லாம் இறைவனிடமிருந்து நம்முள் இறங்கி நிரம்புகின்றன. வாழ்க்கை முழுவதும் யோகமாகவும் பூரீ அன்னைக்குச் செய் யும் நிவேதனமாகவும் ஆகவேண்டும்.
இவ்வுலக வாழ்க்கைக்கும் ஆத்மீக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள சமன் செய்ய முடியாத பெரும் பிளவு ஒழிக் கப்பட வேண்டும். இவ்வுலக வாழ்க்கையிலேயே இறை இன் பத்தைத் துய்க்க வேண்டும்.

ஆத்மஜோதி 437
அதி மனம்
அதிமனம் இறந்த நிலை மஞதீதநிலை, தற்போதுள்ள மனம் தெய்வத்தன்மையடைந்த நிலை, பிரம்ம சாட்சாத்கார நிலை இவைகளில் அதுவும் பூரீ அரவிந்தர் அருளும் அதிமானச மன்று. உடல் உயிர் மனம் முதலிய உணர்வுநிலைகளைப் போன்று அதிமனம் தனித்தன்மையும் தனி இயல்பும் தனி இருப்பும் (Exist) உடைய ஒரு தனித்தத்துவமாகும். சித் துக்கும், சடத்திற்கும், ஆத்மீகத்திற்கும், லெளகீகத்திற்கும் பெளதீகவிஞ்ஞானத்திற்கும், ஆத்மீகமெய்ஞ்ஞானத்திற்கும், யோகத்திற்கும், போகத்திற்கும், துறவுக்கும், புலனுகர் இன்பங்களுக்கும் இவ்வுலக வாழ்க்கைக்கும் இறைவனுக் கும் இடையேயுள்ள பெரும்பிளவை ஒழித்து சமன் செய்யக் கூடியதும், இவ்வுலக வாழ்க்கையை இறைவனுடைய எல்லை யிலா ஆற்றலின் விளக்கமாகவும், இன்பப்பரவச ஆனந்த களிநடனமாகவும் காணச்செய்வது அதிமானசமேயாகும்.
அதிமானச உணர்வின் இறுக்கத்தினுலும் செயல்பாட்டி ஞலுந்தான் துன்பமும் இருளும் மல்கிய இவ்வுலகின்மிசை ஆத்மானந்தராய் வாழமுடியும்.
மிகமிக உயரிய ஆத்மீக நியமங்களைப் பின்பற்றி ஒழுகும் போதும் சமூகத்தில் மிகக் கடையானதாகக் கருதப்படும் பணியைச் செய்யும் போதும் ஒரேவிதமான சமபாவத்துடன் பரசாந்தமோனப்பெருநிலையில் பரவுணர்வில் திளைத்திருக்கச் செய்வது அதிமானசமாகும்.
பழைய மதங்களை அழித்து புதுமதங்காண்பதுவோ, தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் யோக மார்க் கங்களுக்குப் பதிலாக புதிய யோகத்தைத் தோற்றுவிப்ப துவோ, புதிய சமய தர்மங்களை சிருஷ்டிப்பதுவோ பூரீ அர விந்தருடைய நோக்கமன்று.
மன உணர்விற்கு மேலேயும் உணர்வுகளை எல்லாங்கடந் திலங்கும் பரஉணர்விற்குக் கீழேயுமுள்ளதும் பரத்தின் தன் மைகளை எல்லாங் கொண்டதுமான அதிமானச உணர்வை கீழே கொணர்ந்து வாழ்வை திருவுருமாற்றமடையச் செய்து, புத்தொளியும் புத்துணர்வுமுற்ற அதிமானச மனித சமுதா யத்தை நவஜீவனத்தை நவயுகத்தைத் தோற்றுவிப்பதுவே நவயுகரிஷி பூரீ அரவிந்தருடைய நவதத்துவ தரிசனபோத மும் பூரணயோக லட்சியமுமாகும்.

Page 23
438 ஆத்மஜோதி
சிந்திக்கும் திறனுடைய மனிதனின் உள்ளத்தில் தற்கால உலகம் உள்ள நிலையால் இது சாதிக்கக்கூடிய காரியந்தாணு என்ற ஐயம் எழக்கூடும். இது ஏதோ பித்தனுடைய பிதற்றல் போலவும் தோன்றலாம்.
ஆணுல் நாம் கருதுவது போன்று சட்டம் உணர்வற்ற பொருளன்று. சுத்த சிவத்தின் தன்மைகள் எல்லாம் வெளிப் பாடடையாமல் சரத்தில் ஒடுங்கிக் கிடக்கின்றன. யுகந் தோறும் இயற்கையன்னை புரியும்; மாபெரும் வேள்வியால் மகத்தான தியாகத்தால் அனுபவிக்கும் தாங்க முடியாத வே" தனையால், சடத்தில் ஒடுங்கிக்கிடக்கும் பேருணர்வானது மலர்ச்சியுற்று படிப்படியாக மேலுணர்வு நிலைகளுக்கு உய ர்ந்து முடிவில் பேரொளியின் இறக்கத்தால் பரிபூரணத்துவ முற்று சுத்த சிவமாகப் பர்ணமிடுகின்றது.
சிருஷ்டிக்கு உட்பட்டதன் மூலம் தன்னிலை இழந்து உணர்வற்றதாக தோன்றும் சடம் மலர்ச்சியுற்று சுத்த சிவ மாக மாறவேண்டும். சிவத்தின் தன்மைகளெல்லாம் சடத் தில் பர்ணமிக்க வேண்டும். சடம் சுத்த சிவமாக மாறவேண் டும் உதுவே மானிட வாழ்வின் குறிக்கோளும் முடிவற்ற நீண்ட ஜீவயாத்திரையின் இறுதி இலக்கும் பூரணயோக லட் சியமுமாகும்.
இன்று உலகிலும் தனிமனிதனுடைய வாழ்விலும் நிக ழும் சம்பவங்களெல்லாம் அதிமானஸ் மனித சமுதாயத்தை நோக்கியே உந்தித் தள்ளிகொண்டு இருக்கின்றன. இது வெ றும் யூகமோ மனேகற்பனையோ அன்று. உணர்வின் பரிணும கதியில் தவிர்க்க முடியாத இயற்கையின் நியதியாகும். பல் லாயிர வருடங்கலுக்கு முன்பு காடுகளிலும், மலைக்குகைக ளிலும், மரப்பொந்துகளிலும் வசித்து ஏறக்குறைய மிருகங் களைப்போல் இயற்கை நெறிபற்றி வாழ்க்கை நடத்தி வந்த ஆதிகால மனிதன் மர்பில் வந்து நம்மை எந்த இயற்கைச் சக்திகள் தூண்டி வழிநடத்தி தற்போதுள்ள மனுேநிலையின் உன்னத நிலைக்குக் கொண்டுவந்ததோ அந்த இயற்கைச் சக்திகளே மேலும் நம்மைத் தூண்டிவழிநடத்தி அதிமானச உணர்வு நிலையை அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
மன உணர்விற்கு மேலான உணர்வு நிலையில் வதியும் மனிதனே அதிமான சஞவான். வரவிருக்கும் ஒளிமயமான சத்திய யுகத்தில் அதிமானச மனித சமுதாயம் தவிர்க்கமுடி யாததாகும்.

ஆத்மஜோதி 43
சத்திய யுகத்தினின்று கலிக்கும் கலியினின்று சத்திய யுகத்திற்கும் கால வட்டம் அதிவேகமாக சுழன்று கொண்டு இருக்கின்றது. சத்தியயுக அருணுேதயத்தின் அருட்காட்சிகள் தோன்றுகின்றன.
பரமோனங் கவிகின்றது. அருளொலி கேட்கின்றது. புத் துணர்வு இறங்கி செயல்படுகின்றது. உலகமெங்கிலுமுள்ள மனித சமுதாயம் உறக்கத்தினின்றும் விழித்தெழுந்து வீறு கொண்டுபழந்தளைகளைத்தகர்த்தெறிந்து மறுமலர்ச்சியுற்றுபுத் தொளியை நோக்கி அதிவேகமாக முன்னேறிக்கொண்டு இருக் கின்றது. பூரீ அரவிந்தருடைய ஆதரிசமாகிய அதிமானச மனித சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கின்றது. அது சிந் திக்கும்போதுதான் அன்பும் அருளும் அருட்பெருங்கருணை யும் செழித்தோங்கும். நவயுகம் உதயமாகும். நவ உலகம் தோன்றும். நவஜீவனம் சித்திக்கும். இவ்வுலக வாழ்க்கை புத் துயிரும் புத்துணர்வும் புது மலர்ச்சியுமுற்று புத்தெழிலுடன் மிளிரும். அறஞ்செழித்து, தவம் ஓங்கி அருள்கொழிக்கும் நவ யுகம் ஜனனமாகும். w
மகாயோகி பூரீ அரவிந்தருடைய பூரணயோக இலட்சியம்.
இம்மண்ணுலகில் சித்திக்கும் செந்தழலெழும்.
ஆர்வத்தி இடைவிடாது மேல் நோக்கி எழட்டும். புத் துணர்வு கீழிறங்கி செயல்படட்டும். புத்தொளி எங்கும்
பாய்ந்து பரவட்டும். புதுயுக மனிதர்கள் தோன்றட்டும். நிரந்
ரம் ஆத்மானந்தத்தில் திளைக்கச்செய்யும் திவ்யபரிபூரண வாழ்க்கை சித்திக்கட்டும். இதுவே நமது இதயத்தின் ஆழ்ந்த அமைதியினின்றும் இறைவனை நோக்கி எழும் இடைவிடாத, பிரார்த்தனையாகவும் தியானமாகவும் இருக்கட்டும்.
குறிப்பு ; அதிமனிதன்
மேஞட்டு சிந்தனையாளர்களில் சிலர் அதிமனித கோட் பாட்டை விளக்கியுள்ளனர். அவர்களுள் உலகப் பேரறிஞர் களின் திருக்குழாத்தைச் சேர்ந்தவரும் ஜெர்மனி நாட்டு மாபெரும் சிந்தனையாளருமாகிய நீட்ஷே குறிப்பிடத் தக்க வர். அவருடைய சிந்தனையில் உருவான அதி மனிதன் தற் போதுள்ள மனுேநிலையின் உச்ச கட்டத்தில் உருவான வன். ஹிரண்ய கசுபுவைப் போன்று அசுரபலங் கண்டவன். பாவ" புண்ணியங்களைப் பாராதவன். அகந்தையின் முழுவடிவமா ஐத் திகழ்பவன்.

Page 24
440 ஆத்மஜோதி
நீட்ஷேயின் சிந்தனையின் ஸ்தூல வடிவமே சென்ற மகா யுத்தத்தின் போது உலகை நடு நடுங்கச் செய்த கொடூர சித்தமுடைய ஹிட்லர் ஆவார். ஆணுல் பூரீ அரவிந்தர் அரு ளும் அதிமானசமான நீட்ஷேயின் சிந்தனைக்குமுற்றுமாறன தற்போதுள்ள மனுே உணர்விற்கு மேலான உணர்வு நிலையின் இறக்கத்தால் உருவாகும் புத்தொளியும் புத்து ணர்ச்சியும், புது மலர்ச்சியுமுடைய புதிய மனிதனுவான். அகந்தைத் தனியுணர்வு சிறிதுமின்றி அன்பு அருள் அருந் தவம் கருணை முதலிய அருட்குணங்கள் யாவற்றையும் தன் னகத்தே கொண்டு மாவீரமும் பரசாந்தமும் மோனமும் பரம ஞானமும் உடையவனுய் உள்ளுணர்வின் மூலமும் இடையருது இறைவனுடன் தொடர்பு கொண்டு இவ்விஸ் வப் பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்தையும் இறைவனின் திருவடிவங்களாகக் காணும் ராஜரிஷி ஜனகரைப் போன்ற தெய்வீக புருஷனுவான்.
நோன்பு
விரதம் என்பது ஒரு நோன்பு, ஒருகுறிப்பிட்ட காலம் வரையில்புசிக்காதும் பருகாதும் இவ்வுலக இன்பங்களே அனு
பவிக்காதும் இருப்பதற்கே நோன்பு என்று பெயர்.
நோன்பு மூலம் பலவீனம் ஏற்படுகிறது என்ற எண்ணம் தவறு. அதற்கு பதிலாக அதிக பலமும் சக்தியும் பிறக்கின் றன. உடம்பிலுள்ள சேமிப்பு சக்திகள் மூன்று வாரம் வரை ஒரு மனிதனைப் போஷிக்கப்போது மானவை என்று ஆராய்ச் சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பெர்ணுர்ட் மேக்பேடன் என்ற அறிஞர் ஆரோக்கியத் துக்காக நோன்பு என்று எழுதியிருக்கிருர். “ஒரு நோயாளி யைப் பட்டினி போட்டால் உண்மையில் அவன் வியாதி யைதான் பட்டினி போடுகிறீர்கள்’ என்று இவர் சொன்னுர்,
“லங்கணம் பரம ஒளஷதம்’ என்ற பழமொழி நம் நாட் டில் உண்டு. ஒன்பது நூற்றண்டுகளுக்கு முன் வாழ்ந்த மருத்துவமேதையான அபூ அலிஸினு தம்மிடம்வரும் நோயா ளிகளை எல்லாம் இரு வாரம் நோன்பு அனுஷ்டிக்கும்படி செய்து வந்தாராம். பலகொடிய நோய்களுக்கு நோன்பே நிச் சயமான பரிகாரம் என்று அவர் கருதி வந்தார்.

ஆத்மஜோதி கருணை நிறைந்த தெய்வம்
FouTufi tion/T65ij **"***
441
முனிவர்கள் தேவர் ஏனைய மூர்த்திகள் முதலானேர்கள் மனிதர்கள் சகல வாழ்வின் மகிமையல்லால் வேறுண்டோ? கனிவுள தெய்வம் நீயே கதிர் சேயே, காகம் ஏறும் சனியனே உனைத் துதித்தேன்! தமியனேற் கருள்செய்வாயே!
உலகுக்கே கண்ணுகவும் கண்கண்ட தெய்வமாகவும் விளங் குபவன்.கதிரவன். அவனுடைய புகழை உலகில் இதுகாறும் வாழ்ந்திருந்த மக்கள் பலவகையில் விரித்துப் பேசியிருக்கின்ற னர். வேதம் அவனையே வாழ்த்துகிறது; சோதிடநூல் அவன. யே நடுநாயகமாகக் கொண்டு வழிபடுகிறது.
சூரியனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வமிபட்ட சம யம் ஒன்று இருந்தது; அதற்குச் செவாரம் என்று பெயர்.
விஞ்ஞானிகள் சூரிய மண்டலத்தைப் பற்றியும் சூரியனு .ைடய கிரணங்களைப்பற்றியும் செய்துள்ள ஆராய்ச்சிக்குக் கணக்கு வழக்கே இல்லை. “சூரியன் வாயுவினுல் தூண்டப்பெற்று மக் களைப் பாதுகாக்கிறன்! சூரிடின் ஊழிக்காலத்தில் உலகத்தை அழிக்கிறர்; மீண்டும் உண்டாக்குகிறர்.” ழீரீ ராமபிரான் பிறந்த, ரகுவம்சமே சூரியனை முதல்வணுக உடையது. சுக்கிரீவன ஞாயிற்றின் சேய் என்று ராமாயணம் சொல்லும். இருள் மய மான அண்டத்தைப்பிரமன்பிளந்தபோதுஒம் என்றஒருஒலிஉண் டாயிற்று. அந்த ஒலியிலிருந்து தேசோமயணுன சூரியன் தோன் றிஞன் என்று மார்க்கண்டேய புராணம் கூறும். சூரியனுக்குப் பல மனைவியர் இருப்பதாகப் புராணங்கள்கூறும். சூரியன்துவஷ் டாவின் பெண்ணுகிய ஸஞ்சிகை என்பவளை மணம்செய்து வாழ்க் கையில் அவர்களுக்கு மனு, யமன், யமுனை மூவரும் சேய்க ளாகப் பிறந்தனர். ஸஞ்சிகைக்கு சூரியன் வெப்பம் தாங்க முடியாமல் தனது பத்தினி தர்மத்தால் தன்னுடைய நிழலையே ஒரு பெண்ணுகச் செய்து அவளுக்கு சாயாதேவி என்ற பெயர் அமைத்து சூரியனிடம் விட்டுவிட்டுத் தந்தையிடம் சென்றுவிட் டாள். சூரியனும் அவளைச் ஸஞ்சிகை என்றே எண்ணி அளவ ளாவி வந்தான்.

Page 25
'42 ஆத்மஜோதி
சாயாதேவிக்கு சனிபகவானும் பத்திரை என்னும் பெண் ணும் பிறந்தார்கள். சனிபகவான் காசிக்குச்சென்று தன் டெய ரினுல் ஒரு லிங்கத்தை நிறுவி, பூஜை செய்து வழிபட்டார். அதன் பயணுகக் கிரகபதவியை அடைந்து வாழலானுர். சனியி னுடைய பீடனத்தால் துன்புற்றவர்கள் கதை பல. நளன் சனி யின் தொடர்பால் மிகவும் துன்புற்று அப்பால் அவன் தன்னை விட்டு நீங்க இன்பம் அடைந்தான். சனிபகவானுக்கு ஒரு கால் சற்றே சிறுத்திருத்தலின் மெல்ல நடப்பான். அதனுல் சனைச் சரன் என்ற பெயர் வந்தது. யமன் அவன் காலத் தன் தண் டத்தால் அடித்தமையால் அவ்வாறு ஆயிற்று, சனிபகவானுக்கு குளிகன் என்ற பிள்ளை ஒருவன் உண்டு. -
விஷ்ணு தர்மோத்தரம் என்னும் நூலில் சனிக்கு அதிதே வதை யமன், பிரத்தியேக தேவதை பிரஜாபதி, சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உண்டு. ஒன்று வேதமந்திரம். அதற்கு ரிஷிஇளிமிளி, அந்த மந்திரம் "உஷ்ணிக்’ என்னும் சந்தத்தில் அமைந்தது. மற்றெரு மந்திரத்துக்கு உரியவர் மித்ரரிஷி; அது காயத்ரீ மந்திரத்தை உடையது. வடமொழியில் உள்ள தியான சுலோகங்களில், பல இடத்தில் இவனுக்குக் கழுகையே வாகன மாகக் குறிக்கின்றன. பின்பகுதியில் இந்தியா முழுவதும் சனி பகவானுக்கு காக்கையே வாகனமாக இருக்கிறது. கலியுகம் முடிந்தபின் காமதேனு வாகனமாகும் என்று யூனிலழனி மயான
‘யோகீஸ்வரர் தெரிவிக்கிறர். சனி தாமத குணம் உடையவன்.
கருணை மிக்கவன். பக்தர்களுக்கு கருணை காட்டி வாழ்வு அளிப் பவன். சூரியன் முதலான ஒன்பது கிரகங்களில் இயற்கையாக வும் அவரவர் ஜாதக அமைப்பின்படியும் துன்பங்களை அளிப்ப தற்காக ஏற்பட்ட கிரகம் சனிபகவான். இவர் ஆயுள்காரர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. இவர் ஆரோக்கியத்திற்கும்
அதிபதி.
ஜாதக ரீதியாகவும் கோசார ரீதியாகவும் தசாபுத்திகள் ரீதி யாகவும் சனிபகவானுக்கு பலம்குறைவாக இருந்தால் உயிருக்கு ஆபத்தும், நோய்களின் உபாதையும், மானநஷ்டம், தனநஷ் டம் போன்ற கஷ்டங்களும் ஏற்படுமென்று சாஸ்திரம் எச்சரிக் கின்றது.
ஏழரை நாட்டுச் சனியும் அஷ்டமத்தில் சனியும் இருக்கப் பெற்றவர்கள் படும்பாடுகள் எண்ணிற்கடங்காதவை. அத்தகைய

ஆத்மஜோதி 443
காலங்களில் செய்வதறியாது தவிக்கின்ற மக்களுக்கு தெய்வத் தின் மீதும் கிரகங்களின் மீதும் சாஸ்திரங்களின் மீதும் நம்பிக் கை ஏற்படும். y
சனியைப் போல் கொடுப்பவமிைல்லே, கெடுப்பவனுமில்லை; ஆகையால் சனிபகவானை நம்பிக்கையுடன் வழிபடும் அன்பர் களுக்குத் துன்பம் நீங்குவது மட்டுமின்றி, அவன் அருளால் சகல சுகங்களேயும் பெறுவது திண்ாைம்.
சனிபகவானுக்கு பிரியமான உலோகம் இரும்பு; ரத்தினம் நீலம், தான்யம் எள், மலர் கருங்குவளை, சுவை கசப்பு, திசை மேற்கு, சனிபகவானுக்கு ஜடாதரன் என்ற பெயர் உண்டு. சிவபிரான் போல சடையுடையவன், கருனை மிக்கவன். பக்தர் களுக்கு கருணை காட்டி வாழ்வு அளிப்பவன். பூணிலழரீ மயான யோகியாருக்கு மிகவும் பிடித்தவர். நல்ல சகோதரர். ஜீவ மந்தி ரத்தை உபதேசம் செய்தவர். இந்த மந்திரத்தை உபதேசம் பெற் றவர்கள் நீண்ட ஆ புளுடன் வாழலாம். சனிபகவானைப் போல கருனே மிகுந்தவர் யாரும் இல்லை. உயர்ந்த சிவபக்தர். சித்தர்க ளுக்கும் யோகிகளுக்கும் மிக உயர்ந்த கதிரவன். காலச் சக்கரத் தைப் பிளப்பதில் கதிரவனைப் போன்றவர். எள்ளுக்கலந்த உண -விலும் நல்லெண்ணெய் விளக்கிலும் மிக்க விருப்பம் உடையவர். மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் அதிபதியான சனி பகவான் நவக்கிரஹ மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே தனுசின் உரு வங்கொண்டு மண்டலத்தில் உறைபவன்.
அவரவர் பிறந்த ராசிக்கு 12, 8, 1 ஸ்தானங்களில் சனி, சூரி யன், செவ்வாய், குரு என்னும் நான்கு கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் போது சிலருக்கு உயிருக்கு ஆபத்து, இடம் விட்டு இடம் மாற்றம், உத்தியோகத்திலிருந்து நீக்கப்படுதல், திருட்டுபோதல், செய்தொழில் நஷ்டம் ஏற்படும்.
சனிபகவான் அவரவர் ராசிக்கு 12, 8, 1ல் சஞ்சாரம் செய் யும் காலத்தில் வீட்டிலிருந்து சனிபகவான் படத்தை புத்தகத்தில் சொல்லியபடி கிழமை வாரியாக வழிபாடு செய்ய மேற்கண்ட சிர மங்கள் நீங்கும். உங்கள் வாழ்வில் தைரியம் ஏற்படும். சனி பக வானின் கருணை கிடைக்கும். சனிபகவான் ஒவ்வொரு ராசியி லும் இரண்டரை வருட்ங்கள் சஞ்சாரம் செய்வார். ஜன்ம ராசியில் 12, 2 ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைநாட்டுச் சனியாகும். இந்த காலத்தை மிகவும் சிரமம் மிகுந்த காலம்

Page 26
444 ஆத்மஜோதி
என்று ஜோதிட சாஸ்திரம் எச்சரிக்கை செய்கிறது. கந்தபுராணத் தில் சனிபகவான் வழிபடும் முறை தெரிவிக்கிறது.
சனிபகவான் படத்தை வீட்டில் மாட்டி வழிபடும் அன்பர்க ளுக்கு சனிபகவான் கருணை உண்டு.வீடுகளில் பரிபூரண கடாட்சம் நிலவும். நவக்கிரகங்கள் நல்லதே செய்யும். இந்த உண்மையை வழிபட்ட பின் உணர்வீர்கள். கலியுகத்தில் உள்ளத் தூய்மையு டன் வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். யூனிஆதி சங் கரபகவத்பாதாள் மனம் உருகி சனிபகவானைப் பிரார்த்தனை செய்து இருக்கிறர்கள். W
*சனிபகவான் படத்தில் வன்னிஇலே மாலை அணிவித்து யார்
வணங்குகிறர்களோ அவர்கள் எல்லா காலங்களிலும் தோஷங்
கள் நீங்கிச் சுபபலனை அனுபவிப்பார்கள் என்று தசரத சக்கர வர்த்திக்கு சனிபகவான் கொடுத்த வாக்கு?
சனிக்கிரகம் மகான்கள், பாவிகள் எல்லோரையும் பிடிப் பார். மகான்களைப் பிடிக்கும்போது ‘நான் தங்களைப் பிடிக்கப் போகிறேன். அனுமதி கொடுக்கவேண்டும்? என்று கேட்பார். மகான்கள் இசைந்தபின் அவர்களைப் பிடிப்பார். அந்த வேளை யில் மகான்கள் சனிபகவானை வழிபட்டு அவர் கருணையால் நலம் அடைவார்கள்
இப்படி கருணை நிறைந்த தெய்வம் சனிபகவான். z மக்களைப் பிடிக்கும் போது கனவு மூலம் எச்சரிக்கை செய்வார். கலியுகத்தில் சனிபகவான வழிபட்டு அனைவரும் நலம் அடை வோம். உலகில் நன்மைகள் உண்டாகட்டும்.
தமிழில் அர்ச்சனை மாலை தமிழில் மந்திரங்கள் கூறி இறைவனை அர்ச்சனை செய்ய வழிகாட்டும் நூல் அர்ச்சனமாலை.
பிரதி ஒன்றின் விலே ரூபா: 5/- நீ ஆத்மஜோதி அச்சகம் - நாவலப்பிட்டி.

ஆயுள் சந்தா ஆதரவாளர்:
உயர்திரு. பழ. பழனியப்பன் அவர்கள் பூணி தனலக்சுமி அரிசி ஆலை, வேப்பத்துார் - 612104 தஞ்சாவூர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்துனேசியா
சந்தாதாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
●●哆**必夺●●●●岭令令夺必●●●●*令**令●●●●●*4
அன்புக்குரிய சந்தாதாரர்களே,
ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கும் ஆத்மஜோதி இங்கி ருந்து அனுப்பப்படுமுன் இருமுறை விலாசம் சரிபிழை பார்க்கப்பட்டுத் தபாலில் சேர்க்கிருேம். அப்படி இருந்தும் ஒரு சிலர் தமக்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை என்றும் முறையீடு செய்கின்றனர். அத்துடன் கடந்த தை மாதம் தொடக்கம் முத்திரைச் செலவையும் அரசாங்கத்தார் 14 மடங்காக அதிகரித்துள்ளனர். இவை இரண்டையும் ஈடுசெய்யுமுகமாக ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஏஜென்சியை நியமித்துள்ளோம். இனிமேல் அவர்களிட மிருந்தே உங்களுக்கு ஆத்மஜோதி கிடைக்கத்தக்கதான ஒழுங்கைச் செய்துள்ளோம். உங்கள் சந்தாவையும் அவர் களிடமே செலுத்தி அவர்களிடமிருந்தே ரசீதையும் பெற் றுக்கொள்க.
இந்திய விலாசம்:
S. RAJASEKARAN
“Visalakshi Illam”, 274, Royapettah High Road, Royapettah-Madras-600 014, Tamilmadu.
Telephone: 847107 uo(iso6)шт salsоп знio:
S. SUBRAMANIYAM Sri Eswari Flour Mill, 99-IL, Jalan Tandok, Kualalumpur, Malaysia. இந்துனேசியா விலாசம்:
SRI MARIYAMMAN KOVI Jalan Teuku Umar No: 18, Medan-Sumatra, Indonesia.
சிங்கப்பூர் விலாசம்:
Mrs. M. MAHESWARY THEVI NO. 03 - 3597 Geylang Bahru, Singapore 1233, Tel, 8955229

Page 27
Registered at the G. P. O. as a Ne
திருவேற்காடு
யூனிதேவி கருமாரித தெய்வத் தப
திருவேற்காடு கருமாரி அம்ம (700 செய்யுட்கள் கொன் திருவேற்காடு கருமாரி அம்ம திருவேற்காடு பூரீ கிருஷ்ணம திருவேற்காடு கருமாரி சதக!
ஆதிசங்கரர் பிள்ளைத் தமிழ்
காமாட்சி பிள்ளைத் தமிழ்
அருணகிரிநாதர் பிள்ளைத் தப பாம்பன் சுவாமிகள் பிள்ளைத் பூரீ ராமாநுஜர் பிள்ளைத் தமி
அபிராமி பிள்ளைத் தமிழ்
(வெளிநாடுகளுக்கு தபால் செ
திருவேற்காடு சுவாமி புகழ் பரப் இந்து தர்மங்களைப் பரப்பும் அரு *ழனிதேவிகருமாரி ஆசிரியர்: அருட்கவியர மாதம் இருமுறை திருமுருகன் புகழும், செந்தமி திங்கள் ஏடு அருணகிரி, பாம்பனடிகள் அ(
'குமரகுருமணி’.
152, தம்புச் செட்டித்தெரு, சென்னை 600 001 - தமிழ்ந
ஆசிரியர் தா. முத்ை அச்சுப்பதிவு : யூனி ஆத்மே அச்சிட்ட திகதி: 17 - 8 - 8

wspaper M. L. 359/00.
அருட்கவியரசு ாசர் அருளிச் செய்த மிழ் நூல்கள்
}ன் புராணம் ரூபா. 100.00 T -s)
ன் பிள்ளைத் தமிழ் 3.00 ாரி குறவஞ்சி 3,00 b 3.00
3,00
3.00
மிழ் 3 00 தமிழ் 3.00 ழ் 3.00
3. 00 Fலவு தணி)
பும் தெய்வ இதழ். ள்நெறித் தமிழ் ஏடு
அம்மன் விஜயம்’
சு சூரீதேவி கருமாரிதாசர்
ஆண்டுச் சந்தா ரூபா. 24/-
ழ்க் கலையும் பரப்பும் தெய்வீகத்
ருள் நூலைப் பரப்பும் ஏடு
மாத இதழ் " ஆண்டுச் சந்தா - ரூபா 18/-
ாடு. தொலைபேசி 3 1595
தயா ஜாதி அச்சகம் - நாவலங்பிட்டி 2