கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1982.12.16

Page 1

Hill H FinFETITEITETE

Page 2
ஆத்மஜோதி
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா விட்டலும் இறைவன் ஆலயமே
-சுத்தானந்தர் ஆசிரியர்: நா. முத்தையா .
'ஜோதி: 35 - மார்கழி ward (16-12-82) – a Lit: - 2 .
பொருளடக்கம்
புண்ணியத்திற்புண்ணியம் 449 سے சிலையும் சிந்தனையும் - SO சொன்னபடி செய்தவர் சொன்னபடியே செய்தார் 5 مسـ சிவதீக்கை 55 میس பாவையும்'பக்தியும் a 59 சுவாமி ராமதாஸ் அருளுரை 64 ح சகச மார்க்கத் தியானமுறை விள்க்கம் - 66 suấ9ìợnrgosorửo <-sex voì 68 حسب யோகப் பயிற்சியில்பெண்களின் பங்கு 71 سے ( மனிதரின் உணவு மாமிசமா மரக்கறியா? 73 سست தம்பலகாமம் மேற்கு மலைத்தொடரிலுள்ள --- མ་ཡ་གསལ་ལ། 77 அருள் பொழியட்டும் 85 متبسم யோகி சிவலிங்க அடிகளார் யோகப்பண்ணே நடத்துகிறர் 89 -ܚܗ சற்குருதரிசனம் 91 سه தேவி கருமாரி புராண விரிவுரை - 9:5
LLLLSLLLMLLMLLLMLL L LLLSLLSLLL MLMLMLLLLSLLLLL LSLSLLTLSLLMLLLLLSLS L MLLLLL ML LML
ஆத்மஜோதி சந்தா
Ο
Ο 0.
இலங்கை வருடச் சந்தா- 25 ரூபா
., ஆயுள் சந்தா- 500 ரூபா இந்தியா வருடச் சந்தா- 25 ரூபா (இந்திய ரூபாய்)
, ஆயுள் சந்தா- 500 ரூபா ( , சிங்கப்பூர்-மலேசியா-இந்துனேசியா
வருடச் சந்தா- 10 வெள்ளி
ஆயுள் சந்தா- 200 வெள்ளி ܀
இச்சந்தா 1982 கார்த்திகை மாதம் தொடக்கம்
அமுல் நடத்தப்படும்.
Κ) O
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி - பூஜீ லங்கா.
LSLLLLLSLLLLLLLLLMLLMLLLLLL LLLLLLLLSLLLLLLMLLLLSLLLLLLLL LL LLLLLLLLST
 
 

புண்ணியத்திற் புணணயம
eJYeSAMeYe0eYeMAe0eMAM AeeAeMeM0eM SASzeM0YAM0eSASAe SAM0eMAJLL
நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை
("கத்தியின்றி ரத்தமின்றி என்றமெட்டு).
பூமிதானம் செய்வதே புண்ணியத்திற் புண்ணியம் புனிதமான முறையில் நாட்டின் வறுமைபோகப் பண்ணிடும்; சாமிசாட்சியாக எங்கும் சண்டைகள் குறைந்திடும்; சரிநிகர் சமானவாழ்வு சத்தியம் நிறைந்திடும். -பூமி
ஏழையென்றும் செல்வனென்றும் ஏற்றத்தாழ்வு போய்விடும்; எங்கும் யாரும் பகைமையின்றி பங்குகொள்ல தாய்விடும்;
கோழையின் பொருமை தூண்டும் குற்றம் யாவும் நீங்கிடும்; கொடுமையான பஞ்சம் விட்டு குணநலன்கள் ஓங்கிடும். -பூமி
உடலுழைத்து உணவுமுற்றும் உண்டுபண்ணும் உழவர்கள் உரிமை சொல்ல நிலமில்லாமல் g2 6iT6Yttib வெந்து அழுவதா? உடல்சுகித்து உலகினுக்கு உதவியற்ற ஒருசிலர் ஊரிலுள்ள பூமிமுற்றும் உரிமை கொண்டு திரிவதா? -பூமி
உலகிலுள்ள நிலமனத்தும் உலகநாதன் உடைமையே; ஊரிலுள்ள விலைநிலங்கள் ஊர்ப்பொதுவாம் கடமையே; கலகமின்றி சட்டதிட்டக் கட்டுப்பாடும் இன்றியே;
கலலேயற்ற சமரசத்தின் காட்சிகாண நன்றிதே. -பூமி
காந்திதர்ம நெறியைக் காக்க கடவுளிட்ட கட்டளை கருணையோடு பூமிதானம் செய்யக் கோரும் திட்டமே; ஆய்ந்து பார்க்கின் உலகிலெங்கும் அமைதியற்ற காரணம் அவரவர்க்கு நிலமிலாத ஆத்திரத்தின் பேரில்தான். -பூமி
தானதர்ம ஆசையேநம் தமிழகத்தின் கல்வியாம் தந்துவக்கும் இன்பமேநம் தலைசிறந்த செல்வமாம்; தீனருக்குப் பூமிகொஞ்சம் தானமாகத் தருவதால்; தோமெங்கும் அமைதிபெற்றுத் திருவிலாசம் பெருகுமே. -பூமி,

Page 3
ஆதிமஜோதி
சிஉலயும்சந்தஐனயும்
னுேபாஜி -
线
மாவீரன் அலெக்சாந்தரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்தார். அவரை அவன் நன்கு உபசரித்தான். தனது மாளிகை யிலேயே தங்க வைத்தான். பிறகு அவ ரைத் தனது அரண்மனைத் தோட்டத் திற்கு அழைத்துப் போனுன். --
s
இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந் தார்கள். தோட்டத்தில் அநேக பெரிய வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. விருந்தினர் ஒவ்வொரு சிலை யிடமும் நிற்பார். அலெக்சாந்தர் அவ ருக்கு அதன் வரலாற்றைச் சொல்லு வான். இவ்வாறு ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே தோட்டத்தின் கடைசிக்கு வந்துவிட்டார்கள்.
வந்த விருந்தினர் அலெக்சாந்தரைப் பார்த்தார். இத்தன்ை வீரர்களின் சிலைகள் இந்தத் தோட்டத்தில் இருக்கும் போது உங்களுடைய சிலை மட்டும் இங்கு ஏன் இல்ல' என்று கேட்டார்.
"இங்கு எனது சிலையைப் பார்த்து, இது யாருடைய சிலை என்று கேட்பதை விட, மாவீரன் அலெக்சாந்தருடைய சிலை ஏன் இங்கு இல்லை என்று கேட்பதையே நான் விரும்புகிறேன்' என்று பதில் சொன்னுன் கிரேக்க மன்னன்.
2

ஆத்மஜோதி 51
(ର ன்னப டி செய்தவர்
ன்னபடியே செய்தார்
மகாத்மா ஆரம்பித்த சபர்மதி ஆச்சிரமத்தின் ஆரம்பத் திலேயே வினுேபா வந்துசேர்ந்தார். இவர் சமஸ்கிருதத்தில் சிறந்த மேதையாக விளங்கினர். இம்மொழியை மேலும் பயின்று சிறந்த முன்னேற்றமடைவதற்காக மகாத்மாவிடம் ஒரு வருட ஓய்வு கேட்டுச் சென் ருர், எந்த நாளில், எந்த நேரத்தில் சென்ருரோ, ஒரு வருடத்திற்குப் பின் அதே நாளில், அதே நேரத்தில் எவருக்கும் முன்னறிவிப்பின்றி ஆச்சிரமத்தில் நுழைந்தார்.
கடைசிக் காலத்தில் உடல் உயிரை விட்டுப் பிரிந்து செல்லா மல் உயிர் உடலை உதறிவிட்டுச் சென்றுவிடவேண்டுமென்று உறுதி கொண்டார். உண்ணுவிரதம் இருந்து நோற்றர். பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இதனைக் கேள்வியுற்றதும் ஓடோடியும் சென்று உண்ணுவிரதத்தைக் கைவிடுமாறு பல விதங்களிலும் வேண்டினுர். அவரோ தமது உறுதியினின்றும் தளர்ந்தார் அல்லர். கிழிந்த சட்டையை நாம் கழற்றி எறிவது போல வினேபாஜியின் ஆத்மா உடலை உதறிச் சென்றுவிட்
• لوگ -L.
மகாத்மா காந்தியின் பிரிவு உலகத்தையே ஒரு அசைப்பு
அசைத்துவிட்டது. எத்தனையோ மன்னர்களை இவர் யாரேன்று அறியாத மக்கள் வாழ்ந்துள்ளார்கள். ஆணுல் மகாத்மாவை அறியாத தேசத்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மகாத்மா உலகம் முழுவதும் பிரக்யாதி பெற்றிருந்தார். இத் தகைய மகாத்மாவின் பிரிவுக்குப் பின் பாரததர்மத்தைக் காப் பாற்றி வழிகாட்டக் கூடியவர் யாரி என்ற கேள்வி எல்லார் உள்ளத்திலும் எழுந்தது. அதற்கு எல்லோரும் ஏகோபித்த மனதோடு கூறிய விடை வினுேபாஜி என்பதுதான். இதஞ்றல் மகாத்மாவின் பிரிவுத் துன்பத்தையே மறந்திருந்தார்கள்.
இன்று வினுேபாஜியின் மறைவுக்குப் பின் யார்? என்ற கேள்விக்கு விடைகாண முடியாது பாரத நாடே தத்தளிக்கின் றது. வினுேபாஜி அவர்கள் உயிருடன் வாழும் பொழுதே

Page 4
52. ஆத்மஜோதி
பலர் காந்தியையும் காந்தீயத்தையும் மறந்துவிட்டார்கள். வாழும் வகை அறியாது தத்தளித்த மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்தவர்கள் பூஜ்யவினுேபாஜி அவர்கள். கலங் கரை விளக்கம் அணைந்துவிட்டது. இப்போ வழிகாட்டுவார் யாருமின்றி பாரதநாடு தத்தளிக்கின்றது.
ஹைதரா பாத்தில் சிவராம் பள்ளியில் நடைபெற்ற மூன்றுவது சர்வோதய சம்மேளனத்திற்கு வருமாறு வினுே பாவை அழைத்தனர். இவரும் ஒப்புக்கொண்டார். 1951 மார்ச்சு 8-ஆம் தேதி ஆச்சிரமத்தினின்றும் கால் நடையா கப் புறப்பட்டார். 300 மைலுக்கும் அதிகமாகவே நடந்து, ஏப்ரல் 7-ஆம் தேதி சிவராம் பள்ளி வந்து சேர்ந்தார். அங் கிருந்து திரும்பும்போது தெலுங்காணுப் பிரதேசம் வழியே செல்ல விரும்பினுர், தெலுங்காணுவில் சுற்றுப் பிரயாணம் செய்தார். போலிஸ் பாதுகாப்பு இல்லை; ஆயுதம் இல்லை, கால் நடையாகக் கிராமம் கிராமமாகச் செல்லலாஞர். ஆத்ம பலமே அவருக்குத் துணை. நால் கொண்டா ஜில்லாவில் போச்சம் பள்ளி கிராமத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஆண்டவன் அருளால் ‘பூமிதான யக்ஞம் உதயமாயிற்று, ‘ராம நாமத்தை ஜபித்துக்கொண்டே பூமிதான யக்ஞத்தை கடந்த பல்லாண் டுகளாக நடத்திவந்தார். பூமிதான யக்ஞம் ஏற்படாதிருந் தால் பாரத நாட்டின் நிலப் பிரச்சனை தீர்ந்திருக்காது. பாரத நாடு கொம்மியூனிஸ் நாடுகளில் ஒன்ருக மாறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பூதான யக்கத்தோடு சிரமதானம், பொருள் தானம், ஞானதானம் என்பனவும் வந்து ஒட்டிக்கொண்டன. இப்புது மையான இயக்கத்தின் வெற்றியைக் கண்டு, இதனுல் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாறுதலைக்கண்டு இன்று உலகமே வியக்கிறது. அயல் நாட்டுப்பத்திரிகைகள் எல்லாம் வினுே பாஜிக்குப் புகழ் மாலைகள் சூட்டின. பல கோடி ஏக்கர் நிலம் மற்ற ஏழை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்தமை இந்தியா விலேயே பெரிய அஹிம்சைப் புரட்சி என்று புகழப்பட்டது. இந்த அஹிம்சைப் புரட்சியின் தாக்கத்தை உலகம் முழுவதி லுமே நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
ஜ்ே வினுேபாஜியின் சரித்திரத்தைப் பலர் எழுத முயன்ற போது வினுேபாஜி அதனைத்தடுத்து விட்டார்கள். அவரு டைய சரித்திரத்தில் பெரும் பகுதி அகம் பற்றியது, புற விஷயங்கள் பற்றியது அல்ல. வெளியில் நடந்த சம்பவங்கள்

ஆத்மஜோதி 53
வெகு சிலவே. தன் சரித்திரத்தை எழுதுவதென்ருல் தானே தான் எழுத வேண்டும் என்று வினுேபாஜி கூறுவது முற்றி லும் உண்மையே.
அவருடைய மனுேநிலைக்கு எழுதுபவர்களுடைய மனுே நிலை உயர்ந்து விட வில்லை. வினுேபாஜி ஆன்மீகத்துறையில் தினமும் கணப்பொழுது தோறும் வளர்ந்து கொண்டிருந் தவர்கள். இத்துறையில் அவரோடு மற்றவர்களை ஒப்பிடும் போது மற்றவர்கள் எல்லோரும் இருந்த இடத்திலேயே இருக் கிருர்கள் என்றுதான் கூறவேண்டும்.
சுவாமி விவேகானந்தர் ஒரு இடத்திலே “மனிதனுக்கு சங்கராச்சாரியாருடைய அறிவும், புத்தபகவானுடைய உள் ளமும் வேண்டும்? என்று கூறுகிறர். இதற்கு இலக்கிய புரு ஷணுக விளங்கியவர்தான் வினுேபாஜி அவர்கள். நுணுக்க மான தர்க்கசக்தியோடு உயர்ந்த ரசிகத்தன்மையையும், கணித ஞானத்தோடுஉயர்ந்த கவிதாசத்தியையும் வினுேபாஜி ஒரு வரிடமே தான் காணலாம். பகவத்கீதையில் “ஞானியே பரம பக்தன்’ என்றும், “பக்தியின் மூலமாக அவன் என்னை உணருகிருன்? என்றும் கூறியிருப்பது வினுேபாஜியின் விஷ யத்தில் மிகப்பொருத்தமாகவே இருக்கின்றன.
ஞான தேவர், ராமதேவர், ஏகநாதர், துகாராம் போன்ற மகான்களைத் தந்த மகாராஷ்டிரத்தில் தான் விநாயக் நரஹரி பாபே தோன்றினுர். இவரையே காந்திஜி பின்னர் வினுேபா என அழைத்தார். அப்பெயரே நிலைத்து விட்டது. பம்பாய் மாகாணத்தில் கொலபா ஜில்லாவில் கடோடா என்னும் இடத் தில் 1894-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி இவர் பிறந்தார். இவரது தந்தை நரஹரிபாவேக்கும், தாய் ருக்மணி தேவிக்கும் நான்கு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் உண்டு. அவர்களில் வினுேபாதான் மூத்தவர்.
வினுேபா சுபாவத்திலேயே படிப்பில் ஆர்வம் உள்ளவர். ஆணுல் கூடிய மட்டும் அதிகமான நேரத்தை நூல் நூற்பதி லேயே செலவு செய்தார். கைநூற்றுக்கொண்டிருக்கும்போதே மனம் முழுதாக இறை தியானத்தில் லயித்திருக்கும். மனம் லயிக்கும்போது கூடுதலாக நூற்கவும் முடிந்தது. பரந்த அளவில் நூல் நூற்கும் தொழிலை எல்லாத்திட்டங்களுக்கும் மையமாக அமைத்தால்தான் கிராமங்களின் வறுமை தொலை பும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டவர். நூல் நூற்பதை

Page 5
54 ஆத்மஜோதி
மையமாகக் கொண்டே ஒன்றிணைந்த பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினுர். இவர் இயல்பாகவே ஒரு ஆசிரியர் ஆனதி ணுல் கைத்தொழில் மூலம் அடிப்படைக் கல்வித் திட்டத்தை விஸ்தரித்து அமைப்பதற்கு வார்தா கல்வித் திட்டத்திற்குப் பெரிதும் உதவிஞர்.
நூல் நூற்பதை அடிப்படைக் கைத்தொழிலாக மதித்து, அவர் ஒரு புத்தகம் எழுதினர். அது முழுக்க முழுக்க அவரு டைய சுய சிந்தனையிலிருந்து உருவான கொள்கை, நூல் நூற் பதைப் பரிகாசம் செய்பவர்களுக்குக்கூட, அது ஒரு நல்ல கைத்தொழில், அடிப்படைக் கல்வித் திட்டத்தில் அதை நன் ருய்ப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். தக்ளியில் நூற்பதில் அவர் புரட்சியையே உண்டாக்கி இருக்கிருர். தக்ளியில் மறைந்திருக்கும் சக்திகளை எல்லாம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறர். பாரத நாட்டில் கைநூல் நூற்பதில் அவரைப்போல் பூரணத்துவம் எய்தியவர் யாருமே இல்லை. -
அவருடைய உள்ளத்தில் தீண்டாமையின் வாசனை துளி யும் இல்லை. வகுப்பு ஒற்றுமையில் அவருக்கிருந்த நம்பிக்கை மிக அபாரமானது. இஸ்லாம் மதத்தின் தத்துவங்களை அறிவ தற்காக அவர் ஒரு வருஷ காலம் குரான்ஷரீயை மூல அரபி யில் பயின்றர். இதற்காக அவர் அரபி பாஷையும் கற்றுக் கொண்டார். இந்திய மாநிலங்களிலுள்ள பதினுன்கு பாஷைக ளிலும் பரிச்சயம் உள்ளவர் ஆனர். தமக்குப் பக்கத்தில் வாழும் முஸ்லிம் சகோதரர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதற்கு இது அவசியம் என்று அவர் கருதி ஞர். அவரிடம் சிஷ்யர்களும் தொண்டர்களும் அடங்கிய ஒரு கூட்டம் இருந்தது. அவர் ஒரு சமிக்ஞை செய்தால் போதும். எந்தவிதமான தியாகத்திற்கும் அவர்கள் தயார். ஓர் இளைஞன் குஷ்டரோகிகளின் பணிக்குத் தன் வாழ்க்கையையே அர்ப் பணித்திருந்தான். அவனை இந்தத் தொண்டுக்குத் தயார் செய்துவிட்ட பெருமை வினுேபாவையே சாரும்.
அவர் ஒரு முடிவு செய்தார் என்ருல், ஒரு கொள்கையை ஏற்ருர் என்ருல் அதை அந்தக் கணத்திலேயே நடத்தத் தொடங்கிவிடுவார். இது அவரிடமுள்ள முதல் தரமான, குணம். அவரிடமுள்ள இன்னுெரு குணம் இடையருது மேன்மேலும் வளர்ச்சியுற்றுக்கொண்டிருத்தல். மக்களிடையே செல்வாக்குள்ள பல சீடர்கள் வினுேபாவுக்கு இருக்கிருர்கள்.

ஆத்மஜோதி 55
AZ.Z2íc
(திருமுறைவழி) ப. இராமநாத பிள்ளே (சித்தாந்த பண்டிதர்-கழகப் புலவர்)
திருநீறு பெறுதல்
*திருநாவுக் கரசர் செய்ய பூவடி வணக்கங் கண்டு
புனித நீறு அளித்தார் அன்றே.? '-12 அப்பூதி 36 என அன்புடன் ஒதித் திருநீற்று மடலைக் கைகளால் எடுக்க.
திருநீறு பூசுதல் 榜
‘சிவ சிவ’ என ஒதி நெற்றிப் புருவத்து நடுவில் 'ஓம் என்று திருநீற்றல் வரைக. கொப்பூழிலிருந்து கழுத்து வரை யிலும், இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து தோள் வரையி லூம் திருநீற்றல் சிறிய நேர்கோடு இழுக்க, இதுவே சாம்பற் புச்சு. சாம்பற்பூச்சு என்பது உத்தூளனம்.
சிவகுரு வணக்கம்
“குருவே சிவமெனக் கூறினன்? போற்றி.
கடவுள் வணக்கம்
“கல் ஆல் நிழல் மலைவு
இல்லார் அருளிய பொல்லார் இனே மலர் நல்லார் புனைவரே.? -சிவஞான-மங்க
திருவருட் புனல்
− *நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் காண்க?? -திருவண்-25 என ஒதிக்கொண்டு கைகூப்பி அக்குவளைப் புனலினை இரு கையாலும் தொடுக. -
திருவருள் நீறு -
‘'நீற்ருெடு தோற்ற வல்லோன் போற்றி?-8திருவண்-108
என ஒதிக்கொண்டு கைகூப்பி வலக்கையால் திருவெண்
ணிற்றை எடுத்து இடது உள்ளங்கையில் வைக்க,

Page 6
56 ஆத்மஜோதி
திருவருள் நீறு குழைத்தல் ረ
*நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி? -8-போற்-138
என ஒதிக்கொண்டு வலக்கையால் தண்ணிரை எடுத்துத் திரு
வெண்ணிற்றில் இட்டுக் குழைக்க. −
திரு அருள் நீறு அணிதல்
குழைத்த திருநீற்றை வலக்கை நடு மூன்று விரல்களால்
'திருச்சிற்றம்பலம்" என்று ஒதிக்கொண்டு உச்சியில் ஒரு அங் குல நீளம் வைக்க, ‘மந்திரமாவது நீறு" என ஒதிக்கொண்டு
நெற்றியில் இரு கடைப்புருவம் வரையும் இடப்புறமிருந்து
இடுக. அப்படியே ஒதிக்கொண்டு மார்பில் ஆறு அங்குலமும், கொப்பூழ் இரு முழந்தாள்களில் ஒவ்வோர் அங்குலமும் இடுக. அப்படியே இடக்கையிலும் இடுக. இரண்டு காதுகளிலும் இடுக. இவ்விடங்களில் இடும்போதெல்லாம் ‘மந்திரமாவது நீறு" என ஒதிக்கொள்க. பின் ‘திருச்சிற்றம்பலம்" என ஒதிக் கொண்டு ஒவ்வோர் அங்குலம் கழுத்தடியிலும், முதுகுத் தண் டின் அடியிலும் இடுக. உச்சி, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள் இரண்டு, இரு கைகளிலுமுள்ள தோள், முழங்கை, மணிக்கட்டுகள் ஆறு, காது இரண்டு, கழுத்து, முதுகுத்தண் டின் அடி ஆகத் திரு அருள் நீறு அணியவேண்டிய இடங்கள் பதினறு. இப்பதினறும் இறைவனின் புறத்திருத் தொண் டாம் பதினறினையும் முறைதவருது நிறை அன்புடன் இயற் றற்கே இவ்வுடல் என்னும் எழிற்குறிப்பாகும். அவை வரு மாறு:-
ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், தவம், தானம், வந்தித்தல், வணங்கல், வாய்மை, துறவு, அடக்கம், அறிவு, அருச்சித்தல் என்பன.
(சிவஞான சித்தியார். 2-3-23)
திரு அருட் புனல் மும் முறை பருகல்
திருவெண்ணிற்றுக்கையை கழுவிக் குவளை நீரிலூற்றி உடல் மெய் இருபத்து நான்கும் உரம் பெற அருள்க. உணர்வு மெய் ஏழும் ஒண்மையுற அருள்க. உணர்த்து மெய் ஐந்தும் ஊக்குவிக்க அருள்க.என ஒதிக்கொண்டு ஒவ்வொருமுறையும் வலது உள்ளங்கையில் சுண்டு விரல் ஒழிந்த நான்கு விரல் களையும் ஒன்றய இனத்துச் சாய்த்துக் குழிந்த உள்ளங்

ஆத்மஜோதி 57
கையில் உழுந்து அழுத்தும் அளவு புனல் விட்டு உட்பரு குதல் வேண்டும். இது முப்பத்தாறு மெய்களின் உண்மை யுணர்தலாகிய தூய்மை ஆகும்.
திரு உறுப்புத் தொடுதல்
‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும்’ தந்தான் தாள் போற்றி(5-90-7) என ஒதிக் கைகூப்பித் தலைவணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத்தி ருத் தொண்டியற்றும் முறையை குறிப்பதாகும்.
திரு ஐந்தெழுத் தெண்ணல்
'நமசிவய’ என்னும் திரு ஐந்தெழுத்தைக் குறைந்தது பதினுெரு உரு மெல்லென மனத்துள்ளே எண்ணுக. இங்ங்னம் எண்ணுதற்கு மணி வடம் சிறந்தது. இல்லையாளுல் வலக் கைப் பெருவிரலில் வலக்கை அணிவிரல் நடுவரை, அடி வரை, சுண்டுவிரல் அடிவரை, நடுவரை முடிவரை, அணி வரை சுட்டுவிரல் முடிவரை நடுவரை அடிவரை இவைகளை நமசிவய ஒதிக்கொண்டு தொட ஒன்பது எண்ணிக்கையா கும். பின் சுட்டு விரலால் பெருவிரலின் முடிவரை அடிவரை களைத் தொடப் பதினென்று ஆகிவிடும். இங்ங்னம் எண்ணி வரும் முறையினை ஒர் உருவ அமைப்பில் உருவகம் செய் யின் ஒம் என்னும் வடிவம் அமையும். சுட்டு விரல் ஆவி யையும், பெருவிரல் விழுமிய முழு முதல்வனையும் குறிப் பனவாகும். e.
பெருவிரலின் முடிவரை வழிப்பேற்றினையும், அடிவரை விழுப்பேற்றினையும் குறிப்பனவாம். சுண்டுவிரல் அன் "பினையும் அணிவிரல் அறிவினையும், சுட்டுவிரல் ஆற்றலினை யும் குறிப்பனவாகும். கொள்ளப்படாத நடுவிரல் மலம், மாயை, கன்மங்களைக் குறிப்பனவாம்.
திருவைந்தெழுத்து ஒதுதல்
“நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே? -758-1

Page 7
58 ஆத்மஜோதி
திருஅடியார்ப் போற்றல்
*பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்’
- 7.39-10 திருஅடி போற்றுதல்
‘ஆலமரம் நீழலறஞ் சொன்னுய் போற்றி? -6.32-2
வேண்டுதல்
“பூரியாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரிதாய அறிவுகை கூடிடும் சீரியார்பயில் சேறையுட் செந்நெறி நாரி பஜன்தன் நாமம் நவிலவே? 5.77-س۔--
அந்தணர், சான்றேர் தந்தைதாய் உடன்பிறந்தோர் வாழ்க; மழை வாழ்க; வளம் வாழ்க! மன்னுயிர்கள் வாழ்க! கலை வாழ்க; கற்பிப்பார் வாழ்க; கடவுள் நெறி வாழ்க; தமிழ் வாழ்க; முறைவாழ்க: தமிழகம் வாழ்க; திருநெறி, சிவநெறி, தேசமெலாம் வாழ்க.
திருவடிக்கு ஆக்கல்
ஆண்டான் அடிமறவா அருஞ்செயலே அன்பின்பு என ஒதிப்பூப்புனலை இருகையாலும் மும்முறை வார்க்க.
வாழ்த்து
'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ -8"சிவ-1
9FLDu I D எனது பக்தி, அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்தது. மனித னுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டாக்கி அவனைப் பூரணத்துவத்திற்கு - உயர்ந்த பரிபூரண வாழ்விற்கு
அழைத்துச் செல்வதுதான் எனது சமயம்.
எல்லாம் வல்ல இறைவன் நமக்கு இந்தப் பிறப்பைத் தந்த ருளியது பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதற்காகத் தான். எனவே பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதுதான்
பிறவியின் பயன் - சமயத்தின் சாரம்.
-தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆத்மஜோதி 59.
Sanas statDohun disguid
செஞ்சொற் கவிமணி புலவர் மா. வேங்கடேசன் எம். ஏ.
காஞ்சிபுரம்-தமிழ்நாடு -
தமிழில் உள்ள பக்திப் பாடல்களுக்கு அளவே இல்லை. "தமிழ்” என்ருலே 'பக்தி” என்று சொல்லும் அளவிற்கு அவை தமிழில் மிகுதியாகவுள்ளன. அவை அனைத்தும் இறைவனது பொருள் சேர் புகழையே பொருளாக உடையவை. இறைவனை வழிபடுவோர் அனைவரும் உள்ளம் உருக அன்போடு அப்பா டல்களைப் பாடி வழிபடலாம். ஆயினும் அவரவர் தங்கள் நிலைக்கேற்ப பாடல்களைப் பாடி வழிபடுதலே முறைமை, அம் முறைப்படியே பக்குவமுடையார்க்கும், பக்குவமில்லார்க்கும் ன்னத் தனித்தனி இயல்புடைய பாடல்கள் தோன்றின. மற்றும் ஆடவர் பெண்டிர், சிறுவர், சிறுமியர் என்னும் இனப் பிரிவுகட்கேற்பவும் அப்பாடல்கள் பலவகைப் படலாயின. அவற்றுள் பாவைப் பாடல்கள் இளங்கன்னியர்க்கே உரிய வழிபாட்டுப் பாடல்களாகும்.
இத்தகைய பாவைப் பாடல்கள் பண்டைக் காலந்தொட் டே தமிழகத்தில் வழங்கி வருகின்றன. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பேராசிரியர் பாவை, அம்மானே முதலிய பாக்களுக்கு உரிய இலக்கணங்களை எடுத்துரைத் துள்ளார். எனினும் இக்காலத்தில் வழக்கில் இருப்பவை மணி வாசகரது திருவெம்பாவையும், ஆண்டாள் நாச்சியாரது திருப்பாவையுமேயாகும். இப்பாவைப் பாடல்கள் பக்திப் பாடல்களுள் மிக சிறந்த பாடல்களாகும். இவை பிற பாடல் க்ளிலும் எங்ங்னம் சிறப்புடையனவாம் என்பதை மேலே தாண்போம்.
பக்திநெறி உலகெங்கும் உண்மையாகப் பரவ வேண்டு மாயின் பாவையர் மனத்திற்தான் முதலில் அது தோன்ற வேண்டும். பக்தியால் முதலில் அவர்கள் மனம் பண்படுமாயின் அவர்கள் வழியாகப் பாரெங்கும் அது எளிதிற் பரவும். கார னம் அவர்களே உலகியல் வாழ்விற்கு அடிப்படையாகவுள்ள மை. இங்ங்னம் பெண்கள் வாயிலாக உலகெங்கும் உண்மைப் பக்தியை வளர்க்கும் இயல்பு இப்பாவைப் பாடல்களில் அமைந்திருப்பதணுற்றன் பிறபக்திப் பாடல்களிலும் இவையே சிறப்புடையனவாகின்றன. இனி மகளிரே உலகியல் வாழ்

Page 8
60 ஆத்மஜோதி
விற்கு அடிப்படையாக இருக்கும் உண்மையை உலகியல் நிகழ்ச்சிகளைக்கொண்டு நோக்கின் தெளிவாக உணரலாம்.
ஒரு நாட்டினுடைய உயர்வுக்கோ, தாழ்வுக்கோ உரிய காரணத்தை ஆராயும் போது அது பலவாகத் தோன்றும். அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணம் ஒன் றைக்கான முற்படின் அது அந்நாட்டில் வாழும் பெண்களது பொதுவியல்பாகவே இருக்கும். எவ்வாறெனின் கூறுவேன்.
வீட்டு வாழ்க்கையின் விளைவே நாட்டு வாழ்க்கை. ஆத லின் ஒரு நாட்டின் வாழ்வும் தாழ்வும் அந் நாட்டின் வீட்டு வாழ்வினைப் பொறுத்தே அமையும். அத்தகைய வீட்டு வாழ்க் கையோ அவ் வீட்டுத் தலைவியின் பண்பைப் பொறுத்ததா கின்றது. ஆகவேதான் ஒரு நாட்டின் நன்மை-தீமைகட்கு அந்நாட்டுப் பெண்களின் இயல்பே அடிப்படையாகக் கொள் ளப்படுகின்றது.
இனி ஒரு குடும்பத்தின் சிறப்பிற்கும் சீர் கேட்டிற்கும் அக் குடும்பத்தலைவியின் பண்டோஎவ்வாறு காரணமாகின்றது என்பதை விளக்கமாகக் காண்போம்.
சிறுத்தொண்ட நாயனுர்க்கு வாழ்க்கைத் அதுணைவியாக வாய்த்தவர் ‘திருவெண்காட்டு நங்கை என்னும் நல்லார். அவ் வம்மையார் அந்நாயனுரது இல்லற வாழ்வு சிறப்புறுதற்கு எவ்வாறு இருந்தார் என்பதனை,
“.. . . . . . . . மனையறத்தின்
வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கை’, என்னும் பெரியபுராணச் செய்யுள் அடிகளால் விளக்கி அருளுகின் ருர் சேக்கிழார்.
சேக்கிழாரது இச் செய்யுளில் திருவெண் காட்டு நங்கை வேராக உவமிக்கப்பட்டுள்ளார். இதனுல் சிறுத்தொண்டரது மனே ப்ற வாழ்க்கை, செழித்து விளங்கும் ஒரு மரம் போன்றது என்பதையும், அந்நாயனுர், காயும் கனியுமாகத் தழைத்துக் காட்சியளிக்கும் அம் மரத்தினது மேற் பகுதி போன்றவர் என்பதனையும் உய்த் துணர வைத்துள்ளார்.
சேக்கிழார் காட்டும் இவ்வுவமையை மேலும் விரித்து நோக்குவோமாயின், இல்லற வாழ்வின் சிறப்பிற்கு மட்டு

ஆத்மஜோதி 61.
மின்றி அது சிறுமையுறுதற்கும் எவ்வாறு குடும்பத் தலைவி யரே அடிப்படையாக இருக்கின்றனர் என்பது இனிது விளங்
கும. ܥ '
ஒரு மரத்தின் செழிப்பிற்கும் சீர்கேட்டிற்கும் அதன் வேர்தான் அடிப்படையான காரணமாம். மரத்திற்கு ஆதார மாகவுள்ள நிலமும், அதற்கு உணவாகவுள்ள நீரும், சத்துப் பொருளும் கூட அம்மரத்தின் உறுதியாக இருந்தால் தான் பயன்படும். அதனுலேயே வேர் மரத்தின் மேற்பகுதி நிலைத்து நிற்க முடிகின்றது; உணவைப் பெற முடிகின்றது. பூத்தும் காய்த்தும் பயன்பட முடிகிறது. அதனுல் தான் அது பெருமையையும் பெறுகின்றது. இங்ங்ணம் ஆதாரமாக வுள்ள வேர் உறுதியற்று நோயுற்றுச் சிதையுமாயின் செழு மையாக நின்ற மரம். இருந்த இடமும் தெரியாமல் அழிந்து படுகிறது.
ஆனல் மரத்தின் கிளை முதலிய மேற்பகுதிகளில் ஒன்ருே பலவோ சிதையுமாஞலும் வேர் உறுதியாக இருந்தால் மீண் டும் அம்மரம் தளிர்க்கின்றது. சிலசமயங்களில் மரத்தின் மேற் பகுதி அடியோடு அறுக்கப்பட்டுவிட்டாலும், வேர் உறுதி யாக இருக்கும் காரணத்தால் மீண்டும் அம்மரம் தளிர்த்துச் செழிப்பதை நாம் காண்கிருேம். இதனுல் மரத்தின் வேர் வலி தாக இருந்தால் தான் அம்மரம் சீராக வளர்ந்து பயனளிக் கும் என்பது நன்கு தெளிவாகின்றது.
இங்ங்னம் மரத்தின் செழுமைக்கும் அறிவுக்கும் வேர் காரணமாக இருப்பதஞலேயே இல்லற வாழ்வின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகவுள்ள குடும்பத் தலைவியர்க்கு அவ் வேரையே உவமை கூற முற்பட்டிருக்கின்ருர் சேக்கிழார் சுவாமிகள்.
நற்குண நற்செயல்களையுடைய தலைவியைப் பெற்ற குடும்பம் சிறந்து விளங்குவதையும், அத்தகைய வளைப்பெருத குடும்பம் சீரழிந்துபோதலையும் இன்றைய உலகிலும் நாம் கண்கூடாகக் காணலாம். குடும்பத் தலைவன் பண்பில்லாத வணுகயிருப்பினும் தலைவி நற்பண்புடையவளாக இருந்தால் எவ்வாறேனும் அவளால் அவனும் திருந்தக் குடும்பம் சீரடை கின்றது. ஆனல் பண்பில்லாத தலைவியைப் பெற்ற ஒருவன் நற்குணமுள்ள தலைவனுகஇருப்பினும் அவன் வாழ்வு செழிப் பதே இல்லை. எங்ஙனம் செழிக்கும்? வேர் நைந்து போன

Page 9
62 ஆத்மஜோதி
ஒரு மரம் பட்டுப்போகுமேயன்றிச் செழிக்குமோ? இதனுற் ருன் வள்ளுவப் பெருந்தகையும்,
*மனே மாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை
என மாட்சித் தாயினும் இல்’ என்று உரைப்பாராயினர்.
மேலும் அவர் இல்லறத்திற்கு இல்லாள் அடிப்படையாக இருக்கும் தன்மையை,
'இல்லதென்? இல்லவள், மாண்பானுல் உள்ளதென்?
இல்லவள் மாணு க்கடை"
என்று வினவி விளக்கியருளுகின்றர்.
எத்தகைய சிறப்புமில்லாத ஒருவனுக்கு மாட்சிமை யுடைய மனைவி ஒருத்தி வாய்த்துவிட்டால், அவன் அனைத் துச் சிறப்பும் பெற்ற வனுவான்’ என்றும், “எல்லாச் சிறப்பு முடையவனுயினும் மாண்பில்லாத மனைவியைப் பெறும் ஒருவன் ஒரு சிறப்பும் இல்லாதவனே ஆவான்’ என்று வகுத் அதுணர்த்துவதாலும் இல் வாழ்வின் உயர்வு தாழ்வுகளுக்கு முதற்காரணமாக உள்ளவள் இல்லாளே என்பதை நன்கு உணரலாம்.
இங்ங்ணம் சேக்கிழார் காட்டும் உவமையாலும், வள்ளு வர் வகுத்துரைக்கும் நீதியாலும் இல்லற வாழ்விற்கு அதனை ஏற்கும் மகளிரே ஆதாரமாக உள்ளமை நன்கு விளங்குவ தால், அவர்கள் நற்குணமுடையவர்களாயின் அவர்களால் நடைபெறும் இல்வாழ்க்கை மேன்மையுற்ருல் அதன் விளைவா கிய நாட்டு வாழ்க்கையும் நலமுறும் என்பதனையும் எடுத்து ரைக்க வேண்டுவதில்லை;
ஆகவே ஒரு குடும்பத்தின் தலைவி ஆழ்ந்த பக்தியுள்ள வ *ளாக விளங்குவாளயின் அவள் வாயிலாக அவளது குடும் பத்திலும், அதனை அடியாகக் கொண்ட நாட்டிலும், உலகத் திலும், படிப்படியாகப் பக்தி பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படு கின்றது. பாவைப் பாடல்கள் இளங்கன்னியர் உள்ளங்க ளில் பக்தியைப் பெருகச் செய்வதால், அத்தகைய வாய்ப் பினை உண்டாக்கும் ஒப்பற்ற சாதனமாக உள்ளன. இதனு லேயே இப்பாவைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் அனைத்தி னும் சிறந்தனவாகின்றன. ... '

ஆத்மஜோதி 63
மேலும் பெண்கள் மனதில் பக்தியை வளர்க்கத் தனிப் பெருஞ் சாதனமாகவுள்ள இப் பாவைப் பாடல்கள், அத வளர்க்கத் தொடங்கும் முறை இயற்கையானது.
ஒருவர் நற்குண, நற்செயல்கள் உடையவராக விளங்கு வாராயின், அவருக்கு அப்பண்புகளும் செயல்களும் இடைக் காலத்திலோ, இறுதிக்காலத்திலோ தோன்றியனவாக இரா, இளம் பருவத்தில் அமைந்தனவாகவே இருக்கும். 'தொட்டிற் பழக்கமே சுடுகாடு வரையிலும் தொடங்கும் வன்மையுடை யது’ என்பதனை அனைவரும் அறிவர். எத்தகைய நல்லொ ழுக்கமும் இளமையிற் ருெடங்கினுற்றன், அது இறுதிவரை யில் செம்மையாக விளங்கும். இவ்வடிப்படையுடனேயே பாவைப் பாடல்கள் தோன்றி இளம் பாவையர் உள்ளத்தில் பக்தியை வளர்த்து வருகின்றன.
மேன்மை கொள் பக்தி நெறி மேதினியெங்கும் பரவ வேண்டுமாயின், அதற்கு ஆதாரமாக வள்ளவர் மகளிரே என் பதனை இதனுல் கண்டோம். அம்மகளிரிடத்திலும் பக்தி என்னும் பண்பினைப் பாதியில் தோற்றுவிக்க முடியாது. அது ஆதியிலே தொடங்கப்பட வேண்டும். அப்போது தான் அப் பக்தியானது ஆழ்ந்தும். அகன்றும் அரும்பயன் விளைக் கும்.
இவ்வுண்மையைத் திருவுளங் கொண்ட இறைவன் மணி வாசகர், ஆண்டாள் ஆகியோர் வாயிலாக இளங்கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளையே பாவைப் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளான். இதனுல் இளஞ்சிறுமி யர் உள்ளங்களெல்லாம் பக்திப் பயிர் விளையும் நிலங்களாக மாறவும், அவர்கள் மூலம் அது பாரெங்கும் பரவவும் அரிய வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆகவே திருவெம்பாவை, திருப்பா வை என்னும் இருவகைப் பாவைப் பாடல்களுமே பிறபாடல் கள் எல்லாவற்றுள்ளும் சிறப்புடையனவாதலை யுணர்ந்து அவற்றைப் பாடிப் பரவுவதன் மூலம் அகிலமெங்கும் பக்தி யைப் பரப்பி இன்புறுவோமாக,
வாழ்க பாவைப் பாடல்கள்! வளர்க பக்திநெறி!

Page 10
64 ஆத்மஜோதி
சுவாமி ராமதாஸ் அருளுரைகள்
அகம்பாவம் அழிந்து போக
வருவது சுகுந்திரம்
தமிழ் வடிவம் ம. சி. சிதம்பரப்பிள்ளை
காஷ்மீர் நகரத்தில் ஒரு பெரிய வணிகன் இருந்தான். பேர்சியா நகரத்தில் உள்ள பண்டங்களையே விற்பனை செய்தான், ஒவ்வொரு வருடமும் ஏதாவது வியாபாரப் பொருட்களே தூர தேசமாகிய பேர்சியாவுக்குக் கொண்டு சென்று அங்கு அவைகளை விற்பனை செய்துவிட்டு தனது தேசத்துக்கு அங்குள்ள நல்ல பொருட்களை விலை தந்து கொண்டு வருவான். இவ்வாறு பல வருடங்கள் சென்று ஒடுகின்றன.
ஒரு நாள் பேசும் கிளிப்பிள்ளை ஒன்றினை விற்பனைக்கு இருப் பதாகப் பேர்சியாவில் கண்டான். அதனப் பொருள் கொடுத்து வாங்கிப் பெற்றுத் தனது நகரமாகிய காஷ்மீருக்குக் கொண்டு வந்து தனது வீட்டில் ஒரு முக்கிய இடத்தில் (கூண்டில்) வைத் தான். மக்களைப் போன்று உரையாடும் கிளிப்பிள்ளையாகையால் வணிகனும் அவனது குடும்பத்தினரும் மிகவும் நேயமாக அத னைப் பராமரித்து வந்தனர். வருடா வருடம் பேர்சியாவுக்குப் போகின்ற நாட்களாகிய அத்தினங்களில் ஒரு தினம் வணிக னுக்கு நோய் கண்டுவிட்டது. ஆகவே நம்பிக்கைக்குப் பாத்திர மான தமது செயலாளரைத் தனக்காகப் பேர்சியாவுக்குச் சென்று வருமாறு பணித்தான். இதனே அறிந்த கிளிப்பிள்ளை, அக்காரிய தரிசியை நோக்கி: “நீர் எனது தாய் நாடாகிய பேர்சியாவுக்குப் போகின்றீர். எனக்காக ஒரு சகாயம் செய்வீர்களா? உங்களுக்குத் தெரியும் அங்கு அடைபட்டு மறியலில் உள்ளேன். சுதந்திரமாகப் பறந்து சந்தோஷமாக இருப்பதன மறுக்கப்பட்டுள்ளது. நீர் வோகும் பட்டினத்துக்குக் கீழ்த்திசையில் உள்ள காட்டிற்குச் சென்றிராணுல் அங்குள்ள மரங்களில் எனது உறவினர்களும் நண்பர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு எனது அப்போதைய நிலையை விபரமாகக் கூறுங்கள். எத்தனையோ மைல் துரத்துக் கப்பால் அடைபட்டு வியாகுலத்துடன் இருப்பதாகவும் கூறுங்கள்.

ஆத்மஜோதி 65
என்னை விடுவிப்பதற்கு என்ன வழிவகைகளை கையாள வேண் டும் என்பதனை அவர்களிடம் வினவி வரவும். அவர்கள் தரும் விளக்கத்தைக் கேட்டு வந்து எமக்கு அப்படியே கூறுங்கள்" எனக் கூறியது. - −
பேர்சியாவில் தான் வந்த வியாபார விடயங்களை முடித்து விட்டு காரியதரிசி, கிளிப்பிள்ளை கூறிய காட்டுக்குச் சென்று மரங் களில் அநேகம் கிளிகள் இருப்பதனைக் கண்டு கிளிப்பிள்ளை கூறிய வற்றை மும்முறை உரத்துக் கூறினுன். மறு உத்தரமாக ஒன் றும் வராததைக் கண்டு திரும்ப முயலும் போது ஒரு கிழக்கிளி பறந்த வந்து காரியதரிசி முன்பாக படார் என வீழ்ந்து இறந் தாற் போன்று கிடந்தது. காரியதரிசி இச்சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது, இது முதுமைப்பருவமடைந்த தன் மையினுல் இறந்துவிட்டது என்று மனத்தில் நினிைத்தார்.
காரியதரிசி சில நாட்களுக்குள் காஷ்மீர் நகருக்கு மீண்டு தமது வியாபாரச் செய்திகளை வணிக முதலாளிக்குச் சமர்ப்பித்து விட்டுச் செல்லும் போது அங்கே உள்ள பேசும் கிளி காரியதரிசி யைக் கூப்பிட்டுத் தான் கூறிய செய்திகளின் பலன் என்ன என்று வினவிற்று. காட்டில் தான் எவ்வாறு கிளிக் கூட்டங்களை நோக்கிக் கூறியதையும், பின்பு ஒரு முதிய கிளி ஒன்று தன் முன் விழுந்து இறந்தது என்பதனையும் கூறினுன். இதனை இவ் வாறு கேட்டதும், கிளிப்பிள்ளை தனது கூட்டில் உள்ள கம்பியிலி ருந்து கீழே விழுந்து இறகுகளை நன்றக விரித்து இறந்துபோன தாகக் கிடந்துவிட்டது. திடீரெனக் கிளிப்பிள்ளைக்கு ஏதோ மார டைப்பு நேர்ந்துவிட்டதென எண்ணி இந்தத் துக்கச் செய்தியை வணிகனுக்கு அறிவித்தான். வணிகனும் நீட்டி நிமிர்ந்து ஆடா மல் அசையாமல் மரணப்படுக்கையில் இருக்கும் தனது கிளிம் பிள்ளையைக் கண்டான். ஒருகாவலாளியை அழைத்து அப்பறவை யைக் கூட்டிலிருந்து அகற்றி அப்பால் வீசும்படி கூறினுன். அவ னும் அப்படியே அதனை எடுத்து ஒரு குப்பை மேட்டில் வீசிஞன். பூமியின் மேல் பறவை பட்டதும் உடனே அது பறந்து சென்று விட்டது.
இக்கதை தரும் பாடம், ஆன்மா உண்மைச் சுதந்திரம் பெறு வது அகம்பாவ எண்ணம் அழிந்த பின்பு.
சாந்தி சாந்தி!! சாந்தி!!! மாதாஜி வாழ்க! சுவாமி ராமதாஸ் வாழ்க!
எங்கும் இன்பமே சூழ்க!

Page 11
66 . ஆத்மஜோதி
சகச மார்க்கத் தியானமுறை விளக்கம் --~~~~~~~~~న~~~~~~~~~~~~~~~~~~~ (மகாத்மா ஹிராம் சந்ரஜிழரீராம் சந்ர மிஷன்)
S. மார்க்கமும் சாதனையும்
நமது இலட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டோம்.அதை அடைவது எவ்வாறு? பரம்பொருளை நாம் அடையவேண்டு மாஞல், பூரண அசைவற்ற நிலை எய்தும் சாதனை எதுவோ அதை மேற்கொள்கா வேண்டும். நமது ஆசைகளே நமது துன்பங்களுக்குக் காரணம். ஆசைகள் ஒழிய அன்பங்கள் குறையும். ஆசை வலையினின்றும் விடுபடவேண்டும். அதற்கு வழி-கருத்தை ஆசைகளினின்று திருப்புதலே. சத்தியத்தின் மேல் நாட்டங்கொள்ள் வேண்டும். அவ்வாறு பழகி வந்தால் ஆசைமறையும். துன்பங்கள் குறையும். சத்தியம் ஒன்றே
நிரந்தரமாக நிற்கும்.
அளவு கடந்த பற்றுதல் கூடாது. எதிலும் மிதமாக இருத்தல் வேண்டும். விருப்பு வெறுப்பற்று நமது கடமை என்று காரியங்களைச் செய்வோமாகில், உலகப்பற்றுகளிலி ருந்து ஒருவாறு விலகலாம். பற்றற்ற நிலை என்பது மனத் தின் உள்நிலையே! இல்லற வாழ்க்கையை நடத்திக்கொண்டே பூரணத்துவத்தை அடைய முடியும்.தீமையும் நன்மையும் மனத்தினின்று எழுகின்றன. ஆகவே மனத்தை நாசம் செய்யவேண்டியதில்லை. சபிக்கவும் தேவையில்லை. சரியான வழியில் பழக்கப்படுத்தவேண்டும். பயிற்சி அளிக்கவேண்டும். மன்ச்சலனத்தைச் சிரமப்படுத்தி அதை அலையவிடாமல் கட் டுப்படுத்தவேண்டும். தெய்வசிந்தனையில் மன ந் தோய் ந் து தோய்ந்து தெய்வ நினைவு மேலோங்க வேண்டும், அதனுல் மனம் அடங்கும். உள்ளக்கலக்கமும் நீங்கும். மனத்தின் கண் சமத்துவம், அடக்கம் ஏற்படாது போனுல், பரம்பொருளு டன் ஒன்றியநிலை அடையமுடியாது. நல்லபழக்க வழக்கங் கள் பூரணத்துவத்தை அடைய மிக்க உதவியாகும்.
நமது சாதனையில் வெற்றிபெற ஒரு குருவைப் பெறுதல் வேண்டும். அந்தக்குரு ஜீவனை விழிப்படையச் செய்யும் ஆற் றல் உள்ளவராக இருக்கவேண்டும். சற்குருவின் ஆதரவும் சகாயமுமே நம்மைக் கடையிலக்கை அடையச்செய்யும். ஆன்மதத்துவ ஜீவயாத்திரையில் முக்கியமான அம்சம் குரு பக்தி. குருவிடம் பரிபூரண சரணுகதி அடைதல் வேண்டும்.

ஆத்மஜோதி 67 குரு உயரிய சக்தி வாய்ந்தவராகவும் அனுபவசக்தி வாய்ந்த வராகவும் இருக்க வேண்டும். கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பு குருவால் உண்டாகும். அவருடைய சக்தியாலேயே மார்க்கத்தில் சிக்கல்கள் நீங்கும். ஆன்ம தத்துவ நெறியில் ஈடுபட்டவர்களுக்கு குருவினது சகாயம் இன்றியமையாதது. ஆன்ம தத்துவப் பயிற்சி ஆன்ம தத்துவப் பயிற்சி ஒருவருக்கு வேண்டுமேயாளுல் சக்தியுள்ள உண்மையான ஒரு குருவேண்டும். அவர்மூலம் சரியான வழியில் பயிற்சி வேண்டும். அப்பொழுதுதான் உய ரிய நிலைகளை அடைய முடியும். ஆன்மதத்துவம் என்னும் கட்டிடத்திற்கு நம்பிக்கையே உண்மையான அத்திவாரம். அடக்கமே ஆன்ம தத்துவத்தின் சாரம். சரியான முறையில் பயிற்சி அடைய வேண்டுமாயின் முதலில் அகத்தைத் தூய் மைப்படுத்தல் வேண்டும்.
ஆன்ம தத்துவப் பயிற்சியின் நோக்கம் அதன் மூலமாக மனிதன் தன்னுள்ளடக்கியிருக்கும் தெய்வப் பண்புகளை வெளிப்படுத்துவதேயாகும். தெய்வப் பண்புகளை அப்படி அடையாவிட்டால் அப்பயிற்சி குற்றமுற்றது; பிரயோஜன மற்றது. சாதாரணமாக எல்லோருக்கும் தெய்வ பக்தி உண்டு. ஆணுல் அவர்களில் எத்தனைபேர் தெய்வத்தை அடைந்தனர்? மிகமிகச்சிலரே. குறைபாடுள்ள தத்துவப் பயிற்சியும் தவறன வழியுமே இதற்குக் காரணம். சம்சார வாழ்க்கையில் இருந்துகொண்டு மேலான தத்துவ நிலைகளை அடைய முடியாதென்றும் மத போதகர்களால் கூறப்படுகி றது. ஆனல் ஜனங்கள் வீடுபேறு பெறவேண்டி உலகத்தை வெறுப்பரோ? இது அனுபவவாயிலல்லாமல் வெறும் கோட் பாடுகளை ஆதாரமாகக் கொண்டது.
உலக வாழ்வைத் துறந்த ஒரு சிலருக்கு மாத்திரம் தத்து வப்பயிற்சி அளிப்பதல்ல நம்முன்னுள்ள பிரச்சிஜன. பக்தியும் இருந்து உலக வாழ்வில் அநேக விதமாய் ஈடுபட்டு, அவற்றி னின்றும் விலகமுடிய்ாது இருப்பவருக்கும் பயிற்சி அளிப் பது ஒரு உண்மையான பிரச்சின்ை ஆகும். உலக வாழ்வும் தத்துவ ஞானமும் ஒன்ருேடொன்று இணைந்து இரண்டும் சிறந்து திகழ்ந்திருக்கச் செய்வதற்குச் சரியான உபாயத் தைக் கண்டுபிடிக்க வேண்டியது அத்தியாவசியமாகும். சாமான்ய சனங்களும், தற்கால உலக வாழ்வுக்கு இசைந்தி ருக்கும் ஆன்மதத்துவப் பயிற்சியை வளர்க்க வேண்டும். இதற்குக் குருவின் சகாயமும் கட்டாயம் வேண்டும்,

Page 12
68. ஆத்ம:ே தி
näFFTITäFzur so
LLLLSLLLLYLYLLLLLLLLLLLLLSLLLLL0SeLLLLLLLLLLLLML00YYYYLLLYYY0LLLYY (யோகி இ. வைரவநாதர்)
இந்த ஆசனத்தின் பெயரிலிருந்து இதனுடைய மகிமையை அறிய லாபம், இவ்வாசனம் செய்பவர்கள் வச்சிரம் போன்று உறுதியுடையவர் களாக இருப்பார்கள் என விளங்கும்.
நமது உடலைத் தாங்குவது பாதங்களே. சரியான உடலமைப்பை யும், இலேசாக நடக்கும் பழக்கத்தையும் உண்டு பண்ணுவதன்றி முழு உடலுக்கும் மிகவும் இலகுவில் 'வலுவையும் பாதுகாப்பையும்' அளிக் கும் ஒரே அப்பியாசம் இதுவே இதைவிட உடம்பு முழுவதும் கூடிய இணக்கமுள்ளதாகவும் எப்பக்கமும் இசைந்து வளைந்து நிமிரக்கூடியதா கவும் சக்தியைப் பெற்று நிலையான இளமையையும் ஓங்கச் செய்கிறது.
இவ்வாசனத்தை நீங்களே அறியாமலே குழந்தைகளாக இருக்கும் போது செய்திருப்பீர்கள் சிறு குழந்தைகள் அமரும் போது கவனியுங் கள்! ஏன்? இது இயற்கையே எமக்கு அருளியது.
இன்னும் யப்பானியர் வச்சிராசனத்திலிருந்துதான் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள், பாகிஸ்தான் மல்யுத்த பயில்வான்களின் முக்கிய அப்பியாசமே இதுதான்
ஒரு வண்டிக்கு அச்சு எப்படி இருக்கிறதோ அப்படியேதான் எங்கள் உடம்பிற்கு இடுப்பு இருக்கின்றது இடுப்பில் பலமில்லாவிடின் நாம் ஒன் றும் செய்ய முடியாது. அடிவயிற்றெலும்பு, இடுப்பெலும்பு வலுப்படு கின்றது. இக்காரணங்களால் வச்சிராசனத்தை யோகப்பயிற்சிக்கு முன் கையாள வேண்டியிருக்கிறது. பழகும் முறை வழமையான முறை.
விரிப்பில் மண்டிபோட்டு கால்களை பின்னல் மடக்கி, இரு குதிக் கால்களுக்கு மேல் இருந்து மலவாயில் இடையில் இருக்கும்படி கைகளை முன்னுல் நன்முக நீட்டி விரல்களையும் சேர்த்து முழங்கால்களில் மெதுவாக அமுக்கியவாறு உடம்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக இருக்கவும். இந்நிலையில் ஒரு சிங்கம் இருப்பது போன்று பாவனை உண் டாகும். மூச்சை மெதுவாக விட்டு வாங்கிகொண்டு இருக்கவும்.
இப்போது நேரத்தை வீளுக்காமல் இருப்பதற்கும், உடம்பிற்கு ஆறுதலை வழங்கவும், நாடி சுத்தி செய்யவும் இரண்டு மூன்று தடவை இதைச் செய்தால் போதுமானது. சிலர் இந்நேரத்தில் பிரார்த்தனை செய்வதுமுண்டு,

ஆத்மஜோதி 69
இப்படி வச்சிராசனம் போட்டு அப்பியாசம் செய்வது வழக்கத்தில் இருந்து வருவதொன்ருகும்.
இவ்வாசனத்தைத் திருத்தி மாற்றியமைத்து இரு பிரிவுகளில் செய் வது இன்னும் சிறந்தது.
பிரிவு 1
சுப்தவிராசனம்
முன்பு கூறியபடி இருக்கக்கூடியளவுக்கு இருந்தபின் இரு கால்களை யும் இரு பக்கமாகவும் அகட்டி வைத்துக்கொண்டு இரு கைகளாலும் கால் குளச்சுகளை நன்ருகப் பிடித்துக்கொண்டு முன்னுல் வளைந்து போக வும், இவ்வாறு நெற்றி விரிப்பில் பட்ட வண்ணம் நின்று திரும்ப நிமிர வும். நிமிர்ந்ததும் மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். இப்போது பின் பக்கமாக மூச்சை வெளிவிட்டபடி சாய்ந்து வளைந்து, முதுகு, பிடரி விரிப்பில் படியும்படி மல்லாந்து நிமிரவும். இப்படி 3.4 தடவைகள் செய் பவும்.
பிரிவு 2
இப்போது இரண்டாவது படிக்கு வருவோம். இவ்வப்பியாசத்தை முதற்படியிலிருந்து செய்யவேண்டும். h−
நிமிர்ந்திருக்கும் உடம்பைப் பின்பக்கமாக மல்லாந்து படுக்கவைக்க வும். இப்போது கால் குளச்சுகளில் பிடித்த கைகளைப் பின்பக்கமாக எட்ட வீசி விரிப்பில் நன்முக முழு உடலையும் படிய வைக்கவும். மூச்சை மெதுவாக விட்டு வாங்கிச் சில நொடிகள் அப்படியே இருக்கவும். இப்ப டியே சில வினடிகள் இருந்து மறுபடியும் நிமிர்ந்து இதேபோல் 3, 4 தட கவைகள் செய்யவும். . . . . . . " . "
இவ்வாறு செய்து முடிந்ததும் மீண்டும் வளக்கமான வச்சிராசனத் நிற்கு வந்து 2, 3 முறை நாடி சுத்தியும் செய்து இவ்வாசனத்தைத் திருத்தமான முறையில் செய்து முடிக்கவும். . .
பலன்கள்: ரணசிகிச்சை பிரிவில் இடுப்பு மிகவும் கடினமானது. கொடைப்பகுதியின் தலைப்பகுதியில் ஏற்படும் முறிவு அது எந்த வயதில் /hபட்டாலும் திரும்பவும் சேருவது இயலாத காரியம், இடுப்பெலும்பு சுெட்டுப்போய் வலியால் துடி துடித்துப் போவார்; இதனல், நடமாட்ட மில்லாமல் போய் மிகவும் அவஸ்தைப்படுவார்:

Page 13
70 ஆத்மஜோதி
இடுப்புப் பகுதிக்கு மிகவும் வலிவையும் பாதுகாப்பையும் அளிக்கும் அப்பியாசம் இதுவே. பெண்களுக்கு உகந்த ஆசனம். கால் உளைவு, குதிவாதம், முட்டிவாதம் முதலியன வரமாட்டா, பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும். எடுத்த காரியத்தை முற்றிலும் முடிக்க வேண்டும் என்ற மனேதிடத்தையும் உண்டாக்கும் வல்லமையுள்ளது.
இவ்வாசனம் ஒன்றே போசனத்தின் பின்பும் செய்யலாம்; ஜீரண சக்தியை விரைவில் உண்டாக்கக்கூடியது. இக்காரணங்களால் ‘வச் சிராசன* பயிற்சியை எல்லா ஆசனப் பயிற்சிகளுக்கும் முன் வைத் திருக்கிரு ர்கள். -
இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இவ்வாசனத்தை முறை யாகப் பழகி, ஒழுங்காகப் பயிற்சி செய்து வருவீர்களாயின் அந்த வய திலும் எதுவிதமான முறிவுதPவோ ஏற்பட இடமில்லாதிருக்கும். சறுக்கி விழுந்தாலும் சரி அல்லது சற்று விபத்துக்குள்ளாயினும்சரி நாரி முறிவோ அல்லது பூட்டு விலகிப் பிரிவோ ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். முதியோர் பலர் இவ்வாருன இக்கட்டுக்குள் அகப்பட்டு சாகும்வரை படுக்கையில் கிடந்து அவஸ்தைப்படுவதை காண மிகவும் பரிதாபம்.
அவ்வாசனத்தின் இரகசியம் என்னவெனில், அதாவது இடுப்பு பகுதி முழுவதுக்கும் கூடிய இணக்கமுள்ளதாகவும் எப்பக்கமும் இசைந்து வளைந்து நிமிரக்கூடியதாகவும் சக்தியைப் பெற்று நிலையான இளமையையும் வருவிக்கச் செய்தலாகும்.
3FLDUID
இறைவன் சோறு போடமாட்டான்; நிச்சயமாகப் போடமாட் டான். அவன்தான் சோற்றை உண்டாக்கிக்கொள்ள நிலம், நீர், அறிவு, ஆற்றல், உழைக்கக் கைகள் அனைத்தும் கொடுத்திருக்கி ருனே! -
மனிதகுலம் இன்ப அன்பிலே திளைத்து இன்புற்று வாழவே இந்த உலகம் - பேசும் மொழி - ஒழுகும் சமயம் யாவும்!
அரசியல் என்பது சமுதாயத்திற்கு ஒரு வேலி போல. சம யம் என்பது மனிதனுக்கு உள்ளும் புறமுமாக இருந்து அவனை உணர்வால் - சிந்தனையால் தூண்டி வளர்த்துப் பக்குவப்படுத்து கின்ற ஓர் அரும் பெரும் சாதனம்.
- . -தவத்திரு குன்றக்குடி அடிகளார்

யோகப் பயி ற்சியில் பெண்களின் பங்கு
- திருமதி. ட்ாக்டர் குணரத்தினம் செல்வராணி- புன்ஞலைக்கபடுவன் -
** நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனவே மனிதன் நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமானல் சில பழக்க வழக்கம், சுத் தம், சுகாதாரம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கடைப் பிடிக்கும் பழக்க வழக்கங்களில் யோகப் பயிற்சியும் ஒன்ருகும். இதை மனிதன் தவருது கிரமப்படி செய்து வந்தால் அவன் நோயின் றிச் சுகத் துடலும் திட ஆரோக்கியத்துடனும் வாழ முடியும். இவ் யோகப் பயிற் யில் பெண்களும் முக்கியமாக பயின்று பயன்பெறக்கூடிய யோகப் பயிற்சி பல உண்டு. அவற்றை இங்கு நோக்குவாம். .
பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனப் பயிற்சியில் ஒன்று "வச்சிரா சனம். பெண்களில் வாத சம்பந்தமான ரோகங்கள் குறிப்பாக மொழி வாதம், முழங்கால் வாதம், குதிவாதம், கால் உளைவு என்பன நீங்கும். கெர்ப்பாசயம் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும். இவ்வாசனம் கெர்ப்பா சயத்திற்குப் பெருமளவில் உதவி செய்கிறது. எவ்வாறெனில் கெர்ப்பப்பை முன்பக்கம் வளைந்திருத்தல் , பின்டக்கம் வளைந்திருத்தல் அல்லது கெர்ப்பப்பை முழுதாகவே வளைந்திருத்தல் போன்றன இதனல் சீரடைகின்றன. இன்னும் மேற்கூறிய கெர்ப்பப்பையின் அசாதாரண நிலையினலேயே சிலர் பிள்ளைப்பேறு இன்றிக் கவலைப்படுகிருர்கள். எனவே இக் குறை நீங்க வேண்டுமானல் பெண்கள் இவ்வாசனத்தைச் சீராகச் செய்து வருவதால் கர்ப்பப்பை சுயநிலையடைந்து தனது தொழி லேக் குறைவின்றி செய்யும். ஏன்? இன்னும் இவ்வாசனத்தின் சிறப்பைத் தான் சில சைவப்பெருமக்கள் சொல்லுவார்கள். பிள்ளையில்லாதவர் கள் கோயிலுக்கு நேர்த்தி வைத்த அடி அழித்தல் விரதத்தை’ அனுட் டித்தால் பிள்ளை கிடைக்கும் என்று. இதன் உட்காரணம் என்னவெ னில், அடி அழித்தல் விரதம் ஆலயத்தைச் சுற்றி விழுந்து, விழுந்து கும் பிட்டு எழுதலாகும். இது வச்சிராசனம் போலவேயாகும். எனவே, தான், அடி அழித்த ல் விரதம் மூலம் பிள்ளைப்பேறு அடைந்தவர்களும் பெருந்தொகையானவர்கள் உண்டு. பண்டைய மக்கள் சுகாதாரம், தேகாப்பியாசம் இரண்டையும் பெருமளவில் சமயத்துடன் புகுத்தி மக்களுக்கு நம்பிக்கை வரக்கூடியவகையில் வைத்துள்ளதை நாம் இதிலி ருந்தே காணக்கூடியதாயுள்ளது!
மேற்கூறிய வச்சிராசனம் போன்று பெண்களுக்கு உகந்த அடுத்த ஆசனம் 'ப ஸ்திமோத்தாசனம்' ஆகும். இதை ஏற்ற முறைப்படி

Page 14
72 ஆத்மஜோதி
செய்வதால் முன் கூறியதைப்போல் கெர்ப்பரோகங்கள் குணமடைவ துடன் பிரசவமும் இலகுவாகும். எவ்வாறெனில் இவ்வாசனம் நன்முகக் குனிந்து வளைந்து கால்களை நீட்டியபடி செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதனல் பெண்களின் பிரசவ நேரங்களில் எலும்புகள் சரிவரத் தொழிற்பட்டு பிரசவத்தை இலகுவாக்குகின்றது. குறிப்பாகச் சில பெண்கள் 36, 38 வயதுவரை இருந்து பின்பே விவாகம் செய்கிருர்கள். இவர்கள் இவ்வயதின் பின் கருத்தரிப்பதனுல் சிலரின் பிரசவம் கஷ்ட நிலையடையும். எலும்புகள், அதாவது இடுப்புக்குளிப்பூட்டு எலும்புகள், பின்பக்க திருகாஸ்தி எனும் எலும்பு, இடுப்புபக்க எலும்புகள் முதலியன கல்சியம் எனும் சுண்ணச்சத்து வயதுக்கு ஏற்ப கூடி எலும்புப் பொருத் துகள் எல்லாம் கடின நிலை அடைந்து பிரசவம் கஷ்டமாகிச் சத்திர சிகிச்சைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே இவ்வாசனத்தை ஆசிரியன் கூறிய முறைப்படி செய்துவந்தால் இடுப்பு எலும்புகள், பூட்டுகள் எல் லாம் பிரசவ நேரம் விரிவடைந்து கஷ்டப் பிரசவத்தை நீக்கிச் சுகப்பிரச வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இத்துடன் நாம் சத்திர சிகிச்சைக்குட்பட வேண்டிய நிலை ஏற்படாது. இயற்கையுடன் ஒட்டிய சுகதேகியாகவும் வாழ வழிவகுப்பது இவ்வாசனமாகும்.
அடுத்து எல்லோரும் இலகுவாகச் செய்யக்கூடியது "சர்வாங்காசன மாகும். இவ்வாசனத்தைச் செய்வதினுல் உடற்சுரப்பிகள் யாவும் சரி வரத் தொழிலைச் செய்வதுடன் சுறுசுறுப்பும் அடைகின்றன. சிறுவர்க அளின் தொனிமாற்றம் சில பருவ மாற்றங்களையும் ஆட்படுத்தும். குறிப் பாக பெண்களில் வயதுக்கு ஏற்ற பருவ மாற்றங்கள், பால் உணர்ச்சி கள், இவற்றையும் அவ்வக் காலங்களில் ஏற்படுத்தும். அடுத்து ‘அர்த்த மத்ஸ்யேந்திராசனம்" செய்வதணுல் பெண்களில் பார்ப்பதற்கு ஒழுங்கீன மாக பெருத்துத் தொங்கும் ஊளைச்சதைகளையெல்லாம் கரைத்து உடம்பை அமைப்புறச்செய்து அவலட்சணத்தை நீக்கி அழகைக் கொடுக் கும். "பாதஹஸ்தாசனம் இதே போன்ற பலனையே கொடுக்கும். பெண்களில் பொதுவாக கர்ப்பவதிகள் சிரசாசனம் போன்ற சில ஆச னங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து மிகவும் இலேசாகவும் கஷ்டமின்றியும் எல்லாராலும் செய் ங்க்கூடிய பயிற்சி எதுவெனில் "நாடிசுத்தி'யாகும். இது மூச்சை உள் இழுத்து வெளிவிடுவதேயாகும். இதனுல் போதியளவு பிராணவாயு கவாசட்பைச் சிற்றறைகளில் புகுந்து அங்குள்ள காபனீரொட்சைட் க்டை வெளித்தள்ளுகிறது. இதனுல் சுவாசம் சுத்தமாக நடைபெறுகின் றது. இரத்த சுத்தி துரிதமாக நடைபெற்று இருதயம் பெலனடைந்து சகல நோய்களையும் நீக்கி வாழ வழியேற்படும். இது சிறுவர் முதல் வளர்ந்தோர்வரை இலகுவாக செய்யக்கூடியதொன்ருகும். இது மக்க ளுக்கு திடகாத்திரத்தையும், சுறுசுறுப்பையும், நீண்ட ஆயுளையும், நோயற்ற உடம்பையும் கொடுக்கவல்லது. இதே போன்று "பிராணுயா மமும் கர்ப்பவதிகளும் பயமின்றி செய்யக்கூடியதொன்று.

ஆத்மஜோதி 73
மனிதரின் உணவு மாமிசமா மரக்கறியா?
- மாத்தளை - அருணேசர் -
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நாகரிகமில்லாத மிகப்பழைய காலத்தில் பரதகண்டமா கிய இந்தியா நாட்டிலிருந்த மக்கள் மாமிச பட்சணிகளா யிருந்ததனுல், அவர்கள் தங்கள் உணவிற்கு உதவியாயிருந்த வையும் அப்போது தங்களுக்கு உயர்வாகத் தோன்றியனவு மான ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்கினங்களை இந்தி ரன், வருணன் முதலிய தெய்வங்கட்குப் பலியிட்டுப் படைத் துத் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்குமாறு வணங்கி வந்தனர். வெறிதரும் சோமபான மும் செய்தனர்.
இக்காலத்திலும் சித்திரான்னங்கள், பலகாரபட்சணங்கள், தேங்காய் பழங்கள் முதலியவைகளைத் தெய்வங்கட்குப் படைத்து அவற்றைப் பிரசாதங்களாக உண்டுகளிக்கிறர் களல்லவா? சாதாரண மக்கள் தெய்வங்கட்கு ஆடு, கோழி களைப் பலியிட்டு உண்டும் மது அருந்தியும் களிக்கிருர்களல்ல வா? இங்ங்ணம் செய்யும் கருத்து தாங்கள் படைக்கும் பொ ருள்களை அத்தெய்வங்கள் ஏற்றுக்கொண்டு தங்கள் கோரிக் கைகளை நிறைவேற்றி வைக்கும் என்னும் நம்பிக்கையேயன் ருே? இது போலவேதான் முற்காலத்தவரும் செய்துவந்தனர்.
ஆணுல் நாளடைவில் பாரமார்த்திக ஞானமும் சீவகா ருண்ய உணர்ச்சியும் கொண்ட சில அறிஞர்கள் தோன்றவே அவர்கள் தீய பழக்கமாகிய உயிர்க்கொலையையும், மாமிசம் உண்ணுதலையும் எப்படியாவது நீக்க வேண்டுமென முயன்று அம் மக்கள் கையாண்ட கொள்கைகளின் வாயில்ாகவே அவர் களைக் கட்டுப்படுத்த எண்ணினர். ஏனெனில், எக்காலத்தி லும் உலகத்தில் எல்லாரும் ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையோர்களாகவே இருக்கமாட்டார்களல்லவா?
ஆதலால் அம்மக்களின் பூசை முறையையே "யாகம்’ என்ற பெயராலமைத்து, அந்த யாகத்தின் மூலமாக மட்டுமே மாமிசம் சாப்பிடலாமெனவும், அதிலும் யாகத்தில் அவிர்ப்பா கம் கொடுத்த பின் மிகுதியாகும் மாமிசத்தை மட்டுமே உட் கொள்ளலாமெனவும் வகுத்து அந்த வழியிலாவது மாமிச

Page 15
74 ஆத்மஜோதி
விருப்பத்தை ஓரளவுக்கு உட்படுத்திச் சில மந்த மதியினர் படிப்படியாய்ப் பக்தியோகத்தில் மேல் நிலைக்கு வரட்டும் எனக்கருதி விதித்தனர். அவ்வித யாகத்தையும் எல்லோரும் எளிதில் செய்து கொள்ள முடியாதபடி கடினமான விதிமுறை களால் வரையறுத்தனர்.
இம்முறையின்படி ஒரு யாகம் செய்ய வேண்டுமானுல் அதற்கு மிகுந்த பொருள் செலவிட வேண்டும். அவ்வளவு பொருளைச் செலவிட்டு ஒவ்வொரு நாளும் யாகஞ் செய்வது ஒருவரால் எளிதில் செய்யக்கூடியதல்ல. ஓராண்டிற்கு ஒரு முறையோ ஈராண்டிற்கொருமுறையோ தான் அப்படிச் செய் வது சாத்தியமாகும். ஆதலால் உயிர்வதை அடிக்கடி நேரிடு வதற்கு வழியில்லாமற் போய்விடுமென்பது திண்ணம். இந்த நோக்கத்தைக் கொண்டே யாகங்களில் பலியிடுவதை அக்கா லத்தில் அநுமதிக்க நேர்ந்தது.
யாகத்தைப்பற்றி வேதத்தின் உண்மைக் கருத்து
'கள்ளுமுணு நீ விரும்பினுல் மகங்கள் செய்
காமத்தின் மனதானுல்
கொள்ளும் பெண்டொடு கலவி செய் எனிலிவன்
குறையெலாந் தவிர்வானென்றே
தள்ளும் வேதத்தின் சம்மதம் சகலமும்
தவிர்வதே கருத்தாகும்
விள்ளு மிவ்விதி யென்னெனிற் பூருவ
நியமமாம் விதியன்றே"
என வேதம் விளம்புவதை கைவல்லிய நூல் நன்கு எடுத்து ஒதுகின்றது.
*கள்ளும் மாமிசமும் சாப்பிட விரும்பினுல் யாகங்கள் செய்து அங்கே சாப்பிட்டு; மோகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமானுல் உன் சொந்த மனைவியினிடம் கல விசெய்* என்று வேதம் கூறுகிறதெனினும், அதன் உள்கருத்து.
இவ்விதம் கூறினுல் மனம் போனபடி எல்லா போகங்க ளிலும் மனிதர் தலையிடமாட்டார்கள். (அதாவது- அக்கட்ட ளைக்குப் பயந்து மனிதர் நாள்தோறும் நினைத்த போதெல் லாம் மாமிசம் சாப்பிடும் பழக்கத்தை ஒழித்திடுவார்கள்) என்பதேயாகும்.

ஆத்மஜோதி 75
கவே மாமிச உணவை ஒழித்தல் வேண்டும் என்பது வேதத்தின் அபிப்பிராயமே யன்றி யாகம் செய்யவேண்டு மென்பது அபிப்பிராயமல்ல. மாமிசம் புசிப்பதில் இச்சை யுண்டானுல் பாகஞ் செய்யுமிடத்தில் புசி என்ற வேதம், பிறகு,
‘மது விறைச்சிகள் உண்ணென்ற சுருதி, பின்
மணந்து பார் எனல் பாராய்'
அதாவது, யாக காலத்திலும் மாமிசத்தைப் புசியாமல் அதனை மோந்து பார்த்தல் மாத்திரம் செய்வாஞயின் வெகு காலம் சுவர்க்க போகங்களை அநுபவிப்பான்? என்று விதித் திருப்பதையும் ஆலோசித்துப்பார் என்று அதே கைவல்லிய நூல் கூறுகிறது.
இதை ஆராயுமிடத்து, யாகங்கள் மாமிச உணவில் பிரிய முள்ளவர்களை ஓர் வரம்பிற்குட்படுத்துவதன் வா யி லா க மாமிச உணவைத்தடுக்க வேண்டியதற்காகவும்,சீவகாருண்ய ஒழுக்கத்தைப் பரவச் செய்வதற்காகவுமே ஏற்படுத்தப்பட் டன என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கும்.
அதன் பின்னர் “யாகங்களிலும் உயிர்க்கொலை’ கூடாது என அதனையும் நீக்கும் பொருட்டு வேருெரு உபாயத்தால் தடுக்கலாயினர் பெரியோர். ‘யாகத்தில் கொல்லப்பட்ட ஆடா னது சுவர்க்கத்தில் இரும்புக் கொம்புகளையுடையதாயிருக் கும்; யாகத்தைச் செய்தவன் சுவர்க்கத்தை அடையும் பொழுது அந்த ஆடு தன் இரும்புக் கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழிக்கும்’ என ஒரு கதையைக் காட்டி, அதன் வாயிலாக யாகம் செய்தவன் இழிவை விளக்கி, “யாகஞ் செய்தல் பெரிய பாபச் செயலாகும்; ஆதலின் யாகத்தை முன் னிட்டும் உயிர்க் கொலை புரியலாகாது’ என்று விலக்கு ஏற்ப டுத்தி மறுத்திருக்கின்றனர். இவ்வுண்மையை,
'அயமகத்தினில் அரசநீமடுத்த அம்மறிகள்
செயிர் தழைந்து கண் தீயுக வரவுபார்த் திருக்கும் பயில் விசும்பு செல்காலையில் வெருவரப் பாய்ந்து வயிறு போகும் வல் விருப்பினுென் மருப்பினின் மாதோ'

Page 16
76 ஆத்மஜோதி
*படுத்திடும் மறிகள் வேள்வி புரிந்தவன்
அடுத்திடுங் காலம்நோக்கி அழல்விழி
யொழுகப் பாய்ந்து ܚ வடித்த காரிருப்பில் செய்த மருப்பினுல்
வயிறு போழ்ந்தது எடுத்துநா முரைக்கக் கேட்டி இறைவ
என்றுரைக்கலுற்றன்" (பாகவதம் 4-ம் ஸ்கந்தம்) என வருவதாலறியலாம். இன்னும்,
"அவி சொரிந்தாயிரம் வேட்டலினுென்றன்
உயிர் செகுத்துண்ணுமை நன்று" (திருக்குறள்)
அதாவது - நெய்யை விட்டு ஆயிரம் யாகஞ் செய்வதை விட ஓர் உயிரைக் கொன்று உண்ணுதிருப்பதே நன்று என நாயனுரும் யாகக் கொலையைத் தடுத்துக் கூறியுள்ளதை அறிக.
'ஊனுண்டுயிர்கட் கருளுடையே மென்பாரும் தானுட்ம்பாடின்றி வினையாக்கு மென்பாரும்
காமுறு வேள்வியிற் கொல்வாரும் - இம்முவர் தாமறிவார் தாங்கண்டவாறு' (திரிகடுகம்)
என்பதையுமறிக.
சங்கராச்சாரியார் முதலியோரும், பூர்வ மீமாம்சகர் போன்ற யாக விருப்பமுடையோர்களின் கருத்தைக்கூட எதிர்த்துள்ளனர். மாதவரும் பூரீ கண்ட சிவாச்சாரியார் முதலி யோரும் யாகத்திற் பயனில்லை என்றே கூறியுள்ளனர்.
தருமர் செய்த யாகத்தாற்கூட பயனில்லையென்றும், ஒரு புரு தன்னலத் தியாகம் செய்தமையே பெருமைக்குரியதென் றும் பாரதமே கூறுகிறது. தருமரின் யாகமே பயனுண்டாக வில்லையென்றல், இந்த யாகம் என்பது என்ன பயனளிக்க வல்லது.
இதிலிருந்து, நாகரிகக் குறைவாயிருந்த அக்காலத்திலி ருந்தே இந்துமத வேதங்களாலும், மதாச்சாரியர்களாலும் யாகபலி ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பது நன்கு உணரக் கிடக்கிறது. -தொடரும்

ஆத்மஜோதி 77
தம்பலகாமம் மேற்குமலைத் தொடரிலுள்ள கழனி மலையில் நடந்த அற்புதம் தேவர்கள் வணங்கும் ஆலயத்தைத் தரிசித்தவர் கண்டதாகக் கூறிய ருசிகரமான தகவல்கள் (க, வேலாயுதம் - தம்பலகாமம்.)
பனிபடர்ந்த இமயத்தின் உச்சியில் அமைந்துள்ள ஆதி கைலாச மலைச்சிகரத்திற்குத் தெற்கே முக்காத தூரத்தில் கழனி மலை என்னும் தெய்வீகச் சிறப்புமிக்க பதியிருப்பதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. இதே போல் தென் கைலையா கிய கோணேஸ்வரத்துக்குத் தெற்கே முக்காத தூரத்தில் கழனிமலை யென்னும் புண்ணியபதி இருப்பதாகவும் இந்த இரு கழனிமலைகளும் கைலாசபதிக்கு மிக உகப்பான உறை விடங்கள் என்றும் புராண நூல்கள் மிகச் சிலாகித்துக் கூறு கின்றன. வட கைலையில் பசுபதிக்கும் அம்பிகைக்கும் திரும னம் நடைபெற இருந்த போது அந்த வைபவத்தைக் கண்டு களிக்கத் தமிழ் முனிவரான அகஸ்தியர் வட கைலையின் அண் மையிலுள்ள கழனி மலையில் வந்த போது வடபால் தாழ்ந்த தென்றும் அதைச் சமன் செய்யும் நோக்கில் இறைவன் தென் கைலை செல்லுமாறும் அங்கு திருக்கல்யாண கோலத்தைக் காணலாம் என்று அகஸ்தியருக்குக் கூறி தென்பகுதிக்கு அனுப்பி வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அகஸ் தியர் மனைவி லோபா முத்திரையுடன் ஈழம் வந்து கோணேஸ் வரத்தைத் தரிசித்து அங்கு அம்மை அப்பனின் திருக்கல்யா னக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார் என்று திருக்கோணு சலப் புராணம் கூறுகின்றது. அதன் பின்னர் முனிவரும் மனைவியும் திருக்கோண ஸ்வரத்துக்குத் தெற்கே முக்காத தூரத்தில் உள்ள அருள் சிறப்புமிக்க கழனி மலைக்கும் மகா வலி கங்கைக்கும் சென்ருர்கள் என்றும் நூல்கள் கூறுகின் றன. மேகத்தோடு உறவாடும் இமயமலைச் சிகரத்திலுள்ள புனித ஸ்தலமான கேதாரநாத் செல்லும் வழியில் அலகந்தா மந்தாகின் நதிகளுக்கிடையே அகஸ்தியர் கோயில். அகஸ்தி யேக்சுரம், அகஸ்திய ரிஷி போன்ற அகஸ்தியரின் பேர் கொண்ட இடங்கள் காணப்படுவது போல் தென் கைலையான கோண்ே ஸ்வரத்துக்குத் தெற்கே முக்காத தூரத்தில் தம்பல கமம் மேற்கு மலைத் தொடரிலுள்ள கழனிமலைச் சாரலில் மகாவலி கங்கையோரம் அகஸ்திய ஸ்தாபனம் என்னும் புண்

Page 17
78 ஆத்மஜோதி
ணியபதி காணப்படுவதால் வடகைலை தென்கைலை ஆகிய இரு பதிகளுக்கும் அகஸ்தியர் யாத்திரை செய்துள்ளார் என்பதை உறுதிப் படுத்துவதாக உள்ளது. கோணேஸ்வரம் பறங்கி யர்களால் அழிக்கப்படும்போது இந்தக் களனி மலைப்பிரதே சத்தில் கோணேஸ்வரரின் திரு உருவைக் கொண்டுவைத்து வழிபட்டுப் பின் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்ய வேண் டும் என்று கோணேஸ்வர ஆலய ஸ்தாபகரான குளக் கோட்டு மன்னர் தீர்க்க தரிசனமாகக் கூறி இருப்பதாக கோ ணேஸ்வரர் கல்வெட்டு பின் வருமாறு கூறுகின்றது.
"மாந்தளிர் போல் மேனியுடைப் பறங்கி வந்து மாகோனைப் பதி அழிக்க வருமன்னுளில் வேந்த தென்பால் கழனிமலே யொன்றுண்டாங் ஈசனுக்கு ஆலயமொன்று இயற்றிப் பின்னர்’
(கோணேஸ்வரர் கல்வெட்டு)
இந்த வாசகத்துக்கு அமையவே இடிபட இருந்த கோ ணேஸ்வரர் ஆலயத்துள் சைவப் பெரியார்கள் கோணேஸ் வரரின் திருஉருவை எடுத்து வந்து மேற்படி மலைச் சிகரத் தில் ஸ்தாபித்துப் பூசித்துவந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன. கோணேஸ்வரர் கல் வெட்டு திருக்கோணுசலப் புராணம் போன்ற நூல்கள் கோணேஸ்வரரின் அறிவுக்குப் பின் கழனி மலையில் வைக்கப் பட்டுள்ள கோணேஸ்வரரின் திரு உருவுக்குக் கோயில் கட்டி வழிபடும் முறைகளைத் திரும் பத் திரும்பக் கூறுகின்றதே யன்றிப் பறங்கியரால் அழிக்கப் பட்ட கோணேஸ்வரம் பற்றி ஒரு வார்த்தையேனும் கூருதது கவனிக்கத்தக்கதாகும்.
நாய் விட்டு மரை பிடிக்கும் வேட்டை
பழமையில் தம்பலகாமம் வயல்வெளிகளில் (மாரி) பெரும் போக வேளாண்மை செய்வதில்லை. காரணம் இங்கு மக்கள் மிகச் சொற்பமாகவே வாழ்ந்தனர். மாரி மழையும் மிகக் கடுமையாகப் பெய்யும். மாரிகாலத்தில் வயல் வெளி கடல் போல் வெள்ளம் நிரம்பிக் காட்சி தரும். ஆகவே சிறு தொ கையினர்களாக வாழ்ந்த மக்கள் கோடையில் மட்டுமே சாகு படி செய்வார்கள். மாரியில் தாயம் எறிந்து விளையாடுவதும் கோஷ்டியாகச் சேர்ந்து நாய் விட்டு மரை பிடிக்கப் போவதை யும் பெரும்பாலும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். நாய்விட்டு மரை பிடிப்பதென்றல், பத்துப் பதினைந்து பேர்கள் ஒருங்கு

ஆத்மஜோதி 79
சேர்ந்து நன்றகச் சுவடு பழக்கப்பட்ட வேட்டை நாய்களு டன் மழை பெய்து ஈரமாகத் தரை இருக்குங் காலங்களில் மரை பிடிக்கும் வேட்டைக்குச் செல்வார்கள்.
அங்கு ஈரத் தரையில் பதிந்து காணும் மரை அடியைக் கண்டதும் எல்லோரும் ஒரு இடத்தில் நின்று நாய்களைக் கொடியால் கட்டி எடுத்துக் கொண்டு மிருகத்தின் அடிச்சுவட் டைத் தப்பவிடாமல் துப்பாக்கியுடைய வேட்டைக்காரர் முன் செல்ல ஒருவர் பின் ஒருவராக வரிசையாக அடிச்சுவட்டைத் தொடர்ந்து செல்வார்கள். எக்காரணம் கொண்டும் மரையின் அடியை விலகிச் செல்ல மாட்டார்கள். அப்படிச் செல்வது வேட்டை மரபல்ல. அத் துடன் அடிச்சுவட்டை விலகவிட்டால் வேட்டை இலட்சியம் தோல்வியுறுவதுடன் காட்டில் திசை தப்பவும் நேரிடும். ஆகவே நாய் வேட்டைக்காரர்கள் அடிச் சுவடு சென்றிருக்கும் காடு இறிசல் நிறைந்து இருந்தாலும் குனிந்தும் தவழ்ந்தும் எதிரில் மிகக் கடுமையாகக் காணப் படும் காட்டுப்பகுதியிலுள்ள புதர்களை வெட்டி அப்புறப்படுத் திக் கொண்டும் வேட்டைக்காரர்கள் விடாமல் அடிச்சுவட் டைத் தொடர்ந்து செல்வார்கள்.
தேடிப் போகும் மிருகம் அண்மையில் நின்று மேய்ந்தோ அல்லது படுத்துக்கிடந்தோ இருந்தால் மரையின் சுவடு நாய் களுக்கு அதிகமாக விழும். அப்போது நாய்கள் பிடித்திருப்ப வரிடம் இருந்து பறித்துக் கொண்டு மரையைக் கடிக்க ஒட முயலும். அவைகளின் மோப்ப நிலையை அறிந்து கொண்டு வேட்டையாளர்கள் நாய்களை அவிழ்த்து விடுவார்கள். அவை கள் துப்பாக்கி ரவைகள் போல் காட்டில் பாய்ந்து சென்று மரைகளைக் கடித்துக் கொள்ளும் அல்லது நீர் நிலைகளில் மறித்துக் கொண்டு குரைக்கும். அதைக் கேட்டு துப்பாக்கிக் காரர்கள் ஓடிச் சென்று மிருகத்தைச் சுட்டுக் கொல்வார்கள்.
மலைக்காட்டில் திசை தப்பினுர்
பன்றியோடு கூடிய கன்றும் மலம் உண்ணும் என்பது பழமொழி. இதற்கேற்ப ஜீவகாருண்யமிக்க சிவபக்தரான மயில்வாகனனுர் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க மரை வேட்டைக்கு ஒருமுறை போனுர். கானகத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசையே அவரைக் காட்டுக்கு இழுத்துச் சென்றது என்று கூறலாம்.ஒரு உயிருக்கும் ஆபத்துஏற்படக் கூடாது இறைவனே என மனதுக்குள் வேண்டிக்கொண்டே

Page 18
80 ஆத்மஜோதி
காட்டுக்குச் சென்ருர், தம்பலகமத்துக்கும் மேற்கே அநுராத புரத்திற்கும் இடையே சுமார் ஐம்பது மைல் கல்வரை விரிந்து கிடக்கும் மலை வனத்தில் தம்பலகமத்தையொட்டி இந்த மேற்கு மலைத்தொடர் இருக்கிறது. ஆயினும் கல்வெட்டுகள் கூறும் கழனிமலைச் சிகரம் எது என்று இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. தம்பலகாமம் முன்னைநாள் கோ ணேஸ்வரர் கோயில் பராமரிப்புக்காரராக இருந்த முதலாளி யார் சபாபதிப்பிள்ளை என்னும் கனவான் பலமான ஒரு வேட் டைக் கோஷ்டியை அழைத்துச் சென்று உலமியணுற்று ஒர மாகப் பலநாள் தேடுதல் நடத்தினுர்.
மிகுந்த பிரயாசத்தின் மீது கோணேஸ்வரரின் திரு உரு வைப் பக்தர்கள் கொண்டுவந்து பீடமமைத்து வழிபட்ட மலைச் சிகரத்தைக் கண்டுபிடித்தனர். அதற்கு மேல் கொண்டு நடத்திய தேடுதலால் பயனுென்றும் ஏற்படவில்லை. ஒரு பக் கம் மனிதர் ஏற வசதியற்ற செங்குத்தான மலை. மறு புறம் உலமியனுறு. சலிப்படைந்த அவர்கள் ஊர் திரும்பினர். முத லாளியாரின் முயற்சி வெற்றி அளித்திருக்குமானல் புராணங் களும் கல்வெட்டும் மிகச் சிலாகித்துக் கூறும் சிவனுக்கு மிக உகப்பான வணக்கஸ்தலம் ஒன்று சைவ மக்களுக்குக் கிடைத் திருக்கும். இந்தச் சுவாமி மலைக் காட்டுக்கு வேட்டைக்குச் செல்பவர்கள் சாம்பிராணி தூப மணத்தை நுகர்ந்ததாக இன் றும் சிலர் கூறுகின்றனர். மயில் வாகனனுர் சென்ற வேட் டைக் கோஷ்டி மேற்கு மலைத் தொடர்க்காட்டில் ஒரு மரையின் அடிச்சுவட்டை பின்பற்றி ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தது. v.
மலை வனம் மத்தியான வேளையிலும் இருண்டு பயங்கர மாகக் காட்சி அளித்தது. ஆகாயத்தைத் தொடுவது டோல் மராமரங்கள் வளர்ந்திருந்தன. மலை அடுக்குகளும் பயங்கரப் பள்ளத்தாக்குகளும், சம நிலங்களுமாகக் காடு பல விதமாகக் காணப்பட்டது. செங்குத்தான சிகரங்களில் இருந்து அருவிக ளாக விழும் ஓசை தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. வேட் டைக்காரர் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றுகொண்டி ருந்தனர். நீண்ட அணியில் பிற்பகுதியில் சென்றுகொண்டி ருந்த காட்டுப் பழக்கமற்ற மயில் வாகனணுருக்கு மலம் கழிக் கும் உபாதை ஏற்பட்டதால் அணியை விட்டு விலகி ஒரு புதர் மறைவில் மலம் கழித்துச் சுத்தி செய்து கொண்டு வேட்டைக் கோஷ்டியைத் தொடர எண்ணிப் பார்த்த போது வேட்டைக்

ஆத்மஜோதி 83.
கோஷ்டியைக் காணவில்லை. அவர்கள் மரையடியோடு ஒரு சிகரத்தில் ஏறி மறுபுறம் இறங்கிக் கொண்டிருந்தனர்.
ஆட்களைக் காணுமல் பெரும் பீதி அடைந்த மயில்வாகன ஞர் பெரும் குரல் எடுத்துக் கூவிஞர். ஒன்றும் பயனில்லை. காடு இருண்டு வந்தது. மயில் வாகனனுர் பரித வித்தார். பொழுது அடங்கு முன் இந்த மலை வனத்தை விட்டு இறங்கி ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடவேண்டும் என்று ஓடினர். எதிரே காடு சூழ்ந்த சுவர் ப்ோன்ற மலை வந்தது. இப்படி நாலா புறமும் ஓடிப் பார்த்தார். அவர் போன திச் கெல்லாம் மலையே வந்தது. மலை சூழ்ந்த ஒரு சமதரைக் காட் டில் தான் அகப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் மிக வருந்தினுர், அவர் வாய் அவர் இஷ்ட தெய்வமான சம்புவின் நாமத்தை இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருந்தது. காடு நன்றக இருண்டுவிட்டது.
யானை, புலி, கரடி போன்ற குஷ்ட மிருகங்களின் குரல் கள் கேட்கத் தொடங்கின. முன் பின் காட்டு அனுபவம் எது வும் அறியாத மயில்வாகனனுர் செய்வது அறியாது கலங்கி ஞர். இனியும் கீழே நின்று கொண்டிருப்பது அபாயமானது என்றெண்ணிய மயில்வாகனனுர் பெரும் பிரயாசை எடுத்து ஒரு மரத்தில் ஏறி நான்கு கிளைகள் சந்திக்கும் மர இடுக்குள் வசதியாக இருந்து கொண்டார். இனிப் பயம் குறைவு ஆயி னும் பசி அவரை பிடுங்கித்தின்றது. கோட்டாவிகள் எடுத் தபடி மர இடுக்குக்குள் கலங்கி இருந்தார். காட்டின் பயங் கரத்தை எண்ணி மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த வரை பசி-அலைச்சல்-சோர்வு எல்லாமாகச் சேர்ந்து நித்திரை யில் ஆழ்த்தியது. f
காட்டில் ஒரு கோயில்
இப்படி எவ்வளவு நேரம் நித்திரை கொண்டாரோ ஏதோ ஒரு காரணத்தினுல் விழித்துக்கொண்டார். ஏதோ ஒரு சத்தம். மேளச்சத்தம் கேட்பது போல் இருந்தது. அங்கே தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போலவும் இருந்தது. நம்மைவிட்டு வீட்டுக்குப் போன வேட்டைக் கோஷ்டியினர் தான் தன்னைத் தேடி வருகிறர்கள் என்று எண்ணியபோது அவர் மனம் துள்ளியது. ஆண்டவனுக்குப் பல முறை நன்றி தெரிவித்துக் கொண்டார். நேரம் என்ன இருக்கும் என்று வானத்தைப் பார்த்த போது ஆளும் மீன் வெள்ளிக் கூட்டம்

Page 19
82 ஆத்மஜோதி
உச்சிவானில் இருந்து மேற்குப்புறம் சரிந்துகொண்டிருந்தது. உத்தேசமாக விடியச்சாம வேளையாக இருக்கும் என்று அவ ருக்குத் தோன்றியது. இவ்வளவு நேரமாக இந்த மரத்துள் தூங்கி இருக்கிறேமே என்று எண்ணியவராக வெளிச்சம் தெரியும் பக்கம் நோக்கிப் போக மயில்வாகனஞரின் மனம் பர பரத்தது. ஆயினும் பயமாக இருந்தது. இப்படிக்கொஞ்ச நேரம் சென்றது. வெளிச்சத்தையும் மேளச் சத்தத்தையும் கேட்டு மரத்தில் இருக்க அவரால் முடியவில்லை.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இறங்கி பயம் பாதி அச்சம் பாதியாக வெளிச்சத்தை நோக்கி நடந்தார். குறிப் பிட்ட இடத்தை நெருங்கியதும் அவர் அப்படியே மலைத்துப் போஞர். அவர் எண்ணியபடி தன்னைத் தேடி வந்தவர்கள் கொண்டுவந்த வெளிச்சம் அல்ல.அது ஒருமாபெரும் கோயில். பூசை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது என்ன நாம் கனவு காண்கிருேமா? என்று தன்னை நன்ருக நிதானித்துப் பார்த்துக் கொண்டார்.நல்ல விழிப்பு நிலையில் இருப்பதாகவே தெரிந்தது. هر.
இது என்ன காட்டில் கோயில் இரவில் பூசை நடக்கிறதே என்று ஆச்சரியக் கடலுள் ஆழ்ந்தார். மந்திரத்தால் கட்டுண் டவர் போல் ஒரு தூண் மறைவில் நின்று பயபக்தியோடு அந்த அதிசயக் கோயிலில் தெரியும் ஆண்டவனை ஸ்தோத்த ரித்தார். தீபங்கள் ஜெக ஜோதியாக ஜொலித்தன. கேர்யிலுள் இரு பக்கத்திலும் பொன்னிறமான பக்தர்கள் சிரசில் கூப்பிய கரங்களுடன் இறைவழிபாடாற்றிக் கொண்டு நின்றனர். ஒரு இந்திர ஜாலக் காட்சியைக் காண்பது போல் மயில் வாக்ன ஞர் சிரசில் கூப்பிய கரங்களுடன் ஆனந்த ப்ர்வசனுக நின் ருர், கோயிலில் ஏராளமான பக்தர்கள் வணக்கத்தில் ஈடுபட்டு நின்ருலும் ஒருவருடன் ஒருவர் பேசியதாகத் தெரியவில்லை.
பூசை முடிந்தது, எல்லோருக்கும் அர்ச்சகர் திருநீறு, சந் தனம், தீர்த்தம், பிரசாதம் வழங்கினுர். மயில் வாகனணுருக் குப் பிரசாதம் கொஞ்சம் கூடுதலாகவே கிடைத்தது. இந்த ஆச்சரியங்களைக் கண்டு பசியை மறந்திருந்த அவருக்கு கோயில் அமுதைக் கண்டதும் திரும்பவும் பசி வருத்தத் தொடங்கியது. ஆகவே அந்தத் தூண் மறைவில் இருந்து தனக்குத் தரப்பட்ட அமுதில் அரைவாசிக்கு மேற்பட்ட அமுதை ஆவலோடு உண்டார். பசி குறைய நித்திரை அவரை

ஆத்மஜோதி 83
ஆட்கொண்டது. தூணுேடு சாய்ந்த மாதிரியே அவர் அயர்ந்து நித்திரை ஆஞர். அவர் திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது பொழுது விடிந்து சிறிது நேரம் சென்றிருந்தது.
கோயிலில் ஒரு மனுவையும் காணவில்லை. மலை வனத்தின் மத்தியில் தெய்வீகமாகத் தோன்றும் அந்த ஆலயம் அவருக்கு வியப்பையும் பயத்தையும் ஊட்டியது. இரவு வழிபாடு ஆற் றிய அந்தச் சுவர்ண நிற மனிதர்கள் யார்? அவர்கள் எங்கே போய் இருப்பார்கள் என்றெல்லாம் அவ்விடத்தில் நின்று சிந் தித்துப் பார்க்க அவருக்குப் பயமாக இருந்தது. கோயிலை நோக்கி பலமுறை வணங்கிய மயில்வாகனனர் பிரசாதம் தந்த ஐயர் கிழக்குப் பக்கத்தை நோக்கிப் போகுமாறு கையால் காட்டி இருந்தார். ஆகவே அந்தத் திசையில் விரை. வாக நடந்தார்.
இந்த அற்புதத்தை ஊரவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகும் வழியைப் பிறகு கண்டு பிடிப்பதற்காக பச்சைக் குளைகளை முறித்துப் போட்டுக் கொண்டே விரைவாக நடந்தார். இப்போது அவரிடம் ஒரு புதுத்தென்பு காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணிவரை ஆகிக் கொண்டிருந்தது. தூரத்தில் பறை மேளச்சத்தமும் துப்பாக்கி வேட்டு முழக்கங்களும் மிக இலேசாகக் கேட்கத் தொடங்கின. தன்னைத் தேடி ஆட்கள் வருகிறர்கள் என்ற மகிழ்வோடு மேளச் சத்தம் கேட்கும் திசையை நோக்கிப் பச்சைக் குஜள யை முறித்துப் போட்டவாறு மயில் வாகனனுர் விரைவாக நடந்தார். இப்போது அவரைத் தேடி வந்த கோஷ்டியும் அவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டனர். அவரைத் தேடி வந்த கோஷ்டியினருக்கு அவரைப் பார்த்ததும் பேராச் சரியமாக இருந்தது.
காட்டில் தொலைந்து போன மனிதன் சந்தனம் பூசிக் கொண்டு வருவது அளவில்லாத வியப்பை ஊட்டியது. அதை விட அவர் சொன்ன காட்டில் கண்ட் கோயிலின் கதை இன். னும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களால் அதை நம்ப முடிய வில்லை. ஆயினும் அவர் அணிந்திருந்த சந்தனம் அவர் வழங் கிய அமிர்தம் போன்ற கோயில் பிரசாதம் அவர்களை நம்ப வைத்தது. பொழுது சாய்ந்துவிட்டாலும் அவர் முறித் கப் போட்டு வந்த பச்சைக்குளைகளைக் கண்டுபிடிக்க முயன்ற னர். இரண்டு மூன்று குளைகளைக் கண்டதும் அவர்கள் உற்

Page 20
84. ஆத்மஜோதி
சாகம் அதிகரித்தது, பிறகு எவ்வளவு தேடியும் அடையா ளத்துக்காக முறித்துப் போட்டு வந்த குளைக் கொப்புகளைக் காண முடியவில்லை. ஆகவே அவர்கள் வீட்டுக்குத் திரும்பி அவர்களுடன் மற்றும் பல கோஷ்டிகளும் போய் தேடல் நடத் தினர். சிலர் காட்டில் தங்கி இந்த அதிசயமான ஆலயத்தைப் பார்க்கும் ஆவலுடன் தேடினர். என்ன தேடியும் மயில்வாகன ஞர் குறிப்பிடும் நான்கு பக்கமும் சுவர்கள் பேரல் எழும்பிய மலேகளேயும் மத்தியில்சமதரையான காட்டையும்கோயிலையும் காண முடியவில்லை. அந்தப் பகுதி எங்கும் காடடர்ந்த மலைச் சிகரங்களும் பள்ளத்தாக்குகளுமாக இருந்ததால் தேடுதலில் ஈடுபட்ட பலர் முன் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தனர். மயில்வாகனனுர் இறந்து பல வருடங்கள் சென்றதின் பின் கோணநாயகர் கோயில் பராமரிப்பதாக இருந்த துவாதிப் பிள்ளை முதலியார் பெரிய ஏற்பாடுகளுடன் பல வாரங்களா கக் காட்டில் தங்கி தேடுதல் நடத்திய போது கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட போது கோணேஸ்வரரின் உருவைக் கொண்டு வந்து பீடமமைத்து வழிபட்ட மலைச்சிகரத்தைத் தெற்பைக் குளத்துக்கும் உலமியணுற்றுக்கும் இடையே கண்டு பிடித்த னர். அதற்கு மேற்கொண்டு ஒன்றும் கண்டுபிடிக்க.அவர் களால் முடியவில்லை. மயில்வாகனனுர் குளை முறித்துப் போட்டு வந்த வழியைக் கண்டுபிடிக்க இன்றுவரை ஒருவரா லும் முடியவில்லை.
ஓம் சாந்தி சாந்தி!!
SFLDuilo
உண்மையான சமயம் ஒருபோதும் சமதர்மத்திற்கு மாறு: பட்டதல்ல. சாதி, குலம், பிறப்பு என்ற எல்லைகளைக் கடந்ததே. சமயம், இறைவன் எல்லா உயிர்வர்க்கங்களுக்கும் தாயும் தந்தையுமாக - அம்மையப்பணுக இருக்கின்றன் என்பது சமய நெறியின் தத்துவம். அப்படியாளுல் அவன் எப்படி உயிரினங் களிலே தாழ்வுயர்வுகளை - மேடுபள்ளங்களை அங்கீகரிப்பான்? ஏழாம் நூற்றண்டில் தோன்றிய அப்பரடிகள் சமதர்மத்திற்கு ரோதமான பிரிவு உணர்ச்சிகளை, அப்பட்டமான தன்னல் வாழ்க்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார் .
ஆன்மீகத்தின் அடிப்படை எண்ணம் தன்னை அறிதலாகும். ஆன்மாவைப்பற்றி அறிதல் ஆத்மீகம். அதாவது உயிரியலைப் பற்றிய அறிவு. -தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆத்மஜோதி SR 5
அருள் பொழியட்டும் அருளாட்சி கழகத் தந்தை 292வது குருமகா சன்னிதானம் பூநீலநீ மதுரை ஆதீனம்
இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற அத்துணைப் பேருக்கும் நிரந்தரமான தலைவன் அந்த எல்லாம் வல்ல எம்பெருமான். அவருடைய பாரபட்சமற்ற தீர்ப்பின்படிதான் (Impartial budgement of the Amighty God) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிருேம். ஒவ்வொருவ ரும் முன் பிறவியில் செய்த புண்ணிய பாவத்தின் அடிப்படையில் தான், தொழில், பதவி, மனைவி, மக்கள், அறிவு, ஆற்றல் பக்குவம், ஞானம் எல்லாம் அமைகின்றன. ஆனல், இந்தப் பிறவியில், நாம் செய்கின்ற புண்ணிய பாவச்செயல்களுக்கு இந்தப் பிறவியிலேயே நமக்கு பலன் கிடைக்கிறது. காரணம் இது கலியுகம். இதனை அனுபவத்தில் ஒவ் வொருவரும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்கு நன்மை செய்தால், வேறு யாரோ ஒருவர் மூலம் நன்மை கிடைக்கும். ஒருவருக்கு தீங்கு செய்தால், வேறு யாரோ ஒருவர் மூலம் நமக்கு தீங்கு கிடைக்கும். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்', வினசகாலே விபரீத புத்தி என்பதனையும், நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
நம்முடைய மதுரை ஆதீனத்தை நிறுவி அருளிய ஞானசம்பந்தப் பெருமான் ஏழாம் நூற்ருண்டில் எழுந்தருளி இந்து சமய மாண்பை உல குக்கு அறிமுகப்படுத்தினர். திருநீற்றினுடைய அருமை, பெருமைகளை எடுத்து விளக்கினர். அவர் வாழ்ந்த காலத்திலே கூன்பாண்டிய மன்ன னுடைய ஆட்சி நடந்துகொண்டிருந்தது. திருநீறைப்பூசினுல் மூன்று நாள் தீட்டு. அவன் திருநீறு பூசியிருந்தான் நான் பார்த்தேன் என்று சொன்னல் மூன்று நாள் தீட்டு. 'கண்டு முட்டு கேட்டு முட்டு" என்று சட்டமே இருந்தது. ஆனல் ஞான சம்பந்தப் பெருமானே திருநீற்றின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, தினசரி அவர்களை திருநீறு பூசுமாறு செய்து கொண்டிருந்தார். நம்முடைய அரசியல் சாசனத்திற் கும் நமது கொள்கைகளுக்கும் விரோதமாக ஞானசம்பந்தர் செயல்படு முரே என்று கருதிய கூன்பாண்டிய மன்னன், தன்னுடைய 8,000 சமண் முனிவர்களை ஏவி ஞானசம்பந்தப் பெருமான எப்படியாவது மதுரை மாநகரத்திலிருந்து வெளியேற்றி விடவேண்டும் என்று கருதி, திட்டம் போட்டு வேலை செய்து, தந்திரங்களைச் செய்தும், மந்திரங்களைச் செய் தும், அவரைப்பற்றி துர்பிரசாரங்கள் செய்து கொண்டும் இருந்தான். எந்த அளவுக்கு தீங்கிழைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு தீங்கிழைத்

Page 21
86 ஆத்மஜோதி
தான். ஞானசம்பந்தப் பெருமான மதுரை மாநகரத்திலிருந்து வெளி யேற்ற முடியாமல், வேறு வழியில்லாமல் இறுதியாக ஞானசம்பந்தப் பெருமானின் ஆதீனத் திருமடாலயத்திற்குத் தீயை வைத்தான்.
இதைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான், 'இது பையவே
சென்று பாண்டியற்கு ஆகவே' என்ருர். அதாவது இந்தத் தீபானது மெதுவாகச் சென்று பாண்டிய மன்னனுக்கே பற்றட்டும் என்று சொன்னர். இப்படிச் சொன்னவுடன், இந்தத் தீயானது பாண்டிய மன்னனுடைய உடலிலே வெப்பு நோயாக மாறியது. மிகமிக துன் பப்பட்டான் பாண்டிய மன்னன். 'மெதுவாக சென்று பற்றட்டும்'
என ஏன் சொன்னரெனில் வேகமாக சென்று பற்றினுல் மன்னன் கூன் ப்ாண்டியன் இறந்து படுவான், அதன் வாயிலாக மங்கையர்க்கரசியின் **திருமாங்கல்யம்** இழக்க நேரிடும் என்ற காரணத்திலும் அத்தோடு கூன் பாண்டியனை உயிருடன் வைத்துக்கொண்டே திருத்த வேண்டு மென்ற பெருந்தன்மையான நோக்குடன்தான் அவ்வாறு கூறினன்.
8,000 சமண முனிவர்களும் மன்னனுடைய நோயை நீக்குவதற்காக முயற்சிகள் பல மேற்கொண்டனர். ஆனல், குணமாக்க முடியவில்லை. இறுதியாக, கூன் பாண்டிய மன்னனுடைய மனைவி மங்கையற்கரசி யாரும், பாண்டிய நாட்டின் முதலமைச்சர் குலச் கிறையாரும், சேர்ந்து மன்னனுக்கு சொன்னர்கள். 'மன்னு" ஞானசம்பந்தப் பெருமான் சிறுபிள்ளையாக இருந்தாலும், அவர் ஞானத்திலே மூத்தவர். பக்கு வத்திலே முதிர்ந்தவர். சமுதாயத்தின் நலன் கருதிவாழும் ஞானப் பெருமகன். ஞானப்பெருமக்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைக்கவே கூடாது. மன்னர் நினைத்தது மட்டுமல்லாமல், சமணமுனி வர்களையும் தூண்டிவிட்டு, திருமடாலயத்திற்குத் தீயையும் வைத்து) Gorf.
பெரியாரைப் பேணுது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். என்ருர் வள்ளுவர். அதைப்போல ஞானப்பெரியாராகிய ஞானசம்பந்தருக்கு தீங்கி ழைத்து அவர் உள்ளம் நொந்த காரணத்தினுல்தான், இந்த நோய் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. எனவே அந்த ஞானசம்பந்தப்பெரு மான் எழுந்தருளி வந்து திருநீற்றைப் பூசி ஆசீர்வாதம் செய்தால்தான் உங்கள் நோய் நீங்கும். இல்லையானல் நீங்கள் உயிர்தப்ப முடியாது என்ருர், இதைக்கேட்ட பாண்டிய மன்னன். ‘அப்படியே ஆகட்டும்' என்ருர், ஞானசம்பந்தப்பெருமான் சிவிகையில் எழுந்தருளி அரசவைக் குச் சென்று சிம்மாசனத்திலே அமர்ந்து மன்னனுக்கு திருநீற்றை அணி வித்து,
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; சுந்தரம் ஆவதும் நீறு, துதிக்கப்படுவதும் நீறு;

ஆத்மஜோதி 87
என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பாடி மன்னனுடைய வெப்புநோயை குணமாக்கினர் என்பது மட்டுமல்லாமல் கூன்பாண்டிய மன்னனை 68 நாயன்மார்களில் ஒருவராக ** நின்றசீர் நெடுமாற நாயன'ராக மாற் றிஞர். கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியாரும், முதலமைச் சர் குலச்சிறையாரும், தினசரி திருமடாலயத்திற்கு வந்து, ஞானசம்பந் தப் பெருமான தரிசித்து, ஞானசம்பந்தப் பெருமானுக்கு எல்லாவகை களிலும் உறுதுணையாக இருந்து ஆசீர்வாதம் பெற்ற காரணத்தினுல், அவர்கள் இருவரையும், ஞானசம்பந்தப் பெருமான் 63 நாயன்மார்களு டன் இணைத்து அருளினர். அரசை கண்டித்த பெருமை, அரசை திருத் திய பெருமை, சமண அரசை ைேசவசமய அரசாக மாற்றிய பெருமை ஞானசம்பந்தப் பெருமான் ஒருவருக்கே உண்டு. ஞானசம்பந்தப் பெரு மானது காலத்திற்குப் பின்னர், தொடர்ந்து நமது ஆதீனத்தில் எழுந்த ருளி இருக்கின்ற குருமகா சந்நிதானங்கள் அனைவரையும், அரசு ஆட்சி யாளர்கள் அனைவரும் வந்து தரிசித்து ஆசிபெற்று, ஆட்சியை நடத்தி னர். ஏதாவது சட்டம் இயற்றவேண்டும் என்ருல், மகா சன்னிதானங்க ளின் ஆலோசனைகளைக் கேட்டு, இந்த சட்டத்தை கொண்டு வரலாமா? இதஞல் நமது சமயத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏதாவது தீங்கு நேருமா என்று கேட்டுத்தான் சட்டம் இயற்றினர்கள். ஆட்சியும், சமு தாயமும் நல்ல முறையிலே வளர்ந்தது. ஆனல் இன்றைய தினம் தான் தோன்றித்தனமாக சட்டங்களைக் கொண்டு வருகிருர்கள். ஞானப்பெரு மக்களின் ஆலோசனைகளை, ஆசீர்வாதங்களை பெறுவது இல்லை. ஞானப் பெருமக்களின் மனத்தை நோகவைப்பதன் மூலம் சீர்கேடுகள் பல ஏற் படுகின்றன. •
பொதுவாக, பக்தி என்பது திருநீறு பூசுவதோ, சந்தனம் குங்குமம்
மட்டும் அணிவதோ அல்ல். கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது மட்டும் பக்தி அல்ல. உண்டியலில் பணம் போடுவது மட்டும் பக்தி அல்ல. கும்பாபிஷேகம் நடத்துவது மட்டும் பக்தி அல்ல. லட்சார்ச்சனை கோடியார்ச்சனை நடத்துவது மட்டும் பக்தி அல்ல. பக்திக்கு இலக்கணம் என்னவென்றல், பக்திக்குப் பிறகு சில நடைமுறைகள் இருக்கின்றன. அவைகள் தான், பெரியோர்களிடம் பண்பாட்டுடன் நடந்து கொள் வது, அவர்களிடத்திலே பணிந்து ஆசி பெறுவது, நல்ல சிந்தனையோடு இருப்பது, விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மை, பெருந்தன்மை, ஒரு
வரையொருவர் புரிந்து கொள்வது, மனிதனுடைய நிலையாமைத் தன் மையை உணர்ந்து பார்த்து வாழ்வது, மற்ற உயிர்களையும் திம் உயிர் போல் நேசித்து நடத்துவது இவைகள் எல்லாம் சேர்ந்துதான் பக்தியா கும். சமயம் ஆகும். யாரும் எந்த வேஷமும் போட்டுவிடலாம். ஆனல் வேஷமே பக்தியாகி விடாது. வெறும் வேஷமே பக்குவத்தையும் ஞானதி தையும் தந்துவிடாது. உள்ளத்தில், நடையில் தெளிவு வேண்டும்.

Page 22
88: ஆத்மஜோதி
ஞானப் பெருமக்களை அவர்களது உடலில் உயிர் தங்கி இருக்கும் பொழுதே அவர்களைப் பாராட்டாவண்டும். அவர்களின் செயல்களுக்கு எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, அவர் கள் உடலிலிருந்து உயிர் போன பிறகு அவர்களைப் பாராட்டுவதோ, கவிதைகள் எழுதுவதோ, விழாக்கள் நடத்துவதோ, அவர்களைப் பற் றிய நூல்கள் எழுதுவதோ, அவர்களுக்கு மண்டபங்கள் அமைப்பதோ பயனற்றது. அவர்கள் இருக்கும்போதும் இவ்வாறு செய்துவிட்டு, அவர் களது ஆவி பிரிந்த பிறகும் பாராட்டினுல் அது நன்மை பயக்கும்.
மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவரையோ, அவரது கருத்துக்களையோ எவரும் ஆதரிக்க வில்லை. மனம் நொந்தார். எவ்வ ளவோ எடுத்துச் சொன்னர், சமுதாயம் கேட்கவில்லை. அவரது இறுதி மூச்சு அடங்கியது. அவரது இறுதிச் சடங்கில் 21 பேரே கலந்து கொண் டனர். இது வேதனைக்குரியதாகும். அம் மகாகவி இறுதியிலே பாடினுர்,
'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட
மாந்தரை நினைந்து விட்டால்' என்றும்,
*தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த
ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்றும் பாடினுர்.
அதுபோலத்தான் நம் மதுரை ஆதீனத்திற்கு நெருங்கிய தொடர் புடைய வடலூர் வள்ளல், வெள்ளாடைத் துறவி இராமலிங்க சுவா மிகள் காலத்தில் அவருடைய கொள்கைகளையும், கருத்துக்களையும் இவ்வுலகம் ஏற்றுக்கொண்டதா? ஏற்றுக்கொள்ளவில்லை ஆதலால்,
"கட்ைவிரித்தேன் கொள்வாரில்லை
கட்டிவிட்ட்ேன்." என்று பாடினர்.
சாதாரண மனிதர்களுக்குச் செய்கின்ற் தீங்குகளிலிருந்து கூட தப் பித்துக்கொள்ளலாம். ஆனல் ஞானப் பெருமக்களுக்கு இழைக்கும் தீங்குகள், பாவங்கள் மிகமிகப் பொல்லாததாகும்,
ஞானப் பெருமக்கள் ஒவ்வொரு நிலைகளில் (Mood) இருப்பார்கள். அன்புக்கு அன்பாகவும், பண்புக்கு பண்பாகவும், பாசத்திற்கு பாசமா கவும் இருப்பார்கள். அவர்களுடைய மனம் புண்படும் படியாக நடந்து கொண்டாலோ, அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" சின்ற முறைகளில் மாறுபாடாக நடந்தாலோ, அவர்களைப் பற்றி முழு அளவில் புரிந்து கொள்ளவும் மனம் இல்லாமல், தீங்கு நினைத் தாலோ, தீங்கிழைக்கப் பிறரைத் தூண்டினலோ, தீங்கு செய்தாலோ அவர்களுடைய உள்ளம் நொந்தால் அவர்கள் வேதனையுற்ருல் யாரா இம் தாங்கமுடியாது. " சாதுமிரண்டால் காடு கொள்ளாது" எனவே திரு தனிமனிதன், இறைவனுடைய பேரருளைப் பெற வேண்டும் என்ருல் குருவினுடைய அருளைப்பெற வேண்டும்
*குருவருள் இன்றேல் திருவருள் இல்லை".

ஆத்மஜோதி 89
... ' கலிபோர்னியாவில் யோகி சிவலிங்க அடிகளார் யோகப் பண்ணை நடத்துகிறர்
భ్రలలో
இர. ந. வீரப்பன் -
வட அமெரிக்க கலிபோர்னியாவில் பல்லாண்டுகளாக யோகப் பண் ணேயை அமைத்து அதன் இயக்குனராகவும், பேராசிரியராகவும், பயிற் றுனராகவும் இருந்து வருகிறவர் யோகி சுவாமி சிவலிங்கம் அடிகள்.
இவரது முதல) சிரியர் சென்னை கடப்ப சுவாமி சச்சிதானந்தர் ஆவார். இமய ரிவ்ழிகேசத்தில் சுவாமி சிவானந்தாவிடமும் பயிற்சி பெற் றவர் இவர். தமிழகம் சேலத்தைச் சேர்ந்த இவர், முதலில் சென்னை யிலும் பின்னர் சேலத்திலும் அதன் பிறகு, ஜப்பான் ஐரோப்பாவின் பல பகுதிகளின், வட அமெரிக்கா கனடா போன்ற பகுதிகளிலும் யோகப் பயிற்சிகளை நடத்தியுள்ளார்.
ஆங்கிலமும் தமிழும் அறிந்த இவர் அங்கு ஆங்கிலத்திலேயே பாடங்களை நடத்தி வருகிருர் . யோகக் கலைகளைப் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். தலைமையகம் பல ஏக்கர் பரப்பில் காட்டுக் கடற்கரை அமைந்த இயற்கைச் சூழலில் யோகப்பண்ணை அமைந்திருக்கிறது.
ஜப்பானில் மூன்று கிளைகளும், இந்தியாவில் இரண்டும் , வட அமெ ரிக்காவில் ஐந்தும், கனடாவில் இரண்டும், டென்மார்க், ஸ்பெயினில் தலா ஒன்றும் உள்ளன. マ
கலிபோர்னியாவில் கோடை முதலிய வசந்த காலத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதப் பயிற்சிகளை நடத்துகிரு?ர். சைவ உணவு மற்றும் தங்கும் விடுதிகளையும் பயிற்சிக்கூடங்களையும் அமைத் துப் பயிற்சிகளை நடத்துகிருர். 'பிராண யோக வாழ்க்கை' என்ற ஏட் டையும் நடத்துகிருர், ஒம் என்ற சிவ தத்துவத்தைக் கருட்பொருளா கக் கொண்ட இவருடைய பணிகளில் பல துணையாளர்கள் செயலாற்று கிருர்கள். சுதர்சன், சரசுவதி தேவி, யோகநாதன், ஆத்மவதி தேவி, வித்யாதேவி, முகுந்தன், பிரேமதேவி, சங்கர் ஆகிய அனைவரும் அமெ ரிக்கர்கள். ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்களும் பிறரும் இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனர். உலகில் இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரிய யோகப் பண்ணையை நடத்தி வருகிறவர் இவரே. இவரது பெயர் தெரி யாத உலகம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பதஞ்சலி

Page 23
90 ஆத்மஜோதி
மகரிஷி மகானன சிவயோகியின் அருளும் திருவும் யோகி சிவலிங்கத்தடி களிடம் இருப்பதாகக் கருதுகிருர்கள். கடந்த 1981ல் மதுரையில் உல கத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பேராளராகக் கலந்து கொண்டவர், ஐந்தாண்டுகளாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகத் துடன் தொடர்புள்ள இவர் இவ்வியக்கத்தின் காப்பாளர்களில் ஒருவர்.
யோகக்கலையின் பல்வேறு திறன்களையும் நுட்பங்களையும் இவர் உலக ஓர்மை, மனிதத் தத்துவம், சமாதானம், அன்புடைமை, உடல் நலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிருர் . அவற்றை எளி மையான ஆங்கிலத்தில் கவிதையாக, கட்டுரையாக தத்துவங்களை விளக்கி எழுதுகிறர். சைவசமய உணர்வுடன், சமய ஆன்மீக நெறிகளை யும் போதிக்கிருர்,
யோகாசனம், சிரசாசனம், சிவாசனம் போன்ற கலைகளையும் செய் விக்கிருர், 12 வகையான சூரிய வணக்கமும், 12 வகையான சந்திர வணக்கமும் செய்து வருகிருர், 60 வயதுக்கு மேற்பட்ட இவர் இளமை யாக, துறவியாகப் பலருக்கும் பயன்படும் மேதையாகவே வாழ்கிருர், கல்லூரி. பல்கலைக்கழகங்களில் யோகக்கலையின் உயிர்ப்பொருளின் தத் துவங்களைப் பற்றி விரிவுரையும் ஆற்றுகிறர். கதயோகம், அந்தர் யோ கம், பிராணயோகம் முதலிய பல்வேறு அதன் கூறுகளையும், வரலாற் றையும் பயன்களையும் கற்பிக்கிருர்,
தவப்பயிற்சிகளால் மனவமைதிக் கலையை அமெரிக்கர்களிடையே புலனடக்கத் திறனை வளர்த்து வருகிருர், "அனைத்துலக பிராணயோக நிலையம் என்ற பெயரில் இவர் கலிபோர்னியாவில் பெரும் நிலப் பரப் பில் நடத்திவரும் இது பெரும் வியப்பாக உள்ளது. பொருளாதார ச் சிக்கல் எதுவுமின்றி ஆண்டின் பல்வேறு காலத்திலும் உலகின் பலபாகங் களுக்கும் பறந்து சென்று திரும்புகிருர்,
9FLD uU fD
சுவையால் கணிக்குச் சிறப்பு ஏற்படுவது போல, மணத் தால் மலருக்குச் சிறப்பு ஏற்படுவது போல, நீரால் ஆற்றுக் குச் சிறப்பு ஏற்படுவது போல அவனுடைய ஆன்மாவின் தரத்தினுலும்-தகுதியினுலும்(கருத்தாலும்-உணர்வாலும்) மனி தனுக்குச் சிறப்பு ஏற்படும்?
தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆத்மஜோதி 9.
சத்குரு தரிசனம்
- கங்காதரன் - யூனி அரவிந்தாசிரமம், புதுவை -
உள்ளும் புறமும் பரம் பொருளைக்கண்டு அதனுடன் இரண்டறக் கலந்தொன்றி அதன் அருட்குணங்கள் யாவை யும் தன்னகத்தே கொண்டு நடமாடுந் தெய்வமாய்த் திகழ் பவன் எவனே அவனே சத்குரு ஆவான்.
எங்கும் நிறைந்ததும் யாவுமாய் ஆனதும் யாவற்றிலும் மறைந்துறைந்து அனைத்தையும் இயக்குவதும் அனைத்திற் கும் ஆதாரமும் ஆதேயமுமாய் இலங்கும் சத்பொருளை உணர்ந்து அதை உணரவேண்டுமென்ற தணியாத ஆர்வமு டைய சத்தியத் தேட்டங்களுக்கு அதை உணர்ந்து உய்யும் மார்க்கத்தை அருளுபவனே உத்தம சற்குரு ஆவான்.
எதனுடைய இச்சா சத்தியினுல் இவ்விஸ்வப் பிரபஞ்சத் தோற்றங்கள் யாவும் தோன்றி யுகயகமாக சாஸ் வத நியதி களுக்கு உட்பட்டு ஒழுங்காக இயங்கி கொண்டிருக்கின்றதோ எதனுடைய அருளின்றேல் ஒரு விநாடிகூட நம்மால் ஜீவித் திருக்க முடியாதோ எதை உணர்ந்தால் யாவற்றையும் உணர்ந் ததாகுமோ எதை உணர்வதை நோக்கி ஜீவன் நீண்ட யாத் திரை செய்துகொண்டு இருக்கின்றதோ ஊழிக்காலத்தில் யாவும் எதிலொடுங்கி லயமாகி விடுமோ, எதை உணர்ந்த மாமுனிவர்கள் பிறவித்தளையினின்றும் விடுபட்டு மீண்டும் பிறந்திறவாப் பரசாந்த மோனப்பெருநிலையை அடைந்து அமரானந்தத்தில் திளைக்கச் செய்யும் அருள் மறைகளை ஆர்த் தனரோ அப்பரம் பொருளை உணர்ந்து பிறருக்கும் உணர்த்
தும் ஆற்றலுடையோனே சத்குரு ஆவான்.
உள்ள் பொருளை உள்ளவாறு உள்ளாழ்ந்த மோனத்தில் தேர்ந்து தெளிந்தோனும் உலகாய் விரிந்தியங்கும் பரம்பொரு ளேதான் என்பதை உணர்ந்தோனும் உலகத்தளையினின்றும் பிறப்பு இறப்பின் சுழலினின்றும் விடுபட்டு நிரந்தர இன்பத் தில் திளைப்போருமே உத்தம சத்குரு ஆவான்.
உத்தம சாதகன் ஒருவனுக்குத் தன் வாழ்வில் கிட்டும் பெரும்பேறு சத்குரு தரிசனமும் அவருடைய சேவையுமே
யாகும்.

Page 24
92 ஆத்மஜோதி
குரு சேவையின் மூலம் ஆசை அகந்தை அறியாமை நான் எனது என்ற தனியுணர்வு முதலிய கீழியல் குணங்களி னின்றும் முற்றும் விடுபட்டுத் தூய்மையடைந்தோனே உத்தம சாதகன் ஆவான். ,
பல்லாயிரம் பிறவிகளில் செய்த நற்றவப் பயன்களினு லேயே ஒருவனுக்கு சர்வம் வாசுதேவமயம் என்று உணர்த்த சத்குருவின் தரிசனமும் அவருடைய திருவடி நிழலில் தங்கி அவரூக்கு சேவை செய்யும் கிடைப்பதற்கரிய அரும் பெரும் பேறும் சித்திக்கின்றது. w
சத்குருவை நம்போன்று சாதாரண மானிட உடல்தாங்கி இயங்கும் ஓர் உருவமாக கருதலாகாது. எங்கும் நிறைந்ததும் யாவுமாய் விரிந்து இயங்குவதுமான பரம்பொருளாகவே கருத வேண்டும். பரம் பொருளை உணர்ந்தவன் பரம் பொரு ளாகவே ஆகுகிறன் என்று அருள்மறைகள் அருளுகின்றன. இடைவிடா சாதனையால் இறையருளால் பரம்பொருளை சாட் சாத்கரித்த சத்குரு பரம் பொருளே யாவார்.
எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணமாயிருக்கும் ஆசையையும் அகந்தையையும் தகித்தழித்து நிர்மூலம் செய் யும் ஞானுக்கினியாவார் சத்குரு. நாம் அகமலர்ச்சியும் ஆத்ம வளர்ச்சியும் அகண்டாத்ம அனுபவமும் ஐக்யானுபூதியும் அடைவதற்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டுகின்றர். ஆகையினுல் நாம் சத்குருவின்பால் செலுத்தும் பக்தியும் சமர்ப்பணமும் பரிபூரணத்துவமுடையதாக இருக்க வேண் டும். முடிவற்ற நீண்ட ஜீவயாத்திரை முடிவடையுந் தருணம் எப்போது வந்துவிட்டதோ அகந்தைத் தனியுணர்வு அழிந்து அகண்டப் பரவுணர்வே நாமென்று உணரும் சமயம் எப் போது நெருங்கிவிட்டதோ - மாறி மறையுந் தோற்றங்களுக் குப் பின்னே மாருததும் மறையாததும் முக்காலங்களிலும் இருக்கக் கூடியதுமான நிரந்தரப் பேருண்மையை உணர்ந்து, வாழ்வின் உண்மையையும் மரணத்தின் ரகசியத்தையும் அறிந்து பிறப்பிறப்பின் சுழலினின்றும் விடுபட்டு பேரானந் தப் பெருங் களிப்பில் திளைக்கும் சமயம் எப்போது வந்து விட்டதோ இறைவனுடைய அருட்கருணை மாரி எப்போது நம்மீது இடைவிடாது பொழிகின்றதோ அப்போதே ஒருவ னுக்கு இவ் விஸ்வப்பிரபஞ்சத் தோற்றங்கள் இயக்கங்கள் அனைத்தையும் இறைமயமாகக் கண்ட சத்குருவை சரணடை யும் பெரும்பேறு சித்திக்கின்றது.

ஆத்ம:ே 1ாதி 93.
சத்குருவின் ஆற்றல் அபாரமானது. அற்புதங்கள் செய்ய வல்லது. மனிதச் சிறுமதியால் அறிய முடியாதது. கல்வி யறிவு இல்லாதவனையும், சமூகத்தில் மிகக் கடைநிலையில் உள்ளவனையுங்கூட மகோன்னதமான ஆத்மானுபவங்களின் சிகரங்களுக்கு உயர்த்தவல்லது. அது முடவனை மலை தாண் டச் செய்யும்,
ஊமையைக் கவிபாடச் செய்யும். குருடனை இம்மண்ணுல குக்கப்பாலுள்ள விண்ணுலகக் காட்சிகளைக் கண்டு அமரானந் தத்தில் திளைக்கச் செய்யும். சத்குருவின் அருள் நோக்கு அருள் வாக்கு அருட்காப்பு இவைகள் பிறவிப் பிணியகற்றும் அருமருந்து, பிறவிக் கடல் கடத்தும் அருந்தோணி, இறவாப் பெருநிலைக்கு வழிகாட்டும் அருள் மறைகள்,
நீறுபூத்த நெருப்புப்போல நம் இதயக் குகையின் மிக மிக ஆழ்ந்த அமைதியின் மோனத்தில் மறைந்துறையும் அகக் கனலைத் தூண்டி ஒளிபெறச் செய்து ஆர்வத்தழலெழச் சேய் யும் அகண்டப் பெருநெருப்பாவார் சத்குரு.
சத்குரு பிரம்ம சொரூபமான பிரம்மானந்தன்.பிரம்மோப தேசகன். அம்ருதவர்ஷகன். அனந்த சைதன்யன், ஆனந்த சாகரன். இம்மகா புருடனைச் சரணடைந்தோன் அழியாத அமரத்துவ நிலையை அடைகிருன்,
வேதம் ஓதுவதனுலும், உபநிடத மந்திரங்களை மனனம் செய்வதனுலும், அமரத்துவம் அளிக்கும் அருட்குழலாம் கீதையைப் பின்பற்றி நிஷ்காம்யமாகக் கர்மம் செய்வதணு லும், ஞானம் பத்தி முதலிய யோக மார்க்கங்களைப் பின்பற்றி தீவிரமாக சாதனை செய்வதனுலும், சமயூதனமான சமய நிய மங்களை அனுஷ்டிப்பதனுலும், தெய்வத் திருத் தலங்களுக்கு யாத்திரை செல்வதனுலும், புனித நதிகளில் ஸ்நானம் செய்து தான தருமங்கள் செய்வதனுலும் கிட்டும் புண்ணிய பலன்களை யும் ஆத்மீக முன்னேற்றத்தையும் சத்குரு சேவையென்னும் அருந்தவம் ஒன்றின் மூலமாகவே உத்தம சாதகன் அடைகி
நாம்செய்யும் கருமத்தை பொறுத்த தன்று நம்முடைய ஆத்மீக முன்னேற்றம். அக்கருமித்தை எந்த பாவனையுடன் லட்ஷியத்தை ஆதரிசமாகக்கொண்டு செய்கின்ருேம் என் பதையே பொறுத்திருக்கிறது.மனித சமுாதயம் புனிதமானத

Page 25
94 ஆத்மஜோதி
கக் கருதும் கர்மங்களினல் மட்டுமின்றி மிகமிகச் சாதாரண மான கர்மங்களையும் சித்த சுத் தி யு ட ன் உள்விழிப்புடன் இறைஅர்ப்பணமாக செய்வதன் மூலம் இறைநிலை அடைய முடியும்.
சத்குருவின் சாந்தம் தவழும் திருமுகத்தில் சுடர்விட் டுப் பிரகாசிக்கும் நயனங்களினின்றும் வெளிப்படும் அரு ளொளியானது. நம் உள்ளத்தில் ஊடுருவ பாய்ந்து அங்கு உறங்கிக் கிடக்கும் பேருணர்வைத்தூண்டி விழிப்புறுத்தி வீறு கொள்ளச் செய்கின்றது. அவருடைய தெய்வீக செளந் தர்யமுடையவதனங்களினின்றும் வெளிப்படும் மோகனப் புன்னகை யானது நம் உள்ளத்தைக் கவர்ந்து சொக்கச் செய்து நம் கவலைகளையெல்லாம் போக்கி அமைதிக்கடலில் ஆழ்த்துகின்றது. அவருடைய கருனுகடாட்சமென்னும் அருள் தோணியானது நம்மை பிறவியென்னும் பெருந்துயரக் கடலினின்றுங் கரை யேற்றி விடுதலையளிக்கின்றது.
அவருடைய திருக்கரங்களின் ஆசியுடன் கூடிய அருட் தீண்டலின் ஸ்பரிசமானது நம்மை நிச்சலன மோன சமாதி யில் ஆழ்த்தி ஆனந்த மயமான அருளொளி வெளிக்கு உயரச் செய்கின்றது. சத்குருவின் கமல பொற்பாதங்களில் சரண டைவதால் கிட்டும், அவருடைய கருணையானது நம்மை ஜன்மஜன்மாந்திரங்களில் செய்த பாவங்களினின்றும், கீழி யல் குணங்களினின்றும் அகந்தைத் தனிவுணர்வினின்றும் விடுவித்து தூய்மைப்படுத்தி அமரர்களுக்கு அறிவதற்கு அரிதான அகண்டபரமனை உணரச்செய்து நிரந்தரம் ஆத் மானந்தத்தில் திளைக்கச் செய்கிறதென்ருல் சத்குருவின் பெரு மையை விளக்குதல் எளிதோ. مر
அலைத்திரள்கள் வந்துமோத மோத அசைவின்றி கம்பீர் யமாக நிமிர்ந்து நிற்கும் கடற்பாறை போன்று நமதுள்ளம் நிச்சலனமாகவும் பளிங்குபோல் தூய்மையாகவும் இருக்க வேண்டும். ஆசாபாசங்களினின்றும் முற்றும் விடுபட வேண்டும்.
(தொடரும்)

ஆத்மஜோதி 95 ܓ .
്ബി' (I / ീ புராண விரிவுரை
qSLSLSSLSLSSLSLSSqSLSLSLS SLSLSLSSSMSSSLLLLLLS LMTLLqL LLqSqS LLLL LLLLLLLLSqS SLL LLLLLLLLS LSLS SLL LSSLSLSSSSSASASS
முலம்: அருட்கவி கருமாரிதாசர் சுவாமிகள் உரை: புலவர் பொன். தெய்வநாயகி சோதி தெய்வப்பணி மகளிர் மன்றம்-சென்னை
அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் அவ்வப்போது அருள் நூல்கள் பல தோன்றிய வண்ணம் உள்ளன. சங்கக் காலம், இடைக்காலம், தற்காலம் என்ற முக்காலத்திலும் வெளிவரும் அருள்நூல்கள் தமிழுக்கு வளம் தேடுவதாய் அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கவிஞன் தோன்று கிருன் என்பது ஒரு வெளிநாட்டுப் பழமொழியாகும். இந்த இருபதாம் நூற்ருண்டில் நம்மோடு வாழும் கவிஞர் ஒருவர் எழுதிய மாபெருங்காவியம் மாரியின் இலக்கியம். தமிழரின் தொன்று தொட்ட தெய்வ வழிபாட்டு சித்திரத்தை விவாக்கும் காவியம். திருநீற்றின் பெருமாண்பை விளக்கும் காவியம் தேவி கருமாரியம்மன் புராணமாகும்.
இந்த நூல் ஓம் சக்தி காண்டம், தேவி கருமாரி காண்டம் என்ற இரண்டுகாண்டங்களாய் 96 படலங்களாய் அமைந்துள் ளன. ஏழாயிரத்தொரு எழுசீர் செய்யுட்களாய் அமையப் பெற்ற இக்காவியம் புது புனைத்திறம் வாய்ந்ததும், இலக்கிய நயம் மிகுந்ததும் ஆகும். பக்திச்சுவை மிகுதியாக விளங்கும் இந்நூல் சொல் வளமும், பொருள் வளமும் செழித்து விளங்கு வதோடு, பழமைக்கும் புதுமைக்கும் பாலம் வகுப்பதாகவும் உள்ளது.
புராணம் என்ருலே, படிக்க அஞ்சுபவர் - கற்க நாட்டமில் லாதவரும் - கேட்டு வெறுப்படைகின்றவர் ஆகியோரும்கூட கருமாரி புராணத்தை படிக்க வேண்டுமென்று ஆவல் கொள் வர். காரணம் இனிய எளிய தமிழில், எல்லோருக்கும் புரி கின்ற வகையில் எழுதப்பெற்றது ஒரு காரணமாகும். இத்த கைய மாபெரும் காவியம் 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினைந்தாம் நாள் வெளியிடப்பட்ட அருள் நூலாகும். இதனை இயற்றிய திருவேற்காடு அருட்கவியரசு தவத்திரு கருமாரி தாச சுவாமிகள் நாற்பதே நாட்களில் இந்த செய்யுட்களை எழுதியுள்ளார் என்ருல் தெய்வ சக்தியால்தான் அவ்விதம் இயலும் என்பது என்போன்ருேர் நம்பிக்கை.

Page 26
96 ஆத்மஜோதி
தமிழுக்கு அணிகலனுக விளங்கும் கருமாரி புராண காவி யத்தின் முதல் செய்யுள் விரிவுரையை இந்த கட்டுரையில் அளிக்கின்றேன். தொடர்ந்து தொடர் கட்டுரைகளாக வரும் போது தொடர்ச்சியாக வரும் காவிய நூற் பொருளைக் காணுங்கால், நூலாசிரியரின் கவித்திறமும், தமிழ் கவிதைக ளிேன் அருள் மணம் கமழும் பொலிவும், உங்கட்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முதன் முதலாக எழுதும் இந்த உரைநூல் செம்மையாக முடிய எல்லாம் வல்ல் அங்கயற் கண்ணி சமேத ஆலவாய் இறைவன் திருவருளை மனதிலே நினைந்து உரை எழுதத் துணிகின்றேன்.
தோற்றுவாய்:- கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கருமாரி தேவியை அறியாதார் இல்லை. அருளை மாரி போல பொழியும் அன்னை கருமாரியை தைப்பூச நன்னுளில் கண்டு அகத்தியர் வழிபட்டார். அதனைப் பின் பற்றி இப்போ தும் தைப்பூச திருவிழா திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் தைப்பூசந் தோறும் கொண்டாடப்பட்டு வரு கிறது. கருநாக வடிவு கொண்டு, புற்றில் அமர்ந்து அருளாட்சி புரியும் கருமாரி தேவியின் பெருங்கருணையை விளக்குவது இந்த காவியம். காவியத்தின் முதல் துதி:-
"உலகமெலாம் படைப்பவளைக் காப்பவளை அளிப்பவளை
மறைத்தலுட்ன் அருள் செய்வாள நிலமெல்லாம் புரக்கின்ற கோவிந்தன் திருநாமம்
எஞ்ஞான்றும் நவில்கின்றளச் சலமாகி காற்ருகி கனல்பாராய் விசும்பாகும் கருமார் தாயை வாழ்த்த வலம்புரிஷி நாயகனின் மலரடியை நாள்தோறும், நல்லுணர்வால் வழுத்தி நிற்பாம்”
என்பது முதற்செய்யுளாகும்.
அருட்கவிஞர் நூலைத் தொடங்குகின்ற போது உலக மெலாம் என்று தொடங்கியுள்ளார். “உலகமெலாம்" என்று ஏன் தொடங்கிஞர்? உலகமெலாம் என்று ஏன் தொடங்க
வேண்டும்? அரிய சிந்தனை, உரிய ஆராய்ச்சி.
М -தொடரும்

சந்தா நேயர்களுக்கு
திருவருளை முன்னிட்டு எல்லா நலன்களும் பெற்று வாழ் வீர்களாக இச்சுடர் 35-வது ஆண்டுக்குரிய இரண்டாவது சுட ராகும். இவ்வாண்டுக்குரிய சந்தா 25/- ரூபாவையும் அனுப்பி வைப்பதோடு, பழைய நிலுவை இருப்பின் அவற்றையும் சேர்த்து அனுப்பிவைக்க வேண்டுகிருேம். சந்தா இலக்கங் களையும் குறிப்பிட்டு எழுதினுல் உடனே ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். விலாச மாற்றங்களின் போது சந்தா இலக்கம், பழைய விலாசம், புதிய விலாசம் என்றின்ன வற்றைத் தெளிவாக எழுதி அனுப்பிவையுங்கள். ஒரே பெய ரில் பல விலாசதாரர்கள் இருக்கிறர்கள். ஆகவே தெளிவுபெறு வதற்கு மேற்கூறியன அவசியம் தேவை. சிலர் தந்தியில் பணத்தை மாத்திரம் அனுப்பிவிடுகிறர்கள். வேறு எத்தகைய தகவலும் எம்மால் அறிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே தந்தியில் சந்தா இலக்கத்தையும் பெயரையுமாவது குறிப் பிடுங்கள். ஆத்மஜோதி தொண்டு சிறப்புற நடைபெறு வதற்கு உங்கள் சந்தாவை உடனே அனுப்பிவைப்பதோடு, ஒரு புதிய அங்கத்தவரையாவது சேர்த்து உதவுக.
ஆத்மஜோதி நிலையம். நா. முத்தைய T நாவலப்பிட்டி. (றி லங்கா) t
இந்திய விலாசம்:
S. RAJASEKARAN
“Visalakshi Illam, 274, Royapettah High Road, Royapettah-Madras-606 014, Tamilmadu.
P. O. Box 5577, Telephone: 847107
மலேசியா விலாசம்:
S. SUB RAMANIYAM
Sri Eswari Flour Mill,
99-IL, Jalan. Tandok, Kualalumpur, Malaysia. சிங்கப்பூர் விலாசம்:
Mrs. M. MAHESWARY THEV
No. 03 - 3597 Geylang Bahru,
Singapore 1233, Tel. 8955229
இந்துனேசியா விலாசம்:
SRI MARIYAMMAN KOVI. Jalan Teuku Umar No: 18, Medan-Sumatra, Indonesia.

Page 27