கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1989.05-06

Page 1

விலே 5. R 5U (T
tட்டக வெளியீடு

Page 2
With best Compliments from:
Al-HAJ A. M. S, ABDUL RAHUMAN J. P. (Chairman & Managing Director)
CEYPRO EXPORTS LTD.
CEYPRO ORENTAL CHEMICAL CO PVT. LTD
FAATH MA MILLS
KANAGA RAJAH RAJANATHAN 8+ CO CHARTERED ACCOUNTANTS
CEYPRO EXPORTS pp: FACTORY
942|7: York Building 22/1, Minuwangoda Road,
York Street, Colombo EKAULA: JA -ELA
Te 1: 26325 ५° Phone: 536883
Telex 22212 CEYEXP СЕ RESIDENCE;
Cable 'CEYEXPOY Colombo 754, Prince of Wales Avenue
Colombo - 4.
Tel 35493

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிபெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெ லாம்
விழிப்பெற்று பதவிகொள்வார்
- பாரதி
సీ: - ஆசிரியர் : JAV ... 纵 இதழ் நான்கு அந்தணி ஜீவா
KOLUNDU 57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 6.
மே / ஜ"ன் 1989
அய்யருக்கு ஓர் அறிவ ாலயம்
அன்புள்ளங்கொண்டவர்களே, இலங்கையின் முதல் தமிழ் தினசரியின் ஆசிரியர்; தொழிற்சங்க முன்னேடிகளில் ஒருவர்; மலையகத்தின் முதல் தொழிற்சங்கத்தை நிறுவியவர்; மலையக ஆக்க இலக்கியத்தின் முதல்வர் இவர் தான் கோ. நடேசய்யர். மலையக மக்களிடையே விடிவெள்ளியாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர். இதுவரைக்கு இவருக்கு ஒரு நினைவுச்சின்ளம் இல்லாதது பெரும் வெட்கக் கேடாகும். வடக்கிலே நாவலருக்கு மணிமண்டபம் கிழக்கிலே விபுலாநந்தருக்கு இசைக் கல்லூரி நாம் நடேசய்யருக்கு என்ன செய்தோம்? நன்றி மறந்தவர்களாகிவிட்டோம் அய்யர் வாழ்ந்த அட்டன் நகரிலே அவருக்கு ஒர் அறிவாலயம் அமைக்க வேண்டும் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு நடவடிக்கைஎடுக்க முன் வரவேண்டும்.
- Ssius

Page 3
நவநாகரிகமான சுவர்க்கடிகாரங்கள் கைக்கடிகாரங்கள்
பரிசுப் பொருட்கள்
ஆகியவற்றிற்கு இன்றே நாடுங்கள்
பார்க்கர் டிரேட்டர்ஸ்
PARKER Quality Quartz Clocks (Importers & Distributors)
PARKER TRADERS
Wholesale Dealers in Wall Clocks, Wrist Watches and all kind of Gift ware,
Phone : Y 26 65 7 160, Keyzer Street,
545 24 4 Colombo - 11. Togram : PARKER Sri Lanka.
Telex : 2 1 7 5 4 FAYAZ СЕ
ATTN. PARKER

இலையும் திரியும்
- சாரல்நாடன் -
இலையும் திரியும்’ என்பது மலையகத்தில் இன்றும் வழக்கி விருக்கும் சொற்பிரயோகமாகும். இரண்டு இலையும் ஒரு மெர்ட்டுமாக அமைந்திருக்கும் இளந்தளிரை - கொழுந்தை, இவ்விதமே மலைய கத்தில் குறிப்பிடுவர். கொழுந்தெடுக்கும் பெண்களுக்கு இதுவே
வாழ்க்கையாகும்.
டுே லீவ்ஸ் அண்ட் எ பட்" என்று இதை ஆங்கிலத்தில் வழங்குவர். இந்த ஆங்கிலப் பிரயோகத்தைப் பாவித்து தமது படைப்பிலக்கி யத்தை ஆக்கித்தந்தவர்கள் இருவர் ஆவர்.
ஒருவர் இலங்கையைச் சேர்ந்த ஸி. வி. வேலுப்பிள்ளை, மற்றை யவர் இந்தியாவைச் சேர்ந்த முல்க்ராஜ் ஆனந்த் ஆவார்.
இன் சிலோன் டீ கார்டன்’ என்ற தனது கவிதைப் புத்தகத்தில் இந்தப்பிரயோகத்துக்கு உயிர் கொடுத்து, துடிப்புள்ள கவிதை வரி கராக அமைத்து துயருறும் தொழிலாளர்களின் உணர்வுகளைச் ச்ாகா இலக்கியமாகப் படைத்துள்ளார் ஸி. வி. அவர்கள்.
முல்க்ர்ாஜ் ஆனந்த் அவர்க்ளோ இந்தப்பிரயோகத்தைத் தனது படைப்பின் தலைப்பாகவே ஆக்கியுள்ளார். "டூ லீவ்ஸ் அண்ட் எ பட்’ என்பது அவர் படைத்தளித்துள்ள நாவலின் தலைப்பாகும்.
பங்களாதேசத்தில் "டூ லீவ்ஸ் அண்ட் எ பட்" என்ற பெயரில்
ஒரு மலைத் தொடரே இருக்கின்றது. இங்கு தேயிலை செழித்து வளருவதால், இந்தப் பெயர் வழக்கிலிருக்கின்றது.
இந்தப் பெயரில் வந்திருக்கும் நாவலும் தேயிலைத்தோட்ட மக்களைப் பற்றியதே ஆகும்.
இந்த நாவல் 1937இல் முதலில் லண்டனில் வெளியாயிற்று; இதன் மறு பிரசுரம் 1946இல் இந்தியாவில் வெளியானது. ஆங்கிலத் தில் தற்கால இந்திய இலக்கியம் என்ற தலைப்பில் எழுதும் போது ஆங்கில மொழியில் படைக்கப்பட்டிருந்தாலும் படைப்பாளி ஆங்கி லேயராக இருக்கும் போது அது "ஆங்கிலோ இந்தியன் லிட்ரேச்சர்", என்றும், இந்தியராக இருக்கும் போது “இந்தோ அங்கிலியன் விட்
( 3 )

Page 4
ரேச்சர்" என்றும் பாகுபடுத்தப்பட வேண்டிய அவசியத்தை இந்திய விமர்சகர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். அப்படி ஒரு வலியுறுத்தல் தோன்றுமளவுக்கு ஆங்கிலத்தில் இந்தியர்கள் வளமாக எழுதியுள்ளனர். அத்தகு வளமான எழுத்தாளர்களில் முல்க்ராஜ் ஆனந்த் குறிப்பிடத்தகுந்த ஒருவர்.
இந்தியர்களின் - அதுவும், அடிமட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் களின் மனஉணர்வுகளுக்கு உயிர் கொடுப்பதில் அவர் தனித்து மிளிர்ந்தார்.
அவர் எழுதியவைகள் பதினெட்டுக்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்திருக்கின்றன. தாவல்கள், கதைகள், கட்டுரைகள் என அவை பல தரப்பட்டவை.
அவர் படைத்தளித்த 'தீண்டாதவன்" தமிழில் வெளிவந்திருக் கின்றது. தமிழில் இதை மொழிபெயர்த்தளித்தவர் தலாத்தோ யா கே. கணேஷ் அவர்களாவார்.
கூலி, தீண்டாதவன் என்ற நாவல்களுக்குப்பிறகு முல்க்ராஜ் எழுதிய ‘இலையும் திரியும் தேயிலைத் தோட்டப் பின்னணியில் அமைந்த நாவலாகும்.
தேயிலைத் தோட்ட வாழ்க்கையென்பது எல்லாத் தேசங்களிலும் இந்தியா, மலேயா, இலங்கை என்று, அதிலும், வெள்ளை ஏகாதி பத்திய காலத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியான அவலம் நிரம்பிய வாழ்க்கையாகவே தான் இருந்தது.
எனவேதான், இந்த நாவலில் இந்திய அசாம் பகுதியில் கதை நடப்பதாகக் கூறப்பட்டாலும் இலங்கை மலைப்பகுதியில் நடப்பதாக வாசிப்பவர்களால் இதயபூர்வமாக உணர முடிகின்றது. 1826இல் பிரித்தானியர்கள் அசாமில் குடியேறுவதற்கு முன்பே இந்திய அசாமும் இலங்கை கண்டியும் நில அமைப்பாலும் சமுதாய அமைப்பு முறை யாலும் ஒரே வகையில் அமைந்திருந்தது என்று வரலாற்ருசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதைவிட முக்கியமான ஒன்று இந்த நாவலில் 'சித்திரிக்கப் படும் கதாபாத்திரம் ஒன்று இலங்கையின் மலைப்பகுதிகளில் உயி ரோடு உலாவிய ஒருவரின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி எழுதப்பட்டிருப்பதாகும்.
இலங்கை தோட்டப்புறங்களில் பதட்டத்தையும், அரசியலில் நெருக்கடியையும் ஏற்படுத்திய பிரேஸ் கேர்டில் என்பவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளில் மாத்தளைப் பகுதியில் தோட்ட ஒன்றில் சின்ன துரையாக இருந்து தனது இடதுசாரி கொள்கைக் காரணமாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்.
(4)

அவர், லண்டனுக்குப் போய் புத்தக விற்பனை நிலையம் ஒன்றை நடத்தினர். அப்போது அவருக்கும் முல்க்ராஜ் ஆனந்துக்கும் ஏற் பட்ட தொடர்பும், அதன் நிமித்தம் முல்க்ராஜ் ஆனந்த் உள்வாங் கிக்கொண்ட கருத்துமே இந்தப் ப்ாத்திரப் படைப்புக்குக் காரணம். (இந்த உண்மையை முல்க்ராஜ் ஆனந்திடமிருந்து நேரடியாக தெரிந்து வைத்திருந்து இந்தக் கட்டுரையாசிரியரோடு பகிர்ந்து கொண்ட தலாத்தோ யா கே. கணேஷ் அவர்களுக்கு நன்றி.)
நசுக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி எழுதுகையில், ஒதுக்கப்பட்ட வர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் சித்திரிக்கையில் முல்க் ராஜ" கு இயல்பாக மிளிரும் கைவண்ணம் இந்த நாவலில் பளிச் சிடுகின்றது. தேயிலைத் தோட்ட வாழ்க்கையை ஆராயத் தொடங் கும் ஆரம்பமாக இந்த நாவலைக் கருதுகிருர் ஆர்தர் கல்தர் மார்சல் என்பரர். நிய. யத்தை வேண்டி நிற்கும் விவரிய படைப்பு என்கிருர் வி. எஸ். பிரிட் ஜெட் என்பார்.
சமகால நாவலாசிரியர்களிடையே உன்னத இடத்தை முல்க்ராஜ்
ஆனந்துக்குப் பெற்றுத்தரும் தன்மையது இந்த நாவல் என்று கருது கிருர் ஸ்டீபன் ஸ்பெண்டர் என்பவர்.
* வாழ்க்கை என்பது ஒரு பயணம்" என்ற நினைவலையோடு ரயில் ஏறுகிருன் கங்கு
தேயிலத்தோட்ட வாழ்க்கையில் தமக்கு மலர்ச்சி ஏற்படும் என்று எண்ணி, நூறு ரூபாவைக் கூட தம் வாழ்நாளில் காணுத கிராமத்து சனங்கள் இலட்சக் 4ணக்கில் பணம் குவிக்கலாம் என நினைத்து சர்தார்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி, பயணத்தை மேற்கொண்டு அசாமில், பிரமபுத்ரா நதியோரத்தில் குடியேறுகின் றனர். கங்குவும் அவர்களில் ஒருவன். வந்த முதல்நாளே " சூழலைத் திரிக்கவும், திரும்பவும்’ நடக்கும் மேலிடத்து முயற்சிகள் தோட் டப் புறத் தில் மலிந்திருப்பதைக் காணுகிருன்.
தோட்டங்களிலிருந்து வரும் துர்நாற்றம் தூரத்து இமாலயத்து மலைகளிலிருந்து வரும் காற்றின் சுகந்தத்தையும் மீறுகிறது என்ற வரிகளில் (அத்தியாயம் 2) இந்த மக்களைப் பற்றி பச்சாத்தாபப்படும் டாக்டரைக் காணுகிருேம். இறப்பு வீதம் அதிகம் என்ருலும் அவர் களின் இனப் பெருக்கமும் இடம் பெறுகிறது; அவர்கள் கிராமத்தி லிருப்பதைவிட நன்ருக இருக்கிருர்கள். அவர்களுக்கு ஆசைகள் குறைவு, கனவுகள் குறைவு, அவர்கள் நசுக்கப்படுகின்ருர்கள் என் பது உண்மையாக இருக்கலாம். ஆனல், அவர்கள் அதை இலட்சியப் படுத்துவதில்லை என்று கூறுகின்ற பெரியதுரை (அத்தியாயம் 2)
12 நாட்கள் பிரயாணம்செய்து ஆரம்பமான வாழ்க்கை: பரம தரித்திரத்தில் இருந்து விடுபடுவதற்காக பஞ்சைகளாய் வாழ்ந்து
(5)

Page 5
பசிபட்டினியில் சாவதிலிருந்து விடுபடுவதற்காக, ஆள் கட்டும் சர்தார்களை நம்பி வந்த வாழ்க்கை; மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்போய் சேரலாம் என்றெண்ணியிருந்து முடியாதுபோன கர்ம வினை (அத்தியாயம் 3) என்று கூறும் தோட்டத் தொழிலாளியான நாராயண்.
இரவில் ஒவ்வொரு வீடாக வந்து லாந்தரை பிடித்துக்கொண்டு பேர் சொல்லி அழைத்து யாரும் ஓடிவிடாது பார்க்கும் தோட் டத்து வாழ்க்கை உண்மையில் தடைகளில்லையென்ருலும் உடைக்க (plgust 5 (D, Gogliai) out b5605 (This prison has no bars, but it is nevertheless an unbreakabie Jail) (35S) SOM Tufão J só uGay Gär தன்னை நெப்போலியன் போனபார்ட் என்று நினைத்துக் கொள்ளும் சின்னதுரை ரெஜி (அத்தியாயம் - 4) என்ற இவர்களுக்கு மத்தியில் "மார்க்ஸை படித்து தான் கம்யூனிசம் தெரிந்து கொள்ள வேண்டு மென்றில்லை. இந்திய ஏழை தோட்டத் தொழிலாளிகளைப் பார்த் தாலே போதும்" என்று கூறும் வித்தியாசமான போக்குள்ள டாக் டர் அவர்தான் கங்கு தன் மனைவியின் மரண கிரியை செய்ய பணம் இல்லாத போது உதவுகிறர்.
'தங்கள் பண்டிகையின் போது மாத்திரமே உரத்த குரலில் ஒலி எழுப்ப பழகிப்போயிருக்கும் மக்கள், உயர்ந்த குரல் எழுப்பி திரண்டு வருகின்ருர்கள் என்ருல் ஏதோ நடந்திருக்கவேண்டும். பசியால் வாடியபோது மிருகங்களால் தாக்கப்பட்டபோது நோய் களின் தாக்குதலுக்கு உள்ளானபோது குரலெழுப்பாத மக்கள் அவர் கள் புழுவும் எதிர்க்க முடியும் என்று காட்டுமாப்போல வந்திருக் கின்ருர்கள் என்று மகிழ்ந்து அவர்களை பெரியதுரையிடம் நியாயம் கேட்க அனுப்பி அதனல் தன் தொழிலையே இழக்கிருன், (பிரேஸ் கேர்டிலின் நிஜ வாழ்க்கையைப் போல) தொழிலாளர்களின் எதிர்ப்பு கட்டுமீறும் என்று பயந்து இராணுவம் தோட்டத்துக்கு வரவழைக்கப் படுவதும், கங்கு கொல்லப்படுவதும் என்று நீடிக்கும் கதை, நிறை வேருத ஆசைகளின் மொத்த சாட்சியாய் உயிர் வாழத்துடிக்கும் மனித ஜீவன்களின் அவலத்தை 26ஆம் அத்தியாயங்களில் நெஞ்சில் வடுவாய் நிலைக்கும் வண்ணம் சொல்லிச் செல்கின்றது.
தேயிலைத் தோட்ட மக்களின் அவல வாழ்க்கையைச் சித்திரிப் பதில் புதுமைப் பித்தனின் "துன்பக்கேணி" என்ற படைப்புக்கு இன் றும் தனியானதோர் இடம் உண்டு என்ருல் முல்க்ராஜ் ஆனந்த்தின் இலையும் திரியும்" நாவலுக்கும் அப்படி ஒரிடமுண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஏனென்ருல், ராஜாராவ் என்ற ஆங்கிலத்தில் எழுதிய இன்னேர் இந்திய எழுத்தாளர், தனது காந்தாபுர என்ற நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டது போல (1971) அமெரிக்கர் களும், அயர்லாந்துகாரர்களும் எழுதிய ஆங்கிலத்தைப் போல இந் தியர்கள் எழுதிய ஆங்கிலம் தனித்து நிற்க வேண்டும் என்ற பிரியத் தின் வெளிப்பாடாகவும் இந்த நாவல் அமைந்துள்ளது.
(6)

இலையுதிர் காலத்து மரங்கள்
பீடிகுடிப்பதில் வைரமுத்து தலைவருக்கு அவ்வளவாக விருப் பம் இல்லை. சோறில்லாவிட்டா லும் சுருட்டு இருந்தால்போதும்.
பாயில் புரண்டவாறு தலை யணைக்கு அடியில் துளாவிப் பார்த்தார்.
இரண்டு மூன்று பீடித் துண்டு கள் விரல்களில் நெருடின.
கேவலம் ஒரு துண்டு சுருட்டுக் குக் கூட வக்கில்லாமல் போய் விட்டது.
எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டவர், துண்டு பீடியின் லேபலைக் கிழித்து வீசிவிட்டு; பீடியை பற்றவைத்து ஒரு தம் இழுத்து புகையை ஊதி நாக் கில் படிந்த கறையை மேற் பற் களால் சுரண்டி எச்சில் சிரட் டையில் காறித் துப்பினர்.
இரண்டாவது துண்டை பற்ற வைத்தபோது தான் கொஞ்சம் சுவாரஸ்யம் வந்தது.
மண்டியெண்ணெய்குப்பிலாம்பு ஏகமாய் புகைந்தது.
நிஸப்தங்கள் பூத்திருந்த பின் னிரவு வேளையில், பின் புற ஜன் னல் வழியாக புகுந்த மங்கிய நிலா வெளிச்சம் - சற்று தள்ளிப் படுத்திருக்கும் மனைவியின் மீதுகோடிப்புற மரக் கிளை பின் அசைவுகளுக்கேற்ப - “வீடியோ" படம் காட்டியது. '
இப்படித்தான் ஒரு மூன்றும் பிறை நிலவைக் கிள்ளி திரையில்
சிறுகதை போட்ட துபோல மனைவிக்குப் பக்கத்தில் படுத் திருப்பா ள் பேத்தி ராணி.
வைரமுத்து தலைவருக்கு தூக் கம் வரவில்லை. இன்றைக்கு மட்டுமல்ல, இந்த ஒரு மாத மாக சரியாக துரக்கமில்லை.
மனதை கனமாக ஒரு பிரச் சினை கவ்விப் பிடித்துக் கொண்
"டிருக்க கூடவே பேத்தி ராணி
யின் நினைவும் வேறு மொட்ட விழ்க்கிறது.
இவருக்கு ஒரேயொரு மகள். மகளுக்கும் ஒரேயொரு மகள் grnr 60 cil.
மலரன்பன்
கலர் கலராககனவுகள் 95tract கின்ற வயது. கிா லைப் பூ வின்
பணியாய் பார்வை. அடிக்கடி கண்ணுடி பார்த்து "ஆயிரம் மலர்களே மலருங்கள்" முணு முணுக்கும் பருவ ம். ஆடித்
தேரில் வரும் அம்மன் சிலை.
குடும்பத்தில் ஒரே யொ ரு
பிள்ளை என்ற கால், தோட்டத்
(7)
துக்குப் பக்கத்தில் இருக்கும் பள் ளிக்கு அனுப்ப அவளும் நன் ரு கத்தான் படித்தாள் பெரிய பிள்ளையாக வரும்வரை.
இளம் கறுப்பில் கொஞ்சம் துர க் க லா ன நிற ம், குத்தி விடுமோ என நினைக்க வைக் கும் கூரான மூக்கும்; "இன்

Page 6
னெரு முறை திரும்பிப்பார்" என்கிற அச்சில் வார்த்த உட லமைப்பும்; ஒரு தோட்டத்துப் பெண்ணுல் தாங்க முடியாத அசாதாரண அ ழ கும் தா ன் அவள் படிப்பில் மண்ணை ப் போட்டு விட்டது.
படிக்கப் போகின்ற வழியில்
வெறும் சிரிப்பு ஒன்றுக்காக மட் டும் தவம் கிடந்த ஒரு சுருட்
டைத் தலையன் பேக்கரி ஒன்றில்
வேலை செய்கிருனம். சில நாட் கள் சிரித்து பின்னர் கடிதங் கள் பரிமாறி, அப்புறம் ஒரிரு முறை பஸ்ஸில் பக் கத் தி ல் அமர்ந்து; இளம் ஸ்பரிசத்தில் ஆழ்ந்து சில மாதங்களின் பின் னர் ஒரு நாள் படம் பார்க்க கூட்டிப் போய் அவளது உடை கள் எல்லாம் ஒவ்வொன் ருய் அவிழ்த்துப் பார்த்து விட்டுப் போய்விட்டான்.
முதலில் வீட்டுக்கும் பின்னர் பள்ளிக்கும் செய்தி போ ன கையோடு பேத்தியின் படிப்பு என்ற கனவை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டார் வைரமுத்து.
மாத்தளைக்கு அ ைழ த் து ச் சென்று கைக்காசு மருந்தில் பேத்தியின் கன்னித்தன்மையை பாட்டி காப்பாற்றிக்கொண்டு வந்தாள் என்றலும், ஒரு நாள் *கோவா’ மருந்தில் தன் முடி வைத் தேடிக் கொண் டா ள் ராணி,
ராணியின் மரணம் எதுவிக கவலையையும் இவருக்கு ஏற் படுத்தவில்லை.
ஒப்பாரி வைத்த மனைவியை யும் ம க ளை யும் பார்த் து
(8)
"தொலைஞ்சிச்சி கெறுப்பு சும்மா கெட" என்றதோடு சரி.
பேத்தியின் நினைவு வெறும் சலனம். இந்த ஒரு மாதமாக இ வருக் கு நெஞ்சையரிக்குக் கொண்டிருப்பது அதுவல்ல.
தோட்டத்தில் ஒரு மாதமாக ஒருவருக்கும் வேலையில்லை. முன் வைத்த பிரச்சினையும் தீர்ந்த பாடில்லை. பாருங் கல்லாய் நெஞ் சில் கணக்கின்றது இதுதான்.
வைரமுத்து
வைரம் பாய்ந்த உடற்கட்டு. ஐம்பது வயதிலும் மு ப் ப து வயது வாலிபனின் மிடுக்கான நடை. கம்பீரமான தோற்றம். நல்ல உயரம். ஆளைப்பார்த் தாலே மரியாதை உருவாக்கும் so-Guj6), b.
தோட்ட த் தி ல் எவரும் அவரை பேர் சொல்லி கூப்பிட் டது கிடையாது உத்தியோகத் தர்களைத் தவிர.
எல்லோருக்கும் இவர் தலைவ ரப்பா.
கல்யாணம், ச ட ங் கு, காது குத்தா,கரகம், காவடி தேரோட் டமா, தலைவரப்பா சொன்னல் அது வேதவாக்கு.
கறுப்புக் கோட்டு வெள்ளை வேட்டி சகிதம், நெற்றியில் , மூன்று மின்னலாய் விபூதியுடன், "லேபர்டே? அன்று "மினிட்" புத்தகமும் கையுமாக தலைவரை ஆ பி சி ல் கா னு ம் போ து பெரியதுரைகூட முகம் சுளிக் காமல் நடந்து கொள்வார் என்

முல் அது வைர் முத்து பிரச் சினையை அணுகும் சாதுர்யத் தைத்தான் காட்டும்.
சென்ற மாதம் இருபதாம் தேதி வாக்கில் பெரியதுரை ஆ பி சு க் கு வ ரும் படி ஆள் அனுப்பியிருந்தார் தலைவருக்கு.
'அடுத்த மாதம் முதலாம் தேதி நம்ம தோட்டத்த , ஜம் பது ஐம்பது ஏக்கரா ஆறு முத லாளிமாருக்கு பிரித்து கொடுக் கப் போருங்களாம். மீதியுள்ள நூத்தியம்பது ஏக்கரில் அதுக்கு தேவையான ஆளுகளுக்கு மட் டும் வேலை கிடைக்கும். எனக்கு கடிதம் வந்திருக்கு.
'இதென்னங்க தொற அநி
யாயம். யாம் பிரிச்சி இடுக்கப் போருங்க"
'பழைய கவர் மெண் டு ல தோட்டமெல்லாம் கவர்மெண் டுக்கு எடுத்த நேரம், இவங் களுக்கு சேரவேண்டிய ஐம்பது ஏக்கர குடுக்கலியாம். அதுதான் இப்ப குடுக்கிறங்களாம்."
*அதற்கு அவு ங் க உட்டு பழைய தோட்டத்தையே குடுக் கிறது தானே?
கவர்மெண்ட் நெனைக்கிற L-ILq.
நிப்பாட்ட முடியும். ஆன நான் சொன்னதாக சொ ல் ல க் கூடாது.'
பெரிய துரைக்கு பென்சன் எடுக்க இன்னும் இரண்டோ மூன்ருே வருடங்கள்தான் இருக் கின்றன. தோட்டத்துக்குப் பக் கத்தில் ஒரு மைல் தள்ளி ஒரு சாணி வாங்கி பங்களா ஒன்றும் கட்டியிருக்கின்றர். அதே ரா டு
வெள்ளைக்காரர்கள் தங்கிப்போ
கும் 'டுவரீஸ்ட் கெஸ்ட் ஹவுஸ்" ஒன்றும் கட்டிக் கொண்டிருக்கின்
முர். இந்த நேரத்தில் அவரை பதுளை பண்டாரவெலக்கு தள்ளி
தோட்டம் கூறுபோடும் சங்கதி லயம் பூராவும் 'தமுக்கடிக்கப் பட்டுவிட்டது.
ஐம்பது ரக்கருக்கு கீழ் உள்ள தோட்டத்தில் சம் பள ரேட் குறைவு. முதலாளி வைத்தது தான் சட்டம் குறிப்பிட்ட தேதி யில் சம் ப ள ம், அட்வான்ஸ் கிடைக்காது. நோனத் தோட் டத்தை இப்படித்தான் பிரித்துக் கொடுத்தார்கள். நாட்டாளைக் கொண்டு அடி த் து நொறுக்கி
அடிமையாக்கி வைத்திருக்கின்
தானே செய்யும். நம்ம விருப்பம்
போல எல்லாம் நடக்குமோ?"
துரை மு டி  ைவ் க் கூறிவிட் டார். என்ருலும் கொஞ்சம் பச் சைக் கொடியும் காட்டினர்.
நீங்க எல்லாம் கொழும்புக் குப் போய் பெரிய ஆளுகள கண்டு பேசின. சில நேரம் இத
(9)
ருன் முதலாளி.
முன் பென்(?ல் வவுனியா கிளி நொச்சி பகு தி க ளு க் கு சரி ஒடலாம்.
சங்கத்தில் சேர்ந்தால் இரவில் லயக் கூரைகளில் கல் மா ரி பொழியும்.
அந்த கதி இந்த தோட்டத் துக்கும் வந்துவிடக் கூடாது.

Page 7
தலைவர் ஜில்லாவுக்கு ஓடினர். கடிதங்கள் பறந்தன. மறக் கால் பத்திரிகைகளுக்கும் செய்தியனுப் பினர் பிரதிநிதி,
உருப்படியான பதில்தான் கிடைக்கவில்லை.
கொழும்புக்கும் இர ண் டு
மூன்று தடவை நடந்தாவிட்டது.
ஒரு நாள் ஜிப் ஒன்றில் க" ணி அளப்பவர் 5ள் வந்து இறங்கினர் கன் காணி பிரிக்க,
உத்தியோ சித்தவர்களும் உசா ராகிவிட்டார்கள். மா ற் ற ம் கிடைக்கா விட்டால் அவர்கள் கதியும் அதோ கதிதான். புதிய முதலாளிமாரிடம்  ெகா ழி ல் பெற்றுக்கொள்ள வேண்டியதாகி விடும்,
பெரிய துரை ஸ்டாஃப்மாரின்
மறைமுக ஆதாவுடன் வே ல நிறுத்தம் ஆரம்பித்து ஒருமாதம் ஓடி விட்டது.
வேலை செய்கின்ற நோத்தில் இருந்து வயிறு வேலை செய்யாத போதும் இருந்தது.
இரண்டு மூன்று மைல்களுக்கு
அப்பால் போ ஞ ல் நாட்டில் '
சேனை வேலை கிடைக்கும். கிழ மைக்கு இரண்டோ மூன்று நாட் சளுக்குதான். கூலி மிக வும் குறைவு. குடும்பத்தில் ஒருவர் இரு வருக்குத் தான் அதுவும்.
பொட்டு பொடுசாக இருந்த நகைகள் இடம் மாறிக்கொண்
-67,
“வந்தது வரட்டும் பழையபடி வேலைக்குப் போவோம். ? என
அங்கொன்றும் இங்கொன்று Of 5 Փ900) முணுப்புகள் காதில் விழாமலில்லை.
ஒரு வைராக்கியத்தில் அரை வயிறு கால் வயிறுமாக கால த்தை தள்ளிக் கொண்டு வந்த வர்களுக்கு இந்த ஒரு வாரமாக கடும் சோதனை.
அடுப்புகள் எரியவில்லை. வயி றுகள் எரிகின்றன.
ஆடு மாடு கோழிகள் இருந் தால் ஆபத்துக்கு கைகொடுக் கும். அதுகளெல்லாம் எண்பத்தி மூன்ருேடு சரி.
எண்பத்தி மூன்ரும் ஆண்டை நினைக்கையில் இப்போதும் கூட கை கால்கள் எல்லாம் நடுங்கு கின்றன.
ஆலமரத்து சந்திக்கு ஐந்தாறு லொறி பஸ்களில் வந்த கூட்டம் கடைகளை அடித்து நொறுக்கி தீ வைப்பதைக் கண்டு, கையிலகப் பட்ட குழந் ைத குட்டிகளை வாரிக்கொண்டு காட்டுக்கு ஓடிய வர்களோடு தலைவர் குடும்பமும் மூன்று நாட்கள் அன்னம் தண்ணி ஆகாரமி ல் லா ம ல் கிடந்த போது தான் மற்றவர் களைப் போல இவருக்கும் இந் தியா ஞாபகம் வந்தது.
குடை பிடித்து நிற்கும் புளிய மர நிழலில் "கிட்ட வராதே கொல்லுவேன் பார்" என வலது கையில் ஓங்கிய வெட்டரி வாள் இடது கை இடுப்பில் மிடுக்காக ஆட்டுக் கிடா கொம்பு மீசை கம்பீரமாக எழும்பி நிற்கின்றது. ஐயனர் சிலை. பக்கத்தில் குதிரை வாகனம்,
(k0)

கிராமத்துக்குஎல்லையாய்மணல் நிறைந்த தண்ணீர்குறைந்த சிற்றரின் அருகில் ஊர்க்காவல் தெய்வம் ஐயனர் எட்டடி உய ரம் எழுந்தருளியிருக்கின்றர்.
குணிந்து இரகசியம் பேசும் நெற்கதிர்களுக்கு நடுவே - வரம் பில் - இடுப்பிலும் தலையிலுமாக இவ்விரண்டு குடங்க . சுமந்து
செல்லும் கன்னியரின் குடங் களில் வீட்டுககுப் போகின்ற சூரியன் சிரித்துக்கொண்டிருக் கிமுன்,
எங்கு பார்த்தாலும் தமிழ் முகங்கள். தமிழ் குரல்கள. தமிழ் தமிழ். தமிழ்
இந்தியாவை நினைத்தலே இனிக்கின்றது.
இந்தியா கறுப்போ சிகப்போ
இவருக்குத் தெரியாது. போன
தும் கிடையாது. சினன வயசில் பாட்டன் கதை க  ைத யா க சொன்னது இனனும ம்றகக வில்லை.
கலவரங்கள் ஏற்படுகின்ற நேரத்தில் எல்லோருக்கும் உண் டாகும் எண்ணம்தான இவருக் கும் உண்டாகும்.
வாசல் முற்றத்தில் பலாமரத் தில் காகங்கள் திருப் பள்ளி யெழுச்சி பாட: கொலனியில் சேவல்களில் சுப்ர LITG5 Lb.
படுக்கையை விட்டு வெளியே வந்தார் வைரமுத்து.
மஞ்சள் பூசி முகம் கழுவி யிருந்தது வானம்,
விடிந்ததும் விடியாததுமான வேளையில் குரைக்கின்ற நாயை அதட்டிய படி யே வந் தா ன் பணிய லயம கோபால்.
கேள்விக் குறியோ டு அ ன முகத்தைப் பாtததாா வைர முத்து.
செய்தி சொனனவன கினருன்.
டொறி கலங்க Abf6ðI (? l zo Céu oufT 8» ou TCupo,51. இது த கெட-நத பணிய வயதது *Աlt-i رسانى يهوه له من الاقته اهلها (ق) مسالإ6 الثالس 60 س س لن يتهم سد الله لو ذاك لقll tقم 5 لا لا در دههی آ6ه بeoی اف اللاfTلاقها با ۶ قلا) ld (th&hl திeவலுருககுக. IT و ۵۵ ه الاها زنی خنرانی طلایت لق لقا ளேக்கும் வந்தயும ت الله (۵هool نامه պւք \hւսո ամՎԵd (e. M - Gbefgou o ஆஸ்பத து 17 ܘ ܩ ܣܽܘ ܣ ܗ̇ ، oedd Kip o trا می به Gor و glu به هشi L 6 ولت الاقا
6 اکتفا
- - - bii
கிைமருந்து Ego (böbb ch chi 1 ibi J). ته بيام الدين د سرى ره لقاړنلا اتمه له فاکA I) ورته تبت توره کړم . لایه له اiلافاسد لاه
இந் தா னனு இழுத்துக்கடடு
(b) . . . . . . o
பிள்ளைகளைக் கட்டிப் புரண்டு கொண்டிருந்த கறுப்பையாவன் மனேவி, தலைவரைக் கண்டதும்
அவர் கடலில் விழுந்து கதறி
தூ ரத் தி ல்
ஞள், கருப்பைய வும வைர முத்துவைக கட்டி ப் பிடித் து அழுதான்.
லேசில மனம் தளராத தலை வர் கூட ைெ ல வெ ல த் து ப் போனர்.என்ருலும் இனி நடக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருபபதை சிந்தித்தார். எல்லா வற்றுக்கும் பனம தே ல் ைவ. தலைவரை வி ட் டா ல் இவர் களுக்கு வேறு கதியில்லை. இவர் யாரிடம் போய் ,ே ட் து
துரைகூட தோ ட் டத் தி ல்
இல்லை.
( 11)

Page 8
ஐயாமாரெல்லாம்  ைக  ைய விரிததுவிட்டார்கள். பக்கத்தி லுள்ள கடைகாரர்களிடமும் ஒரு சதம்கூட பெயரவில்லை.
இடிந்துபோன தலைவரப்பா வீடு திரும்புமபோது DTTčou மயங்கியிருந்தது. தண்ணையில் குந்தி யோசித்துக்ம காண்டிருக் கிருா. நேரம் \ர் பா ன து கூட
தெரியவில்லை. இருள் கவிந்து
வெகுநேரமாகிவிட்டது. கேத வீட்டுக்கு போய்க் கொண்டிருந தவா கள கூப்பிட தான் பிறகு வருவதாக அவா களை அனுப்பி விட்டு உட்கார்ந்த کړه ايم-ا(ا விட்டு நகராமல யே சத்துக் கொண்டிருந்த அவருக்கு நேரம் பததுமணயைத் தாண்டியது கூட தெரியவில்லை.
கதவை ஒறுக கணித்து ம0 வத்து விட்டு மனைவ தூங்குகிருள.
துண்டை உதறி தோளில் போடடவாறு, “ஏ புள்ள நான் கேத வீடடுககு ப்ோ ய்ட் டு வாரன' எனறவாறு இருளில இறங்கினர்.
அம்மன் கோயில் உழுத்துப் போ ன க த  ைவ 5) o (5 gil கொண்டே உள்ளே போனர் தலைவர். அடுத்த பெருமழை யில் விழுந்து வடுவேன் என பயமுறுததிககொணடி ரு க் கி ன் றது கூரை, அப்போதுதான கீழ் வானில் உதிததுககொண்டிருநத நிலா வெளிச்சம், கா  ைர ப் பெயாந்த சுவரிலும எளிமை யான சலே மீதும விழுந்தது.
கோயிலை புனர் நிர்மாணம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்னர், ஒரு யோ ச ன  ைய வைரமுதது சொல்ல எல்லோ ரும் ஏற்றுக் கொண்டார்கள்.
சம்பளத்தினத்தன்று ஒ வ் வொரு வரும் கட்டாயம் ஒரு ரூபா காணிக்கை போட வேண் டும் கோயில் உண்டியலில். மாரி யம்மன் காலடியில் தரையைத் தோண்டி உண்டியலைப் புதைத்து
சிமென்ட்டும் பூசியாகி விட்டது. காணிக்கைப் போ டு வ தற்கு தோதாக துவாரம் மட்டும் தெரிகின்றது.
அம்மன் சிலையை வணங்கிய வர் கையோடு கொண்டு வந்த அலவாங்கினல் த ரை  ைய த் தோண்டி காணிக்கைப் பெட் டியை மேலே எடுத்தார்.
காணிக்கைப் பெட் டி யுடன் இவர் வெளியே வரவும்: நாலைந்து பேர் பந்தம் வெளிச்சத்துடன் கோயிலுக்கு மு ன் னே யு ள்ள
ருேட்டில் வருவதற்கும் சரியாக
இருந்தது.
காணிக்கைப் பெட்டியும் கையு மாக விக்கித்து நிற்கின்ருர்
வைரமுத்து.
‘இவ்வள ாளா இப்ப
வு ந |ւյւգ
தான் எங்க சங்கத்து பண மெல்
லாம் கொள்ளையடிசசி இருப் பான் இந்த கெழவன்."
“இப்படித்தான்பு.ா இத்தக் கெழவன் நம்மல ஏமாத்தியிருக்
கான் . '
*கெழவன் செ ம்  ைம யா
ஒதுச்சி தோல உரிச்சி பொலிசில
பாரம் குடுக் கனும் . '
கொலனிக்கு கைவேலை செய்ய போன இடத்தில் சம்பளத்துக் குப் பதில் கசிப்பை ஊற்றிக் கொண்டுவந்த ஒருவன் ஆலோ சனைக் கூறினன்'மழலை மொழி
'கேதவீட்டுக்கு செலவு செய் யத் தான் காணிக்கைப் பெட் டியை உடைத்தேன் ஒங் க ள கேட்டா நீங்க காட்டுக்கு ஒருத் தனும் மேடடுக்கு ஒருததனுமா இழுப்பீங்க. காரியம் நடக்காது. அதுதான் என் சொந்த முடிவில் நானே இதை செய்தேன். என்று கடைசி வரை தலைவர் வைர முத்து சொல்லவேயில்லை?
(12)

கவிதைக் கன்னியின் காதலில், அவள்
கடைக் கண் வீச்சினில் மயங்கி நாளுமே புவியில் உற்றிடும் போகம் ššáGu
போக்கினேன் காலம், செந்த மிழிலே சுவை தருங்கவி நூறு நூறென.
சுரக்கும் நெஞ்சினில் பொருள்த னை, மிக அவ மி வையென வெறுக்க லாயினேன்
vess யணின்று அடைய லாயினேன்!
புத்த ககேளே வாங்கி குவித்தேன்,
பொழுதெ லாமிவை படித்துக் களித்தேன்,
பந்திரி கைகளில் சஞ்சி கைகளில்
பவனி வந்தன எந்தன் கவிதைகள்,
நித்த முங்கவி எழுதி எழுதியென்
நீண்ட கரங்களும் மெலிந்து битцеит,
சித்த மோகவி சுரப்ப தன்றி வே(று)
சிந்தனேக்கிடம் தருவ தில்லையே
நன்று நன்று கவிதை நன்றென
நண்பர் கூறும் புகழ்மொழி கேட்டு, தென்ற லின்மென் சுகத்தை யுணர்ந்தேன்
தோளில் மாலைகள் மணத்தை நுகர்ந்தேன்! ஒன்று மறந்தேன், வாழ்வுக் கிவையெலாம்
உதவு மா?ான, ஒர்ந்து பார்த்திட, அன்று மறந்ததை இன்று நினைக்கிறேன்
ஆம் பொருளின் தேவை யுணர்கிறேன்
( 13)

Page 9
காவி யம்புனைத் தேன், பல நூறு
கவிகள் பாடினேன் ஆயினு மென்ன? வாழ்வி லேவளம் காண வில்லையே,
மனத்தைப் போர்க்கள மாக்கி நீயென ரவி னேன் கவிக் கணைகள் பற்பல
இருந்து மென்ன வாழ்வி லேஓளி மே வ வில்லை பொருள்வலி முன்னே,
முற்றுந் தோல்வியே வாழ்வு காணலே
இறந்த பின்னெனக் கெடுக்கும் விழாக்கள்
எத்தனை எத்தனை எண்ணிப் பார்க்கிறேன், "சிறந்த கவிஞன்," எனப்புகழ்ந் திடுவார்,
தீஞ்சுவைக்கவித் திலகமென் றிடுவார், பரிந்து எந்தன் கவிதைக ளைப் பலர்
பந்து போலெறிந் தாடிக் களிப்பார், இறந்து கொண்டிருக் கும் எனக் குதவ
யாருளர்? போலி வேடதாரிகள்
'பொன்னையும்பொருள் தன்னையும் போற்றும்
புவியில் உந்தன் கவிதை யாலெமக் கென்ன பயனிர வுக்குண வாகுமோ?"
*ஏனடா வுணக் கிந்த பைத்தியம்!" அன்னை சொன்னவை இன்னுங் காதினில்
அதிர்ந் தொலித்திடும், ஆயினும் கவிதை இன்னு மின்னும் எழுதிக் கிழிக்கிறேன்,
ஏடுக ளை,ஆம் நானேர் பைத்தியம்!
இலக்கிய விழாக்கள் கவிய ரங்குகள்
எத்தனை எத்தனை கலந்து கொண்டவை, முழக்கிய கவிதைகள் ஆயிரம் அதன்
மூச்செ லாம்பொது நலத்தின் தாகம், நிலத்தில் எவரும் சமதை என்றிடும்
நினைவே கவிதைக ளாக மலர்ந்தன அளப்பி லாலாயென் நெஞ்சின் ஆசைகள்
அத்தண் புங்கன வாகிப் போனதே
பட்டம் பதவி இவைகளுக் காக
படித்திருந் தேனல், மற்றவர் கைக்கு எட்டாக் கணியாய் இருந்த போதிலும்
எந்தன் வாழ்வு சிறப்புறு மன்ருே குட்டிச் சுவராம் தோட்டப் பள்ளியில் கூடிய ஐந்தாம் வகுப்புடன் கல்வி முற்றுப் பெற்றதால் பெற்றவ ரைப்போல்
மீளாச் சிறை லயக் கைதியாய் ஆனேன்!
( 14)

மேலுங் கற்றிட மனதினில் ஆர்வம்
மீதுறும்; ஆயினும், வறுமையின் தாக்கம் மேலுற, ஆசையில் மாபெரும் தேக்கமில்
வேழை நெஞ்சிலோ அளவிலா ஏக்கம் பாலும் பழமுமா உண்டு வளர்ந்தேன்?
பஞ்ச ணையிலா உறங்கி எழுந்தேன்? கூழும் இன்றி பசியில் துடித்தேன்!
கிழிந்த படங்கில் உறங்கி வளர்ந்தேன்!
பெற்றவர் தொழிலேயே பிள்ளை மேற் கொண்டேன்
பேய்மழைக் காற்றில் மலைகளில் ஏறி நித்தமும் தேயிலைத் தளிரினைப் பறித்து
நெஞ்சிலா கொடியருக் கஞ்சி நடுங்கியும் திட்டும் வசையும் தினந்தினம் கேட்டும்
தொழில் புரிந் தேன்பல ஆண்டுகள் ஆயினும், பத்திரி கைகளை படிக்கும் ஆர்வமோ
பற்றிக் கொண்டதே பாவி யேனென!
பார்பரந்த மக்கள் வாழ்க்கையும்
பற்பல நாட்டு சரித்திரம் பற்றியும் சீர்மிகுந் தமிழின் தொன்மையுந் தமிழர்
திறல் புகன்றிடும் இலக்கியம், அவர்தம் நேரிய அரசியல் நெறிக ளும் ஒரு
நிகரி லாஅவர் வீரமும் காதலும் போர்முறை நியதியும் வாணிப வளர்ச்சியும்
பொழுதெ லாம்படித் துளம் பூரிப்பேன்!
எங்கு நோக்கினும் பசுமையின் தேக்கம்
எம்மவர் கைகளின் உழைப்பின் ஆக்கம் பொங்கும் அருவிப் புனல்வழிந் தோடி
பொன்மகள் நிலமகள் பூரிக்கச் செய்யும் அங்க மெங்கினும் தேயிலை பூத்து
அழகு சிரிக்கும் மலைகள் அதனில் இங்கு உற்றயென் அன்னை தந்தையர்
இருகண் சொரிந்த நீரும் கலக்கும் !
ஆங்கவர் கண்ணி ருடனவர் எண்ணம்
ஆசைக் கனவுக் ளோடவர் உடலும் சங்கு புதைந்து மண்ணில் கலந்து
இற்றுரமாக, இதய வுணர்வுகள் ஓங்கி வளர்த்த மரங்களாய் தேயிலை
உருவாய் மாறி எத்தனை செல்வம் பாங்குடன் குவியும் அன்னவர் சந்ததி
பாரில் இழிந்த சடப்பொருள் ஆஞர்
( 15 )

Page 10
அன்று எம்மவர் வாழ்வினை எண்ணி
அகம் மகிழ்வுறும், அடுத்த கணமோ இன்று எம்மவர் இங்கு மலைகளில்
எண்ணி லாயிடர் பட்டு மடிவதை தின்று உமிழும் எச்சிற் பொருளென
தீ . ம னத்தவர் எம்மை வெறுப்பதும் கண்டு கண்டு கனன்ற நெஞ்சினில்
கவிதை யூற்று சுரக்க லாயின !
வளமை யுற்றதென் கவிதை; ஆயினும்
வறுமை யுற்றதென் வாழ்வு, மனத்தின் இளமைக் கால கனவுகள் போல
எனது கவிதைப் பயன்களும் ஆகவோ? தலைமை, உலகில் எதற்கும் தாங்கிடும்
தனந்த னைச்சிறி தேனும் மதித்திடா உளம் இன்றதன் தேவை யின் பயன்
உணரும் போதிலோ உடல்த ளர்ந்ததே !
* சங்கத் தாலே வாழ்வு வளம்பெறும் !" தணியா ஆவல் இதய மீதுற இங்கென் வாழ்வை உரமாய் ஆக்கினேன். இடர்க் ஞற்று சிறையில் வாடினேன் ! பங்க முற்றதென் வாழ்வு சுயநலப்
பதர்க ளாம் தொழிற் சங்கத் திருடரால், எங்கு நோக்கினும் எம்பெயர் கூறி
ஏய்த்து வாழ்ந்திடும் வேட தாரிகள்.
கன்னக் கோலர்கள் எங்கள் வளத்தினை
கவரும் வஞ்சக் கொடிய மனத்தினர் தன்னலப் பதர்கள் தம்மைப் போற்றிசெந்
தமிழிற் கவிதைகள் பாடினே னந்தோ என்னை, எந்தன் கவிதை, மலர்களை
எருவாய் ஆக்கி உயர்ந்த பேர்களோ மன்னர் போலும் வாழ இங்கிவன்
வறுமைச் சேற்றில் வதைய லாகினேன்!
'குறிஞ்சி - தென்னவன்”
( 16 )

தோட்டப் பாடசாலைகளும் மலையக இளைஞர்களும் தோட்டப் பாடசாலை ஆசிரியர் நியமனம் தொடர்பான நேர் முகப் பரீட்சை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மலையக
இளைஞர்களது ஒரே ஒரு அரசாங்க வேலைவாய்ப்பு இதுவென்று யாவரும் அறிந்ததே.
அத்தோடு பிறந்த மண்ணில் சேவையாற்ற அவர்கள் எச் துண்ை ஆர்வத்துடன் இருப்பார்கள். இந் நியமனத்தில் வெளியாரின் போட்டி விரும்பத்தக்கது அல்ல. குறிப்பாக மலையகத்தில் தற்போது அரச பாடசாலைகளில் பட்டதாரி, பட்டதாரி அல்லாத நியமனங்கள் யாவும் வெளி மாவட்டத்தாரின் கையிலேயே இருக்கிறது. இவர்கள் சம்பளத் திற்காக வேலை செய்தார்களே தவிர, கல்வியில் பின்தங்கியுள்ள மலை யகத்திற்கு என்ன செய்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. தமக்குரிய சட்டப்படியான லீவுகளைப் பெற்று தமது ஊர்களில் கழிக் திருர்களே தவிர, விடுமுறை காலங்களில் மேலதிக வகுப்புகள் நடை பெற உதவுகிருர்களா? இல்லைத்தானே. ና ጎ
தோட்டப் பாடசாலை ஆசிரிய நியமனத்தில் வெளியார் ஆக் கிரமிப்பு கொள்ள இடம்வைக்கக்கூடாது என்பதே இன்றைய மலையக இளைஞர்களது பிரச்சினையாகும். அத்தோடு இந் நியமனத்தில் உயர் அதிகாரிகள் கவனயீனமாக நடப்பார்களேயானல், இதுவே மலைாகத் தில் இன தேசிய பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.
போட்டி பரீட்சையின் போது மலையக இளைஞர்கள் குறிப்பிட்ட வீத்மே தேறி இருக்கிருர்கள். இதன்படி பார்த்தால் பெரும்பான்மை இடம் வெளியாருக்கே ஒதுக்கவேண்டும். அவர்களுக்குள்ள கல்வி வசதி எமது மாணவருக்குக் கிடைக்கிறதா? எனவே அவர்கள் சித்தி யடைய வாய்ப்பு அதிகம் தானே. எமது கோரிக்கை இது தான்; எமது இளைஞர்கள் பட்டதாரி ஆசிரியராக, அல்லது பட்டதாரி அல்லாத ஆசிரியராக வெள்மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டியில் கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? இல்லைத்தானே. அப்போது ஏன் நாம் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.
R ke 邀学、
நமது முழு உரிமையையும் பயன்படுத்த வேண்டும். போராட்டம் நடத்தியாவது எமது தோட்ட மண்ணில் வெளியார் ஆசிரியராக நிய் மிக்காமல் இருக்க முடிந்தளவு முழற்சி எடுக்கவேண்டும். இதுவே மலையக இளைஞர்களது மனதில் இன்றுள்ள திலமை. இதனையே
17)

Page 11
வெளிமாவட்டத்தார் கருத்திற் கொண்டு விட்டுக்கொடுப்பார்களே யானல் ஆதுவே அவர்களது பெருந்தன்மையாகும்.
கல்வியிலே பின்தங்கியுள்ள மலையகத்தை வெளியாரால் கட்டி யெழுப்ப முடியாது. நாமே முயற்சித்து செயற்பட்டால் மாத்திரமே இதனை மாற்றி அமைக்கலாம். ஆசிரியத் தொழில் என்பது இலகுவாக சம்பளம் பெறும், பொறுப்பற்ற தொழில் என பலரும் நம்புகிருர்கள். பிரத் கியேக வகுப்புக்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இப்படி யானதொரு இக்கட்டான நிலைமைக்கு மலையகம் தள்ளிவிடபடக் கூடாது. எனவே எமது இளைஞர்கள் தோளோடு தோள் நின்று மலையகம் என்ற மாபெரும் சக்தியை கட்டியெழுப்புவதன் மூலம் எமக்குள்ளும் படித்த இளைஞர்கள் பலரை உருவாக்கிவிட வேண்டும். இதுதான் நாம் காணப்போகும் கல்வி அபிவிருத்தியாகும்.
மேற்படி ஆசிரியத் தெரிவுக்காக நாவலப்பிட்டி பகுதிகளில் பலரும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களது பெயர்ப் பட்டியலை வைத்துக் கொண்டு பணம் குறையாட பிரபல தொழிற்சங்கத்தின் நகர கிளை எனக் கூறிக்கொள்ளும் பிரபல வர்த்தகர்கள் பலர் மலையக இளைஞர்களிடம் 5,000/- தொடக்கம் 10,000/- வரை பணம் கேட் கிருரர்கள். இது தொடர்பான முறைப்பாடுகள் கெளரவ அமைச்சர் திரு. தொண்டமான் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தொழிற்சங்க தலையீடும் மலையக ஆசிரிய நியமனத்தில் தவிர்க் கப்படவேண்டும்.
அமைச்சர் திரு. தொண்டமான் தோட்டக்கல்வி தொடர்பாக எவ்வளவோ அபிலாஷைகளைக் கொண்டு செயலாற்றிய போதும் அவ ரது தொழிற்சங்கத்தின் நாவலப்பிட்டி நகர கிளையின் அரசியல் பிரி வினர் பணம் சூறையாட நினைப்பது தொழிற்சங்கத்தின் பெயருக்கு மாசுகற்பிப்பதாகவே இருக்கின்றது.
இப்படியான ஒரு சிலரது மோசடி தான் கடந்த பாராளுமன்றத் தில் எமது பிரதிநிதிகளை மக்கள் வெறுத்து ஒதுக்கிவிட்டனர் என எண்ணத் தோன்றுகிறது.
- நாவலப்பிட்டி எம், சுரேந்திரன்
விடுதலை செய்
இனவெறி கொண்ட தென்னுபிரிக்க அரசினல் கடந்த 25 ஆண் டுகளாக சிறையிலே வாடும் தென்னபிரிக்க மக்கள் தலைவர் நெல் சன் மண்ட்லேக்கு எதிர்வரும் ஜூல்ை மாதம் 71 வய்தாகிறது. அவரை விடுதல் செய்ய வேண்டும் என்ற உலக மக்களின் கோரிக்கைக்கு தென்னபிரிக்க அரசு செவிசாய்க்க மறுத்து வருகின் றது. இந்த நிலையிலாவது அவர் விடுதலை செய்ய வேண்டும் என் பதே இதயம் உள்ள எல்லாருடைய கோரிக்கையாகும்,
( 18)

jäänidiini
வட்டகொடை எஸ். பி. வட்டகொடை
*கொழுந்து ஒவ்வொரு மாதமும் வெளிவர ஆவன செய்வது நல்லது. இதற்கு நந்தி அவர்களின் கருத்து கவனிக்க வேண்டிய தொன்ருகும். மலையக பாடசாலை மாணவர்களிடையே அறிமுகம் செய்து வைப்பது அவசியமொன்ருகும். மலையகத்தின் பாடசாலை அதிபர்களைக் கண்டு அவர்களுடன் கலந்துரையாடி துயர்வுற்ற சமு தாயத்திற்கு எழுச்சிமிகு கருத்துக்களை தெரிவிக்க முயற்சிகள் எடுக்கு மாறு வேண்டுகிறேன்.
GTGřv. grmt GOLDurr நுபூண்டுலோயா த. வி. பூண்டுலோயா அட்டைப் படம் டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா எடுத் துரைப்பது இன ஒற்றுமையை சாரல் நாடனின் கட்டுரை எடுத்து ரைப்பது மலையக மக்களின் இன்றைய தேவையை,
கம்ப்ளி நியுஸ் மலையக அரசியல்வாதிகளுக்கோர் கொசுக்கடி.
சிறுகதை மலையக இளைஞர்களுக்கு ஓர் எடுத் க்காட்டு. "அக்கரை
கவிதைகள்" அபாரம். கொழுந்தின் விலையோ மிக மலிவு. மூன்று சிகரட்டின் விலைதான்.
a - assifierreir
கபரகில எஸ்டேட்
எலமுள்ள
கொழுந்து கிடைக்கப்பெற்றேன். சுவை பிரமாதம் அதை
கசக்கி நுகர்ந்தேன். மணம் மனதைப் பறிகொடுத்தேன்.
ஐயஞர். முல்லவேந்தன் ( 19 )

Page 12
O மலையகத்தின் முன்னணி தொழிற்சங்கத்தின் மாதவெளி யீடு பத்திரிகை உலக ஜாம்ப ான் ஒருவரின் கைவண்ணத்
தில் வெளிவர உள்ளது. "ஒரு
வரின் பொருளாதாரத்திற்கு
முதுகெலும்பாக இருந்த இந்த
பத்திரிகை இனி மேலா வ து தொழிற்சங்கத்திற்கு தொழிலா
ஆார்களுககு பயன்படட்டும்'; என்று தினசரி பத்திரிகை ஒன்
றின் நிருபர் அமைச்சரான தொழிற்சங்க தலை வரிடம் தொலைப்பேசியில் கிசுகிசுத்தா அரிச்சந்திரா بنائے ' ہprnrtb
O தோட்டங்களில்
தகங்களை தருவித்து கொடுப்ப தில் ஒரு தொழிற்சங்கம் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது ஆனல் அந்த புத்தகங்களால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. கலைக்களஞ் சியம், சாண்டில்யனின் தலை யணை நாவல்கள், என்பவை அவைகளுள் சில கொழும்பு புத்தகக் கடை ஒன்றில் விற் காது தேங்கிக் கிடந்த புத்தகங் களை :பெரிய கமிஷனுேடு' யாரோ தொழிலாளர்கள் தலை யில் கட்டிவிட்டிருக்கின ருர்கள்
அட சுப்பா அறிவுக கண் திறப்
பதிலுமா இப்படி ஒரு சுரண் டில்?
திறக்கப் படும் வாசிகசாலைகளுக்குப் 14 : : :
O மே தின முதல் வார தமிழ்ப்பத்திரிகைகளைக் கவனித் தவர்கள் விளம்பரம் போட்டு தங்களை நினைவுபடுத்தும் அள வுக்கு தளர்ந்து போயிருக்கும் மலையகத் தொழிற்சங்கம் ஒன் றின் நிலை கண்டு விசனித்தார் கள் என்னே பரிதாபம்.
O சோவியத் ருஷ்யாவில் வழ
மைக்கு மாருக மே தினம் சாத
னைகளை பறை சா ற் று வ  ைத
விடுத்துத் தொழிலாளர்களின்
தேவைகளை முன்னிலைப்படுத்து வதற்கு இவ்வாண்டு மேதின விழா பயன்படுத்தப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்
தானில் இந்த ஆண்டு மே தின விழா சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. மாருக, இலங்கை யில் இந்த ஆண்டு சோபை இழந்திருந்தது.
O இந்து சமய இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தலை நகரான கொழும்பில் தமிழ்த் தின விழா சிறப்பாக நடை பெற்றது. அ ைமச்சர் திரு. லொக்கு பண்டாரவின் சிங்கள பேச்சை பாராளுமன்ற முன் ஞள் மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் மொழிபெயர்த்தார். அது மொழிப்பெயர்ப்பா அல் லது முழிப்பெயர்ப்பா என்று முன் வரிசையில் அமர்ந்திருந்த மும்மொழிகளிலும் பாண்டித் தியமுள்ள ஒருவர் கேட்க, பக் கத்தில் இருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் "இப்படித்தான இவர் பாராளுமன்றத்திலும் குப்பை கொட்டியிருப்பார் என் ருர். பின்னலிருந்த பத்திரிகை யாளர் ஒருவர் அட மணியா என்று த லை யில் கொண்டார்.
அடித்துக்
(20)
 

அட்டை சொல்லும் கதை
தனிமனித இலக்கிய இயக்கம்
- சு. முரளிதரன்
எனது ஹைக்கூட கவிதை நூலான கூடைக்குள் தேசத்தின் வெளியீட்டுக்கு வந்த நண்பர் மேமன் கவியை கொழும்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்ற இடத்தில் மலையகத்தின் மூத்த இலக்கியவாதி திரு. கே. கணேஷ் அவர்களை முதன் முதலாகச் சந் தித்தேன். மேதைகளுக்கேயுரிய அவரின் தோற்றமும் அவரின் ஆளுமை பற்றிய கணிப்பும் என்ன பயபக்தியுள்ளவனக அவர்முன் இருக்கச்செய்தது. தனது கவிதையொன்றுக்கு ஜப்பானிய சக்கர வர்த்தியிட ம் பரிசு வாங்கிய அவரிடம் எனது ஜப்பானிய ஹைக்க வடிவக் கவிதைத் தொகுதியை கொடுத்தபோது என் மகிழ்ச்சி இரட் டித்தது. அதன் பின் பலதடவை அவரின் இல்லத்தில் சந்தித்த போது இளைய தலைமுறை எழுத்தாளனன என்னேடு ஒரு சிநேகி தனேடு சம்பாஷிப்பதைப்போல் உரையாடியது, என்ன வியக்கவும் மகிழ்வடையவும் செய்தது, அவரிடம் இலங்கை இலக்கிய வளர்ச்சி, உலக இலக்கிய போக்குகள் பற்றி தாராளமாக கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய துணிவையும் தந்தது. இலக்கியப் புலத்துள் அவரின் சிந்தனை கிளறிவிடும்போது, ஏராளமான தகவல்களை கொண்ட அவ ரின் பழுத்த இலக்கிய அனுபவ வார்த்தைகள் என்ன பலதடவை கள் பிரமிக்க வைத்தன.
திரு. கே. கணேஷ் அவர்கள் தமிழகத்திலும் பின் இலங்கை யிலும் கல்வி கற்றவர். தனது பன்னிரெண்டாவது வயதிலேயே சஞ் சிகைகளுக்கு எழுதத் தொடங்கியது மட்டுமன்றி, பதினறு வயதிலேயே சஞ்சிகைகளை வெளியிடும் முயற்சிகளை தொடங்கியவர்.
சென்னையில் தனது சகாக்களோடு இணைந்து இளைஞர் காங்கிரஸ் எனும் அமைப்பை ஆரம்பித்து "லோகசக்தி" எனும் பத்திரிகையை 1936ல் வெளியிட்டார். இதுவே சென்னையில் முதன் முதலாக முற் போக்குக் கருத்துக்களைக் கொண்டு வெளிவந்த பத்திரிகையாகும் இவ்வாறன இவரின் அனுபவம் 1945ல் கே. ஏ. அப்பாஸ், தினமணி கதிரின் அப்போதைய ஆசிரியர் வெங்கடாச்சாரி, குயிலன், தமிழ் ஒளி, தி. க. சிவசங்கரன் முதலான பல முற்போக்கு எழுத்தாளர் களை ஒன்றிணைத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித் தார்; அதைப் போலவே பிரபல பஞ்சாபி ஆங்கில எமுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கைக்கு வந்திருந்தபோது, அவர் முன்னிலை
(21)

Page 13
யில் சுவாமி விபுலானந்தரை தலைவராகவும் மார்டின் விக்கிரம சிங்காவை உபதலைவராகவும் கொண்ட அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்து கலாநிதி சரத் சந்திரவோடு இருவரும் இணை காரியதரிசியாக இருந்து இலங்கை வாழ் தமிழ், சிங்கள எழுத்தாளர் களை ஒன்றிணைத்து பலப்படுத்தியவராகவும் இருக்கின்ருர், தற்போதும் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் உப தலைவராக விளங்குகின்றர். இவ்வாறன இவரின் பணிகள் காரணமாக தமிழகத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் தொடக்கம் வானம்பாடிக் கவிஞர்கள் வரையான எல்லா வகையான முற்போக்கு எழுத்தாளர்களையும் பரிச்சியப்படுத் திக்கொண்டவராகவும் இருப்பதோடு இலங்கையின் எல்லா எழுத் தாளர்களினதும் நெருக்கமான தொடர்பு கொண்டவராகவும் இருப் பது திரு. கே. கணேஷ் அவர்களுக்கேயுரிய சிறப்பாகும். தனியே தமி ழக எழுத்தாளர்கள் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் பல எழுத் தாளர்களயும் நண்பர்களாகக் கொண்டு அதனேடு பெரும் தமிழ்ப் பணி செய்தும் வருகின்ருர்,
சிறந்த ஆக்க இலக்கியலாளர் என்பதைவிட திரு. கணேஷ அவர் கள் பிரசித்தமாக இருப்பது அவரின் அவசியங் கருதி அவர் அவ்வப் போது செய்த மொழி பெயர்த்துத்தந்த இலக்கிய வடிவங்களால் ஆகும். தமிழ் எழுத்தாளர்களுக்கு இவரின் மொழிபெயர்ப்புப்பணி பேருதவியாக அமைந்தது மாத்திரமன்றி தமிழ் கூறும் உலகுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கின்றது.
பல்கேரிய கவிஞர் பெட்டோஃபியின் கவிதைகள் இவரால் தமிழ் படுத்தப்பட்டு தற்போது தமிழகத்தில் நூலாகும் செய்தியும் நூலு ருப்பெறவிருக்கும் வியட்னுமிய சிறுகதைகள் தொகுதியும் இவரின் மொழி பெயர்ப்பு ஆளுமைக்கும் காலங்கருதி செய்யும் அவசிய பணி செய்யும் பெருந்தன்மைக்கும் சான்ருகும். எல்லாவற்றையும் விட உலக எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் சீன எழுத் தாளரான லூசுனின் கதைகளின் மொழிபெயர்ப்பைச் செய்து தமிழ் மக்களுக்கு நூலுருவில் (இரு பாகங்கள்) தந்த இவரின் பணி மறக்கப் LJ-(pLun5gi.
மேலும் உக்ரேனிய மகாகவி தாராஷ் செவ்சென்கோவின் காவி யமான "கதரினு'வை தமிழில் தந்துள்ளார். ஆங்காங்கே உதிரிக ளாக பெருந்தொகை பிறநாட்டு கவிதைகளை அழகாக தமிழ்ப் படுத்தி இலங்கை இந்திய சஞ்சிகைகளில் தந்தும் தந்துகொண்டு மிருக்கின்ருர், அண்மையில் வி. குப்ரியானேவ் என்ற சோவியத் கவிதையாளரின் கவிதைகளை தந்து புதுக்கவிதையாளர்களின் அபி மானத்தையும் பெற்றவராகியுள்ளார். மேலும் நூலுருவாக்கத் தகுந்த பல மொழிபெயர்ப்பு இலக்கிய வடிவங்கள் பல எழுத்துப் பிரதிகளாக இவரிடம் இருக்கின்றன.
(22)

தமிழகத்தில் தமிழ் ஒளி, குயிலன் ஆகியோரோடு "தென்றல்' என்ற பத்திரிகை தடத்திய அனுபவத்தோடு இலங்கை வந்த திரு' கணேஷ் சில காலம் ‘வீரகேசரி"யில் பணியாற்றி பின் சுதந்திரன்' பத்திரிகையிலும் கடமையாற்றியுள்ளார். "சுதந்திரனில் இவர் பணி யாற்றியபோது ஏராளமான எழுத்துலகப் பிரமாக்களோடு தொடர் புகளை ஏற்படுத்திக் கொண்டார். அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி முதலானேர் அத்தகைய ரீதியில் இவரோடு தோழமை கொண்டிருந்தனர். இவ்வாறு நமக்குத் தொழில் எழுத்தென சில காலமிருந்த கணேஷ் அவர்கள் இலங்கையில் செய்திட்ட சிறந்த பணி "பாரதி' என்ற முற்போக்குச் சஞ்சிகையை வெளியிட்டதா கும.
"பாரதி' சஞ்சிகை உலக முற்போக்கு முதல் தமிழ் சஞ்சிகை யென்ற சிறப்புக்குரியது எனலாம். திரு. கே. ராமநாதன் அவர் களோடு திரு. கணேஷ் நடத்திய சஞ்சிகை இலங்கை இலக்கியவர லாற்றில் முக்கியமானது. இதில் இலங்கையின் முற்போக்கு எழுத் தாளர்கள் பலர் எழுதினர்கள். இதிலிருந்து இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள் ஓரணிதிரண்டு பணிசெய்வது ஆரம்பமாயிற்று என GT).
கணேஷ் அவர்கள் சிறந்த கவிஞர், சிறந்த கட்டுரையாசிரியர் என்பதோடு சிறந்த சிறுகதையாசிரியர் என்ற பெருமைக்குமுரியவர்g சிறுகதைகள் பற்றி ஆய்வோர் இலங்கை சிறுகதை வளர்ச்சியில் இவரின் பணியை குறிப்பிடத்தவறமாட்டார்கள்.
இவரின் 'ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம்” என்ற சிறுகதை அக்கா லத்தில் சிறந்த அங்கதச் சிறுகதையாக பாராட்டப்பட்டமை கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களின் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலூடாக தெரியவருகின்றது.
திரு. கணேஷ் அவர்கள் ஒரு காலத்தில் இலங்கையின் இடது சாரி இயக்கமொன்றின் முக்கிய செயலுறுப்பினராக இருந்துள்ளார். ஐக்கியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கலாசாரப் பிரிவுக் கும் பொறுப்பாகவும் இருந்துள்ளார். இவைகளினூடே வெறுமே எழுத்தாளணுக மட்டுமில்லாமல் பாட்டாளி வர்க்கத்தினேடு பாடு படுபவராக அதனை பலம் பொருந்திய சக்தியாக மாற்றுவதற்காக பாடுபட்டவராகவும் இருப்பது தெளிவாகின்றது. தோட்டத் தொழி லாளர்களின் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு தோழர் எஸ். நடேசன் போன்றேருடன் இணைந்து பணியாற்றியுமுள்ளார்.
இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் பிரதிநிதியாக ஏகோபித்த ஆதரவைப்பெற்று பலதடவை இலங்கை எழுத்தாளர்களை பிரதிநி தித்துவப்படுத்த வெளிநாட்டு எழுத்தாளர் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். ரஷ்யா, பல்கேரியா போன்ற நாடுகளின் எழுத் தாளர்களால் மிக ஆர்வமாக இவர் வரவேற்கப்பட்டுள்ளார். உல கக் கவிதை விழாவில் பங்குபற்றி ஜப்பானிய சக்கரவர்த்தியாக
(23)

Page 14
இருந்த ஹீரோஹிட்டோவிடம் விருதையும் பெற்றுள்ளார். இலங்கை கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனை சபையிலும் சாஹித்திய மண்டல உறுப்பினராகவும், உலக தமிழ் as anom FinTT பேரவையின் நிறைவேற்றுக் கவுன்ஸில் உறுப்பினராகவும் இருந் துள்ளார். PEN உறுப்பினராகவும் ருேயல் எசியாற்றிக் சொசைட் டியின் ஆயுட்கால உறுப்பினராகவும் விளங்குகின்ருர், பல்கேரியா வில் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர்கள் மாநாட்டில் இரு தடவைகள் பங்குபற்றியுள்ளார்.
இவ்வாறு பல் சிறப்புகள் பெற்ற மூதறிஞராக விளங்கும் கணேஷ் அவர்கள் கடந்த ஆறு தசாப்த இலக்கிய நிகழ்வுகளை உள் வாங்கிக் கொண்டு எவ்வித விளம்பர பகட்டுகளுக்கும் ஆட்படாத வராய் மணிவிழாக்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நாயகராய் சிறந்த நூலகத்தை தன் இல்லத்தோடு கொண்டவராய் அதில் சுறுசுறுப் பாக தேனியைப் போல் இயங்கும் நல்ல வாசகளுப் பொறுமை யோடு நிதானமாக எழுத்துப்பணியை மேற்கொள்பவராய் 69 வய திலும் ஒரு இளைஞரைப் போல் இயங்கிவருகின்றர்.
நூல் அறிமுகம்
மலையகத் தமிழ் மக்கள்
மலையகத் தமிழர் குறித்த ஆய்வுகள் இன்று பலரால் மேற் கொள்ளப்படுகின்றன. இரா. சிவசந்திரன் “மலையகத் தமிழ் மக்கள் குடித்தொகை பண்புகளும் சமூக பொருளாதார நிலைமைகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் கலாநிதி குமாரி ஜெயவர்தன "லங்கா கார்டியன்" னில் எழுதி, பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருப் பெற்றதில் ஓர் அத்தியாயமான "தோட்டத் தொழிலாள ரின் அரசியல் உரிமை மறுக்கப்படல்" என்ற கட்டுரையும் ஒன்றி ணைக்கப்பட்டு மலையகத் தமிழ் மக்கள்" என்ற தலைப்பில் 50 பக்கங் களில் கையடக்கமான நூலாக தற்போது வெளிவந்திருக்கின்றது. இவ்விரு கட்டுரைகளும் முன்பு "ஆய்வு' காலாண்டு இதழில் வெளி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 'பொன்னி" வெளியீடாக சென்னையிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மலையக மக் களின் துயரம் நிறைந்த வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும், அவர்களுக்கெதிராக விதைக்கப்பட்ட இனத்துவேஷக் கருத்துக்களை அரசியல் ரீதியாக அறிந்துகொள்வதற்கும் பயன்படும் என நம்ப 6).
விலை - இந்திய ரூபா நான்கு
(24)

ம&யகத்தோடத்தெறிலாலர் "醬
%Eള് యె.తిr(gణాటుb
தீமிழக வரலாற்றிற் கிறிஸ்தாப்த காலத்துக்குச் சற்று முன் னும் பின்னுமாக மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கிய நிலவுடைமை நிலப்பிப்புத்துவ, ஆதிக்கமானது கி. பி. ஏழாம் நூற்றண்டிலிருந்து. அதாவது பல்லவப் பேரரசர் காலத்தில் ஆழ அகலமாக வேரூன் றிச் சோழப் பேரரசர் காலப்பகுதியில் உச்சநிலையை அடையலா யிற்று. விசயநகர் - நாயக்கா காலப்பகுதியிலே தொடர்ந்தும் நில வுடைமை ஆதிக்கம் பெருவலிமையுடன் திகழ்ந்ததாயினும் பதினெட் டாம் பத்தொன்பதாம் நூற்ருண்டுகளில் குறிப்பாக, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியின் போதும் அதனைத் தொடர்ந்தும் சிறிது சிறிதாகத் தளரத் தொடங்கியது.
பிரித்தானியராட்சிக் காலப்பகுதியில் வரவேற்றத்தக்க நல்ல பல மாற்றங்கள் ஏற்பட்டபோதும் நிலவுடைமை ஆதிக்கமும் <别凸 னுடன் பின்னிப் பிணைந்திருந்த பண்ணை அடிமை முறை, சாதி, சம யாசாரங்கள், வழமைகள், நம்பிக்கைகள் முதலியனவும் அடியோடு அழியவில்லை. மாருக நிலவுடைமை ஆதிக்கமானது காலத்துக்கேற் பத்தன்னை மாற்றுக்கொண்டு புது வடிவம் பெறலாயிற்று.
நிலவுடைமை ஆதிக்கத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாகப் பண்ணை அடிமை முறை, சாதி, சமயாசாரங்கள், அவற்றின் அமைப்பு முறைகள் முதலின அமைந்திருந்தன. காலத்துக்குக் காலம் நிலவு டைமை ஆதிக்கமானது வலிமை பெற்று வளர்ந்து வந்த போது பண்ணை அடிமை முறை, சாதி, சமயாசாரங்கள் நெறிமுறைகள் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முதலியனவும் அவற்றைக் கட்டிக் காப்பதற்கான விதிமுறைகளும் மிக இறுக்கமாகக் கடைப் பிடிக்கப்பட்டன. சமூகத்தின் பெரும் பகுதியினர், குறிப்பாக உட லுழைப்பாளிகள் சூத்திரர் என முத்திரை குத்தப்பட்டு உடலுழைப் புக்கு மட்டும் தகுதியாக்கப்பட்டனர். ஆரம்பத்தில் சூத்திரர் ஒரு பிரிவினராகக் கணிக்கப்பட்டாலும் காலப்போக்கில் சூத்திரருள்ளும் நூற்றுக் கணக்கான உபசாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள், உருவாக் கப்பட்டனர். அவர்கள் எவ்வகையிலும் தலையெடுக்கா வண்ணம் சுகபோக வர்க்கத்தினர் அரசியல், சமூகம், பொருளாதாரம், சல்வி,
(25)

Page 15
சமயம் முதலிய துறைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். குத்திரர் களது உழைப்பினுற் கிடைக்கும் வருவாயின் பெரும் பகுதியைத் தம தாக்கிக் கொள்வதில் சுகபோக வர்க்கத்தினர் கண்ணுங்கருத்து மாக இருந்தனர். சூத்திரர்களைத் துஞ்சவும் விடாது விஞ் ச வும் விடாது வாழவும் விடாது சாகவும் விடாது கவனித்துக் கொண்
6.
சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களில் நசுங்குண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தினர் என்றுமே தலை நிமிரா வண்ணம் அவர்களது அகமும் புறமும் கட் டுப் படுத்தப்பட்டிருந்தன உழைக்கம் வர்க்கத்தினர் தமது தாழ்வுற்ற நிலைமைக்கான உண்மைக் காரணங்களை என்றும் அறிந்து கொள் ளாத வகையில் அவர்களுக்குக் கல்வி விருத்தி மறுக்கப்பட்டிருந்தது. கூடவே உழைக்கும் வர்க்கத்தினரின் தாழ்வுற்ற நிலைமைக்கும் துன்ப துயரங்களுக்கும் அவர்கள் செய்த கன்மவினைகளும் பிறவுமே கார னங்கள் எனச் சமயம், சமய சாஸ்திரங்கள், தெய்வங்கள் முதலிய வற்றின் பெயரால் வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு வகையிலும் போதிக்கப்பட்டன.
உழைக்கும் வர்க்கத்தினர் தமது அறியாமை ஆகிய இருளி லிருந்து வெளியேழு வண்ணம் பாதுகாத்துக் கொள்வதிற் சுகபோக வர்க்கத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இவ்வாறு உழைக் கும் வர்க்கத்தினரின் அகத்தைக் கட்டி வைத்த சுகபோக வர்க்கத் தினர், அவற்றையும் மீறி உழைக்கும் வர்க்கத்தினர் கிளர்ந்தெழுந்த போதெல்லாம் தமது அரசியல், பொருளாதார பலத்தினல் அவர் களே இலகுவாக அடக்கி ஆளவும் முடிந்தது.
சுருங்கக் கூறின் பண்டைய மேலைநாடுகள் சிலவற்றிலும் மத்திய ஆசியாவிலும் இடம்பெற்றிருந்ததைப் போன்றதொரு "அடிமை முறை" தொடக்கத்தில் வட இந்தியாவிலும் காலப்போக்கிலே தென் இந்தியாவிலும் இடம் பெறலாயிற்று. மேலை நாடுகளில் வெளிப்படை யாகவே அடிமை முறையும் சுரண்டலும் இடம் பெற்றன. ஆயின் இந்தியாவில் வருணம், சாதி, குலம், கோத்திரம், சமயம், சாத் திரம், கன்மவினைக் கோட்பாடு, மறுபிறப்புக் கொள்கை முதலிய திரைகளுக்குப் பின்னல் மிக்க சாமர்த்தியமான முறையில் அடிமை முறையும் சுரண்டலும் இடம் பெற்றன. இது பற்றி வரலாற்ருசிரியர்
GJIT : . ፴® (26)

".புராதன கிரீஸ், ரோம், சில மேற்காசிய நாடுகள் ஆகியவை களில் உருவான அடிமை முறை அமைப்புக்கும் இந்தியாவில் உரு வான அடிமை முறை அமைப்புக்கும் இந்தியாவில் உருவான இந்த வருண ஜாதி அமைப்புக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமை கள் ஒன்றும் இல்லை. அடிமை முறையைப் போலவே வருண ஜாதி முறையினுடையவும் முக்கியமான அம்சம் சுரண்டுவோர் - சுரண்ட்ப் படுவோரிடையேயுள்ள முரண்பாடுதான். ஒன்றில் அடிமைகள் என்று பகிரங்கமாக அழைக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் சுரண்ட லுக்கு இரையாக்கப்படுகின்றர்கள். மற்ருென்றில் ஜாதி என்ற திரை பைப்) பிடித்துக்கொண்டுள்ளார்கள். இந்த வித்தியாசம்தான் உள் ளது.' (நம்பூதிரி பாட், இ. எம். எஸ். , இந்திய வரலாறு: ஒரு மார்க் சிய கண்ணுேட்டம்) எனக் கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
தமிழகத்தின் புகழ் பூத்த வரலாற்றுக் காலகட்டமாகக் கொள் ளப்படும் செல்வச் செழிப்புமிக்க சோழப்பேரரசர் காலத்திற்கூட மேற்கண்ட நிலைமைகள் மிக இறுக்கமாக இடம்பெற்றிருந்தமையையும் மனுதர்ம சாஸ்திர விதிகளைப் பின்பற்றி அரச தர்மமும் சாதி தர்ம மும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டமையையும் அவற்றை மீறும் உழைக்கும் வர்க்கத்தினர் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டமையை யும் அக்கால வரலாற்றுச் சான்றுகள் நிரூபித்து நிற்கின்றன.
எடுத்துக் காட்டாக:- முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத் தில் வரிப்பளுவின்த் தாங்கமாட்டாத சூத்திரர்கள் - தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் வரி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியமை யினையும் அப்போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டமையினையும், அதே சமயம் விசேட சலுகைகள் - வரி நீக்கம் முேதலியன - கோரிக் கிளர்ந்தெழுந்த பிராமணர்களுக்குக் கொடுந்தண்டனை வழங்கப்படா த்து மட்டுமன்றிச் சலுகைகள் வழங்கப்பட்டமையினைபும் அக்காலச் சீாசனங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
பல்லவ, சோழப் பேரரசர் காலப் பகுதிகளிலும் அடுத்து வரும் காலப்பகுதிகளிலும், மனுதர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டதற் கமைய, ஏனையோருக்கு அடங்கி அழுக்காறு கொள்ளாது இரவு
(27)

Page 16
பகல் ஓயாது பணிபுரிதல் ஒன்றே சூத்திரர்களின் தலையாய கடமை என்பதும் பணிபுரிய வேண்டுமே தவிரப் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பதும் முக்கிய நியதிகளாகக் கொள்ளப்பட்டன. இந் நியதிகளை மீறும் சூத்திரன் நாத்திகளுகவும் சமூகத் துரோகியாக வும் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட வேண்டியவனகவும் கருதப்பட்டுக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். இதே விதிமுறைகள் சிற்சில வேறுபாடுகளுடன் இன்றைய மலையகத் தோட்ட நிர்வாக முறைக் கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொருந்துமாற்றை ஒப்பு நோக்கி அறியலாம்.
சோழப் பேரரசர் காலப் பகுதியிற் பல்வேறு வழிகளிலும் ஈட் டப்பட்ட செல்வ மிகுதியினற் பேரரசு செல்வச் செழிப்புடன் திகழ்ந் த்து. ஏறத்தாழ மூன்று நூற்ருண்டுகளுக்கும் மேலாக நாட்டிலே அமைதி நிலவியது; பலதுறைகளும் முன்னேற்றம் கண்டன; கிராம சமூக அமைப்பும் உள்ளூராட்சி முறையும் வலிமை பெற்றுத் திகழ்ந்தன: இத்தகைய சூழ்நிலைகள் காரணமாகச் சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களில் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை நிலை போற்றத் தகுந்ததாக இருக்காவிடினும் மகா பரி தாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்படவில்லையெனலாம்.
சோழப் பேரரசர் காலப்பகுதியிலே தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் எவ்வளவுதான் கேவலமாக நடத்தப்பட்டபோதும் துயரங்களுக்குள்ளாகிய போதும் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தபோதும் அவர்களுக்கெனச் சில உரிமைகளும் சலுகைகளும் அறத்தின் பெயரால் வழங்கப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் அயலூர்களுக்கும் கோயில்களுக்கும் சென்றுவர முடிந்தது. தாம் விரும்பாத விடத்து, தத்தமது குலத்தொழிலை விடுத்து வேறு தொழில் களில் ஈடுபட உரிமை இருந்தது. அதேபோன்று தமது உழைப்பிற் கேற்ற ஊதியத்தைப் பெற முடியாதவிடத்தும் அக்கால மானிய அடிப்படையில் 'உணவு உரிமை" - சீவனம் - இருந்தது. பசிக் கொடுமையைத் தீர்க்க வழியின்றித் தவித்தவர்களுக்கு, அக்காலத் திற் பெருஞ் செல்வச் செழிப்பு மிக்க நிறுவனங்களாக விளங்கிய பிரமாண்டமான பல கோயில்கள் புகலிடமளித்து வயுற்றுத்தீயைத் தணித்தன. ஆயின் இவையாவும் அடுத்துவரும் காலப்பகுதிகளில் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. (தொடரும்)
(28)

ஆங்கில மருந்து வகைகள், டின் உணவு வகைகள்
பெற்றுக்கொள்ள விஜயம் செய்யுங்கள்
சேகர் மெடிக்கல்ஸ் இல, 58, மேட்டு கடை வீதி, பூண்டுலோயா, தொலைபேசி: 34
நவ நாகரீகமான புடவை வகைகள்
நாணயமான அடவு வியாபாரம்
இன்றே விஜயம் செய்யுங்கள்
நியூ விநாயகர் ஸ்டோர்ஸ் இல, 139, மேட்டு கடை வீதி, பூண்டுலோயா.
தொலைபேசி இலக்கம் °6

Page 17
O):ll, 涂 last
Cs
பூண்டு(
GLDT"LT fr q
இல, 10, மேட்டுகடை
PUNDU MOTOR TI
No. 10, upper Ba
th Proprietor; R. సీ
Printed at Print Hou for Ed

(ompliments
l:
3m)muust
ரான்ஸ்போட்
வீதி, பூண்டுலோயா.
JLO Y A RANSPORT
贺 izaar, Pundu loya.
•niv ARAN & B Ro.
r Publisher S, Anthory Jeeva,