கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1989.11.01

Page 1
''
 ேஅமெரிக்கா வ6
மதி
 ேமுதலாளித்துவ
9 தர்மம் சரணம்
- செ. க.
9. இலங்கையின் ஆ
சில குறிப்புகள் - "அழகன்"
 ேகம்யூனிச சமுத
 ேகலே, இலக்கியத்
நோக்கங்களும் - மாதவன்
6
கேள்வி ? பதில்
 
 

. . .
ད། ■ 71
நவம்பர்
1989
ார்த்த கிடாய்கள்
த்தின் வெற்றிகள்?
(சிறுகதை)
ம் வர்க்கம் واقوا
TL ID
தின்
பணியும் - 7

Page 2

அமெரிக்க ஏகாதிபத்தியம் இலத்தின் அமெரிக்க நாடுகளை நீண்ட காலமாகச் சுரண்டியதோடு தன் இராணுவ, பொருளாதார பலத்தை தென் அமெரிக்காவில் நிலைநாட்டியது யாவரும் அறிந்ததே.
ஏகாதிபத்தியம் தன் சுரண்டலை எளிதாகத் தொடர் தற்காக இந் நாடுகளில் பூர்ஷ்வா ஜனநாயகம் தலையெடுக் காது, சர்வாதி காரிகளை நிலை நாட்டி வந்தது. இராணுவ பலம் பொருந்திய சர்வாதி காரி மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலகுவாகும். இத் தந்திரத்தை வல்லரசுகள் அனைத்தும் அறியும்; பிறவல்லரசுகளும் கடைப்பிடித்தும் வருகின்றன.
இவ் ஆட்சித்தந்திரம் இன்று அமெரிக்காவிற்கு வேறு வழியில் ஆபத்தை வரவழைத்துள்ளது.
இலத்தின் அமெரிக்க சர்வாதிகாரிகள் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பெருந்தொகை டாலர்களை எளிதாகத் திரட்டி தனி அரசி யலாதிக்கம் பெற்றுவருவது ஆபத்தாகவும் உள்ளது.
போதை வஸ்து விற்பனையில் பெருந்தொகைப் பணம் திரட்டத் தக்க நாடு அமெரிக்காவே. சோஷலிசம் தோற்று வருகிறது, முதலா ளித்துவம் வெற்றி பெறுகிறது" என்று இன்று உலகெங்கும் பிரச் சாரம் செய்யும் அமெரிக்கா தன் நாட்டு மக்களை போதைப் பொருட் களில் (மதம் என்ற அபினிக்கு மேலாக) நேரடி அபினியை மறை முகமாக வழங்குகிறது. இதன் மூலம் ஆளும் வர்க்கமும் எளிதாக நாட்டை ஆட்சி செய்வதற்கும் உதவுகிறது போலும்!
யுத்த தளபாடங்களுக்கு அடுத்ததாக, பிற நுகர் பொருட்களை மிஞ்சுவதாக, இன்று ஹீரோயின், கொக்கெயின், கஞ்சா போன்றவை அமெரிக்காவில் அதிக செலவில் உட் கொள்ளப், டுகின்றன போலும், ஒரு கிலோ ஹீரோயின் 10 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ 40,000,000/-) வரை விலை போகிறது. உலக, அமெரிக்க பங்குச் சந்தை மார்க்
سست - 1 -۔سے

Page 3
கெட்டை நாள் தோறும் தீர்மானிப்பதில் புகழ்பெற்ற வால்ஸ்ரீட்டே நாள் தோறும் போதைப் பொருட்களின் சந்தை விலையையும் தீர் மானிக்கிறது. பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந் திருக்கும் சர்வாதிகார ஆட்சியாளரின் நாடுகளிலிருந்தே இவை அமெரிக்காவிற்குள் கடத்தப் படுகின்றன.
பாக்கிஸ்தான்,"துருக்கி உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக் கும் போதைப் பொருள் உற்பத்தியைத் தடுக்க அமெரிக்கா மானி யம் வழங்குகிறது. இம் மானியத்தை இடைத்தரகர் பலர் சாப்பிட்ட பின் எஞ்சியது "பயிரிடவேண்டாம்" என உரிய விவசாயிகளுக்கு மாற்றுப் பயிரிட் வழங்கப்படுகிறது. வேடிக்கை என்னவெனில் விவசாயிகள் மானியத்தையும் பெற்று அதை மூலதனமாக்கி அதிக மாகப் பயிரிடுகின்றனர். விவசாயிகள் பயிரிடத் தயங்கினும் அவற்றை வாங்கி ஆயிரம் மடங்குக்கு மேலாக லாபம் திரட்டும் அரசியலாதிக் கம் பெற்ற வியாபாரிகள் விடப்போவதில்லை. பாகிஸ்தானிலேயே பயிரிடும் பட்டாணியருக்கும் அரச படைகளுக்குமிடையில் இடை யிடை மோதல் நடைபெறுவதுண்டு. துருக்கியிலும் இது நடைபெறு கிறது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளே பயிரிட உதவி, அமெரிக்காவுள் கடத்தி, லாபம் திரட்டும் வர்க்கத்தவரோடு இணைந்து தனிப்பட்ட செல்வம் குவிக்கின்றனர்.
அண்மையில் சிறிய நாடான பனமா (குடித்தொகை 22 லட்சம்) சர்வாதிகாரி நெருக்காவை வீழ்த்த அமெரிக்கா முயன்று தோல்வி கண்டது. முன்னரும் பல தடவை முயன்றும் தோல்வியே. காரணம் இராணுவமும் ஆளும் வர்க்கமும் சர்வாதிகாரி நெருக்காவை ஆத ரிப்பதே ஆகும். ܕܫܡܫܚ
பனமா கால்வாயைக் காவல்புரிய அமெரிக்கப் படை அங்கே உள்ளது. நேரடிப் படையெடுப்பின் மூலமே நெரிக்காவை வீழ்த்த ஜனதிபதி புஷ் திட்டமிட்டுள்ளார். உலகக் கூக்குரலுக்காக தயங்குகிருர்,
பனமாவிலும் மோசமாக அமெரிக்காவிற்குள்போதைவஸ்து கடத்து வதில் கொலம்பியா முன்நிற்கிறது. மூன்றரைக் கோடி மக்களைக் கொண்ட கொலம்பியாவின் பொருளாதாரம் கோப்பி, வாழை பிற விவசாயப் பயிர்கள், சில கைத் தொழில்களிலேயே தங்கியிருந்தது. அங்குள்ள தொழில், விவசாய மூலதனம் யாவும் அமெரிகக மூல தனமே. அவர்களது சுரண்டல் இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று போதைப் பொருள் வியாபாரத்தால் பொருளாதாரம் வளம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கோப்பியில் 150 கோடி டாலரே

முன்னர் கிடைத்தது. இன்று போதைப் பொருள் மூலம் ஆண்டிற்கு 500 கோடி டாலர் வரை கிடைக்கிறது. இந்த லாபம் பல்வேறு தொழில்களில் நுழைந்து பொருளாதாரத்தை சீராக்கி வருவதாக வும் கூறப்படுகிறது.
போதைப் பொருள்பணம் அரசியலிலும் நுழைந்து அரசியலாதிக் கமும் பெற்றுள்ளது. ஜனதிபதிக்கெதிராக, அமெரிக்காவிற்கு சார்பா வும் போதைப் பொருள் விற்பனைக்கு எதிராகவும், தேர்தலில் போட்டி யிடப் பிரச்சாரம் செய்த அரசியல்வாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் இவ்வாணிபத்தில் முன்னேடியாக நின்ற செமேரோ நாடு கடத்தப்படுவதை நாட்டு மக்களே எதிர்த்தனர். ஒரு பத்திரிகை இது பற்றி பொதுஜன வாக்கெடுத்த போது 63% மக்கள் நாடு கடத்துவதை எதிர்த்தனர்.
மீன் விற்ற காசு மணப்பதில்லை" என்பதுபோலவே போதைப் பொருளால் வரும் டாலர்கள் நாற்றமெடுப்பதில்லை என லத்தீன் அமெரிக்க நாடுகளிலே பேசிக்கொள்கின்றனர். ‘அமெரிக்கர் லத்தின் அமெரிக்க நாடுகளை நூறு வருடங்களுக்கு மேலாகச் சுரண்டிய பணத்தை நாம் போதைப் பொருள் விற்று அவர்களைச் சுரண்டி எடுக் கிருேம். இதில் என்ன தவறு" என்று கடத்தல்காரர்களே தேசீயம் பேசுகின்றனர். சர்வாதிகாரிகளாக தாம் "வளர்த்த கடாய்கள் மார் பில் பாய்கின்றன" என அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒப்பாரி வைப் பதும் விசித்திரமே.
குமரன
தனிப்பிரதி els 316 இதழ்கள் ரூ 17/- 12 இதழ்கள் ரூ 33/- விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க: ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 421388

Page 4
முதலாளித்துவத்தின் வெற்றிகள்?
- K -
(1) ஏழைகள் ஏழைகளாகின்றனர்
தேசத்தின் செல்வந்தர் - ஏழைகளுக்கிடையிலான இடைவெளி மேலும் விரிவடைகிறது. இன்று காங்கிரஸ் வெளியிட்ட் தரவுகள் இவ்வுண்மையைத் தெரிவிக்கன்றன. பண வீக்கத்தையும் கணக்கெடுக் கும் போது அமெரிக்க ஏழைகளான 20% மக்களின் வருமானம் 1979 - 87 காலப் பகுதியில் 8.1% ல் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளை மேல் மட்டத்திலுள்ளவரின் குடும்ப வருமானம் 11.1%ல் அதி கரித்துள்ளது. இவையும் பிற தரவுகளும் நாட்டின் ஜனநாயக நல&னப் பாதிப்பதாக உள்ளன- நியூ யோக் ரைம்ஸ் 22.3.89
(2) அமெரிக்காவில் அதிக செழிப்பு - அதிக வறுமை
இந்த தசாப்தத்தில் உள்நாட்டின் வறுமையும் பசிக் கொடுமையை யும்மக்களின் துன்பததையும் அனைவரும் அறிவர். போஷாக்கின்மைக் கும் நோய்க்கும் இடையிலுள்ள உறவு தெளிவானது என ஆய்வுகள் கூறுகின்றன. அண்மைய பொருளாதார மீட்சி, பசிப் பிணியிலுள்ள இரண்டு கோடி மக்களின் துன்பத்தைப போக்குவதாக இல்லை. 1980ன் பின்னர் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகள் குடும்பங்களின் வறுமையை துடைப்பதாக இல்லை கூலி உழைப்பின் வீழ்ச்சி வெள்ளை நிறத்த வரை மட்டுமல்ல அனைவரையும் பாதித்துள்ளது. சாதாரண வறிய குடும்பத்தவரின் வருமானத்தில் 78% வாடகையில் செலவாகிறது. மத்திய அரசு வீட்டு வசதிக் 5ாக வழங்கிய மாணிபத்தை நிறுத்திய தே காரணமாகும். இத்த தசாப்தத்தில் வீட்டு மாணிபம் 3000 கோடி யிலிருந்து 1800 கோடிக்கு குறைக்கப்பட்டது- 25-2-89 நியூ யோக் ரைமஸ் நாளிதழ் லாரி பிறவுன், அமெரிக்க பசிப்பிணி மருத்துவர் ஹாவேட- பல்கலைக்கழகம்.
(3) றிகன் தந்த வறுமைச் சாசனம்
ஏழை பணக காரரிடையே ஏற்பட்டுவரும் பாரிய இடைவெளியால் குற்றச செயல்கள், போதை மருந்து உட்கொள்ளல் அதிகரிப்பது உட்பட சமூகத்தை பிளவுபடுத்தக் கூடிய நிலைக்கு தள்ளக்கூடியது ம. கும் உங்கள் கதவுகளுக்குப் போதிய பூட்டுகள் இல்லாது போக லா ம: இன்றைய பொதுவாழ்வில் இல்லாத புதிய பரம்பரை மக்களிட மிருந்து தெருப்பெ லிசார் உங்களைக் காப்பாற்ற முடியாதும் போக லாம். டொனல் ட் ரீகன் எழுதித்தந்த சாசனம் இது.
அமெரிக்க மனிதவள துணைக் கமிட்டித் தலைவர்.
۔سمہ 4 س

கலை, இலக்கியத்தின் நோக்கங்களும் பணியும் - 7
- மாதவன் -
19. கருத்தியலும் மார்க்சிய கோட்பாடுகளும்
கலை இலக்கியங்கள் பரந்துபட்ட மக்களின் வாழ்க்கைக்கு உந்து சக்தியாக விளங்கவேண்டும். Հ-. ,
பெளதிய விஞ்ஞானம் பண்ட உற்பத்தியைப் பெருக்கியது உண் மையே. ஆயினும் அப் பண்டங்களின் பயனை மக்களின் ஒரு பகுதி யினர் மட்டுமே அனுபவிக்கின்றனர். அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் எவ்வாறு செயற்பட முடியும் என்பதே எமது வின?
சொத்தற்ற பாட்டாளிகளின் எழுச்சியும் வர்க்கப் போராட்ட முமே சோஷலிச சமூக அமைப்புக்கு வழிகாட்டி கம்யூனிச சமுதாயத் திற்கு இட்டுச் செல்ல முடியும். அங்கேயே திட்டமிட்ட பொருள் உற்பத்தி மக்களின் தேவையை நோக்கி நடைபெறமுடியும் அனைத்து மக்களுக்கும் தேவைக்கேற்றபடியாகப் பண்டங்கள் கிடைக்க முடியும்; பெளதிக விஞ்ஞான வளர்ச்சியின் பயனையும் பரந்துபட்ட மக்கள் அப்பொழுதே பெறமுடியும்.
இத்தகைய பொதுமையை நோக்கிய கலை, இலக்கியங்களே சமுதாயத்திற்கு வேண்டியவை.
தவருன கருத்தியல்களில் அழுந்தியிருக்கும் சமுதாயம் விடிவுபெற இன்றைய கருத்து முதல் வாதம் சார்ந்த அக் கருத்தியல்கள் யாவும் உடைத்தெறியப்பட வேண்டும். அதற்குக் கலை, இலக்கியங்கள் பயன் பட வேண்டும். இன்றைய அரசு யந்திரத்தோடு ஒன்றிப் போகும் நிலையான கலை, இலக்கியங்கள் அரசின் சொத்துடைமையைப் பேணும் கருத்தியலாகவே அமையும்.
உண்மையும் அழகுணர்வும் பகைமையுள்ள எதிர்மறைப் பொருட் களாக முதலாளித்துவத்தில் இருப்பதைக் காணலாம். ஏனெனில் இன்றைய கலைஞர்கள் பொய்மையையே கலை, இலக்கியங்கள் மூலம் அழகுபடுத்த முயல்கின்றனர்.
من 5 سمي

Page 5
ஒரு புறத்தில் பசி, பட்டினி, அடக்குமுறை ஆகிய துன்பங்கள்; உழைப்பவரின் உபரியை அபகரித்து அடக்கி ஒடுக்கும் கொடுமை. இவர்கள் பெரும்பான்மையினர்.
மறுபுறத்தில் உடல் உழைப்பிலேயே ஈடுபடாது சொகுசாக
வாழும் சிறுபான்மையினர்; மனித உழைப்பின் பெரும் பகுதியை
தமது இன்ப வாழ்விற்காகவும் பாதுகாப்பிற்காக பொலிஸ், ராணு வம், யுத்த தளபாடம் முதலிய வீண் விரயங்கள்.
கலை, இலக்கியங்கள் குறுகிய வட்டங்களுள்ளே அடங்கி ஒரு தனிப்பட்ட மக்களின் அழகுணர்வுத் தேவைகளுள் முடங்கிவிடப் படாது.
மார்க்சும் ஏங்கெல்சும் தொழிலாள வர்க்கத்தை சிங்களத் தொழிலாளியாகவோ, தமிழ் தொழிலாளியாகவோ, இந்தியத் தொழி லாளியாகவோ காணவில்லை. -
'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்று பரந்துபட்ட குரலையே எழுப்பினர். உலகத்திற்கு விளக்கங் கூறுவதற்கல்ல, உல கத்தை மாற்றி அமைக்கும் குரலையே முன்வைத்தனர்.
இந்த நோக்கே இன்றைய கருத்தியலைக் கடந்த மனித வரலாற்று நாக்காகும்; வரலாற்றுப் பொருள் முதல்வாதப் பார்வையாகும். இதுவே மார்க்ஸ் வரலாற்றை விஞ்ஞான மயமாக்கிக் கண்ட நோக்கு.
உலகத்திற்கு விளக்கம் கூறுவதை விட்டு அதை மாற்றி அமைக் கும் சித்தாந்தமே மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல் வாதம்.
கலை, இலக்கியத்தின் பணி மக்களின் அழகுணர்ச்சியை மலினப் படுத்தி, இழிவுபடுத்தி விடுவதல்ல. வெறும் பொழுதுபோக்கு என ஏமாற்றிவிடுவதல்ல. கீழ்த்தர அனுபவங்களைக் கொட்டிவிடுவதல்ல.
மக்களின் சிந்தனையைத் தூண்டி அறிவை, கலை அறிவை வளர்க்க வேண்டும். சமுதாயத்தின் பரந்துபட்ட மக்களின் சமத்துவத்தையும் சமநீதியையும் தோழமை உணர்வையும் மேம்படுத்தவேண்டும்.
சொத்து எதுவுமற்ற உழைக்கும் பாட்டாளிகளாலேயே இத் தகைய புதியதோர் பொதுமைச் சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முடி պւհ என்பதை, மார்க்ஸ் நிரூபித்தார். மனித சுதந்திரம் என்பது மானிட தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமே ஏற்பட முடியும் என் ஏங்கெல்ஸ் கூறினர்.

கலை, இலக்கியங்களின் பணி இத்தகைய உண்மைகளை நோக் கியே அமையவேண்டும். அப்பொழுதே - அவை கருத்தியல் என்ற கருத்து முதல்வாத போர்வையை விட்டு விஞ்ஞானம் என்ற நிலையை அடையும்.
கருத்தியல்கள் வெறும் கருத்துக்களாலானவை. விஞ்ஞானபூர்வ மற்றவை. கருத்து முதல் வாதத்திற்கு இட்டுச் செல்பவை. மார்க் சிய கோட்பாடுகள் மட்டுமே விஞ்ஞானபூர்வமானவை. அவை வர லாற்றுப் பொருள் முதல்வாதம் இயக்கவியல் பொருள் முதல்வாத மாகும், இக் கோட்பாடுகளே மனித சமுதாயத்தை புதிய உலகை நோக்கிச் செல்ல வழிகாட்டுபவை. "உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற பரந்த நோக்கையும் மார்க்சிய கோட்பாடுகளையும் கலை, இலக்கிய உற்பத்தியாளர்கள் என்றும் கைக்கொள்ளவேண்டும். அப்பொழுதே கலை அறிவு கருத்து முதல்வாத மாயையிலிருந்து விடு பட்டு விஞ்ஞான நிலையை அடையும். மார்க்சிய அறிஞர் அல்துரசர் கலை அறிவு பற்றி பின்வருமாறு கூறினர்:
கலைபற்றிய யதார்த்த அறிவை அடைவதற்கு, கலைப் படைப்பின் ஆழத்தை அளப்பதற்கு, கலை ஏற்படுத்தும் "அழகியல் தாக்கத்தின்" அமைப்பு முறைகளை அறிவதற்கு, அதிக காலம் செலவிட்டு மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்பதில் நாம் மிகக் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அவசரப்பட்டு "வேறு விஷயங்களுக்குச் சென்று விடப்படாது அவ்வாறு திசைமாறிச் செல்லின் நாம் கலைஅறிவை (விஞ்ஞானபூர்வமாக) அடையமாட்டோம். கலையின் கருத்தியலையே (கருத்து முதல்வாதமாக) அடைவோம்.
பெருந்தோட்ட்த்தின் 150 ஆண்டு வரலாறு
இலங்கையின் 150 ஆண்டு கால பெருந்தோட்ட வரலாற்றை ஆராயும்போது காலத்துக்குக்காலம் தொழிலாளரின் முகாமைத் துவ உறவுகள் பல படிகளில் மாற்றமடைந்துள்ளன. தொழி லாளர்களைப் பொறுத்தவரை வரலாறு சோகமும் துன்பமுமானது: குறைந்த கூலி, பேரம் பேச முடியாத பலம் குன்றிய நிலையில் குடும்பங்கள் அத்துமீறிச் சுரண்டப்பட்டன. பொருளாதார அநீதியும் அரசியலில் ஒரவஞ்சமும் ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்ட னர். இந்நிலையை மூலதனம், உழைப்பாளர், அரசு சக்திகளின் உலகப் போக்கிலும் உள்நாட்டு அரசியற் பொருளாதார நிலை யிலும் இயல்பாக ஏற்பட்டது என்று கூறுவதற்கில்லை. பகுத்தறிந்து பார்ப்பின் உற்பத்தி மூலதனப் பெருக்கத்திற்கு வாய்ப்பளித்தது போல தொழிலாளர்கட்கு இந் நீண்ட காலகட்டத்தில் பயனளிக்க வில்லை. - டாக்டர் றெச்சல் கூரியன்.
- 7 -

Page 6
இலங்கையின் ஆளும் வர்க்கம்சில குறிப்புகள் 2
"அழகன்'
ஆளும் வர்க்கம் என்று கூறும்போது அரசியலாதிக்கம் கொண்ட வர்க்கத்தையே நாம் கருதுகிருேம். சமூக வர்க்கம் அல்லது வர்க்கத் இன் ஒரு பிரிவினர் ஆதிக்கம் கொண்டிருப்பதையே அரசியலாதிக்கம் கொண்ட வர்க்கத்தவர் என லெனின் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட உற்பத்தியாளர்கள், சர்வதேசக் கம்பனிகள், அரசி யலாளரின் ஆதிக்கத்திலுள்ள பொருளாதாரபலம் ஆகியவற்றை நாம் எடைபோட்டவேளை அதிகாரத்துவ மூலதனமே பலம் பெர்ருந்திய மூலதனம் எனக் கண்டோம்; இதன் அமைப்பை நாம் இருவகையாக வகுத்துப் பார்க்கலாம்;
(1) அரசின் பொருளாதாரம், அரசியல், கருத்தியல் ஆதிக்கம்.
(2) அரசு யந்திரம். இதன் கீழ் அரசின் ஆளணி, நிர்வாகம், அதிகாரிகள், இராணுவம், பொலிஸ் என்ற வன்முறை வடிவங்கள்.
(1) பெரும் பான்மை பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் கட்சி யின் ஆதிக்கத்தில் அதிகாரத்துவ மூலதனம் வந்து விடுகிறது. பெரும் பான்மையினரான சிங்கள இனத்தவரின் அரசியல்கட்சியாகவே என்றும் அமையும். இதனல் அரசியலைக் கைப்பற்றும் எக்கட்சியாயினும் ஒரே கருத்தியலைக் கொண்டதாகவே அமைந்துவிடுகிறது.
காலஞ்சென்ற சமூகவியலாளர் டாக்டர் நியூட்டன் குணசிங்காவின் சிறப்பான முடிவு ஒன்றுண்டு. அதன்படி பொளத்தமதம் என்ற கருத் தியல் சிங்கள அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
இந்நிலையினலேயே 31% இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மதத்தவர் நாட்டில் இருந்தபோதும் அவர்களைப் பொருட்படுத்தாது பெளத்த மதத்தை அரசின் மதமாகப் பிரகடனப் படுத்தி, பூரணை தினங்களெல் லாம் விடுமுறை தினங்களாக சிங்களப் பேரினவாத அரசியலாளர் பிரகடனச் படுத்தினர். ரொக்சிய இடதுசாரிகள் இணைந்து கூட்டாட்சி நடத்தியபோதும் புத்தகுருமாரின் பாதங்களில் பணிந்து ஆசிபெற்றனர். கிறிஸ்தவ பரம்பரையில் வந்தவர்களும் திடீரென தம்மை பெளத்தர் களாக இனம் காட்டிக்கொண்டனர்.
- 8 -
 

(2) பிரிட்டிசாரின் ஆட்சிக்காலத்திலும் பின்னர் சிலகாலமும் அரசு யந்திரத்தின் ஆளணி, நிர்வாகம், அதிகாரிகள், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றில் பிற இன, மதத்தவர் ஒரளவு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். 1956ன் பின்னர் சிறிது, சிறிதாக அரசு யந்திரத்தின் பல் வேறு துறைகளையும் சிங்கள, பெளத்தர்கள் கைப் பற்றிக்கொண்டனர். சிறப்பாக இராணுவம், பொலிஸ் முற்று முழு தாக இவர்களது ஆதிக்கத்தில் வந்தது; இனங்களிடையான முரண் பாடுகளையும் வன்முறைப் போக்குகளையும் மோசமடையச்செய்தது.
பெரும்பாலான அரசியல் கட்சியின் கீழ் அதிகாரத்துவ மூலதனம் குவிந்த நிலையில் இனப்பகையை வன்முறையால், யுத்தத்தால் தீர்க்க அரசு முயன்றது. பிறநாட்டுக் கடன்களும் உள்நாட்டில் திரட்டக் கூடிய கடன் பணங்களும் அரசியலாளருக்கு உதவியது. வறிய மக்க ளுக்கு உதவும் மானியப் பணங்கள் யுத்தக் கருவிகளுக்காக திசைதிருப் பப்பட்டது.
இப்பணங்களைக் கொண்டு யுத்தத்தை மேலும் தொடரமுடியாத நிலை ஒன்று பின்னர் ஏற்பட்டது.
தமது இனம், தேசியம், சுதந்திரம் யாவையும் மறந்த நிலையில் இந்திய வல்லரசுக்கு கீழ்ப்படிந்த நிலையில் அரசியலாளர்கள் 1987ல் ஒப்பந்தம் எழுதி, இந்தியப் படையை வரவழைத்தனர்.
இத்தகைய மேல்மட்டம் சார்ந்த பல்வேறு முரண்பாடுகளிடையே இனவாத முரண்பாடு மேலாதிக்கம் பெற்ற போதும் இறுதியில் நாட் டின் அடிப்படையான பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக் கிறது என்ற கூற்று இங்கும் நிரூபணமாகிறது. S.
சிங்கள தேசிய முதலாளிகள் ஆதிக்கம் பெற்ற வர்க்கமாகத் திகழ்ந்திருப்பின் இத்தகைய நிலை இலங்கையில் ஏற்பட்டிருக்கமுடியாது. தேசிய முதலாளிகள் எப்பொழுதும் தமது தேச நலனில் கருத்துள்ள வராக, அக்கறையுள்ள வராக, செயலாற்றுபவர். இதே குறை தமிழர் களிடையேயும் இருக்கவே செய்தது. தேசீய விடுதலைப் போராட்ட ாயின் அதைத் தலைமைதாங்கி நடத்த தமிழ் தேசிய முதலாளிகள்
இங்கில்லை.
இடைப்பட்ட, நடுத்தர வர்க்கத்தவரே முதலாளித்துவம் முன் வைக்கும் தேசீய விடுதலைப் போராட்டக் குரலை எழுப்பிப் போராடி இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். இன்றைய சூழலில் தமிழ் தேசிய முதலாளிகள் உருவாகும் வாய்ப்பே இல்லாது போய் விட்டது. சிங்கள மக்களிடையேயும் இதே நிலையே ஏற்பட்டுள்ளது. (தொடரும்)
- 9 -

Page 7
கே:
கே:
கேள்வி ? பதில்
அனைத்துக் கட்சி மகாநாடு பற்றிய தங்கள் கருத்தென்னவோ?
சு. சிதம்பரநாதன், யாழ்.
பாராளுமன்ற அரசியலை ஆதரித்து தேர்தலில் நிற்கும் கட்சிக
ளின் மகாநாடே நடைபெறுகின்றது. இவர்கள் யாவரும் தனிச்
சொத்துடைமையையும் அதைப்பேணும் ஜனநாயகத்தையும் ஆதரிப் பவர்கள்; வன்முறையை ஒழிப்பதற்கும் தமது ஜனநாயகத்தைப் பேணுவதற்குமாக ஒன்று சேர்ந்துள்ளனர். அரசின் வன்முறையை
எதிர்க்கும் வன்முறை தோன்றியதன் அடிப்படைக் காரணங்களையும்
இம் மகாநாடு ஆராய்ந்து அவற்றை அகற்ற முயல்வதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தைப் பேணிக் காக்க முடியும். பாராளுமன்றத் தில் சி வி. குணரத்தின எம். பி. அவர்கள் அண்மையில் கூறிய காரணத்தில் உண்மையில்லாமலில்லை. 'பத்து வீதமான பணக் காரரிடம் ஐம்பது வீதமான சொத்து குவிந்துள்ள நிலையில் நாட்டில் கிளர்ச்சி ஏற்படுவதையிட்டு நாம் ஆச்சரியப்பட வேண் டியதில்லை"
டிவி, ர்ேடியோவில் ஒளி, ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை கலை, இலக் கியத்துள் எடுக்க முடியாதா? −
த. சிவபாக்கியம், கொழும்பு.
இதுபற்றிய விவாதம் இன்று மேல் நாட்டு அறிஞரிடையே நடை பெற்று வருகிறது. பண்ட விற்பனை விளம்பரங்களோடு ஒட்டியே பெரும்பாலான டி. வி. நாடகங்கள் இசை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. டைனஸ்டி" என்ற "சோப்பு விளம்பர டி. வி. நாடகம் அமெரிக்காவில் முதல் தர நிகழ்ச்சியாக சில வருடங் களே தொடர் கதையாகக் காட்டப்பட்டது. இலங்கையிலும் சர்வதேசக் கம்பனி ஒன்று, தன் விளம்பரத்திற்குப் பயன்படுத்தி யது. இந்நாடகத்திற்காக பல நூறு கோடிக்கணக்கான டாலர் கள் செலவிடப்படுகின்றன இதில் நடிப்பவர்கள் சினிமா நட்சத் திரங்களையே மீறிய புகழ் பெறுகின்றனர். பிரபல சினிமா நட் சத்திரங்களே டி. வியை நோக்கிச் செல்வதைக் காண்கின்ருேம்.
- 10 -

மேலும் இந் நிகழ்ச்சிகள் அரசுயந்திரத்தின் கருத்தியலை ஒட்டியே நடத்தப்படுகின்றன. இவற்ருல் டி. வி, ரேடியோ கலை, நிகழ்ச்சி களை மக்கள் தொடர்பு சாதனமாகவே ( Mass Media ) கலை, இலக்கிய விமர்சன அறிஞர்களால் கொள்ளப்படுகிறது.
கே. வன்முறையற்றதாகக் கூறப்படும் கருத்தியல்கள் மக்களை ஆட்டிப்
படைக்கவும் கூடியவை என்பதை நீங்கள் ஏற்பீர்களா?
செ. கார்முகில், பதுளை.
ப; மதம் என்ற கருத்தியலை ஒட்டி ஐரோப்பாவில் 300 ஆண்டு களாக சிலுவை யுத்தம் நடந்த இரத்தக் கறையை வரலாறு மறக்க முடியாது. எம் நாட்டிலேயே கருத்தியல் மக்களை அசைக்க வில்லையா? இதில் விசித்திரம் என்னவெனில் கருத்தியலால் பிற் றைக் கொல்வதற்கு மட்டுமல்ல தாமே கொல்லப்படுவதற்கும் மனிதர் துணிவதுதான்.
கே: கலை, இலக்கியத்தின் நவீனப் போக்குப் பற்றிய தங்கள் கருத்து
என்ன? - -
க. சிவமலர், கொழும்பு.
ப: சென்ற குமரன் இதழில் இவ் விடயம் பற்றிய சில் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. ‘நவீனப் போக்கு" என்பது உருவத்தில் ஏற்பட்ட மாற்றங்களே. சினிமா, தொழில் நுட்பத்தில் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. தொழில் நுட்பவளர்ச்சி பல கலைகளின் வடிவங்களை மாற்றியுள்ளது உண்மையே. ஆனல் உள்ளடக்கத்தில் புரட்சித்தன்மையைக் காண முடியவில்லை. பிற்போக்குத் தனத்தையே காண்கின்ருேம்.
பாகூம் கற்க
பின்னர் என்ன நடைபெற்றபோதும் 1917 வரலாற்றில் நினைவுகூரத்தக்க ஆண்டு; 1789 போல மனித வரலாற்றில் ஒரு மைல்கல்; மனித குலத்தின் விதியை வெற்றிகொள்ளும் நாள். பின்னர் நாம் எதிர்பார்த்தவை நடவாதிருக்கலாம். எங்கு தவறு ஏற்பட்டது என்பதை நாம் கற்கவேண்டும்; கிடைத்த அனுபவத் திலிருந்து உரமாக பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் .
- டானியல் சிங்கர்.
- 11 -

Page 8
தர்மம் சரணம் . . .
செ. க.
666 O e
த்தனை கஷ்டமேற்படினும் நான் பொறுப்பேற்கத் தயா ராகவுள்ளேன்; கண்டியிலுள்ள பெளத்த பற் கோயிலையாவது நான் பார்த்து விட்டே திரும்ப வேண்டும்"
பேராசிரியர் கென்னத் பெரில் அடம்பிடித்தார். தம்பளை, ஒஇ ரியாவிற்கும் செல்ல வேண்டும் என முதலில் கூறினர். நான் அவ் வழி செல்வதிலுள்ள ஆபத்தான நிலைமைகளை விளக்கினேன். அப் போதும் கண்டியை விட்டுவிட அவர் தயாராக இல்லை. கண்டி செல்லின் பேராதனைப் பல்கலைக்கழகத்தையும் பார்த்து விடலாம் என்ற நப்பாசை.
சரி, ஒரு வேண்டுகோள். அதிகாலையில் புறப்பட்டு மாலையில் நாம் திரும்பி விடவேண்டும்"
என் வேண்டுதல் அவருக்கு ஏமாற்றத்தை அளித்ததை அவர் முகத்திலிருந்து கண்டு கொண்டேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புத்த மத பீடத் தலைவர்களுட னும் நூலகத்திலும் இரண்டு மூன்று நாட்களையாவது பயன்படுத்த லாம் என்ற அவரின் ஆவலும் என் பேச்சால் அடிபட்டுப்போனது.
**இத்தனை தூரம் வந்து கடைசியில் இப்படியாக a P பேராசிரியர் இழுத்தார். நான் இடைமறித்தேன்.
**கண்டி சென்ற பின் பிரயாணம் சீராயின் தம் பளை, சிகிரியா விற்கு அழைத்துச் செல்வேன்". அவரைத் திருப்திப்படுத்துவதற்காகக் கூறினேன்.
"புரொபெஷர் நீங்க இன்னும் இங்குள்ள நிலைமைகளை நன்கு அறியவில்லை. பல்கலைக்கழகங்களெல்லாம் இரண் டு ஆண்டுகளுக்கு மேலாகப் பூட்டிக் கிடக்கின்றன. அது தவிர சென்ற ஓரிரு மாத மாக கண்டியும் அதைச் சுற்றிய இடங்களும் மிக மோ சம 1ா கப்
- 12 -

பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் செல்வது த க்க பாதுகாப்பா காது" என்றேன்.
புரொ பெ ஷ ர் கென் ன  ைத சென்னை யி ல் த ங் கி யிருந்த வேளை நண்பர் ஒருவர் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி யிருந்தார். சுவீடனிலுள்ள பல்கலைக்கழகத்தில் பெளத்த மத பீடத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். தென் கிழக்காசிய நாடுகளில் பெளத்த மதப் பரம்பல், அவற்றின் வேறுபாடுகள், பிளவுகள், பிரி வுகள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவருடன் கருத்தியலான மதங்கள் பற்றி உரையாடுவதே தனிச் சுவை, அறி வுக்கு விருந்து.
சில ஆண்டுகளின் பின்னர் அவரைக் கொழும்பில் கண் டதில் மகிழ்ச்சியடைந்தேன். ஆயினும் அவர் கேட்ட உதவிகளை ஆர்வத் தோடு செய்ய முடியாத சூழ்நிலை கவலையே தந்தது.
அவர் அரசின் பெளத்த மத பண் பா ட் டு நிறுவனத்திற்குச் சென்று உதவிகள் அனைத்தையும் பெற்றிருக்கலாம். அவர்கள் பிரச் சா ர ம் செய்து அர சின் சா ர் பா க த ன் ஆய்வு களை திருப்ப முனை ய லா ம், என்பதற்காகவே அவர் விரும்பவில்லை. என் உதவியை வேண்டினர்.
மறுநாள் அதிகாலை சிங்களம் நன்கு தெரிந்த என் நண்பரின் "வாணி"ல் அவரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு புரொபெஷர் தங்கியிருந்த அச் சாதாரண ஒட்டலுக்குச் சென்றேன்.
அவர் தன் மகள் ஜென்னியுடன் ‘வான நோக்கி வந்தார். அது மற்ருேர் வியப்பு. சுறு சுறுப்பான பெண். இர ண் டு ஆண்டுகளின் முன்னர் கண்டேன். அப்போது பன்னிரண்டு வயது என்று கூறிய நினைவு. வீட்டுக்கு வந்து என் பிள்ளைகளுடன் பழகி, ச  ைமத் து உண்டு யாவரையும் கவர்ந்திருந்தாள். என்னை இனங் கண்டு, சிரித் துப் பேசி, பிள்ளைகள் பற்றியும் உசாவினள்.
அவளையும் அழைத்துச் செல்வதிலுள்ள ஆபத்துப் பற்றியே என் நினைவு வட்டமிட்டது. சேட்டும் அரைக் கால் சட்டையும், வெண்பட் டுப் போன்ற ஸ்கின். பேராசிரியர் கென்னதையும் ஜென்னியை யும் நான் என்றும் மறந்து விட முடியாத உண்மை ஒன்று இருந்தது.
இந்தியாவில் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் உரையாடிய வேளை பெண் விடுதலை பற்றி என் நூலில் எழுதிய புதிய கண்டு பிடிப்புப் பற்றிய கருத்தை அவரிடம் கூறினேன். "பெண்ணினம் விடு த லை பெறும் காலத்தில் குடும்ப அமைப்பு நிலைபெருது; ஆண்களும்,
سے 13 میسس

Page 9
பெண்களும் தனியாகவோ, ஒன்முக விடுதியிலேயோ வாழலாம் ; சமூகத்தின் மறு உற்பத்தித் தேவைக்காகப் பெண்கள் விரும் பும் போது குழந்தையைப் பெற்று சமூகப் பொறுப்பில் விட்டுவிட நேர லாம்' என்றேன்.
\ பேராசிரியர் சிரித்துவிட்டுச் சொன்னர்;
'இப் பெண் ஜென்னியை நா னே வளர்க்கிறேன். இவளது தாயார் இப் பெண்ணைப் பெற்றுத் தந்து விட்டு வேறு இடத்தில் தனியாக வாழ்கின்ருள், இது என்ன கண்டுபிடிப்பு. நடைமுறையில் எங்கள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது."
என் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒரு அடி; மறக்க முடியாதது.
அதிகாலை, இதமான பயணம், ஜென்னி என் நண்பரோடு முன் சீட்டில், நாம் பின் சீட்டில் இலங்கை மட்டுமல்ல உலகின் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி அ ல சிக் கொண்டிருந்தோம். மதம் என்ற கருத்தியலின் ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே அனைத் தும் ஆரம்பமானது.
'இந்து மதம் என்றும் உயிர்க் கொலையை எதிர்த்த தி ல் லை’
'அதில் சந்தேகமில்லை'
"எங்க கிராமத்தில் மூன்று  ைவர வர் கோ வில் க ள் உள்ளன. பங்குனி மா த த் தி ல் முதல் ம  ைட இரண் டா ம் மடை என எட்டாவது நாளிலும் விழாக்கள் நடைபெறும். அக் கோவில்களுக்காக கிராமங்களில் வளர்த்த பல நூறு கடாய்களைக் கொண்டு வந்து பூசை செய்து தலையை வெட்டுவார்கள். பின் னர் தலை வேறு முண்டம் வேருக விலைபேசி விற்பார்கள். கோவிலைச் சுற்றி இரத்தம் ஆருக ஓடும். யுத்த களம் போன்ற ப யங் க ர க் காட்சி. சுற்றிவர உள்ள கிராமத்தவரெல்லாம் கடாய்களின் முண் டங்களை விலைபேசி வாங்கி வண்டில்களில் தலை கீழாகக் கட்டிச் செல் வர். சிலர் தலைகளை மட்டும் வாங்குவர். இக் கோரமான கட வுள் வழிபாட்டை ஒழிக்க நான் சிறு வயதில் ஒரு இயக் க மே நடாத்தித் தோல்வியடைந்தேன்'
'சிறு தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுத்து வழிபடும் முறை இந்து மதத்திலும் வேறு சில மதங்களிலும் உள் ளன. பெருந் தெய்வ வழிபாட்டை ஒட்டி யாகங்கள் நடைபெற்றன. அங்கும் ஓம குண்டத்தில் நெய் வார்த்து, தீ எழுப்பி இறைச்சியை நெருப்பில் வாட்டி உயர் வகுப்பினர் பகிர்ந்து உண்டனர். இதில் சந்தேச ιδίουδου .
مسس سے 14 سست

பேராசிரியர் அத்தோடு ஓம குண் டத்  ைத ச் சுற் றி வர இருந்து வேதம் ஒதும் வழமை பற்றியும் தான் கற் ற வற் றை க் கூறினர்.
* கிராமத்து வேள்வி பற்றிய சம்பவத்தை ஒட்டி நான் அறிய விரும்புவது உளவியல் சம்பந்தமான சமூகவியல் தாக் கம் பற்றி யதே’ என்றேன். V
** சரியாகப் புரியவில்லை'
* 'இந்த உயிர்க் கொலையின் போது, கடாய்க்களின் கழுத் து வெட்டப்படும் போது, பீறிட்டு எழு ம் இரத்தத்தையும் பின் னர் கொல்லப்பட்ட கடாய் முண்டங்களின் பரவலையும் பல கிராமங்களி லிருந்து வரும் சிறுவர், பெண்கள் உட்பட பல்லாயிரம் மக்கள் சாதாரண விழா நிகழ்வாகக் கண்டு களிக்கிருர்களே. பூசை செய் யப்பட்ட பெரிய கத்தியால் கடாய்களின் கழுத்தை வெட்டுபவன் அன்றைய வீர புருஷனுகப் பேசப்பட்டான். இந் நிகழ்வு சமூக உள வியலில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பைப் பற்றியே நான் அதிக ம்
கலைப்பட்டேன்'
**நீங்க கூறுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது. இவ் வேள்வி களின் தாக்கம் மனிதக் கொலைகள் உட்பட ப் பிற கொலைகளையும் வழமைப்படுத்தி விடலாம். உங்கள் கவலையில் ஒரளவு உண்மை இருக்கவே செய்கிறது. உங்கள் கிராமத்து வேள்வியைத் தடுக்க நீங்க முயன்றதாகக் கூறினீர்களே. அது சமண, புத் த மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்ட கருத்தியல். அடிப்படை அ  ைம ப் பின் தேவையை ஒட்டியே கருத்தியல்களிலும் மா ற் ற ம் ஏற்படுகிறது. மந்தை மேய்த்து வாழும் சமூகத்தின் பிரதான உற்பத்தியான மந் தைகளின் பெருக்கமே மக்களுக்கு வாழ்வு தந்தது. ம ந்  ைத களை யாகம் என்ற பெயரில் கொன்று தின்பது உற்பத்தியைப் பா தி ப்ப தாக இருந்தது. இதற்கு எதிரான இயக்கமாகவே சமணம், புத்தம் மதங்கள் தோன்றி உயிர்க் கொலையை எ தி ர் த் து அகிம்சையைப் போதித்தன. நீங்க சைவ உணவை மட்டும் உண்பது கூட இப் புதிய மதங்களின் தாக்கத்தாலேயே ஏற்பட்டது'
பேராசிரியர் நீண்ட தன் ஆராய்ச்சிச் சொற்பொழிவை நிகழ்த் தினர்
* சமணம், புத்தம் வாணிப வர்க்கத்தின் மதம் என்றும் கூறப் படுகிறதே"
நான் கற்றதைக் கூறினேன்.
- 15 -

Page 10
'உண்மையே மகா வீரர், புத்தர் காலத்திலே அடிமை உற்பத்தி முறையில் பரவலாகக் கருவிகளும் உற்பத்தி செய்ய ப் பட்டன. அவற்றை பரிமாற்றம் செய்யும் பணியும் ஏற்பட்டது. வணிக வர்க் கம் வளர்ந்தது. உயிர்க் கொலையை எதிர்க்கும் சமணத்தைக் கடைப் பிடிப்பது வணிக வர்க்கத்தவராலேயே முடிந்தது"
"அடிமை உற்பத்திக் காலத்தில் வளர்ச் சி ய  ைட ந் த கைத் தொழில் உற்பத்தி நிலப் பிரபுத்துவ காலத்தில் தேக்கமடைந்தது என்று கூறுவீர்களா?"
\\ - - . -تیت -
"ஆமாம். பயிர்த் தொழில் உற்பத்தி மக்களை நிரந்தரமாக குடி யேற்றி அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்தது. அதனல் தற்கா லிகமாக தேக்கம் அடைந்தது என்று கூறலாம். உபரியால் மதத்தை வளர்த்துக் கோவில்களைக் கட்டினர். பின்னர் கைத்தொழில் வளர்ச் யும் இயந்திர உற்பத்தியும் பண்ட உற்பத்தியை மிக வே க ம |ா க வளர்த்து இன்றைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது”
மலை ஏற்றத்தில் வளைந்து வளைந்து வான் ஏறிக்கொண்டிருந்தது. பள் ளத்தாக்குகளின் பசுமை எம்மைக் கவரவே செய்தது.
வழியில் பல கிராமங்களில் நடமாட்டம் இருந்தபோதும் சில இடங்களில் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. கடைகள் பூட்டிக் கிடந்தன. சில கட்டடங்கள் எரிந்து கிடந்தன. பாதிக் கப் பட்ட கிராமங்களாக இருக்க வேண்டும் என பேராசிரியரிடம் விளக்கம் கூறினேன்.
இராணுவ வாகனங்கள் ஆங்காங்கே நிலவிய மரண அ  ைமதி களிடை இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே "சுர்’ என்ற துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டன. எம்மை அச்சுறுத்தியது. என் அச்சத்தைக் காட்டி அவர்களையும் பயமுறுத்த வி ரு ம் பா த முறையில் நான் நடித்துப் பேச்சுக் கொடுத் துக் கொண்டிருந்தேன். முன் சீட்டில் இருந்த என் நண்பர் முக்கிய இடங்களைப் பற்றி ய விபரங்களை இடையிடை கூறிக் கொண்டிருந்தார்.
"புத்தம், சமணம், கிறிஸ்தவம் அகிம்சை பேசிப் பிரச்சாரம் செய்தபோதும்,அதே மதங்களால் யுத்தங்களையும் உயிர்க் கொலைகளையும் நிறுத்தி விட முடியவில்லை. வரலாற்றுக் காலம் தொட்டு பல்வேறு தேவைகளை நோக்கி உயிர்க் கொலைகள் நடைபெற்றுக் கொண்டேயிருக் கின்றன"
"புத் த மத ம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட போதும் இலங்கையில் வன்முறையாகவே நிலவி வந்துள்ளது என குமாரி ஜெயவர்த்தன அடிக்கடி கூறுவார்'
- 16 -

"அதுவும் உண்மையே. முன்னர் முஸ்லிம்கள், தமிழர்கள் மேல் வன் முறையைக் காட்டினர்கள். 1971 இன் பின்னர், மிக மோசமாக தம் மக்களிடையேயே தற்போது வன்முறையை நடைமுறைப்படுத்துவதைக் காண்கின்ருேம். தனிச் சொத்தைப் பேணும் அரசு என்ற வடிவம், வன் முறை வடிவம் என்பதை நான் உங்களுச்குச் சொல்லித் தரவேண் டியதில்லை. இந்த வடிவம் தாக்குதலுக்கு உட்படும்போது அதன் கோர உருவத்தையும் காண்கிருேம்"
**எல்லா அரசு இயந்திரங்களையும் நீங்கள் ஒன்று படுத்துவீர்களா? பூர்ஷ்வா ஜனநாயக நாட்டு அரசுக்கும் எம் நாட்டுக்கும் வேறுபாடு கிடையாதா?"
*கிராம்சி அரசுகளை வேறுபடுத்திப் பார்க்க முயன்ருர். அல் தூசர் அக் கருத்தை ஏற்கவில்லை. அரசுக்கு ஆபத்து வரும் வேளை அதன் பாதுகாவலனன இராணுவத்தின் கோர வடிவத்தை, பாசிசப் போக்கைக் காணலாம். உங்கள் நாட்டு இராணுவமாயினும் சரி. அமைதி காக்க வந்த படையாயினும் சரி, அவர்களிடமுள்ள துப்பாக்கி கள் நூதனசாலைப் பொருட்களல்ல' V,
லெனின் கூறியதைக் குறிப்பிடுகிறீர்களா?"
**ஆமாம்.'"
நாம் பேராதனைப் பூங்காவுள் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட்டு சில நேரம் ஒய்வு எடுத்தோம். நேரம் அதிகமில்லாதபடியால் பூங்காவையும் "வாணி"லேயே சுற்றிப் பார்த்தோம்.
அங்கும் கண்டியிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந் தது. மக்கள் முகத்தில் ஒருவகைப் பீதியும் அமைதியின்மையும் வெளிப் படையாகத் தெரிந்தது. தெருக்களில் வாகனங்கள் குறைவாகவே இருந்தன. ஆயுதம் தாங்கிய இராணுவ லொறிகளும் பொலிஸ் ஜீப் களும் நகரைச் சுற்றி ஓடின. தயார் நிலை யி ல் இராணுவத்தினர் ஆங்காங்கே நின்றனர்.
நேரமாக புத்தரின் பற்கோயிலுக்கே சென்ருேம். “வான்’ முன் போல அண்மையில் நெருங்க அனுமதிக்கப்படவில்லை. ஓட்டலருகே வாய்ப்பான இடமொன்றில் நிறுத்தினுேம், புத்த கோயிலைப் பாது காக்க இராணுவப் படை ஒன்று நின்றது. அனைவரும் அடை யாள அட்டைகளையும் கடவைச்சீட்டுகளையும் காண்பித்து, உலோகப் பரிசோதனையின் பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
அன்று யாத்திரிகர்கள் குறைவாகவே இருந்தனர். நண்பர் ஒய்
வாகச் சுற்றிப் பார்த்தார். சில விபரங்களைக் கேட்டறிந்து குறித்துக் கொண்டார். சிங்களம் தெரிந்த நண்பர் பேருதவியாயிருந்தார்.
س- 17 سے

Page 11
நண்பகல் பூசை வரை நின்று அங்குள்ள சடங்கு முறைகளையெல் லாம் நண்பர் ஆர்வத்தோடு பார்த்து, தன் குறிப்புக்களை இடை யிடையே என்னிடம் கூறினர்.
கோவில் சடங்கு முறைகளில் இருந்த இந்துமதத் தாக்கங்களை தெரிவித்து என் கருத்துக்களையும் கேட்டு, குறித்துக் கொண்டார்.
பகல் ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. பின்னர் வெளியே வந்த தும் எதிரே இருந்த இந்துக் கோயில்களையும் காட்டினேன். அவற்றை யும் சுற்றிப் பார்த்தோம். இந்து, பெளத்த மத ஒற்றுமை, வேற்று மைகளையும் ஆராய்ந்தோம்.
நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்து மதத் தாக்கம் பற்றிய செய்திகளையும் தெரிவித்தேன்.
உணவு விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றேன். என்னைப் போலவே நூடிள்ஸ் வரவழைத்து அவர்களும் உண்டனர்.
** என்னகுறை கூறினும் சமண, புத்த மதங்களே மத வழிபாடு, மத குருமார் முறைகளில் ஒழுங்கு முறைகளை முதன் முதலில் கொண்டு வந்தது”
'பள்ளிகள், பிக்குகளின் சீருடைகளை வைத்துக் கூறுகிறீர்களா?" நான் என் அறிவைத் தெரிவித்தேன்.
'அவற்றையும் சேர்த்தே கூறுகிறேன். மதத்தைப் பேணச் சங்கம் அமைத்தவர்கள் அவர்களே. பிராமணரின் குருகுல முறைகளை ஒதுக்கி விட்டு பள்ளிகளை அமைத்தவர்கள் அவர்களே. சங்கம், பள்ளிகள்-இன் றும் அதே கருத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுவதைக் காணக் கூடியதாக இருக்கவில்லையா?' என்னிடம் கேட்டார்.
வேறு நாட்டவர் ஒருவர், எங்கள் நாட்டு மதங்கள், வார்த்தைகள், பண்பாடுகள் பற்றி கல்வி மூலம் அறிந்து விளக்கம் கூறுவது எனக்கு வியப்பாகவே இருந்தது. பேராசிரியர் மேலிருந்த மதிப்பும் உயர்ந்தது.
மேற் கொண்டு மேலும் 80 கி. மீ. தூரத்திலுள்ள தம்பளை,
சிகிரியா ஆகிய பெளத்தமத நிலையங்களை மறுநாள் பார்க்கும் எண்
ணம் கைவிடப்பட்டது. போக்குவரத்து நல்லாயில்லை என்று காணப் படும் சிலரை விசாரித்துவிட்டு நண்பரும் உறுதிப்படுத்தினர்
பல்கலைக்கழகத்தை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு விரைவில் கொழும்புக்குத் திரும்பிவிடுவதாக முடிவு செய்தோம்.
- 18 -

கொழும்பு நோக்கிய வீதியில் இறங்கியதும் இராணுவத்தின ரால் எமது “வான்’ தடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
மற்றேரிடத்தில் தெருவில் சென்ற வாலிபர்கள் சுற்றி வளைக்கப் பட்டு இரர்ணுவ லாரியில் துப்பாக்கி முனையில் ஏற்றப்பட்டனர்.
"கொழும்பு" வீதிவழியே வந்து பேராதனையில் பல்கலைக்கழகம் நோக்கித் திரும்பினேம். சிறிது தூரத்தில் வாகனங்கள் செல்ல முடி
யாது தடுக்கப்பட்டன.
பயங்கர நிழல் படிந்த முகத்தோடு சிலர் ஆங்காங்கே போய்க் கொண்டிருந்தனர். நடந்து செல்பவரிடையே பரபரப்பு. நண்பரும் நானும் பேராசிரியரும் என்ன நடைபெறுகிறது என்பதைப் பார்ப்ப தற்காக இறங்கிச் சிறிது தூரம் சென்ருேம். ஆங்காங்கே சிதறிக் கிடந்த மானிடத்தலைகளை ஒருவன் எண்ணிக் கொண்டிருந்தான். அவற்றைப் பார்க்க விரும்பாத நிலையில் வானை நோக்கித் திரும்பி னேம். 'தாயட்டாய்” - பதினெட்டு என ஒருவன் சிங்களத்தில் கூறிக் கொண்டு நடப்பதைக் கண்டோம்.
'வானை'த் திருப்பி வந்த வழியே வந்து கொழும்பு வீதியாகச் செலுத்தச் செய்தோம். -
ஒரே மரண அமைதி; உடலில் இரத்தம் உறைந்து கொண்டிருந் தது. ‘என்ன? என்ன?’ என்று கேட்ட ஜென்னிக்கு, 'ஒன்றுமில்லை" என்று கூறி மழுப்பினுேம். பேராதனைப் பாலத்தைத் தாண்டி “வான்’ ஒடிக்கொண்டிருந்தது. காலையில் திறந்திருந்த கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. நடமாட்டம் குறைந்திருந்தது.
கண்டி - கொழும்பு நோக்கிய வாகனங்கள் மட்டும் எதையும் பொருட்படுத்தாது ஓடிக் கொண்டிருந்தன.
திடீரென முன் சென்ற வாகனங்களின் வேகம் குறைந்தது. ஆங் காங்கே சிறுகூட்டம். என்ன பார்க்கின்றர்கள்? மீண்டும் மனிதத்தலை đợi 6TrT?
அல்ல, தலையிழந்த மனித முண்டங்கள். ஆங்காங்கே தெருவோ ரத்தில் போடப்பட்டிருந்தன.
உடலில் ஒடும் இரத்தமெல்லாம் மீண்டும் உறைந்து போகும் உணர்வு. -
ரயர் மூட்டி எரிந்துகொண்டிருந்த ஒரு உருவத்தைச் சுற்றி சிறு
கூட்டம் , சாரதியின் முகத்திலேயும் பீதி நிறைந்திருந்தது. கொழும்பு நோக்கிய பிற வாகனங்களைத் தொடர்ந்து வேகமாக ஒட்டினன்.
- 19 -

Page 12
எங்கள் வாழ்க்கையிலேயே கண்ணுற் காணுத காட்சிகள். சிறு வயதில் வைரவர் கோவிலில் கண்ட காட்சி என் நினைவில் தோன்றி ஒப்பு நோக்கியது.
அரை மணிநேரம் கழித்தே பேசுவதற்கேற்ற தெம்பு வந்தது. வீட்டிலிருந்து எடுத்துவந்த நீரால் தொண்டையை நனைத்தேன். மற்ற வர்கட்கும் நீட்டினேன்.
"ஏன் இப்படியெல்லாம் செய்கிருர்கள்?"
பேராசிரியர் வினவினர்.
'நபர்களை மொழி, இனம், மதத்தால் இங்கே இனம் காண முடி யாது. தலை எங்கோ உடல் மற்றேரிடத்தில். அதனுலும் மக்களிடை பீதி ஏற்படுத்துவதற்காகவும் தான் இப்படியாகச் செய்கிறர்கள் போலும்."
** இருக்கலாம்"
*அகிம்சை போதித்த தர்மம் சரணம்.ஒதும் மதம் சார்ந்தவர் களிடையே நடைபெறும் வன்முறையைப் பற்றி என்ன கூறுவீர்கள்?"
'தங்கள் பதிலையே எதிர்பார்க்கின்றேன்"
'அரசின் வன்முறை வடிவம் கருத்தியல்களைக் கடந்தது."
*" கருத்தியல்கள் அரசுயந்திரத்தோடு இணைந்தவை என்பதே என் கருத்து"
வரக்காபளையில் சிறிது நேரம் ஆறி இரவு எட்டு மணிக்கு கொழும் புக்குத் திரும்பினுேம்.
இரவு எட்டரை மணிக்கு பி. பி. சி. செய்தியைத் திருப்பினேன்,
பேராதனைப் பல்கலைக் கழகப் பகுதியில் பதினெட்டு மாணவரின் தலைகள் காணப்பட்டன. மற்றேரிடத்தில் பதினறு தலையிழந்த முண் டங்கள் கிடந்தன. இனம் காணப்படாதவர்களால் கொல்லப்பட்ட
தாக அரசின் குறிப்புக் கூறியது.
அகில இந்திய வானெலி 9 மணிக்கு இதே போன்று செய்தி கூறியது.
f
மறுநாட் காலைப் பத்திரிகைகளிலும் அதே செய்தி வெளிவந் திருந்தது. O
- 20 -

கம்யூனிச சமுதாயம்
大
srysyvM w wy
Lாட்டாளிகள் என்போர் சொத்து எதுவுமற்றவர்கள். அதனல் இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள்; அடுத்தது உழைப்பில் உற்பத் தியில் ஈடுபடுபவர். அதனல் சுரண்டப்படுபவர். எதிரியை இனங் காணக்கூடிய வர்க்கத்தவரும் இவரே. ஒன்றுமற்ற பிச்சைக்காரர் பாட்டாளிகளாகார். ஏனெனில் அவர்கள் உழைப்பில் ஈடுபடுவதில்லை.
பாட்டாளிகள் முதலில் அமைக்கும் சமுதாயமே சோஷலிச சமு தாயமாகும். இச் சமுதாயம் புதிய உற்பத்திஉறவு, புதிய அரசியல் புதிய கலாச்சாரம், பண்பாடும் கொண்ட சமுதாயமாகும். சுயநல மற்ற, சமுதாய உணர்வு மிக்க சமுதாயமாகும். இச் சமுதாயத்தி லேயே மனித அடிமை விலங்குகள் அகற்றப்படுகின்றன. முதலாளித் துவத்தில் கூலி அடிமையாக மாறிய மனிதன் இங்குச் சுதந்திரம் பெறுகிருன் நிர்வாகத்திலும் உபரியைத் தீர்மானிப்பதிலும் உரிமை பெறுகிருன்.
இங்கு உழைப்பவனுக்கே உண்ண உரிமைகள் உண்டு. உழைக்க முடிந்தவர்கள் அனைவரும் உழைப்பர். உற்பத்திச் சாதனங்கள் யாவும் சமூகத்தின் கூட்டுச்சொத்தாக இருக்கும். சோஷலிசத்தில் திறமைக் கேற்ற உழைப்பு, உழைப்பிற்கேற்ப பண்டங்கள் பெறலாம்,
பண்ட உற்பத்தி பெருக, காலப்போக்கில் எல்லோருக்கும் தேவைக் கேற்பப் பண்டங்கள் கிடைக்கும். அக்காலத்தில் திறமைக்கேற்ப உழைப்பு, தேவைக்கேற்ப பண்டங்கள் கிடைக்கும். அக்கால கட் டமே கம்யூனிசம் ஆகும். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சி பெருநிலை யிலேயே புராதன கம்யூனிசம் இருந்தது. இக் கம்யூனிசம் மனித சமு தாய வளர்ச்சியின் உயர்ந்த கட்டமாகும்.
ஆகவே சோஷலிசம் என்பது கம்யூனிசத்திற்குச் செல்லும் இடைப் பட்ட காலமாகும். சோஷலிசத்தில் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிலை நிறுத்தப்படும். முதலாளிகளின் சர்வாதிகாரம் ஒடுக்கப்பட்டு விடும். a.
உற்பத்திக் கருவிகளின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில், உபரி உற்பத்தி செய்ய மனிதன் ஆரம்பித்த வேளையில், அடிமைச் சமுதா
سس- 2H سس

Page 13
யம் தோன்றியது. ஆகவே வர்க்க சமுதாயம் தோன்ற வழிவகுத் தது என முன்னர் கண்டோம். .
இதன் பின்னர் நிலப் பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் என வளர்ந்தது. இவ் வளர்ச்சிப் போக்கில் சோஷலிச சமுதாயம், கம்யூனிச சமுதாயம் தோன்றுவது தவிர்க்க முடியாத வர லாற்று உண்மை என்பதே மார்க்சிய சித்தாந்தமாகும்.
கம்யூனிச சமுதாயத்தில் அரசு என்ற பலாத்கார வடிவம் உதிர்ந்து விடும். அரசு மனித வரலாற்றின் இடைக் காலத்தில் தோன் றிய வடிவமே. வர்க்கமற்ற சமுதாயம் மீண்டும் ஏற்படும் போது இப் பலாத்கார அமைப்பு உலர்ந்து விடும்.
உலக வரலாற்றைத் திரும்பப் பார்க்கும் போது இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவில்லேயா? இது ஒரு விஞ்ஞான பூர்வ மான அணுகு முறை.
இப்புதிய சமுதாயத்தில் பெண்ணடிமைத்தனமும் ஒழிந்துவிடும். ஆணும் பெண்ணும் அனைத்திலும் சம உரிமையுடன் வாழ்வர், ஆணு டைய சொத்துக்காக பெண், குழந்தை பெறும் நிலை மறைந்து விடும். சமுதாயத் தேவையை ஒட்டியே மறு உற்பத்திக்கே குழந்தை பெறு வர். குழந்தையின் தேவை அனைத்திற்கும் சமுகம் பொறுப்பேற்கும். குடும்பத்திற்காக சமைத்தல், துவைத்தல், வீடு பேணல் போன்ற மேலதிக வேலைப்பழுக்கள் குறைந்துவிடும்.
இன்றைய வர்க்க சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்காகவே அரசு சட்டங்கள், மதம், சாதிப்பாகுபாடு, கல்வி, கலை இலக்கியங் கள் என்ற மேல்மட்ட அமைப்புகள் ஏற்பட்டன. வர்க்க சமுதாயம் உடைத்தெறியப் படும்போது இம் மேல்மட்ட அமைப்புகளும் தகர்க் கப்படும்.
உலக வரலாறு அடிமைத்தளையுடன் ஆரம்பிக்கவில்லை. அடிமைத் தளையோடு முடியப் போவதுமில்லை. \
("மான்விழிக்கு கடிதங்கள்?)
எமது ஒழுக்கமெல்லாம் பொருள் முதல்வாதமானது; கற் பணுவாதமல்ல. ஏனெனில் அவற்றின் முதற்பணி எம்மை உயி ரோடு வைத்திருப்பதே. - ஹபெக்
བ་གམ 22 -གས་ལམ་

ஹென்றி போட்டின் ஏற்றமும் வீழ்ச்சியும்
O தியாகு"
இந் நூற்ருண்டின் ஆரம்ப காலத்தில் ஹென்றி போட் (18631947) என்ற அமெரிக்கர் " போட் கார் உற்பத்தியுடன் புதியதோர் துரித உற்பத்தி முறையை அறிமுகப்படுத்தினர். தொழிலாளர்களி டம் வேலைப் பிரிவினையை ஏற்படுத்தி அவர்களை இயந்திரத்தோடு இணைத்துவிடும் வேலை முறையைக் கொண்டு வந்தார்.
தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலையைத் தேடி டோகப் படாது, வேலை தொழிலாளியைத் தேடி வரவேண்டும் என அசை யும் “பெல்ட்'டில் தொழிலாளியிடம் வேலை வரும் முறை யை யு ம் கொணர்ந்தார். உதாரணமாக நட்" ஒன்றை, கார் "பெல்ட்"டில் வருபோது குறட்டால் இறுக்கி விடும் வேலையையே ஒரு தொழி லாளி நாள் பூராவும் செய்ய நேரிட்டது.
(சார்லி சப்ளின் இயந்திரமயமாக தொழிலாளியை இவ் வா று ஆக்குவதை தன் சினிமாவில் நகைப்பூட்டும் விதமாகக் கண்டித்தார். நட் பூட்டும் தொழிலேயே நாள் பூராவும் செய்யும் தொழிலாளி தெருவில் போகும் பெண்களின் மார்புச் சட்டையில் பட்டனை க்" கண் தும் அவனை அறியாமல் அவன் கைகள் "நட்’ பூட்டும் வித மாக இயங்கத் தொடங்கின.)
ஹென்றி போட் சிறிய கார்களை ஏராளமாக உற்பத்தி செய்து விலையைக் குறைத்து, விற்பனையை விரிவாக்கி அதிக லாபம் திரட் டிஞர். பண்ட உற்பத்தியை முதலாளித்துவம் பரவலாக்குவதும், வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு அவர்களின் சக்திக்கேற்ப பண்டங் களை உற்பத்தி செய்து விரிவாக்குவதுமான தவிர்க்க முடியாத முத லாளித்துவப் போக்கே இதுவாகும்.
இவரது உற்பத்தி முறையை இன்றைய நவீனப் போக்குகளுடன் ஒப்பிடுபவர் பின்வருமாறு விபரிப்பார். 1. தொழில்நுட்ப வளர்ச்சி யில் அதிக ஈடுபாடில்லை. 2. நிரந்தரமான தொடர்ந்த உற்பத்தி 3 பரந்துபட்ட சந்தை 4. திட்டமிடுவதை  ைம ய ப் படுத் த ல் 5. பரந்துபட்ட தொழிற்சங்கமும் கூலித் தீர்மானங்களை மையப் படுத்துதல் மூலம் வர்க்க சமரசம் ஏற்படுத்துதல் ஆகியன.
இவ் உற்பத் தி மு  ைற புதியது, புரட்சிகரமானது என உலக மெங்கும் முன்னர் பாராட்டுப் பெற்றது.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா உட்பட முதல வரித்துவ நாடுகளெங்கும் புதிய பொருளாதாரப் பிரச்சினைகள்
y ருவாகின.
ܡܚ- 23 ܚܝܝ

Page 14
பண வீக்கம், லாப விகிதத்தில் வீழ்ச்சி, தொழிற்சங்கங்களின் ஐக்கியமும் போராட்டமும், பொருளாதாரத் தேக்கம், அர சி ய ல் தலையீடுகளால் உற்பத்தி நுகர்வுகளில் மாற்றங்கள் முதலியன.
இந் நிலைகளால் போட்டின் முறைகள் வீழ்ச்சியடைந்தன. முன் னேறிய தொழில் நுட்பங்களும், விரைவாக லாபம் திரட்டும் முறைக ளும், தொழிற்சங்கங்களின் ஐக்கியத்தைப் பிளவுபடுத்தி பேரம் பேசும்போக்குகளும் முதலாளித்துவ நாடுகளில் புகுத்தப்பட்டன.
* போட்டின் முறைகள் மூன்ரும் உலக நாடுகளுக்குத் தள்ளப் பட்டன. பிரான்சு நாடு மட்டுமே தொழில் நுட்ப விவேகத்தை வளர்ப் பதோடு " போட்டின் முறையைக் கைக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இப் போக்கு தொழிலாளர்களை தொழில்நுட்ப விவேகத்திற்கு அடி மைப்படுத்தும் போக்கு என்ற கண்டனக் குரலும் இன்று மார்க்சிய ஆய் வாளரிடமிருந்து எழுந்துள்ளது.
வாணிபக் கலை உற்பத்தி ۔
‘நவீனப் போக்கு' என்பது பூர்ஷ்வா எதிர்ப்பை விட்டு சர்வ தேச முதலாளித்துவத்துடன் வாய்ப்பாக இன்று இணைந்து விட்டது. சர்வதேச எல்லைகளுடனும் அனைத்து வர்க்கங்களுடனும் சர்வதேசச் சந்தையை நோக்கிப் பிணைந்து பொய்மையாக, போலியாகி விட் டது. அவற்றின் வடிவங்கள் காலாச்சாரப் போட்டியாலும் வாணிப நோக்கின் பாதிப்பாலும் காலாவதியாகிவிட்டன. சந்தைக்கு வேண் டிய படியான நடை, வடிவம், நோக்குக் கொண்டுள்ளதாலேயே இந் நிலை ஏற்பட்டது.
கஷ்ட உழைப்பில் கண்டு பிடிக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் பயனற்று ப் போ யி ன, விளம் பர முறைகள், வணிக முறை யான சினிமாவிற்காக உணர்வு குன்றிய நிலையில் தொழில் நுட்ப வியலாளர் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அந் நியப்பட்ட படிமங்களும் மாதிரியற்ற தனி நபர் சம்பவங்களும் வணிக வடிவங்களுக்கு சாதா ரணமாகப் பயன்படுத்துகின்றனர். பரபரப்பூட்டும் வகையான வீர புருஷர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
இதயமற்ற வாய்ப்பாடாக நவீனப் போக்குகள், படைப்புகள் என இவை வழங்கப்படுகின்றன. இன்றைய நிலையான வடிவங்கள் இவையே. இவற்றுக்கு மாற்றன நவீனப் போக்குகளில் நாம் கலை களைப் படைக்க வேண்டும். இந் நூற்றண்டில் பல்வேறு கட்டங்களில் படைக்கப்பட்ட மரபில், சமுதாய உணர்வுடன் அவை புதிய எதிர் காலத்தை நோக்காகக் கொண்டிருக்க வேண்டும்
(ரேமன் வில்லியம்வRன் சொற்பொழிவி லிருந்து)
一 24一


Page 15
KUMARAN-71 con
ಸ್ಥಿ$$$$$
* குமரன்
உலகில் போதைப் பொருள் அமெரிக்க மதத்திலும் பார்க்க ஆவம் மக்கரே மயக்கத்தில் ஆழ்த் அமெரிக்கர வளர்த்து வரும் சர்வு டவில் முதன்மை வகிக்கின்றனர். விஷ்ஃ. "சோஷலிசம் தோற்று இரண்டு கட்டுரைகளும் பதிலளிக்
இபளத்து மதம் என்ற கருத் இவரின் அரசியல் பிள்ளி பினேற் சிறப்பு என காலஞ் சென்ற சமுக கூறியுள்ளார்.
இம் மதம் வின் முறையாகவே ப்ேபட்டு வந்தது, தொடர்கிறது வார். தர்மம் சரனாம். என்ற சிறு சிறு குறிப்புகளும் இக் கருத்துக்ளேத்
இலக்கியம் பற்றிய தெ அதன் நோக்கங் பிளேயும் பணியை முதில் வாதக் கடலில் நாம் நீந்தி முதல்வாத ரீதியில் கஃ) இலக்கியத் அறிவோம். ஆ. இலக்கியத்தை விமர்சிப்பது என்பதை கருத்துமுத பூர் க,ே இலக்கியங்கள் மேல்மட் தியலானவை என்பதை ஏற்பவரின் இன்றைய அரசுயந்திரத்தோடு இே "T5, T STS-Star srgir Liga வரலாற் வாதம் பற்றி சுற்றவர்கட்குக் மTர்க்சிய கண்களூடாக ຫຼື ພື້ນ செய்வதோடு விமர்சிக்கப்படவும் கட்டுரையின் நோக்கு
'கம்யூனிச சமுதாயம்" பற்றி கட்டுரை தருகிறது.
குமரன் அச்சகம், ஆசிரியர் : செ. கணேசவிகள்

201, DAM STREET,
1-1989) COLOMBO-2,
§ಜ್ಜಿ
குரல் 2 ”
沁、
அதிகமாக விற்பனேயாகும் நாடு பெரிய அபினியாக முதலாளித் *த இதுவும் உதவுகிறது போலும். பாதிகாரிகளே இப் பெரும் சுரண் அரசால் கட்டுப்படுத்த முடிய வருகிறது" என்போருக்கு முதல் கும், தியலோடு பெரும்பான்மை இனத் திருப்பது இலங்கை அரசின் தனிச் வியலாளர் நியூட்டன் குணசிங்கா
தொடர்ந்து நடைமுறைப் படுத் என குமாரி ஜெயவர்த்தணு கூறு கதையும் ஆளும் வர்க்கீம் பற்றிய தெளிவுபடுத்துவதாக உள்ளன். ாடர் பீட்டுரை பல கோணங்களில் பும் ஆராய்ந்து வந்தது. கருத்து க்கொண்டிருக்கும்வேளே பொருள் விதி அணுகுவதிலுள்ள சிரமங்களே விஞ்ஞா ன மயப்படுத்துவது, ஸ்வாதிகள் சேவியாகவே காண் - அமைப்புச் சார்ந்தவை, கருத் டையேயும் மயக்கம் ஏற்படவிாம். வந்த கருத்தியல்கள் கருத்து முதல் று இயக்கவியல் பொருள் கூறவேண்டி பதில்வே; இவ்விரண்டு இலக்கியத்தை உற்பத் தி வேண்டும் என்பதே இத்தொடர்
"ய ஆரம்ப அறிவை இவ்விதழ்
- ஆசிரியர்.
ெே1 டாம் வீதி, கொழும்பு-12,