கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2000.01

Page 1
இது
வதை
ளுககான
G
 
 

5p - Poetry Journal
W2

Page 2
யாத்ரா கிடைக்கும் இடங்கள்
Long LilgůBUT 79. தெமட்டக்கொட றோட்
மருதானை, கொழும்பு - 09
O
பூபாலசிங்கம் புக்டிப்போ 340, செட்டியர் தெரு, கொழும்பு - 11
CO
இஸ்லாமிக் புக் ஹவுஸ் 77. பூரீ வஜிரஞான மாவத்தை தெமட்டக்கொட வீதி,
மருதானை, கொழும்பு - 09
சவுத் ஏசியன் புக்ஸ் S - 44. மூன்றாம் மாடி கொழும்பு மத்திய சுப்பர் மார்கட் கொழும்பு - 11

ஜனவரி - 2000
$65flớ87 bụểh (5 tDITỷh$ìguồ - Private Circulation Only ஆசிரியர் : அஷ்ரஃப் சிஹாப்தீன் துணை ஆசிரியர்கள் வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம்.ஸதக்கா, எஸ்.நளிம் GTLřLs56ïT : 37, Dhankanatta Road, Mabola, Wattala - 11300 - Sri Lanka.
/ な*。 绒
· IX፷፰ i t 7,
இவர்கள் இங்கே இருக்கிறார்கள்
கவிக்கோ, புரட்சிக்கமால், ஏஇக்பால், அன்பு ஜவஹர்ஷா, ஷண்முக சுப்பையா, அன்புடீன், ஆர்.எம். நெளஷாத், இப்னு அஸிமத், எஸ்.எச்-நிஃமத் அஷ்ரஃப் சிஹாப்தீன், முல்லா, ஏ.ஐ.விராந்த பெர்னாண்டோ, முமித்ராஜ், வாழைச்சேனை அமர், கிண்ணியா அமீரலி, ஏ.ஜி.எம்.சதக்கா, அஸ்மி ஸாலிஹ், தர்கா நகர் ஸபா, எஸ்.நளீம், வெலிமட ரபீக், நவமுனி, பயணி, அஷ்ஃபா
t LCCSCC TA LLtt Ett0TCCSCC Tt CTLT0TtC CTTT

Page 3
அந்தக் கால மழை
இப்னு அஸ9மத்
அது அந்தக் காலம்
மழை பெய்து ஒயும் போது செடிகளின் கீழாய்ச் செல்வேன்
இலைகள் துளிகளைப் பிடித்து உருட்டி விளையாடும்
நண்பர்கள் செடிகளைக் குலுக்குவர் நாணி நனைவேனி கிழிந்த சேலையாய்
தூறலில் நின்று துளியிழப்போம் முகத்தில் சிதறும் சிதறல் கண்டு சிரிப்போம் தூறலாய்
அது அந்தக் காலம் அந்தக் கால மழை
எப்போதோ 6Tr(5a5(5ust 660cul ஓர் அழகியைப் போல

I - "כעבי. #&
கவிதை இதழ்
நண்பர் இலக்கியக் குழு - வாழைச்சேனை
கவிதைகளை முதன்மைப்படுத்தி வெளியிடப்படும் “யாத்ரா"வை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
கவிதைச் சிற்றிதழ்கள் மட்டுமல்ல, இலங்கையில் வெளியிடப்பட்ட பல இலக்கியச் சிற்றிதழ்களும் கூட அவ்வப்போது காணாமல் போயிருக்கின்றன என்பதை நன்கு தெரிந்து கொண்டபடியேதான் இதனை வெளியிடுகிறோம்.
கவிதைக்கான ஒரு சிற்றிதழை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் எமக்குள் ஏற்பட்டு நீண்ட காலம் ஆகிறது. நீண்ட மிக நீண்ட மனப் போராட்டத்தின் பின்னர் தான் களத்தில் இறங்குவது என்று முடிவு செய்தோம்.
படைப்புகளைச் சேகரிக்கலாம் என்று கவிஞர்களைத் தேடினால் - பலர் வெளிநாட்டில் இருந்தார்கள். (வெளிநாடு போன பின் கவிஞர்களானவர்களைச் சொல்லவில்லை) சிலர் எழுதுவதை விட்டுவிட்டார்கள். சிலர் எப்போதாவது இருந்துவிட்டு எழுதுகிறார்கள். சிலரோ ஐரோப்பிய நாடுகளிலிருந்து மழமழப்பான தாளில் வெளிவரும் சஞ்சிகைகளுக்கு மட்டும் எழுதுகிறார்கள். எஞ்சியவருள் சிலர் பார்க்கலாம்' என்றார்கள்.
இப்படி ஆளுக்கு ஆள் ஒரு வட்டத்தைப் போட்டு அதற்குள் ஒரு நாற்காலி போட்டு அல்லது சிம்மாசனம் போட்டு அழுத்தமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் நாம் மனந் தளரவில்லை. தனிப்பட்ட முறையிலும்
தொலைபேசியிலும் கவிஞர்கள் சிலரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டபடியே இருந்தோம். வாழ்த்தும் வரவேற்பும் சொல்லிச் சிலரும் நமது தொந்தரவு தாங்கொண்ணாமல் சிலரும் படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.

Page 4
இந்தப் படைப்புகளைத் தாங்கிக் கொண்டுதான் ‘யாத்ரா' உங்களிடம் வருகிறது.
“ஒரு மூன்று நான்கு இதழ்களுக்கு இப்படித்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்று அனுபவஸ்தரான இலக்கியவாதி ஒருவர் கூறினார். மூன்றாவது இதழோடு வெறுத்துப்போய் நாம் இதழை நிறுத்திவிடுவோம் என்று சொன்னாரா அல்லது உண்மையாகவே அப்படித்தானா எனத்தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும் நாம் இதழைக் கைவிடுவதாக இல்லை. எமது உறுதி வெல்லப்பட வேண்டுமானால் உங்களது கவிதைகளை, கவிதை சார்ந்த படைப்புகளை எமக்கு அனுப்பிவையுங்கள்.
எல்லா மனசுகளுக்குள்ளும் கவிதை இருக்கின்றது. சிலருக்கு எழுத்தாக வெளிவருகிறது. சிலருக்கு நடத்தையாகவும் சிலருக்கு பேச்சாகவும் வெளிப்படுகிறது. }
உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுள், கேள்விப் பட்டவர்களுள் ஒரு கவிதா மனது இருக்கலாம். அவரைச் சந்தியுங்கள் அவரின் படைப்பு ஒன்றை அல்லது அவரைப் பற்றிய ஆக்கமொன்றினை நீங்கள் எமக்கு அனுப்பியுதவலாம்.
நமது முன்னோர்கள் பலர் இலக்கியத் திறன் மிக்கவர்களாக வாழ்ந்து
அறியப்படாமலேயே, வெளிவராமலேயே மறைந்து போயிருக்கிறார்கள்.
அவர்களது அடையாளங்கள் எங்காவது ஓரிடத்தில் மீதமிருக்கும். அவற்றை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
வாழ்க்கையில் ஒரே ஓர் அற்புதமான கவிதையை எழுதிய மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அப்டிப்பட்ட ஒரு படைப்பையும் நீங்கள் அனுப்பலாம்.
கவிஞர்களுக்கும் இலக்கியச் சுவைஞர்களுக்கும் தான் சொல்ல வருகிறோம்.
'யாத்ரா ஒரு நிலாமுற்றம். இங்கு அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். இந்த இதழ் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எழுதுமாறு கேட்டு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
-usy
m^gU - 1

பேசவேண்டும் என்றபோது தலையசைத்தார்கள்
எழுதவேண்டும் என்ற போதும் தலையசைத்தார்கள்
நான் பாடவேண்டும் என்ற போதும் தலையசைத்தார்கள்
செயற்பாட்டில் இறங்குகையில் வாய் திறந்தார்கள்
தலையசைப்பு மறுப்பேயன்றி அனுமதி அல்ல
15-1-99

Page 5
ஒரு மனிதனின் செய்தி
ஏ.ஜி.எம். ஸதக்கா
5Tதடைக்கும் பேரோசை கொட்டுகிற குண்டு மழை மார்பிலே பிஞ்சு மழலையை இறுக, அணைத்துக் கொண்டோடும் ஒரு பெண்ணின் துயரம் என் தூக்கத்தை எங்கோ திருடிக்கொண்டு போனதும்
போரினால் கால் சிதைந்த ஒரு மனிதனின் சேதி கேட்கிற போதெல்லாம் என் கால்கள் எனக்குச் சுமையாகி விடுவதுவும்,
இரந்து நிற்கும் ஒரு ஏழையின் வெறுங் கையைக் கண்டும் எதுவும் தர முடியாத என் வறுமையின் மீது சினம் பொங்கி வருவதுவும்,
சொந்தமான அனைத்தும் துறந்து வாழ்விடம் இழந்து போனோர் வாழ்வுக்கும், இருப்புக்குமாக அறைகூவிய போதெல்லாம் என் தேசம் எனக்கு அந்நியமாகிப் போனதுவும்,

மனித அவசங்கள் துன்பியலாய்ப் போன வாழ்க்கைச் சூழல் இந்தச் செயற்கைச் சிறையுடைத்து
அண்ட வெளியில் எங்காகிலும்
நின்றுலாவ ஒரு தனியுலகம் கிடைக்காதா. என்றெல்லாம் மனம் அடிக்கடி ஏங்கித் தவிப்பதுவும்,
ஏன்?
ஏனென்று புரியாமல்
சூனியத்தை வெறித்து
T606 பயணப்படுகிற போதெல்லாம் என் துணைவி,
என்னங்க. என்னாச்சு, உங்களுக்கு என்று கலவரத்துடன் கேட்பதும்.
ஏன்?
என்னாயிற்று எனக்கு?

Page 6
sites GACOs
Lரட்சிக் கமால் -
பெயருக்கேற்றபடியே கவிதை இலக்கியத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அற்புதக் கவிஞன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் பிறந்த இக் கவிஞனின் இயற் பெயர் எம்.எம். ஸாலிஹ்.
சிறுகதையொன்றின் மூலம் இலக்கிய உலகுக்கு வந்த புரட்சிக் கமால் பின்னர் அதிசயிக்கத் தக்க கவிஞனாக வடிவம் பெற்றார்.
பொருட்செறிவும் இறுக்கமும் நயமுங்கொண்ட இவரது கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகெங்கினும் பேசப்பட்டன. அவரது ‘கவியரங்கு கேட்க ஆசையுடன் கூடுவோர் ஆயிரம் ஆயிரம்.
தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ள “நாளை வருவான் ஒரு மனிதன்" என்ற அவரது கவிதை எந்த நூற்றாண்டிற்கும் புதிதாய் ஒரு செய்தியைச் சொல்ல வல்லது. பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு அவருக்குப் பெரும் புகழை அது ஈட்டிக் கொடுத்தது. சமுதாய உணர்வூட்டும் கவிதைகளைப் போர்வாளாய்ச் சுழற்றியவர் புரட்சிக் கமால்.
தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள் - அவரிடம் கவிதைகளைக் கேட்டுப் பிரசுரித்தன. அதி சிறந்த இலக்கியவாதிகள் அவருக்கு நண்பர்களாய் இருந்தார்கள்.
"புரட்சிக்கமால் கவிதைகள்' எனும் அவரது முதற்றொகுதி அறுபதுகளில் வெளிவந்தது. பாரதியின் கவிதையில் கண்ட பொருட் பிழையைச்
சொல்ல அவனைத் தேடுவதாக அமைந்த “வான் புலமை தேம்பாதோ'
என்ற பிரபல்யம் மிக்க கவிதை அதில் அடங்கும்.
pumb
 

எழுபதுகளில் இலங்கையில் நடந்த அகில உலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் கவியரங்கிற்கும் -யாழ்ப்பாணத்தில் நடந்த சாஹித்ய விழாக் கவியர்ங்கிற்கும் தலைமைவகித்த இம் மாமனிதனை 78ல் மட்டக்களப்பு மாவட்டக் கலாசாரப் பேரவை கவிமணி பட்டம் வழங்கி கெளரவித்தது. 1992ல் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு 'ஷம்சுஷ் - ஷ"அறா - கவிப்பரிதி பட்டமளித்துப் பொற்கிழியும் வழங்கி மேன்மைப்படுத்தியது.
அவரது சொந்த ஊரான ஏறாவூரில்- இஸ்லாமிய இலக்கியக் கலாவட்டத்தினர் 1995ல் பாராட்டு விழாவெடுத்தனர். புதியதொனி என்ற அவரது மற்றொரு கவிதை நூலும் வெளியிடப்பட்டது.
ஆசிரியராய், அதிபராய், கல்வியமைச்சின் பாடவிதான சபையின் உறுப்பினராகவெல்லாம் கல்விப் பணி செய்த கவிஞரின் வெளிவராத எத்தனையோ எழுத்தோவியங்கள் வெளிவர நாதியற்று எங்கோ ஒரு மூலையில் கிடக்கக்கூடும். அதில் பாதி இப்போதே சிதைந்து போயிருக்கலாம். மீதி காலப்போக்கில் அழிந்தும் போகலாம்.இது ஒன்றே நமது கேவலத்தை அடையாளப்படுத்தப் போதுமானது.
மிக அண்மையில் அவரது "புரட்சிக் கமால் கவிதைகள்,மீள் பிரசுரம் கண்டிருக்கிறது. கவிஞர் புரட்சிக் கமால் ஞாபகார்த்த நிறுவனம் அதனை அழகுற வெளியிட்டிருக்கிறது. ༤ மீதியாயுள்ள எல்லா எழுத்தாக்கங்களையும் அந்த நிறுவனம் வெளியிட வேண்டும் என்று நாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
புரட்சிக் கமால் போன்ற ஒரு அதி சிறந்த கவிஞன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதிலும் அவர் நமது இலக்கிய முன்னோடி என்பதிலும் நாம் பெருமைப்படுகின்றோம்.'
ஆர்ப்பாட்டமேயில்லாமல் ஒரு சராசரி ம்னிதனாய் வாழ்ந்து மறைந்து
விட்டார் புரட்சிக் கமால்.ஆனாலும்,அவர் நம்மோடு வாழ்ந்து
கொண்டுதாணிருக்கிறார்: is புரதரங்கும் பழ்மாத்தும் இல்லாத அவரது கவிதைகளில், ، ره ،"" :
Fury

Page 7
geolo3ut năsesironir?
தமிழே சீறா - தாவிய நல்லமிழ்தே! - உமர்வாய் ஒதிய நீ, எம தே!
அமிழ்தேஅமிழ்தே,
அமிழ்தே சிற்றுார் ஆயிஷா, மர்யம் மகிழ்வே! - அன்னார் ஆடல், பாடலின் நிகழ் வே!
ஹாசிம் திருப்புகழ்
காதல்நயத்தொரு - தேசு புனைந்த வளே! - எம்மில் ஆசை மிகுந்த வளே!
பேசும் களஞ்சியர்
பண்ணொடு கூடியே - பாடு சிறந்தவளே! - எம் மோடு செறிந்தவளே!
ஞானியர் மஸ்தான்
நாவிடை மோனம் - நன்று பயின்றவளே! - எம்மில் என்று மியன்றவளே!
ஏணியாய் நின்றுன்
எழிலளக் கின்றவர் - எமை ஏன் மறுக்கின்றார்? - அவர் தமையோ நிறுக்கின்றார்?
(புரட்சிக்கமால் கவிதைகளிலிருந்து)

மறுபடியுமென் மன்னுக்கு எஸ்.எச்.நிஃமத்
Tெங்கென் நிலவு? எங்கென் ஞாயிறு? எங்கென் தென்றல்? எங்கென் தேசம்?
அகதிமுகாம் முற்றத்தில் அனலள்ளி வீசுமிந்த அக்கினி நிலா எனதல்ல;
காலை கிழக்கெழுமிந்தக் கோழை ஞாயிறு எனதல்ல;
முள்ளந்தண்டை முடக்கி வீச்மிந்த மூர்க்கத் தென்றல் எனதல்ல;
அரசின் பிச்சைக்காய்
அழுதலையுமிந்த அடிமைத் தேசமும் எனதல்ல;
இவை விடுத்து நான் ஏக வேண்டுமென்றன் பாட்டியும் தாயும் பாண்டியாடிய பரம்பரை மண்ணுக்கு
அஃதல்லால். ஈர நிலவையும் வீர ஞாயிறையும் சுகந்தத் தென்றலையும் சுதந்திர தேசத்தையும் நான் தரிசித்திடேனென்றுமே!

Page 8
一苯司
எரிந்தெரிந்து போகும்
முல்லைத் தீவு முகாமை
காப்பாற்ற நடந்த சமரில் குண்டு பட்ட உன் உடலையே கண்டேன் இரு தினங்களாக நான்!
தெரிந்தாலும் எதிரியாக நீ
கண்ட முதல் முறையில் என் தங்கை, காதலி நீ
என்றே நான் உணர்ந்தேன்!
 

வீக்கமுற்றுக் கரைந்து போகையில் என் முன் உன் உடல் என் தங்கை, காதலி என்றே நான் உணர்ந்தேன்! கடல் காற்றில் நீ கரைந்து போகும் துர்வாடை அறைந்து என் நெஞ்சில் யுத்தத்தின்
குரூரத்தைக் கூறியது
தங்கச்சி, நாமேன் சாகிறோம் - யுத்தத்திற்கு இளமையை ஒப்படைத்து?
உன் நெஞ்சும் என் நெஞ்சும் சிதைந்து
சிதறியோடும் இரத்தம் இந்த மண்ணுக்கு ஜிவிதமல்ல, மரணத்தையே கொண்டு தருமெனில் தங்கச்சி, நாமேன் ஆயுதமேந்தி ஏழை எமது பெற்றோரை அழவைக்கிறோம்?
முல்லைத்தீவுசமரில் மூன்றுதினங்களாக கடற்கரையில் ஒரேயிடத்தில் தனித்து இருந்த இராணுவ விரரொருவர் தன்னருகில் பனைமர அடியில் துப்பாக்கிச் சூட்டுக்குப்பலியாகி இறந்துகிடந்த எல்ரீசு பெண் போராளியொருவரின் உடல் கண்டபோதுதோன்றிய கவிதை)
சிங்களத்தில் இருந்து தமிழில் : இப்னு அஸ9மத்

Page 9
கலகம்
வாழைச்சேனை அமர்
சிTதுவான சவுக்குமரச் சோலைக்குள் எல்லாமாக பறந்து திரிந்தன
கரிக்குருவி அதிகாலை என்றில்லாமல் கத்திப் பறக்கும்
மயில்கள் மழைமேகம் மறந்து மாலை நேரத்திற்குத் தோகை விரிக்கும்
காக்கையின் கூட்டுக்குள் முட்டையை இட்டு கூவிப்போகும் குயில்
иот6ово е рш6ови அமைதிகொள்ள நடு இரவாகும்.
சாதுவான மரச் சோலையிலே எல்லாமாக ஆழப்பாழ.
இப்படியான உல்லாச வாழ்க்கையில் ஒரு நாள்
ஏழாம் காலத்தில் சவுக்குச் சோலை சண்டை பிடித்தது முறிந்த உறவில் மூங்கில் நின்று திப்பந்தம் ஏந்த
கலகமொன்று சாம்பல் வரை விழுந்தது
காலைப் பொழுது.
சாதுவான
சவுக்குமரச் சோலை காற்றோடு மாத்திரம் கலந்துரையாடிக் கொண்டிருந்தது. -99
(விரைவில் வெளிவரவிருக்கும் "நீ வரும் கால்லைப் பொழுது" எனும் கவிதைத் தொகுதியிலிருந்து)
کا
 
 
 
 
 
 
 
 
 
 

வான்நிலவென நில்லு கின்னியா அமீர்அலி
கTர்முகிலொடு தேன்நிலவது வான்கடலினில் நீந்திடுமெழி லேந்தியவிழிபாடியகவி கோடி - சிறு பூ மலர்ந்துள பூவனமென வேஅழகுறு வானிரவினி லே ஜொலிக்குது. தேன்மலர்களைச் சூடி - இளம்
பணி இரவினி லாயிரங்கன வூறிடுமிளம் பாவலனுள
மாடிடுந்தினந்தேன்கவி பல பாடி - நில வூற்றிய ஒளி நீந்திடுங்கட லோவிய எழி லாச்சுது புவி
காட்டிடும் புதுக் கோலமேதனிப் பாணி
வீண்விரயமாய்த் தான்விரைந்திடுங் கார்முகிலது வீண்பொழுதினை
யோட்டிடும் இளம் வாலிபருளங் காட்டும் - ஆம்
வாழ்வதுநொடி யாயினுமுல கோர்நல முறை வேநடை தொடர்
வாயெனஎழிலம்புலி அறிவூட்டும்
பார் பெளர்ணமி யாய் வருவதனால் புவிமகிழ் வோடதை வர
வேற்பதை உனைப் பூரணமென மாற்று - ஆம் வாழ்வினைநிஜ மாய்மதி மதியால்புவியுள கோர்புகழ்ந்திட
வே. இனி நடை போட்டுனை இனங் காட்டு '
பார்முழுவது மேஎழிலொடு பால்நிலவது கீழ்க்கரை வரும் ஆயினுமது வீண் கவலைகளின்றி - தான் வானிருந்தெழில் வீசியபொழுதால்புவி மகிழ்வோடிருந்திடத் தான் மறைந்திடு மிதன் பெயரதே வாழ்க்கை வான்! புவி இது நாம் முகிலென வீண்விரயமாய்த் தான் விரைவதா? நாம் நிலவென வேதனிப்பு ழாடு - ஆம். வாழ்வது நொடி யாயினுமுல கோர்நல முற வேநடைதொடர்
வோம். பிறர்நலம் பேணலே தனி இன்பம்
ஆண்டவனவ னம்புலிபுவி கான்மலை கடலேன்படைத்தனன் வாழ்வதன் பொருள் கூறிடற் கன்றோ? - நாம் வான்மதி முகில் பார்க்கிறோமது சாற்றிடும்பொருள் நாமுணர்ந்திடின் வாழ்வதில் வரா தேமறைந்திடுந் துன்பம் நாளையைமறு நாளையைமறு நாளையை எதிர் பார்த்திடாதெமக் காய்மலர்ந்துள இன்றதனிலே. நின்று - நாம். வாழ்வது ஜெயமேவழங்கிடும் என்றுமேமன தோடிதை நினை வாழ்வினிலினி. வான்நிலவென நில்லு

Page 10
@G元叫.多gg型B斤ggT
Hழத்துப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர் தன்னடக்கமும் கண்ணியமும் மிக்க மனிதன். கல்விச்சேவை பற்றிய எல்லா விபரமும் இவர் விரல் நுனியில் இருக்கும்.
தான் அதிபராகக் கடமை செய்யும்
கல்லூரியை
இரண்டாந்தாரமாக மணந்து கொண்டவர். இவர் எந்தப் பாடசாலையில் கடமை புரிந்தாலும் அங்கிருந்து ஒரு றோணியோ இதழாவது கட்டாயம் வெளிவரும். இலக்கியத்தை விட்டுத் தூரமாகிவிட்டார்
py6) if:
ஒரு நல்ல கவிஞனை
இழந்தோம் நாம். யாத்ரா பேட்டி கேட்டபோது "எவ்வளோ படைப்பாளிகள் இருக்க
என்னைத் தெரிவு செய்த காரணம்
எனக்குத் தெரியவில்லை" என்று எழுதியிருந்தார். அது எமக்குத்தானே தெரியும்!
 

யாத்ரா. கடந்த 30 ஆண்டுகளாக இலக்கியத் ஈடுபட்டு வருகின்றீர்கள். படைப்பிலக்கியத்
துறையில்
துறையில் ஈடுபடக் காரணமாக இருந்த ஊக்கியை நினைவு கூர முடியுமா?
ஜவ:1964ம் ஆண்டு அனுராதபுரம் புனி வளனார் கல்லூரியில் எட்டாம் வகுப்பு கற்றுக் கொண்டு இருந்தபோது எங்கள் வகுப்புத் தமிழாசிரியர் அருளானந்தம் அவர்கள் ஒருநாள் வகுப்பில் “குமுதம்" வார இதழில் வந்த கதையொன்றை வாசித்துக் காட்டி அதை எழுதி வருமாறு கூறினார். மறுநாள் நான் எழுதி வந்த கதை சற்று வித்தியாசமாக இருந்தது. அதை வகுப்பு மாணவர் களுக்கு வாசித்துக் காட்டி, ஆசிரியர் என்னைப் பாராட்டியதே என்னை இத்துறையில் ஈடுபட வைத்தது.
யாத்ரா புதுக் கவிதைகளையே a-ski
களது படைப்பாக அதிகம் பார்க்க முடிந்துள்ளது. வேறு துறைப் படைப்புக் களிலும் ஈடுபட்டுள்ளிர்களா?
ஜவ 1973ம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையில் திக்குவல்லை கமாலின் நட்பே என்னை
புதுக்கவிதைத் துறையில்
ஈடுபடுத்தியது இதற்கு முன்னரும் பின்னரும் சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் கதைகள், விஞ்ஞான விடயங்கள் தொடர்பான கட்டுரைகளைப் போன்ற நூற்றுக்
கணக்கான ஆக்கங்கள் என்னால் '
படைக்கப் பெற்றுள்ளன.
யாத்ரா: அன்பு ஜவஹர்ஷாவித்தியாச மான பெயராக இருக்கின்றதே. இதில் விசேடம் எதுவும் உண்டா?
ஜவ : எனது ஏழாவது வயதில் (1957ம் ஆண்டு) காலமான எனது தந்தையார் அன்புதாசன் (அப்துல்காதர் முஹமது ஹனிபா) ஒரு கவிஞர். அவரும் மறைந்த எழுத்தாளர் பரித்தனும் (கே.எம்.ஷா) மிக நெருங்கிய நண்பர்கள். தந்தையார் ஐம்பது களிலேயே இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அபிமானி. அவர் விரும்பிய தலைவரின் நினைவாகவும், பித்தனின் நட்புக் காரணமாகவும் எனது Golu uurf ஜவஹர்ஷா ஆனது. எனது தந்தையின் நினைவாக அன்பு முன் உள்ளது.
யாத்ரா: எதுவும் தொகுப்புக்களாகியுள்ளனவா?
உங்களது படைப்புக்கள்
ஜவ : எனது கவிதைகள் காவிகளும் ஒட்டுண்ணிகளும்'என்ற தொகுதியாக 1975ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இலங்கையில் புதுக்கவிதைத் துறையில் ஈடுபட்ட 44 பேரின் கவிதைகளைத் தொகுத்து 1974ம் ஆண்டு ‘பொறிகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன். இப்படியாக இலங்கையில் வெளியிடப் பட்ட முதல் தொகுதி இதுவாகும். புத்துலகம் படைப்போம்' , 'சிதைந்து போகும் சிறப்புக்கள் என்ற இரண்டு கவியரங்குத் தொகுதிகள் என்னால் தொகுக்கப்பட்டுள்ளன. அனுராதபுரம் பகுதியில் இருந்து வெளியான புத்தொளி, களம், புதுமை ஒளி, ஆகிய சஞ்சிகைகளின் இணையாசிரியராக இருந்துள்ளேன்.
இலங்கை ஆசிரியர் சேவை’ ‘இலங்கை ஆசிரியர் சேவையும் ஆசிரியர்களுக் கான சட்ட விதிக் கோவையும் என்ற இரண்டு தொழில்சார் நூல்களையும்
வெளியிட்டுள்ளேன்.
umyn -
-G) VA

Page 11
யாத்ரா; பரிசில்கள் விருதுகள் எதுவும் கிடைத்துள்ளனவா?
ஜவ : எந்த இலக்கியப் பரிசுப் போட்டி யிலும் இதுவரை பங்குபற்றவில்லை. 1997ம் ஆண்டு 'கலாபூஷணம் விருது அரசினால் வழங்கப்பட்டது.
யாத்ரா: எழுபதுகளில் புதுக் கவிதைத் துறையில் மிக ஈடுபாட்டுடன் ஈடுபட்ட உங்களது படைப்புக்கள் எதுவும் அ ண்மைக் காலத்தில் வெளியாகவில்லை. தொழில்சார் கட்டுரைகளுட்ன் மட்டும் உங்களது பணி சுருங்கி விடுகின்றதே?
ஜவ: உண்மை தான். கடந்த பத்தாண்டு காலமாக எனது இலக்கியப் பணி வாசிப்போடு மட்டும் நின்று விடுகின்றது. இதற்குப் பின்வரும் காரணங்களை எனது தரப்பில் சொல்லலாம்.
எனது தொழில் அதிலான ஈடுபாடு போன்றவை காரணமாக ஆழமாகச் சிந்தித்து நிறைவான படைப்புக்களை செய்ய முடியவில்லை. இது எனது பாரிய குறைபாடாகும். உள்ளத்து உணர்ச்சிகளே சிறந்த படைப்புக்களாக இருக்க முடியும். ஆசிரியராக இருக்கும் போது கிடைக்கும் ஓய்வும் வசதியும் அதிபருக்கு கிடைப்பது இல்லை. ஒரு அறிவுறுத்தல் தலைவராக இல்லாமல் அபிவிருத்தித் தலைவராக இருக்கும் போது இலக்கிய ஆளுமை சிதைந்து
போகின்றது. இதனால் L160 Li'l பரிலக்கியத் துறையில் ஈடுபட முடியவில்லை.
& Lig5 பத்தாண்டு காலமாக நான் எழுதி வரும் கல்விசார் ஊழியர் களுக்குப் பயன்படும் தகவல்களைக் கொண்ட தொழில்சார் கட்டுரைகள் மற்றவர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கின்றது.
தகவல்களைத் தேடுவது கஷ்டமாக இருந்தாலும் இத்தகைய கட்டுரைகளை எழுதுவது இலகுவானதாகும். இலக்கியத் துறையில் வெற்றிபெற விரும்பு கின்றவர்களுக்குத் தனது முத்திரை இருக்க வேண்டும் என்ற சுயநலமும் வேண்டும். இவை இல்லாமை போன்ற குறைபாடுகளே எனது படைப்பிலக்கிய ஈடுபாட்டுக் குறை பாட்டுக்குக் காரண
மாகும்.
யாத்ரா: உங்களது ஆரம்ப காலத்தில் இருந்த புதுக்கவிதை - மரபுக் கவிதை போட்டி நிலை இப்போது எப்படி உள்ளது?
ஜவ இன்று அந்த நிலை இல்லை. புதுக்கவிதை - வசன கவிதை இவை இன்று நவீன கவிதையின் பரிணா மங்களாகிவிட்டன. இன்று சில சமய்ங்களில் பட்டிமன்றங்களில் மட்டுமே இந்தத் தலைப்புக்கள் உள்ளன.
யாத்ரா நிறைய நூல்கள் வெளியா கின்றன. நல்ல வாசகராக இருப்பதாகச் சொன்னீர்கள். இப்படி நூல் வெளி யாவது பற்றி உங்களது கருத்து என்ன?
ஜவ நிறைய நூல்கள் வெளியாவது வரவேற்கத்தக்கதொன்றே. இவைகள் வாசிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஒருவர் நல்ல படைப்பாளியாக இருக்க வேண்டு மானால் நன்றாக வாசிக்க வேணடும். பெரும்பாலான இளைய தலைமுறைப் படைப்பாளிகள் தாம் எழுதுவதை மட்டுமே வாசிப்பதைக் காணலாம்.
அதிகமாக ஜனரஞ்சக பத்திரிகைகளில் மினிக் கவிதை, மணிக் கவிதை என்று அரைப் பக்கத்தை ஒதுக்குகின்றன. இப்படியான நடவடிக்கைகளால் நல்ல படைப்பாளிகள் பெருகுவார்கள் என்று
9HfO (POLlulus ghl.
@-
 

யாத்ரா; நூல் அறிமுகம், விமர்சனங்கள் தொடர்பாக என்ன கூற விரும்பு கின்றீர்கள்?
ஜவ விழாக்கள், விமர்சன அரங்குகள், நூல் ஆய்வுகள் போன்றவை தொடர் பாக பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் இன்று சுவைஞர்கள் இடையே காணப் படுகின்றன.
தரத்தைவிட வேறு காரணிகளால் கிடைக்கும் விளம்பரத்தால் அவை நல்ல நல்ல படைப்புக்களாகி விட முடியாது. சொந்த இலாபத்திற்காகப் படைப்புக் களையோ படைப்பாளியையோ புகழ்வ தால் படைப்பாளிகளுக்குத் தீமையே கிடைக்கும். பல்கலைக் கழகங்களும், பத்திரிகைகளும் ஆய்வு விடயங்களில் ஆழமான, விரிவான, நேர்மையான விடயங்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் பல நுனிப்புல் மேய்வனவாகவும், காவடி தூக்குபவையாகவும் இருக்கின்றன. இவை நூலாக்கப்படும் முயற்சி பெருகி யுள்ளபடியால் இதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இலக்கியத் துறையில் நல்ல விமர்சகர்கள் குறைந்து விடுகின்றார் களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யாத்ரா: இலக்கியப் போக்குகள் தொடர்பான சர்ச்சைகள் குறைந் துள்ளது போல் தெரிகின்றதே?
ஜவ உண்மை தான், இலங்கையைப் பொறுத்தவரையில் முற்போக்கு - நற்போக்கு சர்ச்சை இன்று குறைவாக உள்ளது. உளச் சுத்தியுடன் மனித நேயத்தைச் சித்தரிக்கும் படைப்புக்கள் எந்த போக்காக இருந்தாலும் நின்று நிலைக்கும். இலக்கியவாதி எழுதுவதைப் போல் வாழ வேண்டும் என்பதில் நாம் அனைவரும் முரண்படக் கூடாது என்பது எனது வேண்டுகோளாகும். 0
காவிகளும் ஒட்டுண்ணிகளும் என்ற கவிதைத்
சேர்ந்தே வருகின்ற துன்பத் துகள்கள்
அதை இன்றையதாக்க ஆட்" பேப்பரில் சந்நிறத்தூரிகையால் கத்தி அரிவாள்களை
ஆடம்பரமாய்ப் போட்டோம் ( ஹோட்டேல் இன்ரகொண்டினென்டில் “ஹொட் ரிங்சுடன்
மார்க்ஸ், ஏங்கல்ஸ் பற்றி
ஓபன் எயர் தியேட்டரில் ஒபரேசன் பற்றி
அனுபவ மென்சூடு மெய் முதல் வாதம் முதாய ஆன்மிகப் பார்வை
இவைகளையும் ஒரு கை பார்த்தாலென்ன?
அன்புί φορτήராவின்
தொகுதியிலிருந்து
GART - ti

Page 12
சாத்தானின் இரவு அய்வோ விராந்த பெர்னாண்டோ
ரவு பயங்கரமானது இறுக்கமான இருள் வெளவால்களின் ஒலங்கள் நாய்களின் குரைப்பு இரவின் அமைதியை தகர்த்தெறிய இரவு தரித்திரமானது.
வேகமாக இரைச்சலுடன் கிராமத்தை நோக்கி வரும் சிப்பாய்களின் “டிரக்" வண்டி அதிலிருந்து இறங்கும் சிப்பாய்களது இரும்புச் சப்பாத்து ஓசை குரூரமானது, அச்சம் தருவது
கதவினை உடைத்து உட்சென்று எழுப்பும் கர்ஜனைகள் அச்சமும் பயங்கரமும் ஏற்படுத்தும்.
"ஐயோ' எனது அப்பாவி மகனை கொண்டு செல்ல வேண்டாம்”
தாய் நிலத்தின் மீது மோதி குரல் எழுப்புகிறாள். அவலக் குரல் நடுவில் துப்பாக்கியின் கொடூர சப்தம் தொடர்ந்து எழுந்து அதிரவைக்கும்.
அவலமாய் மாறிய தாயின் பிள்ளைப் பாசம் ஏழு கிராமங்கள் வரை தொடர்ந்து செல்லும்
@)

பூமியின் மீது படுத்துக் கொண்டஇன்னொரு மகன் நியாயத்தின் பெயரால் இறந்து விழுவான்.
அநியாயத்தின் இரவு பொய்மையின் இரவு பயங்கரமான இரவு சாத்தானின் இரவு
குறிப்பு: சிங்களக் கவிதை உலகுக்குச் சற்றுப் புதிய முகமான அய்வோ விரன்ந்த பிரனாந்துவின் முதலாவது கவிதைத் தொகுதி 1999ல் 'சாத்தானின் இரவு என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இங்கு பிரசுரிக்கப்படும் இக் கவிதை அந் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். களனி தளுகமையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வளர்ந்து வரும் ஆற்றல்மிகு கவிஞராவார்.
மொழிபெயர்ப்பு: இப்னு அேைமத்
()

Page 13
(2)
கவிக்கோ
6ழுதுகோலாகி எழுத்தாகி மலர்பவனே உன்னைத் தொழுது - கோல் ஏந்தித் தொடருகின்றேன் எனது கோல் பழுது கோல் ஆகாமல் பார்த்துக் கொள் சத்தியத்தின் விழுது கோலாகி விரியட்டும் என் கவிதை
முலாமிட்ட பித்தளைகள் முகமற்ற பேர்வழிகள் 'கலாமி ட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அனைவருக்கும் சலாமிட்டுத் தொடங்குகிறேன் சாந்தி எங்கும் நிலவட்டும்.
அப்துல் ரகுமான் - எந்த ரக மான் என்று சிலர் கேட்பார் பொய்மான் பின்னால் போனவன் அல்லன் ஈமான் பின்னால் ஏகின்றவன்.
நாமோ இஸ்லாத்தைத் தமிழாக்கியவர்கள் தமிழை இஸ்லாமாக்கியவர்கள் மக்கா அரபிக்கு மங்கைத் தமிழை 'நிக்காஹ்' முடித்தவர்கள் சும்மா முடிக்கவில்லை - 'ஈராயிரம் மஹராய் ஈந்தே மணமுடித்தோம்
1இஸ்லாமியர் தமிழுக்களித்த இலக்கியங்கள் ஈராயிரத்துக்கும் மேல்.
 

/ *றும் புரிாணங்கள் செய்தவர் மத்தியிலே 'றாப் புராணத்தைச் செய்தவர் நாம்
எண்ண் வறுமை எங்களுக்கு இல்லை
பத்து ஐந்து கலை அறிந்தவர் நாம் ஆ ነጦrdb : :: s
2.டல் என்ன - 2. ஸ்ளத்திலும் ஒரழுக்கு அற்றவர் நாம் ஏனென்றால்
கோட்டாற்றுப் பாட்டாற்றில் குளிக்கின்ற கவிஞர் நாம்,
s 570 கவிஞர்? என (நமை ஒருவர் கேட்பாரோ?
'நாமா'க் கவிஞர் என நமைப்புகழ வாழ்ந்தவர் நாம்
பாட்டுச் சமையலுக்குச் சுவை சேர்க்கும் மஸ் அலா அரைத்துக் கொடுத்தவர் நாம்
உடைப்போரோ அல்ல - “படைப்போர் நாம்
இங்கு கவிதை படைப்போராய் வந்துள்ளோம்.
|
வள்ளல்கள் தான் வழங்குவர் |
--- நாமோ
வள்ளலையே வழங்க வந்து ளோம்.
“குப்ர் எனும் இருளே, உனக்கு எங்கள் நன்றி நீ இல்லையென்றால் பெரும - - - - பூமியிலே பிறந்திருக்க முடியாது.
i

Page 14
நாமோ வருமானம் இழந்திருப்போம் பெருமானம் தொலைத்திருப்போம்,
ரள் ஆறாய் இருந்த வரலாற்றில் : புதுப்புனலாய்ப் பொங்கி வந்தார் புனித நபி.
துணிவைப் போல் ஈஸாவைப்போல் ? அற்புதங்கள் உண்டோ அண்ணலாரிடம் என்றே அறியாதார் சிலர் கேட்டார் :
: .. அவர்களே அற்புதம்! அவர்களுக்கேன் அற்புதம்?
ரியனுக்கு எதற்கு விளக்கு?
அந்தப் பிரளயப் பொழுதில் மனித விதைகளைத் தம் கப்பலில் ஏற்றிக் காத்தவர் நூஹ
*
அண்ணலோ அஞ்ஞானப் பிரளயத்தில்
ஏகத்துவ தீபங்கள் ஏற்றி வைத்தவர். சேமுத்திரத்தைப் பிரிந்து தம்
சமுதாயத்தை ஈடேற்றி வைத்தவர் மூஸா
'.
பெருமானாரோ பிரச்சினைகள் என்ற " பெரும் சமுத்திரத்தைப் பிழிந்து : உலகையே வழிநடத்தி உய்விக்கச் செய்தவர்
3: குருட்டு விழிகளுக்குப் பார்வை தந்தவர் (ፋ6ንጊህለ ̇
பெருமானாரோ இருட்டுக்கே கண்கொடுத்து சத்திய ஒளியைத் தரிசிக்கச் செய்தவர்
2.குர்ஆன் Q 3: R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழுநோயாளிகளை குணப்படுத்தியவர் ஈஸ்ா பெருமானாரோ
கண்டதையெல்லாம் கடவுள் என்றே தொழு - நோயை குணப்படுத்தி வைத்தவர்
அவர்களுடைய பிறப்பு அவனிக்கே மறு பிறப்பானது
அவர்களுடைய உதயம் எல்லா இரவுகளுக்கும் நிரந்தர விடியலானது.
ஒரே ஒரு மரம் தோப்பாகி விட்டது.
அவர்கள் கொண்டு வந்த நூல்'
--- @@ Urfa)6
உலகத்தையே சோலையாக்கிவிட்டது
::
ஒரே ஒரு மருந்து சர்வரோக நிவாரணியாகிவிட்டது.
:
ஒரே ஒரு பாதை பாதைகளுக்கே பாதையானது.
ஒரே ஒர் ஒருமை" பன்மையை வென்றுவிட்டது.
சென்னையில் நடந்த அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டின் இறுதி நாளான 1.12.1999ல் "வள்ளல் நபி வாழ்வில்" எனுந்தலைப்பிலான கவியரங்கின் தலைமைக் கவிதையின் ஒரு பகுதி
3. குர்ஆன் 4, ஏகத்துவக் கொள்கை.

Page 15
ஹைக்கூ
ஆர்.எம்.நெளவுாத்
★
இருட்டு வழித் தோழர் குருடனுக்கு வெளிச்சம் ஏனோ கல்லறையில் மின்மினி
★
வாழ்த்துக்கள் நண்பா உனக்கென வாங்கிய புதுப்பாதணிகள் கைகளில் ஊன்று கோல்
சின்ன மரமெனச் சடை சிட்டுக்களே கூடு கட்டுங்கள் தபோவனர் தவம்
★
பனித்துளியில் உவரா? பருகாத பறக்கும் வண்டே கன்னத்தில் கண்ணிர்
★
மேலே சுண்டி விட கீழே வரவேயில்லை நாணயம் ஆகாய நிலவு

(9urroo
அது சரி, இது பிழை நேற்று உனக்கு
அவர் பிழை இவர் சரி
அது பிழை இது சரி இன்றோ இவர் பிழை அவர் சரி
முற்று முழுதாகவுமே உனக்கு நேரெதிர் மாறாய் நான்
முரண்படுகிறான் அவன் உன் கணிப்பில் பகுதியும் என் கணிப்பில் மிகுதியுமாய்
நிறங்கள் மாறுபடும் நிச்சயமாய் நாளைய நமது பார்வையிலும்
கலவரமொன்று கால்கோள் நடத்தும் பெரும்புயல் ஒன்று மையங்கொள்ளும்
வித்தியாசப்படும் இவ்விடத்தில்
எது எப்படியிருப்பினும் எவரெப்படியிருப்பினும் இருந்து விடடுப் போகட்டும்
எனக்கும் உனக்கும் அவனுக்கும்
வா நீ கைகுலுக்கிக் கொள்வோம்
GE)

Page 16
கவிதை
கவிஞர் ஏ. இக்பால்
சிறந்த சொற்களைச் சிறப்பான ஒழுங்கில் அமைத்து எழுவதுதான் கவிதை என்பது அறிஞர் கருத்து. ஒரு சொல்லுக்குப் பொருளாற்றல் மட்டுமல்ல, ஒலியாற்றலும் உண்டு. இவ்விரு தன்மைகளையும் சிறந்த வகையில் புலப்படுத்துவதுதான் கவிதை, கவிஞன், புலப்படுத்தும் போது பல உத்திகளையும் கையாண்டு உணர்த்துவான். அந்த உணர்த்தல்தான் உலகின் கவிதையின் பொது மொழியென உலகியலறிஞர்கள் உணர்த்தி நிற்கின்றனர். சொல், பொருள், ஓசை, அலங்காரம், சொல்லுக்கப்பால் குறிப்பாக நிற்கும் உணர்வு ஆகிய அம்சங்களைக் கவிதை உள்ளடக்கினாலும், அது உணர்த்தும் உணர்வுதான் மேலே எழும்.

எழுத்தறிவற்றவர்களால் தான், முதன் முதலில் பாடல்கள் எழுந்ததென வரலாற்றாசிரியர்கள் வர்ணிக் கின்றனர். கவிதை வரலாற்றில் முதலிடம் பெறுவது கிராமியப் பாடல்கள்தான் என்பதை மாணவர்கள் மனதில் கொள்ளல் அவசியம். இன்று நாட்டுப்புறவியல் ஆய்வில் முதலிடம் வகிப்பது நாட்டார் இலக்கியம் தான். sig,6o68r Li (Folk Literature) நாட்டுப்புற இலக்கியம்' என உலகம் மதிப்பிடு கின்றது. இதில் 1. நாட்டுப்புறப்
பாடல்கள் - (Folk Songs) 2. நாட்டுப்புறக்
கதைகள் (Folk Tales) 3. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (Folk Ballads) 4.
பழமொழிகள் (Proverbs) 5. விடுகதைகள் (Riddles) 6. Lurital tissoir (Myths) 6Taiyugar அடங்கும்.
கவிதையின் எழுச்சிக்கு ஆதாரம் நாட்டார் பாடல்கள்தான். ஒவ்வொரு தமிழ் படிக்கும் மாணவரும் இதில் கவனம் செலுத்தி உங்கள் பிராந் தியத்தில் உள்ள கிராமியப் பாடல்களை கணக்கில் எடுத்தல் அவசியம். அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, பொத்துவில், கரு வாட்டுக்கல் என்னும் இம்மூன்று தலங்களே கிராமியக் கவிதைக்குப் பேர் போன வரலாற்றுத் தலங்கள். மட்டக்களப்புப் பிராந்தியத்தில் கிராமியக் கவிதை காணப்படுவ தென்றால், 960s, இம்மூன்று தலங்களின் கவிதைகள் தான். இவற்றைத் தொகுத்து வைத்திருப்
பவர்கள், வாயில் பாடம் செய்து
வைத்திருப்பவர்கள் மூலம் தான் இப் பாடல்கள் ஏனைய இடங்களுக்குப் பரப்பப்பட்டுள்ளன. இன்று கிராமியக் கவிதைகளைத் தொகுத்தோ, ஆய்வு செய்தோ எழுதியவர்களெனக் கணிக்
கப்படுபவர்கள், வெள்ளவத்தை மு.இராமலிங்கம், பேராசிரியர் சு. வித்தியானந்தன், வித்துவான் எப்.எக்ஸ். லி. நடராசா, கலாநிதி பாலசுந்தரம், ஏ.ஆர்.எம். சலீம், வி.எம்.இஸ்மாயில், அ.ஸ்.அப்துஸ்ஸமது, எம்.வை. எம். முஸ்லிம், எம்.ஸி.எம். சுபைர், பேராதனை ஷர்புன்னிஸா, எஸ். முத்துமீரான், எஸ். எச்.எம்.ஜெமீல் போன்றவர்களே. இவர்களுக்கெல்லாம் ஊன்று கோலாக நின்ற ஊர்கள் அக்கரைப்பற்று, பொத்துவில், கருவாக் காட்டுக்கல் என்பதை மறுத்திடமாட்டார் கள். இவ்விதம் பெருமைப்படுவதற்குக் காரணம் இவ்வூர்களில் இருந்து பிறந்தளவு கிராமியப் பாடல்கள், வேறெங்கினும் தொகையாகக் கிடைக்க வில்லை. ஆனால், ஏனைய பகுதி களிலும் கிராமியக் கவிதைகள் உண்டென்பதை மறந்துவிடக் கூடக்
&nt-fig1.
குருநாகல் பறகஹதெனிய வீதியில்
இருக்கும் பகுதியிலிருந்து பெற்ற ஒரு கிராமியப் பாடலை நோக்குங்கள்.
"காது குத்தின சுறுக்கும் கடுக்கன் போட்ட சுறுக்கும் - அத ஆட்டிப் பாத்த சுறுக்கும் - அது அறுந்து விழுந்த சுறுக்கும்"
இப்பாடல் அப்பகுதி முஸ்லிம் மாதர்களின் பாடல். இவ்விதம் இப்பகுதியில் ஏராளம் பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றைக் கணக்கெடுத்தல் மிக அவசியம்.
குறிப்பிட்ட இப் பாடலைக் கேட்டவுடன் ஒரே மனச் சுழற்சி. இப்பொழுது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ் கற்கும் மாணவனின் செய்யுள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர்
Ungu - 1
GE)

Page 17
/ N
யூரோ
5ffe5ff běff 6wUff
யாதும் ஊரே. சங்கப்பா இப்போ ஐரோப்பாவில் 9 lufôfiüL/mT?
பாண்டவர்கள் பதினைந்தாகப் படையெடுத்தாலும் தாரம் ஒன்றுதான் யூரோமுகத்தில் திரெளபதிப் போடு என்றால் குந்தியைக் குத்தி குழப்பிவிட்டாயே! ஏய் பொன் வாஷிங்டனை விடு
லண்டன் நீயுமா? காலம் காலமாய் உழைத்துப் போட்ட டொலர்தாத்தாவுக்கு வயதாகிப் போனதா? வாழ்க்கையில்தான் 62/6fkijada) கையிலாவது வா!
ܢܠ
நாணயது -
கம்பதாஸனின் "உதிர்ந்த மலர்கள்" என்னும் கவிதையை நோக்குங்கள். இதே வாழ்க்கையின் தத்துவக் கருத்தை மிக எளிதாகவும் சிறப்பாகவும் அந்த கிராமியக் கவிதை தருவதைக் காண முடிகிறது. கம்பதாஸனின் பாடல் இதுதான்
“முள்ளுடைச் சிறு செடியின் - கனவாய் மூண்டு சிரித்த மலர் கள்ளெனும் பொக்கிஷத்தால் 6) flubu6)Gu
கர்வம் அடைந்த மலர் பனித்துளி மணி துடித் - தென்றலின் பாட்டினைக் கேட்ட மலர் கனிந்துள விண்ணதன் கீழ் - மெளனக் கல்வியைக் கற்ற மலர்
அந்திச் சிவப்பினையும் - விண்மீன்
அழகின் விழிப்பினையும் சிந்தையிற் கொண்ட மலர் - மனமே
செய்து திளைத்த மலர்
வீழ்ந்து கிடக்குதையா - உச்சி வெய்யிற் சுடலையிலே
வாழ்வின் விழுப்பங்களை மண்ணிலே
வரைந்துளதோ வண்டே"
வாழ்க்கையின் தத்துவத்தைக் கூறும் அதே கிராமியப் பாடலின் கருத்தைத் தான் கம்பதாஸனின் இக் கவிதையும் கூறி நிற்பதைச் சற்று விரித்து உண்ர்ந்து இரசித்துப் பாருங்கள்.
கிராமியக் கவிதைகளின் பிறப்பிடத்தி லிருந்துதான் தமிழில் கவிதை பிறந்திருக்கின்ற தென்பதை யாரும் மறந்திடவோ மறுத்திடவோ துணியார். கிராமியத் தமிழாகத் துளிர்ந்த தமிழ் அழகு தமிழாக வடிவம் பெற்றுச் சங்க இலக்கியங்கள் தோன்றியதென அறிகி றோம். காதல் பற்றிய கற்பனை அகத்துறையாகவும், வீரம், கொடை, புகழ் பற்றிய உண்மைகள் புறத்திணை
டு)
uAAFga - 1

யாகவும் அக்கால மக்களின் வாழ்க்கையோடு ஒட்டிய பாடல்களான சங்க காலக் கவிதைகள் தமிழின் கவிதைத் தோற்றமெனலாம்.
சங்க மரபு ஒரு தனித்துவமுடைய மரபு. கவிதையைப் பார்த்தால் இயற்கை வர்ணனை போலிருக்கும். உண்மை அதுவல்ல. மனிதனின் காதலைப் பாடுவதே நோக்கமாகவிருக்கும். இதற்குத் துணை செய்வது இயற்கை தான். இயற்கையோடு got Llull வாழ்க்கைத் தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டதே சங்கப் பாடல் எனின் அது மிகையல்ல.
“ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து அளியதாமே கொடுஞ்சிறைப் பறவை இறையுற ஓங்கிய நெறி அயல் மரா அத்துப்
பிள்ளை உள்வாய் செரீஇய இரை கொண்டமையின் விரையுமால் செலவே!"
இப்பாடல் குறுந்தொகையில் உள்ளது. பாடியவர் தாமோதரனார். நெய்தல் திணையைச் சார்ந்தது. இந்தப் பாடல் அந்தி வானத்தில் செல்லும் பறவைக் காட்சியைக் கூறுவது போல் தொனிக் கின்றது. இவ்வித மரபு சங்க காலத்துக்குரியதல்ல.இது, "க்ாதலால் வாடிய காதலி தன் தலைவனுடைய பிரிவால் மிக நைந்து சாயங்காலப் பொழுது கண்டு வருந்திக் கூறியதை எடுத்துக் காட்டுகின்றது." இதுதான் இக் கவிதையின் உள்ளுறை.
நாம் இக் கவிதைக்கு இப்பொழுது பொருள் "கதிரவன் மேற்கே சாய்ந்த அகன்ற வானத்தில் பறந்து செல்லும் வளைந்த சிறகுகளையுடைய பறவைகள் இரங்கத் தக்கவை. அவை கூடு கட்டித்
கொள்வோமானால்,
தங்குவதற்கு ஏற்றவாறு ஓங்கி வளர்ந்த மாமரத்திலுள்ள குஞ்சுகளின் வாய்க் குள் ஊட்டுவதற்கு இரை எடுத்துச் செல்வதால் அவ்வளவு விரைவாகச் செல்கின்றன" என்று கூறுவோம். சங்க காலக் கவிதை மரபில் உள்ளுறை, உவமம், இறைச்சிப் பொருள் என்பன தொனிக்கும். அகப்பாடல்கள் பெயர் குறித்தே பாடப்படா. இம்மரபு நோக்கித் தற்காலக் கவிதைகளைக் காண்பது அரிது. என்றாலும், கிராமியக் கவிதைகளில் சில வேளைகளில் காண
(Մ)ւգ-պւb.
"ஏத்தாளை வேளாண்மை
இளஞ்சோலை பூங்குடலை LDfTuʼ L.—fr@i) அழியுமெண்டு என்ர மன்னரிடம் சொல்லிடுங்கோ"
அகவல் எனும் ஆசிரிய யாப்பில் சங்கப் பாடல்களாக எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் மேற்கணக்கு நூல்களாக வரலாறு Gir LD &š@g எடுத்துரைக்கின்றது. எட்டுத்தொகை யில் வரும் அகப்பாடலான கலித் தொகை சங்க நூல்தானா என்ற
சந்தேகமும் உள்ளது. அதை, ஆய்வாளர்
கள் சிந்திக்கட்டும்.
மேலே காட்டியுள்ள கிராமியக் கவிதை உள்ளுறை, உவமத்தைக் கணக்கெடுத்தல் அவசியம். ஏத்தாளைக்
கூறும்
கண்டத்தில் இளஞ்சோலையாக வளர்ந் திருக்கும் வேளாண்மை குடலைப் பருவத்திலுண்டு. குடலைப் பருவத்துப் பயிரை மாடுகள் விரும்பி உண்ணும். எனவே, காவல் கட்டில்லாமலிருக்கும் விளை நிலத்திற்கு உடனே காவல் போடுங்கள் என்று தலைவன் தொழில் செய்யுமிடத்திற்குச் செல்லும் ஒருவரிடம் தலைவி செய்தி அனுப்புகிறாள். இந்தச் செய்தியைச் சுமந்து செல்பவர் நாம்
மத்ரா - 1
-டு)

Page 18
இப்பொழுது கூறிய கருத்துடனேதான் செல்கிறார். இது, உவமமே ஒழிய உள்ளுறையல்ல.
தனிமையில் இருக்கும் உனது மனைவி, இளமையுடையவள். இப்பொழுது வயிற் றில் பிள்ளையுண்டாகி இருக்கிறாள். பலவீனமான இக் காலத்தில் அவளுக்குப் பாதுகாப்பு அவசியம். கட்டாக்காலிகள், அடாவடித் தனத் தோர் அதிகரித்த காலமிது. எனவே, உடனே வாருங்கள் என்பது தான் இக் கவிதையின் உள்ளுறை. இவ்வித மரபு சங்க காலத்துக் கவிதை மரபே
தமிழ்க் கவிதை வீச்சு காலத்துடன் சுரந்த புதையல் எனலாம். சங்க காலத்தில் தமிழ் வளர்த்த அரசர்கள் ஒழிந்து, அறநெறி பிறழ்ந்து நாடு அல்லோலகல்லோலப்பட்ட போதும், அறமொழிந்த இருண்ட காலத்திலும் ஒரே பொருள் நோக்கி அறநெறிப் பாடல்கள் தோன்றிய போதும், தமிழ்க் கவிதை வீச்சு சோர்வடையவில்லை. அக் காலம் மறைந்த போதும், மன்னரையும் மக்களையும் பாடும் மரபு மறைந்து இறைவனையே பாடும் சமய எழுச்சி ஏற்பட்ட போதும் இலக்கிய விழிப்புடன் வடமொழிக் கலப்புடன் தமிழ்க் கவிதை வளர்ச்சி பெற்றது.
சோழர் காலத்தே, புதுமையான பரந்த இலக்கியங்கள் வீறு நடைபோட்டன. இலக்கணங்கள், நிகண்டுகள், சைவ வைணவ இலக்கியங்கள், பெருங் காப்பியங்கள், பரணி, கோவை, உலா எழுந்ததோடு உரைநடை இலக்கியம் விளக்கவுரையாக, கருத்துரையாக எழுந்தன. சங்க காலத்தின் பின், இலக்கிய வளர்ச்சிக்கும் புதுமைக்கும் சோழர் காலமே சமமாக நின்றதெனின் அதுவும் மிகையல்ல. இவ்விதம் வீறு பெற்ற தமிழ் இலக்கியமும், கவிதையும்
(2)
அரசியல் காரணமாக சற்றுக் கீழிறங்கத் தொடங்கின. சோழர் காலம் முடிந்து நாயக்கர் காலம் பிறந்ததும் சிற்றிலக்கியங்கள் சிலவும் சொற் சிலம்பல் வித்தைகள் பலவும், சிலேடை வசைக் கவிதைகளும், பிரபந்தம், பரணி, பிள்ளைத் தமிழ் போன்ற இலக்கியங்களும் தோன்றின.
முஸ்லிம்கள், ஐரோப்பியர் அரசியலில் ரீதியாகக் கலந்ததும் கவிதை மரபுடன் நின்று வளர்ந்த தமிழ் உரைநடை (Prose)க்கு மாறின. இதற்கு மூலகாரணம்: அச்சியந்திரத்தை ஆங்கிலேயர் - ஐரோப்பியர் தமிழ் நிலத்துக்குக் கொண்டு வந்ததே எனலாம்.
காலம் காலமாகத் தமிழ்க் கவிதை அரசோச்சிய தமிழிலக்கிய வரலாறு இப்பொழுது வசன நடைக்குத்திரும்பி விட்டது. என்றாலும், அந்த மரபை அறுத்தெறிய முடியாத அளவுக்கு மகாகவி சுப்பிரமணியப் பாரதியின் வரவு ஆணித்தரமாக நின்றொலித்தது.
தமிழ்க் கவிதையின் வளர்ச்சியை இப்பொழுது வரலாற்று ரீதியாகக் கணக்கெடுக்கும் பொழுது பாரதியை மத்தியமாகக் கொண்டு, “காலத்தை முன்னும் பின்னுமாகக் கணக்கெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
“புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழைப் புகழில் ஏற்றும் கவியரசு தமிழ் நாட்டுக்கில்லை என்னும்
வசை என்னால் கழிந்தது.”
“பண் அளவு உயர்ந்தது என் பண் பா அளவு உயர்ந்தது என் LunTʼ “என்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்”
“சுவை புதிது பொருள் புதிது வளம்
புதிது
ungu - 1

சொற் புதிது சோதி மிக்க நவகவிதை” எந்நாளும் அழியாத மகாகவிதை "என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்”
என்றெல்லாம் தன் திறமையை நிலை நிறுத்தித் தமிழ்க் கவிதைக்குத் தற்காலத் தமிழ்க் கவிதைக்கு உலக அந்தஸ்தை ஏற்படுத்தினான் பார்தி.
கல்வித் திணைக்களம் க.பொ.த.உயர் தர வகுப்பில் தமிழ் கற்கும் மாணவர் களுக்கான செய்யுள் தொகுப்பில் பாரதியின் ‘நிலவும் வான்மீனும் காற்றும்” எனும் கவிதையைச் சேர்த்திருக்கின்றது. இதைவிடப் பாரதி பாடல்கள் எனும் தொகுப்பில் பத்துக் கவிதைகளைச் சேர்ந்திருக்கின்றார்கள். தனித்துச் சிந்தித்துத் தற்காலக் கவிதைகளையுணர்வதுடன், புதுக் கவிதையின் முன்னோடியாகப் பாரதி திகழ்கின்றான் என்பதை உணரவும் வகுப்பு சந்தர்ப்பம்
ஆய்வு செய்யவும் உயர் மாணவர்களுக்கு ஒரு ஏற்படுகின்றது.
தற்போது உயர் வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கு (Project) ஒப்படை செய்வதையும்(Assignment) செயற்றிட்டம் செய்வதையும் புதிய கல்விச் சிந்தனையில் சேர்ந்திருக்கின்றார்கள். கவிதையின் வளர்ச்சி, மாற்றம், தற்போது அது வந்து நிற்கும் இடம் என்பவற்றை எடைபோட மாணவர் களுக்கு நல்ல வசதி கிடைத்திருக் கின்றது. அப்போது தான் கவிதை பற்றிய வரலாற்றை எல்லோரும் அறிய வாய்ப்பேற்படும். 66ft foil 606t
நிலையும் ஒழியும். O
s
தாடர் கதைகள் அஷ்ரஃப் சிஹாய்தீன்
N
கிதைத்தார்கள் சேர்ந்தார்கள் Uேசினார்கள்
சிரித்தார்கள் (Suafornia,6i கழத்தார்கள்
குழத்தார்கள் கதைத்தார்கள்
விவாதித்தார்கள் வெறுத்தார்கள் முறைத்தார்கள் முண்டினார்கள் முட்டினார்கள்
அழுத்தார்கள் உதைத்தார்கள் உடைத்தார்கள் வெட்டினார்கள் குத்தினார்கள்
unfig.sysfas6 கேட்டார்கள் விசாரித்தார்கள் கதைத்தார்கள் கூடினார்கள் (5ufaTsistas6i
கலைந்து போனார்கள்
7-8-99
ノ
Ungu - 1
-GE)

Page 19
GE)
Tென் சாதிபோல் உயர்ந்த ஒரு சாதி
புரியாத ஒன்று
ஷண்முக சுப்பையா
இப்பூதலத்தில்லை
என் மதம் போல் மகத்தான ஒரு மதம் இச்சகத்தினிலில்லை
எண் மொழிபோல் எழிலான ஒருமைாழி இவ்வூழியில் இல்லை.
ஆனால் . என் சாதியல்லாத சாதியில் எண் மதமல்லாத மதத்தில் என் மொழியல்லாத மொழியில்
என்னைவிடச் சிறந்தவர்கள்
στύουφύ υrDφΦιτήΦ6ή எண்பதுதானி புரியவில்லை
நன்றி - சுபமங்களா
 

கவிதைக்கு நேர்ந்த கதி நவமுனி
மிவிதை ஒன்று பிரசுரமானது கண்டவரெல்லாம் விமர்சனம் செய்தனர்
படிமம் இல்லாக் கவிதை என்றார் ஒருவர்
குறியீடில்லாக் கவிதை என்றார்
கவித்துவம் இல்லாக் கவிதை என்றார்
ஒருவர் சேதி”யே இல்லாக் கவிதை என்றார்.
மார்க்ளின் கருத்திலாக் கவிதை என்றார்
ஒருவர் மண்ணாங்கட்டிக் கவிதை என்றார்
நயம் மிகக் குறைந்த கவிதை என்றார்
ஒருவர் நடுநிலை பாராக் கவிதை என்றார்
பாசாங்கான கவிதை என்றார்
ஒருவர் புரியவே இயலாக் கவிதை என்றார்
வசனம் மிகுந்த கவிதை என்றார்
ஒருவர் வாழ்வியல் கூறாக் கவிதை என்றார்
ஆளாள் பங்குக்குக் குறைகள் சொன்னார்
கவிதை என்பதை ஏற்றுக் கொண்டார்.
f201999
Gs)

Page 20
மு. மித்ராஜ்
67ീഴ്ചക്കിഖ് മേര് ക്ലബ്രീഖി 6 ണു് 60 ക്രമിഖമില്ക്ക്ബ്രണ ണഞ്ഞ് ക്ലബ്ബ്.
ഗ്ഗക്സഖ് ക്രഖഗ്ഗീ)്ഗീ' മകമിമിഗ് ബ്രിക്കിഗ്ര
മ.ബഗബ
வெகுதூரம் வந்துவிட்டேன்.நான்
. ബബ് ബി ഗ്രി
நிதான் நின்ற இடத்தை விட்டுக் கட் മ്ലഗ്ഗ് (ഖമിഞ്ച്,
உன் கண்கள் காதலின் கையெழுத்துப்புத்தகம்தான் ஆனால், தான் வாசிக்கிவாசிக்கு ബി(മ) മിത്ര കീഴ്ക, ബിഞ്ഞു കണുബിഖ്, ഖിബ്ബ06,
 

/ീശവിജ്ഞഖഗ ഉണ്മക്ര? ஒரு புல்வாங்குழவின் உடம்பெங்கும் ഗ്ഗങ്ങിഞ്ഞ7%), ഗബg புரியவில்லையா உனக்கு?
67ബ് ഗ്ര760 எனக்குள் மட்டும் தானே உறங்கிக் கிடந்தது ஏனதை உசுப்பி விட்டு விட்டு உயரே போய் உட்கார்ந்து 62garasoāiv(32f2c tal-Mazu?
ഗീഗ്രീകൃഷ്ണക്രമ ഗ്രഖക്രി ബ്ള്യു பதில் பார்த்திருக்கிறேன் മ്ളിഞ്ഞതുമ) 6ിമണ്ണു ഖഡ്ഢീഗ്ഗകണ്ഠേ மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாம்.
உன் வாசவை
வரிசையாக வந்து வனைத்திருக்கும் 67ഞ്ഞ് കബീല്ക്ക്
ഉണുബ്ബ ക്ലബ്ബില്ക്കCിധ -0) கரைந்து கொண்டிருக்கும் என் മ06ഴ്സ് ക0Z/ിക്കുണുക്സ് கைகளில் பிடித்துக் கொண்டு
ഉബ് ബങ്ങബ வரிசையாக வந்து வனைத்திருக்கும் என் கவிதைகள்
കബീഗZ"൧൬ങ്ങ70ളഞ്ഞുഖ ഉബ് ജ്ഞഗ്രി) കമ്മcിമീA காவங்களைச் செலவு செய்து ഉബ് രൂ0Uക്കഞ്ചണ് (AG
என் காதலின் கணக்கை 67ണു കഞ്ഞ്,76) ഞഗ്രീഖി - A.
GD

Page 21
அவர்கள்
என்னை விதவையாக்கினார்கள்
அன்புடீன்
நிTனொரு விதவை விதவையானவள் நானல்ல ஆக்கப்பட்டவள் விதவையாக,
வருத்தமில்லை எனக்கு விதியின்மீது ஏனென்றால் விதி விதித்த விதியல்ல விதவையானது நான்
எனது வருத்தமெல்லாம் அந்த முகம் தெரியாத மனிதர்கள் மீதுதான்
மறைந்த சூரியன் மீண்டும் மலர்வதற்கு முன் அவர்கள் என்னை விதவையாக்கினார்கள்
'இஷா தொழுகை தொழுது இறைவனிடம் கையேந்திவிட்டு போனவர்தான் என்புருஷன் பன்றிக்காவலுக்கு வயலுக்கு. மீண்டும் 'ஸ்ப்ஹற்" தொழுகை தொழுவதற்கும் கையேந்திடுவதற்கும் இருக்கவில்லை அவர் உயிரோடு.
 

காற்று வந்து ஒதியது என்காதுக்குள் வயல் வெளிக்குள்ளே 'இஸ்ராயில் வேடம் பூண்டு வந்த அந்த மனித வேட்டைக்காரர்கள் என்னை விதவையாக்கிவிட்ட செய்தி"யை.
அன்றுதான் எண் வீட்டுத் தொட்டில் வசந்தத் தாலாட்டை கேட்ட கடைசிநாள் என் கூந்தல் கிளைகளில் பூக்கள் மணத்த முழவுநாளும் அன்றுதான். இரவின் வரவுக்கு எண் மனசு கறுப்புக்கொழ காட்டத்தொடங்கிய முதல்நாளும் அன்றுதான்.
என் வீட்டுப் பசு கட்டாக்காலியானதும். எண்குளியல் கிணறு திரைக்காட்சியானதும் .
வருத்தமில்லை எனக்கு விதியின்மீது 線 ஏனென்றால் விதி விதித்த விதியல்ல விதவையானது நான்,
எனது வருத்தமெல்லாம் அந்த முகம் தெரியாத மனிதர்கள் மீதுதான் மறைந்த சூரியன் மீண்டும் மலர்வதற்கு முன் அவர்கள் எனினை விதவையாக்கினார்கள்
இஷா : முன் இரவுத் தொழுகை вогLibiji . அதிகாலைத் தொழுகை இஸ்ராயில்' மனித உயிர்களை வாங்குவதற்கு இறைவனால் நியமிக்கப்பட்டி
ஒலுவில் பள்ளக்காடு வயல்வெளியில் 06-08-1990ஆம் நாள் முகம் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்ட கலிவிவசாயிகளது நினைவுக்கு

Page 22
பசி
எம்.அஸ்மிஸாலி
புதியதொரு அகராதிக்கென ஆக்கிய சொற்றொகுதி கொண்டு சிக்கலான மொழியில் சமாதானம் சிந்திக்கப்படுவதாயிற்று -
வேற்றுக் கிரக மொன்றில் தொலைத்த ஒன்றையல்ல இரு விரல்களுக்கு இடையே இருக்கிற ஒன்றை செம்மணியைத் தோண்டியும் தேடிப் பார்த்தாயிற்று -
போதி மர நிழல்களெல்லாம் படை முகாம்களின் உஷ்ணத்தை சுவீகரிக்கத் தொடங்கிவிட்டன -
குருதியைப் பொழியும்
எங்களின் விடியலுக்காக ஆயுதங்கள் விரதமிருக்கின்றன; வேள்வி செய்கின்றன.
அந்த வானத்தையே வளைத்து விழுங்குமளவுக்குப் பசி வயிற்றுக்கல்ல, வாழ்க்கைக்கு
O2.O.999
s
GO)
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகவற்பெட்டி
ஓய்ந்து விடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் நல்ல கவிஞர்களில் ஒருவர் அன்புடின் முகங்கள்’ என்ற கவிதைத் தொகுதியைத் தந்தவர் அவரது பிறந்தகமான பாலமுனைக் கிராமத்தில் கவிஞரின் மற்றொரு கவிதை நூலான ஐந்து தூண்கள்’ வெளியீட்டுவிழா 30.10.1999ல் நடைபெற்றது. புகவம் - என அறியப்பட்ட கல்முனை புதிய கலைஞர் வட்டம் இவ் விழாவில் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசுகவி'என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தது. இப்பட்டமளிப்பு புகவம்'அமைப்பின் அந்தியில் சந்திப்போம்ான்ற திட்டத்திற்கமைவானது எனத் தெரிவித்துள்ள்ர்
C
ஒட்டமாவடி - அறபாத் எமது பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாவார். எரிநெருப்பிலிருந்து' என்ற கவிதைத் தொகுதியும் நினைந்தழுதல்" என்ற சிறுகதைத் தொகுதியும் இவரை கவனிக்கத் தக்க படைப்பாளியாக இனங் காட்டின. இவரது நினைந்தழுதல், 1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதியாக விபவி’ அமைப்பினால் தெரிவு செய்யப்பட்டு 7வது சுதந்திர இலக்கிய விழாவில் விருதும் சான்றிதழும் பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. அறபாத் அண்மையில் இல்வாழ்விலும் இணைந்துள்ளார். புதிய படைப்புக்களை மேலும் அவர் தரவேண்டும்
(-1-1-
அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் அதன் ஆண்டு விழாவையொட்டி சர்வதேச ரீதியாக நடத்திய தமிழ்க் கவிதைப் போட்டியில் கவிச்சுடர் அன்பு முகையதினுக்குப் பரிசு கிடைத்திருக்கிறது என்ன கவி எழுதுகிறீர் பாவலரே?’ என்ற தலைப்பில் கவிச்சுடர் கவிதையை எழுதியுள்ளார். நபிகள் வாழ்வில் நடந்த கதைகள்', மாதுளம் முத்துக்கள் பொங்கி எழும் புதுப்புனல்’, அரசியல் வானில் அழகிய முழு நிலா ஆகிய கவிதை நூல்களைத் தந்த கவிச்சுடர் இலங்கையின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்.
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் புதிய செயலாளராக தெரிவாகியுள்ளார். புத்தாயிரமாம் ஆண்டில் புதிய செயலாளரின் எழுச்சிமிகு செயற்பாட்டில் தமிழ்ச்சங்கம் பொலிவு பெறும் என எதிர்பார்த்து நிற்கிறோம்.
இவர்கள் எல்லோரையும் “யாத்ர"வாழ்த்துகிறது.
GE)

Page 23
(2)
என்னினிய காற்றுக்கு.
வெலிமடை ரபீக்
Tெண்ணினிய காற்றே உனக்கென்ன.
பூப்பறிக்கிறாய்
கிளை முறிக்கிறாய்
மண்ணள்ளி வீசுகின்றாய் பறவைகளோடு பேசுகின்றாய்
புல்லில் நடக்கின்றாய் புடவை இழுக்கின்றாய்
மூங்கிலில் நுழைந்து
சங்கீதமாகின்றாய்
மழைமேகம் பிழத்து தரைக்கிழுத்து வருகின்றாய்
நதியில் குளித்தெழுகின்றாய்
துப்பாக்கிகளுக்கு
பயமற்றுத் திரிகின்றாய்
உனக்கிங்கு விதிக்கப்பட்டிருப்பது
விலங்கில்லா வாழ்வும் வேதனையற்ற நாட்களும்
காற்றே. எனதினிய காற்றே. என்னைத் தூக்கிப் போய் வெண்மேகங்களில் கொஞ்சம் தூங்க வை
I998

'யாத்ரா' இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டுள்ளது.
விடுதலையின் நிகழ்வுகள்' - வாழைச்சேனை அமர்
இமைக்குள் ஒர் இதயம் - ஏ.ஜி.எம். ஸதக்கா
போர்க்காலப் பாடல் - ஏ.ஜி.எம். ஸதக்கா
காாணாமல் போனவர்கள் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
AAA
‘போர்க்காலப்பாடல் நூல் வெளியீட்டு விழா 06.06.1999ல் தெமட்டகொட
வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. பூரீ லங்கா முஸ்லிம் மீடியா
ஃபோரம் தலைவர் ஜனாப் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதியாகக் கலந்து கொண்டார்.
AAA
காணாமல் போனவர்கள்' வெளியீட்டு விழா 03.08.1999ல் கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரஃப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட விழாவுக்கு கலாநிதி எம்.ஏ.எம்.ஷாக்ரி அவர்கள் தலைமை வகித்தார். நூல் அறிமுக விழா - ஒட்டமாவடி பாத்திமா பாலிகா.ம.வி. மண்டபத்தில் பிறிதொரு தினத்தில் நடைபெற்றது. 02.12.1999ல் சென்னையில் நடந்த அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் தமிழக முதல்வர் கருணாநிதியினால் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
AAA
விபவி அமைப்பின் 7வது சுதந்திர இலக்கிய விழாவில் 1998ம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான பரிசை வென்ற இரண்டு நூல்களுள் போர்க்காலப் பாடலும் ஒன்றாகும். விருதும் சான்றிதழும் பத்தாயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது.
AAA
இரண்டாயிரமாம் ஆண்டில் யாத்ராவின் வெளியீடுகள்: 1. சிறுகதைத் தொகுதி - (தலைப்பிடப்படவில்லை) - மர்ஹும் வை. அகமது. 2. கவிதைத் தொகுதி - நீ வரும் காலைப் பொழுது - வாழைச்சேனை அமர் 3. கவிதைத் தொகுதி - கடைசி சொட்டு உசிரில்' - எஸ்.நளீம்

Page 24
இன்ன பிற.
"இந்தியாவுக்கு இலக்கிய மாநாட்டுக்குப் போனீர்களே, கவிக்கோ, மேத்தா வந்திருந்தார்களாமே சந்தித்தீர்களா..?"
"ம். கவிக்கோ அவசரமாகச் சென்று கொண்டிருக்கையில் இரண்டு வார்த்தைகள் கதைக்கக் கிடைத்தது. மற்றவரோடு கதைக்கச் சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் கதைக்கவில்லை."
"ஏன்.?"
"எனது தாய்நாட்டை எம்மவருக்கு முன்னால் செருப்புக்கு உவமித்துப் பேசிய மனிதன் முகத்தை எப்படிப் பார்க்க முடியும்.? எப்படிப் பேச முடியும்.?"
"ஒஹ். அதைச் சொல்கிறீர்களா. ஆனாலும் அவர் அவ்வளவுதான்' என்று இதை விட்டு விட வேண்டியதுதான்."
"அதனால் தான் விட்டு விட்டேன்!"
O கவிதை நூல் வெளியானதிலிருந்து நண்பர்களிடமிருந்தும் முகந்தெரியா அன்பர்களிடமிருந்தும் நட்புக்காகவும் ஆய்வுக்காகவும் என்று நூல்களை அனுப்பும்படி கோரி கடிதங்கள் வந்ததாம். "மாதங்கள் மூன்று கழிந்தும் பணம் தான் அனுப்பவில்லை. புத்தகம் கிடைத்தது, நன்றி என்றாவது ஒரு தபாலட்டை அனுப்ப வேண்டாமா?" என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் புத்தகங்களை அனுப்பிய கவிஞர் ஒருவர். w
 ெசிலர் நூலகங்கள் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப்' வைத்துக் கொண்டும் கணணியில் கடிதத் தலைப்புத்தாள் வடிவமைத்துக் கொண்டும் கடிதம் எழுதிப் புத்தகம் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். வாழ்க!
- சுவைஞன்
யாத்ரா 2ல் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள்: அண்ணல்,பாவலர் பளில் காரியப்பர். எஸ்.நள்ம், பர்த் ஏ.ஜௌஸகீ, ஏ.சீறாஹில் (நிந்ததாசன்). இன்னும் பலர் இருப்பார்கள், ஆக்கங்களை அனுப்பினால்,
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவிற்காக சென் மேரிஸ் றோட், மஹபாகே அல்அல9மத் அவர்களினால் அச்சிடப்பட்டு ஹதாறோட், வாழைச்சேனையில் வசிக்கும் ஏ.ஜி.எம்.சதக்காவினால் வெளியிடப்பட்டது.

யாத்ரா கிடைக்கும் இடங்கள்
Baüdadai iš Figh MPCS Copm.
glnjuI BIBLIT Glasnil Gafiji
வாழைச்சேனை.
அறிவுநூல்நிலையம்
ஏறாவூர்
O
சக்தி நூல்நிலையம்
மட்டக்களப்பு
gyfl. 145555FFFTGDGD
காத்தான்குடி

Page 25
énggalia GgTanah Glasnubi ag
arkianaGullsið guany
கட்டணத்தில் வெளி
மிகத் தெளிவான போட்ே
சிறிய பெரிய அளவில் லெ
உள்நாட்டு வெளிநாட்டு U.
ஒரே நாளில் சகலவிதமா
ஒரு மணி நேரத்தில் றUர்
மிகக்குறைந்த கட்டணத்த
கொப்பிகள், உபகரணங்க
M.P. Ο
Oddamavadi, Va
Te: O65-57 Fax: 00
 

இரி
Arenu
பியூட்டர்பொருத்தப்பட்டதொலைத்
TLLõib
யாரும் வழங்காதமிகக் குறைந்த நாட்டுத்தொலைபேசி வசதி
டாப் பிரதி
)மினேற்றிங்
க்ஸ்
ன அச்சு வேலைகள்
சீல்
தில் பாடசாலை அப்Uயாசக்
ள்
.S. Road, laichenai, Sri Lanka. 123, O65-57125 94 65 57378