கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2000.04

Page 1

- Poetry Journal

Page 2
யாத்ரா கிடைக்கும் இடங்கள்
N இஸ்லாமிக் புக் ஹவுஸ் r ஹாதி புக் டிப்போ 77, வஜிரஞான மாவத்தை 79,தெமட்டகொட றோட்
தெமட்டகொட வீதி DQBass606
மருதானை கொழும்பு-9 கொழும்பு-9 الم. -ܠ لم -ܝܠ
பூபாலசிங்கம் சவுத் ஏசியன் புக்ஸ் புக் டிப்போ s -44, முன்றாம் மாடி 340,செட்டியார் தெரு கொழும்பு மத்திய கப்பள்
கொழும்பு-11 மார்கட் 11-J U கொழும்பு -ܠ
இஸ்லாமிக் புக் சென்ரர் |
M.P.C.S. Gips
ஒட்டமாவடி
ཡོད༽ போட்ே அறிவு நூல் நிலையம் ஹிதாயா போட்டோ
கொப்பி சென்ரர் ஏறாவூா
வாழைச்சேனை ار , الم
Šነ
N நூரி புத்தகசாலை சக்தி நூல் நிலையம்
காத்தான்குடி மட்டக்களப்பு
أم تر۔

கவிதைகளுக்கான காலாண்டிதழ்
56dfé isomide LDT.gify to - Private Circulation Only ز(%$؟
'6). ஏப்ரல் 2000
KN
S. 念*
S N ్వస్ முல்லா
படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்பாளிகள்"

Page 3
என்னை ஒரு பலவீனன் என்றுரைத்தாய் நண்பா இதிலென்ன ஆச்சரியம் அடடாவோ அடடட7/ இந்நரிலத்து மாந்தரெல்லாம் ஏற்றுகின்ற மொழியாம் இங்கிலிசு மொழியருமை என்னுளமும் ஒப்பும் மன்னுமறை வேதியரின் வேதமொழி மான மறைமொழியாம் சமஸ்கிரத மாண்/தொ?ந் தடினும் என்னருமைத் தமிழ்த்தாய்க்கு இன்னொருத்த7 ஈடோ எண்றெண்ணும் பலவீனம் எனதுபல வினம்!
காதலுக்கு வாழ்த்துரைக்கும் கடியபல வினம் களவாழ்வைப் போற்றுகிற கவிதைபல வினம் சாதலுக்கும் வாழ்வுக்கும் சலியாமல் எதையும் சமமாக ஏற்கின்ற சமத்வபல வீனம்! மேதைகளின் சரிதத்தை மென்மேலும் மேலும் மிட்டுகிற பலவீனம் / மேலும் உல கத்தே ஏத7னிமேல் பலவீனம் இயம்பிடுவரப் நண்பா இத்தனையும் என்னிடத்தே எய்துபல வீனம் /
கல்லூரிப் பட்டங்கள் தாங்கிஅலை வோரை காலாட்டிக் கொண்டுழைக்கும் கனவான்கள் தம்மை செல்வாய செல்வங்கள் சேர்த்துவைத்தும் வாழ்வைச் செம்மையிலே ஓட்டாத சின்னவர்கள் தம்மை சொல்லாத பலவீனம் சொந்தமெனக் காயின் சோர்ந்துவிடப் போவதில்லை! வேந்தர்களின் முன்பும் நல்லவரை நாடுய்ய உழைப்பவரைக் காணின் நலிந்துருகும் பலவீனம் நமதுபல வினம்!
கொள்கைநெறி மாறாத கொடியபல வீனம் கொடியவரைக் கூடாத நெடியபல வீனம் வள்ளல் எனத் தமிழ்அள்ளி வழங்குபல வீனம் வாயாலே வீணர்களை வாட்டுபல வினம் எள்ளிநகை யாடியெங்கள் இனஉரிமை விற்கும் எட்டப்பர் கட்டத்தைக் குட்டுபல வீனம் கொள்ளையன்பர பலவீனம் / வெளவாலைப் போலும் கொள்கை விற்கும் பலவீனம் என்னிடத்தே இல்லை!
என்னண் புத் தாய்நாடே இனியேனும் മികഖിഞu என்பக்கம் தாவென்று ஏங்குபல வீனம்! என்னருமை இளைஞர்கஎே7 தாய்நாட்டின் ஏற்றம் எண்ணிஉழைத் தடுகவெனச் சொன்னபல வீனம்! இன்னுமின்னும் இப்படியே பலவீனம் கோடி இருக்குதன்பர இவையெல்லாம் எனதுயல வீணம் உன்போலும் விரனில்லை என்றாலும் சொந்த ஊரைவிற்று உண்ணமணம் ஒப்பவில்லை! ஒப்பா?
நீலாவணன்
。な姿がだ を
 

அலி ஸாஹிர்
மெளலானா
لاہ
வடிந்தால் வெளியீடும் கவியரங்கும். யாத்ரா கவிதை இதழ் கணி முன்னே இருந்தது. குளிர் நீத காற்று ஜனி ன லுTடாயப் வீசிற் று. ஒரு கணம் கணி னை மூடிக்கொண்டு அந்தச் சுகத்தில் திழைத்தேன். உடலைக் கவி வரியிருந்த களைப் பரில் ஒரு பகுத அகன் று விலகியது போலிருந்தது. மனதிலிருந்த பாரம் குறைந்தது போலிருந்தது. V
யாத்ரா வெளியீட்டுக்கு என்னை அதிதியாக மதித்து அனுப் பரிய அழைப் பரிதழ் எண் னோடு ஏதோ பேச முனைந்தது. அதற்குள் பின்னிரவின் முற்றத்தில் வானம் நீர் தெளிப்பதைப் போல் மழை தூறத் தொடங்கியது. கூரையில் 'டப் டப்' என்றும் இலைகளில் 'சப் சப் என்றும் சீமெந்துத் தரையில் 'தக் திக் ' என்றும் மழைத்துளிகள் ஒரு சங்கீத ஆலாபனையே நடத்தின. அந்த இசையில் மறைந்திருந்த கவிதையை என்னால் ரசிக க முடிந்தது. அது கவிதையா காதா? அந்த மென்துளி மழை என்ன சொல்லிப் பாடுகிறது என்பதை அறிய நான் முயற்சித்தேன்.
யாத்ரா கவித்ை இதழிலுள்ள எந்தக் கவிதையையுமே என்னால் முழுமையாக அறிய (piç u ft 5 போது (D60) pg5 துளிகளால் இறைவன் எழுதும் கவிதையை என் னால எவி வாறு கரகசிகி க முடியும் ? என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
"கிளுக் கிளுக’ என்று என் மகள் அமானா தூக்கத்தில் சிரித்தது கேட்டது. மலர்களால் நிரம்பி வழியும் ஓர் அழகிய பூங்காவில் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தி மகிழும் கனவில் என் மகள் தன்னைப் பறிகொடுத்துச் சிரிக்கிறாளோ என்றெண்ணி வியந்தேன். அமானாவின் கனவு ஒரு அருமையான கவிதையாய் இருக்குமென்றும் அந்தக் குழந்தையின் சிரிப்பு அற்புதமான சங்கீதம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.
கவிதை என்றால் என்ன? கவிதைக்கு வரைவிலக்கணம் சொல்லிப் பார்க்கும் வியூகத்தை அமைக்கும் தத்துவம் எனக்குக் கிடையாது. யாத்ராவை அருகிற்கு இழுத்து அசிரத்தையாய்ப் புரட்டினேன். கவிதை என்ற தய்ைபில் கவிஞர் ஏ. இக் பால உயர் வெளிச் சம் காட் டி எழுதியிருந்ததை வாசித்தேன். சிறந்த சொற்களை சிறப்பான ஒழுங்கில் அமைத்து எழுதுவதுதான் கவிதை என்பது அறிஞர் கருத்து என்று அவர் எழுதியிருந்தார். காக்கை இருக்கப் பணம் பழம் விழுந்ததைப் போல கவிதைக் கு அர்த் தம் தேடிய என் னைக் கவிஞர் ஏ. இக் பால் கூறியிருநீத வரை விலக கணம் எதிர் கொண்டழைத்தது.

Page 4
அவரைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது எனக்கு. சிறந்த சொல் எது? சிறப்பான ஒழுங்கு எப்படியெல்லாம் இருக்கும் ? என் றெல லாம் அந்த அறிஞரிடம் கேட்க வேண்டும் என்று எனது மனது துடித் தது. சிறந்த பொருட்களைக் கொணி டு சிறப்பானதிட்டத்தில் அமைத்துக் கட்டுவது சிறந்த வீடாக இருக்கலாம். ஆனால் கவிதை இவ்வாறான செயற்கைச் சேர்மானங்களுடன் ஒரு சட்ட திட்டத்துக்கு அமைவாக ஆக்கப்படும் ஒரு படைப்பாக இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றியது. கவிஞருடன் நான் மல லுக்கு நரிற் கறேன் எண் று என் னைக் கணித்துவிடக் கூடாது.
LD 630) 6O முகட் டிலிருந்தோ மலைகளின் இடுக்குகளினூடாகவோ சங்கீதமிசைத்து விழுகின்ற ஓர் அருவியாக வலி லவா கவிதை இருக்க வேணி டும் ? இஸ்மாயில் நபியின் குதியடித்த மண்ணைக் கிளப்பி ஊறி எழுந்த ஓர் ஊற்றாக வலி லவா. கவிதைஇருக்க வேண்டும்? பூமியின் உஷ்ணத்தைக் குடித்து சீரணிக்க முடியாமல் வெளியே பீச்சித் துப்பும் எரிமலைக் குழம்பு போல ல லவா கவிதை இருக் க 86 600 (6 Lò ? சமுத்திரங்களின் வயிறு வெடித்து கரையைக் கபளிகரம் செய்யும் பிரளயம் போலல்லவா கவிதை இருக்க வேணி டும் ? மலை முகடுகளைச் சூழ த தழுவி முத்தமிட்டு நழுவும் மேகங்களைப் போலல்லவா “ கவிதை இருக்க வேண்டும்? புல் வெளியில் தமை மறந்து வெறுங் காலோடு காதல் வசப்பட்டு ஒருவரில் மற்றவர் தலை சாய்த்து நடக்கும் போது இடையில் வந்து சரசமாடிச் செல்லும் இளந் தென்றல் போலல்லவா கவிதை இருக்க வேண்டும்?
இவ்வாறெல்லாம் இருக்க வேண்டிய கவிதைக்கு சிறந்த சொல்லைத் தேடுவதும் சிறப்பான ஒழுங்கில் அமைப்பதும் கவிதையை அங்காடிச் சரக்காக்கி விடும் என்று, என்னுள் அச்சம் எழுந்ததையா! அத்தோடு நான் அதிகப் பிரசங்கித்தனம் செய்வதாகவும் நினைப் பு வந்தது. அதனால் அத்தோடு நிறுத்திக் கொள்வோமென நினைத்துக் கொண்டேன்.
கவிதைகளை முதன் மைப் படுத் தரி வெளியிடப்பட்ட ஒரு கவிதை இதழே யாத்ராவாகும். ஒசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்தை நினைக்க வைக்கின்ற வகையில் இந்தக் கவிதை இதழின் தலைப்பு அமைந்திருக்கின்றது. நானறிந்த வரையில் இவ்வாறான இலக கரிய முயற்சிகள் எ வி வள வோ செய்யப்பட்டிருக்கின்றன. காலத்தின் நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக் க முடியா மல அவை தம் கர் ப் ப அறைகளையே மரணக் கிடங்குகளாக மாற்றிக் கொண்டு விட்டன. அந்த அறிவையும் அனுபவங்களையும் மறந்து விடாது கவனமாகவே அடிகளை எடுத்து வைத்துக் கொண்டு யாத்ரா வெளிவந்துள்ளது.
(?)-- 幼r姿が着翌

இந்த வெளியீடு நீடுழி வாழ வேண்டும். இந்த இலக் கரிய கர் த தாக் களின் பகரதப் பிரயத் தனம் பல்லாண்டு பல்லாண்டு பரிமளிக்க வேண்டும் என்று இந்த சந்தர் ப் பத் தல இதயம் மலர வாழ் த த வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இதற்கு முன்னர் செய்யப்பட்ட இவ் வாறான முயற்சிகள் தோல் வி கண் டுவிட்டன. எனவே, இதுவும் தோல் வி கண்டு விடுமென்ற எச்சரிக் கை விடுத்த அச் சங்களைப் புறக் கணித்து யாதி ரா தனது யாத தரையைத் தொடங்கியுள்ளது.
இமைகளில் ஈயத்தை வடித்து யாரோ ஒட்ட முனைந்தார்கள். துT க்கம் தனிமையாக இருக்கிறது என்று எனக்குத் தூது விட்டது. களைப்பும் அசதியும் தூக்கக் குளிருக்குக் கணப்பை மூட்டின.
நான் மகி கள் பரிரதநிதரியாக இருக் கும் மட்டக் களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நண்பர் இலக் கரியக் குழுவின் வெளியfடாகவே யாத ரா வெளிவருகிறது என்பதை நினைத்து என் மனது ஒருவித சொந்தம் கொண்டாட முந்தியது. ஆனால் எனது உள் மனம் எச்சரித்தது. இலக்கியத்தில் பிரதேசவாதம் கிடையாது. சுயநல மேம்பாடும் கிடையாது. அப்படி இருக்கவும் கூடாது என்று நான் விரும்பினேன்.
காலத்தின் கண்ணாடியாகக் கவிதைகள் வாழவேணி டும் . அது சர்வதேச த தண் சர் வ முகங்களையும் பிரதிபலிக்கும் அழகிய வரலாற்றத் துணுக் குகளாக அமைய வேணி டுமென்று நான் விரும்புகிறேன். இரவின் எண்ணெயை எரித்துக் கொண்டு மனித நேயத் தின் மாணி புக்கு இரையாக மனித அவலங் களைத் தாங்க முடியாத மன தனி ஆதங் கங் களையும் ஆவே சங்களையும் உருக் கொடுக் கண் ற கவிஞன் சாதாரணமான வணி அல்லன். சமகால மாந்தர்களால் அவன் புரியாமல் போய்விடப்பட்டாலும் அவனது கவிதா சாம்ராஜ்யத்தில் அவனது சிம்மாசனத்தில் அவன் கொலுவுற்றிருந்து செய்கின்ற ஆட்சியில் அழகும் சமத்துவமும் ஒருங்கே புடைசூழ வீற்றரிருப் பதைக் கற்பனையரில் காண முயற்சிக்கிறேன். 'எப்போதோ எங்கேயோ கண்ட ஓர் அழகியைப் போல.
அந்தக் காலத்து மழையின் அழகை ரசிக்கும் இப்னு அஸ*மத்தின் உள்ளத்தில் என்ன சோகம் ? அந்த சோகம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! சமூக விரோதங்களை எதிர்த்துச் சாடிச் செயற்பாட்டில் இறங்குவதற்கு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு சமூகத்தில் வாழக்கிடைத்த விதியில் கழிவிரக்கம் கொண்டு கசந்து போகும் முல்லாவைப் போல் எத்தனை கவிஞர்கள்? இந்த செயற்கைச் சிறையுடைத்து அண்ட வெளியில் எங்காகிலும் நின்றுலாவ ஒரு தனியுலகம் கிடைக்காதா என்று ஆதங்கப் பட்டு மனது செதி துப் போகன் ற ஏ.ஜி.எம்.ஸதக்காவின் சோகம் எத்தனை ஆழமானது! எவ்வளவு மனிதாபிமானமானது!
。だ姿が* を

Page 5
எனி சாதரியல் லாத சாதரியரில எனி மதமல்லாத மதத்தில் என் மொழியல்லாத மொழியில் என்னைவிடச் சிறந்தவர்கள் எப்படிப் பிறந்தார்கள் என் பது புரியாமல இருப் பதனால அல ல, புரிய மறுப்பதனால தான் என் சாதி போல் உயர்ந்த ஒரு சாதி இப்பூதலத்தில் இல்லை என்ற அகங்காரம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது. ஷணி முக சுப் பையாவுக் கு இது தெரியாத விடயமுமல்ல. தன்னை முந்தச் செய்யும் ஈகோவுக்கு அடிமையாகி தனி மனிதன் மட்டுமல்ல, சமூகங்களும் மனித நேயத் தை விலை பேசுவதை அவருக் குத தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இருக்கிறது.
ஆர்ப்பாட்டமேயில்லாமல் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்து மறைந்த எனது ஊரைச் சேர்ந்த புரட்சிக் கமால பாசாங் கும் பம் மாத துமில லாத அவரது கவிதைகளில் இன்னும் வாழ் நீ து கொணி டு தா னிருக்கிறார் எண்று யாத்ரா கூறுவதல் எவ்வளவு உண்மையிருக் கரிறது! இந்த இலக் கரிய மன்றத்தில் கண்ணுக்குத் தெரியாத அரியாசனத்தில் கெளரவமாக அமர்ந்து தனக்கு அளிக்கப்பட்டுள்ள கெளரவத்தை இனிதாக ஏற்றுக் கொள்ளும் புரட்சிக் கமாலின் சுவாசத்தை உணர வேண்டுமென நான் விரும் பினேன்.
பாட்டியும் தாயும் பாண்டியாடிய மண்ணுக்குப் போகத் துடிக் கும் எஸ்.எச நி.மத, வா ஊருக்குப் போவோம் என்கிறார். முறிந்த உறவில் மூங்கில் நின்று தீப்பந்தம் ஏந்த கலகம் ஒன்று சாம்பல் வரை விழுந்தது என்று முனகும் வாழைச் சேனை 9ị LD |ĩ சமாதானத்துக்காக ஏங்கும் ஒரு சராசரி மனிதரல்ல. சாதுவான சவுக்கு மரச் சோலைக்குள் எல்லாமாகப் பறந்து திரிந்த காலத்தை நினைந்து கண் கலங்கும் ஒரு கவிஞன்.
முடிவில் எலி லா மி சூனியம் தான் என்று முறைப்படும் அஷர.'ப் சிஹாப்தீனின் தொடர் கதைகள் அரசியல யதார் த தத் தன் வெளிப் படையாகும் , கூடினார்கள், பேசினார்கள், கலைந்து போனார்கள் என்ற அளவிலேயே தேசியப் பிரச்சனைக்கான தீர்வும் தேங்கிக் கிடப்பதை அமர்க்களமில்லாமல் சூசகமாகச் சொல்லியிருப்பது கவிதை இறுக்கமானது என்பதற்குக் காட்டக் கூடிய உதாரணமாக உயர்ந்து நிற்கிறது.
எல்லாக் கவிதைகளையும் கட்டுரைகளையும் என்னால் வாசித்து முடிக்க முடியவில்லை. அங்கொன்று இங் கொன்றாகச் சில தை வாசித துச் சிறிதாகச் சொல்லியிருக்கின்றேன். பல நல்ல கவிஞர்கள் இங்கே கைகோத் திருக்கிறார்கள்.
எனக்கு இனி எழுத முடியாது என்று தெரிந்தது. துT க்கம் என்னைத் துக்கிச் சுமக்கத் தயாரானது. வெளிமடை ரபீக் சொன்னதைப் போல. காற்றே எனதனிய காற்றே என்னைத் துTக்கிப் போய் வெண் மேகங்களில் கொஞ்சம் துTங்க வை என்று சொல்லி
விடைபெறுகின்றேன். ቾ
(யாத்ரா வெளியீட்டு விழாவில் கெளரவ பாராளுமன்ற உறுப் பினரின் உரை)
(0)- singer 2

ஒரு காலத்தில் ஒலைக் கூரையின் கீழ் களிமண் குழசையில் நாங்கள் வாழ்ந்திருந்தோம் குப்பி விளக்கில் படித்தோம்
பின்னர் ஓடுகளால் வேயப்பட்ட கூரையின் கீழ் கல்வீடுகளில் வாழ்ந்து வந்தோம் மின் விளக்குகளில் காரியமாற்றினோம்
ஒரு நாள் கூடாரங்கள் கிடைத்தன
இனிமேல் அதற்குள் வாழும்படி சொன்னார்கள் மெழுகுவர்த்திகளோடு
முல்லா

Page 6
சோகச் சுமையால் சோர்ந்தே போனது எண் மனத்தோள் அன்று
பிணத்தடை தாண்டிப் போவதால் கால்கள் பின்னி மடிந்தன -
எத்தனை மணிகள் எத்தனை தொலைவு எப்படி நாங்கள் எண்ணி நடப்பது
குருதிநீர் கொட்டிய செந்நிலப் பரப்பு கருகிய மனிதப் பிணங்களின் வாடை காற்றினை ஆண்டது
ஷெல் அடிபட்டும் மிதிவெடி வெடித்தும் பாதைகள் தோறும் கபுறுக் குழிகள்
பதுங்கு குழிக்குள் பதுங்குவோர் பதுங்க ஒதுங்கவும் இடமிலா தலையும் நாங்கள்
நகமும் சதையும் வெவ்வே றாகின அண்ணனும் தம்பியும் அந்நியர் ஆகினோம்
யாரோ எரித்த அரசியல் நெருப்பினால் ஊரே ஒன்றி ஒதுங்கும் பவநிலை
துரத்தப் பட்டோர் துயர்தனை எண்ணி துரத்தியோள் தம்மின் தாயும் தந்தையும் கண்ணிள் வடித்தால் காவோலை வருமென நெஞ்சுள் வெடித்துச் செந்நீர் வடித்துத் தவித்தே நின்றனர்
பிறந்தமண் எங்களைப் பிரிய வொப்பாது பதங்களில் படிந்து படிந்தே யுதிர்ந்தது
யார் செய் தவறோ யார்பழி நிகழ்வோ யாரறி வாரோ நாமறி யோமே
அபூ முஜீப்
。姿がた 翌
 

u rritë ti rr நண்பர் இலக்கியக்குழு-வாழைச்சேனை
யாத்ரா இரண்டாவது இதழில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகிறது.
யாத்ரா-1 இன்னும் சரியாக - சரியான இடங்களுக்குப் போய்ச் சேராத நிலையில் தான் யாத்ரா-2 வெளிவருகிறது. இருந்தாலும்கூட எம்மை உற்சாகப்படுத்தும் விதத்திலான ஆலோசனைகளும் அபிப் பிராயங்களும் எம்மை வந்தடைந்தபடியிருக்கின்றன.
இக் கவிதை இதழின் போக்கும் நோக்கும் குறித்த நாம் எதுவும் குறிப்பிடவில்லையென்றம் தொடர்ந்து வரும் இதழ்களில் அதைப் புரிந்து கொள்ள முடியுமாயினும். அதனைக் குறிப்பிடுவது சில அசெளகரியங்களைத் தவிர்க்கும் என்றும் முன்னோடிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கவிதை என்பது அறிவு ஆராதிக்கும் சங்கீதம். இதனை மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் கவிதை, நவீன கவிதை என்றெல்லாம் ஜாதி பிரித்துப் பார்த்ததனன்டு. பார்ப்பதுண்டு. நமக்கு இதில் ஒட்டுறவோ உடன்பாடோ கிடையாது.
நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். அது. கவிதை
இந்தக் கவிதையானது ஒரு சாதாரணக் குடிமகனாலும் பழத்தோ பழப்பதைக் கேட்டோ ரசிக்கக் கூடியதாக இருக்குமாயின் நாம்
அதில் திருப்தியுறுவோம். இந்த அளவுகோலே யாத்ராவின் பார்வையாகும்.
91 മുpt ? —®

Page 7
இலக்கியம் விற்று இலங்கையில் யாரும் பிழைப்பு நடத்தியது கிடையாது என்பதை நாம் எல்லோரும் நன்கறிவோம். இலக் கரிய உலகளில் சஞ்சிகைகள் எவையும் இலாபத்துக்காகப் போராடுவன அல்ல. இருப்புக்காகவே போராடுகின்றன.
யாத்ராவுக்கான வருடச் சந்தாவாக (100.00) நாறு ரூபாய்களைப் பெறுவது என்று முடிவு செய்துள்ளோம். சந்தா பெறுவதன் மூலம் ஒரு நிரந்தர வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்பது எமது எண்ணமாகும். சந்தாதாரர் நமது தொடர் வாசகள் என்பதால் அவர்களுக்கு யாத்ராவை அனுப்பியாக வேண்டும் என்ற கடப்பாடு, எமது சோம்பலை. அவ்வப்போது ஏற்படும் மனச்சோர்வை அகற்றி வைக்கும்.
நீங்கள் மட்டுமல்ல. உங்களது நண்பர்களையும் யாத்ராவின் வாசகர்களாக எமக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விதழில் மேலும் நான்கு பக்கங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. அறபத்து நான்கு பக்கங்களுக்கு யாத்ராவைக் கொண்டு வரும் எண்ணமும் இருக்கிறது. எதிர்காலத்தில் (95 சாத்தியமாகலாம்.
உங்களது கவிதைகளை, கவிதை சார்ந்த ஆக்கங்களை. நீங்கள் படித்து ரசித்த கவிதையொன்றின் அல்லது கவிதை நாலொன்றின் விமர்சனக் குறிப்ப்ொன்றை நீங்கள் யாத்ராவுக்கு அனுப்பி வைக்கலாம். யாத்ராவின் அமைப்புப் பற்றிய, உள்ளடக்கம் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எழுதுங்கள், வரவேற்போம்.
நல்லெண்ணத்துடனும் நட்புறவுடனும் உங்களது கரங்களை நீட்டுங்கள்- பற்றிக் கொள்வோம்!
ο τα ாத்ரா അപ 1891

57ற்றும் போதையேறியவனும்
தனர் போக்கல் செல்லப்
பாதை முழுவதும் வியர்வை
தூரத்தே யாரோ நிர்கிறான்இருளுக்கும் வெளிச்சத்துக்குமிடையில்
அம்மா உணர்னைப் போலவே உயர்ந்த மின் கம்பம் - பார்வையற்று
சாப்பாட்டுக் கடையரினி வயது முதிர்ந்த பெண் அம்மா. உர்ைனைப் போனர்றே
எனினும் உனதுசாப்பாட்டினைப் போல ருசி இல்லை அவளது லாச்சியும் எனதுவufறும் நரம்புவதே இல்லை
எனது நரினைவு எப்படியும் வீட்டுக்கு வரவே
அப்படி வந்தால் உங்களது வயிறு நரம்புவதுவும் தடைப்படும்
இந்தச் சனியன் பிடித்த நகரில் மனிதர்கள் சிரிப்பதே இல்லை. உங்களைப் போல்
துர்நாற்றம் மிக்கவர்கள்காறித்துப்ப நரினைக்கிறது
வீட்டிற்கு வரவே நினைக்கிறதுஅப்படி வந்தால் அம்மா.
பரவாயில்லை, நானர் இாகர்கேயே இருக்கறேனர்.
சிங்களத்தில: அநுர கே. ஜயசூரிய
தமிழில்
இப்னு அஸ?மத்
※2r姿女だ 翌 -G)

Page 8
அண்ணல்
அணி ணல் பற்றி வேறு விபரங்கள் எதுவும் வேண்டியதில்லை- அவரது கவிதை நூலில் மஹாகவி கவிதையாய்த் தந்திருக்கும் குறிப்பைப் படித்தால்.
அண்ணல் எம் கூட்டத்தவரே அருங் கவிதை பண்ணல் தொழிலாகப் பல்லாண்டுழைத்துள்ளார். நண்பர் எவர்க்கும் நகைத்த முகம் காட்டும் பணி பிற் குரியர்: பழகத் தெவிட்டாதார். காதலைக் கண்டால் கனிவார். கசடுகளை மோதி உடைக்க வெனில் முன்னிற்பார் போரணியில்.
திருகோணமலை மாவட்டத்தின் பெரிய கிண்ணியா எனுங் கிராமத்தில் முகம்மது சுல்தான் -ஹயாத்தும்மா தம்பதியின் இளைய மகனாகப் பிறந்தவர் எம்.எஸ்.எம்.ஸாலிஹ் என்ற அண்ணல்,
தனது கவிதை நூலின் முன்னுரையில் அவர் இப்படிச் சொல்கிறார்.
அவன் உள்ளத்திலே சடைத்துப் படரும் உணர்ச்சிகள். உணர்ச்சிகளுக்கு சொல்லுருவங் கொடுக்குந் தாகம். இலக்கியத் தாகம். தாகத்தைத் தணிக்கும் வேட்கையுடன் 1945ம் ஆண்டில் பதினைந்து வயது மாணவனாக, பசுந்தரைச் சுனையூற்றைத் தேடும் பயணத்தை அவன் மேற்கொள்கிறான். ஐந்து ஆண்டுகளின் பின், புரட்சிக் கமாலின் நட்புக் கிடைக்கிறது. பயணத்தின் வழித்துணை. உற்சாகந் தருகிறது. பயணச் சிரமங் குறைகிறது. கவிதை மடல்கள் நட்புச் செய்தி சுமக்கின்றன. உணர்ச்சிகளை வெளியிடக் கவிதை உருவத்தில் மோகந் தளிர்க்கிறது.
அவள்’ எனுங் கவிதை மூலம் அறிமுகங் கண்ட அண்ணல், சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஆனாலும் கவிஞனாக அவர் நாமம் நிலைத்திருக்கக் காரணம் அவருடைய கவிதா மேன்மையேயன்றி வேறில்லை. ‘காதல் பாடல்களுக்கு ஓர் அணி ணல்' என்று அவர் அழைக்கப்பட்டார்.
®- 。な参女だ を
 
 

திருகோணமலை மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.எம்.வாமதேவன் அனுசரணையுடன் நிலாவெளியில் 28.03.1968ல் முன்ண்ாள் அமைச்சர் திரு.எம்.திருச்செவல்வம் அவர்களால் அண்ணல, பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
இலக்கியம் சார்ந்த,தொழில் சார்ந்த, சமுகம் சார்ந்த பொதுப் பணிகளில் ஆர்வத்துடனும் மனித நேய உணர்வுடனும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது அயரா முயற்சியின் காரணமாகவே கிண்ணியா மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார் கிணிணியாவின் மற்றொரு கவிஞரான ஏ.எம்.ஏ.கஹற்ஹார்.
எழுத்தாளர் வ.அ.இராசரத்தினத்துக்கும் அண்ணலுக்குமிடையில் நெருக்கமான தொடர்பு இருந்து வந்திருக்கிறது. அண்ணலின் மறைவின் பின் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கவிதைகளைக் கொண்டு மற்றொரு கவிதைத் தொகுதியையும் நபிகாவியம் கையெழுத்துப் பிரதியையும் அச்சிடும் வேலையை ஆரம்பித்திருக்கிறார் வ.அ. 1982ல் மூதூரில் இடம்பெற்ற வன்செயல்களினால் அவரது அச்சகம் தீக்கிரையாயிற்று. அச்சிட்டு முடியுந் தறுவாயிலிருந்த அண்ணலின் நூல்களும் சாம்பராயின.
நாம் அறிந்த வரை அண்ணலின் இலக்கிய வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்த மற்றும் மூவருள் திரு.எஸ்.டி.சிவநாயகமும் ஒருவர். எத்தனையோ நல்ல கவிஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையான இவர் அண்ணலின் வளர்ச்சியிலும் பங்கு கொள்கிறார். முன்னாள் மூதூர் முதல்வர் மர்ஹ9ம் ஏ.எல். அப்துல் மஜீத். இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் ஆகியோர் ஏனைய இருவருமாவர். இவர்கள் இருவரதும் முயற்சியும் உதவியும் இல்லையெனில் அண்ணல் கவிதைகள் நமக்குக் கிடைத்திருக்காது.
1997 முதல் உயர்தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொள்ளும்
மாணவர்க்கான புதிய பாடத் திட்டத்தின் ஒரு பகுதியான செய்யுள் கோவையில்
அண்ணலின் 'நீ யார்' என்ற கவிதையைச் சேர்த்துள்ளனர் கல்வியாளர். இது அண்ணலின் இலக்கியத் திறமைக்குக் கிடைத்த சிறப்பாகும்.
1974ல் ஒரு பொது நிகழ்ச்சியின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு கவிஞர் அண்ணலை நம்மிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விட்டது. மறைந்து கால் நூற்றாண்டு கழிந்தும் பேசப்படுகிறார் என்றால்- அவரது கவித்துவத்தின் சிறப்பைச் சொல்ல அதுவே மிகப் பெரிய சான்றாகும்.
ü月药剪拜
®— αακωα καιωμη καιωκ να αιωκν 。冷参むだ を ار

Page 9
சொல்லைக் கணையாய்ச்
செருகுஞ் செயலாலே இல்லை பெருமை
இனியிரே - வல்லமைகள் எல்லார்க்கு முண்டே
இயலு மொருவழியில் பொல்லாங்கில் நேரும் பழி
காக்கும் மரபில்
கலகங்கள் வேண்டாஎப் போக்கும் இனிதாய்ப்
புரிந்தக் கால்- தாக்குகின்ற கொல் யானை தன்னை
அறுகுங் கெடுத்திடுமேல் வெல்வேன் எனப்பிதற்றல் வீண்
என்னை எடுத்தும்
எடுத்துக் காட் டுள்நுழைத்தும் தன்னைப் பெரிதாக்குந்
தம்பியர்கள் - முன்னுக்கு வந்தால் மகிழ்ந்திடுவோம்
மாறாகத் திட்டலிலே வெந்தாற் சிரிப்பே வரும்
பொடி வைத்துப் பேசிடுதல்
ஓர் போக் கெவர்க்கும் வெடிவைத்தல் வீண் வேலை
வேண்டாம் - வடிகட்டும் பன்னாடை பாலின்
பழுதைத் தனதாக்கும் விண்ணாணம் வேண்டாம் விடு
எங்க ளுயர் குடும்பம்
காய்ச்சல் எரிச்சலினால் பங்கப் படுதல்
பழுதன் ப- தங்கம் போல் நாங்கள் விளங்க
நலனாய்தல் வேண்டுந்தான் வாங்கல் எழுப்பல் வடு
 

வTர்த்தைகளை வீணாக்கியிருக்கிறேன் அதிகமாக மனித உயிர்களைப் போல
ஒரு வார்த்தையில் நீவந்தாய் எத்தனை முணுமுணுப்புகள்
சில வார்த்தைகளால் செத்தேன் நான் சிரிப்பொலிகளைக் கேட்டாயா
வார்த்தைகளை வீணாக்கியிருக்கிறேன் அதிகமாக அரசியல்வாதிகள் பேச்சைப் போல அதையும் விட மனித உயிர்களைப் போல
இப்போது மெளனமாக இருக்க விரும்புகிறேன் 63Fubuo600f60)UU (5usT6)
இப்னு அஸ9மத் ພf-gr 3 –G)

Page 10
பாவலர் பஸில் காரியப்பர்
நான் எப்படி வரவேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை வரைந்து கொண்டு அந்த மனிதனை ஆக்குவதிலே நான் ஈடுபட்டிருக்கிறேன். மனித உறவை மலர் வித்தல், மனிதஉறவைச் செப்பனிடுதல், மனிதஉறவுக்கு ந ம பரிக கை யு ட் டு த லி , நல ந த மனிதனுக்கு இரங்குதல்,அதற்காகப் போராடுதல் - ஒரு போர்க் குணங் கொண்டவனாக, சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகிறேன்.
ajf姿が溶 巻
 
 

யாத்ரா: இலக்கியத்தோடு இணைந்த
ஆரம்ப கால ஞாபகங்கள்.
பாவலா: கல்முனை பாத்திமா கல்லூரியில் நான் படித்தேன். எமது வகுப்பாசிரியருக்கு இடமாற்றம் வந்தபோது பிரியாவிடை வைத்தோம். வகுப்புத்தலைவன் என்ற வகையில் வகுப்பின் சார்பில் கவிதை ஒன்றை எழுதி வாசித்தேன். தமிழாசிரியரான அருளையா என்னை உமர் கையாம் என்று அழைத்தார்."உமர் கையாம் என்றால் யார் சேர்?"என்று கேட்டேன். அவன் ஒரு பெரிய்ய கவிஞன் என்றார்.
எனது 16வயதில் சம்மாந்துறையில, கலா வெற்றிக் கழகம் என்ற ஒன்று உருவாகி இலக்கிய மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டது. இச்சங்கம் எனது இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. சங்கத்தின் 'அன்னம்' என்ற கையெழுத்துச் சஞ்சிகைக்கும் நான் ஆசிரியராக இருந்துள்ளேன்.
1958ல் தொட்டவத்தைக்கு ஆசிரியராகக் கடமை புரியச் சென்றேன். அங்கிருந்து நண்பர்களுக் கெல்லாம் கவிதையில் கடிதம் எழுதுவேன். செய்யுள் பாணி என்று கூடச் சொல்லலாம். பிறகு ஆசிரியர் கலாசாலைக்குச் சென்றேன். அங்கு எல்லோரும் என்னைக் கவிஞன் என்று அழைத்தார்கள்.(சிரிக்கிறார்)
ur. நீங்கள் எழுதத் துவங்கிய காலகட்ட த்தில் உங்களது பிரதேச இலக்கியம் எப்படியிருந்தது?
பா: ஷரிபுத்தீன் ஹாஜியார், ஈழமேகம் ,
பக்கீர்த்தம்பி,சலிம் காக்கா (ஏயாரெம் சலீம்), ஜே.எம்.அப்துல் காதர் முக்கியமானவர்களாக நான் மதிக்கின்ற நபர்களாக இருந்தார்கள். என்னைப் போன்றோருக்கு உந்து சக்தியாகவுமிருந் தார்கள். பின்னாளில் இருந்தவர்களையும் குறிப்பிட வேண்டும். ஆசிரிய கலாசாலையில் முக்கியமான இலக்கிய நண்பனாக இருந்தவர் ஏ.இக்பால்.சில்லையூர் செல்வராசன் ஓர் அற்புதமான மனிதன். அவரைச் சந்தித்தது ஒரு புகைவண்டிப்பயணத்தில், மற்றொருவர்
போன்றோர்
'தினகரன்' ஆசிரியராக இருந்த சிவகுருநாதன் அவர்கள். எந்த இடத்தில் கண்டாலும் அது
கடையாக இருந்தாலும் கூட, ஒரு தாளை
நீட்டி"கவிதை எழுது" என்பார்.
uJT: இலங்கையில் பல முற்போக்கு இலக்கிய
அணிகள் இருந்தன. அவை பின்னர்
அடையாளம் இழந்து போனமைக்கான காரணம் என்ன?
பா: அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காத்திரமான இயக்கமாக இருந்தது. கைலாசபதியின் தலைமையில்
பிரேம்ஜி, சில்லையூர் செல்வராஜன்,காவலூர்
ராஜதுரை, முருகையன்,சோமகாந்தன் ஆகியோர் நல்லமுறையில் இதனை நடத்தி வந்தனர். பின்னர் எஸ்.பொன்னுத்துரைக்கும் சங்கத்துக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இது நிகழ்ந்த கூட்டத்தில் தான் பொன்னுத்துரையை எம்.ஏ.ரஹற்மான் சந்தித்தார்.அவருக்கு இவர் ஆதரவாக இருந்தார். இது ஒரு முன்னிலை உறவாக இருந்தது. இலக்கியத்தில் பல நல்ல விடயங்கள் நடந்தன.
உரிமைகளுக்காக உழைக்க வேண்டும்,சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்,வருத்தப்படுபவர்களுக்காக வாதாட வேண்டும் என்பன போன்ற முற்போக்குச் சிந்தனைகள் கூர்மையடைந்திருந்த காலப்பிரிவு ஒன்றிருந்தது. காலவோட்டத்தில் அந்நிலை மாறிவிட்டது. வாழ்க்கை முறையும் அதற்கு ஒரு காரணம். இலங்கையில் ஒருவரால் எழுத்தை நம்பி வாழமுடியாது. தொழிலில்தான் வாழ்க்கை தங்கியிருக்கிறது. ஆனபடியால் எழுத்தாளனின் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படும்போது அவன் எங்கெங்கேயோ சிதறிப் போகிறான். சிந்தனைச் சிதறலும் இடச் சிதறலும் ஏற்பட்டுத்
தீவாந்தரமானநிலைக்கு வந்துவிடுகிறான்.
மற்றொரு காரணமாக இனக்கல்வரத்தைச் சொல்லலாம். இது எல்லாவற்றையும் உடைத்துத் தள்ளிவிட்டது. மனித இயல்பு வாழ்க்கையை அவனது ஆத்மாவைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது. மனித இறைச்சியை மட்டும்தான் இவர்கள் இன்னும் விற்கவில்லை.
。学学が資 巻 - 0

Page 11
யா உங்களுக்கென்று ஒர் இலக்கியக் கொள்கை உண்டா?
பா: ஒரு நாளும் அப்படியொன்றும் இருக்கவில்லை. நான் உள் மனிதன். நான் எழுதுபவற்றில் மிகச் சிறந்தது எதுவாக இருக்க வேண்டுமென்றால் அது எனது உள்மனிதனை வடித்து எடுத்ததாக இருக்க வேண்டும். எனது உள் மனிதனைப் பற்றித்தான் நான் சதாவும் சிந்தித்தவனாக இருக்கிறேன். அதை வைத்துத்தான் நான் தீர்மானங்களை எடுக்கிறேன்.
யா: தமிழ்க் கவிதை வெவ்வேறு வடிவங்கள் கொண்டு வருகிறல்லவா?
LT: இதுபற்றி நான் கவனம் செலுத்துவதில்லை. இலக்கண அறிவோ
தகவல் அறிவோ நிறைந்த மனிதனாக
நானில்லை. என் மனதில் அந்தந்த வேளையில் எழுந்த சிந்தனைகளை நான் எழுத்தில் வடிக்கிறேன்,எனக்கு சுயமாக ஏற்பட்ட சொல்லொழுக்கில். 'கவிதை என்பது பெருகிய உணர்வின் இறுகிய - இசையோட்டமான சிந்தனைச் சிறைப்பிடிப்பு என்பது எனது கருத்து.
யா:புதுக் கவிதை பற்றி.
UT : ஒரு நல்ல விஷயம். சில சொற்களுக்குள்ளே உணர்வுகளைத் தட்டி விடக்கூடிய பாரிய பண்பு அதற்கு இருக்கிறது. இவற்றில் நல்ல கவிதைகள் பலவற்றை நாம்
காணக் கூடியதாக உள்ளது. அதன்
தன்மையும் மிக இறுக்கமானது.
யா: நீங்கள் கருதுவதற்கு முரணாகவும் அமைகின்றனவே பல?
பா: நல்ல கவிதைகள் அமையவில்லை. வசனங்களைப் பிரித்து அடுக்குவது கவிதையாகாது. சொல்லுகின்ற விடயத்தை உணர்ந்த தன்மை, உணர்ந்ததை வெளிப்படுத்திய மேன்மை ஆகியன நல்ல கவிதையில் தென்படும்.
யா: இப்போது நவீனத்துவம், பின் நவீனத்துவம்,பின் பின் நவீனத்துவம், தலித்தியம்,பெண்ணியம் என்றெல்லாம் பேசப்படுகிறதே?
。だ参む資 翌
பா: இது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.(சிரிப்பு)
யா: இலங்கையில் நல்ல கவிஞர்கள் என
நீங்கள் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
பா: பட்டியல் போடுவது அழகாக இருக்குமென நினைக்கவில்லை. ஏராளமானோர் உள்ளனர். பொதுவாக நண்பர் நுஃமானின் பெயருடன்நிறுத்திக்கொள்கிறேன்.
யா:உங்களுக்குக் கிடைத்த பரிசுகள்.?
பா: முதல் ஆக்க இலக்கியம் என நான் கருதியது'உயிர்' என்ற கவிதையை. மன்னார் பெரியமடு என்ற இடத்தில் வைத்துத்தான் அதனை நான் எழுதினேன்.அக்கவிதை எனக்கு முழு மன நிறைவைத் தந்தது. அதனைத் தினகரன் பத்திரிகைக்கு அனுப்பினேன்.பிரசுரிக்கப்படவில்லை. கடிதம் எழுதி முத்திரையும் வைத்து அனுப்பினேன். அது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய தங்கத் தாத்தா கவிதைப் போட்டி யில் அந்தக் கவிதை பரிசு பெற்றது. போட்டி விதிகளுக்கு அமைவானதாக இல்லாதிருந்த போதும்நடுவர்களுள் ஒருவர் அக்கவிதைக்குப் பரிசு வழங்கியே ஆகவேண்டும் என்று உறுதியாக நின்றதாக பிறகு எனக்குத் தெரிய வந்தது. அந்தக் காலத்தில் அது மிகவும் கீர்த்தியாகப் பேசப்பட்ட விஷயம்.
ஆசிரிய கலாசாலையில் பயின்ற இரு வருடங்களிலும் போட்டிகளில் எனக்கே பரிசு கிடைத்தது. அதன் பிறகு நீலாவணன்
இலக்கியப் பேரவை' நடத்திய கவிதைப்
போட்டியிலும் பாதுகை' என்ற எனது கவிதைக்குப் பரிசு கிடைத்தது. கொழும்புப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் நடாத்திய போட்டியில் தங்கம்மா' பரிசு பெற்றது.
யா; அதன் பிறகு பாவலர் பட்டம் தந்து ஊரே உங்களுக்கு விழா எடுத்ததே.
பா: தமிழ்ச் சங்கப் பரிசு மட்டுமல்ல, விழாவின் கவியரங்குக்கும் தலைமை தாங்கச் சொன்னார்கள் கொழும்புப் பல்கலைக்

வான தேசம் தான் விரும்பியபடி எப்போதாவது பறக்க விடும் ஏழு வர்ணத் தேசியக் கொடி
மழைத் துளியினதும் வெய்யில் ஒளியினதும் அபூர்வச் சந்திப்பு
கணி டு இயற்கை சிந்தும் சிரிப்பு யார் சொன்னது வெள்ளையில் கள்ளம் இல்லையென்று உள்ளே நிறம் ஏழு இருந்தது தெரிந்தது இன்று
சாமியைப் பார்க்கவென்று
வானத்தில் நிகழ்த்தும் அபூர்வ அணிவகுப்பு
சூரியனிடம் பிடிபடாமல் மழை மகள் ஓடிவர வளைக் கரத்தை அவன் வளைத்துப் பிடித்த போது உடைந்த வளையல்
இயற்கை மழையில் நனைந்து வெய்யிலில் காயப்போட்ட வண்ணத் தாவணி வையகத்தில் வாழ்க்கை வாழ்க்கையில் வாலிபம் வானம் சொல்லும் பாடம்
a e o a s s a வ.சிவப்பிரகாஷ்
பூமியிலிருந்து சென்ற வர்ணங்கள்
少
-ܓܠܠ
盆; *
கழகத்தில், எல்லா கெளரவங்களையும் எனக்கு வழங்கினார்கள். ஊருக்குப் போய் இறங்கிய போது பாரிய வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள்,
நமது செல்வமம்மா
நாட்டின் செல்வமம்மா
நமது பஸில் காரியப்பா'என்று வாழ்த்துப்பா எழுதினார். 'பாவலா’பட்டமளித்துப்பெருமைப் படுத்தினார்கள்.
யா: வானொலியில் அதிகம் பங்களிப்புச் செய்திருக்கிறீர்கள். 'அழகான ஒரு சோடிக் கண்கள்', 'கயிற்றோசை கேள் மகளே', 'பொன்னரிவாள் என்றே உன்னைப் புரட்சிக் கமால்சொன்னார்' போன்றகாலத்தை வென்ற பாடல்களை எழுதியிருக்கிறீர்கள். வேறு பங்களிப்புகள்.?
பா: கவியரங்கங்கள் நடத்தியுள்ளேன். இசைச் சித்திரம் எழுதியுள்ளேன். இலக்கிய உரைகள் நிகழ்த்தியிருக்கிறேன். 'கவிதை பிறந்தது' என்னொரு நிகழ்ச்சி. இலங்கையிலுள்ள கீர்த்தி பெற்ற பலரை, நானும் எம்.எம்.இர்பானும் தேடிச் சென்று பேட்டி கண்டு வந்து ஒலிபரப்பியிருக்கிறோம்
'கவிதைச்சரம' என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்து நடத்தினேன். தொடர்ந்து கொழும்புக்கு வரமுடியாத சூழ்நிலையில் அதனை ஜனாப். அல் அஸ9மத் அவர்கள் சிறப்புற நீண்டகாலமாக நடத்தி வந்தார்.
யா:உங்கள் கவிதைகளை நீண்டகாலமாக எதிலும் காணக் கிடைக்கவில்லையே.
பா: அது என் பொடுபோக்குத்தனமா,
பலவீனமா என்று தெரியவில்லை. எழுதி முடிந்தவுடன் எனது கடமை முடிந்து
விட்டதாக நினைக்கிறேன்.
யா: கவிதை காலத்தின் கண்ணாடி என்பார்களே, அடுத்த தலைமுறை உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள (86.603LTLDIT?
பா: காலத்துக்குரிய கவிதை, எல்லாக் காவங்களுக்குமான கவிதை என இரண்டு வகைகள் உள்ளன.உதாரணமாக பாரதியின

Page 12
'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே காலத்துக்குரிய கவிதை. "குயில் பாட்டு எல்லாக் காலங்களுக்குமான கவிதை. காலத்துக்குரிய கவிதைகளை நான் அவ்வப்போது பிரசுரித்துள்ளேன். எல்லாக் காலங்களுக்குமான கவிதைகள் எப்போது வெளிவந்தாலும் சரிதானே. அவை என்னிடம் ഉ_ണ്ണങ്ങ.
யா: கவிதை தவிர வேறு படைப்புகள்..?
பா: உருவகக் கதைகள் எழுதியுள்ளேன். 'கலைச் செல்வி', 'தேனருவி' , 'வீரகேசரி' ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. தினகரனில் மூர்த்தியின் ஓவியங்களுடன் வெளிவந்துள்ளன. தவிர பல சிறுகதைகள் எழுத்திலும் மனதிலும் உள்ளன.
யா ஏன் இதுவரை ஒரு கவிதைத் தொகுதியைத்தானும் வெளியிடவில்லை?
பா: நீண்ட காலமாக எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்வி இது. அப்போதெல்லாம் எனக்கு இதில் நாட்டம் இருக்கவில்லை. இப்போதுவந்துள்ளது. இந்த வருடம்கட்டாயம் எனது கவிதைத் தொகுதி வெளிவரும். அதைத் தொடர்ந்து உருவகக் கதைகளை நூலாக்குவேன்.
யா:உங்கள் முதல் கவிதை...?
பா:சிறுவயதில் ஒருமுறைகடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தேன். இரண்டு தினங்கள் உணர்வின்றிக் கிடந்துள்ளேன். திடீரென இரவில் கண்விழித்த நான் சுவரில் எறும்புகள் ஊரும் நிரையொன்றைப் பார்த்தேன். அவை எதிரும் புதிருமாக ஒன்றை ஒன்று சந்தித்துச் செல்வதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட எனது தாயார் அதிர்ச்சியடைந்து "உனக்கென்ன ஆயிற்று" என்று பதறிபட்போய்க கேட்டார். "உம்மா நான் எறும்புகளைப் பார்க்கிறேன். அவை ஒவ்வொன்றும் சந்தித்துச் ஸலாம் சொல்லிச் செல்கின்றன." என்று பதில் சொன்னேன். தாயார் ஆனந்தம் அடைந்தார்.
அதுதான, அந்த எண்ணம்தான், அந்தச் சிந்தனைதான் எனது முதலாவது கவிதை என்று எண்ணுகிறேன்.
யா: 'வாழ்வோரை வாழ்த்துவோம'தொடரில் உங்களை கெளரவிக்க அழைத்தபோது நீங்கள் மறுத்தது ஏன்?
பா: 'வாழ்வோரை வாழ்த்துவோம்' ஒரு நல்ல முன்மாதிரியான திட்டம். அதைச் செய்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த முன்மாதிரியைப் பின்பற்றிப்பல இடங்களிலும் , இப்போது கலைஞர்கள் கெளரவிக்கப் படுவதைக் காண்கிறோம்.
என்னை அமைச்சர் அஸ்வர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "என்னை விட்டுவிடுங்கள்" என்று நான் மறுத்தேன். பட்டங்கள் பெறுவதும், Spotlight ல் நிற்பதும் இன்றைய அவலச் சூழலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது. பாவலர் பட்டம் ஒன்றே போதும் என்று திருப்தியுடன் இருக்கிறேன். பத்தாயிரம் ரூபாவுக்கு எனது திருப்தியை இழக்க நான் விரும்பவில்லை. இன்றைய நிலையில் பாவலர் பட்டம் கிடைக் குமாக இருந்தால் அதையும் மறுத்திருப்பேன். பஸில் காரியப்பர் போதும். பெயர் நன்றாக இருக்கிறதுதானே.
ஆனால் வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்ச்சியில் பின்னர் பார்வையாளராக கலந்துள்ளேன். பலர் கெளரவிக்கப் பட்டார்கள். நல்ல முயற்ச.
யா: உலகம் சுருங்கி விட்டது. எல்லாமே நவீனமாகிவருகின்றன. எதிர்கால இலக்கியம் எப்படியிருக்கும்?
பா: இலக்கியம் இருக்கும். சுருக்கமாக, வீரியமாக இருக்கும். வடிவங்கள் வேறு பட்டாலும் கூட.
உலகம் முழுவதும் எத்தனையோ அற்புதமான வடிவங்களில் வானளாவ கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னுமின்னும் எழுப்பப்பட்டும் வருகின்றன. இவைகளால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட , மிகப் பழைய கட்டடமான
தாஜ்மஹாலை எதுவுஞ் செய்ய முடியவில்லையே. அப்படித் தான் இலக்கியமும்.
が溶巻 ܢܰܟ݂

6Tங்கு ஒளிந்திருந்து எப்படியாய்ச் சென்றதுவோ
குச்சி, அதன் பெட்டியுடன் கூடி உரசியதால் விச்செனவே சுடரொன்று வீறிட்டெழுந்து இங்கு நின்று, சுழன்று சில நொடியில் மறைந்தது காண்
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
வீணை நரம்புகளில் விரல்கள் விளையாட தேனாம் இசையுண்டோம் சேர்ந்ததுவும் எங்கேயோ
எங்கு ஒளிந்திருந்து எப்படியாய்ச் சென்றதுவோ
சுழன்ற சுடராமோ சுவைத்த இசையாமோ தளர்ந்த உயிர் உடலைத் தவிர்த்த நிலை எதுவோ
எங்கு ஒளிந்திருந்து எப்படியாய்ச் சென்றதுவோ
L/1762/627 L/6nosů a5/7/flu JL71 1/7
这玮参莎芦登 —®

Page 13
எப்போதும் சச்சரவு தரும் பேச்சென்றால் மெளனத்தின் அழகு வெளிப்படுவது எப்படி
பேச்சுக்களின் துவக்கமே அவரவர்க்கான பொய்யை ஆடையாய் நெய்தது. பேச்சால் அமைதி நிலவுமென்பது Uொய்யாய்ப் போனது.
இரைச்சல்களின் கூக்குரல்களின் குரூர வன்மங்கள் பகலற்ற இரவுகளையும் கிழிபடச் செய்கின்றன.
பேச்சு கனத்து ஒரு அணுகுண்டு வெடிப்பின் பிரளயத்தை உற்பத்தி செய்த போது எரிந்து முடிந்த சாம்பலில் மெளனம் மிஞ்சியது.
ஹெச்.ஜி.ரசூல்
(இந்தியா)

உள்ளத்துலையில் உருகிற்று வாழ்வு பிரக்ஞைகளைத் துறந்து குடும்பச் சாகரத்தில் முழ்கினாள் முச்சடக்கினாள்
தாவணிக் கனவுகளைத் தாண்டியபோது வாழ்க்கை பலரும் சொல்லிக்கொண்டபடி சுவாரஸ்யமாயில்லை
அவளது இரவுகளைத் தீண்டியவன் பல்லாண்டுகளின் இரவுகளுக்கு பதில் கூறாமலே கடல் கடந்தான்
இல்லற ஒவியம் உணர்வுகளால் திட்டப்படுவதல்லவா
எண் உணர்ச்சிகளை எரித்த ஆகுதியில் குளிர் காய்பவனே
உன் அந்தரங்கத்தின் ஆரவாரம் என் செவிகளை தாறடிக்கிறது
உழைப்புக்கும் என் தவிப்புக்கும் தர்மத்தை உன்னால் 6î808) önp (pçuğDT876ü இனியும்
இந்த அசோக வனத்திலிருந்து எதற்காக நான் அவஸ்தைப்பட வேண்டும்
அவளது அவலத் தொனி அரபிக் கடலில் அலையாய் ஆர்ப்பரிக்கத் தொடங்கிற்று
ஏ.ஜி.எம்.எ)தக்கா.

Page 14
இருட்டில் தொலையும் வெளிச்சங்
வரலாற்றுச் சுவரில் பெருமைச் சாந்து பூசிய எாங்கள் கிராமம் கொட்டுகின்ற வெண் பனித்துளிகள் பசுமை வெளிகளில் வைரங்கள் பாய்ச்சக்
துடித்தெழுகின்ற காலவன் வெள்ளொளி கண்ணளக்க
நீரில் முகங்கள் தெரியும்
பொன்னிறக் கதிர்ச் சிதறல்கள் எங்கள் கிராமத்தரைகளில் பொற்காடாய்ப் பொழிப்புறும் காலைப் பிரசவ ஆரவாரமுகிழ்ப்புக்கு முன்னரே கரையோரக் கதைகள் நிகழ்ந்திருக்கும்
கரைவிட்டுக் கிளம்பிய வள்ளங்கள் நிலத்திரையில் இரைதேடும் கரைதட்டிய தோணிகள் களைத்துக் கிடக்கும்
தென் šaz5 6zv7
கடற் கரைப் பனிக் காற்றில் மின் வாடை கடை பரப்பி மின்காரர் ஏலமிடுவர்
சுவடுகள் பதிந்து ஈரத் துளிகளில் சிலிர்க்கச் சட்டிகள் நிறைய மின் வளங்கிவரப் படையெடுக்கும் எாங்கள் கிராமப் பெண்கள்
இரத்தினக்கல் சுமந்து பொன்னளக்கப் போகும் தமது இரத்தச் செல்வங்கள் விரியும் ஒவ்வொரு நாளிலும் நிகழ்த்தும்
சாதனைகள் பற்றி அலசிக் கொள்வர்
(2)-— *శ్రీy* ప్తి
 

எங்கட ரம்பிைன் இன்டேக்கும் கல்லு விச்சப் பெய்த்த அனஸ்நாநாட கல்லொண்ட வித்து நேத்தும் நல்லநயம் கொன்னந்த.:
ஓ. எங்கட ரிலானும் அம்பது 6?sõreoerašaš oaslgul.----
ஆகாசம் தொடும் வண்ணக்கனவுகள் வறுமைக் குடில்களை வியக்கும் மாடிகளாக்கி zpruzb prfiszoasufsö
வானச் செடியின் வெள்ளிப் பூக்களை வெறும் பஞ்சுக் கைகளால் பறித்தெடுக்கப் Leitenfů LipůsoLv Apapašaz5 aopmřa567 பத்தைச் சந்தையில் பலராய்க் கூடுவர்
எங்கள் கிராமச் சின்னஞ் சிறிசுகள் சில்லறைக்கும் சில பத்துகளுக்கும் சாதனைகள் நிகழ்த்திப் பாலை வெளிகளில்
நத் ே 25i
வகுப்பறை வளங்குகளில் வெறுமை நிழல் தட்டும் பர்ட்சைக் காலநிகழ்வுகளுதிர்கையில் வகுப்பறை முழுவதும்தலைகள் தெரியும்
சூன்ய வெளியில் சான்றுகள் தேடிக்களைத்த இளசுகளது பரிட்சை முடிவுகள் தாள்களில் பூஜ்யங்களாகப் பரிணமிக்கையில் வாழ்க்கைப் பூமியின் பொருளாதாரக் குன்று குழிகளைச்
செப்பனிட முயன்ற எங்கள் கிராமச் சின்னச் சிற்பிகள் அறிவுளியுடைந்த முடவர்களாவர்
soough. ----- (sorgab ------ பாயும் கல்விக் கதிர்கள் தொலைத்த பேயிருளில் தாங்களது பயணங்கள் தொடரும் அந்தத்தலைமுறைகளினால் எங்கள் கிராமத்தில் முடவர்களே
aziz2a2nizaguire

Page 15
அல் அஸ்மத்
ஆங்கிலக் கவிதை இலக்கியத்தில் பிரபலமான ஒர் உருவம் 'லிமரிக்ஸ்' எனப்படும் ஐந்தடிக்கவிதையாகும். இதுவே குறும்பா எனும் பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தமிழில்முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் இலங்கையரான அமரர் மஹாகவி (து.உருத்திரமூர்த்தி) அவர்களே. நவீனகவிதைத் துறையில் அதிகதிகம் பேசப்படும் ஒரு கவிஞரான மஹாகவி, யாப்பில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அதனால் ஆங்கில 'லிமரிக்ஸை அவர் தமிழில் குறும்பா என்ற தமிழ்ப் பெயரில் அறிமுகம் செய்ததோடு அதன் உருவத்துக்கும் அழகிய ஒரு யாப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
'குறும்புப்பா' என்றும் 'குறுகிய பா' என்றும் இரு பொருள் தரக்கூடியதாக பெயர் அமைக்கப்பட்ட தமிழ்க் குறும்பாக் குறித்து நாம் அறிந்து கொள்ளுமுன், 'லிமரிக்ஸ் குறித்துச் சுருக்கமாக அறிந்து கொள்ளுதல் அவசியமே.
'லிமரிக்ஸ்' எந்த நாட்டுக்குச் சொந்தமானதென்று இதுவரை நிலைநாட்டப்படவில்லை. சிலர் அயர்லாந்து நாட்டுக்குரியது என்கிறார்கள். அயர்லாந்தில் 'லிமரிக்ஸ்' எனப்படும் ஒர் ஊர்
உண்டு. அந்த நாட்டின் ஒருவகைப் பாடலின் ஈற்றடி ஒவ்வொன்றும்,
"We'll come up, come up to Limerick" 61601 (p19636).j605 அடிப்படையாகக் கொண்டும் இவ்வூர்ப் பெயரை அடிப்படையாகக் கொண்டுமே இம் முடிவு வாதாடப்படுகிறதே தவிரத் தீர்மானிக்கப்படவில்லை. ஆரம்பக் காலத்தில், இந்த ‘லிமரிக்ஸ்' இலக்கியத் தரத்தைப் பெற்றிருக்கவில்லை. விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் நெருக்கமானவர்கள் கூடும் இடங்களிலும் மட்டுமே கையாளப்பட்டது. சில வேளைகளில் கல்லச்சுச் செய்யப்பட்டு மிக இரகசியமாகவும் வினியோகிக்கப்பட்டு வந்ததாக அறியக்கிடக்கிறது. இவ்வகைக் கவிதைகளைப் பகிரங்கமாகப் பிரசுரிக்க எவருக்கும் தைரியம் ஏற்படவில்லை போலும் பாலியல் விஷயங்களையும் சமூக அந்தஸ்தில் உயர்ந்திருந்தவர்களின் குறைகளையும் அந்தரங்கங்களையும் சிலேடைக் கருத்துக்களையும் கொண்டவையாக இவை அமைந்திருந்தமையே அதற்குக் காரணம் எனலாம்.
அர்த்தமே இல்லாத விதமாக, வெறும் வார்த்தை ஜோடிப்புகளாக லிமரிக்ஸ்'கள் அமைந்திருந்த வேளைகளும் உண்டு. காலப்போக்கில் இலக்கிய அந்தஸ்தை அடையக்கூடிய திறன் இவ்வகைக் கவிதைகளில் இருப்பதாக உலகம் அறிந்த போது வேகமாகப் பரவலாயிற்று சமயம், சமூகம், அரசியல்,நகைச்சுவை, அறிவுறுத்தல் போன்ற பல தலைப்புகளையும் ஆக்கிரமித்தது.
மொழிபெயர்ப்பின்போது ‘லிமரிக்ஸ் தன் மூலச் சிறப்பை இழந்து விடுவதால் ஜேர்மன் போன்ற மொழிகளில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வசனமாகவே இருக்கின்றன. இதுபற்றி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
s
2
)-- 。だ参む資 巻 — ܥܰܕ݂
 

தமிழ்ப் புதுக் கவிதைக்குத் தந்தை பிச்சமூர்த்தி போல 'லிமரிக்’ஸ"க்குத் தந்தை "எட்வர்ட் லியர்'என்பவராவர். எனினும் 'லிமரிக்ஸ்' எனும் பெயரை இவ்வகைக் கவிதைக்கு இவர் தான் சூட்டினார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எட்வர்ட் லியர் தலை சிறந்த ஓர் ஓவியராவார். சந்தமுள்ள சிறு சிறு நாடோடிக் கவிதைகளை இயற்றுவது இவரது பொழுது போக்காக இருந்தது. சிறுவர்களுக்கு இத்தகைய பாடல்களைப் புனைந்து கொடுப்பதில் இவர் பெரு விருப்புடையவராயிருந்தார். சிறிது காலத்தில் இவ்வகைக் கவிதையை இவர் தன் தனிப்பாங்குக கவிதையாகக் கொண்ட போது ‘லிமரிக்ஸ்' உருவானது.
இவரால் இக் கவிதா வடிவம் பிரசித்தி பெற்ற பிறகு எண்ணற்ற 'லிமரிக்ஸ்' கவிஞர்கள் உருவானார்கள். அர்னோல்ட் பெனட் ஜோன் கல்ஸ்வேர்தி, ருட்யார்ட் கிப்ளின், றொபர்ட் லூயி ஸ்டீவன்ஸன், லியூயிஸ் கெரோல், ஒக்டன் நாஷ், ஒலிவர் வெண்டேல் ஹோம்ஸ், ஜிலட் பர்ஜஸ், யூஜின் ட்பீல்ட், கொஸ்மோ மங்க் ஹெளஸ், நந்து கெட், வூட்றோ வில்ஸன், டி.எஸ்.எலியட் போன்ற புகழ் பெற்ற இலக்கியக்காரர்கள் இதன் மீது அக்கறை காட்டத் தொடங்கினார்கள்.
எட்வர்ட் லியர் உபயோகித்த முறை சிறிது சிறிதாக வளமடையத் தொடங்கியது. எனினும் அதன் கட்டுக் கோப் பு மாற்றமடையவில்லை. லியரினதும் அவரை உடனடியாகப் பின்பற்றியவர்களதும் தவிதைகளின் ஆரம் பங்கள் 96judTg5su Tab(36), 305b,560T. There was an old man' 6T667(3m3rr'There was a younng lady from' 6T66 (33(Tg5T66, 966) தொடங்கும் ஈற்றடியும் அநேகமாக முதலடி போலவே முடிவுறும். எட்வர்ட் லியரின் ஒரு கவிதையை உதாரணமாகத் தருகிறோம்.
There was an old man of Cape Horn Who wished he had never born So he sat on a chair Till he died of despair That dolorous man of Cape Horn
يخضر
(கேப் ஹோர்னில் கிழவன் ஒருவன் இருந்தான். தான் பிறவாதிருந்தால் நல்லதென்று அவன் விரும்பினான்.ஆகவே அவன் நிராசையால் தான் சாகும் வரையிலும் ஒரு நாற்காலியில்
அமர்ந்தான். கேப் ஹோர்னின் அந்த
துயரமுள்ள மனிதன்.)
லியருக்குப் பின்னர் லிமரிக்'ஸின் வடிவம் மாறாவிட்டாலும் முதலடி வெவ்வேறு விதமாக அமையத் தொடங்கின. கொஸ்மோ மங்க் ஹவுஸ் என்பவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதிய ஒ லிமரிக்ஸ் இது:
A diner while dining at Crewe Foundararher largemouse in his stew Said the Waiter, "Dont Shout And wave it about Or the rest will be wanting one, too"
(குறு என்னுமிடத்தில் ஒருவன் இரவு உணவு உட்கொள்ளும் போது குழம்பில் ஒரு பெரிய எலியைக் கண்டான் பரிமாறுபவன் உடனே கூறினான். சத்தம் போடாதீர்கள்! அதை உயர் தி தி ஆட் டாதீர்கள் ! மற்றவர்களும் கேட்டுவிடப் போகிறார்கள். தங்களுக்கும் ஒன்று வேண்டும் என்று)
இக் கவிதை வரிகள், லியரின் வரிகளிலிருந்து மிகவும் மெருகடைந்திருப்ப தைக் காணலாம்.
ஆதிமுதல் இன்று வரையும் இதன் அடிகள் ஐந்துதான். எவ்வாறு ஜப்பானிய ஹைக்கூ மூன்று அடிகளையும் இத்தாலிய சொனட் பதினான்கு அடிகளையும் தமிழ்க் குறள் வெண்பா இரண்டு அடிகளையும் கொண்டிருக்கின்றனவோ அதைப்போல லிமரிக் ஸ"ம் ஐந்து அடிகளைக் கொண்டிருக்கிறது. முன்னர் சிலர் ஆறு அடிகளிலும் 'லிமரிக்ஸ் புனைந்த போதிலும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை எனத் தெரிகிறது. -
நகைச்சவைக்குப் பெயர் போன 'லிமரிக்ஸ்' யாப்புக் கவிதையினத்தைச் சேர்ந்ததாகும்.
ஆங்கிலக் கவிதை இலக்கணத்தையொட்டி ஒவ்வோர் அடியின் இறுதியிலும் மோனை அமைகிறது. இதைத் தமிழில் இயைபுத் தொடை என்கிறோம்.
。な参むf 8 - Q)

Page 16
ஐந்தாம் அடியிலேயே. அதாவது ஈற்று அடியிலேயே - எடுத்தாளும் கருத்து அநேகமாக முழுமை பெறும் உலகப் புகழ் பெற்ற சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் சிறுகதை முடிவுகளைப் போல எதிர்பாரா முடிவுகளை நாம் காணக்கூடியதாக இருக்கும். . . . .
முதலாம் இரண்டாம் ஐந்தாம் அடிகள் ஒன்று போலவும் மூன்றாம் நான்காம் அடிகள் ஒன்று போலவும் இக்கவிதை வடிவம் பெறுகிறது. இயைபுதி தொடைகளும் இந்தக் கிரமத்திலேயே அமையும்.இக்கவிதை பெரும்பாலும் ஒரு படத்தைத் தாங்கி நிற்கும். கவிதையின் பொருளை இலகுவாக விளங்கிக் கொள்ள இப்படங்களே பெரிதும் உதவுவனவாக அமைந்தன.
பல மொழிகளில் 'லிமரிக்ஸ் சிறந்து விளங்குவதைப் போல் தமிழில் சிறப்புடன் விளங்குவதாகத் தெரியவில லை. ஜப்பானியக் கவிதை என்றும் சீனக் கவிதை என்றும் விழுந்தடித்துக் கொண்டு அந்நியக் கவிதைகளைக் கும்பிட்டுக் கூத்தாடி நமது கவிதை மரபைத் திட்டித் தீர்க்கும் தமிழகத்துக் கவிதா மேதைகளுள் ஒருவர் கூட லிமரிக்ஸைத் திரும்பிப் பார்த்ததாக இல்லை.
இலங்கையர் ஒருவர் கண்டு பிடித்து வெளியிட்ட ஓர் உருவத்தைத் தாம் பின்பற்றுவதா என்ற தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்னவோ! தமிழகத்துக் கவிஞர்களின் பங்களிப்பும் இல்லாததால்தான் 'லிமரிக்ஸ்’ தமிழில் எதிர்பார்த்தளவு அறுவடையைத் தரவில்லை என்று அடித்துக் கூறலாம்.
இலங்கையருள் ஒரு சிலரைத் தவிர,மிகப் பலராலும் பின்பற்றப்படாமல் இருப்பதற்குரிய ஒரு காரணம் வெண்பாவை விடக் கடினமாக இது அமைந்திருப்பதுதான் என்று கூறலாம். தமிழ்க் கவிதா இலக் கணமே மகா க் கடின மென ஒதுக்கிவிட்டுப் புதுக்கவிதையால் போர்த்துக் கொண்டு துTங்கிக் கிடப்பவர்கள் 'லிமரிக்'ஸின் பக்கம் தலை வைத்துப் படுக் காமல் இருப்பதொன்றும் புதுமையில்லைதான்!
தமிழ்க் கவிதா இலக்கண முறையைப் பின்பற்றி, ‘லிமரிக'ஸின் இலக்கணத்தை மஹாகவி இவ்வாறு வகுத்தளித்தார்:
காய் காய் தேமா காய் காய் தேமா ЗБTuЈ ЗБTuj காய் காய்
காய் காய் தேமா
இலங்கையில் மஹாகவியைத் தொடர்ந்து மிகச்சிலரே இவ்வடிவத்தைப் பின்பற்றலாயினர். எம்.எச்.எம்.ஷம்ஸ், கலைவாதி கலில், ஜவாத் மரைக்கார், அல் அஸமத்(ஆகிய நான்) என்போர் குறிப்பிடத் தக்கவர்கள். இளைஞர் சிலர் அவ்வப்போது இதில் ஆர்வம் காட்டுபவர் களகக் காணப்பட்டார்கள். எனினும் இதன் யாப்புக் கடினம் அவர்களையும் தளர வைத்தது 6T60T6) (LD.
இன்னொரு முக்கிய காரணத்தையும் நாம் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். தேமா எனக்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் புகுத்துவதற்குத் தேவையான சொற்கள்
சரியான கருத்துடனும் ஓசையுடனும்
அமைவதுதான் குறும்பாவின் சிரமமும் வெற் றரிக் குக் காரணமுமாகும் . உதாரணமாகக் கம்பி என முதல் தேமா வருமாகில் அம்பி, எம்பி, கும்பி, தம்பி, தும்பி, நம்பி போன்ற சொற்களைத் தவிர் தி தால வேறு சொற்கள் கையாளப்படுவதற்கு இல்லை எனலாம். வேண்டுமானால் இதே ஓசையுள்ள பிறமொழிச் சொற்கள் (எம்பி) கையாளப்பட வேண்டும். அல்லது நண்பி, எண்பி, உண்பி போன்ற சொற்கள் வேண்டும். இவ்வாறான வார்த்தைப் பஞ்சமும் கடினமும்தாம் முக்கிய காரணிகள் எனலாம்.
இந்தக் குறும்பாவைக் கவனியுங்கள்:
ஒரு பாட்டாற் கோலுயர்ந்தே ஆளும் ஒரு பாட்டால் அக்கோலே தாழும் உயர் கவிஞன் நாவினுக்கே ஊரெல்லாம் மெய் நடுங்கும் ஒர்ந்தினிமேல் பாடப்பா வாழும். (பூபாளம்)

செல்வம் கொழிக்கச் சூனியமகற்ற குடும்பப்பகைநீங்கப் பேய்கள் விலகப் பிசாசுகள் ஒடத் திருமணங்குதிர
மந்திரங்கள் செய்வீராம்
பிரிந்தவர் கூடவும் வெளிநாட்டுப்பயணம்
வெற்றிபெறவும் காரிய சித்தியாகவும் தாயத்துத் தருவதுண்டாம்
கஷ்டங்கள் நேராதிருக்க எதிரிகளால் ஏதும் ஏற்படாதிருக்க பரீட்சையில் சித்தியடைய இன்பங்கள் நிறைய இயந்திரங்களும் உண்டென்றறிந்தேன்
இருந்தாற்போல்நிகழும் குண்டுவெடிப்பில் மாட்டிக்கொள்ளாதிருக்க
Checkpoint 36ù 6Ji5g5i துப்பாக்கிகளைத்தாண்டுகையில் தவறுதலாக வெடிக்காதிருக்க
காவல் செய்ய வழியுண்டாயின்
ஆவல் உண்டு அறியத்தருக
SL SLL LS SLS LL LSS LSL LSL LSLS SLS S S S S S S S S S SS SS SSL SSL S SS SS SS ജഖങ്ങ
இக்குறும்பாவில் ஆளும், தாழும், வாழும், என்பன இடம்பெறக் கீழும், கூழும், தேளும், தோளும், பாழும், நாளும், நீளும், வாழும், வீழும் போன்ற பல சொற்களும் ஆலும், ஏலும், காலும், போன்ற பல சொற்களும் மேலும் இருக்கின்றன. ஆனாலும் தேமாவாகக் கையாளப்படும் எல்லாச் சொற்களுக்கும் இவ்வாறாக ஏராளமான ஒத்த ஓசைச் சொற்கள் கிடைக்கும் என்பது நடக்கக் கூடியதல்ல. இதைத்தான் வார்த்தைப் பஞ்சம் என்றோம்.
சொற்கள் ஏராளமாக இருந்தாலும் அவை உபயோகத்திற்குச் சரியாக அமையும் என்றும் சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் வேறு சொற்களை உபயோகத் துக் குறும் பாவைப் புனையவேண்டி வரும். அவை கருத்து மாறிப்போகலாம். வலியப் புனைந்ததாக அமையலாம். இதைத்தான் கடினம் என்றோம். குறும்பாவைப் பொறுத்த வரையில் சொற்களை நம் எண்ணம்போற் கையாளமுடியும் என்பதையும் நாம் ஒரு விதிவிலக்கு இலக்கணமாகக் கொள்ளுதல் அவசியமாகின்றது. மீசை என்ற சொல்லைத் தேமாவின் ஒற்றுமை கருதி மீசி என்றும் கையாளலாம் மீஜை என்றும் கையாளலாம் உதாரணமாக:
நாரெலும்பு தோல்படைத்த நேரம் நடுச்செருக லாய்ப்பிறந்த வீரம்
நம்பகமாய் நாசி நறுக்கிட்ட மீசி
நாரியர் போல் மருதாணிக் கோலம்' (560)LLJIT)
இதே போல வேற்று மொழிச் சொற்களையும் கையாள முடியும் . 2 -95TU600TLDT85:
'ஹிரோஷிமாவின் ஹிரோக்கள் மேமன் இலங்கையிலே புதுக்கவிதை ஓமன் இவர் மேமன் இனமெனினும் இனியதமிழ் வித்துவத்தால்
இதயத்தைக் கொள்ளையிடும் காமன்
(பூபாளம்)

Page 17
மஹாகவி, குறும்பாவின் இலக்கணத்தை ஓரளவுதான் வகுத் துத் தந்தாரே தவிர,'லிமரிக் ஸ்' கவிதையில கையாளப்பட்ட இலக்கணத்துக்குச் சமதையான ஓர் இலக்கணத்தைத் தரவில்லை என்றே கூற வேண்டும். இதை ஒரு தவறு என்றும் கூறி விட முடியாது. மஹாகவி இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை சரிக்குச் சரியான இலக் கணத தை அவரே வகுத்திருக்கலாம். விட்ட குறை தொட்ட குறை என்பதைப் போல, இந்தக்குறை என் னால் ஓரளவுக்கு நிவர் த தி செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது வெளியான என் குறும்பாக்கள் சில இதற்குச் சான்று பகரக்கூடியன.
இக்கட்டுரையின் முன் பகுதியில் தரப் பட்டுள்ள எட்வர்ட் லியரின் கவிதையையும் கொஸ்மோ மங்க் ஹவுஸின் கவிதையையும் கவனியுங்கள். முதலாம் இரண்டாம் ஐந்தாம் அடிகளின் ஈற்றுச் சீர்கள் ஒத்த ஓசை உடையனவாகவும் மூன்றாம் நான்காம் அடிகளின் ஈற்றுச் சீர்கள் ஒத்த ஒசைஉடையனவாகவும் அமைந்துள்ளதைக் காண்பீர்கள். 'லிமரிக்ஸ் அனைத்துமே இவ்வாறாக அமைந்திருப்பதைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.
மஹாகவி தமிழில் (தழுவல்தான்) காட்டிய குறும்பா எதுவுமே இவ்வாறு அமையாமையையும் நாம் காண நேர்கிறது. அவர் காட்டித் தந்த குறும்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளின் ஈற்றுச் சீர்கள் ஒத்த ஓசை உடையனவாக இல லை. இக்கட்டுரையின் முற்பகுதியில் நான் தந்திருக்கும் 'ஒரு பாட்டால்' என்ற குறும்பாவும் 'ஹிரோஷிமாவின்' என்ற குறும்பாவும் அத்தகையதே.
ஆங்கில 'லிமரிக்’ஸ"டன் ஓரளவு ஒத்துப் போக்ககூடிய, அதே நேரம் மஹாகவி தந்த (காய் காய் தேமா.) எனப்படும் வாய்பாட்டுக்கு ஓரளவு அமைய இயற்றப்பட்ட ஒரு குறும் பாவைத் தருகிறோம்;- w
'பளிரென்ற மூக்குக்கண் ணாடி பள்ளத்தே லெனின்,புல்கான் தாடி பர்ரென்னும் மூக்குத்தூள் பலநூல்கள் பேக்குக்குள் பரிதியிதோ வந்துவிட்டார் நாடி' (நடைப்பா)
இதில் மூன்றாம் நான்காம் அடிகளின் இறுதிச் சீர்கள் ஓரளவு ஒத்து வருகின்றன. 'லிமரிக்'ஸின் சரியான இலக் கணத் தை நாம் தமிழரிற் கொள்வதானால் மஹாகவி வகுத்துத் தந்த அதே பாணியில்தான் அமைய வேண்டும். 956öljuqu T85 6060TujLJJ L. (b (501DUT
இது
'ஒருபாட்டாற் கோலுயர்ந்தே நீளும் ஒருபாட்டால் அக்கோலே மாளும் உயர்கவிஞன் நாவில் உலகமொரு கோவில் உதிருஞ்சொல் ஒவ்வொன்றும் ஆளும்
இக்குறும்பாவில் நீளும்,மாளும்,ஆளும் என்பன முறையே முதலாம் இரண்டாம் ஐந்தாம் அடிகளின் ஈற்றுச் சீர்களாகவும் நாவில், கோவில் என்பன முறையே மூன்றாம் ஐந்தாம் அடிகளின் ஈற்றுச் சீர்களாகவும் இயைபுத் தொடைகளாக அமைகின்றன. தேமாவுக்குரிய ஐந்து இறுதிச் சீர்களிலும் ஒரே ஓசையுடைய சொற்களும் வரலாம். உதாரணம்:-
'ஞாலத்தை மிஞ்சுதற்காய் அஞ்சா ஞானியரே முன்புகைத்தார் கஞ்சா நாடிப்போய்த் தஞ்சா நரம்பெலும்பும் எஞ்சா நாசத்துள் புகைப்பவரெம் பிஞ்சா? (பூபாளம்)
குறும்பாவின் ஈற்றுச் சீர்கள் தேமாவில் SD 60) to & & LJ Li L– வேண்டியிருப்பதால், அதிலும் ஒத்த ஓசையுடையனவாக அச் சொற்கள் அமைக்கப்பட வேண்டியிருப்பதால் சொற் பஞ்சம் ஏற்பட இடமுண்டு என்பதை முன்னரே கூறினோம். இதை ஓரளவு ஈடு செய்யக் கூடிய ஒரு வழியும் உண்டுதேமாச் சீர்களை உபயோகிப்பதைப் போலவே புளிமாச் சீர்களையும் நாம் தாராளமாக உபயோகிக்கலாம் என்பதுவே அதுவாகும்.

இதனால் சொற்பஞ்சம் கணிசமாகக் குறைந்து விடுகிறது. பூபாளம் காலாண்டுக் கவியேட்டின் 1983 ஏப்ரல் இதழில் இதுகுறித்து ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன். இதற்கு உதாரணமாக ஒரு குறும்பாவைத் தருகிறேன்:-
'உன் செலவு போகவுள்ள வருவாய் ஊரவரின் சொத்தாகும் அறிவாய் ஒழித்தனை நீவைத்தால் ஓரிறைவன் உனைநரகில் ஒடுக்கிடுவான் தானஞ்செய் விரைவாய்,
(வானொலி)
இந்தக் குறும்பா மஹாகவி தந்த இலக்கணத்தின்படி ஆனான் புளிமாச் சீர் ஈற்றமைய அமைந்த ஒன்றாகும். நாம் முன்னர் கண்ட 'லிமரிக்ஸ் இலக்கணப்படி அமையக் கூடிய புளிமாச் சீர்க் குறும்பாவுக்கு உதாரணமாக இதைத் தருகிறோம் :-
'ஆத்மீகம் லெளகீகம் இரண்டும்
அடங்கலுறும் துறையெலாமே வருந்தும்
அகிலத்துக் கன்னார்
ஆயவழி சொன்னார்
அ.தெங்ங்ண் ஒருவருக்கே பொருந்தும்?
(இஸ்லாமிய சட்டங்கள்)
மேலும் ஒரு புது வகையான குறும்பா வையும் 1983 ஏப்ரல் பூபாளம் இதழில் நான் அறிமுகப்படுத்தியிருந்தேன்
தமிழ்க் கவிதைகளின்சக்கரவர்த்தி வெண்பா என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ்க் கவிதை இலக்கணத்திலேயே மிகக்
கடினமான இலக்கணத்தைக் கொண்ட பாதான் வெண்பா, பெரும் பெரும் புலவர்களும் வெண்பாவில் சறுக்கி விட முடியும். வெண்பா யாப்பின் துணையுடன், அதாவது வெண்டளைகளில் குறும்பா இயற்ற முடியும். அதற்கு வெண்குறும்பா என்றும் பெயரிடலாம். எப்படி வெண்பாவில் தளை தட்டும் பிழை ஏற்படுமோ அப்படியே இதிலும் ஏற்பட இடமுண்டு. இதன் இலக்கணத்தை இவ்வாறு வகுத்துக் GibsT6iT6T6)ITLD:-
?? !!! m ہیلر
கருவிளங்காய் அல்லது கூவிளங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமா.
இதற்குரிய உதாரணம்:
எம்மவரின் ஆக்கங்கள் காணார் எமையெம்முன் தாழ்த்திடவும் நாணார் இலங்கைக்குள் வந்தவுடன் எப்படியும் பேசித்தம் இல்லாமை சாற்றுகிறார் பூநார்!
சரியான லிமரிக்ஸைப் பின்பற்றிப் புனையப்பட்ட இலக்கணம் இவ்வாறு @lങ്ങഥിgg
கூவிளங்காய் அல்லது கருவிளங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா
Sd.g5/Ty600135 (5g) busT:-
புதுக்கவிதை என்பதெல்லாம் என்ன புதிதாகச் சொல்வதுவே சொன்ன புதிர்களையே மீண்டும் புரட்டுவதால் ஈண்டும் புதுக்கவிதை மரபாகும் மன்ன!
வெண்குறும்பாவில் புளிமாச்சீர் இடம்பெறாது என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
ஆர்வத்துடன் இத் துறையில் ஈடுபடுபவர் கள் எதர் காலத் தரில் தோன்றுவார்களானால் மேலும் பல குறும்பாப் பரிணாமங்கள் தோன்றுவதற்கு இடமுண்டு.
யாத்ரா-1 வெளியீட்டு விழாக் கவிபரங்கக் கவிதைகள் அடுத்த இதழிலிருந்து பிரசுர மாகும்
SLSLLLSLLSLLSL0SLLSLLSLSLLSL LSSLLSSLLSSLSLS SLSLSLSLSLS SSSS ஆசிரியர்

Page 18
நிலவைக் காணாதவள்
இக்பால் உனக்கோர் இனிய மகனி Uறந்தானி அற்புதமாய் உணர்போல் அழகாய் அவனர் திகழ்ந்தான் செப்பமாய் உணர்மகனைச் சீராய் வளர்த்தெடுத்து இப்பாரை வெல்ல எண்ணி இருந்திருப்பாய்
எனினை விடவும் ஏற்றமுள்ள ஒருUறப்பாய் உணர்மகனை வளர்த்து உயர்த்த நினைத்திருப்பாய்
பரிள்ளை Uறந்தவுடனர் பரிரியமாய்க் காதுகளில் வாங்கோதி நானும் வழிகாட்ட நினைத்திருந்தேனர்.
32)- お着姿むだ 巻
 

விண்ணில் தோன்றுகினர்ற விடிவெள்ளி போலவனர் மணிணில் Uறந்து சில மணித்தியால மாவதற்குள் கணிணிரில் மூழ்க வைத்துக் கண்மணி போய்விட்டானர் அணி புள்ள உணர்ஜாUர்னா அழகுநிலா காணாமல் துணர்ப இருளுக்குள் துடிக்கினர்றாள் என்னசெய்வோம்
திருமணம் நிழழத்துத் தினம் பத்து ஆவதற்குள் வெறிபரிடித்த ஒருசிலரால் வேதனை மிகப்பட்டாய் பொனினான உணர்மனையில் புதுத்தேனை உண்ணவிடா உணர்னைப் Uரித்து உவகை அடைந்தார்கள்
Uனர்னால் இணைந்து பிறந்தஉணர் செல்வத்தை அல்லாஹற் பறித்தானர் அதுவுமொரு சோதனைதானர் வேதனைக்குள் ளேதானி விழவும் இருக்கிறது
கல்முனை மண்ணைக் காதலித்து வளர்ந்தவர் நாம் இல்லை இந்நாட்டில் இருக்கும் இடமெல்லாம் சொந்தமென எமக்குச் சொல்லுதற்கா உணர்மகனைக் கணி டி2 நகரிலே கருவிழியாளர் Uரசவித்து அந்த மண்ணுக்கே அர்ப்பணித்து விட்டுவந்தாளர்
கணர்டி செல்லும் போதெல்லாம் கணிமணியினர் நினைவுவரும் நின்றுசெல்வோம் எல்லா நிலங்களையும் நேசிப்போம்
எங்கள் உடலுமினி எந்த நிலத்துக்குச் சொந்தமென எங்களுக்குச் சொல்ல முடியாது
எல்லா நிலங்களையும் இனிநாங்கள் நேசிப்போம்
அன்பு முகையதன்.

Page 19
புதிய நூற்றாண்டில் இலங்கையில் வெளியான முதல் தமிழ்க் கவிதை இதழ் என்ற பெருமையுடன் மலர்ந்திருக்கும் யாத்ராவின் வெளியீட்டு விழா கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் கவியரங்காக நடைபெற்றது. 12.2.2000 அன்று பிற்பகல் 4.30க்கு ஆரம்பமான விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐ.எம்.இல்யாஸ், அலி ஸாஹிர் மெளலானா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
கவிஞர் அல் அஸ”மத் தலைமை வகிக்க கவிஞர்களான இளநெஞ்சன் முர்ஷிதீன், எஸ்.நளிம், கிண்ணியா அமீர் அலி, எஸ்.எச்.நி.'மத், கலைவாதி கலில், மேமன் கவி ஆகியோர் கவிதை வாசித்தார்கள். நிகழ்ச்சிகளை அறிவிப்பாளரான கவிஞர் அஸ்மி ஸாலிஹற் தொகுத் து வழங்கினார் . இலக் கசியவாதிகள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதற் பிரதியை புரவலர் அல் ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்களுக்குப் பதிலாக அவரது செயலாளர் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை குடிவரவு குடியகல்வு அதிகாரி ஜனாப் எஸ்.எல் மன்ஸன். வர்த்தகப் பிரமுகர்களான ஜனாட்கள் ரம்ஸி ரியால்,முகம்மட் தாஹிர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழா மாலை 700 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
விழாவின் சிறப்புக் குறித்தும் யாத்ரா குறித்தும் தலை நகரில் நடந்த வித்தியாசமான ஒரு வெளியீட்டு விழா என்ற தலைப்பில் 20.02.2000 அன்றைய நவமணி'யில் இதய கனி, ஒரு வரவேற்புக் கட்டுரை எழுதியிருந்தார்.
OOO
கொழும்பு மஹாநாம கல்லூரி மாணவன் சித்தீக் ஏ. அக்பர், ஆங்கிலக் கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுதியொன்றை வெளியிட்டுள்ளார். கவிதைத் தொகுதிக்கு THE ECHO என்று பெயரிடப்பட்டுள்ளது. முட்பது கவிதைகளை அடக்கிய இக்கவிதைத் தொகுதி ஐம்பத்து நான்கு பக்கங்களைக் கொண்டது. கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவரான சித்திக், ஆங்கிலக் கவிதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றவர். சித்திக் மேலும் பல கவிதைகளைப் படைக்க நமது வாழ்த்துக்கள்.
* おだ姿が溶 ? ー 大
 

அமரர்.நீலாவணனின் அவர்களைப் பெற்றதால் கிழக்கு எப்போதும் பெருமைப் படுவதுண்டு. நீலாவணனின் "வழி" என்ற கவிதைத் தொகுதி 1976ல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் பின்னர் 'வேளாண்மை' என்ற காவியம் வெளியிடப்பட்டது.
பத்திரிகைகளில் பிரசுரமான கவிதைகள் சில தொகுக்கப்பட்டு இன்னுமொரு கவிதைத் தொகுதி விரைவில் வெளியாகவிருக்கும் இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. இதற்கான காரியங்களில் துரிதமாக இறங்கியிருக்கிறார் நீலாவணனின் புதல்வரும் சக்தி ஒளிபரப்பு:ஒலிபரப்பு அதிகாரியுமான எஸ்.எழில்வேந்தன். இதனைத் தொடர்ந்து நீலாவணனின் வெளிவராத மற்றும் பல இலக்கியப் படைப்புக்களையும் நூலாக்க இருப்பதாக அவர் யாத்ராவுக்குச் சொன்னார். நீலாவணனின் படைப்புக்களைப் பாதுகாத்து வைத்திருந்தமைக்கும் அவற்றை இலக்கிய உலகுக்கு நூலுருவாய்த் தருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குமாய் எழில் வேந்தனுக்கு யாத்ரா பாராட்டும் நன்றியும் சொல்கிறது.
OOO
"இலக்கியத்தால் இணைவோம' என்ற கொள்கையுடன் அரசியல் சார்பற்றதாக ஓர் புதிய தனித்துவமான இலக்கிய அமைப்பு 'இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வமையம் என்ற பெயரில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் இலங்கையரின் இலக்கியங்களையும். இலங்கை முஸ்லிம்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களையும் ஆய்தலும் ஊக்குவித்தலும், இலங்கை முஸ்லிம் சமூக பொருளாதார,கலை,கலாசார,பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் படைப்புக்களை ஆய்வு செய்வதும் மேம்படுத்துவதும், தகுதி வாய்ந்த படைப்பாளிகளை கெளரவித்து ஊக்கப்படுத்துவதும் இவ்வமையத்தின் நோக்கங்களாகும்.
கலை இலக்கியத்தோடு தொடர்புள்ள பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமியரான ஆண் பெண் இருபாலாரும் அங்கத்துவம் பெறலாம். இவ்வமைப்பு - 19, Fountain house Lane, Maradana, Colombo.10 - 616 m) முகவரியைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகிறது.
®-- και η αρή και , ---- ہیلر

Page 20
வேண்டப்படாத பிரமைகளோடுதான் அதிக நேரங்கள் இன்று கழிந்து செல்கின்றன பாதிரொட்டிக்காய் இரைதேடும் வயிற்றில் உப்பு நீர் நிறைந்த கதை உங்களுக்குத் தெரியுமா
பிரபஞ்சப் படைப்புக்களில் நாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மானுடவறுமையின் அத்தியாயமானவர்கள்
மரக்குதிரைகளாய் எங்களை யாரோ பயணிக்கச் சொல்கிறார்கள் கால் பெரிதென்று செருப்பின் அளவுக்காய் வெட்டி எடுக்ககத்திகளோடு வருகிறார்கள்
எரிந்த கூரையாய் இன்று வரைக்கும் வெளிக்காமல் போனது எங்களுடைய கிழக்கு அதுபோலவே புழுதியின் பொழுதுகளூடே பூச்சியமாய்க் கழிகிறது வாழ்வு
அக்கினி பிழத்து அத்தனை முகாம்களும் சாம்பலைத் தந்ததும் கண்ணிர் வழய மணல்மேடுகளில் தாய்ப் பாதம் கசியவெங்காயம் வெட்டியதும் உப்Uளக் கரைகளில் மூட்டை சுமநடததும் அப்பப்பா அதை எப்படி மறப்போம்
சின்ன இதயங்களையும்
அகதிகள் என்று கண்டி விடும்போது எண் போன்றபேனாக்களும் அழுதுவிடவாம
ஆகவே அதிகம் அதிகமாய் உரிமைகளுக்காகவே எழுதித்தள்ளுவோம
SLLLL 0 LLLL LLL LLLL C C CCCCCCL L0 0SL C CC 0C C LSLCC CS 0L 0 C L SLL SLCLSSS S C CSLLL LLLL CSL0 LSL உவைஸ் கனி
 

கச்சங் கொல்லைக்குள் கவ்வாப் பந்தடித்து
முக்காடியப்பாக் காட்டுக்குள் காற்பந்தடித்து
விதானையப்பா பார்த்திருக்கக் கரப்பந்தடித்து
தாண்டாணிக் குளத்தில்
வெள்ளை இரவுகளில் வெற்றிலைக் கொடி விளையாடி
பூக்கொட்டி குஞ்சொளித்துக் கொட்டும் மழை முடிய கோடு பாய்ந்து
2ளரி பொறுக்கி மணல் குவித்து உவகையுடன் பாண்டியாடி
கிழக்குத் தொங்கல் தைக்கா முன்னும் மேற்குத் தொங்கல் பூவரசின் கீழும்
கட்டை o bülạës BruLDT
கிட்டிக் கம்படித்துக் கிளித்தட்டுப் பாய்ந்து
சீட்டுக் கட்டில் முன்னூற்று நாலாடி
சில வேளை தாம் விளையாடி
ம். ஹ9 ம். அந்த முகங்களுக்கும் இந்த முகாம்களுக்கும்
எங்கள் இழப்புகள் எங்கே தெரியப்போகின்றன.?

Page 21
சங்கப் பலகை ஆரோக்கியமான பத்தி. முதுசொம்களையும், சமூக எழுச்சியில், இலக்கியத்தில், தமிழ்பேசும் உலகிற்குத் தொண்டு செய்த பேராற்றல் மிக்கவர்களையும் இன்றைய JAI தலைமுறையினர் அறிந்து கொள்ள நல்லதொரு சாளரம். 2 f யாத்ராவின் தொடர் வருகையில் மிகுந்த நம்பிக்கை ஏற்படும் விதம் அதன் ஆசிரியர் குழுவின் அயரா உழைப்பும் முயற்சியும் முதல் இதழிலேயே நன்றாகப் புலப்படுகிறது.
கவிதை பற்றிய கருத்து முரண்பாடுகள் அனேகம் உள்ளன. எது உண்மையான கவிதை என்பதிலெல்லாம் அவரவர் சிந்தனைத் தளத்தில் நின்று மோதிக்கொள்வர்.எனினும் வாழ்வோடு பேசும் எல்லாக் கவிதைகளிலும் ஓர் உயிர்ப்பசை இருக்கும். அது காதலாக, துன்பமாக, ஏமாற்றமாக, தோல்வியாக, தேம்பியழும் நெஞ்சின் விக்கலாக, இழந்து. விட்ட பரிதவிப்பின் ஒப்பாரியாக, இப்படிச் சகல ரூபத்திலும் அந்தக் கவிதைகள் பேணிப் பாதுகாக்கப்படும். அது அடுத்த நூற்றாண்டிலும் நினைவுகூர்ந்து பேசப்படும். வங்கக் கவிஞர் தாகூரின் கலகக் கவிதை போல எழுச்சியுடன் பாடப்படும். பாரதியைப் போல் வீர்யத்துடன் நிமிர்ந்து நின்று காலங்காலமாய் ஜோதி போல் நவகவிதை இருப்புக் கொள்ளும்.
அர்த்தமுள்ள அழுத்தம் மிகுந்த ஒரு கவிதைப் பரப்பை யாத்ரா உருவாக்க வேண்டுமென்பதே எமது எண்ணம். நமக்குத் தேவை சிலுசிலுப்பல்ல, அலங்காரமல்ல, நமது வாழ்வோடு பேசுகின்ற நம் மனதைத் தேற்றுகின்ற இன்றின் கவிதைகளே. அவற்றை நிச்சயம் யாத்ரா தரும்-தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓட்டமாவடி அறபாத் கொழும்பு-8
ஒரு பாரிய பணியைத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிரார்த்திக்கிறேன். சாதனை புரிவோரைச் சரித்திரம் ஒருபோதும் மறப்பதில்லை.
அன்பு முகையதின் A
கல்முனை
நல்ல முயற்சி சிறந்த பலனைத் தரும் என்று நான் நம்புகின்றேன். மரங்கள் தோப்பாகும் போது, சிறு துளிகள் வெள்ளமாய்ப் பெருக்கேடுத்து ஓடும் போது. எறும்பு தன்னை விடப் பெரிய பொருளை இழுத்துச் செல்லும் போது நமக்கு மட்டும் ஏன் அந்த நம்பிக்கை அற்றுப்போக வேண்டும்?
முயற்சி செய்வோம். சின்னச் சின்னத் தடைகளை எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட்டாலும் தளராமல் அடியெடுத்து வைப்போம். நிகழ்காலம் இருளாயிருந்தாலும் எதிர்காலம் வெளிச்சத்தில் இருக்கிறது.
கவிப்பிரியன் நாச்சியாதிவு
και η έρη και - 大

தலைப்பு எழுத்துக்கள் அணிவகுத்து யாத்திரை போவது போல் அமைந்திருப்பது அற்புதம், அட்டைப் படம் தனியழகு. இப்போதைக்கு எனக்குத் தெரிவது முட்கம்பியில் புறாச் சிக்கவில்லை.
முட் கம்பிதான் புறாவிடம் சிக்கியுள்ளது. கம்பி இடையிடையே அறுந்தும் கிடக்கிறது. அனைத்துக்கும் அர்த்தமிருக்கும். அறிவேன்.
எஸ்.எம்.தலிபா மிராவோடை.4
யாத்ரா இதழ் கிடைத்தது. தலையங்கத்தைப் படித்த போது, எவ்வாறோ உடன்பாடற்ற கருத்து எதையும் ஏற்கும் நிலையில் யாத்ரா உள்ளதா என்ற ஐயமே எழுந்தது. கவிதைக்கான இதழ் ஒன்று வருவது அவசியமா இல்லையா என்பது ஒரு கேள்வி. ஆனால் ஒன்று வருகிறது. அது நல்ல விடயம். வரவேற்கவும் ஊக்குவிக்கவும் விரும்புகிறேன்.
நிலா முற்றங்கள் எல்லாருக்குமானவை என்று அதற்குப் பொறுப்பானவர்கள் சொன்னாலும் மனதார விரும்பினாலும் எல்லாருக்கும் பொதுவான நிலாமுற்றங்கள் குறைவு ஏன் இல்லை என்றே கூடச் சொல்வேன். ஒவ்வொரு நிலா முற்றத்திலும் பலர் கூடுகிறார்கள். ஆயினும் காலப்போக்கில் ஒவ்வொரு நிலா முற்றமும் ஏதோ வகையான அடையாளத்தைப் பெற்றுவிடுகிறது. சிலவற்றுக்கு இடையில் ஒருகால் வந்து போக முடிகிறது. சிலவற்றில் ஒரேயடியாகவே தங்கி விட முடிகிறது. சிலவற்றை நெருங்கவே மனம் வருவதில்லை. நிச்சயமாக யாத்ரா இறுதி வகையானதாக இராது என நம்புகிறேன்.
படங்கள் எல்லாம் நளிமுடைய கைவண்ணமென்று நினைக் கரிறேன் . யாதி ராவில் வந்துள்ளவை நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன. இனி இன்னுஞ் சிறப்பாகவும் வரும் என்ற எதிர் பார்ப்புடனும் இனிய நல வாழ்த்துக்களுடனும்.
சி.சிவசேகரம்
6):5Ո(լքլճւլ 3
பட்டுக் கத்தரித்தாற் போலும் செய்நேர்த்தியுடன் வந்திருந்த யாத்ராவைப் பார்த்து அதிசயித்தேன். ஆம் அதிசயித்தேன். யாத்ரா கவிதைகளைத் தாங்கி வந்த கவிதை, கவிதைக்கு உயிருண்டு. அதற்குரிய மரிதையுடன் அது பிரசுரிக்கப்படும் போது கவிதை ரசிகன் நெகிழ்ந்து விடுவான், மற்றொரு கவிஞன் எழுத ஆசைப்படுவான்.
சந்தேகமில்லை, நீங்கள் நல்ல கவிதைகளை முதல் இதழிலேயே இனங்காட்டியிருக்கிறீர்கள். அர்த்தமில்லாத வசனங்களும் உயிர்த்துடிப்பற்ற வார்த்தைகளுமாய் எழுதி கவிஞன் என மார்தட்டிக் கொண்டிருக்கும் பலரிலிருந்து நீங்கள் வேறுபடுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
2 - -- wurder: ? --®፭ (39)

Page 22
அடிமை
இந்த வரிஷம் கோலாகலமா நடந்துச்சு வீரபாண்டி கோவில் திருவிழா
நாக்குல அலகு குத்திக்கிட்டு ஊர்வலமாக வந்து நேத்திக் கடன் செலுத்தினாரு மாணிக்கக் கோனாரு
திருவிழாப் பாக்கிறதுக்கு சிங்கப்பூர் லந்து அம்பலகாரர் பையன் வந்ததிருந்தாக (சிங்கப்பூர் போறதெல்லாம் இப்ப மெட்ராஸ் மாதிரி ஆகிரிச்சி அப்பே)
ஓடிப்போயி கல்யாணம் பண்ணிகட்ெட மகேசுவரி (கிழத் தெரு சின்னையா மக) மினுக்கிக் கிட்டு வந்து புள்ளைங்களோட கொட ராட்னம் சுத் துனத ஒளருே அதிசயமா பாத்துச்ல
காத்தரிச் சாம்பட்டி ஆசாரி விட் ல நாலு ஆடு அடிச்சி சோறாக்கிப் போட்டாக மாரியப்ப வாத்தியாரு கூட வந்து சாப்ட் டுட்டுப் போனாரு
வல்லத்திரா கோட்டை பொரியையாதான் ராஜபார்ட்டு கண்டரமாணிக்கம் மல்லிகாதான் வள்ளி பழையபாட்டும் புதுப்பாட்டும் கலந்து கலக்கிப்புட்டாகல்ல நாடகத்த
(என்ன இந்த ஆர்மோனியக் காரன்தான் சரியில்ல தண்ணியப் போட்டுட்டு வந்துட்டான் எடுபட்ட பய}
とおな姿むだ 巻 *

奪え
வக் காளி ஏம்பாடு தேவல ஒரு காலு சூம்பியிருந்தாலும்
கேந்திக் கேந்தியாவது வருஷா வருஷம் திருவிழா பாத் துர்றேன்
ஜானகி அக்காவ நெனச் சாத்தான் பாவமாயிருக்கு சடங்காயிட்டான் னு சாக்குச் சொல்லி போன வருஷம் வரைக்கும் விடல தாலியறுத்திட்டாள் ஒனு சொல்லி இந்த வருஷமும் விடல
மா.காளிதாஸ். o ao as o u u m e ao e SLSS S SLSSSS SSLL SSSLL SS SSLSSLS SSLS SS SSSS SSSL S SSSS SSSSSSSSSSSLSSLLSSLL S LSL
நன்றி: சுந்தர சுகன்

Page 23
பிரசுரம் பெறாத கவிதைகள்
கவிஞர் ஏ.இக்பாலின் பிரசுரம் பெறாத கவிதைகள்கவிதை நூல் தர்ஹா நகர் படிப்பு வட்டத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. 68 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 30 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும் அனுபவமும் மிக்க இக்பால் ஏற்கனவே ஒன்பது நூல்களை எழுதியிருக்கிறார். ஓயாத வாசிப்பும் சலியாத எழுத்துமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இம்மனிதர், 'எனது மனவுணர்வு, நான் வாழ்ந்தகால உலகப் பின்னணியில் மிகவும்நனைந்துவிட்டது. அந்த ஈரந்தான் இக்கவிதைகள்' என்கிறார். நூலின் விலை: 80.00 ரூபாய்கள்.
ஏ.இக்பால் றிபாயா மன்ஸில் தள்ஹா நகள்
ஓ.பலஸ்தனமே!
கலைத்துறையில் பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு நதியான கலைவாதி கலீலின் மற்றுமொரு கிளையாறு, x ஓ.பலஸ்தீனமே! என்ற கவிதை நூல். நஜி அல் அலி என்ற பலஸ்தீன தூரிகைப் போராளியின் சித்திரங்களுக்கு எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய இந்நூலை மன்னார் வாசகர் வட்டம் வெளியிட்டிருக்கிறது. நஜி அல் அலி தனது கருத்துக்களை வெளிக்கொணரப் பயன்படுத்திய ஹன்ஸல்லா என்ற சிறுவனின் கூடாள்த்த சித்திரம் ஆத்மாவைத் தொடுவது. பதினான்கு சித்திரங்களுக்கு பத்திரிகையில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது விலை: 7500 ரூபாய்கள்.
கலைவாதி கலில் 3.ஹொரண வீதி எலுவில,பாணந்துறை
கவிஞர் ஜின்னாவின் இரட்டைக் காப்பியங்கள்
ஓ7 ஆய6/
ஆயிரக் கணக்கான வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஹஸன் அவர்களின் மஹ ஜபனி , புனித பூமியிலே ஆகிய வரவாற்று நாவல்களைக் | காவியமாக்கியவர் கவிஞர் ஜின்னாஹற் சரிபுத்தீன், அவற்றை நூற்று நான்கு பக்க நூலில் ஆய்வு செய்திருக்கும் கவிஞர் அகளங்கன், கவிஞர் கண்ணதாசனின் மாங்கனி, யேசுகாவியம், சாரண பாஸ்கரனின் யூஸ"ப் ஸ"லைஹா, அல்லது க.தி. சம்பந்தனின் சாகுந்தல காவியம் ஆகியவற்றுக்கு எந்த வகையிலும் இக்காவியம் குறைந்ததல்ல என்கிறார். அட்டையில் சுல்தான் ஸலாஹத்தின் தெரிகிறார். விலை:100.00 ரூபாய்கள்.
அன்னை வெளியீட்டகம்
16, ஸ்கூல் அவெனியூ தெஹிவளை.
 
 
 
 

لاہور
பிணப் புதையல்களுக்குள்ளும் எலும்புக் குப்பைகளுக்குள்ளுமாய் இது நிர்ப்பந்த ஜீவிதம்
இங்கே உயிருக்கு அதிகம் பயப்படவேண்டியிருப்பது ஆயுதபாணிகளை விட நிராயுதபாணிகள்தான் V இந்த இரு தசாப்தத்தில் அதிகம் இறந்தது பொது மக்கள்தானே
அன்றாடம் இலக்கில்லாது வரும் புல்லட் டின் இலக்கிற்குத் தப்பிப்பதே பெரும் பாடாய்ப் போகிறது இங்கே புல்லட் பயணிக்காத வெளிகளில்லை காற்றில் எல்லாம் அதன் காலடிகள்
எனக்காகக் காயப் பட்டுக் கிடக்கும் எனர் வீட்டுச் சுவர்கள் சாட்சி பலமுறை நான் படுத்துக் கொண்டதாலும் ஒளித்துக் கொண்டதாலுமே உயிர்தப்பினேன் என்பதற்கு
இங்கு இரவு வரும் விம்மி அழுது விழித்திருக்க பகலும் வரும் ஒப்பாளி வைத்து இறந்தோரைப் புதைக்க
ஆக ராசாத்தி யுத்தம் பறித்த எனர் உறவினரை
சொத்து சுகத்தைக் கேட்கவில்லை நிவாரணமும் நஷ்டஈடும் கோரவில்லை
நீ சொன்ன சமாதானத்தை
கொஞ்சம் சமைத்துத் தா நாங்கள் மீளத் துளிர்க்க
எளப், நளிம்.
(விரைவில் வெளிவரவுள்ள "கடைசி சொட்டு உசிரில்" என்ற நூலிலிருந்து)

Page 24
நிந்ததாசன்
༽
இந்தத் தவிப்பில் பனி விழாதா
வாள் கூர்தான் இதய வீடா
வியர்வைக்குப் பதிலாக செந்திரவம் உதிர்கிறதே
துயரக் கொடி
சிகரத்தில் பறக்கிறது
மதங்கள் முள் வேலிகளா
« ζ
பிண மாரிக்குள் தேசம் மூழ்கிக் கொண்டிருக்கிறது
புன்னகை வேலி கேட்டு தீவு தவமிருக்கிறது
ஆயுதக் காற்றில் உயிர்கள் இலைகளாகின்றன
இந்த நாவு தேனுக்காக காத்திருக்கிறது
தேனீக்கள் சேர்ந்தால்தான் இங்கே இனிப்புக் கசியும்
விரல்களையே சிதைத்து விட்டு கை என்பதா
இப்படியென்றால் சுமைகள் எப்படி சுகமாகும்
)--
பாதைகளை மூடிவிட்டுப் பயணம் செய்வதா
சிதைந்து போன வசந்தத்தைச் செப்பனிடு
புதைந்து போன ரத்தினத்தை அகழ்ந்து எடு
இந்தப் பெளர்ணமி இருட் போர்வைக்குள் கிடக்கிறது
இந்தச் சோலைக்குள் தீ முளைத்திருக்கிறது
ஒரு விளக்கு ஏற்று
ஒரு வாளித் தண்ணி ஊற்று
இந்தக் கவிதைக் கழுத்துக்குக் கத்தியா
இந்தப் புவி விதையின் முகத்திற்குத் துப்பாக்கியா
ஒரு மாலையிடு கழுத்துக்கு
கால நிலை கொடு இந்த விதைக்கு
இங்கே
வெள்ளை விருட்ச நிழல் விரைவாகத் தேவைப்படுகிறது.
 

கான் பேசாதிருப்பதனால்
క్ట్సోళ్ళ இன்னிமல்யன்றோ موسمعتهه کچgngنہluھی نجی تorطہجہ
ఖగీ எர்ண்ணிஷ். வேண்டிாம்
தையெல்லாம் விலைபேசுவது 8
விற்றுச் சம்பாதிப்பது. శాక్కా
வியாபாரிகள் தொழில்
வாழ்வை - உரிமைை
எந்த விலைக்கும் என்னால் விற்க முழயாது
ஐத்தைக்கக்கியபடி Gulf பார்ன்விக்கு"அழகாய் நெளியும் பாம்புகள் நீங்கள்
முட்களோடுதான் என்றாலும் ரோஜாவாக ஜூவிப்பவள் நான்
அனார். ... . . . . . . . . .
もおな姿が* 登 —®

Page 25
யாத்ரா வெளியீட்டு விழாக் காட்சிகள்
Zg/
:ጀ &
3:
அலி ஸாஹிர் மெளலானா (பா.உ) டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் (பா.உ)
(அதிதிகள் உரையாற்றுகின்றனர்)
கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்
GO- 9な姿gた 巻
 
 
 

பெறும்
: : :
ஹாஜி ஹாஷிம் உமர் சார்பில் ஜனாப். ரம்ஸி ரியாழ்
ஜனாப்.எஸ்.எல்.மன்ஸர்
தலைமை உரை གྱི་ நிகழ்ச்சித் தொகுப்பு அல் அஸ்மத் அறிவிப்பாளர் அவர்கள் அஸ்மி ஸாலிஹற் சஞ்சிகை ஆசிரியர்
யாத்ரா வெளியீட்டு விழாக் காட்சிகள்
なおrr勢が資 惣
ار

Page 26
நண்பர் இலக்கியக் குழ
யாத்ரா 3 ༠9...་
வாழைச்சேனை.
எம்.எச்.எம்.ஷம்ஸ் மு.பொன்னம்பலம் சோலைக்கிளி 72 S.
QLLLDIT6)l19 9 BUT5 இப்னு ஜிப்ரி ஆசிரியர் கிண்ணியா அமீரலி அஷ்ரஃப் சிஹாப்தீன் ஏ.எஸ்.எம்.நவாஸ அஸ்மி ஸாலிஹற் துணை ஆசிரியர்கள ஓட்டமாவடி இஸ்மாயில் வாழைச்சேனை அமர் நாச்சியாதீவு பள்வீன் ஏ.ஜி.எம்.ஸதக்கா இன்னும் பலர்
எஸ்.நளிம்
ஒவியங்கள்
யாத்ரா ಲೆಕ್ಹ LT சந்தாதாரராகி விடுங்கள்.
Lju66f பிரதிகள் உங்கள் முகவரிக்கு உரிய வேளை வந்து சேரும்.
தொடர்புகள்
வருடச சநதா ரூ.100வுககான YAATHRA காசுக் கட்டளையை 37, DHANKANATTA ROAD, MPSADHATH
WAT TALA FAX: 01-939239 தபால் கந்தோரில் மாற்றத்தக்கதாக அனுப்பி வைக்கலாம். VS
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக மஹபாகே சென்.மேரீஸ் றோட் அல் அஸ9மத்தினால் அச்சிடப்பட்டு ஹதா றோட், வாழைச்சேனையில் வசிக்கும்
ஏ.ஜீ.எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
 

ш п55 у ня
நண்பர் கிலக்கியக் குழுவினருக்கும் கவிஞர்களுக்கும்
நல் வாழ்த்துக்கள்
6
AAMA/NAZ 7 COAMAMUNICA7/ONV KEKIRA MWA ROAD GA NEVMVALPOLA
With The Best Compliments From
MASTER CHOICE
187/G/7, 2nd CROSS STRET COLOMBO-11
TeI: 342737

Page 27
A.c. MoHAME
ROCOD N
importers of ball Stationary &
120 /15, Sri Scudd Mcalige
COLOM
SRI L
Te: 677485

D
D MVNAMER
RDRSS
point pens Refills, School items
arma Mawatta, watte, BO - 1 0
ANKA
Fax: 075 341766