கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1997.05

Page 1
ElLIS
மாதாந்த நிகழ் e T9
உலக வாழ்க்கை
6)
• 06)Ö)
(6)6)
 

ᏧbᏛᎧᎸlᏧ5Ꮷ5ᎢᏧ| ழ்க்கைக்காக

Page 2

மரம் களில் கறையான் தொட்ட மரம் ந்த சருகும். அற்ற மரம் ர்த்தது என்று ஊரேசேர்ந்தது றும் வேகமாய் சனத்துடன் கலந்தேன்
புதம் என்று ஒருவன் சொன்னான் சயம் என்ற மற்றவன் சொன்னான் எனும் பின்னும் இது நிகழாது று ஒருவன் வரையறை செய்தான்
போற் புதினம் நிகழ்ந்தே இல்லை று ஒருவன் உறுதி கூறினான்.
ம் திரண்டது கசமுச. கசமுச. பர்கள் கூடினர் படங்கள் எடுத்தனர். பதி பறந்தது வெளியூர்க்காரரும் து சேர்ந்தனர் கம் இட்ட எச்சிலில் இருந்து பங்கொட்டை முளைத்து உள்ளது ர்த்தனமாக ஒருவன் உண்மையை புவித்ததால் ம் கலைந்தது.

Page 3
கலாச்சார அரசியல் தலையீடு பற்றிய ஓர் ஆய்வு.
- கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன வளர்ச்சியடைந்த ஜனநாயக வரம்பிற்குள் அரசினதும் (அரசியல் சமூகத்தின்) சிவில் சமூகத்தினதும் இயல்பை, மேற்படி அமைப்புகளுக்கிடையேயான உறவுகள் பற்றிய ஒப்பியல் ஆய்வின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும், அரசு மதச்சார்பற்ற அமைப்பு என்பதையே இது வலியுறுத்துகின்றது. சமூகத்தின் பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கும், சமூகக் குழுக்களுக்குமிடையிலான தொடர்பு, மானுட ரீதியான, நியாயமான, சமூக ஒடுக்குமுறை அற்ற, சமத்துவம் கொண்ட தன்மையாக இருத்தல் வேண்டும். இதனை உறுதிப்படுத்துவதில் அரசின் மதச்சார்பற்ற இயல்பு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அரசு பற்றிய கோட்பாடும், சர்வதேச நடைமுறையும், இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
அரசு மதச்சார்பற்றது என்ற எண்ணக்கரு சமூக வாழ்வு தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான நிலைப்பாடாக மாத்திரம் கருதுவது இன்றைய யுகத்தில் காலம் கடந்த ஒன்றாகும். சமூகத்தின் முழுமையான ஆத்மீக வாழ்வு தொடர்பாக ஜனநாயக ரீதியான அரசு முறை ஒன்று இன்று அமைதல் வேண்டும். அதாவது பல்லின சமூகத்தில் (அனைத்து சமூகங்களும் ஒருவகையில் நானாவிதமானவை) குறிப்பிட்ட ஒரு மதக் குழு, இனத்துவக் குழு அல்லது கலாச்சாரக் குழு வரையறுக்கப்பட்ட தேவைகளை மையமாகக் கொண்ட கருத்தியல் ஊடாக அரசை வழிநடத்தக் கூடாது.
ஆனால் அதனைச் செய்ய முடியுமா? அதனை எவ்வாறு செய்வது? சில சமயம் ஒரு தீர்வாக சமூகத்தின் அனைத்து சமயக் குழுக்களின் கருத்தியலுக்கு அரசின் கலாச்சார கொள்கையினுள் நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்பட முடியுமா? அதிகாரத்திற்காக போட்டியிடும் பல்வேறு கருத்தியல்களை பிரதிநித்துவப்படுத்தும் சக்திகளின் யதார்த்தத்தை நோக்குமிடத்து இதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. பலமுடையவன் அரசை ஓர் ஆயுதமாகப் பாவித்து பலவீனமானவனின் ஜனநாயக உரிமைகளைக் கொள்ளையடித்து முழுச் சமூகத்திலும் தனது ஏகபோக கலாச்சார ஆதிபத்தியத்தை பரவச் செய்வதை காலனித்துவத்திற்குப் பிற்பட்ட சமூக அமைப்புக்களில், நாடுகளில் நாம் காணமுடிகின்றது. எனவே மதச்சார்பற்ற அணுகுமுறை மூலம் அரசு இத்துறையில் தலையிடாது இருப்பதை உறுதிப்படுத்துவதே இன்றைய ஜனநாயகத்தின் உண்மையான வடிவமாக இருத்தல் வேண்டும். மறுபுறம் அநாவசியமான அரசின் தலையீடுகளிலிருந்து எமது சமூகத்தின் நானாவித கலாச்சாரங்களைப் பேணுவதற்கான ஓர் இயந்திரத்தை இந்த அரச ஒழுங்கு முறையில் உள்ளடக்க வேண்டும். அதனையே மதச் சார்பற்ற அரசு எனக் கூறலாம். இதன் மூலம் பிரஜைகள் மட்டத்திலும் நானாவித சமூக மட்டத்திலும், குழுக்கள் மட்டங்களிலும் சமய வாழ்வு, கலைத்துவ - அழகியல் வாழ்வு, ஒழுக்கவியல், விழுமியங்கள், சம்பிரதாயங்கள், மரபு உரிமைகள் ஆகியவையை உள்ளடக்கக் கூடிய அவரவரின் தனித்துவத் தன்மைகளை பேணிப் பாதுகாக்கக் கூடிய சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மதச்சார்பில்லாத வகையில் நடந்து கொள்வது அரசின் முக்கிய கடமையாக அமைதல்

வேண்டும். பிரஜைகளைப் போலவே சமூகத்தின் நானாவித குழுக்களின் ஆத்மீக வாழ்வை பேணிப் பாதுகாப்பதும் அரசின் கடமையாதல் வேண்டும்.
கலாச்சார வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் சமூகத்தின் பொதுத் தேவைகளையும் பிரதிபலிக்கக் கூடிய வகையிலே நிறுவனங்களைப் பராமரித்தல் அரசின் கடமையாதல் வேண்டும். சமூக உபரி உற்பத்தியின் குறிப்பிட்ட பங்கினை அரசு கலாச்சார செயற்பாட்டிற்காகவும், மேற்படி நிறுவனங்களைப் பராமரிப்பதற்காகவும் ஒதுக்க வேண்டும் என அரசு எதிர்பர்க்கிறது. இத்தகைய பெறுமானம் கொண்ட பொதுக் கலாச்சார நிறுவனங்கள், அவற்றின் கட்டமைப்பு, செயற்பாடு என்பனவும் மேலே குறிப்பிட்ட ஜனநாயக அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவும் வேண்டும்.
மக்கட் சேவைக்கு அர்ப்பணித்த அரச நிறுவனங்களின் மரபு
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு, புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள அரச நிறுவனங்களைப் பற்றிப் பாரதூரமான சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. அண்மைக் காலத்தில் புதிய இலத்திரனியல் ஊடகங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் ஒலிபரப்பு, ஒளிபரப்பு அதிகார சபையின் அவசியம் பற்றி அரசு வலியுறுத்தி வருகின்றது. குறிப்பாக வானொலி - தொலைக் காட்சி ஊடகங்கள் தொடர்பாக அவற்றிற்குப் பொறுப்பாக இருக்கும் அமைச்சருக்கு வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்ட வேளையில் அது குறித்து பல்வேறு மட்டங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
அதே சமயம், கலாச்சார திணைக்களத்திற்கு 1956ன் பின் வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரங்கள் காரணமாக இலங்கை கலைப் பேரவையும் ஏனைய துணை அமைப்புக்களும் கலைக்கப்பட்டு ஜனநாயகமும், சுதந்திரமும் கொண்ட அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை பொதுஜன ஐக்கிய முன்னணி அன்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டது. அரசாங்கத்தின் - அரசியல் வாதிகளின் அநாவசிய தலையீடுகளுக்கு இடமில்லாத, சுதந்திரமான அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டுமென பொதுஜன ஐக்கிய முன்னணி பதவியேற்க முன்னர் சபதம் செய்தது.
பிரித்தானிய மரபிற்கு அமைய அரசு நிறைவேற்றுத்துறைகளில் உருவாக்கிய நிறுவனங்கள் எப்படி இருப்பினும், நிலப்பிரபுத்துவ காலனித்துவ ஒருமுனைவாதத்திற்கு ஏற்றவகைகளில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக வெகுஜன தொடர்புசாதன நிறுவனங்களும் கலாச்சார நிறுவனங்களும் 1956 க்குப் பின்னர் அரசியல் மயமாக்கப்பட்டன. ஆட்சிபீடத்தில் உள்ள அரசியல்வாதிகள்ன் விளையாட்டு அரங்கமாக இவை மாறின. இவ் அரசியல் வாதிகளின் கைப் பொம்மையாக அரச அலுவலர்கள் மாறினார்கள். 1977 ன் பின்னர், இவ் அதிகாரிகளின் ஒரு தலைப் பட்சமான நடவடிக்கைகள் மேன்மேலும் அதிகரித்தன அமைச்சர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் அதிகளவில் அதிகரித்தன. மக்களுடைய பொதுநிதி வீண் விரயமாக்கப்பட்டது.

Page 4
அரங்கின் பரிமாணங்கள் (நாடகக் கட்டுரைத் தொகுப்பு)
தமிழில் நாடகம் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஓர் கலைவகைமை. இது சமூகச் சிந்தனைக்கும், சமூக ஒருங்கு சேரலுக்கமையவும் வளர்ச்சியடைகிறது எனலாம்.
நாடகம், பண்பாட்டில் இன்றியமையாத கலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. நடிப்பும் பார்வையும் என்று மட்டும் நோக்கப்பட்டு வந்த முறைமைகைக்கு மாறாக, நாடகம் இன்று புதிய அர்த்தங்களை வேண்டிநிற்கிறது.
நாடகம் என்பது மனிதனை, மனித உணர்ச்சிகளை, முரண்பாடுகளை, போராட்டங்களை புரிந்து கொள்வதற்கான ஒரு கலை வகையாகவும், விளங்குகிறது. எல்லோராலும், எல்லோருக்குமான இலகுவில் சாத்தியமாகக் கூடிய கலையே நாடகமாகும்.
அரங்கின் பரிமாணங்கள் என்ற இத் தொகுப்பு ஒரு புலமைத் தேடலின் தொடர்ச்சியின் பாற்பட்டது எனலாம். குறிப்பாக அரங்கு குறித்த அறிவார்ந்த சிந்தனைப் பாங்கில் சிரத்தையையும், தேடலையும் எம்மிடையே வளர்த்தெடுக்கும் நோக்கம் கொண்டது.
ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் காத்திரமான, ஆரோக்கியமான நாடகக் கருத்தரங்கொன்றை நடாத்தும் போது இத் தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.
இது பலரது சிந்தனையில் அர்ங்கு குறித்த தேடலையும் விளக்கங்களையும், பன்முகத் தள நிலையை அடைவதற்குத் திறந்த தொடருடையாடல்களையும் வேண்டிய நிற்கின்றது.
"அரங்கின் பரிமாணங்கள்" என்ற நூற்பிரதியொன்றின் விலை 150/- ரூபா மாத்திரமே. காசோலை அல்லது காசுக்கட்டளை (Money Order) விபவி (Vibhawi) என்ற பெயருக்கு எழுதப்பட வேண்டும். காசுக் கட்டளை அனுப்புவோர் காசு பெற வேண்டிய தபாற்கந்தோரை 1hala Welikada Rajagiriya 5160 golij Slo G 51/7, Rajahevavitharana Mavatha, Rajagiriya Road Rajagiriya என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
 

Events out the British Council holl - Moy 1997 (49, Alfred House Gardens, Colombo - O3)
Fri 2nd 9.00a.m. - 5.00 p.m.
Sat 3rd 9.00 a.m.
Mon 5th - Thur 15th
Tue 6th 5.30 p.m.
Wed 14th & Thur 15th 6.30 p.m.
Fri 16th 5.30 p.m.
Fri 23rd 5.30 p.m. Sat 24th 10.30 a.m.
Thur 29th 5.30 p.m.
Fri3Oth 5.30 p.m.
Seminar for drama teachers 2ழ் to theatre conducted by Mr. Bo
Cheeseman, Chief Examiner, Trinity College, London. (EAS 7
Polytechnic)
Finals of the Effective Communication competition.
Artists camp in Kandalama.
Early Detection and Prevention of Cancer' - a talk by Dr.Jayantha Balawardane. (BSA)
Shakespeare Film Festival (Repeat)
welfth night 128 mins) 'COriolanus (146mins) "Love's Labour's Lost (120mins)
"Troilus & Cressida' (190 mins) "The Winter's Tale" (170 mins)
An evening of theatre comprisin three short plays directed by indu Dharmasena.
High Spirits. Feature film (96mins)
High Spirits. Feature film (96 mins)
A discussion of patterns in
Canadian Literature' - a talk by Jill
McDonald, Head Mistress, British School. (EASL)
'High spirits'. Feature film (96 mins)

Page 5
விவிநிக்ழ்
Gun - 10 g soft S.L. 3.00 மாதாந்த சினிமா நீ மே - 11 ஞாயிறு பி.ப. 2.00 மாதாந்த சினிமா நீ மே - 16 வெள்ளி பி.ப. 4.00 RicherdIII சேக்ஷ்பியரின் திரை மே - 17 சனி (மு.ப. 9 - பி.ப5) தமிழ் இலக்கியக் கருத்தர
மே - 27 செவ் நண்பகல் 12 குறு நாடகம் சிங்களம் யுத பிற்றியே சவா
கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடை
மே-9 வெள்ளி பிப.2 (W.E.R.C.) GustioTGoofue
மே - 18 ஞாயிறு பி.ப. 4 கவிஞர் சுபத்திரனின் கவிதைத் ெ மே-21 புதன் பிப 4 "சூழல் பாதுகாப்பு" கருத்தரங்கு
இலங்கை ஒலிபரப்பு, ஒளிபரப்பு அதிகார சபையின் இல உறுப்பினர்கள் (உத்தேச சட்ட வரைவு) . {
1. வெகுஜன தொடர்பு சாதன அமைச்சுச் செயலாளர்
அல்லது அவரின் பிரதிநிதி 2. பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் அல்லது அவரின்
பிரதிநிதி 3. 3. . தபால் தொலைத் தொடர்பு அமைச்சுச் செயலாளர் 4
அல்லது அவரது பிரதிநிதி 4. கல்வி கலாச்சார அமைச்சுகளின் செயலாளர்கள் 5. அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் 6. 5. திறைசேரிச் செயலாளர் அல்லது அவருடைய பிரதிநிதி 6. தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ' 7. தொடர்பு சாதன அமைச்சரால் நியமிக்கப்படும் ஐவர், !
سا

- - - - - ச்சிகள்
கழ்ச்சி W.E.R.C. Loser_Lú
கழ்ச் f 58, தர்மராம வீதி, கொழுப்பு-06 O e W.E.R.C. மண்டபம் கொழுப்பு-06 ப்படத்தைத் தழுவியது விபவி மாற்றுக் கலாசார மையம் " ங்கு (முழுநாள்) W.E.R.C. மண்டபம் கொழுப்பு-06 ரிய' ( போர்க்களத்தில் சுற்றுலா) சட்டக்கல்லூரி மண்டபம்
பெறும் கலாச்சார நிகழ்ச்சிகள்
க் கலை நிகழ்வு சென். போல்ஸ் மிலாகிரிய மண்டபம் தாகுப்பு அறிமுக விழா கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளவத்தை. ந (மாற்று அமைப்பு) இராமகிருஷ்ண மண்டபம் வெள்ளவத்தை.
}ங்கை தேசிய கலாச்சாரப் பேரவையின் உறுப்பினர்கள் த்தேச சட்ட வரைவு)
பிரதமரால் நியமனம் செய்யப்படும் ஓர் உறுப்பினர். எதிர்க்கட்சித் தலைவரால் நியமனம் செய்யப்படும் ஒர் உறுப்பினர்.
கலாச்சார அமைச்சுச் செயலாளர்
சாகித்திய மண்டலத் தலைவர்
அழகியல் நுண்கலை பேரவையின் தலைவர்.
நாடக அரங்குப் பேரவையின் தலைவர்
கலாச்சாரத் அமைச்சரால் நியமனம் செய்யப்படும் கலை
கலாச்சார துறையில் நிபுணத்துவம் பெற்ற 11 பேர்.

Page 6
தமிழ் இலக்கியக் கருத்தரங்கு
கடந்த மூன்று தசாப்தங்களாக எமது தாய்த் திருநாடாகிய ஈழத்தில், தமிழ் இலக்கியத்தின் போக்குகள் பற்றியும், அதன் பரிணாமம், பற்றியும் பல கோணங்களிலிருந்து, இத்துறைகளில் அறிவும் ஆற்றலும் அனுபவம் உள்ளவர்களால் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதை யொட்டிய தொடர் கருத்தரங்குகளை காலத்துக்குக் காலம் நடத்துவதற்கு விபவி (மாற்றுக் கலாச்சார மையம்) திட்டமிட்டு, செயல்பட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக சென்ற மார்ச் மாதம் 29ம் திகதி ஒரு முழுநாள் கருத்தரங்கு கொழும்பு பெண்கள் கல்வி ஆய்வு நிலைய (WERC) மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
மேற்படி கருத்தரங்கிற்கு கொழும்பு பல்கலைக்கழக கல்வித்துறைத் தலைவரும் பேராசிரியருமான திரு. சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கி நெறிப்படுத்தினார். "பல்வேறு துறைகளில் ஆய்வுகளைச் செய்யும் சிந்தனையாளர்களுக்கு பெரும்பாலும் அந்தந்தத்துறைகளில் மட்டும் தான்புலமை இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் கலை இலக்கியப் படைப்பாளிகளைப் பொறுத்த வரையில் பல்வேறு துறைகளிலும் அவர்களுக்கு ஓரளவாவது புலமையிருப்பதைக் காண முடியும். ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு அல்லது நாவலாசிரியனுக்கு வரலாறு, அரசியல், பண்பாடு, உளவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் புலமை இருப்பதைஅவனுடைய படைப்புக்களிலிருந்து நாம் தரிசிக்க முடிகின்றது. இக் காரணத்தினால்தான் நான் கலை இலக்கிய சிருஷ்டிகர்த்தாக்களை பெரிதும் மதிக்கின்றேன். அவர்களைக் கெளரவிக்கின்றேன்" என்று திரு. சந்திரசேகரன் அவர்கள் தமது தலைமை உரையில் எடுத்துக் கூறினார்.
தலைமை உரையை அடுத்து, திரு. திக்குவலைகமால் அவர்களால் ஈழத்து தமிழ் இலக்கியமும் முஸ்லிம் எழுத்தாளர்களும் பற்றிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. அதையொட்டி கலந்துரையாடல் நடந்தது. அதன்பின் ஈழத்து தமிழ் இலக்கியமும் பெண் எழுத்தாளர்களும் என்ற ஆய்வுக்கட்டுரை திருமதி.த. தேவகொளரி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடலும் நடந்தது. ஈழத்து தமிழ் இலக்கியமும் நவீன கருத்துக்களும் என்ற கட்டுரை திரு.மு.பொன்னம்பலத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. கலந்தரையாடலும் நடத்தப்பட்டது. தெளிவத்தை யோசப்பினால் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் மலையக எழுத்தாளர்களும் என்ற கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஈழத்துதமிழ் முற்போக்கு இலக்கியமும் அதுமுகம் கொடுக்கும் நெருக்கடிகளும் பற்றி திரு.பிரேம்ஜி ஞானசுந்தரனால் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பும் பிரச்சினைகளும் என்ற கட்டுரையை மடுளுகிரிய விஜேரத்ன சமர்ப்பித்தார். இதை அடுத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மாலை 5.30 மணியளவில் கருத்தரங்கு முடிவுற்றது.


Page 7
கொழும்பிலும் அதைச்சற்றியுள்ள பகுதிக கலாச்சார நிகழ்வுகளைத் தொகுத்து வழங் குறிக்கோளாகும்.
எனவே இந்நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெ ஒவ்வொரு மாதமும் 25ந் திகதிக்கு மு அனுப்பிவைத்தால் அடுத்தமாத
சேர்த்துக்கொள்ளமுடியும் என்பதனை இ
விபவி மாதாந்த நிகழ்ச்சி நிரல் பற்றிய உ அனுப்பினால் நாம் பெரிதும் நன்றியுடை
விபவி மாதாந்த நிகழ்ச்சி நிரல். 51/7 ராஜா ஹேவா வித்தாரண ஒழுங்கை, ராஜகிரிய வீதி,
ராஜகிரிய,
விபவி மாற்றுக் கலாச்சார 51/7 ராஜா ஹேவா வித்தாரண ஒழுங்கை, ! ராஜகிரிய,
தொலைபேசி : 87-1996 தொலை மடல் 87.4996

ளிலும் இடம் பெறும் கலை இலக்கிய குவது விபவி மாதாந்த நிகழ்ச்சிநிரலின்
வேண்டும் என நீங்கள் கருதும் கலை லும் காலம், நேரம், இடம் என்பவற்றை ன்னர் பின்வரும் முகவரிக்கு எழுதி நிகழ்ச்சி நிரலில் அதனைச் த்தால் அறிவிக்கின்றோம்.
ங்களது கருத்துக்களை எமக்கு எழுதி யோம்.
மையம் ாஜகிரிய வீதி,