கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1997.10

Page 1
இதில் .
* ராஜினி திரணகம
t நூல் அறிமுகம்
* கவிதை
穆<
* சிறுகதை
- 8560)6) 56.)Taff JLD ....
* மாதாந்த சினிமா
* பரிமாற்றம்
 
 
 


Page 2
snÝú
"மனிதனுடைய மதிப்பிட W. முடியாத இனிய உடமைகளில் W சிறந்தது.அவனது வாழ்வாகும். _ அவன் ஒரு தடவைதான் வாழ W முடியும். காலம் முழுவதையும்
குறிக்கோள்இல்லாமல் s பாழாக்கிவிட்டேனே என்ற துயரம் வதைப்பதற்கு இடமளிக்காத வகையில் அவன்
3883
சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமான உணர்ச்சி உள்ளத்தை எரிப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன்
நேராக வாழவேண்டும், ! உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்துக்காக -மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் ஒன்றின் பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது உரிமை கோரும் வகையில் அவன் வாழ வேண்டும், திடீர் நோயோ
-சோக விபத்தேரவாழ்வுக்கு FôGen/Zg,600 60/455-9565 96n 604 o/7256au/7elyn2
மனிதன்தன் வாழ்வின் ()
ஒவ்வொரு கணப்பொழுதையும்
நன்கு பயன்படுத்திக் கொள்ள W வேண்டும். f
 
 
 

ராஜனிதிரணகம
ராஜனி திரணகம கொலை செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 1989 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி அவர் படுகொலை செய்யப்பட்டார். யாழ் மருத்துவபீட உடற்கூற்றுப் பிரிவின் தலைவரான அவர் MBBSஇரண்டாம் ஆண்டுக்கான பரீட்சையின் இறுதிநாளான அன்று தமது கடமையை நிறைவேற்றி விட்டு மாலை ஆறுமணியளவில் மருத்துவ பீடத்திலிருந்து 200 யார்கள் தூரத்திலுள்ள தமது வீட்டுக்கு பைசிக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒரு கொலையாளி அவரைப் பின்தொடர்ந்து சுட்டுக் கொன்றான். இக்கொலை திட்டமிட்டுச் செய்யப் பட்டது. பரீட்சை முடியும் கடைசிதினம் வரை பாத்திருந்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இதற்கு மருத்துவபீட மாணவரில் ஒருவன் உடந்தையாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் பரீட்சை முடியும் இறுதிநாள் வரை ராஜனியின் நடமாட்டத்தை உள்ளிருந்து அவதானித்து அவன் கொடுத்த சைகையை அடுத்துத் தான் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கின்றது. இந்தப் படுகொலையைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், மாணவ சமுதாயமும் தமிழ் மக்களும் தமிழ் பிரதேசமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியும் ஊர்வலங்களையும் நடத்தி உணர்வுபூர்வமாகத் தமது எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
தமிழ் மக்களின் கல்வியை வேரோடு அழிக்க வேண்டும் என்றுதான் முன்னைய அரசின்தார்மீகத் தலைவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. இதற்கு தமிழ் பிரதேசத்திலுள்ள கல்விச் சாலைகளையும் கல்விமான்களையும் அழித்தொழிக்க வேண்டும். கல்விச் சாலைகளை அரசின் விமானப்படை குண்டு போட்டு அழித்தது. கல்விமான்களை அழித்தொழிக்கும் புனித கைக்கரியத்தை சில ஆயுதக் குழுக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றின. இந்தக் கொலை வெறிக்குப் பலியான கல்விமான்களில் முதன்மை யானவர்களில் ஒருவர் ராஜனி திரணகம. இவரது இழப்பு யாழ் மருந்துவத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். அது மாத்திரமல்ல, மனித உரிமை மீறல்களுக்கெதிரான போராட்டத்தில் முன்னணியின்நின்ற ஒருவரையும் தமிழ் மக்கள் இழந்து விட்டார்கள்.
இந்திய அமைதிகாக்கும் படையினர் தமிழ் பிரதேசத்தில் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்திய அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக மாணவர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி போராடியுள்ளார் ராஜனி. இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்த லிருந்தது. அதையும் அவர் பொருட்படுத்தாமல் தனது போராட்டப் பணியை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தார்.
இந்திய அமைதி காக்கும் படையினரின் அத்துமீறல்களுக்கு எதிராக மாத்திரமல்ல, தமிழ் பிரதேசத்திலுள்ள ஆயுதத் குழுக்களின் அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் ராஜனி தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். இந்த ஆயுதக் குழுக்களின் அத்துமீறல் களையும் மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து உக்கிரமாகப் போராடியது மாத்திரமல்ல 'முறிந்த பனை" என்ற தமது நூலில் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். தமது சுயரூபம் அம்பலமானதால் சினங் கொண்ட ஆயுதக்குழுக்களில் ஒன்றின் கொலை வெறிக்குப் பலியானார் ராஜனி.
இந்திய அமைதி காக்கும் படையினராலும் ஆயுதக் குழுக்களாலும் தமிழ் பிரதேசத்திலுள்ள பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை எதிர்த்து போராடுவதற்கு ஒரு பெண் குழுவை உருவாக்கி அதற்கு உந்து சக்தியாக இருந்தவர் ராஜனி திரணகம. இதனால் தமிழ் பிரதேசத்தில் பெண்ணிலைவாதத்துக்கு உருக் கொடுத்து வளர்த்தவர்களில் முக்கியமானவர்களில் ராஜனியும் ஒருவர். தமிழரின் கல்வித்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பாக மருத்துவத்துறையின் முன்னேற்றத்திற்கு அச்சாணியாக இருந்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகப் போராடியவரும், பெண்நிலை வாதத்திற்கு அத்திவாரமிட்டு உருக்கொடுத்தவர்களில் முன்னணியில் நின்றவருமான திருமதி ராஜனிதிரணகமவை அழித்த கொலை வெறியர்களை வரலாறு என்றுமே மன்னிக்காது.
03

Page 3
புரிமாற்றம்
சுமித்திரா ராகுபந்த
திலைசிறந்த சிங்கள நாவலாசிரியர்களில் ஒருவர் திருமதி சுமித்ரா ராகுபந்த அவர்கள் 1952 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் திகதி ஹோமகம பிரதேசத்திலுள்ள அத்துரிகிரிய என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் செய்முறைப் பாடசாலையில்
க.பொ.த. உயர்தர வகுப்புவரை கல்வி பயின்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியில் பட்டதாரியானார்.
194 ம் ஆண்டு இவர் நொவஸ்தி' என்ற சோவியத் தகவற் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். இந்த ஸ்தாபனத்தின் வேலை செய்யும் பொழுது பல சிங்கள, தமிழ் எழுத்தாளர் களுடன் இவருக்குத் தொடர்பேற்பட்டது. இக்கால கட்டத்தில் இவர் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் கலை இலக்கியம் பற்றியும் காத்திரமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இர்ெ 1978 ல் இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்தார். 1979 ல் முதல் முதலாக யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள அச்சுவேலி என்ற பிரதேசத்தில் கிராமிய அபிவிருத்தி பயிற்சித் துறையில் சேவையாற்றத் தொடங்கினார். இங்கு அவர் எட்டு மாதங்கள் மாத்திரம் தான் சேவை புரிந்தார். ஆனால் எட்டு வருடங்களில் பெற்றுக் கொள்ளமுடியாதளவு அனுபவங்களை தாம் பெற்றுள்ள தாகக் கூறினார். இங்குதான் யாழ் மனிதனின் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் தான் நேரடியாக அறியக்கூடியதாக இருந்தது என்று கூறினார். தமது பாடசாலைநாட்களிலேயே இவர் கவிதை சிறுகதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார். இவர் க.பொ.த. உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கோ ஆனந்தத் தேரர் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.
'ஆ நிஸா மா வீதராகி' என்ற இத்தொகுதி இவரை மிகவும் கவர்ந்தது மாத்திரமல்லாது சிருஷ்டித்துறையில் மிக ஆர்வமாக ஈடுபடுவதற்கும் உத்வேகமளித்தது. இவரது வியட்நாம் கம்போடிய யுத்தம் சம்பந்தமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் முக்கிய சிங்களப் பத்திரிகைகளில் வெளி வந்து பிரபல்யமாகின. அதேவேளை படைப்பிலக்கியத்துறையிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
இவரது முதல் சிறுகதை 1975 ல் பிரசுரமாகியது. கவிதை சிறுகதைகளை இவர் படைத்தாலும் நாவல் துறைதான் இவரது பிரதான களமாகும். ஒரு சிறுகதைத் தொகுதியையும் ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளதுடன் இவரது எட்டு நாவல்கள் பிரசுரமாகியுள்ளன. 'புமுதுறுன' என்ற இவரது முதலாவது நாவல் 1978 ல் வெளிவந்தது. இவரது நாவல்களுக்கு ஐந்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் இவ்விருதுகள் பற்றி இவர் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது படைப்புக்களுக்கு இந்த விருதுகள் அளவுகோலாக இருக்க முடியாது என்று தாம் கருதுவதாகக் கூறினார். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகிய துறைகளில் சிருஷ்டிகளைப் படைத்த அதேவேளை 1995 ல் 'சாரா' என்ற சிறுவர்களுக்கான லூயிஸ் 4.
 

லோறன்ஸ் என்பவரது நூலை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதுடன் ஜறனடன்கெல் மாஸ் ஜோன் டறிஸன் ஆகியவர்களால் எழுதப்பட்ட "பெண்களும் சூழலும்' என்ற நூலையும் மொழியாக்கம் செய்துள்ளார்.
இவரது நாவல்கள் பெரும்பாலும் அரசியல் (கட்சி அரசியலல்ல) சமூக பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை. திருமதி சுமித்திரா அவர்களது முதலாவது நாவலான "புமுதுறுமு' (கம்பளம்) 1978 ல் வெளியிடப்பட்டது. 'உதானய' (உதயம்) என்ற நாவல் 1979 ல் பிரசுரமாகியது. 1981, 'தளறள பெறள' (மூர்க்க ஆலைகள்) என்ற நாவல் பிரசுரிக்கப்பட்டது. 'கெலிமடுள' (சதுரங்கம்) என்ற நாவலும் 'சுரஅசுர (தேவர்களும் அசுரர்களும்) என்ற நாவவலும் 1992 ல் பிரசுரிக்கப்பட்டன. 1991 ல் 'அறகலய' (போராட்டம்) நாவல் வெளியிடப்பட்டது. "இதி பஹன’ (மெழுகுவர்த்தி) நாவல் 1993 ல் வெளியானது. சதுரங்கம் என்ற இவரது நாவல் ஒரு அரசியல்வாதியின் மோசடிகள், அதிகாரத்திமிர் பெண்களை குறிப்பாக தனது இரண்டு மனைவிமார்களை வஞ்சித்து ஏமாற்றியது ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது. போராட்டம் (அறகலய) என்ற நாவல் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் நேர்மையாக தனது கடமைகளை நிறைவேற்ற முயல்கின்றார். ஆனால் அரசியல்வாதிகளான உயர் அதிகாரிகள் அழுத்தங்கள், தலையீடுகள் மிரட்டல்கள் அவரது நன்முயற்சிகளுக்கு இடையூறாக நிற்கின்றன. இவற்றிற்கெதிராக அரச உத்தியோகத்தர் உறுதியாக நின்று போராடுவதைச் சித்தரிக்கின்றது. மெழுகுவர்த்தி (இதிபஹன) அரசியல் நாவலாக இருப்பதுடன் அது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. தேவர்களும் அசுரர்களும் (சுரஅசுர) நாவல் நமது நாட்டில் தலைவிரித்தாடும் இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டிருக்கின்றது.
தேவர்களும் அசுரர்களும் என்ற இந்த நவீனத்தில் லக்ஸ்மி என்ற மங்கையும் சுரநிமல என்ற இளைஞனும் இணைந்து வாழ விரும்பினார்கள். ஆனால் நன்றாகக் கற்றவர்கள் என்று தம்மைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற சிங்கள தமிழ் மேதாவிகளின் தலையீட்டினால் இந்த காதலர்களது முயற்சி சிதைத்து நாசமாக்கப்படுகின்றது. இந்த நாவல் பிரசுரிக்கப்பட்ட பொழுது கடும் எதிர்ப்புக்களும் கஸ்டங்களும் வந்ததுடன் இந்த நவீனத்தின் படைப்பாளியான சுமித்திரா அவர்களை சிங்களவர்களின் விரோதி என்றும் தமிழர்களின் கையாள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபொழுதுதான் எந்தப்பக்கமும் சாராதவர் என்றும் உண்மையைத்தான் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார். அது மாத்திரமல்ல இந்த நாவலை தொலைக்காட்சி நாடகமாக்கி ஒளிபரப்பட்ட பொழுது திருமதி சுமித்திராவுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தொலைபேசி மூலம் தூசணைகளும் அச்சுறுத்தலும் மிரட்டல்களும் விடப்பட்டன. மேலும் இந்த நாவலை ஒரு பிரபலமான சர்வதேச திரையூடாக நிறுவனம் தொலைக்காட்சி நாடகமாக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இவருக்கு முற்பணமும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தலையீடுகள் அச்சுறுத்தல் காரணமாக அந்த சர்வதேச நிறுவனம் தனது முயற்சியிலிருந்து பின்வாங்கி ஒப்பந்தத்தையும் கைவிட்டது.
தற்பொழுது (இதிபஹன) மெழுகுவர்த்தி என்ற நவீனம் தொலைக்காட்சி நாடகமாக்கப்பட்டு ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நாடகம் கீழ் மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றது. இவரது நாவல்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தைப் பற்றியும் சமுதாயத்தில் அடித்தளத்திலுள்ள மக்களைப் பற்றியும் சித்தரிக்கின்றன. இவரது மொழி நடை லாவகரமானதும் இலகுவாக எல்லோராலும் படித்து புரிந்து ரசிக்கக் கூடிய இலகுவான எளிய மொழியிலமைந்துள்ளது.
உதயம் (உதானய) என்றிநாவலை எழுதிய பின்பு அதன் கையெழுத்துப் பிரதியை தான் படித்துப்
05

Page 4
பார்த்து தாம் அனுமதி வழங்கினால் மாத்திரமே இதை நூலுருவில் பிரசுரிக்க முடி யும் என்று, திருமதி சுமித்திரா அவர்களுக்கு மேலதிகாரியாகவுள்ள ஒரு அமைச்சுச் செய லாளர் கையெழுத்துப் பிரதியைத் தம்மிடம் கொடுக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் சுமித்திரா ராகுபந்து அந்த மேலதிகாரியின் வற்புறுத்தலுக்கு அடி பணியவில்லை. தமது நவீனம் தான் சேவையாற்றுகின்ற அரசாங்க துறை சார்ந்தாக இல்லையென்றும் இது தமது சொந்த தனிப் பட்ட முறையான சிருஷ்டி என்றும் இதை எவராலும் கட்டுப்படுத்த முடியாதென்றும் தமது நவீனத்தின் கையெ ழுத்துப் பிரதியை அந்த உயரதிகாரியிடம் ஒப்படைக்காமல் உறுதியாகப் போராடி தமது நூலை சுதந்திரமாக பிரசுரித்துள்ளார்.
வெளியீட்டைப் பொறுத்த வரையில் தமது ஒவ்வொரு நாவலும் 5000 பிரதிகள் அச்சிடு வதாகவும் அவை குறுகிய காலத்தில் விற்று முடிவதாகவும் கூறினார். 'சரசவி' என்ற புத்தக விற்பனை நிறுவனம் தனது ஒவ்வொரு நாவலின் 3000 பிரதிகளை உடனடியாகவே பணம் கொடுத்து வாங்கி விடுவதாகவும் "கொடகே' போன்ற புத்தக விற்பனை நிறு வனங்கள் இருநூறு அல்லது முன்னூறு பிரதி களை கொள்வனவு செய்து விற்பதாகவும் கூறியுள்ளார். திருமதி சுமித்திரா தற்பொழுது, விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணையும் அவர் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியும் ஒரு நவீனத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார். "இதி பஹன' என்ற இனப்பிரச்சனை சம்பந்தமான தமது நவீனத் தைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடு வதைத் தாம் விரும்புவதாகக் கூறியுள்ளார்.
(13ம் பக்கத் தொடர்.) "எப்படி?' , "நாட்டிலுள்ள சமூக விரோதிகளைத் தேடிப் பிடித்துச் சமூக விரோதச் செயல்களில் இனி ஈடுபட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டி உங்கள் கொலை வெறிக்கு வடிகால் தேடிக் கொள்ளுங்களேன்.' 'அட கடவுளே! என்ன சொல்கிறீர்கள்! அது வும் சமூகப் பணியாளர் நிலையில் அமர்ந்து கொண்டு!" “சமூகத்துக்கு இதுவும் ஒரு தொண்டுதான்.' "வேறு மாற்று வழி இல்லையா?' 'உண்டு. உளவியல் மருத்துவரைச் சந்தி யுங் கள், உளநல மருந்துகள் எழுதிக் கொடுக்க ப்படும், ஓரளவு நீண்ட காலச் சிகிச்சை தேவை ப்படும். படிப்படியாகத் தங்கள் கொலை வெறி தணியும்.'
இந்த இரண்டு ஆலோசனைகளில் எதைச் செய்யச் சொல்கிறீர்கள்?' இதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" 'வேறு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா?’ "நோய்க்குறியைச் சில சமயம் மூலதனமாக்கிக் கொள்ளவும் முடியும். சிகிச்சை பெற்றுச் சுவா தீன நிலைக்குத் திரும்பவும் முடியும். நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு செய்யும் பட்சத்தில் வாரம் ஒரு முறை என்னை வந்து பாருங்கள் உங்கள் வெறி தணிய உளவியல் ரீதியான சில ஆலோசனைகள் வழங்குகி றேன்." 'முடிவார்த்தமாக ஒரே ஒரு ஆலோசனை மட்டும் தங்களால் வழங்கமுடியாதா?' 'முடியும் ஆனால் ஒருநாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். உங்கள் விதியை நிர்ணயித்துக் கொள்ளும் தனிநபர் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. ஆகையால் முடிவு உங்க ளுடையதாகத்தான் இருக்க வேண்டும். உங்க ளுக்கு நோயாளி என்ற பட்டத்தை வழங்கும் அராஜகத்தை நான் செய்ய நிச்சயம் விரும்பி வில்லை. மேலும் தங்கள் சகமனிதன் என்ற அடிப்படையில் எனக்கு அப்படிப்பட்ட உரிமையும் கிடையாது.
நன்றி மீறல் (சிறுசஞ்சிகை, இந்தியா)
 

கலை கலாசாரம் சம்பந்தமான உத்தேச சட்ட வரைவுகளுக்கு என்ன நடந்தது?
ரு தேசிய பண்பாட்டுப் பேரவையையும், சாகித்திய மேடை நாடக நுண்கலை மற்றும் தேசியக் கலை சம்மந்தமாக மூன்று அக்கடமிகளையும் அமைப்பதற்கு கலாசார விவகார அமைச்சரினால் நான்கு உத்தேச சட்டவரைவுகள் வர்த்தமானியில் 1996 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் 1997 ம் ஆண்டு மே மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் தமது ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என்று 22-04-97 ல் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப் பட்டது. இதற்கு எதிராக இந்த நாட்டிலுள்ள ஒரு பலமான தலைசிறந்த 150 க்கும் மேற்பட்ட கலைஞர்களும் எழுத தாளர்களும் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்து மனுவைத் தயாரித்து ஒப்பமிட்டு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் 1997 ஜூலை 23 ம் திகதி அனுப்பி வைத்தது. இந்த உத்தேச சட்டமூலங்களுக்கு என்ன நடந்தது? இந்த சட்டமூலங்களுக்கெதிராக நாட்டிலுள்ள கலைஞர்களும் எழுத்தாளர்களும் தமது ஆட்சேப னையைத் தெரிவித்துள்ளபடியால் இச்சட்டமூலங்களைப் பாராளுமன்றத்திற்க்கு கொண்டு வரும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்று கலாசார விவகார அமைச்சர் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனால் கலைஞர்களின் எதிர்ப்பினால் இந்த உத்தேச வரைவு சட்டங்கள் கைவிடப்படவில்லை. அதிகாரப் பரவலாக்கல் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரவிருப்பதால் இதற்கு இசைவாக இந்த நான்கு சட்டமூலங்களை அமைக்க இருப்பது என்ற காரணத்தாலும், சில ஸ்தாபனங்கள் சில ஆலோசனைகளை முன்வைத்தபடியால் இவற்றைப் பரிசீலனை செய்ய கால அவகாசம் வேண்டுமென்று காரணத்தினாலும் இந்த சட்டமூலங்களைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரும் முயற்சி பின்போடப்பட்டுள்ளது என்று கலாசார விவகார அமைச்சு கூறுகின்றது. 4. இந்த கலாசாரம் சம்பந்தமான சட்டமூலங்களைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். இந்த முயற்சி கைவிடப்படவில்லை, பின்போடப்பட்டுள்ளது என்று கலாசார விவகார அமைச்சு கூறுகின்றது. அமைச்சரது கூற்றுக்கும் அமைச்சினது கூற்றுக்கும் முரண்பாட்டைக் காட்டுகின்றது. ஆகவே இந்த கலை கலாசாரம் சம்பந்தமான உத்தேச சட்டங்களின் எதிர்காலமென்ன? கலை கலாசாரம் சம்பந்தமான உத்தேச சட்டவரைவுகளைக் கைவிடும் படி இந்த நாட்டிலுள்ள 150 க்கும் மேற்பட்ட கலைஞர்களும் எழுத்தாளர்களும் தமது ஆட்சேபனை மனுவில் கேட்கவில்லை. கலை கலாசாரம் தொடர்பாக சுதந்திரமான நான்கு நிறுவனங் களை அமைக்கும் படிதான் தமது மனுமூலம் அமைச்சரைக் கேட்டிருந்தார்கள். அவர்கள். "சுதந்திரமான கலை கலாசார நிறுவனங் களை" அமைத்துத் தருவதாக அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது. ஆகவே உறுதியளித்தபடி சுதந்திரமான கலாசார நிறுவனங்களை அமைத்துத் தரும்படி தான் தமது மனுவில் அமைச்சரைக் கேட்டிருந்தார்கள். அத்துடன் அமைச்சரால் கொண்டுவரப்படவிருந்த உத்தேச சட்டவரைவுகளைச் சீர்படுத்தி மீள வரைவதற்கு தமது ஆலோசனைகளையும் ஒத்துழைப் புக்களையும் தமது மனுவில் தெரிவித்துள்ளார்கள். அது மாத்திரமல்ல இந்த மனுவில் ஒப்பமிட்டுள்ள கலைஞர்கள் ஏறக்குறைய எல்லோரும் இந்த அரசின் ஆதரவாளர்கள்; இந்த அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு பாடுபட்டு ழைத்தது மாத்திரமல்ல கடுமையாகப் போராடி யவர்கள். ஆகவே சுதந்திரமான கலை கலாசார நிறுவனங்களை அமைத்துத் தரும்படி கோர இக்கலை ஞர்களுக்குப் பூரண உரிமையுண்டு. அதே (தொடர்ச்சிபக்கம் 14இல்)
07

Page 5
அக்டோபர்
மாதாந்த சினிமா 14 சனிக்கிழமை (Braveheart)
அக்டோபர் சமகால சிங்களக் கவிதை 14 வெள்ளி (ரத்னசிறி விஜயசிங்ஹ)
The British Council - 49, Alfred House Gardens, Col
October "Dreamchild'
3 Feature film (94mins)
4 - 5 - 6 Hiroshima
a Sinhala translation of Keiji Nakazawa's autobiographicalnovel. A production of Maya Shakti Theat
10 - 11 "1997 Colombo British Book Fair'
17 "DreamChild
Feature film (94 mins)
"The Theatre Of BertOlt Brecht" 22 readings and reconstructions with special reference to The Caucasian Chalk Circle, presented by Gamini Haththotuwaga.
and Haig Karunaratne
24 - "DreamChild'
Feature film (94mins)
25 'Sweet William' Feature film (92mins)
31 'Sweet William'
Feature film (92 mins)
 

LosT6p6M) 4. OO - Lomré60D6A) 7.3O (WERC Lo6oTuulo)
LomT60d6MD 4. OO — DT6oo6O 6. OO (WERC d6coTudo)
mbo-3, Tel: 5811712
5.30 p.m.
tre. 6.30 p.m.
9.00 a.m. - 9.00 p.m.
5.30 p.m.
p
Japanese Film Festival at Lionel Wendt Theatre
Madadaya 6.30 p.m. Faraway Sunset
(Tooki Rakujitsu) 6.30 p.m. Uneasy Enconters
(Kowagaru hitobito) 3.30 p.m. Free & Easy Special Version (Tsuri-baka misshi supesharu) 6.30 p.m. Summer Holiday Everyday (Mainichiganatsuyasumi) 3.30 p.m. Madadayo 6.30 p.m.
Japanese Film Festival at D.S. Senanayake Public library, Kandy
25 Madadayo 3.30 p.m.
Faraway Sunset (Tooki Rakujitsu) 6.30 p.m. 26 Uneasy Enconters
(Kowagaru hitobito) 3.30 p.m. Free & Easy Special Version
(Trsuiri-baka nisshi supesharu) 6.30 p.m.
5.30 p.m.
O.30 a.m.
5.30 p.m.
r
N கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.
- மார்ட்டின் லூதர் கிங் -

Page 6
நண்பனுக்கு
கவிதை வெறிமுட்டி 2) Այ நான் என் இனிய நண்பனே- நீ கவிஞன் ஆகவில்லை என்னை அறிந்ததாகக் கூறினாய் - என்னை வெறிமூட்ட
இங்கு
எப்படி என்றேன்
ஆத்திரப்பட்டாய் ஒராயிரம் சம்பவங்கள் உன்னிடத்தில் -என்னை சமப்படுத்திப் பார்த்தாய் -பின் அன்று நான் பரவாயில்லை புத்திசாலி என்றாய் கவிதைகள் வரையவில்லை அறிவென்றாய் -கூடவே என்னிடம் இருந்தது அழகென்றாய் கறுபட மையே இன்றோ எதை எதற்காகச் சொன்னாய்? சிவப்
6) JLIL 60LDu IIT6) இல்லை வரைகின்றேன் உன்னால் என்னை அறியமுடியவில்லை என் உள்ளத்தை பெண் என்பதைத் தவிர உன் உள்ளத்தை தோல்வியுறா தர்மத்தின் a- r حسر ரஞ்சனி حسیسیصر بر இறுதித் தீர்ப்புகளை நன்றி கணையாழி t /* ク/
நானொரு பிறவிக் கவிஞன் அல்ல என்னை வெறிமூட்ட இங்கு ஓராயிரம் சம்பவங்கள்! நானோ ம் நூற்றாண்டின்
10
 
 
 
 
 
 
 

ஆனந் தனது கவிதைத் தொகுதி அவன் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்திருக்க வேண்டும் அவனது ஆசையும் அதுவே. தாமதமாகவேனும் அவனது அபிலாசையை நிறைவேற்றுவதில் மட்டக்களப்பு வாசகர் வட்டம் மகிழ்ச்சியடைகிறது என பதிப்புரையிலும்
‘என்னை இன்னொருவர் காணும்போது
அன்னவர் அகம் மலரவும்
அதனறிகுறியால்
புன்னகை அவர் முகத்தில்
பூக்கவும் வேண்டும்
இதுவே நான் எடுத்த பிறவிப்பயன்'
ஆனந்தனின் இந்த வரிகள் அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பினால் அதில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்
ஆனந்தனை ஒரு உண்மை மனிதனாக அடையாளப்படுத்தும் அவனது சொந்த முகவரிகள் ஆனந்தன் இன்று நம்மிடை இல்லை. அவனுக்கு என்ன நடந்தது? அவன் இறந்து போனான். எப்படி இறந்தான்? அகால மரணம் என்று அவனைப் பற்றி எழுதியவர்கள் இரங்கிக் கண்ணீர் விட்டிருக் கிறார்கள். அகால மரணம் என்பது ஒரு பொருளற்ற வார்த்தை திடீரென்று வரும் மாரடைப்போ, அல்லது வேறு எந்த நோயினாலோ அவன் இறந்து போகவில்லை. நடந்து செல்கையில் வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு மரணிக்கவில்லை. வீதி விபத்தில் இறந்து போகவில்லை. அவன் கொலை செய்யப்பட்டான். பாதி வழியில் படுகொலை செய்யப்பட்டான். அவன் மட்டுமல்ல, அவனுடன் சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பலர் கல்முனை மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் பஸ் வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது 05.12.1995 இல்
ஈழத்தில் 1960 களில் மோலோங்கிய மார்க்சிய சிந்தனையில் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே ஈர்க்கப்பட்டு, இடது சாரித் தொழிலாளர் இயக்கங்களுள் நுழைந்து, புரட்சிக் கனவுகளுடன் வளர்ந்தவன். 1980 க்குப் பின் இங்கு தீவிரமாக வீசிய இனவாதச் சூறாவளியில் அள்ளுண்டு போகாமல் இறுதி வரை தன் புரட்சிக் கனவுகளுடன் வாழ்ந்தவன் பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான ஒரு பிரதிநிதியாகவே நான் அவனைக் கண்டேன்.
'அன்பினாலே இன்பம் காண்போம்' என்ற ஆனந்தனின் கவிதை இன்றைய வன்முறைச் சூழலிலே எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றது. 'வன்முறைக் கொலைகள், கொள்ளை, வாழ்வினை அழித்தலெனும் வன்முறை எல்லாம் புகுந்துலகை ஆட்சிசெய்ய கண்ணிலார் போல மனிதர் வாழக் காரணம்' அன்பின்மையே என ஆனந்தன் இக்கவிதையில் கூறுகிறான். 'இனிக் கவலை இல்லையென உலக மக்கள் இனிது வாழ' அன்பு தழைத்து உலகில் வளர்தல் வேண்டுமென அவன் கோருகிறான். 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்றும், 'அன்பென்று கொட்டு முரசே' என்றும் பாடிய பாரதியின் வழியில் ஆனந்தனும் நிற்பதை நாம் இங்கு காண்கிறோம். 'மானிலம் பயனுற' இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டிய அவன் மனிதரிடத்து அன்பற்றவர்களால் கொடூரமாகக் கொலையுண்டமை நம் காலத்து அவலம் என 'ஆனந்தனும் அவனது கவிதைகளும்' என்ற தலையங்கத்தில் எம்.ஏ நுஃமான் குறிப்பிடுகிறார்.
நூலாசிரியர் பற்றி முடிவில் இவை தனது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்த ஒரு மனிதன் பற்றிய சுருக்கமான குறிப்புக்கள், அவனோடு வாழ்ந்த பழகிய காலத்தில் அவன் வாயிலாக அறிந்து நெஞ்சின் ஆழத்தில் புதையுண்டவற்றை மீட்டபோது.' என குறிப்பிடுகிறார்கள்.
* 1996 ல் நடைபெற்ற எமது சுதந்திர சாகித்திய விழாவில், மொழிபெயர்ப்பு துறையில் வி.ஆனந்தன் ஆற்றிய சேவைக்காக அவரை நாம் பரிசில் வழங்கிக் கெளரவித்தோம்.
(சா.வி.குழு)
11

Page 7
எதிர் - உளவியல்
கோபி கிருஷ்ணன்
"என்னிடம் உங்கள் பிரச்சினைகளைக் கொட்டுவதில் ஏதாவது ஆட்சேபம் உண்டா? இங்கு எந்தப் பிரச்சினை குறித்தும் பேசலாம். எதுவும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.' 'ஆட்சேபம் எதுவும் இல்லை. என் பிரச்சினை சமூக விரோதமான மனப்பான்மைதான்.' 'சற்று விளக்குங்களேன்'
'எனக்கு வன்முறையில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ‘இன்னும் குறிப்பாக விளக்குங்கள்’ 'எல்லோரையும் கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டுள்ளது.' 'இது வெறும் எண்ண அளவில் நிற்கிறதா அல்லது இதைச் செயல்படுத்தியிருக்கிறீர்களா?” 'வெறும் எண்ண அளவில்தான். ஆனால் எண்ணம் உக்கிரமாக உள்ளது.' ‘என்னையும் கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா?” ‘ஏனோ இல்லை. நீங்கள் ஒரு சமூகப் பணியாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல இங்கு இருக்கிறீர்கள். தவிர உங்கள் முகத்தில் ஏதோ ஒரு அம்சம் பச்சாபத்தைத் தூண்டுகிறது.' 'சரி, அப்படியானால் நான் தப்பித்தேன். நீங்கள் உங்களை நோயாளி என்று கருதிக் கொள் கிறீர்களா?"
ஆம், இந்த வெறி ஒரு மனநோய்தான் 'எனக்கும் ஏதோ ஒரு நோய்க்குறி தோன்றி உங்கள் இருக்கையில் நானும் சுவாதீனமடையும் பட்சத்தில் என் இருக்கையில் நீங்களும் அமர வாய்ப்புண்டு. தயவு செய்து நோயாளி என்ற சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.' ‘சரி, எனக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறீர்கள்?" 'அதற்கு முன் நான் சில கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.'
"கேளுங்கள்'
'தங்களைத் தாங்களே விமர்சித்துக் கொள்ளும் பழக்கம் உங்களிடம் உள்ளதா?’
'இல்லை’ 'அப்படி இருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்று தோன்றுகிறது.' 'நீங்கள் பிரச்சினைகளை மிகவும் எளிமைப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன்.' 'இல்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். சரி, தங்கள் பிரச்சினையைப் பற்றிச் சேர்ந்து சிந்திப்போம். என்னுடன் ஒத்துழைப்பீர்களல்லவா? இதற்கு உணர்வுகள் அளவிலான தடையோ எதிர்ப்புணர்வோ இப்பொழுது தங்கள் மனதில் தோன்றுகிறதா?’ 'இல்லை, ஓரளவு ஆசுவாசமாகவே உணர்கிறேன்' 'அப்படியானால், அலசலில் ஆரம்பகட்டச் சிக்கல்கள் ஏதுமில்லை. காலத்தில் பின்னோக்கிச் செல்லுங்கள். நன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள். இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது என்பதை யூகிக்க முடிகிறதா? உங்களிடம் ஆளுமைதியான அடிப்படைக் குறைகள் ஏதாவது உள்ளனவா?' 'இல்லை, இந்த வெறி இடையில் ஏற்பட்டதுதான். எனக்கு இப்பொழுது வயது முப்பது. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். Classics ல் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. ஆனால் ஒரு விபத்துக்குப் பிறகு இது மறைந்து விட்டது. ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருக்கிறேன். சில மாதங்களாக இந்தப் பிரச்சினை காரணமாக வேலையில் நாட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் ஒரு அன்றாடச் சடங்கை நிகழ்த்தும் முகமாகத் தினமும் அலுவலகத் துக்குப் போய்க் கொண்டுதான் இருக்கிறேன். 'விபத்துப் பற்றி நினைவுகூர்ந்தால் உங்களுக்கு மன அதிர்ச்சி ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?' 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சொல்கிறேன். மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த
I2

போது ஒரு திருப்பத்தில் லாரி ஒன்று மோதிவிட்டது. விபத்தில் என் ஆண்மையை இழந்துவிட்டேன். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.' 'வாழ்க்கையில் பாலுறவு, பாலுணர்வுதான் எல்லாம் என்று நினைக்கும் ரகத்தைச் சார்ந்தவரா நீங்கள்?" 'அப்படிச் சொல்வதற்கில்லை. விபத்து நடந்த போது எனக்கு இருபத்தெட்டு வயது. திருமணம் செய்து கொண்டிருக்கவில்லை. விபத்துக்கு முன்பும் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொண்ட தில்லை. இப்பொழுதோ அந்தப் பேச்சுக்கு இடமே இல்லாமல் போய்விட்டிருக்கிறது. "இதை ஒரு பேரிழப்பாக நினைக்கிறீர்களா? ஆண்மை இழப்பினால் ஏதாவது தாழ்வு உணர்வு ஏற்பட்டிருக்கிறதா?' 'அப்படியும் இல்லை. இந்த ஆண்மை இழப்பு என் வெறிக்குக் காரணமாக அமைந்துவிட்டதுதான் கொடூரமானது.'
'தெளிவாக விளக்குங்கள்.' 'என் வெறி உருக்கொண்டது மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமான என் அண்ணன் வீட்டுக்கு ஒரு வாரத்தங்கலுக்கு சென்றிருந்தேன். அவருக்கு ஓர் அழகான பெண் குழந்தை. ஏழு வயதுதான். பார்ப்பதற்கு அம்சமாக இருப்பாள். திடீரென்று அவளது மென்னியைப் பிடித்துத் திருகிக் கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.'
'செயல்படுத்த முயன்றீர்களா?' 'இல்லை, ஒரு பொய்க் காரணம் சொல்லி அண்ணனுடைய வீட்டை விட்டு உடனே அகன்று விட்டேன். பிறகு நாட்கள் ஆக ஆக மணமான ஆண்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற வெறி உருக்கொண்டது. ஏனோ செயல் வடிவில் நிகழ்த்த முடியவில்லை. 'இதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?' இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தக் கேள்வியை நான் எனக்குள் ஒருமுறை கூடக் கேட்டுக் கொண்டதில்லை.'
'சரி உங்கள் பிரச்சினைக்கு உங்களுடைய தீர்வு என்ன?' இந்த வெறி சமூகத்துக்குப் புறம்பானது. இது அகற்றப்பட வேண்டும். அதற்குச் சிகிச்சை பெறத்தான் இங்கு வந்திருக்கிறேன்.'
'சற்று சுதந்திரமாகச் சிந்திக்கலாமா?"
'ஒ. தாராளமாக'
'வன்முறையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' 'எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இந்த உணர்வு. வெளிப்படுத்தப்படுவதில்லை. சமூகக் கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.' 'நீங்கள் சமூகப் பிரக்ஞை உள்ள நபரா?'
'ஓரளவு அப்படிச் சொல்லலாம்.' 'சமூகத்துக்கு உங்களுக்கு என்று ஒரு பங்களிப்புப் பொறுப்பு உண்டு என்ற கருத்தை ஏற்றுக் கொள்வீர்களா?' 'வாஸ்தவம் வேலையில் நேர்மையுடன் நடந்து கொள்வதன் மூலம் என் பங்களிப்பை நான் அளித்துக் கொண்டு தானிருக்கிறேன்.
'அதற்கும் மேல்..?'
'ஒன்றுமில்லை.'
'செய்வதாக உத்தேசம் உண்டா?' 'உண்டு. ஆனால் என்ன செய்வது என்று தெளிவாகத் தெரியவில்லை.' 'ஆலோசனை வழங்கும் உரிமையை நான் எடுத்துக் கொள்ளலாமா?'
'அது உங்கள் கடமை.' 'ஒரு சிறு ஆலோசனை. அதிர்ந்து விடாதீர்கள் தங்களுடைய இந்தக் கொலை வெறியை ஆக்கபூர்வமாகச் செயல் வடிவில் நிகழ்த்தினால் என்ன?' (தொடர்ச்சி பக்கம் 6)
13

Page 8
(7ம் பக்கத் தொடர்.) வேளை அரசும் கலைஞர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடப்பாடுடையது. கலாசார விவகார அமைச்சைப் பொறுத்தவரை சுதந் திரமான கலாசார நிறுவனங்களை அமைப்பது என்ற அரசினதும் கலைஞர்களதும் அபிலாசைகளுக்கெதி ராகவும் அமைச்சு அதிகாரிகள் செயல்படுவது வெளிப் படையாகத் தெரியவந்துள்ளது. கலாசார விவகார அமைச்சு இவ்விவகாரத்தை முக்கியமானதொன்றாகக் கருத்தில் எடுத்துக் கொண்டு இத்துறையிலுள்ள கலை ஞர்களைப் பரவலாக அழைத்து கலந்துரையாடல் களை நடத்தி குறிப்பிட்ட இந்த நான்கு சட்ட மூலங் களை மீள் வரைவு செய்து சுதந்திரமான நிறுவனங் களை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் அமைச்சு இதற்குத் தயாராக இல்லை என அதன் தற்போதைய நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. கலை கலாசாரப் பேரவையும் அதன் கீழ் இயங்குகின்ற 15 உப கமிட்டிகளும் மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் செயல்படக் கூடியவகையில் அமைச்சரால் நியமிக்கப பட்டுள்ளன. தற்பொழுது நடைமுறையிலுள்ள கலா சாரப் பேரவையும் அதன் உபகமிட்டி உறுப்பினர்களது காலம் முடிவடைந்து எப்பொழுதோ காலாவதி யாகி விட்டது. ஆனால் அமைச்சு அதிகாரிகள் இந்தப் பேரவையைக் கலைப்பதற்குப் பதிலாக இவற்றை தொடர்ந்து வைத்துக் கொண்டு இவற்றிற்கு சில புதிய முகங்களை நியமித்து இந்த சபையையும் உப குழுக் களையும் தொடர்ந்து செயல்பட வைப்பதற்கு முயற்சி களை மேற்கொண்டு புதிய முகங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இது ஒரு ஜனநாயக விரோதச் செயலாகும். இது
வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும்.
இந்த நாட்டினுடைய கலைஞர்கள் அனைவரும் கலா
மாதாந்த சினிமா
BRAVE HEART இத்திரைப்படம் இங்கிலாந்து இராச்சியத் திற்கு எதிரான ஸ்கொட்லாந்து மக்களின் போராட்டத்தினை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
13ம் நூற்றாண்டின் இறுதிகளில் ஸ்கொட் லாந்து இங்கிலாந்து இராச்சியத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்தது. முதலாம் எட்வட் என்ற கொடுங்கோலன் இங்கிலாந்தின் மன் னனாக இருந்தான். இக்கால கட்டத்தில் sốdsSuuüd 6u6d6iv (Willim Walace) 6T6árið இளம் ஸ்கொட்லாந்து குறுமன்னன் இங்கி லாந்துக்கு எதிரானபோராட்டத்தை ஆரம்பித் தான். இப்போராட்ட முயற்சி பற்றியதே இத் திரைப்படமாகும். § ဒွိ ဒွ န္တိ இத்திரைப்படத்தை இயக்கிய மெல்கிப்சனே படத்தில் வலஸ்சின் பாத்திரத்தை ஏற்று pఖత్తgictrt இத்திரைப்படம் 1995ம் ஆண்டுக்கான சிற ந்ததிரைப்படம் சிறந்தநெறியாள்கைசிறந்த
ஒளிப்பதிவு சிறந்த ஒப்பனை ஆகியவற்றுக்
கார் விருதுகளையும் பெ
சார விவகார அமைச்சின் ஜனநாயக விரோத எதேச் சூர் சதிகார நடவடிக்கைக்கு எதிராகப் போராடுவதற்கு பல
முன்வருவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆகவே இந்த நாட்டிலுள்ள கலைஞர்களை பரவலாக அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி மேற்கூறப் பட்ட நான்கு உத்தேச சட்டவரைவுகளை மீள வரைவு செய்து சுதந்திரமான நிறுவனங்களை அமைப்பதற்கு அரசை நிர்ப்பந்திப்பதற்கு போராடவேண்டும். அதே வேளை கலாசார விவகார அமைச்சின் சூழ்ச்சி பற்றி
சகல கலைஞர்களும் எழுத்தாளர்களும் விழிப்புட ட
னிருக்க வேண்டும்.
(15 14
 

நான் நிரந்தரமாகதுரங்கிவிட முயற்சிக்கிறேன்
ஒரு நிம்மதியாக
சவக்குழி சவப்பெட்டியின்றி காடுகளுக்கிடையே
2D யி ன் Greör பறவைகளுக்கு உணவாக நாய்களுக்கும் கயிறுகளை அறுத்துக் கொள்ளும் கத்தியில்லை
நி என்னிடம் தைவுகள உதறிவிடும் மனநிலையில் இறுகும் உன் முடிச்சுகளை
தாங்கிக் கொள்ளும் பலமில்லை நான் யாருமில்லை வெற்றிலலையும் மனித பூச்சி அல்லது
பெயரில்லா ஒரு பறவை
ஆத்மாஜி இரண்டு நாட்களுக்கிடையில் எதனையும் :: சாதித்ததில்லை பிறப்பித்தனர் நானறியாமல் ஒருநாளில் இறப்பினை மகிழ்வுடன் வரவேற்றேன் என் நாளில் இருநாட்களுக்கிடையில் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஒன்றைத் தேடி பொய்யாய் ஒன்றை சிருஷ்டித்து உழன்று சிதைந்து உருவிழந்து என்நாளில் நான் நிம்மதியாய் விடைபெறுவதற்காக நிற்கிறேன் விடைபெறுதலின்போது இறுகும் மனசின் வலியை நீ விடைபெறும் நாளில் புரிந்து கொள்ள முடியும். தலைகீழாக வாழ்ந்ததாகக் கூறுவர் என்னை என் சவக்குழியும் ஆழமாய் தலைகீழாக என்னை புதைப்பதெனில்
அல்லது நான் நேசிக்கிற ரங்களுக்கிடையே காட்டில் வீசியெறியப்படட்டும் எனக்கென்று எந்த சொத்துமில்லை
முயற்சிக்கவுமில்லை நான் சிலகாலம் வாழ்ந்ததாக நினைக்கிறேன் பிறகு சமீபமாய் மாற்றப்பட்டேன் காலஅகாலம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று என்னை ஞாபகப்படுத்தும் எல்லா பொருட்களையும் இந்த வார்த்தைகளையும் என்னுடன் புதைத்து விடுங்கள் அல்லது மரங்களுக்கிடையியே வீசியெறிந்து விடுங்கள் ஒருவேளை ஏதோ ஒரு பறவை என் வார்த்தைகளை இசைத்துக் கொண்டிருக்கக் கூடும் ஒருமரம் மெளனமாய் வார்த்தைகளிடுடேயுள்ள ஈரத்தை உறிஞ்சிதலையசைக்க கூடும். மண்ணும்
மனிதர்களுக்குப் புரியாதவைகள் அலைகளுக்குப் புரிபடலாம் ஒருவேளை நான் விடைபெறாவிட்டால் நீங்கள் நாளை என்னை காண நேர்கையில்
15
நன்றி: மீறல் (இந்தியா)

Page 9
ஒரு பிணத்துடன் பேச முட ஒரு பிணத்துடன் ஏனெனில் அந்த இசை நின்றுவிட்டு அந்த கவிதை விடைபெற். மிஞ்சியிருக்கும் எலும்புக மனிதன் முடியாத கவிதைகளோ ெ அந்த காற்றிலிருந்து விஷ; சுவாசகோஷம் என் காதுகளில் சதா ஒரு L பார்வையில் படாத ஏதோ விடைபெறும் கடைசிநெ/ இவைகளை கூறமுடியாது ஏனெனில் ஏனெனில் ஏெ ஒருவேளை என்விடைபெறுதல் ஒரு மு அது நல்லது எந்தக் கோணத்திலிருந்து நான் நிரந்தரமாக துரங்கிவி நிம்மதியாய்,
விபவி மாதாந்த நிகழ்ச்சிநிரல் 51/7, ராஜா ஹேவா வித்தாரன ஒழுங்ை ராஜகிரிய வீதி, ராஜகிரிய, தொலைபேசி: 874996
 

g4L/a/Tib
றுவிட்டது ளும் சதையும் பிறவுமா
வகுவெகு தொலைவில் த்தை ஈர்க்கும் எனது ஈரல்
0ரணப்பறவையின் அழைப்பொலி வொரு தேவதையின் வரவேற்பு 7டியில் உங்களிடம்
னனில்
மட்டாள்தனமாக இருக்கலாம்.
பார்த்தாலும் டவே முயல்கிறேன்