கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1997.12

Page 1
Z66|!rīgiet.
qongo gopqiego ogromar gerige
 


Page 2
କ୍ଲି]] OÜUNÜGöEET ENGI ព្រៃ
"கலப்பு திருமணம் செய்வதன் மூலம், இன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்று அனேக எழுத்தாளர்களும் கலைஞர்களும் நினைக்கின்றார்கள் இதை வலியுறுத்தி பல சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள். திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றை படைத்துள்ளார்கள். இன்றும் படைக்கின்றார்கள். இது சாத்தியமா? இது ஒரு தவறான சிந்தனை என்று தான் கருத வேண்டியுள்ளது. இன மத குல பேதமின்றி மனிதனை மனிதன் மதிப்பதன் மூலமும், அவனைக் கெளரவிப்பதன் மூலமும் தான் இது சாத்தியம். நமது படைப்புகள் யாவும் மனிதநேயத்தை அடிநாதமாகக் கொண்டு சிருஷ்டிக் கப்பட்டால் நிச்சயமாக இன மத குல பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு இத்தகைய கலைகள் பங்காற்ற முடியும். இப்படியான சிருஷ்டிகள் வலுவானவையாகவும் ஜீவத் துடிப்புள்ளவையாகவும் அமரத்துவமுடையவையாகவும் இருக்கும்" என்று திரு கமலவீர ஜயத்திலக ஊவா சனசமூக அபிவிருத்தி நிலைய பதுளைக் கிளையினால் நடாத்தப்பட்ட இன ஒருமைப்பாட்டுக்கான கலாசார விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார்.
இந்த இன ஒருமைப்பாட்டுக்கான கலாசார விழா 1997 நவம்பர் 30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பதுளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊவா பிரதேசத்தி லுள்ள பாடசாலைகளின் உயர்தர வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஊவா சமூக அபிவிருத்தி நிலைய பதுளைக் கிளையினால், ஊவா பிரதேசத்திலுள்ள மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்பட்ட இன ஒருமைப்பாட்டுக்கான கலை சிருஷ்டிகள் - சிறுகதை, கவிதை, பாடல் போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ படைப்பாளிகளுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஊவா சமூக அபிவிருத்தி பதுளைக் கிளையின் அமைப்பாளர் திரு. மானல் ரட்னாயக்கா, சிறுகதைத் துறைக்கு பொறுப்பான திரு. வசந்த அபயசேகர திவினாயக்க, கவிதைத் துறைக்கு பொறுப்பான திரு சூரத் காமினி பண்டார, பாடல் துறைப் பொறுப் பாளர் திரு கே.ஏ.ஏ.காமினி ஆகியோர் உரையாற்றினார்கள். இப் போட்டித் தேர்வி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இன ஒருமைப்பாட்டிற்கான பல பாடல்கள் இசைக் குழுவினரால் இசையமைத்து இடைக்கிடையே பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
പ്രമ
கல்ை
மனிதனின் பகுத்தறிவை பாதிப்பதில்லை, அவன் உணர்வுகளை பாதிக்கிறது, அவன் ஆன்மாவை இளக்குகிறது, நல்ல விஷயங்களை நோக்கி அவனை திருப்புகிறது.
- ஆந்த்ரேய்தார்க்கோவ்ஸ்கி
2 மாதாந்த நிகழ்ச்சிநிரல் - டிசம்பர் 1997

கலாசார ஒருங்கிணைப்பு
வம்பர் 23 ஞாயிறுக்கிழமை, கலாசார சமய அலுவல்கள் அமைச்சு, எழுத்தாளர்களுக்கான கலாசார ஒருங்கிணைப்புக்கான ஒரு முழுநாள் செயலமர்வினை நடத்தியது. இச்செயலமர்வு கொழும்பு 7, ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராயச்சி பயிற்சி நிறுவக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் முப்பது சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் பங்குபற்றினர். எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்த அடிப்படை பற்றி அநேக எழுத்தாளர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டினார்கள். தமது குறைபாட்டை ஒப்புக் கொண்ட அமைச்சு அதிகாரிகள், இப்படிப்பட்ட குறைபாடுகளை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இச்செயலமர்வு ஓர் ஆரம்ப முயற்சியேயென்றும் கூறினர். கலாசார, சமய அலுவல்கள் கெளரவ அமைச்சர் லக்மன் ஜயக்கொடி மங்கள விளக்கேற்றி செயலமர்வை ஆரம்பித்து வைத்தார். கலாசார சமய அலுவல்கள் அமைச்சு செயலாளர் சுரவீர மற்றும் கலாசார சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் பேராசிரியர் சுரவீர அவர்களும் பங்குபற்றினர். இதையடுத்து கலாசார ஒருங்கிணைப்புக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ‘சிங்கள இலக்கியமும் கலாசார ஒருங்கிணைப்பும்' என்ற உரையை பேராசிரியர் விமல் மல்லகல நிகழ்த்தினார். தமிழ் இலக்கியமும் கலாசார ஒருங்கிணைப்பும் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி உரையாற்றினார். ஜனாப் ஏ.எம்.சமீம் இஸ்லாமிய இலக்கியமும் கலாசார ஒருங்கிணைப்புப் பற்றி உரையாற்றினார். மேற்படி உரைகள் சம்பந்தமான விடய ஆய்வுக்கான மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டன. 1. பண்டைய இலக்கியங்களையும், நாட்டார் பாடல்களையும் மொழி பெயர்ப்பதை
ஆய்வு செய்வதற்காக ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது.
புனைகதைகளும் கவிதைகளும் மொழி பெயர்ப்பதை ஆய்வு செய்வதற்கான ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது.
2
3. நாடக நூல்களை மொழி பெயர்த்தலும் தயாரித்தலுக்குமான விடயத்தை ஆய்வு
செய்வதற்கான ஒரு குழு. இம்மூன்று குழுக்களும் தனித்தனியாக அமர்ந்து ஆய்வு செய்து தனித்தனியே தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. இந்த அறிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்று இதனடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுப்பதென்றும் கூடிய விரைவில் பரந்தரீதியில் சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஒரு சந்திப்பையும் கருத்தரங்கையும் கலாசார சமய அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
தவறு கூடுதலாக இருந்தால், பிடிவாதமும் அதி மாக இருக்கு
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997 3

Page 3
சாகித்ய மண்டல தமிழ்க்குழு
கலாசாரப் பேரவையும் அதன் கீழ் இயங்கும் 15 உப குழுக்களும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கலாசார விவகார அமைச் சினால் அமைக்கப்படுவது வழமையாகும். 'சுதந்திரமான கலை கலாசார நிறுவனங்களை’ அமைப்பதற்கு வழிவகுத்துத் தரும படி இலங்கையிலுள்ள 150க்கு மேற்பட்ட தலைசிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம கலைஞர்களும் எழுத்தாளர்களும் கை ஒப்பமிட்டு ஒரு மனுவை அரசுக்கும ஜனாதிபதிக்கும் அண்மையில் அனுப்பிவைத்தமை சகல துறையினருக்கும் தெரிந்ததே. அண்மையில் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் கலாசாரப் பேரவையும் அதன் உபகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகத தெரிய வந்துள்ளது. சாகித்ய மண்டல தமிழ் குழுவின் தலைவராக திரு. ஆர். சிவகுருநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் 'தினகரன் பத்திரிகை ஆசிரியர். இவர் ஒரு சிறந்த பத்திரிகையாளர். திரு. கே. சோமசுந்தரம் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவா தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரியாக இருப்பதுடன் தேசிய கல்விக் கொளகையை வகுப்பதில நிபுணத்துவம பெறறவர். அத்துடன் சமய சொற பொழிவுகளை நிகழ்த்துவதிலும சிறப்புத்தன்மையுடையவர். திரு. த கனகரத தினமும குழுவின் உறுபபினராக நியமனம் பெற்றுள்ளார். இவா கலவிச் சேவையில் கடமையாற்றியுள்ளதுடன் பாடவிதன நூல்களை அமைப்பதில் கை தேர்ந்தவர். தி. எஸ். நடேசன் மலையகத்தின் சிறந்த தொழிற் சங்கவாதி. திருமதி. வசந்த வைத்யநாதன் சிறந்த சைவ சமய பிரசங்கி திரு. கே. நாகேஸ்வரன் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பதுடன் சிறப்பான சைவ சமய பிரசங்கியாகவுமிருக்கின்றார். திரு. கே. என். இரத்னவேல் (வித்துவான் வேலன்) சிறந்த மேடைப்பேச்சாளன். திரு. எஸ். ஜே. ஜெயராஜாவும் இக குழுவில இருக்கின்றார். மேற்கூறப்படட பெரியோர்களுககும நவீன படைப்பிலக்கியத்திற்கும் எந்த வகையான தொடர்புள்ளது? இவாகளை என்ன அடிபபடையில் கலாச்சார அலுவல்கள் அமைச்சு அதிகாரிகள் நியமித்துள்ளார்கள்? யாருடைய சிபார்சின் பேரில் இவர்களை அமைச்சு அதிகாரிகள் குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார்கள்? அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போடுவதாக அமைச்சு அதிகாரிகளின் செயல் அமைந்துள்ளது. படைப்பிலக்கியவாதிகளான திருவாளர்கள் கலாநிதி எம ஏ. நு:மானையும் டொமினிக் ஜீவாவையும் படைப்பிலக்கியவாதிகள் என்பதை அமைசசு அதிகாரிகள் மறந்து குழு உறுப்பினர்களாக நியமித்தார்களா அல்லது இவர்களை படைப்பிலக்கியவாதிகள் என்று கருதாமல இக்குழுவில் நியமித்தார்களா?
102
arvae
வாழ்க்கைப்பயணம் என்றும் ஒன்று போல அமைந்துவிடுவதில்லை. வேகமான மாற்றங்களுக்கு சமூகம் முகம் கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் அனுபவங்களும் புதுமை பெறுகின்றன. அந்த அனுபவங்கள் கலைவடிவம் பெற்றுசிறுகதைகளாக அறுவடையாகின்றன. சமூக நோக்கும் யதார்த்தப்பண்புகளும் இல்லாமல் சிறுகதைகள் மட்டுமல்ல எந்த இலக்கியபடைப்பும் உருவாக (piqufiği. என்கிறார்திக்குவல்லைகமால்
"படைப்பாளிவானத்திலிருந்து குதிப்பவனல்ல:மக்களில் ஒருவனே. மக்கள் வாழ்விலிருந்தே மகத்தான இலக்கியங்கள் உருவாகின்றன. மகத்தான படைப்பென்றபெயர் வாங்குவதற்காக எந்தப் படைப்பாளனும் எழுதத் தேவையில்லை. உண்மையாளனாக அவன் படைப்பாக்கம் செய்யும்போதுஅது மகத்தான படைப்பாக அமைந்துவிடும்."
மாதாந்த நிகழ்ச்சிநிரல் - டிசம்பர் 1997
 

பரிமாற்றம்
ரெனிசன் பெறேறா
சர்ச்சைக்குரிய ஒரு எழுத்தாளராக இருந்த ரெனிசன் பெறேறா அவர்கள் 1940ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி கொழும்பிலிருந்து ஆறுமைல்களுக் கப்பாலுள்ள மகாபுத்கமவ என்ற கிராமத்தில் பிறந்தவ்ர். இவரது தந்தை ஓர் அரசாங்க உத்தியோகத்தர். இவரது குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள். குடாபுத்கமுல கனிஷ்ட ஆங்கில பாடசாலையில் S.S.C. வரை படித்த திரு ரெனிசன் அரசாங்க அச்சகத்தில் ஒரு தொழில் பயிலுனராக ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அதே வேளை க.பொ.த. உயர்தரம் பரீட்சையில் சித்தியடைந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகச் சேர்ந்து 1960 ல் ஒரு கலைப்பட்டதாரியானார். அரச அச்சகத்தில் 33 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெற்ற பின்னர் முழு நேரமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். 1958 ம் ஆண்டு 'நிலா ஒளி' என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. 'சரசவி' பிரசுரத்தாரால் இத்தொகுதி வெளியிடப்பட்டது. 1500 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளிவந்தன.
1967 ம் ஆண்டு இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதியைத் தானே வெளியிட்டார். கார ணம் என்ன வென்றால் இந்தத் தொகுதியை பிரசுரகர்த்தாக்கள் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள். இந்த சிறுகதைத் தொகுதியின் பெயர் 'கைத்தொழிற் புத்தர்' அதாவது இலங்கைத் தொழில் மலர்ச்சியினால் உதித்த புத்தர் என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது இந்த நூல். பெளத்த சங்க அமைப்பை விமர்சிக்கின்ற எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுதி இந்த நூல். இக்கதைகள் இடதுசாரித் தன்மையுடையவையாக இருந்தபடியாலும் பெளத்த சங்க அமைப்பை விமர்சிப் பவையாக இருந்த படியாலும் எந்த ஒரு சிங்கள நூல் வெளியீட்டாளரும் இந்த சிறுகதைத் தொகுதியை பிரசுரிக்க முன்வரவில்லை. இந்த சிறுகதைத் தொகுதி வெளிவந்ததும் அகில இலங்கை பெளத்த காங்கிரசும் மகா சங்கத்தினரும் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அரசாங்கத்தால் இந்த நூல் தடை செய்யப்பட்டதுடன் இதன் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் இதன் பிரதிகள் ஐந்நூறு வரை விற்பனையாகிவிட்டன. இந்த நூலுருக்கு பெரும் கிராக்கியிருந்தது. காரணம் என்னவென்றால் பெளத்த சங்க அமைப்பை விமர்சனம் செய்ததுடன் இந்த நூலிலுள்ள கதைகள் ஒரு புதிய வடிவ அமைப்பைக் கொண்டிருந்ததுமாகும். இலங்கையில் அரசாங்கத்தினால் முதல் முதலாகத் தடை விதிக்கப்பட்ட சிறுகதைத் தொகுதி இது. இந்த நூலுக்குப் பின்னர் திரு ரென்சன் பெறேரா சிறுகதைகள் எழுதுவதிலிருந்து விடுபட்டு, நாவல்கள் எழுத ஆரம்பித்தார்.
1960 ம் ஆண்டு திரு ரெனிசன் பெறேராவின் "பசி' என்ற முதலாவது நாவல் வெளி வந்தது. 'புரட்சி' என்ற இரண்டாவது நாவல் 1963ல் வெளியிடப்பட்டது. 1964 ம் ஆண்டில் 'நிழல்' நாவல் பிரசுரிக்கப்பட்டது. 'துட்டகைமுனு இறக்கவில்லை என்ற நாவல் 1969 ல் வெளி வந்ததுடன் 1992 ல் இதன் இரண்டாவது வெளியீடு பிரசுரமானது. இந்நாவலின் உருவத்திலும் கட்டமைப்பிலும் ஒரு பரிசோதனை நாவலாகும். பெளத்த அமைப்புகளையும் தற்பொழுது தொடர்ந்து இருந்து வரும் போலி. பையும் இந்த நாவல் அம்பலப்படுத்துகின்றது. இதன்
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997 5.

Page 4
பின்னர் திரு ரென்சன் நாவல் எழுதுவதை நிறுத்தினார். 21 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் இவர் எழுத ஆரம்பித்தார். 1990ம் ஆண்டில் 'நிக்கன்' 'பத்மினிலாதிவங்க' என்ற முதலாம் இரண்டாம் பாகங்களைக் கொண்ட நாவலின் இரு நூல்களை வெளியிட்டார். 1969ம் ஆண்டில் 'மன்னனின் ஆபரணம்' என்ற நாவல் வெளி வந்தது. இந்த நாவல் யுத்தத் தின் பின் ஏற்பட்ட துட்டகைமுனுவின் உள்ளப் பாதிப்பை மையமாக வைத்து எழுதப்பட்டது. அதாவது யுத்தத்திற்கு எதிரான மனோநிலையை பிரதிபலிக்கின்றது இந்த நாவல், 1992ல் இந்த நாவலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இது ஒரு வரலாற்று நாவல், திரு.ரெனிசன் பெறேரா 15நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் ஒருநாடக நூலை யும் தத்துவக் கட்டுரைத் தொகுதி ஒன்று, இளம் பருவத்தினருக்கான நூல்கள் இரண்டு ஆகிய வற்றைச் சிருஷ்டித்துள்ளார். 'எனது உள்ளத்து உணர்ச்சிகளை யதார்த்த வடிவமைப்பில் நான் வெளியிடுவதற்காக நான் எனது சிருஷ்டிகளைப் படைக்கின்றேன்" என்று கூறுகின்றார். இடதுசாரிச்சிந்தனையையுடைய திரு ரெனிசன் பெறேரா 'சகலவற்றிற்கும் அரசியல் தான் முதன்மை வகிக்கின்றது' என்ற கூறுகின்றார். 'எனது படைப்புக்களின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பகுக்கலாம். இவை வர்க்க அடிப்படை நோக்கைக் கொண்டுள்ளன. ஆரம்பக்கட்டத்தில் வறிய, கீழ் மத்திய தர மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எனது படைப்புக்களைச் சிருஷ்டித்துள்ளேன். இரண்டாவது கட்டத்தில் 1990 க்குப் பின்னர் கீழ் மத்தியதர வர்க்கத்தினதும் மேல் மத்திய தர வர்க்கத்தினதும் மக்களுடைய வாழ்க்கையை மையமாக வைத்து எனது படைப்புக்களைச் சிருஷ்டித்துள்ளேன். மூன்றாவது கட்டத்தில் நான் வரலாற்றுநாவல்களைப் படைத்துள்ளேன்' என்கின்றார். வரலாற்று நாவல்களைப் பற்றிக் கூறுகையில், 'இலங்கையிலுள்ள வரலாற்றுச் சம்பவங்களை மையமாக வைத்து நான் வரலாற்று நாவல்களைப் படைக்கின்றேன்' என்றார். 'இராஜாபரண' என்ற துட்டகைமுனு பற்றிய நாவல் அனுராதபுர கால வரலாற்றுச் சம்பவங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. "நிசங்க மல்லவ' (நான் மன்னர்களின் மன்னன்) என்ற நாவல் பொல்லநறுவ வரலாற்றுக் கால சம்பவங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. 'நான் தற்பொழுது சிறீவிக்ரம ராஜசிங்க கால குழந்தையை உரலில் போட்டு இடித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவலைப் படைத்துக் கொண்டிருக்கின்றேன்' என்றார். வரலாற்று நாவல்களைப் படைக்கும் பொழுது தரமான இலக்கிய மொழிநடையை நான் பாவிக்கின்றேன். எனது ஏனைய நாவல்கள் சரளமான எளிய மொழிநடையைப் பாவித்துப் படைக்கப்பட்டுள்ளன. எனது படைப்புக்களில் அநேகமானவை பரிசோதனை ரீதியில் சிருஷ்டிக்கப்பட்டவை. எதிர்காலத்தில் இளம் பிராயத்தினரும் ஏனையோருக்குமாக பலநாவல்களை எழுதத்திட்டமிட்டுள்ளேன். இப்பொழுது 3000 லிருந்து 5000 பிரதிகள் வரை எனது படைப்புக்களை அச்சிடுகின்றோம். 1995லிருந்து அண்மைக்காலம் வரை எனது நூல்களிலிருந்த எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்துள்ளது. தற்பொழுது இது சற்று குறைந்துள்ளது. இது எனக்கு மாத்திரமல்ல. இது ஒரு பொதுவான போக்கு. இந்த வாசகர் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்கு பல காரணங்களிலிருந்தாலும், குறிப்பாக தொலைக்காட்சியின் தாக்கம் வாசகர் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கருதிக் கொள்ளலாம். அத்துடன் வாசகர்களின் தரமும் வீழ்ச்சியடைந்துள்ளது' எனக் கூறினார். இனப்பிரச்சினை சம்பந்தமாகக் கூறுகையில், 'இலங்கையிலுள்ள ஒவ்வொரு இனமும் தனது தனித்துவத்தையும் மொழி, பண்பாடு, வரலாறு, இருப்பு அனைத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கும் இவற்றை விருத்தி செய்வதற்கும் அரசு உத்தரவாதமளிப்பதுடன் இவற்றை ஸ்திரப்படுத்துவதற்கு ஸ்தூலமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'
என்றார்.
ശ്രഗ)
6 மாதாந்த நிகழ்ச்சிநிரல் - டிசம்பர் 1997

நூல் அறிமுகம்
பாரதியின் பெண்விடுதலை
'தென்னாசியாவில் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலை பற்றியும் அதில் முன்னேற்றகரமான மாற் றங்களை ஏற்படுத்துவது பற்றியும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து எழுத் தாளர்கள் சிலராவது அக்கறை காட்டியுள்ளனர். சுப்பிரமணிய பாரதியார் இத்தகையோரின் மிக முக்கியமானவராக விளங்குகிறார். பெண்ணு டைய வாழ்க்கை. அவளது அந்தஸ்து நிலை, அவள் பற்றிய சமூக நோக்கு ஆகியவற்றின் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட வேண்டுமென பாரதியார் மிகவும் வற்புறுத்தி வந்தார். ' என்ற சித்திரலேகா மெளனகுருவின் முன்னுரைக் குறிப்புடன் கட்டுரைப் பக்கங்களுக்குள் நுழையலாம்.
'பாரதியும் பெண் விடுதலையும் ' எனும் கட்டுரையில் .
"ஆண்பாலார்க்கும் பெண்பாலார்க்குமுள்ள வித்தியாசம் இளமையிற் பழக்கத்தினா லேயே என்று நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்பாலாரை அபலைகள், அஃதாவது பலமில்லாதவர்கள் என்கிறோம். இதற்குக் காரணம் பெற்றோர் முதலிய பெரியோர்களே யாவர் பெண் குழநதைகளைக் கல்வியிலும் சரீரப் பயிற்சியிலும் பழக்காமல் ஆண் குழந்தைகளுக்கு மாத்திரம் அவை இருந்தாற் போதுமென்றெண்ணிப் பெற்றோர்கள் இவ் வாறு செய்தனர் போலும்! புத்தி விரிவதற்கும் தைரியம் முதலியன பெருகுவதற்கும். பெண் பிள்ளைகட்கு இடங்கொடாமல், அவர்களை ஒருவழியிலும் செல்லவொட்டாமல் கல்வி யுங் கற்பியாமல் வீட்டு வேலைகள் செய்வதிற் பழக்கி மடைப்பள்ளிக்குரிய மடையர் களாக்கிப் புருஷர்களுக்கு சிற்றின்பம் தரும் யந்திரங்களாய் மாத்திரம் அவர்களை வளர் த்து விட்டார்களே . இங்ங்ணம் வெகுகாலமாய் வளர்க்கப்பட்டு வரவே இரண்டொரு தலைமுறையிற் பழக்கத்தினாலேற்பட்ட மடமையும், பலக்குறைவும் பின்வரும் தலை முறைகளிற் பிறக்கும் சிறுமியர்க்கு இயற்கையிலே ஏற்படுகின்றன. ' என்ற பாரதியின் கூற்றை நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். るク r எது உனக்கு அறிவுரை சொலலவில்லையோ, எது உன்னை கடடாயப்படுத்தவிலலையோ, எது உன்னை உச்சக்குரலில் அழைக்கவில்லையோ, எது உணனை மன்றாடவில்லையோ, எது உனககு விளக்கம் தரவில்லையோ, அதை எதிர்த்து நிற்பது கடினம்.
s حمي * 1 յoու ս. լ. 6 -
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997 7

Page 5
அண்ணா தீர்வுப் பாசல் வந்துவிட்டது போலகிடக்கு
யாருக்கு யார் தீர்வு கொடுப்பது? பெரும்பான்மைதான், சிறுபான்மைக்குக் கொடுக்க வேண்டும்!
ஆகவே நீங்கள் சொல்வது சிறுபான்மை கேட்பதெல்லாம் பெரும்ாபான்மை கொடுக்க வேண்டும்?
அப்படியென்றால் அது தீர்வுப் பாசலல்லவே!
தம்பி பெரும்பான்மையும், சிறுபான்மையும் சிலசில விட்டுக்கொடுப்புக்களைச் செய்தால் தான் தீர்வாக அமையும்? இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகும் விட்டுக் கொடுக்க முடியாது!
இழப்பு இருபக்கமும் தான்? சிறுபான்மை இழப்பது உரிமைக்காக பெரும்பான்மை இழப்பது ஒடுக்குமுறைக்காக!
பெரும்பான்மை கைநீட்டும்போதெல்லாம் அதைத்தறித்தால் பெரும்பான்மை தன்னை இழப்பதும் ஒரு உரிமைக்காகத்தான் என்று அர்த்தப்படும்! அவர்கள் எம்மை இவ்வளவு காலமும் ஏமாத்தி, ஏமாத்தி.
அதனாலதான் ஒரு உரிமைப் போராட்டம் கிளம்பியது. நீங்களும் ஏமாத்தினால் ஏன் இன்னொரு உரிமைப் போராட்டமாக அர்த்தப்படுத்த முடியாது? சரி பார்சலுக்க என்ன கிடக்கு
சிங்களக் கமிஷன் சொல்லுது 13வது திருத்தச் சட்டத்த கொடுக்கலாமெண்டு முதலில் இவ இதை எதிர்த்தவ அது தெரியுமோ? ஆக உந்தளவே!
இப்ப இருக்கிற பிரச்சன காணி, பொலிஸ் அதிகாரம், வெளிநாட்டு உதவி. எங்களுக்கு குடியேற்ற திட்டத்த நிறுத்த வேணும்? சனத்தொகை வீதத்த மாத்தக் கூடாது!
அப்ப 22% மானவர்கள் 50% மான நிலத்தை எடுக்கிதோ! அரசாங்கம் குடியேற்றத் திட்டத்தை நிறுத்த வேணும்
நாங்களும் முந்தியிருந்த இடத்துக்கு போக வேணும் எங்கட வணக்க தலங்கள் முந்தியிருந்த இடத்தில கட்டியெழுப்பப்பட வேணும்.
எப்பவும் எங்கள்ள சந்தேகக் கண் தான்
8 மாதாந்த நிகழ்ச்சிநிரல் - டிசம்பர் 1997
 

பொலிஸ் படைய அமைச்சு இன்னொரு தரம் ஈழம் ஏன் பிரகடனப்படுத்த LoTL Liqui6iT ! அப்படி அமைச்சாலும் ஏன் அந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டம் என்றத யோசியுங்கோ?
பழைய நூல் நிலையத்தக் கட்ட கல்லுச்சேர்கிறியள் எங்கட வணக்க தலத்தக் கட்ட ஒரு சிறங்க மண் தாங்கோ பாப்பம்.
ஈழம் அமைச்சாலும் வெளிநாடு அங்கீகரிக்க வேணுமே
வெளிநாட்டில இருந்து முதலே கேக்கிறியள் உதொண்டும் சரிவராது எல்லாம் நாடகம்
நீங்கள் கூத்தாடுறத என்னவெண்டு சொல்லுறது! உங்களுக்கு 2/3 வருமோ சனம் அங்கீகரிக்குமோ
முதல்ல உங்களுக்கு திருப்தியோ எண்டு சொல்லுங்கோ சரிவராது
உங்களுக்கு கூட எங்களுக்கு குறைவு அப்ப உங்களுக்கு பிறம்பா இருக்கு எங்களுக்கு இருக்கிறத ஒத்துக் கொள்ளுறியள்
அப்ப நாங்களும் ஒத்துக்கொள்ளம் அப்ப தொடர்ந்து அடிபடுவம்
நாங்களும் மரணிக்கத் தயார்.
மேற்கூறப்பட்ட வாதங்களுக்கான அடிப்படைப் பயம் என்ன? பயத்தை தீர்பதற்கான வாசகங்கள் தீர்வுப் பாசலில் உள்ளதா?
சரி பாசல திறப்பம்! நீங்கள் சொல்லுங்கோ இந்த அடிப்படை பயங்களை தீர்ப்பதற்கான வாசகங்கள் பாசலில் உள்ளதா?
எங்களுக்கு என்ன நடக்குதெண்டே தெரியேல்ல எத்தின காலத்துக்கு தெரியேல்ல தெரியேல்ல எண்டு அண்ணனிட்டையும், தம்பிட்டையும், தங்கையிட்டையும், அக்காட்டையும் ஒப்படைச்சுப்போட்டு இருப்பியள். ஒரு முடிவுக்கு வராட்டிலும், ஒரு முயற்சியையாவது தொடங்குங்கோ பாப்பம். இது கஷ்டமானதல்ல.
எதுவரைக்கும் எத்தன மரணங்களைச் சந்திப்பது! விடிவு வரைக்கும் விடிவென்பது எதுவரைக்கும் இந்த மரணம் இறுதி மரணமாக அமையாதா?
சி. வி. பிள்ளைகள்
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997 9

Page 6
கொல்லப்பட்ட சபாலிங்கம் . கொல்லப்படப் போகும் அனைவருக்கும் சமர்பணமாகி யிருக்கும் "இனியும் சூல் கொள்” என்னும் இலக்கியச்சந்திப்பு சிறப்புமலர் பிரான்சில் இருந்து வெளியாகியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் 1988ல் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு 1997ம் ஆண்டுவரை 23 இலக்கியச் சந்திப்புக்களைக் கண்டிருக்கிறது. இத்திரு நாட்டில் மாற்றுக் கருத்தை எதிர்கொள்கிற லட்சணம்; குறிப்பாக தமிழ்ச் சமூகம், கொடுக்கின்ற இழப்புக்களை புலம்பெயர்ந்த நாடுகளிலும் முகம் கொடுக்கிறார்கள் என்பதை மிக இலகுவில் உணரக் கூடியதாக இருக்கிறது. இந்நூலின் வாயிலாக.
மரணித்த மனிதனின் மரணங்கள்
Dனுடன் சிந்தனையை உயர்த்திப் பிடித்து வானத்தை மறைத்துக் கொள்கின்றான். நேற்றுப் பிறந்த குஞ்சுக்காக்கைகள் மட்டும் அவற்றை ஊடுருவிச்செல்கின்றன. தீயைக் குடித்தவர்களும் நூர்ந்து போனார்கள் வான் எல்லைகள் மட்டும் நரைப்பதில்லை. மரணத்தைக் காதலித்து நூர்வதில்லை மரணம்! வாழ்நிலை சுரந்த வடிவற்ற சன்னதம், கூடுவிட்டு விலகிப்போய் ஒா வேம்பின நிழலில் செத்திருந்து இளைப்பாற ஏவாத வாழ்ககை எனனுள் பிளக்காத செந்நீரை எண்ணி வதைக்கின்ற சிந்தனைகள். இமைக்காது கண்கள் நிலைத்திருக்க ஏக்கம் எண்ணி எண்ணி கணத்துக்குள் வானுயரும் வெறுப்பு. எகிறிக் குதித்து விண் தொட்டு ஒட்டுமொத்த உலகை அளந்து ஆங்காங்கே புல் மேய்ந்து செமிக்காது சற்றுப் பனையோரம் பதுங்கி விக்கி குடல் விழுங்கிச் சிதைந்து என்னைக் காற்றுக்குள் தூவி மேலும் கனாக்களைக் கொண்டு வந்து போதையூட்டி ஒழுங்கு ஒழுங்கு என்று கட்டமைப்பை போதித்து என் கட்டுக்குள் வைக்க, விரிந்த வழியெங்கும் ஈட்டிகள் விழுந்தது. முயற்சித்த வாழ்க்கை ஒரு கணம் ஒன்றுமில்லாது நின்று பின் பிதற்றலோடு ஆரம்பித்த பின்தான் மரணம் மகத்துவமானது. மரணம்! அதுதான் என் ஆன்மீகம். உடலொட்டா செயற்கை உறவுகளை விட்ட சுத்த நிர்வாண சுகத்தைப் போதிக்கும் மதம். நின்றுகொண்டே படுக்கவும் இருந்துகொண்டே பறக்கவும் கல்வி ஞான பழைய மூளையைப் பாதித்து அழித்து ஒவ்வோர் அணுககளின் அசைவைக் கண்டு ரசிக்கவும் மொழியற்ற மற்றும் பேதைக் கவிதைச் சொல்லற்ற சொர்க்கம். பிறந்தெழுந்து உயிர்ப்புடைய புறத்தை கண்ணுக்குத் தெரிந்த கைகளுக்கெல்லாம் பரிசளித்து வற்றிப்போய் ஒருநாள் நின்று மரணித்து மெளனமாகிப் போனோம். அறியாமை என் வீடென்றோதி என் ஞானச் சிறையுடைத்து பயன்பெற்ற நண்பர்களே, என் நாசி தொலைத்துவிட்டது முனகல். சிரிப்பு என் நெஞ்சு வேர் அறியாச் சாதகமாய்ப் போச்சு, பாசப்பிறப்பறுந்து போச்சு, டட்டும் படாமலும் என்மேல் தொடாமலும் என்னை உறிஞ்சிய உற்றார் நீர் சிலப்பான நம பூமிக்கு மாலை சூட்டி கல்லறை என்று பொறித்துச சுடலை வாழநதோம் சுற்றி வர வீடுகள் வீடுகளில் மரணித்த மனிதர்கள். வந்து கதை பேசி உறவாடி என் உயிர்ப்பைப் பரிகசிக்கும் விடாக்கண்டர்கள். நான் ஒருபோது கூடிக்குதித்தேன். கும்மாளமிட்டு உயிர்ப்பைத் தெறித்து இப்போது அவாகளோடில்லை. இந்த மரண மெளனத்தில் எந்தப் புதிய சங்கற்பங்களாயினும் எனக்கு சோகத்தையே தெரிவு செய்கின்றன. மறுதலித்து நான் மரணத்தைத் தெரிவு செய்கின்றேன். நான் மீண்டும் ஒரு யுத்தத்துக்குள் போயிருந்து கொண்டு பழையதைக் கண்ணிமைக்காமல் பாாத்தபடி சிறை செய்கிறேன். வருபவர்கள் வந்து எனை உற்றுக் கவனிக்க குனிந்தபடி நானும் புலன்களைத் திறந்து அவர்களை நிதானிக்கின்றேன். அவர்களுக்கும் மெளனம் கொடுத்து. என் சுவர்களை
() மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997

அளந்து தண்டு தளபாடங்களை அளந்து நிலம் நோக்கி கால்களிற் பாயும் கண்களுடன் பலரும் வந்து வந்து ஒருவரை ஒருவர் பிரதிபலித்தனர். நான் போகப் போகிறேன் எல்லாரும் எனக்கு முன்னால் நின்று பற்கள் காட்டினர். சுற்றிவர எங்கும்மண் ஊரார் பிதற்றுவர் மண்டைக்குள். அவர்கள் கதைகளிற் கவனமெடுக்க முடியாது. 'தோனறிற புகழொடு தோன்றுக’ என்று இடைக்கிடை வந்து அமமா காதில் ஒதிப் போவா எதை எதை இணைக்குதென்று தெரியாது மரணம் என்ன செய்யும்? உயிர்விழுங்கி விம்மியவன் இவன் என் காதல் மரணமே தவித்திருக்கும் தேகத்தை ஆற்று.
**** அளவாக அழுது நாளைக்கும் அழச் சேமிக்கும் கஸ்தூரி ஒருநாள் என் கரத்தை இதயத்தில் அழுத்தி கண்களைக் குறுக்கி தன்னை நட்பிக்கச் சொன்னாள். அடிவயிறு கலங்க கைகளை உருவிக் கொண்டேன். நான் மரணித்தது புரிய கபாலம் சிதறிப்போய் கஸ்தூரி கைகளால் தலைவைத்தால், துடிப்பை ரசித்துவிட்டு நாளைக்கு வரவென்று வந்துவிட்டேன். சொச்சத்தை அவள் வெறுமனே சிந்தினாள். என் நேற்றுவரை வரலாறு களங்கமின்மை என்றும் சமூக அங்கத்துவம் இன்னும் வாய்களில் விழுந்து கேள்விகள் ஆகாததும் அவளது பழைய பதிவுகள்தான். இன்றைய தருணத்தில் அவளுக்கு வேறு கனவுகளும் இருக்கலாம் என நான் வார்த்தைகளையும் எதிர்பார்த்தேன். வாக்கியங்கள் அவளுக்குச் சொற்களை இணைத்துப் பிறந்தன. இந்தப் பேதமை இன்றோடு சரி. மூக்கில் உயிர் வந்து முட்டும் ஒரு நாள் வரைக்கும் வேண்டாம். அவள் அனைத்திற்கும் அருகதையானவள் அவள் வாழ்ந்தால்தான் அகிலத்திருப்தி. ஆனால் என்ன நோக நோக பெற்றெடுத்த அவளை ஊரில் ஓர் உதிரச் சடுதிக்கு மணமுடித்துக் கொன்றார்கள்.
* 督普*
வெளிக்குள் நேரம் விதைப்பது தொடரும். மார்புக்குள் உக்கி உருகிவிட்ட எலும்புகள் மேலும் வெளிக்குத் தெரியாத ஒன்று பசித்திருக்கு இன்னமும்.
உதய சேனன்
பாதுகாப்பு + பம்மாத்து = தேசப்பற்று.
எண்பதுகளில், இருந்தாலும் இயக்கங்களைக் கண்டதும் எனக்கு இன்னுமொன்று தேவை. கல்லூரியில் படித்த என்னை
கவனமாய் யோசித்து தென்தமிழீழத்து சிறார்களைக் கனடாவுக்கு அனுப்பிவைத்த கொன்றாவது என் அப்பா, தமிழீழம்.
தொண்ணுாறுகளில், சுதந்திரமாய் வாழவெண்டு ஏனெனில் சுவிசுக்கு என் தம்பியை நான் தேசப்பற்று மிக்க சுணங்காமல் அனுப்பிவைத்த தமிழன்.
GT667 g) thLDst.
இருவரையும் நானிப்போ
எதற்கும் நல்லதென்று கௌரிமனோகரன் இந்தியாவுக்கு எடுத்துவிட்டேன் * நன்றி இனியும் சூல் கொள்
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997

Page 7
சுடலை ஞானம்
வாழ்க்கையினைக் காலம் வடம்பிடித்து நிற்கிறது. தோளின் கனவெல்லாம் குக்குமமாய்த் தெரிகிறது. சுழும் சுவர்க்கமெல்லாம். சுடுகாட்டுக் கேகையிலே தோன்றுகிற ஞானத்தில் தூசாய்த்தான் தோன்றுகிறது. சுண்ணம் இடித்து,
சுடர்கின்ற பந்தமெல்லாம்
கண்ணெய்யால் கொழுத்திக் கடன் செய்து
அரப்பெண்ணை வைத்து:
குளிப்பாட்டி வரிசையிட்டு. உடல் சுமந்து கொள்ளிக் குடத்தோடு குளறி நடக்கையிலே. 'இதுதானே வாழ்வென்ற' எதார்த்தம் சிரிக்கிறது?
^, 'விதியே மெய்' என்றோர் விடைநெஞ்சைக் குடைகிறது
நேற்று வளர்த்து, நெற்றிமோந்து. பொட்டுவைத்து, சோற்றுப் பருக்கைகளைச் சுவைத்தெந்தன் வாயிலிட்டு பாசம் பொழிந்த பாலூற்று
நோயாலே. காய்ந்து உலர்ந்த கஞ்சலெனப் 'போகையிலே' கடைசிமுறை செய்யும் கடமைக்காய். பேரன் யான்
சுடெை) வரை சென்றேன்?
சூழ்ந்த சொந்த பந்தமெல்லாம் படலைவரை வந்து. பறந்துவிட. உறவு என்ற உடமை பிரிந்த உடலுக்கு. தீயாலே குளிப்பாட்ட நானும் சுடுகாட்டில் கொலுவிருந்தேன் மொழியுரைக்க முடியா மோனத்தில் 'அன்பின்மேல் மூண்ட அனல்கிளைந்து முளாசிக் கனன்றதடா? 'தோன்றிய பொன்மேனி துளித்துளியாயத் தேய்ந்ததடா!
பற்றும் நெருப்பு பசித்தீர்த்து அடங்குதற்குச் சற்றுமுன் மண்டை ஓட்டோடு நெஞ்செதுவும் முற்றும் எரியாது முறுகியது? தடியெடுத்து உடைத்தெரித்தேன்?
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997
 

மூளை உருகி எரிவதனை மடைசொரிந்த கண்ணாலே கண்டமர்ந்தேன்
ஈரலது நெய்க்கட்டி ஆக நெகிழ்ந்தெரிய நான்துவண்டேன்? ஐயோ இதுவா? முன் அழகென்றேன்? சில நொடியில்
எலும்பின்றி எல்லாமும் ஏகத்தில் நீறாக வலுவின்றி வந்து நீர்வார்த்தேன்? படையலிட்டு
காடாத்தி உழுதோம்; கனி, ரொட்டி வைத்தழுதோம்; தேவாரம் சொன்னோம்: அஸ்த்தியுடன் திரும்பி வந்தோம்; سمير ஒன்றும் அறியாத ஊமையைப்போல் சுடுகாடு نام மெல்ல இருட்டில் மிதந்தடா?
சிவந்த அனல் ஆறி, அடங்கி! அடுத்ததற்காய் காத்ததிடா? ஊறி எழும் எண்ணம் "உனக்கும் இது என்று ஓர்சேதியால். ' மெய்யை உணர்த்திவிட வாழ்க்கையதன்
வேர்நுட்பம் கண்முன் விளங்கியது
கால்மாறி
வீட்டுக்குச் சென்றேன். வெளிச்சத்தில் நாளைக்காம் ஆட்டத்துக்கு ஆரோ அடுக்கெடுத்தார். ஆராரோ ஆட்டுவிக்க ஆரோ ஆடவந்தார். சிலநொடிக்குள்
'பட்டினத்தார் பாடல்" மறைந்தது காண்?. பழையபடி எட்டாக் கனவெல்லாம் இதயத்தை உலுப்பின காண்? தத்துவத்தைக் கண்ட தலைதேய்ந்து
எதற்காயோ
கத்துகிறேன்
கலவரமாயென் கவிதை தொடர்கிறது. (6) சீலன்
த.oஜயசலன
நன்றி: இதய சங்கமம்
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997 13

Page 8
மா தா ந் த சி ரிை மா
3) I Typ 5) gibG335 (TO LI VE)
1940 தசாப்தங்கள் "சியங்காய் ஷேக்கின் தேசிய இராணுவமும் (KMT) 'மாஓசேதுங்கின்' செஞ்சேனையும் ஆட்சி அதிகாரத்திற்காகப் போர் புரிந்த காலகட்டமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி கம்யூனிஸ்டுகள் எதிர்ப்புரட்சியாளர்களை பகிரங்க மாகச சுட்டுத்தள்ளினா தனது வீட்டை சூதாட்டத்தினால் உரித்தாக்கிக் கொண்ட நபரை சுட்டுக் கொல்வதற்கு அழைத்துச் செல்வதை 'ஷகிெய்" காண்கிறான் அரசியலோடு எதுவிதத் தொடர் பும் அற்ற 39கிய்" இச்சம்பவங்களைக் கண்டு தனது வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு புரட்சி வாதியாக தன்னை இனங்காட்டிக்கொள்ள செஞ்சேனை இராணுவ முகாமிலிருந்து கிடைதத நற்சான்றிதழைப் பயன்படுத்துகின்றான்.
1950 தசாப்தம் புரட்சிகர செஞ்சேனை ஆயுதத் தயாரிப்புக்கு என வீடுகளிலுள்ள இரும்புப் பொருட்களையும் ஏனைய பண்டங்களையும் சேகரிக்கின்றது. 'ஷ9கியின் வீட்டில் உள்ள சமையல் பாத்திரங் களும் ஆடதத் தயாரிப்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. பொம்மலாட்டக் கருவிகளிலும் இரும்பு இருபபதாகக் கூறி 'ஷ9கியின் மகன் அவற்றை இராணுவத்திற்குக் காட்டுகின்றான். கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் நகரவாசிகள் அனைவருக்கும் பொதுச் சமையல் அறையிலிருந்து உணவு கிடைக்கின்றது.
1960 தசாப்தம் புரட்சிக்கு முன்பிருந்த அனைத்தும் எதிர்ப்புரட்சிகரமானது எனக்கருதும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அவற்றை அழித்து விடுகின்றது. அதற்கமைய 'ஷகிெயின் பொம்மலாட்டக் கருவிகளும் எரித்து அழிக்கப்படுகின்றன. பிராந்தியக் கட்சித் தலைவன் 'ஷகிெயின் மகளுக்கு ஒரு மணாள னைத் தேடித்தருகின்றான். வலது குறைந்தவனாக இருப்பினும் மணமகன் தொழிற்சாலைக் கட்சிக்கிளைத் தலைவனாவான். 'பன்ஷியா குழந்தையைப் பிரசவிக்க மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றாள். இச்சந்தர்ப் பத்தில் வைத்தியசாலையின் இளம் ஊழியர்கள் மூத்த வைத்தியர்களை எதிர்புரட்சியாளர் களென முததிரை குத்தி வெளியேற்றிவிட்டு வைத்தியசாலையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். குழந்தைப் பிரசவம் நடைபெறும் போது பயிற்றப்பட்ட வைத்தியர் ஒருவரை அழைத்து வருமாறு 'பன்ஷியாவின் பெற்றோர் மருமகனை நிர்ப்பந்திக்கின்றனர். எதிர்ப் புரட்சி வாதியென முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு பசியோடிருந்த பேராசிரியர் 'வான்ங் என்னும் வைத்தியர் அழைத்து வரப்படுகின்றார். வைத்தியர் பல நாட்களாகப் பட்டினியோடு இருப்பதை உணர்ந்து 'ஷ9கிய் தம்பதிகள் வைத்தியருக்கு பனிஸ் ஊட்டி குடிக்கத் தண்ணீர் கொடுக்கின்றனர். வைத்தியர் மூர்ச்சையடைகின்றார். இதனிடை.ே பன்ஷியா ஒரு குழந்தையைப் பிரசவிக்கின்றாள். பிரசவத்தின் பின்னர் இரத்தப்பெருக்கு அதிகரிக்கின்றது. அனுபவமிக்க வைத்தியர்கள் இல்லாத படியால் தாயின்
உயிரைக் காட்பாற்ற முடியவில்லை.
14 மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997
 

விபவி நிகழ்ச்சிகள்
1949-LDLuIT மாதாந்த சினிமா LoT6O6IO 4. CO — for 66AD 7. OO 14 ஞாயிறு (To Live) (VVERC LLE SOT uso)
டிசம்பர் இலக்கியக் காலை 9.30 - 12.30 கலந்துரையாடல் (WERC LL6COTL-lub) (၁၀ ਲ60 (58,தர்மராம வீதி, கொழும்பு-6.)
டிசம்பர் 20, 21 (சனி, ஞாயிறு)
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் கலைக் கழகத்தின் கர்நாடக, பரத நாட்டியக் குழு வழங்கும் விரிவுரையும் செய்முறை விளக்கமும் (முழுநாட் கருத்தரங்குகள்) இடம் : இராமகிருஷ்ண மண்டபம், வெள்ளவத்தை. அனுசரணை : இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம, இந்தியத் தூதரகம்
பேரழிவுகளை வேறு விதமாக நோக்குதல் வெள்ளங்கள், வரட்சி, மண்சரிவுகள், யுத்தம் . முடிவற்ற பேரழிவுகள் . நீண்டகால தீர்வையிட்டு சிந்திப்போமாக
தென் ஆசிய சுவரொட்டி, சித்திரப் போட்டி பேரழிவுத் தணிப்பு
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவரொட்டிப் போட்டி 18 வயதுக்கு குறைந்தோருக்கு சித்திரப் போட்டி 1998, பெப்ரவரி 1 அன்று பிரவேசங்கள் மூடப்படும்
முதாலாவது பரிசு : RS.20,000/- இரண்டாம் பரிசு RS.15,000/- மூன்றாவது பரிசு : RS.10,000f
ஒவ்வொரு பகுதியிலும் 25 தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் பதிவுப் படிவத்திற்கும், கருத்துருக் குறிப்புக்கும் தயவு செய்து சுய விலாசத்திலான முத்திரையிடப்பட்ட உறை ஒன்றை பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்: துர்யோக் நிவாரண சுவரொட்டி, சித்திரப் போட்டி, 5, லயன்ஸ் எதிரிசிங்க மாவத்தை, கொழும்பு 5.
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - டிசம்பர் 1997

Page 9
தங்களுக்கு
நாம் இவ் நிகழ்ச்சி நிரலினூடாக தங்களை சந்தி தவிர இந்நிரல் சம்பந்தமாக யாரும் எழுத்துரு தெரிவிக்கவில்லை. சரிநிகர்,வீரகேசரி, தினகரன் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினூடாக அறிமு: நன்றிகள். பல இடையூறுகளின் மத்தியிலும் இந்நிரலை தங் கடந்த 3 மாத நிரலும் அச்சிட்டே அனுப்பி வை தங்களின் விலாசங்களை நாமாக அறிந்தே இந் போய்ச்சேருகிறதா என்பதை அறிய முடிய இந்நிரலை கிடைக்கப்பெறும் ஒவ்வொருவ முகவரியை எழுதியனுப்புங்கள், முகவரிக பெறுகிறது என்பதை உறுதிப்படுத்தவும் எமக்கு ஜனவரி (1998) மாதம் முதல் முகவரிகளை மீ கலை, இலக்கியம், சம்பந்தமாக (சிறிய வரவேற்கிறோம்.
நன்றி
விபவி மாதாந்த நிகழ்ச்சி நிரல் V 51/7, ராஜா ஹேவா வித்தாரன ஒழுங்கை,
محمد کی مہ.o ... &ھ A*

த்து ஒரு வருடம் ஒரு சில கடிதங்களைத் வில் எமக்கு எவ் அப்பிராயங்களையும் , தினக்குரல் நண்பர்களுக்கும், இலங்கை ப்படுத்திய நண்பன் யோகராஜனுக்கும்
கள் கரங்களுக்கு கிடைக்கச் செய்கிறோம். க்கிறோம் இதன் செலவு மிகவும் அதிகம். நிரலை அனுப்புகிறோம். இது பலருக்குப் ாமலிருக்கிறது. எனவே தயவு செய்து நம் தபால் அட்டையிலாவது தங்களின் ளைச் சரிபார்க்கவும், நிரல் கிடைக்கப்
உதவியாகவும் இருக்கும். ள் ஒழுங்கமைக்கவும் எண்ணியுள்ளோம். ப) ஆக்கங்களை (கவிதை/சிறுகதை)
நாங்கள்
விபவி தமிழ் ரிெவு