கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.01

Page 1
சுதந்திரத்தைப் புதிய கண்ணோட்ட சுதந்திரப் போராட்டத்தின் அவச செலுத்தவும், எம்மை அர்ப்பணிக்க
 

ச்சி நிரல் - தை 1998
彩能影物阿须飘忽羽汉 刁像劉懿縫 « .ダ،ダダkmメ ィグ及影燃物殘癥历 っ72形啟珍珍黎 \:%丝 澎 忍 vご∞%丝 丝*膠丁磁 丝% "ダイシ% 丝ダ。シダ%%磷 多目概昭磁之娜丝 →双 \\哆概华人之黎 :缪级1 話吸袭 %彩忽磁
珍望 绿引袭移 &
NV
எமது கவனத்தைச்
i Ghafi (alsTLDIT?
ம் பற்றி
ாவகறப
ம் திடச
த்தில் அனுகவும், இரண்டாவது
fu
। ରLD

Page 2
முப்பயம்
"தண்ணிர்! தண்ணிர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணிர்! ஆனால் என் தாகத்தைத் தீர்க்க ஒரு துளி தண்ணிர் தானுமில்லையே." என்று கூற்று உண்டு. அது போலவே, தண்ணிர், தண்ணிர், எங்குமே தண்ணிர் பாய்கின்றது. ஆனால் என் வயலுக்குப் பாச்சுவதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லையே” என்று ஊவாப் பிரதேசத்திலுள்ள கிராமம் விவசாயியினுடைய அவல ஒலம் ஒலித்து மலைமுகடுகளில் எதிரொலிப்பதை "துன்விய” என்ற சிங்கள தொலைக்காட்சி நாடகத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. இந்தத் தொலைக்காட்சி நாடகம் அண்மையில் விபவி கலாச்சார மையத்தின் அனுசரணையுடன் கொழும்பிலுள்ள தேசிய நூலக சேவைச் சபைக் கேட்போர் கூடத்தில் பத்திரிகையாளர்களுக்கும் வெகுஜன ஊடகத் துறையினருக்கும் திரையிடப்பட்டது.
“முதுமை, பிணி, மரணம் ஆகிய மூன்றும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றது. என்று புத்த பகவான் கூறுவதையே "துன்விய" என்ற வார்த்தைகள் குறிக்கின்றன. ஆனால் இதே அர்த்தத்தில்லாமல் தண்ணின்மை, தொடர்ச்சியான கடன் தொல்லை. மரணம் ஆகிய முப்பயங்கள் ஊவாப் பிரதேச கிராமிய விவசாயியை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. இந்த அச்ச உணர்வும் கிராமிய விவசாயியின் சோகமும் இந்தத் தொலைக்காட்சி நாடகத்தில் ஊடுபாவாக ஓடிக் கொண்டேயிருக்கின்றது. இந்தத் தொலைக்காட்சிக் காவியத்தில் ஊவாப் பிரதேசத்திலுள்ள கிராமிய விவசாயி முகம் கொடுக்கின்ற தனது வயலுக்கு பாச்சுவதற்கு நீரில்லாமல் அல்லலுறுவது, இதனால் அவனுடைய நெற்பயிர்கள் கருகி நாசமாவதும், பட்டகடனை அடைக்க முடியாமல் அவன் திண்டாடுவதும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளும் அடாவாடித்தனங்களும், தற்கொலை முயற்சிகளும், இதனால் வாழ்க்கை சீரழிந்து சிதைவதையும் உணர்வு பூர்வமாகச் சித்தரிக்ப்பட்டுள்ளன. "கடன், கடன் கடன், வட்டிக்குப் பணம் எடுத்த கடன். கடைக்காரனுக்கு கடன், அரசாங்கத்துக்குக் கடன். இந்தத் தொடர்ச்சியான கடன் தொல்லை எப்ப தீரப்போகின்றதோ என்று அங்கலாய்க்கும் உணர்வுடன் கிராமிய விவசாயி அவலக் குரல் எழுப்புவதை இதில் நாம் காண்கிறோம். இந்த விவசாயியின் ஒரே ஒரு மகளின் கற்பு இருதடவைகள் சூறையாடப்படுவதனால், மகளும், தந்தையும் பலதடவைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். தனது காதலியின் கற்பைச் சூறையாடமுயன்ற அதிகாரியைக் கொலை செய்ய முயற்சித்து அதில் தோல்வி கண்ட அவனை பயம் தொடர்ச்சியாகத் துரத்திக் கொண்டேயிருக்க இறுதியில் அவன் ஆற்றில் குதித்து மரணத்தைத் தழுவுகின்றான். தன்னைக் கற்பழித்த அதிகாரியை மலையுச்சியிலிருந்து தள்ளி வீழ்த்திப் பழிவாங்குகின்றாள் அந்த இளமங்கை. இவை அனைத்தும் மிகக்கலை அம்சத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையமைப்புக்கும் நடைபெறுகின்ற சம்பவங்களுக்கும் ஒத்திசைவாக சோகமயமான கிராமிய இசையும், கிராமியப் பாடலும் மலையக கிராமியக் காட்சிப் புலத்துடன் ஒன்றிணைந்து இந்தத் தொலைக்காட்சி
gP பக்கம் 7இல்
2 மாதாந்த நிகழ்ச்சி நிரல் - தை 1998

சுதந்திரத்தை. சுதந்திரத்தை. சுதந்திரத்தை.
COCOG finsfuggir? Jibilgir
காலனித்துவ எஜமானிடமிருந்து நாம் விடுதலை அடைந்து ஐம்பது ஆண்டுகளாகின்றன. சுதந்திரத்தின் மாபெரும் அறுவடையின் இடையே பாரிய களியாட்ட விழாவிற்கு காலம் வந்துள்ளது!.
இது உண்மையா? 50 ஆண்டு கால சமூக அரசியல் பயணத்தின் பின் நாம் எமது எஜமானர்களாகி
6G3L TDIT?
"மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடியதாக உள்ளதா? யாருடைய கையில் சுதந்திரம் உள்ளது? என்பதைத் தீர்மானிக்கும் அடிப்படைப்பிரச்சினை அதிகாரம் பற்றிய பிரச்சினையே.
அப்படியானால் அதிகாரம் யார் கையில் உள்ளது? இலங்கையின் சுதந்திரக் குடியரசின் யாப்பிற்கு அமைய “இறைமை” மக்களிடம் இருந்தே வெளிவரவேண்டும். ஆனால் நடைமுறை வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த வாசகத்தில் ஏதாவது பொருள் உண்டா? வினாவை இவ்வாறு தொடுப்போம். t எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும், அதன் சிறப்பிற்கும். முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் அடிப்படை அம்சங்களான - பொருளாதார சமூக - கலாச்சார நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலும் அதிகாரமும் அவற்றை நடை முறைப்படுத்தும் ஆற்றலும் மக்களுக்கு உண்டா? இப்பிரச்சினையை நோக்குமிடத்து ஆட்சிக்கு வந்த - வராத, எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரத்திட்டமிடும் அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் இடையே எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு விடயத்தில் ஒருமித்த கருத்துக் கொண்டவர்களாக உள்ளனர். “மக்களுடைய பிரச்சினைகளை மக்கள் அறிந்திருப்பதைவிட தாங்களே அதிகம் அறிந்திருப்பதாக அரசியல்வாதிகள் கூறுகின்றனர். எனவே, மக்களும் அவர்கள் மத்தியில் வாழும் மக்களின் உண்மையான தலைவர்களின், மக்கள் அபிப்பிராயங்களை உருவாக்கும் தலைவர்களின் நிபுணர்களின் அபிப்பிராயங்களை, கருத்துக்களை, அறிவை மக்கள் குரலாகக் கருதி தமது தீர்மானங்களை மேற்கொள்ளவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான செயற்பாட்டில் முழுமையாகப் பயன்படுத்தாது விடுவதில் தவறு இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் அனைவரும் வந்துள்ளதாகத் தெரிகின்றது. இதன் காரணமாகவே இதுவரை ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளைக் காற்றில் பறக்க விடுகின்றன. இதுவரை ஆட்சிக்கு வராத கட்சிகள் தமது நேர்மையை
மாதாந்த நிகழ்ச்சி நிரல் -தை 1998 3

Page 3
உறுதிப்படுத்துவதாகவும் இல்லை. இப்பிரச்சினை பற்றிய மாற்று நோக்கு உண்டா? உதாரணமாக ஜே.வி.பி.யை எடுப்போம். பிரதேச சபைத் தேர்தல்களின்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை நீக்கிவிட்டு மிகவும் தகைமை வாய்ந்தவர்கள் என்று கூறி ஜே.வி.பி. பிரதேச சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தது. மக்கள் அபிப்பிராயம் ஜே.வி.பி.க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படவில்லை. தமது அபிப்பிராயமே அவர்களுக்கு முக்கியமாகும். அதே போல கடந்த 50 ஆண்டுகளாக சீரழிந்த ("பொதுமக்கள் சேவை"யின் அடித்தளம் இன்று முழுமையாக குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது.) அரசாங்க சேவை இன்று அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் நிறுவனமாகவே மாறியுள்ளது. அரசு என்ற கட்டமைப்பில், சட்டம் இயற்றும் நிறுவனத்திற்கும், நிறைவேற்று அதிகாரத்தை அமுல்படுத்தும் நிறுவனத்திற்கும் இடையே அமைய வேண்டிய ஒப்பீட்டுச் சுதந்திரம் இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு இடையே வித்தியாசம் உண்டா என்று கண்டு பிடிக்க முடியாது. அமைச்சர்கள், நிறைவேற்று அதிகாரத்துறையின் தலைவர்கள், அதே சமயம் சட்டவாக்கத் துறையின் தீர்மானங்களை மேற்கொள்வோரும் அவர்களே. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா? பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி அதிகாரக்கட்டமைப்பின் பங்காளர்களாவர். அவர்களும் தீர்மானங்களை எடுக்கின்றனர் அதேசமயம் அவற்றை அமுல்படுத்துகின்றனர். தீர்மானங்களை செயற்படுத்த வேண்டியவர்கள் அல்லது நடுநிலையுடன் மக்கட் சேவைக்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டிய அரச நிறைவேற்று உத்தியோகத்தர்கள் - ஒளிவுமறைவான, மூடிய, பொறுப்பற்ற, தான் தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாட்டின் பங்காளர்களாகவே இன்று செயற்படுகின்றனர். இந்த அரச மரபைப் பொறுத்தளவில், சரியாகக் கூறுவதாயின் "இழிவான மரபின் கீழ் இறைமையுடையோர் எனக் கூறப்படும் மக்களுக்கு எதுவித உரிமையும் கிடையாது. இந்தப் பிரச்சினை சரியாகப் புரியாவிட்டால் பின்வருமாறு வினவ முடியும். எமது நாட்டின் முக்கிய உற்பத்தியாளர்களாகிய விவசாயிகள் - மீனவர்கள் தமது உற்பத்திகள் - நீர் வளங்கள் பற்றி அடிப்படைத் தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமா? அவை அவர்களிடமிருந்து கை நழுவி இடம்பெயரவில்லையா? கைத்தொழில் -விற்பனை- சேவைத் துறைகளைச் சார்ந்த, பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் தமது தொழில்சார் வாழ்வு தொடர்பான ஆரம்பம் முடிவு பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வது ஒரு புறமிருக்க, தமது உயிரைப்பாதுகாத்து மனைவி மக்களையும் குடும்பத்தையும் பராமரிக்க முடியாத இக்கட்டான நிலையை அடைந்துள்ளனர். பல லட்சக்கணக்கான சிங்கள-தமிழ் முஸ்லீம் மக்கள் யுத்தத்தின் விளைவாக அகதிகளாகவோ இடம்பெயர்ந்தோ வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எதுவித உரிமையும் இல்லாதவர்களாக வாழும் இம்மக்கள் தமது குரலை சிறிய அளவிலேனும் சமூகத்தில் முன்வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இம் மக்களுக்கு “சுதந்திரம்" என்பது ஒரு வாய்ச்சொல் மாத்திரமே. அச்சமும் பீதியும் இன்றி பெண்கள் க்தந்திரமாக நடமாட முடியாத நிலையில் பெண்களுக்கு எங்கே "சுதந்திரம்”? காலம்
4 மாதாந்த நிகழ்ச்சிநிரல் - தை 1998

கடந்த நெருக்கடிக்குள்ளான அமெரிக்க மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை முன்னுதாரணங்களைக் கடைப்பிடிக்க எண்ணியுள்ள இலங்கையின் நகர்ப்புற மத்தியதர வர்க்கம் “சுதந்திரம்" என்ற சொல்லின் உண்மை அர்த்தத்தை புரியும் மன நிலையில் உள்ளதா? அடிக்கடி பலிக்கடாக்களாக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் பயனுறுதிவாய்ந்த பிரஜைகளாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா? கடந்த 50 ஆண்டுகால கலை இலக்கியத்துறையின் வளர்ச்சி காரணமாக கிராமப்புற மக்கள் எப்படி இருப்பினும் நகர்ப்புற உயர் மத்திய தர வர்க்கமாவது சிறந்த கலாசார வாழ்வை உரித்தாக்கிக் கொண்டுள்ளதா? வேறு வகையில் கேட்பதாயின், கலை இலக்கியம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வோர் கலாச்சாரம் பற்றிய அரச கொள்கைகளை வகுப்பவர்கள் கலைஞர்களா? கலை இலக்கிய விற்பன்னர்களா? அல்லது ரசிகர்களா?
சுருங்கக் கூறுவதாயின் கடந்த 50 ஆண்டுகால தேசிய அரச செயற்பாடு மக்களின் பங்கேற்புடனான ஜனநாயக வழியில் அமைந்ததா? அதிகாரம் தொடர்பான அடிப்படை சுட்டிகளைப் பயன்படுத்தி சுதந்திரம் பற்றிய வினாக்களைத் தொடுத்து ஆய்வு செய்து நாம் அடைந்துள்ள சுதந்திரத்தை அளவிட முடியும். சுதந்திரத்தை அளவீடு செய்வதற்கு இதனைவிட நுட்பமான சுட்டிகளையும் பயன்படுத்த முடியும். ஒன்று ‘சுதந்திரத்தை அனுபவிக்கும் காலவரையறை பற்றிய சுட்டி. இரண்டாவது வாழ்க்கையின் பெளதீக நிலைமைகளான உணவு, உடை. வீட்டு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகிய அடிப்படை மானுடத் தேவைகளை அளவிடும் சுட்டியாகும், உடல் மூளை உழைப்பை பயன்படுத்தும் நேரத்திற்கு மேலதிகமாக எவ்வளவு ஒய்வு நேரம் மக்களுக்கு உண்டு? என்பதைப் பொறுத்தே ஒரு நபர் அல்லது சமூகம் தனது உடல், உள, கலாசார ஆத்மீக அபிவிருத்திக்காக நேரத்தை ஒதுக்க முடியும், எனவே,எவ்வளவு ஒய்வு நேரம் உண்டு? அதனை மேற்கூறிய மனித அபிவிருத்திக்குப் பயன்படுத்த எவ்வளவு அவகாசம் உண்டு? "நாம் சுதந்திரம் பெற்று விட்டோம்" என்பது அனுபவிக்கும் ஓய்வின் அளவைப் பொறுத்ததேயாகும்.
எனவே நாம் சுதந்திரம் அடைந்து விட்டோமா? 8. பிரச்சினையை நாம் அச்சமின்றி நோக்குவோம். 50 ஆண்டு கால அறுவடையை நாம் பெறும் போது இரண்டு கிளர்ச்சிகளையும் இன்று வரை தொடரும் ஓர் உள்நாட்டுக் கொடூர யுத்தத்தையும், வேறு பல சிக்கல்களையும் எதிர் நோக்கி உள்ளோம். முதலாவது சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக நாம் தோல்வி கண்டுள்ளோம் என்பதை ஏற்க எமக்குத் தைரியம் உண்டா? எனவே. 1998ம் ஆண்டில் சுதந்திரத்தைப் புதிய கண்ணோட்டத்தில் அணுகவும். இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் அவசியம் பற்றி எமது கவனத்தைச் செலுத்தவும். எம்மை அர்ப்பணிக்கவும் திடசங்கற்பம் செய்வோமா?
மூலம் : சுனில் விஜேசிரிவர்ன
தமிழில்: எஸ். சிவகுருநாதன்
மாதாந்த நிகழ்ச்சி நிரல் -தை 1998 5

Page 4
பரிமாற்றம்
சுகதபாலா த சில்வா
சிகள கலைஞர்களையும் எழுத்தாளர்களை யும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் இந்தத்தடவை திரு சுகதபால த சில்வா அவர் களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். திரு சுகத பால த சில்வா ஒரு எழுத்தாளர் மாத்திரமல்ல,
அவர் வானொலி நாடக பிரதியாகச் சிருஷ்டி கர்த்தாவாக இருப்பதுடன் பிரபலமான நாடக அரங்க நெறியாளராகவும் ஒரு தீவிரமான மனித உரிமைகளுக்கான ஒரு போராளியுமாவர்.
தென் இலங்கையின் ஒரு கிராமத்தில் பிறந்த திரு சுகதபாலா கொழும்புக்கு வந்து, குற்றவியல் கதைகளை எழுதுவதை ஆரம்பத்தில் கைக் கொண்டார். '99' என்ற ஒரு குற்றவியல் சம்பந்தமான ஒருநாவலை எழுதினார். இரண்டாவதாக "சாய்புநானா' என்ற ஒரு விகடநூலைப் படைத்தார். இந்தப் படைப்புஹாஸ்யம்நிறைந்ததாகவும் பெருமளவு வாசகர்களைக் கவர்ந்தாகவுமிருந்தது திரு சுகதபால அவர்கள் அதிகம் படித்தவரல்ல. அவர் எதுவித உயர்கல்வித் தகமையு முடையவரல்ல. ஆனால் தனது விடாமுயற்சியினாலும் அனுபவத்தினாலும் கலையுலகில் தன்னை முன்னுக்குக் கொண்டு வருவதில் வெற்றி கண்டார். இலங்கை வானொலியில் முதன் முதலில் அவர் நாடக பிரதியாக்க படைப்பாளியாக தனது நாடகத் துறைவாழ்க் கையை ஆரம்பித்தார். இவர் நீண்டகாலமாக இலங்கை வானொலியில் ஒரு முன்னணி நாடகத் தயாரிப்பாளராகத் திகழ்ந்தார். இவரது திறமையையும் ஆற்றலையும் உயர்ந்த சிருஷ்டித்திறனையும் புரிந்துணர்ந்த இலங்கை வானொலிநிர்வாகத்தினர்திரு சுகதபாலா அவர்களை ஒரு நிரந்தர சேவையாளராக இலங்கை வானொலியில் சேர்ந்து கொள்ளும்படி பலதடவைகள் வற்புறுத்தினார்கள். தான் ஒரு சுதந்திரமான கலைஞனாக இருப்பதையே விரும்புவதாகக் கூறிநிர்வாகத்தினரது அழைப்பை ஏற்கமறுத்துவிட்டார். 1960 களில் அவர் ஒருநாடகக் குழுவை அமைத்து, அதில் சிறந்த நாடகக் கலைஞர்கள் பலரை உள்வாங்கி தலைசிறந்த நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றினார். இந்த நாடகக்குழுவின் பெயர் 'அப்பே கட்டிய' (எமது குழு) என்பதாகும். 'மறாசாத்' (மாறா சாதி) 'கொடோவுக்காகக் காத்திருத்தல்' என்ற இரு தலைசிறந்த நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றினார். அவருடைய நாடகங்களில் 'மறாசாத்' என்பது மிகச் சிறந்த நாடகமாகும். இன்று சிங்கள நாடகத்துறையில் மிகத் தலைசிறந்த தீவிரமாக உழைக்கின்றநாடகக்கலைஞர்களில் அனேகமானோர்திருசுகத பாலாவின் சிஷ்யர்களாக இருந்தவர்கள். நாடகத்துறையிலுள்ள இளைஞர்கள் எல்லோரும் அவருடன் நெருங்கிப் பழகுவதுடன் அவரை இதயபூர்வமாக நேசிக்கின்றதுடன் 'சுகத் ஐயா" (சுகத் அண்ணா) என்று வாஞ்சையுடன் அழைக்கின்றனர். அவர்இன்று எழுபது வயதை எட்டி விட்டாலும்
6 மாதாந்த நிகழ்ச்சிநிரல் - தை 1998
 

எப்பொழுதும் இளம் கலைஞர்கள்தான் அவரைச் சுற்றியிருக்கின்றார்கள். ஏனெனில் அவர் அவர்களை ஆழமாக நேசித்துகலைத்துறையில் அவர்கள் வளர்த்து வருகின்றார் திரு சுகதபாலா அவர்கள் நாவல்களையும் மூன்று மொழி பெயர்ப்பு நாவல்களையும் 5 நாடகப் பிரதிகளையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் வானொலி நாடகமும் மேடைநாடகமும் பற்றிய ஒரு நூலையும் படைத்துள்ளார். இந் நூல் இலங்கையில் அரங்கியலுக்கும் வானொலி நாடகப் பிரதியாக்கத்திற்கும் ஒரு பிரதானமான பங்களிப் பாக இருப்பதுடன் இலங்கையின் சிங்கள அரங்கியல் அபிவிருத்திக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது. இவர் ஒரு கவிதைத் தொகுதியையும் சிருஷ்டித்து வெளியிட் டுள்ளார். இலங்கையின் வானொலி நாடகம் பற்றியும் சிங்கள மேடை நாடகம் பற்றியும் பேசும் பொழுது திரு சுகதபாலாவின் பெயரைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. அந்த அளவிற்கு அவர் பங்களிப்புச் செய்துள்ளார். திரு சுகதபாலா அவர்களதுநாவல்களில் பெரும்பான்மையானவை அரசியல்நாவல்கள் அவர் இடதுசாரி மனப்பான்மையுடையவர். இன்றுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் மத்தியில் அவர் பெரிதும் மதிக்கப்படுவதுடன், அவர்நாட்டில் மிகவும் பிரபல்யமானவர் அப்படியிருந்தும் அவர் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார். அவர் இரத்மலானையிலுள்ள தொடர் மாடியில் ஒரு சிறிய இடத்தில் வாழ்கின்றார். அவர் சின்னச்சிறிய தொடர்மாடி வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் எப்பொழுதும் அவரை இளம் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அவர் எழுதுவதிலும் நாடகங்களிலும் மாத்திரம் திருப்தி கொள்ளாமல் மனித உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நின்று தீவிரமாகப் போராடி வந்தார். ஜீவத்துடிப்புள்ள போராட்ட உணர்வுடைய இந்த எழுத்தாளனும் கலைஞனுமான திரு சுகதபால த சில்வா இன்று நோயின் காரணமாக படுக்கையில் முடங்கிக் கிடப்பது ஒரு துர்அதிர்ஷ்டவசமான நிலையாகும். அப்படியிருந்தும் அவரைப் பார்க்கச் செல்கின்ற இளம் கலைஞர்களையும் ஏனையோரையும் மணிக்கணக்காகத் தமது விகடக் கதைகள் மூலமும் சமயோசிதமான
பேச்சுக்களாலும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கின்றார்.
ஒபக்கம் 2 இலிருந்து முப்பயம்
நாடகத்திற்கு கலைத்துவத்தை ஊட்டுகின்றமை சிறப்பம்சமாக இருக்கின்றது. இதன் நெறியாளர் ஆரியரத்ன அத்துகல. இது காலமுயற்சிக்கு ஒரு வெற்றியாக அமைந்துள்ளது. ஊவா பிரதேச கிராமிய விவசாயி. அவரது மனைவி, ஒரே ஒரு மகள், அவளுடைய காதலன் ஆகிய நான்கு பாத்திரங்களையும் ஏற்று நடித்த நான்கு கலைஞர்களும் உணர்வு பூர்வமாக அப்பாத்திரங்களாகவே மாறி நடித்துள்ளார்கள். நெறியாளரின் வெற்றிக்கு இக்கலைஞர்களின் பங்களிப்பு ஒரு முக்கிய அம்சமாக இருந்துள்ளது. தலை சிறந்த சிங்கள கிராமியத் திரைக் காவியங்களான திரு. லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் "ரேக்காவ" “கம்பெறளிய', திரு. தயானந்த குணவர்த்தனாவின் "சிக்குறுதறுவோ", "குறுளுபத்த” ஆகியவற்றைப் போல "துன்விய” என்ற இத் தொலைக்காட்சி நாடகமும் தனது கிராமிய சிறப்பம்சங்களைக் கொண்டமைந்த ஒரு உன்னதமான சிருஷ்டியாக அமைந்துள்ளது.
மாதாந்த நிகழ்ச்சி நிரல் -தை 1998
7

Page 5
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ. இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும் என்வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள் உருண்டன.
கூடவே கோதாரிபுடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது. ஆவீன மழைபொழிய இல்லம் வீழ. நாசீயேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற அகத்தடியாள் விம்மியழ வாரீசு வதங்கித்துவள.
இருப்பைக்காக்கத்தாம் யாவும்.
ஈழத்தைவிட்டு ஜேர்மனியில் வாழ்வதும்.
சாவதும் இருப்பைப்பற்றிய கனவின் உந்துதல்தாம்.
நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.
சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்,
Ma WSIG OOO
ஒலியே அநாதி! சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது. ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ. அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக. என் அகத்தடியாள் அழுதாள். மேய்நோக நோக விம்மி விம்மியழுதாள். அடிமை?
இவ்லோகத்தின் அடிமை?? தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.
என் வீரீயத்தின் மகுடம் துவண்டு
கிடந்தது. மூச்சில்லை. முகங்கற்குவியலுக்குள். நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. உச்சியிலிருந்து குருதி கசிந்தது. அவன்மீது கட்டப்பட்ட கனவுகள்கோடி தவிடுபொடியாவும் என் மீது நான் கொள்ளும் பச்சோதாபம் அவனுருவில் வலிமை சேரும்.
எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாகிப் போனபோது.
மனைவி அவன் எனக்கு ஆரம்பத்தொடரானான். ஒலி இதற்குக் குண்டு முற்றுப்புள்ளி வடிவில் எதிரொலி வந்து சேர்ந்தது.
என் செவிப்பறை இரைச்சலில் இயலாமை மீண்டும் உச்சியில் வலுவிழந்தது. பிரபஞ்ச இரைச்சல் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது என்னை ஒலியைத்தவிர வேறெதுவுமில்லை அவன் மனிதத்தை அத்வைதம் மனதில் விரிந்தது. இறுகப்பற்றியிருந்தான்.
8 மாதாந்த நிகழ்ச்சி நிரல் - தை 1998
 

குருதியினால் அதை தூய்மைப்படுத்தவா?. போன கிழமைதாம் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ் நண்பர்களின் முயற்சி அது. மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில் குடிகளுக்குள் வருகின்றன? மாவீரம் போகுதென்று விதை கொண்டோட வழியியலே கடன்காரன் மறித்துக்கொள்ள. இருப்பதே வாடகைக் குடியில் இதற்குள் விளைப்பிதற்கேது நிலம்?
ஒருநாளைக்கு உடம்புக்கு முடியாது போனால், வாடகை வீடு ஞாபகம்
கிருஷ்ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக. அதற்குள் 'மானுடம் புழுவாக நெழியும் காட்சியாக விரியும்.
நேற்றும் வேலைக்கும் போனபோது என்னுடன் வேலைபார்க்கும் என் நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையிலிருந்து நீக்கியிருந்தார்கள். போனமாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பியபோது தட்டத்தனியனாக நின்று எதிர்த்தவன். டொச்சில் Ausbeutung Systeme (Gy6öTL-do பொறிமுறை) என்று கோசம் போட்டவன்.
நேறறு.
இனறு நான் என் குடும்பம் வெடிகுண்டுப்புகைக்குள் குருதி சிந்தி. உயிர் கொடுத்து. இடிபாடுகளுக்குள் இருந்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வேலைகசூப் போகமுடியாமல்
நேர்ந்ததை எண்ண அது பயமாகி என் வீட்டு இழப்பைக்கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள் டொச் லாண்ட (Deutchland) புகைகளின் பின்னே. எனக்கு, ஈழம் இப்போது சிறப்பானதாகப் பட்டது. யுத்தத்தை மறுத்து தூக்கம் வரும்போது தூங்கி பசிவரும்போது கொட்டாவிவிட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன் காலந்தள்ளி, அமைதியாய் உடல் அசைந்து உயிர் தாங்கும். டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கியிருந்தது. ஆனால், குண்டை எப்போது வழங்குமென்று தெரியாமற் போய்விட்டது தெரிந்திருந்தால். என் வீரியம். என் கனவு. என் மனைவி. நான் அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து. என் மனைவியை என் மழலையை அண்மிக்க முயற்சித்து தோற்றேன் சில நிமிடங்கள் கழிய கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்தெறித்தன. இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலிய்ை ஞாபகமூட்டின. நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள். இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதுராடியது. சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஒடியடித்து எமை அண்மித்தனர். அவர்கள் Vof fufகாரர்கள் (அவசர அழைப்புக்காரர்கள்) கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார் அது துவண்டு விட்டது. நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய முறையில் அவனைப் பார்க்கவில்லை.
மாதாந்த நிகழ்ச்சிநிரல் -தை 1998

Page 6
அவன் வாழ்நாளில் பலமணிநேரங்களை நான் அவனுக்காக செலுத்தாமல் புத்தகங்களுடன் செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல் நூல்களுக்குள் புழுவாகிப் போனதாலேயோ என்னவோ அவன் என்னை விட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான், எனக்குள் நொந்து வெதும்பினேன். இனி, இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ? நான் இதையறியேன். ஏதோவொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி, அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து. அகோரமான வாழ்வுப்படலத்தை சொல்லாமற் சொன்னது. இரு விழி சிந்தும் நீரை பாராதே என் இதயம் மகிழ்வதைப் பார்! என்று அவைகள் கூறவில்லை இயற்கை வலிமையுடையது சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும், மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே : لقـاسـالا தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை தற்போது தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப் பிதற்றினாள். துவண்டதை அணைத்து மூர்ச்சையானாள். அவள் உடலெங்கும் இரத்தக்காயங்கள். தலையிலிருந்து குருதி வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது. என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூலையில் சிதறாமல் கிடந்தது.
என் குழந்தையும் இப்படி. என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது உப்புநீர், சீதை சிந்திய கண்ணீர் மலைபோன்ற எதனுடே சென்று எங்கோ அடைந்த தாம்
எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி வர்ணிப்பானோ தெரியாது.
ராமாயணத்தை சுவைபட விளக்கிய ஆசிரியர் சபாரெட்ணம் என் விழி முன் வந்து போனார். எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன. என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும் சென்றார்கள். என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிச்சென்றார்கள். நேரம், அதிகாலை நான்கை நகரவைத்தியசாலைக்குள் காட்டியது. எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்துநாளைக்கு எழுதப்பட்டது. கூடவே உடற்சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது. மனைவியை விபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள் கடுமையாக குண்டடிபட்டுவிட்டாள். நான் என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ என்று ஏங்கித்
தவித்தேன்.
மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள எனக்கு உணர்வும் உடல் இயக்கமும் இருந்தது. என்ன பாவம் செய்தேனே தெரியாது! புண்ணியம் செய்திருந்தால் கூடவே. நானும் போயிருப்பேன். இப்போது நான்.
இருள் விடிந்து காலை மணி ஏழாகியது. என் உடலில் வலுவிருந்தது. வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத்துண்டு வழி வகுத்தது. அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி,
O
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - தை 1998

மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தளத்திற்குச் செல்லக்கிளம்பினேன். வழியில் ஞானம் எதிர்ப்பட்டான். ‘என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுகள் நான் மெளனமாகியிருந்தேன். 'மச்சான் போன மாதம் வேண்டின ஆயிரத்தையும் தாவன்ராப்பா. வீட்டுக்காரர் கொழும்பில் வந்து நிற்கினம். இப்ப அவையளோட ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கேதான் நீயும் கடவுளேயெண்டு நேரிலவாறாய். காசைத் தாவன்ரா" ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக மாவீரம்போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன் காரன் மறித்துக் கொள்ளச்.
வேலை போகுதென்று மருத்துவ விடுப்புக்கொணடோட வழியிலே கடன் காரன் மறித்துக்கொள்ளச்
சாவீடு என் வீட்டில் நிகழ. நான் விழி பிதுங்கி நிற்க.
ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை. பத்தாண்டுகளுக்குப் பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில் அவன் தன்னை மறந்திருநதான். பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன் என்றேன்.
சரி மச்சான் ஏதோ சிநதனைவயப்பட்டவனாய் விடை பெற்றான் அவனைப் பிரிந்து கிளம்பினேன் வானம் அழத் தொடங்கியது. எனக்காக?
மாதாந்த நிகழ்ச்சி நிரல் -தை 1998
குண்டுச் சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின எனக்கு
நிம்மதி இல்லை என் மழலை பற்றிய கனவுகள் வாழ்வின்மீது வெறுமை கவ்வியது. வேலை ஏன்? மருந்து விடுப்பேன்? எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன பொன் எழில்கொள் மேனியைக் கண்ணநீரினால் கழுவி ஆடுவேனோ? மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன் இடையில் விம்மி விம்மி அழுது வீங்கினேன் என் செல்வத்தின் எழில் முகத்தைப்
பார்க்க மனம் அவாப்பட்டது.
அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி கண்கள் மீண்டும் பனித்தன. விழி நீரினூடே அவன் மலர்ந்தான். விழிநீரிலாடே அவன் மலர்ந்தான் குயிலும் கரும்பும் செழுந்தேனும் குயிலும் யாழும் கொழும்பாகும் அயிலும் அமுதம் சுவைதாத்த மொழியைப்பிரிந்தான் அழியானோ!
சீதைக்கும் இராமனுக்குமா இது பொருந்தும்?
எனக்கும்தாம்! என் மழலையை எந்தச் சவக்காலைக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள்? மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன இரத்தம் ஏற்றினார்கள்.
எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளஸ்மா மூலம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன். டாக்டர்கள் கேட்கவில்லை. அவள் நிலைமையை நானறியேன்
恋I玛

Page 7
ஓடினேன். ஒடினேன். என் குழந்தை நினைவால் அவள் நினைவால் வைத்தியசாலை அண்மித்தது. என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத்தலைகள் தென்பட்டன. 'என்ன தம்பி உமக்கு இப்படி? பெரியவர் ஒருவர் நா தளதளக்க கேள்விக்குறியால் ஆறுதல்படுத்தினார். ஞானமும் மெளனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான். மனைவி கோமாவில் இருந்தாள். நான் தலைமை வைத்தியரிடம் என் மழலை பற்றிய விபரம் அறியச் செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச்சென்றேன். என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய் சொன்னார்கள்.
பதில் கிடைத்தது.
தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது ஒடினேன் மீண்டும் அவர்களும் பின் தொடர்ந்தார்கள். பஸ் டிராம். கார் யாவுமே மெதுவாகச் செல்வதாகவுணர்ந்தேன் இதனாற் கால்களினால் ஓடினேன். ஒடினேன். பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை. இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன். இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலியெடுத்தது. மணி சுழன்றது. மால்வரை சுழன்றது மதியோர் எண் சுழன்றது சுழன்றது
அவ் வெறி கடல் ஏழும் விண் சுழன்றது. சுழன்றது. கதிரொடு மதியும். என்று
கம்பன்சொன்னதுபோல்நான் சுழன்றேன் வாய் மட்டும் அசைந்தது.
ஆவீன மழைபொலிய இல்லாம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமைசாக மாவீரம் போகுதென்று விதை
கொண்டோட வழியிலே கடன்காரன்
மறித்துக்கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே
தோன்றத் தள்ளவொண விருந்து வர
சர்ப்பந்தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை
கேட்கச் குருக்கள் வந்து தட்சனை கொடு
என்றாரே எனப்புலம்பினேன்.
எனக்கு நீர்த்தாகம் எடுத்தது நா வரண்டு கண்கள் இருண்டனன. சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என் வீட்டினிலேயே நிகழ்ந்தது. அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை. கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள். குருக்கள் வடிவில் போன
கிழமை.
அவர்கள். அவசரகால யுத்தநிதி என்
விருப்பை அறியாமலே ஐந்நூறு மார்க் என எழுதி ரசீது தந்து பணம் அபகரித்தார்கள். இவையாவும் காட்சியுருவாகின. கண்களை இருள் முழுமையாக கவ்வியது.
நான் மூர்ச்சையானேன். நினைவு திரும்பியபோது ஒரு வைத்தியசாலைக் கட்டிலில் கிடப்பது புரிந்தது.
12
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - தை 1998

கண்ணெதிரே என் மழலை ஒடியாடுவது புலப்பட்டது.
விழிகளை கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன் கண்ணீர் மட்டும் நிஷமாகின விழிகளை இறுகமூடினேன். மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது. அகத்தடியாள் மெய்நோக அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலை பார்க்கும் வரை வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழ முயன்றேன் முடியவில்லை. உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது. மீண்டும் என் மழலையின் பேச்சொலி செவிகளிற் பட்டுத்தெறித்தன இப்போது கண்களில் இருந்து நீர் வரவில்லை. வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன். வானத்தில் முழுநிலவு வட்டமிட்டது. அது என் மழலையின் நிர்மலமான தோற்றத்தை உரித்துவைத்தாற்போல காட்டி நிற்க. என் வாய் மட்டும் ஆவின மழைபொழிய இலலம் வீழ?. என முணுமுணுக்க விழிகள் பனித்தன
மறுப்பு
நான் முன் போக எண்ணினேன்
அவன் தன் கைகளைப் பற்றிச் சொன்னான்
நான் மறுத்தேன். அவன் சராமாரியாக என் மீது அடிகளைப் பொழிந்தான் நான் நிலைகுலைந்து விழுந்தேன் எழுந்தேன். மீண்டும் நடநதேன்
அவன் என் முன் நின்று எனது பாதையைத் தடுத்தான்.
மெதுவாக மென்மையாக அவனது கையை நகர்த்தி
முன்னால் சென்றேன் அவன் தனது கையைப் பின்னிமுத்து எனது முகத்தில் அறைந்தான் நான் அவனைப் பார்த்தேன் கண்களில் கண்ணிருடன் மீண்டும் நடந்தேன்
தனியாக
அவனால் எனது சுதந்திரத்தைப் பொறுக்கமுடியவில்லை தனது கரங்களுக்குள் என்னைச் சிறைவைக்கவிரும்பினான் தனது முத்தங்களால் காதலால் ஒரு வலை பின்னினான்.
அதை என்மீது வீசினான் ஆக இந்த பின்னலுக்குள்
எனது ஆன்மா தன் வாழ்வைக் கழிக்கவேண்டும்
எனது இறக்குகள் படபடக்க முச்சடங்கி உருக்குலைந்து சாகவேண்டும்
ஆனால் நான் இதிலிருந்தும் தப்பிக்கொண்டேன்
நாணிந்த மாயையிலிருந்து மீளமுன
அவனெனனைப் புதை மணலுக்குள் தள்ளினான்.
குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினான்.
அவன் எதிர்பார்த்தான்
எனது தோல்வியை ஒத்துக்கொள்வேன் என்று:
அவனது ஆண்மையை
நன்றி - 'ஒசை' அதன உலகளாவிய பலத்தை ஏற்றுக் கொள்வேன் என்று
ஆனால் நான் மறுத்தேன் மறுததேன் மறுததேன் Manuschi இதழிலிருந்து தமிழில் தேவா நன்றி ‘மனிதம்
மாதாந்த நிகழ்ச்சி நிரல் -தை 1998 13
്
#:

Page 8
La Sir GrišKayún
மன்னிக்கவும் என்னை உன்கேள்விகளுக்கான பதில்கள் என்னிடத்திலில்லை இருப்பது - அநீதி, வெறுப்பு, யுத்தம் மற்றும் கோஷமாக மட்டுமல்ல சமத்துவம்.
எனக்கென்ற காட்சியில்லை.
காணமுடிவது அடர்ந்துபடர்ந்த ஹிரோஷிமா மேகங்களையும்
ஆஸ்ட்விச்'சின் சிம்னிகளிலிருந்து பரவிச் செல்கிற கரும்புகையையுமே...!
கடந்த காலங்களென்றெதுவுமில்லை மாயையாகத் தெரிவதுகீறல் விழுந்த கண்ணாடிகள் காட்டுகிற சாந்தமான முகங்கள் பெரும் கண்ணர் மூட்டத்துள் காணாமல்
GLslubol
அவற்றின் உயிர்ப்பான தோறறங்கள்!
எதிர்காலம்.? என் கைககள் அசைந்தெழும்பி வழியனுப்ப ஒன்றன்பின் ஒன்றாய் ஒவ்வொன்றாய்ச் செல்கிறது புகைவண்டி நான் ரயில் நிலையத்திலேயே நிற்கிறேன் எனக்கு அது தெரிகிறது.
பாதுகாப்போ. அபயமோ எதுவுமில்லை தங்கமும் வைரமும் நிலையற்று விலையற்று
எம்.கே.எம்.ஷகீப்பின் மொழி பெயர்ப் புக் கவிதைகளின் தொகுதி நாளை இன்னொரு நாடு’ நிகரியின் வெளியீடாக வந்திருக்கிறது. இதிலிருந்து.
ஏறியிறங்குகின்றன. அவ்வாறே வீடுகளும் புத்தகங்கள் எரிக்கப்படவும் உறவுகள் முறிக்கப்படவும் தாராளமாய் முடிகிறது இங்கு
மற்றும்
வதையையும் சிதையையும் கத்தியையும் கம்பியையும் கடவுளின் பெயரால் புனிதப்படுத்தியாயிற்று 'இஸங்களும் உலகை அவற்றிடையே பிரித்துவிடும்
மிகக் கூரான அவைகளது சின்னங்களிலிருந்து சொட்டுச் சொட்டாய் வழிகிறது
இரத்தம் தெரிவுக்கும், கருத்துத் தெளிவுக்கும் இடமற்ற கல்லறைகளில் உறுதியான முடிவுகள் உறங்குகின்றன
எப்போதும் போலன்றி மிகச்சத்தமாயும், அதிகமாயும் அண்டங்காக்காய் கத்திக் கொண்டிருக்கிறது முன்பு, இவ்வாறு நீ கேட்டிருக்கமாட்டாய் கிறிச்சிட்டுக் கொண்டிருக்கிற கதவும் தொப்பென்று சத்தமெழுப்பி முடிக் கொள்கிறது.
மன்னிக்கவும் என்னை
உன் கேள்விகளுக்கான பதில்கள்
என்னிடத்திலில்லை
ஆன் ரணசிங்ஹ (ஆங்கிலம் - 1997)
14
மாதாந்த நிகழ்ச்சி நிரல் - தை 1998
 

விபவி நிகழ்ச்சிகள்
ஜனவரி ಬಣ್ಣ: "" (or solo 4.30- oncos. 6.00
gБLDL JULD 17 சனி (இயக்கம்: அரவிந்தன்) (WERC மண்டபம்) டிசம்பர் விபவி 97ம் ஆண்டு மாலை 4.30 - 7.00 செயற்பாடு பற்றிய (WERC 1 fb6doTLLub) 24 சனி
மதிப்பீடு (58,தர்மராம வீதி, கொழும்பு -6.) أص ܢܠ
GOTHE INSTITUT39, Gregory's Road, Colombo 7. Te 694,562
CONCERT
The Dresden Chamber Choir 14th January 7.00 p.m. at the Cathedral of Christ the Living Saviour 374, Bauddaloka Mw. Col. 07
VIDEO LECTURERS
"TWITTERING WITH POWER' (56mins) Introduction- Kingsley Gunattilake (22th 5.00 p.m. GCI Auditorium)
"DOCUMENTAX' (30mins) Introduction-Dr. Sabine Grosser, Art historian (29th 5.00 p.m. GCI Auditorium)
(2 ཡོད་ ན།
ஒரு கலைஞனால் செய்யக் கூடியதெல்லாம் தனது புரிதலுக்கும் அனுபவத்திற்கும் எட்டிய விதத்தில் நடப்பு, சமூக இருப்பை ஒழுங்கை கேள்விக்குள்ளாக்குவதும் விமர்சனத்திற்குள்ளாக்குவதும்
என்பதாகவே இருக்க முடியும்.
ஆதி
(ހ
மாதாந்த நிகழ்ச்சிநிரல் -தை 1998 15

Page 9
இப்பொழுதெல்லாம் அழுகை அழுகையாக வருகின்றது தொடர்ந்த சொந்தம் இறந்ததால் எல்லாமே சூனியமாய்
போதையாய்
அழுகை அழுகையாக. இந் நீண்ட பிரபஞ்சத்தில் சுருண்டு போனது வாழ்க்கை இனியுமென்ன?
51/7, ராஜா ஹேவா வித்தாரன ஒழுங்கை, ராஜகிரிய வீதி, ராஜகிரிய. தொலைபேசி: 874996
விபவி மாதாந்த நிகழ்ச்சி நிரல்
 

எழுந்து நிற்கக்கூட வக்கற்று போன ஜீவன்
ஆனாலுமென்ன? ஆசை விட்டUாடில்லை கவிதை(யென்று) படைக்க
உன்னிகளால் துரத்தப்படும் இரையும்
தற்காத்துக் கொண்டு இரைதேட நானுமிங்கே ???
-பாடினி