கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.02

Page 1


Page 2
இனி இது விபவி மடல்.
நம்மைச் சுற்றியிருக்கும் பல்வேறு இடர்ப்பாடுகளையும் கடந்து, தடைகளையும் மீறி நமக்கான சிந்தனைத் தெளிவுகளுக்கும் தேடல் களிற்கும் பன்முகரீதியிலான உரையாடல் களுக்குமான பரிமாற்ற ஊடகமாகவே இது அமையும்.
விபவியின் தமிழ் செயல்திட்டங்களை ஒழுங்குபடுத் தி, ஆரோக்கியமாக, வளர்த்துச்செல்ல, ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கபட்டுள்ளது. விபவி மடலைத் தொகுத்து வழங்கவும் விபவியின் பதிப்பு முயற்சிகளை திட்டமிட்டு செழுமையுடன் வெளிக் கொணரவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மடல் குறித்தும், நிகழ்ச்சிகள் குறித்தும் உங்கள் ஆலோசனைகளையும். விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.
கலை இலக்கியம் குறித்த சிறிய
படைப் புகளை தந்துதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
-ஆசிரியர் குழு
கொக்கோக்
G5NGT
dbGDIJsLJIb!
சுதந்திரம் பொன் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற எமது
நாட்டில் ஒரு பிரபல கிறிக்கற் விளையாட்டு
வீரர் பெய்சி கொக்கோ கோலா கம்பனியுடன் 180 லட்சம் ரூபாவிற்கு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளார் எனத் தெரியவருகின்றது. எமது நாட்டை ஆக்கிரமித்துள்ள இந்த கொக்கோ கோலா கலாச்சரத்திற் இந்தப் பானத்தைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும் என்ற காரணத்தினால் சில கீழைத்தேச நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது. சென்ற ஆண்டில் சுவிங்கம் இறக்குமதி செய்ததில் 50 இலட்சம் ரூபா மோசடி செய்ததற்காக ஒரு வர்த்தகருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சாதாரண பொதுமக்கள் நாளந்தம் சாப்பிடுகின்ற பாண் மாவிற்கு இன்று பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு மாநகரில் “ வோல்ஸ் ” ஐஸ் கிறீம்
வழிந்தோடிக்கொண்டு இருக்கின்றது. என்னே சுதந்திரப் பொன்விழாவின் மகத்துவம்.
 

இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க பெளத்த சிங்கள மக்களது வணக்கஸ்தலமான கண்டி புனித தலதா மாளிகை தாக்கி நாசப்படுத்தப்பட்டுள்ளது பெளத்த சிங்கள மக்களை புண்படுத்தி, அவர்களது ஆத்ம கெளவரத்தை பாதித்துள்ளமை மிகவும் கவலைக்குரியது. இது அநாகரீகமான, வெறுக்கத்தக்க மிகவும் கண்டிக்கவேண்டிய பயங்கரவாதச் செயல்.
அதேவேளை நமது நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்துக்கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள் ஏன் சில விகாரைகள் கூட சில தரப்புகளால் தாக்கி அழிக்கப்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது. இப்பொழுது உரக்கக்கத்துகின்ற ஒரு சிலர் முன்பு புனித வணக்கத்தலங்கள் தாக்கி அழிக்கப்பட்ட பொழுது மெளனமாக பார்த்துக்கொண்டிருந்தனர். இதற்கு அர்த்தம் என்னவென்றால் அந்தப் பயங்கரவாதச் செயல்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் அல்லது அனுசரணையாக இருந்து ஊக்கப்படுத்தினார்கள்.
வணக்கத்திற்குரிய புனித ஸ்தலங்களை இப்படி மிலேச்சத்தனமாக தாக்குவதற்கு வழிவகுத்தவர்கள் யார்? இதற்கு பொறுப்பானவர்கள் யார்? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? இந்த நிலை ஏன் ஏற்பட்டது? கடந்த காலத்தில் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நலனுக்காக மதஸ்தானங்களையும், வணக்கஸ்தலங்களையும் பயன்படுத்தினர் பாவித்தனர்.இந்த ஸ்தாபனங்களையும் வழிபாட்டு தலங்களையும் அரசியல் மயமாக்கினர். இச் செயல்களை மதத்தலைவர்கள் எதிர்க்கவில்லை,கேள்வி கேட்கவில்லை.இதை அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்தது மாத்திரமல்ல இதற்கு இவர்கள் உடந்தையாகவுமிருந்தனர். அதேவேளை இந்த மதத்தலைவர்கள் தமது மேம்பாட்டுக்காக அரசியலைப்பயன்படுத்தினர். இதனால்தான் இந்த நிலை ஏற்பட்டத என்பதை எவரும் மறுக்கமுடியாது.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தங்கள் பதவியேற்று தாங்களும் பழைய சிங்கள மன்னர்கள் என்று பாவனை செய்து கொண்டு, பெளத்த சிங்கள மக்களின் வழிபாட்டு ஸ்தலமான புனித தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து கொண்டு தமது அரசாங்க கொள்கையை நாட்டு மக்களுக்கு பிரகடனம் செய்தனர். இதன் மூலம் இந்த புனித வழிபாட்டுத்தலத்தை அரசியல் மயப்படுத்தினர். இதை மதத்தலைவர்கள் எதுவித கேள்வியுமில்லாமல் மழுப்பாமல் பார்த்துக்கொண்டிருந்தது மாத்திரமல்ல உடந்தையாகவுமிருந்தனர். புனித வழிபாட்டு தலங்களை அரசியல் மயமாக்குவதன் மூலம், இந்த இடங்களுக்கு அரசியலுடன் தொடர்புடைய பயங்கரவாதத்தையும் இந்த இரு தரப்பினரும் வரவழைத்துள்ளனர்.
மேலும் தமது அரசாங்கங்களின் கொள்கைகளை நாட்டு மக்களுக்கு பிரகடனம் செய்வதற்கு பெளத்த சிங்கள மக்களின் வழிபாட்டுத்தலமான தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தை கடந்த அரசாங்க கால ஜனாதிபதிகள் தெரிந்தெடுத்துள்ளனர். இந்நடவடிக்கை இந்நாட்டில் பெளத்த சிங்கள மக்கள் மாத்திரம்தான் இருக்கிறார்கள், வேறு இன மத மக்கள் இல்லை என்பதை

Page 3
ஸ்திரப்படுத் துவதற்காகதான் இவர்கள் இப்படிச்செய்தள்ளார்கள் என எண்ணத்தோன்றுகிறது. இந்த நாட்டில் பெளத்த சிங்கள மக்களுடன் ஏனைய இன மத மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? இந்த நாட்டில் பெளத்த சிங்கள மக்களுடன் ஏனைய இன மத மக்களும் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தை தவிர்த்து சகல இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து தமது அரசாங்கங்களின் கொள்கைகளை பிரகடனம் செய்திருக்கவேண்டும். ஆகவே அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக மதத்தை பயன்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது அதேபோல் மதவாதிகள் தமது மேம்பாட்டிற்காக அரசியலை பயன்படுத்த இடமளிக்கக்கூடாது.
எமது தாய் நாட்டின் சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடுவதற்கு அரசாங்கமும் பெளத்த சிங்கள மக்களின் வழிபாட்டுத்தலமான தலதா மாளிகை அமைந்துள்ள இடத்தைத் தான் தேர்ந்தெடுத்தது. இந்த பிரதேசத்தை இவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள். இந்த நாட்டில் தனியே பெளத்த சிங்கள மக்கள் மாத்திரம்தான் இருக்கிறார்கள் என்று எண்ணமா? இங்கு வேறு இனங்களும் மக்களும் இல்லையா? அப்படியான உணர்வு இன்றைய அரசாங்கத்திற்கு இருந்திருந்தால் இந்த நாட்டிலுள்ள சகல இனங்களதும் மதங்களதும் எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொதுவான பிரதேசத்தை தேர்ந்தெடுத்திருக்கலாமே. அப்படியான பொது இடங்கள் இல்லையா? இருக்கவே செய்கின்றன. இந்த நாட்டிலுள்ள சகல இன மக்களாலும் மதங்களாலும் பொதுவானது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய சிவனொளிபாத மலைப் பிரதேசம் அல்லது கதிர்காமம் அமைந்துள்ள பிரதேசத்தை தேர்ந்தெடுத்து சுதந்திரப் பொன்விழாவை கொண்டாடுவது பொருத்தம். இதை விடுத்து ஒரு குறிப்பிட்ட இன மதத்தைச் சார்ந்த இடத்தை தேர்ந்தெடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாததுடன் விவேகமற்ற செயலாகவும் உள்ளது. ஆகவே அரசியலில் இருந்து மதத்தை விடுதலை செய்யும் அதேவேளை மதத்தின் பிடியில் இருந்து அரசியலையும் விடுதலை செய்ய வேண்டும்.
நாளையே'. நம்பிக்கை
“பொய்யாய்ப் பழங்கதையாய்ப்' போனகாலம்
போனதுதான்!
மையிருட்டுள் மூழ்கும் மடிக்கு
நிகழ்காலம் “கலங்கரையை’க் கூடக் காட்டலைதான்.
கண்தெரியப்
பொழுதும் புலரலைகாண்! “புளுக்கள்” நாம். எமைச்சுற்றிக் கூடடித்தோம் ;
வண்ணத்துப்பூச்சியெனக் கூர்த்து
'உருவம்' . தவிக்கின்றோம்! மண்ணுள் 'உறங்குநிலை கொண்டவித்தாய் . பச்சைக் குடைவிரிக்க நீர்கேட்டும் வந்தமுது வார்க்க மழைமுகிலோ கூடலியே. “இன்றோ” எமை மேய்த்து ஏய்க்கிறதே. ஆம் ; வருநாள் ஒன்றேநம் நம்பிக்கை. உணர்ந்தெம் “ உயிர்க்குஞ்சு ” தென்றலென நாளைக்குத் திரியஏங்கி முட்டையதன் கோதை இன்று கொத்துதடா! கூவத்துடிக்குதெடா!!
மாற”
努%
-தஜெயசீலன்
al r

பரிமாற்றம்
- திக.பஸ்சிே
சிங்கள கலைஞர்கள் எழுத்தாளர்கள் வரிசையில்,
நாவல் துறை சாராத, இலக்கியத் தறையில் வேறுபட்ட தனித்தன்மையுடைய துறைசார்ந்தவராக இருக்கின்றார். இவர் இருபதிற்கும் மேற்பட்டஇலக்கிய மொழி பெயர்பு நூல்கள் எழுதியுள்ளார் அவற்றுள் இரண்டு நூல்கள் தனித்தன்மையுடையனவாக இருக்கின்றன. சாதாரண பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய உப கதைகள் அடங்கிய இரு தொகுதிகளை இவர் படைத்துள்ளார்.மூன்றாவது தொகுதி மிக விரைவில் வெளிவரவிருக்கிறது. இக்கதைகள் திருயுஞ்சிஹேவா அவர்களது சுய படைப்பாகும். சமூக வாழ்நெறிமுறையும் இலக்கியத்தன்மையும் மனித மகத்துவமும் இக்கதைகளில் பிரவகிக்கின்றன. மனித மேம்பாடுதான் இவரது இலக்கு வறுமையும் அனுபவமும்தான் எனது ஆசான் என்று திருபுஞ்சிஹேவா அவர்கள் கூறுகின்றார். இவைதான் என்னை எழுத வைத்தவை என்கிறார். இலங்கையின் தென்பிராந்தியம் கடும் வரட்சியையும் கடுமையான உழைப்பாளர்களையும் கொண்ட பிரதேசம். இப்பகுதியிலுள்ள மாத்தறை சிறந்த தலைவர்களையும், இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான டாக்டர்.எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹா அவர்களையும், பல சிறந்த சிந்தனையாளர்களையும் தந்துள்ள பெருமைக்குரியது. திரு.புஞ்சிஹேவா அவர்கள் மாத்தறை பிரதேசத்திலுள்ள தொட்டமுல்லை என்ற கிராமத்தில் 1933 மார்ச் மாதம் 3ம் திகதி பிறந்தார். இவர் நூப்பே (Nupe) கிராமப் பாடசாலையில் தமது ஆரம்பக் கல்வியை கற்றார். பின்னர் மஹிந்த பிரிவன்னாவில் ஆங்கில சிரேஸ்ட கல்வித்தராதர பரீட்சையில் சித்தியெய்தினார். 1959ல் பயிற்றப்பட்ட ஆசிரியர் பதவியேற்ற திரு.புஞ்சிஹேவா அபிவிருத்தியடையாத கஸ்டப்பிரதேசங்களான அநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, பதவியா போன்ற பிரதேசங்களிலுள்ள கிராம பாடசாலைகளில் கல்வி கற்பித்தார். இவர் அரசியல் பழிவாங்கல் காரணமாக அடிக்கடி இடமாற்றங்கள் செய்யப்பட்டு, சில காலங்களில் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு பாடசாலை வீதம் வதை செய்யப்பட்டார். ஆனால் கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பின்தங்கிய கிராம மக்களுடைய வறுமையான வாழ்க்கையையும் கஷ்டங்களையும் தானும் அனுபவித்து இவற்றை அகற்றுவதற்கு இடைவிடாது போராடினார். இதனால் பெற்ற அனுபவங்களை கொண்டு தனது இலக்கிய சிருஷ்டிகளைப் பெற்றதுடன் , இந்த இலக்கியத்தை ஒரு போராட்ட ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றார்.
1980ல் அதி உத்தமரின் தார்மீக ஆட்சியில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் வேலை பறிக்கப்பட்ட ஆயிரம் அரச ஊழியர்களில் திரு.புஞ்சியுேவாவும் ஒருவர். இவர் இதன் பின்னர் சட்டப்படிப்பை மேற்கொண்டு 1982ல் LLB சட்டப்பரீட்சையில் சித்திபெற்று தமது போராட்டத்திற்கு சட்டத்துறையை உரு ஆயுதமாக பயன்படுத்தினார். தனியே ஒரு இலக்கிய வாதியாக மாத்திரம் இருந்துவிடாமல் திரு.புஞ்சிஹேவா மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒரு தீவிர போராளியாகவும் இருந்து வருகிறார். 1989ம் ஆண்டில் யூஎன்யி அரசின் ராணுவத்தினால் நடத்தப்பட்ட மிகக்கொடூரமான நர வேட்டையின்போது எம்பிலிப்பிட்டியாவிலுள்ள ஒரு பாடசாலையில் 32 மாணவர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு வழக்கை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் திருயுஞ்சிஹேவா, இதற்காக இவருக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும, உயிருக்கு ஆபத்தும் ஏற்படவிருந்தும் இவைகளை பொருட்படுத்தாமல் மனித உரிமை மீறல்களுக்கெதிரான தமது போராட்டத்தை உறுதியுடன் தீவிரமாக நடத்தினார்.

Page 4
தென்னிலங்கையில் ஒரு சில “புகழ்பெற்ற” இனவாதிகள் தோன்றி செயற்பட்டு வந்தாலும், இப்பிரதேசத்தில் இனவாதத்திற்கு எதிரான தீவிர போராளிகள் விட்டு கொடுக்காமல் போராடிவருகின்றார்கள். இவர்களில் திருயுஞ்சிஹேவா குறிப்பிடத்தக்கவர். தனது பாடசாலை நாட்களிலிருந்தே அங்கிருந்த தமிழ் மாணவர்களுடன் நெருக்கமான நட்புறவ| ன் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்துள்ளார்.இக்காலத்திலேயே மாணவர்களுக்கான ஒரு பத்திரிகையை ஆரம்பித்து இதன் மூலம் இனவாதத்திற்கெதிரான போராட்டத்தையும் தமது இலக்கிய முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தள்ளார்.
திரு.புஞ்சிஹேவா இலக்கியவாதியும் மனித உரிமைகளுக்கெதிரான போராளியும் மாத்திரமல்ல,இவர் ஒரு சிறந்த பத்திரிகையாளராகவுமிருந்துவருகின்றார்.1967லிருந்து “ அத்த” என்ற சிங்களப் பத்திரிகையில் “பூதக் கண்ணாடி” என்ற தமது பத்தி எழுத்து மூலம் சமூக பிரச்சினைகளையும் ஊழல் மோசடிகளையும் நீண்ட காலமாக அம்பலப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் "அத்த” பத்திரிகை மக்கள்மத்தியில் பெருமளவு செல்வாக்கைப் பெற்றது. அத்துடன் பல தேசியப் பத்திரிகைகளிலும் மொழிபெயர்பு கட்டுரைகளையும் மனித உரிமை மீறல்களுக்குகெதிரான கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவருகின்றார். மேலும் சிறுகதை, நாவல்கள்,கவிதைகள் பற்றிய இவரது விமர்சனம் ஆழமானதாகவும், கூர்மையானவையுமாக இருக்கின்றன, அதேவேளை பல இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளையும் தேசியப்பத்திரிகைகளில் எழுதிவருகின்றார்.
சிங்கள மக்கள் மத்தியில் இலக்கியம்,அரசியல்,பொருளாதாரம்,பண்பாடு சம்பந்தமாக ஆழமான கருத்துக்களை உருவாக்கி வருகின்ற “விவரண’ என்ற இலக்கிய மாத சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து வருகின்றார் திருயுஞ்சிஹேவா. இச்சஞ்சிகையில் இவரால் எழுதப்பட்டு வருகின்ற ஆசிரியர் தலையங்கங்கள் இலக்கிய அரசியல் சிந்தனைகளை தூண்டி வளர்ப்பனவாக அமைந்துள்ளன. இந்த ஆசிரியர் தலையங்கங்கள் நூலுருவிலும் வெளியிடப்பட்டுள்ளன. “விவரண” சஞ்சிகையில் “நவீனத்துவம்”, “பின்நவீனத்துவம்” பற்றிய இலக்கிய சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் நடத்தப்பட்டு சிங்கள சமகால இலக்கியததிற்கு உரமூட்டப்பட்டு வந்துள்ளது.
இச்சஞ்சிகையில் விடுதலைப்புலிகளது மாதர் படையணி பற்றிய திருமதி , ராதிகா குமாரசாமி அவர்களுடைய சர்ச்சைக்குரிய கட்டுரையை திருயுஞ்சியுேவா வெளியிட்டார். இது ஒரு துணிச்சலுள்ள செயலென குறிப்பிடத்தக்கது.
இருபதிற்கு மேற்பட்ட கலை இலக்கிய ,அரசியல்,சட்டத்துறை நூல்களை திருபுஞ்சிஹேவா படைத்துள்ளார். "அஹேதடதுவட்ட ஹேத்துவ (துர்ரதிஸ்டங்களிற்கான காரணம்) ,'தண்டுவ (தண்டனை) ஆகிய நிதிக்கதைகளை கொண்டு இரண்டு நூல்களை சிருஸ்டித்துள்ளார். மூன்றாவது மிக விரைவில் வெளிவரவிருக்கிறது. "Iணு த்தின் மகத்துவம” என்ற மகுடத்தில் கலில் இப்ரானின் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுதியை வெளியிட்டுள்ளார். “அக்குறு பயுன” (இடிமின்னலொளி) என்ற மற்றுமொரு கவிதைத்தொகுதியையும் வெளியிட்டுள்ளார். “மனித உரிமைகளும் சமூகமும்” என்ற மனித உரிமைகள் சம்பந்தபான ஒரு நூலையும் எழுதியுள்ளார். “கருங்காலிச் சிற்பம்” என்ற மகுடத்தில் “விவரm' சஞ்சிகையில் இவரால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் நூலுருவில் வெளிவந்துள்ளது. பாரதியின் கவிதைகளை மொழிபெயர்து ஒரு தொகுதியாகவும், பேட்டல் பீரிஸின் லத்தின் அமெரிக்க ஆபிரிக்க கவிதைகளையும் மொழிபெயர்து ஒரு தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.சிறுவர்களுக்கான ஐந்து

நல்ல திரைப்பட நெறியாளருக்குரிய அம்சங்கள்
லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்
திரைப்படத்துக்கு, தயாரிப்பாளர் நிதியிட்டம் செய்கின்றார். கமாரக் கலைஞன் ஒளிப்பதிவைச் செய்கின்றார். எழுத்தாளன் திரைக்கதையை உருவாக்குகின்றான். ஒலிப்பதிவாளர் ஒலிப்பதிவைச் செய்கின்றார். இசையமைப்பாளர் இசையமைக்கின்றார். பல்வேறு தொழில் நுட்பவியலாளர்களும் ஆய்வுகூடத்தில் செயலாற்றி பிரதியெடுக்கின்றார்கள். அவ்வாறாயின் நெறியாளர் செய்வதென்ன ?
நெறியாருக்குப் பிரத்தியேகக் கடமை எதுவும் இல்லையென்று மக்கள் பொதுவாக எண்ணுகின்றார்கள், அவர் நெறியாளர், அவ்வளவுந்தான்.
ஒரு நெறியாளர் அடிப்படை அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருக்கவேண்டும். அவற்றுக்கும் மேலாக ஒரு நெறியாளருக்கு திரைபடமென்ற கலை வெளிப்பாட்டுச் சாதனத்தை அனுபவிக்கின்ற உணர்வு இருக்கவேண்டும். இந்த உணர்வே அவருக்கு அதை கொள்ளும் ஆற்றலைக் கொடுக்க முடியும்.
" SILaibiglass 601 s6.J." (Feel for the medium)
இதை விளக்குவது கஷ்டம் தான். சந்தேகமில்லை, பேசும் படமாக திரைப்படம் அறிமுகமாகிய பின்னர் அது கேட்கின்ற ஊடகமாகவும் மாறியது. கண்ணும் காதும் சமமாகக் கவனிக்கப்படவேண்டும். இது நவீன திரைப்படத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது.
திரைப்படத்துக்கு காட்சி முக்கியம் ஆனால் இசையும் புறக்னிக்கப்பட முடியாதது. இசையென்பது பேச்சுமட்டுமல்ல. இயற்கையான இசை, இசை, மெளனமும் கூட.
ஆகவே ஒரு திரைப்படத்துக்கு அடிப்படையில் தேவையான காட்சி, ஓசை - இவற்றைத் திறமையாக கையாளும் திறன் ஒரு நெறியாருக்கு அவசியமாகும். இவற்றின் அடிப்படைக் கருவிகளான கமிரா, மைக்ரபோன் பற்றிய அறிவு அவசியமாகும். இவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். என்பதில்லை. கமிராவும் , மைக்ரபோனும் என்ன செய்யும், என்ன செய்யாது என்று தெரிந்திருக்க வேண்டும். அவற்றின் ஆற்றல், வரையறை பற்றி புரிந்திருக்கவேண்டும். இன்றேல் இவர் தொழில்நுட்பவியலாளரின் இரக்கத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும்.
இசையறிவும் இருக்கவேண்டும். இசையறிவு உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஒத்திசிவைப் பேணுவதற்கும் இன்றியமையாதது.
திரைப்படமானது இரு பரிமாணர்களைக் கொண்டது. அது வெளியும் காலமுமாகும். சுருங்கக்கூறின், ஒரு திரைப்பட நெறியாளர், ஒரு ஓவியருக்குறியதைப்போன்ற நல்ல கண்களையும், ஒரு சிற்பக் கலைஞருக்குரியதைப்போன்ற பிளாஸ்ரிக் உணர்வையும், ஒரு இசைக்கலைஞருக்குரியதான ஒத்தசைவான உணர்வினையும், கமரா மற்றும் மைக்ரபோன் போன்றவற்றைப்பற்றிய அறிவையும் கொண்டிருக்கவேண்டும்.
நெறியாளருக்கு நாடக உணர்வும் இருக்கவேண்டும். நாடகமென்றால் மேடை நாடக
மென்பதில்லை.
இவற்றுக்கு மேலாக, மனித அனுபவம் அவசியம் அது இல்லாவிட்டால் அவர் வெறும் தொழில்நுட்பவியலாளராகத்தான் இருக்கமுடியும். - - தமிழில் சசி. -

Page 5
தாயும் மகனும்=
உன் கண்களுக்கு அவை கயிறுகளாய் தெரியவில்லை. ஏன் ? எம்மில் பலருக்கும் அப்படித்தான், புரிவதில்லை. கயிறோ வெள்ளிக் கால்விலங்கோ எதுவும் கட்டுத்தான் அவர்களுக்கு.
உனக்கு
அவர்கள் மனமும், மார்பும் பீனிக்ஸை அல்லவர் நினைவூட்டுகின்றன. எனினும் பாரென்
அவர்கள் கால்கள். கடற்கரை மணலில் கட்டுண்டு கிடக்கின்றனவே.
நீ ஒன்றும்
கட்டவிழ்க்க வேண்டாம் மகனே. இன்னமும் உன் கைவிரல்களில் பக்குவமில்லை. ஆனால் ஒன்று செய்யேன்.
அவர்கள் அவர்களாய் அவிழும் போதும் முடிச்சுக்களை அவிழ்க்கும் போதும் கற்பு கால்வழியே போகிறது எனக் கூவாதே வீணே.
அங்கே பார் தோணி! அதற்கு கால்களும் இல்லை கட்டுக்களும் இல்லை. அப்படித்தான் அவர்தம் பேத்திகளும், பேத்தி வயிற்று மகள்களும் சவல் கொண்டு சமுத்திரங்களைக் கடப்பர்.
கயிறுகள் கட்டுக்கள் வெள்ளிக்கால் விலங்குகள் LDUGLugg)|tfo LD! GOL!)... இவற்றொடு இவர்கள்.
புரிகிறதா என் மகனே ? புரிந்துகொள் ஓர் விளையாட்டைப் போல்.
- ஆழியாள் - 04-97-س- 7

சுதந்திர பொன்விழாவா?
யாருக்கு?
பிரித்தானிய காலணித்துவ வாதிகள் எமது நாட்டில் தேயிலைச் செய்கையை ஆரம்பித்தன் மூலம் தமது “ சுதந்திர வர்த்தக வலயங்களையே உருவாக்கினர்” வெள்ளையர்களின் தோட்டங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளை விட வித்தியாசமான ஆட்சியே நிலவியது. தோட்டங்களில் இருந்து பெறும் வருமானங்களை வெள்ளையர்களே எடுத்துச்சென்றனர். வெள்ளையர்களிடம் தமது சொந்த காணிகளை இழந்த சிங்கள கிராம வாசிகள் பலவிதமான கஷ்டங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தார்கள்.
திருவாளர். ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் யு.என்யி ஆட்சி காலத்தில் விவசாய அபிவிருத்தி வலயங்கள் என்ற போர்வையில் எமது நாட்டுக்குச் சொந்தமான காணிகளை வெளிநாடுகளுக்கு குத்தகை வார்த்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவு பின்வருமாறு :-
* பாம் எண்ணை பயிர்ச்செய்கைகளுக்காக மலேசியாவில் “குட்திறி ”நிறுவனத்திற்கு மகாவலி
பிரதேசத்தில் 24,000 ஏக்கள்கள்.
* சேருவிலைத் தொகுதியில் வாழை பயிர்செய்கைகளுக்காக ஒல்லாந்து நிறுவனம் ஒன்றிற்கு 10,000 ஏக்கள்கள்.
* மதுறு ஒயா பிரதேசத்தில் கனேடிய நிறுவனம் ஒன்றிற்கு 10,000 ஏக்கள்கள்.
* மதுறு ஒயா பிரதேசத்தில் அவுஸ்ரேலியாவின் நிறுவனம் ஒன்றிற்கு 17:750 ஏக்கள்கள். * அம்பாறை மாவட்டத்தில் அவுஸ்ரேலிய நிறவனம் ஒன்றிற்கு 40, 000 ஏக்கள்கள்.
* உடுதும்மர பிரதேசத்தில் (கண்டி மாவட்டம்) பிரான்ஸ் நிறுவனம் ஒன்றிற்கு 6,000 ஏக்கள்கள்
* திருகோணமலை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பதற்க்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு
2500 ஏக்கள்கள்.
மொத்தமாக 110250 ஏக்கள் காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
மேற்படி காணிகள் துப்பாக்கி முனையிலேயே கைப்பற்றப்பட்டன. எமது விவசாயிகளின் செழிப்பான காணிகள் வெளிநாட்டவருக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.
(நன்றி : போரா ? சமாதானமா ? )

Page 6
விபவி நிகழ்ச்சிகள்
------
一て一 -u --- - -"-----~ہبہ۔--س
- பெப்ரவரி "தண்ணீர் தண்ணீர்” 400 பிய - 700 பிய م۔
21 சனி - இயக்கம் K.பாலச்சந்தர் - - WERC
28 சனி * சிங்கள நாவல் இலக்கியம்” 4.00 பிய - 7.00 பிய
- ரெனிசன் பெரேரா - WERC
(தமிழில் மொழி பெயர்ப்பு வழங்கப்படும் ) |
சனிதோறும் கலைவிருந்து
திரைப்படங்கள் எல்லாம் வர்த்தகமயமாக்கப்பட்டுவிட்டன. நல்ல கலைரசனையை, அனுவத்தை, சமூக புரிதலை அளிக்க வேண்டிய திரைப்படங்கள் மனிதர்களில் பெலவீனர்களுக்கு தீனியாக மாறிவிட்டன. நல்ல திரைப்படங்களுக்கு கடந்து போன காலத்தையே எதள்பார்க்க வேண்டிருக்கின்றது. நல்ல பல திரைப்படங்கள் பிற மொழிகளில் பரவலாக வளர்ந்து இருந்தாலும் பல்வேறு பொருளாதார காரணங்களால் எல்லாரையும் எட்டிவிடுவதில்லை. இக்குறைபாட்டை ஓரளவுக்கு தீர்க்கும் முகமாக ரூபவாஹினி சனிக்கிழமை தோறும் இரவு 1030 மணிக்கு, வெவ்வேறு மொழிகளில் வெளிவந்த தரமான, கலைத்துவம் மிக்க திரைப்படங்களை தெரிந்தெடுத்து தமிழ், ஆங்கில அறிமுகத்துடன் திரையிட்டு வருகின்றது. ALLANEN BRIDGE நெறிப்படுத்திய BRIEF ENCOUNTER, (ஆங்கிலம்) Crane Ane Flying (நார்யான் ) 36 செளராங்கி லேன், (வங்காளம்) உள்சல் (கிறீன் கர்நாட் நெறிப்படுத்தியது) முறிந்தி) மாமோ (சியாம் பெசைல் இயக்கிய உருது திரைப்படம் ) சார்ளி சப்ளினின் The kid , ருஷ்ய திரைப்பட நெறியாளர் இயக்கிய Bttleship Votemium ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்கள் எல்லாம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டவையாகவோ உயர்வாக பேசப்பட்டவையாகவோ விளங்குவன இந்த நல்ல திரைப்படங்களை இலங்கை மக்கள் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை கொடுத்தற்காக ரூபாவாஹனி பாராட்டுக்குரியது.
 
 
 

The Brit
ஜெகத் வீரசிங்க, அனோலி பெரரா, றுவின்கா, கிங்ஸ்லி குணதிலக, முகன்னத்
காதர், சந்திரபுத்த தேனுவர, சரத்சந்திர ஜிவா, பு:று. சோமரத்ன, கருணசிறி விஜசிங்க, மொன்தி செனரத், கொலம்பகே திபஸ் டி அல்விஸ், கீதாஞ்சனா குடலி கம, பல்பற் கொடா ஆகியோரின் ஓவியங்கள் சித்திரங்கள், சிற்பங்கள் கட்புல காட்சிகள்
இடம்:- லயனர் வென்ட * கலாபவனம்”
கொழும்பு-07
திகதி :- 1998/02/10, 11, 12 திகதிகளில்
நேரம் :- முய 10 - பிய 7.00
EEL GLG 0LEEELYGYLLGL LL LLL LLLGYS LLLLL LLLL G LLLL GLLLLYLLLLLYLLLL ELSSSLY aL LGLGL GGSLG LG LLLL LLLLLLY GLS 0L aLLLLL LLL LLLL LLL LLL LLGL 0LLS M U H A M MED CA DE R C H A N D RA GUji PTH A THE NI U WARA - SA RATH CHA IN DRA ji EE WA . " G. W. SOMARATH NA. KARUNA SIR W JES! NGHE MONTY SE NARTH K O L A MBA GE. T S S A D E A LW 1 S. G E E THAN J A N A K UD A L. 1 GA M A. B.A. L. B R B O D H .
ish Council, 49, Alfred House Gardens, Colombo 3 - 581 171
2-14
;
10
13 19
20 27
An exhibition of posters commemorating the 100th 9.30-5.30 p.m death anniversay of Lewis Carrol English Chamber Orchestra - chidren's concert 6.00 p.m English Chamber Orchestra - public concert 7.00 p.m.
Bishops College Auditorium
Writer Romesh Gunasekera to read from and talk 5.30 p.m. about his latest novel “The Sanglass" “Land and Freedom Feature film (110 mins) - A talk by Prof.A.J.Gunawardena on “Bertolt Brecht” 5.30 p.m to celebrate the writer's 100th birth anniversary * Land and Freedom Feature film (110 mins) 5.30 p.m * Land and Freedom - Feature film (100 mins) 5.30 p.m “A Meal for Hungry Eyes "an exhibition by Jurgen Zahringer

Page 7
வைக்கம் முகமது பஷீர்-தகழி ஆகியோரின் எழுத்துக்கள் பற்றி மலையாள எழுத்தாளர்களின் பார்வையில்.
1. பீமன் குருஜி :
அவர்கள் திறமையானவர்கள் எனப்படித்திருக்கிறேன். ஆனால் அவர்களின் படைப்புகள் அதிகம்
படித்ததில்லை.
2. ஒளப்பமன்னா !
பஹீர் பேச்சு மொழியையே தனது எழுந்து மொழியாகவும் கொண்டுள்ளார். வாழ்க்கையில் தனது நேரடி அனுபவங்களால் அடைந்ததாகிய மதிப்பீடுகளையே படைப்புக்ளில் பதிவு செய்திருக்கிறார்.
தகழி ஒரு முக்கிய இலக்கியப் போக்கை உருவாக்கியவர். மக்கள் வாழ்வினை எளிய நடையில் வெளியிடக் கூடியவர் தகழி. கிராமிய வாழ்க்கை சுரண்டலுக்குள்ளான வர்க்கத்தின் எழுச்சி, தேசிய இலக்கியங்கள் இவைகளை அப்படியே பிரதிபலிப்பவையாக உள்ளன தகழியின் இலக்கியங்கள்.
3. ഞഖങ്കങ്ങ് :
பStரும், தகழியும் தத்தம் அனுபவங்களை எளிமையாகச் சொற்களில் அதன் வண்ணமும் வாசமும் குன்றாமல் வாசகர்களுக்கு கிடைக்கும்படி செய்தனர். பஷீர் தத்துவங்களின்
மேதையாக உயர்ந்த போது தகழி உணர்ச்சிகளின் உயரங்களை வசப்படுத்தினார்.
4. முண்டூர். கிருஷ்ணன் குட்டி :
தகழியும் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்தான் ஆனால் எழுத்தின் சிறப்பில் பஷீர் ஒரு படி முன நிற்கிறார்.
5. பூரீ கிருஷ்ணபுரம் கிருஷ்ணன் குட்டி :
ஒரு ஆராதனை மனோபாவமின்றி பஷீரின் எழுத்துக்களை வாசிக்க இயலாது. காலத்தால் அதை மறைக்க முடியாது. புதுநிலவென புன்சிரிப்பு பாவச் செய்யும் புத்தொளி வீசும் அழகான எழுத்து அவருடையது. ஒரு காலத்தில் வாசகள்களை உணர்ச்சியின் எல்லைக்கு கொண்டு சென்ற தகழியின் எழுத்துக்கள் இன்று மறுமுறை வாசிக்க சுவையற்று காணப்படுகின்றன.
6. காளிதாஸ் புதுமனா :
அவர்கள் வெவ்வேறு முறையில் ஒரு காலத்தினுடைய பெருமைகளை வரைந்து காட்டினார்.
7. முண்டூர் சேதுமாதவன் :
பStரும், தகழியும் வழிநடத்திச் சென்றதென்ன ? அவர்களைச் சுற்றியுள்ள சிறு வட்டத்திலுள்ள மனிதர்களைக் குறித்து கிராமிய மணம் கமழ்கின்ற மொழியில் எழுதினார்கள் . அவர்களின் எழுத்துக்களில் மனிதநேயம் மேலோங்கி நின்றது. அங்ங்ணம் அவர்களுடைய எழுத்துக்கள் உலகத்தரம் வாய்ந்தவையாயின.
8. இயங்கோடு பூரீதரன் :
ஒரு மலையாளியின் கற்பனை ஓட்டத்தை விரிவடையச் செய்வதற்கு அவர்களது படைப்புகள் உதவி புரிந்திருக்கின்றன. தொடர்ச்சி 18 ல் . 2

உயர்வர்கத்திண் கொண்டாட்டம் 2
இலங்கையில் கத்தியின்றி இரத்தமின்றி பெற்றக்கொண்டதுதான் சுதந்திரம். இது அனைத்து மக்களினதும் உணர்வுடன் ஒன்றிய வகையில் அவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துடன் போராடி பெற்றுக்கொண்ட சுதந்திரம் அல்ல. அதாவது இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் போல் எதுவும் இல்லாமல் சும்மா கிடைத்தது தான் சுதந்திரம்.
நாம் போராடி பெற்றுருந்தால் சுதந்திரத்தை மக்கள் அனுபவிப்பதற்கும் அதன் நடைமுறை வெளிப்பாடக அரசியல் நிலைக்கப்பால் பொருளாதார சமூக கலாசார நிலையில் புத்துணர்வு பிறப்பதற்கும் வாய்ப்பேற்பட்டுருக்கும் இலங்கையின் சுதந்திரத்தின் தன்மை யாது? SWRD பண்டாரநாயக்கா இப்படி கூறுகிறார் (சுதந்திரமானது) வரையறுக்கப்பட்ட தத்துவத்தின்பாற்பட்ட கொள்கைகளுக்கும் திட்டங்களுக்குமான போராட்டத்தின் பின் வரவில்லை. ஆனால் அது உண்மையில் சாதாரண நிகழ்வுகளின் போக்கிலே வந்திருக்கிறது. சுதந்திரமின்றி நடைமுறைப்படுத்தமுடியாத தத்துவங்கள், கொள்கைகள், திட்டங்கள் என்பவற்றை ஈடுபடுத்தி அவற்றிற்க்காக சுதந்திரத்திற்கு போராடுவதென்பது இருக்கவில்லை. அதுவோர் இரவுக்குள் கிடைத்திருந்தால் ஒருநாள் நாங்கள் கண்விழித்தபோது "நீவீர் இப்போது ஒரு டொமினியன்’ என எமக்கு கூறப்பட்டது.
. . . . ஆகவே சாதன நிகழ்வுகளின் போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான் சுதந்திரம். ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் அதிகாரம் உள்நாட்டு உயர் வர்கத்திடம் மாற்றப்பட்ட சாதாரண நிகழ்ச்சி இதற்கு வயது 50. இந்த வயதிற்குள் கத்தியல்ல பெரும் துய்பாக்கிகள் கொண்ட யுத்தங்கள் - இரத்த ஆறுகளின் பெருக்பெடுப்பு
அப்போ. சுதந்திரம் ?
பதக்கம் பெறும் அயலின் மேதை
"நான் ஒரு நல்ல பேச்சாளன் அல்ல, எனக்குத் தெரிந்த பாஷை இசை ஒன்று மட்டுமே. இதனூடகவேதான் நான் சாதியத்தையும், வகுப்புவாதத்தையும், இனவாதத்தையும், வன்முறையையும் புலம்பலையும் உறுதியாக வெறுத்து நிற்கின்றேன்.” இவ்வாறு இசைமேதை கவிசர்கள் ஒரு முறை கூறியிருந்தார். உண்மையான கலைஞன் இந்தக் குறுகிய எல்லைகளை உடைத்தெறிந்தவன் மட்டுமல்ல. முழு மானுடமேன்மைக்காகவும் உழைப்பவன். இத்தகையதொரு கலைஞன் ஆனா யஹரதி மெறுறி ஜேர்மன் நாட்டு அதிஉயர் விருந்தான சூட்டோ ஹான் சுதந்திர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. எந்த யூதர்களை ஒரு காலத்தில் கொன்று குவித்த அதே ஜேர்மனி அதே யூத இனத்தவருக்கு இன்று அதி கெளரவத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
சிறுவயதிலிருந்து வயலின் வாசிப்பில் ஈடுபட்டுக்கொண்டவரான இவர் மேற்கத்திய இசை விற்பனரும்கூட. இப்போது உலக அமைதிக்காக போர், கலவரம் ஆகியவற்றில் இன, மொழி, மதம் வேறுபாடு இன்றி வயலின் கச்சேரியை நடத்தி வருகின்றார்.
மார்ச் 8ல் பெண்கள் தினம் இதனையொட்டி காலை கருத்தருங்கும், மாலை கலை நிகழ்வும் இடம்பெறும். மேலதிக விபரங்கள் அடுத்தமடலில் அறியத்தருகின்றோம். ஏற்பாட்டாளர்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) விபவி கலாசார மையம்

Page 8
வெள்ளைத்தாள்
நான் உங்களது வானத்து சூரிய, சந்திரர்களைக் கேட்கவில்லை.
உங்களது பண்ணை, உங்களது நிலம் உங்களது உயர்ந்த வீடுகள், மாளிகைகள் ஆகியவற்றை நான் கேட்கவில்லை.
நான
உங்களது கடவுள்களையோ, சடங்குகளையோ சாதிகளையோ அல்லது உங்களது தாயையோ சகோதரிகளையோ மகன்களையோ கூட கேட்கவில்லை
நான் கேட்பதெல்லாம் ஒரு மனிதனுக்கான உரிமை
தீட்டுபட்டுவிடுமோ என்கிற பயத்தால் எனது நுரையீரலிருந்து வெளிப்படும் மூச்சு
உங்களது பிரதிகளிலும், மரபுகளிலும் நகரங்களிலும் சொர்க்கங்களிலும் படாமல் நடுங்குகிறது.
எங்களது வாழிடங்களைப் பாழாக்க உங்களது கரங்கள் நீள்கின்றன. நீங்கள் என்னை அடிக்கலாம், கிழிக்கலாம் கொள்ளை அடிக்கலாம் எனது வீட்டைக் கொழுத்தலாம்.
ஆனால் என் நண்பர்களே கிழக்கில் உள்ள சூரியனைப் போல நடத்தப்பட்ட வார்த்தைகளை எப்படிக் கிழிப்பீர்கள் ?
எனது உரிமைகள் : தொற்றிக் கொள்ளும் சாதிக் கலவரங்கள் நகரத்துக்கு நகரம் கிராமத்துக்கு கிராமம் மனிதனுக்கு மனிதன். மூடப்படுவது, சாதியிலிருந்து தள்ளி வைக்கப்படுவது
சாலை மறிக்கப்படுவது, வெளியேற்றப்படுவது இவையே எனது இன்றைய உரிமைகள்.
எனக்கு எனது உரிமைகள் வேண்டும் எனது உரிமைகளைக் கொடுங்கள் இவற்றை நீங்கள் மறுப்பீர்களா ?
நான் ரயில் தண்டவாளங்களைப் பெயர்பது ᏣᏞllᎢ6Ꭰ உங்கள் புனித நூல்களைத் தகர்ப்பேன். உங்களது சட்டமன்ற சட்டங்களை நகரப் பேருந்துகளைப் போல எரிப்பேன்.
என் நண்பர்களே என் உரிமைகள் சூரியனைப் போல எழுகின்றன சூரிய உதயத்தை நீங்கள் தடுக்கப் போகிறீர்களா?
- ஷரன்குமார் லிம்பாளே
மராட்டி - * பிணத்தை எரித்தே வெளிச்சம் தலித் இலக்கிய தொகுப்பு ”

பூதவுடல்
-LJTélé, -
அவள் சிணுங்கிச் சிணுங்கி பாடசாலை போனாள். பாடசாலை அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் பாடசாலைக்கு அவளைப் பிடிக்கவில்லை. “ தொடாத ’ என ஒரு ஆசிரியர் சொன்னாராம் அன்று அவள் பட்ட பாடும். இவள்பட்ட அடியும் சொல்லிலடங்காதவை. பாவம் . உடம்பை வெட்டியிறக்கிய சுவை நெஞ்சில் உறைத்தது. என்ன கொடூரம்? பொத்திப் பொத்தித் தைத்த சட்டையை அணிந்து கொண்டு போனான். இன்றும் “ யங்கி” போடவில்லை. தேய்ந்து கிழிந்து போன சப்பாத்தினூடே முழித்துக்கொண்டு பெருவிரல். ஏன் தான் இப்படி இரு ஜன்மப் பிழைப்போ!
பற்றறுத்து உயிர் நீக்க இது என்ன காயமா?
பசிநிறைந்த கண்ணோடும் ஒரு நாளும் அவள் “பசிக்கின்றது” என்று அழுததில்லை. தனித்த கொட்டிலில் ஒரு சிறு விளக்கோடு இருப்பாள் சில வேளை அந்த வெளிச்சமுமின்றி காத்திருப்பாள், இவள் வரும் வரை! சில நாட்களில் காலை புலரும் இவள் வர! காத்திருப்பான். அன்று கையில் பேயாய் ஆட்டும் பணம் தான். மூன்று நான்கு நாட்களுக்கு இவள் வெளியே போவதில்லை அவள் எதைத் தின்பது எதைக் கழிப்பது என திணறிப்போவாள்.
இன்று முதல் நாள் காலை சாப்பிட்ட மிச்சத்தோடு பொழுது பட்டு புலர்ந்தும் விட்டது. அவள் அரைவயிறு கஞ்சிகூட இல்லாமல் வெறும் பால்தண்ணி பருகி பாடசாலை போகிறாள் பாவிமகள்.
" நல்ல கெட்டிக்காரி” என்ற இதமே அவனை எப்படியாவது படிப்படிக்க வன்மம்.
சுயநலமும், ஒரவஞ்சனையான பற்றும், பாசமும் நிறைந்த சமூகம் தன் கெளரவத்தையும், மேதாவித்தனத்தையும் நலிந்தவர் கைகளில் சில்லறையாக காட்டுவர். சிந்தனையால் கூட இரங்குபவர் போல..என் கதையை தன் கதையாகப் படைக்கும் இவன் கூட !
இந்த இலட்சணங்கள் மீண்டும் மீண்டும் சுழலவைக்கிறது. அல்லது என்ன?
பற்றறுத்து உயிர் நீக்க இது அது என்ன காயமா?
அதிபர் என்னை அறிந்திருக்கிறார். முகப்பழக்கமில்லை! இந்தப் பாவியைப் பெற்றது நான் தான் என்பதை எப்படி அவரால் அறியாமல் இருந்திருக்க முடியும்? இல்லை நானா பெற்றேன். அவன் ! அவன் மட்டுமா? அவனைத் தய்பிக்க விட்ட இதுகள! இதுகள யார் கேள்வி கேக்கிறது? சபிக்கப்பட்டு துரத்தப்பட்ட என்னையும் அந்தச் சின்னனையும் கொண்டு வந்தேன் எந்தக் கொம்பனும் நிமித்த முடியாதாடி!
நேரமாகுது வேலைக்கு போகவேணும். கால் கையெல்லாம் பரபரத்தது. மரத்துப் போய் குத்திட நின்றது. எவ்வளவுதான் தூக்கி கட்டினாலும் இதயத்திற்கு முன்னான் நிமிருதேயில்லை. என்னதான் கிடக்கிறதோ தெரியவில்லை அவிட்டுப்போட்ட பிறகு கீழ் வடிகிறது.
கன்னத்தில் கண்ணில் நெற்றியில் உதட்டில் சீக். என்னவிது ? மனத்தளவில் மட்டுமா மரத்துப்போனது?
மனதும் நினைவும் எங்கோ இணைந்து அலைய இந்தக் காயம் மட்டும் தன் தொழிலில்.
அப்போ ஒருவனோடு இணைந்தால் பழைய வாழ்க்கையாவது வாழலாமா? அந்த ஒருவன்
யார் ? அவனா? அவன் தான் இல்லையே இன்னொருவன் ! நடக்குமா! நடக்கக் கூடிய காரியமா! ஆனாலும் நடந்ததுவே!"

Page 9
அவனோடு தான் இவனும் வேலை செய்தான். முரண்பாடும் சண்டையும் நிறைந்த வேலை, ஆனால் ஐக்கியம், சமத்துவம் பற்றித் தான் பேச்சு, அவனும் இவனும் இணைந்தேதிரிவார்கள். செங்கம்பள விரிப்பினாட்சி அவர்களுடைய கனவு. கந்தலும், கசங்கிய முகமும் அவர்களுடைய சொத்து. இதுவும் சரி அவர்களுடைய வேலையும் சரி எனக்குப் பிடிக்கவேயில்லை. பள்ளியில் எல்லோரிலும் பார்க்க அவன் அதிவிசேட சித்தியடைந்து மேற்படிப்புக்கு அனுமதியளிக்கப்பட்ட போது தான் அவன்பால் ஈர்க்கப்பட்டேன். என் வழிக்கு இலகுவில் மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இரண்டிலும் இருந்தது.
பொத்திப் பொத்தி வளர்த்த மொட்டுக்கள். நினைவின் மணிஒலியின் ஸ்பரிசத்தில் கிளர்ந்தெழுந்து தேனாறும் வாய்க்குள் சிக்கிடாத கானமிர்தம். பிரகாசித்துக்கொண்டிருந்த கண்களிலிருந்து, இரண்டையும் அவிட்டுப் போட்டபிறகு கீழ் வடிந்தது.
இதயமறுந்து ஒலமிட்டுக் கொண்டு கீழே விழத் தொடங்கியது. பூமி பிளந்து ஒலத்தை ரசித்தபடியே பிளந்து கொண்டே இருந்தது. மன்றாடினேன். எவ்வளவோ சொன்னான். அவள் கருக்கொண்டிருந்த போது, கோவேந்தள் கடமை எனப் போனவன், திரும்பவே இல்லை. அவன் மனிதம் மிக்கவன் என நம்ப மறுத்த நேரம், அவள் பிறந்து நிறம் கூட மாறவில்லை. இவன் வந்து சொன்னான் “ முரண்பாடு வலுத்து சண்டை குறைந்ததால் அவன் இல்லாமல் போனான் ”.
என் பேரிடிக்குள்ளும் இவனுக்கு ஆறுதல் சொன்ன்ே. எனக்கு இவனும், இவனுக்கு நானும் ஆறுதல் தந்தோம். பசியின் ராட்சியம் மெல்ல மேலெழும்ப இவன் இரை தேடினான் அதுகள் சந்தோசப்பட்டன. ஆனால் ஆத்திரம் கொண்டன அவன் என்னோடும் பகிர்ந்துண்டதால்! வீட்டின் ஒரு மூலையின் தணல் தெறிக்கும் மூச்சுடன் இவன் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டிருந்தான் அதுகளின் ஆத்திரம் பீறிட்டுக்கொண்டிருந்ததால்.
“அதுகள் சுமத்திய குற்றத்திற்கு நாம் ஏன் பதில் கொடுக்கக்கூடாது ?’ என்றேன். நிமிர்ந்து மட்டும் தான் பார்த்தான். என்ன இவன் ? சமூகம், பிரச்சனை, பெண்கள் என்று பிதற்றுறவன் ஏன் இயங்கிறானில்லை. வியப்பாக இருந்தது. நான் சொல்லியும் அசைவின்றி இருக்கிறானே. “பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது” என்று முட்டாள்தனமாக யோசித்தானே ! கையை நான் தான் நீட்டினேன். இவன் இதயம் அடித்த அடி நிச்சயம் உங்களுக்கும் கேட்கும். இவன் கையின் நடுக்கத்தைக் குறைப்பதற்காகவே இறுகப் பற்றினேன். ஆனாலும் முடியவில்லை. அன்றிலிருந்து இவன்ர இயக்கத்துக்காக இயங்கினேன். இவன்ர இயக்கத்துக்கு இயங்கினேன் இயங்கினேன். இயம்ப முடியாதபடி, இயம்ப முடியாமல் இயங்கினேன் அப்பொழுது அவளுக்கு வயது இரண்டு.
என் மண்டைக் கயிறு இவனிடமிருந்தது. இவனுடைய மண்டைக் கயிறு என்னிடமுமில்லை!
அதுகளிடமுமில்லை! இது எங்கே ? எப்படி ? தொடங்கியது என்பதை யாரறிவார்? ஒன்றுமட்டும் நிச்சயம் இவன்கள் தான் இதுகள உருவாக்கினாங்கள். அதற்கு கலை, கலாசாரம், சட்டம், முறை, இயல்பு, வழக்கம், மரபு, மயிர், மண்ணாங்கட்டி! து.
இவன்கள் யார் ? நலிந்தோர் சார்பாக என்ன செய்தார்கள் ?
இதற்காக அவன் எவ்வளவு தூரம் அவஸ்த்தைப்பட்டான். தெரியாத மாதிரி முட்டினான். இருக்கையில் மிகவும் அவலப்பட்டுக்கொண்டு இருந்தான் தொட்டான், வருடினான் கொஞ்சினான், தத்துவமும், சிந்தனைக் கோட்பாடுகளையும் தான் கண்டார்கள். காட்டினார்கள்.
மேலெழும் கையாகவும், இடும் கையாகவும் தான் தங்களை வளர்த்தார்கள். எம்மை அணைக்கவோ? எம்மோடு வாழவோ வக்கற்றுப் போனவர்கள். மனிதம் எனும் முகம் காட்டி ! து. இன்றைக்கு இப்படியுமானேன். கேவலம் ! யாருக்கு எனக்கா கேவலம்! தலையைத் துவட்டி, தலை வார கண்ணாடி முன் தோன்றினாள் கண்ணாடி தான் வந்த
கதையை நினைவூட்டின.

“அக்கா, அக்கா” என்ற தான் வந்தான் , உண்மையாகவே என் தம்பியாகவே இருந்தான் என்னிதயம் தம்பி தம்பி எனத்தான் அடித்துக்கொண்டிருந்தது இறுதிவரை வளையவில்லை கெஞ்சிக் கூத்தாடி நாய்குட்டி போல பின்னாலேயே வந்தான்.
“ அவளின் சோதனைக் காசு ’ கட்டியயே ஆகவேனும் தம்பியாவது ஆட்டுக்குட்டியாவது. வளைந்தேன் நிமிர்ந்தான்.
போகும் போது “உன்னைப் போல எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் ” என அவனுக்கு தெரிந்த மொழியில் தட்டுத் தடுமாறி சொன்னேன் கவட்டுக்குள் முகத்தை வைத்து கொண்டு போனான். அவன் தந்ததில் தெரியாத் தனமாக இந்தக்கண்ணாடியையும் வாங்கிவிட்டேன் வேலைக்கு போகும் போதெல்லாம் இது நெஞ்சையறுக்கும்
“ஆ.” காலில் சப்பாத்துக்கால் ஊன்றிய போது தான் நினைவும், மனமும், காயமும் ஒன்றாகின “ரை” கட்டில பெருத்த ஆசாமி அகப்பட்டால் செத்தம் காலை உருவமுடியும்.
அவளும் நானும் இன்றும் பட்டினியா? அவனுடைய அவஸ்தை அவனுக்கு. நிமிர்ந்து உக்கார வேண்டிய கட்டாயம் எனக்கு!
ஒரு பச்சை மயிலை பத்தாக்கி, ஒரு மஞ்சளைத் தந்தான். கெஞ்சிக் கூத்தாடி, திரும்பவும் என் வாய் கூத்தாடிக்க இன்னுமொன்றைத் தந்தான்.
திரியை விட்டு பிரிந்துவிட துடிக்கிறது சுடர், காற்றோ கெக்கட்டம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தது. வீட்டில் பூச்சிகள் அவசியமில்லாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன.
பிள்ளைக்கு சரியான பசிபோல “நல்ல நித்திரை ’ ஒடுற பாம்ப மிதிக்கிற வயது அவளுக்கேது பயம் ? அவளுக்கு மிகவும் பிடித்த “நூடில்ஸ்’ தண்ணிரைச் சூடாக்க நாக்கு அருவருத்தது. குளித்துவிட்டு அவளை எழுப்பினா,
“அம்மா” என்ன மாதிரிக் கொதிக்கிறது ஒருநாளும் தூங்கிடாத மர்மம் துலங்கிறது.
“எடா எழும்புங்கோ, பிள்ளைக்கி நூடில்ஸ் செய்திருக்கிறன்” துள்ளிப் பாய்ந்து துடிதுடிக்கும் கண்ணோடு அள்ளிச்சாப்பிட்டால் என் பசி தீரும், ஆனால் அவளால் முடியவில்லை முனகினாள் "அம்மா” “எழும்பட ராசா” கண்விழித்தாளில்லை. "ldudst - Dr" "ஐயோ என்ன ? வரவர குரல் கரைகிறது ” “DIT. LOT -- LOT ... LDT LDT !”
ஏதாவது ஐந்துக்கள் தீண்டியிருக்குமோ! குப்பிவிளக்கை தூக்கி காலை தடவிப்பார்க்கிறாள். அடைய்ாளங்கள் ஏதுமில்லை. காச்சல்தான் இப்பவே டொக்டரிட்ட கொண்டு போவம். கால்களைத் தடவியபடி கை உயருகிறது. “சீழின் பிசுபிசுப்பு” "ஐயோ’ பகிரென்றது. கண்ணிலிருந்து உதிரத் துளி, பிசுபிசுத்த சிதழுோடு. இருக்காது. இருக்காது. என மன உச்சரிப்போடு கண்களை கூர்மையாக்கினாள். நீள் கண்ணைத் திரையிடுகிறது மங்கிக் கொண்டு போகிறது. தலைசுற்றத் தொடங்கியது. கண்டமாலை மேலும், கீழுமாக நகர்திப் பாக்கிறாள். பிசுசிசுக்கிறது. இவன்களா? அவளுக்கு வயது எட்டுத்தானே! மார்போடு தூக்கி கட்டி அணைத்தாள். கதறினான். அவள் பொத்தியிருந்த கையை விரித்தாள் கசங்கியபடி "டொலர்” ஐயோ ! என்ர ஐயா ! யாராலும் உணர்ந்தோ, புரிந்து கொள்ளவோ முடியாத கதறல் அச் சிறு குடிசையில்.

Page 10
சினிமா கருத்தரங்கு
ஏப்ரல் மாதத்தில் முழுநாள் கருத்தரங்கு நாடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. சினிமா என்ற ஆற்றல் மிக்க கலை வெளிப்பாட்டுச் சாதனத்தை புரிந்து கொள்வதற்கும் இரசிப்பதற்குமான ஓர் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கருத்தரங்கு திட்டமிடப்பட்டுள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட திரைப்பட காட்சிகளுடன் திரைப்படத்தின் அடிப்படை அம்சங்கள் பற்றிய விளக்கங்களுடன் இது அமையும். இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் முன் கூட்டியே தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
སོ།། རྒྱལ་
༨. ༄། །---ག་མ།། ལེ།། ޗަރ ފި 6ம் பக்க தொடர்ச்சி. 下。 کس سے یہ ح۔ ” நூல்களையும் படைத்துள்ளார். சிங்கள தேசியப் பத்திரிகையான லங்காதீய பத்திரிகையில் “சட்டமும் உரிமைகளும்” என இவர் 1985ல் இருந்து தொடர்சியாக எழுதிவருவது திருயுஞ்சிஹேவா ஒரு சட்டத்துறை எழுத்தாளர் என்பதையும் நிரூபணமாக்கியுள்ளது.
திரு.புஞ்சிஹேவா அவர்களது எழுத்து கூரிய அரசியல் விமர்சன கேலியும் கிண்டரும் நிறைந்த அங்கத பாணியிலமைந்துள்ளது. சிங் களத்தில் அனேக தடவைகள் மேடையேறிக்கொண்டிருக்கும் மிகப் பிரபலமான “செக்குவ’ (சக்கு) என்ற நாடகம் திருயுஞ்சிஹேவாவின் நீதிக்கதைகளை வைத்தே தயாரிக்கப்பட்டது. அவருடைய கதாபாத்திரங்கள் எல்லாம் பூரண அரசியல் மயமானவையாக இருக்கின்றன. தமது நூல்களுக்கு அரசால் விருதுகள் வழங்கப்படுவதை இவர் விரும்பவில்லை. இவர் ஆரம்பத்திலிருந்தே இக்கொள்கையை கடைபிடித்து வருகின்றார். “என்னுடைய இந்த நூல் அரசினால் வழங்கப்படுகின்ற எந்த வித விருது வழங்குவதற்கான மதிப்பீட்டிற்குள்ளாகக் கூடாது” என்று தமது ஒவ்வொரு நூலிலும் தமது கொள்கையை பிரகடனப்படுத்தி வெளியிடுகின்றார். சாதி, இனம், மதம், பதவி முதலியவற்றை பின் கதவால் முன்வைத்து அரச, தேசிய விருதுகளைப்பெறுவதற்கு சில எழுத்தாளர்கள் ஊழல்களையும் மோசடிகளையும் செய்து வருகின்றார்கள். தேசிய விருதுகளைப்பெறுவதற்குத் தவித்துக்கொண்டிருக்கின்ற தன்மானமற்ற இந்த எழுத்தாளர்களுக்கு திருபுஞ்சிஹேவாவின் இச்செயல் ஒரு சாட்டையடியாக இருக்கின்றது. ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கத்தின் நிறைவேற்று செயலாளராகவும் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
13ம் பக்க தொடர்ச்சி .
9. முல்லசேரி சந்திரன் :
பஷீர் விலையுயர்ந்த அனுபவங்களின் சொந்தககாார். நிறைய சிந்தனை செய்து கொஞ்சமாக எழுதினார். “பால்யகாலசஹியும் ” (இளமைக்காலத்தோழி)“பாந்துமயுடெ ஆடும்”போன்றன சொர்க்கப் படைப்புகளாகும். கிராமப்புறத்தின் பொலிவை தகழியின் படைப்புக்களில் காணலாம். எதார்த்த வாழ்க்கையின் மனோகரமான படைப்புக்கள் அவை.
10. Kசஸிகுமார் :
சிறந்த கருத்துக்களின் அடிப்படையில் படைப்புக்களாக அமைந்த எழுத்தாளர்கள்.
நன்றி : வைகறை / சன 95 w
 

மலையாள இலக்கியம் பற்றி.
இந்துலேகா எழுதப்பட்ட பின் ஐம்பது வருடங்கள் வரை மலையாள நாவல் இலக்கியம் முளைவிடவில்லை. பெரிய தேக்கம் இருந்தது. 1930 களில் தகழி, கேசவ தேவ், பொன்குன்னம் வர்க்கி பஷீர் போன்ற படைப்பாளிகள் தோன்றினர். மலையாள இலக்கியத்திற்கு ஆதாரமாக சில நாவல்கள் இப்போது உள்ளது போல் தொடர் கதையாக வெளிவரவில்லை. புத்தகங்களாக ^வளிவந்தன அன்று தொட்டே நாவல் இலக்கியம் பலமுகங்களாக வளர்ந்து வருகிறது.
- இ. எம். எஸ். நம்பூதிரிபாட் -
மலையாள மொழியில் வட்டார வழக்குகள் மூன்று பிரிவுகள் இருக்கிறது. வள்ளுவ நாடு பகுதியில் பேசப்படுகிறது ஒன்றும் கொச்சின் வடக்கு மலபார் பகுதிகளில் ஒருவிதமாகவும், கோழிக் கோட்டில் ஒருவிதமாகவும் உள்ளது. இதைத் தவிர வடக்கு மலபார் முஸ்லிம் இனத்தவிரின்
மொழியும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.
- எம். டி. வாசுதேவன் நாயர் -
மலையாள இலக்கிய உலகில் எல்லாவித சோதனை முயற்சிகளுக்கும் இடமுண்டு. பத்திரிகைளும் பதிப்பகங்களும் பெயர் பிரபலமிலாவிடினும் புதியவர்களின் இறையவர்களின் சோதனைப் படைப்புகளை வெளியிடுகின்றன. பத்திரிகை ஆசிரியர்களும் - திறனாய்வாளர்களும் திறந்த மனதுடன் இப்படைப்புகளின் நவீனத்தன்மையைச் சிலாகித்து விரிவாய் திறனாய்வு செய்கிறார்கள். பிறமொழிக்காரர்களிடம் இப்படைப்புகளைப் பற்றிச் சொல்வதிலோ மொழிபெயர்ப்புகளுக்கு வழி வகுப்பதிலோ தயக்கம் காட்டுவதில்லை.
- நீலயத்மநாபன் -
திதாக நூல்கள் வெளிவந்தே கொண்டே இருக்கின்றன இங்கே . வவுனியா கலைஇலக்கிய நண்பர்கள் வட்டம்
QEb நூல்களை வெளியிட்டுள்ளன.
கந்தையா பூரீ கணேசன் எழுதிய “யாழ்ப்பான தமிழ் நாடக அரங்கு” ( விமர்சனக் கட்டுரைகள் ) 100/=
ந. இரவீந்திரன் எழுதிய “ பின் நவீனத்துவமும் அழகியலும் ” 1OOf நிகரி வெளியீட்டகம் இரு நூல்களை வெளியிட்டுள்ளது
“வனத்தின் அழைப்பு'
- அஸ்வகோஸ் - 100/s
* நாளை இன்னொரு நாடு “
( மொழி பெயர்ப்பு கவிதைகள் ) M.K.M.6.g. Ši 601st பாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக
“ வானொலியும் நானும் “
妮 ஜோர்ஜ் சந்திரசேகரன். 10Ofst மூன்றாவது மனிதன் வெளியீடு * இருளின் நிழலில் (கவிதை தொகுதி ) OOf
- வேதாந்தி -

Page 11
நாகரிகம் பற்றிய பதிவு ஒவ்வொன்றும்
பதிவாகவுமிருக்கின்றது. இதிலிருந்து எதுவும் தப் பதிவு, ஒரு உரிமையாளரிடமிருந்து இன்னொ காட்டுமிராண்டித்தனம் தனது கறையைப் படியவிட்
எழுத்து
ஒருவன் ஒரு சம்பவத்தை அடிப்படைய சுயத்தன்மையுடையவன் எனப் பாராட்டுகிறோம். அ போது காப்பியடித்து விட்டதாகக் கூறுகிறோம். முன்றா குறைவாக இருக்கின்றது என விமரிசிக்கிறோம். நா எல்லாரும் அறிந்த விஷயத்தைப் பற்றி எழுதியிருப்ப ஒருவன் எழுதினால் அவனை ஆய்வாளன் என்கி
ஆசிரியர்கள் -
நீர்வை பொன்னையன், S.சிவகுருநாதன்
விபவி மடல் 51/7 ராஜா ஹேவா வித்தாரன 595504. ராஜகிரிய வீதி, ராஜகிரிய. தொ.பெ 874996

உேடவே காட்டுமிராண்டித்தனத்தின் கவில்லை, அதுபோலவே இத்தகைய
ருவருக்கு கைமாற்றித் தரபட்டதிலும்
டிருக்கின்றது.” -
- வால்டர் பெஞ்சமின் -
ாகக் கொண்டு எழுதினால், அவன் அதேயே அடுத்து இன்னொருவன் எழுதும் மவன் அதேயே எழுதும் போது சுயத்தன்மை ன்காம் முறையாக எழுதுபவன் பொதுவான தாகக் கூறிவிடுகிறோம். ஐந்தாம் முறையாக றோம்.
- பிராண்டர் மாத்யூஸ் -
ன், சசிகிருஸ்ணமூர்த்தி, தெமதுசூதனன்