கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.03

Page 1
856) TUFTIJ 51/7, இராஜகிரிய வீதி,
மார்ச்-98
:چینی: #:;
 
 
 

5ნტინ5)
60) D.D
இராஜகிரிய. 874996
*『シ

Page 2
உலக பெண்கள் தினம்
க ரு த் த ர ங் கு
* வெகுஜன சாதனங்களும் பெண்களும்
-அனோமா ராஜகருணநாயக்கா
家
சினிமாவும் பெண்களும்
-சசி கிருஷ்ணமூர்த்தி
* யுத்தமும் பெண்களும்
-சுனித்திரா ராஜகருணநாயக்கா
冰
பெண்உரிமைகளும் மனித உரிமைகளும்
--சூரியகுமாரி பஞ்சநாதன்
நெறிப்படுத்துதல்
சுல்பிகா ஸ்மைல்.
காலம்
1998 மார்ச் 8ம் திகதி காலை 9 மணியிலிருந்து 3 மணிவரை,
இடம் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம விதி கொழும்பு-06.
சமகால மொழிபெயர்ப்பு இடம் பெறுவதுடன்,மதிய உணவும் வழங்கப்படும்.

சிவகுஜனத்சிதாடர்பு சாதனங்களும் ஜனநாயகமும்
ஒரு ஜனநாயக நாட்டில் வெகுஜன தொடர்பு சாதனங்கள் தமது கருத்துகளை சுதந்திரமாக எடுத்துச்சொல்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அந்தச் சுதந்திரம் இல்லாவிட்டால் அந்த நாட்டில் ஜனநாயகமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். எமது நாட்டில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் எவ்வளவு சுதந்திரமாக இயங்குகின்றன? அவை சுதந்திரமாக இயங்குகின்றனவா? இது கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தில் வெகுஜனத்தொடர்பு சாதனங்களுக்கு தமது
கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அது மாத்திரமல்ல கடந்த அரசாங்கத்தை விமர்சித்து தமது கருத்தை வெளியிட்ட வெகுஜனத் தொடர்பு சாதனங்களைச் சேர்ந்த பலர் அச்சுறுத்தப்பட்டார்கள். சிலர் தண்டிக்கப்பட்டார்கள். மற்றும் சிலர் காணாமல் போனார்கள். பாராளுமன்ற சட்டங்கள் மூலமும்,அவசரகாலச் சட்ட விதிகளின்படியும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களைச் சார்ந்தவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். இதை மீறிய பலர் தண்டிக்கப்பட்டனர். சென்ற அரசாங்கத்தின் வெளிநாட்டமைச்சர் தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டமைக்காக ஒப்சேவர் பத்திரிகை ஆசிரியர் பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம், ஒரு பாராளுமன்றக் குழு முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். இச்சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவிற்கு ஒரு மாவட்ட நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டது. மேலும் பல பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
ஜனநாயத்திற்கு விரோதமாக சட்டங்களை கொண்டுவந்து வெகுஜனத்தொடர்பு சாதனங்களைச் சேர்ந்த பலர் தண்டிக்கப்பட்டதுடன் அரசாங்கம் திருப்தியடையவில்லை. அரசாங்கத்தின் காடிையர்களால் பல பத்திரிகையாளர்களும் செய்தித்தொடர்பாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.சிலர் தாக்கப்பட்டனர், சிலர் காணாமல் போயினர்கொலை செய்யப்பட்டனர். அந்தப் பத்திரிகையின் கேலிச்சித்திரக்காரர் திரு யூனுஸ் வீட்டிற்கு சில காடையர்கள் சென்று அவரை கதீதியால் குத்திக் காயப்படுத்தினார்கள். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த குகமூர்த்தி என்பவர் காணாமல் போனார். இவருக்கு என்ன நடந்ததென்றே ஒருவருக்கும் தெரியாது. சுரேந்திர என்ற பத்திரிகைப் படப்பிடிப்பாளர் கொல்லப்பட்டார் இக்பால் அத்தாஸ் என்ற பத்திரிகையாளர் தாக்கப்பட்டார். றிச்சாட் டீ சொய்சா என்ற சிறந்த பத்திரிகையாளர் ஒருநாள் இரவு அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். மவுண்ட்லவேனியா கடற்கரையில் அவரது சடலம் பிணமாக கண்டெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி பிரேமதாச வெகுஜனத்தொடர்பு சாதனங்களை தனது நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்திப்பிரிவிற்கும், ரூபவாஹினி செய்திப்பிரிவிற்கும் திரு பிரேமதாச காலையும் மாலையும் வெளியிடப்பட ۔۔۔۔ தொடர்ச்சி 18ல்.

Page 3
பரிமாற்றம் . பந்துல ஜெயவர்த்தன - ޝްޖީ z கடுகு சிறிதானாலும் காரம் பெரிது . அகஸ்தியர் உருவத்தில் சிறியவர் ஆனால் அவரது சாதனை பெரியது. திருயந்துல ஜெயவர்த்தன உருவத்தில் சிறியவர்தான் அவரது சாதனை பெரியது. கலாநிதி சரத் சந்திராவைப்போல திரு பந்தல ஜெயவர்தன சிங்கள நாடகத்துறையில் ஆழமாகத் தடம் பதித்துள்ளார்.
திரு பந்துல ஜெயவர்தனா ஆரம்பத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் நாடகத்துறையில் பிரவேசித்தார். இவர் மரபுக் கவிதைகளை எழுதிய அதேவேளை நவீன கவிதைகளையும் எழுதினார். பாடசாலை நாட்களிலேயே கலிதைகளையும் கட்டுரைகளையும் பத்திரிகைகளுக்கு எழுதினார். ஆங்கிலத்திலும் கவிதைகள் இவரால் எழுதப்பட்டன”CALLTOLANKA" என்ற மகுடமிட்ட இவரது ஆங்கிலக் கவிதை 1930களில் (சரியான ஆண்டு ஞாபகத்தில் இல்லை) ஆங்கில ஒப்சேவர் பத்திரிகையில் முதல்முதலாக வெளிவந்தது. இவர் சிங்களக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்."SIGMOND FRAUD” என்ற இவரது முதலாவது சிங்களக் கட்டுரை லங்காதிப என்ற சிங்களப்பத்திரினையில் வெளிவந்தது.
1926 யூன் 15ம் திகதி இரத்தினபுரியில் பிறந்த பந்துல ஜெயவர்தன தமது ஆரம்பக் கல்வியை ஒரு கிறிஸ்த்தவ கொன்வென்ரில் தொடங்கினார்.1935 ல் இரத்தினபுரியிலுள்ள சீவலி வித்தியாலத்திலும் பின்னர் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள சென்.பீற்றஸ் கல்லூரியிலும் கற்று (S.S.C) சிரேஸ்ட தராதரப் பத்திர பரீட்சையில் சித்தியடைந்தார். 1943ல் விஞ்ஞான ஆசிரியராக கடமையேற்று 1945 வரை சேவையாற்றினார். 1950ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டதாரிப் பரீட்சையில் சித்தியடைந்தார்.தத்துவ சாஸ்த்திரத்தில் அவருக்கு கூடிய ஈடுபாடிருந்தது.
1954ல் இலங்கைய் பல்கலைக் கழகத்தில் “கலைக் களஞ்சியம்” தொகுக்கும் சேவையில் உதவியாசிரியராக சேர்ந்து இருபது வருடங்கள் பணியாற்றினார்.இக்காலத்தில்தான் ஆங்கிலத்தில் FREEVERSEஎழுதினார். அதே நேரத்தில் கிரேக்க காவியங்களை அக்கறையுடன் படித்தார். பேராசிரியர் சரத் சந்திராவின் “மனமே” என்ற மரபு வழி நாடகம் 1956 ல் அரங்கேறியது. இதே பாணியில் (TRADITIONALDRAMASTYLE)திருயந்துல ஜெயவர்தன “கோசலகே வஸ்த்துவ” ( கோசலையின் கதை ) நாடகத்தை அரங்கேற்றினார். இந்த நாடகம் ஒரு பெளத்த கதையை அடிப்படையாகக் கொண்டது. நாடகப் பிரதிப் போட்டியில் இப்படைப்புக்கு அகில இலங்கை ரீதியில் முதலாவது பரிசு கிடைத்தது.இப்போட்டி கலாச்சார அமைச்சினால் நடாத்தப் பட்டது.இவர் கிரேக்க நாடகங்களை படிக்கும் போது இந்த நாடகங்கள் மரபு வழியில் அமைந்திருந்ததை இவர் அவதானித்தார்.இந்த நாடகங்களில் சிலவற்றை சிங்கள மொழியில் தழுவலாக
(Adopted)தயாரித்தார்.
1961ல் “பெர ஹ ண்ட” (முரசு முழக்கம்) என்ற சிங்கள தழுவல் நாடகம் இவரால் தயாரிக்கப்பட்டு மேடையேறியது.இந்தநாடகம் பெரு வெற்றியீட்டியத அத்துடன் கலாசார அமைச்சின் கலைக் கழகம் அந்த நாடகத்தை கொழும்பில் மேடையேற்றுவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. கொழும்பிலும் இந்த நாடகதிற்கு பெரிய வரவேற்பிருந்தது. இதனால் உந்தப்பட்ட திரு பந்துல ஜெயவர்தன நாடகத்துறையை தனது முழு நேரப பணியாகக் கொண்டு ஊக்கத்துடனும்,உற்சாகத்துடனும் உழைத்து வந்தார்.இவருடைய அடுத்த நாடகம் அங்கத பாணியில் கேலியும், கிண்டலும் நிறைந்ததாக இருந்தது.இந்த நாடகத்தின் பெயர் “பியசேன நொபமின”(பியசேன வரவில்லை) என்பதாகும். இது ஒரு அரசியல் அங்கத (၉၇)ဖူး கிண்டலும்
\- یعنتی...............بست
 
 

நிறைந்தது) நாடகம். 1965ல் இலங்கையில் இருந்த அரசியல் நிலமை பற்றி கேலியான ரீதியில் விமர்சித்தது.இந்த நாடகம் சிங்கள சமூகத்தில் பெரும் தாக்கங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.இந்த நாடகம் பெளத்த பலவேகயவின் எதிர்ப்புக்கு முகம் பொடுத்தது. இதன் பின் “மிஹி கத்தே தறுவோ’ (அன்னை பூமியின் பிள்ளைகள்) என்ற நாடகத்தை தயாரித்தார். இது ஒரு சமூக நாடகம், இப்படைப்பு மனித விழுமியங்களை பேராசையினால் பலிகொடுக்கப்பட்டது சம்பந்தமான கருவைக் கொண்டதாகும்.
இதையடுத்து மூன்று தழுவல் நாடகங்களை தயாரித்து மேடைற்ேறினார். செக்கோஸ்லவாக்கிய கரல் கசக் என்ற நாடகாசிரியரின் புழுக்கள் என்ற நாடகம் பிரெஞ்சு மோலியரின் "மொனற பீஸ்" (மயிலிறகு) , "EVERY MEN" என்ற ஒரு ஆங்கில தழுவல் நாடகம் ஆகியவற்றை தயாரித்து மேடையேற்றினார். தம்ம ஜயக்க்ோடி என்ற பிரபலமான சிங்கள நாடகத் தயாரிப்பாளர் இந்த நாடகத்தை தாமே பொறுப்பேற்றுத் தயாரித்தார். இதுவரை ஏழு நாடகங்களை எழுதிநெறிப்படுத்தி, மேடையேற்றியுள்ளார் திரு பந்துல ஜெயவர்தன. "சிங்காசனத்தின் வாரிக்" (ஒட்டுண்ணி ஹி மி பொறயா) என்றொரு தீவிர அரசியல் கொள்கையுடைய ஒரு நாட்கப்பிரதியை தற்பொழுது திரு பந்துல ஜெயவர்தன எழுதி முடித்துள்ளார். தான் மறைவதற்கு முன்னர் இந்த நாடகம் தயாரிக்கப் பட்டு மேடையேற்றப்படுவதை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை தமக்க இருப்பதாக இவர் கூறினார்.
“பெர ஹண்ட" "மொனற பீலி” "சகல ஜன" ஆகிய மூன்று நாடகப்பிரதிகள் நூலுருவில் வெளிவந்துள்ளன. " ரூபன" என்ற நாடக சஞ்சிகையின் ஆசிரியராக கடந்த இரண்டரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.இது காலாண்டு சஞ்சிகையாகும். நாடகம் சம்பந்தமான இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
"DOCUMENTARY DRAMAON THE TRAVELS OF 'FA-HIYAN' PLGRIMAGE" GTsip 90, 59th "CONTEMPARARYSINHALATHEATRE" GTops, LoboGoICB
TâUATG5 fò. a 1970 களிலிருந்து கலாச்சார அமைச்சின் கீழுள்ள கலைக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். கலாச்சார அமைச்சின் நாடகத்திறையின் சிங்களப்பிரிவின் தலைவராக திரு பந்துல ஜெயவர்தனவும்.தமிழ் நாடகப்பிரிவின் தலைவராக திரு.கா.சிவத்தம்பியும் இருந்த காலத்தில் அதாவது 1980ம் ஆண்டில் முதல் தடவையாகவும் இறுதித் தடவையாகவும் * சிங்கள நாடகங்களும் தமிழ் நாடகங்களும் ஒரே மேடையில் நடாத்தப்பட்டன. இதன் பின்னர்
தாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
திரு பந்துல ஜெயவர்தி தன தறி பொழுது கொழும்பு பல கலைக் கழகத்திலும்,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்திலும் நாடக விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். அத்துடன் மருதானை எல்பின்ஸ்டன் படமாளிகை மண்டபத்தில் இயங்கி வருகின்ற தேசிய நாடகப் பாடசாலையிலும் விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார்.
கிரேக்க நாடகங்கள் பற்றியும் ஷேக்ஸ்பியரின் ஹம்லத் நாடகம் பற்றியும் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இப்பொழுதும் திரு பந்துல ஜெயவர்தன பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து நாடகங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். கலாசாரம் சம்பந்தமாக இன்றைய அரசாங்கத்தின் அசமந்தப் போக்கையும் நெறி கெட்ட நடத்தையையும் பார்த்த திரு பந்துல ஜெயவர்ததனபெரிதும் விரக்தியும் சோர்வும் அடைந்த நிலையிலுள்ளார். கலாசார அபிவிருத்தியின்றி அரசியல் பொருளாதார ரீதியில் பெரியளவு அபிவிருத்தியை எட்ட முடியாது என்று கூறுகிறார். மக்களிடையே மனமாற்றம் ஏற்படாதவரை ஏனைய துறைகளிலிருந்து எதுவிதமான பெரிய மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது என்கின்றார். ஏனைய துறைகளைப் போல கலாச்சாரத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக அன்று மக்கள் கூட்டணியினர் கூறினார்கள். ஆனால் அதிகாரத்திற்கு வந்து மூன்று ஆண்டுகள் சென்று விட்டாலும் இந்த அரசாங்கம் கலாசாரத்துறையில் உருப்படியாக ஒன்றும் சாதிக்கவில்லை என்கின்றார். இனிமேல் கலாச்சார நடவடிக்கைகளை மக்கள்தான் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கமல்ல. இன்று கலாச்சாரம் மக்கள் அரசாங்கத்தால் அரசியல் மயமாக்கப்பட்டு அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப் படுகின்றது இதை எதிர்த்து சகல கலைஞர்களும் மக்களும் போராடவேண்டும். இதற்கு மக்கள் நேரடியாக கலாச்சார நடவடிக்கைகளில் இறங்கவேண்டுமென்று திரு பந்துல ஜெயவர்தன முஸ்த்தாப்பு வைத்தார். - - ಲ್ಯ?

Page 4
அரிச்சந்திர புராணம் : ஒரு மறு வாசிப்பு
கி.பி. 1524 ல் வீரகவிராயர் எழுதிய அரிச்சந்திர புராணம் எனும் நூலில் 5வது காண்டமான சூழ்வினைக்காண்டத்தில் அரிச்சந்திரன் தனது நாட்டை விசுவாமித்திரனிடம் இழந்தமைக்கான காரணம் இவ்வாறு கூறப்பெற்றுள்ளது:
விசுவாமித்திரன் கோபப்பெருமூச்சு விட்ட போது இரு மோகினிப் பெண்கள் தோன்றினர். கோபத்தில் பிறந்தமையால் இரு பெண்களும் புலைசீயராய் பிறந்தனர். (அரிச்சந்திர புராணம் 54). இவ்விரு புலைப்பெண்களும் ஒவியம் போலவும், நீல நிறமான அன்னப்பறவை போலவும், நீல மலர் போன்ற கண்களையுடையவர்களாகவும் காட்சியளித்தனர். (மேலது 5:9) இவ்விரு புலைப் பெண்களும் எழுத்திலக்கணம் , சொல்லிலக்கணம், அறுபத்தி நான்கு கலைகள் ஆகியனவற்றை கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர் (5:11). இவர்கள் பாடினால் வெயிலால் தீய்ந்து காய்ந்த பயிர்கள் செழித்து வளர்ந்து மிக்க பலனைக் கொடுக்கும். பட்ட மரங்கள் தளைக்கும். பல நாட்களுக்கு முன்னர் இறந்தவர்களுடைய வெண்மையான எலும்பும் உயிர் பெற்று அசையும். (5:12) .
அரிச்சந்திரனிடம் சென்று தங்கள் ஆடல், பாடல் திறனைக் காட்டி அவனுடைய வெற்றிக்குடையை பரிசாக கேட்டகும்படியும், அவன் அதை மறுத்தால் அவர்களுடன் கலந்து மகிழ வேண்டும்படியும் விசுவாமித்திரன் அப்பெண்களிடம் கூறியனுப்பினான் (5:15). மேகலையும், செம்பொன் சிலம்பும் ஒசையிட, பூமாலை தவழ, இரண்டு முலைகள் ததும்பி விம்ம இவ்விரு பெண்களும் வேட்டையாட வந்த அரிச்சந்திரன் முன் வந்தனர். (5:16).
பின் இவ்விரு புலைப்பெண்களும் சுவரின் மேல் எழுதி வைத்த ஓவியம் பாடியது போல் யாவரும் உருகும் படியாக பாடினர் (524). இப்பெண்கள் இசை கேட்டுமகிழ்ந்த அரிச்சந்திரன் அணிகலன்களையும், ஆடைகளையும் இப்பெண்களுக்கு பரிசாக வழங்க உத்தரவிட்டான் (5:31). ஆனால் இவ்விரு பெண்களும் அதை ஏற்காமல் விசுவாமித்திரன் கூறிபடி அவனது வெண்கொற்றக் கொடையைக் கேட்டனர். அரிச்சந்திரன் அதைக் கொடுக்க மறுத்தான். அதற்குப் பதில் தங்களுடன் கலந்து மகிழும்படி அப்பெண்கன் இருவரு அரிச்சந்திரனிடம் வேண்டினர் (534). அரிச்சந்திரன் அமைச்சன் அது இயலாது என்று கூறி, அவர்கள் இருவரையுப் அவ்விடத்தை விட்டு நீங்கும் படி கட்டளையிட்டான் (53637), "வள்ளல் என்று கருதி வந்தோம் , இரந்து கேட்டதற்கு ஒரு பொருளும் கொடாத கள்ளன் என்று முதலே தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டோம்" என்று புலைப்பெண்கள் கூறினர் (538). இவ்வுரை கேட்டு கோபமுற்ற அரிச்சந்திரன் இப்பெண்களைப்பிடித்து வெளியில் தள்ளுங்கள் என்று கட்டளையிட்டான். அதன்படி காவலர்களால் விரட்டப்பட்ட பெண்கள் இருவரும் விசுவாமித்திரனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினர் (539-42)
விகவாமித்திரன் அரிச்சந்திரனிடம் வந்து புலைப்பெண்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுபாறு வற்புறுத்த, "புலைக்குலத்தோடும் மன்னர் பொருந்துதல் நல்லதோ" என்று அரிச்சந்திரன் மறுத்துரைத்தான். "உன் தந்தை திரிசங்குவை வசிட்டன் புலையனாகும்படி சபித்தான். இதன் விளைவாக அவன் புலையனாகினான். அவன் மகனாகிய நீ புலச்சியரை ஏன் மணக்கக்கூடாது" இது விசுவாமித்திரன் கேள்வி (5-62)
'என் தந்தையின் புலைத்தன்மையை நீக்கி அருள் செய்தாய். இன்று என்னை புலையனாக்க விரும்புகிறாய்" இது அரிச்சந்திரன் பதில் (583)
உன் தந்தையின் புலைத்தன்மையை நீக்கினோம். இனிமேல் உனக்குள்ள புலைத்தன்மையை நீக்குதல் சாதாரண செயல்'. இது விசுவாமித்திரன் விளக்கம் (584).
நீர் என்னைக் கொன்றாலும், உம்முடைய கண் நெருப்பால் என்னைச்சுட்டாலும், எனது உடலைவிட்டு நீங்கி உயிர் போவதாயினும், எனது உடலை வெட்டி அரிந்து கூறுகூறாகச் செய்தாலும், புலைப்பெண்ணை மணக்கும் படி கூறுகின்ற இச்செயலுக்கு நான் கட்டுப்படமாட்டேன். இது அரிச்சந்திரனின் உறுதியான பதிலுரை (58).
"கொடி போன்ற இடையுடைய எண் பெண்களை நீ மணக்கவில்லை என்றால் என் சாபம் நீ பெறுக' என்ற விசுவாமித்திரனின் அச்சுறுத்தலை அரிச்சந்திரன் பொருட்படுத்தவில்லை (5:36).

புலைப்பெண்ணைக் கூடி புலைத்தன்மை அடைவதைக் காட்டிலும் உன் சாப மொழிகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று அரிச்சந்திரன் உறுதியாக கூறிவிட்டான் (587) 'உடுக்கை போன்ற இடைகளையுடைய என் பெண்களை மணம் செய்தல் தீய செயல் என்று கூறிய கள்வனே ஏவல் தொழில் செய்யும் கொடிய புலையனுக்கு நீ அடிமையாவாய்' என்று விசுவாமித்திரன் சாப மொழி பகர்ந்தான் (570)அரிச்சந்திரனும் மறுப்பின்றி சாப மொழியை ஏற்றுக்கொண்டான்.
உத்தியத்தை உறுதியாகப்பற்றி நின்றமைக்காக அரிச்சந்திரன் சாபம் பெறவில்லை. மனைவியைத்தவிர பிற பெண்களை ஏறிட்டும் பாரேன் என்று கூறி ஏக பத்தினி விரதனாக நின்றும் சாபத்தை ஏற்கவில்லை. 'என் கண்ணை வேண்டுமாயினும் கொடுப்பேன். நான் அரசாளுகின்ற மண்ணுலகத்தை வேண்டுமாயினும் கொடுப்பேன். இசைத்தன்மை வாய்ந்த செஞ்சொல் பேசும் 'பறை குலப் பெண்ணை வேண்டியவன் யான்' என்று கூறியே விசுவாமித்திரன் சாபத்தை ஏற்றான் (575).
உடன் விசுவாமித்திரன் நாட்டையும், நகரத்தையும் கொடுப்பேன் எனறு கூறிய மொழி தவறாதபடி உனது அரசாட்சியை தந்துவிடு' என்று கூறினான் (577).
உம்முடைய பெண்களால் அடையும் இன்பத்தை நான் அடைய விரும்பவில்லை. என்னுடை நாட்டையும் பெரும் செல்வக் குவியலையும் உமக்கெ கொடுத்தேன். சொன்ன சொல் தவறமாட்டேன். என்று அரிச்சந்திரன் உறுதிபட கூறினான்(5.78) "அப்படியானால் நாட்டையும், செல்வத்தையும் நீர் வார்த்துக்கொடு" என விசுவாமித்திரன் கேட்க (5:79) அரிச்சந்திரன் அதனை ஏற்று தன் நாட்டையும், செல்வத்தைம் நீர் வார்த்துக் கொடுத்தான். (580) இச்செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது அரிச்சந்திரனைப் பொறுத்தளவில் சத்தியம் என்பது வருணத் தூய்மைதான் என்பது புலனாகிறது. வருண சங்கமம் (வருணக் கலப்பு) ஏற்பட்டு விடக் கூடாது என்று விழிப்புடன் இருந்துள்ளான்.
"அரசன் தாழ்ந்த குலப் பெண்ணிடமாக சந்தான உற்பத்தி செய்தால் பதிதன் (ஒழுக்கங்குன்றியவன்) என்பது சௌனகர் வாக்கு" (மநு 3:6).
"எவனுக்குத் தாழ்ந்த ஜாதிப்பெண்ணிடமாகப் பிறந்த பிள்ளை தென்புலக் கடன் ஆற்றுகிறானோ, அவன் தரும் அவியை தேவரும் பிதுரர்களும் தீண்டமாட்டார்கள். ஆகையால் அவனுக்கு சுவர்க்கம் ஆகிய நன்மைகளும் இல்லை" (மறு 318).
"தாழ்ந்த சாதிப் பெண்ணின் அதர பாணமும், அவளது மூச்சுக் காற்று மேலே படுதலும் அவளிடமாக பிறந்த குழந்தைகளும் கழுவாயே இல்லாத பாவங்களாகும்" (மநு 3:19).
உயர்சாதி ஆடவர் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை மணந்து கொள்வதைக் கடுமையாக எதிர்க்கும் மநுதர்ம விதியை மக்கள் மத்தியில் நிலைநாட்ட உருவான ஒரு புராணக்கதையே அரிச்சந்திரன் கதை என்பதில் ஐயமில்லை. இத்தகைய கதைகளை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்கியுள்ளனர் என்று நம்புவதற்கு இடமுள்ளது. இதற்குச் சான்றாக, தஞ்சை கருந்தாட்டன்குடி அருகிலுள்ள "கோடியம்மன்" கோவிலின் தலை புராணத்தை கூறலாம்.
"முன்னொரு காலத்தில் சோழநாட்டில் மழைவளம் குன்றியது. சோழ அரசன் கவலையுற்று வசிட்ட மகா முனியை வணங்கிக் கேட்டான். அதற்கு அம்முனிவர், உனது நாட்டில் "உதங்கன்" என்ற பிராமணன், ஒழுக்கங்குன்றி சண்டாளியுடன் கூடிப் பிள்ளைகளைப் பெற்று வாழ்கிறான். அப்பிள்ளைகளில் ஒருவனை சண்டாளி காலால் உதைத்து வருகிறாள். அவர்களை நாட்டை விட்டுத் துரத்தினால் மழை பொழியும், நாடு செழிக்கும் என்ற கூறினார்"(குளத்தூரான் - தஞ்சை நகர சக்தி கோவில்கள் 1994:116).
மனுதர்ம சாஸ்திரம் வலியுறுத்தும் வருணத்தூய்மை கருத்தை அரிச்சந்திரன் உறுதியாக கடைப்பிடித்துள்ளான். அதற்காக எத்தகைய இழப்பையும் ஏற்றுக் கொள்ள அவன் சித்தமாக இருந்தான்.
"வருணாசிரம தர்ம அமைப்பைத் தழைக்கச் செய்வதில் முன்னோடியாக விளங்கிய மன்னர்களுள் அரிச்சந்திரனும் ஒருவன். வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்த அரிச்சந்திரன் விரும்பியதாலேயே இலட்சியவாதியான மன்னனாக அவனைப் புராணங்கள் சித்தரிக்கின்றன என்று விசய பாரதி கூறும் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
காட்டு வாசிகளாக வாழ்ந்த வேதகாலம் முடிவதற்கு முன்பே ஒரு சாதியாக உருவாகியிருந்தனர். கிராதகர்சண்டாளர் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் போன்றே மதங்கர்களும் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கப்பட்டனர். புத்தர் எந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பது குறித்து கடவுளர்களிடையே விவாதம் நடந்ததாம். கோசல மன்னர்கள் மதங்கர்களின் வழித்தோன்றல்கள் என்பதால் , புத்தர் பிறப்பதற்கு தகுதியற்ற குலமாக
கோசல மன்னர் குலத்தை ஒதுக்கினராம். இவ்வாறு "லலித விஸ்தரா" என்ற பெளத்த ೫. கூறுகிறது.
- நன்றி . தாமரை - " " U ゾーD7

Page 5
அந்தப்சிபண்ணல்ல நான்
-கிஷ்வர் நஹித்
காலுறைகளையும் காலணிகளையும் விற்கும் அந்தப் பெண் அல்ல நான் நீ காற்றைப் போல மீண்டும் பயமின்றித் திரியலாம் என்று என்னை உயிரோடு புதைக்க முடிவுசெய்தாய் கற்களால் ஒரு குரலை ஒரு போதும் அடக்க முடியாது என்பது உனக்குத்தெரியவில்லை.
மரபுகள் என்ற சுமையின் கீழ் எண்னை நீ மூடி மறைத்தாய் ஏனெனில் காரிருளைக்கண்டு ஒளி ஒருபோதும் அஞ்சாது என்பது உனக்குத்தெரியவில்லை. நீமலர்களைப் பறித்தது என் மடியிலிருந்துதான் . அவற்றுக்குப் பதிலாக நீ அங்கு முட்களையும் தீக்கங்குகளையும் கொட்டினாய் ஏனெனில் பிணைச் சங்கிலிகளால் நறுமணம் பரவுவதைத் தடுக்க முடியாது என்பது உனக்குத் தெரியவில்லை.
எனது கற்பின் பெயரால் என்னை நீ வாங்கி விற்றாய் ஏனெனில் எளிதில் உடையக்கூடிய மட்பாண்டத்தைக் கொண்டு ஆற்றைக் கடக்கத்துணியும் சோஹினி இறக்கவே மாட்டாள் என்பது உனக்குத் தெரியவில்லை.
எப்படியாவது தொலையட்டுமென்று உன்னால் மணம் முடித்துக் கொடுக்கப்பட்ட பெண் நான் தான் உள்ளம் அடிமைப் பட்டிருந்தால் தேசத்திற்கு எழுச்சியில்லை என்பது உனக்குத் தெரியவில்லை.
எனது வெட்க உணர்வையும் நாணத்தையும் கொண்டு நீண்ட காலமாய் நீ இலாபமீட்டி வந்தாய் எனது தாய்மையையும் எனது விசுவாசத்தையும் வணிகப் பொருளாக்கினாய் எங்கள் மடிகளிலும் மனங்களிலும் மலர்கள் மலர வேண்டிய பருவம் இப்போது வந்துவிட்டது சுவரொட்டியிலுள்ள அந்தப் பெண்
அரை நிர்வாண கோலத்தில் - NNy. V− 08

காலுறைகளையும் காலணிகளையும் விற்றுக்கோண்டிருக்கும் அந்தப் பெண்ணல்ல நான். சோஹினி: ஒரு புகழ் பெற்ற பஞ்சாபி மரபு வழிக் கதையின் நாயகி சுட்டெடுக்கப்பட்ட மண் பாண்டத்தில் உடகார்ந்து கொண்டு சோஹினி ஒவ்வொரு நாளிரவிலும் செனாப் ஆற்றைக் கடந்து சென்று தன் காதலனை சந்தித்து
விட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவளது மைத்துணி ,கோஹினி வழக்கமாக பயன்படுத்தும் மண்பாண்டத்தை எடுத்து வைத்து விட்டு அதறி குப் பதிலாகச் சுட்டெடுக்கப்படாத மண்பாண்டத்தை
வைத்துவிட்டாள். ஆற்று நீரில் எதிரில் அம்மண்பாண்டம் கரைந்து விடுமாதலால் சோஹற்னி நீர் மூழ்னி இறந்து விடுவாள் என்று அவள் நினைத்தாள். கிஷ்வர் நஹl த் - பானிஸ்தானில் ஆணாதிக்கத்திற்கும் இராணுவக் கொடுங் கோன்மைக்கும் எதிராக விடாது பல ஆணர்டுகளாக போராடிவரும் புகழ் பெற்ற பெண்ணிலைவாதக் கவிஞர்.1940 ல் பிறந்த இவர் பாகிஸ்தானின் மிக முக்கிய கவிஞருள் ஒருவர் இக்கவிதையின் ஆங்கில மொழியாக்கம் இடம் பெற்றுள்ள gr) BEYOND BELIEF LAHORE 1990.
தமிழில் : வகிதா
எளப் வி.ஆர்
(அவ்வப்போது பறித்த அக்கரைப்பூக்கள் தொகுப்பிலிருந்து)
நின்னுக்கிட்டிருப்ப7ங்க. அப்பப்பெ7 அம்டது பைசா குடுப்பேன கொஞ்சநாள்லெ பழகிட்டோம் சிலவேளைலெ மாச மொதலெயென்னா பக்கத்திலே இருக்கிற ஒட்டலுக்கு ஒன் அம்மாவை அழைச்சுக்கிட்டுப்போயி டி. பன் வாங்கிக் கொடுப்பேன்’ ஒரு நா கேட்டாங்க. "நீ ரொம்ப வாடிப் போயிருக்கே. என்ன விஷயம்?"னு. நா சொல்லல்லெ ? என் துக்கத்தெ ந7 யார்கிட்டேயும் சொல்றதிலெ. துக்கத்தைப் பகிர்ந்துக்கணும்ன7 நெரையப் பேரைத் துக்கப்படுத்தனும் என துக்கம் என்னோடேயே இருக்கட்டும்” அப்பிடினுட்டேன். "ஒரு நா விட்டுக்கு வாயேன்னா’ங்கா. நா தயங்குனேன். "என்ன பிச்சைக்காரி விட்டுக்குப் போறதான்னு பாக்குறியா விட்டர்?"அப்படீன்னு கேட்டுட்டாங்க. நா அப்படியே நிலெகுலெஞ்சு போயிட்டேன். கன்னுலெ நீர் கோத்துக்கிட்டது. ஒகர்த்தரே சொல்லியிருக்கார் காசெயும் அவரையும் ஒன்ன7த்தரசிக்க முடியாதுன்னும் அவர் முன்னாலெ பணக்காரன் பிச்சைக்காரன் எல்லாம் ஒண்னுதான் சானும் பணக்காரன் இல்லெ. ஏதோ ஆஃபீஸ் ஒன்னுலே வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன் அவ்வளவுதான். நான் நிச்சயமா வீட்டுக்கு வர்ரேன்னு சொன்னேன். அதான் வந்தேன். ஆமா, நீங்கல்லாம் எப்படி இந்த நெலெமெக்கி வந்திங்க?" “எனக்கு அப்பா இல்லெ.நா எட்டாவது படிக்கும்போது எறந்துட்டாரு.இருதயத்திலே என்னமே7 சீக்கு. அதோட எம் படிப்பும் நின்னுபோச்சு எங்களுக்கு சொத்துன்னும் ஒண்னுமில்லெ. இந்த வீடு கூடத் தேவையில்லெ, ப்ளாட்பாரத்திலேயே கூட இருக்கலாம். நா வயசுப் பொண்ணுங்கறதாலேயும் ந7 வேலெக்கிப் போய்க்கிட்டு இருக்கிறதாலேயும் விடுன்று ஒண்னு இருக்கு.
“வேணாம், மேலே ஒண்னும் சொல்லவேணாம் நான்ஸி கேக்கிறதுக்கு இம்சையா இருக்கு,” இருங்க பிட்டர். முளுஸ்ஸா சொல்லிர்றேன். அப்போதுதான் ஒங்களுக்கு முளு பிக்சரும் கெடக்கும் நா விட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற கார்மெண்ட்ஸ் ஃபாக்டரியிலெ வேலெ பாக்குறேன். இருநூத்தி அம்பது ரூபா தர்றாங்கவாடகை தொண்ணுறு போயிரும் மிதியிலேதான் காலந் தள்ளனும்
"போறும் நான்லி போறும்” "இல்லெ நானே முடிச்சுக்கிட்டேன்." “நான்ஸி நா ஒண்னு சொல்றேன். நம்ம தொடர்ந்து பழகனும். நீ என்னே ஒரு நல்ல . ப்ரண்டா நெனெச்சுக்கோ. ஒங் கஷ்டத்தைக் கேட்டதும் எந்துக்கமெல்லாம் பறந்து போயிடுச்சி வா மெரீன7 காண்டின்லெ சாப்பிடுவோம். நாம சந்திச்ச இந்த தினெத்தெ தோழமை தினம7க் கொண்டாடியே ஆகனும்”
“எனக்கென்னமோ கொஞ்சம் பயமாயிருக்கு." “என்ன பயம்? நா ஓம் மேலே எந்த ஒரு லிசேஷ சுதந்திரத்தையும் எடுத்துக்கமாட்டேன். இன்னும் பச்சையாச் சொல்லப்போனா நா ஒன்ன நிச்சயமாக் காதலிக்க மாட்டேன். வாழ்க்கையிலே எனக்கு ஏற்பட்டிருக்கிற விரக்தியைப் போக்கிக்கிறதுக்கு ஒன்னெ வழகாலாப் பயன்படுத்திக்க மாட்டேன். என்னெபத்தி இன்னொரு நாளெக்கி ஓங்கிட்டே சொல்றேன். நீ எங்கிட்டே ரொம்பவும் பாதுகாப்பா :பில் பண்ணலாம். ஒவவொரு செவ்வா சாயந்திரமும் சர்ச்சுக்கு வந்திரு. ஜபத்தை முடிச்சுக்கிட்டு அங்கேர்ந்து எங்கெயாச்சும் போகலாம். வாரத்துலே ஒரு நாளையாவது மனசுக்கு ஆறுதலான நாளாவும் சந்தோஷமான நாளாவும் ஆக்கிக்கிடுவோம். சரிதானே?”
இதோ வந்துட்டேன் நா காமிச்ச ஒரு மாதிரியான ஆட்கள் உங்ளெ ரொம்பவும் படுத்திற்ற7ங்களா? இன்டெலெக்சுவலா வேணும்னா செல்ெலலாம். "இவங்கல்லாம் ஒட்டுண்ணிகள்"ன்னு இவங்கெல்லாம் இப்படி இருக்கிறதுக்கு நானும் ஒரு காரணம். நீங்க கோபிச்சுக்கல்லேன்ன7 “நீங்களும் தான்’னு சேத்துக்குவேன். நெறெய பீட்டர்கள் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது சரிதுானே?
நன்றி-நிகழ் AWy 09

Page 6
மகாசங்கமுரண்பாரு
மகாசங்கத்தினர் நாட்டில் மக்களுடைய சமாதானம் சகனிவனம் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உழைக்கவேண்டுமெனவும் மக்களுடைய ஆத்மீக வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் மகாசங்கத்தைச் சார்ந்த ஒரு பகுதியினரிடம் இது தென்படுவதாகத் தெரியவில்லை. எமது நாட்டில் கொலை, கொள்ளைகள், தற்கொலைகள், போதைவஸ்து சம்பாவனைகள், பாலியல் வன்முறைகள், பாலர் துஷ்பிரையோகம், பாதாள உலக நடவடிக்கைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதுடன் மனித விளுமியங்கள் மறைந்து வருகின்றன. இத்திய செயல்களுக்கு எதிராக மகாசங்கத்தைச் சார்ந்த இந்தப்பிரிவினர்கள் மூச்சுக்கூட விடுவதாக தெரியவில்லை.
மாறாக இப்பிரிவினர்கள் பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து இந்த நாட்டிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தமிழ் சிங்கள மக்களிடையே குரோதத்தையும் பிரிவினை உணர்வையும் வளர்த்து வருகின்றனர். அண்மையில் நடந்த தலதாமாளிகை தாக்குதலின் பின்னர் தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதேவேளை மகாசங்கத்தைச் சார்ந்த இன்னொரு பிரிவைச் சார்ந்தவர்கள் தலதாமாளிகையையும் குறிப்பாக மத வழிபாட்டு நிலையங்களை அரசியல் மயப்படுத்துவதற்கெதிராகவும், மதத்தை குறுகிய அரசியல் நடவடடிக்கைகளுக்காக பாவிப்பதற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுத்து வரத் தொடங்கியுள்ளனர். இவர்கள் அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இது ஓர் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான செயல்பாடாக அமைந்துள்ளது. இப்படியான செயலை நாம் வரவேற்பதுடன் எமது ஆதரவை தொனிக்கவும் தயங்கக்கூடாது.
அண்மையில் 14 நாடுனளைச்சேர்ந்த பெளத்தபிக்குகத்தம் பிக்குனிகளும் அடக்கிய உலக சமாதான பாத யாத்திரை குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. இக்குஞ்சி ஆறு மாதங்களுக்கு முன்னர் தமது சமாதான பாதயாத்திரையை ஆரம்பித்தனர். இக்குஞ் 2000 ஆண்டு வரை தமது சமாதானப்பாதயாத்திரையை உலகின் பல நாடுகளிலும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்கள் அனுராதபுரத்திலிருந்து கண்டி தலதாமாளிகை வரை தங்கள் சமாதான பாத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டு இலங்கை வந்துள்ளனர். இதை அறிந்த பேரின வாதிகளும் மகாசங்கத்தைச் சார்ந்த வலது சாரிப்பிரிவினரும் தங்களுடைய இனவாதநடவடிக்கைகளுக்கு இந்த உலக சமாதான பாதயாத்திரை பெளத்த குஞ்றிவினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இப் பிரிவினர் "லங்கா பவிதி சங்கிதானம்” என்ற அமைப்பினூடாக பெப்ரவரி நான்காந் திகதி கொழும்பு மருதானையிலுள்ள விஜராம மாவத்தை சம்போதி விகாரையில் ஒரு பத்திரிகையாளர் மகதநாட்டை நடத்தினர். இந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உலக சமாதான பாதயாத்திரைக் குஞ்வைப் பங்குகொள்ளச் செய்தனர். மொழி புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் இந்த பத்திரிகையாளர் மகாநாட்டின் நோக்கத்தை ஏற்கனவே அவர்களால் விசாரித்தறிந்து கொள்ளமுடியவில்லை. இரண்டுநாட்கள் விசாரித்து இவர்களை தவறான நோக்கத்தை அறிந்த அவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையை விடுத்தனர். உலக சமாதான பாதயாத்திரக் குழுவின் தலைவரான வியட்னாமை சேர்ந்த புத்ததாது என்ற பெயரை உடைய பெளத்தகுரு தங்களுக்கு தவறான தகவலை கொடுத்து இந்த பத்திரிகையான் மகாநாட்டிற்கு தாம் அழைத்துச்செல்லப்பட்டதாக கூறினார். தமது குஞ் சமாதானபாதயாத்திரைக்காகவே வந்திருந்ததாகவும் தமது குளுவிற்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லைஎன்றும், தலதாமாளிகைத் தாக்குதலைக் கண்டிப்பதற்கு தம்மைப்பாவிக்க முயற்சித்தசெயலை தாம் விரும்பவில்லை என்றும், தமது குஞ்வை அரசியல் நோக்கத்திற்காக ஒரு சிலர் பாவிக்க முயற்சித்ததை தாம் கண்டிப்பதாவும் இதனால் தமது சமாதானத்திற்கான பாத யாத்திரையை தாம் இலங்கையில் நிறுத்தி வைப்பதாகவும் தமது அறிக்கையில் புத்ததாது குறிப்பிட்டிருந்தார். தாங்கள் இங்குவந்தது அனுராதபுரத்திலிருந்து கண்டி தரதாமரளிகை வரை உலக சமாதான பாதயாத்திரையை மேற்கொள்ளுவதற்கு மாத்திரமேயொளிய கண்டி தலதாமாழிகைத்தாக்குதலைக் கண்டித்து பாத யாத்திரை செய்வதற்காக அல்ல என்றும் தமது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளர். இதிலிருந்து தமிழ் பேசும் மக்களக்கெதிராகச் செயல்படுகின்ற பேரினவா சக்திகளின் செயல்பாடு பெளத்த தர்மத்திற்கு முரணாக அமைந்துள்ளது என்பது புலன7கின்றது. ཡང་──ཚད་མ་ལ་མ────────། N\,10سس
هم ^

அறிவியல் வளர்க்கும் அரியதொரு சஞ்சிகை
சர்வதேச கண்ணோட்டத்துடன் அறிவியல்,பொருளாதாரம்,கல்வி, பண்பாடு தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளைப்பற்றி செய்திகள்,கட்டுரைகள் புகைப்படங்கள் அடங்கிய ஒரு சஞ்சிகை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் வெளிவருகின்றதென்றால் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.
தமிழ் உட்பட 30 மொழிகளில் மாதந்தோறும் தவறாமல் வெளிவரும் யுனெஸ்கோ கூரியர் தான் அந்தச்சஞ்சிகை. மிகவும் நேர்தியான அமைப்புடன் வெளிவரும் இச்சஞ்சிகை 21 ம் நூற்றாண்டிற்கான அறிவியல் கருத்துகளை தமிழின்மூலம் வெளிப்படுத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது.
ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விடயங்களை முதன்மைப்படுத்தி,அது தொடர்பான பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்திவரும் கூரியரின் தை மாத இதழ், உலக நாடகத்தின் பல்வேறு போக்குகள் பற்றிய கருத்துகளை தருகின்றது. -
“கூரியர் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியது”
(சிவராமகரந் என்ற மேதமை மிக்க எழுத்தாளர்)
இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் கன்னட எழுத்தாளர் சிவராமகரந்தும் ஒருவர். இவர் தனது 95 வது வயதில் அண்மையில் காலமாகினர். இதன்மூலம் இந்திய இலக்கியப்பரப்பில் இவர் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார்.
தான் வாழ்ந்த காலத்தின்,சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்கிய கரந்தின் இலக்கியப்படைப்புக்கள் நீடித்து நிலைத்திருக்கக்கூடியன. விமர்சனத்துடன், சமூக அவலங்களை, பொய்மைகளை,பிற்போக்குத்தனங்களை இலக்கியமாக்கிய கரந்தின் படைப்புகள் அழகியல் ரீதியிலும் செழிப்பானவை . மண்ணும் மனிதரும், அழித்த பிறகு பாட்டியின் கனவுகள் போன்ற அற்புதமான படைப்புக்கள் தமிழில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
45 நாவவ்கள்,நாடகங்கள்,கட்டுரைகள் என 390 புத்தகங்கள் எழுதியுள்ளார். சககுழந்தைகழுக்கான கலைக்கழஞ்சியம் மூன்று தொகுதிகளும், விஞ்ஞான கலைக்கழஞசியம் நான்கு தொகுதிகளும், உலககதைகள் பற்றிய கலைக்கழங்சியம் ஒன்றும் தொகுத்துள்ளார்.
இலக்கியம், இதழியல்,நுண்கலைகள்,நாட்டியம்,புகைப்படக்கலை என பல்வேறு துறைகளிலும் தனது ஆழுமையை வெளிப்படுத்தியிருப்பவர். தலிதுகள் மீது மிகவும் அக்கறை கொண்ட கரந்தின் சோமன துடி என்ற நாவல் இவர்களது அவலங்களையும் துயரயங்களையும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகின்றது. இந்த நாவல் கன்னட திரைப்பட நெறியாளர் ரிவிகரந்தினால திரைப்படமாக்கப்பட்டு பெரிதாக பேசப்பட்டது.
தனது கருத்துகளை துணிந்தும்,நேர்மையுடனும் இறுதிவரை வெளிப்படுத்தி வந்த கரந்த் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசின் போக்குகளயுைம் துணிந்து கண்டித்தவர். அரசு கொடுத்த பத்ம விபூஷன் விருதைக்கூட திருப்பித்தந்து தனது எதிர்பைத் தெரிவித்திருந்தார்.’ஒரு எழுத்தாளன் மனச்சாட்சிக்கும், சமூகப்பொறுப்பு பற்றிய விழிப்புணர்விற்கும் சிவராமகரந்த் ஒரு முக்கிய உதாரணமாக விளங்குகிறார்” என்று கன்னட எழுத்தாளர் டாக்டர் சித்தலிங்கப்பா இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
தமது நீண்டகால வாழ்வுப் பயணத்தில் எழுத்தை மிகவும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் பயன்படுத்திய கரந்த் வாழ்வின் இறுதிக்காலத்தில் சுற்றுப்புறச்சூழலில் மிகவும் அக்கறை கொண்டவராக,அது சம்பந்தமான நடவடிக்கையில் முழுமூச்சுடன் இயங்கி வந்நவர்.
-8 ટી -

Page 7
E42 fastp -கோபிகிருஷ்ணன்
அவளுக்கென்ன, இருபத்திமுனு வயசிருக்கும் ஸ்கார்ட் போட்டிருக்கா. ம7 நிறம். ஊது7ை காத்தோட போயிருவா அப்படி ஒரு ஒல்லி என்ன பண்றா அவ? பாப்பமே ஒருத்தன் ரயில்வே ஸ்ரேஷனை விட்டு ரோட்டிலே காலெ எடுத்து வக்கிறான். ஆள்.நல்ல டிப்டாப் ஊர்லே இருந்து வர்றவன் இல்ல. பக்கத்திலே எங்கெயோ வந்துட்டு ரயில்வே காண்டில்லெ காப்பி சாப்பிட்டுட்டுத் திரும்பிக்கிட்டிருக்கிறவன7 இருக்கனும் இவ கிட்டே போற7, இங்கிலிஷ்லெ நேரம் கேக்கிறா. (ஸ்டேஷனுக்கு மேலே பெரிய கடிகாரம் இருக்கு. பாத்துக்கிடலாம்.) இவனும் சொல்றான் பக்கத்துலெயே நடக்க ஆரம்பிக்கிற7. *இண்ணெக்கு வெயில் அவ்வளவா இல்லெ நல்ல நாள்தானுண்னு சொல்லனும்’கிறா. அவனும் ஆம7ன்னு தலையாட்டுகின்றான். “ஓங்களுக்கு எங்கெ வேலெ"ன்றா. சொந்தக் கேள்வியெதிடீர்னு கேக்குற7. இவனும் சொல்றான். “ஓங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’ன்னு இன்னொரு நெருக்கமான கேள்வியை கேக்கிறா. அவன் இல்லைங்குற7ன் "கல்யாணம்ன7 கவுர்டந்தான். பொறுப்பு அது இதுன்னு. அதுக்கு சதந்திரப் பறவையா இஷ்டப்பட்டவங்களோட பழகிட்டு இவர்டப்படி சந்தோஷமா இருக்கலாம் இல்லியா?” அப்பிடீன்ற7. "ஆம7, நீங்க சொல்றதும் ஒரு விதத்துலெ சரிதான்'றான் இவனும் "எம்பேரு இந்து ஒங்களுக்கு அவசர வேலெ ஒன்னுமில்லேன்னா என்னோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம் எனக்கும் நேரம் இருக்கு’ங்குற7இவ. இவனுக்கு -அது உண்மையோ பொய்யோ-என்ன தோணுனதோ தெரியல்லெ. * இல்லெ நா அவசரமா ஒரு எடத்துக்குப் போய்கிட்டிருக்கேன் இன்னொரு நாளெக்கி ஓங்களைச் சந்திக்கிறேன்’னு வேகமாக நடக்க ஆரம்பிக்கிறான். இவளும் அவனோட வேகமாக நடக்குற7. “கொறைஞ்சது ஒரு டி.பன் சாப்பிடக்கூட நேரம் இருக்காதா?"ன்னு கேக்குறா. அவன் ரொம்பவும் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வேகமாக போயிற7ன் பாவம், அவளுக்கு ஒண்னும் கெடெக்கலே, மொகமெல்லாம் வாழப்போகுது. வேறெ யாராச்சும் தேறனும் இல்லேன்ன7 அவ டி.பன் அவ்வளவுதான்.
என்ன இதெல்லாம் மனசுக்கு கவுர்டம7 இருக்கா? எனக்குத்தான் பாவம7 இருக்கு. நீங்க கேக்கலாம். "ஒனக்கு இவ்வளவு எரக்கம் இருந்தா நீயே ஏதாச்சும் ஒதவி செய்யறது. தானே?"ன்னு. ஆனா எங்கிட்டெ எண்ணி எழுபத்தஞ்சு பைசா தான் இருக்கு. அதை வச்சிக்கிட்டுத்தான் நா நாளெ சம்பளம் வர்ற வரைக்கும் தள்ளியாகணும். இந்த நெலையிலே அவளுக்கு நா என்ன பண்ண முடியும்னு நெனெக்கிறீங்க?
அவ்வளவுதான்னு நெனெச்சிங்களா? இல்லெ வாங்க. பக்கத்துலே ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு ஒரே நெரிசலா இருக்குல்லெயா? இருக்கட்டும். சிலதுகளெப் பார்க்கணும்னு நெனெச்சா சிரமத்தைப் பாக்கக் கூடாது. நெறெயப் பேர் பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க, பஸ் ஸ்டாப்புன்னா பின்னெ இருக்கமாட்டாங்களா? ஒரு குவுர்டரோகி ஒரு அலுமினிய டப்பாவெக் குலுக்கிக்கிட்டு பிச்செ கேட்டுக்கிட்டு வர்றான். டப்பாவிலெ ஒரே ஒரு பத்துப்பைசாவோ என்னமோத்தான் இருக்கணும். அந்த ஒத்தெச் சத்தம் விட்டுவிட்டுக் கேக்கிறது. ஒரு உயிரோட துடிப்பு மாதிரித் தோணுதில்லையா? ரெண்டு பேரு ஸ்டுடன்ஸ்ன்னு நெனெக்கிறேன். பணக்கார விட்டுப் பிள்ளைங்களா இருக்கனும் அவங்க சொந்தக் காரிலேயே போகலாம். ஏம் பஸ்ஸுக்காக நிக்கிற7ங்கன்று தெரியல்லெ, அவங்க பேசிக்கிறாங்க. கேப்பமே. இந்தக் குவித்டரோகிகளுக்கு தங்களுக்கு வந்திருக்கிற வியாதி மத்தவங்களுக்கும் வரனுங்குற ஆசெ. அதான் ஹேம்லெ எல்லாம் போய்ச் சேராம ட்ரிட்மெண்டும் எடுத்துக்காமெ மத்தவங்களுக்கு எடைஞ்சல் தந்துக்கிட்டிருக்காங்க. இவனெயும் பாரு, பிச்சை கேக்குற விதத்தை. கிட்டத்தட்ட கையையோ மெ7கத்தையோ தொட்டுருவோம்போல அவ்வளவு கிட்டத்துலே கையைக் கொண்டுவர்றான், நீ வேணும்ன7ா, நல்லாக் கவனிச்சுப்பாரு. இந்தமாதிரி தப்புத்தப்பான கமெண்ட்ஸ்தான் கேக்க முடியுது. யாரும் பைசா போடலெ. அந்த ஒத்தச் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டே இருக்கு. லப் டப் லப் டப் லப் டப்
இப்பெ7 என்ன மணி ஆற7யிடுச்சா? வாங்க பீச்சுக்குப் போவோம். படகுக்குப் பக்கத்துலெ ஒரு இளம் ஜோடி, அப்பதன்ன7 காதலர்களா? எதுக்கும் அவசரப்பட வேண்டாம். நீங்க அவங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு இருங்க. எனக்கு ஒரு சின்ன ஜோலி இருக்கு.
" ஓங்க டன்ஜனை விட்டுக் காத்தோட்டமா வாந்தாச்சு இப்பொ கொஞ்சம் சொகமா இருக்கில்லியா? நான்ஸி"
" ஆன இது என் நித்திய வாழ்க்கை கிடையாது. நீங்க சொல்ற டன்ஜன்தானே நா எப்பவுமே இருக்கிற எடம்?"
" ஓங்க கஷ்டம் எனக்கு புரிகிறது." " நீங்க என்னெ நின்னே கூப்பிடலாம். ஓங்க பேரு அம்மா சொன்னவுடனேயே மறந்து கோச்சு
ஸ்ாரி:
“ լն էլ ժ” " பீட்டர் ஒங்களுக்கு இது வினோதமான விஷயமாகத் தோணலியா? எப்பழ விட்டுக்கு வரச் சம்மதிச்சிங்க?"
" ஒன் அம்மாவை செவ்வா செவ்வா சர்ச்சிலெ பார்க்கிறதுண்டு. வாசெல்லெ
தொடர்ச்சி 09ல்.

பொழுதுபோக்கு நாவல்கள் தோன்றியதற்கான சூழல்கள்
மேலைநாட்டில்,தொடக்க காலத்திலிருந்து வந்த இலத்தின் மொழி வழிக் கல்வியும், இலக்கியங்களும் அவரவர் தாய் மொழியின் வாயிலாக வெளியிடும் வாய்ப்பும் தொழில் புரட்சியும்.ஓரளவுக்கு கல்வி பெருகிக்கொண்டிருந்த நிலையும்,நடுத்தர வகுப்பினரின் தேவைக்குரிய இலக்கியங்களைப் படைக்கும் புதிய சூழலை உருவாக்கியது. இலகுவான இலக்கியத்தைப் படிக்கும் மனப்பான்மையும் மக்களிடம் வளர்ந்தது. எனவே,எளிய உரைநடையிலான,எளிமையான கதைக் கருக்களையுடைய பொழுது போக்கு நாவல்கள் தோன்றின.
வீரமும், வியப்பும்மயிர்க்கூச்செறிதலும் பொருந்திய பொழுது போக்கு நாவல்களே மிகவும் சிறப்புற்றிருந்தன. ரெயினால்ட்ஸ்,அலெக்ஸாண்டர்டுமாஸ்தானியேல் டிபோ,கானன் டாயில்,அகதா கிறிஸ்டி போன்றோர் நாவல்களையே மக்கள் பெரிதும் விரும்பிப் படித்தனர். இவர்களது நாவல்கள் பிற மொழிகளில் பெருமளவில் மொழிபெயர்க்கப்பட்டன. இத்தகைய நாவல்களின் தாக்கம் (m- pact) தமிழிலும் ஏற்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில படித்த மக்களிடையே ஆங்கில மோகமும்,ஆங்கிலக் கல்வியைப் புகுத்தவேண்டும் என்ற விருப்பமும் இருந்தன.ஓரளவு கல்வி கற்றவர்களின் கற்கும் ஆர்வத்தை நிறைவுபடுத்த எளிய பொழுது போக்கு இலக்கியம் தேவைப்பட்டது. இதற்கு முந்திய குடும்பக் கதைகளிலும் மந்தப்போக்கே நிலவியது. மேலும், விறுவிறுப்பாகவும்,சுவையாகவும்,ஆர்வநிலையோடும் கூடிய பொழுது போக்கிற்காக படைக்கும் நாவல்களைப் படிக்கும் வாசகர் பெருகிக் கொண்டே வந்தனர் சிந்தனைக்குச் சிறப்பிடம் கொடுக்காமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கற்பனையுலகில் வாழ விளைந்ததன் பயனேதமிழில் பொழுது போக்கு நாவல்கள் தோன்றி-வளர வாய்ப்பளித்தன.இவை 1910முதல் 1935 வரையிலும் தாராளமாக வெளிவந்தன. ஆரணி குப்புசாமி முதலியார் வடுவூர் கேதுரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜ",வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்ற பொழுதுபோக்கு நாவலாசிரியர்கள் பலர் உருவாயினர்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து இருபது ஆண்டுகளில் இந்த ரெயினால்ட்ஸ் நாவல்கள் முக்கியமாகப் பரபரப்பும் மர்மமும் நிறைந்த கதைகள் என்ற காரணத்தால் எழுத்தாளர்கள் பலரால் மொழி பெயர்த்தும் தழுவியும் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டுப் பெருவாரியாகப் பரவின. அவை இலட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்தன. இவ்வாறு தமிழில் ஆங்கில நாவல்களைத் தழுவி எழுதியவர்களில் ஆரணி குப்புசாமி முதலியார் முதலிடம் வகிக்கிறார். இலட்சக்கணக்கான வாசகர்களைப் புத்தகம் படிக்கும்
பழக்கத்தில் ஈடுபட செய்த பெருமை அவரையும், அவருக்குப் பின்வந்த வடுவூர் துரைசாமி ஐயங்காரையும், கோதைநாயகி அம்மாளையும் சாரும்.
பொதுவாக பொழுது போக்கு நாவல்கள் ஓய்வு நேரங்களில் முழுமையாக ஈடுபடச் செய்வதற்கும், பிற மனநிலையில் இருந்தும், புறச் சூழலிலிருந்தும் விடுவித்துக் கொள்வதற்கும் (escapism),படித்த ஒன்றை நினைத்துக் கற்பனை செய்வதற்கும், பயணச் சோம்பலையும், சோர்வையும் போக்கிக் கொள்வதற்கும் துணை செய்கின்றன. இவைகளில் துய்பறியும் நாவல்களே தலைமை ஏற்கின்றன. மக்களிள் அவசரத்தேவையான படிக்கும் ஆர்வத்தை ஈடுசெய்ய இந்நாவல்கள் பெரிதும் பயன்படுகின்றன.
தங்களின் கவனத்திற்கு, எமது காரியாலயம் செவ்வாய்க் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை திறந்திருக்கும். ஞாயிறு,திங்கள் விடுமுறை தினங்களாகும்.
நன்றி -விபவி

Page 8
ஈழத்து தமிழ் நாவல்கள்.
ஈழத்தில் தமிழ் நாவல் வரலாறு 1885 ம் ஆண்டில் சித்திலெப்பை என்பவரால் எழுதப்பட்ட அசன்பேயுடைய கதையுடன் தொடங்குவதாக நாம் கூறலாம். வசன வடிவிலான நீண்ட கதை கூறும் நிலையில் அமைந்த எல்லாவற்றையும் நாவல் எனப் பொதுவாக சுட்டும் நோக்குடன் கடந்த 112 ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 1000 தமிழ் நாவல்களை நாம் எதிர்பார்க்கலாம். எனினும் நாவல் என்பதற்கு முழுநிலைப் பண்புகளோடு அனைத்துலகத்தரத்தில் எத்தனை படைப்புக்கள் எம்மவர்களால் எழுதப்பட்டுள்ளன என்ற வினாவும் பல சந்தர்ப்பங்களில் எழுகிறது.
ஈழத்தில் தமிழ்க்கதைகள் பல எழுதப்பட்டுள்ள்ன. ஆனால் அவை நாவல்கள் அல்ல என்றும் ஈழத்தில் தமிழ் நாவல்கள் எனத்தக்க படைப்பு இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறும் விமர்சகர்களும் நம் மத்தியில் உளர். இவர்களின் இவ்வாறான கருத்து நிலையை முழுநிலையில் ஒப்புக்கொள்ள முடியாதவர்களும் உள்ளனர். அனைத்துலக மட்டத்தில் பொருத்திப்பார்க்கும் போது தமிழ் நாவல்கள் இன்றும் குழந்தையாகவே உள்ளது என்ற கணிப்பீடும் சில விமர்சகர்கள் மட்டத்தில் ஆழமாகவே உள்ளது.
எவ்வாறாயினும் ஈழத்துது தமிழ் நாவல்கள் எனக் குறிப்பிட்டுக் கூறக்கூடிய - எடுத்துக் காட்டக்கூடிய படைப்புக்கள் ஒரு சிலவாவது நம்மிடம் உள்ளன எனக்கூறுபவர்கள் கூட இன்னமும் முழுமையாக எடுத்துக்கூறாமல் வெறுமனே சில அபிப்பிராயங்கள் எனும் மட்டத்திலேயே தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நாம் இந்நிலையில் எவ்வாறு விமர்சனம் செய்ய முடியும்? ஆனால் விமர்சன நிலையி நின்று நோக வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். சிந்திக்கவும் தேடவும் விவாதிக்கவும் விமர்சனம் செய்யவும் இனி முற்படுவோம். --------
சனரஞ்சகச் சஞ்சிகைகளின் வளர்ச்சியில் ஆனந்த விகடனுக்கு முக்கிய இடம் உள்ளது. 1931 ல் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடன் பொறுப்பாசிரியராக சேர்ந்தார். 1937 ல் கல்கி ஆனந்த விகடனில் “கள்வனின் காதலி" எனும் தொடர் கதையை எழுதத்தொடங்கினார். பின்னர் 1939 ல் கல்கி “தியாகபூமி “ என்னும் நாவலைத் தொடர் கதையாக எழுதத்தொடங்கினார். ஆனந்த விகடனில் இருந்து கிருஷ்ணமூர்த்தி விலகி 1941 ல் ஜூகல்கி” என்ற சஞ்சிகையை தொடங்கினார். அதில் 1941 முதல் “பார்த்திபன் கனவு” என்ற நாவலையும், 1944 முதல் “சிவகாமியின் சபதம் “ என்ற நாவலையும், 1948 முதல் அலை ஓசை’ என்ற நாவலையும், 1950முதல் “பொன்னியின் செல்வன் ” என்ற நாவலையும் தொடர் கதைகளாக வெளியிட்டு வந்தார.
எது நாவல் ?
மேலை நாட்டு கலாசார இசையில் எத்தனையோ இளம் மேதைகளை (சழனபைல) நமக்கு அளித்திருக்கலாம் (உதாரணம்: மோசாட்ஷபாட்மெண்டல் சோன் பிரிட்டன்) எத்தனையோ இளம்கவிஞர்களையும்ஓவியர்களையும் அளித்திருக்கலாம். (உதாரணம்: ரிம்பாட், சாட்டர்டன், கீட்ஸ், மைக்கல் ஆஞ்சலோரெனால்ஸ் பிக்காஸோ). ஆனால் இளம் மேதைகள் என்பது ாவலில் சாத்யமே இல்லை. உண்மையான நாவல்களினுடைய வேர் வாழ்க்கையின் அனுபவத்தில் தான் இருக்கிறது.
- \W^ 14 سسسسس

“புதுயுகம் பிறக்கிறது” என்ற இதழில் சிமோகன் என்பவர் நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும் எனும் தலைப்பில் ஓர் கட்டுரை எழுதியிருந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நாவல்களில் சிறந்த நல்ல குறிப்பிடத்தக்க நாவல்கள் பற்றிய தர வரிசையிலான பட்டியல் ஒன்றை அக்கட்டுறையின் இணைப்பாகக் கொடுத்திருந்தார்.
அது இதுதான்.
தமிழில்:
மிகச்சிறந்த நாவல்
இல்லை
சிறந்த நாவூல்கள் 1.மோகமுள் - தி.ஜானகிராமன்
2.ஜே . ஜே சில குறிப்புகள் ởịbậ5[]UITI0ỡflưì 3யுயலிலே உரு தோணி - பசிங்காரம்
நல்ல நாவல்கள் 1.பொய்தேவு - க.நா.சுப்பிரமணியம் 2.இடைவெளி - எஸ்.சம்பத் 3.ஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி 4.அம்மா வந்தாள் - திஜானகிராமன் 5. நாகம்மாள் - ஆர்.சண்முகசுந்தரம் 6.கிருஷ்ணய் பருந்து - ஆமாதவன் 7நினைவுப் பாதை - நகுலன் 8.தண்ணிர் - அசோகமித்திரன் 9.பள்ளி கொண்டபுரம் - நீல பத்மநாதன் 10.கடல் புரத்தில் - வண்ணநிலவன்
குறிப்பிடத்தக்க நாவல்கள் 1.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் 2.இதயநாதம் - ந.சிதம்பரசுப்பிரமணியம் 3.தலைமுறைகள் - நீலயத்மநாதன் 4.செம்பருத்தி - தி.ஜானகிராமன் 5.புதியதோர் உலகம் - கோவிந்தன் (ஈழம் )
6.வேள்வித்தீ - எம்.வி.வெங்கட்ராம் 7நித்திய கன்னி - எம்.வி.வெங்கட்ராம் 8.அசடு - காசியப்பன் 9.புத்தம் வீடு - ஹெ ய்சியா ஜேசுதாசன் 10ஒரு நாள் - கநா சுய்பிரமணியம்
11. சட்டி சுட்டது - ஆர்ஷ ன்முகசுந்தரம் 12.நாளை மற்றுமொரு நாளே - ஜி நாகராஜன் 13.அபிதா - லா.ச ராமாமிருதம் 14.கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 15.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா 16.சாயாவனம் - சா.கந்தசாமி 17.கம்பாநதி - வண்ணநிலவன் 18. பிறகு - பூமணி 19நிழல்கள் - நகுலன் 20. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடான் 21யசித்த மானுடம் - கரிச்சான்குஞ்சு 22. ஜீவனாம்சம் - சி.ச.செல்லப்பா 23.புனலும் மணலும் - ஆ.மாதவன் 24.சடங்கு - எஸ்.பொன்னுத்துரை (ஈழம்) 25.கடலுக்கு அய்பால் - பசிங்காரம் 26. தாகம் - சின்னப்பாரதி.
இந்த தர வரிசை 1987 சனவரி மேற்குறித்த இதழில் வெள்வந்தது. . அது அப்போ பலத்த எதிர்வினைகளை முகங்கொடுத்தது. இன்னும் முகம் கொடுக்கும்.
இன்று ஜெயமோகன் எழுதிய நாவல் என்ற நூலும் மேற்குறித்த கட்டுரையை விட வேறு ஒரு பரிமாண நிலையில் கருத்துக்களை முன்வைக்கிறது.
உண்மையில் இவை குறித்த விவாதங்களை,சிந்தனைகளை நாம் பரிமாற வேண்டும். நிச்சயம் செய்ய வேண்டும்.செய்வோமா? -

Page 9
தி ஜாநாவல்கள்
பெண் சிக்கல்களை முன்னிலைப்படுத்தி திஜா நாவல்களை படைத்தபோது நவீன கருத்தியலான பெண்விடுதலை பற்றிய தமது எண்ணங்களை நாவல் மாந்தர்கள் வழியாகப் பேச தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எழுபதுகளில் , இந்தியா படித்த நடுத்தர மற்றும் பணக்காரப் பெண்கள் முன்வைத்த பெண் விடுதலைக்கருத்துக்களையும் அப்பெண்களையும் பற்றியே தி.ஜா தம் நாவல் மாந்தர் வழியே கடுமையாக குறை கூறியுள்ளார்.மொத்தத்தில் பெண்விடுதலை குறித்த திஜா வின் எதிர்வினையை நோக்கும் போது மேற்கத்திய மரபில் தோன்றிய பெண் விடுதலைக் கருத்துகளை விட சக்தி தத்துவமும் பக்தி, கர்ம யோகத்தின் பாற்பட்ட தீவிர அன்புக் கோட்பாடும்தான் இந்துப் பெண் விடுதலைக்கு உதவ முடியும் என்ற அவர்தம் முடிவு தெரிய வருகிறது.
திஜா படைத்த “மோக முள்”, “அன்ாே ஆரமுதே”, ”உயிர்த்தேன்” “செம்பருத்தி”, “மரப்பசு”, ஆகிய ஐந்து நாவல்களில் ஆண் பெண் கதை மாந்தர் வழியே படித்த நடுத்தர வகுப்புப் பெண்களின் நவீனப் பெண் விடுதலை குறித்த கருத்துகள் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. பெண்ணை அடிமைப்படுத்திய எல்லாவித மதிப்பீடுகளுக்கும் பெண் அடிமையானதற்கும் பெண்ணையே முழுக்காரணமாக காட்டுகிற ஒரு பார்வை தி.ஜா விடம் இருப்பதைக்காணலாம். படித்த நகர்ப்புற பெண்களின் சுதந்திர சமத்துவக் கோரிக்கைகளைத் தி.ஜா தம் நாவல்களில் எதிர்மறையாக விமர்சிப்பதையும் காணலாம். தி.ஜா தமது நாவல்களில் இந்துப்பண்பாட்டு மரபின் பக்தியோகம், தீவிர அன்பு, சக்தி வழிபாடு அம்பாளின் லீலை பிரகிருதி ஆன்மா எனும் பெண் - ஆண் தத்துவங்கள் ஆகியவற்றை வரவேற்று இந்துப் பெண்ணிற்கான அன்புவழி பற்றி விளக்கியுள்ளார். தி.ஜா நாவல்களில் படைக்கப்பட்டுள்ள பிராமண - வேளாள "சமுதாயத்தின் இந்துப் பெண்களுக்குச் சுதந்திரம்.அன்பான வாழ்க்கை என்பவை மேற்கத்திய மரபில் வந்த பெண்ணியச் சிந்தனைகள் இயக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படாது.இந்து வாழ்க்கை முறையில் ஊறித்திளைத்த இப்பெண்களுக்கு இந்து மதத்தின் அன்புக் கோட்பாடுதான் "உண்மையான நிறைவைத் தரமுடியும் என்ற விந்தனையை திஜா முன்வைத்துள்ளார். மேற்கத்தைய நவீன காலப் பெண்விடுதலையைத் திஜா மறுப்பதற்குக் காரணம் அவரிடம் ஆழப்பதிந்துள்ள இந்துமதப்பண்பாடுதான் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
- டாக்டர்கயரிமளம் -
தி.ஜா வீண் மரப்பசு
மரத்துப்போன பசுமரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப்போன உபயோகமற்ற மிருகமாயும்,உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள்படும்படி பெண்ணை உவமித்துக்கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைய் பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு , பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை. இந்தப் பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது. இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும் அதன் விளக்கத்தையும் இந்த நாவலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.
- 9thGOL -
விமர்சகர்கள் சொல்வதைப்பற்றி கவனத்தில் கொள்ளததிர்கள். விமர்சகள்ை பெருமைப்படுத்தி எந்த சிலையும் இதுவரை வைக்கப்டவில்லை.
- ஜின் சிபலியஸ் -
 
 
 
 
 
 

கிபி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய "லூஸியஸ்ஸின் உருமாற்றங்கள்” என்னும் நாவலே உலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் எழுந்த நாவல் என்பர். அதுவே பின்னர் “தங்கக்கழுதை எனும் சுருங்கிய பெயர் பெறலாயிற்று. அதை எழுதியவர் பண்டைக் கிரேக்கங்கர்களை தம் முன்னோர்களாக கொண்டவரும் சொல்லாட்சித் திறமும் பிளேட்டோவின் தத்துவ ஞானபுலமையும் உடையவரும் ஆன லூசியஸ் அய்புலியாஸ் என்னும் ஓர் உரோமர் ஆவர். அவர் வட ஆப்பிரிக்காவில் உரோமன் குடியேற்றமான மதோரா என்னும் ஊரில் செல்வம் படைத்த உயர் குடியொன்றில் கிரி 125ம் ஆண்டில் பிறந்தார்.
நாவல்களில் பல வகையுண்டு அவற்றுள் ஒன்று கடித நாவல், நாவல்கள் கடிதங்களாக சொல்லப்படும் . மறைமலையடிகள் ஒகோகிலாம்பாள் கடிதங்கள்” என தலைப்பிட்டே நாவல் எழுதி விட்டாராக்கும். இக்கடிதங்கள் நாவலில் பாத்திரங்களிடையே பரிமாறிக் கொள்ளப்படும். பிறருடைய கடிதங்களை கள்ளத்தனமாக படிப்பதிலேயே ஆர்வம் உள்ள நமக்கு பாத்திரங்களின் கடிதங்களை வெளிப்படையாக வாசிக்கக் கசக்கவா செய்யும்? பாத்திரங்களுடைய மொழிநடை வித்தியபசப்பட வேண்டும் தன்னை வெளிபடுத்த வேண்டும். நாடக விளைவோடு , இக்கடிதங்கள் இருந்தால் நாவலைப் படிப்போர் மகிழ்வார்கள் என்று கடித நாவல் எழுதுவதில் சிறந்தவரான சாமுவல் ரிச்சட்ஸன் கூறுகிறார்.இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பேனாவும் பேப்பருமாக திரிந்து கொண்டிருக்க வேண்டும்.மேலும் எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டு இருப்பார்கள். ரிச்சட்ஸன் கிளாரிசா நாவலில் கிளாரிசா மிஸ்ஹோாவுக்குக் கடிதம் எழுதுகிறாள் இப்படி °னெக்கு எந்த வேலையும் கவனச்சிதறலும் கிடையாது அனுப்புவதற்கு ஆள் இல்லாவிட்டாலும், நான் கடிதம் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும்”.
லஷ்மியின் எழுத்துலக முன்னோடி
1924 இல் தொடங்கி 1959 வரை ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் எழுத்துலகில் தமக்கென ஓர் இடத்தைப் பெற்றிருந்த வை.மு கோதைநாயகி அம்மாள் அவர்களால் நடத்தப் பெற்ற "நந்தவனம்” “ஜான் மோகினி’ இதழ்கள் ஏறத்தாழ நூறு பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தின. குகப்பிரியை,அநுத்தமா,எம்.எஸ்.கமலா குமுதினி என்று பெயர் சொல்லத்தக்க படைப்பாளிகள் எழுத்ததொடங்கினர். வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண் எழுத்தாளர் வரிசையை உருவாக்கிப் பெருமை கொண்டவர் மட்டுமல்லாமல் எழுததுலகில் நுழைந்த சமகாலப்படைப்பாளிகளுக்கும் வழிகாட்டியாக அமைந்தார். லஷ்மியே கூறுவார். அவரை என் குருவாக மதித்துப் போற்றுகிறேன். அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒளி விளக்குப் போன்றவர், எழுத்துலக முன்னோடி அம்மையார் இருந்தமையாலேயே எனக்குப் பிடித்த பெண் எழுத்தாளராக “சாவி’ என்ற வார இதழுக்கு அளித்த பேட்டியில் வைமு கோதைநாயகி அம்மையாரை நான் குறிப்பிட்டேன்’கந.சு குறிப்பிடுவார் “வை.மு.கோ நாவல்கள் போல் தற்காலத்தில் எழுதுபவராக லஷ்மியை குறிப்பிடாலம்.”
- திலீலாவதி -
பிரபல துப்பறியும் கதை நாவலாசிரியரான அகதா கிறிஸ்டி ஒரு தொல்பொருள் ஆராய்சியாளரை மணந்தார். நிருபர்கள் அதற்கான காரணம் கேட்ட போது அகதா கிறிஸ்டி கூறினார்: எனக்கு வயதாக வயதாக என் கணவருக்கு என்மேல் அன்பு அதிகமாகும். அதற்காகத் தான். -
= W.-47

Page 10
வேண்டிய செய்திகளையும் நீக்கப்படவேண்டிய செய்திகளையும் தொலைபேசி மூலம் தானே நேரடியாகக் கூறிக் கட்டளை பிறப்பிப்பார். வெகுஜனத் தொடர்பு சாதனங்களை கட்டுப்படுத்தி வந்த நடவடிக்கைகளுக்கெதிராக வெகுஜனத் தொடர்பு சாதனங்களை சார்ந்தவர்களும் ஏனைய ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் தற்போதய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு பேருதவியாக இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.
மக்கள் முன்னணி அரசாங்கம் அமைத்தால் வெகுஜனதொடர்பு சாதனங்களுக்கு சுதந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று வாக்குறுதியளித்தது மக்கள் முன்னணி, ஆனால் அதிகாரத்திற்கு வந்தபின் நடந்தது என்ன?"சண்டே லீடர்" ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் வசந்த விக்கிரமசிங்ஹ தாக்கப்பட்டார். இக்பால் அத்தாஸ் என்பவரும். ஒரு நாள் அவர் மோட்டாரில் தனது வீடு சென்று கொண்டிருக்கும் பொழுது காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டார். அண்மையிலும் ஒரு நாள் இரவு இனம்.
தெரியாத சிலர் இவரது வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர். இச்செயல்கள் வெகுஜனத்தொடர்பு சாதனங்களின் சுதந்திரத்திற்கு வரவிருக்கின்ற அடக்குமுறையின் அறிகுறியாகத் தென்படுகின்றன. இந்த ஜனநாயக விரோத செயல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை மாத்திரமல்ல இதற்கு எதிராக போராட வேணி டியுள்ளது. இச்செயலைக் கணிடித்து அணி மையில் வெகுஜனதொடர்புசாதனங்களைச் சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக வெகுஜன இதாடர்பு சாதனங்களைச் சார்ந்தவர்களுடன் இந்த நாட்டிலுள்ள சக்திகள் அனைத்தும் இணைந்து போராட வேண்டும்.
பத்திரிகைச் சுதந்திரத்திற்காகவும்.ஜனநாயகத்திற்காகவும் போராடுகின்ற வெகுஜன தொடர்புசாதனங்களை சார்ந்தவச்கள் முதலில் தம்மையும் ஜனநாயகமயப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தம்மிடம்
கலைகளில் யாரேனும் செய்யக்கூடிய ஒரு ஒழுக்கமற்ற விகாரமான, அபாயகரமான செயல் எதுவென்றால் பாமர பக்களுக்கு அவர்கள் அறியாமையையும்மலிவான ருசியையும் தெரிந்தே அவரடகளிடம் திருப்பிச் செலுத்துவதாகும்.
- எட்மண்ட் வில்சன் -
மகத்தான விஷயங்களைப் பற்றி வருணிப்பது நாவலாசிரியரின் வேலை இல்லை. சின்ன விஷயங்களை சுவாரசியமாக வருணிப்பதே அவன் வேல்ை
VM - ஆதர் ஷோப்பனா -
வாழ்தல் என்பது வாழ்வின் சந்தடிகளுக்கு நடுவே வாழ்தல் ஆகும்
- எட்வேட் ஜே மெளனிக் என்ற மொழியியல் கவிஞர் -
18}سےNاN/\

விபவி மாதாந்த நிகழ்ச்சிகள்
\ சர்வதேச மாதர் தின கருத்தரங்கு காலை 9.00 மணி முதல்
பிய 3.00 மணி வரை W.E.R.C D60s, Lub.
மாதாந்த சினிமா "முப்பயம் ” பிய 2.00 மணியிலிருந்து (சிங்களம்-இயக்குனர் விரிவு- W.E.R.C logo Lutf
-ரையாளர் அத்துக்கொறள )
கருத்தரங்கு: தமிழகத்தின் அண்மைக் பிய 430 மணிக்கு கால கலை இலக்கியப் போக்கு. W.E.R.C LD66 LULs.
தெ மதுசூதனன்
23 Scent of a Green Papaya 4.50 O O 24 Sister my Sister 4.5 Film Festival 25 Suruiuing Picasso 4.5 மாகாவலி மண்டபம். 26 Shoot հndց Jarhol 5.00 ஆனந்த குமாரசுவாமி oma šo 27 Antonia's Line 4.3 கொழும்பு-07.
Gothe Institut, 39, Gregory's Road,Colombo 07- Tel. 694562
EXHIBITION
OTTODIX Social Cristicism-Prints (1920-1924) "Der Kreig" (War) – Etchings 1924 National Art Gallery - 16th-19th March
VIDEO LECTURES
26th 5.00 p.m. G.C.I. Auditorium Max Ernst (100 mins) (My Vagabondage, My Restlessness)
Introduction by Anoli Perera -
British Council, Duplication Road, Colombo 03
FM FHESTIVAL BY AND ABOUT WOMEN IN CANADA
9 DOUBE HAPPINESS 10 BYE BYE BLUES 14 THE DIVINERS 16 UNVE.UED 17 THE COMPANY OF STRANGERS 18 MARGARETS MUSEUM

Page 11
உலக மகளிர் தினம் uெணிகள் கன்வி ஆய்வு நிறுவனம்
1996
உலக மகளிர் தின விழாவிற்கு
“uெர்ைனர்
திடuர்வினர் தேரருவோம்.
--Jaf blusar stallinar விளம்பருவோம்.”
Salii: taitiuji tifanatifiu
காலம் :06.03.1993 (வெள்ளிக்கிழமை)
fu 3. Oo mazfig
தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில்
கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். தமிழில்
“ பூச்சியம் கலை வட்ட”த்தினர் வழங்கும் அளிக்கை " கட்டுக்கள் i, i, i, . . . "

விபவி 51/7, இராஜகிரிய வீதி, .இராஜகிரிய ܟܠ
8T4996