கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.04

Page 1
விப்லி"
86ଚU୮T୪F୮T୬ ଗ{
ப்பிரல்-98
6L
இராஜகிரிய வீதி,
5/7
 

5ნტი5) ·
)மயம்
செய்தி நிரல்-16
இராஜகிரிய. 874996

Page 2
விபவி நிகழ்ச்சி
ஏப்ரல் பின் நவீனத்துவம் WERC
4. 5.Lu 4.00 1060afl
-செல்வி திருச்சந்திரன்
ஏப்ரல் சினிமா WERC
18 கருத்தரங்கு காலை 9.00 மணி முதல்
(முழு நாள்)
இக் கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புபவர்கள், தங்களது பெயா, விலாசத்தை எமக்கு அறியத்தந்தால் இந் நிகழ்ச்சியின் முழு விபரமும் அறியத் தருவோம். இதில் சில படக்காட்சிகளும், குறுந்திரைப்படங்களும், அகலத்திரையில் காண்பிக்கப்பட்டு கந்துரையாடலும் நடைபெறும்.
கொழும்பை அண்மித்த நிகழ்ச்சிகள் ஏப்ரல் - 10,11, 12 திகதிகளில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் புத்தக கண்காட்சியும், மலிவு விற்பனையும், ஆய்வரங்கு, கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெறும்.
ஆய்வரங்கில் பல அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். (காலை 10.30 - 5.00) புத்தக கண்காட்சி விற்பனையில், பிரபல புத்தக நிறுவனங்கள் பங்குபற்றுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு - கொழும்பு தமிழ்ச் சங்கம், 7, 57ம் ஒழுங்கை(உருத்திரா மாவத்தை வழி) கொழும்பு - 06.

சுதந்திரப் பொண்விழா
சிறுகதைத் தொகுதி
இலங்கை சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு கலாசார அமைச்சின் கலாசார சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ஒவ்வொரு மொழியிலும் 50 சிறுகதைகளடங்கிய தொகுதிகளை வெளியிடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை சம்பந்தப்பட்ட இலக்கியக் குழுக்களுக்கு அதிலிருந்து இத்தொகுதிகளை வெளியிடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வேண்டுமென சுதந்திரவிழாவிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் சாகித்திய மண்ணடலத்தின் சிங்கள இலக்கிய குழுவிற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் இலக்கிய குழுவிற்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை. இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அதிகாரி அதைச் செய்யவில்லை என்று தெரியவருகிறது. சிறுகதைத் தொகுதியை அச்சிடுவதற்காக அச்சகத்திற்கு கதைகளை கொடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்ட திகதிக்கு இருவாரங்கள்தான் இருந்தது. தமிழ் சிறுகதைகளை தெரிவு செய்து கொடுக்கும் வேலை ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கு பொறுப்பேற்று இருந்த அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர். கலாசார கவுசிலில் உள்ள இரண்டு தமிழ் உறுப்பினர்கள் இந்த பொறுப்பை ஏற்று தொகுதிக்கான சிறுகதைகளை பொறுக்கி எடுத்தனர். இந்த தமிழ் உறுப்பினர்களுக்கும் நவீன த்மிழ் இலக்கியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவர்கள் வேறு துறைகளைச் சார்ந்தவர்கள். இதன் காரணமாக இவர்கள் பொறுக்கி எடுத்த தமிழ் சிறுகதைகள் உருப்படியற்றவையாகவும் பொருத்தமற்றவையாகவும் இருந்து. இந்த திரிசங்கு நிலையை அறிந்த தமிழ் இலக்கியக் குழுவினர் தமது ஆட்சேபனையை தெரிவித்தனர் உடனே சிறுகதைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தமிழ் இலக்கியக் குழுவின் 34 உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டது. இந்த நால்வரும் அவசர அவசரமாகத் கதைகளை சேர்த்து ஒரு தொகுதியை உருவாக்கினர். இந்தத் தொகுதி சுதந்திரப் பொன்விழாவிற்கு முன்பே அச்சடிக்கப்பட்டு விட்டது, பாராட்டக்கூடிய விடயம்தான்.
சாகித்திய மண்ணடல தமிழ் இலக்கியக் குழுவினால் தொகுத்து அச்சிடப்பட்ட 50 சிறுகதைகளைக் கொண்ட தொகுதி சுதந்திரப் பொன்விழா அன்றே அதாவது பெப்பரவரி 4ம் திகதி கையளிக்கப்பட்டது. ஆனால் இத்தொகுதி இன்றுவரை பொதுமக்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. இதன் வெளியீட்டுவிழா பின்போடப்பட்டுள்ளது காரணம் என்னவென்றால் பொன்விழாவை ஒட்டி தொகுக்கப்படவிருந்த சிங்கள சிறுகதைத்தொகுதி அச்சிடும்வேலை இன்னும் பூர்த்தியாகவில்லையாம் இத்தொகுதிக்கான வேலை மே மாதம் அளவில்தான் முடிவடையும் என்றும் இதன் பின்னர்தான் இத்தொகுதிகளின் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கலாசார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளதாக தெரிகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பொன்விழா சிங்களச் சிறுகதைகளின் தொகுதிவேலைகள் பூர்தியாடைந்து,
3.

Page 3
தமிழ் தொகுதியின் வேலைகள் பூர்த்தியடையாத பட்டசத்தில் சிங்களத் தொகுதியின் வெளியீட்டுவிழா பின் தள்ளி வைக்கப்படுமா? இதற்கு கலாச்சார அமைச்சின் அதிகாரிகள் சம்மதிப்பார்களா?
பொன் விழா தமிழ் சிறுகதைகளின் தொகுப்பின் வெளியீட்டுவிழா இன்னும் வைக்கப்படாவிட்டாலும் அந்தத் தொகுப்பை பார்க்ககூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த உடனே இது ஒர பாடநூாலா என்ற சந்தேகம் எழுந்தது இதன் அமைப்பும் இதன் அட்டைப்படமும் சரியாக பாடநூலுக்குரிய அமைப்பாக இருப்பதடன் அட்டைப்படம் சிறுவர்களுக்கான பாடநூலூக்கான அட்டைப்படமாகவே தோன்றுகிறது. பொன்விழாவை ஒட்டிவருகின்ற ஓர் சிறுகதைத்தொகுதி கலை அம்சம்மடைய ஒரு அட்டைப்படத்தை உருவாக்கக்கூடிய ஓர் தமிழ் ஓவியன்தானும் இந்த நாட்டில் இல்லையா?
தொகுதியில் உள்ள கதைகள் என்ன வரன்முறையில் தெரிவுசெய்து தொகுக்கப்பட்டுள்ளன? இக்கதைகள் பிரசுரிக்கப்பட்ட காலஅட்வணையிலா அல்லது பிரதேச ரீதியிலா? இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனேகமாகவற்றிற்கு அவை வெளிவந்த ஆண்டுகள் குறிப்பிடப்படவில்லை. இதற்கு என்ன காரணம்? மேலும் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் அனேகமானவை ஒரு குறிப்பிட்ட சஞ்சிகையில் பிரசுரிக்கப்ட்ட கதைகளாகவே இருக்கின்றன. இதற்குeஎன்ன காரணம்? இச்சஞ்சிகையுடன் சம்பந்தப்பட்ட நபர் இத்தொகுப்பிற்கான கதைகளை தெரிவுசெய்த குழுவில் உறுப்பினராக இருந்துள்ளாரா? ஒரு சிறுகதைதானும் அச்சில் வெளிவராத இரு பெரும் பிரமுகர்களது இரண்டு கதைகள் இத்தொகுதியில் எப்படி இடம் பிடித்துக் கொண்டன? இவர்கள் வகிக்கின்ற பெரும்பதவிகள் தான் காரணமா? அல்லத தனிப்பட்ட நட்பா? ஈழத்து தமிழ் சிறுகதைகளின் துறையில் பெரும்பங்குவகித்த பல முக்கிய சிறுகதை எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் ஏன் இடம்பெறவில்லை? ஏன் இவர்கள் புறக்கணிக்கப்ட்டார்கள்? 1948ம் ஆண்டிற்குப் பிறகு, பிறந்த சிறந்த சிறுகதைகளைப் படைத்த பல சிறுகதைஎழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறாததற்கு காரணம் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்து சமகால இலக்கியத் துறையில் தடம் பதித்த இளைய தலைமுறையினர் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு காரணம் என்ன? இந்த இளைய தலைமுறையினது நவீன உத்திகளை கையாளப்பட்ட ஒரு படைப்பாவது இத்தொகுப்பில் இடம் பெறாமைக்குக் காரணம் என்ன? ஈழத்து சிறுகதை வளர்ச்சியைப்பற்றியும் அதன் போக்கைப்பற்றியும் தற்பொழுது அல்லத எதிர்காலத்தில் ஆய்வு நடத்துவதற்கு இலங்கை சுதந்திர பொன்விழாவை ஒட்டி தொகுத்து வெளியிடப்பட்ட இந்த தமிழ் சிறுகதைத்தொகுப்பு எந்தளவிற்கு பயன்படப் போகிறது அத்துடன் இப்பொன்விழா நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய நாடகத்துறை, இசைத்துறை, நாட்டியத்துறை போன்றவற்றில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு கலாச்சார அமைச்சினால் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இந்தப் பொன்விழா சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளின் ஆசிரியர்களுக்கு கலாசார
அமைச்சினால் கொடுப்பனவு வழங்கப்படுமா?
4.

(எம்.எஸ். மார்க்சிஸ்ட்
iயனிஸ்ட் கட்சியின் மதி தலைவர் மட்டுமல்ல. அரசியலில் எப்படி தீவிர கவனம் செலுத்தினாரோ அதற்கு கொஞசமும் குறையாமல் இலக்கியத்தில் இந்த7ய தத்துவ சாஸ்திரத்தில் ஈடுபாடு
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முனி னணியில் திகழ்ந்தவரும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவருமான தோழர் நம்பூதிரி பாட்
அவர்கள் அணி மையில் அமரத்வமெய்தினார். இவர் அரசியல் போராட்டங்களில் எவ்வளவு தீவிரம் செலுத்தினாரோ அதேபோல கலைஇலக்கியத் தறையிலும் இந்திய
தத்துவ சாஸ்திரத்திலும் அதிக மையிலும் தீவிரமாக ஈடுபாடுடையவராகவுமிருந்தர் இவர்
省 குபவர். அவரை ! ஆா இலக்கிய
A P r . na காடுத்த பேட்டியை நன்றியுடன்
புதுதில்லியில் சந்தித்தபேது: தருகின்றோம்.
? கலை இலக்கிய உலகில் குறிப்பாக கேரளத்தில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு என்ன இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பினைப் பற்றிக் கூறுவதற்கு முன் அதற்கு முன்னோடியான சமூக சீர்திருத்தஇயக்கம் பற்றியும் கூறியாக வேண்டும். கேரளத்தில் இந்த சமூக சீர்திருத்த இயக்கத்தின் பிதாவாக யூரீ நாராயண குருவைச் சொல்லாம். அவர் கேரளத்தில் பல படைப்பாளிகளுக்கு ஊக்க சக்தியாக இருந்தார். சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தி, இலக்கியம் படைக்க அவர் செல்வாக்கே காரணம். குமரன் ஆசான் நாராயண குருவைப் பின் பற்றியவர். இசைநயம் மிகுந்த கவிதைகளை எழுதுவதால் ஆவரை மிஞ்சக் கூடியவர்கள் எவரும் இல்லை. அவைகளை நவீனத்துவம் என்று கூறமுடியாவிட்டாலும் பாரம்பரிய கவிதை மரபில் அழகான காதல் கவிதைகளை அவர் எழுதினார். ஆனால் ஒருசில கவிதைகள் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவைகளாக இருந்தன.
'மாப்ளா கலவரம் என்று அழைக்கப்படும் விவசாயப் போராட்டத்தின்போது ஒரு நம்பூதரிப்பெண் தப்பியோடி
ரு ஹரிஜன் இல்லத்தில் அடைக்கலம் சேர்கிறாள். பின்னர் அந்த இளைஞனையே திருமணம் செய்து
காள்கிறாள். இந்தக் கவிதையை கேரளத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு முதற்படி என்று நான் கூறுவேன். எழுபது வருடங்களுக்கு முன்னால் இது எழுதப்பட்டது. துரவஸ்த என்ற அந்தக் காவியத்தின் முன்னுரையில் குமரன் ஆசான் கூறுகிறார் இது முற்றிலும் மாறுபட்ட கவிதை கேரள சமுதாயம் அங்கீகரித்துள்ள வாழ்க்கை முறைகளுக்கு முரண்பட்டது. ஆனால் சமூக முன்னேற்றத்திற்கு கவிதையும் காரணமாக வேண்டும் என்ற என் அளவு கடந்த ஆர்வத்தினால் இதை எழுதியுள்ளேன். இது தோற்றுப்போகலாம். ஆனால் வெற்றி என்பது பல தோல்விகளுக்குப் பின்னரே சாத்தியமாகிறது.
? அவர் சமூக இயக்கங்கள் எதிலும் பங்கு கொண்டாரா ஆம், ஈழவர்களின் (கேரளத்தின் பிற்படுத்தப்பட்டோர்) சமூக சபைக்கு அவர் பொதுச் செயலாளராக இருந்தார். 1942ல் ஒரு படகு விபத்தில் காலமானார்.
*? ஆசானுக்கு முன்பு மலையாள இலக்கியம் a
1889ல் சந்துமேனன் எழுதிய இந்துலேகா என்ற நாவலிலிருந்து மலையாள நவீன இலக்கியம் தோன்றியது எனக் கூறலாம்.
? கேரளத்தில் தோன்றிய அரசியல் நாடகங்கள் பற்றி நம்பூதரி இனத்தில் இடதுசாரி முற்போக்கு இளைஞர்கள் ஒன்றுகூடி பல நாடகங்களை மக்கள் முன் அரங்கேற்றினர். அதில் ஒரு நாடகம் சமையல் கட்டிலிருந்து மேடைவரை என்ற நாடகம் அதில் நானும் நடித்துள்ளேன். இந்த இடதுசாரி இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பும் காங்கிரஸ் இயக்கத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது அன்னிய ஆட்சியை எதிர்த்து பல நாடகங்கள் மேடையேறின. ஆனால் என்னைப் பொறுத்தவரை தாமோதரன் எழுதிய வாடகை பாக்கி என்ற நாடகமே சக்திவாய்ந்த முதல் அரசியல் நாடகம் என நான் கூறுவேன். இந்த நாடகம் கேரள விவசாய இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.
5

Page 4
தோழர் ஏ.கே.கோபாலன் கூட இதில் நடித்துள்ளார். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் பற்றிய அவருடைய ரத்த பானம் என்ற நாடகமும் பிரசித்தி பெற்றது.
? கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு கலை இலக்கியங்களின் பங்கு எண்ன 1930ல் நாங்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினோம். அந்தக் கட்சியின் செயற்திட்டங்களில் ஒன்று நூலக இயக்கம். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் படிப்பதற்கு செய்திப் பத்திரிகைகளும் நல்ல நூல்களும் வாங்கி இந்த நாலகத்தில் வைத்தோம். அதுதவிர முதியோர் கல்வி வகுப்புகள் பல இடங்களில் நடத்தினோம். இந்த இயக்கங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக உருவெடுத்து பின் அரசியல் இயக்கமாக மாறியது. பின்னர் உருவெடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேர்களாக இவை இருந்தன.
? கேரளத்தில் இப்டாவின் பங்கு எண்ண gifu toids sit BTL5i diplinto gills (IPTA Indian People's Theatre Association) 6Tsirug, Gufu அளவில் இயங்கியதாக கூறமுடியாது. ஆனால் இப்டா என்ற பெயரில் இயங்காவிட்டாலும் அதனுடைய குறிக்கோளையும் அமைப்புமுறைகளையும் கையில் எடுத்துக் கொண்டு பல தனிப்பட்ட அமெச்சூர் குழுக்கள் சக்தி வாய்ந்தவைகளாக அந்தக் காலகட்டத்தில் இயங்கின.
ஆனால் அவை செழுமைப்படுத்தப்பட்ட நாடக மேடை என்று கூறமுடியாது அந்த நாடகங்களில் கலை அம்சம் என்பது கவனிக்கப்படாததாக இருந்தது. ஆனால் இந்தக்குறை தோப்பில் பாசியினுடைய கே.பி.ஏ.ஸி கேரள மக்கள் கலைக்குழுவின் நாடகங்களினால் தீர்க்கப்படது. தோப்பில் பாசியின் நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்த நாடகங்கள் எல்லாம் இடதுசாரி இயக்க வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.
? நாவல் இலக்கியம் பற்றி. இந்துலேகா எழுதப்பட்ட பின் ஐம்பது வருடங்கள்வரை மலையாள நாவல் இலக்கியம் முளைவிடவில்லை. பெரிய தேக்கம் இருந்தது. 1930-களில் தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி பவீர் போன்ற படைப்ாளிகள் தோன்றினர். மலையாள இலக்கியத்திற்கு ஆதர்சமாக சில நாவல்களை எழுதினர் ஆனால் அந்த நாவல்கள் இப்போது உள்ளது போல தொடர்கதையாக வெளிவரவில்லை. புத்தகங்களாக வெளிவந்தன. அன்றுதொட்டே நாவல் இலக்கியம் பலமுகங்களாக வளர்ந்து வருகிறது.
? ஒரு அரசியல் கட்சியின் கட்டளைப்படி இலக்கியங்கள் படைக்கமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா நிச்சயமாக முடியாது. இலக்கியம் படைப்பது என்பது தனிப்பட்டவர்களின் இயங்கு சக்தி எப்படிப்படைக்கவேண்டும் எதை எழுதவேண்டும் என்பதெல்லாம் எழுத்தாளனுடைய தனிப்பட்ட உரிமை, அதுவே அவனுடைய தனித்துவம் கூட எந்தக் கட்டுப்பாடும் அந்த தனித்துவத்தை அழித்து விடக்கூடாது.
ஆனால் கட்சி சார்புள்ள எழுத்தாளர்களுக்கு கட்சி சில வழிமுறைகளை எடுத்துக் கூறுகின்றது. மாக்சிம் கார்கிக்கு லெனின் எழுதினார் "உங்கள் கருத்தை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உருவத்தைப்பற்றி அபிப்பிராயம் கூற எனக்குத் தகுதியில்லை. ஆனால் உங்கள் உள்ளடக்கம் இயக்கத்திற்கு உதவி புரிவதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். மக்கள் ஊழியனாக உங்கள் ஆளுமை வளர வேண்டும்.
? இன்றைக்கு உள்ள பரதநாட்டியம், கதகளி கர்நாடக இசை போன்ற நுணர் கலைகள் நிலவுடமை சமுதாயத்தில் எழுந்தவை (Feudal Art) இப்போது அது தேவை இல்லை என்ற கருத்து நிலவுகிறதே அதுபற்றி எண்ன கூறுகிறீர்கள் இன்றைக்கு நாம் போற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான கலைகள் அனைத்துமே நில உடமை சமுதாயத்தில் தோன்றியதுதான்-கம்பராமாயணம் அந்த சமுதாயத்தில் தோன்றியது தான் இருக்கட்டுமே. இன்றைக்கும் அது நம்முடைய சொத்தாச்சே. கதகளியை எடுத்துக் கொண்டால் இசை- பக்கவாத்தியங்கள் அருமையான அடவுகள், ஜதிகள், கை, கண் போன்ற உறுப்புக்களின் அற்புதமான அசைவுகள் இவைகளைக் கொண்டதாகும். ஆனால் அவைகள் புராணக்கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. அது அப்படியே இருக்கட்டும். அதைநாம் தொந்தரவு செய்யவேண்டாம். ஆனால் கதகளி என்ற நாட்டிய அமைப்பில் பல கருத்துக்ளை நவீன நாடகங்களைக் கொண்டு வர நாம் முயற்சி செய்வோமே! "கலாமண்டலம் குழுவினரோடு இதுபற்றி நான் பேசியிருக்கின்றேன். "சமாதான இயக்கத்தை வலியுறுத்தும் ஒரு கதகளி நாடகத்தை அவர்கள் தயாரிக்கிறார்கள். இப்போது ஷேக்ஸ் பியரின் கிங்லியர் கதகளியில் தயாரிக்கப்படுகின்றது. இன்னும்கூட கதகளியின் உடை மேக்கப் இவைகளை எடுத்துவிட்டு நடன உத்திகளை மட்டும் வைத்துக்கொண்டு புதிய நாவல்களை கொண்டுவரமுடியும். இது கதகளி இலக்கணத்தை மலினப்படுத்துகிறது. என்று
6

துாய்மைவாதிகள் கூறினால் இந்தப் புதிய முயற்சிக்கு நாம் கேரளாபாலே" என்று புதிய பெயா கொடுதது கொள்ளலாம். இம்மாதிரி முயற்சிகள் இப்டா காலத்திலும் நடந்தது. ரஷ்யபாலே நடனத்திற்கும் இந்த மாதிரி கதகளி நடனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆகவே எந்த புராதன கலைவடிவங்களையும் நாம் புறக்கணிக்கவோ தேவையற்றது என்று கருதவோ கூடாது.
? இசையில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா? என்னைக் கவராத விடயம் இசை ஒன்றுதான். இசை ஏன் என்னைக் கவரவில்லை என்ற காரணத்தையும் என்னால் அறிய முடியவில்லை.
? படைப்பு இலக்கியம் எழுத நீங்கள் முயற்சி செய்தது உண்டாட ஒருபோதும் இல்லை. விமர்சனம் எழுதுவதோடு சரி.
? 7yśs770 (3óż z ஒரு அரசியல் கோட்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்து கொள்வது அவசியந்தானா அவசியம் இல்லை. அரசியலை கூர்ந்து கவனிக்கும் பார்வை இருந்தால் போதும். அதே நேரத்தில் அரசியல் கோட்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள எழுத்தாளனையும் நான் வரவேற்கின்றேன்.
/ கலை கலைக்காகவே எண்பது பற்றி . என்று சொல்லிக் கொண்டே பணம் சம்பாதிப்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
? திரைப்படங்கள் பார்ப்பது உண்டா வெகு அபூர்வமாக ஆனால் நான் அதைப்பற்றிய விவரங்களை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். முன்பு முற்போக்கு திரைப்படங்கள் மலையாளத்தில் ஏராளம் வந்தன. பின்னர் இந்த நிலை மாறிப்போய் மிகச் சாதாரண படங்கள் வந்தன. இப்போது மீண்டும் கலை அம்சங்கள் கொண்ட புதுமையான திரைப்படங்கள் வருகின்றன.
? கைேலகளில் சோஷலிஸ் யதார்த்தவாதம் எண்ற கோட்பாடு இக்காலத்தில் செல்லுபடியாகாத ஒன்று என்ற கருத்து நிலவுகிறதே அப்படிக் கூறுவது தவறு. கார்க்கி சொன்ன முறைப்படி சோஷவிஸ் யதார்த்தவாதம் இன்றைக்கு தேவையானதுதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும்போது ஒருவிதமான இறுக்கம் இதில் ஏற்பட்டு அதனுடைய வளர்ச்சியை தடைப்படுத்தியது. ஒரு நாவல் சமூக வாழ்க்கைளில் உண்மையான படப்பிடிப்பாக இருக்கவேண்டும். இந்த வகையில் அது சமூகத்தை விமர்சனம் செய்கிறது. எதிர்கால சமுதாயம் எப்படி இருக்கவேண்டும் என்று கோடிகாட்டுகிறது. நிகழ்காலத்தை விமர்சனம் செய்து சோஷலிஸ் சமுதாயத்தின் எதிர்காலத்தை சுட்டிக்காட்டுவதே அதன் வேலை. இது ஏங்கல்ஸ் வாசகம். இந்தக் கோட்பாடு இப்போது இலக்கியத்திற்கு தேவையில்லை என்று யார் கூறுவார்கள்?
? 2.வியில் காட்டப்பட்ட ராமாயணம், மகாபாரதமர் போன்றவைகளால் இந்து வகுப்புவாதம் தலைதுாக்கியிருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறதே! அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா
முழுக்க அதைநான் அப்படியே ஏற்றுக் கொள்ளமட்டேன். இந்த இரண்டு இதிகாசங்களும் நம் பழம் பெருமைகளை இளம் தலைமுறையினர் அறிய வாய்ப்புக் கொடுத்தது இல்லை என்றால் இதிகாசங்களைப்பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாமல் போயிருக்கும். அந்த வகையில் அதை நான் வரவேற்கிறேன். அதே நேரம் நைந்துபோன காலத்திற்கு தேவையற்ற சில கருத்துக்களையும் அவை பரப்பின என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
? இளம் எழுத்தாளர்களுக்கு. அழகுணர்வு மிக்க படைப்பில் அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வேண்டும். அதற்கு தமிழிலும் மற்ற
களிலும் உள்ள ஏராளமான படைப்புக்களைப் படிக்கவேண்டும்.
அடுத்து எழுச்சியுறுகிற மக்கள் போராட்டங்களில் ஒரு முற்போக்கு எழுத்தாளனின் கவனம் எப்போதும் இருக்கவேண்டும் அந்த மக்கள் போராட்டங்களின் உணர்வுபூர்வமான ஒரு சக்தி எழுத்தாளனின் உள்ளடக்கத்திற்கு பெரிதும் உதவும்.
? நீங்கள் கனவுகாணும் சோஷலிஸ் சமுதாயம் இருபதாம் நூற்றாணடு நிறைவுக்குள் இந்திய மண்ணில் 7صلاقه சாத்தியமில்லை, அது நீண்டபாதை பலகாலம் நடந்தாக வேண்டும்.
フ

Page 5
அசல் வில்லியம்ஸ் மிளிஸ் டவுட்பயர் நகல் விநாளன் அவ்வைசண்முகி
இதுவொன்றும் சிதம்பர ரகசியம் இல்லை. டவுட் பயர் படத்தின் நகல்தான் அவ்வைசண்முகி என்று கமல்ஹசன் ஒப்புக் கொண்டிருக்கிறார். ரோபின்ஸின் பெண்வேட நடிப்புத்தான் தன் உந்துதல் என்றும் சொல்லியிருக்கிறார். பெண் வேடம் போட்ட ஆண் அகப்பட்டுக் கொண்டால் நிகழும் வேடிக்கைதான் கமல்ஹசனுக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் முக்கியமாக இருக்கிறது.
நகல் செய்வதில் வல்லவர் கிரேஸிமோகனி. முதலில் கமல்ஹசனுக்காக மகளிர் மட்டும் படத்தை நகல் செய்தவர் இப்போது அவ்வை சண்முகியைச் செய்திருக்கிறார். படம் இந்தியன் மாதிரி ஆஸ்கார் பரிசுக்குப் போகாது என்று நம்புவோம். அனுப்பாதிருப்பது நல்லது என்றும் சிபாரிசு செய்வது எனது விருப்பம். ஏனெனில் அவ்வை சண்முகியில் நடந்திருப்பது கொலை, ஜீவக் கொலை. அமெரிக்க சமூகத்தின் ஐரோப்பிய சமூகத்தின் ஒரு துக்கரமான சமூகப்பிரச்சினை Mrs DoubtFire இல் சொல்லப்பட்டிருந்தது.
குடும்பங்கள் பிரிவதால் குழந்தைகளுக்கு நேரும் துக்கம் வேறுபட்ட வாழ்க்கைப் போக்குள்ள பெற்றோர்கள் தம் பிரச்சினை தீர்க்கப்பட முடியாதது எனப் பிந்து விட்டால் கூட குழந்தைகள் பிரச்சினையை உணர்ச்சியளற்று நாகரீகமாக அணுக வேண்டும் என்ற செய்தி தான் அப்படத்தின் ஜீவன்.
கோடான கோடி குழந்தைகளினதும் நெருக்கடியும் அன்பும் பெற்றோர்களின் துயரமும் அப்படத்தின் காட்சிகளில் நெஞ்சுருகிச் சொல்லப்பட்டிருந்தது. பெண்வேடம் புனைதல் என்பது இப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவரை நேரடியாக ஈடுபாடுகொள்ள வைக்க ஒரு கதை சொல்லும் யுக்தியாகத்தான் அப் படத்தில் கையாளப்பட்டிருந்தது.
1. அவ்வை சண்முகியில் நடந்திருக்கும் கொலை இரண்டு வழிகளில் நடந்திருக்கிறது.
பாத்திர வளர்ச்சியோ சம்பவ வளர்ச்சிகளோ குறைந்த பட்ச தர்க்கத்துக்கூட வரவில்லை
எவருக்கும் பிரிவு குறித்த ஆழ்ந்த வருத்தமோ வாழ்க்கை அவலங்களோ இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக அதில் சித்தரிக்கப்பட்டிருந்த குழந்தை அதிகப் பிரசங்கித்ததனமான தமிழ் சினிமாக் குழந்தை.
கமல்ஹசன், மீனா, குழந்தைக்கு இடையிலான ஆழ்ந்த அன்பின் ஜீவன் ஒரு காட்சியில்கூட இல்லைமூன்று மரங்கள்தான் இருந்தன.
2. டவுட்பயர் படத்தில் இல்லாததம் அவ்வை சண்முகியில் முழுக்க நிறைந்திருப்பதான ஒரு அம்சம்: நரைத்த முதிர் வயதுப் பெண்ணைச் சுற்றின பாலுறவு வக்கிரம். பொறுக்கித்தனமான வசனங்கள். போதாதற்கு ஹீராவின் லோகட் ஜாக்கட் காட்சிகள் மாடியில் மெலிருந்து Elevation Shot களாக மேல்காட்சிகளாக எடுபட்ட வக்கிரம். கமல்ஹசனதும் ரவிக்குமாரினதும் நோக்கு அவ்வகையில் நிறைவேறியிருக்கிறது.
டவுட் பயர் படத்தின் கதைதான் என்ன? வெகுசாதாரணம் மிமிக்ரி செய்வதிலும் வேஷம் போட்டு நடிப்பதிலும் ஆர்வமுள்ள கலைஞனான ராபின் வில்லியம்சுக்கு குழந்தைகள் மீது உயிர். தன் மூன்று குழந்தைகளோடு இருப்பதென்றால் வேலை பற்றி அவன் கவலைப்படமாட்டான். ஒரு வேலையில் எப்போதும் தங்கியிருக்க மாட்டான். இறுதிவரை அவன் அப்படியேதான் இருக்கிறான்.
○
 

மனைவி ஒரு வியாபார நிறுவனத்தில் மேலதிகாரி திட்டமிட்டு விஷயங்களைச் செய்யக்கூடியவள். வியாபார நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பான அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டவள். அவளுக்கு திட்டமிட்ட வீடும் குழந்தை வளர்ப்பும் வேண்டும். திட்டமிட்ட வாழ்வும், அதை மறுத்த வாழ்வும் கொண்ட இருமனிதர்களுக்கிடையிலான உறவு தொடர்ந்து மேல் கொண்டு செல்ல முடிவதாக இல்லை. (கலைஞன் வாழ்வு+அதிகாரியின் வாழ்வு) மனைவி விவாகரத்து பெறுகிறாள்.
விவாகரத்தின் விளைவுகளாகத் தொடரும் சம்பவங்கள் வருகிறத. சரியான வேலையில்லாதவனும் நிரந்தரமான தங்குமிடம் இல்லாதவனுமான வில்லியம்ஸோடு குழந்தைகள் தங்க முடியாது. வாரத்தில் ஒருநாள் மட்டும் மேற்பார்வையாளரின் கீழ் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறான்.
வில்லியம்ஸின் முழு உலகமும் நொறுங்கி விழுகிறது. அவன் மனம் உடைகிறது. மனைவிக்கு கவனிக்க நிறைய நிர்வாக வேலைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. குழந்தைகளை முழுக்க இருந்து அவளால் பராமரிக்க முடியாது. ஆகவே ஒரு சைல்ட்மைன்டர் வேண்டும். விளம்பரத்தைக் காண்ணுறும் ராபின்ஸ் பெண் வேஷம் கட்டிக்கொண்டு விண்ணப்பித்து வேலைக்குச் சேர்கிறான்.
வளர்த்த பெண் குழந்தை ஒரு பையன் பிறகொரு குட்டிப் பெண்குழந்தை. பள்ளிக்கூட ஹோம்வேர்க் சிரத்தையாகச் செய்யக் கற்றுக் கொடுக்கிறான். அவன் குழந்தைகளை அக்கறையாகக் கவனிக்கிறான். அந்தப் பெண்வேடத்தின் பெயர்தான் மிஸஸ் டவுட்பயர். சந்தர்ப்பமாக செய்தித்தாளில் கிடைத்த பெயர் மிஸிஸ் டவுட்பயர் தந்தைதான் என்பதை யதேர்ச்சையாக பெரிய மகளும் மகனும் கண்டுபிடிக்கிறார்கள். தாயிடம் சொல்லவதில்லை எனச் சத்தியமும் வாங்கிக் கொள்கிறான். சின்னக் குழந்தைக்கு இவை எதுமே தெரியாது. அது சின்னக் குழந்தை என்பது இங்குமுக்கியம் (மாறாக சண்முகி கழந்தை ஞானக்குழந்தையாக இருக்கிறது.) இச் சூழலில் மூன்று சம்பவங்கள் நேர்கிறது.
er *
1. குழந்தைகள் வந்து தங்கிச் செல்ல பொருத்தமான வீடுதானா எனப் பார்க்க சோஷல் வொர்க்கர்
தணிக்கைக்கு ராபின்ஸ் வீட்டுக்கு வரப் பொகிறார்
伊 *
2. மனைவிக்கு வேறு ஒரு ஆண் நண்பர் அறிமுகமாக அவர்களோடு உணவருந்த மிஸிஸ் டவட் பயர்
போகவேண்டும்.
. ராபின்ஸின் திறமையைக் கண்டு அவரை வேலைக்கு அமர்த்தும் டைரக்டரோடு பேச அதே நாளில்
அதே ஒட்டலுக்கு ராபின்ஸ் செல்லவேண்டும்.
ஒரே ஆள் ஆணாக பெண்ணாக ஒரே காலத்தில் மாறி இருக்கவேண்டும். இந்த இடங்கள், எந்தப் பாலுறவு வக்கிரமும் இன்றி இயல்பான தர்க்கபூர்வமான சம்பவ வளர்ச்சியின் நகைச்சுவையாகச் சொல்லப்படுகிறது.
கடைசியில் வேஷம் கழன்றுபோகிறது. அந்தச் சம்பவத்தில் தான் சின்னக்குழந்தை ஆச்சரியத்தடன் கத்துகிறது. டாடி"
கோர்ட் ராபினை மோசடிக்காரன் என்கிறது
ராபின் குழந்தைகளின் உறவு எனக்கு மூச்சு போன்றது. காற்று போன்றது. காற்றில்லாமல் மூச்சில்லாமல் தான் வாழ முடியாது. குழந்தைக்காக நான் எதுவும் செய்வேன் என்கிறான்.
கோர்ட் ராபினது திட்டமிலாத வாழ்க்கை போன்றன நாகரிகமில்லாதவை என்கிறது. குழந்தைகள் அச்சூழலில் வளரக்கூடாது என்கிறது. வாரம் ஒருநாள் பார்க்கலாம் என்கிறது. ராபின் அழுகிறான்.
இந்த மாபெரும் துக்கத்தைச் சமந்துகொண்டு தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான மிமிக்கிரி நிகழ்ச்சியை நடத்தி வருகிறான் ராபின்ஸ். கோர்ட்டுக்குத் தெரியாத உண்மையொன்று ராபின்ஸின் மனைவிக்குத் தெரியும் அது குழந்தைகளுக்கும் ராபின்சுக்கும் இடையிலான அன்பின் உன்னதம்.
9

Page 6
அவள் ராபின்ஸ்சை தெடிவருகிறாள். ஒன்றை இருவரும் உணர்கிறார்கள். தங்களுக்கிடையிலான பிரச்சினை தீர்க்க முடியாதது ஆனால் குழந்தைகள் தங்கள் இருவரையுமே நேசிக்கிறார்கள்.
படத்தின் இறுதியில் தினமும் பள்ளிகூடம் விட்ட் பின் குழந்தைகளை சில மணி நேரம் ராபின் வெளியே அழைத்துச் செல்லலாம் என மனைவி முடிவு செய்கிறாள். கதவு திறக்க குழந்தைகள், அப்பா காத்திருக்கக் காண்கிறார்கள்.
குட்டிக் குழந்தை தாயிடம் கேட்கிறது கோர்ட் ஆடரை என்ன செய்வது? அம்மா சொல்கிறாள் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் மாபெரும் வெற்றிபெற்ற படமாக ஆழ்ந்த துக்கத்தையும் நம்பிக்கையும் எழுப்புவதாக இப்படம் திகழ்கிறது.
இறுதியில் ராபின் சொல்கிறான் "குழந்தைகள், தகப்பன் தாய், உறவுகள் எல்லோருமே நுாறுமைல்கள், ஆயிரமைல்கள் தாண்டி இருக்கலாம். சிலவேளை ஒருவருடம் கூட பார்க்காமல் இருக்கலாம் ஆனால் பரஸ்பரம் அன்பு என்பது நிலவ வேண்டும்."
அவ்வை சண்முகியில் மீனா பணக்கார பிராமண வீட்டுப்பெண். அப்பாவி அகத்தை பிடித்தவள். வேலைக்குப் போவதில்லை. அய்யர் பேர்த்தியை சபையில் அடவைப்பது விவாகரத்துக்கான காரணமாகிறது. இருக்கவே இருக்கிறது சுமங்கலி பூஜை, வரலட்சுமி விரதம், கப்ஸா தாலி புனிதம். பாத்ரூம் சீன்கள். கிழவியை உரியும் இயக்குனர். அநியாயமாக வீட்டு வேலைக்காரப் பெண்ணை திருடியாக்குகிறார்கள். ராமர்விலாஸில் வேலை செய்யும் முஸ்லீம் நாசர் மன்னித்துவிட்டதற்கா சாமீ என்று ஜெமின் அய்யர் காலில் விழுகிறார். ஹீரா என்றொரு உடம்பு இருக்கிறது.
பிரசாந்த் பெண்வேடம் போட்ட மாதிரி கமல்ஹசனும் போட்டிருக்கிறார். விளைவு அவ்வை சண்முகி அசலர்க யோசிக்கவே தமிழனால் முடியாது போலிருக்கிறது. ஒரு மலையாளப்படம் பெயர் மறந்து போயிற்று. ஒரு குடும்பத் தகப்பன் இறந்துபோக அவன் பெயரிலான இன்சூரன்ஸ் பணத்தை எடுத்து குடும்பம் பிரச்சினைகளை சரிக்கட்டுகிறது.
துரதிஷ்டம், இறந்ததாக நிகைத்தவர் உயிருடன் வந்து விட அவரை வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு தொடர்ந்து இறந்தாகவே காட்டுகிறார்கள். இறந்தபின் நடக்கும் நாடகங்கள் பெயர் போன்றவற்றை உயிருடனிருந்தே பார்ப்பதாக காட்சிகள்.
இப்படம் வெகு சாதாரண அர்த்தத்தில் மாஜிக் பியாலிஸ்ட் சினிமாப் பண்பை ஞாபகப்படுத்தியது. இது மலையாளப்படத்தின் அசல் குணம். படத்தின் இறுதி உறவுகள் எல்லாவற்றையும் விடுத்து கணவனும் மனைவியும் நள்ளிரவில் வீடுதுறந்து இருளில் போய் விடுகிறார்கள். அது மதம் சார்ந்த முடிவுதான். ஆனாலும் அப்படம் சில அசலான தன்மைகளைக் கொண்டிருக்கிறது.
மகளிர் மட்டும் படத்தில் இருந்த Adoptation குணங்கள் கூட அவ்வை சண்முகியில் இல்லை. இருப்பதெல்லாம் அசிங்கம். அர்த்தமற்ற இயந்திரமயமான வக்கிர நகைச்சுவை.
அவ்வை சண்முகியைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அதற்கு முன்பு
MSDoubt படத்தைப் பாருங்கள் உயிருக்கும் உயிரற்ற ஜடத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது
நீங்களே உணரமுடியும்.
யமுனா ராஜேந்திரன்
நன்றி: கனவு’ இதழ் 28, 1997
O SSSSGLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLLLSSSS

பிரமை கசிந்த உணர்வுகள் நுணர்ணியவை. கணப்பொழுதின் பிண்னத்திற்குரிய கணங்களிலே கேரன்றி அழிகின்றவை. எச்சமாகத் திகிலையும் அவ நம்பிக்கையையும் தோற்றிச் செல்பவை.
அந்தப் பிரமைகலந்த மன உணர்வில் இருந்தால் அவள் யனைலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். * . இருளும் மெண்காற்றும் போட்டி போட்டபடி அவளது முடியைக் கோதிவிட்டன.
அப்படி இருப்பது இன்பமாய் அமைந்த கணங்களுமுண்டு. அவ்வேளைகளில் உ~ணர்வுகள் காதல் பற்றியதாக இருக்கும். அல்லது அழகான பூக்கள், இனிய பாடல்கள் எதிர்காலத் தொழில் இப்படி அர்த்தம் நிலவமுடியாத ஆனால் மனதைச் சுகப்படுத்தக் கூடிய உணர்வுகள் மிதக்கும். இவை ஒருவகைக் கனவே என அவள் அறியாமலில்லை. ஆனால் அவை அவளை மகிழ்ச்சிப்படுத்தின. எனவே அக்கணங்கள் அவளுக்கேயுரியனவாய் இருந்தன.
ஆயினும் மின்னலைத் தொடரும் இடிபோல இந்தப் பிரமைத்துண்பத்தையும் அவள் எதிர்பார்தே இருந்தாள். அவ்வேளைகளில் அவள் திடமாகத் தீர்மானிப்பாள்.
இனிமேல் இப்படிப்பட்ட புத்தங்கள் வாசிக்கிறதில்லை" இனிமேல் இப்படிப்பட்ட காட்சிகயை நின்று பார்ப்பதில்லை" அவள் வாசித்த மனதைப்பாதித்த பாத்திரங்களே அவளாகி அவனின் முற்பிறப்புச் சம்பவங்கள் போல புகையாய் நினைவு மணடலத்தில் சுழலும். அவள் கண்ட காட்சிகளோ அவளுக்கே நிகழ்வனவாய் பிரமைதோன்றும், மூச்சுக்குழாய்கள் அடைபடும். பாத்திரங்களோ நொடிக்கு நொடி மறிச்சசெல்லும்.
அவளுள் ஏராளமான பதிலற்ற கேள்விகள். நான்யார்.?" நான் எண்பவள் யார்.?" கணிகள், மூக்கு, உதடு. இவை நிரம்பிய முகம். எல்லோரைப்போலவே இருந்தும் பிறிதுபட்டு பெயர் ஒன்றுதாங்கி அடையாளப்படுத்திக் கொண்ட பொருள். மாற்றங்களைவிட அதிகமாகக் கோபப்படுகின்ற அல்லது அதிகமாகச் சிரிக்கின்ற பேர்வழி மொத்தத்தில் வெவ்வேறு செறிவுள்ள உணர்வுக் கரைசல் அப்படியாயின் உனக்கு இந்நேரம் இந்த ரூபத்தில் முடிவு என்று குறித்து வைப்பவர் யார்? *计
அவள் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதை தவிர்த்தாள். அது அவளுக்கு மீதியூட்டும் நிகழ்வு. முடிவு நெருங்குகிறது என மனம் உணர்ந்து கொள்ளுமோ என அவள் ஐயுற்றாள். அந்த ஐயம் அவளை நெருக்கும் போதெல்லாம் முடிவு நெருங்கிவிட்டது போல” என எண்ணிக் கொள்வாள். மறுநாள் உற்சாகமாக விசிலடித்துக் கொண்டு எழும் சூரியனைப் பார்க்கப் பெறாமையாக இருக்கும்.
என்றாவது ஒருநாள் அந்தச் சூரியனை அவள் பார்க்கமுடியது போகலாம். அது அவ்வளவு தெட்டத்தெளிவான உண்மை என ஆச்சரியப்பட்டாள்.
đa- ல் ஓட்டையூடு இருள் கசிகிறது. சுருண்டிருக்கிறாள். மடியில் நலுங்கிய உடலுடன் பிள்ளைகள். பசியால் துடிப்பவை. வெளியே இன்பமான இருளல்ல. கடுமையும் பயங்கரமும் நிறைந்த இருள். காவில் காயப்பட்டு வலி தெவிகிறது. வெடியோசை மார்பாலும் கைககளாலும் தவழ்கிறாள். வெகு தொலைவிற்கு போய்ச்சேரவேண்டும் என்ற பதற்றர். வெறி உயிர் கால்வழி கரைகிறது.
அவள் உடைகளைப் பற்றுகிறாள். அலறிக்கொண்டோடுகிறாள் கையின் தள்ளலில் வலிவு இல்லை. கோயிலில் அமர்ந்திருக்கிறான்மனமுருகித் தியானிக்கிறாள். இது என்ன இடி ஓசை? மடியில் விழுந்த பொருளினால் தொடையில் ஈரம் தட்டுகிறது. கணதிறந்து பேது தொலைவில் நின்றிருந்த பெணணின் தலைமடியில்.
அற முடியாத ஆனால் ஊமைத்தனமான நடுக்கம் இவளை ஆட்கொண்டது. பயம் நெஞ்சை உலுக்கியது. இந்த உணர்வுகளை யாரிடம் சொல்ல? யாருமற்ற நான் யாருமற்ற அவர்களிடம் பிண்னக்கணத்து உணர்வுகளை எங்கனம் சொல்ல? என்னவென்று சொல்ல,
கற்று குளிர்ந்து வீசுவதாக உணர்ந்தாள். யன்னலில் வாகாகத் திரும்பிச் சாய்ந்தாள். கடல் அலைகள் வீசியெறிந்தன. அமைதிக்குள் அலை மோதின நினைவுகள். நித்திரை வருவது போலிருந்தது அதை அவள் வரவேற்றாள். அது ஒன்றே அந்தக் கணங்களிலிருந்து அவளை வெளிக்கொணர உதவும் மார்க்கம் என எண்ணினாள். சற்றைக் கெல்லாம் மெல்லிய தூக்கம் கணிகளை ஊடுருவியது. காற்று வீசிவீசி கன்னங்களை குளிரச் செய்து கொண்டிருந்தது.
-ஆதர்வுதியா

Page 7
இருள் தன் பதிலுக்காய் காத்திருந்தது வனவளம் நீண்டு கிடந்து ஆனாலும் பூமிப்பந்து தன் விசையுடன் வீறிட்டது
எங்கோவொரு முடுக்கீல் இரு உயிர்கள் மட்டும் காதல் செய்தன. தம்மையல்லஓண்றை ஒன்றுமல்ல.
வென்றுவிடும் மிதப்பில்/ வீழ்த்திவிடும் கழிப்பில்/
அவை காதல் செய்தன.
தொடக்கமுமின்றி முடிவுமின்றி விசாலித்தோடும் ஏரிக்கரையில் துளையிட்டு எலும்பும், தோலும் உயிரும் கொணட அத்தனை படைப்புக்களையும் போட்டு வெணசாம்பலிட்டு பூசிமெழுகி கறுப்பு இரத்தத்தால் வரலாறு செய்தனர் சமாதானம்
ஆம் !
புனித விடுதலைத் தாகம்!
-பாடினி
2
அர்த்தம்
இந்த நிமிடம் வரை இனிய என்வாழ்வு குறித்தே இல்லை மனித வாழ்வில் அர்த்தம் தேடியே இதுவரை கடந்து வந்த மனிதர்களின் தடங்களில் தேடலானேன்.
தேடியும் என்ன..! நான் என்னை இழந்து கொண்டதைவிட கண்டதொன்றுமில்லையே
ஆயினும், முயற்சி கைகூடுமென்று
விடாப்பிடியாய் தேடுகிறேன். அப்பவும் என்ன..?
வாழ்வின் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ தேடுவதே வாழ்க்கையாயின் வாழ்க்கையின் அர்த்தம் அதுவாகட்டும்.
ஆனி 1990
 

அமெரிக்காவில் பட்டினி
அமெரிக் கா என்றால் நிறையப் பேருக்கு
கட்டிடங்களும், கம்யூட்டர்களும் நிறைந்த பணம் கொழிக்கும் நாடு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் 50 லட்சம் குழந்தைகள் இரவில் உணவின்றி பட்டினி இருக்கிறார்கள். ஆண்டொன்றிற்கு 23.000 குழந்தைகள் உணவின்றி பசியால் இறந்து விடுகிறார்கள். இதை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் அமெரிக்க அரசின் புதிய பட்ஜெட்டினால் ஏற்கனவே பள்ளி மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த 260 குழந்தைகளுக்கு உணவில்லாமல் போய்விட்டது. பள்ளியில்
நமீ மில் வானளாவிய
லட் சமீ
காலை உணவு சாப்பிட்டு வந்த 50 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவை நிறுத்தி விட்டார்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் குழந்தைகளின் வறுமை விகிதம் 1980ல் 18சத வீதமாக இருந்தது. இன்று 22சத வீதமாக அதிகரித்துள்ளது.
புதிய வியாபாரம்
மனித உருவாக்கத்திற்குரிய மூலகங்கள் அதாவது குழந்தைப் பேறு அற்றவர்களுக்கு கருவளமூட்டல் உயிரணு ஆராச்சி என்பன இன்று புதிதாக அமைந்துள்ள தொழில் நுட்ப மாற்றங்களாகும். விந்து விற்பனை இன்று கை தீ தொழிலாக வளர்ந்துள்ளது. இன்று ஐக்கிய அமெரிக்காவில் சுமார் 11,000 வைத்தியர்கள்
にう
பாரிய
ஈடுபட்டுள்ள செயற்கை முறை கருவூட்டல் மூலம் 172000 பெண்கள் ஒவ்வொரு வருடமும் கருவளமூட் டப்படுகின்றனர். மேலும் இங்கு பிறக்கும் குழந்தைகளில் 30,000 வரை செயற்கையாக வேறு ஒருவரின் விந்திலிருந்து கருவூட்டப்பட்ட குழைந்தைகளே பிறக்கின்றன. ஒரு
தடவை பெறப்படும் விநிது செய்பவருக்கு 50 US டொலர் வழங்கப்படுகின்றது. இளம்
மாணவர்களும் விந்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவர்களின் விந்து வெளிச்சந்தையில் 20US டொலர்வரை விற்பனையாகின்றன.
உலகில் இன்று 150 செய்தி நிலுவைகள் உள்ளன. இவை தினந்தோறும் 40 மில்லியன் சொற்களில் செய்திகளை வினியோகிக்கின்றன. எனினும் இவற்றில் நான் கே நான்கு பணி னாட்டு நிறுவனங்கள் (AFP) மட்டும் கிட்டத்தட்ட 38 மில்லியன் சொற்களை அதாவது 97 சதம் - உருவாக் கப்படுகின்றன. அமெரிக்காவின் அசோசியேஸ் பிறஸ் சுக்கு (AP) மட்டும் 8500 சந்தாதாரர்கள்- அதாவது செய்தி பெற்றுக் கொள்பவர்கள் உள்ளனர். செய்திகளை 1,000 மில்லியன் வாசகர்கள் நுகர்கின்றனர் 3ம் உலகச் செய்தி நிறுவனங்கள் (இன்ரர் பிறஸ் ( IPS) TANJUG, MENA,போன்றவை) மொத்தம்
சர்விஸ்
4லட்டசம் சொற்களைத்தான் (அதாவது வெறும் ஒரு சதம்) செய்தியாக வினியோகிக்கின்றன.

Page 8
2 Azasaži zžoošés
எனிமை விட்டில் இருந்து தொடங்குகிறது.
உலகவங்கித் தலைவரின் ஓர் ஆண்டு ஊதியம் என்ன தெரியுமா? ரூ7250,000 இதற்கு முந்திய தலைவர் திரு.கோனேயின்னை விட தற்போதைய தலைவர் திரு. லூயிஸ் பிறாங்டன்
1825,000 அதிகமாக வாங்குகிறார். இந்த உயர்வு அவர் கேட்காமலே அவருக்கு
கிடைத்துள்ளது எப்படித் தெரியுமா நிலவி வரும் வளக்கப்படி உலக வங்கி தலைவருக்கும்,
சர்வதேச நிதிநிறுவனத் தலைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுகின்றது. எல்லாம் சரி சர்வதேச நிதிநிறுவனத்தின் தலைவர் திரு மைக்கேல் காமடேஸ்ஸஸ் அவர்களுக்கு ஏன் இந்த உயர்வு என்கிறீர்களா? புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்பிற்கும் 6JGuiriádigins of 86, Tinsul 6 rid (European Bank for Reconstruction and Development)
தலைவரைவிட அதிக ஊதியம் பெறவேண்டாமா. அதற்காகத்தான்.
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL எந்தவொரு அமைப்பும் பொதுமக்களிடையே வந்துவிட்டால், அதன் பின் பொதுமக்களின் விமர்சனத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கவேண்டும். இது முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டிய விஷயம். இந்தத் தெளிவு இன்னும் இங்கு ஏற்படவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
தாம் பொதுச்சேவை செய்வதால், தங்களைப்பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல. ஆகா, ஓகோ என்று பாராட்டுவதனால் வாருங்கள் . இல்லையேல் ஒன்றுமே சொல்லாதீர்கள். என்ற மனநிலை வருத்தத்திற்குரியது.
பொதுச்சேவையில் ஈடுபடுவது எவ்வளவு கடினமானது என்பதை நாம் அறிவோம். அவர்களது சேவை மனப்பான்மையை, தியாகத்தை மதிக்கிறோம். மெச்சுகிறோம். ஆனால் அவர்கள் தவறுகள் செய்யும் போது மக்கள் விமர்சிக்கக்கூடாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
O o o 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 o do o O. Co o O மரபு அவுஸ்திரேலியா
سس //
நாற்பது வருடங்களாக மனிடவியலை ஆய்வுசெய்து வருகிறேன். ད།༽ ஆனால் இன்னும் ஒரு பெண் என்ன நினைக்கிறாள்? விருப்பு என்ன? அவள் மனம் எதை நாடுகிறது? என்பதை எண்ணால் இன்னும் சரியாகச் சொல்லிவிட முடியவில்லை.
-சிக்மணி .ரைட்- ھے/

தவறு ‘வெகுஜன தொடர்பு சாதனங்களும், ஜனநாயகமும்" என்ற தலையங்கத்தில்,
வெளியான கட்டுரை கடந்த எமது நிகழ்ச்சி நிரலில் (15) இறுதிப்பகுதி தவறுதலாக தவறிவிட்டது அதன், இறுதி பகுதி இங்கு தருகிறோம்.
பத்திரிகைச் சுதந்திரத்திற்காகவும்.ஜனநாயகத்திற்காகவும் போராடுகின்ற வெகுஜன தொடர்புசாதனங்களை சார்ந்தவர்கள் முதலில் தம்மையும் ஜனநாயகமயப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தம்மிடம் இருந்துதான் ஜனநாயகமயப்படுத்தல் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. தலதா மாளிகை குண்டுத் தாக்குதல் பற்றி விபவி கலாச்சார மையம் ஓர் அறிக்கையை வெளியிட்டது இந்த அறிக்கையில் விபவியின் கூட்டிணைப்பாளர்களான கலாநிதி சுனில் விஜயவர்த்தனவும்.ஜெயதிலக கம்மலவிரவும் தங்கள் கையொப்பங்களையிட்டு வெளியிட்டார்கள். இந்த அறிக்கை சகல வெகுஜனத்தொடர்பு சாதனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.எந்த ஒரு வெகுஜன தொடர்பு சாதனமும் தலதா மாளிகை தாக்குதல் சம்பந்தமான விபவி கலாச்சார மையத்தின் இந்த அறிக்கையை வெளியிடவில்லை.ஆனால் பிபிசி ரொய்டர் போன்ற வெளிநாட்டு செய்தி நிறுவனற்கள் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. உள்நாட்டு வெகுஜன தொடர்பு சாதனங்கள் ஏன் இந்த இருட்டடிப்புச் செய்தன. கடந்தகாலங்களிலும் ஏன் இன்றும்கூட வெகுஜன தொடர்பு சாதனங்களின் சுதந்திரத்திற்கான, ஜனநாயகத்திற்கான இந்தப் போராட்டத்தில் விபவி கலாச்சார மையம் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று வருகிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது. இந்த உண்மையை வெகுஜனதொடர்பு சாதனங்களை சார்ந்தவர்கள் புரிந்து செயல்ப்பட வேண்டும்தாங்கள் தாக்கப்படும் பொழுது இத்தாக்குலுக்கெதிரான போராட்டத்தில் ஏனைய ஜனநாயக சக்திகளின் ஆதரவை எதிர்பார்க்கின்ற வெகுஜனத்தொடர்பு சாதனங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் கடப்பாட்டையும் உணர்ந்து செயல்ப்படுவது அவசியம்.
உரிமைகளுக்காக போராடியே
எமது உயிரணுக்கள் LOly. ந் 프 போயின
விலங்குடைக்க கோஷமிட்டே
குரல் உடைந்து போனது
கத்தியையும் புத்தியையும்
தீட்டித் தீட்டியே மூளையும் விரல்களும் விட்டில்கள் காய்த்துப்போனது போடப்பட்டிருக்கும்
வட்டங்களுக்குள் தயவு செய்து சுற்றிச் சுற்றி அலுத்துவிட்டது. அந்தக் கதவுகளை கள்ளத்தனமாய் கட்டைவிரலை திறந்துவிடுங்கள்
கோட்டுக்கு வெளியே நீட்டி திரும்பவும் இழுத்துக் கொள்ளும் விளையாட்டும் சலித்துவிட்டது
a e o 0 8 a
போகிறவர்கள் போகட்டும் சுதந்திரத்தின் சுகம் கொடுப்பவனுக்கும் புரியட்டும்.

Page 9
The British Council, 49, Alfred House Gardens, Colombo 3.581171
3 "Twelth Night'-feature fulm (128 mins) 5.30 p.m. 7 Constitutional Reforms' a talk by Dr. Stanley Kalpage 5.30 p.m. 17 "Twelth Night'-feature fulm (128 mins) h 5.30 p.m. 8 "Brassed Off-feature film (107 mins) 5.30 p.m. 24 "Twelth Night' -feature 1 fulm (128 mins) 5.30 p.m.
German Cultural institute, 39, Gregory's Road, Colombo 7 - 694562
GC II Audit or i u m
07 Outside Time -(1995/col/107 mins) 6.00 p.m.
Director- Andreas Kleinert
21 It's a Jungle Out There -(1995/col/90mins) 6.00 p.m.
:س
Director- Hans Christian Schmid
23. Bye Bye America -(1993/col/86mins) 6.00 p.m.
Director- Jan Schotte
30 The Dada Manifesto -(58mins) 5.00 p.m.
Introduction by Ranjith Perera
IRAN FILM FESTIVAL '98
22-28 6.00 p.m. BMCH Ciena Ha
"The Immigrant * The Scout * Manush Watchtower
* The Lost Son * Fire in the Harvest * Scent of the Joseph's Son (Organised by Asian Film Centre)
 

பரிமாற்றம்
-தெனகம சிறிவர்தன
இருபத்து மூன்று வருடங்களில் இருபத்தி மூன்று பாடசாலைகளில் படிப்பித்த ஆசிரியரைப் பார்த்திருக்கின்றீர்களா? அவரைப் பார்க்கும் i. அதிஷ்டம் எனக்குக் கிடைத்தது. திரு.தெனகம சிறிவர்தன ஒரு ஆசிரியர் மாத்திரமல்ல அவர் ஒரு எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் திகழ்ந்திருக்கிறார். மனித நேயம் மிக்க அந்த மனிதருடன் கதைப்பது ஒரு அலாதியான அனுபவம்.
இவர் மாத்தறையிலிருந்து 18மைல்களுக்கப்பாலுள்ள ஹக்மண பிரதேசத்திலுள்ள தெனகம என்ற ஒரு சிறிய கிராமத்தில் 1945 பெப்பரவரி மாதம் 14ம் திகதி பிறந்தவர். தந்தை ஓர் ஏழை விவசாயி தெனகம என்ற இந்தக் கிராமத்திலுள்ளவர்கள் ஏழை விவசாயிகள். இந்தக் கிராமத்திலுள்ள நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு நான்கோ ஐந்து பணக்காரக்குடும்பங்களுக்கும் பெளத்தமத விகாரைக்கும் சொந்தமாக இருந்தது. மூன்றில் ஒரு பகுதி நிலத்தில்தான் இக்கிராமத்தின் மக்கள் சிறு சிறு துண்டுக்காணிகளில் வசிப்பதுடன் விவசாயம் செய்வார்கள். ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள்தான் இவர்கள் தங்களுடைய நிலத்துண்டுகளில் பயிர்செய்வார்கள். ஏனைய காலங்கள்ல் இவர்கள் எம்பிலிப்பிட்டிய போன்ற இடங்களுக்குச் சென்று கூலிவேலை செய்வார்கள். அங்கு கிடைத்த கூலியைக் கொண்டு குரக்கன், சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை வாங்கி தமது தலையில் சுமந்து வந்து உபயோகிப்பார்கள். திரு.தெனகம சிறிவர்தனவும் இவ் ஏழைக் குடும்பங்களில் ஒன்றைச் சார்ந்தவர். சிறுவயது முதற்கொண்டே அவர் தமது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டார். அவர்களுக்கு மிகக் குறைந்த வருவாய் கிடைத்தபடியால் சிறுவயதிலிருந்தே ஏழ்மையை அனுபவித்தார்.
பணங்வெல வித்தியாலத்தில் இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கற்கத்தொடங்கினார். பின்னர் ஹக்மணவிலுள்ள மெதோதிஸ்த வித்தியாலத்தில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியெய்தினார். பின்பு G.A.Q பரீட்சை எடுத்த பின் 1994ல் ஆசிரியர் தொழிலைப் புரிய ஆரம்பித்தார். இவர் தனது ஆசிரியர் சேவைக்காலமான 23வருடங்களில் 23 பாடசாலைகளில் கடமையாற்றியுள்ளார். இது கல்வித்திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற கல்வி அதிகாரிகள் திரு.தெனகம சிறிவர்தனவில் எவ்வளவு பந்தமும் பாசமும் வைத்திருகின்றார்கள் என்பதைக்காட்டுகின்றது. நீச்சல் தடாகங்களும் கிறிக்கட் விளையாட்டு மைதானங்களும் கலைநிகழ்ச்சியை நடத்துவதற்கான நவீன மேடை அமைப்பையும் கொண்ட பெரிய மண்டபத்தையுமுடைய பெரிய கல்லூரிகளில் சேவையாற்றுவதற்கு திரு.சிறிவர்தன அனுபவப் படவில்லை. பிள்ளைகள் இருந்து படிப்பதற்கு வேண்டிய மேசை வாங்குகளோ அற்ற, மலசல கூடம், ஏன் குடிதண்ணீர் வசதிகூடஇல்லாத கஷ்டப் பிரதேசங்களிலுள்ள அரைச்சுவர்களையுடைய மாட்டுக்கொட்டில்கள் போன்ற பாடசாலைகளிலே சேவையாற்றுவதற்கு சிறிவர்தன அனுபவப்பட்டார். போக்குவரத்து வசதியற்ற ஏழு எட்டு மைல்கள் நடந்து செல்லவேண்டிய பாடசாலைகளுக்கு சேவையாற்ற அனுப்பப்பட்டவர். இந்த இடங்களுக்கு சேவையாற்றுவதற்கு மனப்பூர்வமாக சந்தோஷத்துடன் சென்றார். இங்கு படிக்கின்ற பிள்ளைகள் அனைவரும் ஏழைவிவசாயிகள் அல்லது வறிய மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இப் பிள்ளைகளுக்கு
7

Page 10
கல்விபுகட்டி அவர்களை மேம்படுத்துவதற்கு அவர் அந்தரங்க சுத்தியுடன் உற்சாகத்துடன் உழைத்தார். ஆனால் இந்த இடங்களில் நீண்டகாலம் திரு.தெனகம சிறிவர்தன சேவையாற்றினால் இவ்விடங்களில் அவர் காலுான்றி விடுவார் அப்பகுதியிலுள்ள மக்கள் விழிப்படைந்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் கல்விஅதிகாரிகள் திரு.தெனகம சிறிவர்தனவை அடிக்கடி இடமாற்றம் செய்து விரட்டினார்கள். இறுதியாக கொழும்பிற்கு இவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு கூட முகத்துவாரத்திலுள்ள (மோதற) லுாணுஸாகுண சாந்த அன்று வித்தியாலத்தில் கடமையாற்றுவதற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடத்திலும் ஏழை வறியமக்கள்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமப்புற வறியமக்கள் வாழ்கின்ற இடங்களில் பெற்ற அனுபவங்கள்தான் திரு.தெனகம சிறிவர்தனவின் இலக்கிய சிருஷ்டிகளுக்கு உரமாக அமைந்துள்ளன. அதனால்தான் இவரது படைப்புக்கள் வலுவானதாகவும் மனித நேயமுள்ளனவாகவுமிருக்கின்றன. இவர் 1985ல் தமது ஆசிரியர்தொழில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
'மன மகுன' என்ற பெயர் கொண்ட தனது முதலாவது கவிதையை 1985ல் எழுதினார். இப்படைப்பு கவிதைக்காவே வெளியிடப்படுகின்ற “கீதாஞ்சலி" என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. திரு.எச்ஜ்யுஞ்சிஹேவா என்ற எழுத்தாள் இக்காலகட்டத்தில் திருதெண்கம சிறிவர்தனவின் கிராமத்திற்கு வந்த பொழுது இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவரது பாதையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. இத்தொடர்பினால், மார்க்சிம் கார்க்கி, லுாசன் போன்ற முற்போக்கு சிந்தனையுடைய எழுத்தாளர்களது படைப்புக்களைப் படித்தார். இதனால் திரு.தெனகம சிறிவர்தனவின் இலக்கிய நோக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் அவர் சிறுகதைகளையும் எழுத அரம்பித்தார் 1976ல் "அணே மகே நடு அசன (எனது முறைப்பாட்டைக் கேளுங்கள்) என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. விவசாயிகளுடைய பிரச்சினைகளை ஷ்ையமாகவைத்துத்தான் இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. அனுராதபுரம் பொலநறுவை அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இயங்கிவருகின்ற விவசாய சம்மேளனத்தின் கிளைகள் இந்த சிறுகதைத்தொகுதியின் பெரும் பகுதியை இப்பிரதேசங்களிலுள்ள விவசாயிகளுக்கு விநியோகித்து அவர்களை இக்கதைகளைப் படிக்கத் துாண்டின. இதன்பின்னர் எட்டு ஆண்டுகாலம் தொழிற்சங்கவேலையில் முழுநேர ஊழியராக சேவையாற்றினார். வேலை நெருக்கடிகாரணமாக இக்காலகட்டத்தில் இவரால் அதிகம் எழுதமுடியவில்லை.
1987ல் இவரது "அமத்தி முஹஜூன’ (அமைச்சரின் முகம்) என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. இத்தொகுதியில் அரசியல், வர்க்கப்போராட்டம் சம்பந்தமான கதைகள் உள்ளடங்கியுள்ளது. திரு.தெனகம சிறிவர்தன ஆரம்பத்திலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தார். கட்சி சித்தாந்த ரீதியில் பிளவுண்டதில் இவர் மாஓ பாதையில் செயலாற்றினார்.
பத்திரிகைத்துறையிலும் இவருக்கு போதிய அனுபவம் உண்டு. உமாலி நிறுவனத்தின் “விது சர என்ற விஞ்ஞான வாரப் பத்திரிகையில் 8 ஆண்டுகள் வேலைசெய்தார். இதன்பின் "வத்மன என்ற மாத சஞ்சிகையில் ஒராண்டு வேலைசெய்தார். ஏரி வீட்டு நிறுவனத்தின் "சிலுமின" பத்திரிகையில் பிரதி ஆசிரியர் பதவிப் பொறுப்பேற்றார். அதேவேளை "திவயின’ பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டில் விவசாயிகள் பிரச்சினை சம்பந்தமாக தொடர்ந்து எழுதிவருகின்றார். இக்காலகட்டத்தில் சிங்களப் பத்திரிகையாளர்களில் பிரசித்தி பெற்றவரான தயாசேன குணசிங்ஹ என்பவர் திவயின பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இக்காலகட்டத்தில் இப்பத்திரிகை தொழிலாளர்கள் விவசாயிகளின் விவாதமேடையாகத் திகழ்ந்தது. உழைக்கும் வர்க்கம்பற்றிய அநேக கட்டுரைகள் இப்பத்திரிகையில் வெளிவந்தது குறிப்பிட்த்தக்கது.
18

பத்திரிகையில் தொடர் நாவல் எழுதுவதிலும் வல்லவராக இருந்தர் சிறிவர்த்தன. திவயின பத்திரிகையில் "அயோமா என்ற பெயரையுடைய ஒரு நாவலை தொடராக எழுதினார் சிறிவர்தன. இது ஒரு பெண்ணைப்பற்றிய தொடர் நாவல். அனோமா என்ற விபச்சாரியை சமுதாயத்திலுள்ள பெரியமனிதர்கள் என்று மதித்து கெளரவிக்கபடுகின்றவர்களும் மதகுருமாரும் தமது உடலிச்சையைத்தீர்ப்பதற்கு பயன்படுத்தியதுடன் தங்களது சொந்த நலனுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது. இது ஒரு உண்மைக்கதை. இக்கதையின் கதாநாயகி இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.இந்த தொடர்நாவல் பின்பு நுாலாக வெளியிடப்பட்டது. பின்னர் இந்த நாவல் திரைப்படமாக்கப்பட்டது. "தேச பக்தனின் கதை மகறகட்ட (பேரழிவு) என்ற மற்றும் இரண்டு நாவல்களைப் படைதுள்ளார்.
இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் நல்வாழ்வில் அக்கறையுடையவராக இருக்கின்றார். இந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களை உன்னத புருஷர்களாக்கவேண்டுமென்ற வேணவா அவருக்கு அளவுக்கதிகமாக உண்டு. அவர்களை லட்சிய புருஷர்களாக்க வேண்டுமென்ற நோக்குடன் இளைஞர்களுக்காக நாவல்களை எழுதியள்ளார். "குரு பந்துனு என்ற இளைஞர்களுக்கான நாவல் அரச தேசிய கலாச்சார விருதைப்பெற்றுள்ளது. 'மித்ரோ என்ற இவரது இரண்டாவது இளைஞர்நாவல் இளைஞர்களுக்கான சர்வதேசிய நூல்கள் சபையின் (LB.B.Y) சர்வதேசிய விருதைப் பெற்றுள்ளது. இந்நுால் இனப்பிரச்சினை சம்பந்தமான நவீனம், 1952ல் திருகோணமலைப் பிரதேசத்தில் ஒருசிறு நிலத்தைப்பெற்று விவசாயம் செய்துவருகின்ற ஒரு தென்பகுதியைச் சேர்ந்த குடும்பத்திலுள்ள 20வயதுடிைய இளைஞனுடைய கதை. இனப்பிரச்சினையால் தமது சொத்து அனைத்தையுங் இழந்து மீண்டும் தென்பகுதிக்குச் செல்கின்றது இக்குடும்பம். ஒரு ஆயதக் குழுவின் அட்டகாசச் செயலினால் பெரிதும் பாதிப்புக்குள்ளான குடும்பத்திலுள்ள இளைஞனை தமது இனவெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த முயல்கின்றனர், இலங்கையின் தென்பகுதியிலுள்ள இனவாதிகள். ஆனாலி அந்த இளைஞன் இந்த இனவாதிகளின் செயலுக்கு இணைய மறுக்கின்றான். "20வருடங்களாக நான் தமிழ் விவசாயிகளடன் சேர்ந்து உழைத்து வாழ்ந்துள்ளேன். அவர்கள் நேர்மையானவர்கள். நிரபராதிகள் ஒரு சிறு ஆயுதக்குழுவின் செயலுக்காக நான் அந்தப் பிரதேசத்திலுள்ள உழைப்பாளிகளான தமிழ் மக்களைப் பழிசொல்லமாட்டேன்’ என்று அந்த இளைஞன் இனவாதிகளின் மூஞ்சையில் அறைவது போலக் கூறுகின்றான். திரு சிறிவர்தன தொடர்ந்தும் இளைஞர்களுக்கான நூல்களை எழுதி வருகின்றார்.
வாழ்க்கை வரலாறு நூல்கள் ஐந்து எழுதி வெளியிட்டுள்ளார். ஆயுர்வேத வைத்தியரும் பேராசிரியருமான சேனக விமலவின் வாழ்க்கை வரலாற்று நூலை சிறிவர்த்தன படைத்துள்ளார். இத்துடன் பேராசிரியர் டபிள்யூ அதிகாரம் என்பவருடைய வாழ்த்துச் சரிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவ்விரு நூல்களும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.
ஒரு இனத்தை இன்னொரு இனம் புரிந்துகொள்ளாததும் இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் திரு.தெனகம சிறிவர்தன "சிலுமின" என்ற சிங்களப் பத்திரிகையில் "பாலம (பாலம்) என்றொரு அம்சத்தை ஆரம்பித்துள்ளார். இதில் தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புக்களையும் அறிமுகப்படுத்தி விருகின்றார். இவரது படைப்புக்கள் அனைத்தும் உழைக்கும் மக்கள் சார்ந்தவையாகவும் உழைக்கும் மக்களுக்காகவும் இவரால் படைக்கப்பட்டு வருகின்றன.
19 -H-

Page 11
மாக்சீயம் கேள்விக்குறி ஆகிவிட்ட சூழலில் யதார்த்த வாதம் கேள்விக் குறியாகிறது! இந்த இடத்தில் நவீனத்துவம் நுழைகிறது. இங்கும் மனிதன் மையமாகிறான். மனித வாழ்விற்கு ஒற்றைப் பரிமாணத்தில் பொருள் கூறமுடியாது. வாழ்க்கை நேர் கோட்டில் இல்லை. குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்படுவது வாழ்க்கை. பின்னலில் ஏதோ ஓர் இடத்தில் மனிதன் இருக்கிறான். ஒரே சமயத்தில் அவன் எல்லா இடத்திலு மில்லை இவன் பின்னங்களில் இருக்கிறான் ஒரிகளில் இருக்கிறான். படிமங்கள் குறியீடுகள் என்பதாய் வாழ்கை அவனுக்கு துலப்படுகிறது. வரலாற்றின் இறுக்கங்கள் அவனுக்கு தளர்கின்றன. இறந்தகால வரலாறும் இவன் பொருள்படுத்தும் துறையில் நெருக்கமாக வந்துவிடுகிறது தர்கங்களை இவன் நம்பவில்லை தர்கங்களிலிருந்து, தத்துவங்களிலிருந்து இவன் தன்னை விடுவித்துக்கொள்கிறான் பகுத்தறிவின் வன்முறையை இவண் புரிந்து கொள்கிறான். அறிவின் ஆதிக்கத்தை இவன் நம்பவில்லை இத்தகைய போக்கு நவீனத்துவம் நவீனத்துவத்தின் அடுத்த பாய்ச்சல் பின்நவீனத்துவம்.
-ஞானி

966 yL8 ாழஒயேமிடு『ダ·
*ஒge mழஒயேமிடு