கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.07

Page 1
கலாசார
ஜூலை-98
is 81/4,பாகொட வீதி, நுகேெ
229
దా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மையம்
செய்தி நிரல்-19
கொடை. தொ. பே-874996
وچ{}&ئن E. s б), 1ሺዩ፡ -
ܪܰܝܡ. ܬܰ * S. NY.

Page 2
ஹலோ. ஹலோ.
வதைகளுக்கெதிரான நாள். தலைகீழாகத் தொங்கவிட்டு, வயர்க் கம்பிகளால் உடல் முழுக்க சித்திரம் தீட்டி நகங்களை பிடுங்கி சிற்பம் செதுக்கி மூச்சடைக்கும் போது ஆணுறுப்பை லாச்சிக்குள் வைத்து ஓங்கிச் சாத்தி, மூட்டைக்குள் கட்டி அதற்குள் எலிகளையும், பாம்புகளையும், நண்டுகளையும் விட்டு கூச்சம் பார்த்து மூச்சடைக்க நீர்த்தொட்டிக்குள் அமுக்கி, மூச்சு வரும்போது மலவாசலுக்குள் தடியைச் சொருகி முடித்த பின்னும் மூச்சு விட்டால் - துணிவிருந்தால் மாத்திரமே - டாக்டரின் மருத்துவ அறிக்கை சரியாக அடையாளங்களை மாத்திரமே (புகை petrol மூச்சிழுக்கவிட்டால் என்ன அடையாளம்?) வதைகளுக்கெதிராக நீதிமன்றத்தில் கால் வைக்கமுடியும். இறந்து விட்டால் வதைகளுக்கு எதிரான நாளும் மரண நாளே! போராளிகளிடம் (உலகம் முழுதுமுள்ள) அகப்பட்டுக் கொண்டாலோ - வெட்டுவதும், கொத்துவதும், அடிப்பதும், குத்துவதும், சொட்டுவதும், கட்டுவதும், விடுதலைப் போராட்டத்தின் வீரத்தனங்களுக்கு அடையாளம் இதற்கெதிராகச் செய்யக்கூடியதெல்லாம் தற்கொலையா? சுட்டுத்தாட்டுவிட்டால் யார் கேட்பார்?
ருசி என் குருதியிலுள்ள நீரை ருசி
L
என் தசைகளை புசி
26)
என் குறியை உடை
ஆதலால் உள்குறி விறைப்புக் கொள்ளட்டும். (வதைகளுக்கெதிரான நாள் இந் நாட்டில் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.) இன் தொடர்ச்சி.
நான் என்னைப்போலவே பிறபெண்களையும் நேசிக்கிறேன். என் உணர்வுகளை மிதித்தல் போன்றே அவர்கள்
உணர்வுகனையும் மதிக்கிறேன். நான் அவர்களுடன் பேசவிரும்புகிறேன். சமூகம் வடித்த பெண் ணிலிருந்து நாம் பிறழ்தல் பற்றி பிறழ்தலே நம் இருப்பு பிறழ்தலே நம் சுதந்திரம். நான் அவர்களுடன் பேசவிரும்புகிறேன் பிறழ்தல் பற்றி மனந்திறந்து.
02

உலகிலேயே மிகவும் முக்கியமான தத்துவ நூல் பகவத்கீதை என்கின்றனர் ப்லர். குருசேஷத்திரப் போர்க் களத்தில் கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடந்த சம்ப வாதமாக மகா பாரதத்தில் இடம்பெற்றுள்ள பகவத்கீதை இந்தியத் தத்துவ மரபில் இன்னும் தனித்துவத்துடன் விளங்கும் நூல் எனலாம். ஆதிசங்கரர் முதல் இன்றுள்ள சிந்தனையாளர்கள் வரையிலும் பலர் சமய-தத்துவ நோக்கில் பற்பல வியாக்கியானங்களையும் விரிவுரைகளையும் எழுதி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, அரவிந்தர், திலகள், காந்தி, ராஜாஜி, கோல் வாங்கள் முதலியோர் வரையிலான அரசில் வாதிகளும் விளக்க வியாக்கியானங்கள் எழுதியுள்ளனர். பாரதியார் நீண்ட முன்னுரையும் எழுதியதாக அறிய முடிகிறது. இந்திய தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் கீதை முக்கியமான அரசியல் சித்தாந்த நூலாகவும் பலருக்கு இருந்துள்ளது. தமது முக்கிய ஆதர்ச விடுதலைச் சிந்தனையாக கீதையை பலரும் விளங்கி எழுதியிருந்தனர். ஆங்கில ஆட்சியினர் புரட்சியாளர்களின் மறைவிடங்களை தேடியழிக்கும் போது பகவத்கீதைப் பிரதிகளையும் கைப்பற்றினராம். • இன்று"பகவத்கீதை இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்தியாவின் கவர்னல் ஜெனரலாக இருந்த லாரன் ஹேஸ்டிங்களின் வேண்டுகோள்படி சார்லஸ் வில்கின்ஸ்தான் 1785ல் பகவத்கீதையை முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
பிரேமநாத் மொறாசியஸ் மறைவு.
-Eartஇலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களுள், குறிப்பிடக்கூடிய சிலவற்றுள் 'வாடைக்காற்றம் ஒன்று. செங்கை ஆழியான் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இத் திரைப்படத்தை இயக்கிப் பாராட்டுப் பெற்ற பிரேமநாத் மொறாசியஸ் அண்மையில் காலமானார்.
மொறாசியஸ் சிங்களத் திரைப்படத்துறையில் மிகவும் அறியப்பட்டவர். நெறியாளராக,
பாடகராக, நடிகராக, பாடலாசிரியராக, திரைக்கதை எழுத்தாளராக தயாரிப்பு நிர்வாகியாகபலவழிகளில் சிங்களத் திரைப்படத்துறைக்குத் தமது பங்களிப்பைச் செய்தவர்.
须份 後

Page 3
ஜூ லை 11 சனி மாலை 4.30க்கு விபவி-தமிழ் இலக்கியக் கட்டுரைத் தொகுதி"
நூல் விமர்சன அரங்கு.
ஜூ லை 25 சனி மாலை 2.00க்கு
“ரைட்ரானிக்”
இரு நிகழ்ச்சிகழும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் (58. தர்மராம வீதி, கொழும்பு-06) நடைபெறும்.
காலகட்டம். GLsh தொடக்க திகதி,
1. கேட்பு ஊடகம், கி.மு 500,000 ka (பேச்சு மற்றும் மனிதர்க
களின் நேர்முகத் தொடப்பு) 11. | அ. பட எழுத்து கி.மு 4000 ஆ. ஒலியன் எழுத்து கி.மு 2000 அச்சு ஊடகம். இ. அச்சுயந்திரம் હી.ી 1456 நூல்கள் கி.பி 1456 செய்தித் தாள்கள் கி.பி 1621 பருவ இதழ்கள் as 1731 111. அ. தந்தி 1844 மின்சார மின்னணு ஆ. தொலைபேசி 1876 ஊடகங்கள். இ. போனோகிராஃப் 1877 ஈ . ஒளிப்படம் 1827 உ. திரைப்படம். 1894
II. sinoso Tsé 1920 எ. தொலைக்காட்சி 1923 ஏ. கணிப் பொறி. 1946 ஐ. செயற்கைக் கோள். 1957。
 
 
 
 
 
 
 
 
 
 
 

போரின் கொடுமைகள் சிறுவர்களையே பெரிதும் பாதிக்கின்றன. கடந்த ஒரு
தசாப்தகாலத்தில் ஒன்றரை இலட்சம் சிறுவர்கள் ஆயுதப் போர்களில் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இதிலும் நான்கு மடங்கானோர் அங்கவீனர்களாகியுள்ளனர். சுமார் 50 இலட்சம் பேர் அகதிமுகாம்களில் போர்கள் முடிவுறும் நாளைக் காத்திருக்கிறார்கள். மேலும் 1 கோடியே 20 இலட்சம் பேர் தமது வீடுகளை இழந்துள்ளார்கள். எண்ணுக் கணக்கற்ற மேலும் பலர் போரின் மிருகத்தனமான விளைவுகளால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவும் மேலோட்டமான கணிப்பே.
இன்னும் ஏராளமான சிறுவர், சிறுமியர் போரினால் மறைமுகமாகப் பாதிப்படைந்து ள்ளார்கள். பாடசாலைகள், சிகிச்சை நிலையங்கள் ஆகியன மூடப்பட்டு அழிந்து போனமை, உணவு உற்பத்தி தடைப்பட்டமை, தடுப்பு மருந்தேற்றல் போன்ற அடிப்படைச் சேவைகள் இழக்கப்பட்டமை ஆகியவற்றால் இச் சிறுவர்களின் வளர்ச்சியும் மேம்பாடும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. குண்டுகளுக்கும். வேட்டுக்களுக்கும் தப்பிய இலட்சக் கணக்கானோர் இளம்பிள்ளை வாதம் அல்லது சின்னமுத்து போன்ற நோய்களுக்குப் பலியாகிறார்கள், சாதாரண அன்ரிபயட்டிக்ஸ் மருந்து வகைகள் கிடையா மையினால் சாதாரண கண், காது தொடர்பான தொற்றுநோய்கள் கவனிப்பாரற்றுப் புறக்கணிக்கப்படுகின்றன. கண் பார்வை இழப்புக்கும் செவிப்புலன் இழப்புக்கும் வழி வகுக்கின்றன.
பல நாடுகளில் போரின் பகடைகளாகவும், இலக்குகளாகவும் சிறுவர்கள் நடத்தப் படுகிறார்கள். அணிதிரட்டப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் யுத்தக் களங்களில் ஆயுதமேந்திப் போர் புரியும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சமீப ஆண்டுகளில் 15 வயதுக்குட்பட்ட சுமார் 200,000 சிறுவர்கள் ஆயுதம் ஏந்தப் பழக்கப்பட்டு கொலை செய்யப் பயிற்றப்பட்டுள்ளார்கள். ஓர் இரத்தக் களரியிலே கண்ணிவெடிகளை அகற்றும் பொருட்டும், எதிரிகளின் பதுங்கு குழிகளில் பாயும் பொருட்டும் அணியணியாக மனித அலைகளாகச் சிறுவர்களும் முன்தள்ளப்பட்டார்களாம். வீதிகள், வயல், வெளிகள், குடிமனைப் பகுதிகளில் எதிர் அணியினர் கண்ணி வெடிகளைக் கிரமமாகப் புதைப்பார்கள். பொறி வைத்த விளையாட்டுப் பொம்மைகளை சிறுவர் காணக்கூடிய இடங்களில் போட்டு விடுவார்கள். தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில்

Page 4
இரண்டு தசாப்பதங்களுக்கு முன்னர் முற்றுப் பெற்றுவிட்ட போராட்டத்தின் போது புதைத்துவைத்த கண்ணிவெடிகளுக்குச் சிறுவர்கள் இன்றும் பலியாகி வருகிறார்கள்.
1945 ஆம் ஆண்டிலிருந்து வளர்முக நாடுகளிலேயே பெரும்பாலான போர்கள் நடைபெற்று வந்துள்ளன. அங்கெல்லாம் வறுமை.தண்ணிர்ப் பஞ்சம், நோய்நொடி என்பன நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இத்தகைய பிணக்குகள் காணப்படும் நாடுகளிலும் சமூகங்களிலும் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் சிறுவர்களே. ஆனால், மிருகத்தனம் கோரத்தாண்டவாமாடும் நாடுகளில் இளமைப் பராயத்தைப் பறிகொடுத்த சிறுவர்களிடமிருந்து எந்த வகையான எதிர்கா லத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?
ஒரு பிள்ளையின் வளர்ச்சியிலும், விருத்தியிலும் யுத்தம் ஆழ்ந்தகன்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கருத்துகள், சமுதாயத்துடனும் மக்களுடனும் உள்ள உறவுகள், தார்மீக ஆசாரங்கள், சமுதாயத்தையும் வாழ்க்கையையும் விளங்கிக் கொள்ளும் மனப் பாங்கு யாவும் பாதிக்கப்படுகின்றன.
1949 ஆம் ஆண்டின் ஜெனிவாச் சமவாயம் ஆயுதப் பிணக்குகளில் சிறுவர்களின் நிலைபற்றி விசேடமாகக் குறிப்பட்டு 15 வயதுக்குட்பட்ட சிறுவர் எவரும் போரிற் பங்குகொள்ளலாகாது என்று விதித்துள்ளது. போரிற் சிக்கிய சிறுவர்களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்துவதற்குச் சாத்தியமான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதிற் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் உரிமைகள் பற்றிய சமவாயத்தின் 38 ஆம் உறுப்புரையும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆயுதப் படைகளுக்குத் திரட்டப்படுவதைக் தடுக்கிறது. 39 ஆம் உறுப்புரையோஆயுதப் போராட்டங்களில் சிக்கிய சிறுவர்களின் உடல், உள சிகிச்சைக்கும் சமூகத்தில் அவர்கள் மீள இணைந்து கொள்வதற்கும் வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்கிறது.
1997 மார்ச் மாதம் வரையில் 191 நாடுகள் சமவாயத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆயினும், இவற்றுள் பெரும்பாலானவற்றின் செயலும் ஒழுக்கமும் இந்த ஒப்புதலுக்கு
மாறாகவே உள்ளன.
நன்றி - யுனிசெப் (ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம்)
 
 
 

பரிமாற்றம்.
சுனித்ரா ராஜகருனநாயக.
சுனித்ரா தனித்துவமான, சிறப்பியல்புடைய ஒரு கலை இலககியவாதி. இவர் பல்வேறுபட்ட கலை இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு சாதனைகளைப் புரிந்துவருகின்றார். நாடகம், நடிப்பு நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயா ’ப்பு பத்திரிகைத்துறை ஆகியவற்றில் தமது தடத்தைப்
பதித்து வவருகின்றார். திரஞ்ஜனி சுனித்ரா ராஜகருணநாயக அவர்கள் 1954ல் மொறட்டுவையில் பிறந்தார். ஆனால் இரத்தினபுரியில் தான் வேரூன்றினார். இவர் இரத்னபுரி பேகஷன் பெண்கள் உயர் கல்லூரியில் தமது கல்வியை ஆரம்பித்து க.பொ.த உயர்தரப் பரீட்சை சித்தியடையும் வரை அங்கேயே படித்தார். பாடசாலை நாட்களிலேயே சுனித்ரா கலாசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். நாடகங்களை எழுதி, தயாரித்து நெறிப்படுத்தியதுடன் அந்த நாடகங்களில் தான் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்துமுள்ளார். இக் காலகட்டத்தில் அவர் 5 அல்லது 6 சிறப்பான நாடகங்களை எழுதி அவற்றை நெறிப்படுத்தினார். இவர் அங்கிலிக்கன் இளைஞர் தோழமை இயக்கத்தை ஆரம்பித்ததுடன் அதற்கான ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்து நடத்தியதுடன் பல கிறீஸ்தவ நாடகங்ககளையும் எழுதி தயாரித்து அவற்றில் தானும் நடித்துள்ளார். 1871ல் இவருடைய பல வானொலி நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. கத்தோலிக்க தூதுவன் என்ற பத்திரிகையில் 1972ல் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமாகியது. 1978லிருந்து 'ஸ்திரி சஞ்சிகையில் இவர் சிறுகதைகளை மீண்டும் எழுத ஆரம்பித்தார். இவரது கதைகள் பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்தவையாகும்.தவறு பத்திரிகை நிறுவகத்தின் பெண்களுக்கான இலக்கிய சஞ்சிகையில் 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவை
அனைத்தும் பிரசுரமாகி பெண்களினால் பெருமளவு வரவேற்க்கப்பட்டது. 1970லிருந்து 1980தின் இறுதிக் காலகட்டம் வரை "சன்','தவசரைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ‘ரசவித்தன ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து 'பத்தி எழுத்தாளராக இருந்தார். 1981ல் மாப்பசன்னின் சிறுகதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுதியை வெளியிட்டார். 1983ல் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார்.1986ல் களனி பல்கலைக்கழத்தில் கலைப் பிரிவில் சேர்ந்து சிங்களம் ஆங்கிலம் நுண்கலை ஆகிய பாட நெறிகளைக் கற்றார். இக் காலகட்டத்தில் ’தேசத்ய என்ற இலக்கிய சஞ்சிகையில் பத்தி எழுத்தாளராக இருந்தார். 1989ல் கனித்த்ராவின் 'சரதனக் காட்டில் தீ என்ற நாவல் பிரசுரமானது. இந்த நாவலுக்கு கலாநிதி >விஜயவர்த்தன ஞபாகார்த்த விருது கிடைக்கது. இந்த நாவலின் 2000ம் பிரதி களும் மூன்று மாதங்களுக்குள் விற்பனையாகி சாதனை படைத்தது.மேலும் இந்த நாவல் H. Dபிரேமறட்னா என்பவரால் நெறிப்படுத்தப்பட்டு தொலைக் காட்சி நாடகமாக ஒளிபரப்பபட்டது. 1990 ஆண்டின் முற்பகுதியிலிருந்தே ‘ராவயா பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்ததுடன் அப்பத்திரிகையின் பெண்களுக்கான பக்கத்தை இவரே பதிப்பித்தார். 1992ல் இன் விசிபில் போய் என்ற ஒரு நாடகத்தை மொழி பெயர்த்து தாமே நெறிப்படுத்தி மேடையேற்றினார். இக் காலகட்டத்தில் ஈரானிய திரைப்படங்களை இலங்கை மக்களுக்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தினர். 1993ல் கவுண்ர பொயின்ற் என்றொரு செய்தி மடலை கூட்டினைத்து ஆரம்பித்தார். இதன் முதலாவது இதழிலேயே ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற பெண்களது அவல நிலையையும்

Page 5
இத்தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினரது அட்டூழியங்களையும் அடாவாடித்தனங்களையும் அம்பலத்திற்குக் கொண்டுவந்தார். கனித்திரா நான்கு நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மாப்பசனின் சிறு கதைத் தொகுதி ஒன்று சந்தனக்காட்டில் தீ'பஜறோயா என்றொரு சிறுகதைத் தொகுதி'சாகாய்' என்ற ஒரு நாவலின் இரண்டு பகுதிகள் ஆகியவையாகும். இது ஒரு ஜப்பானிய மங்கைக்கும் அமெரிக்க இளைஞனுக்குமிடையில் ஏற்பாட்ட காதலை சித்தரிக்கின்ற நாவலாகும். 'டிங்கிரி பற்றியா (தாயற்ற குழந்தை) போணிக்க கெதற (பொம்மை வீடு) ஆகிய சிறுவருக்கான நாவல்களையும் எழுதி வெளியிட்டார். இக்காலகட்டத்தில் அநேக புலனாய்வுக் கட்டுரைகளை எழுதி வந்ததுடன் இவரது மூன்று நாவல்கள் பத்திரிகையில் தொடராக வெளிவந்தன. 1993ல் ’விதாஷி என்றொரு சஞ்சிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது. 104 பக்கங்களைக் கொண்ட இச் சஞ்சிகையின் 3000 பிரதிகள் மாதாமாதம் முற்றுமுழுதாக விற்பனையாகின. கனித்ரா தன்னந்தனியாக இச் சஞ்சிகையைப் பதிப்பித்து வெளியிட்டு விற்பனைசெய்தார். இச் சஞ்சிகை ஆறுமாதங்கள் வெளிவந்தது. 1994ல் இவர் புலமைப் பரிசில் பெற்று கலிபோனியாவிற்கு சென்ற பொழுது விதாஷி நின்று விட்டது. ஆறு மாதங்கள் கலிபோனியாவில் பத்திரிகைத்துறையில் கல்வி பெற்றார். இலங்கை வந்து ராவய பத்திரிகையில் பெண்கள் பக்கத்தைப் பதிப்பித்ததுடன் இலக்கியப்பகுதிலும் எழுதினர்."எங்கள் தினங்கள் 'சுவர்க்க உணவு ஆகிய நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். சிலுமின பத்திரிகையில் விதர்ஷனா என்ற பத்தியை இவர் வாராந்தம் எழுதிவருகின்றார். மேலும் வெகுஜனத் தொடர்பு சாதன அறிவுரையாளராக சேவையாற்றுகின்றார். எட்டுச் சிறுகதைகளைக் “கொண்ட ATTAININGAGE என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவரது சிங்கள இலக்கியப் படைப்புக்களில் சப்ரகமுவ பிரதேச பேச்சு மொழி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானதொரு கலை இலக்கிய வாதி சுனித்ரா,
ബ رகிழக்கு மாகாணத்தில் இருந்து களம் என்று ஒரு தரமான இலக்கியச் சஞ்சிகை வெளிவரு கின்றது. நல்ல பார்வையுடன் கலை இலக்கியத்தின் பல்வேறு கூறுக ளைக் காத்திரமாகத் தாங்கி வரும் இச் சஞ்சிகையின் 9 வது இதழ் வெளிவந்துள்ளது. பாராஸ் வாசித்தம்பி, அன்ரனி பால்ராஜ் ஆகியோர் இதன் இணையாசிரியர்கள்.
தொடர்புக்கு : 'களம் 7-8 பொது வீதி, அக்கரைப்பற்று-07
சுந்து . யாழ்ப்பாணத்திலிருந்து ‘சுந்தரன்’ என்ற சஞ்சிகை ஒன்று வெளிவரத் தொடங்
’கியிருக்கிறது. சுந்தரன் சிவஞானசுந்தரத்தை
நினைவு கூர்ந்து வெளிவந்திருக்கிறது. தரத்திலும் சிரித்திரனை ஒத்திருக்கிறது. அச்சு வசதி குறைந்த சூழ்நிலையிலும் அழகிய தோற்றத்துடன் முகம் காட்டுகின்றது’சுந்தரன் கெளதமனை ஆசிரியராகவும், த. ஜெயசீலனை இணைஆசிரியராகவும் கொண்டிருக்கின்றது.
தொடர்புக்கு : சுந்தரன்
252 பருத்தித்துறை வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்.

மணடையனோடு. நேரக
t
கடந்த ஏப்பிரல் 21ம் திகதி ரூபவாஹினியில் ‘பூச்சியம் கலை வட்டத்தின் மண்டையுன் ஒளிபரப்பானது. அதைத்தொடர்ந்து புதினப் பத்திரிகைகளில் இந் நாடகம் தொடர்பாக பல விதமான விமரிசனங்கள் வெளிவந்தன அவற்றுள் பெரும் பாலானவை மண்டையனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவனவையாகவே இருந்தன. இந் நாடகம் தொடர்பான கலந்துரையாடல் ஜூ ன் 13ம் திகதி 8.00 மணிக்கு W.B.R.C யில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் ஆரம்பத்தில் மண்டையன் ஒளிபரப்பப்பட்டது. இந் நாடகம் தொடர்பாக தினக்குரலில் வெளிவந்த விமரிசனத்தில் ‘மண்டையர்களால் மண்டையர்களுக்காக ஒளிபரப்பான மண்டையன்." என்று செய்தியை ஒருவர் சொன்னபோது கலந்து கொண்டோர் இவ்வாறானவற்றை ஒரு பொருட்டாக எடுக்கத் தேவையில்லை என்றும், இவை நாடகவளர்ச்சியைப் பாதிக்காது. நாடகத்தை இரண்டாம்முறை பார்க்கும் போது கூடியளவு விளங்கிக்கொள்ளக் கூடியதாகவும் முதல் தரத்தில் விளங்கிக்கொள்ள முடியவில்லை, இந் நாடகம் பிமர மக்களால் விளங்கிக்கொள்ள முடியாதது என்றும் நாடகம் எல்லோரையும் சென்றடைய வேண்டும். வெறுமனே புத்திஜீவிகளுக்கு மாத்திரம் நாடகம் போடுவது தவறாகும். என்ற கருத்துகளுக்கு சபையோரின் கலந்துரையாடலின் போது, ரசிகர்களை பாமரர்கள், புத்திஜீவிகள் என்று பிரிப்பது தவறானது. இம் மாதிரியான நாடகங்களை ஏற்கனவே பார்க்காததும், இவற்றுக்குப் பயிற்சி இல்லா மையினாலேயே விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. எமது ரசிகர்களின்

Page 6
ரசனைத் தரம் ஒரு மட்டத்திலேயே இருக்கின்றது என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இன்னொருவர் நேரம் பற்றாக்குறை காரணமாகவே காட்சிப் படிமங்களும் குறியீடுகளும் போடப்பட்டனவா? என்று கூறியமைக்கு, நேரம் பற்றிய கட்டுப்பாடு இருக்கவில்லை நேரம் தாரளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்தது. என்று தயாரிப்பாளர் பதிளளித்தார். சில காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது, இவ்வாறு செய்தமை எரிச்சலூட்டியது, இக் காட்சிகளுக்கு செலவிட்ட நேரத்தை நாடகத்தை விளக்கப் பயன்படுத்தியிருக்கலாம். என்றனர் கலந்துரையாடலில் காட்சிகளில் சில சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே இவ்வாறு செய்வது வழக்கம். என்றும் கூறப்பட்டது. நாடகத்தின் பெயர் பிடிக்கவில்லை. இவ்வர்றன நாடக முயற்சி பாரட்டுக் குரியதும் இந் நாடகத்தினை ரூபவாஹினி ஒளிபரப்பியது பாராட்டப்படவேண்டும். என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. மண்டையன் என்று கிராமங்களில் அழைக்கப்படுபவர்கள் அறிவு குறைந்தவர்கள் அதாவது ஒற்றைப் போக்குடையவர்கள் என்றே அழைக்கப்படுவது வழக்கம். இந் நாடகத்தின் உள்ளடக்கப் பெறுமானம் அர்த்தம் பொதிந்த தலைப்பாகவே உள்ளதாகவே எடுத்துக்காட்டப்பட்டது. “இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த நூற்றாண்டு முடிவுற இருக்கும் போது மிச்சமா உங்களிட்ட என்ன இருக்கு” என்ற கேள்வியுடன் முடிவதே அது ரசிகர்களிடையே ஒரு கேள்வி எழுப்பியுள்ளது. அதிலிருந்து தான் இந் நாடகத்தின் கரு உருவாகிறது. பின்னணி இசையானது காட்சிகளில் தனித்து இயக்கப்பட்டது. கடல்கரைக் காட்சியில் மட்டும் இயற்கையுடன் கூடியிருந்ததன் காரணம் என்ன? ஏனைய இடங்களிலும் இயற்கை இசையும் இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். குழந்தையின் அழுகையில் சமுதாயத்தில் ஜனநாயகம் குறைவிருத்தியடைந்த நிலையை உணர்த்தியது. ஜனநாயகம் தனிமனிதனின் ஆளுமைக்கு உறுதுணைமிக்கதாக விளங்கவேண்டும். கீழைத்தேசங்களில் ஜனநாயகத்தின் அர்த்தம் கொச்சைத்தனமாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு இளைஞன் தான் விரும்பிய கல்வி, தொழில், காதல் அகியவற்றை மேற்கொண்டு அவற்றில் தோல்வியடையும் போது அவனுக்கு உதவாத சமுதாயம் அவற்றின் தோல்வியால் விரக்தியடைந்து, தற்கொலை செய்ய முற்படும் போது சமுதாயம் விழித்துக்கொண்டு நீதிமன்றத்தில் சட்டப் புத்தகங்களைப் புரட்டி தண்டனை வழங்க, குற்றத்தடுப்பு சட்டப்பிரிவின் கீழான இலக்கங்களைத் தேடுகிறது. எனவே ஒரு இளைஞன் தான் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியாமல் சமுதாயத்தால் மண்டையனாக்கப்படுகிறான்.
சி. வயித்தீஸ்வரன்.
 

~மாதவன~
சிங்கத்தின் குகையில் விசாரணை. நீதி வழங்க மூன்று சிங்கங்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அடுத்த குகைகளில் மான் கூட்டம் சோடி சோடியாக அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சிறு குகையில்இரண்டு கலை மான்கள். விசாரணையின் போது எவ்வாறு பதிலளிப்பது, நடந்து கொள்வது என்று ஆராய்ச்சியிலும் வாதத்திலும் ஈடுபட்டிருந்தன.
எத்தகைய நிலையிலும், வதையிலும் உண்மையைக் கூறுவதில்லை. சுற்றவாளி என்பேன். முடிந்தால் குற்றத்தை அவர்களே நிரூபித்து, நீதி வழங்கட்டும் என ஒரு மான் தன் முடிவை உறுதியாகக் கூறியது. 'உன்னை வதைத்துக் கொன்று விடுவார்கள். நான் உண்மையைக் காக்கப்போகிறேன். மன்னிப்புக் கிடைக்கும். புத்தர், யேசு, காந்தியில் நம்பிக்கை கொண்டவன். குறைந்த தண்டனை கிட்டினும் உயிரைக் காப்பாற்றி விடுவேன்' என்றது மற்ற மான். ’சிங்கங்கள் புத்தரோ, யேசுவோ அல்ல. உயிர்க் கொலையை எல்லாத் தெய்வங்களும், மதங்களம், மதத்தினருமே எதிர்க்கின்றனர். கருணையையே போதிக்கின்றனர்
இரத்த வெறி பிடித்த சிங்கங்களின் மதமே வேறு
’அது என்ன மதமோ
இரத்தம்
விசாரணைகள் ஆரம்பித்த குரல்கள் கேட்டன. சிங்கங்களின் கர்ச்சனை. முதலில் மான்கள் நடுங்கின. பின் மன உறுதியை வரவழைத்தன. கோழைத்தனமாக நடுங்கிச் செல்வதில்லை எனத் தீர்மானித்ன. எப்படியும் உயிரைக் காப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் ஒத்த கருத்து. முதலில் அழைக்கப்படுபவரின் தீர்ப்பை மற்றவருக்கு அறிவிப்பதற்கு வழி தேடினர். அதை ஒட்டி இரண்டாவது மான் தீர்மானம் எடுக்கலாம். விடுதலை எனின் ஒரு தடவை சத்தமிடுவதென்றும், தண்டனை எனின் இரு தடவை என்றும் மரண தண்டனை ஆயின் மூன்று தடவை கத்துவதென்றும் தீர்மானித்தனர். குரல்களையும் சரி பார்த்தனர். குரல்களை இடைநேரம் விட்டு மீண்டும் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் சிங்கம் கள்ச்சித்துக் கொண்டு வந்தது. மான்கள் நடுங்கின. சுற்றவாளி என்ற உறுதியில் குற்றத்தை நிரூபிக்கும்படி வேண்டும் மானே முதலில் அழைக்கப்பட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொம்புகளை நிமிர்த்திய நடையுடன் மான் சென்றது. ”கற்றவாளி என்றதும் தலைமை வகித்த சிங்கம் கர்ச்சித்தது. சிரித்தது. மற்ற இரண்டும் கர்ச்சித்தபடி உற்றுப் பார்த்தன. "உன் கொம்பைக் காட்டி மிருகங்களை நீ பயமுறுத்தவில்லையா?

Page 7
இல்லை
நீ பொய் பேசுகிறாய். உண்மையைச் சொல்லு
நான் பயமுறுத்தவில்லை
'பொய் பேசும் உனக்கு மரண தண்டனை தலைமை வகித்த சிங்கம் தீர்ப்பு வழங்கியது. விசாரணை எதுவுமின்றி, சாட்சிகளை அழையாது சர்வாதிகாரப் போக்கில் தீர்ப்பு வழங்கியதைக் கண்டு மான் அதிர்ச்சியடைந்தது. ‘விசாரணையில்லாது தண்டனையா?’வியப்போடு மான் கேட்டது. நாங்கள் விசாரரிப்பதற்கல்ல, தண்டனை வழங்கவே உள்ளோம். உன் உடலை மனிதர்போல நாம் எரித்துவிட மாட்டோம். பசியோடு உள்ளவர்க்குப் பயன்படும் மான் தன் தோழனை நினைத்து மூன்று தடவை சத்தமிட்டது. உண்மையைக் கூறத் தயாராக இருந்த மான் அழைத்து வரப்பட்டது. 'உண்மை பேசி உயிரைக் காப்பாற்றத் தெரியாத மிருகம் என தனதுள்ளே தன் தோழனை வைதபடி வந்தது. 'நீ உண்மை பேசப் போகிறாயா, அல்லது உன் தோழன் போல பொய் பேசிச் சாகப் போகிறாயா?
'உண்மையே பேசப் போகிறேன் 'உன் கொம்பைக் காட்டி மிருகங்களை விரட்டினாயா?
வேறு என்ன செய்தாய்? நடந்தவற்றைச் சொல்லு. பொய் பேசப்படாது.
தாம் போராடிய காரணம், உடனிருந்த தோழர்கள், வீரச் செயல்கள் யாவ்ையும் மான் கூறியது. மன்னிப்பும் கேட்டது.
'நீ உண்மை பேசியதற்காக எங்கள் பாராட்டுக்கள் தலைமை தாங்கிய சிங்கம் சொன்னது.
நான் போகலாம் தானே'
மான் புறப்படத் தயாரானது.
ஒப்புக்கொண்ட குற்றத்திற்குத் தண்டனை இருக்கிறது. மான் வியப்போடு திரும்பிப் பார்த்தது.
மரண தண்டனை 'இது அநியாயம் அக்கிரமம். நான் உண்மை பேசினேன். மன்னிப்புக் கேட்கிறேன்' “மன்னிப்பா?
தலைமைச் சிங்கம் கர்ச்சித்தது. ‘புத்தர், யேசு கூட உண்மைகூறி மன்னிப்புக்கேட்பின் மன்னித்து விடுவார்கள். ’அவர்கள் தெய்வங்கள், நாங்கள் மிருகங்கள்.
நன்றி-குமரன்
 
 
 
 
 

ஒரு கேள்விகிதப் பதிவப். கலைப்புரட்சிக்கும். அரசியல் புரட்சிக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ரோசா : இக்கேள்விக்கு பதில் சொல்வது கடினமானது. இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் கலாசாரப் புரட்சிக்கு முதல் படி அரசியல்புரட்சி என்று நாங்கள் நினைக்கிறோம். அதே நேரம் ஒரு கலாசாரப் புரட்சி இல்லாமல் அரசியல் புரட்சி என்பது வியர்த்தமானது என்பதையும் உணருகிறோம். ஏனெனில் இன்றைய சமூகத்தில் 'தகவல்களை அடக்கி ஒடுக்கி வைப்பது (Oppression of information) என்ற நிலை இருக்கிறது. (நாம் அறிய வேண்டிய செய்திகள் நமக்குத் தெரிவிக்கப்படுவதில்லை) செய்திஅறிவது என்பது கலாசாரத்தின் அடிப்படையாகும் இந்த செய்தித் தகவல் பரிமாற்றம் தங்கு தடையின்றி இருந்தாலொழிய பொருளாதார வளர்ச்சி என்பது இல்லை. எங்கள் முயற்சி கலாசாரத்தைப் பற்றிய தேடல் என்று கொள்ளலாம். இது கலையையும், அழகியலையும் (Aesthetics) உள்ளடக்கியது. கலை, அழகியலைப் பற்றிப் பேசும்போது உண்மையிலேயே நாம் அரசியலைப் பற்றி பேசுகிறோம் என்பதை உணரவேண்டும். அழகியலை மட்டும் பரிசுத்தமாக அரசியல் கலப்பின்றி பேச வேண்டும் என்பது எங்களுக்கு இயலாத காரியம்.
கேள்வி : அரசியல் கருத்துக்களுக்கு உங்கள் படத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லையே..? சத்திரியரித்ரேயினர் பதவி
மற்ற எல்லோரையும் விட ஏன், மிருனால் சென்னையும் விட மிகத் தெளிவாக அரசியல் கருத்துக்களை என் படத்தில் கூறி உள்ளேன். 'ஜன ஆரண்யா என்சிற படத்தில் காங்கிருகக்காரன் எதிர்காலத் திட்டம் பற்றிப் பேகவான். அவன் பேச்சு முட்டாள் தனமாக இருக்கும், பொய் நிறைந்திருக்கும். ஆனால் அவன் மிக முக்கியமானவனாகத் தோற்றமளிப்பான். வேறு யாராவது இந்தப்படத்தை எடுத்திருந்தால் இந்தக் காட்சி வெட்டப்பட்டிருக்கும். ஒரு இயக்குநர் ஒரு படத்தில் எதுவரை சொல்லனும் என்பதற்கு இங்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. சில பிரகடனங்களும் சித்தரிப்புகளும் இங்கு சொன்னாரைத் தாண்டி வெளிவராது அப்படி இருக்க ஏன் அவைகளைத் தயாரிக்க வேண்டும்?
回西 山T品画出psuá· இந்த நாட்டில் அரசியல் ஒரே குழப்பமாக இருக்கிறது. ஏராளமான குரூப்புகளும், உட்குழுக்களும் இருக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே &6LLATs இருக்கிறது. இந்தக் குழுக்கள் எதனுடனும் எனக்குத் தொடர்பு இல்லை. ஆனால், மார்க்சிசத்தின் மூலம் அடைய முடியும் பலன்களை நான் நம்புகிறேன். பிறரால் சுரண்டப்படாத ஒரு சமூக அமைப்பு என்பதை எல்லாருமே வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். யாரும் யாரையும் சுரண்டிப்பிழைக்க முடியாத ஒரு சமுதாயத்தை நான் நம்புகிற்ேன். இதை அடைய கம்யூனிசமே சிறந்த வழி என நான் நம்பினேன். இப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. முதலாளித்துவ அமைப்பில் இந்த கரண்டலற்ற சமூகத்தை ஸ்தாபிக்க முடியும் என்று நிச்சயமாக நான் நம்பவில்லை. ஆனால், இதை அடைய கம்யூனிசமே சிறந்த வழி என்று சொல்லவும் நான் தயாராக இல்லை. நான் குழம்பியிருக்கிறேன். கம்யூனிசத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற பல விஷயங்கள் அரசின் கையில் இருக்கிறது. இவைகள் கூட மாக்சிய கொள்கைகளின் முடிவுகளை
%ഗ്ലീഗ്ഗ& 後

Page 8
ஒத்திருக்கின்றன. சரியான பாதை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. பல வழிகளில் பல நல்ல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் எந்த வழியும் அதற்கான தடைக்கற்களோடுதான் இருக்கின்றன. எனக்குத் தெரியவில்லை. நான் குழப்பமடைந்திருக்கிறேன். -வங்காளப்பட இயக்குனர், அபர்ணாசென்.
இன்னொரு குற்றச்சாட்டு. ஒரு அரசியல் கொள்கையில் ஒரு இயக்குனருக்கு பிடிப்பு இல்லையென்றால் அவர் அரசியல் படம் எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. அது அவர் சுதந்திரம். ஆனால், வேறு காரணங்கள் அவரைப் பின்னுக்கிழுக்கின்றனவா என்பதை நாம் ஆராய வேண்டும். பயத்தினாலும், கோழைத்தனத்தினாலும் சந்தர்ப்ப வாதத்தினாலும் நம் நாட்டின் தினசரி உண்மைகளான பசி, கலகங்கள், மனித வீழ்ச்சி இவைகளைப்பற்றி ஏதாவது கூறத்தவறிவிட்டால் அவர் உண்மையான கலைஞராக முடியாது. நாம் கோபப்படுவதற்கான காலம் நெடுநாட்களுக்கு முன்பே வந்து விட்டாலும் கூட, சதிகாரர்களால் ஒருதேசமே சிறைக்கூடம் ஆன போதும் கூட எவ்வித பிரதிபலிப்புமின்றி நம் படைப்பாளிகளில் பலர் மன்னிக்க முடியாத அளவுக்கு கோழைத்தனத்திற்கு அடிமையாகி, மிருகங்களைப் போல ஆகிவிட்டது நினைத்துப்பாக்கவே முடியாத ஒன்றாகும். -நாடக, திரைப்பட கலைஞர் உத்பல்தத்
தென்னாபிரிக்காவின், ஜேகான்ஸ்பேர்க்கில் இயங்கும் ஆபிரிக்காவின் அடையாளமாகத் திகழுகின்றது. 1980ல் பென்கி ஃபிரான்சிஸ் என்பவரால் இது ஆரம்பிக்கப்பட்டது. நிறவேற்றுமைக் கொள்கை ஆதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் பிறந்த இவர் 1970களிலிருந்து கறுப்பினப்பண்பாட்டுப் புரட்சியாளராக இருந்துவந்திருக்கின்றார். 1976ல் செலோட்டோவில் நிகழ்ந்த ஒட்டுமொத்தப் படுகொலைக்குப் பின்னர் தனது போராட்டவடிவங்களை மாற்றத் தொடங்கினார். முதலில் தெருக்களில் தெடங்கிய இக்குழு சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த மையமாக இயங்கத் தொடங்கியது. பல முறை ஆட்சியாளர்களால் இது மூடப்பட்டது. பிரான்ஸிசின் இடையாராத முயற்சியினாலும் சில முற்போக்கு அமைப்புக்களின் நிதி உதவியினாலும் மீண்டும் செயல்பட்டது. இதில் வேறு கலைத்துறைகளும் இணைந்தன. பல கலைஞர்கள் இலவசமாக இங்கே பணிபுரிந்தனர். கலைவெளிப்பாடுகளில் பல்வேறு வடிவங்களுக்கு இடம் கொடுப்பதற்காக 1980ல் பிரான்சிஸ் கலைஞர்கள் மையம் ஒன்றை தெடங்கினார். இதன் விளைவாக ஆபிரிக்க பண்பாட்டு மையம் தோன்றியது. இளைஞர்களின் படைப்பாற்றலை தூண்டுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட குழந்தைகள், வறுமை, பசி, 20 வயதுக்குட்பட்டு கருத்தரிப்போர் ஆகியோரின் பிரச்சினைகளை ஆராயும் நடவடிக்கைகளையும் இம் மையம் மேற்கொள்ளுகின்றது.
 
 
 
 

-ஆகர்ஷியாநான் பேசவிரும்புகிறேன் மனந்திறந்து.
நான் என்னை நேசிக்கிறேன். என் முகம், கழுத்து, மார்பு, கைகள், உடல், யோனி, கால்கள் யாவற்றையும். அவை எனக்கு வேறுபாடானவை அல்ல. யாவும் என்னின் ஒருபகுதிகள். யாவற்றையும் நான் பிரியத்துடன் ஸ்பரிசிப்பேன். நான் கருப்பாக, பருமனாக இருப்பது பற்றி எனக்கு ஆட்சேனை இல்லை. அது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் ஏன் மெல்லியவளாக இருக்கவேண்டும்? ஏன் சிவப்பாக அல்லது வெண் நிறமாக இருக்க வேண்டும்? யாருக்காகவும் என்னை நான் மாற்றமுடியாது- யாரையும் திருப்திப்படுத்த எனக்கு அவசியமுமில்லை- சமூகம் கட்டமைக்கின்ற, ரி.வி கள், விளம்பரங்கள், பத்திரிகைகள் வருணிக்கின்ற deal பெண்ணாக இருத்தலை நான் லுெறுக்கிறேன். நான் நானாக இருத்தலே என் பலம் என் உடலின் எந்தப் பகுதியும் பலவீனமானதல்ல. நான் உறுதியானவள் நான் எதையும் செய்யமுடிந்தவள். என் தோல் மென்மையானதும், வழுவழுப்பானதுமல்ல. உழைப்பில் ஈடுபடத்தக்க கரடு தட்டியவை அவை, சமூகம் என்னை மெல்லியளாக, மலராக கனியாக வர்ணித்தலை நான் வெறுக்கிறேன். நான் உயிரூட்டம் நிரம்பிய மனுஷஜீவி. மான், மீன், மயில், நிலவு என்ற படிமங்களை நான் சிதைப்பேன். நான் நானாக இருத்தலையே விரும்புகிறேன். அழகு என்கிற மிகைப்படுத்தப்பட்ட ஆண்களின் பாலியல்திருப்தியையே மையமாகக் கொண்ட வரையறைகளை நான் சினந்து ஒதுக்குவேன். நான் என்னை மிகவும் நேசிக்கிறேன். என் உடலியல்புகளையும் சேர்த்தே. மாதவிடாய் என்பது என் பிரிக்கமுடியாத அம்சம் என் உடலின் ஒரு வெளிப்பாடு அது. அது எனக்கு அருவருப்பதில்லை. ஏன் அருவருப்பாய் இருக்கவேண்டும்? மலசலம் கழிப்பது போல இதுவும் என் உடவியல்பு தீட்டு என்று என்னை ஒதுக்குபவர்களை நான் மீறிவருவேன். அர்த்தமற்றவைகளை ஒழுங்கு என்று பேணுதல் எனக்கு அவசியமற்றது. ஒழுங்கை மீறுதலே என் இருப்பு நான் ஏன் வணக்கத் தலங்களுள் செல்லாதிருக்க வேண்டும்? பெண் தெய்வங்களை அவர்கள் உருவாக்கிப் பூஜிக்கவில்லையா? அத்தெய்வங்களிடம் அவர்கள் பேசும் தீட்டு இல்லையா? நான் ஏன் கிணற்றில் நீரள்ளாதிருக்கவேண்டும்? நான் ஏன் மூலையில் குந்தியிருக்கவேண்டும்? மாதவிடாய் எவ்விதத்திலும் என் தொழில்பாடுகளிற்குப் பாதகமல்ல. இந்தப் போலிப் படிமங்களைப் போற்றுதல் எனக்கியலாதது கனமான படிமப் போர்வைகளில் ஒழிதலை நான் வெறுக்கிறேன். என் உணர்வுகளை வெளியிட ஒருபோதும் நான் தயங்கியதில்லை. என்கோபம் என் மகிழ்ச்சி என் கவலை, என் பாலியல் விருப்புகள் யாவற்றையும் நான் மூடி மறைக்க விரும்பவில்லை. அவை என் உணர்வுகள். ஒன்றிலிருந்தொன்று வேறுபிரிக்க முடியாத உணர்வுகள். கோபத்தை அடக்குதலும் மகிழ்ச்சியை ஒழித்து வைத்தலும் பாலியல் விருப்புக்களை மறைத்தலும் எனக்கு விருப்பற்றன. எதையும் வெளிப்படுத்தலே என் இருப்பு எந்த நிலையிலும் நான் கீழானவள் என்ற படிமங்கள் எனக்குரியனவல்ல. அவற்றை நான் உடைத்தெறிவேன். என்னால் முத்தமிடதழுவிக்கொள்ளமுடியும் உடலியல்உணர்சிகளை என்னால் நன்கு பூர்த்தி செய்து கொள்ளமுடியும். என் தனித்துவத்தை என் உச்சத்தன்மையை என்னால் நிலைநாட்ட முடியும். கற்பெனும் படிமங்களை நான் ஏற்றுக்கொண்டதில்லை. என் பாலியல் சுதந்திரம் வரையறையிடப்படுவதை அதுவும் வரையறை மீறுபவர்களால் வரையறையிடப்படுவதை நான் சகித்துக் கொள்ள முடியாது. என் ஆளுமைக்கும் என் சிந்தனைக்குமேற்பவே நான் நடந்துகொள்வேன். நான் காதல் புரிவேன் யாரையும். அதற்கு வரைமுறை இல்லை. என் காதல் சுதந்திரமானது சமூகம் விதிக்கும் போலி அழுத்தங்கள் கொண்டிராதது. ۔XY........... நான் என் உள்ளொளியைப் பெருக்குவேன். அது என் இன்னொரு பலம். திடசித்தம் என் இயல்பு நாணமும் அச்சமும் என்னிடம் கிடையாது. கீழ்ப்படியவளாக பணிபவளாக சமூகம் மதிப்பிடும் பெண்ணிலிருந்து நான் பிறழ்வேன் நான் என் சுதந்திரத்தை, என் தனித்துவத்தை மீறிப்பிறருக்கு மண்டியிட மாட்டேன். அவர்கள் யார் நான் மண்டி யிடுவதற்கு? நான் தொண்டு புரிவதற்கு? எந்தவிதத்தில் என்னைவிட உயர்ந்தவர்கள் அவர்கள்? தொடர்ச்சி-02ல்
}5

Page 9
闇量
謁 鬣 謁 蠶*
蠶
播
 

955 FLBĢ !·T巨9995马© '환영 그usou그 '*/ng
정TT國ma(3」경연영