கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.02

Page 1

-- - - - -
- - - - - - Κ.Σ.-- ... . . .
- - - - -

Page 2
1957ம் ஆண்டில் கைலாசபதி தினகரன் இதழின் துணை ஆசிரிய ராகச் சேர்ந்தார். ஓராண்டிற்குள் அதன் பிரதம ஆசிரியர் ஆனார். 1961 ல் பத்திரிகைத் துறையை விட்டுத் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
1982ல் காலமாகும் வரை 25 ஆண்டுக் காலம் இலக்கிய உலகில் தீவிரமாக உழைத்தார். தமிழின் தலைசிறந்த விமர்சகர்களில் ஒருவர் என்ற சிறப்பைத் தேடிக் கொண்டார். கைலாசபதி மார்க்சீய விமர்சனத்தின் அடிப்படைகளைத் தமிழில் நிறுவிய சிலருள் ஒருவராகப் போற்றப படுகிறார். அவரின் விமர்சனப் பணிகளை அவர் செயற் பட்ட இலக்கியச் சூழலின் பின்னணியில் மதிப்பிடுதல் அவசியம்.
நவீன இலக்கிய விமர்சன அரங்கில் கைலாசபதி புகுந்த வேளையில் முனைப்புப் பெற்றிருந்த இலக்கியக் கோட்பாடு யாது என்பதை நாம் கவனித்தல் வேண்டும். அவ்விமர் சனக் கோட்பாட்டை புது விமர்சனக் (335 TL JTGS (New Criticism) 6T6IŠTAO கூறலாம் . 1920, 30 க் களில் பிரிட்டனில் டி. எஸ். எலியட் ஐ. ஏ. ரிச்சார்டஸ் ஆகியோரால் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட இலக்கிய விமர்சன
 

இலக்கிய விமர்சனமும்
கே. சண்முகளிங்கம்
இயக்கமே புது விமர்சனம் என்னும் கோட்பாடாகும். இக்கோட்பாடு 1940க் களிலிருந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறை மூலமாக இலங்கைக் கல்வி உலகில் பரவி யிருந்தது. அக்காலத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருந்த லுடோவைக் என்பார் இவ்விமர்சன முறையை கைக்கொண்டவர். பன்முக ஆளுமை மிக்க ஆய்வறிவாளர் லுடோ வை கி , இக் கால த தி ல இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக இருந்த வி. செல் வநாயகம் புது விமரிசனக் கோட்பாடுகளை மிக ஆழமாக உள்வாங்கிக் ரெண்ட ஒருவராகத் திகழ்ந்தார். இவர் கைலாசபதியின் ஆசிரியராகவும் இருந்தார் . தமிழகத்தில் பல்கலைக் கழகங் களிற்கு வெளியே இயங்கிய இலக் கியவாதிகள் பலர் பது விமர்சனக் கோட்பாட்டை தழுவி யிருந்தனர். க. நா. சு. சி. சு செல்லப்பா ஆகியோர் இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டி UJ656i.
கைலாசபதி தம் இளமைக்காலத்தில் புது விமர்சனக் கோட்பாட்டின் மூலக் கருத்துக்களையும் தமிழில் அதன் வெளிப்பாடுகளையும் மிக ஆழமாகக் கற்று அறிந்தார். அதேசமயம் அவரது

Page 3
உள்ளம் மார்க் சீயச் சிந்தனை யினால் ஆட்கொள்ளபப்பட்டது. "இரு மகாகவிகள்" என்னும் இவரது ஆய்வு 1960க்களின் முற்பகுதியில் வெளி வந்தது. புது விமர்சனக் கோட்பாட
டிலிருந்து வேறு பட்ட ஒரு பாதையை இவர் வகுத்துக் கொண்டாரென்பதை அந்நூல் எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது.
புதுவிமர்சனக் கோட்பாட்டின் முக்கிய இயல்புகளை இங்கு சுருக்கமாக வேனும் குறிப்பிடுதல் அவசியம். ஒவ்வொரு படைப்பும் தன்னிறை வானது (automomous) என்று கூறும் புது விமர் சனக் கோட் பாடு * . . . . Lu 60) L Lj Lf6si அமைப் பை மொழிவழக்கு, யாப்பு அமைதி, சொல்லாட்சி, கிளத்தல் உத்திகள் போன்ற படைப்பின் அகக்கூறுகளை அடிப் படை ஆதாரங்களாக க கொண்டு திறனாய்வு செய்கிறது." என்று விளக்கம் தந்தது என்கிறார், "இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள்” என்னும் நூலின் ஆசிரியர் அ அ. மணவாளன். இது பற்றித் தொடர்ந்து விளக்கும் அவர் பின்வருமாறு கூறுகிறார்.
"இந்தக் கொள்கைக்கு அடிப்படை மேலே காட் டியவாறு படைப் பு தனி னிறைவு உடையது (Self contained and Self sustaining) இவர்கள் வகுத் துக் கொண் ட மற்றொரு கோட்பாடாகும். தன்னி றைவுடமையாவது ஒரு கவிதை அல்லது படைப்பு தான் அடக்கியுள்ள செய்தியை அல்லது கருத்தை (பொருணி மையை) தன் வடிவ அமைப்பாலேயே வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது. அவ்வமைப்பைப்

பகுத்தாய்ந்து அதன் பொருண்மை தானே வெளிப்படுமாறு காட்டுவது திறனாய் வினி பணி, 3 j பொருண்மை வெளிப்பாட்டிற்குப் பிற புறக் கூறுகளின் துணை தேவை யில்லை என்பதாகும்." (மே, கு. நூல் பக் 33) வ. வே. சு. ஐயர் முதல் டி. கே. சி. , க. நா. சு. ஈறாக புது விமர்சனம் தன் ஆழமான பதிவுகளை தமிழில விட்டுச் சென்றது. இவற்றைக் கைலாசபதி மிகுந்த அக்கறையோடு கற்றார். விவாதித்தார். எதிர்வினை புரிந்தார். புது விமர்சனச் சிந்தனைக்கு மாறான மாற்றுக் கோட்பாடு ஒன்றைத் தமிழ் இலக்கியக் களத்தில் முன்வைத்தார். இம் மாற்றுக் கோட்பாடு மார்க்சிய விமர்சனக் கோட்பாடாகும். மார்கசிய இலக்கியக் கோட்பாடு அல்லது வேறு எக்கோட்பாடாக இருப்பினும் அதனைத் தமிழ் மயப்படுத்துவதும் தமிழ்ச் சூழலின் சொல்லாடலில் இணைப்பதும் மிகவும் சிரமமான பணியாக இருந்தது. இப்பணியில்  ைகலாசபதி தனித்து நினி று இயங்கினார் என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் இத்துறையில் 1960 முதல் உள்ள பதினைந்து வருட கால எலி லை யில் தீவிரமாக செயற்பட்ட ஒருசிலரில் தலைமைத் தானத்தை அவர் வகித்தார் என்று கூறலாம்.
இலங்கை இலக்கியச் சொல்லா டலில் ஆங்கில மொழி மூலம் LDstfriefu i S6også u 15. (35rl" List 601புகுத்தியவரான றெஜி சிறிவர்த்தனா 1946ம் ஆண்டு வரையுள்ள ஐந்து ஆறு வருடங்கள் சமசமாஜக் கட்சியின் உறுப்பினராகச் செயற

Page 4
பட்டவர். அக்கால நிகழ்வுகள் நபர்கள் பற்றிய தமது நினைவுகளை தலைமறைவாக வேலை செய்தல் (working under ground) 6T6 golf தலைப் பில் சிறு b|T 6). T B எழுதியுள்ளார். இந்நூல் 1999ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புது விமா சனக் கோட்பாட்டாளர் லுடோவைக் கின் மாணவர் ரெஜி சிறிவர்த்தன. அக்காலத்தில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக இருந்தவர் டொரிக் டி சூசா. இவர் ஒரு மார்க்சிஸ்ட் 1942ம் ஆண்டளவில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை ரெஜி தம் நூலில் குறிப்பிடுகிறார். பல கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய சங்கத்தில் லுடோவைக் ஆயப் வுக் கட்டுரை ஒன்றை வாசித்தார். அக்கட்டுரையின் கருத் துக்களுடன் மாறுபட்ட கருத்துக் களை கூறிய டொரிக் சொன்ன ஒரு வசனம் ரெஜியை ஆச்சரியப்பட வைத்தது.
"நான் நினைக்கிறேன் மார்க்ஸ் சொல் லியிருப்பது சரி . ஒரு காலத்தின் கலாச்சாரம் என்பது அக்காலத்தின் ஆளும் வர்க்கத்தின் கலாச்சாரம் தான்” என்பதுதான் டொரிக் கூறிய வசனம். டொரிக் ஒரு மார்க்சிஸ்ட் என்பதை ரெஜி அப்போது ஊகித்துக் கொண்டார். யுத்த காலத்தில் சமசமாஜக் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. 1942 ல் பல்கலைக் கழகத்தில் மார்க்சீய இலக்கியக் கோட்பாடு அரும்பு கட்டக் கூட இல் லை. புதுவிமர்சனக் கோட்பாடே கோலோச்சியது என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. பத்து ஆண்டுகளின் பின் 1952 ல் கைலாசபதி பல்கலைக் கழகம்

சென்றார். அப்பொழுது இடது சாரி இயக்கம் பலம் பொருந்தியதாக பல்கலைக்கழக மட்டத்தில் இருந்த போதும் இலக்கியத் துறையில் மார்க்சீய விமர்சனக் கோட்பாடு பற்றிய தத்துவ வறுமை நிலவியது. பல்கலைக் கழகத்திற்கு வெளியிலும் இதேநிலை தான். டொரிக் டி சூசாவோ அல்லது வேறு எவரோ இலங்கைப் பின்னணியில் மார்க்சீயம் மார்க்சீய இலக்கிய விமர்சனம் என்பன பற்றிய கோட்பாட்டுக் தெளிவு மிக்க நூலை அக்காலத்தில் எழுதவில்லை.
இலங்கையில் நிலவிய தத்துவ வறுமையின் பின்னணியில் மார்க்சீய விமர்சனத்துறையில் புதுப்பாதை வகுத்தவர் கைலாசபதி என்பதை குறிப்பிடுதல் வேண்டும். இது ஒரு கடினமான பணியாகவே இருந்தது. இப் பணி சிங்களத்தில் நடந்தேற நீண்ட காலம் பிடித்தது என்பதை ரெஜி சிறிவர்த்தனவின் நூல் குறிப்பால் உணர்த்துகிறது.
கைலாசபதியின் நூல்களை உன்னிப் பாக நோக்குபவர்கள் ஒன்றை உணருவர். தேவிபிரசாத் சட்டோ பாத்யாய, டி. டி. கோசாம்பி, ஏ. ஆர். தேசாய், ஹிரேன் முக்கர்ஜி ஆகிய இந்திய மார்க் சிஸ் டுகள் மீது கைலாசபதி மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். அவர்களின் கருத் துக் களை உள் வாங்கி தமது மார்க்சீய இலக்கிய விமர்சனத்தை வரலாற்றியல் சமூகவியல் நோக்கில் அமைத்துக் கொண்டார். ஜோர்ஜ் பொலிட்சர், ராகுல சாங்கிருத்தி யாயன் ஆகியோரது நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளில் இருந்து

Page 5
மேற்கோள்களை தம் கட்டுரைகளில் தாராளமாக இவர் எடுத்தாள்வார். நா. வானமாமலை, எஸ். ராம கிருஷ்ணன், ஆர். கே. கண்ணன், தொ. மு. சி. ரகுநாதன் போன்ற தமிழக மார்க்சிஸ்டு எழுத்தாளர்கள் விமர்சனத் துறையில் ஈடுபட்ட அதேசமயம் மார்க்சீய மெய்யியல், பொருளியில், அரசியல் பற்றிய அடிப்படைகளைக் கூறும் நூல்களைச் சுயமாக எழுதுவதிலும் மொழிபெயர்ப் பதிலும் ஈடுபட்டனர். கைலாசபதி அவ்விதம் செய்யவில்லை. மார்க் சீயத்தை உள்வாங்கி தமிழ் விமர் சனத் துறையில் புகுத்துவதே அவர் பணியாக இருந்தது. இலக்கிய விமர்சனமே அவரது முனைப்புக்குரிய செயற்பாட்டுக் களமாக இருந்தது.
நவீன தமிழ் இலக் கியத்தின் அடிப்படைகளை 19ம் நூற்றாண்டி னதும் 20ம் நுாற் றாணி டினது முற்பகுதியினதும் வளர்ச்சிகளைப் பரிசீலனை செய்வதன் மூலமே நிறுவ முடியும் என்பதைக் கைலாசபதி உறுதியாக நம்பினார். நாவலர், பாரதி, மாதவையர், ராஜம் ஐயர், சுந் தரம் பிள்  ைள, மறைமலை அடிகள், டி. கே. சி. ஆகியோரின் படைப்புக்கள், சிந்தனை, நோக்கு முறை ஆகியவற்றை தெளிவு படுத் தும் வகையில இவர் எழுதியவை தமிழ் இலக் கிய விமர்சனத்துறையில் சாகாவரம் பெற்ற எழுதி துக் களாகும் . பாரதியியலினி வளர்ச் சிக் கு பங்காற்றியவர்களுள் கைலாசபதி முக்கிய இடம் பெறுகிறார். "தமிழ் நாவல் இலக்கியம்" என்றும் இவரது நூல் நாவலின் தோற்றம் வளர்ச்சி

பற்றிய சிந்தனையைத் தமிழில் புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது.
நவீன தமிழ் இலக் கியத் தில் காலூன்றி நின்ற கைலாசபதி 19ம் நுாற் றாணி டுடன் மட்டும் தன் பின்னோக்குப் பார்வையை நிறுத்தி விடவில்லை. "தமிழ் வீர யுகக கவிதை" என்னும் இவரது ஆங்கில நூல் சங்க இலக்கியம் பற்றிய புதிய சிந்தனையைத் தமிழர்களுக்கு வழங்கியது. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும் ஆகிய இவரது நுால களில உள் ள கட்டுரைகள் சங்ககாலம் முதல் நவீன காலம் வரையிலான இலக்கிய வரலாற்றைப் பற்றிய ஒன்றித்த நோ கி கு முறையொனி றை வழங்கியது.
கைலாசபதி எழுதிய காலத்தில் மார்க்சீயம் என்ற சொல் தமிழ்ச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்துப் போக் கையே குறித்தது. இன்று மார்க்சீயம் என்று பேசும் பொழுது எந்த வகை மார்க்சீயம்? என்ற கேள்வியை கேட்கும் தேவை தமிழ்ச் சூழலிலும் தோன்றி விட்டது. இப் பின்னணியில் கைலாசபதியின் நிறைகளும் குறைகளும் பலரால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
மார்க்சீய இலக்கிய விமர்சனம் ஒரு ஆயப் வு முறையாக தமிழில வேரூன்றாத காலத்தில் , புது விமரிசனக் கோட்பாடு கோலோச்சிய ஒரு சூழலில் கைலாசபதி புதுப்பாதை வகுத் தார் எண் பதே அவரின் சாதனைகளில் மகத்தானது.

Page 6
மறுபிரதி செய்
இந்திய கலாசார நிலையத்தில் விபவியின் நுண் கலைப் பிரிவின் அனுசரணையுடன் ஐந்து ஓவியர் களின் ஓவியக் கணர் காட்சி அண்மையில் இடம்பெற்றது. டாக்டர் கொனி ஸ் ரன் ரைன் , நிலா நீ தி வீரசேகர கோ. கைலாசநாதன் சூசன் மஞ்சு பூர், முகமட் காதர் ஆகியோரே இக் கண் காட்சியில் கலந்து கொண்டவர்கள்.
சாவகச்சேரி மட்டுவிலைச் சேர்ந்த ஓவியர் கோபாலபிள்ளை கைலாச நாதன் தற்பொழுது தென்மராட்சி கல்வி வலயத்தில் பதில் கல்விப் பணிப்பாளராக (அழகியல் கல்வி) கடமையாற்றுகிறார். தமிழ் மக்களின் அரசியல் , சமூக நிகழ்வுகளை சமூகப் பிரக்ஞையுடன் கலைப் பெறு மானம் குன்றாமல் நவீன ஓவியங் களாகப் படைக்கும் இவர் ஈழத்து சமகால ஓவியர்களில் முக்கிய மானவர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மேற்படி ஒவியக் கண் காட்சியில் பங்கு கொள்ள வந்திருந்த கோ. கைலாச நாதனை வெகுஜன தொடர் பு ஊடகங்கள் பல சந்திப்புகளையும் நேர் காணல் களையும் ஒழுங்கு செய்திருந்தன. அவற்றிலிருந்து பெறப்பட்ட முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள் ຫຼື(ງmb.
"ஓவியம் என்பது முற்றிலும் ஓர் உணர்வு வெளிப்பாடே என்று கூறும்

வதல்ல ஒவியம்
கோ. கைலாசநாதன்
கோ. கைலாசநாதன் பேனாவினால் தான் கூடுதலாக தான் ஓவியங்களை வரைவதாகவும் பென்சிலை தான் பாவிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
ஆரம்பகாலத்தில் கறுப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே கூடுதலாக இவர் ஓவியம் வரை நீ துளி எாார் . ஒவியங்களில் கோடு களுக்குப் பின்னால் தெரியும் உருவத்தில் தெரிகின்ற வெளியும் வெளியில் தெரிகின்ற உருவமும் தங்கு தடையின்றி எனது ஓவியத்தில் வந்தமைந்தன என்று கூறும் ஓவியர் கைலாசநாதன் தான் நான்காம் Sig, Ji (361)(3L 9 b55 EDTDT, News week (3 LITT Gði Mo 3F (6 af 60) a5 356f6ů பிரசுரமாகும் படங்களைப் பார்த்துக் கீறும் பழக்கம் தனக்கு ஏற்பட்டு விட்டது என்றும் , களிமண்ணால் Gld fulf Clay work 2) 65 lb), சிறுபிராயமுதலே உருவங்களைச் செய்வேன் என்றும், அதற்குப்பின் ஏழாம் வகுப்பில் விசாசப் பெருமாள் என்கின்ற ஒவியம் சிறிது காலம் கற்றதாகவும் பின்னர்
தான் ஒவியத்தை ஒருவரிடமும்
f

Page 7
அடக்கப்பட்ட வீரியம்
(சாது மிரண்டால்)
 

முறைப்படி படிக்கவில்லை என்றும். இயல்பாகவே தனக்கு நாட்டம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்.
ஒரு முறை தானி வரை நீ த ஒவியத்தை பின்பு என்றுமே, மெருகு படுத்தி அமைத்ததில்லை என்றும், ஒரு தரம் கிறி முடித்துவிட்டால் பின்னர் அடுத்த புதிய ஓவியத்தை வரைய ஆரம்பித்து விடுவதாகவும் - திருப்பிச் செய்ய வேண்டும் என்ற மனநிலை தனக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை, முடிந்தது முடிந்த தாகவே இருக்கும் என்றும் கூறு கிறார்.
அனேகமான ஓவியர்கள் பென்சிலால் கீறி விட்டு பின்னர் அதன் மேல் Ink ஆல் கீறுவார்கள். எனக்கு இப்படிக் கீறுவதனால் விரைவான உணர்வு வராமல் ஒரு தடங்கல் அல்லது தேக்கம் ஏற்படுவதாக உணர்கிறேன் என்கிறார்.
தனது 90 வீதமான ஒவியங்களை free யாக தூரிகையினால் தான் வரைவதாகவும் , பெண் சிலால் கீறுவது தடையாக இருப்பது போல் உணர்வதாகவும் கூறுகிறார்.
ராஜபுத் ஓவியங்களை குறித்து, ஆய் வுகள் பல செய்துள் ள கைலாசநாதன் ராஜபுத் ஒவியம் பற்றிக் குறிப்பிடுகையில், அனேக மான இவ் ஓவியர்கள் காதல் உணர்வை வெளிப் படுத்த கீத கோ விந தம் என ப் படு கண் ற கிருஷ்ணன் ராதை ஐக்கியத்தை ஓவியமாகத் திட்டுவார்கள். எல்லா உருவங்களும், அனேகமாகப் பக்கப

Page 8
கொன ட  ைவ ய | T க இருக்கின்றன. பெரிய கண்கள் மிக மென்மையான கோடுகள் எந்த விதமான தடையும் இன்றி வருகின்ற கோடுகள், ஒரு சங்கீதத்தை வெளிப் படுத்தக் கூடிய நிறப் பிரயோகங்கள் sig, TGigi. "Painting is nothing Music in Colour" என்ற சொல்வார்களே, Sio, LDTofu III 60I 205 Arrangement அங்கு இருக்கும். அவர் களுக்கே உரிய பாணியில விட் டினி அமைப்புக்கள், மரங்கள், மலைகள், குருவிகள் ஆறு ஓடுகின்ற ரேகை அமைப்புகள் எல்லாம் இருக்கும். ஒரு முடிவுறாத வசீகரம் அந்த ஓவியங் களில் இருக்கின்றது. எனத் தாம் கருதுவதாகவும் கூறுகிறார்.
ராஜபுத் ஓவியங்களுக்கும் சீன ஒவியங்களுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி இவர் கூறும்போது:
"சீன ஓவியர்கள் இயற்கையை மிகப் பெரிதாகவும் அந்த இயற்கையில் மனிதன் ஒரு சிறு புள்ளி என்பதையும் அடிக்கடி காட்டிக்கொண்டு போவார் கள். சீனரின் மரபு வழி ஓவியங்கள
தான் இப்படி இருக்கும். கூடுதலாக இவர்கள் Brush ஐப் பாவிப்பார்கள். இவர்கள் பெண் சில பாவிப்பது இல்லை இன்று நினைக்கிறேன். நேரடியாகவே வர் ன த தோடு தொடர்பு கொள்வார்கள். ஒரு wash போல, நிறங்கள் பட்டும் படாமலும் வெளியோடு கலந்தும் இருக்கும். தமது அனேக ஒவியங்களில் மனிதன் ஒரு சிறு புள்ளி என்பதைக் காட்டிக் கொண்டு போவார்கள் என்று ថាញ់ .
s

யுத்த பீதி
தனிப்பட்ட ஒரு சில வர்ணங்களை மட்டும் தான் விரும் பிப் பயன் படுத்துவதில்லை என்றும், எல்லா வர்ணமும் தனக்கு விருப்பமான வர்ணங்களே என்று கூறும் ஓவியர்  ைகலாசநாதனி Subject இல பொறுத்தே தான் வர்ணங்களைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகிறார்.

Page 9
எடுத்துக் காட்டாக மழைக் காட்சி என்றால் Light C010urs தான் பாவிப்பேன். குறிப்பிட்ட நிறம்தான் நல்லது என்று பொதுவாக என்னால் தர மானித துக் கூற முடியா ம ல இருக்கும்.
நவீன ஓவியத்திற்கும் மரபு ஓவியத் திற்குமுள்ள வேறுபாடு குறித்து ஓவியர் கைலாசநாதனின் கருத்துக் கள் மிகத் தெளிவானவை. இவை பற்றி இவர் கூறும்போது:
நவீனம் என்ற சொற் பிரயோகத்தின் அர்த்தத்தை அகராதியில் பார்த்தால், "தற்காலத்திற்கு உரியது" என ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஓவியத்தைப் பொறுத்த வரையில நவீன ம என பது "வழமையிலிருந்து சற்று மாறு பாடானது" என்ற கருத்தைத்தான் நாம் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு வரைந்த ஒவியம் ஒன்று நவீனமாக இல்லாமல் இருக்கலாம். நீண்ட காலத் திற்கு முன் னர் வரையப்பட்ட ஓவியங்கள் நவீனமாக இருக்கலாம். காலத்தைப் பொறுத்து அல்ல நவீனம் என்பது. அடுத்து, Photography 6) [b5 g5g5 6õi Ls I) (35 ஒவியர்கள் ஒன்றைப் பிரதிபண்ணுதல் என்பதை விட்டு, புதிய வடிவங் களைக் கண்டுபிடித்தல், உள் மனம் சார்ந்த விடயங்களை வெளிக் கொணி ர் தல எண் ப ைவகளில் FF(BULLITij 56i.
விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங் கள் உளவியலில் செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் நவீனத்துக்குள்

எம்மைக் கொண்டு வந்து விட்டுள் ளன. மறுபிரதி செய்வது அல்ல ஒவியம். உதாரணமாக X என்ற ஒன்றைப் பார்த்து நான் அப்படியே திருப்பிக் கீறினேனானால், அந்தத் திறன் பிரதி பண்ணுதலாக மட்டும்ே இருக்கும். ஆனால் X ஐ அனுபவம் திறன்களோடு சேர்த்து வரையும் போது அது Y ஆகி இறுதியில் Z என்ற அமைப்பில் வரும்.
எடுத்துக்காட்டாக வான்கோ என்ற ஒவியர் சுரங்கத் தொழிலாளர்களை வரைந்திருக்கிறார். நாம் நினைப்பது போல், சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத் தைத் தோணி டுகின்ற ஆயுதங்களுடன் அவரது ஒவியத்தில் காட்சி தருவார்கள் என்று நாம் என ன இயலாது. அவரது ஒவியத்தில், சுரங்கத் தொழிலாளரது சப்பாத்துக்களால் அவர்களை ஓவிய மாகத் தீட்டி இருக்கிறார். உழைத்து உழைத்து சப்பாத்தாகி விட்டார்கள் 6 6 ) கருத  ைத வலியுறுத் துவதற்கான தேவை அவருக்கு இருந்திருக் கின்றது. அதனால் அவர் சப்பாத்தால் தனது உணர்வினைக் காட்டியிருக் கின்றார். உண்மையில் நவீன ஓவியம் என்பதே ஒரு வித உயர்வு வெளிப் பாடு எண் பதற்கு மேற் படி ஒவியமே உதாரணமாக அமைந்துள்ளது.
அடுத் து எ ல லோருமே மரபு ஒவியத்தை ரசிக்கிறார்கள் என்று கூற முடியாது. அவர்களுக்கு பரிச்சய மாக இருப்பதாலும் விளங்கு வதாலும் . அதனை அவர் கள் ரசிக்கலாம். ஆனால் ஓவியத்தை எல்லோருமே நுட்பமாக விளங்கிக்

Page 10
கொள்வார்கள் என்பது சந்தேகமே. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வடிவங்களைக் காணும்போது இது நன்றாக இருக்கிறது என ற சொல்கிறார்கள். அவ்வளவுதான்.
பொதுவாக எமது ரசனைகளும் Condition பண்ணப்பட்டிருக்கின்றன. பார்த்தல் என்பதுகூட தொடர்ச்சியாக பயிற்சியில் வரவேண்டிய ஒன்று. எந்தவிதமான பயிற்சியும் அற்று நவீன ஓவியத்தைப் பார்த்து, எனக்கு இது ஒன்றும் விளங்கவில்லை என்பது கருத தற் றது. உதாரணமாக முப்பரிமானப் படத்தை நாங்கள் பார்க்கும் பொழுது அதற்கு ஒரு கணி னா டி போட வேண் டும் , தியேட்டரில், அந்தக் கண்ணாடியை நாங்கள் போடாமல் முப் பரிமா ணத் தை விளங் கிக் கொள்ள முடியாது. ரசித் தல என்பதும் அப்படித்தான். நவீன ஓவியததையும் அதற்கான ஓர் கண்ணாடியோடு பார்த்தால் விளங்கும் தொடர்ச்சியாக பார்த்தல், நவீன ஓவியங்கள் தொடர பான கட்டுரைகளை வாசித்தல் போன்றவற்றால் மட்டுமே. நவீன ஓவியங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறுகிறார்.
மரபு ஓவியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவரால் தான் ஒரு நவீன ஓவியரா கவும் வரமுடியும் என்று கூறும் கோ. கைலாசநாதன்:
உடல் அமைப் பின் அளவுகள் Ds) nylio 29460ii) DLf6 ( An Otomy ) Usið só நன்றாகத் தெரிந்திருந்தால் தான் அனற்றமியை எப்படி சிதைப்பது என்பதும் தெரியும நன்றாகத்

நீராடும் நங்கையர்
இயக்கத்துக்கான ஓய்வு
தெரியாமல், நாங்கள் சிதைக்க முடியாது. நவீன ஓவியத்தில் அனற் றமியை நன்றாகத் தெரிந்த ஒருவர் சிதைத்துள்ளார் என்பது அது தொடர் பான நுட் படம் உள் ள வருக கு விளங்கும். உதாரணமாக பிக்காசோ வே. மிகத்திறமாக அனற்றமியை வெளிப்படுத்தக் கூடிய ஓவியங்களை

Page 11
ஆரம்பத்தில் வரைந்திருக்கின்றார். அதன் பின்புதான் அவர் டிப்படியாக நவீனத்திற்குள் அடித்துச் செல்லப பட்டிருக்கின்றார்.
மொத்தத்தில் ஓவியம் என்பது ஒரு பயணம் என்றுதான் சொல் ல வேண்டும். ஆரம்பத்தில் Traditional ஆன Painting க  ைள செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபட்டு Abstract இற்குள் போவது என்பது தான் நவீன ஓவியத்தின் ஒரு நிலை என்று நான் நினைக்கிறேன்.
உதாரணமாக, ஒரு மாம்பழத்தை பார் த து ஒரு வரை வரை யச் சொன்னால் மாம் பழத்தின் புற அமைப்பு மற்றும் அதன் நிறங்களை மிக நுட்பமாக வரை வார். அது வெறுமனே மாம்பழத்தின் புறத் தோற்றமாக மட்டுமே இருக்கும். ஆனால் மாம்பழத்தின் ருசியை நிறத் தினுTடாக க் காட் டு மாறு கேட்டால், அது சற்றுக் கடினமாக இருக்கும். அதை நவீன ஓவியத்தைத் தவிர வேறொன்றினாலும் விளங்கப் படுத்த முடியாது. ஒவியம் என்பது மனம் சார்ந்தது என்பதே உண்மை
LUT60Tg5).
சுரமஞ்சரி. சுந்தரலிங்கம் நீர்கொழும்பு.
விடுதலை இயக்க காலத்தில் சில படைப்பாளர்கள் அன்றைக்கு நிலவிய 3{b60õ60) p60) lu (Disillusionment) e) சொல் ஆட்சியுடன் படைக்க முற்பட்டனர். அப்போது அது கன்னடத்தில் நவீனத்தும்
 

(Modernism) என்று பெயர் பெற்றது. விடுதலைக் குப் பின் னர் தேசிய அபிலாஷைகளில் இருந்த அளவுக் கதிகமான ஈடுபாடும் எதிர்பார்ப்புகளும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்தியபோது இந்த இருண்மை வலுப்பட்டது. சொல் அலங்காரத்தின் ஆளுமையில் சந்தேகம் கொண்ட கோபாலகிருஷ்ண அடிகள். ஏ.கே. ராமானுஜம் போன்றவர்கள் அலங் காரத்தைக் கைவிட்டு உண்மையை எழுதத் துணிந்தனர். இதன் மூலம் புதிய நடைக்கு வழிகோலப்பட்டது. உள்ளடக கத்திலும் மாறுதல் ஏற்பட்டது. இந்தியத் தலைமையிலும், இந்திய இலக்கியங் களிலும் சொல் அலங்காரங்களிலும் மக்கள் அளவு கடந்த மரியாதை கொண்டிருந்தபோது "இவைகளெல்லாம் போற்றுதற்குரிய பெரிய விஷயங்கள் என்ற யதார்த்தத்தை நவீனத்துவம் முன்வைத்தது. "புத்தரும் வயிற்றுப் போக்கினால் காலமானார், பெரும் யோகிகளும் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்ளத்தான் வேண்டும்" என்பன போன்ற சின்னச்சின்ன உண்மைகள் அந்த இயக்கத்தின் பெரும் சக்தியாக இருந்தது. இதைத்தான் "நவ்யா" இயக் கம் (நவீனத்வம்) 6 6 g கன்னடத்தில் அழைக்கின்றோம்.
டாக்டர் யூ ஆர். அனந்தமூர்த்தி கன்னட நவீன இலக்கிய படைப்பாளி. இவர் சம்ஸ்காரா, அவஸ்தே, பாரதிபுரா போன்ற முக்கியமான சிறந்த கன்னட நாவல்களை எழுதியவர்.

Page 12
##ల్డ్ ఫిన్లో
இன்று எமது நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் பெரும் சஞ்சலத்துக்கு உள்ளாகியுளளன. கவலை கொண்டு ள்ளன. நாம் எங்கு சென்று கொண்டி ருக்கின்றோம் என்ற கேள்வி எம் முன்னேயுள்ளது.
எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் ஏற்பட்ட சம்பவங்கள் ஜனநாயக சக்திகளைக் கிலே சமடையச் செய்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது "சட்டன" பத்திரிகை ஆசிரியரின் கொலை, ஜனாதிபதி மீது நடத்தப் பட்ட குண டுத் தாக்குதல் , குமார் பொன் னம் பலத் திணி கொலை போ னி ற சம்பவங்கள் அரசியல் சக்திகள் மத்தியிலிருந்த சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதலாவதாக எமது நாட்டில் நீண்டகாலமாக நடந்து கொண்டி ருக்கின்ற இந்தக் கொடிய யுத்தம் சம்பந்தமான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. (1 வார்த்தைகள் மூலம் சமாதானத் தைக் கொண்டுவரமுடியும் என்ற எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பேச் சுவார் தி தைகள் (p. 6) LD சமாதானத்தை ஏற்படுத்தவேண்டு மென் ற கருத்தையுடைய ஒரு பகுதியினர் ஆளும் தரப் பில G dFu 6i Li (6 வருகின றனர் . இப் பகுதியினர் இன்று பலவீன முற்றுள்ளனர். யுத்தத்தின் மூலம்தான் சமாதானத் தைக் கொண் டுவர
 
 

TI DP
經要
§ಗ್ಗ?
ක්‍රිෂ්
வேண்டும் என்று கருதுகின்றவர் களுடைய கை ஓங்கியுள்ளது.
့် ဖို့_ာ်
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்த வெற்றி தற்போதய பொருளாதார அவிவிருத்திக் கொள்கையில் எதுவித மாற்றமும் செய்யாமல் இதை தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பதற்கு வழி வகுத்துள்ளது. தாரள இறக்குமதி. கட்டுப்பாடற்ற பொருளாதாரம் நுகர்வுப் பொருளா தாரம் ஆகியவற்றை பிரதான அம்சங்களாகக் கொண்டிருக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கை யை தொடர்ந்து ஆட்சியினர் கடைப பிடிப்பதற்கு இத்தேர்தல் பச்சை விளக்குக் காட்டியுள்ளது. ஆழ்கடல், கரையோர நன்னீர் மீன் பிடித் தொழில் உரிமையை வெளிநாட்டு பல்தேசியக் கம்பெனி களுக்கு தாரை வார் த துக் கொடுக்கும் திட்டம், தண்ணிரை சந்தைப் பொருளாக்கும் திட்டம், எப்பாவெல"போஸ்பேற்’ திட்டம், அம்பாந்தோட்டையில் 700 ஏக்கர் நிலப் பரப் பில் கொல் . ப் விளையாட்டுத் திடலும், வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிக்காரர்களுக்கு உல்லாசபுரி நகரையும் நிர்மா ணிக்கும் திட்டம், கொழும்பிலிருந்து மாத்தறை வரையும் போடப்பட விருக்கின்ற அதிவேக நெடுஞ் சாலைத் திட்டம் போன்ற அனைத்து மக்கள் விரோதத் திட்டங்களையும் மக்கள் எதிர்ப்பதால் இவற்றை

Page 13
அமுல படுத்துவதில் அரசாங்கம் தயக்கம் காட்டி வந்துள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி இந்த மக்கள் விரோதத் திட்டங்களை அமுல்படுத்துவதற்குஅரசாங்கத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி u|6 619)
பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் அமுல்படுத்தவுள்ள மக்கள் விரோதத் திட்டங்களை அமுல்படுத்துவதை மக்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு இதுவரை காலமும் அரசாங் கம் தயக் கம் காட் டி வந்துள்ளது. ஆனால் தேர்தல் வெற்றியினால் ஏற்பட்ட சமநிலை மாற் றம் இந்த எதிர் புக களர் எல்லாவற்றையும் வன்முறை மூலம் நசுக்குவதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளது.
மக் களின் ஜனநாயக உரிமை களுக்குக் குரல் கொடுக் கின்ற வெகுஜன ஊடகங்களின் ஜனநாயக ரீதியான செயல பாடுகளை க கட்டுப் படுத் தும் நோக குட னி அரசாங் கம் எடுத் துவருகின்ற நடவடிக்கைகள் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கே ஆப்பு வைக்கக் கூடியவையாகத் தோன்றுகின்றன. இது ஒரு பாரதூரமான ஆபத்தான நிலை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்
வெகுஜன ஊடகம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் ஊடகவியலாளர்கள் மத் தியில் சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவித விரக்தியையும் உண்டாக்கி եւ45ft6iI601, இந்த அரசாங்கத்தை அதிகாரத திற் குக் கொணர் டு

வருவதற்கு ஊடகவியலாளரில் Gì L1 (5 tổ பகுதினர் is ful பங்காற்றியுள்ளனர். ஆனால் இன்று அவர்களே விரக்தியின் விழிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத தற்கு இரணர் டு பதி திரிகை யாசிரியர்கள் அரசாங்கத்தின் எதுவித நிர்ப்பந்தமோ அல்லது அச்சுறுத் தலோ இன்றி தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். லக்பிம பத்திரிகையின் ஞாயிறு பதிப்பாசிரியர் பந் துல பத்ம குமார யுக்திய பத்திரிகை ஆசிரியர் சுணந்த தேசபிரிய ஆகியோர் அண்மையில் தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். ஊடகத்துறையில் ஒரு ஆரோக்கியமான நிலை இல்லை இது என்பதைக் காட்டுகின்றது.
தனியார் ஒளி, ஒலிபரப்பு ஊடகங் களர் மீது அரசாங் கம் கொண்டுவந்த தணிக்கையும் ஒரு ஜனநாயக் விரோத நடவடிக்கை யாகவே கருதவேண்டியுள்ளது. "லக் ஹண் ட', 'சிரச" போன்ற நிறுவனங்கள் மீது மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இத்துறையில் ஒர் ஆரோக்கியமற்ற நிலையைத் தோற்றுவிக்கக்கூடும். இந்த இரு நிறுவனங் களின் SD sí 6OD LID LLUIT 6TT Í 5 6Ť தங் களர் ஸ்தாபனங்களில் சேவையாற்றுகின்ற இளம் ஊடகவியலாளர் களை இராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தித் துள்ளனர் எனத் தெரியவருகின்றது. இவையெல்லாம் ஜனநாயக உரிமை களை மறுக்கும் செயல்களாகும்.
தங்களுடைய நிறுவனங்களையும். சொந்த நலன்களையும் பாதுகாக்க தனியார்துறை ஒளி, ஒலிபரப்பு

Page 14
நிலையங்களின் உரிமையாளர்கள் எதையும் பலி கொடுக்கத் தயாராக உள் ளனர் என இதிலிருந்து தெரியவருகின்றது. ஆகவே இந்த நிறுவனங்களிலுள்ள ஊடகவிய லாளர்கள் தங்களையும் தங்கள் ஜனநாயக உரிமைகளையும் ஊடக வியல் தர்மத்தையும் பாதுகாக்க எல் தாபன ரீதியாகத் திரணர் டு போராடுவதற்கு தயாராக வேண்டும்.
நமது நாடு தற்பொழுது சென்று கொண்டிருக்கின்ற நிலையைப் பார்க்கும்பொழுது கடந்த யூ.என்.பி. ஆட்சிக்காலத்திலிருந்த ஜனநாயக விரோத, ம க களர் விரோ த தேசத்துரோக இருண்ட யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்கின்றோமா என்ற கேள்வி நம் முனி உள் ளது. யுத்தத் தை வியாபாரமாக் கிக் கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் விரோத, தேசத்துரோகக் கும்பலும், தங்கள் சொந்த நலனுக்காக நாட்டையே பல்தேசியக் கம்பெனி களுக்கும் உலகவங்கிக்கும் விற்கத் தயாரா யிருக் கினி ற வர் த தக சமூகத்தின் ஒரு பகுதி தேசத்துரோகக் கும் பலும் ம க களர் ஐக் கிய மு னி னணிக் குளிர் இருக் கினி ற ஒருபகுதி மக்கள் விரோத யுத்தவெறி பிடித்த வலதுசாரிக் கும் பலும் பேரினவாத இனவெறிச் சக்திகளும் ஒன்றிணைந்து தமது குறுகிய சொந்த நல ன களு க காக 6I LD g5 த ய த த ரு ந |ா ட  ைட இருண்டயுகத்திற்கு இழுத்து செல்ல முயல்கின்றனர். இதை நாம் பார்த்துக்கொண்டு வாழாவிருக்கப் போகின்றோமா?
- நீர்வை பொன்னையன்

கஸ்ட்றோவின்
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின்போது கியூப நாட்டு ஜனாதிபதி பிடெல் கஸ் ட்றோ சில கேள்விகளை எழுப்பியுள்ளார். உலக நாடுகளின் தலைவர்களின் தூக்கக் கலக்கத
தையே துரத்தியடித்தன அந்தக் கேள்விகள்.
1950 முதல் 1997ம் வருட கால கட் டத் துளி 2 6) 35 li பொருளாதாரம் 6LDLIbi (35 வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறப்படுவது உண்மையானால் ஏன் உலகம் முழுவதிலுமாக தினந்தோறும் ஐந்து வயதுக்குக் குறைவான வறிய குழந்தை களில் 30000 பேர் இறக்கின் றனர்.
மரணப்படியிலிருந்து தப்பித்து வாழக் கூடிய வரத் தினைப் பெறுகின்ற 11கோடி குழந்தை களுக்கு ஏன் ஆரம்பகல்வியைப் பெறக்கூடிய வரம் இல்லாமல் போயிற்று.
இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ள உலகில் முழு ஜனத்தொகை யில் 80 கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக் கா மைக் குக் காரண மென்ன?
தினந்தோறும் 50,000 பேர்
குணப்படுத்த முடியாத நோய் களினால் ஏன் இறக்கின்றனர்?

Page 15
参 தாயும
ஒவ்வொரு வருடமும் மகப்பேறு க தாய்மார்களோ அல்லது பிரசவத் (ஆறு இலட்சம்) பேர் இறக்கின் வருடம் தோறும் வாந்திபேதி குழந்தைகள் இறக்கின்றார்கள். அபிவிருத்தியடைந்து வருகின்ற நான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகள் இரத்தம் குன்றிய ஐந்து வயதுக்குக் குறைந்த குழந் போசாக்கின்மையால் செத்துக்ெ உலகம் முழுவதிலுமுள்ள குழர் உயரம் குறைந்த குட்டை இக்குழந்தைகள் தத்தமது வயதுக் போஷாக்கின்மையால்தான் உயர இந்த நிலை அதிகரித்துக்கொன உயரம் குறைந்தல், குறிப்பாக ே இதனால் இவர்கள் பிரசவத்தின்டே அதிகம். 67 மில்லியன் குழந்தைகள் ெ கணக்கிடப்பட்டுள்ளது. தமது உ இவர்கள் கொண்டிருக்கவில்லை. பற்றாக்குறை அல்லது பல்வேறு சேர்ந்ததாக இருக்கக்கூடும். ஆய் அடுத்த வருடத்தில் இறக்கக்கூடிய குழந்தைகளிலும் பார்க்க இரண்டு இரண்டு கோடிக்கும் அதிகமான மற்றும் குழந்தைகள் இருப பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சு அபிவிருத்தியடைந்து வரும் நா குறைந்த குழந்தைகளில் 57 வீத பீடிக்கப்பட்டுள்ளார்கள்.
(1998 யுனிசெவ் அறிக்கை
கொரோல் பேலம் சு
15

(Berub
ாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்ற திற்குட்பட்ட தாய்மார்களோ 600,000 pffff56.
நோயினால் 22 இலட்சம் வறிய
தென்று கூறப்படுகின்ற நாடுகளில் குழந்தைகளில் நூற்றுக்கு 57 வீத நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தைகளுள் 70 இலட்சம் குழந்தைகள் காண்டிருக்கின்றன.
நதைகளில் 23 கோடி குழந்தைகள் பானவைகளாக இருக்கின்றன. கேற்ற வளர்ச்சி பெறவில்ல. போதிய ம் குறைந்து கொண்டு வருகின்றது. ண்டு வருகின்ற ஆபத்திருக்கின்றது. பெண்களுக்குப் பெரும் ஆபத்தானது. ாது இறந்துவிடக்கூடிய வாய்ப்புக்கள்
மலிந்து காணப்படுகின்றனர் எனக் பரத்திற்கு ஏற்ற நிறையை(பாரத்தை) இதற்கு முக்கிய காரணம் உணவு நோய்கள் அல்லது இவை இரண்டும் வின்படி நிறை குறைந்த குழந்தைகள் வாய்ப்பு பொதுவான தன்மையுள்ள 3 தொடக்கம் எட்டு மடங்கு அதிகம். மக்கள், குறிப்பாகப் பெண்கள், புச் சத்து பற்றாக் குறையால் காதார ஸ்தாபனத்தின் கணக்கின்படி டுகளில் நான்கு வயதையும் விட மானவர்கள் இரத்த சோகையினால்
நிறைவேற்றுப்பணிப்பாளர் கூறியவற்றிலிருந்து)

Page 16
இயற்பண்புவாதம்
இயற்பண்பு நெறியானது (Naturalism) கட்டாய விளைவாக வெகுஜன இயக்கங்களையும் பொதுமக்கள் சார்ந்த மனப்பான்மையையும் மழுங்கடிக்கிறது. இயக்கத்திற்கு இன்றியமையாத வரலாற்று நோக்கையும், கருத்து பயனளிக்கும் வகையிற் செயற் படுவதற்கு இன்றியமையாத உணர்வை யும் அது இழக்கச் செய்கிறது, இதன் விளைவாகச் சுற்றாடலைப் பற்றிய நுணுகிய புவிக்காட்சியும் வர்ணனையும் கேவலம் மனக்கண் தோற்றமாகவும் கருத்துப் பொருளாகவும் நிலையிழந்து விடுகின்றன.
- லூக்காஸ் -
உருவவாதம்
உருவவாதம் (Formalism) முன்னர் எப்பொழுதோ தோன்றிய கலை இலக்கியக் கொள்கையல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா விலும், ரஷ்யாவிலும் தனித்தனியாகத் தோன்றி உருப்பெற்றதொரு கலை இலக்கியக் கொள்கையே உருவவாத மாகும். அமெரிக்காவில் புதிய விமர்சனம் என்ற பெயரிலும் ரஷ்யாவில் கலை இலக்கியங்களின் குறியியல் என்ற பெயரிலும் உருவவாதம் வளர்ச்சியடைந்து வந்தது. கலை இலக்கியங்களுக்குரிய gólu LDL. பண்புகளை ஆதாரமாகக்கொண்டு
 
 
 

அவற்றை மதிப்பிடுவதே விமர்சன மாகுமென இவ் விரு சிந் தனா கூட்டத்தினரும் கருதுகின்றனர். இலக்கியத் தில் எண் ன சொல் லப்படுகிறதென்பது முக்கியமல்ல. எப்படிச் சொல்லப்படுகிறது, எத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றதென்பதே உருவவாதிகளுக்கு முக்கியமானது. இவர்களுடைய அபிப்பிராயப்படி கலை இலக்கியங்கள் ஒவ்வொன்றும் தமக் கேயுரிய சிறப்பியல் பான உருவத்தால் நுகள்வோனிடத்து அழகியல் உணர்வைத் தோற்றுவிக்க வல்லன வாயுள்ளன. இதன் படி இலக்கிய உள்ளடக்கம் பற்றிய உரையாடல் ஒருபோதும் இலக்கியம் பற்றிய உரையாடலாக இருக்க முடியாது. மாறாக அவ்வுரையாடல் அவ்விலக்கியம் வருணிக்கும் உலகுபற்றிய உரையாட லாகவே இருக்குமென்றும் அது இலக்கியத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டதென்றும் உருவவாதிகள் வாதிடுகின்றனர். இலக்கியத்தோடு தொடர் புறா விசயங் ளை இலக்கியத்தோடு தொடர்பு படுத்துவதன் மூலம் இலக்கிய உரையாடல்கள் திசை திருப்பய் படுகின்றன. எவ்வாறு ஒவியத்தின் சிறப்பு அதில் இடமி பெற்றுள்ள ரேகைகளிலும் , வர்ணத்திலும் , வடிவத்திலும் தங்கி யுள்ளதோ அவ்வாறே ஒரு இலக்கியத்தின் சிறப்பு அது எதனைச் சொல்லுகிறதென்பதில் அல்ல எப்படிச் சொல்லுகிறதென்பதிலேயே தங்கி யுள்ளதென்பது உருவவாதிகளின் நிலைப்பாடாகும்.
- கலாநிதி சோ.கிருஷ்ணராஜா -
16

Page 17
அமெரிக்காவில்
போதைவஸ்துக்
கலாசாரம்.
1995ல் அமெரிக்காவில் 5700.3 கோடி டாலர் பெறுமதியான சட்டபூர்வமற்ற போதைவஸ்து விற்பனையாகியிருக்கின்றது. இந்தப் போதைவஸ்தில் மூன்றில் இரண்டு வீதம் கொக்கெயின் ஏனய  ைவ ஹரி ரோயினும் மர்ஜ"வானாவுமாகும்.
மேற்கூறப்பட்ட போதைவஸ்துக் காகச் செலவு செய்யப்பட்ட பணம் 10 இலட்சம் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு உயர் கல்வி கற்பிக்கப் போதுமானதாகும். அல்லது 220 கோடி கலன்
Luaga, Lò Lu T 6ö போ ஷாக் கற்ற குழந்தைகளுக்கு உணவாகக் கொடுக் கச் செலவாகும்
பணத்திற்குச் சமமானதாக இருக்கின்றது.
1998ம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட போதை வஸ்து 1995ம் ஆண்டில் விற்பனை செய்யப் பட்டதிலும் பார்க்க இரண்டுமடங்காக அதிகரித்துள்ள தாகத் தெரியவந்துள்ளது.
17

மக்களின் மரணத்தில் கொள்ளை லாபம்
அமெரிக்காவிலுள்ள பிலிப் மொறிஸ் கம்பெனியை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு 81 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாகக் கொடுக் கும் படி அமெரிக்க நீதிமன்றமொன்றின் ஜூரர்கள் தீர்ப்பளித்துள்ளனர். இந் தக் கம் பெனியரினா ல தயாரிக் கப்பட்ட சிகரெட் டைப் புகைத் ததால் இந்த நபருக்கு நுரையீரலில் புற்று நோய் ஏற்பட்டது. இந்த நட்ட ஈட்டுக்கான பணம் மல்பறோ சிகரெட் கம்பெனிக்கு இரண்டு நாட்களில் சிகரெட் விற்பனை மூலம் கிடைக் கும் பணமாகும்.
சென் பிரான்ஸிஸ்கோவிலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 51.1 மில்லியன் அமெரிக்க டொலரை ஒரு நோயாளிக்கு நட்ட ஈடாக வழங்கும் படி தீர்ப்புக் கூறப்பட்டது. சிகரெட் புகைத்ததால் ஏற்பட்ட புற்று நோய்க்கு நட்ட ஈடாகக் கொடுக்கும்படி கூறப்பட்டது. இந்த சுவாசப் பை புற்றுநோய் சம்பந்தமான தஸ் தாவேஜை இவ் விரு கம்பெனிகளும் பல தசாப்தங்களாக பொய் கூறி மறைத்து வைத்து வந்துள்ளன.
ஒவ்வொரு வருடமும் சிகரெட் புகைத்தலால் அமெரிக் காவில் 400,000 பேர் மரணமடைகின்றனர்.

Page 18
  

Page 19
நிகழ்ச்
20 02, 2000 மாதாந்த சினிமா
27 02, 2000 - இலக்கியக் கருத்த
நடைபெறும் நேரம் பி.ப. 3.30
நடைபெறும் இடம் பெண்கள் கலி
இல, 58 தர்
கொழும்பு -
விபவி செய்தி மடல் வாசகர்களுக்கு.
2000ம் ஆண்டு ஜனவரிக்கு முன் மடல்களில் தெரிந்தோ தெரியாமே சிறுகதைகள், கவிதைகள் நாடக ஆகியவற்றிற்கு நீர்வை பொன்னைய நேயர்களுக்கு அறியத் தருகின்றே
எனது படைப்புக்கள் முலம் தமிழ் ம கேலி செய்யவேண்டும், கொச்ை தனிப்பட்டவர்கள் மீது சேற்றை : எண்ணம் எனக்கு எக்காலத்திலு இருக்கப் போவதில்லை. எனது க தெளிவும் , அதல் விஸ் வா இருக்கின்றபடியால்தான் நான் ஐம்ப மயக்கமோ தயக்கமோ இன்றி து என்ற பெயரில் தொடர்ந்து எழுதில்
இை
19

if (JGaib
ரங்கு
விெ ஆய்வு நிறுவனம் (WERC)
DTD ចាប័g.
5.
னர் வெளிவந்த விபவி செய்தி லா பிரசுரிக்கப்பட்ட குறிப்புக்கள், விமர்சனங்கள் வரைபடங்கள் ன் பொறுப்பல்ல என்பதை வாசக
Ind.
க்களின் உரிமைப் போராட்டத்தை சப் படுத்தவேண்டும் அல்லது வாரி இறைக்க வேண்டும் என்ற ம் இருந்ததில்லை, இனிமேலும் நத்துக்களில் சமுதாய நோக்கும் சமும் உறுதயும் எனக் கு தாம் ஆண்டுகளிலிருந்து எதுவித னிவாக நீர்வை பொன்னையன்
வருகின்றேன்.
i 6O6)I GALIN 6 606OILLI6 -
26oIúil Luil 6:HÍ . வி தமிழ் பிரிவு.

Page 20
“ஏதோ இருக்கிறோம்"
"ஏதோ இருக்கிறோம்" என்று கூறிக் கூறி எல்லோரையும் ஒன்றாக ஏமாற்றிக் கொண்டு
- நாங்களும் ஏதோ இருக்கிறோம்"
ஒரு பக்கம் செல்லடி மறு பக்கம் கிபிரடி என்றாலும் நடுவில் எல்லாவற்றையும் சகித்துக்
கொண்டு “ஏதோ இருக்கிறோம்"
பாணன் விலை ஏறினாலும் பருப்பு விலை ஏறினாலும் பச்சரிசியில் கஞ்சி காய்ச்சி பசியைப் போக்கிக் கொண்டு - நாங்களும் "ஏதோ இருக்கிறோம்"
கண்ணிரோடும் செந்நீரோடும் காலங் கழித்துக் கொண்டு சாந்திக்கும் சமாதானத்திற்கும் ஏங்கிங் கொண்டு - நாங்களும் “ஏதோ இருக்கிறோம்"
-T சங்கீதா

窯》
-
Ge
܂ܢܬܐ.
| ܢܝܨܢܠܐ ܢܡܝ ܨܒܘ.
.---