கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.08

Page 1
mu | ஆகஸ்ட் 2000
 
 

திம
GEFLE
Elain
|
羽

Page 2
தமிழ் 1. 13.08.2000 ஞாயிறு, பிற்பகல் 3.30 மணி
மாதாந்த சினிமா - முகம் முகம் பெ.க.ஆநி. 58, தர்மராம வீதி, கொழும்பு - 06 2. 27.08.2000 ஞாயிறு, பிற்பகல் 3.30 மணி
சிறுகதை நூல் ஆய்வரங்கு. பெ.க.ஆநி, 58, தர்மராம வீதி, கொழும்பு - 06.
gArg56mb
1, 1908-2000 சனி, பிற்பகல் 3.00 மணி
மாதாந்த சினிமா விபவி கலாசார மையம், 84/1, பாகொடை வீதி, நுகேகொடை
2. 22.08.2000 செவ்வாய், பிற்பகல் 4.00 மணி
gefab GFbGJITg5 D60őTLUJU I சிங்களக் கவிதையில் ஹைக்கூ செல்வாக்கு
3. 26.08.2000 சனி, முற்பகல் 1000 மணி
இசையமைப்பாளர் தருபதி முனசிங்கவின் நாடக இசையின் பரிணாம வளர்ச்சி - நூல் ஆய்வு ஆய்வு செய்பவர் : நாடகவியலாளர் நிசங்க தித்தெனிய
4. 26.08.2000 சனி, பிற்பகல் 3.00 மணி LDT.g5 55 fasid T - Life is beautyful
கடல் கடந்த பேரினவாதத்திற்கு தலையடி! அண்மையில் இலண்டனில் வசிக்கின்ற இலங்கையர்களால் பிரபல பாடகி நந்தா மாலினி அவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏகப்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட ஒரு பாடலை நந்தாமாலினி பாடினார். சபையிலிருந்த ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு மண்டபமே அதிரும்படி கரகோஷம் செய்தனர். இதனையடுத்து, பாடலாசிரியர் மஹாகம சேகர அவர்களால் 70ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட "நாங்கள் சிங்களவர். எமது நாடு சிங்கள நாடு" என்ற பாடலைப் பாடும்படி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தி ருந்த சிங்களப் பேரினவாதிகள் நந்தாமாலினியை கேட்டனர். அப்பாடலைப் பாட அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்தப் பாடலையே பாடும்படி பேரினவாதிகள் நந்தாமாலினியை வற்புறுத்தினர்.
"இன்றைய சூழ்நிலையில் இப்பாடல் பொருத்தமற்றது. ஆகவே நான் பாடமாட்டேன்" என்று உறுதியுடன் நந்தா மறுத்துவிட்டார். ஆனால் பேரினவாதிகள் விடவில்லை. அப்பாடலையே பாடும்படி அவரை நிர்ப்பந்தித்தனர்.
"மக்களை ஐக்கியிப்படுத்துவதுதான் எனது இலட்சியம், அவர்களைக் கூறு போடுவ தல்ல. ஆகவே என்னால் பாடமுடியாது" என்று அவர் திட்டவட்டமாகக் கூறி பாட மறுத்துவிட்டார். இத்துடன் அவர் நின்றுவிடவில்லை.
"வடக்கிலும் தெற்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களே! ஒடுக்கு முறைக்கு எதிராக ஐக்கியப்பட்டுப் போராடுவோம்"!
என்ற பாடலை இறுதியாக துணிகரமாகப் பாடித் தமது இசை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்து முடித்தார் நந்தாமாலினி.
 

தடைகளைத் தகர்த்து முன் செல்வோம்!
தாராளமய பொருளாதாரக் கொள்கை காரணமாக எமது நாட்டு மக்களின் கலா சார வாழ்வு அபிவிருத்தி அடையவில்லை. அது மாத்திரமல்ல இத்துறை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய மக்களைப் போலல்லாது எமது மக்கள் கலாசார நோக்கற்றவர்களாயிருந்தார்கள். இந்திய மக்களைப் பொறுத்தவரை அவர் கள் தொன்று தொட்டு கலை உணர்வுள்ள வர்களாக, செழிப்பான கலாசாரத்தைக் கொண்ட வாழ்வுடையவர்களாக இருந்து வருகின்றனர். இதற்கு வங்கத்திலுள்ள ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் தென்னகத்திலுள்ள நுண்கலை அக்கடமி, இந்திய மக்கள் கலாசார மன்றம் (IPTA) போன்றவை சான்று பகர்கின்றன. ஆனால் எமது மக்களைப் பொறுத்தவரை சாந்தி நிகேதனைப் போல ஸ்தாபன மயமாக்கப் பட்ட எந்த விதமான கலாசார மையமற்ற வர்களாக கலைத்துறையில் அக்கறை யற்றவர்களாக இருக்கின்றார்கள்.
1989 பிற்பகுதியிலிருந்து 1990 நடுப் பகுதி வரையான காலகட்டத்தில் இலங்கை மிக மோசமான சமூக அரசியல் பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்கியது. அதேவேளை சர்வதேசிய ரீதியில் சோஷலிச இயக்கம் தற்காலிக மாக பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இத னால் அதிர்ச்சியுற்ற, ஆனால் நம்பிக்கை இழக்காத சில சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், கல்வி மான்கள் ஒன்றிணைந்து கூட்டாக விபவி கலாசார மையத்தைக் கட்டி எழுப்பினர். இருண்ட யுகத்தினூடாக, நாம் ஆரம்பித்த பயணத்தில் மதச்சார்பற்ற, மனிதநேயம் கொண்ட கருத்துக்கள் கடுமையாக சோத னைக்குள்ளாகின. இச் சூழலில் நெருக்க டியை சரியாக இனம் காண்பதற்கு எடுக்
கப்பட்ட முயற்சி விபவி கலாசார மையத் தைக் கட்டி எழுப்புவதற்கு உந்து சக்தியாக அமைந்தது.
1989ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விபவி நிதி நெருக்கடியுடன் இயங்கி வந்தது. அதன் ஸ்தாபக உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் இயங்கி வந்தனர். இவர்கள் தாங்களாகவே தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து விபவியை இயக்கி வந்தனர். விபவி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக ளுக்குப் பின்னர்தான், ஹொலன்ட் நாட் டைச் சேர்ந்த ஹிவோஸ் என்ற கலாசார நிறுவனம் நிதி உதவியளிக்க முன் வந் தது. இலங்கையில் மாத்திரமல்ல தென் கிழக்கு ஆசியாவிலேயே முதல் தடவை யாக தனித் தன்மை வாய்ந்த கலாசாரத் துறை சார்ந்த ஒரேயொரு அரச சார்பற்ற ஸ்தாபனம் இயங்க ஆரம்பிக்கப்பட்டதென் றால் அது விபவி கலாசார மையம் தான். சிறைப்படுத்தப்பட்ட கலாச்சாரத்தை மேம் படுத்தல், மாற்றுக் கலாச்சாரத்தை உருவா க்குதல், கலை இலக்கிய கர்த்தாக்களை விழிப்படையச் செய்தல், சர்வதேசிய ரீதியில் வளர்ச்சி கண்டு வருகின்ற நவீன கலை இலக்கிய விழுமியங்களை எமது நாட்டின் ஸ்தூல நிலைக்கு பொருத்தமான வகையில் உள்வாங்கி எமது கலை இலக்கியத்தை வளப்படுத்துவது தான் விபவியின் பிரதான குறிக்கோள்களாக இருக்கின்றன. இந்த இலக்குகளை மையமாக வைத்துத்தான் விபவி இது காலவரை இயங்கி வந்தது. எதிர்காலத்தி லும் இவ்வாறே செயற்படும். விபவி கலாசார மையத்திற்கு 10 ஆண்டுகளுக்கு நிதி உதவியளித்து பங்காளியாக செயற் பட ஹிவோஸ் ஸ்தாபனம் உடன்பட்டது. இதன் பிரகாரம் 2000ஆம் ஆண்டுடன்
- 3 -

Page 3
ஹிவோஸின் நிதி பங்களிப்பு முடிவிற்கு வந்து விட்டது.
சோவியத் ரஷ்யாவில் சோஷலிஸத் தின் தற்காலிக பின்னடை விற்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் கலாசாரத் துறையின் மேம்பாட்டுக்கு நிதியுதவியளி க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஐரோப்பிய நாடுகளுக்கு எற்பட்டது. இதன் காரணமாக ஹிவோஸ?ம் தனது கவனத்தை இந்த நாடுகளின் பக்கம் திருப்ப வேண்டி ஏற்பட் டது. ஆகவே ஹிவோஸ் இதுகாலவரை விபவிக்கும் நிறுவனச் செலவுக்காக வழ ங்கி வந்த நிதி உதவியிலிருந்து விடுபட் டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விபவியை புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விபவியை புனரமைப்பு செய்வதற்கு வகை செய்யும் முகமாக, இதுகாலவரை எமது நிறுவனத்தில் சேவையாற்றி வந்த உறுப்பினர் அனைவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியுடன் தமது சேவையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கு சுயவிருப்புடன் உடன்பட் டுள்ளனர். இதுகாலவரை சேவையாற்றி வந்த உறுப்பினர்கள் தமது பதவிகளி லிருந்து விலகிக் கொண்டாலும் தொடர்ந் தும் விபவியின் செயற்பாடுகளுக்கு தமது பங்களிப்பை உணர்வு பூர்வமாகச் செலுத் துவதற்கு சபதம் பூண்டுள்ளனர்.
விபவி கலாசார மையம் புனரமைப்பு செய்யப்பட்டு கலாசாரத்துறையில் இது காலவரை செய்யப்பட்டு வந்த கலாசார நடவடிக்கைகளைத் தொடர வலுவுடன் புதிய கலாசாரத் திட்டங்களை வகுத்து முன் செல்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள் ளது. சுதந்திர இலக்கிய விழாவை தொடர் ந்து ஆண்டுதோறும், நடத்துவதற்கான திட்டம், சிறந்த நூல்களை மொழி பெயர் த்து பிரசுரிப்பதற்கான திட்டம், விபவி செய்தி மடலை தமிழ் சிங்கள மொழிக ளில் வெளியிடுதல், கலாசார வள ஆளணி யினரை வழங்குவது ஆகிய செயற்பாடு கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிரு க்கும் என்பது நிச்சயம். விபவியின்
"நான் மரணத்தைச் சந்தித்து விட்டேன். கொடிய இருளையும் பார்த்து விட்டேன். இருந்த போதிலும் மேலும் மேலும் நான் வாழ்க்கையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். நான் ஒரு பெண். அதற்காகப் பெருமைப்படுகிறேன். என் பலத்தை யும் நேர்மையையும், தூய்மையையும் நான் நன்கு அறிவேன்"
தஸ்லிமா நஸ்ரின்
வங்க முஸ்லிம் பெண் எழுத்தாளர்.
நெறிப்படுத்தற் குழுவும், செயலாற்றுக் குழுவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே யிருக்கும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கலாசாரத் துறையில் ஏற்பட்ட சகல சவால்களுக்கும் முகம் கொடுத்து நிதான மாக செயலாற்றி வந்த விபவி கலாசார மையம் தற்பொழுது தற்காலிகமாக ஏற்பட் டுள்ள நெருக்கடியை வெற்றிகரமாகச் சமாளித்துக் கொண்டு ஏற்பட விருக்கின்ற சகல தடைகளையும் தகர்த்துக் கொண்டு புது வேகத்துடன் முன் செல்ல திடசங்கற் பம் பூண்டுள்ளது. எமது மாற்றுக் கலாசார வேலை தொடர்ந்தும் நடைபெறும். இத் துறையில் தம்மை அர்ப்பணித்துள்ளவர் கள் தொடர்ந்து தமது பங்களிப்பை செலுத்துவார்கள். தற்போதைய அரசியல் கலாசார நிலைமைக்கேற்ப எமது கலாசார ச்ெயற்பாடு எதுவித தளர்ச்சியுமின்றி முன்னெடுத்துச் செல்லப்படும்.
எமது நாட்டின் மக்கள் கலாசார மேம் பாட்டுக்கு விபவி தனது உணர்வு பூர்வ மான பங்களிப்பை செலுத்தும் என்பது உறுதி. கலாசாரத் துறையில் எம்முடன் இணைந்து செயலாற்றுவதற்கு கலை உணர்வு கொண்ட அனைவரையும் விபவி அந்தரங்கசுத்தியுடன் அழைக்கின்றது.
- 4 -

தேர்தலும் ஊடகத் துறையும்
அண்மைக் காலமாக தேர்தல் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது. நாடு அரசி யல், பொருளாதார, நிதி நெருக்கடிகளு க்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின் றது. தேசிய இனப் பிரச்சினை இடியப்பச் சிக்கலாகி விட்டது. மனித சங்கார யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக் கின்றது. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்த லேற்பட்டுள்ளது. வன்முறைக் கலாசாரம் வெற்றிவாகை சூடிக் கொண்டிருக்கின்றது. இந்த இக்கட்டான நிலையில் தேர்தல் பற்றி பேசப்படுகின்றது.
இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவடையும் கட்டத்தை நெருங் கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தேர்தலை தவிர்க்கமுடியாதுள்ளது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. அதேபோல் கட்சித்தாவல்கள், பேரம் பேசுதல்கள், இரகசிய உடன்படிக் கைகள், கழுத்தறுப்புக்கள், சேறு பூசுதல் கள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின் றன. இந்த நிலையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி மக்கள் முன்னுள்ளது. ஜனநாயகத்தை நிர்மாணிப் பதற்கான தேர்தலில் ஊடகத்துறை குறிப் பாக வானொலி, தொலைக்காட்சி பிரதான பாத்திரத்தை வகிக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் இன்று பேரினவாதப் பிசாசு கோரத்தாண்டவமாடிக்கொண்டிருக்கின்ற வேளையில் தேர்தல் நடக்க இருக்கின்றது. இந்த நெருக்கடி மிக்க வேளையில் ஊடகத்துறையின் செயற்பாடு மிக முக்கியமானதாகும். இது எந்த வகையில் அமையப் போகின்றது?
இன்று எமது நாட்டில் ஊடகத்துறை மூன்று பிரிவாக அமைந்துள்ளது. அரசிற்கு சொந்தமான, அரசினால் நடாத்தப்படுகின்ற ஊடகத்துறை ஒரு வகை. எதிர்க்கட்சி சார்ந்த ஊடகம் இரண்டாவது வகை. வர்த்த சமுகத்திற்கு சொந்தமான ஊடகம் மற்றொரு வகை. இந்த மூன்று வகை
நீர்வை பொன்னையா
ஊடகவியலாளர்களும் தேர்தல் காலத்தில் எந்த வகையான பாத்திரத்தை வகிக்கப் போகின்றார்கள். இவர்களல் ஜனநாயகத் தைப் பாதுகாக்கும் வழியில் செயல்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா? இதை நாம் இன்றைய ஊடகத்துறையினரிட மிருந்து எதிர்பார்க்க முடியுமா?
கடந்த காலத்தில் ஏன் அண்மையில் நடந்த மாகாண சபைகளின் தேர்தல் காலங்களில் இந்த ஊடகவியலாளர்கள் நடந்து கொண்ட முறைகள் மிக வேதனை க்குரியதாக இருந்தன. அரசாங்கத்தின் ஊடகமும், எதிர்க்கட்சி சார்ந்த ஊடகத் தினரும் ஜனநாயகத்திற்கு விரோதமான, வன்முறையைத் தூண்டக்கூடிய பேரின வாத வெறியை உச்சத்திற்குக் கொண்டு சென்ற நடவடிக்கைகளுக்கு தூபமிட்ட வகையில் செயல்பட்டுள்ளன என்பது நாடறிந்த விடயம்.
அரசிற்கு சொந்தமான ஊடகத்தை அதிகாரத்திலிருந்த இருக்கின்ற அரசாங் கம் எப்பொழுதுமே தனக்கு சாதகமான வகையில் உபயோகித்து வருகின்றது. தேர்தல் காலத்தில் பராபட்சமற்ற முறை யில் ஊடகத்தை பாவிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அவைகளின் அபேட்சகள்களுக்கும் தங்கள் கொள்கைகளையும், செயற்றிட்டங்களை யும் பிரசாரம் செய்வதற்கு பராபட்சமற்ற முறையில், சமநிலையில் நேர ஒதுக்கீடு செய்து கொடுப்பதாக பதவியிலுள்ள அரசாங்கம் கூறக்கூடும். இது சாத்தியமா? நேர ஒதுக்கீடு சமமானதாக இருக்கலாம். ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தி ற்கு புறம்பாக அதிகாரத்திலுள்ள அரசாங் கம், செய்திச்சுருள்கள் மூலமும் வேறு
நிகழ்ச்சிகள் மூலமும் மறைமுகமான வழி
களில் தனது தேர்தல் பிரசாரத்தை செய்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும் என்பதை எவராலும் மறுக்க முடி
- 5 -

Page 4
யாது. ஆனால் தான் பராபட்ச மின்றி, சமநிலையாக செயல்படுவதாக அதிகாரத் திலுள்ள அரசாங்கங்கள் கூறி வந்துள்ளன. அரசாங்கத்தின் ஊடகத்துறையின் செயற்பாட்டை சமநிலைப்படுத்தும் வகை யில் தனக்குச் சொந்தமான ஊடகத்தை பாவிப்பதாக எதிர்க்கட்சி கூறி வருகின் றது. ஆனால் யதார்த்த நிலையில் பார்க் கையில் பேரினவாதத்தையும், வன்முறை யையும் தூண்டிவிடக் கூடியவகையில் தான் எதிர்க்கட்சி தனது ஊடகத்தை கடந்த காலத்தில் பாவித்து வந்துள்ளது. தற்போதும் அது அந்த நிலைப்பாட்டைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
வர்த்தக சமூகத்தின் ஊடகத்தை எடுத் துக் கொண்டால், அது நடுநிலையில், பராபட்சமின்றி செயற்படக்கூடிய சாத்தியக் கூறு உண்டா? அதிகாரத்திலுள்ள அரசாங் கம் எப்பொழுதும் வர்த்தகத்துறையின் ஊடகத்தை தனது அதிகாரத்தை உப யோகித்து தனக்கு சாதகமாக செயல்படும் வகையில் முயற்சித்து வருகின்றது. அதே வேளை வலது சாரித் தன்மையைக் கொண்ட எதிர்க்கட்சி, வர்த்தக ரீதியான தனியார் துறையைச் சார்ந்த ஊடகத் துறையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள் ளது. தனியார் துறை எப்பொழுதும் சுரண்டலையும் தனக்கு வாசி கிடைக்கும் பக்கம் சார்ந்து செயல்படுவது தவிர்க்க முடியாது. இரு பெரும் அரசியல் சக்திக ளும் தமக்குரிய வகையில் தமக்கு சாதக மாக, தனியார் துறை வர்த்தக ஊடகத்தை உபயோகிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டே வருகின்றன.
இரு பெரும் அரசியல் சக்திகளுக் கிடையில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய சிறிய அரசியல் கட்சிகள் எந்த வகையில் ஊடகத்துறையை உபயோகி க்க முடியும். சிறிய அரசியல் கட்சிகளு க்கு சொந்தமாக ஊடகமில்லை. அதிகாரத் திலுள்ள அரசு இந்த சிறிய கட்சிகளுக் கென்று ஒதுக்கீடு செய்கின்ற நேரத்தை மாத்திரம் தான் இவை தமது பிரசாரத்தி ற்கு பயன்படுத்த முடியும். ஆகவே பார பட்சமற்ற வகையில், சமநிலையான ஊடக செயற்பாடு என்ற பேச்சுக்கே
இடமில்லை. இது வெறும் கண்துடைப்பு. தேர்தல் காலத்தில் பராபட்சமின்றி சம
நிலையில், ஜனநாயக ரீதியில் உள்டகத்
துறை செயற்படக்கூடிய வழிவகைகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும்? இது எப்படி சாத்தியமாகும்?
மக்களின் நலன்களைப் பேணுகின்ற மக்களைப் பிரதிநிதுத்துவப்படுத்துகின்ற மக்களுக்குப் பதில் கூறுகின்ற மக்களு க்கே சொந்தமான ஊடகத்துறையினால் தான் தேர்தல் காலத்தின் போது பாரபட்ச மின்றி, சமநிலையில் செயல்பட முடியும். கட்சி அரசியல் சாராத ஊடகத்துறையி னால் தான் பராபட்சமின்றி செயலாற்ற முடியும். தேர்தல் காலத்தின் போது பரா பட்சமின்றி செயல்படுத்துவதற்கான வழி காட்டியின் அடிப்படையில் செயலாற்றி னால் தான் இது சாத்தியமாகும். அரசின் மீதோ, அரசியல் கட்சிகள் மீதோ அல்லது வர்த்தகத்துறை மீதோ நிதிவளத்திற்கு தங்கியிராமல், பொது மக்களின் நிதியைக் கொண்டு செயல்படுவதன் மூலம் ஊடகத் துறை பாரபட்சமின்றி செயலாற்ற முடியும். பிரிட்டனிலுள்ள B.B.C. (பிரித்தானிய ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம்) சுவீடன், நோர்வே, ஹொலன்ட், போன்ற ஸ்கன்டினேவிய நாடு களிலுள்ள ஊடகத்துறை இவ்வாறுதான் செயலாற்றி வருகின்றது. தேர்தல் காலத் தின் போது பராபட்சமின்றி செயல்படுவதற் கான வழிகாட்டியின் அடிப்படையில் தான் இப்பிராந்தியத்திலுள்ள ஊடகத்துறை செயலாற்றி வருகின்றது. இதனால்தான் இவ்விடங்களின் ஜனநாயக பராம்பரியம் பேணப்பட்டு வருகின்றது.
மேலே கூறப்பட்டுள்ள நாடுகளில், தேள் தல் காலத்தில் அந்தந்த அரசியல் கட்சிக ளின் அபேட்சகர்களுக்காக ஒதுக்கீடு செய் யப்பட்ட நேரத்தைத் தவிர ஏனைய நேரங் களில் அவர்களுடைய உரைகளடங்கிய நிகழ்ச்சிகளையோ செய்திகளையோ, புகைப்படங்களையோ ஊடகத்துறை ஒளி பரப்புவதை தவிர்த்துக் கொள்ளும், அதி காரத்திலுள்ள அமைச்சர்கள் அல்லது பிர திநிதிகள் பங்குபற்றுகின்ற நிகழ்ச்சிகளின் செய்திச் சுருள்களை அவர்களுக்காக ஒதுக்கீடு செய்த நேரத்தைத் தவிர வேறு நேரங்களில் வெளியிட மாட்டாது.
- 6 -

தேர்தல் காலத்தின் போது கட்சிகளின் வாதவிவாதங்கள் பராபட்சமின்றி எதுவித கட்டுப்பாடுமின்றி, ஜனநாயக ரீதியில் ஊடகத்துறையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஊடகத் துறையைச் சார்ந்த நிருபர்கள் தேர்தல் காலத்தின் போது அரசியல் கட்சி அபேட்ச கர்களால் செய்யப்படம் ஊழல் மோசடி களை தில்லு முல்லுகளை புலனாய்வு செய்து அம்பலப்படுத்துகின்ற செய்திச் சுருள்களையும், நிருபர்களால் தயாரிக்கப்ப டுகின்ற தேர்தல் சம்பந்தமான நிகழ்ச்சிக ளையும் வெளியிடுவதற்கு உத்தரவாத மளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஊடகவிய லாளர்கள் அரசிற்கோ, அல்லது எந்த வொரு அரசியற்கட்சிக்கோ தங்கள் தேர் தல் கால செயற்பாடுகள் பற்றி பதில் கூறவேண்டிய கட்டுப்பாடு தேவையில்லை. அவர்கள் மக்களுக்குத்தான் பதில் கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
தேர்தல் காலங்களில், அதிகாரத்தி லுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதிகளு க்கோ, அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கோ ஊடகவியலாளர்கள் தங்கள் செயற்பாடுகள் பற்றி பதில் கூறவேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஜனநாயக பாரம்பரியத்தைப் பேணப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடுடையவர்களாக இருப்ப துடன் அவர்கள் மக்களுக்குத்தான் பதில் கூற வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கின்றார்கள். மக்களுடைய நலன்க ளில் அக்கறையுடையவர்களாக, அவர்க ளுடைய ஜனநாயக ரீதியான செயற்பாடுக ளையும் நலன்களையும் மேம்படுத்துவதற் கான வகையில் ஊடகவியலாளர்கள் தேள் தல் காலத்தின் போது செயலாற்றவேண் டிய பொறுப்புடையவர்களாகவுள்ளனர். ஜனநாயகத்தை நிர்மாணிப்பதிலும் அதைப் பேணிப் பாதுகாப்பதிலும் தமக்கு பாரிய பங்கும் பொறுப்பும் உள்ளது என்பதை உணர்ந்து ஊடகவியலாளர் செயலாற்ற வேண்டும். அவர்களுடைய செயற்பாடுகள் பாரபட்சமற்றதாகவும், மக்கள் நலனை மேம்படுத்துவனவாகவும் அமைய வேண் டும். நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு
ஊடகத்துறையின் பராபட்சமற்ற செயற்
பாடு அத்தியாவசியம். இது உத்தரவாதப்
படுத்தப்பட வேண்டும். ஊடகத்துறையின் சுதந்திரமான செயற்பாடு உறுதிப்படுத்தப் பட வேண்டும்.
'சபிக்கப்பட்டவன்'
-960 அந்தச் சீருடைக்குள் தீட்சண்யமாய் செதுக்கப்பட்ட சிலை போல நின்றான். முள் வேலிகளுக்கப்பால் அவன் முகம். பூத்தக் கிடந்தத கண்களில் அன்பின் ஒளி மின்ன கைகளில் ~ ஆயுதம் ஏந்தி நின்றான்! திணிக்கப்பட்டதோ. விரும்பியோ. அவனோர் ~ வீரன்! சாபங்களைச் சுமப்பவனாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றான். மண் மூடைகளும். பீப்பாக்களும். அடர்ந்த இருளும். அவன் உறவுகள்! காட்டுவெளிப் பொந்தகளில் பனிகொட்டும் சாமங்களில். உறங்குதலற்று உயிரைத் தாரைவார்க்க தயாராகியிருப்பவன்! உத்தரவாதமற்றது. அவன் வாழ்க்கை அனைவரும் - வெளியில் தெரியும். அவன் ஆடையையும் ஆயதத்தையும் பார்த்த அஞ்சினர். சபித்தனர். முகம் சுழித்தனர். அவன் சீருடைக்குள். மனசொன்று கிடந்த தடித்தது."
- 7 -

Page 5
கவிஞன்
- கலில் ஹறிப்ரான் -
அவன்
இக்கால வருங்காலங்களை இணைப்பவன் அவன்
தாகவிடாயுற்ற அனைவரும் அருந்துகின்ற தூய்மையான ஊற்று அவன்
பசியுற்ற உள்ளங்கள் ஏங்கும் அழகெனும் ஆற்றுப்பாய்ச்சலால் வளர்மரங்கள் தரும் புசிக்கின்ற கனி அவன்
அடிவானில் தோன்றி மேல்நோக்கி வளர்ந்து வான்முகத்திற் திரையிட்டுப் பின் பறந்து கீழ்நோக்கி வாழ்க்கையின் சோலையில் ஒளியின் கதிர்களை ஊடுருவச் செலுத்தி மலர்களைத் திறக்கச் செய்கின்ற வெண்முகில் அவை
இறைவி தன் நற்போதனைகளைப் போதிக்க அனுப்பிவைத்த நல்துாதன் 966
இரவதனால் வெற்றி காணவும், காற்றினால் அணைக்க முடியாததுமான நெய்யினால் நிறைக்கப்பட்டு இசைவாணியால் ஏற்றப்பட்ட சுடர்விளக்கு 966
அன்பையும் எளிமையையும் பூண்டு தன் உளத்தூண்டுதலுக்காய் இரவின் அமைதியான இயற்கையின் மடிமீது அமர்ந்து சக்தியின் இறங்கலுக்காகக் காத்திருக்கும் தனியன் அவன்
மனுக்குலத்தின் ஊட்டத்திற்காய் அன்பாம் சமவெளியில் தனது உள்ளத்து விதைகளை விதைக்க, அவர்கள் அறுவடை செய்ய வழி செய்த விதைப்பாளன் இக்கவிஞன்
வாழ்ந்த இக்காலத்தே மதிக்காத மானுடத்திடம் மண்ணுலகில் விடைபெற்றுத் தன் சுய இடமான சொர்க்கத்திற் சேர்ந்த பின்னரே அங்கீகரிக்கப்படுபவன். இக்கவிஞன்
மனுக்குலத்தின் புன்னகையன்றி மற்றெதையும் நாடாதவன் இக்கவிஞன்
உணர்த்திடும் எழுச்சிமிக்க உயிர்த்துடிப்பு, வான்வெளியின் மேலெழுந்து நிரப்பிடினும், மானுடமே அத்தகைய ஜோதியினை உணர்தற்கு மறுத்திருக்கும். எத்தனை காலம்வரை
துயின்றிருப்பார் இம்மக்கள்? எத்தனை காலம்வண்ர
இவர்கள், தாம் காலத்தைப் பயன்படுத்தி உயர்நிலை அடைந்தோர்தமை தொடர்ந்தும் புகழ்பாடுவதேன்? எத்தனை காலம்வரை
இம்மக்கள் கவின்மிக்க உணர்வுகளையும், அமைதி அளிக்கும் சின்னத்தையும் உணர்த்துவோரை உதாசீனம் செய்திருப்பார்?
- 8

எத்தனை காலம்வரை
மானுடரும், இறந்தோர்தம் புகழ்பாடுவதை விடுத்து. வறுமையின் சூழலில் வாழ்ந்து, தம்மையே மெழுகுவர்த்தியாக ஆக்கிக் கொண்டு உருகித் தேய்ந்து, பாமரர்கள் கடந்து செல ஒளிகாட்டும் இந்த வழிகாட்டிகளை போற்றாது இருந்திடுவர்.
கவிஞனே!
நீ இந்த வாழ்வின் உயிர்த்துடிப்பு: காலங்களின் கொடுமைகளை வெற்றி கண்டவன்.
கவிஞனே!
நீ என்றோ ஒரு நாள் இவ்வுள்ளங்களை ஆட்சி புரிவாய்; எனவே, உனது ஆட்சியின் பரப்பும் எல்லையற்றது.
கவிஞனே!
நீ உன் முட்கள் நிறைந்த மகுடத்தை ஆய்ந்து பார். அதனுள்ளே உன் புகழார மொட்டுக்கள் ஒளிந்துள்ளன.
தமிழாக்கம்: கே. கணேஷ்
ஹய்க்கூ
ஹைக்கூ ஜப்பானிய கலை வடிவம். இத ஜென் தத்துவத்திற்கும் ஜப்பானியர் வாழ்விற்கும் உரியது. ஜப்பானிய ஹைக்கூவை நாம் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நம் சங்க காலப் பாடல்களுக்கு உள்ளது போல உள்ளடக்க அளவிலும் ஹைக்கூவிற்கு நிறையக் கட்டுப்பாடு உண்டு. ஜப்பானிலே இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி சென்ரியோ என்ற கலை வடிவத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். சென்ரியோவிற்கு ஜென் தத்தவம் தேவையில்லை. பருவங்களைத்தான் சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஒரு தரிசனத்தைப் படிம அழகோடு பதிவு செய்தால் போதம்.
- மாதக் கடைசி ಕಿಞ್ಞಾಧಿಟಕಿ- சமயலறைப் பாத்திரங்கள் சப்தம் வைரக் கட்டிகள். 'மனைவியும் கூட யாசகச் சால்வையை உதறினேன் ::606) தூசியொடு 'பெருச்சாளிகள் போரிடுமென பொட்டுப் பூச்சிகளும்.
« «a YY* 4 கல்லெறிந்து விரட்டினாலும் கள்ளச் சிரிப்பொடு சின்னவேர் »ಕ್ಹೇಳ್ತು வானததை நகைககுழு 'பசியைவிட பாசம் கவலையற்ற கோபுரம்.
சீமான் வீட்டுச் சாப்பாட்டு மேசை வெள்ளைச் சோற்றில் கொஞ்சம் வயல் சேறு
உடுக்கை ஒலிக்கச் எல்லைச்சாமி ஊரே நடுங்கும் விளையாட்டை இழக்காத குழந்தைகள்
s தொமிற்சாலைக் கூண்டுவ புத்தாண்டு போயிற்று ᏞᎫᏛᏑ கூண்டுவழி எல்லாவற்றையும் வாரிக்கொண்டு குருதி கலந்து
செடிப்பூ மட்டும் அப்படியே நா. விச்வநாதன்,

Page 6
இலக்கியத்தில் புதுப்புனல்
வ. இராசையா
யாழ்ப்பாணக் காவியம் THE EPIC OF JAFFNA
ஈழத்துத் தமிழ் இலக்கியக் களத் துக்குள் முன்பு என்றும் இல்லாதவாறு, அண்மையில் பொங்கிப் பிரவகித்து வந்தி ருக்கிறது ஒரு புதுப்புனல் யாழ்ப்பாணக் காவியம் என்னும் நறுந் தமிழ் வெள்ளம் / ஒரு பெருங்காவியம்! இரண்டாயிரத்து ஐம்பது கவிதைகளால் ஆக்கப்பட்ட ஒரு நெடுங்கதை, இது.
இந்தக் காவியத்தைத் தமிழுக்குத் தந்த கவிஞர் மாவிட்டபுரம் திரு.க. சச்சிதா னந்தன். மதுரைப் பண்டிதராகிய சச்சிதா னந்தன் ஆங்கிலத்திலே B.A. (Hons) Lond., M.Phil. Lond, seisuu Ut'LiSoit பெற்றவர். வானியல் வல்லுநர். அவர் படைத்த இந்தக் காவியம் 1998 ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
வரலாற்றுக் காவியம்
இந்த நூல் வெறும் கற்பனையில் புனைந்தெழுதப்பட்ட ஒரு காவியம் அன்று. இது ஒரு வரலாற்றைத் தளமாகக் கொண்ட காவியம். நூலாசிரியர் சச்சிதான ந்தன் இந்தக் காவியத்தைப் படைப்பதற்கு ஆதாரமாயிருந்த சகல விபரங்களையும் படிப்பவர் மனங் கொள்ளும் வகையில், நூலின் தொடக்கத்திலே தந்திருக்கிறார்.
இந்தக் காவியம் யாழ்ப்பாண அரசின் சரித்திரத்தில் கி.பி.1450-1467 ஆம் ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியைப் பின்னணியாகக் கொண்டது. இக்காலப் பகுதியில் மன்னன் கனக சிங்கராயன் நல்லுரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணத்தை அரசாளுகிறான். வன்னிப் பிரதேசத்தில் வன்னிய சிற்றரசர்கள் வாழு கின்றனர். அக்காலத்தில் தெற்கே கோட்டை நகரிலிருந்து அரசு புரிந்தவன் ஆறாம் பராக்கிரமபாகு, அவனது வளர்ப்பு மகனான சபுமால் குமரையன், வன்னியச்
g } } } ; i + --— ளைத் தன் வசம் ஆக்கி, அவர் களின் உதவியோடு uJIT pust 600TLb வந்து போர் தொடுக்கிறான். ஒரு நாள் இரவு சடுதி யாக நடநத இந்தத் தாக்கு தலில் கண்க சிங்கன் தோற் கடிக்கப்படுகி றான். அப் பொழுது அவனுடைய இரண்டு ஆண் குழந்தைகளையும் சிவிகையாளன் ஒருவன் காப்பாற்றி படகோட்டி ஒருவனிடம் ஒப்புவிக்க, அவன் அவர்களைக் கொண்டு சென்று தமிழகத்தில் வேதாரணியத்தில் வைத்து வளர்க்கிறான்.
யாழ்ப்பாணக் காவியம் THE EPIC OF AFFNA
terraskutpih
- ds. rafsaretuksi B.A-6}lons}Lond M.Phil. Land assingič tuahnash
பதினாறு ஆண்டுகளின் பின் பரராச சேகரன், செகராசசேகரன் என்னும் அந்த இராசகுமாரர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து, கரந்து உறைந்து, படை திரட்டி, போர் புரிந்து தமது தந்தையின் இராச்சிய த்தை மீட்கிறார்கள். பரராசசிங்கனது ஆட்சி அங்கே மலர்கிறது.
இது வெறும் கர்ண பரம்பரைக் கதை அன்று, யாழ்ப்பாண வரலாற்றில் உள்ள ஆதாரபூர்வமான ஓர் அங்கம். இந்நூலாசிரி யர் சச்சிதானந்தன் சரித்திர ஆய்வாளர்க ளால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை எல்லாம் படித்து, வரலாற்றை ஒப்புநோக்கி, இந்தக் காவியத்தின் கதையை உறுதி செய்து கொண்டிருக்கிறார். இந்தத் தேடலு க்குத் தமக்கு ஆதாரமாயிருந்த பதினாறு
- 10 -
 

நூல்களின் பட்டியலை அவர் இந்த நூலிலே தந்திருக்கிறார். ஆசிரியர் தமக் குக் கிடைத்த சரித்திர ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறும் பாங்கும் அவரது அறிவாற்றலும் நம்மை வியக்க வைக்கின்றன.
மேலே கூறப்பட்ட சரித்திர நிகழ்வு இந்தக் காவியத்துக்குரிய மூலம்; அவ் வளவே. இதன் விரிவு இந்த நூலிலே பல கிளைச் சம்பவங்கள் கொண்ட தாய், படிப்பவரது உணர்ச்சிகளை உலுக்குவ தாய் அமைகிறது.
இந்த நூல் ஒரு சரித்திரக் காவியம்/ நடந்த கதை. ஆதலால், காவியப் பாத்தி ரங்கள் பற்றிய குறிப்புக்கள், கதை நிகழ் ந்த இடங்கள் பற்றிய விபரங்கள் ஆகிய வற்றையெல்லாம் நிரல் படத் தந்திருக்கி றார், ஆசிரியர். இந்தக் காவியப் படைப் பிலே, இதற்குச் செழுமையூட்டும் வகை யில் தாம் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில கர்ண பரம்பரைச் செய்திகளை ஆசிரி யர் தமது விளக்கவுரையில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். இது போற்றுதற்கு உரியது.
யாழ்ப்பாண அரசின் சின்னமாக நல் லூர் - சங்கிலித்தோப்பிலேயிருக்கின்ற மாளிகை முகப்பின் புகைப் படமும் யாழ். அரசினது நாணயங்களின் படங்களும் இங்கு தரப் பட்டிருக்கும் பொருத்தப்பாட்டி னால் இந்தக் காவியத்தின் சரித்திரத் தளமும் வலுவும் நன்கு துலங்குகின்றன.
இவ்வாறு இக்காவியத்தினது வர லாற்றுத்தளம் மாசு படாமல் காப்பதன் மூலம் கவிஞர் சச்சி, கவிஞராக மாத்திர மன்றி நேர்மையான ஒரு சரித்திர ஆய்வாளராகவும் நிமிர்ந்து நிற்கிறார்!
படைப்பிற்கு உதவிய தூண்டுதல்
கவிஞர் சச்சிதானந்தன், இந்தக் காவி யத்தைத் தாம் படைப்பதற்குத் தமக்கு உந்து சக்தியாக இருந்த சில நிகழ்வு களை நூலின் பிறப்புப் பாயிரம் என்னும் பகுதியிலே கவிதை வடிவில் விபரிக்கிறார். அங்கே இவர் கூறும் செய்திகள் நமக்குச் சிலிர்ப்பு ஊட்டுவனவாக இருக்கின்றன.
ஆசிரியர். 1958 ஆம் ஆண்டு. "தாயெ னும் தமிழ்நிலம் காத்திட வேண்டும்" என் னும் இலட்சியத்துடன், வன்னியில் நெடுங் கேணிக்கு அண்மையில் உள்ள பனிச்சங் குளம் என்னும் காட்டுப்பகுதிக்குச் சென்று, காடு அழித்துக் களனி ஆக்கி, பாலைமரம் ஒன்றின் உச்சியில் பரண் அமைத்து அதிலிருந்து இரவிரவாக விலங்கு களை விரட்டிப் பயிர்களைக் காத்து வருகிறார். ஒருநாள் இரவு கடல்மடை திறந்தது போன்ற ஒரு பேரிரைச்சல் கேட்டுத் திகை த்துப் போன இவள், அந்த வெள்ளப் பெரு க்கின் மர்மத்தை அறிவதற்காக மறுநாட் பகலில் காட்டினுள் சென்றபோது குளம் ஒன்று உடைப்பெடுத்திருப்பதைக் காண் கிறார். அந்த அடர்ந்த காட்டிலே சரிந்த கருங்கல் தூண்களும், சாய்ந்த கோபுரங்க ளும், கற்சிலைகளும், கல்வெட்டுக்களும், மட்கலங்களும் ஆங்காங்கே இருப்பதைக் கண்டு வியப்பில் மூழ்கிவிடுகிறார். இவரது தேடல் பலநாள் தொடர்கிறது. அயற் கிரா மங்களுக்குச் சென்று அங்குள்ள முதியோ ரிடம் அந்தச் சின்னங்களின் வரலாற்றை உசாவுகிறார். அங்கிருப்பது பரராசசேகரன் குளம் எனவும் அங்கு நிலவியது பழந் தமிழரது ஆட்சி எனவும் அறியவந்தபோது இவரது மனதில் பெருமிதம் கிளர்ந் தெழுகிறது!
இந்த உணர்வின் உந்துதலே, இது நிகழ்ந்து முப்பது ஆண்டுகளின் பின், யாழ்ப்பாணக் காவியம் என, மன்னன் பரராசன் கதை பாடப்படுவதற்கு மூலம் ஆகின்றது.
காவியத்தின் அமைப்பு
யாழ்ப்பாணக் காவியம் என்னும் இந்த நூலின் பெரும் பிரிவுகளைப் பருவங்கள் எனவும் அவற்றின் உட் பிரிவுகளைப் படல ங்கள் எனவும் பெயரிட்டிருக்கிறார் ஆசிரி யர். பாரத த்தில் வில்லிபுத்தூரரும் இராம கதையில் கம்பரும் கைக்கொண்ட பகுப்பு மரபின் சங்கமம் இது. அடிமைப் பருவம், ஆயத்தப் பருவம், போர்ப்பருவம், இன்பப் பருவம் என நான்கு பருவங்கள் கொண் டது இந்த நூல். இந் நான்கு படலங்களி லும் மறைக்காட்டுப் படலம் முதல் பரிசளி த்த படலம் ஈறாக 38 படலங்கள் இருக்கி
- 1 1 -

Page 7
ன்றன. கம்பர் இராமகதையைத் தாம் ஆசை பற்றி அறையலுற்றதாகக் கூறுகி றார். இங்கே நமது கவிஞரும் தாம் கொண்ட ஆசையால் தமிழுக்கு ஆரம்பு னைவதாகக் கூறுகின்றார்.
தமிழில் உள்ள காப்பியங்கள் எல்லாம் தமிழ்க் காப்பிய மரபினைத் தழுவியே பாடப்பெற்றிருக்கின்றன. அவை எல்லாம் ஆற்று வருணனை, நாட்டு வருணனை, நகர வருணனை எனத் தொடங்கி விரியும். யாழ்ப்பாணக் காவியத்தின் ஆரம்பம் இவ்வாறு அமையவில்லை. கவிஞர் சச்சி நேரடி யாகவே கதைக்கு வந்து விடுகிறார்.
கதை வளரும் பாங்கு
நிலாக் காட்சியுடன் கதை தொடங் குகிறது. "வெள்ளியை உருக்கி வார்ப்பின் மெல்லெனக் குளிர்வ(து)/உண்டோ?/ அள்ளிய அமுதம் கள்ளென்(று) ஆர்ந்திட வெறிப்ப(து) உண்டோ? / ஒள்ளிய பசும் பால் மோக உவகையில் மயக்கும் கொல்லோ? - கொள்ளை கொள்கின்ற இந்தக் குளிர்மதிப் பானம் யாதோ!" என்று தொடங்குகின்றார் கவிஞர்.
யாழ்ப்பாணக் காப்பியத்தின் கதை, தமிழ்நாட்டில் வேதாரணியம் என்னும் ஊரிலுள்ள ஒரு குடிசையைக் களமாகக் கொண்டு தொடங்குகிறது. நாடு இழந்த யாழ். மன்னன் கனகசிங்கையாரியனது பிள்ளைகளாகிய பரராச சேகரனுக்கும் செகராசசேகரனுக்கும் அவர்களது பூர்விக வரலாற்றைக் கூறுகிறான், அவர்களைக் குழந்தைப் பருவத்திலே நல்லூர்ப் போர்க் களத்திலிருந்து மீட்டு வேதாரணியத்துக் குக் கொண்டு வந்தவனாகிய கிழவன் ஆழ்வான். அங்கே கதை அவனுடைய வாய்மொழியில் நனவோடையாக விபரிக்க ப்படுகிறது. இக்காலப் புனைகதை இலக்கி யங்களில் கையாளப்படும் நவீன உத்தி இது. இவ்வாறு இன்றைய வாசகனுக்கு ஏற்றவகையில் நமது காவிய மரபைச் சற்றே நெகிழ்த்தி, கதையை நடத்திச் செல்கின்றார் கவிஞர். இந்த வீச்சும் வேகமும் நூல் முழுவதும் தொடர்வதை நாம் காண்கிறோம்.
இராச குமாரர்கள் யாழ்ப்பாணம் வந்து
கரந்து உறைதல், போருக்கு ஆயத்தம் செய்தல், பரராசசேகரன் ஒற்றாடலும் சிறை ப்படுதலும், கோம்பையன் மணலில் நிகழ் ந்த படு கொலைமுயற்சி, விடுதலைப்படை எழுச்சி, அராலிவெளிப்போர் எனப் பல் வேறு நிகழ்வுகள் கதையிலே பின்னிப் படர்ந்து காவியத்துக்குச் செழுமையூட்டு கின்றன. இராசதந்திரமும் காதலும் வீரமும் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் இந்தக் காவியத்தின் அடிநாதமாக நின்று ஒலிக்கின்றன!
போரினால் நிகழும் அழிவுகள், மக்கள்
படும் இன்னல்கள், அடக்கு முறை, கலாச் சார அழிப்பு என்பன வற்றை கதையோட்
டத்திலே ஆசிரியர் நன்கு சித்திரிக்கிறார்.
நானூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்திய சரித்திரத்தைத் தளமாகக் கொண்ட இந் தக் கதையிலே இன்று நாம் காணும் அழிவுகளின் சாயல் பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது. இவற்றை யெல்லாம் உள்ளங்கொண்டு இந்தக் காவி யத்தைப் படிக்கும் போது, "இது நமது கதை" என்னும் ஓர் உரிமை உணர்வு நம் உள்ளத்தில் உண்டாகிறது!
கவித்துவச் சிறப்பு
யாழ்ப்பாணக் காவியம் என்னும் இந்தப் பேரிலக்கியத்தினது அமைப்பு இவ்வாறு விரிந்ததொரு தளத்திலிருக்க, இதன் படைப்பு பரந்ததொரு கலைச்சோலையாகி, இதன் சிறப் பினை உன்னதத்தை நோக்கி உயர்த்துகிறது. சச்சிதானந்தனது கவித்து வப் பெருக்கு இந்நூலின் ஒவ்வொரு துளி யிலும் பளிச்சிடுகிறது. நூல் முழுவதும் கரைபுரண்டு ஓடுகிறது.
கவிஞர் விருத்தப் பாக்களால் இந்தக் காவியத்தை யாத்திருக்கிறார். காரைக் காலம்மையார் முதன் முதலாகக் கையா ண்ட இந்த யாப்பு வகையை, 12 ஆம் நூற்றாண்டிலே கவிச் சக்கரவர்த்தி கம்பர், மேலும் செழுமைப்படுத்தி லாகவமாகக் கையாண்டு, தமிழ்க் கவிதைத் துறையிலே அற்புதங்கள் செய்தார். அவர் செதுக்கி வைத்த விருத்த மென்னும் இந்த யாப்பு, பாரதி யுகத்தைக் கடந்து இப்பொழுது மீண்டும் ஒரு முறை கவிஞர் சச்சியின்
- 2 -

இந்த நூலிலே களிநடம் புரிகின்றது. அங்கே யாப்பமைதியும் அணிகளின் அழகும் சந்தங்களும் நூலின் பொரு ளோடு இழைந்து நின்று நமது உணர் வோடு சங்கமம் ஆகின்றன. சச்சிதானந்த னது கவிதைகளைப் படிக்கும் போது, இது கம்பனது கவிப் பெருக்கின் தொடர்ச் சியோ என்னும் வியப்பு மேலிடுகிறது!
ஆட்சியாளரின் கையிலே அகப்பட்டுக் கொண்ட பரராசசேகரனை கோம்பையன் மணல் திடலுக்குக் கொண்டு வந்து, கொல்லுவதற்காக அவன் மேல் காளையை ஏவி விடுகிறார்கள். பரராசன், வந்த காளையின் முதுகில் ஏறி அதனை மடக்க, அந்தக் காளை திணறுவதைக் கவிஞர் காட்டுகிறார், இப்படி:
"துள்ளி எழும் மூசி விழும்/ தூக்கி முதுகிருப்பானைத் தள்ளிவிட இருகாலில் தாவி விழும் முக்கரிக்கும்! வெள்ளிநுரை கக்கஇடை விரைந்தோடும். விழி பிதுங்கும்! கொள்ளிஎனக் கொம்பசைக்கக் கூடாமற் குமுறுமன்றே" இந்த வெறிகொண்ட கூட்டத்திலே மக்கள் படையொன்று திடீரெனப் புகுந்து தாக்குகிறது. சனக்கூட்டத்தில் பெரும் குழப்பம்! எங்கும் பதற்றம்! இதனைச் சித்திரிக்க வந்த ஆசிரியர் நடைபாதை வியாபாரிகளின் அவலத்தைக் காட்டுகிறார்.
"கடலைப் பொரியும் கதலிப் பழமும் வடையும் சுளகும் வரகின் அடையும் உடையைச் சிதற உயிரைக் கொண்டு கடையை விடுத்திட்டு) ஓடினர் காதம்!" பணிச்சவனத்துக் காடு. மரங்களின் தாழ்ந்த கிளைகளில் குரங்குகள் வாலைத் தொங்க விட்டுக் கொண்டு குந்தியிருக் கின்றன. கீழேயுள்ள வெள்ளத்தில் வால் தொடுகிறது. கவிஞர் இதனை எப்படிச் சித்திரிக்கிறார்!
"தாழ்ந்து வரும் கிளைகளிலே சாய்ந்தி
ருக்கும் மந்திகளின் / வீழ்ந்த நெடு வால் கள் கீழ் வெள்ள(ம்) நனைந்திருப்பவரால்/ சூழ்ந்து வரும் இரையென்று கடிக்க அவை தூக்குவன ! ஆழ்ந்த கடல் தூண்டிலிடும் மீனவராய் ஆகுமாமே".
பரராசசேகரன் பனிச்சங்குளக் காட் டில் மறைந்திருக்கிறான். அந்தக் காட்டை விவரிக்கிறார், பலப்பல கோணங்களில்: இதோ அங்குள்ள பறவைகளின் ஆரவாரம்
"குக்கிடும் புள்ளும் கூவிடும்
புள்ளும் கொக்கிடும் குரல் மாறிடக்
கூப்பிடும் சிக்கொலிப் புள்ளும் சீழ்க்கைசெய்
புள்ளுமாய் திக்குகட்(கு) ஒரு தேனிசை
கேட்குமே!" கவிஞர் சயங்கொண்டாருடைய கலிங் கத்துப் பரணிப்பாடல்கள் எவ்வாறு நமது உள்ளங்களைப் பிணிக்கின்றனவோ, அவ் வாறு கவிஞர் சச்சியின் போர்க்கள வருண னைப் பாடல்களும் எங்களைக் கவருகின் றன. இவற்றின் மிடுக்கு, துடிப்பு எல்லாம் படித்து நயக்க வேண்டியவை. இதோ 450 ஆண்டுகளுக்கு முந்திய படையணி ஒன்று நகர்கிறது.
"கொம்பினொடு சங்குபறை
கொண்டிட மொலிக்க பம்புதடி பொங்கும் ஒலி பாசறை நிரம்ப தம்புயம் எழுந்தவலி சற்றும் அணைஇன்றி அம்பொடு துடிப்பன அவற்(கு) எதிரிநாடி" இவை தொட்ட இடம் எல்லாம் சுகம் தரும் கவிதைகள்! சொட்டுச் சொட்டாகச் சுவைக்க வேண்டிய கவிதைகள் ! வாய்விட்டுப் படித்து, மனம் முட்ட நயந்து வியக்க வேண்டிய கவிதைகள்!
நமது கவிஞருடைய பாடல்களிலே யதார்த்தத்தை மீறிய அதீதமான கற்பனை கள் ஆங்காங்கே தென்படுகின்றன. குறிப் பாகப் போர்க் காட்சிகளில் இந்த மிகை யான வருணனைகள் நமது பண்டைய காப்பியங்களில் புலவன் கையாண்ட
- 13 -

Page 8
உலக மயமாக்கல்
தாராள மயமாக்கல் என்கிற பெயரில் இப்பொழுது நடைமுறைப்படுத்துவது உலகமயமாக்கல் தான். அது புதுக்காலனியாதிக்கம் ஆகும். இதை நான் முழுமையாக எதிர்க்கிறேன். நமது மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை அது சீரழிக்கப் போகிறது. நமது மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களை, நடை உடை பாவனைகளை, நமது சிந்தனையை நமது கற்பனை வளத்தை, நமது படைப்புத் திறனை - இவை அனைத்தையுமே அது கொன்று விடும். இந்த விஷயத்தில் நமது தகவல் தொடர்பு சாதனங்கள் மோசமான பாத்திரம் வகித்து விட்டன. இதன் விளைவாக நமது கலாச்சாரம் சீரழிவை நோக்கி இட்டுச் செல்லப்படுகிறது. நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றியே திர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுமேயானால், நமக்கென்று சொந்தக் கலாச்சாரம் இல்லாதவர்களாகி விடுவோம். எப்போதைக் காட்டிலும் நாம் விழிப்போடிருந்து நம் கலாச்சாரத்தைக் காப்பது இப்பொது அவசியமாகி விட்டது.
நமது ஸ்மரணைக்கு எட்டாமலே கூட இறக்குமதிக் கலாச்சாரம் திணிக்கப்படுகிறது. இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த நிஜமான கலாச்சார இயக்கம் நடத்தப்பட வேண்டும். கவிதைக்கும், பிற இலக்கிய வடிவங்களுக்கும் இப்போது இடம் சுருங்கிப் போய் விட்டது. சிந்திக்கின்ற சமுதாயம் என்கிற நிலையிலிருந்து, கைதட்டி வேடிக்கை பார்க்கின்ற சமுதாயமாக நாம் வெகு வேகமாக ஆதிக் கொண்டிருக்கிறோம்.
(திருகே. சச்சிதானந்தன். சாகித்திய அக்கடமி வெளியிடுகின்ற "இந்தியன் லிட்றேச்சர்" (Indian Literature) என்னும் இலக்கிய ஏட்டின் ஆசிரியராக இருப்பவருமான திரு.கே. சச்சிதானந்தன். இவர் இந்தியாவில் பிரசித்தமான மலையாள எழுத்தாளர், சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், விமர்சகர்,
முற்போக்கு எழுத்தாளர், பல பிறமொழி வித்தகர்)
உத்திகளில் ஒன்று. இந்தப் போக்கினைக் கண்டு இன்றைய சந்ததி முகம் சுளிக்க வேண்டியதில்லை. இது கவிஞனுக்குரிய தனி உரிமை, அதனுள் நாம் அத்து
floor DIT?
நமது மண்ணின் கதை
இலக்கியம் என்பது யதார்த்தமான தாய், சீரிய நோக்கு உடையதாய், விழுமி யங்களின் கருவூலமாய், கவித்துவம் மிக்கதாக இருத்தல் வேண்டும். யாழ்ப்பா னக் காவியம் இப்பண்புகள் எல்லாம் பொருந்தியதாக அமைந்திருக்கிறது.
இந்த நூல் எங்களது வரலாற்றினது பகுதி ஒன்றின் பதிவு ஆகும். அந்நியரது ஆட்சியை அகற்றுவதற்காக ஒரு குறிப் பிட்ட காலப்பகுதியில் நடந்த மக்கள் எழுச்சியை இது சித்திரிக்கின்றது. இந்த
வகையில் இந்தக் காவியம் எதிர்காலச் சந்ததியும் படித்துப் பயன் கொள்ளத்தக்க ஒரு படைப்பாக விளங்கக் காண்கின்றோம்.
இது நமது மண்ணிலே பிறந்த நமது மண்ணின் கதை என்பதும் இக் காவியத் தைப் படைத்த கவிஞர் எங்களிடையே தோன்றி, எங்களிடையே வாழ்கிறார் என்ப தும் நமக்குப் பெருமை! இந்த நாட்டுக்கு
Disgood
மரபுக்கவிதையில் பாடப்பட்ட இந்த இலக்கியம் எத்தகைய வாசகருக்கு ஏற் றது என்று கேட்கலாம். இது இறுக்கமான மொழிநடையில் அமைந்த காவியமல்ல. பத்தாவது படிக்கும் மாணவரும் சிரமமின் றிப் படிக்கலாம். இலக்கியப் பரிச்சயம் உடைய ஏனையோரும் படிக்கலாம். படிக்க வேண்டும்.
- 4 -

சிறந்த சிறுகதை என்பது மனோதத் துவ உண்மையின் ஆதாரத்தில் எழுதப் படுவது. ஒரு அப்பாவியான தந்தை, கெட்ட நடத்தையுள்ள தன் மகனின் நிலை யைக் குறித்து உள்ளார்ந்த வேதனைப் படுவது ஒரு மனோதத்துவ உண்மை. இந்த உணர்வுகளின் அடிப்படையில், அந் தத் தந்தையின் உணர்வுகளைச் சித்தரித் தும் அதற்கு அனுகூலமாக அவனுடைய செயல்களைக் காட்டுவதும், கதையை மிகக் கவர்ச்சிகரமாக்க இயலும்.
ஒரு தீயவன் முற்றிலுமே தீயவனாக இருப்பதில்லை. அவனுடைய மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒரு தேவதை யின் இயல்பு ஒளிந்திருக்கும் என்பது மனோதத்துவம். அந்தத் தேவதைக் குணத்தைத் திரைவிலக்கிக் காட்டி எழு துவது தான் வெற்றிகரமான சிறுகதை எழுத்தாளரின் இலட்சணமாக இருக்க இயலும். சங்கடங்கள் ஒன்றன்பின் ஒன்றா கச் சந்திப்பதால் மனிதன் எத்தனை துணி ச்சல் உடையவனாக மாறுகிறான் என்ப தையோ அவைகளை எதிர் கொண்டு மிகப்பெரிய சங்கடங்களையும் சந்திக்க அவன் எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான் என்பதையோ, இவ்வாறு பக்குவப்படுத்துவதால் அவனுடைய தீய குணங்கள் அனைத்தும் ஓடிவிடுகின்றன என்பதை அவனுடைய மனதில் ஒளிந்திரு க்கும் பட்டை தீட்டப்பட்ட வைர குணங்கள் ஒளிரும் என்பதையோ படிப்பதால், நாம் திகைத்து விடுகிறோம். இதுவும் ஒரு மனோதத்துவ உண்மை.
ஒரே நிகழ்ச்சி அல்லது விபத்து பல்
சிறுகதையின்
மையம்
ஹிந்தி மூலம் : தமிழில் :
முன்ஷி பிரேம்சந்த் வடுவூர் நாராயணன்
வேறு தரப்பட்ட குணங்களை உடைய மனிதர்களின் மனதில் எப்படிப் பாதிக்கிறது என்பது வெற்றிகரமாகக் கதையில் காட்டப் படுமானால், அக்கதை உறுதியாக எல்லோரையும் கவரக்கூடும்.
ஒரு பிரச்சினையைக் கதையில் கல ந்து தருவது சிறுகதையைக் கவரத்தக்க வகையில் எழுத ஒரு சிறந்த வழியாகும். வாழ்க்கையில் அனேக பிரச்சினைகளை நாம் தினமும் சந்திக்கிறோம். அவற்றால் உருவாக்கப்படும் போராட்டங்கள் கதை யில் இயற்கையாக எழுதப்படுமானால், அது கதைக்குக் கவர்ச்சியைச் சேர்க்கும்.
உண்மையே பேசும் தந்தைக்கு, தன் மகன் ஒரு கொலையைச் செய்துவிட்டான் என்பது தெரியும். அவனை நீதிமன்ற மேடைவரை கொண்டு செல்வதா, அல்லது தன் கொள்கைகளையே மகனுக்காகக் குழி தோண்டிப் புதைப்பதா என்ற போராட் டம் எத்தனை பயங்கரமாக இருக்க முடி யும் தெரியுமா? இந்த விதமான போராட்டங் களின் பின்னணியில் பச்சாத்தாபம் என்கிற வற்றாத நீர்ஊற்றுக்கள் உண்டு.
ஓர் அண்ணன் தன் தம்பியின் சொத்து க்களை வஞ்சகமாகக் கவர்ந்து விடுகி றான். தம்பி தெருவிற்கே வந்து விடுகி றான். அவன் தன் தம்பி கண்முன்னே தன் வீட்டிலேயே பிச்சையெடுக்க வந்து நிற்பதைப் பார்க்கும் எந்தச் சகோதரனுக்கு வேதனையும் பச்சாத்தாபமும் ஏற்படாம லிருக்கும்? அப்படி ஏற்படவில்லையென் றால் அவன் மனிதனே அல்ல!
நாவல்களைப் போல சிறுகதைகளும்
- 15 -

Page 9
சம்பவங்களின் கோர்வைகளிலும், குணாதி சயங்களின் அடிப்படையிலும் எழுதப்படு கின்றன. பாத்திரங்களின் குணங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் கதை சிறந்த சிறுகதையாக மதிக்கப் படுகிறது. ஆனால் சிறுகதைகளில் விஸ்தாரமாகக் குணங்களை உருவாக்கிக் காட்ட சந்தர்ப் பம் ஏற்படுவதில்லை. நாவல் வாழ்க்கை யின் பூரணமான உருவம், சிறுகதை ஒரு சம்பவத்தின் அடிப்படையில் பின்னப்படும் ஒரு ஒளிக்கிற்று.
எனவே, சிறுகதையின் லட்சியம் ஒரு முழு மனிதனைச் சித்திரித்துக் காட்டுவது அல்ல, மாறாக அவனுடைய குணங்களின் ஒரு பகுதியை மட்டும் காட்டுவதாகும்.
மேலும் சிறுகதையின் முடிவில் நாம் உணர்த்த விரும்பும் தத்துவமோ, அல்லது பாதிப்போ எல்லோரும் ஒப்புக் கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டும். அதில் ஆழ மான பாதிப்பு இல்லாமல் கொஞ்சம் மென்மையாகவும் இருந்தால் நல்லது. எத
னுடன் நம் தொடர்பு இருக்கிறதோ அத னைப் பற்றிய விடயங்களில் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது ஒரு சாதா ரண விதி. சீட்டு விளையாடுகின்றவனுக்கு அதனை விளையாடும் பொழுதில் உருவா கும் மகிழ்ச்சியும், மயக்கமும், அதனைப் பார்க்கின்ற ரசிகர்களுக்கு ஏற்படுவ தில்லை.
நாம் சித்தரிக்கும் குணாதிசயம் உயிரு ள்ளதாக, கவரத்தக்க வகையில் இருக்கு மேயானால், படிக்கின்றவன், தானாகவே தன்னை அந்தப் பாத்திரத்தின் இடத்தில் பொருத்தி அதைப் போன்றே மாறுவதாக உணருகின்றான். அதுதான் கதையின் வெற்றிக்கும், இலக்கிய மகிழ்ச்சிக்கும் உள்ள அடையாளம்.
எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திர ங்களின்பால் படிக்கின்றவர்களின் அனுதா பத்தையோ, உணர்வுகளையோ எழுப்பத் தவறிவிட்டால், எழுதும் லட்சியத்தில் அவன் தோல்வி கண்டவனாகிறான்.
தமிழ்ச் சிறுகதைப் படைய்பாளிகளே...!
விபவி-மாற்றுக் கலாச்சார மையம், நமது தமிழ்ச் சிறுகதைத் துறையினது வளர்ச்சிக்கும் வளத்துக்கும் மேலும் ஊக்கம் அளிக்கும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளது. இதன்படி சிறுகதைத்தொகுப்பு நூல்களின் ஆய்வுக்கு என அரங்குகள் நடத்தப்படும். இவ்விரண்டு மாதத்துக்கு ஒவ்வோர் அரங்கு.
நீங்கள் இந்த அரங்குகளில் உங்களது சிறுகதைத் தொகுப்புக்களை வைத்து ஆய்வுக்கு உட்படுத்தி, இலக்கிய ஆய்வாளர்களதும் ஆர்வலர்களதும் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். இலக்கியத்துறை சார்ந்த வல்லுநர்கள், இந்த அரங்குகளில் உங்கள் நூல்களை ஆய்வு செய்வார்கள். 1999, 2000 ஆகிய ஆண்டுகளில் நீங்கள் வெளியிட்ட நூல்களை ஆரம்பத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
விபவி இப்பொழுது நடத்திவரும் "சிறுகதை மேம்பாட்டரங்கு” வேறு. இனி வரவிருக்கும் இந்தச் "சிறுகதைநூல் ஆய்வரங்கு" வேறு. முன்னையது பலருடைய கதைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வது. பின்னையது ஒரு படைப்பாளியினது பல கதைகளை ஒன்றாக வைத்து ஆய்வு செய்வது.
உங்களது சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்குச் சமர்ப்பிக்க விரும்பினால், முதலில் விபவியுடன் தொடர்பு கொண்டு விபரம் அறிந்து கொள்ளுங்கள்.
விபவி நடத்தும் சிறுகதைநூல் ஆய்வரங்கை நமது சிறுகதைத் தொகுப்புக்க ளுக்கு ஓர் உரைகல் ஆகப் பயன்படுத்துவோம்.
- 16

ஏன் எழுதவேண்டும்?
விபவியின் சிறுகதை மேம்பாட்டுக் கருத்தரங்கொன்றில் திரு. சிவகுமார் முன் வைத்த கருத்துக்கள், எழுத்தாளர்கள் மத்தியில் ஓர் அலசலை ஏற்படுத்துவதற் குப் பதிலாக - ஆச்சரியத்தையே உண் டாக்கக் கூடியது என்பதை உணரக் கூடியதாயுள்ளது.
ஆதிகாலத்திலிருந்தே, மானுட ஜாதி தர்ம நெறிகளைக் கடைப் பிடித்து, அதன் வழி வாழ வேண்டும் என்று ஞானிகளும் அறிஞர்களும் கூறி வருகின்றார்கள். சிவகுமார் குறிப்பிட்டது போல, எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரைத் தெய்வம் வாட்டும், அடாது செய்பவர் படாது படுவர், நல்லவன் வாழ்வான், கேடு நினைப்பவன் கெட்டழிந்து போவான். பொறுத்தார் பூமியாள்வார், தர்மம் தலை காக்கும். இவையெல்லாம் வாழ்க்கைத்
தத்துவங்கள். நமது வாழ்வை மேம்படுத்த
இவைகளை அனுசரித்து வருகின்றோம். இவைகளை நாம் கடைப்பிடித்தொழுக வேண்டும் என்பதை வலியுறுத்தவே "மூத் தோர் சொல்வார்த்தை அமிர்தம்" என்றும் முத்திரை குத்தி வைத்திருக்கிறோம்.
இத்தகைய தர்ம நெறிப்பட்ட வாழ்க் கையில், இன்றைய எழுத்தாளர்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையிருப்பது மிகுந்த அயர்வூட்டுவதாயுள்ளது - என்று விரக்தியடைந்த நிலையில் கருத்து முன் வைக்கப்படுகின்றது. அதற்கு ஆதாரமாக, இன்றைய வாழ்க்கைச் சிக்கலைப் புரிந்து கொள்ளவோ, விளக்கவோ இத்தகைய கதைகள் முயல்கின்றனவா? என ஆதங் கப்படுகின்றார். இன்றைய சிருட்டிகள், புதி தாய் ஒரு சலனத்தை ஏற்படுத்துவதில்லை யென்றும், காலங் காலமாய்ச் சொல்லப் பட்டு வரும் அதே வலுவிழந்த கதைக ளைத் தருவது அவசியந்தானா? என்றும் கேள்வி எழுப்புகின்றார்.
இவற்றுக்கு அவர் கூறும் காரணம்: தப்புச் செய்கின்றவர்கள் எல்லோருமே தண்டனை பெறுகின்றார்களில்லையாம்.
தர்மம் எப்போதும் தலை காக்கின்றதா? பொறுத்தவர்கள் பூமியாள்கின்றார்களா? அப்பாவிகளுக்கு ஏன் கஷ்டங்கள் வந்து சேர்கின்றன? இப்படி அடுக்கிக்கொண்டே போகிறார்.
நல்ல கேள்விகள்.
வாழ்க்கை என்றால் என்ன? பளபளப் பான சறுக்கி ஓடும் பாதையா? அந்தப் பாதையில் ஒடிச் செல்வதுதான் வெற் றியா? இதற்கான பதில்களுக்கு நாம் ஆராய்ச்சி நடத்தத் தேவையில்லை. நம் கண்முன்னாலே பதில் இருக்கிறது. Life is not easy: but very interesting 6T6iral சொல்லி வைத்திருக்கின்றார்கள். வாழ் க்கை சுலபமானதல்ல; ஆனால் மிகவும் சிரத்தையானது. சிரத்தையோடு, தடைக ளைத் தாண்டி முன்னேறிச் செல்வதில் தான் வாழ்க்கையின் வெற்றி தங்கி இருக்கின்றது. அதுதான் மனதுக்கு மகிழ் ச்சியையும் நிறைவையும் தருகின்றது.
அதனைத்தான் இன்றைய எழுத்தாளர் கள் மட்டுமல்ல, பண்டைய எழுத்தாளர்க ளும் புராண-இதிகாச காலப் புலவர் பெரு மக்களும் எழுதி வைத்திருக்கின்றார்கள்.
*வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் செல்லக் குறுக்கீடுகள் வேண்டும் என்று நான் சொல்வதாக யாரும் கருதக்கூடாது. உலகில் பலவித சமூக அமைப்புக்கள், அந்த அமைப்புக்களுக்கேற்ற வாழ்க்கை முறைகள் இருப்பதனாலும், வல்லவர்கள் தமக்கேற்ப அந்த வசதிகளைப் பயன்படுத் திக் கொள்வதனாலும், ஏற்றத்தாழ்வு களை, இன்பதுன்பங்களை அனைவரும் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றின் அடிப் படையில்தான் தர்ம நெறிக் கருத்துக்கள் உருப்பெற்று வருகின்றன. இயற்கை வள த்தைப் பயன்படுத்தல், வர்க்க முரண்பாடு கள், இன, மத, மொழி பேதங்கள், சாதி பேதம் என்றெல்லாம் இவை விரிவடைந்த வண்ணமே உள்ளன. இவற்றை இல்லா தொழித்து சமத்துவ சமுதாயத்தை, சமா
- 17 س

Page 10
தான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எக்காலமும் பெரியோர்கள் பாடுபட்டு வருகின்றார்கள். பேனா தூக்கியவர்களின் பங்களிப்பும் இந்த உன்னத பணிக்காகவே காலங்காலமாக இடம் பெற்று வருகின்றது.
இருந்தும், ஒர் அயர்வுணர்ச்சி தோன்றி யுள்ளதாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதை யிட்டு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த அயர்வுணர்ச்சி கொள்ளும் பேனா தூக்கிகளுக்காக இரக்கப்படும் சிவகுமார் அடுத்து ஒரு விடிவெள்ளியையும் காட்டுகிறார்.
நம் நாட்டு படைப்பாளிகள் என்று பார்க் கின்றபோது, புலம் பெயர்ந்து சென்று அங் கங்கே இருந்து எழுதுகின்ற பலர்தான் எமக்கு இன்றைய கதைகளின் போக்கைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருக் கிறார்கள் என்பதுதான் அந்த விடிவெள்ளி யாகும்.
யுத்தக் கொடுமையினால் விடுவாசல் களை இழந்து, தொழிலற்று, பணப் பிரச் சினை கழுத்தை நெரிக்க, பசி பட்டினிக் கொடுமையிலிருந்து விடுதலை பெற நம்ம வர்கள் புலம் பெயர்ந்து போயுள்ளர்கள்: போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்க ளுள் நமது எழுத்தாளர்களும் உள்ளனர். போன இடத்தில், அவர்கள் ஏதோ தொழி லைப் பார்த்துக்கொண்டு, எழுத்துப் பணியி லும் ஈடுபடுகிறார்கள். எழுத்தாளன், பேனவை ஒரு மூலையில் போட்டு விட்டுச் சும்மா இருக்க முடியாதுதானே! அதனால் எழுதுகிறார்கள். அங்கும் தாம் அனுபவிக் கும் துன்ப துயரங்களை மேல்நாட்டு வர்க்கத்தினர் இழைக்கும் கொடுமைகளை, இனிய நிகழ்வுகள், கோலங்களை எழுதுகி றார்கள். அவற்றை விடுத்து, "இலக்கியம்” இலக்கியத்துக்காகவே என்ற கொள்கை யில் ஊறிப்போனவர்களும், தங்கள் பேன க்களை இனிய கற்பனை வளங்களுக்காக ஒட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அங்கு எழுதப்படும் கதைகள்தான் மனதைத் தொடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புலம் பெயர்ந்த இடங்களில் எழுதப் படும் கஷடதுன்பங்களை புலப்படுத்தும் கதைகள் மனதைத் தொடுகின்றன. அதே
மாதிரி இங்குள்ள கஷ்டதுன்பங்களை எழு தும் கதைகள் மனதைத் தொடாமற் போன தேன்? இங்கும் சில எழுத்தாளர்கள், சிருங் காரரஸம் சிந்தும் கதைகள் எழுதுகிறார் கள். அப்படி இருக்க, அங்குள்ள இனிப்புக் கதைகள் மட்டும் பாராட்டுப் பெறுவதேன்?
நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற எழுத்தலங்கார முறைகள் மேலை நாடுக ளில் இடம் பிடித்துள்ளன. என்ன சொல்கி றோம்? என்பது வாசகர்களுக்குப் புலப்பட முடியாத கோட்பாடு. சொல்லலங்காரம்! வார்த்தை ஜாலம்! அதுதான் இன்று நம்ம வர் சிலராலும் வியந்து போற்றப்படுகின் றது. பாமர வாசகனுக்கு அந்த இலக்கியம் புரியவே புரியாது. படித்த வாசகன், மனதை அங்குமிங்கும் அலைத்து, வாசித் துவிட்டு, ஒன்றும் புரியாத நிலையில் "புரிய வில்லையே! என்று சொன்னால் அடுத்த வன் தன்னைப் பற்றிக் குறை நினைப் பானே" என்ற தாழ்வுச் சிக்கலின் காரண மாக, ஆகா! அற்புதம்! என்று தலை நிமிர் த்திக் கொண்டிருக்கிறான்.
சுருங்கச் சொன்னால் மக்களுக்குப் புரியாத எழுத்து!
அதர்மத்துக்கு எதிரான - கொடுமைக ளுக்கெதிரான கருத்துக்களைப் பாமர வாசகன் படித்தறியக்கூடாதெனப் போடும் திரை! அதுதான் நவீனத்துவம், பின் நவீனத்துவம்.
கனடாவிலுள்ள நமது புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் "அரும்பு" என்ற பெயரில் சிறுகதைத்தொகுதி ஒன்றை வெளியிட்டுள் எார்கள். சில பழைய எழுத்தாளர்களின் படைப்புக்களில், தமது பிறந்த மண்ணில் தாம் பட்ட துன்ப துயரங்களும், புகுந்த மண்ணில் அனுபவிக்கும் மனம் ஒன்றாத வாழ்வு முறைகளும் சித்திரிக்கப்பட்டுள் ளன. அநேகமான படைப்புக்கள், நவீனத் துவ சித்திரிப்புத்தான். புரிந்து கொள்ள முடியவில்லை. ஓர் இளம் எழுத்தாளர், கரப்பான் பூச்சி என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியுள்ளார். கதையின் முடிவு என்ன என்பது விளங்கவில்லை என்று பதிப்பாசிரியரே குறிப்பிட்டுள்ளார். அந்தக் கதையில் ஒரு சம்பவம்:-
- 18 -

வீட்டுக்கு நண்பன் ஒருவன் வருகின் றான். வீட்டிலிருப்பவனுடன் உரையாட முடியாமல், அவன் மனைவியுடன் கதை க்க குசினிப்பக்கம் போகின்றான். கதாசிரி யர் பின்வருமாறு எழுதுகின்றார்.
சமையறையிலிருந்து கோழிக் குளம் பின் வாசனையுடன் நண்பனின் குரலும் வெளியில் வந்தது. அவளைத் தூக்கி இடுப்பில் வைத்துப் புரட்சிகரப் புத்திகளை ஊட்டிக்கொண்டிருந்தான்.
இங்கே எழுத்துப் புரிகிறது. அர்த்தம் புரியவில்லை. வந்தவன் மிக அந்நியோன் யமாக அவளோடு பேசிக் கொண்டிருந்த தையே எழுத்தாளர் அப்படிச் சித்திரிக் கிறார் போலும், இதுவும் நவீனத்துவம் தான்! இந்த மாயை நமது நாட்டிலும் பரவப் பார்க்கின்றது.
எழுத்தாளன் கையில் பேனா எதற்கு? ஆதிகாலம் தொட்டு இன்றுவரை - எழுத் தாணியைத் தூக்கினாலென்ன எழுதுகோ லைத் தூக்கினாலென்ன? அக்கிரமங்களை வெட்டி வீழ்த்தப் பயன்பட்ட கூரிய ஆயுதம் அதுதான். வாளினும் வலியது பேனா! ஆதலால் எவரும் வார்த்தை ஜாலம் பண்ணவில்லை. அதர்மம் தறிகெட்டுத் தலை தூக்கிய போதெல்லாம், அந்த வாள் அதனை வெட்டிச் சாய்த்துத் தர்ம த்தை நிலைநாட்டியிருக்கிறது. எழுத் தாளன் பெருமைப்படவேண்டும்!
ஒரு சேதியைத் தெளிவுபடச் சொல்ல, ஒரு கருத்தைத் தயக்கமின்றி முன்வைக்க மொழி பயன்பட வேண்டும். அது எந்த மொழியாயிருந்தாலும் சரிதான். சொற் சிலம்பம் தேவையில்லை. எளிய, இனிய, சுத்தமான தமிழில் எழுதப்படும் கதைக ளாய் இருந்தால், அது எவர் நெஞ்சை யும் தொட்டு, கருத்துக்கள் ஆழப் பதிந்து, வாசகள் மனதில் ஒரு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. விழிப்புணர்ச்சி, அவனைச் சரியான பாதைக்கு இட்டுச் செல்லும்.
இங்குள்ள வாரப் பத்திரிகைகளும், கதைகளைத் தெரிவு செய்வதில் குறை களை மேற்கொள்கின்றன என்று குற்றஞ் சாட்டப்படுகின்றது. இலட்சிய நோக்கோடு
எதிர்காலம் பற்றி தெளிவற்ற குழப்பம்
ஒருவரின் உணர்வுகள் அவரது அல்லது அவளது எண்ணத்திற்கு ஆதாரமாக அமையும். அதேபோல எண் ணங்கள் செயற்பாட்டிற்கு அஸ்திவார மாக அமையும். இந்த செயல்பாடு பழக்கமாக மாறி, அதுவே பின்பு
ஒருவரது நடத்தையாக மாறுகிறது.
இக்கால இளைஞர்களுக்கு பல விஷயங்களை வீட்டில் இருந்து கொண்டே அறியும் வகையில் விஞ்ஞா னம் வளர்ந்திருக்கிறது. அதேபோல தொலை நோக்கற்ற சிந்தனை, தெளி வற்ற செயல்பாடு ஆகியவையும் அவ னுக்கு எளிதாக தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இது படிப்பில் தடு மாற்றம், எதிர்காலத்தைப் பற்றிய தெளி வற்ற குழப்பம், தன்னைப் பற்றிய தவ றான கணிப்பு, மற்றவர்கள் பற்றிய கவலையற்ற தன்மை ஆகிய அவ னையே அழிக்கவல்ல பாதையை நோக்கியும் ஒரு இளைஞனைத் தள்ளக் கூடும். மனோதத்துவ நிபுணர் மாத்ருபூதம்
வெளிவரும் சஞ்சிகைகள் வேறு: ஜனரஞ்ச கப் பத்திரிகைகள் வேறு. புதிய கருத்துக் களை, புரட்சிகரமான சிந்தனைகளைப் பரப்பவே, இலட்சிய நோக்கோடு சஞ்சிகை கள் வெளியிடப்படுகின்றன. இவற்றுக்கு மக்கட் பலம் இல்லையென்றால், பண பலம் இருந்தாலும் அவை முன்செல்ல முடிவதில்லை. அதேவேளை, அத்த கைய இலட்சிய வேகம் கொண்ட எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை ஜனரஞ்சகப் பத்திரி கைகளுக்கு அனுப்பினால், அவை பிரசுரம் பெறுவதில் பின்னடைவு அடைகின்றன. ஜனரஞ்சகப் பத்திரிகைகள், ஜனரஞ்சகப் படைப்புக்களுக்கே முதலிடம் கொடுக்கின் றன. அவற்றை நாம் குறை சொல்ல (փլգս III35l.
எத்தகைய பின்னணியிலும், நிலை மையைப் புரிந்து கொண்டு எழுத்தாளன் தன் பங்களிப்பைச் செய்யக் கடமைப் ULL6).j65. என்.கே. ரகுநாதன்
- 19 -

Page 11
புதிய புத்தகங்கள் 1999 ஆரம்பம் முதல் வெளிவந்த நூல்களின் விபரங்களைத்தந்தால் பயனுள்ளதாக இருக்குமென பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர். அதன்படி முழுமையாகத் தொகுத்தளிக்க முயல்கிறோம்.
01. விமர்சனக் கட்டுரைகள்
(கட்டுரைகள்) முகம்மது சமீம 02. ஈழத்து தமிழ் நாவல்களிற் சில.
(கட்டுரைகள்) கே. எஸ். சிவகுமாரன் 03. எனது வானொலி நாடகங்கள்
(ஒலி நாடகங்கள்) ஏ.ஏ. ஜூனைதீன் 04. எழதப்படாத கவிதைக்கு வரையப்
படாத சித்திரம் (தன் வரலாறு) டொமினிக் ஜீவா 05. சிறுவர் பிரயானம்
(சிறுவர் இலக்கியம்) அ. முருகேசம்பிள்ளை 06. மீண்டும் வசிப்பதற்காக
(கவிதை) மேமன் கவி 07. கருக்கொண்ட மேகங்கள்
(நாவல்) . L. ജൂ'ങ്ങ് 08. வரலாற்றுத் தமிழும் தமிழரும்
(ஆய்வு) திக்கவயல் தர்மகுலசிங்கம் 09. கலையாத மேகங்கள்
(நாவல்) ஒலுவில் அமுதன் 10. புதுமை
(கவிதை) ஏ. இக்பால் 11. பள்ளு இலக்கியமும்
வாழ்வியலும் (ஆய்வு) துரை மனோகரன் 13. ஸ்ருதி தேடும் சந்தங்கள் (மெல்லிசைப் பாடல்) அக்கரையூர் அப்துல் குத்தூஸ் 13. மட்டக்களப்பு காவியம்
பாமரர்
(காவியம்) வாகரைவாணன் 14. வெளிக்குள் வெளி
(கவிதை) கல்லூரான் 15. நீதிபதியின் மகன் (மொழிபெயர்ப்பு) ராஜ பூரீகாந்தன் 18. விடைக்குள் வராத வினாக்கள்
(கவிதை) g5 reiss bass 6m)UT 17. காட்டில் கலவரம்
(சிறுவர் இலக்கியம்) ச. அருளானந்தம் 18. கசின் சிறுகதைகள் (சிறுகதைகள்) க. சிவகுருநாதன் 19. இசை நாடகக் கூத்து
(கலைஞர் வரலாறு) செல்லையா மெற்றாஸ்மெயில் 20. அவுஸ்திரேலிய பயனக்கதை
(பயணக்கட்டுரை) தி. ஞானசேகரன் 21. பொன் சிவானந்தன் கவிதைகள்
(கவிதை) பொன் சிவானந்தன்
22. இலங்கையின் மலையக தமிழ்
நாவல்கள் ஓர் அறிமுகம்
க. அருணாசலம் 23. பாலர் விளையாட்டுக்கள்
(சிறுவர் இலக்கியம்)
சபா ஜெயராசா 24. பாலர் கதைகள்
(சிறுவர் இலக்கியம்)
a LJП Gigu JIIан 28. ஈன்ற பொழுதில்
(சிறுகதை)
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 26. மலையக அரசியலும் சமுக வாழ்வும்
(ஆய்வு)
சந்தனம் சத்தியநாதன் 27. பெண்னே போற்றி
(சிறுகதை)
எஸ். நஸ்ருத்தீன்
20 -

28. கொட்டியாரக் கதைகள்
(சிறுகதைகள்) வ.அ. இராசரத்தினம் 29. பொச்சங்கள்
(அனுபவப் பதிவு) வ. அ. இராசரத்தினம் 30. அபத்த நாடகம்
(நாடகம்) ஜோர்ஜ் சந்திரசேகரன் 31. குறிஞ்சி நாடன் கவிதைகள்
(கவிதை) க. வெள்ளைச்சாமி 32. பாடுவோம் பயில்வோம்
(சிறுவர் இலக்கியம்) ந. தருமலிங்கம் 33. மனத்தூறல்
(சிறுகதை) ந. பார்த்திபன் 34. காணாமல் போனவர்கள்
(கவிதை) அஷ்ரஃப் சிஹாப்தீன் 35. பிறந்த மண்
(சிறுகதை) புர்கான். பி. இப்திகார் 36. புதிய வீட்டில் (நாவல்) சோ. ராமேஸ்வரன் 37. கண்ணகி சரிதையும் வரலாறும்
(ஆய்வு) க.இ. குமாரசாமி 38. இலக்கிய கருவூலம்
(கட்டுரை) க. சொக்கலிங்கம்
39. இலக்கியப் பார்வை
(கட்டுரை) வே. சுப்ரமணியம் 40. மெல்லத் தமிழ் இனி.
(சிறுகதை) செ. கந்தசாமி 41. தமிழ் ஆய்வியலில்
கலாநிதி கைலாசபதி (ஆய்வு) நா. சுப்பிரமணியம் 42. இஸ்லாமிய கலைகள்
(கட்டுரை)
மு. ச. றம்சீன் 48. பாலத்தின் அடியில் (மொழி பெயர்ப்பு) சுந்தரம் செளமியன் 44. ஒரு துளி
(நாவல்) ஒ.கே. குணநாதன் 45. உரைநடையில் கலேவல
(மொழி பெயர்ப்பு) ஆர். சிவலிங்கம் 46. Lurraoir LDaoir
(சிறுவர் இலக்கியம்) தமிழவேள் 47. அல்லாமா இக்பாலின்
இதயப் புதையல் (மொழி பெயர்ப்பு) எஸ்.எம்.ஏ. ஹஸன் 48. தங்கத் தாமரை
(சிறுவர் இலக்கியம்) செ.யோகநாதன் 49. அழியும் கோலங்கள்
(சிறுகதை) புலோலியூர் க. தம்பையா 30. இனத்துக் கவிதைகள்
(கவிதை) வைரமுத்து சுந்தரேசன் 51. காத்திருப்பு (நாவல்) தெணியான் 52. கலைக்குரல்கள்
(தொகுப்பு) வி.என்.எஸ். உதயச்சந்திரன் 53. சந்திப்பும் சிந்திப்பும்
(தொகுப்பு) கே.பி. நடனசிகாமணி 54. மலரும் மலர்கள்
(சிறுவர் இலக்கியம்) யசோதா பாஸ்கரன் 55. பாரதியின் குயில் பாட்டின் மர்மம்
(ஆய்வு) எஸ். கருணானந்தராஜா 56. நாவலர் மரபு (கட்டுரை) இரா.வை. கனகரத்தினம்
- 21 -

Page 12
கண்ணிவெடியின் கோரத்தாண்டவம்
போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகளுக்கு கண்ணிவெடிகளை விநியோ கிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. உலகில் உற்பத்தி செய்யப் படுகின்ற கண்ணிவெடிகளில் மூன்றில் இர ண்டு பங்கினை அமெரிக்க ஏகாதிபத்தி யம் உற்பத்தி செய்து ஏனைய நாடுகளு க்கு விநியோகித்து வருகின்றது. கண்ணி வெடிகளால் பெருமளவில் பாதிக்கப்படு வன ஆசிய ஆபிரிக்க நாடுகள்தான். ஆப்கானிஸ்தானும் கண்ணிவெடியால் பாரியளவு பாதிக்கப்படுகின்றது.
9 1975ம் ஆண்டிலிருந்து 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக் கின்றனர். ஒவ்வொரு நாளும் 70 பேர் வரை அல் லது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருவர் வீதம் மக்கள் கண்ணிவெடியி னால் கொல்லப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருப்பதிலும் பார்க்க 25 மடங்கு வேகத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. 9 நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக் கும் கண்ணிவெடிகள் வெடிப்பதனால் வருடாந்தம் 26000 பேர் அங்கவீனர் களாகின்றனர். கண்ணிவெடிகள் வெடிப்பினால் ஆண்டு தோறும் 10,000 சிறுவர்கள் கொல்லப் படுகின்றனர். கம்போடியா, ஆப்கானிஸ் தான், சோமாலியா ஆகிய நாடுகளி லுள்ள சிறுவர்கள் தான் மிக மோசமா கப் பாதிக்கப்படுகின்றனர். 9 1997ம் ஆண்டு டிசம்ப்ர் மாதம் கனடா வின் பிரதான நகரான ஒட்டாவாவில் கண்ணிவெடி தடை உடன்படிக்கை ஒன்றில் 121 நாடுகள் கைச்சாத்திட்டன. அன்றிலிருந்து இன்று வரை 136 நாடுகள் இன்று கண்ணிவெடி தடை
உடன் படிக் கையில் கைச் சாத் திட்டுள்ளன. உடன்படிக்கையில் கைச்சாத்திடாத நாடுகளில் 25 கோடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள
நாடுகளில் 3 கோடி வரையிலான கண்ணிவெடிகள் இருக்கின்றன. 70 நாடுகள் வசமுள்ள நிலத்துக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக் கின்ற வெடிக்காத கண்ணிவெடிகளின் எண்ணிக்கை 7 கோடியாகும் என்று எச்.ஆர்.டபிள்யூ நிறுவன ஆய்வொன்று கூறுகின்றது. ஆசிய நாடான கம்போடியாவில் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை 70 இலட்சம். இது அந்த நாட்டின் சிறுவர் களின் தொகையை விட இரண்டு மடங் காகும். தென் ஆபிரிக்க நாடான அங் கோலாவில் நடந்து கொண்டிருக்கின்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒரு கோடி 50 இலட்சம் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
கம்போடியாவிலும், ஆப்கானிஸ்தா னிலும் நிலக் கண்ணிவெடிக் காயங்களுக் காக சிகிச்சை பெறுவோரில் 25 வீதமா னோர் சிறுவர்கள். வடசோமாலியா வைத்திய சாலையில் கண்ணி வெடிக் காயங்களுக்காக சிகிச்சை பெறுவோரில் 75 வீதத்தினர் சிறுவர்கள்.
1999 மார்ச் மாதத்தில் ஒட்டாவாவில் நடை பெற்ற மகாநாட்டில் கண்ணிவெடிகள் உற் பத்தி செய்வதை தடை செய்வதற்கான பிரகடனத்தில் கைச்சாத்திட்ட பின்பு, அவ ற்றை உற்பத்தி செய்து வந்த 54 நாடுக ளில், தற்போது அவற்றை உற்பத்தி செய் யும் நாடுகளின் எண்ணிக்கை 16 ஆகக் குறைந்துள்ளது. அந்த 16 நாடுகளில் கண்ணிவெடி உற்பத்தியில் அமெரிக்கா இன்னும் முன்னணியில் தான் நிற்கின்றது.
- 22

தணிக்கையா? தடையா?
பிரபல திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதான அவர்கள் "புறஹந்த களுவற" (பூரணசந்திரனில் இருட்கறை) என்ற ஒரு சிங்களத் திரைப்படத்தை நெறிப்படுத்தித் தயாரித்துள்ளார். இப்படம் மனித நேயம் மிக்கது.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட தனது மகன் உயிருடன் இருக்கின்றானா அல்லது இறந்துவிட்டானா என்பதை அறி யத் துடிக்கும் ஒரு தந்தையின் தவிப்பை வெற்றிகரமாக வெளிக் கொணர்ந்தது "பிறவி" என்ற தமிழ்ப்படம். இதேபோல, தற்போது எமது நாட்டில் நடந்து கொண் டிருக்கின்ற யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கின்ற தங்கள் பிள்ளைகளைக் காண் பதற்குப் பெற்றோர் தவித்துக் கொண்டிருப் பதை புறவந்த களுவற என்ற திரைப்படம் வெற்றிகரமாக வெளிப்படுத்துகின்றது.
புறவந்த களுவற திரைப்படம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி திரையிடப்படவிருந் தது. இப்படத்தைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பொறுப்பேற்று தணிக்கை சபையின் பார்வைக்குத் திரையிட்டு, சபை யின் அனுமதியையும் பெற்றுக் கொண்ட பின், படத்தைத் திரையிடுவதற்கு வேண் டிய சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்டது. இப்படம் சர்வதுேச திரைப்பட விழாக்களில் 4 விருதுகளையும் பெற்றிருந் தது. இப்படத்தைப'பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இப்படம் திரையிடப்படுவதை நிறுத்தி வைக்கும்படி வடக்கு-கிழக்கு புனர்வாழ்வு அமைச்சர் சரத் அமுனுகம ஒரு கடித
த்தை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன தலைவருக்கு திடீரென எழுதியிருந்தார். இன்று நாடு யுத்த நிலையில் இருக்கின்ற சூழ்நிலையில் இப்படத்தைத் திரையிட முடியாதென்றும், நிலைமை சீரடைந்த பின்னர் இது திரையிடப்படும் என்றும் இத் திரைப்பட நெறியாளரும் தயாரிப்பாளரு மான பிரசன்ன விதானக்கு அறிவிக்கும்படி திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் கேட்கப்பட்டுள்ளார்.
புறவந்த களுவற என்ற திரைப்படத் திற்குப் பதிலாக "ராஜ சேவ பினிசயி” (அரச சேவைக்காக) என்ற படம் திரை யிடப்பட்டது. இது அரசியல் கட்சிப் பிரசாரம் சம்பந்தமான ஒரு படம்.
புறஹந்த களுவற என்ற படம் திரையி டப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது சம்ப ந்தமாக பொது மக்கள் மத்தியில் சந்தே கமும் பல கேள்விகளும் எழுந்துள்ளன.
வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு அமைச் சரினால் திரையிடுவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இப்படத்திற்கு அரசினால் நியமிக்கப்பட்ட திரைப்படத் தணிக்கை சபையினால் படம் திரையிடுவதற்கான சான்றிதழை எப்படி வழங்க முடியும்?
யுத்தம் சம்பந்தமான திரைப்படமாய் "புறஹந்த களுவற" இருப்பதால் இப்படம் திரையிடப்படுவதா அல்லது திரையிடாமல் தடுத்து வைப்பதா என்ற முடிவை பாது காப்பு அமைச்சர் எடுக்க வேண்டும். இதை விடுத்து வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைச்சரினால் இந்த விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்?
- 23

Page 13
சர்வதேச திரைப்பட விழாவில் நா விருதுகளைப் பெற்ற ஒரு கை திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ட் இந்த நாட்டு மக்களுக்கு ஏன் மறுக்கட் கின்றது? இச்செயல் மக்களின் கலt உரிமையைப் பறிக்கின்ற செயலி இருக்கின்றதல்லவா?
தணிக்கை சபையால் திரையிடுவத அனுமதியளிக்கப்பட்டு திரையிடுவத திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் க ஒதுக்கீடு செய்யப்பட்ட படத்தை திரை வதிலிருந்து தடுத்து நிறுத்தி விட்டு ட ளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டி கின்ற வேளையில் அரசியல் கட்சிப் பி ரப் படத்தை எக்காரணத்தையிட்டு திை டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டி கின்றது?
தேசிய திரைப்படத் தயாரிப்பை ஊ விப்பது, கலைப்படத் தயாரிப்பை ே படுத்துவது எமது திரைப்படக் கூட் தாபனத்தின் பிரதான நோக்கங்கள் எ திரைப்படக் கூட்டுத்தாபன சட்டவிதிகள் விதந்துரைக்கப்பட்டிருக்கின்றது. இத மாறாக, சர்வதேசிய விருதைப் டெ ஒரு கலைத்துவமான படத்தை திரை வதிலிருந்து தடுத்து நிறுத்திய செ திரைப்படக் கூட்டுத்தாபன சட்டமூலத்தி முரணான நடவடிக்கையல்லவா?
துர்அதிஷ்டவசமாக இந்த ஒரு தை பட்சமான செயலுக்கு எதிராக. திரைப்ப தயாரிப்பாளர்களுக்கும் நெறியாளர்களு கும். திரைப்படக் கலைஞர்களுக்கும் ட ப்பை ஏற்படுத்துகின்ற நடவடிக்கை எதிர்த்து குரலெழுப்பாமல் திரைப்ப கலைஞர்கள் மெளனமாக இருப் கவலைக்குரிய விடயமாகும். திரைப்ப கலைஞர்கள் ஸ்தாபன ரீதியாக ஒன்று டிராமைதான் இதற்கு முக்கிய கார மாகும். இச்சந்தர்ப்பத்திலாவது திரைப்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு பலம தமக்கென ஸ்தாபனத்தை அமைக்கு மு முயற்சிகளை மேற்கொள்வது அவசிய

ன்கு லத் JULib JLIG éH[]
Ü 88
ற்கு
6)
jt t'i
IL35
T6. முன் பம்,
بزر
i