கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.12/2001.01

Page 1
டிசம்பர் 2000/ஜனவரி 2001
 
 

செய்திமடல்

Page 2
அட்டைப்படக் கவிதை
வருவான் கலைவாதி
கண்னை உறுத்தும் முள்ளாய்த்தைக்கும் கம்பிய் பின்னல்வதைசெய்யும் - முட் கம்பியின் பின்னால் கதை தொடரும்: கதையின் பின்னால் கடல்சிலிங்க்கும்! கண்ணித் துளியின் உஹlணத்தீயில் கடலின் அடியில் உலை கொதிக்கும்! வண்ணநிலவும் கருமை பூசி தன்னைய்போர்த்திஇருளாக்கும்! வட்ட முகத்தின் சோகத் துளசு தட்டித்துடைத்தால் நிலவுதிக்கும்! வண்டுக் கண்கள் மயக்கம் விலக்கி கொள்ளித்தணலாய்க் கொதித்தெழும்பும்! சென்ற கணவன் திரும்பிவருவான் என்றே உணர்வு இழத்துரைக்கும் - அவன் வென்று வருவான் வென்று வருவான்! கொண்டு வருவான் பலஸ்தீனம்!
விபவி அன்பர்களுக்கு:
விபவி கலை இலக்கிய மடலை வாசகர்களுக்கு அனுப்புவதள்குரிய அஞ்சல் முகவரிகளடங்கிய பட்டியலைப் புதுப்பிக்கவிருக்கின்றோம். இதற்கு உதவுமுகமாக, தயவு செய்து உங்கள் சரியான முகவரியை ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி எமக்கு அனுப்பி வையுங்கள். இவ்வாறு முகவரியைப் புதுப்பித்துக் கொண்டவர்களுக்கு மாத்திரமே அடுத்து வரும் விபவி இதழ்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபவி இலக்கிய மடலில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டினை உறுதி செய்யும் ஓர் அடையாளமாக ரூபா 2/= பெறுமதியுள்ள பத்து முத்திரைகளும் விபவிக்கு நீங்கள் அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம். விபவியின் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஆர்வமுடைய புதிய அன்பர்கள் தாம் விபவி மலரைப் பெற விரும்பினால் எம்மடன் தொடர்பு கொள்க.
Vibavi Cultural Cuntre, 8114, Pagoda Road, Nugegoda.

சுதந்திர இலங்கையில் கல்வி
கல்வியின் பிரதான நோக்கம் நற்பிரஜை களை, அதாவது சிறந்த குடிமக்களை உருவாக்குவதுதான். பாடசாலைக்கல்வி மூலம்தான் இதனைச் சாத்தியமாக்க முடியும். மக்களின் வரிப்பணத்தில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எமது நாட்டில் கல்விக்காகச் செலவழிக்கப்படுகின்றதே. இதன் பலாபலன் தான் என்ன? எமது நாட் டில் சகலருக்கும் கல்வி கிடைக்கின்றதா? "எல்லோருக்கும் கல்வி' என்று ‘ஐக்கிய நாடுகள்’ ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள் ளது. இது எமது நாட்டில் எந்த அளவு நிறைவேற்றப்பட்டுள்ளது? இதன் பலாபலன் தான் என்ன?
கல்வி என்றால் என்ன? கல்வி என்பது இன்றியமையாத மனித உரிமை, சமூக மாற்றத்துக்கான உந்து சக்தி, வறுமையை ஒழித்து பெண்ணுக்கு வல்லமை வழங்கி சிறுவர்களை ஏமாற்றும் பாங்கான ஆபத் தான ஊழியத்திலும் பாலியல் இச்சையிலிரு ந்து பாதுகாத்து, மனித உரிமையையும் ஜனநாயகத்தையும் பரப்பி, சுற்றாடலைப் பேணிக்காத்து, சனப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்தி, உலகை மேன்மையடையச் செய்வ தற்கான வலிமை மிக்க ஒரே சாதனம் கல்வியே. சர்வதேச சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் வழிகாட்டுவது கல்வியே என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோஃபி ஏ அனான் பிரகடனப்படுத்தியுள் ளர். எமது நாட்டில் பாடசாலைக் கல்வியின் மூலம் இந்த இலக்கை நோக்கி நாம் எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளோம் என்று எம்மை நாமே கேட்டுப் பார்க்க வேண்டும்.
கல்வி என்பது உருமாற்றும் வல்லமை மிக்க மனித உரிமையாகும். சுதந்திரம், ஜனநாயகம் நிலைபேறான மேம்பாடு யாவற் றுக்கும் அதுவே அத்திவாரம் என யுனிசெவ் அறிக்கையின் முன்னுரையில் கூறப்பட்டுள் ளது. ஆனால், இலங்கை உள்பட வளர்முக நாடுகளில் 130 மில்லியன் பிள்ளைகளுக்கு (இவர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர் பெண்பிள்ளைகள்) இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று 1999 ஆம் ஆண்டுக்குரிய உலகச் சிறுவர் நிலை என்னும் யுனிசெவ் அறிக்கை கூறுகின்றது. மேலும், சுமார் 1 பில்லியன் மக்கள் அல்லது உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கி னர் எழுத்தறிவற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பெண் கள் என்றும் இவ்வறிக்கை கூறுகின்றது. இந்நிலையில் எமது நாட்டைப் பொறுத்தள வில் கல்வியின் நிலை என்ன? குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் கல்வியின் மூலம் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அல்லது பலா பலன்கள் பற்றி நாம் ஆராய்வது பயன்தரத்தக்கது. தேசிய நெருக்கடிகள்
இன்று எமது நாடு பல்வேறு பாரிய சமூக நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற, எத்தரப்பினராலும் வெற்றி பெற முடியாத இனவாத யுத்தம் அனுமான்வாலாக நீண்டு சென்று கொண்டே யிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி

Page 3
உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக் கின்றது. வறுமையினாலும் விலை வாசி உயர்வாலும் மக்கள் திணறிக் கொண்டிருக் கின்றனர். கொள்ளை, கொலை, கொந்தறாத் துக் கொலைகள், போதைவஸ்துப் பாவனை, பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. சுரண்டலும், சூறை யாடலும் உச்சக் கட்டத்தை அடைந்துள் ளன. திருவாளர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா வின் தாராளவாத பொருளாதாரக் கொள்கை யின் மூலம் பல்தேசியக் கம்பனிகள் எமது நாட்டின் மனித வளத்தையும் இயற்கை வளங்களையும் நவகாலனித்துவ ஏஜண்டுக ளான பல்தேசியக் கம்பனிகள் பகற் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. மனித விழுமியங்கள் என்றோ மரித்து விட்டன. கலை, கலாச்சாரம், எல்லாமே சீரழிந்து விட்டன. இவை அனைத்திற்கும் அடிப்படைக்காரணம், சுதந்திரத்திற்கு முன்னிருந்த காலனித் துவக் கல்வி மாத்திரமல்ல, சுதந்திரத்திற்குப் பின்னர் நாம் கடைப்பிடித்து வந்த தவறான கல்விக் கொள்கைதான் பிரதான காரணமாகும். சுதந்திரத்திற்கு முன்
சுதந்திரத்திற்கு முன்னர், பிரித்தானிய காலனித்துவ வாதிகளால் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில மூலக் கல்வி ஓரளவு நற்பயனைத் தந்துள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் அக்கல்வி முறை யின் பிரதான நோக்கம் காலனித்துவவாதி கள் தமது அரச நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதேயாகும். எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உற்பத்தித் துறைக்கும், கல்விக்கும் எதுவித தொடர்பும் இருக்கவில்லை. காலனித்துவ அரச நிர்வா கத்தைக் கொண்டு நடத்துவதுதான் அன் றைய கல்வி முறையின் பிரதான நோக்க மாக இருந்தது. அரசாங்க நிர்வாகிகளையும், லிகிதர் மார்களையும் (கிளாக்கர் மார்) உருவாக்குவதுதான் பிரதான நோக்கமாக அன்று இருந்தது. சிறந்த குடிமக்களையோ
நற்பிரஜைகளையோ உருவாக்குதல்ல. அடிமை மனப்பான்மையுடைய கறுப்புத்துரை மார்களை உருவாக்குவதுதான் அன்றைய கல்விக் கொள்கையின் நோக்கம். சுதந்திர இலங்கையில்
நாடு சுதந்திரமடைந்த பின்னர் கடைப் பிடிக்கப்பட்டு வந்த கல்விக் கொள்கையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதுதான். குறிப்பாக 1956 இன் பின் ஏற்படுத்தப்பட்ட சுயமொழிக்கல்வியினால் ஓரளவு பயன்கிட்டி யுள்ளதுதான். ஆனால் நாம் எதிர்பார்த்தளவு பாரிய மாற்றங்களோ பலாபலன்களோ ஏற்பட வில்லை. காரணம் என்னவென்றால் சுதந்திர மடைந்த பின்னர், யூ.என்.பி. ஆட்சிக்காலங்க ளிலும் சரி, சுதந்திரக்கட்சி பொதுசன மக் கள் கட்சி அரசாங்கங்களின் ஆட்சிக்காலங்க ளிலும் சரி ஏற்படுத்தப்பட்ட சகல கல்விச் சீர்திருத்தங்களும் கல்வி நிர்வாகம் நிறுவ னம் சம்பந்தப்பட்டவைகளாகவும் கல்வி (pGO356it (Administrative Institutional Educational Methods) also bgbitt 606.juT&6pp மாத்திரம்தான் இருந்தன. மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் அனைத்தும் கல்விக் கொள்கையில் எதுவித அடிப்படை மாற்றங்களையும் செய்யவில்லை. இச்சீர்திரு த்தங்கள் ஒரு உருப்படியான முழுமையான தேசியக் கல்விக் கொள்கையை வகுக் கவோ அதை நோக்கிச் செல்லவோ வழிவகுக்கவில்லை. உற்பத்திக்கும் கல்விக்கும் தொடர்பில்லை
எமது நாட்டின் பொருளாதாரத் துறையில் பிரதான இடத்தை வகிப்பது விவசாயமும் மீன்பிடியுமாகும். எமது மக்களில் பெரும்பான் மையினர் தமது ஜீவனோ மாயத்திற்காக விவசாயத் தொழிலைத்தான் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் எமது நாடு கட லால் சூழப்பட்ட ஒரு தீவு மீன்வளம் நிரம்பி யது. இந்த இரு துறைகளையும் மேம்படுத் துவதற்கு எமது கல்விக் கொள்கையில் ஏதாவது உருப்படியான ஸ்தானம் கொடுக்

கப்பட்டுள்ளதா? இத்துறைகளுக்கும் எமது கல்விக் கொள்கைக்கும் ஏதாவது நெருங் கிய தொடர்பு ஏற்பட்டுள்ளதா? இத்துறைகள் சம்பந்தமான அபிவிருத்திக்கு ஏதாவது தேசியக் கொள்கை உண்டா? பெயரளவில் விவசாயத்திணைக்க ளத்தையும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தையும் வைத்திருக்கின்றோ மேயொழிய இத்துறை சம்பந்தமாக பாடசா லைகளையும், உயர் கல்வி நிறுவனங்களை யும் இணைத்து செயல்பட வைக்கும் முழுமையான தேசியக் கல்விக் கொள்கை இன்றுவரை வகுக்கப் படவில்லை. சமுகப் பொறுப்புக்களில்லை
எமது கல்வியின் மூலம் உருவாக்கப்படு கின்ற ஆசிரியர்கள், அரசாங்க நிருவாகிகள், தொழிசார் நிபுணர்கள் - அதாவது டாக்டர் கள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர் கள் ஆகியோர் சமூகப் பொறுப்பற்றவர்க ளாக இருக்கின்றனர். சமூகத்திற்கும் இவர்க ளுக்கும் எதுவித தொடர்புமில்லை. இவர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் உருவாக்கப்படுகின்றார்கள். ஆனால் மக்களின் சேமநலனிலும் மேம்பாட் டிலும் இவர்களுக்கு எள்ளளவும் கரிசனை யில்லை. மாறாக மக்கள் மீது தமது அதி காரத்தைச் செலுத்துவதையும், பணம் பண்ணுவதையும் சமூகத்தில் உயரிய அந்தஸ்தை வகிப்பதையும்தான் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளனர். மக்களுக் குச் சேவை செய்ய வேண்டும், அவர்களது வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ எள்ளளவேனும் இவர்களிடமில்லை. குறிப்பாக மக்களுடைய வரிப்பணத்தில் படித்த மருத்துவ நிபுணர்க ளில் பெரும்பான்மையினர் யுத்தக் கெடுபிடி களால் காயப்பட்டோ நோயினால் பாதிக்கப் பட்டோ அல்லல்படும் இந்த இக்கட்டான வேளையில் பசுமையையும் உல்லாச வாழ் வையும் தேடி வெளிநாடுகளுக்கு பறந்து விட்டனர். இங்கு இருப்பவர்களிலும் சிலர் அரச மருத்துவ மனைகளில் குறைந்தபட்ச நேரம் வேலை செய்து விட்டு தனியார்
மருத்துவ மனைகளுக்கு காக்கைகளைப் போல பறந்து திரிகின்றனர். அதேவேளை இங்குள்ள சில மருத்துவர்கள் யுத்தப் பிரதேசங்களில் பல நெருக்கடிகள் மத்தி யில் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றத்தான் செய்கி றார்கள். இப்படிப்பட்ட மருத்துவர்கள் தமது சேவைகளின் மூலம் மக்கள் இதயங்களில் நிரந்தரமாய் பதிவாகியுள்ளனர்.
புலமைத்துவ வறுமை
சமூகத்தில் உயரிய அந்தஸ்தை வகுக்க வேண்டும் என்ற நோக்குடன் அநேக பெற்றோர் தமது பிள்ளைகளை தொழில்சார் நிபுணத்துவர்களாக (Professionals) வருவதற் குரிய கல்வியை திணிக்க முயற்சித்து வந்துள்ளனர். குறிப்பாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள் ஆகிய தொழிற்துறையையே தமது பிள்ளை கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வி யூட்டி வருகின்றனர். இத்துறைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஏனைய துறைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. கல்வியி யல், சமூகவியல், மானிடவியல், வரலாற்றி யல், பூகோளவியல் போன்ற மற்றெல்லாத் துறைகளிலும் புலமைத்துவ வரட்சி ஏற்பட்டு ள்ளது. பணம் பண்ணுவதையும் அதிகாரம் செலுத்துவதையுமே குறிக்கோளாகக் கொண்ட மனப்பான்மை எமது சமூகத்தின் புலமைத்துவத்தின் ஆரோக்கியத் தன் மையை பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. கடந்தகால கல்விமான்களும் சமுகக் கல்வியும்
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இங்கி லாந்து சென்று ஆங்கிலக் கல்வியைப் பெற்ற சில கல்விமான்கள் சமூக உணர்வு உடையவள்களக இருந்தனர். இவர்கள் சில முற்போக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். ஏகாதிபத்திய எதிர்பார்ப்பாளர்களாக இருந்த இவர்கள் திண்டாமை ஒழிப்பு, தேசிய

Page 4
ஒருமைப்பாடு போன்ற முற்போக்கு நடவடிக் ககைளிலும் ஈடுபட்டனர். அதே வேளை இவர்கள் ஆசிரிய சமூகத்தின் சிறந்த உதாரண புருஷர்களாகவும் கல்வித்துறை யின் தூண்களாகவும் திகழ்ந்தனர். இவர்கள் தம்மைப் போன்ற முற்போக்கு எண்ணம் கொண்ட சமூக உணர்வுடைய ஒரு பரம்ப ரையை உருவாக்க முனைந்தனர். சமுகச் சிந்தனையை உருவாக்கக் கூடிய வாசிப்பு, கருத்தாடல்கள் போன்ற செயற்பாடுகளினூ டாக ஒரு புதிய தலைமுறையை உருவாக் குவதில் ஈடுபட்டனர். ஆனால் இவர்கள் இந்த புதிய பரம்பரையை ஸ்தாபன மயப்ப டுத்தத் தவறியமையால் உருப்படியாக சமூக ரீதியில் எதையும் சாதிக்க முடிய வில்லை. அதேவேளை இப்புதிய தலை முறையினரால் அரச நிர்வாகத்துறையில் பிரகாசிக்க முடிந்தது. அதேவேளை சமூக உணர்வுடைய இந்தக் கல்விமான்கள் சமூக ரீதியாகக் கல்வியைப் பரப்புவதற்கு முதி யோர்கல்வி, நூல்நிலையங்கள் ஸ்தாபித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இக்கல்விமான்கள், பரீட்சைக்கு மாத்தி ரம் மாணவர்களை தயார்படுத்துவதுடன் நின்று விடாமல் தமது மாணவர்களை விளையாட்டுத்துறை, கலை இலக்கியத் துறை, இசை, நாடகம் போன்ற துறைகளி லும் ஈடுபடுத்தினர். பாடசாலைகளில் இலக் கியம் சார்ந்த சங்கங்கள், பாடசாலைப் பாராளுமன்றம், பாடசாலை ஸ்கவுட் போன்ற அமைப்புக்களை உருவாக்கி மாணவர்கள் இவற்றில் ஈடுபட ஊக்குவித்தனர். வகுப் பறை நூல்நிலைம், பாடசாலை நூல்நிலை யம் போன்றவற்றை நிறுவி மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தினர். இச் செயற்பாடுகள் மூலம் சமூக உணர்வுடைய ஒரு இளைய பரம்பரையை உருவாக்குவ தில் வெற்றி கண்டனர் இக்கல்விமான்கள். தாராளமயமாக்கலின் தாக்கங்கள் 1977 ஆம் ஆண்டில் எமது நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தாராள மயமாக்கல்
கொள்கை கல்வித்துறையில் பெரும் பாதிப்பு க்களை ஏற்படுத்தியது. கல்வித்துறையிலிரு ந்த நல்ல அம்சங்கள் படிப்படியாக மறை யத் தொடங்கின. அறிவுக்காகக் கல்வி என்ற நிலை அகன்று, பரீட்சைக்காகத்தான் கல்வி என்ற எண்ணம் மேலோங்கியது. ஆசிரியர்களுக்கிருந்த உயர்ந்த ஸ்தானம் அற்றுப் போனதுடன் அவர்கள் மதிக்கப்படு வதில்லை. வாசிப்புப் பழக்கம் அறவே ஒழி ந்து விட்டது. பரீட்சை முன்னிலைப்படுத்தப் பட்டது. கல்வித்துறையில் மூலதனம் முக்கிய பாத்திரம் வகிக்கத் தொடங்கியது. அதாவது கல்வித்துறையில் முதலீடு செய் யப்பட்ட பணம் கூடிய விரைவில் அதிக லாபத்தை ஈட்டியது. அரசாங்கம் கல்வித் துறையிலுள்ள நல்ல அம்சங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. தனியார் மயம் கல்வித்துறையில் பல ரூபங்களில் தலையீடு செய்தது. கல்வித்துறையில் பாடசாலை வகித்த முக்கிய பாத்திரம் அருகி விட்டது. டியூசன் கடைகளும் சர்வதேசிய பாடசாலைகளும
கல்வித்துறை வியாபார மயமாகி விட்டது. இத்துறையில் தனியார் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். டியூசன் கடைகளும் சர்வ தேசிய பாடசாலைகளும் பரவலாக ஆரம்பிக்கப்பட்டன. இத்துறையில் முதலீடு செய்யப்பட்ட பணம் விரைவில் அதிக லாபத் தைக் கொண்டு வந்தது. கல்வித்துறையில் பாடசாலைகள் வகித்த பாத்திரங்களுக்குப் பதிலாக இந்த டியூசன் கடைகள் ஆக்கிர மித்தன. பரீட்சை மனப்பான்மை வளர்ந்தது. அறிவு, விற்பனைப் பண்டமாக மாறியது. போட்டியும் கழுத்தறுப்பு வர்த்தகமும் கல்வித்துறையில் ஏற்பட்டு சீரழிவை உண்டு பண்ணி விட்டது. பரீட்சை மனோபாவம் மேலோங்கி பெற்றோர்களையும் மாணவர்க ளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கி ன்றது. அரசாங்கம் டியூசன் கடைகளதும் சர்வதேசிய பாடசாலைகளதும் செயற்பாடுக

ளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. டியூசன் கடைகள் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பரீட்சைச் சித்திப் பேராசையை வளர்த்து விட்டன. பரீட்சைக்குரிய வினா விடைகளை மாத்திரம் படிப்பதுடன் நிறுத்தி கற்கும் வட்டத்தைக் குறுக்கி மாணவர்களது அறிவை சுருக்கி விட்டனர். சர்வதேசிய பாடசாலைகள் தங்களுடைய பாட விதான த்தை தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து பிரித்து அதற்குப் புறம்பான வர்த்தக மய மாக்கப்பட்ட கல்வியைப் போதித்து வருகின் றன. அரசாங்கம் இத்துறையில் தலையிட்டு தேசியக் கல்விக் கொள்கைக்குள் இத் துறையை கொண்டு வரத் தவறி விட்டது. டியூசன் கடைகளும் சர்வதேசிய பாடசாலை களும் கல்வித்துறையில் காட்டு ராஜதர்பார் நடத்தி வருகின்றன. இவர்கள் மாணவ சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியை நாசப்படு த்திக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் மாணவ சமுதாயத்திற்கு சமூக உணர்வை ஊட்டுவதற்குப் பதிலாக தனிநபர் மனோபா வத்தை வளர்த்து சமூகத்திலிருந்து மான வர்களை அந்நியப்படுத்திக் கொண்டிருக் கின்றனர்.
அரசாங்கம் கல்வித்துறைக்கு கோடிக்க ணக்கில் பணத்தைச் செலவு செய்து வருகி ன்றது. தேசியக்கல்வி முறையை வளர்க்க முயற்சிக்கின்றது. ஆனால் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவ சமுதாயத்திலும் தேசி யக் கல்விக் கொள்கைக்கு முரணான வர்த்தகமய, அதாவது வியாபாரக் கல்வி மனோபாவம் மேலாண்மை செலுத்தி துரித கதியில் வளர்ச்சியடைந்து கொண்டே போகின்றது. இன்று எமது நாட்டிலுள்ள தேசியக்கல்வி பெரும் நெருக்கடிக்குள்ளாகி யிருக்கின்றது. கல்வித்துறையை மீட்டெடுப்போம்! எமது நாட்டின் தேசியக் கல்வியை இந்தப் பேரழிலிருந்து மீட்டெடுப்பது அவசர அவசியமாக இருக்கின்றது. இந்த மிட்டெடுப்
புப் பணியில் சமூக உணர்வுடைய ஆசிரியர் கள் முக்கிய பாத்திரம் பிரதானமாகும். சமூக உணர்வுடைய ஆசிரியர் குழாம் இன்னும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார் கள். சமூக உணர்வுள்ள ஆசிரியர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட புத்தி ஜீவிகள், தேசபக்தி சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு, கல்வித்துறையில் அக்கறை யற்றியிருக்கின்ற அரச கல்விப் பகுதியினரு க்கும் டியூசன் கடைகளதும் சர்வதேசிய பாடசாலைகளதும் சமூக விரோதக் கல்விச் செயல்பாடுகளுக்கு எதிராகப் போராட ஸ்தா பன ரீதியாக ஒன்றுபடுவது அவசியம் நற்பிர ஜைகளை, அதாவது சிறந்த குடிமக்களை உருவாக்கும் பணிக்கு ஒரு சீரான சமுக உணர்வுடைய கல்வித்துறை அவசியம். இதைக் கட்டி எழுப்புவதற்குக் கல்வித்துறை யில் இன்று ஆக்கிரமிப்பு செய்து கொண்டிரு க்கின்ற சமூக விரோத சக்திகளது போலிக் கல்வி முறையை, ஆய்வரங்குகள், கருத்தா டல்கள் மூலம் அம்பலப்படுத்தி மக்களை விழிப்படையச் செய்வது அவசியம். இப்பணி க்கு ஊடகத்துறையின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது அவசியம். தனியார் துறையினரின் முற்றுகையிலிருந்து எமது நாட்டின் கல்வித்துறையை மீட்டெடுப்பதற்கு சமுக உணர்வுடைய ஆசிரியர்கள், முற் போக்கு எண்ணம் கொண்ட புத்தி ஜீவிகள், நாட்டு நலனில் அக்கறையுள்ள மக்கள் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கல்வித்துறையின் இந்த பாரிய வீழ்ச்சி பற்றி பொது மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படு த்தி, இந்த சமுக விரோதச் சக்திகளுக்கு எதிராக போராடினால் தான், எமது எதிர்கால சந்ததி ஒரு ஆரோக்கியமான அர்த்தமுள்ள முன்னேற்றகரமான கல்வியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு.

Page 5
சிந்தனைக்கு
முதலாளித்துவ கல்விமுறை
சிறுவர் வகுப்பு காலை முதலாவது பாடம்
சமயபாடம், களவெடுக்கக்கூடாது, ஏமாற் றக் கூடாது என்ற உதாரணங்கள் ஊடாக ஆசிரியர் வாய்மை பற்றி போதிக்கின்றார். இரண்டாவது பாடம்:
கணிதம், ஒரு கிலோ நல்ல தேயிலை யின் விலை 150 ரூபா. இழக்கத் தேயிலை ஒரு கிலோவின் விலை 125 ரூபா.
பத்து கிலோ நல்ல தேயிலையையும், 8 கிலோ இழக்கத் தேயிலையையும் கலந்து விற்றால் இலாபம் என்ன?
宽 ★宽
தொழிற் கல்விப் பயிற்சிக் கல்லூரியில்
3 வருடங்கள் தொழிற்கல்வி பயிற்சிபெற்ற
. (Vocational Trained Teacher) (5 effuji ஒரு பிரபல கல்லூரியில் நியமனம் பெற்றுச் சென்றார்.
அந்த ஆசிரியர் ஒரு பழைய மோட்டார் வாகனத்தை விலைக்கு வாங்கி மாணவர்க ளுக்கு மோட்டார் வாகனம் திருத்தும் uujibf60)u (Motor Mechanism)6 LDT.g5556i வரை மாணவர்களுக்கு கொடுத்து வந்தார்.
ஒரு நாள் பாடசாலை அதிபருக்குத் திடீ ரென மார்பு வலி ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு தனது மோட்டாரை ஓட்டும்படி அதிபர் அந்த தொழிற்பயிற்சி ஆசிரியரைக் கேட்டார். தனக்கு மோட்டார் ஓட்டத் தெரியாது என்று அந்த தொழிற்பயிற்சி ஆசிரியர் கூறினார்.
★宽责
க.பொ.த. பரீட்சைக்கு விண்ணப்பங்கள்
அனுப்புவதற்கு மாணவர்களைத் தேர்ந்தெடு
ப்பதற்கான பரீட்சை ஒரு பிரபல கல்லூரியில் நடத்தப்பட்டது. பரீட்சை வைக்கப்பட்ட பாடங்களின் விடைத்தாள்களை திருத்தி அவற்றிற்குரிய மதிப்பீட்டுப் புள்ளிகளின் பெயர்ப்பட்டியலை 10 நாட்களுக்கிடையில் தரவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு காலக்கெடுவைக் கொடுத்தார். அதிபர், ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் மூன்று பாடங்களுக் கான தனது மதிப்பீட்டுப்புள்ளி விபரப் பெயர் ப்பட்டியலை 4 நாட்களுக்கிடையில் அதிபரி டம் கையளித்தார். அப்பொழுது அந்த மூன்று பாடங்களுக்கான கள்ளுக் கோப்பறே சனில் பாடசாலைப் பியோனால் கண்டெடு த்த திருத்தப்படாத விடைத்தாள்களை அந்த ஆசிரியரிடம் அதிபர் கொடுத்தார்.
★ 宽 ★
இங்கிலாந்தின் டீன் ஒஃவ் கன்ரபெரி என்ற மத போதகள் நாற்பதாம் ஆண்டுகளில் ஒரு தடவை சோவியத் யூனியனுக்கு விஜய த்தை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது தனது 11 வயதுடைய மகனையும் கூட்டிச் சென்றார். அவர்கள் சோவியத் மாணவர்களு டன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் பொழுது பரீட்சார்த்தமாக ஒரு கணக்கைக் கேட்டார். ஒரு அப்பிள் பழத்திற்கு ஒரு ரூபா வீத விலையில் 10 பழங்களை வாங்கி ஒரு ரூபா ஐம்பது சத விலைக்கு விற்றால் விளைவு என்ன என்று மாணவர்களைக் கேட்டார். ஐந்து ரூபா இலாபம் கிடைக்கும் என்று டீன் ஒஃவ் கன்ரபரியின் மகனான பிரித்தானிய மாணவன் பதிலளித்தான். அந்த அப்பிள் பழங்களை விற்பனை செய்த வனுக்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என்று சோவியத் மாணவர்கள் பதில் கூறினார்கள்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை
க. சண்முகலிங்கம்
ஐடியோலஜி' என்னும் ஆங்கிலப்பதம் குறிக்கும் எண்ணக்கரு தமிழிலும் சமூகம், கலை, பண்பாடு பற்றிய ஆய்வுகளில் இன்று உபயோகிக்கப்படுகிறது. “சித்தாந்தம்' 'கண்ணோட்டம் ‘கருத்தியல் கருத்துநிலை போன்ற சொற்கள் ஐடியோலஜியைக் குறிப்பனவாக தமிழில் உபயோகிக்கப்பட் டன. கருத்துநிலை என்ற சொல் இன்று ஏற்புடைமையுடைய சொல்லாக அமைந்து விட்டது. இச்சொல்லை உருவாக்கி உபயோ கத்திற்கு கொண்டு வந்தவர் பேராசிரியர் கா. சிவத்தம்பியாவர். அவர் யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை' என்னும் தலைப்பில் ஒரு நூலை அண்மையில் வெளி யிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தினது சமூகத்தை யும் அதன் பண்பாட்டையும் விமர்சிப்பதற்கு ரிய ஒரு கருவியாக கருத்துநிலை' என்னும் எண்ணக்கருவை பேராசிரியர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார். அவ்வகையில் கருத்து நிலையின் பின்னணியில் யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளும் மதல் முயற்சி தமிழில் நடைபெற்றுள்ளது எனக் கூறலாம். இந்நூலின் சிறப்பு அம்சம் அதுவே எனக் கருதுகின்றேன்.
ஒரு குழுவின் அல்லது சமூகப்பிரிவின ரின் கருத்து நிலையை விமர்சனத்திற்கு உட்படுத்தும்போது குறிப்பிட்ட அக்கரு அல்லது சமூகப்பிரிவினர் அணிந்துள்ள முகமூடி கிழிக்கப்படுதல் (unmasking) நிகழ் கிறது. கருத்து நிலை ஆய்வின் மிகச்சிறந்த பயன் முகமூடி கிழித்தல்' என்று கூறலாம். அந்த எண்ணக்கரு முகமூடிகளை கிழிப்பத
然
ற்கும் மூடி மறைக்கப்பட்டவற்றை அம்பலப் படுத்தவும் சிறந்ததோர் கருவியாக அமைகி றது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் யாவும் யாழ்ப்பாணச் சமூகத்தின் கருத்து நிலை அடிப்படைகள் எவை? அக்கருத்து நிலை என்ன விடயங்களைப் பற்றி அழுத் திப் பேசுகிறது? எவற்றை மறைக்கிறது? எவற்றைத் திரித்துக் கூறுகிறது? ஏன் எப்படி இத்திரிப்பு இடம் பெறுகிறது? என்ற கேள்விகளுக்கான விளக்கமாகவே அமைந்துள்ளன.
'சைவமும் தமிழும் என்ற கருத்து நிலை யாழ்ப்பாணச் சமூகத்தின் மேலாண்மை பெற்ற கருத்து நிலையாக இருந்து வந்துள் ளது என ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இக் கருத்து நிலையின் அரசியல் உட்கிடக்கை முக்கியமானது. மொழிவழிப் பண்பாடு வலியுறுத்தும் தமிழ் ஒருமையை இது மறுதலிக்கின்றது (பக்.41) என ஆசிரி யர் குறிப்பிடுகின்றார். இக்கருத்துநிலையின் அரசியல் பண்பாட்டுச் சின்னமாக சேர். பொன் இராமநாதன் போற்றப்பட்டார். அவரின் சகோதரரும் தாராண்மைக் கருத்து நிலை யாளருமாகிய சேர்.பி. அருணாசலத்திற்கு இந்த அந்தஸ்தை வழங்குவதற்கு யாழ்ப்பா ணச் சமூகத்தின் மேலாதிக்கக் கருத்து நிலை ஒப்புதல் தரவில்லை. சமணம், ஆசீவ கம், பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தமிழ் சார் பங்களிப்பு களை இக்கருத்துநிலை முற்றாகப் புறக்க ணித்தது. "கிறிஸ்தவர் தமிழ்த்தொண்டு 'இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு என்றெல்லாம்

Page 6
பேசுவதற்கு இடம் உண்டு. ஆனால் 'சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு’ எனப் பேசப்படுவதில்லை.
ஆகம வழிபாட்டு முறையினை முதன் மைப்படுத்திய மதக்கருத்து நிலை சாதாரண மக்களின் வழிபாட்டு முறைகளைப் புறந் தள்ளி வைப்பதற்கு எவ்விதம் காரணமாக இருந்தது என்பதையும் பேராசிரியர் விரிவாக எடுத்துக் கூறுகின்றார். சைவக்கருத்துநிலை எடுத்துக் கூறும் சைவம் காஷ்மீர சைவத்து டனோ வீர சைவத்துடனோ சம்பந்தப்பட வில்லை என்றும் சைவம் என்ற மதத்தின் உருவாக்கத்தில் இச்சிந்தனைகளுக்கு இடம் இல்லை என்றும் சாதிக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சைவத்தின் தூய்மைவாதத் தின் அடிப்படைகளைப் பேராசிரியர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
சமயத்துய்மை வாதத்தின் இலக்கிய நிலை வெளிப்பாட்டை நூலாசிரியர் அம்பலப் படுத்துகிறார். இலக்கியம், கலை, பண் பாட்டுத் துறைகளில் ஒருவித கண்காணிப்பு நிகழ்ந்தது. சமயச்சார்பற்ற இலக்கியங்க ளைக் கவனிக்காது ஒதுக்கி விடும் போக்கு
உருவாகியது. இத்தகைய இலக்கியக்கன்
காணிப்புப் பார்வையிலிருந்து தப்பிய சில நூல்கள் உள்ளன. உதாரணம் கனகிபுரா ணம் ஆகும். யாழ்ப்பாணத்தில் நாவலரின் தூய்மைவாதப் போக்கிற்குச் சமாந்தரமான ஒரு அங்கதப் பாங்கான கலகலப்பான ஒரு இலக்கியப் பாராம்பரியமும் நிலவிற்று என்பதை இந்நூல் காட்டுகின்றது. (பக். 67) சமய பண்பாட்டுத் தூய்மைவாதம், கலைத்துறையில் ஏற்படுத்திய தாக்கங் களை யாழ்ப்பாணத்தின் எழுத விடப்படாத கலை வரலாறு பற்றி. என்ற கட்டுரையில் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார்.
'ஈழத்தின் நாடக வரலாற்றில் இந்த நாடக வடிவம் (இசைநாடகம்) மிகப் பிரபல் யமானதாக இருந்தும் சொர்ணலிங்கத்தின் கண்டு பிடிப்பிற்கும், வித்தியானந்தன் செய்த
O
மீள் கண்டுபிடிப்புக்கும் கொடுக்கப்பட்ட அளவு முக்கியத்துவம் இதற்கு ஏன் கொடு க்கப்படவில்லை? என்ற பொருத்தமான கேள்வியை எழுப்பும் ஆசிரியர் இதற்கான விடையையும் தருகின்றார். தாம் நிலை நிறுத்த விரும்பிய சைவத்தமிழ்ப் பாரம்பரிய த்திற்கு ஒவ்வாத அம்சங்களை இசை நாடக மரபு கொண்டிருந்ததால் அது ஏற்கப்பட வில்லை. கிறிஸ்தவர்கள் சைவத்தில் காட் டும் குறைபாடுகள் உண்மையான சைவத் தின் அம்சங்கள் அல்ல அவை சைவத்தி ற்கு புறம்பானவையே என்று வாதிடப்பட்டது. இதனால் இசை, நாடகம் ஒதுக்கப்பட்டது.
சமூகவியலாளர் எம்.என். பூரீநிவாஸ் அவர்களின் சமஸ்கிருத நெறிப்படுகை என்னும் எண்ணக்கருவைப் பயன்படுத்தி யாழ்ப்பாணச் சமூகத்தில் சமூக மேநிலைப் பாடு எவ்விதம் செயற்படுகிறது என்பதைப் பேராசிரியர் ஆராய்ந்து எழுதியுள்ளார். தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் சமூகக் குழுமம் எப்படி உயர்குழாத்தின் நெறிமுறைகளை உள்வாங்கிக் கொள்கின்ற தென்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டி யுள்ளார். தெய்வங்களும் வழிபாட்டு முறைமைகளும் பெறும் ,உருமாற்றம் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளது. (பக். 47)
அண்ணன்மார் - பிள்ளையார் விறுமர் - பிள்ளையார் நாய்ச்சிமார் - காமாட்சி அம்மாள் முனி - முனிஸ்வரன் (சிவன்) வைரவர் - ஞான வைரவர்
குளிர்த்தி, மடை பொங்கல்
பொங்கல் - சங்காபிஷேகம் இவ்விதமாற்றம் கருத்து நிலையின் மேலா திக் கத்தினால் (ாநபநஅழைெஉ சழடந) நிகழ்கிறது.
யாழ்ப்பாணத்தின் சமூக பண்பாட்டு வர லாற்றை எடுத்து நோக்கினால் 19ம் 20ம் நூற்றாண்டுகளில் அங்கு மேலோங்கி

எழுந்த கருத்து நிலை நாவலர் வழிமரபே ஆகும். இதனையே சைவத் தமிழ்க்கருத்து நிலை எனப் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். நூலின் கட்டுரைகளுடே வெளிப்படும் கருத்துக்கள் சில:
1) சமூகத்தின் மேலாதிக்கமுடைய குழுவின் அதிகாரத்தை நியாயப்படு த்தும் கருத்துநிலை தான் 'சைவமும் தமிழும்? இது மொழி வழிப்பண்பாட்டை வலி யுறுத்தும் தமிழ் ஒருமையை மறுதலிப்பது. சமணம், பெளத்தம், இஸ்லாம், கிறி ஸ்தவம் ஆகியவற்றின் பங்களிப்பு களை முற்றாக மறுப்பது. பிற மதங்களின் பங்களிப்புகளை 'தொண்டுகள்’ என்று கூறுவதன் மூலம் சைவமும் தமிழும் ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அளவுக்கு பிணைப்புடையன எனக் கூறுதல். ஆகம வழிபாட்டை முதன்மைப்படு த்தி ஏனைய வழிபாட்டு முறைகளை ஒதுக்குதல். சமஸ்கிருத நெறிப்படுகை இக்கரு த்து நிலை மேலாதிக்கத்தின் ஒரு அம்சமே. இக்கருத்து நிலையின் கலை இலக் கிய வெளிப்பாடுகளாக 'ஒறுப்புவா தம்' ‘துய்மைவாதம் ‘இலக்கியக் கண்காணிப்பு ஆகியன செயல் பட்டன. கருத்து நிலை என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பி அது தொடர்பான கோட் பாட்டு ரீதியான ஆய்வு ஒன்றை பேராசிரியர் மேற்கொள்ளவில்லை. அத்தகைய ஆய்வு நூலின் நோக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட தாக ஆசிரியர் கருதியிருக்கலாம். ஆனால் கருத்துநிலை பற்றிய ஒரு ஐயம் நூலைப் படிக்கும் பொழுது மேலோங்கி நிற்கிறது.
3)
4)
5)
6)
7)
'சைவமும் தமிழும் என்பதை கருத்துநிலை என்ற அடைமொழியால் ஆசிரியர் காட்டு கிறார். இதேபோல் இளைஞர் காங்கிரஸ் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் இளைஞர் காங்கிரசின் தாரண்மை வாதக் கருத்து நிலை என்கிறார். ஆனால் முற்போக்கு இலக்கியம்' 'சோஷலிசம்' ஆகியன பற்றிக் குறிப்பிடும் பொழுது கருத்துநிலை என்ற அடைமொழியை உணர்வு பூர்வமாகவே தவிர்த்துள்ளார். ஆகவே கருத்து நிலை என்றால் திரிபுபடுத்தப்பட்ட நோக்கு, குறைவு டையது, பக்கச்சார்புடையது (Biased) என்ற எண்ணம் ஆசிரியர் மனத்தில் உள்ளது. ஆனால் கருத்து நிலை என்றால் என்ன என்பதை விளக்கும் முறையில் அவர் காட் டும் மேற்கோள் ஆசிரியர் மனத்தில் உறை யும் இந்த எண்ணத்தை வெளிப்படுத்த வில்லை. அவர் குறிப்பிடும் ஜேம்ஸ் கிளக்மன் மேற்கோள் பின்வருமாறு:
சமூக ஊடாட்டம் வளரத் தொடங்க (அந்த ஊடாட்டத்தில் ஈடுபடும்) மனிதர்கள் உலகம் பற்றியும், தமது சொந்தச் சமூக வாழ்வு பற்றியும் தெய்வம் பற்றியும் சொத்து அறம் நீதி ஆகியனபற்றியும் பொதுவான எண்ணக் கருக்களையும் நோக்குகளையும் உண்டாக்கிக் கொள்கின்றனர். இத்தகைய சிந்தனை வழியாக சமூகம் பற்றியும் அரசி யல் சட்டம் சமயம் கால தத்துவம் பற்றியும் கருத்துப் பிரமாணமான நோக்கு வளரத் தொடங்குகிறது. அந்தச் சிந்தனை நோக்கே கருத்துநிலை எனப்படும். (பக்.38)
கருத்து நிலை என்றால் என்ன என்பது பற்றி அரசியல் சமூகவியல் கோட்பாட்டாளர் கள் விரிவாக ஆராய்ந்துள்ளர்கள். அரசியல் சமூகவியல் நூல்களில் தரப்படும் விளக்க லின் அடிப்படையில் கருத்துநிலை பற்றி ஏறக்குறைய பத்துக்கு மேற்பட்ட வெவ்வேறு விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். ஜேம்ஸ் கிளக்மன் வரைவிலக்கணம் கருத்துநிலை பற்றிய ஒரு வகை விளக்கம். அதில் கருத்துநிலைபற்றி மார்க்ஸ் விளக்

Page 7
கும் முக்கிய இரு அம்சங்கள் இடம்பெற வில்லை. அவையாவன:
1) கருத்துநிலை உலகம், சமூகம், * வாழ்க்கை பற்றிய நோக்கே ஆயி னும் அது ஒரு பொய்யுணர்வும் (False consciousness) segbb.
2) கருத்து நிலை குறிப்பிட்ட ஒரு வர்க்
கத்தின் அல்லது சமூகப் பிரிவினரின்
திரிபுபடுத்தப்பட்டதும் தம் சுய நலன்களை நியாயப்படுத்துவதுமான நியாயப்படுத்தலும் (apology)ஆகும். இந்த இரு அம்சங்களும் அழுத்தம் பெறும் ஒரு எண்ணக்கருவாக 'கருத்து நிலை உபயோகிக்கப்படும் போது தான் அது 'முகமூடி கிழித்தல்' என்னும் பணி யைச் சிறப்பாக ஆற்றுகிறது. பேராசிரியரின் நூல் முகமூடி கிழித்தலை மிகவும் கச்சித மாகச் செய்திருந்தபோதும் கருத்துநிலை
பற்றிய பொருத்தமான வரைவிலக்கணத்தை தன் முகமூடி கிழித்தல் வேலைக்குப் பொரு ந்தும் வரைவிலக்கணத்தை தரத் தவறிவிட் டது. இதனை விட இன்னேர் இக்கட்டையும் உருவாக்கியுள்ளது.
'சைவத் தமிழ்க் கருத்துநிலை என்றும் "இளைஞர் காங்கிரசின் தாரண்மை வாதக் கருத்துநிலை' என்றும் கூற முடியுமாயின் "சோஷலிசக் கருத்துநிலை முற்போக்கு இலக்கியம்' என்றும் கருத்துநிலை என்று ஏன் கூறமுடியாது? இதுவே முற்போக்காளர் எதிர்கொள்ளும் இக்கட்டு. முற்போக்காளர் மட்டும் அல்ல. மார்க்சிஸ்டுகள் யாவரும் எதிர்நோக்கிய இக்கட்டும் இதுவே. தாரா ண்மை வாதத்தை ஒரு கருத்துநிலை என்று இழிவுப் பொருளில் பேசினால் மார்க்சீயக் கருத்துநிலை என்று ஏன் விமர்சிக்க முடியாது என்ற கேள்வியையும் கேட்கலாம் அல்லவா? (தொடரும்)
உலகில்.
அசுர வேகத்தில் உலகமயமாகி வருகின்ற எயிட்ஸ் நோயின் கோரத்தாண்டவம்
1999 ஆம் ஆண்டு இறுதிவரை எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3 கோடி 43 இலட்சம் பேர். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை கோடி 73 இலட்சம் பேர். பெண்களின் எண்ணிக்கை 1 கோடி 57 இலட்சம் பேர். 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை. 13 இலட்சம் பேர். ஏற்கனவே எயிட்ஸ் நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி 88 இலட்சம் இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை. 73 இலட்சம் பேர். பெண்களின் எண்ணிக்கை 77 இலட்சம் பேர். சிறுவர்களின் எண்ணிக்கை 36 இலட்சம் பேர். 1999
பேர்.
ஆம் ஆண்டில் புதிதாக எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 இலட்சம் பேர் இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 24 இலட்சம் பேர். பெண்களின் எண்ணிக்கை 23 இலட்சம் பேர். சிறுவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 20 ஆயிரம் பேர். 1999ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 இலட்சம் பேர். ஆண்களின் எண்ணிக்கை 11 இலட்சம் பேர். பெண்களின் எண்ணிக்கை 12 இலட்சம் பேர். சிறுவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம்
பேர். (தொடர்ச்சி பக்கம் 14)
2

இலக்கியத்தில் புதுப்புனல்
பலஸ்தீன மக்களது விடுதலைப் போரா ட்டத்தைச் சித்திரிக்கும் நூல் இது. இந்த நூலிலே சித்திரிப்பு என்பது அதற்குரிய முழு அர்த்தத்தில் நிகழ்கிறது. கவிதை என்னும் இலக்கிய வடிவமும் சித்திரம் என்னும் கலை வடிவமும் இதிலே சங்கம மாகி நின்று பலஸ்தீனப் போராட்டத்தை நமக்குக் காட்டுகின்றன.
இந்த இணைப்பிலே ஒரு புதுமை இருக் கிறது. கதையோ கவிதையே முதலில் எழுதப்பட, பின்பு அந்தப் பனுவலுக்குச் சித்திரம் வரையப்படுவது தான் வழமை. வாசகனுக்கு விளக்கமும் மனப்பதிவும ரசனையும் ஏற்படுவதற்காகக் கைக்கொள்ள ப்படும் இந்த நடைமுறை, இங்கு மறுதலை யாக நிகழ்ந்திருக்கிறது. சித்திரம் முதலில் தோன்றுகிறது. அதற்குரிய கவிதை பின்பு பிறக்கிறது! இதில் புதுமை மாத்திரமல்ல, இரு வெவ்வேறு துறைகள் சார்ந்த கலைத் துவத்தின் திறமையும் வெளிப்பட்டு நிற்ப தைக் காண்கிறோம். நூலாசிரியர், இந்த இரு துறைகளினதும் சங்கமம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைத் தமது முகவுரையிலே நமது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சொல்லியிருக்கிறார்.
13
நோக்கு: வ. இராசையா
ஓ பலஸ்தீனமே!
படைப்பு - கலைவாதி
இந்த நூலின் கருமூலமாக உள்ள சித்திரங்கள் முழுவதும் அங்கத ஓவியங்கள் - கருத்தோவியங்கள். இவற்றை வரைந்தவர் நஜி அல்-அலி என்னும் பெயர் கொண்ட பலஸ்தீனியர். இவர் பத்து வயதுச் சிறுவ னாக இருக்கும் போதே (1948) அகதிமுகா மில் இருந்து அல்லற்பட்டவள். பிற்காலத்தில் பல தடவைகள் சிறைகளில் அடைக்கப்பட்ட வர். அவ்வாறு சிறையில் இருக்கும் காலத்தி லேயே தனது உள்ளக் குமுறல்களைக் கருத்தோவியங்களாக வரையத் தொடங்கி னார். இந்த எழுச்சி அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் படுகொலை செய்யப்படும் வரை தொடர்ந்தது. பிற்காலத்தில் நஜி. அல்-அலி பொறியியலாளராக உயர்ந்த போதிலும் பலஸ்தீன உரிமைப் போரைச் சித்திரிக்கும் சித்திரங்களை வரைந்து கொண்டேயிருந்தார். இவ்வாறு பலஸ்தீனிய ஓவியராகிய நஜி-அல்-அலி வரைந்த சித்திரங்களுக்கே இந்த நூலின் ஆசிரியர் கலைவாதி கவிதை படைத்திருக்கிறார்.
கலைவாதி கலிலுக்கு சித்திரங்கள் மாத் திரமே கிடைத்தன என்பதும் அவற்றிற்குதிய விபரமோ விளக்கமோ கிடைக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய அம்ச ங்களாகும். நஜியினது சித்திரங்களை மாத்திரமே வைத்துக்கொண்டு, தமது சிந் தனை என்னும் லேஸர் கதிரை அவற்றி னுாடு பாய்ச்சி அவற்றைப் பகுப்பாய்வு செய்து அச்சித்திரங்களின் உள்ளார்ந்த பொருளை உறிஞ்சியெடுத்திருக்கிறார்

Page 8
கவிஞர். பின்பு அந்தப் பொருளாகிய சாரத் தைத் தம்முடைய கற்பனை வளத்துடன் கலந்து கவிதைகளில் பெய்திருக்கிறார். கவிஞர் செய்திருப்பது கலைத்துவம் சார்ந்த ஒரு பெருமுயற்சி! அவர் இதிலே வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய கவிதைகள் நன்றாயிருக்கின்றன.
கவிஞர் இங்கு புனைந்து தந்திருப்பவை புதுக்கவிதைகள் தான். ஆயினும் மரபுக் கவிதைகள் 10ாத்திரமே நமக்குத் தரக்கூடிய சில இலக்கிய அழகுகளையும் இவற்றிலே நாம் கண்டு நயக்கக் கூடியதாயிருக்கிறது. இந்த நூலில் உள்ள சித்திரங்களையும் அவற்றுக்குரிய கவிதைகளையும் வர்சகர் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்த ஒப்பி டுகை வாசகனுக்கு ஒரு புதிய கலாரசனை அனுபவமாக இருக்கும்.
இந்த நூலில் உள்ள சித்திரம், கவிதை என்னும் ஒவ்வொரு அங்கத்திலும் பலளில் தீனியம் என்பதே கருவாக உயிராக இருக்கிறது! பலஸ்தீனிய மக்கள் கடந்த அரை நூற்றாண்டு முன்பு இழந்துவிட்ட நில உரிமையையும் அதனை மீட்பதற்காக நடத்தும் போராட்டத்தையும் நூலாசிரியர் உணர்வுபூர்வமாக இங்கு உரைக்கின்றார்.
ஆழக்கடலில் மீளப் பயணம் கருமைக்கடலில் அருமைப் பயணம் என்று ஆசிரியர் கூறுவதில், பலஸ்தீனியரது விடாப்பிடியான போர்முனைட்டத் தெரிகிறது.
'ஒரு கரம் ஒயும் போது மறுகரம் கல்லை மாற்றும்! ஒரு உயிர் சாயும் போது மறு உயிர் கல்லை ஏந்தும்' என்னும் கவிதையில் பலஸ்தீனியர்களது போராட்ட முறையை கலைவாதி சுட்டிக் காட்டுகிறார். '''
கல்லில் கசியும் குருதித் துளிகள் கானகப் பூவை மலர்விக்கும் கல்லைப் பிளந்தும் செடி துளிக்கும்
பூக்கள் மலர்ந்து தீ கக்கும் என்னும் கவிக்கூற்றிலே தமது மீட்சியில் பலஸ்தினியர் வைத்துள்ள அசையாத நம்பிக்கை பளிச்சிடக் காண்கிறோம்.
சித்திரங்கள் சிலவற்றின் பின்னணியில் இருள் காட்டப்படுகிறது. அதனைப் பலஸ் தினியர்களின் அடிமை நிலையெனக் கொண்டு, கருமைக்கடல், கருமைப்பூதம், எங்கு பார்க்கினும் இருட்டு என்று கவிஞர் வருணிக்கிறார்.
இங்குள்ள சில சித்திரங்களில் பிறை காட்டப்பட்டிருக்கிறது. அந்தச் சின்னத்தை உலுத்தர் உயிரைப் பறிக்கும் போர்வாள் என உருவகித்துள்ளமை அர்த்தம் நிறைந்த தாக இருக்கிறது.
இந்த நூலில் உள்ள சித்திரங்கள் முழு வதையும் அவற்றுக்குரிய கவிதைகளையும் ஒருங்கே வைத்து நோக்கும்போது, பலஸ்தீ னியர்கள் படும் இன்னல்களும் அவர்களது சுதந்திர வேட்கையும் தாயக மீட்புக்காக அவர்கள் நடத்தும் போராட்டமும் எங்கள் மனத்தில் ஆழமாகப் பதிவாகின்றன. பலஸ்தீனியர்களை நோக்கி நமது அனுதாப அலைகள் விரிகின்றன.
O
உலகில்...
ஆரம்ப காலத்திலிருந்து இதுவரையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1 கோடி 32 இலட்சம் பேர். 1999 ஆம் ஆண்டில் புதிதாக எயிட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் என்ணிக்கை 54 இலட்சம் பேர். இதில் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 40 இலட்சம் பேர். தென் கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சம் பேர். (ஜி.லக சுகாதார அமைப் பின் மேற்குப் பசுபிக் பிராந்திய அலுவல கம் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து)


Page 9
என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:
"விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று. அது உலகத்தை மாற்றிய மைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும், அதன் நேசச் சக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவாயுதமாகவும் இருத்தல் வேண்டும்
இந்தக் கருத்து நிலையில் இருந்துதான் அவர், பண்டைய இலக்கியங்களையும், சம கால இலக்கியங்களையும் மதிப்பீடு செய் தார். பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்த கைலாசபதி, வீரயுகப் பாடல்கள்’ என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில் அவர் முன் வைத்த கருத்துக்கள் தமிழிலக்கியத் திறனாய்வுக்கு ஒரு திருப்பத்தைக் கொடுத் தது. இவ்வாய்வில் இரண்டு முக்கிய கருத் துக்களைக் கைலாசபதி முன்வைத்தார். சங்ககால இலக்கியங்களை அதே காலத் தில் தோன்றிய வேற்று நாட்டு மக்களின் இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்க ளின் சமூக-பொருளாதார நிலை, இலக்கியங் களில் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்றும், இரண்டாவதாக, இவ்விலக்கியங்கள் பெரும் பாலும் வாய்மொழி இலக்கியங்களாகவே தோன்றின என்றும் கூறினார்.
கைலாசபதி காலம் வரையும், பண்டைய தமிழிலக்கியங்களை ஆராய்ந்த பலர், பல கோணங்களிலிருந்து ஆராய்ந்தார்கள். பெரும்பாலும் இவ்வாய்வாளர்கள் காலத்தை வைத்தே இப்பாடல்களைக் கணித்தார்கள். இலக்கிய வரலாற்றை, சங்ககாலத்திற்கு முற்பட்ட காலம், சங்ககாலம், சங்கம் மரு விய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கள் காலம், ஐரோப்பியர் காலம், என்று ஆட்சி செய்தவர்களின் அடிப்படையாகக் கொண்டே இலக்கிய வரலாற்றை கால அடிப்படையில் பிரித்தார்கள். வேறுசிலர் தமிழிலக்கிய பரப்பை இயற்கை நெறிக் காலம், அறநெறிக்காலம், சமய நெறிக் காலம் என பண்பாட்டுக் கருத்தியல்களின டிப்படையில் வகைப்படுத்தினார்கள். மக்க ளின் பொருளாதார, சமூக சூழ்நிலையிலிரு ந்து தான் சம்பவங்கள் தோன்றுகின்றன என்பது மார்க்சியவாதம். இதற்கு இலக்கியம் வதிவிலக்கல்ல. மார்க்சிய தத்துவத்தில்
16
திளைத்திருந்த கைலாசபதி மார்க்சிய அடிப் படையில் இப்பகுப்புமுறையை மேற்கொண் டார். 'தொன்மையான இனக்குழு, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம் நில வுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் என்று வகுத்தார். 、い *
வரலாற்றை ஆராய்ந்த, மார்க்சிய வரலா ற்றா சிரியர்களும், இதே பகுப்பைத்தான் செய்தார்கள். சங்க காலத்திலும், அதற்கு முற்பட்ட காலத்திலும் வாழ்ந்த மக்கள் தாம் வாழ்ந்த சூழ்நிலைக்கேற்ப தமது வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். தாம் வாழ்ந்த நிலத்தை குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம், என்று வகைப்படுத்தினார் கள். இந்நிலங்களுக்கே சொந்தமான பண் பாட்டு முறைகள் இவர்களுடைய இலக்கிய ங்களில் காணக் கிடக்கின்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில நாகரிகங்கள், கால கதியில் மருத நில நாகரிகத்தின் வளர்ச்சி யால் குன்றிப் போகின்றன. சங்க காலத்தி ற்கு முன்பிருந்த சமுதாயத்தில் வாழ்க்கை, குறிஞ்சிக்குள், அல்லது முல்லைக்குள் அல்லது நெய்தலுக்குள் பெரும்பகுதி அடங்கி விடுகிறது. மருதநில மக்களின் உற்பத்திப் பெருக்கினால் அவர்களுடைய நாகரிகம் வளர்ந்து அவர்களது எல்லைகள் விரிவடைந்த காரணத்தினால் ஏனைய நில மக்களின் வாழ்வு குன்றியதோடு அவர்களது நாகரிகங்களும் இம்மருதநில நாகரிகத்தில் அடங்கி விடுகின்றன. சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சமுதாய உறவு முறைகளில் மாற்றம் ஏற்படுகின்றது. பொதுமைச் சமுதாயத்தில் இருந்த சமத்துவ நிலை மாறி, உழைப்பின் அடிப்படையில் வர்க்க பேதங்கள் தோன்றுகின்றன. பழைய சமுதாயம் மறைந்து புதிய சமதாயம் தோன் றுகிறது. குறுநில மன்னர்களின் பாதுகாப்பில் அவர்களது புகழ்பாடி வாழ்ந்த பானர்களும், விறலியர்களும், புலவர்களும் உடைமைப் பற்று பெருகிவரும் சமுதாயத்தில் பாதுகாப்பு ஏதும் இல்லாமல், சமூக அந்தஸ்து இல்லா மல் ஊர் ஊராய் அலைந்து திரிந்தார்கள். இவர்களில் ஒருவரான பூங்குன்றனாரின்
'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி
கள் இவர்களுடைய உண்மையான நிலை

யைக் குறிக்கின்றன. இந்த அடிப்படையில் தான் கைலாசபதி, இப்பாடல்கள் சமூக மாற்றத்தையும் அச்சமூகமாற்றங்களில் தோன்றிய பிரச்சினைகளையும் பிரதிபலிக் கின்ற என்ற கருத்தை முன்வைத்தார்.
சங்க இலக்கியங்களை ஆராய்ந்த கைலாசபதி, அதற்கும் பிற்பட்ட காலங்க ளில் தோன்றிய இலக்கியங்களையும் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தார். அவ்வக் காலங்களில் தோன்றிய இலக்கியங்கள் அக்காலத்தில் சமூக மாற்றங்களைப் பிரதிய லிக்கின்றன. சங்ககால சமூகமும், சங்க இலக்கியமும் இனித் தொடர்ந்து வாழ்வதற் கத் தேவையில்லாமல் சமயத்திற்கு இடங் கொடுத்து மறைகின்றன. சமய சார்புள்ள இலக்கியங்கள் தோன்றுகின்றன. சிலப்பதி காரம், மணிமேகலை போன்ற காவியங்கள் தனி மனிதனைப் பற்றிப் பாடாது, நாடு, நகரம், நீர், நிலம், அரசு, மக்கள் என்று எல்லாவற்றையும் அடங்கிய பொருளை மையமாக வைத்து, தொடர் செய்யுளாக மாறுகின்றன. இப்புதிய சமுதாயத்தில் வணிக சமூகத்தின் எழுச்சியைக் காண் கிறார் கைலாசபதி, பண்டைய தமிழர் வாழ் வும் வழிபாடும்' என்ற நூலில் இதனை விளக்குகிறார் கைலாசபதி,
வணிக வர்க்கத்தினர் தமது வியாபாரத் தொழிலுக்குப் பரந்த சந்தையை விரும்புவர். உள்நாட்டு வணிகமும் பிறநாட்டு வணிக மும் அக்காலத்தில் சிறந்திருந்தன எனக் கண்டோம். அதனுடைய பிரதிபலிப்பே மூவேந்தரையும் இணைக்கும் காப்பிய முயற்சியாகும்.
சிலப்பதிகாரத்தின் முன்னுரையில் இளங்கோ அடிகளின் 'அரசியல் பிழைத் தோர்க்கு அறங்கூற்றாவதும் என்ற வாசகத் திற்கு கைலாசபதி இக்கோஷத்திற்குப் பின்னால் வணிக சமுதாயத்தின் வலிய கரங்களைக் காணலாம்' என்று கூறுகிறார். ஏனைய இலக்கியங்களையும் அவ்வக் கால சமூகங்களின் பின்னணியிலிருந்து ஆராய்கிறார் கைலாசபதி. பல்லவர்கால பக்தி இலக்கியத்தை நிலவுடைமைக்காரர்க ளின், வேளாளர்களின் எழுச்சியாகக் காண் கிறார் கைலாசபதி, பல்லவர் காலத்தில்
17
தமிழர் வாழ்வில் ஆரியப் பண்பாட்டு முறை கள் ஊடுருவல் செய்த காலம். பெளத்தசமண செல்வாக்கினால், தமிழர் வீரம் குன்றி பிறநாட்டவரின் ஆதிக்கத்தில் வாழ்ந்த காலம். நாயன்மார்களினதும் ஆழ்வார்களின தும் பக்திப் பாடல்களை, ஒரு தேசிய உணர்ச்சியாகக் காண்கிறார் கைலாசபதி. வணிகவர்க்கத்தின் உயர்நிலைக்கு எதிராக நிலவுடைமை வர்க்கத்தின் எழுச்சியாகவும் வணிக சமூகத்தின் சார்புடைய சமணசமயத் துக்கு எதிராக, சைவவழிபாட்டு முறையை யும் பக்திப் பாடல்களையும் வேளாளர்களின் எழுச்சியாகவும் காண்கிறார் கைலாசபதி,
பேராசிரியர் கைலாசபதி, இந்தத் தமிழு ணர்வைப் பற்றிக் கூறும்போது 'புறசமயத்த வர்களுக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த்திப் பிரச்சார முழக்கஞ் செய்த அரனடியாரும், ஆழ்வாரும் தமிழகமெங்கும் தமிழுணர்ச்சியையும் தமிழ் நிலப்பற்றையும் பெருக்கினர். தமிழரல்லரான பல்லவர் ஆட்சி பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்ட துவும், பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே ஒருவிதமான தேசிய உணர்வு தோன்றக் காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம். (பண்டையத் தமிழர் வாழ்வும் வழிபாடும்) சோழர் கால இலக்கியங்களை ஆராயப் புகுந்த கைலாசபதி சோழர் பேரரசு கால த்தை வேளாள வர்க்கத்தின் உயர்நிலைக் காலமாகக் காண்கிறார்.
இங்கிலாந்து வரலாற்றில் ஸ்டூவர்ட் அரச பரம்பரையினர், தமது ஆட்சியுரிமை தெய்வ த்தினால் வழங்கப்பட்டது. (Divine Right Theory) என்ற தத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தினார்கள். அதேபோல, சைவ சித் தாந்தத் தத்துவம், சோழப் பேரரசுக்கு உடந் தையாக அமைந்தது என்பது கைலாசபதி யின் கருத்து. இந்தக் கருத்தைக் கைலாச பதி 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
சோழர் காலத்திலே காணப்பட்ட சமு தாய அமைப்பும் அரசியல் முறையும், வாழ் க்கை ஒழுங்கும், சித்தாந்தம் காட்டும் இறை வனில் - சிவனில் - பதியில் தமது சாய லைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்து

Page 10

வகை சிறுகதைகள் நூலாசிரியர் : ராணி சீதரன் பக்கங்கள் :78 விலை: ரூபா80
கிடைக்குமிடம்: 136, மத்திய வீதி, திருகோளமலை
நூல் இயல்பினை அவவதல்
ഖ( ; &ക്കിത്സു,
Lifisit: 60
விலை: ரூபா 70 கிடைக்குமிடம் 257, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
நூலாசிரியர் : த சித்தி அமரசிங்கம் பக்கங்கள்: 112
விலை: ரூபா 75 கிடைக்குமிடம்: ஈழத்து இலக்கியச் சோலை 21, ஒளவையர் வீதி, திருகோணமலை
9

Page 11
கறுப்பு அமெரிக்கக் கவிஞன்
லாங்ஸ்டன் ஹியூஸ் it. ض
அடக்கு முறைக்கு எதிரான குமுறலை யும் ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணிரையும் போராடுபவர்களின் அயர்வின்மையையும் சொந்த மரபின் பெருமிதத்தையும்
கவிதைகளில் வெளிப்படுத்தியவர்.
பெயருக்கு முன்னால் எந்த அடைமொழி யும் இல்லாதவர்கள் உலகம் முழுவதுமிருக் கிறார்கள் என்று நமது காலத்தைப் பற்றிய விளக்கம் கவிதையில் குறிப்பிடுகிறார் லாங் ஸ்டன் ஹியூஸ், ஆனால், அவரது கவிதையு லக மனிதர்களுக்கு அடைமொழி கள் இருந் தன. நீக்ரோ, கறுப்பன், அடிமை என்று வெவ்வேறு வார்த்தைகளில், கறுப்பு அமெரி க்க வாழ்க்கையின் கண்ணிரையும் புன்னகை யையும் அவர் தனது கறுப்புக் கவிதைக ளில் பெருமிதத்துடன் வெளிப்படுத்தினார். நீக்ரோ இலக்கியத்தின் உலகப் புகழ்பெற்ற கறுப்பு முகம் - லாங்ஸ்டன் ஹியூஸ்.
1902 இல் ஜாப்லின் என்ற இடத்தில் பிறந்தார் லாங்ஸ்டன் ஹியூஸ். தந்தை ஜேம்ஸ் ஹியூஸ் சட்டக் கல்வி பயின்றார். ஆனால் வெள்ளை ஆதிக்கம் இறுகக் கவ்வியிருந்த அன்றைய சமூகச் சூழலில் அவரால் போட்டியிட்டு வெற்றி பெற முடிய வில்லை. நொந்து போன ஜேம்ஸ் ஹியூஸ் மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு காசு சம்பாதிப்பதற்காக மெக்ஸிகோ போனார். லாங் ஸ்டனும் தாயாரும் அமெரிக்காவிலேயே தங்கினர்.
லாங்ஸ்டனின் அம்மாவுக்கு திடமான மனமும் பிறந்த மண்ணிலேயே வாழ்க்
20
கையை வாழ்ந்து பார்ப்பது என்ற பிடிவாத மும் இருந்தன. இரண்டாவது கணவனுடன் வேலை தேடி ஊர் ஊராக அலைந்தார். சிறுவன் ஹியூஸ் தனிமைப் பிராணியாக, ஒதுக்கப்பட்ட குழந்தையாக தாய்வழிப் பாட்டியுடனும் தூரத்து உறவினர்களுடனும் வாழ நேர்ந்தது.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடம் தனது தந்தையுடன் சேர்ந்து வாழும் 'அதி ருஷ்டம் ஹியூசுக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கொலம்பியா பல்கலைக் கழகத் தில் ஓராண்டு காலம் கல்வி கற்கும் வாய்ப் பும் கிடைத்தது. 1921இல் லாங்ஸ்டன் ஹியூ ஸின் பத்தொன்பதாவது வயதில் அவரது முதல் கவிதை "நீக்ரோ, நதிகளைப் பற்றிப் பேசுகிறான்' வெளியானது. நீக்ரோ இலக்கி யம் தனது ஒப்புவமை இல்லாத கவிக் குரலை அடையாளம் கண்டது.
அமெரிக்க நீக்ரோ, நிறம் காரணமாகத் தாழ்த்தப்பட்டவன். சரும விரோதத்தால் மானுட மரியாதைகள் மறுக்கப்பட்டவன். அவனது துயரங்களுக்குக் காரணம் அவ னது கறுப்பு ஜனனம். நீக்ரோக்களின் இந்த அவலத்தைச் சொந்த வாழ்வில் வெவ்வேறு கட்டங்களில் அனுபவித்தவர் ஹியூஸ். எனி னும் பிறந்த கறுப்பு இனத்தை வெறுக்க வில்லை. வெள்ளை இனத்தைப் பழிக்க வில்லை. இந்த வகையில் லாங்ஸ்டன் ஹியூஸ் மிதவாதி. அடக்கு முறைக்கு எதிரான குமுறலையும் ஒடுக்கப்பட்டவர்க ளின் கண்ணிரையும் போராடுபவர்களின்
 

அயர்வின்மையையும் சொந்த மரபின் பெரு மிதத்தையும் கவிதைகளில் வெளிப் படுத்தினார் அவர்.
1926 இல் ஹியூஸின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. அந்தத் தொகுப்புக் காக லிங்கன் பல்கலைக்கழகத்தில் அவரு க்கு உதவித்தொகை அளிக்கப்பட்டது. அதுவே பட்டப் படிப்புக்கும் அவரைத் தகுதியானவராக்கியது. பிறகு 1943 இல் கெளரவ டாக்டர் பட்டமும் அவரைத் தேடி வந்தது. தொடர்ந்து மாபெரும் அங்கீகாரங்க ளும் விருதுகளும் வந்து சேர்ந்தன.
கவிதை, சிறுகதை, நீக்கிரோக்களின் ஆன்ம சங்கீதமான ஜாஸ், ப்ளு இசைக்கான பாடல்கள், கட்டுரை, நாடகம், நகைச்சுவை, சுயசரிதை என்று இலக்கியத்தின் பல துறை களிலும் எழுதிக் குவித்தார் ஹியூஸ். 1967இல் மறையும் வரை அவரது எழுத்து முற்றுப் புள்ளியைச் சந்திக்கவே இல்லை. ‘சுதந்திரத்தின் உழவு என்ற கவிதை யின் ஒருவரி லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதை மையத்தைச் சுட்டுவதாக நம்பலாம். அந்த வரி: 'அடிமைகளாக வாழ்வதை விட மேலானது. சுதந்திரமானவர்களாக இறப்பது கவிதையின் திசைகள் - 3
நான் வளர்ந்த பின்பு. நீண்ட காலத்துக்கு முன்பு கண்ட கனவு ஏறத்தாழ எனது கனவை மறந்து விட்டேன். ஆனால் அப்போதும் அது அங்கே தான் இருந்தது. ஒரு சூரியனைப் போலப் பிரகாசமாக என் முன்னால் இருந்தது, என் கனவு. பிறகு சுவர் உயர்ந்தது. மெதுவாக உயர்ந்தது மெதுவாக எனக்கும் எனது கனவுக்கும் இடையில். மங்கச் செய்தது
D60355gby எனது கனவின் ஒளியை. ஆகாயத்தை தொடும் வரை
உயர்ந்தது அந்தச் சுவர்.
நிழல்.
நான கறுபபன
அந்த நிழலில் படுத்துக் கிடந்தேன்.
இனிமேலும்
எனக்கு முன்னாலோ
எனக்கு மேலாகவோ இல்லை
எனது கனவின் ஒளி.
கனத்த சுவர் மட்டும்
நிழல் மட்டும்
என் கைகளே!
என் கறுத்தக் கைகளே!
சுவரை இடியுங்கள்.
கனவைக் கண்டுபிடியுங்கள்.
இந்த இருட்டைச் சிதறடிக்க உதவுங்கள்!
இந்த இரவை நொறுக்க உதவுங்கள்
சூரியனின் ஆயிரமாயிரம் வெளிச்சங்களாக
சூரியனின் ஆயிரமாயிரம் சுழற்கனவுகளாக
இந்த நிழலை உடைக்க.
ஒரு சிறிய பழைய கடிதம் போதும்.
女女女
அமெரிக்காவே
நானும் பாடுகிறேன். நான் உனது கறுத்தச் சகோதரன், நண்பர்கள் வந்த போது அவர்கள் என்னை அடுப் பங் கரையிலேயே சாப் பிடச் சொன்னார்கள்
எனினும் சிரித்தேன் நன்றாகச் சாப்பிட்டேன் வலுவானவனாக வளர்ந்தேன். நாளை
நண்பர்கள் வரும் போது மேஜையருகில் இருப்பேன் அப்போது அடுப்பங்கரைக்குப் போய்ச் சாப்பிடு என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இராது. அது தவிர எவ்வளவு அழகானவன் நான் என்பதை அவர்கள் பார்ப்பார்கள் வெட்கப்படுவார்கள் அமெரிக்கா என்பது நானும் தான்.

Page 12
மருத்துவரும் சமுகப் பொறுப்புகளும்
டாக்டர் எம்.கே.முருகானந்தன்
மனித இனத்தின் ஆதித் தொழில் என்ன?
பலரும் பல கருத்துக்களைச் சொல்ல லாம். மருத்துவமும் அது தனக்கே உரியது என உரிமை கோர காரணங்கள் உண்டு. ஆம். மனித இனத்தின் முதல் குழந்தை தாயிலிருந்து பிரிந்து பூமியில் விழுந்த அந்தக் கணத்திலேயே வேதனையும் உபா தையும் நோயும் நொடியும் மனிதனைத் துன் புறுத்த ஆரம்பித்துவிட்டன. வேதனையைக் கண்டு சகிக்க முடியாமல் அதைத் தணிக்க எதையாவது கொடுத்தவன் எவனோ அவன் தான் முதல் வைத்தியன். கொடுத்தது வெறும் நீராகக் கூட இருக்கலாம். அதுதான் முதல் மருந்து. எனவே முதல் மனிதனின் ஜனனத்துடனேயே மருத்துவமும் ஆரம்பி த்துவிட்டது எனச் சொல்லலாம். சமூகத்தின் அத்தியாவசிய தேவையை நிறைவு செய்ய சுயமாக எழுந்த மனிதாபத் தொழிலாதலால் அதனுடன் நெருங்கிய உறவு பேணப் பட்டது.
மருத்துவனும் சமுகமும், மருத்துவத்தின் முக்கிய அங்கம் மருத்துவன்தான்.
ஆரம்பத்தில் மருத்துவனுக்கும் சமூகத் துக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததற்கு முக்கிய காரணம், மருத்துவன் தான் பணியாற்றும் சமூகத்திலிருந்து பிறந்த தாகும். அதனால் அவனுக்கு அவன் பணி யாற்றும் சமூகத்தின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், தேவை கள் பற்றிய உள்ளார்ந்த அறிவும், தெளி வான சிந்தனையும் இருந்தது. ஒவ்வொரு நோயாளியினதும் சமூக, குடும்பப் பின்னணி
22
அவனுக்கு அத்துபடியாகத் தெரிந்திருக்கும். இதனால் அவன் செய்யும் வைத்தியம் நோயாளிக்கு இசைவானதாக அவனது நம்பிக்கைக்கு உரியதாக விளங்கியது.
வைத்தியத்தை வெறும் தொழிலாகக் கருதாமல் சேவை மனப்பான்மையுடன் நோயாளர்களின் மனதறிந்து வைத்தியம் செய்யப்பட்டது. அத்தகைய வைத்தியர்கள் மக்களது அபிமானத்தைப் பெற்றது மட்டுமன்றி அவர்களது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களானார்கள். தாம் வணங்கும் கடவுளுக்கு அடுத்த படியாக துதிக்கப்பட்டனர். 1. மனங்கவர்ந்த வைத்தியர்கள். உதாரணத்திற்கு ஒரு காலத்தில் குடா நாட்டில் பணியாற்றிய ஆங்கில வைத்திய ரான பி.எஸ்.சுப்பிரமணியத்தையும், பரம்பரை வைத்தியரான சுதுமலை அண்ணாமலையை யும் குறிப்பிடலாம். இவர்களது தன்னலமற்ற சேவையால் தமிழ்ச் சமுதாயம் நலமும் நிறைவும் பெற்றது. இவர்கள் மறைந்தபோது குடாநாடு முழுவதுமே சோகம் கொண்டு கண்ணி சிந்தியது. இதேபோல கொழும்பின் பிரபல வைத்தியராக விளங்கிய குமாரன் ரட்ணம் மக்களின் அபிமானம் பெற்றவர். இதன் காரணமாக பின்பு அவர் கொழும்பின் மேயராகியதையும் குறிப்பிடலாம். மலேரியா தடுப்புப் பணியில் மக்களோடு இணைந்து இயங்கி மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டர் விக்கிரமசிங்கவும் மதிப்போடு நினைவுகூர வேண்டியவர்.
அண்மைக் காலத்தை எடுத்துக் கொண் டால் அந்நிய இராணுவத்தின் அடாவடித் தனத்தின் போதும், சொந்த நாட்டு மக்க

ளையே குண்டு வீசி அழித்த கொடுரத்தின் போதும் நாட்டை விட்டு ஓடாது மக்களின் துன்பத்தில் தாமும் பங்கு கொண்டு, உயிரா பத்தையும் பொருட்படுத்தாது பணியாற்றிய பல வைத்தியர்கள் மக்களின் அன்புக்குப் பாத்திரமாயினர். அதில் சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் மக்களின் நினைவில் இன்றும் வாழ்பவர். 2. இன மத தேச எல்லைகளைக்
கடந்த சேவை
அதேபோல வடமராட்சியில் ஆபத்துக் காலத்தில் கைகொடுத்த பிரெஞ்சு வைத்திய சேவை நிறுவனமாகிய MSF பணியாளர்க ளும் மக்களின் மதிப்பிற்கு ஆளாயினர். அதன் இணைப்பாளராகப் பணியாற்றிய பெண்மணி ஒருவர், அவரது பெயர் உடனடி யாக ஞாபகத்திற்கு வராவிட்டாலும், சேவை மனப்பான்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்த வர். அந்நிய இராணுவத்தின் அடாவடித்தன ங்களின்போது அனர்த்தம் நடந்த இடங்க ளில் மக்கள் விதிக்கு இறங்கவே அஞ்சி நின்ற நேரங்களில், இவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது உடனே சென்று காயம் பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று எத்தனையோ மக்களுக்கு மறுபிறப் புக் கொடுத்தவர். இன மத தேச எல்லைக ளையும் கடந்த மனிதாபிமான மருத்துவ சேவைக்கு உதாரணமாகக் கூறக் கூடியவர்.
சர்வதேசிய ரீதியிலும் சேவையால் புகழ் பெற்ற வைத்தியர்கள் பலர் இருக்கிறார்கள். சீனாவில் ஒரு காலத்தில் பிளேக் நோய் வேகமாகப் பரவி மக்களை வகை தொகை யின்றிக் கொன்றபோது இந்தியாவிலிருந்து விரைந்து சென்று, தன்னைப் பற்றிய சிந்தனையின்றிப் பணியாற்றிய கல்கத்தா டாக்டர் கொட்னிஸ் முக்கியமானவர். இதே போல சீனாவின் புரட்சியின்போது மக்களி டையே பணியாற்றிய கனடா நாட்டு டாக்ட ரான நோர்மன் பெத்யூன் சேவை சரித்திரத் தில் பதிவாகியுள்ளது. அவரது சேவையைப் போற்றிச் சீனத் தலைவர் மாவோ அவர்களே In Memory of Norman Bethune' 6T60T கட்டுரை எழுதியிருப்பது அவர் ஆற்றிய பணிக்குக் காத்திரமான அங்கீகாரமாக உள்ளது.
23
8. உறவில் கீறல்கள்
ஆனால் இன்று மருத்துவத்திற்கும் சமூகத்திற்குமான உறவில் கீறல்கள் பெருகிவிட்டன. இன்று மருத்துவம் நிறுவன மயமாகிவிட்டது. நோயாளிக்கும் வைத்திய னுக்கும் இடையே எந்த நெருக்கமான உற வும் இருக்கவேண்டியது அவசியமில்லை என்றாகிவிட்டது. 3.1 தொலை வைத்தியம்
இணையத்தின் வளர்ச்சி காரணமாக பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பா லுள்ள நோயாளியை நேரில் பார்க்காமலே, கையால் தொட்டுப் பரிசோதிக்காமலே வைத் தியம் செய்யக் கூடிய நிலை உருவாகி வருகிறது. இத்தகைய தொலை வைத்தியத் தின் மூலம் துறை சார்ந்த மிகச் சிறந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக் குக்கிராமத்தில் உள்ளவர்களும் பெற முடிகிறது என்று சிலாகிக்கப்படுகிறது.
ஆயினும் இத்தகைய மருத்துவம் நோயாளியின் உள்ளுணர்வைப் புரிந்து வைத்தியம் செய்ய முடியுமா? வைத்தியம் என்பது வெறுமனே விஞ்ஞான உண்மைக ளைக் கொண்டு செய்யப்படுவதில்லை. 8.2. மருத்துவம் ஒரு கலை
விஞ்ஞானம் அடித்தளமாக உள்ளபோ தும் மருத்துவத்தை ஒரு கலையாகவே பல வைத்தியர்கள் ஆற்றுகைப்படுத்துகிறார் கள். நோயாளிகளை இன்முகம் காட்டி வரவேற்பதும், பெயர் சொல்லி அழைத்து நெருக்கமான உறவை வளர்ப்பதும், அவர் கள் சொல்வதைப் பொறுமையோடு காது கொடுத்துக் கேட்பதும். நோயாளி சொல்லத் தயங்கியவற்றை மறைமுகக் கேள்விகள் மூலமும், முகபாவங்களிலிருந்து புரிந்து கொள்வதும் கலையுணர்வோடு செய்யப்பட் டன. கலையும் மருத்துவமும் இணைந்த உயர் தொழிலாகச் செய்யப்பட்ட மருத்து வம் இன்று விஞ்ஞான, இணைய வளர்ச்சிக ளால் நோயாளியுடனான உறவு அறுபட்டு அர்த்தம் அற்றுப் போவதாக உணரப் படுகிறது. .ே3 நிர்ப்பந்தம் ஆகிவிட்ட சேவை இதற்கு மேலாக நிர்வாக ரீதியான

Page 13
காரணங்களுக்காக அல்லது பொருளாதாரத் தேவைகளுக்காக வைத்தியர் தனக்குப் பிரியமில்லாத அந்நியமான சூழ்நிலையில் வேலை செய்ய நேரிடுகிறது. மனதிற்குத் திருப்தியில்லாத இடத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இது அவர்களின் சேவை மனப்பான்மையை சிதைக்கவே செய்யும்.
உதாரணத்திற்கு மருத்துவ பரீட்சையில் சித்தியடைந்த கையோடு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் சிங்கள வைத்தியர்களைக் கூறலாம். போர்ச் சூழலில், அந்நியமான மக்களிடையே பணியாற்ற விருப்பமின்றி, கொழும்பிற்கான அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கும் அவர்கள் எவ்வாறு முழுமனத் தோடு சேவையாற்ற முடியும்? மாறாக போருக்கு முந்திய காலங்களில் பல சிங்கள வைத்தியர்கள் தாமாகவே முன்வந்து குடா நாட்டில் வேலை செய்ததையும் அவர்கள் மக்களின் மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக விளங்கியதையும் குறிப்பிடலாம். 4. வைத்தியர் பற்றாக்குறை 4.1. வடகிழக்கு பகுதிகளில்
வடகிழக்குப் பகுதிகளில் வைத்தியர் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கிறது. யாழ் போதனா வைத்தியசாலையிலும் யாழ் மருத்துவ பீடத்திலும் நிலைமை மோசமா கவே இருக்கிறது. யாழ் வைத்தியசாலை யில் 17 வைத்திய நிபுணர்களுக்கான பற்றா க்குறை இருப்பதாக வைத்தியர்கள் அண் மையில் கையெழுத்திட்ட மகஜர் கூறுகிறது. வைத்தியர்களுக்கும் வைத்திய நிபுணர்க ளுக்குமான பற்றாக்குறை நோயாளருக்கான சேவைகளையும் மருத்துவ மாணவர்களுக் கான போதனைகளையும் பெருமளவில் பாதிக்கிறது.
81 வைத்தியர்கள் கடமையாற்ற வேண் டிய யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் 8 வைத்தியர்களே கடமையாற்றுகிறார்கள். 4 சுகாதார அதிகாரிகளுக்கான வ்ெற்றிடம் நிரப்பப்படவில்லை. வடமராட்சிப் பகுதியில் உள்ள மந்திகை வைத்தியசாலையில் முன்பு இருபதிற்கு மேற்பட்ட எம்.பி.பி.எஸ்
24
பட்ட வைத்தியர்களும் ஐந்து வைத்திய நிபுணர்களும் பணியாற்றினர். இன்று சேவை நீடிப்புச் செய்யப்பட்ட மாவட்ட அதிகாரி மட்டுமே அங்குள்ள ஒரேஒரு எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற வைத்தியர். வைத்திய நிபு ணர்கள் பெயருக்குக்கூட ஒருவருமில்லை. வன்னியின் நிலைமை பற்றிப் ப்ேசவது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அரசளவில் இருக்கிறது.
தெற்கில் உள்ள வைத்தியசாலைகளின் வார்ட்டுகளில் ஒரு வைத்திய நிபுணரின் பின்னே ஏழு எட்டு இளம் வைத்தியர்கள் சொகுசு நடைபோடும் அதேநேரத்தில், வட கிழக்கில் பல வார்ட்டுக்களை ஒரே வைத் தியர் கவனிக்கவேண்டிய நிலையுள்ளது. 4.2. பற்றாக்குறைக்குக் காரணம் வைத்தியர் பற்றாக்குறைக்குக் காரண மாக அரசைச் சுட்டிக் காட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் எம்மை நோக்கி நிற்பதையும் மறுப்பதற்கில்லை. எமது மண் ணில் பிறந்து. எம்மோடு சேர்ந்து அடியும் உதையும் குண்டடியும் செல்லடியும் வாங்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக ஒடுக்கப்பட்ட வர்கள், எம்மிடையே எமது வரிப்பணத்தில் இலவசக் கல்வி பெற்றவர்கள், பட்டம் பெற் றவுடன் யாவற்றையும் மறந்து சுயநலத்தை மட்டும் கருத்தில் கொண்டு தெற்கின் வசந்த ங்களை நாடி ஒடுவது ஏன்? என மக்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேள்வியில் நியாயம் இருக்கவே செய்கிறது.
வைத்தியர்கள் மட்டும் ஒடித் தப்ப வில்லை. வசதியும் வாய்ப்பும் உள்ள அனை வரும் தான் வசந்தங்களை நோக்கி ஓடுகி றார்கள். எங்களை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்’ என வைத்தியர்கள் எதிர்க் கேள்வி எழுப்புகிறார்கள். அத்தோடு வட கிழக்கில் நாம் முடங்கிவிட்டால் பட்ட மேற் படிப்புக்கான வாய்ப்புக்கள் எமக்குக் கிடை க்காது பின்தங்கிவிடுவோம். இதனால் எமது சொந்த எதிர்காலம் பாதிக்கப்படும்.
ஏற்கனவே தமிழ் வைத்தியர்கள் தொகை இலங்கையில் அருகிவிட்டது. நாமும் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளாவிட்டால் இத் தொகை மேலும் வீழ்ச்சி அடையும். இத

னால் முழுத் தமிழ்ச் சமுதாயமும் எதிர்கால த்தில் பாதிப்புக்கு ஆளாகும்' எனவும் காரணம் கூறுகிறார்கள்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுக்கு ஒழுங்கான சேவை அளிக்கப்பட வேண்டும். 5. நோயாளியுடன் செலவிடும் நேரம் வடகிழக்குப் பகுதியில் வைத்தியர் பற் றாக்குறை மோசமாக இருக்கும் அதுே நேரம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் நோயாளர்கள் தொகைக்கு ஏற்ப வைத்தியர் கள் இல்லை. இதனால் ஒவ்வொரு நோயா ளிகளுடனும் அவர்கள் செலவிடும் நேரம் குறைவாகவே உள்ளது. இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் ஒவ்வொரு வெளி நோயாளருடனும் குறைந்தது பத்து நிமிடங்களைச் செலவு செய்கிறார்கள். இங்கு பெரும்பாலும் ஐந்து நிமிடமளவில் தான் ஒதுக்கப்படுகிறது.
இது நோயாளியின் குறைகளைத் திருப்தியாகக் கேட்டறிந்து, அவர்களைப் பரிசோதித்து நோயைக் கண்டறியவோ, நோய் பற்றிய விளக்கங்ளை நோயாளிக்குத் தெளிவுபடுத்தவோ போதுமானதல்ல. சில வைத்தியர்கள் ஓரிரு நிமிடங்களுக்குமேல் ஒதுக்குவதில்லை. நோயாளி வைத்தியருக்கு அருகில் வந்து உட்கார்ந்து தன் பிரச்சினை களைக் கூற வாய் திறக்க முன்னரே மருந் துச்சிட்டை அவர்கள் கையில் திணிக்கப் பட்டு அவர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். இதனால் நோயாளியின் நோய் சரியாக நிர்ணயிக்கப்படுவது கேள்விக்குறி யாவதுடன், நோயாளி மனம் திருப்திப்படவும் முடியாதிருக்கின்றது. மருந்துகள் மட்டும் நோயைக் குணப்படுத்துவதில்லை. நம்பிக் கையும் மனத்திருப்தியும் தேவை என்றிருக் கும்போது எமது நோயாளிகளுக்கு அவை எட்டாக்கனியாகி விடுகிறது. 8. உடல்நலக்கல்வி
மக்களின் ஆரோக்கியம் மேலோங்க வேண்டும் எனில் மக்களிடையே சுத்தம், சுகாதாரம், நோய்கள், அவற்றிற்கான காரண ங்கள், உடல்நலம், அவற்றைப் பேணும்
25
வாழ்க்கைமுறை பற்றிய அடிப்படை அறிவு
வளரவேண்டும்.
உடல்நலக் கல்வி அளிப்பதில் வைத்தி யர்களின் பங்களிப்பின் போதாமை உணரப் படுகிறது. நோயாளர்களுடன் செலவிடும் நேரம் குறைவாக இருப்பதால் நோயாளர்க ளுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் போதுமாகவில்லை. அத்துடன் நோயாளர்க ளுக்கு அவர்கள் நோய் மற்றும் கடைப்பிடி க்கவேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கம் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்குவதும் இங்கு நடைமுறையில் இல்லை. இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
உடல்நலக் கல்வி பற்றிய நூல்களை எழுதுவதிலும் எங்கள் வைத்தியர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஆங்கிலத்தில் இத்தகைய நூல்கள் ஏராள மாக வெளிவருகின்றன. தமிழகத்து வைத் தியர்களும் நிறைய நூல்களை வெளியிடு கிறார்கள். ஆனால் இங்குள்ள வைத்திய ர்கள் அக்கறையின்றி இருக்கிறார்கள். 7. மருந்து இறக்குமதியும்
மருந்தகங்களும் இது தனியாகப் பேசப்படவேண்டிய விரிவான முறை. பல்தேசிய கம்பனிகளின் போக்கு, சமூக நலனை நோக்காது வியா பார முன்னேற்றத்தில் மட்டும் காட்டும் அதீத அக்கறை, மருந்து விற்பனையாளர்களுக் கான பயிற்சிகளின் போதாமை, ஊடகத் துறையின் அக்கறையின்மை போன்றவை இன்னுமொரு கட்டுரையில் ஆராய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக சிறந்த பொருளாதாரக் கொள்கை, மற்றும் துறை சார்ந்தோரின் சுயநலப் போக் குகளினால் மருத்துவம் என்பது ஒரு சேவை என்ற நிலை மாறி, அதுவும் பணம் பண்ணும் வழி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அரசும், வைத்தியர்களும் மனது வைத்து, எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து கடும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந் நிலையில் திருப்தியான மாற்றம் ஏற்படலாம். O

Page 14
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் ஏன் தோல்வியைக் கண்டன?
தம்பிஐயா தேவதாஸ்
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்புப்பற்றி, பிரபல எழுத்தாளர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் ஆழ்ந்து நோக்கக் கூடியன. அந்தக் கருத்தை வெளியிட்டவர், ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஒலிபரப்பாளர், விமர்சகள், 'பொன்மணி' என்ற படத்தின் தயாரிப்பு நிர்வாகியும் கூட! ஆம், காவலூர் ராஜதுரை சொன்ன கருத்துத்தான், அப்படி ஆழ்ந்து நோக்கக் கூடியதான கருத்துக்கள். "நாங்கள் படமொன்றைத் தயாரித்து விட் டோம். ஆனால் அதைச் சந்தைப்படுத்தத் தெரியவில்லை. இப்படிச் சந்தைப்படுத்தத் தெரியாமையால்தான் பல இலங்கைத் திரை ப்படங்கள் தோல்வியடைந்தன” இதுவே அவர் சொன்ன கருத்து. உண்மைதான். இப்பொழுது இலங்கைத் திரைப்படங்களைப் பார்க்க ஆவலாயுள்ளவர்கள் உள்நாட்டை விட வெளிநாட்டில்தான் அதிகம் இருக்கிறார் கள். வெளிநாட்டு இலங்கையரையிட்டுத் தான் ராஜதுரை அந்தக் கருத்தைக் கூறியி ருக்கலாம். புலம்பெயர்ந்த அந்த இலங்கைத் தமிழர்கள் இலங்கைத் திரைப்படங்களைப் பார்க்க ஆவலாக உள்ளார்கள். அவர்கள் ரசிக்கும் வகையில் எமது திரைப்படச் சந்தைப்படுத்தல் அமையும் என்றால், எமது இலங்கைத் திரைப்பட உலகம் தலைநிமிர வாய்ப்பு இருக்கிறது.
அக்காலத்தில் ஒரு தமிழ்ப்படத்தைப் பிரமாண்டமான முறையில் தயாரித்தவர் திரு.வி. எஸ். துரைராஜா. அவர் அக்காலத் தில் சொன்ன கருத்தும் நாம் ஆழ்ந்து
t
நோக்கக் கூடியதுதான். அவள் சொன்னார்:
"நான் ஆரம்பத்தில் 'குத்து விளக்கு திரைப்படத்தைத் தயாரிக்க ஆயத்தமா னேன். பிரபலமான தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட இறக்குமதியாளர் ஒருவர் என் னிடம் வந்து, இலங்கையில் தமிழ்த் திரைப் படம் தயாரித்தால் தற்கொலைக்குச் சமம் என்று சொன்னார். நான் பரவாயில்லை என்று
சொன்னேன். அப்படி படம் தயாரிக்க ஆசை
26
என்றால் இந்தியாவில் பணம் போட்டுத் தயாரிப்போம். அதற்கு நான் உதவி செய்கிறேன் என்றார். நான் அதற்கு மசிய வில்லை. துணிந்து இலங்கையிலேயே படத் தைத் தயாரித்தேன்” என்று கூறினார் வி. எஸ். துரைராஜா. அந்தத் திரைப்பட இறக்கு மதியாளர் வி. எஸ். துரைராஜாவை மட்டும் கேட்கவில்லை. பலரிடம் முயற்சித்திருக்கி றாள். இது மட்டுமா? இந்தியத் திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கம், இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டால் தென்னிந்தியப்படங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று ஆராய்ந்து அறிய ஒரு குழுவைக்கூட அனுப்பியதாம். அதற்கு இணங்கவே தென்னிந்தியத் தமிழ்ப்படங் களை இங்கு இறக்கி வியாபாரம் செய்த நிறுவனங்கள் செயற்பட்டன.
இந்த நடவடிக்கையால்தான் முதலில் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப் பில் தோல்வியைத் தழுவிக்கொண்டன. ஆரம்ப காலத்திலேயே இப்படியான பிரச்சி னைகளுக்கு இலங்கையில் தமிழ்த்

திரைப்படக் கலைஞர்கள் நடவடிக்கை ஏதும் எடுத்திருந்தால் இலங்கைத் தமிழ்த் திரைப் படங்களின் தோல்வியை ஓரளவு தடுத்திருக் கலாம் என்று பல கலைஞர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் "தோட்டக்காரி என்ற படத்தைத் தயாரித்த தன் மூலம் முதலாவது இலங்கைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் என்று பெயர் எடுத்துக் கொண்டவர் பி.எஸ். கிருஷ்ணகுமார். அவர் சொன்ன கருத்து அண்மையில் ஒரு சிங்க ளப் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் வெளியிடும் ‘சதிசி" என்ற சிங்களச் சஞ்சிகையில் அவரது பேட்டி இடம்பெற்றது. அவர் கூறுகிறார்: "எத்தனை கஷ்டம் இருக்கிறதோ அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்து தோட்டக்காரியைத் தயாரித்து விட்டோம். அதன் பின்புதான் பெரிய பிரச்சி னையே தோன்றி விட்டது. தியேட்டர்கள் எல்லாம் தனியார் கையில் இருந்தன. பெரும் பாலும் இந்தியப்பட இறக்குமதியாளர்களு க்கே தியேட்டர்கள் சொந்தமாக இருந்தன. அதனால் தோட்டக்காரியை திரையிடுவத ற்கு தியேட்டர் தரமாட்டோம் என்றார்கள். அப்போது இருந்த அரசியல்வாதிகளின் காலில் விழுந்து அந்தப்பிரச்சினையையும் தீர்த்தோம். அரசியல்வாதிகளின் அனுசர ணையில் தியேட்டர்களும் கிடைத்துவிட்டன. பின்பு என்ன நடைபெற்றது தெரியுமா? தோட்டக்காரி திரையிடும் தியேட்டருக்குச் சமீபமாக உள்ள தியேட்டர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோரின் புதிய திரைப்படங்களைத் திரையிட்டு எங்கள் பட த்தை விரட்டோ விரட்டென்று விரட்டிவிட்டார் கள். தோட்டக்காரி தோல்வியில் முடிந்தது” என்று கூறியிருக்கிறார் பி.எஸ். கிருஷ்ண குமார்.
இவ்வாறு அந்தக் காலத்தில் இலங்கை யில் தமிழ்த் திரைப்படங்கள் தலைதூக்க முடியாமல் இருந்தன. இந்த இறக்குமதி வியாபாரிகள் உள்ளுாத் தமிழ்த் திரைப்பட
27
வளர்ச்சிக்கு பல இடைஞ்சல்களைக் கொடுத்தனர். தமிழ்த் திரைப் பட வளர்ச்சியைத் தடுத்தனர். ஆனாலும் அந்தத் தடைகளையெல்லாம் தாணி டி 50 படங்களுக்குக் கிட்ட தயாரிக்கப்பட்டன. அவற்றில் அரைவாசியே திரைக்கு வந்தன. இப்படியான பிரச்சினைகள் பொதுவாக இப் பொழுது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டபின் அநேகமாக இப்படியான பிரச்சினைகள் தீர்ந்து விட்டன. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள்தான் தயாரிக்கப்படவில்லை. ஆனாலும் இப்பொழுது புதிய பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. தொலைக்காட்சி என்ற சாதனம்தான் அப்படியான புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. தொலைக்காட்சியின் தாக்கம் DL (6 LÖ இலங்கை தி திரைப்படங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வடகிழக்கு யுத்த சூழ்நிலையும் திரைப்பட வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. வடமாகாணத்தில் 42 தியேட்டர்களும் கிழக்கு மாகாணத்தில் 15 தியேட்டர்களும் செயலிழந்தன. கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்ததாக அதிக தியேட்டர்களைக் கொண்ட பிரதேசமாக யாழ்மாவட்டம் விளங்கியது. இப்பொழுது அங்கு யாழ்.ராஜா, சுன்னாகம் (நாகம் ஸ்), நெல்லியடியில் இன்னும் ஒரு தியேட்டர் என மூன்று தியேட்டர்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்நிலைபரங்கள் இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும் தடைக் கற்களாகும். உள்ளுரில் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் நெருக்கடியை எதிர்நோக்கினாலும் அவற்றை வெளிநாடுகளில் உரிய முறையில் சந்தைப்படுத்தினால் வெற்றி கொள்ளலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

Page 15
蕊 இந்தியக் கலைஞர்கள் பலர் இப்பொ ழுது வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அவர்களை வர வேற்று கலை நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத் துவது புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களே.
பெரிதாக இல்லாவிட்டாலும் இந்தத் துறையில் வானொலி நிலையங்களையும், தொலைக்காட்சி நிலையங்களையும் ஏன் சினிமாத் தியேட்டர்களையும் இப்போதும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களே நடத்துகின்றனர். இந்தியப் பத்திரிகை சஞ்சிகைகளை வாசிப்பவர்களும் அதிகமாக இலங்கைத் தமிழர்களே. அதனால்தான் தமிழ்வாணனும் அவரது புதல்வர்களும் நடத்தி வந்த ‘மணிமேகலைப் பிரசுரம்கூட இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்க ளைப் பிரசுரிக்க முன்வந்திருக்கின்றது. அவற்றின் வெளியீட்டு விழாக்களும் வெளிநாடுகளில் நடைபெறுகின்றன.
நிலைமை இப்படி இருக்கும்பொழுது உருப்படியான இலங்கைத் தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டால் உள்நாட்டில் இல்லாவிட் டாலும் வெளிநாட்டில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. எனவே இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிப்பதுடன் அவற்றை வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தும் முயற்சி யையும் ஒரு தொடர் துறையாகக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களின் தோல்வியின் காரணங்களில் முக்கியமானது தயாரித்த படங்களை உரிய முறையில் சந்தைப்படுத்தாமையே ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்குத்தான் இலங் கைத் தமிழ்த் திரைப்பட ஆர்வலர்கள் முதன் முதலில் தீர்வு காணவேண்டும்.
எல்லாம் சரிதான். பூனைக்கு யார் மணி கட்டுவது? O
யுத்தத்தினால்.
அதிகமாகும்.
யுத்தத்தையும் வன்முறையையும் நிராகரிப்போம்!
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் அதிகமாகும். அங்கவீனமானவர்க்ளின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாகும். விதவையானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாகும். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாகும். பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும்
கல்வியை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாகும். அழித்தொழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாகும். வீண்விரயமான பணத்தொகை 1 கோடியே 30 இலட்சத்துக்கும் அதிகமாகும். இழக்கப்பட்ட விவசாய நிலங்கள் பத்தாயிரம் ஏக்கருக்கும் அதிகமாகும். அழிக்கப்பட்ட சூழலை விலை மதிக்க முடியாது. தடைப்பட்ட அபிவிருத்தி வேலைகளின் பெறுமதி பல கோடி ரூபாய்களாகும். அழித்தொழிக்கப்பட்ட புனிததலங்கள் ஆயிரக்கணக்கானவையாகும்.

பாடசாலைக் கல்வியில் முதலாளித்துவச்சிந்தனை
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
பாடசாலைக் கல்வியானது எதிர்காலப் பயனுள்ளது: நன்மையையே தருவது: வாழ்க்கையின் முன்னேற்றம், கண்ணியமான ஒரு தொழிலைப் பெறுவது என்பன பாடசா லைக் கல்வியைப் பொறுத்த நன்மைகளே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் விரிவாகப் பரவியுள்ளது. சாதாரண மக்கள் இந்நன்மை களையும் பெறவேண்டும் என்பதற்காக உலகநாடுகளின் அரசாங்கங்கள், கட்டாயக் கல்வி, இலவசக்கல்வி, இலவசபாடநூல், இலவச சீருடை, புலமைப்பரிசில் எனப்பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றன. இவற்றைப் பயன்படுத்தி, பொருளாதார த்தில் பின்தங்கிய பிரிவினர்களில் கணிச மானவர்கள் உயர் கல்வித் தேர்ச்சிகளை யும், தகுதிகளையும் பெற்று வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளமையும் கண்கூடு. பாடசாலைக் கல்வியின் இத்த கைய பல நன்மைகள் பற்றிய அறிவும் தகவல்களும் சமூகத்தில் நன்கு பரவியுள்ள மையால் பாடசாலைக் கல்வி விமர்சனத்து க்கு அப்பாற்பட்டதாய் கேள்விக்கிடமின்றி சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சேவையாகக் கணிக்கப்படுகின்றது.
இன்று வளர்முகநாடுகளில் தீவிரமான பிரச்சினையாகக் காணப்படும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை, இளைஞர் அமைதியி ன்மை, வன்முறைகளின் வளர்ச்சி, மற்றும் சமூக சீர்கேடுகள் என்பன காரணமாக, அவ் வப்போது கல்வி முறைகளின் குறைபாடு கள், இயலாமை, பொருத்தப்பாடின்மை பற்றிய கருத்துக்களும் அவற்றைப் போக்கு வதற்கான அரசாங்கங்களின் கல்விச் சீர் திருத்த ஆலோசனைகளும் முன் வைக்கப் படுகின்றன. சனத்தொகை அதிகரிப்பு, எய்ட்ஸ் நோய், சுற்றாடல் மாசடைதல், இன ஒற்றுமைச் சீர்குலைவு, போதை மருந்துப்
29
பாவனை, வன்செயல்களின் அதிகரிப்பு ஆகிய சமூகப்பிரச்சினைகள் பற்றிய ஆய்வு களும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோச னைகளும், கல்வி முறைகளையும் உள்ளட க்கியே அமைகின்றன. இப்பிரச்சினைகளுக் கான தீர்வுகளில் ஒன்றாக கல்வித்துறைச் சீர்திருத்தங்கள், பாட ஏற்பாட்டு மாற்றங்கள் முன் வைக்கப்படுகின்றன. இப்பிரச்சினை களையும் பொறுத்தவரையில் 'கல்வி ஒரு சர்வரோக நிவாரணி’ என்ற கருத்துடன் அரசுமட்டக் கொள்கை வகுப்போர் செயற்பட்டு வருகின்றனர்.
கற்கும் உரிமை மறுப்பு எவ்வாறாயினும் எப்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டனவோ அப்போதே அவை பற்றிய விமரிசனங்களும் தொடங்கி விட்டன. ஆரம்ப காலத்தில் கல்வி வசதிகளை தமது பிள்ளைகளுக்காக ஏற்படுத்திக் கொண்ட உயர் வர்க்கத்தினர் பாடசாலைக் கல்வியும் கலாசாரமும் உயர் குடியினருக்கு மட்டும் பயன்படுமேயாதலால் சாதாரண மக்களுக் குப் பாடசாலைக் கல்வி தேவையில்லை: அவர்களுக்குப் பொருத்தமற்றது என்ற நோக்குடன் செயற்பட்டனர். அவர்களுக்கு கல்வி உரிமையும் வாய்ப்புக்களும் மறுக்கப் பட்டன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பாட சாலைக் கல்வி பிரபுத்துவ உயர் குடியினரு க்கே உரியதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவில் வசதி குறைந்த கறுப்பு இனத்தவருக்குக் கல்வி வசதிகளை வழங்கு வதைத் தடை செய்யும் சட்டங்கள் கூட இருந்தன. தென்னாபிரிக்காவில், கறுப்பர்கள் உயர்தரமான நூற்கல்விப் புலமையைப் பெறுமளவுக்கு அவர்கள் வெள்ளையர்கள் போன்று முழுமையான மனித இனமாகப் பரிணாமவளர்ச்சி பெறவில்லை என்ற இன ஒதுக்கல் சிந்தனையை வெள்ளையர் அரசு

Page 16
பின்பற்றியது. இந்தியாவில் காலம் காலமா கத் தலித் வகுப்பினர்களுக்கு உயர் வருண த்தவருக்குச் சமமான வாய்ப்புக்கள் வழங் கப்படவில்லை: இலங்கையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களை வழங்கினால் தங்களுடைய பெருந்தோட்ட வேலை பாதிக்கப்பட்டு தாங் கள் பின்னடைய நேரிடும் என்ற நோக்கில் குடியேற்ற கால ஆட்சியாளர் செயற்பட்டனர். முதலாளித்துவம் தந்த கல்வி ஏற்பாடு இப்பகைப்புலத்தில் பாடசாலைக்கல்வி பற்றிய மார்க்சிய சிந்தனையாளர்களின் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டன. முதலாளி த்துவ சமூகத்தில் இடம் பெறும் பாடசா லைக் கல்வியின் அடிப்படை நோக்குகள், பாட ஏற்பாடு, பாட அமைப்பு, பாடசாலைப் பண்பாடு முதலிய அனைத்தும் முதலாளித் துவ அமைப்பை உறுதி செய்யும் நோக்கு டையனவேயன்றி, அதனை மாற்றியமைக் கும் இலக்குடையனஅன்று: சமூகத்தில் ஏற் கனவே இருந்து வரும் சமமின்மைகளையும், பேதங்களையும் தொடர்ந்து நீடித்து நிலை நிறுத்தும் பணியையே இந்தக் கல்வி செய் கின்றது. இதனால் பொருளாதார வளர்ச்சி யில் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்று மார்க்சியவாதிகள் வாதாடினர். பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட சமூக அமைப்பில், பின் தங்கிய மக்களுக்கு எவ்வளவுதிான் இலவசக்கல்வி வசதிகளை வழங்கினாலும் இறுதியில் பாடசாலை அமைப்பானது சமூக வேறுபாடுகளையும் பிரதிபலிக்கவே செய்யும்; வசதி மிக்கோரு க்கு வசதியான பாடசாலைகள், சாதாரண மக்களுக்கு வசதியற்ற பாடசாலைகள் என்ற நிலை நீடிக்கவே செய்யும் முதலாளித்துவ அமைப்பின் கல்வி நிலை இதுவே என்பது அவர்களுடைய நிலைப்பாடாகும்.
எடுத்துக்காட்டாக, இலங்கையில் கடந்த 60 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களில் பெரும்பாலானவை கல்வி வாய்ப்புக்களை யாவருக்கும் சமமாக வழங்கும் நோக்குடை யவை. பின்தங்கிய கிராமிய மக்களின் கல் வியை மேம்படுத்தும் குறிக்கோளுடனேயே
30
இலவசக்கல்வி, மத்திய பாடசாலை அமை ப்பு, இலவசப் பாடநூல், சீருடை, புலமைப் பரிசில் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய் யப்பட்டன. ஆயினும் இன்று பாடசாலைக் கல்வித் துறையில், பல பிராந்திய வேறு பாடுகளையும் பிராந்தியங்களுக்குள்ளே பல சமமின்மைகளையும் காண முடிகின்றது. எழுத்தறிவு, கல்வி அடைவு மட்டம், மான வர் இடைவிலகல், க.பொ.த. பரீட்சைச்சித்தி, ஆசிரியர் வளம் என்றும் பல விடயங்களில் மலையக மக்கள் பின் தங்கியிருப்பதை சகல தரவுகளும் சுட்டிக் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில் உயர் மத்திய வகுப்பினரு க்கென வசதிமிக்க பெரிய பாடசாலைகளும் சாதாரண வகுப்பினருக்கென வசதி குறை ந்த பாடசாலைகளும் இயங்கி வருவதைக் காண முடிகின்றது. இந்நிலைமைகளையே மார்க்சிய விமரிசகர்கள் முதலாளித்துவக் கல்வி ஏற்பாடாக வர்ணித்தனர். பின்தங்கிய் வகுப்பினருக்கு தக்க பய்ன் இல்லை முதலாளித்துவ பொருளாதார அமைப்பு என்ற வட்டத்தினுள் உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள், சிறுபான்மையினர் ஆகி யோரின் நிர்ப்பந்தங்களைத் தளர்த்தி முத லாளித்துவ அமைப்பைப் பேணுவதற்காகக் கல்வித்துறையில் பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன என்பது இச்சித்தாந்தவாதி களின் கருத்து. இதற்கு முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, சிறுபான் மையினரும் தொழிலாளர்களும் கல்வி பெறத் தடையாக இருந்த சட்டங்கள் நீக்கப் பட்டன. ஐக்கிய அமெரிக்காவிலும் தென்னா பிரிக்காவிலும் நடைமுறையிலிருந்த இத்த கைய சட்டங்கள் நீக்கப்பட்டன. இரு நாடுக ளிலும் கறுப்பர்கள் கல்வி பெறுவதைத் தடைசெய்யும் சட்டங்கள் முன்னர் இருந்தன. இரண்டாவது நடவடிக்கையாக, பின் தங்கிய வகுப்பினர் கல்வி பெறுவதற்கென புலமைப்பரிசில்கள் போன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இலங்கையில் ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில், மகாப்பொல போன்றன அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று மேலை நாடுகளிலும் பின் தங்கிய

வர்களுக்கான பல புலமைப்பரிசில் ஏற்பாடு கள் செய்யப்பட்டன. ஆயினும் கல்வியில் காலங்காலமாகக் பின் தங்கிய வகுப்பினர் இந்த ஏற்பாடுகளினால் அதிக பயனடைய வில்லை. எடுத்துக்காட்டாக, தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கை இத்துறையில் நிதானமான, நியாயமான பல நடவடிக்கை களை மேற்கொண்டது. இதன் காரணமாக, 1960 களில் இலங்கை நாடு பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கிய குறைவு விருத்தி நாடென இனங் காணப்பட்டாலும், கல்வி வளர்ச்சியில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடு த்த இரண்டாம் நாடாக வைத்தெண்ணப் பட்டது. ஆனால் இலங்கையின் கல்விச் சீர்திருத்தப்பணிகள் இன்று வரை எட்டாத பல இனக்குழுக்களில் பெருந் தோட்டத் தொழிலாளர் சமூகமும் ஒன்றாகும். இதனை இலங்கையின் கல்வி முன்னேற்றம் பற்றி ஆராய்ந்த பல அறிஞர்களும் குறிப்பிட்டு ள்ளனர். மேலைநாடுகளிலும் கல்வியில் பின்தங்கிய இனச்சிறுபான்மையினரின் விடயத்திலும் இவ்வாறே நிகழ்ந்தது. மேலதிக வாய்ப்புகளும் உதவிகளும் தேவை
மேலைநாட்டு முதலாளித்துவ சித்தாந் தம், சனநாயகம், கல்வியில் சம வாய்ப்புகள் என்பனபற்றி வலியுறுத்திக் கூறிய போதிலும், அந்நாடுகளின் முதலாளித்துவ அமைப்பின் பாரம்பரிய சக்திகளும் இயல்புகளும் பின் தங்கிய சிறுபான்மைக் குழுவினரின் கல்வி வாய்ப்புகளுக்கு எதிராகவே செயற்பட்டன. இதனால் உருவாகக் கூடிய முதலாளித்துவ சிந்தனைகள் பற்றிய விமரிசனங்களை எதிர் கொள்ளும் வகையில் காலங்காலமாகக் கல்வியில் சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வான வாய்ப்புக்களைப் பெற்ற சிறுபான்மையினரு க்கு, "சமமற்ற மேலதிக ஆதரவையும் உதவிகளையும் வழங்கினால் மட்டுமே சமவாய்ப்புக் கோட்பாடு கருத்துள்ளதாக அமையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. அதாவது பின்தங்கிய நிலையில் கல்வியை ஆரம்பிப்பவர்களுக்கு கல்விமுறை அசாதார ணமாக மேலதிக வாய்ப்புக்களை வழங்கு தல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இனச்சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி
3.
பொருளாதாரத்தில் பின்தங்கிய சகலருக்கும் இத்தகைய மேலதிக வாய்ப்புக்களும் உதவிகளும் வழங்கப்படல் வேண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
முதலாளித்துவக் கலாச்சாரம்
மேலோட்டமான பார்வையில், சமவாய்ப்பு தொடர்பான இந்நடவடிக்கைகளில் பல நியா யங்கள் இருப்பது போலவே தோன்றும். ஆனால் தீவிரவாத கல்விச் சிந்தனையாளர் கள், முதலாளித்துவப் பாடசாலை முறையா னது, சமகால சமூக, பொருளாதார முறையை எதுவித விமரிசனமுமன்றி ஏற்றுக் கொள்வதாகவும், கல்வித்துறைச் சமவாய்ப்பு கள், பின்தங்கிய வகுப்பினரை முதலாளித் துவ சமூக விழுமியங்களையும் வாழ்க்கைப் பெறுமானங்களையும் கட்டாயக் கல்வியினூ டாக ஏற்றுக் கொள்ளச் செய்யவே உதவும் எனவும் விமரிசித்தனர். பாடசாலைகளில் நிலவும் சமூகத் தொடர்புகள் முதலாளித் துவ அமைப்பில் காணப்படும் ஊழியர்களின் சமூகப்பிரிவு முறையையே பிரதிபலிக்கின் றன என அவர்கள் வாதிட்டனர். எச்சமூகத்தி லும் கல்வி முறையின் ஒரு பிரதான பணி பிள்ளைகளிடத்து முறையான விழுமியங்க ளையும் உளப்பாங்குகளையும் ஏற்படுத்துவ தாகும். இதனையே சமூகவியலாளர்கள் கல்வியின் சமூகமயமாக்கற் பணி எனக் குறிப்பிட்டனர். இவ்வகையில் பாடசாலை முறை முதலாளித்துவ கலாச்சாரத்தைப் பேணவே உதவுகின்றது என்ற முறைப்பாடு சாதாரணமானதே.
தொழிற்சாலையை நிகர்த்த பாடசாலை அமைப்பு இச்சிந்தனையாளர்களின் நோக்கில் முத லாளித்துவ அமைப்பின் பாடசாலைகளைச் சிறு தொழிற்சாலைகளுடன் ஒப்பிடமுடியும். பாடசாலைகள் முதலாளித்துவ தொழிற் சந்தை விரும்புகின்ற பெறுமானங்களையே கற்பிக்கின்றன. முதலாளித்துவத் தொழிற் சாலைகளில் அதிகாரிகள் ஒரு படிமுறை ஒழுங்கில் பதவி வகுப்பர். பாடசாலைக ளிலும் இதே நிலைமையே. (அதிபர் - துணைஅதிபர் - ஆசிரியர்) காணப்படுகி ன்றன. முதலாளித்துவத் தொழிலகங்களில்

Page 17
கீழ்ப்புடிவும் பணிவும் எப்போதும் வலியுறுத் தLபடுகின்றன. இவற்றையே பாடசாலைக இம் ஊக்குவிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பிலும் பாடசாலைகளிலும் ஒத்துழைப் பைவிட போட்டியும் பொது நன்மையை விட சுயநலனுமே வலியுறுத்தப்படுகின்றன. சிடுங்கக் கூறின் மொத்தத்தில் கல்விமுறைக் தம் முதலாளித்துவப் பொருளாதார முறைக் குமிடையே பல ஒற்றுமைகளைக் காண முடியும் என இச்சிந்தினையாளர்கள் எடுத் துக் காட்டினர். பாடசாலை முறை நிர்வாக தந்திரத்தையோ அல்லது கல்விச் சுதந்திர *தயோ கொண்டதல்ல அத்ன் அனைத்து அம்சங்களும் முதலாளித்துவ தொழிற்சந் தையினால் கட்டுப்படுத்தப்படுவதாக இவர்கள் வாதிட்டனர்.
நவீனக் கல்வியியலில் பயன்படுத்தப் படும் பாடசாலை உள்ளீடு, கற்றல் வெளி մO (input, output) &մյո8, செய்முறை ஃ செயற்பாடு போன்ற பதங்கள் தொழிற்சாலை :: தராதரங்கள், தரங்கள், ಇಂಕ್ಜೆ ஆகிய சொற்களும் இவ்வாறான ஜீண்மையில் கட்டாயக்கல்வி, னமுற்றாகவே கைத்தொழில் இதழுக் சிந்தனைகளின் அடிப்படை
வையாகும். இலங்கையில் அரசாங்கப் பாடசாலை முறையொன்றினூடாகவே கல்வியில் சமவாய்ப்புகளை வழங்க முடியும் என வலி யுறுத்திய சக்திகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே இலவசக்கல்வி பொன்ற விப்புகள் வழங்கப்பட்டன. இவ்வாய்ப்புக ளினால் நாட்டின் பின்தங்கிய கிராமப்புற மக்கள் பல நன்மைகளையும் பெற்றாலும், பயிற்சியற்ற தொழிலைச் செய்து வந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களை அந்நன் விPள் சென்றடையவில்லை. பெருந்தோட் டப்பொருளாதாரத்தைப் பராமரிக்கக்கூடிய படிப்பறிவு குறைந்த தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக ஒழுங்காகக் கிடைக்கப் பெறப் பொருத்த " ஒரு கல்வி முறையையே 19 நூற்றா விடுக் காலனித்துவ ஆங்கில அரசு விடிேெமத்துக் கொடுத்தது. ... O
 
 
 
 
 
 

"ZBĒRTĀ -ĘŁO "¿Dozī£ :rış) olists “Titoluotoops, oss -īus uolgırı ‘bjug
o panssa