கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2001.10-11

Page 1


Page 2
பக்தகோடிகள் புடைசூழ.
பக்தகோடிகள் புடைசூழ கால்மேல் கால் போட்டுக் ‘கடவுள் நான்’ என்று ‘டிக் டிக்’கிறது முக்காலிமேல் ஒரு கடிகாரம்.
பக்தகோடிகளுக்கு “ஓவர் டைம்’மும் உபரி வருமானமும் உயர்குடி வாழ்வும் அருளுகிறார் கடவுள்.
கடவுள் மரிப்பதில்லை ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம். கடவுள் பழுதானால் காலநோய்கள் பல பெருத்துவிடும் ஆகையால் கடவுள் பழுது நீக்க நிரந்தர மடங்களும் மடாதிபதிகளும் அவ்வப்போது தோன்றும் மகான்களும் காலநோய்கள் தீர்க்கக் கல்விமான்களும் சதா கடவுள் நாமம் பாடிக் கொண்டேயிருக்க பக்தகோடி வெகுஜனங்களும்தான் உண்டே
இந்தக் கூட்டத்திலே போய் கவிஞனைத் தேடுவதென்ன மடமை! அதோ பார்: உழைத்து ஓடாகி மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும் ஒரு மாட்டின்மேல் மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது. ஒரு காகம்: நித்தியத்வத்தை நோக்கி அதன் முகம்.
தேவதேவன்
(நன்றி சுபமங்களா)

மக்களுக்கான ஒரு சுதந்திர கலாசாரக் கொள்கை
மக்களின் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரச கலாசாரக் கொள்கை மற்றும் நிறுவன செயற்பாட்டிற்கான கட்சிச் சார்பற்ற இடையீடு
தோற்றுவாய்
எமது நாடு, மீண்டும் ஒருமுறை புதிய அரசாங்கத்தைத் தேர்தெடுக்கும் சந்தர்ப்பத்தை எட்டியுள்ளது. நாம் தேர்தல் உறுதி மொழிகளில் நம்பிக்கை வைக்கவில்லை. புதிய அரசாங்கத்தில் நியமனம் பெறும் புதிய கலாசார அமைச்சர் உட்பட இத்துறையின் கொள்கை வகுப்பாளர்கள், நிறுவன அதிகாரிகள் மற்றும் செழுமையான ஒரு கலாசார வாழ்வினை எதிர்பார்க்கும் பிரஜைகள் ஆகிய அனைவரினதும் கவனத்தை ஈர்க்கவே நாம் இவ் இடையீட்டைச் செய்கிறோம். எந்த ஒரு கட்சியிடமும் உறுதி மொழிகளைப் பெறும் நோக்கில் இதனைச் சமர்ப்பிக்கவில்லை. கட்சி சார்பற்ற அடிப்படையிலேயே இப்பிரகடனத்தை வெளியிடுகின்றோம்.
பொதுவாகக் கலாசாரம் என்பது மக்கள் வாழ்வின் முழுமையான அபிவிருத்திக்கு அத்தியாவசியமான அடிப்படையாகும். சர்வதேச ரீதியான ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில் எமது நாடு எதிர்நோக்கியிருக்கும் பாரிய கலாசார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், சிவில் சமூகத்திற்கு அவசியமான சக்தியைப் பெற்றுக்கொடுக்கவும், மறுமலர்ச்சியின் முன்னேற்றத்திற்கும், மாற்றத்திற்குரிய முக்கிய அங்கமென்பதை அடையாளம் காண்பதன் மூலம் எமது நாட்டின் கலாசார வாழ்வு பற்றிய பின்வரும் விடயங்களை எடுத்துக்கூற விரும்புகின்றோம். பிரச்சினைகள்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலாசாரத் துறைக்குத் தவறற்ற - போதிய அரச இடையிட்டிற்கான வழிகாட்டலும் கொள்கை வகுப்பும் கிடைக்கவில்லை என்பது எமது அவதானிப்புராகும். 1956 இல் ஆரம்பமான கலாசார அமைச்சின் செயற்பாடு வரையறுக்கப்பட்ட ஒர் குறுகிய வட்டத்திலேயே இயங்கி வந்தது. கலாசாரத்துறை பற்றி ஆட்சிக்கு வந்துபோகும் அரசாங்கங்களின் கவனம் மிகக் குறைவாகவே இருந்து வந்துள்ளது. அதே சமயம், பதவியிலிருந்த சகல அரசியல்வாதிகளும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கலாசார நிறுவனங்களைப் பயன்படுத்தினர். குறிப்பாக இன்றைய தாராளப் பொருளாதாரச் சூழலில் எதுவித கட்டுப்பாடுமின்றி விரிவடையும் வணிகத்துறை, கலாசார வாழ்வு முழுவதையும் கேட்டுக் கேள்வியின்றி விழுங்கி வருகின்றது. இத்தகைய சிக்கலான பின்னணியின்கீழ் இன்றைய அரச கலாசாரக் கொள்கைகள் எத்தகையவை? அரசு பொதுமக்கள் பணத்தில் பராமரிக்கப்படும் அரச
3.

Page 3
கலாசார நிறுவனங்களின் செயற்பாடு எத்தகையது? போன்ற விடயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதன் மூலமே கலாசார வீழ்ச்சிக்கான பாதையைச் சீர் செய்யவும் மக்களின் நலனை மையமாகக் கொண்ட கலாசாரச் செயற்பாட்டை நாட்டில் முன்னேற்றவும் (ՄIգեւքb.
நீண்ட வரலாற்றைக்கொண்ட, இன்று மிகச் சக்திவாய்ந்த முறையிற் செயற்படவேண்டிய கலைப்பேரவை அதன் கட்டமைப்பைக்கூட முறையாகக் கவனிக்காத காரணத்தினால் இன்று பாரதூரமான பக்கவாத நோய்வாய்ப்பட்டு செயலிழந்துள்ளது. அதற்குரிய சுயாதீனத்தைப் பெற்றுக் கொடுத்து நிறுவன ரீதியில் அதனை வலுப்படுத்துவதற்கு இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட ஆசாபாசங்கள் அபிலாசைகள் என்பவற்றை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட "டவர் ஹோல் நிதியம்” தொடர்பான குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளில் பிற்காலத்தில் மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது தொடர்ந்து அரசியல் ஆதிக்கத்தின்கீழ் செயற்படும் ஒரு மூடிய நிறுவனமாக செயற்பட்டதே ஒழிய எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. கல்வி அமைச்சின்கீழ் செயற்பட்டாலும் இலக்கியத் துறையில் செல்வாக்குச் செலுத்திய நிறுவனமான நூலக அபிவிருத்திச்சபை கடந்த காலத்தில் எதுவித பயனுள்ள நிகழ்ச்சித் திட்டத்தையும் அமுல்படுத்தாது வெறுமனே பணத்தை வீண் விரயமாக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. சர்வதேச மட்டத்தில் மிக முக்கியமான சம்பவங்களுக்கு உரிமை கொண்டாடும் இலங்கையின் ஓவியக் கலையை பிரதிநிதித்துவப்படுத்தும் கற்கைக்கான மத்திய நிலையமாக அமைய வேண்டிய தேசிய கலாபவனம் பிராந்திய கலை அரங்குகளில் கேலிக்கிடமான ஓர் அந்தஸ்தையே பெற்றுள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஒரு மாற்றத்தைக் காட்டிய போதிலும், தேசிய சினிமா அபிவிருத்தியை குறிக்கோளாகக் கொண்டு புதிய செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சினிமாத்துறை தொடர்பாக அரசிற்கு ஆலோசனை வழங்கவேண்டிய சுயாதீனத்தை ஒழித்து அரசியல் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நிறுவனமாக மாறிய பல சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருந்தது. (உ-ம்: “புரசந்த களுவர” (பூரணச் சந்திரன் இருளில்) தடை செய்தமை)
எமது நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப் பட்டு வருவதையே மேற்படி விடயங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது. மக்களின் கலாசார உரிமைகள் தொடர்பான 1978 ஜெனிவா சர்வதேச மரபொழுங்குகளுக்கு கைச்சாத்திட்ட போதிலும் இலங்கை அரசு தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்குச் சிறிதேனும் திடசங்கற்பம் கொள்ளவில்லை. உத்தேச யோசனைகள்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இம்முக்கிய பிரச்சினைகளையிட்டுக் கவனஞ்செலுத்தி அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் யோசனை கூற விரும்புகின்றோம். இவ்விடயத்தில் புதிய அரசுக்கும் விசேட பொறுப்புக்கள் உண்டு. முதலில் ஜனநாயகக் கண்ணோட்டம் கொண்ட கலாசாரத் துறைபற்றிய அறிவுள்ள - அறிவை மேம்படுத்தத் தயாரான ஓர் திறமைசாலியே கலாசார அமைச்சராக நியமிக்கப்படல் வேண்டும். அதே சமயம் இன்றைய தேசிய,
4

சர்வதேசிய அரசியல் - பொருளாதார சூழலுக்கும் சவால்களுக்கும் ஏற்ப மக்களின் கலாசார ஆத்மீக முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சரியான உபாய மார்க்கத் திட்டங்கள் ஊடாக நிறுவனச் செயற்பாடுகளை வழிநடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்குப் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றோம்.
1.
பன்முகக் கலாசாரச் சூழலில் அரச கலாசாரக் கொள்கைகளையும் உபாய மார்க்கங்களையும் தயாரிக்கும்போது நகரங்களையும் பிரதேசங்களையும், ஆண் - பெண் பிரதிநிதித்துவத்தையும் பரம்பரைப் பன்முகப்பாங்கு, இனத்துவ குழுமங்களின் கலாசாரப் பன்முகம் என்பவற்றை உள்ளடக்கிய அனைத்துக் கலாசாரத் தேவைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும். நவீன உலகமயமாக்கல் நிலமைகள் ஊடாக ஏற்படும் சிக்கல்களையும் சந்தர்ப்பங்களையும் அறிந்திருத்தல் வேண்டும்.
சுருங்கக் கூறுவதாயின் மக்களின் பொதுக் கலாசார உரிமைகளையும் சமூகக்
குழுமங்களின் விசேட கலாசார உரிமைகளையும் காப்பதற்கும் அதன் ஓர் அங்கமாகக் கலையை நடைமுறைப்படுத்தவும் அதன் வெற்றியை அனைத்து இலங்கைப் பிரஜைகளும் அனுபவிக்கத்தக்க வகையில் உரிய சந்தர்ப்பங்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொடுப்பது அரசின் கடமையாகும்.
அரச கலை கலாசார நிறுவனங்களின் செயற்பாடு அரசியல் அபிலாசைகளுக்குக் கீழ்படுத்தப்படக் கூடாது. இக்கலாசார நிறுவனங்களின் உயிரோட்டமுள்ள செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அதி உயர் அரச அனுசரணை வழங்கப்பட
கூட்டு - நாகரீக சமூகக் கலாசார வாழ்விற்கு எதிர்கால சந்ததியினரின் ஆத்மீக ஒழுங்கமைப்பையும் ரசனையையும் அபிவிருத்தி செய்யும் முகமாக கல்வி - தொடர்பாடல் துறையில் நேரடியான வினைத் திறனைக் கலாசார அமைச்சு ஊடாகக் கூட்டிணைத்தல் வேண்டும். உதாரணமாக சுயாதீனத்தை வழங்கி வலுவூட்டப்பட்ட கலைப்பேரவை அல்லது அத்தகைய தேசிய மட்டத்திலான சுயாதீனமான கட்டமைப்பின் தலைவர் அரச ஊடகங்களின் மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். மேலும் இம்மூன்று துறைகளையும் ஒரே அமைச்சரின்கீழ் இயங்கவைப்பது சிறந்தது.
அரச கலாசார நிறுவனங்களுக்கிடையே முதன்மையான பாத்திரத்தை வகிக்கும் கலைப் பேரவையை இன்றைய பலவீனமான நிலையிலிருந்து மீட்டெடுத்து போதிய வலுவுடைய அமைப்பாக கட்டி எழுப்புவதற்கும் அதன் சுயாதீனம் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும். இது அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் அதன் அடிப்படை நியமனங்கள் செய்யப்படும்போது ஜனநாயக ரீதியான ஒளிவு மறைவற்ற தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆகவே, பல்கலைக்கழக உபவேந்தர்கள் மூலம் அல்லது ஆகக் குறைந்தபட்சம் மானிடவியல் துறைப் பீடாதிபதிகள் மன்றத்தின் மூலம் அல்லது அங்கீகரிக்கப்படக்கூடிய சபையின் சிபாரிசுக்கமைய அமைச்சர் கலைப்பேரவைத் தலைவரை நியமனம் செய்ய வேண்டும். நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய அடிப்படைப் பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்ட பின்னர் அவ்வத் துறைகளில் தேர்ச்சி பெற்றோர் சபையின் சிபாரிசுகளுக்கமைய
5

Page 4
ஜனநாயகரீதியாகவும் ஒளிவு மறைவின்றியும் குறிப்பிட்ட உபகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட முடியும். கலைப் பேரவையின் உறுப்பினர்களாக அரச உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யப்படக் கூடாது. அதே சமயம் அதன் நிறைவேற்று மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு அவசியமான உத்தியோகத்தர்களை கலைப் பேரவையைக் கலந்தாலோசித்து அமைச்சு நியமனம் செய்வதில் தவறில்லை. எவ்வித காரணங்களையும் சுட்டிக் காட்டாது கலைப்பேரவை உறுப்பினர்களை நீக்குவதற்கும் கலைப் பேரவைக்குக் கட்டளை பிறப்பிக்கவும் அமைச்சருக்குள்ள அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும். கலைப் பேரவை பாராளுமன்றத்தின் ஊடாக மக்களுக்குப் பொறுப்புக் கூறும் நிலையை உருவாக்க வேண்டும். கலைப் பேரவையின் நிறுவன சக்தியை உறுதி செய்வதற்குக் குறைந்தபட்சம் கலைப்பேரவைத் தலைவர் பதவி உட்பட அடிப்படைத் துறைகளின் (கலை, நாடகம், நுண்கலைகள்) தலைமைப் பதவிகள் முழுநேர தொழில்சார் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் சகல பிரஜைகளும் செழுமையான கலாசாரத்திற்கு உரித்துடையவர்கள். இவ்வுரிமையை நடைமுறையில் செயற்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு கலைப் பேரவை அல்லது அதற்குப் பதிலாக தேசிய மட்டத்தில் நிறுவப்படும் சுயாதீன நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் பிரதேச மட்டத்திலான கலாசார செயற்திட்டம் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதற்கு இன்று செயலிழந்த நிலையில் உள்ள கலாசார மத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதேச மட்டத்திலான கலைஞர்களையும் அறிஞர்களையும் உள்ளடக்கிய மக்கள் கலாசார மையத்தைக் கட்டி எழுப்பி
பிரதேச மட்டத்திலான கலாசார நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்.
மரபொழுங்குகளுக்கு மாறாகவும் மூடி மறைக்கப்படும் வகையிலும், முறை சாரா வகையிலும் நிதி உதவி - அனுசரணை வழங்குவதை அமைச்சு கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக ஒழுங்கான திட்டத்திற்கமைய ஒளிவுமறைவற்ற நிலையில் ஜனநாயக ரீதியில் கலைஞர்களுக்கும், கலை - கலாசார நிறுவனங்களுக்கும், சனசமூக நிலையங்களுக்கும் நிதி உதவியும் அனுசரணையும் வழங்கப்பட வேண்டும். இதற்கென கலைப்பேரவையின் கீழ் விசேட நிதி உதவிப் பிரிவை அமைத்தல் உசிதமானது.
டவர் ஹோல் நிதியத்தை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிப்பதற்கு நாடகக்கலையின் பன்முகப்பாங்கையும் விசேட தன்மையையும் மேம்படுத்தும் வகையிலும் காலத்திற்கு ஒத்த வகையிலும் டவர் ஹோல் நிதியச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
கலாசாரத் துறையில் வளங்கள் வீண் விரயம் ஆக்குவதையும் துர்ப்பிரயோகம் செய்யப்படுவதையும் நிறுத்துவதற்கும் சரியான வழிகாட்டல் வழங்குவதற்கும் கலாபவனத்தையும் ஜோன் டி சில்வா அரங்கையும், இத்தகைய வேறு நிறுவனங்களையும் கலைப் பேரவையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இதுவரை மேற்படி ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள கலைஞர்களும் அறிஞர்களும் பின்வருமாறு:
பண்டித் அமரதேவ பந்துல ஜயவர்தன ஜெக்சன் அந்தனி லால் ஹேகொட பராக்கிரம கொடித்துவக்கு ஹென்றி ஜயசேன பேராசிரியர் சிறி குணசிங்க கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன ஜயதிலக்க கமலவிர பிரசன்ன விதானகே தர்மசிறி பண்டாரநாயக்க பராக்கிரம நிரிஎல்ல பந்துல வித்தானகே அசோக்க ஹந்தகம ரத்ன சிறி விஜேசிங்க சரத் விஜேசூரிய சோமபந்து வித்தியாபதி தர்மசேன பத்திராஜ புத்ததாச விதானராச்சி நீர்வை பொன்னையன் திலக் ஜயரத்ன இனோகா சத்தியாங்கனி ராஜித்த திஸாநாயக்க பந்துல நாணயக்கார ரெனிசன் பெரேரா எட்வர்டு ஜயக்கொடி சரித்தா பிரியதர்சினி திபிகா பிரியதர்சினி நந்தன வீரசிங்க தெனகம கிரிவர்தன எஸ்.ஜி. பூஞ்சிஹேலா W.A. அபேசிங்க தருபதி முனசிங்க அநோமா ஜினாதநி சித்திரசேன
வஜிரா
உபேக்ஷா ரவிபந்து வித்தியாபதி குணதாச கப்புகே சந்திரகுப்த தேநுவர கருணாசிறி விஜேசிங்க கிங்ஸ்லி குணதிலக தீபானி சில்வா ஆரியரத்ன அத்துகல ப்ரதீபா தர்மதாஸ் அநோமா ராஜகருணா தன்ஞ்சய கருணாரத்ன ஜயலால் ரோஹண
49 50
5 52 53 54 55 56 57 58 59 60 62 61 63 64 65 66 67 68 69 70 7 72 73 74 75 76 77
78
79
80
8 82
83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95
96.
சந்திரசிறி போகமுனவ சேனக்க பெரேரா ஜயந்த சந்திரசிறி பியல் காரியவசம் சோமரத்ன திஸாநாயக்க கீர்த்தி வலிசரகே கெளல்யா பிரநாந்து குமாரி முனசிங்க சீதா ரஞ்சனி புத்திக தமயந்தி வசந்தி ரவ்வல சோமபால ஹேவா கப்புகே ரவிந்ர குருகே கே.பி. ஹேரத் நவரத்ன கமகே கமல் பெரேரா பேராசிரியர் கா. சிவத்தம்பி கலாநிதி அர்ஜுன பராக்கிரம கலாநிதி செல்வி திருச்சந்திரன் எஸ். சிவகுருநாதன் ஜயதிலக்க பண்டார கலாநிதி ஜயதேவ உயங்கொட சீமந்த கேரத் திலிப் றோஹன உதயகாந்த வர்ணசூரிய பியதாச வெலிகண்ணகே கே. எஸ். சிவகுமாரன் ஏ. முகமது சமிம் எம்.கே. முருகானந்தன் எச். ஏ. பெரேரா கே. விஜயன் வ. இராசையா என்.கே. ரகுநாதன் காவலூர் இராசதுரை பியசார சில்பாதிபதி ரொட்னி வர்ணகுல கத்லின் ஜயவர்தள ரஞ்ஜித் பெரேரா றோளந்த் அபுேபால தெளிவத்தை ஜோசப் டெனி அளுத்வத்த ப்ரசாத் சூரியஆராச்சி பேராசிரியர் நந்தசேன ரத்னபால ஜயந்த அரவிந்த சர்வம் கைலாசபதி T. சண்முகநாதள் மநுபந்து வித்தியாபதி கே. கணேஷ்

Page 5
விபவி செய்திமடல் பின்னோக்கிய பார்வை
டாக்டர். எம்.கே. முருகானந்தன்
எங்களின் இலக்கு எது என அறிந்து கொள் - இங்கே புதியதோர் உலகம் தோன்றிட வேண்டும். வருத்திய தொல்லைகள் மாண்டிட வேண்டும். உலகினைத் தின்னும் போர்களைக் கொல். பசியினை அகற்று, பகைமையை ஒடுக்கு, நசிவுசெய் அரசியல் நரகரை அடக்கு. பாலியல் கொச்சைகள். மனங்கிளர் விகாரம் மடமைகள், கொடுமைகள் எல்லாம் ஒழிக.
2000 ஜனவரி விபவி செய்தி மடலில் வெளியான இக் கவிதை வரிகள் புதிய சகத்திரத்தினை வரவேற்பதாக அமைந் திருந்தபோதும், அதன் செல்நெறியை விளக்கும் பா போல அமைந்திருந்து குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு இலக்கியக் குழுவினதும் அடிநாதமாக இருப்பது அவர்கள் தாம் வரித்துக் கொண்ட கலை இலக்கியக் கோட்பாடுகளுக்கு விஸ்வாசமாக இருப்ப தும் அவற்றைத் தமது படைப்புக்களிலும், வெளியீடுகளிலும் முக்கிய இடம் அளித்து வெளியிடுவதும் ஆகும். இந்த வகையில் பார்க்கும்போதுவிபவி கலாசாரத் துறையின் சுதந்திரத்தை அவாவியது. இங்குள்ள துறையானது அரசின் கட்டுப்பாட்டுக்குள்
அல்லது சில தனியார் துறையினரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஊதுகுழலாக நிற்கின்றது. கலாசாரத்தை இத்தகைய கட்டுப்பாட்டுக்க ளிலிருந்துவிடுவித்து மக்களினதும், லட்சிய உணர்வு கொண்ட கலைஞர்கள், எழுத்தா ளர்களினதும் குரலாக ஒலிக்க வைக்க வேண்டும் என்பதே விபவியின் பேரவாவாக இருந்தது. அதற்காகவே அது செயற் பட்டது. அரசியலாரின் விருப்பு வெறுப்புக்க
ளுக்கு துணைபோகாத சுதந்திர இலக்கிய விழாக்களையும் பரிசளிப்புக்களையும் முன்னெடுத்ததும் இதற்காகவே.
ஆம். அரசியல் ஆதிக்கங்களுக்கு அடிபணியாமலும், பண முதலைகளின் கபட நாடகங்களுக்குத் துணை போகாம லும் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் பணிக்குத் தங்கள் இலக்கிய முயற்சிகள் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற தாகத்துடன் பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஒன்றிணைந்தனர். சுதந்திர மான கலாசாரம் அவர்களது இலட்சியமாக இருந்தது. அவர்கள் அன்று, 12 ஆண்டுகளு க்கு முன்னர் ஆரம்பித்ததுதான் விபவி. அவர்கள் தம் பணிகளின் தகவல்களை இலக்கிய ஆர்வலர்களிடம் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பித்ததுதான் விபவி செய்தி மடல். ஆரம்பத்தில் மாதமொரு முறை 4 பக்கங்களுடன் முளைவிட்டது. இப்பொழுது இரு மாதங்களுக்கு ஒரு முறை 32 பக்கங்களாக சடை பரப்பி விட்டது. தனது நிறுவனம் நடாத்தவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கும் அதே நேரத்தில் ஏனைய கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றியும் அறிவிக்கத் தவற வில்லை. கவிதைகள், தகவல் துணுக்கு

கள், சிங்களக் கலைஞர்களின் அறிமுகம் எனப்பல விடயங்கள் அந்த 4 பக்கங்களுக் குள் திணித்து வழங்கப்பட்டதால் ஆரம்பகாலம் முதலே பலரும் விருப்புடன் எதிர்பார்க்கும் செய்தி மடலாக வெளிவந்தது.
விபவி மடலில் வெளிவந்த ஒவ்வொரு படைப்பும் சமூக அக்கறையுடன் இலக்கிய நேர்மையோடு தெரிவு செய்யப்பட்டிருந்தன. மக்களைப் பாதிக்கும் எந்த விடயத்தைப் பற்றியும் குரல் எழுப்ப விபவி தயங்க வில்லை. நீர்வை பொன்னையன் மாதா மாதம் எழுதிய கட்டுரைகள் யாவும் சுதந்திர இலக்கியத்தினதும், முற்போக்கு கொள்கையினதும், இன மத மொழிக ளைக் கடந்த மனித நேயத்தினதும், ஆவே சக் குரல்களாக சத்திய வேட்கையுடன் ஒலித்ததை காணக் கூடியதாக இருந்தது. தணிக்கை, இரண்டாயிரம் ஆண்டை நோக்கி, எங்கு செல்கிறோம், வன்முறைக் கலாசாரம், ஈழத்தில் மாற்றுக் கலாசாரம், தேசிய செல்வத்தைப் பாதுகாப்போம், தேர்தலும் ஊடகத் துறையும், மாற்றுக் கலாசாரத்தளம் எமக்கும் தேவைதானா? சுதந்திர இலங்கையின் கல்வி போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
விபவியின் செய்திமடல் இன்னுமொரு விதத்தில் தனித்துவமானது. பெரும்பாலான சிற்றிதழ்கள் போல அது எந்த ஒரு தனி மனிதரையோ குழுவையோ முதன்மைப் படுத்தவோ அல்லது மாறாக எதிர்க்கருத் துக் கொண்ட எவரையும் தனிப்பட்ட ரீதியில் சேறு பூசவோ ஒருபோதும் முயலவில்லை. மாறாக இலக்கியத்தில் செழுமை காண்பதையே அவாவி நின்றது.
ஈழத்து சிறுகதைத் துறையின் வளர்ச்சியில் விபவி எடுத்துக் கொண்ட அக்கறை அளப்பரியது. சிறுகதை மேம்பாட்டு அரங்கை அது ஒழுங்காக
நடாத்தி வந்தது. இவ்விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட சில கட்டுரைகளின் சுருக்கங் கள் சிறுகதைப் பாணிகள், ஏன் எழுத வேண்டும். எதை எழுதுவது போன்ற தலைப்புக்களில் விபவி செய்தி மடலில் பிரசுரமாயின. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம் கு.ப.ரா வின் ‘உயிரின் அழைப்பு பாரதியாரின் “காற்று போன்ற வரலாற்றுப் பெருமையும், படைப்பழகும் கொண்ட நல்ல தரமான சிறுகதைகள் உதாரணங் காட்டுவதுபோல பிரசுரமாயின. இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம் முன்னோடி எழுத்தாளர்களை அறி முகப்படுத்தியதுடன் அவர்களின் படைப்புச் செழுமையை மீள நினைவூட்டவும் வாய்ப்பளித்தது.
இலங்கை ஒரு சிறிய நாடு. இங்கு மூவினங்கள் வாழ்கின்றன. அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, மற்றவர் கலை கலாசார பண்பியல் அம்சங்களை அறிந்து, பரஸ்பர மதிப்பளித்து வாழ்வது அவசியம். கலை இலக்கியப் பரிவர்த்தனை மூலம் இதை முன்னெடுக்க முடியும். இனங்களுக் கிடையேயுள்ள சந்தேகத்தை அகற்றி புரிந் துணர்வை ஏற்படுத்தி இன செளஜன்ய த்தை வளர்த்துக் கொள்வதில் விபவி எப்பொழுதுமே தீவிரமாக செயலாற்றி வந்திருக்கிறது.
இந்த வகையில் சிங்கள மொழிக் கலைஞர்களை தமிழ் வாசகர்களுக்கு தனது செய்தி மடலூடாகத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்துள்ளது. கமால் பெரேரா. மஹகம சேக்கர போன்ற பல படைப்பாளிகள் அறிமுகப்படுத்தப்பட்ட துடன் பல சிங்களக் கலைஞர்களின் படைப்புக்களும் தமிழில் தரப்பட்டன. மூத்த எழுத்தாளர் கே. கணேஷ், நந்தன வீரசிங்கவின் இரு கவிதைகளை உயிர்த் துடிப்புடன் தமிழில் தந்திருந்தார். இதே

Page 6
போல பிற நாட்டுப் படைப்பாளிகளையும் அவர்களது படைப்புக்களையும் எமக்கு அறிமுகப்படுத்தவும் செய்தது. சந்திரலேகா, வித்யாசாகர், கும்மாடி விட்டல், கலில் ஹிப்ரான், கறுப்பு அமெரிக்கக் கலைஞன் லாங்ஸ்டன் ஹியூஸ். பாபல்லோ நெருதா, போன்ற பல படைப்பாளிகள் இவ்வகையில் எமக்கு அறிமுகமாயினர்.
கார்க்கி என்றொரு மானிடன் வாழ்கிறான். அடித்தள மக்கள் இலக்கிய முன்னோடி முல்க்ராஜ் ஆனந்த் கலாசாரப் புரட்சியின் பிரதம தளபதி லுசுன், போன்ற நீர்வை பொன்னையனின் ஆழமும் அகலமும் கொண்ட கட்டுரைகள் உலகளாவிய ரீதியலான முற்போக்கு இலக்கிய முன்னோடிகளை எமக்கு உயிர்த்துடிப்புடன் அறிமுகப்படுத்தி வைத்தன. கே. கணேஷ், கே.ஏ.அப்பாஸ் பற்றி எழுதியிருந்தார். இதே போன்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிய விரிவையான பார்வையாக பேராசிரியர் கைலாசபதி, என்.கே. ரகுநாதன் ஆகியோரின் படைப்பாளு மையை முகம்மது சமீம் பதிவு செய்தார்.
கவிதைத் துறையும் விபவியின் அக்கறைக்குரியதாக என்றும் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் வெளியான கவிதைகள் கருத்தாழமும், மொழி வனப்பும் கொண்டவையாக அமைந்திருந்தன. புகழ் பெற்ற மூத்த கவிஞரான நுஃமான் முதல் அரும்பும் கவிஞரான சங்கீதா வரை பலரும் தங்கள் பங்களிப்பைச் செய்திருந்தனர்.
இலக்கியப் போக்குகள் காலத்திற்குக் காலம் மாறி வந்திருக்கின்றன. அவை பற்றிய சர்ச்சைகளும் என்றும் ஓய்வ தில்லை. முக்கியமாக யதார்த்தவாதம், முற்போக்கு இலக்கியத்தில் அழகியல் போன்றவை அடிக்கடி சர்ச்சைக்கு ஆளவ
துண்டு. இந்த வகையில் பேராசிரியர் கைலாசபதியின் முற்போக்கு இலக்கியத் தில் அழகியல் பிரச்சினைகள், பேராசிரியர் ஆர். சீனிவாசனின் அழகியல் போன்ற கட்டுரைகள் வாசகள்களுக்குத் தெளிவைத் தந்தன.
இப்பொழுது பின் நவீனத்துவம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆயினும் இது பற்றிய பெரும்பாலான இலங்கை எழுத்தாளர்கள் அக்கறைப்படுவதில்லை. அக்கறைப்பட்டாலும் தெளிவான விளக்கத் தைக் கொடுக்கக் கூடிய கட்டுரைகள் இங்கு கிடைப்பதில்லை. ஒரு சிலர் எழுதிய கட்டுரைகளும் விளக்கங்களும் அவர்களது மேதாவித்தனத்தை வெளிப்படுத்துவனவா கவே அமைந்தன. அல்லத ஜிரணிக்காதன வற்றின் வெற்று வாந்திகளாகவே இருந்தன. இந்த நிலையில் பின் நவீனத் துவத்தின் அடிப்படைகள் என்று கே. விஸ்வநாதன் முன்பு சுபமங்களாவில் எழுதிய கட்டுரையை மீள்பிரசுரம் செய்திரு ந்தமை வரவேற்புக்குரியதாயிருந்தது. இக்கட்டுரை பின் நவீனத்துவத்தை எளிமை யாக விளக்கிய அதே நேரம், ஆழமான
திருச்சந்திரன் இ.முருகையன் ஆகியோர் இவ்விடயத்தில் அளித்த சில விளக் கங்களும் பயனுள்ளவையாயிருந்தன.
சில புதிய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படத்திய இலக்கியத்தில் புதுப் புனல் என்ற தொடர் பலராலும் விரும்பி
வாசிக்கப்பட்ட இன்னுமொரு பகுதியாகும்.
10
நிதானமும் ஆழமும் கொண்ட வ. இராசையா பல நூல்களை சிறப்பாக ஆய்வு செய்திருந்தார். சாகித்திய பரிசு பெற்றதும் காத்திரம் மிக்கதுமான சச்சிதானந்தனின் யாழ்ப்பாணக் காவிய்ம் என்ற நூல் பற்றிய அவரது மதிப்பீடு மிகவும் நுணுக்கமும் நறும்சுவை கொண்ட

தாயும் அமைந்திருந்தது. யாழ்ப்பாணம், சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் நூல் பற்றிய க. சண்முகலிங்கத்தின் ஆழமான விமர்சன மும் பலரின் கவனத்தை ஈர்த்தது. இதே வேளை பல இளம் விமர்சகர்களும் தமது காத்திரமான பங்களிப்பை இப்பகுதிக்கு வழங்கியிருந்தனர்.
சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம் எனப் படைப்பிலக்கியங்களுடன் தன் பணிகளை விபவி முடக்கிக் கொள்ள வில்லை. திரைப்படம், நாடகம், ஓவியம், இசை என அதன் எல்லைகள் பரந்தது.
திரைப்பட ரசனையை வளர்க்கும் பணியில் மாதாந்தம் சினிமா சிறந்த திரைப்படங்களை வீடியோ மூலம் காட்டுவதுடன் அப்படம் சம்பந்தமான கலந்துரையாடலும் விபவியால் ஒழுங்கு செய்யப்பட்டது. ரசனை உணர்வுள்ளவர்க ளின் வரவேற்பைப் பெற்ற நிகழ்வு இது. அத்துடன் திரைப்படக் கலை சம்பந்தமான பல காத்திரமான பயனுறு கட்டுரைகள் விபவியில் அவ்வப்போது வெளியாயின. அகிரோ குரோசாவின் மூன்று திரைப்படங் கள், இனப்பிரச்சினையை இரு சிறுமிகளின் நட்புணர்வூடாக காட்டிய சரோஜா திரைப் படம் பற்றிய கட்டுரை, இலங்கைத் தமிழ்ப் படங்கள் ஏன் தோல்வியைக் கண்டன என்ற தம்பியையா தேவதாஸனின் கட்டுரை ஆகியன குறிப்பிடத்தக்கவை. கைலாசநாத னுடையதும், வைதேகி இராஜசிங்கத்தின தும் இரு ஓவியக் கண்காட்சிகள்
சம்பந்தப்பட்ட ஓவியர்களின் கருத்துரை யோடு இணைந்த கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. கைலாசநாதனின் ஒரு ஒவியமும் அது பற்றி மாவை வரோதயன் விபவி மடலில் எழுதிய கவிதையும் இன்றும் மனத்தில் பசுமையாக நிற்கின்றன.
கதிரை இருந்தது.
கதிரையில்
கழற்றிக் கொழுவிய
சேட்டும் இருந்தது!
மேசையில் விரித்தபடி
புத்தகம் இருந்தது
கைவிளக்கும்
எரிந்தபடி இருந்தது
படித்துக் கொண்டிருந்தவனை மட்டும்
காணவில்லை. தமிழ்ச் சமுதாயத்தின் சோகக் கதையை வார்த்தைகளும் வர்ணங்களும் சிறைப் பிடித்திருந்தன.
சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய கல்வி, மருத்துவம் போன்ற துறைகள் பற்றியும் விபவி செய்தி மடல் கவனம் எடுக்கத் தவறவில்லை. கல்வித்துறை பற்றி ஒரு இதழ் முழுமையாக எடுத்தாண்டது. சுதந்திர இலங்கையில் கல்வி, முதலாளித் துவ கல்வி முறை, பாடசாலைக் கல்வியில் முதலாளித்துவ சிந்தனை போன்ற கட்டுரைகள் அவ்விதழை அலங்கரித்தன.
ஆர்வத்தோடும், ஈடுபாட்டுடனும் ஒழுங்காக படித்து வரும் ஒரு இதழ் பற்றிய மதிப்புரையை எழுதுவது எவருக்குமே மன திற்கு இசைந்த, மனநிறைவைக் கொடு க்கும் பணி என்பதில் ஐயமில்லை. விபவி என்னைப் பொறுத்தவரையில் அத்தகைய ஒரு சஞ்சிகைதான். ஆனால் நான் எழுது வது அம்மடலின் இறுதி இதழுக்கு என்னும் போது மனத்தைப் பிழிகிறது. நெருங்கிய நண்பன் ஒருவனின் பிரியாவிடைக் கூட்டத் தில் கலந்து நிற்பது போன்ற ஆற்றா மையை என்னுள் தூண்டி விடுகிறது.
ஆயினும் இது விபவியின் இறுதி இதழ் என்றும் சொல்ல முடியாது. நிதி நெருக்கடி க்கு வழி கண்டதும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவைபோல மீண்டும் வெளிவரும் என நம்பலாம். 4

Page 7
உலகப் பயங்கரவாத ரிஷி
ஐரோப்பாவில் ஹிட்லரின் ஜேர்மனியும் முசோலினியின் இத்தாலியும் இரண்டாம் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கில் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்ட ஜப்பான் தோற்கடிக்கப்பட்டது. ஹிட்லரின் மூலம் சோஷலிச சோவியத் யூனியனை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டிய பிரிட்டனும் அமெரிக்காவும் ஹிட்லரின் பேராசை காரணமாக பின்னர் அவனை எதிர்த்து சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்துப் போராட வேண்டி ஏற்பட்டது.
இரண்டாவது யுத்தத்தின் போது ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாயித் தீவுகளில் அணுக்குண்டுகளை வீசி பல லட்சம் அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
இருப்பினும் பிரிட்டனதும் அமெரிக்கா வினதும் உலக ஆதிக்கப் பேராசை அவர்களை விட்டுப் போகவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீரமிக்க போராட்டத் தால் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் அந்நாட்டை விட்டு 1945ல் வெளியேறியதும் அந்த வெற்றிடத்தை நிரப்ப அமெரிக்கா ஓடோடிச் சென்றது. பிற்போக்குவாதி சியாங் கேஷேக்கின் கோமிண்டாங் ஆட்சிக்கு ஆலோசகர்களும் ஆயுதங்களும் நிதியும் வழங்கியது. அதுவரை உலக அரங்கில்
12
ஜனநாயகத் தேவதையாக காட்சி தந்த அமெரிக்கா தனது சுயரூபத்தை உலகின் முன் வெளிப் படுத்தியது. அதன் ஆக்கிரமிப்பு நகங்கள் சீனாவை பிறாண்ட முயன்றன. ஆனால் மகத்தான சீன மக்கள் அமெரிக்கா ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற சியாங்கேஷேக் கும்பலின் 90 லட்சம் துருப்புகளை பூண்டோடு ஒழித்து புதிய சீனத்தைப் படைத்தனர்.
சீனாவிலிருந்து தப்பியோடி தாய்வான் தீவில் பொம்மை ஆட்சியொன்றை நிறுவிய கோமிண்டாங் பிற்போக்கு வாதிகளுக்கு அமெரிக்கா இன்று வரை ஆதரவளித்து சீனாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயன்று வருகின்றது. அதேபோல ஆசியா வின் இன்னொரு பெரும் நாடான இந்தி யாவை விட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெளியேற மறுத்தது. இந்திய மக்கள் மாபெரும் சுதந்திரப் போராட்டத்தை நடாத்தி பிரிட்டனை வெளியேற்றினர்.
சீனாவில் தோல்வி கண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் சும்மா இருக்கவில்லை. 1950ல் கொரியாவில் தலையிட்டு ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை நடாத்தியது. ஆனால் வீரமிக்க கொரிய மக்கள் சீன் மக்களின் உதவியுடன் உறுதியுடன் போரிட்டு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்க ளைத் தோற்கடித்தனர். ஆனாலும்

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரியாவை வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரித்து இன்றும் தென்கொரியாவில் 30,000 அமெரிக்கத் துருப்புக்களையும் இராணுவத் தளங்களையும் வைத்திருந்து கொரிய தீவகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.
1954 ஜெனிவா உடன்படிக்கையைத் தொடர்ந்து வியட்நாம் யுத்தத்தில் அவமானகரமாகத் தோற்கடிக்கப்பட்ட பிரெஞ்சுப் படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. அங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஓடோடிச் சென்று குந்திக் கொண்டது. அமெரிக்கப் படைகள் முதலில் தென் வியட்நாமையும், பின்னர் லாவோசை யும் அதற்குப் பின்னர் கம்போடியாவையும் ஆக்கிரமித்து தமது பொம்மை அரசுகளை நிறுவின. இந்த மூன்று இந்தோசீன நாட்டு மக்களும் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியபோது அம்மக்கள் மீது லட்சக்கணக்கான தொன் நச்சு இரசாயனக் குண்டுகளை வீசி பல லட்சம் மக்களை அமெரிக்கா ஏகாதிபத்தியம் கொன்றொழித் தது. ஆனால் இறுதியில் அம்மக்களால் மோசமாகத் தண்டிக்கப்பட்டு 1975ல் அந்நாடுகளை விட்டு அவமானத்துடன் வெளியேறியது.
சீன, கொரிய இந்தோசீன யுத்தங்களில் தன்னை நுழைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா சொன்ன காரணம் “கம்யூனி ஸம் பரவாமல் தடுப்பதற்கு' என்பதாகும். மற்றைய நாடுகளின் மக்கள் தாம் என்னவிதமான சமூக அமைப்பு முறையில் வாழ விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்கும் உரிமையை இந்த அமெரிக்க விரும்பு கிறார்கள் என்று தீர்மானிக்கும் உரிமையை அந்த அமெரிக்க பொலிஸ்காரனுக்கு வழங்கியது யார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அது ஒருபுறமிருக்க 50 களிலும் 60 களிலும் புதிதாகச் சுதந்திரம்
13
அடைந்த பெருவாரியான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது சொந்த முதலாளித்துவ வழியக் கூட சுதந்திரமாக மேற்கொள்ளவிடாமல் அமெரிக்கா எத்தனை சதி, சீர்குலைவு, பயங்கரவாதச் செயல்களைச் செய்து வந்துள்ளது?
அமெரிக்கா ஏகாதிபத்தியம் உலகம் பூராவும் செய்த நாச வேலைகளை பட்டியல் போடுவதனால் ஒரு நூற்றாண்டு உலக சரித்திரத்தையே எழுத வேண்டியிரு க்கும். முக்கியமான சம்பவங்களை மட்டும் இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
1953ல் ஈரானில் ஷா முசாதிக்கின் அரசாங்கத் மெரிக்காவே கவிம்க்கக. 1954ல் கெளத்தமாலாவில் ஷாகோமோ ஆர்பென்ஸின் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கத்தை ஆட்சிக் கவிழ்ப்பு செய்தது.
1956ல் கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சோஷலிஸ அரசைக் கவிழ்ப்பதற்காக எதிர்ப்புரட்சி கிளர்ச்சிகளை உருவாக்கியது. அதேபோல 1956 இலும் 1968 இலும் இன்னொரு கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடான செக்கோஸ்சிலோவாக் கியாவிலும் கிளர்ச்சிகளை உருவாக்கியது. அப்பிராந்தியத்தில் இன்னொரு சோஷலிச நாடான போலந்தில் கத்தோலிக்க திருச்சபையின் உதவியுடன் சொலிடா ரிற்றி என்ற தொழிற்சங்க அமைப்பின் மூலமும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை 1980 களில் மேற்ககொண்டது.
1959ல் கியூபாவின் சர்வாதிகாரி பாட்டிஸ்டாவின் எதேச்சாதிகார அரசை பிடல்கஸ்ரோ தலைமையிலான புரட்சிகரப் படைகள் தூக்கி எறிந்து மக்கள் அரசை நிறுவியது. முதல் அவ்வரசைக் கவிழ்க்க வும் கஸ்ட்ரோவைக் கொலை செய்யவும் பல தடவைகள் அமெரிக்க அரசின்

Page 8
வளர்ப்புப் பிள்ளையான சீ.ஐ.ஏ முயன்று வந்துள்ளது.
1960ல் பெல்ஜியத்தின் காலனியாக இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற கொங்கோவின் தேசிய விடுதலை வீரன் பட்றிக் லுமும் பாவை சீ.ஐ.ஏ. படுகொலை செய்தது.
பாண்டுங் மாநாட்டின் மூலம் பஞ்சசீலக் கொள்கையை வகுக்கவும். கூட்டுச் சேரா இயக்கத்தை உருவாக்கவும் பெரும்பங்கு வகித்த இந்தோனேஷிய அதிபர் டாக்டர் சுகார்னோவின் ஆட்சியை 1965 செப்டெம் பரில் கவிழ்த்து கம்யூனிஸ்டுகள் உட்பட ஏறத்தாழ 10 இலட்சம் இந்தோனேஷிய மக்களை துடிக்கப் பதைக்கப் படுகொலை செய்த இராணுவ சர்வாதிகாரி சுஹார்ட்டோ விற்கு பின்னணியில் நின்று செயற்பட்டது அமெரிக்க அரசே,
1966ல் ஆபிரிக்காவின் கானா நாட்டின் புகழ்பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனாதி பதி என்குறுமாவை சீ.ஐ.ஏ. ஆட்சிக்கவிழ்ப் புச் செய்தது. இது தவிர ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் அடிக்கடி இராணுவச் சதிகளை நடாத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொண்டது.
1971ல் பங்களாதேஷ் உருவான பின் அதன் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மானை யும் அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை செய்வதற்கு பின்னணியில் நின்றதும் அமெரிக்காவே.
பாகிஸ்தானில் பிரதமர் சுல்பிகார் அலி பூட்போவை இராணுவத் தளபதி வழியாவுல் ஹக் மூலம் தூக்கில் போடவும் பின்னர் வழியாவுல் ஹக் கை வானவெளியில் விமானத்தில் குண்டுவைத்துக் கொல்லவும் பின்னணியில் நின்றதும் அமெரிக்காவே.
1980 களில் சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரி ஜனாதிபதி
14
சல்வடோர் அலென்டோயைக் கொலை செய்து இராணுவ சர்வாதிகாரி பினோசெற் தலைமையில் ஆட்சியமைக்க உதவியது அமெரிக்க சீ.ஐ.ஏ. ஈராக்கிய, லிபிய, பாலஸ்தீன, ஈரானியத் தலைவர்களைப் படுகொலை செய்யவும் அங்குள்ள ஆட்சிக ளைக் கவிழ்க்கவும் அமெரிக்கா எண்ணற்ற தடவைகள் முயன்று வந்துள்ளது.
ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட் டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற மொசாம் பிக் அங்கோலா, சிம்பாப்வே, நமீபியா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளில் போட்டி விடுதலை இயக்கங்களை உருவா க்கி ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கி உள்நாட்டு யுத்தங்களை உருவாக்கி விட்டுள்ளது அமெரிக்கா.
தென் அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் உள்ள நிக்கரக்குவா, கிரெனடா, பனாமா போன்ற நாடுகளில் அமெரிக்கத் தலையீடுகளும் சதி நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்ற
6666LD 6T66s.
ஆப்கானிஸ்தானில் இன்று அமெரிக்கா வால் அதிகம் வேண்டப்படும் சவூதி அரேபிய பயங்கரவாதி பின்லேடனினதும் தலிபான்களினதும் உதவியுடன் டாக்டர் நஜிபுல்லா தலைமையிலான ஜனநாயக அரசை அமெரிக்காவே கவிழ்த்தது.
இவை எல்லாம் ஒருபுறமிருக்க, எமது அண்டை நாடான இந்தியாவில் அமெரிக்க ஏகாதிபதியம் செய்து வருகின்ற சதி வேலைகள் கணக்கிலடங்காதவை.
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் அமெரிக்கா ஏகாதிபத்தியம் தனது வேலையை அந்நாட்டில் ஆரம்பித்து விட்டது. இந்தியா, இலங்கை உட்பட பாராளுமன்ற ஜனநாயகம் இருக்கின்ற நாடுகளில் அமெரிக்க அதிகாரிகள் தேர்தல்கள், கட்சித்தாவல்கள் உட்பட

உள்ளுர் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதும் தமக்கு விரும்பிய பிற் போக்கு அரசுகளைப் பதவிக்குக் கொண்டு வருவதும் சாதாரணமாக நடைபெற்று வந்துள்ளது.
இந்த சதிநாச வேலைகளைச் செய் வதற்காகவே அமெரிக்கா பி.எல்.480 என்ற திட்டம் ஒன்றை 50களில் அறிமுகப்படுத் தியது. அத்திட்டத்தின்படி அமெரிக்கா இந்நாடுகளுக்கு வழங்கும் கோதுமை மாவுக்கான செலுத்துமதிகளை டொலரில் கொடுக்கத் தேவையில்லை. உள்நாட்டு நாணயத்தில் வழங்கலாம். இதன்மூலம் அந்த நாடுகளில் தனது அரசியல் வேலைகளுக்கான உள்ளுர் பணத்தை அமெரிக்கத் தூதரகங்கள் சுலபமாகப் பெற்றுக்கொள்ள வழி கிடைக்கும்.
சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில் இந்தியாவின் முதலாவது பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கையை மேற்கொண்ட காரணத்தால் அவரைக்கூடக் கொலை செய்வதற்கு அமெரிக்க சீ.ஐ.ஏ. திட்டமிட் டிருந்ததாகப் பிற்காலத்தில் செய்திகள் வெளியாகின.
இந்தியா ஏகாதிபத்திய விரோதப் பாதையில் செல்வதையும் பொருளாதார, தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி பெறுவதைத் தடுப்பதற்காகவும் பல பிரபல மான இந்தியத் தலைவர்களையே அமெரிக்கா பயன்படுத்தி வந்த விடயம் பின்னர் அம்பலத்துக்கு வந்தது. அந்த வரிசையில் நேருவின் சொந்தச் சகோதரி விஜயலஷ்மி பண்டிட், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாராயணன், பூமிதான இயக்கத் தலைவர் ஆச்சார்ய வினோபாவே, முன்னாள் உள்நாட்டு மந்திரிகள் பட்டேல், நந்தா என்போரின்பெயர்கள் அடங்கலாகப் பல பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
15
உதாரணமாக இந்தியாவில் 1967ல் 8000 மேற்பட்ட அமெரிக்கர்கள் இருந்தனர்.
அமெரிக்க அரசாங்க ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் - 1879, பாதிரிமார்கள் 26000, தொழிலதிபர்கள் - 3000, சமாதானப் படையைச்சேர்ந்தவர்கள் 12000, அறிஞர்கள் 192, மாணவர்கள் 42 - ட்போட், றொக்பெல்லர் போன்ற பவுண்டேசன்களில் வேலை செய்தவர்கள் இதில் உட்படுத்தப்படவில்லை.
செஸ்ர பொல்ஸ் - தெரிவிப்பு
வலதுசாரிக் கட்சிகளுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிப் பட்டியலை பிளிட்ஸ் வெளியிட்டது.
A, இந்து வகுப்புவாதக் கட்சி ஒன்றுக்கு
86 லட்சம் ரூபா வலதுசாரிக் காங்கிரஸ் தலைவர் ஒருவ ருக்கு 15 லட்சம் ரூபா மே. வங்க காங்கிரஸ் தலைவருக்கு 8.5 லட்சம் ரூபா . M.R. LDHT6fi epsoid sigsby is 35 sig5
97.5 லட்சம் ரூபா ஜனசங் கட்சிக்கு 80 லட்சம் ரூபா சி.பி.குப்தானுக்கு 15 லட்சம் ரூபா அசல்யா கோஷக்கு 8.5 லட்சம் ரூபா இவை மாத்திரமின்றி நட்புறவுடன் திகழ்ந்த இந்திய சீன நாடுகளுக்கிடையில் எல்லை யுத்தத்தை உருவாக்கியதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பங்குண்டு. சீனாவை இந்திய மண்ணிலிருந்து கொண்டு உளவு பார்ப்பதற்கான கருவி களை 1960 களுக்கு முன்னரே இந்தியா வின் நந்தாதேவி மலைச்சிகரத்தில் அமெரிக்கா பொருத்தியிருந்த விடயமும் பின்னர் அம்பலமானது.
அதேபோல 1955ம் ஆண்டு இந்தோனே வழிய நகரான பாண்டுங்கில் ஆரம்பமான ஆசிய - ஆபிரிக்க ஒருமைப்பாட்டு மாநாட்டிற்கு சீனப்பிரதமர் சூ என்லாய்

Page 9
செல்லவிருந்த
'காஷ்மீர் இளவரசி என்ற இந்திய விமானத்தைக் குண்டு வைத்து அமெரிக்க சீ.ஐ.ஏ. தகர்த்தது. சீனப் பிரதமர் அதில் பிரயாணம் செய்யாதபடியால் உயிர் தப்பியபோதும் பல சீன உயரதிகாரிகள் அதில் கொல்லப்பட்டனர்.
1960 களின் பிற்பகுதியில் இந்தியாவின் மிகச் சிறந்த அணுசக்தி விஞ்ஞானியான ஹோமிபாபா ஜெனிவாவில் நடைபெற்ற அணுசக்தி மாநாடொன்றுக்குச் செல்லும் வழியில் சுவிஸ் நாட்டுக்கு மேலாகப் பறந்து கொண்டிருக்கையில் அமெரிக்க சீ.ஐ.ஏ வைத்த குண்டு வெடித்து விமானம் சிதறிப் பலியானார்.
இந்தியாவில் திராவிட இயக்கங்கள் உட்பட பல பிரிவினைவாத இயக்கங்களை உருவாக்கிய இனமத மோதல்களை உருவாக்கிய அமெரிக்காவின் கரங்கள் பின்னணியில் இருந்ததை சுட்டிக்காட்டாத இந்திய அரசியல் தலைவர்கள் இல்லையென்றே கூறலாம்.
இவை ஒரு புறமிருக்க,
எமது இலங்கையிலும் காலத்துக்குக் காலம் பிற்போக்கு அரசியல் கட்சிகளை
ட்சிக்குக் கொண்டுவருவதிலும் உள்நாட்
டுப் போரை ஊக்குவிப்பதிலும் அமெரிக்கா வின் பங்களிப்பு கணிசமாக இருந்து வந்துள்ளது.
1959 பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் ஏகாதிபத்தியக் கரங்கள் இருந்ததாக பின் ஒரு தடவை எகிப்துக்கு விஜயம் செய்தபோது கெய்ரோவின் புகழ் பெற்ற 'அல் அஹற்ரம்' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் திருமதி ழரீமாவோ பண்டாரநாயக்கா குறிப்பிட்டமை இங்கு நினைவுகூரத்தக்கது.
சரி. இப்பொழுது சொல்லுங்கள். உலகின் மிகப் பெரிய பயங்கரவாதி யார்? அமெரிக்கா ஏகாதிபத்தியமா அல்லது செப் 11ம் திகதி அமெரிக்காவைத் தாக்கிய இனம் தெரியாத நபர்களா?
அத்துடன் சர்வதேசப் பயங்கரவாத த்தை ஒழிக்கும் தார்மீகத் தகுதி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உண்டா?
இல்லவே இல்லை.
ஏனெனில் பயங்கரவாதத்தின் நதிமூல மும் ரிஷி மூலமம் வேறு யாருமல்ல: அமெரிக்க ஏகாதிபத்தியந்தான்.
கார்த்திக் தாசன்.
பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
விமர்சனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே
கலை புதிய கேள்விகைளக் கேட்கின்றது:
தார்மன் வின்சென்ட் பீல்
எதிர்த்து நிற்கின்றது: புதிய சிந்தனைப்
பாதைகளுக்கு வழிகோல்கிறது. எதையும் ஒதுக்கிறது. மாறுதல் அதன் அடிப்படைத் தத்துவம், அதற்காக அது எந்தவித ஆபத்துக்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றது அஸ்தன் 'நீரில் வாழும் மீன் அமைதியாக இருக்கிறது. நிலத்திடையே வாழும் மிருகம் சப்தத்திை உண்டாக்குகிறது: காற்றில் பறந்து செல்லும் பறவை பாடிக் கொண்டிருக்கிறது; ஆனால் மனிதனோ தன் உள்ளத்தில் கடலின் அமைதியையும், நிலத்தின் சப்தத்தையும் காற்றின்
கீதத்தையும் கொண்டுள்ளான்".
தாகூர்
16

ஒரு பொய்யும் ஒரு உண்மையும்
(யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டு இறுதி நாள் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் சம்பந்தமாக "அலை ஒசையில் வெளிவந்த திரு. ஜனார்த்தனம் அவர்களின் அறிக்கையில் இருந்து சில பகுதிகளையும், அது சம்பந்தமான உண்மையை எழுதிய ‘வீரகேசரியில் ஆசிரிய தலையங்கத்தில் இருந்து சில பகுதிகளையும் இங்கே தருகின்றோம்).
‘.ஜூலியன் வாலாபாக் கொடுமை போல் நடந்த இந்தாக்குதலில் ஒன்பது பேர் இறந்ததாகச் செய்தி அறவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நூறு பேருக்கு மேல் இறந்திருக்கக் கூடும்.
கும்பல் கும்பலாக மக்கள் குற்றுயிராக விழுந்து கிடந்ததை பல இடங்களில் நான் கண்டேன். இவர்களில் ஒரு சிலர் தான் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
பொலிஸ் லாரியிலேயே பலரை எடுத்துப் போட்டுக் கொண்டு போனார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பொலிசாரே அவர்களை எரித்திருக்கக் கூடும்.
(12-1-74 ‘அலை ஓசை யில் வெளிவந்த திரு. ஜனார்த்தனம் அவர்களின் அறிக்கை) ’.யாழ்ப்பாணச் சம்பவத்தைப் பற்றி உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளரென வர்ணிக்கப்படும் திரு. ஜனார்த்தனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல விடயங்கள் அப்பட்டமான பொய் என்பதை இங்கு இடித்துக் காட்ட விரும்புகின்றோம். இலங்கையிலுள்ள பத்திரிகைகள் அனைத்தும் அரசாங்க கட்டுப்பாட்டின்கீழ் உள்ளவையென்ற கூற்று பச்சைப் பொய்.”
யாழ்ப்பாணச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியதாக அவர் சொல்லியிருப்பது பொய்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற பெரும் பொய்!. (26-1-74 வீரகேசரி ஆசிரிய தலையங்கம்)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கைப் பொலிசார் குழப்பியபோது ஒன்பது தமிழர் கொலை செய்யப்பட்டதை பிரதமர் வாஜ்பாய் அன்றே 'ஜாலியன் வாலாபாத் என வர்ணித்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர்களுக்கெதிராக 1970 களில் ஜாலியன் வாலாபாத் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தை பிரிட்டிஷ் பொலிஸார் கலைத்தபோது பல ஆயிரம்பேர் உயிரிழந்தனர். இதனாலேயே தமிழாராய்ச்சி மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை பிரதமர் வாஜ்பாய் ஜாலியன் வாலாபாத் என வர்ணித்துப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் என்னை இன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் ஒருமுறை அறிமுகப்படுத்தியபோது அவர் கேட்டார் ‘நீர் தான் ஈழத்தமிழருக்காக அறிக்கைவிடும் சனார்த்தனனோ? என்று. இவ்வாறு ஈழத்தமிழர் பிரச்சினையில் அவருக்கு நீண்ட காலமாகவே அக்கறை உள்ளது.
உலகத்தமிழ்ப் பேரவைத் தலைவர் இரா ஜனார்த்தனன் கொழும்ப வந்திருந்த போது 14.11.99 வீரகேசரி வார வெளியிட்டுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார்.
17

Page 10
1945 - 1949 -
பயங்கரவாதம்!
1945 ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா நடத்திய ராணுவப் படையெடுப்புக்களும் ஆக்கிரமிப்புக்களும்.
அமெரிக்க 113,000 துருப்புக்களுடனும் 600 போர் விமா னங்களுடனும் சீனா மீது ஆக்கிர மிப்புப் படை யெடுப்பை நடத்தியது. . 1946-1949 - கிரேக்க நாட்டில் நடந்து கொண்டிருந்த பாஸிச ஆட்சிக் கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தினார்கள். அந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்து வதற்காக அமெரிக்காவும் இங்கிலாந்தும் 5000 துருப்புக்களை யும் 200 போர் விமானங்களையும் அனுப்பி வைத்தன. . 1947 - பராகுவேயில் மக்களின் பேரெ ழுச்சியை நசுக்குவதற்கு தனது துருப்புக்களை அனுப்பி வைத்தது. . 1947 - 1948 - பிலிப்பைன்ஸ் நாட்டின் கொடுங் கோன்மை ஆட்சிக்கெதி ராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய பொழுது, அந்த மக்க ளின் பேரெழுச்சியை ஒடுக்கி நசுக் குவதற்கு 90,000 ராணுவத்துருப்புக் களை அமெரிக்கா அனுப்பியது.
1950 - 1953 - அமெரிக்க 35 மில்லியன்
துருப்புக்களையும் 1000 யுத்த டாங்கி களையும் 1,800 போர் விமானங்க ளையும் கொரிய நாட்டின் மீது ராணுவ ஆக்கிரமிப்பை நடத்துவத ற்கு அனுப்பியிருந்தது. அத்துடன் நேபளம் குண்டுகள், ரசாயன ஆயுத ங்கள், உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றையும் அனுப்பிவைத் தது. இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் 2,500,000 கொரிய மக்கள் கொல்லப்பட்டனர்.
6. 1954 - கெளதமாலாவில் அமெரிக்க
‘யூனைற்.புறுட் கொம்பனியின் பெரும் தோட்டங்களை அந்தநாட்டு அரசாங்கம் தேசியமயமாக்கிய பொழுது அதைத் தடுத்து நிறுத்த
18
தன்னுடையராணுவத்துருப்புக்களை அனுப்பி ஆக்கிரமிப்புச் செய்தது.
. 1958 - லெபனான் மீது ஆக்கிரமிப்புப்
படையெடுப்பை நடத்தி அந்த நாட்டை முற்றுகையிடுவதற்கு 14,000 துருப்புக்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.
1961 -கியூபா மீது ஆக்கிரமிப்பை நடத்
துவதற்கு 1500 துருப்புக்களையும் 35 யுத்தக் கப்பல்களையும் 80 போர் விமானங்களையும் அனுப்பியது.
9. 1962 - கியூபா மீது பொருளாதாரத்
தடையை ஏற்படுத்தி முற்றுகையிடு வதற்கு அமெரிக்க யுத்தக் கப்பல் களையும் போர் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது.
10. 1964 - பனாமாவில் மக்கள் பேரெழுச்
சியை நசுக்குவதற்கு அமெரிக்கா ராணுவத்தை அனுப்பி அந்த நாட்டைரத்த ஆற்றில் மூழ்கடித்தது.
11. 1964 - கொங்கோவில் ஆக்கிரமிப்புப்
படையெடுப்பை நடத்துவதற்கு. 1000 துருப்புக்களையும் 60 போர் விமானங்களையும் அமெரிக்காவும் பிரிட்டனும் அனுப்பி வைத்தன.
12. 1964 - 1973 - வியட்நாம் மீது ஆக்கிர
மிப்பு யுத்தத்தை நடத்துவதற்கு, 26,000,000 ராணுவத் துருப்புக்களை யும் 10,000க்கு மேற்பட்ட போர் விமானங்களையும் ஹெலிகொப்டர் களையும் நூற்றுக்கணக்கான யுத்தக் கப்பல்களையும் போர் டாங்கிகளையும் அமெரிக்கா ஈடுபடுத்தியது. மேலும் நேப்ளம் ரசாயனக் குண்டுகளையும் இந்த யுத்த நடவடிக்கையின் போது பாவித்தது. அமெரிக்கா வியட்நா மில் 14,000,000 தொன்கள் குண்டுக ளையும் றொக்கட்டுக்களையும்

பயன்படுத்தி அந்த நாட்டை அழித் தது. இந்தக் குண்டுகள் ஹிறோவழி மாவிலும் நாகாசாயிலும் போட்ட அணுக்குண்டுகளைப் போல 700 மடங்கு குண்டுகளுக்கு சமமானது. இந்த யுத்தத்தில் 15,000,000 தொகைக்கு மேற்பட்ட வியட்நாமிய சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். 13. 1963 - 1973 - 50,000 துருப்புக்களுடன் 1500 போர் விமானங்களையும் லாவோஸ்மீதுநடத்திய ஆக்கிரமிப்பு யுத் தத்தில் அமெரிக் கா பயன்படுத்தியது. 14. 1965 - அமெரிக்கா 40,000 போர் வீரர்களையும் 275 போர் விமானங்க ளையும் 50 யுத்தக் கப்பல்களையும் டொமினிக்கன் குடியரசுக்கெதிரான
ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடுத்தியது. 5. 1970 - 1975 கம்போடியாவுக்கு
எதிரான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்கா 70,000 ராணுவத்தின ரையும் 50 போர் விமானங்களையும் 40 யுத்தக் கப்பல்களையும் பயன்
படுத்தியது. 16. 1983 - லெபனான் மீது நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்கா
2000 ராணுவத்தினரையும் 30 யுத் தக்கப்பல்களையும் ஈடுபடுத்தியது. 17. 1985 - கிறெனடா மீது ஆக்கிரமிப்பு
யுத்தத்தைத் தொடுத்தது. 18. 1986 - லிபிய நகரங்கள் மீது மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. 19. 1987- அமெரிக்க யுத்தக் கப்பல்களும் துருப்புக்களும் பாரசீக வளை குடாவை முற்றுகையிட்டன. 20. 1989 - அமெரிக்கா 20,000 துருப்புக் களுடன் பனாமாவில் ஆக்கிரமிப்புப் படையெடுப்பை நடத்தியது. 21. 1991 - அமெரிக்கா 535,000 துருப்புக்க ளுடனும் 2950 போர் விமானங்களு டனும் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிர மிப்புப் படை முற்றுகையை நடத்தி
9
யது. இந்த யுத்த நடவடிக்கையில் முதல் தடவையாக யூறேனியம் குண்டுகளை வீசியது. இதில் 100,000 க்கு மேற்பட்ட ஈராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 22. 1993 - சோமாலியாவில் அமெரிக்காவு க்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங் களை நசுக்குவதற்கு ஹெலிகொப் டர்களையும் பீரங்கிக் கப்பல்களை யும் பாவித்து பல்லாயிரக்கணக் கான சோமாலிய மக்களைப் படுகொலை செய்தது. 23. 1994 யூகோஸ்லாவியா மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்பை நடத்தியது அமெரிக்கா. 24. 1995 - ஈராக் மீது அமெரிக்கா 'பாலை வனப்புயல் என்ற இரண்டாவது ஆக் கிரமிப்பு யுத்தத்தைத் தொடுத்தது. 25. 1996 - அமெரிக்கா ஈராக் மீது மூன்றா வது படையெடுப்பை நடத்தி நாடு பூராவும் பரவலான கோரக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. 26. 1998-சூடானுக்கும் ஆப்பானிஸ்தானுக் கும்எதிராக றொக்கட் மற்றும் ஏவுக ணைத் தாக்குதல்களை நடத்தியது. 27. 1999 - யூகோஸ்லாவியா மீது இரண்டு மாதகாலமாக பயங்கரத் தாக்குதல் களை நடத்தியதுடன், பெல்கிறேட் தலைநகள் மீது குண்டுகளையும் யூறேனிய எறிகணைத் தாக்குதல்க ளையும் நடத்தியது. 28. 2001 - "பயங்கரவாதிகளுக்கெதிராக யுத்தம் என்ற கோஷத்துடன் ஆப்கா னிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தை தற்கொழுது நடத்திக் கொண்டிருக் கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் எத்தனை "இரகசிய யுத்தங்களை’ அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது?
பயங்கரவாதம் பற்றிப் பேசும் பொழுது மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளையும் நாம் மனதிற் கொள்வோம்.

Page 11
பல்கலை மேதை
கே. ஏ. அய்யாஸ்
நீர்வை பொன்னையன்
"நான் எல்லோருக்கும் ஒரு வினாக்குறியா கவே இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையாளனா? நானோர் எழுத்தாளனா? நானொரு படத் தயாரிப்பாளனா?
பத்திரிகையாளர்கள் என்னை 'அவர் ஒரு எழுத்தாளன்' என்று விமர்சிக்கின்றார் கள். எழுத்தாளர் என்னை எழுத்தாளனாக ஏற்றுக் கொள்ள மறுகின்றார்கள். அவர்கள் என்னைப் பத்திரிகையாளன் என்று கூறுகின்றனர். என் கதைகளைச் செய்தித் தொகுப்புக்கள் என்கின்றார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால், நான் என்னை ஒரு கம்ப்யூட்டராகவே நினைக்கின்றேன். நான் சொல்ல விரும்பும் விசயத்தை எப்படியும் எல்லோரும் புரியும் வகையில் சொல்லி விடவேண்டும் என்று துடிக்கின்றேன். அதனுடன் என் பணியும் முடிந்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி பெறுகிறேன்
திரு.கே.ஏ. அப்பாஸ் தன்னைப்பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அவர் ஒரு பல்கலைமேதை. அவர் கலை இலக்கியத்துறையில் ஒன்றை யும் விட்டு வைக்கவில்லை. அவர் நாவல், சிறுகதை, விமர்சனம், திரைப்படம், நாடகம்
பத்திரிகை ஆகிய துறைகளில் அவரால்
ஆழத்தடம் பதிக்கப்பட்டுள்ளது. எந்தத்
20
-- Lil I துறையை எடுத்துக் கொண்டாலும் அவர் அத்துறையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு கலைத்துவத்துடன் தனது படைப்புக்களை ஆக்கியுள்ளார்.
இந்தியாவின் தலைவிதியை மூன்று முறை நிர்ணயித்த வீரத்தின் விளை நிலமான யுத்தபூமியாக விளங்குகின்றது பஞ்சாப், அச்சமென்றால் என்னவென்றறி யாத, வீரகாவியம் படைத்த புரட்சித் தியாகி பகவத்சிங், அஞசா நெஞ்சம் படைத்த பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படுகின்ற லாலா லஜபதி ராய், கலை இலக்கிய மேதை முல்க்ராஜ் ஆனந்த் போன்ற உன்னத மனிதர்கள் பிறந்த பஞ்சாப்பில் பானிபட் என்ற இடத்தில் பிறந்தார் கே.ஏ. அப்யாஸ்.
அப்பாஸ் அலிகார் கல்லூரியில் ஒரு மாணவன். அக்கல்லூரி அக்காலத்தில் வகுப்பு வாதத்திற்குப் பெயர் பெற்ற இடம். வகுப்பு வாதத்தில் வடித்தெடுத்த “விற்பன்னர்கள் பலர் அங்கு பணியாற்றி னர். 'அலிகார் மகளிலின்’ என்றொரு பத்திரிகை அங்கிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அப்பத்திரிகையில் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அப்பாஸ் எழுதுவதற்கு இடம் மறுக்கப் பட்டது. இதன் காரணமாக அவர் 'அலிகள் ஒப்பீனியன்' என்ற பத்திரிகையை தானே ஆரம்பித்தார். இப்பத்திரிகையில் தனது
 

முற்போக்குக்கருத்துக்களை ஆணித்தர மாக முன்வைத்தார். இதனால் அவர் பல
யிருந்தது. ஆனால் அவர் எதற்கும் சளைக்க வில்லை. உறுதியுடன் செயற்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த சில ஆங்கிலேயர்களில் ஹார்னிமன் என்பவர் முதன்மையானவள். இவர் ‘பம்பாய் கிறனிக் கல்' என்றொரு ஏட்டினை நடத்தினார். இப்பத்திகை பிரிட்டிஸாரின் அடக்கு முறையையும் கெடுபிடிகளையும் இந்தியா விலும் வெளிநாடுகளிலும் அம்பலப்படுத்தி யது. பம்பாய் வந்த திரு. அப்பாஸ் இப்பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். நாற்பதாம் ஆண்டுகளில் இப்பத்திரிகையில் வாராவாரம் கடைசிப் பக்கம் (Last page) என்ற பத்தியில் அப்பாஸ் எழுதி வந்தார். இப்பத்தி வாசகர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘நாஷனல் கோல் (National call)என்றொரு பத்திரிகை யிலும் சிறிதுகாலம் எழுதினார். இவரது எழுத்து அக்காலத்தில் இந்திய மக்களின் தேசிய உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது. ஆர்.கே. கறகிஞ்யா என்பவரை ஆசிரிய ராகக் கொண்ட மிகவும் பிரபலமான வார இதழான "பிளிற்ஸ் (Blitz) வெளிவந்து கொண்டிருந்தது. இப்பத்திரிகை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும், உள்ளுர் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தையும் மிகத் துணிச்சலுடனும் தீவிரமாகவும் நடத்தி வந்தது. அக்காலத் தில் இந்தியாவிலுள்ள அமெரிக்க ஸ்தானிக ராலயத்தில் கடமையாற்றிய சி.ஐ.ஏ. ஏஜன்ட் செஸ்ரர் பவுல்ஸ் என்பவன் பெரும் தொகைப் பணத்தைச் செலவளித்து இந்திய ராணுவ இரகசியங்களைத் திருடி சதி முயற்சியில் ஈடுபட்டான். இவனுடைய இந்தத் திருட்டு ராணுவச் சதியை அம்பலப்படுத்தி, இவனை இந்தியாவி
2
லிருந்து விரட்டியடிக்கும் போராட்டத்தில் பிளிற்ஸ் வெற்றி கண்டது. இந்திய பெருமுதலாளித்துவப் பெருச்சாளிகளில் ஒருவனான முந்திரா என்பவன் இந்திய அரசின் நிதியிலிருந்து எண்பது கோடி ரூபாவை மோசடி செய்து சுருட்டிக் கொண்டான். இவனுடைய தேச விரோதத் திருட்டை அம்பலப்படுத்தி இவனைச் சிறைக்கு அனுப்பி வைத்த போராட்டத்தில் பிளிற்ஸ் பத்திரிகை வெற்றி கண்டது. அத்துடன், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அன்றைய இந்திய நிதி அமைச்சர் சண்முகம் செட்டியை பதவி நீக்கும் போராட்டத்திலும் பிளிற்ஸ் பத்திரிகை ஜெயித்தது. இப்போராட்டங்களில் அப்பாஸ் தீவிரமாக ஈடுபட்டார். இந்திய சுதந்திரத்தின் பின்னரும், போர்த்துக்கீசரின் பிடியிலிருந்த இந்தியாவின் கோவா மாநிலத்தை விடுதலை செய்யும் போராட்டத்தையும் நடத்தி ஜெயிப்பதில் பிளிற்ஸ் பத்திரிகை முக்கிய பாத்திரம் வகித்தது.
பிளிற்ஸ் பத்திரிகையில் ‘அசாத்கலம் (சுதந்திர எழுதுகோல்) என்ற தலைப்பில் அப்பாஸ் வாராவாரம் எழுதி வந்துள்ளார். இப்பத்தியில் அரசியல், கலை இலக்கியம், சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் ஆழமான விமர்சனங்களையும் செய்திக் குறிப்புக்களையும் தொடர்ந்து எழுதினார். இப்பத்தி கலைஇலக்கியத்துறை வாசகர்க ளைப் பெரிதும் கவர்ந்ததுடன் இத்துறை யின் மேம்பாட்டுக்குப் பெரும் பங்களித்தது. ‘சர்கம்' என்ற ஒரு ஹிந்தி சஞ்சிகையும் இவரால் வெளியிடப்பட்டது.
சினிமா சம்பந்தமான ‘ஓசை’ (Sound) என்ற ஒரு திரை ஏட்டையும் அப்பாஸ் நடத்தினார். இப்பத்திரிகையில் திரைப்பட விமர்சனங்கள் கலை இலக்கியம் சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்தன. இது ஒரு உயர்மட்ட தரம் வாய்ந்த சினிமா ஏடாக இருந்தது. இது அன்றைய சினிமாத்துறையின் கலைத்துவ

Page 12
வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. அத்துடன் சினிமாத்துறைக்குள் திரு அப்பாஸ் காலடியெடுத்து வைப்பதற்கு ‘ஓசைப் பத்திரிகை கால்கோளாக அமைந் தது. தனக்கு எதுவித முன்னறிமுகமேயில் லாத உன்னத திரைப்பட நெறியாளர் திரு. சாந்தாராமின் 'ஆத்மி என்ற படத்திற்கு ஒரு ஆழமான விமர்சனத்தை எழுதியதன் மூலம் சாந்தாராமுடன் ஒரு இறுக்கமான பிணைப்பை அப்பாஸிற்கு ஏற்படுத்தி விட்டது இப்பத்திரிகை. 'ஆத்மி என்ற படம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் (Form and content) g56gsglóillb 6 stuigbg55. Tas இருந்தது. ‘பிரதானமாக ஆத்மி பற்றி (Mainly about Athmy) 6T6of O DT (b விமர்சனத்தை ‘ஓசை யில் எழுதியிருந்தார் அப்பாஸ். மேற்படி விமர்சனத்தில் அப்பாஸ் பாராட்டி எழுதிய பல விசயங்களை தாம் படத்தயாரிப்பின் போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று பின்னர் சாந்தாராம் கூறியுள்ளார். இதன்பின் “படோலி என்ற படத்தை சாந்தாராம் தயாரித்தார். இது ஓர் அரசியல் படம். இப்படத்தைப் பற்றி ஆசிரியத் தலையங்கத்தை (Editorial) அப்பாஸே எழுதினார். ஒரு படத்தைப் பற்றி ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்ட அனுபவம் இந்தியாவில் இதுதான் முதலாவதாகும்.
இந்தியத் திரைப்படத் துறையில் ஐம்பதுகளில் சில குறிப்பிட்ட நெறியாளர் கள் பெரும் சாதனைகளை நிலைநாட்டி யுள்ளார்கள். திரு. சாந்தாராமின் 'ஆத்மி, “படோலி, ‘சுறங், 'தோ அங்கே பறஹாத் போன்ற திரை ஓவியங்களைப் படைத்தார். ‘தோ பிகா ஜமீன்’ என்ற உன்னத படைப்பை பிமால் றாய் உருவாக்கினார். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அதற்குப் பின்னும் மிர்னால் சென், ஆனந்த் பட்டவர்த்தன், றிச்விக் கட்டக் போன்றவர் கள் சினிமாத் துறையில் சாதனைகள் புரிந்தனர். மிர்னால் சென்னின் ‘இன்ரவியூ,
22
'கல்கத்தா 71', திரை உலகில் பெரும் புயலை உண்டாக்கின. ஆனந்த் பட்டவர்த் தனின் செய்தி விளக்கப் படங்களான ‘நர்மதா அணைக்கட்டு’, ‘கடவுளின் பெய ரால்', 'பம்பாய் எனது நகரம் ஆகியன சினிமாத் துறையில் மைல் கற்களாக அமைந்துள்ளன. இதே வரிசையில் அப்பாஸின் இரு துளி நீர் சாதனை படைத்துள்ளது.
தான் பெற்ற அனுபவங்களை வைத்து ‘நயா சன்சார்’ (புதிய சமுதாயம்) என்ற கதையை எழுதினார். "பம்பாய் டாக்கிஸ் நிறுவனம் அதைப் படமாக எடுத்தார்கள். அது அமோக வெற்றியீட்டியதுடன் பட உலகில் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி விட்டது. இரண்டாவது படம் ‘சுவாங்'. இதன் பின் ‘டாக்டர் கொட்னிஸ் கா அமார்கஹான் என்ற படத்தை உருவாக்கி னார் அப்பாஸ். ஜப்பான்-சீனா போர் நடந்த காலத்தில் டாக்டர் கொட்னிஸ் தலைமை யில் இந்தியாவின் நல்லெண்ண சின்னமாக ஒரு மருத்துவப் படையணி சீனா சென்றது. இப்படை யுத்தத்தில் காயமடைந்தவர்க ளுக்கு சிகிச்சை செய்ததுடன் பொது மக்களின் நோய்களைத் தீர்ப்பதில் பெரும் பணியாற்றி மக்களின் பெருமதிப்பைப் பெற்றது. இப்படத்துக்கான கதை, வசனத்தை அப்பாஸ் எழுதினார். இப்படம் உலகப் புகழ் பெற்ற ஒரு அமர சிருஷ்டி, அப்பாஸ் ஓர் சிறந்த திரைப்படக்கதை, வசன கர்த்தா ஆவார். கலைத்துவமான நெறியாளர். முற்போக்கான சிந்தனைகளை உள்ளடக்கிய தரமான வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர். ‘நயா சன்சார், “டாக்டர் கொட்னிஸ்கா’ ‘அமார் கஹான் அவாரா', 'ஆகாஷ்', 'சிறீ420', 'முன்னா', பூட்ஸ் பொலிஷ், ஷர்தில் ஷா ராஹேன், "பொபி’, ‘வழிக்வா’, ‘தார்தி-கே-லால்',
ஆகிய வெற்றிப்படங்களை உருவாக்கினார். இரண்டாம் உலக யுத்தம் நடந்த

காலத்தில் ஹிட்லர், முசோலினியின் பாசிஸத்துக்கு எதிரான முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவிலேயுள்ள கவிஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள் சினிமாக் கலைஞர்கள் ஒன்று திரண்டு இந்தப் பாஸிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கினர்கள். இதன் அங்கங்களாக இந்திய மக்கள் கலாமன்றம், இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகிய இரு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இந்த முயற்சியில் திரு அப்பாஸ் பெரும் பங்கு வகித்தார். இந்திய மக்கள் கலாமன்றத்தை (I.PTA) அப்பாஸ், பால்ராஜ், சஹானி (பிரபலமான கலைத்துவ குணச்சித்ர நடிகர்) ஹெமந்தகுமார் (அதிசிறந்த பாடகரும் இசையமைப்பாள ரும்) ஆகிய முற்போக்குக் கலைஞர்கள் இணைந்து அமைத்தனர். இந்த மன்றம் பல அரிய நாடகங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியதுடன் ஒரு புகழ் பெற்ற திரைப்படத்தையும் தயாரித்தது. அக்காலத்தில் வங்காளத்தில் ஒரு கொடிய பஞ்சத்தை பிரித்தானிய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே உருவாக்கினர். இதனால் வங்க மக்களும் சமுதாயமும் சிதறி சின்னாபின்னா மாகி பேரழிவுக்கு உள்ளானார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். இந்த கொடிய பஞ்சத்தை அடிப்படையாகக் வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க இந்திய மக்கள் கலாமன்றம் முடிவெடுத்தது. புகழ்பெற்ற வங்காள நாடகமான 'அபிலாஷா வின் கதையையும் கிர்ஷன் சுந்தரின் ‘அன்ன தாதா என்ற் கதையையும் இணைத்து 'தர்-திகே-லால்' என்ற படத்தைத் தயாரித்தார்கள். இப்படத்தை அப்பாளல் நெறிப்படுத்தினார். இந்தப் படத் தயாரிப்பில் பங்கு பற்றிய எந்தவொரு கலைஞனுக்கும் நாநூறு ரூபாவிற்கு மேல் ஊதியம் கொடுக் கப்படவில்லை. இது உலகப் புகழ்பெற்ற ஒரு உன்னத படைப்பாகத் திகழ்ந்தது.
23
கலை இலக்கியத்தின் மூலம் சமுதாய த்தை மாற்றி அமைக்க முடியும் என்று அப்பாஸ் உறுதியாக நம்பினார். அதற்கமையவே அவர் செயற்பட்டார். அவருடைய திரைப்படங்களும் இலக்கியப் படைப்புக்களும் இந்த மகத்தான குறிக் கோளையே அடிப்படையாக வைத்துப் படைக்கப்பட்டன. சமூக ஏற்றத்தாழ்வுகளை அழித்தல், இன, மத குல பேதங்களை அகற்றுதல், ஆண், பெண் சமத்துவம், சிறுவர் மேம்பாடு, சமூக அநீதிகளை
பாதுகாத்தல் போன்ற உன் னத குறிக்கோள்களைத் தொனிப் பொருட்களா கக் கொண்டு அவரது திரைப்படங்களும், இலக்கியப் படைப்புக்களும் உருவாக்கப் பட்டன. மக்களுக்காகவே, அவர்களது பிரச்சினைகளையும் உணர்வுகளையும் அவர்களது வாழ்வுக்கான போராட்டங் களையும் வெளிப்படுத்தும் நோக்குடன் தன் படங்களையும் இலக்கிய சிருஷ்டிகளையும் உருவாக்கினார் அப்பாளல். அவரது படைப்புக்களில் கலைத்துவம் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. பணத்தைக் குவிப் பதற்காகவோ, புகழுக்காகவோ தனது படங்களையும் இலக்கியங்களையும் அவர் ஆக்கவில்லை. மனித மேம்பாட்டுக்காகவே தனது கலை இலக்கியப் படைப்புக்களை உருவாக்கினார். இதனால் அவரு க்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் அவர் தமது இலட்சியப் பயணத்தை உறுதியுடன் தொடர்ந்தார்.
திரைப்படங்களைத் தயாரிப்பதுடனும் இலக்கியத்தைப் படைப்பதுடனும் மாத்திரம் அப்பாஸ் நின்று விடவில்லை. கலைஞர் களையும் எழுத்தாளர்களையும் ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டி ஏகாதிபத்தியத்திற்கும் பாஸிசத்துக்கும் உள்ளுர் முதலாளித்துவத் துக்கும் எதிரான போராட்டத்தை நடத்துவ தில் அப்பாஸ் முன்னணியில் நின்றார். இந்த உன்னத நோக்குடன்தான் இந்திய

Page 13
கலைஞர்களை அணிதிரட்டி இந்திய கலா மன்றத்தை அமைப்பதில் முன்னணியில் நின்றார். அத்துடன் முன் பிரேஷிம் சந்த், முல்ராஜ் ஆனந்த், கிர்ஷன் சந்தர் ஆகி யோருடன் இணைந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார். 1947ம் ஆண்டில் ஆந்திராவில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டுக்கு அப்பாஸ் தலைமை தாங்கினார். இந்தியாவில் வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்திய முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளைகள் அமைக்கப்பட்டு சங்கம் வெற்றிகரமாகச் செயல்பட பங்காற்றியவர்களில் அப்பாஸ் முதன்மையானவர். இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன் இங்கு நடக்கும் மகாநாட்டில் தானும் முல்ராஜ் ஆனந்த்தும் பங்குபற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவச மாக அவரால் வரமுடியவில்லை. திருமுல் ராஜ் ஆனந்தான் இலங்கைக்கு விஜயம் செய்து நண்பர் கே. கணேஷையும் திருவா ளர்கள் மாட்டின் விக்ரமசிங்க, பேராசிரியர் சரத்சந்ரா, சுவாமி விபுலானந்தர் போன்றோ ரைச் சந்தித்து ஒரு எழுத்தாளர் சங்கமும் அமைக்க வித்திட்டார் இச்சங்கம் குறுகிய காலம் தான் செயற்பட்டது. ஆனால் இலங்கையில் எதிர்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவதற்கு ஒரு அத்திவாரமாக இது அமைந்தது. தமிழ்நாட்டில் நடந்த முற்போக்கு எழுத் தாளர் சந்திப்பிற்கு இலங்கையிலிருந்து திரு. கே. கணேஷ் சென்றிருந்தார். அவர் திரு. அய்யாஸின் சில கதைகளை மொழி பெயர்த்துத் தம்முடன் கொண்டு சென்றுள் ளார். அப்பாஸ் இந்த மொழிபெயர்ப்பு முயற்சியை வரவேற்றார். இக்கதைகள் 1949ல் கல்கியில் வெளிவந்தன. 1956ல் மைலாப்பூரிலுள்ள கண்ணகி பதிப்பகத்தி
24
னால் 'குங்குமப்பூ என்ற மகுடத்தில் அப்பாஸின் கதைகள் சிறுகதைத் தொகுதி யாக வெளியிடப்பட்டது. தமிழ் நாட்டின் பிரபல பத்திரிகையாளரும் இலக்கியவாதி யும் ஹிந்துஸ்தானுக்கும் பின்னர் மஞ்சரிக்கும் ஆசிரியராகவிருந்த தி.ஜ.ர. அவர்கள் ‘குங்குமப்பூ சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ளார். இத் தொகுதியிலுள்ள எந்தக் கதையும் பிரத்தியட்ச வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைச் சித்திரிக்கவில்லை. இன்றைய பாரதத்தின் பல அம்சங்களைப் பிரதிபலிக்கும் மிக நேர்த்தியான கதைகள். விஷயங்களை இவை முறையே உணர்ச்சிக் குழைவுடனும் இயல்பாகவும் சித்திரிக்கின்றன என்று தி.ஜ.ர. தமது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். தலைசிறந்த இந்திய ஆங்கில இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களான ஆர்.சிதத், பங்கிம்சந்ர சட்டர்ஜி, ரவீந்திரநாத் தாகூர், ராஜ் ரா ஓ, முல் ராஜ் ஆனந்த், ஆர்.கே.நாராயணன், பவானி பட்டாசார்யா, குஸ்வன்சிங், மனோகர் மல்ஹொங்கர், கமலா மார்க்கண்டேய, ருத் பிரவா, ஜகஸ்வாலா, நயன்தாரா, ஸாகல் ஸசத்தி, பிரதா, ஆகியோர்களில் கே.ஏ.அப்பாஸ் முன்னணி எழுத்தாளராகத் திகழ்கிறார். ஆனால் திரு. முல்ராஜ் ஆனந்த்தும், கே.ஏ.அப்பாஸம் ஏனைய ஆங்கில எழுத்தாளர்களைவிட இலக்கியக் கோட்பாட்டைப் பொறுத்தவரை வேறுபட்ட வர்களாக, புரட்சிகர உணர்வுடையவர்கள கத் திகழ்கின்றனர். இவர்களிருவரும் மார்க்ஸிஸத்தை அடிப்படையாக வைத்துத் தமது இலக்கியக் கோட்பாட்டை வகுத் திருந்தனர். உலகை விமர்சனம் செய்வத ற்குப் பதிலாக அதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இவ்விரு வரும் உடையவர்களாயிருப்பதுடன் அதற்காக அயராது போராடி வந்துள்ளனர். 1920 இலிருந்து 47 வரையான கால

கட்டத்தில இந்திய இலக்கியத் துறையில் அரசியல் செல்வாக்கு பெருமளவில் இருந்தது. அதாவது, இக்காலகட்டத்தில்
விடுதலைப் போராட்ட உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசியலில் விடுதலைப் போராட்ட அலை கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தில், மகாத்மா காந்தியின் அகிம்சை முறையிலான போராட்ட அலையும், பகவத்சிங் போன்ற தீவிரவாத இளைஞர்களின் புரட்சிகரப் போராட்ட அலையும் சமாந்தரமாக மோதிக் கொண் டிருந்தன. இக்காலகட்டத்தில் வெளிவந்த பெரும்பாலான நாவல்களில் இவ்விடுத லைப் போராட்ட உணர்வுகளைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த நாவல்கள் பெரும்பாலானவற்றில் சுதந்திரப் போராட்டம் தான் பிரதான கருவாக இருந்துள்ளது. உதாரணத்திற்கு, ராஜ் ராஓவின் ‘காந்தபுர', தடுப்புக்குள்ளிருந்த பசு’, ஆர்.கே. நாராயணனின் “மகாத்மாவுக்காகக் காத்திருப்பு, முல்ராஜ் ஆனந்த்தின் ‘வாளும் அரிவாளும், சி.என்.ஸிக்ஷியின் *தாய்நாடு', அமீர் அலியின் "மோதல்", ஸினத் பியூட்ஹல்லியின் ‘ஷோரா', மனோகர் மல்ஷங்கரின் கங்கையின் ஒரு திருப்பம், கே.ஏ.அப்யாஸின் ‘இன்குலாப், வீரஜவாகரின்'எரிமலை ஆகிய நாவல்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக 1 வைத்துப் புனையப்பட்ட தலைசிறந்த படைப்புக்களாகும்.
இந்திய சுதந்திரத்தை அடுத்து வந்த காலகட்டத்தில் பிரிவினைவாதத்தாலும், இன, மத வகுப்புவாத வெறியாலும் இந்தியாவில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இக்காலகட்டத்தில் இந்திய மக்கள் இந்து முஸ்லிம்கள் மத்தியில் நடந்த பெரிய எடுப்பிலான படுகொலைகள், கொள்ளை
25
கள், கற்பழிப்புகள் ஆகிய அனர்த்தங்கள், சொல்லொணாத் துன்ப துயரங்கள் எல்லாம் படைக்கப்பட்ட நாவல் களில் செறிந்திருப்பதைக் காணலாம். உதாரணத் திற்கு குஸ்வன்சிங்கின் "ரெயின் ரூ UTS6rig5T66 (Train to Pakistan) sej T656ir 'திரும்பி வாருங்கள் பாபு', 'ஓவியன்', "இரத்தமும்கற்களும், ‘இன்குலாப் ஆகிய படைப்புக்கள் இச்சோக சம்பவங்களைத் துல்லியமாகச் சித்திரிக்கின்றன.
‘நாளை நமதே என்ற திரு. அப்பாஸின் நாவல் 1943ல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ‘அமரவாழ் விற்கு அழைப்பு என்ற நவீனம் 1944ல் பிரசுரிக்கப்பட்டது. 'அரிசி, ஏனைய கதை கள் 1947,'ரத்தமும் கற்களும் (குறுநாவல்) 1949, "மரணத்தின் தோல்வி’ (நாவல்) 1949, ‘இன்குலாப்' (நாவல்) 1958, கறுப்புச் சூரியனும் ஏனைய கதைகளும் (சிறுகதைகள்) 1965, இரவு வந்த பொழுது (நாவல்) 1968, சிதைந்த இதயம்(நாவல்) 1968,"என்பெயர் யோக்கர்’ (நாவல்)1970,'இளைஞன் கிர்ரைச் சந்தித் தான் (நாவல்) 1973, “தொலைதூரக் கனவு (நாவல்) 1975,"நான்கு நண்பர்கள் (நாவல்) 1977, ‘மனிதனும் பெண்களும் (நாவல்) 1977, தீவில் நானில்லை' (சுயசரிதை) 1977, “எனது கிராமத்தின் உலகம்(நாவல்) 1985, பம்பாய் என் பம்பாய்’ (நாவல்), “பதின் மூன்றாவது பலிக்கடா (நாவல்) 1987, 'திரும்பி வாருங்கள் பாபு', 'ஓவியன்', 'குங்குமப்பூ சிறுகதைத் தொகுதி, ‘பொபி, 'இருதுளி நீர் ஆகிய படைப்புக்கள் வெளி வந்துள்ளன. "குங்குமப்பூ', 'இன்குலாப், ‘ஓவியன்', 'திரும்பி வாருங்கள் பாபு, 'இருதுளிநீர் ஆகியவை தமிழில் வெளிவந் துள்ளன. இன்குலாப் ஆங்கிலம், ஜெர்மன், செக், ரஷ்யன் மொழிகளிலும் அனேக இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்த ஆங்கில இலக்கிய எழுத்தாளர்களில் திரு.கே,ஏ. அப்பாஸ்

Page 14
முற்போக்கு எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஒரு மார்க்ஸிய எழுத்தாளருமாவர். அவரு டைய இலக்கியக் கோட்பாடு மார்க்ஸிச த்தை அடிப்படையாகக் கொண்டது. சகலவிதமான அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிரான, சமுதாய மாற்றத்துக்கான, புரட்சிகரப் போராட்ட உணர்வை அடிப் படையாகக் கொண்டிருக்கின்றது அவரு டைய இலக்கியக் கோட்பாடு. மேலும் ஸ்தாபன ரீதியான கூட்டுச் செயற்பாட்டு அடிப்படையில் அவர் இயங்கி வந்துள்ளார். இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்து நோக் குகையில் அவர் ஒரு உண்னத மார்க்ஸிச எழுத்தாளர் என்பது புலனாகின் றது. அவருடைய இலக்கியப் படைப்புக்கள் - சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனங்கள் அனைத்தும் சமூக உணர்வு டைய, சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற புரட்சி உணர்வையும், சமூக யதார்த்தவாதத்தையும் அடிநாதமா கக் கொண்டவையாக அமைந்துள்ளன. ஆங்கிலம் , உருது, ஹரிந்தி ஆகிய மொழிகளில் அவர் தமது படைப்புக்களை உருவாக்கினார்.
இன்குலாப் என்ற அப்பாஸின் நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்துப் புனையப்பட்டது. பங்கிம்சந்ர சட்டர்ஜியின் ஆனந்தமடம், சரத்சந்ர சட்டர்ஜியின் பாரதி, வீரஜவாகரின் எரிமலை, என்.எஸ் பட்கேயின் சூறாவளி ஆகிய நாவல்களைப் போல அப்பாஸின் இன்குலாப் நாவலும் இந்திய சுதந்திரத் தைப் புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் மூலம்தான் பெறமுடியும் என்ற கருத்தை வலியுறுத்துவதாயமைந்துள்ளது. இந்த நாவலில், தங்கள் எழில் கொஞ்சும் இளமையையும், இன்பமயமான காதல் உணர்ச்சிகளையும் விடுதலைப் போராட்ட வேள்வித் தீயில் தியாகம் செய்கின்ற உன்னத பாத்திரங்களை நாம் காண்கின்
26
றோம். அது மாத்திரமல்ல, எங்கள் நெஞ்சை அதிர வைக்கும் ஜூலியன்வாலா பார்க் படுகொலைகள், இந்திய விடுதலைப் போராளிகள் மீதானமீரத்சதி வழக்கு, தண்டி யாத்திரை, மகாத்மா காந்தியின் ஒத்துழை யாமை இயக்கம், வரிசெலுத்தா இயக்கம், ஆகிய முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்த நாவலில் ஊடும் பாவுமாய் கதையோடு ஒத்திசைவாய், இயல்பாய்ப் பின்னிப் பிணைந்திருக்கும் கதை சொல்லும் உத்தி, வாசகர்களைப் பிரமிப்படைய வைக்கின்றது. இந்த நாவலைப் படிக்கும் போது அகிம்சாமூர்த்தி காந்தியையும், பகவத்சிங், ராஜ்குரு, சுகத்தேவ் போன்ற வீர புரட்சித் தியாகிகளையும் நாம் சநீதிக்கின்றோம். எம் இதயத்தை விட்டகலா ரத்தன், அன்வர் மியான், அம்சத் அலி, அக்பர் அலி ஆஷா, சல்மா, பேராசிரியர் சலீம், டாக்டர் அன்சாரி போன்ற உன்னத பாத்திரங்களை நாம் தரிசிக்கின்றோம்.
வகுப்புவாதத்தை அடியோடு வெறுத்த அப்பாஸ் அதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடியவர், ‘இரத்தமும் கற்களும்’, 'திரும்பி வாருங்கள் பாபு ஆகிய அவரது குறுநாவல்கள் இந்து முஸ்லீம் கலவரத் தின் கொடுரங்களையும் கொலைகளையும் சித்திரிக்கின்றன. இந்தக் கலவரத்தின்போது நடந்த மனிதப் படுகொலையை நேரடியா கப் பார்த்த நிர்மல்குமார் பெருமளவு மனக் குழப்பமடைந்து சித்தப் பிமை பிடித்தவனாகின்றான். வேறு இடத்திற்குச் சென்றால் அவனுடைய மனம் சாந்தியுறும் என்று எண்ணுகின்றாள் அவனுடைய காதலி பாரதி, பாரதிக்கு ஓவியக் கலையில் பெரும் ஈடுபாடு. நிர்மலை அவள் அஜந்தா ஓவியம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றாள். அவளுடைய முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதியில் நிர்மல் தனது நண்பன்கூறிய சமாதானப் படையணி

யில் இணைவதற்கு பம்பாய்க்குப் புறப்பட் டுச்செல்கிறான். இரத்தமும் கற்களும் என்ற குறுநாவல் இக்கருவைக் கொண்டிருப்பது டன் இந்து முஸ்லிம் வகுப்புக் கலவரத்தின் கொடுமைகளைச் சித்திரிக்கின்றது.
'திரும்பி வாருங்கள் பாபு என்ற அப்பாஸின் மற்றுமொரு குறுநாவல் இந்து முஸ்லிம் வகுப்புக் கலவரத்தின் வக்கிரகங்களை வெளிக் கொணர்கிறது. இக்கலவரத்தின்போது ஒரு கன்னிப்பெண் அவளது பெற்றோர்களதும் சகோதரனதும் கண்முன்னால் நான்கு ஐந்து முஸ்லிம் இனவெறியர்களால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய தனங்களும் அவர்களால் வெட்டப்படுகின்றன. இதற்குப் பழிவாங்கும் நோக்குடன் அந்த அபலையின் சகோதரன் ஒரு முஸ்லிம் கன்னிப்பெண்ணைத் தேடி அலைகிறான். இறுதியில் ஒரு விபச்சார விடுதியில் ஒரு முஸ்லிம் இளம்பெண்
வெட்டும் நோக்குடன் அவளுடைய மார்புக் கச்சையை அவன் கத்தியால் அறுக்கிறான். அவளுடைய மார்பிலிருந்து போலித்
வ்கள் விமகின்றன. அப்பெண் தனங்களும் வெட்டப்பட்டிருப்பதைப் பார்த்த அவன் பெரும் அதிர்ச்சியடைகின்றான். ‘தங்கச்சி' என்று அவனையும் அறியாமல் அவன் அலறுகின்றான். இந்துக்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் இந்த வகுப்புவாதக் கலவரங்களில் பாதிக்கப்பட் டுள்ளனர் என்பதை 'திரும்பி வாருங்கள் பாபு என்ற அப்பாஸின் குறுநாவல் மிக நுணுக்கமாகக் கலை அம்சத்துடன் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்த வகுப்பு வாதக் கலவரங்களுக்கெதிராக சமாதானப் படையணி ஒன்று உருவாக்கப்பட்டு அப்பாஸம் ஏனைய கலைஞர்களும் விடாப்பிடியாகப் போராடினார்கள்.
1943ல் வெளிவந்த அப்பாஸின் நாளை நமதே என்ற நாவல் இந்திய நாவல் துறையில் ஒரு புதிய போக்கின் முன்னோடி யாகத் திகழ்கின்றது. இந்த நாவல் இந்திய சமூகத்தின் ஒரு யதார்த்தபூர்வமான படைப்பாக அமைந்துள்ளது. அப்பாஸின் இரத்தமும் கற்களும்', 'இளைஞன் மிர்ரைச் சந்திக்கிறான்’, ‘தொலைதூரக் கனவு’, ‘பொபி', ஆகிய அவரது படைப்பு க்கள் இளைஞர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள், காதல், வகுப்புவாதம் போன்றவற்றை யதார்த்தபூர்வமாகச் சித்திரிக்கின்றன.
‘பத்திரிகைத் தொழிலையும் கதை புனைவதையும் இரண்டு வெவ்வேறு விடயங்களாக நான் நினைக்கவில்லை. ஒரு செய்தியை மேல்வாரியாக எழுதினால் அது பத்திரிகைச் செய்தி. அதன் ஆழங்க ளில் சென்று உணர்ச்சிகளை ஆராய்ந்து எழுதினால் அது கதை நான் கண்டவை, கேட்டவை எனது கதைகளாகவும் உருவெடுத்திருக்கின்றன என்று அப்பாஸ் தனது படைப்புக்கள் பற்றிக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகின்றார்:
‘என்னுடைய மிகச் சிறந்த கதை எது வெனில், அதன் மீது எனது பெயர் இருக் கக்கூடாது. அதைப் படித்துவிட்டு மக்கள் இது அப்பாஸின் கதை' என்று சொல்ல வேண்டும். என்னுடைய உருவம் என் எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.
இக்கூற்றிலிருந்து அவர் மக்களில் சார்ந்திருப்பதும், மக்கள் மீதும் தனது எழுத்துக்கள் மீதும் அவர் கொண்டுள்ள நம்பிக்கையும் பற்றுறுதியும் புலப் படுகின்றது.
இவள்தான் குவாஜா அஹமது அப்பாஸ் என்ற முழுமையான பெயர் கொண்ட கே. ஏ.அப்பாஸ்
★

Page 15
விபவி செயற்பாடுகள்
வானொலி - தொலைக்காட்சி கருத்தரங்கு
விபவி கலாசார மையம் வெகுஜன ஊடகங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றை 28.10.2001 இல் நடத்தியது. இவ்வரங்கில் வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரு ஊடகங்களும் கருத்தாடலுக்குரிய கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன மூத்த அறிவிப்பாளருள் ஒருவராகிய காவலூர் இராசதுரை அவர்கள், ஷவானொலியும் அபிவிருத்தியும் என்னும் பொருளிலும் ரூபவாஹினித் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளராகிய எஸ். விசுவநாதன் அவர்கள் ‘தமிழ்க் கலை இலக்கியத் துறைக்குத் தொலைக்காட்சியின் பங்களிப்பு என்னும் பொருளிலும் உரை நிகழ்த்தினர். வடக்குக் கிழக்கு புனரமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடக நிருவாக அதிகாரி வீஏ. திருஞான சுந்தரம் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
தலைவர் தமது உரையில், கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் இந்நாட்டு ஒலிபரப்புத் துறையில் நிகழ்ந்த படிமுறையான மாற்றங்களையும் அவற்றினுடு அத்துறையில் ஏற்பட்ட விரிவு, வளர்ச்சி என்பவற்றையும் எடுத்துக் கூறினார்.
காவலூர் இராசதுரையின் உரையில் அவரது ஒலிபரப்புத்துறை சார்ந்த பட்டறிவு அடிநாதமாக ஒலித்தது. வானொலி விளம்பரங்களில் இருக்கக்கூடிய இலக்கியத்தாக்கம், கலைத்துவப் பரிமளிப்பு என்பனவற்றை அவர் எடுத்துக் காட்டியதுடன் நாட்டின் அபிவிருத்திக்கு விளம்பரத்துறை எவ்வாறு பங்களிப்புச் செய்கிறது என்பதையும் விபரித்தார்.
எஸ். விசுவநாதன் அவர்கள், கலை இலக்கியப் படைப்புக்களைத் தொலைக்காட்சி ஊடகத்தின் வழி வெளிக்கொணர்வதில் உள்ள கலைத்துவ, தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துரைத்தார். தொலைக்காட்சி, கலை இலக்கியக் கருவூலங்களைக் காட்சிப்படுத்தும் ஊடகம் எனவும், இது பத்திரிகை, வானொலி என்பவற்றுக்கு இல்லாத தனித்துவமான செயற்பாடு எனவும், படைப்பாளி எண்ணிய கருப்பொருளை முழுமையாகத் தொலைக்காட்சியில் வெளிக்கொணர்வது அரிது எனவும் அவர் விபரித்தார். தொலைக்காட்சிப் படைப்புக்கள் தனிமனித முயற்சியால் வருவன அல்ல. அவை பலதுறைப்பட்ட வெவ்வேறு கலைஞர்களதும் தொழில்நுட்பவியலாளரதும் கூட்டு முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.
உரைகளின் முடிவில் கலந்துரையாடல் நடைபெற்றது.
(தொடர்ச்சி 31 ஆம் பக்கம்)
28

இலக்கியத்தில் புதுப்புனல்
நோக்கு: வ. இராசையா
நூல்: கரை தேரும் அலைகள்
படைப்பு: ஆரபி சிவஞானராஜா
வெளியீடு ஸ்கந்தவரோதயக் கல்லூரி சுன்னாகம்.
இந்த நூல் ஓர் இளம் எழுத்தாளரு டைய படைப்பு. இதன் ஆசிரியராகிய செல்வி ஆரபி சிவஞானராஜா யாழ். கல்லூரி ஒன்றிலே உயர்தர வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருப்பவர். இதிலும் முக்கியமாக இவர் ஒரு விஞ்ஞான பாட மாணவி என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும். இலங்கையில் நடைபெற்ற பல்வேறு சிறுகதைப் போட்டிகளுக்குத் தாம் எழுதிய கதைகளை இந்த நூலிலே தொகுத்துத் தந்திருக்கிறார் இவர். நூலாசிரியரைப்பற்றிய இந்த விபரங்களை இங்கே முதலில் கூறி வைப்பது அவசியம்.
ஏழு கதைகள் இந்த நூலிலே தொகுக் கப்பட்டுள்ளன. அவற்றள் கரைதேடும் அலைகள் என்பது இந்த நூலுக்கு மகுடம் தநத முதற கதை அடடைகள, மணமகன தேவை, கணிப்பீடுகள், கானல் நீர், வெந்து தணிந்த காடுகள், மனிதம் என்றும் மரணிப்பதில்லை என்பன ஏனைய கதைகள்.
பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களிலே நிலவுகின்ற இரு வேறு வகையான அவலங்களை முதல் இரண்டு கதைகளி
29
San SFS ஆரபி
சிவஞானராஜ
தமிழ் மன்றம் sašaujā asis 43dhAdgageabu- ošatrast
லும் காண்கிறோம். அடக்கம், ஒடுக்கம், ஒழுக்கம் என்னும் முள்வேலிகளைப் போட்டு, கன்னிப் பெண்களின் வாழ்க்கை யைப் பாலை நிலமாக்கி, அங்கே கள்ளிச் செடிகளை வளர்க்கின்ற திருகல் சிந்தனையை முதற்கதை சித்திரிக்கிறது. குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளையினது உழைப்பை வாழ்நாள் முழுவதும் உறுஞ்சி, அவனது வாழ்க்கையைச் சாகடிக்கின்ற குருட்டு மனப்போக்கைக் காட்டுகிறது, ‘அட்டைகள்’ என்னும் இரண்டாவது கதை.
அழகு, செல்வம், அகந்தை, அளவு கடந்த எதிர்பார்ப்பு என்பன ஒரு பெண் ணைக் கன்னியாகவே இருக்க வைக்கும் என்பதை அடுத்துள்ள கதை ‘மணமகன் தேவை கூறுகிறது. “கணிப்பீடு என்னும் கதையில், படிப்பு, படிப்பு என்று எப்போதும் நச்சரித்து, அதன் விளைவாக தமது பிள்ளைகளின் திறமைகளை மழுங்கடிக் கும் பெற்றோரது பேராசையைக் காட்டுகிறார் ஆசிரியர்.
'கானல் நீர்' என்னும் கதை தாய்மைப்பேற்றை எதிர்பார்த்திருந்த ஒரு

Page 16
பெண்ணினது இதயத் தவிப்பின் சித்திரம், * வெந்து தணிந்த காடுகள்’ என்னும் கதையிலே ஓர் இளம் குடும்பப்பெண்ணின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் என்பன எல்லாம் வெந்து சாம்பல் ஆகின்றன. எயிட்ஸ் நோயின் வாய்ப்பட்டோருக்கு மனிதாபி மானம் தரக்கூடிய ஒத்தடத்தை ‘மனிதம் என்றும் மரணிப்பதில்லை' என்னும் கதையில் காண்கிறோம்.
இந்தக் கதைக் கருக்கள், நூலாசிரிய ரது படைப்பாற்றலின் மையம் எங்கே நிலைகொண்டுள்ளது என்பதைச் சூசகமாக நமக்குக் காட்டுகின்றன. செல்வி ஆரபி
தான் காணும் - தனது மனத்தை ஈர்க்கும் சூழலுக்குள்ளே சுற்றிச் சுழன்று வருகின் றார். ஆதலால் இங்கு உள்ள கதைக ளைப் படிக்கின்றபோது எங்களுக்கு உள ‘ளேயே நாங்கள் நுழைகிறோம் என்னும் உணர்வு நமது மனத்திலே விரியத் தொடங்கி விடுகின்றது!
இந்த நூலில் உள்ள கதைக்கருக் களில் ஒன்றிரண்டு ஏதோ ஒரு வகையில் கதைகளிலே முன்பு அணுகப்பட்டவையே. ஆயினும் அவற்றை ஒரு புதிய கோணத் தில், ஒரு புதிய பார்வையினூடு இந்தப் படைப்புக்களில் நாங்கள் காண்கின்றோம். அந்தப் புதிய பார்வையின் கணிப்பு கதை யோட்டத்தில் நமக்கு நன்கு புலனாகிறது. சமுதாயத்தில் ஏற்படும் அசைவுகளை யும் மனித மனத்தின் அதிர்வுகளையும் இவர் அவதானிக்கிறார். இது ஓர் இளம் இலக்கியப் படைப்பாளிக்கு அமைய வேண்டிய பலமான அடித்தளமாகும். தான் எடுத்துக் கொண்ட கதைக் கருவை
ம்படுத்தி வளர்த்துச் செல் தற்கு வேண்டிய விடயஞானம் செல்வி ஆரபிக்கு இருப்பதை இங்குள்ள கதைக ளின் வியாபகம் வெளிப்படுத்துகின்றது. விடயஞானம் இங்குள்ள கதைகளில்
30
காணப்படும் ஒரு நயத்தகு பண்பு.
சிறுகதையின் வடிவம் இங்குள்ள கதைகளில் நன்கு பேணப்பட்டிருக்கிறது. கதைகளின் கச்சிதமான சித்திரிப்பிலே அனுபவ முதிர்வு கொண்ட ஒரு படைப்பாளியினது சாயலைக் காணலாம்.
கதையின் ஆரம்பம் எடுத்த எடுப்பிலேயே நமது மனத்தைக் கெளவிப் பிடித்துக் கொள்கிறது. நறுக்கி விட்டாற் போன்று கதையோட்டம் நின்று விட்ட பின்பும் அந்தப் பிடியிலிருந்து விடுபட முடியாது நாம் சற்று நேரம் லயித்து நிற்கிறோம். இந்தத் தொகுப்பிலுள்ள 'கணிப்பீடுகள் என்னும் கதையை இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக எடுத்துக் காட்டலாம். கதைகளின் வார்ப்புத் தரம் கதைக்குத் கதை விஞ்சி நிற்கிறது.
கதைகளிலே நிகழ்வுகளிலும் பார்க்க உணர்வுகளே முதன்மை பெறச் சித்திரிக் கப்படுவது இங்கு உள்ள மற்றொரு சிறப்பு கதைப்பின்னலின் ஒவ்வொரு இழையும் அந்தக் கதைக் கருவை மையமாகக் கொண்டு அதனை வளம்படுத்துவதாக இருப்பது, எவ்வளவு பக்குவமாக இந்த இளம் படைப்பாளி கதைகளை உருவாக் குகிறார் என்பதைப் புலப்படுத்துகின்றது!
இரத்தமும் தசையும் கொண்ட சீவன்களாக இக்கதைகளில் உள்ள பெரும்பாலான பாத்திரங்கள் நம் மனத்தில் உலாவுகின்றன. கதாபாத்திரங்கள் இங்கே மட்டாகப் பேசுகின்றன! அந்த உரையா டலில் அவற்றின் குணவியல்பு பட் என்று
நாலு வசனம் பேசுகிறார். அதிலே அவர் ஒரு அசல் கல்யாணத் தரகள்தான் என்பது தெரிந்து விடுகிறது.
‘நான் ஒரு விசளி சரியான விசரி? என்று ஒரு கதாபாத்திரம் ஓரிடத்தில்

தன்னை நொந்து கொள்கிறது. அப்பொ ழுது இந்த இரண்டு வார்த்தைகளில் அவளுக்குரிய கழிவிரக்கம் முழுவதும் குபுக் என்று வந்து கொப்புளிக்கக் காண்கிறோம்.
“ஆண்கள் அழக்கூடாது என்று யார் சொன்னது?
" ጎ' எடுத்த முயற்சி பிசுபிசுத்துப் போனது தொடங்குவது மனிதன் முடிப்பது இறைவன் அல்லவா!'
‘. சிரிப்புக்குக் கூடப் பஞ்சமான மனிதர்களும் இருக்கிறார்கள?
‘என் தாயும் தந்தையும் "போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் துாற்றட்டும். க்குச் சமர்ப்பித்து விடு' என்றனர். இவ்வாறெல்லாம் ஆசிரியர் மொழியும் இடங்களில் நமது வாசிப்பு ஒரு கணம் தரித்து விடுகிறது. அந்தப் படைப்புச் சாமர்த்தியத்தை நயக்காமல் அப்பால் போக மனம் மறுக்கிறது. ஆரபிக்குரிய இந்த எழுத்துச் சாதுரியம் அவருக்கு ஒரு
G
சபாஷ் சொல்ல வைக்கிறது.
செல்வி ஆரபி, மொழிக்குள்ளே தன்னைச் சிறை வைத்துக் கொள்ள வில்லை! மொழி அவருக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. இவரது மொழிநடை பேச்சுத் 6stoğ 剑 ப் இருக்கிறது. இவள் தமது எண்ணங்களை - கற்பனையை வெளியிட அது ஒரு தோழி போல் நின்று உதவுகிறது.
மொழிச் செம்மையைத் தேடுகிற கன்களுக்கு இவருடைய எழுத்து நடையிலே சின்னச் சின்ன உடைவுகள் ஆங்காங்கே இருப்பதாகத் தோன்றும். அந்த உடைவுகளுக்கு ஒட்டுப் போட யாரும் முயலக் கூடாது. முயன்றால் அந்தப் படைப்பின் உயிரையே அது உடைத்து விடும்!
ങ്ങിങ്ങ് d ப்பில் இ க்கு ஒரு தனித்துவம் இருப்பது தெரிகிறது. அந்தச் ‘சுயம் பேணி வளர்க்கப்படல் வேண்டும். இவர் தரம் உயர்ந்த சிறுகதை,
(28ஆம் பக்கத் தொடர்ச்சி)
பத்திரிகையாளர் மகாநாடு விபவி கலாசார மையத்தின் அழைப்பின் பேரில் ஒன்று கூடிய கலைஞர்களும் அறிஞர்களும் கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்னர், நீண்ட காலமாக எமது கலாசாரத்துறை முகம் கொடுக்கும் பாரதுரமான பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக தேவைப்படும் அரச கலாசாரக் கொள்கை, மற்றும் நிறுவன செயற்பாடு பற்றிய வழிகாட்டல் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் 96 க்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஆவணத்தைப் பிரகடனம் செய்வதற்கு 1911-2001 திங்கட்கிழமை பிய 430 மணியளவில் பத்திரிகையாளர்கள் மாநாபொன்று தேசிய நூலக சேவை டபத்தில் நடைபெற்றது. இந்த மகாநாட்டில், மேற் e ம் பற்றிய
சிங்கள நடிகரான ஜக்ஸன் அன்ரனி, விபவி தேசிய இணைப்பாளர் சுனில்
f 别 负 d y 别 别 O ଘ (3 C3 o, . இந்த ஆவணம் பற்றி விளக்கமளித்ததுடன், இது சம்பந்தமாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.
31

Page 17
| sae|-- | | –| – |- - - - -|- |-- “... ----|(: ,| ( )|-|-|- |- T---- |- . . |- |- |- |- |-|-|- |- - |-|- |-|- |- |
---- |-|-
|-
|- |----- |- |-|- |-
|-|- |- |-|- |-|-|- |- |- |-|- | | |----|-|- |- | |-|- |- |- : |- ---- |-+ |- |- - ||- ----
_ _ . . . .
 

"AM) 유31R :n詩)*u홍Flg --Isso usoubojsīs" sāļs Tuloustourit/8
6N 월e그國民