கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2001.04

Page 1
ஒலை02 கொழும்புத் தமிழ்ச்
கொழும்புத் தமிழ்ச்சங்க ளப்தா
நிறைவு நாளான 250
குர்ப்பனகையின் சூழ்ச்சி - இரா
கொழும்புத் தீ 7, 37 வது ஒழுங்கை (உருத்தி தொலைபேசி
 
 

Հե իիիիի (22.03-2001-25.03.2001) 01 அன்று நிகழ்த்தப்பட்ட ாயன நாட்டிய நாடகத்தில் ஒர் காட்சி
தமிழ்ச் சங்கம் ரா மாவத்தை), கொழும்பு : 08, F - O -53375
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
இதயம் திறந்து.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஓர் மாதாந்த செய்திமடலை வெளியிட வேண்டுமென்பது ஓர் நீண்ட நாளைய நிலைப்பாடு. இநத நிலைப்பாட்டின் அழப்படையில் சங்கத்தின் இலக்கியக்குழு அதன் 13.02.200 கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் விளைவே தற்சமயம் தங்கள் கரங்களில் தவழும் ‘ஓலை’ இதன் முதலாவது இதழ் இவ்வாண்டுமார்ச் 22 இலிருந்து 25 வரை கொழும்புத் தமிழ்ச் சங்க ஸ்தாபக வாரம் முதன் முறையாக கொண்டாடப் பெற்றபோதுவிழாவின் இறுதிநாளான 25.03.200 அன்று காலை நடைபெற்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், கலைஞர், பத்திரிகையாளர் ஒன்று கூடலின் போது வெளிவரப் பெற்றது. இம் முயற். சியை எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் பலர்பாராட்ட டினர். ஆனாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இதனைக் காவோலை என்றுகதை பரப்பியதும் எம் காதுகளுக்கு எட்டாமலில்லை. நல்நோக்குடன் கூழய விமர்சனங்கள் எம்மைப் புடம் போட உதவும் என்பதை நாம் அறிவோம். அதேவேளை திய எண்ணத்துடன் கூறப்படும் எத்தகைய பரிகாச வார்த்தைகளும் எம்மைத் தீண்ட நாம் அனுமதிக்கப்போவதுமில்லை. “ஓலை." ஓர் செய்தி மடலாக இருந்தாலும் கூட கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாதார வளமும் விளம்பரதாரர்களின் அனு. சரணையும் எதிர்காலத்தில் கைகொடுக்குமாயின் இதனை ஓர் கனதிமிக்க இலக்கிய ஏடாகப் பரிணமிக்கச் செய்யும் எனின. மும் எமக்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய உங்கள் அன்பும்,ஆதரவும், உதவியும் ஊக்கமும் எமக்குத் தேவை.
மீண்டும் மறுமடலில்.
- இலக்கியக்குழு
“9606v” Uásó 2

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகவாரம் இவ்வாண்டு முதன்முறையாகக் கொண்டாடப்பெற்றது.
22.03.2001 - வியாழக்கிழமை
தலைமை செல்வி சற்சொரூபவதிநாதன்
(துணைத்தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
பிரதம அதிதி : திரு. எம். பாக்கியநாதன்
(பனம்பொருள் அபிவிருத்திச்சபைத்தலைவர்)
சிறப்பு அதிதி : திருமதி ஞா. பாலச்சந்திரன்
(அதிபர், சைவமங்கையர் கழகம். கொழும்பு - 08)
நிகழ்ச்சிகள் பி. ப. 5.30க்கு ஆரம்பமாகின. கொழும்புத் தமிழ்ச்சங்கத் ஸ்தாபகத் தலைவர் அமரர் சு. ச. பொன்னம்பல முதலியார் அவர்களின் உருவப்படத்தினை கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். விழாவுக்குச் சமூகம்ளித்திருந்த அமரர் சு. ச. பொன்னம்பல முதலியாரின் மகன் திரு.பொ.சிதம்பரநாதன் மகள் இமயவல்லி விக்னராஜா ஆகியோரும் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஸ்தாபகர் நினைவுரையை சங்கத்துணைத்தலைவர்களில் ஒருவரான கலாசூரி. இ. சிவகுருநாதன் நிகழ்த்தினார். "கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் பணிகளும்" எனும் தலைப்பிலான சிறப்புரையினை த. கோபாலகிருஸ்ணன் (செங்கதிரோன்) ஆற்றினார். அமரர். சு. ச. பொன்னம்பல முதலியார் அவர்களால் எழுதப்பெற்று தமிழவேள் க. இ. க. கந்தசுவாமி அவர்களினால் பதிப்பிக்கப்பெற்ற "பனைநூறு" மூலமும், உரையும் நூலினை பிரதம அதிதி வெளியிட்டு வைக்க நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரின் மகன் திரு. பொ. சிதம்பரநாதன் பெற்றுக் கொண்டார். பிரபல எழுத்தாளர் செ. யோகநாதன் பனைநூறு"நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார். சோக்கல்லோ சண்முகநாதன் குழுவினரின் "கவிராஜன்கதை" - வில்லுப்பாட்டு இடம்பெற்றது. மகாகவி பாரதியாரின் கதையை, கதையினூடே பொருத்தமான இடங்களில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் செயற்பாடுகளையும் பொருத்தமான பாரதி பாடல்களுடன் சேர்த்து வில்லுப்பாட்டில் சொல்லியமை வியந்து இரசிக்கும்படியாக அமைந்தது.
‘ஓலை’ பக்கம் 3

Page 3
23.03.2001 - வெள்ளிக்கிழமை
தலைமை : திரு. பெ. விஜயரெத்தினம்
(துணைத்தலைவர், கொழும்புத்த் தமிழ்ச்சங்கம்) பிரதம அதிதி : உடுவை எஸ் தில்லைநடராஜா
(மேலதிகச் செயலாளர். கல்வி உயர்கல்வி அமைச்சு) சிறப்பு அதிதி : திருமதி ரூ. சிவகுருநாதன்
(அதிபர். இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு 04) நிகழ்ச்சிகள் பி. ப. 5.30க்கு ஆரம்பமாகின. "ஈழத்துக் கவிதை இலக்கியம்" பற்றிய ஆய்வரங்கு இடம்பெற்றது. 1931 இலிருந்து 1955 வரை, 1956 இலிருந்து 1976 வரை, 1977 இலிருந்து 2000 வரை என மூன்று காலகட்டங்களாக வகுத்து முறையே கவிஞர். ஏ. இக்பால், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கே. விஜயன், சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான திரு. தி. திருக்குமரன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இளையதம்பி தயானந்தா தலைமையில் "கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்" என்ற தலைப்பின் கீழ் கவியரங்கு நடைபெற்றது. கவிஞர்கள் மேமன்கவி, மாவை வரோதயன், சிதம்பரபிள்ளை சிவகுமார், சோ. தேவராஜா ஆகியோர் பங்குபற்றினர்.
24.03.2001 - சனிக்கிழமை
தலைமை : திரு. க. நீலகண்டன்
(துணைத்தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்) பிரதம அதிதி : திரு. நா. செல்வகுமாரன்
(சட்டபீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம், மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்) து. சந்தோஷம் (அதிபர், விவேகானந்தா கல்லூரி, கொழும்பு - 13)
சிறப்பு அதிதி
நிகழ்ச்சிகள் பி.ப. 5.30க்கு ஆரம்பமாகின. "ஈழத்துப் புனைகதை இலக்கியம்" பற்றிய ஆய்வரங்கு இடம்பெற்றது. 1936 இலிருந்து 1949 வரை, 1950 இலிருந்து 1960 வரை, 1961 இலிருந்து 1982 வரை, 1983 இலிருந்து 2000 வரை என நான்கு கால கட்டங்களாக வகுத்துமுறையே செங்கை ஆழியான் க. குணராசா, தெளிவத்தை யோசப், செ. யோகநாதன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். "தற்கால ஈழத்து தமிழ் இலக்கிய படைப்புக்கள் சமகாலப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கின்றனவா? எனும் தலைப்பின் கீழ் பட்டி மன்றமும் நடைபெற்றது.
‘ஓலை’ பக்கம் 4.

25.03.2001 - ஞாயிற்றுக்கிழமை
முழுநாள் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. காலை நிகழ்ச்சிகள் மு. ப. 9.30க்கு ஆரம்பமாகின. சங்கத்தின் துணைத்தலைவர் கலாசூரி இ. சிவகுருநாதன் தலைமை தாங்கினார். கொழும்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நெறியாள்கையின் கீழ் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், கலைஞர், பத்திரிகையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிநடைபெற்றது. ஈழத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வத்துடன் பலர் சமூகமளித்திருந்தனர். வரவேற்புரை நிகழ்த்திய த. கோபாலகிருஸ்ணன் ஒன்றுகூடல் நிகழ்வின் நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டி ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், கலைஞர், பத்திரிகையாளர்களின் விபரங்களைச் சேகரித்து கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் ஆவணப்படுத்தும் சங்கத்தின் முயற்சிகளையும் எடுத்துக் கூறினார். பின் கலந்துரையாடல் இடம்பெற்றது. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் நெறிப்படுத்தினார். தமிழ்மொழி, இலக்கிய, கலை, பண்பாட்டு வளர்ச்சிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய பணிகள் பற்றிய கருத்துக்களை சமுகமளித்திருந்தோர் பலர் சுருக்கமாக எடுத்துக்கூறினர். செங்கைஆழியான் க. குணராசா, செ. யோகநாதன், கவிஞர் சு. வில்வரெத்தினம், உட்பட பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மிக்க ஆர்வத்துடன் கலந்துரையாடலில் கருத்துக்களை வழங்கினர். ஒன்றுகூடல் நிகழ்வு மதிய போசனத்துடன் இனிதே நிறைவு கண்டது. ஈழத்து எழுத்தாளர், கலைஞர், பத்திரிகையாளர் விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. மாலை நிகழ்ச்சிகள் பி. ப. 5.30க்கு சங்கத்தலைவர் சோ. தேவராஜா தலைமையில் ஆரம்பமாகின. பிரதம அதிதியாக வடக்கின் அபிவிருத்தி, புனரமைப்பு, புனருத்தாரணம் மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் திரு. வே, இரகுநாதன் அவர்கள் கலந்து கொண்டார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த செல்வி. இராஜேஸ்வரி ஜயந்தினியின் தமிழிசைப் பாடல்கள், உடப்பூர் கலைஞர்களின் "உடப்பூர் பாரம்பரிய இசை"நிகழ்வு, உஷா சிற்றம்பலநாதன் குழுவினரின் "சூர்ப்பனகையின் சூழ்ச்சி" (இராமாயண நாட்டிய நாடகம்) ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்தாபகவாரம் நிறைவுற்றது.
தொகுப்பு : செங்கதிரோன்
சங்கப் பதிவேட்டிலிருந்து.
பொதுமை நெறி தமிழ் நெறி. பொதுமையே சர்வோதய நெறியுமாகும். தமிழ்ச் சங்கம் தமிழ் நெறியைப் பேணிப் பாதுகாப்பதாக!
29.09.1969 குன்றக்குடி அடிகளார்
‘ஓலை’ பத்தம் 5

Page 4
சங்கப்Uலகை
rー d 99 O
களங்கம நாடகம
ר
உலக நாடக தினத்தையொட்டி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 30.03.2001 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு திருமறைக் கலாமன்றம் வழங்கிய அருட் திரு. நீ மரியசேவியர் அடிகளாரின்"களங்கம்"நாடகம் (நெறியாள்கை ஏ. பிரான்சிஸ் ஜெனம்)
மேடை யேற்றப்பட்டது. أص
r வரவேற்பு வைபவம்
மலேசிய நாட்டின் பிரபல தமிழ் எழுத்தாளர் மு. வரதராசு அவர்களுக்கு ஓர் வரவேற்பு வைபவமும், அதனையொட்டி ஒர் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் 15.04.2001 அன்று ஞாயிற்றுக்கிழமை மு. ப. 9.00 மணிக்கு சங்கத்தலைவர் சோ. தேவராஜா தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் திரு.மு. வரதராசா அவர்கள் "உலகமயமாக்கலும் மலேசிய தொழிலாளர்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார் لم
ר
கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஒழுங்கு செய்துள்ள "இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பிலான பேருரைத் தொடரின் மூன்றாவது உரையை 28.04.2001 அன்று சனிக்கிழமை பி. ப. 5.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி. பரமு. புஸ்பரட்ணம் அவர்கள் "பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்" என்ற தலைப்பில் நிகழ்த்தினார். இது நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. گھر۔
“இலங்கைத் தமிழர் : வாழ்வும் வகிபாகமும்’- பேருரைத்தொடர்
r “கலையின்பமே நிலையின்பமாகும்’ N "கலையின்பமே நிலையின்பமாகும்" என்ற மகுடத்தின் கீழ் யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலைக் கோயிலடியைச் சேர்ந்த கலாபூஷணம் சு. கணபதிப்பிள்ளை, ஒய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் இசையோடு கூடிய கதா நிகழ்வொன்றினை 30.04.2001 திங்கட்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்த்தினார்.
‘ஓலை’ பக்கம் 6

நூல்நயம் காண்போம்.
05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கணர்டவர்
200200|"உயிர்வெளி" வெளியீடு : ஒளவை. (41) (பெண் கவிஞர்களின் சூரியா பெண்கள் நிறுவனம், விக்கினேஸ்வரன்
கவிதைத் தொகுப்பு) | மட்டக்களப்பு
06.04.200"பனைநூறு” நல்லூர் ச. சு. பொன்னம்பல (42) மூலமும் உரையும் முதலியார் எஸ். பூரீஸ்கந்தராசா
பதிப்பாசிரியர் : தமிழவேள்
200200 "குருதிமணி” தேவகடாட்சம்
(43) (சிறுகதைத்தொகுதி ) எஸ். வன்னியகுலம்
2704200 "செந்தணல்" "அங்கையன்” கயிலாசநாதன்
(44) (நாவல்) கே. எஸ். சிவகுமாரன்
சங்கப் பதிவேட்டிலிருந்து.
நான் இன்று இந்த கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கு பெற்றுமுத்தமிழ் என்னும் பொருள்பற்றிப் பேசும் பேறு பெற்றேன். சங்கம் பல ஆண்டுகளாக தமிழ் பணி செய்து வருவதை அறிவேன். 1957ல் இங்கு வந்த போதும் இச்சங்கத்தின் பணியை அறிந்து சொற்பொழிவு நிகழ்த்தினேன். மொழிப் பற்றுள்ள நன்மக்கள் பலர் முன் நின்று இச்சங்கத்தை நடாத்துகின்றனர். இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவர்க்கும் இச்சங்கம் மொழிப் பற்றை ஊட்டி வருவது பெரிதும் பாராட்டுதலுக்குரியது. இச்சங்கம் மேன்மேலும் வளர்ச்சியடைந்து அருந் தொண்டுகளைச் செய்து சிறப்படையவேண்டும் என முழுமனதோடு வாழ்த்துகின்றேன். 17.1968 கி.ஆ.பெ.விசுவநாதம்
"g606v” U55ú 7

Page 5
வாழ்த்துப்Uா
25.01.2001 இல் மணிவிழாக்கண்ட ஈழத்து முதுபெரும் எழுத்தாளர் செங்கை ஆழியான் க. குணராசா அவர்களைப் பாராட்டிக் கெளரவித்து கொழும்புத் தமிழ்ச்சங்கம் 16.02.2001 அன்று அளித்த தேநீர் விருந்துபசார நிகழ்வில் இடம் பெற்ற வாழ்த்துப்பா
அள்ளிக் கொடுத்துச் சிவந்தன கர்ணன் அங் கையும்
அதுபோன றே அள்ளிக் கொடுத்தனை தமிழைநின் விரல் வழி
அவைகளுஞ் சிவநீதனவோ கொள்ளைநினி படைப்புகள் கலையொடு இலக்கியம்
கற்பனை யுடன் தமிழினி வள்ள லே செங்கை ஆழியா னேநீ வாழிய பல்லாணி டே
0.00 000 (X- (X- 8X- 0x- w (X-
படைக் குந் திறன் இறை கொடையாம் அளவறப்
படைத்தவன் நினக் களித் தான், படைத்தனை பல வகைச் சிறுகதை நாவல் பிரதேசச்
சிறப்புடனே படைத் தனை ஆய்வுகள் பிறபல தொகுத் தனை
புகன் றிடிற் கொள்ளையதாம் படைத் தவ ரிலைநினைப் போல விவி வீழப் பதிதனில்
வாழியவே
9 80 000 «o 0XP (X- w 0- 0.
தோன்றிற் புகழொடு தோன்றுக என்றனன் செந்நாப்
போதகனும் தோன்றினை புகழைத் தேடினை நின் திறன் தோன்றிடத்
தமிழ் செய்தே தோன்றிலை புகழில் திளைத்தும் கர்வம் வித்துவச்
செருக்கு : முகம் “தோன்றிடும் புண் ணகை” தோற்றிடும் மனத்தின்
துய்மைநி வாழியவே.
Sè, d. d. d. d. 10. (X- 0X- (X- 0X- 8X- (X-
‘ஓலை’ பக்கம் 8

உலகுள வரை தமிழ் வாழும் அதனொடு வாழும் நின்
செந் தமிழே பலமாம் நினது படைப்புகள் தமிழின் பெருநிதி
புகழ்ச்சியிலை நிலமிசை இன்றுள நிலைமையைச் சொன்னனை
நிகழ்ந்ததுஞ் சொல் லி வைத் தாய் அலைகடல் சூழ் இவ் ஈழமணி பெற்ற ஏந்தலே வாழியவே.
சங்கம் வளர்த்த தமிழ் வளர்த் துயர்ந்தாய் செந் தமிழ்
வளர்க் குமெங்கள் சங்கம் கொழும் பில் செய் நலத் தொண்டாம் திறன் மிகு
தமிழரினைச் சங்கை செய் தவர்தம் திறன் பிற ரறிந்திடச் செய்தலாம்
நின்னையும் நாம் சங் கைசெய் திவ்விழாச் செய்தனம் வாழிநீ செங்கை
யாழியானே
800 008. 8X- 0X- (X- 0X- 0X
“ஜின்னாஹற்”
சங்கப் பதிவேட்டிலிருந்து.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்று இலக்கியம் பற்றிப் பேச வாய்ப்புப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. அழகிய இலங்கைத் தீவில் இனிய மொழியான தமிழை வளர்க்க கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் பணியை நான் அறிவேன். சங்கத்திற்கு எனது பாராட்டு.
ம.பொ.சிவஞானம்
கொழும்பு தமிழ்ச் சங்கம் செய்து வரும் தொண்டுக்கு எல்லோரும் பேருதவி செய்து இதன் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டிக் கொள்கிறேன்.
6.9.1969 வே அணிணாமலை
Ill.)
‘ஓலை’ பக்தம் 9

Page 6
சங்கத்தின் பன்முகப் பணிகள் சில.
0.
0.
* இலவச இரத்த அழுத்த வைத்தியப் பரிசோதனை
1998 செப்டம்பரிலிருந்து மாதத்தின் 2ம், 4ம் வார பிரதி வெள்ளிக்கிழமைகளில் காலை 9.30 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்த அழுத்த வைத்தியப் பரிசோதனையையும் ஆலோசனைகளையும் ஒய்வுபெற்ற வைத்திய அதிகாரி திரு. என். கந்தையா அவர்கள் கடந்த 3 வருட காலமாக இலவசமாக ஆற்றி வருகிறார். கொழும்புத் தமிழ்ச்சங்கப் பணிகளின் இன்னுமொரு பரிமாணம் இச்சேவை மூலம் எண்பிக்கப்படுகிறது.
* கூடிப்பயில்வோம்
இளம் சமூகத்தில் தமிழ் மொழித்திறனை வளர்க்கும் நோக்கில் 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான "கூடிப்பயில்வோம்" என்ற நிகழ்வு 21.04.2001 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதி சனிக்கிழமை தோறும் காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் சிறுவர்களைப் பயிற்றுவிப்போராக புலவர் அ. திருநாவுக்கரசு (கல்விக்குழுச் செயலாளர்), பண்டிதர் உமாமகேஸ்வரன், புலவர் திருமதி. பூரணம் ஏனாதிநாதன், துணைத்தலைவர் செல்வி. சற்சொரூபவதிநாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த திரு. கோமஸ் ஆகியோர் தற்சமயம் பொறுப்பேற்றுச் சேவைகள் வழங்கி வருகின்றனர்.
- த. சிவஞானரஞ்சன்
() அஞ்சலி () Nu/ "Nک
2004.2001 அன்று காலமான சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் அமரர். இரா. மயில்வாகனம் அவர்களுக்கு எமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
‘ஓலை’ பக்கம் 10
 

கொழும்புத் தமிழ்ச்சங்கம்
நூலகச் சேவைகள்
நூலகச் செயலாளர் : திரு க. குமரன்
இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தமிழ் நூலகங்களில் ஒன்றான "கொழும்புத் தமிழ்ச் சங்கநூலகம்"20,000க்குமதிகமான நூல் தொகுதிகளைக் கொண்டு இயங்கிவருகின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள்,நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றிய நூல்கள் மட்டுமல்லாது மிக அரிதான பதிப்புக்களையும், கணிசமான அளவு சமஸ்கிருத, ஆங்கில மொழிகளிலான நூல்களையும் சிறுவர் நூல்களையும் கொண்டுள்ளது. நூல்கள் அனைத்தும் தூவி முறையில் பகுக்கப்பட்டுப் பட்டியலாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் நூலகமானது கணினி மயமாக்கப்படவுமுள்ளது.
நூலகமானது பின்வரும் சேவைகளை அதன் அங்கத்தவர்களுக்கு வழங்கி வருகின்றது.
19 இரவல் பகுதி
நூலக அங்கத்தவர்கள்இரவற்பகுதியிலிருந்து இரண்டு நூல்களையும் இரு சஞ்சிகைகளையும் இரு வார காலத்திற்கு இரவலாய் பெற்றுச் செல்லலாம்.
19 உசாத்துணைப்பகுதி
மிக முக்கியமானதும், பெறுமதியானதுமான நூல்கள் இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. நூலக அங்கத்தவர் இப்பகுதி நூல்களை உசாவுவதுடன் தேவையான முக்கிய பகுதிகளை நகல் எடுக்கவும் வசதியுள்ளது.
10 இலங்கைத் தமிழியல் சேகரிப்புப்பகுதி
இலங்கைத் தமிழரின் இலக்கியம், வாழ்வியல், வரலாறு, தொல்லிய அரசியல் சமூகவியல்உட்பட இன்னோரன்னபரிமாணங்களைத்தெரிவிக் நூல்களும், ஆவணங்களும் இட்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ளன. தமக்குத் தேவையான நூல்களைப் பட்டியலாக்கத்தில் தெரி தெடுத்து இதற்கான சீட்டில்பூர்த்தி செய்து நூலகரிடம் கையளிப்பதி மூலம் இப்பகுதியிலுள்ள நூல்களை அங்கத்தவர்கள் பெற்று பயன்படுத்தலாம்.
"gá06v” Uő4ó 11

Page 7
ஆய்வுப் படிப்பகப் பகுதி இப்பகுதியினை ஆய்வாளர்கள் பயன்படுத்தலாம்.
படிப்பகப்பகுதி மாணவ மாணவியர் இப்பகுதியினைப் பயன்படுத்தலாம். (மாணவ மாணவியர் இப்பகுதியில் தமது குறிப்புகளை எடுத்துவந்துபடிக்கலாம்) பரீட்சைக்காலங்களில் இப்பகுதிச்சேவை நீடிக்கப்படும்.
சிறுவர் பகுதி இப்பகுதியில் 5-15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் உறுப்புரிமை பெற்றுப் பயன்படுத்தலாம். இப்பகுதியில் இரு நூல்களையும் ஒரு சிறுவர் சஞ்சிகையினையும் இரவலாய்ப் பெறலாம். இப்பகுதியில் தமிழ் நூல்கள் மட்டுமல்லாது மொழியறிவினையும், அறிவியலையும் தரவல்ல ஆங்கில நூல்களும் சிறுவர் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் கதைநேரம், சிறுவர் விவரணப் படங்கள் காண்பித்தல், சிறுவர் நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் ஒழுங்குபடுத்தப்படும்.
சஞ்சிகைப் பகுதி இப்பகுதியில் இலக்கிய, வணிக, ஆய்வு அடிப்படையான வார, மாத, காலாண்டு, வருட இதழ்கள் என 30க்கு அதிகமான சஞ்சிகைகளும் ஆங்கில சஞ்சிகைகள் சிலவும் வைக்கப்பட்டுள்ளன. அங்கத்தவர் எவரும் இப்பகுதியினைப் பயன்படுத்தலாம்.
பத்திரிகைப் பகுதி g). Ligg5ulsio 6ily (Sabatif, g560735(gyeo, 560735.6i, Daily News, Daily Mirror ஆகிய தினசரிகள் வைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியை மட்டும் பயன்படுத்த வருட கட்டணமாய் ரூபா 25/= செலுத்துதல் வேண்டும். நூலக அங்கத்தவர் எவரும் இப்பகுதியை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ஒலி ஒளி இணையப்பகுதி ஒலி, ஒளி நாடாக்களையும், இறுவட்டுகளையும், இணைய வசதி. களையும் கொண்ட இப்பகுதி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒவிய சேகரிப்புப் பகுதி, ஈழத்து இலக்கியவாதிகள் பற்றிய தகவல் பகுதி போன்றவையும் விரைவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
‘ஓலை’ பக்கம் 12

வாசியுங்கள்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின்
வெளியீடுகள்
முதற்பதிப்பு : 1979 மீள்பதிப்பு : 2001 நூற்பெயர் : பனைநூறு ஆசிரியர் : முதலியார் ச.க.
பொன்னம்பல முதலியார்
பதிப்பாசிரியர்: தமிழவேள் வெளியீடு : கொழும்புத் தமிழ்ச்சங்கம் பதிப்புரிமை : கொழும்புத் தமிழ்ச்சங்கம்
அச்சகம் : நந்தா அச்சகம்,
3:... ...: கொழும்பு - 13 விலை " 75/=
裘酸
இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் "பண்டைய இலங்கையில் தமிழும், தமிழரும்
(பிராமிக் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
கலாநிதி பரமு. புஸ்பரட்ணம் முதுநிலை விரிவுரையாளர்:வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் :
‘ஓலை’ பக்கம் 13

Page 8
ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர் விபரம்
ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டித் தொகுத்து கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் ஆவணப்படுத்தி வைக்கும் முயற்சியினை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபக வாரம் (22.03.2001 - 25.03.2001) கொண்டாடப்பெற்றபோது அதன் நிறைவு நாளான 25.03.2001 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் / கலைஞர் / பத்திரிகையாளர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது சமூகமளித்திருந்தவர்களுக்கு விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேரில் கையளிக்கப்பட்டன. முகவரிகள் கிடைத்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டும் வருகின்றன. இதுவரை இவ்விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெறாதோர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு கொள்ளும்படியும், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றோர் தாமதியாது அவற்றை பூரணப்படுத்தி அனுப்பி வைக்கும்படியும் அன்பாக வேண்டப்படுகின்றனர்.
- இலக்கியக்குழு -
சங்கப் பதிவேட்டிலிருந்து.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. கழகத்தவரின் தமிழ்ப்பணி கண்டு பாராட்டுகின்றேன். கழகப் பணி வளர்க வாழ்க என வாழ்த்துகின்றேன்.
காகோவிந்தன்
‘ஓலை’ பக்கம் 14

தமிழ்ச்சங்கம் வழங்கிய பெருவிருந்து கவிராஜன் கதை - வில்லிசை நிகழ்ச்சி
நமது நாட்டில் மறையத் தொடங்கிய கிராமியக் கலை வடிவமான வில்லி. சைக்குப்புத்துயிர் கொடுத்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றிவரும் ஒருசில வில்லிசைக் குழுக்களில் ஒன்றான "சோக்கல்லோ வில்லடிக் குழு"ஏராளமான ரசிகப் பெருமக்களின் பேரபிமானத்தைப் பெற்று வருவதை சிறப்பாகக் குறிப்பிடலாம். முதன் முதலாக 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாரதியாரின் நூற்றிப் பதினொராவது பிறந்த தினத்தன்று "கவிராஜன் கதை" என்ற தலைப்பிலான வில்லிசை மூலம் அறிமுகமான சோக்கல்லோ வில்லடிக் குழுவினர், கொழும்பு, தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபக வார விழாவின் முதல் நாளன்று (22.03.2001) இதே தலைப்பிலேயே வில்லிசையை நிகழ்த்தியிருந்தார்கள். பாரம்பரியமான வில்லிசைக் கலைக்கு கொழும்புதமிழ்ச்சங்கம் கொடுத்த முக்கியத்துவம் பெரும் பாராட்டைப் பெற்றது. பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் "கவிராஜன் கதை" வில்லிசையில், கலைஞர் சோக்கல்லோ சண்முகம் கதையோட்டத்தை உணர்ச்சிபூர்வமாக முன்னெடுத்துச் சென்றார். கதிரேசன் வழங்கிய பக்க உதவி குறை சொல்வதற்கில்லை. கதையோட்டத்தின் இடையிடையே ஒலித்த பாரதியார் பாடல்கள் மற்றும் வில்லிசைப் பாடல்கள் என்பன சிறப்பாக இருந்தன. வில்லிசையின் உதவிக் கலைஞர்களான கதிரேசன், பிரியா ஜெயந்தி ஆகியோர் சிறப்பாகப்பாடிவில்லிசைக்கு மெருகூட்டினார்கள் என்று சொல்லலாம். வில்லிசைக் கலைஞர் சோக்கல்லோ சண்முகம் கதையோட்டத்துடன் சேர்த்து வில்லிசைக் குழுவினரின் அறிமுகத்தையும் வழங்கியிருந்தது புதுமையான வித்தியாசமான வகையில் இருந்தது. பக்க வாத்தியக் கலைஞர்கள் வில்லிசையின் சிறப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய போதிலும், உணர்ச்சி. வசமான கட்டங்களில் கலைஞர் சண்முகநாதன் குரலை உயர்த்திப்பேசியபோது அதேமாதிரியான வசன நடையில் ஆர்மோனியத்தையும் இசைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லலாம். பொதுவாக, பக்க வாத்தியக் கலைஞர்களுடன் மேடையில் அமர்ந்திருந்து குரல் கொடுத்த உதவிக் கலைஞர்கள் அனைவருமே வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பு அன்றைய வில்லிசையைநல்ல வகையில் அமைக்க உதவியது.
கொழும்புதமிழ்ச்சங்கம், ஸ்தாபக வாரத்தையொட்டி ரசிகப்பெருமக்களுக்கு வழங்கிய பல கலை விருந்துகளில், வில்லிசையும் நல்லதொரு இசை விருந்தாக அமைந்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அ. கனகசூரியர்.
‘ஓலை’ பக்கும் 15

Page 9
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7. 57 வது ஒழுங்கை உருத்திரா மாவத்தை கொழும்பு - 08, தொலைபேசி .8759تجليدي