கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.06

Page 1
* 玉’
。
 
 
 
 
 
 

臀
மாவத்தை),

Page 2

இதயம் திறந்து.
"ஒலை" யின் 05வது இதழ் இது. 'ஒலை'யின் தயாரிப்புச் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியிருப்பதால் அதன் பக்கங்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தவும் வேண்டியுள்ளது. இதனால் "ஒலை"யின் இதழ்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கச் செய்திகளையும், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புடைய விடயங்களையும் மட்டுமே தாங்கி வெளிவருதல் தவிர்க்க முடியாததொன்றாகிவிடுகிறது. எனினும் 'ஒலை"யை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த மடலாக மட்டுமன்றி அதனை ஈழத்தின் கனதியும் காத்திரமுமிக்கதோர் இலக்கிய மாசிகையாகவும் எதிர்காலத்தில் மலரச் செய்ய வேண்டுமென்ற எமது எண்ணத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும், அத்தகைய எமது செயற்பாட்டின் முதற்கட்டமாகவும் இந்த இதழின் சில பக்கங்களை ஆக்க இலக்கியப் படைப்புக்களுக்கென ஒதுக்கியுள்ளோம். அந்தவகையில் இந்த இதழில் ஜின்னாஹ்வின் இதயத்தின் ஈரிதழ்கள் சிறுகதையும் "அக்கரைசக்தி"யின் நாவலனே நீ மீண்டும் பிறக்க வேண்டும் கவிதையும், எஸ்.கே.சிவபாலன் அவர்களின் 'உலக இசையில் தமிழிசையின் தொன்மைவளம்" கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிதி வசதிக்கேற்ப இனிவரும் இதழ்களின் பக்கங்களைப் படிப்படியாக அதிகரித்து ஆக்க இலக்கியப்படைப்புக்களுக்கு அதிக அளவில் இடம் கொடுக்கவும் எண்ணியுள்ளோம். வாசகர்களாகிய எழுத்தாளர்கள்/கலைஞர்கள்/பத்திரிகையாளர்கள்/இலக்கிய ஆர்வலர்கள்/ கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் தரும் உதவியும் ஊக்கமுமே 'ஒலை" ஓங்கி வளர்வதற்கான உயிர்நாடி. படைப்பாளிகளிடமிருந்து தரமான கலை, இலக்கிய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
மீண்டும் மறுமடலில்.
-ஆசிரியர்
‘ஓலை’ பக்கம் 1

Page 3
கவிக்கோ அப்துல் ரகுமான் - புதுக்கவிதை" இராமனுக்கு பக்த ஹனுமான். யாப்பை அறிந்து மீறி - தமிழ்க்கவிதை யாத்த பெருங்கவிஞன்.
தமிழ்க்கவிதைப்,
போக்கறிந்து புதுக்கவிதை படைத்துப் புகழ் படைத்தோன்.
மரபறிந்த மா கவிஞனானாலும் - யாப்புச் சிறையுடைத்துத் ‘தமிழ்க்கவிதை'ச் சீதையினை மீட்டு வந்தோன்.
அறிந்தவனே அதை உடைத்து ஆக்கம் படைத்தால்தான் அரங்கேறும் அதுதான் ஆரோக்கியம் ஆகும். - ஆனால் இன்று
பூப்படையாப் பெண்களெலாம் பிள்ளைபெற வந்ததுபோல் கவிதை யாப்பறியாப் பேர்களெலாம் பாப்புனைய வந்துவிட்டார்.
யாப்பே வேண்டாமாம்! 'யதார்த்தக் கவிதைகளாம்!
ஓசை, உருவம், உணர்ச்சி, உள்ளடக்கம் ஒன்றுமே வேண்டாமாம்!
புற்றுக்குள் ளிருந்தீசல் புறப்பட்டு வந்ததுபோல் "புதுக்கவிதை"ப் புலவர்கள்
கொட்டும் குளவிக் கூட்டைக் கலைத்தது போல் எட்டுத் திக்கெங்கும் இவர்கள்தான் ஏராளம்
‘ஓலை’ பக்கம் 2
 

வெற்றுத் தகரத்தில் வீணை ஒலிக்குமா?. இக் கற்றுக் குட்டிகளால் - தமிழ்க் கவிதை செழிக்குமா?
வாக்கியத்தை முறித்துப்பின் வரிசையிலே வைத்தெழுதி ஆக்கியதால் வந்த சொல் அடுக்கைத்தான் அதிகம் பேர் சோக்கான கவிதையெனச் சோடித்துக் காட்டுகிறார். கேட்பதற்கு யாருமில்லை என்றெண்ணிப் - பேனாவால், கிறுக்கித் தள்ளுகிறார். - அவற்றில் சிலவற்றை பொறுக்கி யெடுத்துப்பின் புதுக்கவிதைப், புத்தகமும் போடுகிறார்.
முதற்பிரதி வாங்கவென முந்தும் புரவலர்கள், முன்னுரைகள் வழங்க முத்தபே ராசிரியர்கள். காலைப்பிடித்தால் இக்கவிஞர் கூட்டத்தார் கோலைப்பிடித்தெழுதிக் குவித்த வரிகளெல்லாம் சாலச் சிறந்ததெனச் சாற்றும் கலாநிதிகள் இருக்கும் வரைக்கும் இந்த இழவுத் தொழில் இருக்கும்.
பம்மாத்து கவிதையிலே பண்ணுமிப் போக்கினைநாம் 'கவ்வாத்துப் பண்ணும் காலம் வரவேண்டும்! .
ஆதலினால் - கவிக்கோவே! அப்துல் ரகுமானே!
தடம் புரளா தென்றும் தமிழ்க் கவிதைத் தேரோட வடம் இழுக்க வாருங்கள்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!
-செங்கதிரோன்
‘ஓலை’ பக்தம் 3

Page 4
அரசின் நூல்கள் அன்பளிப்பு
- ༄༽
சங்கப் பதிவேட்டிலிருந்து. கொழும்புத் தமிழ்ச் சங்கம் இலக்கியத் துறையிற் சிறப்பான பணியினை இன்று செய்திருக்கின்றது. வழக்கலிருந்து அருகிப் போயிருக்கும் தமிழ்ப் புலவர் சரித்திரத்தை ஆய்வுரையுடன் எழுதுவித்து வெளியிட்ட தொண்டு பாராட்டிற்குரியது. இத்தகைய ஆக்கப் பணிகள் பலவற்றைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்ய மக்கள் ஆதரவு நிறையக் கிடைப்பதாக
சு.வித்தியானந்தன். பல்கலைக்கழகம் பேராதனை 06.04.1975
الم ܢܠ
'gabay” U53a 4
 

சங்கப்Uலகை
சுகாதாரக் கருத்தரங்கு ר "ஆரோக்கியத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள்" 02.06.2002 ஞாயிற்றுக்கிழமை காலை 9 .30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.சோ.தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. டாக்டர்.எஸ்.சிவயோகம் (தலைவர்.சமூக சுகாதாரத்துறை மருத்துவபீடம் ஜயவரத்தனபுர பல்கலைக்கழகம்) திருமதி.ரி.விநாயகமூர்த்தி (விரிவுரையாளர் தாதிகள் கல்லூரி, யாழ்ப்பாணம்)திரு.எ.செல்லையா (இளைப்பாறிய சுகாதார மேற்பார்வை பரிசோதகர்)திரு.கா.வைத்தீஸ்வரன் (இளைப்பாறிய சுகாதார கல்வி ’ ஆலோசகர்)ஆகியோர் விடய ஆலோசனைகள் வழங்கினர். ھر
N
பாராட்டுவிழா
கொழும்புத் தமிழ்ச் சங்க ஒம்படைச்சபைத் தலைவரும் திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணிச் சபைத் தலைவருமான சைவப்பெரியார் இ.நமசிவாயம் அவர்களை திருவாவடுதுறை ஆதீனம் பாராட்டிக் கெளரவித்ததை முன்னிட்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் 09.06.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் அவர்கள் வாழ்த்துப்பா படித்தார். பேராசிரியர். சோ.சந்திரசேகரம், பேராசிரியர். எஸ். பத்ம لم .நாதன், திரு.க.உமாமகேஸ்வரன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்ܢܠ
r 4D O
சிறப்புச் சொற்பொழிவு டாக்டர் இராஜனார்த்தனம் (தலைவர், உலகத் தமிழர் பேரவை) தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த உலகத்தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் இராஜனார்த்தனம் அவர்களின் "இது எங்கள் கதை" எனும் தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு 13.06.2002 அன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இசிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
أصـ
‘ஓலை’ பக்கம் 5

Page 5
அறிவோர் ஒன்று கூடல் - 1906-2002 ) 02.09.98இல் ஆரம்பித்து பிரதிபுதன்கிழமைதோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெறும்'அறிவோர் ஒன்று கூடல்' இன் 166வது நிகழ்வு 19.06.2002இல் நடைபெற்றது. சங்கத் துணைத்தலைவர் பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பண்ணிசைக் கலாநிதி, சங்கீத வித்வான் பேராசிரியர் எஸ்.கே.சிவபாலன் அவர்கள் உலக இசையில் தமிழிசையின் தொன்மை வளம்' எனும் பொருளில் இசை விளக்கவுரை நிகழ்த்தினார்.
மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் 11 வது நிகழ்வு 22.06.2002 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர். திருமதி நவமணி பத்மநாதன் - பாட்டு திரு.டீ.என்.பாலமுரளி - வயலின், திரு.ஏ.ரகுநாதன் - மிருதங்கம்.
60 ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அஞ்சலி
05.06.2002 அன்று மரணமெய்திய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அமரர் முருகேசு சிவசிதம்பரம் அவர்கட்கும், 20.06.2002 அன்று காலமான கொழும்பு, இரட்மலானை இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிமர் அமரர் விஸ்வநாதன் வைத்தியநாதன் (குழந்தை மாஸ்ரர்) அவர்கட்கும் 23.06.2002 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்க சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்ற சங்கத்தின் 60வது ஆண்டுப் பொதுக்
Uகூட்டத்தில் இருநிமிடநேர மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
أص
r கொழும்புத் தமிழ்ச் சங்கமும் Y
இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும்
இணைந்து வழங்கிய சுகாதாரக் கருத்தரங்கு 23.06.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. "பல் பாதுகாப்பு வழிமுறைகள்" எனும் விடயம் பற்றி டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியம் (பல் வைத்திய நிபுணர், கொழும்பு மாநகர சபை) விளக்கவுரை நிகழ்த்தினார்.
أص
‘ஓலை’ பக்கம் 6

உலக சலரோக தினத்தை முன்னிட்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய இரத்தப் பரிசோதனையும், நோயாளர் பராமரிப்பு
தொடர்பான கலந்துரையாடலும்
29.06.2002 சனிக்கிழமை காலை 8.30மணிக்க சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வருவோர் சேவை புரிந்தனர்:-
டாக்டர்.எஸ்.சிவயோகன்
(சமூகசுகாதாரம்,மருத்துவபீடம், பூரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்)
திருமதிரிவிநாயகமூர்த்தி
(யாழ்ப்பாண தாதிகள் கல்லூரிவிரிவுரையாளர்)
டாக்டர்.என்.கந்தையா
(இளைப்பாறிய வைத்திய அதிகாரி)
டாக்டர்எஸ் நவரெட்ணராஜா
(இளைப்பாறிய வைத்திய)
திரு.எ.செல்லையா
(g96oD6TL (5)u u S.PH.II)
திரு.காவைத்தீஸ்வரன்
(இளைப்பாறிய வைத்திய ஆலோசகர்)
வெகுசனத் தொடர்பியல் ஆதாரப் பயிற்சி நெறி சான்றிதழ் பரிசு வழங்கல்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட வெகுசனத் தொடர்பியல் ஆதாரப் பயிற்சி நெறியினை (13.01.2002-28.04.2002) திருப்திகரமாக முடித்தவர்களுக்கான சான்றிதழ் - பரிசு வழங்கும் வைபவம் 30.06.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
‘ஓலை’ பக்கம் 7

Page 6
'ஒலை" யின் 4வது இதழ் 23.06.2002 ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணிக்கு நடைபெற்ற சங்கத்தின் 60வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பபெற்றது. முதற் பிரதியை சங்கத்தின் ஒம்படைச் சபைத் தலைவர் சட்டத்தரணி இ.நமசிவாயம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
'ஒலை" யின் முதல் மூன்று இதழ்களும் முறையே 2001 மார்ச், ஏப்ரல் மே மாதங்களில் வெளிவந்திருந்தன. 'ஒலை'யின் 4வது இதழ் 2001 யூன் மாதத்திலிருந்து 2002 மே மாதம் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. இனிமேல் அதாவது யூன் 2002 இலிருந்து الم .கிரமமாக 'ஒலை' வெளிவரும் ܢܠ
கவிஞர் ஞானமணியம் வருகை 28.06.2002 இல் நடைபெற்ற நூல்நயம் நிகழ்விற்கு சங்கத் துணைத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் தலைமை வகித்தார். அவ்வமயம் லண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஈழத்துக் கவிஞர் ஞானமணியம் அவர்கள் விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது தனிப் பாடல்கள் தொகுதியான 'மரபுநாதம்' பிரதிகளையும் வேறு சில நூல்களையும் சங்கத்திற்கு அன்பளித்தார்.
நூல்நயம் காண்போம். 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
21.06.2001 கதை முடியுமா? க.தணிகாசலம் சோ.தேவராஜா
(79) (சிறுகதைத்
தொகுதி) 28.06.2001 நயனங்கள் க.செபரத்தினம் தா.சண்முகநாதன்
பேசுகின்றன (சோக்கல்லோ (80) (சிறுகதைத்தொகுதி) சண்முகம்)
‘ஓலை’ பக்கம் 8
 

பண்ணிசைக் கலாநிதி, சங்கீதவித்வான் பேராசிரியர் எஸ்.கே.சிவபாலன் இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், முன்னாள் விரிவுரையாளர் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, இயக்குனர், இசைக்கோயில் சென்னை-20.
g5 மிழிசை பண்டைக் காலத்திலிருந்தே திராவிட நாகரிகத்தை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியுற்ற பண்பாட்டின், பின்னணியில் தோன்றி வளர்ந்த இசை மரபாகும். திராவிட நாகரீகம் என ஆராய்ச்சி அறிஞர்களால் கருதப்படும் சிந்து வெளியில் காணப்பெற்ற இசைப்படிமங்கள் தமிழர் இசையின் தொன்மையினை நன்கு வலியுறுத்தும் அகச் சான்றுகளாகும். உலக இசை வரலாற்றில் தமிழிசையே முதலில் தோன்றிய இசை என அண்மைக்கால உலக இசை ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. பொதுவாக உலக இசை வரலாறு கிரேக்கநாட்டு இசையின் தொடக்கத்திலிருந்து ஆராயப்படுகின்றது. இதற்கு காரணம் தமிழிசை பற்றிய ஆய்வுகளும் செய்திகளும் வெளிநாடுகளில் பரவாமையேயாகும். பழம் பெருமை உடைய கிரேக்க நாடு தமிழ்நாட்டுடன் மிகப்பழங்காலம் முதல் பல்வகை தொடர்பு கொண்டு இருந்தது என்பதனை யாவரும் நன்கு அறிவர். தமிழ் இசையின் பண்பும், பழமையும், கிரேக்க நாட்டு இசையில் காணப்படுவதை நாம் பெருமையுடன் அறியலாம்.
தமிழர்கள் தங்கள் இசைக்குப் பண் எனப் பெயர் வைத்தமையும் சிறப்புக்குரியதாகும். அதாவது பண்பட்ட சமூக அமைப்பில் இருந்து வெளிவந்த இசைமரபு என்றும் பொருள்படும். எமது தவக்குறைவால் பல தமிழிசை பற்றிய நூல்கள் மறைந்து போயின. ஆனால் இன்று தமிழிசை பற்றிய செய்திகளை நாம் அறிந்துக் கொள்வதற்கு தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்சமரபு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பின்கலநிகண்டு, கல்லாடம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, பன்னிருத்திருமுறைகள், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், கருணாம்ருதசாகரம், யாழ் நூல் போன்ற நூல்கள் துணை புரிகின்றன.
கி.மு.7-ம் நூற்றாண்டில் எழுந்த தொல்காப்பியத்தில் ஒலியானது உள்ளத் தெழும் எண்ணத்ததைக் கொண்டு எழுந்ததாகக் கருதப்படும் பொழுது அது இசையாகப் பெயர் பெறுவதை தொல்காப்பியம் வாயிலாக அறியக் காணலாம்.
"அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவெனமொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய எண்மனார் புலவர்
(எழுத்ததிகாரம் 33 செய்யுள்) எனும் வரிகளால் பாடலின் ஒலி நீள்வது இசை நீட்டமாகக் கருதப்படுவதையும். அளபெடை எழுத்துக்களுக்கும், இசைக்கும் இடையே உள்ள தொடர்பினைபு அறியலாம். மேலும் சங்க கால இலக்கியங்களிலிருந்து
“ஓல’ பக்கம் 9

Page 7
பண்டைத் தமிழர்கள் ஒலியை ஏழாகப் பகுத்து முறைப்படுத்தி அவற்றை ஏழிசை என அழைத்துப் பண்களை உருவாக்கினர் என அறியலாம். தமிழர்கள் தங்கள் ஜவ்வ்கை நிலத்திற்கேற்பப் பண்களை குறிஞ்சிப் பண். மருதப் பண். பாலைப்பண், முல்லைப் பன், மற்றும் நெய்தல் பண் என சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெயரிட்டு அழைக்களாயினர். தமிழர் இசை முறைப் பகுப்பைப் போல், பழைய கிரேக்கர்களும், எகிப்தியரும் அவர்களின் நிலப் பகுதியில் "தோரியன் மோட்" எனும் இசைமுறையைக் கையாண்டனர். நமது இசையிலுள்ள பண்ணுப் பெயர்த்தல்' முறை கிரேக்க இசை முறையிலும் காணப்படுகின்றது. ஏழிசையாகிய குரல் (ஸ) , துத்தம் (ரி) கைக்கிளை (க) உழை (ம), இளி (ப), விளரி (த), தாரம் (நி) எனும் ஒலிகளின் பெயர்கள் தமிழிசை நூல்களில் தான் காணப்படுகின்றன. மேலும் இவ் ஏழு இசை ஒலிகளுக்கும் சமமாக ஆஈ.ஊ.ஏ.ஐ.ஒ.ஒள எனும் உயிரெழுத்துக்கள் தமிழர் இசையில் வழங்கி வந்திருக்கின்றன. இதை சேந்தன் திவாகரம் எனும் நூலும், பின்கல நிகண்டும் குறிப்பிடுகின்றன. இவ்வொலிகளே பன்னாட்டு இசைக்கும் அடிப்படையான ஒலிகளாகும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இசையில் செந்துருத்திப் பண்ணும், (மத்திமாவதி இராகம்) பழந்தக்க ராகப் பண்ணும் சுத்தசாவேரி இராகம்) காணப்படுவதோடு மேற்கு ஆசிய நாடுகளின் இசையில் செந்திருத்திப் பண்ணும், காந்தாரப் பண்ணும் (நவரோஜ் இராகம்) காணப்படுகின்றன. ஆபிரிக்க, அமெரிக்க இசையின் ஜாஸ் இசையில் சுத்த தன்யாசிப் பண் அதிகமாக கையாளப்படுகின்றது. மேல்நாட்டு இசையில் எமது பழம் பஞ்சுரப்பண் (சங்கராபரண இராகம்) (Mayor Scale) என அழைக்கப்படுகின்றது. சீன இசையில் ஜந்திணைப் பண்ணாகிய முல்லைப்பண் (மோகனம்) காணப்படுகின்றது. மேலும் தென் கிழக்கு ஆசிய பொம்மலாட்ட இசை நிகழ்ச்சிகளில் சிவரஞ்சனி, மோகனம், போன்ற பண்களின் சாயல்களையும் நாம் காணலாம்.
பண்டைய தமிழிசை நூல்களில் இசைக் கருவிகளைப் பற்றியும் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஐந்நிலங்களுக்கும் ஜவ்வகை யாழ்கள் இருந்தன என அறியப்படுகிறது. குழலும், யாழும் பண்டைய தமிழகத்தில் முக்கிய இடத்தை வகித்ததுபோல், கிரேக்க நாட்டிலும் இவ்விசைக் கருவிகள் சிறப்பிக்கப்பட்டன.
கிரேக்க இலக்கியங்களிலும் இக்கருவிகள் போற்றப்படுவதையும் நாம் காணலாம். யாழ் வகைககளில் முதல் தோன்றியவில்யாழ் மொகஞ்சதாரோ, ஹரப்பா முத்திரையில் உள்ளது என ஆய்வாளர்கள் கிராஸ், ரோஸினி போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர். இதன் காலம் கி.மு. நாலாயிரம் என்பர். மேலும் தமிழ் நாட்டில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குடுமியான் மலை இசைக் கல்வெட்டில் சுவரங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு உள்ளன. மேலை நாட்டு இசையிலுள்ள கூட்டு வாத்திய இசை முறையைத் தமிழிசை யில் ஆமந்திரிகை, பல்லியம் என அழைத்தனர். எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை இலக்கணத்தோடு தோன்றி வளரந்த தமிழிசையே, இன்று கர்நாடக இசைஎன்னும்பெயரில் வழங்கி வருவதோடு, உலகின் மூத்த இசையாகவும் விளங்குகின்றது எனலாம். C O
‘ஓலை’ பக்கம் 10

இதயத்தின் ஈரிதழ்கள்
-ஜின்னாஹ்
புள்ள நஜீமா..! இண்டைக்கு இறைச்சி ஆக்கிச் சோறு தாபுள்ள. கனநாளா இறைச்சிதின்னல்ல" கணபதி அண்ணன் என் தங்கையைக் கண்டதும் சிரித்தபடி சொன்னார்.
"சரியண்ணே மச்சானும் பள்ளியுட்டு வந்திருவார். வாப்பாவுக்கும் இஞ்சதான் சாப்பாடு. ஆக்கச் செல்லிப்போட்டு போயிராதீங்க" என்றாள் அவள் பதிலுக்குச் சற்றுக் காரமாக,
கணபதி அண்ணன் படிப்பாளி. வாப்பாவின் அன்புக்குரிய மாணவன். வாத்தியார் வேலையில் "பென்ஷன்" வாங்கிக் கொண்டு பொது வேலைகளில் நாட்டங் கொண்டார்.
இப்படித்தான் குருதரிசனம் செய்ய வரும்போது உரிமையோடு சில சமயங்களில் சொல்லுவார். சொல்லிவிட்டுச் சில நாட்களில் மறந்துபோய் சாப்பிடாமல் விடுவதும் உண்டு அதனால்தான் தங்கையின் வார்த்தைகளில் காரம் இருந்தது.
அப்படி அவர் உரிமையோடு கேட்பது எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும். வழக்க்த்தைவிட அன்று சாப்பாட்டில் ஒன்றிரண்டு உருப்படிகள் கூடவே சேரும். அவருக்காக.
மச்சான் பள்ளிவிட்டுவந்தார். வாப்பாவும். வந்தார்கள். குடும்ப அங்கத்தவர்களும் விரித்திருந்த பண்பாயில் வட்டமாக உட்கார்ந்து கொண்டோம். மத்தியில் ஏற்கனவே உணவு பரிமாறப்பட்டிருந்தது.
வழமைபோல் வாய்பாவுக்கருகில் கணபதி அண்ணன் இருந்து கொண்டார். விரிலிடையில் உதிர்ந்துவிடும் இறைச்சிதான் வாப்பாவின் பல்லில்லா வாய்க்குப் பொருந்தும். உதிராதவை வலப்பக்கம் இருப்பவரின் கல்லையில் விழும்.
வாப்பாவின் கைவிரல் பட்ட இறைச்சித் துண்டுகளுக்காகத்தான் அண்ணன் கணபதி வந்தால் வாப்பாவின் வலப்பக்கமாய் அமர்ந்து கொள்வார். நாங்கள் ஒருநாளும் அவருடன் போட்டிக்குப் போவதில்லை குருவின் கைபட்ட உணவில் ஏன்தான் அவருக்கு அத்தனை நாட்டம் என்பது எமக்கு இன்றும் எண்ணின் வியப்பாகவே இருக்கின்றது.
வாப்பாவுக்குப் பல்லுத்தான் போனதே தவிர சொல்லுப்போகவில்லை. "பழமொழி பொய்த்தால் பழம்சோறு சுடும்" என்பார்கள். எங்கள் வீட்டில் வாப்பா வாழும்வரை பழஞ்சோறு சுட்டது. தொண்ணுாறு தாண்டியும். லகரழகர பேதங்கள் சுருதி சுத்தமாய் மொழியப்பட்டன.
a
‘ஓலை’ பத்தம் 11

Page 8
"வாத்தியார் பொண்டி சுறுக்கா வாகா மகரியாப்போகுது. நான் 'வஸ்' புடிச்சிகளுதாவளைக்கிப் போக வேணுங்கா"
தினமும் காலையில் வெற்றிலை தந்துவிட்டு மாலையில் காசு திரட்டிச் செல்லும் பொன்னம்மா அக்கா. எனது தாயாரை அவசரப்படுத்தினாள்.
நான் கொழும்பில் இளமை தொட்டு வாசம் செய்வதால் முஸ்லிம்கள் தமிழோடு கலந்து பேசும் சில அறபுப் பதங்களை கிழக்கிலே ஒன்றிவாழும் இந்து மக்களும் முஸ்லிம் மக்களோடு பேசும் போது அவற்றையும் கலந்து பேசுவதை நான் ஊருக்குப் போாயிருந்தபோது அன்றுதான் அறிந்தேன்.
"மஃரிப்" என்பது மாலைப்பொழுதில் நடத்தும் ஒரு தொழுகைப் பொழுது அதனைக் குறிப்பிட்டு இரவாகப் போகும் காலத்தைப் பொன்னம்மா அக்கா என் தாய்க்கு உணர்த்தினாள்.
மிக நெருங்கிவாழும் அவர்களுக்கு இந்தப் பேச்சு வழக்கில் வேற்றுமை தோன்றாவிட்டாலும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
嘻嘻嘻
'கலே ஒடிப்போய் தம் 11) ச1 மேசனாரக் கூட்டிக்கி வா வாப்பா. கட்டு வேலக்கி சிமேந்த கொண்டு வந்திரிக் கெண்டு செல்லிற்று வாகிளி" இது உம்மாவின் வேண்டுகோள்.
கல்லாற்றுக்கு இரண்டு மூன்று மைல்கள்தான். மேசனார் வீட்டுவாசல் மாமரத்தில் காய்க்கும் ஒட்டு மாங்காயில் எனக்கு எப்போதுமே ஒரு பசி,
மேசனாரின் மகள் தேவகி அக்கா "வாடா" என்றுதான் ஒருமையில் என்னை அழைப்பாள். என்னைத்தன் தம்பி என்ற உரிமையோடு.
மாங்காய் வெட்டித்தருவாள். மாங்காய் இல்லாத காலத்தில் தோட்டத்து முடக்குத் தென்னையில் குரும்பையாவது கத்திக்கம்பு கொண்டு பறித்து முதுகு வெட்டித் தருவாள்.
அவளின் அன்பும் உபசாரமும் எனக்குப் பிடிக்கும் என்னையும் அவளுக்குப்பிடிக்கும். தலையில்குட்டுவாள். மூக்கைத் திருகுவாள். நான் சின்னவன். அவள் எனக்கு ஏழெட்டு வயது மூத்தவள்.
மேசனார் வந்தார். "என்னவாத்தியார் சீமேந்தி வந்திட்டா" என்றார். உம்மா சொன்ன விசயங்களைச் சொன்னேன். வாப்பாவாத்தியார் என்பதால் பிள்ளைகள் நாங்களும் வாத்தியார்மார்தான் அவருக்கு.
அவர்புறப்பட்டால் இருவரும் "பைசிக்கிள் றேஸ்" ஒடுவோம். அக்கா பார்த்துச் சிரிப்பாள். கிழவன் பலசாலி என்னைத் துரத்தவிட்டு அவர்பறப்பார். நான்மூச்சிளைக்க வீடு வந்து சேர்வேன்.
td
கந்தப் போடி எங்கள் வயற்காரர். நல்லமனிதர் வீட்டுக்கு வந்தால், அவருக்கு எனது உம்மா செய்யும் உபசாரம் எனக்குப் பிடிக்கும். தேனீர்
‘ஓலை’ Uású 12

குடித்துவிட்டு பல்லில்லாத தனது வாய்க்குத் தோதாய் வெற்றிலை பாக்கை தனது இடது உள்ளங்கைக்குள் வைத்து வலது பெருவிரலால் கசக்குவார். கைக்குள்ளேயே அது சுண்ணாமும் சேர்ந்து சிவந்து போகும். பொக்கை வாய்க்குள் அதைப் போட்டு அவர் முரசால் மெல்லும் போது அவர்வாய்கோணும் கோணலைக் காண்பதில் எனக்கோர் சந்தோசம்.
பாடசாலை லீவு நாட்களில் நானும் காக்காவும் வாப்பாவுடன் களிமடு வட்டைக்குச் செல்வோம். அங்கு தங்கும் நாட்களில், கந்தப்போடியார். சமைத்துப் போடும் ஆத்துமீன் குழம்பும், பொன்னாங்கண்ணிச்சுண்டலும் தேவாமிர்தம்.
பெற்ற பிள்ளைகள்போல் எங்கள் இருவரையும் கவனிக்கும் அந்த மனிதரை இப்போது நினைத்தாலும் மனம் இளகிப் போகின்றது.
***
"அம்மாக்கா இதப்புடி அம்மாக்கா" என்றான் சிற்றம்பலம் கையில் இருந்த கோணிப்பையை உம்மாவிடம் கொடுத்தபடி, அதில் புதிதாகப் பறித்த மரக்கறிவகைகள் இருந்தன.
சிற்றம்பலம் மரக்கறித் தோட்டக்காரன். "கமத்துக்குள் மரக்கறிக்காலை செய்கின்றான். வாப்பாவிடம் சிறுவயதில் படித்தவன். ஐந்தோ ஆறோதான். அதற்கு அதிகம் ஏறவில்லை. பள்ளியில் இருந்து விலகிக் கொண்டான். வாப்பா அவன் வீட்டுக்கே சென்று விட்டார்கள். அவனை அழைத்துவர. அவன் வீட்டுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு வாப்பாவுக்குப் போக்குக் காட்டிவிட்டான். இருப்பினும் இறுதிவரை வாப்பாவைக் கண்டால் ஏழாய் மடிவான். கைகால் உதறும் அத்தனை குருபக்தி இந்தக் காலத்தில் கற்பனைகூடச் செய்முடியாத மரியாதை.
மரக்கறிக் காலையில் அறுவடைமுடியும் வரை இந்த வழக்கம் தொடரும். வாப்பா சொல்லுவார்கள் அவனுக்குக் காசு கொடுக்கும்படி,
உம்மா கொடுக்கும் பணத்தை வாங்கமாட்டான். சண்டை பிடிப்பான். "நான் மரக்கறி யாவாரத்தில் கணக்குப் பாக்கும் கூட்டலும் கழித்தலும் ஐயாட்டப் படிச்சதுதான்" என்பான்.
வெறும் கூட்டலுக்கும் கழித்தலுக்கும் இத்தனை பிராயச்சித்தம்.வாப்பா சிரிய பார்கள். அவன் நன்றியுணர்வு வென்றுவிடு போது, வெறும் தேனீர் கோப்பையோடு மனம் நிறைந்து திரும்புவான்.
a
பக்கத்து ஊர் பாண்டிருப்புக் கண்ணகி அம்மன் கோயில் தீ மிதிப்பு அப்போது வருடா வருடம் நடக்கும். மிகக் கோலாகலமாக தொடர்ந்து ஏழு நாட்கள் என்ற நினைவு.
கோயிலைச் சுற்றிப் பெரிய வெளி. நூற்றுக்கணக்கான கடைகள். பெரும்பாலும் எல்லாக் கடைகளிலும் தொப்பிகள் தான் வியாபாரம் செய்யும்.
‘ஓலை’ பக்கம் 13

Page 9
அண்ணனும் காக்காவும் பெயரளவில் தான் மற்றப்படி எல்லோரும் ஒன்று. பாதி மருதமுனை (அதுதான் எனது ஊர்) அங்குதான் நிற்கும் பொருள்கள் வாங்க கரும்பு சுமக்க,
இறுதிநாள் தீமிதிப்பில் திக்குழியைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடிநிற்பர். சனக் கூட்டம் நெறுதுளிப்படும். அதற்குள் கந்தனும், காசீமும், கணபதியும், காதரும், பூபாலும் பவரீரும் ஆள்மாறி ஆள் நெருங்கிக் கிடப்பர்.
தீப்பாயும் பக்தர்கள் போடும் கூச்சலோடு நெருக்கம் தாங்காமல் 'அரோகரா" ஒலியோடு "அல்லா" என்ற சப்த்தமும் ஓங்கி ஒலிக்கும்.
எத்தனை முறைநான் நெருங்குண்டு போயிருப்பேன். மூச்சுத் திணறும் போது ஆண்டவனை நினைத்து கத்தி இருப்பேன்.
மஞ்சள் பூசிக் கொண்டு பத்திரக் கொத்துகளுடன் பேய்கள் ஆடிவரும்போது அவற்றிற்கும் கொடுக்கும் சாட்டை அடிபார்க்கச் சிறுவர்கள் திள் வார்கள்.
சுளிர்! சுளிர்! என்று அடிப்பது எனக்கே அடிப்பதுபோல் மனத்துக்குள் வேதனை தோன்றும். திப்பள்ளையம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு விழாபோலத்தான் அந்த நாட்களில் நடைபெற்றது. ஒருபோதும் இன மதவேறுபாட்டால் குழப்பங்கள் தோன்றியதே இல்லை.
வாப்பா சொல்லுவார்கள் அவர் கடந்தகால நினைவுகளை. அவை இப்போதும் என்நினைவுகளில்நிழலாடுகின்றன. வைரமுத்து வாத்தியாரிடம் தமிழ் இலக்கணம் படிக்கும் போது வீட்டுக்குப் போய் இராச்சாப்பாடுகொண்டு வருவது சாமித்தம்பி வாத்தியாராம். என் தந்தைக்குத் திருமணம் பேசிமுடித்ததே அவர் குரு வைரமுத்து ஐயா என்றால் அன்றைய உறவின் மேன்மை புரியும்,
a
என் சிந்தனையில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகளின் புதுப்புது மீட்டல்கள். கையில் இருந்த பத்திரிகையின் செய்திகளால் நான் ஒரு புது உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை என்மனைவியின் தொடுதலால் உணர்ந்தேன்.
கைமாறிக் கொண்ட சூடான தேனீர்க் கோப்பை, அவள் கடமையை முடித்துக் கொண்டதாய் சொல்லாமல் சொல்ல அவள் அங்கிருந்து அகன்றாள்.
a
கொழும்புக்கு வரும் போது வழக்கமான பயணம் மட்டக்களப்பு வழிதான். அந்த வழியை மறந்து இப்போது எத்தனை வருடங்கள் ஆகின்றன. இரவென்ன பகலிலென்ன பலமைல் தூரம் பைசிக்கிள்களில் மட்டக்களப்புக்குப் படம் பார்க்கப் பறந்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன்.
‘ஓலை’ Uású 14

வழியில் தாக சாந்திக்கு எந்தப் படலையையும் அவிழ்த்துக் கொண்டு செல்லலாம். சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோன்ற உரிமையுடன்.
குருக்கள் மடம், களுவாஞ்சிக்குடி, கல்லாறு எல்லாமே எங்கள் ஊர்தான். அங்கெல்லாம் வசிப்பவர்களும் எங்களவர்கள் தான்.
குருகுல சிங்கமும், கனகரெத்தினமும் வகுப்பு நண்பர்கள். அவர்களின் வீட்டுக்குச் செல்லாத நாட்கள் எனது வீட்டுக்கலண்டர்களில், மிகக் குறைவே.
ஒருமுறை ஊருக்குப் போயிருந்தேன். எனது காக்காவுடன் படித்த ஒரு நண்பன். வீட்டுக்கு முன்னுள்ள வீதியால் நடந்து வந்தான். அவன் பெயர் எனக்கு மறந்து விட்டது. வேலாயுதம் என்ற ஒரு சின்ன ஞாபகம்,
அவனைக்கண்டதும் எனக்கு எற்பட்ட மகிழ்ச்சியில் வயதையும் மறந்து ஒருமையில் "டேய் நில்லுடா" என்றேன். அவன் என்னை அடயாளம் கண்டு கொள்ளவில்லை. நான் சின்னத் தாடியுடன் இருந்ததால்.
அவன் பயந்து போனான். அருகில் சென்றேன். உரிமையோடு அவன் தோளில் கைபோ ட்டேன் அவன் உதடுகள் நடுங்குவதை என்னால் அவதானிக்க முடிந்தது. எனக்கு நிலைமை புரிந்து அவன் அச்சத்ததைப் பேர்க்க, "அடேய் மச்சான் நான்தாண்டா" என்ற என் பெயரைச் சொல்லி அவன் கைகளைப் பற்றினேன். அது வியர்த்து குளிர்ந்தது.
ஆதரவான என்பிடி அவன் அச்சத்தைப் போக்கி இருக்க வேண்டும். மெல்லச் சிரித்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினான் எனது ஊருக்குள் அவனுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம், அவன் ஊருக்குள் நானும் அவனானால் எனக்கும் அதுவாகவே இருந்திருக்கும்.
a
மீட்கப்படும் இந்த நினைவுகளிலிருந்து பத்திரிகையில் மேய்ந்த என் கண்களால் நான் விடுபட என்மனம் அங்கலாய்த்தது. ஏனிந்தநிலை. யாரால் ஏற்பட்டது. எதற்காக ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து என் நண்பன் கொழும்புக்கு வந்திருந்தான். கூடப்படித்தவன். எப்படியோ பலவருடங்களின் பின் என்னைத் தேடிப்பிடித்து வந்திருந்தான். பெயர் புவிராஜன்.
கூட்டிவந்தவரை எனக்குத்தெரியும் தமிழ்ப் புலமையால் ஏற்பட்ட உறவு. அவர்தான் என்னைப்பற்றி சொல்லி இருக்கின்றார்.
"மச்சான்" என்றேன் வியப்புத் தாங்காமல் என்னை அவன் இறுக அணைக்க. நான் அவனை அணைக்க நெஞ்சங்கள் பேசின. இருவர் கண்களும் கலங்கிப் போயின. கூட்டி வந்தவர்நெகிழ்ந்து போகும் ஒரு சூழ்நிலை உருவானது.
அன்று எங்கள் வீட்டில்தான் அவர்களுக்குச் சாப்பாடு மனைவி கோழி பொரித்து புரியாணி பரிமாற மூவரும் உண்டோம்.
‘ஓலை’ பக்கம் 15

Page 10
பழங்கால நினைவுகளின் அசைபோடலுடன். தற்கால நினைவுகளும் பரிமாறப்பட்டன. அவன் சொன்னான்.
"மச்சான் நாங்களடா மண்ணெண்ணையிலதான்டா மோட்டார் சைக்கிள் ஒடுறம்" என்றான். கவலையை மறந்து மூவரும் வாய்விட்டுச் சிரித்தோம். "தலைக்குமேலே வெள்ளபோனால் சாணென்ன முழமென்ன"
போகும் போது வயதையும் மறந்து சிறுபிள்ளையைக் கொஞ்சுவதுபோல் நடுவீதியில் வைத்து என்னை மாறி மாறித் கொஞ்சினான். எங்கள் நரை மயிர்கள் ஒன்றோடு ஒன்று ஆலிங்ங்ணம் செய்து கொண்டன. நான்கலங்கிப் போனேன் வார்த்தைகள் வெளிவராமல் வாய் குழற கண்ணிர் வழியும் கணங்ளுடன் விடை பெற்றுக் கொண்டோம்.
நெஞ்சம் கனத்தது. எங்கள் கிழக்கின் செல்வம் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் பாடலடியொன்று நினவுைக்கு வந்தது.
"இருதயத்தின் ஈரிதழ்கள் இந்து முஸ்லிம்”
ஆம் அன்று அப்படித்தான் வாழ்ந்தோம். இன்று ஏனிந்த நிலை. ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் என் நெஞ்சத்தைக் குடைந்தது. கடந்த காலத்தில் நடந்து போன கசப்பான நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் என் நினைவில் மீண்டன.
உயிரழிவால் பாதிப்புற்ற கிராமங்கள் ஊரைவிட்டே ஓட்டப்பட்ட உடன்பிறவாச் சகோதரர்கள்.
நடந்தவைகள் நடந்து போயின இருந்தும் இன்னும் என்மனம் முன்னைய உறவையே தேடியது.
தொடர்ந்து அலறிய தொலைபேசிக்கு வாய் தந்தான் என் சின்னமகன்.
"ஹலோ"
"தீபாவளியா.சாப்பாடாe e ao u e வாறேன்டா வாறேன்" அவன் பேச்சுத் தொடர்ந்தது. சிரிப்பு:கும்மாளம் வீடே அதிரப் பேசினான் என் மகன்.
சட்டென என்நினைவில் ஒரு ஒளிக்கிற்றுப்படர்ந்தது. அழிந்த உறவுகள் மீண்டும் புதிய தலைமுறையால் புதுப்பிக்கப்படுவதாய்
(கற்பனை இல்லை)
‘ஓலை’ Uásář 6

கொழும்புத் தமிழ்ச் சங்க ஒம்படைச் சபைத் தலைவர் சட்டத்தரணி இநமசிவாயம் அவர்களுக்குத் திருவாவடுதுறை ஆதீனம் (2002 ஏப்ரல் 21ஆந்தேதி) சிவப்பணிச் செல்வன் பட்டமும் பொன்னாடை, பொன்னாழி. பொற்கிழி என்பனவும் வழங்கிக் கெளரவித்தமைக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய (09.06.2002) பாராட்டு விழாவில் வழங்கிய
Uாராட்டு வாழ்த்துப்Uா
திணை:பாடாண் துறை: வாழ்த்தியல் (வெண்பா) நாதனார் நாமம் நமசிவாய வென்றோதுங் காதலாலப்பெயர்கொள் கண்ணியனே-பூதலத்தில் தங்கு திருக்கேதீச் சரத்தலத் தொண்டராய் மங்கலமாய் வாழ்க மகிழ்ந்து
(நேரிசையாசிரியப்பா) சிவபுரி யெனத்திரு மந்திரம் செப்பிடும் திருவளர் இலங்கை திசைதொறும் விளக்கும் சிவதலம் ஐந்துள் சிறப்பொடு கொழிக்கும் மாதோட் டமமர்ந்த மாபெரு சிவத்தலம் பாலா விக்கரை பொங்கப் பக்தரின் மேலா கலமாய்க் கும்பிடும் திருத்தலம் சம்பந்தர் தம்மொடு சுந்தரர் பாடலும் போற்றி வழிபடும் புராணமான்மியமும் மேற்றிசையுலகும் மெச்சிடும் புகழ்பெறு பெரும்பணித் தலைவ! பேரறங் காவல! சார்ந்தநின் சமயம் சைவமும் தழைக்க ஆர்ந்த சைவசித் தாந்தச் செந்நெறி ஒர்ந்தே பேணி ஒப்பில் அனுபவம் தேர்ந்தே விளக்கத் “தத்துவதாத்துவிகம்’ ஆய்ந்த விஞ்ஞான ஆழ்ந்த நோக்கில் காலத் தேவை கருத்தில் அறிந்து சாலச் சிறந்த சைவநுரல் படைத்தனை
‘ஓலை’ பக்கம் 17

Page 11
கொழும்புமா நகரினில் கோதில் தமிழொடு விழுமிய பண்பினில் விளங்கும் கலைகளும் பேணியே வளர்த்திடும் பேரவை யெனத்தகும் ஒம்படைச் சபையின் தலைவரும்நீயே!
இந்துமாமன்றம் இந்து திணைக்களம் முந்தியே பணிசெய மொழிந்தனை மதியுரை: அகவை தொண்ணுற்றொன்ற தனிலும் பூண்ட சைவப் பணியெலாம் போற்றி திருமுறை யோதலும் சிவபூசை செய்தலும் நித்திய கடனாய் நினைவொடு செய்குவை அதான்று, நாவலர் வழியில் நன்னெறி பேணும் காவலன் நீயே கருதிடும் சிவப்பணி கண்டும் கேட்டும் மகிழ்ந்துபா ராட்டித் திருவாவடுதுறைத் தவப்பெரு ஆதீனம் சிவப்பணிச் செல்வன் சிவமயப்பட்டமும் பொற்கிழியளித்துப் பொன்னாடை போர்த்திப் பொன்னாழி தந்து பல்லாசி கூறினரால் வாழ்க பெரும! வளர்ந்திடு சைவமும் மேன்மைகொள் நீதியும் விளங்குகவுலகில் சாந்திசமாதானம் தழைக்க வென்றும் மாந்தை நகரில் மாதோட்ட ஈசன் ஏந்தல் இறைவன் கேதீஸ்வரனருள் மாந்தி நீண்டநல் ஆயுள் செல்வம் பொலிய மேதினி போற்ற, வாழிய பெம்மான் வாழிய வளர்ந்தே
(கலிவிருத்தம்) சிவப்பணி நாளும் சிறக்கச் சைவம் தவப்பணி யென்றே தலைக்கொள் வள்ளல் சிவத்திரு நாமம் நமசிவாயம் தவப்பயன் பெற்ற பாராட் டிதுவே
(பாவாக்கம் பன்மொழிப்புலவர் தகனகரத்தினம்)
‘ஓலை’ பக்கம் 18

gritëatri haiji
பிறக்க வேண்டும்
அக்கரைச்சக்தி
ஆவலுடன் தமிழ்க்கனியை அருந்திச்சைவ ஆகமத்தில் கரைகணிடு ஆங்கிலத்தின் பாவலரும் துரைமாரும் வியந்து பார்க்கப்
பைபிள் நூல் தனைத் தமிழ் படுத்தி வைத்தாய் ! காவலராம் மேல் நாட்டார் கல்வியூடே
கடுகதியில் கிறீஸ்துமதம் கலத்தல்கண்டு தாவலுடன் அதை எதிர்க்கத் தயங்கா தன்று
தாய் நாட்டில் சைவ மதம் தழைத்து ஓங்க சேவலெனக் கூவிக் கணி திறப்பித்தாயே!
சிற்றறிவுக் கூட்டங்கள் திகைத்தே ஒட கேவலமாய்க் கண்டனங்கள் கணிடல் எல்லாம்
கிடைத்தாலும் அஞ்சாது கீரன் போலே மாவலிய சொன்மாரிப் பிரசங்கத்தால்
மக்கள். மதம் மாறாமல் காத்து நின்ற நாவலனே! நீ மீண்டும் பிறக்க வேண்டும்!
நாட்டில் நீ மறுமுறையும் நடக்க வேண்டும்!
குணர்டுகளால் பதப்பட்ட யாழ்ப்பாணத்தின்
கோலத்தை நீ வந்து பார்க்க வேண்டும்! எண்டிசையும் இடிந்தபல கட்டிடங்கள்
எழில் குலைந்து அழிந்தவளம் இங்கே காணர்பாய்! வண்டுகளே துளைக்கும் மாம் பழததையின்று
வருகின்ற ஷெல் பிய்த்து மாய்த்ததையா! கணிட கணிட இடத்திலெல்லாம் பாதுகாப்புக் காவலரின் காப்பரண்கள்! கடக்கும் போது மண்டையிலே எப்போது தருவார்? என்ற
மனப்பயந்தான்! அன்றாட வாழ்க்கையிங்கே! தணர்டனைபோல் இருக்கிறதே தலைவா! தங்கத்
தமிழ்சைவம் காத்திடவே தன்னைத் தந்தாய்!
‘ஓலை’ பக்கம் 19

Page 12
பண்டு தொட்டு வந்த கலா சாரப் பணியைப்
பரிமளிக்க வைத்தாய்! நாவலனே பாராய்!
சண்டைகளே முடிவின்றித் தொடரும் நாட்டில்
சமாதானத் தூதனாய் நீ சனிக்க வேண்டும்!
கணிமணியாம் கணவர்களைக் காணா தேங்கிக்
கதறுகிற மனைவியரும். கைது ஆன நன்மணியாம் பிள்ளைகளை நாளும் தேடி
நானூறு தரம் அலைந்தும், நலிந்து வாடு’ பெண்மணிகள் கணிணிர்க்குப் பதிலே இல்லை
பேசுவதற்கும் முதல்விக்கு நேரம் இல்லை! மும்மணிகள் ஆசியுடன் போரை இங்கே
முன்னெடுத்துச் செல்வதிலே முனைப்பு உள்ள அம்மணியார் ஆட்சியிலே, சமாதானத்தின்
அணுக்கருவைத் தானும் உருவாக்கவில்லை! பொன்மணியாய் நல்லூரில் அவதரித்துப்
பொழுதெல்லாம் தொண்டினையே போற்றி, ஈற்றில் விண்ணன் நீ! வித்துவன் நீ! என்றே இந்த
வியனுலகம் புகழ்ந்திட்ட மேன்மையோனே! செம்மணியின் புதைகுழியின் சீவன்கட்குச்
சிரார்த்தங்கள் செய்திடநீ வருதல் வேண்டும்!
ஆறு பத்து நூல் கற்றால் ஆகாயத்தை
அளந்ததுபோல் கதைபேசும் அறிவாளர்கள்; மாறுபட்ட போக்கினரை மதிக்கும் பணிபு
மருந்துக்கும் கிடையாத மதிவாணர்கள்; தாறுமாறாய் எழுதிடினும் செய்தித்தாளில்
தம் ஆக்கம் வெளிவரவே தயவைநாடி நூறுதரம் ஆசிரியர் அறை நுழைந்து
நோக்கத்தை நிறைவேற்றும் எழுத்தாளர்கள்; நீறு பூசி ருத்ராக்கம் அணிந்த போதும்
நினைப்பெல்லாம் பெண்பாலார் மீதேகொண்ட வாறேஆலயம் சென்று வணங்கும் பக்தர்;
வணர்ணவண்ண நிற ஆடை குடி நெஞ்சைக் கூறாகவே சிதைக்கும் மகளிர் கூட்டம்;
கோயில்விழாச் சேட்டைவிடும் இளைஞர் கோஷ்டி,
‘ஓலை’ பத்தம் 2

ஆறுமுக நாவலன் நீ! இந்த வேளை
அவதரிக்கா விடின் எங்கள் சமூகம் மாளும்! கணனிக்காய்த் தமிழ் எழுத்தைக் கத்தரிக்க
கனவிளக்கம் கொடுக்கும் கலா நிதிகள் கூட்டம்! மனமுருக்கும்வாசகத்தைத் தேவாரத்தை
வாய்குளிரச் சொல்லாத ஒதுவார்கள்! பணமிருக்கு என்பதனால் தேவையின்றிப்
பல்லக்கில் செல்லும் பணக்காரர் கூட்டம்! பிணமிருக்கும் வீட்டினிலும் சாதி பேசிப்
பிணங்கி முகஞ் சுளிக்கின்ற பேயர் கூட்டம் குணமிருக்கும் பேர் தலையில் குட்டுதற்குக்
குறிபார்க்கும் வஞ்சகர்கள் கூட்டம்! எங்கள் இனமிருக்கும் நிலை தன்னை எண்ணி எணர்ணி
ஏக்கந்தான் வருகிறதே! என்ன செய்வோம்! தினமிருக்கும் பிரச்சினையைத் தீர்க்க எந்தத் திருவாளர் வந்தாலும் தீர்த்துக்கட்டும் சனமிருக்கும் இக்காலம் சனித்து நீயும்
தலைவனென வந்திடுசெந் நாவல்லோனே!
ஈச்சுரமாம் தேன்பொந்து மன்னார்த்தீவில்
இருக்கின்ற தங்கேகி இணையில்லாத ஆச்சரிய அருள் நல்கும் ஆலயத்தை
அகழ்ந்திடுக! என உலகுக் கறிவித்தீரே! பூச்சொரியும் பாலாவிப் புனலில் மூழ்கிப்
புதுவாழ்வு பெற்றிடுக! எனப்புகன்றீர்! வீச்சுமிகு சொல்லாற்றல் மேன்மையாலே
வேற்றுமதப் பாதிரிகள் வெருணர்டு போக மூச்சு உள்ள வரை முயற்சி செய்தீர் ஐயா!
மூதறிஞ! நாவலனே! முனிவர் ஏறே! பேச்சு செயல் ஒன்றாகப் பேணும் உம்மைப்
பிறப்பெடுக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்! கூச்சமில்லாமல் நாவால் பொய்கள் கூறும்
குணமுள்ளோர் குலமெல்லாம் திருந்த வேண்டும்! தீச்சுடராய் நீ திரும்பத் தோன்றினால் தான்
தீந்தமிழைச் சூழ்ந்த இருள் திரும்பி ஓடும்!
‘ஓலை’ பக்கும் 21

Page 13
மல்கலைகள் ே ஈழ நாட்டில் மீண்டும்
மாதவனே! மறுபிறப்பு எடுத்தாயானால் பல்கலையாய் மன்றமெலாம் உன்னைப்போற்றிப்
பாராட்டுவிழா! மாலை, பட்டம் சூட்டும்! வல்ல ஒலி ஒளிபப்பு நிகழ்வில் உந்தன்
வணர்தமிழின் சொற்பொழிவு மழையாய்ப் பெய்யும்! இல்லை! இவர் இறை தூதர்" என்றும் கூட
ஏற்றிடுமோர் மக்கள்குழு எமக்குள் தோன்றும்! கல்வியினில் பெரியோனே! கணியம் ஓங்கக்
கட்டுப்பாடாய் வாழ்ந்த ப்ரம்மச்சாரீ! செல்வியவள் சரஸ்வதியின் திருவருள்தான்
தென்னாட்டில் உன்பெருமை திகழவைத்து புல்லர்களாம் தீட்சிதர்கள் போக்கை மாற்றிப்
புகழ்விளங்க வைத்துளது என்பதுணர்மை! தில்லைநட ராஜன் சிதம் பரத்தான்மீது
சிந்தைதனை ஒப்படைத்த பூரீமான்வாழ்க!
சித்தாந்தச் சைவமதம் சிறப்புற்றோங்க
சிந்தித்துச் செயல் புரிந்த திறனுள்ளோனே! முத்தான உபதேசம் முழங்கி நாட்டின்
மூலை முடுக்கெல்லாமே வியந்து ஏத்த சத்தான கருத்துக்கள் தந்து மக்கள்
சக்தியினை விழித்தெழவே வைத்தாய் ஐயா! வித்தாக நீ போட்ட விழுமியங்கள்
விருட்ச மெனவே வளரவேண்டு மையா! கொத்தாக அது ஞானக் கனிகள் கொட்டிக்
குவலயத்தோர் மனங்களிலே இனிக்க வேண்டும்! பித்தான மதமாற்றப் பிரசாரத்தின்
பின்னாலே அலைவோர்கள் திருந்த வேண்டும்! எத்தாலும் ஆறுமுக நாவலன் பேர்
எல்லையிலா ஆற்றலுடன் மீண்டும் எங்கள் சொத்தாக வேண்டுமெனில் சொர்க்கம்விட்டு
தோன்றியவ தரித்திடுவாய் சொல்வல்லோனே!
0. 0. 0. 0. 0. 0. d
• 0. ext • 0x8
‘ஓலை’ பக்தம் 22

Logol G36) T6Oes
அன்று மதுரைத் தமிழ்ச் சங்கம் போல், இன்று கொழும்புத் தமிழ்ச் சங்கம் வளர்ந்து வருவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன். 'ஒலை" யின் முதலாம், இரண்டாம் வெளியீடுகள் வந்தன.
2
வாழ்த்து
சலசலப் பில்லா விந்தத் தண்டமி ழோலை முன்னே
பலகலை பயின்ற நூல்கள் பாரினிற் சுமந்து வந்தே அலகில்பல் புகழை யீட்டி யருந்தமிழ் மேன்மை தன்னை நிலைபெறக் காலந் தோறும் நின்றது இன்றும் அற்றே.
கொழும்பிலெந் தமிழ்ச்சங்கத்தின் குலவிடு மோலை தானே செழுந்தமிழ் சிறக்க வேந்தி சேர்பக்கம் பதினாறாக எழுங்கதிர் போலி லங்கை யெங்கணுஞ் சென்ற த..தே தொழும்பரி செனவே பெற்றேன் தொடர் திங்கள் தோறும் வாழி
உயருருத் திராமா வத்தை ஏழ், ஐம்பத்தேழொங்கை பெயருநல் வெள்ளவத்தை பிறங்குகட் டிடந்து லங்க உயருந்தா பகர்த லைவர் ஒப்பில் பொன்னம்பலத்தின் சுயநிழற் படமுங் கண்டேன் தொழுதனன் வாழ்த்தினேனே
அறுபதாம் அகவையெய்தும் அருந்தமிழ்ச் சங்கத்திற்கு உறுபெரு விழாவெடுக்கு மொப்பிலா நோக்கங்கொண்டே பெறுமொரு முயற்சியாகப் பெருமைசே ரோலை தன்னை நிறைவுறத் தலைவராகி நிற்கிறார் தேவராசா
சித்திரைப் புதிய வாண்டிற் சிறந்தநூ லிலட்சங்கொண்ட வித்தக நூலகத்தை விதம்படத் திறந்து வைக்க எத்தனந் செய்யுஞ் சங்கத் தினியநற் செயலரான உத்தமர் பூரித ரன்னை உவந்துபா ராட்டுவெனே.
0. 0. 0. (X- 0x8 0x8
‘ஓலை’ பக்தம் 23

Page 14
நிற்க, கடந்த இரு திங்கள் ஒலைகளிலும் ஒருவரை மேலும் பாராட்டப் போகிறேன். அவர்தான் கவிஞர் “ஜின்னாஹற்”
l. முதல் ஒலையில் அமரர் வ.அ.இ.பற்றிய கவிதாஞ்சலி எல்லாம் நேரிசை வெண்பாக்கள். பாராட்டவே வேண்டும். 4ம் பாட்டில் சாகித்திய என்பதில் சாகித்ய என்றால் நிறம் அல்லது
தளை பிழைக்கும்.
2. இரண்டாம் ஒலை மலரில் திரு.செங்கை ஆழியான் பற்றிய பாராட்டு அறுசீராசிரிய விருத்தங்கள். மிச்சம் நல்ல பொருளாக்க விருத்தங்கள் இவரைத் திரும்பவும் பாராட்டுகின்றேன். மேலும் வளரட்டும்.
87 வயதினனான அடியேன் உங்கள் முயற்சிகள் அத்தனையும் வெற்றிபெற வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.
வணக்கம்
இங்ங்ணம் அம்பலவாணர் வீதி முது பெரும்புலவர் உடுவில், சுன்னாகம் வை.க.சிற்றம்பலம்
20.08.200
சூழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர் விபரடு ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டித் தொகுத்து கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் ஆவணப்படுத்தி வைக்கும் முயற்சியினை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபக வாரம் (22.03.2001 - 25.03.2001) கொண்டாடப்பெற்றபோது அதன்நிறைவுநாளான 25.03.2001 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் /கலைஞர் / பத்திரிகையாளர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது சமூகமளித்திருந்தவர்களுக்கு விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேரில் கையளிக்கப்பட்டன. முகவரிகள் கிடைத்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டும் வருகின்றன. இதுவரை இவ்விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெறாதோர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு கொள்ளும்படியும், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றோர் தாமதியாது அவற்றை பூரணப்படுத்தி அனுப்பி வைக்கும்படியும் அன்பாக வேண்டப்படுகின்றனர்.
) - இலக்கியக்குழு - ܢܠ
‘ஓலை’ பத்தம் 24


Page 15

ம்பு - 0 If a 01-383759