கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.07

Page 1
பவள்விழாக் காணும் மல்லிகை ஆ தமிழ்ச் சங்கம் வழங்கிய பாராட்டுவி 50 மணிக்கு சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்றது கொ பரிசினை திருமதி செல்வி திருச்சந் விழித்துக் கவிதை
கொழும்புத் 57 வது ஒழுங்கை (உருத் ՃlքեITEնույt: வெப் முகவரி
இனைய தபால் முகவரி
 

பிரியர் டொமினிக் ஜீவாவுக்கு கொழும்புத் ழா 23:07:002ஞாயிற்றுக்கிழவிமாலை கலாசூரி இசிவகுருநாதன் அவ ன் ឆ្នា தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நிை நிரன் டொமினிக் ஜீவாவுக்கு வழங்குகிறார்
பக்கம் 18-21
தமிழ்ச் சங்கம் நீரா பாவத்தை) கொழும்பு : .ே
F. : L-B379
www.colombo. tanilsa nga ITT.Org
ts (G). GLIre ka. Ik
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2

இதயம் திறந்து.
"ஒலை" யின் 06வது இதழ் உங்கள் கரங்களில் தவழ்கிறது. "ஒலை"யின் விலையை "இயன்றளவு அன்பளிப்பு" என்றே முன் அட்டையில் குறிப்பிட்டுள்ளோம். "ஒலை" கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமல்லநாடளவியரீதியில் எழுத்தாளர்கள்/ கலைஞர்கள்/ பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள நலன்விரும்பிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது. "ஒலை"யை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் செய்தி மடலாக மட்டுமன்றி கனதியும் காத்திரமுமிக்கதோர் இலக்கியமாசிகையாகவும் மலரச் செய்ய வேண்டுமென்ற எமது இலக்கை நோக்கி சென்ற 5வது இதழிலிருந்து அடியெடுத்தும் வைத்துள்ளோம். எதிர்காலத்தில் "ஒலை"யின் பக்கங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஆக்க இலக்கியப்படைப்புக்களையும் தாங்கி வெளிவரவுள்ளது. ஆதலால், "ஒலை"யின் தயாரிப்புச் செலவை தாங்கிக் கொள்ளும் வண்ணம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஈழத்து எழுத்தாளர். கள்/கலைஞர்கள்/பத்திரிகையாளர்கள்/இலக்கிய ஆர்வலர்கள்/ நலன்விரும்பிகளிடமிருந்து நிதி உதவியினை எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது. ஆதலால் அன்பானவர்களே நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! எதுவும் நல்கி யிங்கெவ்வகையானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!
நன்றி! மீண்டும் மறுமடலில்.
‘ஓலை’ பக்தம்

Page 3
ဝှို§§သ္မိ & 豹
L.Murugapoopathy P.O.Box 350, Craigieburn Victoria 3064, Australia
28.04.2002 தலைவர் தமிழ்ச் சங்கம் - கொழும்பு,
மதிப்பார்ந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்கட்கும் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கமும்,
இலங்கைக்கு வருகை தந்திருந்த பொழுது சகோதரி ஜெயந்தி விநோதன் அவர்களின் இல்லத்தில் என்னை வரவேற்று பாராட்டி உரை நிகழ்த்தியதுடன், தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பொன்னாடையும் போர்த்தி, நூல்களும் அன்பளிப்பு செய்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
தமிழ்ச் சங்கம் புதிய பொலிவுடன் கம்பீரமாக திகழ்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இலக்கிய உலகில் பிரவேசித்த 1972 ஆம் ஆண்டு முதல், அங்கே இருந்த காலப்பகுதியில் தமிழ்ச் சங்கத்தில் எமது எழுத்தாளர் சங்கம் பல நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது. கொழும்பில் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் செய்து வருகிறீர்கள். வரலாற்றில் இடம் பெறும் பணிகள் இவை.
தங்கள் நூல்நிலையத்திற்கு எனது நூல்களின் பிரதிகள் கிடைப்பதற்கு ஆவன செய்கிறேன். மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்
அன்புடன்
லெமுரு கபூபதி
‘ஓலை’ பக்கம் 2
 
 
 
 

102 Kelleway Avenue Nicholls, A.C.T.2913 Australia
28.5.2002
திரு.சிவகுருநாதன், தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம் அன்புடையீர்க்கு வணக்கம்,
GN
தினக்குரல் 24 மார்ச் 2002 (ஞாயிறு) வெளியீட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய "வைர விழாக் காணும் கொழும்புத் தமிழ்ச் சங்கம்" என்ற கட்டுரையில் எனது தகப்பனார் புலவர் சிவங்.கருணாலய பாண்டியனார் அவர்கள் சங்கத்தில் வகுப்புக்கள் நடாத்தியமை பற்றிய விபரம் கண்டு உள நெகிழ்ந்தேன். மூன்று தலைமுறைகளுக்கு மேலான தமிழருக்கு (முக்கியமாக யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அறிஞர்களுக்கும் தலைவர்களுக்கும்) கொழும்பில் தமிழ், சமய ஆசானாகக் கடமையாற்றிய எந்தையாரின் பெயரை பல்லாண்டுகளுக்கும் பின் அச்சில் காணக் கிடைத்தது இன்னும் அவரைத் தமிழுலகம் மறக்கவில்லை எனக் காட்டியது.
அவருக்கு உரிய மதிப்புத் தந்து வந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்ங்ணம் அன்புடன்
திருவருள் வள்ளல்
சங்கப் பதிவேட்டிலிருந்து. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மறுமுறையும் பேசும் பேறுபெற்றேன். மிகமிக மேலோங்கி வருவது கண்டு மகிழ்கின்றேன். சங்கத்தினர்
தமிழ்த் தொண்டு மேலும் ஓங்குக
தெ.பொ.மீனாட்சி சுந்தரன் 23-05-1970
‘ஓலை’ பக்கம் 3

Page 4
வெகுஜனத் தொடர்பியல் ஆதாரப் பயிற்சி நெறி
தமிழ் மொழி வளர்ச்சிக்கு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வகிக்கும் பங்கு அளப்பரியது. இவ்வூடகங்களில் சேவையாற்றுவோர் மொழி ஆளுமையுள்ளவர்களாகத் திகழ்வது அவசியம். தமிழ் மொழியில் புலமை மிக்கவர்களே தமிழ் மக்களுக்கு ஊடக வாயிலாக சிறந்த சேவையாற்ற முடியும். இந்த நோக்கின் அடிப்படையிலேயே கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெகுஜனத் தொடர்பியல் ஆதாரப் பயிற்சி நெறியை இத்துறையில் ஈடுபட ஆர்வம் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்குமாக நடாத்தியது
இப்பயிற்சி நெறி 13.01.2002இலிருந்து 28.04.2002 வரை இடம் பெற்றது. ஞாயிறு தினங்களில் மூன்று மணி நேரம் பல்வேறு தலைப்புக்களில் வெகுஜனத்துறை சார்ந்த அறிவும் அனுபவமும் உள்ளவர்களால் பயிற்சியளிக்கப்பட்டது.
பயிற்சியளித்தோர் பேராசிரியர் கா. சிவத்தம்பி * கலாசூரி இ. சிவகுருநாதன் ஜனாப் வி. ஏ. கபூர் * திரு. வி. ஏ. திருஞானசுந்தரம்
செல்வி. சற்சொரூபவதி நாதன் திரு. ஆ. சிவனேசச் செல்வன்
* தி. பி. பாலசிங்கம் * திரு. கே. எஸ். சிவகுமாரன் திரு. வி. தேவராஜ் * திரு. எண். செல்வக்குமாரன் திரு. வி. ரி. தமிழ்மாறன் * திரு. எஸ். விஸ்வநாதன் திரு. கே. குணராசா * திரு. இளையதம்பி தயானந்தா
* ஜனாப். ஏ. ஆர். எம். ஜிப்றி
பயிற்றப்பட்ட அம்சங்கள்
sk
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் வரலாறு
sk
செய்தித்தாள்களின் அமைப்பு
米
செய்தி நுணுக்கங்கள் ஊடகங்களுக்குச் செய்தி சேகரிப்பு வழங்கல், தொகுப்பு பல்வேறு தகவல்களின் அணுகுமுறை தொடர்பாடலில் மொழிப்பாவனை வர்த்தக விளம்பர நுணுக்கங்கள் பத்திரிகை எழுத்து வடிவங்கள் ஊடகக் கோட்பாடுகள். சட்டங்கள்
கருத்துச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும்
‘ஓலை’ பக்கம் 4

இதழியல் விவரண நிகழ்ச்சி அபிவிருத்தி தொடர்பாடல் செவ்வி காணல்
திட்ட அறிக்கை
* இப்பயிற்சி நெறியினை கொழும்புத் தமிழ் சங்கத் தலைவர் கலாசூரி இ. சிவகுருநாதன், ஊடகத்துறை அனுபவஸ்தர்களான செல்வி. சற்சொரூபவதி நாதன் (துணைத்தலைவர்), திரு.வி.ஏ.திரு ஞானசுந்தரம் (ஆட்சிக்குழு உறுப்பினர்) ஆகியோர் வடிவமைத்தனர்.
பயிற்சி நெறியின் செயற்பாட்டாளராக திரு.த.சிவஞானரஞ்சன் (கல்விக் குழுச் செயலாளர்), திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (துணைப் பொதுச் செயலாளர்) ஆகியோர் சேவையாற்றினர்.
பயிற்சி நெறி ஒருங்கிணைப்பாளர் பணியை செல்வி. சற்சொரூபவதி நாதன் அவர்கள் ஏற்றிருந்தார். பயிற்சி நெறியின் இறுதியில் எழுத்துமூலமான பரீட்சை நடாத்தப் பெற்று அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்பயிற்சி நெறியின் சிறப்பு அம்சம் பயிலுனர்கள் தாமே தெரிவு செய்த தலைப்புக்களில் சமர்ப்பித்த திட்ட அறிக்கைகளாகும். ஆய்வு பூர்வமாகவும், நம்பத்தகுந்த தகவல்களுடனும் சிறப்புற திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்த முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பரிசில்கள் பெற்றோர்
1ம் இடம் : செல்வி. எஸ் வைதேகி
2ம் இடம் : திரு. அந்தோனிப்பிள்ளை
றெஜினோல்ட் சந்திரகுமார்
3ம் இடம் : செல்வி. உமாகாயத்ரி தியாகராஜா
1ம் இடம் : திரு. இ. மோகனதாஸ் 2ம் இடம் : ஜனாப், ஏ.ஆர்.ஐ. யாக்கூப் 3ம் இடம் : செல்வி. பா. கலைச்செல்வி
‘ஓலை’ பக்கம் 5

Page 5
பரிசில்கள் வழங்கும் வைபவம் 30.06.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு.செல்லையா நடராசா அவர்கள் கலந்து கொண்டார். எண்பத்தி நான்கு (84) பயிலுனர்கள் இப்பயிற்சி நெறிக்குப் பதிவு செய்து கொண்டிருந்த போதிலும் எழுபது (70) பேரே பயிற்சி நெறியை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் முடித்து சான்றிதழ் பெறத் தகுதியுடையோராகத் தேறியிருந்தனர்.
பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் பின்வருவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
* பேராசிரியர் சோ. சந்திர சேகரன்
திரு.ஆ.சிவனேசச் செல்வன் - தினக்குரல்பிரதம ஆசிரியர் திரு.வி.தேவராஜ் - இணை ஆசிரியர். 'வீரகேசரி ஜனாப். வி.ஏ.கபூர் - மூத்த ஒலிபரப்பாளர் திருவி.ஏ.திருஞானசுந்தரம் - மூத்த ஊடகவியலாளர் திருமதி அன்னலெட்சுமி இராஜதுரை - 'வீரகேசரி திரு.எஸ்.பூரீகஜன் - 'வீரகேசரி இப்பயிற்சி நெறியின் ஒருங்கிணைப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன்
தனிப்பட்ட காரணங்களால் திருமலை சென்றிருந்ததால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.
米
‘ஓலை’ U55ó 6
 
 
 

*செல்விமேனுகா இந்திரபாலன் * திரு.மனோகரன் நிரூபன் * திரு.செல்வரத்தினம் விக்னேஸ்வரன் *செல்விமேரிசைலஜா அருளப்பன் * திரு.ஜெ.ராம் விக்டர் *செல்விஅபிராமி இரவீந்திரநாதன் * திரு.சண்முகாநந்தன் குகவரதன் *செல்விஉமா காயத்திரி தியாகராஜா * திரு.ப.சந்திரதாளப் *செல்விசுபாஷினி சிவகுமார் *செல்விநாமகள் ஜீவரட்னம் *திருமுகம்மது அயூபக்கர் முகமது அஷ்ரப் * செல்வி.M.Bரிஸ்மியா *செல்விநிதர்ஷினி ராஜதாஸ் *திரு.முத்துவேல் தவராஜா *செல்விசுமதி சிவாநந்தம் * திருமுகம்மது ஜெமீல் பாத்திமா சரீபா * திரு.முத்துக்குமார் ராஜேஷ்குமார் *செல்வி.கிருபாலினி சிதம்பர நாதன் * திரு.பரராஜசிங்கம் கஜன் * திரு.A.R.1ஐயாக்கூப் *திரு.அப்துல் ஜப்பார் புர்ஹான் *செல்விசர்மிலா நடராஜா *செல்விஅனுஷா சிவஞானம் * திரு.மு.காசரீப்ஹாசைன் *திரு.செ.புவனரூபன் * திரு.பரமசாமி கமலச்சந்திரன் *திருலிசிமுஹம்மத் பரஹத் *செல்வி.எஸ்.வைதேகி *செல்வி.கீர்த்திகா சுத்தானந்தன் *திருமுஹம்மது இப்றாகீம் மியூந் சஹீட் *செல்விபுரந்தகி செந்தில்செல்வம் * திரு.செந்தில்செல்வம் கோகுலநாத் * திரு. பாலசுந்தரம் நிர்மானுஷன் * திருமதிசெந்தில்குமார் அன்பரசி * திரு.கே.ஆர்.சிவக்குமார் * திரு.M.Tஇக்பால் நசார்
* திருசிஹாஜமீல் அமானுல்லா ஜமீல் *செல்வி.ஜெயந்தி ஜெகநாதன் * திரு.ரா.அப்துல்லாஹற் அஸ்ஸாம் *செல்வி.இ.கமலின் ஜோர்ஜினா *செல்விஅமரிஷானி *செல்விவனஜாதேவி மயில்வாகனம் * திரு.எஸ்.இராஜ்குமார் *செல்வியாலசுப்பிரமணியம் கலைச்செல்வி *செல்வி.குலதேவி குலசேகரம்பிள்ளை *திருதிருநாவுக்கரசு ஜனகன் *செல்விரதினி பத்மநாதன் *திரு.ஜொனி சுவீண்ரென் அனிந்தஸ்
மதுரநாயகம் * செல்விகதிர்வாணி தயாபரன் *செல்விஅருணா திருநாவுக்கரசு *செல்விமெதடிஸ்
லெட்டோனியா பெர்னாண்டோ *செல்வி,இம்மானுவேல் காமலின் நெலுக்கா * திரு.சந்திரசேகரன் சசீதரன் * திரு.சங்கரப்பிள்ளை பாலமுரளி * திரு.பீற்றர் தேவசகாய சந்திரலால் *செல்விதிருநாவுக்கரசு சிந்துஜா * திரு.அந்தோனிப்பிள்ளை
றெஜினோல்ட் சந்திரகுமார் * திரு.இராஜேந்திரன் சஞ்சீவ் * திருமரியசவரி மில்றோய் யோசப் *திரு.சிவப்பிரகாசம் விமலேஸ்வரன் *திருஅடக்லஸ் மெண்டிசன் *திரு.எம்.மொஹூடின் *திரு.அமானுல்லா முகம்மது றிசான் *திரு.Mரூபவதனன் *செல்விவானதி சச்சிதானந்தன் * திருவிசுவலிங்கம் மெளனகுரு *திருதிசர்வேஸ்வரன் *திரு.சு.சுபேந்திரன் * திருஇமோகனதாஸ்
‘ஓலை’ பக்தம் 7

Page 6
பரிசில்கள் வழங்கும் வைபவத்தை திருமதி செந்தில்குமார் அன்பரசி தமிழ்வாழ்த்து பாடி தொடக்கி வைத்தார்.
பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெற்ற செல்வி எஸ்.வைதேகிக்கு பிரதம அதிதி வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு.செல்லையா நடராசா அவர்கள் தங்கப்பதக்கம் சூட்டுகிறார்.
 

பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த இளைஞர்களும், யுவதிகளும் தாமே தயாரித்துப் பங்கேற்ற கலை இலக்கிய நிகழ்ச்சிகள் இறுதியில் மேடையேற்றப்பட்டன. பின்வரும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
தமிழ்த்தாய் வாழ்த்து - திருமதி. செந்தில்குமார் அன்பரசி
பக்திப் பாடல் நடனம் கவியரங்கம்
விவாதம்
நாடகம்
- செல்விவைதேகி சண்முகம் - செல்விசைலஜா அருளப்பன், செல்விரிஷானி அலோசியஸ் - ”சமாதானம் நிலைக்குமா?”
தலைமை : த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்) பங்கேற்ற இளம் கவிஞர்கள்
வானதி சச்சிதானந்தம், சுபாஷினி சிவகுமார், கீர்த்திகாசதானந்தன், இரட்னசபாபதி மோகனதாஸ், ஜொனி சுவின்ரென் அனிற்றஸ் மதுரநாயகம் - ”ஊடகங்களின் இன்றைய நோக்கு சமுதாயத்தை
சீரழிக்கின்றதா? சீரழிக்கவில்லையா?”
தலைமை : செல்வி பூரீகுமாரி கதிரித்தம்பி சீரழிக்கிறது
செல்வி கிருபாலினி சிதம்பரநாதக்குருக்கள், செல்வன். பரராஜசிங்கம் கஜன் சீரழிக்கவில்லை
செல்வன். சங்கரப்பிள்ளை பாலமுரளி செல்வி கதிர்வாணி தயாபரன் - ”விதி வரைந்த பாதை”
நெறியாள்கை : செல்வி சுபாஷினி சிவக்குமார் பங்குபற்றியோர் :
செல்வன். இரட்னசபாபதி மோகனராஜ், செல்வன் சண்முகனாந்தன் குகவரதன் செல்வி. வைதேகி சண்முகம் திருமதி அன்பரசி செந்தில்குமார் செல்வி கதிர்வாணி தயாபரன் செல்வி சிந்துஜா திருநாவுக்கரசு செல்வி குலதேவி சேகரம்பிள்ளை செல்வி கலைச்செல்வி பாலசுப்பிரமணியம் செல்வன். எம்.ஐ.எம்.சஷிட் செல்வன். பிரிசந்திரதாஸ் செல்வன். ஜெயராம் ராம்விக்டர் செல்வன். விஸ்வலிங்கம் மெளனகுரு செல்வன். பரராஜசிங்கம் கஜன்
தொகுப்பு:தசிவஞானரஞ்சன் (கல்விக் குழுச் செயலாளர்)
‘ஓலை’ பக்கம் 9

Page 7
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 60ம் ஆண்டுப் பொதுக் கூட்டம் 2002ம் ஆண்டு யூன் மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. பதவியாளர்களின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஏனைய பதவியாளர்களின் தெரிவு 07.07.2002 க்கு ஒத்திவைக்கப்பட்டது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 23.06.2002 அன்று நடைபெற்ற 60ம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் தொடர்ச்சி 2002ம் ஆண்டு ஜுலை மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் கலாசூரி. இ.சிவகுரு நாதன் தலைமையில் நடைபெற்றது.
காப்பாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி துணைக்காப்பாளர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
ஜனாப் எஸ்.எம்.கமால்டின் பண்டிதர் ஆர். வடிவேல் திரு.மாதவயோகராஜா வண.பிதா மரிய சேவியர் அடிகள். ஒம்படைச்சபை திரு.வி.எஸ்.துரைராஜா
திரு.கே.கே.சுப்பிரமணியம் ஜனாப்.எம்.எம்.சமீம் திரு.ஆர்.பாலசுப்பிரமணியம் திரு.இ.நமசிவாயம் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் பொதுச் செயலாளர் ஆ.இரகுபதி பாலழறீதரன் நிதிச் செயலாளர் திரு.தி.கணேசராஜா துணைத் தலைவர்கள் திருஜின்னாஹ் ஷரிபுத்தீன்
திரு.பெ.விஜயரத்தினம் திருமதிபூரணம் ஏனாதிநாதன் திரு.த.இராஜரட்ணம் திரு.இ.சுந்தரலிங்கம் திரு.மு.கதிர்காமநாதன்
2606v” uésó 10
اس
 

துணைப் பொதுச்செயலாளர்: துணை நிதிச் செயலாளர் உறுப்புரிமைச் செயலாளர் நிலையமைப்பச் செயலாளர் : நூலகச் செயலாளர் கல்விக்குழுச் செயலாளர் இலக்கியக்குழுச் செயலாளர் ஆட்சிக்குழுச் உறுப்பினர்கள்
உள்ளகக் கணக்காய்வாளர் :
திரு.ஆ.கந்தசாமி திரு.எஸ்.பாஸ்கரா திரு.க.சி.பாலகிருஷ்ணன் திரு.மாசடாட்சரம் திரு.க.குமரன் திரு.த.சிவஞானரஞ்சன் திரு.த.கோபாலகிருஷ்ணன் திரு.சபாலேஸ்வரன் செல்விசற்சொரூபவதி நாதன் திரு.சி.அமிர்தலிங்கம் திருWS.செந்தில்நாதன் திருமதி,அபுவனேஸ்வரி திரு.க.சி.இரத்தினவேல் திரு.க.நீலகண்டன் திரு.சி.கந்தசாமி திரு.அதிருநாவுக்கரசு திரு.வ.சிவஜோதி திரு.சி.சரவணபவன் திருதா.சண்முகநாதன் திரு.க.க.உதயகுமார் திருவீரசொக்கன் திரு.க.ஞானகாந்தன் திரு.த.கனகரத்தினம் திரு.செ.திகனகலிங்கம் பேரா.இரா.வை.கனகரத்தினம் திரு.அ.ந.யோகநாதன்
திரு.V. A. திருஞானசுந்தரம் திரு. ப.இராமச்சந்திரன்
நன்றி
ரூபாய் முந்நூறிற்கான (300 ரூபா) காசோலையை அனுப்பி ஒலைக்கு உதவிக்கரம் வழங்கிய திரு.பரதன் கந்தசாமி (CAO) வலயக்கல்வி அலுவலகம், கல்முனை) அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!
‘ஓலை’ பக்கம் 11

Page 8
சங்கப்Uலகை
r
தமிழகப் பேராசிரியரின் சிறப்புச் சொற்பொழிவு
தமிழகப் பேராசிரியர் தத்துவத் தலைக் காவலர் புலவர் வை. இரத்தின சபாபதி அவர்களின் “தமிழ் இலக்கியத்தில் பக்தி” எனும் தலைப்பிலான சொற்பொழிவு 24.07.02 புதன் மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் గ్రా60L பெற்றது. لك
மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் 12 வது நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் 12 வது நிகழ்வு 27.07.2002 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர். திருமதி சுப்புலட்சுமி சச்சிதானந்தன்-பாட்டு. திரு.எஸ்.திவாகரன்-வயலின், திரு.வி.வேணிலான்
மிருதங்கம்
لص
r பவள விழாக் காணும் மல்லிகை டொமினிக் ஜீவாவுக்கு பாராட்டு விழா
28.07.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள்
வருமாறு நடைபெற்றன. தமிழ் வாழ்த்து ; செல்வி, பவித்ரா கிருபானந்த மூர்த்தி வரவேற்புரை : திரு.பெரியதம்பிப்பிள்ளை விஜயரத்தினம்
(துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
பாராட்டுரைகள் : திரு.என்.கணேசலிங்கம்
(அதிபர், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய மகாவித்தியாலயம்) திரு.வி.தேவராஜ் (இணை ஆசிரியர், வீரகேசரி) திருமதிசெல்வி திருச்சந்திரன் (பணிப்பாளர், பெண்கள் ஆய்வு நிலையம்) திரு.எஸ்.எழில்வேந்தன் (பணிப்பாளர். சக்தி தொலைக்காட்சி செய்திகள்) கலாபூசணம் உடப்பு பெரிசோமஸ்கந்தர் (ஓய்வு பெற்ற அதிபர்) திரு.ம.சிறிதரன் (தொழில் நீதிமன்ற நீதிபதி, மேலதிகநீதவான் கொழும்பு)
வாழ்த்துக் கவிதை : திரு.த.கோபாலகிருஸ்ணன்(செங்கதிரோன்)
ஏற்புரை : திரு.டொமினிக் ஜீவா
நன்றியுரை திரு.ஆ.இரகுபதி பாலழரீதரன்
தமிழ் வாழ்த்து : திரு.சி.அமிர்தலிங்கம்
الصـ ܝܢܠ
‘ஓலை’ பக்கம் 12

N -- அறிவோர் ஒன்று கூடல்
02.09.98 அன்று ஆரம்பித்து பிரதி புதன் கிழமை தோறும் மாலை 5.00 மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு தினத்தில் ஆராயப்பட்டன. பல்வேறு தரப்பட்ட தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் தமது அறிவு, அனுபவ நிலைகளில் நின்று பல்வேறு கோணங்களில் எடுத்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு குறட் பாவினையும் ஆராய்ந்தனர். அவ்வேளை திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகள் அவ்வப்போது ஒப்பு நோக்கவும்பட்டன. 1330 குறட்பாக்களும் இவ்வாறு ஆராயப்பட்டு முடிவுற்ற பின்னர் 13.03.2002 இல் நடை. பெற்ற 154வது நிகழ்வு தினத்திலிருந்து திருவள்ளுவ மாலை நூல் ஆராயப்பட்டது. அதுவும் 167 வது நிகழ்வான 26.06.2000 அன்று நிறைவுற்றது. இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. அந்த வகையிலே 10.07.2002 அன்று கலாநிதி க.க.கணேசலிங்கம் அவர்களின் திருக்குறளும் சைவசித்தாந்தமும் எனும் தலைப்பிலான ஆய்வுச் சொற்பொழிவு இடம் பெற்றது.
أصـ
நூல்நயம் காண்போம். 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 05.07.2002 மகாகவியின் ஆறு மகாகவி பண்டிதர்.க.
(81) காவியங்கள் உமா கேஸ்வரன்
காவியம்)
(82) (சிறுகதைத்தொகுதி) |ப்ாவலர் கவிஞர் தயானந்தா
ஞான மணியம் 1907,2002|வனத்தின் அழைப்பு |அஸ்வகோஸ் திதிருக்குமரன்
(83) (கவிதை)
26.07.2002 | புதிய வார்ப்புக்கள் பத்மா எம்.தேவகெளரி
(84) (சிறுகதைத்தொகுதி) சோமகாந்தன்
‘ஓலை’ பக்கம் 13

Page 9
பாரதத்தின் புதிய ஜனாதிபதி பாரதரத்னா அப்துல் கலாம் அவர்களுக்கு வைர விழாக்காணும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும்
வாழ்த்துப்பா
பாரதத்தின் கீர்த்தியிப் பாரறியும் மெய்ப்பித்தார் பாரதத்தின் மேன்மக்கள் பாராள்வோர் - ஓரினது செப்பற் கரியசெயலாகும் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
வாழியென வாழ்த்தும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தோழமைக்கு ஏற்றமகன் தேர்ந்ததனால் - வாழ்வுயர எப்போதும் நெஞ்சத்தால் ஏற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
வானாண்ட விஞ்ஞானி வாரிதிசூழ் மண்ணாளும் ஞானம் படைத்தவர்தான் நம்பிடலாம் . வானோன்றன் செப்பற் கரியதிரு சேர்ப்பான் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
பாரில் சமாதானம் பாரதத்தால் மேவிவரும் கார்கொள்போர் மேகம் கலைந்தழியும் . தீர்வுதனை ஒப்பும் உலகம் உதவும் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
அண்டை அயலும் அதிதூர நாடுகளும் கொண்டார் மகிழ்வுநவநாயகனால் - ஒன்றுபடல் தப்பா தினியென்றே தேர்ந்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
ஈன்ற பொழுதில் பெரிதுவந்தாள் செந்தமிழ்த்தாய் சான்றோன் மகன்தமிழன் சார்புகழால் - பூண்டபெரும் ஒப்பில்லா மேன்மைக் குவப்பாம் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
‘ஓலை’ பக்கம் 14

சிறுபான்மை யோர்க்கும் உரிமைசம மென்னும் முறைமைக்குச் சான்றாமிம் மண்ணில் - அறிவுலகம் ஒப்பும் ஜனநாயகமாம் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
சாதி இனமதமென் றொன்றில்லை பாரதத்தில் நீதி முறைமையோடு நோக்குங்கால் - கோதில்லா செப்பம் உடைத்ததாம் சொல்லின் ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
பெற்றதன் நாடுமிப் பாரும் பயன்கொள்ள நற்கோன்மை செய்கவுயர் நாயகனே சிற்றுலகு(க்) அப்பால் கடந்தும்போம் சீர்மை ஜனாதிபதி அப்துல் கலாம்வாழ்க வே.
கவியாக்கம் : ஜின்னாஹற் ஷரிபுத்தின் 21.07.2002 (துணைத்தலைவர்)
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தொழில்சார் முகாமைத்துவ பயிற்சி நெறி (தமிழ்)
மாறிவரும் சமுதாய தேவைகளுக்கேற்ப இளைய தலைமுறையினரை உரிய முறையில் வழிநடத்துவதற்கு உதவும் வகையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மூன்று மாதங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை தமிழில் தொழில்சார் முகாமைத்துவப் பயிற்சி நெறியினை சங்கப் பணிமனையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இப் பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலேனும் சித்தியடைந்த 18-30 வயதிற்குட்பட்ட ஆண்-பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். கிரமமாகப் பயிற்சி நெறியில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்களும் திறமையின் அடிப்படையில் மூவருக்கு விருதுகளும் வழங்கப்படும். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்பயிற்சி நெறியின் முதற் தொகுதி 01.09.2002இல் ஆரம்பமாகின்றது.
“g606v” uésó 15

Page 10
பெரியதம்பிப்பிள்ளை விஜயரத்தினம்
"G
Dற்றிசைக் கணினும் கீழ்த்திசைக் கணிணுமுள்ள பல்கலைக் கழகங்கள், தமிழ்க் கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும்." இவ்வாறுதனிநாயகம் அடிகள் இன்றைக்கு 46 ஆண்டு. களுக்கு முன்பு அவர் எழுதிய தமிழ்த் துது என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.”
தனிநாயகம் அடிகளாரின் குடும்பத்தின் பின்புலத்தை நோக்குமிடத்து அவருடைய தந்தையார் நாகநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் ஒரு பரம்பரைச் சைவர் என அறிய முடிகின்றது. பின்னர் இவர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவி ஹென்றி ஸ்டெனிஸ்லாஸ் (Henry Stanilaus) என்னும் பெயரால் அழைக்கப்பட்டார். இவருடைய மனைவியார் சிசில் லெயன் இராசம்மா வஸ்தியாம்பிள்ளை.
இவர்கள் இருவருக்கும் 02.08.1913ல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பெற்றோர் குழந்தைக்கு சேவியர் ஸ்டானிலாஸ் எனப் பெயரிட்டனர்.
இவருடைய முன்னோர்கள் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிற்காலத்தில் இளைஞர் சேவியர் ஸ்டானிஸ்லாஸ் தன்னுடைய பெயரோடு தமிழ் பெயர் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள விரும்பித் தனது பெயரோடு தனிநாயகம் என்னும் பெயரையும் சேர்த்துக் கொண்டார். பின்னர் இவர் தனிநாயகம் அடிகள் என அழைக்கப்பட்டார்.
தனிநாயக அடிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றான ஊர்காவல்துறையில் உள்ள கரம் பொன் என்னும் கிராமத்தில் 1913ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறையில் உள்ள புனித அந்தோனியார் கல்லூரியில் பெற்றார். பின்னர் யாழ்ப்பாண புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து 1930ம் ஆண்டு தனது பதினேழாவது வயதில் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையில் சித்தி பெற்றார். பின்னர் குருமடத்தில் சேர்ந்தார். பேனாட் குருமடத்தில் இவரைத் திருநிலைப்படுத்த முடியாமல் போனதால், இவரை 1934ல் உரோம நகரில் உள்ள ஊர்பான் குருத்துவ சர்வசாலைக்கு அனுப்பினர். அங்கு அடிகளார் இறை இயலில் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றார். 1939ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குருவானவராக திரு நிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தாய்நாடு திரும்பினர். அச்சமயம் இலங்கைக்கு வந்திருந்த திருவிதாங்கூர் ஆயர் றோச் அவர்கள் அடிகளாரை திருவாங்கூருக்கு அழைத்துச் சென்றார். இங்கு வடக்கன்குளம் புனித திரேசாக்கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியப் பணிபுரிந்தார். இக்காலத்தில் தமிழை முறையாகக் கற்கும் வாய்ப்பு இவருக்கு
“9606v” Uágó 16
 

ஏற்பட்டது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயரிடம் முறையாகத் தமிழைக் கற்றார். • ܫ
1947 முதல் 1949 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக விளங்கினார். இங்கு மொழியியலிலும், தமிழ் மொழியிலும் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்ற பின்னர் திரு.அ.சிதம்பரநாதச் செட்டியாரின் மேற்பார்வையின் கீழ் “பழம் தமிழ் இலக்கியத்தில் இயற்கை" என்னும் தலைப்பில் ஆராச்சி செய்து எம்.லிட் பட்டத்தைப் பெற்றார்.
தனிநாயகம் அடிகள் 1952 முதல் 1961 வரை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்விப் பீடத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் “பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஆராச்சியை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
1961 முதல் 1969 வரை மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலைத் துறைகளின் பேராசிரியராய் விளங்கினார். பரிஸ், நேப்பிள்ஸ் முதலிய பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, நேப்பிள்ஸ், ரூசியா, ஸ்கண்டிநேவியா முதலிய நாடுகளுக்கு தமிழ்த் தூது சென்று தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். வீரமாமுனிவர் கழகம் அனைத்துலகத் தமிழாராச்சிக் கழகம் தமிழ் இலக்கியக் கழகம் என்பன அடிகளாரின் சிந்தனையில் உருவாகிய தாபனங்களாகும்.
அனைத்துலகத் தமிழாராச்சிமன்றம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கு அமையச் செயற்பட்டு வந்தது. இது 1966 முதல் 1994 வரை எட்டுத் தமிழாராச்சிமாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது. தனிநாயகம் அடிகளாரின் பன்மொழிப் புலமை இம்மாநாடுகளை ஏற்பாடு செய்ய மிகவும் உதவியது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்கின்ற பாரதியின் அவாவை செயல் மூலம் காட்டியவர் நமது தனிநாயகம் அடிகள்.
பல நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர். இலங்கையில் நடந்த தமிழர் போராட்டத்திலும் பங்கு கொண்டவர். இதனால் தனது பல்கலைக்கழகப் பணியைத் துறந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பாடுபட்டார். தமிழையும் தமிழர்களையும் மனமார நேசித்த ஒரு தமிழ் மகன்.
இவர் கடைசியாகக் கலந்து கொண்ட இலக்கிய நிகழ்ச்சி பண்டிதர் இ கா.பொ.இரத்தினம் அவர்கள் எழுதிய "தமிழ் மறை விருந்து" என்ற நூல் வெளியீட்டு விழாவாகும். 1980ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 6.30 மணியளவில் அடிகளார் உயிர் நீத்தார்.
‘ஓலை’ பக்கம் 17

Page 11
டொமினிக் ஜீவா வாழ்க!
மல்லிகை ஜீவா என்றொரு மனிதனை மாண்புற வாழ்த்திநாம் மதித்திடும் இந்நாள், சொல்லும்! சரித்திரம் சுடரும் இப் பொன்னாள்! எழுபத்தைந்தை எட்டிய டொமினிக் ஜீவா எனும் இவ்
ஜீவனை வாழ்த்தக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கொடுத்து வைத்ததே!
எண்பித்தி ஏழில் இலக்கிய உலகு எடுத்தது மணிவிழா!. இன்னும் அந் நினைவுகள் நெஞ்சில் பசுமையாய்!
நிலைத்தும் உள்ளன.
பவளவிழாவையும் பார்த்திடும் இவ்விழா மல்லிகிைஜிவா மானுடம் ஓங்கவும்
X: - FF!p
செழிக்கவும் நாளும் இயற்றிய வேள்வியை றிடும் இலக்கியப் பெருவிழா!
பின்னர் டானியல்' பிணைப்பு நிகழ்ந்ததும்.
சென்னையில் வெளிவரும் சிற்றிதழ் ஒன்றினில் 'சிலுவை"என்றொரு சிறுகதை வந்ததால் சிலாகித்து அதனைச் சிந்தையில் கொண்டவர் 'ஏ.ஜே. எனும் நல் இலக்கிய நண்பரோ தேடிவந் துன்னுடன் தோழமை பூண்டதும் தமிழ்நாடும் - உன்
‘ஓலை’ பக்கம் 18
 
 
 
 
 
 
 
 
 

தகுதி அறிந்ததால் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தி எட்டிலே அட்டைப்படத்தில் உன் அழகிய முகமலர் தாங்கியதாகச் சரஸ்வதி சஞ்சிகை(யை) விஜயபாஸ்கரன் வெளியிட்டு வைத்ததும், சென்னை 'சரஸ்வதி - உன் சிறுகதைத் தொகுதியை தண்ணிரும் கண்ணிரும்' தலைப்பில் கொணர்ந்ததும்,
அறுபதாம் ஆண்டிலே
அந்தப் புத்தகம் சாகித்ய மண்டலப் பரிசுக்குரியதாய் ஆகித் தமிழில் சிறுகதை இலக்கியம் ஆக்குமுன் ஆற்றலை அளவிட வைத்ததும்,
இலக்கிய உலகினில் ஏற்றமுற நீ எடுத்துவைத்தநல் இனிய தடம் களாம்!
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழமண்ணில் எழுந்த வேளையில் விளங்கினாய் யாழ்கிளைச் செயல் ஆளனாய்! அதன் வெற்றி தோல்வியில் பங்கு கொண்டதால் நீ கற்றுக் கொண்டவை காலத்தின் பதிவுகள்.
'கார்த்திகேசன் மாஸ்ரில் மார்க்ஸிசம் நேர்த்தியாய்க் கற்று நெஞ்சில் மானுட நேயம் வளர்ந்த டொமினிக் ஜீவா!
பஞ்சமர் தம்மைப் பழித்திடுவோரை வெஞ்சினம் கொண்டு வீழ்த்திய வீரன்! அஞ்சினான் அல்லன்! அத்தகையோரை எத்தகை உயர்ந்த இடத்தினரேனும் பொத்திவாய் புறம் போக வைத்தவன்!
கந்தபுராணக் கலாசாரம் என்றெலாம் கணக்கிலாத பல கதைகளைக் கட்டியும்
‘ஓலை’ பக்தம் 19

Page 12
சொந்தமண்ணின் சுதந்திர மாந்தரை(ச்) சோடை போனவர் என்று சுரண்டியும் முந்தமுனைந்த மூடரை எழுத்தினால் முதுகுகாட்டி ஒடி மூலையில் ஒளிக்க வைத்தவன்! நெஞ்சில் ஒர்மம் படைத்தவன்!
இழிசனர் இலக்கியம்' என்றிவர் எழுத்தினை இலக்கியக் கொம்புகள் இயம்பிய வேளையில் கிழிகிழியெனக் கிழித்தவர் கிண்டலை(க்) கீழ்த்தரமானவை என்று நிறுவியே விழிபிதுங்கி அவ் வீணர்கள் விலகிட வீறுகொண்டுநல் வினை விதைத்தவன் அறுபத்தி ஆறு ஆகஸ்ட் பதினைந்தில் ஆமாம்! அந்த அரங்கேற்றம் நிகழ்ந்தது!
சிகை அலங்காரச் சிறுகடை யொன்றினுள் சிறிய மூலையில் சிற்றிதழ் 'மல்லிகை" முகை அவிழ்ந்தது முப்பத்தாறாண்டுகள் முடியப் போகிற மூத்த சஞ்சிகை
மல்லிகை யெனும் . இம் மாசிகை வரவினால் 'மல்லிகை ஜிவா என மதிக்கப்படுபவர்!
வெள்ளை வேட்டியும் வெள்ளை நெஸனலும், வெளியில் எங்கும் வேறுடை தரியார்!
-இவர் உள்ளத்தனையது உடையின் வெண்ணிறம். கொள்ளை அழகு - இவரின் கொடுப்புச் சிரிப்பு!
கொண்ட கொள்கையில் கோணாப் போக்கும் துண்டை எவர்க்கும் தூக்கா மிடுக்கும் குன்றின் வைரக் கொள்கைப் பிடிப்பும் இன்றும் இலங்கும் இளமைத் துடிப்பும் என்றும் இவரை இளமையாய்க் காட்டும்! இவரே! டொமினிக் ஜீவா! வாழ்க!
‘ஓலை’ பக்கம் 20

இருபத்தியேழாம் ஆண்டு பிறந்து எழுபத்தைந்து அகவையை அடைந்தும் இன்னும் எங்கும் ஏறி இறங்கி இலக்கியம் எங்கோ அங்கெலாம் ஏகி இளைஞனைப் போலே எதிலும் துடிப்பாய் எண்ணித் துணிந்து கருமங்கள் இயற்றி உழைப்பு ஒன்றே உண்மையென்றெண்ணி ஊதியம் தன்னை ஒருபுறம் தள்ளி ஊறுகள் விளையினும் உடைத்துத் தகர்த்து உன்னதமான கொள்கைகள் நெஞ்சில் உள்ளதால் என்றும் உலகளாவிய உழைக்கும் மாந்தரை உயர்வெனப் போற்றிடும் தோழர் டொமினிக் ஜீவா என்றும் தோன்றுக! புகழொடு. தோன்றுக! தோன்றுக!
(செங்கதிரோன்)
令 g KQ d 8.
•X- ox 0x8 * •e w •
பவளவிழாக் காணும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் 28.07.2002 அன்று வழங்கிய பாராட்டு விழாவில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய மகா வித்தியாலய அதிபர், திரு.என். கணேசலிங்கம் அவர்கள்
உரையாற்றுகிறார்.
‘ஓலை’ பக்தம் 21

Page 13
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அண்மைக்கால (மே 2001 - யூன் 2002) வெளியீடுகள்
தலைப்பு
ஆசிரியர்
பதிப்பு விபரம்
1. பாவலர் சரித்திர தீபகம்
ug5g571
அ.சதாசிவம்பிள்ளை பதிப்பாசிரியர்:கலாநிதி
இண்ைடாம் பதிப்பு: தை 1975 மீள்பதிப்பு: மே 2001
(A History of the Tamils up to British Period)
பொ.பூலோகசிங்கம் 6)ණාඛා325/=
2.பாவலர் சரித்திர தீபகம் அ.சதாசிவம்பிள்ளை 1ம் பதிப்பு: 1979 பகுதி2 (ஆராய்ச்சிக் பதிப்பாசிரியர்:கலாநிதி மீள்பதிப்பு: 2001 குறிப்புகளுடன்) பொ.பூலோகசிங்கம் விலை:425/= 3. பனைநூறு (மூலமும் ச.சு.பொன்னம்பல முதற்பதிப்பு: 1979 உரையும்) முதலியார் மீள்பதிப்பு: 2001
பதிப்பாசிரியர்:தமிழவேள் விலை :75/- 4. நாம் தமிழர் பொ.சங்கரப்பிள்ளை முதற்பதிப்பு: ஆவணி 1979
மீள்பதிப்பு: காசி 1991, புாட்டாசி 2001, விலை: 225/-
. யாழ்ப்பாணம் செகராச சேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான் வையாபுரி ஐயர் 16ம் நூற்றாண்டில் செய்த 606).JuJIT LITL6).
பதிப்பாசிரியர் : கலாநிதி க.செ.நடராசா
முதற்பதிப்பு: 1980 மீள்பதிப்பு: 2001 விலை 100/=
6. ஈழத்துத் திறனாய்வு அ.சண்முகதாஸ் முதற் பதிப்பு: ஏப்ரல் 1990 முன்னோடி மீஸ்பதிப்பு: ஜனவரி 2001 (நினைவுப் பேருரை) விலை :50/=
7. இலங்கையில் தமிழ்ப் கலாசூரி.இ.சிவகுருநாதன் முதற்பதிப்பு: 1980
புதினப் பத்திரிகையின் | எம்.ஏ மீள்பதிப்பு: புாட்டாதி 2001 வளர்ச்சி விலை : 225/.
8
பேரா.கணபதிப்பிள்ளை அவரது புலமைப் பாரம் பரியம் பற்றிய ஓர் அறிமுக ஆய்வு (நினைவுப் பேருரை)
கார்த்திகேசு சிவத்தம்பி
முதற் பதிப்பு : தை 1997 மீன்பதிப்பு: தை 2001 விலை : 100/=
9. மதமும் கவிதையும்
கார்த்திகேசு சிவத்தம்பி
முதற்பதிப்பு: தை 2000
-தமிழ் அனுபவம் விலை : 50/- 10.இலங்கைத் தமிழர் கார்த்திகேசு - சிவத்தம்பி முதற் பதிப்பு: கார்த்திகை 200
யார், எவர்? விலை :75/-
11இலக்கியத் தேட்டம்
ஈழத்து நவீன இலக்கியம்
செல்லையா யோகராசா
முதற்பதிப்பு : கார்த்திகை 2000 விலை : 100/-
‘ஓலை’ பக்கம் 22

12.பண்டைய இலங்கையில் கலாநிதி பரமு முதற்பதிப்பு: சித்திரை 2001
தமிழும், தமிழரும் புஸ்பரட்னம் விலை : 250/- (பிராமிக் கல்வெட்டு dö6067 g/kgüL60)LuJITöáb கொண்டஆய்வு)
13.புலம் பெயர்ந்த லாநிதி வி. முதற்பதிப்பு: தை 2002
இலங்கைத் தமிழரின் கதிர்த்தம் விலை : 30: பண்பாட்டுத் தனித்துவம் சில அவதானிப்புகள்
14.இலங்கைத் தமிழர் அம்பலவாணர் முதற்பதிப்பு: மாசி 2002
களின் அரசியலை சிவராஜா விலை :50/- விளங்கிக் கொள்ளல்
15.செல்லரித்த செந்தமிழ் மா.க.ாழவேந்தன் முதற்பதிப்பு: மாசி 2002
சுவடிகளுக்கு புதுவாழ்வு விலை : 20/- கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார்.
101 வது ஆண்டு மறைவு நினைவுக் கட்டுரை.
16.ஆரம்ப, இடைநிலை எம்.ஏ.நுஃமான் முதற் பதிப்பு: ஜூன் 2002
வகுப்புகளில் தமிழ் மொழி விலை : 250/= கற்பித்தல் ஒரு மொழியியல் அணுகுமுறை
r N
அஞ்சலி
15.07.2002 அன்று உயிர்நீத்த நாடறிந்த எழுத்தாளரும், பத்திரிகையாளரும், கவிஞருமான எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்களது நினைவாக எமது கண்ணிர் அஞ்சலியினைக் காணிக்கையாக்குகின்றோம்.
مـ ܢܠ
r ר
அஞ்சலி
27.07.2002 அன்று காலமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பாளர் திருமதி.ஜமுனா சர்வானந்தா அவர்களுக்கு எமது கண்ணிர் அஞ்சலி,
لم ܢܠ
‘ஓலை’ பக்கம் 23

Page 14
/ ༄། நான்காவது ஒலை செய்திமடல் கிடைக்கப் பெற்றேன். நன்றி தமிழ்ச் சங்கத்தின் பரந்தளவிலான பல்துறைப் பணிகளைப் படித்து மகிழ்வடைந்தேன்.
ஒலை எதிர் காலத்தில் ஒரு விருட்சமாகி எமது சமூகத்திற்கு நிழல் கொடுக்க எனது வாழ்த்துக்கள். ஒலையின் கனதிக்குத் தேவையான ஆதரவு என்றும் வழங்கத் தயாராய் உள்ளேன். இப்போதைக்கு 300/- க்கான ஒரு காசோலை அனுப்பி வைக்கின்றேன். ஒலையின் சார்பாகப் பெற்றுக் கொள்ளவும்.
திரு.பரதன் கந்தசாமி (C.A.0) வலயக் கல்வி அலுவலகம்
8.07.2002 始 لم கலமுனை ܢ
கடந்த அறுபது ஆண்டுகளாக கொழும்பு நகரில் தமிழ் வளர்) த்து வந்திருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது செயற்பாடுகளைப் பகிரங்கப்படுத்துமுகமாக வெளியிட்டு வரும் மாதாந்த மடல் இதுவாகும். கிடைக்கப் பெற்றிருப்பது நான்காவது ஒலையாகும்.
கடந்த வருடம் ஜூன் முதல் கடந்த மே மாதம் வரையில் தமிழ்ச் சங்கம் ஆற்றியிருக்கும் பல்வேறுபணிகளை இம்மடலில் பார்க்கலாம்.
தமிழின் பெயரால் மன்றங்களும் சங்கங்களும் புற்றீசல்களாக அமைக்கப்பட்டாலும் பல சோதனைகளையும் தாக்குப் பிடித்து நிற்பது வெகுசிலவே. இவ்வகையில் கலை இலக்கிய தாகம் கொண்ட அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பெருமையுடன் சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு அடைக்கலம் தரும் முகவரியாக கொழும்புத் தமிழ்ச் சங்கம் விளங்குகிறது. ஒலையைப் பார்க்கும்
அனைவருமே இதைப் புரிந்து கொள்வார்கள்
- சத்யா -
நன்றி : தினகரன் வாரமஞ்சரி. 14.07.2002
لم ܢܠ
‘ஓலை’ பக்கம் 24
 


Page 15
S
灰T
Sè
死
烈
三。
தமிழ்ச் சங்கத்
தரணி எங்
வளர எம் இதயம் க
வகுப்பு 1 தொடக்
கயொத (சாதரன்
க.பொ.த (உயர்த
奪
彰
* (கலை 1 விஞ்ஞா
* ஆங்கிலம் தமி
*
Fri_ó æಹಾí
அனைத்தும்
Filii is so
2 jign GlGu GÍ GIM s ElјпВлајšш
 

\\<\ક தின் குரலாய் 学 கும் ஒலிக்க Jĩ (05) 5.Jộ7
ரிந்த வாழ்த்துக்கள் !
தற் 10 வரை
Frf )
TE})
ரம் / வர்த்தகம்)
பேச எழுத வாசிக்க
குமுக வகுப்புகள்
நடைபெறுகின்றன
—')
ni jlen EADUILLÍ
ISUffigno
வத்தை
Elf : 364 381
ছেৰ্পা (১৯