கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.09

Page 1
|-
蚤
கொழும்புத் 7, 57 வது ஒழுங்கை (உரு
தொலை வெய் முகவரி இண்ைடி தபால் முகவரி
 
 

- s -
தமிழ்ச் சங்கம் ந்திரா மாவத்தை கொழும்பு 08, ; : D-E. T.
WWW. Colombo. tanisa nga T.Org cts Geureka. Ik
விலை:இயன்ற இன்பர்

Page 2
對
དང་མ་ས་སྒྱུ་
70lith (1Best 70lishes froma
| PAVITHIRAA
GOLD HOUSE
Dealers in Genuine 22 ct. Gold Jewellery
No.22, Chilaw Road, Kochchikade
i Tel: 031 79696 Res: 031-79096 ബ് ܡܓܼܕܬà
፪ም~ 70ith Best 70ishe, from ད་བ་ས་ཧྥུ་
ATRICE
AINGHARAN RICE MLL
Dharga Road,
Kottramula ܐ அே ܡܓܼܕܬàܐܰܰ

இதயம் திறந்து.
fழத்துஎழுத்தாளர்கள்/கலைஞர்கள்/பத்திரிகையாளர்கள் /இலக்கிய ஆர்வலர்கள் / கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் வழங்கி வரும் ஆதரவும், ஊக்கமும் எம்மை உற்சாகப்படுத்துகின்றன. அதனாலேயே இப்போது உங்கள் கரங்களில் தவழும் "ஒலை"யின் 08 வது இதழையும் கொணர. முடிந்துள்ளது. இந்த உற்சாகம் புதியதாகவும் தமிழுக்குப் பயனுள்ளதாகவும் எதையாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. ஈழத்து எழுத்தாளர்களே! உங்கள் ஆக்கங்களை "ஒலை"க்கு அனுப்பி உதவுங்கள். இலைமறை காயாக இருக்கின்ற எழுத்துத்திறமையும் படைப்பாற்றலுமிக்கவர்களுக்கு "களம்" கொடுத்து அத்தகையோரை வெளிக் கொணர வேண்டுமென்ற எண்ணமும் "ஒலை"க்கு உண்டு. இலட்சியத்துடனும் இலக்கிய தாகத்துடனும் புறப்பட்டுள்ள "ஒலை"யின் இலக்கியப் பயணத்தில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் என எல்லோரையும் அன்போடும் ஆதரவோடும் அழைக்கின்றோம்!
நன்றி! மீண்டும் மறுமடலில்.
-ஆசிரியர்
‘ஓலை’ பக்கம் 1

Page 3
1997ஆம் ஆண்டு, முதல் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரிலும்,
1999ஆம் ஆண்டு இரண்டாம் தமிழ் இணையமாநாடு சென்னையிலும் நடைபெற்றது. அதற்குஅடுத்த மூன்றாம் தமிழ் இணைய மாநாடு இலங்கையின் கொழும்பில் 2000 ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளால் இம்மாநாடு நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொழும்புத் தமிழ்ச் சங்க கணிப்பொறித்திருவிழாவின் மூலமாக தமிழ் இணைய உலக மாநாடு நடைபெற்றது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தில் இலங்கை பின்னடைவு பெற்றிருந்தாலும் தமிழால் கணிப்பொறி சாதனை ஈடேற்றப்பட்டுள்ளதை கண்ட இலங்கைத் தமிழர்களின் உணர்வு வரவேற்கத்தக்கதாகும்.
தோன்றிற் புகழோடு தோன்றுக என்றான் வள்ளுவன். அதற்கேற்றாற் போல புகழோடு கணிப்பொறித் திருவிழா இலங்கையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இலங்கை என்றால் தமிழிற்கு மதிப்பிருக்கும் என்று நினைத்தேன். இங்கேயும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. உலகின் அனைத்து தொழில்நுட்ப புரட்சியிலும் தமிழன் தோல்வியடைந்துள்ளான். ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் உலகளாவிய அளவில் தமிழன் வெற்றி பெற்றுள்ளான். இணைய பயன்பாட்டில் ஆசிய அளவில் தமிழுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளதே பெருமைக்குரிய விஷயமாகும். இதில் பாதிப்பங்கு ஈழத் தமிழனுக்கே சொந்தமாகும். மேலும் இவையனைத்தும் இளைஞனுக்கே சொந்தம். மேற்கத்திய நாடுகளின் தயாரிப்புக்கு இணையாக தமிழில் பல சிடிக்களும், மென்பொருட்களும் உள்ளன என்பதை இக் கணிப்பொறித் திருவிழா நிரூபித்துள்ளது. ஆங்கிலத்திலேயே அனைத்தும் முடியும் என நினைக்காதீர்கள். கணிப்பொறி ஒரு இயந்திரமே! நாம்
‘ஓலை’ பக்கம் 2
 

தமிழாலும் பல கணிப்பொறிச்சாதனைகளைச் செய்ய் முடியும், தமிழின் கணிப்பொறிச் சாதனைகளை நிரூபிக்கவே அடுத்த தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் என உலகின் முன்னணி நிறுவனங்கள் இயங்கும் சிலிக்கான் வேலியில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுவதால் உலக அளவில் தமிழின் பெருமை நிலைநாட்டப்படவுள்ளது. மாநாட்டின் முன்னும் பின்னும் தமிழ் அனைவரின் மனதிலும் புகழப்படவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தைச் சார்ந்து எந்த மொழி வளர்ச்சி பெறுகிறதோ அம்மொழியே உயிர் வாழ முடியும். அதற்காக பலரும் பணியாற்றினாலே தமிழை சர்வதேச அளவில் பொருளாதார மொழியாக உருவாக்க முடியும்.
தாய்லாந்து நாட்டில் தாய் மொழியைபேசுபவர்கள் மூன்று கோடி மக்களே. இருந்தாலும் செல்பேசி முதல் அனைத்து கம்யூனிகேஷன் சேனல்களிலும் தாய்மொழி 100% பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழிக்கென ஒன்பது கோடி மக்கள் இருந்தாலும் அதன் பயன்பாடு குறைந்த அளவிலேயே உள்ளது. இப்படியே இருந்தால் தேய்வு நிலை கூட ஏற்படலாம். 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தன. தற்போதோ 80 மொழிகள் மட்டுமே ஐரோப்பாவில் புழக்கத்தில் உள்ளன. இந்த தேய்வுநிலைக்கு காரணம் அனைத்து மொழிகளும் தொழில்நுட்பத்தை சார்ந்து வளராத நிலையே ஆகும். தமிழ் மொழி கணினித்துறையில் வெற்றி பெற வேண்டுமானால் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கலைச்சொற்களை பள்ளிகளில் விதைத்தால் தான் மாணவர்கள் கல்லூரிப் படிப்பின் போது பயன்பாட்டுடன் இயங்கு. வார்கள்.
இந்தியாவின் முதல் நூலே தமிழ் நூல்தான். ஹரிக் ஹென்ட்ரிக்ஸ் பதித்த "தம்பிரான் வணக்கம்" தான் அத்தமிழ் நூல். ஆங்கிலேயன் செய்த தமிழ்ப்பணிஉணர்வுகள் தமிழனுக்கு பல சதவீதம் கூட வேண்டும். கணிப்பொறித்துறையில் பல்வேறு கூறுகளை படிக்கும் மாணவர்கள் தமிழ் சார்ந்த படைப்புக்கேற்றபடி பயில வேண்டும். தமிழ்க்கணினி படைப்புக்களை, சிடிக்களை, மென்பொருட்களை படைக்கும் நோக்குடன் கணிப்பொறித் துறையை பயிலுங்கள். ஒலைச்சுவடிகள் அனைத்தும் புத்தகமாக ஆக்கப்படவில்லை. தமிழ் புத்தங்கள் அனைத்துமாவது டிஜிட்டல் வடிவை பெற ஒத்துழைப்புக் கொடுங்கள்! தமிழை பொருளாதார மொழியாக மாற்றுங்கள். S
‘ஓலை’ பச்சம் 3

Page 4
Extract of speech made by Mrs. Farida Jinnah Sherifudeen, The President. Womens Bureau, Moors Islamic Cultural Home (M.I.C.H.) on the occasion of publication of book titled “SIR PONNAMBALAM RAMANATHAN'authored by M.K. Elaventhan, held on 21-08-2002 at Colombo Tamil Sangam
The President, distinguished guests, Ladies and Gentlemen. On this pleasant evening I deem it a great honour to have been given this opportunity to speak on the life of one of the greatest and most remarkable personalities of his time, a noble patriot of the Ceylonese nation Sir Ponambalam Ramanathan. His patriotism transcended above all narrow domestic walls and embraced all mankind irrespective of race, creed or dine "I think if I were a Ceylonese I should feel specially proud of Sir Ponambalam Ramanathan .He has had a most remarkable career. I suppose there are a few instances on record in which a man has touched life at so many points,and at every point at which he has touched it with distinction quoted Govener Sir Herbert Stanley. A great statesman scholar philosopher patriot,a man of religion, educational reformer and a benefactor of the nation was none other than Sir Ponnambalam Ramanathan. He had an universal mind not that he loved his people less, but he loved mankind more.
During his early age of life, when his father was to send his two sons for their higher studies to India, he spoke to his sons and said "look My dear children whatever you do maintain a careful record of your expenses and review these records at your calmer and leisured moments Expenses which at one moment seemed to you unavoidable will on second thoughts appear to you superfluous and avoidable." Sir Ponnambalam Ramanathan and his brother lived upto this advice and direction and attributed their freedom from want to the timely advice tendered by their dear and dutiful parent .Their father's allowances towards them at Royal College and Cambridge University never exceeded their bare necessities "take care of the pence and the pounds will take care of themselves' was his often quoted saying. In fact this rigid and ruthless economy enabled him to carry through his manifold acts of charity. Though he was very careful in his personal and private expenditures he was lavish in his benefactions to his people.
He was quite content and happy to live to the end of his days at 'Sukastan' an ancient and ancestral building which formed part of his inheritance, though
‘ஓலை’ பக்கம் 4

he could well afford to build a more stately and luxurious mansion.His house in Jaffna within the premises of Ramanathan College was small and modest" No man can serve two masters". He always quotes that he who aspired to serve men and god must first deny himself when coming to the guardianship of trust and funds and public monies he was strictly careful and absolutely economical in their disposal. He always mentions that public money is “Parameshwaran's money. That is god's money.
In his early youth he tamely submitted to western influences by eating and drinking Once an Earl of England who has travelled widely and enjoyed the hospitality of many eastern peoples visited 'Sukastan where he left on record specially the best whiskey he drank and the best tennis court he played in was at "Sukastan Sir Ramanathan moreover has always prided himself on the most gorgeous western attire but his pattern of life was not long to endure, when he is reaching his maturity and the advent of his religious teacher the pattern of his life was completely changed Henceforth throughout his life he was a pure vegetarian. Although he lived all his life in the city of Colombo he never Succumbed to their lure but lived a simple sober and austere life.
Sir Ponnambalam Rannanathan was a national hero with an international reputation. His charm of manner his graceful speech his natural dignity his lofty character,his deep sincerity his independence of mind and his wide scholarship exercised a great fascination on all who came in contact with him and drew to him. It was these noble qualities that won the hearts of his people and his collegues in the council. His memory is not the monopoly of any particular community or any particular race, he belonged to all mankind.
As a Muslim I wish to review the tremendous service Rendered by Sir Ponnambalam Ramanathan to the Muslim community of Srilanka, which the younger generation of the Muslims may not be aware of Once when the bill titled "An ordinance to amend code of Mohamedan laws and provide for the registration of Mohamedan marriages contracted in the colony' was presented in the council in 1886 there was a vehement protests by the Muslims as they felt it vitally affected their religion. A memorial embodying their protest was submitted to the council and Sir Ramanathan their representative in council was urged to oppose the Bill Being a veteran debator having studied the bill from all angles Sir Ponnambalam Ramanathan argued the case convincingly and authoritatively. He stated that this clause alters the substantive law of Mohammedan marriage...it enacts that the facts of registration shall be the most essential and indeed the only efficient ceremony in the Muslim marriage.The only thing
‘ஓலை’ பக்கம் 5

Page 5
that mark the marriage is registration all requirements of the holy Quran may have been duly fulfilled to the point but if the registration is not made the marriage will not be a valid marriage if that is not an alternative of the Mohammedan Law he said l do not know what else is I cannot understand why so great a change should be imposed on the Mohamedans, while their brethren the hindu Tamils are allowed greater freedom The Ordinance was not accepted by the secretary of State and returned to Ceylon for amendment Sir Ponnambalam Ramanathan was crowned with success .The ordinance when amended made the registration of Mohamedans marriages not as the only evidence of marriage as contented by the government but as the best evidence of marriage this was indeed a si gnificant service to the Muslims in that it upheld the validity of their religion as against the law in matters relating to matrimony.
In the year 1879 he was chosen by his excellency Sir James Iongdon to represent the Tamils in the legislative Council. This marked his first entry into the turbulent waters of the country's politics he served his people with the greatest possible distinction for more that half a century and Strode the public life of this country like colossus in 1911 he was elected as the first educated Ceylonese member in the reformed legislative Council. His was statesmanship constructive and creative. He relied solely on the strength and the validity of argument on the intensity and force of his conviction. To carry conviction to his collegues Sir Ponnambalam Ramanathan was received in London as the greatest unofficial of Ceylon.
From the very outset of his political life bore a religious quality and was dominated by noble arms and ideals.He viewed every question not from the narrow communal, racial,or religious angle ,but rather from the broaderstandpoint of the national interest.He fought the cause not merely of the Tamils,the Sinhalese, the Muslims, and the Burghers, The Europeons residing in the Island. It was this Languages of view of this concept of humanity as fundamentally one indivisible though subject to superficial differences, that the needs of one community are as paramount and imperative as those of another that raised him high above the general run of a politician due course earned him the title
Member of Ceylon
In conclusion may I say that Sir Ponnambalam Ramanathan is undoubtedly the first presumably the last of the great leaders to have spiritualised our politics to have placed religion and morality in the forefront of good government. It was his example and precept that reared a banned of leaders who placed their country before self, who toiled in a spirit of dedication for the good of their Motherland and march towards national freedom and sovereignty. S
‘ஓலை’ பக்கம் 6

சங்கப்Uலகை
தொழில் சார் முகாமைத்தவம் தமிழ் மொழி மூல பயிற்சி நெறி"
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் மேற்படி பயிற்சி நெறி 01.09.2002 ஞாயிற்றுக்கிழமை மு.ப.9.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பெற்றது. இப்பயிற்சிநெறியின் ஒருங்கிணைப்பாளராக கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினரும்உள்ளகக் கணக்காய்வாளருமான திரு.வி.ஏ. திருஞானசுந்தரம் பொறுப்பேற்றுள்ளார். 01.09.2002 அன்றுள்ளபடி இப்பயிற்சிநெறிக்கு முப்பத்தியேழு (37) பயிலுனர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இப்பயிற்சி நெறி பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மு.ப.9.00 இலிருந்து பி.ப.1.00 மணிவரை நவம்பர் மாதம் வரை (24.11.2002) நடைபெறும். விரிவுரைகளை பின்வருவோர் வழங்கவுள்ளனர்.
* திரு.எஸ்.வி.ஆர். வேதநாயகம் (சிரேஸ்ட உதவிச் செயலாளர், இந்து
சமய விவகார அமைச்சு கொழும்பு) * au5. Gab.arapassasa BA, MBA, FIB, FCMA, MCIM *** (பிரதிப்பொது முகாமையாளர் (நிதி, திட்டமிடல்) இலங்கை வங்கி) * 6. coma. afacou arco BBA, MBA, AIB, ACMA (6uosiu6opéæ5 Dgögélu u
வங்கி) * திரு.எஸ்.நடராசா (பொது முகாமையாளர், 'பான் ஏசியா' வங்கி) * ஜனாய். ஏ. முகமட் நஹியா பணிப்பாளர் (புனர்வாழ்வு)
(கிழக்கின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, முஸ்லிம் சமய விவகார அமைச்சு)
* ság. Garaib. cacă. uDTasufakasafvas AB, MICIM
பயிற்சி நெறியின் தொடக்கவிழா வன்று திரு.எஸ்.வி.ஆர். வேதநாயகம் அவர்கள் 'முகாமைத்துவம் -ஒர் அறிமுகம் எதற்காக? யாருக்காக? எனும் பொருளில் விரிவுரையாற்றினார். لصـ ܢܠ
‘ஓலை’ பக்கம் 7

Page 6
ஒலை 6வது இதழ் வெளியீடு
'ஒலை'யின் 6வது இதழ் 04.09.2002 அன்று நடைபெற்ற 'அறிவோர் ஒன்று கூடல்' நிகழ்வின் ப்ோது சங்கத் தலைவர் கலாசூரி. இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. முதற் பிரதியை சங்க உறுப்பினர் திருமதி. சிவகாமசெளந்தரி விஜயரத்தினம் (இளைப்பாறிய அதிபர்) அவர்கள் பெற்றுக் கொண்டார்.
4 a . . . . . . * ጶ أص
177வது அறிவோர் ஒன்று கூடல் ད། சிங்கப்பூர் தமிழறிஞர் திருஇ.வி.சிங்கன்
அவர்களின் சிறப்புரை
02.09.98இல் ஆரம்பித்து கடந்த நான்கு வருடங்களாக பிரதி புதன்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெற்று வருகின்ற 'அறிவோர் ஒன்றுகூடல்' நிகழ்ச்சித் தொடரின் 177வது நிகழ்வு 11.09.2002 அன்று சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர் திரு.த.முத்துக்குமாரசுவாமி அவர்கள் கலந்து கொண்டார். பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
தமிழ் வாழ்த்து : செல்வி இந்துஜா கணேசராஜா
வரவேற்புரை : புலவர் த.கனகரத்தினம்
(ஆட்சிக்குழு உறுப்பினர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
தலைமையுரை -
சிறப்புரை : "திருக்குறள் வகுப்பு நடத்துவது எப்படி?"
கலந்துரையாடல்
நன்றியுரை : திரு.எஸ்.பாஸ்கரா
(துணைநிதிச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
أص
‘ஓலை’ பக்கம் 8

மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்வாக கலாபூசணம் உடப்பு பெரிசோமஸ்கந்தர் குழுவினரின்
வில்லிசை
காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை (சுதாராஜ் எழுதிய குழந்தை இலக்கியம்) இடம் பெற்றது. 14.09.2002 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சாந்தி தயாபரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். எழுத்தாளர் சுதாராஜ் அவர்களும் சமூகம் அளித்திருந்தார். தமிழ் வாழ்த்தை செல்வன் தயாபரன் யூரி ரமணனும் நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் திருமதி.அரியரட்னம் புவனேஸ்வரி அவர்களும் வழங்கினர். أص
r ● 爱
அறிவோர் ஒன்று கூடல்'- திருக்குறள் ஆய்வு பின்வரும் ஆய்வுச் சொற்பொழிவுகள் இடம் பெற்றன
திகதி விடயம் ஆய்வாளர்
04.09.2002 திருக்குறளில் திரு.த.இராஜரட்னம்
அறிவு பற்றிய ஆய்வு (பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
உப அதிபர்) 1809-2002 திருக்குறளில்அரசியல் திரு.மா,கணபதிப்பிள்ளை
(கொழும்பு றோயல் கல்லூரி
தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியர்)
250ழ2002|திருக்குறளில் கல்வி திரு.உ.நவரட்ணம்
(தேசிய ஆசிரிய அதிகாரசபைப் பணிப்பாளர், கல்வி அமைச்சு)
أص ܢܠ
‘ஓலை’ பக்தம் 9

Page 7
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 06.09.2002 கனவுகளின் எல்லை : க.சிவகுமார்
(90) (ab விதை) த.ஜெயசலன
13.09.2002 புதிய பூக்கள் திரு.வ.இராசையா அனு.வை.
(9) (சிறுவர் இலக்கியம்) நாகராஜன்
(92) (கட்டுரைகள்) (R.C.ராஜ்குமார்) குரூஸ்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்து நடாத்தும் இலங்கைத் தமிழர் : வாழ்வும் வகிபாகமும்'
என்ற தலைப்பிலான பேருரைத் தொடரின்
ஆறாவது உரை
28.09.2002 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
"இலங்கையில் தமிழர் கல்வி :
வளர்ச்சியும் பிரச்சினகளும்"
எனும் பொருளில் சோ.சந்திரசேகரன்
(பேராசிரியர், கல்வியியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்) அவர்கள்பேருரை ஆற்றினார்.
‘ஓலை’ பக்தம் 10

கவிதா மாலை
(காலாண்டு கவிதா நிகழ்வு) கவிஞர் நீலாவணன் கவிதைகள்
29.09.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுகள் வருமாறு
தமிழ் வாழ்த்து . திருமதி நிலாமதி ழறிதர் பிச்சையப்பா
வரவேற்புரை திரு. ஆ. இரகுபதி பாலழறீதரன்
(பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) திரு.எஸ். எழில் வேந்தன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கவிஞர் நீலாவணனின் தெரிந்தெடுத்த சில கவிதைகள் மூலம் பின்வரும் கவிஞர்கள் கவிதா நிகழ்வை நிகழ்த்தினர்.
* ஜின்னாஹற் ஷரிபுத்தீன் * சிதம்பரப்பிள்ளை சிவகுமார் * சோ.தேவராஜா * த.சிவசங்கர் * இளையதம்பி தயானந்தா * செல்வண்-லோயிரசண்ணா * கமலினி செல்வராஜன் * செல்வி.க.கலைவாணி * க.கலாகரன் * கிணர்னியா அமீர் அலி * செங்கதிரோன் * ஏ.ஆர்.வாமலோசனன்
米
பூரீதர் பிச்சையப்பா * திதிருக்குமரன்
நிகழ்வின் இறுதியில் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (துணைப் பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) நன்றியுரை வழங்கினார்.
ܢܠ
"gosv” uású 11

Page 8
நிகழவிருப்பவை
ஒக்டோபர் 2002 சங்க நிகழ்ச்சிகள்
02.10.2002, புதன்கிழமை பிப530 மணி
180 வது 'அறிவோர் ஒன்று கூடல்' விடயம் : சாகித்தியமண்டல பரிசு பெற்ற எழுத்தாளர் லெமுருகபூபதி அவர்களுடன் இலக்கியச் சந்திப்பு o
04.10.2002 வெள்ளிக்கிழமை பிப530 மணி
93வது நூல்நயம் காண்போம்"
நூல் : சாவித்திரி (காவியம்)
நூலாசிரியர் செல்வி.சி.திருமலர்ப்பாக்கியம் நயம் காண்பவர் : பண்டிதர் சி.அப்புத்துரை (இளைப்பாறியஅதிபர்)
09.10.2002, புதன்கிழமை பிப530 மணி
181 வது 'அறிவோர் ஒன்று கூடல்'- திருக்குறள்ஆய்வு விடயம் : பாளி, சிங்கள இலக்கியங்களில் திக்குறட் கருவூலங்கள். நிகழ்த்துபவர் : பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
10.10.2002 வியாழக்கிழமை மாலை 6.00 மணி.
வில்லிசைப் புலவர் - கலாபூசணம் சின்னமணி குழுவினரின்வில்லிசை 'சத்தியவான் சாவித்திரி
16102002.புதன்கிழமை பி.ப. 530 மணி
182 வது 'அறிவோர் ஒன்றுகூடல்'-திருக்குறள் ஆய்வு 18.10.2002வெள்ளிக்கிழமை பி.ப. 5.30 மணி
94 வது நூல்நயம் காண்போம்"
நூல் : தெய்வம் பேசுவதில்லை (சிறுகதைத் தொகுதி) நூலாசிரியர் : தமிழ்மணி ந.பாலேஸ்வரி நயம் காண்பவர் : சோ.ரஞ்சகுமார்
23.10.2002 புதன்கிழமை பிப. 530 மணி 183 வது 'அறிவோர் ஒன்று கூடல்' - திருக்குறள் ஆய்வு
‘ஓலை’ பத்தம் 12

25.10.2002 வெள்ளிக்கிழமை பிப. 530 மணி
95 வது நூல்நயம் காண்போம்"
நூல் : டொமினிக் ஜீவா கதைகள் (சிறுகதைத் தொகுதி) நூலாசிரியர் : டொமினிக் ஜீவா நயம் காண்பவர் : திரு.நடராஜசிவம்
27102002 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி 'அரங்கம்' ( காலாண்டு நாடக நிகழ்வு) 30.10.2002 புதன்கிழமை பி.ப.5.30 மணி
184வது 'அறிவோர் ஒன்று கூடல்' - திருக்குறள் ஆய்வு
했, 했, 했
"கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகக் குழுவின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர் : வாழ்வும் வகிபாகமும் எனும் தலைப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்று வரும் ஆய்வுத் தொடரில் செப்டம்பர் 2002 இறுதி வரை பின்வரும் பேருரைகள் நிகழ்த்தப்பட்டு நூல் வடிவம் (சிற்றாய்வேடுகள்) வெயிடப்பட்டுள்ளன. இவ்விடயத்தின் பொறுப்பை நூலகச் செயலாளர் திரு.க.குமரன்
ஏற்றுள்ளார்.
திகதி விடயம் 0 - 60s 12022000 இலங்கைத் தமிமர் யார்? எவர்? பேராசிரியர்.
(O1) இ த தமழ கா.சிவத்தம்பி
26.11.2000 இலக்கியத் தேட்டம் : கலாநிதி
(2) நவீன இலக்கியம் Gaf.Guitably Tafit 28.04.2001 பண்டைய இலங்கையில் தமிழும் கலாநிதி பரமு. (3) தமிழரும் புஸ்பரட்னம் 30.06.2001 I இலங்கைத் தமிழரின் அரசியலை பேராசிரியர். (04) விளங்கிக் கொள்ளல் அ.சிவராஜா
01.12.2001 பொருளியலின் கலாநிதி
(05) அரசியல் மு.வித்தியானந்தம்
28.09.2002 இலங்கையில் தமிழர் கல்வி - பேராசிரியர்.
(06) வளர்ச்சியும் பிரச்சிரனகளும் சோ. சந்திரசேகரன்
‘ஓலை’ Ué5ú 13

Page 9
உதவும் கரங்கள் ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
எழுத்தாளர் சுதாராஜ் அவர்கள் (திரு.சிவசாமி இராஜசிங்கம் 58/3, அனுராபுர வீதி, புத்தளம்)
B 10,000/s
أصـ
எழுத்தாளர் திருமலை சுந்தா அவர்கள் (திரு.எஸ்.சுந்தரலிங்கம் 31/1, சமாது ஒழுங்கை திருகோணமலை)
-/500 : ரூபாய் ܢ
பத்திரிகையாளர் கோபு (எஸ்.எம்.கோபாலரட்னம் 88/7, வட்டாரபொல வீதி, கல்கிஸ்ஸ)
ரூபாய் 300/-
لم
எழுத்தாளர் ஒலுவில் அமுதன் (ஆதம் லெவ்வை அலாவுதீன் ) 67. புதுப்பள்ளி வாசல் வீதி அக்கரைப்பற்று -05
ரூபாய் 200/=
ص 2
‘ஓலை’ பக்கம் 14
 
 
 
 

வாழ்க! தமிழ்ச்சங்கம் வளர்க! வண்ண ஓலை
இலங்கையாம் அழகு மண்ணின் இதயமாம் கொழும்பில் நின்று இனிமொழி தமிழை என்றும் இகமெலாம் பரப்பும் சங்கம்.
தமிழிலே தேன் கலந்து தருகின்ற "ஓலை" தன்னின. மனதிலே பதித்து வைத்து மகிழ்வுடன் போற்றுகின்றேன்.
உலகெலாம் ஓசை கேட்கும் "ஓலை"யின் வரவைப் பார்த்து மண்ணெலாம் தமிழர் வாழும் மடியெலாம் "ஒலை" வேண்டும் தமிழ்ப் பணி புரிந்து நிற்கும் தமிழ்ச்சங்க மேலோர் தம்மை, வாழ்த்திட வார்த்தையில்லை வானினும் உயர்ந்து விட்டார்
இலக்கியப் போட்டி, வாதம் இனிய நல் கவிதைமாலை திருக்குறள் ஆய்வு மன்றம் தினசரி அழகு பொங்கும்!
அறிஞரைப் போற்றச் செய்தும் ஆக்கத்தை நூலாய் நெய்தும் ஆன்மீக, அறங்கள் போற்றி ஆயிரம் பணிகள் செய்யும்,
கொழும்பிலுள்ள) தமிழ்ச் சங்கத்தின் பெருமையைப் போற்றுகின்றேன்! எழும் புனல் "ஒலை" முழ்கி இறும் பூ தெய்து கின்றேன்
- கறுவாக்கேணி முத்துமாதவன்
வாழைச்சேனை
‘ஓலை’ பக்கம் 15

Page 10
சாதனையாளன்
நாடறிந்த மேடை/வானொலி/தொலைக்காட்சிக் கலைஞரும், எழுத்தாளருமான * திரு. தாமோதரம்பிள்ளை சண்முக*நாதன் (18/5 அட்டம் பொல வீதி, கெந்தல) - சோக்கல்லோ சண்முகம் அவர்கள் 20.09.2002 வெள்ளிக்கிழமை பெளர்ணமி நாள் காலை 9.00 மணியி. லிருந்து பி.ப.7.40 மணிவரை "நானும் தமிழும்" எனும் மகுடத்தில் தொடர்ந்து ஏழரை மணித்தியாலங்கள் உரையாற்றி உலக சாதனை ஏடான "கின்னஸ்" ல் ஏற்கனவே உள்ள சாதனயை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இல:58, தர்மராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனுசரணையுடன் சட்டத்தரணி திரு.சோ.தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வுலக சாதனை நிகழ்வினை திரு.பொன் வல்லிபுரம் (அறங்காவலர். மயூரபதி அம்மன் தேவஸ்தானம், வெள்ளவத்தை) அவர்கள் தொடக்கி வைத்தார். புலவர் ஹாசிம் உமர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்வருவோர் நடுவர்களாகப் பணியாற்றினர். 9.00 மணி முதல் 11.30 மணி வரை
பேராசியர் சி.சிவசேகரம் (பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழகம்) திரு.சி.வன்னியகுலம் (செய்தி ஆசிரியர் - வீரகேசரி)
2
3. தி.ச.இலகுப்பிள்ளை (கட்டிட ஒப்பந்தக்காரர்)
4
5
. திரு.ஆ.பிரான்சிஸ் ஜெனம் (நாடகக் கலைஞர்)
. திருமதி.அ.புவனேஸ்வரி (உள்நாட்டு இறைவரித் திணைக்களம்) 11.30 மணி முதல் 2.00 மணி வரை 6. திரு.சி.கா.செந்திவேல் (பத்திரிகையாளர்) 7. திரு.கா.வைத்தீஸ்வரன் (ஓய்வுபெற்ற சுகாதார வைத்திய கல்வி அதிகாரி) 8. திரு.மா.கணபதிப்பிள்ளை (ஆசிரியர், றோயல் கல்லூரி) 9. திரு.த.கோபாலகிருஷ்ணன் (பத்திரிகையாளர்) 10. கலாநிதி.செல்வி.திருச்சந்திரன் (ஊடகவியலாளர்) 2.00 மணி முதல் நிறைவு வரை 11. திரு.இ.தம்பையா (சட்டத்தரணி) 12. வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன் 13. திருமதி.கமலினி செல்வராஜன் (ஊடகவியலாளர்) 14. இளையதம்பி தயானந்தா (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
"gá06v” Uá3ó 16
 
 
 
 
 
 
 
 

காலை 8.30க்கு ஆரம்பித்து மங்கலவிளக்கேற்றல், மாவை வரோதயனின் வரவேற்புரை. திரு.சோ.தேவராஜாவின் தலைமையுரை, திரு.பொன். வல்லிபுரம் அவர்களின் தொடக்கவுரை ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் சரியாக மு.ப.9.00 மணிக்குத் தனது தொடர் உரையை ஆரம்பித்த "சோக்கல்லோ சண்முகம்" அவர்கள் தனது பிறந்த கிராமமான ஏழாலையின் இயற்கை எழில்கள். தனது தந்தை, தாய், தனது இளமைக்கால வறுமையின் கொடுமையான அனுபவங்கள், தன்மீது அன்பு செலுத்திய ஆத்மாக்கள், பராய காலத்து நண்பர்கள் என்று நீண்டு செல்லும் தன் வாழ்க்கை அனுபவங்களை உணர்ச்சி மேலிட சிலவேளைகளில் கண்கள் கலங்கிய போதும் உணர்ச்சிப் பெருக்கு தனது உலக சாதனை முயற்சிக்கு ஊறு விளைவித்து விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கையுடன் தன்னை உடனடியாகவே சுதாகரித்துக் கொண்டு எத்தகைய இடர்ப்பாடுகளுமின்றி ஆற்றொழுக்காக அவர் ஆற்றிய ஊரை அதிசயிக்க வைத்ததுமின்றி சிலவேளைகளில் அவதானிப்பாளர்களைப் புல்லரிக்கவும் வைத்தது. இடையி. டையே அமைந்த அங்கத சுவை அவரது உரையின் இன்னுமோர் சிறப்பு. தனது வாழ்க்கை அனுபவங்களையும் தமிழோடு தனக்கிருந்த உறவையும் தர்மாவேசத்துடன் அவர் வெளிப்படுத்தினார். போலிகளை நிராகரித்து நிஜம்களை வெளிச்சத்துக்குக் கொணர்ந்தார். தனது தொடர் உரையை ஓர் "சத்திய வேள்வி" யாகவேநிகழ்த்தினார், அவருடைய உரையின் ஒவ்வொரு வசனத்திலும் உண்மை வெளிப்பட்டது. அதனால் தானோ என்னவோ சாதாரணமாக அரைமணிநேரம் ஒருவரின் பேச்சைக் கேட்டாலும் அலுப்புத்தட்டிவிடும் வழமையான நடைமுறைக்கு மாறாக நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருமே அவரது முழு உரையையும் உன்னிப்பாகச் செவிமடுத்தனர். இந்நாட்டின் முதுபெரும் இடதுசாரி அரசியல்வாதியான திரு.எஸ்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் தனது தள்ளாத வயதிலும் வந்திருந்து அவரை வாழ்த்தியமை குறிப்பிட வேண்டிய தொன்றாகும். அவரது முழு உரையும் ஒலி/ஒளிப்பதிவுகள் செய்யப்பட்டன. நடுவர்கள் தங்கள் குறிப்புகளை அதற்கென வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் பதிவு செய்தார்கள். அவதானிப்பாளர்களும் தங்கள் அபிப்பிராயங்களையும், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும், வரவையும் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். பத்திரிகைகள், சஞ்சிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இவை எல்லாமே ஆவணங்களாக கின்னஸ்நிறுவனத்துக்கு அனுப்பப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மு.ப.9.00 மணியிலிருந்து பி.ப.4.35 மணிவரை ஒரு நீர்த்துளி கூட அருந்தாமல் நின்று கொண்டே உரையாற்றி முன்புகின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டிருந்த கியூபா ஜனாதிபதி பிடல்காஸ்ரோவின் 4 மணித்தியாலம் 29 நிமிடங்கள் உரை உலக சாதனையை முறியடித்து அவதானிப்பாளர்களின் கைதட்டல்களுக்கிடையே குளிர்பானம் அருந்தியவண்ணம் தொடர்ந்தும் நின்று கொண்டே மாலை - 7.40 மணிவரை உரையாற்றி புதிய உலகசாதனையொன்றைப்படைத்தார். சென்ற "ஒலை" 07 வது இதழில் "வென்று வருக" என இவரை வாழ்த்தியனுப்பினோம். இவ்விதழில் காலத்தை வென்று வந்துள்ள இக்கலைஞரை - கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினரை - வெற்றித் திருமகன் நீ என விளித்து "நூறாண்டுகாலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க" என உளமாரவும் உவகைபொங்கவும் மீண்டும் வாழ்த்துகின்றோம். - ஆசிரியர்
‘ஓலை’ பக்தம் 17

Page 11
கதிரவன் தன்பொன் நிகர் ஒளி தரக் கிளர்ந்தெழும் குணதிசை எனப் பெயர் பெறும் கிழக்கின் பால் - நீல கடலலை நிலமகள் மேனியை ஆரத் தழுவி நித்தம் முத்தம் அள்ளிச் சொரிந்திடும் ஏரிகாண்திக்கில் 'மீன்பாடும் தேனாடு' எனப் போற்றப்பெறுவது மட்டக்களப்பு.
அங்கு வளைந்தோடும் வாவியினடியில் பாடும் மீன்கள் எழுப்பும் ஓசை பற்றி சுவாமி விபுலானந்த அடிகளார் கூறுவதாவது:
யாழ் வீணையில் இசைவுடைய நரம்புகள் பலவற்றை மீட்டும் போது எழுகின்ற பண்போன்ற இன்னிசை ஒலியொன்று இலங்கையின் கிழக்குக் கரையிலுள்ள வாவியினுள்ளே கேட்கப்படுகிறது' என்று கூறுகிறார். அதற்கு விளக்கமும் தருகிறார்.
"மணி, கடல், யானை, குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் எனக் கூறப்பட்ட பத்து வகை நாதங்களுள்ளே சங்க நாதமானது முரற்சி, முழக்கம் என இரு வகைப்படுமென அறிஞர் கூறுகிறார்.
"முந்நீர் வலம் புரி சோர்ந்தசைந்து வாய் முரண்று முழங்கியீன்ற மெய்நீர்த் திருமுத்து" எனச் சீவக சிந்தாமணி ஓம்படைச் செய்யுளினுள்ளே இருவகை நாதமும் கூறப்பட்டன.
‘ஓலை’ பக்கம் 18
 

"மோது முது திரையான் மொத்துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம்" எனச் சிலப்பதிகாரம் முரற்சியை மாத்திரம் கூறுகின்றது. இம் முரற்சியானது சங்கினது வளர்ச்சிக்கேற்ப நாதம் வேறுபட்டுத் தோன்றும்.
"மட்டக்களப்பு வாவி கடலொடு கலப்பதாதலின் ஒருவகைச் சங்கு வாழ்வதற்கு இடமாயிற்று. அளவிற் சிறியனவும், பெரியனவுமாகிய சங்குகள் இடையிட்டு முரல்வதனாலே ஏற்படும் ஒசையின் சேர்க்கை இசைத்தன்மை பெற்றுத் தோன்றுகிறது" என்கிறார் அடிகளார்.
அதன்கண் அவ்வித இன்னிசையெழுப்பும் "பாடும் மீன்கள்" எனப் பட்டனவென்க. அவை ஊரி வகையைச் சேர்ந்தவையாகும்
பழந்தமிழர் எங்கெல்லாம் இசை வழங்கினரென்பதையும், இயற்கையாய், செயற்கையாய் அமைந்த இசையை அவர்கள் எவ்வாறு ரசித்தனரென்பதையும் அடிகளார் அழகாகச் சொல்கிறார்.
"புனத்தினும் பொழிலிலும். குன்றத்தின் மீதும், மருதத்தண்பணையிலும். முல்லைப் புறவத்திலும், கடற் சானலிலும், கான்யாற்றடை கரையிலும், அருஞ்சுரத்திலும், மனையினகத்தும், மன்றத்தினுள்ளும், தேவர் கோட்டத்தும், அறவோர் பள்ளியிலும், இசை வழங்கிய நாடு தமிழ் நாடு, மெல்லென்றிசைக்கும் தென்றலினுயிர்ப்பிலும் இழுமென இழிதரும் அருவி நீரிலும், நறுமலரில் முரலுகின்ற தேன் வண்டின் ஒலியிலும் இசையினைக் கேட்டு உவந்த தமிழர் பாடண்மகளதுமிடற்றுப்பாடலையும், பாணனிசைத்த யாழ் பாடலையும், குழலோன் தந்த வங்கியப்பாடலையும் செவியாரக் கேட்டு இன்பம் எய்தினர்" என்கிறார்.
பாடும் மீன்கள் நிலாக் காலங்களிலேயே இசையெழுப்புவது வழமை. உலகின் ஒரு சில இடங்களில் மட்டும் வாழும் பாடும் மீன்கள் மட்டக்களப்பு வாவியிலும் வாழ்வதனால் பேருவகை கொண்ட அடிகளார் அதனைத் தமிழ் கூறுநல்லுலகு அறியும் வண்ணம் வண்ணத் தமிழில் எடுத்துரைக்க எண்ணம் கொண்டனர். அதன் கண் செந்தமிழ் நாட்டில் வெளிவந்ததோர் தெள்ளு தமிழ் ஏட்டில் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளுமோர் செய்யுள் செய்தார். அது நீண்டதோர் செய்யுள்.
நீரினடியில் செவிக்கின்பம் தரும் ரீங்கார இசை மீட்டும்பாடும் மீன்களின் சிருங்கார உருவம் அச் செய்யுளில் சொல்லப்படுகிறது. கற்பனை இழையோட பெண்களின் சாயலில் காண்பிக்கப்படுகிறது.
‘ஓலை’ cJású 19

Page 12
"பைம்புனலின் மேற்படர்ந்த பாசிநிகர் கூந்தலார்
அப்பொன்னின் மேனி அரையின் கீழ் மீன் வடிவம்
செங்கமலம் போற் கரங்கள் திங்கள் முகத்திற்
பொங்கிய முன்முறுவல் பூத்தார் புலமையார்."
மினுமினுக்கும் அழகான பொன் மேனியுடைய அப்பெண்களுக்கு பட்டுப்போல் பளபளக்கும் பாசியையொத்த கூந்தலாம். செந்தாமரை போன்ற மென்மையான கரங்களாம். சந்திரன் போன்று ஒளிவீசும் முகமாம். இடையின் கீழ் மீனுடலாம்!
"அப்பெண்களுக்கு அடிகளார் சூடிய பெயர் நீரர மகளிர் என்பதாகும்! நீரர மகளிர் என்றால் நீரில் வாழும் தெய்வப் பெண்கள் என்று பொருள். அந்நீரரமகளிர் பாடுவதான பாடல் ஒன்றும் செய்யுளின் நடுவே வருகின்றது.
'நீல வானிலே நிலவு வீச வே மாலை வேளை யே மலைவு தீருவோம் சால நாடி யே சலதி நீரு ளே பாலை பாடி யே பலரொ டாடுவோம்" "இவ்வினிய பாடலைப்பாடும்நீரரமகளிர் எண்ணிக்கையில் எழுவராகக் காண்பிக்கப்படுகின்றனர்.அந்த மங்கையர் எழுவர் யார்? அதுவே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் ஏழிசை,
ஏழிசையின் பிறப்பினைக் கூறுவதற்காகச் சுவாமி விபுலானந்த அடிகளார் கற்பனை கலந்து கற்கண்டுச் சொற் கொண்டு படைத்த இச்செய்யுள் 1940ம் ஆண்டு தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழில் ஏட்டில் வெளியாயிற்று. இச்செய்யுட் பகுதி 1947ல் வெளிவந்த யாழ் நூலிலும் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் பாடும் மீன்கள் எழுப்பும் இசை பற்றி சர்.எமர்சன்ற் ரெனன்ற் தமது "இலங்கை விவரணம்" நூலில் சொல்லியுள்
ளார். மேலும் பல மேற்கு நாட்டவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்து பாடும் மீன்கள் எழுப்பும் ஓசையை ஆராய்ந்தும், ஒலிப்பதிவு செய்தும் உள்ளனர்.
இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி. யிலுள்ள ஒலிப்பதிவு நாடாவில் பாடும் மீன்களின் இசையையாவரும் கேட்டு இன்புற முடியும்."
நன்றி : "தாய்மொழி"
14. 0.99
‘ஓலை’ பக்தம் 20

நறுக்கு
இருளின் துணை இரவுத் திருவிழா இருட்டில் கோவிலில்
கல்லைக் கடலையில்
கலந்து, விற்றவள் செல்லாக் காசையும்
சேர்த்துப் பெற்றனள்
6Tujuel)
ஒரு றாத்தலுள்ளவரை ஓயாத சுகத்திற்காய் தெருவெல்லாம் புழுதிகளைத் தீண்டாதே வருநோயால் இடிபட்டழிந்தழுகி இறவாத பிணமாகி அடிக்கோலும் காணாய் அறி.
வீரவிதான N இளைத்துக் கிடந்த இனவாதக் கிழவனை எழுப்பி நிறுத்திய 'வயாகரா' மாத்திரை
- ܠ
கவிஞன் அதர்மம் நாட்டில்
அதிகரிக்கும் போது கண்ணன் மட்டுமல்ல
கவிஞனும் பிறப்பான்
‘ஓலை’ பக்தம் 21

Page 13
>INKAN - *371 ܓ ട്ട്]ീ தமிழின் முதல் அகராதி
புரியாத சொற்களுக்குரிய பொருளை அறிந்து கொள்ள 'அகராதி" உதவுகிறது. தமிழில் அகராதி தோன்றுவதற்கு முன் சொற்களின் பொருள் அறிய நிகண்டுகள் பயன்படுத்தப்பட்டன. நூற்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற பாக்களாலேயே நிகண்டுகள் அமைக்கப் பெற்றன. தமிழில் முதலில் தோன்றிய நிகண்டுகள் திவாகரம்" பிங்கலம்' என்பனவாகும். பின்னர் சூடாமணி, கயர்தரம், பாரதிதிபம்', பொதிகை', 'தீபிகை, முதலிய நிகண்டுகள் தோன்றின. பாக்களால் அமைக்கப்பெற்ற நிகண்டுகளைப் படித்துச் சொற்களின் பொருள் அறிய புலமை பெற்ற புலவர்களால் மட்டுமே முடிந்தது.
ܓ
A
இந்த நிலையை மாற்றமுற்பட்டவர் கத்தோலிக்க மதத்தைப் பரப்பவென ஐரோப்பாக் கண்டத்தின் இத்தாலிநாட்டின் ரோம்நகரிலிருந்துதத்துவப் போதகராக தமிழ் நாட்டிற்கு 1711 இல் வருகை தந்த கான்ஸ்டன்டைன் (ografů Gu67bdé (Constantine Joseph Beschi) 67gyb Guu Jiř Gabr60jr. ஐரோப்பிய பாதிரியாவார். இவர் தனது பெயரை முதலில் தமிழில் தைரியநாதர் என்றும் பின்னர் வீரமாமுனிவர் என்றும் மாற்றிக் கொண்டார்.
இவர் தமிழ் மொழியைக் கற்று, நிகண்டுகள் அனைத்தையும் நீக்கமறப் படித்து, தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் எழுத்தெண்ணி சொல் எண்ணிக் கற்று, பகல் இரவுபாராது ஊன் உறக்கமின்றிப் பல்லாண்டுகள் உழைத்துத் தொகுத்த பல்லாயிரம் தமிழ்ச் சொற்களை 'பெயர், 'பொருள்', 'தொகை', 'தொடை' என நான்கு வகையாக வகுத்து தனித்தனி ஏடுகளில்ஏற்றிப்பின்னர் முழுச் சுவடியாக்கி*சதுரகராதி எனப் பெயர் சூட்டி வெளியிட்டார்.
வீரமாமுனிவர் தமது நாற்பத்தைந்தாவது அகவையில் தொடங்கிய இவ் அரிய பணி ஐம்பத்திரண்டாவது அகவையின் போதுதான் நிறைவு பெற்றது. தமிழ்மாழியின் வரலாற்றில் 1732ம் ஆண்டு ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். ஆம்! அந்த ஆண்டில்தான் தமிழ் மொழி தனது முதல் 7 அகராதியான “சதுரகராதி'யைப் பெற்றது.
Y కె, تھی۔
‘ஓலை’ பக்தம் 22

பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
திமிழ் வளமுள்ள மொழி. அது வளம் பெற்று வளர்ந்து வந்துள்ளது. அந்த வளத்திற்கு உரமூட்டி வாட விடாது பாதுகாத்தலே எம் கடமையாக அமைந்துள்ளது. பொதுப் பெயர்களும் பொது வினைகளும் நிறைய இருத்தல் அம் மொழியினரின் நாகரிகத்தையும் பிரதிபலிக்கும். உதாரணமாக, கால் என்ற சொல் உடம்பின் உறுப்பாகிய கால் என்பதைக் குறிக்கின்றது. உடம்பின் அளவில் காற்பங்கான பாகத்தைக் குறிக்கும் வளமான சொல்லாகவும் விளங்குகிறது. அது மட்டுமன்றி அது மனிதனுடைய கால், விலங்கின் கால் பறவையின் கால் ஆகிய பலவற்றிற்கும் பொதுவான பெயராகவும் அமைந்திருக்கிறது. சில மொழிகளில் ஒவ்வொரு வகைக்கும் தனித்தனிச் சொற்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் தாயுடன் பிறந்தவர்க்கு (சகோதரனுக்கு) uncle என்பர். தந்தையுடன் பிறந்தவர்க்கு (சகோதரிக்கு) aunt என்பர். தந்தையுடன் பிறந்த ஆணிற்கு சிற்றப்பன், பெரியப்பன் என்றும் உடன் பிறந்த பெண்ணிற்கு அத்தை என்றும் வழங்குவர். ஆனால், அத்தை, சிற்றன்னை, சின்னம்மா . பெரியன்னை, பெரியம்மா எல்லோரையும் "aunt'என்றே அழைக்கின்றோம். தமிழிலுள்ள பொதுச் சொல் நுண்பொருட் சொல் என்பவற்றின் சிறப்பைப் பற்றிப் பேசினோம். ஆனால் "aunt' போன்றதோர் பொதுச் சொல் தமிழில் இல்லையென்பது உண்மை. அது தமிழிற்குப் பெரிய குறைபாடு அன்று.
"கீழைத்தேச மொழிகளில் , சமுதாய ஏற்றத் தாழ்வுகளின் மிகுதியினால் உயர்ந்தோரை நோக்கிப் பேசும் போது பலவகை உயர் சொற் கிளவிகள் உள்ளன." என ஐரோப்பியர் குறை கூறுவர். மேலும், பேசுவோரின் தாழ்வு மனப்பான்மை இம்மொழிகளில் பிரதிபலிக்கின்றன என்பர்.
நீ. நீர், நீங்கள். தாங்கள் என யார் யாரிடம் கூறுகின்றோம் என்பதை எண்ணிப் பாருங்கள். நீயென வேலையாளிடமோ, சிறுவர்களிடமோ கூறுகின்றோம்.நீர் என வயது, தரம், பதவிஒத்தவரிடம் கூறுகின்றோம்.நீங்கள் எனச் சிறிது உயர்ந்தவரிடம் கூறுகின்றோம். தாங்கள் என மிக உயர்ந்தவர்களிடம் கூறுகின்றோம். நீர் என்பது மரியாதைப் பன்மையாக இருந்தும் இலங்கையிலுள்ள கிழக்கு மாவட்டத்தில் வழங்குவதில்லை.
‘ஓலை’ பக்தம் 23

Page 14
இவற்றை முறையாக வழங்காமையால் சமூகத்தில் பல இடர்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உள. நீர் என்பது தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களிலேயே இடம் பெற்ற சொல், அதனைப் படித்த நண்பர் ஒருவருடன் உரையாடும் போது நீர் எனக் குறிப்பிட நேர்ந்தது. நண்பருக்குக் கோபம் வந்துவிட்டது. "நீங்கள், நீர் என அழைப்பது பிழை. நீங்கள் என்று கூறக் கூடாதா?" என்பது அவரது விசனம், தாழ்ந்த சமுகத் தினரைத்தான் "நீர்" என அழைக்கிறார்கள். என்னும் முன்னபிப்பிராயத்தினால் நேர்ந்த விளக்கவீனம் இது. தொல்காப்பிய நன்னுற் சூத்திரங்களை (தண்மையானான் யா நா முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ அல்லன படர்க்கை யெல்லா மெணல் பொது) நண்பருக்கு நினைவூட்டியதும் நண்பர் தம் தவறை உணர்ந்து கொண்டார்.
உயர்வு தாழ்வு மனப்பான்மையால் "ஆமாம்" என்று ஒத்தவர்களிடம் பேசுபவர்கள் கூட உயர்ந்தவர்களிடம் "ஆமாங்க" (ஆமாங்கள்) என்று கூறுகிறார்கள். குறை கூறும் ஆங்கிலேயரிடையேthou, thee,Ye,you என்று பல சொற்கள் இருந்தன. ஆனால் இன்று முன்னிலையிடப் பெயராக y0u என்ற ஒரு சொல் மட்டுமே வழங்குகிறது.
"நீ" என்று உயர்ந்தவரை விளிக்க முடியாது. எனினும் கடவுள் இந்த மொழியிலக்கணங்களைக் கடந்தவராவார். அவரை விளிக்கும் போதோ, முன்னிலைப்படுத்தும் போதோ "நீ" எனக் குறிப்பிடுகின்றோம். குழந்தையை "நீ" என்று முன்னிலைப்படுத்துதல் போல் இறைவனை தெய்வத்தை நீயென அழைக்கலாம். கடவுள் கோபிக்க மாட்டார். மேலும், குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற உண்மையும் தெளிவாகின்றது. திருநாவுக்கரசு நாயனார் இறைவனை நோக்கிப் பாடிய தேவாரம் ஒன்றில்
"அப்பன் நீ அம்மை நீ ஐய னும் நீ அன்புடைய மாமனும் மாமி யும் நீ
so a a a ஏறுரர்ந்த செல்வன் நீயே"
என்று பாடியிருக்கின்றார்.
மேலும் கவி செய்யும் புலவனுக்கும் இந்த 'லைசென்ஸ்' - உத்தரவுப் பத்திரம் உண்டு. மனிதன் சமூகப் பிராணி, எனவே சமூகத்தின் நாகரிக வளர்ச்சியைச் சொல்வளம் பிரதிபலிக்க வேண்டும்.
‘ஓலை’ பக்கம் 24

அன்று ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வீட்டில் வேலையொன்றும் இல்லாமல் சற்று ஒய்வாக இருந்தேன். காலாற நடந்து ' ரவுணு' க்குப் போய் வரலாம் என்ற எண்ணமேற்பட்டது. சுவரிலே கொழுவியிருந்த சேட்'டையெடுத்துப் போட்டுக் கொண்டு வீட்டு முற்றத்திலிருந்து ஒழுங்கைக்குள்ளே இறங்கி பின் பிரதான பாதையில் ஏறி 'ரவுனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
போகும் வழியில் என்னுடைய சேட்' 'பொக்கற்றுக்குள் சத்தம் கேட்டது. காதைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தேன். இருவர் வாக்குவாதப்படும் இரைச்சல். "உன்னை விட நான் பெறுமதியில் கூடியவன். ஆதலால் நீ எனக்குக் கீழானவன்தான். திரும்பவும் சொல்கிறேன். மனதில் வைத்துக் கொள்"
"பொக்கற்று"க்குள் இருந்த இருபத்தைந்து சத நாணயத்தைப் பார்த்து ஐம்பது சத நாணயக் குற்றி இறுமாப்போடு இப்படி எச்சரித்தது. "எமக்குள்ளே என்ன மேலும் கீழும். இருவரும் ஒரே உலோகத்தினால்தானே உருவாக்கப்பட்டிருக்கின்றோம். மனிதன்தானே உலோகமாயிருந்த நம்மை உருக்கி நாணயங்களாக்கி வெவ்வேறு பெறுமதியைத் தந்து பெயர் சூட்டி நடமாட விட்டிருக்கின்றான்"
இருபத்தைந்து சத நாணயம் ஐம்பது சத நாணயத்தைப் பார்த்து இவ்வாறு எடுத்துரைத்தது. "இளையவனாக இருந்து கொண்டு எனக்கு விளக்கம் சொல்கிறாயா? இதோ! உன்னை என்ன செய்கின்றேன் பார்" - என்று கோபம் கொப்பளிக்கக் கூறிய ஐம்பது சத நாணயம் இருபத்தைந்து சத நாணயத்தை நோக்கி ஆவேசமாக மோதிற்று. தொடர்ந்து இரு நாணயங்களும் ஒன்றோடொன்று டணார்! டணார்! என்று மோதிவிழும் சத்தம். சண்டை உக்கிரமாகிற்று. சண்டையை நிறுத்த வழியென்ன வென்று மண்டையைக் குடைந்தேன். நல்லதொரு தீர்வு மனதில் தோன்றிற்று. வழியில் இருந்த கடைக்குச் சென்று "பொக்கற்று"க்குள் கிடந்த ஐம்பது சத நாணயக் குற்றியைக் கொடுத்து இரண்டு இருபத்தைந்து சத நாணயங்களாக மாற்றி மீண்டும் "பொக்கற்று"க்கள் போட்டேன்.
சத்தம் தானாகவே நின்றது. சண்டையும் இல்லை. சச்சரவும் இல்லை.
&
‘ஓலை’ பக்கும் 25

Page 15
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி (01102002) இக்கட்டுரை பிரசுரமாகிறது
இலங்கையில் முதலாவதாக தமிழில் வெளிவந்த
பிள்ளைகளுக்கான சஞ்சிகை
-. O ԱIհlճII
சோ. தேவராஜா
முதலாவது இதழ் 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி வெளி வந்தது. 2002ம் ஆண்டு ஜூலை மாதம் 01ம் திகதி கடைசி இதழ் வெளிவந்தது. இருவாரங்களுக்கு ஒர் இதழாக வெளியிடப்பட்டது. 2003ம் ஆண்டு ஜனவரியிலிருந்து மீண்டும் தொடர்ந்து வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
'இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் பத்திரிகை" என்ற மகுட வாசத்துடன் பூங்கா வெளிவந்தது. இவ்விதழின் விலை ஆரம்பத்தில் 12 ரூபா 50 சதமாகும். கடைசி இதழில் 15/= எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 16 பக்கங்களில் தொடர்ந்து வெளி வந்துள்ளது. இதன் ஆசிரியராக அஸிஸ் நிஷார்டீன் அவர்கள் பணிபுரிந்துள்ளார்.
அட்டைப்படமும் பின் அட்டையும் வண்ணப் படமாக காட்சியளிக்கின்றன. அட்டைப்பட வர்ணங்களில் பிள்ளைகள், மிருகங்கள், இயற்கை காட்சிகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளன. பின் அட்டையில் அரும்புகள் அறிமுகம் என்ற தலைப்பில் பாடசாலைப்பிள்ளைகளின் படங்கள் உள்ளன. இச்சஞ்சிகையின் முதற்பக்கங்களில் ஆங்கில எழுத்துக்களில் முதல் எழுத்தைக் கொண்டு ஆரம்பமாகும் படங்களுக்கு வர்ணங்கள் திட்டும்படி கேட்கப்பட்டுள்ளன.
'ஒரே மாதிரியாக இண்ைடு படங்கள் இருக்கின்றன கண்டுபிடியுங்கள்' எனப் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
படங்களை அச்சிட்டு அவற்றின் ஆங்கிலப் பெயர்களை அட்டவணை. யில் கண்டுபிடித்து விடும்படி வேண்டப்படுகின்றனர். படத்துடன் இரண்டு பக்கச் சிறுகதை ஒவ்வொரு இதழிலும் வெளிவந்துள்ளன.
‘ஓலை’ பக்கும் 26
 
 
 
 
 
 
 

சித்திரப்பக்கம் என்ற பகுதியில் பிள்ளைகளால் வரையப்பட்டுள்ள படங்கள் உள்ளன.
பிள்ளைகளுக்கான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
படங்கள் தரப்பட்டு வர்ணந் தீட்டும் போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன.
வரைதல் கற்போம் என்ற பகுதியில் எண்கள், சதுரப் பெட்டிகள் வரையப்பட்டு அதைப் பிள்ளைகளிடம் தொடுத்து வரையும் பயிற்சி பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது.
புள்ளிக் கோடுகளை இணைத்து வர்ணம் திட்டும்படி படங்கள் வரையப்பட்டுள்ளன. குறுக்கெழுத்துப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
விடுகதைகள் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. படங்கள் வரையப்பட்டு கதை ஒன்று சொல்லும்படி பிள்ளைகள் வேண்டப்படுகின்றனர்.
பிள்ளைகளின் அறிவுத்திறன்களை வளர்க்கும் வகையில் படங்களும், கேள்விகளும் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் கதைகளும் வெளியிடப்பட்டுள்ளன. விஞ்ஞானக் குறிப்புகளும் கண்டுபிடிப்புகளும் விளக்கங்களும் உள்ளன. இலைகளால் உருவங்கள் அமைப்போம் என்றவாறு படங்கள் போடப்பட்டுள்ளன.
பூங்கா வாசகர்களை ஆசிரியர் 'தம்பி தங்கைகளே' என்றே குறிப்பிடுகின்றார். பிள்ளைகளின் சொந்த ஆக்கங்கள் அரங்கம் என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.
தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கு பெறும் மாணவர்களுக்குரிய மாதிரிப் பயிற்சிகள் அவ்வப்போது தரப்பட்டுள்ளன.
'அழகிய கையெழுத்துப் போட்டி' என்ற பகுதியிலே பூங்கா தரும் வசனங்களை அழகாக உறுப்பமைய எழுதி அனுப்பும் பிள்ளைகளின் சிறந்த கையெழுத்துக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிர்ப்போட்டி நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பிள்ளைகள் பலர் பங்கு பற்றியுள்ளனர்.
பிள்ளைகளின் சிங்களமொழி அறிவை வளர்த்திட சிங்களம் கற்போம்" பகுதியும் ஆரம்பமாகியுள்ளது. சிங்களப் பாடல்களும் கவிதைகளும் வந்துள்ளன.
சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பற்றிச் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. பற்களைப் பாதுகாப்போம் போன்ற பல விடயதானங்கள் வந்துள்ளன. உலக அதிசயங்கள் பற்றிய குறிப்புகள் வந்துள்ளன.
கடதாசியால் உருவங்கள் செய்யப்பட்டுள்ளன.
‘ஓலை’ பத்தம் 27

Page 16
தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்ட மாவை நித்தியானந்தன் எழுதிய 'சின்னச் சின்னக் கதைகள்' என்ற நூலிலிருந்தும் சில கதைகள் பிரசுரமாகியுள்ளன. அவையாவன: கழுதையைச் சுமந்தவர்கள், நாயும் எலும்புத் துண்டும் (புத்தக அறிமுகம்). தாத்தாவும் பேரனும், கொக்கும் நரியும், மாடும் சுண்டெலியும் போன்றனவாகும்.
கதைகள் பின்வரும் தலைப்புகளில் படங்களுடன் வெளிவந்துள்ளன.
கல்வியினால் முன்னேறிய சிறுவன் திருடனும் அரக்கனும் சம்பளம் கொடுத்த முதலாளி திருடனும் அரக்கனும் கழுதையும் நரியும் அறிவுரை கேளா மீன் நன்றியுள்ள கீரிப்பிள்ளை சோம்பேறியும் சூரியனும் பழிக்குப் பழி ஒநாயும் சிறுவனும் எறும்பும் வெட்டுக்கிளியும் சேதுவும் மாதுவும் அதிக ஆசை கூடாது லலிதாவுக்கு கிடைத்த விசேட பரிசு (தொடர்கதை) தாத்தாவும் பேரனும் அணிலும் அரசனும் விடாமுயற்சி வெற்றி தரும் வால் இழந்த குரங்கு நாயும் எலும்புத் துண்டும் வாயடக்கம் இல்லாத ஆமை முட்டாள் முதலை மழை தரும் மரங்கள் மாடும் சுண்டெலியும்
பூச்சாடி கொக்கும் நரியும் ஊக்கத்தால் உயர்ந்தோன் நல்ல மாணவன் மந்திர கத்தரிக்கோல் நிலாவைக் கரம்பற்றிய அன்னம் நன்றி மறவாதவன் எறும்பும் புறாவும் அறிவற்ற ஆடு
‘ஓலை’ பக்கம் 28

நன்றி மறவாத பாம்பு
முயலும் சிங்கமும்
கூடு இழந்த குருவி
ஒநாயும் நிழலும்
குருவிக் குஞ்சும் நெருப்பும்
காகமும் பாம்பும்
ஒற்றுமை வெற்றியைத் தரும்
அட்டைப்படங்களில் வெளிறாட்டுச் சிறுவர்களின் படங்களும்
பறவைகளின் படங்களும் உள்ளன.
என்னுடைய பார்வைக்கு 44 இதழ்கள் கிடைக்கப் பெற்றன. 2000ம் ஆண்டு மார்கழி மாத இதழ் முதல் 2002ம் ஆண்டு ஜூலை இதழ்களே அவை, இச்சஞ்சிகைகளுக்கான பொறுப்பு ஆசிரியர் மட்டுமே என்பதையே அறிய முடிகிறது. இச்சஞ்சிகை கொழும்பு-12ல் இருந்து வெளிவந்துள்ளது. இத்தகைய சஞ்சிகையொன்றின் வெளியீட்டின் பொறுப்பு தனி நபர்களிடம் மாத்திரம் இருப்பின் அது வெறும் தனிப்பட்ட விவகாரமாகிவிடும்.
பிள்ளைகள் பற்றிய சஞ்சிகையொன்று வெளிவந்தது பற்றியே அறியாமலே இருந்துள்ளோம்.
இத்தகைய சஞ்சிகையின் பொறுப்புகள் பகிரப்பட்டு விநியோக சீராக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டு இலாபகரமாக நடாத்தப்பட வேண்டும். தொழில் முறையில் நூல் வெளியீட்டில் சாதனை படைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
பிள்ளைகள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை பாடசாலை விவகார. மாக்காமல் வீட்டுப்பழக்க வழக்க முறையாக பெற்றோர், உறவினர் மாற்றும் பொழுது பிள்ளைகளுக்கான சஞ்சிகை பரவலான விநியோகத்தைப் பெறும்.
பிள்ளைகளின் பிறந்த தினம் போன்ற நிகழ்வுகளிலும் வீடுகளுக்கு விருந்தினராகச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் உறவினர்களும் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைப் பரிசளிப்பதற்கு மாறாக புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கையளிக்கும் பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கான சஞ்சிகையின் வாசகர்கள் பற்றிய தெளிவு ஆசிரியர் குழுவுக்கு இருக்க வேண்டும். மழலைகள், குழந்தைகள், பிள்ளைகள், பருவமானவர்கள் என்ற பேதங்களைப் புரிந்து சஞ்சிகை தனது வாசகப் பரப்பைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் என்போரை மாணவர்கள் என வகைப்படுத்தி அவர்களது பாடசாலைக் கல்வியின் போட்டிப் பரீட்சைக்குரிய மாதிரி வினாக்களை வெளியிடுவதோ அப்பரீட்சைகளுக்குப்பிள்ளைகளைத் தயார் செய்வதோ
‘ஓலை’ பக்கம் 29

Page 17
பிள்ளைகளுக்கான சஞ்சிகை அமையும் போது மகிழ்வூட்டலை இழந்து சுமையாகி வேதனையாகி விடுகிறது.
அறிவூட்டல் என்பது மகிழ்வூட்டலாக வெளிப்படும் விதமாக விடயதானங்கள் அமையும்படி கவனித்துக் கொள்ளல் ஆசிரியப் பணியாகும்.
விடயதானங்களைப் பொறுத்தவரையில் பிள்ளைகளின் குடும்பம் , சூழல் ஆகியவற்றை அண்மித்ததாகவும் அதில் வெளியிடப்படும் படங்கள் அன்றாடம் பழகும் அயலவர்களின் தோற்றம், உடை பாவனை என்பவற்றைப் பிரதிபலிப்பதாகவும் அமையும்படி பார்த்துக் கொள்ளல் அவசியமாகும். பாடல்கள், கதைகள் மற்றும் பிற விடயதானங்களின் படைப்பாளிகள் பற்றிய விபரம் தரப்படல் வேண்டும்.
பிற நாட்டுக் கதைகள் பிரசுரமாகும் போது அவை பெற்றுக் கொள்ளும்
நூல் விபரங்களை நன்றியுடன் வெளிப்படுத்துவது பிற நூல்களைத் தேடிப் படிக்கவும் துரண்டுவதாக அமையும்.
பிள்ளைகளுக்கான சஞ்சிகைகளைப் பிள்ளைகளே படிக்கவும் பேசவும் கலந்துரையாடவும் விவாதிக்கவும் கண்காட்சி நடாத்தவும் கதைகள் சொல்லவும் பாடவும் அபிநயிக்கவும் நடிக்கவும் கூடிய கலை நிகழ்வுகளை பொது நிறுவனங்கள் ஊக்குவிப்பதிலும் அரங்க அனுபவத்தை பயிற்றுவிப்பதுடன் புத்தகப் பண்பாட்டில் புதிய பாய்ச்சல்களையும் எட்ட முடியும். (SS)
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தி வரும் 'அறிவோர் ஒன்று கூடல்' நிகழ்ச்சியின் 177 வது நிகழ்வன்று (11.09.2002) சிறப்புரை வழங்கிய சிங்கப்பூர் தமிழறிஞர் திரு.இ.வி.சிங்கன் அவர்கள் தனது திருக்குறள் பற்றிய ஆக்கங்களை கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென சங்கத் தலைவர், செயலாளரிடம் அன்பளிப்புச் செய்கிறார்.
‘ஓலை’ பக்கம் 30
 

A. Allawudeen 67, New mosque Road (Oluvil Amuthan) Akkaraipattu -05
House Tp: 067-78339
Celte 072-669828
S-9-2002 அன்புடையீர் ஐயா! ஒலை வளர்ச்சிக்கு என் சிறு அன்பளிப்பாக 200/= காசோலை அனுப்பி வைத்துள்ளேன். ஏற்றிடுக. தவறாது எனக்கு ஒலையை அனுப்பி உதவுங்கள். நன்றி
ஒலுவில் அமுதன்
31/ சமாது ஒழுங்கை, திருகோணமலை
13.09.2002
செயலாளர், தமிழ்சங்கம் கொழும்பு.
நூலகநூல் அன்பளிப்பு, ‘ஓலை’ சஞ்சகை அன்பளிப்பு
ggu Iss, 'ஒலை ஒழுங்காக கிடைக்கின்றது. நன்றிகள். கொழும்புத் தமிழ்ச் சங்க செய்திகள், தலைநகரில் நடைபெறும் இலக்கிய சம்பந்தமான விடயங்களையும் 'ஒலை மூலம் அறிவதில் மட்டற்ற மகிழ்ச்சி. இத்துடன் 'ஒலை' வெளி மாவட்டங்களில் நடைபெறும் இலக்கிய சம்பந்தமான செய்திகளையும் வெளியிட்டால் என்ன? திருக்கோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் செய்திகளை நான் தங்களுகு அனுப்பி உதவதயார். இத்துடன் எமது 'அம்மா பதிப்பகத்தின் ஊடாக வெளியிடப்பட்ட சில நூல்களை தங்கள் நூலகத்திற்கு இணைத்துள்ளேன். என்னால் முடிந்தளவு நூல்களையும் அனுப்பி வைக்க முயலுகின்றேன். ஒலை இதழுக்காக 500/= (ஐநூறு) அனுப்பி வைக்கிறேன். தயவுடன் பெறுக. நன்றி
அன்புடன் திருமலை சுந்தா
‘ஓலை’ பக்தம் 31

Page 18
"பாக்கியவபதி" 15. வித்தியாலயம் ஒழுங்கை, திருக்கோணமலை 14.09.2002
பேரன்புமிக்க, திரு.ஆ.இரகுபதி பாலழரீதரன் அவர்கள் பொதுச் செயலாளர். தமிழ்ச் சங்கம், கொழும்பு agut, 'ஒலை'ஆறாவது சஞ்சிகை கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. துணைக் காப்பாளராக அடியேனையும் சேர்த்துக் கொண்டதற்கும் நன்றி. பாராட்டத்தக்க பல தமிழ்த் தொண்டுகளைத் தமிழ்ச் சங்கம் செய்து கொண்டிருப்பதைச் சங்கப் பலகையைப் படித்தறிந்து பெரும் மகிழ்ச்சி. யடைகிறேன். முதிர்ச்சியினாலும் தளர்ச்சியினாலும் உங்களுடனிருந்து தமிழ்த் தொண்டும், சைவத் திருத் தொண்டும் செய்ய முடியாமைக்கு மிக வருந்துகிறேன். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தொண்டு மேலோங்கி வளர்ச்சியடையவும், ஒலை - தமிழ் வளர்க்கும் மூல ஓலையாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றி
பணிவன்புடன்
பண்டிதர்.இ.வடிவேல்
எஸ்.ஆறுமுகம் (நவம்) 7 B, தெற்கு கங்கையம்மன், கோயில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94. தமிழ் நாடு. இந்தியா 20.09.2002 ஆசிரியர். ஒலை கொழும்புத் தமிழ்ச் சங்கம் கொழும்பு-06. இலங்கை அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஐயா, வணக்கம் தாங்கள் அன்புடன் அனுப்பி வைத்த 'ஒலை' -6ம் சென்ற மாதம் அனுப்பி வைத்த ஒலை 5ம் பெற்றேன். மகிழ்ச்சி. அறுபது ஆண்டுகள் விடாப்பிடியாக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை திறம்பட நடத்திவருகின்றீர்கள். ஒலை' சஞ்சிகைக்கு ஒலை' என்ற பெயர் சூட்டியுள்ளீர்கள். நம் பாரம்பரியத்தை நினைவூட்டும் பவித்திரமான பெயர். கனதியும், காத்திரமுமிக்கதோர் இலக்கிய மாசிகையாக மலரச் செய்ய வேண்டுமென்ற உங்கள் தவம் நிச்சயம் பலிக்கும். எதிர்காலம் பிரகாசமானது! வாழ்த்துக்கள்!
பிரியமுடன் நவம்
‘ஓலை’ பக்தம் 32

ஜான ཁོང་《ཟོད་སྒྱུ་
S. 70ith 1Best 70ishes from 一太
JAYA STORES
General Merchants Dealers in Provision Groceries, Oilman Goods, Coconut Oil & Treacle Etc.
20, MARKET STREET, NEGOMBO PHONE: 31-33938, 33579.39407
ாக் WSAS2 彎
镜
ĪSIN
對
7Oith 23est 7Oishes from
SIVAA ENTERPRSES
PAWNING BANK & CoMMUNICATION
73, Sea Street, Negombo TP 031-38373,38334,031-38745 Fa:031-38745
جSسکتحتر ܡܓܕܬàܐܰܰ

Page 19
آرتھمتیہ3 =
፲ህሸff፡ ፴8eፆ f 1
Mayurie
Authorised M. Dealer's Jewe,
240. lifair Str
fel " " 3-2.
Fall" YW4||
签证 =ኝቿጏሽ≤Sነ s's E-2 冕
தரம f"EM մեքենի քմ:
///eqaa fago (Zora, A ffilia
Asian Comp
23, Assarappaa R Tö!-0}74 .
*
ܕܨ<ܕܒܸܰ

Diskues frotra
Jewellery
oney Changer llery & Gennas
eef, Negombo 2.343, 3938.9
- W -
2 エ三了リ言 Wis 2s
விக் கல்விக்கு.
e paafer Systeria sted to Utter Systernas
toad, Negombo. -872O6
定。
- 12 fisf