கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.02

Page 1
書晝。「芒*
日
醬
ே
| 25.01.03 அன்று நடைபெற்ற செல்வராஜனின் கவிதைகள்)
உருவப்படத்தின் முன் விளக்
L செல்வராஜன்
■
கொழும்புத் த 7, 57 வது ஒழுங்கை (உருத்திர
தொலைபேசி வெய் முகவரி : WW இணைய தபால் முகவரி : cts
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fங்கதிரோன்
ங்க மாதாந்த மடல்
பெப்ரவரி 마마.
-
கவிதாமாலை (சில்லையூர் நிகழ்வில் தனது தந்தையின் கேற்றும் செல்வன் அதிசயன்
மிழ்ச் சங்கம் ா மாவத்தை), கொழும்பு : 06.
: D1-8637.59
W. Colombo. tanils angam.org Geureka. Ik
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
*
- 宅族
13வது ஒலை மலர எமது வாழ்த்துக்கள்
T. GAN ESHAN
31/1, THAKKIYA ROAD, THALUWAKOTTUWA
TEL: 03177075
s
g
 

இதயம் திறந்து. ஒலையின் 13 வது இதழ் இது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22ந் திகதி கைச்சாத்திடப் பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் தோற்றுவித்துள்ள நன்மைகளில் ஒன்று, கடந்த காலங்களில் பல்வேறுவகையான சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் நாட்டைவிட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் போர் நிறுத்தம் மற்றும் சமாதானச் சூழலில் தங்கள் ஊரையும் - உற்றார் உறவினர்களையும் -நண்பர்களையும்-நாட்டையும் தரிசிப்பதற்காய் அவ்வப்போது இலங்கைக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் எழுத்தாளர்கள் - கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள் - சமூக சேவையாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் அடங்குவர். இவர்களில் அனேகர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்கும் வருகை தரத் தவறுவதில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் அவ்வாறு வருகை தந்தவர்களுள் திரு.கே.நடராசா (பணம்பொருள் அபிவிருத்திச்சபையின் முன்னாள் தலைவர்)- அவுஸ்திரேலியா, கவிஞர். ஞானமணியம்- இங்கிலாந்து, சர்வதேச அகதிகள் சம்மேளன இயக்குநர் தமிழினி வ.குலேந்திரன் - இங்கிலாந்து, எழுத்தாளர் லெமுருகபூபதிஅவுஸ்திரேலியா, கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் பொருளாளர் அமரர் த.நடேஸ்வரன் அவர்களின் மகன் நராகவன் - அவுஸ்திரேலியா, பேராசிரியர் எஸ்.கே.மகேஸ்வரன் - மொனாஸ் பல்கலைக்கழகம்- அவுஸ்திரேலியா, தமிழறிஞர், புலவர் அமரர்.சிவங்கருணாலய பாண்டியனாரின் மகன் சிதிருவருள்வள்ளல் - அவுஸ்திரேலியா, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் அதிபர், கனடா ரொறொன்ரோ மாவட்ட கல்விச் சேவை ஆலோசகர் சின்னையா சிவனேசன், நாடகக் கலைஞரும், புலம் பெயர்ந்த (லண்டன்) களரி நாடகக் குழுத் தலைவருமான ஏ.சிதாசீஸியஸ், லண்டன் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மற்றும் தேசம்' சர்வதேச தமிழ் சஞ்சிகை நிர்வாக ஆசிரியர் என செல்வராஜா (நூலகவியலாளர்) - இங்கிலாந்து, 'வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்-ஜேர்மனி ஆகியோர் இங்குள்ள எம்மவர்களுடன் கலந்துரையாடல் - சந்திப்பு மூலம் தங்கள் புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இத்தகைய கலந்துரையாடல்களும், சந்திப்புக்களும் பல பயனுள்ள தகவல்களை இங்குள்ள எம்மவர்களுக்கு வழங்கின. அந்த வகையில் இனிவரும் காலங்களிலும் இவ்வாறு வருகை தரும் பிரமுகர்கள் இங்குள்ள எம்மவர்களுடன் கலந்துரையாடுவதற்கு 'களம்' கொடுக்கக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் காத்திருக்கின்றது. அதற்கு 'ஒலை உதவும்.
நன்றி மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
‘ஓலை’ பக்கம்

Page 3
ஏனைய இதழ்களில் 'ஒவை'
N
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த வெளியீடாக வந்து கொண்டிருக்கும் இவ்விதழ் சில இலக்கியங்களையும் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த 5வது இதழில் சிறுகதை ஒன்றும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளது
நன்றி "தேசம்" சர்வதேச தமிழ் சஞ்சிகை இதழ் 10 நவம்பர் 2002
Thesam, P.O. Box 35806, London, E113JX, U.K.
r ר கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் "ஓலை" கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 'ஒலை பத்தாவது இதழ்(டிசம்பர் 2002) வெளிவந்துள்ளது. இதயம்திறந்து என்னும் ஆசிரிய தலையங்கத்தில் உலகமயமாதல் என்னும் கொள்கையில் மறைவாக இருக்கும். கலை, இலக்கிய பண்பாட்டுச்சீரழிவுகள் குறித்து அவதானமாக இருக்கவேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.
சங்கத்தில் நடந்தேறிய மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளுடன் சற்சொரூபவதிநாதன் (கண்ணிரும் கதை சொல்லும்) பத்மா சோமகாந்தன் (வாசிப்புப்பழக்கம்) பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் (சொல்வளம் பெருக்குவோம் - 4), வேல் அமுதனின் (இலங்கையில் முதல் தமிழ்ச் சிறுவர்சிற்றேடு வெற்றிமணியே) ஆகியோரின் கட்டுரைகளும், தாமரைத்தீவான் (வாழ்க) எம்.எல்.எம். அன்ஸார் (பிஞ்சுகளைப் பிழியாதே) பொன்.சிவானந்தன்(ஒலை ஒரு அமுத நிலா) ஆகியோரின் கவிதைகள், வாகரைவாணனின் "தமிழ் மன்னன் பராக்கிரமபாகு" என்னும் வரலாற்றுச் சிறுகதை, செங்கதிரோனின் 'அவசரம்' உருவகக் கதை மற்றும் கடிதங்கள் (மறுவோலை) இடம் பெற்று வாசிப்புச் சுவையைத் தருகின்றன.
"பிஞ்சுகளைப் பிழியாதே" என்னும் எம்.எல்.எம்.அன்ஸாரின் கவிதை, சின்னஞ்சிறுசுகளும் ஆபத்தை எதிர்நோக்கும் இக்காலகட்டத்தில், சமூகத்தின் உணர்வுகளைத் தட்டிவிடும் ஒன்றாகும்.
ஒலை வேண்டுவோர் கொழும்பு - 6. 57 ஆவது ஒழுங்கை, 7ஆம் இலக்கத்தில் அமைந்திருக்கும் கொழும்புத் தமிழ் சங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
- லக்ஷ்மிநன்றி! கலைக்கேசரி (24.01.2003) - வீரகேசரி ノ ܢ
‘ஓலை’ பக்கம் 2

நூல் : ஒலை 09 (கொழும்புத் தமிழ்ச் சங்க மாதாந்த மடல்) ר
அவ்வப்போதைய கலை இலக்கிய நிகழ்வுகளை தாங்கி மாதமொரு
முறை வெளிவரும் ஒலையின் 9வது இதழ் மேலும் மெருகூட்டப்பட்டு வெளிப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் லெமுருகபூபதியுடனான சந்திப்பு, அண்மைக்காலங்களில் இடம்பெற்ற இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய ஒன்று கூடல்கள், அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பற்றிய விபரம் ஆகியவற்றையும் இவ்விதழ் தாங்கி வந்துள்ளது.
தாமரைத் தீவானின் "தமிழ்ப் பெயர்" மற்றும் பண்டிதர் அப்புத்துரையின் வளம் நிறைந்து வாழிய போன்ற கவிதைகள் இதழை அலங்கரிக்கின்றன.
in 一01一2003 நன்றி! நவமணி (05-01 り ܢܠ
சிகரம்
சிகரம்என்ற மகுடம் தாங்கி விரைவில் கலை இலக்கிய மாதாந்த சஞ்சிகை ஒன்று வெளிவர உள்ளது.
மாதாந்தம் ஒரு விறுவிறுப்பான முழு நாவல், உலகப் பிரசித்திபெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகள், ஆச்சரியத்தில் ஆழ்த்தவல்ல தொடர்கதை, நகைச்சுவை துணுக்குகள், கவிதைகள் மற்றும் பல்சுவை அம்சங்கள் ஆகியவற்றை இச்சஞ்சிகை தாங்கிவரும்.
பல்வேறு பரிசுப்போட்டிகளும் வாசகர்களுக்கு உண்டு இச் சஞ்சிகைக்கு பொருத்தமான ஆக்கங்கள், துணுக்குகள், சித்திரங்கள், படங்கள், ஆலோசனைகள் போன்றவை வரவேற்கப்படுகின்றன.
தனிப்பிரதி ரூ.75/- வருடசந்தா ரூ.750/- (முகவர்கள், நூலகங்கள், மன்றங்கள், சேவை அமைப்புக்களுக்கு விசேட சலுகை உண்டு) சந்தாதாரர் ஆவதற்கும் மற்றும் விபரங்களுக்கும் தொடர்பு கொள்க.
R. Shadagopan Editor, "Sigaram' 152 - 1/5, Hulfsdorp Street, Colombo - 12 Telephone: 075-512999 e-mail: shadagopan Ghotmail.com
‘ஓலை’ பக்கம் 3

Page 4
விருட்சம் வீழ்ந்தது
திரு. கனகசபை
சிவகுருநாதன் (கசின்)
(முன்னாள் அதிபர், உடுத்துறை ou : 1920.12.20 மகா வித்தியாலயம், முத்த
இறப்பு : 2008.01.18 எழுத்தாளர் - கலாபூஷணம்)
அஞ்சலி !
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், கொழும்புத் தமிழ்ச்சங்கப் பண்டித வகுப்பு ஆசானுமாகிய திரு.கனகசபை சிவகுருநாதன் (கசினர்) அவர்களினர் மறைவுக்கு 'ஒலை" யின் அஞ்சலி.
26.01.2003 ஞாயிறு நடைபெற்ற கொழும்புத்தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அன்னாரின் மறைவையொட்டி மெளனாஞ்சலிசெலுத்தப்பட்டது.
ஈழத்தின் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான 'கசின்' (கனகசபை - சிவகுருநாதன்) அவர்களின் மறைவுடன் ஈழத்து இலக்கியத் தோப்பிலே ஆழவேரூன்றிநின்ற பழம் விருட்சம் ஒன்று வீழ்ந்துவிட்டது.
20.12.1920 இல் பிறந்த அவர் இறக்கும் போது 82 வருடங்களைப் பூர்த்தி செய்து 83வது அகவையுள் காலடி எடுத்து வைத்திருந்தார். வடமாகாணத்தில் தற்போதைய கிளிநொச்சி மாவட்டத்தில் (முன்பு யாழ் மாவட்டத்தின் பகுதி) பளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள புலோப்பளை அவர் பிறந்த இடம். தந்தை கனகசபை, தாய் சேதுப்பிள்ளை.
உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்தியமகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று 1940 இல் திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் ஆசிரிய பயிற்சிக்காய்ச் சேர்ந்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்று 1943இல் ஆசிரியரானார். 1944 இல் திருமணம் புரிந்தார். 1950இல் பண்டித பரீட்சையில்
‘ஓலை’ பக்தம் 4
 

சித்தியடைந்தார். வவுனியா, செட்டிகுளம், மன்னார், மத்துகம, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஆசிரியப்பணிபுரிந்து இறுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி (1971/78) ஒய்வு பெற்றார். 1946இல் கட்டுரை ஆசிரியராகவே ஈழகேசரி மூலம் எழுத்துலகில் நுழைந்த இவர் பின் சிறந்த நாவலாசிரியாகவும், சிறுகதை எழுத்தாளராகவும் பரிணமித்தார். "ஈழகேசரிப் பண்ணையில் உருவான இலக்கியவாதிகளும் 'கசின்' அவர்களும் ஒருவர்.
இவரது முதலாவது ஆக்க இலக்கியப்படைப்பான வண்டியில் வளர்ந்த கதை (நாவல்) 1947இல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது. பின்சகடயோகம் (1949) - ஈழகேசரி, இதயஊற்று' (1951) -ஈழகேசரி, குமாரி ரஞ்சிதம் (1952) ஈழகேசரி, பச்சைக்கிளி (1957)- ஈழகேசரி, கற்பகம் (1959)-தினகரன், தேடிவந்த செல்வம் (1959) -ஈழநாடு; நிதானபுரி (1961)-தினகரன்;சொந்தக்கால் (1961). தினகரன், கண்டெடுத்த கடிதங்கள் (1963) - வீரகேசரி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். அவ்வப்போது சிறந்த சிறுகதைகளையும் எழுதிவந்தார். யாழ் இலக்கிய வட்டம் திரு.பொ. ஆனந்தலிங்கம் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு 'கசினி சிறுகதைகள்’ என்ற தலைப்பிலே 1948-1961 காலப்பகுதியில் ஈழகேசரி, தினகரன், கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்த பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுதியொன்றினை 1999 ஏப்ரலில் வெளியிட்டது. சட்டம்பியார்' எனும் பெயரில் பல கட்டுரைகளையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். 1946 இலிருந்து நீண்ட காலமாக எழுதி வந்தாரெனினும் சுமார் அரை நூற்றாண்டு காலமாக அவரது ஆக்கங்கள் எதுவும் நூலுருப் பெறாத காரணத்தால் மூத்த தலைமுறை அன்னாரை அறிந்து கொண்ட அளவுக்கு இளைய தலைமுறை அவரை அறியமுடியவில்லை. ஆழமான - புலமைமிக்க ஆக்க இலக்கிய கர்த்தாவாக அவர் விளங்கிய போதிலும் அடக்கமாகவும், ஆடம்பரமில்லாமலும், எளிமையாகவும் வாழ்ந்தார் என்பதும் இளையதலைமுறை இவரை அடையாளம் காணத் தாமதித்தமைக்கு இன்னுமோர் காரணமெனலாம். எனினும் கடந்த ஏழு ஆண்டு காலத்திற்குள் வெளிவந்த நிதானபுரி (நாவல்)-1995; காதலும் கடிதமும் (நாவல்)- 1995;'கசின் சிறுகதைகள்' -1999;குமாரி இரஞ்சிதம் (நாவல்) -2000 ஆகிய அவரது நூல்கள் இளந்தலைமுறையினருக்கு அவரை இனங்காட்டிற்று எனலாம்.
அவரது கதைகளிலே - எழுத்திலே- தூய்மையும், எளிமையும், ஆற்றோட்டமான-இயல்பான-அங்கதச்சவை இழையோடும் மொழிநடை விரவிக்கிடக்கும். அவரது புனைவுகளில் கூடுதலாக குடும்ப உறவுகளே கருவாக அமைந்துள்ளன. காதல், காமம், களவொழுக்கம் முதலிய சிக்கல் நிறைந்த வாழ்வியல் விடயங்களையெல்லாம் எந்தவிதமான சிக்கலின்றியும் விரசம் வெளிப்படாமலும் சித்தரித்துள்ளமையே அவரது படைப்புக்களின் சிலாகித்துக் கூறப்பட வேண்டிய சிறப்பு ஆகும். கடிதங்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்லல் இவர் கையாண்ட உத்திகளில் ஒன்று. இவரது சிறுகதைகள் இலங்கை வானொலியிலும் அவ்வப்போதுவாசிக்கப்பட்டுள்ளன. 'கவிதை இன்பம்' பற்றி வானொலியில் தொடர் உரையாற்றியுமுள்ளார். கொழும்பில் கடமை புரிந்த காலத்தில் ((1968)
‘ஓலை’ Uśøó 5

Page 5
'கலை இலக்கியப் பேரவை' ஒன்றினை உருவாக்கி அதன் தலைவராகவம் விளங்கி கலை, இலக்கியப் பணியாற்றியுள்ளார்.
சோதிடத்திலும் புலமையுள்ளவராக இவர் திகழ்ந்தார். கனக.செந்திநாதன் அவர்கள் ஈழகேசரியில் அக்காலத்தில் 'ஈழத்துப் பேனா நண்பர்கள்' என்ற மகுடத்தில் கரவைக்கவி கந்தப்பனார் எனும் புனைபெயரில் எழுதிய கட்டுரைத் தொடரில் 'கசின் பற்றியும் எழுதியுள்ளமை (ஈழகேசரி 26.06.1955) ஈழத்துப் பேனா உலகில் அவர் பெற்றிருந்த இடத்திற்குச் சான்றாயமைகிறது. இலங்கை இலக்கியப் பேரவை 17.12.1994இல் 'கசின் அவர்களைக் கெளரவித்து யாழ் மண்ணில் விழா எடுத்தது. ஒய்வு பெற்று அவர் கொழும்பில் (H6, அரச தொடர்பாடி, பம்பலப்பிட்டி, கொழும்பு-04) வாழ்ந்த காலத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் இலவசமாக நடாத்தியபாலபண்டித வகுப்புகளில் ஆசானாகவும் தமிழ்ப்பணி புரிந்தார். கொழும்புத் தமிழ்ச்சங்கம் 21.02.1999இல் கொழும்பில் நடாத்திய பண்டிதர் புலவர் வித்துவான் மாநாட்டில் இயற்றமிழ் வித்தகர்' எனும் கெளரவப்பட்டம் அளிக்கப்பட்டார். இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் 2000ம் ஆண்டுமே மாதம் 22ந் திகதி 'கசின் அவர்கள் கலைத்துறையின் மேம்பாட்டிற்கு ஆற்றிய சேவையினைப் பாராட்டுமுகமாக 'கலாபூஷண விருது வழங்கியது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் 'கசின் அவர்களின் கலை இலக்கியப்
பங்களிப்பு காத்திரமிக்க பதிவு ஆகும். C ஆழ்வாப் பிள்ளை கந்தசா Ls
தமிழ்போல் இனிய கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினருக்கு
ஒலை முன்னட்டையில் நூல்நயம் காண்போம் நிகழ்சிக்கு தலைமை வகிக்கும் திரு.வ.இராசையா அவர்களைக் கண்டு மனங்குளிர்ந்தேன். அவருடன் 1974 களில் வேல் அமுதன் மூலம் (தகவம்) எனக்கு தொடர்பு இருந்தது. அன்று திரு.வேல் அமுதன்நான் திரு.வ.இராசையா எல்லோரும் சேர்ந்து வாரம்தோறும் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை வாசித்து நல்லவற்றைத் தெரிவு செய்வோம். இன்று அந்த நினைவுகள் கண்முன் விரிகின்றன. அன்பான திரு.வ.இராசையா அவர்களுக்கு எனது இடைவெளி நூலினை ஒரு முறைகொடுத்து விமர்சனம் தரும்படி கூறவும். கண்ணா என்று கூறினால் நினைவு வரும். அதற்கும் நினைவு வரவில்லை என்றால் களனி வளாகத்தில் ஒவியம் படித்த கண்ணா என்று சொல்லவும். எதற்கும் ஆனி மாதம் 20ம் திகதி கொழும்பு வருகின்றேன். கோடுகளும் கோலங்களும் என்ற நூல் தமிழ்சங்கத்தில் வெளியிட எண்ணம். அப்போது கட்டாயமாக அவரைச் சந்திப்பேன். அன்புடன்
யேர்மனி கலாநிதி. மு.க.சு.சிவகுமாரன் 24.01.2003 ஆசிரியர் வெற்றிமணி
‘ஓலை’ U666 6
 

குறுங்காவியம் செங்கதிரோன் எழுதும்
ിണ്ടി
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
முன்கதை
வேளாண்மைக் காவியம் குடலை'. 'கதிர்' என இருபகுதிகளைக் கொண்டது.
குடலை
வயலுக்குச் செல்ல ஆயத்தமாகும் கந்தப்போடிக்கு மனைவி பொன்னம்மா உணவு பரிமாறும் சம்பவத்துடன் காவியம் (முதற்பகுதி - குடலை) தொடங்குகிறது.
ஆரங்கே? பொன்னம்மா உன்
அடுப்படி அலுவல் ஆச்சா?
நேரமும் கடந்து போச்சே!
நீ என்ன செய்கின்றாய்? போய்
சோறெடு. சிவ சிவா. ஏய்
சுரைக்காயை என்ன செய்தாய்?
நீறினை நெற்றியிட்டு
நெஞ்சினை வயலில் விட்டு
சோறொடும் மீனைப்பிட்டுச்
சுவைக்கின்றார் கந்தப்போடி மகன் செல்லன் வயலிலே நிற்கிறான். பொன்னம்மா கணவன் கந்தப்போடிக்கு உணவு பரிமாறுகிறாள். பொன்னம்மாவின் அண்ணன் அழகிப்போடி, மனைவி கனகம்மா, கந்தப்போடியின் தங்கை. அழகிப் போடி - கனகம்மா தம்பதிகளின் மகள்தான் அன்னம்மா. அன்னம்மா சமைந்த சேதியை உணவு பரிமாறும் போது பொன்னம்மா கந்தப்போடிக்குச் சொல்லுகிறாள்.
அண்ணனின் இளையபெட்டை அன்னம்மா சமைந்ததாக வண்ணார வயிரண் பெண்டில் வழியிலே சொன்னாள் என்று பொன்னம்மா சொல்ல கந்தப் போடியார் விசள மேதும் கொணர்ணன் வீட்டார் களிங்கு கொண்டு வந்தாரோ? என்றார்.
‘ஓலை’ பக்கம் 7

Page 6
வயல்வழக் காடித்தோற்ற
வயிரம்போல் அவர்க்கு நம்மேல்
அயலெல்லாம் சொல்லிப் போனார்
ஆயினும் இங்கேயொன்றும்
வியளங்கள் இல்லை - என்றாள்
வேறென்ன செய்வார் நம்மை?
பயறிலே கல்லாய்ப் போனோம்!
பதறினார் கந்தப் போடி
கந்தப்போடி குடும்பத்துக்கும் அழகிப் போடி குடும்பத்துக்குமிடையே வயல் தகராறு வழக்கு ஒன்றின் காரணமாக உறவு விரிசல் கண்டிருந்தது. அண்ணன் அழகிப்போடியின் மகள் அன்னம்மா சமைந்த சேதியை பொன்னம்மா கேள்விப்பட்டிருந்தாள். ஆனாலும் உரித்துக்காரர் எவரும் வந்து விசளம் சொல்லவில்லையே என்று விசனமடைந்திருந்தாள். இந்தநிலையில் 'விசளமேதும்' கொண்ணன் வீட்டார்களிங்குகொண்டு வந்தாரோ' என்ற கந்தப்போடியின் கேள்விக்கு இல்லை' என்று பொன்னம்மா கூறக் கந்தப்போடி கோபம் கொள்கிறார்.
அன்னம்மா அழகிதான், இங்
கார்வந்து முடிப்பாண் பார்ப்போம்!
பொன்னம்மா மறுகால் கொணர்ணன்
பொடியனைப் கேட்டுக் கீட்டு
எண்வீட்டுப் படியில் வந்து
ஏறட்டும் எளிய நாய்கள்!
சன்னதம் எழுந்தாற் போல
கறுவினார் கந்தப்போடி கணவன் கந்தப்போடியைச் சமாதானப்படுத்தி வயலுக்கு வழியனுப்பி வைக்கிறாள் பொன்னம்மா. வயலிலே காத்திருக்கும் மகன் செல்லனுக்குச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு இரவு சூடடிப்பதற்கான ஆயத்தங்களுடனும் வயலை நோக்கி வண்டியில் புறப்பட்டுச் செல்கிறார் கந்தப்போடி. சண்டியன் சாமித்தம்பி வண்டியை ஒட்டிச் செல்கிறான். வண்டி புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தால் கனகம்மாநீண்ட நாட்களுக்குப் பின் கூடப் பிறந்த அண்ணன் கந்தப்போடியின் வீட்டிற்கு வந்து மச்சாள் பொன்னம்மாவிடம் தனது மகள் அன்னம்மா சமைந்த சேதியை முறைப்படி சொல்லிச் செல்கிறாள். வண்டியும் வயலை அடைகிறது.
மாட்டினை உருவிக் கொண்டு மடுவில் நீர்காட்டி வைக்கோல் போட்டபின் கணுவில் கட்டி புகையிலை கிள்ளி, பல்லைத் தீட்டிஉள் திணித்த சாமி செல்லனைப் பார்த்துத் தம்பி கேட்டியா சேதி உந்தன்
‘ஓலை’ Uśøó 8

கிளியல்லோ சமைந்த தென்றான். வயலுக்குப் புறப்பட்டு வந்த பின் ஊரில் நடந்தது கந்தப்போடிக்குத் தெரியாது. அதாவது கனகம்மா கந்தப்போடி வீட்டுக்கு வந்து மனைவி பொன்னம்மாவிடம் அன்னம்மா சமைந்த சேதியை முறைப்படி சொல்லிச் சென்றது தெரியாது. அதனால் அவரது கோபம் ஆறவாய்ப்பில்லை.
"ஆரைடா சாமி நீ போய் அவனது கிளியாள் என்றாய் பேரையே மாற்றி வைப்பேன் பெருங்கொலை நடக்கும். இந்த ஊரெல்லாம் சொன்னார், நானும் ஒருவனிங்கிருந்தேன். என்று பீரங்கிக் கந்தப்போடி பெருங்குரலெடுத்துச் சொன்னார்.
"வலிய வந்தெனக்கு மாறாய்
வழக்காடித் தோற்ற கோபம்
அழகிப் போடிக்கும் பெண்டில்
அவளுக்கும் பழி யார் மேலே?
எழியவன் எனக்கும் சொன்னால்
என்னவாம்! செல்லனுக்கு
கலியாணம் பாண்டியூரில்
கணபதிப் போடி வீட்டில்!
செய்யாது போனால் என்னைச்
செருப்படித்தடிடா சாமி
பொய்யில்லை. என்று கந்தப்போடி செருமுகிறார். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேதான் செல்லன், வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டை உண்ண ஆயத்தமாகிறான்.
"அப்பனின் கோபம் வீட்டில்
அம்மைக்கும் அடியோ செல்லன்
இப்படி நினைத்துக் கொண்டு
எழுந்து போய் குடிலுக்குள்ளே
செப்புச் சட்டிக்குட் சோற்றைத்
திறந்ததும் தயிர்ச் சட்டிக்குள்
எப்படி மச்சாண்’ என்றே
இளித்தனள் அண்னம் நின்று அன்னத்தின் பழைய நினைவுகளை மீட்டியபடி செல்லன் உணவை உண்ணு
கிறான்.
‘ஓலை’ பக்கம் 9

Page 7
காவியத்தின் அடுத்த நிகழ்வுகளாக சூடடிக்கப்பட்டுகளம் பொலிகிறது. மொத்தம் எண்பத்தைந்து அவணம். கணக்குத் தீர்த்தல் - களவெட்டிப் பொங்கல் எல்லாம் முடித்து நெல் முட்டைகளை ஏற்றிக் கொண்டு சண்டியன் சாமியும் செல்லனும் ஊருக்குப் புறப்படுகின்றனர். வழியில் சண்டியன் சாமி தன் மனைவி கற்பகத்தை வசியம் பண்ணிக் கலியாணம் முடித்த கதையைச் செல்லனிடம் கூறி
"அப்பனை விடு செல்லா நீ
ஆணர்பிள்ளை அண்னம் மட்டும்
ஒப்புதல் தந்தாப் போதும்
ஊரெல்லாம் எதிர்த்து வந்து
தப்புத்தணர்டா செய்தாலும்
தகர்த்திந்தக் கலியாணத்தைச்
செப்பமாய் முடிப்பேன்" என்கிறான். வண்டி ஊரை அடைகிறது. தாய் பொன்னம்மா மகன் செல்லனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே
"அன்னம்மா சமைந்த சேதி
அப்பன் சொன்னாரா தம்பி" என்று கேட்கிறாள். கந்தப்போடி வயலில் ஏசிய கதையைச் செல்லன் சொல்ல, மாமி கனகம் நேரில் வந்து செய்தி சொன்னதைப் பொன்னம்மா சொல்கிறாள். செல்லன் சந்தோஷப்படுகிறான். செல்லன் சாப்பிட்ட பின் வடிவேலைப் பார்க்கும் சாட்டில் அன்னத்தைப் பார்ப்பதற்காகச் செல்கிறான். ஆனால் அங்கு அன்னத்தைச் சந்திக்க முடியவில்லை. அன்னத்தின் பெத்தா பார்வதிவைக்கலில் விளைந்த நெல்லை வைக்கலில் வைத்துக் கட்டி இக்குலம் தழைக்க வைத்தல் எல்லோர்க்கும் கடமை என்றெண்ணி தனது மகளின் மகளான அன்னத்தை முறை மச்சான் செல்லனுக்கு (மகனின் மகன்) கட்டி வைக்கவே எண்ணிச் செயல்படுகிறாள்.
"வடிவேலின் சாட்டில் அன்னம்
வடிவினை மறைந்து காண
முடியாது போன தெணிணி
முணுமுணுக்கின்ற செல்லன்
அடிமணம் போலக் கூத்து
மத்தளம் அலறக் கோயி
லடியிலே சிறிது குந்திக்
கூத்துப் பார்த்திருந்தான் செல்லன். இந்த நிகழ்வுடன் காவியத்தின்முதல் அத்தியாயமான குடலை முடிந்து அடுத்த பகுதியான கதிர் ஆரம்பமாகிறது.
‘ஓலை’ பக்கம் 10

கதிர்
அன்னத்திற்குச் சமைந்த தண்ணிர் வார்க்கும் நிகழ்வுடன் இரண்டாவது அத்தியாயமான கதிர் தொடங்குகிறது.
பங்குனிக்குப் பதினேழு புதன்கிழமை பகல்நேரம் பரணிசேர்ந்த மங்கல சீர் முகூர்த்தத்தில் மகள் அன்னம் சமைந்த தணிணிர் வார்ப்பதாக எங்களது பெரியோர் செய் தீர்மானம் என்றுாரின் எல்லா வீடும் சங்கை செய்து கணகம்மா வெளியிட்ட தாம்பூல வட்டா தந்தாள். பின் ஊரில் அன்னம் சமைந்த தண்ணீர் வார்ப்பு - பெண்களின் குரவை- வெடிக்கொளுத்து - ஆராத்தி - மஞ்சள் குளிப்பு இத்தனை அலங்காரங்களுடன் நடைபெற்று முடிகிறது.
பிரிந்திருந்த கந்தப்போடி- பொன்னம்மா குடும்பமும், அழகிப்போடி-கனகம்மா குடும்பமும் மீண்டும் உறவாடும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
ஊரில் சித்திரை வருடப் பிறப்புக் கொண்டாட்டம் - தொடர்ந்து கோயில் தேர் - கோயில் முற்றத்திலே கூத்து எனத் தொடர்கிறது. அன்னம் செல்லனின் நினைவுகளுடன் வீட்டிலிருந்து கூத்துப்பாடல்களை இரவு விழித்திருந்து கேட்டவாறே உறங்கிப் போகிறாள். செல்லன் அன்னத்தின் நினைவுகளுடன் வடிவேல் , சாமித்தம்பி சகிதம் வந்திருந்து கூத்துப் பார்க்கிறான். கந்தப்போடி, அழகப்போடி ஆகியோரும் அருகிலிருந்து கூத்து பார்க்கிறார்கள்.
"களரியின் அருகில் செல்லன்
கலியாணப் பேச்சுவார்த்தை
கிழவனைப் பாரேன்! என்று
கிள்ளினான் வடிவேல் சாமி
களவாக எட்டிப் பாாத்தான்!
கந்தப்பர் - அழகப்போடி
தலையினை அசைத்து தாளம்
தகர்ப்பதும் கண்டான் செல்லன் இத்துடன் கதிர்ப்ப் பகுதியும் நிறைவுறுகிறது. ஆனால் காவியம் முற்றுப் பெறவில்லை.
(வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சியான 'விளைச்சல்' அடுத்த இதழில் விளையத் தொடங்கும்)
D
‘ஓலை’ பக்தம் 11

Page 8
கவிஞர் குறிஞ்சி தென்னவன்
ஒரு நினைவுக்குறிப்பு அந்தனிஜீவா
நாளெல்லாம் பட்டினியாய் நாடித்துடிப்பிழந்தும் வேலை நிறுத்தம் பல வேணுமட்டும் செய்து விட்டோம்! மாலை பல தலைவர்களின் மார்மீது சாத்திவிட்டோம்! -ஆனாலெம் துன்பம் தொலையவில்லை!
துயர் கதை முடியவில்லை!"
எனக் கவிதையில் வேதனைப்படும் கவிஞர் குறிஞ்சித் தென்னவன் இன்று நம்மோடு இல்லை, ஆனால் அவர் கவிதைகள் என்றும் பேசப்படும். 1998 - ஜனவரி 19-ம் திகதி குறிஞ்சி தென்னவன் அமரரானார் அட்டன் நோர்வுட் சென். ஜேம்ஸ் தோட்டத்தில் 1934 - ம் ஆண்டு மார்ச் மாதம் 12 - ம் திகதி பிறந்த குறிஞ்சி தென்னவன் ஐந்தாம் வகுப்புடன் தோட்டப்பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு தோட்டத் தொழிலாளியாக வாழ்ந்தார்
மகாகவி பாரதியும், பாரதிதாசனும்தான் தன் ஆற்றலுக்கு வித்திட்டதாகக் கூறும் கவிஞர் சிறு வயதில் பாரதம், இராமாயணம் போன்றவற்றைப் படித்துத் தன் அறிவை விசாலித்துக் கொண்டதுடன் சங்க இலங்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு தன் கவிதா ஆற்றலையும் விசாலித்துக் கொண்டார்.
குறிஞ்சி தென்னவனின் முதல் கவிதை 1957-ம் ஆண்டு "மாணவர்மலர்" என்ற சஞ்சிகையில் "வெல்க உரிமைப் போர்" எனும் தலைப்பில் வெளிவந்தது. மலையகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற கவியரங்குளில் பங்குபற்றிச் சிறப்பித்துள்ளார். மலையக வெளியீட்டகத்தினால் 1987-ம் ஆண்டு இவரது கவிதைகள் "குறிஞ்சி தென்னவன் கவிதைகள்” என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.
கவிதைத்துறையில் "குறும்பா" என்றவுடன் நினைவுக்கு வருபவர் மஹாகவி. மஹாகவி இத்துறையில் ஆளுமையும் ஆற்றலும் மிக்க கவிஞராகத் திகழ்ந்தார். ஆனால் மஹாகவிக்குப் பின்னர் சிறப்பான குறும்பாக்களைப் படைத்தவர் கவிஞர் குறிஞ்சித் தென்னவன். இவரது ‘குறும்பாக்கள் "குறும் பூக்கள்" என்ற
‘ஓலை’ பக்கம் 12
 

தலைப்பில் ‘கொழுந்து சஞ்சிகையில் வெளியாகின. அதில் ஒனறு.
தொழிற் சங்கத் தலைவர் தண்ட பாணி
தொழிலாளர் இவர்கள் ஒரு ஏணி
விழி சிவக்க முகஞ்சிவக்க
மேடைகளில் பேசிடுவார்
தலைவர் இவர் இன்று கங்காணி
இந்தக் குறும்பா ஒரு யாதார்த்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது “ஒருவர் தோட்டத்தொழிலாளியாக இருந்து, பின்னர் தோட்டத்தில் தலைவரானவர், தொழிலாளர் பிரச்னைகளை எடுத்துக் கூறும் தொழிலாளர். பிரதிநிதியாகச் செயற்பட்டவர். பின்னர் தோட்டத்துரையின் கையாளாகி கங்காணி வேலை பெற்றுக் கொள்கிறார். இது தோட்டங்களில் காலம் காலமாக நடந்து வரும் உண்மை. இதனை வெகுநாகுக்காக நையாண்டியாக எடுத்துக் காட்டுகின்றார் கவிஞர்.
வாழும் பொழுதே குறிஞ்சி தென்னவன் மதிக்கப்பட்டார், கெளரவிக்கப்
பட்டார் பிரதேச அபிவிருத்தி அமைச்சு ‘கவிச்சுடர்’ பட்டம் வழங்கியது. 1992-ல் நடந்த சாகித்திய விழாவில் தமிழ் மணி கெளரவமும் 1986-ம் ஆண்டு கலாசார அமைச்சின் “கலாபூஷண" விருதும் பத்தாயிரம் ரூபா பணப்பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார். அவர் இறந்த பின்னரும் 'தினகரன்’ பத்திரிகையின் ஊடாக நல்லிதயங்கள் ஒரு லட்சம் ரூபா நிதி திரட்டி அவர் குடும்பத்திற்கு வழங்கினார்கள். S
r -
பாராட்டு
றுரீலங்கா அரசின் கலாசார அமைச்சினால் ‘கலாபூஷணம்’ விருதை 26-12-2002இல் பெற்றுக் கொண்ட கொழும்புச் தமிழ்ச் சங்கத்தின் துணைக் காப்பாளர்களில் ஒருவரான ஞானசிரோன்மணி - சைவப்புலவர் - பண்டிதர் ஆர். வடிவேல் (“பாக்கியவதி”, 15, வித்தியாலய ஒழுங்கை திருகோணமலை) அவர்களை ‘ஓலை’ பாராட்டி மகிழ்கிறது.
இவர் 1999ம் ஆண்டு தமிழ் இலக்கியப் பணிக்காக வடகிழக்கு மாகாண ஆளுநர் விருதை “திருக்கோணேஸ்வரம் தொண்மையும் வன்மையும்”, “கோணேசர் கல்வெட்டு’ ஆகிய நூல்களுக்காகப் பெற்றார். இவரது “திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வன்மையும்” நூலை பின்னர் இவரின் அனுமதியுடன் “திருகோணேஸ்வரம் தான் தெட்சண கயிலாயம்” என்ற பேரில் ரவி. தமிழ்வாணன் அவர்கள் 2002ம் ஆண்டில்
மணிமேகலை பிரசுரமாக வெளியிட்டுள்ளார். لم - ܢܠ
‘ஓலை’ பக்கம் 13

Page 9
குறுங்கதை
TEODOLGD
வேல் அமுதன்
கடந்த மாதம், பதினோராம் திகதி, புதன்கிழமை, காலை பத்தரை மணி, எங்களது வங்கி துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தது.
நான் கடன் வழங்கும் உயர் அலுவலகர். வர்த்தக ஊக்குவிப்புப் பகுதி எங்களுடையது. இதனால், எமது வேலை மிகப் பொறுப்பு வாய்ந்தது.
இன்று எமது அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்த வர்த்தக வாடிக்கையாளர் சிலரின் வேலைகளை ஆற்றி, அவை முடிவுறும் தறுவாய்,
எமக்கு நன்கு அன்னியோன்னியமான புறக்கோட்டை முதலாளி கந்தசாமி தனது சொந்த வீட்டினுள் நுழைவது போல எமது வங்கியுள் உள்நுழைந்து விறுக்கு விறுக்கென என்னிடம் வந்து கொண்டிருக்கின்றார்.
நான் இவரை வெறுமைனையாய் புறக்கோட்டை முதலாளி என அறிமுகம் செய்திருந்த போதும், இவர் உழைப்பால் உயர்ந்த வர்த்தகர் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். புறக்கோட்டை மொத்த விற்பனைவியாபாரியாக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கடும் உழைப்பாலும், சாதுரியத்தாலும் வத்தளைப் பகுதியில் தொழிற்சாலை ஒன்றினையும், பென்னம்பெரிய களஞ்சியசாலைத் தொடரினையும் உரிமையாக்கியுள்ள பிரபல வர்த்தகராகி விட்டார்.
இவரைப் பற்றி பல்வேறு நினைவுகள் என் மனவானில் மின்னி மறைந்தன.
நினைவுகள்!.
இவருக்கு என் மேல் அளவுக்கு அதிகமான அக்கறை, பஸ் பயணியான என்னை வழி தெருவில் பஸ் நிறுத்தும் இடங்களில் கண்டு விட்டால், தனது விலையுயர்ந்த அழகிய "டொயோற்றாக்"காரை நிறுத்தி, என்னை வற்புறுத்தி, தன் காரின் முன் ஆசனத்தில் செளகரியமாக அமர வைத்து, எமது வங்கி வாசல்வரை கொண்டு வந்து, தன் மனைவியை இறக்க வைப்பது போல,வலு பக்குவமாக இறக்க வைக்கும் தருமவான்!
கடந்த வெள்ளிக்கிழமை நான் வெள்ளைவத்தை பொலிஸ் நிலையத்தை அண்மித்த "கேமார்ட்" நிறுவனத்திற்கு நேர் முன்பாக உள்ள பஸ் நிறுத்தும் இடத்தில் பஸ்சை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். அதிகப்படியான பயணிகள் நெருக்கமாக நின்றும் கூட, ஜன நெருக்கடியுள் நின்ற என்னை எப்படியோ அடையாளம் கண்டு தனது காரில் ஏற்றி வந்த சீமான்!
‘ஓலை’ பக்கம் 14

எமது திருமணம் சில ஆண்டுகளுக்கு முன் பம்பலம்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. கந்தசாமி முதலாளிக்கும் அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் வருகை தந்து சிறப்பித்ததோடு விலையுயர்ந்த அழகியபுத்தம் புதிய "நாஷனல் பனசொனிக்" வானொலிப்பெட்டி ஒன்றினை எனது வீட்டுக்கே கொண்டு வந்தும் அன்பளிப்பு செய்து விட்டார்!
எமது திருமண தினத்தை எம்மைவிட அக்கறையாக நினைவுப்படுத்தும் அன்பர் முதலாளிதான்! ஒவ்வொரு ஆண்டுநிறைவுக்கும் "றிச் கேக்" பார்சலுடன் எமது வீடு தேடி வந்து, கொண்டாடிச் செல்லும் குடும்ப நண்பர் இவர்!.
இந்நேரம் கந்தசாமி முதலாளி என் மேசையை நெருங்கிவிட்டார்! தானாகச் சும்மா சிரித்தார்!
தன் கையோடு கொண்டு வந்த பார்சல் ஒன்றினை என்னிடம் தந்து, வருடாந்த அன்பளிப்பு என்றார்.
வழமைபோல், வேண்டா வெறுப்பாக, ஆனால், மரியாதை கருதி அதனை ஏற்றுக் கொண்டேன், அடுத்த முதலாம் திகதியோடு இடமாற்றமாகி, நான் வெளியூர்க்கு உயர் பதவி ஒன்றினை ஏற்றுப் போகவுள்ளதாகவும், எனது இடத்திற்கு என்று இன்றைய "அஸ்சிஸ்ரன்" ஜோர்ச் பெரேரா பதவியுயர்வுபெற்று வரவுள்ளதாகவும் சொன்னேன்.
குறிதப்பிய கணையால் அதிர்ச்சிக்கு ஆளானவராக, “பிழையான ஆளிடம் பார்சலைக் குடுத்திட்டன்’ எனத் தன் மனத்துள் சொன்னவராக, வாயைக் சுழித்து, பெரிய பரிதாபமாக, “ச்சா.”, எனக் கேட்கக் கூடியதாகச் சொல்லிக் கவலைப்பட்டார்! 囊
“gạ60p6v” Uếøó 15

Page 10
அமரர் வ.அ.இராசரத்தினம்
GUDGUTGITH
11032001 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதுபெரும் எழுத்தாளர் அமரர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் தகோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்) ஆற்றிய அஞ்சலி உரையின் சுருக்கம்
அமரர் வ.அ.இன் நினைவாக இங்கு ఘ.... శ.
தரப்பட்டுள்ளது. împių : 1925. 06., 05 இறப்பு : 2001.02.22
05.06.1925 இல் முதுரரில் பிறந்து 1948இல் இலக்கிய உலகில் பிரவேசித்து அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வேள்வி இயற்றி அதன் ஆகுதி. யாக அற்புதமான ஆக்க இலக்கியங்களை எமக்கு அளித்து 22.02.2001இல் தனது 76 வயதில் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்ட வ.அ.இன் இலக்கியப் பங்களிப்புக்கள் காலத்தைக் கடந்து வாழும் காத்திரமிக்கவை.
அமரர் வ.அ. அவர்கள் இலக்கிய உலகில் சிறந்த புனைகதைப்படைப்பாளியாகச் சிலாகித்துப் பேசப்பட்ட மூத்த தலைமுறை எழுத்தாளர். எனினும் எனது அஞ்சலி உரையை வ.அ.வும் கவிதையும் என்ற வரையறைக்குள் நிகழ்த்த விழைகிறேன்.
வ.அ.அவர்கள் நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை,நாவல், கட்டுரை, பத்தி எழுத்து, வானொலி/மேடை நாடகங்களில் படைப்பிலக்கியவாதியாகப் பரிணமித்திருந்த போதிலும் கூட பழந்தமிழ் இலக்கியங்களோடு மிகவும் பரிச்சயமும், அவற்றில் புலமைமிகுந்தவராகவும் விளங்கினார். சங்க இலக்கியப் பாடல்களில் தோய்ந்து நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த செய்யுள்களை ஆதார சுருதியாகக் கொண்டு அவரால் புனையப்பட்ட ஐந்திணைக் கதைகள் இதற்குச் சான்று. அதுமட்டுமல்ல சங்க இலக்கியங்களிலே வருகின்றவெள்ளிவீதியார் என்ற பெண் புலவரின் பாடல்களையெல்லாம் தொகுத்து தற்காலக் கைம்பெண்களை மனதில் வைத்து வெள்ளிவீதியார் கதை' என்றொரு சிறுகதையையும் அவர் எழுதினார். இது வீரகேசரியில் வெளிவந்தது. இவ்வாறு சங்க இலக்கியப் பாடல்களில் வ.அ.வுக்கிருந்த நாட்டத்தின் - புலமையின் காரணமாகத் தான்
‘ஓலை’ பக்கம் 16
 
 
 

போலும், சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் பல்வேறு படைப்புக்களைத் தந்து அவற்றிற்காகச் சாகித்திய மண்டலப் பரிசு உட்பட பல பரிசில்களையும், பாராட்டுக்களையும், விருகளையும் பெற்ற வ.அ.இன் இலக்கியப் பிரவேசம் கவிதையூடாகவே நிகழ்ந்தது. வ.அ.அவர்கள் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கவிதையாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை விட்டு பிரியாவிடை பெறுகையில் நடந்த விழாவில் ஒரு கவிதை எழுதிப் படித்ததாகவும் அதில் ஞாபகத்தில் உள்ள வரிகள்
"தொத்துவச்ச பின்னலிலே
சொக்கிப் போனீங்க
தொந்தரவு வேணாம் தம்பி
வீட்டுக்குப் போங்க
என்று வ.அ.அவர்களே தனது இலக்கிய நினைவுகள் (1995இல் வெளிவந்து
வடகிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது) கட்டுரை நூலில் குறிப்பிட்டுள்ளார். அங்கதச் சுவையுடன் கூடிய கொத்தமங்கலம் சுப்பு பாணிக் கவிதை வரிகளை அவர் அன்று (1948இல்) எழுதியுள்ளார். -
1948இல் அமரர் அ.செ.முருகானந்தம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு திருகோணமலையில் வெளிவந்த எரிமலை’ என்ற பத்திரிகையிலேயே வ.அ.வின் முதற்கவிதை வெளிவந்தது. அதுவே அவரது இலக்கியப் பிரவேசமும் ஆகும். எரிமலைக்கு எழுதிய கவிதையையும் அவர் கொத்தமங்கலம் சுப்பு பாணியிலேயே ஆக்கியிருந்தார்.
இரண்டாவது உலகமகாயுத்தத்தின் போது திருகோணமலை நேசநாடுகளின் கேந்திரத்தானமாக இருந்தது. பல்வேறு கட்டுமானப்பணிகள் யுத்தம் காரணமாக நடைபெற்றன. பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை தேடி இங்கே வந்து குவிந்தனர். சண்டை முடிந்ததும் பலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள். பலர் சொந்த ஊர் திரும்ப வேண்டியிருந்தது. இதனைக் கருவாக வைத்தே இக்கவிதையை அவர் எழுதினார். 1948ம் ஆண்டு ஆணி மாதம் இக்கவிதை 'எரிமலை'யிற் பிரசுரமாயிற்று. இக்கவிதையில் வரும்,
"நேவி வேல முடிஞ்சு போச்சு வீட்டுக்கு வாங்க - உங்க சேவையினித் தேவல்லியாம் வீட்டுக்கு வாங்க கந்தளாய்க் குளத்தில நீர் புரளுது கங்கை மகாவலி நதி பொங்கி வருகுது வந்தனை நாம் செய்வோம் கோஷம் வானிற் கேட்குது- கவி வாக்குப் பலிக்கும் காலமப்பா வீட்டுக்கு வாங்க" என்ற கவிதை வரிகள் மட்டும்தான் இப்போது கைக்குக் கிடைத்துள்ளன. வேலையில்லையென்று கவலைப்படத் தேவையில்லை. விவசாயம் இருக்கிறது என்று நம்பிக்கையூட்டும் கவிதை இது.
‘ஓலை’ பக்தம் 17

Page 11
இக்கவிதை பிரசுரமான 'எரிமலை'இதழை 1990ம் ஆண்டு ஆனிமாதம் வரை (சுமார் 42 ஆண்டுகள்) தான் பாதுகாத்துவைத்திருந்ததாயும் அது 1990ம்ஆண்டு வன்செயலில் தீக்கிரையாக்கப்பட்டது என்றும் வ.அ.அவர்களே கூறியுள்ளார்.
மேலும் "ஈழநாதன்' என்ற புனைபெயரில் ஈழகேசரியிலும், 1940களின் பிற்பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்த 'வசந்தம்' சஞ்சிகையிலும் பாராட்டும் படியான பல கவிகைளை வ.அ.அவர்கள் எழுதியுள்ளார். கவிஞர்களான கிண்ணியாவைச் சேர்ந்த 'அண்ணல்", மட்டக்களப்பு கல்லாற்றைச் சேர்ந்த ராஜபாரதி, கல்முனை நீலாவணையைச் சேர்ந்த நீலாவணன்' ஆகி. யோருடன் நெருங்கிய உறவும் வ.அ.வுக்கு இருந்தது. இக்கவிஞர்களின் நட்பினால் ஏற்பட்ட தாக்கம் வ.அ.விடம் இயல்பாக அமைந்திருந்த கவித்துவத்தை வளர்க்கப் பெரிதும் உதவியது. இவரது கவித்துவத்தைப் பறைசாற்றக் கூடியதாக 1977ம் ஆண்டு முதுரர் அமுதா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு தங்கம்' வெளியீடாக வெளிவந்த பூவரசம்பூ என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைநதள்ளன.
மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் உருதுமொழிக் கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பை வ.அ.அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பூவரசம் பூ என்ற தலைப்பில் வெளிவந்த இக்கவிதைகளில் கவிஞர் இக்பாலின் கருத்துக்களை அதன் உணர்ச்சியும், சுவையும் குன்றாமல் தமிழுக்கு அறிமுகம் செய்வதில் வ.அ. அவர்கள் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறவேண்டும். மொழி பெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போல் அல்லாமல் தமிழ்க் கவிதைகளை நேரடியாகப் படிப்பது போன்றே இக்கவிதைகள் யாக்கப்பட்டுள்ளன. பொருள் ஊறுபடாமல், உருவம் சிதையாத விருத்தப்பாக்களில் இக்கவிதைகளை அவர் வடித்தார். கவிமணி தேசிய விநாயகம்பிள்ளையின் 'உமர்கையாம்' தமிழாக்கத்துடன் சமதையாக ஒப்புநோக்கத்தக்க செழுமையை இக்கவிதைகள் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு சில கவிதைகள்.
மட்டி லடங்கா ஆலயங்கள் வானை முட்டும் கோபுரங்கள் தட்டும் கைகள் எல்லாம் இக் களிமணி தன்னால் ஆனவையே கட்டி வாழும் அன்னியனின் கட்டில் இருந்து விடுவிக்க முட்டாள் மனிதா உன்இதயம் தன்னால் முடியும் அறிந்திலையோ,
கதையைக் கொஞ்சம் நிறுத்தப்பா காது புளித்துப் போயிற்று சிதையில் விழுந்து போராடும் சின்னஞ் சிறிய ஈயலைப் போல்
‘ஓலை’ பக்கம் 18

இதயத் தேற்றிப் போற்றிடுவேன்
ஏனென்றே நீ கேட்பாயோ
வதையும் அந்தச் சிற்றுயிரின்
வன்போ ரின்பம் இறப்பின்பம்
மேலும், தனது பூவரசம்பூக் கவிதைகளை தனது மனைவிக்குச் சமர்ப்பித்த
அறுசீர்விருத்தத்தில் அவர் எழுதிய கவிதைகள் இக்கவிதை நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளுக்கும் முத்தாய்ப்பாய் அமைந்துள்ளன. அக்கவிதை வரிகள் வருமாறு.
அன்னக் கவலை மீதுர
ஆடி ஓடிப் பொருள்தேடி
சின்னக் கதைகள் பலபேசி
செத்து மடிந்து மணர்ணாகும்
புண்மை வாழ்வு வாழாமற்
பொதிகைக் தமிழின் வாழ்வுவரை
என்னை வாழச் செய்தற்காய்
எரியும் மெழுகு திரியாகி
காசைக் கழஞ்சைக் கேட்காமல் கழனி தோட்டம் துரத்தாமல் காசில் கொற்றக் கம்பனொடும் கதைஞண் புதுமைப் பித்தனொடும் பேசும் படிக்கு எனைவிட்டுப் பெருமை சேர்த்த லில்லிக்கு ஆசை யாகச் சூட்டற்கே அல்லாமா வைத் தமிழ் செய்தேன்.
இக்கவிதை வரிகளைப் படிக்கும் போது மகாகவி பாரதியாரின்,
"தேடிச் சோறு நிதம்தின்று - பல சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகு உழன்று - பிறர் வாடப்பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? எனும் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
லண்டனிலிருந்து வெளிவரும் ஈழகேசரியில் 1996ம் ஆண்டு மே இதழில் ஆக்காண்டி’ என்ற தலைப்பில் வ.அ.அவர்கள் எழுதிய கவிதையைப் பார்க்கலாம்.
‘ஓலை’ பக்கம் 9

Page 12
ஆக்காணர்டி ஆக்காணர்டி ஆக்காணர்டி எங்கே நீ முட்டையிட்டாய்? கல்லுப்பிளவிற் கடலோரம் முட்டையிட்டேன். இட்டதுமோ மூன்று முட்டை, பொரிச்சதுமோ ரெண்டு குஞ்சு மூத்தகுஞ்சுக்கிரை தேடி மூணுலோகம் சுற்றி வந்தேன். இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுலோகம் சுற்றி வந்தேன்.
குஞ்சுக்கிரை தேடக் கொடு பாவி பட்ட கதை கொஞ்சமல்ல நானுனக்குக் கூறக்கேற் மானுடவா கப்பல் மீதேறிக் கடலிற் பயணித்து சிப்பியோடு முத்தெடுக்கச் சிரம் மூழ்கிக் குளித்தேன் நான் வயலை உழுது வித்தி வானத்தை அணினாந்து பயிர் விளையும் என்றெணிணிப் பசியோடு காத்திருந்தேன்.
காட்டில் விறகு வெட்டிக் கட்டிச் சுமந்து விற்றேன் தோட்டத்திற் தென்னையிலே நெஞ்சுத் தோலுரிய ஏறினேன் நான் கல்லையுடைத்தேன் கை காய்ச்சிப் போனதையா கூலிக்கு வேலி கட்டிக் கூழுக்குஉழைத்தேன் நான் எத்தனைதான் பாடுபட்டேன் இரண்டுகுஞ்சைக் காப்பாற்ற அத்தனையும் சொல்லுதற்கு அவகாசம் இல்லை ஐயா
‘ஓலை’ பக்கம் 20

பள்ளிக்குப் போகப் பை வேண்டும் என்று சொன்னார் வெள்ளை உடையும் மேலேயோர் ரையுமென்றார் கொப்பிகளும் புத்தகமும் கூர்ப்பேனா பென்சில்களும் தப்பாது பரீட்சையினைத் தாண்டவேண்டும் எண்பதற்காய் மீட்டற்பயிற்சி என்றும் விரைவுப் பரீட்சைஎன்றும் போட்டிக்கு விற்கின்ற புத்தகங்கள் அத்தனையும் வாங்கிக் கொடுத்தேன் நான் வளம்அவரால் வரும்என்றே
கிணற்றங்கரை தன்னில் செழித்து வளர்ந்திட்ட இணைக் கமுகு போல இரு குஞ்சும் வாலிபராய் பாளைச் சிரிப்போடும் படிப்போடும் வளர்ந்தவர்கள் நாளை நமதென்று நம்பியே வாழ்ந்தேன் நான், வந்ததையை கொடிய வன்முறையும் இனப்போரும் அந்தப் போர் செய்யவந்த அரசபடைவீரர் ஊரைவளைத்தார்கள். ஒருங்கே இளைஞர்களை சேரப் பிடித்தார்கள் சென்றார்கள் கொணிடெங்கோ
போனவங்கள் மீண்டும் திரும்பி வரவில்லையா ஐயா வானவர்தான் ஆனாரோ மணர்ணில் வரவே தான் மாட்டாரோ?
‘ஓலை’ பத்தம் 21

Page 13
என்றெண்ணி நொந்து ஏங்கிப்புலம்புறன் நான். நானழுத கணிணிரும் இந்த நாடழுத கணிணிரும் வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர் கால்கழுவி இஞ்சிக்குப் பாய்ந்து இலாமிச்சை வேரோடி வயலுக்குப் பாய்ந்து வயல் வெள்ளக் காடாகி நாடே அழுததையா நாளை நமதாமோ.
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? என்பது கிழக்கிலங்கையின் கிராமியப் பாடல்களில் ஒன்று. அதனை ஆரம்ப அடியாக வைத்து இக்கவிதையை வ.அ.ஆக்கியுள்ளார். 'ஆக்காண்டி' என்பது ஒரு பறவை. உண்மையில் ஆட்காட்டி' என்பதே ஆக்காண்டியாக மருவிற்று.
வ.அ.அவர்கள் தான் பிறந்த மூதுரையும், கிழக்கிலங்கையையும் மிகவும் வாஞ்சையோடு நேசித்தார். கிழக்கிலங்கை மண்ணின் மீதும் அதன் கவிவளத்தின் மீதும் வ.அ.அவர்கள் திராத காதல் கொண்டிருந்த காரணத்தினாலேயே கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் குறுங்காவியத்தை தனது அச்சகத்தில் - மூதூர் அமுதா அச்சகம் - அச்சிட்டு தங்கம்' வெளியிடாக 1982இல் தனது முன்னுரையுடன் வெளியிட்டார்.
மகாவலி கங்கையின் இருகிளைகளான குருக்கள் கங்கைக்கும்
வெருகல் கங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தைக் கொட்டியாப்பற்று என்று சரித்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. இப்பிரதேசத்தின் பேரூர் கொட்டியாபுரம் என்றே வழங்கப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் அதற்கு முதுரர் என்ற பெயர் வந்தது. அந்த முதுரர்தான் வ.அ.பெருமையுடன் கூறும் அவர் பிறந்த மண். இந்த மண் நீர்வளமும், நிலவளமும், கடல் வளமுமுடையது.
இந்த மண்ணின் மகன் என்ற உணர்வே எண் எழுத்துக்களின் அடிநாதம். இம்மண்ணின் வனப்பையும், வளத்தையும் நேசிப்பதே எனது யோகம். இம்மணர்ணின் மக்களின் வாழ்வை இலக்கியமாக்குவதே எண் நோன்பு. நான் எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்தே இத்தவத்தை இயற்றி வருகின்றேன்"
இவ்வாறு மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 1999 வைகாசியில் வெளியிடப்பெற்ற வ.அ.இன் 'கொட்டியாரக்கதைகள்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலின் முன்னுரையில் வ.அ.அவர்களே கூறியுள்ளார்.
‘ஓலை’ பக்கம் 22

சங்கப்Uலகை
/ー கலந்துரையாடல் N
01.01.2003 புதன்கிழமை மாலை 7.00மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு.த.இராஜரட்ணம் அவர்கள் தலைமையில் மறைந்த தமிழறிஞர்புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரது மகன் சட்டத்தரணி திரு. திருவருள்வள்ளல் (அவுஸ்திரேலியா) அவர்களுடனான கலந்துரையாடலில் "அவுஸ்திரேலியாவில் தமிழும் தமிழரும்" என்ற பொருளில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்படும் சிவங்கருணாலய பாண்டியனார் நினைவுப் பரிசிலுக்காக மேலும் ரூ10,000/= திரு.திருவருள்வள்ளல் அவர்களால் \வழங்கப்பட்டது. لر
r 10வது ஒலை வெளியீடு. N
01.01.2003 புதன்கிழமை மாலை 6.30மணிக்குக் கொழும்புத்தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு.த.இராஜரட்ணம் அவர்களால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 10வது மாதாந்த மடல் 'ஒலை' வெளியிட்டு வைக்கப் பெற்றது. இதன் முதற்பிரதியை சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத் தலைவி ஜனாபா பரீதா ஷரிபுத்தீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
r கலந்துரையாடல் N 04.01.2003 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பன்மொழிப்புலவர் திரு.த.கனகரட்னம், அவர்கள் தலைமையில் கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி முன்னாள் அதிபரும் தற்போது கனடா ரொறொன்ரோ மாவட்ட கல்விச்சேவை ஆலோசகருமான திரு.சின்னையா சிவனேசன் அவர்களுடான கலந்துரையாடல் இடம் பெற்றது. لم
‘ஓலை’ பக்கம் 23

Page 14
அனுபவப் பகிர்வு
14.01.2003 செவ்வாய்க்கிழமை பி.ப.5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்துணைத்தலைவர் திரு.த.இராஜரட்ணம் அவர்கள் தலைமையில் இலங்கையில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற நாடக விற்பன்னரும், புலம் பெயர்ந்த (லண்டன்) களரி நாடகக் குழுத்தலைவரும், இலங்கையில் புகழ்பெற்ற 'கோடை" புதியதொரு வீடு' ஆகிய நாடகங்களது நெறியாள்கையாளரும், பொறுத்ததுபோதும்' நாடக ஆசிரியருமான திரு.ஏ.சி.தாசீஸியஸ் அவர்களால் நானும் அரங்கும்' என்ற பொருளில் அவரது நாடக அனுபவங்கள் இலக்கிய ஆர்வலர்களுடன் பகிரப்பட்டது.
கவிதா மாலை
(காலாண்டு கவிதா நிகழ்வு-2) கவிஞர் சில்லையூர் செல்வராசன் கவிதைகள்
25.01.03 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத்தமிழ்ச் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் கொழும்புத்தமிழ்ச் சங்கத்தின் 2ஆவது காலாண்டுக் கவிதா நிகழ்வான 'கவிதாமாலை'இடம்பெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் கவிதைகள் மொழியப் பெற்றன. செல்வி பவித்திரா நடராஜா அவர்களின் தமிழ் வாழ்த்தையும் திரு.க.க. உதயகுமார் அவர்களது வரவேற்புரையையும் தொடர்ந்து திருமதி கமலினி செல்வராசன் அவர்கள்
தொகுத்து வழங்க பின்வருவோர் கவிதைகளை மொழிந்தனர்.
9 அதிசயன் செல்வராசன் 9 கிண்ணியா அமீர்அலி 9 மாவை வரோதயன் 9 சிதம்பரப்பிள்ளை சிவகுமார் 9 ஏ.இக்பால் O த.சிவசங்கர் 9 இளையதம்பி தயானந்தா 0 கே.சந்திரசேகரன் 0 சுபாஷினி ஹிரீதரன் 9. எஸ்.செல்வசேகரன் 9 தி.திருக்குமரன் 9 யோகேந்திரன் பிரசன்னா 9 ஏ.ஆர்.திருச்செந்துரன் 9 பூரிதர் பிச்சையப்பா.
கொழும்புத் தமிழ்சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழரீதரன் அவர்களது நன்றியுரையுடனும் திரு.த.நடராசா அவர்.களது தமிழ்வாழ்த்துடனும் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது ܢܠ
‘ஓலை’ பக்கம் 24
أص
 

r 婚
ՀՀ கலநதுரையாடல \ 24.01.2003 வெள்ளிக்கிழமை மாலை 4.30மணிக்குக் கொழும்புத்தமிழ்ச்சங்கத் தலைவர் கலாசூரிஇ.சிவகுருநாதன் அவர்கள்தலைமையில்நாடக நெறியா. ளர் திரு.ச.பாலசிங்கத்துடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "தெருக்கூத்துநாடகக் கலை பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. لم
சான்றிதழ் வழங்கும் வைபவம் "தொழில்சார் முகாமைத்துவம் - பயிற்சிநெறி"
கொழும்புத் தமிழ்ச் சங்கக் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் 11.09.2002 அன்று தொடக்கம் இடம் பெற்ற 3மாத தொழில்சார் முகாமைத்துவப் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர். களுக்கான விருதும் சான்றிதழும் வழங்கும் வைபவம் 26.01.2003 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்புத்தமிழ்ச் சங்கத்தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
வரவேற்புரை - திரு.த.சிவஞானரஞ்சன்
(கல்விக் குழுச் செயலாளர், கொ.த.ச) 95ങ്ങബങ്ങബാuങ്ങj് விசேடஅதிதிஉரை - திரு.க.சண்முகலிங்கம்
(மேலதிகச் செயலாளர், கிழக்கின் அபிவிருத்தி அமைச்சு) பயிற்சிநெறிபற்றிய குறிப்பு - திரு.வி.ஏ.திருஞானசுந்தரம்
(பயிற்சிநெறிப்பணிப்பாளர்) - திரு.வை.சிவனேசன் (இலங்கை மத்திய
வங்கி (பயிற்சி விரிவுரையாளர்) நன்றிநவிலல் - செல்வி.இ.பிரபாஜினி
(பயிற்சி நெறிமாணவர் சார்பாக) முடிவுரை - திரு.ஆ.இரகுபதி பாலறிதரன்
(பொதுச் செயலாளர், கொ.த.ச)
r 'ஒலை 11 வது இதழ் வெளியீடு N
29.01.2003 புதன் கிழமை பி.ப.5.30க்கு நடைபெற்ற 195வது அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வின்போது தலைவர் இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிடப் பெற்றது. முதற் பிரதியை சங்கத்துணைத் தலைவர் புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பவளவிழாக்காணும் மட்டுவில் ஆ.நடராசா அவர்கள் Uநினைவுப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். لم
."g606)' U630, 25

Page 15
திகதி விடயம் ஆய்வாளர்
O1.01.2003 திருக்குறளில் திரு.இறுஸ்கந்தராசா
(192) புதுமையும் புரட்சியும்
08.01.2003 "மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரு.இறுஸகந்தராசா
(193) நகைச்சுவை"
22.01.2003 "சிரிக்கவும் சிந்திக்கவும் திரு.இறுஸ்கந்தராசா
(194) குட்டிக்கதைகள்"
29.01.2003 சங்க இலக்கியமான மட்டுவில் ஆநடராசா
(195) கலித்தொகையில் - மருதக்கலி
நால்நயம் காணர்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு
நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
10.01.2003 யோகம் இருக்கிறது. குந்தவை |திருமதி.அன்னலட்சுமி (101வது) (சிறுகதைத் தொகுதி) இராஜதுரை
24.01.2003 சிறுவர் பாலியல் மானா மக்கீன் திருமதிகெட்சி
(102) கொடுமைகள் சண்முகம்
(கட்டுரை)
31.01.2003 வேப்பமரம் D6D6 சுபாஷினி சிறீதரன்
(103வது) |(சிறுகதைத் தொகுதி)| வரோதயன்
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ பக்கம் 26
 

திருசின்னையா சிவநேசன் (துறையூரான்) கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் அதிபர் கனடாவிலிருந்து இலங்கை வந்திருந்த பொழுது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் (0401.03) ஆற்றிய உரைச்சுருக்கம். ஒவ்வொரு இனமும் தத்தமது தனித்துவத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் அதேசமயம் ஏனைய இனங்களுடன் இணைந்து வாழப்பழக வேண்டும். இந்த வாய்ப்பு கனடாவில் எனக்குக் கிடைத்துள்ளது. அங்கு 140 சனசமூகங்களும் மொழிகளும் உண்டு. புலம் பெயர்ந்து சென்றவர்கள் அவ்வவ்நாட்டில் திட்டமிட்டு வாழத்தவறின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். அசுரவேகத்தில் பணத்தைத் தேடாது ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். பலர் 60 வயதுக்கு முன் கடும் உழைப்பின் காரணமாக நோய் வாய்ப்படுகின்றனர். தாய் மொழியைக் கற்க தமிழ் மாணவர்கள் முன்வருவது குறைவு. மொழி, குறிப்பாகத் தாய்மொழி மனித சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவன் தனது சொந்த மொழியில் சிந்தித்து வெளிப்படுத்துவதில் யதார்த்தம் மிளிர்கின்றது. கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சியில் குறிப்பாக மாணவர் மட்டத்தில் முன்னின்று உழைத்து வருகிறேன். பெற்றோர்களின் ஆதரவும் போதுமான அளவு கிடைப்பதில்லை. மொழி ஊடாகத்தான் எமது கலாசாரத்தை -நம் முன்னோர் அளித்த அரும் பெரும் செல்வத்தை எம்மால் காப்பாற்ற முடியும். சர்வதேச கலாசாரம் என்ற எண்ணக்கரு பலநாடுகளையும் கவ்விக் கொண்டு வருகிறது. நாம் விழிப்பாக இருந்து கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இளைஞர்கள் பலர் அந்நிய கலாசாரத்தில் மூழ்குவதற்கு ஆர்வமுடையவர்களாகத் தெரிகிறது. அந்தநிலை ஏற்படுமானால் தாய்நாட்டை மறக்க நேரிடும். அவ்வாறு ஏற்படாமல் தடுப்பதற்கான மாற்றுவழிகளை இப்போதிருந்தே எடுப்பது சர்வதேசத் தமிழ்ச் சமூகத்தின் பாரிய கடமையாகும்.
தொகுப்பு : த.இராஜரட்ணம் (துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
"g606v” U55ú 27

Page 16
உதவும் கரங்கள்
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
தமிழினி குலேந்திரன் - லண்டன் (100 E ) 15, 148.00 சுப்பிரமணியம் கந்தசாமி - ஜேர்மன் (43.00 Euro) 4,273.74 திருமதிபூரணம் ஏனாதிநாதன் - தெஹிவளை 1,001.00 Rev. Bro. S.A.I. Mathew S.S.J &t56üb(yp6OD60T (aé). DIT) 1,000.00 ஜனாபா. பரீதா ஜின்னா ஷரிபுத்தீன், தெஹிவை 1,000.00 சாயா ஸ்ரூடியோ 1,000.00 A லோகேஸ்வரன், கொழும்பு - 11 1,000.00 இ.மயூரநாதன் - கொழும்பு - 06 500.00 பிரசன்னா நகைமாளிகை - கொழும்பு - 06 500.00 ந.சண்முகராஜா 500.00 மு.புஸ்பராஜா 500.00 N. புஸ்பயோகேந்திரன் 500.00 வேல் அமுதன், கொழும்பு - 06 500.00 இ.குலேந்திரா, அம் / திருக்கோவில் (கி.மா) 500.00 S. ஞானராஜா, மன்/ மடுக்கோவில் 300.00 Kதியாகராசா, கொழும்பு - 12 300.00 பட்டயக்கண்ணு நகை மாளிகை 300.00 ALM மஸPத்து லெவ்வை, அம்/ மாவடிப்பள்ளி (கி.மா) 300.00 ச.சபாநாயகம், யாழ் / மல்லாகம் 300.00 தாமரைத்தீவான், திரு/ஈச்சந்தீவு (கி.மா) 300.00 R.பற்குணம், கொழும்பு - 12 300.00 எஸ்.நடராஜன், நீர்கொழும்பு 250.00 S.M.Mறாபீக், அம் / கல்முனை (கி.மா) 200.00 ஜனாய். உவைஸ்கனி, பாணந்துறை 200.00 சிகண்டிதாசன், திருகோணமலை 200.00
‘ஓலை’ Ušзdй 28

அழுக்குப் பிடித்திருந்த ஆடைகளைக் கொண்டுபோய் கிணற்றடியில் வைத்துத் துவைக்கும் வேலையில் இருந்தாள் கண்மணி, உடுப்புகளை சவர்க்காரத்துள் போட்ட தண்ணில் வைத்துக் கசக்கும்போது பொங்கி எழுந்து வந்த நுரை அவர் முழங்கை வரையும் பட்டுப்படிந்து கொண்டிருந்தது.
“ஒரு தேனீர் போட்டுக் கொண்டுவந்து தாருமன் கண்மணி” கேட்டுக் கொண்டே அவளது கணவர் அருகில் வந்து நின்றார். “வேலையாயிருக்கிறன் குறைநினைக்காம இப்போதைக்கு மட்டும் நீங்கள் போட்டுக்குடியுங்கோ. அங்க எல்லாம் அடுக்காக குசினிக்க கிடக்கு” நெற்றியில் பனித்திருந்த வியர்வையை அப்படியே தலையைச் சரித்து ரவிக்கைப்பகுதியில துடைத்துக் கொண்டு பரிதாபமாக அவரைப்பார்த்தாள் அவள். “பாவம் அவளும்தான் என்ன செய்வாள், ஒரு தேனீர் போட்டுத் தருவதற்கு அழுக்குக் கைகளை அலம்பிச் சுத்தம் செய்து கொண்டு வரமுடியாதுதான்’ இப்படியாக நினைத்துக் கொண்டு மனசாட்சிக்கும் கொஞ்சம் இடமளித்து, “சரி - சரி நானே போட்டுக் குடிக்கிறன் நீர் வேலையைப் பாரும்” சொல்லிவிட்டு நேசன் நேராக சமையலறைக்குள் சென்றார். அலுவலகத்திலிருந்து இன்று அவருக்கு விடுமுறைநாள். பத்திரிகையில் படித்ததுபாதிபடி யாதது பாதியாக இருக்கையில் அதைமடித்து மேசையில் வைத்துவிட்டு மனைவியின் கையால் தேனிர் குடிக்க வந்தவருக்கு இப்போது தர்ம சங்கடமாகிவிட்டது.
சமையல் கட்டுப்பக்கம் தேயிலை, சீனி எங்கே இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. கண்டு பிடிக்க இலகுவானதாக அதற்குள்ளே சுடுதண்ணிர்ப் போத்தல் மாத்திரம் தெரிந்தது, அதை எடுத்தார். அடுத்து பொருட்களுடன் அருகே கிடந்த ஐந்தாறு ரின்களை குலுக்கிப்பார்த்து ஊகத்தில் ஒன்றை திறக்கும் போது வேண்டியதான தேயிலைத்துளும் கிடைத்து விட்டது. இந்தச் சீனி. அடேடே. இரண்டு போத்தல்களிலும் நிரம்பக்கிடக்கிறதே. ஒன்றே எடுத்துக் கொள்வோம். இப்போது ஒரு கறண்டி தேயிலை ஒரு மேசைக் கறண்டி
“g96D6v” Uśøó 29

Page 17
சீனி. அதற்குள் வென்னிரை ஊற்றி கறண்டியால் கலக்கியபிறகு இரண்டு நிமிடம் தேயிலைச் சாயம் ஊறும் வரை காத்திருந்து விட்டு வடித்துத் தம்ளரில் ஊற்றியதும் தான். தேனீர்தயார். “இதற்குப் போய்கண்மணிக்குக் கரைச்சல் குடுத்தனே’ சிரிப்போடு கிணற்றடிப்பக்கமாக வந்து கொண்டிருப்பவரை கொஞ்சம் ஆச்சரியமாகவும் அவள்பார்த்தாள்.
“கெட்டித்தனமாய் போட்டு எடுத்திட்டியள் போல’ மகிழ்ச்சியாக அவளுக்கும் இருந்தது. “சிம்பிள்” தேத்தண்ணீர் போடத் தெரியாதொண்டு நினைச்சீரே. ஆச். சுட்டுகுது. கொஞ்சம் ஆறவைச்சுக் குடிப்பம். விரல்களை நீட்டி டம்ளர் விளிம்பிலே பிடித்துக் கொண்டு வரவேற்பு அறைக்கு அவர் விரைந்தார். வேலை. வேலை. அது எப்போதுதான் அவளுக்கு தொலையப் போகிறது. பின்பும் அவள் வேலையிலேயே மூழ்கிக்கிடந்தாள். கொஞ்ச நேரத்தின் பின்பு அவள் பார்க்கும்படி வாந்தி எடுக்கும் நிலையில் அந்தரப்பட்டார்.
கிணற்றடியில் நின்றவாறே திகைத்துப்போய் “என்ன நடந்தது’ கேட்டாள் அவள். “ஒண்டுமில்லையப்பா சீனியெண்டு நினைச்சு உப்பைப் போட்டிட்டன் - காக். தூ. கரிக்குது தொண்டை” விளங்கிவிட்டது அவளுக்கு இரண்டு போத்தல்களில் ஒன்றில் சீனியும் மற்றையதில்உப்புப் பொடியும் இருந்தது. சீனிக்குப் பதில் உப்பைப்போட்டு கலக்கி விட்டிருக்கிறார்.
“கொஞ்சம் பொறுத்திருக்கலாமே அவதிப்பட்டுப்போய் இப்பிடியெல்லாம் கஷ்டப்படவேணுமே. சரிவாங்கோ வாயைக் கொப்பளியுங்கோ” செம்பிலே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“கண்மணி உன்ரை கையாடாட்டி இந்த வீட்டில் ஒண்டுமே நடவாதபோல கிடக்கு” தன்னைத் தாழ் வாகவும் எண்ணி குறுக்கிக் கொண்டு விட்டார். “எல்லாமே உங்களின்ரையும் பிழைதான் ஒருநாளைக்கேனும் குசினிப்பக்கமாக வந்திருப்பியளே! அடுப்புப்பக்கம் வந்து ஒண்டுமே பாத்தறியாததால தான்சின்ன ஒரு தேத்தண்ணி கூட உங்களுக்குப் போட்டுக் குடிக் கேலாமப் போச்சு. ஐம்பது வயசாகியும் இன்னும் இது ஒண்டும் தெரியாமலிருக்கிறியள்’ சொல்லும் போது தன்னிலும் கூட பிழை இருப்பதுபோல் அவளும் எண்ணிக் கொண்டாள். “கண்மணி கோவிச்சுக் கொள்ளாதயும் என்ன சவஇழவோ தெரியேல்ல என்னையும் மாத்திக் கொள்ளேலாமக் கிடக்கு. இளந்தாரியா இருக்கக்களையும் என்றை அம்மா கிணத்தில தண்ணியள்ள விடாம பலகையில் இருத்தி வைச்சுத்தான் முழுக வார்த்து விட்டவ உதுமாதிரிவேற ஒரு வேலையும் என்னைக் கொண்டு செய்விக்காததாலதான் இப்பிடியாயிட்டன்’ அவருடைய முகத்தில் சோகம் ததும்பியது.
“ம். உப்பிடியெல்லாம் வளர்த்து விட்டுட்டு உங்கட அம்மா சிவனேயெண்டு சொல்லி போய்ச் சேந்திட்டா. இப்ப நானெல்லே உங்களைக் கொண்டிழுக்க வேண்டியிருக்கு' மனச் சுமையை பெருமூச்சில் அவள் இறக்கிவிட்டாள்.
தங்கள் உடல் உழைப்பும் உடல் நலம் குறைவும் சகலருக்கும் தெரிய
"gá06v” (U55ó 30

வேண்டும் என்பதில் அநேகமான பெண்களுக்கு அலாதியான விருப்பம் இருக்கும். தங்கள் உடல்நலக் குறைவு உபாதைகளைப்பற்றி அடுத்தவர்களிடம் கூறி ஆறுதலடைவதில் ஆண்களை விட பெண்கள்தான் முன்னணியில் நிற்கிறார்கள். நான் போனால்தான் தெரியும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு சீரழிவெண்டு என்று நாற்பது வயது சென்று புலம்பாத பெண்களைக்காண்பது குடும்பங்களில் அரிது தான். ஆனால் கண்மணி அவள் குடும்பத்தில் இவற்றுக்கெல்லாம் எதிர்மாறாகவே தன்னுடைய வாழ்க்கையில் சீவித்துக் கொண்டிருந்தாள். நாள் முழுக்க வீட்டுவேலையும் சமையல் வேலையுமாக எல்லாவற்றையும் தனது தலையிலேயே போட்டுக் கொண்டு பொழுதெல்லாம் மாய்வது ஏனோ அவளுக்குப் பழக்கமாகி விட்டது. இதனாலேயாரிடமாவது இதைப்பற்றி குற்றம் குறைகள் சொல்லி அழுது வடிவதும் அவளுக்கு விருப்பமில்லாதிருந்தது.
இன்றுபுருஷனுக்கு சேவகம் செய்து கொண்டிருப்பவள், மகன் சிவகுமார் திருமணம் முடிப்பதற்கு முதல் தன்னோடு வீட்டிலிருக்கும் போதும் கணவனுக்குச் செய்வதையே மகனுக்கும் செய்து கொடுத்து அவனையும் சோம்பேறியாய் ஆவதற்கு விட்டிருந்தாள். கணவனை இருந்த இடத்திலேயே இருத்திவைத்து அவளுக்கு அடுக்கெடுத்து எல்லா அலுவல்களையும் செய்து கொடுத்துவிட்டு குடும்பத்துக்கென்று ஒரேயொரு செல்லப் பிள்ளையாகவிருக்கும் மகனிடத்தில் வேலை வாங்குவது பிடிக்காததால் பிள்ளையையும் கணவனைப் போலவே சோம்பேறியாய் ஆகிவிடுவதற்கு வழிகாட்டியாகவும் போய் விட்டாள்.
‘ஓலை’ பக்கும் 31

Page 18
காலையிலே படுக்கைக்குக் கோப்பிகொண்டு போய்த்தான் கண்மணிமகனை எழுப்புவாள். கோப்பி குடித்த பின் கோப்பையை அவன் அவ்விடயத்திலே விட்டுப்போவதும் கண்ட கண்ட இடத்தில் உடமைகளைப் போட்டுவிட்டு தாயார் அதை ஒழுங்குபடுத்துவதும் ஆரோக்கியமான போக்காக இல்லா விட்டாலும் கண்மணி இதனை வளர்த்துக் கொண்டுதான் வந்தாள். படிப்பை முடித்த கையோடு சிவகுமாருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அவனும் குழந்தை குட்டிகளோடு குடித்தனம் நடத்து வதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் இன்றைய நாளில் எல்லாரும் விரும்புவது போல அவர்களும் படித்த பெண்ணாக விருந்த தாமரையை விரும்பி அவளை மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மருமகள்தாமரை படித்ததோடு மட்டுமல்லாதுநல்ல உத்தியோகமும் பார்ப்பவள். இன்றைய சூழலிலே இருவரும் உழைத்தால் தான் பணப்பிரச். சினையில் சிக்கல்கள் வராதிருக்கும் என்பதும் தாய்தகப்பனின் கருத்தாக இருந்தது.
சிவகுமாருக்கும் தாமரைக்கும் திருமணமாகி இரண்டுமாதங்கள் சென்று விட்டன. தனிக்குடித்தனம் போய் இருக்கும் மகனையும் மருமகளையும் அவர்கள் இருக்கும் வீட்டிலே போய்ப் பார்க்க தாய்க்கும் ஆசை. இந்த நேரத்தில் அந்தக் கதையும் வந்தது. “இங்கேருங்கோ இந்த முறை நாங்கள் மகனிண்ட வீட்டவாப் போவமே. பிள்ளை இங்கினையாவந்து எங்களைப் பார்த்திட்டுப் போகிறது மாதிரி ஒருக்கால்நீங்களும்நானுமா அங்கபோய் அவயளைப்பார்த்துக் கொண்டு வந்தாலென்ன”. ஒன்று மட்டும் உண்டு. மனைவியின் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டு விடுபவர் நேசன். அதுக்கென்னநீர் எதைக்கேட்டும் மாட்டனெண்டிருக்கிறனே. நாளைக்கு எல்லாருக்குமே லிவுநாள் இண்டைக்கே வெளிக்கிடுவம். சரிதானே” இருவருக்குமே இப்போது உற்சாகம் தான். அடுத்ததாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேதியும் சொல்லியாகிவிட்டது. சிவகுமார், அப்பாவையும் அம்மாவையும் எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிலே குதுரகலமாயிருந்தான். தனிக்குடித்தனம் போன பிறகு மாமாவும் மாமியும் வீட்டுக்கு வருகிறார்கள் என்பதில் தாமரைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. பொழுதுபடுகிற நேரம்பார்த்து நேசனும் கண்மணியும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
“வாருங்கோமாமா. மாமிவாங்கோ.” பாசத்தோடு முன்னால் சென்று வரவேற்றாள் தாமரை. சிவகுமாரும் அவளுடன் கூடவே நின்று கொண்டு அம்மா கொண்டு வந்த பொருட்களை வாங்கிக் கொண்டான், இவர்கள் வீட்டுக்கு முன்னால் சிறிய முற்றம். அங்கே நிறைய செடிகளில் பூக்களும் இருந்தன.
“கன்றுகள் நல்லாக்கண்ணுக்குக் குளிர்ச்சியால் நிற்குது நீர்தான் தண்ணிர் ஊற்றுறிரோ?” கண்மணிமரு மகளிடம் கேட்டாள். "ஒரு நாளைக்கு நான் ஊத்துவன் இன்னோருநாள் உங்கட மகன் ஊத்துவார்’ சொல்லிவிட்டு மாமியின் முகத்தைப் பார்த்தாள் தாமரை. “குமார் தண்ணிரள்ளி ஊற்றுறானோ” ஆச்சரியப்பட்டவள் “அவர் இப்பிடியெல்லாம் செய்யிறதுக்கு குனிய நிமிர
‘ஓலை’ பக்கம் 32

மாட்டாரே?. உண்மையைத்தான் சொல்லுறிரோ? “சொல்லியபடி கண்மணி கணவனைப் பார்த்தாள். நேசன் ஆச்சரியத்தில் மகனுடைய முகத்தைப் பார்த்தாள். “அம்மா அதெல்லாம் பிறகு கதைப்பம், களைச்சுப்போய் வந்திருப்பியள் முதலில் உள்ளபோய் இருந்து ஏதாவது குடிச்சிட்டு பிறகு பார்ப்பமே” வரவேற்பு அறையில் எல்லாரும் வந்தமர்ந்தார்கள், கண்மணி அறையின் உள்ளே விழிகளை சுழற்றினாள். சுவரிலே எழிலான இயற்கை ஒவியங்கள் சட்டம் போட்டு மாட்டிவைக்கப்பட்டிருந்தன. கீழே நிலத்தில் போடப்பட்டிருந்த விரிப்புமிகவும் சுத்தமாக இருந்தது. இருக்கைகளின் முன்னால் உள்ள சிறிய மேசையில் உயிர்ப்புடனுள்ள இயற்கைப்பூக்கள் கொத்தாகச் சேர்த்து குவளையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த அழகும் சுத்தமும் அவளின் மனதை ஈர்க்கும்படியாக இருந்தது. “அம்மா அப்பா என்ன குடிக்கிறியள். குளிர்ச்சியாய் ஏதாவது” மகன்கேட்ட போது, “வேண்டாம் குமார் எனக்கு நெஞ்சில சளி அப்பாவும் குடிக்கார்.”
அப்ப நல்லதாய் ஒரு ரீ போட்டரட்டே" தாமரை கேட்டாள். “அதுக் கென்ன போட்டாரும் குடிப்பம்” கண்மணி சொன்னாள். “இருங்கோம்மாவாறன்’ சிவகுமார் தான் அங்கிருந்து எழுந்து போனான். “குமார் எங்கபோறார்?’ தாய் கேட்டாள். "ரீபோட்டுக் கொண்டரப் போறார் தாமரைபதில் சொன்னாள், கண்மணிக்கு ஒன்றுமே புரியவில்லை கேள்விக்குறி அவள் முகத்தில் வெளிப்பட்டது. நேசனும் விறைந்து விட்டார். முக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்து கைக்குட்டையால் துலக்கமாகத்துடைத்து சுத்தம் செய்து கொண்டு மீண்டும் மாட்டிக் கொண்டார். புதிதாக அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதில் இருவருக்குமே ஆவல்மேலோங்கியது. ஐந்து நிமிடங்கள் கழித்து தேனிரும் தட்டுமாக சிவகுமார் அவர்கள் முன்னால் நின்றான். முதலில் அப்பாவுக்கு அடுத்து அம்மாவுக்கென்று நீட்டும் போது முகம் மாறிப் போனாலும் தேனீரை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள் “ஏன் தாமரை வீட்டு வேலையெல்லாம் இங்க குமாரே செய்யிறார்?” ஆத்திரத்தை வெளிக்காட்டாமல் குத்தலாக கண்மணி கேட்டாள். “இல்லையே நானும் தான் செய்யிறன்’ அமைதியாக அதற்கு இவள் பதிலளித்தாள். “நீர் சொல்லுறமாதிரி அப்பிடி இங்கநடக்கிறதாத் தெரியேல்லயே. எல்லா வேலையளையும் குமார் செய்யிற மாதிரித்தானே தெரியிது?’ குறிப்பாக இப்படி வினவியவுடனே. ‘மாமி! நீங்கநினைக்கிறமாதிரி நாங்கள் ஒண்டும் ஒருவரையொருவர் அதிகாரம் பண்ணி வாழ்க்கையைக் கொண்டு போகேல்ல. ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருவர் உதவியாயிருக்கிறம். சிலவேளை நான் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்யிறார். அதே மாதிரி அவருக்குத் தேவையானதையெல்லாம் நான் செய்து கொடுக்கிறன். ரெண்டுபேருமே இப்பிடி ஆளை ஆள் புரிஞ்சு கொண்டு நடக்கிறம்” அதிகப்பிரசங்கித்தனமாயிராது இரத்தினச் சுருக்கமாக நல்லமுறையில் கூறிவிட்டு அவர்கள் இருவரினதும் பதிலை எதிர்பார்த்துக்காத்துக் கிடந்தாள் அவள். கண்மணி மருமகளின் கருத்துக்கு நன்றாக இறங்கிவர வேண்டியிருந்தது. அவள் சொன்னவைகளெல்லாம் தனது குடும்பவாழ்வில் இல்லாத நிலையில் பல
‘ஓலை’ பக்கம் 33

Page 19
துன்பங்களையும் அனுபவித்துப்பழகி இருந்தவளுக்கு தன்னைப்போல ஒரு பெண்ணின் இந்தக் காலத்திற் கேற்ற நடைமுறை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதாகவே நினைத்து வரவேற்றுக் கொண்டாள். என்றாலும் மகனை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது. “சரி என்னோட இருக்கேக்க இது மாதிரி சமாச்சாரம் ஒண்டும் தெரியாம இருந்தாரே அதுக்குள்ள இது எல்லாம் எப்பிடி?.” வெளிப்படையாகவே இதை மருமகளிடம் கேட்டு விட்டாள் அவள். “இதில என்ன மாமிபுதினம் இருக்கு முந்தி உங்களோட இருக்கேக்க இதொண். டும் செய்யிறதில்லையெண்டுதான் எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனா நான் விடுகிறதில்ல. வேலைக்கு நானும் தான் போறன். அதால வீட்டு வேலையிலையும் நீங்க பங்கு பற்ற வேணுமெண்டு சொல்லி அவராகவும் இதை சிந்தித்து உணந்து வழிக்கு வரச் செய்தன். இப்ப ரெண்டு பேருக்கையும் ஒரு பிரச்சனையும் வாக்கு வாதமும் இல்லாத மாதிரி இருக்கும்படியாயிருக்கு” இதைக்கேட்டதும் கண்மணி, முதலில் தனது கணவனைத்தான் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளானாள். அவருக்கு இப்படியெல்லாம் உதவி செய்யவிரும்பும் ஏதாவதொரு நல்ல குணம் இருக்கிறதா?என்பதை மானசீகமாக தேடிப்பார்த்தவளுக்கு வெறும் ஏமாற்றம் தான் கிடைக்கும் படியாகியது. நேசன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டார். திரிகல்லை கயிற்றில் கோர்த்துக்கட்டி கழுத்தில் மாட்டி விட்டது போல் பாரமாக இப்போது அவருக்கு இருந்தது. பாவம்! தலையை உயர்த்திப் பார்க்க முடியாதவாறு ஆகிவிட்டதால் அப்படியே இருந்தவாறு தன்னை நினைத்து அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
பொழுது சாயும் வேளை. பொட்டுப் பொட்டென்று மழைத்துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலத்தில் விழுந்து கொண்டிருந்தது, அவர்கள் வீட்டு முற்றத்தில் நின்ற பெரிய பலாமரத்தில் மைனா கிளையாக வந்து அடைந்து கொண்டிருந்தது. அவைகளினது தொடர்ச்சியான சத்தத்தோடு மாலையும் மயங்கிப்போய் இருளில் மூழ்கியது. பெரியவர்கள் இருவருக்கும் பொழுது போக்காக இருக்க தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி வைத்து விட்டு தாமரையும், கணவரும் சமையலறைக்குள் நுளைந்து விட்டார்கள். குசினியிலே கொஞ்ச நேரம் போய் இருந்து எல்லா விஷயங்களையும் கண்டுவரலாம் என்பதே கண்மணியின் அவா என்றாலும் கல்யாணமான சிறுசுகளுக்கு தொந்தரவு கொடுப்பது நாகரிகமல்ல என்ற எண்ணம் வலுத்ததும் அந்த விருப்பத்தை கைவிட்டாள்.
இரவு அவர்களின் சமையல்முடிந்து மேசையைச் சுற்றி எல்லாருமாக சேர்ந்திருந்து சாப்பிடும் நேரம் அவர்களது சம்பாஷணயும் இரசிக்கக் கூடியதாக இருந்தது. இட்டலியும் காரச்சுவையுடைய தொடுகறியும் சுவையாக இருப்பதாக கண்மணி மருமகளைப் பாராட்டினாள். நேசனும்அதிலே தானும் கலந்து கொண். டார். பூப்போல இருக்கும் இட்லி வாயில் வைத்ததும் கரைந்து போவதாக சான்றி. தழ்வேறு தாமரைக்குக் கொடுக்கப்பட்டது. பரிமாறும் வேலையை சிவகுமார் எடுத்துக்கொண்டான். மனைவிக்கும், இட்டலி, சட்ணியை எடுத்து அவள் அருகில் வைத்து தட்டில் போட்டுக் கொடுத்தான். மகனது இந்த உபசரிப்பை தாயார்
‘ஓலை’ பத்தம் 34

சாப்பிட்டுக் கொண்டே கடைக்கண்ணால் ஆர்வமாகப்பார்த்தாள்.
சாப்பிடும் போது பழைய இலக்கியக்கதைகளும் அவர்கள் உரையாடலில் சேர்ந்தது. ஆண் இனம் அரக்க இனமாய் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலில் ஒருபோடு போட்டாள் தாமரை. இதைப்புரியாது அவளைப் பார்த்தபடி கண்மணி விழித்தாள். தாமரை தொடர்ந்தாள். “பெண்ணுக்காக ஆண் இனம் எதையுமே தாங்கத் தயாராக இருக்கிறது. மிருகங்களில் கூட அதைக் காணப்கூடியதாய் இருக்கிறதாம் மாமி. சங்கப்பாடல்களில் இதற்குச் சான்று இருக்கிறது’ இப்போது சாப்பாட்டு மேசையிலே தாமரைக்கு நேராக சிவகுமார் இருந்து கொண்டான். தட்டிலே இட்லியை அடுக்கிக் கொண்டவன் சட்ணியைப் போட்டுக் கொண்டு மனைவியின் முகத்தைப் பார்த்தவாறு அவள் கதையையும் இரசித்துக் கொண்டு மெல்ல சாப்பிட ஆரம்பித்தான்.
தாமரை பேச்சைத் தொடர்ந்தாள்.
“கொஞ்சம் இருக்கும் நீரினை முதலில் பெண்யானையைக் குடிக்க விட்டு பின்பு தான் குடிக்கிறதாம் ஆண்யானை - அதே போல வெய்யிலில் வாடும் பெண் மானை தன் நிழலில் நிற்கவைக்கிறதாம் ஆண் மான். இப்பிடியெல்லாம் மிருக சாதிகளே இருக்க, மனித இனத்தில மட்டும் ஆண் இனம் அரக்க இனமாயிருக்க வாய்ப்பில்லையென்ன. பொம்பிளையஸ் தங்கட தேவையளையும் ஏலாத்தனத்தையும் சரிவர விளங்கத்தக்கதாய், அன்பாய் புருசனிட்டச் சொல்ல வேணும். அப்பிடியில்லாம தங்களை ஆம்பிளையஸ் புரிஞ்சு கொண்டு நடக்க வேண்டு மெண்டு பார்த்தால் பேந்து தனியக் கிடந்து எல்லாவேலையளையும் செய்து மாஞ்சு போற அளவுக்குத்தான் போயிடும்”
தாமரை இப்படிச் சொன்னதும் நேசன் திகைத்துப் போனார். உடனே கண்மணியைத் திரும்பிப்பார்த்தார். களைத்துப் போயிருக்கும் அவள் முகம் அவருடைய மனதில் பலவித கவலைகளையும் ஏற்படுத்திவிட்டது. தான் துன்புற நேர்ந்தாலும் மற்றயவர்கள் நன்றாயிருக்கவேணும் என்ற வாறான நற்குணமுடைய கண்மணியை இனியாவது கண்போல பாதுகாத்து இயலுமான எல்லா உதவிகளையும் அவளுக்குச் செய்து கொடுத்து மகிழ்வாக அவளை வைத்திருக்க வேண்டும் என்று அந்தக் கணமே அவர் முடிவெடுத்தார், உடனே தன்னாலேயும் எல்லாவற்றையும் மனைவிக்குச் செய்து கொடுக்க முடியும் என்பதைக் காட்ட அங்கே ஆரம்பமாக ஒரு அன்பான உதவியைக் கண்மணிக்குச் செய்தார். தட்டிலே இரண்டு இட்டலிகளை எடுத்து கண்மணி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில்வைத்து சட்ணியை சிறிது கறண்டியில் அள்ளிப் போட்டு “கண்மணி! சாப்பிடுமப்பா’ என்று அன்போடு கூறினார். கண்மணிக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. முதன் முதலில் வெட்கம் அவளைப் பிடுங்கித்தின்பது போல் இருக்க, நிமிர்ந்து கணவனைப்பார்த்து நன்றியோடு அவள் லேசாகச் சிரிந்தாள், இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகனும் மருமகளும் உள்ளம்பூரித்துப் போக அதிலே இருந்தவாறு வாய்விட்டுச் சிரித்தார்கள் -
‘ஓலை’ υό6ώ 35

Page 20
கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர் இரா.சடகோபனின்
“ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்”
(பிள்ளை இலக்கிய நால்)
இரா.சடகோபனின் "ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்" என்ற பிள்ளை இலக்கிய நூலின் வெளியீட்டு விழா 20.10.2003 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மணிடபத்தில் பேராசிரியர். சோ.சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்றது. இவ்விழாவில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். எம்.எஸ்.மூக்கையா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆய்வுரையை தேசிய கல்வி நிறுவன தமிழ்ப் பகுதி பணிப்பாளர் திரு.தைதனராஜும் உலக சாதனையாளர் சோக்கல்லோ சண்முகநாதனும்
நிகழ்த்தினர்கள்.
'ஆயிரம் ஆண்டுகாலமனிதர்கள்’ என்ற தலைப்பில் கடந்த காலங்களில்வாழ்ந்த, பாடசாலைப்பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டியபத்துப்பேர்பற்றிய இச்சிறுநூலை திரு.இரா.சடகோபன் எழுதியுள்ளார். இன்றைய பிள்ளைகளின் கல்வியானது பெரும்பாலும் பரீட்சைகளை மையமாகக் கொண்டதென்றும் பாடத்திட்டம், பாட நூல்களுக்கு அப்பால் உலக அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூல்களை அவர்கள் படிப்பதற்கான ஊக்குவிப்பைக் கல்வி முறை வழங்குவதில்லை என்றும் பல குறைபாடுகள்எடுத்துக் கூறப்படுகின்றன.இவற்றுக்கெல்லாம்சிகரம் வைத்தாற் போல இன்று பல்வேறு வயது நிலைகளில் உள்ள பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற மொழிநடையில எழுதப்படும் நூல்களும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன. இந்நிலைமைகளைக் கருதிற் கொள்ளும் போது, இரா.சடகோபனின் இச்சிறுவர் நூலின் முக்கியத்துவம் நன்கு புலப்படுகின்றது.
சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் கவிஞராகவும் சிறந்த ஒவியராகவும் இன்றுமிளிர்ந்துள்ள சடகோபன் அவர்கள் கடந்த ஆயிரமாண்டு கால உலக வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனித நாகரிக வரலாறு, அரசியல் வரலாறு என்பவற்றில் திருப்பு முனையாக அமைந்து தடம் பதித்த வரலாற்று நாயகர்கள் பத்துப்பேரை இந்நூலில் இளந்தலைமுறையினருக்கு அறிமுகம் செய்கின்றார். அவர்கள் அனைவருமே மாணவர்கள் அறிந்திருக்க வேண்டியவர்கள். அவர்களது வாழ்க்கைப் பின்னணி, பின்பற்றிய கொள்கைகள், ஆற்றிய பங்களிப்பு என்பன பற்றி அனுபவம் மிக்க எழுத்தாளரான சடகோபன் எளிதில் விளங்கும் மொழிநடையில் சிறப்பாக ஒவ்வொரு கட்டுரையையும் எழுதியுள்ளார். நூலின் மற்றொரு சிறப்பு, அட்டைப்படம் உட்படத் தேவையான படங்களை நூலாசிரியரே வரைந்துள்ளமைதான்.
-பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
'gബഞ്ച്' UőSaó 36

இந்நூலில் நடந்து முடிந்த ஆயிரம் ஆண்டு
காலத்தில் (கி.பி.1000- கி.பி.2000) வாழ்ந்த அதி. மானுடர்களான கிறிஸ்தோபர் கொலம்பஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆபிரஹாம் லிங்கன், சார்ள்ஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், மகாத்மா காந்தி, அல்பர்ட் ஜன்ஸ்டின், அடோல்ப் ஹிட்லர், நீல் ஆம்ஸ்ட்ரோங் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு அவர்களது படங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளது.
தேசிய கலை இலக்கியப் பேரவையினர் வெளியிட்டுள்ள இந்நூல் சவுத் ஏசியன் புக்ஸ் - 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தை தொகுதி கொழும்பு 11 (தொ.பேசி.335844), வசந்தம் புத்தகசாலை - 405, ஸ்ரான்லி றோட், யாழ்ப்பாணம் ஆகிய முகவரியில் மொத்தமாகவும், சில்லறை ஆகவும் பெற்றுக் கொள்ளலாம். ரூ.100/- விலையிடப்பட்டு உள்ள இந்நூலை பாடசாலைகள், இலக்கிய மன்றங்கள், நூலகங்கள், புத்தகசாலைகள் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள் 30% கழிவில் பெற்றுக் கொள்ளலாம், மற்றும் பூபால சிங்கம் புத்தகசாலை, மில்லேனியம் புத்தகசாலை (பம்பலப்பிட்டி) ஆகியவற்றிலும்
கிடைக்கும்.
OD
விட்டுத் தள்ளுமச்சான்
மூன்று தடவை வெள்ளம் போட்டு முடித்தது வானம்! - நீரில் தாண்டெழும்பித் தப்பிவந்தோம் தந்ததார் தானம்?
வெள்ளம் பார்க்க வீடுவீடாய் வந்தாரா யாரும் - நம்ம உள்ளம் குளிர பாண்துண்டாச்சும் தந்தாரா கேளும் !
காலமெல்லாம் வெள்ளம் போடும் கண்ணிரும் ஒடும் - இது காலத்தோடு காலமாகக் காணாமல் போகும்!
கவிஞர் செகுணரத்தினம்
நாமுழைத்தால் தானேநம்ம நிலமைகள் மாறும்! - வெள்ள மாமும், சீனி பருப்பு மெந்த மூலைக்குக் காணும்?
விட்டுத்தள்ளு 1 வாடாமச்சான் வயலுக்குப் போவம்! -நாம பட்டுப்பட்டுத் தேறிப் போனோம் பசிக்குடல் பாவம்!
‘ஓலை’ பக்கம் 37

Page 21
தில்லைச் சிவனின் கடிதம்
செயலர் அவர்கள்,
தமிழ்ச் சங்கம்,
கொழும்பு.
அன்புடையீர், கொழும்புத் தமிழ்ச்சங்கப்பணிகளைப் பாராட்டுவதுடன், நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ்ந்த நாள்களை நினைத்தும் புளகாங்கிதமடைகிறேன். அறிவோர் ஒன்று கூடல், நூல் நயம் காண்போம் எனும் நிகழ்வுகள் எனது நினைவில் நிலைத்து விட்டன. அங்கு சந்தித்த ஒவ்வொரு இனிய முகங்களும் என் நெஞ்சை நிறைத்து விட்டன. , தனித்தனி பேர் கூறி நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆற்றாமை புறந்தள்ளத் திக்குமுக்காட வேண்டியுள்ளது. எனது "படைப்போம் பாடுவோம்" என்ற நூலை நயங்கண்டதோடமையாது, வெகுமதியும் தந்து மகிழ்வித்த நுங்கள் அன்புக்கு என் நன்றி எம்மாத்திரம், அறிவோர் தம் திருவடிகளை அன்புடன் வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து, இம்மடலை அறிவோர் மன்றில் முன்வைக்க வேண்டுகிறேன்.
அன்பான
45/1, அம்மன் வீதி, தில்லைச் சிவன்
நல்லூir, w (தி.சிவசாமி) யாழபபாணம 12.12.2002
குறிப்பு : கவிஞர் தில்லைச் சிவன் (தி.சிவசாமி) அவர்கள் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலெல்லாம் குறிப்பாக பிரதிபுதன்கிழமை தோறும் நடைபெறும் "அறிவோர் ஒன்று கூடல்" மற்றும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் "நூல்நயம் காண்போம்" நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டதுடன் சங்கப்பணிகளுக்கு அதன் உறுப்பினராக இல்லாதிருந்த போதிலும் கூட ஊக்கமும் ஒத்தாசையும் ஆலோசனைகளும் வழங்கி உதவினார். அவர் அண்மையில் யாழ்ப்பாணம் திரும்பிச்செல்லும் வேளை 29.11.2002 அன்றைய 96வது "நூல்நயம் காண்போம்" நிகழ்வில் அவரது படைப்பான "படைப்போம் பாடுவோம்" சிறுவர் இலக்கிய நூல் திரு.இளையதம்பி தயானந்தா அவர்களால்நயம் காணப்பட்டதுடன் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் துணைத் தலைவர் மு.கதிர்கமநாதன் அவர்களால் நினைவுப்பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டார். அவர் யாழ் சேர்ந்தபின் எழுதிய கடிதம் -ஆசிரியர்.
‘ஓலை’ பக்கம் 38
 
 

O பத்தாவது'ஒலை கிடைத்தது. இதுவே எம் சொத்தாகட்டும் என மனம்
புடைத்தது. சங்கம் வளர்த்த தமிழை மனதில் தங்க வைக்கும் முகமாக கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஒலை மூலம் தன் வேலையைப் பரப்புவதற்கு இது சிறந்த கருவி. சங்கத் தொழிற்பாடுகளையும் எண்ணங்களையும் ஒலை வெளிக் கொணரலாம் என்பது திண்ணம். மங்காத சங்கத் தமிழையும் அவ்வப் போது பக்கம் ஒன்றில் பத்தியாக்கினால் எதிர்காலத்தில் பல சித்திகளையும் பெறலாம். சாலையில் போகும் போதும் படித்துய்ய கையடக்க ஒலையாய் வருவதும் சாலப்பொருந்தும்.
இலக்கிய நெஞ்சங்கள் மகிழ, ஒலைதுஞ்சாமல் வெளிவரல் வேண்டும் என்ற மனமகிழ்வுடன், ஓலை ஒரு பூஞ்சோலையாய் அகிலம் அனைத்திலும் தமிழ்மணம் பரப்பட்டும் என்றுவாயார வாழ்த்தி, வளர்க நும் பணி என ஆசீர்வதிக்கிறேன். Pon Teivendiran Retd. Dy Principal Kopay G.TC & S.L.E.A.S.II Pandarikulam, Vavuniya.
கலைமாமணி, சைவப்புலவர்
பொன். தெய்வேந்திரன்
ஒலை 10 - வது இதழ் பெற்றேன். நன்றி முதலாவது சிறுவர் சஞ்சிகை "வெற்றிமணி" என்பது சரியே. சரியான தகவலைத் தந்தமைக்கு நன்றி. 1970ம் ஆண்டில் வெற்றிமணியில் சிறுவர் போட்டிப் பகுதி தயாரிப்பாளராகவும். பரிசு கொடுப்பவராகவும் நான் செயற்பட்டேன். எனது அன்பளிப்பை நேரில் வந்து ஒப்படைக்கவுள்ளேன். ஒலையின் பழைய பிரதிகளும் தேவை. ஒலை பற்றியும் அடுத்த ஜும்ஆவில் செய்தி வெளிவரும். நன்றி.
UMMA ஆசிரியர் Sinhala Muslim Mitra Mawatha, ஜும் ஆ Balapitiya. 80550 (Sri Lanka Muslim Paper) 09.01.2003
‘ஓலை’ பக்தம் 39

Page 22
{)
"ஒலை"இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்கின்றன. மிக்கநன்றி. இதழ்கள் சிறப்பாக வெளிவருகின்றன. தங்கள் இலக்கியப்பணி மிகவும் பாராட்டிற்குரியது.
திருகோணமலை இலக்கிய ஒன்றியம் எஸ்.செல்வகுமார் இல :50/2A, மத்திய வீதி, உவர்மலை, Gafu Guiráti திருகோணமலை
தொ.பே.இல : 026 - 22802
10.01.2003
ஒலை கிடைத்தது. உவகை கொண்டேன். காலத்திற்கு உகந்த வேலை, 'ஒலை' -நன்றி
SADMIMANZIL 438/3, KALUGAMUWA VIDWAN M.ABDUL RAHUMAN
GELIOYA - 20620 11.01.2003
'ஒலை' மாதாந்த மடல் 8,9,10 என் கரங்களுக்கும் கிடைத்தன. திருக்கோவில் கவியுகனின் பெயருக்கு நீங்கள் அனுப்பும் 'ஒலையை நானும் தொடர்ந்து படித்து வருகின்றேன்.
மேலும், தமிழ், தமிழனை எண்ணி வேதனைப்படும் சில நேரங்களில் சாதனையாளர் திரு.த.சண்முகநாதன்(சோக்கல்லோ சண்முகம்) அவர்கள், அவர் போன்ற இன்னும் சில தமிழர்களின் வீரதீரச் செயல்களைப் படிக்கும் போதோ, கேட்கும்போதோ மனம் பெருமைப்படுகிறது. 'ஒலையின் 1,2,3,4,5,6,7 இதழ்கள் படிக்க முடியாமல் போனது மனதில் பெரும் குறைபோல் தோணுகிறது. உங்களால் முடிந்தால் இக்குறையையும் போக்கி 'ஒலையின் இதழ்களை என் கரங்களிலும் தவழச் செய்யுங்கள். 'ஒலை வாரமடலாக மாற கடவுளை வேண்டி ஆசி கூறுகின்றேன்.
பிள்ளையார் வீதி இகுலேந்திரா
திருக்கோவில் (கி.மா) 19.01.2003
‘ஓலை’ பக்கம் 40

SPECIALIST FOR SHRTS
s
RADHIKAs
No. 4, SHOPPING COMPLEX, NEGOMBO. TEL:031-32321
170ith (1Best 70lishes froma
10, STATION ROAD,JA-ELA, SRI LANKA
T.P. 230601
ഗ{്ട

Page 23
நித்தியகல்யாணி
ILL
பெல்ஜியம்
சர்வதேச இரத்தினர் (International Gen உறுதிப்படுத்தப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட் பைகளில் மூடித்
ബട്ട
fljulöEI
230 காலி வீதி தொலைபேசி
* தொலை ந
மின்னஞ்சல்
RA
 
 

வத்தை நகை மாளிகையில்
ற்ற வைரம்
(Belgium) கல்லியல் நிறுவனத்தினால் nmological Institute) - பரிசோதிக்கப்பட்டு டு - மாற்றமுடியாதபடி
தாளிடப்பட்டது.
ITEDI లిalam
கொழும்பு - 06 :36器冕。$6°蜴”
5 : 504933
tās