கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.03

Page 1
1 -- نتی ஒலைபுக் கொழும்புத் தமிழ்ச்:
22.03.2003, 23.03.2003 இருதினங் தமிழ்ச் சங்கத்தின் அறுபத்திே இறுதிநாளான 23.03.2003 சான்றோன்’ விருது - 2003 கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின்
உயர்திரு கா.பொ.இரத்தினம் இ. நம
அவர்கள் --Ավել
கொழும்புத் 7, 57 வது ஒழுங்கை (உருத்த தொலைபேசி
வெய் முகவரி W. இணைய தபால் முகவரி tே
 
 

ിfigB][6ി
சங்க மாதாந்த மடல் :
களும் நடைபெறும் கொழும்புத் பாராவது சங்கத் தினவிழாவின் ஞாயிற்றுக்கிழமை “சங்கச் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ள மூத்த உறுப்பினர்கள் மூவர்.
ர்திரு உயர்திரு சிவாயம் ஆர்.எம்.பழனியப்ப பர்கள் செட்டியார் அவர்கள்
தமிழ்ச் சங்கம்
ரா மாவத்தை), கொழும்பு : 08.
: 01-8637.59 W.W. Colombo.tamilsangam.org S Geureka. Ik
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
)VÁSQ(V* کرنے 0>
170ith (1Best 170list/tes fronau
AISHA BOOKSHOP & POLYTHENE CENTRE
DEALERS IN POLY PROPLYNE PRODUCT, PAPER, BOOKS 8 STATIONARY
NO. 3, FERNANDO AVENUE, NEGOMBO, TEL : O31-33735 N O ア/ 羈 FAX: 031-37085 霍 *%)N_ _26(ଵିଟି
 

இதயம் திறந்து.
ஒலையின் இந்த 14 வது இதழுடன் ஒலை தனது இரண்டாண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது. ஆமாம்!'ஒலையின் முதலாவது இதழ் (மார்ச் 2001) 25-03-2001 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கச் செய்திகளைத் தாங்கியதாக பதினாறு பக்கங்களில் விரிந்தது. பின் 2வது, 3வது இதழ்கள் முறையே ஏப்ரல் 2001, மே 2001 மாதங்களில் வெளிவந்த போதிலும் பின்னர் தவிர்க்க முடியாதபடி தடையேற்பட்டது. எனினும் மீண்டும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தும் முயற்சி அறுந்து விடாத வகையிலே யூன் 2001 - மே 2002 வரையிலான ஒராண்டு காலப்பகுதியை உள்ளடக்கியதாக ஒலை 4வது இதழ் நாற்பத்தியெட்டுப் பக்கங்களில் வெளிவந்து அதன் பின் கிரமமாக வெளிவரத் தொடங்கிற்று. ஒலை -5 இலிருந்து பக்கங்களை இருபத்தி நான்காக அதிகரித்தோம். ஒலை -7 இலிருந்து பக்கங்கள் முப்பத்தியிரண்டாக அதிகரிக்கப்பட்டது. ஒலை -12 (நீலாவணன் நினைவுச் சிறப்பிதழ்) நாற்பத்தியெட்டுப்பக்கங்களில் விரிந்தது. ஒலை 13 இலிருந்து பக்கங்கள் நாற்பதாக ஆக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொழும்புத் தமிழ்ச் சங்கச் செய்திமடலாக ஆரம்பித்த ஒலை இன்று இலக்கியக் கனதிமிக்க மாசிகையாகவும் மலர்ந்துள்ளதைக் காண்கிறீர்கள். இரண்டு ஆண்டுகளின் ஐந்தொகைக் கணக்கு இது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் வாசகர்களே.
இத்தருணத்தில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள்/ கலைஞர்கள்/ ஊடகவியலாளர்கள்/ கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் இலக்கிய ஆர்வலர்களிடம் அன்பான வேண்டுகோள் மூன்று. (1) ஒலையைக் காய்தல் உவத்தலின்றி விமர்சியுங்கள். எமது தவறுகளைத் திருத்திக் கொண்டு மேலும் தரம் மிக்கதாக ஒலையை விரியச் செய்ய அத்தகைய விமர்சனங்கள் உதவும். (2) உங்கள் ஆக்கங்களை ஒலைக்கு அனுப்பி வையுங்கள். சலித்தெடுக்கப்பட்ட தரமான படைப்புக்கள் பிரசுரிக்கப்படும். எதிர்காலத்தில் படைப்பாளிகளுக்கு ஊக்குவிப்புத் தொகையும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிதி நிலைமைக்கேற்ப வழங்கப்படும். (3) நிதிமிகுந்தவர் பொற்குவை தந்தும், நிதி குறைந்தவர் காசுகள் தந்தும், ஆணர்மையாளர் உழைப்பினை நல்கியும், அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருளியும் உதவியும், ஊக்கமும் அளியுங்கள். ஒலை மேலும் ஓங்கி வளர உங்கள் உதவிக்கரங்களும் தேவை.
நன்றி மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
‘ஓலை’ பக்கம் 1

Page 3
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறுபத்தியோராவது சங்கத் தினவிழாவில் (22032003-23.03.2003) "சங்கச் சான்றோன்"விருது-2003 வழங்கிக் கெளரவிக் கப்படவுள்ள சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மூவர்
ත්‍ර Lil . கா.பொ.இரத்தினம் அவர்கள்
இவர் யாழ்ப்பாணத்தில் ஏழு தீவுகளில் ஒன்றான வேலணையில் 10.03.1914ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையார் கார்த்திகேசர் பொன்னம்பலம். தாயார் பத்தினிப்பிள்ளை. வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் கல்வி பெற்று தாய்மொழி பயிற்சி பெற்றிருந்தமையால் கோப்பாய் அரசினர் பயிற்சி கலாசாலையில் சேர்ந்து ஆசிரிய பயிற்சியும் பெற்று தான் கல்விக்கற்ற வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆசிரியரானர். பின் மகாவித்துவான் சிகணேசஐயர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரின் உதவியைப்பெற்று பண்டிதர் பரீட்சையில் தேறினார். பின் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை
ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
மெட்டிக்குலேசன் தேர்வில் வெற்றிப்பெற்றார். இவரது துணைவியார் சிந்தாமணி வளர்ப்பு மகன் நிமலன்.
இவர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு, பி.ஓ.எல் பட்டம், லண்டன் பல்கலைக்கழக சிறப்பு கலைப்பட்டதாரித் தேர்வு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என்பவற்றைப் பெற்றவர். கொழும்பு மாநகரில் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப்பணி செய்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராகவும், 1958,1959இல் தலைவராகவும், 1970-1981 காலத்தில் துணைக்காப்பாளராகவும் பல்லாண்டு சங்கப் பணியாற்றியுள்ளார். கலித்தொகைமாநாடு (03.12.1944); சங்கத்தில் பிரவேச பண்டித வகுப்பை ஆரம்பித்து வைத்தல் (04.02.1945), ஆசிய எழுத்தாளர் மாநாடு (10.02.1957); எட்டுத் தொகை மாநாடு (1959) திருவள்ளுவர் திருநாள் (1960) ஆகிய சங்கத்தின் முக்கியமான நிகழ்வுகளில் பிரதான பங்கேற்றிருந்தார்.
மேலும், குன்றக்குடி அடிகள் வருகை (02.04.1957), கொழும்புத் தமிழ்ச் சங்க 15வது
‘ஓலை’ பக்கம் 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டு விழா (1957); பத்துப்பாட்டு மாநாடு (1958), கம்பர்விழா (1959); சிலப்பதிகார விழா(1959);பாரதிவிழா (1961), கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அணுசரணையுடன் நடைபெற்ற தமிழ் மறைக் கழகத்தின் 14வது திருக்குறள் மாநாடு (1966) ஆகிய நிகழ்வுகளுக்குத் தலைமையேற்றார். 1957ல் டில்லியில் கீழைத்தேய மொழியியல் மாநாடு உட்பட பல மாநாடுகளுக்குச் சங்கப் பிரதிநிதியாகச் சென்றவர். 1960ல் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட 'முருகு' என்னும் இலக்கிய வெளியீட்டின் ஆசிரியருமாவார். இவர் 1964இல் புதுடில்லி மாநாட்டில் தெரிவித்த கருத்தின் அடியொற்றியே உலக தமிழாராய்ச்சி மன்றம் அமையலாயிற்று. உலகத்தமிழராய்ச்சி மாநாடுகள் பலவற்றில் பங்கு பற்றியவர்.
1952இல் கொழும்பில் தமிழ்மறைக்கழகம் நிறுவி இருபத்தியேழு திருக்குறள் மாநாடுகள்ை ஏற்பாடு செய்து அதில் வெற்றியையும் கண்டவர். அனுராதபுரத்திலும் திருக்குறள் மாநாடொன்றினை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிங்கள பெளத்த அறிஞர்களை மாநாட்டில் பங்குபற்ற வைத்தார். 25வது திருக்குறள் மாநாடு உலகத்திருக்குறள் மாநாடாகச் சென்னையில் 1993இல் நடைபெற்றது. கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரியில் 12 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை அரசகரும மொழித் திணைக்களத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி 15,000க்கு மேற்பட்ட ஆட்சிச் சொற்களை வெளியிடுவதற்குப் பொறுப்பாக இருந்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.
1965ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராகி 18 ஆண்டுகள் தொடர்ந்திருந்து தமிழ்மொழி உரிமைக்கும், தமிழின விடுதலைக்கும், அஞ்சாமலும், அசையாமலும், அயராமலும் போராடியவர். பல நாடுகளுக்குச் சென்று தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றியவர். கீழை நாட்டியற் புலவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழியல் ஆராய்ச்சியாளர் என்போரின் உலகளாவிய மாநாடுகளிலும் பங்கு கொண்டு உரையாற்றியவர். பல நாடுகளின் ஏடுகளிலும் சிறப்பு மலர்களிலும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. உரைநடை நூல்கள் இருபதுக்கும், கவிதை நூல்கள் மூன்றுக்கும் ஆசிரியர். ஆறு நூல்களைத் தொகுத்தும் எழுதிச் சேர்த்தும் பதிப்பித்தவர். “உண்மைக்குரல்”, “விடுதலைப் பரணி” எனும் ஏடுகளின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
அகவை முதிர்ந்த நிலையிலும் தம் சுயசரிதையை நினைவுத்திரைகள்’ எனும் நூலாக வடித்துள்ளார். உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தையும், தமிழக புலவர்குழு தமிழ் சான்றோர் பட்டத்தையும், இவர்தம் தமிழ் தொண்டினைப் பாராட்டி 1995ம் ஆண்டு தமிழக அரசு 1995ம் ஆண்டுக்கான 'திரு.வி.க விருதினையும் வழங்கியுள்ளது. இன்று கொழும்புத் தமிழ்ச்சங்கம் “சங்கச் சான்றோன்” விருதினை ஆங்கிக் கெளரவிக்கின்றது.
உயர்திரு.இநமசிவாயம் அவர்கள்
தந்தையார் பெயர் இராசப்பிள்ளை; தாயார் பெயர் சிதம்பரசாக்கியார். 104.1912ல் யாாழ்ப்பாணம், மூளாய் கிராமத்தில் பிறந்தார். இன்று 90வயதையும் கடந்தவர். ஆரம்பக்கல்வியை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சித்தங்கேணி இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.
'gബയെ' பக்கம் 3

Page 4
அதன்பின் உயர்கல்வியை சுழிபுரம் விக்ரோறியாக் ல்லூரியில் பெற்றார். இங்கு கேம்பிறிஜ் யூனியர் தர்வில் வெற்றிகண்டார். தனது பெரியதந்தையார் சவசீலர் திக்கம் செல்லையாபிள்ளையிடம் சைவநெறி அதன் நுண்ணிய உண்மை பொருளையும் ஆய்ந்து தளிவுபெற்றார். ஆங்கிலப் புலமையைப் புனித ற்றிக்ஸ் கல்லூரியில் பெற்றார். மாணவப் பருவத்தில் காத்மா காந்தி, சக்கரவர்த்தி இராசகோபாலச்சாரியார் போன்ற இந்திய தலைவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். 1935 முதல் 1940 வரை சட்டக் கல்வியைப் பெற்று 1941ஆம் ஆண்டில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் தம் வாழ்நாளில் சமய, சமூக அரசியல் துறைகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தது மட்டுமல்ல, அத்துறைகளில் தான்கற்று துறைபோக வேண்டும் என்னும் உணர்வு இவரிடம் மேலோங்கி இருந்தது என்பதை இவரின் ஆக்கங்களான “சைவசித்தாந்தங் கூறும் தத்துவங்களும் தாத்துவிகங்களும் ஒரு விஞ்ஞான நோக்கு” 6Tgů Tgů “SAIVASIDDHANTA IN THE LIGHT OFMODERN SCIENCE ANDCOSMOLOGY” எனும் ஆங்கில நூலும் உணர்த்துகின்றன. இவர் அயல்நாட்டு அறிஞர்களான சேர் இராசா அண்ணாமலை அரசர், இராசா முத்தையாச் செட்டியார் M.A.M.இராமசாமிச் செட்டியார், மதுரை நாராயணன் செட்டியார், அரு.இராம. அருணாசலம் செட்டியார், குமாரராணி முத்தையாச் செட்டியார், ஆநாராயணசாமிப்பிள்ளை, தொழிலதிபர் TTK-வாசு, (மியூசிக் அகடமி) பண்டிற் ஜவகர்லால் நேரு, இன்றைய இந்தியப் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பே ஆகியோருடன் நட்பும், தொடர்பும் கொண்டிருந்தவர்.
இலங்கையில் அறிஞர்கள் சங்கரப்பிள்ளை செல்லமுத்து, கோ.ஆழ்வாப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான், A.அசீஸ், S.J.V.செல்வநாயகம், சி.சுந்தரலிங்கம், ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் சேர் வைத்தியலிங்கம்துரைசாமி. இந்து போட்.S.இராஜரட்ணம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, சுவாமி விபுலாநந்த அடிகள் போன்ற சிறந்த தலைவர்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். தமிழக அறிஞர்களான இராஜராம், எம்.ஜி.இராமச்சந்திரன், இராமவீரப்பன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், பழநெடுமாறன், வை.கோபாலசாமி, கல்கி சதாசிவம் குடும்பம், கல்கி கிருஸ்ணமூர்த்தி போன்றவர்கள் இவரை மிகுந்த அன்போடும் பண்போடும் பெரும் மதிப்போடும் பேணி வந்தார்கள். 1944 ல் விஜயலிமி அம்மையாரை திருமணம் செய்தார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உண்டு. பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் சிறப்புற வாழ்கிறார்கள்.
திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபைச் செயலாளராக செயற்பட்டு 1990வரை திறம்பட திருப்பணி வேலைகளைச் செய்தார். இன்று திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபைத் தலைவராக உள்ளார். 1970-1975வரை கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவராக இருந்து அரும்பணி செய்துள்ளார். 2000ம் ஆண்டில் மீண்டும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒம்படைச் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றுவரை தலைவராக உள்ளார். சங்க நிகழ்வுகளில்
‘ஓலை’ பக்கம் 4
 
 

கலந்துகொண்டு வேண்டிய உதவிகளை ஆற்றி வருகிறார். வயதில் தளர்ந்தாலும் உள்ளம் இளமையானது. இவரின் நினைவாற்றலும் ஊடாடலும் வியக்கத்தக்கவை.
இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 2002 ஏப்ரல் 21ந் திகதி “சிவப்பணிச் செல்வன்” பட்டமும் பொன்னாடை, பொன்னாழி, பொற்கிழி என்பவற்றையும் வழங்கிக் கெளரவித்தமைக்காக 09.06.2002இல் கொழும்புத் தமிழ்ச்சங்கம் பாராட்டுவிழாவொன்றினை நடாத்தியது. இன்று “சங்கச் சான்றோன்” விருது அளித்துப் பெருமைப்படுத்துகின்றது.
உயர்திரு.ஆர்.எம்.பழனியப்ப செட்டியர் அவர்கள்
உயர்திரு.ஆர்.எம்.பழனியப்ப செட்டியார் அவர்கள் 1914ல் செட்டிநாட்டைச் சேர்ந்த அரிமளம் என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய சேர் இராஜா அண்ணாமலை செட்டியாருடைய பர்மாவிலுள்ள ஸ்தாபனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுபெற்று ஒரு பகுதிக்கு ஏஜன்டாக நியமிக்கப்பட்டார். பர்மாவில் ஜப்பானிய யுத்தம் ஆரம்பமானவுடன் 1942ல் இந்தியாவிற்கு திரும்பிய அவரைச் சேர் ராஜா அண்ணாமலை அவர்கள் தங்களுடைய கொழும்பிலுள்ள 'பாங்க் ஆப் செட்டிநாட்டிற்கு ஏஜன்டாக நியமித்துக் கொழும்பிற்கு அனுப்பினார்கள். அன்றிலிருந்து 1999வரை ஏஜன்டாக இருந்து வந்தார்கள். 1947ல் நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிரேசன் கோவிலின் அறங்காவலர் சபையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1965ல் அறங்காவலர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டு 1999 வரை அப்பதவியில் இருந்தார். உடல் நலக்குறைவால் அவர் அப்பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு தற்பொழுது அறங்காவலர் சபை உறுப்பினராக இருக்கின்றார். அவர் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன்கோவில் வளாகத்தில் கதிரேசன் ஹால்' என்ற மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட கல்யாண மண்டபத்தை நிறுவினார். தற்பொழுதுள்ள கோயிலைக் கட்டி 1992ல் கும்பாபிகேம் நடத்தினார். கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள கோயிலைப் புனருத்தாரணம் செய்து 1999ல் கும்பாபிகேம் நடத்தினார்.
இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைக்காப்பாளராகவும் (1970, 1976-1977); பின்பு காப்பாளராகவும் (1978/87); மீண்டும்1989 இல் துணைக்காப்பாளராகவும் பின் மீண்டும் காப்பாளராகவும் 1990/1997 விளங்கிச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் ஊக்கமும் உதவியும் அளித்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறுபத்தியோராவது சங்க தினவிழாவில் அவரது சங்கப்பணிகளுக்காகச் “சங்கச் சான்றோன்” விருது -2003 வழங்கிக் கெளரவிக்கப்படுகிறார்.
- ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (துணைப் பொதுப் செயலாளர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
‘ஓலை’ பக்கம் 5

Page 5
சர்வதேச மகளிர் தினம்
(International Women's Day)
தினம் : மார்ச் 08
கருப்பொருள்: பெண்களுக்கான மனித உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும். சமூக வளர்ச்சியில் அவர்களின் முதன்மையும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
பின்ன ணி: பண்டைய கிரேக்கத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆண்களுக்கு பாலியல் சேவையை வைழங்கி வந்த லைஸிஸ்ட்ராட்டா (Lycistrata) என்ற சாதாரண பெண் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தன்சேவையை பகஷெகரித்தாள். இச்செயல் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் வரலாற்றில் செபண்ணுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகவும் அமைந்தது. பிரான்ஸியப் புரடட் அசியின் போது பாரிஸ் பெண்கள், விடுதலை, சமத்துவம், தோழமை வேண்டி போராடினர். இத்தகைய போராட்டங்கள் 20ம் நூற்றாண்டில் வலுவடைந்தன.
1909 இல் அமெரிக்காவில் சோஷலிசக் கட்சியின் பிரகடனத்துக்கு அமைய முதலாவது தேசிய மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 1910இல்) கொப்பனேகனில் சர்வதேச மகளிர் மகாநாடு கூட்டப்பட்டது. தொடர்ந்து வேறுபல நாடுகளிலும் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது 1917இல் சார்வீழ்ச்சியின்டபின் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். 1945இன் ஐ.நா.சாசனம் பெண்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்த முதலாவது ஆவணமாகும். 1947 இலிருந்து பெண்கள் அந்தஸ்துக்கான ஐ.நா. ஆணைக்குழு செயற்படத் தொடங்கியதும் மேலும் பல உரிமைகளைப் பெண்கள் பெற்றனர்.
முதலாவது சர்வதேச பெண்கள் மாநாடு 1975இல் மெக்ஸ்கோவிலும் தொடர்ந்து 1980இல் கோப்பனேகனிலும், 1985இல் நைரோபியாவிலும், 1995 இஎல்பீஜிங்கிலும் கூட்டப்பட்டன. 1981இல்நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு எதிரான சகலவித பாரபட்சங்களையும் நீக்குவது தொடர்பான சாசனம் பென்ைகளுக்கான உரிமைப்பட்டயம் எனப்படுகிறது. 161 நாடுகள் இதனை ஏற்றன. இதனைத் தொடர்ந்து இலங்கையிலும் சர்வதேச மகளிர் செயற்பாடுகள் அழுத்தம் பெறலாயின.
‘ஓலை’ பக்கம் 6

விழிப்புணர்வு நீண்டகாலமாக பெண்கள் பால்நிலை ரீதியாக ஒதுக்கப்பட்டும், சமூகத்திலிருந்து தள்ளப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளனர். பால்நிலை வேறுபாட்டை,பாரம்பரிய கலாசார நம்பிக்கைகளும், குடும்பக் கட்டமைப்பும் உறுதிப்படுத்தியே வந்துள். ளன. குடும்ப செயற்பாடுகளிலும், தீர்மானம் மேற்கொள்வதிலும் பெண்களின் முதன்மை கருத்திற் கொள்ளப்படவில்லை. கல்வி, பயிற்சி போன்றவற்றிலும் அவர்தம் திறமை அங்கீகரிக்கப்படவில்லை. தொழில் தேர்வு, வாழ்க்கைத் துணைத் தேர்வு போன்றவற்றிலும் அவர் நிலை சீர்தூக்கப்படவில்லை.
தவிர பாலியல் வன்முறை, குடும்ப அடக்குமுறை, தொழிலிடங்களில் தொந்தரவுகள், சக்திக்கு மிஞ்சிய வேலை, குறைந்த கூலி போன்ற இழிநிலைகள் பெண்க. ளின் உரிமைக்குச் சவாலாக அமைந்தன. இந்நிலை ஆசிய, ஆபிரிக்க நாடுக. ளில் தீவிரமாகக் காணப்படுகின்றது. பங்களாதேஷில் பெண்கள் 10 - 14 மணித்தியால வேலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்நிலையிலிருந்து விடுபட பெண்கள் அபிவிருத்தி, அரசியல், நிருவாகம், சமூகசேவை, பாதுகாப்பு, விஞ்ஞான ஆராய்ச்சி, கணணி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளிலும் அவர்தம் திறமையும், முதன்மையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும். கடந்த கால வரலாறுகள் அவர்தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் தலைவிகளாகவும், விண்வெளி விஞ்ஞானிகளாகவும் அவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையில் பெண்களின் படிப்பறிவு வீதம் 59.2 ஆகும். இதன் விளைவாக அவர்களில் அநேகமானோர் சிறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
கணிசமான தொகையினர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைவாய்ப்புப் பெற்றுநாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்றனர். பெண்களின் நிலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் உழைக்கின்றன. இலங்கையில் மகளிர் விவகாரத்துக்கென்றே தனி அமைச்சு செயல்படுகிறது.
இன்று மகளிர் அந்தஸ்தும், முக்கியத்துவமும் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளும், சுதந்திரங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இன்னும் நாடுகளில் புரையோடியுள்ள பெண்ணடிமை நிலையிலிருந்து அவர்களை மீட்க சர்வதேச ரீதியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களுக்குச் சமமான உரிமைகளும், அபிவிருத்தியில் சமமானபங்கும் உடையவர்கள் என்ற கருப்பொருள் அழுத்தம் பெற்றுள்ளது.
நன்றி:சர்வதேச நினைவு தினங்கள்
யூ.எல்.அலியார்.எம்.ஏ. (முதற்பதிப்பு -ஜூன் 1998)
GCDd
‘ஓலை’ பத்தம் 7

Page 6
குறுங்காவியம்
செங்கதிரோன் எழுதும்
விளைச்சள்
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
3. காய்
பார்வதிப் பெத்தாவின் ஆசை அன்னம்மா சமைந்து நாட்கள் ஆண்டுகள் ஆகியோட எண்ணமே செல்லன் ஆகி ஏங்கினாள். ஒர்நாள் பெத்தா "என்னடி. கனகம் மாவுன் இளையவள் கலியாணத்தை(க்) கண்ணைநான் மூடு முன்னம் காணத்தான் ஆசை" என்றாள்.
"அண்ணன்ட மகன்தான் செல்லன் ஆனாலும் அவன் என்னத்த எண்ணித்தான் இருக்கிறானோ? ஏனென்டா. பாண்டியூரார் பொண்ணுக்குக் கேட்டுப் போகப் போறாராம்?" -கனகம் கூற "பண்ணட்டும் பாப்பம்" என்ற பார்வதிப் பெத்தா சொன்னாள்,
"பொன்னுவக் கேட்டுப் பார்த்தன் பொடியனும் சம்மதந் தான் கொண்ணன்தான் வந்து கேட்டா கொடுக்காம விடுவனா நான். சொன்னானாம் கந்தப் போடி சொந்தந்த விடுவானா. பார்! விண்ணாலக் கதய உட்டு விசயத்தப் பாரு புள்ள"
"ஓலை’ பக்கம் 8
 
 

அழகிப்போடியின் பதில் அம்மையும் மகளும் பேச அழகியும் காதில் கேட்டு "சும்மாநாம் போகலாமா..? சூட்டையும் அடிக்க வேணும்! இம்மாதம் முடிந்த பின்னர் இருத்தையும் கழியுட் டுங்கா! சம்மதம் கேட்டுப் போவம். சரிதானே. கனகம்!" என்றார்
அன்னம்மாவின் ஆனந்தம் அடுப்படிப்பக்கம் நின்றே அப்பனின் பதிலைக் கேட்டு கொடுப்புக்குள் சிரித்த வண்ணம் குதுகலித் திருந்த அன்னம் துடுப்புக்கள் வலிக்கப் பாயும் தோணி போல் ஓடிக் கட்டில் நடுப்புறம் வீழ்ந்தாள். போன நாளெல்லாம்நினைவில் மீளும்!
- இன்னும் விளையும்
ஈழத்தில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில். கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவந்துநின்றுபோய்விட்ட ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய விபரங்களை ஒலை இதழ்களில் தர எண்ணியுள்ளோம். அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலம். வெளியீட்டாளர். அதன் ஆசிரியர் - எப்பிரதேசத்திலிருந்து வெளிவந்தது - எத்தனை இதழ்கள் வெளிவந்தன - எப்போது நிறுத்தப்பட்டது - நின்றுபோன காரணம், அவ்விதழ்களில் எழுதிய எழுத்தாளர்கள். - அவ்விதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள்அவ்விதழ்களின் அளவு, பக்கங்கள் பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இலக்கிய உலகில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், பங்களிப்புகள் முதலிய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுரை ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். 'ஒலையின் ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான சிற்றிதழ்கள் ஒவ்வொன்றின் விபரமும் தனித்தனியே வெளியிடப்படும். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர். கள் உங்களுக்குத் தெரிந்த 'சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பழைய பிரதிகளை ஆவணப்படுத்துமுகமாக விலைகொடுத்து வாங்கவும் தயாராயுள்ளோம். அவ்வாறான பிரதிகள் கைவசமுள்ளவர்கள் 'ஒலையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
-ஆசிரியர்
"gap" ( 44 c) to

Page 7
சாதுமிரண்டால்
愛三う
ή
மருதன்ம்ந்தின்
அகதிகளின் வெந்நீர் விநியோகத்திற்காக ஒரு பெரிய அண்டாவில் நீர் நிறைத்து அடுப்பில் ஏற்றி வைக்கப்பட்டு நெருப்பு முட்டப்பட்டது.
வேண்டா வெறுப்பாக எரிவதும் அணைவதுமாகக் காணப்பட்ட நெருப்பைக் கண்டதும் வேலையாளுக்கு தாங்கொண்ணா ஆத்திரமாகவே இருந்தது. பக்கத்தில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து அடுப்பு நனையுமளவுக்கு தெளித்துவிட்டு, நெருப்புக்குச்சியைக் கொளுத்தி அடுப்பினுள் வீசினான். மண்ணெண்ணெயின் உக்கிரமமோ அல்லது வேலையாள் மீது கொண்ட ஆத்திரமோ தெரியாது தீசுவாலை விட்டு எரியத் தொடங்கியது.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நீர் அண்டாவினுள் தன் சாந்த நிலையைக் காட்டியபடி அமைதியாக இருந்தது.
கொளுந்துவிட்டெரியும் நெருப்பைக் கண்டதும் வேலையாள் எல்லையில்லா மகிழ்வுடன் பக்கத்தில் கிடந்த விறகுகளிற் சிலவற்றை அடுப்பினுள் தள்ளிவிட்டு அப்பாற் சென்றான். தீதனது முழுத்திறமையையும் காட்டுவது போல் உயர்ந்து புகை கக்கி எரியத் தொடங்கியது.
தீயின் அதிவெப்பத்தைத் தாங்க முடியாது நீர் தனது உடலை மெல்ல மெல்ல அசைக்கத் தொடங்கியது. நீரின் அவஸ்தையால் வெளியாகிய மூச்சு சிறுசிறு குமிழ்களாக மேல்மட்டத்தை நோக்கிச் சென்றன.
நீருக்கு தீயின் அகோரத்தைத் தாங்க முடியாத நிலை! மேல்நோக்கிச் சென்ற நீரின் மூச்சுக் குமிழ்கள் வெப்பம் தாங்காது வெடித்துச் சிதறின.
நீரின் சாந்தநிலை தளர்ந்து சிறிதுசினமடையும்நிலைக்கு ஆளானது. என்றாலும், இயற்கையாய் அமையப்பெற்ற பொறுமையை இழந்துவிடாது, தன்னையே முடியெரியும் நெருப்பினைப்பார்த்து ஒரு ஏக்க மூச்சை வெளியாக்கியது. S. தண்ணின் பரிதாப நிலையைக் கண்ட நெருப்பு. ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு மேலும் தனது திறமையைக் காட்டுவான்போல் துளிர்விட்டு எரிந்து கொண்டிருந்தது.
பொறுக்க முடியாத வேதனையால் நீர் அங்குமிங்கும் அசையத் தொடங்கியது. நீரின் அவஸ்தையைக் கண்டு மகிழ்வு கொண்ட நெருப்பு மேலும் மேலும் வாதைக்குள்ளாக்குவதில் மகிழ்வடைந்தது.
‘ஓலை’ பக்கம் 10
 
 
 
 
 

பொறுமையைக் கடந்து பழிநிலைக்கு ஆளாகும் வேளை, ஆனாலும் நீர் தனது பெருந்தன்மைக்கு இழுக்கேற்படாது காக்க மேலும் சகித்துக் கொண்டிருந்தது. நீரின் சகிப்புத் தன்மையை பிழையாக விளங்கிக் கொண்ட நெருப்பு மேலும் மேலும் அதனை அவஸ்தைக்குள்ளாக்குவதில் மகிழ்வையே அடைந்
9ögöl.
பொறுமை எல்லையைக் கடக்கும் நேரம் வந்தாலும், தனது எதிரிக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கு முகமாக நெருப்பைப் பார்த்து நீர் முதன்முதலாக வாயைத் திறந்தது. Y
"சகோதரா, ஏனப்பா என்னை இத்துணை அவஸ்தைக்குள்ளாக்குகிறாய்? நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? என்னை வதைப்பதிலே நீயடையுஞ் சுகந்தானென்ன?"
"ஹஹற் ஹஹற்ஹா" நெருப்பு ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்திவிட்டு மேலும் வலுவடைய முயல்கிறது.
"சகோதரா! மீண்டும் நீரின் அழைப்பு"
ஆனால் நெருப்பு ஒரு அலட்சிய மனப்பான்மையுடன் பார்வையைச் சிந்திவிட்டு, தன் வேலையை மும்முரமாக்கியது.
"ஒருத்தனின் கஷ்டத்திலே இன்னொருத்தனுக்கு மகிழ்ச்சியா? என்னப்பா நீதி?நீர் சாந்தமாக நெருப்பைப் பார்த்துக் கொண்டது.
"உலகத்திலே ஒவ்வொருவனும் அவனவன் வலிமைக் கேற்ப வாழ வேண்டியதுதான் - முடியாது போனால் சாக வேண்டியதுதான்"
நெருப்பின் வார்த்தை நீருக்கு எரிச்சலையூட்டியது.
"ஆணவம் அழிவைத் தருமேயல்லாது வாழ்வைத் தராது", அழுகைக்கும் ஆத்திரத்துக்கும் மத்தியில் ஒரு தத்துவத்தைக் கூறிவிட்டுநீர் அமைதியானது. நீரின் அமைதியை இயலாமையாகக் கருதிய நெருப்பு, "என்ன சொன்னாய் ஆணவமா? என் திறமையைத் தெரிந்து கொள்வதற்கு இது உனக்கொரு சந்தர்ப்பம்", கர்வத்துடன் கூறிக் கொண்டு தனது வேகத்தைக் கூட்டியது.
நெருப்பின் உயர்ந்து சென்ற வெப்பம் நீரைத் திக்குமுக்காடச் செய்தது. தாங்க முடியாத உடல் வலியால் நீர் தள்ளாடத் தொடங்கியது. இதன் உடல் மெல்ல மெல்ல ஆவியாகி உருகிக் கொண்டிருந்தது.
நீரின் பொறுமை எல்லை தாண்டி பகைமை நிலையில் ஆழ்ந்தது!
"அடேய் கேடுகெட்டவனே, உன் அக்கிரமத்தை நிறுத்தப் போகின்றாயா? அல்லது.?நீர் கொதித்தெழுந்து குமுறியது.
"960ów” Uáść 11

Page 8
நீருடைய வேக்காட்டைக் கண்ட நெருப்பு எக்காளமிட்டுச் சிரித்ததுடன், "மடையா காகம் திட்டி மாடு சாவதில்லையடா, "உன் விதி இப்படித்தான் என்றிருந்தால் நீ அதனை அனுபவித்துத்தான் தீரவேண்டும்", வேதாந்தம் பேசிவிட்டு தன்னிலை உயர்த்தி எரியத் தொடங்கியது.
ஒரே மூச்சில் நெருப்பை அழித்துவிடமனம் துண்டினாலும் நீரின் பொறுமைக் குணம் மேலெழுந்ததால் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் அளிக்க நாடியது.
"சகோதரா, நீயும் நானும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களல்லவா?என்மீது உனக்கேன் இவ்வளவு ஆக்ரோசம் ? தயவு செய்து என்னையும் வாழவிடப்பா" நீர் மன்றாட்டமாய் கேட்டது.
"நானும் நீயும் ஒரு குடும்பமா? உனக்கென்ன பைத்தியமா? உன் குணமென்ன? என் குணமென்ன? உன் தோற்றமென்ன? என் தோற்றமென்ன? உன் வலிமையென்ன? என் வலிமையென்ன? இவற்றையெல்லாம் உணராது குடும்பத்தைக் காட்டி யாரை ஏய்க்கப் பார்க்கிறாய்?
"இல்லை சகோதரா, நீயும் நானும் ஐம்பூதங்களென்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நம் இருவருக்கிடையிலும் தோற்றத்தில், தன்மையில் , செயற்பாட்டில் வேற்றுமைகள் காணப்பட்டாலும் படைப்பின் நோக்கத்தால் நாம் ஒன்றானவர்கள்தான்" தன் கருத்தை அமைதியாகக் கூறிவிட்டுநீர் நெருப்பைச் சாந்தத்துடன் பார்த்தது.
நெருப்பு தன் கர்வத்தில் நின்றும் இறங்குவதாகத் தெரியவில்லை. நீரின் கூற்றுக்குச் செவி சாய்க்காது தன் உச்சநிலையைக் காட்டுவதில் மும்முரமாக இருந்தது.
"முட்டாளுக்குப்புத்தி சொல்லிப் பயனில்லை", நீர் உள்ளுக்குள் பொருமிக் கொண்டது.
நெருப்பின் உச்சநிலை நீரைத் தளம்பச் செய்தது. அணுவணுவாகச் செத்துக் கொண்டிருந்த நீர் தனது கடைசி முயற்சியிற் பலிதமடைவதில் நெஞ்சுறுதிகொண்டது. தனக்குள் அடங்கிக் கிடந்த அத்துணைச் சக்திகளையும் ஒன்று திரட்டிமேலே குதித்தெழுந்துதீயின்மேல் விழுந்தது. அவ்வளவுதான் நெருப்பின் சக்தியனைத்தும் நொடிப்பொழுதில் அழிந்தொழிய அது இருந்த இடமே இல்லாது அணைந்தது!
உடல் நிலையில் ஏதோ உந்தல் அழிந்தது போல் நீர் சற்று நேரத்துக்குள் அமைதியடைந்தது. ஆனாலும் அதன் ஆத்திரம் மட்டும் ஆவிநிலையில் மெல்ல மெல்ல அகன்று கொண்டிருந்தது.
"ஓலை’ பக்கம் 12

தமிழிசை பற்றிய புரிதலும் ஈழத் தமிழிசையின் தேவைப்பாடும் -ராஜ பூரீகாந்தன்
தாய்மொழியில் உள்ள பாடல்களை இசையரங் N முடிவில்தான் பாடுவது என்று தள்ளிவைத்தல், தமிழ் நாட்டில் மட்டுமே காணப்படுகின்றது. பிற மொழியில் உள்ள பாடல்களின் இசை ஒசையைத் தான் தமிழர்கள் இப்போது அறிய முடிகிறதே யன்றி, முற்றிலும் பாட்டின் உணர்ச்சியுள் புகுந்து அனுபவிக்க முடிவதில்லை. பாடல்கள் தமிழில் இருந்தால் இசை நயத்துடன் கருத்தின் நயத்தினையும் அறிந்து பாடுகின்றவரின் உணர்ச்சியோடு ஒத்த உணர்ச்சி அடைய இயலும். இவ்வுணர்மை இசையரங்குகளில் பிற மொழிப் பாடலைப் பாடும்போதெல்லாம் சோர்வாயி ருந்து, தமிழ்ப் பாடலைக் கேட்டவுடன் தமிழ ருக்குத் திடீரென உண்டாகும் கிளர்ச்சியானதும், மகிழ்ச்சியானதும் தெள்ளிதின் உணரப்படும். முழுவதும் தமிழ்ப் பாடல்களாக அமைந்த இசை அரங்குகள் இசைக் கலைஞர்களால் விரைவில் நடைபெறக் கூடும்.
- அணர்ணமலை அரசர்)
தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் கர்நாடக இசையே தமிழிசை என்ற தவறான புரிதலுடன் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள். பாடசாலை முதற்கொண்டு பல்கலைக்கழகம் வரை கர்நாடக இசையே தமிழர்களின் இசைவடிவமாகப் போதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை கலாசார அமைச்சின் கீழுள்ள கலைக் கழகத்திலும் தமிழர்களின் இசையாக கர்நாடக இசையே கொள்ளப்படுகிறது. தமிழிசை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பெருமைகளை உலகிற்குஅறியத்தந்த நமது சுவாமி விபுலானந்தரின் பெயர் சூட்டப்பட்ட விபுலானந்த இசைநடனக் கல்லூரியிற் கூட கர்நாடக இசையே பயிற்றுநெறியாக உள்ளது.
‘ஓலை’ பக்கம் 13

Page 9
அற்புதமான தமிழிசையை அகிலத்திற்குத் தந்த தமிழ்நாட்டிற்கூட கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக தமிழிசை முழுமையான அங்கீகாரத்தைப் பெறவில்லை. பல்மொழி பேசுகின்ற, பல் கலாசார தொன்மங்களைக் கொண்டுள்ள இந்திய தேசத்திலும் அரசியல் அதிகாரத்துவமே கலைகளின் இருப்பினையும் அவற்றின் பரிணாம வளர்ச்சியினையும் தீர்மானித்துள்ளது.
உலகில் வேறெந்த இனத்திற்கும் இல்லாத இசையுறவு தமிழினத்திற்கு உள்ளது. தாயின் வயிற்றிற் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் வந்துதித்ததும் தாலாட்டு என்று ஆரம்பித்து குழந்தைப்பருவத்தில் நிலாப்பாடல், வாலிபப் பருவத்தில் வீரப்பாடல் , காதற் பாடல் என்று தொடர்ந்து உயிர்பிரிந்த பின்னர் கூட ஒப்பாரிப்பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்கும் தமிழ்ப்பாடல்கள் உள்ளன. இது தமிழினத்திற்கு மட்டுமேயுள்ள தனித்துவமான vn இசை அடையாளம்.
தென்னிந்திய மாநிலங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஏனைய நாடுகளிலும் இன்று செழிப்புற்றுத் திகழும். மூன்று நூற்றாண்டு வயது கொண்ட, கர்நாடக இசை என்ற பெயர் கொண்ட இசைவடிவத்தின் தாய் தமிழ் இசையே என்பதும் இத் தமிழிசை மூவாயிரம் ஆணர்டிற்கு மேலானவரலாற்றுத் தொண்மையைக் கொண்டிருந்தது என்பதும் இசை ஆய்வாளர்களின் ஒருமித்த முடியாகும். முறையான இசை ஆய்வுகளை மேற்கொண்டு "கர்ணாமிருத சாகரம்" என்ற ஆய்வுநூலை எழுதி 1917ஆம் ஆண்டில் இந்நூலை அச்சிடுவதற்கென்றே ஓர் அச்சகத்தை நிறுவிய ஆபிரகாம் பண்டிதர் முதற்கொண்டு உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான விபுலானந்தர் வரை இவற்றைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
1928ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்சார்ந்த ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. இப் பல்கலைக்கழகத்தின் முதற் தமிழ்ப் பேராசிரியரான விபுலானந்தரால் 1933இல் தமிழிசையை மீட்டெடுக்க விதைக்கப்பட்ட முதல் வித்து மூன்றாண்டுகளின் பின்னர் தமிழிசை இயக்கமாக (pதற் துளிர்விட்டது. அண்ணாமலை அரசரால் உருவாக்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்கு ராஜாஜி, கல்கி டி.கே.சி. போன்ற வர்கள் ஆதரவாகத் தொழிற்பட்டார்கள்.
சுவாமி விபுலானந்தர் 1936இல் சென்னைப்பல்கலைக்கழக செனற்அரங்கில் தமிழர் இசை, சிற்பம், நாடகம் என்பவைபற்றி ஆங்கிலத்தில் நிகழ்த்திய பேருரைகள் புதியதொரு விழிப்புணர்வை அறிஞர்கள் மத்தியில் ஏற்படுத்தின. தமிழர் இசைபற்றி இவர் எழுதிய "யாழ் நூல்" 1947இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
தமிழர்களின் கலை, கலாசார, வாழ்வியல் தொன்மங்கள் தமிழ் இலக்கியங்களிலேயே பொதிந்துவைக்கப்பட்டுள்ளன. தமிழிசை பற்றிய மிக விரிவான செய்திகள் தொல்காப்பியத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. தொல்காப்
‘ஓலை’ பக்கம் 14

பியத்தின் அடியார்க்கு நல்லார் உரையில் விரிவான தகவல்கள் பேசப்பட்டிருக்கின்றன. பல தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அடியார்க்கு நல்லார் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். "யாப்பருங்கலம்" என்ற யாப்பு நூலுக்கு எழுதிய குறிப்பிலும் தமிழிசை, ஆடல், பாடல் என்பவை குறித்த மிக விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு உச்சநிலையிலிருந்த தமிழிசை மரபுஎங்கே தொலைகிறது என்று நோக்கினால் அங்கே வருகிறது கர்நாடக இசை. தமிழிசை வரலாறு இங்கே துண்டிக்கப்படுகிறது.
14ஆம் நூற்றாண்டில் அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் தென்னாட்டின் மீது படையெடுத்தார். பாண்டிய,கோசல, யாதவ, காகதீய, அரசுகள் மாலிக் கபூரினால் கைப்பற்றப்பட்டன. முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இந்துக்களைக் காக்க பல்லாரி மாவட்டத்தில் விஜயநகர அரசு உதயமானது. கர்நாடகரும் ஆந்திரரும் தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்தனர். 15ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழ்ப் பெருநிலம் தெலுங்கு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவரான புரந்தரதாசர் மிகுந்த செல்வமும் அரச செல்வாக்கும் கொண்டிருந்தார். சங்கீதத்தில் அதீத ஈடுபாட்டினைக் கொண்டிருந்த இவர் தமிழிசை நுட்பங்களைச் சிறப்பாகக் கற்றுத்தேர்ந்தவரென்று கூறப்படுகிறது. இவரே கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்றும், ஆதிகுரு என்றும் அழைக்கப்படுகிறார். இந் நூற்றாண்டின்பிற்பகுதியிலேயே கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகக் கொள்ளப்படும் சியாமா சாஸ்திரிகள் (1762-1827), தியாகராஜ சுவாமிகள் (1767-1847), முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் தோன்றினார்கள். இவர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் தியாகராஜா சுவாமிகள் தமிழ்ப் பண்ணிசை ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த திருவாரூரில் 1967 மே மாதம் 4ஆம் திகதி பிறந்தார். கொண்டி வெங்கடரமணய்யாவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றுத் தேர்ந்தார்.
தென்னகத்தை ஆட்சிபுரிந்த விஜயநாயக்க மன்னர்கள் கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு பூரண ஆதரவு வழங்கி அதன் மேம்பாட்டிற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தமிழகத்திலிருந்த கான சபாக்கள் அனைத்தும் தெலுங்கர்களின் பரிபாலனத்திலேயே இருந்தன. இசை அனைத்திலும் தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடப்பட்டன. தமிழில் பாடல்களை இசைப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தமிழ் இசை படிப்படியாக மறைக்கப்பட்டது. தமிழ் வித்துவான்கள் கூட தெலுங்கில்பாடி தமது திறமைகளுக்குப் பாராட்டுப் பெறுவதிலேயே முனைப்பான அக்கறை செலுத்தினார்கள். தமிழில் பாடல் இசைப்பது இழிவாகவும் தீட்டாகவும் தமிழர்களாலேயே கருதப்பட்டது.
‘ஓலை’ பக்கம் 15

Page 10
இந்தப் பண்பாட்டுச் சூறையாடலிலிருந்து தமிழ் இசையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் சகல மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் இசையை முழுமையாக மீளக் கொணர்வதற்குச் சாதகமானதும் சாத்தியமானதுமான சூழல்நமது நாட்டிலேயே உள்ளது. இங்கு தெலுங்கு மொழி பேசுபவர்கள் எவருமில்லை, கான சபாக்களுமில்லை. உலகில் முதன்முதலாக தமிழ்மொழிக் கல்வி பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது நம் நாட்டிலேயாகும். இதனை அடியொற்றி தமிழர்களின் பாரம்பரியபண்பாட்டு வடிவமான, முத்தமிழில் இரண்டாவது கூறான இசைத் தமிழை மீட்டெடுப்பதற்கும் நிலைபெறச் செய்வதற்கும் உலகெங்கணும் வியாபிதமடையச் செய்வதற்கும் மிகவும் உகந்த புலம் ஈழத்திருநாடேயாகும்.
தெலுங்கு மொழி உட்பட அனைத்து மொழிகளையும் அவற்றின்பண்பாட்டுப் பொக்கிசங்களையும் நாம் உயர்வாகப் போற்றி மதிக்கிறோம். இசைக் கலைஞர்கள், குறித்த மொழிகளை அறிந்தவர்கள் மத்தியிலேயே அம்மொழிப் பாடல்களைப் பாடவேண்டும். நாம் அறியாத மொழிகளில் பாடப்படும் பாடல்கள் செவிநுகர்வில் அதிர்வுகளை மட்டுமே ஏற்படுத்தும். பொருள் விளங்கிச்சுகிக்கும் அனுபவத்தைப் பூரணமாக இல்லாதொழிக்கும்.
நமது இசைக்கலைஞர்கள், தமிழ் இசையைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து இல்லாதொழிக்க முயன்ற கர்நாடக தெலுங்குக் கீர்த்தனைகளை நம்மவர்கள் மத்தியில் பாடுவதும் அவற்றைநம்மவர்களுக்குப்பயிற்றுவிப்பதும் அபத்தமானது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை அவமதிப்பதுமாகும். ஈழத்து இசை அரங்குகளில் தமிழ் இசை மட்டுமே பாடப்பட வேண்டும். இயற் தமிழையும் நாடகத் தமிழையும் பேணிவரும் தமிழ்ச் சங்கங்களும், கழகங்களும் இசைத் தமிழையும் பேண ஆவன செய்ய வேண்டும். இதேபோன்று நமக்கு முன்னால் பிறிதொரு தேவைப்பாடும் உள்ளது.
ஒரே மொழியினைப் பேசும் மக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழுகின்ற போதிலும் அந்தந்த நாடுகளுக்கென தனித்துவமான தேசிய அடையாளங்களைப் பேணிவருகின்றனர். ஆங்கில மொழி இங்கிலாந்தைத் தனது தாயகமாகக் கொண்டுள்ளபோதும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் மொழியாகவும் திகழ்கிறது. இந்நாடுகள் அனைத்தும் ஆங்கில மொழிக்குரிய பொதுவான பண்பாட்டு அம்சங்களுடன் ஒவ்வொரு நாட்டிற்குமுரிய தனித்துவமான தேசியப் பண்புகளையும் கொண்டுள்ளன.
தமிழகத்திலும் ஈழத்திருநாட்டிலும் தமிழால் ஒன்றுபட்டு வாழும் நாங்கள் வாழிடங்களினால் வேறுபட்டபவர்களாகவிருக்கிறோம். தனித்தனியான இறைமைகளைக் கொண்ட இரண்டு நாடுகளில் வாழுகிறோம். முத்தமிழைப் பொறுத்தமட்டில் இயற் தமிழில் தேசிய தமிழ் இலக்கியத்தை, ஈழத் தமிழ்
‘ஓலை’ பக்கம் 16

இலக்கியத்தை உருவாக்குவதில் முற்போக்குச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பெரு வெற்றி பெற்றுள்ளார்கள். நாடகத் தமிழிலும் ஈழத் தமிழ் நாடகத்திற்கென்று தனியான தேசிய மரபொன்றை தேசிய கலை இலக்கியப் பேரவையினர் முறையாகப் பேணிவருகின்றனர். ஆனால் இசைத் தமிழைப் பொறுத்தவரை ஈழத் தமிழிசை வெற்றிடம் நிரப்பப்பட வேண்டியதாக உள்ளது.
தமிழகத்தின் தமிழிசை மரபுகளும் உன்னதங்களும் உள்ளீடு செய்யப்பட்டு ஈழத் தமிழிசை உருவாக்கப்பட வேண்டும். இது உலகத் தமிழிசையின் தனித்துவமான கூறாகப் பரிணாமம் பெறவேண்டும்.
அற்புதமான இசைக் கலைஞர்களான ஏ.கே.கருணாகரன், எஸ்.பத்மலிங்கம், சண்முகராகவன், திலகநாயகம் போல், கனகசபாபதி நாகேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட ஏனைய இசைக் கலைஞர்களும் யாழ்பல்கலைக்க நுண்கலைப்பிரிவு, விபுலானந்தர் இசைநடனக்கல்லூரி, வட இலங்கை சங்கீத சபை என்பவை உட்பட்ட நிறுவனங்களும், கொழும்புத்தமிழ்ச்சங்கம், இலங்கைக் கம்பன் கழகம் ஆகியவை உள்ளிட்ட அமைப்புகளும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் எஸ்.கே.மகேஸ்வரன் போன்ற கல்விமான்களும் "பல்லவி" இசை,நடன, இதழின் நிர்வாக ஆசிரியரும் அற்புதமான தமிழ்க் "கீர்த்தன மாலையை" இயற்றிய சட்டத்தரணி எஸ்.செந்தில்நாதன் போன்ற அறிஞர்களும் இப்பணிகளை ஆரம்பித்து வைக்கலாம்.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் இந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படவேண்டிய அவசர பணியாக இவை கொள்ளப்பட வேண்டும். கல்வி மற்றும் கலாசார அமைச்சுக்களும் தமிழ் அமைச்சர்களும் கலை, பண்பாட்டுக் கழகங்களும் இசைக் கலைஞர்களும் ஆர்வலர்களும் தமிழ் உணர்வுமிக்க அனைவரும் இவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தமது இதயபூர்வமான ஆதரவையும் பங்களிப்பையும் நல்கவேண்டும். S)
‘ஓலை’ பக்கம் 17

Page 11
உலகமெல்லாம் நிலைக்கும் தமிழ் - கவிஞர் ஏ.இக்பால் -
இரண்டாயிரம் வருடங்களுக் கப்பால் தமிழ்மொழி இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுமென்று உண்டான செய்தியைத் தமிழ்ப்பேராசிரிய ரொருவர் விண்டகதை கேட்டு வியந்ததமிழ் மாணவன்நான் கண்டாய்வு செய்து கடும்தீர்ப்பைக் கொடுத்தவர்கள் நன்றாகச் சிந்தனைக்கு நல்லாய்வே தரவில்லை! உண்மையிலே இப்போது தமிழ்மொழி இருந்தவிடம் கண்காணா திருக்கவேண்டும் ஏன் அழியாது வீறுநடை போட்டு விளக்கம் விஞ்ஞான மெலாம் கூறும் மொழியாகிக் குவலயத்தே உயர்ந்து நிற்கும் சேதியினால்தான் இவர்கள் செய்வதறி யாதவொரு நாதியற்ற இவ்வாய்வை நானிலத்தில் விதைத்தனரோ! ஆதிமொழியான தமிழ் ஆண்டசங்க இலக்கியங்கள் தூயதமிழாலாகித் தமதுபண்பா டனைத்தும் ஒதிநிற்கும் செய்தி இலக்கியத்தில் காட்டுவதைக் காதுகொடுக் காதவர்கள் காட்சியிடல் இருள்மயந்தானி! சங்கத்தமிழ் சார்ந்து தடம்புரண்ட அரசியலால் எங்கும்மணிப் பிரவாளநடை ஏற்றதெங்கள் தமிழ்மொழியே! உங்களுக்குப் பாவகைக்கு யாப்பருங் கலக்காரிகையும் தங்கிநிற்க அணியினுக்கு தண்டியலங் காரமதும் வடமொழி இலக்கணங்கள் வந்துபுகத் தமிழ்ப்புலவர் திடமெனவே தமிழிலதை எடுத்தாண்டு கவிபுனைந்தார்: இவ்விரண்டு இலக்கணங்கள் தமிழ்மரபா யானகதை பவ்வியமாய் அறிந்திருத்தல் பகிரங்கமான ஒன்று தமிழைப்பாம் எழுவாய் செயப்படுபொருள் பயனிலையை நழுவாது வசனமென நாம்கண்ட மரபைமீறி தரிப்புக்குறி சேர்ந்ததனால் அமைப்புமுறை இடம்மாறி இருப்பதனைக் கண்டுவிட்டால் புதுமைகளைத் தமிழ்மொழியே உள்வாங்கும் என்பதனை உணர்ந்துகொள்ளல் தானிநியதி எள்ளளவும் மாறாமல் மொழிக்குரையே செய்கின்ற நிகண்டுமுறை வாய்ப்பாட்டை ஐரோப்பியர் வருகை அகராதியாக்கி இயல்பாகத் தமிழ்மரபை மீறாது ஒன்றிவிட இயல்பாகி இவ்விதமே மேல்நாட்டார் கொண்டுவந்த புனைகதைகள் புதுமைமிகு வடிவங்கள் எல்லாப் புதுமையையும் ஏற்கும் நல்லதமிழ் உலகமெலாம் நிலைத்து நிற்கும்!
ܢܠ
‘ஓலை’ பக்கம் 18

O சங்கம் வளர்த்த சான்றோர்கள் (கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை வளர்த்த அறிஞர்கள்)
-இ. க. க
கடந்த நூற்றாண்டுத் தொடக்* கத்தில் இந்நாட்டில் தோன்றிய தமிழ் எழுச்சி உணர்வினால் பண்டைத் தமிழ்ச்சங்கப் பாரம்பரியத்தின் அடியொற்றி இலங்கையின் தலைநகரில் 1942ம் ஆண்டு (22-031942) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தை (கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகமே ஆரம்பப் பெயர்) அமைத்து இதன் முதல் தலைவராக இருந்தவர் ச.சு.பொன்னம்பல முதலியார் ஆவார். பண்டைய யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தின் தலைநகராக விளங்கிய நல்லுரே இவரது பிறப்பிடமாகும். தலைநகரில் நீதிமன்ற மொழி. பெயர்ப்பாளராகக் கடமைபுரிந்தவர். 'பனைநூறு' எனும் நூலை எழுதியவர். * இதனால் தலைநகரில் பல தமிழறி. ஞர்களின் ஆதரவு இவருக்கு இருந்தது. இதனாலேயே இவர் இச்சங்கத்தை அமைக்க முடிந்தது. இச்சங்கத்தை நிறுவியதை இவர் காலத்து அறிஞர் சிலர் எழுதியுள்ளனர்.
ச.சு.பொன்னம்பல முதலிய
ச.சு.பொன்னம்பலம் அவர்கள் இச்சங்கத்தைநிறுவுவதற்கு உறுதுணையாக இருந்த அறிஞர்கள் மு.வ.வயிரவப்பிள்ளை, இ.தம்பிராசா ஆகிய இருவரும் ஆவர். பிரதிக் கணக்காளர் நாயகமாகக் கடமையாற்றிய மு.வயிரவப்பிள்ளை அவர்கள் தலைநகரில் பல ஸ்தாபனங்களின் வளர்ச்சிக்கு உதவியவர். தமிழில் சிறந்த அறிவு உள்ளவர். ‘செந்தமிழ் மாமணி’ எனும் விருது பெற்றவர். இச்சங்கத்தின் தொடக்ககாலம் முதல் உயிர்நீக்கும் வரை சங்கத்துடன் தொடர்புள்ளவராக துணைத்தலைவர், தலைவர், காப்பாளர் பதவிகளில் இருந்து சங்க வளர்ச்சிக்குப் பெரும்பணி புரிந்தவர். இச்சங்கத்தின் கட்டிடப்பணியை முதலில் தொடங்கி பலரிடமும் நிதியுதவி பெற்று முற்பக்கக் கட்டிடத்தொகுதியின்
‘ஓலை’ பக்கும் 19

Page 12
முதலிருமாடிகளையும் நிறைவு செய்தவர்.
இதம்பிராசா சிறைச்சாலைப்பகுதி அதிபராக இருந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர். இவர்கள் மூவரும் இச்சங்கத்தை நிறுவ முன்னர் 1924ம் ஆண்டு. வெள்ளவத்தை விநாயகர் கோயிலில் திருக்குறட் பயிற்சிக் கழகத்தை நிறுவினர். இவர்கள் மூவரும் தலைநகரில் தமிழையும் தமிழர் பண்பாட்டையும் வளர்த்த மும்மூர்த்திகள் ஆவர். இச்சங்கம் தொடங்கிய போது. மு.வயிரவப்பிள்ளை துணைத்தலைவராகவும், இ.தம்பிராசா பொருளாளராகவும் இருந்து உதவினர். வெள்ளவத்தை காலி வீதியில் ஒரு வீட்டை வாடகையாகப் பெற்று அதில் சங்கத்தை நடத்தினர். அங்கு ஒரு பத்திரிகைப் படிப்பகத்தையும் நடத்தினர். ஒரு உணவு விடுதியை நடத்தி அதிலிருந்து பெற்ற வருவாயை வீட்டு வாடகை கொடுப்பதற்குப் பயன்புடுத்தினர்.
p. வ. வயிரவப்பிள்ளை
(தொடரும்)
அஞ்சவி * கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.சி.சரவணபவன் அவர்களின் தாயார் யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கைச் சேர்ந்த திருமதி.இரத்தினம் சிவலிங்கம் அவர்கள் 06.02.2003 வியாழக்கிழமை கொழும்பில் காலமானார்.
* காலஞ்சென்ற திரு.செல்லத்துரை சண்முகநாதன் (இலங்கை வானொலிப் புகழ் லண்டன் கந்தையா கலாஜோதி 'சானா) அவர்களின் மனைவியும், கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதிபாலழரீதரனின் மாமியாருமான (மனைவியின் தாய்) திருமதி இரத்தினம் சண்முகநாதன் 14.02.2003 வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் காலமானார். இவர்களுக்கு 'ஒலை தனது அஞ்சலியைச் செலுத்துவதுடன் அமரர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.23.02.2003 ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற கொழும்புத்தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு கூட்டத்தில் இவர்களின் மறைவையொட்டி மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
‘ஓலை’ பக்கம் 20
 

"புலம் பெயர்ந்த லணர்டன் தமிழர்களின் நிலை"
இலங்கைக்கு வருகை தந்திருந்த லண்டன்நியூஹாம்நகர கவுன்சிலரும் சமூக சேவைக்காக கிழக்கு லண்டன் பல்கலைக்கழத்தால் கெளரவப்பட்டம் வழங்கப்பட்டவருமான திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் புலம் பெயர்ந்த லண்டன் தமிழர்களின் நிலை' என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் 03.02.2003 திங்கட் கிழமை பி.ப.5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்ணம் அவர்களின்தலைமையில்நடைபெற்றது.
மாதாந்த இசை நிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தி வரும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சித் தொடரின் 17வது நிகழ்வு 15.02.2003 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர்.
縫
8 :
பாட்டு : திரு.எம்.பூரிரங்கநாதன்
வயலின் : திரு.கே.கே.பாலமுரளி
மிருதங்கம் : திரு.ஏ.ரகுநாதன்
‘ஓலை’ பக்கம் 21

Page 13
விடயம்
நிகழ்த்தியவர்
திகதி
05.02.2003 தமிழில் விஞ்ஞானம் திரு.வி-=ான்.முர்த்தி
(196) (வேடிக்' தமிழ் விஞ்ஞான ஆய்வுநிறுவனம் இந்தியா Verdic Tamil Research Institute I ( I ndia
19.02.2003 வள்ளுவர் காட்டும் மட்டுவிகள் ஆநடராசா
(197) வாழ்க்கை முறை
நால்நயம் காண்போம்.
05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாண-அல530மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் p5u ran 7 o £560öyL6) fft
14.02.2003 இப்படியும் ஒருவன் மா.பாலசிங்கம் திருதடமதி.வாசுகி (104) (சிறுகதைத் தொகுதி) தேவராஜா
28.02.2003 இலங்கை தமிழர் பூம.செல் அேக.விஜயன்
(105) வரலாறும் இன்றைய லத்துரை (ஆதட விரியபீடம்,
நிலையும் 6x5gêépéFif)
‘ஓலை’ பக்கம் 22
 
 
 

ஒலை - 12 வெளியீடு
'ஒலையின் 12வது இதழ்-ஜனவரி 2003-நீலாவணன் நினைவுச் சிறப்பிதழ் வெளியீடு சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் 16.02.2003 புதன்கிழமை பி.ப.5.30 மணிக்கு நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு.பாலசுகுமார் அவர்களும், சிறப்புஅதிதியாக கல்விஅமைச்சின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.சிவநிர்த்தானந்தா அவர்களும் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தனர். செல்வன் இந்திரன் சாயீசன், செல்வன் சேகர் நிஷாந்த் ஆகியோர் தமிழ் வாழ்த்துப்பாட தமிழ்ச்சங்கக் கல்விக் குழுச் செயலாளர் திரு.த.சிவஞானரஞ்சன் வரவேற்புரை ஆற்றினார். வெளியீட்டுரையைச் சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களும் நயவுரையை வீரகேசரி ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த திரு.எஸ்.சித்திராஞ்ஜன் அவர்களும் நிகழ்த்தினர்.
முதற்பிரதியை கொழும்பு-04 ஒரியன்ட் றேடிங் கம்பனி உரிமையாளர் திரு.எஸ்.கணபதிப்பிள்ளை (கல்முனை) பெற்றுக் கொள்ள, டாக்டர் ஜனாப் ஏ.உதுமாலெவ்வை, திருவாளர்கள் எஸ்.இலகுப்பிள்ளை (சமூக சேவை
மன்றத் தலைவர் என்.இளங்கோ ஆகியோர் சிறப்பப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
நீலாவணன் குறித்து பண்டிதர் க.வீரகத்தி எழுதிய இந்தத் தலை - முறையின் தாஹுர்" என்ற தலைப்பிலான கவிதையை திருதி,திருக்குமரன் மொழிந்தார்.
நீலாவணனின் பாய்விரித்து வையுங்கள்’ கவிதையைக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி சோ.தேவராசா மொழிந்தார். நீலாவணன் இயற்றிய "ஓ.என் வண்டிக்காரா!" மெல்லிசைப் பாடலும் ஒலிநாடாவில் இசைக்கப் பெற்றது. இறுதியில் 'ஒலை' ஆசிரியர் த.கோபாலகிருஸ்ணனின் (செங்கதிரோன்) ஏற்புரையைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
‘ஓலை’ பக்கம் 23

Page 14
தமிழ் வாழ்த்து செல்வன் இந்திரன் சாயிசன் சேகர்நிஷாந்த்
வெளியீட்டுரை திரு.பெ.விஜயரத்தினம் துணைத்தலைவர்
தலைவர்.கலாசூரி.இ.சிவகுருநாதனிடமிருந்து திரு.எஸ்.கணபதிப்பிள்ளை முதற்பிரதி பெறுகிறார்.
‘ஓலை’ பக்கம் 24
 
 
 

பிரதம விருந்தினர் உரை திரு.பாலசுகுமார்
சிறப்பு விருந்தினர் உரை திரு.எஸ்.சிவநிர்த் தானந்தா
சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்ணத்திடமிருந்து சிறப்புப் பிரதி பெறும் டாக்டர் ஏ.உதுமாலெவ்வை.
x நயவுரை:
திரு.என்.சித்திராஞ்ஜன்
“ஓலை’ U55á 25

Page 15
நிதிச்செயலாளர் திரு.தி.கணேச ராஜாவிடமிருந்து திரு.எஸ்.இலகுப்பிள்ளை சிறப்புப் பிரதி பெறுகிறார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. கே.ஞானகாந் தனிடமிருந்து திருமதி கிருஸ்ணபிள்ளை சிறப்புப் பிரதி பெறுகிறார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி.புவனேஸ்வரி அரியரத்தினத்திடமிருந்து திரு.என்.இளங்கோ சிறப்புப்பிரதி பெறுகிறார்.
‘ஓலை’ பக்கம் 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூகோளமயமாதலும் விடுதலைச் சூழலியலும்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான தமிழ்நாடு திரு.சி.நெடுஞ்செழியன் அவர்களின் மேற்படி தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு 27.02.2003 வியாழன் பி.ப.5.30 மணிக்கு கொழும்புத்தமிழ்ச்சங்கத்தின் குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் சங்கத் துணைத்தலைவர் பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ பக்கம் 27

Page 16
இரத்த உறவுகளாய்.
என்னினியவனே, நீ அங்கே. நானிங்கே. இரண்டு துருவங்களாய்! ஆனால், நீயும், நானும்
இரத்த உறவுகளாம்என் பாட்டி சொன்னாள்! மதங்கள் தாம் எம்மைப் பிரித்ததென்று மவ்த்தாகிப் போவதன்முன் கதைகதையாய்க் கூறினாள்! உன்பாட்டனும், என்பாட்டனும், பாட்டனின் பாட்டனும். பாட்டியின் பாட்டியும் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளென்ற இதிகாச உண்மையை இறந்த என்பாட்டியே பகர்ந்தாள்! இந்துவும், முஸ்லிமும் இருவிழிகளாமே தமிழ்த்தாய்க்கு! இராப்பகலாய், ஈரினமும் இணைந்துமண், மரம் சுமந்து, கல்லறுத்துக் கட்டினார்களாம்கோயில். பள்ளிவாசல்களை! தைப்பொங்கலுக்குபார்வதி பாலுற்ற, பாத்துமுத்து அடுப்பெரிக்க. பால்பொங்கி, பானையால் வழிந்ததென்று பாட்டி சொல்லிச் சொல்லி. பரவசமுற்றாள்!
‘ஓலை’ பக்தம் 28
நோன்புப் பெருநாட் பலகாரம் பண்ண மைமூனாச்சி மாப்பிசைய, தெய்வானை
சுட்டுச் சுட்டுத் தட்டுக்களில் அடுக்கிவைத்து தின்று களித்ததாகவும், அன்று
மணவீடும், பிணவீடும், சித்திரை, பொங்கல், தீபாவளி. நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாட்கள் இந்து, இஸ்லாமியர்களால் நிரம்பி வழிந்ததாகவும் பாட்டியே சொல்லிச் சொல்லி அவற்றை நெட்டுருப் போட்டாள்! நண்பனே,
சரித்திரத்தைபின்னே. பின்னே. இன்னும் பின்னே நீயே மீட்டிப்பார்! அல்லது, கேட்டுப் பார்! அப்போது. நீஎனது நண்பனாய் அல்ல, தம்பியாய். அண்ணனாய். மாமனாய். மருமகனாய். இரத்த உறவுகளாய் மலர்வதைக் கண்டு
D60D6D'ALTuiu!
-ஏறாவூர் தாஹிர்

காவைத்தீஸ்வரண் எழுதிய 'சுகவாழ்க்கை
கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினரும் இளைப் பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரியுமான திரு.கா. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய 'சுகவாழ்க்கை நூலின் வெளியீட்டு விழா 06.04.2002 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச யூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருதே மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" என்ற தன் கவிதை வரிகள் மூலம் மகாகவி பாரதி அறிவியல் நூல்கள் தமிழில் இல்லாமையை அல்லது குறைபாட்டினை எண்ணி ஆதங்கப்பட்டான்.
இன்று தமிழ்மொழியில் பல அறிவியல் நூல்களும், அறிவியல் சஞ்சிகைகளும், பருவவெளியீடுகளும், பிரசுரங்களும் தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் வெளிவருகின்றனவெனினும் அவற்றின் போதாமை இன்னும் தமிழ் மொழிக்குண்டு. அந்த வகையிலே அறிவியல் சார்ந்ததாக - மருத்துவம் எனும் முக்கியமான துறைசார்ந்ததாக திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்களின் 'சுகவாழ்க்கை' எனும் நூலின் வருகை அமைந்திருக்கின்றது.
சுகவாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள் பழந்தமிழ் ஏடுகளிலே காணப்பட்டாலும் கூட அவை செய்யுள் வடிவங்களிலே உள்ளதால் அவற்றை எல்லோரும் படித்துப் பயன் பெற முடியாது. நோய்களும், நோய்களுக்கான மருந்துகளும் "வாகடம்"களிலே கூறப்பட்டிருந்தாலும் கூட அதில் தேர்ச்சி பெற்றவர்களால்தான் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை எடுத்து நோக்கும் போது முதல் தமிழ் நூலென அறியப்படும் சரசோதிமாலை' எனும் சோதிட நூலுக்குப் பின்னர் (கி.பி.1310) வைத்துப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் (கி.பி.1250 - 1621) எழுந்த 'செகராச சேகரம், பரராசசேகரம்' எனும் வைத்திய நூல்களேயாகும். எனவே மருத்துவத்துறை சார்ந்த நூல்கள் எனும் போது ஈழத்துத் தமிழ் நூல்கள் வரலாற்றில் எமக்கு நீண்டதோர் பாரம்பரியமுண்டு. அத்தகைய பெருமை மிக்க பாரம்பரியப் பின்புலத்தில் 'சுகவாழ்க்கை எனும் இந்நூலின் வரவைப் பதிவு செய்யலாம்.
"g606v” Uő5ű 29

Page 17
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பது குறள். இப்படியாக மருத்துவச் செய்திகள் பண்டைத் தமிழ்நூல்களில் காணப்பட்டாலும் புலமையுடையோர் மட்டுமே அவற்றைப் புரிதல் கூடும். அதேவேளை
"வாழக்கா மந்தம்
வழுதுலங்கா செங்கிரந்தி
கீரை குளுமை -எணர்ட
கிளிமொழிக்கு என்ன கறி?” என்ற மட்டக்களப்புப் பிரதேச நாட்டார் பாடல் தரும் மருத்துவச் செய்தி எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
மேற்கூறப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையிலே 'சுகவாழ்க்கை' எனும் நூலை நோக்கும்போதுசுகவாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான அம்சங்களை எளியவடிவிலே தொகுத்தும், இலகுவான மொழி நடையிலே அமைத்தும் தருவதால் இதன் சமூகப் பயன்பாடு பாராட்டத்தக்கதாகும். நோய்களைப்பற்றியும், அந்நோய்களுக்கான மருந்து வகைகளைப் பற்றியும் கூறுவதை விட சுகவாழ்க்கைக்குத் தேவையான சுகாதாரப்பழக்கவழக்கங்களையும், பண்புகளையும் சிறு பிராயத்திலிருந்தே கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்நூல் அதிகம் வற்புறுத்துகிறது. நோய்கள் வராமல் இருப்பதற்கான தற்காப்புநடவடிக்கைகளை நாம் தவறாதுநம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது அவசியம் என்பதும் இந்நூல் தரும் அறிவுரையாகும். திருக்குறள், திருமந்திரம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவது, கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சோ.தேவராஜா தனதுமுன்னுரையில் கூறியிருப்பதுபோல, ஒரு புதுமுயற்சியாகும். உடல்நலம் மட்டுமல்லாமல் உளநலத்தின் அவசியத்தையும் வற்புறுத்தும் இந் நூல் அதற்கான வழி வகைகளையும் கூறுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல ஆத்மீக சிந்தனைகளும் அவசியமானவை என்பது இந்நூல் தரும் செய்தி.
இந்நூலாசிரியர் அரசாங்க சேவையில் சுகாதாரக் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தனது அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றாலும் கூட சமூக சேவையிலிருந்து ஒய்வு பெறக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தனது அனுபவங்களினூடாகப் பெற்ற ஆழ்ந்த ஆரோக்கியம்' சார்ந்த அறிவினை இந்நூலின் மூலமாக இவர் அனைவருக்கும் வழங்கியிருப்பது "யாம் பெற்ற இன்பம். பெறுக இவ்வையகம்' எனும் இவரது மனப்பாங்கினைக் காட்டுகிறது. இவரது இத்தகைய முயற்சி பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
- செங்கதிரோன்
கிடைக்குமிடம் South Asian Books, S-44, 3rd floor CCSMC, Colombo -II. TP:335844
"gá06v” Uásáő 30

கவாசாரம் = பண்பாடு.?
புலவர் த.கனகரத்தினம் அவர்கள் கலாசாரம் என்ற சொல் குறித்தும் எழுதியிருந்தார்.
கலாசாரம் என்ற சொல் குறித்து மேலும் சில விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றேன்.
பண்பாடு, கலாசாரம் இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருபவையா? வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவையா?
பண்பாட்டின் வடமொழி வடிவமே கலாசாரம் என்று சில தமிழறிஞர்கள் கூறுகின்றார்களா?
அவ்வாறு அல்ல பண்பாடு என்பது வேறு, கலாசாரம் என்பது வேறு என்று சில மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்குரியது, கலாசாரம் ஒரு குறிப்பிட்ட - பிரதேசத்திற்குரியது என்பது அவர்கள் விளக்கமாகும்.
தலைசிறந்த எழுத்தாளர்களும் - கவிஞர்களும் கூட பண்பாட்டுக் கலாசாரங்கள், கலாசாரப் பண்பாடுகள் என்ற தொடர்களைத் தங்கள் எழுத்துக்களில் பயன்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
திரு. கனகரத்தினம் அவர்கள் குறிப்பிட்டது போன்று கலா+ஆசாரம் எனப் பிரித்துப் பொருள் விளக்கியுள்ளோரும் உள்ளனர்.
ஜகத்குரு காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் (முன்னைய பெரியவர்கள்) இதுபற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். சுவாமிகள் ஆன்மீகத் துறையில் மாத்திரமின்றி தமிழ், ஆங்கில சமஸ்கிருத மொழிகளிலும் புலமை வாய்ந்தவர் என்பது யாவருமறிந்ததே.
கலா என்பது வளர்ந்து வருவது. வளர்ந்து வருவதனாலேயே சந்திரக்கலை என்று கூறுகின்றோம். இப்படி வளர்ந்து வருவதே கலாசாரம் ஆகும். இது வடமொழி. இதன் அடிப்படையிலேயே கல்ச்சர் (Culture) என்னும் ஆங்கிலச் சொல்லும் தோன்றியுள்ளது. இதன் தமிழ்ச் சொல் பண்பாடு என்பது ஆகும் என்பதே இது குறித்த சுவாமிகளுடைய விளக்கமாகும்.
இது குறித்து திரு.த.கனகரத்தினம் அவர்களே, வேறு தமிழறிஞர்களோ போதிய விளக்கம் அளிப்பார்களாயின் பயனுடையதாகும்.
வி. எஸ். நவமணி, அதிபர், இ/நொரகல்ல தமிழ் வித்தியாலயம், தேலை
‘ஓலை’ பக்கம் 31

Page 18
பதில் : பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
கலா + ஆசாரம் = கலாசாரம் கலாசாரம் - பண்பாடு - Culture பண்பாட்டுக் கலாசாரங்கள் என்றோ கலாசாரப்பண்பாடு என்றோ வழங்.
குவது பிழை. லைற் வெளிச்சம் (Light வெளிச்சம்) என்ற சொற்றொடர் வழக்குப் போல் இவை பிழை. (லைற் என்றாலே வெளிச்சம் ஆக, லைற் வெளிச்சம் என்றால் வெளிச்சம் வெளிச்சம் என்றல்லவா பொருள்படும்) இவை சாரைப்பாம்பு கதலி. வாழை என்பன போல இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகவும் இல்லை. பண்பாடு என்பது குறிப்பிட்ட இனத்திற்குரியது, கலாசாரம் என்பது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரியது என்ற விளக்கமும் சரியானதன்று.
பண்பாடு என்பது புவிப்பரப்பு அல்லது நாடு சார்ந்ததாக அமைவதைக் காணலாம். மொழி, இனம், சமயம் இடம் என்பன சார்ந்ததாகவும் பண்பாடுகள் அமையலாம். அமெரிக்கப்பண்பாடு, இந்தியப்பண்பாடு தமிழர்பண்பாடு என்ற வகையில் பல்வேறு பண்பாடுகள் உள. பண்பாடு என்பதற்கு குரோபரும் (Kroeber) குளுக்கானும் Kuluckohn) எழுதிய நூலில் 100க்கு மேற்பட்டவரையறைகள் உண்டு. பண்பாடுதான் மனிதனை மனிதனாக விளங்கவைக்கும்.
திருக்குறளில் பண்புடைமை எனும் ஒரு அதிகாரமே உண்டு.
"பண்புடையார் பட்டுணர் டுலகம் அதுவின்றேல் மணர்புக்கு மாய்வது மண் (பண்புடைமை -08)
சங்கநூலாகிய கலித்தொகையில் பணியெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" எனவருகிறது. உலகப் பாட்டினை அறிந்து ஒழுக வேண்டிய பண்பை அது விளக்குகிறது.
இலக்கியகலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் "கந்தபுராண கலாசாரம்" என யாழ்ப்பாண மக்களின் கலாசாரத்தை விளக்குவதனையும் அவதானிக்கலாம். பண்பாடு பற்றிய விரிவான ஆய்வினை. ஆறாம் உலகச் சைவ மாநாட்டுக்கு (1921 - 12 - 1997) யான் சமர்ப்பித்து வாசித்த ஆய்வுக்கட்டுரையில் (சமயநெறியிற் பண்பாடு) காணலாம்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பன்முகப் பணிகளுள் இன்னுமொன்று கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி கொழும்பு வலயக் கல்வி அலுவலகம் நடாத்தி வருகின்ற (தமிழ்மொழி)வழிகாட்டற்கருத்தரங்கிற்கான(2003)அனுசரணையைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது கொழும்பு, சைவமங்கையர் கழகம் மற்றும் விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றில் முறையே 24.02.2003 25.02.2003ம் திகதிகளில் நடைபெற்ற இக்கருத்தரங்குகளில் கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் பாலரீதரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
‘ஓலை’ பக்கும் 32

FLINTĪi
இணுவை ந.கணேசலிங்கம்
நகரின் பிரபல கல்லூரி அது. ஆண்டு ஆறிற்குப் புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான இறுதிநாளுக்கு இன்னும் பத்து நாட்களே பாக்கி. அதிபரின் அலுவலகம் சூடுபிடித்திருந்தது.
அதிபர் அரங்கநாயகம் படபடப்புடன் காணப்பட்டார். அக்கல்லூரியிலிருந்து ஐந்தாம் ஆண்டு சித்தி எய்தியவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து அக்கல்லூரியில் அனுமதி பெறத்தகுதியுடையவர்கள் என கல்வித் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பட்டியலிலிருந்து உள்ளே வருபவர்கள் என்று கூட்டிக் கழித்துப் பர்ர்த்ததில் இன்னும் ஒரேயொரு வெற்றிடமே இருந்தது.
சலித்தெடுக்கப்பட்டுத் தகுதியுடையவர்களெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களை எண்ணினார். ஒரேயொரு கதிரைக்குப்பத்து மாணவர்களின் பெயர்கள். மேலே மின்விசிறி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. அதிபர் சுழல் நாற்காலியின் கரங்களில் கைகளை ஊன்றிப் புருவத்தைச் சுருக்கி முகட்டை நோக்கியவாறு யோசனையில் மெதுவாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.
மின்விசிறியின் காற்றில் மேசைமீதிருந்த 'பைல் திறபட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விண்ணப்பப்படிவங்கள் பறந்து சிதறுகின்றன.
துரக்கியெறியப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எடுத்துக் கொடுப்பதற்காக பியோன்' ஓடி வருகிறான். அதிபர் படிவங்களை ஒன்றுசேர்க்க முற்படுகையில் அம்மாவட்ட எம்.பியினால் சிபார்சு பண்ணப்பட்ட மாணவனின் விண்ணப்பப்படிவ இலக்கம் பத்து அவர் கண்ணிற்படுகிறது.
'இம்மாணவனின் தந்தையார் எனக்கு மிகவும் வேண்டியவர். இம்மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்க' இப்படி "எம்.பி தனது கைப்பட எழுதியிருந்தார்.
இது ஒரு அரசியல் தலையீடு. இதனைச் செய்யாவிட்டால் அவர் காரணமில்லாத குற்றத்திற்காக மாற்றலாகவும் கூடும். மனைவி மாதங்கி மாதர் சங்கத் தலைவி அவளினால் சொல்லப்பட்ட எண் ஒன்பது. அவளுக்கு வேண்டியவளின் புத்திரன். கட்டிலில் மிக நெருக்கமாக இருக்கும் போதே முடு
‘ஓலை’ பக்கம் 33

Page 19
மந்திரம் இரண்டு மூன்று நாட்களாகவே சொல்லிக் கொண்டு வருகின்றாள். இவ்வாறு அவள் அட்மிஷனுக்காகப் பல்லைக் காட்டியதே இல்லை.
ஆம். அவளைப் பொறுத்த வரையில் இது ஒரு கெளரவப் பிரச்சினை. அதிபரைப் பொறுத்த வரையில் குடும்பப் பிரச்சினை.
படிவஎண் எட்டு. பிராந்தியக் கல்விப்பணிப்பாளரினால் விதந்துரைக்கப்பட்ட எண். அன்று நடைபெற்ற அதிபர் கூட்டத்தின் பின்பும் நினைவுபடுத்தியிருந்தார். இது அவரின் மேலதிகாரி தொடர்பான பிரச்சினை.
ரெலிபோன் மணி அலறி அதிபரின் கவனத்தைக் கலைத்தது. எதிரே கனிவான குரலில் மாவட்ட எம்.பி.குழைவுப் பேச்சினிடையே எண்ணை நினைவுபடுத்திப் போனை' வைத்தார்.
மின் விசிறிக் காற்றிலும் அதிபரின் முகம் குப்பென்று வியர்த்தது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
மீண்டும் யாரைத் தேர்ந்தெடுப்பதென்ற மனப்போராட்டம். அதிபர் யோசனையில் மூழ்கிப் போகின்றார்.
நாகேஸ்வரன் - இன்ஜினியர் - எண்7.அவரின் மகன். அவனுடன் ஒன்றாகப் படித்த போது கழிந்த பசுமை நிறைந்த காலங்கள். ரியூசனுக்குச் சென்றது. பாடசாலை 'கட்'அடித்து 10.30 "சோ" பார்த்தது. மலர் விழிக்குப் பின்னால் சுற்றியது. இன்னும் செய்த திருகுதாளங்கள் ஞாபகத்துக்கு வந்தன. இது ஒரு நட்புப் பிரச்சினை.
'எஸ்.எல்.ஈ.ஏ.எஸ்.கிளாஸ்1- புறமோஷன் பெற்றுத் தருவதற்காக ஒடித்திரிந்த மாகாணசபை உறுப்பினரின் சிபார்சுடன் கூடிய விண்ணப்பப்படிவ எண் ஒன்று. அன்று வீடு தேடி வந்து கூட இதுபற்றிக் கதைத்திருந்தார். பதவி ஆசை கூட மெல்லத் தலை தூக்கியது. ஆசை அலைக்கழித்தது. படபடத்த உடம்பு குளிர்வது போல்.
உடம்புக்கு இதமாக பிளாஸ்கிலிருந்து 'டி'யை எடுத்து வார்க்கும் போதே மனைவி மாதங்கி பிரசன்னம். கூடவே அவளது எண் ஞாபகம். தலை சுழன்றது. ஊரிலிருந்து அப்பா எழுதிய கடிதத்தில் இரண்டாம் எண்மாணவனின் பெயர். படிவ எண் மூன்று, அதே கல்லூரி ஆசிரியரினால் கொடுக்கப்பட்ட பெயர். எண் நான்கு. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் சிபார்சுடன் வந்திருந்தது. கல்லூரியின் சுகதுக்கங்களில் பங்குகொள்ளும்நலன் விரும்பிகையில் கொண்டு வந்து கொடுத்த படிவம் -5
ஒரு மாணவனைத் தெரிவு செய்ய அதிபரின் திண்டாட்டம். அதிபர் காரியாலயம் கட்டுவதற்கான கலெக்ஷனில் இரவு பகலாக ஒடித்திரிந்த நலன் விரும்பி மீண்டும் தலை தூக்கினார்.
"gap6v” Uásá 34

எண் ஆறு- எவராலும் சிபார்சு செய்யப்படாத விண்ணப்பம். ஆண்டு ஆறு 'அட்மிஷனுக்கான விசேட எண் புலமைப் பரீட்சையில் சித்தியெய்தியும் - அக்கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட புள்ளிவீச்சின் இழிவுப்புள்ளியிலும் இரண்டு மார்க்குகள் குறையப் பெற்றவன்.
அன்றொரு நாள் அம் மாணவன் அதிபரைச் சந்திக்க வந்திருந்தான். வந்ததும் வராததுமாக வீழ்ந்து வணங்கி ஒரு மதிப் பெண்ணைப்பெற்றிருந்தான். அவனின் தோற்றத்தில் வறுமைக் கோடுகள், மாணவனின் முகத்தில் எதிர்கால ஏக்கம். மாணவ அறிக்கை ஐ.கியூ (1.0) மாணவனாகக் காட்டியது. உரையாடியதிலிருந்து பேச்சுவன்மை, தமிழ்தினவிழாப் போட்டியில் ஆக்கத்தில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றமை, ஒவியப் போட்டியில் சிங்கப்பூர் நாட்டின் சான்றிதழுடன் பரிசில் கிடைத்தமை, விளையாட்டுத்திறன் என்பன அறியப் பெற்ற தகவல்கள்.
பழைய ஞாபகங்கள் நிழலாடியது. தானும் சிறுவயதில் இரண்டு மைல் தூரம் நடந்து வந்து படித்தது. கஸ்டத்தோடு போராடியது, போட்டிச் சமுதாயத்துடன் போராடிச்சித்தியெய்தியது, திறமைக்குமுதலிடம் கொடுத்து மாவட்டக் கல்லூரி கை கொடுத்தமை, எதிர் காலம் சிறப்புப் பெற்றமை
இப்போ. என்னதான் சிபார்சு இல்லாமல். எல்லாமே பின்கதவுகள். போலிகள். இதனால் உருவாகும் பொய் முகங்கள்.
அலுவலக 'ரைப்றைட்டர் பொரிந்து தள்ளியது. அதிபரின் இதயத்துடிப்பு அதிகரித்தது. தயாராகும் அட்மிஷன் லிஸ்டில்'இன்னும் ஒரேயொரு பெயர்தான் சேர்க்கப்பட வேண்டும்.
திடீரென அதிபர் என்ன நினைத்தாரோ தெரியாது. மணியை அழுத்திப் 'பியோனை அழைத்தார். "பானை' நிற்பாட்டும் படி கட்டளை இட்டார். மேசையிலுள்ள கடிதங்களின் பட படப்பும் ஒய்ந்தது. சுழல் நாற்காலி பூச்சிய நிலைக்கு வந்தது.
'பைல்லைத் திறந்து விண்ணப்பப் படிவமொன்றை இழுத்தெடுத்தார். ஏதோ சிவப்புநிற மையினால் கிறுக்கினார். பியோன் மூலம் கிளார்க்கை அவசரமாக அழைத்து, விண்ணப்படிவத்தைக், 'கிளார்க்கிடம் கொடுத்து 'ரைப்' செய்யுமாறு உத்தரவிட்டு சரியான ஒன்றைச் செய்துவிட்ட மனநிறைவுடன், வகுப்பு மேற்பார்வைக்காக வெளியேறினார் அதிபர் அரங்கநாயகம்.
தனது இருப்பிடத்துக்கு வந்த 'கிளார்க்' 'ரைப்' செய்வதற்காக விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தார். அதன் இலக்கம் ஆறு.
‘ஓலை’ பக்கம் 35

Page 20
கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும், இலங்கை வானொலி, தொலைக்காட்சிக் கலைஞரும், எழுத்தாளரும், ஏழரை மணித்தியாலங்கள் தொடர்ந்து பேசி உலகசாதனை புரிந்தவருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் இலங்கை வானொலி, தொலைக் காட்சி அறிவிப்பாளர் றேலங்கி செல்வராஜா அவர்களுடன் இணைந்து வழங்கிய கதம்ப நிகழ்வு (சிறுவர்களுக்கான நகைச்சுவை நிகழ்வு) அண்மையில் (02.02.2003 ஞாயிற்றுக்கிழமை) ஜேர்மன் நாட்டில் 'GLIT”(p60örl' 'g56pi 5606uJabëgsisë (Thamilar Kalaiyagam Dort Mund, Rheinische str 130, 44147 Dortmund) sb60)LGlLustsDg5. &L6Ö ä5Lßgö) சென்று கலைப்பணி புரியும் எமது நாட்டுக் கலைஞர்களான இவர்களை 'ஒலை பாராட்டி மகிழ்கிறது.
அஞ்சவி கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பணிபுரியும் செல்வி. கஸ்துரி. யின் தந்தையார், மண்டூரைப் பிறப்பிடமாகவும் களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய மண்டூர் உபதபால் அதிபர் சின்னப்பு சிவப்பிரகாசம் அவர்கள் 28.02.2003 அன்று காலமானார். 'ஒலை' அஞ்சலி செலுத்துவதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றது.
‘ஓலை’ பக்தம் 36
 

உதவும் கரங்கள்
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
திரு.சி.கணபதிப்பிள்ளை, e5 10,000.00
செங்கலடி சீனித்தம்பி தவராசா 1,500.00 திருமதி யோகா யோகேந்திரன் - திருக்கோவில் 1,000.00 அமிர்தலிங்கம் சுதர்சன் 1,000.00
கே.எஸ்.இரட்ணவேல் 1,000.00
கே.சக்திதாசன் 1,000.00
சி.சிவநிர்த்தானந்தா 1,000.00
டாக்டர் உதுமாலெவ்வை 1,000.00
எஸ்.இலகுப்பிள்ளை 1,000.00
எஸ்.எழில்வேந்தன் 1,000.00
என்.இளங்கோ 1,000.00
மு.புஸ்பராஜா 500.00
ந.கண்ணதாசன் 500.00 ஏ.ஸி.இஸ்மாலெவ்வை, சம்மாந்துறை -06 5OOOO திருமதி. சாந்தா இராஜகோபால், ஹட்டன் 5OOOO சி.அருணகிரிநாதன், வட்டுக்கோட்டை 3OOOO அருள்.மா.இராஜேந்திரம், 250.00 திருமதி.வாசுகி தேவராஜா 200.00
வ.இராசையா 200.00
எம்.எஸ்.எஸ்.ஹபீட் (மருதமைந்தன்) காத்தான்குடி -02 200.00 ஈழபாரதி மருதுர்வாணன்
(ஆசிரியர்,சமாதானம்),மருதமுனை 200.00
சாரணாகையூம், பதுளை 100.00
‘ஓலை’ பத்தம் 37

Page 21
> வருக பொற்காலம் உலகக் கவிதைப் போட்டியில் எடுபட்ட 10 பேர்களுள் நானும் ஒருவனாக ஆகுவதற்குச் சந்தர்ப்பம் தந்த கொ.த.சங்கத்தை என்னால் மறக்க முடியாது. உங்களின் 10ம் ஒலைதான் எனக்குக் கிடைத்தது.
ஒலை 5ல் செங்கதிரோன் யாத்த பூப்படையாப் பெண்களெ ம்.." என்ற கவிதையின் சிறப்புரையை ஒலை 10இல் கண்ட நாள் முதல் அக் கவி. தையை அசை போட்டுக் கொண்டிருக்கின்றேன். தமிழ்ச்சங்கத்தின் தமிழ் காக்கும் பெரும் பணிக்கு மிகவும் தேவையானது பன்மொழிப் புலவர் த.கனகரெத்தினத்தின் சொல் வளம் பெருக்குவோம். ஒலை உள்ள மட்டும் இது தொடரவேண்டும். தாமரைத் தீவானின் வாழ்க! கவிதை வாழ்க. சற்சொரூபவதிநாதன் கண்ணிர்க் கதைகளுக்காகக் காததுரம் பலவற்றில் நடந்துள்ளார். நெஞ்சைப் பிழிகிறது எம்.எம்.அன்சாரின் பிஞ்சுகளைப் பிழியாதே! இவ்வாறு ஒலையின் ஒவ்வொரு சொட்டுப் பிரதேசமும் விட்டுவைக்காமல் தொட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஒலை 10 மட்டும்தான் என் கரமெட்டியது. மற்றைய ஒன்பதும் நிழலாடுகின்றன. காணாமல் இருப்பு வராது. அவைகளுக்காக விழிகளை வழியில் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒலை தொடரவும், உயர்வடையவும் ஆசிக்கின்றேன்.
3ம் ஒழுங்கை கலைமணி.ஏ.ஸி.இஸ்மாலெவ்வை 1ம் குறுக்குத்தெரு,
சம்மாந்துறை-06
3.2.2003
D தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட 2002 நவம்பர், டிசம்பருக்கான ஒலை இதழ்கள் கிடைக்கப்பெற்றேன். நன்றி. சங்கம் அமைத்துத் தமிழ் வளர்க்கும் தமிழ்ச்சங்கத்தின் வரலாற்றுத்தடங்கள்'ஒலையில் பதிவாவது சிறப்பு. அதாவது சங்கத்தின் வெளியீடான 'ஒலை' என்னும் ஆழம் பற்றிக் குறிப்பிடுகின்றேன்.
ஃ திருமதி யோகா யோகேந்திரன்
ருககோவல
2003.02.10
‘ஓலை’ பக்கம் 38
 

> தங்களின் "ஒலை"-10,11 ஆகிய மடல்கள் கிடைக்கப்பெற்றேன். மிகவும்
நன்றி.
ஒலை-11 இல் செ.குணரத்தினம் அவர்களின் "எனக்குப் பயமாக இருக்கிறது" சிறுகதைதற்கால தமிழ்மக்களின் யதார்த்தச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவதாயுள்ளது. அவருக்கு எனது பாராட்டல்கள். தொடர்ந்தும் "ஒலை"பல செய்திகளைத் தாங்கி வெளிவந்து சிறந்தோங்க வேண்டுமென வாழ்த்துகின்றேன். மன் / முள்ளிக்குளம் அ.த.க.பா பாலம்பிட்டி 12.02.2003
செஞானராசா (அதிபர்)
> வணக்கம். தாங்கள் அனுப்பிய 11வது இதழ் "ஓலை" கரங்கிட்டியது. இதழ் சிறியதாக இருப்பினும் உள்ளடக்கத்தில் எடுப்பாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது. படிக்கப் பயனளிப்பதாகப் பரவசம் தருகின்றது.
"ஒலை"யில் இடம் பெற்றுள்ள எனது அஞ்சலில் "கணணி பயிற்சி நெறி" என்பது "கணிப்பொறி" என்றும், "மலையகப் பகுதியில் உள்ளவர்களும் கேட்டும் - பார்த்தும் அனுபவிக்கும் பாங்கில் அமைய, இரண்டு அல்லது மூன்று திங்களுக்கு ஒரு முறையாவது சங்கத்தின் நிகழ்வை இங்கே நடத்தினால் எல்லோரும் கேட்டு மிகவும் களிப்படைவார்கள்." என்பது, அச்சுக்கோட்பாளரின் தவறால் "தினங்களுக்கு" என்று இடம்பெற்றுள்ளது.
ஐம்பது காலப் பகுதியில் சங்கத் தலைவர் திரு.சோமசுந்தரம் அவர்கள் அறிஞர் அண்ணாவையும் அடுத்தாண்டுக்கு தமிழ் விழாவிற்கு வரவேற்று, சொற்பொழிவாற்றிட செய்ய ஆவன செய்து, கொண்டிருந்தார்.
அத்தோடு அக்காலப்பகுதியில் தமிழ்ச்சங்கத்தில் அங்கம் பெற்றிருப்பதே பெருமைக்குரிய செயலாக மதிக்கப் பெற்றது.
மீண்டும் அத்தகைய அருமையான நிலையை கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஏற்படுத்திக் கொண்டு வருவதும் பெருமை தருவதாகும். வளர்க ஒலை! வளம் பெறட்டும் கொழும்புத் தமிழ்ச் சங்கம்!
நிக்கவத்தை கெதர இ.ஆதமிழோவியன் வினித்தகம -90034
பதுளை
16.02.2003
> வெறும் செய்திமடலாக இல்லாமல் ஒலை தற்போது தரமான ஓர் இலக்கிய
ஏடாக வெளிவருவதைக் காண முடிகிறது. ஒலை 11வது இதழ், சங்கச் செய்திகளுடன் விமர்சகர் ஆனந்தன் பற்றிய கட்டுரை (அந்த இனிய
‘ஓலை’ பக்கம் 39

Page 22
நண்பன் யாரோ) செ.குணரத்தினத்தின் அருமையான சிறுக தை முத்து மாதவனின் "ஐயா புலவீர்காள்" (அங்கதக்கவிதை) "சொல்வளம் பெருக்கு. வோம்" கட்டுரை மற்றும் முக்கிய செய்திகளைத் தாங்கி மிக க் உச்சிறப்பாக வெளிவந்துள்ளது. சங்கப் பணிகளின் ஆவணப் பதிவாக இவ்விதழைச் சேமித்து வைக்கிறோம். எதிர்கால உசாத்துணைக்காக. வாரம் ஒரு இலக்கி=தி யா நிகழ்வு (அறிவோர் ஒன்றுகூடல், நூல்நயம் காண்போம்) மற்றும் சங்கம் நடாத்தும் இலக்கிய நிகழ்வுகள், யாவும் மாதமுடிவில் ஐந்தொகையாக அமைகிறது. இத்தகைய இதழை இனிமேலாவது விலை வைத்து (ரூ.20 /="? ஆண்டுச் சந்தா (ரூ.250/=) என ஆக்கினால் என்ன?இவ்வாலோசனைடைட இலக்கிய அன்பர்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பதில் சந்தேகாம் இல்லை. கணக்கு வழக்கு வைக்கும் மேலதிக வேலை சங்கத்துக்கு தரற்படலாம். அதனாலென்ன? சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரித்தால் அதைக்கூடச் சமாளித்து விடலாம் அல்லவா?
18, நல்லையா வீதி மட்டக்களப்பு 20.2.2003
அன்பு மணி இரா நாகலிங்கம்
hanisangan
Forn: "Ajantha Gnanamuttu" 

Page 23
வெள்ள நித்தியகல்யாணி ந
அப்பழுக்கா
பெல்ஜியம் சர்வதேச இரத்தினக் (International Gem II உறுதிப்படுத்தப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு
பைகளில் மூடித்
நித்தியகல்யா
230 காலி வீதி. (
தொலைபேசி
தொலை நக
மின்னஞ்சல் :
ܒܝܕ
قوت==
 

影
வத்தை கை மாளிகையில்
]] ]ബ])
(Belgium) கல்லியல் நிறுவனத்தினால் mological Institute) - பரிசோதிக்கப்பட்டு டு - மாற்றமுடியாதபடி தாளிடப்பட்டது.
IgloMeluar
கொழும்பு - 06. 36器92,3624°”
504933
nithal (slt.lk
17.