கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2003.09-10

Page 1
H
HHHHHHHH.
- ------ ----- ---------
LSLSLS LS S LSL SLL LSSL L S L L SS L L L L L L L L L L L L L L L L L L L L L L
H -
------
HE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA. لم . ܢܠ
 

போது - 1 இதழ் - 33
புரட்டாதி - ஐப்பசி 2003 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor)
IGGQIMI
போல் சற்குணநாயகம், யேச.
gefonfuuff: (Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
U600ftp60607: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை விதி, மட்டக்களப்பு
தொலைபேசி: O65-23822, O65-22983
E-mail ppccGDdiamond.lanka.net
ஆசிரியர் Uக்கம்
'கலங்காதிரு மனமே" எனும் பாடல் ஊடாக ஐம்பதுகளில் தமிழ்த் திரை உலகில் காலடி எடுத்து வைத்த முத்தையா என்ற கண்ணதாசன் அமெரிக்காவில் 1981ம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 18ம் திகதி காலன் கையில் அகப்படும் வரை - திரை உலகின் முடிசூடா மன்னனாகவே திகழ்ந்தார்.
பாட்டெழுதுவதற்கு முன்பு தமது பதினெட்டாவது வயதிலேயே பத்திரிகை
ஆசிரியனாக அறிமுகமான கணிணதாசன் - அதன் பின் பு இலக்கிய 2-6) sles எடுத் த
அவதாரங்கள் எத்தனையோ இருந்தும், கணிணதாசன் என்றதும் நமக்கு அவரது கவிதைகளே நினைவுக்கு வருகின்றன.
கண்ணதாசன் ஒரு சிறந்த பாடலாசிரியரே அன்றி கவிஞன் அல்ல, என்று வாதிடுவோரும் உணர்டு. அவ்விதம் வாதிடுவோரில் தமிழ் நாட்டுக் கவிஞர் காமராஜனும் ஒருவர். இவர்களின் வாதங்கள் எவ்விதம் இருப்பினும் கண்ணதாசன் ஒரு கவியரசர் என்பதே உண்மை. இந்த உணர்மையை அவரது சினிமாப் பாடல்களின் சில வரிகளே, நமக்கு
உணர்த்தி நிற்கும்.

Page 3
பாசமலரி'ல் கண்ணதாசன் பாடல் ஒன்றில் வரும் நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே என்ற வரிகளில் கவிதையின் வாசமே கமகமக்கும். இது போன்றே "வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ' எனும் பாடலின் கருத்து பட்டினத்தாருக்குரிய தெனினும் அந்தக் கவிதையினைக் கண்ணதாசன் சொன்னவிதம் அவரை ஒரு கவியரசராகவே காட்டி நிற்கும்.
கவிஞன் ஒருவன் படைக்கும் கவிதைகள் எல்லாவற்றிலும் அவனது கைவண்ணம் பளிச்சிடுவதில்லை. இடைச்செருகல் என்னும் பெயரில் கம்பராமாயணத்தில் இருந்து டி. கே. சி. அவர்கள் ஒதுக்கிவிட்ட பாடல்களே இதற்கு நல்ல சான்று.
இது போன்றே, இன்றைய நவ கவிதையின் ஊற்றுவாயாக இருக்கும் பாரதியை அவனது எல்லாக் கவிதைகளிலும் நம்மால் பார்க்க முடிவதில்லை. இது இயல்பு
வசனத்திற்கும் கவிதையின் வசீகரத்தைக் கண்ணதாசன் கொடுத்தமையை அவரது அர்த்தமுள்ள இந்து மதத்தில் காணலாம். கவியரசரின் வசன காவியங்களில் ஒன்று சேரமான் காதலி. இவ்விலக்கியம் இந்திய அரசின் சாஹித்திய அக்கடமி பரிசினை அவருக்குப் பெற்றுத் தந்தது.
இலக்கிய உலகில் இமயமாகவே எழுந்து நின்ற கண்ணதாசன் அரசியலில் அதல பாதாளத்திலே விழுந்து கிடந்தார். தனிப்பட்ட வாழ்க்கையும் தக்கதாக அமையவில்லை.
இந்த இரண்டு தோல் விகளுமே சிலரது கண்ணில் கண்ணதாசனைக் குறைவாக எடைபோடக் காரணிகளாகின்றன. ஆயினும் தம்மைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் கடந்து "நான் நிரந்தரமானவன், எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. என்ற தமது வார்த்தைகளை அவர் மெய்ப்பித்துக் கொண்டிருக் கின்றார் என்பதையே இன்று நாம் நிதர்சனமாகக் காண்கின்றோம்.
அன்புடன் 12 graybaobao (varowajv.
G02)

அறிய வேண்டிய அரிய மனிதர் - 11.
கவியரசர் கண்ணதாசனி
கவிஞர் கண்ணதாசன் - தமிழ் சமுதாயத்தின் அறுபதாண்டு கால அடையாளம் . இன்றும் கல்யாண வீடுகளில் அவரது பாடல் தான் D 60 D.5 6) 6 வரவேற்கிறது. துக்க வீடுகளிலோ 96). Tg5 பாடல் ஆறுதல் கூறிக் கொணர் டு இருக்கிறது. கண்ணிர் மனிதனுக்கு கர்ச்சிப் தருகிறது. சந்தோஷம் மனிதனுக்கு சாக்லெட் தருகிறது.
“சார், நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன்.” என்று தனது நோட்டுப் புத்தகத்தை அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம் ஆர்வமாக நீட்டினான் முத்தையா.
“நீயெல்லாம் ஏன் கதை எழுதுகிறாய்? அது சாமான்யமான வேலையல்ல’ முகத்தில் அடித்த மாதிரி கூறுகிறார் ஆசிரியர். முத்தையா அவமானத்தில் குன்றிப்போகிறான். அதன்பின் அவன் தனக்கென்று ஒரு கனவுலகை அமைத்துக்கொள்கிறான். அவனது கிராமமான சிறுகூடற் பட்டியிலிருந்த கண்மாய்க் கரையும் தென்னந் தோப்பு அவனது தவச் சாலையானது. மேகங்கள் ஓடங்களாயின. இயற்கையை இரசித்துக்கொண்டு கற்பனையில் மிதந்துகொண்டு - ஒரு ஞானியைப் போலவே அவன் சிறுவயதில் தோன்றினான்.
எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு முற்றுப்புள்ளி. வேறு வேலையும் இல்லை. அந்த நேரத்தில்தான் அவனுக்கு ஊரில் ஒரு பெண் மீது காதல், ஆனால், அது தோல்வியில் முடிந்தது. அந்தக் காதல் தோல்வி - அவனைக் கடுமையாகப் பாதித்தது. ஊர் அலுத்தது. ஊர் மெச்சும்படி சாதனை செய்ய துடிப்பு எழுந்தது. ஒரு நாள் - முத்தையா வீட்டில் கூடச் சொல்லாமல் கிளம்பிவிட்டான்.

Page 4
திருச்சியிலும் பிறகு சென்னையிலும் வேலை தேடி அலைந்தான். எல்லா இடத்திலும் “வேலை காலி இல்லை” விளைவு. பசி, பட்டினி.
வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து, இறுதியில் புதுக்கோட்டை - இராமச்சந்திராபுரத்திலிருந்து வெளிவரும் “திருமகள்” பத்திரிகையில் வேலை கிடைத்தது. முத்தையா என்ற பெயரையும் கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார். சில தினங்களிலேயே அந்தப் பத்திரிகைக்கு அவர் ஆசிரியர் ஆனார். அப்போது அவருக்கு வயது பதினெட்டுத்தான். பிறகு அங்கிருந்து மேதாவி, திரைஒலி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து, இறுதியில் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நடத்திய சண்டமாருதம் இதழின் ஆசிரியரானார். அதன் பிறகு பத்திரிகைப் பணியிலிருந்து மார்டன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் வேலை. ஆனால் மார்டன் தியேட்டர்ஸில் கவிஞர் எழுதிய வசனங்களை டி. ஆர். சுந்தரத்தின் பார்வைக்கு அனுப்பாமல் குப்பைக் கூடைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். அலுவலக அரசியல் தாங்க முடியாமல் வேலையை உதறிவிட்டுக் கிளம்பினார். கோவை ஜூப்பிட்டர் பிக்சர்ஸார் எடுத்த “கன்னியின் காதலி’ படத்துக்குப் பாடல் எழுதும் முதல் வாய்ப்பு டைரக்டர் ராம்நாத் மூலம் கிடைத்தது. “கலங்காதிரு மனமே” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் கவிஞர் தனக்குத்தானே எழுதிக் கொண்டது. அதன்பிறகு தமிழ் சினிமாவில் கண்ணதாசனின் வெற்றிக்கொடி சுடர்விட்டுப் பறந்தது!
முத்தையாவின் பெற்றோர்: சாத்தப்பச் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி. குடும்பச் சூழல் காரணமாக 1949-ல் தனது மூன்றாவது மகனான முத்தையா என்கிற கண்ணதாசனை சுவீகாரம் கொடுக்க முடிவு செய்தார். சாத்தப்பச் செட்டியார்.
விசாலாட்சி ஆச்சியின் மகன் முத்தையா, கண்ணதாசனாகப் புகழடைந்து, தெய்வானை ஆச்சிக்கு மகனாகி நாராயணன் ஆனார்.
சுவீகாரத்திற்குப் பிறகு கவிஞருக்குத் திருமணப் பேச்சுகள் நடந்தன. 1950-ல் உற்றார் - உறவினர் வாழ்த்துரைக்க பொன்னம்பலம் ஆச்சியின் கழுத்தில் திருப்பூட்டினார் கவிஞர். இந்தத் திருமணத்திற்கு கலைஞர் சென்னையிலிருந்து வந்து சிறப்புரையாற்றினார்.
1950-ல் காரைக்குடியில் தனது முதல் திருமணத்தை முடித்த
CO2)

கவிஞர் பிறகு 1951-ல் தனது இரண்டாவது திருமணத்தை சென்னையில் நிச்சயித்தார். திருவும், உருவும் திருத்தமாய் வாய்க்கப்பெற்ற பார்வதி அம்மை யோரை ஆடம்பரம் ஏதுமின்றி மணந்துகொண்டார். கவிஞரும் பார்வதி அம்மையாரும் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானது.
பிறகு கவிஞர் தனது 48வது வயதில் வள்ளியம்மை என்ற புலவர் பட்டம் பெற்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்தார்.
பாட்டெழுதியதன் மூலம் கவிஞர் லட்சக்கணக்கில் சம்பாதித்தார். ஆனால், அதைச் சேமிக்கத் தவறிவிட்டார். அவர் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் நஷ்டத்தில் பத்திரிகை நடத்தினார். இன்னொரு பக்கமோ சொந்தத்தில் படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டார். “கவலை இல்லாத மனிதன்” அவரை கவலைகொள்ளும் மனிதனாக்கியது. கடன்காரர்களின் தொல்லை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மது போன்ற கெட்ட சகவாசங்கள். ஒரு வழியில் வந்த வருமானம் பல வழிகளில் கரைந்தது.
இதுபற்றிய உறுத்தல் கவிஞருக்கு கடைசிக்காலத்தில் Q (3 g o ഡ്ര C3 ர்வி S S g க் i.
“புத்தகங்கள்தான் என் பிள்ளைகளுக்கு நான் வைத்துப்போகும் சொத்து. இன்னும் ஐம்பது புத்தகங்களாவது நான் எழுதிவிட்டால், எனக்குப் பிறகு, என் குழந்தைகளுக்கு சாப்பாட்டுக் கஸ்டம் இருக்காது.”
இது குறித்துக் கவிஞரின் புதல்வர் காந்தி கண்ணதாசன் கூறும்போது “அப்பா தனது சொத்துக்களைப் பாதுகாத்திருந்தால்
ஆனால் அவரது கசப்பான அனுபவங்கள் மூலம் கிடைத்த உன்னதமான படைப்புக்கள் தமிழுக்கு இல்லாது போயிருக்கும். அண்ணாவின் மீது கோபப்பட்டபோது அண்ணன் காட்டிய வழியம்மா..” என்று எழுதினார். இந்திரா காங்கிரஸில் இருந்தபோது “அந்த சிவகாமி மகனிடம் சேதி
GOS)

Page 5
சொல்லடி” என்று பாடல் தூதனுப்பினார். நலம்தானா என்று அண்ணாவை நலம் விசாரித்தார். சம்பத் தேர்தலில் தோற்றபோது “யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே” என்று பாடினார். கவிஞர் சம்பாதித்தார். ெ இத்தார். இதில் infai . எங் நன்றாகப் படிக்கவைத்தார். கவிஞரின் வாரிசுகள் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். அது போதும்.” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“அர்த்தமுள்ள இந்துமதம்” கட்டுரைகள் மூலம் இந்துமதத் தத்துவத்தை மிக எளிய உதாரணங்களால் விளக்கிய கவிஞரைச் சில பாதிரிமார் சந்தித்தார்கள். “தமிழில் இயேசுவின் கதையை ஒரு காவியமாக ஆக்கித்தர வேண்டும்.” என்று வேண்டுகோள் வைத்தார்கள். கவிஞர் சம்மதித்தார். திடீரென்று தனது உதவியாளர்களுடன் குற்றாலம் சென்றார். பதினைந்து நாட்கள் தங்கியிருந்து தவம்போல “இயேசு காவியத்தை” எழுதி முடித்தார். 7000 வரிகள் கொண்ட இயேசு காவியம் மிக அற்புதமாக வந்திருந்தது. பெரிய விழா எடுத்து அந்தக் காவியத்தை வெளியிடத்
திட்டமிட்டார்கள்.
இதற்கிடையில் 1981 ஜூன் மாதம் கவிஞர் அமெரிக்கா செல்லவிருந்தார். அதற்கு முதல்நாள் ஒரு படத்திற்குப் பாட்டெழுதி விட்டுத் திரும்பும்போது தனது உதவியாளர் இராம கண்ணப்பனிடம் இப்படிக் கூறினார்: “இனிமேல் சினிமாவுக்கு பாட்டெழுதமாட்டேன். இதுவே கடைசி. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பாதியில் நிற்கும் நான்கு காவியங்களையும் முடித்துவிடவேண்டும். இன்னும் இருபது புத்தகங்களாவது எழுதிவிடவேண்டும்” - கவிஞர் இப்படி திட்டம் போட்டார். விதியோ வேறுவிதமாகத் திட்டமிட்டது.
அமெரிக்காவில் சிகிச்சைக்குச் சென்ற கவிஞர் மீண்டு வந்து காவியங்களைப் படைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அமெரிக்காவிலேயே அவர் காலமானார்.
- மரணம் மனிதனைப் புதைக்கின்றது. கலைஞர்களை விதைக்கிறது. தமிழ் இதயங்களில் வேர்விட்டும் விழுதுகள் விட்டும் யார் தொட்டும் அசைக்கமுடியாத கவிதை விருட்சமாய் விரிந்து நிற்கிறார் கவியரசர். உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை கவிஞரும் இருப்பார்.
GOGO
(குமுதம் 25-08-2003)

முன்பெல்லாம் தீவிரவாதிகள்தான் உயிர்களைப் Uணயம்வைத்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டனர் அப்போதெல்லாம் அவர்களைப் Uழப்பறிவற்ற இனவெறிச் சாத்தான்கள் என்று ஏசினர்!
இப்போது
உயிர்களைப் பயணம் வைத்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள படித்த தீவிரவாதிகள் வந்துவிட்டார்கள் யார் தெரியுமா..? உயிரியல் Uழத்து உயிரைக் காப்போமென சத்தியப்Uரமாணம் செய்த
வைத்தியர்கள்.
நாடுபூராவும் அரச வைத்தியசாலைகளில்
அடிக்கழ இப்பழ உயிர்களை பணயம் வைக்கின்றனர்.
இதனால் தனியார்துறை வைத்தியசாலைக்குக் கொண்டாட்டம் போதாக்குறைக்கு தாதிகளும் போர்க் கொடி தூக்குகின்றனர்

Page 6
அதைப் பார்த்து ஏனைய சுகாதார ஊழியர்களும்.
978gJsTótssysT (BUTU அநியாயமாக உயிர்கள் பலியாகின்றன!
அரச வைத்தியசாலையை நம்பிவரும் ஏழைகளும் நடுத்தரவர்க்கமும் படும்பாடு.?
ஐயோ. இதயமில்லாத வெறியர்கள் Uணயம்வைப்பது ஏழை உயிர்களையல்லவா? உயிர்களைக் காப்Uவர்களே அவற்றைப் பலியிடுவது நம் தேசத்தில் தான்.
நாளை வைத்தியசாலையிலுள்ள சடப்பொருள்களும் கோரிக்கைக்காக போராடும்போல
என்ன வேழக்கையென்றால் இத்தனையும் பார்த்தக்கொணடிருக்கும் அரசும் எதிர்க்கட்சியும் அதற்கு முழவெடுக்காமல் சிறுபாண்மையை அழிக்கச் சிந்திக்கின்றன?!
எஸ்.பி. பாலமுருகன்.
G08)

மொழி
மொழி என்பது ஒருவருடைய எண்ணங்களை வெளிப்படுத் தக்கூடிய “கருத்துச் சாதனம்’ என்பர். இக்கருத்து மொழியின் பண்பாட்டுத் தன்மையை மட்டுமே குறிக்கின்றது. ஆனால் மொழியின் இயல்புகள் இன்னும் ஆழமானவை, விரிவானவை, வளர்ந்தவை. மொழி எண்ணுவதை எடுத்துரைக்கும் கருவி மட்டுமல்ல, எண்ணத்தை அறிவிக்கும் கருவியும் ஆகும். மொழியின் மூலம் அம்மொழியாளரின் வாழ்க்கை வழியையும் உணர முடியும்.
மொழி ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டுக் கருவூலம். தொன் மைத் தொடர்பு, அவ்வினத்தின் வாழ்முறை, கருத்தோட்டங்கள், சிந்தனை ஊற்றுக்கள், செவ்வியல் வேர்கள் போன்றவற்றின் சீர்திறம், சமூக வளர்ச்சி-தளர்ச்சிகளைக் காட்டும் திசைகாட்டி, வழிவழியினதான சமுதாயப் போக்குகளின் இணைப்புப் பாலம். எனவே ஒரு தேசிய இனத்தின் உயிரோட்டமாகத் திகழும் மொழி காக்கப்படவேண்டியது அவசியமாகும். அத்துடன் வளர்க்கப்பட வேண்டியதாகும்.
ஒரு நாட்டை அடிமைப்படுத்தவோ, ஓர் இனத்தைச் சிதைத்து விடவோ அவர்களின் மொழியை சிதைத்துவிடு என்ற கொள்கையைக் கடைப்பிடித்த அரசுகளின் வரலாறுகள் உள்ளன. ஓர் இனமாகத் தம்மை உயர்த்தி தம் உரிமை வாழ்வைப் போற்றி வாழும் மக்களை அனைத்துப் புலங்களிலும் இணைக்கும் மொழி அழிந்திடுமானால் அம்மக்கள் எழுச்சி குன்றி உருக்குலைந்து ஒடுங்கிவிடுவர். அந்நாட் டினை அடிமைப்படுத்தல் எளிதாகிவிடும். சவாதிகாரியான ஹிட்லர் ஒரு நாட்டை வீழ்ச்சியுற செய்ய வேண்டுமெனில் முதலில் அவர்தம் மொழியை அழிக்கும் வழியைக் காண வேண்டும் என்றார். ஆனால், அயர்லாந்து விடுதலை வீரர் “டிவேலரா” என் நாட்டின் உரிமையை இழக்க நேரிடலாம், இழப்பேன். என் மக்களின் மொழியை (ஐரின்மொழி) ஒரு நாளும் இழக்க மாட்டேன் என்றார். ஏனெனில், மொழியைக் காத்தால் அடிமையுற்ற நாட்டினையும் ஒரு நாள் மீட்கமுடியும் என்பது
(1no

Page 7
அவனுடைய திடமான நம்பிக்கை. எனவே ஒரு தேசிய இனத்தின் தாய்மொழிப் புறக்கணிப்பு அம் மக்களின் தற்கொலையையே குறிக்கும்.
தேசியம் என்பது ஒரு நாட்டு மக்களிடையே தோன்றக்கூடிய பொதுப் பற்றினை அல்லது நாட்டுடன் ஒன்றிய உணர்வினை தேசியம் அல்லது நாட்டுப்பற்று எனலாம். ஒரு நாட்டு மக்களின் மொழி, இலக்கியம், ஒத்தமரபுகள், நெடிய வரலாறு, பொருளியல் நிலை, வாழ்வியல் முறை, பொதுப் பண்பாடு, இன உணர்வு என்பன தமது நாட்டுக்குத் தாமே சொந்தக்காரர் என்ற தன்னுரிமை போன்றவற்றுடன், அந்நாட்டுடன் ஒன்றிய இயல்பையே பற்றுறுதி அல்லது தேசியம் எனலாம். தேசிய இனங்களிடையே நாட்டினது அமைவு (Nationhood) இருந்த போதும் தனித்தன்மை கொண்ட சில விந்தை வரலாறு சூழ்நிலை காரணமாக அவை முழுத்தன்னுணர்வுடன் (Full Conscience) வளரவில்லை. ஒரு நாட்டு மக்களின் பற்றுறுதி ஆணிவேர் பழைமை மக்களின் போர் உணர்வாகும். இதனை ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய நாட்டியல்புப் பண்பு (Nativity) எனலாம். இந்த நாட்டியல்புப் பண்பே பண்டைத் தேசியம் எனப்படும்.
<_ supréfast சிபாண் சக்திவேல்)
ஒருவன் தன் வழிவழியாக வாழ்ந்துவரும் நிலப்பகுதியானது தனக்குப் பிறப்பிலேயே உரிமைப்பட்ட வாழ்விடம் என்ற உள்ளார்ந்த உணர்வோடு பொது நிலையில் அந்நாட்டுடனும் அந்நாட்டு இயல்புடனும் அதன் அரசுடனும் இயல்பாகக் கொள்ளும் பற்றுறுதியே பண்டையத் தேசியம் எனப்படுகிறது.
பற்றுறுதி என்பதை கூறுமிடத்து வீரம் என்ற திருக்குறள் அதிகாரம்.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற் பின்சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து - (குறள் 780)
தலைவனின் கண்ணிர் பெருக வருந்துமாறு இறப்பது விரும்பத்தக்க. இதையே இதுவே பற்றுறுதி எனப்படுகிறது. வீரம் என்பது பேராண்மை. அவ்வீரம் முறையோடு வெளிப்பட வெற்றியை நாட்ட தேவைப்படுவது படைக்கலன், தான் சார்ந்த நாட்டை ஆளும் தன்மையே அப்படைக்கலன்.
“பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
G10)

ஊராண்மை மற்று அதன்எஃகு” (குறள்-773)
ஒவ்வொரு பொது மகனும் தான் யார், தனது மொழி எது? தனது இனம் எது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்ளத் தேவையான அடிப்படையான அறிவுகூட பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படாததால், அறியாமை இருளில் பல தலைமுறை கள் மூழ்கிவிட்டதால், அறிஞர் பலரால் இயற்றப்பட்ட பல அரிய அறிவுத்துறை இலக்கியங்கள் சில சிதறல்கள் மக்களின் அறிவுக்கும், உணர்வுக்கும் தொடர முடியாததால் பண்டைய பண்பாட்டின், அறிவூற்றின், வீச்சு இன்றும் நீறு பூத்த நெருப்பாகவுள்ளது.
தமிழர்களாகிய நாம் “நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒருங்கிணைப்புடன் இன உணர்வைப் பெறுவதுடன் தமிழ் மொழி இலக்கியங்கள், கலைகள், சிந்தனை, நூல்கள், கருத்துநிலை, கல்விப் பண்பு, சமூக அமைப்பு, சமுதாய ஒழுக்கம், வாழ்க்கைமுறை வழிவழி யான மரபுகள் என்பவற்றையும் உள்ளிடாகக் கொண்டு பண்பாட்டுடன் மிளிரவேண்டும். மொழி உணர்வு என்பது மூச்சுக்காற்றைப் போன்றது. அது தடைப்படும்போதுதான் அதன் உயிரியல்பும், இன்றியமையாமை யும் புரியும். தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு இயல்பாக இருக்க வேண்டும். தமிழுக்கும், தமிழியலுக்கும், தமிழர் பொருளியல் வாழ்க் கைக்கும் புற அழுத்தங்கள், போரின் கெடுபிடிகளே, இயல்பான அத்தமிழுணர்வு தீராத் தன்மையுடன் பீறிட்டுக் கிளம்பியமையின் விளைவே இன்றைய சமாதானமும், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன 6hTG5D.
தமிழரின் பண்பாட்டு இலக்கியத்தையும், அவர்தம் தொன்மை யையும் ஈராயிரம் வருடங்களுக்கு நெடிய ஈழத்து வரலாற்று அரசியல், சமூகம், இலக்கியம் என்ற முப்பெரும் பகுப்புக்களின் அடிப்படையில் ஆய்வு செய்தால், அரசியல் வரலாறும், சமூகவியல் வரலாறும் ஏறத்தாழ இணைந்து செல்கின்றன. சமூகத்தின் தேசிய அடிநாதமான மொழி வரலாறு மட்டும்தனிவழியே அவ்வப்போது பிணங்கியும், இணங்கியும் இயங்கி வந்ததை மறுப்பதற்கில்லை. தமிழ் வழியே வளரவேண்டிய கலைகளும், பண்பாட்டுக் கூறுகளும் வளர வழிவகுப்பது கடமையாகும். (தினக்குரல் 23-09-2003)
G1)

Page 8
துறி பரணி
“பலட்டுப்பாண’ என்ற குன்றினை ஈழத்தின் விடுதலைப் போராட்டத்திற்கான பாசறையாக ஆக்கிக்கொண்ட விஜயபாகு அன்று கருக்கலில் தனது பட்டத்துராணி லீலாவதியோடு அமர்ந்திருந்து உரையாடும்போது நடந்த சம்பவத்தின் பின்னணியில் சோழ மன்னன் வீரராஜேந்திரன், - அல்லது ஐந்தாவது மகிந்தனின் இளையமைந்தன் கேசதாதுவோ இருக்க வேண்டும் என்று நினைத்தான். இவர்கள் இருவரில் - அதிராசேந்திரனின் ஈழத்துப் படை எடுப்பின் பின்பு ரோகணையில் கலகத்தை மூட்டி மக்களைத் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்யும் தேசத்துரோகப் பணியில் ஈடுபட்டிருந்த கேசதாதுவைத் துரத்தியடித்துவிட்டு, ரோகணையில் தனது ஆட்சியை உறுதிப்படுத்திக்கொண்ட விஜயபாகு, ராஜரட்டையில் சோழருக்கு வரி கொடாது மக்கள் தொடர்ந்து நடத்தும் சுதந்திரப் போராட்டத்
surfit) was
திற்குத்தான் இன்னும் பெரும் பக்கபலமாக் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான்.
அதிகாரம் - 8.
இத்தகையதொரு சூழ்நிலையில் ஆறு ஆண்டுகள் மட்டும் சோழ சிம்மாசனத்தில் வீற்றிருந்து வல்லடிப்போரையும் இராசதந்திரத்தையும் தனது ஆட்சியின் இரு பெரும் கருவியாக்கி சோழ சாம்ராச்சியத்தைக் கட்டி ஆண்ட வீர இராஜேந்திரனின் எதிர்பாராத மரணம் விஜயபாகுவின் அனைத்துக் கவலைகளையும் போக்கும் அருமருந்தாக அமைந்தது. முன்பு போலவே, சோழ அரசன் மரணத்தால் களிப்படைந்த விஜயபாகு, வீரராஜேந்திரனின் மைந்தன் அதிராஜேந்திரன் அரியணையில் அமர்ந்ததைத் தொடர்ந்து சோழ சாம்ராச்சியத்தில் ஆளும் உரிமைக்கான போட்டி ஆரம்பமாகிவிடும்
C12)

என்று எதிர்பார்த்தான்.
விஜயபாகு எதிர்பார்த்திருந்தது போலவே அதிராஜேந்திரன் அரசு கட்டிலில் ஏறி அமர்ந்ததும் அவனுக்கெதிராக முதலாம் இராசேந்திரனின் பேரனும், விஸ்ணுவர்த்தன் என்ற இயற்பெயர் கொண்டவனுமான கீழைச் சாளுக்கிய இளவரசன் குலோத்துங்கன், நாட்டில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினான். அவனது இந்தச் செயற்பாட்டுக்கு வைணவப் பெரியார் இராமானுஜத்தை அதிராஜேந்திரன் துன்புறுத்தியமையும் ஒரு நல்ல காரணமாக வாய்த்தது.
அதிராஜேந்திரனின் இந்த இக்கட்டான நிலையை அறிந்த மேலைச் சாளுக்கிய மன்னனும் அதிராஜேந்திரனின் மைத்துனனுமான விக்கிரமாதித்தன் உடனடியாக காஞ்சிக்கும் கங்காபுரிக்கும் பெரும் படைகளோடு விரைந்து, கலகக்காரரை அடக்கி ஒரு திங்கள் அதிராசேந்திரனுடன் தங்கிவிட்டுத் தன் நாடு திரும்பினான்.
குலோத்துங்கனின் மறைமுக எதிர்ப்புக்கு மத்தியில் சோழ சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்ட அதிராஜேந்திரன், தனக்கு எதிரான கலகக்காரர்களை அடக்குவதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டிய தாயிற்று. அத்தோடு குழப்பத்தினால் நாட்டில் ஏற்பட்ட பொருள் பற்றாக்குறை - பொருள்களின் விலை அதிகரிப்பு - என்பவற்றுக் கெல்லாம் ஈடுகொடுக்க வேண்டிய நிலையில் இருந்த அதிராஜேந்திர னின் கவனம், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே மையம் கொண்டிருந்தது.
எனினும் - ஆட்சி உரிமைக்காக குலோத்துங்கனால் நாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பங்கள் நாட்டையும் மக்களையும் பெருமளவு பாதித்ததோடு - அதிராஜேந்திரனின் உயிரையும் ஒரு சில மாதங்களில் பலி எடுத்தது. -
அதிராஜேந்திரனின் அகால மரணத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டவள் அவனின் அன்புக்கினிய பட்டத்துராணி
சித்திராங்கிதான். காதலித் யே கரம்பற்றி, பிறந்த நாட்டைவிட்டுட்
G13)

Page 9
புகுந்த வீடான சோழநாட்டில் காலடி வைத்த கணத்தில் இருந்து கணவனே தெய்வமென வாழ்ந்த அவளால் ஒரு கணமேனும் அவனைப் பிரிந்து வாழமுடியாத நிலையில் உடன்கட்டை ஏறி ஒரு தமிழ்ப் பெண்ணாகவே மரணத்தைத் தழுவிக்கொண்டாள்.
சோழநாட்டின் பட்டத்துராணியின் இந்த முடிவு பற்றிக் கேள்வியுற்ற அதிராஜேந்திரனின் தாய் அருள்மொழிமங்கை துடிதுடித்துப் போனாள். தன் கணவன் வீரராஜேந்திரனால் இவ்வழக்கம், நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்ட போதும், தன் மருகி - ஒரு சிங்களப் பெண்ணாக இருந்தும், ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்ந்து மடிந்ததை நினைத்துப் பார்த்த அவள் - கண்கள் இரண்டும் குளமாகப் பொங்கி வழிந்தன. சோழதேசம் முழுவதுமே இந்தச் சோகத்தில் மூழ்கிப்போனது.
அதிராஜேந்திரனின் மரணத்தைத் தொடர்ந்து சோழப் பேரரசின் மகுடம் புனைந்துகொண்ட விஸ்ணுவர்த்தன் என்ற முதலாம் குலோத்துங்கன் நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டி லுமே அதிக கவனம் செலுத்தினான். முதலாம் இராஜராஜனில் இருந்து - வீரராஜேந்திரசோழன் காலம் வரை - சோழ சாம்ராச்சியத்தின் பேருக்கும் புகழுக்கும் என நடத்தப்பட்ட வல்லடிப் போர்களாலும் - நாட்டின் செல்வம் பெருமளவு அழிந்தது மட்டுமன்றி - மக்களும் நிம்மதி இழந்து வாழ நேர்ந்தமையை உணர்ந்து கொண்ட குலோத்துங்கன், அவ் வல்லடிப்போருக்குப் பதிலாக இராஜதந்திரத்தை மேற்கொள்வதே நல்லதென எண்ணினான்.
ஆனாலும், மேலைச்சளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும், தனக்கும் இடையே நிலவிவருடம் நீண்டகாலப் பகையை, எந்த இராஜதந்திரத்தாலும் தீாக்க முடியாதென நம்பிய குலோத்துங்கன் அவன் மீது போர் தொடுத்தான்.
சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த நங்கிலி என்ற இடத்தில் ஆரம்பமான இப்போரில் விக்கிரமாதித்தன், அவன் தம்பி ஜெயசிங்கன், கொங்கண நாட்டின் அதிபதி ஜயகேசி, திரிபுவன பாண்டியன் என்ற வடபுலத்து உச்சங்கி நாட்டினதிபதி, வேங்கி நாட்டு மன்னன்
G14)

விஜயாதித்தன், போசள மன்னன் விநயாதித்தன், அவன் மகன் ஏரங்கன், தேவகிரியின் யாதவ மன்னன் சேரன் போன்றோர் குலோத்துங்கனின் படைப்பலத்துக்கு முன்னால் நிற்க முடியாது தோற்றோடினர்.
இப்போரின் மூலம் கங்கபாடியை மீட்டுக் கொண்டதோடு சாளுக்கியரின் ஆயிரம் போர் யானைகளையும் கவர்ந்துகொண்டு சோழர்படை வெற்றியோடு கங்கை கொண்ட சோழபுரம் திரும்பியது.
இதே காலப்பகுதியில், பாண்டியர்களும் சோழர்களும் தன்னாட்சி பெற முயன்றபோது, குலோத்துங்கன் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமிடையிலேற்பட்ட போரில் கோட்டாறு எனும் இடத்திலிருந்த பாண்டியரின் கோட்டையைக் குலோத்துங்கன் எரித்ததோடு, பாண்டியன் ஓடி ஒளித்த காட்டையும்
தீக்கிரையாக்கினான். O
6)JITćѣ60DТ6)JfТ600Т60T
பாண்டியரை எளிதாக வெற்றி கண்ட குலோத்துங்கன் கோட்டை, கொத்தளம் நிறைந்த விழிஞ்சத்தில் சேரரோடு நடந்த போரில் அவர்களை வென்று வாகை சூடினான். இவ்விரு போர்களிலும் வீராவேசத்தோடு போராடும் இயல்பு படைத்த சேவேர்கள் முழுமையாக வெல்லப்பட்டதால் குலோத்துங்கன் படை குதுகலம் அடைந்தது.
சேரரும் பாண்டியரும் செருக்களத்தில் வெல்லப்பட்ட போதும் தம் தம் நாடுகளில் தன்னாட்சி நடத்தும் உரிமையைக் குலோத்துங்கன் அவர்களுக்கு வழங்கினான். முன்னைய சோழ மன்னர்களின் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையை குலோத்துங்கன் மேற்கொண்டமை நாட்டின் வளர்ச்சியில் அவன் கொண்ட அக்கறையும், தேவையற்ற வல்லடிப்போரை அவன் விரும்பாமையுமே காரணங்கள் எனலாம்.
குலோத்துங்கனின் இந்தப் போக்கையும் பக்கத்து நாடுகளான சேரத்திலும், பாண்டிய மண்ணிலும் உருவாகிவரும் தனித்துவ சுதந்திரப் போராட்ட முனைப்பையும் உணர்ந்து கொண்ட விஜயபாகு - ஈழத்தின் விடுதலை மிக அண்மையிலேயே இருக்கின்றதென்று உறுதியாக
G15)

Page 10
நம்பினான். ஈழவிடுதலைக்கான கிளர்ச்சியை முன்னைவிட இன்னும் அதிகமாகத் துரிதப்படுத்தினான். அதேநேரத்தில் - குலோத்துங்கனின் பரம விரோதியான சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் - அயோத்தி கலிங்க அரசர்கள் ஆகியோரோடும் இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட விஜயபாகு - பாண்டிய சேரரோடும் தனக்கிருக் கும் பந்தத்தை இன்னும் அதிக இறுக்கமாக வைத்துக்கொண்டான்.
விஜயபாகுவின் இந்த விடுதலைப் போராட்டத்திற்கு முதலாம் இராஜராஜனாலும், அவனைப் பின்தொடர்ந்த சோழ மன்னர்களாலும், பொலநறுவையில் குடியமர்த்தப்பட்ட வேளைக்காரர், பொலநறுவை, மாதோட்டம், கந்தளாய், பதவியா போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழர்களின் ஆதரவும் தாராளமாகக் கிடைத்தது.
தமிழர்களின் இவ்வாதரவு, விஜயபாகுவிற்குக் கிடைத்தமைக்கு அவனது நடுநிலையான ஆட்சியும், பாண்டியரோடு அவனுக்கிருந்த நீண்டகால நெருங்கிய உறவுமே காரணம். மேலும் நாட்டின் நிர்வாக மொழிகளாக சிங்களத்தோடு தமிழையும் வைத்திருந்தமையும். படைத்தளபதிகளாக அபிமன்ராமன், மழவராயன் ஆகிய தமிழர்களை நியமித்தமையும் அவன்பால் தமிழர்களை அதிகம் நெருங்கச் செய்தன.
ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு முதல் தேவை நாடு தழுவிய மக்கள் ஒற்றுமை என்பதை அறிந்திருந்த விஜயபாகு அதனைத் தனது நேர்மையான போக்கினால் பெற்றிருந்தமை அவனுக்கிருந்த மிகப் பெரிய பலமாகும்.
இந்தப் பெரும் பலத்தோடு, தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகிய பலங்களையும் தன்னோடு எப்போதும் வைத்திருந்த விஜயபாகு சோழருக்கெதிரான போர் முரசை பெரிதாகவே முழக்கினான். அந்த முழக்கம் ஈழத்தை மட்டுமன்றி, சோழ சாம்ராச்சியத்தையும் ஓர் உலுக்கு உலுக்கியது. (இன்னும் வரும்) பண்பாடு என்பது 1937ல் நண்பர் திரு. டி.கே. சிதம்பரநாதமுதலியார் அவர்கள் புதிதாகத் தமிழுக்குக் கொண்டு வந்த ஒரு சொல். ஆங்கிலத்திலே கல்ச்சர் Culture) என்பதைத் தமிழில் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
G16)
- பேராசிரியர் எல், வையாபுரிப்பிள்ளை,

மெல்லத் தமிழினிச் சாகுமோ? - அதன்
மேன்மைகள் விட்டுத்தான் Uோகுமோ? சொல்லுமப் பேதையர் யாவரோ? - அவர்
சொல்வது வேதமோ? தேவரோ? வெல்லும் தமிழ் வருநாளையும் - கேட்டு
விண்ணையும் மோதுவான் கோழையும் தொல்லுலகின் அதன் ஆட்சியில் - கண்டு
துள்ளிக்குதிப்பார் மாட்சியில்!
மூப்பே அறியாத தமிழினை- எங்கள்
முன்னவர் போற்றிய அமிழ்தினை காப்பாய் விளங்கும் பேற்றினை - தேன்
கவிதை பிறந்தெழும் ஊற்றினை தோப்பாய்ச் செழிக்கும் மொழியினை - அந்தத்
தொல் புகழ்க் காப்Uயன் விழியினை நாப்பறை கொட்ழச் சொல்லுவார் - அது நாளையே சாகுமாம் எள்ளுவார்.
அன்றும் கடலன்ன எதிரிகள் - அட
அழிவையே கண்டனர் உதிரிகள் குன்று என தமிழ் நின்றிடும் - பகை
கூனிக்குறுகியே சென்றிடும்

Page 11
மன்ற மெலாம் புகழ் ஓங்கிடும் - அதன்
மகிமையால் வநஞ்சங்கள் வீங்கிடும்
நன்று இதைத் தேரா மூடர்காள் - சிறிதும் நாணின்றிப் பேசினி கேடர்காள்.
மலையது இமயம் சாயுமோ? - இந்த
மண்ணைல்லாம் வெந்து தியுமோ? அலைகடல் வற்றிக் காயுமோ? - நித்தம்
அசைந்திடும் காற்றும் ஒயுமோ? நிலமது முற்றாய் அழியுமோ? - ஊழி
நெருப்பது அணைந்து ஒழியுமோ? புலமில்லா மனிதரின் பேச்சடா - அவர் போகட்டும்? நமக்கது மூச்சடா?
எங்கள் தமிழுக்கென்னகுறை? - அதில்
இலங்கிடும் குறளே தமிழர் மறை சங்கத் தமிழை வெல்லுவரோ? - ஒன்றைச்
சகத்தினில் இணையாய்ச் சொல்லுவரோ? Uொங்கும் அறிவியல் நிறைந்ததுவாய் - இந்தப் பூமியில் தமிழ்மொழி சிறந்ததுவாய் எங்கும் மனிதர்கள் போற்றுவார்கள் - எதுவும் இணையில்லை என்றே சாற்றுவார்கள்!

(நப் / . மகேஸ்வரன்
இடி போல வந்திறங்கியது, அந்த மரணச் செய்தி.
வழமை போலவே அக்கா சுகநலம் விசாரித்து, ஊர்ப் புதினங் களை விலாவாரியாக விமர்சித்து, இனியாவது ஊரோடு வாருங்கோவன் என்று பரிவோடழைப்பு விடுத்து, இறுதியாக தகப்பன் மரணமான செய்தியைக் கோடுகாட்டியிருந்தாள்.
அந்த ஒரு செய்திதான் அவள் தலைக்குள் இறங்கிப் பேரிடி யாகத் தாக்கியது.
என்ன இருந்தாலும் மார்மேலும் தோள் மீதும் சுமந்து சீராட்டித் தாலாட்டி அவர் செல்லமாய் வளர்த்த பிள்ளை அவள்.
வருத்தம் கடுமையென்று ஏற்கனவே அறிவித்து, உடனடியாக ஒருக்கால் வந்து போங்கோ என்று சில நாட்களுக்கு முன்னரே எழுதியிருந்தால் தகப்பனோடு இரண்டு வார்த்தைகள் பேசி, தன் பங்கிற்கும் ஏதாவது பணிவிடை செய்து பெற்று வளர்த்தவருக்கு இறுதிக் கடனாவது தீர்த்திருக்கலாம். எல்லாமே போயிற்று.
இப்போது பெருங் குரலெடுத்து வீரிட்டழுது, கேவலாகத் தணிந்து, நினைத்து நினைத்துக் கண் கலங்கத்தான் முடிந்தது. அவளை ஆறுதல்படுத்தக் கணவனும் பிள்ளைகளும் பெரும் பிரயத் தனம் எடுக்கவேண்டியிருந்தது.
இனி யாரிடம் எதைச் சொல்லி என்ன செய்ய?
அயலவர் வந்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிப் போகவும்,
தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் வந்து தேற்றம் சொல்லவும் அழுகை பீறிடத்தான் செய்தது.

Page 12
இனி அங்கு போவது, ஊருலகு ஒப்பாசாரத்திற்குத்தா னென்றாலும், போய் வந்தால்தான் மனது ஆறும் போல ஒர் அவஸ்தை.
கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறிக்கொண்டு வருகையில் மீளவும் கடிதத்தைக் கையிலெடுத்த போது, அக்காவின்மீது கடுஞ் சீற்றமெழவே செய்தது.
கடிதமெழுதிய தேதியைப் பார்த்தாள். மார்கழி 16-ல் எழுதிய கடிதத்தின் இறுதியில், நேற்று ஐயா காலமாகி விட்டாரென்று மிக அற்பத்தனமாக ஒரு வரி எழுதி ஒப்பமிட்டு, 21-01 என முடித்திருந்தாள். நியாயமாகப் பார்த்தால் அந்தக் கடிதத்தில் வருமாறு அழைப்பு விடுத்து உடன் அஞ்சலிட்டு, அதற்கும் வராது போயிருந்தால், திரும்ப இந்தச்
பாப்பரசரின் இலங்கை விஜயத்தைப் பக்கத்து வீட்டு “ரிவி”யில் பார்த்துவிட்டு வந்து அப்போதுதான் இரு கவளம் சோறெடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், ஊருக்குப் போன குடும்ப நண்பர் வந்து கணவனைத் தனியாக அழைத்து வீதியில் நின்று இரகசியம் கதைத்தபோது அவளுக்கு சந்தேகம் வந்தது. பின்பு இருவரும் உள்ளே வந்தபோது, இருவர் முகத்தையும் பார்த்து அவள் கேட்ட கேள்வி - ஐயா சுகமாய் இருக்கிறாரா?
அதற்குமேல் புத்திஜீவியான அந்த நண்பரால் கொண்டு வந்த செய்தியை மறைக்கவும் முடியவில்லை. கடிதத்தைக் கையளித்ததும் ஆவலுடன் அமைப் பிரித்துப் பார்த்தபோதுதான், அந்தச் செய்தி இடியாக அவள் தலைக்குள் இறங்கியது.
அக்கா கடிதத்தை ஆரம்பித்த அந்த வேளையில் தடைசெய்யப் பட்ட கிளாலிக் கடலூடான சிரமமான பயணம்தான். என்றாலும் போராளிகளின் காவற்கலங்கள் இருமருங்கும் வெகு தூரத்தே பாது காப்புக்கு உத்தரவாதம் வழங்கி அணிவகுக்க இரு தினங்களிலாவது போயிருக்கலாம். இப்போது எல்லாமே முடிந்திருந்தது.
ஊருக்குப் போனபோது அக்காவின் அழுகைகூட ஒரு பாசாங்கு
G20)

போல்தான் அவளுக்குப் பட்டது. ஆயினும் இருவரும் கட்டி அழுதனர். இவள் வந்த செய்தி சில நொடிகளில் பரவ, வீட்டில் ஒரு சிறு குழாமே கூடித் தேற்றியது. ஒய்வுக்கு வந்த இரண்டாவது நாள் ஆளாளுக்கு அவளிடம் சில செய்திகளை அவிழ்த்துவிட்டனர்.
‘உன்னைக் காணவேணுமென்று அந்த மனிதன் கடைசியாகத் துடித்த துடிப்பென்ன..?”
“கொய்யா உனக்கெண்டு தலைமாட்டில முப்பத்தையாயிரம் காசும், அஞ்சு பவுண் மாலையும் வைச்சுக் கொண்டிருந்தது.
*.அதைத்தான் உன்ர தம்பி சா வீட்டுச் செலவுக்கென எடுத்துப் போட்டான்.”
‘.பிறகு கொக்காவும் அடிபட்டு ஐயாயிரம் வேண்டிப் போட்டாளாம்.
ஊர் வாய்கள் மெல்ல, மெல்ல. அவளுக்கு மீண்டும் அழுகை பீறிட்டது.
இறுதி நேரத்திலாவது தகப்பனைப் பார்க்க முடியவில்லை யாம். இனி இதுகள்தான் எனக்கு இல்லாத குறை. என்று விசனப்பட்டாள்.
ஒரு வேளை தகப்பன் தனது அந்திமச் செலவிற்காகவே அவற்றை வைத்திருக்கலாம் என்று, அவள் அறிவு அவளுக்குப் புத்தி புகட்டியது.
இருந்தாலும் இந்தச் சுயநலவாதிகளின் போக்கும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இவர்களோடு வந்து சேர்ந்திருப்பதே சிரமம் என்று, அவளது இன்னொரு மூளை நரம்பு அதிர்ந்து அச்சுறுத்தியது.
தன் இருப்பெல்லாம் இனியும் வாடகை வீட்டு கலாசாரம் தானென்று மனது கணக்க, அவள் மூட்டை முடிச்சோடு மறுபடியும் தான் முன்பிருந்த இடத்திற்கே போவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அவள் புறப்பட்டுப் போனாள், இனி அங்கேயே “செற்றில்’ ஆனாலென்ன என்ற ஒரு மனக் குறையுடன், விரக்தியுடன்.
G2D

Page 13
கவிதைப் பெண்
பெண்ணாக
செட்ழ நாட்டுத் தென்றல் தொட்டிலிலேயே தமிழைத் தொட்டு விளையாடிய தோன்றல்.
ஊர் திருத்த வேண்டும் ഉബങ്ങ6Bu சீர் திருத்த வேண்டும்.
சின்ன வயதிலேயே 6Urfu affig6060T
சிறகடித்தது.
முத்தையாவின் நெஞ்சில் கவிதை வெறி மூண்டெழுந்தது.
ஊரோடு இருந்தவனை ஈரோடு அழைத்தது.
g5560)gs 6Usfustrf60f தானையில்
G22)
மைந்தன் இவனும் மறவன் ஆனான்.
கவிஞன் இவன் இப்போது கண்ணதாசன்.
மூடக்கொள்கை அவனால் மூச்சிழுக்கத் தொடங்கியது.
நாத்திகம் இவன் рпоljeb நர்த்தனம் ஆழயது. ஆத்திகம் அழUணிந்தது.
அண்ணாவின் ՖԱ5Մաff6ծ கவிஞர் கண்ணதாசனும் ஒருவன். கவிதை அவன்முன் கைகட்டி நின்றது.
‘தென்றல்”

(B456060T 6JTrf இறைத்தது மன்றம் புகழ் மகுடம் குட்டியது.
திரை உலகும் அவனைத் தேழவந்தது
ازنک தேராக அவனைத் திக்கெட்டும் சுமந்தது.
uonoaupuu (os86D66oU ордее срtpщот?
மதுரைவிரனி, மகாதேவி கவிஞனுக்கு புதுப்புகழ் சேர்த்தன.
கல்லக்குழு போராட்டம் கவிஞனையும்
கைதியாக்கியது.
சிறையில் கவிஞனி சிந்தையில் “மாங்கனி? சிங்காசனம் அமைத்தாள்.
வனவாசம் அவனி வாழ்வின் தனிவாசம்.
மதுவும் மாதும் கவிஞனை மயக்கின அந்த மயக்கத்தில் ஆயிரம் ஆயிரம் கவிதைகள் வந்து பிறந்தன.
அரசியல் பேதம் இவனை அறுபத்தொன்றில் அர்ைனாவின் அன்புக் கயிற்றை அறுக்கச் செய்தது.
சம்பத்தின்
சகா இவன் தமிழ்த் தேசியக் கட்சியின் சம்பத் ஆனான்.
ஆனால்

Page 14
கட்சியில் இருந்தவர்கள் சில வருடங்களில் Uட்சிகளாகப் பறந்து போனார்கள்.
கவிஞன் &nupgrT&ვ08ეm0ჩ கை கோத்தான்.
நாத்திகம் அவனிடமிருந்து நடையைக்
கட்டியது
ஆத்திகம்
ஆரத் தழுவியது.
பக்திப் பாடல்கள் அவன் நெஞ்சிலிருந்து பாய்ந்து வந்தன.
6)J60x5 ՍՈւՔա6/60/ இறைவன் மீது இசை பாடினான்.
ஆழ்வாராக சிவன் அழயாராக கவிஞன் அவதாரம் எடுத்தான்.
*கிருஸ்ண கானம்?
நெஞ்சைக் கிறு கிறுக்க வைக்கும்.
அர்த்தம் உள்ள இந்து மதத்தில் பித்துக் கொள்ளாத Uறவி ஆர்?
தத்துவம் கவிஞனின் சொத்தானது.
இந்து ஆயினும் அவன் (86606)utb Uтц26лт6ії.
6τιδωρΦΦρώ அவனுக்குச் சம்மதமே.
இலக்கிய உலகம் அவன் முன் கையேந்தி நின்றது
ஆனால்
அரசியலில் அவன் ஓர் அநாதையானான்.
gങ്ങബഖf காமராஜரைத்

தனர் கவிதைக் கையால் தழுவியவன் இந்திராவே இந்தியா எனிறான்.
தி.மு.க.வைத் திட்டித் தீர்த்தவன் கலைஞர் ஆட்சியில் அவர் கைக்குள் கிடந்தான்.
6τό 88 εώ6ώιτ ஏசியவன் எழுபத்தேழில் அவரை இமயம் என்றான்.
பாராட்டுப் பெற்ற 6τώ.83 ερή கவிஞனுக்குக் கொடுத்த ufegii 35m6o ஆஸ்தானக் கவிஞர் பதவி.
குழந்தைத் தனம் கவிஞனின் குணம் உணர்ச்சிச் சூறாவளி
966D60T உருட்ழப் புரட்டியது.
ஆலமரம் கண்ணதாசனை அந்தச் சூறாவளிதான் அழத்து வீழ்த்தியது.
96.5606) 8ம்Uத்தைந்தில் அமெரிக்காவில் 6ഖങ്ങgU ബUങ്ങ് 60paыђ 6)U60й6xжтвѣ
காதல் பெண்கள் கண்ணிர்மழை பொழிய
வைஸ்னமும் சைவமும் வாய் விட்டலற
திரை உலகம் உரைகுழற
மது மயங்க
கண்ணை மூடினான்
கவிஞன்
( வாகரைவாணன்
G25)

Page 15
- பனிக்கட்டிபோன்றது
“வாழ்க்கை பறந்துகொண்டிருக்கிறது. பொழுது புலரும்
ஒவ்வொரு நாளும் இறப்பும் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, உன்னுடைய ஒவ்வொரு கண நேரத்தையும் முற்றிலும் பயன்படுத்துவாயாக!” என்றார் ஒரு மேலைநாட்டு அறிஞர். அவர் தனது வீட்டுக்குமுன் ஒரு புதைகுழியைத் தோண்டி வைத்திருந்தாராம். அந்தக் குழி அருகே ஒரு பதாகையில் இந்த வசனங்களை எழுதி வைத்து காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகப் படிப்பாராம்.
ஒரே ஒரு நேரத்தில் உலகில் பல்லாயிரம் ஜனனங்களும்,
மரணங்களும் சம்பவிக்கின்றன. பல்லாயிரம் சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனால் நேரம் மிக முக்கியமானது.
米
ஒரு மூன்றாண்டின் மதிப்புக் குறித்து. ஓர் இளநிலைப் பட்ட தாரியைக் கேட்டால் தெரியும். ஓராண்டின் முக்கியத்துவம். தேர்வில் தோல்வியடைந்த மாண வர்களுக்குத் தெரியும். ஒரு நிமிட நேரத்தின் முக்கியத்துவம் அறிய ரயிலையோ, பேரூந்தையோ, விமானத்தையோ தவறவிட்டவரிடம் கேளுங்கள். ஒரு நொடியின் முக்கியத்துவம் விபத்தில் சிக்கிப் பிழைத்த வரிடம் கேட்டால் புரியும். ஒரு மில்லி நொடியின் மதிப்பைக் குறித்து வெள்ளிப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரரால் தான் விளக்கமுடியும். அந்தச் சொற்ப நேரத்தில் தான் தாம் தங்கப் பதக்கத்தை இழந்ததைச் சொல்லி அவர் புலம்புவதைக் கேட்கலாம். நேரம் யாருக்கும் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் பெரும் புதையல். அதைச் சரியாகப் பயன்படுத்துபவரே அறிவாளி.
நேர மேலாண்மை என்பதற்கு "வெற்றி” என்று பொருள்
கொள்ளலாம். "சீரான வாழ்க்கை” என்றுகூட பொருள் சொல்லலாம்.
С26)

இந்தப் பிரபஞ்ச இயக்கமே நேர மேலாண்மைக்கான சரியான உதாரணம். சூரியனோ, சந்திரனோ அல்லது சக படைப்புகளில் எதுவெனினும் நேரம் பிசகாமல் தத்தமது சுழற்சிகளில் இருப்பதால்தான் உலகில் எல்லாமே சீராக இயங்குகின்றன.
உண்மையில் நேரம் என்பது ஒரு பனிக்கட்டி போன்றது. அதைப் பயன்படுத்தவில்லையென்றால் உருகிவிடும், கரைந்துவிடும்.
ஒரு பேராசிரியர் தமது மாணவர்களுக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். மேசை மீது ஒரு ஜாடி வைக்கப்பட்டிருந்தது. கருங் கற்களை எடுத்தவர் அந்த ஜாடியுள் ஒவ்வொன்றாகப் போட்டு அதை நிரப்பினார். “மாணவர்களே! ஜாடி நிரம்பிவிட்டது அல்லவா?” என்று கேட்க "ஆமாம்” என்றார்கள் மாணவர்கள்.
ஆனால், பேராசிரியர்சரளைக் கற்களை எடுத்தார். ஜாடியை அசைத்து. அசைத்து கற்களால் நிரப்பினார். அதன் பிறகு கேட்டார் “மாணவர்களே! ஜாடி நிரம்பிவிட்டது அல்லவா?’ இப்போது மாணவர்கள் சொன்னார்கள். “இல்லை இன்னும் நிரப்ப முடியும்!” “சபாஷ்” என்ற பேராசிரியர், மீண்டும் ஜாடிக்குள் பொடி மண்ணைப் போட்டு நிரப்பினார். பிறகு மாணவர்களிடம் கேட்டார் “மாணவர்களே, இப்போது ஜாடி நிரம்பிவிட்டது அல்லவா?”, “இல்லை இன்னும் நிரப்பலாம்”.
மாணவர்களின் கூர்மதியைக் கண்ட பேராசிரியர் அவர்களைப் பாராட்டிவிட்டு, சிறிது தண்ணிரை ஜாடிக்குள் ஊற்றி நிரப்பினார். கடைசியாக மாணவர்களிடம் கேட்டார், "இப்போது ஜாடி நிரம்பிவிட்டது. சரி நான் காட்டிய செயல் உங்களுக்கு விளக்குவது என்ன?”
"நமது இலக்கை அடைய நாம் எத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்” - என்ற மாணவர்களிடம், “இல்லை” என்ற பேராசிரியர், "முதலில் நீங்கள் கருங்கற்களைப் போட்டிருக்காவிட்டால். பிறகு அவற்றை ஜாடிக்குள் நிரப்ப இடமிருந்திருக்காது” என்பதே படிப்பினை என்றார்.
@

Page 16
உண்மைதான்!
மனம் என்னும் ஜாடிக்குள் கருங்கற்களைப் போன்ற இலட்சியங் களை முதலில் போடாவிட்டால். அதன் பிறகு சரளையும் மணலும் தண்ணிரும் போன்ற சிறிய விசயங்களே அதை நிரப்பிடும். நம் கவனம் சிதறிவிடும்.
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி அதி உற்பத்தித் திறன்காண பத்து அம்சங்கள் வருமாறு:
1. எப்போதும் ஒரு திட்டத்துடன் இருங்கள். 2. உங்கள் இலக்கிலும், அதை அடைவதற்கான முறைமைகளிலும்
தீர்மானமாக இருங்கள். 3. ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்துக்காகத் திட்டமிட்டுக்
கொண்டே செல்லுங்கள். எழுதிவைத்துக் கொள்ளுங்கள். “என்னுடைய நேரம் சரியாகச் செலவழிகிறதா” என்று அடிக்கடி வினா எழுப்பிக்கொண்டே இருங்கள். 6. காலை, மாலை, இரவு என்று அவரவர்க்கு சுறுசுறுப்பான
நேரங்களில் செயல்படுங்கள். 7. ஒவ்வொன்றாகச் செயற்படுத்துங்கள். 8. பணியிடத்தைத் தூய முறைப்படுத்தப்பட்டதாக ஆக்கிக் கொள்
ளுங்கள். 9. நேரத்தின் முக்கியத்துவம் அறிந்து விரைந்துசெயல்படுங்கள். 10. வாழ்வில் எப்போதும் நடுத்தரப் போக்கையே கையாளுங்கள்.
இனி மகிழ்ச்சி, அமைதி, உடல்நலம் பெருகுவதைக் காணுவீர்கள்.
தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல - அது ஒரு கலாசாரமுமாகும்.
- எழுத்தாளர் ஜெயகாந்தன்.
 
 
 
 
 
 
 
 

நாடாளுமன்றத்திற்கு இனினும் எத்தனை நாட்களி?
ஜனாதிபதியினி கையில்தானே அதனி ஜாதகம்?
எந்த நேரத்திலும் இறப்பு எனும் செய்தி வரலாம்!
ஆண்டு ஒன்றுதானி அதன் ஆயுள்!
அதன்பினர் அநீதியேட்டிதானி!
மக்கள் ஆட்சியாம். அதன் மகிமை இவ்வளவே!
தனி ஒருவரிடம் அதன் தலைவிதி
நிறைவேற்று அதிகாரம் நினைத்ததைச் செய்யுமாம்
இலங்கை ஜனநாயகத்தில் ஒருவரின் உரிமைக்கு ஓராணிடுதானி உத்தரவாதம்.
புண்ணியவாணி ஜே. ஆர். போட்ட சட்டம் இது!
இந்நாட்டுக்குடி மக்களே இனினுமா தூக்கம்?
இது ஒரு துக்க நாள் எங்கும் Uரகடனம் செய்யுங்கள்.
வெள்ளை, கறுப்புக் கொழகளை வீட்டு வாசலில் தொங்க விடுங்கள்.
அரைக்கம்பத்தில் தானும் தேசியக் கொடி அசையக் கூடாது.
மைளன ஊர்வலம். மக்கள் கூட்டம் நடத்துங்கள்.
இறுதியாக - இடுகாடு செல்லுங்கள் அங்கு இரங்கலுரை நிகழ்த்துங்கள்!
ஒப்Uாரி வையுங்கள் ஓவென அழுங்கள்.
இலங்கை ஜனநாயகம் இறந்துவிட்டது.
ஆமாம், இறந்தே விட்டது.
~ கம்பதாசன்

Page 17
விஞ்ஞானெ
அணு விஞ்ஞானி அப்துல் கலாம்
இன்று இந்தியாவின் ஜனாதிபதி
ஆராய்ச்சியாளர் அரசாட்சி செய்கின்றார்.
அரியனையில் ஓர் அரும்பெரும் கவிஞன்.
வினை வித்துவான் கையில் ஆணைச் சக்கரம்!
பத்திரிகை விற்றுப் படித்தவன் சத்திரியன் ஆனது ஒரு பெரும் சரித்திரம்!
முஸ்லிம் ஒருவருக்கு இந்தியா சூட்டிய αριρ θgδι
சிறுபான்மை இனத்திற்குத் தரப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பு
அரசியல் கலவாதவன்

இறா
நாடாளும் அதிசயம்!
தோணி ஒட்டியின் தோன்றலின் கையில் ஒரு தேசத்தின் சுக்கான்
அரசமாளிகையில் ஒர் ஆண்டியின் மகன்!
இராமேஸ்வரத்திற்கும் இதனால் இராஜமரியாதை!
விஞ்ஞான வெளிச்சத்தில் இப்போது இந்தியா வீற்றிருக்கின்றது!
உலகத்தின் பார்வையில் இந்தியா உயர்ந்தே விட்டது!
அதிஸ்ரமா? இல்லை ஆண்டவன் வரமா? இரண்டும் இல்லை! அறிவுக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். கலாம் உனக்கொரு சலாம்!
- காண்டீபன்.