கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2006.01-02

Page 1
இந்தப் புறா எ
எவர் பதில்
அந்தக் கையில் அமைதி அறி
*璽|-
11 ܢ .
| -
డ్రాకో "E"డ్రాకో హైకో "డ్రాకో "హైకో "
ཡིག་
 

ண்ணாகும்? ஜெரல்வரர்?
b அகப்படுமா? 1றுப்போகுமா?
| II) = = I'
డ్రాకో "E" వ్రా హైకో "డ్రాకో "ఛెత్రా హైకో "వై

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
ஆண்டுச் சந்தா 100B
வெளியிடு: PROFESSIONAL PSYCOLOGICAL COUNSELLING CENTRE
BATTCALOA.
 

போது ~7 இதழ்-46
தை - மாசி 2006 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி
போல் சற்குணநாயகம்.யே.ச.
ஆசிரியர் (Editor)
வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி.எம்.ஒக்கஸ்
பணிமனை: உளநல உதவிநிலையம், 15, வெபர் வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி:
Օ65-2222842 \ E-mail ppccpal Gsltnet.lk
இலங்கை அரசியலின் மையமாகப் புத்த பிக்குகளே இருந்து வருகின்றார்கள் என்பது ஒரு நீண்ட வரலாறு. முடியரசுக் காலத்தில் முளைவிட்டு வளர்ந்த இந்த அரசியல் வேட்கை - இன்றைய குடியரசில் ஒரு பெரும் கூத்தாகவே நடந்து கொண்டிருக்கின்றமை கண்டு உலகமே
அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
“காவிகள் இல்லாமல் இந்த நாடே இல்லை’ என்று காட்டுக் கூச்சல் போடும் அளவுக்கு பிக்குகள் சிலர் அரசியலில் காட்டும் அதீத ஈடுபாடு - மீண்டும் ஒரு பண்டார நாயக்கா யுகம் பிறந்து விட்டமையைத் தெளிவாகக் காட்டி நிற் கினிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷவுக்குக் கை கொடுத்த இந்த இனவாதிகள் தான் மீண்டும் ஒரு பண்டார நாயக்கா யுகத்திற்கு வித்திட்டவர்கள் என்பதை நாடு நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றது.
அனைத்தும் துறந்தவர்கள் என்று நம்பப்படும் பெளத்த துறவிகளில் சிலர் நடத்தும் இந்த அரசியல் வெறியாட்டத்தை அறிவும் ஒழுக்கமும் உள்ள பெளத்த
பிக் குகள் அனைவரும் அறவே
1.

Page 3
வெறுக்கின்றார்கள் என்பதை-அரசியலில் பிக்குகள் தொடர்ந்து ஈடுபடுவார்களே யானால் இந்நாட்டில் இருந்தே, பெளத்தம் இல்லாமற் போய்விடும் என்று அண்மையில் மலவத்த பீட மகா நாயக்கர் எச்சரித்திருந்தமையை இங்கு எடுத்துக் காட்டுதல் மிகப் பொருத்தமாகும்.
கத்தோலிக்கத் திருச்சபை ஒருகாலத்தில் ஐரோப்பிய அரசியலில் கைவைத்ததனால் உண்டான கலங்கத்தை இன்னும் அதனால் துடைத் தெறிய முடியவில்லை. இதே போன்றதோர் நிலை இன்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றுக்கும் ஏற்பட்டிருக்கின்றமை கண்கூடு.
இந்த யதார்த்தத்தை நன்கு உணர்ந்தமையினால்தான் பேராசிரியர் பெல்லன்வில விமலதேரர், கட்சி அரசியலில் இருந்து பெளத்த பிக்குகள் விலகிக் கொள்ள வேண்டும். இல்லையேல், அவர்கள் தம் தகுதியையே இழக்க நேரிடும் என்று அறிவுறுத்தியுள்ளமையை நாம் காலத்தின் குரலாகவே கருத வேண்டும்.
கபிலவஸ்துவின் அரசகுமாரனுக்குத் தோன்றிய ஞானம் - இந்த உலகத்திற்கே வழிகாட்ட ஏதுவானது. இப்போது இன்றைய இருண்ட சூழலில் மல்வத்த பீட மகா நாயக்கருக்கும் பேராசிரியர் விமலரத்தன தேரருக்கும் ஏற்பட்டிருக்கும் மனத் தெளிவு, திசை மாறிப் போய்க் கொண்டிருக்கும் தேரரைச் சரியான வழிக்குத் திருப்ப உதவ வேண்டும். அனைத்து மக்களும் இதனையே ஆவலோடு எதிர்பார்க்கின்றார்கள்.
அரசியலில் சமயத்தைப் கலப்பது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை நாமும் இந்தச் சமயத்தில் உரக்கவே சொல்ல விரும்புகின்றோம். இதனைச்
சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்களாக
அன்புடன்
வாகரைவாணன்
2

எங்களினம் வாழ
இன்னலெலாம் மறைய சங்க காலம் போலத்
தலைநிமிர்ந்து நிற்க மங்கை நீவாராய்
மங்களங்கள் சூடி பொங்கல் எனும் நாளில்
பொற்பாவை தையே
நெற்றியிலே பொட்டு
நிலாப் போல அழகாய் . . . உற்றதொரு வாசம்
ஊரெல்லாம் இழுக்கும் வெற்றியதன் வடிவம்
விடியல் என வருவாய் பற்றி நாம் பிடித்தோம்
பாவை உன் பாதம்
தைப் பெண்ணே. தாயே.. தமிழ் உலகம் உன்னை கை கூப்பி வணங்கும்
காலை இள நேரம் பொய் போலும் இருட்டு
போய் எங்கோ மறைய ஐயை நீ வாராய்
ஆசையோடழைத்தோம்!
_3_

Page 4
இந் நாட்டில் நாங்கள்
எதிர்ப்பெல்லாம் வென்று தன் மானத்தோடு
தமிழன் என உயர்ந்து முன் போல மீண்டும்
(Ulp. (512. 6) III அன்னை நீ அருள்வாய்
அன்புடனே கேட்டோம்
நீ வந்தால் போதும்
நிச்சயமாய் இங்கே தீ கூட அணைந்து
தென்றலாய்க் குளிரும் நாவெல்லாம் வாழ்த்த நங்கை நீவாராய் பூவெல்லாம் உன் மேல்
பொன்போலச் சொரியும்
 

முத்துக்கல்
மகாவலிகங்கையின் அரவணைப்புத் தந்த சுகம் முத்துக்கல் கிராமத்தின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்றது. காடுகளும் குன்றுகளும் காவல் செய்யும் அந்தக் கிராமத்தில் காற்றில் கலந்து வரும் மருத நில வாசமும் மனத்தை நிறைக்கின்றது.
இளங்காலை நேரம் . . . . உதய சூரியனின் ஒளி அங்குள்ள ஒவ்வொரு குன்றிலும் பாறையிலும் பட்டு அவற்றை முத்துக்களாகப் பளிச்சிடச் செய்கின்றது. இந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டு அதிசயித்த நாச்சியம்மை இதனால் தான் இந்த ஊருக்கு முத்துக்கல் என்று பெயர் வந்ததோ என்று நினைத்தவளாய் கங்கையை நோக்கி ஓர் இளவரசி போல நடந்து வருகின்றாள். இளமையின் அழகையெல்லாம் தனது மேனியில் ஏந்தி நிற்கும் அந்த மங்கையின் இடையில் குந்திக் கொண்டிருக்கும் குடமும் அவளுக்கு ஒரு தனி அழகையே தருகின்றது.
இடுப்பில் இருந்த குடத்தை இறக்கி, கங்கைக் கரையில் வைத்த நாச்சியம்மை, அந்த மணற்பரப்பில் மெல்ல அமர்ந்து கொள்கின்றாள். மனத்தில் அவள் பிறந்த மண் முத்துக்கல் பற்றி முன்னோர் சொன்ன வரலாறு கங்கையின் அலைபோல மெதுவாக அசைகிறது. அதை மீட்டுப் பார்ப்பது அந்தச் சமயத்தில் அவளுக்குப் பெருமையாகவும் இருக்கிறது.
மட்டக் களப் புத் தமிழகத்தின் நுழைவாயிலான மன்னம்பிட்டியை அண்டிய ஒரு பழந்தமிழ்க் கிராமம் முத்துக்கல். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மன்னன், அமரசேனனால் வீரமுத்து என்னும் வன்னிச்சிக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட பூமி அது. இந்த உரிமையை மேலும் உறுதி செய்வது போல பிற்காலத்துச் சோழர்களும் மாகோனும் தமிழகத்தில் இருந்து அழைத்து வந்த வன்னியரும், அரசர்களுக்கு மிகவும் நெருக்மான அதே இனத்தைச் சேர்ந்த அடப்பர் சமூகத்தவரும் அந்தக் கிராமத்தில் குடியேறவே அது மறவர் பூமியாகின்றது.
L5

Page 5
காலம் கறங்கு எனச் சுழல்கின்றது . . . . மகாவலி கங்கையை மையமாக வைத்து, தம்பன்கடவை, சொறிவில் (சுரிவில்) கல்லூர் முதலான ஊர்கள் உருவாகின்றன . . . ஆனாலும், அந்தப் பிரதேசத்தில் கலந்து விட்ட சோழர் ஆட்சியின் கலை கலாசாரப் பாரம்பரியங்கள் அதை ஒரு தமிழ் நிலமாகவே அடையாளப்படுத்து கின்றன.
பிறந்த ஊரின் வரலாற்றில் மூழ்கியிருந்த நாச்சியம்மை மனத்தில் மன்னம்பிட்டி சிறீ சித்திரவேலாயுதர் கோயில் திருவிழா நினைவுக்கு வருகின்றது. உடனே எழுந்து கங்கையில் நீராடிவிட்டு பக்கத்தில் இருந்த தாமரைக் குளத்தில் நீர் அள்ளிக் கொண்டு விரைந்து வீடு செல்கின்றாள்.
சின்னஞ்சிறு வயதிலேயே தன் தாயை இழந்து விட்ட நாச்சியம்மை அன்று வழக்கம் போல் தனது சின்னம்மாவுடன் கோயில் திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பிய பின் படுத்த படுக்கையாகி விட்டாள். எதிர்பாராத விதமாக நாச்சியம்மைக்கு ஏற்பட்ட வியாதியைக் கண்டு, வீட்டார் கவலைப்பட்ட போது, 'ஊரெல்லாம் கொள்ளை நோய் பரவுது . . .’ என்ற அபாய ஒலி கேட்கின்றது. மக்கள் அலறி அடித்துக் கொண்டு கிழக்கே கதிரவெளி, பனிச்சங்கேணி, போதிஓடை ஆகிய
ஊர்களுக்கு இடம் பெயர்கின்றனர். (வரலாற்றுச் சிறுகதை)
முத்துக்கல்லில் கொள்ளைநோய் பரவிய செய்தி அவ்வூரில் இருந்து பதினைந்து மைல்களுக்கப்பால் உள்ள பனிச்சங்கேணிக்கு அண்மையில் ஒரு குக் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தோனிப்பிள்ளையின் காதில் விழுகின்றது. ஆயுள்வேத வைத்தியரான அவருக்கு அப்போது என்ன தோன்றியதோ, கொஞ்சம் கூடத் தாமதியாமல் தமது மருந்துப் பையை எடுத்துக் கொண்டு முன்பின் தெரியாத அந்த ஊருக்குப் புறப்படுகின்றார்.
வடமராட்சி வல்வெட்டித்துறையில் கப்பலோட்டிக் கரையார் வம்சத்தில் பிறந்த அந்தோனிப்பிள்ளை என்னும் அந்தோச்சியார், தமது பரம்பரைத் தொழிலான வியாபாரத்தின் பொருட்டு மட்டக்களப்பிற்கு
6.

வந்து அங்கேயே நிரந்தரப் பிரசையாகின்றார்.
திருமணமும் நடந்து குழந்தைகளும் பிறக்கின்றன. ஆனால், விதியின் விளையாட்டோ என்னவோ, மனைவிக்கும் அவருக்குமிடையே உருவான பூசல், நிரந்தரப் பிரிவினைக்கு வழி வகுக்கின்றது.
முற்கோபக்காரரான அந்தோனிப்பிள்ளை தனது மனைவியை விட்டுப் பிரிந்து, மட்டக்களப்பிற்கு வடக்கே உள்ள பனிச்சங்கேணியை அண்டிய அந்தக் காடடர்ந்த ஒரு சிறு பிரதேசத்தைச் சென்றடைகின்றார். அப்போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு மூன்று பழந்தமிழ்க் குடிகளின் ஆதரவு அவருக்குக் கிடைக்கின்றது. அவர்களின் ஆதரவோடு ஆற்றங்கரை ஓரமாகத் தமக்கு ஒரு குடிசையும் தாம் பக்தி சிரத்தையோடு வணங்கும் புனித இராயப்பருக்கு ஒரு குடிசையும் அமைத்துக் கொண்டு, பக்கத்துக் கிராமங்களான கதிரவெளி, பனிச்சங்கேணி ஆகிய ஊர்களுக்குச் சென்று வைத்தியத் தொழிலில் ஈடுபடுகின்றார். மக்கள் அறிமுகம் கிடைக்கின்றது. ارگJணி
இந்நிலையில், வாகைமரங்கள் நிறைந்த தமது ஊருக்கு வாகரை என்று பெயரிட்டு அதனையே தமது சொந்தக் கிராமமாகக் கொள்கின்றார். அந்தோச்சியாரின் கடும் உழைப்பு அவருக்கு ஆடு, மாடு, காணி என பல்வேறு சொத்துக்களைத் தேடிக் கொடுக்கின்றது.
முத்துக்கல்லைச் சென்றடைந்த அந்தோனிப்பிள்ளையை அவர் ஒரு வைத்தியர் என்று அறிந்ததும், அவ்வூர் மக்கள் அன்போடு வரவேற்று உபசரிக்கின்றனர். கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட அந்த ஊர் மக்களிடையே, சஞ்சீவியாகவே அந்தோனிப்பிள்ளை காட்சி தருகின்றார். வியாதியில் வீழ்ந்த பலர் சுகம் பெறுகின்றனர். நாச்சியம்மையும் எழுந்து வழக்கம் போலத் தனது காரியங்களைக் கவனிக்கின்றாள்.
அந்தோனிப்பிள்ளைக்கு நாற்பது வயதிருக்குமி, ஏற்கனவே மணமாகி குழந்தைகள் பெற்றிருந்தும் அந்த இளமை முறுக்கு அப்படியே அவரிடம் இருக்கிறது. ஆனால் அந்த முறுக்கு, இருபது வயது கூட
7

Page 6
எட்டாத ஓர் இளம் பெண்ணை ஆட்கொள்ளும் என்று அங்கு யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இது உண்மையிலேயே நாச்சியம்மையின் சிறிய தாயாருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. என்றாலும் இருவர் மனங்களும் இணைந்திருப்பதை நன்கு அறிந்து கொண்ட அவர், தமது உறவினர்களோடு குறிப்பாக, முத்துக்கல் குலசேகரம் பிள்ளை உடையாரோடு கலந்தாலோசித்து விட்டுத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.
முத்துக்கல்லில் வன்னியர் குலத்தில் பிறந்த ஒரு பெண்ணும் வடமராட்சி கப்பலோட்டிக் கரையார் வம்சத்தில் உதித்த ஓர் ஆணும். திருமண பந்தத்தில் இணைந்ததை முத்துக்கல் வியப்போடு பார்த்து ஆசீர்வதிக்கின்றது.
அதே நேரம், இவர்கள் ஊடாக, பேதுருப்பிள்ளை உடையார் என்னும் ஒருவர் தலைமையில் உருவாகப் போகும் புதியதொரு வம்சத்தை வரவேற்க வாகரை ஊர் தயாராகின்றது.
「ーーーーーー1 தினங்கள்
தொழிலாளர் தினம் - மே 01 பெண்கள் தினம் - மார்ச் 08 காதலர் தினம் - பெப்ரவரி 14 பாவனையாளர் தினம் - மார்ச் 15 முட்டாள்கள் தினம் - ஏப்ரல் 01
8.

ஏகாதிபத்தியமே இதன் ஒரே இலக்கு
அன்று இங்கிலாந்து இன்று அமெரிக்கா
அணுகுண்டைப் பெற்றெடுத்த அருமைத் தாய் இது
நிற வேற்றுமை இன்றும் இங்கே நீறு பூத்த நெருப்பு
இது ஒரு தேவலோகம் அல்ல! இங்கும் ஏழைகள் இலட்சக்கணக்கில்!
ஒன்றாக இருந்த
சோவியத் யூனியன்
இன்று
பல துண்டானதற்கு
இது தான் காரணம்!
- 1 -
محمج
) அமெரிக்கா என்றால். . . :(

Page 7
பாக்கிஸ்தான் . . . .
இந்தியாவைப் பயமுறுத்தும் இதன் படைக்கலம்!
சின்ன நாடு கியூபா இதற்கொரு சிவப்பு விளக்கு!
இஸ்ரவேல் இதன் இதயத்தில் பலஸ்தீனம் பாதத்தின் கீழ்
கார்ல்மாக்ஸ் லெனின் என்றால் இதற்குக் கனவிலும் அச்சம்
வியட்னாமில் விழுந்த அடி இன்று
ஈராக்கில் இதற்கு விழுகிறது

உலகிற்கு இது எப்போதும் உபதேசிக்கும் ஆனால் தனக்கு மட்டும் தத்துவம் வேறு
ஆயுதமும் டொலருமே இதன் அசுர சக்தி
எக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் வெளிநாட்டுக் கொள்கை வேறுபடாது
சுரண்டலே அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம்
வாஷிங்டன் முதல் புஷ் வரை வார்த்தை ஒன்று தான்!
11

Page 8
கையளவு இலங்கையிலும் இதன் கால் பதிந்துவிட்டது நாளை இதன் கொலனி ஆகலாம்!
அமெரிக்கா என்றால்
ஆக்கிரமிப்பு! இது தான் அர்த்தம்!
- வியாசர் -
「一ーーーーーーーーーーーーーーーー -
| மனம் ஒரு நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான எஜமான்.
12

கவிதை எனும் சொல்
தமிழில் தொன்மை மிக்க பாடல்கள் என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்கள் - சங்கமருவிய காலக்காப்பியம் சிலப்பதிகாரம் - பல்லவர்காலப் பக்திப்பாடல்கள் என்பன ஆசிரியப்பா, விருத்தம் முதலான பாவகைகளால் ஆனபோதும் அவற்றில் நாட்டுப் பாடல்களின் செல்வாக்கு இருப்பது நன்கு புலனாகும்.
இவ்விலக்கியங்களின் தோற்றத்தின் பின்பு கி.பி.17ம் நூற்றாண்டில் எழுந்த முக்கூடல்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, ஆகிய இலக்கியங்கள் கிராமத்து மக்களின் சிந்து கண்ணி என்னும் பா வடிவங்களைப் பெரிதும் தழுவியவை. இவ்விலக்கியங்களின் செல்வாக்கை இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்) கோபால கிருஷ்ண பாரதியார், வேதநாயகம்பிள்ளை, வேதநாயக சாஸ்திரியார் ஆகியோரின் படைப்புக்களில் காணலாம். இப்படைப்புக்களே, இருபதாம் நூற்றாண்டின் கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதிக்கு ஆதர்ஸமாக இருந்தன என்பது கற்றவர் பலரும் அறிந்த செய்தியாகும்.
இதிலிருந்து ஓர் உண்மை நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது எல்லாப் பாவடிவங்களும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதல்ல. அவற்றைத் தள்ளும் கவிஞரும் உண்டு; கொள்ளும் கவிஞரும் உண்டு. சில சமயம் பொது மக்களே பழைய பாவடிவங்களை முற்றாக நிராகரித்து விட்டு, புதிய வடிவம் ஒன்றை ஏற்றுக் கொள்வதும் உண்டு. இதற்குக் காட்டாக, கோபால கிருஷ்ண பாரதியின் (19ம் நூற்றாண்டு) நந்தனார் கீர்த்தனைக்கு (இசைப்பாடல்) நாடு முழுவதும் இருந்த செல்வாக்கினை எடுத்துக் கொள்ளலாம். இவ்விசைப் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களில் மகாகவி பாரதியும் ஒருவர்.
சங்க நூல்களுக்கு முன்பு எழுந்த தொல்காப்பியம் அக்
காலத்தில் வழக்கில் இருந்த ஏழுவகையான யாப்பு வகைகளை இவ்விதம் சொல்கிறது.
13

Page 9
பாட்டுரை, நூலே, வாய்மொழி, பிசியே அங்கதம், முதுசொல் அவ்வேழ் . . . (தொல். செய்யுளியல்)
இந்த யாப்பு வகைகளில் தொல்காப்பியருக்குப் பின் வந்த சங்கப் புலவர்கள் பாட்டு யாப்பை மட்டும் கையாண்டனர் என்பார் முனைவர் கா.கோ.வேங்கடராமன் (தமிழ் இலக்கிய வரலாறு - பக் - 48)
உண்மையிலேயே யாப்பு என்றால் என்ன? கிரமத்து மக்கள் தம் விருப்பம் போல் பாடிய பாடல்களைக் கற்றறிந்த புலவர்கள் ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்காகச் செய்த ஒரு வித விதிமுறை என்று மேற்படிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம். இதனைப் பின்வரும் பழைய மேற்கோள் சூத்திரம் நன்கு விளக்கும்.
இலக்கியமின்றி இலக்கணம் இன்றே எள்ளின்றாயின் எண்ணெயும் இன்றே எள்ளினின்றெண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்.
தொல்காப்பியர் தமது இலக்கண நூலில் செய்யுள் எனும் சொல்லைப் (நல்லிசைப் புலவர் செய்யுளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே) பயன்படுத்தியிருப்பினும் அவர் காலத்திலும், சங்க காலத்திலும் பா, பாட்டு எனும் சொற்களே வழக்கில் இருந்ததாக தெரிகின்றது. இதனை
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்’ என்று தொல்காப்பியமும்,
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே என்று குறுந்தொகையும் பறைசாற்றும்.
பா, பாட்டு, கவி, தூக்கு, செய்யுள், கவிதை என்பன ஒரு பொருட் சொற்களாகும். எனினும் தற்காலத்தில் இச் சொற்களில் கவிதை
14

எனும் சொல்லே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இது பற்றி மொழியியல் அறிஞர் மு.வ. அவர்கள் இவ்விதம் கூறுவார்.
ஒரு பொருளை உணர்த்த ஒரு சொல்லே வழங்கும். இரு சொல் வழங்கின் ஒன்று நிற்க, மற்றொன்று அழியும். அல்லது வேறு பொருளுணர்த்தத் தொடங்கும். உண்மையாக நோக்கின் ஒரு பொருட் கிளவிகள் என்பன பேச்சுமொழியில் இல்லை. (மொழி நூல் - பக் 272)
அறிஞரின் கருத்தை அப்படியே நிரூபிப்பது போல கவிதை எனும் சொல்லே இன்று எழுத்திலும் பேச்சிலும் அதிக அளவில் இயங்குவதைக் காணலாம்.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால இலக்கிய வரலாற்றில் பாட்டு எனும் சொல் சங்ககாலத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட போதும் கவிதை எனும் சொல்லும் வழக்கில் இருந்தமையை சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் காட்டி நிற்கும்.
நாவிற் புனைந்த நன் கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து வினை நந்தத்
தாயிற்றே தண்ணம் புனல் (பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும் - பதிப்பு - 1948)
பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கவிதை எனும் சொல்லுக்கு கவியது தன்மை, அஃது ஈண்டுச் செய்யுள் மேல் என்று குறிப்பிட்டுள்ளமை நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. பரிபாடலில் இடம் பெற்ற இச் சொல் (கவிதை) மக்கள் மத்தியில் அன்று அறிமுகமாகாமைக்கு பாட்டு எனும் சொல்லுக்கு இருந்த அங்கீகாரமும் மரியாதையுமே காரணங்கள் எனலாம்.
இதன்பின் பல்லவர் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார்
‘பாடேன்றொண்டர் தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு’
15

Page 10
என்று பாடுவதைக் காண்கின்றோம்.
சோழர் காலத்துச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலிங்கத்துப் பரணி ஆசிரியர் ஜெயங் கொண்டாரும். கவிதை எனும் சொல்லைத் தமது நூலில் கையாண்டிருப்பதை பின்வரும் பாடல் காட்டும்.
களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதயன் கால் வழித் தளையை வெட்டியரசிட்டவனும் . . .
இச் செய்யுளடியில் வரும் களவழி என்பது களவழி நாற்பது என்னும் நூல் என்றும், அதனைப் பொய்கையார் எனும் புலவர் இயற்றினார் என்றும், உரையாசிரியர் வித்துவான் பெ.பழனிவேல் பிள்ளை கூறுவார். (சைவசித்தாந்தக் கழக வெளியீடு - 1961)
பழந்தமிழ் இலக்கியங்களில் அத்தி பூத்தது போல் காணப்படும் கவிதை மகாகவிபாரதியின் காலத்திலேயே மக்கள் நாவிலும் நடமாடத் தொடங்கியது. ஆயினும் 1849ம் ஆண்டளவில (வித்துவான் FXC. நடராசாவின் ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு - பக்.176) யாழ்ப்பாணத்து வட்டுக் கோட்டையில் பிறந்த நா. சிவசுப்பிரமணிய சிவாசாரியார் இயற்றிய கந்தசஸ்டிப் புராணத்திலும் கவிதை இடம் பெறுவதைப் புராண வெண்பா எடுத்துக் காட்டும்.
வட்டுநகர் வாழ் சுப்பிரமண்ய சிவாசாரியனாஞ்
சிட்டன் கவிதையாற் செய்தளித்தான் - இட்டமொடு
செய்ய வடசொற் சிவராத்திரி புராணம்
வையகத்திற் செந்தமிழின் மாட்டு.
இவர் போன்று இன்னுமொரு ஈழத்துப் புலவரால் இயற்றப்பட்டு சுன்னாகம் அகுமாரசுவாமிப் புலவரால்1890ம் ஆண்டு (மேற்படி நூல் பக் . 194) பதிக்கப்பெற்ற திருக்கரைசைப் புராணத்திலும் கவிதை ஒட்டிக் கொண்டிருப்பதை பின்வரு செய்யுள் அடி உணர்த்தும்.
'குதித்ததேன் சுவைக் கவிதையாற் குறு முனி போல்’
16

கம்பன் கவிதையில் திளைத்து மகிழ்ந்த புலவர் ஒருவர் பாடிய செய்யுளிலும் கவிதை இருப்பதை அவரது செய்யுள் ஒன்று காட்டி நிற்கும்.
* கம்ப நாடன் கவிதையைப் போல கற்றோர்க்கு இதயம் களியாதே'
ஆரம்ப காலத் தமிழ் இலக்கியங்களில் அபூர்வமாகத் தோற்றம் தந்த கவிதை - பாரதி காலத்தில் பெரும் சிறப்புப் பெற்று. தற்காலத்தில் மலிந்தோர் பண்டமாய் மாறி விட்டதைக் காணும் போது மனதை என்னவோ செய்கின்றது. இச்சமயத்தில் புதுமைப் பித்தனின் வார்த்தைகளை இங்கு நினைவு கூருதல் பொருத்தமானதாகும்.
கவிதை தமிழில் இருக்கலாம். ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளினைப் பற்றி, அதாவது கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கி றார்கள். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றித் தமிழர் ஆராயவே இல்லை.
புதுமைப்பித்தனின் இந்த வார்த்தைகள் பொன்னே போல் போற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
- வாகரைவாணன் -
حسب مكده عـص عس
(Uபொன் மொழி)
*mu m, un m**
புத்தகங்கள் தான் நல்ல நண்பர்கள்.
17

Page 11
அறிய வேண்டிய அரிய மனிதர். 21
一一一一一一一一一一一云一一一一一一六一一一一一
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
சுவாமி ஞானப்பிரகாசர் இலங்கையில் பிறந்த தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவராவார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரிலே 1875ம் ஆண்டு ஆவணி மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் 6வது பரராஜசேகரன் பரம்பரையில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தார்.தந்தையார் பெயர் இராஜசிங்கம் சாமிநாதபிள்ளை. தந்தையார் ஓர் ஆசிரியராக விளங்கினார். தாயார் தங்கமுத்து. இவர் பிறந்த பொழுது அவருக்கு வைத்தியலிங்கம் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இவரது செல் லப் பெயர் கனகரத் தினம் .
ஞானப்பிரகாசருக்கு 5 வயது நடக்கும் போது அவரது தந்தையார் இறந்து விட்டார். அவரது தாயார் அச்சுவேலியில் அச்சுக்கூடம் நடத்தி வந்த தம்பிமுத்து என்ற கத்தோலிக்கரை மறுமணம் செய்துகொண்டார். எனவே தங்கமுத்துவும் மகனும் திருமுழுக்குப் பெற்றுக் கத்தோலிக்க மதத்தை தழுவினார்கள். அப்போது அவருக்கு ஞானப்பிரகாசர் எனப் பெயர் சூட்டினர்.
ஞானப்பிரகாசர் அச்சுவேலியிலுள்ள அமெரிக்கமிஷன் ஆங்கிலப் பாடசாலையொன்றில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார். வளர்ப்புத் தந்தையாரான தம்பிமுத்து நல்ல தமிழ் அறிஞர். ஆனபடியால் ஞானப்பிரகாசருக்கு அவர் தமிழ் அறிவை ஊட்டினார். அச்சுக் கலையில் பயிற்சி அளித்தார். அதனால் ஞானப்பிரகாசர் சிறுவயதிலேயே இலக்கணப் பிழையின்றி தமிழ் எழுதப்பழகிக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை மிகுந்த ஆர்வத்தோடு கற்றார். அதனால் கவிதை இயற்றும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.
சங்கீத ஞானம் உள்ளவராக விளங்கிய ஞானப்பிரகாசர் வயலின் வாசிப்பதோடு ஒரே சமயத்தில் பல வாத்தியக் கருவிகளை மீட்டக் கூடிய திறமை பெற்றிருந்தார்.
ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ் நகரிலுள்ள புனித
18

பத்திரிசியார் கல்லூரியிலே கல்வி பயின்றார். தமது சொந்த முயற்சியால் அறிவை வளர்த்துக் கொண்ட ஞானப்பிரகாசர் தனது படிப்பை முடித்துக் கொண்டு 1893ம் ஆண்டில் புகையிரத பகுதி லிகிதர் பரீட்சையில் திறமையாகத் தேர்ச்சி அடைந்து கடிகமுவை புகையிரத நிலையத்தில் வேலைக்கமர்ந்தார். இவருடைய திறமையான வேலையைக் கவனித்த மேலிடம் அவரை கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்தது.
ஆனால் அவர் வேலையில் 3 வருடங்களே சேவை புரிந்தார். பின்னர் கத்தோலிக்கக் குருவாக மாறவிரும்பி குருமடத்தில் சேர்ந்து கொண்டார். 1907ம் ஆண்டு மார்கழி மாதம் 1ம் திகதி அவர் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
குருவான பின் அவர் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதிலும் சமயத்தைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதிலும் ஆர்வமாக ஈடுபட்டு உழைத்தார். வேறு எந்தக் குருவானவரும் செய்திராத அளவுக்குப் பல கத்தோலிக்க தேவாலயங்களை கட்டுவித்தார். கிட்டத்தட்ட 37 தேவாலயங்களைக் கட்டுவித்தார். மக்கள் இடையே அறிவை வளர்ப்பதற்காக வாசிகசாலைகளையும் உடன் ஏற்படுத்தினார். எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஞானப் பிரகாசர் வீரமாமுனிவருகி குப் பின் தமிழுக் குதி தொண்டாற்றியவர்களுள் முதன்மையானவராகக் கருதப்பட்டார்.
தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை மிக ஆர்வத்தோடு ஆழமாகப் படித்ததோடு பிறமொழிகள் பலவற்றையும் படிக்கத் தொடங்கினார். பிற மொழிகளை ஆசிரியரிடத்திலோ அன்றி பல்கலைக்கழகத்திலோ அவர் கற்கவில்லை. தமது சொந்த முயற்சியால் அறிவை வளர்த்தார். 72 மொழிகளை அவர் அறிந்திருந்தார். சமஸ்கிருதம், ஜேர்மன், கிரேக்கம் என 12 மொழிகளைத் திறம்படக் கற்று பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.
மொழிகளில் மாத்திரமன்றி சமயம், தத்துவம், சரித்திரம் போன்றவற்றிலும் ஆழ்ந்த ஞானம் பெற்று விளங்கினார். இவர் தாம் எழுதியவற்றை பத்திரிகை வாயிலாக மக்களுக்கு புத்துணர்ச்சியூட்டினார்.
19

Page 12
யாழ்ப்பாணச் சரித்திரத்தை முதலில் வெளியிட்டவர் சுவாமிகளே. ஞானப்பிரகாசருடைய கட்டுரைகள் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய வேறு சில கட்டுரைகள் கலைமகள்' , ‘சத்திய நேசன்' , 'கலா நிலையம், என்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. தமிழ், சமயம், இந்து மதம், யாழ்ப்பாண இராச்சியம் எனப்பல தரப்பட்ட கட்டுரைகள் ஈழ கேசரியில் வெளிவந்துள்ளன.
தமிழின் தொன்மையையும் அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உணர்த்தியவர் ஞானப்பிரகாசர். அவர் தனித்து நின்று ஒப்புயர்வற்ற சொற் பிறப்பு ஒப்பியல்' என்ற தமிழ் அகராதியை 12 ஆண்டுகளாக ஆராய்ந்து 20 பாகங்களாக எழுதி 6 பாகங்களை வெளியிட்டார். எஞ்சிய பாகங்கள் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தன. அவற்றை வெளியிடுவதற்கு முன் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். துரதிஷ்டவசமாக அவை சரியான முறையில் பாதுகாக்கப்படவில்லை. அகராதி, தமிழ்ச் சொற்கள் பற்றிய ஒரே ஆராய்ச்சி நூலாகும். தமிழ் கற்கும் மாணவர்களுக்கு அவர் தம் ஆய்வுகள் நன்கு உதவுகின்றன. <மரத்தா சிவலிங்கம் >
1896ம் ஆண்டிலிருந்து 1906ம் ஆண்டு வரை “அமலோற்பவ இராக்கினி தூதன்” எனும் மாத சஞ்சிகையின் ஆசிரியராக சுவாமிகள் விளங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல தொண்டுகள் புரிந்துள்ளார். தமிழ் மொழி தொன்மையான மொழி என்றும் பல பிறமொழிகளுக்குத் தாயாக உள்ளது, என்றும் ஆராய்ந்து கூறியவர் ஞானப்பிரகாசர் அவர்களே. 'ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தின் உப தலைவராக இருந்தார். அத்தோடு ஆசிய அரசவையின், இலங்கைக் கிளைத் தலைவராகவும் தொண்டு புரிந்துள்ளார். சுவாமிகள் ஆராய்ச்சி செய்த காலத்தில் தற்கால பிரயாண வசதிகள், வாய்ப்புக்கள் இல்லை. கால்நடையாகவும் மாட்டு வண்டிகளிலும் சைக்கிளிலும் பிரயாணம் செய்து உடல் வருத்தத்தையும் பாராது பழைய தமிழ்ச் சுவடிகளைத் தேடி எடுத்து குப்பி விளக்கிலே படித்து தமிழ்த் தொண்டு செய்த பெரும் அறிஞர்.
தான் பிறந்த ஊராகிய மானிப்பாயில் உள்ள வைத்திய சாலையில் நோய்வாய்ப்பட்டிருந்த ஞானப்பிரகாசர் 1947.01.22 காலை தமது 72 வது
sant 20

வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் மரணமானது தமிழ் மக்களுக்கு ஈடு செய்யமுடியா பேரிழப்பாகும். அவர் புகழ் இலங்கையில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் பரவியிருந்தது. 1981ம் ஆண்டு வைகாசி 22ம் திகதி இலங்கையரசு அவரது உருவம் பொறித்த தபால் முத்திரையொன்றை வெளியிட்டு அவரைக் கெளரவித்தது. ஞானப்பிரகாசர் மறைந்தாலும் அவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் அழியாது நிலைத்து நிற்கும்.
* பல்கலைக்கழகங்களில் கல்வி கற்போரில் 49 வீதமானோர் பெண்கள்.
* யாழ்குடா நாட்டில் உயர்கல்வி பெறும் பெண்கள் 59 வீதமானவர்கள்.
* வாக்காளர்களில் 50 வீதமானவர்கள் பெண்கள்.
* பாராளுமன்றப் பிரதிநிதிகளில் 4.8 வீதமானவர்கள் பெண்கள்.
21

Page 13
வெட்டாப்புத் தரும் வெளிச்சம்
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, பிறந்திருக்கும் புதிய ஆண்டிலும் எம் நாட்டில் வன் செயல்கள், படுகொலைகள், நிழல் யுத்தம், ஊடுருவித் தாக்குதல் போன்றவை தலைதுாக்குகின்றன. பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் சோதனைச் சாவடிகள் அதி விரைவாக அமைக்கப்பட்டு வருகின்றன. இராணுவ கெடுபிடிகள், தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுதல் போன்றவற்றினால் மீண்டுமொரு யுத்தம் வந்து விடுமோ என்ற அச்சம் ஒரு புறமும், போட்டிக் குழுக்கள் ஒன்றையொன்று அழித்து பழிவாங்கும் படலம் மறுபுறமும் தொடர்வதால் தமிழ் மக்கள் இருதலை வாய்க் கொள்ளி எறும்பு போன்று பரிதவிக்கும் நிலை எழுந்துள்ளது.
இவையனைத்தையும் பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வாக கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டுநகர் தூய மரியாள் இணைப்பேராலயத்தில் இடம் பெற்ற படுகொலை அமைந்துள்ளது. இறைவனின் சந்நிதானத்துக்குள்ளேயே ஆயுததாரிகள் நுழைந்து இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு அடியானை சுட்டுக் கொல்வதை எப்படி நியாயப்படுத்துவது? இது தெய்வத்தையே நிந்திக்கும் செயலாகும். இத்தகைய நிந்தனைகளை தெய்வம் பொறுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். “ அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்”
என்பது ஆன்றோர் வாக்கு. O அருட்தந்தை P. ஜோச)
மனித உயிரைப் பறிக்க யாருக்குமே உரிமையில்லை. உயிரைப் படைக்கும் இறைவனும் ஒரு போதும் மனித உயிரைப் பறிப்பதில் மகிழமாட்டார். இப்படுகொலையைப் புரிந்தவர்கள் சாதித்தது என்ன? அவர்கள் கூலிப்படையாக இருந்து பணத்திற்காக இதனைச் செய்திருந்தால், பாவம் என்ற இரத்தக் கறையை எதனைக் கொண்டு கழுவிவிடப் போகின்றனர்? நிராயுத பாணிகளாக இருப்பவர்களை ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் கோழைத்தனமாகும்.
அதைவிட மேலான துரோகம் தழிழனே தமிழனைக்
22
 

கொலை செய்வதுதான். இது இனவாதிகளுக்கு மாபெரும் சாதனை. இனப்படுகொலையின் ஓர் அங்கம். ஏதோ ஒரு வகையில் தமிழினம் தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் தற்போது படித்தவர்களையும், புத்தி ஜீவிகளையும், மக்களுக்காக குரல் கொடுப்பவர்களையும், இலக்கு வைத்து திட்டமிட்டு அழிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு புறம் திட்டமிட்ட இனப்படுகொலை. மறுபக்கம் திட்டமிட்ட குடியேற்றமும் நில அபகரிப்பும் . விளைவு? தமிழரின் தாயகம் பரப்பளவில் அருகிக் கொண்டு வருகின்றது. தமிழரின் விகிதாசாரமும் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனை அறிந்தும் ஒன்றும் நடக்காதது போன்று வாழ்வதுதான் சாபக்கேடு.
தமிழருக்குக் கிடைத்த மாபெரும் சாபம் ஒற்றுமையின்மை அல்லது ஒன்றுபடாமை. தமிழரின் வரலாற்றிலே எப்போதாவது ஒன்றுபட்டு வாழ்ந்திருக்கிறார்களா என்றால் “ இல்லை” என்ற பதில்தான் வரும். இதுவே தமிழரின் பலவீனம் . இதனைப் பகடைக் காயாக வைத்துக்கொண்டுதான் பேரினவாதிகள் தங்கள் கைங்கரியத்தை காட்டுகின்றனர். நினைத்ததையெல்லாம் சாதிக்கின்றனர். இந்த நிலையிலிருந்து நாம் விடுபடுவது எப்போது?
இந்தப் புதிய ஆண்டும் கடந்த ஆண்டினைப்போல் கடந்து சென்று விடாமல்,தீய சக்திகளுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றுபட வேண்டும். பேரினவாத சக்திகளின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒன்று திரண்டு போராடப் போகின்றோமா? அல்லது உரிமைகளைப் பறிகொடுத்து இனவாதிகளின் அடிமைகளாக காலங் காலமாய் வாழப்போகின்றோமா என்பதை முடிவெடுப்பது நம் கையில்தான் உண்டு. இன, மத, மொழி, பிரதேசவாத நோய்களினால் பாதிக்கப்படாமல், உண்மைக்காக, நீதிக்காக, உரிமைக்காக குரல்கொடுத்து தன்னுயிர்த் தியாகம் செய்த உத்தமர் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ தீர்மானிப்போம். அவரால் முடியாதது எதுவுமில்லை.
Tஆசிரியர் கருத்தோவியம் T

Page 14
மன்னனவன் மைந்தன்
மணவிழா என்று வண்ணமுறு சேவல்
வாய் கிழியக் கடவும் எண்ணமத தெரிந்த
எழிற்பறவை யாவும் தன் குரலால் உலகைத்
தட்டித் தயில் எழுப்பும்!
கண்ணத திறக்கும் போதே
கலகலப்போடு மக்கள் மன்னனை வாழ்த்தலானார்
மகனவன் மணத்திற்காக பன்னரும் சிறப்பினோடு
பாரத தோன்றக் கண்டு தன்னையே இழக்கலானார்
தனி ஒரு அழகுக் கோலம்!
எழிலெனும் பொட்டினோடு
இயற்கையின் வதனம் கண்டு விழியெலாம் குளிரலானார்
விருட்சத்தின் பசுமையான தளிரெலாம் தங்கமாகத்
தகதகத் தொளிரக்காண்பார் வழியினில் கல்லுத்தானும்
வைரம் போல் மின்னுமம்மா!
24
 

மலையெலாம் குறிஞ்சி
மலர்ச் சூடி நிற்கும் அலையெலாம் நீலம்
அணிந்தழகு காட்டும் நிலமெலாம் பசுமை
நிறமொன்றே சூடும் புலமெலாம் இந்தப்
புதமைதான் தெரியும்
மலர்ப்பந்தல் எங்கும்
மனமள்ளும் வாசம் புலர் காலைப் போதில்
புல் கூட ஒளிரும் தலை வாசல் முற்றம்
தாங்குமொரு கோலம் சிலை போலும் பெண்கள்
செங்கைகள் போடும்
கதிரவன் ஒளியில்
காலை இள நேரம் புதிதெனத் தலங்கும்
Löbl0 Lg5 l06Dss656M மதக் கோப்பை போல
வண்டு வாய் வைக்கும் பதியெலாம் பொங்கும்
பாலருவி வெள்ளம்
25

Page 15
வீதியெலாம் சோடனை
வெண்ணிலவு போல சோதி மிகு விளக்கம்
சொல்லொண்ணா அழகு காதினிக்கச் செய்யும்
கான மழை எங்கும் நாத மழை கேட்டு
நாடு அதில் மூழ்கும்!
நெடு மரங்கள் யாவும்
நிழலஸ்ளித் தாவும் சுடு மணல் என்னும்
சொல்லங்கு இல்லை படு மரம் தானும்
பார்த்த வரும் இல்லை மடு, குளம், வாவி
மலர் விளக்கேந்தம்
மலை மீத பிறந்து
மண் மீது தவழ்ந்த அலை என எழுந்து
அன்ன நடை பயின்று நலம் தரும் காற்று
நறுமணம் வீசும் குல மகன் வதவை
குறித்தத செய்யும்
26

காற்றத நடக்கும்
கபிலவஸ்தெங்கும் இவற்றென வாசம்
ஊர் தொறம் பரவும் சேற்றதன் மலர்கள்
சிரிக்கின்ற போத ஏற்றதோர் செய்கை
எங்கெங்கும் இனிமை!
விண்ணுலகு தானும்
விழாவதனைக் காண மண்ணுலகை நோக்கும்
மயங்கும்; பின் சொல்லும் என்னூறு நேரினும்
இதற்கு ஒரு நாளும் கண்ணுாறு நேரா
காக்க நாம் வேண்டும்!
(இன்னும் வரும்)
27

Page 16
நாளைய உலகம் நமக்குச் சொந்தம்
பிறரது பொருளினில் பேரவாக் கொள்ளாது
பிறருக்கு உதவியே பொதுப்பணி பேணுவோம்; நிறைந்து வருகின்ற நீணிலம் மீதினில்
நித்தமும் தொல்லைகள் நின்றுமே வாட்டுதே! சிறந்த குணமொடு சீரிய நற்செயல்
நிறைந்த மனிதராய் நீணிலம் வாழுவோம்; குறையிலா மனிதராய்க் குவலயம் வாழ்ந்து, - நற்
குடும்பமாய்ப் பிறரொடு கூடியே வாழுவோம்!
ஏழையர்க் குதவுதல் ஏழ்மை ஒழித்திடும்
எனச் செயற் பட்டிடல் என்றுமே நல்லது; நாளைய உலகமும் நமக்கினி சொந்தமே
நன்மைகள் செய்திடில் நாடிடு மெம்மையே! காளையர் நாமினி நாளைய மன்னர்கள்
காலம் கரையுது கருத்திது கொள்ளுவோம்; ஏழையர் செல்வர்க ளெனப்பேத மின்றியே
எல்லோரும் ஒன்றென வாழுதல் வேண்டுமே!
சீதனம் என்பதை சீயென ஒதுக்கியே
சிறப்பொடு வாழ்வோம்; சகத்தினில் என்றுமே வேதனை என்பதை வேரோடு அழித்துமே
வாழ்வினிற் தேறியே வளமது கொள்ளுவோம்! நித்தமும் நிகழுமிவ் நித்திய கொடுமைகள்
நின்றுமே நீங்கியே நிம்மதி நாடுவோம்; ஆதலின் கொடுமைகள் அற்றுமே வாழ்வினை
அமைத்துமே என்றுமே அன்போடு வாழுவோம்!
2
8.
 

இதோ . . . . ஒரு சர்வதேசப் பிரகடனம் எழுதிக் கொள்ளுங்கள் .
சம + தானம் தான் சமாதானம் இது இல்லையேல் எங்கும் இருள் தான்!
சமத்துவம் தான் மனித சாதியின்
மகத்துவம்
சமய நால்களின் சத்தியப் பிரமாணமும் இதவே!
சர்வரோக நிவாரணி இந்தச் சமாதானம்!
இது இருந்தால் இங்கே எந்த இஸமும் தேவையில்லை
ஆண்டான் அடிமை அந்தக் காலம்
தீண்டத் தகாதவனும் இன்று தெய்வந்தான்!

Page 17
ஏது எதி
நிவாரணம் என நீண்ட . . . . மிக நீண்ட வ அதிலும்
நீ நான் என்று
கம்மா என்றால் ஒரு பெரும் கூ சூழ்ந்து விடும்
EDT . . . . அத்தனை பேரு அங்கு பிரசனர்5
எடுத்த பணமு 5 Trij GESTGELUIT GE குடித்து  ெ கூட்டம் கூடி சீ . . . .
களப்ரப்பட்டு உழைப்பதெனி எப்போதும் கசப்புத் தான்!
தன் காவில் நிற்க முடியாத தானாகவே அ
இதற்கு ஏது எதிர்காலம் ?

ர்காலம்?
ர்றதும்
ரிசை
ர சணர்டை
ப் போதும் ட்டம்
கள் . . பேரப்பிள்ளைகள் நம்
JATCŮ65°09' añ வறித்து .
20/TбU
ஒரு சமூகம்
ழியும்